Showing posts with label ADMK. Show all posts
Showing posts with label ADMK. Show all posts

Monday, July 02, 2018

எம்.ஜி.ஆர் ஒரு டம்மி பீசு. - எடப்பாடி எங்கிருந்து வந்தார் என்று புரிகிறதா

எம்.ஜி.ஆர் ஒரு டம்மி பீசு.
தமிழக மக்கள் செய்த மிகப்பெரிய தவறு
காமராஜரை தோற்கடித்தது அல்ல. எம்.ஜி.ஆரை ஜெயிக்க வைத்தது தான்.
1975ல் இந்திராகாந்தி அமல்படுத்திய
எமர்ஜென்சியை எதிர்த்த ஒரே மாநிலம்
தமிழ்நாடு.அப்போதைய முதல்வர்
கலைஞர்.
எம்.ஜி.ஆர் பயந்து டெல்லி சென்று
எமர்ஜென்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.
திமுக செயற்குழுவை கூட்டி எமர்ஜென்சிக்கு
எதிராக தீர்மானம் போட்டார் கலைஞர்.
அதிமுக பொதுக்குழுவை கூட்டி
ஆதரவாக தீர்மானம் போட்டார்
புரட்சித் தலைவர்.
எமர்ஜென்சியை எதிர்க்கும் மாநில
கட்சியை தடை செய்வோம் என்றார்
இந்திரா.முடிந்தால் திமுகவை தடை
செய்து பாருங்கள் என்றார் கலைஞர்.
தன் கட்சிப் பேரையே அனைத்திந்திய
அதிமுக என்று மாற்றினார் MGR.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான்
ஜனநாயக காற்று வீசுகிறது என்றார்கள்
வடமாநில அரசியல்வாதிகள்.
அப்படிப்பட்ட கலைஞரை மீண்டும்
தேர்ந்தெடுக்காமல் 1977-ல் MGR-ஐ
முதல்வராக்கினர் தமிழக மக்கள்.
அப்போது மட்டும் மக்கள் கலைஞரோடு
நின்று அவர் கரத்திற்கு வழு
சேர்த்திருந்தால் தமிழகம் இன்னும்
வேறு உயரத்திற்கு சென்றிருக்கும்.
ஜெயலலிதா,எடப்பாடி என்று
கலைஞரின் ஆளுமைக்கு நிகரில்லாதவர்கள் எல்லாம் திமுகவுக்கு
மாற்றாக ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள்.வேறு ஒரு தகுதியான
மாற்று கட்சியாவது வந்திருக்கும்.
"நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்" என்று சினிமாவில்
பாடிய MGR சினிமாவில் மட்டுமே
ஹீரோவாக இருந்திருக்கிறார்.
"தென்றலைத் தீண்டியதில்லை
தீயைத் தாண்டியிருக்கிறேன்" என்று
வசனம் எழுதிய கலைஞர் நிஜத்திலும்
ஹீரோவாக வாழ்ந்திருக்கிறார்...
எடப்பாடி எங்கிருந்து வந்தார்
என்று புரிகிறதா.??

Friday, June 22, 2018

திமுகவும் , அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா?

திமுகவும் , அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்/////.......இது சரியா...???
🔷தமிழக பிரச்சனைகளை கையாளமும் முறை :-
அதிமுக :- அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியதுண்டா...????
திமுக :- முக்கியமான தமிழக பிரச்சனைகளுக்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துக்களை கேட்டு முடிவெடுக்கும்.
🔷முந்தைய அரசின் திட்டங்கள்:-
அதிமுக :- திமுகவின் சமச்சீர் கல்வி, புதிய சட்டப்பேரவை, புதிய மின் திட்டங்கள் மற்றும் அண்ணா நூலகம்வரை அனைத்தையும் முடக்கிவிட்டது...
திமுக :- அதிமுகவின் சத்துணவு திட்டம், மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம் ஆகியவற்றை திமுக செயல்படுத்தியது...
🔷அடக்குமுறை சட்டங்கள்:-
அதிமுக :- தடா,பொடா போன்ற சட்டங்களால் அரசியல் தலைவர்கள் பழிவாங்கப்பட்டனர்...சிலர் கஞ்சா வழக்கு போடப்பட்டு பழிவாங்கப்பட்டனர்
திமுக :- அடக்குமுறை சட்டங்கள் திமுக ஆட்சியில் ஒழிக்கப்பட்டன...
🔷அவதூறு வழக்குகள் :-
அதிமுக :- பத்திரிக்கை ஊடகங்கள் மீது அவதூறு வழக்குகள் போடப்பட்டு பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டது.
திமுக :- திமுக தலைவர் மீது இன்றுவரை ஊடகங்கள் சுதந்திரமாக அச்சில் ஏற்ற கூடாத அவதூறுகளை எழுதிக்கொண்டுதான் உள்ளன. யாரும் பழிவாங்கப்படவில்லை....
🔷கூட்டணி தர்மம் :-
அதிமுக :- கூட்டணி தர்மம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் கட்சி.வாஜ்பாய், வைகோ,ராமதாஸ்,விஜயகாந்த்,கம்யூனிஸ்ட்களிடம் கேட்டால் நன்றாக தெரியும்....
திமுக :- இந்திய தலைவர்கள் முதல் தமிழக தலைவர்கள்வரை அனைரும் கலைஞரின் கூட்டணி தர்மத்தை பாராட்டியுள்ளனர் (நண்பன் என்றால் இறுதிவரை ஆதரிப்போம், எதிரியென்றால் இறுதிவரை உறுதியாக எதிப்போம்)
🔷அரசியல் நாகரீகம் :-
அதிமுக :- மாற்றுக் கட்சியினருக்கு வணக்கும் வைக்ககூட தயங்குபவர்கள்
திமுக :-முதல்வராக இருந்த ஜெயலலிதாவையே நேரில் சந்தித்து நிவாரணநிதி வழங்கியவர் ஸ்டாலின். அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழுவில் திமுக எம்பிக்கள் கலந்து கொண்டு மோடியை சந்தித்தனர்...
🔷தமிழக வளர்ச்சி :-
முந்தைய திமுக ஆட்சியில் தமிழகத்தின் தொழில்வளர்ச்சி 33% அதிகரித்தது... அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி ‘மைனஸ்’ 3%...
தமிழக வேளாண்மை வளர்ச்சி ‘மைனஸ்’ 12 சதவிகிதம்....
கலைஞர் ஆட்சி செய்த இறுதியாண்டில் (2011) GDP எனப்படும்
பொருளாதார மொத்த உற்பத்தியானது 13.12% சதமாக இருந்தது, ஆனால், ஜெயா ஆட்சிக்கு வந்த இந்த மூன்றே ஆண்டுகளில் GDP 4.14% சதமாக வீழ்ச்சியடைந்துவிட்டது.....
திமுக ஆட்சியில் தமிழக உற்பத்தி வளர்ச்சி 20.18% சதம்... அதிமுக ஆட்சியில் அது 1.61% சதமாக சரிவு...
🔷அடிப்படைகட்டுமான திட்டங்கள் :-
திமுக ஆட்சியில் மட்டும் தான் தமிழகத்தில் எண்ணற்ற அடிப்படைகட்டுமான திட்டங்கள் (இன்பராஸ்ட்ரகச்சர்) செயல்படுத்தபட்டன... கணக்கற்ற மேம்பாலங்கள், நெடுஞ்சாலைகள், மின் திட்டங்கள், தொழில்சாலைகள்... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்...
அதிமுக ஆட்சியில் ஒன்றுமே கிடையாது... எல்லாம் வெறும் 110 விதி அறிக்கைகளாக ஏட்டில் மட்டும்மே உள்ளது.
🔷காவிரி பிரச்சனை :-
அதிமுக :- காவிரி ஆணையத்தை பல் இல்லாத ஆணையம் என்றது...
திமுக :- கவிரிக்காக வழக்கு தொடுத்தது,ஆணையத்தை அமைத்தது,இடைக்கால தீர்ப்பை பெற்றது , இறுதி தீர்ப்பையும் பெற்றது...
🔷அரசு ஊழியர்கள்:-
அதிமுக :- எஸ்மா சட்டம் கொண்டு அரசு ஊழியர்களை கைது செய்தது, மக்கள் நலப் பணியாளர்கள், சாலைப்பணியாளர்களின வேலையை பறித்தது
திமுக :-அரசு ஊழியர்களின் நலன் காக்கப்பட்டது
🔷ஊழல் குற்றச்சாட்டு:-
அதிமுக :-டான்சி வழக்கு, வருமானவரி வழக்கு , சொத்து குவிப்பு வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது
திமுக :- எந்த வழக்கிலாவது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை தரப்பட்டுள்ளதா...????
எல்லாவற்றையும்விடுங்கள் நடுநிலை ஊடக நண்பர்களே ஒரு நிமிடம் உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்...
உங்களால் நினைத்த நேரத்தில் நினைத்த கேள்வியை ஜெயாவிடம் கேட்க முடியுமா அல்லது கலைஞரிடம் கேட்க முடியுமா...????
திமுக எல்லாவற்றிலும் மக்கள் நலன்சார்ந்து செயல்படக்கூடிய இயக்கம்...ஆனால் அதிமுக அப்படிபட்டது இல்லை என்பதற்கு மேலே கூறியவை சில உதாரணங்கள்..
பிறகு எப்படி எந்த முகாந்திரமும் இல்லாமல் திமுகவும் அதிமுகவும் ஒன்றுதான் ( ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ) என்று பொத்தம் பொதுவாக கூறுகிறீர்கள்....
இனிமேலும் திமுகவும் அதிமுகவும் ஒன்றுதான் என்று சொல்வீர்கள் என்றால் நீங்கள் தான் ஏதோ குட்டையில் ஊறியிருக்கிறீர்கள் என்று அர்த்தம் ....

Tuesday, May 22, 2018

அண்ணா நாமம் வாழ்க, புர்ச்சி தலைவன் வாழ்க, புர்ச்சி தலைவி வாழ்க, எடப்பாடி சுவாமிகள் வாழ்க வாழ்க‌

ஸ்னைப்பர் எனப்படும் தொலைவில் இருந்து மிக சரியாக போராட்ட குழுவின் முன்னணிநபர்களை மண்டையில் சுடுவதெல்லாம் இஸ்ரேல் பாணி
சந்தேகம் வராமல் இருக்க சிலரை கூட சுடுவார்கள்
பாலஸ்தீனத்தில் அது அனுதினமும் இதைத்தான் செய்கின்றது
ஒருகாலமும் இந்த பூமியில் அச்சாயல் நடக்காது என இறுமாந்திருந்தோம்
இங்கெல்லாம் வானத்தை குறிபார்த்து சுடுதல், கண்ணீர் புகை வீசுதல், நீர் அடித்து கலைத்தல், முழங்காலுக்கு கீழ் சுடுதல் என்றுதான் விஷயம் இருந்தது. பொதுவான விஷயம் அதுதான்
அந்த நம்பிக்கை எல்லாம் தகர்கின்றன. ஸ்னைப்பர் என்பது போர்களங்களில் தளபதிகளை மிக குறிபார்த்து அடிக்கும் வகை, மக்கள் போராட்டங்களில் இஸ்ரேல் தவிர யாரும் பயன்படுத்துவதில்லை
ஆனால் முதன் முதலாக இந்தியாவிலே முதன் முறையாக மண்டையில் சுட்டு பலர்த்த அதிர்ச்சியினை தேசத்திற்கே கொடுத்திருக்கின்றார்கள்
இதெல்லாம் இங்கு தீவிரவாதிகளுக்கு எதிராக கூட நடக்காத விஷயங்கள், மும்பை தாக்குதலில் கூட பாகிஸ்தான் தீவிரவாதிகளை இப்படி சுடவில்லை
இதெல்லாம் மகா அச்சமூட்டும் விஷயங்கள்
காவல்துறைக்கு வேறு ஏதோ சக்திகள் பயிற்சி அளிக்காமல் இதெல்லாம் சாத்தியமில்லை, எங்கோ உதைக்கின்றது
மிக கடுமையாக மாநில மக்களை மிரட்ட வேண்டும் என்ற திட்டத்துடன் மிக கொடிய பயிற்சிகளை ஏதோ ஒரு சக்தியிடம் இருந்து இவர்கள் பெற்றிருப்பது புரிகின்றது
இவ்வளவிற்கும் இது தீவிரவாதம், நக்சலைட்டு எல்லாம் உள்ள பகுதி அல்ல, பின் ஏன்?
மிகபெரும் அழிவுசக்தியினை திட்டமிட்டு தமிழக காவல்துறையில் சத்தமில்லாமல் புகுத்தியிருக்கின்றார்கள், ஏதோ பெரும் கணக்கு உள்ளது
காவல்துறை என்பது இனி மாநில அரசின் அடியாளாக இப்படித்தான் குதறிக்கொண்டிருக்கும்
பாலஸ்தீன கொடூர‌ காட்சிகளை நம் மண்ணில் காணும்பொழுது அதுகொடுக்கும் மனதளர்ச்சிக்கு வார்த்தை இல்லை
இனி விரைவில் ராணுவ டேங்குகளும், கப்பல் தகர்க்கும் ஏவுகனைகளும் தமிழரை குறிவைக்கும்
அடுத்த கட்டம் அதுதான்
அண்ணா நாமம் வாழ்க, புர்ச்சி தலைவன் வாழ்க, புர்ச்சி தலைவி வாழ்க, எடப்பாடி சுவாமிகள் வாழ்க வாழ்க‌

துப்பாக்கி சூடு கலாச்சாரம் யார் யார் ஆட்சியில்

துப்பாக்கி சூடு கலாச்சாரம் வெள்ளையனுக்கு பின் இங்கு பக்தவச்சலம் காலத்தில் வந்தது, திமுகவின் வீரம் செறிந்த போராட்டத்தை ஒடுக்க பக்தவச்சலம் துணை ராணுவபடையினை வரவழைத்தார்
கிட்டதட்ட 64 பேர் செத்தார்கள், தமிழகம் கண்ட மாபெரும் துப்பாக்கி சூடு அது. ஆனால் அதுதான் இங்கு இந்தியினை விரட்டியது. சந்தேகமில்லாமல் ஆட்சியினை மாற்ற திமுகவிற்கு உந்து சக்தி ஆனது. மக்கள் மனதில் திமுக இடம்பெற்றது அதில்தான்
அதன் பின் கலைஞர் ஆட்சியில் துப்பாக்கி சூடு எல்லாம் இல்லை, பொதுவாக எப்பிரச்சினை ஆனாலும் அவர் அலசி ஆராய்வார். துப்பாக்கி சூடு அவர் ஆட்சியில் இல்லை
இந்த கொடும் துப்பாக்கி சூடு எப்பொழுது வந்ததென்றால், பக்தவத்சலம் காலத்திற்கு பின் யார் கொண்டுவந்தாரென்றால் சாட்சாத் ராமசந்திரன்
ஆம் 1979ல் விழுப்புரம் பக்கம் 12 பேர் கொல்லபட்டு பெரும் சர்ச்சை வெடித்தது, அகில இந்திய அளவில் அது எதிரொலித்து மத்திய அரசு குழு ஒன்றை அனுப்பியது
அலறி அடித்து எழும்பிய ராமசந்தினுக்கு தான் முதல்வர் அல்லவா? என நினைப்பு வந்து தானே விசாரிப்பதாக சொல்லி குழுவினை திருப்பி அனுப்பினார்
அதன் பின் எந்த சர்ச்சை என்றாலும் கொடூரமாக போலிசை ஏவி சுட்டுகொல்லும் முடிவிற்கு அவர் வந்தார். அதாவது ஆட்சியினை காக்க யாரையும் கொல்ல அவர் முடிவு செய்தார்
சென்னை மெரீனாவினை சுத்தம் செய்கின்றேன் (அவருக்கும் ஜெயாவிற்குமான கல்லறைக்காக இருக்கலாம்) என மீணவர்களை அவர் விரட்ட, கலவரம் வெடிக்க பல மீணவர்களை அவர் அரசு சுட்டு கொன்றது
மண்டைக்காட்டு கலவரத்திற்கும் சுடும் உத்தரவை அவர் வழங்கினார், அங்கும் பலிகள் உண்டு
மீனாட்சிபுரம் கலவரங்களிலும் இதே உத்தரவினை கொடுத்தார்
துப்பாக்கி சூடு என்பது அக்கட்சியின் ஆயுதமானது இப்படித்தான், ஜெயா இன்னும் மேலே சென்றார். அவர் ஆட்சியின் என்கவுண்டர்கள் உலகறிந்தது
இன்று அதே ராமசந்திரன் பாணியில் இந்த அரசும் வந்து சுடுகின்றது, ஆச்சரியமில்லை
கவனித்தால் புரியும் விஷயம் ஒன்றுதான்
தமிழரின் நியாயமான போராட்டங்களுக்கு திமுகவும் முண்ணணியில் இருந்து போராடியது, உயிரை கொடுத்தது. பின் ஆட்சிக்கு வந்தபின் பல விவகாரங்களில் அது தமிழர் உயிரை காத்தது
அதனால் ஆட்சியினை இழக்கவும் அது தயங்கவில்லை
ஆனால் பக்தவச்சலம் முதல் ராமசந்திரன், ஜெயா, பழனிச்சாமி வரை டெல்லி அடிமைகள். அது என்ன சொல்லுமோ அதனை செய்வார்கள். சுடுகின்றாயா ஆட்சியினை பறிக்கட்டுமா என்றால் அலறி அடித்து சுடுவார்கள்
சுட்டு கொன்றுவிட்டு சட்டம் ஒழுங்கை நிறுத்திவிட்டோம், ஆட்சி கலைக்க வேண்டாம் என சொல்வது அவர்கள் வாடிக்கை
அந்த தொடர்ச்சித்தான் தூத்துகுடி படுகொலைகள், இப்பொழுதும் கவனியுங்கள், ஏதோ எல்லாம் சொல்லி மழுப்பும் பழனிச்சாமி ஸ்டெர்லைட் பற்றி ஒரு வார்த்தையும் சொல்ல காணோம்
இம்மாதிரி சிக்கல்களுக்கு முடிவு ஒன்றே
ஒன்று தமிழகம் தேசிய நீரோட்டத்தில் கலக்கட்டும், இல்லை மாநில மக்களின் நலம் காக்கும் நல்ல அரசு அமையட்டும்
இம்மாதிரி அடிமைகள் இருந்தால் இந்த அவலமே தொடரும்
ராமசந்திரன் தொடங்கி வைத்ததை அப்படியே நிறுத்தாமல் கொன்று குவித்து ஆட்சி நடத்துகின்றார்கள். அதை விட்டால் அவர்களுக்கு என்ன தெரியும்?
என்றெல்லாம் டெல்லி அடிமை அரசு அமைகின்றதோ அன்றெல்லாம் துப்பாக்கி சத்தம் இங்கு கேட்கும், என்றெல்லாம் மாநில நலன் ஓங்கி நிற்குமோ அப்பொழுது கேட்காது
தமிழக துப்பாக்கி சூடு வரலாறு இப்படித்தான்.
உண்மையில் இங்கு சுடதெரியாமல் சுட்டவன் எம்.ஆர் ராதா. அந்த துப்பாக்கி சூடு ஒழுங்காக நடந்திருந்தால் இவ்வளவு சீரழிவு வந்திருக்காது

Saturday, May 12, 2018

அமேரிக்க வாழ்தமிழர்களும் ஆர்கேநகர் வாக்கார்களும்

அமேரிக்க வாழ்தமிழர்களும் ஆர்கேநகர் வாக்கார்களும்
சசிகலா ஏற்படுத்திய அதிமுக அரசு கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம், வழிகாட்டல் என எல்லாமுமாக இருந்து நடத்திய ”மெரினா புரட்சிக்காக” (?!?!) குடும்பம் குடும்பமாக வார இறுதியில் picnic/போராட்டம் நடத்தி facebookஇல் பொங்கோ பொங்கென்று பொங்கிய அமேரிக்க வாழ் தமிழ் அறிஞர்கள் எல்லோரும் தமிழ்நாட்டில் பெண்பத்திரிக்கையாளர்கள் அனைவரும் படுத்து தான் சம்பாதிக்கிறார்கள் என்று எழுதிய பதிவர் அதே அமேரிக்காவில் தங்கள் மத்தியில் வாழ்ந்தும் அவருக்கு எதிராக முகநூல் கண்டனம் தெரிவிப்பதைக்கூட கவனமாய் தவிர்க்கிறார்கள். ஆனால் அந்த ஆபாச பதிவை பகிர்ந்த எஸ் வி சேகரை எதிர்த்து நீதிமன்றம்வரை சென்று வழக்கு நடத்திக்கொண்டிருக்கும் ஏழை இளம் தமிழ் பத்திரிக்கையாளர்கள் பலருக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். குறிப்பாக இந்த செயல்களால் அவர்களின் இப்போதைய வேலை மட்டுமல்ல எதிர்கால வேலைகளும் மோசமாக பாதிக்கும். இருந்தும் செய்கிறார்கள். வெளிநாடு வாழ் தமிழர்களின் அறச்சீற்றத்தின் ஆழ அகலத்துக்கு இது ஒரு உதாரணம்.
அதைவிட கொடுமை தமிழ்நாட்டின் ஏழை எளியமாணவர்களின் எதிர்கால மருத்துவக்கனவை இல்லாமல் செய்து, அனிதாக்களின் அகாலமரணத்துக்கு காரணமான முழுமுதல் குற்றவாளி, அதிமுக தலைவி ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக எதிர்த்த நீட்டை ஒப்புக்கொண்டுவந்த தமிழ்நாட்டின் முதலாவது அமைச்சர், எர்ணாகுளம் என்ன அமெரிக்காவிலா இருக்கிறது என்று வாய்க்கொழுப்போடு எகத்தாளம் பேசியவர், மத்திய ஆர்எஸ்எஸ் பாஜகவின் எடுபிடியும் ஏவலாளுமான அரசியல் வியாபாரி, கட்சிமாறி தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை கூப்பிட்டு சிறப்பு செய்வதும் இதே அமேரிக்க பேரறிஞர் கும்பல் தான். கும்பல் என்கிற வார்த்தையை அதன் பொருள் புரிந்தே இங்கே பயன்படுத்துகிறேன்.
சில எதிர்ப்புக்குரல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்தாலும் மெரினா பொய்புரட்சியை காரணம் காட்டி குடும்பரீதியாக வார இறுதி சுற்றுலா எதிர்ப்பு காட்டிய அளவோடு ஒப்பிட இப்போதைய எதிர்ப்பு ஒன்றுமே இல்லை. அத்தோடு விட்டாலும் பரவாயில்லை. இந்த கேவலத்தை அரங்கேற்றும் அமேரிக்க வாழ் தமிழர்களின் அமைப்பை எதிர்த்து லேசாக முணுமுணுப்பவர்களுக்கு எதிராக புதுவித வியாக்கியானம் ஒன்றை இவர்கள் முன்வைக்கிறார்கள். அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வருவதை நாங்களும் விரும்பவில்லை. ஆனால் அதற்காக அவரை அழைத்து சிறப்பு செய்யும் அமேரிக்கவாழ் தமிழ் அமைப்புகளை எதிர்க்கக்கூடாது என்கிறார்கள். எப்பேர்கொத்த வாதம்?!?!? இதெல்லாம் சராசரி மனிதர் புரிந்துகொள்ள முடியாத தனித்துவமான அரசியல் சந்தர்ப்பவாதங்களிலேயே ஆனப்பெரிய சந்தர்ப்பவாதம்.
இது தான் அமெரிக்க வாழ் தமிழர்களின் அரசியல், அறச்சீற்றத்தின் லெட்செணம். இவர்களுக்கும் 20 ரூபாய் நோட்டுக்கு டிடிவி தினகரனுக்கு ஓட்டுபோட்ட ஆர் கே நகர் வாக்காளர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. குறைந்தது ஆர் கே நகர் வாக்காளர்கள் ஏழ்மை என்றொரு சாக்கு சொல்லிக்கொள்ள முடியும். மாஃபா பாண்டியராஜனையெல்லாம் கூப்பிட்டு தம் மேடையேற்றி அங்கீகரித்து பாராட்டி மகிழும் அமேரிக்கவாழ் தமிழர்களுக்கும் தமிழறிஞர் கும்பலுக்கும் அப்படியான எந்த சாக்குபோக்கும் இல்லை. அன்றன்றைய அரசுகளை அண்டிப்பிழைப்பது என்கிற சந்தர்ப்பவாதத்தின் மொத்த உருவங்கள் இவர்கள். நாளை ரஜினியையும் கமலையும் மட்டுமல்ல ஆர் கே நகர் 20 ரூபாய் நோட்டு புகழ் டி டி வி தினகரனைக்கூட கூப்பிட்டு சிறப்பு செய்வார்கள். அதற்கும் ஒரு வியாக்கியானம் சொல்வார்கள். அறிஞர்களல்லவா?