Tuesday, June 14, 2022

Marshall நேசமணி

 "1810 வரை தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட, சேரர் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம், அதன் பிறகு, சனாதன தர்மத்தை கொள்கையாகக் கொண்ட சமஸ்கிருத மலையாள மன்னராட்சியின் கட்டுப்பாட்டுக்கு சென்றது.
ஏறத்தாழ 146 ஆண்டுகள் இந்நிலப்பரப்பு அடிமைப்பட்டுக் கிடந்தது. தீண்டாமை, காணாமை, தோள் சீலை அணியும் உரிமை மறுப்பு, கோவிலுக்குள் நுழையத் தடை, தலைப்பாகை அணியக்கூடாது, நல்ல பெயர்களை சூட்டக் கூடாது, வரிச்சுமை.. இன்னும் பற்பல அடக்குமுறைகள் தமிழ் குலத்தினர் மீது ஏவப்பட்டது!!

கன்னியாகுமரி தமிழர்கள் மீண்டும் தமிழ்நாட்டுடன் சேராமல் இருக்க சமஸ்கிருத மலையாள ஆட்சியாளர்கள், இந்நிலப்பரப்பை மலையாளமயமாக்கினர்; தமிழ் கற்கும் உரிமை மறுக்கப்பட்டது. தமிழர்களை அடக்கி ஒடுக்கினர். 1948 - 1956 காலகட்டத்தில், மொழி வழியில் மாநிலங்களை பிரிக்க இந்திய அரசு ஆய்வு நடத்திய போது, கேரளத்தோடு குமரி மாவட்டத்தை சேர்க்க அரசு முடிவு செய்தது. இவற்றையெல்லாம் எதிர்த்து, தமிழர்கள் வீறுகொண்டு எழுந்து நடத்திய போராட்டமே, தெற்கெல்லை விடுதலைப் போராட்டமாகும்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடைபெற்ற வீரஞ்செறிந்த போராட்டங்களில் பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் 36 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் நாடார் சமூகத்தினர். காவல்துறையின் கொடூரமான தாக்குதல்களில், நூற்றுக்கணக்கானோர் உடல் ஊனமுற்றனர். எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தாலும், தமிழ்நாட்டோடு இணைந்தே தீருவது என்ற மன உறுதியோடு மக்கள் போராடினர்.

போராடிய மக்களின் தலைவராக இருந்து வழிநடத்தியவர் தான் குமரித் தந்தை Marshall நேசமணி. வர்ணாஸ்ரமதர்மத்தால் ஒடுக்கப்பட்ட நாடார் சமூகத்தில் பிறந்தவர். வழக்கறிஞரான இவர், நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில், ஆதிக்க ஜாதி வழக்கறிஞர்களுக்கும் ஒடுக்கப்பட்ட வக்கீல்களுக்கும் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த குடிநீர்ப் பானையை உடைத்து, அனைவருக்கும் பொதுவான ஒரே பானையை வைத்தவர்.

தான் நீதிமன்றம் சென்ற முதல் நாளன்றே,  ஒடுக்கப்பட்டடோருக்கு (நாடார், தேவர், பறையர், முக்குவர், ஈழவர், புலையர்......), தீண்டாமை காரணங்களுக்காக போடப்பட்டிருந்த "தனி" ஸ்டூலை காலால் உதைத்துத் தள்ளிவிட்டு, நாற்காலியில் உட்கார்ந்தவர். தமிழர்களை ஒன்றுதிரட்டி, அரசுக்கு எதிராக பல கிளர்ச்சிகளை முன்னின்று நடத்தியவர். அதேபோல,  தாய்மொழிக்கல்வி மறுக்கப்பட்ட தமிழர்களின் மொழி உணர்வுக்கும் விழிப்புணர்வுக்கும் எழுச்சிக்கும், வேளாளர்கள் முன்னெடுத்த தமிழ் சங்கங்களும், கருத்தரங்குகளும் பெரிதும் பயன்பட்டன.

துப்பாக்கி சூடுகள், தடியடிகள்,  ஆதிக்கவாதிகளின் அரிவாள் வெட்டுக்கள், சொத்து பறிப்புகள், தியாகங்கள், உயிரிழப்புகள் ஒருபுறம் அதிகரித்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், பலகட்ட போராட்டங்கள் நடந்தன‌.  "வீட்டுக்கு ஒரு தமிழன், நாட்டை காக்க புறப்படு" என்று நேசமணி முழங்கினார். ஒரு கட்டத்துக்கு மேல், இந்திய அரசால் போராட்டங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால், வேறு வழியில்லாமல், விருப்பம் இல்லாமல், கன்னியாகுமரி மாவட்டத்தையும், தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை தாலுகாவையும், தமிழ்நாட்டோடு இணைத்தது அரசு. (1956)

நேசமணி எழுதிய நூல்கள்:
1. Inside Travancore, Tamil Nadu
2. Rule of Steel and Fire in Travancore Cochin
3. "திங்கள்" என்ற இதழையும் நடத்தினார்.

தன் இறுதிக் காலத்தில், Church of South India (CSI) - கன்னியாகுமரி மறைமாவட்ட துணைத் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து மறைந்தார். (1968). மன்னராட்சியில் ஜாதிகளால் பிளவுபட்டிருந்த, பிளவுபடுத்தி வைக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி தமிழர்கள் (நாடார், மீனவர், பறையர், வேளாளர்,  ....), மொழி & பண்பாட்டின் அடிப்படையில், ஒன்று திரண்டெழுந்த வீரவரலாற்றுக்கு சொந்தக்காரரான Marshall நேசமணியின் பிறந்தநாள் இன்று ⚔️⚔️⚔️"

படி..படி..படி...

 படி..படி..படி...
படிக்காம ஜெயிச்சவன் ஒருத்தர் இரண்டுபேர காட்டலாம் படிச்சு ஜெயிச்சவன் லட்சம் பேர என்னால காட்டமுடியும் .. படிக்காம ஜெயிக்கலாம் அப்படி எவனாவது சொன்னா நம்பாதே ..
இவர்களெல்லாம் முன்னேறுகிறார்களே என்ற எரிச்சலில்  தவறான பாதையை காட்டும் சூழ்ச்சி ..
தமிழ்நாட்டின் தலைவன்
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்

M. K. Stalin
Chief Minister of Tamil Nadu
..
ஆம்
படிக்காம விவசாயம், பண்ணு ஆடு வளர்க்க போ.. லட்சம் லட்சமா சம்பாதிக்கலாம் .. IPS வேலைய ராஜினாமா பண்ணிட்டு ஆடு வளர்த்தேன்  என படிக்க  நினைக்கிறவன் மனதில் விசத்தை விதைக்கிற "பசுமைவிகடன்" விவசாயம் பண்ணி கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இன்ஜினியர் என மயக்கும் வார்த்தைகளை நம்பாமல் படியுங்கள் .. படிப்பு மட்டுமே ஒருவனின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் ..
..
எங்கே படிச்சு மேல வந்துடுவானோ என்கிற அச்சம் பன்நெடுங்காலமாய் கல்வி மறுக்கபட்டவன் உயரத்தை நோக்கி வரும் போது அவனை திசைமாற்றும் சதி.. அதை நம்பாமல் கல்வி ஒன்றே குறையாத செல்வம் .. எப்படியாவது படித்துவிடு என முதலமைச்சர் கவலைக்கொள்கிறார் .. எக்கேடுகெட்டால் என்ன மாட்டு மூத்திரமும் புல்டோசரும் முஸ்லிம்களும் இருக்கும் வரை நம்மை அசைக்கமுடியாதென மக்களை மடையர்களாக வைத்திருக்க நினைக்கும் காலத்தில் படி என்கிறார் திராவிட மாடல் முதல்வர் ..
..
காலையில படி மாலையில விளையாடு என பாரதி பாட்டை பாடமாக்கி அவர்கள் மட்டும் எல்லா நேரமும் படித்துக்கொண்டிருக்க பாவேந்தர் தான்
"காலையில் படி - கடும்பகல் படி
மாலை இரவு பொருள்படும்படி
கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் வேண்டுமப்படி
கல்லாதவர் வாழ்வதெப்படி"..
படி படி படி என பாடினார் ..
..
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் தான் திராவிடத் தலைவர்கள் படித்த சமுதாயம் உருவாக வேண்டுமென பாடுபட்டார்கள், பாடுபடுகிறார்கள் ..  
மிக முக்கியமான காலகட்டத்தில்
வரலாற்றை மாற்றி எழுத துடிக்கும் சனாதனசக்திகள், தமிழகத்தின் விடுதலை வரலாற்றை கூட மறைக்க முயலும் பாசிச சக்திகள், சாதிமத துவேசத்தை எளிதாக நம்மிடையே கடத்த முயலும் இக்காலகட்டத்தில் .. மிகப்பெரிய மாற்றம் என்ற பெயரில் பொய்புரட்டு புராணத்தை புகழ்ந்து கல்வியில் திணிக்க முயலும் வேளையில், எதையும் ஆய்ந்தறிந்து சரியானதை தேர்வு செய்து மாணவச் செல்வங்களின் நெஞ்சில் நல்லதை விதைக்க சரியானவரிடம் அதிகாரம் வந்திருப்பதும் அதை அவர் மிக சாதூர்யமாக கையாள்வதும் மகிழ்வை தருகிறது "எண்ணும் எழுத்தும்"..
..
இந்திய ஒன்றிய அரசு (எல்லாமாநிலத்திற்கும்) ஒதுக்கியதை விட அதிகமாக நிதியை ஒதுக்கி வலுவான கல்வி கட்டமைப்பை தருகிறார் .. நம் பிள்ளைகளை படிக்க வைக்கவேண்டும்..
ஆம் அப்போது தான் இச் சமூகத்தில்
 சிறந்தவர்களாக பண்பாளர்களாக, நல்லொழுக்கமுள்ளவர்களாக, சாதிமதவெறியெனும் சாக்கடையில் மூழ்காமல் எதையும் அறிவுக் கொண்டு சிந்திக்கும் நல்லவர்களாக உருவாக்குவோம் ..
..
நல்லதை விதைப்போம்
வருங்காலம்  நன்மையே பயக்கும்

லார்டு மெக்காலே வை பார்ப்பனர்கள் வில்லனாக சித்தரிப்பதன் காரணம் என்ன?

 “1813 துவங்கி 1833 வரை கிழக்கிந்திய கம்பனி, இந்தியாவில் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சிக்காக, வருடம் தோறும் வழங்கிய ஒரு லட்சம் ரூபாய் மானியம் என்ன ஆயிற்று? என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற குழு ஆய்வு நடத்தியது.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, 20 லட்சம் ரூபாய் என்றால் இன்றைய மதிப்பில் எத்தனை பில்லியன் என்று பாருங்கள்!

அவ்வளவு பணமும் இந்திய பொதுமக்களுக்கு போய் சேரவில்லை. கல்வியோ, பொது அறிவோ, முக்கியமாக அறிவியலோ வளரவே இல்லை. அந்த இருபது லட்சத்தையும் வேத பாட சாலை நடத்தி சமஸ்கிருதம் வளர்க்கவும், மதராசாவில் அரபி கற்பிக்கவும் தான் செலவாயிற்று என்று தெரிய வந்தபோது அது பிரிட்டிஷாருக்கு அதிருப்தியைத் தந்தது.

காரணம்
பிரிட்டனில் கல்வி என்பது மதசார்பற்றது,
எல்லா மனிதருக்கும் பொதுவானது,
முக்கியமாய் பிரிட்டனில் பெண்களும் படிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

ஆனால்
//இந்தியாவில் பெண்களை விடுங்கள், பிராமணரைத் தவிற வேறு எந்த வர்ணத்தை சேர்ந்த ஆண்களுமே கல்வி‌ கற்கவே கூடாது என்கிற விதி இருந்தது//

இந்தியாவின் இந்த விசித்திரமான வழக்கத்தை ஆய்வு செய்யும் பணி தாமஸ் பாபிங்டன் மெக்கலே எனும் ஆங்கேலேய அதிகாரிக்கு வழங்கப்பட்டது.

யார் இந்த தாமஸ் மெக்கலே?

அவர் ஒரு எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர், பல மொழி வித்தகர், அடிமை முறைக்கு எதிரானவர், முற்போக்கு கருத்தளர்,  பெண்களுக்கு கல்வி வழங்க வேண்டும் என்கிற கொள்கை உடைய பிரிட்டிஷ் அதிகாரி.

இந்த லார்ட் மெக்கலே இந்தியாவிற்கு விஜயம் ஆனார். சமஸ்கிருதமும் பர்ஷியனும் கற்றுக்கொண்டார்.  அவருக்கு ஏற்கனவே கிரேக்கமும், லத்தீனும் அத்துப்படி என்பதால், அதே வேர் சொற்களை கொண்ட சமஸ்கிருதம் அவருக்கு எளிதில் புரிந்துபோனது.

அவருடைய ஆழமான ஆய்விற்கு பிறகு, 1835 ல் “இந்தியாவில் கல்வி” எனும் அவருடைய குறிப்புக்களை வெளியிட்டார். இந்த
Minutes  on Indian Education எனும் உரை, பிறகு Macaulay's Minutes என்று பிரசித்தி பெற்றது.

அதில் மெக்காலே சொன்னது என்னவென்றால்?

1. சம்ஸ்கிருத நூல்களில் இருக்கும் குறிப்புகளை அனைத்தையும் ஒன்று திரட்டிப்பார்த்தாலும்,
அவை பிரிட்டிஷ் ஆரம்ப கல்வி நூல்களை விட குறைவான தகவலே கொண்டுள்ளன.

2. இந்தியாவில் இது வரை சமஸ்கிருதத்திலும் அரபிக்கிலும் கற்பிக்கப்பட்டு வந்த பாடங்கள் அறிவியலுக்கு உகந்ததாக இல்லை

3. இந்தியர்கள் இதனாலேயே பிற்போக்கான, காட்டுமிராண்டித்தனமான மூடநம்பிக்கைகளை பின்பற்றுகிறார்கள்

4. அதனால் இந்திய மொழிகளில் பாடம் நடத்துவது வீண் செலவு.  அது அனைவருக்கும் போய் சேரவில்லை.

மெக்காலேவின் எண்ணம்
“எல்லோருக்கும் கல்வியில் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும்,
இந்தியர்கள் அனைவரும் வெளித்தோற்றத்தில் பழுப்பு நிறத்தவராய் இருந்தாலும், எண்ணத்திலும் நாகரீகத்திலும், நேர்த்தியிலும், ரசனையிலும் பிரிட்டிஷாரை போல முற்போக்காய் இருக்க வேண்டும்,
சமத்துவ நிலையை அடைய வேண்டும்,
அதற்கு ஆகும் செலவை மனிதாபிமான அடிப்படையில் பிரிட்டிஷ் அரசே மேற்கொள்ள வேண்டும்”
என்றார்.

//சில பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இது ஆபத்தான போக்காக தோன்றிற்று. இந்தியர்களை தமக்கு சமமான நாகரீக நிலைக்கு கொண்டு வர முயல்வது வேண்டாத வீண் செலவு என்றே அவர்கள் நினைத்தார்கள்//

ஆனால்
*தாமஸ் மெக்கலே பிரிட்டிஷ் வரலாற்று நூல் எழுதியவர் என்பதால் அரச குடும்பத்திற்கு நெருக்கமானவர்.  மிக சிறந்த அறிஞர், நாணயமிக்கவர், மனிதாபிமானி, அப்பழுக்கற்ற அறச்சிந்தனையாளர் என்பதால் யாராலும் அவரை நேரடியாக எதிர்க்கமுடியவில்லை*

இதற்கு இடையில் 1833 ல் இந்தியாவில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அது வரை சில பிரெசிடென்சிகளை மட்டுமே ஆண்டுவந்த கிழக்கிந்திய கம்பெனிக்கு
ஒட்டுமொத்த இந்திய நிலபரப்பை ஆளும் அதிகாரம் அளிக்கப்பட்டது.

லார்ட் வில்லியம் பெண்டிங் ஒருங்கிணைந்த இந்திய பிரதேசத்தின் முதல் கவர்னர் ஜெனரலான பொறுப்பேற்றார்.

அவர் பொறுப்பேற்ற பிறகு இயற்றிய முதல் சட்டம்:

பெங்கால் சதி தடை சட்டம்.

ஆங்கிலேயருக்கு இந்தியாவில் ரொம்பவே பிடிக்காத காட்டுமிராண்டுத்தனம் ஒன்று உண்டு என்றால் அது “சதி ஏறுதல்” எனும் மிகவும் கொடூரமான சம்பிரதாயம்.

இங்கிலாந்தில் கணவன் இறந்துவிட்டால்,
மனைவி விரும்பினால் மறுமணம்  செய்து கொள்ளலாம். அல்லது தனி பெண்ணாய் தன் பிள்ளை குட்டியை வளர்த்து ஆளாக்கி சுயமாய் வாழலாம்.

ஆனால் இந்தியாவிலோ கணவன் இறந்தால்,
அதற்கு மேல் பெண்ணுக்கு மறுமணம் செய்தாரில்லை. அந்த பெண்ணை சுயமாக வாழ விட்டாரும் இல்லை. அந்த பெண், கணவனின் சிதையில் தானும் குதித்து செத்தே ஆக வேண்டும் என்பதை கட்டாயமாக்கி இருந்தார்கள்.

பிள்ளைகுட்டி இருக்கிற பெண், இப்படி பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டு சதியில் குதிப்பதில் என்ன லாஜிக் இருக்கிறது?  
அந்தப் பெண் உயிரோடு இருந்தால் தானே அவள் குழந்தைகளுக்கு அனுகூலம்!  
அப்போது தானே அவள் மரபணுக்களுக்கு லாபம். அவள் கணவனுடைய மரபணுக்களுக்கும் லாபம்.

இதை விட்டுவிட்டு ஆரோக்கியமான ஓர் இளம் பெண் இறந்து போவதில் யாருக்கு என்ன லாபம் இருக்க முடியும்??

ஆனால் லாபம் இருப்பதாகவே இந்தியர்கள் நம்புவிக்கப்பட்டார்கள்!
என்ன லாபம் தெரியுமா?
கணவன் அவனுடைய ஈரேழு ஜென்மங்களில் செய்த அத்தனை பாவமும் போய்,
அடுத்த ஜென்மத்தில் புனித க்ஷேத்ரமான காசியில், புனித நதியான கங்கையின் கரையில், புண்ணியாத்மாவான பிராமணனாக பிறக்கும் நல்வாய்ப்பை பெறுவான்.
அதனால் தன் கணவனுக்கு இந்த பாக்கியம் கிடைக்க வேண்டி கற்பில் சிறந்த பெண்கள் உடன்கட்டை ஏறுவது அவசியம்!!

அந்த பெண்ணுக்கு வலிக்குமே?
ஆங்! உண்மையான கற்புக்கரசிக்கு வலிக்காது! எல்லாருக்கும் கிடைக்குமா இந்த பாக்கியம்!  அதுக்கெல்லாம் கொடுப்பனை வேண்டும்!....
என்று சொல்லி,
அழகு போட்டி என்று சொல்லி பெண்களை அரைநிர்வாணமாய் நிற்க வைத்து ஆண்கள் கண்களாலேயே வேட்டையாடுவது போல, கற்புக்கரசிக்கான போட்டி- கற்புள்ளவளுக்கு வலிக்காது என்று கதைகட்டி விட்டார்கள் கருட புராணம் எழுதிய பிராமணர்கள்.

இந்த கதைகளை எல்லாம் இந்தியாவில் படிப்பறிவில்லாத முட்டாள்கள் நம்பி, ஷத்திரிய பெண்களையும், வைஷிய பெண்களையும் மானாவாரியாக உடன்கட்டை ஏற்றி கொன்றுவிட்டார்கள்!

ஆனால் சூத்திர பெண்கள் அதிகமாக உடன்கட்டை ஏறவில்லை. காரணம் சூத்திர பெண்கள் வேலைக்கு போனார்கள். அவர்கள் ஊதியம் ஈட்டினார்கள்.
உழவு, நெசவு, கொசவு, பூ தொடுத்தல், அரண்மனையில் வேலை செய்வது என்று சூத்திர பெண்கள் குடும்பத்திற்கு தங்கள் வருவாயை கொண்டு வந்ததால், அவர்களை யாரும் உடன்கட்டை ஏற்ற தயாராக இல்லை.

பிராமண, ஷத்திரிய, வைஷிய பெண்கள் வீட்டு வாசற்படியை தாண்டாமல், பொருளாதாரத்தில் பங்கே எடுக்காமல் இருந்ததால், அவர்களுக்கு சமூக மதிப்பு இல்லை. அதனால் அந்த பெண் சதி ஏறி செத்தால், அவளுடைய பிள்ளைகளை தவிற வேறு யாருக்கும் எந்த இழப்பும் தெரிந்திருக்கவில்லை.

இந்தியர்கள் இந்த கருட புராண பொய்களை நம்பி இப்படி இளம் பெண்களை கொல்வதை பார்த்த ஆங்கிலேயருக்கு அறச்சீற்றம் பீறிட்டது.
அவர்களுக்கு கங்கை புனித நதி இல்லை,
காசி புனித தளம் இல்லை,
ஈரேழு ஜென்மம் எனும் நம்பிக்கை இல்லை.
பிராமணர் உயர்ந்தவர் என்றோ,
பிராமணருக்கு தக்‌ஷனை கொடுத்தால் தான் புண்ணியம் என்றோ அவர்கள் நம்பவில்லை.

//பிராமணர் எழுதிய சமஸ்கிருத நூல்கள் பலதை அவர்கள் படித்தார்கள். அந்த நூல்களில் இருந்த அப்பட்டமான சுயநலமும், தந்திரமும், ஏமாற்றுத்தனமும் அவர்களுக்கு அருவருப்பாக இருந்தது//

இந்த சமஸ்கிருதம் வளர்க்க நாம் வேறு இருபது ஆண்டுகளாக மானியம் வழங்கி ஏமாந்திருக்கிறோமே என்கிற காட்டம்!

சதியை தடை செய்யும் சட்டத்தை இயற்றிய கையோடு, லார்ட் மெக்கலேவின் அறிவுரையின் படி,
அடுத்த அதிரடி சட்டத்தை இயற்றினார் லார்ட் பெண்டிங்:

//இனி பிரிட்டிஷ் இந்தியா முழுக்க,
ஆங்கிலமே கல்விக்கான மொழி!
ஒரே ஒரு சாராருக்கான சமஸ்கிருதத்தை இனி ஊக்குவிப்பதில்லை, எனும் ஆங்கிலவழி கல்வி சட்டம் 1835 முதல் அமலானது//

இதனோடு, நீதி துறையின் அலுவல் மொழியாக அது வரை இருந்த அரபிக்கை நீக்கி, ஆங்கிலத்தையே சட்ட துறையின் அலுவல் மொழியாக அறிவித்தார்.

குருகுலம், வேத பாட சாலை, மதார்சா எனும்
மத கல்விக்கு அதற்கு மேல் பிரிட்டிஷ் காசு
செல்வழிக்காமல், நேரடியாக பொதுமக்கள் பயன்பெறும் விதமாய், பிரிட்டிஷ் தரத்தோடு, பிரிட்டனில் இருக்கும் அதே பாட திட்டத்தோடு இந்தியாவில் பள்ளிக்கூடங்கள் ஆரம்பித்தார்கள்.

ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல், அறம், உடல் பயிற்சி என்று சர்வதேச தரம் வாய்ந்த கல்வி இந்தியர்களுக்கு இலவசமாய் கிடைக்க ஆரம்பித்தது.

1835 ல் கல்கத்தாவில் ஒரு மருத்துவ கல்லூரி,
அடுத்த ஆண்டே கல்கத்தாவில் பொது நூலகம்,
1847ல் ரூர்கியில் இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி.
1848டில் கல்கத்தாவில் பெண்களுக்கான பிரத்தியேக தனிப்பள்ளி

1835 முதல் ஆங்கில பள்ளிகளில் கற்றுந்தேர்ந்த மாணவர் கல்லூரிக்கு போக வேண்டுமே?
அதனால் 1858 ல் கல்கத்தா, சென்னை, மும்பாய் ஆகிய நகரங்களில் பல்கலைகழகங்கள் துவக்க பட்டன.....

//இரண்டாயிரம் ஆண்டுக்கால இடைவெளிக்கு பிறகு இந்தியர்களுக்கு கல்வி எனும் ஆயுதம் கிடைத்தது//

இப்போது சொல்லுங்கள்,
இத்தனைக்கும் காரணமான அந்த தாம்ஸ் பாபிங்டன் மெக்காலே ஹீரோவா வில்லனா?”
Lord Macaulay, சரசுவதி & Statistics*

நவராத்திரி விழா முடிவில் சரசுவதி பூசையும் சேர்த்து கொண்டாடப்படும். எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் மிகவும் பக்தியுடன்  கல்விக்கான கடவுள் என்று குறிப்பிட்டு சரசுவதியை கும்பிடுவார்கள். இந்த வழிபாடுகளில்  முதன்மையான பங்கு வகிப்பவர்கள் பெண்கள்.

ஆம்
சரசுவதி கல்விக்கடவுள்.
அதிலும் பெண் கடவுள்.
இதுவெல்லாம் புராணங்கள் நமக்கு கூறும் செய்திகள்.

கல்விக்கடவுள் பெண். எனவே கல்வியைக் கற்பித்தலில் பெண்களுக்கு முன்னுரிமை தந்து அவர்களின் சமூக மேம்பாட்டிற்கு துணை நிற்க வேண்டியவர் சரசுவதி.

ஆண்களுக்கும் கல்வி என்றாலும், பெண் கடவுள் கல்விக்கு தலைமை ஏற்பதால், பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டியது நியாயமே என்று எண்ணுவது இயல்பு.

வரலாறு தரும் Statistics நமக்கு சொல்லும் உண்மை என்ன?

1881ல்  

இந்தியர்களின் எழுத்தறிவு 4.32%.  
ஆண்கள் மட்டும் 8.10%.
பெண்கள் வெறும் 0.35%.  

2011ல்  

இந்தியர்களின் எழுத்தறிவு 74.04 %  
ஆண்கள் 82.14 %   
பெண்கள்  65.46%.

அதாவது கல்விக்கடவுளாக பெண்ணே இருக்கும் நாட்டில் 1881 வரை ஒரு விழுக்காடு பெண்கள் கூட படிக்க வில்லை.

ஒட்டுமொத்தமாகப் படித்தவர்களே 4.32% தான்

இதையெல்லாம் கல்விக்கடவுள் சரசுவதி ஆய்வு செய்து சீர் செய்தாரா என்றால் இல்லை.

ஆனால் இப்போதோ எழுபது, எண்பது, அறுபது என்ற நிலை.

இதற்கு காரணம் யார்?

Lord Thomas Babington Macaulay

WhatsApp வந்த காலத்தில்
அவர் நமக்கு ஒரு வில்லனாகத்தான் அறிமுகம்.

இந்தியாவின் பாரம்பரிய கல்வி முறையை சிதைத்து, வெள்ளைக்காரனுக்கு பியூன் வேலைப்பார்க்க ஆங்கிலத்தை கற்பித்த கயவன் என்று தான் பல Forward Messages சுற்றியது.

யாரிந்த மெக்காலே என்ற தேடலும் அங்கிருந்து தொடங்கியது தான்.

Macaulay இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அந்தக் காலத்திலேயே நிறவேற்றுமைக்கு எதிராக குரல் எழுப்பியவர்.

இந்தியாவிற்கு வந்தபோதும் அதே செக்யூலரிசத்தை இங்கும் பரப்பியவர்.

அது வரை இந்தியாவில் கல்வி என்றால்:
1) வேத பாட சாலை
2) இஸ்லாமிய மதராசா
3) கிறுஸ்துவ மிஷினரி
தந்தால் மட்டுமே உண்டு.

இந்த மூன்றும் வெறும் மதக்கல்வியை மட்டுமே கற்பித்தவை. இதற்கு இங்கிலாந்து அரசு செலவு செய்வது பொது மக்களுக்கு போய் சேரவில்லை. வெறும் மூடநம்பிக்கைகளை மட்டுமே வளர்க்கிறது...என்று முதன் முதலில், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல், தாய்மொழி என்கிற ஐந்துவித பாடங்களை உள்ளடக்கிய பொதுக் கல்வியை திட்டமாக கொண்டு வந்தவர் மெக்காலே.

♦️ கல்வி ஆங்கிலேயர்களால் பரவலாக்கப்பட்ட பிறகே

♦️ அவரவர் தாய் மொழியிலும் கல்வி கற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டப் பிறகே

♦️ கல்வி நிலையங்கள் அவரவர் இருப்பிடம் அருகில் அமைந்த பிறகே

இந்தியர்கள் படித்தார்கள்.

இதற்கு அடுத்து அவர் எடுத்துக்கொண்ட பிராஜெக்ட் இன்னும் சிறப்பானது.

அது வரை இஸ்லாமியருக்கு ஷரியா சட்டம், இந்துக்களுக்கு மனுஸ்மிருதி என்றிருந்த சட்டத்தை, அனைவருக்குமான “இந்தியன் பீனல் கோடு” என்று மாற்றி IPC யை கொண்டு வந்தவர் இதே லார்ட் மெக்கலே தான்.

அந்த Lord Macaulay அவர்கள்

அவர் திருமணம் ஆகாதவர். அவருக்கு Genetic சந்ததியினர் இல்லை.

நாம எல்லாரும், குறிப்பா இந்தியப் பெண்கள் அவருடைய Memetic வாரிசுகள்!