Tuesday, September 24, 2019

தமிழக அரசு ஊழியர்களின் முக்கிய அரசாணைகள்

தமிழக அரசு ஊழியர்களின் முக்கிய அரசாணைகள்

(1)- பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும்,
பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது (RG. 1984.P.278)

(2)- கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)

(3)- அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்-27.9.1974)

(4)- அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண். 45679/A2/1996, நாள்-17.4.1996)

(5)- மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பும் பணியாளரை முடிந்தவரை அதே இடத்தில் பணி அமர்வு செய்ய வேண்டும். (அரசு கடித எண். 2290/93-1,நிர்வாகத்துறை, நாள் - 18.6.1993)

(6)- அரசு ஊழியர் ஒருவர் Private Study பயில்வதற்கு துறைத் தலைவர் அனுமதி பெற வேண்டும். (G. O. Ms - 362,P&A. R, DT - 4.11.1992)

(7)- தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்பும் அரசு ஊழியர் மாவட்ட அளவிலான உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். (அரசாணை எண். 362, நிர்வாகத்துறை, நாள். 4.11.1992, மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/93,நாள் - 22.6.1993)

(8)- மாலை நேரக் கல்வி பயில துறைத்தலைவரின் அனுமதி தேவை. (அரசாணை எண் 1341,பொது, நாள் - 27.8.1993 மற்றும் அரசு கடித எண். 98189/84-8, நிர்வாகத்துறை, நாள் - 13.8.1983)

(9)- அரசு ஊழியர் ஒருவர் மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondence Course) பயில அனுமதி கோரி விண்ணப்பித்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம். (அரசாணை எண். 200,நிர்வாக சீர்திருத்ததுறை, நாள் - 19.4.1996)

(10)- பரம்பரை சொத்துகளிலிருந்து பாகம் கிடைத்தாலோ அல்லது சொத்து ஒன்று பரம்பரையாக அரசு ஊழியருக்கு கிடைக்க நேர்ந்தாலோ அதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை. சொத்து அறிக்கையில் மட்டும் காண்பிக்க வேண்டும். (அரசாணை எண். 7143/பணி/ஏ/85-6,நிர்வாகத்துறை, நாள்
[14/09 4:13 pm]  +91 94426 43238 : அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி

அரசாணை எண் 39
பள்ளிக் கல்வி (இ2 ) துறை
அரசாணை எண் 39
அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி ரூ 75,000

பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- நிதி வழங்குதல்- ஆணை வெளியிடப் படுகிறது.

பள்ளிக் கல்வி (இ2 ) துறை
அரசு ஆணை ( நிலை ) எண். 39

ஒரு குடும்பத்தில் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய், விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலே, வருவாயின்மைக் காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியைத் தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படுகிறது. அவ்வாறான சூழ்நிலைகளில் அத்தகைய குழந்தைகள் தங்களது கல்வியை இடையில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து கல்வி கற்கும் வகையில், அவர்களது கல்விப் பாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில், புதிய திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ,மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- நிதி வழங்கப்படும்.

இந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் அவர்களது பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும்.

தரமான கல்வி எது?

தரமான கல்வி எது?

இங்கு ஒரு தவறானப் பொது உளவியல் உருவாக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. நிறையத் தேர்வு எழுதினால், நிறைய மதிப்பெண் எடுக்கலாம், தரமானக் கல்வி உருவாகும் என்கின்றனர். தேர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்தால், எப்படி தரமானக் கல்வி உருவாகுமென்று யாரேனும் நிரூபிக்கத் தயாரா?

அரசுப்பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகளை நடத்துகின்றனர். அதில் தரம் இல்லையெனக் கூறிக்கொண்டு, மாதாந்திர தேர்வு நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அனுப்பத் தொடங்கினர். இப்பொழுது, வாராந்திர தேர்வு நடத்துகின்ற பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்புகின்றனர்.

இன்னும் சில ஆண்டுகளில் தினமும் தேர்வு நடத்துகின்ற பள்ளிகளுக்கு குழந்தைகள் அனுப்பப்படுவர். உண்மையில் தேர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்தால், கற்றல் அதிகரிக்குமா?

நாங்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது, காலாண்டுத் தேர்வு வருவதற்கு முன் ஒரு வாரத்திற்கு முன்பாக தேர்வுக்கான தேதியை அட்டவணையாக வெளியிடுவர். அந்த அட்டவணை வெளியான நாள் முதல் மனதில் ஒருவிதமான பயம் தொற்றிக் கொள்ளும். தேர்வில் சரியாக மதிப்பெண் எடுக்காவிட்டால், வகுப்பில் ஆசிரியர் அடிப்பார், வீட்டில் பெற்றோர் அடிப்பார்கள், பக்கத்து வீட்டில் மாமா கிண்டல் செய்வார் என்று பல்வேறு அழுத்தம் உருவாகும். அதனை தவிர்ப்பதற்காக படிக்கத் தொடங்குவோம்.

தேர்வு முடிந்தால் ஒருவாரம் விடுமுறை அதில் நன்றாக விளையாடலாம், இப்பொழுது கவனமாக படிக்கலாம் என்ற ஒருவித விட்டுக்கொடுத்தலுக்கு மனம் தயாராக இருக்கும். படிக்கின்ற நாள்களில் ஒழுங்காகப் படிக்க வேண்டும். விளையாடுகின்ற நாள்களில் ஓடியாடி விளையாடலாம் என்ற புரிதல் பால்ய வயதிலேயே வந்துவிடும்.

தேர்வு, தேர்வுக்குத் தாயராக சரியான நாள்கள், தேர்வுக்கு பிறகு மன ஓய்வுக்கான விடுமுறை என்று எல்லாமும் சரிவிகிதமாக பிரிக்கப்பட்டு, பள்ளி வாழ்க்கை நகர்ந்தது. அதனால், உண்மையில் வலிமையான மனதிடத்தோடு நாங்கள் உருவானோம்.

இன்றைய நிலைமை வேறு. ஒரு வாரம் பாடம் நடத்துகின்றனர். அடுத்த வாரம் தேர்வு வைக்கின்றனர். அதற்கு அடுத்த வாரம், இவன் புத்திசாலி, இவன் முட்டாள் என்று தரம் பிரித்துவிடுகின்றனர். நாம் எந்த இடத்தில் தவறு செய்தோம் என்று அந்த மாணவன் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே அடுத்த வாரத்திற்கான தேர்வு வந்துவிடுகிறது. மறுபடியும் அவன் முட்டாளாக்கப்படுகிறான்.

கற்பித்தலும்- கற்றலும், புரியாதப் பகுதியை மீண்டும் கற்பித்தலும்- அதன் மூலம் மீண்டும் தெளிவாக கற்றலும்தான் கல்வி. ஆனால், வாரம் ஒருமுறை தேர்வு நடத்தினால், கற்பித்தல் எப்பொழுது நடக்கும், அதன் விளைவான கற்றல் எப்பொழுது நடக்கும்?

இன்றைய காலத்தில், நீங்கள் எந்தப் பள்ளிக்கூடம் தலைச்சிறந்த பள்ளிக்கூடம் என்று நினைக்கிறீர்களோ, அங்கு கற்பித்தலே நடப்பது இல்லை என்பதை என்னால் நிரூபிக்க முடியும். கற்பித்தலிலும், கற்றலிலும், இரண்டு பக்கமும் வார்த்தைகள் பரிமாற்றம் நடக்க வேண்டும். எந்தப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பாடம் நடத்தியவற்றில் இருந்து மாணவன் கேள்வியை எழுப்புகிறான்? குறிப்பாக ஆக்கபூர்வமான கேள்வியை எழுப்புகிறான்?

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் வீட்டில் இருந்தே தேர்வு எழுதுகின்ற காலம் வந்துவிட்டது. காரணம், தேர்வு முக்கியமில்லை, தேர்வில் இருந்து கற்பதும், புதியவற்றை கண்டுபிடிப்பதும்தான் கல்வியின் நோக்கம் என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்து வைத்து இருக்கின்றனர். ஆனால் இங்கு நடப்பது என்ன? குழந்தைகளை செக்கு மாடுகளாக மாற்றும் மாபெரும் பணியைத்தான் வகுப்பறைகளில் நிகழ்த்திக் கொண்டு இருக்கின்றனர்.

வகுப்பறையில் இருக்கும் கரும்பலகையில் எழுதப்படுபவை வெறும் வரிகளாக, படங்களாக மட்டுமே மாணவர்களின் மூளைக்குள் திணிக்கப்படுகின்றன. அதனைத்தான் 'பாடம் நடத்துவது' என்று நம்புகின்றனர் ஆசிரியர்கள். அதனையும் கடந்து, புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வரியும், இயல்பான உலகில் நடைபெறும் ஓர் உண்மை சம்பவத்தின் குறியீடு என்பதை யாருமே உணர்வதில்லை. அந்த குறியீடுகளின் வழியாக மெய் உலகைத் தேடி நகர்கின்ற அறிவு, இக்கால குழந்தைகளுக்கு வழங்கப்படாமல் இருப்பதுதான் பெருங்கொடுமை.

எடுத்துக்காட்டாக ஒருக் கேள்வியைக் கேட்கிறேன். எல்லோரும் எலக்ட்ரான் என்ற வார்த்தையைப் படிக்கின்றனர். ஆனால், எலக்ட்ரான் எப்படி இருக்கும், அதன் உருவம் என்ன? அதன் பிம்பம் என்ன? போன்ற எந்த கேள்விக்கும் யாரிடமும் பதில் இல்லை. ஆனால், எலக்ட்ரான் அணுவைச் சுற்றி வருகிறது என்று மட்டும் எல்லோரும் நம்புகின்றனர். ஏன் இந்த தேடல்களை நம் தேர்வுகள் உருவாக்கவில்லை?

பாடப்புத்தகங்களுக்குள் விடை தேடுவது அறிவல்ல. பாடப்புத்தகங்கள் சொல்லாதவற்றையும் தேடுவதுதான் உண்மையான அறிவு. தொடர்ந்து தேர்வு எழுதுபவன் மெய்நிகர் உலகிற்கு செல்வதே இல்லை. அதன் அருகில் கூட அவன் இல்லை. அவன் உலகம் எல்லாம், அவன் கையில் இருக்கும் புத்தகம் மட்டுமே. புத்தகத்தைக் கடந்து அவனிடம் கேள்வியும் இல்லை, பதிலும் இல்லை, தேடலும் இல்லை.

தரமானக் கல்வி என்பது ஒருபோதும் செக்குமாடுகளை உருவாக்காது..
தேடல் கொண்டச் சமூகத்தை உருவாக்கும் வலிமை, எந்தக் கல்வி முறைக்கு இருக்கிறதோ, அதுவே தரமான கல்வி...

தரமானக் கல்வியும், அதன் விளைவாக உருவான அறிவார்ந்த மாணவனும்தான், வலிமையான நாட்டை வடிவமைக்க உதவியாக இருக்க முடியும்...

அந்த 'தரம்' கட்டாயம் நீங்கள் நினைக்கும் தேர்வுகளால் தீர்மானிக்கப்படாது..
கற்றலும்- கற்பித்தலும் எங்கு இருக்கோ, அங்குதான் தரம் இருக்கும்..

-பேராசிரியர் ஆ.அருளினியன்

சத்திய வரலாறு

சத்திய வரலாறு - 1 - தமிழ்நாடு என பெயர் வைக்க கோரி சங்கரலிங்கனார் 75 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்கிறார். அவருடைய உண்ணாவிரதத்தை கைவிட திரு.வி.க, பேரறிஞர் அண்ணா போன்ற பலர் முயற்சித்தும் பலனற்று போனது.  அது 1957_ம் ஆண்டு, அப்போது ஆட்சியில் முதலமைச்சராக இருந்தவர் காமராசர். சங்கரலிங்கனார் இந்த கோரிக்கைக்காக இறந்த பிறகும் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் காமராசரே முதலமைச்சர்.
ஆயினும் “தமிழ்நாடு” என்கிற பெயர் மாற்றத்தை நினைத்து கூட பார்க்கவில்லை காமராசர்!!!!
1957_ல் சங்கரலிங்கனார் இறந்து போகிறார்.
1967_ல் பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வருகிறார்.
முதல் மூன்று கையெழுத்துகளில் ஒன்றாக தாய் தமிழ்மண்ணிற்க்கு, “தமிழ்நாடு” என்கிற பெயரை சூட்டுகிறார்!!!

சத்திய வரலாறு - 2 - தமிழகத்தின் எல்லையில் தேவிக்குளம், பீர்மேடு எல்லை பிரசினை பூதாகார உருவெடுக்கிறது. அப்போதும் ஆட்சியில் இருந்தவர் காமராசர் தான்!!! தமிழகமே கொத்தளித்து நிற்கிறது!!! “மேடாவது, குளமாவது” என தமிழக எல்லையை பற்றி அசட்டையாக பதிலளித்தவரும் இதே காமராசர் தான்!!!

சத்திய வரலாறு - 3 - பெரியாரும், ராஜாஜியும் நெருங்கிய நண்பர்கள்.  ஆயினும் காமராசர் எனும் பச்சை தமிழனை வீழ்த்த உதவமாட்டேன் என சொன்னதோடு காமராசரை ஆதரித்தார் பெரியார். பேரறிஞர் அண்ணாவோ, காமராசரை எதிர்த்து வேட்பாளரே நிறுத்த மறுத்தார். ஆனால், பச்சை தமிழனான காமராசரை எதிர்ப்பதே வாழ்நாள் இலக்காக கொண்ட மா.பொ.சி. காமராசருக்கு எதிரான ராஜாஜியின் கை கோர்த்து கொண்டு துரோகம் செய்தார்!!!

இப்படி வரலாற்று உண்மைகள் நிறைய இருக்கின்றன!!!

ஆனால்.., தமிழ்நாடு என பெயர் வைக்க மறுத்தவரும், எல்லையை காவு கொடுத்தவருமான காமராசர் மண் இதுவாம் - சீமானின் தம்பிகளுக்கு.
காமராசரை இப்படி சொல்கிற இவர்களே, காமராசருக்கு நேர் துரோகியான ம.பொ.சி.யையும் சேர்த்து கொண்டாடுகிறார்கள்!!!

எனில், சீமான் இவர்களுக்கு கற்று தந்திருப்பது புழுகினி வரலாறு தானே!!!

பெரியார் சொன்ன ”கடவுள் மறுப்புக்” கருத்துக்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க முடியுமா ?

சமத்துவத்துக்காக

பெரியார் சொன்ன  ”கடவுள் மறுப்புக்” கருத்துக்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க முடியுமா ?

அதற்கு மிக எளிதான வழி ஒன்று இருக்கிறது.

உங்கள் குழந்தையிடம் பூமியின் தோற்றம், உயிர்களின் தோற்றம் பற்றி சொல்லிக் கொண்டே இருங்கள்.

சமயம் கிடைக்கும் போதெல்லாம் அது பற்றிய அறிவியல் தகவலை சொல்லிக் கொண்டே இருங்கள்.

ரொம்ப அறிவியலாக உள்ளே போய் கூட சொல்ல வேண்டாம். மேலோட்டமாக கொஞ்சம் யோசிக்க வைத்தாலே போதும்.

“இதப் பாரு. நீ ரெண்டு பேரும் இந்த இடத்துல இப்படி இருக்கோம் சரியா?

எப்படி இங்க இப்படி இருக்கோம்னு பாரு. 500 கோடி வருசத்துக்கு முன்னாடி சூரியன்ல இருந்து ஒரு துண்டு பிஞ்சி விழுந்து சுத்தி சுத்தி சூரியன விட்டு தள்ளிப் போச்சு.

அது குளுந்தாச்சி. கட்டியாச்சி. அதுதான் நம்ம பூமி.

அப்புறம் பூமியோட தோற்றம் 450 கோடி வருசம் முன்னாடி தொடங்குது.

So பூமி தோன்றும் போது அங்க எல்லாமே Non living things தான். கல்லு மண்ணு உலோகம் தண்ணி இப்படித்தான் இருந்திச்சி. இந்த Non living things ல இருந்து Living things எப்படி வந்திச்சி.

யோசிச்சி பாரு இப்ப நீ உயிருள்ளதுக்கும் உயிர் இல்லாததுக்கும் எவ்ளோ வித்தியாசம் பாக்குற. உயிர் உள்ளது வளருது சாப்பிடுது  ஆனா உயிர் இல்லாதது வளராது சாப்பிடாது அசையாது.

இந்த உயிர் இல்லாததுல இருந்து உயிர் உள்ளது வந்தது முக்கியமான Turning point ஆகும்.

அப்போ மக்கள் கிட்ட இது எப்படி நடந்தின்னு குழப்பம் இருக்கு. இதுக்கு ஒரு தீர்வ Urey miller சோதனை சொல்லுது.

அதன்படி 300 கோடி வருசம் முன்னாடி இருக்கிற பூமியோட தன்மையை அதாவது மின்னல் எல்லாம் அதிக பலத்தோட இருக்கும், அந்த செட் அப் எல்லாம் செய்து சின்னதா ஒரு மாடல் சோதனை சாலைல உருவாக்கினாங்க.

அதுல சில அமினோ ஆசிட்கள் கிடைச்சதாம். அமினோ ஆசிட் ஒரு உயிர் பொருளுக்கான அடிப்படை. அமினோ ஆசிட் வெச்சிதான் உயிர் செல் உருவாகும்.

அப்போ முதல்ல மின்னல் வெட்றதால நிறைய அமினோ ஆசிட் உருவாகுது, அதுல இருந்து ஒரு செல் உருவாகுது. அந்த ஒரு செல் பல கோடி வருசம் கழிச்சி அதுவே அதை உற்பத்தி பண்ணுது.

அப்படி பல செல் உயிர்கள். பல வடிவமான உயிர்கள் வளருது.

அப்புறம் டைனோசர் அட்டகாசம் பண்ணுது. அப்ப நாம பாலூட்டிகள் எல்லம் ஜுஜூப்பி. பிறகு விண்கல் மோதுனதால டைனோசர் அழியுது. அதுக்கப்புறம்தான் நாம Mammals பூமிய டாமினேட் செய்றோம்.

அதுல மனுசனுக்கு கொஞ்சம் அறிவு அதிகமா இருக்கு.

ஆனா அவனுக்கு இயற்கை கொடுக்கிற பயம் அதிகம் இருக்கு, திடீருன்னு வெள்ளம் வருது, சுனாமி வருது, சூரியன் சாயங்காலம் மறைஞ்சிருது, எரிமலை வெடிக்குது. உடனே இதையெல்லாம் வணங்குறான். தயவு செய்து எங்கள எதுவும் செய்திராதீங்கன்னு கெஞ்சுறான்.

அடுத்து சில மனுசங்கள பாம்பு கொத்தி வெச்சிட்டு போயிருந்து. பாம்ப எப்படி டீல் பண்றதுன்னு அவனுக்கு தெரியல. உடனே பாம்பை ஒரு தெய்வமா வணங்குறான்.

இப்படித்தான் முதல் முதல்ல சாமி வர்றார்.

அப்போ நல்லா கவனி பூமி உருவாக தொடங்கி 500 கோடி வருசம் ஆகுதுன்னா அதுல கடவுள் எப்போ வர்றார். இப்போ 5000 வருசமாத்தான் வர்றார்.

இப்போ நீ ஒரு சினிமா பாக்குற சரியா. அதுல லாஸ்ட் சீன்லதான் கடவுள் வர்றார். அது மாதிரி அர்த்தம்.

இப்போ மனுசனுக்கு இன்னும் அறிவு ஜாஸ்தி ஆகுது. அவன் இயற்கைல இருந்து அவன ஒரளவுக்கு காப்பாத்திக்கிறான். இயற்கையை கடவுளா கும்பிடுற பழக்கம் கொஞ்சம் குறையுது. அதே சமயம் மனுசன் குரூப் குரூப்பா வாழ்றான்.

அப்போ ஒவ்வொரு குரூப்லையும் உள்ளுக்குள்ள சண்ட வருது. அந்த சண்டய எல்லாம் தீத்து வைக்கிறது அந்த குரூப்ல உள்ள வயசானாவங்கள தலைவனா வைக்கிறான்.

அது அப்படி கொஞ்சம் கொஞ்சமா வளந்து ஒரு குரூப்புக்கு தலைவன் கட்டாயம் வேணும்கிற கான்செப்ட் வருது.

இப்போ என்னவாகுது தலைவனுக்கு கர்வம் வருது.

தான் சொல்றத மத்தவங்க கேக்குறது அவனுக்கு பிடிச்சிருக்கு. உடனே என்ன செய்றான் நான் தான் கடவுள் அப்படின்னு சொல்றான்.

தலைவனுக்கு ஜால்ரா போடுறவங்க எல்லாம் ஆமா நீதான் கடவுள்ன்னு சொல்றாங்க. இப்ப இயற்கைல இருந்து கடவுள் மனுசன் வடிவமாகிப் போறாரு.

முதல்ல செத்துப் போன தலைவர்கள சாமியா கும்பிட ஆரம்பிக்கிறாங்க. இப்படி கொஞ்சம் கொஞ்சமா மனுசன் சாமியை வெச்சி மத்தவங்கள அடக்க ஆரம்பிக்கிறான்.

நீ இப்ப கிளாஸ் லீடரா இருக்க. நீ எப்படி கிளாஸ்ல கண்டிரோல் பண்ணுவ. “நீ பேசினா மிஸ் திட்டுவாங்க “ அப்படித்தான மிரட்டுவ.

அப்படித்தான் அந்த காலத்துல மன்னர்கள் மக்கள மிரட்டுனாங்க. “நீ இப்படி செய்தா அது சாமிக்கு பிடிக்காது. நாந்தான் சாமி வழி வந்தவன்” இப்படி சொன்னாங்க.

இதுக்கப்புறம் அந்த மன்னனும் மன்னனுக்கு ஜால்ரா போடுற குரூப்பும் என்ன செய்யுது ”சாமி புக் “ ஒண்ண எழுதி வைக்குது.

மனுசங்க எல்லாம் இந்த ”சாமிபுக்” சொல்ற்படிதான் கேக்கனும் அப்படின்னு திரும்ப திரும்ப சொல்லி மக்கள ஏமாத்துறாங்க. அந்த “சாமிபுக்ல” இருக்கிறது எல்லாமே பொய். அடுத்தவங்கள எப்படி அடக்கலாம்.

ஒடுக்கலாம்னுதன் அதுல இருக்கும். இப்படித்தான் கடவுள் நம்ம கூட வர்றார். சரியா இப்படி ஒரு கடவுள நம்ம மேல திணிக்கிறாங்க.

சரி இப்படி திணிக்கிற கடவுள் எப்படி வேகமா ஹிட் ஆகுறாருன்னு பாரு. அதுதான் நீ கவனமா புரிஞ்சிக்கனும்.

இப்ப ஒரு குரங்கு இருக்கு. அதுக்கு ரொம்ப பசிக்குது. அப்போ அதோட மூளைக்கு சாப்பிட எதாவது கிடைக்காதான்னு இருக்கும். அதுக்கு மேல அதுக்கு எதுவும் தோணாது.

ஆனா மனுசன எடுத்துக்க அவனுக்கு சாப்பிட எதுவும் கிடைக்கலன்னு வெச்சிக்க “சாப்பிட எதுவும் கிடைக்காதாங்கிற” அந்த தவிப்பு ஃபீல் இருக்கில்ல, அத கடவுளா மாத்திப்பான்.

கடவுளே எனக்கு சாப்பிட எதாவது கொடு அப்படின்னு சொல்லிப்பான். அவனுக்கு அதச் சொல்லிக் கொடுத்தது அவனோட அம்மா அப்பா. அவன் கடவுளேன்னு சொல்லிகிட்டே போகும் போது சாப்பிட எதாவது கிடைச்சா உடனே கடவுள்தான் அதக் கொடுத்தாருன்னு நினைச்சிக்கிறான்.

அப்போ மனுசனோட சொந்த Emotions இருக்கு பாரு. 

அதுக்கெல்லாம் கடவுள் வடிவம் கொடுக்கிறான். நீ ஹோம்வொர்க் செய்யாம போவ உடனே நீ வேண்டுவ “கடவுளே இன்னைக்கு மிஸ் ஸ்கூலுக்கு வரக் கூடாது”.
கிரிக்கட் பாக்குறோம் “கடவுளே இந்தியா ஜெயிக்கனும்”

நல்லா கவனிச்சா இது எல்லாம் மனுஷனோட ஆசைகள்.

இந்த ஆசைகளப் போய் கடவுள் கடவுள்ன்னு சொல்லிட்டு இருப்போம்.

தினமும் நமக்கு எதாவது விசயம் நடக்கனும்னு இருக்கும் அப்படித்தான. அப்போ ஆடோமெட்டிக்காக கடவுளா வேண்ட ஆரம்பிச்சிருவோம்.

இப்படித்தான் கடவுள் ஹிட் ஆகுறாரு. இப்படித்தான் ஒவ்வொரு மனுசனுக்குள்ளும் கடவுள் தந்திரமா உள்ளே வந்திருவாரு.

So இப்படி தனி தனியா ஒவ்வொருத்தருக்குள்ள இருக்கிற கடவுள, அந்த “சாமி புக்” கோஷ்டி இருக்கு பாரு.

அவனுங்க ஈஸியா இழுத்திருவானுங்க. உன் மனுசல இருக்கிற கடவுள்தான் இந்த சாமிபுக்ல இருக்கு .

இந்த கடவுளுக்கு இதப் பண்ணினா உனக்கு நல்லது செய்வாரு.

நீ இதச் செய் அப்படின்னு சொல்லும்.

So கடவுள சரியா புரிஞ்சிகிட்டா ஹட்டோரி மாதிரி, டோரேமான் மாதிரி, ஸ்பைடர் மேன் மாதிரி அவரும் ஒரு சுவாரஸ்மான கேரக்டரா தெரியும். அவர் மேல பயமோ பதற்றமோ கொள்ளத் தேவையில்லை. ஏன்னா அப்படி ஒருத்தர்தான் கிடையாதே. Nature தான் உண்மை அப்படித்தானே. ”

இப்படி அறிவியலைச் சொன்னாலே கடவுள் மூடநம்பிக்கையில் இருந்து குழந்தைகளை மீட்கலாம்.

சும்மா கடவுள் கிடையாது. கும்பிடாதே என்றெல்லாம் சொல்வதினால் எப்பலனும் இல்லை. அறிவியலைச் சொல்லி அதைச் செய்ய வேண்டும்.

சமீபத்தில் ஒரு பேட்டரி பல்ப் வேலை செய்யும் வீடியோவை மகள் பேசுவதாக நான் எடுப்பதாக தயாரானேன்.

அதை எடுக்கும் முன் மனைவி மகளுக்கு விபூதி பூசிச் சென்றார்.

நான் ரெடி ஸ்டார்ட் என்று எடுக்கப் போகும் முன் மகள் தடுத்தாள். என்ன என்றேன்.

“அப்பா சொல்லப் போறது சயின்ஸ். விபூதி நல்லா இருக்குமா. நான் அழிச்சிரவா” என்று விபூதியை எடுத்து விட்டு அறிவியல் பேசலாலானாள்.

அச்செயல் கண்டு பூரித்துப் போனேன்.

இஸ்ரோவில் இருந்து எத்தனையோ இந்திய விஞ்ஞானிகள் நெற்றியில் பட்டை நாமத்தோடு அறிவியலை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கேட்டால் ”மதம் ஆன்மாவை செழுமைப்படுத்தும் அறிவியல்” என்று உளறி வைப்பான்கள்.

இவளோ விபூதியோடு அறிவியல் பேசுவதை தவறு என்கிறாள்.

ஏதோ ஒன்றை சரியாக சொல்லிக் கொடுத்திருக்கிறேன்தான் போல என்று மகிழ்ந்து கொண்டேன்.

உங்கள் குழந்தைகளை பெரியார் சொன்ன பகுத்தறிவு வழியில் கொண்டு போவதைப் போல நீங்கள் அவர்களுக்கு
 செய்யும் நன்மை எதுவுமில்லை.

இரயில்வே தேர்வில் தமிழக இளைஞர்களின் பங்கேற்பு குறைவு என்பது அப்பட்டமான "பொய்"

இரயில்வே தேர்வில் தமிழக இளைஞர்களின் பங்கேற்பு குறைவு என்பது அப்பட்டமான "பொய்"

இரயில்வே தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 10%க்கும் குறைவாகவும்.. 90% வட இந்தியர்கள் தேர்ச்சி என்பது முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பதாகும்.

தமிழர்கள் முயச்சிக்கவில்லை சோம்பேறிகள், நடிகர்கள், கிரிக்கெட் பின் செல்பவர்கள் மட்டமாக பதிவிடுவை முதலில் நிறுத்துங்கள்.

தமிழர்களை மட்டமாகவும் வட இந்திகாரர்களை உயர்வாகவும் இந்திய அசுக்கும் கூஜா தூக்கி நக்கல் அடித்து பதிவிடுபவர்கள் தமிழர்கள் தானா என்பது சந்தேகமாக உள்ளது.

கல்வியில் அறிவில் தமிழ்நாட்டில் இருப்பவர்களை விட 40 ஆண்டுகள் பின் தங்கியுள்ள இந்திகாரர்கள் 10ம் வகுப்பு தேர்வில் அருகருகே அமர்ந்து பார்த்து எழுதியும் தங்கள் தாய் மொழி இந்தியிலே தேர்ச்சியாகாத இலட்சக்கணக்கானவர்கள் தான் முறையாக இரயில்வே RRB/RRC தேர்வில் வெற்றி பெற்றனர் என்பதை
கேட்பதற்கே நகைப்பாக உள்ளது.

தமிழக இரயில்வேயில் பணிபுரியும் வட இந்திய  அதிகாரிகள் மூலம் ஆள் மாராட்டம், பிறப்பு, கல்வி, சாதி போன்ற போலி சான்றிதழ்கள் கொண்டு முகவர்கள் மூலமாக பல முறைகேடுகள் செய்து தேர்வு எழுதி மாடி கொண்டதை நாமே கடந்த காலங்களில்  பார்தோம்.

சரிவர எழுத படிக்க தெரியாத தகுதியற்ற இவர்கள்   பயிற்சி மைய முகவர்கள் மூலமாக பணம் செலுத்தி முறைகேடாக பணியை பெற்றனர் என்பதே உண்மை.

தமிழகத்தைச் சேர்ந்த   10வகுப்பு, 12 வகுப்பு மாணவர்கள், கல்லூரி பட்டதாரிகள் அரசு வேலைக்காக 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் பலர் TNBC/ UPS/ NEET தேர்வுகளுக்கு முயற்சி செய்து வருவதை போல் இரயில்வே RRB/RRC தேர்வுக் முயற்சி செய்து வருகின்றனர்.

குறிப்பாக இரயில்வேயில் இதற்காகவே பயிற்சி பெற்ற அப்ரண்டிசு மாணவர்கள் (20% உள் இட ஒதுக்கீடு பெற்ற) தெற்கு இரயில்வே, ஐ.சி.எஃப் மாணவர்கள் 20,000க்கும் மேற்பட்டோர்  பலர்  இத்தேர்வில்  கலந்து கொள்ள பயிற்சி வகுப்புகள் சென்று  தொடந்து 15 ஆண்டுகள் ஆர்.ஆர்.பி/ ஆர்.ஆர்.சி யில் முயற்சி செய்து வருகின்றனர் ஆனால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தேர்ச்சி பெறவில்லை.

 தமிழர்கள் பணியிடங்கள் வட இந்தியர்கள் பெறுவதற்கு முக்க காரணம் இந்திய அரசும் அதன் இந்திய மயம் என்ற கொள்கை மட்டுமே.

இந்தியை திணிக்க முடியாத இந்திய அரசு இந்திகாரர்களை வேலைவாய்ப்பின் மூலமாக திணிக்கின்றது.

தமிழர் விரோத இந்திய அரசின் செயலை தடுக்க கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா சட்டம் உள்ளது போன்று தமிழக அரசு மண்ணின் மைந்தர்களுக்கே 90% வேலைவாய்ப்பு என்ற சட்டம் இயற்ற வேண்டும்.

சங்க இலக்கியங்களில் சாதிகள் இல்லை

சங்க இலக்கியங்களில் சாதிகள் இல்லை, ஐம்பெருங்காப்பியங்களில் சாதிகள் இல்லை பின் எப்போது சாதிகள் தமிழருக்கு அறிமுகமானது என அறிய சாதிகளின் தோற்றுவாய் தமிழில் எப்போது நிகழ்ந்தது எனத் தேடினேன்

மநு தர்மம் என்ற பெயரில் வந்தேறிகள் எழுதிய குப்பை எப்படி தமிழர் மீது ஏற்றபட்டது என வினவினேன்

விடை விளக்கமாக கண்டறிந்தேன், ஆளுக்கொரு சாதியாகப் பகுத்து அத்தனை பேரையும் இல்லாத கடவுள் உலகம் செல்ல பயணச்சீட்டு கொடுக்க பார்ப்பனன் அந்தணராகவும் மற்றவர்கள் மநு தர்ம பகுப்புகளாகவும் திறம்பட எழுதி அனைவரும் பார்ப்பனனுக்கு அடிமை என கதை கதையாக வாழைப்பழத்தில் ஊசி குத்துவதுபோன்று ஏற்றிய திட்டமே பெரியபுராணமும் அதன் 63 நாயன்மார்களும்

சற்றே ஆய்ந்ததில்

இழிவான மனுசாத்திர குப்பையை முதன் முதலில் தமிழர் எண்ணத்தில் சாதிகளாகப் பகுத்து பிரிவினையை உட்புகுத்த இந்த 63 நாயன்மார் இழவுகளை கீழ்கண்டவாறு பரப்புரைத்தனர்

மனு - பிராமணர்:
அந்தணர் (13)

மனு - சத்திரியன்:
அரசன் (12)

மனு - வைசியன்:
வணிகர்(5)

மனு - சூத்திரன்:
வேளாளர் (14)
ஆதி சைவர்(4)
மரபுக்கொருவர்(13)

மனு - சண்டாளன்:
மரபு கூறப்படாதவர் (2)

என வகைப்படுத்தி அவரவர் சாதிகளுக்கென பார்பனன் கால்நக்கி வாழும் கதைகளை எழுதினர். இதுவே 63 நாயன்மார் பெரியபுராணம் பெரிய சாதிச்சண்டைகளுக்கு வித்தானது

இத்தக்கதைகளை படித்தால் மனைவியை பார்ப்பனனுக்கு கூட்டிக்கொடுத்தல்

பெற்றப்பிள்ளையைக் கொன்று பார்ப்பனனுக்கு உணவாகப் படைத்தல்

பிரம்படிபட்டாலும் பார்பனனுக்கு அடிமையாய் அடிபணிதல்

கடவுளேயானாலும் கீழ்சாதியானால் நடைசாத்தப்பட்ட கோவிலுக்கு மட்டுமே அனுமதித்தல் அதாவது தீண்டப்படாதவனாக ஏற்றுக்கொளல்

என கீழ்த்தரமாக சாதிகள் உட்புகுத்தப்பட்டிருக்கும்

மூடிய பள்ளிக்கூடங்களை காமராஜர் திறந்தார்

"மூடிய பள்ளிக்கூடங்களை காமராஜர் திறந்தார்"னு சொல்ராங்களே. அந்த பள்ளிகளை மூடியது யார்? அவர்கள் மூடும் முன் அந்த பள்ளிகளை திறந்து வைத்தது யார்?

பள்ளிகளை திறந்தது - நீதிக்கட்சி
பள்ளிகளை மூடியது - பார்ப்பனன் ராஜகோபாலன்

தமிழர்களுக்கு கல்விக்கண் திறந்தவர் காமராஜர்னு சொன்னா, ஒளவையாரையம் திருவள்ளுவரையும் காட்டி காமராஜருக்கு முன்னால தமிழர்கள் படிக்கவேயில்லையா அதென்ன அவர் வந்து கல்வி கண் திறந்தாரு?  அப்படின்னு குதர்க்கமா கேக்கலாமா?

காவிரி பிரச்சனைக்கு மூல காரணமான குடகு பகுதியை கர்நாடகாவிற்கும் திருப்பதியை ஆந்திராவிற்கும் முல்லை பெரியாறு அணைப்பகுதியையும் பாலக்காட்டையும் கேரளாவிற்கு தாரை வார்த்து குடுத்தப்போ யாரு முதல்வர்?

காமராஜர் 1963ல முதல்வர் பதவியை ராஜினாமா பண்ணி பக்தவச்சலத்தை முதல்வர் ஆக்கினாரு. பக்தவச்சலம் இந்தி திணிப்பு பண்ணி துணை ராணுவத்தை வெச்சு துப்பாக்கி சூடு நடத்தினதாலே காங்கிரஸ் இருந்த இடமே தெரியாம போச்சு... அதெப்படி திராவிடலு அவர் பதவியை பறிக்க முடியும்?


தமிழ் தேசியவாதி என்று யாரும் ஏற்கப்போவதில்லை

சீமான் அரசியல் கட்சி நடத்துகிறார் என்று அவர்கள் சொல்லுவதில்லையே. அப்படி சொல்லிட்டு போனால் யார் கேட்க போகிறார்கள் ? தமிழ் தேசியம் என்பது என்னை விட்டால் யாரும் இல்லை என்பதும்.  அதற்கு ரசிக குஞ்சுகளின் அலப்பரையும், யாரையும் மதிக்காமல் மக்களையே குறை சொல்லுவதும், திராவிட கட்சிக்கு போட்டியாக அனைத்து சித்தாந்தத்தையும் தமிழர்களுக்கு எதிராக பின்பற்றும் ஒரு நபரை தமிழ் தேசியவாதி என்று யாரும் ஏற்கப்போவதில்லை

சீமானின் செயல்பாடுகள் திராவிட மற்றும் ஹிந்துத்வ அரசியலுக்கு எந்தவகையிலும் மாற்று இல்லை. தனது கேரக்டரை தானே கொல்ல முடிவெடுத்து செயல்படும் பொழுது யாரும் காப்பாற்ற முடியாது. லைக்கா வுக்கு ஆதரவு, கமலஹாசன், எளிய மகன் பன்னீர், குறைந்த சான்றோன் மாபா ..... இறுதியா ஜக்கிக்கு ஆதரவு .....இதெல்லாம் என்ன தமிழ் தேசிய அரசியல் அணுகுமுறையா  ?      

இத்தனை நாள் இவர்களின் அனைத்து தவறான முடிவுகளுக்கும், சமரசத்திற்கு நாம் முட்டு கொடுத்து கொண்டு நின்றோம். எதற்கும் ஒரு அளவு இருக்கிறது. இன்று ரவுடி பயலுக சகவாசத்தில் வந்து நிற்கிறது. தற்குறிகள் எல்லாம் அட்வைஸ் பண்ணினது போதாதுன்னு இனிமேல் ரவுடிகள் எல்லாம் வரணுமா ? ஒரு இனத்தையே இனப்படுகொலைக்கு கொடுத்துவிட்டி இன்று ஒரு தவறான நபரை தேர்ந்தெடுக்கும் அளவிற்கு தமிழ் தேசியவாதிகள் முட்டாள் இல்லை.

இத்தனை கோயில் கட்டிய அடி முட்டாள்கள் ராஜாக்கள் ஏன் தமிழர்கள் படிக்க ஒரு பள்ளிக்கூடம் கூட திறக்கவில்லை

இத்தனை கோயில் கட்டிய அடி முட்டாள்கள் ராஜாக்கள் ஏன் தமிழர்கள் படிக்க ஒரு பள்ளிக்கூடம் கூட திறக்கவில்லை இப்பொழுது தெரிகிறதா தமிழனுடைய வளர்ச்சியை தடுத்தவன் திராவிடன் அல்ல இந்த நாட்டை ஆண்ட மானங்கெட்ட தமிழ் மன்னர்கள் தான் காரணம் எதற்கெடுத்தாலும் திராவிடத்தை குறை சொல்லும் நண்பர்களே வரலாறை படித்து விட்டு யாரை யாரை விமர்சனம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொள்ளுங்கள் அனைவரும் படிக்க வேண்டும் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் அனைத்து சந்தோஷங்களும் அனைவருக்கும் கிடைத்திட போராடிய தலைவர்கள் எத்தனை பேர் தமிழ்நாட்டில் இருந்து இருக்கிறார்கள் ஆனால் அதை அனைவருக்கும் சென்றடைய வாழ்நாள் முழுவதும் போராடிய தலைவர் தமிழின தலைவர் தந்தை பெரியார் மட்டுமே என்பதை உணர்ந்தவர்களுக்கு தெரியும் அவரை உணராதவர்கள் ஒருநாளும் அது தெரியப் போவதில்லை அதனால் பெரியாரை விமர்சனம் செய்பவர்கள் செய்து கொண்டே இருக்கட்டும் ஒரு நாள் உண்மை தெரியும் விமர்சனம் செய்த வாயும் கையும் பெரியாரை போற்றும் நாள் வரும்