Saturday, March 09, 2019

திராவிட இயக்கம் வந்திருக்காவிட்டால் நம் தாய்த்தமிழின் நிலை

திராவிட இயக்கம் வந்திருக்காவிட்டால் நம் தாய்த்தமிழின் நிலை இப்படியேதான் தொடர்ந்திருக்கும்...
திராவிடத்தால் வீழ்ந்தோம்னு சொல்லும் தமிழ்தேசிய தும்பிகள் போயி கூப்புல உக்காருங்கடா..


SC என்ற பிரிவுதான் அந்த சமூகத்தினரை தரம் தாழ்த்தி விட்டதா?

பட்டியலின வெளியேற்றத்தால் தேவேந்திர குல வேளாளர்கள் வாழ்க்கை தரம் உயர்வாக வாய்ப்புள்ளது என்ற கருத்து பற்றி?.. கிராமங்களில் அவங்க SC ஆளுக என்ற கருத்து பரவலானது... அது பட்டியலின வெளியேற்றத்தால் காலப்போக்கில் மாற வாய்ப்புள்ளது....ஏன் என்றால் SC ஆளுக என்று சொல்லும் சமூக அமைப்பு MBC ஆளுக BC ஆளுக என்று அழுத்தி சொல்வதில்லை.... உண்மையில் SC பட்டியலில் தேவேந்திர குல வேளாளர்கள் சேர்க்கப்பட்டது சரியானது தான்.. அவர்கள் அடைந்த நன்மை அளப்பரியது... இன்னும் ஒரு 100 ஆண்டுகளாவது அந்த சலுகை இருக்கும் பட்சத்தில் அப்பிரிவினர் முன்னேற வாய்ப்புகள் அதிகம் .... உண்மையில் SC என்ற பிரிவுதான் அந்த சமூகத்தினரை தரம் தாழ்த்தி விட்டதா??

என்ன தான் அண்ணல் அம்பேத்கர் அமேரிக்கா வாழ் நபர் என்றாலும் அவர் என்றும் தாழ்த்தப்பட்டவர்தான். இளையராஜா சிந்து பைரவி இசைத்தபின்பு தான் பலர் அவரை இசையில் திறமையுள்ள வர் என இந்து நாளிதழில் கண்டேன் ..ஆக SC என்றவுடன் அவர்களை விட சாதிஏணியில் உயர இருப்போர் என்றும் ஏளனமாக பார்ப்பர்..ஆனால் இதற்கு தீர்வு இல்லை. இது மனித இயல்பு..ரயிலில் முதல் வகுப்பு பயணசீட்டு வைத்திருப்போர் இரண்டாம் வகுப்பினை பார்க்கும் மனநிலை தான். அவர்கள் ' நான் அடிமை இல்லை ' என்று தம் மனம் உயர்த்திக் கொண்டு ..வந்த வாய்ப்பினை பயன்படுத்த வேண்டும்..கிருட்டினசாமி சொல் கேட்கக்கூடாது


SCல இருந்து MBC ஆயிட்டா பள்ளப்பசங்கனு சொல்லுவாங்க அவ்வளவு தான் நடக்கும்


காரணம் MBC ஆகிவிட்டால் PCR Act வராது. அதனால, என்னதான் இவங்க தேவேந்திர குல வேளாளர்ன்னு சொல்லிகிட்டாலும்
அவனுங்க, ஏப்பா அந்தா போற பள்ளன கூப்புடுப்பா,
ஏன் பள்ள தம்பி சவுக்கியமா, ஏல தள்ளி இருல அந்த ஓரமா பள்ளன் உட்காரட்டும் என
்றுதான் ஏளனம் பேசுவான். ஒன்னும் பண்ணமுடியாது.
PCR பாதுகாப்பும் போயிடும். தைரியமா சாதி பேர சொல்லி அசிங்க படுத்துவான்.

ஆமா கேணசாமி நம்ம ஆளுங்க கொஞ்சம் பேரு கிறிஸ்தவனா ஆகி BC யாவே ஆயிட்டான். அவங்கள்ளாம் இப்ப பள்ளகுடியில வாழராங்களா? அவங்க வாழ்க்க தரம் கூடிதான் போச்சா... இல்ல எவனாவது அவங்கள BC ன்னு கூப்புடுறானா?...
ஒத்த எம் பி சீட்டுக்கு (கடைசியில் தென்காசி ரிசர்வு தொகுதியாம்) ஒட்டு மொத்த சமூகத்தயே காவு கொடுக்க துணிந்துவிட்ட இந்த கேணசாமிய நம்பி நம்ம தலமுற அழியனுமா?

மதுரையில் ரயில் வண்டி புறப்படுகிறது...

மதுரையில் ரயில் வண்டி புறப்படுகிறது; காலியாக இருக்கும் அன்ரிசர்வ் கம்ப்பார்ட்மெண்ட்டில் ஒருவர் காலை நீட்டிக் கொண்டு படுக்கிறார். அடுத்ததாக கொடை ரோடு வருகிறது; ரிசர்வ் டிக்கெட் வைத்திருப்பவர்கள் எல்லாம் ஏறுகிறார்கள்; இன்னும் சிலர் அன்ரிசர்வ் கம்ப்பார்ட்மெண்ட்டில் ஏறுகிறார்கள்; ஏற்கெனவே காலை நீட்டிப் படுத்துக் கொண்டிருந்தவரை, அய்யா, காலை மடக்கிக் கொள்ளுங்கள்; நான் உட்கார வேண்டும்'' என்று சொன்னால்,
காலை நீட்டிப் படுத்துக் கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்க்கிறார்; ஒரு அரை மணிநேரம் வசதியாக காலை நீட்டிப் படுத்துக் கொண்டிருந்தவர், யோவ், வேற கம்ப்பார்ட் மெண்டிற்குச் செல்லலாமே; என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய்'' என்பார்.
ஏனென்றால், அரை மணிநேரம் படுத்து அனுபவித்த சுகத்தினை இழப்பதற்கு அவருக்கு மனதில்லை. எதையோ இழந்ததைப் போன்றுதான் அவர் காலை மடக்கிக் கொள்வார். அடுத்தவர்களுடைய உரிமையை மதிக்கவேண்டும் என்பதற் காக அவர் காலை மடக்கி உட்கார மாட்டார்.
அதுபோன்றுதான், இன்றைக்கு முற்பட்டவர்கள் என்று சொல்லக்கூடிய முன்னேறிய ஜாதிக்காரர்கள், காலங்காலமாக அனுபவித்தவர்கள். அவர்களை நாங்கள் ஒன்றும் சொல்ல வில்லை. அய்யா நாங்களும் பயணச்சீட்டு வாங்கியிருக்கிறோம்; எங்களுக்கும் உரிமை இருக்கிறது; கொஞ்சம் எழுந்திருங்கள் என்றவுடன், படுத்திருந்தவர், எதையோ இழந்தது போன்று கூக்குரல் எழுப்புகிறார்.
இதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். அரை மணிநேரம் வசதியை அனுபவித்தவருக்கே அவ்வளவு இழப்பு உணர்ச்சி இருந்தால், ஆயிரக்கணக்கான ஆண்டு களாக அனுபவித்தவர்களே கொஞ்சம் உங்களுடைய உரிமைகளைவிட்டு, எங்களுடைய உரிமைகளை நீங்கள் அங்கீ கரியுங்கள் என்று சொன்னால், சுலபமாக விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
எனவே, இதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். உரிமைக்குக் குரல் கொடுக்கத் தயங்கக்கூடாது. அதற்காக நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்
இந்திய யூனியன் வங்கியின் வெள்ளி விழாவில் தமிழர் தலைவரின் கருத்துரையின் ஒரு பகுதி.
நன்றி. விடுதலை 26.2. 2019

தேவதாசி முறை : நியாயப்படுத்தும் குற்றவாளிகள் !

தேவதாசி முறை : நியாயப்படுத்தும் குற்றவாளிகள் !
பூரி ஜெகன்னாதர் கோவிலில் தேவதாசி முறையை நீட்டிக்க முயற்சிகள் நடந்த 1996-ம் ஆண்டில் புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரை இது. தேவதாசி முறை குறித்த வரலாற்றுப் புரிதலை இக்கட்டுரை ஏற்படுத்துமென்று நம்புகிறோம். படியுங்கள், பகிருங்கள்.
– வினவு
ஜெகன்னாதபுரி, தீண்டாமையை ஆதரித்தும், பெண்கள் வேதம் படிக்கக் கூடாது என்றும், இன்று வரை குரலெழுப்பித் திரியும் பூரி சங்கராச்சாரியின் திருத்தலம். இவ்வூர்க் கோயிலின் தெய்வமான பூரிஜெகன்னாதருக்கு விமரிசையாக நடத்தப் படும் நாபகலிபார் என்ற திரு விழா 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடம் (1996) கொண்டாடப்பட இருக்கிறது.
இவ்விழாவில் ஜெகன்னாதருக்காகக் கதறி அழுது, 10 நாட்கள் விதவையாக வாழும் சடங்கு ஒன்றிற்கு தேவதாசிகள் தேவை. கோவிலின் கடைசி தேவதாசியான கோகிலபிரபா 1993 -ல் மறைந்த போது தனக்கென்று வாரிசாக யாரையும் நியமிக்கவில்லை. தற்போது உயிருடன் வாழும் பரஸ்மணி, சசி மணி என்ற முன்னாள் தேவதாசிகளும் வாரிசுகள் யாரையும் நியமிக்காமல், கோவில் சேவைகளிலிருந்தும் விலகி வாழ்கின்றனர்.
இப்படி தேவதாசிகள் இல்லாமல் போனால் நாபகலிபார் திருவிழாவை எப்படி நடத்துவது? பழி பாவத்துக்கு அஞ்சிய கோவில் நிர்வாகம் உடனடியாக வேலையில் இறங்கியது. பதிவேடுகளைப் புரட் டியது. 1988 -ஆம் ஆண்டில் கஜால் குமாரி ஜெனா என்ற பெண்ணும், அவரது சீடர்களான ஏனைய நான்கு பெண்களும் தேவதாசி சேவைக்கு விண்ணப்பித்திருந்தனர். தூசி தட் டிய விண்ணப்பங்களை 7 ஆண்டுகளுக்குப் பிறகு கையிலெடுத்த நிர்வாகம் ஐவரையும் நேர்காணலுக்கு வருமாறு அழைத்தது.
செப்டம்பர் 11 நேர்காணலுக்கு வந்த பெண்களும், கோவில் நிர்வாகமும் அங்கு குவிந்திருந்த பத்திரிகையாளர்களை எதிர்பார்க்கவில்லை. அவர்களது கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியவில்லை. தொடர்ந்து ஒரு வார காலமாக பல்வேறு பெண்கள் அமைப்புகள், பத்திரிக்கைகள், சில அரசியல் கட்சிகள் என வெளி உலகின் கண்டனங்களை சந்திக்க நேர்ந்த பூரி கோவில் நிர்வாகம் வேறு வழியின்றி முடிவெதுவும் எடுக்காமல் அமைதி காத்து வருகின்றது.
***
இந்த நூற்றாண்டின் (20-ம் நூற்றாண்டு) தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் இருந்ததாக தெரியவருகின்றது. பல நூறு ஆண்டுகள் வலுவாக நீடித்திருந்த தேவதாசி முறை தேவதாசி ஒழிப்புச் சட்டம் மூலம் ஏனைய கோவில்களில் ஒழிக்கப்பட் டாலும் பூரியில் மட்டும் இன்று வரை உயிருடன் உள்ளது ஏன்?
“ஏனென்றால் தமிழ்நாட்டி லும், ஆந்திராவிலும் தேவதாசி முறை விபச்சாரமாகப் பரிணமித்தது போல் பூரியில் நடக்கவில்லை. இங்கு மட்டும் தான் உண்மையாக உள்ளது” என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
முன்னாள் தேவதாசி பரஸ்மணி
எது உண்மை? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன கடைசி தேவதாசி கோகில பிரபா உண்மையில் தனது உறவுப் பெண்கள் இருவரை தத்தெடுத்து தேவதாசியாவதற்குரிய அனைத்துப் பயிற்சிகளையும் அளித்துள்ளார். இருப்பினும் அந்தப் பெண்கள் இருவரும் தேவதாசியாவது அவமானகரமானது என்பதை உணர்ந்து இறுதியில் மறுத்து விட்டனர். மேலும் 1954 , 55 -ல் பூரி கோவில் நிர்வாகத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் போது 30 -க்கும் மேற்பட்ட தேவதாசிகள் கடவுளுக்கு சேவை செய்து வந்தனர். அவர்கள் அனைவரும் சமூக வாழ்க்கைக்குத் திரும்பி விட்டனர். தேவதாசிகளது ஆரம்பமும் முடிவும் வறுமையோடு பிணைந்திருக்கிறது என்பது ஆச்சரியமில்லா உண்மை.
ஒடிஸி நடனத்தைப் பயிலுவதற்காக பூரிக்கு வந்த பிரடரிக் ஏ. மார்க்லின் என்ற பெண் (மனிதவியல் ஆய்வாளர்) அறிஞர், “கடவுளரின் மனைவியர்” என்ற தமது புத்தகத்தில் தேவதாசிகளது வாழ்க்கையை விரிவாக ஆராய்ந்திருக்கிறார். பெற்றோர் தமது பெண்களை தேவதாசிகளாக அனுப்புவதற்குக் காரணம் அவர்களை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து வைக்க இயலாத வறுமையே என்கிறார் மார்க்லின்.
“தேவதாசி சேவைக்காக பெண்களை நாங்கள் அழைத்ததாகக் கூறப்படுவது தவறு. இந்தப் பெண்கள் தாங்களாகவே சேவை செய்ய முன் வந்ததினால்தான் அதைப்பற்றி விவாதிக்க அவர்களை அழைத்தோம். தேவதாசிமுறை தலைமுறை தலைமுறையாக பூரி கோவிலில் இருந்து வரும் முறைதான்” என்கிறார் பூரியின் மாவட்டஆட்சித் தலைவரும், கோவில் நிர்வாக கமிட்டியின் உதவித் தலைவருமான கே.கே. பட்நாயக்.
“இந்து தர்மம்” காக்க பெண்களை ‘சமர்ப்பணம்’ செய்வது அல்லது பலியிடுவது என்பது புதிதல்ல. 1987 -ல் இராஜஸ்தான் மாநிலத்தில் ரூப்கன்வர் என்ற பெண்ணை உடன் கட்டை ஏற்றிக் கொன்ற இந்துத்துவ வெறியர்களின் செயலைக் கண்டு நாடே அதிர்ந்த போது, “சதி”யைப் நியாயப்படுத்தினார் பாரதீய ஜனதாவின் அகில இந்திய துணைத் தலைவர் விஜயராஜே சிந்தியா. பூரியின் ராஜகுடும்ப புரோகிதர் ரமேஷ் சந்ர ராஜகுரு, “நேர்காணலுக்கு வந்த பெண்களிடம் முன்பு ஆடச் சொன்னதாகக் கூறப்படுவது சிலரின் வளமான கற்பனை. 50 ஆண் டுகளுக்கு முன்பே நடனத்தை நிறுத்தி விட்டோம். எவ்வித காரண மும் இல்லாமல் தேவதாசி முறை என்றாலே உடனே விபச்சாரத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்று குமுறுகிறார்.
ராஜகுருவின் கோபத்தை பரிசீலிப்பதற்கு நாம் மன்னர்கள் காலத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். அதற்கு முன்பாக, முன்னாள் தேவதாசியான பரஸ்மணியிடம் ஒரு கேள்வி – ஆண்டவன் முன் நடனம் ஆடுவது பற்றி என்ன கூறுகின்றீர்கள்? “நான் ஜகன்னாதருக்கு மணமுடிக்கப்பட்டவள். தன் கணவனுடன் இரவு என்ன செய்தாள் என்பதை மணமான பெண் ஒருத்தி உலகத்திற்கு எப்படிக் கூற முடியும்?” என்று புன் சிரிப்புடன் மறுக்கிறார். இப்படி நடனம் ஆடுவது தொடருவது மட்டுமல்ல, ஒரு தேவதாசியின் வாழ்க்கை என்பது திறந்த புத்தகமல்ல.
தேவதாசிகளாவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண் வேறெந்த ஆடவருடனும் உறவு வைத்திராத தூய்மை வாய்ந்தவளாக இருத்தல் வேண்டும். பின்னர் அவளுக்கு ஆடல், பாடல், அலங்காரம் உட்பட பல்வேறு கலைகளில் வளர்ப்புத் தாயாரால் (தேவதாசி) பயிற்சி அளிக்கப்படுகிறது. தக்க காலம் வந்த பிறகு அவள் ஜெகன்னாதருக்கு மணமுடிக்கப்படுகிறாள். மணப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு “பொட்டுக் கட்டுதல்” என்றழைக்கப் படும் இந்நிகழ்ச்சி தேவதாசியின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வு. அவள் இறக்கும் போதும் மணப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டே எரியூட்டப்படுகிறாள். இப்படி ஏனைய இந்துப் பெண்களுக்குள்ள ‘விதவை அபாயம்’ தேவதாசிகளுக்கு இல்லையென்றாலும், ஏனைய இந்துப் பெண்களின் மண வாழ்க்கை தேவதாசிகளுக்குக் கிடையாது.
ஒடிஸி நடனக் கலைஞர் சஞ்ஜுக்தா பானிகிரஹி
சனாதனிகளின் பார்வையில் மன்னன் என்பவன் யார்? விஷ்ணுவின் அவதாரம், உயிருள்ள ஜெகன்னாதர்களான மன்னர்களுக்கு செய்யும் அந்தப்புரச் சேவை தேவதாசிகளின் கடமையாகும். ராசராச சோழன் காலத்து தேவதாசிகள் “அரசனின் திருமேனிப் பணியாளராக” அந்தப்புரத்தில் சேவை செய்து வந்தனர் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.
தேவதாசிகளுக்கு பொட்டுக் கட்டும் சடங்கு முதல் அவளது கோவில் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்ற பண்டா என்றழைக்கப்படும் பார்ப்பன புரோகிதனுக்கு செய்யும் சேவை ஜெகன்னாதருக்குச் செய்யும் சேவையைப் போலவே முக்கியத்துவம் உடையது. இதையெல்லாம் சகித்துக் கொள்ளும் தேவதாசி, இவர்களுக்கு அப்பாற்பட்டு வெளி ஆடவருடன் தொடர்பு கொண் டால், மன்னனும், பண்டாவும் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
மன்னர்கள், பார்ப்பனர்கள், பின்னாளில் ஜமீன்தார்கள் என்று உயர்ரக மேட்டுக் குடியினரோடு உறவு கொண்டாக வேண்டிய தேவதாசி அவர்களுடன் பகிரங்கமாக வாழ முடியாது. தேவதாசியின் வாழ்க்கை பட்டு சரிகையைப் போல மின்னினாலும் அதன் பின்னே உள்ள அவலமும், துயரமும், அழுகுரலும் – ஜெகன்னாதர் கோவிலில் நெடிதுயர்ந்து நிற்கும் கருங்கற்களுக்கு மட்டும் தான் தெரியும்.
“அரசாங்கம்; சாராயம், கள் இவைகளை எப்படி வருவாயாகக் கருதி நடத்த வேண்டுமோ அது போலவே பெரும் கோவில்களையும் உண்டாக்கி அரசு வருவாய்க்கு வழி தேட வேண்டும்.” என்று சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் வலியுறுத்துகின்றார்.
பூரியின் முன்னாள் ராஜா திவ்ய சிங் தேவ்
பெருமளவு மக்களின் வாழ்க்கையும், அரசின் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கின்ற நிறுவனங்களாகவே கோவில்கள் இருந்தன. இன்றைய ஐந்து நட்சத்திர விடுதிகளின் சகல வசதிகளும் அன்றைய கோவில்களில் இருந்தன. இதில் ஆடல், பாடல் மூலம் மன்னனை மகிழ்விக்க பார்ப்பனர்களால் நியமிக்கப்பட்டவர்களே தேவதாசிகள்.
பண்டைய கதைகளை இங்கு கிசுகிசுக்க வேண்டாம், தேவதாசி சேவைக்கு நாங்கள் விண்ணப்பத்திருக்கும் காரணங்களை சற்றுக் கவனியுங்கள் எனும் கஜால் ஜெனா என்ன கூறுகின்றார்? “ஐந்து வயதிலேயே கண்ணன் என்னுள் வியாபித் திருப்பதை உணர்ந்தேன். 19 வயதில் தீட்சை பெற்றுக் கொண்டேன். நின்று போன தேவதாசி சேவையை உயிர்ப்பிப்பது கடமை என்று கருதி என் சிஷ்யைகளுடன் விவாதித்தேன். ஏதோ ஒரு வகையில் ஜெகன்னாதருக்கு சேவை செய்ய விரும்பும் எங்கள் பக்தி தனிப்பட்ட விசயம். இவ்வளவு இருந்தும் கடவுளின் முன்பு அநீதியான செய்கைகளைச் செய்வது போல எங்களை ஏன் கோரமாக மதிப்பிடுகிறீர்கள்?”
இல்லை புனிதமாகவே மதிப் பிட முயலுவோம். காலையில் திருப்பள்ளி எழுச்சி, இரவிலே பள்ளியறைப்பாட்டு, மாலையில் கால் வலிக்க நடனம் எதுவானாலும், திரைச்சீலையிட்ட ஜெகன்னாதரின் கருவறைக்கு வெளியே, வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் தான் நடத்த முடியும், தேவதாசி ‘அபவித்ரா’ (தூய்மை இல்லாதவள்) வாகக் கரு தப்படுவதால், பூஜைகள் செய்யும் போது ‘பண்டா’ (பார்ப்பனப் புரோகிதன்) அவள் கையால் குடிநீர் கூடக் குடிக்க மாட்டான், தன்னைத் தொடவும் அனுமதிக்க மாட்டான். உள்ளம் உருக, பக்தி பெருக கீத கோவிந்தம் பாடும் தேவதாசிகளுடைய புனிதத்தின் கதி இதுதான்.
முன்னாள் ராஜாக்கள், ராணிகள், பாரதீய ஜனதாவில் உலாவரும் இந்நாளில் ஜெகன்னாதபூரியின் ராஜா திவ்ய சிங் தேவ் இந்து முன்னணிக் குரலில் ஒரு கேள்வி கேட்கிறார். “கடவுளின் சேவைக்காக வாழ்க்கையைத் துறந்து, தங்களது சொந்த முடிவில் பொருளியல் உலகை மறந்து, பெண்கள் துறவிகளாகவும், சகோதரிகளாகவும் மாறுவது அனைத்து மதங்களிலும் உள்ளதுதான். தேவதாசி முறையும் அத்தகையதுதான்”.
உண்மையில தேவதாசி முறை அத்தகையதல்ல. தேவதாசிகளாவதற்கு நீங்கள் வைத்திருக்கும் தகுதி என்ன? ஆடல், பாடல், அழகுக் கலை, அலங்காரம் இவைதானே? பிறமதத்துப் பெண்கள் துறவறத்தின் மூலம் சமூகத்தின் பாதுகாப்பையும், மதிப்பையும் பெறும்போது, தேவதாசியாக மாறும் பெண்ணோ – பாதுகாப்பின்மையையும், அவமதிப்பையும் பெறுகிறாளே அது ஏன்?
ஆக மன்னர்கள், பார்ப்பனர்கள், அதிகாரிகள் என அனைவரும் தேவதாசிகளுக்காக பேச முற்படும் போது “கலைஞர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா?
இன்று தமிழ்நாட்டு பார்ப்பனப் பெண்களால் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் பரதக் கலை தேவதாசிகளால் தான் வளர்த்து உருவாக்கப்பட் டது என்பதில் உவகை அடைகிறார் இந்தியா டுடே வாஸந்தி. ஒடிசி நட னக் கலைஞர் சன்ஜூக்தா பாணிக்கிரஹியும் இக்கருத்தை ஆதரித்து, தேவதாசி முறையில் எவ்விதத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும், தானே பகுதி நேர தாசி சேவை செய்ய விரும்புவதாகவும் கூறுகிறார்.
அமெரிக்காவை பூலோக சொர்க்கமாக மாற்றியமைப்பதற்கு ஆப்ரிக்க கருப்பர்களைக் கடத்தி வந்த அடிமை முறை உதவி செய்திருக்கிறது என்பதாக நாகரீக உலகின் எந்த ஒரு மனிதனும் கொண்டாட மாட்டான். தேவதாசிகள் காற்சலங்கை கட்டிக் கொண்டு நடனம் ஆடும் போது பாதம்படுகின்ற இடங்களில் உறைந்திருக்கும் ரத்தம் நம்மை உலுக்குகிறது. அதே சமயம் பாதத்தின் பதத்தையும், ஆட்டத்தின் அபிநயத்தையும் மெய்சிலிர்த்து ரசிக்கிறார்கள் வாஸந்தியும், பாணிகிரஹியும்.
***
1930 -களில் தேவதாசி முறையை எதிர்த்துக் கிளம்பிய இயக்கத்தை அறியும்போது வாழையடி வாழையாக சனாதனிகளின் குரல் இன்றைக்கிருப்பது போல் ஒலிப்பதைக் கேட்க முடியும். பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கமும், காங்கிரசாரும் – இந்தியப் பெண்கள் சங்கத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் தேவதாசி முறையை ஒழிக்க போராடி வந்தார்கள்.
1930 -ல் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டுவந்தபோது, இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார் என்பதை முத்துலட்சமி கூறுகிறார். காங்கிரசில் ராஜாஜிக்கு போட்டியான சத்திய மூர்த்தி அய்யர், “இன்றைக்கு தேவதாசி முறையை ஒழிக்கச் சொல்வீர்களானால் நாளைக்கு பார்ப்பனர்களை அர்ச்சகராக்குவதையும் எதிர்க்கலாம். தேவதாசிகளை ஒழித்துவிட்டால் பகவானின் புண்ணிய காரியங்களை யார் செய்வார்” என்று வாதிட்டார்.
“பகவானுடைய புண்ணியத்தை இதுவரை எங்கள் குலப் பெண்கள் பெற்றுவந்தனர். வேண்டுமானால் இனி அவரது (சத்திய மூர்த்தி அய்யர்) இனப்பெண்கள் அந்த புண்ணியத்தை ஏற்றுக்கொள் ளட்டுமே? அது என்ன எங்கள் குலத்திற்கே ஏகபோக காப்பிரைட்டா?” என்று திருப்பிக் கேட்டார் முத்துலட்சுமி ரெட்டி.
இந்துத்துவ முகங்களில் மிதவாதத்தை காங்கிரசும், தீவிரவாதத்தை பாரதீய ஜனதாவும் இன்றைக்கு பிரதிநித்துவம் செய்வது போன்று அன்றைக்கு ராஜாஜியும், சத்தியமூர்த்தியும் விளங்கினார்கள்.
இச்சூழலில்தான் 1883-இல் தாசி குலத்தில் பிறந்து, இளவயதிலேயே பொட்டுக் கட்டப்பட்டுவிட்ட இராமாமிர்தம் அம்மையார், தன் சொந்த அனுபவங்களைக் கொண்டு, தேவதாசி ஒழிப்பை வலி யுறுத்தி “தாசிகள் மோசவலை” எனும் நாவலை மிகுந்த சிரமத்துக்கிடையில் 1936 -இல் வெளியிட்டார்.
***
20 -ம் நூற்றாண்டிலும் இந்துத்துவம் தனது வருணாசிரம நெறியை இருத்திக் கொள்ள மூர்க்கமாக முயலுகிறது. பாபர் மசூதி இடிப்பு, பிள்ளையார் பால் குடித்த புரளி, என ஒவ்வொன்றிலும் “ஹிந்து எழுச்சி ஆரம்பித்து விட்டது” எனக் கும்மாளமிடும் இந்தக் கும்பல்தான் தேவதாசி முறையை நியாயப்படுத்தும் நபர்களின்-கருத்துக்களின் அடித்தளம்.
அந்த அடித்தளத்தை தகர்க்க 60 ஆண்டுகளுக்கு முன்பு “தாசிகள் மோசவலை” என்ற தனது நாவல் மூலம் வழி காட்டுகிறார் இராமமிர்தம் அம்மையார். அவரது ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு சுரணையூட்டும்.
நாவலில் இருந்து, “ஒரு குறிப்பிட்ட பெண் சமூகத்தை விபசாரத்துக்குத் தயார் செய்துவைத்திருப்பது இந்நாட்டு ஆண் சமூகத்தின் மிருக இச்சைக்குதக்க சான்றாக இருக்கிறது. பகுத்தறிவும் நாகரீகமும் வளர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் தேவதாசி முறையை ஒழிப்பது சாஸ்திர விரோதம், சட்ட விரோதம், கலை விரோதம் என்று கூக்குரல் கிளப்பும் சாஸ்திரிகளும், தலைவர்களும் இருப்பது மானக்கேடாகும். தேவதாசி முறைக்கு அடிப்படையாக இருக்கும் கடவுள், மதம், ஸ்மிருதி, ஆகமம், புராணம் ஆகியவைகளை முதலில் ஒழிக்க வேண்டும். இவைகளை ஒழித்து விட்டால் தேவதாசிக் கூட்டம் இருப்பதற்கே நியாயமிருக்காது.” என அறிவோம் அரசியல் தெளிவோம்.
-இளநம்பி
( புதிய கலாச்சாரம், பிப்ரவரி – 1996 )

நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன்

நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் மறைவுற்று ஒரு ஆண்டுகள் ஆகிவிட்டது (28.2.2018). தன்னடக்கம், மனித நேயம் என்ற சிறப்பான குணங்களை தன்னகத்தே கொண்டு அனைவரிடத்திலும் அன்பு செலுத்திய பெருமகன்.
இன்றைக்கு இந்தியா முழுமையும், பெரும்பான்மை மக்களாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள், மத்திய அரசின் வேலை வாய்ப்பில் 27 இட ஒதுக்கீடு பெறுவதற்கு, உச்ச நீதிமன்றத்தில் அவர் அளித்த தீர்ப்புதான் வழிவகுத்தது என்பது மிகையல்ல.
அரசமைப்புச் சட்டத்தின் 340-விதியின்படி அமைக்கப்பட்ட மண்டல் குழு அறிக்கையின் பரிந்துரையில் ஒன்றான, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு எனும் ஆணையை, அன்றைய பிரதமர், சமுக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் 7.8.1990 அன்று பிறப்பித்தார்.
அந்த ஆணையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பளித்தது. அதில், நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும் என்று பல சான்றுகளுடன் அளித்த தீர்ப்புதான், பெரும்பான்மை தீர்ப்பாக மாறுவதற்கும், அதன் காரணமாக, உரிமை மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள், மத்திய அரசின் பணிகளில் இட ஒதுக்கீடு பெறவும் முடிந்தது.
244 பாராக்கள் கொண்ட, நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அளித்த தீர்ப்பு (16.11.1992), திராவிடர் இயக்கத்தின் சமுக நீதிக் கோட்பாட்டின் மீது அவர் கொண்ட நம்பிக்கையையும், உணர்வையும், ஆழத்தையும், வெளிப்படுத்தியது.
இந்த இட ஒதுக்கீடு ஆணை, பாரத் ரத்னா பி.ஆர்.அம்பேத்கர், தந்தை பெரியார், ராம் மனோகர் லோகியா ஆகியோரது கனவை நனவாக்கும் செயல் என வி.பி.சிங் நாடாளுமன்றத்தில் கூறிய வார்த்தைகளை, தனது தீர்ப்பில் கூறி, தான் யார் என்பதையும் வெளிக்காட்டினார்.
அடுத்து Second Judges Case வழக்கிலும் (6.10.1993), மகளிர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டோரின் பிரதிநிதித்துவம், நீதித்துறையில் வேண்டும் என்ற தீர்ப்பை அளித்தார்.
தற்போது, சமுக நீதிக்கெதிரான நிலைப்பாடுகளை மத்திய அரசு எடுத்து வரும் நிலையில், அதனை எதிர்த்து, நீதிமன்றத்தில் வாதாடும்போது, நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்கள், இட ஒதுக்கீடு குறித்து அளித்த தீர்ப்பு, நமக்கு ஆதாரமாகவும், வழிகாட்டுதலாகவும் உள்ளது.
இருப்பினும், நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் போன்று, இன்றைய நீதிமான்கள், அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதல்படி தீர்ப்பளித்து சமுக நீதியைக் காப்பாற்றுவார்களா? என்ற ஏக்கமும் கூடவே இணைகிறது.
அவரின் சமுக நீதிச் சிந்தனைகளை மனதில் ஏந்தி, வெற்றி பெறுவதே, அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த நினைவேந்தலாகும்.
நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்களுக்கு வீர வணக்கம்.


அன்னை மணியம்மையாரின் 100-ஆவது பிறந்தநாள் ஆண்டு தொடக்கம்

இராவண லீலா நடத்தி ஆரியத்தையும், இந்திய தேசியத்தையும் அலற வைத்த அன்னை மணியம்மையாரின் 100-ஆவது பிறந்தநாள் ஆண்டு தொடக்கம். 1920-2019 மார்ச் 10.


The Dravidian Manifesto (2019)

The Dravidian Manifesto (2019)

1. People are equal by birth !

2. Gender Equality

3. Social Justice

4. To reject concepts that do not fit within the rational and scientific framework like God, Religion and associated beliefs such as Soul, Heaven/Hell, Ancient ritualistic practices and upholding ancestry which reeks irrationality.

5. Rationalism, Scientific Attitude, Innovative mindset which questions and accepts/rejects everything around based on evidence.

6. To firmly resist and rile against Political Hinduism (Hindutva) which speaks the language of divisiveness.

7. To accept Science, with a rider that, the application of scientific methods should be for the welfare of the humanity and not against it.

8. To rebel against, dismantle and destroy every form of untouchability, the root cause of every form of untouchability (i.e) Caste, the indomitable defense of caste in form of God, Religion, works of humans like Vedas, Ithihasas, Shastras, Puranas which provide a framework for sustained oppression of humankind and pride associated with parochial and conservative ideas related to ancestry.

9. To ensure the delivery of social justice in an asymmetric and unequal society where rights are denied to vast sections of people - in public and private sector and Government.

10. To ensure the upturn of the status quo wherein Men are viewed as Lord and women as slaves. To establish Gender equality, where women are ensured opportunities to establish themselves as equals to men in education, employment, politics and economic status.

11. Rights to Priesthood which is now restricted to men should be ensured to women, in every religion.

12. Homosexuals and Transgenders should be able to avail every possible right as a citizen of this nation, on the basis that people are equal by birth !

13. There shouldn't be asymmetry between the Urban and the Rural.

14. The status quo in this society to use religion as a tool to ensure inequalities must be overturned. Complete rejection of the literary works and oral traditions of humans, from various time periods and circumstances, to establish hegemony of a few among the many.

15. To ensure the respect of every language of nation groups. To ensure the rejection of possibility when a language is allowed to dominate over another. To allow changes in language keeping in mind the changes in human communication over a period of time with scientific outlook. To ensure National Language status to every language in the 8th Schedule of Indian Constitution in an India, which is a nation with various linguistic groups, while conserving the status of English as the language of communication across India.

16. To ensure that the Nation State takes complete responsibility for the delivery of basic requirements for a human to every citizen of the Nation State. To work towards creation of a reality where the connotation of rich and poor loses meaning. To nurture and establish a mindset of comradery within the society. In short, creation of an equal and just society, which is devoid of discrimination on the basis of Caste, Class and Gender.

17. To establish equality whose nature is devoid of hegemony and bias, in order to ensure rights, possibilities for equal participation and share in wealth to every nation group within a nation, where there are multiple linguistic and nation groups.

18. To ensure establishment of a true secularism in the society, which is not linked to the State and Religion.

19. To ensure proportional representation to every caste in this society in every fora and avenue, until the dissolution of the hegemony of caste in the society.

20. Education is an Universal basic right. To ensure the rejection of the intrusion of literature in syllabus that is against the scientific attitude. To ensure establishment of an educational system which provides space for development of thought clarity and work ethic, in turn equipping students to tackle competition in the present global opportunity landscape, an education system which provides space for inculcation of discipline and respect as a public good; an education which uses hands-on technical abilities and practical knowledge as a criteria to evaluate ones learning over rote learning ability; an education system which has in its heart the catalytic nature of technology, which is grounded in science.

21. To work for the creation of laws, which is equidistant to believers and non-believers, with the conservation of the right to evangelize.

22. To ensure a nurturing environment during early childhood for every child, with focus on environment, nutritious food, sanitation, development of critical mental and physical abilities and good habits.

23. To ensure empathetic treatment of elders with respect and dignity.

24. Protection of environment and natural resources.

25. To allow people of age, 20 years and above, to make independent decision about their marriage. To ensure establishment of a reality, wherein marriage is devoid of external compulsion and intervention. To ensure that, the women have a final say in decisions related to child birth.

26. To abolish death sentence.

27. To establish a reality wherein there is no restriction on expression and evangelization/propaganda.

28. An art is created for the sake of art, is a standpoint which cannot be unaccepted. An art should have a constructive utility, with humanism and self-respect ingrained.

29. Everyone should have the opportunities for everything, with the possibilities for unceasing, sustained movement in the material reality of the society

30. An individual does not owe his creation to himself. Hence, one should not live for oneself but to serve for the society.

31. To eschew from indulgence in luxury - To uphold frugal living.

32. Humans are endowed with rationalism - a virtue which should lead to brotherhood and equality - a cordial relationship that should be between individuals, beyond the kinship of blood.

33. Let an equal world emerge - Let a world where self respect is ingrained emerge - A life with self respect is a full life - Let Human be at the heart and the God be forgotten.

All towns are our own, everyone our kin, the world is our family - Let our actions provide the essential and conscious nudge towards such a cultural and social evolution.

Let our journey and plans be drawn to ensure the creation of a radical, brave new world which is devoid of hatred, hegemony, encroachment - Let a healthy and a vibrant new world emerge.

K. Veeramani.

President, Dravidar Kazhagam (Association for Dravidians)

Thanjavur

23.2.2019

- translated by Jeyannathann Karunanithi.

இராமனை வைத்து பிழைப்போர் களவானிப் பசங்களே!

#இராமனை வைத்து பிழைப்போர் களவானிப் பசங்களே!............
- பெருந்தலைவர் கு.காமராஜ்
மேனாள் தமிழ்நாடு முதலைச்சர்
“நீங்க பல தெய்வ வழிபாட்டை வெறுக்கிறீங்களா, இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா?’’ என்று முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கேட்டபோது,
அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல், “லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம்பிச்-சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற போல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட்டான் நம்மாளு. கடவுளுங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிக்கிட்டுதான் இருப்பாரா?
அரேபியாவிலே இருக்கிறவன், ‘அல்லா’ ன்னான், அதுல சன்னி, சியா, சுஃபி, பாகா என்று பல உட்பிரிவுகளையும் உருவாக்கினான். ஜெருசலத்தில் இருக்கிறவன் ‘கர்த்தர்’ன்னான். அதிலேயும் சிலபேரு ‘மேரியக் கும்பிடாதே’ ன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு எட்டு உட்பிரிவுகளை உண்டாக்கிட்டான். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமியச் சொன்னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடிமக்களான திராவிடர்கள் காத்தவராயன், கழுவடையான் முனியன், வீரன்னு கும்பிட்டான்.
எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே என் பேரு இதுதான்னு சொன்னான்? அவனவனும் அவனவன் இஷ்டத்துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுளை உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான். சுருக்கமாக சொல்லனும்னா காங்கிரஸ் _ கம்யூனிஸ்ட் _ தி.மு.க. யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேர்ந்துக்குறான்.
மதம் மனிதனுக்குச் சோறு போடுமா? அவன் கஷ்டங்களப் போக்குமா? இந்தக் குறைந்த பட்ச அறிவுகூட வேண்டாமா மனுசனுக்கு? உலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா, நான் பெரிசான்னு மோதிக்கிட்டு ரத்தம் சிந்துதே! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே!’’ இப்படியெல்லாம் நீரோடை மாதிரி பேசிக்கொண்டே வந்தார். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு அழுத்தமான முடிவை அவர் வைத்திருப்பதைப் பார்த்து நான் வியந்தேன்.
“நீங்க சொல்றதப் பாத்தா, ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளாக்கிட்டானே, அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே?’’ என்ற வினாத் தொடுத்தபோது,
தலைவர் குலுங்கச் குலுங்கச் சிரித்தார். “டேய் கிறுக்கா, நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்?’’
“ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதா பாத்திரம்னேன். அதை எல்லாம் நம்மாளு கடவுளாக்கிட்டான்னேன்! இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயகனுக்குக் கட்அவுட் வைக்கிறா னில்லையா, அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப்பட்ட ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிப்புட்டான். அந்தப் புத்தகங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற விசயங்கள் எடுத்துக்-கனும், ஆசாமிய விட்டுப்புடனும், காலப்-போக்குல என்னாச்சுன்னா, லட்சக் கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டாங்கன்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்-சிட்டான் அரசியல்வாதி. அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறான்னுங்க களவாணிப் பசங்க.
புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சிதான் நம்ம சனங்களை அடிமையா ஆக்கி வச்சிருக்கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான், நவராத்திரி கதையைச் சொல்லி சரஸ்வதி பூசை பண்றான், விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளைச் செஞ்சி சனங்களையும், பாமரசனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான்.
நான் தீபாவளி கொண்டாடுனதுமில்ல, எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல, புதுசு கட்டுனதுமில்ல. பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம். அது நம்ம கலாசாரத்-தோட ஒட்டுன விழான்னேன்’’ என்று விளக்கினார்.
“மதம் என்பதே மனிதனுக்கு அபின், அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடுதான் போலத் தோணுதே?’’ என்ற கேள்விக்கு,
தலைவர், “நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விசயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு மூக்குத்திக்குக் கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில் வைர ஒட்டியானம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கான்; திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம். ரெண்டு பள்ளிக் கூடம் கட்டிக் கொடுக்கலா மில்லையா? அதையெல்லாம் செய்ய மாட்டான். சாமிக்குத்தம் வந்திடும்னு பயந்துகிட்டு  பயமுறுத்தியே வைக்குதே தவிர தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன்’’ என்றார்.
“கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா? இதிலேயிருந்து எப்போ விலகுனீங்க?’’ என்றதற்கு,
“சின்னப் பையனா இருந்தப்போ விருது-நகரிலே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரேபூசை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன். அவர் மொட்டை போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுக்கிட்டேன். அப்பொறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போயும் போயும் கடவுள், தலை முடியத்தானா கேக்குறாரு? எல்லாம் முடி வெட்டுரவன் தொழில் யுக்தின்னு சிந்திச்சேன், விட்டுட்டேன். ஆனா, சஞ்சீவ-ரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பானுங்க. ஆனா ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப்பானா?’’ என்று கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.
“அப்படியானா மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே, அதப்பத்தி?’’ என்று கேட்டதற்கு,
“அடுத்த மனுசன் நல்லாருக்கணும்கிறது தான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை, இதுல நாம சரியா இருந்தா, தெய்வம்னு ஒன்னு இருந்தா, அது நம்ம வாழ்த்தும்னேன்!’’
காமராசர் என்கிற அந்த மனிதாபிமானி என் மனத்தில் அந்த நிமிடமே சிம்மாசனம் போட்டு உட்காருகிறார். சட்டென்று காரை நிறுத்துகிறார். வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டையோ இல்லாமல் நடந்து போன சிறுவர்களைப் பார்த்து “ஏன் பள்ளிக்கூடம் போகலியா?’’ என்கிறார். அவர் இவ்வளவு நேரம் பேசிய பேச்சின் விளக்கம் எனக்குக் கிடைத்து விடுகிறது.
நன்றி: ‘அருட்தந்தையின் அன்புக்குரல்’
(மாத இதழ்)

மகா சிவராத்திரி அன்று உடம்பில் மிகப்பெரிய சக்தி தூண்டுதல் ஏற்படுமாம்

மகா சிவராத்திரி அன்று உடம்பில் மிகப்பெரிய சக்தி தூண்டுதல் ஏற்படுமாம், அதனால் அன்று விழித்திருந்து கொண்டாட வேண்டும், ஈஷாவுக்கு வாருங்கள், சிவனை வழிபடுங்கள், ஆனந்தம் பெறுங்கள் என்கிறார் கார்ப்ரேட் சாமியார் ஜக்கி.

உலக அளவில் அறிவியல் துறை எவ்வளவு வளர்ந்திருக்கிறது, அறிவியல் சிவராத்திரி நாளில் சக்தி தோன்றுகிறது என்பதை ஏற்றுக் கொள்கிறதா? இவை எல்லாமே பொய், புளுகு மூட்டைகள் என்பதை தவிர வேறென்ன,
நம் அன்றாட வாழ்வில் சாதகம், சோசியம் என்ற பெயரில் மற்றும் பல வழிகளில் மக்களளை மூடநம்பிக்கையில் தள்ளி பார்ப்பனிய வர்க்கங்கள் தமது பணப்பெட்டியை நிறைத்துக் கொள்வதற்கான வழி தானே இந்த மகா சிவராத்திரி கொண்டாட்டம். மக்களை சாதிகளாக பிரித்தது இந்து பார்ப்பனியம். இதற்கு மதச் சார்பற்றவராக இருக்க வேண்டிய குடியரசு தலைவர் மத பரப்புரை செய்ய வருகிறார். சாதி எதுவாக இருந்தாலும் பார்ப்பனியத்தை பரப்புவதில் மேல் தட்டு வர்க்கங்கள் ஒன்றாகத் தான் இருக்கிறார்கள் என்பது தான்.

பார்ப்பனிய வர்க்கங்கள் இந்தியா முழுதும் சாதிய ஒடுக்குமுறை, தேசிய இன, மொழி ஒடுக்குமுறைக்கு வடிவமாக இருப்பது தான் இந்த இந்து மதம் என்பது தான். சிவராத்திரி என்பதெல்லாம் பார்ப்பனிய வர்க்கங்கள் மக்கள் மீது உயர்சாதி ஆதிக்கம் செய்வதற்கும் இந்து, இந்தியா என்ற பெயரில் கார்ப்ரேட்கள் பல்வேறு தேசிய இன மக்களை கொள்ளையடிப்பதற்குமான ஏற்பாடே தவிர வேறில்லை.

திராவிடக் கொள்கை அறிக்கை

திராவிடக் கொள்கை அறிக்கை
--------------------------------------------------

திராவிடக் கொள்கை - கோட்பாடு என்பவை -

1. அனைத்து மக்களும் பிறப்பின் அடிப்படையில்

சமமானவர்களே!

2. பாலின சமத்துவம்

3. சமுகநீதி

4. பகுத்தறிவுக்கும், அறிவியல் சிந்தனைக்கும் பொருந் தாத கடவுள், மதம் மற்றும் இவற்றைச் சார்ந்த ஆன்மா, மோட்சம், நரகம், பழக்க வழக்கம், மூடத்தன நெடியேறும் முன்னோர்க் கூற்று உள்ளிட்டவற்றை மறுப்பது.

5. பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை, எதையும் கேள்விக்கு உட்படுத்தி ஆய்வின் அடிப்படையில் ஏற் பதும் அல்லது மறுப்பதுமான புத்தாக்க உருவாக்கம்.

6. பேதம் பேசும் இந்துத்துவா கோட்பாட்டை எதிர்ப்பது.

7. அறிவியலை ஏற்பதுடன், அது மனித குலத்தின் நலனுக்கு - வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கவேண்டுமே தவிர, கேடாக அமையக்கூடாது.

8. தீண்டாமை - அதற்கு மூல வேரான ஜாதி - ஜாதிக்கு அரணான கடவுள், மதம், வேதம், சாஸ்திரம், இதிகாசம், புராணங்களை - பழைமைவாத குலப்பெருமைகளை எதிர்த்து அழிப்பது.

9. ஏற்றத் தாழ்வுள்ள இந்த சமுக அமைப்பில் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு சமுகநீதி வழங்குவது - தனியார் துறை, பொதுத் துறை, அரசுத் துறை அனைத்திலும்.

10. ஆண் எஜமானன் - பெண் அடிமை என்ற தற்போதைய நிலைக்கு மாறாக பாலின சமத்துவம், எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகராக கல்வி, உத்தி யோகம், அரசியல், பொருளாதார நிலைக்கு உத்தரவாதம்.

11. தற்போதைய நிலையில் வழிபாட்டில், அர்ச்சகத் தன்மையில் ஆண்களுக்குள்ள எல்லா உரிமைகளும் பெண்களுக்கும் தேவை - இது எல்லா மதங்களுக்குமே!

12. ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் எல்லா வகைகளிலும் மற்றவர்களுக்குச் சமமானவர்களே என்ற அடிப்படையில் அனைத்து உரிமைகளின் நுகர்வுக்கும் உரியவர்களே!

13. கிராம - நகர பேதம் கூடாது.

14. மதங்களைக் காரணம் காட்டி ஏற்றத் தாழ்வுகளை நிலை நிறுத்தும் போக்கு முற்றாக மாற்றி அமைக்கப்படுதல். எந்தக் காலத்திலோ, யாரோ சூழ்ச்சியாக ஆதிக்கத்தை நிலை நிறுத்த எழுதிக் குவித்த அனைத்தையும் ஒட்டு மொத்தமாக நிராகரித்தல்.

15. ஒவ்வொரு இனத்துக்குமான மொழிக்குரிய மதிப்புப் பேணப்படுதல் - இதில் ஒரு மொழி, இன்னொரு மொழியை ஆதிக்கம் செலுத்துவதற்கு அறவே இடம் தராமை. கால வளர்ச்சிக்கு ஏற்ப மொழியில் விஞ்ஞானக் கண்ணோட்டத்தோடு மாற்றம் கொணர்தல். பன்மொழிகள் கொண்ட இந்தியாவில், இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் எட்டாம் அட்டவணையில் இடம்பெற்ற மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழி என்பது உறுதிப்படுத்தப்படுதல்.

அகில இந்திய அளவில் தொடர்பு மொழி என்பது ஆங்கிலமே!

16. பொருளாதார நிலையில் மனிதனுக்குத் தேவை யான அடிப்படைகள் பூர்த்தி செய்யப்படல்; இதற்கு அரசே முழுப் பொறுப்பு ஏற்றல்; பணக்காரன், ஏழை என்ற பேதத்தைக் குறிக்கும் சொல்லாடலுக்கே இடமில்லாது செய்தல்.

தொழிலாளி - முதலாளி என்ற பேதமின்றி பங்காளி எனும் தன்மை நிலைநிறுத்தப்படுதல்; சுருக்கமாக சொல்லப்போனால், வருண பேதம், வர்க்க பேதம், பாலியல் பேதமற்ற ஒப்புரவு சமுதாயம் உருவாக்கப்படுதல்.

17. ஒரு மொழி, ஓர் இனத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழும் நாட்டில் அனைத்து மொழிகள், இனங்களுக்கான உரிமை, பண்பாடு, பங்களிப்பு, வளங்களுக்கிடையே பாரபட்சமற்ற, ஆதிக்கமற்ற சமன்பாட்டை நிலை நிறுத்துதல்; மாநிலங்களுக்கான தன்னாட்சி உரிமை நிலைப்படுத்தப்படுதல்.

18. அரசுக்கும், மதத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாத உண்மையான மதச்சார்பின்மை நிலைப்பாடு.

19. ஜாதி ஒழிக்கப்படும் காலகட்டம் வரை அனைத்துப் பிரிவினருக்கும் சகல இடங்களிலும், துறைகளிலும் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம்.

20. கல்வி என்பது எல்லோருக்கும் அடிப்படை உரிமை. விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமான எதுவும் கல்வியில் இடம்பெறாமை, வளர்ச்சித் தத் துவம், சிந்தனையூற்றம் - விடாமுயற்சி, ஊக்கம் தரும் தன்மை இவற்றோடு உலகப் போட்டிக்குத் தயாரிப்பான கல்வி முறை, ஒழுக்கம் பொதுச் சொத்து என்ற வார்ப்பு, பாடத் திட்டங்கள்; தகுதி திறமையை அளவிட மனப்பாட மதிப்பெண் முறைக்குப் பதிலாக செய்முறை, வினையூக்கத்தை உள்ளடக்கிய அறிவியல் அடிப்படையில் அமைந்த தொழில்நுட்பம் உள்ள கல்வி முறை.

21. கடவுள் நம்பிக்கைக் கொண்டோர், கடவுள் நம்பிக் கையற்றோர் - இரு நிலையில் உள்ளவர்களுக்கும் பிரச்சார உரிமையுடன் கூடிய சமநிலைச் சட்டங்கள் உருவாக்கப் பாடுபடுதல்.

22. குழந்தை வளர்ப்பில் முழுக்கவனம், உடல், மூளை வளர்ச்சிக்கான உணவு, சூழல், தூய்மை, அறிவுத் தூண்டல், நற்பழக்கம் பேணப்படுதல்.

23. முதியவர்களை அக்கறையுடன் உரிய மதிப்புடன் பாதுகாத்தல்.

24. சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் பாதுகாப்பு.

25. ஆணோ, பெண்ணோ 20 வயதுக்குமேல் எந்த வயதில் திருமணம் செய்துகொள்வது என்பதை அவர் களின் முடிவுக்கே விட்டுவிடுதல்.

திருமணம் என்பதில் வேறு யாருடைய தலையீடோ, குறுக்கீடோ கூடாத நிலை.

வயது அடைந்த ஓர் ஆணும் - பெண்ணும் இணைந்து வாழ்தலில் மூன்றாவது மனிதனுக்கு இடம் என்பது அத்துமீறிய நடவடிக்கையே!

குழந்தைப்பேறு குறித்த முடிவில் பெண்ணுக்கு மட்டுமே பிரத்தியேக உரிமை.

26. மரண தண்டனையை ரத்து செய்தல்.

27. கருத்துரிமை, பிரச்சார உரிமைக்கு தடையற்ற நிலை.

28. கலை கலைக்காக என்பதை ஏற்க இயலாது - மனிதத்தையும், சுயமரியாதைக் கருத்துருவையும் கொண்டதாக ஆக்கப்பூர்வமாக அமைதல் வேண்டும்.

29. அனைவருக்கும் அனைத்தும் அமைந்து, சமுகத் தின் நுகர்வுக்கான விரிந்த இலக்கு நோக்கி நடக்கட்டும் இந்த வையம்.

30. மனிதன் தானாகப் பிறக்கவில்லை - எனவே, தனக்காக வாழக்கூடாதவன் என்ற சமுக நோக்கு - தொண்டறப் பண்பு!

31. ஆடம்பரம் தவிர்ப்பு - சிக்கனப் பெருவாழ்வு!

32. குருதி உறவு என்பதையும் கடந்து மனிதனுக்கு மனிதன் நேச உறவு - சகோதரத்துவம், சமத்துவம் பேணலே மனிதனுக்குப் பகுத்தறிவு இருப்பதின் பலனாகும்.

33. சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு கடவுளை மற - மனிதனை நினை என்னும் சுயமரி யாதை சமத்துவ உலகம் மலரட்டும்! மலரட்டும்!!

யாதும் ஊரே, யாவரும் கேளிர், உலகமே ஒரு குடும்பம் என்னும் பரிணாம நிலை வளரட்டும்!

பகைமை, ஆதிக்கம், ஆக்கிரமிப்பு போன்ற கொடிய நோய்களற்ற, ஆரோக்கியமான புத்துலகம் புரட்சியுகமாக பூத்துமலர நமது பயணங்களும், திட்டங்களும் அமை யட்டும்!

கி.வீரமணி

தலைவர் திராவிடர் கழகம்.

தஞ்சாவூர்

23.2.2019

#திராவிடம் அறிவோம் (76)

இராஜாஜி அரசின் கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து, தமிழக வரலாற்றின் முதல் மொழியுரிமைப் போரான இந்தி எதிர்ப்புப் போராட்டம் தந்தை பெரியாரால் 1938-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. பெரியார் 05.12.1938 அன்று கைது செய்யப்பட்டு சிறை சென்றார். 22.05.1938 அன்று விடுதலையானார்.

தந்தை பெரியார் சிறையிலிருந்த போது, நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் 14 ஆம் மாநாடு சென்னையில் நடைபெற்றது. அம்மாநாட்டில் நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது

அதாகப்பட்டது, 1974ல் இந்திரா காந்தியும் சிறிமாவோ பண்டாரநாயகேவும் சந்தித்து கச்சத்தீவை இலங்கைக்கு எழுதி விட்டார்கள். இதை அப்போதைய தமிழக முதல்வர் கண்டித்தார். 1976 வரை எதுவும் நடக்கவில்லை. 1976ல் எமெர்ஜன்சி அறிவிக்கப்பட்டு ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு அப்போது MGRன் (மோடிக்கு EPS போல அந்நாளில் இந்திரா காந்திக்கு MGR) முழு ஆதரவுடன் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. இது போல பல பேக்கரி டீலிங்குகளை இந்திராவுடன் நடத்தியதால் 1977 தேர்தலில் காங்கிரசின் "முழு ஆதரவுடன்" MGR முதல்வர் ஆக்கப்பட்டார்...

#திராவிடம் அறிவோம் (75)

ஒரு தேசிய இனத்தின் அடையாளம் என்பது அவ்வினத்தின் மொழி சார்ந்து தான் முதன்மையாக உருவாகிறது. திராவிட மொழிக் குடும்பம் குறித்த அறிதல் என்பது இவ்வகையில் முக்கியமான நிகழ்வு.

கி.பி.1784 இல் வில்லியம் ஜோன்ஸ் தலைமையில் கல்கத்தாவில் உருவாக்கப்பட்ட ‘ஆசியவியல் கழகம்’ என்னும் அமைப்பின் மூலம் நிகழ்ந்த ஆய்வுகள், இந்தியாவில் கீழைத்தேயவியல் மரபுக்கு உரிமையுடையது, சமஸ்கிருத மொழி என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தன. இந்தியாவின் பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டுள்ள மொழி சமஸ்கிருதம் என்னும் கருத்து உலக அளவில் முன்னெடுக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவ்வகையான புரிதலே இருந்தது.

1812-இல் எல்லீஸ், இந்தியாவின் தென்பகுதியில் சமஸ்கிருத மொழியிலிருந்து வேறுபட்ட பல மொழிகள் வழக்கத்தில் உள்ளன என்பதைக் கண்டறிந்தார். 1856-இல் கால்டுவெல் இக்கருதுகோளை வளர்த்தெடுத்து ‘திராவிட மொழிக்குடும்பம்’ என்னும் அடையாளத்தை நிலைபேறு கொள்ளச்செய்தார்.

1905 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘இந்திய மொழிகளைப் பற்றிய கணக்கெடுப்பு நிறுவனம்’, கால்டுவெல் கருத்தை வலுப்படுத்தி, திராவிட மொழிக்குடும்பத்தில் மேலும் பல மொழிகளை இணைத்தது. 1962-இல் எமனோ மற்றும் பர்ரோ உருவாக்கிய திராவிட மொழிகளின் வேர்ச்சொல் அகராதியில் 24 மொழிகளைத் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவையாக இனம் கண்டனர். 1984-இல் அந்த அகராதி விரிவாக்கப்பட்ட மீள்பதிப்பைக் கொண்டு வரும்போது 27 திராவிட மொழிகளை அடையாளப்படுத்தியுள்ளனர்.

#திராவிடம் அறிவோம் (74)

"திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது. திராவிடர் கழகத்திற்குப் போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதையில்தான்; திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதே தான், திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படைக் கொள்கைகளில், கருத்துகளில், மாறுதல், மோதுதல் எதுவும் கிடையாது. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே சீர்திருத்தம், சமதர்மக் குறிக்கோள், அரசியலில் வடநாட்டு ஏகாதிபத்தியத்தினின்று விடுதலை ஆகிய கொள்கைகள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடுகளாகும்".

-17.09.1949 அன்று சென்னை, இராயபுரம், இராபின்சன் பூங்காவில் நடைபெற்ற தி.மு.க துவக்க விழாவில் அறிஞர் அண்ணா பேசியது.

#திராவிடம் அறிவோம் (73)

இந்திய விடுதலைக்குப் பின்னர், குடியரசு நாளன்று குடியரசுத் தலைவரும், விடுதலை நாளன்று பிரதமரும் தில்லியில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். ஆனால், மாநிலத் தலைநகரங்களில் இந்த இரண்டு நாட்களிலும் ஆளுநரே தேசியக்கொடியினை ஏற்றி வந்தார்.

1969 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 5 அன்று கலைஞர், “விடுதலை நாள் விழாவில் மாநிலத் தலைநகரங்களில் தேசியக்கொடியேற்றும் உரிமையை முதலமைச்சர்களுக்கு வழங்க வேண்டும்" என்று நடுவண் அரசுக்குக் கோரிக்கை விடுத்தார். பிரதமர் இந்திரா காந்தியும் இதனை ஏற்றார். 1974 ஆகஸ்ட் 15 அன்று, புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் கலைஞர் கொடியேற்றினார்.

இந்தியாவில் உள்ள முதலமைச்சர்கள் இந்த உரிமையை இன்று பெற்றிருப்பது கலைஞராலேயே !

தொடர்புடைய இணைப்புகள்:

https://www.thehindu.com/news/national/tamil-nadu/karunanidhi-secured-a-precious-right-for-all-the-chief-ministers/article24548803.ece

https://www.indiatoday.in/amp/india/story/karunanidhi-independence-day-national-flag-1308750-2018-08-08

#திராவிடம் அறிவோம் (72)

தமிழ்நாட்டில் தொழில் கல்வி நிலையங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக நடைபெற்று வந்த பொது நுழைவுத் தேர்வை நீக்கி, தமிழக சட்டப்பேரவையில் 06.12.2006 அன்று, அன்றைய முதல்வர் கலைஞரால் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கிராமத்து மாணவர்களும், நகரங்களில் வாழும் ஏழை மாணவர்களும் பயன்பெறுவதற்காகவே பொது நுழைவுத் தேர்வு நீக்கப்பட்டது.

தொழிற்கல்வி நிலையங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக நடைபெற்று வந்த பொது நுழைவுத் தேர்வை நீக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு தான்.

#பெரியார் யார் ?

#பெரியார் யார் ?

ஒரு முறை நம்ம ஜிடி நாயுடு மத்திய அரசிற்கு எதிரா ஒரு மாபெரும் கூட்டம் கூட்டினார்,  அதில் அகில இந்திய தலைவர்கள் தாெழிலதிபர்கள் விஞ்ஞானிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் பேரறிஞர் அண்ணா அவர்களுடன் சிறப்பு விருந்தினராக அய்யா பெரியார் அவர்களும் கலந்து கொள்கிறார்கள்.  மத்திய அரசாங்கம் திரு ஜி டி நாயுடு அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு உரிமம் தரவில்லை என்றும், வருமான வரிச்சோதனை என்ற பெயரில் தொல்லை கொடுப்பதை எதிர்த்து மத்திய அரசை கண்டித்து அதற்கு எதிர் வினையாக தனது கண்டுபிடிப்புகளை மேடையிலேயே சம்மட்டி கொண்டு அடித்து உடைப்பது என்றும்  முடிவெடுக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் பேசிய அனைவரும் இக்கருத்தை வலியுறுத்தி  நாயுடுவிற்கு ஆதரவான கருத்தையே பேசினார்கள்.

அய்யா பெரியாரும் இதே கருத்தைத் தான் பேசுவார், இருந்தாலும் நாயுடுவிற்கு சிறு அய்யம் !  அய்யா எதாவது மாற்றி சொல்லி விட்டால் என்ன செய்வது,  மக்களும் அய்யா சொல்வதைத் தான் கேட்பார்கள்,  என்பதால் இப்போது  அய்யா பெரியார் அவர்கள் உரை யாற்றுவார்கள் என்று சாெல்லிவிட்டு தான் கண்டுபிடித்த காரை தானே உடைக்க ஆரம்பித்தார்.

பேச எழுந்த அய்யா அவர்கள் நாயுடுவின் செயலை கடுமையாக கண்டித்தார் !  என் தலைமையில் நிகழ்ச்சி அறிவித்து விட்டுஎன் அனுமதி இல்லாமல் காரை எப்படி உடைக்கலாம் நிறுத்துங்கள் என்னு சத்தம்போடுகிறார் அய்யா ..!அதோடு திரு நாயடுவின் செயலை முட்டாள் தனம் என்றும் கூறினார்.  உடனே அக்கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற  தலைவர்கள் அனைவரும் அய்யாவின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாபஸ் வாங்க வேண்டும் என்று கூச்சல் போட்டார்கள்..!!

அய்யா அவர்கள் தனது முடிவில் உறுதியாக இருந்ததுடன் ஜிடி நாயடுவின் செயலை வரவேற்பது அப்பட்டமான மூடத்தனம் என்றும் பேசினார்.  அனைத்து தலைவர்களும் வாயடைத்து போயினர் !  தான் கொண்ட கருத்தை எவர் தடுத்தாலும் யாருக்காகவும் பின் வாங்காத சமரசம் செய்து கொள்ளாத ஒரே ஆளுமை அய்யா பெரியார் என்றால் அது மிகையாகாது ..!!

பிறகு அய்யா அவர்கள், ஒரு அரசாங்கத்தை எதிர்க்க வேண்டிய நீங்கள் உடைக்க வேண்டியது உயிரற்ற பாெருளையல்ல,  அதுவும் இது நீங்கள் உங்கள் செலவில் தயாரித்த ஒரு பொருள் இதை  உடைப்பதில் நட்டம் உங்களுக்குத் தானே தவிர அரசாங்கத்திற்கு என்ன நட்டம்?

உங்கள் சம்மட்டி மத்திய அரசாங்கத்தை எதிர்த்தல்லவா வீசி இருக்க வேண்டும் ! அக்ரஹாரத்திற்கு எதிராக அல்லவா வீசியிருக்க வேண்டும் என்று பேசி  கைதட்டல் வாங்கியதுடன் மத்திய பார்ப்பனீய அரசாங்கத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் பெரியார் !!

அந்த அய்யா பெரியார் அவர்கள் இன்று இருந்திருந்தால் இந்த மோடி  அரசு என்ன பாடு பட்டிருக்குமோ !!

Really We miss you KIZHAVA...

வாழ்க பெரியார் !
வளர்க பகுத்தறிவு!!

♥ அன்புடன்
பி என் எம் பெரியசாமி

#திராவிடம் அறிவோம் (71)

28.2.1929 அன்று அருப்புக்கோட்டை அருகேயுள்ள சுக்கிலநத்தம் எனும் சிற்றூரில்தான் முதன் முதலாகப் பார்ப்பனப் புரோகிதர் இல்லாமல் சுயமரியாதைத் திருமணம் அரங்கேறியது. ஒரே திருமண மேடையில் 3 சுயமரியாதைத் திருமணங்கள் நடந்தன. இதிலே இரண்டு திருமணங்களில் ஒரே கணவன்- இரண்டு மனைவிகளைத் திருமணம் செய்து கொண்டார்கள்; தந்தை பெரியார் முன்னின்று நடத்திய அத்திருமணத்தில் மறைந்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், ஜெ.எஸ்.கண்ணப்பர்; பட்டுக்கோட்டை அழகிரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.


#திராவிடம் அறிவோம் (70)

திராவிடம் என்ற சொல்  பல நூறாண்டுகளாய்ப் பயன்பாட்டில் உள்ளது.

கி.மு.முதல் நூற்றாண்டிலே மனுஸ்மிருதி, பத்தாம் அத்தியாயத்தில், 43,44 ஆவது சுலோகத்தில் திராவிட என்ற சொல் கையாளப்பட்டுள்ளது.

”ஜாதி தர்மத்தை அனுசரிக்காதவர்களுக்குப் பிறந்தவர்கள் திராவிடர்கள்….திராவிட தேசத்தை ஆண்டவர்கள் சூத்திரர்கள்” என்கிறது மனுஸ்மிருதி.

கி.பி.17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவர் எழுதிய, “கல்லாத பேர்களே நல்லவர்கள்” என்னும் பாடலில் திராவிடம் என்ற சொல் மொழியைக் குறிக்க ஆளப்பட்டுள்ளது.

திருஞானசம்பந்தர் ‘திராவிட சிசு’ என அழைக்கப்பட்டார். இங்கு திராவிடம் என்பது தமிழைக் குறிக்கப்பயன்பட்டது.

1856 இல் வெளியிடப்பட்ட கால்டுவெல் என்பவரின் ‘திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம்’ (A Comparative Grammar in Dravidian or South Family of Languags) என்ற நூலிற்குப்பின்னரே திராவிடம் என்ற சொல் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தது.

--

ஆரியர்கள் இங்கு நுழையும் முன்னர் இங்கு வாழ்ந்த நாகர் இன மக்கள் "திராவிடர் "
என்கிறார் டாக்டர் அம்பேத்கர். இது கி.மு. 1500 க்கு முன்னர்.

தமிழ் எழுத்தின் முதல் வடிவம் " திராவிடி" என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன். இதை "லேனா " அல்லது "குகை எழுத்து " என்றும் அவர் கூறுகிறார். திராவிடத்தின் தொன்மைக்கு இவையும் சான்றாக நிற்கிறது.

--

திராவிடர்கள், நாகர்கள் என்பது ஒரே மக்களின் வெவ்வேறு பெயர்களே என்பதை ஒப்புக்கொள்ள வெகுசிலரே தயாராக இருப்பர் என்பதை மறுக்கமுடியாது; அதேபோன்று திராவிடர்கள் நாகர்களாக தென்னிந்தியாவில் மட்டுமன்றி இந்தியா முழுவதிலும் தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் பரவியிருந்தனர் என்பதையும் சிலரே ஒப்புக்கொள்வர். ஆயினும் இவை வரலாற்று உண்மைகள் என்பதில் ஐயமில்லை.

- அண்ணல் அம்பேத்கர்

(நூல்: அம்பேத்கர் - இன்றும் என்றும்)

#திராவிடம் அறிவோம் (69)

அரசியலில் நுழைவதையும், அந்த நுழைவிற்குத் தேவைப்படும் வாக்காளர்களின் வாக்குகளையும் அவர்களைத் திருப்திப்படுத்துவதற்கு வேண்டிய மத, சாதி உணர்வுகளையும் அலட்சியப்படுத்தக்கூடிய ஒரே தலைவராகப் பெரியார் விளங்கினார்.


தமிழகத்தின் சட்டமன்ற அரசியலைத் தீர்மானிக்கும் எண்ணிக்கைப் பலம் வாய்ந்த ஒரு சமூகத்தினரின் தலைவரின் ஆதிக்க சாதி மனப்பான்மையைத் துணிச்சலுடன் கண்டிக்கவும், தாழ்த்தப்பட்டோருக்கு உறுதுணையாக, தார்மீக ஆதரவு கொடுக்கக் கூடியவராகவும் அவரால் இருக்க முடிந்தது.


1957 ஆம் ஆண்டு, முதுகுளத்தூர் பகுதியில் நடந்த சாதிக்கலவரங்கள் தொடர்பாகப் பெரியார் மேற்கொண்ட நிலைப்பாடு இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

முத்துராமலிங்கத் தேவர் மீது பெரியாருக்குத் தனிப்பட்ட பகை ஏதும் இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் 1937-39 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது அவர் கைது செய்யப்பட்டதைக் ‘குடி அரசு’ கண்டனம் செய்திருக்கிறது.

 முதுகுளத்தூர் கலவரத்தின் போது, காமராசர் அரசாங்கம் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகள் கலவரம் பரவாமல் தடுத்தன. தேவர் கைது செய்யப்பட்டார். அரசியல் கட்சிகள் அனைத்தும் தேவர் கைதைக் கண்டனம் செய்த நிலையில், சட்டமன்ற அரசியலில் பங்கேற்காத பெரியார் மட்டுமே தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாகப் பேசிய ஒரே தலைவராகத் திகழ்ந்தார்.

“முன்கூட்டியே முத்துராமலிங்கத் தேவரைக் கைது செய்திருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகி இருக்குமா? இவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டிருக்குமா? இத்தனை ஆதிதிராவிடர் குடும்பங்கள் ஊரை விட்டு வெளியேறி இருக்குமா?

(விடுதலை தலையங்கம் 04.10.1957)

திமுக உருவான போது அதில் தலைவர் கலைஞரின் பங்கு ..பகுதி-2

திமுக உருவான போது அதில் தலைவர் கலைஞரின் பங்கு
பகுதி-2
1944 ஆம் ஆண்டு திருவாரூர் நகர சுயமரியாதைச் சங்க ஆண்டுவிழாவில் கலந்துகொள்ள தந்தை பெரியார் வந்தார். அந்த விழாவில்தான் கலைஞரின் முரசொலி இதழைக் கண்டு பாராட்டினார். அப்போதிருந்து தந்தை பெரியாருடன் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசத் தொடங்கினார்.
அந்த ஆண்டுதான் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றப்பட்டது. கலைஞருக்கு பத்மாவதி அம்மையாருடன் சுயமரியாதை திருமணம் நடந்ததும் அந்த ஆண்டுதான்.
திராவிடர் கழக கூட்டங்களிலும் மாநாடுகளிலும் எழுச்சிமிகு பேச்சாளராக வளர்ந்து வந்த நேரம். 1946 ஆம் ஆண்டு புதுவையில் திராவிடர் கழக மாநாட்டுக்குச் சென்று திரும்பியபோது, கலைஞரை காங்கிரஸார் கடுமையாக தாக்கினர். தாக்குதலில் கலைஞர் இறந்துவிட்டதாக கருதி சாக்கடையில் எறிந்துவிட்டுச் சென்றனர். வயதான பெண்மணியும் இளைஞர் ஒருவரும் கலைஞரை காப்பாற்றினர். அங்கிருந்து இஸ்லாமியரைப் போல வேடம் அணிந்து பெரியாரிடம் வந்தார். அன்றே கலைஞரை தன்னுடன் அழைத்து வந்த தந்தை பெரியார் குடியரசு வார இதழின் துணை ஆசிரியராக நியமித்தார்.
அங்கு பணியில் இருக்கும் சமயத்தில்தான் திராவிடர் கழக கொடி வடிவமைக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். கருப்பு வண்ணத்தின் நடுவே தனது விரலில் குத்தி எடுக்கப்பட்ட ரத்தத் துளியை பொட்டாக வைத்து கொடி உருவாக துணையாக இருந்தார். அதே ஆண்டில், கோயம்புத்தூரில் இயங்கிய ஜூபிடர் பிக்சர்ஸில் வேலை கிடைத்து, பெரியாரிடம் விடைபெற்ற கலைஞர் ஈரோட்டிலிருந்து கோயம்புத்தூர் சென்றார். ராஜகுமாரி திரைப்படத்துக்கு வசனம் எழுதி திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார்.
ராஜகுமாரி வெளிவந்த 1947 ஆம் ஆண்டிலேயே முரசொலி பத்திரிகையை வார இதழாக வெளிக் கொண்டுவந்தார். அந்த ஆண்டு இந்திய விடுதலையை துக்கதினமாக அறிவித்த பெரியாரின் அறிக்கை எதிர்த்து அண்ணா வெளியிட்ட அறிக்கையால் இருவருக்கும் பிளவு ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் இருவருக்கும் இடையே சமரசம் செய்யும் வகையில் நடுநிலையாளராக கலைஞர் தனது முரசொலி பத்திரிகையில் கட்டுரைகள் எழுதினார். பெரியார் மணியம்மை திருமணம் கட்சிக்குள் பூசலை ஏற்படுத்திய நிலையில் 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டது.
அந்த புதிய இயக்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 110 பேரில் அண்ணா, இரா.நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், மு.கருணாநிதி, என்.வி.நடராசன், ஈ.வெ.கி.சம்பத், டி.எம்.பார்த்தசாரதி என்று பெயர் வரிசை இருந்தது.
பிரச்சாரக்குழுவில் கே.ஏ.மதியழகன், ஈ.வெ.கி.சம்பத், சி.பி.சிற்றரசு, ஏ.வி.பி.ஆசைத்தம்பி, மு.கருணாநிதி, டி.கே.சீனிவாசன், என்.வி.நடராசன், காஞ்சி கல்யாணசுந்தரம் என்று பெயர் வரிசை இருந்தது.
பெரியாருடன் அறிமுகம் ஏற்பட்ட மிகக்குறுகிய காலத்தில் கலைஞருக்கு கட்சியில் குறிப்பிடத்தகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கு காரணம் அவருடைய பேச்சாற்றலும், எழுத்தாற்றலும்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். கலைஞர் மாணவராக இருந்த சமயத்தில் தலைவர்களாக இருந்தவர்களுடன் மிகக்குறுகிய காலத்தில் சமமமாக பணியாற்றும் வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்தது. இதற்கு காரணம் அவருடைய பேச்சாற்றலும், எழுத்தாற்றலும்தான்.!!!!!

திமுக உருவான போது அதில் தலைவர் கலைஞரின் பங்கு ..1

திமுக உருவான போது அதில் தலைவர் கலைஞரின் பங்கு ..

1944 ஆம் ஆண்டு திருவாரூர் நகர சுயமரியாதைச் சங்க ஆண்டுவிழாவில் கலந்துகொள்ள தந்தை பெரியார் வந்தார். அந்த விழாவில்தான் கலைஞரின் முரசொலி இதழைக் கண்டு பாராட்டினார். அப்போதிருந்து தந்தை பெரியாருடன் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசத் தொடங்கினார்.
அந்த ஆண்டுதான் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றப்பட்டது. கலைஞருக்கு பத்மாவதி அம்மையாருடன் சுயமரியாதை திருமணம் நடந்ததும் அந்த ஆண்டுதான்.
திராவிடர் கழக கூட்டங்களிலும் மாநாடுகளிலும் எழுச்சிமிகு பேச்சாளராக வளர்ந்து வந்த நேரம். 1946 ஆம் ஆண்டு புதுவையில் திராவிடர் கழக மாநாட்டுக்குச் சென்று திரும்பியபோது, கலைஞரை காங்கிரஸார் கடுமையாக தாக்கினர். தாக்குதலில் கலைஞர் இறந்துவிட்டதாக கருதி சாக்கடையில் எறிந்துவிட்டுச் சென்றனர். வயதான பெண்மணியும் இளைஞர் ஒருவரும் கலைஞரை காப்பாற்றினர். அங்கிருந்து இஸ்லாமியரைப் போல வேடம் அணிந்து பெரியாரிடம் வந்தார். அன்றே கலைஞரை தன்னுடன் அழைத்து வந்த தந்தை பெரியார் குடியரசு வார இதழின் துணை ஆசிரியராக நியமித்தார்.
அங்கு பணியில் இருக்கும் சமயத்தில்தான் திராவிடர் கழக கொடி வடிவமைக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். கருப்பு வண்ணத்தின் நடுவே தனது விரலில் குத்தி எடுக்கப்பட்ட ரத்தத் துளியை பொட்டாக வைத்து கொடி உருவாக துணையாக இருந்தார். அதே ஆண்டில், கோயம்புத்தூரில் இயங்கிய ஜூபிடர் பிக்சர்ஸில் வேலை கிடைத்து, பெரியாரிடம் விடைபெற்ற கலைஞர் ஈரோட்டிலிருந்து கோயம்புத்தூர் சென்றார். ராஜகுமாரி திரைப்படத்துக்கு வசனம் எழுதி திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார்.
ராஜகுமாரி வெளிவந்த 1947 ஆம் ஆண்டிலேயே முரசொலி பத்திரிகையை வார இதழாக வெளிக் கொண்டுவந்தார். அந்த ஆண்டு இந்திய விடுதலையை துக்கதினமாக அறிவித்த பெரியாரின் அறிக்கை எதிர்த்து அண்ணா வெளியிட்ட அறிக்கையால் இருவருக்கும் பிளவு ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் இருவருக்கும் இடையே சமரசம் செய்யும் வகையில் நடுநிலையாளராக கலைஞர் தனது முரசொலி பத்திரிகையில் கட்டுரைகள் எழுதினார். பெரியார் மணியம்மை திருமணம் கட்சிக்குள் பூசலை ஏற்படுத்திய நிலையில் 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டது.
அந்த புதிய இயக்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 110 பேரில் அண்ணா, இரா.நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், மு.கருணாநிதி, என்.வி.நடராசன், ஈ.வெ.கி.சம்பத், டி.எம்.பார்த்தசாரதி என்று பெயர் வரிசை இருந்தது.
பிரச்சாரக்குழுவில் கே.ஏ.மதியழகன், ஈ.வெ.கி.சம்பத், சி.பி.சிற்றரசு, ஏ.வி.பி.ஆசைத்தம்பி, மு.கருணாநிதி, டி.கே.சீனிவாசன், என்.வி.நடராசன், காஞ்சி கல்யாணசுந்தரம் என்று பெயர் வரிசை இருந்தது.
பெரியாருடன் அறிமுகம் ஏற்பட்ட மிகக்குறுகிய காலத்தில் கலைஞருக்கு கட்சியில் குறிப்பிடத்தகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கு காரணம் அவருடைய பேச்சாற்றலும், எழுத்தாற்றலும்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். கலைஞர் மாணவராக இருந்த சமயத்தில் தலைவர்களாக இருந்தவர்களுடன் மிகக்குறுகிய காலத்தில் சமமமாக பணியாற்றும் வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்தது. இதற்கு காரணம் அவருடைய பேச்சாற்றலும், எழுத்தாற்றலும்தான்.!!!!!

திராவிடநாடு கோரிக்கை வரலாறு

திராவிடநாடு கோரிக்கை வரலாறு :
1940-ஆம் ஆண்டு திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் “திராவிட நாடு திராவிடருக்கே” என்ற கோரிக்கையை வைக்கிறார். பின் 1944-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ஆம் தேதி நீதிக்கட்சி திராவிடர் கழகமாக சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற மாநாட்டில் அண்ணாவை வைத்து தந்தை பெரியார் அவர்கள் அறிவிக்கிறார். அதே மாநாட்டில் "திராவிட நாடு திராவிடருக்கே" என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றுகிறார்.
பின் 1953-ஆம் ஆண்டு தெலுங்கு மாவட்டங்களை, சென்னை மாகாணத்திலிருந்து பிரித்து நவம்பர் முதல் நாளில் ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டது. 1956 நவம்பர் முதல் நாளில், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு என மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அதன் பின்னர் கோரிக்கையை “தமிழ்நாடு தமிழருக்கே” என திருத்தி அமைத்துக் கொண்டார் பெரியார். தனித் தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தி, 1960 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீங்கலான இந்திய வரைபடம் எரிப்புப் போராட்டத்தை அறிவித்திருந்தார். தந்தை பெரியார் அவர்கள் 1955-ஆம் ஆண்டு மொழிவழி மாநிலத்தை வரவேற்றார் ஏன் என்றால் அது தம் விடுதலை இலக்கை அடைய உதவும் என்றார். தந்தை பெரியார் அவர்கள் அரசியல் விடுதலைக்காக "தமிழ்நாடு தமிழருக்கே" என்றும் சமூக விடுதலைக்காக "திராவிட நாடு திராவிடருக்கே" என்று அறிவித்தார். அக்கோரிக்கையை தனது இறுதி நாள் வரை உறுதியாக மக்களிடையே பரப்பியும் வந்தார்.
1938- 1949- ஆம் ஆண்டு வரை தந்தை பெரியாருடன், அண்ணா இருந்த போதும் பின்னர் 1949-ஆம் ஆண்டு திமுக என்ற தனிக்கட்சி உருவாக்கி தேர்தல் கட்சியாக வளர்த்தெடுத்த காலத்திலும், 1963- ஆம் ஆண்டு 'திராவிட நாடு' கோரிக்கையை கை விடும் வரை அண்ணா உயர்த்திப் பிடித்தார். பெரியாருடன் ஏற்ப்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அண்ணா திராவிடர் கழகத்திலிருந்து 1949-ஆம் ஆண்டில் பிரிந்து திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்குகிறார். திமுக தொடங்கியது முதல் “அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு“ என்று மேடைகள் தோறும் பேசி வந்தார். முதலில் சமூக இயக்கமாக செயல்பட்டுவந்த திமுக 1956-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில மாநாட்டில் தேர்தலில் ஈடுபடுவது என முடிவெடுத்தது. 1957-ல் நடைபெற்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் முதன் முதலில் போட்டியிட்டது. அதன் பிறகு 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற சீனப் போருக்குப் பிறகு ,பிரிவினை கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன் பின் திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிடும் போது கூட “இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட ஒரு திராவிட ஒன்றியம். கூட்டரசு அமைப்பு முறையை வலிவுடையது ஆக்கும் வகையில் இந்திய அரசியல் அமைப்பில் மாற்றங்களை கொண்டு வருதல். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று அண்ணா அறிவிக்கிறார்” மேலும், திராவிடநாடு கொள்கையை தனது உயிர் பிரியும் வரை அண்ணா கைவிடவில்லை.
எனவே, திராவிடநாடு கோரிக்கை தற்போது எழுவதற்கும் தமிழகமே முன்னோடியாக உள்ளது என்றும் கூறலாம். தற்போதாவது பெரியாரால் முன்வைக்கப்பட்டு அண்ணாவால் இறுதி வரை கடைபிடித்த திராவிடநாடு கோரிக்கை இந்த முறை வெற்றி பெறுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

1944 ஆம் ஆண்டு தந்தை பெரியாருக்கு எதிர்ப்பாக இருந்த பார்ப்பனரல்லாத உயர்ஜாதி கும்பல்

1944 ஆம் ஆண்டு தந்தை பெரியாருக்கு எதிர்ப்பாக இருந்த பார்ப்பனரல்லாத உயர்ஜாதி கும்பல், சென்னை கன்னிமரா ஓட்டலில் டாக்டர் அம்பேத்கருக்கு விருந்து கொடுத்து, அவரிடம் ‘நாங்கள்தான் உண்மையான பார்ப்பனரல்லாத இயக்கம்’ (நீதிக்கட்சி) என்று நற்பெயர் வாங்குவதற்காக திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த திட்டம் அண்ணல் அம்பேத்கருக்கும் தெரிந்திருக்கிறது. தன்னைப் பாராட்டி விருந்து கொடுத்தவர்கள் மத்தியில் அண்ணல் இப்படி பேசியிருக்கிறார்:
“பார்ப்பனரல்லாத தோழர்களே, உங்களை நீங்கள் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக் கொள்ளுகிறீர்களே அதில் உங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் உள்ள பேதத்தைக் காட்டுவதற்குள்ள காரியங்கள் என்ன? உங்கள் கொள்கை என்ன? திட்டங்கள் என்ன?
எங்கள் கட்சி பார்ப்பனியத்திற்கும் மாறான கட்சி என்று சொல்லிக் கொண்டு நெற்றியில் நாமம், வீட்டில் பார்ப்பனப் புரோகிதம், நடவடிக்கையில் பார்ப்பனியத்தைப் பின்பற்றுதல், அவன் பூசை பண்ணும் கோவிலில் சென்று வெளியில் இருந்து வணங்குதல் ஆகியவைகளைச் செய்து உங்களையும் இரண்டாவது வகுப்புப் பார்ப்பனர் மாதிரி ஆக்கிக் கொண்டு, முதலாவது வகுப்புப் பார்ப்பானாக ஆவதற்கு ஏற்ற வண்ணம் நடந்து கொண்டு வருவீர்களானல் நீங்கள் எந்தத் தன்மையில் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக் கொள்ள அருகர்கள் ஆவீர்கள்?
பார்ப்பனர்லலாதார் கட்சிக்கு முதாலவதும் கடைசியானதுமான கொள்கை ‘உத்தியோம்’ தானா? அல்லது உத்தியோகத்தில் சரிபங்கு மாத்திரம்தானா? இதைத் தவிர வேறு என்ன கொள்கையை இதுவரை பின்பற்றிவந்தீர்கள்?”
“உங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் பேதம் காட்டிப் பார்ப்பனியத்தில் இருந்து நீங்கள் விலகாததாலேயே தோற்றீர்கள். அதனாலேயே உங்களுக்குச் செல்வாக்கில்லை. இப்படியே இருந்தால் இனியும் நீங்கள் என்றென்றும் உருப்படமாட்டிர்கள்”
என்று பேசியிருக்கிறார்.
(குடியரசு 30.9.1944)

#திராவிடம் அறிவோம் (68)

"உலகத்தில் நாத்திகத் தத்துவம் குறித்து இத்தனை நூல்கள் எழுதிய வகையிலோ, வெளியிட்ட வகையிலோ பெரியாருக்கு ஈடு இணை எவருமிலர்".

விடுதலைப் போராட்டத்தின் புரட்சியாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்தவருமான எம்.என்.ராய் கூறியது இது.

1944 ஆம் ஆண்டு தந்தை பெரியார் வட நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, எம்.என்.ராய் ஏற்பாடு செய்த Radical Democratic party Conference மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவரை வரவேற்று எம்.என்.ராய் பேசியது இது

செம்மொழி

'செந்தமிழ்' என்று தொல்காப்பியர் காலத்திலேயே அழைக்கப்பட்ட மொழி "தமிழ்' மொழி.
மிகத் தொன்மையான தமிழ்மொழி, எழுத்துருவங்களையும் தொல்காப்பியர் காலத்திலேயே (கி.மு.700) வரையறை செய்து கொண்ட மொழி ஆகும்.
திராவிட மொழிகளின் தாய்மொழி "தமிழ்' என்றும், தமிழ்மொழி "உயர்தனிச் செம்மொழி' என்றும் 1856-இல் கால்டுவெல் உறுதி செய்தார்.
சமற்கிருதமே செம்மொழி, தமிழ் செம்மொழி இல்லை என்று கூறிச் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழை ஒதுக்கியபோது, "தமிழ் செம்மொழியே' என்று வாதிட்டு வெற்றி பெற்றவர் மு.சு. பூரணலிங்கம் பிள்ளை.
"தமிழ் செம்மொழியே' என்று கட்டுரை எழுதியவர் பரிதிமாற் கலைஞர் எனும் சூரியநாராயண சாஸ்திரியார்.
தமிழைச் செம்மொழி எனச் சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிக்க வேண்டும் என்று 1918-இல் மறைமலை அடிகள் தலைமையில் நடந்த சித்தாந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1919-20 இல் கரந்தைத் தமிழ்ச் சங்கமும் இக்கோரிக்கையை முன்வைத்தது.
1988இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் 1998-இல் சென்னைப் பல்கலைக்கழகமும் தமிழைச் செம்மொழியாக ஏற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றின.
1995-இல் உலகத்தமிழ் மாநாடும் 1998, 2002 ஆகிய ஆண்டுகளில் தமிழக அரசும் இதே தீர்மானத்தைக் கொண்டு வந்தன. இதனை இந்திய அரசு ஏற்காததால் போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
மொழி அறிஞர்கள் செம்மொழி என்பதற்குக் கூறும் பதினோரு தகுதிகள் வருமாறு:
1. தொன்மை,
2. கிளைமொழிகளின் தாய்மொழி
3. பிறமொழிகளின்றித் தனித்தியங்கும் ஆற்றல்
4. பிறமொழிகளிலிருந்து சிறப்பால் வேறுபடுதல்
5. மொழி இலக்கணக் கோட்பாடுகள் உடைமை
6. பிற மொழியாளர்க்கும் இனத்தார்க்கும் பொருந்தும் இலக்கியப் பொதுமை
7. பட்டறிவு இலக்கியங்கள்
8. சமயச் சார்பின்மை
9. நடுநிலைமையான இலக்கியங்கள்
10. உயரிய சிந்தனைகளைத் தரும் இலக்கியங்கள்
11. கலை இலக்கிய மேன்மை.
இத்தகைய தகுதிகள் அனைத்தையும் கொண்ட மொழி தமிழ்மொழி.
உலகின் மிகவும் தொன்மையான மொழிகளில் தமிழும் ஒன்று.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய கிரேக்கம், எபிரேயம், உரோம், தமிழ், இலத்தீன், சீனம், சமற்கிருதம் ஆகிய மொழிகளில் சீனமொழியும் தமிழும் மட்டுமே பெருவாழ்வு பெற்று விளங்குகின்றன.
மொழியியல் என்பது நூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட வளர்ச்சியாய் இருக்கத் தமிழில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்ட இலக்கண மரபைக் காட்டுவது உயர்வானதாகும்.
அகத்திணை, புறத்திணை என்று பாகுபாடும், இவற்றில் அமைந்த அறம் சார்ந்த ஒழுக்க நெறிகளும் தமிழ்மொழி வாழ்விலும் இலக்கியத்திலும் பெற்றுள்ள ஒருமையையும் நாகரிகப் பண்பாட்டுப் பெருமையையும் காட்டும்.
இத்தகைய பல தகுதிகள் இருப்பதனால்தான் தமிழ், "செம்மொழி' எனும் தகுதியைப் பெற்றது!
ஆனால், இத்தனைப் போராட்டங்களுக்குப் பின்னர் தமிழை செம்மொழி என்று அறிவிக்கப்பட்டவுடன், கமுக்கமாக, தெலுங்கும் மலையாளமும் செம்மொழிப் பட்டம் பெற்றுவிட்டன என்பது யாருக்காவது தெரியுமா?


தமிழிய மொழிக்குடும்பம்


1856 இல் கால்டுவெல் தென்னிந்திய மொழிகளுக்கு திராவிடம் என்று பெயர்வைத்து நூல் வெளியிட்டார்.
ஆனால் அதற்கு இரண்டாண்டுகள் முன்பே 1854 இல் ஜெர்மானிய மொழியியல் ஆய்வாளர் பிரடெரிக் மாக்சு முல்லர் (Friedrich Max Müller ) என்பவர் தமது "The classification of the Turanian languages" எனும் நூலில் தென்னிந்திய மொழிக்குடும்பத்திற்கு இட்டப் பெயர் தமுலிக (Tamulic) மொழிக் குடும்பம் என்பதாகும்.
இவருக்கும் முன்பு 1847 -லேயே ஆங்கிலேயே இனவியல் ஆய்வாளர் பிரையன் ஓட்குசன் (Brian Houghton Hodgson) இந்தியாவின் பூர்வீக இனமாக தென்னிந்தியரை தமுலியர் (Tamulian) என்றும்
அவர்களின் மொழிக்குடும்பத்தைத் தமுலிய (Tamulian) மொழிக் குடும்பம் என்றும் தம் "Essay the first on the Kocch, Bodo and Dhimal Tribes" எனும் நூலில் பெயரிட்டு குறித்துள்ளார்.
தமிழும் அதன் வழி வந்த மொழிகளும் தமிழிக, தமிழிய என்னும் பெயரால் அழைக்கப்படுவதே சரியாகும்.
கால்டுவெல்லோ தமிழும், அதன் பிற உறவுமொழிகளும் மூலத் திரவிடம் (Proto- dravidian) என்றொரு பொது மொழியினின்று வந்ததாக பிறழ உரைத்துள்ளார்.
இது தமிழின் பழமையைக் குறைத்து பிற தென்னிந்திய மொழிகளுக்கு ஈடாகத் தமிழையும் ஒரு சேய்மொழியாக வைக்கும் முயற்சியாகும்.
தமிழுக்கு மூலமாக எம்மொழியும் இல்லை.
அப்படி இருந்ததாக கால்டுவெல் நிறுவவும் இல்லை.
கால்டுவெல்லின் தடுமாற்றம் அவரது நூலில் தலைப்பிலேயே தெரிகிறது.
"திராவிட அல்லது தென்னிந்திய மொழிக்குடும்பத்தின் ஒப்பிலக்கணம்" எனுமாறு (Comparative grammar of the Dravidian or South-Indian family of languages) குழப்பமான ஒரு பெயரையே வைத்துள்ளார்.
தமிழர் வரண (Race- மரபின) அடிப்படையிலும் தமிழர்தான்.
தேசிய இன(Ethnicity) அடிப்படையிலும் தமிழர்தான்.
திராவிடர் என்ற இல்லாத இனமாகத் தமிழர் உட்பட எவரையும் திரித்தல் கூடாது.
தமிழ் மொழியைத் தமிழென்றும்,
தமிழினத்தாரைத் தமிழரென்றும்,
தமிழ் வழிவந்த மொழிகளை தமிழிக(Tamilic) மொழிகள் என்று வழங்குவதே சரியானதாகும்.


#திராவிடம் அறிவோம் (67)

1856 இல் கால்டுவெல் எழுதி வெளியிட்ட 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற அரிய ஆய்வு நூலுக்கு நாற்பதாண்டுகளுக்கு முன்னரே, 1816 - ஆம் ஆண்டு 'திராவிட மொழிக் குடும்பம்' என்ற கருத்தாக்கத்தைக் கண்டுணர்ந்து உலகுக்கு வெளிப்படுத்தியவர் எல்லீஸ்.
          
எல்லீசன் என்று தமிழ் ஒலி மரபுக்கேற்பத் தம்மை அழைத்துக் கொண்ட பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.

சென்னை அரசாங்கத்தில், வருவாய் வாரியச் செயலாளர், நிலச்சுங்க அதிகாரி, சென்னை மாவட்ட ஆட்சியர் எனப் பல பதவிகளை வகித்தவர். தம் பொறுப்பிலிருந்த அரசாங்கத் தங்கசாலையில் திருவள்ளுவரின் உருவம் பொறித்த தங்க நாணயங்களை வார்த்த பெருமைக்குரியவர் எல்லீஸ்.


#திராவிடம் அறிவோம் (66)

72 ஆண்டுகளுக்கு முந்தைய கருஞ்சட்டை மாநாடு.

திருச்சியில் 1945 ஆம் ஆண்டு திராவிடர் கழக மாகாண மாநாடும் சுயமரியாதை மாநாடும் நடைபெற்றன. அம்மாநாட்டில் கருஞ்சட்டைப் படையொன்றை (தொண்டர் படை) அமைப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.

மாநாட்டின் தீர்மானத்திற்கேற்ப கருஞ்சட்டைப் படை 10.10.1945 அன்று உருவாக்கப்பட்டது.

சென்னையில் 10.2.1946 அன்று கருஞ்சட்டைப் படையினரின் அணி வகுப்பு நடத்தப்பட்டது.

பெரியாரும் அவரது தோழர்களும் 11.5.46 அன்று மதுரையில் திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டைப் படை மாநாட்டை நடத்தினர். 50,000 பேர் கலந்து கொண்ட அம்மாநாட்டையொட்டி நடத்தப்பட்ட பேரணியில் 20,000 பேர் பங்கேற்றனர். அப்பேரணியில் பெரியார், அண்ணா, எஸ்.ஆர்.காந்தி அம்மையார், இரா.நெடுந்செழியன் ஆகியோர் சாரட்டில் வந்தனர். ஈ.வெ.கி.சம்பத், க.அன்பழகன், இளம்வழுதி ஆகியோர் தொண்டர் படைத் தளபதிகளாகச் செயல்பட்டனர்.

அம்மாநாட்டுப் பந்தல் குண்டர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. மாநாட்டில் பங்கேற்றோர் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடந்தன. கருப்புச் சேலை அணிந்த ஒரு பெண் தோழர் நிர்வாணமாக்கப்பட்டார்.

ஏ.வைத்தியநாத அய்யர்தான் வன்முறையாளர்களுக்குப்  பணம் கொடுத்துத் தூண்டிவிட்டார் என்ற சந்தேகம் ஏற்பட்டதாக "குடி அரசு" (18.5.1946) எழுதிற்று.

#திராவிடம் அறிவோம் (65)

நீடாமங்கலம் சாதியக் கொடுமை நடைபெற்ற நாள் இன்று.

28.12.1937 அன்று பழைய தஞ்சை மாவட்டம், நீடாமங்கலத்தில் ‘தென்தஞ்சை ஜில்லா காங்கிரசின் 3-வது அரசியல் மாநாடு’ நடைபெற்றது.
மாநாடு அன்று பிற்பகல் சமபந்தி விருந்து நடந்தது.
சாதி, மத பேதமின்றி யாவரும் வரலாம் என்று மீண்டும் மீண்டும்  அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்பேரில் அங்கு வேடிக்கை பார்க்க நின்றிருந்த விவசாயக் கூலித்தொழிலாளர்களான தாழ்த்தப்பட்ட மக்கள் சிலர் மாநாட்டு விருந்தில் அமர்ந்து உணவருந்தினார். ஆனால் உணவருந்திக் கொண்டிருந்தபோதே அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அதற்கு மறுநாள் அவர்கள் வேலை பார்க்கும் பண்ணைகளுக்கும் தகவல் தரப்பட்டு, அங்கும் அவர்கள் தாக்குதலுக்குள்ளாயினர்.

 மரத்தில் கட்டிவைத்து உதைத்தும் மொட்டை அடித்தும் சாணிப்பாலை வாயில் புகட்டியும் கரும்புள்ளி – செம்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டும் அவர்கள் இழிவுபடுத்தப்பட்டனர். சுமார் 20 பேர் இத்தாக்குதல்களுக்கு உள்ளானார்கள்.

 இவ்வன்முறை நிகழ்விற்குச் சுயமரியாதை இயக்கம் உடனே எதிர்வினையாற்றியது. சுயமரியாதை இயக்க நாளேடான ‘விடுதலை’ யே இதனை முதன்முதலாக வெளியுலகிற்குக் கொண்டுசென்றது. ‘விடுதலை’ ’குடி அரசு’ இதழ்கள் இரண்டும் இணைந்து சுமார் ஆறுமாத காலத்திற்கும் மேலாக இந்த வன்நிகழ்வை மாகாணத் தமிழ் மக்களின் பேசுபொருளாக ஆக்கின.

மேலும், வன்முறைக்கு ஆளான தாழ்த்தப்பட்ட மக்களில் சிலரை இவ்வியக்கம் பாதுகாத்தும் வந்தது. இவற்றின் காரணமாக ஒரு தரப்பினரின் கோபத்துக்கு ஆளாகி, நீதிமன்ற வழக்குகளையும் சந்தித்தது ‘விடுதலை’ ஏடு.


#திராவிடம் அறிவோம் (64)

மிழ்மொழியைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒரு நூற்றாண்டு காலமாகத் தமிழ்நாட்டில் இருந்து வந்தது.

1918 மார்ச் 18 ஆம் நாள், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற புலவர்கள் கூட்டத்தில் சென்னை பல்கலைக்கழகம் தமிழ்மொழியைச் செம்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடு விடுதலை அடைந்த பின்பே, தமிழ்மொழியைச் செம்மொழியாக மைய அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

மறைமலை அடிகள், அப்பாதுரையார், தேவநேயப் பாவணர் முதலிய தமிழறிஞர்கள் இக்கோரிக்கையை வலியுறுத்திக் கட்டுரைகள் எழுதினர். பல்வேறு தமிழ் அமைப்புகள் தீர்மானங்களை நிறைவேற்றி மைய அரசுக்கு அனுப்பின. ஆனால், கலைஞர் வலியுறுத்தத் தொடங்கிய பின்பே இக்கோரிக்கைக்கு வலு சேர்ந்தது.

1996இல் முதலமைச்சர் கலைஞர் தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவிக்கக்கோரி மைய அரசுக்குக் கடிதம் எழுதினார். அக்கடிதத்தை மைய அரசு மைசூரில் உள்ள இந்திய மொழிகள் மைய நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தது. அந்நிறுவனம் அறிஞர்களுடன் கலந்தாய்வு செய்த பின்னர், தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்கலாம் என்று மைய அரசுக்குப் பரிந்துரை செய்தது.

1999 சனவரி 16 ஆம் நாள், சென்னையில் நடைபெற்ற திருவள்ளுவர் நாள் விழாவில் பேசிய முதலமைச்சர் கலைஞர், “தமிழ் செம்மொழியா? இல்லையா? என்ற விவாதம் இனிமேலும் தேவையில்லை. தமிழ் செம்மொழிதான்! மைய அரசு அதை உடனடியாக அறிவிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, 2003 ஏப்ரல் 22ஆம் நாள், கலைஞர் பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதினார்.

 2004 மே 27 ஆம் நாள், பிரதமர் மன்மோகன் சிங் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குறைந்த அளவுப் பொதுச்செயல் திட்டத்தை வெளியிட்டார். கலைஞர் வலியுறுத்தியதற்கிணங்கத் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படும் என்ற கோரிக்கை அத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. அதன்படி, 2004 செப்டம்பர் 17 ஆம் நாள் நடைபெற்ற மைய அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஆணையை மைய அரசு 2004 அக்டோபர் 12 ஆம் நாள் வெளியிட்டது.

மீனாம்பாள் சிவராஜ் அவர்களுடன்... ஒரு நேர்முகப் பேட்டி

http://dalitshistory.blogspot.com/2016/03/blog-post_22.html?m=1


காவல்துறையில் துணை ஆணையாளராக பதவியாற்றி ஓய்வுபெற்ற cவரது மகன் தயாசங்கர் இல்லத்தில்தான் மூதாட்டியார் அவர்கள் இருந்து வருகிறார்கள். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத்துடன் துவக்கத்தில் தொடர்பு கொண்டு உயிரோடு இருக்கக்கூடிய விரல்விட்டு எண்ணக்கூடியவர்களுள் ஒருவராக இருக்கக்கூடியவர் என்பதால், நீதிக்கட்சி பவள விழா மலரில் அவரை  நேர்முகமாக கண்டு பழைய நினைவுகளை புதிய தலைமுறையினரின் வெளிச்சத்துக்குக் கொண்டுவர  வேண்டும் என்ற அவாவில் அவரைச் சந்தித்தோம். திராவிடர் கழகத் தலைமை நிலைய செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றனுடன் வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் வி.எம்.நாராயணன், எஸ்ரே கருணாகரன் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

கேள்வி: தங்களுக்கும் நீதிக்கட்சிக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கும் தொடர்பு எப்படி ஏற்பட்டது?

பதில்: என்னுடைய பெரியப்பா வேணுகோபால் பிள்ளை இந்த இயக்கங்களுடன் தொடர்பு கொண்டவர். கடப்பையில் நகராட்சி ஆணையாளராகப் பணிபுரிந்தவர். சென்னை ஸ்பர்டாங் சாலையில் டாக்டர் டி.எம்.நாயர் ஆற்றிய உரை புகழ்பெற்ற ஒன்றாகும். அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களே இவர்தான். இந்த முறையிலே எங்கள் குடும்பத் தொடர்பு நீதிக்கட்சியோடு இருந்தது.

ஒரு நாள் சி.டி.நாயகம் அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தார். அப்பொழுது ராஜாஜி பிரதமராக இந்தியைத் திணித்த சமயம். பார்ப்பனர்கள் சூழ்ச்சியால் இந்தி திணிக்கப்படுகிறது. இதனை நாம் தடுத்து நிறுத்தாவிட்டால், வரும் காலத்தில் நம் பிள்ளைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். நாம் பெரியாரோடு சேர்ந்து கொண்டு ஏதாவது செய்தாக வேண்டும் என்று கூறினார்.
எனது துணைவர் சிவராஜ் அவர்கள் யோசிக்கலாம் என்றார். நான் திருமணம் ஆனபுதுசு. அப்பொழுது சட்டென்று சொன்னேன், இதில் யோசிக்க என்ன இருக்கிறது? தீவிரமாக இந்தியை எதிர்க்கத்தான் வேண்டும் என்று சொன்னேன். குழந்தை சொல்லுது; சரி என்று சொல்லுங்கள் என்றார் சி.டி.நாயகம்.

முதலில் சென்னை தியாகராயர் நகரில் பொதுக்கூட்டம் ஏற்பாடாயிற்று. அந்த கூட்டத்தை சுமங்கலிதான் துவக்கிவைக்க வேண்டும் என்றார் சி.டி.நாயகம். அந்த முறையிலே முதன் முறையாக நான் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் அது. பெண் ஒருவர் பேசுகிறார் என்றவுடன் ஆச்சரியத்துடன் கூடினார்கள். ஏனென்றால், அந்தக் காலத்தில் பெண்கள் எல்லாம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதோ பேசுவதோ மிகவும் அதிசயம்.

அடுத்து இராயப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவில் உள்ள பெரிய மைதானத்தில் எனது தலைமையில் இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டம். இந்தியை எதிர்த்துத் தீர்மானம் போடப்பட்டது.  அந்தத் தீர்மானத்தை எடுத்துக்கொண்டு பிரதமர் ராஜாஜியைச் சந்திக்கச் சென்றார்கள். நான் நல்ல எண்ணத்தோடு தான் இந்தியைக் கொண்டு வந்திருக்கிறேன், சுதந்திரம் வந்தால் இந்தியாவுக்குப் பொது மொழி இந்திதான். இதை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று ராஜாஜி பதில் கூறி அனுப்பிவிட்டார். இதனைத் தொடர்ந்து நாட்டில் ஏராளமான அளவில் இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டங்கள் நடக்கத் தொடங்கின. மீர்சாப்பேட்டை, தேனாம்பேட்டை என்று பரவியது.

ஒருநாள் கி.ஆ.பெ.விசுவநாதம் இராயப்பேட்டை ஆண்டியப்பத் தெருவில் உள்ள (கதவு எண்.12) எங்கள் வீட்டுக்கு வந்தார்., அவருடன் ஸ்டாலின் செகதீசன் என்பவரையும் அழைத்து வந்தார். இந்தியை எதிர்த்து எங்கள் வீட்டிலேயே ஸ்டாலின் செகதீசன் என்பவர் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். ஏராளமான பொதுமக்களும் பிரமுகர்களும் எங்கள் வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள்.

சென்னைக் கடற்கரையில் பெரியார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. பெரியாரைக் கைது செய்விட்டார்கள். பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமியையும் கைது செய்துவிட்டார்கள். அந்த நேரத்தில் நான் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினேன். ராஜாஜி என்னைக் கைது செய்யவில்லை. அதற்கு ஒரு காரணம் உண்டு. அந்தக் காலகட்டத்தில் வெள்ளைக்காரர்கள் வீட்டில் எல்லாம் சமையல்காரர்களாக (பட்லர்) பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் ராஜாஜியிடம் சென்று, மீனாம்பாள் அம்மாவை எந்தக் காரணத்தை முன்னிட்டும் கைது செய்யக்கூடாது; மீறி கைது செய்தால் நாங்கள் வேலைக்குப் போகமாட்டோம் என்று கூறிவிட்டார்கள். ராஜாஜியும் எப்படியோ என்னைக் கைது செய்யவேண்டாம் என்று கூறிவிட்டார்.

கேள்வி: தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தாங்கள் ஆற்றிய குறிப்பிடத்தக்க பணி என்ன?

பதில் : அகில இந்திய அளவில் தாழ்த்தப்பட்டோர் அமைப்புக்கு “கிறீறீ மிஸீபீவீணீ ஷிநீலீமீபீuறீமீபீ சிணீstமீ திமீபீமீக்ஷீணீtவீஷீஸீ” என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. பல மாநிலங்களில் எம்.சி.ராஜா அவர்களைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். உத்திரப்பிரதேசம், வங்காளம் போன்ற இடங்களில் எம்.சி.ராஜா அவர்களைத் தேர்ந்தெடுத்தனர். மத்தியப் பிரதேசத்தில் டாக்டர் அம்பேத்கரைத் தேர்ந்தெடுத்தார்கள்.

சென்னையிலே மாநாடு கூட்டி டாக்டர் அம்பேத்கர் அவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். எம்.சி.ராஜா எங்களுக்கெல்லாம் ஒரு வகையில் உறவினர். உறவினர்கள் எல்லாம் என்னிடம் வந்து உறவுக்காரர் என்றுகூடப் பார்க்கலாம். இப்படி  செய்கிறீர்களே என்றார்கள். நாட்டின் எதிர்காலத்தைப் பார்க்கவேண்டுமா? சொந்தபந்தத்தைப் பார்க்கவேண்டுமா? என்று திருப்பிக்கேட்டார்.

மாநாடு எங்கு நடத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது சென்னை “அய்லாண்டு திடலில் நீதிக்கட்சியின் மாநாடு” நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது 1919 திசம்பர் மாதத்தில் அந்த மாநாட்டுப் பந்தலில் ஒரு குறிப்பிட்ட நேரம் தாழ்த்தப்பட்டோர் மாநாடு நடத்துவதற்கு வாய்ப்பு அளித்தார்கள். நீதிக்கட்சி மாநாட்டின் செயலாளராக இருந்த சுந்தர்ராவ் நாயுடு இந்த உதவியைச் செய்ய முன்வந்தார்.

அந்தக் காலத்தில் பணத்துக்குப் பெருங்கஷ்டம், நான் போட்டிருந்த நான்கு பவுன் வளையல்களை அடமானம் வைத்து மற்ற செலவுகளைச் செய்தோம். இரண்டு மூன்று மணிநேரத்துக்குள்ளாகவே சுவரொட்டி அச்சிட்டு ஒட்டி மாநாட்டை சிறப்பாக நடத்திவிட்டோம். மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் அவர்களைத் தலைவராக தேர்ந்தெடுத்து தீர்மானத்தை அம்பேத்கர் அவர்களுக்கே அனுப்பிவைத்தோம்.

தந்தை என் சிவராஜ்
ஆனால், அம்பேத்கர் அவர்கள் தலைவர் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார். “நான் கோபக்காரன், எனக்கு இந்தப் பதவி எல்லாம் ஒத்துவராது நீயே இரு” என்று கூறி எனது கணவர் சிவராஜ் அவர்களை தலைவராக நியமித்தார்.

நாக்பூரில் மாநாடு நடத்தி சிவராஜ் அவர்கள் தலைவராக முறைப்படி அறிவிக்கப்பட்டார். அந்த மாநாட்டை ஏற்பாடு செய்தவரே டாக்டர் அம்பேத்கர் அவர்கள்தான். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் அகில இந்திய அமைப்பின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டது அப்பொழுது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகவே கருதப்பட்டது.

கேள்வி: தந்தை பெரியார் அவர்களோடு தாங்கள் இணைந்து பணியாற்றிய நிகழ்ச்சிகள் பற்றிக் கூறுங்கள்.

பதில்: நான் ஏராளமான சுயமரியாதைத் திருமணங்களுக்குத் தலைமை தாங்கி நடத்தி இருக்கிறேன். பெரியார் அவர்கள் கலந்துகொண்ட திருமணங்களிலும் கலந்துகொண்டு பேசி இருக்கிறேன்.

சென்னை, பெரம்பூரில் என் தலைமையிலும், பெரியார் தலைமையிலும் ஒரு சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. கடுமையான மழை, தாழ்த்தப்பட்டோர் பகுதி.. ஒரே சேறும் சகதியுமாகிவிட்டது. திருமணம் முடிந்து சாப்பிட்டுப் போகச் சொன்னார்கள். நான் ஏதோ சமாதானம் சொல்லி சாப்பிடவில்லை. பெரியார் என்ன செய்தார் தெரியுமா? மேலே இருந்த ஓலையைக் கீழே எடுத்துப்போட்டு அப்படியே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார். பெரியார் எந்தவித ஏற்றத்தாழ்வும் பார்க்கமாட்டார்.

நான், நாராயிணி அம்மாள், டாக்டர் தருமாம்மாள் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தபோது, காந்தியாருக்கு மகாத்மா என்ற பட்டம் கொடுத்து அழைக்கிறார்கள்; நாம் நம் மக்களுக்காக எல்லாவற்றிலும் முன்னின்று பாடுபடுகிற ஈ.வெ.ரா.அவர்களுக்கு ஒரு பட்டம் கொடுத்து அழைக்கவேண்டும் என்று முடிவு செய்தோம். அப்பொழுதுதான் ‘பெரியார்’ என்று அழைப்பது என்ற முடிவு செய்து, பிறகு பெண்கள் மாநாடு கூட்டி ‘பெரியார்’ என்று பட்டம் கொடுத்தோம். அதை ஒரு முக்கிய நிகழ்ச்சியாக தன் வாழ்நாளில் நான் கருதுகின்றேன்.
கேள்வி : வேறு முக்கிய நிகழ்ச்சிகள்...


பதில்: நான் எனது கணவர் சிவராஜ் அவர்களுடன் பம்பாயில் உள்ள அம்பேத்கர் அவர்கள் வீட்டுச் சென்று இருக்கிறேன். அவரே சமையல் செய்து எங்களுக்கு விருந்து பரிமாறிய நிகழ்ச்சி மறக்கமுடியாத ஒன்று.

சென்னைக்கு வேல்ஸ் இளவரசர் வந்தபோது, எங்களுக்குத் தனி அழைப்புக் கொடுக்கப்பட்டு, அந்த விருந்தில் கலந்துகொண்டோம்.

சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழக செனட் உறுப்பினராக இருந்திருக்கின்றேன். கவுரவ மாஜிஸ்ட்ரேட் போன்ற பொறுப்புகளில் இருந்திருக்கின்றேன். இரங்கூனில் எனது பாட்டனார் மதுரைப்பிள்ளை பிரபல ‘வணிகர் விக்டோரியா’, ‘மதுரை மீனாட்சி’ என்கிற இரண்டு லாஞ்சுகள் அவருக்குச் சொந்தமானவை. இண்டர்மீடியட் படித்துவிட்டுத் திருமணத்துக்காக 16வது வயதில் சென்னைக்கு வந்தேன். எனது கணவர் சிவராஜ் எனது அத்தைமகன் ஆவார். அந்தக் காலத்திலேயே வக்கீலுக்குப் படித்தவர். அப்பொழுதெல்லாம் இந்த சமுதாயத்தில் இவ்வளவு தூரம் படித்தவர்கள் மிகவும் குறைவு. அம்பேத்கர் அவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். தாழ்த்தப்பட்ட ஏழை-எளிய மக்களுக்கு இலவசமாக சட்ட உதவிகள் செய்வார்.

(பழைய நினைவுகளைப் பசுமை மாறாமல் எடுத்துச்சொன்ன மூதாட்டியாருக்கு நன்றி தெரிவித்து விடைபெற்று வந்தோம்)

நன்றி : நீதிகட்சி பவளவிழா மலர் - 1992



#திராவிடம் அறிவோம்(63)

மீனாம்பாள் சிவராஜ் – பிறந்த நாள் (26.12.1904).

சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலின பெண் துணை மேயர்;

இந்தி எதிர்ப்புப் போராளி;

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வல்லமை பெற்றவர் போன்ற பல்வேறு சிறப்புகள் உடையவர் மீனாம்பாள் சிவராஜ்.


1938 ஆம் ஆண்டு நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில்தான் பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த மாநாட்டுப் பந்தலிலேயே மூன்றாம் நாள் இறுதியில் ஆதிதிராவிடர் மாநாடு நடத்த மீனாம்பாள் சிவராஜ் நீதிக்கட்சித் தலைவர்களிடம் ஒப்புதல் பெற்று நடத்தினார். அவருடைய பிறந்தநாள் இன்று.

இணைப்பு: நீதிக்கட்சி பவள விழா மலரில் வெளிவந்த அவருடைய பேட்டி.

http://dalitshistory.blogspot.com/2016/03/blog-post_22.html?m=1



#திராவிடம் அறிவோம் (62)

(25.12.2018) இன்றிலிருந்து சரியாக 44 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவையே பரபரப்புக்கு உள்ளாக்கிய அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அது இராவண லீலா. அந்த நிகழ்ச்சிக்குக் காரணம் என்ன?

அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவரான பக்ருதீன் அகமது அலி மற்றும் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோருக்கு அன்னை மணியம்மையார் 26.10.1974 அன்று ஒரு தந்தி அனுப்பினார்.

‘திராவிட மாவீரன் இராவணனை எரிக்கும் இராமலீலா நிகழ்ச்சியில் தாங்கள் பங்கு கொள்வது மதச்சார்பின்மை கொள்கைக்கு முரணானது மட்டுமன்று. பல இலட்சக்கணக்கான திராவிட மக்களை, அவமானப்படுத்தி ஆத்திரமூட்டும் செய்கையுமாகும். எனவே, இந்நிகழ்ச்சிக்குச் செல்லக்கூடாது. மீறியும் அதில் பங்கு கொள்வீர்களானால், இலட்சக்கணக்கான திராவிட மக்கள் தமிழ்நாடெங்கிலும் இராமன் உருவத்திற்குத் தீயிட்டுக் கொளுத்த நேரிடும்’ என்பதுதான் அது.

எனினும், மணியம்மையாரின் குரலுக்கு குடியரசுத் தலைவரோ, பிரதமரோ செவிமடுக்கவில்லை. மருத்துவமனையில் இருந்த மணியம்மையார் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். நிகழ்ச்சியை நிறுத்துமாறு செய்யப்பட்ட எல்லா நடவடிக்கைகளையும் மீறி உறுதி தளராமல் இராமன், சீதை, இலட்சுமணன் ஆகிய உருவங்களுக்கு 25.12.1974 அன்று தமது கையாலேயே தீயிட்டார் அன்னையார். கைதும் செய்யப்பட்டார்.

    அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு நடந்த நாள் இன்று.


#திராவிடம் அறிவோம் (61)

அரசு அலுவலர்கள் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும் என்று 1978-இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண். 1134, கல்வித் துறை, நாள். 26.01.1978)

பின்னர், தமிழ்மொழியின் பயன்பாட்டினை செவ்வனே செயல்படுத்த உறுதுணையாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையின் துணைகொண்டு 2008-இல் செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. அரசாணையும் வெளியிடப்பட்டது. (அரசாணை எண். 41, தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை, நாள். 20.02.2008). அதன்படி,


தலைமைச் செயலகத் துறைகளில் அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும்.


சுற்றாணைக் குறிப்புகள் (Circulars) மற்றும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும்.


தலைமைச் செயலகம் மற்றும் துறைத் தலைமை அலுவலகப் பயன்பாட்டிலுள்ள கணினிகள் அனைத்திலும் தமிழ் மென்பொருள் பயன்படுத்தப்பட வேண்டும்.


துறைத் தலைமை அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் படிவங்கள் முடிந்த வரை தமிழிலேயே இருக்க ஆவன செய்ய வேண்டும். சான்றாக, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை போன்றவற்றில் பயன்படுத்தப்படும் படிவங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.


#திராவிடம் அறிவோம் (60)

இரணியண் அல்லது இணையற்ற வீரன் – பாரதிதாசன்

இராவண காவியம் – புலவர் குழந்தை

ஆரிய மாயை – அண்ணா

கருஞ்சட்டை ஒழிய வேண்டுமா – புலவர் பு. செல்வராசு

காந்தியார் சாந்தி அடைய – ஏ.வி.பி. ஆசைத்தம்பி

போர்வாள் – சி. பி. சிற்றரசு

தூக்குமேடை, உதயசூரியன் - கலைஞர்

    அரசால் தடை செய்யப்பட்ட திராவிட இயக்க எழுத்தாளர்களின் நூல்கள் இவை.

 திராவிட இயக்க வரலாற்றில் கருத்துரிமை நசுக்கப்படுவதை எதிர்த்து தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வந்தது. தி. மு. கழகம் 1950-இல் காங்கிரஸ் ஆட்சியாளரை எதிர்த்து, ‘பேச்சுரிமை-எழுத்துரிமைப் போர்’ என்று ஒரு போராட்டத்தையே நடத்திற்று.
   
1948-இல் தடை செய்யப்பட்ட ‘இராவண காவியம்’ நூலுக்கு 23 ஆண்டுகள் கழித்து கலைஞரால் 1971-இல் தடை நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

#திராவிடம் அறிவோம் (59)

திருக்குறளும் தந்தை பெரியாரும்!

1928 ஆம் ஆண்டு முதல் பெரியார், திருக்குறளை எழுத்துகள் வாயிலாகவும், சொற்பொழிவுகள் மூலமாகவும் மக்களிடையே தீவிரமாகப் பரப்பினார்.

1948 ல் சென்னையில் மிகப்பெரிய முதல் திருக்குறள் மாநாடு நடத்தினார். 'திருக்குறள் நாள் ' கொண்டாடச் செய்தார்.

1952 ல் 10000 திருக்குறள் புத்தகங்களை அச்சடித்து நான்கு அணா விலையில் தமிழ்நாடு முழுவதும் பரப்பினார்.

இதன் விளைவாக, தமிழகப் பள்ளிகளிலும், மேடைகளிலும், பத்திரிகைகளிலும், நூல்களிலும் திருக்குறள் சிறந்த செல்வாக்கு பெற்றது.

"நீங்கள் என்ன சமயத்தவர் என்று கேட்டால், வள்ளுவர் சமயம் என்று சொல்லுங்கள். உங்கள் நெறி என்னவென்றால் குறள் நெறி என்று கூறுங்கள். அப்படிச் சொன்னால் எந்தப் பிற்போக்குவாதியும், எப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரனும் எதிர்நிற்க மாட்டான். யாரும் குறளை மறுக்க முடியாததே இதற்குக் காரணம்".

- பெரியார்.

#திராவிடம் அறிவோம் (58)

7.07.1950 அன்று சென்னை உயர்நீதிமன்றம் ' வகுப்புரிமை இட ஒதுக்கீடு' அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது எனத் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றமும் சென்னைத் தீர்ப்பை உறுதி செய்தது.

 இத்தீர்ப்பை எதிர்த்து தந்தை பெரியார் திருச்சியில் 03.12.1950 இல் வகுப்புரிமை மாநாடு கூட்டினார்.

தந்தை பெரியாரின் போராட்டத்தின் காரணமாக முதன்முதலாக அரசியல் சட்டம் திருத்தப்பட்டது. அரசியல் சட்டத்தில் பிரிவு 15 (4) சேர்க்கப்பட்டது.

சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ செல்லாத தந்தை பெரியாரால் இந்தியாவில் வசிக்கும் அனைத்து பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வகுப்புவாரி உரிமை வழங்கப்பட்டது.

#திராவிடம் அறிவோம் (57)

காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவளித்ததில் பெரும் தொழிலதிபர்களும், பண்ணையார்களும் கணிசமான பங்கு  வகித்தனர். நிலச்சீர்திருத்தம் குறித்துப் பேசி வந்தாலும், அதற்காக காங்கிரஸ் அரசு எதையும் செய்யவில்லை.

கடுமையான போராட்டங்களின் விளைவாக 1961-இல் தமிழ்நாடு நிலச்சீர்திருத்த (உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரு தனி நபருக்கான நில உச்ச வரம்பாக 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பயனில்லை.

1970-ல் திமுக அரசு மிகுந்த துணிச்சலோடு உச்சவரம்பிற்கான அளவை 15 ஸ்டாண்டர்டு ஏக்கராகக் குறைத்தது. இதன் மூலம் கணிசமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, விவசாயத் தொழிலாளர்களுக்கும், சிறு விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

#திராவிடம் அறிவோம் (56)

நீதிக்கட்சி ஆட்சியில், 1922 மார்ச் 25 ஆம் நாள், தாழ்த்தப்பட்ட - பழங்குடி மக்களை இனி பஞ்சமர் உள்ளிட்ட சொற்களால் இழிவு படுத்தக்கூடாது. அவர்களைக் குறிப்பிடுவதற்கு, ஆதிதிராவிடர் என்ற சொல்லையே பயன்படுத்த வேண்டும் என்றும் சென்னை மாகாண சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவிலேயே தாழ்த்தப்பட்டோருக்காக தனியாக அமைச்சகத்தை அமைத்தது நீதிக் கட்சி அரசு.

#திராவிடம் அறிவோம் (55)


G.O.Ms.No.145, Personnel and Administrative Reorms Dept., dated: 30.09.2010.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணை இது.

கலைஞரின் ஆட்சிக்காலத்தில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இவ்வாணையின்படி, ஒரு குறிப்பிட்ட பணிக்குத் தேவையான அடிப்படைத் தகுதிக் கல்வியைத் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அந்தப் பணியிடங்களில் 20 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படியே, இன்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அரசுப் பணிக்குப் பணியாளர்களைத் தேர்வு செய்து வருகிறது.


Challenged in court and dismissed:
https://indiankanoon.org/doc/56235554/

Madras High Court
S.Gomathi Nayagam vs The State Of Tamil Nadu ... on 25 July, 2014
       

  

  

 
 
 BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT

DATED : 25.07.2014

CORAM
THE HONOURABLE MR.JUSTICE S.NAGAMUTHU

W.P.(MD)No.15383 of 2012

S.Gomathi Nayagam                ... Petitioner
                                   
     
Vs.

1.The State of Tamil Nadu represented by
   the Secretary to Government,
   Personnel and Administrative Reforms (S) Department,
   Secretariat, Chennai-600 009.

2.The Secretary,
   Tamil Nadu Public Service Commission,
   Near Government Dental Medical College,
   Frazer Bridge Road,
   V.O.C. Nagar, Park Town,
   Chennai-600 003.               ... Respondents

 
Writ Petition filed under Article 226 of the Constitution of India
praying for issuance of a Writ of Certiorarified Mandamus calling for the
records of the first respondent relating to G.O.Ms.No.145 (P&AR Department)
dated 30.09.2010 and quash the portion relating to the illustration and
consequential wrong selection made by the second respondent on 09.10.2012 and
20.11.2012 for the interview posts and non-interview posts respectively under
Group-II Examination and consequently direct the respondents to issue amended
Government Order so as to serve the purpose of twenty percent of special
reservation for persons studied in Tamil Medium (PSTM) in all categories and
issue fresh selection notification by the TNPSC within a specified time frame
that may be fixed by this Court.

  
!For Petitioner     : Mr.S.Visvalingam
^For Respondents : Mr.K.P.Krishnadoss,
     Government Advocate


:ORDER
Challenge in this writ petition is to the Government Order in G.O.Ms.No.145, Personnel and Administrative Reforms (S) Department, dated 30.09.2010.
2.The facts of the case are as follows:
The Government of Tamil Nadu promulgated an Ordinance as Tamil Nadu Ordinance 3 of 2010 providing horizontal reservation to 20% in all posts and Government Services for the candidates who were studied in Tamil Medium. With a view to give effect to the said Ordinance, which was later on substituted by an Act, the Government, in exercise of the powers conferred by sub-section (1) of Section 8 of the said Ordinance, issued Rules under the name ?Tamil Nadu appointment on preferential basis in the Services under the State of Persons studied in Tamil Medium Rules, 2010?. In the Rules, Rule-3 speaks of manner of selection for appointment, which reads as follows:
?3.Manner of selection for appointment: Twenty percent of all vacancies in the appointment in the services under the State which are to be filled through direct recruitment shall be set apart on preferential basis to persons studied in Tamil medium as illustrated below:- ILLUSTRATION Out of 200 seats, 40 seats shall be set apart on preferential basis to persons studied in Tamil medium, in their respective category, in the following manner:
General Turn Backward Classes (Other than Backward Classes Muslims) Most Backward Classes / De-notified Communities Scheduled Castes Backward Classes Muslims Scheduled Caste Arunthathiars Scheduled Tribes (BY ORDER OF THE GOVERNOR)?
3.In this writ petition, the petitioner's contention is that the illustration given in Rule-3, if worked out properly, would demonstrate that 20% as mandated under the Act, is not preserved.
4.When this writ petition was taken up, the learned counsel for the petitioner submitted that the illustration appended to Rule-3 is not correct and therefore the same requires correction. The learned counsel for the petitioner would further submit that the Secretary of Tamil Nadu Public Service Commission also forwarded a letter to the Government pointing out the above error in the illustration. The learned counsel for the petitioner would further submit that now the error has been rectified and G.O.Ms.No.40, Personnel and Administrative Reforms (S) Department, dated 30.04.2014 has been issued. The learned counsel for the petitioner would further point out that as per the said amendment, illustration earlier appended to Rule-3 has been now deleted and in its place, a new illustration has been substituted. The learned counsel for the petitioner would further submit that this revised illustration issued in G.O.Ms.No.40 is the correct one, which preserves 20% of employment for Tamil Medium candidates. Therefore, according to the learned counsel for the petitioner, as per G.O.Ms.No.40, the petitioner should be considered and he should be accordingly selected and posted in any one of the services in Group-II Examinations held as per the Advertisement No.258 issued by the Tamil Nadu Public Service Commission dated 30.12.2010.
5.The learned Government Advocate would vehemently oppose this writ petition. He would state that G.O.Ms.No.40 is only prospective in operation and if G.O.Ms.No.40 is to be given retrospective operation to the advertisement dated 30.12.2010 issued by the Tamil Nadu Public Service Commission, it would only create chaos and confusion, since in pursuance of the said advertisement, examinations were conducted, selection was completed and appointments have already been made. He would further submit that if the relief sought for by the petitioner is conceded to, then, many of the selected candidates may have to be sent out of service and many new faces may have to be allowed to be selected. This will only again create confusion and chaos and therefore, according to the learned Government Advocate, the request of the learned counsel for the petitioner to give retrospective operation of G.O.Ms.No.40 cannot be countenanced.
6.The learned counsel for the petitioner would however submit that when this writ petition was admitted, this Court passed an order as early as on 30.11.2012 directing that if any appointment is made, it will be subject to further orders to be passed in the writ petition, and the candidates so selected cannot claim equity. Referring to the said interim order passed, the learned counsel for the petitioner would submit that since the appointments made already are subject to the outcome of this writ petition, there will be no chaos or confusion, as it is sought to be projected by the learned Government Advocate.
7.I have considered the above submissions.
8.As I have already pointed out, what is under challenge is the illustration appended to G.O.Ms.No.145. The fact remains that by applying the illustration, selection was completed and appointments have already been made. At this stage, if it is declared by this Court that the said illustration is illegal and the same is quashed, then, all the appointments made earlier are to be set aside. Of course, it is true that in the interim order, this Court made an observation that any appointment made subsequent to the filing of the writ petition shall be subject to the outcome of this writ petition. But, at the same time, if this Court is inclined to set aside the Government Order in G.O.Ms.No.145, and to withdraw the benefits given to various candidates in pursuance of G.O.Ms.No.145, then, it becomes incumbent on the part of this Court to afford opportunity to all those selected candidates and to hear them, and then to pass appropriate orders. If, conceding to the request of the petitioner, the illustration appended to Rule-3 is examined and if any adverse order is passed, certainly, it will cause only chaos and confusion as several hundreds of candidates selected already and who are already working, will be disturbed. As I have already pointed out, that course cannot be done without affording opportunity to them. Therefore, at this length of time, in view of the subsequent development, I am not inclined to go into the correctness of G.O.Ms.No.145.
9.Apart from that, the illustration appended to G.O.Ms.No.145 has been now undone by G.O.Ms.No.40. Therefore the question is, whether G.O.Ms.No.40 can be retrospectively applied or not. That course is not possible, because if the illustration appended to G.O.Ms.No.40 is to be applied retrospectively for the advertisement dated 30.12.2010, in that event also, many of the selected candidates may have to be sent out of service and many new faces may have to be brought in. That will also create only chaos and confusion. That is the reason why I agree with the learned Government Advocate that G.O.Ms.No.40 is purely prospective in operation and therefore, the benefit of G.O.Ms.No.40 cannot be extended to the petitioner.
10.In view of all the above, the writ petition fails and accordingly it is dismissed. No costs.
Index  : Yes/No       25.07.2014
Internet : Yes/No

KM

To

1.The Secretary to Government,
   Government of Tamil Nadu,
Personnel and Administrative Reforms (S) Department, Secretariat, Chennai-600 009.
S.NAGAMUTHU, J.
KM
2.The Secretary, Tamil Nadu Public Service Commission, Near Government Dental Medical College, Frazer Bridge Road, V.O.C. Nagar, Park Town, Chennai-600 003.
W.P.(MD)No.15383 of 2012 25.07.2014