Monday, March 12, 2018

ஆரியர்களின் ஆதி பூர்வீகம் சிரியா

பகிர்வு

உங்களுக்கு தெரியுமா, தற்போது போர்க்களமாக காட்சி அளிக்கும் சிரியா தான் இந்தியாவில் வாழும் ஆரியர்களின் ஆதி பூர்வீகம் என்று. ஆம், இங்குதான் உலகின் மிக பழமையான சுமார் 3500 ஆண்டுகள் பழமையான சமஸ்கிரத எழுத்துக்கள் உள்ள கல்வெட்டுக்கள் உள்ளன. இந்தியா வில் அசோகர் காலத்து 1500 வருடங்களுக்கு மேல் பழமையான சமஸ்கிரத கல்வெட்டுக்கள் இல்லை ஆனால் கீழடி, கொடுமணல் ஆகியவற்றில் 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தமிழ் எழுத்துக்கள் பொறித்த மண்பாண்டங்கள் கிடைத்து உள்ளன.

சிரியா சமஸ்கிரத கல்வெட்டுக்கள் பற்றி மேலும் அறிய google அல்லது youtube  -ல் "Mittani Sanskrit inscriptions" அல்லது "hittite-mitanni treaty" என்று தேடி பாருங்கள்.

http://www.iskcontimes.com/india-wasnt-the-first-place-sanskrit-was-recorded/

https://en.wikipedia.org/wiki/Mitanni-Aryan

This Place Was The First To Record 'Sanskrit' And Not India:

https://mdaily.bhaskar.com/news/JM-MYTH-sanskrit-roots-syria-india-5351484-PHO.html

3500 வருடங்களுக்கு முன் சிரியா பகுதியை Mittani மற்றும் hittite Empire ஆண்டு வந்தனர். பின்னர் இவர்களுக்குள்ளாகவே அடித்து கொண்டு ஒரு பகுதியினர் துர்க்மெனிஸ்தான் பகுதிக்கு ஓடிவிட்டனர்.

இந்த துர்க்மெனிஸ்தான் பகுதியிலிருந்து பின்னாட்களில் அபிகானிஸ்தான் வழியாக ஆரியர்கள் இந்தியா வில் நுழைகின்றனர். துர்க்மெனிஸ்தான் பாலைவன பகுதியில் தான்  ஆரியர்கள் வாழ்ந்த 2500 -3000   வருடம் பழமையான archealogical settlements கண்டுபிடிக்க பட்டுள்ளது. 

ரிச்சர்ட் மார்ட்டின் டோனி ஜோசப் ஆகியோரின் இந்த வருடம் வெளியான  DNA analysis ம் இதை உறுதி படுத்து கிறது .

http://www.thehindu.com/sci-tech/science/how-genetics-is-settling-the-aryan-migration-debate/article19090301.ece

கேள்வி

2500 வருடங்களுக்கு அதிக பழமையான பொருட்களை கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டது எனில் இந்தியா இந்த தமிழனுக்கு (திராவிடர் களுக்கு ) உரியது என சொல்லுகிறீீர்கள்....அசோக கல் வெட்டுகள் 1500 வருட பழமை தானா?.....அசோகர் ஆ்ண்ட நூற்றாண்டு எது?..

பதில்

மிகச்சரியான கேள்வி ஐயா. நீங்கள் கூறியதை போல அசோகர் காலத்து கல்வெட்டுகள் கிடைத்துள்ளன ஆனால் அவை சம்ஸ்கிருத கல்வெட்டுகள் அல்ல. கீழடியில் கிடைத்துள்ளவை தமிழ் எழுத்துகளிலேயே உள்ளன. இதைத்தான் நான் அனுப்பிய பதிவிலும் உள்ளது. அசோகர் காலத்து கல்வெட்டுகள் உள்ள மொழிகள் - ப்ராக்ரித், கிரேக்கம், அராமைக் - இந்த கல்வெட்டுகள் மேற்கில் காந்தகார், கிழக்கில் தவுலி, தெற்கில் எர்ரகுடி மற்றும் வடக்கில் மான்செரா (கஷ்மீரம்) உட்பட பல இடங்களில் கிடைத்துள்ளன.

"அசோகர் காலத்து 1500 வருடங்களுக்கு மேல் பழமையான சமஸ்கிரத கல்வெட்டுக்கள் இல்லை"

"கீழடி, கொடுமணல் ஆகியவற்றில் 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தமிழ் எழுத்துக்கள் பொறித்த மண்பாண்டங்கள் கிடைத்து உள்ளன"

மேலும் கீழடியில் கிடைத்துள்ளவை settlement எனப்படும் நிரந்தர குடியிருப்புகளுள்ள பகுதியிலுள்ள தினசரி உபயோக பொருட்கள். நாம் அசோகர் காலத்தை பற்றி தெரிந்து கொண்டது சமண மற்றும் பௌத்த மத துறவிகள் எழுதி வைத்துள்ள குறிப்புகளை வைத்துதான். அசோகர் காலத்து மக்கள் என்ன மாதிரி பாண்டங்கள் உபயோகப்படுத்தினார்கள், அவர்களது அன்றாட பொருட்கள் என்ன என்பதுதான் இந்த பொருட்கள். அவற்றில் தமிழில் பொறிக்கப்பட்டுள்ள வார்த்தைகள் அரிதானது.

இந்த பொருட்கள் மற்றும் நகர அமைப்புகளை வைத்து கீழடி கலாச்சாரமும் சிந்து சமவெளி கலாச்சாரமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்றும், hittite சாம்ராஜ்ய கலாச்சாரமும் சிந்து சமவெளி கலாச்சாரமும் வெவ்வேறு கலாச்சாரங்கள் என்று archaeologists கூறுகிறார்கள்.