Monday, April 02, 2018

சாயல்குடி

சாயல்குடி என்ற கிராமத்தை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அது  ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடி வழியில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்த ஒரு குக்கிராமம். தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு பட்டிக்காட்டிற்கான எடுத்துக்காட்டு - மின் வசதியில்லை, பெண்கள் மைல்கணக்கில் மொட்டை வெயிலில் தலையில் பானைகளை சுமந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு வரவேண்டும்... இந்த கிராமமும் கிராம மக்களும் ஏழைகளை  விட ஏழ்மையில் வாழ்பவர்கள். இந்த கிராமம் வழியாக இந்தியன் ஆயில் கம்பெனி ஒரு எரிவாயு குழாய் (கேஸ் பைப்லைன்) பதிக்க முயற்சி செய்தது. ராமநாதபுரத்திலிருந்து இயற்கை எரிவாயு தூத்துக்குடிக்கு அனுப்பி ஏற்றுமதி செய்வது திட்டம். அந்த கிராமத்தின் வாழ்க்கையே மாற்றி அமைக்க வல்ல ஒரு திட்டம். 100 கிமீக்கு அதிகமான குழாய், சுற்றுவட்டாரத்திலுள்ளவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் திட்டம். ஆனால் நடந்தது என்ன?  போராட்டங்கள் வெடித்தன, கிராம மக்கள் ஆய்வாளர்களை முற்றுகையிட்டனர். அரசாங்கம் மக்களின்  கேள்விகளுக்கு பதிலளிக்க கூட்டிய கூட்டங்களை கிராம மக்கள் நடைபெறவிடாமல் தடுத்து விட்டனர். போராட்டங்கள் எல்லாவற்றுக்குமே போலியான காரணங்களும் அறிவியலுண்மையற்ற சாக்குகளும் காரணமாக கூற பட்டன. குழாய் பதிப்பு வேலைகள் அடியோடு நிறுத்தப்பட்டன. எதிர்ப்பு கலாச்சாரம் தமிழ்நாட்டில் நாளுக்கு  நாள் பெருகிக்கொண்டே வருகிறது. நம் மாநிலத்துக்கு ஏற்பட்டுள்ள பெரிய, மோசமான விஷயம் இதுவாகத்தான் இருக்கும். தமிழ்நாட்டின் தொழில்துறை இந்தியா மட்டுமல்ல உலகமெங்கும் பெருமைக்குரியதாக இருந்தது. ஆனால் அந்த பெருமையெல்லாம் ஒன்றுமில்லாமல் போய் கொண்டிருக்கிறது.

இவ்வளவு நடந்தாலும் வழுதூர் ப்ளான்டில் மட்டும் போராட்டம் நடக்கவே நடக்காதே ஏன் தெரியுமா? அதற்கு நிலம் கொடுத்து ஒப்பந்தம் பெற்று வாழ்ந்து கொண்டிருப்பது நாம் தமிழர் இயக்க முக்கிய புள்ளி. இந்த மாதிரி ஆட்கள்தான் பல போராட்டங்களுக்கு பின்னணி. தீமைனா சரி. ஆனால் அரசியலால்?