Showing posts with label திராவிடம். Show all posts
Showing posts with label திராவிடம். Show all posts

Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - கல்வி கற்றோர் புள்ளிவிவரம்

 1901 ஆம் ஆண்டில் கல்வி கற்றோர்  புள்ளிவிவரத்தையும், 1921 ஆம் ஆண்டுக் கணக்கையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! பார்ப்பனரல்லாதார் பார்ப்பனர்களைப் போல் இல்லாவிடினும் - மெல்ல மெல்லக் கல்வி கற்பதில் முன்னேறி வந்திருப்பது தெறியும்.

தாமதமாக நுழைந்திருந்தாலும் பார்ப்பனரல்லாத சமுதாயங்கள் முன்னேரத் துவங்கிவிட்டன. அவர்கள் இப்போது முன்னேற்றத்தின் பல படிக்கட்டுகளில் இருக்கிறார்கள், செட்டியார், கோமுட்டி, நாயுடு, நாயர், போன்ற சமுதாயத்தினர் வேகமாக முன்னேறி வருகின்றனர். மிகவும் பின்தங்கியோர் கூட முன்னேறியிருப்பவர்களைப் போல புதிய காலத்தின் தகுதிகளைப் பெறுவதற்காக அக்கறையுடன் பாடுபட்டு வருகிறார்கள். கல்வியில் முன்னேற வேண்டும் என்கிற பொதுவான உணர்வு எல்லோருக்கும் ஏற்பட்டுவிட்டது. பார்ப்பனர்களில் காணப்படுவதைவிட சில பார்பனரல்லாத சமுதாயத்தினரிடையே காணப்படும் கல்வி வளர்ச்சி சீரானதாகவும், சமநிலையிலும் (பெண் - ஆண் இருபாலரும்) கல்வி கற்கும் நிலை இருக்கிறது.

கல்வி இலாக்காவினர் பார்ப்பன பெண்களுக்கும், குறிப்பாக பார்பன விதவை பெண்களுக்கும் ஏதோ அவர்கள்  பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் போலக் கருதிக் கொண்டு கல்விச் கலுகை அளித்து வருகின்றனர். இருந்தாலும் நாயர் பெண்கள் அளவுக்கு  பிராமணப் பெண்கள் கல்வி கற்றுவிட்டதாக இல்லை. பல்வேறு துறைகளில் பிராமணரல்லாதார் பயனுள்ள வகையில் - இந்த மாகாணத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றி வாருகின்றனர். பார்ப்பனர்கள் தந்திரமாகவும், பல்வேறு வழிகளிலும் அரசியல் அதிகாரத்தையும், உத்தியோகச் செல்வாக்கையும் பயன்படுத்திய காரணத்தால் ! அறிவுத் துறையில் தீவிரமான போட்டி நிலவுகின்ற இந்த நாட்களில் தேர்வில் வெற்றி பெற தனித்திறமை வேண்டும் என்பதை மறுக்கவில்லை.

புரிந்துகொள்ளமுடியாதது என்னவெனில், மற்றவர்களை விட ஆங்கிலம் கற்ற ஆடவர்களை அதிகம் கொண்டிருக்கிற  ஒரு சிறு வகுப்பு, மற்ற வகுப்பினர் திறமையானவர்களாகவும்,அறிவு கூர்மையானவார்கள் அதிகம் இருப்பினும் அவர்களுக்கு அரசு வேலைகளில் இடம் கொடுக்காமல் , உயர் பதவி, தாழ்ந்ததுமான அனைத்தும் அவார்களுக்கே வழக்குவதுதான். நீதிபதிகள், சிறந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், பெரிய முக்கிய எஸ்டேட்களை நிர்வகிப்பவர்களாக மேதைகளை பார்ப்பனரல்லாத சமூகம் வழங்கியிருக்கிறது, அவர்களில் ஈடாக பார்ப்பன சமூகத்தில் ஒருவரை கூட ஒப்பிட முடியாது.

நூல்.    ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ;  123 to 125.

திராவிடம் அறிவோம் - பார்ப்பனரல்லாத கொள்கை அறிக்கை.

 பார்ப்பனரல்லாத கொள்கை அறிக்கை.

பார்ப்பனரல்லாத சமுதாயத்தார் விழிப்புற்றுச் செயல்பட வேண்டும். முதலாவதாக தங்கள் குழந்தைகளை படிக்கவைக்க வேண்டும். கல்வி வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள பார்ப்பனரல்லாதாரை ஊக்குவிக்க வேண்டும்.

கல்வி வசதியற்ற இடங்களில் அவ்வசதியை ஏற்படுத்தவும், புத்திகூர்மையுள்ள ஏழை சிறுவர், சிறுமியர்க்குக் கல்வி கற்பிக்க நிதி உதவி வழங்கவேண்டும். மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களில் சங்கங்கள் துவங்கப்பட்டு அவை திறமையாக பராமரிக்கப்பட வேண்டும். பார்பனரல்லாதாருக்கு என கல்வி கொள்கை உருவாக்க வேண்டும், சமுதாய அரசியல் அமைப்புகள் உருவாக்கபடவேண்டும், தங்களது கோரிக்கையை முன்வைப்பதற்கு ஆங்கலத்திலும் , தாய்மொழியிலும் செய்தித்தாள்கள் துவங்கி நடத்தப்பட வேண்டும். தந்திரம் மிகுந்தோர் அவர்களைத் தங்கள் சுயநலத்திற்காகப் பயன் படுத்திக்கொண்டார்கள் பார்ப்பனர்களோடு ஒப்பிடும்போது தாமிருக்கும் தற்கால நிலை குறித்து பார்ப்பனரல்லாதாரிடையே அதிருப்தி நிலவுகிறது, அரசாங்கம் ஒரு வேலை அறியாமல் இருக்கலாம் , அரசின் கவனத்தை திருப்பவேண்டும். பார்ப்பனரல்லாதார் ஒருவருக்கொருவார் உதவி செய்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் ஒவ்வொரு சமுதாயமும், குறைந்த பட்சம் தங்களது வளர்ச்சியை முதன்மையாக கொள்ள வேண்டும்.
தாழ்ந்த நிலையிலும் அல்லாமல் - சுயமரியாதை பெற்ற வளர்ச்சியுற்ற அமைப்பாக உயர்வானதென்று கருதப்படுகிற பிற வகுப்பாரோடு ஒத்துழைக்க முடியும்.
பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை இன்றைக்கும் பொருந்தும்.
11.8.1957 -ல் 1967 என்கிற தலைப்பில் மதுரையில் சிறப்பு சொற்போழிவு நிகழ்த்திய அண்ணா கீழ்க்கண்டவாறு கூறினார்.

பார்ப்பனரல்லாதார் இயக்கம் சமநீதி காணும் நோக்குடன் துவக்கப்பட்டதே தவிர, அது பார்ப்பனர்களைத் தனிப்பட்ட முறையில் வெத்ததில்லை, வெறுக்கவேண்டிய அவசியமில்லை, பார்பனர்களுக்கு உரிய பங்குகைத் தந்து, பார்ப்பனரல்லாதாருக்கு உரிய பங்கைத் தரவேண்டும் என்ற நீதியை அடிப்படையாகக் கொண்டதால்தான் ஜஸ்டிஸ் கட்சிக்கு நீதிக்கட்சி என்று தமிழில் பெயரிடப்பட்டது என்று பேசினார் அறிஞர் அண்ணா.

நூல்     ; திராவிட இயக்க                      வாரலாறு.
பக்கம் ; 126 to 127.

திராவிடம் அறிவோம்

சுவாமி தீர்த்தாஜி மகராஜ் என்பவர் இந்து ஏகாதிபத்தியத்தின் அபாயம் என்னும் நூலில் எப்படி ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இந்தியாவில் பார்ப்பணீயத்தை உயர்த்தி விட்டது என்பதற்குப் பத்து உதாரணங்களை காட்டுகிறார்.

1. ஆங்கிலேயர்கள் மிக உயர்ந்த நம்பிக்கைகுரிய லாபம் தரும் பதவிகளில் நியமித்தனர்.
2.கம்பெனி அதிகாரிகளுக்கும், புரோகிதர்களுக்கும் ஒருவருக்கொருவர் லாபம் தரும் வகையிலும், பொழுதுபோக்கும் வகையிலும் அழிந்துபோன கோவில்களையும், விக்ரக ஆராதனை உற்சவங்களையும், அதோடு சேர்ந்த நடன மாதரையும் ஊக்குவித்தனர்.

3. இந்துக்களின் கொடுங்கோன்மைச் சின்னமான " ஜாதிக் கச்சேரி" களைப் (நீதிமன்றங்களை) புதுப்பித்தனர்.

4 இந்துக்களின் பெரும்பான்மையோரின் சிந்தனையிலிருந்து மறைந்த ஒழிந்துபோன மனு சாஸ்திரத்தையும், இதர சாத்திரங்களையும் மறுபடியும் கண்டுபிடித்து அதுவே அதிகாரபூர்வமான இந்துச் சட்டம் என்கிற நிலைக்கு அவற்றை உயர்த்தினர்.

5. கோவில்களின் நிர்வாகத்தை அறங்காவலர்கள் கையில் ஒப்புவித்து, பார்ப்பனீயம் வலுப்படவும், இதர சாதியினர் உரிமை இழக்கவும் ஏற்பாடு செய்தனர்.

6. சில சட்டங்கள்  மூலமாகவும், நீதிமன்ற முடிவுகள் மூலமாகவும், கிறித்துவர்கள் அல்லது முஸ்லீம்கள் அல்லாத அனைவரையும் கட்டுப்படுத்துவது இந்துச் சட்டம் தான் என்கிற நிலையை உறுவாக்கினர்.

7. சாதிப் பிரிவுகளுக்கு அவர்கள்  ராஜாங்க அங்கீகாரம் கொடுத்தனர். அரசுப் பாதுகாப்பும், முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

8. இந்த இழிநிலைமையை மாற்றியமைக்கும் சீர்திருத்தவாதிகளின் நம்பிக்கைகளை நாசமாக்கினார்கள்.

9. மத விஷயங்களில் தலையிடுவதில்லை என்று கூறிக்கொண்டு, சமுதாயக் கொடுமைகளை பலப்படுத்தினார்கள், நிரந்தரமாக நிலவச் செய்தார்கள்.
10. அவர்களில் சிலர் சாதிமுறையையும் விக்ரக ஆராதனையையும் மனித சமுதாயத்தை மகிழ்விக்க வந்த கலாச்சார சாதனைகள் என குறிப்பிட்டு புகழ்ந்தனர்.

நூல்    ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 119 to 120.

Saturday, March 09, 2019

The Dravidian Manifesto (2019)

The Dravidian Manifesto (2019)

1. People are equal by birth !

2. Gender Equality

3. Social Justice

4. To reject concepts that do not fit within the rational and scientific framework like God, Religion and associated beliefs such as Soul, Heaven/Hell, Ancient ritualistic practices and upholding ancestry which reeks irrationality.

5. Rationalism, Scientific Attitude, Innovative mindset which questions and accepts/rejects everything around based on evidence.

6. To firmly resist and rile against Political Hinduism (Hindutva) which speaks the language of divisiveness.

7. To accept Science, with a rider that, the application of scientific methods should be for the welfare of the humanity and not against it.

8. To rebel against, dismantle and destroy every form of untouchability, the root cause of every form of untouchability (i.e) Caste, the indomitable defense of caste in form of God, Religion, works of humans like Vedas, Ithihasas, Shastras, Puranas which provide a framework for sustained oppression of humankind and pride associated with parochial and conservative ideas related to ancestry.

9. To ensure the delivery of social justice in an asymmetric and unequal society where rights are denied to vast sections of people - in public and private sector and Government.

10. To ensure the upturn of the status quo wherein Men are viewed as Lord and women as slaves. To establish Gender equality, where women are ensured opportunities to establish themselves as equals to men in education, employment, politics and economic status.

11. Rights to Priesthood which is now restricted to men should be ensured to women, in every religion.

12. Homosexuals and Transgenders should be able to avail every possible right as a citizen of this nation, on the basis that people are equal by birth !

13. There shouldn't be asymmetry between the Urban and the Rural.

14. The status quo in this society to use religion as a tool to ensure inequalities must be overturned. Complete rejection of the literary works and oral traditions of humans, from various time periods and circumstances, to establish hegemony of a few among the many.

15. To ensure the respect of every language of nation groups. To ensure the rejection of possibility when a language is allowed to dominate over another. To allow changes in language keeping in mind the changes in human communication over a period of time with scientific outlook. To ensure National Language status to every language in the 8th Schedule of Indian Constitution in an India, which is a nation with various linguistic groups, while conserving the status of English as the language of communication across India.

16. To ensure that the Nation State takes complete responsibility for the delivery of basic requirements for a human to every citizen of the Nation State. To work towards creation of a reality where the connotation of rich and poor loses meaning. To nurture and establish a mindset of comradery within the society. In short, creation of an equal and just society, which is devoid of discrimination on the basis of Caste, Class and Gender.

17. To establish equality whose nature is devoid of hegemony and bias, in order to ensure rights, possibilities for equal participation and share in wealth to every nation group within a nation, where there are multiple linguistic and nation groups.

18. To ensure establishment of a true secularism in the society, which is not linked to the State and Religion.

19. To ensure proportional representation to every caste in this society in every fora and avenue, until the dissolution of the hegemony of caste in the society.

20. Education is an Universal basic right. To ensure the rejection of the intrusion of literature in syllabus that is against the scientific attitude. To ensure establishment of an educational system which provides space for development of thought clarity and work ethic, in turn equipping students to tackle competition in the present global opportunity landscape, an education system which provides space for inculcation of discipline and respect as a public good; an education which uses hands-on technical abilities and practical knowledge as a criteria to evaluate ones learning over rote learning ability; an education system which has in its heart the catalytic nature of technology, which is grounded in science.

21. To work for the creation of laws, which is equidistant to believers and non-believers, with the conservation of the right to evangelize.

22. To ensure a nurturing environment during early childhood for every child, with focus on environment, nutritious food, sanitation, development of critical mental and physical abilities and good habits.

23. To ensure empathetic treatment of elders with respect and dignity.

24. Protection of environment and natural resources.

25. To allow people of age, 20 years and above, to make independent decision about their marriage. To ensure establishment of a reality, wherein marriage is devoid of external compulsion and intervention. To ensure that, the women have a final say in decisions related to child birth.

26. To abolish death sentence.

27. To establish a reality wherein there is no restriction on expression and evangelization/propaganda.

28. An art is created for the sake of art, is a standpoint which cannot be unaccepted. An art should have a constructive utility, with humanism and self-respect ingrained.

29. Everyone should have the opportunities for everything, with the possibilities for unceasing, sustained movement in the material reality of the society

30. An individual does not owe his creation to himself. Hence, one should not live for oneself but to serve for the society.

31. To eschew from indulgence in luxury - To uphold frugal living.

32. Humans are endowed with rationalism - a virtue which should lead to brotherhood and equality - a cordial relationship that should be between individuals, beyond the kinship of blood.

33. Let an equal world emerge - Let a world where self respect is ingrained emerge - A life with self respect is a full life - Let Human be at the heart and the God be forgotten.

All towns are our own, everyone our kin, the world is our family - Let our actions provide the essential and conscious nudge towards such a cultural and social evolution.

Let our journey and plans be drawn to ensure the creation of a radical, brave new world which is devoid of hatred, hegemony, encroachment - Let a healthy and a vibrant new world emerge.

K. Veeramani.

President, Dravidar Kazhagam (Association for Dravidians)

Thanjavur

23.2.2019

- translated by Jeyannathann Karunanithi.

திராவிடக் கொள்கை அறிக்கை

திராவிடக் கொள்கை அறிக்கை
--------------------------------------------------

திராவிடக் கொள்கை - கோட்பாடு என்பவை -

1. அனைத்து மக்களும் பிறப்பின் அடிப்படையில்

சமமானவர்களே!

2. பாலின சமத்துவம்

3. சமுகநீதி

4. பகுத்தறிவுக்கும், அறிவியல் சிந்தனைக்கும் பொருந் தாத கடவுள், மதம் மற்றும் இவற்றைச் சார்ந்த ஆன்மா, மோட்சம், நரகம், பழக்க வழக்கம், மூடத்தன நெடியேறும் முன்னோர்க் கூற்று உள்ளிட்டவற்றை மறுப்பது.

5. பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை, எதையும் கேள்விக்கு உட்படுத்தி ஆய்வின் அடிப்படையில் ஏற் பதும் அல்லது மறுப்பதுமான புத்தாக்க உருவாக்கம்.

6. பேதம் பேசும் இந்துத்துவா கோட்பாட்டை எதிர்ப்பது.

7. அறிவியலை ஏற்பதுடன், அது மனித குலத்தின் நலனுக்கு - வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கவேண்டுமே தவிர, கேடாக அமையக்கூடாது.

8. தீண்டாமை - அதற்கு மூல வேரான ஜாதி - ஜாதிக்கு அரணான கடவுள், மதம், வேதம், சாஸ்திரம், இதிகாசம், புராணங்களை - பழைமைவாத குலப்பெருமைகளை எதிர்த்து அழிப்பது.

9. ஏற்றத் தாழ்வுள்ள இந்த சமுக அமைப்பில் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு சமுகநீதி வழங்குவது - தனியார் துறை, பொதுத் துறை, அரசுத் துறை அனைத்திலும்.

10. ஆண் எஜமானன் - பெண் அடிமை என்ற தற்போதைய நிலைக்கு மாறாக பாலின சமத்துவம், எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகராக கல்வி, உத்தி யோகம், அரசியல், பொருளாதார நிலைக்கு உத்தரவாதம்.

11. தற்போதைய நிலையில் வழிபாட்டில், அர்ச்சகத் தன்மையில் ஆண்களுக்குள்ள எல்லா உரிமைகளும் பெண்களுக்கும் தேவை - இது எல்லா மதங்களுக்குமே!

12. ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் எல்லா வகைகளிலும் மற்றவர்களுக்குச் சமமானவர்களே என்ற அடிப்படையில் அனைத்து உரிமைகளின் நுகர்வுக்கும் உரியவர்களே!

13. கிராம - நகர பேதம் கூடாது.

14. மதங்களைக் காரணம் காட்டி ஏற்றத் தாழ்வுகளை நிலை நிறுத்தும் போக்கு முற்றாக மாற்றி அமைக்கப்படுதல். எந்தக் காலத்திலோ, யாரோ சூழ்ச்சியாக ஆதிக்கத்தை நிலை நிறுத்த எழுதிக் குவித்த அனைத்தையும் ஒட்டு மொத்தமாக நிராகரித்தல்.

15. ஒவ்வொரு இனத்துக்குமான மொழிக்குரிய மதிப்புப் பேணப்படுதல் - இதில் ஒரு மொழி, இன்னொரு மொழியை ஆதிக்கம் செலுத்துவதற்கு அறவே இடம் தராமை. கால வளர்ச்சிக்கு ஏற்ப மொழியில் விஞ்ஞானக் கண்ணோட்டத்தோடு மாற்றம் கொணர்தல். பன்மொழிகள் கொண்ட இந்தியாவில், இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் எட்டாம் அட்டவணையில் இடம்பெற்ற மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழி என்பது உறுதிப்படுத்தப்படுதல்.

அகில இந்திய அளவில் தொடர்பு மொழி என்பது ஆங்கிலமே!

16. பொருளாதார நிலையில் மனிதனுக்குத் தேவை யான அடிப்படைகள் பூர்த்தி செய்யப்படல்; இதற்கு அரசே முழுப் பொறுப்பு ஏற்றல்; பணக்காரன், ஏழை என்ற பேதத்தைக் குறிக்கும் சொல்லாடலுக்கே இடமில்லாது செய்தல்.

தொழிலாளி - முதலாளி என்ற பேதமின்றி பங்காளி எனும் தன்மை நிலைநிறுத்தப்படுதல்; சுருக்கமாக சொல்லப்போனால், வருண பேதம், வர்க்க பேதம், பாலியல் பேதமற்ற ஒப்புரவு சமுதாயம் உருவாக்கப்படுதல்.

17. ஒரு மொழி, ஓர் இனத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழும் நாட்டில் அனைத்து மொழிகள், இனங்களுக்கான உரிமை, பண்பாடு, பங்களிப்பு, வளங்களுக்கிடையே பாரபட்சமற்ற, ஆதிக்கமற்ற சமன்பாட்டை நிலை நிறுத்துதல்; மாநிலங்களுக்கான தன்னாட்சி உரிமை நிலைப்படுத்தப்படுதல்.

18. அரசுக்கும், மதத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாத உண்மையான மதச்சார்பின்மை நிலைப்பாடு.

19. ஜாதி ஒழிக்கப்படும் காலகட்டம் வரை அனைத்துப் பிரிவினருக்கும் சகல இடங்களிலும், துறைகளிலும் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம்.

20. கல்வி என்பது எல்லோருக்கும் அடிப்படை உரிமை. விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமான எதுவும் கல்வியில் இடம்பெறாமை, வளர்ச்சித் தத் துவம், சிந்தனையூற்றம் - விடாமுயற்சி, ஊக்கம் தரும் தன்மை இவற்றோடு உலகப் போட்டிக்குத் தயாரிப்பான கல்வி முறை, ஒழுக்கம் பொதுச் சொத்து என்ற வார்ப்பு, பாடத் திட்டங்கள்; தகுதி திறமையை அளவிட மனப்பாட மதிப்பெண் முறைக்குப் பதிலாக செய்முறை, வினையூக்கத்தை உள்ளடக்கிய அறிவியல் அடிப்படையில் அமைந்த தொழில்நுட்பம் உள்ள கல்வி முறை.

21. கடவுள் நம்பிக்கைக் கொண்டோர், கடவுள் நம்பிக் கையற்றோர் - இரு நிலையில் உள்ளவர்களுக்கும் பிரச்சார உரிமையுடன் கூடிய சமநிலைச் சட்டங்கள் உருவாக்கப் பாடுபடுதல்.

22. குழந்தை வளர்ப்பில் முழுக்கவனம், உடல், மூளை வளர்ச்சிக்கான உணவு, சூழல், தூய்மை, அறிவுத் தூண்டல், நற்பழக்கம் பேணப்படுதல்.

23. முதியவர்களை அக்கறையுடன் உரிய மதிப்புடன் பாதுகாத்தல்.

24. சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் பாதுகாப்பு.

25. ஆணோ, பெண்ணோ 20 வயதுக்குமேல் எந்த வயதில் திருமணம் செய்துகொள்வது என்பதை அவர் களின் முடிவுக்கே விட்டுவிடுதல்.

திருமணம் என்பதில் வேறு யாருடைய தலையீடோ, குறுக்கீடோ கூடாத நிலை.

வயது அடைந்த ஓர் ஆணும் - பெண்ணும் இணைந்து வாழ்தலில் மூன்றாவது மனிதனுக்கு இடம் என்பது அத்துமீறிய நடவடிக்கையே!

குழந்தைப்பேறு குறித்த முடிவில் பெண்ணுக்கு மட்டுமே பிரத்தியேக உரிமை.

26. மரண தண்டனையை ரத்து செய்தல்.

27. கருத்துரிமை, பிரச்சார உரிமைக்கு தடையற்ற நிலை.

28. கலை கலைக்காக என்பதை ஏற்க இயலாது - மனிதத்தையும், சுயமரியாதைக் கருத்துருவையும் கொண்டதாக ஆக்கப்பூர்வமாக அமைதல் வேண்டும்.

29. அனைவருக்கும் அனைத்தும் அமைந்து, சமுகத் தின் நுகர்வுக்கான விரிந்த இலக்கு நோக்கி நடக்கட்டும் இந்த வையம்.

30. மனிதன் தானாகப் பிறக்கவில்லை - எனவே, தனக்காக வாழக்கூடாதவன் என்ற சமுக நோக்கு - தொண்டறப் பண்பு!

31. ஆடம்பரம் தவிர்ப்பு - சிக்கனப் பெருவாழ்வு!

32. குருதி உறவு என்பதையும் கடந்து மனிதனுக்கு மனிதன் நேச உறவு - சகோதரத்துவம், சமத்துவம் பேணலே மனிதனுக்குப் பகுத்தறிவு இருப்பதின் பலனாகும்.

33. சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு கடவுளை மற - மனிதனை நினை என்னும் சுயமரி யாதை சமத்துவ உலகம் மலரட்டும்! மலரட்டும்!!

யாதும் ஊரே, யாவரும் கேளிர், உலகமே ஒரு குடும்பம் என்னும் பரிணாம நிலை வளரட்டும்!

பகைமை, ஆதிக்கம், ஆக்கிரமிப்பு போன்ற கொடிய நோய்களற்ற, ஆரோக்கியமான புத்துலகம் புரட்சியுகமாக பூத்துமலர நமது பயணங்களும், திட்டங்களும் அமை யட்டும்!

கி.வீரமணி

தலைவர் திராவிடர் கழகம்.

தஞ்சாவூர்

23.2.2019

#திராவிடம் அறிவோம் (76)

இராஜாஜி அரசின் கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து, தமிழக வரலாற்றின் முதல் மொழியுரிமைப் போரான இந்தி எதிர்ப்புப் போராட்டம் தந்தை பெரியாரால் 1938-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. பெரியார் 05.12.1938 அன்று கைது செய்யப்பட்டு சிறை சென்றார். 22.05.1938 அன்று விடுதலையானார்.

தந்தை பெரியார் சிறையிலிருந்த போது, நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் 14 ஆம் மாநாடு சென்னையில் நடைபெற்றது. அம்மாநாட்டில் நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


#திராவிடம் அறிவோம் (75)

ஒரு தேசிய இனத்தின் அடையாளம் என்பது அவ்வினத்தின் மொழி சார்ந்து தான் முதன்மையாக உருவாகிறது. திராவிட மொழிக் குடும்பம் குறித்த அறிதல் என்பது இவ்வகையில் முக்கியமான நிகழ்வு.

கி.பி.1784 இல் வில்லியம் ஜோன்ஸ் தலைமையில் கல்கத்தாவில் உருவாக்கப்பட்ட ‘ஆசியவியல் கழகம்’ என்னும் அமைப்பின் மூலம் நிகழ்ந்த ஆய்வுகள், இந்தியாவில் கீழைத்தேயவியல் மரபுக்கு உரிமையுடையது, சமஸ்கிருத மொழி என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தன. இந்தியாவின் பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டுள்ள மொழி சமஸ்கிருதம் என்னும் கருத்து உலக அளவில் முன்னெடுக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவ்வகையான புரிதலே இருந்தது.

1812-இல் எல்லீஸ், இந்தியாவின் தென்பகுதியில் சமஸ்கிருத மொழியிலிருந்து வேறுபட்ட பல மொழிகள் வழக்கத்தில் உள்ளன என்பதைக் கண்டறிந்தார். 1856-இல் கால்டுவெல் இக்கருதுகோளை வளர்த்தெடுத்து ‘திராவிட மொழிக்குடும்பம்’ என்னும் அடையாளத்தை நிலைபேறு கொள்ளச்செய்தார்.

1905 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘இந்திய மொழிகளைப் பற்றிய கணக்கெடுப்பு நிறுவனம்’, கால்டுவெல் கருத்தை வலுப்படுத்தி, திராவிட மொழிக்குடும்பத்தில் மேலும் பல மொழிகளை இணைத்தது. 1962-இல் எமனோ மற்றும் பர்ரோ உருவாக்கிய திராவிட மொழிகளின் வேர்ச்சொல் அகராதியில் 24 மொழிகளைத் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவையாக இனம் கண்டனர். 1984-இல் அந்த அகராதி விரிவாக்கப்பட்ட மீள்பதிப்பைக் கொண்டு வரும்போது 27 திராவிட மொழிகளை அடையாளப்படுத்தியுள்ளனர்.

#திராவிடம் அறிவோம் (74)

"திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது. திராவிடர் கழகத்திற்குப் போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதையில்தான்; திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதே தான், திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படைக் கொள்கைகளில், கருத்துகளில், மாறுதல், மோதுதல் எதுவும் கிடையாது. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே சீர்திருத்தம், சமதர்மக் குறிக்கோள், அரசியலில் வடநாட்டு ஏகாதிபத்தியத்தினின்று விடுதலை ஆகிய கொள்கைகள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடுகளாகும்".

-17.09.1949 அன்று சென்னை, இராயபுரம், இராபின்சன் பூங்காவில் நடைபெற்ற தி.மு.க துவக்க விழாவில் அறிஞர் அண்ணா பேசியது.

#திராவிடம் அறிவோம் (73)

இந்திய விடுதலைக்குப் பின்னர், குடியரசு நாளன்று குடியரசுத் தலைவரும், விடுதலை நாளன்று பிரதமரும் தில்லியில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். ஆனால், மாநிலத் தலைநகரங்களில் இந்த இரண்டு நாட்களிலும் ஆளுநரே தேசியக்கொடியினை ஏற்றி வந்தார்.

1969 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 5 அன்று கலைஞர், “விடுதலை நாள் விழாவில் மாநிலத் தலைநகரங்களில் தேசியக்கொடியேற்றும் உரிமையை முதலமைச்சர்களுக்கு வழங்க வேண்டும்" என்று நடுவண் அரசுக்குக் கோரிக்கை விடுத்தார். பிரதமர் இந்திரா காந்தியும் இதனை ஏற்றார். 1974 ஆகஸ்ட் 15 அன்று, புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் கலைஞர் கொடியேற்றினார்.

இந்தியாவில் உள்ள முதலமைச்சர்கள் இந்த உரிமையை இன்று பெற்றிருப்பது கலைஞராலேயே !

தொடர்புடைய இணைப்புகள்:

https://www.thehindu.com/news/national/tamil-nadu/karunanidhi-secured-a-precious-right-for-all-the-chief-ministers/article24548803.ece

https://www.indiatoday.in/amp/india/story/karunanidhi-independence-day-national-flag-1308750-2018-08-08

#திராவிடம் அறிவோம் (72)

தமிழ்நாட்டில் தொழில் கல்வி நிலையங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக நடைபெற்று வந்த பொது நுழைவுத் தேர்வை நீக்கி, தமிழக சட்டப்பேரவையில் 06.12.2006 அன்று, அன்றைய முதல்வர் கலைஞரால் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கிராமத்து மாணவர்களும், நகரங்களில் வாழும் ஏழை மாணவர்களும் பயன்பெறுவதற்காகவே பொது நுழைவுத் தேர்வு நீக்கப்பட்டது.

தொழிற்கல்வி நிலையங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக நடைபெற்று வந்த பொது நுழைவுத் தேர்வை நீக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு தான்.

#திராவிடம் அறிவோம் (71)

28.2.1929 அன்று அருப்புக்கோட்டை அருகேயுள்ள சுக்கிலநத்தம் எனும் சிற்றூரில்தான் முதன் முதலாகப் பார்ப்பனப் புரோகிதர் இல்லாமல் சுயமரியாதைத் திருமணம் அரங்கேறியது. ஒரே திருமண மேடையில் 3 சுயமரியாதைத் திருமணங்கள் நடந்தன. இதிலே இரண்டு திருமணங்களில் ஒரே கணவன்- இரண்டு மனைவிகளைத் திருமணம் செய்து கொண்டார்கள்; தந்தை பெரியார் முன்னின்று நடத்திய அத்திருமணத்தில் மறைந்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், ஜெ.எஸ்.கண்ணப்பர்; பட்டுக்கோட்டை அழகிரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.


#திராவிடம் அறிவோம் (70)

திராவிடம் என்ற சொல்  பல நூறாண்டுகளாய்ப் பயன்பாட்டில் உள்ளது.

கி.மு.முதல் நூற்றாண்டிலே மனுஸ்மிருதி, பத்தாம் அத்தியாயத்தில், 43,44 ஆவது சுலோகத்தில் திராவிட என்ற சொல் கையாளப்பட்டுள்ளது.

”ஜாதி தர்மத்தை அனுசரிக்காதவர்களுக்குப் பிறந்தவர்கள் திராவிடர்கள்….திராவிட தேசத்தை ஆண்டவர்கள் சூத்திரர்கள்” என்கிறது மனுஸ்மிருதி.

கி.பி.17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவர் எழுதிய, “கல்லாத பேர்களே நல்லவர்கள்” என்னும் பாடலில் திராவிடம் என்ற சொல் மொழியைக் குறிக்க ஆளப்பட்டுள்ளது.

திருஞானசம்பந்தர் ‘திராவிட சிசு’ என அழைக்கப்பட்டார். இங்கு திராவிடம் என்பது தமிழைக் குறிக்கப்பயன்பட்டது.

1856 இல் வெளியிடப்பட்ட கால்டுவெல் என்பவரின் ‘திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம்’ (A Comparative Grammar in Dravidian or South Family of Languags) என்ற நூலிற்குப்பின்னரே திராவிடம் என்ற சொல் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தது.

--

ஆரியர்கள் இங்கு நுழையும் முன்னர் இங்கு வாழ்ந்த நாகர் இன மக்கள் "திராவிடர் "
என்கிறார் டாக்டர் அம்பேத்கர். இது கி.மு. 1500 க்கு முன்னர்.

தமிழ் எழுத்தின் முதல் வடிவம் " திராவிடி" என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன். இதை "லேனா " அல்லது "குகை எழுத்து " என்றும் அவர் கூறுகிறார். திராவிடத்தின் தொன்மைக்கு இவையும் சான்றாக நிற்கிறது.

--

திராவிடர்கள், நாகர்கள் என்பது ஒரே மக்களின் வெவ்வேறு பெயர்களே என்பதை ஒப்புக்கொள்ள வெகுசிலரே தயாராக இருப்பர் என்பதை மறுக்கமுடியாது; அதேபோன்று திராவிடர்கள் நாகர்களாக தென்னிந்தியாவில் மட்டுமன்றி இந்தியா முழுவதிலும் தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் பரவியிருந்தனர் என்பதையும் சிலரே ஒப்புக்கொள்வர். ஆயினும் இவை வரலாற்று உண்மைகள் என்பதில் ஐயமில்லை.

- அண்ணல் அம்பேத்கர்

(நூல்: அம்பேத்கர் - இன்றும் என்றும்)

#திராவிடம் அறிவோம் (69)

அரசியலில் நுழைவதையும், அந்த நுழைவிற்குத் தேவைப்படும் வாக்காளர்களின் வாக்குகளையும் அவர்களைத் திருப்திப்படுத்துவதற்கு வேண்டிய மத, சாதி உணர்வுகளையும் அலட்சியப்படுத்தக்கூடிய ஒரே தலைவராகப் பெரியார் விளங்கினார்.


தமிழகத்தின் சட்டமன்ற அரசியலைத் தீர்மானிக்கும் எண்ணிக்கைப் பலம் வாய்ந்த ஒரு சமூகத்தினரின் தலைவரின் ஆதிக்க சாதி மனப்பான்மையைத் துணிச்சலுடன் கண்டிக்கவும், தாழ்த்தப்பட்டோருக்கு உறுதுணையாக, தார்மீக ஆதரவு கொடுக்கக் கூடியவராகவும் அவரால் இருக்க முடிந்தது.


1957 ஆம் ஆண்டு, முதுகுளத்தூர் பகுதியில் நடந்த சாதிக்கலவரங்கள் தொடர்பாகப் பெரியார் மேற்கொண்ட நிலைப்பாடு இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

முத்துராமலிங்கத் தேவர் மீது பெரியாருக்குத் தனிப்பட்ட பகை ஏதும் இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் 1937-39 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது அவர் கைது செய்யப்பட்டதைக் ‘குடி அரசு’ கண்டனம் செய்திருக்கிறது.

 முதுகுளத்தூர் கலவரத்தின் போது, காமராசர் அரசாங்கம் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகள் கலவரம் பரவாமல் தடுத்தன. தேவர் கைது செய்யப்பட்டார். அரசியல் கட்சிகள் அனைத்தும் தேவர் கைதைக் கண்டனம் செய்த நிலையில், சட்டமன்ற அரசியலில் பங்கேற்காத பெரியார் மட்டுமே தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாகப் பேசிய ஒரே தலைவராகத் திகழ்ந்தார்.

“முன்கூட்டியே முத்துராமலிங்கத் தேவரைக் கைது செய்திருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகி இருக்குமா? இவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டிருக்குமா? இத்தனை ஆதிதிராவிடர் குடும்பங்கள் ஊரை விட்டு வெளியேறி இருக்குமா?

(விடுதலை தலையங்கம் 04.10.1957)

#திராவிடம் அறிவோம் (68)

"உலகத்தில் நாத்திகத் தத்துவம் குறித்து இத்தனை நூல்கள் எழுதிய வகையிலோ, வெளியிட்ட வகையிலோ பெரியாருக்கு ஈடு இணை எவருமிலர்".

விடுதலைப் போராட்டத்தின் புரட்சியாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்தவருமான எம்.என்.ராய் கூறியது இது.

1944 ஆம் ஆண்டு தந்தை பெரியார் வட நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, எம்.என்.ராய் ஏற்பாடு செய்த Radical Democratic party Conference மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவரை வரவேற்று எம்.என்.ராய் பேசியது இது

#திராவிடம் அறிவோம் (67)

1856 இல் கால்டுவெல் எழுதி வெளியிட்ட 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற அரிய ஆய்வு நூலுக்கு நாற்பதாண்டுகளுக்கு முன்னரே, 1816 - ஆம் ஆண்டு 'திராவிட மொழிக் குடும்பம்' என்ற கருத்தாக்கத்தைக் கண்டுணர்ந்து உலகுக்கு வெளிப்படுத்தியவர் எல்லீஸ்.
          
எல்லீசன் என்று தமிழ் ஒலி மரபுக்கேற்பத் தம்மை அழைத்துக் கொண்ட பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.

சென்னை அரசாங்கத்தில், வருவாய் வாரியச் செயலாளர், நிலச்சுங்க அதிகாரி, சென்னை மாவட்ட ஆட்சியர் எனப் பல பதவிகளை வகித்தவர். தம் பொறுப்பிலிருந்த அரசாங்கத் தங்கசாலையில் திருவள்ளுவரின் உருவம் பொறித்த தங்க நாணயங்களை வார்த்த பெருமைக்குரியவர் எல்லீஸ்.


#திராவிடம் அறிவோம் (66)

72 ஆண்டுகளுக்கு முந்தைய கருஞ்சட்டை மாநாடு.

திருச்சியில் 1945 ஆம் ஆண்டு திராவிடர் கழக மாகாண மாநாடும் சுயமரியாதை மாநாடும் நடைபெற்றன. அம்மாநாட்டில் கருஞ்சட்டைப் படையொன்றை (தொண்டர் படை) அமைப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.

மாநாட்டின் தீர்மானத்திற்கேற்ப கருஞ்சட்டைப் படை 10.10.1945 அன்று உருவாக்கப்பட்டது.

சென்னையில் 10.2.1946 அன்று கருஞ்சட்டைப் படையினரின் அணி வகுப்பு நடத்தப்பட்டது.

பெரியாரும் அவரது தோழர்களும் 11.5.46 அன்று மதுரையில் திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டைப் படை மாநாட்டை நடத்தினர். 50,000 பேர் கலந்து கொண்ட அம்மாநாட்டையொட்டி நடத்தப்பட்ட பேரணியில் 20,000 பேர் பங்கேற்றனர். அப்பேரணியில் பெரியார், அண்ணா, எஸ்.ஆர்.காந்தி அம்மையார், இரா.நெடுந்செழியன் ஆகியோர் சாரட்டில் வந்தனர். ஈ.வெ.கி.சம்பத், க.அன்பழகன், இளம்வழுதி ஆகியோர் தொண்டர் படைத் தளபதிகளாகச் செயல்பட்டனர்.

அம்மாநாட்டுப் பந்தல் குண்டர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. மாநாட்டில் பங்கேற்றோர் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடந்தன. கருப்புச் சேலை அணிந்த ஒரு பெண் தோழர் நிர்வாணமாக்கப்பட்டார்.

ஏ.வைத்தியநாத அய்யர்தான் வன்முறையாளர்களுக்குப்  பணம் கொடுத்துத் தூண்டிவிட்டார் என்ற சந்தேகம் ஏற்பட்டதாக "குடி அரசு" (18.5.1946) எழுதிற்று.

#திராவிடம் அறிவோம் (65)

நீடாமங்கலம் சாதியக் கொடுமை நடைபெற்ற நாள் இன்று.

28.12.1937 அன்று பழைய தஞ்சை மாவட்டம், நீடாமங்கலத்தில் ‘தென்தஞ்சை ஜில்லா காங்கிரசின் 3-வது அரசியல் மாநாடு’ நடைபெற்றது.
மாநாடு அன்று பிற்பகல் சமபந்தி விருந்து நடந்தது.
சாதி, மத பேதமின்றி யாவரும் வரலாம் என்று மீண்டும் மீண்டும்  அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்பேரில் அங்கு வேடிக்கை பார்க்க நின்றிருந்த விவசாயக் கூலித்தொழிலாளர்களான தாழ்த்தப்பட்ட மக்கள் சிலர் மாநாட்டு விருந்தில் அமர்ந்து உணவருந்தினார். ஆனால் உணவருந்திக் கொண்டிருந்தபோதே அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அதற்கு மறுநாள் அவர்கள் வேலை பார்க்கும் பண்ணைகளுக்கும் தகவல் தரப்பட்டு, அங்கும் அவர்கள் தாக்குதலுக்குள்ளாயினர்.

 மரத்தில் கட்டிவைத்து உதைத்தும் மொட்டை அடித்தும் சாணிப்பாலை வாயில் புகட்டியும் கரும்புள்ளி – செம்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டும் அவர்கள் இழிவுபடுத்தப்பட்டனர். சுமார் 20 பேர் இத்தாக்குதல்களுக்கு உள்ளானார்கள்.

 இவ்வன்முறை நிகழ்விற்குச் சுயமரியாதை இயக்கம் உடனே எதிர்வினையாற்றியது. சுயமரியாதை இயக்க நாளேடான ‘விடுதலை’ யே இதனை முதன்முதலாக வெளியுலகிற்குக் கொண்டுசென்றது. ‘விடுதலை’ ’குடி அரசு’ இதழ்கள் இரண்டும் இணைந்து சுமார் ஆறுமாத காலத்திற்கும் மேலாக இந்த வன்நிகழ்வை மாகாணத் தமிழ் மக்களின் பேசுபொருளாக ஆக்கின.

மேலும், வன்முறைக்கு ஆளான தாழ்த்தப்பட்ட மக்களில் சிலரை இவ்வியக்கம் பாதுகாத்தும் வந்தது. இவற்றின் காரணமாக ஒரு தரப்பினரின் கோபத்துக்கு ஆளாகி, நீதிமன்ற வழக்குகளையும் சந்தித்தது ‘விடுதலை’ ஏடு.


#திராவிடம் அறிவோம் (64)

மிழ்மொழியைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒரு நூற்றாண்டு காலமாகத் தமிழ்நாட்டில் இருந்து வந்தது.

1918 மார்ச் 18 ஆம் நாள், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற புலவர்கள் கூட்டத்தில் சென்னை பல்கலைக்கழகம் தமிழ்மொழியைச் செம்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடு விடுதலை அடைந்த பின்பே, தமிழ்மொழியைச் செம்மொழியாக மைய அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

மறைமலை அடிகள், அப்பாதுரையார், தேவநேயப் பாவணர் முதலிய தமிழறிஞர்கள் இக்கோரிக்கையை வலியுறுத்திக் கட்டுரைகள் எழுதினர். பல்வேறு தமிழ் அமைப்புகள் தீர்மானங்களை நிறைவேற்றி மைய அரசுக்கு அனுப்பின. ஆனால், கலைஞர் வலியுறுத்தத் தொடங்கிய பின்பே இக்கோரிக்கைக்கு வலு சேர்ந்தது.

1996இல் முதலமைச்சர் கலைஞர் தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவிக்கக்கோரி மைய அரசுக்குக் கடிதம் எழுதினார். அக்கடிதத்தை மைய அரசு மைசூரில் உள்ள இந்திய மொழிகள் மைய நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தது. அந்நிறுவனம் அறிஞர்களுடன் கலந்தாய்வு செய்த பின்னர், தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்கலாம் என்று மைய அரசுக்குப் பரிந்துரை செய்தது.

1999 சனவரி 16 ஆம் நாள், சென்னையில் நடைபெற்ற திருவள்ளுவர் நாள் விழாவில் பேசிய முதலமைச்சர் கலைஞர், “தமிழ் செம்மொழியா? இல்லையா? என்ற விவாதம் இனிமேலும் தேவையில்லை. தமிழ் செம்மொழிதான்! மைய அரசு அதை உடனடியாக அறிவிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, 2003 ஏப்ரல் 22ஆம் நாள், கலைஞர் பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதினார்.

 2004 மே 27 ஆம் நாள், பிரதமர் மன்மோகன் சிங் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குறைந்த அளவுப் பொதுச்செயல் திட்டத்தை வெளியிட்டார். கலைஞர் வலியுறுத்தியதற்கிணங்கத் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படும் என்ற கோரிக்கை அத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. அதன்படி, 2004 செப்டம்பர் 17 ஆம் நாள் நடைபெற்ற மைய அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஆணையை மைய அரசு 2004 அக்டோபர் 12 ஆம் நாள் வெளியிட்டது.

#திராவிடம் அறிவோம்(63)

மீனாம்பாள் சிவராஜ் – பிறந்த நாள் (26.12.1904).

சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலின பெண் துணை மேயர்;

இந்தி எதிர்ப்புப் போராளி;

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வல்லமை பெற்றவர் போன்ற பல்வேறு சிறப்புகள் உடையவர் மீனாம்பாள் சிவராஜ்.


1938 ஆம் ஆண்டு நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில்தான் பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த மாநாட்டுப் பந்தலிலேயே மூன்றாம் நாள் இறுதியில் ஆதிதிராவிடர் மாநாடு நடத்த மீனாம்பாள் சிவராஜ் நீதிக்கட்சித் தலைவர்களிடம் ஒப்புதல் பெற்று நடத்தினார். அவருடைய பிறந்தநாள் இன்று.

இணைப்பு: நீதிக்கட்சி பவள விழா மலரில் வெளிவந்த அவருடைய பேட்டி.

http://dalitshistory.blogspot.com/2016/03/blog-post_22.html?m=1



#திராவிடம் அறிவோம் (62)

(25.12.2018) இன்றிலிருந்து சரியாக 44 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவையே பரபரப்புக்கு உள்ளாக்கிய அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அது இராவண லீலா. அந்த நிகழ்ச்சிக்குக் காரணம் என்ன?

அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவரான பக்ருதீன் அகமது அலி மற்றும் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோருக்கு அன்னை மணியம்மையார் 26.10.1974 அன்று ஒரு தந்தி அனுப்பினார்.

‘திராவிட மாவீரன் இராவணனை எரிக்கும் இராமலீலா நிகழ்ச்சியில் தாங்கள் பங்கு கொள்வது மதச்சார்பின்மை கொள்கைக்கு முரணானது மட்டுமன்று. பல இலட்சக்கணக்கான திராவிட மக்களை, அவமானப்படுத்தி ஆத்திரமூட்டும் செய்கையுமாகும். எனவே, இந்நிகழ்ச்சிக்குச் செல்லக்கூடாது. மீறியும் அதில் பங்கு கொள்வீர்களானால், இலட்சக்கணக்கான திராவிட மக்கள் தமிழ்நாடெங்கிலும் இராமன் உருவத்திற்குத் தீயிட்டுக் கொளுத்த நேரிடும்’ என்பதுதான் அது.

எனினும், மணியம்மையாரின் குரலுக்கு குடியரசுத் தலைவரோ, பிரதமரோ செவிமடுக்கவில்லை. மருத்துவமனையில் இருந்த மணியம்மையார் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். நிகழ்ச்சியை நிறுத்துமாறு செய்யப்பட்ட எல்லா நடவடிக்கைகளையும் மீறி உறுதி தளராமல் இராமன், சீதை, இலட்சுமணன் ஆகிய உருவங்களுக்கு 25.12.1974 அன்று தமது கையாலேயே தீயிட்டார் அன்னையார். கைதும் செய்யப்பட்டார்.

    அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு நடந்த நாள் இன்று.