Showing posts with label DMK. Show all posts
Showing posts with label DMK. Show all posts

Friday, July 27, 2018

கலைஞர் இறந்துவிடுவார் கருமாதிச்சோற்றில் பஞ்ச கவ்வியத்தை கலந்து கொண்டாடி சாப்பிடலாம்

கலைஞர் இறந்துவிடுவார் கருமாதிச்சோற்றில் பஞ்ச கவ்வியத்தை கலந்து கொண்டாடி சாப்பிடலாம் என்று காத்திருந்த சிலோன் தமிழர்களுக்கு (டிவிட்டரில் தன் ஆணுறுப்பை படம் வெளியிட்ட ச்சீறிலங்கா கிரிக்கெட்டர் சங்கக்கராவின் ரசிகர்கள் என்பதால் இவர்களை சங்கா"தமிழர்கள் என்றும் பலர் சொல்வார்கள்) கலைஞர் வாழ்கிறார் என்பது தெரிந்து மனம் நொந்து சோகத்துடன் சயனைடு சப்பிகளுடன் திரிவதாக லண்டன் ஈஸ்ட்ஹாம், பாரிஸ் லா சாப்பல்,
கனடா டோரொண்டோ பார்க் வீதிகள், அவுஸ்திரேலியே சிவப்பு விளக்கு பகுதிகளில் இன்று போதைப்பொருள் சப்ளை நடைபெறவில்லையாம். கலைஞர் வாழ்ந்து முடித்தவர், ஆனால் உங்களுக்கெல்லாம் எதிர்காலம் இருக்கிறது, ஆக கலைஞருக்காக காத்திருக்காமல் உங்கள் போதைப்பொருள் சப்ளை வேலைகளைத் தொடர்ந்து செய்தால்தான் உங்களுக்கு கையில் நாலு காசு நிற்கும். தமிழ்நாட்டுத்தமிழர்களைப்போல உங்களுக்கு படிப்பறிவும் கிடையாது. இந்த பொழைப்பைவிட்டுவிட்டால் ஒரு நாதியும் கிடையாது. தொப்புள் கொடி சொந்தங்களே இருக்கும் வேலையை சமூக ஊடக கொண்டாட்டங்களுக்காக விட்டுவிடாதீர்கள்.

கலைஞர் சாவுக்கு சில ஈழத் தமிழர்கள் காத்திருப்பது சொல்கின்ற செய்தி என்ன?

கலைஞர் சாவுக்கு சில ஈழத் தமிழர்கள் காத்திருப்பது சொல்கின்ற செய்தி என்ன?
ஆம், வேறு வழியில்லை. எல்லாவற்றிற்குமே இவர்கள் இப்படித்தான் காத்திருக்க வேண்டும். அவர்களின் விருப்பங்கள் தானாக நடந்தால்தான் உண்டு. நடத்திக் காட்டுகின்ற வல்லமை அவர்களிடம் இல்லை. எதிர்காலத்திலும் அது வரப் போவதும் இல்லை.
காணி வேண்டுமா? காணாமல் போனவர்கள் நிலை தெரிய வேண்டுமா? அதிகாரப் பகிர்வு வேண்டுமா? எதுவும் தமிழர்களின் போராட்டத்தினால் வரப் போவது இல்லை. வேறு யாரவது அழுத்தம் தந்து இவை கிடைக்க வேண்டும். அல்லது எதிரியே போனால் போகட்டும் என்று தந்து விட வேண்டும். இதுதான் நிலை. தானாக எல்லாம் நடக்கட்டும் என்று காத்திருக்க வேண்டிய பரிதாபமான நிலையில் ஈழத் தமிழினம் இருக்கிறது.
இந்த நிலையை மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்தியாமல், இயற்கையாக வந்தே ஆக வேண்டிய சாவு கலைஞருக்கு எப்பொழுது வரும் என்று சில ஈனத் தமிழர்கள் காத்திருக்கிறார்கள்.
கலைஞர் சில ஆண்டுகளாகவே செயற்பட முடியாத நிலையில் இருக்கிறார். ஆனால் தனக்குப் பிறகும் தன்னுடைய கட்சி வலுவோடு இருப்பதற்கான ஏற்பாடுகளை அவர் என்றைக்கோ செய்து முடித்து விட்டார். மிகப் பெரும் சவால்களையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்ட அவருடைய கட்சி, இன்றைக்கும் மிகப் பெரும் வலிமையோடு இருக்கிறது. நாளைக்கும் இருக்கும்.
இன்றைக்கு தேர்தல் நடந்தால், கலைஞரின் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும். ஸ்டாலின்தான் முதலமைச்சர் ஆவார். இது எல்லோருக்கும் தெரியும். கட்சி மட்டும் அல்ல. கட்சியின் சமூகநீதிக் கொள்கையும் தமிழ்நாட்டில் வலுவோடு என்றைக்கும் இருக்கும். கலைஞரின் சாதனை இது. தனக்குப் பிறகும் தன்னுடைய கட்சியும், கொள்கையும் வலுவோடு இருப்பதற்கான அடித்தளத்தை அவர் போட்டிருக்கிறார்.
மறுபுறம் ஈழத் தமிழர்கள் தமது தலைமையை இழந்து பத்து ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு பல குழுக்களாக சிதைவுற்று, தமக்குள் மோதிக் கொண்டு, எல்லாம் தானாக நடக்கும் என்று காலத்தை கழிக்கின்ற பரிதாப நிலையில் இருக்கிறார்கள்.
அவர் சாவார், இவர் சாவார், முகநூலில் வெடி கொழுத்தலாம் என்று தமது வக்கிரத்தை வெளிப்படுத்தக் காத்திருப்பவர்கள், இந்தப் பரிதாப நிலையை மாற்ற என்ன செய்யலாம் என்று சிந்திப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று இந்தப் பதிவை முடிக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் இப்படியான வக்கிரபுத்தி படைத்தவர்கள் சிந்திக்கக்கூடியவர்களாக இருப்பார்களா என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கிறது.

Thursday, July 26, 2018

ஈழ துரோக காங்கிரஸ்சை ஆதரிப்பதா -- பழைய குபீர் திடீர் (RSS) தமிழுணர்வு போராளிகள்

//ஈழ துரோக காங்கிரஸ்சை ஆதரிப்பதா -- பழைய குபீர் திடீர் (RSS) தமிழுணர்வு போராளிகள்//
காங்கிரஸ்சாவது புலிகளை மாத்திரம் எதிரியாய் பார்த்தது, அதுவும் ராஜீவ் படுகொலையால், ஆனால் பாஜக RSS கும்பலோ, ஒட்டுமொத்த தமிழினத்தையே எதிரியாய் பார்க்கும்..
2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பிஜேபி கட்சி வெளியிட்ட காங்கிரஸின் மீதான குற்றபத்திரிக்கையில், "உள்நாட்டு, பிரதேச" அழுத்தங்களுக்கு பணிந்து, தமிழர்களுக்கு எதிரான இறுதி போரில், இலங்கை ராஜபக்சே அரசுக்கு முழு ஒத்துழைப்பை, உதவியை மந்திய காங்கிரஸ் அரசாங்கம் செய்யவில்லை என்று குறைசொல்லி, நாங்களாய் (பிஜேபி ஆட்சி) இருந்திருந்தால், இத்தைகைய அழுத்தங்களுக்கு அடிபணிந்திருக்கமாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்... அப்படியென்றால் என்ன அர்த்தம்?? "கூட்டணி கட்சியான திமுக கொடுத்த அழுத்தங்களால், மத்திய காங்கிரஸ் அரசு, இலங்கை அரசுக்கு, புலிகளை ஒழிக்க சரியான முறையில் உதவவில்லை.. ஆனால், நாங்கள் (பிஜேபி) இவ்வாறு உள்நாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியாமல், ராஜபக்ஷே அரசுக்கு உதவியிருப்போம்" என்பதுதானே.. .
சரி, இலங்கையில் தமிழ் இந்துக்கள் பாதிக்கப்பட்டபோது, எந்த RSS ஹிந்துத்துவா இயக்கங்களும் போராடவில்லையே... இலங்கையில் லட்சகணக்கான தமிழ் மக்கள் கொல்லபட்டார்களே, பல நூறு இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டனவே... அப்போது இங்கே எந்த ஒரு ஹிந்துத்துவா இயக்கங்களோ, மோடி போன்ற ஹிந்து தேசியவாதிகளோ ஒன்றுமே செய்யவில்லையே... ஒரு சிறு எதிர்ப்போ, போராட்டம்மோ, அறிக்கையோ எதுவும்மே செய்யவில்லையே??, அப்போ தமிழர்கள், ஹிந்துக்கள் இல்லையா???
சாதாரண சப்பை காரணக்களுக்காக பலமுறை, வாரக்கணக்கில் இந்திய நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் முடக்கிவைத்த அப்போதைய எதிர்கட்சியான பிஜேபி, தமிழ் நாட்டு மீனவர்களுக்காகவும், ஈழ தமிழர் (இந்துக்கள்) படுகொலைகளின் போதும், எத்தனை முறை நாடாளுமன்றத்தை முடிக்கிவைத்தது??? அவற்றின் மீது விவாதம் நடத்த அரசை கோரியது????... விடை : பூஜ்யம்
காங்கிரஸ் அரசே ஒருவழியாய் ஒத்துக்கொண்டு, போற்குற்றத்துக்காக இலங்கையை கண்டிக்கும் தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முன்வந்தது... ஆனால் அந்த தீர்மானத்தைகூட நாடாளுமன்றத்தில் கொண்டுவரக்கூடாது என்று எதிர்த்தும், அதை தாக்கல்செய்யகூட ஒத்துழைக்காத கட்சிதான் பிஜேபி.... "இலங்கையில் நடந்தது போர்குற்றம் அல்ல", ராஜபக்ஷேவை "போற்குற்றவாளி" என்று குறிப்பிடக்கூடாது என்று சொன்னகட்சிதான் பாஜக...
இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு மட்டும் முட்டுக்கட்டை போட்டது ஏன்?????
தமிழர்களை கொன்ற சிங்கள ராஜபக்ஷவுக்கு பாரத ரத்னா கொடுக்கவேண்டும் என்று சொன்னவர் BJPயை சேர்ந்தவரும், மோடியின் நண்பருமான சு.சாமி... மோடியின் அமைச்சரவையில் மிகமுக்கிய பொறுப்புக்களை வகிக்கும் ரவிசங்கர் பிரசாத், இலங்கையில் நடந்தது போர்குற்றம் கிடையாது, ராஜபக்சே போற்குற்றவாளி என்று அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று அறுதியாய் சொன்னவர்.... சுஷ்மா சுராஜோ, ராஜபக்ஷவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்.. இந்தியாவுக்கு அவரை அழைத்து மரியாதை செய்தவர்.. ஈழ தமிழர்கள் தனி நாடு என்பதை கேட்கவில்லை என்று சொல்லி, உயிர்த்தியாகம் செய்த போராளிகளை அவமதித்தவர்..

Thursday, July 12, 2018

எதிர்க்கட்சியின் இலக்கணம்

கேள்வி: திமுக ஏன் எப்போது பார்த்தாலும் வெளிநடப்பு செய்கிறது. ஆளும்கட்சி செய்யும் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டுமா.?
பதில்: ஆம். கண்டிப்பாக எதிர்த்து தான் ஆக வேண்டும். அதுதான் எதிர்க்கட்சியின் இலக்கணம். இதற்கு ஒரு உதாரணம் சொன்னால் சரியாக புரியும்.
சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் என்று ஒருவர் இருந்தார். அறிஞர். தந்தை பெரியாரின் வலது கையாக விளங்கியவர். அவர் இந்தியாவினுடைய ஆலோசகராக லண்டனுக்கு சென்ற போது விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவர் எதிர்க்கட்சியாக இருந்த போது அவரை பார்த்து காங்கிரஸ் காரர் ஒருவர் கேட்கிறார்,
"நீங்கள் சட்டசபையில் இருந்து எதை எடுத்தாலும் அதை எதிர்த்து பேசியிருக்கிறீர்களே. காங்கிரஸ் ஆட்சி செய்யும் நண்பர்களை கூட நீங்கள் ஏற்றுக்கொள்ளாமல் பேசியிருக்கிறீர்களே" என்று கேட்டார்.
அதற்கு அவர், "ஆமாம் எதிர்க்கட்சி என்றால் அப்படித்தான் பேச வேண்டும். எதிர்க்கட்சிக்கு என்று சில இலக்கணங்கள் இருக்கின்றன. எதிர்க்கட்சி என்றால் அப்படித்தான் பேச வேண்டும்" என்றார்.
உடனே அவர், "சரி நாளைக்கு ஆதிதிராவிட மக்களுக்கு அனைவருக்கும் ஆளுக்கு ஒரு வீடு தருவதாக காங்கிரஸ் அரசு அறிவித்தால் அதை எதிர்ப்பீர்களா ஆதரிப்பீர்களா.?" என்று கேட்டார்.
"ஆதரிப்பேன். ஆதரித்து விட்டு ஒரு யோசனை சொல்வேன். வீடு கொடுத்தால் மட்டும் போதாது. வீடு கொடுத்து விட்டு வீட்டுக்கு 200 ரூபாய் தர வேண்டும் என்றும் சொல்வேன். அதுதான் எதிர்க்கட்சி காரனுடைய இலக்கணம்" என்றார்.
அவரைத்தான் parliamentarian, பாராளுமன்ற வித்தகர், தந்தை பெரியாருடைய மாணவர், அறிஞர் அண்ணாவினுடைய தோழர், எங்களுக்கெல்லாம் தலைவர் என்று கலைஞர் அவர்கள் குறிப்பிட்டிருப்பார்.
விமர்சனங்களில் வளர்ச்சிக்கான விமர்சனம் வீழ்ச்சிக்கான விமர்சனம் என்று இருவகை உள்ளது. ஆங்கிலத்தில் constructive criticism, destructive criticism என்று கூறுவர். இதில் திமுக செய்வது முதல் வகையை சேர்ந்தது. வளர்ச்சிக்கான விமர்சனம் constructive criticism. போக்குவரத்து துறையின் நஷ்டத்தை குறைக்க ஆலோசனை கூறியதில் இருந்து காவிரி நதிநீர் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் அறிவித்ததில் இருந்து நீட் எதிர்ப்பு மீத்தேன் எதிர்ப்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பு நியூட்ரினோ எதிர்ப்பு, இன்று லோக் ஆயுக்தா சட்டமசோதா எதிர்ப்பு வரை திமுக செய்து வருவது வளர்ச்சிக்கான விமர்சனங்களே.
இதுதான் எதிர்க்கட்சியின் இலக்கணம். அளவே வக்கில்லாதவர்கள் ஆளுங்கட்சியாக இருப்பதால் தான் அடிக்கடி வெளிநடப்பு செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது.
ஜனநாயக முறைப்படி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியால் காட்ட முடிந்தது அதிகபட்ச எதிர்ப்பே வெளிநடப்பு மட்டும் தான்.
அதனால் சட்டசபையில் வெளிநடப்பு செய்வதால் என்ன ஆகிவிடும்.?
எல்லா திட்டங்களையும் எதிர்க்கலாமா.?
செயல்படுவதே இல்லை
போன்ற ஆஃபாயில் தனமான விமர்சனங்களை வைக்காமல் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து பேசுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது...

Wednesday, July 11, 2018

தஞ்சை கலைஞரின் மண்...

தஞ்சாவூர் ..
தஞ்சை திமுக.. பிற மாவட்டங்களை விட இங்கே திராவிடத்தின் வேர் ஆழ ஊடுறுவியிருக்கும்..காரணம் அதிகம்  அடிமைபட்டுகிடந்த  மக்களை விழுப்புணர்வை ஊட்டி சுயமரியாதைக்காரர்களாக்கியது திராவிடம்
தஞ்சை என்றாலே நிலகிழார்கள் மட்டுமே நினைவுக்கு வருவார்கள் .. ஆயிரம் ஏக்கர் நஞ்சை ஆயிரத்துஐநூறு ஏக்கர் புஞ்சை என ஒரு சில குடும்பங்களே ஆட்சி செலுத்தியது.. கபிஸ்தலம் மூப்பனார்  உக்கடை தேவர்..  பூண்டி  வாண்டையார் என கொடிகட்டி ஆட்சிசெய்தார்கள்.. அவர்கள் வைத்தது தான் எழுதபடாத சட்டம் ..  அவர்களை மீறி எதுவுமே நடக்காது .. யாரும் எதிர்க்க முடியாது  அவர்களது அரசியல் காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமே..
அதோடு சிறு சிறு நிலக்கிழார்கள்.. அதாவது ஐம்பது அறுபது ஏக்கர் வைத்திருப்போர்.. சிலரிடம் நூற்றுக்கணக்கில் இருக்கும் ..சில இஸ்லாமிய குடும்பங்களும் நிலகிழார்களாக இருந்தன .. பார்பனர்கள் காவிரிக்கரைகளில் இனாமா பெற்ற நிலங்கள் மற்றும் கோவில் நிலங்களோடு ஏறக்குறைய ஆட்சி செய்தார்கள்
அவர்களும் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தார்கள்.. சிறு சிறு முதலாளிகள் கூட விவசாயத்தை பிரதானமாக கொண்டவர்கள் கூட பெரும் "ஆண்டைகளின்"அருகில் தான் இருந்தார்கள்..  இவர்களையெல்லாம் மீறி சரியாக சொல்லவேண்டுமெனில் எதிர்த்து  கட்சியை வளர்த்தெடுத்தில் பெரும் பங்கு கலைஞருக்கு மட்டுமே உண்டு ..
..
ஏதாவது பேராட்டம் பொது கூட்டமென்றால் காங்கிரஸ்காரர்களை மீறி தஞ்சை மாவட்டத்தில் எதுவுமே செய்ய முடியாது மீறினால் அவர்கள் நிலங்களில் வேலையில்லை குத்தகை இல்லை.. குடும்பம் அந்த ஊரில் குடியிருக்கவே முடியாது.. எந்தவொரு போராட்டமும் ஆரம்பத்திலேயே ஒடுக்கபடும் ..
ஒருங்கிணைந்த தஞ்சையின் பழைய  மாவட்டத்தின் செயலாளராக இருந்த நீலமேகம் எங்கண்ணே நம்ப கூப்பிட்டா வரவா போறானுக என்ற பேச்சை கேட்காமல் கிராமம் கிராமமாக மக்களை சந்தித்து .. திராவிட கொள்கைகளை ..யாருக்காக திமுக  துவங்கபட்டதென்பதை.. யாருக்கும் அடிமையாக இருக்க தேவையில்லை என  சுயமரியாதை தட்டியெழுப்பி .. மரியாதையோடு நடத்தாதவர்களோடு நமக்கென்ன வேலை என கூறி.. மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்தவர் கலைஞர் .. பிற மாவட்டங்களை விட தஞ்சை மீது கலைஞருக்கு தனி கவனமிருக்கும்.. சொந்த மாவட்டமென்பதால் மட்டுமல்ல சொந்த மண்ணில் எப்படி புறக்கணிக்கபடுகிறோம்.. ஒரு சில  குடும்பங்களும் ..சில பார்பனர்களும் மட்டுமே ஆட்சி செய்கின்ற நிலையை நேரில் கண்டு படித்தவர்..  மண்ணின் நிறம் அறிந்தவர்
மக்களின் மனதறிந்தவர்..
தஞ்சை திமுக என்றாலே மன்னையும் மணியும் நினைவுக்கு வந்தாலும் அடித்தளமிட்டது கலைஞர்தான்..
..
அண்ணன் கோ.சி.மணியை பற்றி சொல்லவேண்டும் இன்றைக்கு மூன்று மாவட்டங்களாக இருக்கும் ஒருங்கிணைந்த தஞ்சையில் ஒற்றை ஆளாய் சுற்றி திரிந்து கட்சியை வளர்த்தவர் கலைஞருக்கு பிறகு ஒவ்வொரு கிராமத்திலும் கட்சிகாரனை பெயர் சொல்லி அழைத்து அவனோடு நெருக்கம் காட்டியவர்.. அண்ணனோடு பழகி அந்த நாட்கள் இன்னமும் பசுமையாய்..
..
கலைஞர் கட்டியெழுப்பிய கோட்டை தஞ்சை
ஒடுக்கபட்ட சமூக பின்னணியில் இருந்த உயரத்தை எட்டியவர் .. அதனால் தான் எந்த கோவிலில் ஓரமாய் நின்று கதைக்க இசைக்க வேண்டுமென்றார்களோ  அதே கோவிலில் பட்டு சட்டையோடு  நாற்காலியில் அமர்ந்து பார்ப்பன கூத்தாடியின் நடனத்தை ரசித்ததெல்லாம் நமக்கு நிறைய உணர்த்தும்.. சுயமரியாதை விட்டுகொடுக்காத.. யாரால் எதற்காக புறக்கணிக்கபட்டோமே அவர்களை கொண்டே சிறப்பு பெறுவது.. அவர்களின் வினைக்கு எதிர்வினையாற்றுவது.. பல்லக்கில் நீ மட்டும்தான் செல்வாயா ..நாங்களும் செல்வோம் சாரட்டில்
என்று சொல்லாமல் வினையாற்றும்..
காவிரிக்கரை பிராமணர்கள்  ஜமீன்கள்  நிலக்கிழார்கள்  மிராசுகள்  தங்களை குறுநில மன்னர்களைப்போல நினைத்தார்கள் இது பிற மாவட்டங்களில் அதிகமில்லை..
இவர்களை எதிர்த்து  பேசவோ.. அவர்கள் முன் அமரவோ.. ஏன் உரக்க பேச கூட முடியாத சூழலை மாற்றியது திராவிட இயக்கம் அதில் பெரும்பங்கு கலைஞருக்குண்டு.. கலைஞர்  தன் எழுத்து நாடகம் பேச்சு என மக்களை தினம் தினம் சந்தித்து இன உணர்வை சுயமரியாதையை ஊட்டினார்..
தஞ்சை சுயமரியாதை மண்ணாக மாற்றியதில்
திராவிட உணர்வாளர்களை அதிகம் உருவாக்கியதும் கலைஞரின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி..

கோடைகாலங்களில் வயல்வெளிகளில் கலை நாடகம் இசையென கூத்து நடக்கும்.  அதில் புராணங்களும் மத பிரசங்கங்களும் நடக்கும்.. அங்கும் பகுத்தறிவு நாடகங்களை .. கொள்கை முழக்கும் தெருமுனை கூத்துகளை.. செய்து தஞ்சையில் திமுகவை வளர்த்தவர் கலைஞர் பெருமகன்..   அதனால் தான் எல்லோரையும் தோற்கடிக்க முடிந்த காமராஜாரால் கலைஞரை தோற்கடிக்க இயலவில்லை
தஞ்சை கலைஞரின் மண்.. எனது மண்ணும் கூட..
..
ஆலஞ்சியார்

Thursday, July 05, 2018

கலைஞரின் சொத்தை பற்றி கேள்வி கேட்கும் அதிமுக பா.ம.கா ,நாம் தமிழர், பா.ஜா.க கட்சியினரே.

கலைஞரின் சொத்தை பற்றி கேள்வி கேட்கும் அதிமுக பா.ம.கா ,நாம் தமிழர், பா.ஜா.க கட்சியினரே...... தங்கள் தலைவர்கள் கட்சி ஆரம்பிக்கும் முன்பு என்ன சொத்து வைத்திருந்தனர்.?
தங்கள் தலைவர்கள் கட்சி ஆரம்பிக்கும் முன்பு என்ன சொத்து வைத்திருந்தனர்.?
இன்று அவர்களிடம் என்ன சொத்துக்கள் உள்ளது என என்றாவது சிந்தித்தது உண்டா?
அதை அறிந்துக் கொள்ள முயன்றது உண்டா?
ஆட்டு மந்தைகள் போலத்தானே இருக்கிறீர்கள்.
உங்கள் தலைவர்கள் அக்மார்க் யோக்கியர்கள் என்பதை உறுதி செய்த பின்தானே நீங்கள் மற்றக் கட்சித் தலைவர்களை கேள்வி கேட்க முடியும்?
உங்கள் தலைவர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதை மறக்க வேண்டாம் ஆட்டு மந்தைகளே.
கொஞ்சம் மூளையை உபயோகிங்க.
1)1976 ஜனவரியில் திமுக ஆட்சியை கலைத்த இந்திராவால் ஏன் எமர்ஜென்சி காலத்திலேயே கலைஞர் மீதான குற்றச்சாட்டுகளின் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை? ஏன் வெட்டித்தனமா கமிசன் போடனும்? ஒரு FIR கூட போட முடியாதது ஏன்?
2) 10 வருசம் ஆட்சியிலிருந்த MGR ரால் கலைஞர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதது ஏன்?
3)1991 இல் ஆட்சியை பிடித்த ஜெயலலிதா பழிவாங்காத ஆளே கிடையாதே.
கலைஞர் மீது 1996 வரை எந்த நடக்கையையும் எடுக்க முடியாதது ஏன்?
4) 1996 முதல் 2016 வரை சொத்துக்குவிப்பு வழக்கால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஜெ மற்றும் சசி குடும்பத்தினர் கலைஞர் மீது மிக மோசமான கோபத்தில் இருந்திருப்பார்கள்.
10 வருட ஆட்சி அதிகாரம் அவர்கள் கையில்தானே இருந்தது.
கலைஞர் குடும்பச்சொத்தை நீங்களெல்லாம் பதிவு போடும் போது அந்த விபரம் கலைஞரை பழிவாங்க காத்திருந்த உளவுத் துறையையே கையில் வைத்திருந்த அவர்களுக்கு தெரியாதா?
ஏனென்றால் கலைஞர் சொத்துக்கள் என நீங்கள் போட்ட பட்டியலே டுபாக்கூர்தான்.
18 வயது முதல் 90 வரை 72 வருடங்கள் ஆண்டுகள் உழைத்தவருக்கு சொத்துக்கள் இல்லாமலா இருக்கும்?
அவற்றுக்கு முறையாக கணக்கு காண்பித்திருந்ததால்தான் ஜெயாவினால் கலைஞர் மீது ஒரு
FIR கூட போடமுடியவில்லை.
கலைஞரால் 20 வருடம் நிம்மதியிழந்த சகல அதிகாரம் படைத்த ஜெயலலிதாவாலேயே
எதுவும் செய்ய முடியாத போது
இந்த சில்லரை கட்சி மூடர்கள் தினம் தினம் கலைஞரை பற்றி கதை கட்டுவது கேடு கெட்ட
மொள்ளமாரித்தனமே

Friday, June 22, 2018

திமுகவும் , அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா?

திமுகவும் , அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்/////.......இது சரியா...???
🔷தமிழக பிரச்சனைகளை கையாளமும் முறை :-
அதிமுக :- அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியதுண்டா...????
திமுக :- முக்கியமான தமிழக பிரச்சனைகளுக்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துக்களை கேட்டு முடிவெடுக்கும்.
🔷முந்தைய அரசின் திட்டங்கள்:-
அதிமுக :- திமுகவின் சமச்சீர் கல்வி, புதிய சட்டப்பேரவை, புதிய மின் திட்டங்கள் மற்றும் அண்ணா நூலகம்வரை அனைத்தையும் முடக்கிவிட்டது...
திமுக :- அதிமுகவின் சத்துணவு திட்டம், மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம் ஆகியவற்றை திமுக செயல்படுத்தியது...
🔷அடக்குமுறை சட்டங்கள்:-
அதிமுக :- தடா,பொடா போன்ற சட்டங்களால் அரசியல் தலைவர்கள் பழிவாங்கப்பட்டனர்...சிலர் கஞ்சா வழக்கு போடப்பட்டு பழிவாங்கப்பட்டனர்
திமுக :- அடக்குமுறை சட்டங்கள் திமுக ஆட்சியில் ஒழிக்கப்பட்டன...
🔷அவதூறு வழக்குகள் :-
அதிமுக :- பத்திரிக்கை ஊடகங்கள் மீது அவதூறு வழக்குகள் போடப்பட்டு பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டது.
திமுக :- திமுக தலைவர் மீது இன்றுவரை ஊடகங்கள் சுதந்திரமாக அச்சில் ஏற்ற கூடாத அவதூறுகளை எழுதிக்கொண்டுதான் உள்ளன. யாரும் பழிவாங்கப்படவில்லை....
🔷கூட்டணி தர்மம் :-
அதிமுக :- கூட்டணி தர்மம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் கட்சி.வாஜ்பாய், வைகோ,ராமதாஸ்,விஜயகாந்த்,கம்யூனிஸ்ட்களிடம் கேட்டால் நன்றாக தெரியும்....
திமுக :- இந்திய தலைவர்கள் முதல் தமிழக தலைவர்கள்வரை அனைரும் கலைஞரின் கூட்டணி தர்மத்தை பாராட்டியுள்ளனர் (நண்பன் என்றால் இறுதிவரை ஆதரிப்போம், எதிரியென்றால் இறுதிவரை உறுதியாக எதிப்போம்)
🔷அரசியல் நாகரீகம் :-
அதிமுக :- மாற்றுக் கட்சியினருக்கு வணக்கும் வைக்ககூட தயங்குபவர்கள்
திமுக :-முதல்வராக இருந்த ஜெயலலிதாவையே நேரில் சந்தித்து நிவாரணநிதி வழங்கியவர் ஸ்டாலின். அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழுவில் திமுக எம்பிக்கள் கலந்து கொண்டு மோடியை சந்தித்தனர்...
🔷தமிழக வளர்ச்சி :-
முந்தைய திமுக ஆட்சியில் தமிழகத்தின் தொழில்வளர்ச்சி 33% அதிகரித்தது... அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி ‘மைனஸ்’ 3%...
தமிழக வேளாண்மை வளர்ச்சி ‘மைனஸ்’ 12 சதவிகிதம்....
கலைஞர் ஆட்சி செய்த இறுதியாண்டில் (2011) GDP எனப்படும்
பொருளாதார மொத்த உற்பத்தியானது 13.12% சதமாக இருந்தது, ஆனால், ஜெயா ஆட்சிக்கு வந்த இந்த மூன்றே ஆண்டுகளில் GDP 4.14% சதமாக வீழ்ச்சியடைந்துவிட்டது.....
திமுக ஆட்சியில் தமிழக உற்பத்தி வளர்ச்சி 20.18% சதம்... அதிமுக ஆட்சியில் அது 1.61% சதமாக சரிவு...
🔷அடிப்படைகட்டுமான திட்டங்கள் :-
திமுக ஆட்சியில் மட்டும் தான் தமிழகத்தில் எண்ணற்ற அடிப்படைகட்டுமான திட்டங்கள் (இன்பராஸ்ட்ரகச்சர்) செயல்படுத்தபட்டன... கணக்கற்ற மேம்பாலங்கள், நெடுஞ்சாலைகள், மின் திட்டங்கள், தொழில்சாலைகள்... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்...
அதிமுக ஆட்சியில் ஒன்றுமே கிடையாது... எல்லாம் வெறும் 110 விதி அறிக்கைகளாக ஏட்டில் மட்டும்மே உள்ளது.
🔷காவிரி பிரச்சனை :-
அதிமுக :- காவிரி ஆணையத்தை பல் இல்லாத ஆணையம் என்றது...
திமுக :- கவிரிக்காக வழக்கு தொடுத்தது,ஆணையத்தை அமைத்தது,இடைக்கால தீர்ப்பை பெற்றது , இறுதி தீர்ப்பையும் பெற்றது...
🔷அரசு ஊழியர்கள்:-
அதிமுக :- எஸ்மா சட்டம் கொண்டு அரசு ஊழியர்களை கைது செய்தது, மக்கள் நலப் பணியாளர்கள், சாலைப்பணியாளர்களின வேலையை பறித்தது
திமுக :-அரசு ஊழியர்களின் நலன் காக்கப்பட்டது
🔷ஊழல் குற்றச்சாட்டு:-
அதிமுக :-டான்சி வழக்கு, வருமானவரி வழக்கு , சொத்து குவிப்பு வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது
திமுக :- எந்த வழக்கிலாவது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை தரப்பட்டுள்ளதா...????
எல்லாவற்றையும்விடுங்கள் நடுநிலை ஊடக நண்பர்களே ஒரு நிமிடம் உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்...
உங்களால் நினைத்த நேரத்தில் நினைத்த கேள்வியை ஜெயாவிடம் கேட்க முடியுமா அல்லது கலைஞரிடம் கேட்க முடியுமா...????
திமுக எல்லாவற்றிலும் மக்கள் நலன்சார்ந்து செயல்படக்கூடிய இயக்கம்...ஆனால் அதிமுக அப்படிபட்டது இல்லை என்பதற்கு மேலே கூறியவை சில உதாரணங்கள்..
பிறகு எப்படி எந்த முகாந்திரமும் இல்லாமல் திமுகவும் அதிமுகவும் ஒன்றுதான் ( ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ) என்று பொத்தம் பொதுவாக கூறுகிறீர்கள்....
இனிமேலும் திமுகவும் அதிமுகவும் ஒன்றுதான் என்று சொல்வீர்கள் என்றால் நீங்கள் தான் ஏதோ குட்டையில் ஊறியிருக்கிறீர்கள் என்று அர்த்தம் ....

Tuesday, June 19, 2018

மனமோ கருணாநிதியை தேடுகிறது

2005 இல் கட்டுரைப்போட்டி ஒன்றிற்காக மும்பை (அன்று பம்பாய்) சென்றிருந்த போது, இந்தி தெரியாமல் முழித்த போது திமுக மீது எரிச்சலும் வெறுப்பும் கோபமும் வந்தது. அது மட்டுமில்லாமல் மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் எங்களுக்கு நடந்த பரிசளிப்பு விழாவில் "இந்தியை படிக்கவிடாமல் செய்த கருணாநிதியையும், திமுக வையும்" மேடையில் கண்ணீரோடும் மிகுந்த கோபத்தோடும் வசைபாடினேன். அப்போது எனக்கு அரசியல் தெரியாது. அரசியல் வரலாறும் தெரியாது. திமுக தான் இந்தியை படிக்கவிடாமல் தடுத்தது என்ற செய்தியை மட்டும் பத்திரிக்கை(அன்றைய வாட்ஸாப்) படித்து தெரிந்துவைத்திருந்தேன்.
2009 களுக்குப் பின்னர் அரசியலை படிக்க, கவனிக்க ஆரம்பித்த பின்னர் வாங்கிய புத்தகங்களில் முதன்மையான புத்தகம் பழ கருப்பையா எழுதிய "கருணாநிதி என்ன கடவுளா?".
இன்று 2018. கருணாநிதி உடல்நலமின்மையால் செயல்படாமல் இருக்கிறார்.
"கருணாநிதி என்ன கடவுளா" புத்தகம் எழுதிய பழ கருப்பையாவோ திமுகவில் சேர்ந்துவிட்டார்.
இந்திக்காக கருணாநிதியை வசைபாடிய நானோ திமுகவின் பாதையில் இந்தி எதிர்ப்பு பாதையில் நிற்கிறேன்.
என் மனமோ கருணாநிதியை தேடுகிறது.
என்ன காரணம்?
பல காரணம் இருந்தபோதிலும் ஒற்றைக்காரணமே போதுமே.
அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
இது அனைவருக்கும் தெரிந்த குறள். அதன் பொருளும் அனைவருக்கும் தெரிந்ததே.
மு.வரதராசனார் ஆத்திகர், "எழுத்துக்கள் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கின்றது". இது மு.வ உரை.
இனி மு.க முறை. அவர் சீரிய பகுத்தறிவாளர். இந்த குறள் தான் கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் முதல்குறள்.
ஆதிபகவன் என்றால் என்ன என்று திருவள்ளுவனுக்கு தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் உரை எழுதிய எல்லோரும் ஆதிபகவன் என்றால் கடவுள் என்றே உரை எழுதிவிட்டனர்.
கலைஞர் கருணாநிதி என்ன செய்திருக்க முடியும்? கடவுள் என்ற சொல்லை சொன்னால், பகுத்தறிவாளர் தன் நிலை தாழ்ந்து எழுத வேண்டி வருமே..
எனவே இப்படி எழுதினார்.
"அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை,
ஆதிபகவன் உலகில் உள்ள உயிர்களுக்கு முதன்மை".
இதுல வரும் ஆதிபகவனுக்கு என்ன பொருள்.?
நீ என்ன வேண்டுமானாலும் வச்சுக்கோ. எனக்கு "ஆதிபகவன் னா கடவுள் இல்லை".. ன்னு சொல்லிட்டார் மு.க.
படிப்பவர் சாய்வைப் பொறுத்து ஆதிபகவன் பொருள் மாறும். ஆனால் எனக்கு ஆதிபகவன் னா கடவுள் கிடையாது. ஏன்னா ஆதிபகவன் னு எழுதிய திருவள்ளுவரே எந்த பொருளையும் சொல்லவில்லை, நான் ஏன்டா சொல்லனும் என்கிறார் கலைஞர். உனக்கு தேவைப்பட்டதை நீ வச்சுக்கோ. அவ்ளோ தான்.
கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள குறளுக்கு விளக்கம் எழுதும்போது, "கடவுள்" என்ற சொல்லையோ, அந்தப் பொருளையோ பயன்படுத்தாமல் விளக்கம் எழுதும் திறமை, தைரியம், நுண்ணறிவு யாருக்கு வரும்?
அது கலைஞருக்கு உண்டு. இந்த ஒற்றைக்காரணம் போதாதா? கலைஞரை என் மனம் நினைக்க?

கலைஞர் அணை கட்டியதை தடுக்காமல் விட்டுவிட்டாராம்

கிருஷ்ண ராஜசாகர் ஆரம்பம் 1926
கபினி அணை கட்ட ஆரம்பித்தது 1959
ஹேரங்கி 1964 ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது
ஹேமாவதி 1968ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது
கலைஞர் முதல்வரானது 1969ல்தான்
கலைஞர் அரசு புதிய அணைகளை கட்டுவதை எதிர்த்து வழக்குபோட்டதை உச்சநீதிமன்றம் ஏற்காமல் தனது 25.1.1971 தீர்பில் டிஸ்மிஸ் செய்துவிட்டது
ஆனா கலைஞர் அணை கட்டியதை தடுக்காமல் விட்டுவிட்டாராம்
பொய்க்கு மேல் பொய் சொல்றானுங்க


 கர்நாடகா அணை கட்டியதை கலைஞர் தடுக்க முயற்சிக்கான ஆதாரம் - https://indiankanoon.org/doc/1945849/

பொய் சொல்ற பயலுக பூரா திமுக என்ற ஒவ்வாமை நோய் பிடித்தவர்கள். சொந்த புத்தியில்லாத முண்டங்கள். இவர்கள் திமுக எதிர்ப்பு என்ற கண்ணாடியை கழற்றாத வரைக்கும் இப்படித்தான் ஊளையிடுவார்கள். பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே வளர்ந்தவனுங்க!

Monday, June 04, 2018

சிங்கப்பூர் ஆகியிருக்கவேண்டிய தமிழ்நாடு

ஆ ஊன்னா சிங்கப்பூர் ஆகியிருக்கவேண்டிய தமிழ்நாடுங்குறாங்க. அங்க 2 வருஷம் இருந்தவன், அந்த ஊர் பிடிச்சுப்போனவன் என்பதால கீழ இருக்க விஷயங்களை சொல்றேன், புரிஞ்சு தொலையுதான்னு பார்ப்போம்.
1. அங்க லீ குவான் யூ கஷ்டப்பட்டுதான் அந்த நாட்டை முன்னேத்துனாரு. ஆனா அங்க எல்லாரும் ஜாதி,மதம் பார்க்காம லொல்லு மயிறு பேசாம எல்லாரும் அவங்கவங்க வேலையை சரியா செஞ்சாங்க
2. நம்மூர் மாதிரி வேலைவெட்டிக்கே போகாம, அப்பன், பாட்டன், மகன், மகள் வருமானத்தில வாழுறவங்க அங்க யாருமில்லை.
3. நீங்க கொண்டாடுற சிங்கப்பூர்லயும் குடும்ப அரசியல் இருக்கு. லீ குவான் யூ மகன் தான் இப்போ பிரதமர்
4. நீங்க கொண்டாடுற சிங்கப்பூர்ல கலவரமே நடந்ததில்லை, அதை முதன்முதல்ல நடத்தி இப்ப பொழைக்க வழியில்லாம போன ஒரே இனம் நம்ம தமிழினம் தான்.
5. நம்மூர்ல இருக்க மாதிரி கருத்து சுதந்திரம் சகட்டுமேனிக்கு அங்க கிடையாது. கவர்மெண்ட்டுக்கு எதிரா ஒரு கருமமும் உங்களால எழுத முடியாது.
6. திராவிடத்தால் வீழ்ந்தோம் ஒறவுகளே மாதிரி, அங்கயும் அந்த ஊருக்காரன் வெளிநாட்டுக்காரர்களால் வேலையிழந்தோம் பங்காளின்னு அரசியல் பேசிட்டிருக்கான்
7. அந்த ஊர்ல தனியார் கூட வங்கிமூலம்தான் சம்பளம் தரும். முறைப்படி வரி 100% மக்களும் அரசுக்கு செலுத்தியே ஆகனும். நம்ம ஊர்ல வரி கட்டுறவன் எவன்னு தேடித்திரிய வேண்டியிருக்கு.
8. எல்லாத்தை விடவும் முக்கியமா அங்க இருக்கவங்க எல்லா விதிமுறைகளையும் பின்பற்றுராங்க. இங்க நம்மூர்ல சுத்தமாக் கிடையாது.
சொல்ல ஆரம்பிச்சா இன்னும் நிறைய மிச்சம் இருக்கு. என்னவோ இவனுகதான் சிங்கப்பூரை முன்னேத்துனாப்ல பொலம்பிக்கிட்டிருக்கானுக. திருந்துங்கடா கோப்பி வாங்கி தரேன்.

மஞ்சள் பையுடன் வந்த மைனர் மகா கோடீஸ்வரன் ஆனது எப்படி?

"மஞ்சள் பையுடன் வந்த மைனர் மகா கோடீஸ்வரன் ஆனது எப்படி?
இந்த கேள்வி பிடித்தவர்கள் முழுவதும் படிக்கவும்...
குப்பையில் இருந்து மின்சாரம் கிடைக்கின்றதாம். அதற்காக குப்பையை அள்ளி தலையிலே போட்டுக்கொள்ள முடியும்?
கலைஞர் ஒரு மஞ்சள் பையுடன் திருட்டு ரயில் எறி திருவாரூரில் இருந்து வந்து இன்று கோடீஸ்வரன் ஆனது எப்படி என அரைத்த மாவை அரைக்கும் வேலையை செய்து கொண்டிருப்பதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பதனால் தான்.
அது என்ன மஞ்சள் பை, திருட்டு ரயில், ஆதாரம் என்ன என அவர்களிடம் கேட்டோமானால் உடனே கண்ணதாசன் எழுதிய வனவாசம் என்னும் புத்தகத்தை சொல்வார்கள். கண்ணதாசன் என்ன இந்திய சட்டம் எழுதிய அண்ணல் அம்பேத்காரா? அல்லது சத்திய சோதனை வடித்த மகாத்மா காந்தியா? உலகில் ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என ஒரு உதாரணம் மிகச்சிறந்த கவிதை வடித்திருக்கின்றாரே என கேட்போர்களுக்கு ஒரே வரி பதில் சொல்வேன். குப்பையில் இருந்து மின்சாரம் கிடைக்கின்றதாம். அதற்காக குப்பையை அள்ளி தலையிலே போட்டுக்கொள்ளவா முடியும்? கலைஞரே ஒரு முறை சொல்லிவிட்டார். நான் ரயிலில் வரும் போது பக்கத்து இருக்கையில் அமர்ந்து வந்தவர்கள் போல பேசுகின்றனர், என அந்த பேச்சுகளை புறம் தள்ளிவிட்டு போய்விட்டார்.
அவர்களிடம் நான் கேட்கும் ஒரே கேள்வி. கலைஞர் மஞ்சள் பையுடன் வந்தார் என்றே வைத்துக்கொண்டால் கூட தன் மூளையை கழட்டி திருவாரூர் கமலாலயத்தில் வீசி விட்டா வந்தார். அவர் பிறந்தது 1924ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி. 1944ல் தன் இருபதாவது வயதில் ஜூபிடர் பிக்சர்ஸ்ல் கதாசிரியராக வேலைக்கு சேர்ந்து விட்டார். இன்றைக்கு இதே கலைஞரை வசைபாடும் கழுதைக்கூட்டத்தில் யாராவது தன் 20 வயதில் சுய சம்பாதித்யம் சம்பாதித்தது உண்டா என தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும். தன் அப்பன் காசில் வாழும் ஊதாரிகள் வசைபாட கலைஞர் தான் கிடைத்தாரா?
அவர் அரசாங்க உத்யோகத்தில் வேலைக்கு சேர்ந்த அண்டு 1957ம் ஆண்டு தான். ஆம் சட்ட மன்ற உறுப்பின்ராக. ஒரு அரசாங்க உத்யோகத்தில் சேருபவர் மிக அதிக பட்சமாக மிக மிக அதிக பட்சமாக 42 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம். ஆனால் 1957ல் அரசாங்க சம்பளம் வாங்க ஆரம்பித்த இவர் இன்று தன் 90 வயது ஆகிவிட்ட நிலையில் கூட கிட்ட தட்ட அர நூற்றாண்டுகள் கடந்தும் 56 வருடங்களாக அரசாங்க சம்பளம் வாங்கி கொண்டுள்ளார். இதில் ஐந்து முறை முதல்வராக சட்ட மன்ற சம்பளத்தில் அதிகப்படியன சம்பளம் வாங்கியுள்ளார். இவர் வாங்கும் அரசாங்க சம்பளம் என்பது இன்று ஐடி துறையில் பணி செய்வோர் வாங்கும் சம்பளத்தை விட அதிகம். ஒரு வருடத்தில் ஐடி துறையில் வேலை பார்ப்பவர்களே உடனே ஒரு கார், சொந்த வீடு என சுபிட்சமாக இருக்கும் போது 56 வருடங்கள் அரசாங்க சம்பளம் வாங்கி கொண்டு இருக்கும் இவர் கோடீஸ்வரனாக இருக்க கூடாதா என்ன?
சரி போகட்டும். அரசாங்க உத்யோகம் இவருக்கு கைகூடும் முன்னர் என்ன செய்தாரெனில் அந்த பொறாமை கொண்ட வசவாளர்கள் சொல்வது போல மஞ்சள் பையுடன் வந்தார் என்றே வைத்துக்கொண்டால் கூட இவர் தன் 20 வது வயதில் திரைத்துறைக்கு வந்து தன் 24 வது வயதில் ராஜகுமாரி என்னும் படத்துக்கே வசனம் எழுத ஆரம்பித்து விட்டார். அது தான் எம் ஜி ஆர் அவர்களுக்கும் முதல் படம். தன் 28 வது வயதில் இவர் எழுதிய பராசக்தி படம் திரையுலகில் ஒரு திருப்பு முனை படம். அந்த படத்தின் சம்பளம் எல்லாம் வாங்கி எல்லாம் முடிந்த பின்னர் அதன் வசனங்கள் மட்டும் சிறிய புத்தகமாக போட்டு விற்பனை செய்யலாம் என ஏ வி எம் மெய்யப்ப செட்டியார் முடிவு செய்து இவரிடம் அனுமதி கேட்ட போது இவர் அதற்காக கேட்ட தொகை என்பது முழு பத்தாயிரம் ரூபாய். அப்போது ஒரு சவரன் 20 ரூபாய் என்னும் போது இப்போது அந்த பத்தாயிரம் ருபாய்க்கு என்ன மதிப்பு என கணக்கிட்டு கொள்ளுங்கள். அப்போது ஒரு ப்யூக் கார் விலையே 7000 ரூபாய் மட்டுமே. அப்போதே கார் வாங்கி விட்டார். எம் ஜி ஆர், சிவாஜி ஆகியோர் கதாநாயகனாக அப்போது நடித்துக்கொண்டு இருந்த போதே அத்தனை சம்பளம் வாங்கியது இல்லை. தான் 1957ல் சட்ட மன்ற உறுப்பினர் ஆகும் முன்னரே 30000 (முப்பதாயிரம் ரூபாய்)க்கு தான் வசிக்கும் கோபாலபுரம் வீட்டை வாங்கிவிட்டார். (அதையும் இப்போது தன் 87ம் பிறந்த நாளின் போது தன் காலத்துக்கு பின்னர் ஏழைகளுக்கான மருத்துவமனையாக ஆகும் படி அஞ்சுகம் ட்ரஸ்டுக்கு எழுதி வைத்து விட்டார்)
இவர் திரைத்துறையில் சம்பாதிக்க பணம் எடுத்துக்கொண்டு திருவாரூரில் இருந்து வரவேண்டும் என்பதில்லையே. அந்த மஞ்சள் பையில் ஒரு பேனாவும் அதில் நிறைய இங்க்ம், தன் மூளையும் மட்டுமே மூலதனமாக போதுமே. 1960ல் மேகலா பிக்சர்ஸ் என்னும் சொந்த பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். ஆக 1944 முதல் 1960 வரை தன் மூளையை மூலதனமாக கொண்டு சம்பதித்ததை மேலும் அதிகரிக்க சொந்த பட தயாரிப்பு நிறுவனமே தொடங்கி விட்டார். பின்னர் பூம்புகார் புரடக்ஷன்ஸ். இதும் அவரது சொந்த பட தயாரிப்பு நிறுவனம் தான். பின் ஏன் அவர் கோடீஸ்வரன் ஆக மாட்டார்? கலைஞர் திரைப்பட துறையில் மட்டுமா சம்பாதித்தார். இல்லை. தன் எழுத்துகளை புத்தகமாக்கினார். நாடகம் ஆக்கினார். அவர் தொட்ட துறை எல்லாமே நிதியை அள்ளி கொடுத்தன. அவர் அன்று மட்டுமல்ல. தன் 90 வது வயதில் எழுதிய இரு புத்தகங்கள் ஒரே நாளில் இவர் புத்தக வெளியீட்டு மேடையை விட்டு இறங்கும் முன்னரே 15 லட்சத்தில் 74 ஆயிரத்துக்கு விற்று தீர்ந்தது. அவர் ஏன் கோடீஸ்வரர் ஆக கூடாது...
இனியாவது உருப்படியான வரலாறை தெரிந்து கொண்டு பேசுங்கள் மனிதர்களே...

Tuesday, May 29, 2018

கலைஞருக்கு எப்படி சொத்து வந்தது? இதோ அவரே விளக்கம் தருகிறார்

கலைஞருக்கு எப்படி சொத்து வந்தது?
இதோ அவரே விளக்கம் தருகிறார்
தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அம்மையார் ஜெயலலிதா தொடங்கி, அந்தக் கட்சியிலே உள்ள அடிமட்டத் தொண்டர்கள் வரையிலும் - ஏன், தமிழகத்திலே உள்ள வேறுசில கட்சிகளின் நண்பர்கள் ஒரு சிலரும் - என்னைப் பற்றி குறிப்பிடும் போது - நான் ஏதோ "சல்லிக்காசு'' கூட கையிலே இல்லாமல் சென்னைக்கு வந்ததைப் போலவும் - இன்றைக்கு ஆசியாவிலேயே முதலாவது பணக்காரனாக இருப்பதாகவும் - என் பெயரில் ஏராளமான சொத்துக்களையும், எஸ்டேட்டுகளையும் வாங்கிக் குவித்திருப்பதைப் போலவும் பேசி வருகிறார்கள், எழுதி வருகிறார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் - என்னுடைய சொத்துகள் என்ன என்பதைப் பற்றி குறை கூறுபவர்களுக்கும் - அதை நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு விளக்கம் அளிக்க வேண்டியது என்னுடைய கடமை என்று கருதுகிறேன். என்னதான் அவர்கள் என் குடும்பத்தைப் பற்றி குறைவாக எழுதினாலும், நான் சிசு பருவத்திலே இருந்த போதே, திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவிற்கும் - உயர்நிலைப் பள்ளியில் படிக்கவே திருவாரூரில் கொண்டு போய் சேர்க்கக் கூடிய அளவிற்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம் தான் என்னுடையது.
முரசொலி தொடங்கி முதல் கார் வரை...
எனக்கு 18 வயதாகும் போது "முரசொலி'' வாரப்பத்திரிகையைத் தொடங்கி விட்டேன். அப்போதே நாடகங்களை எழுதுகின்ற முயற்சியிலும் ஈடுபட்டேன். திராவிடர் கழகப் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்துகொண்டேன். 1949-ம் ஆண்டு சேலம் மாடர்ன் தியேட்டர்சில் எழுத்தாளராக பணியிலே அமர்ந்தேன். அந்தக் காலத்திலேயே அதற்காக மாத ஊதியமாக 500 ரூபாய் பெற்றேன். அதே ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதியன்று ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையிலே தி.மு.கழகம் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டபோது, அந்தக் கூட்டத்திலே கலந்துகொண்டேன்.
அந்தக் கூட்டத்திற்கு வந்த போது விருதுநகர் நாடார் லாட்ஜில் தான் தங்கினேன். என்னுடைய "மந்திரி குமாரி'' நாடகம் சேலம் மாடர்ன் தியேட்டர்சாரால் திரைப்படமாக எடுக்கப்பட்ட போது எங்கள் குடும்ப வாழ்க்கை சேலத்தில் தொடங்கியது. அப்போது சேலம் வந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், என்னைச் சந்தித்து அவருடைய "மணமகள்'' திரைப்படத்திற்கு நான் தான் திரைக்கதை வசனம் எழுத வேண்டு மென்று கேட்டு ஒப்புதல் அளித்தேன். அந்தக் காலத்திலேயே அதற்காக 10 ஆயிரம் ரூபாய் ஊதியமாகப் பெற்றேன்.
அதுபோலவே "இருவர் உள்ளம்'' திரைப்படத்திற்காக உரையாடலை நான் எழுதிய போது, அந்தப் படம் நூறு நாளைத் தாண்டி ஓடிய காரணத்தால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர், அருமை நண்பர் எல்.வி.பிரசாத் என் இல்லத்திற்கே வந்து முதலில் கொடுத்த பத்தாயிரம் ரூபாயைத் தவிர்த்து, மேலும் பத்தாயிரம் ரூபாயை என்னிடம் அளித்தார்.
நான் அந்தத் தொகையைக் கொண்டு என்னுடைய சொந்த ஊரான திருக்குவளையில் என் பெற்றோர் பெயரால் ஒரு தாய் சேய் நல விடுதியினைக் கட்டி, அதை அன்றைய முதல்வர் பெரியவர் பக்தவத்சலனாரை அழைத்துச் சென்று 12-11-1964-ல் திறந்து வைத்தேன். அண்ணாவால் அடிக்கல் நாட்டப்பட்ட அந்தக் கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு நாவலர் தலைமை தாங்கினார்.
அப்போது நான் எதிர்க்கட்சியிலே இருந்தபோதிலும், முதல்வரை அழைத்துச்சென்று அந்த நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்தினேன்.
அந்தக் கால கட்டத்தில் சென்னைக்கே நான் குடிபெயர்ந்து தியாகராயநகரில் ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்தினேன். அப்போது ஒரு நாள் கலைவாணர் என்னிடம் ஒரு பந்தயம் கட்டி, அதிலே ரூ.5 ஆயிரம் எனக்கு லாபம் கிடைத்தது. அது கண்டு வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்த கலைவாணர் அதற்குமேல் தேவையான பணத்தைத் தானே போட்டு எனக்கு ஒரு கார் வாங்கித் தருவதாகச் சொல்லி விட்டுச் சென்றார். மறுநாளே ஒரு புதிய கார் என் வீட்டிற்கு வந்தது. அதிலே என்னை உட்கார வைத்து, கலைவாணரே ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றார். அந்தக் காரின் எண் கூட எனக்கு நினைவிலே உள்ளது - "வாக்சால்'' -4983.
75 படங்கள்...
இவைகளைத் தொடர்ந்து இன்று வரை 75 படங்களுக்கு மேல் நான் திரைக்கதை வசனம் எழுதி ஊதியம் பெற்றுள்ளேன். 1957-ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் நின்று சட்டப் பேரவை உறுப்பினராக ஆனது முதல் இதுவரை தொடர்ந்து பேரவை உறுப்பினராகவோ, மேலவை உறுப்பினராகவோ இருந்து வருகிறேன். முரசொலி நாளிதழும் எத்தனையோ ஏற்ற இறக்கத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிழமை இதழ்களாக குங்குமம், முத்தாரம், வண்ணத் திரை போன்றவைகளும், "ரைசிங் சன்'' ஆங்கில இதழும் நான் தொடங்கியவைதான்.
வசதியற்ற வீடு...
1967 முதல் 1969 வரை பொதுப்பணித்துறை அமைச்சராகவும், அதன் பின்னர் ஐந்து முறை முதல்வராகவும் இருந்திருக்கிறேன். இந்தியாவிலே உள்ள அனைத்து மாநில முதல்வர்களையும் எடுத்துக்கொண்டால் எல்லா முதல்வர்களுடைய வீடுகளையும் விட வசதி குறைவான எளிமையான வீட்டிலேதான் நான் வாழ்ந்து வருகிறேன் என்பதை வெளிநாட்டிலிருந்து வந்த முக்கிய பிரமுகர்களே நேரில் கண்டு வியப்பு தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்களைச் சந்திக்கக் கூட இடம் இல்லாத அளவிற்கு அவர்களே மிகுந்த சிரமத்திற்கு ஆளாகக்கூடிய வகையிலே உள்ள வீட்டிலேதான் இன்றளவும் வாழ்ந்து வருகிறேன். ஒவ்வொரு முறை முதல்-அமைச்சராக நான் தேர்ந்தெடுக்கப்படும் போதும் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவியேற்போர் - தம்பி துரைமுருகன் போன்றவர்கள் - அரசு சார்பில் உள்ள வீடுகள் ஒன்றில் நான் தங்க வேண்டுமென்று கேட்டு அழைத்துச் சென்றும் காட்டியிருக்கிறார்கள். எனினும் நான் தங்கி வந்த அதே "ஸ்ட்ரீட் வீடு'' என்பார்களே, அதாவது தெருவில் வரிசையாக உள்ள வீடுகளில் உள்ள ஒரு வீட்டிலேதான் வசித்து வருகிறேன்.
இந்த வீடு கூட நான் அமைச்சராக ஆவதற்கு முன்பு 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய வீடுதான். அந்த வீட்டிலே ஒரு சில மாற்றங்கள் உதவியாளர்களின் வசதிக்காக செய்யப்பட்டிருக்கலாம். என் பிள்ளைகள் எல்லாம் கூட திருமணம் ஆகும் வரைதான் இந்த வீட்டிலே இருந்தார்கள். அதற்குப் பிறகு இந்த வீட்டிலே இடம் இல்லாமல் அவர்களே சொந்தத்தில் வீடு வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
என்னிடம் செய்திகளைச் சேகரிக்க வரும் பத்திரிகையாளர்கள் இந்த வீட்டிலே என்னைச் சந்திக்கும் போது எவ்வளவு இன்னலுக்கு நெரிசல் காரணமாக ஆளாகிறார்கள் என்பதை அவர்களே நன்கறிவார்கள். ஆனால் அந்தப் பத்திரிகையாளர்கள் கூட நான் இத்தனை ஆண்டுக் காலம் இத்தனைப் பொறுப்புகளிலே இருந்தும் கூட, இவ்வளவு எளிமையாக இதே வீட்டில் வாழ்கிறேன் என்பதைப் பற்றி அவர்களே அதை உணர்ந்திருந்த நிலையிலும் அதைப் பற்றி எழுதாமல், அதிலேயும் ஒரு சிலர் - என்னைப் பற்றி அவதூறாக நான் பணக்காரன் என்று எதிர்தரப்பினர் விமர்சனம் செய்வதை எழுதும்போது - அவர்கள் கூட அதை நம்புகிறார்களா என்ற வேதனை என் மனதிலே தோன்றாமல் இருப்பதில்லை.
நான் இத்தனை பொறுப்புகளையும் என்னுடைய 87 வயதிற்குள் பார்த்திருக்கிறேன் என்ற போதிலும் சென்னையில் உள்ள இந்த ஒரு வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்டுகளையோ விலைக்கு வாங்கியதும் இல்லை. அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதும் இல்லை. குறைந்த விலைக்கு பெற்றுக்கொண்டதும் இல்லை. ஆனால் என்னை ஆசியாவிலேயே பெரிய கோடீஸ்வரன் என்றெல்லாம் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.
ரூ.100 கோடி...
முரசொலி மாறன் மறைவுக்கு பின்னர் சன் தொலைக்காட்சி நிறுவனத்தை தனியாக நடந்த விரும்பி கேட்டதால் நானும் அதற்கு உடனடியாக ஒப்புகொண்டேன். அப்படி பிரிந்து சென்ற நேரத்தில் 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம், "சன்'' தொலைக் காட்சி நிறுவனத்தின் சார்பில் எனக்கு 100 கோடி ரூபாய் கொடுத்தார்கள். அந்தத் தொகைக்கான வருமான வரியாக 22 கோடியே 50 லட்சம் ரூபாய் உரிய காலத்தில் முறைப்படி என்னால் செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையான 77 கோடியே 50 லட்ச ரூபாயை என்னுடைய மகன்களுக்கும், மகள்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தேன். அதிலே எனக்கும் ஒரு பங்காக பத்து கோடி ரூபாய் கிடைத்ததில், ஐந்து கோடி ரூபாயை வங்கியிலே இருப்பு செய்து, அந்தத் தொகையைக் கொண்டு "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை'' ஒன்று தொடங்கப்பட்டு, அதிலே கிடைக்கின்ற வட்டித் தொகையிலே இருந்து ஏழை-எளியோர்க்கு மருத்துவ உதவியாகவும், கல்வி வளர்ச்சி உதவியாகவும் 8.12.2005 முதல் 8.11.2010 வரை 2,145 பேர்களுக்கு 1 கோடியே 72 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறேன்.
வங்கியில் இருப்பு செய்யப்பட்ட இந்த ஐந்து கோடி ரூபாயில் -ஆண்டுதோறும் நல்ல புத்தகங்களை, சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகள் தாங்கிய புத்தகங்களை, எதிர்கால இளைஞர்களுக்கு ஆக்கபூர்வமாக வழிகாட்டுகின்ற அறிவார்ந்த புத்தகங்களை எழுதும் சிறந்த எழுத்தாளர்கள் ஐந்து பேரைத் தேர்வு செய்து, அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் - பொற்கிழியாக வழங்கிட தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினேன்.
அந்த ஒரு கோடி ரூபாய் நிதியைக் கொண்டு, அந்தச் சங்கம் "கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை'' என்ற பெயரில் ஓர் அறக்கட்டளையை ஏற்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில் இருந்து, 2008-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அந்தச் சங்கத்தின் மூலமே சிறந்த எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு 2008, 2009, 2010 ஆகிய மூன்றாண்டுகளில் மொத்தம் இது வரை 17 அறிஞர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழிகள் வழங்கப்பட்டுள்ளன.
செம்மொழி மாநாடு...
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத் தொடக்க விழா 30.6.2008 அன்று நடை பெற்ற போது ஆண்டுதோறும் செம்மொழித் தமிழ் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் அறிஞருக்கு 10 லட்ச ரூபாய் பொற்கிழி விருது வழங்கிட ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என நான் அறிவித்து, அதன்படி செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் "கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை'' தொடங்கிட 21.7.2008 அன்று ஒரு கோடி ரூபாய் வழங்கினேன்.
கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா அவர்களுக்கு இந்த அறக்கட்டளையின் முதல் விருதாக பத்து லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
2004-2005-ம் ஆண்டில் "மண்ணின் மைந்தன்'' படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் 11 லட்சம் ரூபாய் - "கண்ணம்மா'' படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் 10 லட்சம் ரூபாய் இரண்டையும் சேர்த்து 21 லட்சம் ரூபாயை "சுனாமி நிவாரண நிதி''யாக அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம், மு.க.ஸ்டாலின் வாயிலாக நேரில் வழங்கப்பட்டது.
உளியின் ஓசை...
2008-ம் ஆண்டு, "உளியின் ஓசை'' திரைப்படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் 25 லட்சம் ரூபாயில் வருமானவரி போக, 18 லட்சம் ரூபாய் திரைத்துறையிலே பணியாற்றிய நலிந்த கலைஞர்களுக்கு 9.7.2008 அன்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர், ராம.நாராயணன் முன்னின்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் என்னால் நேரடியாக வழங்கப்பட்டது.
2009-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட "பெண் சிங்கம்'' திரைப்படத்திற்காகக் கிடைத்த 50 லட்சம் ரூபாயுடன், சொந்த நிதி 11 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் சேர்த்து - 14-9-2009 அன்று தமிழக அரசின் முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலே சேர்த்து, தமிழகத்திலே உள்ள அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்வி பயிலும் 56 மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 1,165 மாணவர்கள் என மொத்தம் 1,221 மாணவ -மாணவியருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் 61 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கல்வி வளர்ச்சி நிதியாக 26.10.2009 அன்று தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டது.
மேலும், தற்போது தயாரிக்கப்பட்டுவரும் "இளைஞன்'' திரைப்படத்திற்குரிய கதை வசனம் எழுதியமைக்கு 24.4.2010 அன்று வருமானவரி போக அளிக்கப்பட்ட 45 லட்சம் ரூபாய் ஊதியத்தைத் தமிழக அரசின் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலே ஒப்படைத்து, அந்தத் தொகையினை - தமிழகத்திலே உள்ள மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காகச் செலவிட வழங்கப்பட்டது.
23.7.2009 அன்று நடைபெற்ற கலைஞர் காப்பீட்டுத் திட்டத் தொடக்க விழாவில் உரையாற்றிய பொழுது சென்னை கோபாலபுரத்தில் நான் வசித்து வருகின்ற வீட்டை, பிற்காலத்தில் ஏழை-எளியோர்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் மருத்துவமனையாக மாற்றிட நன்கொடையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன்படி உரிய பத்திரப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.
14.4.2010 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக சென்னை மறைமலைநகரில் நடைபெற்ற அம்பேத்கார் பிறந்தநாள் விழாவில் "அம்பேத்கார் சுடர்'' எனும் விருது எனக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் தரப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் பொற்கிழியினை 15.4.2010 அன்று முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதியில் சேர்க்க என்னால் வழங்கப்பட்டது.
25.5.1990 அன்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பாக - "தென்பாண்டிச் சிங்கம்'' என்ற பெயரில் நான் எழுதிய நாவல் சிறந்த புதினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்காக "ராஜராஜன் விருது''ம், அந்த விருதுக்குரிய ஒரு லட்ச ரூபாய் பொற்கிழியும் எனக்கு அன்றைய குடியரசுத் துணைத் தலை வராக இருந்த சங்கர் தயாள் சர்மா ஆளுநராக அப்போதும் இருந்த பர்னாலா முன்னிலையில் வழங்கப்பட்ட போது, அந்த நிதியை அந்தப்பல்கலைக் கழகத்திடமே திரும்பக் கொடுத்து, அந்தத் தொகைக்குரிய வட்டியினைக் கொண்டு ஆண்டு தோறும் என் பெற்றோர் பெயரால் அறக்கட்டளை சொற்பொழிவுகளை நடத்துமாறு கேட்டுக்கொண்டேன். இந்த ஆண்டு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அந்தச் சொற்பொழிவுகள் நடைபெற்றன.
பிறந்தநாள் விழா...
என்னுடைய பிறந்த நாளன்று மாலைக்குப் பதிலாகவும், பொன்னாடைக்குப் பதிலாகவும் கழகத் தோழர்கள் அளித்த நிதியையும் கூட முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலே தான் சேர்த்திருக்கிறேன். 3.6.1986 அன்று என்னுடைய பிறந்த நாள் விழாவின்போது உண்டியலில் குவிந்த 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை இலங்கை விடுதலைப் போராளிகள் இயக்கங்களுக்கு பகிர்ந்தளிப்பது என்று கழகப் பொதுக் குழுவிலேயே முடிவெடுத்து அவ்வாறே வழங்கப்பட்டது. அதைப் போலவே என்னுடைய வேறு சில பிறந்த நாள்களில் உண்டியலில் குவிந்த நிதிகளிலிருந்து மறைமலை நகரில் (காட்டாங்குளத்தூர்) உள்ள சிவானந்த குருகுலத்தில் பயிலும் சிறுவர்களின் கல்வி செலவுகளுக்காக 13.6.1988-ல் 50 ஆயிரம் ரூபாயும், 7.6.1993-ல் 70 ஆயிரம் ரூபாயும், 6.6.1996-ல் ஐந்து லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டன. மேலும் 1994-ம் ஆண்டு பிறந்த நாளில் அளிக்கப்பட்ட நிதி பெங்களூரில் உள்ள தமிழ்ச் சங்கத்திற்கு என்னால் வழங்கப்பட்டது.
நான் கலந்து கொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகளில் எனக்கு பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்குவதுண்டு. அவற்றைக்கூட அரசு விழாக்களில் அவைகள் வழங்கப்பட்டால், அவற்றை தலைமைச் செயலகத்திலும், கட்சி நிகழ்ச்சிகளிலே வழங்கப்பட்டவை என்றால் அவற்றை கழகத் தலைமைக் கழகம், அண்ணா அறிவாலயத்திலே உள்ள கருவூலத்திலும் ஒப்படைத்திருக்கின்றேன். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, தங்க நாணயங்கள் கோர்க்கப்பட்ட மாலைகள், வெள்ளியிலான பல்வேறு பொருள்கள் எல்லாம் இப்போதும் அண்ணா அறிவாலயத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருப்பதை யார் வேண்டுமானாலும் சென்று காணலாம்.
சொத்துகளே வாங்கவில்லை...
இறுதியாக தற்போது என் கணக்கிலே எவ்வளவு இருப்பு உள்ளது என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகிறேன். 'சன்' தொலைக்காட்சி வாயிலாக எனக்குக் கிடைத்த பத்து கோடி ரூபாயில் "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை''க்காக ஐந்து கோடி ரூபாய் கொடுத்ததைப் பற்றி நான் முதலில் குறிப்பிட்டிருப்பதைப்போல கொடுத்ததை அன்னியில் - எஞ்சிய 5 கோடி ரூபாயை வைப்பு நிதியாக வங்கியிலே செலுத்தி, அதற்காக கிடைத்த வட்டித்தொகையெல்லாம் சேர்ந்து -தற்போது வைப்பு நிதியாக 5 கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134 ரூபாயும் - சேமிப்புக்கணக்கில் (எஸ்.பி. அக்கவுண்ட்) 35 லட்சத்து 90 ஆயிரத்து 86 ரூபாயும் இன்றைய தேதியில் உள்ளது.
நான் வசிக்கின்ற இந்த வீட்டைக் கூட மருத்துவமனை அமைப்பதற்காக எழுதிக் கொடுக்க நான் அறிவித்த போது - நான் வாழ்ந்த இல்லம் என்பதற்காக இதை வைத்துக் கொள்ள வேண்டுமென்று வீட்டார் எண்ணிய போதும், நான் அழைத்து அவர்களை கையெழுத்திட்டுத் தருமாறு கேட்டபோது மறுவார்த்தை பேசாமல் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டார்கள். இந்த ஒரு வீட்டைத் தவிர என் பெயரில் நான் எந்தச் சொத்தையும் வாங்கிடவில்லை, சேர்த்திடவில்லை.
தமிழ்த் திரைப்பட உலகத்திலே திரைக்கதை வசனம் எழுதுவதற்காக முதன் முதலில் அதிக ஊதியம் பெற்றவன்; தி.மு. கழகத்திலே சென்னையில் முதன் முதலில் சொந்தமாக ஒரு வீடும், காரும் - நான் எந்தப் பதவி பொறுப்புக்கும் வராத போதே வாங்கியவன் என்ற பெயர் எனக்கு உண்டு என்பதை அனைவரும் அறிவர்.
இதுதான் என்னுடைய சொத்துக் கணக்கு. இதை வைத்துத்தான் நான் ஆசியாவிலேயே முதல் கோடீஸ்வரன் என்கிறார்கள். லஞ்சம், ஊழல் ஆகியவைகளைப் பொறுத்தவரை, என் உதவியாளர்கள் கூறுவது போல நான் ஒரு "நெருப்பு'' மாதிரி! நான் முதன் முறையாக முதல்வராக இருந்தபோதே தஞ்சையில் கூட்டுறவு நிறுவனம் ஒன்றில் எனக்கு மிகவும் வேண்டிய உயிர் நண்பர் வழக்கறிஞர் தவறு செய்த போது, அவர் மீது நடவடிக்கை எடுத்து, அதன் காரணமாக அவர் தனது வழக்கறிஞர் பணியினையே செய்ய முடியாத அளவிற்கு ஆயிற்று! அது போலவே தான் சென்னை மாநகராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பிலே இருந்தபோது, "மஸ்டர் ரோல்'' ஊழல் நடைபெற்றதாக பேரவையிலே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டபோது, சட்டப்பேரவையிலேயே எழுந்து அந்த மாநகராட்சி மன்றம் கலைக்கப்படும் என்றும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்து அவ்வாறே செயல்முறை படுத்தியவன்தான் நான்.
சிபாரிசுக்கு இணங்கவில்லை...
இன்னும் சொல்லவேண்டுமேயானால் எனக்கு மிகவும் வேண்டிய நண்பர்களில் ஒருவர் கவிஞர் கருணானந்தம். அவருடைய ஒரே மகன் குலோத்துங்கனுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர ஒரு மதிப்பெண் குறைந்தது. முதல்வர் மனது வைத்தால் சேர்த்துக்கொள்ளலாம் என்று கேட்டபோது கூட நான் அதற்கு இணங்கவில்லை. அதனால் அந்தக் குடும்பத்துக்கு என் மீது எழுந்த கோபம் இன்னும் தீரவில்லை. இதுபோன்ற சம்பவங்களை நான் எழுதிக் கொண்டே போகலாம்.
நான் இதையெல்லாம் எழுதுவதற்குக் காரணம் யாரிடமும் சான்றிதழ் பெறவேண்டும் என்பதற்காக அல்ல, என்னுடைய குணம், இயல்பு அப்படி என்பதை என் மீது குறை காண்போர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உற்றார் உறவினர்கள் அவரவர்கள் உழைத்து, ஒரு சிலர் தங்களுக்கென வீடுகளையோ, சொத்துக்களையோ வாங்கியிருக்கலாம். ஆனால் அதற்காக நான் எந்த விதமான நிதி உதவியோ, அரசு சார்பிலான உதவியோ செய்தது இல்லை என்பதையும் இந்த நேரத்தில் நான் உறுதிப் படுத்திட விரும்புகிறேன்.
நான் பல முறை சொல்லியிருப்பது போல மிக மிகச் சாதாரணமான, சாமான்யமான குடும்பத்திலே பிறந்த என்னை, இந்த அளவிற்கு தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பேன் என்ற நம்பிக்கையோடு ஐந்து முறை முதல்வராக்கி, 1957 முதல் 11 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி, 1969 முதல் நாற்பதாண்டு காலத்திற்கு மேலாக ஒரு கட்சியின் தலைவராக்கி இருக்கிறார்கள் என்றால், திராவிடத் தமிழ் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி செலுத்துகின்ற நேரத்தில் என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்பதை அவர்களுக்கெல்லாம் தெளிவாக்கிடவும், என் மீது இன்னமும் குறை காண்கின்ற ஒரு சிலரும் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன். என் எஞ்சியுள்ள காலத்தையும் திராவிடத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகவே செலவிடுவேன் என்று உறுதி கூறி - என்றைக்கும் ஏழையெளிய மக்களின் கவலை தீர்ப்பதையும், கண்ணீர் துடைப்பதையும் கடமையாகக் கொள்வேன் என்பதற்காகவே இந்தக் கணக்கைக் காட்டியிருக்கிறேன், கண்ணுடையோர் காண்பதற்காக! முகத்தில் இரண்டு புண்ணுடையோர்க்கல்ல!
கலைஞர் கருணாநிதி

Wednesday, May 23, 2018

கேள்வி பதில் - திமுக என்ன செய்ய முடியும்

கேள்வி: நாட்டில் இவ்வளவு கொடுமைகள் நடக்கிறதே? செயல் தலைவர் என்ன செய்யப் போகிறார்?

பதில்: ஒன்றும் செய்ய முடியாது.

ஒரு எதிர்க்கட்சி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பலாம். குண்டுக்கட்டாக அவையை விட்டு வெளியேற்றுகிறார்கள்.

நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். விசாரிக்கவே மாட்டேன் என்கிறார்கள்.

#Gobackmodi என்று உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் அறவழிப் போராட்டம் நடத்தலாம். நீட்டுக்கு நம் பிள்ளைகளை ஊர் ஊராக அலைய விட்டுப் பழி வாங்குகிறார்கள்.

எதிர்க்கட்சி என்பது ஏதோ திரைப்படங்களில் வருகிற நாயகனுக்கு உரிய சாகசத் தன்மை கொண்ட பதவி என்று சிலர் நினைக்கிறார்கள். அல்லது, அப்படி ஒரு எதிர்பார்ப்பைப் பரப்புவதன் மூலம் எதிர்க்கட்சி செயல் திறனற்றது என்ற தோற்றத்தைக் கட்டமைக்கிறார்கள். இதை விடக் கொடுங்கோன்மையான எம்.ஜி.ஆர். ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் செய்ய முடியாத எதையும் தற்போதைய செயல் தலைவர் செய்ய முடியாது.

இவை அனைத்தையும் தாண்டி ஒரு எதிர்க்கட்சி செய்யக்கூடியது, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டி தேர்தல் மூலம் ஆளும் கட்சியை அகற்ற முனைவது தான். அதனை மிகச் சரியாகவே செய்து வருகிறார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலுவடைவதைத் தடுக்க புரட்சி, போர், சிஸ்டம், மையம், தேர்தல் புறக்கணிப்பு என்று முனகும் புதிய காளான்களை மிதித்து,

படி. வேலைக்குப் போ. கோபத்தைத் தேக்கி வை.

வாக்களிக்கும் வரை காத்திரு!

கேள்வி: திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகினால் ஆட்சியைக் கலைக்கலாமே?

பதில்: டேய் நோட்டாவுக்குப் பிறந்த வாட்சாப்பு மண்டையா, வாயில நல்லா வருது. இருந்தாலும் பொறுமையா சொல்றேன். கேட்டுக்கோ.

எல்லா எதிர்க்கட்சி உறுப்பினரும் பதவி விலகினாலும் ஆட்சி கலையாது. அவற்றுக்கு மீண்டும் ஆறு மாதத்துக்குள் இடைத் தேர்தல் நடத்த வேண்டும். ஏற்கனவே 18 சட்ட மன்ற உறுப்பினர்களைப் பதவி விலக்கி ஆறு மாசம் ஆகியும் தேர்தல் வரவில்லை. நீதிமன்றம் அந்த வழக்கை விசாரிப்பது அவசரம் இல்லை என்கிறது. அப்படியே இடைத் தேர்தல் வந்தாலும் ஆளுங்கட்சி தில்லாலங்கடி வேலை பார்த்து இப்போது இருக்கிற இடங்களை விடக் கூடுதல் இடம் பெற்று அறுதிப் பெரும்பான்மை பெறும்.

அப்புறம், எதிர்க் கட்சிகள் பொறுப்பில்லாமல் பதவி விலகினார்கள்னு அதுக்கு வேற தனியா மீம்சு போடுவீங்க.

திமுகன்னா திட்டுறதுன்னு முடிவாகிடுச்சு. கொஞ்சம் லாஜிக்கோடவாவது திட்டுங்கடா. கர்நாடகத்தில் நடந்த கூத்தை எல்லாம் பார்த்த பிறகும் இப்படி எல்லாம் கேக்காதீங்கடா. எங்களைப் படிக்க வைச்சுத் தொலைச்சிட்டாங்க.

Saturday, May 19, 2018

நாங்கள் உண்மையை கூறுகிறோம் அதை திரித்துரைக்கும் வேலையை நீங்கள் செய்கிறீர்கள்.

திமுக காமராஜரை விமர்சித்தது. காமராஜருக்கு எதினான கட்சி.
-காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக 24.05.2006 அன்று அறிவித்தவர் கலைஞர்.
திமுக நாத்திக கட்சி. கடவுள் மறுப்பாளர்களை கொண்டது. கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு எதிரானது.
-பெரியார் தான் கோவிலுக்குள் செல்லும் உரிமைக்காக போராடினார். கலைஞர் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை 02.12.1970 இல் கொண்டு வந்தவர்.
திமுக தமிழ் மொழிக்கு எதிரான கட்சி. தமிழை அழித்தவர்கள் அவர்கள் தான்.
-இருமொழி கொள்கையை கொண்டு வந்தவர் அண்ணா. கடைகளின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும்‌ திரைப்படங்களின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர். தமிழ்தாய் வாழ்த்து கொண்டு வந்தவர் கலைஞர்.செம்மொழி மாநாடு நடத்தியவர் கலைஞர்.
திமுக தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தை விமர்சிப்பவர்களை கொண்டது‌. கண்ணகியையும் பழிப்பவர்கள்.
-கண்ணகிக்கு கோவில் எழுப்பயவர் கலைஞர்.
திமுக வில் இருப்பவர்கள் திருவள்ளுவரை கூட விமர்சிப்பவர்கள்.
-திருவள்ளுவருக்கு 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் முடிவு இங்கு என்று சொல்லாதீர்கள் இதுதான் ஆரம்பம் என்று சொல்லும்படி வானுயர சிலை அமைத்தவர் கலைஞர்.
இதே போல் நாங்கள் இன்று பிரபாகரன் அவர்களையும் விமர்சிக்கிறோம். அது விமர்சனம் மட்டுமே. மற்றவர்கள் எங்கள் மீது உமிழ்வதை போன்ற காழ்ப்புணர்வு அல்ல. சொல்லமுடியாது ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு அவருக்கு சிறப்பு செய்யும் வகையில் தமிழகத்தில் ஏதேனும் ஒரு நினைவகமோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றோ கூட அமைக்கப்படலாம். அல்லது அவ்வாறு அமைந்தால் அது திமுக ஆட்சியில் மட்டுமே நடக்கும்.
நாங்கள் உண்மையை கூறுகிறோம். ஆனால் அதை திரித்துரைக்கும் வேலையை நீங்கள் செய்கிறீர்கள். நாங்கள் பேசுவது உண்மை என்பது உங்களுக்கும் புரியும். காலம் தான் அதற்கான விடை.

Friday, May 18, 2018

கருணாநிதிக்கு பிரபாகரன் எழுதிய மடல்


23.7.97
தமிழீழம் 

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அண்ணாவிற்கு.
நான் நலமேயுள்ளேன்
அதுபோல் நீங்களும் நலமேயிருக்க தமிழ் அன்னையை வேண்டுகிறேன். இங்கு இப்போது மருந்துப் பொருட்களுக்குத்தான் பெரிய தட்டுப்பாடு அண்ணா. நீங்கள் அருட்பிதா சேவியர் மூலம் ஒழுங்கு செய்த மறுத்துப் பொருட்கள் எமக்கு கிடைத்தன. நான் அதற்குரிய ஒரு நன்றிக் கடிதம் அவருக்கு கொடுத்துள்ளேன் அண்ணா அதை அவரிடம் நீங்களே நேரில் கொடுத்து விடுங்கள். மற்றும் மருந்துப் பொருட்கள் எடுப்பதற்காக அங்கு வந்த எமது போராளிகள் பிடிபட்டு இது வரை ஐம்பது லட்சம் வரையான பணம் தமிழ் நாட்டு பொலீசாரிடம் பிடிபட்டுள்ளது எமக்கு இங்கு இருக்கும் எவ்வளவோ பணக் கஸ்டத்தின் மத்தியிலும் மருத்துப் பொருட்கள் வாங்க அனுப்பிய பணம்  தமிழ் தமிழ் என முழங்கும் கலைஞரின் ஆட்சியிலேயே பறிக்கப் படுவதுதான் வேதனையை தருகிறது அனாலும் உங்கள் உதவி எமக்கு ஒரு நம்பிக்கையையும் ஆறுதலையும் தருகிறது. எங்களுக்கு இங்கு இப்போதைக்கு தேவையானது மருந்துப் பொருட்கள் தான். தொடர்ந்தும் இது போல எமக்கு மருத்துப் பொருட்கள் கிடைக்க உதவி செய்யுங்கள் அண்ணா அது இங்கு எமது போராட்டத்திற்கு உதவியாக இருக்கும் அண்ணா.
இப்படிக்கு
வே. பிரபாகரன் 


தும்பிகள் நினைப்பதுஆசிய கண்டத்தின் அதிபராகவும், ஐநா சபை தலைவராகவும் 2006 முதல் 2011 வரை பொறுப்பு வகித்த தமிழின துரோகி கலைஞர் எனும் பேர் அரக்கரின் துரோகத்தால் எங்கள் தொப்புல் கொடி ஒறவுகள் ஈழத்தில் முற்றாக அழித்ததை வண்மையா கண்டிக்கிறேன்...

Thursday, May 17, 2018

ஒரு மாநில முதல்வரால் போரையே நிறுத்தியிருக்க முடியும் என நம்புவது அறியாமையின் உச்சம்

ஈழத்தமிழனுக்கும் சிங்களவனுக்கும் சண்டை,இதில் வலு உள்ளவன் பல நாட்டு உதவியுடன் வெற்றி பெற்றான்.இதில் அன்றைய மத்திய அரசில் அங்கம் வகித்த ஒரே காரணத்திற்காக ஒரு மாநில முதல்வரால் போரையே நிறுத்தியிருக்க முடியும் என நம்புவது அறியாமையின் உச்சம்.அப்படி இருந்தும் கலைஞர் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்தார் ஆனால் போரின் உச்சத்தில் ஸ்ரீலங்கா இந்தியாவின் பேச்சையே கேட்கவில்லை என எஸ்.எம்.கிருஷ்ணாவே சொல்லியிருக்கிறார்.

உண்மை இப்படி இருக்க இன்னும் தி மு க துரோகம் என்பவன் தி மு க மேல் கொண்ட காழ்ப்புணர்வு மட்டுமே காரணம் ஈழத்தமிழர் மேல் பாசமெல்லாம் இல்லை. இது ஒரு சாக்கு அவ்வளவே.சொல்லப்போனால் விடுதலைப்புலிகளால் ராஜிவ் கொல்லப்பட்ட போதும் சரி,அதற்கு முன்பு அவர்களுக்கு உதவுதாக கூறி ஆட்சியை இழந்த கட்சி
தி மு க மட்டுமே.மேலும் Ipkf இந்தியா திரும்பி வந்தபோது மரபை மீறி அதை வரவேற்க மாட்டேன் என்று சொன்னவர் கலைஞர்.

உண்மை என்னவெனில் பிரபாகரனும்,கோத்தபயவும்,
பசிலும் தன் லட்சியத்தை அடைய யாரையும் பலி கொடுக்க தயாராக இருந்தனர்.அதில் ஆர்மி வென்றது.இத்தனை நாள் பிரபாகரன் என்ற ஒற்றை மனிதருக்காக அவதூறுகளை பொறுத்தோம்,இனியும் அவர் பேரில் திமுகவை எதிர்த்தால் அதற்கும் தக்க பதிலடி கொடுப்போம்.





மதிமுக உருவான பின்னணியும் கோபாலின் கபட நாடகங்களும்

மதிமுக உருவான பின்னணியும் கோபாலின் கபட நாடகங்களும்****
ராஜீவ் கொலைக்கு பின் நடந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை கண்ட திமுகவுக்கு அடுத்த பேரிடியாக இறங்கியது திமுகவில் இருந்து மதிமுக பிரிந்த சம்பவம். இது நடந்தது 1993 ல். அதற்கு காரணமாக கூறப்பட்டது நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசின் உளவுத்துறை ஜெயலலிதா தலைமையிலான தமிழக காவல்துறைக்கு அனுப்பிய கடிதமும் அதைதொடர்ந்து நடந்த சம்பவங்களும். இந்த சம்பவம் நடந்த போது வைகோ திமுக வின் மாநிலங்களவை உறுப்பினர். அதாவது 1978 முதல் 1996 வரை தொடர்ச்சியாக 18 ஆண்டுகள் திமுக வின் உறுப்பினராக இருந்தார். அப்படி தொடர்ச்சியாக மூன்றாவது முறை உறுப்பினராக இருந்த போது மாநிலத்திலும் திமுக ஆட்சி, மத்தியிலும் 1989 - 1991 வரை திமுக கூட்டணியின் வி.பி. சிங் தலைமையிலான அரசு பொறுப்பில் இருந்தது. திமுக வுக்கும் விடுதலைபுலிகளுக்கும் புரிதல் ஏதும் இல்லா காலம் அது. திமுக டெலோ வை ஆதரித்தது எம்ஜியார் இறந்த பிறகு விடுதலை புலிகளுக்கு ஆதரவாக அதிமுக இல்லாத சூழல்அது. இந்த காலகட்டத்தில் தான் கள்ளத்தோணி ஏறி வைகோ, இலங்கை சென்று பிரபாகரனை சந்தித்தார். அந்த சந்திப்பு கருணாநிதிக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரும் சவாலை ஏற்படுத்தியது அதற்கு காரணம் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள ஒரு கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் அடுத்த நாட்டின் எல்லைக்குள் கள்ளத்தோணி ஏறி செல்வது அரசியல் ரீதியாக எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது வைகோ வுக்கு தெரியாதது வியப்பே. அவரின் பயணம் இறுதி வரை கமுக்கமாக வைக்கப்பட்டு அவர் வன்னி சென்றதும் தான் கருணாநிதிக்கே(தன் நெஞ்சுகுழியில் உயிரிருக்கும் வரை கருணாநிதி தான் எல்லாம் என்று சொன்ன வைகோ) தெரியவந்தது. இது அரசியல் எதிரிகளால் மிகப்பெரும் புயலை கிளப்பி விட்டது. இதே காலகட்டத்தில் தான் விடுதலைப்புலிகள் நிகழ்த்திய பத்மநாபா படுகொலை, இந்திய ராணுவத்தை கலைஞர் வரவேற்காமை, வைகோவின் கள்ளத்தோணி பயணம் இவை அனைத்தும் சுப்ரமணிய சாமி, ஜெயலலிதா, ராஜீவ் ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்ப்பதாக அமைந்து ராஜீவ் ஆதரவுடன் ஆட்சி அமைத்த சந்திரசேகரால் 1991 ஆட்சி கலைக்கப்பட்டது. இதில் கலைஞரின் செயல்பாடான இந்திய ராணுவத்தை வரவேற்காமை, எம் மக்களை கொன்று குவித்த படை என் நாட்டு படையாகினும் அதை வரவேற்க போகமாட்டேன் என்று சூளுரைத்தது ஒரு நேர்வழி போராட்டம். மற்ற இரண்டும்?
கொலைக்குற்றம் சாட்டப்பட்ட பின்னணி:
வைகோ திமுகவை விட்டு வெளியேறிய/விலக்கப்பட்ட போது, நான் உயிரினும் மேலாக நினைத்த கருணாநிதியே என்னை சந்தேகப்பட்டு விட்டார் என்பதே வைகோ வின் குற்றசாட்டு .
கருணாநிதி சந்தேகப்பட்டாரா? இல்லையா என்பதற்கு போகுமுன், வைகோ சந்தேகப்படும்படி நடந்தாரா இல்லையா என்பதுதான் கேள்வி
1. மூன்றாவது முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்து ஓராண்டு கூட நிறைவடையாத சூழ்நிலையில், தலைவருக்கு தெரியாமல் கள்ளத்தோணி ஏறி இலங்கை சென்று பிரபாகரனை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் என்ன?(டெசோ மூலம் வசூலித்த பணத்தை வாங்க மறுத்து திமுகவை அவமான படுத்திய விடுதலைபுலிகளின் தலைவரை, அந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர் ஒருவர் கட்சியின் தலைவருக்கு தெரியாமல் சந்திக்க சென்றது ஏன்)
2. இந்த பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வைகோவுக்கு பாதுகாப்பு அளித்த விடுதலைப்புலிகள் சிலர் மரணமடைந்தனர். இவ்வளவு அபாயகரமான பயணம் மேற்கொள்ளும் நிர்பந்தம் வைகோ வுக்கும், விடுதலை புலிகளுக்கும் ஏற்பட்டது ஏன்?
3.இந்த பயணம் முடிந்து ஓராண்டிற்குள் ராஜீவ் காந்தி கொலை தமிழகத்தில் நிகழ்ந்தது. அதற்கு ஒரு வருடம் முன் பத்மநாபா கொலை நடந்தது. இந்த இரண்டும் விடுதலை புலிகளால் நிகழ்த்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
4. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின், அதிமுக வுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் உறவு அறுபட்ட நிலையில் திமுக வுடனும் பழைய கசப்புகளால் உறவை புதுபிக்க முடிய வில்லை. எனவே திமுக வின் தலைவராக நமக்கு வேண்டப்பட்டவர் வந்தால் நன்றாக இருக்கும் என்று விடுதலை புலிகள் நினைத்திருக்கலாம்அதற்கு சரியான சந்தர்ப்பமாக1991 தோல்வியால் துவண்டு இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக கருதி இருக்கலாம்.
5. 1990 கள்ளத்தோணி பயணத்திற்கு பின் வைகோ கருணாநிதியை சந்தித்து சமாதானம் செய்திருந்தாலும் தொடர்ச்சியான நடவடிக்கைகள், சந்தேகம் கொள்ள வைத்திருக்கும். அதுவும் கருணாநிதி போன்ற அரசியல் தலைவருக்கு (எதிர்ப்பையே வாழ்நாள் முழுதும் சந்தித்து கொண்டிருக்கும் ஒருவருக்கு) சந்தேகம் வந்திருந்தாலும் அது நியாயமே.
6. எச்சரிக்கையை வெளியிட்டது நரசிம்ம ராவ் தலைமைலான அரசு. அந்த அறிக்கையை கையளித்தது ஜெயலலிதா தலைமையிலான அரசு. அவர்கள் கருணாநிதி பாதுகாப்பு குறித்து பொய்யான அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?
7. இந்த அறிக்கை கிடைத்தவுடன் அதற்கு பொதுக்குழுவில் விளக்கம் அளிக்கும் படி வைகோ விடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது ஆனால் அதை மறுத்து அவர் போட்டி பொதுக்குழுவை கூட்டினார், அறிவாலயத்தை கைப்பற்ற முயன்றார் இறுதியில் கட்சியை கைப்பற்ற முயன்று தோல்விஅடைந்தார். இறுதியாக மதிமுக வை உருவாக்கினார்.

திமுக அரசு கலைக்கப்பட்ட நாட்கள்

எந்த சந்தேகமும் இல்லாமல், அரசே ஒப்புக்கொண்ட அசாதாரண காலம் அது, ஜூன் 25 1975ல் இந்த தேசத்தின் ஒட்டுமொத்த ஜனநாயக மான்புகளையும் தூக்கி வீசும்படியான நெருக்கடிநிலை பிரகடன அறிவிப்பை வெளியிட்டார் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி, எதிர்கட்சிகள் தொடங்கி கருத்துரிமை போராளிகள் வரை இந்திய ஜனநாயகத்தின்பால் நம்பிக்கை கொண்ட அத்தனை பேரும் பேரதிர்ச்சிக்கு உள்ளானார்கள், அந்த அதிர்ச்சியின் சூட்டை மொத்த இந்தியாவும் உணர்வதற்குள், நெருக்கடிநிலை எதிர்ப்பு சக்திகளின் பதட்டம் குறைவதற்குள், அடுத்த நாளான 26 ஜூன் 1975ம் தேதி அதிகாலை தென்னகத்தின் பிராந்திய கட்சி ஒன்றின் செயற்குழு கூடி.. இது சர்வாதிகாரம் என்று சொல்லி கண்டனத்தீர்மானம் நிறைவேற்றியது, நிறைவேற்றிய கட்சி திமுக, அந்த செயற்குழுவின் தலைவர் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர்
.
இந்தியாவின் அத்தனை மாநிலங்களும் எமர்ஜென்சியின் பாதிப்புகளால் திண்டாடியபோது தமிழகம் வழக்கமாக இயங்கிக்கொண்டிருந்தது, இந்தியாவின் ஒட்டுமொத்த ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் தலைவர்களும் தமிழகத்தில் தஞ்சம்புகுந்து கொண்டிருந்த காலம் அது, இந்தியாவின் ஜனநாயக தீவு என்று சொல்லும் அளவிற்கு எமர்ஜென்சியை எதிர்த்து கலைஞர் சங்கநாதம் முழங்கிக்கொண்டிருந்தார்.. ஆனால் அத்தனையும் அதிக காலம் நீடிக்கவில்லை ஆறே மாதத்தில் கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டது பின்னர் இந்தியாவின் மைய நீரோட்டத்தில் தமிழகமும் கலந்துவிட்டது.. அதற்கு பிறகான காலகட்டங்களில் பத்திரிக்கைகள் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன, கலைஞருக்கும் திராவிட முன்னோடிகளுக்கும் சாதகமான செய்திகள் வெட்டி வீசப்பட்டன, அவர்களுக்கு எதிரான அவதூறுகள் தாராளமாக அனுமதிக்கப்பட்டன.. கைதுகள், தடைகள், கொடுமைகள் என்று சகலவிதவான பலப்பிரயோகங்களுக்கு பிறகும் அந்த கட்சியை சிதைக்க முடியவில்லை ஆனால் இவ்வளவு பெரிய எதிர்நீச்சல் போட்டதன் விளைவாய் அமைப்பு ரீதியாக பலத்த அடிவாங்கியிருந்தது அந்த கட்சி, அந்த பலவீனம் எமர்ஜென்சிக்கு பிறகான தேர்தலில் வெளிப்பட்டது.. பிறகு அரசியல் வானில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் அப்படி இப்படி என்று பதினான்கு ஆண்டுகள் ஓடியபிறகு தான் அந்த கட்சியால் மீண்டும் ஆட்சிக்கே வர முடிந்தது
.
பெரும் இடைவெளிக்கு பிறகு, தமிழக அரசும் அது சார்ந்த துறைகளும், தமிழ்நாட்டின் கட்டமைப்பும் மிக மோசமாக சிதைந்து போயிருந்த காலகாட்டத்தில் 1989ல் திமுக அரசு தமிழகத்தில் அமைந்தது, பெண்களுக்கு சொத்துரிமை உட்பட எண்ணற்ற வரலாற்று சாதனைகள் படைக்கப்பட்டன.. மத்தியிலே சமூக நீதி காவலர் வி.பி.எஸ் அவர்களின் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தது, மத்தியிலும் மாநிலத்திலும் நல்ல சூழல் நிலவிய அந்த காலகட்டத்தில் ஈழ விடுதலை போர் புதிய உச்சத்தை எட்டியிருந்தது.. 1987ல் நடந்த கரும்புலிகள் தாக்குதலை தொடர்ந்து ராஜூவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் போடப்பட்டு, இந்திய அமைதிகாப்பு படை அங்கே அனுப்பப்பட்ட மூன்றாவது மாதத்தில் தொடங்கிய ஐ.பி.கே.எப் vs விடுதலை புலிகள் யுத்தம் பதினைந்து மாதங்களை நெருங்கிக்கொண்டிருந்தது.. ஏற்கனவே வைகோவின் பயணத்தை வைத்து அந்த கட்சி மீது கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன, இந்த நிலையில் ராஜூவ் காலத்திலிருந்தே இலங்கை பிரதமர் பிரேமதாசா வற்புறுத்தியபடியும், கலைஞர் உள்ளிட்ட தமிழக தலைவர்களின் கோரிக்கையை ஏற்றும் வி.பி.எஸ் தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு, அமைதி காப்பு படையை திருப்பி அழைத்துக்கொண்டது, இந்தியா திரும்பி வந்து தமிழகத்தில் இறங்கிய படையை மரபை மீறி வரவேற்க செல்ல மாட்டேன், எதையும் சந்திப்பேன் என்று அறிவித்தார் அன்றைய முதல்வர் கலைஞர், இதையே அவருக்கு எதிரான ஆயுதமாக்க நினைத்து அறிக்கை வெளியிட்டு ஆட்சியை கலைக்க கோரினார் அம்மையார் ஜெயலலிதா.. ஆனால் கலைஞர் இன்னும் தீவிரமாக முடிவெடுத்தார், இந்திய அமைதிகாப்பு படை வெளியேறிவிட்டதால் எங்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று கூறி ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.என்.டி.எல்.எப் உள்ளிட்ட பிற போராளி இயக்கங்கள் தமிழகத்தில் தஞ்சம் கேட்டனர், மத்திய அரசு ஒத்துக்கொண்டபோதும் கலைஞர் மறுத்துவிட்டார் விளைவாக அவர்கள் எல்லோரும் ஒரிசாவில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர் ஆனால் இதையும் கலைஞருக்கு எதிரான அரசியலுக்கு பயன்படுத்தி எதிர்கட்சிகள் அறிக்கை வெளியிட்டன
.
கொஞ்சம் கொஞ்சமாக பதட்டம் அதிகரித்துக்கொண்டிருந்த நேரத்தில் பேரிடியாய் நடந்து முடிந்தது அந்த நிகழ்வு, 20.06.1990 ம் ஆண்டு பத்மநாபா உள்ளிட்ட பதினைந்து பேர் சுட்டுக்கொல்லப்பட, அவை புலிகளால் நிகழ்ந்ததென செய்திகள் பறந்தன, சட்ட ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அத்தனை கட்சிகளும் ஊடகங்களும் ஓரணியில் நின்று உரக்க கத்தின
.
அன்று திமுக கூட்டணியில் இருந்த சி.பி.எம், எதிர்தரப்பில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் தொடங்கி அத்தனை பெரிய சிறிய கட்சிகளும் அரசை கண்டித்தன, சில பதவி விலக கோரின இன்னும் சில ஆட்சியை கலைக்க ஒன்றிய அரசுக்கு நேரடியாக கோரிக்கை வைத்தன, கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று சிதம்பரம் அறிக்கை வெளியிட்டார், இந்திய ஐக்கிய பொதுவுடமை கட்சியின் தா.பாண்டியன் தமிழக அரசு மீது மத்திய அரசு நடவெடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆட்சியை கலைக்கக்கோரின, கடமை தவறிய தமிழக அரசு என்று தினமணி தனது தலையங்கத்தில் புலிகளை ஆதரிப்பதால் வேண்டுமென்றே சட்டம் ஒழுங்கு கெட்டுப்போக அனுமதித்தார் என்று கடும் வார்த்தைகளில் விமர்சித்து குற்றம்சாட்டியிருந்தது
.
ஆட்சியை எப்படியேனும் பத்பநாபா கொலையை முன்வைத்து கலைக்க வேண்டும் என்று அம்மையாரும் எதிர்கட்சிகளும் வியூகம் அமைத்து செயல்பட்டன, 27.06.1990 அன்று சென்னை வந்த குடியரசு தலைவர் வெங்கட்ராமனிடம் சுதந்திர தியாகிகள் பெயரில் கொடுக்கப்பட்ட ஒரு மனுவும், நாவலர் மற்றும் வாழப்பாடியார் தலைமையில் பேரணியாய் வந்த எதிர்கட்சிகள் கொடுத்த ஒரு மனுவும் என்று இரண்டு மனுக்கள் தமிழக அரசை கலைக்க வலியுறுத்தி குடியரசு தலைவரிடம் அளிக்கப்பட்டது, 1990ல் ஜூலையில் புலிகளை கலைஞரே வளர்க்கிறார், ஈழம் அமைந்தால் அதை வைத்து தமிழகத்தையும் பிரித்துவிட திட்டம் தீட்டுகிறார் என்கிற ரீதியில் கடுமையான விமர்சனத்தை ராஜூவ்காந்தி முன்வைத்தார்
.
ரதயாத்திரையை லாலு தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து பாஜ ஆதரவை விலக்கிக்கொண்டதால் வி.பி.எஸ் தலைமையிலான அரசு கலைக்கப்பட்டு சந்திரசேகர் தலைமையிலான அரசு பதிவியேற்றது, ஆர்.வெங்கட்ராமன் குடியரசு தலைவராகவும் சுப்ரமணியன்சுவாமி சட்ட அமைச்சராகவும் இருந்து அன்றைய ஆளுநர் சுர்ஜித்சிங் பர்ணாலாவின் கையெழுத்தே (சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அறிக்கை அளிக்க மறுத்தார் ) இல்லாமல் ஆட்சியை கலைத்தனர், இந்திய வரலாற்றில் ஆளுநர் ஒப்புதல் இன்றி கலைக்கப்பட்ட முதல் அரசு திமுக அரசு தான் ஆனால் ஈழத்தை ஆதரித்து நின்ற யாரும் பத்மநாபா கொலையை தொடர்ந்து கலைக்கப்பட்ட அரசுக்கு ஆதரவாக பேசியதாக தெரியவில்லை, பின்னர் குடியரசு தலைவர் ஆட்சியில் நடந்த ராஜூவ் படுகொலை, 91ல் அம்மையாரின் ஆட்சி என்று தமிழக அரசியலின் ஒட்டுமொத்த போக்கையே மாற்றிய நிகழ்வாக மாறிவிட்டது அந்த நாள்
.
புலிகள் ஆதரவால் திமுக அரசு கலைக்கப்பட்ட நாள் ஜனவரி-30 

எமர்ஜென்சியை எதிர்த்ததன் விளைவாய் திமுக அரசு கலைக்கப்பட்ட நாள் ஜனவரி 31

Friday, April 27, 2018

ஒரே குறி கலைஞர்

சென்னையில் அடையாள உண்ணாவிரதமா பிரபாகரன் இருப்பார்
பல்கலைகழகத்தில் மதிவதனி உண்ணாவிரதம் இருந்தாளா? பிரபாகரனின் புலிப்படை இரவோடு தூக்கி வந்து காப்பாற்றும்
ஆனால் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து செத்து போக திலீபனுக்கு கட்டளை இடபடும்.
கலைஞரும் அப்‍படி சாக வேண்டும் அப்படித்தானே?
பிரபாகரன் வீசிய எலும்பை பொறுக்கி தின்றவர்கள் ஏன் இங்கு உண்ணாவிரம் இருந்து சாகவில்லை, ஆமைகறி பிரியர்கள் ஏன் திலீபன் போல் சாகவில்லை?
கலைஞர் மட்டும் சாகவேண்டுமா? அம்மனிதர் மேல் இவ்வளவு வெறுப்பா..
நல்லவர்கள் திலீபன் போல் வைகோ, சைமன், நெடுமாறன் எல்லாம் ஏன் சாகவில்லை என கேளுங்கள், அட உண்ணாவிரதம்தான் இருக்கவில்லை தற்கொலை படையாக மாறி வீரகாவியம் படைத்தால் என்ன?
இதனை எல்லாம் ஒரு பயலும் கேட்கமாட்டான், ஒரே குறி கலைஞர்.
பிரபாகரன் சொன்னால் சயனைடு குடிக்கும் புலிகள், அதே பிரபாகரன் சொன்னால் நீர் குடித்து பிழைக்கமாட்டார்களா?
திலீபனை காப்பாற்ற பிரபாகரனால் முடிந்திருக்காதா? மருத்துவனே அவனை தொடாதே, திலீபனை மருத்துவமனைக்கு அனுமதியோம் என நின்றது யார்?
திலீபனை உண்மையில் கொன்றது யார்?
டேய்.. எங்கடா விடுறீங்க டூப்பு...

திலீபன் உண்ணாவிரதம் இருந்தான் செத்தான், கலைஞர் உண்ணாவிரதம் இருந்தார் சாகவில்லை



திலீபன் உண்ணாவிரதம் இருந்தான் செத்தான், கலைஞர் உண்ணாவிரதம் இருந்தார் சாகவில்லை என சில பதர்கள் கிளம்பியிருக்கின்றன‌
காரணம் கலைஞர் உண்ணாவிரதம் இருந்த நாளாம் இன்று
திலீபன் உண்ணாவிரதத்தின் கள்ளதனம் என்ன என்பது, நுட்பபமாக கவனித்தால் அன்றி விளங்காது
அன்று அமைதி ஒப்பந்ததை எங்கள் வசூல் பாதிக்கபடும் இன்னபிற சிக்கல்கள் உண்டு ஆயுதங்களை கீழே வைக்கமாட்டோம் மாதம் 50 லட்சம் வேண்டும் என்றெல்லாம் சொல்லியே ஏற்றுகொண்டனர் புலிகள், அவர்கள் மனதில் யுத்தம் தொடங்கும் நோக்கமே இருந்தது
ராஜிவ் இதனை அனுமதித்தே ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்தார்
இதோ சிரியாவில் கடும் யுத்தம் எந்த நாடாவது சிரிய போராளி குழுவுடன் பேசியதா? கண்டோமா? இல்லவே இல்லை
எல்லா நாடும் இன்னொருநாட்டு விவகாரத்தில் தலையிடும்பொழுது அந்நாட்டு அரசுடனே பேசும், இஸ்ரேல் கூட அபாராபத்துடன் பேசிற்றே தவிர ஹமாசோடு இல்லை
எனினும் புலிகளை மதித்து அழைத்து இவ்வளவுதூரம் இந்தியா பேசிற்று, இந்தியா செய்த பெரும் தவறு அது. இந்த சனியன்களை அழைத்து பேசியிருக்கவே கூடாது, ஆனாலும் ராஜிவ் அதனை செய்தார்
அதுவும் தன் குண்டு துளைக்காத சட்டையினை பிரபாகரனுக்கு கொடுத்து அனுப்பியும் வைத்தார், அம்மாமனிதனின் மனம் அப்படி இருந்திருக்கின்றது.
ஆனாலும் யுத்தம் நடத்தும் முடிவிலே இருந்த புலிகள் காரணம் தேடினர். அவர்களின் ஆயுதங்கள் ஒளித்துவைக்கபட்டதே தவிர சமாதானத்திற்கு வரவே இல்லை
திலீபன் உண்ணாவிரதம் என்ன சூழலில் நடந்தது?
அது ஈழமக்கள் அமைதிபடையினை வரவேற்ற நேரம், முதல் இரு மாதங்கள் ஈழமக்கள் அமைதிபடையினை கொண்டாடினர், புலிகளுக்கு அமைதிபடை மேல் வெறுப்பு இதில்தான் தொடங்கிற்று
எங்களை மக்கள் மறப்பதா? வசூல் என்னாகும்? கட்டபஞ்சாயத்து என்னாகும் ? முடியாது ஏதும் செய்து யுத்தம் தொடங்க வேண்டும் என எண்ணினர்
ஜெயவர்த்தனே இறங்கிவந்து தமிழருக்கு தனி மாகாணம் கொடுக்கலாம் என முதன்முதலாக சொல்லி இருந்த நேரம். அதற்கு மேலும் இழுத்தால் நிலமை இன்றைய சிரியா அளவிற்கு செல்லலாம் என்பதால் எல்லா குழுக்களும் இணக்கபாட்டுக்கு வந்திருந்த நேரம்
புலிகளும் ராஜிவ் ஒப்புகொண்ட
அமைதியாக இருக்க‌ மாதாந்திர 50 லட்சத்தையும் வாங்கிகொண்டு எப்படியும் ஜெயவர்த்தனேவுக்கும் ராஜிவிற்கும் பிணக்கினை ஏற்படுத்தி மறுபடியும் சண்டை தொடங்கலாம் என எதிர்பார்த்த நேரம்.
ஆனால் ஜெயவர்த்தனேவோ அனுபவஸ்தர், இந்தியாவினை எதிர்க்கும் அளவிற்கெல்லாம் செல்லவே இல்லை. சீரழிந்த வடக்கு மாகாணத்தை சீர் படுத்ததொடங்கினார்
புலிகள் பொறுமை இழந்து மக்களை தூண்டிவிட ஆரம்பித்தனர், இந்திய முகாம்கள் முன்னால் ஈழமக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர், பிண்ணணியில் புலிகள்
கொஞ்சம் கொஞ்சமாக இது அதிகரித்தது, இந்திய ராணுவம் முதலில் குழம்பினாலும் பின்னால் சுதாரித்தது, ஏதோ அவர்களுக்கு புரிந்தது. அன்று வரவேற்ற மக்களுக்கு இன்று என்ன ஆனது? ஏதோ துர்போதனை, நடக்கட்டும்
இந்திய இலங்கை ஒப்பந்தபடி வடக்கே சீரழிந்திருந்த நிர்வகத்தை ஜெயவர்த்தனே நடத்த தொடங்கினார். அதுவரை காவல் நிலையங்கள் இல்லை, அவர் திறக்கதொடங்கினார்
புலிகளுக்கு அழிவுக்கண் திறந்தது, காரணம் காவல்நிலையம் திறப்பது மக்களுக்கு சௌகர்யமோ இல்லையோ, தங்களுக்கு ஆபத்து என கருதினர். அவர்களை பொறுத்தவரை நீதி, காவல் எல்லாம் அவர்கள்தான், ஒரே நோக்கம் வசூல்
அதற்கு முன்பாக மக்களை தூண்டிவிட்டு காவல்நிலையங்களை அடித்து நொறுக்கிய காட்சியியினை கண்ட இந்திய ராணுவம் அமைதியாகத்தான் இருந்தது, ஆனால் ஏதோ நடக்கபோவதை புரிந்து கொண்டது
அப்படி அந்நேரம் ஆங்காங்கே மக்கள் இந்தியாவினை எதிர்த்தாலும் பெரும் எதிர்ப்பு இல்லை. இந்தியாவினை மொத்த மக்களும் எதிர்க்க புலிகளுக்கு ஒரு காரணம் தேவைபட்டது, சில காரணங்களை உள்ளடக்கி திலிபன எனும் ராசையா பார்த்தீபனை உண்ணாவிரதம் என களமிறக்கினர்.
காரணங்கள் இவைதான், புதிய காவல் நிலையம் திறக்க கூடாது, ஊர்க்காவல் படை கூடாது, எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துகொள்வோம், குறிப்பாக வடக்கு கிழக்கில் சிங்களன் வரவே கூடாது, இதனை ஏற்காதவரையில் உண்ணாவிரதம் தொடங்கும் என்றனர்.
இது சிக்கலான விஷயம், இந்தியபடை அமைதிகாக்க சென்றது, ஒருங்கிணைந்த ஈழமாகாணத்து தேர்தலை அமைதியாக நடத்த சென்றது, அங்கே நீதிமன்றம் கூடாது, காவல்நிலையம் கூடாது என்பது ஏற்றுகொள்ளகூடியது அல்ல, சட்டம் ஒழுங்கு வேண்டாமா?
கொழும்பில் ஏராளமான தமிழர்கள் வாழும்போது வடக்கே சிங்களர் நுழைய கூடாது என்பது எப்படி சாத்தியம்? அதுவும் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என ஜெயவர்த்தனேவினை ஒப்புகொள்ளசெய்தபின் ஏன் தயக்கம் என ஏகபட்ட கருத்துக்கள் இந்தியாவிற்கு.
காந்தி போன்ற தலைவர்கள் அவர்களே உண்ணாவிரதம் இருந்தனர், ஆனால் இங்கோ பிரபாகரனுக்கு பதில் திலீபன் இருந்தான், காரணம் அவன் சாக வேண்டும் என்பது எடுக்கபட்ட முடிவு
முதலில் உண்ணாவிரத‌தித்தினை இந்தியா கண்டுகொள்ளவில்லை, காரணம் அப்படி தன்னை மிரட்டி தான் பணிந்தால் எடுத்தற்கெல்லாம் உண்ணாவிரதம் என கிளம்பிவிடுவார்கள் என்பது இந்தியாவிற்கு தெரியாததல்ல‌
இந்தியாவினை தன் விருப்பத்திற்கு மட்டும் ஆட்டுவிக்கும் விபரீத ஆயுதமாக புலிகள் திலீபனை பயன்படுத்துவதை இந்தியா உணர்ந்தது அமைதி காத்தது
ஆனால் புலிகள் ஈழமெங்கும் மக்களை அழைத்து திலீபனை காண செய்து கொடுங்கோல் இந்தியா எப்படி நம்மை சாகவிடுகின்றது பாரீர் என ஒப்பாரி வைத்தனர்.
மகாத்மா காந்தியும் உண்ணாவிரதம் இருந்தார், ஆனால் சுதந்திரம் கிடைக்கும்வரை இருந்து சாவேன் என அவர் இருக்கவில்லை. ஆனால் சில உரிமைகளை அவ்வப்போது பெற்றுகொடுக்கவும் தவறவில்லை
அந்த உயரிய தியாகத்திற்கும் வீண் பிடிவாததத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணரா நாடல்ல இந்தியா, அது அப்படியே இருந்தது.
புலிகளும் திலீபன் செத்தே தீரவேண்டும் என முடிவோடே இருந்தனர், இல்லை என்றால் சாகப்போகும் அவன் தன்னை காப்பாற்றவேண்டாம் என எழுதிகொடுத்ததாக சொன்ன கடிதத்தை காட்டியே அவனுக்கு ஒரு சொட்டு நீர் கொடுக்காமல் வதைத்தனர்.
புலிகள் நினைத்திருந்தால் அவனை காப்பாற்றி இருக்கலாம், புலிதலைவர் சொன்னால் சயனைடு கடிக்கும் புலிகள், அவர் கட்டளை இட்டால் நீர் குடிக்கமாட்டார்களா?
அவர் காட்டிய பிடிவாதமே திலீபனை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றது, ஈழ மக்களிடையே இந்திய எதிர்ப்பு அதிகரித்தது.
இறுதியில் அவன் செத்துவிடுவான் என உறுதிசெய்யபட்ட நிலையில் இந்திய தரப்பு அணுகுமுறைகள் அவனை பாதுகாக்க வண்ணம் புலிகளும் ஆடினர், அதாவது தாமதபடுத்தினர். வெளியில் துடித்தனர், உள்ளுக்குள் கடும் திட்டம்
ஏற்றுகொள்ளமுடியாத கோரிக்கைகளுக்கு எப்படி செவிகொடுக்க முடியும் என இந்தியா யோசிக்க, வதைக்கபட்டு செத்தான் திலீபன்
அவன் செத்ததும் மொத்த ஈழதமிழரையும் இந்தியா கைவிட்டுவிட்டதாக ஒப்பாரி வைத்து, அவன் உடலை பெரும் பேரணியாக்கி ஒருவித பதற்ற நிலையினை உண்டாக்கினர் புலிகள்
அதாவது மக்கள் போரினை மறந்து அமைதிவழிக்கு திரும்பிகொண்டிருந்தபொழுது, நிம்மதியாக பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து மகிழ்ந்தபொழுது, இனி போராளி குழுக்கள் வேண்டாம், இந்திய ராணுவம் எம்மை காக்கும் என் கொஞ்சம் கொஞ்சமாக புலிகளை மறக்க நினைத்தபொழுது
பெரும் சர்ச்சையாக திலீபனை சாகடித்து இந்திய ராணுவத்திற்கு எதிராக மக்களை திருப்பினர் புலிகள்.
ஆக எப்படியும் புலிகள் இந்தியாவுடன் மோதுவர், நாம் ஏன் அவசரபடவேண்டும் என்ற அனுபவஸ்த ஜெயவர்த்தனேவின் நிதானைம் வெற்றிபெற்ற வேளை அது.
அதன் பின் நடக்க கூடாதது எல்லாம் நடந்து, இன்று ஈழமக்களுக்கு ஒருங்கிணணைந்த மாநிலம் கூட இன்றி சிங்கள ராணுவ முற்றுகைக்குள்ளே வாழும்படி செய்தாகிவிட்டு அவர்களும் பரலோகம் சென்றாயிற்று
திலீபனும் புலிகள் அமைப்பின் உறுப்பினராக ஆடிய ஆட்டம் கொஞ்சமல்ல, போராளிகுழுக்கள் ஒழிப்பில் அவர் காட்டிய வெறியும், இன்னபிற அழிச்சாட்டிய கொடுமைகளும் பல இடங்களில் காண கிடக்கின்றன‌
புலிகளின் இரண்டாம் உண்ணாவிரதம் இது, முதல் உண்ணாவிரதம் சென்னையில் ராமசந்திரன் காலத்தில் நடந்தது. சார்க் மாநாட்டையொட்டி ஜெயவர்த்தனே இந்தியா வரும்பொழுது சென்னையில் இருந்த பிரபாகரனை நிராயுதபாணியாக்கி வீட்டு சிறையில் தள்ளினார் ராமச்சந்திரன்
அதாவது மத்திய அரசு சொல்லி, செயலில் இறங்கினார் அவர். செய்தது அந்நாளைய கமிஷனர் மோகன் தாஸ், பழி சுமந்ததும் அவரே
ஒன்றுமறியாத கன்னிபோல கவலையாய் விழித்துகொண்டிருந்தார் ராமசந்திரன், காரணம் அவரின் ஈழ இமேஜை காப்பாற்றும் நாடகம் அப்படி. அன்றெல்லாம் நெடுமாறன், வைகோ எல்லாம் ஏய் துரோகி ராஜினாமா செய் என்றெல்லாம் சொல்லவே இல்லை
மாநாடு முடிந்ததும் எச்சரிக்கையுடன் கருவிகளை பிரபாகரனிடம் கொடுத்தார் மோகன் தாஸ். ஒரே நாளில் உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு அடித்து புரண்டு இலங்கை ஓடிய பிரபாகரன அதன்பின் தமிழக பக்கம்வரவே இல்லை.
(பின்னாளில் பத்மநாபா, ராஜிவ் என எல்லா கொலைகளையும் தமிழகத்தில் செய்து தமிழகத்தை ஒரு கலவர பூமியாக்க புலிகள் எடுத்த முயற்சிக்கெல்லாம் உட்கோபம் அதுவேதான்.
ராமச்சந்திரன் அருமையாக நடித்த அரசியல் காட்சிகளில் இதுவும் ஒன்று.)
காரணம் உண்ணாவிரதம் என ஆரம்பித்து சென்னையில் ஒரு பதற்றத்தை அவர் தொடங்கினார், வீரமணி கும்பலின் ஜால்ரா ஒருபக்கம், புலிகளை பற்றிஅறியா தமிழக மக்களின் அப்பாவித்தனம் ஒருபக்கம் என மாநிலம் தடுமாறுவதை மோகன் தாஸ் விரும்பவில்லை
இன்னொன்று இலங்கை தீவிரவாதிகளுக்கு இடமளித்துவிட்டு பஞ்சாப், காஷ்மீர் என பாகிஸ்தானை எப்படி கண்டிக்கமுடியும் என்ற மோகன் தாஸின் பேட்டி பாராட்டதக்கது.
இதெல்லாம் ராமச்சந்திரனுக்கு தெரிந்துதான் நடந்தது, ஆனாலும் இன்றுவரை அவரை ஒருவார்த்தை யாரும் பேசமுடியாது ஜாதகம் அப்படி.
ஆக அன்று எப்படியும் தன்னை தமிழக மக்கள் காப்பாற்றுவார்கள் என உண்ணாவிரதம் தொடங்கிய பிரபாகரன், பின் நிச்சயம் இம்மும்றை சாகத்தான் வேண்டும் என்ற நிலையில் திலீபனை களம் இறக்கினார்.
ஏன் சாகவேண்டிய அந்த உண்ணாவிரதத்தை பிரபாகரன் இருந்தால் என்ன?
முன்பு சிங்கள பலகலைகழகத்திற்கெதிராக மாணவிகள் உண்ணாவிரதம் இருந்தபொழுது, இது எல்லாம் வேலைக்கு ஆகாது, வன்முறை ஒன்றே வழி என அம்மாணவியரை புலிகள் கடத்தினர். அவர்களில் ஒருவரை பிரபாகரன் திருமணமும் செய்தார்
அவர்தான் மதிவதனி,
அவருக்கு அன்று கொடுக்கபட்ட போதனை உண்ணாவிரதம் எல்லாம் சும்மா, தலைவர் பிரபாகரனை நம்பு
பின்பு திலீபனுக்கு கொடுக்கபட்ட கட்டளை, ஆயுத பலத்தால் இப்போது மக்களை திரட்டமுடியாது, உண்ணாவிரதம் இருந்து செத்துபோ, உணர்ச்சிகளை வைத்து பின் நாங்கள் பார்த்துகொள்கின்றோம்
அதாவது மதிவதனி இருந்தால் காப்பாற்றுவார்கள், திலீபன் இருந்தால் சாகும் வரை கிட்டே இருந்து கொல்வார்கள்.
அதன்பின் ஈழபிரச்சினை வேறுகோணத்தில் சென்று எல்லாம் நாசமாகிவிட்டது, எனினும் தங்களை மக்களிடம் மறுபடியும் கொண்டு சேர்ததற்காக யாழ்பாணத்தில் அவனுக்கொரு நினைவு தூண் புலிகளால் கட்டபட்டது
(இன்று அது சிதைக்கபட்டு அழிந்து கிடக்கின்றது, கண்டுகொள்ள யாருமில்லை)
தியாக தீபம் எனும் அடையாளம் காசி ஆனந்தனால் கொடுக்கபட்டது, பின் திலீபன் பெரும் அடையாளம் ஆனார்
ஏராளமான பேரினை கொன்றவர்கள் புலிகள், ஒருவனை உலகின் கண்முன் வதைத்து கொன்றனர் என்றால் அது திலீபனை மட்டுமே.
அவன் கடைசிவார்த்தை வரை பிரபாகரன் பின்னால் திரளுங்கள், ஈழத்தில் நமது கொடி நமது ராணுவம் என சொல்லியே செத்தான் என்றால் அவன் யாரால் தூண்டபட்டு, எதற்காக செத்தான் என்பது எளிதில் முடிவுக்கு வரகூடியது,
ஒரே காரணம் இந்திய ராணுவம் வெளியேற மக்கள் சண்டைக்கு வரவேண்டும்
இன்னொன்று குமாரப்பா உட்பட 17 புலிகள் தற்கொலை செய்தனர். அவர்களை சிங்களபடை பிடித்து கொழும்பு கொண்டு செல்ல முயன்றபொழுது இது நடந்தது
17 பேரை இந்தியா காப்பாற்றவில்லை என சர்ச்சை வந்தது, ஆனால் நடந்தது என்ன‌
17 பேரையும் கடலில் கைது செய்தது சிங்களபடை, இதில் குமாரப்பா மேல் சிங்கள பொதுமக்களை கொன்ற வழக்கு இருந்தது. இந்தியா நிதானமாக கையாள நினைத்தது புலிகள் அவசரமாக அவர்கள் விடுவிக்க வேண்டும் என்றனர்
கைது செய்யபடும்பொழுது அவர்களிடம் சயனைடு இல்லை, அவர்கள் சாகவும் தயாரில்லை ஆனால் ஆண்டன் பாலசிங்கம் ரொட்டியும் பழமும் கொடுக்கும் சாக்கில் சயனடை கொடுத்தார், உத்தரவு பிரபாகரன்
செத்து போங்கள், உங்கள் சாவு எங்களுக்கு முக்கியம்
17 பெரும் அதன்பின்பே செத்தனர், பாலசிங்கம் சந்தித்த பின்பே செத்தனர். ஆனால் இந்தியா காக்கவில்லை என சொல்லி மக்களை குழப்பிய புலிகள் கடும் ஆட்டத்தில் இறங்கினர், மக்களும் குழம்பினர் , இலங்கை எரிய ஆரம்பித்தது
2009 வரை எரிந்தது.
அன்று இந்திய முயற்சியில் எல்லாம் மிக நன்றாக நடந்துகொண்டிருந்த பொழுது திலீபனின் வதை சாவு எல்லாவாற்றையும் நாசமாக்கி மக்கள் உணர்ச்சிகள் மீண்டும் புலிகளால் அநியாயமாக தூண்டபட்டு எல்லாம் மண்ணாய் போக மிக முக்கிய காரணமாய் அமைந்துவிட்டது.
அனுபவஸ்த ஜெயவர்த்தனே நிதானமாக தன் எதிரிகளை மோதவிட்டு ரசிக்க தொடங்கினார், வரலாற்றின் பெரும் தந்திரக்கார வில்லன் அவர்.
ஆனால் நிதானமிழந்த புலிகள் முட்டாள்தனமாக‌ உதவவந்த இந்தியா மீதே பாய இன்று எல்லாம் சர்வநாசம்.
இன்றும் ஆங்காங்கே தீயாக தீபம், திலீபன், இந்திய கோரமுகம் என சிலர் தமிழகத்திலும் வீரவணக்கம் என இறங்கலாம், புரிந்தவர்களுக்கு புரியும் திலீபன் ஏன் சாகடிக்கபட்டான் என்பது
இந்தியாவிற்கு எதிராக அன்று ஏவபட்ட ஒரு தற்கொலை படை அவன்.
போகட்டும்
திலீபன் உண்ணாவிரதம் தொடங்கும்பொழுது பிரபாகரன் சொன்னாராம் "திலீபா நீ முன்னால் போ..நான் பின்னால் வருகிறேன்"
சொன்னபடி உடனே வந்தாரா? இல்லை. அவன் செத்ததும் அவனை வைத்து சீன் போட்டு என்னமோ செய்தார்
22 ஆண்டுகள் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு தீலிபனுக்கு சொன்னபடி முள்ளிவாய்க்காலில் அவன் இருக்குமிடம் சென்றார்.
அவர் சென்றது பிரச்சினை இல்லை, மாறாக எத்தனை லட்சம் தமிழ்மக்களை கூட்டிகொண்டு சென்றுவிட்டார்.
அதுதான் மகா பரிதாபம், இந்த நூற்றாண்டின் பெரும் கொடுமைகளில் ஒன்று.
இப்படி எல்லோரையும் அனுப்பிவிட்டு இறுதியாக இவர் சென்றார், சரி இவருக்கு பின் போராட யாரை விட்டு சென்றார்? எதனை மிச்சம் வைத்துவிட்டு சென்றார்?
ஆக இதனை தாண்டி யோசியுங்கள் திலீபனை சாக விட்டது யார் என தெரியும், யாரின் தலமைக்கு பணிந்து அவன் செத்தான் என்பதும் தெரியும், யாருக்கு லாபம் என்பதும் புரியும்
காஷ்மீரிய எல்லையில் செத்த எம் தேசவீரர்களை மறந்துவிட்டு, இப்படி எவன் சொல்லி எங்கோ அந்நிய நாட்டில் செத்தவனுக்காக இங்கு எவனாவது கொடிபிடித்தால் அவர்கள் எப்படிபட்டவர்கள் என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
காந்தி தானே உண்ணாவிரதம் இருந்தாரேயன்றி, இன்னொருவனை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க சொல்லி எவனையும் சாகடிக்கவில்லை.
இதோ வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருந்தார், அடித்து பிடித்து அவன் உயிரை காப்பாற்றியிருக்கின்றது தமிழகம்
அப்படி திலீபன் உயிரை பிரபாகரன் காப்பாற்ற எவ்வளவு நேரமாயிருக்கும்?
இதனை எல்லாம் சொல்லமாட்டார்கள் மறைப்பார்கள்.,
அவன் சாகவேண்டும் என உத்தவிடனர் புலிகள், அவன் செத்தான், அதுதான் நடந்தது.
அதன் பலனை புலிகள் அறுவடை செய்தனர், பழி இந்தியா மீது போடபட்டு அமைதிபடைக்கு எதிராக ஈழம் கொதித்தது
பின் மோதல் நடந்து இந்தியா வெளியேறிற்று
இறுதியில் கேட்க யாருமில்லாமல் முள்ளிவாய்க்காலில் கொள்ளிவைத்தது இலங்கைபடை.
திலீபன் உண்ணாவிரதம் இருந்த வரலாறும் அதன் அழிவும் இதுதான்
கலைஞர் நிலை பரிதாபம் டெசோ காலம் முதல் அமைதிபடை மீட்பு வரை அவர் கடும்பாடு பட்டார்
அமிர்தலிங்கம் கொலையும் தன் காலடியில் நடந்த‌ பத்மநாபா கொலையும் அவரை பாதித்தது உச்சமாக ராஜிவ் கொலை அவரை மனதால் கொன்றது
அதன் பின்னும் வைகோவினை புலிகள் பயன்படுத்தி கட்சி துண்டாகி கடும் சிக்கலை சந்தித்தார் கலைஞர்
2009ல் பிரபாகரன் தப்பமுடியாது என்பது அவருக்கென்ன உலகிற்கே தெரிந்தது, மறைமுகமாக "போரஸ் மன்னனை அலெக்ஸாண்டர் நடத்தியது போல் பிரபாகரனை கவுரவமாக நடத்தவேண்டும் என சொல்லி எல்லாம் பார்த்தார்
அது அறிவுள்ளோர்க்கு புரியும்
பிரபாகரனின் அண்ணனும் அக்காவும் கனடாவில் சுகவாழ்வு வாழ பிரபாகரனின் தாய் இந்தியாதான் கொண்டு வரபடவேண்டும் என்பதில் இந்திய அரசுக்கே உடன்பாடில்லை,
ஏன் பார்வதியம்மாள் பிள்ளைகளுக்கு பொறுப்பு இல்லையா?
கலைஞர் உண்ணாவிரதம் இருந்தது "ஏய் பிரபாகரா அந்த மக்களை விட்டுவிடு, இனி உன்னை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது" என்பதே
அறிவு இருந்தால் அதை புரிந்து கொள்வார்கள்
அறிவில்லா மாந்தர் கூட்டம் ஏன் திலீபனை போல் கலைஞர் சாகவில்லை என கேட்கின்றது
அந்த நாய்களுக்கு யாரவது சாக வேண்டும் அதை வைத்து அரசியல் செய்ய வேண்டும்
ஏ பதர்களே, கலைஞர் செய்ததை எல்லாம் மறந்து ராஜிவை கொலை செய்து அவர் முதல்வராவதையும் தடுத்து, வைகோவினை வைத்து கட்சியினை உடைத்து அவரின் அரசியலையும் முடக்க சதி செய்த முட்டாள்களே
இதெல்லாம் பிரபாகரனை தூக்கில் போட வேண்டும் என பகிரங்கமாக சொன்ன ஜெயாவிற்கு லாபமாக முடியும் என்பதை கூட உணராத முட்டாள் கூட்டமே
திலீபன் என்ன? பிரபாகரன் என்ன? உங்கள் சாவையும் பார்த்துவிட்டுத்தான் கலைஞர் காலம் முடியும், அதை நாங்களும் காணத்தான் போகின்றோம்