Tuesday, July 11, 2023

மாமன்னன் திரைப்படத்தின் மையப்புள்ளி

*மாமன்னன் திரைப்படத்தின் மையப்புள்ளி*. இடைவேளை முடிந்த பின் வடிவேலு பேசும் dialogue:-


*எனக்கு கிடைத்த கொஞ்ச அதிகாரத்தை என் உரிமைனு நினைக்காம அடுத்தவன் போட்ட பிச்சைனு நினைச்சு காலம் பூராவும் கண்டவன் முன்னாடி நின்னே கழிச்சன் பாத்தியா அதுதான் நான் பண்ணுன பெரிய தப்பு பெரியதப்பு* .


அதற்கு முன் நம் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் உள்ளது.


இங்கே சமூகம் என்பது ஜாதியம் தான்.இந்த ஜாதிய சமூகமாகட்டும், ஜாதிமய பொருளாதாரமாகட்டும் இவற்றில் ஷெட்யூல்டு மக்களுடைய பங்கு (Role & level play ) ஒன்றும் கிடையாது. ஷெட்யூல்டு மக்களிடம் நிலம் கிடையாது,

வியாபாரம் பண்ண முடியாது, தொழில் செய்ய முடியாது (உதாரணம் கடைகள் வைக்க முடியாது, பஸ் போக்குவரத்து வைக்க முடியாது)


இப்படிபட்ட நிலைமை இருப்பதால் தான் ஷெட்யூல்டு மக்களுடைய பங்கு (Role & level play ) தவிர்க்க முடியாததாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் அரசியலில் பங்கு எடுக்க தமது வாழ்க்கை முழுவதும் போராடினார் டாக்டர் அம்பேத்கர்.


அவை, முதலில்,ஷெட்யூல்டு மக்களுக்கு Separate Electorate வேண்டும் என்று போராடி பெற்றார். ஆனால், அது  அறிவிக்கப்பட்ட உடனேயே காங்கிரஸ்-காந்தியால் பறிக்கப்பட்டது.


இரண்டாவது, Joint electorate இரட்டை வாக்குரிமை அதையும் வீணாக்கிவிட்டது  காந்தி-காங்கிரஸ் கம்பெனி. Joint electorate மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷெட்யூல்டு பிரதிநிதிகளையே வாய்பூட்டப்பட்ட நாய்கள் (MUZZLED DOGS) என்றார் டாக்டர் அம்பேத்கர்.  குரைக்கவே முடியாது இதில் எங்கே போய் கடிப்பது.


மூன்றாவது,சுதந்திரத்திற்கு பிறகு Reserve தொகுதி முறை, பார்ப்பன காங்கிரஸ் மற்றும் இதர ஜாதியவாதிகளால் அனுமதிக்கப்பட்ட (permitted)/வரையறுக்கப்பட்ட (limited) அரசியல் அதிகாரம் தான் இந்த Reserve தொகுதி ஆகும்.  இதன் மீது டாக்டர் அம்பேத்கர் பெரிய நாட்டம் வைக்கவில்லை. காரணம்,ஏற்கனவே joint electorate மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் போலத்தான், இந்த Reserve தொகுதி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் இருப்பார்கள் என்றார் டாக்டர் அம்பேத்கர்.


 தங்கள் தொகுதி பிரச்சினைகளை *நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பேசமுடியாது* . இதில் எங்கே போய், தான் *சார்ந்த ஷெட்யூல்டு மக்கள் பிரச்சினைகள் பற்றி  குரல்  எழுப்பமுடியும்* என்றார் *டாக்டர் அம்பேத்கர்* . இது தான் Reserve தொகுதிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட MP,MLA க்கள் நிலைமை.


Reserve தொகுதிகள், ஷெட்யூல்டு மக்களுக்கான தொகுதிகள் கிடையாது. ஷெட்யூல்டு மக்களில் இருந்து பொறுக்கி எடுத்து வாய்பூட்டப் பட்டவர்களே இங்கே ஷெட்யூல்டு மக்கள் பிரதிநிதிகளாக நம்ப வைக்கப்படுகிறோம்.


ஷெட்யூல்டு மக்களுக்கு இருக்கிற குறைந்தபட்ச பாதுகாப்பு தளம் அரசியல்,

அதில் உள்ள ஓட்டுரிமை மட்டுமே. இந்த உரிமை மட்டும் இல்லாமல் போயிருந்தால்  ஷெட்யூல்டு மக்கள் முழுவதும் அழிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகி இருக்கும். 


இதற்காக தான் *Reserve தொகுதி இருந்து விட்டு போகட்டும் என அனுமதித்தார் அம்பேத்கர்* .


மாமன்னன் படத்தில் ஒருமுறை வில்லன் வளர்த்த நாய்களை அவிழ்த்து விட்டு பன்றி தொழுவத்தில் விட்டு பன்றிகளை கடிக்க விடுவான். இறுதியில் தனது கைதுப்பாக்கியை எடுத்து அத்தனை பன்றிகளையும் சுட்டு கொன்று விடுவான்.


 *ஜாதிய நாய்கள் அரசியல் கட்சிகள் யாவும் ஷெட்யூல்டு மக்களுடைய கட்சிகள் இல்லை.* இவர்கள் தங்களுக்கு பிடித்த கட்சியில் இருக்கிறார்கள்.

இந்த கட்சிகளில் அவற்றில் உள்ள ஷெட்யூல்டு உறுப்பினர்களையும், பிரதிநிதிகள் என்று சொல்ல வைக்கப்படுகிற *Reserve தொகுதி MP, MLA க்கள்* மற்றும் இந்த கட்சிகளுக்கு ஒட்டுப்போட்ட மக்களையும் பன்றிகளாத்தான் இந்த கட்சிகள் நடத்துகின்றன.


என்னுடைய *அரசியல் கொள்கை எது,* என்னுடைய *கட்சி* எது என்று தெரியாதவரை *பன்றிகளாகத்தான்* இருக்க முடியும்.


மீண்டும் ஒருமுறை மேலே சொன்ன வடிவேலு டயலாக்கை வாசிக்கவும்


*எனக்கு கிடைத்த கொஞ்ச அதிகாரத்தை என் உரிமைனு நினைக்காம அடுத்தவன் போட்ட பிச்சைனு நினைச்சு காலம் பூராவும் கண்டவன் முன்னாடி நின்னே கழிச்சன் பாத்தியா அதுதான் நான் பண்ணுன பெரிய தப்பு பெரியதப்பு*.


ஜெய் பீம்..