Saturday, May 25, 2019

துரோக வரலாறு இன்றைய சமுதாயமே ஏமாறாதே . Who was Vanjinathan

துரோக வரலாறு
இன்றைய சமுதாயமே ஏமாறாதே . Who was Vanjinathan...
A Brahmin ... Died for Sanathana...

இன்று வான்சிநாதன் நினைவு நாளாம், மிக்க மகிழ்சியோடு கொண்டாடுவோம். ''குற்றால அருவியில் குறிப்பிட்ட ஒரு குலத்தவரே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது
என்றிருந்த ஜாதி வெறியை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர். ஆஷ்'' என்ற வெள்ளைக்கார கலெக்டர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ? இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளினாலேயே ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரை சாதி வெறியனான
வாஞ்சி நாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஒரு நாள் ஆஷ் துரை மாலை நேரத்தில் தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தருடன் நடைபயிற்சி போகிறார்.
நடந்து கொண்டிருந்தவர் காதில் ஏதோ அலறல் சத்தம் பலமாக  கேட்கிறது. ஓசை வந்த திசை நோக்கினார் ஆஷ் துரை. அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார். பின்னால் வந்த ராவுத்தர் ஓடி வந்து
"துரை அங்கு போகாதீர்கள்" என்று தடுக்கிறார்.
ஏன் என்று வினவிய துரைக்கு "அது தாழ்த்தபட்டவர்களின் குடிசை என்றும் நீங்கள்
அங்கு போகக் கூடாது என்றும் சொல்லுகிறார்.
உடனே ஆஷ் துரை ராவுத்தரைப் பார்த்து சரி நீ போய் பார்த்து வா என்றார். சேரிக்குள் போன
முத்தா ராவுத்தர் திரும்பி வந்து சொன்னார்
 " முதல் பிரசவம் துரை. சின்ன பொண்ணு
ரெண்டு நாளா கத்திக்கிட்டு இருக்காளாம்,
பிள்ளை வயித்துல  தலை மாறிக் கிடக்காம்"
பரிதாபம். இனி எங்கிட்டு துரை பொழைக்கப் போகுது என்றார்.
ஏன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாமே என்று துரைக் கேட்க, அவங்க ஊருக்குள்ளேயே வரக்கூடாதுங்க அய்யா,
பின்ன எப்படி வண்டி கட்டி டவுணுக்கு கொண்டு போறது என்றார் ரவுத்தர்.
இதனிடையே சாரட்டில் அமர்ந்திருந்த திருமதி. ஆஷ்துரை இறங்கி அக்குடிசை நோக்கி போனார். மருத்துவமனைக்கு  கொண்டு சென்றால் ஒரு உயிரையேனும் காப்பாற்றலாம் என்று துரையிடம் சொன்னார். அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று உடனே ஒரு மாட்டு வண்டியை கொண்டு வருமாறு ராவுத்தரைப் பணித்தார் துரை.
ஓடிப் போன ராவுத்தர் ஊரின் மேற்கு பகுதியில் உள்ள அக்கிரஹாரத்தைத் தாண்டிய பொழுது
துரையின் வண்டியோட்டி எனத் தெரிந்த ஒரு பார்ப்பணர் வழிமறிக்கிறார். விசயத்தை சொல்லி ஒரு குடியானவனின் வீட்டிலிருந்த மாட்டு வண்டியை ஒட்டி வந்தார். அந்த வழியாய் செல்ல வண்டிப்பாதை பிராமணர்களின்  அக்கிரஹாரத்தை தாண்டித் தான் சென்றாக வேண்டும். சரியாய் அக்கிரஹாரத்துக்குள் மாட்டு வண்டி மறிக்கப்படுகிறது.
ஒரு சேரிப்பெண்ணை ஏற்றப் போகும் வண்டி
இப் பாதை வழியே போகக் கூடாது என்று பார்ப்பணர்கள் வழி விட மறுக்கிறார்கள்.. வண்டி கொடுத்த குடியானவனையும் ஊர்
நீக்கம் செய்து விடுவோம் என்கிறார்கள்!
வண்டி கொண்டு வரச் சொன்னது துரையும்
அவரின் மனைவியும் தான் என்று சொன்ன
பிறகும் ஏற்க மறுக்கிறார்கள்..!
இதை துரையிடம் போய் சொல்லுகிறார்
ராவுத்தர். இதைக் கேட்ட ஆஷ் துரை தனது வண்டியில் அந்த பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார்.
குதிரையோட்டியின் பக்கத்திலேறி அமர்ந்தும்  கொண்டார்.வண்டி அக்கிரஹாரத்திற்குள்  நுழைகிறது. பார்ப்பணர்கள் கூட்டமாய் வழி மறிக்கிறார்கள். "ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக் கொண்டு இந்த அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய்
இருந்தாலும் அனுமதிக்க முடியாது" என்கிறார்கள்.
வழி விட சொல்லிப் பார்த்த துரை  அவர்கள் வழி விட மறுக்கவ, வண்டியைக் கிளப்பு என்று
உத்தரவிடுகிறார்.
மீறி  வழி மறித்த பார்ப்புகளின் முதுகுத் தோல்
துரை அவர்களின் குதிரை சவுக்கால் புண்ணாக்கப்படுகிறது.
அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டாள்.
ஆஷ் துரை அவர்களிடம் அடி வாங்கிய கும்பலில் ஒரு 16 வயது இளைஞனும் இருந்தான் அவன் பெயர் வாஞ்சிநாதன்.
அப்போது வாஞ்சிநாதன் எடுத்த சபதம் தான் 17.06.1911 அன்று ஆஷ் துரை சுட்டுக் கொல்லப்பட  வஞ்சகமாக அமைந்து விட்டது.
மனித உயிரை விட அக்கிரஹார புனிதம் காக்க புறப்பட்ட வரலாறு இன்று வரை மறைக்கப்பட்டு வருகிறது. இதுவும் "ழான் வோனிஸ் எழுதிய
Ash Official Notes - என்னும் குறிப்புகளில்
அரசு ஆவணக் காப்பகங்களில் தெரிந்தே உறங்கிக் கொண்டிருக்கிறது !

உலகத்தில் 3 ‘ஜாதிகள்’ உள்ளன

உலகத்தில் 3 ‘ஜாதிகள்’ உள்ளன, இந்த படத்திற்கு வரும் “reaction” வைத்து சொல்லிவிடலாம் :



முதல் ஜாதி - இந்த படத்தை பார்த்து, இந்த படத்தில் என்ன கொடுமை இருக்கு என்றே தெரியாதவர்கள். இவர்கள் யார் ஆண்டாளும் கவலைப்படாதவர்கள். தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவர்கள். இவர்கள் போராடவும் வரமாட்டார்கள், இவர்களை வைத்து கொண்டு போராடவும் முடியாது, இவர்களுக்காக போராடுவதும் வீண்.

இரண்டாவது ஜாதி - இந்த படத்தை பார்த்து, இது சரிதானே, இதில் என்ன தவறு இருக்கிறது, இதற்க்கு ஒரு உளவியல்/அறிவியல்/பொருளாதார /ஆன்மீக காரணம் இருக்கிறது என்று நினைப்பவர்கள். இவர்கள்தான் ‘தீயவர்கள்’ 

மூன்றாவது ஜாதி  - இந்த படத்தை பார்த்து, சொல்லித்தராமலேயே இவர்களின் இரத்தம் கொதிக்கும். இவர்கள்தான் ‘நல்லவர்கள்‘. இவர்கள் தான் ஆளவேண்டியவர்கள்!

37 எம்பிக்கள் இருந்தும் வேஸ்ட். ஒன்றுமே செய்ய முடியாது என்கிறார்களே.

கேள்வி: 37 எம்பிக்கள் இருந்தும் வேஸ்ட்.  ஒன்றுமே செய்ய முடியாது என்கிறார்களே.

பதில்: இந்த 37 எம்பிக்கள் "காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்,"என பாடும் எம்பிக்கள் அல்ல.  இந்த 37 எம்பிக்கள் மோடிதான் எங்கள் டாடி என பல்லிளிக்கும் மானங்கெட்டவர்கள் அல்ல. சுருக்கமாகச் சொல்லப்போனால் இந்த 37 எம்பிக்களும் மானமுள்ள மனிதர்கள். உண்மையான எம்பிக்கள்! 

இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுமையிலும் இருக்கும் முற்போக்காளர்கள், பாஜகவை எதிர்க்கும் நிஜமான அம்பேத்கரியர்கள், பெரியாரியர்கள், மார்சியவாதிகள், பெண்ணியவாதிகள், முற்போக்கு எழுத்தாளர்கள், சிறுபான்மையினர் என எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை ஒளி பாய்ச்சிக் கொண்டிருப்பது இந்த 37பேர் தான். முற்றிலும் தோற்று வீழ்ந்த பின், 'எல்லோரும் தோற்கவில்லை தெற்கில் ஒரே ஒருவன் ஜெயித்திருக்கிறான்,' எனத் தெரிந்தால் "நாளை நிச்சயம் காலம் மாறும்," என வீழ்ந்தோர் எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை வருமே அந்த நம்பிக்கைதான் இந்த 37 பேரும். முழுதாக அடிபட்டுக் கீழே விழுந்தபின்னும் தட்டுத்தடுமாறி எழுந்து வீழ்ந்தோர் அத்தனைபேரின் குரலாகவும் ஒலிப்பானே ஒரு வீரன் அந்த வீரன்தான் தமிழ்நாடு.  தமிழ்நாடு பாஜகவுக்கு தோல்வியைத் தரவில்லை. இந்தியாவுக்கு வெற்றியைத் தந்திருக்கிறது. இந்தியா முழுமையிலும் அழிய இருக்கிற இந்தியாவின் ஜனநாயகத்தன்மை, இந்தியாவின் மதச்சார்பின்மை ஆகியற்றைத் தேக்கி தன்னுள் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.  தாய் கங்காரு குட்டியைச் சுமப்பதைப் போல இந்தியாவில் அழிந்துவிட்ட  ஜனநாயகத்தைச் சுமந்துகொண்டு பாராளுமன்றம் போகப்போகிறவர்கள் இந்த 37 பேர்தான். 

இது வெற்றி மட்டும் அல்ல. இது ஒரு செய்தி. இந்தியா முழுமைக்கும் அல்ல உலகத்திற்கே தமிழினம் கொடுத்திருக்கும் செய்தி.  இந்தியா முழுதும் பாஜக தோற்றிருந்தால் தமிழ்நாடு இந்தியாவின் மற்றுமொரு மாநிலமாகப் போயிருக்கும்.  இன்று தமிழ்நாட்டை தனித்தன்மை மிக்க நாடாக உலகமே பார்க்கிறது.  அதற்குக் காரணம் இந்த வெற்றிதான்.  அடுத்த ஐந்தாண்டுகளில் பாஜக எனும் சர்வாதிகாரத்திற்கு எதிராக எழப்போகும் ஒரே ஒரே எதிர்ப்புக்குரல் திமுக கூட்டணியின் எம்பிக்களான இந்த 37 பேரின் கூட்டுக்குரல்தான்.

முற்றிலும் இருளாகிவிடும் என நினைத்தால் தமிழ்நாடு எனும் ஒரே ஒரு வெளிச்சத்தைத் தடுக்க முடியவில்லையே எனப் பதறும் இருளின் தூதுவர்கள் இந்த வெற்றியை "வேஸ்ட்" என்கிறார்கள்.  வயிறெரிகிறார்கள். பயப்படுகிறார்கள்.
நாம் அப்படிச் சொல்லலாமா?

நான் சொல்கிறேன் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.  நாம் சோதனையான காலத்தில்தான் இருக்கிறோம்.  இருள் சூழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் நாம் மண்டியிடவில்லை. மரணித்துவிடவில்லை. உயிருடன் இருக்கிறோம். அதற்கு ஒரே சாட்சி இந்த 37 பேர்தான். 

-டான் அசோக்
மே25, 2019

ஐரோப்பாவில் இருந்து கூட்டமாக வந்த ஒரு கூட்டம்

ஐரோப்பாவில் இருந்து கூட்டமாக வந்த ஒரு கூட்டம்
இந்து நதிக்கரையில் தங்கள் கூட்டத்துக்கு அடையாளமாய்
ஒரு நூலை உடம்பில் சுற்றி கொண்டு பிரிந்தார்கள்  இமையம் முதல் குமரி வரை 

வெள்ளையன் வரும் வரை அங்குள்ள மக்களை ஜாதியா பிரித்தார்கள் அவர்கள்  கோவில்களை , மருத்துவத்தை , வாழ்வுமுறையை  கைப்பற்றினார்கள்.புராண கதைகளை உருவாக்கினார்கள்

வெள்ளைக்காரன் வந்த பிறகு
சிதறி கிடந்த நாட்டை வெள்ளையனை வைத்து
இந்தியா என்று ஒரு நாட்டையும் 
இந்து என்று ஒரு மதத்தையும் உருவாக்கினார்கள்
பள்ளி மற்றும் மடங்களை திறந்தார்கள்

பூர்வ குடிகளை  வைத்து வெள்ளைக்காரனை விரட்டினார்கள்
ஆர் எஸ் எஸ் என்ற இயக்கம் உருவாக்கி 
தேச தந்தை காந்தியை சுற்று கொன்றார்கள்
மற்ற அரசியல் கட்சிகளுக்குள் இருந்து அரசியல் கற்றார்கள்
பிறகு தங்களுக்கு என்று பி ஜே பி அரசியல் கட்சி  உருவாக்கினார்கள்

 குண்டு வைத்தார்கள் , ஜாதி , மத கலவரத்தை உருவாக்கி வளர்ந்தார்கள்  

நாம் வாழ்க்கையில் வெற்றி பெற  அவர்கள் மந்திரத்தை நம் கோவில் ,வீடுகளில்  சொல்லவைத்து விட்டு  
 மின்னணு எந்திரத்தை தங்கள் வெற்றி மந்திரமாக மாற்றிக்கொண்டார்கள்.

மொத்தத்தில் அவர்கள் வியர்வை , ரத்தம் சிந்தாமல்  உள்நாட்டவர்களை வைத்தே அவர்கள் நாட்டை தனதாக்கி கொண்டுஇருக்கிறார்கள்.


இது கதை இல்லை நிஜம் !

புனிதம்

புனிதம்
©©©© கனல் ©©©©

பூணூலின்  கை பிடித்து இறங்கியது புனிதம்
குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி
அருள்மிகுவை சிறீயென ஆக்கி
கருவறையை கர்ப்பகிரகமாக்கி
நீரை ஜலமாக்கி
தண்ணீரைத் தீர்த்தமாக்கி
குளியலை ஸ்நானமாக்கி
அன்பளிப்பை தட்சணையாக்கி
கதிரவனை சூரியனாக்கி
வணக்கத்தை நமஸ்காரமாக்கி
ஐயாவை ஜீயாக்கி
நிலத்தை பூலோகமாக்கி
வேளாண்மையை விவசாயமாக்கி
மழையை வருணணாக்கி
வேண்டுதலை ஜெபமாக்கி
தீயை அக்னியாக்கி
குண்டத்தை யாகமாக்கி
காற்றை வாயுவாக்கி
விண்ணை ஆகாயமாக்கி
பூவை புஷ்பமாக்கி
பூசனையை பூஜையாக்கி
முறைகளை ஆச்சாரமாக்கி
படையலை நைவய்தியமாக்கி
திருமணத்தை விவாகமாக்கி
பிள்ளைப் பேறை பிரசவமாக்கி
பிணத்தை சவமாக்கி
மக்களை ஜனங்களாக்கி
உணர்வற்றதை சடமாக்கி
ஒன்பதாம் நாளை நவமியாக்கி
பத்தாம் நாளை தசமியாக்கி
பிறந்தநாளை ஜெயந்தியாக்கி
பருவமடைதலை ருதுவாக்கி
அறிவைப் புத்தியாக்கி
ஆசானைக் குருவாக்கி
மாணவனை சிஷ்யனாக்கி
அறிவியலை விஞ்ஞானமாக்கி
படிப்பித்தலை அப்பியாசமாக்கி
பள்ளிகளை வித்யாலயமாக்கி
அவையை சபையாக்கி
கலையை சாஸ்திரமாக்கி
இசையை சங்கீதமாக்கி
ஓவியத்தை சித்திரமாக்கி
ஆடலை நடனமாக்கி
ஆடையை வஸ்திரமாக்கி
அழகை சுந்தராக்கி
முகத்தை வதனமாக்கி
முடியை கேசமாக்கி
உறக்கத்தை நித்திரையாக்கி
உண்மையை சத்தியமாக்கி
நல்லதை புண்ணியமாக்கி
கெட்டதை பாவமாக்கி
கொடையை தர்மமாக்கி
அமிழ்தை  அமிர்தமாக்கி
நஞ்சை விஷமாக்கி
சான்றை ஆதாரமாக்கி
பெரியதை மஹாவாக்கி
சிறியதை சோட்டாவாக்கி
செருப்பை ரட்ஷையாக்கி
ஊர்வலத்தை உற்சவமாக்கி
பயணத்தை யாத்திரையாக்கி
உலகத்தை லோகமாக்கி
மாட்டைக் கோமாதாவாக்கி
மூத்திரத்தை கோமியமாக்கி
என்னைச் சூத்திரனாக்கி
உன்னைப் பஞ்சமனாக்கி

பூணூலின் கை பிடித்து இறங்கியது புனிதம்
பூணூல் அறுபடாதவரை இறங்கிக் கொண்டு தான் இருக்கும் புனிதம்

படித்ததில் மனம் வெந்தது....