Wednesday, November 24, 2004

ட்ராஃபிக் ஜாம்

சென்னையிலே ட்ராஃபிக் தொல்லை ரொம்ப அதிகம். எவ்வளவு அதிகம்? 'Traffic Jam' அப்படின்னு ஒரு உணவகத்துக்கு (Restaurant-க்கு) பெயர். இது அடையாறு (Adyar) பேருந்து நிலையத்துக்கு அருகில இருக்கு

Image Hosted by ImageShack.us

Tuesday, November 16, 2004

கல்லிலே கலை வண்ணம்

எனக்கு கோவில்களிலே புடிச்சது மூனு: அமைதி, கட்டடக் கலை, பஞ்சாமிர்தம். (சில கோவில்களிலே வெண் பொங்கல், ஆனா அதிக இடங்களிலே தர்ரதில்லை). முருகன் கோவில்லே பாடர பாட்டு ரொம்ப பிடிக்கும். சிவன் கோவில்லே இருக்கிற அமைதியான் சூழல் வேற எங்கயும் கிடைக்காது.

நம்ம ஊரு கோயில்களோட புகைப்படங்கள் சிலது ஒரு தளத்திலே பார்த்தேன், ரசித்தேன். அதில இருந்து ஒன்னு. கல்லிலே சிற்பம் செஞ்ச காலம் போயி சிமென்டுல செஞ்சாலும் ரொம்ப அற்புதமாவே இருக்கு. இதத்தான் 'கல்லிலே கலை வண்ணம் கண்டான்' அப்படீன்னு பாடி வெச்சிருக்கான்.

Image Hosted by ImageShack.us

Sunday, November 14, 2004

திருக்குறள் - மூன்று தலைமுறை

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க ஆதற்குத் தக - தாத்தா

கற்க கசடற கல்கி குமுதம் கற்றபின்
விற்க பாதி விலைக்கே - அப்பா

கற்க கசடற ஏபீஸீ.காம் பீபீஸீ.காம் கற்றபின்
செய்க கணினி ஷட் டவுன் - பையன்

Friday, November 12, 2004

நேற்று, இன்று, நாளை

நேத்து இந்த ஊரு உட்லான்ட்ஸ் போயிருந்தோம். செம சாப்பாடு, நம்ம ஊரு மாதிரியே இட்லி, வடை, தோசை, சாம்பார், ரசம். சீஸ் ஊத்தப்பம்னு ஒன்னு, சூப்பர்! :)
இன்னிக்கு இந்த ஊருல தீபாவளி, கோல போட்டி இருந்துச்சு. நாமளும் வரஞ்சோம். நான் நம்ம ஊரு கோலம் போட்டா, இந்த ஊரு பசங்க க்ரயான்ல வரஞ்சு உள்ள மாவ தூவீட்டாங்க! அதுக்கப்புரம், பட்டாசு. 44000 ஃபீஸ் கட்டினதுக்கு சில பசங்க இதான் சான்சுன்னு பூந்து வெளயாடீட்டாங்க. ரென்டரை மணி நேரத்தில சில ஆயிரம் ரூபாய் கரி ஆயிடுச்சு.
நாளைக்கு திரும்ப க்லாஸ் போகனும் :(

(நேத்து எழுதுனாப் போல நெனச்சுக்கோங்க)

Wednesday, November 10, 2004

தீபாவளி

இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள். நீங்க வெடிக்கிற ஒவ்வொரு பட்டாசும் நம்மோட காற்றையும், சுற்றுச் சூழலையும் மாசு படுத்துது. Noise pollution-உம் உண்டுபடுத்துது. இதில பல சின்ன குழந்தைகளால் செய்யப் பட்டது. பாத்து பத்திரமா கவணமா சந்தோசமா கொண்டாடுங்க.