Tuesday, October 17, 2017

போஜ்புரி மாலும் நஹி

How Bojpuri mother tongue of Biharis forgotten
..நேற்று இரவு சுமார் 7 மணிக்கு எல்ட்மஸ் ரோடு , தேனாம்பேட்டை அருகே நண்பருடன் ஹோட்டல் வாசலில் நின்று பேசி கொண்டு இருந்தேன் . மழை விடாமல் பெய்து கொண்டு இருந்தது
அப்போது அங்கு வந்த மூன்று பேர் சென்ட்ரல் ஸ்டேஷன் எப்படி போக வேண்டும் என்று ஹிந்தியில் கேட்டார்கள் அவர்கள் குழி விழுந்த கண்கள் அழுக்கேறிய உடைகள் எல்லாம் அவர்கள் வட இந்தியாவில் இருந்து கட்டிட வேலைக்கு வந்தவர்கள் என்பதை உணர்த்தியது ..
நீங்க எந்த ஊரு என்றவுடன் பாட்னா (பீகார் ) என்றார்கள் .. உடனே உங்க மொழி போஜ்புரி பேச வருமா ( டெல்லியில் ஒரு வருடம் வேலை செய்த ஹிந்தி தந்த அனுபவத்தை வைத்து "பய்யா அப்கோ துமரா பாஷா போஜ்புரி போல் கார்தே சே ") என்றேன் . போஜ்புரி மாலும் நஹி என்று முழி முழித்தார்கள் .
உடனே அருகில் இருந்த ஆட்டோவை அழைத்து இவர்கள் சென்ட்ரல் போக வேண்டும் என்றவுடன் 300 ரூபாய் கேட்டார் ஆட்டோக்காரர் .. அந்த போஜ்புரி மொழியை மறந்த ஹிந்தி பேசும் பீகாரிகள் நூறு ரூபாய் தருகிறோம் என்று கை கூப்பி கெஞ்சினார்கள் ..
பேரம் படியவில்லை .. அவர்கள் முகம் சுருங்கி விக்கித்து நின்றார்கள் .. அவர்களிடம் சென்று என்ன விஷயம் என்றவனுடன் அவர்கள் சொன்னது .. சென்னை வேலைக்கு வந்து 2 வருஷம் ஆகி விட்டதாம் . 25 நாள் 10 சுமார் மணி நேரம் நாள் ஒன்றுக்கு வேலை செய்தால் ரூபாய் 12500 வருமாம் .
அதில் இவர்கள் செலவு போக 7500 ரூபாய் அங்கு அவர்கள் குடும்பத்துக்கு அனுப்பி விடுவார்களாம் . சென்ற தீபாவளி சென்றது இந்த தீபாவளி செல்ல வேண்டும் என்றார்கள் .
ஆட்டோகாரரிடம் சென்று "என்னப்பா ... சென்ட்ரலுக்கு 6 கிமீ தானே கிமீ 50 ரூபாயா கேக்குறே.. ஊரு விட்டு ஊரு வந்து வேலை செய்யிற இவுங்களை பார்த்த பாவமான இல்லையா " என்றவுடன் .. அவர் வட இந்தியர்கள் திட்டி கூறிய வார்த்தைகள் பீப் பீப் ரகம் . பதிய முடியாது ..
சரி எவ்வளவு தான் கடைசியா முடியும் என்றேன் .. 220 ரூ ஓகே என்றார் . இந்த பிடிங்க 120 என்று கொடுத்து விட்டு .அவர்களிடம் 100 மட்டுமே வாங்கி ட்ரோப் பண்ணிடுங்க என்றே அனுப்பி வைத்தேன் .
அந்த முன்றில் இரண்டு பேர் சிறுவர்கள் ஒருவருக்கு சுமார் 60 வயது இருக்கும் .. அவர் கையை பிடித்து கொண்டு "சுக்ரியா" என்றார் .. உங்கள் பீகார் மொழில் சொல்லுங்க என்று சிரித்தேன் . மறுபடியும் முழிமுழிப்பு ..
ஆட்டோவில் ஏறி செல்லும் போது திரும்பி பார்த்து கூப்பிய கைகள் ஊடே அவர் கண்களில் பனித்த நன்றியின் மகிழ்ச்சி ., நினவுகளை கிளறியது
*****நிற்க ******
புத்தரை ( 563 BCE - 483 BCE ) அவர் போதித்த நெறிகளை இன்றும் உலகெங்கும் ஏற்று வாழும் 376 million ( 6% of world population ) மக்களை தந்த நிலம் அது ..
உலகத்திலே அதி சிறந்த கல்வி கூடம் நாலந்தா என்ற இடத்திலே அங்கு இயேசு பிறப்பதற்கு முன்னே 600BC அதாவது சுமார் ரெண்டயிரம் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே 2,000 teachers and 10,000 students கொண்டு இயங்கியதை கல்வெட்டுகளும் மட்டுமில்லை .,சீன வழிப்போக்கர் மொழில் கூட குறித்து வைக்கப்பட்டுள்ளது .
Inspired by the journeys of Faxian and Xuanzang, the pilgrim, Yijing (also known as I-tsing), arrived in India in 673 CE. அவர் இந்தியாவில் இருந்த ஆண்டுகளில் 14 ஆண்டுகள் இன்றைய பீகார் அன்றைய தலைநகரத்தில் 10 ஆண்டுகள் இருந்தும் உள்ளார்..
இந்தியாவை கட்டி ஆண்ட மகத சாம்ராஜ்யம் மையப்புள்ளி :
♦️Haryanka dynasty (c. 600 – 413 BCE)
♦️Shishunaga dynasty (413–345 BCE)
♦️ Nanda Dynasty (345–321 BCE)
♦️Maurya Empire (c. 325 – c. 185 BCE)
♦️Shunga Empire (c. 185 – c. 75 BCE)
♦️Kanva Empire (c. 75 – c. 30 BCE)
♦️Satavahana Empire (c. 30 – c. 320 CE)
♦️Gupta Empire (c. 321 – c. 550 CE)
♦️ Pala Empire (c. 750 – c. 1162 CE)
காலத்திலே அப்போது அங்கு ஹிந்தி கிடையாது ஹிந்தி மொழி என்பது உருது சமஸ்க்ரித அரேபிய கலவையில் முழுவதுமாக உயிர் பெற்று சுமார் 10th AD வருகிறது.
அது அப்போது முகலாய ஆப்கான் கிழக்கு ஐரோப்பிய படை வீரர்கள் மட்டுமே பேசி கொண்டு இருந்த ஒரு மொழி .. மெதுவாக அது நுழைய ., 16 நூறாண்டுகளாக பெருமையுடன் இயங்கிய பல்கலைக்கழகம் 12th AD மூடப்படுகிறது ..
பின்னர் அதனை தனி சட்டம் மூலம் UPAII உயிர்ப்பித்து விடுகிறது The Nalanda University Bill, 2010 was passed on 21 August 2010 in Rajya Sabha and 26 August 2010 in Lok Sabha. The bill received Presidential assent on 21 September 2010 thereby becoming an Act.
ஆனால் ஹிந்தியால் 12th century சூழப்பட்ட வென்று எடுக்கப்பட்ட போஜ்புரி நிலைமை ‼️
*********
அண்ணாவை படிக்கும் போது அவர் சொல்லிய ஒரு விஷயம் புரிபடாமல் இருந்தது .. புரிபடாமல் இருந்தது என்று சுற்றிவளைக்காமல் நேரிடையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது என்றும் சொல்லலாம் ..
அவர் ஹிந்தி யை எதிர்க்கும் போது வேறு மொழியை ஏற்று கொள்ளும் ஒருவரது நிலை மூன்றாம் தர குடிமகனாக அவர்களை(தமிழனை ) அது ஆக்கி விடும் என்றார் ..
How is it possible ‼️ ..learning languages is not the process of expansion of one's knowledge ⁉️ .. why such short sight vision from anna was surfaced at that time while i read..
இந்தியாவை கட்டி ஆண்ட ., உலகத்திற்கு கல்வி வழங்கிய அந்த போஜ்புரி மொழி மறந்த ஹிந்தி பேசும் முதியவரின் கண்களில் பனித்த நன்றியின் சிரிப்பு வாசிக்கும் போது ...
புரியாததை புரிய வைத்தது .. தெளிய வைத்தது ..அனுபவம் தான் எவ்வவளவு பெரிய ஆசான்..
நீங்கள் செலவழித்த மணித்துளிகளுக்கு நன்றி 🙏
Ref : Bronkorst, J; Greater Magadha: Studies in the Culture of Early India (2007)
Ghosh, Amalananda (1965). A Guide to Nalanda (5 ed.). New Delhi: The Archaeological Survey of India.
Scharfe, Hartmut (2002). Education in Ancient India. Handbook of Oriental Studies. 1
#வரலாறு #சவெரா #savera #anna #dmk #hindi #dravidanadu #ஹிந்தி #பீகார் #budhaa

கொண்டாடுங்க

கொண்டாடுங்க..!
மகா வீரர்..மகா வீரர்ன்னு ஒருத்தரு இருந்தாரு.மனுசன் பெரிய்ய அறிவாளி. சமணக் கொள்கைகளையெல்லாம் ஊரூரா சொல்லிக்கிட்டு திரிஞ்சாரு. தனக்குன்னு சொத்துபத்து எதுவும் சேர்த்துவைக்காத ஆளு.ஜனங்களுக்கும் அவருமேல கொள்ள பிரியம். திடீர்ன்னு ஒருநாளு அவரு செத்துட்டாரு.ஜனங்கலாம் ரொம்ப ஃபீலாயிட்டாங்க.
அவர் செத்து ஒரு வருசம் ஆயிப்போச்சி.அவர் நினைவு நாளு வந்துச்சி.நம்மளுக்கு நல்லதுபொல்லது சொல்லிக்குடுத்த மனுசனாச்சேன்னு ஜனங்க அந்த நாள்ல வீட்டுல அகல்விளக்கு ஏத்திவச்சி பலகார பட்சணமெல்லாம் செஞ்சிவச்சி அவருமாதிரியே இருந்த சாமியாருங்க ஏழபாழைங்களுக்கெல்லாம் குடுத்து கொண்டாடுனாங்க.
கொஞ்சநாள்ல இந்த அசோகருன்னு ஒரு ராசா,சண்டைபோட்டு சண்டைபோட்டு வெறுத்துபோயி...எந்த ஆசையும் வாணாம்டான்னு பெளத்த மார்க்கத்துக்கு வந்துட்டாரு.அப்பாலிக்கா..மகாவீரரு நினைவு நாளு வந்துச்சி.அந்த சமயம் பார்த்து சீனாவுலயிலயிருந்து வியாபாரிங்க வந்திருந்தாங்க.அவங்க ராசாவுக்கு கையோட கொண்டாந்த பட்டாசு வெடியயெல்லாம் குடுத்தாங்க.அப்ப பார்த்து மருத்துவம் பார்க்குற பண்டிதரு ஒருத்தரு ஆமணக்கு கொட்டையிலயிருந்து எண்ணெய்ய புழிஞ்சி எடுத்தாந்து ராசாகிட்ட குடுத்தாரு. இது ரொம்பநேரம் நின்னு எரியும் ராசான்னு சொன்னாரு.சரிதான்னு ராசா ஜனங்கள கூப்புட்டு மகாவீரரை கும்புடுற நாளு வருதில்லே..அப்ப இந்த எண்ணெய்ல வூடு வாசலு பூராம் தீபம் ஏத்தி இந்த பட்டாசை வெடிச்சி சந்தோசமா கொண்டாடுங்கன்னாரு.ஜனங்களும் அப்பிடியே செஞ்சாங்க.ஊரே ஜெகஜோதியாயி ஒரே குஷியா பூடுச்சாம்.
அந்த சமயம் பார்த்து அம்மா தாயே பிக்‌ஷாந்தேகின்னு பூணூலு போட்ட கும்பலு ஒன்னு ஊருக்குள்ள வந்துச்சி.கொஞ்ச நாள்லயே அவுங்களுக்கு ராசாங்ககூட பழக்கம் ஏற்பட்டு நிலபுலம்ன்னு பெரிய ஆளுங்களாயிட்டாங்க அவங்களுக்கு இந்த தீவாளிய பாத்து வயித்தெரிச்சலு.கொஞ்சநாள்ல அந்த மகாவீரரு யாருமில்ல..அவந்தான் நரகாசூரன்னு ஒரு கதைய கட்டிவுட்டு கங்கஸ்நானம் பண்ணுங்கோன்னு தஸ்புஸ்ன்னு புரியாத பாசையில சொல்லவும் நம்மாளுங்க அப்புடியே நம்பிட்டாங்க . அப்பறம் மகாவீரரு யாருன்னே மறந்துபோயி..நரகாசூரனை இவங்களே வதம் பண்றதா நெனச்சிக்கிட்டு தீவாளிய கொண்டாடிக்கிட்டிருக்காங்க.
மக்களுக்கு எதையாவது கொண்டாடிக்கிட்டே சந்தோசமா இருக்கணும்..அம்புட்டுதான்.கொண்டாடுங்க...தப்பில்லே...ஆனால் ஏன்... எதுக்கு...எப்படி..கொண்டாடுறோம்ன்னு புரிஞ்சிக்கிட்டு கொண்டாடணும்தான் சொல்றேன்.
மகிழ்ச்சி.
தமிழன் வெகுண்டு எழுந்து என்ன பண்ணுவான்?
வீடு கொளுத்துவான். ரேப் பண்ணுவான், கவுரவ கொலை செய்வான், பொம்பளைங்க கழுத்தில் மொக்கனாங்க் கயிறு தாலி கட்டுவான். ஜாதி வெறி பிடிச்சி அலைவான். எதாச்சும் கேள்வி கேட்டா உன் பொண்டாடி எவனோடு படுத்தால் அம்மா எவனோடு படுத்தால் அக்கா எவனோடு படுத்தால் என்று கேள்வி கேப்பான்.
இதாண்டா தமிழனின் டிரேட் மார்க்…….
#இளையராஜாவின் தந்தை கிறிஸ்துவராக இருந்தார்.
இளையராஜா இந்துவாக இருக்கிறார்.#
இளையராஜா தன்னை இந்து என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார். அவர் இந்துவாக முடியாது. சாக்கியர் (பஞ்சமர்) இந்து மதத்தில் சேருவதற்கு இந்து மதத்தில் எந்த சடங்கும் சம்பிரதாயமும் இல்லை.
இந்து மதத்தில் இருப்பது நாலு வருணம் மட்டுமே. இந்து அல்லாததார் அனைவரும் ஐந்தாம் வருணத்தார். ஐந்தாம் வருணத்தாரை இந்துவாக அங்கிகரிக்க இந்து மதத்தில் வழி இல்லை. சும்மா நானும் இந்து என்று நம்பிக்கொண்டு காவடி தூக்கலாம் ஆனால் முக்தி அடைய அங்கு வழி இல்லை.
வெளி நாட்டில் போய் வாழ்வாதாரம் ஈட்டும் மக்களை இங்கே கொச்சை படுட்தவில்லை. அப்படி அவர்கள் இங்கு வாழ்வாதாரம் செய்ய முடியாமல் வெளி நாட்டுக்கு போக காரணம் இந்த அரசியல் வேடதாரிகள்தான். ஆனால் வெளி நாட்டில் போயி அண்டி பிழைத்துக்கொண்டு இருக்கும் சில சனியன்கள் அந்த நாட்டு மகளை அந்த நாட்டு மண்ணை அந்த நாட்டு மொழியை நேசிக்காமல். அங்கே இருந்து கொண்டு இவர்கள் தமிழ் மயிரு ரொம்ப பெருசு இவுங்க தமிழ் மண்ணு பெரிய சாக்கடை தொட்டின்னு பேசிட்டு இருப்பதுதான் கடுப்படிக்குது. அப்படி உங்க மயிரு பெருசுன்னா இங்க வந்து புடுங்க வேண்டியதுதானே எதுக்கு வெளி நாட்டில் மத்தவங்க மயிரை புடுங்கிட்டு இருக்கீங்க.

சி.பி.முத்தம்மா

🎪சி.பி.முத்தம்மா🙏🏼 காலமான தினமின்று🐾
🎓இன்று ஐ ஏ எஸ் அல்லது ஐ பி எஸ் என்ற சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுத ஆசைப்படும் பல இளம் பெண்கள் இந்தப் பெயரை கேள்விப்பட்டிருக்கக் கூடுமா என்பது டவுட்தான். ஆனால் மூடத்தனத்தினால் எழுப்பப்பட்ட ஒரு மதில் சுவரை தனி ஒருவராக உடைத்து அடுத்தடுத்து வந்துக் கொண்டிருக்கும் தலைமுறைக்கு வழி அமைத்தவர் அவர்.👀
நம்ம மெட்ராஸ் விமன் கிறிஸ்டியன் காலேஜிலும், மாநிலக் கல்லூரியிலும் படித்த சி. பி. முத்தம்மா (கொனெரி பெல்லியப்பா முத்தம்மா), கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில்தான் பிறந்தார். இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றியடைந்த முதல் பெண்.
இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரியாக 1949-இல் பணியில் சேர்ந்தவர்.
இவர் டூட்டியில் சேரும்போது வெளியுறவுத் துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான பணி விதிகளின்படி, அந்தத் துறையில் பணிபுரியும் பெண் மேரேஜ் செய்றதுக்கு முன்னாடி கவர்மெண்டிடம் முன் அனுமதி பெற வேண்டுமென்று சொல்லின. அது மட்டுமல்ல, திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்மணியின் குடும்பப் பொறுப்புகள், வெளியுறவுத்துறையில் அவரது பணிக்குத் தடையாக இருக்கிறதென்று அரசு கருதினால், அந்தப் பெண் ராஜினாமா செய்ய வேண்டுமென அரசு நிர்பந்திக்கும் என்றும் அந்த விதிகள் சொல்லின.
இதைப் போன்ற விதி ஆண்களுக்குக் கிடையாது. இந்தத் துறையின் இன்னொரு விதி, திருமணமான எந்தப் பெண்ணும் இந்தப் பணியில் சேரும் உரிமை தனக்கு உண்டென உரிமை கோர முடியாது என்றது. சுருக்கமாகச் சொன்னால், இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றும் வாய்ப்பும் உரிமையும் ஆண்களுக்கு மாத்திரமே உரியது.
25 வயதில் முத்தம்மா பணியில் சேரும்போது பணி நியமனக் குழுவின் தலைவர், ‘இந்த விதிகளை எடுத்துச் சொல்லி, வெளியுறவுத் துறையில்தான் நீ சேர வேண்டுமா?’ எனக் கேட்டபோது, ‘ஆமாம்’ எனப் பிடிவாதமாகச் சொல்லிவிட்டார். அவரை அந்தப் பணியில் சேர இயலாமல் செய்யும் நோக்கத்துடன், அந்த அதிகாரி அவருக்கு நேர்முகத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் அளித்தார். ஆனாலும் அவரது மற்ற மதிப்பெண்கள், அவர் நினைத்த வண்ணமே வெளியுறவுத் துறையில் சேர வாய்ப்பளித்தன.
ஆனால் அவரது பிரச்சினை அத்துடன் ஓய்ந்துவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் அதற்குப் பின்னர்தான் ஆரம்பம் ஆயிற்று. ஏனெனில் அதன் பின் ஒவ்வொரு கட்டத்திலும் பலவிதமான பாலியல் பாகுபாடுகளுக்கு அவர் ஆளாக நேர்ந்தது.தொடர்ந்து முப்பது வருஷமா இத்தகைய பாகுபாட்டை எதிர்கொண்ட அவர் 1979-ம் வருஷம் , பணி ஓய்வு பெறுவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னாடி அரசின் இந்த விதியே பெண்ணுரிமை மற்றும் சமத்துவம் ஆகியவற்றிற்கு எதிராக இருக்கிறதென்றும் பெண் என்பதாலேயே பணியில் அமர்வதற்கான உரிமை பாதிக்கப்படுவதென்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானதென்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த வி ஆர் கிருஷ்ணயரிடம் அரசு இந்த விதிகள் நீக்கப்படும் என உறுதி அளித்தது.
ஆக அரசு விதிகளில் இருந்த ஆணாதிக்கக் கருத்துக்களைத் தனது மன உறுதியாலும், விடாமுயற்சியாலும் உடைத்தெறிந்த முத்தம்மா. இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த அவர் டெல்லியில் தனக்குகு இருந்த 15 ஏக்கர் நிலத்தை அன்னை தெரசாவின் அறப்பணி அமைப்பிற்கு அளித்தார். இப்போது அங்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது.
அப்பேர்பட்ட ரியல் அம்மணி தனது 85 வது வயதில் 2009ம் ஆண்டு இதேஅக்டோபர் 14ம் தேதி காலமானார்.🐾👣🙏🏼

மோடி ஆட்சி தீபாவளி

முன்பெல்லாம் தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும்போதிருந்தே வெடிச்சத்தம் அப்படி இருக்கும். காலேலயே தொலைதூரத்தில் வெடிக்கப்படும் வெடிகளின் சத்தத்தில் துவங்கி பக்கத்துவீட்டு வெடி வரை தொடர்ச்சியாக ஒரு அலையைப்போல சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இன்னைக்கு ஒரு சத்தத்தையும் காணோம். காலையில் இருந்து ஒரே ஒருமுறை கேட்ட பெரும் சத்தமும்கூட பக்கத்துவீட்டு தாத்தா பிரித்த காற்றுச் சத்தம் என பிறகுதான் தெரிந்தது. தமிழகத்தில் என்ன பட்டாசுக்கு தடையா? இல்லை. அப்புறம் ஏன் சத்தமே இல்லை? எல்லோரும் இந்துமத விரோதி ஆகிவிட்டார்களா? அதுவும் இல்லை. மோடி ஆட்சி புண்ணியத்தில் எவன் கையிலும் காசு இல்லை என்பதே உண்மை.
மோடி ஆட்சி என்பது பயங்கரவாத ஆட்சி. மத பயங்கரவாதிகள் வைக்கும் வெடிகுண்டுகள் எப்படி அந்த மதம் இந்த மதம் என்றில்லாமல் எல்லா மதத்தினரையும் உயிர்காவு வாங்குமோ, அதுபோல மோடியின் ஆட்சி எல்லோர் பொருளாராத்திலும் அமிலத்தை ஊற்றி உள்ளது. உணவு வாங்கவும், மருந்து வாங்கவுமே ஆயிரம் முறை யோசிக்கவேண்டிய நிலையில் மக்கள் இருக்கும்போது எங்கே போய் கொண்டாட்டத்திற்காக காசை கரியாக்குவார்கள்?
மோடியும், பாஜகவும் இந்துமதவாதிகளாக இருக்கலாம், இந்துக்களுக்காக, இந்துமதத்திற்காக போராடுகிறவர்கள் போல நடிக்கலாம். ஆனால் அவர்களின் நிர்வாக சீர்கேடு யாரையும் விட்டுவைக்காமல், இந்துக்களையும், இந்துமத பண்டிகைகளையும் சேர்த்தே காவு வாங்கியிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மோடி/பாஜக ஆட்சி இருக்கும்வரை நமக்கெல்லாம் தீபாவளி மட்டுமல்ல எந்த பண்டிகையுமே கிடையாது. இழவு வீடுதான்.

சாமானிய மக்கள் & தீபாவளி

அன்புள்ள பால குமாரன் அவர்களே,
முன்னெல்லாம் தீபாவளிக்கு மூன்று நாளுக்கு முன் இருந்து வெடி வெடிக்கும் சத்தம் கேட்கும், தீபாவளி கழித்து இரண்டு நாள் கேட்கும், தற்போது அந்த நிலையில்லை, சமீப வருடமாகவே இல்லை. சமூகத்தின் கேளிக்கைகள் மாறிக்கொண்டு வருகிறது, வெடி வெடிப்பது மிக பெரிய உற்சாகத்தை குழந்தைகளுக்கு கொடுப்பதில்லை, தொலைக்காட்சி, மொபைல், கேம்ஸ் என்று கேளிக்கைகள் விரிவடைந்து விட்டது, தற்போது தீபாவளி என்பது சம்பிரதாயமாகவே கொண்டாடப்படுகிறது.
அது மிக சிறப்பாக கொண்டாடப்பட்ட காலத்திலே கூட, அது ஒரு ஹிந்து பண்டிகை என்றோ, நரகாசூரன் கொல்லப்பட்டான் என்று வெஞ்சன்ஸோடு மக்கள் கொண்டாடவும் இல்லை. அதை ஒரு பழம் கதையாக காதில் கேட்டு ஓரம் போட்டு, வருடம் முழுக்க உழைக்கும் மக்களுக்கு இயல்பாக இருக்கும் கொண்டாட்டத்தின் தேவை காரணமாக தான் வெடி வெடிப்பதும், இனிப்புகளை பரிமாறி கொள்வதுமாக இருக்கிறது.
அதிலும், பார்ப்பனிய வழக்கம் எங்களுக்கில்லை. நாங்கள் அதிகாலை ஆட்டுக்கறிகடையில் நிற்பவர்கள்.
நீங்கள் ஆத்திக சாயம் பூசி என்ன கதைகளை கற்பித்தாலும் கொண்டாட்ட முறைகளை பொறுத்து தான் அந்த பண்டிகை எப்படி பிரசித்தி பெறுகிறது என்பதை வரையறுக்க முடியும்.
அந்த வரிசையில் தீபாவளி ஆகட்டும், ஹோலி ஆகட்டும், ஏன் ஸ்பெயினில் நடக்கும் la tomatino என்கிற தக்காளி அடித்து கொள்ளும் விழாவே இங்கு வந்தாலும், மக்கள் மத்தியில் பிரபலமாக தான் இருக்கும். இது விழாக்களுக்கே உள்ள இயல்பு.
ஆத்திகர்கள் நீங்கள் போய் இதன் அடிப்படையை விளக்கினாலும், நாத்திகர்கள் விளக்கினாலும், சாமானிய மக்கள் இதையெல்லாம் கேட்பதாயில்லை.
ஏனினில் அவர்கள் பெரும்பாலான விழாக்களை அதன் வரலாறு, ஆதி மூலம் அறிந்து, அதற்காக கொண்டாடுவதில்லை.
வண்ண பட்டாசுகளை ரசிக்கவும், தின்பண்டங்களை வாங்கவும்; ருசிக்கவும்; அடிப்படை புலன்கள் போதுமானது. நீங்கள் பெருமை பீற்றி கொள்ளுமளவு இதை ஆத்திகத்தின் வெற்றியாக பார்க்கும் அளவு பார்ப்பனியத்தின் புல்லுருவித்தனங்களை அறியாதவர்கள் தான் பெரும்பான்மையான மக்கள்.
மக்கள் இனிப்புகளை வாங்கி செல்வதெல்லாம் நாத்திகத்தின் தோல்வியாக நினைப்பதின் மூலம் உங்கள் மனம் நிம்மதியடையுமென்றால், அதை நான் ஏன் கெடுப்பானேன்.
சர்க்கரை நோய் அதிகமாகியிருப்பதும், டாஸ்மாக் வியாபாரம் அதிகமாகியிருப்பதும் கூட ஆத்திகத்தின் வெற்றியாக இருந்துவிட்டு போகட்டுமே!

Monday, October 16, 2017

அபத்தத்தை எப்படி மக்கள் நம்புகிறார்கள்

கேள்வி: ஹீலர் பாஸ்கர், செந்தமிழன் போன்றவர்கள் பேசுவதை ஒருநிமிடம் கூட கேட்கமுடியவில்லை. அபத்தத்தின் உச்சமாக இருக்கிறது. இந்த அபத்தத்தை எப்படி மக்கள் நம்புகிறார்கள்?
பதில்: மக்களின் உளவியல் மிகவும் சாதாரணமானது. கை பெருவிரலில் ஆணுறையை மாட்டிக்கொண்டால் எய்ட்ஸ் வராது எனச் சொன்னால் நிறைய பேர் நம்பி அப்படியே செய்வார்கள். ஏனெனில் ஆணுறையை மாட்ட வேண்டிய இடத்தில் மாட்டுவதை விடவும் கட்டைவிரலில் மாட்டுவது எளிது.
மக்கள் பின்பற்றுவதற்கு கடினமான சரியான உண்மையைவிடவும், பின்பற்ற அதிக உழைப்பு தேவைப்படாத எளிமையான பொய்யை நம்பும் மனநிலை உடையவர்கள். ஆங்கில மருத்துவத்திற்கு மாற்றாக அதைவிட கடினமான விஷயங்களை முன்வைத்தால் ஒருபயல் பின்பற்ற மாட்டான். அதனால்தான் இந்த ஹீலர்கள் உயிர்வாங்கும் பெரிய நோய்களுக்கு கூட மிக மிக எளிமையான தீர்வுகளாக கொடுப்பார்கள். கேன்சர் என்றால் கூட காலேல ரெண்டு ஸ்பூன் பூண்டை மெனறு தின்னுங்கள் என்பார்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம் உடற்கூறு, மருத்துவம் பற்றிய மக்களின் அறியாமை. மூடநம்பிக்கை ஒழிப்பு போராளியும், மனநல மருத்துவருமான டாக்டர் ஆபிரகாம்கோவூரின் case study ஒன்று உண்டு. ஒரே ஒரு மொழி மட்டுமே பேசத்தெரிந்த சிறுமி ஒருத்தி திடீரென ஒருநாள் காலையில் ஆங்கிலம், இந்தி, அரபி உள்ளிட்ட பத்து மொழிகளில் சரளமாக பேசத்துவங்கினாள். சுற்றி இருந்தவர்களுக்கு ஆச்சரியம். அவள் மொழிப்புலமையை நம்பத்துவங்கி அவளுக்கு அபூர்வ சக்தி வந்துவிட்டதாக நம்பினார்கள்.
டாக்டர் கோவூர் அவளை பரிசீலித்தார். அரபி, இந்தி பேசும்போது அவரும் வியந்தார். பின்னர் அவள் ஆங்கிலம் பேசும்போது அவளுக்கிருப்பது அபூர்வ சக்தி அல்ல மனநோய் என கண்டுகொண்டார். ஏனெனில் அவள் ஆங்கிலம் உட்பட அனைத்து மொழிகளையுமே கொஞ்ச கொஞ்ச வார்த்தைகளை தெரிந்துகொண்டு அர்த்தமே இல்லாமல் தப்புந்தவறுமாக, அதே நேரத்தில் சரளமாக பேசியிருக்கிறாள். அவள் பேசிய மொழிகள் அவளைச் சுற்றி இருந்த யாருக்குமே தெரியாதென்பதால் அவளுக்கு வந்திருப்பது அபூர்வ சக்தி என வியந்தார்கள். ஆங்கிலம் தெரிந்த டாக்டர் அவள் ஆங்கிலம் பேசும்போது உண்மையைக் கண்டுகொண்டார்.
அப்படித்தான் இந்த ஹீலர்களும், செந்தமிழன் வகையறாக்களும் பேசும் உடற்கூறும், மருத்துவமும். பொதுமக்கள் அவர்கள் சரளமாக பேசுவதைக் கேட்டு வியப்பார்கள். இவ்வளவு உறுதியாகச் சொல்கிறாரே என நம்புவார்கள். அதாவது அந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அவளைச் சுற்றி இருந்தவர்கள் நம்பியதைப் போல. ஆனால் உண்மையான மனித உடலை அறுத்துப் பார்த்து படித்த டாக்டர்களுக்கு செம்ம கடுப்பாக, கோபமாக இருக்கும்.
பொதுமக்கள் தங்கள் அறிவை, அதாவது யாரை நம்பவேண்டும் என்கிற பகுத்தறிவை வளர்த்துக் கொள்ளவில்லை என்றால் கொத்துக் கொத்தாக தாங்களும் மடிந்து, தங்கள் குழந்தைகளும் மடிவதைக் காணும் அவல நிலைக்கு உள்ளாகுவதையன்றி வேறு நிலை ஏற்படாது.

ராஜராஜ சோழன் முப்பாட்டன்

அன்புள்ள தமிழ்நாஜித் தம்பி!
ராஜராஜ சோழன் உனக்கு ஒரு முப்பாட்டன்.
உங்கப்பாவோட பாட்டன் ஒரு முப்பாட்டன். அதாவது நிஜ முப்பாட்டன்.
உன் நிஜ முப்பாட்டன், உன் ராஜராஜ சோழன் முப்பாட்டன் காலத்துல பொறந்திருந்தா உன் ராஜராஜசோழன் முப்பாட்டன் உன் நிஜ முப்பாட்டன ஊருக்குள்ளயே விட்ருக்க மாட்டான். நிமிர்ந்து பார்த்தாலே நெஞ்சுல மிதிச்சிருப்பான். சுண்ணாம்பு கால்வாய்ல போட்டு வேகவச்சுருப்பான்.
அதாவது உன் ராஜராஜ சோழன் முப்பாட்டன் காலத்துல நீ ராஜராஜ சோழனை மட்டுமில்ல, உனக்கு மேல இருந்த சாதில எவனையுமே முப்பாட்டன்னு கூப்ட்ருக்க முடியாது. கூப்டுருந்தீனா நாக்கை இழுத்து வச்சு அறுத்துருப்பான் உன் முப்பாட்டன்.
ராஜராஜசோழனை விடு, 1900கள்ல கூட நீ எவனையுமே முப்பாட்டன்னு கூப்ட்ருக்க முடியாது. தோலை உரிச்சிருப்பாய்ங்க.
போறவன் வர்றவன், இருக்கவன் செத்தவன், எல்லாத்தையும் நீ முப்பாட்டன்னு இப்ப கூப்பிடுற உரிமையை உனக்கு வாங்கி கொடுத்ததே திராவிட இயக்கம். நீ என்னடான்னா ஆயிரம் ஆயிரம் வருசமா உன்ன மனுசனா கூட மதிக்காதவனை எல்லாம் முப்பாட்டன்னு கூப்டுகிட்டு, உன் சுயமரியாதைக்காக ஊர் ஊரா மூத்திரச் சட்டிய தூக்கிட்டு திரிஞ்ச கிழவனை திட்டிட்டு திரியிற!!!
இந்த லட்சணத்துல தமிழர் பெருமை, முப்பாட்டன் பெருமை, வீரவணக்கம், புகழ்வணக்கம்னு தெருத்தெருவா போஸ்டர் வேற! போங்கடாங்...

அடிமை தரகர்தான் ராஜராஜசோழன்

தேவதாசி முறையையும், வர்ணாசிரம தர்மத்தையும் நிறுவனமயமாக்கி பார்ப்பனர்களுக்கு நிலத்தையும், தமிழ் பெண்களையும் அள்ளி வழங்கிய அடிமை தரகர்தான் ராஜராஜசோழன். ஒரு இனத்தையே சாதிக்கு அடிமையாக்கிவிட்டு, அவ்வினத்திடமே அதிக வரிக்கொள்ளையடித்து மிக அழகான, பிரம்மாண்டமான கோவிலை எழுப்பிவிட்டால் எல்லா பாவமும் தீர்ந்துவிடுமா? சரி அதோடாவது விட்டானா? சமண மத துறவிகளாய் மாறி இருந்த பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட பெண்களை தேவசாதிகளாக்கி கோவிலை நிரப்பினான் அந்த அயோக்கியன். அவனை எல்லாம் தமிழ் மன்னன் எனச் சொல்வதில் நிஜத்தில் நாம் அவமானம் கொள்ளவேண்டும். இவன்லாம் ஒரு மன்னன், இவனுக்கு முப்பாட்டன் என புகழாரம் வேறு. இதைச் சொன்னால் இந்த முட்டாள் தமிழ்நாஜிக்கள் கலைஞர் அரசு நடத்திய ராஜராஜசோழன் விழாவைப்பற்றி கேட்கிறார்கள். அந்த விழாவையும், அவ்விழாவில் பத்மா சுப்பிரமணியத்தை மேடையில் ஆடவிட்டுவிட்டு, பறையிசைக் கலைஞர்களை கீழே வாசிக்கவிட்ட அவலத்தை அப்போதே விமர்சித்து எழுதினேன். கனிமொழி நடத்திய சங்கமம் நிகழ்ச்சியில் பறையிசை கலைஞர்கள் முறையான மரியாதை பெறுகிறார்கள் என பாராட்டியபோதும் அந்நிகழ்வை நினைவுகூர்ந்தேன். தப்பு யார் செய்தாலும் தப்புதான்.
நான் அடிக்கடி சொல்வதைப் போல, அண்ணாவை விட, கலைஞரை விட பெரியார் இதுமாதிரி விஷயங்களில்தான் ஒருபடி உயர்ந்து நிற்கிறார். கண்ணகி எனும் பெண்ணடிமைத்தன சின்னத்திற்கு சிலை வைத்தபோது முதல் கண்டனம் பெரியாரிடமிருந்தே வந்தது. அவர் அயோக்கியத்தனத்தை அயோக்கியத்தனம் என்பார். மொழியோ, இனமோ, நட்போ எதுவோ அவரை தடுத்ததே இல்லை. He never failed to call a spade a spade. King Rajaraja chozha was nothing but a criminal and a brahminical slave. Period.

யாழ்பாண இளைய தலைமுறை சினிமா மோகம்

உலகின் அறிவான இனம் என 3J சொல்வார்கள்,
Jews, Japanese , Jaffna (யாழ்பாணம்)
அதில் நாங்களும் ஒன்று என மார்தட்டிகொண்டிருந்தது யாழ்பாணம்
அதில் கொஞ்சம் உண்மையும் அன்று இருந்தது, கல்வியில் அவர்கள் சிறந்து விளங்கினார்கள், உலகெல்லாம் பெரும் பதவியில் அமர்ந்தார்கள், இன்றும் உலக பெரும் கோடீஸ்வரர்களில் ஈழதமிழர் உண்டு
நினைத்தால் பணம் கொடுத்தே இஸ்ரேலிய லேண்ட் பேங்க் பாணியில் அவர்கள் ஈழம் வாங்கியிருக்கலாம், சாத்தியம் இருந்தது. ஆனால் ஏனோ செய்யவில்லை
அப்படிபட்ட பெரும் தமிழ்பற்றும், கல்வியும், செல்வமும் கொஞ்சம் கர்வமும் நிரம்ப இருந்த யாழ்பாணம் புலிகள் காலத்தில் நாசமாயிற்று
படித்தவர்களையும் சிந்தனையாளர்களையும் குறிவைத்து கொன்ற புலிகளின் ஆட்சியும் வீழ்ச்சியும் அந்த யாழ்பாணத்தை நாசமாக்கிவிட்டது.
கடும் யுத்தம் விட்டுசெல்லும் சுவடான போதை, கூலிப்படை, வெட்டு குத்து இன்னபிற விவகாரங்களில் சிக்கி தவிக்கின்றது யாழ்பாணம்
இனி மீண்டும் யாழ்பாணம் தன் பொற்காலத்தை எட்ட நெடுநாட்கள் ஆகலாம் எனும் நிலை இருக்கும்பொழுது இப்பொழுது ஒரு விவகாரம் அந்த நம்பிக்கையிலும் மண் அள்ளி போடுகின்றது
அதாகபட்டது யாழ்பாண இளைய தலைமுறை சினிமா மோகத்தில் திரிகின்றதாம், இது அங்கு தம் பழம்பெருமையினை எண்ணி கண்ணீர் விடும் சில நல்ல தமிழர்களின் கண்களில் மிளகாய் தூவியிருக்கின்றது
ஆம், அஜித்திற்கும் விஜய்க்கும் இப்ப்பொழுது அங்கு ரசிகர் மன்றங்கள் திறந்திருக்கின்றார்களாம்
விரைவில் அவர்கள் மோதிகொள்ளும் அளவில் நிலமை தீவிரமாகின்றதாம்
சிங்களனோடு ஈழத்திற்கு மோதிய காலம் போய், இப்பொழுது யாழ்பாணத்தில் அஜித் கொடி பறப்பதா விஜய் கொடி பறப்பதா என சண்டை வருகின்றது.
இதில் விஜய் யாழ்பாண மருமகன் என்பதால் அவருக்கு வாய்ப்பு அதிகமாம்.
இதனை எல்லாம், இந்த திருமா வளவன்,வைகோ, வேல் முருகன், திரு முருகன் எல்லாம் கண்டிக்க மாட்டார்கள்
இங்கு "இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை" என கத்தி, செங்கொடி, விக்னேஷ், முத்துகுமார் என பல உயிர்களை உசுப்பேற்றி இழக்க வைத்தவர்களும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
அவர்களே விஜய், அஜித் என கைதட்டி குத்தாட்டம் ஆட கிளம்பிய பின் என்ன போர்குற்றம்? என்ன ஈழம்? என்ன மண்ணாங்கட்டி
அவர்கள் அஜித் படத்திற்கு கைதட்டும்பொழுதுதான் இங்கு திருமுருகன் காந்தி மெரினாவில் மெழுகு கொழுத்தபோனார், எப்படி இருக்கின்றது பார்த்தீர்களா?
அங்கிள் சைமன் இந்தியா என்றால் பொங்குவாரே அன்றி, சினிமா விஷயம் என்றால் மகா சைலண்ட்.
அதுவும் ஈழ தமிழ்பிள்ளைகள் பற்றியெல்லாம் ஹிஹிஹிஹீஹிஹ்
இதுபற்றி மனம் கனத்த ஒரு ஈழநண்பர் சொன்னார்
"எப்படி இருந்த நாங்கள் எப்படி நாசமாகிவிட்டோம் பார்த்தீர்களா?
அந்த ராமசந்திரன் முதல் இந்த சைமன் வரை சினிமாக்காரர்கள் எங்கள் பிரச்சினைகளை பேசியதுதான் இன்று இப்படி விபரீதம் எல்லாம் வர காரணம், சினிமாக்காரன் பேசி பேசி ஈழமும் தமிழகம் போல சினிமாதனமாகிவிட்டது
கொஞ்சம் கவனியுங்கள்
புலிக்கொடி பறந்த இடத்தில் விஜய் கொடி, அஜித் கொடியா? வெட்கமாக இல்லை என ஒரு குரல் தமிழகத்திலிருந்து வருகின்றதா இல்லை
ஈழத்திற்கு குரல் கொடுக்கின்றோம் என தமிழக சினிமாக்காரன் நடிக்க, அதனை நம்பிய ஐரோப்பிய ஈழதமிழன் படம் தயாரிக்க இப்படி எல்லாம் வியாபாரம்
இனி யாழ்பாணமும் அவர்களுக்கொரு மார்கெட் அவ்வளவுதான்,
யாழ்பாண தமிழன் தயாரிப்பாளனாகவும் இந்திய தமிழன் சினிமா உருவாக்கத்திலும் இணைந்து இப்பொழுது ஈழபோராட்டம் முழுக்க வியாபாரமாகிவிட்டது
உங்களுக்கு தெரியுமா தம்பி, திராவிட முன்னேற்ற கழகம் அக்காலத்தில் பெரும் எதிர்பார்ப்பை கொடுத்தது. ரஷ்ய புரட்சி இயக்கம் போல கருதபட்டது
ஆனால் சினிமாக்காரர்களை உள்ளே விட்டு அது இன்றைய தமிழக வீழ்ச்சிக்கு அடிகோலியது
துரதிருஷ்ட வசமாக ஈழபிரச்சினையும் அதில் சிக்கிவிட்டது.
தமிழகத்தை மோசமாக்கிய சினிமா இனி யாழ்பாணத்தின் மிச்ச மீதியினையும் நாசமாக்க வந்தாகிவிட்டது
ஈழம், தொப்புள் கொடி இப்படி எல்லாம் சினிமாகாரன் பேசுறது எல்லாம் மோசடி தம்பி, எல்லாமே நாடகம்.
பணம் ஒன்றே பிராதானம்"
ஆக யாழ்பாணத்தானே அஜித், விஜய் படங்களுக்கு கைதட்டிகொண்டு நான் இலங்கையன் என சொல்லிகொண்டிருக்கும்பொழுது இங்கு சைமன் கோஷ்டி, கவுதமன் கோஷ்டி, திருமுருகன் கோஷ்டி எல்லாம் இந்தியா ஈழத்தை அழித்தது, இந்தியா நம் இன எதிரி என சொல்லிகொண்டிருந்தால் அவர்களை தூக்கி போட்டு மிதிக்க வேண்டாமா
எவண்டா அது "இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை" என கத்தியது?
எதற்கு விடுதலை? விஜயினை இன‌ முதல்வராக்கவா?

ராஜராஜ சோழன் முப்பாட்டன்

அன்புள்ள தமிழ்நாஜித் தம்பி!
ராஜராஜ சோழன் உனக்கு ஒரு முப்பாட்டன்.
உங்கப்பாவோட பாட்டன் ஒரு முப்பாட்டன். அதாவது நிஜ முப்பாட்டன்.
உன் நிஜ முப்பாட்டன், உன் ராஜராஜ சோழன் முப்பாட்டன் காலத்துல பொறந்திருந்தா உன் ராஜராஜசோழன் முப்பாட்டன் உன் நிஜ முப்பாட்டன ஊருக்குள்ளயே விட்ருக்க மாட்டான். நிமிர்ந்து பார்த்தாலே நெஞ்சுல மிதிச்சிருப்பான். சுண்ணாம்பு கால்வாய்ல போட்டு வேகவச்சுருப்பான்.
அதாவது உன் ராஜராஜ சோழன் முப்பாட்டன் காலத்துல நீ ராஜராஜ சோழனை மட்டுமில்ல, உனக்கு மேல இருந்த சாதில எவனையுமே முப்பாட்டன்னு கூப்ட்ருக்க முடியாது. கூப்டுருந்தீனா நாக்கை இழுத்து வச்சு அறுத்துருப்பான் உன் முப்பாட்டன்.
ராஜராஜசோழனை விடு, 1900கள்ல கூட நீ எவனையுமே முப்பாட்டன்னு கூப்ட்ருக்க முடியாது. தோலை உரிச்சிருப்பாய்ங்க.
போறவன் வர்றவன், இருக்கவன் செத்தவன், எல்லாத்தையும் நீ முப்பாட்டன்னு இப்ப கூப்பிடுற உரிமையை உனக்கு வாங்கி கொடுத்ததே திராவிட இயக்கம். நீ என்னடான்னா ஆயிரம் ஆயிரம் வருசமா உன்ன மனுசனா கூட மதிக்காதவனை எல்லாம் முப்பாட்டன்னு கூப்டுகிட்டு, உன் சுயமரியாதைக்காக ஊர் ஊரா மூத்திரச் சட்டிய தூக்கிட்டு திரிஞ்ச கிழவனை திட்டிட்டு திரியிற!!!
இந்த லட்சணத்துல தமிழர் பெருமை, முப்பாட்டன் பெருமை, வீரவணக்கம், புகழ்வணக்கம்னு தெருத்தெருவா போஸ்டர் வேற! போங்கடாங்...

Thursday, October 12, 2017

அறிவியற் கண்டுபிடிப்புகள் - பிற்காலத்தில் கற்பனை பீதியை உண்டாக்கும்

கேள்வி: இயல்பாக நடக்கும் அறிவியற் கண்டுபிடிப்புகள், அதன் பயன்பாடுகள், தொழிற்புரட்சியின் தாக்கம், வணிகம், தொழில் போட்டி, தேசபக்தி, அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றை பிற்காலத்தில் கற்பனை கலந்து பீதியை உண்டாக்கும் வண்ணம் பரப்ப இயலுமா? மக்கள் அதை நம்புவார்களா?
பதில்: நீங்கள் திருப்பூரில் ஒரு ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் நடத்துவதாகவும் உங்கள் சகோதரர் கோவையில் ஒரு ஃபவுண்ட்ரி ஆலை நடத்துவதாகவும் வைத்துக்கொள்வோம். உறவினர்கள், நண்பர்களின் சின்னச்சின்ன யூனிட்கள் மூலம் ஜாப் ஒர்க் செய்து பிழைப்பு நடத்தி வருகிறீர்கள். திடீரென இந்தியாவுக்கும் பக்கத்து நாட்டுக்கும் போர் மூள்கிறது என்று வைத்துக்கொள்வோம். நாடே பரபரப்பாக யுத்தத்தை கவனிக்கிறது, குடிமகன்கள் எல்லோரும் தன்னாலான உதவிகளை செய்வதன் மூலம் தாய்நாடு போரில் வெற்றிபெறவேண்டும் என துடிக்கிறார்கள். அந்த நேரத்தில் இராணுவ வீரர்களுக்கு போர்க்கள உடைகளைத் தைக்கும் வசதி உங்கள் ஆயத்த ஆடை நிறுவனத்தில் இருப்பதால் இராணுவத்தினர் உங்களுக்கு பெரிய ஆர்டரைத் தருகிறார்கள். போருக்கு நேரடியாகச் செல்ல முடியவில்லை என்றாலும் நெஞ்சில் தேசியக்கொடியைக் குத்தியவாறே கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இராணுவம் கேட்டதைவிட அதிக தரத்தில் ஆடைகளை தயாரித்து அனுப்பி வைக்கிறீர்கள். உங்கள் ஊழியர்களும் காலை மாலை ஒரு மணிநேரம் கூடுதலாக உழைத்து தேசத்தற்கு தங்களாலான சேவையை நல்குகிறார்கள்.
ஆடை தயாரிப்பில் மிச்சம் விழும் கட்டிங் வேஸ்ட் துணிகளைக்கூட இராணுவம் தளவாடங்களைத் துடைக்கப் பயன்படும் என வாங்கிச் செல்கிறது. உங்களது சகோதரர் நடத்தும் பவுண்ட்ரியும் போர்க்கருவிகளின் உதிரி பாகங்களை தயாரித்து இராணுவத்துக்கு அனுப்பி யுத்தத்துக்கு உதவுகிறது. நாடு போரில் வெல்கிறது. போருக்கு உதவிய நிறுவனங்கள், வங்கிகள், அரசாங்க & தனியார் ஊழியர்கள், தொழிலதிபர்கள் எல்லோரும் பெருமிதத்துடன் கர்வத்துடன் மிடுக்காக வலம் வருகிறார்கள். இராணுவ ஆர்டர் கிடைத்த நிறுவனங்கள் பெருநிறுவனங்களாகின்றன. நாட்கள் மகிழ்ச்சியாக செல்கின்றன. ஊடகங்கள் மக்கள் மகிழும்வண்ணம் செய்திகளை வெளியிட்டவாறே இருக்கின்றன.
யுத்தம் நடக்கும்போது இராணுவத்துக்கு சப்ளை செய்யமுடியாது என்று நீங்கள் மறுப்பதாக வைத்துக்கொள்வோம். மறுநாளே தேசத்துரோகி, அந்நிய நாட்டு கைக்கூலி என்று முத்திரை குத்தப்படுவீர்கள். வழக்கமாக நடக்கும் அத்தனை அரசாங்க நெருக்கடிகளும் தரப்படும். தேசத்துரோகி என்பதால் உங்களது சப்ளையர்கள், வாடிக்கையாளர்களே விலகுவார்கள். அல்லது ஒருகட்டத்தில் நிறுவனம் அரசுடைமையாக்கப்பட்டுவிடும். உங்களை ஆதரிப்பவர் யாருமின்றி அநாதையாக சொந்த நாட்டிலேயே சாக நேரிடலாம். நடைமுறை என்னவோ இப்படித்தான் இருக்கும்.
ஆனால் பின்னாளில் வரும் அரைகுறை அறிஞர்கள் நீங்களும் உங்கள் சகோதரரும் யுத்தத்துக்குத் தேவையான நாசகார பொருட்களை தயாரித்து இராணுவத்துக்கு வழங்கி பல இலட்சம் அப்பாவி மக்களை அண்டை நாட்டில் படுகொலை செய்ய துணைபோனதாகவும், கட்டிங் வேஸ்ட் துணிகளைக்கூட விற்று காசு பார்த்ததாகவும், ஊழியர்களை மனசாட்சியே இல்லாமல் ஓவர்டைம் பார்க்க வைத்ததாகவும், உங்களது நிறுவனத்துக்குத் தேவையான ஜாப் ஒர்க் ஆர்டர்களைக்கூட உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கி கொள்ளை இலாபம் பார்த்ததாகவும், இதற்கு பல வங்கி அதிகாரிகள் துணைநின்றதாகவும், பின்னாளில் அவர்களும் பதவி உயர்வு பெற்று பெருவாழ்வு வாழ்ந்ததாகவும் எழுதுவார்கள்.
பிற்காலத்தில் இதை மல்லாக்கப் படுத்துக்கொண்டு வாட்சப்பில் படிப்பவர்களுக்கு இரத்தம் கொதிக்கும். இன்னொருவாட்டி படித்துப் பார்த்து இனப் படுகொலைக்கு துணைபோன இலுமினாட்டி என்று ஓலமிடுவார்கள்.
காற்றில் 78% நைட்ரஜன் இருந்தாலும் தாவரங்களால் அதை நேரடியாக கிரகிக்க இயலாது. விலங்குகளின் செல்களில் உள்ள புரதத்துக்கும் நைட்ரஜன் அடிப்படை. மக்கள்தொகை பெருக ஆரம்பித்ததால் வேட்டையாடி உண்பது நடைமுறைக்கு ஒத்துவராது என்பதால் விவசாயம் செய்து தானியங்களை சேமித்துவைத்து உண்ணவும், வியாபாரம் செய்யவும் ஆரம்பித்தார்கள். தொடர்ந்து விவசாயம் செய்ததால் மண்ணில் நைட்ரஜன் குறைய ஆரம்பித்தது. சாணங்களாலும், தாவரக் கழிவுகளாலும் நைட்ரஜன் எடுக்கப்படும் வேகத்துக்கு திருப்பியளிக்க முடியவில்லை.
அந்த காலகட்டத்தில் சிலி நாட்டில் அடகாமா பாலைவனத்தின் மணலில் சோடியம் நைட்ரேட் படிவுகள் இருந்ததால் கப்பல் கப்பலாக மணலை அள்ளிச் சென்றார்கள். சில வருடங்களில் மணலே இல்லாத பாலைவனமாகிவிடுமோ என்று பூகோளவியலாளர்கள் கவலைப்பட்டார்கள். அங்கிருந்த மக்கள், சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பு உண்டாகும் என அஞ்சினார்கள்.
அந்நேரத்தில் குறைவான வினைபடுதிறன் கொண்ட நைட்ரஜனை ஹைட்ரஜனுடன் வினைபுரிய வைத்து அம்மோனியாவை செயற்கையாக உண்டாக்குகிறார் ஃப்ரிட்ஸ் ஹேபர் என்ற விஞ்ஞானி. இதற்காக 1918-இல் நோபல் பரிசு பெறுகிறார். இதனடிப்படையில் Haber - Bosch process உருவாகிறது. காலங்காலமாக இருந்து வந்த அம்மோனியா, நைட்ரேட் தேவையை Haber Bosch process மூலமாக நிறைவேற்ற பல ஆய்வகங்கள் முற்பட்டன. தொடர்ந்து பல மூலக்கூறுகளை, ஆய்வு முறைமைகளை ஃப்ரிட்ஸ் ஹேபர் தலைமையிலான குழு கண்டறிகிறது.
BASF, Bayer, Hoechst போன்ற நிறுவனங்களின் இணைப்பில் உருவான IG Farben கம்பெனி, சயனைடு அடிப்படையில் ஃப்ரிட்ஸ் ஹேபர் கண்டுபிடித்த Zyklon B எனும் இரசாயனத்துக்கு தானிய கிட்டங்கிகளில் பூச்சிகளைக் கொல்லும் fumigant-ஆக பயன்படுத்த காப்புரிமை வாங்கி வைத்துக்கொள்கிறது. ஹேபர் ஆரம்பித்த Degesch என்ற கம்பெனியே கடைசியில் IG Farben நிறுவனத்திடம் Zyklon Bயைப் பயன்படுத்த லைசன்ஸ் வாங்கி அமெரிக்காவில் கப்பல்களில் வரும் தானியங்களுக்கு fumigation செய்ய சப்ளை செய்கிறது. பின்னாளில் IG Farben கம்பெனி BASF, Bayer நிறுவனங்களுக்குள் கரைந்துபோனது. அதன் தலைமை அலுவலக கட்டிடம் இன்று University of Frankfurtஇன் நிர்வாக கட்டிடமாக மாறி ஆராய்ச்சிகளைத் தொடர்கிறது. அந்த காலகட்டத்தில் ஐரோப்பாவில் பல விஞ்ஞானிகள் நோபல் பரிசுகளைக் கூடையில் அல்லாத குறையாக வாங்கிக் குவிக்கிறார்கள்.
உலகப்போர் நடக்கும்போது ஹிட்லரின் இராணுவத்தினர் இந்த Zyklon Bயை பெருமளவில் வாங்கி யூதர்களின் முகாம்களில் விஷவாயுவாக செலுத்தி படுகொலை செய்கிறார்கள். ஹேபரின் Degesch கம்பெனியும் கரைந்துபோனது. போருக்கு உதவ மறுத்த பல விஞ்ஞானிகள் காணாமல் போனார்கள். சிலர் அமெரிக்கா ஓடிப் போனார்கள்.
அமெரிக்காவில் ஒரு தம்பதியினர் விதைகளை அக்கம்பக்கத்தில் உள்ள விவசாயிகளிடம் விற்று பிழைப்பு நடத்தி வந்தனர். வியாபாரம் நன்றாக இருந்ததால் Queeny Monsanto என்ற அந்த பெண்மணியின் பெயரிலேயே மான்சாண்டோ என்ற பெயரில் ஒரு கம்பெனி ஆரம்பித்து விதை வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர். பின்னாளில் அது ஒரு பெரிய நிறுவனமாகிறது. அந்நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்த களைக்கொல்லியின் விற்பனையும் அமோகமாக நடந்து வந்தது.
அப்போது வியட்நாம் போர் வருகிறது. கொரில்லா தாக்குதலில் அனுபவம் இல்லாத அமெரிக்கப் படை பலத்த அடி வாங்குகிறது. எப்படி தேடினாலும் வியட்நாம் வீரர்களை நெருங்க முடியவில்லை. ஒரு தளபதிக்கு புதிய யோசனை வருகிறது. மான்சான்டோவின் களைக்கொல்லியை பெரிய பேரல்களில் வரவழைத்து ஹெலிகாப்டர் மூலமாக காடுகளின்மீது தெளிக்கிறார்கள். சில நாட்களில் இலைகள் உதிர்ந்த பின்னர் வியட்நாமிய வீரர்களின் முகாம்களின் மீது வான்வழித் தாக்குதல் நடத்துகிறார்கள். அப்போது ஆரஞ்சு நிற பேரல்களில் வரவழைக்கப்பட்ட களைக்கொல்லியானது ஏஜென்ட் ஆரஞ்சு என்றே அழைக்கப்பட்டது.
எல்லாப் போர்களும், இன அழித்தொழிப்புகளும், காலனிகளும் குரூரமானவையே. போர் என்று வந்துவிட்டால் எல்லாவிதமான போர் முறைகளும் நியாயப்படுத்தப்படும். அதில் உயிரோடு மீண்டு இருப்பது மட்டுமே வரலாறாகக் கருதப்படும். யுத்தத்தை ஆதரித்து உயிரோடு இருக்கவேண்டும், இல்லாவிட்டால் சாகவேண்டும். தேசபக்தி என்பது அவ்வாறுதான் பயிற்றுவிக்கப்படும். போரை எதிர்க்கும் தனிநபர்கள் தினசரி நடவடிக்கைகள்கூட யுத்த ஆதரவு செயலாகவே முடியும்.
இயல்பாக நடந்துவரும் அறிவியல் ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் எல்லாமே நாடுகளால் தேச பாதுகாப்பு, அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படும். அணு ஆராய்ச்சி, தொலைத் தொடர்புக்கருவிகள் முதல் தானியங்கள்வரை அத்தனையும் தேச நலனுக்காகவே அர்ப்பணிக்கப்படும். அதில் இராணுவம், போர் என்பதும் ஓர் அங்கம்.
அம்மோனியா, நைட்ரேட் போன்றவை வெடிமருந்துக்கு பயன்பட்டதோடு விவசாயத்துக்கும் பயன்படுத்தப்பட்டது. போர்களில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளைவிட பாறைகள், மலைகளை உடைத்து சாலைகள், தண்டவாளங்கள், பாலங்கள், அணைகள், குடியிருப்புகள் அமைக்க பயன்படுத்தப்பட்டவையே உலகளவில் அதிகமான ஒன்றாகும். ஆனாலும் வெடிமருந்து என்றாலே ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது வீசவே தயாரிக்கப்படுவதாக கற்பிதம் செய்யப்படுகிறது.
உலகம் அறிவியல் கண்டுபிடிப்புகள், வர்த்தகம், நாடு பிடிக்கும் போட்டிகள் என வேறு திசைகளில் பயணித்துக்கொண்டிருந்தபோதும் இந்தியாவில் ஓடுகிற ஆற்றுநீரில் குளித்தாலே, வீதியில் நடந்து சென்றாலே தீட்டுப்பட்டுவிடும் என்ற அளவில் வாழ்ந்துகொண்டிருந்தோம். ஆங்கிலேயர் காலனி வருகைக்கு முன் பஞ்சமே வந்த்தில்லை என இன்றும் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு தானியங்களை, எண்ணையை மற்றும் பலவற்றை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம்.
வெடிமருந்தை விவசாயத்துக்கு விற்ற வெள்ளைக்காரத் துரோகியே என திண்ணைகளில், சாவடிகளில் உட்கார்ந்து அறைகூவல் விடுக்கிறோம். இரண்டாயிரம் வருடத்துக்கும் மேலான வேளாண் வரலாறு கொண்ட சமூகம் ஏன் எலிக்கறி தின்று, அம்மணமாக நின்று வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்யச் சொல்லி கையேந்துகிறது என்று சிந்திக்க மறுக்கிறோம். சங்க இலக்கியத்தில் சொட்டுநீர்ப்பாசனம் குறித்த தகவல் இருக்கிறது என்கிறோம்; ஆனால் சொட்டுநீர்க்குழாய்க்கான sand filter தொழில்நுட்பம் இஸ்ரேலிலிருந்து வர வேண்டியிருக்கிறது. இதன் பின்னாடி இலுமினாட்டி இருக்கிறான் என்கிறோம், மெக்காலே கல்வியால் கெட்டது என்கிறோம், அந்நிய சக்தி என்கிறோம்.
எல்லாம் தெரிந்திருந்தும் பகுத்தறிவுக்கு முரணான முடிவுகளை ஏன் எடுக்கிறோம் என்பதைச் சொல்லி இந்த ஆண்டு ஒரு அறிஞர் நோபல் பரிசு வாங்குகிறார். இங்கே நாம் technical fault என்று சொல்லி பசப்புகிறோம். பின்னாளில் இந்த இரண்டு நிகழ்வுகளையும் வாசிக்கும் சமூகம் இன்றைய சமூகத்தைப் போலவே ஏதேதோ கற்பனைகளில் மிதக்கவே செய்யும்

Monday, October 09, 2017

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்

டவுள் இல்லை என்பவர்களுக்கு எங்கள் கோவிலில் என்ன வேலை", "கடவுளே இல்லைன்ற பகுத்தறிவாளர்கள், இயக்கங்களெல்லாம், ஏன் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக விடணும்ன்னு சொல்றாங்க..?", "சாமிதான் இல்லன்னு சொல்லறாங்களே, அப்றம் இத பத்தி அவங்க ஏன் பேசறாங்க..?"
-- சாதி வெறியும், மத வெறியும் கொண்ட சிலர், தாங்கள் என்னவோ சாமர்த்தியமாய் பேசுவதாய் நினைத்துக் கொண்டு இப்படியொரு முட்டாள்தனமான கேள்வியை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.....
கடவுள் இல்லை என்றவர்கள் தான் எல்லா சாதியினருக்கும் கோவிலுக்குள் நுழையும் உரிமையைப் போராடிப் பெற்றுத்தந்தார்கள்.
கடவுள் இல்லை என்றவர்கள்தான் சாமியின் பெயரில் நரபலி கொடுக்கும் - எளியவர்களைக் கொலைசெய்யும் வழக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்கள்.
கடவுள் இல்லை என்றவர்கள்தான் பெண்களை தேவடியாக்களாய் கோவிலுக்குப் பொட்டுக்கட்டும் வழக்கத்தை சட்டம் போட்டு தடுத்தார்கள்...
கடவுள் இல்லை என்றவர்கள் தான் சதி என்ற பெயரில் பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தடுத்து நிறுத்தினார்கள்.
கடவுள் இல்லை என்கிறவர்கள் தான், தமிழ் மொழியிலும், கடவுளுக்கு அர்ச்சனை செய்யும் உரிமையை சட்டத்தின் அளித்தார்கள்...
கடவுள் இல்லை என்கிறவர்கள் தான், கோயில் சொத்துக்களும், நிலங்களும் கொள்ளைபோவதை தடுக்க, ஹிந்து அறநிலையத்துறையை ஏற்படுத்தி அவற்றை பாதுகாத்தார்கள்.
இப்படி ஒவ்வொரு காரியம் செய்யும் போதும் " கடவுள் உண்டு" என்றவர்கள், மதவெறி கொண்டு, மூர்க்கமான வெறித்தனத்துடன் அத்தனை நல்ல காரியத்தையும் எதிர்த்தார்கள்.
எல்லா சூழலிலும் அவர்கள் உச்சமாய் கத்திய ஒரு சங்கதி என்னவென்றால் "சாமி இல்லை என்பவனுக்கு எங்கள் கோவிலில் என்ன வேலை", "கடவுளை மறுக்கும் பகுத்தறிவு இயக்கங்களுக்கு இதில் என்ன அக்கறை" என்பதுதான்.
எல்லாக் கால கட்டத்திலும் இந்த மதவெறியர்களை, சாதிவெறியர்களை மீறித்தான் இதுபோன்ற காரியங்களை, மக்கள் சமத்துவ செயல்களை, சாதித்திருக்கிறார்கள் கடவுள் மறுப்பாளர்கள். அது போலவே, முறையான பயிற்சி முடித்தவர், எந்த சாதியை சார்ந்தவராக இருந்தாலும், கோயில் அர்ச்சகர் ஆகுவதையும் சாதிப்பார்கள்.....

பேய்படங்கள்

Annabelle என்றொரு பேய்படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. நான் இன்னும் இந்த படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் எனக்கு பேய்படங்கள் மீது ஒருவித ஆழ்ந்த அவநம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.
அவநம்பிக்கை என்று இங்கே நான் literal sense சில் சொல்லவில்லை. பேய்படங்கள் அவற்றுக்கு உண்டான பவிசை இழந்துவிட்டன என்று சொல்ல வருகிறேன்.
அந்த காலத்தில் பேய் சினிமா என்றாலே அது ஒருவித கிளுகிளுப்பைத் தரும். காரணம் அவ்வளவு அட்டகாசமான கவர்ச்சி அதில் இருக்கும். ஈவில் டெட் படத்தில் கூட எந்த எந்த டைம்மில் எந்த கிளுகிளு சீன் வரும் என்று என்னால் இப்பவும் சொல்ல முடியும். பேய், ஆவிகள் என்று ஹாலிவுட் படம் வந்தாலே ஒரு மின்சாரம் பாயும் உடலில்.
இதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் இந்த ஃபீலிங்கை Late 80 s and Early 90 s சில் பேய் சினிமா பார்த்த ஆட்களால் ஆத்மார்த்தமாக உணர முடியும் என்று நம்புகிறேன்.
நமது ஆட்கள் இன்னும் ரசனையானவர்கள்..
பேயைப் பார்த்தால் பயம் வருகிறதோ இல்லையோ...அவசியம் மூடு வரும். அந்த அளவுக்கு பேயை எக்ஸ்போஸ் செய்வார்கள்.தமிழ் படத்தில் வரும் பேய்கள் பெரும்பாலும் Seducing ஜானரில் வரும் பேய்கள் தான். எப்படியும் அந்த பாழாப்போன பேயை முன் ஜென்மத்தில் / அல்லது 30 வருடம் முன்பு வில்லன் கெடுத்து கொன்றிருப்பான். அவனை பழிவாங்க வரும் பேய்கள் எல்லாம் இளம் ஃபிகர்களாக வந்து கிழடு தட்டிய அந்த ஆட்களை Seduce செய்யும். அப்படியே கில்மா சீன் போகும் நேரத்தில் பேய் தனது மேக்கப் கலைத்து கோர முகம் காட்டும்.....அப்புறம் வில்லன் சாவார் ... இது ஒரு டெம்ப்ளேட்.. அந்த வில்லன் சாவு சீன் வரும் முன்புவரை பக்கா Softcore கில்மாவுக்கு உத்திரவாதம்.
வெள்ளையுடை பேய் , சன்சில்க் ஷாம்பு போட்ட பேய் என்று ஜில்ல்ல்ல்ல் பேய்கள் தமிழ் சினிமாவில் அலாதி.
இப்படி பொதுப்படையாக பேசுவதனால் பேய் படத்தின் இன்னொரு தாக்கத்தை சொல்லப்படாமல் போய்விடக்கூடாது. அந்த காலத்தில் இத்தகைய படங்கள் தான் சிறுவர்கள் - இளைஞர்கள் இருவரையும் இணைக்கும் ஒரு பாலமாக இருந்தன என்றால் அது மிகை இல்லை.
சிறுவனாக இருப்பதனால் வெளிப்படையாக சைட் அடிக்க முடியாது. இளைஞர்கள் என்னதான் ஆசைப் பட்டாலும் வீட்டில் பொதுவில் உக்காந்து அழகிய பேய்களை ரசிக்க இயலாது..
இப்படி ஒரு இறுக்கமான சூழலை உடைக்க வந்த ஒரு பேராயுதம் தான் கில்மா பேய்கள்.
"சித்தப்பா/மாமா இன்னைக்கு கேபிள் ல பேய் படம் போடுறோம்னு எழுத்து ஓடுச்சி ..பாப்போமா...எனக்கு பயமா இருக்கும்..நைட்டு துணைக்கு கூட பாக்குறீங்களா " என்று பீடிகை ஆரம்பம் ஆகும்.
"டேய் ..பேய் எல்லாம் இல்லடா...அது பொய்.. சரி..நான் வேணும்னா துணைக்கு இருக்கேன் " என்று சொல்லி அவர்களும் சைக்கிள் கேப்பில் என்ஜாய் செய்துவிடுவார்கள். இப்படி இரு தலைமுறைக்கு இடையில் ஒரு WIn-Win ரெலேஷன்ஷிப் ஏற்படுத்தியது கில்மா பேய்கள் என்றால் அது மிகையில்லை.
வா அருகில் வா , ராசாத்தி வரும் நாள், மை டியர் லிசா ,யார் ,உருவம் , ஜமீன் கோட்டை என்று படத்தில் ஏதாவது ஒரு கிளுகிளு சீன் இருந்து வயிற்றில் பாலை வார்க்கும்.
இது மட்டுமா ?..பேய் போதாது என்று இச்சாதாரி பாம்புகள் கூட இச்சையைத் தூண்டும் நம்ம சினிமாவில். நீ யா ? ஒரு டிரென்ட் செட்டர் என்றால், மனைவி ஒரு மாணிக்கம் எல்லாம் கல்ட் மூவி....! ராதா இல்லாத படம் சாதா என்று இளைஞர்கள் தூக்கத்தில் பினாத்தும் அளவுக்கு இம்பாக்ட் ஏற்படுத்திய படம் . உருவம் பல்லவியை எத்தனைப் பேர் மறந்திருப்பார்கள் ??
"அங்க ஜில்பான்சி காட்டுறது ஒரு Reptile ..Freaking Reptile..Snake " என்று புத்தி சொன்னாலும் மனசு , பாம்பு ஆடும் பெல்லி டான்ஸ் மீது லயித்துவிடும்...மேஜிக்கல் ரியலிசம் எல்லாம் அப்பொழுதே கற்றுத் தந்தவை கில்மா பேய்கள் / கில்மா பாம்புகள்.
இதன் தாக்கத்தில் தான் "ஜென்மம் எக்ஸ் " தீம் சாங்கில் கூட Silhouette டில் அழகிய பெண் பேய்கள் சுடுகாட்டில் ஆடும்.
ஆனால் ஏதோ ஒரு யுகப்பிறழ்வு ஏற்பட்டு மெல்லமெல்ல கில்மா Quotient குறைந்து சீரியல் கூட சப்பையாக போனது.. உடல் பொருள் ஆனந்தி, கொலையுதிர் காலம் என்று கில்மா கம்மியான பேய்கள் தான் வரத்தொடங்கின..எப்படி இது நேர்ந்தது ?.இப்படிப்பட்ட ஒரு சமூக வீழ்ச்சியை ஏன் மணிரத்னம், பாரதிராஜா எல்லாம் தடுக்கவில்லை என்று மனம் அடித்துக்கொள்கிறது. பாலுமகேந்திரா மட்டும் பேய் படம் எடுத்திருந்தால் நிச்சயம் பேய் ஒரு சீனிலாவது பேன்ட் போடாமல் சுடிதார் டாப்ஸ் மட்டும் போட்டு வந்திருக்கும். பாலசந்தர் பேய் படம் எடுத்திருந்தால் ஆண்களை துக்கமாக மதிக்கும் பேய் , மகனை பழிவாங்க அப்பாவை கல்யாணம் செய்யும் பேய் வந்திருக்கும் . பாரதி ராஜா படத்தில் ஜாக்கெட் இல்லாத பேய் , பாக்கியராஜ் படத்தில் முருங்கை சூப் குடித்துவிட்டு மூடு ஏறி அலையும் பேய் , விசு படத்தில் "உமா " என்ற பெயருடைய பேய். இப்படி எத்தனை பேயை மிஸ் செய்துவிட்டோம் ? சிலுக்கை எல்லாம் பேயாக நடிக்க வைக்காத பாவத்தை தமிழ்சினிமா எங்கே போய் கழுவும் ?
பேய் படத்திற்கு என்று இருந்த அழகியலை சீர்குலைத்துவிட்டு அரண்மனை மாதிரி கில்மாவே இல்லாத பேய் படம் எடுக்கும் சமூகமாக அல்லவா மாறியிருக்கிறோம் ?
"உருவம் " என்று கரடுமுரடு பெயர் இருந்தாலும் , பல்லவி என்ற அழகிய பேய் இருக்கும் அந்த காலத்தில்..
இப்போது "காஞ்சனா " என்ற அழகிய பெயர் இருந்தாலும் லாரன்ஸ் , அண்டர்வேர் தெரியும் ராஜ்கிரண் தான் அதில் பேய்கள் என்றால் அது எவ்வளவு பெரிய கில்மா வீழ்ச்சி?
எங்கே போனது நமது கில்மா Quotient ?
சாரு நிவேதிதா சொல்லும் கலாச்சார சுரணையற்ற Philistine சமூகம் தான் இப்படி கில்மா பாரம்பரியத்தை சீர்குலைக்கும்.
ச்சே...ஆயாசமாக இருக்கிறது...
மீண்டும் Annabelle படத்துக்கே வருகிறேன் .
Annabelle படத்தில் பேய் யார் என்று கேட்டால் , ஒரு பொம்மை தான் பேய் என்கிறார்கள். என்ன அபத்தம் இது ? காமத்தை தணித்துக்கொள்ள தற்போதெல்லாம் சிலர் பிளாஸ்டிக் பொம்மைகளை தான் நாடிப்போகிறார்கள் என்று சேலம் வைத்தியர் ஒரு பக்கம் கண்ணீர் வடிக்கிறார். அவர் கூற்றை மெய் ஆக்குவதைபோல் இன்று ஒரு பொம்மையை பேய் ஆக்கி அழகு பார்க்கிறது இந்த அவல சமூகம்.
சத்தியமாய் உலகம் சீக்கிரம் அழிந்துவிடவவேண்டும் ..

ஏன் பிரிட்டிஷாரை எதிர்த்தார்கள்?

200 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள்..!
ஏன் 150 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த கிருத்தவ மிஷனரிகளை,பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்..?
1200 ஆண்டுகள் ஆண்ட முகலாய பேரரசுகள், பெரும்பான்மை மக்களை அடிமைபடுத்திய இந்து மனுதர்ம கோட்பாட்டினை எதிர்க்கவே இல்லை. ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்து கட்டினார்கள்.
அவை நாம் என்னவென்று பார்ப்போம்...
பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும், வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த இந்து மனு தர்ம்ம சட்டத்தை பிரிடிஷ்சார்கள் ஏற்றுக்கொள்ளாமல், சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிபடையில் 1773 ஆம் ஆண்டு பிரிடிஷ் அரசு சட்டத்தை எழுத தொடங்கியது.
சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை, 1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்தை வாங்கி கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.
1804யில் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது
1813 கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது
பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும் (இந்து மனு சட்டம் VII 374, 375), ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்னைணோடு உறவு கொள்ளலாம். ஆனால் அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்துவிட்டால் பிணம் போன்றதேயாகும். (இந்து மனு சட்டம் IX 178) பிராமணன் தப்புசெய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில் - - -
பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது.
சூத்தர பெண் திருமணம் முடிந்த அன்றே, பிராமணருக்கு பணிகள் பல செய்ய 7 நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும். அதை பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் 1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.
பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த இந்து சட்டத்தை 1835 ஆண்டு லாட் மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.
சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளிவிட்டு கொல்ல வேண்டும் என்ற கங்கா தானத்தை 1835-ல் பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.
1835 ஆண்டு சூத்திரர்கள் நாற்காலியில் உட்காருவதற்காண அரசாணை கொண்டுவரப்பட்டது.
1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்து மனு தர்மச் சட்டத்தை தடை செய்ய உத்திரவு பிறப்பித்தது.
இந்தியாவை மட்டும் பிரிடிஷார்கள் ஆளவில்லை ,மிஷனரிகள் வரவில்லை என்றால், சூத்திரர்களுக்கு கல்வி இல்லை,
கல்வி இல்லை என்றால் அம்பேத்கார் இல்லை, அம்பேத்கார் இல்லை என்றால் நாம் இல்லை.
சூத்திரனின் அடிமை சங்கிலியை உடைத்த கிறிஸ்தவபிரிட்டிஷார் மற்றும் மிஷனரிகளின் நற்பணிகளை நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்

Friday, October 06, 2017

சீமான் - இனவெறிக்கே உண்டான சித்தாந்தங்கள்

நாம் தமிழர் தம்பிகள் அவ்வப்போது அவர்களை விமர்சிக்கும் போது "எங்களை நீங்க புறக்கணிக்கவே முடியாதபடி விமர்சனம் பண்ணுறது தாண்டா எங்க அண்ணன் கெத்து" ரேஞ்சிக்கு பில்ட் அப் கொடுப்பதும், நாம் தமிழர்களை பார்த்தால் கதறுறாங்க என்று அவர்களுக்கு அவர்களே ஹார்டின் விட்டு கொள்வதும் அங்கங்கே நடக்கிறது.
சீமானுக்கு தேர்தல் அரசியலில் வெல்லும் சூட்சமும் தெரிந்தால், அதற்கு நாம எந்த வகையிலும் தடையாக இருக்க முடியாது என்கிற யதார்த்த அரசியல் பேசுற ஆள் தான் நான். யார் வர வேண்டும் யார் வர கூடாது என்பதை தனிநபர் முடிவு செய்ய முடியாது, ஆனா கொள்கை, அபிப்பிராயம், விமர்சனம் எல்லாம் தனிநபர் உரிமைகள்.
சீமான் ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்காமல், உள்ளே நுழையும் போதே ஏன் விமர்சனம் என்கிற கேள்வியும் politically immature தனமான கேள்விகள் தான். ஒருவரை அரசியல் ரீதியாக விமர்சனம் செய்ய அவர் நீண்ட கால ஆட்சியில் இருந்திருக்க வேண்டியதில்லை, கொள்கைகளே போதுமானது, அவர் பேசுகிற விவகாரங்கள் போதுமானது. இதில் சீமான் பேசுவது அடிப்படைவாத கருத்தியலுக்கு ஒற்று போவதால் மட்டுமே சீமானை விட்டு வெளியேறிய நிறைய முற்போக்கு தோழர்கள் இருக்கிறார்கள், ஆரம்பத்தில் இவர்களும் சீமான் பேச்சை கேட்டு சிலிர்த்து சில்லறைகளை விட்டெறிந்தவர்கள் தான்.
சீமான் பெரியாரை ஏற்று ஹிந்து மதத்தை வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருந்த காலத்தில் கூட சீமானை என்னால் ரசிக்க முடியவில்லை, ஏனினில் நீங்கள் ஒரு மதத்தை, சித்தாந்தத்தை எதிர்த்து வாதம் வைக்க வேண்டுமானால், அதில் ஆக்கபூர்வமான தரவுகள், சிந்தனைகள் இருக்க வேண்டும். கடவுளர்களை கண்டபடி வசைபாடுவதால் மட்டுமே ஒருவன் பகுத்தறிவாளன் ஆகிவிட முடியாது, அப்படி data இருந்தால் தான் இந்த சமூகத்தில் ஆக்கபூர்வமாக ஒரு கருத்தை முன்னெடுத்து செல்ல முடியும், இல்லையெனில் அது ஒரு வெறுப்புவாதமாக தான் பார்க்கப்படும்.
இப்படி வெற்றி பெற்றவர்கள் ஏராளம், தற்காலத்தில் சொல்ல வேண்டுமானால் டாக்கின்ஸ், ஸ்டீவன் ஹாக்கிங், இந்தியாவில் அம்பேத்கர் பெரியார் போல. பிரபல மனவர்களை மட்டுமே குறிப்பிடுகிறேன். இவர்கள் வரலாற்றை படித்தவர்கள், அதை பொறுத்து சித்தாந்தங்களை நிறுவியவர்கள், அம்பேத்கர் ஆய்வு செய்து இருக்கிறார், அதை ஆதாரமாக வைத்து தான் கட்டுரை எழுதினார்.
இதையெல்லாம் மறுக்க முடியாத காரணத்தினால் தான் அவர் வரலாற்றில் இந்திய சீர்திருத்தங்களுக்கு உழைத்தவர் என்பதை தாண்டி, அறிவுஜீவிகள் புறக்கணிக்க முடியாத இடத்தில் நிலைத்து இருக்கிறார்கள்.
ஆனால் சீமான், கண்ணதாசன் பேசிய நாத்திக கருத்துக்கள் அரைவேக்காட்டு தனமான கருத்துக்கள். அதில் வெறுப்பு மட்டுமே எஞ்சியது, எந்த ஆக்கபூர்வமான, அறிவுபூர்வமான விவகாரங்களையும் பேசியதில்லை. அநேகமாக கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் படித்தவர்கள், கண்ணதாசன் நாத்திகனாக இருந்த போது உதிர்த்த முத்துக்களை கேட்டிருக்க மாட்டீர்கள். நாத்திகம் ஏற்ற போதும் சரி, ஆத்திகத்தை ஏற்ற போதும் சரி, கண்ணதாசனிடம் எந்த ஆக்கபூர்வ கருத்தியல்களும் இல்லை.
அண்ணன் சீமான் அப்படியானவர் தான், கிருஷ்ணனையும், மஹா பாரத்தையும் கிழித்து தொங்க விட்டவர், ஆனால் அது வெறும் உணர்ச்சி பிழம்புகள். ஆகையால் சீமான் போன்றவர்கள் பெரியாரியத்தை ஏற்று பேசினாலும் அதில் எனக்கு சிலாகிக்க எதுவுமில்லை. பார்ப்பன ஆதிக்க சக்திகளுக்கு counter கொடுக்கத்தான் பெரியார் கடவுளர்களை திட்டினாரே தவிர, அதை தாண்டி அவர் எழுதிய சமூக நுண் அரசியல்கள் ஏராளம்.
அண்ணனுக்கு வருவோம், அண்ணன் எந்த ஆர்வத்தில் ஆரம்பத்தில் பேசினாரா, இப்போ அதற்கு எதிர்மறையான அதே ஆர்வத்துல பேசுறார் அவ்ளோ தான். எல்லா நேரமும் சமூகத்தை உணர்வு அடிப்படையில் கட்டமைக்க முடியாது. ஒரு விபத்து நடந்து இழப்புகள் நடந்தால் அங்கே உணர்வுகள் தலைதூக்கும், அந்த விபத்தை நடக்க விடாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் போது அறிவு தலைதூக்கும்.
இதான் சமூக கட்டமைப்புக்கு அடிப்படை ஆதாரம், எல்லா நேரமும் ஒருத்தன் உணர்ச்சி பொங்கி கத்திட்டு இருந்தா அவர் புரட்சியாளன் ஆகிட முடியாது. சீமானிடம் இருப்பது வெறும் இந்த உணர்ச்சியை முதலீடு செய்து, வயசு வேகத்தில் இருக்கும் விடலை பசங்களை அறுவடை செய்ததே.
அம்பேத்கர் ஆலய நுழைவு போராட்டம் பண்ணிட்டு இருக்கார், சாதி ஹிந்துக்கள் தலித்துகள் கோவிலுக்குள் பிரவேசிக்க கூடாது என்று தலித்துகளை அடிக்க ஆரம்பிக்கிறார்கள். அந்த இடத்தில் அம்பேத்கர் எத்தனை நிதானம் காத்திருந்தால், அவர் பதிலுக்கு வன்முறை கூடாது என்று கேட்டு கொள்கிறார். காரணம் அவரின் சமூக செயல்திட்டம் காலம் தாண்டியது, சாதி ஹிந்துக்களுக்கு வன்முறை புதிதல்ல, ஆனால் தலித்துகள் திருப்பி அடித்து விட்டால் அதை இந்த பொது சமூகம் எப்படி திரித்து விடும் என்பதில் கவனமாக இருந்தார், இரண்டாயிரமாண்டு வன்முறை ஒரே பதில் தாக்குதல் மூலம் "தலித்துகளும் தான் வன்முறை பன்றாங்க" என்று விடுதலை நோக்கத்தை சிதைத்து விடும் என்பது அவருக்கு தெரியும்.
சம்மந்தமில்லமால் இந்த உதாரணத்தை சொல்வதற்கு காரணம், அங்கே அடிபடும் போது சுயமரியாதையும், உணர்வுகளும் அம்பேத்கருக்கு இல்லாமலில்லை, ஆனால் அதை தாண்டி ஒரு நிதானம் வேண்டும், அப்படி நிதானத்தோடு சொல்லப்படுகிற விவகாரங்கள் தான் வரலாற்றில் இடம் பிடிக்கும். சர்வ வல்லமை படைத்த நாஜி இன வெறியனான ஹிட்லரை இந்த சமூகம் தூக்கி குப்பையில் போடவில்லையா? இன்னும் ஐநூறு ஆண்டுகள் ஆனாலும் ஹிட்லர் ஒரு அறமற்ற பொறுக்கி தான் என்று வரலாறு திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கும். இன பாசம் வெறியானது, அந்த வெறியே லச்சக்கணக்கில் கொல்ல செய்தது, ஹிட்லர் கையில் எடுத்ததும் உணர்வுகள் தான், அறிவு இல்லை.
இப்படியாக இனப்பாசத்தை உணர்ச்சி பொங்க பேசி பேசி, தமிழ் சாதிய அடையாளத்தோடு "நாங்களே ஆள்வோம்" என்று சொல்லும் போதே அது அடிப்படை வாதத்திற்குள் வந்து விட்டது. மராத்தி இன வெறியர்களான சிவ சேனா எப்படி இந்துத்துவததோடு connect ஆகிறதோ, சீமானும் அப்படி தான் சாதி ஹிந்துத்துவத்தோடு connect ஆகி விட்டார், நான் விமர்சிப்பதற்கு அதுதான் ஆதார காரணம், அவர் பேசுற சித்தாந்த கோட்பாடுகளோடு இந்த similarity பாருங்களேன்,
1. இந்தியா ஹிந்துக்களுக்கே
தமிழ் நாடு தமிழருக்கே
2. ஹிந்து மதத்தின் அடையாளம் ஹிந்து சாதிகள்
தமிழ் சமூகத்தின் அடையாளம் தமிழ் சாதிகள்
3. இஸ்லாமியர்கள் பத்தோடு பதினொன்றாக இருக்கலாம், ஆனால் ஹிந்து தேசத்தை ஹிந்து தான் ஆள வேண்டும்
மற்ற மொழிக்காரர்கள் இருக்கலாம், ஆனால் தமிழ் தேசத்தை தமிழன் தான் ஆள வேண்டும்
4. ஹிந்துக்களாக ஒன்றிணையுங்கள்
தமிழர்களாக ஒன்றிணையுங்கள்
(அடிப்படையில் இப்படி ஒன்றிணைவதில் இருக்கும் சிக்கலாக இருக்கும் சாதி முரண்பாடுகள் கண்டுக்காம, தீர்க்காம ஒன்றிணையணுமாம்)
5. மஹாபாரத போர் வரலாற்று நிகழ்வு,
பாரத போருக்கு சோறு கொடுத்தான் தமிழன்
6. கிருஷ்ணர், ராமர் இந்தியாவின் பண்பாட்டு அடையாளம்
முருகன் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம்
7. வெள்ளைக்காரன் ஹிந்துத்துவத்தை ஏற்றால் கடல் தாண்டும் இந்து பெருமை, நம்மூர்காரன் வெள்ளைக்காரன் மதத்தை ஏற்றால் அவமானம்
தமிழன் தமிழகம் தாண்டி போர் புரிந்தது பெருமை, அந்நியன் தமிழகத்தில் நுழைந்து ஏற்படுத்திய அடையாளங்கள் சிறுமை
8. தாஜ்மஹால் வந்தேறி அடையாளம், புறக்கணி
திருமலை நாயாக்கர் மஹால் வந்தேறி அடையாளம், புறக்கணி
9. இந்துத்துவத்தை இஸ்லாமியன், கிருஸ்துவன் விமர்சனம் செய்தால் கோபம், கைக்கூலிகள்
தமிழ் சமூகத்தை, தெலுங்கன், கன்னடன் விமர்சனம் செய்தால் கோபம், கைக்கூலிகள்
10. சாவர்க்கருக்கும் மாலை, காந்திக்கும் மாலை, அம்பேத்கருக்கும் மாலை, நாங்கள் எல்லோருக்குமானவர்
பசும்பொன் முத்துராமலிங்கத்துக்கும் மாலை, ரெட்டமலை ஸ்ரீனிவாசனுக்கும் மாலை, இமானுவேல் சேகரனுக்கும் மாலை, நாங்கள் எல்லோருக்குமானவர்,
11. சாதிபேதமற்று நாம் இந்துக்களாக தான் இருந்தோம், நம்மை பிரிட்டிஷ் என்கிற அந்நியர்கள் தான் பிரித்து விட்டார்கள்,
சாதிபேதமற்று நாம் தமிழர்களாக தான் இருந்தோம், வந்தேறிகள் தான் சாதி பிரிவினை செய்தார்கள்
இப்படியாக நீங்கள் அடுக்கி கொண்டே போகலாம், இந்த ஒற்றுமை திட்டமிட்டு ஒட்டப்பட்டது அல்ல. இனவாதத்திற்கும், மதவாதத்திற்கும் இயல்பிலேயே இருக்கும் ஒற்றுமைகள், இதை நீங்கள் உலகின் எந்த "வாதத்தோடும்" ஒப்பிட்டு கொள்ளலாம், அது இனவெறிக்கே உண்டான சித்தாந்தங்கள். நாஜிக்களின் சித்தாந்தத்திற்கும், பார்பனீயத்துக்கும் இருக்கும் ஒற்றுமைகளை கூட இப்படி நம்மால் எழுத முடியும். இனவெறி என்கிற தன்மையின் மூலக்கூறு வேறு ஒன்றாக இருந்தாலும், "சர்வாதிகாரம் உங்கள் கைக்கு கிடைத்து விட்டது / சர்வாதிகாரம் உங்கள் கைகளில் இல்லை" என்கிற இந்த இரண்டே வேறுபாட்டை வைத்து தான், உங்களிடம் இருப்பது இனவெறியா, இனபாசமா என்பதை வரையறுக்க முடியும், மற்றபடி இந்த எந்த சித்தாந்தமுமே மானுட சமூகத்துக்கு எதிரானது.
இந்த அடிப்படைவாத மூலக்கூறுகளை யார் உலகத்தில் பேசினாலும், அதை விமர்சனம் செய்வதற்கு ஆட்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள். ஹிட்லர் என்கிற கொடுங்கோலன் சர்வாதிகாரத்தின் நாற்காலியில் இருந்த போதே பகடி செய்து காமெடியாக விமர்சித்த உலகமிது, சீமான் எம்மாத்திரம்?
இனபாசத்துக்கும், இனவெறிக்கும் இருக்கும் வேற்றுமை "வாய்ப்பு" மட்டுமே.

Monday, October 02, 2017

‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை!

‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை!
காந்தி வாழ்ந்த காலத்திலேயே காந்தியம் தோற்றுப் போய் விட்டது என்பது மூடி மறைக்கப்படுகிறது. அரை உண்மைகள் ஊதிப்பெருக்கப்படுகின்றன. பொய்கள் அதிகாரப்பூர்வ வரலாறாகிறது
தமிழகத்தைச் சேர்ந்த சேலம் வேலு காந்தி எனும் 82 வயது முதியவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், சாதி நம்பிக்கையற்றோர், “கலப்பு’த் திருமணம் செய்து கொண்டவர்கள், அனாதைக் குழந்தைகள், மதம் மாறியோர் ஆகிய நான்கு வகையினரைக் கொண்டு, “காந்தி சாதி’ என்ற ஒரு புதிய சாதியை உருவாக்க உத்தரவு தருமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் சாதிகள் ஒழிய வழிபிறக்கும் என வாதிட்டார். அரசியல் சாசனத்தின் அடிப்படையில், ஒரு புதிய சாதியை உருவாக்க தமக்கு அதிகாரம் இல்லையெனக் கூறி, நீதிபதிகள் அம்மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
நாமகரணங்கள் நமக்கு புதியனவல்ல. ஹரியின் குழந்தைகள் எனப் பெயர் சூட்டினார் காந்தி. காந்தியின் குழந்தைகள் எனப் பெயர் சூட்ட வேண்டுமென ஆதங்கப்படுகிறார் காந்தியின் சீடர். பெயர் சூட்டுவதிருக்கட்டும். “பீ’யள்ளப் போவது யார் என்பதல்லவா கேள்வி. அன்றே காந்தியின் சாதி ஒழிப்பு சண்ட பிரசண்டங்களுக்கும், அவரது நடைமுறைக்குமான முரண்பாட்டை அம்பேத்கர் திரை கிழித்திருக்கிறார். ஆனால், காந்தி தனது வாழ்நாள் முழுவதும் அம்பேத்கர் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.
குறைந்தபட்சம் காங்கிரசில் உறுப்பினராக சேர தீண்டாமையைக் கடைப்பிடிக்கக் கூடாது என ஒரு விதியைக் கொண்டு வருவதற்குக் கூட காந்தி தயாராக இருந்ததில்லை. காந்தியால் சோசலிசத்திற்கு மாற்றாக வைக்கப்பட்ட தருமகர்த்தா முறையை நடைமுறைப்படுத்தக் கிளம்பிய வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தின் தோல்வி காந்தியத்தின் தோல்வியல்ல என்பது போல மூடி மறைக்கப்பட்டு விட்டது. எனினும் காந்தி மீண்டும் மீண்டும் மக்கள் அரங்கில் முன்நிறுத்தப்படுவது மட்டும் இன்றளவும் நின்றபாடில்லை.
ஆனால், காந்தி சொன்ன கிராமப் பொருளாதார முறையை 1947லேயே காங்கிரசு கைக்கொள்ளவில்லை. காங்கிரசைக் கலைக்கச் சொன்ன காந்தியின் யோசனையை ஒரு பொருட்டாகக் கூட எவரும் கருதவில்லை. குடும்பக் கட்டுப்பாடு கூடாது, ஆலைத் தொழில்கள் கூடாது போன்ற “அற்புதமான’ கருத்துக்களை மட்டுமல்ல; ஜனாதிபதி மாளிகையை இலவச மருத்துவமனையாக்க வேண்டுமென்ற தேசப்பிதாவின் “சின்ன சின்ன ஆசைகளை’க் கூட யாரும் கண்டு கொள்ளவில்லை.
எனினும், ஐநூறு ரூபாய் நோட்டிலும், காந்தி ஆசிரமங்களிலும், நாடு முழுவதிலுமுள்ள சிலைகளிலும், அரசாங்க உரைகளிலும் காந்தி ஒரு மந்திரம் போல தொடர்ந்து நிலைநிறுத்தப்படுகிறார். காந்தி பிறந்த குஜராத்தில் திரையிட மறுக்கப்பட்ட “பர்சானியா’ திரைப்படம், குஜராத் முசுலீம் இனப்படுகொலையால் மனம் உடைந்து போகிற ஒரு வெளிநாட்டு காந்திய மாணவனை கதாபாத்திரமாகக் கொண்டிருந்தது. சோனியா காந்தியோ சத்தியாக்கிரகத்தின் “மகிமையை’, “உலகப் பொருளாதார மன்ற’த்தில் வியந்தோதுகிறார்.
காந்தியால் மீண்டும் மீண்டும் குழப்பப்பட்ட சத்தியாக்கிரகம், இன்றும் கூட மக்கள் எதிர்ப்பை மழுங்கடிப்பதில், வன்முறை குறித்த நியாயத்திற்கு அப்பாற்பட்ட தார்மீக அச்சத்தை உருவாக்குவதில் முன் நிற்கிறது. மணிப்பூரில், இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு எதிராக, இந்திய அரசின் கொடூரச் சட்டமான “ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை’ திரும்பப்பெறக் கோரி, கடந்த ஏழு ஆண்டுகளாக உண்ணாவிரதமிருந்து வரும் ஐரோம் சர்மிளா இதற்கு ஒரு உதாரணம். சர்மிளா செத்துப் பிணமானால் கூட இந்திய அரசு அச்சட்டத்தை திரும்பப் பெறப் போவதில்லை.
காந்தியின் தெளிவற்ற, மூடு மந்திரமான மதச்சார்பின்மை 1947 பிரிவினையின்போதே படுதோல்வியடைந்த போதிலும், இன்றும் காங்கிரசாலும், போலி கம்யூனிஸ்டுகளாலும் உதாரணமாக முன்வைக்கப் படுகிறது. ஷாபானு வழக்கிலும், ராம ஜென்ம பூமி விவகாரத்திலும், குஜராத் படுகொலையிலும் காந்திய மதச்சார்பின்மை வெங்காயம் மொத்தமாய் உரிந்து போனது. காவிப் படையின் கொலை வெறியாட்டத்திற்கு சொல்லில் மௌன சாட்சியாகவும், செயலில் நம்பகமான கூட்டாளியாகவும் காங்கிரசு துணை போனது. ஆனால், இன்னமும் மதச்சார்பின்மைக்கு போலித்தனமான நடுநிலைமையே விளக்கமாக அளிக்கப்படுகிறது.
உண்மையில், காந்தி வாழ்ந்த காலத்திலேயே காந்தியம் தோற்றுப் போய் விட்டது. ஆனால் அந்த உண்மைகள் மூடி மறைக்கப்படுகிறது. அரை உண்மைகள் ஊதிப்பெருக்கப்படுகின்றன. பொய்கள் அதிகாரப்பூர்வ வரலாறாகிறது. அப்படித்தான் நாம் காந்தியை ஏற்றுக் கொள்ளச் செய்யப்பட்டிருக்கிறோம். அவ்வாறு மூடி மறைக்கப்பட்ட சில வரலாற்று உண்மைகளின் ஒளியில், இப்பொய்களை அடையாளம் காண்போம்.
****
காந்தி அவரது காலத்திலேயே தமது முரண்பாடுகளுக்காக மிகப் பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஒரு விவாதத்தில்,
“”எனது முரண்பட்ட நிலைகளைக் குறித்த நிறைய குற்றச்சாட்டுக்களை நான் படித்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். ஆனால், அவற்றிற்கு நான் பதில் கூறுவதில்லை. ஏனெனில், அவை வேறு யாரையும் பாதிப்பதில்லை. என்னை மட்டுமே பாதிக்கின்றன”
என காந்தி எழுதினார். ஆனால், இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தரும் “பொறுப்பை’ ஏற்றிருந்த காந்தியின் முரண்பட்ட நிலைகள் எவ்வாறு இந்த நாட்டின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையே பாதித்தது என்பதைத்தான் வரலாறு காட்டுகிறது.
அகிம்சைதான் காந்தியத்தின் அடிப்படைக் கொள்கையாகச் சொல்லப்படுகிறது. உலகிலேயே முதன்முறையாக காந்தி கண்ட அறவழிப் போராட்ட முறையாக சத்தியாக்கிரகம் முன் வைக்கப்படுகிறது. ஆனால், உலக வரலாற்றில், நியாயமான கோரிக்கைகளுக்காக, எதிர்த்துத் தாக்காமல், துன்பங்களை தாமே முன்வந்து ஏற்றுக் கொள்ளும் சாத்வீகப் போராட்ட முறை இயேசு, துவக் கால கிறிஸ்தவர்களிலிருந்து ரசியாவின் டியூகோபார்கள் எனப்படும் பிரிவினர் வரை பலரால் ஏற்கெனவே கைக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், காந்தி தனது சத்தியாக்கிரக முறை சாத்வீக போராட்ட முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதென விடாப்பிடியாக சாதித்தார்.
“காந்தியும் அவரது காலங்களும்’ என்ற நூலில் காந்தியம் எனும் கருத்தாக்கம் உருவான முறையை சாரமாக எழுத்தாளர் மன்மத்நாத் குப்தா இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“”புத்திசாலித்தனமாக கணக்கற்ற தார்மீக, தத்துவார்த்த, ஆன்மீகச் சரடுகளை சுற்றிக் காட்டியதன் மூலம், முந்தைய சாத்வீக இயக்கங்களிலிருந்து சத்தியாக்கிரகம் மாறுபட்டதென காட்ட முயன்றார். நூற்றாண்டுகளைக் கடந்த இந்துக் கலாச்சாரத்தின் மீதேறி சுலபமாகப் பயணிக்க முயன்றார். அவரே ஒத்துக் கொண்டதைப் போல, இதற்கு தேவையான தயாரிப்புகள் இல்லாத போதும், வறட்டுப் பிடிவாதத்தின் மூலமாக மட்டுமே அவரால் தனக்கென ஒரு கருத்தாக்கத்தை உருவாக்க முடிந்தது.”
தமது ஆன்மீகச் சொல்லாடல்களின் மூலம் எக்கருத்தையும் தனக்கேற்ற முறையில் காந்தியால் வளைக்க முடிந்தது. சிறையிலிருக்கும் புரட்சியாளனின் உண்ணாவிரதத்தைக் கூட காந்தி “வன்முறை’ என்றார். ஏனெனில் அவனது உள்ளத்தில் வன்முறை இருக்கிறதாம். நிலப்பிரபுக்களுக்கு விவசாயிகள் வரி கொடுக்க மறுத்து, சாத்வீக முறையிலேயே போராடிய போதும் கூட, அது வன்முறை என்றார்.
இவ்வாறு வன்முறைக்கும், அகிம்சைக்கும் கணக்கற்ற விளக்கங்கள் அளித்த காந்திதான், தென்னாப்பிரிக்காவில், முற்றிலும் அநீதியான வகையில் ஜூலூ கலகப் போரிலும், போயர் யுத்தத்திலும், முதல் உலகப் போரிலும், பிரிட்டிஷ் சிப்பாய்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை செய்தார். இதனைக் கேள்வி கேட்டவர்களுக்கெல்லாம்,
“”இதன் மூலம் பிரிட்டிஷ் பிரஜை என்ற முறையில் தமது கடமையை ஆற்றினால்தான், உரிமைகளைப் பெற முடியும்”
என விளக்கமளித்தார்.
முதல் உலகப் போரில் ஆங்கிலப் படைகளுக்கு சேவை செய்த பொழுது, அவரது நெருங்கிய நண்பர்களே அவரை விமர்சித்ததற்கு,
“”போரில் பங்கேற்பது என்பது அகிம்சையோடு ஒருக்காலும் பொருந்தாது என்பதை நானறிவேன். ஆனால் ஒருவருக்கு அவரது கடமைகள் குறித்து, எல்லாச் சமயங்களிலும் தெளிவான பார்வை பெற வாய்ப்புகள் இருப்பதில்லை. சத்தியத்தின் பாதையில் பயணிப்பவன் பல சமயங்களில் இருட்டில்தான் செல்ல வேண்டியிருக்கிறது”
என நியாயம் கற்பித்தார்.
பின்னர், 1921இல் தமது கண்கள் திறந்து விட்டதாகவும், அவ்வாறு கருதியது தவறு என்றும், பிரிட்டிஷ் அரசு தம்மை பிரஜையாகவே கருதவில்லையென்றும், எந்த உரிமைகளும் அற்ற ஒரு தாழ்த்தப்பட்ட பராரியாகவே இந்த அரசின்கீழ் தான் உணர்வதாகவும் “யங் இந்தியா’வில் குறிப்பிட்டார். ஆனால், அக்கண்கள் நீண்டநாள் திறந்திருக்கவில்லை. மீண்டும் 1928இல் முதல் உலகப் போரின் பங்கேற்பு குறித்த நிருபர்களின் கேள்விக்கு,
““போருக்கு எதிராக என்னுள் இப்பொழுது இருக்கும் அதே அளவிலான எதிர்ப்புணர்வு அப்பொழுதும் இருந்தது. ஆனால், இந்த உலகத்தில் நாம் விரும்பாத பல விசயங்களை நாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.”
பச்சை அயோக்கியத்தனத்தை இயலாமையாகக் காட்டித் தப்பிக்க முயலும், அறிவு நாணயமற்ற மனிதனால் மட்டுமே இவ்வாறு விளக்கம் அளிக்க முடியும்.
“”சுதந்திரம் என ஒன்று வருமானால், அது மாபெரும் பிரிட்டிஷ் அரசுடன் ஒரு கண்ணியமான ஒப்பந்தத்தின் மூலமே வரவேண்டும்”
என 1929இல் காந்தி எழுதினார். காந்திய சுதந்திரப் போராட்டத்தின் சாராம்சத்தை, அதன் திசைவழியை, இந்த ஒற்றை வரியை விட வேறெதுவும் விளக்கிவிட முடியாது. காந்தி முரண்பாடற்று, கடைபிடித்த ஒரே கொள்கை இதுதான். ஏனெனில், சுதந்திரம் மக்களால் சமரசமற்று வென்றெடுக்கப்படுமாயின், அது பிரிட்டிஷ் ஆட்சியை மட்டுமல்ல, முதலாளிகளையும், நிலப்பிரபுக்களையும் மட்டுமல்ல, தன்னையும் சேர்த்தே தூக்கி எறிந்து விடும் என்பதை காந்தி தெளிவாக அறிந்திருந்தார். அதனால்தான், நடைமுறையில் மக்கள் சக்தியின் இயல்பான கோபாவேசத்தின் சிறுபொறி எழும்பினால் கூட, உடனடியாக அப்போராட்டத்தையே கைவிட்டு மக்களை திகைத்துப் பின்வாங்கச் செய்தார்.
இதனை 1921 ஒத்துழையாமை இயக்கம் முதல் 1942 தனிநபர் சத்தியாக்கிரகம் அல்லது வெள்ளையனே வெளியேறு இயக்கம் வரை, நாம் காண முடிகிறது. காந்தி நடத்திய மூன்று இயக்கங்களிலும், போராட்டத்தின் போக்கில் மக்கள் போலீசு மீது எதிர்த்தாக்குதல் தொடுப்பதும், அவர்களைச் சிறை பிடிப்பதும், அரசுச் சொத்துக்களை நாசப்படுத்துவதும் தன்னியல்பாக நிகழ்ந்தது.
1921இல் சௌரி சௌரான் விவசாயிகள் காவல் நிலையத்திற்கு தீ வைத்ததையொட்டி, ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியதாக இருக்கட்டும்; 1930இல் மக்களின் போராட்டத் தீ பற்றி எரிந்த வேளையில் வைஸ்ராய் இர்வினோடு ஒருதலைப்பட்சமான ஒப்பந்தத்திற்கு முன்வந்து, போராட்டத்தை கைவிட்டதாக இருக்கட்டும்; 1942இல் “தான் எந்தப் போராட்டத்தையும் அறிவிக்கவில்லை. மக்களது வன்முறைக்கு தாம் பொறுப்பல்ல’ என ஆகஸ்டு போராட்டத்தை கைகழுவியதாக இருக்கட்டும், காந்தியின் வன்முறைக்கெதிரான பரிசுத்த வேடத்திற்குள், போராட்டம் தனது கைகளிலிருந்து நழுவ விடக்கூடாதென்ற இடையறாத அச்சம் ஒளித்து கொண்டிருந்தது.
காந்தியப் போராட்டத்தினுடைய வர்க்கச் சார்பு முதலாளிகளையும், வணிகர்களையும் சார்ந்திருந்தது தற்செயலானதல்ல. அகமதாபாத் ஆலைத் தொழிலாளர் போராட்டத்தின் அனுபவத்திலிருந்தும், பர்தோலி விவசாயிகளின் வரிகொடா இயக்க போராட்டத்திலிருந்தும், தொழிலாளர், விவசாயிகளின் வர்க்க கோரிக்கைகளுக்காக போராடுவதும், அவர்களை விடுதலைப் போராட்டத்தில் களமிறங்கச் செய்வதும் அபாயகரமானது எனத் தான் உணர்வதாக காந்தி வெளியிட்ட அறிக்கைகளை, அன்றே தமது “இளம் அரசியல் தொண்டர்களுக்கு‘ எனும் கட்டுரையில் மாபெரும் புரட்சியாளர் தோழர் பகத்சிங் சுட்டிக் காட்டினார். சுருக்கமாகச் சொன்னால், காந்தியப் போராட்டத்தின் வர்க்க உள்ளடக்கம்தான் அப்போராட்டத்தின் வடிவத்தையும் வரம்புகளையும் தீர்மானித்தது. அகிம்சை, சத்தியாக்கிரகம் என்பதெல்லாம் வெறுமனே வார்த்தைப் பூச்சுக்கள் மட்டுமே.
1929இல் சுதந்திரம் கிடைக்காமலேயே சுதந்திரக் கொடியேற்றும் கோமாளித்தனத்தை அரங்கேற்றினார், காந்தி. வீரதீரமாக “முழுச் சுதந்திரமே இலட்சியம்’ என்று அறிவித்த கையோடு வைஸ்ராய்க்கு எழுதிய நீண்ட கடிதத்தில்,
“”என்னால் இயன்ற வரை, தங்களுக்கு எத்தகைய அனாவசியமான தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தும் எண்ணம் எனக்கில்லை” எனக் குழைந்தார். வைஸ்ராய், ஒரு அலட்சியமான பதிலை வீசியெறிந்தார். “”நான் மண்டியிட்டு உணவு கேட்டேன். ஆனால், எனக்கு கல்தான் கிடைத்திருக்கிறது”
எனப் புலம்பினார் காந்தி. வைஸ்ராய்க்கு “தர்மசங்கடத்தை’ ஏற்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை காந்திக்கு ஏற்பட்டுவிட்டது. அந்த தர்மசங்கடத்திற்கு பெயர்தான் “தண்டி யாத்திரை’.
ஆனால், ஆங்கில அரசு குயுக்தியாக காந்தியின் சகாக்களை கைது செய்தது; காந்தியை மட்டும் கைது செய்யாமல் விட்டு, அவரைச் சிறுமைப்படுத்தியது. உடனே அகிம்சாமூர்த்தி ஒரு அழகான தந்திரம் செய்தார். உப்புக் கிடங்குகளைச் சோதனையிட்டு, உப்பைப் பறிமுதல் செய்ய முடிவு செய்தார். வேறு வழியின்றி, அவரை அரசு கைது செய்ய நேர்ந்தது. பறிமுதல் செய்வது சத்தியாக்கிரகம் என்றால், வங்கியை கொள்ளையடிப்பது கூட சத்தியாக்கிரகம் தானே? “தனது தலைமையை காப்பாற்றிக் கொள்வது’ என்ற ஒரே நோக்கத்துக்காகத்தான், சத்தியாக்கிரக வடிவத்தைக் கைவிட்டு, “பறிமுதல்’ என்ற போராட்ட வடிவத்துக்கு மாறினார் காந்தி. அதே நேரத்தில், “”உப்பை மட்டுமல்ல, மொத்த சுதந்திரத்தையுமே பறித்தெடுக்க வேண்டும்” என்று கூறிய பகத்சிங் முதலான புரட்சியாளர்களை, “தீவிரவாதிகள், வன்முறையாளர்கள்’ என்றார் காந்தி.
சட்ட மறுப்பு இயக்கத்தை “இரகசியம்’ சூழ்ந்து விட்டதாகக் கூறி, காந்தி அதனைக் கைவிட்டு, இர்வினிடம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் சரணாகதி அடைந்த பொழுது,
“”ஒரு அரசியல் தலைவர் என்ற முறையில் காந்தி தோல்வி அடைந்து விட்டதாக நாங்கள் ஐயமின்றிக் கருதுகிறோம். தனது வாழ்நாள் கொள்கைகளுக்கே முரணின்றி நடக்க இயலாத காந்தி மேலும் தலைவராக நீடிப்பது நியாயமற்றது”
என சுபாஷ் சந்திர போஸும், வித்தல்பாய் படேலும் வியன்னாவிலிருந்து பகிரங்கமாக அறிக்கை விடுத்தனர். இருப்பினும் பார்ப்பனபனியாக் கட்சியான காங்கிரசுக்கு, மக்களை ஏய்க்க காந்தியின் “முகமூடி’ தேவைப்பட்டது. ஆங்கில அரசுக்கோ, இத்தகைய விசுவாசமான “எதிரி’ கிடைத்ததை விட வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?
இவ்வாறு முப்பதாண்டுகளுக்கும் மேலாக, ஆளும் வர்க்கத்தின் மனம் நோகாமல், காந்தி நடத்திய “அரசியல் பரிசோதனை’களுக்கு “சோதனைப் பிராணி’களாக இந்திய மக்கள் அடிபட்டார்கள். உதைபட்டார்கள். இரத்தம் சிந்தினார்கள். சொத்துக்களை இழந்தார்கள். சிறையில் வாடினார்கள். ஒவ்வொரு போராட்டத்தின் கழுத்தறுப்பிற்கு பிறகும் விரக்திக்கும், வேதனைக்கும் தள்ளப்பட்டார்கள். இதைவிடக் கொடூரம்,
“”போராட்டத்தின் தோல்விக்கான காரணம், மக்களின் ஆத்ம சுத்தி போதவில்லை”
என காந்தி சொன்ன குற்றச்சாட்டையும் மௌனமாக ஏற்றுக் கொண்டார்கள்.
1942இல் யுத்தத்தில் ஜெர்மனி-ஜப்பான் முகாம் வெற்றி பெறலாம் என்ற கணிப்பில், அரை மனதோடு, காந்தி “வெள்ளையனே வெளியேறு‘ முழக்கத்தை முன்வைத்த மறுகணமே, காங்கிரசின் அனைத்து முக்கியத் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இம்முறை மக்களின் போர்க்குணம் முழுமையாக வெளிப்பட்டது. தந்திக்கம்பிகள் அறுக்கப்பட்டன. ரயில் தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன. போலீசும், இராணுவமும் தாக்கப்பட்டனர். ஷோலாப்பூர் போன்ற பல இடங்களில் இராணுவமோ, போலீசோ பல நாள்களாக உள்ளே நுழையக் கூட முடியவில்லை. கொடூர அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
“காங்கிரசு சோசலிஸ்டுகள்’தான் வன்முறைக்கு காரணமென்று, காங்கிரசுத் தலைவர்கள் ஆள்காட்டி வேலையில் ஈடுபட்டார்கள். எதற்கும் உதவாத அகிம்சையை, மக்கள் நடைமுறையில் வீசியெறிந்தனர். சிறையிலிருந்து விடுதலையான காந்தி, போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். 1921இல் ஒத்துழையாமை இயக்கத்தின் பொழுது, சாதி, மத வேறுபாடுகளற்று நாடே கிளர்ந்தெழுந்த பொழுது, சுதந்திரம் வாயிற்படி வரை வந்ததென்றால், 1942இல் சுதந்திரம் வீட்டிற்குள்ளேயே கால் வைத்தது. ஆனால் இந்த முறையும் காந்தி அதன் காலை வாரிவிட்டார்.
தலைமையை விஞ்சி எழும்பும் மக்களின் போர்க்குணத்தை அதன் திரண்ட வடிவத்தில் 1942இல் காந்தி கண்டார். அதனால்தான் பின்னர் பிரிவினைக் கோரிக்கை எழுந்த பொழுது, பிரிவினைக் கோரிக்கையை ஆதரிப்பதைத் தவிர காந்திக்கு வேறு வழி இருக்கவில்லை. ஏனெனில் இன்னொரு “மக்கள்திரள் அரசியல் போராட்டம்’ என்பது ஒட்டுமொத்த நிறுவனத்தையும் பெயர்த்தெடுக்காமல் அடங்காது என்பதைக் காந்தி புரிந்து கொண்டார். பிரிவினைக் கோரிக்கையை ஏற்பதற்கான காங்கிரசுத் தீர்மானத்தின் முன்மொழிவில், இதனைக் குறிப்பிடவும் செய்தார்.
பிரிவினைக் காலத்தில், கலவரம் நடந்த ஒவ்வொரு இடத்திற்கும் காந்தி சென்றார். ஆனால், அவரது சமரச முயற்சிகளும், போதனைகளும் இந்துமகா சபா வெறியர்களிடமும், முசுலீம் லீக் வெறியர்களிடமும் எடுபடவில்லை. காந்தியின் ஆத்மார்த்த சீடர் ஆச்சார்ய கிருபாளனியே, காந்தியினுடைய முயற்சிகளின் பலனைக் கீழ்க்காணும் முறையில் விவரிக்கிறார்.
“”அவர் நவகாளிக்கு சென்றார். அவரது முயற்சிகளால் நிலைமை சற்றே முன்னேறியது. இப்பொழுது பீகாரில் இருக்கிறார். நிலைமை சற்று மேம்பட்டுள்ளது. ஆனால் பஞ்சாபில் கொழுந்து விட்டெரியும் வன்முறையில் எந்த மாற்றமும் இல்லை. மொத்த இந்தியாவிற்கான இந்துமுசுலீம் ஒற்றுமைப் பிரச்சினையை பீகாரில் தீர்க்கப் போவதாகக் கூறுகிறார். ஒருவேளை அவ்வாறு நடக்கலாம். ஆனால் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவார் என்பது சிக்கலாகவே தோன்றுகிறது. சாத்வீகமாக நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தைப் போல, இலக்கை அடைவதற்கான எத்தகைய தீர்க்கமான வழிமுறைகளும் இதில் இல்லை.” பின்னர், “”பீகாரில் தங்களது அகிம்சை எவ்வாறு வேலை செய்தது?” எனக் கேட்டபொழுது “”அது வேலையே செய்யவில்லை. மோசமாகத் தோல்வியடைந்தது”
என்றார் காந்தி.
காந்தியின் ஆசிரமம் தாக்கப்பட்டது. தில்லியில் நடத்திய கடைசி உண்ணாவிரதத்தின் இறுதியில் காந்தி
““நான் எனது ஓட்டாண்டித்தனத்தை ஒத்துக் கொள்கிறேன்”
என தனது இயலாமையை வெளியிட்டார். அகிம்சையின் தந்தை காஷ்மீருக்கு படைகள் அனுப்ப ஆதரவளித்தார். தான் சர்வாதிகாரியாக இருந்தால், மதத்தையும் அரசியலையும் பிரிப்பேன் என்றார். அடுத்த கணமே,
“”மதம்தான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். வார இறுதி விசயமாக அல்லாமல், ஒவ்வொரு நொடியும் மதத்திற்காகச் செலவிடப்பட வேண்டும்” என்றார். காந்தியால் தனது அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்ட நேரு, “காந்தியின் பொருளாதாரக் கொள்கைகள் காலங்கடந்தவை’ என அவருக்கே கடிதம் எழுதினார். “”காந்தி தனது இறுதி நாள்களில் இருளில் தடுமாறிக் கொண்டிருந்தார்”
எனத் தெரிவிக்கிறார் கிருபாளனி.
இதே காலகட்டத்தில் இந்திய தேசிய இராணுவம் தொடுத்த தாக்குதல்களும், 1945 கப்பற்படை எழுச்சியும், தொழிலாளர் போராட்டங்களும் காந்தியின் அரசியல் முடிவை முன்னறிவித்தன. இரண்டாம் உலகப் போரில் பலவீனமடைந்த ஆங்கில அரசு, நேரடியாகத் தனது காலனிகளை இனிமேலும் அடக்கியாள முடியாது என்ற நிலையில், இந்தியா, இலங்கை மற்றும் பிற காலனிகளின் தரகு முதலாளிகளுக்கு ஆட்சிப் பொறுப்பைக் கைமாற்றிக் கொடுக்க முன்வந்தது.
அரசியல் அரங்கத்தால் புறந்தள்ளப்பட்ட காந்தியின் பிம்பம், இன்றளவும் பாதுகாக்கப்படுகிறதென்றால், அதற்கு கோட்சேயின் நடவடிக்கைதான் உதவி செய்தது என்று சொல்ல வேண்டும். காந்தியம் வெளுத்து, அதன் பூச்சுக்கள் உதிர்ந்த நிலையில், காந்தி ஒருவேளை தொடர்ந்து வாழ்ந்திருப்பாரேயானால், காந்தியம் தவிர்க்கவியலாமல் செத்துப் போயிருக்கும். கத்தியின்றி, இரத்தமின்றி, சுதந்திரத்தின் கழுத்தறத்ததுதான், “காந்தி’ எனும் ஊதிப் பெருக்கப்படும் “சோளக்காட்டுப் பொம்மை’யின் சுருக்கமான அரசியல் வரலாறு.
“”என்னதான் இருந்தாலும், காந்தியிடமிருந்து பின்பற்றுவதற்கு எதுவுமே இல்லையா?” என அரசியல் பொழுதுபோக்காளர்கள் கேட்கக் கூடும். காந்தியிடமிருந்து நாம் பின்பற்ற எதுவுமில்லை. ஆனால், “வாடிக்கையாளரே நமது எசமானர்’ என்ற அவரது பொன்மொழியை மட்டும், கட்சிப் பாகுபாடின்றி சகல இந்திய ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளும் இம்மி பிசகாமல் பின்பற்றுகிறார்கள். அவர்கள் மக்களைத் தமது எசமானர்களாகக் கருதுவதில்லை. பன்னாட்டு முதலாளிகள் என்ற தமது வாடிக்கையாளர்களைத்தான் எசமானர்களாகக் கருதுகிறார்கள். இந்த விசயத்தில் குருவை மிஞ்சிய சீடர்களாகவும் நடந்து கொள்கிறார்கள். அந்த வகையில் காந்தியம் இன்னமும் உயிரோடிருக்கிறது என்பது உண்மைதான்.
நன்றி- வினவு.