Thursday, May 31, 2018

ரஜினியும் பூர்ணம் விஸ்வனாதனும்

ரஜினியும் பூர்ணம் விஸ்வனாதனும்
ரஜினியின் இந்த பேட்டியைப் பார்த்து விட்டு அதிர்ச்சி அடைபவர்களைப் பார்த்தால் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இதுதான் ரஜினி ! இந்த வகையான ஆளுமையைத்தானே அவர் இவ்வளவு நாளும் வெளிப்படுத்தி வந்தார் ! இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது ? ரஜினி இப்படித்தான் பேசுவார். “உளறுவார்” என்றுதான் எழுத நினைத்தேன் !
ஆக அதிர்ச்சி அடைபவர்கள் ,அவரிடம் பெரிதாக ஏதோ எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள் போல 
ரஜினி என்பவர் உங்கள் அப்பா , என் அப்பா போன்ற ஒரு மிடில் கிளாஸ் மனோபாவம் கொண்ட வயது முதிர்ந்த பெரியவர். லௌகீக வாழ்வின் அனைத்து லக்ஷணங்களையும் ஒருங்கே பெற்றவர்.
மகள்களுக்கு கல்யாணம் கட்டிக்கொடுத்து கண்ணீர் மல்க ஆசி வழங்குபவர். பேரன் மூஞ்சில் மூத்திரம் அடிப்பதை ரசித்து நெகிழ்ந்து மகிழ்பவர்.
பூர்ணம் விஸ்வநாதனைப் பற்றி என்ன நினைப்பீர்கள் ? அவர் இப்படித்தானே பேசுவார்? சினிமாவில் அவரது கதாபாத்திரத்தை வைத்து அந்த முடிவுக்கு வருவோம். நேரில் அவர் எப்படி என்று தெரியாது.பெரிய புரட்சிக்காரராக கூட இருக்கலாம்.
ரஜினி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் , வாழ்வில் அவர் ஒரு சினிமா பூர்ணம் விஸ்வநாதன் தான்.அவர் அதை பலமுறை நிரூபித்து இருக்கிறார். பூர்ணம் விஸ்வநாதனாக இருப்பது கேவலம் ஒன்றும் இல்லைதான்.
இவரைப்போன்றவர்களின் கருத்துக்கள் எப்படி இருக்கும் ?
மிலிட்டிரி ஆட்சி வந்தாதான் நாடு உருப்படும் ….
சீறும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே ! (சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்று சொல்வது கூட தனி மனித கருத்து , ஏன் சீறும் பாம்பை நம்ப வேண்டும் 
பெரும் பணக்கார்ர்கள் , பண்ணையார்கள் , ஜமீன் தார்கள் எல்லோரும் நல்லவர்கள். ஏழைகள் தான் கிரிமினல்கள்.
பிக் பாக்கெட் அடிப்பவனை தூக்கில் போட வேண்டும், பெண்கள் மூடி மறைத்துக்கொண்டு , ரேப்பிஸ்ட்டுக்கு கற்பழிக்க மூடு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இப்படி வண்டி வண்டியாக போகும் இவர்கள் கருத்துக்கள்.
உயர் ரக குடியிருப்புப் பகுதியில் வாழ்ந்து கொண்டு , கார் பார்க்கிங்க் பிரச்சனைக்காக போலீஸ் கமிஷனரை அழைக்கக் கூடிய ஒரு மிடில் க்ளாஸ் சிவில் சொசைட்டி மனோபாவத்தின் பின்னணியில் இருந்து வருபவர்தான் ரஜினி காந்த்.
இதனால் ரஜினி கெட்டவர் கிடையாது. அவருக்கு வாய்த்த்து அதுதான். ஒரு வயதான மிடில் க்ளாஸ் தந்தையின் மனோபாவம் தான் இது. ரஜினி மட்டுமா இப்படி இருக்கிறார் ? தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான வயசாளிகள் இப்படித்தான் இருக்கிறார்கள்.
”எதுக்கெடுத்தாலும் போராட்டம் , நாடு எப்படி சார் உருப்படும் ? இவனுங்களை எல்லாம் குருவி சுட்றது மாதிரி சுடணும் சார் “
இதுதான் மிடில் கிளாஸ் குடும்பத்தலைவர்களின் மனோபாவம். இதைத்தான் ரஜினியும் வெளிப்படுத்தினார். என்ன எழவு மற்றவர்கள் எல்லாம் அரசியலுக்கு வராமல் குடும்பத்துக்குள் உளறிக்கொண்டு உள்ளனர். ரஜினி , முதல்வர் ஆகும் ஆசையுடன் பொதுவெளியில் உளறுகிறார்.
எப்படி ரஜினிக்கு இப்படி உளறிக்கொட்டும் துணிச்சல் வந்தது ? ஏன் தமிழக அரசியல் களம் தொடர்ந்து கோமாளிகளையும் , அபத்த நாடகங்களையுமே சந்த்தித்து வருகிறது ?
நாம் தான் காரணம்.
எப்போது கொள்கை , அரசியல் கலாச்சாரம் என அனைத்தையும் ஓரம் கட்டிவிட்டு ஜனரஞ்சக கவர்ச்சி அரசியலுக்கும் , தனிமனித துதி சார்ந்த , தனிமனித சாகச உணர்வு சார்ந்த அரசியலுக்கு நாம் ஆசை ஆசையாக மாறினோமோ , அப்போதிலிருந்து ஆரம்பித்த்து இந்த வீழ்ச்சி!
அந்த வீழ்ச்சியின் உச்சமாக ஜெயலலிதா அரசைப் பார்த்தோம். அவரது மறைவுக்குப் பிறகு இப்போது நடந்து கொண்டிருக்கும் அபத்த அரசாட்சியைக் கண்டு கொண்டு இருக்கிறோம். இதையும் தாண்டி தூக்கி அடிப்பது போல அடுத்து நாம் காண இருப்பது ரஜினி – கமல் அரசியல்.
ரஜினி அப்போதே அரசியலுக்கு வந்து இருந்தால் , அரசியல் மேடையில் சிகரட்டை தூக்கிப்போட்டு பிடித்து இருப்பார். மக்கள் கை தட்டி ஓட்டு போட்டு இருப்பார்கள். இதுதான் நம்முடைய அரசியல் சுரணை.
மற்ற மாநிலங்களைப் பாருங்கள் , அரசியல் கூத்துக்கள் அங்கும் நடந்தாலும் , அரசியல் கலாச்சாரம் என்பது அங்கே இருக்கும். இதைப்போன்ற வெற்று தனிநபர் சார்ந்த கோமாளிக்கூத்துக்களோ , அதற்கு நாம் கொடுக்கும் அளவுக்கு முக்கியத்துவமோ இருக்காது.
இங்கே பெரும்பாலான தமிழ் ஆண்கள் தனக்கான பர்/ஸ்னாலிட்டி இல்லாத வெற்றுடம்புகள். ஐடெண்டிட்டி இல்லதவர்கள். இவர்களுக்கு எவனையாவது பிடீத்து தொங்கிக்கொண்டு இருக்க வேண்டும். அவனது அடையாளமே இவர்களது அடையாளம். அவனைப்பற்றி ஏதேனும் சொன்னால் “வெறி” வந்து விடும். நண்பனாவது , மனைவியாவது , குதறி விடுவார்கள்.
இந்த சைக்கலாஜிக்கல் பிரச்சனையால்தான் இங்கே மற்ற மாநிலங்களை விட ஹீரோ வொர்ஷிப் அதிகமாக இருக்கிறது. இந்த பின்னணியில் தான் கோமாளிகள் , சைக்கோக்கள் , அரை மெண்டல் எல்லாம் அரசியலுக்கு வரமுடிகிறது, ஆட்சியில் அமரவும் , அதிர்வை உண்டாக்கவும் முடிகிறது.
இவர்களுக்கு சொம்படிக்க , முட்டுக்கொடுக்க என்ற பலரை நேர்ந்து விட்டிருக்கிறார்கள்.
அதாவது ரஜினி நல்லவர்தான். அவருக்கு சொல்லிக்கொடுப்பவர்கள் சரியில்லையாம். இப்படிதான் சசிகலாவை பலிகடாவாக்கி , ஜெயல்லிதாவை புனிதப் படுத்தினார்கள். இப்போது ரஜினிக்கும் அதே ஃபார்முலா !
இந்த “சொல்லிக்கொடுக்கும் “ முண்டக்கலப்பைகள் யாரு? அதுங்க மொகரைங்களை பார்த்து , அதுங்களோட அறிவு எத்தனை மரக்கான்னு தெரிஞ்சிக்கணும்.
வேற எதெல்லாம் முண்டக்கலப்பைகளா தலைவருக்கு “சொல்லிக்” குடுக்கறீங்க ?இப்ப தலைவரு பெருசா தப்புத் தண்டாவுக்கு போறதில்லை….இல்லைன்னா நினைச்சுப் பார்த்தாலே கொடூரமா இருக்கு !
ஏன் பெருவாரியான மிடில் க்ளாஸ் மனோபாவம் கொண்டவர்கள் , ரஜினி உட்பட போராட்டங்களை வெறுக்கிறார்கள்?
போராட்டங்கள் என்பதை இவர்களுக்கு எதிராக பார்க்கிறார்கள். இவர்களுக்கு ஒரு வீடு , சோறு , கார் , குடி , குட்டி என அனைத்தும் கிடைத்து ஒரு மாதிரி சிஸ்டம் ஒழுங்காக போய்க்கொண்டு இருக்கிறது. இந்த சிஸ்ட்த்தை ஒழுங்காக கொண்டு செல்பவர்கள் போலீஸும் ராணுவமே என்பது இவர்களின் முதல் ஆழ்மன நினைப்பு.
அதனால் தான் போலீஸ் மற்றும் ராணுவத்தின் மேல் கை வைத்தால் இவர்கள் பதறுவார்கள். போலீஸும் இவர்களிடம் மரியாதையாக ஸ்நேகமாக நடந்து கொள்வதை கண்டிருக்கலாம்.
இந்த சுயநலமான ”சிஸ்ட்த்தை கலைத்து” விடப்போகிறார்களே என்பது முதல் பயம்.
அடுத்தது , போராட்ட்த்திற்கு அழைப்பு விடுப்பவர்கள் , தலைமைப் போராளிகள்.
தமிழகத்தின் அடுத்த சீ எம் ரேஸில் ரஜினியும் கமலும் இருந்தால் , போராளி ரேஸில் மட்டும் என்ன சேகுவேராவும் , சுபாஷ் சந்திர போஸுமா இருப்பார்கள் ?
அங்கும் பஃபூன்களுக்கும் கோமாளிகளுக்கும் பலத்த போட்டி !
தலைவர்களுக்கான எந்த தகுதியும் , பின்புலமும் இல்லாமல் , அவர்களும் திடீரென்று பாஸ்ட் ஃபுட் போராளிகள் போல தோன்றி உளறிக்கொட்டி காமடி செய்து கொண்டு இருப்பதால் போராட்ட்த்திற்கான மரியாதையே போய் விட்ட்து.
இவர்களிடமும் எந்த கொள்கை மண்ணாங்கட்டியும் கிடையாது. எதை எடுத்தாலும் எதிர்ப்பார்கள். மாற்று வழியோ , ஆக்கபூர்வமான யோசனைகளோ , பெரும் மக்கள் கூட்ட்த்திற்கான அரசியல் கோஷமோ ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.
எல்லா போராளிகள் மெனுவிலும் தமிழ்நாடு இரண்டாம் இடம் தான். ஈழம் தான் முதல் இடம். எங்களை தயவு செஞ்சி விட்டுடுங்கடா என்று ஈழ மக்கள் கெஞ்சி கதறி பார்த்து விட்டார்கள். இவர்கள் விடுவதாக இல்லை. மொத்தமாக ஒழித்து விட்டுத்தான் விடுவார்கள் போல. இது என்ன மாதிரியான காண்டிராக்ட் என்று எனக்கும் புரிபடுவதில்லை.
இதைப்போன்ற கோமாளி போராளித் தலைவர்களினால்தான் போராட்டம் அதற்குண்டான வலிமையையும் , வீரியத்தையும் இழந்த்து.
ெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்தது.
போராட்ட்த்தில் கலந்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல.மற்ற மக்களுக்காகவும் ஒருவன் களத்தில் இறங்கி போராடுகிறன் என்பது எவ்வளவு மகத்தானது ?
ஆனால் இதைப்போன்ற லட்சக்கணக்கான மகத்தான மக்கள் கலந்து கொண்ட போராட்டங்களை வழி நடத்த தெரியாமல் , அந்த மக்கள் போராட்ட்த்தின் வெளிப்பாட்டை , உணர்வுகளை மொத்தமாக திரட்டி அதிகாரத்தின் முன்னால் கொண்டு சென்று உணர்த்தி , அரசியல் பேசி , தீர்வை உருவாக்கும் அளவுக்குத் தலைவர்கள் இல்லை , போராளிகள் இல்லை, அதற்குண்டான திராணியும் போராளித் தலைவர்களுக்கு இல்லை.
மக்கள் ஓட்டு வீணாகிப்போவது போல , மக்களின் போராட்டங்களும் வீணாகிப்போகின்றன.
அதனால்தான் ,தங்கள் வாழ்வைக் காக்க ஜனநாயக ரீதியில் மக்கள் போராடும் போராட்டத்தின் மீதே மிடில் கிளாஸ்களுக்கு வெறுப்பு வருகிறது. அதனால் தான் அரசு தைரியமாக சுடுகிறது. அதனால் தான் ரஜினி தைரியமாக , போராட்டம் போராட்டம்னா நாடு சுடுகாடாய்டும் என்று சொல்கிறார்.
“சமூக விரோதிகள் “ என்று கண்டு பிடித்து ஜாடையாக மக்களைச் சொல்கிறார். அவரைப் பொறுத்தவரை போலீஸ் மீது கல்லெறிந்தவர்கள் சமூக விரோதிகள்.அவர்கள் கல் எறிந்த்தால்தான் போலீஸ் சுட்டார்கள்.
மக்கள் சாவு ரஜினிக்கு அடுத்த பிரச்சனை.. போலிஸ் மீது கல்லடி பட்ட்துதான் ரஜினிக்கு பிராதான பிரச்சனை. ஏனென்றால் அது சிஸ்ட்த்தின் மீது விழுந்த அடி !
ரஜினி மக்களுக்கு முதல்வராக விரும்பவில்லை. இந்த சிஸ்ட்த்தின் உயர்பதவியில் சென்று அமர விரும்புகிறார். இந்த சிஸ்ட்த்தின் முதல்வர் ஆக விரும்புகிறார்.

Wednesday, May 30, 2018

தீண்டாமை பிடியில் சேலம் கிராமம்

தலித்துகளுக்கு முடி வெட்ட மாட்டோம்!

தீண்டாமை பிடியில் சேலம் கிராமம்
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவன் வாழ்ந்த பூமியில்தான் இன்னும் சாதிக் கொடுமைகளும், அதன்பேரில் நிகழும் வன்முறைகளும் ஓயாத அலைகளாக எழுந்து கொண்டே இருக்கின்றன.
பொதுவெளியில் வள்ளுவனையும், பாரதியையும் கூட்டணி சேர்த்துக்கொள்ளும் வெள்ளுடை வேந்தர்கள் யாருமே, தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களைப் பின்பற்றுவதில்லை. அதனால்தான் ஆண்டான் அடிமை மனோபாவத்திலேயே இன்னும் தலித்துகள் மீதான அடக்குமுறைகள் தொடர்கின்றன.
சேலம் மாவட்டம் கீரிப்பட்டி முதல்நிலைப் பேரூராட்சி கிராமம், இன்னும் தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகளில் இருந்தும், ஒதுக்கி வைத்தலில் இருந்தும் மீளவே இல்லை.
நாம் அந்தக் கிராமத்திற்கு சென்றபோது, தலித் இளைஞர் ஒருவரிடம் பேசினோம். அவர், அந்த ஊருக்கு முன்பின் அறிமுகமில்லாத ஒருவரிடம் (நம்மிடம்) நீண்ட நேரம் நின்று பேசிக்கொண்டு இருப்பதையே பலரும் உற்றுக்கவனித்ததை கவனித்தோம்.
‘ஏன் இப்படி பார்க்கிறார்கள்?’ என்று அந்த இளைஞரிடம் கேட்டபோது, அவர் சொன்ன பதில், “சார்….இது பொது இடம். இந்த மாதிரி இடத்தில் எல்லாம் நாங்கள் (தலித்துகள்) நின்று பேசக்கூடாது. எங்களுக்கென காலனி இருக்கிறது. அங்குதான் பேச வேண்டும்,” என்றார்.
கோயிலடி, சந்தை கூடும் இடம் போன்ற பொது இடங்களில் தலித்துகள் சகஜமாக நின்று கதைக்க இயலாத சங்கிலி பிணைப்பில்தான் இன்னும் அந்தக் கிராமம் கட்டுண்டு கிடக்கிறது. நம்மிடம் பேசிய சில தலித் இளைஞர்களேகூட சுற்றும்முற்றும் பார்த்தபடியே பேசினர்.
“இதெல்லாம் பரவாயில்லை சார். இந்த ஊருக்குள்ள இன்னும் எங்களுக்கு எந்த சலூன் கடையிலயும் முடி வெட்ட மாட்டாங்க சார். அதனால நாங்களே முடி வெட்டிப் பழகிக்கிட்டோம் சார். இப்போலாம் எங்களுக்கு நாங்களே முடி வெட்டிக்கிறோம் சார்,” என்றார் இன்னொரு இளைஞர்.
கீரிப்பட்டியில் சுமார் பத்தாயிரம் பேர் வசிக்கின்றனர். 15 வார்டுகள் உள்ளன. வன்னியர், அகமுடையார், ஜங்கமர், குரும்பக்கவுண்டர் ஆகிய சமூகங்களே பெரும்பான்மையினராக உள்ளனர். பறையர் மற்றும் அருந்ததியர் சமூகத்தினர் 4 மற்றும் 5ம் வார்டுகளில் வசிக்கின்றனர்.
தலித் சமூகத்தில் இருந்து மட்டும் சுமார் 1500 வாக்காளர்கள் உள்ளனர்.
பெரும்பான்மை சமூகத்தினர் தலித்துகளை வெளிப்படையாக சாதி பெயரைச் சொல்லி அழைக்காவிட்டாலும், அவர்களை, ‘காலனிக்காரனுங்க’ என காரணப்பெயரால் அடையாளப்படுத்தி விடுகின்றனர்.
இந்த ஊருக்குள் 5 சலூன் கடைகள் இருந்தும், எந்தக் கடையிலும் தலித்துகளுக்கு முடித்திருத்தம் செய்வதில்லை. வெளிப்படையாகவே மறுத்துவிடுகின்றனர். அதேநேரம், கீரிப்பட்டியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கந்தசாமி புதூரில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லாததால், கீரிப்பட்டியைச் சேர்ந்த தலித் சமூக ஆண்கள் கந்தசாமி புதூருக்குச் சென்று முடித்திருத்தம் செய்து கொள்கின்றனர். அல்லது, அவர்களே சிகையலங்காரம் செய்து கொள்கின்றனர்.
ஊரின் மையத்தில் இருக்கும் திரவுபதி அம்மன் கோயிலுக்குள் இன்றும் தலித் சமூகத்தினர் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. கோயிலுக்குள் நுழைந்து அம்மனை தரிசிக்கவோ, திருநீறு பிரசாதம் பெறவோ முடியாது.
இதைவிட மிகக்கொடுமையானது என்னவெனில், தலித் சமூகத்தினருக்கு தாகம் எடுத்தால், தவித்த வாய்க்கு தண்ணீர்கூட தர மாட்டார்களாம். அப்படியே குடிக்க தண்ணீர் கொடுத்தாலும், அவர்களுக்கென வீடுகள்தோறும் தனியாக ஒரு பிளாஸ்டிக் டப்பா வைத்திருப்பதாகவும், அதில்தான் தண்ணீர் தருவார்கள் என்றும் கூறுகின்றனர்.
இன்றும் பெரும்பான்மை மற்றும் ஆதிக்க சமூகத்தினரைக் கண்டால், தலித் சமூகத்தைச் சேர்ந்த வயதான பெரியவர்கள்கூட, கையெடுத்து கும்பிட்டு ‘கும்புடறோம் சாமி’ என்று சொல்லும் போக்கும் நீடிக்கிறது. அவர்கள் பவ்யமாக வணக்கம் தெரிவித்தவுடன் ஆதிக்க சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், சில சில்லரைக் காசுகளையும் தருகின்றனர்.
எனினும், இத்தகைய அடிமை வணக்க முறையில் இருந்து தலித் இளைஞர்கள் மட்டும் மீண்டுவிட்டதைக் காண முடிகிறது.  ஆனாலும், ஆதிக்க சாதியினர் தங்களின் சாதி பெருமையையும், தலித்துகள் மீதான துவேஷங்களை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்திச்செல்லும் வேலைகளிலும் ஈடுபடாமல் இல்லை.
தலித்துகள் வசிக்கும் பகுதியில் இரண்டு அரசுத்தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப்பள்ளியில், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளே அதிகளவில் படிக்கின்றனர்.
பிற ஆதிக்க சமூகத்தினர் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளிகளில் படிக்க வைப்பதில்லை. ‘காலனிக்கார பிள்ளைகளுடன் பழகினால், அப்புறம் நம்ம குழந்தைகளுக்கும் அவனுக புத்திதான வரும்,’ என்று கூறுவார்களாம்.
தேநீர் கடைகளில் இரட்டைக்குவளை முறை ஒழிக்கப்பட்டுவிட்டது ஆறுதலானது; எனினும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் மற்றவர்க்கு இணையாக பெஞ்சில் அமர்ந்து தேநீர் அருந்துவதில்லை.
கீரிப்பட்டி கிராமத்தில் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தினர், தங்கள் சாதி பெருமைகளைப் பேசும் திரைப்படப் பாடல்களை (உ.ம்.: தேவர் மகன், சண்டக்கோழி, மறுமலர்ச்சி) ஒலிபரப்பி வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக தலித் சமூகத்தினரும் தங்கள் குலப்பெருமையைப் பேசும் (‘தென்றல்’ படத்தில் வரும் ‘பறை’ பாடல், ‘கபாலி’ படத்தில் வரும் ‘நெருப்புடா’ பாடல்) பாடலை ஒலிபரப்புகின்றனர்.
சாதிய ஒடுக்குமுறைகள் இருந்தாலும் இப்போதுவரை கீரிப்பட்டியில் பெரிய அளவிலான சாதி மோதல்கள் இருந்ததில்லை. ஆனால், ஒடுக்கப்படும் மக்கள் எல்லா காலத்திலும் அடங்கியே கிடப்பார்கள் என்று மட்டும் சொல்லிவிட முடியாது.

Tuesday, May 29, 2018

பார்ப்பன சொம்பு

பார்ப்பன சொம்பு
கோவையில் பரவலாக இருக்கும் மலையாளம் பேசும் நாயருக்கும் தமிழ் ஜாதி என்று சொல்லப்படும் கவுண்டர்களுக்கும் ஜாதி ரீதியிலான பிரச்சினை வந்திருக்கிறதா
வன்னியர்களுக்கும் தெலுங்கு பேசும் நாயக்கர்களுக்கும் ஜாதி சண்டை வந்திருக்கிறதா
ஹிந்தி பேசும் மார்வாடிகளுக்கும் முக்குலத்தோருக்கும் மோதல் வந்திருக்கிறதா
ஆனால் கவுண்டர் வன்னியர் முக்குலத்தோர் என்று அனைவரும் ஒரே மாதிரி தலித் சமூகத்திற்கு எதிராக செய்த வன்முறைகள் ஏராளம்
இது தான் சமூக உளவியல்
இதில் தமிழ் ஜாதி மலையாள ஜாதி தெலுங்கு ஜாதி ஹிந்தி ஜாதி என்று எதுவும் இல்லை மொத்தத்தில் கீழ் ஜாதி மேல் ஜாதி என்பது மட்டுமே சமூக உளவியல்
சீமான் அக்கிளத் தூக்கிட்டு கத்தறதுக்கும் நடைமுறை சமூக உளவியலுக்கும் கூந்தல் அளவிற்கு கூட சம்பந்தம் இல்லை
பட்டியல் பிரிவில் தங்களை சேர்த்தது தான் தன் சமூகம் ஜாதி படிநிலைகளில் கீழாக உணரப்படுவதற்கு காரணம் என்று நாசா விஞ்ஞானி கிச்சா கண்டுபிடித்திருக்கிறார்
ஒரு வாதத்திற்காக சொல்கிறேன் பார்ப்பனர்களை SC பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு கொடுத்து விட்டால் பார்ப்பனர்கள் தங்களை அவமதித்து விட்டதாக இட ஒதுக்கீட்டை எதிர்ப்பார்களா
கண்டிப்பாக மாட்டார்கள் மாறாக முழுமையாக ஆதரித்து இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவிப்பார்கள் காரணம் SC பட்டியலில் சேர்வதால் அவர்களது சமூக உயர் ஜாதி உளவியல் துளியளவிற்குக் கூட குறையாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்
சரி சில மாதங்களுக்கு முன்பு கிச்சா ஒரு பொதுக் கூட்டம் நடத்தி அதில் பார்ப்பனர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தன் சமூகம் முன் வரிசையில் நிற்கும் என்றார்
இப்போது கிச்சா சமூகம் பாதிக்கப்பட்ட சமயத்தில் பார்ப்பனர்களை சிவகங்கையில் கூட்டம் போட வைத்து கிச்சா சமூகத்திற்கு பிரச்சினை என்றால் பார்ப்பனர்கள் முன் வரிசையில் நிற்பார்கள் என்று சொல்ல வைக்க முடியுமா
இப்படி பேசுவதற்கு பார்ப்பனர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை காரணம் பார்ப்பன சொம்பு வேலையில் கிச்சாவுக்கு 200 வருட சீனியர் டேபரய்யா குரூப் ஆகையால் பார்ப்பனர்கள் முக்குலத்தோரை எதிர்க்க வேண்டிய அவசியமே இல்லை
நேற்று கிச்சா தன் முகநூல் பதிவில் லாவகமாக ஜாதி பிரச்சனை என்கிற வார்த்தையைத் தவிர்த்து தன் சமூகம் சிறுபான்மையாக உள்ள இடங்களில் இது போன்ற பிரச்சினை வருகிறது என்று மலுப்பி இருக்கிறார்
சிறுபான்மை சமூகம் என்பது தான் பிரச்சனை என்றால் பார்ப்பனர்கள் மீது ஏன் வன்முறை நடத்தப்படுவதில்லை
சரி சில திகவினர் பார்ப்பனர்களின் பூனுல் அறுத்த போது இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்று பொங்கி எழுந்த அர்ஜுன் சம்பத் இப்போது எங்கே
கிச்சா சமூகம் இந்துவாகத் தெரியவில்லையா அர்ஜுன் சம்பத்திற்கு
தமிழ் ஜாதி என்று சீமான் பேசுவதும் இந்து ஒற்றுமை என்று அர்ஜுன் சம்பத் பேசுவதும் பாண்டிய வம்சம் என்று கிருஷ்ணசாமி பேசுவதும் பல கலர்களில் விற்கப்படும் பார்ப்பன கம்பெனி ஜட்டிகள் தான்
தமிழ் ஜாதி இந்து ஒற்றுமை ஆண்ட பரம்பரை என்கிற மூன்றையும் நாம் சுருக்கமா பார்ப்பனிய அரசியல் என்று சொல்லலாம்
அதன் தலைவர்கள் சீமான் கிருஷ்ணசாமி அர்ஜுன் சம்பத்

கார்புரேட்-கார்புரேட் விளம்பரங்களும்- பார்பனியமும்


கார்புரேட்-கார்புரேட் விளம்பரங்களும்- பார்பனியமும்

நம் நாட்டை பொறுத்தவரை கார்புரேட் கம்பெனிகளும் பார்பனியமும் இரண்டும் வெவ்வேறு அல்ல ஒன்றோடொன்று பின்னி பிணைந்தவையாகும். பார்ப்பனியத்தை அகற்றினால் கார்புரேட் கம்பெனிகள் நிலைத்து நிற்காது, கர்புரேட் கம்பெனிகளை அகற்றினால் பார்ப்பனியம் நிலைத்தது நிற்காது.

இதை நன்கு உணர்ந்த பார்ப்பனர்கள் தீவிர வலது சாரி சிந்தனையுடையவர்களாகவே இருப்பார்கள் சிந்தனையில் சிறு பிசையும் இன்றி அனைத்து பார்ப்பனர்களும் கார்புரேட் கம்பெனிகளுக்கு ஆதரவு என்கின்ற ஒரு புள்ளியில் இணைவது என்பது ஆச்சர்யம் அல்ல அது அவர்களுடைய இயல்பான குணம். ஆம் உடல் உழைப்பு வேலை செய்து பழக்கம் இல்லாதவர்கள் வெறும் சூழ்ச்சி சிந்தனையில் முன்னேறியவர்களுக்கு கார்புரேட் ஒரு வரப்பிரிசாதமாகவே கருதுவார்கள்.

அதன் வெளிப்பாடே ஸ்டெர்லைட் கம்பெனிக்கு எதிராக போராடும் நம் மக்களை கொச்சைப்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் அனைவரும் பார்பனர்களாகவும் பிஜேபி கட்சி காரர்களாகவுமே உள்ளனர் மக்களை பற்றி துளியும் அக்கறை கொள்ளாமால் சுயநலமாகவும், சூழ்ச்சியால் எப்படி முன்னேறுவது என்பது போன்ற குணமே பார்ப்பனிய தத்துவம்.

ஸ்டெர்லைட் ஆலை எதிர்த்து போராடும் மக்களை கொச்சைப்படுத்தி பதிவிடுபவர்களை சாதாரணமாக கடந்து சென்று, ஆலையை துடங்கி வைத்தது திமுகவா, ஆதிமுகாவ என்ற விவாத வலையில் மக்களை சிக்கவைப்பதில் உள்ளது பார்ப்பனியத்தின் வெற்றி.

கார்புரேட் விளம்பரங்களில் பார்ப்பனியம்

பெரும்பாலான விளம்பரங்களில் பார்ப்பநியத்தை மைய படுத்தியே நம்மால் காண முடியும் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் விடு விற்கும் விளம்பரம் ஒன்று ஒளிபரப்ப பட்டது அதில் mr &mrs iyer என்ற வாசகத்தோடு வெளியிட்டனர் கடும் எதிர்ப்புக்கு பிறகு mr&mrss ஐயர் என்ற வாசகத்தை எடுத்து  விட்டனர் ஏனெனில் இது பெரியார் மண்.
இருப்பினும் இது மறைமுகமாக நடந்து கொண்டு தான் இருக்கின்றது என்பதையும் நாம் மறுத்து விட முடியாது.
அப்படி மறைமுகமாக ஆதிக்கத்தை நிறுவமுயலும் சிலவற்றை நான் எடுத்துவைக்க உள்ளேன்.

கார்புரேட் விளம்பரங்களில் பார்ப்பனியத்தை நான் மூன்று வகையாக பார்க்கிறேன்.
1)விற்பனை பொருள் மீது பார்ப்பனியம்
2)மண்ணின் மைந்தர்களை கவ்ட்டவர்களாக சித்தரிப்பது
3)பார்ப்பனிய பண்பாட்டை சிறந்தது என காட்ட முற்படுவது

முதல் வகை
விற்பனை பொருள் மீது பார்ப்பனியம்

 வேதியல் கலந்த டூத் பேஸ்ட் முதல் இயற்க்கை மூலிகையால் செய்யப்பட்ட டூத் பேஸ்ட் விளம்பரங்கள் வரை நாம் பார்த்துள்ளோம். ஆனால் இது மற்ற டூத் பேஸ்ட் விளம்பரங்களைவிட இது  முற்றிலும் மாறுபட்டது. வேதத்துடன் விஞ்ஞானம் என்று நேரடியாக பயன்டுத்தக்கூடிய பொருளின்மீது பார்ப்பனியத்தை திணித்து இருப்பார்கள். வேதமம் விஞ்ஞானமும் இரண்டும் இரு துருவங்கள் அப்படி இரண்டும் கலந்து ஒரு டூத்  பேஸ்ட்டை உருவாக்க முடியும் என்றால் அவர்களுடைய கூற்று படி பார்தால் வேதம் என்பது மாமிசங்களை எப்படி சமைத்து உண்ணுவது என்ற குறிப்பே வேதம் வேதத்துடன் விஞ்ஞானம் என்றால் நிச்சயம் அந்த டூத் போஸ்ட் அசைவம் தான்.
 https://youtu.be/2C7bVgg5LJ4

இரண்டாம் வகை
மண்ணின் மைந்தர்களை கேட்டவர்களாக சித்தரிப்பது

XUV500 CAR  விளம்பரம். ஒருநாள் மங்கோலியாவில் என்று ஆரம்பமாகும் இந்த விளம்பரதில் கதாநாயகன் கதாநாயகியை மோங்கோலிய மக்களிடம் இருந்து காப்பாற்றுவது போல விளம்பரம் அமைந்திருப்பார்கள் இதற்கும் உரிமைக்காக போராடும் மக்களை தீவிரவாதிகள் என்று அழைக்க படுவதற்கு எந்த வேறுபாடும் இல்லை இந்த விளம்பரத்தை ரேசிச கண்ணோட்டத்தில் பார்க்கலாம்
https://youtu.be/f8Uh3DtEOcE


மூன்றாம் வகை
பார்ப்பனிய பண்பாட்டை  சிறந்தது என காட்ட முற்படுவது

இது ஒரு நகை விளம்பரம் இதில் முக்கிய கதாபாத்திரமே நமது வேங்கை மவனின் சொந்தமான ஒய் ஜி மகேந்திரன்தான்  தான் அணிந்திருக்கும் பூணூலை எப்படியாவது காட்டியே தீர வெண்டும் என்ற முடிவோடு விளம்பரத்தில் நடித்திருப்பார் இப்படி கிடைக்கின்ற சந்தர்ப்பங்கள் அனைத்திலும் பார்ப்பனியத்தை உயர்த்தி பிடிப்பதில் உள்ளது பார்ப்பனியத்தின் வெற்றி.
https://youtu.be/CI_aWyTZu3A

இப்படி 100க்கு 90 சதவீதம் பார்ப்பன சுவடுகள் இல்லாத விளம்பரங்களை பார்ப்பது மிகவும் அரிது
இப்பொழுது புரிகிறதா பார்ப்பனர்களுக்கு கார்புரேட் கம்பெனிகளுக்கு உள்ள தொடர்பு.
 இவை அனைத்தையும் நாம் சாதாரணாமாக கடந்து விடுகின்றோம்.
நான் இந்த கட்டுரை எழுத காரணம் இந்த பார்ப்பன ஆதிக்க திமிரை அறிந்தும் நானும் கடந்து போவது நான் ஏற்ற கொள்ளகைக்கு செய்யும் துரோகமாகும்.

பார்ப்பனியம் எப்பொழுதும் ஒரு ஒட்டுண்ணி வகையை சேர்ந்தது..எது ஆதிக்கம் செலுத்துகிறதோ அதோடு ஒட்டிக்கொண்டு ஒட்டுண்ணி வாழ்க்கையை வாழும்.
இன்று முதலாளித்துவம் ஆதிக்கம் செலுத்துகிறது அதனால் முதலாளித்துவத்துடன் ஒட்டுண்ணி வாழ்க்கையை வாழ்கிறது.

பா.ரஞ்சித் படங்களில் முக்கிய குறியீடுகள்

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட அரசியலை தொடர்ந்து தனது படங்களின் வாயிலாக பேசி வரும் இயக்குநர் பா.ரஞ்சித் , காலா படத்திலும் சில முக்கிய குறியீடுகளை காட்சிப்படுத்தியுள்ளார். தற்போது வெளியாகியிருக்கும் காலா படத்தின் 2 -வது டிரைலரில் தண்டகாரண்யா நகர் என்ற சொல்லின் பின் உள்ள குறியீட்டை பார்ப்போம்.தண்டகாரண்யா: 1967-ல் மேற்கு வங்கம், நக்ஸல்பாரியில் நடந்த விவசாயக் கிளர்ச்சிக்குப் பின் ஆந்திரம் அவர்களுடைய பரிசோதனைக் கூடம் ஆனது. ஆந்திரத்தில், ஸ்ரீகாகுளத்திலும் பார்வதிபுரத்திலும் நிலச்சுவான்தாரர்களுக்கு எதிரான விவசாயிகளின் கிளர்ச்சியை நடத்தினார்கள். பெரிய முன்தயாரிப்புகளோ, படை பலமோ இல்லாத இந்த இரு கிளர்ச்சிகளும் காவல் துறையால் ஒடுக்கப்பட்டன.

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு குழுக்கள் சின்னச் சின்ன தகர்ப்பு முயற்சிகளில் (கிளர்ச்சி/துப்பாக்கிச்சூடு/ஆட்சியாளர் கடத்தல்கள்) ஈடுபட்டுக்கொண்டிருந்தன.இவற்றில் பல குழுக்களுக்கும் மானசீக நாயகனாக சாரு மஜும்தார் இருந்தார். அப்படியும் இப்படியுமாக இருந்த இந்தக் குழுக்கள், மிகப்பெரிய நெருக்கடியை இந்திரா காந்தி கொண்டுவந்த அவசரநிலைப் பிரகடனத்தின்போது எதிர்கொண்டன. சாத்விக ஜனநாயக சக்திகளே ஒடுக்கப்பட்ட அந்தக் காலகட்டத்தில் இவர்கள் வேட்டையாடப்பட்டனர். ஏராளமான ‘மர்மச் சாவுகள்’ நடந்தன. நிறைய பேர் காணாமல் போனார்கள்.இவை தவிர, கைது நடவடிக்கைகள் நடந்தன. இந்திரா காந்தி தேர்தலில் தோல்வி அடைந்து ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது, அரசியல் கைதிகள் பெரும் அளவில் விடுவிக்கப்பட்டார்கள். தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்கள் வெளியே வந்தார்கள். அப்படி மிஞ்சிய மாவோயிஸ்ட்டுகள் பலர் மீண்டும் பல்வேறு குழுக்களை உருவாக்கினார்கள். மீண்டும் ஆங்காங்கே கலகங்கள் தொடங்கின. கூடவே ஒடுக்குமுறையும் தொடர்ந்தது. ஆந்திரத்தில் அப்படி உருவாகி, கிளர்ச்சி நடவடிக்கைகளுக்குத் திட்டமிட்டு, காவல் துறையின் நெருக்கடியால் அங்கிருந்து ஒரு குழு மாறிய இடம்தான் தண்டகாரண்யா.நிலம் குறித்த அரசியலை காலா படத்தில் பேசும் ரஞ்சித் தண்டகாரண்யாவின் அரசியலை இப்படத்தினூடாக பேசப்போகிறாரா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. தண்டகாரண்யா என்ற சொல்லுக்கு மற்றுமொரு புராண பின்புலமும் இருக்கிறது. காட்டுக்குள் ராமர் வனவாசம் அனுபவித்த 14 ஆண்டுகளில் இந்த பகுதியில்தான் இருந்தார் என்றும், ராவணன் சீதையை தூக்கிச் சென்றது இந்த பகுதியில் இருந்துதான் என்றும் ராமாயணத்தில் இடம்பெற்றுள்ளது.இந்த புராண பின்புலத்தில் தொடர்கிறது இயக்குநர் பா.ரஞ்சித்தின் அடுத்த குறியீடு வில்லன் நானா படேகரிடம் காலா என்பவன் யார் என்று குழந்தை கேட்க அவர் ராவண் என்று ராவணனின் பெயரைக் குறிப்பிடுகிறார். இதற்கு அடுத்தபடியாக இந்த உடம்புதான் நமக்கு இருக்குற ஒரே ஆயுதம் என ரஜினிகாந்த் பேசும் காட்சியின் தூரத்தில், புத்த விகாரை ஒன்று சுவற்றில் வரையப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் அவர்களின் வாழ்விடத்தில் பரவியிருந்த பௌத்த சமய கருத்தியலையும் குறியீடாக இயக்குநர் முன்வைத்துள்ளதாகப் பேசப்படுகிறது.

பச்ச சிரிப்புக்காரர்கள்

பச்ச சிரிப்புக்காரர்கள்


 எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியில் சேர்ந்த அல்லது எம்ஜிஆரால் சேர்க்கப்பட்ட செல்வி ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவர்களை எவ்வளவு கீழ்த்தரமாக பேசமுடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக பேசக்கூடியவர்.வயது,அரசியல் அனுபவம், கொண்ட எவரையும் செல்வி ஜெயலலிதா விட்டு வைத்ததில்லை.மேனாள் பிரதமர் நரசிம்மராவ்  ஆக இருந்தாலும்,திமுக தலைவர் கலைஞராக இருந்தாலும்.
நாவலராக இருந்தாலும் எதிர்த்து பேசக்கூடியவர் செல்வி ஜெயலலிதா என்பதை நாம் அறிவோம். இதனால் செல்வி ஜெயலலிதாவை பலர் தைரிய சாலி என்று கூட  சொல்லுவார்கள்.  பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது கூட அவ்வளவு சீக்கிரத்தில் ஜெயலலிதா முகத்தில் சிரிப்பை  பார்க்கமுடியாது. பொது நிகழ்ச்சிகளில் அவர் விழுந்து, விழுந்து சிரிக்கிறார் என்றால் நாலாந்தர பேச்சாளர்கள் யாராவது தலைவர் கலைஞர் அவர்களையும்,கலைஞர் அவர்களது குடும்பத்தையும் இழிவாக பேசும்போது மட்டுமே! தான் எப்படிப்பட்ட வன்மம் உடையவர்,மோசமானவர் என்று வெளிப்படையாக காட்டிக்கொள்வார்.
 ஆனால் இன்றைய முதல்வர்கள் ஓபிஸ்,இபிஸ் இருவரும் அப்படிப்பட்டவர்கள் இல்லை,யாரையும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்யமாட்டார்கள்.மேடயில் சக அமைச்சர்களுக்கு நாற்காலி போடுவார்கள்,அருகருகே உட்கார வைப்பார்கள்.மற்ற அமைச்சர்களை தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் பேச அனுமதிப்பார்கள்.அவ்வளவு நல்லவர்கள் போல காட்டிகொள்வார்கள்.கிராமங்களில் பேச்சுவழக்கில் அவன் பச்சை சிரிப்புக்காரன் அவனை நம்பக்கூடாது என்பார்கள். அதே போலத்தான் ஓபிஸ்,இபிஸ்- ம்.பச்சை சிரிப்பு சிரித்து சசிகலா காலில் சாஷ்டங்கமாக வீழ்ந்து சின்ன அம்மா, சின்னம்மா என்று நடித்து
முதல்வர் பதவியை பெற்றுக்கொண்டு அமைதிப்படை அமாவாசை போல் சசிகலாவை அப்புறப்படுத்தியவர்கள் ஆம் பச்ச சிரிப்புக்காரர்கள்.நல்லவர்கள் போல் காட்டிக்கொள்வார்கள்,அறவழியில்போராடும் தமிழர்களை குருவி சுடுவது போல் சுட்டு  பொசுக்கி
தமிழ்நாட்டை பிஜேபிக்கு காட்டிக்கொடுப்பார்கள்.

*பச்ச சிரிப்புகாரர்கள்
தமிழர்கள் பார்த்து நடந்து கொள்ளுங்கள்*

கலைஞருக்கு எப்படி சொத்து வந்தது? இதோ அவரே விளக்கம் தருகிறார்

கலைஞருக்கு எப்படி சொத்து வந்தது?
இதோ அவரே விளக்கம் தருகிறார்
தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அம்மையார் ஜெயலலிதா தொடங்கி, அந்தக் கட்சியிலே உள்ள அடிமட்டத் தொண்டர்கள் வரையிலும் - ஏன், தமிழகத்திலே உள்ள வேறுசில கட்சிகளின் நண்பர்கள் ஒரு சிலரும் - என்னைப் பற்றி குறிப்பிடும் போது - நான் ஏதோ "சல்லிக்காசு'' கூட கையிலே இல்லாமல் சென்னைக்கு வந்ததைப் போலவும் - இன்றைக்கு ஆசியாவிலேயே முதலாவது பணக்காரனாக இருப்பதாகவும் - என் பெயரில் ஏராளமான சொத்துக்களையும், எஸ்டேட்டுகளையும் வாங்கிக் குவித்திருப்பதைப் போலவும் பேசி வருகிறார்கள், எழுதி வருகிறார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் - என்னுடைய சொத்துகள் என்ன என்பதைப் பற்றி குறை கூறுபவர்களுக்கும் - அதை நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு விளக்கம் அளிக்க வேண்டியது என்னுடைய கடமை என்று கருதுகிறேன். என்னதான் அவர்கள் என் குடும்பத்தைப் பற்றி குறைவாக எழுதினாலும், நான் சிசு பருவத்திலே இருந்த போதே, திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவிற்கும் - உயர்நிலைப் பள்ளியில் படிக்கவே திருவாரூரில் கொண்டு போய் சேர்க்கக் கூடிய அளவிற்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம் தான் என்னுடையது.
முரசொலி தொடங்கி முதல் கார் வரை...
எனக்கு 18 வயதாகும் போது "முரசொலி'' வாரப்பத்திரிகையைத் தொடங்கி விட்டேன். அப்போதே நாடகங்களை எழுதுகின்ற முயற்சியிலும் ஈடுபட்டேன். திராவிடர் கழகப் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்துகொண்டேன். 1949-ம் ஆண்டு சேலம் மாடர்ன் தியேட்டர்சில் எழுத்தாளராக பணியிலே அமர்ந்தேன். அந்தக் காலத்திலேயே அதற்காக மாத ஊதியமாக 500 ரூபாய் பெற்றேன். அதே ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதியன்று ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையிலே தி.மு.கழகம் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டபோது, அந்தக் கூட்டத்திலே கலந்துகொண்டேன்.
அந்தக் கூட்டத்திற்கு வந்த போது விருதுநகர் நாடார் லாட்ஜில் தான் தங்கினேன். என்னுடைய "மந்திரி குமாரி'' நாடகம் சேலம் மாடர்ன் தியேட்டர்சாரால் திரைப்படமாக எடுக்கப்பட்ட போது எங்கள் குடும்ப வாழ்க்கை சேலத்தில் தொடங்கியது. அப்போது சேலம் வந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், என்னைச் சந்தித்து அவருடைய "மணமகள்'' திரைப்படத்திற்கு நான் தான் திரைக்கதை வசனம் எழுத வேண்டு மென்று கேட்டு ஒப்புதல் அளித்தேன். அந்தக் காலத்திலேயே அதற்காக 10 ஆயிரம் ரூபாய் ஊதியமாகப் பெற்றேன்.
அதுபோலவே "இருவர் உள்ளம்'' திரைப்படத்திற்காக உரையாடலை நான் எழுதிய போது, அந்தப் படம் நூறு நாளைத் தாண்டி ஓடிய காரணத்தால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர், அருமை நண்பர் எல்.வி.பிரசாத் என் இல்லத்திற்கே வந்து முதலில் கொடுத்த பத்தாயிரம் ரூபாயைத் தவிர்த்து, மேலும் பத்தாயிரம் ரூபாயை என்னிடம் அளித்தார்.
நான் அந்தத் தொகையைக் கொண்டு என்னுடைய சொந்த ஊரான திருக்குவளையில் என் பெற்றோர் பெயரால் ஒரு தாய் சேய் நல விடுதியினைக் கட்டி, அதை அன்றைய முதல்வர் பெரியவர் பக்தவத்சலனாரை அழைத்துச் சென்று 12-11-1964-ல் திறந்து வைத்தேன். அண்ணாவால் அடிக்கல் நாட்டப்பட்ட அந்தக் கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு நாவலர் தலைமை தாங்கினார்.
அப்போது நான் எதிர்க்கட்சியிலே இருந்தபோதிலும், முதல்வரை அழைத்துச்சென்று அந்த நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்தினேன்.
அந்தக் கால கட்டத்தில் சென்னைக்கே நான் குடிபெயர்ந்து தியாகராயநகரில் ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்தினேன். அப்போது ஒரு நாள் கலைவாணர் என்னிடம் ஒரு பந்தயம் கட்டி, அதிலே ரூ.5 ஆயிரம் எனக்கு லாபம் கிடைத்தது. அது கண்டு வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்த கலைவாணர் அதற்குமேல் தேவையான பணத்தைத் தானே போட்டு எனக்கு ஒரு கார் வாங்கித் தருவதாகச் சொல்லி விட்டுச் சென்றார். மறுநாளே ஒரு புதிய கார் என் வீட்டிற்கு வந்தது. அதிலே என்னை உட்கார வைத்து, கலைவாணரே ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றார். அந்தக் காரின் எண் கூட எனக்கு நினைவிலே உள்ளது - "வாக்சால்'' -4983.
75 படங்கள்...
இவைகளைத் தொடர்ந்து இன்று வரை 75 படங்களுக்கு மேல் நான் திரைக்கதை வசனம் எழுதி ஊதியம் பெற்றுள்ளேன். 1957-ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் நின்று சட்டப் பேரவை உறுப்பினராக ஆனது முதல் இதுவரை தொடர்ந்து பேரவை உறுப்பினராகவோ, மேலவை உறுப்பினராகவோ இருந்து வருகிறேன். முரசொலி நாளிதழும் எத்தனையோ ஏற்ற இறக்கத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிழமை இதழ்களாக குங்குமம், முத்தாரம், வண்ணத் திரை போன்றவைகளும், "ரைசிங் சன்'' ஆங்கில இதழும் நான் தொடங்கியவைதான்.
வசதியற்ற வீடு...
1967 முதல் 1969 வரை பொதுப்பணித்துறை அமைச்சராகவும், அதன் பின்னர் ஐந்து முறை முதல்வராகவும் இருந்திருக்கிறேன். இந்தியாவிலே உள்ள அனைத்து மாநில முதல்வர்களையும் எடுத்துக்கொண்டால் எல்லா முதல்வர்களுடைய வீடுகளையும் விட வசதி குறைவான எளிமையான வீட்டிலேதான் நான் வாழ்ந்து வருகிறேன் என்பதை வெளிநாட்டிலிருந்து வந்த முக்கிய பிரமுகர்களே நேரில் கண்டு வியப்பு தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்களைச் சந்திக்கக் கூட இடம் இல்லாத அளவிற்கு அவர்களே மிகுந்த சிரமத்திற்கு ஆளாகக்கூடிய வகையிலே உள்ள வீட்டிலேதான் இன்றளவும் வாழ்ந்து வருகிறேன். ஒவ்வொரு முறை முதல்-அமைச்சராக நான் தேர்ந்தெடுக்கப்படும் போதும் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவியேற்போர் - தம்பி துரைமுருகன் போன்றவர்கள் - அரசு சார்பில் உள்ள வீடுகள் ஒன்றில் நான் தங்க வேண்டுமென்று கேட்டு அழைத்துச் சென்றும் காட்டியிருக்கிறார்கள். எனினும் நான் தங்கி வந்த அதே "ஸ்ட்ரீட் வீடு'' என்பார்களே, அதாவது தெருவில் வரிசையாக உள்ள வீடுகளில் உள்ள ஒரு வீட்டிலேதான் வசித்து வருகிறேன்.
இந்த வீடு கூட நான் அமைச்சராக ஆவதற்கு முன்பு 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய வீடுதான். அந்த வீட்டிலே ஒரு சில மாற்றங்கள் உதவியாளர்களின் வசதிக்காக செய்யப்பட்டிருக்கலாம். என் பிள்ளைகள் எல்லாம் கூட திருமணம் ஆகும் வரைதான் இந்த வீட்டிலே இருந்தார்கள். அதற்குப் பிறகு இந்த வீட்டிலே இடம் இல்லாமல் அவர்களே சொந்தத்தில் வீடு வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
என்னிடம் செய்திகளைச் சேகரிக்க வரும் பத்திரிகையாளர்கள் இந்த வீட்டிலே என்னைச் சந்திக்கும் போது எவ்வளவு இன்னலுக்கு நெரிசல் காரணமாக ஆளாகிறார்கள் என்பதை அவர்களே நன்கறிவார்கள். ஆனால் அந்தப் பத்திரிகையாளர்கள் கூட நான் இத்தனை ஆண்டுக் காலம் இத்தனைப் பொறுப்புகளிலே இருந்தும் கூட, இவ்வளவு எளிமையாக இதே வீட்டில் வாழ்கிறேன் என்பதைப் பற்றி அவர்களே அதை உணர்ந்திருந்த நிலையிலும் அதைப் பற்றி எழுதாமல், அதிலேயும் ஒரு சிலர் - என்னைப் பற்றி அவதூறாக நான் பணக்காரன் என்று எதிர்தரப்பினர் விமர்சனம் செய்வதை எழுதும்போது - அவர்கள் கூட அதை நம்புகிறார்களா என்ற வேதனை என் மனதிலே தோன்றாமல் இருப்பதில்லை.
நான் இத்தனை பொறுப்புகளையும் என்னுடைய 87 வயதிற்குள் பார்த்திருக்கிறேன் என்ற போதிலும் சென்னையில் உள்ள இந்த ஒரு வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்டுகளையோ விலைக்கு வாங்கியதும் இல்லை. அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதும் இல்லை. குறைந்த விலைக்கு பெற்றுக்கொண்டதும் இல்லை. ஆனால் என்னை ஆசியாவிலேயே பெரிய கோடீஸ்வரன் என்றெல்லாம் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.
ரூ.100 கோடி...
முரசொலி மாறன் மறைவுக்கு பின்னர் சன் தொலைக்காட்சி நிறுவனத்தை தனியாக நடந்த விரும்பி கேட்டதால் நானும் அதற்கு உடனடியாக ஒப்புகொண்டேன். அப்படி பிரிந்து சென்ற நேரத்தில் 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம், "சன்'' தொலைக் காட்சி நிறுவனத்தின் சார்பில் எனக்கு 100 கோடி ரூபாய் கொடுத்தார்கள். அந்தத் தொகைக்கான வருமான வரியாக 22 கோடியே 50 லட்சம் ரூபாய் உரிய காலத்தில் முறைப்படி என்னால் செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையான 77 கோடியே 50 லட்ச ரூபாயை என்னுடைய மகன்களுக்கும், மகள்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தேன். அதிலே எனக்கும் ஒரு பங்காக பத்து கோடி ரூபாய் கிடைத்ததில், ஐந்து கோடி ரூபாயை வங்கியிலே இருப்பு செய்து, அந்தத் தொகையைக் கொண்டு "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை'' ஒன்று தொடங்கப்பட்டு, அதிலே கிடைக்கின்ற வட்டித் தொகையிலே இருந்து ஏழை-எளியோர்க்கு மருத்துவ உதவியாகவும், கல்வி வளர்ச்சி உதவியாகவும் 8.12.2005 முதல் 8.11.2010 வரை 2,145 பேர்களுக்கு 1 கோடியே 72 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறேன்.
வங்கியில் இருப்பு செய்யப்பட்ட இந்த ஐந்து கோடி ரூபாயில் -ஆண்டுதோறும் நல்ல புத்தகங்களை, சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகள் தாங்கிய புத்தகங்களை, எதிர்கால இளைஞர்களுக்கு ஆக்கபூர்வமாக வழிகாட்டுகின்ற அறிவார்ந்த புத்தகங்களை எழுதும் சிறந்த எழுத்தாளர்கள் ஐந்து பேரைத் தேர்வு செய்து, அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் - பொற்கிழியாக வழங்கிட தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினேன்.
அந்த ஒரு கோடி ரூபாய் நிதியைக் கொண்டு, அந்தச் சங்கம் "கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை'' என்ற பெயரில் ஓர் அறக்கட்டளையை ஏற்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில் இருந்து, 2008-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அந்தச் சங்கத்தின் மூலமே சிறந்த எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு 2008, 2009, 2010 ஆகிய மூன்றாண்டுகளில் மொத்தம் இது வரை 17 அறிஞர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழிகள் வழங்கப்பட்டுள்ளன.
செம்மொழி மாநாடு...
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத் தொடக்க விழா 30.6.2008 அன்று நடை பெற்ற போது ஆண்டுதோறும் செம்மொழித் தமிழ் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் அறிஞருக்கு 10 லட்ச ரூபாய் பொற்கிழி விருது வழங்கிட ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என நான் அறிவித்து, அதன்படி செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் "கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை'' தொடங்கிட 21.7.2008 அன்று ஒரு கோடி ரூபாய் வழங்கினேன்.
கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா அவர்களுக்கு இந்த அறக்கட்டளையின் முதல் விருதாக பத்து லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
2004-2005-ம் ஆண்டில் "மண்ணின் மைந்தன்'' படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் 11 லட்சம் ரூபாய் - "கண்ணம்மா'' படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் 10 லட்சம் ரூபாய் இரண்டையும் சேர்த்து 21 லட்சம் ரூபாயை "சுனாமி நிவாரண நிதி''யாக அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம், மு.க.ஸ்டாலின் வாயிலாக நேரில் வழங்கப்பட்டது.
உளியின் ஓசை...
2008-ம் ஆண்டு, "உளியின் ஓசை'' திரைப்படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் 25 லட்சம் ரூபாயில் வருமானவரி போக, 18 லட்சம் ரூபாய் திரைத்துறையிலே பணியாற்றிய நலிந்த கலைஞர்களுக்கு 9.7.2008 அன்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர், ராம.நாராயணன் முன்னின்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் என்னால் நேரடியாக வழங்கப்பட்டது.
2009-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட "பெண் சிங்கம்'' திரைப்படத்திற்காகக் கிடைத்த 50 லட்சம் ரூபாயுடன், சொந்த நிதி 11 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் சேர்த்து - 14-9-2009 அன்று தமிழக அரசின் முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலே சேர்த்து, தமிழகத்திலே உள்ள அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்வி பயிலும் 56 மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 1,165 மாணவர்கள் என மொத்தம் 1,221 மாணவ -மாணவியருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் 61 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கல்வி வளர்ச்சி நிதியாக 26.10.2009 அன்று தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டது.
மேலும், தற்போது தயாரிக்கப்பட்டுவரும் "இளைஞன்'' திரைப்படத்திற்குரிய கதை வசனம் எழுதியமைக்கு 24.4.2010 அன்று வருமானவரி போக அளிக்கப்பட்ட 45 லட்சம் ரூபாய் ஊதியத்தைத் தமிழக அரசின் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலே ஒப்படைத்து, அந்தத் தொகையினை - தமிழகத்திலே உள்ள மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காகச் செலவிட வழங்கப்பட்டது.
23.7.2009 அன்று நடைபெற்ற கலைஞர் காப்பீட்டுத் திட்டத் தொடக்க விழாவில் உரையாற்றிய பொழுது சென்னை கோபாலபுரத்தில் நான் வசித்து வருகின்ற வீட்டை, பிற்காலத்தில் ஏழை-எளியோர்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் மருத்துவமனையாக மாற்றிட நன்கொடையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன்படி உரிய பத்திரப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.
14.4.2010 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக சென்னை மறைமலைநகரில் நடைபெற்ற அம்பேத்கார் பிறந்தநாள் விழாவில் "அம்பேத்கார் சுடர்'' எனும் விருது எனக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் தரப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் பொற்கிழியினை 15.4.2010 அன்று முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதியில் சேர்க்க என்னால் வழங்கப்பட்டது.
25.5.1990 அன்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பாக - "தென்பாண்டிச் சிங்கம்'' என்ற பெயரில் நான் எழுதிய நாவல் சிறந்த புதினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்காக "ராஜராஜன் விருது''ம், அந்த விருதுக்குரிய ஒரு லட்ச ரூபாய் பொற்கிழியும் எனக்கு அன்றைய குடியரசுத் துணைத் தலை வராக இருந்த சங்கர் தயாள் சர்மா ஆளுநராக அப்போதும் இருந்த பர்னாலா முன்னிலையில் வழங்கப்பட்ட போது, அந்த நிதியை அந்தப்பல்கலைக் கழகத்திடமே திரும்பக் கொடுத்து, அந்தத் தொகைக்குரிய வட்டியினைக் கொண்டு ஆண்டு தோறும் என் பெற்றோர் பெயரால் அறக்கட்டளை சொற்பொழிவுகளை நடத்துமாறு கேட்டுக்கொண்டேன். இந்த ஆண்டு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அந்தச் சொற்பொழிவுகள் நடைபெற்றன.
பிறந்தநாள் விழா...
என்னுடைய பிறந்த நாளன்று மாலைக்குப் பதிலாகவும், பொன்னாடைக்குப் பதிலாகவும் கழகத் தோழர்கள் அளித்த நிதியையும் கூட முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலே தான் சேர்த்திருக்கிறேன். 3.6.1986 அன்று என்னுடைய பிறந்த நாள் விழாவின்போது உண்டியலில் குவிந்த 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை இலங்கை விடுதலைப் போராளிகள் இயக்கங்களுக்கு பகிர்ந்தளிப்பது என்று கழகப் பொதுக் குழுவிலேயே முடிவெடுத்து அவ்வாறே வழங்கப்பட்டது. அதைப் போலவே என்னுடைய வேறு சில பிறந்த நாள்களில் உண்டியலில் குவிந்த நிதிகளிலிருந்து மறைமலை நகரில் (காட்டாங்குளத்தூர்) உள்ள சிவானந்த குருகுலத்தில் பயிலும் சிறுவர்களின் கல்வி செலவுகளுக்காக 13.6.1988-ல் 50 ஆயிரம் ரூபாயும், 7.6.1993-ல் 70 ஆயிரம் ரூபாயும், 6.6.1996-ல் ஐந்து லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டன. மேலும் 1994-ம் ஆண்டு பிறந்த நாளில் அளிக்கப்பட்ட நிதி பெங்களூரில் உள்ள தமிழ்ச் சங்கத்திற்கு என்னால் வழங்கப்பட்டது.
நான் கலந்து கொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகளில் எனக்கு பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்குவதுண்டு. அவற்றைக்கூட அரசு விழாக்களில் அவைகள் வழங்கப்பட்டால், அவற்றை தலைமைச் செயலகத்திலும், கட்சி நிகழ்ச்சிகளிலே வழங்கப்பட்டவை என்றால் அவற்றை கழகத் தலைமைக் கழகம், அண்ணா அறிவாலயத்திலே உள்ள கருவூலத்திலும் ஒப்படைத்திருக்கின்றேன். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, தங்க நாணயங்கள் கோர்க்கப்பட்ட மாலைகள், வெள்ளியிலான பல்வேறு பொருள்கள் எல்லாம் இப்போதும் அண்ணா அறிவாலயத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருப்பதை யார் வேண்டுமானாலும் சென்று காணலாம்.
சொத்துகளே வாங்கவில்லை...
இறுதியாக தற்போது என் கணக்கிலே எவ்வளவு இருப்பு உள்ளது என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகிறேன். 'சன்' தொலைக்காட்சி வாயிலாக எனக்குக் கிடைத்த பத்து கோடி ரூபாயில் "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை''க்காக ஐந்து கோடி ரூபாய் கொடுத்ததைப் பற்றி நான் முதலில் குறிப்பிட்டிருப்பதைப்போல கொடுத்ததை அன்னியில் - எஞ்சிய 5 கோடி ரூபாயை வைப்பு நிதியாக வங்கியிலே செலுத்தி, அதற்காக கிடைத்த வட்டித்தொகையெல்லாம் சேர்ந்து -தற்போது வைப்பு நிதியாக 5 கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134 ரூபாயும் - சேமிப்புக்கணக்கில் (எஸ்.பி. அக்கவுண்ட்) 35 லட்சத்து 90 ஆயிரத்து 86 ரூபாயும் இன்றைய தேதியில் உள்ளது.
நான் வசிக்கின்ற இந்த வீட்டைக் கூட மருத்துவமனை அமைப்பதற்காக எழுதிக் கொடுக்க நான் அறிவித்த போது - நான் வாழ்ந்த இல்லம் என்பதற்காக இதை வைத்துக் கொள்ள வேண்டுமென்று வீட்டார் எண்ணிய போதும், நான் அழைத்து அவர்களை கையெழுத்திட்டுத் தருமாறு கேட்டபோது மறுவார்த்தை பேசாமல் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டார்கள். இந்த ஒரு வீட்டைத் தவிர என் பெயரில் நான் எந்தச் சொத்தையும் வாங்கிடவில்லை, சேர்த்திடவில்லை.
தமிழ்த் திரைப்பட உலகத்திலே திரைக்கதை வசனம் எழுதுவதற்காக முதன் முதலில் அதிக ஊதியம் பெற்றவன்; தி.மு. கழகத்திலே சென்னையில் முதன் முதலில் சொந்தமாக ஒரு வீடும், காரும் - நான் எந்தப் பதவி பொறுப்புக்கும் வராத போதே வாங்கியவன் என்ற பெயர் எனக்கு உண்டு என்பதை அனைவரும் அறிவர்.
இதுதான் என்னுடைய சொத்துக் கணக்கு. இதை வைத்துத்தான் நான் ஆசியாவிலேயே முதல் கோடீஸ்வரன் என்கிறார்கள். லஞ்சம், ஊழல் ஆகியவைகளைப் பொறுத்தவரை, என் உதவியாளர்கள் கூறுவது போல நான் ஒரு "நெருப்பு'' மாதிரி! நான் முதன் முறையாக முதல்வராக இருந்தபோதே தஞ்சையில் கூட்டுறவு நிறுவனம் ஒன்றில் எனக்கு மிகவும் வேண்டிய உயிர் நண்பர் வழக்கறிஞர் தவறு செய்த போது, அவர் மீது நடவடிக்கை எடுத்து, அதன் காரணமாக அவர் தனது வழக்கறிஞர் பணியினையே செய்ய முடியாத அளவிற்கு ஆயிற்று! அது போலவே தான் சென்னை மாநகராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பிலே இருந்தபோது, "மஸ்டர் ரோல்'' ஊழல் நடைபெற்றதாக பேரவையிலே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டபோது, சட்டப்பேரவையிலேயே எழுந்து அந்த மாநகராட்சி மன்றம் கலைக்கப்படும் என்றும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்து அவ்வாறே செயல்முறை படுத்தியவன்தான் நான்.
சிபாரிசுக்கு இணங்கவில்லை...
இன்னும் சொல்லவேண்டுமேயானால் எனக்கு மிகவும் வேண்டிய நண்பர்களில் ஒருவர் கவிஞர் கருணானந்தம். அவருடைய ஒரே மகன் குலோத்துங்கனுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர ஒரு மதிப்பெண் குறைந்தது. முதல்வர் மனது வைத்தால் சேர்த்துக்கொள்ளலாம் என்று கேட்டபோது கூட நான் அதற்கு இணங்கவில்லை. அதனால் அந்தக் குடும்பத்துக்கு என் மீது எழுந்த கோபம் இன்னும் தீரவில்லை. இதுபோன்ற சம்பவங்களை நான் எழுதிக் கொண்டே போகலாம்.
நான் இதையெல்லாம் எழுதுவதற்குக் காரணம் யாரிடமும் சான்றிதழ் பெறவேண்டும் என்பதற்காக அல்ல, என்னுடைய குணம், இயல்பு அப்படி என்பதை என் மீது குறை காண்போர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உற்றார் உறவினர்கள் அவரவர்கள் உழைத்து, ஒரு சிலர் தங்களுக்கென வீடுகளையோ, சொத்துக்களையோ வாங்கியிருக்கலாம். ஆனால் அதற்காக நான் எந்த விதமான நிதி உதவியோ, அரசு சார்பிலான உதவியோ செய்தது இல்லை என்பதையும் இந்த நேரத்தில் நான் உறுதிப் படுத்திட விரும்புகிறேன்.
நான் பல முறை சொல்லியிருப்பது போல மிக மிகச் சாதாரணமான, சாமான்யமான குடும்பத்திலே பிறந்த என்னை, இந்த அளவிற்கு தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பேன் என்ற நம்பிக்கையோடு ஐந்து முறை முதல்வராக்கி, 1957 முதல் 11 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி, 1969 முதல் நாற்பதாண்டு காலத்திற்கு மேலாக ஒரு கட்சியின் தலைவராக்கி இருக்கிறார்கள் என்றால், திராவிடத் தமிழ் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி செலுத்துகின்ற நேரத்தில் என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்பதை அவர்களுக்கெல்லாம் தெளிவாக்கிடவும், என் மீது இன்னமும் குறை காண்கின்ற ஒரு சிலரும் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன். என் எஞ்சியுள்ள காலத்தையும் திராவிடத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகவே செலவிடுவேன் என்று உறுதி கூறி - என்றைக்கும் ஏழையெளிய மக்களின் கவலை தீர்ப்பதையும், கண்ணீர் துடைப்பதையும் கடமையாகக் கொள்வேன் என்பதற்காகவே இந்தக் கணக்கைக் காட்டியிருக்கிறேன், கண்ணுடையோர் காண்பதற்காக! முகத்தில் இரண்டு புண்ணுடையோர்க்கல்ல!
கலைஞர் கருணாநிதி

கச்சநத்தம் வன்கொலைகள்

ஜல்லிக்கட்டு போராட்டதின்போது, “மாடு பிடிப்பதில் சாதியம் இருக்கிறது” என பேசிய ஒருசிலரை தமிழர் ஒற்றுமையைக் குலைக்கிறார்கள் என குற்றம் சொன்னீர்கள். இதை பேச இதுவல்ல நேரம் என்றீர்கள்.
நீட் தேர்வு குளறுபடிகளால் அனிதா இறந்தபோதும், அவளை தலித் என்று அடையாளப்படுத்துக்கூடாது, இதை பேச இதுவல்ல இடம் என்றீர்கள்.
பிறகொரு நாள், பிறகொரு இடத்தில் இதை பேசலாம் வா என்றால், அதை தலித்துகள் மாநாடு என்று அடையாளப்படுத்தி ஒதுங்கிக்கொள்கிறீர்கள்.
ஆனால் உங்கள் “தமிழண்டா” அடையாளத்திற்குள் தலித்துகள் இல்லை என்பதை மட்டும் அவ்வப்போது கச்சிதமாக எமக்கு புரிய வைத்து விடுகிறீர்கள்.
”கச்சநத்தம் வன்கொலைகள்”.

Sunday, May 27, 2018

"ஸ்டெர்லைட் பிரச்சனையில் தலையிட்டால் டெல்லிக்காரன் ஆட்சியைக் கலைத்து விடுவான்"

"ஸ்டெர்லைட் பிரச்சனையில் தலையிட்டால் டெல்லிக்காரன் ஆட்சியைக் கலைத்து விடுவான்"இது
       என்.கே.கே.பெரியசாமி அவர்கள்  திமுக அமைச்சரவையில் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தபோது சொன்னது.
           ஸ்டெர்லைட் ஒப்பந்தம் போட்டதிலிருந்து அதற்கு எதிரான போராட்டத்தை புரட்சிகர இளைஞர் முன்னணி தொடர்ந்து நடத்தி வந்தது.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாநடு  உட்பட பல போராட்டங்கள் நடத்தப்பட்டது.
         1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது.என்.கே.கே.பெரியசாமி அவர்கள் சுற்றுச்சூழல் அமைச்சராக பொறுப்பு வகித்தார்.கரும்பு விவசாயிகள் சங்கத்தை வலுப்படுத்தி பல போராட்டங்களை நடத்தியபோது அதில் சென்னிமலைப் பகுதி முன்னிலை வகித்தது.அதனால் எனக்கும் என்.கே.கே.அவர்களுக்கும் நல்ல உறவு இருந்தது.
            தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவில் அங்கம் வகித்த தோழர்கள் சுற்றுச் சூழல் அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்ய என்னிடம் கோரினர் அமைப்பின் வழிகாட்டலின் பேரில் அமைச்சர் என்.கே.கே.பெரியசாமி அவர்களை ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.இன்று சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரசன் அந்தக் குழுவில் இருந்தார்.
              கவுந்தப்பாடி அருகிலுள்ள அவரது இல்லத்தில் சென்று சந்தித்தோம்.சந்தித்தவுடன் அவர் சொன்னது"விஸ்கோஸை என்னால் நிறுத்த முடியும் .அவன் சூட்கேஸ் கொண்டு வந்தான் துரத்தி விட்டேன் அந்த ஆலையை மூட ஏற்பாடு செய்து வருகிறேன்.என்ன பொன்னையன் இந்த வம்பை என்னிடம் கொண்டு வரிங்க, நீங்க எங்கே இவங்களோடு சேர்ந்திங்க
ஸ்டெர்லைட்ட தொட்ட டெல்லிக்கார ஆட்சியிலே கையை வைச்சுருவான்"
         என வெளிப்படையாகப் பேசினார்.
    பின்னர் விஸ்கோஸ் ஆலையை மூட மிக அதிக விபரங்களைத் திரட்டி அமைச்சரவையில் வைத்து மூடுவதற்கான முடிவை எடுக்க வைத்தார் என்.கே.கே.பெரியசாமி.
       விஸ்கோஸ் ஆலை மூடும் முடிவு எடுக்கப்பட்டதும் சுற்றுச் சூழல் இலாக்கா என்.கே.கே.பெரியசாமி அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது.
         இந்த நிகழ்வை நான் கவனப் படுத்துவதன் நோக்கம் இன்று எடப்பாடி துப்பாக்கிச் சூட்டை நானே தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்பது முழுவதும் பொய்யாக இருக்காது.
          மத்திய உள்துறை முடிவெடுத்துவிட்டு இவர்களிடம் தெரிவித்திருப்பார்கள்.இன்னொரு உதாரணம் நீட் தேர்வு எழுத எத்தனை மாணவர்கள் வெளி மாநிலம் செல்ல உள்ளனர் என்பதை இறுதிவரை சி.பி.எஸ்.சி மாநில அரசுக்கு தெரிவிக்கவே இல்லை.
            வேதந்தா ரிசோர்ஸ் என்பது  சர்வதேச பங்குச் சந்தையில் பட்டியல் செய்யப்பட்ட கம்பெனி.பாஜக வே வேதந்தாவின் சட்டைப்பையில் தான்.
         கிளர்ந்தெழுந்த தூத்துக்குடி மக்களை இரத்தவெள்ளத்தில் மூழ்கடித்து
தமிழகத்தில் சூறையாடலைதடையின்றி நடத்தலாம் என கார்பரேட் நிறுவனங்கள் முடிவு செய்துவிட்டன.
           அன்று என்.கே.கே.பெரியசாமி அவர்கள் சொன்னதை இன்று  நிகழ்வாக பார்க்க முடிகிறது.

பங்குச் சந்தைதான் அரசியலைத் தீர்மானிக்கும் ஆகப்பெரும் சக்தி என லெனின் சொன்னது எவ்வளவு பொருத்தமானது.

பெரியார் ஒரு தொலைநோக்காளர் - பிராமணாள் சங்கம் vs தமிழ்ச்சங்கம்

ஃபெட்னா எனும் அமெரிக்க தமிழ்ப்பேரவையே மாஃபாய் பாண்டியராஜனுக்கு சொம்பு தூக்கும் ஒரு செமி-தமிழ்ச்சங்கம். அந்த செமி தமிழ்ச்சங்கத்தினர் நியூஜெர்சியில் உள்ள TNF தமிழ்ச்சங்க (TamilNadu Foundation) நிகழ்வில் கலந்து கொண்டு அந்த கரகாட்ட கோஷ்டியை இந்த கரகாட்ட கோஷ்டியின் நிகழ்வுக்கு அழைத்திருக்கிறார்கள். அப்போது ஃபெட்னா குழுவினர் தூத்துக்குடியில் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தலாம் எனச் சொல்கிறார்கள். உடனே அங்கிருக்கும் பார்ப்பனர்கள், "தேவையில்லை தேவையில்லை," என எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். உடனே ஃபெட்னா கோஷ்டியும், "சரி சரி சரி," என ஆமாம் சாமி போட்டு ஒப்புக்கொள்கிறது. நிற்க.
பார்ப்பனர்கள் தனி இனம். எந்தெந்த ஊருக்கு போகிறார்களோ அந்தந்த மொழியை பேசுவார்கள். தமிழ் பேசுவதால் சீமான் போன்ற 'அபிஷ்டுக்கள்' வேண்டுமானால் திருச்சி சங்கர் அப்பா சொன்னார், மைலாப்பூர் மணிரத்னம் அப்பா சொன்னார் (சங்கர் அப்பா என்பவர் சீமானுக்கு மூக்கில் விரலை வைக்கும் வரலாற்றுத் தகவல்களை எழுதிக்கொடுக்கும் பார்ப்பன வரலாற்று அறிஞர்.) என அவர்களை தமிழர்களாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அவர்களே அவர்களை மனதார தமிழர்களாகக் கருத மாட்டார்கள். வெளிநாடுகளிலும் சரி, நம்மூர் அப்பார்ட்மெண்டுகளிலும் சரி, குடியேறியவுடன் அவர்கள் 'தமிழ்ச்சங்கம்' என்ற பெயரில் சங்கம் வைப்பதே 'பிராமணாள் சங்கம்,' என வைத்தால் கேவலமாக இருக்கும் என்பதால்தானேயொழிய அதில் தமிழ்ப்பற்று ஒன்றும் கிடையாது. ஃபில்டர் காபியும், தயிர் சோறும் தமிழரின் பாரம்பரிய உணவுகள் என பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் 12 தமிழர்கள் உயிர் போனால் இரங்கல் கூட தெரிவிக்காத கொடூரர்கள். மீன்கறியைப் பார்த்தால் மூக்கை மூடுவார்கள். ஆட்டுக்கறியைப் பார்த்தால் கண்ணை மூடுவார்கள். ஆனால் மனிதக்கறி என்றால் ஒன்பது ஓட்டைகளிலும் அவர்களுக்கு எச்சில் ஊறும்.
நீங்களே சொல்லுங்கள். அனிதா மரணத்தில் இருந்து, கிருஷ்ணசாமி மரணத்தில் இருந்து, தூத்துக்குடி தமிழர் மரணம் வரை அவர்களின் கருத்துக்கள் எப்படியிருந்தன? அந்த 3% மட்டும் தனித்து தெரிந்தார்களா இல்லையா? காலம்காலமாக இதுதான் இவர்களின் குணம்.
தமிழ்ச்சங்கம், தமிழர் அடையாளம் எல்லாம் இவர்களுக்கு முகமூடி. Camouflage! அவர்களால் இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழராக ஆகவோ, உணரவோ முடியாது. (3% பார்ப்பனர்களில் 0.00003% மைக்ரோ மைனாரிட்டியாக சின்னக்குத்தூசி போன்ற சமூகநீதி போற்றும் பார்ப்பனர்கள் பிறப்பதுண்டு. அது விதிவிலக்கு). திராவிட இயக்கம் தமிழ்நாட்டில், தமிழருக்காக, தமிழர் முன்னேற்றத்திற்காக இயங்கினாலும், ஆயிரம் நன்மைகளைச் செய்திருந்தாலும் தமிழர் இயக்கம் என இயங்காது திராவிட இயக்கம் என இயங்கியதன் காரணம் இதுதான். தமிழர் இயக்கம் என இயங்கியிருந்தால் இந்நேரத்துக்கு அதுவும் நம்மூர் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ போலவோ, தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் போலவோ, நியூஜெர்சி தமிழ்ச்சங்கம் போலவோதான் ஆகியிருக்கும்!! பெரியார் ஒரு தொலைநோக்காளர்!!!