Thursday, December 28, 2017

தமிழர்களை இழிவுபடுத்த, வடவர்களை உயர்த்த எழுதிய காப்பியமே ராமாயனம்

அந்த காலகட்டத்தில் இராவணன் என்பவன் பறந்து வந்திருக்கவும் முடியாது, அவன் பறவையும் அல்ல
மனித பிறவியில் மனிதனுக்கு பத்து தலைஎன்பதும் அறிவியலுக்கு பொருந்தாதது,
இராமயன காலம் 17லட்சம் ஆன்டுகள் என்று கூறப்படுகிறது ,
அந்த காலகட்டத்தில் மனித இனமே பரினாம் அடையவில்லை என்கிறது அறிவியல்,
இராமர் கட்டியதாக சொல்லப்படுகிற இடத்தில் 10000 ஆண்டுகளுக்கு முன்பே கடல் இல்லை அது இந்தியாவுடன் சேர்ந்து இருந்த குமரிக்கண்ட திட்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்,.
உண்மை இப்படி இருக்க,!
ராமன் சீதையை திருமனம் செய்ய வெற்றி பெற கலந்துக்கொன்ட போட்டியில் ராமன் பயன்படுத்திய 60000வீரர்கள் எடுத்துவந்து ராமனிடம் கொடுத்ததாகவும் ;
அந்த வில்லை வளைத்து படக்கொன உடைத்தாகவும் கதை இருக்கிறது,
அதிலும் திருமனத்தின் போது ராமனின் வயது12சீதையின் வயது7என்கிறது புராணம்.!
இதற்கு எல்லாம் யார் விடையளிப்பது?
ராமாயனம் உண்மை என்பவர்கள் தான் பதிலளிக்க வேன்டும் பதில் வருமா?
ஆக உண்மையில் வடவர்கள் தமிழர்களை வென்றதுமில்லை,
தமிழர்களை ஆட்சி செய்யவும் இல்லை ,
வரலாற்றில் ஆரிய படைகடந்த பான்டிய நெடுஞ்செழியன்,
இமயத்தில் கொடி நாட்டிய ராஜேந்திர சோழன் போன்ற தமிழ் மன்னர்கள் வேன்டுமானால் இருக்கிறார்களேயொழிய
தமிழ்நாட்டை ஆன்ட வட நாட்டு அரசன் இதுவரையில் இல்லை,
தமிழர்களை இழிவுபடுத்த,
வடவர்களை உயர்த்த எழுதிய காப்பியமே ராமாயனம் !
இதைதான் கம்பரும் கூட மனவருத்தத்துடன் வருங்காலதமிழர்களை என்னை இகழ்ந்தாலும்,
அதனால் மாசு வந்து சேர்ந்தாலும் வடமொழியில் இருக்கும் காவியத்தை தமிழில் தருகிறேன் என்று பின்வரும் பாடலில் எழுதுகிறார்,
பாடல்:
வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இது இயம்புவது யாது எனின்
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிவிக்கவே

வாழ்க பல்கலை வித்தகர் கங்கை அமரனார்

பல்கலை வித்தகர் கங்கை அமரனார் மட்டும் ஆர்கே நகரில் மீண்டும் வேட்பாளராக நின்றி ருந்தால்-முன்னாள் தாழ்த்தபட்டவரான தமிழிசை அவர்கள் --நாங்கள் மீண்டும் தாழ்த்தபட்டவரான கங்கை அமரனை பொது தொகுதியில் விட்டிருக்கிறோம்- என 
திருமதி தமிழிசையை விட அனைத்திலும் உயர்ந்து நிற்கும் 
திரு கங்கை அமரனாரை ஒரு நாளைக்கு100 முறையாவது அவரை தாழ்த்தபட்டவர் -தாழ்த்தபட்டவர் - தாழ்த்தபட்டவர் என சொல்லி -சொல்லியே தன்னை பிராமண ரேஞ்சிற்கு உயர்த்தி ரொம்பவே பம்மாத்து காட்டியிருப்பார்
--
திரு- கரு -நாக ராஜன் அவர்களை விட கங்கை அமரனார் அதிகமாகவே
வாக்கு பெற்றிருப்பார் என்றாலும்- என்ன சொல்லியிருப்பார்கள்????
-
கங்கை அமரனாரின் பாடி லாங்குவேஜ் சரியில்லை- பட்டியலின இளைஞர்கள் ஜீன்ஸ“ பேண்ட் - டீ சர்ட்- கூலிங் கிளாஸ் போட்டு
காதலிகளை கவருவது போல (நம்ம மருத்துவர் பாணி ) மக்களை கவராமல் கழுத்தில டவ்வல் போட்டு பாகவதர் போல வந்தார் -மக்களை கவரும்பட பேச தெரியாமல்-காமெடியனாக பேசினார் அதனாலத்தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம் -என மொத்த பழியையும் அவர் மேல் சுமத்தி தந்திரமாக தப்பிருப்பார்கள்-
காலங்காலமாக பட்டியலின மக்களை அனைத்திலும்
குறை ம--ரை மட்டுமே சொல்லவில்லையென்றால்-தாங்களே உலக மகா அறிவாளிகள்- பட்டியலின மக்கள் திறமையற்றவர்கள் - தகுதியற்றவர்கள்-அறிவற்ற முட்டாள்கள் என காட்டவில்லையென்றால்
இவர்களின் தலைவெடித்து சிதறிவிடும்தானே???
பல்கலை வித்தகர் திரு கங்கை அமரனார் புத்தி வந்து- மருத்துவமனையில் படுத்து-பணத்தையும்- தன்“ மானத்தையும் தானே இரட்சித்து விட்டார்-
-
வாழ்க பல்கலை வித்தகர் திரு- கங்கை அமரனார்

Wednesday, December 27, 2017

இந்துக்களிடமிருந்து இந்துக்களின் உரிமையை மீட்போம்

சில நண்பர்கள் என் மீது கோபப்படுகிறார்கள். இந்து மதத்தை போற்றி வளர்க்கும் பிராமனர்களை திட்டுகிறேன். பிற சமய நண்பர்களிடம் நட்பு பாராட்டுகிறேன் என்று. ஆம். ஏனென்றால் அதுவும் உங்களுக்காகத் தான் இந்து நண்பர்களே. சிலர் உங்களை அடியாட்களாக பயன்படுத்துகிறார்கள். நீங்கள் எந்த இந்து கோவிலைப் பெருமையாக என்னுகிறீர்களோ அனைத்து கோவில்களின் கருவறைக்குள் உங்களால் செல்ல முடியுமா?. இல்லை இறைவனுக்கு கற்பூர தீபம் தான் காட்ட முடியுமா? இல்லை சாமியை தான் சுமக்க முடியுமா? ஏன். நீங்கள் தூய்மை இல்லாதவரா?. ஆச்சாரம் அற்றவரா?. சைவமாக உள்ள மக்கள் எல்லா சாதியிலும் இருக்கிறார்கள். அவர்களை கூட இறைவன் ஏற்கமாட்டாரா. சரி உங்கள் வீட்டில் பார்பனை நீர் அறுந்த சொல்லுங்கள் பார்ப்போம். வேதம் எழுதியது பிரகஸ்பதி எனும் தச்சன் ஒரு பிராமணர் ஆவார் .. சரி மற்ற சாதியினர் கோவிலுக்குள் நுழைய கூடாது. சாமியை வணங்க கூடாது. கடவுளே இல்லை என்றும் சொல்லக் கூடாது. சரி ஏதாவது ஒரு கடவுளை வணங்குவோம் என்று பிற சமய கடவுளை வணங்க மதம் மாறுவதும் தவறு இதை தான் நண்பர்களே பார்பணன் உங்களை வைத்து செய்துக் கொண்டிருக்கிறான். இந்து கோவில்களை மீட்க போராடும் நாம். ஏன் கோவில் கருவரைக்குள் செல்ல இன்னும் போரடவில்லை. அதை தான் மற்ற மதத்தினர் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு மதமாற்றம் செய்கின்றனர். நீங்கள் ஏன் மதம் மாறினீர்கள் என ஒருவரையாவது கேட்டிருப்பீர்களா?. கேட்டுப்பாருங்கள் உண்மை புரியும். முதலில் நாம் திருத்த வேண்டியது பார்பனனை தான். முதலில் இந்துக்களிடமிருந்து இந்துக்களின் உரிமையை மீட்போம். இந்தியாவில் உள்ள மற்ற சமூக மக்களின் முன்னோர்கள் ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்தவர்கள் தான். நான் சொல்வது சரிதானே நண்பர்களே!

மனுதர்மம்தான் ஆளுகிறது! ஊழல் செய்வதிலும் பார்ப்பானுக்கு சலுகையா?

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!

மனுதர்மம்தான் ஆளுகிறது!   ஊழல் செய்வதிலும் பார்ப்பானுக்கு சலுகையா?

‘தி இந்து’ (தமிழ்) நாளிதழில் நேற்று (26.12.2017) 10 ஆம் பக்கத்தில் சேகர் குப்தா அவர்கள் எழுதியுள்ள ‘‘அரசியலில் ஊழல் களுக்கும், சாதிகளுக்கும் என்ன தொடர்பு?’’ என்ற கடடுரையை அப்படியே எடுத்து வெளியிடுகிறோம்.   (ஆ-ர்)

ஊழலுக்கும் குற்றச் செயல்களுக்கும் சாதியோ, சமூகமோ நேரடித் தொடர்பில் உள்ளனவா? சாதிப் படிநிலையில் கீழே செல்லச் செல்ல ஊழல் வழக்கு களில் பிடிபடுவதும், தண்டிக்கப்படுவதும் அதிகமா கிறதா? சில உண்மைகளை ஆராய்வோம்.

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந் ததாகத் தொடரப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆ. ராசா 15 மாதங்களுக்கு சிறையில் விசாரணைக் கைதியாக இருந்தார். 6 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் தலித். இதே வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கனிமொழி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். நிலக்கரி ஊழல் வழக்கில் சமீபத்தில் தண்டனை விதிக்கப்பட்ட மது கோடா, லஞ்சம்  கொலை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சிபு சோரன் ஆகியோர் பழங்குடி வகுப்பினர். உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தலித். லாலு பிரசாதும், முலாயம் சிங்கும் யாதவ சமூகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப் பட்டவர்கள். அவ்விருவரும் ஊழல் செய்ததாகவும், வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாகவும் வழக்குகளுக்கு உள்ளானவர்கள்.

ஊழல் வழக்கில் மேல் சாதிக்காரர்களும் சிக்காமல் இல்லை. சுக் ராம், ஜெயலலிதா, சுரேஷ் கல்மாடி முக்கியமானவர்கள். இவர்களைப் போன்ற மேல் சாதிக்காரர்கள் பிடிபடுவது மிகவும் குறைவு. சுக் ராமின் கட்டிலிலிருந்தே கட்டுகட்டாக ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டும், அவருக்குத் தண்டனை விதிக் கப்பட்டும், அவர் சிறைக்கே செல்லவில்லை. இப்போது சுக் ராமுக்கு வயது 90. பாஜகவில் சேர்ந்து புதுவாழ்வு பெற்றுவிட்டார். தேர்தல் நேரத்திலேயே அவர் கட்சி மாறினார். அவருடைய மகன் அனில் இப்போது இமாச்சல பிரதேச பாஜக சட்டப் பேரவை உறுப்பினர். அமைச்சராகக் கூட வாய்ப்பு இருக்கிறது. ஆ. ராசா வுக்கோ அவருடைய குழந்தைகளுக்கோ இப்படிப் பட்ட அதிருஷ்டம் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?

என்னடா இவர் ஊழல் வழக்கில் கூட சாதி பார்த்து எழுதுகிறாரே என்று கோபத்தில் கொதிக்கும் முன்ன தாக, நான்கு அம்சங்களைக் கவனத்தில் கொள்ளக் கோருகிறேன்.

முதலாவதாக, சுக்ராமும் ராஜாவும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்தபோதே ஊழல் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இரண்டாவதாக, சுக் ராம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது, ராஜா இப்போது வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மூன்றாவதாக, முதலாமவர் வீட்டில் கட்டிலில் படுக்கைக்கு அடியி லிருந்து ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மற்றொருவர் விஷயத்தில் பணம் எங்கே என்று நீதிபதியே எகத் தாளமாகக் கேட்கிறார்? பணம் இல்லை என்றால் ஊழல் என்ன என்று கேட்டுவிட்டு வழக்கிலிருந்து விடுவிக்கிறார்.

இப்போது நாலாவதும் முக்கியமானதுமான அம்சம். சுக்ராம் பிராமணர். அவர் அப்போது மட்டும் ஊழலில் ஈடுபட்டிருக்கலாம்; மேல் சாதிக்காரர்கள் ஊழலே செய்ய மாட்டார்கள்; ஆ. ராசா பட்டியல் இனத்தவர். அவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? அவர்களால் பதவியையும் பொறுப்பையும் வகிக்க முடியாது, வழக்கமாகவே சந்தேகத்துக்குரிய வர்கள் என்பதே பொதுப்புத்தியாக இருக்கிறது!

இனி, பாஜகவுக்குள் இரு வேறு ஊழல் சம்பவங்கள் எப்படிக் கையாளப்பட்டன என்று ஆராய்வோம். அக் கட்சியின் இரு வேறு மூத்த தலைவர்கள் ஆளுங் கட்சியாக இருந்தபோது அரசின் மூலம் ‘எதையோ செய்து தருவதற்காக', மறைத்துவைக்கப்பட்ட கேமரா எதிரில் லஞ்சம் வாங்கினார்கள். 2003-ல் திலீப் சிங் ஜுதேவ் ரூ.9 லட்சம் வாங்கினார். அந்த விவகாரம் வெளியான பிறகும் அவருக்குக் கட்சியில் மறுவாழ்வு தந்து மீண்டும் தேர்தலில் நிறுத்தப்பட்டு நாடாளு மன்றத்தில் கூட இடம் பெற்றுவிட்டார்.

இன்னொருவர் பங்காரு லட்சுமண். 2001-ல் ‘தெஹல்கா' நிறுவன ஏற்பாட்டில், ஒரு செயலுக்குப் பரிந்துரை செய்வதற்காக ஒரு லட்ச ரூபாயை கேமரா எதிரில் வாங்கிக்கொண்டார். ஜுதேவ் இளைய அமைச்சர் என்றால் பங் காரு லட்சுமண் கட்சியின் தேசிய தலைவர். அத்துடன் அவர் தலித். கட்சி அவரைப் பதவியிலிருந்து இறக்கியது, அவரைத் தனிமைப்படுத்தியது. சிறைக்கு சென்ற பங்காரு லட்சுமண் தன் மீதான ஊழல் வழக்கை தனியாக எதிர்த்துப் போராடி இறந் தும்விட்டார்.

ஜுதேவை ஆதரித்த கட்சி, பங்காரு லட்சு மணை ‘தீண்டத்தகாத வராகவே' நடத்தியது. அதுதான் ஊழலுக்கும் சாதிக்கும் உள்ள தொடர்பு அல்லது வித்தியாசம்!

சாதி, நிறப் பாகுபாடு நிச்சயம் தொடர்கிறது; தண்டனை விதிக்கப்பட்டாலும் சுக் ராம் என்ற பிரா மணரால் சிறைக்குப் போகாமலேயே தப்ப முடிகிறது; வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் ஆ.ராசாவைத் திருடனாகவே பார்க்கும் கண்ணோட்டம் தொடர்கிறது. ஜுதேவ் மறுவாழ்வு பெறுகிறார், பங்காரு லட்சுமண் விலக்கப்பட்டு, சாகவிடப்படுகிறார். இத்தகைய ‘இருட்டு சிந்தனைகளோடு' உங்களுடைய விடுமுறை நாள்களைப் பாழ்படுத்துவதற்காக வருந்துகிறேன்; ஆனால் யதார்த்தம் என்ன என்பதை ஒப்பிட இதைவிடச் சிறந்த நேரம் வேறு இல்லை.

தமிழில்: ஜூரி
சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர்,
முதன்மை ஆசிரியர்
நன்றி: ‘தி இந்து’ (தமிழ்), 2612.201
http://www.viduthalai.in/page-3/154967.html

வாழ்க்கையில் முன்னேற

என்னோட இத்தனை வருடத்தில் நான் கற்றுக்கொண்ட ஒரு பாடம் சொல்கிறேன். நீங்க வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் உங்க பிராமண நண்பர்களை மட்டும் வெளிப்படையாக பகைச்சுக்காதீங்க.