Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - முதல் உலகப்போரில் இந்தியா கொடுத்த ஒத்துழைப்பு

இந்தியாவிற்கு அதிகப்படியான உரிமைகளையும் அதிகாரங்களையும் வழங்க பிரிட்டன் முன் வந்தது.

இந்திய மந்திரி எட்வின் மாண்டேகு , பிரிட்டிஷ்  நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டார் இந்திய மக்களுக்கு அரசியலில் அதிக அதிகாரங்கள் வழங்கப்படும் பிரிட்டிஷ் பேரரசின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு பொருப்பு ஆட்சி வழங்கப்படும் அதை படிப்படியாக உருவாக்கும் நோக்கத்துடன். நிர்வாகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் இந்தியர்களை அதிகமாக பங்கெடுத்துக் கொள்ளச் செய்து - சுயாட்சி அமைப்புகளை வளர்ச்சியுறச் செய்யும் என்றது அந்த அறிக்கை 1917 ஆகஸ்ட் 20 ஆம் நாள் இந்திய அரசின் சிறப்பு அரசிதழிலும்அது வெயிடப்பட்டது இந்திய விடுதலைக்கு பிரிட்டன் காட்டிய  முதல் அடையாளம் அது.

காங்கிரஸ் அறிக்கை
-----------------------------------.
அந்த அறிக்கை பற்றிய இந்தியர்களின் கருத்தறிய இந்திய மந்திரி எட்வின் மாண்டேகுவும் அப்போது இந்திய வைஸ்ராயாக இருந்த லார்டு செமஸ்போர்டும் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். பிரிட்டிஷாரின் அடிமை என்ற நிலையிலிருந்து பிரிட்டிஷாருக்கு சமமான நாடு என்ற நிலைக்கு இந்தியா வரவேண்டும். அதற்கு சுயாட்சி அமைவதுதான் தீர்வு அதற்கான ஆணையை பிரிடிஷ் அரசு வெளியிட வேண்டும் என்று அறிக்கை கொடுத்தது காங்கிரஸ் ,முஸ்லீம் லீக்கும் அதே கருத்தைக் கூறியது. இந்திய தேசியக் காங்கிரஸ், முஸ்லிம் லீக் இரண்டு கட்சிகளின் கருத்தை ஆதரிக்கிறோம் என்றது சென்னை மாகாண சங்கம்.

1917 டிசம்பர் 24ம் நாள் அக்குழு சென்னை வந்தது தென்னிந்திய நல உரிமைச் சங்கம் சார்பாக திவான் பகதூர் ராஜரத்ன முதலியார் தலைமையில் ராவ் பகதூர், பிட்டி தியாகராயர் அக்குழுவிடம் ஒரு அறிக்கை கொடுத்தார் பிரிடிஷ் அரசு அறிவித்துள்ள பொருப்பு ஆட்சி முறை உயர் சாதி வாகுப்பினரான பார்ப்பனர்களுக்கு அதிகாரமும் ஆதிக்கமும் கொடுப்பதாகவும் பிற்படுத்தப்பட்ட பார்ப்பனரல்லாத பெரும்பான்மை மக்களுக்கு திங்கு விளைவிப்பதாகவும் அமையும்.
சமூக சீர்திருத்தம் ஏற்பட்டு, சாதிப்பிரிவுகள் அனைத்தும் அடியோடு ஒழிகின்ற காலம் வரை - அரசின் நிர்வாகத் துறைகள் அத்தனையிலும், வகுப்புவாரி பிரதிநிதித்துவ அடிப்படையில் இடா ஒதுக்கீடு செய்யவேண்டும்.
ஒவ்வொரு சமூகப் பிரிவு நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படும் விதத்தில் வகுப்புவாரி பிரதி நிதித்துவம் கொடுத்து சட்டாமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது அந்த அறிக்கையின் சுருக்கம்.

நூல்    ; திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 54 to 55.

1000 ஆண்டுப் போராட்டமும் 1000 ஆண்டுச் சாதனையும்!

 1000 ஆண்டுப் போராட்டமும் 1000 ஆண்டுச் சாதனையும்!
          -ப.திருமாவேலன்

"புரட்சி என்பது பெரியதாகத்தான் இருக்கும் என்று நினைக்காதீர்கள். என்னைப் போலக் குள்ளமாகவும் இருக்கும்” என்று பேரறிஞர் அண்ணா ஒரு முறை சொன்னார்!

புரட்சி என்பது பெரும் முழக்கம் கொண்ட தாகவே இதுவரை இருந்திருக்கிறது. முதன் முதலாக அது ‘அமைதி’யாகவே நடந்திருக் கிறது. ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோராய் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்துகாட்டி இருக்கும் "அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற புரட்சி சத்தமில்லாமல் செய்யப்பட்டுள்ளது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட சமயச் சான்றோர்களும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பகுத்தறிவாளர்களும் ஒரு சேரப் பாராட்டும் புரட்சிகரச் செய்கை இது.  காவியும் கருப்பும் ஒன்று சேர்ந்து பச்சைக்கொடி காட்டி இருக்கும் பார் போற்றும் புரட்சி இது!

‘யாருக்கும் சொல்லக் கூடாது’ என்று சொல்லப்பட்ட மந்திரத்தை கோபுரத்தின் மீதேறிச் சொன்னார் இராமானுசர். ஆயிரம் ஆண்டுக்கு முன்னால். இந்திய வைதிகத் தத்துவ மரபுக்கு மூவராகச் சொல்லப்பட்ட ஆதிசங்கரர் - மத்வர் - வரிசையில் மூன்றாமவர் இராமானுசர். ‘யாருக்கும் சொல்லக்கூடாத மந்திரத்தை இப்படி கோபுரத்தின் மீதேறிச் சொன்னால் நரகத்துக்குப் போவாய்’ என்று சபித்தார் திருக்கோட்டியூர் நம்பி. ‘எல்லோரும் முக்தி அடைய நான் நரகம் போவது பாக்கியமே’ என்று சொன்னதால் இராமானுசர், ‘புரட்சித் துறவி’யாக இன்று வரை அடையாளம் காட்டப்படுகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் பேரும் ஆயிரம் ஆண்டுகள் நின்று நிலைக்கத்தான் போகிறது; பெரிய கோவில் இருக்கும் வரை இராசராசன் பேர் இருக்கும் என்பதைப் போல!

எல்லா இடங்களிலும் விரட்ட முயற்சிக்கப்படும் ஜாதி ( சாதி என்று எழுதி அதனை தமிழ்ப்படுத்தக் கூடாது என்கிறார் பெரியார்!) கடைசியாக கர்ப்பக்கிரகத்துக்குள் போய் ஒளிந்து கொண்டது. அங்கும் விரட்ட எடுத்த அஸ்திரம்தான், அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் என்பதாகும். சுயமரியாதை இயக்க காலத்தின் முதல் போராட்டமே அதுதான்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஜே.என்.இராமநாதனும், திருவண்ணாமலைக் கோவிலில் ஜே.எஸ்.கண்ணப்பரும், திருச்சி - மயிலாடுதுறை - திருவானைக்காவல் கோவில்களில் கி.ஆ.பெ.விசுவநாதமும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் என்.தண்டபாணியும், ஈரோடு ஈஸ்வரன் கோவிலில் குத்தூசி குருசாமி ஏற்பாட்டில் மூவரும் நுழைந்தது என்பது 1927-30 ஆகிய ஆண்டுகளில் ஆகும். சுயமரியாதை இயக்கத்தவர் கூட்டம் நடந்தால் கோவிலுக்குள் நுழைந்துவிடுவார்களோ எனப் பயந்து கோவில்களைப் பூட்டிய காலம் அது. இது தொடர்பான பல்வேறு வழக்குகள் பல ஊர்களில் நடந்தன. இது தான் பின்னர் ஆலய நுழைவு மசோதா ஆனது.

1970 ஜனவரி மாதம் தந்தை பெரியார் அவர்கள் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்தார்கள். ஆலயங் களில் ஜாதிபேதம் இருக்கக் கூடாது, அனைவரும் கர்ப்பக்கிரகம் வரை செல்ல வேண்டும், கர்ப்பக்கிரகம் வரை சென்று வழிபாடு செய்வதற்கு ஜாதி ஒரு காரண மாக இருக்கக் கூடாது. அந்த அடிப்படை யில் கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார்.

இந்தப் போராட்டம் நடத்த வேண்டாம் என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஒரு வேண்டுகோள் அறிக்கையை வெளியிட்டார். "அப்படி ஒரு கிளர்ச்சி நடத்தாமலேயே அவரது எண்ணத்தை நடை முறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்படும்” என்று அறிவித்தார். ‘அர்ச்சகர் களுக்கென சில சிறப்புத் தகுதிகள் வேண்டும், பயிற்சிகள் வேண்டும், அப்படி பயிற்சி பெறுகிறவர்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் அதில் தேர்வு பெற்று அர்ச்சகர் ஆகலாம்' என்று முதலமைச்சர் கலைஞர் அறிவித்தார். முதலமைச்சர் கலைஞரின் அறிவிப்பை ஏற்ற தந்தை பெரியார் தனது போராட்டத்தைத் தள்ளி வைத்தார்.

2.12.1970 அன்று தமிழ்நாடு சட்ட மன்றத்தில் அர்ச்சகர் சட்டம் நிறை வேற்றப்பட்டது. "இந்து சமய அறக்கட் டளை திருத்த மசோதா” என்று இதற்குப் பெயர். இந்தச் சட்டத்தை ஆதரித்து தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் சட்டமேலவையில் பேசினார். ஆனால் இந்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிலர் வழக்கு தாக்கல் செய்தார்கள். இந்த வழக்கில் 14.3.1972 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. "சட்டம் செல்லுபடியானதே!’’ என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம். ஆனாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இத்திருத் தத்துக்காக அன்றைய ஒன்றிய அரசிடம் பலமுறை முதல்வர் கலைஞர் வலியுறுத்தினார்.

1973 டிசம்பர் 8,9 ஆகிய நாள்களில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக தந்தை பெரியார் அறிவித்தார். இதற்கிடையே டிசம்பர் 24 ஆம் தேதி அன்று தந்தை பெரியார் மறைந்தார்கள். "பெரியாரின் எவ்வளவோ ஆசைகளை நிறைவேற்றினோம். ஆனால் இந்த அர்ச்சகர் சட்டத்தை எழுந்து நடமாட வைக்க முடியவில்லை. பெரியார் அவர்களது நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்காமலேயே புதைத்திருக்கிறோம்’’ என்று முதல்வர் கலைஞர் அவர்கள் அப்போது பேசினார்கள். "அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும்’’ என்ற தீர்மானத்தையும் சட்டமன்றத்தில் நிறை வேற்றினார் முதல்வர் கலைஞர்.

2006 இல் மீண்டும் தி.மு.க. ஆட்சி. 16.5.2006 - அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. "உரிய பயிற்சியும் தகுதியும் உள்ள அனைத்துச் ஜாதியின ரும் இந்து சமய திருக்கோவில்களில் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையைப் பிறப்பிப்பது என அமைச்சரவைக் கூட்டம் தீர்மானிக்கிறது. இது தந்தை பெரியாரின் நெஞ்சில் உள்ள முள்ளை அகற்றும் அரும்பணி என அமைச்சரவை கருதுகிறது.’’ என்று அறிவிக்கப் பட்டது. மீண்டும் நீதிமன்றத்தில் தடை. இறுதித் தீர்ப்பு - 16.12.2015 உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படி சட்டத்துக் குத் தடை இல்லை. சடங்கு முறையில் மாற்றம் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டது.

சடங்கு, சம்பிரதாயம் எதையும் மாற்ற வில்லை. உரிய பயிற்சி பெற்ற வர்கள் சடங்கு, சம்பிரதாயம் செய்யலாம் என்பதுதான் இதன் உள்ளடக்கமே. அத்தகைய தகுதியும், திறமையும் பெற்றவர்களைத்தான் அர்ச்சகர் ஆக்கி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஜாதியால் மூடப்பட்ட கதவை, சட்டத்தால் திறந்திருக்கிறார் முதலமைச்சர். அதுவும் சத்தமில்லாமல்!

புரட்சி சில நேரங்களில் இப்படித் தான் அமைதியாகவும் வரும். இந்த அமைதிப் புரட்சி ஆயிரம் ஆண்டு களுக்குப் பேசப்படும். ‘அன்றொரு நாள் கோபுரத்தின் மீதேறி’ என்று சொல் வதைப் போல... ‘கோட்டையின் மீதேறி மு.க.ஸ்டாலின் சட்டம் போட்டார்' என்று சொல்லப்படும்.

அரசியலில் முதலமைச்சர்கள் வரலாம். போகலாம். சமூகத்தில் மாற்றம் செய்பவர்களே, தனித்து பிரித்தெடுத்து வரிசைப்படுத்தப்படு வார்கள். அந்த வரிசையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேர், போய்ச் சேர்ந்துவிட்டது. என்றும் அழியாப் பேர் இது! ஆயிரமாண்டுப் பேர் இது!

திராவிடம் அறிவோம் - சென்னை மாகாண சங்கம்

பிராமணர் அல்லாத பெருங்குடி மக்களே ! நாங்கள் தான் உங்களுடைய உண்மையான பிரதநிதிகள், எங்களை நம்புங்கள் எல்லோரும் வாருங்கள் என்று அழைப்பு விடுத்த போட்டி இயக்கம்,1917 செப்டம்பர் 15 ம் நாள் கோகலே மண்டபத்தில் கூடியது. காங்கிரஸில்  உள்ள பார்ப்பனர் அல்லாதாருக்கான தனி அமைப்பு என்றும் வலைவீசியது.

தலைவர் தூண்டிலில் மாட்டியவர் திவான்பகதூர் கேசவ பிள்ளை. 1885 -ல் ஆலன் ஆக்டோவியன் ஹியும்,  காங்கிரஸ் கட்சியை துவங்கியபோது அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.துணைத் தலைவர்களாக லாட்கோவிந்த தாஸ், சல்லா குருசாமி செட்டியார் ஈரோடு ராமசாமி நாயக்கர்(பெரியார்) நாகை வி.பக்கிரிசாமி பிள்ளை . சீர்காழி சிதம்பரநாத முதலியார், தஞ்சாவூர் சீனுவாச பிள்ளை, ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

கோபால்சாமி முதலியார், குருசாமி நாயுடு, டாக்டர் வரதராசலு நாயுடு, சர்கரைச் செட்டியார், கல்யான சுந்தர முதலியார், (திரு,வி,க.) ஆகியோர் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்..

இதில் பெரியார் அப்போது காங்கிரஸில் உறுப்பினராக இல்லை . காங்கிரஸ் தலைவர்களான சி, ராஜகோபாலாச்சாரியார், அன்னிபெசன்ட், டாக்டர் வரதராஜலு, கருணாகரன் மேனன் ஆகியோரிடம் நல்ல தொடர்பில் இருந்தார், இராஜகோபாலாச்சாரியார், வாரதராஜலு நாயுடு இருவரும் வற்புறுத்தி அழைத்து சென்னை மாகாண சங்க துணைத்தலைவராக்கினார்.

பார்ப்பனர் அல்லாதார் நலன் என்ற நோக்கத்துடன் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் அமைக்கப்பட்டவுடன், ஆகாயத்திற்கும் பூமிக்குமாக அலறிக் குதித்து எதிர்ப்பு தெரிவித்த இந்து ஏடும், நியூ இந்தியா ஏடும், காங்கிரஸில் உள்ள பார்ப்பனரல்லாதாருக்கான அமைப்பு என்று உறுவாக்கப்பட்ட சென்னை மாகாண சங்கத்தை வரவேற்று எழுதின. இப்படி ஒரு சங்கம் தேவை, பார்ப்பனரல்லாதாருக்கான நிரந்தர அமைப்பு வளர்ந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை - தற்காலிகம் என்ற சொல்லாக வெளிவந்தது,

நூல்    ; திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை,
பக்கம் ; 52 to 53.

திராவிடம் அறிவோம் - இந்தியா என்பது ஒரு நாடல்ல, துணைக்கண்டம்

இந்தியா என்பது ஒரு நாடல்ல, துணைக்கண்டம். குறிப்பாக தென்னிந்தியாவில் திராவிடரும் - பார்ப்பனரும் வெவ்வேறு இனத்தவர்.

மதத்தாலும், வருணாசிரம தருமத்தாலும் பிளவுபட்டுத் திணறும் மாபெரும் திராவிடச் சமுதாயம்.
யானைப் பாகனிடம் அடங்கிப்போயி பழக்கப்பட்ட யானையைப் போன்று இருக்கிறது.
எண்ணிக்கையில் குறைவான பார்ப்பனர்கள், யானைப் பாகனைப் போல்திராவிடச் சமுதாயத்தைப் பன்னெடுங்காலமாகவே வஞ்சகமாக அடக்கி வைத்திருக்கிறார்கள்.

என்றறேனும் ஒருநாள் யானைப் பாகனை விரட்டும், திராவிடர்களின் எழுச்சி பார்ப்பனர்களைப் பணிய வைக்கும்.
எங்களை ஆளத்தான் பிரிட்டிஷாருக்கு உரிமை உண்டு. விற்க உரிமை இல்லை. தங்களை தாங்களே ஆண்டுகொள்ளும் தகுதியை பெரும்பான்மை மக்களாகிய திராவிடர்கள் இன்னும் பெறாத நிலையில்.

ஹோம் ரூலையோ சுயராஜ்யத்தையோ பார்ப்பனர்களிடம் கொடுத்துவிட்டு இங்கிலாந்துக்கு கப்பலேருவது அப்பாவி ஆட்டுக் குட்டிகளை - வஞ்சனையும் ரத்த வெறியும் கொண்ட பார்ப்பன ஓநாய்களிடம் ஒப்படைக்கும் துரோகம் ஆகும்,

1919 ஆம் ஆண்டு டாக்டர் நாயர் தயாரித்து தந்த குறிப்புகளை வைத்து இங்கிலாந்து நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் கே,வி.ரெட்டி 5 மணி நேரத்திற்கும் மேல் வாதாடிய உரையின் ஒரு பகுதி.

மூவாயிரம் ஆண்டுகள் தேவ அசுரப் போராட்டத்தில் அசுரர்கள் கை ஓங்கக் கண்டு பூசுரர்கள் கூட்டம் அலறியது வழக்கமான பிரித்தாலும் சூழ்ச்சியை அவிழ்த்து விட்டது. பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின் கொள்கை அறிக்கைதேசிய நலனுக்கு ஆபத்து விளைவிப்பது தேசிய எதிரிகளுக்கு துணை போவது என்று புலம்பியது பின்னாளில் மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்று குத்தூசி குருசாமியால் அழைக்கப்பட்ட இந்து ஏடு
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஒரு விஷாமத்தனமான இயக்கம். அந்த சங்கம் நாட்டின் எதிரிகள் என அலறியது அன்னிபெசன்டின் நியூ இந்தியா ஏடு.

நூல்     ;திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 51 to 52.

திராவிடம் அறிவோம் - சமூக நீதி அரசாணைக்கு 100 வயது!

செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்! செப்டம்பர் 17 - தந்தை பெரியார் பிறந்தநாளும் கழகம் தோன்றிய நாளும்! இரண்டுக்கும் இடைப்பட்ட செப்டம்பர் 16 க்கும் சிறப்பு இல்லாமல் இருக்குமா? இதோ இருக்கிறது!

செப்டம்பர் 16 ஆம் நாள்தான் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வகுப்புரிமை உத்தரவு போடப்பட்ட நாள்! சமூக நீதி அரசாணைக்கு இன்று 100 வயது!

M.R.O. public ordinary  sevice G.O.no 613. dated 16.9.1921 - என்பது இந்த அரசாணைக்குப் பெயர். அப்போது சென்னை மாகாணத்தில் ஆட்சி செலுத்தி வந்த கட்சி நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஆகும். நீதிக்கட்சி ஆட்சியின் இரண்டாவது முதலமைச்சராக பொறுப்பேற்ற பனகல் அரசர் ஆட்சியில் தான் இந்த அரசாணை வெளியிடப்பட்டது.

1919 சட்டப்படி இரட்டை ஆட்சி நடைமுறைக்கு வந்தது. அதன்படி நடந்த முதல் தேர்தலில் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. முதல் முதலமைச்சராக 1921 ஜனவரியில்  கடலூர் ஏ,சுப்பராயலு தலைமையில் அமைச்சரவை அமைந்தது. பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்று  நீதிக்கட்சி உறுப்பினர் ஏ,தனிகாசலம் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இது பெண்ணினத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இதனிடையே உடல்நிலை குன்றியதால் முதலமைச்சர் ஏ,சுப்பராயலு ஜூலை 11 பதவி விலகினார், அதைத் தொடர்ந்து பணகல் அரசர் முதல்லமைச்சராக ஆனார். அவரது ஆட்சி அமைந்ததும். ஆகஸ்ட் 5 - ம் நாள் சட்டமன்றத்தில் டாக்டர் நடேசனார் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். பார்ப்பனரல்லாதாருக்கு நியாயமான விகிதாச்சார அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்கவேண்டும், என்று தீர்மானம் கொண்டுவந்தார், அரசே இதை ஆணையாக வெளியிட உள்ளது என்று பனகல் அரசர் சொன்னதன்  அடிப்படையில் நடேசனார் இந்த தீர்மானத்தை திரும்ப பெற்றார்,. அதனடிப்படையில் நீதிக்கட்சி அமைச்சரவையின் முதல் வகுப்புரிமை அரசாணை 16.9.1921 அன்று போடப்பட்டது.

கல்வி, வேலைவாய்ப்பு, சட்டசபை ஆகிய மூன்றிலும் மக்களின் விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் உதயமானது, வெள்ளுடை வேந்தர் தியாகராயரும், சமூக மருத்துவர்களுமான டி,எம், நாயரும், நடேசனாரும், இணைந்து உருவாக்கிய அமைப்பு இது.

1912 ம் ஆண்டு திருவல்லிக்கேணியில் திராவிடர் இல்லம் தொடங்கினார் நடேசனார், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உணவு விடுதிக்கு வெளியே சோற்றுப் பொட்டலத்தைப் தூக்கிப் போட்டதைப் பார்த்து நொந்த நடேசனார். ஒடுக்கப்பட்டவர் உட்கார்ந்து சாப்பிடவும், தங்கிப் படிக்கவும் உருவாக்கிய இல்லம் தான்  திராவிடர்  இல்லம், இந்த இல்லத்தில் மாதந்தோரும் ஒன்றுபட்ட சிந்தனை கொண்டவர்களை அழைத்து பேச வைத்தார், அங்கு பேசவந்தவர்கள் தான் தியாகராயரும், நாயரும்.

திராவிடம் அறிவோம் - அன்னை கண்ணம்மாள்

அன்னை நாகம்மையார் என்று சொல்லும்போதே, சேர்த்து உச்சரிக்கப்பட வேண்டிய இன்னொரு பெயர் கண்ணம்மாள் ஆகும். அன்னை கண்ணம்மாள் அய்யா பெரியார் அவர்களின் உடன் .பிறந்த தங்கை ஆவார். அவருடைய கணவரின் பெயர் காரணமாக அவர் எஸ்.ஆர். கண்ணம்மாள் என்று அழைக்கப்படுகிறார். நாகம்மையார் அவர்களும் சேர்ந்துதான் இயக்க வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். கள்ளுக்கடைஎதிர்ப்பு போராட்டமாகட்டும், கதருக்கான போராட்டமாக இருக்கட்டும், இவை அனைத்திலும் எப்படி அன்னை நாகம்மையார் முழுமையாக ஈடுபட்டு அவற்றை எதிர்கொண்டாரோ அதே வேகத்தில் அண்ணை கண்ணம்மாள் அவார்களும் முழுமையாக ஈடுபட்டு எதிர் கொண்டார் என்பதை முக்கியம்மாக சொல்லவேண்டும். இதில் கண்ணமாள் அவர்களிடம் பார்க்கும் ஒரு படிநிலை வளர்ச்சி அன்னை நாகம்மையார் அவராக மேடையில் பேசியதோ, எழுதியதோ கிடையாது. ஏதோ ஒரு கட்டத்தில் பெரியார் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, குடியரசிலே அன்னை நாகம்மையார் பெயரிலே அறிக்கை வெளிவந்திருக்கிறது. வாசகர்கள் தோழர்கள் தோழர்கள் ஒத்துழைப்பு தருமாறு என வந்திருக்கிறது . மற்றபடி கட்டுறையோ, மேடைபேச்சாகவோ அவருடைய பங்களிப்பு இல்லை.

ஆனால் கண்ணம்மாள் அவர்களைப் பொருத்தவரை  சொற்பொழிவாளராகவும், கட்டுரையாளராகவும் இருந்திருக்கிறார். அது மட்டுமல்ல பத்திரிக்கையின் பொறுப்பில் இருந்தபோது " இன்றைய ஆட்சி ஏன் ஒழியவேண்டும் ?" என்கிற தலைப்பிலே கட்டுரை வெளிவருகிறது. இன்றைக்குப் பலர், பெரியாரும், அம்பேத்கரும் ஆங்கிலேய அரசின் அடிவருடிகலாக இருந்தார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த அரசாங்கமும் ,ஆட்சியும் ஒழிய வேண்டும் என்று  கட்டுரை எழுதியதற்காக அந்தப் பத்திரிக்கை நடத்துவதே கேள்விக்குள்ளாகி, பெரியார் அவர்களையும், கண்ணம்மாள் அவர்களையும் அரசாங்கம் கைது செய்து கடுங்காவர் தண்டனை விதித்தது. இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு பெண் பத்திரிகையாளர் கைதாவது இதுவே முதல் முறை.

நூல்    ; கருஞ்சட்டைப் பெண்கள்,
பக்ககம் ; 84 to 85.
எழுத்தாளர் ; ஓவியா.

திராவிடம் அறிவோம் - T. M. நாயர்

1910 ஆம் ஆண்டு, பாலக்காடு நகரமன்றம் கலைக்கப்பட்டது. உள்ளாட்சி  நிர்வாகங்களில் மக்கள் பங்கு பெற வேண்டும் என்ற அழுத்தமான நம்பிக்கை கொண்ட நாயர், அதற்கு எதிராக ஒரு கிளர்ச்சியை தலைமையேற்று நடத்தி, கலைக்கப்பட்ட நகரமன்றத்திற்கு உயிரூட்டினார்.

அப்போது நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில்  பேசும்போது காவல்துறை அதிகாரி ஒருவர் ரகசியமாக குறிப்பெடுத்துக் கொண்டிருந்ததார். இதை கவனித்த நாயர் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, "இந்த தீர்மானம் - குறிப்பெடுத்த ரகசிய போலீஸ் அதிகாரி தவிர மற்ற எல்லோராலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்று குறிப்பிட்டார்.

1912 மார்ச் 14 ம் நாள், சென்னை விக்டோரியா மண்டபத்தில் நமது உடனடி  அரசியல் கண்ணோட்டம் என்ற தலைப்பில் நாயர் பேசினார், நோயுற்றிருந்த நான் உடல் நலத்தோடு திரும்பி வரக்கூடாது, சாக வேண்டும் என்று சில புத்திசாலிகள் பிள்ளையாருக்கு நூற்றுக்கணக்கான தேங்காய்களை உடைத்தார்கள் என்று கேள்விபட்டேன்,
எனது மலபார் மாவட்டத்தில் விலையும் தேங்காய்களுக்கு தற்போது நல்ல விலையில்லை என்று அங்கே உள்ள தென்னை விவசாயிகள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நமது புத்திசாலி நண்பர்கள் மலபார் மாவட்ட தேங்காய்களுக்கு ஒரு புதிய சந்தையை ஏற்படுத்தி கொடுத்ததற்கு நன்றி என்று மூடநம்பிக்கையை  கேலிப் பொருளாக்கினார்.

1914, முதல் உலகப்போரின் போது பிரிட்டனுக்கு உதவ சென்னை மாகாணம்  சார்பாக இந்திய சிற்றரசர்கள், பொதுமக்கள் நன்கொடையில் மருத்துவ உதவிக் கப்பல் ஒன்று கொடுக்கப்பட்டது, அதன் பெயர் எஸ்,எஸ், சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பலர் அந்தக் கப்பலில் பணியாற்றினார்கள். அதே கப்பலில் லெப்டினன்ட் தகுதியுடன் மருத்துவராக பணியாற்றிய நாயர் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை பயிற்றுவித்தார். மாணவர்களின் தேர்வுக்கு அது பெரிதும் உதவியது. இதை பாராட்டிய பிரிட்டிஷ் அரசு, கேசரி இந்து என்ற பட்டம் கொடுத்ததுடன் அவரது மரணத்துக்குப் பின்னரும் தங்கப் பதக்கம் வழங்கி மரியாதை செய்தது.

நூல்   ; திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 29 to 30.

திராவிடம் அறிவோம் - 1929 - ல் பிப்ரவரி 13 ம் நாள் செங்கற்பட்டுலே மாநாடு

1929 - ல் பிப்ரவரி 13 ம் நாள் செங்கற்பட்டுலே மாநாடு நடந்தது. . சென்னைப் பட்டணத்துலே, தியாகராயர் சதுக்கத்துலே இருந்து ஊர்வலம் புறப்பட்டு, 35 கல் தொலைவிலே உள்ள செங்கற்பட்டுக்கு அந்த காலத்திலே வந்து சேர்ந்தது!"

இன்றைய நடப்புக்கு எல்லாம் விதை போட்ட மாநாடு செங்கற்பட்டு சுயமரியாதை மாநாடு! அன்னைக்கு அந்த மாநாட்டுல போட்ட தீர்மானத்தையும், இன்னைக்கு நம்ம ஊரு நடப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கிற பொழுது தான், அங்கே போட்ட விதை தான், இப்ப நாடு முழுதும் செடியா, மரமா வளர்ந்து பலன் தருவதை பார்க்கிறோம்! சடங்குகளை விலக்கிக் கல்யாணம் நடத்துறது பெண்ணுங்களை எல்லாம் படிக்க வைக்கிறது. அவங்களை வேலை பார்க்க அனுப்பி வைக்கிறது, இன்னைக்கு நமக்கு சுளுவான காரியமா தோணலாம்!

என் மருமகளா இருக்கிற தமிழரசி படிக்கிறதுக்குக் காரணமா இருந்ததே, அந்த மாநாடுதான்! நம்ம கந்தசாமி பொண்ணுக்கு , நம்ம நற்பணி மன்றத்துப் புள்ளைங்க எல்லாம் கல்யாணம் நடத்தி, எதிர்ப்புகளை எல்லாம் அடக்குனது குறைச்சு மதிக்கிற காரியம் இல்லே!" சின்னதம்பி தீண்டத்தகாதவர்னு ஒதுக்குபுறமா தள்ளி வச்சவங்க குடியிருக்கிற இடத்துலே தான், நம்ம ஊருலே ஒரு "கலைமணி" இஞ்சினியரா மாறிகிட்டு இருக்கிறதை இப்போ நாம பார்க்கிறோம்! வெளுக்கிற குலம்னு சொல்ற குடும்பத்துலே பொறந்த மணிமுத்து, டாக்டர் படிப்பை முடிக்கப் போறதை, நாம பார்த்துகிட்டு இருக்கிறோம்! அவங்க எல்லாம் மேலெழுத்து வரதுக்கு, அந்த மாநாட்டுலே உதவித் தொகை போட்ட தீர்மானங்கள் எல்லாம் சட்டம்மா மாறுனதுனாலே தான் சமுதாயத்துலே நாம மாற்றத்தை பார்த்துகிட்டுதான் இருக்கோம்!

ஒரு காலத்துலே தீண்டத் தகாதவங்களா மதிக்கப்பட்டவங்க தான் நாடாருங்க! அவங்களை நல்லது கெட்டதுகளில் விலக்கி வைச்ச நாடு தான் இந்த நாடு! அவங்க தொட்டதை சாப்பிடாத காலம் கூட இருந்துச்சி! அந்த சுயமரியாதை மாநாட்டுலே தான், அந்த நாடாருங்க சமைச்சு எல்லாமே சாப்பிட்டது நடந்தது! அப்போ அது பெரிய புரட்சியாவே இருந்தது!

இன்று இந் அம்பது நாலுலே, அந்த நாடார் குலத்துலே வந்த காமராசரு முதலமைச்சர்னு நினைச்சு பார்க்கிற பொழுது, எவ்வளவு மகிழ்ச்சி.

நூல்   ; பயணம் 2,
பக்கம் ; 1046 to 1047.

திராவிடம் அறிவோம் - மதுரையிலே டி,வி.எஸ். நிறுவனக் கட்டிடத் திறப்பு விழாவிலே காமராசர் பேசியது

"மதுரையிலே டி,வி.எஸ். நிறுவனக் கட்டிடத் திறப்பு விழாவிலே காமராசர் பேசியது, சூத்திரன் செய்யவேண்டிய மோட்டார்த் தொழிலைப் பிராமணன் செய்வதாக ஆச்சாரியார் பேசினார். அப்பொழுதுதான் ஆத்திரப்பட்டார் காமராசர். அது மட்டுமல்லே வாயதான சுந்தரம் அய்யங்கார் தமது மகன்களிடம் தொழிலை ஒப்படைத்திருக்கிறார் நான் பாராட்டுகிறேன் என்றார் ஆச்சாரியார்.

அப்பொழுதுதான் கமராசர் தன் கொதிப்பைப் பேச்சிலே வெளியிட்டார். வர்த்தகத்துலே மட்டுமல்லாமல் அரசாங்கம் நடத்துரதுலேயும் அந்த வழியை வயோதிகர்கள் பின்பற்றினால் நாட்டுக்கும் நன்மை ஏற்படும்னு கருத்தை வெளியிட்டார்!" என்றார் பாண்டியன்.

"அந்தப் பேச்சுதான் எங்களைப் போன்றவங்களை எல்லாம் வேகமாகச் செயல்பட வச்சது. எங்க டாக்டர் வரதராசுலு , அண்ணாமலைப் பிள்ளை போலவங்க எல்லாம் அதுக்குப் பின்னாலே முனைப்பா கையெழுத்து வாங்குரதுலே ஈடுபட்டாங்க! ஆச்சாரியாருடைய உடம்பும் கெட்டது. கட்சிக் கூட்டம் நடந்தது! அந்தக் கூட்டத்துலே கல்வித் திட்டத்தின் மீது ஓட்டெடுத்து என்னை அவமானப்படுத்த வேண்டாம். நான் விலகிக் கொள்கிறேன்! என்றார் ஆச்சாரியார்,

எங்கத் தலைவரும் வாக்குக்கு விடாமே கூட்டத்தை ஒத்தி வைச்சாரு இது நடந்தது சனவரி 6ல் என்றார் தியாகியார்.
"பின்னே ஏன்  அப்பவே விலகாம இருந்தாரு"! என்று கேட்டார் ஆறுமுகம், "மேலிடத்திலே உள்ளவாங்க என்று தியாகியார் சொன்னார்.
எங்களுக்கு மேலிடம்னா டெல்லி தானே! மேலிடம் தன்னையே இருக்க சொல்வார்கள் என எதிர்பார்த்தார்! ஆனால் அது நடக்குல. சட்டசபை நடந்துகிட்டு இருந்த பொழுது மார்ச் 23 ஆம் தேதி உடல்நிலைக் காரணம் காட்டி, நான் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன்!" என்றார்.

"சட்டசபை நடக்கரை வரையிலும் இரண்டு மாதத்துக்கு மட்டும் சுப்ரமணியம் அவர்களை முதன்மந்திரியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்னு காமராசரிடத்துலே சொன்னவரு கட்சித் தலைவர் தேர்தல்லே இரண்டு மாசம்னு குறிப்பிட்டுச் சொல்லாமே சுப்பிரமணியம்  இனி முதன்மந்திரியாய் இருப்பார்னு சொல்லவே காமராசர் இந்த ஏற்பாடு இரண்டு மாதத்துக்கு மட்டும் தான்னு சொல்லுங்க என்ற பொழுது கூட்டத்துலே ராஜாஜி அதை ஏத்துக்கலே!.

30 ம் தேதி தேர்தல் நடந்தது ஆச்சாரியார் காமராசர் நிப்பார்னு நினைக்கலே! ஆனால் எங்க டாக்டர் வரதராஜுலு காமராசர் பெயரைச் சொல்லிட்டார். எங்கத் தலைவருக்கு 93ம், சுப்பிரமணியத்துக்கு 41 வாக்கும் கிடைத்தது,  முதல்வர் ஆனார் காமராசர்.

நூல்    ; பயணம் -2.
பக்கம் ; 1026 to 1028.

திராவிடம் அறிவோம் - காமராசரு நினைச்சிருந்தா இந்தக் குலக்கல்வித் திட்டத்தை தொடக்கத்துலேயே தடுத்திருக்கலாம்

"அய்யா நான் சொல்றதைத் தப்பா எடுத்துக்கக் கூடாது காமராசரு நினைச்சிருந்தா இந்தக் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த தொடக்கத்துலேயே தடுத்திருக்கலாம். ஆனால் அந்த எதிர்ப்பை வளரவிட்டு அதுலே தன் நினைப்பை நிறைவேற்றி கிட்டாருனு ஒரு கருத்துச் சொல்றாங்ளெ! நீங்கள்  என்ன சொல்கிறீர் என்றார் செங்குட்டுவன்.

தியாகியாரு,  எங்கத் தலைவருக்கு அப்படிப்பட்ட எண்ணம், அந்தத் திட்டம் வந்த தொடக்கத்துலே, இருக்கிறதுக்கு வாய்ப்பில்லே! ஆனால் பெரியாரும் அண்ணாவும் நாட்டிலே பேசிவந்த பார்ப்பான், சூத்திரன், வர்ணாசிரமம் இதெல்லாம் இந்த நூற்றாண்டுக்குப் பொருந்தாத நினைப்புனு நினைச்சுகிட்டு இருந்த எங்கலைப் போலவங்களுக்கே, அந்த நினைபை உண்டாக்கி வைச்சாரே ஆச்சாரியாரு!" என்றார் தியாகியார்.
எப்படி அய்யா சொல்றீங்க என்றார் ஆறுமுகம்.
"குலக்கல்வித் திட்டம்!  அது நீங்க கொடுத்த பேரு இல்லையா? புதுக்கல்வி திட்டம் வந்தப்போ எங்களிடத்துலே கல்வித்திட்டம் சரியா? தப்பா? இந்தக் கேள்விக் கூட முதல்லே வரலே! இந்தத் திட்டத்தைக் கொண்டு வரதுக்கு முன்னாலே இதைப்பத்தி கல்வி மந்திரி கிருஷ்ணாராவுக்கு கிட்ட ஒரு வார்த்தைக்கூட சொல்லலே! இது அடிப்படையிலே பெரிய மாறுதலை உண்டாக்குகிற இந்த ஏற்பாட்டை கட்சியிலே, சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்துலேயும் கேட்டுச் செய்யாமே, தானா செஞ்சாரு ஆச்சாரியாரு! அந்தக் கல்வித் திட்டத்தை விட அது எங்களைக் கொதிப்படைய வச்சது.
அவரை பார்த்துக் கேட்டபோது  சங்கரரும், ராமானுஜரும் தங்கள் கொள்கைகளை மற்றவங்களைக் கலந்து கொண்டா வெளியிட்டாங்கனு அவர் சொன்னது எங்களை எல்லாம் குமுற வச்சது!" என்றார் தியாகியார்.

"பின்னே தடுத்திருக்கலாமே , மாத்தியிருக்கலாமே!" என்றார் ஆறுமுகம்.

"ஆறுமுகம்! ஒடம்பிலே "குறுப்பு" வந்ததுன்னா மருந்து போட்டு அமுக்குறதும் உண்டு. சிலதைப் பத்துப் போட்டு கட்டியாக்கி பழுக்க வச்சு "முளைப்பையே" எடுத்திடறதும் உண்டு இல்லையா! எங்கத் தலைவரு, இந்த முளையை எடுக்கிறதுலே கண்ணும் கருத்துமா இருந்திருக்கிறாரு! அதனாலேதான் கட்சியிலே ஓட்டெடுப்பு வந்த பொழுது எல்லாம் அதை தடுத்துகிட்டே வந்தாரு. ஆந்திராவும் தனியாகப் பிரிஞ்சப்பின்னே கட்சிக்குள்ளே ஆட்சாரியாறை ஆதரிக்கிறவங்க, தாங்கரவங்க குறைஞ்சு போனதை நல்லா தெரிஞ்சிகிட்ட பின்னே தான், அவர் வெளிப்படையாக வெளியிட்டார், என்றார் தியாகியார்.

நூல்    ; பயணம் -2.
பக்கம் ; 1025 tp 1026.

திராவிடம் அறிவோம் - பெரியாரும் அண்ணாதுரையும்

மருத்துவக் கல்லூரியிலே, 318 இடத்துலே 104 இடம் பார்ப்பனர்களுக்கு, நாம் போராடிப் பெற்ற வகுப்புரிமையின் குரல்வளை நெரிக்கிறாரு! இப்படித்தான் துணை நீதிபதிகளை, மாவட்ட நீதிபதிகளை, அய்.ஏ.எஸ். நியமனங்களிலே, கல்வித்துறையிலே, பாதிக்கு மேலே அவங்க இனத்து ஆட்களையை நியமித்திருக்கிறார். அதற்கெல்லாம் ஈடுகொடுத்து தலையெடுப்பதற்கு ஐம்பது, ஆறுபது ஆண்டுகள் போனாலும்  முடியாது.

"அதணால் தான் அரும்புலேயே  நெருப்பபை  அள்ளிப்  போட்டுட்டா, அதன் வேர்கூட மிஞ்சாது இல்லையா? அதனால தான் ஆணி வேறையே ஒழிக்கிற மாதிரி, குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தாரு" இதை நம்ம மக்கள் புரிஞ்சிக்காம இருக்கிறார்களே" என்றார் ஆறுமுகம்.

"அது மட்டுமில்லே ஆறுமுகம், அவரை ராஜாஜினு கூடச் சொல்றதில்லே, நம்மாளுங்க அவர் ராஜரிசினேசொல்லிக் கால்லே விழறாங்கே! அவர் கையைத் தூக்கி ஆசிர்வாதம் என்பார்!" என்றார் ஆசிரியர் கந்தப்பன்.

எங்க தலைவரை உண்மையிலேயே முதல் மந்திரியா ஆக்குனவங்க, நாங்க இல்லே! நீங்கள் தான் என்றார் தியாகியார், பெரியாரும் அண்ணாதுரையும் தான்! நீங்கள் இந்த ரெண்டு வருசமா வெளியிலே போட்டது வெறும் சத்தமில்லே! ஆச்சாரியாருக்கு வெச்ச வேட்டு என்றார் தியாகியார்,

பெரியாரும் அண்ணாவும் பேசாம இருந்திருந்தா, உங்கத் தலைவர் (காமராசர்) முதல் மந்திரியா வந்திருக்க முடியாது, அப்படி தானுங்களே" என்றார் ஆறுமுகம்.
"அந்த உண்மையை மத்தவங்க ஒத்துகிறாங்களோ இல்லையோ, நான் ஒத்துக்குவேன், நாங்க அண்ணாத்துரை கட்சியைத் தொடங்குனப்போ அது அற்பாயுசு கட்சின்னு தான் நினைச்சோம்! அதுமட்டுமில்லே பெரியாரும், அண்ணாத் துரையும் மோதிகிட்டே இருப்பாங்க! நமக்கு வேலை குறைச்சலுனு எங்க ஆளுங்க பலர் நினைச்சாங்க!

ஆணால் இந்தியை அழிக்கிறதுலே இரண்டு பேரும் முன்னே போனதும், குலக்கல்வித் திட்டம்னு வர்ணாசிரமத்தை நிலை நாட்டுறத் திட்டம்னு ஓயாமே ஊர்வலம், மறியல்னு அண்ணாதுரை ஒரு பக்கம் மும்முனைப் போராட்டம்னு நடத்துனா, பெரியாரு மாநாடு போட்டுக் கண்டிக்க நாகப்பட்டினத்துலே இருந்து நடைப்பயணம்னு புறப்பட்டு வர, நாள் தவராம அரசாங்கத்துக்குத் தலைவலியை உண்டாக்கிட்டு நீங்க ஓயாம போராடாம இருந்தா, எங்க தலைவர்முதல் மந்திரியா பொறுப்பு  எளிதில் ஏத்துகிட்டு இருக்க முடியாது.

நூல்     ; பயணம் - 2.
பக்கம் ; 1023 to 1025.

திராவிடம் அறிவோம் - ஆச்சாரியார் அவங்க ஆட்களை நிரப்பி...

"இப்ப வந்து பொறுப்பு ஏத்துகிட்டாரே, என்ன செஞ்சாரு? அரசாங்கத்துலே திறமை உள்ளவங்களுக்குப் பஞ்சமா? அரசாங்க வேலையிலே ஓய்வு பெற்றுப் போனவங்கள்லே, எத்தனைப் பேரை உள்ளே உட்கார வச்சிருக்காரு? நினைச்சுப் பாருங்கள்!"
"பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னே ஓய்வு பெற்றவரு வயசும் ஏழுபதுக்கு மேலே ஆனவரு, ஆர்.வி, கிருஷ்ணய்யரு! அவருக்கு ஏன் சட்டசபை காரியதரசி வேலையைப் போட்டுக் கொடுத்தாரு?
"வெங்கடகிருஷ்ண அய்யர்னு ஒருத்தரு , அவர் தலைமை இன்ஜினியரா இருந்தவரு! அவரும் ஓய்வு பெற்று ஆண்டு பத்துக்கு மேலே ஆயிடுச்சு, வீட்டுக்குப் போனவரைக் கூப்புட்டுகிட்டாரே! இப்படி எத்தனையோ பேரை, விதிமுறைகளுக்கு மாறா சேர்த்துக்கிட்டதுக்கு எது காரணம்".

"பாண்டியன் படிச்ச, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு துணை வேந்தராப் போடச் சொல்லி யார் பெயரை வற்புறுத்தினார்ரு, சி.பி. இராமசாமி அய்யரைத் தானே?! வேலையில்லா விட்டாலும் வேலையை உண்டாக்கி , அய்யருமாருங்களைக் கொண்டு வந்து உட்கார வச்ச ஆச்சாரியாரு, நம்மாளுங்களுக்குச் செஞ்ச கொடுமைகளை நாம மறக்காம நினைச்சுப் பார்க்கனும்! என்றார் வேலாயுதம்,

"பெரிய நிபுணர், பொருளாதாரத்திலே என்று பாராட்டப்படுபவரு டாக்டர் பா,நடராசன் என்பவர்! அவர் அரசாங்கத்திற்கு நிதித் துறை ஆலோசகரா இருந்தாரு! அவரு நம்ம ஆளு! அந்தப் பதவியே தேவை இல்லைனு, அவரை வெளியேத்துனவர் தானே இவரு!

அரசாங்க நிர்வாகத்துலே, ஆச்சாரியார் அவங்க ஆட்களை நிரப்பியும், நம்ம ஆட்களை விரட்டியும், அவங்க ஆட்களை மேன்மைபடுத்தியும் காட்டறதுக்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருக்கு! அதை எல்லாம் நாம தெரிஞ்சுக்கணும். இப்பொழுது படிச்சு கிட்டு  இருக்கிற மாணவர்கள் சேர்க்கையை எண்ணிப் பார்த்தா, மிகவும் அதிர்ச்சியாய் இருக்கிறது! டாக்டருக்குப் படிக்கிற மணிமுத்து வினுடைய பேராசிரியர் கிட்டே பேசிகிட்டு இருந்தேன் அவர் ஒரு பட்டியலைக் காட்டுனாரு! பொறியியல் கல்லூரியிலே 378 இடமாம், அதுலே பார்ப்பனப் பிள்ளைகள் மட்டும் 160 பேராம்" என்றார் பாண்டியன்.

நூல்     ; பயணம் -2
பக்கம் ; 1022 to 1023.

திராவிடம் அறிவோம் - சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவக் கல்லூரியில் இடம்

1840 ஆம் ஆண்டுதான் சென்னையிலும், பம்பாயிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

திராவிட மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையோடு மருத்துவக் கல்லூரியில் சேரவேண்டும் என்றால் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற ஒரு விதியை ஏற்படுத்தியிருந்தனர்.

இந்த சனாதன விதி 1920 இல் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த போது நீக்கப்பட்டு, திராவிட மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியின் கதவுகள் திறக்கப்பட்டன.
அயராத உழைப்பால் நாயர் அஞ்சல் கல்வி மூலமே சமஸ்கிருதம் படித்து சென்னை மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்தார். இதற்கு உதவியாக அவரது தாயார் கண்மணி அம்மாளும், சகோதரி தராவத் அம்மாளும் இருந்தனர்.

அந்நாளில் ஆங்கிலேயர்கள் இந்தியர்களை சுதேசி என்று ஏளனமாக அழைப்பது வழக்கம் (சுயதேசம் - சுதேசி, பரதேசம் - பரதேசி, வேறு தேசம்- விதேசி) நாயரின் தன்மான உணர்வு அதற்குப் பாடம் கற்பிக்க விரும்பியது, ஒருமுறை இங்கிலாந்தில் ஆங்கிலேயர்களின் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட நாயர், நான் ஒருவன் மட்டும்தான் விதேசி. நீங்கள் அனைவரும் சுதேசிகள், என்று அங்கிருந்த பிரிட்டிஷ் காரர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரஞ்சு மொழிகளில் புலமை பெற்றிருந்த நாயர், தாய்மொழியான மலையாளத்திலும் பற்றுடையவராக இருந்தார். எடின்பரோ மருத்துவக் கல்லூரியில் பயின்றபோது, கள்ளிக்கோட்டையிலிருந்து வெளிவந்த கேரளப் பத்திரிகா என்ற ஏட்டிற்கு கட்டுரைகள் எழுதி வந்தார். அந்த ஏட்டில் சந்துமேனன் என்பவர் எழுதிய இந்துலேகா என்ற நாவிலின் மதிப்புரை ஒன்று வெளிவந்தது நாவாலின் கதாநாயகன் பெயர் மாதவன், நாயகியின் பெயரஇந்துலேகா அந்த மதிப்புரையைப் படித்த நாயர் நூலின் ஆசிறியருக்கு பாராட்டுக் கடிதம் ஒன்று எழுதினார். நான் வெகு தூரத்தில் இருப்பதால் இந்துலேகாவைப் பார்க்க முடியவில்லை, ஆணால் இந்துலேகா ஒரு நாள் மாதவனிடம் வருவாள் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் கடிதத்தைப் படித்து வயிறு குலுங்ச் சிரித்த சந்துமேனன் உடனே ஒரு இந்துலேகா புத்தகத்தை தபால் மூலம் தாயாருக்கு அனுப்பி வைத்தார்.

படம்   ; T.M. நாயர்.
நூல்     ;திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 27 to 29

திராவிடம் அறிவோம் - ராஜா சர் முத்தையா செட்டியார்

1934 ஆம் ஆண்டு சென்னை நகராட்சி, மாநகராட்சியாக உயர்த்தப்பட்டது அப்போது தலைவராக இருந்த ராஜா சர் முத்தையா செட்டியார் முதல் மேயரானார். அது முதல் மேயரை வணக்கத்திற்குரிய மேயர் (Worshipful Mayer) என்று அழைக்கப்படும் சம்பிரதாயம் ஏற்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன் கேரள அரசு வணக்கத்திற்குரிய மேயர் என்ற சொல்லிற்குப் பதிலாக மரியாதைக்குறிய மேயர் (Respected Mayer) என்று மாற்றி அமைத்தது.

சென்னை மாமாநகராட்சியின் மேயர் பதவி வகிப்பவர்கள் அணியும் தங்கச்சங்கிலி, வெள்ளிச்செங்கோல், மேயர், துணை மேயர்களின் இருக்கைகள், மாமன்ற உறுப்பினர்களின் அறை அத்தனையும் ராஜா சர் ராஜா முத்தையா செட்டியார் மாநகராட்சிக்கு அன்பளிப்பாக வழங்கியவை இதற்கு மரியாதை செய்யும் விதமாக அவருக்கு தனியே வரிவிலக்கு சலுகை அளிக்கப்பட்டது. அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் அத்தனைக்கும் பத்து ரூபாய் மட்டுமே அப்போது மாநகராட்சி வரியாக விதிக்கப்பட்டது.

1954 ஆம் ஆண்டூ முத்தையா செட்டியாரின் சகோதரர் எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் மேயராகப்பதவி ஏற்றார். மாநகராட்சிக்கென தனிக்கொடி உறுவாக்கியவர் அவர் தான். மூவேந்தர்களின் சின்னமான வில், புலி, கயல் மூன்றையும் நீலநிறப் பின்னனியில் பொறித்து உருவாக்கப்பட்ட கொடி மேயர் சென்னையில் இருக்கும்போது மாநகராட்சி மன்றத்தில் பறக்கும் இல்லாத போது கொடி இறக்கப்படும் இந்த நடைமுறையை ஏற்படுத்தியவரும் அவர்தான்.

நகருக்கு வரும் பிரபலங்கள் எவராக இருந்தாலும் அவரை மேயர்தான் முதலில் வரவேற்க வேண்டும். என்ற ஒழுங்கு முறை இன்றும் நடைமுறையில் இருக்கிறது சுழற்சி முறையில் ஒவ்வொரு வகுப்பாரும் ஓராண்டு மேயராகப் பதவி வகிக்க வேண்டும் என்ற நடைமுறை ராஜா சர் முத்தையா காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. இப்போது மேயரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என மாற்றப்பட்டுவிட்டது.

படம்    ;ராஜா  சர் முத்தையா.
நூல்    ; திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 20 to 21.

திராவிடம் அறிவோம் - சென்னை நகராட்சி

1871 ஆம் ஆண்டு முதன்முதலாக நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சென்னையின் மக்கள் தொகை நான்கு லட்சத்திற்கும் குறைவு . அதற்கு 180 ஆண்டுகளுக்கு முன்பே துவக்கப்பட்டது சென்னை நகராட்சி.


29.9.1688 -ல் சென்னை எர்ரபாலு செட்டித் தெருவில் ஒரு வீட்டில் துவக்கப்பட்ட சென்னை நகராட்சி துறைமுகப்பகுதியை மட்டும் எல்லையாகக் கொண்டிருந்தது. அப்போது கவர்னராக இருந்த லிட்டன் பிரபு நகராட்சி மன்றத்தை வெள்ளையர்களின் கொள்ளைக் கூடாரமாக்கிக் கொண்டிருந்தார்.

1880 -ல் ஜார்ஜ் பிரடரிக் சாமுவேல் ஜான்சன் என்ற இயற்பெயர் கொண்ட ரிப்பன் பிரபு கவர்னராக வந்தார். உள்ளாட்சி மன்றங்கள் மக்களின் அடிப்படைத் தேவைக்காக உருவாக்கப்பட்ட மக்களின் மன்றங்கள் என்ற தெளிவான நோக்கத்துடன் - ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த நகராட்சி நிர்வாகத்தில், இந்தியர்களைப் பங்கு பெற வைத்தார்.

இன்று கம்பீரமாக எழுந்து நிர்க்கும் சென்னை மாநகராட்சி மாளிகை அவரது 10 ஆண்டுகால உழைப்பால் கட்டப்பட்டது. அவரது மக்களாட்சி கோட்பாடுகளால் கவரப்பட்ட மக்கள் "ரிப்பன் எங்கள் அப்பன்" என்று போற்றினர். அவர் எழுப்பிய மாளிகைக்கு ரிப்பன் மாளிகை என்றுப் பெயர்வைத்து கட்டிட வளாகத்திற்குள் அவரது சிலையையும் வைத்தார்கள்.

தென்னகத்தின் தனித்த அடையாளமாக வேண்ணிரமாக ஒளிரும் அந்த மாளிகைக்கு, வெள்ளை மாளிகை என்று ஒரு பெயரும் உண்டு.

1919 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சென்னை நகர முனிசிபல் சட்டப்படி, 1919 முதல் 1923 வரை சென்னையின் முதல் நகராடீசி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் தியாகராயர். அதைத் தொடர்ந்து திருமலைப்பிள்ளை முகமது உஸ்மான், தனிகாசலம் செட்டியார், சர்.ஏ,ராமசாமி முதலியார்:- ஆகிய நீதிக்கட்சியின் தலைவர்கள் நகராட்சித் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். சென்னை தியாகராயர் நகரில் இந்த தலைவர்களின் பெயரால் தெருக்கள் அமைந்துள்ளன.

படம்   ; சர். ஏ. ராமசாமி முதலியார்.
நூல்     ;திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 19 to 20.

திராவிடம் அறிவோம் - தியாகராயரின் தன்மானத்தை உரசிப் பார்த்தது ஒரு நிகழ்ச்சி

கடவுள் உருவங்களை வீட்டில் வைத்து. பார்ப்பன புரோகிதர்களை வைத்து  - திணமும் பூசை செய்யும், பழுத்த வைதீகராக இருந்த தியாகராயரின் தன்மானத்தை உரசிப் பார்த்தது ஒரு நிகழ்ச்சி.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் குடமுழுக்குக்கு ரூபாய் 10000 நன்கொடை கொடுத்தார் தியாகராயர். அதன் இன்றைய மதிப்பு ஒரு கோடிக்கும் மேல். நன்கொடை பெற்றுக் கொண்ட பார்ப்பனர்கள் அழைத்த காரணத்தால் குடமுழுக்கிற்க்கு சென்றார்.

அங்கே அவரிடம் வேலை செய்து சம்பளம் வாங்கும் பார்ப்பனர்கள், மேடையில் உட்கார்ந்து கொண்டு "சூத்திரனெல்லாம் மேடைக்கு வரக்கூடாது கீழே நில்" என்றார்கள்.

டாக்டர் நடேசனாரின் தொடார்பு, டாக்டர் நாயரின் அறிவுபூர்வமான பார்ப்பன எதிர்ப்பு வாதங்கள் காரணமாக படிப்படியாக வைதீகத்தின் பிடியில் இருந்து விடுபட்டு வந்த தியாகராயர் வெகுண்டெழுந்தார். காரோட்டியை அழைத்து "நாயரின் இல்லத்திற்கு காரை விடு என்றார்.

1916 டிசம்பர் 20 ம் நாள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் கொள்கை விளக்கக் கூட்டம் சென்னை விக்டோரியா மண்டபத்தில் மண்டபத்தில் நடைபெற்றது. தென்னகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மக்கள் திரள் வாழ்த்தொலிகளை எழுப்ப -  நிறுவனர்களில் ஒருவரான சர்,பி. தியாகராயர் கொள்கை விளக்க அறிக்கையை வெளியிட்டார்.

திராவிடர் இயக்கதின் விடுதலை சாசனம் என்று இன்றளவும் போற்றப்படும் அந்த அறிக்கை;

இந்த மாநிலத்தின் மக்கள் தொகை 4 கோடி 50 லட்சம்மாகும். அதில் 4 கோடிக்கு குறையாதவர்கள் பார்ப்பனரல்லாதார், வரிசெலுத்துவோரில் பெரும்பான்மையோரும் அவர்களே, மேலும் குறுநில மன்னர்கள், பெருநிலக் கிழார்கள், விவசாயிகள் ஆகியோரும் பார்ப்பனரல்லாதவரே.

உண்மையில் அரசியல் என்ற பெயரால் நடைபெறும் இயக்கங்களில் பங்குகொள்ள உரிமை இருந்தும் அவர்கள் அதில் பங்கு கொள்ளவில்லை. மக்களிடையே அவர்களுக்குள்ள செல்வாக்கை நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒரு சிறிதும் அவர்கள் பயன்படுத்தவில்லை.

அவர்களுடைய சார்பில் உண்மையை வெள்ப்படுத்துவதற்கு அவார்களிடம்பத்திரிகைகளும் இல்லை, 15 லட்சம்பேர்களே உள்ள பார்ப்பனர்களின் நிலையைக் கவனிக்கும்  போது, இவர்களுடைய அரசியல் வாழ்க்கை எந்த அளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியும்.

நூல்    ; திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 41 to 42.

திராவிடம் அறிவோம் - நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகும்

நாகம்மாள் மறைவை நான் மகிழ்ச்சியான காரியத்திற்கும், லாபகரமான காரியத்திற்க்கும் பயன்படுத்திக் கொள்கிறேனோ அந்த மாதிரி எனது மறைவையோ எனது நலிவையோ நாகம்மாள் உபயோகப்படுத்திக் கொள்ள மாட்டாள். அதற்கு நேரெதிரிராகவே உபயோகித்துக் கொள்வாள். ஆதலால் நாகம்மாள் நலத்தைக் கோரியும், நாகம்மாள் எனக்கு முன் மறைந்தது எவ்வளவோ நன்மை.

என்னருமை தோழர்கள் பலருக்கு நாகம்மாள் மறைவு ஈடுசெய்ய முடியாத நஷ்டம் என்று தோன்றலாம். அது சரியான அபிப்பிராயமல்ல. அவார்கள் சற்று பொறுமையாய் இருந்து இனி நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளைக் காண்பார்களானால் அவர்களும் என்னைப் போலவே நாகம்மாள் மறைவு நலமென்றே கருதுவார்கள். நாகம்மாளுக்கு காயலா ஏற்பட்ட காரணமே எனது மேல்நாட்டு சுற்றுப் பிரயாணம் காரணமாய் ஒரு வருஷகாலம் பிரிந்து இருந்திருக்க நேர்ந்த பிரிவாற்றமையே முக்கிய காரணம். இரண்டாவது ரஷ்ய யாத்திரையினால் எனக்கு ஏதோ பெரிய ஆபத்து வரும் என்று கருதியது.

மூன்றாவது நமது "புதிய வேலை திட்டங்களை" உணர்ந்த பின் ஒவ்வொரு நிமிஷமும் தனக்குள் ஏற்பட்ட பயம், ஆகிய இப்படிப்பட்ட அற்ப காரணங்களே அவ்வம்மைக்குக் " கூற்றாக" நின்றது என்றால் இனி இவற்றைவிட மேலானதான பிரிவு ஆபத்து, பொருளாதாரக் கஷ்டங்கள் இருக்கும் நிலை அவ்வம்மைக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் தோழர்கள் நாகம்மாள் மறைவுக்கு வருந்த மாட்டார்கள் என்றே கருதுகிறேன். 2,3 வருடங்களுக்கு முன்பிருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும் சங்கராச்சாரிகள் போல (அவ்வளவுக்கு ஆடம்பரத்துடனல்ல , பண வசூலுக்காக அல்ல,) சுற்றுப் பிரயாணத்திலேயே இருக்க வேண்டும் என்றும் நமக்கென்று ஒரு தனிவீடோ அல்லது குறிப்பிட்ட  இடத்தில் நிரந்தர வாசம் என்பது கூடாதென்றும் கருதி இருந்ததுண்டு. ஆணால் அதற்கு வேறு எவ்விதத் தடையும் இருந்திருக்க வில்லை என்றாலும் நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தாள, இப்போது அந்தத் தடை இல்லாமல் போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குறிய காரியமாகும். ஆதலால் நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகும்,

நூல்    ; கருஞ்சட்டைப் பெண்கள்.
பக்கம் ; 82 to 83.

திராவிடம் அறிவோம் - நாகம்மாள் மறைவால் "குடும்பத் தொல்லை" ஒழிந்தது

நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை  நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வாந்தேன். இவைகளுக்கெல்லாம் நான் சொல்லக்கூடிய ஏதாவதொரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.

அதென்னவென்றால் நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொதுநலச் சேவையில் ஈடுபட்ட பிறகு பொதுநலக் காரியங்களுக்கும், சிறப்பாக சுயமரியாதை இயக்கத்திற்கமே பயன்படுத்தி வந்தேன் என்பதுதான் நாகம்மாள் நான் காங்கிரஸில் இருக்கும்போது மறியல் விஷயங்களிலும், வைக்கம் சத்தியாகிரக விஷயத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்.

ஆகவே நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டும்மா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டும்மா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டும்மா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டும்மா? எதுவும் விளங்கவில்லையே!

எது எப்படியிருந்த போதிலும், நாகம்மாள் மறைவு ஒரு அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கை எய்தினாள். இதிலொன்றும் அதிசயமில்லை. நாகம்மாளை அற்ப ஆயுள்காரியேயென்று யாரும் சொல்லிவிட முடியாது. நாகம்மாளுக்கு நாற்பத்தெட்டு வாயதே ஆன போதிலும், அது மனித வாழ்வில் பகுதிக்கே சிறிது குறையான போதிலும் இந்திய மக்களின் சராசரி வாழ்நாளாகிய இருபத்து மூன்று வயதுக்கு இரட்டிப்பென்றே சொல்ல வேண்டும். செத்தால் சிரிக்க வேண்டும், பிறந்தால் அழுக வேண்டும் என்கின்ற ஞானமொழிப்படி நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும், நஷ்ட சம்பவமகவும் கருதாமல் அதை ஒரு மகிழ்ச்சியாகவும், லாபமாகவும் கருத வேண்டும் என்றே நான் ஆசைப்படுவது மாத்திரமல்லாமல் உண்மையென்று கருதுகிறேன்.

எப்படியெனில் எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப்போகும் அத்தியாயங்களோ சிறிது விசேஷ சம்பவங்களோ இருந்தாலும் இருக்கலாம். அதை நாகம்மாள் இருந்து பார்க்க நேரிட்டால் அந்த அம்மாளுக்கு அவை மிகுந்த துக்கமாகவும் துயரமாகவும் காணக்கூடியதாய் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்காது. அதைக் கண்டு சகியாத முறையில் யானும் சிறிது கலங்கக் கூடும். ஆதலால் நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் "குடும்பத் தொல்லை" ஒழிந்தது என்கின்ற இரு உயர்பதவியையும் அடைய இடமேற்பட்டது.

நூல்    ; கருஞ்சட்டைப் பெண்கள்.
பக்கம் ; 81 to 82.

திராவிடம் அறிவோம் - நாகம்மையார் மறைவு

 அம்மையார் மரணமடைந்த போது, நாட்டின் பல்வேறு தலைவர்கள் இரங்கல் உரை நிகழ்த்தினார்கள். பல்வேறு இடங்களில் படத்திரப்பு நிகழ்வுகளும், இரங்கல் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. அவர் மரணமடைந்த அன்றே பெரியார் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள ச் செல்கிறார். அடுத்த நாள் 144 தடை உத்தரவு மீறி சிறைக்குச் செல்கிறார். ஆனால் நாடே நாகம்மைக்கு அஞ்சலி செலுத்தியது. இயக்கத் தொண்டர்கள் சொந்த ன்னையை இழந்தது போல் அழுது பரிதவித்தார்கள், இயக்கம் துயருற்றது. இவையெல்லாம் நாகம்மையாருடைய தொண்டின் சிறப்பை காட்டுகிறது. பெண்கள் இயக்க வரலாற்றில், நாகம்மையார் முதல் முத்தாகத் திகழ்கிறார். சுயமரியாதை இயக்க வரலாற்றில், அதணைத் தோற்றுவித்த மாபெரும் பணியில் நாகம்மையாரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அவரைத் தவிர்த்துவிட்டு இந்த இயக்க வரலாற்றை யாரும் எழுதிவிட முடியாது.

நாகம்மையார் மறைவையொட்டி அய்யா எழுதிய இரங்கல் உரை இலக்கிய நயம் மிக்கது. இதுவரை இப்படியொரு இரங்கல் பா யாரும் எழுதியிருக்க மாட்டார்கள்!.

எனதருமை துணைவி, ஆருயிர் காதலி நாகம்மாள் 11.5.33. தேதி மாலை 7.45 மணிக்கு ஆவி நீத்தார், இதற்காக நான் துக்கப்படுவதா? மகிழ்ச்சியடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா? நஷ்டமா? என்பது இதுசமயம் முடிவுகட்ட முடியாத காரியமாய் இருக்கிறது. எப்படியிருந்தாலும் நாகம்மாளை "மணந்து"வாழ்க்கைத் துணையாகக் கொண்டு 35 வருஷகாலம் வாழ்ந்துவிட்டேன்.

நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை, சுயநல வாழ்வில் "மைனராய், காலியாய், சீமானாய்" வாழ்ந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய்இருந்த காலத்திலும், எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரம்மாய் இருந்தாள் என்பது மறுக்க முடியாத காரியம், பெண்கள் சுதந்திர விஷயமாகவும் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ, போதிக்கிறேனோ, அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாளுக்கு நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.

ஆனால் நாகம்மாளோ பெண்ணடிமை விஷாயமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும், சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும், மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தாள் என்பதையும் அதை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.

நூல்    ; கருஞ்சட்டைப் பெண்கள்.
பக்கம் ; 80 to 81.

திராவிடம் அறிவோம் - நாகம்மையார் கலந்துகொண்டுட கூட்டங்களில் பெண்கள்

பேராசிரியர் மங்கல முரகன் எழுதிய நூலில்லிருந்து நாகம்மையார் மேடை ஏறிப் பேசியதில்லை . ஆனால் அவர் கலந்துகொண்டுட கூட்டங்களில் பெண்கள் அதிகளவில் கலந்துகொண்டார்கள். அம்மையார் பெரியாரின் அருகில் இல்லாமலிருந்தால், என்னதான் பெண்ணுரிமைக் கருத்துக்களை பேசியிருந்தாலும் கூட, பெண்கள் அதிகளவில் திரண்டிருப்பார்களா என்பது கேள்வி குறி.  அறிவுக்கருவூலம், தலைமை அய்யா அவர்கள் தான், ஆனால் அதனை ஏதுவாக்கி காட்டியதில் அம்மா அவர்களின் பங்கு இருக்கின்றது. அன்றைய தினம் அவர்களின் குடம்பச் சொத்துதான் இயக்கத்திற்கு இருந்த ஒரே சொத்து. ஆணால் உவப்புடன் அனைவரையும் அரவனைத்து அன்னமிட்டு ஆதரித்தார்கள்,குடியரசு இதழின் பதிப்பாசிரியராகவும் நாகம்மையார் இருந்தார்கள்.

பதிப்பாசிரியர் என்பது வெறுமனே பத்திரிக்கையில் பெயர் போட்டுக்கொள்வது மட்டுமல்ல, அப்போது குடியரசு பத்திரிகை காவல் துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த நிலை. பத்திரிகைகளில் வெளிவரும் விசயங்களுக்கு விளக்கம் கேட்கப்படலாம், கைதுகூடா செய்யப்படாலாம். இது போன்ற பொருப்பு தான் அம்மையார் ஏற்றுக்கொண்டார். குடியரசு மட்டுமல்ல, ரிவோல்ட் என்கின்ற ஆங்கிலப் பத்திரிக்கையின் பதிப்பாசிரியரும் இவாரே, அந்த ஏட்டில் குஞ்சிதம் குருசாமி, முத்துலட்சுமி ரெட்டி ஆகியோர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள்.

குஞ்சிதம் அம்மையார், நீலாவதி ஆகியோர் செய்துகொண்ட சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணங்களுக்கு, விதவை திருமணங்களுக்கு நாகம்மையார் அவர்களும், அவர்களின் தாய் தகப்பன் நிலையிலிருந்து திருமணப்பத்திரிக்கை அடித்து அழைப்பு விடுத்திருக்கிறார்கள். 1930 களில் நடந்த - இராமசுப்பிரமணியம் திருமணம் தாலி மறுப்பு திருமணம் கூட, சுயமரியாதை இயக்கத் திருமணங்கள் இங்கிருந்துதான் தொடாங்குகிறது. முதன்முதலில் தாலி மறுப்பு திருமணம் நடைபெற்ற செய்தியை குடியரசு இதழில் எழுதும்போது "இன்று முதல் தாலி ஒழிந்தது" என்று எழுதினார்கள் . திருமணத்தை புரட்சிக்காண ஆயுதமாக மாற்றிய இயக்கம் சுயமரியாதை இயக்கம். சுயமரியாதை திருமணம் பெரிய அளவில் நடத்தப்படுவதற்கு காரணம் அந்த திருமண நிகழ்வில்தான் தாய்மார்களை சந்திக்க முடிகிறது என்றார் பெரியார்.

அய்யாவின் வெளிநாட்டு சுற்றுபயணங்களான மலேசியா, பர்மா, சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்கு அம்மாவும் செல்கிறார். இரண்டாவது முறை அய்ரோப்பா சுற்று பயணத்தின் போது அம்மா செல்லவில்லை. இங்கு இருந்து இயக்க வேலை தொய்வில்லாமல் செயல்படுத்தினார். அய்யாவை வரவேற்பதற்காக இலங்கை சென்று அய்யாவை அழைத்து வாந்தார். திருமணத்திற்கு பின் இதுவே முதல் முறை அய்யாவை அம்மா பிரிந்தது. தனது நாற்பத்தெட்டாவாது வயதில் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார்.

நூல்     ; கருஞ்சட்டைப் பெண்கள்.
பக்கம் ; 70 to 80.

திராவிடம் அறிவோம் - நாகம்மையார் போராடியவை

நாகம்மையார் நான் சாதி சொல்ல மாட்டேன் என்று மட்டும் சொல்லியிருந்தால் அது தட்டையான பதில், என்ன நோக்கத்திற்காக கேட்கிறார்கள் என்று புரிந்து கொண்டு, அந்த நோக்கம் நிறைவேற ஒத்துழைக்க மாட்டேன் என்று விளக்கமாகப் பதில் சொல்கிற தன்மை இருக்கிறதே, அங்கு தான் பெரியார் கொடுத்த பயிற்சியின் வெற்றியை நாம் பார்க்கிறோம்,. நாகம்மையார் போராடிய போது , கோவில் இருந்த தெருவில் நுழைவதற்காகத் தொடாங்கிய போராட்டம்,கோயில் நுழைவு போராட்டமாகவே மாறிவிடக்கூடிய சூழலை எட்டியது. அப்போது காங்கிரஸ் இயக்கதில் இருந்தார்கள் காந்தியினுடைய இராட்டையை எடுத்துக்கொண்டு, அப்போது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்து கொண்டு, நடத்திய போராட்டத்தின் வல்லமை பெண்களுக்கு முன் உதாரணம் .

இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய போராட்டம் காங்கிரஸ்காரர்கள் மறக்கப்பட்டாலும். கூட கேரளத்தில் உரிய மரியாதையுடன்  இன்றளவும் நினைவுகூரப்படுகிறது. பெரியாரையும், நாகம்மையும் அழைத்து சிறப்பு செய்திருக்கிறார்கள் . அன்மை காலத்தில் அய்யா அவர்களின் சிலை திறக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி அய்யா சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்தார்.

1920 லிருந்து 1925 வரை காங்கிரஸ்சில் உழைத்தார். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்திலிருந்து பரிந்துறைக்கப்பட்ட முதல் பெண் பிரதிநிதி ஆவார். காங்கிரஸ் இயக்க வரலாற்றில் அவருக்கு நிகரான பெண் போராளிகளைக் காண்பது அரிது. பட்டாடைகளையும் மாளிகை வாசத்தையும் புறந்தள்ளி, வீரியமிக்க, போராட்டங்கள் மிக்க, துண்பங்கள் நிறைந்த, அவமானங்களையும், ஏச்சுகளையும், பேச்சுகளையும் உள்ளடக்கிய பொதுவாழ்க்கையில் நுழைந்தது எத்தகைய பக்குவம்.

பிறகு சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்படுகிறது. அதிலும் நாகம்மையாரின் பங்கு அலப்பரிமது, ஏனென்று கேட்டால் பெரியார் ஒரு குடும்பமாகத்தான் இயக்கத்தை கட்டுகிறார், அந்தக் குடும்பத்தின் அன்னையாக நாகம்மை திகழ்கிறார். அத்தகைய அன்னை கிடைக்காமல் போயிருந்தால் அப்படிப்பட்ட இயக்கத்தை கட்டியிருக்க முடியுமா? பெண்களை ஈர்த்திருக்க முடியுமா? அவ்வளவு தோழர்களை உருவாக்கி இருக்க முடியுமா? திராவிடர் இயக்கம் குடும்பம் குடும்பமாக வளர்ந்த இயக்கம். அத்தனை குடும்பங்களையும் ஆதரித்து அரவணைக்கும் அன்னையாக திகழ்ந்தார்.

நூல்    ; கருஞ்சட்டைப் பெண்கள்.
பக்கம் , 77 to 79.

திராவிடம் அறிவோம் - நாகம்மையாரின் பங்களிப்பு

ஆச்சாரம்மாக, வெகுளித்தனமாக இருந்த நாகம்மையார் பெரியார் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்த போதும் , சுயமரியாதை இயக்கத்தை துவங்கிய போதும் நாகம்மையாரின் பங்களிப்பு மகத்தானவை. நாளடைவில் கணவரை பின்பற்றி சுயமரியாதை வாழ்க்கையை ஏற்றுக்கொண்ட நாகம்மையார்.  1920 களில் கள்ளுக்கடை போராட்டம் தொடங்கியது. கள்ளுக்கடைகளை மூடச்சொல்லி போராட்டம் தொடங்க வேண்டும் என்கின்ற தீர்மானம் பெரியாரின் வீட்டில் காந்தியார்ரின் தலைமையிலே நிறைவேற்றப்படுகிறது. போராட்டத்திற்காக தன்னுடைய தோப்பில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டி வீத்தினார். 500 தென்னைமரங்களின் மதிப்பு சாதாரணம் அல்ல, வட நாட்டில் கூட ஈச்சமரங்கலைத்தான்  வெட்டினார்கள்.

போராட்டத்தில் பெரியார் கைது செய்மப்பட்ட பிறகு நாகம்மையார் போராட்டத்தை முன்னின்று நடத்துகிறார். அப்போதெல்லாம் கள்ளுக்கடைகள் இப்போது இருப்பதுபோல் ஊருக்குள்  கிடையாது. ஊருக்கு வெளியில் சுகாதாரமற்ற இடங்களில் அமைந்திருக்கும். அத்தகைய இடங்களுக்கு சென்று நாகம்மையாரும், பெரியாரின் சகோதரி கண்ணம்மாளும்  மரியலில் ஈடுபட்டது எப்படிப்பட்ட புரட்சிகரமான  செயல். காங்ரசில் இருக்கும்போது நடந்த போராட்டம், ஆணால் காங்கிரஸ்காரர்கள் தங்கள் இயக்கத்து போராளிகள் பெயரை பேசியதுண்டா?
 மது ஓழிப்பு போராட்டங்கள் ஏராளமாக நடக்கிறது, காந்தியவாதி இயக்கம், கம்யூனிஸ்ட் காரர்கள்,  ஆணால் மது ஒழிப்பு போராட்டத்தின் முன்னோடிகள் என்று இரு பெண்களைப்பற்றி யாரும் பேசுவதில்லை.

1924 ல் வைக்கம் போராட்டாம் நடக்கிறது கேரளாவிலே அங்கு இருக்கிற வீதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடந்து போக முடியாது. இதணால் வழக்கறிஞர் வழக்கறிஞர் தொழில் செய்வோர் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். காரணம் அந்த வீதியை தாண்டி தான் நீதி மன்றத்திற்கு செல்ல வேண்டி இருந்தது அதணால் வழக்கறிஞர்கள் போராட்த்தை துவங்கிய திருமிகு மாதவன் மற்றும் கே,பி. கேசவமேணன் இருவரும் கைது செய்து சிறை செல்கிறார்கள்.

இந்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தும்படி பெரியாருக்கு கடிதம் வருகிறது. பெரியார் போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்படுகிறார்.
 பிறகு நாகம்மை போராட்டத்தை தொடார்கிறார், வெளிமாநிலம் மொழி காலாச்சாரம் வேறு, இன்றைய காலத்தில் படித்து வேலைக்கு செல்லும் பெண்களே கணவர் துணையின்றி வெளியில் வர தயங்குகிறார்கள், நாகம்மையார் போராட்டத்தை தொடர்கிறார். காவாலர்கள் உன்னுடைய சாதி என்ன என்று கேட்கிறார்கள்? ஏன் நான் தாழ்த்தப்பட்ட சாதி இல்லை என்றால் என்னை மட்டும் உள்ளே விடலாம் என நினைக்கிறீர்களா? நான் சாதி சொல்ல முடியாது?

நூல்    ; கருஞ்சட்டைப் பெண்கள்.
பக்கம் ; 75 to 77.

திராவிடம் அறிவோம் - அன்னை நாகம்மையார்

திராவிட வரலாற்றில் பெண் போரளிகள். அன்னை நாகம்மையார்.

பெரியாருக்கு திருமணம் ஆகும்போது பெரியாருக்குப்  பத்தொன்பது வயது, நாகம்மையாருக்கு பதிமூன்று வயது. இன்றைய கணக்கில் குழந்தை திருமணம் தான். பெரியார் வாசதியான குடும்ப பின்னனி கொண்டவர் நாகம்மையார் இவர்களை விட வசதி குறைவான குடும்பத்தை சேர்ந்தவர். இருவீட்டார் குடும்பத்திலும் இந்த திருமணம் செய்ய விருப்பம்மில்லை, இருந்தாலும் இருவரின் பிடிவாதத்தால் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள், அந்தக் காலத்தில் நடந்த காதல் திருமணம்.

நாகம்மையார் சராசரி பெண்களைப் போல் சடங்கு, சம்பிராதயங்களோடு வளர்ந்தவர்.சம்பிரதாயங்கள் நிரம்பிய குடும்பத்தில் மாமியார், மாமனார்ரை திருப்திபடுத்தவேண்டும், ஒரு புறம்  சடங்கு, சம்பிரதாயத்தை ஒழிக்க நினைக்கும் கணவார்,  இருதரப்பையும் திருப்தி படுத்தவேண்டுய கடமை அந்த சின்ன பெண்ணிற்கு ஏற்படுகிறது. முதலில் அவர் மாமியார் தரப்பில் நிற்கிறார், பெரியார் அவரை மாற்றுவதற்காக முதலாவதாக சாப்பாட்டிலிருப்து துவங்குகிறார்.  நாகம்மையார் சைவ சாப்பாடு சாப்பிடவேண்டும், விரதம் இருக்க வேண்டும். பெரியாருக்கு கண்டிபாக அசைவ உணவு  தாயார்செய்துவிட்டு, அந்தத் தீட்டை போக்குவதற்காகக் குளித்து, அதன் பிறகு அவர் சாப்பிட வேண்டும். இதற்கு இடையில் பெரியார் தான் சாப்பிட்டு விட்டு எழும்புத்துண்டுகளை அந்த உணவுக்குள் சொருகி வைத்துவிடுவார். குளித்து விட்டு மாமியாரும் மருமகளும் சாப்பிட உட்கார்ந்தால் சாப்பாட்டிலிருந்து எழும்பு துண்டுகள் விழும், தன் மகனை கட்டுப்படுத்த முடியாத என்று முடிவு செய்த தாயார் . தன் மருமகளிடம் இனிமேல் நீ எந்த விரதமும் இருக்கவேண்டாம் என்று விரதங்களில் இருந்து விடுதலை கொடுத்தார். அன்றிலிருந்து, விரதங்களுக்க விடுதலை கொடுத்தார்.

நாகம்மையார் தொடர்ந்து கோவிலுக்கு செல்லும் வழக்கம் உள்ளவர் எப்படி தடுப்பது என்று சிந்தித்தா, மைனர் நண்பர்களிடம் தன் மனைவி என்று சொல்லாமல் நம் ஊருக்கு தாசி வந்திருப்பதாகவும் கோவிலுக்கு சென்றால் பார்க்கலாம் என்றார், அவ்வாறே அவரது நண்பர்களும் நாகம்மையார் செல்லும்போது கேலியும், கிண்டலும் செய்ய பயந்து போன நாகம்மையார் வீட்டிற்கு வந்து அழுதிருக்கிறார். பிறகு அய்யா கோவில் என்றால் அப்படிதானம்மா இருக்கும் என்று சொல்லி கோயில் பற்றிப் புறிந்து கொண்ட அம்மையார் கோவிலுக்கு செல்வதை நிறுத்திவிட்டார். படுக்கைக்கு செல்லும்போது புருசன் இருக்கும் போது தாலி எதற்கு என்று சொல்லி தாலியை கழட்ட செய்தார்,. பக்கத்து வீட்டு பெண்கள் தாலி இல்லாததை பார்த்து கேலியும், கிண்டலும் பேச, என் கணவர் அருகில் இருக்குபோது தாலி எதற்கு என்று  எதிர் கேள்வி கேட்டு ஊரார்கள் பேசுவார்கள் என்ற அச்சத்திலிருந்து விடுபட்டார்.

நூல்    ; கருஞ்சட்டைப் பெண்கள்.
பக்கம் ; 72 to 74.

திராவிடம் அறிவோம் - தியாகராயர்

சென்னைக்கு அருகில் உள்ள சத்திய மேடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தியாகராயரின் முன்னோர்கள். இப்போது அப்பெயர் மருவி சத்தியவேடு என்று அழைக்கப்படுகிறது . சத்தியமேட்டிலிருந்து சென்னைக்குக் குடியேறி நெசவுத் தொழிலும், தோல் பதனிடுதல்  ஏற்றுமதி முதலான வணிகங்களிலும் ஈடுபட்டு பெரும் செல்வந்தராகத் திகழ்ந்தவர் அய்யப்ப செட்டியார் பிட்டி என்பது அவார்களது குடும்பப் பெயர். தேவாங்கம் எனும் ஒருவகை ஆடைகளை நெய்வதில் சிறந்து விளங்கியதால் தேவாங்க செட்டியார் என்று அழைக்கப்பட்டார்கள்.

அய்யப்ப செட்டியாரின் முதல் மகன் முனியசாமி, இரண்டாம் மகன் பெரிய தியாகராயர். 1852 ஏப்ரல் திங்கல் 27 ஆம் நாள் மூன்றாம் மகனாகப் பிறந்தவர் நம் தியாகராயர்.
சென்னைக்கு முதன் முதலாக கார் வந்த போது அதை வாங்கிய குடும்பங்களில் ஒன்று தியாகராயரின் குடும்பம். குதிரை பூட்டிய வண்டியில் வளம் வந்த இளம் வயது தியாகராயர் 1876 ஆம் ஆண்டு பி,ஏ,பட்டம் பெற்று தேவாங்க செட்டியார் குலத்தின் முதல் பட்டதாரியானார். தோல் பதனிடுதல் அதை லண்டனுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம், மிகப்பெரும் கைத்தறி நெசவுக்கூடம் ஆகியவைகள் மூலம் பொருள் ஈட்டிய அவர் தென்னிந்திய வர்த்தக சபை தொடங்கி - 1910 முதல் 1921 வரை அதன் தலைவராகவும் இருந்து, தென்னகத்தின் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுத்தார்.

சென்னை வண்ணாரப் பேட்டை எனும் வண்மை ஆர்த்த பேட்டையில் அவர் துவக்கிய பள்ளி அவர் பெயராலே மிகப் பெரும் கல்லூரியாக வளர்ந்து இன்றும் ஏழை மாணவர்களின் வேடந்தாங்களாக உள்ளது. பச்சையப்பன் அறக்கட்டளையின் இயக்குநராகவும், தலைவராகவும் இருந்ததால் ஏழை மாணவர்களுக்கு எட்டா கனியாக இருந்த கல்வி அனைவருக்கும் கிடைக்கசெய்தார். செங்கல்வநாயக்கர் தொழிர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகப் பொருப்பு மூலம் திராவிட மாணவர்கள் தொழிர்கல்வியும் பெருவதற்கு வழிவகுத்தார்.

நூல்    ; திருவல்லிகேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 17 to 19.

திராவிடம் அறிவோம் - 1920 - ல்மாணவர்களின் எண்ணிக்கை

1920 - ல் இன்டர் மீடியட் வகுப்பில் படித்த பார்ப்பன மாணவர்களின் எண்ணிக்கை 1900. திராவிட மாணவார்களின் எண்ணிக்கை  640.

பி.ஏ. வகுப்பில் பார்ப்பன மாணவர்கள் 469. திராவிட மாணவர்கள் 133.

எம்.ஏ. வகுப்பில் பார்ப்பன மாணவர்கள் 104. திராவிட மாணவர்கள் 11.

சென்னையை அடுத்த பொன்னேரிக்கு அருகில் உள்ள சின்னக்கவனம் என்ற ஊரை பூர்வீகமாகக் கொண்டவர்கள் டாக்டர் நடேசனாரின் முன்னோர்கள் மூன்று தலைமுறைகளுக்கு முன்பாக திருவல்லிக்கேணி பெரிய தெரு அழைக்கப்படும் வீரராகவப் பெருமாள் தெருவில் குடியேறினார்கள் இவரின் தந்தை கிருஷ்ணசாமி முதலியார்.

திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள டாக்டர் நடேசனாரின் இல்லத்திலேயேசென்னை அய்க்கியக் கழக தலைவர்களின் சந்திப்புகளும் ஆலோசனைகளும் நடந்தன கழகத்தின் செயலாளர் பொருப்பை நடேசனார் ஏற்றுக் கொண்டார். எல்.ஜி. அரங்க ராமானுஜம் துணைச் செயலாளர்.

1913 - ல் சென்னை அய்க்கிய கழகத்தின் முதலாம் ஆண்டு விழா டாக்டர் நடேசனாரின் மருத்துவமனை தோட்டத்தில் நடைபெற்றது. அமைப்பின் பெயர் நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை எழுச்சியும், ஈர்ப்பையும் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றார்கள்.
பார்ப்பனர் அல்லாத சங்கப் என்றப் பெயர் பெரும்பான்மையோரின் கருத்து.
பார்ப்பனர் என்று ஒரு இனத்தைக் குறிப்பிட்டு அந்த இனம் அல்லாதவர்கள் என்று நம்மை ஏன்  எதிர்மறையாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்? நம் இனத்தின் பெயரால் திராவிடார் சங்கம் என்று பெயர் வைக்கலாம் என்றார் நடேசனார்.

1914 ம் ஆண்டு தொடங்கிய முதல் உலகப் போரில் பிரிட்டனுக்கு பல வகையிலும் உதவி செய்தது இந்தியா. அதற்குப் பிரதிபலனாக இந்தியாவிற்கு தன்னாட்சியும் அதற்கான பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுக்கும் உரிமையும் - பிரிட்டன் இந்தியாவிற்கு தரும் என்ற நம்பிக்கை ஏறபட்டிருந்த நேரம். அந்த உரிமை கிடைத்தால் மக்கள் பிரதிநிதியாகும் வாய்ப்பு பார்ப்பன மயமாகிவிட்ட காங்கிரசுக்கு தான் போகும், திராவிடர்கள் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால் திராவிடர்களுக்கென்று ஒரு அரசியல் கட்சி தேவை.

காங்கிரசிலிருந்து விலகிஇருந்த பி,டி தியாகராயர், டி.எம் நாயர் நாயரையும் சந்தித்து பார்பனரல்லாதார் பிரச்சினைகள் குறித்து விவாதித்தார், அந்த மூன்று தலைவர்களும் கண்ட இயக்கம் தான் நீதிக்கட்சி எனும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம்.

நூல்    ; திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை,
பக்கம்; 12 to 16

திராவிடம் அறிவோம் - பார்ப்பனர் அல்லாதார் சங்கம்

1909 ஆம் ஆண்டு, உரிமைக்குரல் கொடுக்க அவர்கள் உருவாக்கிய அமைப்பிற்குப் பெயர் - பார்ப்பனர் அல்லாதார் சங்கம். சங்கத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. உறுப்பினர்கள் சேர்ந்தார்கள் ஆனால் போதிய பொருளாதாரம் இல்லை.

பார்ப்பனீயத்தின் மூலபலமே திராவிட இனம் பிளவுபட்டுக் கிடப்பதுதான் என்ற உண்மை புரிந்த பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாதார் சங்கம் வரை அனுமதிப்பார்களா? வகுப்புவாதத்தைப் பரப்புகிறார்கள், இனவெறியைத் தூண்டுகிறார்கள் என்று திண்ணைகளில் சதஸ் வைத்தார்கள். பத்திரிகைகளுக்கு ஆசிரியர் கடிதங்களை எழுதிக் குவித்தார்கள். பிரயாணம் செல்லும் இடங்களிலெல்லாம் பிரசங்கம் செய்தார்கள்.

எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் தளர்நடை போட்டது புதிய இயக்கம், அதே நேரம் இன்னொரு புதிய அமைப்பும் உருவானது. சாதியிலும் அரசுப்பணிகளிலும் நான்காம் நிலையில் இருக்கும் நமக்கு விடிவே கிடையாதா? என்று ஏங்கித் தவித்தார்கள் அரசு அலுவலர்கள். திராவிடர்கள் நெல்லிக்காய்கள்  அவர்களை ஒன்றுதிரட்ட முடியாது, குறைந்தது அரசு அலுவலர்கலையாவது ஒன்று திரட்டவேண்டும் என்பது அவர்களது விருப்பம். கைகட்டி குனிந்ததும், வாய்பொத்தி இளித்ததும் போதும் என்று ஒரு அமைப்பை உறுவாக்கினார்கள்.

1912 -ஆம் ஆண்டு உறுவான அமைப்பிற்குப் பெயர் சென்னை அய்க்கியக் கழகம், தமிழகத்தின் அத்தனை உதடுகளும் உச்சரிக்கும் சொல்லை உருவாக்கியவர்கள் ஜி.வீராசாமி நாயுடு, என். நாராயண சாமி நாயுடு, சரவணப்பிள்ளை, துரைசாமி முதலியார் நான்கு பேரும் சேர்ந்து உருவாக்கினர்.

மூன்று ஆண்டுகளாக தளர் நடை போட்ட பார்ப்பனரல்லாத சங்கம் - புதிதாக உருவான சென்னை அய்கியக் கழகம் ஒன்னுகொன்று தோள்  கொடுத்து மகிழ்ந்தன. ஓராண்டில் இரண்டு கழகமும் பெயரலவுக்குதான் வளர்ந்தன, பெயர் சொல்லும் அளவிற்கு இல்லை.
பார்ப்பனீயத்தின் வல்லடி வழக்குகளை எதிர்த்து வலிமையான குரல் கொடுக்கும் வசீகரமான ஒரு தலைமை தேவை. இரண்டு அமைப்பைச் சார்ந்தவர்களும் அப்படி ஒரு தலைவரைத் தேடினார்கள்.
அந்தத் தலைவரின் பெயர் டாக்டர் சி. நடேச முதலியார்.

நூல்    ; திருவல்லிகேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 10 to 11.

திராவிடம் அறிவோம் - திருக்குறளுக்குப் பார்ப்பனரரான பரிமேலழகர் வகுத்துள்ள உரை

தாழ்ந்த வகுப்பினரான திருவள்ளுவரால் எழுதப்பட்ட  திருக்குறளுக்குப் பார்ப்பனரரான பரிமேலழகர் வகுத்துள்ள உரையே சிறந்தது எனப் பாராட்டுகிறார்.

திராவிட மதத்தின் தனித்தன்மை குறித்து அவர் கூறும்போது ஆரியர் வருகைக்கு முன் திராவிடர்கள் இந்துக்களாக இல்லையா?
ஆரியர்களோட வடமொழியும், அவர்களுக்கென்றிருந்த மதமும், சம்பிரதாயங்களும் இங்கு  வந்து குடியேறின. குறிப்பாக ஆரியர் வருகைக்கு முன் இங்கு விக்கிரக வழிபாடு இல்லை என்பதும் அவரது கருத்து.

விக்கிரகம் (image) என்கிற வடமொழி சொல்லிற்குநேர் தமிழ் சொல் இல்லை.  காரணம் "அச்சொல்லும் அதன் கருத்தும் தமிழ் மக்களின் பழக்க வழக்கங்களுக்கும், கொள்கைகளுக்கும் புறம்பானவை பார்ப்பனர்களால் புராணக் கருத்துக்களோடும், "விக்கிரக ஆராதனை முறை" என்னும் உருவ வழிபாட்டோடும், இச்சொல்லும் கருத்தும் தமிழ் நாட்டினுல் புகுத்தப்பட்டவை. என்கிறார் கால்டுவெல்.

நூல்     ; திராவிட இயக்க வரலாறு,
பக்கம் ; 178 to 179.

திராவிடம் அறிவோம் - 1890 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி

1890 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இன்றைய ஆந்திரத்தின் விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர், கடப்பா, கர்நூல், பெல்லாரி, அனந்தபூர், சித்தூர், கர்நாடாகத்தின் உடுப்பி, தென் கன்னடம், ஒடிசாவின் கஞ்சம், கேரளத்தின் மலபார் ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட சென்னை - ராஜதானியின் மக்கள் தொகை நான்கரை கோடி, அதில் திராவிடார்களின் எண்ணிக்கை 4 கோடிக்கும் மேல், பார்ப்பனர்களின் என்னிக்கை 15 லட்சத்திற்கும் கீழ்,

இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 16 பேர்களில் 15 பேர் பார்ப்பனர்கள். ஒருவர் மட்டுமே திராவிடர்.
உதவிப் பொறியாளர்கள் 21 பேரில் 17 பேர் பார்ப்பனர்கள் 4 பேர் திராவிடர்கள்.
உதவி மாவட்ட ஆட்சியர்கள் 140 பேர்களில் 77 பேர் பார்ப்பனர்கள் 63 பேர் திராவிடர்கள்.
உயர் வேலைவாய்ப்புகள் அத்தனையும் பார்ப்பனமயம்.

பல தலைமுறைகளாகப் படித்து முன்னேறிய பார்ப்பனர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலம் படிக்க வைத்தனர். திராவிடர் சமுதாயத்தில் ஒரு சிலர் மட்டுமே படிப்பு வாசனை இல்லாத தங்கள் பிள்ளைகளை ஆங்கிலம் படிக்க வைத்தார்கள்.
குடும்பமே பாடம் சொல்லிக், கொடுத்த மாணவனோடு, ஆசிரியரிடம் மட்டுமே பாடம் படிக்கும் திராவிட மாணவன் போட்டியிடுவது அவ்வளவு சுலபமாக இல்லை.

அரசின் வேலைவாய்ப்புகள் அத்தனையும் பார்ப்பன மயமானது. உடல் உழைப்பு பணிகள் சீருடைப் பணிகள், நான்காம் நிலைப் பணிகள் பக்கம் அவர்கள் எட்டிக்கூட பார்ப்பதில்லை இந்நிலையில் புறக்கணிக்கப்படும் மாணவர்களை தாழ்த்தப்படும் சமூகத்தை - ஒடுக்கப்படும் இனத்தை ஒன்று திரட்டி உரிமைக் குரல் எழுப்ப முடிவு செய்தார்கள். எம் புருசோத்தமன் நாயுடும், மற்றொருவர் சுப்ரமணியம் இரண்டு பேரும் வழக்கறிஞர்கள்.

1909 ஆம் ஆண்டு உரிமைக் குரல் கொடுக்க அவர்கள் உருவாக்கிய அமைப்பிற்குப் பெயர் - பார்ப்பனர் அல்லாதார் சங்கம் ( The Madras - Non Brahmin Association) சங்கத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது உறுப்பினர்கள் சேர்ந்தார்கள் ஆனால் போதிய பொருளாதாரம் இல்லை.

நூல்    ;திருவல்லிக்
கேணி முதல் திருவாரூர் வாரை.
பக்கம் ; 9 to 10

திராவிடம் அறிவோம் - மக்களிடையே உள்ள பொருளாதாரப்பிரிவுகள்

உலகெங்கும் உள்ள மக்களிடையே இம்மாதிரி பொருளாதாரப்பிரிவுகள் தான் உள்ளன. இதை (class) என்று அழைக்கிறார்கள். அவை சாதியை குறிப்பிடும் சொல் அல்ல.

மனுதர்மம் கூறும் ஜாதி தமிழ்ச்சொல் அல்ல அதற்கு நேரடி தமிழ்ச் சொல்லோ அல்லது அதற்கன பொருளைக் கூறும் சொல்லோ தமிழில் கிடையாது.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டனின் ஆட்சி வழுவாகக் காலூன்றி விட்டது. ஆங்கிலேயர்களிடம் ஆட்சி, அதிகாரம் இருந்தது. ஆனால் அவர்களது உத்தரவுகளை நேரடியாக இந்தியர்களுக்குப் புரிய வைக்க முடியவில்லை.

அவர்களின் ஆங்கிலம் இந்தியர்களுக்குப் புரியவில்லை இந்தியர்களின் மொழிகள் அவர்களுக்கு புரியவில்லை. இதைப் புரிந்து கொண்ட பார்பனர்கள் இதுவரை மன்னர்களையும், மக்களையும் மயக்கிய தேவபாஷையாகிய சமஸ்கிருதத்தைக் கீழே போட்டுவிட்டு - மிலேச்ச மொழியாகிய ஆங்கிலம் படித்தார்கள். ஆங்கிலம் தான் எதிர்காலம் என்பதைப் புரிந்து கொண்டது அவர்களின் புத்திசாலித்தனம்.

ஆங்கிலம் அவர்களை பிரிட்டனின் உத்தரவுகளை இந்தியர்களுக்கு புரியவைக்கும் துபாஷிகளாக்கியது.(மொழிபெயர்பாளர்). தளவாய்கள், பிரதானிகள் ராயசங்கள், என்று அரசின் உயர்பதவிகள் அத்தனையும் அவர்களைத் தேடி வந்தன. விதைக்காமளேயே வீளையும் கழனியாகிய பார்ப்பனீயம் விதையும் கிடைத்தால் வீணாக்குமா? நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அரசியலில், சொந்த நாட்டினரான திராவிடர்கள் கொடிபிடித்தார்கள் வந்தேறிகளான அவர்கள் முடிவெடுத்தார்கள்.

வழக்காடும் நீதிமன்றங்கள், நோய் தீர்க்கும் மருத்துவமனைகள், பசிபோக்கும் உணவு விடுதிகள், கல்விச் சாலைகள், செய்தித்தாள்கள், நாடக மேடைகள், இசை, நடனம், ஓவியம் அத்தனையிலும் அவர்கள் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது.

சூத்திரனாக அடிமையாக இரு, படிப்பில் தற்குறியாக இரு. வேலைவாய்ப்புகளில் உடால் உழைப்பு வேலைகளை மட்டும் பார் - என்று 3000 ஆண்டுகளாக குனியக் குனிய குட்டும் பார்ப்பனீயத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த, அயோத்திதாசப் பண்டிதர், இராமலிங்க அடிகள் ஆகியோருக்குப்பின், இனியும் கை கட்டி வாய் பொத்தி அடிபணிய வேண்டாம் என்று ஆங்காங்கே உரிமைக்குரல்கள் எழுந்துகொண்டிருந்த நேரம்.

நூல்     ; திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 8 to 9.

திராவிடம் அறிவோம் - காந்தியார் தென்னாட்டில் சுற்றுப்பயணம்

 1927 ஆம் ஆண்டு காந்தியார் தென்னாட்டில் சுற்றுப்பயணம் செய்கிறார். கொங்கு மண்டலம் சென்ற அவருக்கு அங்கு இருக்கும் சந்திர சேகேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஆசிபெற வேண்டும் என விரும்புகிறார். பாலக்காட்டுக்கு அருகில் உள்ள கிராமத்தில் அருள்பாலிக்கிறார் சங்கராச்சாரியார்.

1927 அக்டோபர் 15 ம் நாள், காந்தியடிகளுக்கு சங்கராச்சாரியார் அருள்பாலித்த அந்த நிகழ்ச்சி பசுமாட்டுக் கொட்டாகையில் நடக்கிறது. பூர்வாசிரமத்தில் விழுப்புரம் சாமிநாத அய்யராக இருந்த சங்கராச்சாரியராக மாறிய அவரது வயது 34.
பாரிஸ்டார் காந்தியடிகளின் வயது 58.
மேல் சாதிக்காரரான அய்யர், கீழ்சாதிக்காரரான வைசியர் காந்தியைப் பார்த்தால் தீட்டாகிவிடுவார், தீட்டுக் கழிக்க குளிக்க வேண்டும், பசுமாட்டுக் கொட்டகையில் பார்த்தால் தீட்டுகிடையாது.
 மகாத்மாவையே பசு மாட்டுக் கொட்டாகை தவிர வேறு எங்கு பார்த்தாலும் தீட்டு என்று வெளிப்படையாக அறிவித்த பார்ப்பனீயம் - சாதாரண மக்களின் நிலை?

"ஊர் அமைப்புகள்" கரு உருவானது முதல் பிரசவித்து, கல்வி பயின்று, வேலைவாய்ப்பு கொடுத்து, சுடுகாட்டில் புதைப்பது வரை ஒவ்வொரு நிலையிலும் மனித சமுதாயத்தின் நலனைக் காப்பது இன்றைய அரசுகளின் கடாமையாக உள்ளது. முற்கால அரசர்களுக்கு அப்படி அல்ல. மூன்று  கடமைகள் மட்டுமே முக்கியமானவை.

திருடர்களிடமிருந்தும் - மிருகங்களிடமிருந்து - அந்நியப் படையெடுப்புகளில் இருந்ததும்  மக்களைக் காப்பதுதான் முக்கால மன்னர்களின் கடமையாக இருந்தது. அக்கால கட்டங்களில் ஊர் அமைப்புகள் எப்படி உருவாக்கப்பட்டன என்பதை கவனிக்க வேண்டும்.

ஊரைச் சுற்றிலும் காடுகள் , கழனிகள், ஆறுகள் எனவே ஊருக்கு வெளியே தாழ்த்தப்பட்ட, ஆதி திராவிடர்கள் வாழும் சேரிகள். மிருகங்கள், திருடர்கள், அந்நியப் படையெடுப்புகள் எதுவாயினும் முதலில் அவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். பாதுகாப்பு வேலிகளும் அவர்களே! அதற்கு உள்ளே குடியானவர்கள், சூத்திரர்கள் வாழும் தெருக்கள். அந்த ஆபத்துக்கள் சேரிகளை மீறி உள்ளே நுழைந்தால் சூத்திர மக்களால் தடுக்கப்படும். அதற்கும் உள்ளே ஊரின் நடுவே சதுர் வேதி மங்கலங்கள் எனப்படும் அக்ரகாரங்கள். இந்த இரண்டு அடுக்கு பாதுகாப்பையும் மீறி ஆபத்து வந்தால் பாதுகாப்பாக தஞ்சமடைய அக்ரகாரம் நடுவில் கோவில் கட்டப்பட்டிருக்கும். அந்தக் கோவிலும் சுவையான குடிநீர் உள்ள, மேடான இடமாகப் பார்த்துகட்டப்பட்டிருக்கும். 21 ம் நூற்றாண்டிலும் இவ்வளவு கொடுமை நிலவுகிறது என்றால் 2500 ஆண்டுகளாக இந்த பார்ப்பனீயம் என்ன பேயாட்டம் போட்டிருக்கும்.

நூல்    ; திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 3 to 6.

திராவிடம் அறிவோம் - வட மொழியை அறவே நீக்குவதென்பது

இன்றைய நிலையை பார்க்கும் போது வட மொழியை அறவே நீக்குவதென்பது தெழுங்கு மொழிக்கு அரிதாகும்; கன்னட மொழிக்கோ மிகவும் அரிது; மலையாள மொழிக்கோ அரிதினுமரிது. இம்மொழிகள் கணக்கு வழக்கு இல்லாமல் வட சொற்களை எடுத்தாண்டு வந்துள்ளமையாலும், அச்சொற்களின் உதவியை நாடுவதே வழக்கமாகக் கொண்டுள்ளமையாலும், தத்தம் சிறப்புப் பண்புகளை இழந்து தனித்து நின்றியங்கும் ஆற்றலையும் இழந்து நிற்கின்றன. ஆனால் திராவிட மொழிகள் அனைத்திலும் மிகவும் திருந்திய பண்பட்ட நிலையிலுல்ல தமிழ் மொழியோ வடசொற்களை அறவே அகற்றித் தனித்தியங்கும் ஆற்றல் வாய்ந்திருப்பதோடன்றி, அவற்றின் உதவியில்லாமல் மிகவும் மேம்பட்டு, வளமுற்று மிளிரும் ஆற்றலும் வாய்ந்ததாகும்.

தமிழிலோ, எவ்வளவுக்கெவ்வளவு தமிழ் நூல்கள் வட மொழியின் உதவியை நாடாமல் தனித்தியங்குகின்றனவோஅவ்வளவுக்கவ்ளவு சிறப்புடன் போற்றப்படும்.

இன்றும் கிராமப் புறங்களில் வாழ்வோரும், நகர் புறங்களில் வாழும் வட மொழிச் சொற்களைக் கையாளாமல் ஒதுக்குவதையும்; அப்படியே அவசியம் கருதிக் கையாள நேரிட்டாலும் "ஜிலேப்பி என்பதை "சிலேப்பி என்றும், ஸ்டேசன் என்பதை டேசன் என்றும் உச்சரிப்பதையும் காணலாம். இயல்பு காரணம்மாக தமிழ் மக்களுக்கு
வடமொழி உச்சரிப்பு வாயில் நுலையாமிலிருப்தை காட்டுகிறார்.

தமிழ் தவிர்த்து ஏனைய திராவிட மொழிகளில் வடமொழிக் கலப்பு மிகுந்து காணப்படுகிறதென்றால், "அவை புதுமை கருதி எடுத்தாளப்பட்டன அல்ல, கிட்டத்தட்ட இன்றியமையானததாகவே கருதிக் கையாளப்பட்டன. இந்த நிலைமை வந்ததற்க்கு காரணம் அம்மொழியின் இலக்கிய வளர்ச்சி முதன்மையாகப் பார்ப்பனர்கள் கையிலேயே ஒப்படைக்கப்பட்டு வந்துள்ளமையேயாம், என்று கூறுகிறார்,

நூல்     ; திராவிடம் அறிவோம்.
பக்கம் ; 172 to 177.

திராவிடம் அறிவோம் - இராபர்ட் கால்டுவெல்

 அயர்லாந்தில் பிறந்த இராபர்ட் கால்டுவெல் வேறு எந்த ஐரோப்பியரையும் விட திராவிட மறுமலர்ச்சிக்கு ஆதரவாக ஆய்வின் மூலம் உருவாக்கி தந்தார். 1838 -ல் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் நடத்தி, தமிழ் மொழியில் மூல்கி, நமது மொழியிலும், வரலாற்றிலும் நிபுணர் என்கிற பெயரைப் பத்தாண்டுகளில் பெற்றார்.

1856 -ல் வெளியிட்ட"திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" எனும் அவரது ஒப்பற்ற ஆய்வு நூல் மொழியியலக்குத் தரப்பட்ட உயர்வு.
அது வெறும் மொழி இயல் ஆராய்ச்சி நூல் மட்டுமல்ல! தமிழ் - திராவிட இன வரலாறும் அதில் கூறப்பட்டிருந்தது!

திராவிட மொழிகளின் தொன்மை ஆரியர் வருகை பல நூற்றாண்டுகளுக்கு  முன் இருக்கலாம். உதாரணமாக கரூர் என்ற சேரன் தலைநகர் அப்படியே கரூர் என்று கிரேக்க அசிரிய வழக்கிலும் காண்பதால் இதிலுள்ள தமிழ் ஒழிகள் கடந்த மூவாயிரம் ஆண்டுகளிலும் இன்று ஒலிக்கப்படுவதைப் போன்றே ஒலிக்கப்பட்டன.

திராவிட மொழிகள் வட மொழியிலிருந்து பிறந்தன என்று சொன்ன வட மொழி பண்டிதற்கள், அதை அப்படியே ஏற்றுக்கொண்ட ஏ.எச்.வில்சன் போன்ற மேலை நாட்டு அறிஞர்களின் கொள்கையும் குருட்டு கொள்கையே என்றார்.

தங்களுக்குத் தெரிந்த ஒவ்வொன்றும் பார்ப்பனர்களிடமிருந்து பெறப்பட்டதாகத்தான் இருக்க வேண்டுமென்று வடமொழிப் பண்டிதர்கள் இயல்பாகவே நம்பி வந்தார்கள், அதணாலே வட இந்திய மொழி மரபுகளிலிருந்து எத்தணையோ மாறுபட்டிருப்பினும், வடமொழியினத்திலிருந்து பெறப்பட்டவையே என்று சாதித்து வந்தனர்.
இதனைப் பண்டைய ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் நம்பினர். அவார்கள் ஆராய்ந்த திராவிட மொழிகள் ஒவ்வொன்றிலும் வடமொழிச் சொற்கள் தற்சமமாகவும் கலந்திருக்கக் கண்டனர். ஆனால் அம்மொழிகளில் வடமொழிக் கலப்பில்லாத சொற்களும், மரபு மொழிகளும் பல இருந்தன.இவ்வாறு ஆய்வினை மேற்கொண்ட கால்டுவெல் தமிழ் வடமொழியின் தயவின்றியேதயவின்றியே தனித்தியங்கும் தன்மை பெற்றது என்பதையும் எடுத்துக்காட்டினார்.

நூல்    ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 172 to 174.

திராவிடம் அறிவோம் - திராவிட கலாச்சார மேம்பாட்டை எடுத்து வைக்க ஐரோப்பியர்கள் உதவினர்


இந்தியாவின் வரலாற்றையும், கலாச்சாரப் பெருமையையும் கண்டறிய எப்படி ஐரோப்பியர் உதவினரோ, அதுபோலவே திராவிட கலாச்சார மேம்பாட்டை எடுத்து வைக்கவும் ஐரோப்பியர்கள் பெரிதும் உதவினர்.

குறிப்பாக கிறித்துவ பாதிரியார்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழ்நாடு வந்தபோது, அவரவர்கள் தாய்மொழியில் மதத்தை போதிக்க வேண்டும் - என்கிற குறிக்கோள் காரணமாகத் தமிழ் மொழியிலும். கலாச்சாரத்திலும் காட்டிய ஆர்வம் கலாச்சார மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது.

தமிழில் அதிகம் ஈடுபாடு காட்டிய முதல் பாதிரியார் இராபர்ட்  - டி- நோபிலி. இவர் மதப்பிரச்சாரத்திற்க்காக தமிழில் உரைநடை எழுதினார்,.

வீரமாமுனிவர் என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்ட, மதப்பணியோடு, தமிழ்ப் பணியும் ஆற்றிய இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெஸ்கி ஆவார். 1711 ஆண்டூ மே - ல் மதுரை வந்தார், இங்கு பழனி சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழிலக்கணம் இலக்கியம் கற்றார்.

தான் இயற்றிய நூல்களில் வடமொழியை இவர் அதிகம் கலக்கவில்லை, அக்காலத்தில் எ-ஏ, கெ-கே, கொ-கோ, என்று எழுதம் வாழக்கமில்லை, எ, ஓ - என்னும் உயிர் எழுத்துக்களையும், இவ்வுயிர் எழுத்துக்கள் ஏறிய மெய்யெழுத்துக்களையும் எழுதி அவற்றின் மேல் புள்ளி வைத்தால் குறிலாகவும், புள்ளி வைக்காவிட்டால் நெடிலாகவும் கொள்வது வழக்கமாக இருந்தது, இவர் தான் அதை மாற்றி எ-ஏ, கெ-கே, கொ -கோ, என்று எழுதும் மரபைப் புகுத்தி , தண்டமிழ் மொழிக்கு இதுவரை யாரும் செய்யாத பெருந்தொண்டு செய்தார்,  தமிழ் அகராதிகளுக்கெல்லாம் முதல் நூலாக விளங்கும் சதுரகராதி" இயற்றித் தமிழகராதியின் தந்தை என்ற அழியா புகழ் பெற்றார்.

திருக்குறளின், அறத்துப்பாளையும், பொருட்பாளையும், லத்தீனில் மொழிபெயர்த்து மேலைநாட்டுக்கு வழங்கினார்.
ஐந்திலக்கணங்களையும் கூறும் "தொன்னூல்", தமிழ்ப் பேச்சு மொழியைப் பற்றிய கொடுந்தமிழ் இலக்கணம் ஆகியவை இவர் இயற்றிய இலக்கண நூல்கள். இவர் உருவாக்கிய அடிப்படைதான் பிற்காலத்தில் சான்றோர்கள் தமிழ் மொழியிலும், கலாச்சாரத்திலும் ஆய்வு நடத்திடப் பேருதவியாக இருந்தது.

நூல்      ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம்   ; 171 to 172.

திராவிடம் அறிவோம் - அயர்லாந் அம்மையார் மூட்டிவிட்ட தீ

"நீதிக்கட்சி தோன்றுவதற்குத் தூண்டுகோலாக இருந்தது அன்னி பெசன்ட் துவக்கிய "ஹோம் ரூல்" இயக்கம்தான்"

அன்னி பெசன்ட் அம்மையார் விடுதலையாகி சென்னையில் வந்து  இறங்கிய போது அவருக்கு மகத்தான வரவேற்ப்பு அளிக்கப்பட்டது இரு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட இரதத்தில் அவர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார் . கோயில் குடை ஒன்றை "ஹோம் ரூல்" பேட்ஜ் அணிந்த இரு மாணவர்கள் பெசன்ட்டிற்கு உயரே பிடித்து வந்தார்கள்  ஊர்வலத்திற்கு முன்பு பல பஜனைக் குழுவினர் வேத பாராயணம் செய்தவாறு சென்றனர். பின்னால் பல வண்டிகள் தொடர்ந்தன.. சுப்ரமணி அய்யர் ஊர்வலத்தில் கலந்துகொண்டார். எதிரில் அய்யங்கார் பிராமணர்களின் ஒரு பெரிய கூட்டம் வேத பாடல்களைப் பாடி எதிரில் அழைத்தது. இந்நிகழ்வு அம்மையாரிடத்திலும், அவர் துவங்கிய இயக்கத்தின் திட்டங்களிலும் பிராமணர் காட்டிய அபரிமிதமான ஈடுபாட்டிற்குச் சான்றாக இருக்கும்.

24-21916- நாள் நியூ இந்தியா ஏட்டில் வாசகர் எழுதிய கடிதத்திலிருந்து,  மதுரையில் " ராவ் பகதூர்" பட்டம் பெற்றமைக்காக ஒரு பிரமுகருக்கு பாராட்டுத் தெரிவிக்கவும், விருந்தும் நடந்தது. அந்த விழாவிற்க்கு பிராமணரல்லாதாரும் அழைக்கப்பட்டிருந்தனர்.பிராமணர் உணவருந்தும் இடத்திலிருந்து 100 கஜம் தள்ளி பார்ப்பனரல்லாதாருக்கு உணவு பந்தி போடாப்பட்டிருந்தது. மக்கள் தொகையில் அதிகமானவர்களான பிராமணரல்லாதார் மீது பிராமணர்கள் அனுதாபத்தையும் தோழமையும் காட்டாமல் இவ்வாறு வெறுப்பைக் காட்டினால், ஹோம் ரூல் என்றும், சுயாட்சி என்றும் கோரிக்கை எழுப்பும் பிராமணர்கள், பிராமணரல்லாத சகோதரர்களுக்கு ஆதரவாக எப்படி சட்டம் இயற்றுவார்கள் என்று வாசகர் நியூ இந்தியா ஏட்டில் எழுதினார்.

ஏற்கெனவே அரசியலில் ஆதிக்கம் பெற்றிருந்த பார்ப்பனர்கள், அன்னிபெசன்ட் இயக்கத்தில் ஓரணியில் சேர்ந்ததால், பிராமணரல்லாதார் இனியும் எதிரணி அமைக்காவிடில் அரசியல் சீர்திருத்தங்களில் உரிய பங்கு கிடைக்காது  என்று தூண்டியது.
அன்னிபெசன்ட் தெரிந்தோ தெரியாமலோ காரணமாக இருந்த உணர்வுகளின் எதிரொலி தான் ஒன்று திரண்ட சக்திகளுக்கு விடுக்கப்பட்ட அறைகூவல் தான் - தென்னிந்திய நல உரிமைச் சங்கம்.

நூல்     ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 157 to 167.

திராவிடம் அறிவோம் - பின்தங்கிய சமூகத்தினருக்குச் சேர வேண்டிய நியாயமான உரிமைகளை பெற

பின்தங்கிய சமூகத்தினருக்குச் சேர வேண்டிய நியாயமான உரிமைகளை பெருவற்கு அது அப்போதைய அரசைப் பயன்படுத்திக் நூல் கொண்டது.

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் பின்தங்கிய வகுப்பினரின் சமுதாய விடுதலை இயக்கமாகையால் வெள்ளையர் செய்கிற எந்தச் சீர்திருத்தம் காரணமாகவும் முன்பே முன்னணியில் - தயார் நிலையில்  - இருந்த பிராமணர்கள் கையில் அனுகூலங்கள் அனைத்தும் கிடைத்தது.
மேலும், தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களும், அதில் அப்போது பங்கு பெற்றவர்களும் பழுத்த மிதவாதிகள், படிப்படியான அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட அணுகுமுறையில்தான் "சுயராஜ்யம்" கிடைக்கவேண்டும் என்பதிலே திடாமான நம்பிக்கை கொண்டவர்கள்.

மிதவாதிகளில் ஒருவரான சீனிவாச சாஸ்திரி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத் தூதுவரானார். தேஜ் பகதூர் சாப்ரு 1923 - ல் லண்டனில் நடைபெற்ற மாநாட்டில் பேசும்போது "என்னுடைய நாடுதான் (பிரிட்டிஷ் ) சாம்ராஜ்யத்தை ஒரு சாம்ராஜ்யமாக உருவாக்கிறது என்பதை நான் பெருமையோடு கூற முடியும்" என்று சொன்னார்.

"அரசியல் சட்டத்திற்குட்பட்ட முறைகளின்பால் நாடு வெகுண்டிருந்த நேரத்தில் நீதிக்கட்சி ஜனநாயக, அரசியல் முறைகளைப் பின்பற்றியது. கடுமையான சமுதாயப் பாகுபாடுகளால் இடர்ப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதையும், அதணால் ஏற்பட்ட பொருளாதார வாய்ப்புகளில் இழைக்கப்பட்ட அநீதியைப் போக்குவதும் நீதிக்கட்சியின் லட்சியம்.

நூல்     ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 153 to 155.

திராவிடம் அறிவோம் - நீதிக்கட்சியின் மீது சாட்டப்படுகிற இன்னொரு குற்றச்சாட்டு

நீதிக்கட்சியின் மீது சாட்டப்படுகிற இன்னொரு குற்றச்சாட்டு, அக்கட்சி அன்னிய ஆட்சியை ஆதரித்ததாகக் கூறப்படுவதாகும். உண்மையில் ஒரு காலகட்டத்தில் காங்கிரஸின் லட்சியமும், நீதிக்கட்சியின் லட்சியமும் ஒன்றாகவே இருந்திருக்கின்றன.

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் சட்டதிட்டங்களின் 2 வது பிரிவு கீழ்கண்டவாறு கூறுகிறது.

"அமைதியான, சட்டபூர்வமான, அரசியல் அமைப்பு வழிகள் அனைத்தின் மூலமும், இயன்ற வரையில் கூடிய சீக்கிரம், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இந்தியாவிற்குச் சுயராஜ்யம் கிடைக்கப் பாடுபடுகிறது."

இப்போது அன்றைய காங்கிரஸ் கட்சியின்  சட்டதிட்டங்களை பாருங்கள், அதன் முதல் பிரிவு கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

"இந்திய தேசிய காங்கிரஸ்ன் நோக்கம் அமைதியான, சட்டபூர்வமான வழிகளில் இந்திய மக்கள் சுயராஜ்ஜியத்தைப் பெறுவது," -

அதணால்தான் 1929 - ல் நெல்லூரில் நடைபெற்ற பிராமணரல்லாதாரின் 12 - வது மாநாட்டிற்குத் தலைமை வகித்த பி.முனுசாமி நாயுடு, "நமது குறிக்கோளுக்கும் இந்திய தேசிய காங்கிரஸ்சின் குறிக்கோளுக்கும்  அதிக வித்தியாசமில்லை" என்று குறிப்பிட்டார்,

சுயராஜ்யம் என்றால் டொமினியன் அந்தஸ்தா"? அல்லது பிரிட்டன் தொடர்பை அரவே துண்டித்துக் கொண்ட விடுதலையா?
அதுபற்றிய தெளிவு அப்போதில்லை. "

எங்கள் தலைவர்களில் பெரும்பாலோர் சுயராஜ்யம் என்பதற்கு விடுதலைக்கு குறைவான ஒன்றாகவே பொருள் கொண்டனர் என்பது தெளிவாகத் தெரிந்தது. காந்திஜி இந்த விஷயத்தில் மகிழ்ச்சியோடு தெளிவற்றவராக இருந்தார். அதுகுறித்துத் தெளிவான சிந்தனையையும் அவர் தூண்டவில்லை" காந்தியார் வருகைக்குப்பிறகும் இந்த தெளிவற்ற நிலை நீடித்ததைத்தான் பண்டி நேரு சுட்டிக்காட்டுகிறார்.

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் காங்கிரஸ்சைப் போல ஒரு விடுதலை இயக்கமல்ல. இருந்தாலும் சுயராஜ்ஜியத்தை அது நோக்கமாகக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் கொள்கைகளான நீதி, அனைவருக்கும் சம வாய்ப்பு - என்கிற அடிப்படையில் அரசு நடத்தப்பட வேண்டும் - என்று அக்கட்சி வற்புறுத்தியது, இக்கருத்துத்தான் " பிராமணரல்லாதாரின் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது,

நூல்     ; திராவிட இயக்க வரலாறு,
பக்கம் ; 151 to 153.

திராவிடம் அறிவோம் - நீதிக்கட்சியில் ஜமீன்தாரர்களும், மிட்டா மிராசுகளும் அதிகம் இடம்பெற்றிருந்த காரணங்கள்

 நீதிக்கட்சியில் ஜமீன்தாரர்களும், மிட்டா மிராசுகளும் அதிகம் இடம்பெற்றிருந்தார்கள் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள், முதலாவதாக அன்று அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தவர்களே , பண்டித நேரு குறிப்பிட்டதுபோல அத்தகைய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான்!

இரண்டாவதாக இன்று போல் அன்று வயது வந்த ஆண், பெண் - இருபாலருக்கும் வாக்குரிமை கிடையாது குறிப்பிட்ட அளவிற்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள் மட்டுமே வாக்குரிமை பெற்றிருந்தார்கள்.
துவக்க காலத்தில் காங்கிரஸ் தொடர்ந்து எழுப்பி வந்த கோரிக்கைகளில் ஒன்று நிலப் பிரபுக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு நிரந்தரமாக நிலத்தை "செட்டில்மென்ட்" செய்ய வேண்டும் என்பதுதான் . உழுபவர்களைப்பற்றி எந்தக் கோரிக்கையும் அப்போது எழுப்பப்படவில்லை.

இந்தத் தகவலைப் பண்டித நேருவே குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரசைப் பாமர மக்களிடத்திலே கொண்டுவருவதற்கு ஒரு காந்தியார் தேவைப்பட்டார். அதுபோலவே திராவிட இயக்கத்தைப் பாமர மக்களிடத்திலே கொண்டுவருவதற்கு இங்கு கிடைத்த காந்தியார் தான் தந்தை பெரியார். அதுவரையில் அதன் தன்மை உயர் வர்க்கத்தையும், படித்த மத்திய தர வர்க்கத்தையுமே பிரதிபலித்தது.

இதை அறிஞர் அண்ணா அவர்களே 11-8-1957 -ல் மதுரையில் நடத்திய சொற்பொழிவில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

"எப்படி சித்தார்த்தர்அரண்மனையிலே பிறந்தாலும் அவர் புத்தமார்க்கத்தை ஏற்படுத்துவதற்க்கு முன்னால் அரச மரத்தடிக்கு வந்தாரோ, அதைப் போல அரண்மனையிலே இருந்த ஜஸ்டிஸ் கட்சியை பெரியார் ராமசாமி மிகப் பாடுபட்டு - எங்களையெல்லாம் துணைக்கு வைத்துக்கொண்டு - ஆலமரத்தடிக்குக் கொண்டு வந்தார்.
"ஆலமரத்தடிக்குக் கொண்டுவந்தபிறகு ஜஸ்டிஸ் இயக்கம் இன்றைய தினம் நீண்ட நாளைக்கு  ஆலமரத்தடடியிலே இருந்து கொண்டால் போதுமென்று எண்ணிவிட்டார்."

அரண்மனை!
ஆலமரம்!
வெட்டவெளி!
இவை திராவிட இயக்கம் கடந்துவந்த மூன்று இயக்கத்து மூலவர்களையும் குறிக்கின்றன.

நூல்    ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 148 to 150.

திராவிடம் அறிவோம் - "மிதவாதி" என்பவர் எப்படி இருப்பார் ?

 "மிதவாதி" என்பவர் எப்படி இருப்பார் ? அவரது தன்மைகள் என்ன?
பண்டித நேரு தனது தந்தையையே ஒரு உதாரணமாகக் காட்டுகிறார்,
1907 - லும், 1908 -லும், அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகும் பண்டித மோதிலால் நேரு " மிதவாதிகளுக்குள் ஒரு மிதவாதியாக இருந்தார்.

திலகரிடம் அவருக்கு அபிமானம் இருந்தபோதும் அவர் தீவிரவாதிகளைக் கட்டோடு வெறுத்தார்.
"இதற்கு என்ன காரணம்? சட்டத்திலும், அரசியல் சட்டமுறைகளிலும் பயிற்சி பெற்றிருந்தமையால் அவர் அரசியலை ஒரு வழக்கறிஞர் என்கிற முறையிலும் , அரசியல் சட்டக் கோணத்திலுமே  அணுகினார், கடுமையான, தீவிரமான வார்த்தைகளைப் போலவே அதற்கேற்ற செயல்முறையையும் பின்தொடராவிட்டால் அதனால் யாதொரு பலனும் விளையாது என்று அவரது தெளிந்த சிந்தனைக்குட் பட்டது. சுதேசி, (அன்னியத் துணி) பகிஷ்கார இயக்கங்களால் பெரும் நன்மைகள் விளைவதாக அவருக்குத் தென்படவில்லை. மேலும் இந்த இயக்கங்களுக்கு மதச்சார்புடைய தேசியம் பின்னணியாக இருந்தது அவரது சுபாவத்திற்கு முரணாதாகும். அவரது சுபாவத்திற்கு முரணானதாகும், அவர் தனது பாதையை கடந்த காலத்திற்குத் திருப்பி, புராதன இந்தியாவை உருவாக்க விரும்பவில்லை, அவை குறித்து அவருக்கு எந்தவித அனுதாபமோ, ஈடுபாடோ கிடையாது.

சாதி முறை போன்ற சம்பிரதாயங்களைப் பிற்போக்கானதென்று அவர் முற்றிலும் வெறுத்தார். அவர் மேற்கத்திய நாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டார். மேலைநாட்டு முன்னேற்றம் அவரை வெகுவாகக் கவர்ந்தது. அத்தகைய முன்னேற்றம் இங்கு இங்கிலாந்தின் தொடர்புடன் தான் உருவாக முடியுமென்று அவர் நம்பினார்.

தென்னாப்பிரிக்காவில் வெற்றி கண்ட சத்தியாக்கிரக முறையை காந்தியார் இந்தியாவில் துவக்க முனைந்தபோது மோதிலால் அதை எப்படி விரும்பவில்லை என்பதையும், பலர் சிறைக்குச் செல்வதன் மூலம் என்ன நன்மை விளைந்துவிட முடியும்? அதனால் அரசு எப்படி வளைந்து கொடுக்கும்? - என்றெல்லாம் கருதியதாகவும் பண்டித நேரு தனது சுயசரிதத்தில் விவரித்துள்ளார்,

நூல்     ; திராவிட இயக்க வரலாறு,
பக்கம் ; 146 to 148.

திராவிடம் அறிவோம் - காந்தியாரின் ராமராஜ்யப் பேச்சு

காந்தியாரின் ராமராஜ்யப் பேச்சு முஸ்லீம்களிடையே எதிர்ப்பையும், முற்போக்குவாதிகளிடையே அருவருப்பையும் சம்பாதித்தது.

"ராமராஜ்யம் என்கின்ற பொற்காலம் திரும்பி வரவேண்டும்" என்பன போன்ற சில சொற்றொடர்கள் எனக்கு அலுப்பை ஏற்படுத்தின. ஆனால் அதில் குறுக்கிடுவதற்க்கு நான் சக்தியற்றவனாக இருந்தேன் ,.. அடிக்கடி நாங்கள் எக்களுக்குள்ளாகவே அவரது விசித்ர, விநோதங்களைப் பற்றி விவாதித்துவிட்டு, பாதி நகைச்சுவையோடு, சுயராஜ்யம் வந்த பிறகு இந்த விசித்திரங்களை ஊக்குவிக்கக் கூடாது என்று பேசுவோம், இவ்வாறு பண்டித நேரு தனது "சுயசரிதையில்" குறிப்பிடுகிறார்.

"மிதவாதிகள் என்றும், தீவிரவாதிகள் என்றும் சொல்லப்பட்டவர்கள் ஏறத்தாழ யூர்ஷுவா வர்கத்தைச் சேர்ந்தவர்களே மிதவாதிகள் அல்லது தீவிரவாதிகளுக்கிடையே குறிக்கோளிலோ, இலட்சியத்திலோ பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. இரு சாராரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குட்பட்ட சுயாட்சி பற்றியே பேசினார்கள் . தற்போதைக்கு அதில் கொஞ்சம் கிடைத்தாலே ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தார்கள். ஆனால் தீவிரவாதிகள் மிதவாதிகளைவிடச் சற்று அதிகம் எதிர்பார்த்தார்கள் கடுமையான சொற்களைப் பயன்படுத்தினார்கள், எண்ணிக்கையில் சிறிதளவே இருந்த புரட்சிவாதிகள் முழு அளவு விடுதலையை விரும்பினார்கள். ஆனால் காங்கிரஸ் தலைவர்களிடையே அவர்களுக்குச் செல்வாக்கு கிடையாது.

மிதவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்குமுள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், மிதவாதிகள் வசதி படைத்தவர்களையும், அவர்களைச் சார்ந்தவர்களையும் கொண்ட கட்சியினர். தீவிரவாதிகளிடையே வசதியற்றவர்களும் பலர் இருந்தனர். அது தீவிரம் பேசிய கட்சியாக இருந்தமையால் இளைஞர்களை கவர்ந்தது. கடுமையான பேச்சு ஒன்றே செயலுக்கு சமம் என்று ,கருதினார்கள் ,... ஆனால் மிதவாதிகளும் சரி தீவிரவாதிகளும் சரி, வசதியற்றவர்கள், தொழிலாளிகள், விவசாயிகள் - ஆகியோரோடு எந்தவிதத் தொடர்பும் கிடையாது"

நூல்     ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 144 to 146.

திராவிடம் அறிவோம் - " தேசியம் அன்று மதச்சார்புள்ள தேசியமாக இருந்தது.

 " தேசியம் அன்று மதச்சார்புள்ள தேசியமாக இருந்தது.

(உதா). மராட்டியத்தில் திலகரால் விநாயக சதுர்த்தி விழா பத்துநாள் பெருவிழாவாகப் புதுப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு நாள் விழாவிலும் ஆங்கிலேயருக்கு எதிரான சொற்பொழிவுகள் நடைபெற்றன.

அதுபோலவே வங்கத்தில் தேசியம் காளியையொட்டி வளர்ந்தது. அங்கும் நவராத்திரி பூசை புதுப்பிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வந்தது.

இதுகுறித்து பண்டித நேரு குறிப்பிடுவது.
"1907 - ல் நிலவிய இந்திய தேசியப் புத்துணர்வினைச் சமுதாயக் கோணத்தில் பார்க்கும் போது அது பிற்போக்குத் தன்மை வாய்ந்தது என்றே கூறவேண்டும். தவிர்க்க முடியாத வகையில் இந்தியாவில் எழுந்த தேசியம் இதர கிழக்கு நாடுகளில் தோன்றியது போலவே மதச் சார்புடைய தேசியமாகும்.
இந்த "மதச்சார்பு" பார்ப்பனர்களை வசீகரிக்கவும்,  துவக்க காலத்தில் காங்கிரஸ் அவர்கள் வசமாகவும் ஒரு காரணமாக இருந்தது.
தீவிரவாதிகளும் இந்தத் தன்மையையே பெற்றிருந்தனர்.

1911 - ஆம் ஆண்டு ஜுன் மாதம் 17 ஆம் நாள்  மணியாச்சி ரயில் சந்திப்பில் வாஞ்சிநாதன் (அய்யர்) திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் (Ashe) என்பவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு , ரயில் பெட்டியில் உள்ள கழிவரைக்குச் சென்று தன்னைத்தானே  துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்தாரல்லவா? அப்போது அவரது சட்டைப் பையில் அவர் எழுதி வைத்திருந்தக் கடிதத்தில், "சுயராஜ்ஜியத்தையும், சனாதானத் தர்மத்தையும் நிலைநாட்டுவதற்காக" (to "Restore Swarajya and the Sanatan Dharma") இப்படிச் செய்ததாக எழுதப்பட்டிருந்தது.

ஆங்கிலேயர்களின் வருகையால் தங்கள் பார்ப்பனர்களின் ஆதிக்கம் பாதிக்கப்படுவதாக கருதினர். காங்கிரசும் இந்தியாவும் காந்தியார் வசமான பிறகும்கூட,ஸொ இந்த "மதச்சார்பு" முற்றிலும் மறைந்துவிடவில்லை. காந்தியார் அடிக்கடி ராமராஜ்யம் பற்றி பேசியது நினைவிருக்கலாம்.

நூல்     ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 141 to 143.

திராவிடம் அறிவோம் - பண்டித நேரு அவர்கள் அன்றைய நிலையை கீழ்க்கண்ட வாறு விளக்குகிறார்

 1912 -ம் ஆண்டின் இறுதியில் அரசியல் ரீதியாக இந்தியா மிகவும் மந்தமாக இருந்தது. திலகர் சிறையில் இருந்தார். தீவிரவாதிகள் சரியான தலைமை இல்லாமல் செயல்படாமல் இருந்தனர். பிரிவினை நீக்கப்பட்டுவிட்டதால் வங்கம் அமைதியாக இருந்தது. மிண்டோ - மார்லி திட்டப்படி உண்டான சட்டசபைகளை மிதவாதிகள் ஒன்று பட்டு ஆதரித்தனர். ஆண்டுதோறும் கூடி, மந்தமான தீர்மானங்களை நிறைவேற்றி, யாருடைய கவனத்தையும் கவராத மிதவாதிகள் கூட்டமாகக் காங்கிரஸ் இருந்தது.

பண்டித நேரு அவர்கள் அன்றைய நிலையை கீழ்க்கண்ட வாறு விளக்குகிறார்.

என்னுடைய அரசியல் நான் சார்ந்திருந்த பூர்ஷுவா வார்க்கத்தைச் சேர்ந்ததாகவே இருந்தது. உண்மையில் வெளிப்படையான அரசியல் அப்போது பார்ப்பனியத்தை பற்றியதாகவே இருந்தது, மிதவாதிகளும், தீவிரவாதிகளும் அவர்களுக்கே பிரதிநிதித்துவம் வகித்தார்கள். வெவ்வேறு தோரணையில் அவர்களது நலத்துக்கே உழைத்தனர். அவர்கள் அனைவரும் பிரிடிஷ் ஆட்சியால் செலுமை பெற்றவர்கள். தங்கள் அனுபவைத்து வரும் நலத்திற்கும் ஆபத்து ஏற்படகூடிய எந்தவித திடீர் மாற்றங்களையும் அவர்கள் விரும்பவில்லை.

அவர்கள் ஆங்கில அரசுடனும் நிலபிரபுத்துவ வர்கத்தோடும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்கள். தீவிரவாதிகளும் அடித்தட்டுகளில் இருக்கும் மத்திய தர வர்க்கத்திற்க்குப் பிரதிநிதித்துவம் வகித்தார்கள். ஆலைத் தொழிலாளர்கள்  யுத்தத்தினால் அவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. சில இடங்களில் உள்ளூர்களில் அமைப்பு ரீதியாகச் செயல்பட்டார்கள். அவர்களுக்குச் செல்வாக்கே இல்லை. விவசாயிகள் குருடர்களாகவும், வறுமையால் தாக்கப்பட்டு அல்லலுறும் வெறும் மக்கள் திரளாகவும், விதியை நொந்து வாழ்பவர்களாகவும், அவர்களோடு தொடார்பு கொண்ட அரசாங்கம், நிலப்பிரபுக்கள், கடன் கொடுப்போர், சாதாரண அதிகாரிகள், போலீஸ், வழக்கறிஞர்கள், பூசாரிகள் ஆகியோரல் சுரண்டப்படுகிறவர்களாகவும் வாழ்ந்தார்கள்.

நூல்    ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 140 to 142.

திராவிடம் அறிவோம் - இந்திய அரசியலில் காந்தியாரின் வருகைக்கு முன்பு வன்முறை

  " இந்திய அரசியலில் காந்தியாரின் வருகைக்கு முன்பு வன்முறையில் நம்பிக்கை கொண்ட புரட்சிவாதிகள் தனியாகச் செயல்பட்டனர்.

இடதுசாரி அல்லது தீவிரவாதிகள் குழுவிற்குத் திலகர் தலைமை வகித்தார். இவர்கள் அரசுடன் எந்தவிதத்திலும் சமரசம் செய்து கொள்ளாதவர்கள்.

வலதுசாரிகள் என்று அழைக்கப்பட்ட மிதவாதிகள் (Moderates) இவர்கள் படிப்படியான பாராளுமன்ற ஜனநாயக முறையில் செய்யப்படும் மாற்றங்களில் முழுக்க முழுக்க நம்பிக்கை வைத்தவர்கள் கோகலே தலைவர்.

திலகரும், கோகலேயும் பம்பாயைச் சேர்ந்தவர்கள். அவர்களிருவருக்கும் உள்ள கருத்துவேருபாடு 1897 ஆம் ஆண்டு பம்பாயில் "பிளேக்" நோய் பரவியபோது நன்கு வெளிப்பட்டது அப்போது திலகர் நவீன தடுப்புமுறைகளுக்குப் பதிலாக, பழைய சம்பிரதாய முறைகளை வலியுறுத்தினார். சிவாஜி அப்சல்கானைக் கொன்றது தார்மீகச் சட்டத்திற்கு அப்பார்பட்டதென்று கூறி அத்தகைய "வன்முறை" யைப் புகழ்ந்தார். இதன் காரணமாக ராஜத்துவேஷாத்தைப் பரப்புவதாகச் சிறையிலடைக்கப்பட்டார். கோகலே, நீதிபதி ரனடேயின் சீடர், நாடாளுமன்ற நடைமுறையில் நம்பிக்கை வைத்தவர், மத்திய சட்டசபையின் உறுப்பினராகி, அப்போது இந்தியாவின் தலைநகராக இருந்த கல்கத்தாவில் ஆண்டுதோறும் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் மீது நிகழ்த்தும் சொற்பொழிவும், ஆண்டுதோறும் காங்கிரஸ் மாநாட்டில் அதன் தலைவர் நிகழ்த்தும் சொற்பொழிவுகள்  அன்றைய அரசியலில் மகத்தான நிகழ்ச்சிகளாக இருந்தன.

1907 - ல் நடைபெற்ற சூரத் காங்ரஸ்சில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் மோதல் ஏற்பட்டு கூட்டம் சலசலப்பில் முடிவுற்றது. இருந்தாலும், காங்கிரஸ் மிதவாதிகளின் வசமாயிற்று. அதற்கடுத்த ஆண்டு வன்முறையைத் தூண்டியதாகத் குற்றம் சாட்டப்பட்டு திலகர் ஆறாண்டுக்காலம் தண்டிக்கப்பட்டு சிறைக்கனுப்பப்பட்டார். அதிலிருந்து முதல் உலக யுத்தம் துவக்கம் வரை காங்கிரசில் மிதவாதிகளின் கையே மேலோங்கியிருந்தது.

நூல்    ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 139 to 140.

திராவிடம் அறிவோம் - காந்தியாரின் வருகைக்கு முன்பு இருந்த இந்திய அரசியல் நிலை

 ஒருவிதத்தில் இந்தியாவின் தேசபக்தி எழுச்சிக்கும், காங்கிரஸ் வளர்ச்சிக்கும் காரணம்மாக இருந்தவர் வைசிராய் கர்சன் என்றே கூறலாம். அவர் வங்க மாகாணத்தை இரண்டாகப் பிரித்த செயல்முறை அதுவரையில்லாத ஒரு புது எழுச்சியைத் தோற்றுவித்தது. வங்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டங்களும், அந்நியத் துணி எரிப்பும், சுதேசி இயக்கமும் தோன்றிய பின்னணியில் வன்முறை தலைவிரித்தாடியது.

"கர்சன் பிரபு தனது நடவடிக்கைகளால் தேசியவாதிகள் கூட்டத்தை ஒரு துடிப்புள்ள அரசியல் கட்சியாக உறுவாக்கினார். 1905 - ஆம் ஆண்டிற்குள் காங்கிரஸ் மத்தியதர வர்க்கம் முழுவதையும் கைப்பற்றி இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக உருவெடுத்தது. ( வங்க மாகாண பிரிவினையின்போது தவிர) காங்கிரஸ் பாமர மக்களிடையே செல்வாக்குப் பெறவில்லை. அது ஒரு விளையாட்டுப் பொருளாகவும், யதார்த்த நிலைக்கு ஒவ்வாததாகவும், தத்துவார்த்த ரீதியாகவுமே இருந்தது.

டாக்டர் அம்பேத்கார் ரத்தினச் சுருக்கமாக அன்றைய நிலையை 1940 - ல் தான் எழுதிய நூலில் வர்ணிக்கிறார்.
திரு. காந்தி இந்திய அரசியலில் நுழைவதற்க்கு முன்பு இங்கே அரசியல் மேடையில் காங்கிரஸ், மிதவாதிகள் (Liberala). வங்கத்து வன்முறையாளர் (terrorists  of Bengal) ஆகிய மூன்று கட்சிகள் தாம் இருந்தன. காங்கிரஸ்சையும், மிதவாதிகளையும் உண்மையில் ஒரே கட்சி என்று  தான் சொல்லவேண்டும் . இன்று போல் அன்று பிரித்து வைக்கும் பேதங்கள் இல்லை, எனவே அப்போது காங்கிரஸ் வன்முறையாளர்கள் என  இரண்டே கட்சிதான் என்றார். இந்த இரண்டிலும் சேர்வதற்காண நிபந்தனைகள் மிகவும் கடுமையானவை. மிதவாதிகள் கட்சியில் சேர்வதற்கு சாதாரணக் கல்வி மட்டும் இருந்தால் போதாது. மிக உயர்ந்த கல்வி அறிவு வேண்டும் கல்வியில் உயர் நிலையை காட்டவில்லை என்றால் மிதவாதிகள் கட்சியில் யாரும்  சேரவேமுடியாது.
படிக்காத மக்கள் அரசியல் அதிகாரத்தில் பங்கு பெருவது தடுக்கப்பட்டது.

வான்முறையாளர்கள் நினைத்து பார்க்கவே முடியாத கடுமையான நிபந்தனைகள் வைத்திருந்தனர். வெறும் வாயால் அர்பணிப்பது போதாது . தேவைபடும்போது உயிரை காவுகொடுக்கவேண்டும். அத்தகையோர்தாம் உறுப்பினர் ஆகலாம். ஏமாற்றுக்காரர்கள் உறுப்பினராக முடியாது .

சத்தியாக்கிரகப் போராட்டத்திற்க்கு கல்வி தேவையில்லை. உயிர் தியாகமும் செய்யவேண்டிய அவசியமில்லை,  தேசபக்கதர் எனப் பெயர் வாங்க நினைக்கும் பெரும்பாண்மையான மக்களுக்கு காந்தியாரின் சத்தியாக்கிரகம் எளிமையான வழியாயிற்று.  இந்த இடைப்பட்ட வழிதான் மிதவாதிகள், வன்முறையாளர்கள் கட்சியைவிட காங்கிரஸ் கட்சியை மிகவும் பிரபலமாக்கியது.

காந்தியாரின் வருகைக்கு முன்பு இருந்த இந்திய அரசியல் நிலை இதுதான்.

நூல்    ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 136 138.

திராவிடம் அறிவோம் - காங்கிசை நீதிக்கட்சியோடு ஒப்பிட தெரிந்து கொள்ள வேண்டியவை

 1886 ஆம் ஆண்டுகளில் கல்கத்தாவில் இரண்டாவது காங்கிரஸ் மகாசபை நடந்தபோது அச்சபை அங்கத்தினர்களை அரசாங்க மாளிகையில் நடந்த வனபோஜனத்துக்கு (இயற்கை சார்ந்த உணவுகள்  பரிமாறப்பட்டது.) லார்டு டப்ரின் அழைத்தார். 1887 ல் காங்கிரஸ் சென்னையில்  கூடியபோதும் சென்னை கவர்னர் இவ்வாறே அவர்களுக்கு மரியாதை செய்தார். (பக்கம் 169)

இத்தகைய மரியாதைகள் 1914 ம் ஆண்டில் மீண்டும் தொடங்கப்பட்டன, இதே ஆண்டில் சென்னையில் கூடிய காங்கிரஸ்சுக்கு அம்மாகாணத்தின் கவர்னர் விஜயம் செய்திருந்தார்"
காங்கிரசின் பிரிட்டிஷ் கமிட்டிக்கு லண்டனில்  ஒரு காரியாலயமும், பத்திரிக்கையும் இருபத்தைந்து ஆண்டுகள் இருந்தன. மிஸ்டர் ஹியூமும், ஸர் வில்லியம் வெட்டர்பர்னும் தாராளமாக பணம் கொடுத்து உதவவில்லை என்றால்  லண்டன் காங்கிரஸ் காரியாலயம் எப்போதோ மூடப்பட்டிருக்கும். (பக்கம் . 177)

எனவே நீதிக்கட்சியைப் பற்றி யாரேனும் குறை சொன்னால் அவர்களுக்கு இந்தச் சூழ்நிலையை மேற்கோள் காட்ட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

காங்கிசை நீதிக்கட்சியோடு ஒப்பிடுவதற்கு  இந்தச் சமுதாய - பொருளாதாரச் சூழ்நிலையை தெரிந்து கொள்வது முக்கியம். "1900 ஆம் ஆண்டில் இந்திய தேசியம் என்பது அமைப்பு ரீதியில் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் இயக்கமாக இல்லை. தேசியக் காங்கிரஸ் ஒரு பிரச்சாரச் சங்கமாக இருந்ததே தவிர, அமைப்பு ரீதியான அரசியல் கட்சியாக இல்லை.  அதன் தலைவர்களான கோகலே, திலகர், சுரேந்தரநாத் பானர்ஜி, சத்யேந்திரநாத் சின்கா, பெரோஸ்ஷா மேத்தா போன்றோர் ஏற்கனவே பெயர் பெற்ற தளபதிகள். ஆனால் அவர்கள் உண்மையான இராணுவமில்லாத தளபதிகளாக இருந்தனர்.

நூல்     ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 134 to 135.

திராவிடம் அறிவோம் - காங்கிரஸ்சை துவங்கியதின் நோக்கம்

 அதிருப்தி உள்ளுக்குள்ளே அமுங்கினால் பிரிட்டிஷ் ஆட்சிக்கே அபாயம் நேரலாம்மென்று ஹியூம் கருதினார்.
அபாயம் நேரிடவிருந்ததாக அவர் நம்பினார். அபாயத்தினால் இந்தியாவில் ஆங்கில துரைத்தனத்தைக் காப்பதற்காக காங்கிரஸ்சை துவங்கியதின் நோக்கம்மாகும்.  (பக்கம்.154)

காங்கிரஸ் துவக்கியவர்களின் நோக்கம் இந்தியாவில் ஆங்கில ஆட்சி நிரந்திரமாக இருத்தல் இந்தியாவின் நன்மைக்கே  என்று கருதினார்கள், ஆதலால் அபாயத்திலிருந்து காப்பதோடு அல்லாமல் பலப்படுத்தவும் இயன்றதை செய்தார்கள். அரசியல் முன்னேற்றமும், அரசியல் குறைகளை நீக்குதலும் இரண்டாந்தர நோக்கம்மாக இருந்தது.   ( பக்கம். 156).

ரானடே, திலகர், நவ்ரோஜி, டபிள்யூ. சி. பானர்ஜி, அயோத்தியாநாத், தயாப்ஜி ஆகியோர் ஆங்கிலேயர்களின் கருவியாக இருந்தார்கள் என சொல்லமுடியாது.  அவர்கள் உண்மையான தேசபக்தர்கள்.      (பக்கம் . 164)

காங்கிரஸ் மகா சபையை கண்ட இந்தியர்களும், ஆரம்பத்தில் எந்த விதமான  இடையூரும், எதிர்ப்பும் இன்றித் துவங்கவேண்டும் என்ற ஆசையில் தங்களது சரித்திர ஞானத்தை மறந்துவிட்டார்கள்" அதணால் தான் ஆங்கிலையர்களின் தூண்டுதலாலோ, ஆதரவினாலோ, காங்கிரஸ் அமைக்கும் "முரன்பாடான காரியத்தில் ஈடுபட்டனர். என்று லாலா லஜபதிராய் எழுதியுள்ளார்.  (பக்கம். 166).

டப்ரின் பிரபு கூரிய இந்த ஆலோசனையை எல்லோரும் நன்றியுடன் ஏற்றுக்கொண்டார்கள். காங்கிரஸ் தலைவர்களும் அரசாங்க உத்தியோகஸ்தர்களும் இனக்கமாக இருந்ததால் முதல் காங்ரஸ்சை பம்பாய் கவர்னராக இருந்த லார்டு ரீயின் தலைமையில் நடத்த அனுமதி தரவேண்டும் என டப்ரின் பிரபுவிடம் தெரிவிக்கப்பட்டது, அரசாங்கத்தின் பூரண சமரச பாவத்துடனேயே  வேலை செய்ய விரும்புகிறது என்பதால் டப்ரின் பிரபு மகிழ்ச்சியடைந்தார். அதை எற்றுக் கொள்வதில் கஷ்டங்கள் பல குறுக்கிடுவதாக கூறினார், எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது, எனினும் முதலாவது காங்கிரஸ் பெரிய அதிகாரிகளின் அனுதாபத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

நூல்     ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 132 to 134

திராவிடம் அறிவோம் - நீதிக்கட்சியின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள்

 திராவிட இயக்கத்தைப்போல இழிமொழிகளுக்கும் பழிச்சொற்களுக்கும் ஆளான அமைப்பு இந்தியாவில் வேறு எதுவும் இருக்க முடியாது . இதற்குக் காரணம் ஒரு வர்க்கத்தாரால் செய்யப்படும் தவரான பிரச்சாரமே!

குறிப்பாக நீதிக்கட்சியின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள்;-

அது வெள்ளையர் தூண்டுதலால் துவங்கப்பட்டது.
அது வெள்ளையருகளுக்கு வால்பிடித்த கட்சி என்பனவாகும் .

அந்தக் காலக்கட்டத்தில் அன்று இருந்த சமுதாய அரசியல் சூழ்நிலையின் அடிப்படையில் - நீதிக்கட்சியை எடைப்போட மறந்தவர்களின் கூற்றுக்களே இவை.
அன்றைய இந்தியாவில் இருந்த பிரதான அரசியல் அமைப்புகள்  காங்கிரஸ், முஸ்லிம் லீக் - ஆகியவைதான்!

அவைகளும் இந்த குற்றச்சாட்டிற்க்குத் தப்பவில்லை.

உதா.. இந்திய தேசியக் காங்கிரஸ் 1885 - ல் டிசம்பர் மாதத்தில் பம்பாயில் ஏ.ஓ ஹியூம் என்கிற ஆங்கிலேயரால் துவங்கப்பட்டது. தாங்களே கட்டணம் செலுத்திக்கொண்டு 70 பேர் முதல் மாநாட்டிற்க்குத் தங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டனர். 1885 முதல் 1900 வரை காங்கிரஸ்சின் தலைவர்களாக மூன்று  ஆங்கிலேயர்கள் இருந்தார்கள்.

அப்போதெல்லாம் மாநாடு கூட்டிக் குறைகளை பிரிட்டிஷ் அரசிற்கு எடுத்துக் கூறி, இந்தியர்களுக்கு அதிக உத்தியோகங்களைக் கேட்பதுதான் காங்கிரசின் தலையாய பணியாக இருந்தது.

லாலா லஜபதிராய் "யுவ பாரதம் (அ) இந்தியத் தேசிய இயக்கத்தின் வரலாறு என்னும் நூலினை 1927 -ல் வெளியிட்டார். அதைத் தமிழில் மொழிபெயர்த்தவர் பேராசிரியர் கல்கி.

இந்தியத் தேசியக் காங்கிரஸ் ஆரம்பிக்கும் யோசனை முதன் முதலாக டப்ரின் பிரபு சிந்தித்தார். அவார் அதை ஹியூம்மிடம் தெரிவித்தார், ஹியூம்  ஏற்றுக் கொண்டு சம்மதித்தார்.

"உலக  சரித்திரத்திலேயே இச்சம்பவத்திற்கு உவமை கிடையாது, யதேச்சதிகார அந்நிய அரசாங்கம் ஒன்றின் தூண்டுதலினால் அரசியல் சுதந்திர இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதாக எவரேனும் கேள்விபட்டதுண்டா?.

நூல்     ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 130 to 132.

திராவிடம் அறிவோம் - கல்வி கற்றோர் புள்ளிவிவரம்

 1901 ஆம் ஆண்டில் கல்வி கற்றோர்  புள்ளிவிவரத்தையும், 1921 ஆம் ஆண்டுக் கணக்கையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! பார்ப்பனரல்லாதார் பார்ப்பனர்களைப் போல் இல்லாவிடினும் - மெல்ல மெல்லக் கல்வி கற்பதில் முன்னேறி வந்திருப்பது தெறியும்.

தாமதமாக நுழைந்திருந்தாலும் பார்ப்பனரல்லாத சமுதாயங்கள் முன்னேரத் துவங்கிவிட்டன. அவர்கள் இப்போது முன்னேற்றத்தின் பல படிக்கட்டுகளில் இருக்கிறார்கள், செட்டியார், கோமுட்டி, நாயுடு, நாயர், போன்ற சமுதாயத்தினர் வேகமாக முன்னேறி வருகின்றனர். மிகவும் பின்தங்கியோர் கூட முன்னேறியிருப்பவர்களைப் போல புதிய காலத்தின் தகுதிகளைப் பெறுவதற்காக அக்கறையுடன் பாடுபட்டு வருகிறார்கள். கல்வியில் முன்னேற வேண்டும் என்கிற பொதுவான உணர்வு எல்லோருக்கும் ஏற்பட்டுவிட்டது. பார்ப்பனர்களில் காணப்படுவதைவிட சில பார்பனரல்லாத சமுதாயத்தினரிடையே காணப்படும் கல்வி வளர்ச்சி சீரானதாகவும், சமநிலையிலும் (பெண் - ஆண் இருபாலரும்) கல்வி கற்கும் நிலை இருக்கிறது.

கல்வி இலாக்காவினர் பார்ப்பன பெண்களுக்கும், குறிப்பாக பார்பன விதவை பெண்களுக்கும் ஏதோ அவர்கள்  பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் போலக் கருதிக் கொண்டு கல்விச் கலுகை அளித்து வருகின்றனர். இருந்தாலும் நாயர் பெண்கள் அளவுக்கு  பிராமணப் பெண்கள் கல்வி கற்றுவிட்டதாக இல்லை. பல்வேறு துறைகளில் பிராமணரல்லாதார் பயனுள்ள வகையில் - இந்த மாகாணத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றி வாருகின்றனர். பார்ப்பனர்கள் தந்திரமாகவும், பல்வேறு வழிகளிலும் அரசியல் அதிகாரத்தையும், உத்தியோகச் செல்வாக்கையும் பயன்படுத்திய காரணத்தால் ! அறிவுத் துறையில் தீவிரமான போட்டி நிலவுகின்ற இந்த நாட்களில் தேர்வில் வெற்றி பெற தனித்திறமை வேண்டும் என்பதை மறுக்கவில்லை.

புரிந்துகொள்ளமுடியாதது என்னவெனில், மற்றவர்களை விட ஆங்கிலம் கற்ற ஆடவர்களை அதிகம் கொண்டிருக்கிற  ஒரு சிறு வகுப்பு, மற்ற வகுப்பினர் திறமையானவர்களாகவும்,அறிவு கூர்மையானவார்கள் அதிகம் இருப்பினும் அவர்களுக்கு அரசு வேலைகளில் இடம் கொடுக்காமல் , உயர் பதவி, தாழ்ந்ததுமான அனைத்தும் அவார்களுக்கே வழக்குவதுதான். நீதிபதிகள், சிறந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், பெரிய முக்கிய எஸ்டேட்களை நிர்வகிப்பவர்களாக மேதைகளை பார்ப்பனரல்லாத சமூகம் வழங்கியிருக்கிறது, அவர்களில் ஈடாக பார்ப்பன சமூகத்தில் ஒருவரை கூட ஒப்பிட முடியாது.

நூல்.    ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ;  123 to 125.

திராவிடம் அறிவோம் - பார்ப்பனரல்லாத கொள்கை அறிக்கை.

 பார்ப்பனரல்லாத கொள்கை அறிக்கை.

பார்ப்பனரல்லாத சமுதாயத்தார் விழிப்புற்றுச் செயல்பட வேண்டும். முதலாவதாக தங்கள் குழந்தைகளை படிக்கவைக்க வேண்டும். கல்வி வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள பார்ப்பனரல்லாதாரை ஊக்குவிக்க வேண்டும்.

கல்வி வசதியற்ற இடங்களில் அவ்வசதியை ஏற்படுத்தவும், புத்திகூர்மையுள்ள ஏழை சிறுவர், சிறுமியர்க்குக் கல்வி கற்பிக்க நிதி உதவி வழங்கவேண்டும். மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களில் சங்கங்கள் துவங்கப்பட்டு அவை திறமையாக பராமரிக்கப்பட வேண்டும். பார்பனரல்லாதாருக்கு என கல்வி கொள்கை உருவாக்க வேண்டும், சமுதாய அரசியல் அமைப்புகள் உருவாக்கபடவேண்டும், தங்களது கோரிக்கையை முன்வைப்பதற்கு ஆங்கலத்திலும் , தாய்மொழியிலும் செய்தித்தாள்கள் துவங்கி நடத்தப்பட வேண்டும். தந்திரம் மிகுந்தோர் அவர்களைத் தங்கள் சுயநலத்திற்காகப் பயன் படுத்திக்கொண்டார்கள் பார்ப்பனர்களோடு ஒப்பிடும்போது தாமிருக்கும் தற்கால நிலை குறித்து பார்ப்பனரல்லாதாரிடையே அதிருப்தி நிலவுகிறது, அரசாங்கம் ஒரு வேலை அறியாமல் இருக்கலாம் , அரசின் கவனத்தை திருப்பவேண்டும். பார்ப்பனரல்லாதார் ஒருவருக்கொருவார் உதவி செய்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் ஒவ்வொரு சமுதாயமும், குறைந்த பட்சம் தங்களது வளர்ச்சியை முதன்மையாக கொள்ள வேண்டும்.
தாழ்ந்த நிலையிலும் அல்லாமல் - சுயமரியாதை பெற்ற வளர்ச்சியுற்ற அமைப்பாக உயர்வானதென்று கருதப்படுகிற பிற வகுப்பாரோடு ஒத்துழைக்க முடியும்.
பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை இன்றைக்கும் பொருந்தும்.
11.8.1957 -ல் 1967 என்கிற தலைப்பில் மதுரையில் சிறப்பு சொற்போழிவு நிகழ்த்திய அண்ணா கீழ்க்கண்டவாறு கூறினார்.

பார்ப்பனரல்லாதார் இயக்கம் சமநீதி காணும் நோக்குடன் துவக்கப்பட்டதே தவிர, அது பார்ப்பனர்களைத் தனிப்பட்ட முறையில் வெத்ததில்லை, வெறுக்கவேண்டிய அவசியமில்லை, பார்பனர்களுக்கு உரிய பங்குகைத் தந்து, பார்ப்பனரல்லாதாருக்கு உரிய பங்கைத் தரவேண்டும் என்ற நீதியை அடிப்படையாகக் கொண்டதால்தான் ஜஸ்டிஸ் கட்சிக்கு நீதிக்கட்சி என்று தமிழில் பெயரிடப்பட்டது என்று பேசினார் அறிஞர் அண்ணா.

நூல்     ; திராவிட இயக்க                      வாரலாறு.
பக்கம் ; 126 to 127.

திராவிடம் அறிவோம்

சுவாமி தீர்த்தாஜி மகராஜ் என்பவர் இந்து ஏகாதிபத்தியத்தின் அபாயம் என்னும் நூலில் எப்படி ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இந்தியாவில் பார்ப்பணீயத்தை உயர்த்தி விட்டது என்பதற்குப் பத்து உதாரணங்களை காட்டுகிறார்.

1. ஆங்கிலேயர்கள் மிக உயர்ந்த நம்பிக்கைகுரிய லாபம் தரும் பதவிகளில் நியமித்தனர்.
2.கம்பெனி அதிகாரிகளுக்கும், புரோகிதர்களுக்கும் ஒருவருக்கொருவர் லாபம் தரும் வகையிலும், பொழுதுபோக்கும் வகையிலும் அழிந்துபோன கோவில்களையும், விக்ரக ஆராதனை உற்சவங்களையும், அதோடு சேர்ந்த நடன மாதரையும் ஊக்குவித்தனர்.

3. இந்துக்களின் கொடுங்கோன்மைச் சின்னமான " ஜாதிக் கச்சேரி" களைப் (நீதிமன்றங்களை) புதுப்பித்தனர்.

4 இந்துக்களின் பெரும்பான்மையோரின் சிந்தனையிலிருந்து மறைந்த ஒழிந்துபோன மனு சாஸ்திரத்தையும், இதர சாத்திரங்களையும் மறுபடியும் கண்டுபிடித்து அதுவே அதிகாரபூர்வமான இந்துச் சட்டம் என்கிற நிலைக்கு அவற்றை உயர்த்தினர்.

5. கோவில்களின் நிர்வாகத்தை அறங்காவலர்கள் கையில் ஒப்புவித்து, பார்ப்பனீயம் வலுப்படவும், இதர சாதியினர் உரிமை இழக்கவும் ஏற்பாடு செய்தனர்.

6. சில சட்டங்கள்  மூலமாகவும், நீதிமன்ற முடிவுகள் மூலமாகவும், கிறித்துவர்கள் அல்லது முஸ்லீம்கள் அல்லாத அனைவரையும் கட்டுப்படுத்துவது இந்துச் சட்டம் தான் என்கிற நிலையை உறுவாக்கினர்.

7. சாதிப் பிரிவுகளுக்கு அவர்கள்  ராஜாங்க அங்கீகாரம் கொடுத்தனர். அரசுப் பாதுகாப்பும், முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

8. இந்த இழிநிலைமையை மாற்றியமைக்கும் சீர்திருத்தவாதிகளின் நம்பிக்கைகளை நாசமாக்கினார்கள்.

9. மத விஷயங்களில் தலையிடுவதில்லை என்று கூறிக்கொண்டு, சமுதாயக் கொடுமைகளை பலப்படுத்தினார்கள், நிரந்தரமாக நிலவச் செய்தார்கள்.
10. அவர்களில் சிலர் சாதிமுறையையும் விக்ரக ஆராதனையையும் மனித சமுதாயத்தை மகிழ்விக்க வந்த கலாச்சார சாதனைகள் என குறிப்பிட்டு புகழ்ந்தனர்.

நூல்    ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 119 to 120.