சீமானை ஏன் அழைக்கவில்லை மே17 இயக்கத்தின் விளக்கம்...
படிச்சுட்டு செத்துடுங்கடா தும்பிகளா
2011 நினைவேந்தலுக்கு சீமானை அழைத்த போது அனைவரும் வந்தமர்ந்து நிகழ்வு தொடங்கும் வரை நினைவேந்தலுக்கு வரமாட்டேனென சொன்னவர் , கடர்கரையில் 50000 தமிழர்கள் திரண்ட செய்தியறிந்தவுடன் பங்கேற்றார். ஐயா. காசி ஆனந்தன், நெடுமாறன், புலமைபித்தன் போன்றவர்களை ஒதுக்கிவிட்டு, கிட்டதட்ட புலமைபித்தனை கீழே தள்ளியவாறே முன்னேறி கூட்டத்தில் தன்னை முன்னிருத்தினர் அவருடன் வந்தவர்கள். நினைவேந்தல் நிகழ்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து நிகழ்வை ஒருங்கிணைக்கும் பொழுதில் கூட்டத்திற்குள் தனியே அமந்து கூட்டத்தினை இரண்டாக பிரித்தனர்.
இந்நிகழ்வு நடந்த ஒரு மாதத்தில் மூவர் தூக்கு அறிவிப்பு வெளியானது. அன்றிரவு துயரத்தோடு செய்வதறியாது திகைத்து நின்றபோது அனைத்து கட்சி, இயக்கத்தினரை ஒன்றாக இணைத்து கூட்டமைப்பாகி போராட்டம் நடத்துவோமென திட்டமிட்டனர் தோழர்கள்.. நெடுமாறன், வைகோ திருமா,ராமதாஸ்,மற்றும் இயக்கங்கள் அனைத்தும் இணைக்கவேண்டுமென முயன்று சீமானையும் சந்தித்து ஒன்றாய் நிற்கவேண்டுமென்ற போது...
அவர்கள் அனைவரும் ஒன்றாய் நிற்கட்டும் நாம் மட்டும் தனித்து நிற்போமென்றார். இல்லை ஒட்டுமொத்த தமிழர் இயக்கங்களும் ஒன்றாக நிற்பதை மறுத்தார். அனைவரும் இணைந்து பொதுக்கூட்டம் நடத்தி கூட்டத்தினை திரட்டி அரசினை நெருக்குவோம் என்று திட்டமிட்டு சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்ட போது, ‘ யார் கடைசியில் பேசுவது” என்றார்.. ‘ தான் தலையாய் மட்டுமே இருக்க முடியும், இறுதி உரை என்னுடையதாய் இருக்கவேண்டுமென்றார்...
அனைத்து மூத்த தலைவர்களும் ஒத்துக் கொண்டு கூட்டத்தினை கூட்டிய பின்னர், கூட்டத்திற்கு செல்லாமல் புறக்கணித்தார். மூவர் உயிர்காப்பு கூட்டணி உருவானதில் இணைந்து கொள்ளாமல் விலகிநின்றார். செங்கொடி ஈகத்தின் போதும் இதே நிலை. கயல், சுஜாதா, வடிவாம்பாள் ஆகியோர் சாகும்வரை உண்ணவிரதம் இருந்த 8 நாட்களில் ஒரு நாள் கூட அவர்களை சந்திக்க வரவில்லை. கடுமையான கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாமல் பின்னர் வந்து சேரவேண்டியதானது.
அனைத்து கட்சி-இயக்கமும் சேர்ந்து, உயர்நீதிமன்றம் மூவர் தூக்கிற்கு தடைவிதிக்கவேண்டுமென கோரிக்கை வைத்து உயர்நீதிமன்ரத்தினை முற்றூகையாக திரள்வோம் என முடிவெடுத்த போதும் சீமான்மட்டும் அதை புறக்கணித்தார்... இதன் பின்னர் நிரந்தரமாக தூக்கினை ரத்து செய்யவேண்டுமென 44 நாட்கள் நடந்த தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் தமிழ்நாட்டிலேயே பங்கெடுக்காத ஒரே கட்சி இவர்கள் மட்டுமே.....
இவையனைட்த்திற்கும் நேரில் சென்று அழைத்த போது திருப்பி அனுப்பியவரே இந்த உத்தமர்.
இதே நிலைதான் 2011இல் தீவிரமான முல்லைப்பெரியாறு போராட்டத்திலும் தொடர்ந்து நடந்தது . 2011 டிசம்பர் 25ம் தேதி சென்னை மெரினாவில் நடைபெற்ற ஊர்வலத்திற்கு முதலாக அழைக்கப்பட்டவர் சீமான். அந்த ஊர்வலத்தில் பாரதிராஜா முதல் அனைத்து படைப்பாளிகளும் கட்சிகளும் பங்கெடுத்தாலும் பங்கெடுக்காத ஒரே நபர் இவர் மட்டுமே... இதே போன்று 2011 ல் கூடன்குள போராட்டகூட்டமைப்பிலும் இதே நிலை.
2012 பிப்ரவரி 18ம் தேதி அமெரிக்க தீர்மான எதிர்ப்பினை முன்வைத்து சென்னை மெரினாவில் மே17 இயக்கம் கூட்டிய கூட்டத்திற்கும் முதலாக சீமானிற்கு நேரில் அழைப்பு கொடுக்கப்பட்டது... தமிழீழ கோரிக்கையை முன்வைக்கும் இக்கூட்டத்திற்கு வரமறுத்தார். இக்கூட்டத்திற்கு த்டை விதிக்கப்பட்டதை மீறி போராட்டம் நட்ந்தது. திருமுருகன் , மணியரசன், தியாகு, தாமரை வீரசந்தானம், மல்லை சத்யா, எழிலன், காஞ்சி மக்கள்மன்ற மகேஸ், எழிலன், தீரன் ஹாரூண் ரஷீத், கீற்று ரமேஸ், வடிவாம்பாள், கயல் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கடந்த வருடம் முறியடிக்கப்பட்டது.
இந்த போராட்டம் நடத்தப்படுவதற்கு இருவாரங்கள் முன்பு சீமான் இதே ஐநா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கவேண்டுமென்று ஊர்வலம் சென்னையில் நடத்தினார். இக்கோரிக்கை தவ்றாய் போகுமென்று தோழமையுடன் நேரில் சென்றும் பேசினோம். இவரது இந்த ஊர்வலத்திற்கும் கூட எங்களுக்கு மட்டுமல்ல எவருக்கும அழைப்பில்லை.
இதன் பின்னர் அதே பிப்18ம் தேதிக்கு அடுத்து இடிந்தகரையில் போராடிய மக்கள் மீது ஜெயா அரசு வன்முறை ஏவியது. இதை கண்டித்து சாலை மறியலை சென்னையில் அனைத்து கட்சி-இயக்கத்தவரும் நடத்தினோம், ஐயா.மணியரசன் அவர்கள் மிக மோசமாக இழுத்துச் செல்லப்பட்டார். பெரியார் திராவிட கழக தோழர்கள் பேருந்துகளை தடுத்து நிறுத்தியதற்காக தாக்கப்பட்டனர். இப்போராட்டத்திலும் இவர் இணையவில்லை, மறுத்துவிட்டார்.
பின் 2012 நினைவேந்தல் கூட்டத்திற்கு அழைத்தோம். வருகிறேன் என்றவர், பின் வரமறுத்துவிட்டார். இந்த நினைவேந்தலுக்கு ராம்விலாஸ் பாஸ்வான் அழைத்த உடன் பங்கேற்பதாக சொல்லி, உறுதி அளித்தவாறு உடல்நலம் சரியில்லாத பொழுதிலும் பங்கேற்றார். குடந்தை அரசன் அவர்களின் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநாட்டிற்காக வந்தவர் நினைவேந்தலில் பங்கேற்றார்.
நேரில் சென்றே அழைப்பிதழ் வைக்கப்பட்ட சிமான் வரவில்லை. இதே போல டெஸோ மாநாட்டிற்கு எதிரான திமுகவை அம்பலப்படுத்தும் போராடத்திற்கு அழைத்த போது, பிற கட்சிகள் பங்கெடுத்தனவே ஒழிய, சீமான் பங்கேற்கவில்லை. வழக்கம் போல பிரதிநிதியும் அனுப்பப்படவில்லை. பின்2012 காமன்வெல்த்திற்கு எதிரான போராட்டத்தின் போது வலிந்து அழைத்த போது ஒரே ஒரு பிரதிநிதி மட்டுமே, போராட்டம் முடிந்த பின்னர் அனுப்பப்பட்டார்.
2012 ஜீன் -ஜுலையில் சிறப்பு முகாமெனும் ஈழ ஏதலிகள் முகாம் முற்றூகை போராட்டம், கண்டனப் போராட்டம், ஈழநேரு உள்ளிட்டவர்கள் நடத்திய சாகும்வரை போராட்டத்திற்கு ஆதரவான போராட்டமென எந்தப் போராட்டத்திலும் நாம் தமிழர் தனித்தே நின்றார்கள்.
2012 செப்டம்பரில் இடிந்தகரையின் மீது கடுமையான தாக்குதலை அரசு செய்த போதும் இதே நிலை. தனித்தே நிற்கிறோமென்றார். பிற போராட்டங்களின் போதும் இதே நிலைதான் நடந்தது.
2013 பிப்ரவரியில் ஐ.நா முற்றுகைப் போராட்டத்தினை நடத்தியதற்கு நேரில் அழைப்பு கொடுத்தோம். அனைத்து கட்சியினரும் ஐயா.நெடுமாறன் தலமையேற்க பங்கேற்றார்கள்..இதிலும் பங்கேற்க மறுத்தார். இது குறித்த கருத்தரங்குகள்-ஆர்ப்பாட்டங்கள் என எதிலும் அவர்கள் பங்கேற்கவில்லை.
2013இல் பாலச்சந்திரன் படுகொலை படம் வெளியான போது ஒன்றாய் சேர்ந்து காங்கிரஸ் அலுவலகத்தினை முற்றூகையிடுவோம் என்றபோதும் இதே நிலை. பின் தோழமை இயக்கங்கள்-கட்சிகளோடு இப்போராட்டத்தினை நடத்தினோம்.
பின்னர் 2013 மார்ச் மாதம் மூன்றாம் வாரத்தில் ஐ.நா தீர்மானத்தினை எதிர்த்த மெரினா ஒன்று கூடலுக்கு அழைப்பு கொடுத்தபோதும் அதை புறக்கணித்தார். எந்த பிரதிநிதியும் அனுப்பப்படவில்லை.
பின்னர் 2013 நினைவேந்தலுக்கு அழைப்பு கொடுத்தோம். வழக்கம் போல நேரிலேயே அழைப்பு கொடுக்கப்பட்டது.
திருமுருகனும், அருள்முருகனும் சென்று அழைத்தார்கள். வழக்கம்போல சீமான் வரவில்லை.
2013இல் வடக்குமாகாண சபை தேர்தல் தருணத்தில் மன்னாரில் தமிழர் நிலத்தை சிங்களவருக்கு கொடுப்பதான தகவல் வெளியானதை வைத்து போராட்டம் நடத்த அழைப்பு கொடுத்த போதும் பங்கேற்கவரவில்லை.
2013இல் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றூச்சுவர் இடிக்கப்பட்டபோது ஒன்றாய் நின்று ஜெயலலிதாவை எதிர்ப்போம் என்கிற போதும் இதே ஒற்றூமையற்ற நிலையே முன்னெடுத்தார்.
2014இல் ஐ.நா முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு கொடுத்தோம்.
2014 மார்ச்சில் மெரினாவில் ஐ.நா தீர்மான எதிர்ப்பு போராட்டம், இதனிடையே அமெரிக்க தூதரக முற்றுகைபோராட்டம், ஏழு தமிழர் விடுதலைக்கான மெரினா ஒன்றுகூடல் என்று எதிலும் ஒன்றாய் நிற்க மறுத்தார்கள்.
இந்தியாவின் அரசு அலுவலகங்கள் முற்றூகை போராட்டம் என எதிலும் பங்கேற்க மறுத்தார்கள். அரசு தடையை மீறி மே17 இயக்கமும் தோழமை கட்சி-இயக்கங்களும் பங்கேற்று ஒவ்வொரு முறையும் கைதானோம். எதிலும் பங்கேற்க மறுத்தார் சீமான்.
2015இல் நடந்த ஐ.நா முற்றூகைப் போரட்டம், அமெரிக்க தூதரகப் போராட்டமென ஒவ்வொன்றிலும் இதே நிலையெடுத்தார்கள்.
2015ல் நடந்த தமிழீழ நினைவேந்தலுக்கும் வரவில்லை. இம்முறை கிட்டதட்ட மூன்றுமணி நேரம் காத்திருந்து தோழர்கள் அழைத்த போதிலும் இதே நிலைதான்.
2015இல் அனைத்து அமைப்புகளும் ஒன்றுகூடி ஈழவிடுதலைக்கான பேரணி நடத்திய பொழுதில் கிட்டதட்ட 50-60 இயக்கங்கள் கட்சிகள் ஒன்றாய் நின்ற போதும் நாம் தமிழர் வரமறுத்தார்கள். அவர்களது நிலைப்பாடு என்பதே இந்த கூட்டங்களில் தங்களை தலைவராக முன்னிறுத்தவேண்டுமென்கிற கோரிக்கையே இவர்கள் தங்களை தனிமைப்படுத்தியதற்கான காரணம்.
இன்னும் பல போராட்டங்களை சொல்லமுடியும்... எந்த ஒரு நெருக்கடியான காலத்திலும் அனைத்து தமிழியக்கக்களோடு சேர்ந்து நின்றதில்லை...
இதே போன்ரு மீத்தேன் ஆவணப்பட வெளியீட்டிற்கும் பங்கேற்காமல் தவிர்த்தார்கள். இவ்வளவு ஏன் பாலைவனமாகும் காவிரி டெல்டா எனும் மீத்தேன் எதிர்ப்பு ஆவணப்படத்தினை திரையிட்ட நாம் தமிழர் தோழர்களை தடுத்து நிறுத்திய அதன் கட்சி பொருப்பாளர்கள், லைக்கா தயாரிப்பில் வெளியான கத்தி திரைப்படம் மீத்தேன் எதிர்ப்பினை பேசுகிறது என்று அதை பாராட்டி சுவரொட்டியும், பதாகைகளும் வைத்தனர்.
கத்தி திரைப்படத்தினை தயாரித்த லைக்கா நிறுவனம் ‘ராஜபக்சே’ தொடர்புடையது, என்று 120 கட்சி-அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியபோது அதை எதிர்த்து நின்றார் சீமான்....
இதே லைக்கா நிறுவனம் இன்று ரஜினிக்காக கட்சியில் முதலீடு செய்திருக்கிறதே?... லைக்கா நிறுவனத்தின் தலைமை பொறுப்பாளர் ரஜினி கட்சியின் தலைமை பொறுப்பாளராகிறாரே இது எப்படி நடக்கிறது?...
இவ்வளவு ஏன், ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக அறிவிப்பானவுடன் நமல் ராஜபக்சே பாராட்டி செய்தி வெளியிடுகிறாரே... எனில் லைக்காவிற்கும், ராஜபக்சேவிற்குமான தொடர்பு சீமானுக்கு தெரியாதா?... லைக்கா-ராஜபக்சே-சீமான் ஒரே அணியாக நின்றது எப்படி?...
இதே போன்று எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் பச்சைமுத்து ‘ தனி நாடு வாங்கிதாரேன் என்று சொல்லி ஒருவன் லட்சம் பேரை கொலை செய்தான்’ என்று தேசியத்தலைவரை பேசியவரின் திரைப்படமான ‘புலிப்பார்வை’க்காக ஒன்றாக மேடையேறி படத்தினை சிறப்பித்தாரே, இது பற்றி ஏன் கேள்வி எழவில்லை?... இந்த புலிப்பார்வை திரைப்படம் பாலச்சந்திரனை கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டதை ஏன் கேள்வி கேட்கவில்லை....
தேசியத் தலைவர் பிரபாகரனை வாய்கிழிய பேசிய சீமான் தேசியத்தலைவரின் மகனை கொச்சைப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படம் பற்றி எதிர்ப்பு தெரிவிக்காமல், அவ்விழாவை சிறப்பித்தது எப்படி?.. இச்சமயங்களில் எல்லாம் தனித்து நின்றவர் தானே சீமான்?...
ஈழவிடுதலைக்காக தொடர்ந்து போராடும் இயக்கங்களோடு இணையாத சீமான், இந்து மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில் ஈழ மக்களுக்காக என்று கலந்து கொண்டவர்தான்.. இத்தனை ஆண்டுகளாக அழைத்த போதும் வராதவர் , இன்று மே17 இயக்கம் மாநாடு நடத்திய போது அழைக்கவில்லை என கதறுவது ஏன்?...
கரு.பழனியப்பன், அமீரை வைத்து தன்னை ஏன் அழைக்கவில்லை கேள்வி கேட்க வைப்பது ஏன்?... ஏனென்றால் இன்று மே17 இயக்கம் அங்கீகரிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.. அதை தனது ஓட்டு வங்கியாக சுருட்டவேண்டுமென்பதைத் தவிர வேறென்ன எண்ணம் இருந்துவிட முடியும்?...
ஈழம், பிரபாகரன் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள், புலம்பெயர் மக்களிடம் வசூலிப்பவர்கள் ஏன் இதுவரை சொந்தமாக ஒரு பலமான மாநாட்டினை நடத்தவில்லை?.. இவர்கள் ஈழத்திற்காக கடைசியாக நடத்திய போராட்டம் எது?..
லண்டன் கோபிசிவந்தனின் உண்ணாநிலை போராட்டத்தின் போதும். ஈழத்தில் சிறுவன் தர்சன் கொலை செய்யப்பட்ட போதும் நடத்திய போராட்டத்திற்கு அழைத்த போது வராத சீமான், வெல்லும் தமிழீழம் எனும் மாநாட்டிற்கு ஏன் அழைக்கவில்லை என கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. ..
கிட்டதட்ட 7 ஆண்டுகளாக அழைத்த நிகழ்வுகளுக்கு வந்ததில்லை, பங்கெடுத்ததில்லை, பங்கேற்க இயலாத போது குறைந்தபட்சம் மரியாதை நிமித்தம் பேசியதும் இல்லை... இவ்வளவு ஏன் தொடர்ந்து பொய்களை மட்டுமே பதிலாக சொல்லும் சீமான், ரேசன்கடைகளை மூடுவது குறித்து தானே 5 ஆண்டுகளுக்கு முன்பு பேசியதாக கடந்தவருடம் 2017இல் பேசுகிறார்.இதை முதன்முதலில் அம்பலப்படுத்தியது மே17 இயக்கமே...
2015 டிசம்பர் நைரோபி மாநாட்டில் கையோப்பமானதை தொடர்ந்து மூன்றாவது மாதத்திலேயே மே17 இயக்கம் அம்பலப்படுத்தியது.. இந்நிகழ்வு நடந்தது 2015இல் ஆனால் 2017லேயே சீமான் சொல்கிறார், தான்தான் 5 ஆண்டுகளுக்கு ரேசன்கடைகள் மூடப்படுவதாக முதன்முதலில் எச்சரித்ததாக சொல்லுகிறார். அப்படி அவருக்கு இதுகுறித்த கவலை இருக்குமெனில் ஏன் மே17 இயக்கத்தோடு இணைந்து பணியாற்ற முன்வரவில்லை?..
ஏன் மே17 இயக்கத்தினரை தனது மேடையில் ஏற்றியது இல்லை?... 7 ஆண்டுகளாக தொடர்ந்து அழைத்த மே17 இயக்கத்தினரை கொச்சைப்படுத்தி உதாசீனப்படுத்திய சீமானும் அவரது தொண்டர்களும், இன்று தங்களை அழைக்கவில்லையே என கதறுவது ஏன்?....