Showing posts with label காமராஜர். Show all posts
Showing posts with label காமராஜர். Show all posts

Tuesday, July 17, 2018

காமராசரின் ஆட்சியே பெரியாரின் ஆட்சிதான்

காமராசரை திராவிடர் இயக்கத்திற்கு எதிராக நிறுத்தும் கைக்கூலிகளுக்கு

காமராசரின் ஆட்சியே பெரியாரின் ஆட்சிதான்

காமராசரும்,சுந்தரவடிவேலுவும் ஒரு தடவை டெல்லியில் இருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் வர நேரிட்டது,,,சுந்தர வடிவேலு அருகில் சென்று அமர்ந்து கொண்ட காமராஜர் தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டிய கல்வித் திட்டங்கள் பற்றி பேசிக்கொண்டே வந்தார்,,

`நாட்டுப்புற ஜனங்களுக்கு மேல் படிப்பு ரொம்ப சுலபமா கிடைக்கணும்,,அதுதான் முக்கியம். நகரத்திலே இருக்கிறவன் எவ்வளவு தொகை கொடுத்தும் படிப்பான்,, கிராமவாசி எங்க போவான்? அவனால் மெட்ராஸ்லேயெல்லாம் வந்து தங்கி படிக்கிறது கட்டுப்படி யாகாது'

 சாதாரண பள்ளிக்கூட படிப்புக்கே அவன் ஆடு,மாடு,கோழியெ ல்லாம் விக்க வேண்டியிருக்கு,,,மேல் படிப்பையெல்லாம் கிராமப்புற காலேஜ்களுக்கும் பரவலாக்குங்க,,, ஏழை வீட்டுப் பிள்ளைங்க அந்தந்த ஊர்லயே பெரியபடிப்பு படிக்கட்டும்” என்றார் காமராஜர்,,,

உடனே அதிகாரி சுந்தரவடிவேலு , இப்போது, கல்லூரிகளில் சேர்ந்து படிப்பவர்களில் நூற்றுக்கு அறுபது பேர்,பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள்” என்றார்,,, “அதைத்தானே நாம விரும்பினோம். அதுக்குத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டோம். ஒரு தலைமுறை படிச்சி மேல வந்துட்டான்னா அப்புறம் அவன் மூலம் அந்த கிராமமே மேல வந்திடுமில்லையா" என்றார் காமராஜர்,,

 அதற்கு சுந்தர வடிவேலு பதில் அளிக்கையில், நான் பெரியார் ஐயாகிட்டே இந்த விவரத்தைச் சொன்னேன். அவரு மிகுந்த மகிழ்ச்சியோடு இவ்வளவு க்கும் காரணம் காமராசர் தான், அவருக்குத்தான் தமிழன் கடன்பட்டிருக்கிறான்,,,அவர் மட்டும் இல்லேன்னா 1952-ல் இலேயே நம்ம தலைமுறையையே ஆச்சாரியார் குழிதோண்டிப் புதைத்திருப்பார்” என்று பெரியார் ஐயா சொன்னார் என்றார்,,,

உடனே காமராஜர், “அதுஎப்படின்னேன்? எல்லாம்பெரியார்ஐயாவாலேதானேநடக்குது,,,அவர்சொல்றார்நாமசெய்யிறோம்! #காரணகர்த்தா_அவருதானே…?

 இது1952இல்ஆரம்பிச்சபிரச்சனையாஎன்ன? #ஐயாயிரம்வருஷமாஇருக்கறதாச்சே,, தெய்வத்தின் பேராலேயும் மதத்தின் பேராலே யும் நம்மள ஒடுக்கி வச்சிட்டானே… இப்படி இருக்கிறது என் தலையெழுத்துன்னு சொல்லிட்டானே! இதப்பத்தி யார் கவலைப்பட்டார்?” “பெரியார்ஒருத்தர்தானேஎல்லாத்தையும்தலையில்எடுத்துப்போட்டுகிட்டுபண்ணிகிட்டிருக்கார்,,

அவருமட்டும்இல்லேன்னாநம்மபுள்ளைங்ககதிஎன்னவாகியிருக்கும்…? அத்தனைப்பேரும் கோவணத்தோட வயல்லே ஏரோட்டிக் கிட்டிருப்பான்…! இன்னிக்கு டெபிடி கலெக்டராகவும், ஜாயிண்ட் செகரட்டரியாவும்ல ஒக்காந்திருக்கான்…! நம்மகிட்ட அதிகாரம் இருக்கிறதாலே பெரியார்நெனச்சகாரியத்தஏதோகொஞ்சம்பண்ணிக்கொடுக்கிறோம்

அவருஎந்தஅதிகாரத்தையும்கையிலவச்சிக்காமஊர்ஊராதிரிஞ்சிசத்தம்போட்டுக்கிட்டுவராரு.! அவராலேதான்நமக்கெல்லாம்பெருமை…!” என்று உணர்ச்சி பொங்கக் காமராசர் கூறினார்.

“எவ்வளவு பெருந்தன்மை இவருக்கு! தான் செய்கிற எல்லா நலத் திட்டங்களையும் தந்தை_பெரியாருக்கே காணிக்கையாக்குகிற இவரது மேன்மைதான் என்னே?” என்று எண்ணி அதிகாரி சுந்தர வடிவேலு
 பூரித்துப்போனார்.


Tuesday, June 19, 2018

எது எளிமை - தன் வரலாறு தெரியாதவன் வீழ்ந்துபோவான்

எது எளிமை
*******************************
தன் வரலாறு தெரியாதவன் வீழ்ந்துபோவான்!
எளிமையின் சிகரமென கக்கனையே எடுத்துரைக்கும் பல தி.மு.கவினரைப் பார்த்து எனக்கு சிரிப்பதா, வேதனைப்படுவதா? என திகைக்கின்றேன் தோழா!
அந்த காலத்திலேயே எம்.ஏ படித்தும், முதலமைச்சராய் பதவி வகித்தும், தமிழகத்தின் மாபெரும் அரசியல் இயக்கத்தை தோற்றுவித்தவருமான பேரறிஞர் அண்ணாவை விட எளிமையான ஓர் மனிதரைக் காட்ட இயலுமா?
சாதிக் பாட்ஷாவை அறிவீர்களா?
அவரைப்பற்றியும் நான் சொல்லப் போவதில்லை. போய்த் தேடுங்கள், வரலாற்றைத் தேடுங்கள்.
தி.மு.கவில் எத்தனை,எத்தனை அமைச்சர் பெருமக்கள், அறிவு ஜீவிகள், மொழிப்போர் ஈகியர்கள், திராவிட ஆய்வாளர்கள் தனக்காக வாழாமல் தமிழினத்திற்காக வாழ்ந்து மறைந்தனர் எனத் தெரியுமா?
தலைவர் கலைஞரின் எளிமையை அறிவாயா? தன் வாழ்நாளின் எத்தனை இரவுகளை பட்டினியாய், கடும் எதிர்ப்புகளின் மத்தியில் கடந்த மாபெரும் தலைவர்.
இங்கே ஓர் கேள்வி எழும்! சொத்தும், சொந்தமும் கொண்ட மனிதரை எப்படி எளிமையானவர் என்கிறீர்? கேளுங்கள்..,
எளிமைக்கும் சொத்து, நாகரிகமான உடை, சொந்தங்களுக்கும் தொடர்ப்பேது? எளிமை என்றாலே பிச்சைக்காரராய் வாழ்வது போன்ற தவறான புரிதல் இங்கே கட்டமைக்கப்பட்டுள்ளன. தவறு.
காந்தியார் உடையில் எளிமையாக இருந்தார், ஆனால் வாழ்ந்ததோ பிர்லாவின் மாளிகையில்!
காமராசரின், கக்கனின், கலாமின் எளிமையால் மக்களுக்கு என்ன பலன்?
தங்களை எளிமையாக அறிவித்துக் கொண்ட இவர்களால் பலனடைந்தோர் எளிய மக்களல்ல!
பார்ப்பனீயமும், முதலாளித்துவமும், அரசு இயந்திரங்களும்தானே!
ஆக; எளிமை என்பது மக்களோடு மக்களாக, மக்களுக்காக வாழும் மனிதர்களின் செயலே தீர்மானிக்கும்.
இப்போது சொல்லுங்கள் கலைஞரின் அயராத உழைப்பும், கழக அரசும், எப்போதும் அவரை யாரும் சென்று சந்திக்கும் வாய்ப்பும், மக்களின் மீதான அவரின் பற்றும் எளிமையன்றோ!
(ஜெயலலிதாவின் செயல்பாடுகளை ஒப்பு நோக்குக)
அவரைத் தொடர்ந்து செயல் தலைவரின் எளிமை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
மக்களிடமே எப்போதும் பயணிப்பதும், மக்களுக்கு பிரச்சினை எனில் சாலையில் இறங்கிப் போராடுவதும், இயற்கை பேரிடர்களில் மக்களில் ஒருவராய் இறங்கிப் பணியாற்றுவதும், அடுதவரின் கருத்துக்களை பணிவுடன் செவிசாய்பதும் என செயல் தலைவரின் எளிமை பாட்டாளி வர்க்கத்தின் எடுத்துக்காட்டு அல்லவா?
தோழனே!
கழகத்தின் வரலாற்றை சளைக்காமல் தேடு!
தேவையிருக்கிறது நீ தேடு!!
இதுவரை தி.மு.கழகத்தை சொன்னேனே..,
அதன் தலைவர் வென்தாடி வேந்தரின் வரலாறு தெரியாவிடில் எதையும் படிப்பது பாழ் அன்றோ?
இல்லாதவன் எளிமையாய் இருப்பது கடினமன்று.
அனைத்தும் இருந்தும் தனக்காக பயன்கொள்ளாமல் தமிழினத்திற்கு கொடுத்துச் சென்ற எம் தந்தை பெரியாரை விட எளிமையாய் வாழ்ந்த ஒருவரை காட்ட இயலுமா?
தோழனே!
வரலாற்றைப்படி, திராவிட இயக்கத்தின் எளிமைதான் உன்னை பகட்டாக்கியிருக்கிறது.
திராவிட இயக்கத்தின் தியாகம்தான் உனை சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைத்திருக்கிறது.
திராவிட இயக்கத்தின் வலிமைதான் உன்னை துணிந்துப் பேச வைத்திருக்கிறது.
இதோ, திராவிட இயக்கம்தான் உன்னை சிந்திக்கத் தூண்டுகிறது!
தன் வரலாற்றை அறியாதவன் சூதை வெல்ல இயலாது.
படி,படி,படி..
வரலாற்றைப் படி.
கக்கனைப் போல் 1000 மடங்கு எளிமையாய் வாழ்ந்த தலைவர்களைக் கொண்ட நீ கக்கனைப் பார்த்து மிரள்வது எதனால்?
வரலாறு அறியாததால் என்பதை அறிவாயா?
எளிமை என்பது பரதேசியாக வாழ்ந்து மடிவதல்ல
மானுடநேயத்தோடு தன்னலமற்ற மக்கள் பணியாற்றுவதே எளிமையாகும்.
படி தோழனே
திராவிட இயக்க வரலாற்றை படி!
இல்லையேல்,
அடிமைகளின் கட்சி அழிவதைப் பார்த்தாயா?
வரலாற்றை அறியாவிடில் நீ அழிவதை உன் அடுத்த தலைமுறை பார்த்து இரசிக்கும்.
எனதருமை கழகத் தோழனே!
வரலாற்றைப் படி!
அடுத்த தலைமுறைக்கு அள்ளிக் கொடுக்கவாவது படி!


Saturday, May 19, 2018

நாங்கள் உண்மையை கூறுகிறோம் அதை திரித்துரைக்கும் வேலையை நீங்கள் செய்கிறீர்கள்.

திமுக காமராஜரை விமர்சித்தது. காமராஜருக்கு எதினான கட்சி.
-காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக 24.05.2006 அன்று அறிவித்தவர் கலைஞர்.
திமுக நாத்திக கட்சி. கடவுள் மறுப்பாளர்களை கொண்டது. கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு எதிரானது.
-பெரியார் தான் கோவிலுக்குள் செல்லும் உரிமைக்காக போராடினார். கலைஞர் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை 02.12.1970 இல் கொண்டு வந்தவர்.
திமுக தமிழ் மொழிக்கு எதிரான கட்சி. தமிழை அழித்தவர்கள் அவர்கள் தான்.
-இருமொழி கொள்கையை கொண்டு வந்தவர் அண்ணா. கடைகளின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும்‌ திரைப்படங்களின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர். தமிழ்தாய் வாழ்த்து கொண்டு வந்தவர் கலைஞர்.செம்மொழி மாநாடு நடத்தியவர் கலைஞர்.
திமுக தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தை விமர்சிப்பவர்களை கொண்டது‌. கண்ணகியையும் பழிப்பவர்கள்.
-கண்ணகிக்கு கோவில் எழுப்பயவர் கலைஞர்.
திமுக வில் இருப்பவர்கள் திருவள்ளுவரை கூட விமர்சிப்பவர்கள்.
-திருவள்ளுவருக்கு 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் முடிவு இங்கு என்று சொல்லாதீர்கள் இதுதான் ஆரம்பம் என்று சொல்லும்படி வானுயர சிலை அமைத்தவர் கலைஞர்.
இதே போல் நாங்கள் இன்று பிரபாகரன் அவர்களையும் விமர்சிக்கிறோம். அது விமர்சனம் மட்டுமே. மற்றவர்கள் எங்கள் மீது உமிழ்வதை போன்ற காழ்ப்புணர்வு அல்ல. சொல்லமுடியாது ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு அவருக்கு சிறப்பு செய்யும் வகையில் தமிழகத்தில் ஏதேனும் ஒரு நினைவகமோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றோ கூட அமைக்கப்படலாம். அல்லது அவ்வாறு அமைந்தால் அது திமுக ஆட்சியில் மட்டுமே நடக்கும்.
நாங்கள் உண்மையை கூறுகிறோம். ஆனால் அதை திரித்துரைக்கும் வேலையை நீங்கள் செய்கிறீர்கள். நாங்கள் பேசுவது உண்மை என்பது உங்களுக்கும் புரியும். காலம் தான் அதற்கான விடை.

Friday, April 20, 2018

முதல்வர் ஆனதும் பெரியாரை காண காமராஜர் வருகிறார்

முதல்வர் ஆனதும் பெரியாரை காண காமராஜர் வருகிறார்.
ஐயா முதல்வர் ஆகிவிட்டேன் உங்களுடைய வேண்டுகோள் என்ன என்று காமராஜர் கேட்கிறார்.
இந்து சமய அறநிலையத் துறைக்கு மந்திரியாக ஒரு தாழ்த்தப்பட்டவரை நியமியுங்கள் என்கிறார்.
திரு. பரமேஸ்வரன் என்ற இளைஞரை காமராஜர் மந்திரியாக்குகிறார்.
இதை அண்ணா புகழ்ந்து எழுதுகிறார்;
பரமேஸ்வரன் மந்திரியானதும்
ஸ்ரீரங்க நாதரும் தில்லை நடராஜரும் பதறிய காட்சி கண்டேன், அந்த மாட்சி கண்டேன் என்றார்,
இதோ என் இனத்தைச்சேர்ந்த இளைஞன் ஆலயத்தினுள் அமர்ந்துவிட்டான் இதற்கு பெரியாரே காரணம் என்று அம்பேத்கர் மகிழ்ந்து கடிதம் எழுதினார். இது இந்தியாவில் எங்கேயாவது நடக்குமா அது பெரியார் மண்ணில்தான் சாத்தியம் ஆகும் என்றார்.
இதுதான் தி.க, திமுக, காமராஜர், அம்பேத்கர் வரலாறு.
இன்று காமராஜரும், அம்பேத்கரும் இல்லை.
ஆனால் தி.கவும், திமுகவும் இருக்கிறது, கடந்த காலம் போலவே, இப்போதும் செயல்படுகிறது.

Thursday, January 04, 2018

கடவுள் மதம் ஆன்மிகம் பற்றி காமராசர்

--1--
நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விசயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல.
பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா?,
ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு , மூக்குத்திக்குக் கூட வழியில்ல.
இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான்.
கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான்.
அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம், ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலாமில்லையா?,
அதையெல்லாம் செய்யமாட்டான்.
சாமிக்குத்தம் வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான்.மதம் மனிதனை பயமுறுத்தியே வைக்குதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன்
--2--
“லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள்.
அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம் பிச்சிட்டான்.
சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட் டான் நம்மாளு.
கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா?.
அரேபியாவிலே இருக்கிறவன் “அல்லா” ன்னான், ஜெருசலத்தல இருக்கிறவன் “கர்த்தர்” ன்னான்,
அதிலேயும் சிலபேரு மேரியக் கும்பிடாதேன்னான்.
கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு ‘டெனாமினேஷன்’ உண்டாக்கிட்டான்.
மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமியச் சொன்னான்.
நம்ம நாட்டு பூர்வீகக் குடிமக்களான திராவிடர்கள் காத்தவராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான்.
எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்?.
அவனவனும் அவனவன் இஷ்டத்துக்கு ஒரு சாமிய உருவாக்கினான்.
ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான். காங்கிரஸ் – கம்யூ னிஸ்ட் – தி . மு . க . மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி.
யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான்.
மதம் மனிதனுக்குச் சோறு போடுமா?, அவன் கஷ்டங்களப் போக்குமா?.
இந்தக் குறைந்த பட்ச அறிவுகூட வேண்டாமா மனுசனுக்கு?
உலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா – நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே!!! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே!!!
இப்படியெல்லாம அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்?”
--3--
"டேய் கிறுக்கா, நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்?. ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதாபாத்திரம்னேன்.
அதையெல்லாம் நம்மாளு கடவுளாக்கிட்டேன்னேன்!!!.
இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயகனுக்குக் ‘கட்அவுட்’ வைக்கிறானில்லையா, அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப்பட்ட ராமனுக்கும் ,
கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான்.
அந்தப் புத்தங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற விசயங்கள எடுத்துக்கணும்,
ஆசாமிய விட்டுபுடணும். காலப்போக்குல என்னாச்சுன்னா, லட்சக்கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும்,
அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி.
அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு.
ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க களவாணிப் பசங்க. புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சித்தான் நம்ம சனங்கள அடிமையா ஆக்கிவச்சிருக்கான்.
நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான், நவராத்திரி கதையைச் சொல்லி சரஸ்வதி பூசை பண்றான்.
விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான்.
இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை சனங்களையும், பாமர சனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான்.
நான் தீபாவளி கொண்டாடுனதுமில்ல, எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல, புதுசு கட்டுனதுமில்ல.
பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம சலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்
--4--
சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடக்கும்.
அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூசை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன்.
1930-க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன்.
அவர் மொட்டை போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுகிட்டேன். அப்பொறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போயும் போயும் கடவுள், தலை முடியத்தானா கேக்குறாரு?, எல்லாம் பார்பர் ஷாப் (Barber Shop ) காரன் செட்-அப் அப்புடீன்னு சிந்திச்சேன், விட்டுட்டேன்.
ஆனா , சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப்பானா?
அடுத்த மனுசன் நல்லாருக்கணும்கிறதுதான் வழிபாடு.
ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை.
இதுல நாம சரியா இருந்தா, தெய்வம்னு ஒன்னு இருந்தா அது நம்ம
வாழ்த்தும்னேன்

Wednesday, January 03, 2018

காமராஜர்

அந்த நாட்களின் தேவையான அத்தியாவசிய தேவைகளான உணவு, கல்வி தன்னிறைவுக்கான திட்டங்களை செய்தவர் காமராஜரே.. கலைஞர் அடுத்த கட்டத்திற்கு தமிழகத்தை நகர்த்திச் சென்றார். இருவரும் தமிழ்நாட்டுக்கு உழைத்தவர்கள். I love both of them. Why do some suddenly support Kamarajar just  to debase Karunanidhi? Bhaktavatchalam's policies as CM were more or less what current and previous CMs are doing  (I am referring to OPS & EPS). Bhaktavatcalam lost because he forced Hindi in Madras State and ended PDS implemented by Kamarajar. காமராஜரோட கொள்கைகளை அவரோட கட்சிக்காரரே follow பண்ணல...  பக்தவச்சலம் தூக்கி எறிந்த policies-அ திரும்ப கொண்டு வந்தது அண்ணாதுரை & கருணாநிதி. MGR expanded some for his own constituency needs, but he followed them. இன்னிக்கி "திராவிடத்தால் வீழ்ந்தோம்  காமராஜர் காலம் பொற்காலம்"னு சொல்றவனுங்க, அடுத்து காமராஜரையும் தூக்கி எரிஞ்சிடுவாங்க. குல கல்வி திட்டம் ஒழித்தவர், சத்துணவு திட்டம் கொண்டு வந்தவர், ஹிந்தி எதிர்த்தவர் அப்டினு அவரையும் கேவலப்படுத்துவானுங்க.

Friday, July 14, 2017

*கதர் சட்டைக்குள் கருப்புச் சட்டை * #காமராசர்....

நீங்க *பல தெய்வ* வழிபாட்ட வெறுக்கிறீங்களா, இல்லே, *தெய்வ* வழிபாட்டையே வெறுக்கிறீங்களா? என்று கேட்டேன்
அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச *சித்திரங்கள்*. அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம் பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட் டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா?
அரேபியாவிலே இருக்கிறவன் *அல்லா* ன்னான், அதுல சன்னி, சியா, சுஃபி, பாகா என்று பல உட்பிரிவுகளையும் உருவாக்கினான்,.
*ஜெருசலத்தல* இருக்கிறவன் *கர்த்தர்* ன்னான், அதிலேயும் சிலபேரு *மேரியக்* கும்பிடாதேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு *உட்பிரிவுகளை* உண்டாக்கிட்டான்.
*மத்திய ஆசியா*விலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு *நூறு சாமியச்* சொன்னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடிமக்களான *திராவிடர்கள்* காத்தவராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான்.
எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்?. அவனவனும் அவனவன் இஷ்டத்துக்கு ஒரு சாமிய உருவாக்கினான்.
ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான். சுருக்கமாக சொல்லனும்னா *காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் – தி . மு . க . மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி.*
யார் யாருக்கு எதிலே *லாபமிருக்கோ* அதுல சேந்துக்குறான்.
மதம் மனிதனுக்குச் சோறு போடுமா?,
அவன் கஷ்டங்களப் போக்குமா?.
இந்தக் குறைந்த பட்ச அறிவுகூட வேண்டாமா மனுசனுக்கு?
உலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா – நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே!!! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே!!!
இப்படியெல்லாம *அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்?*
தலைவர் தெளிந்த நீரோடை மாதிரி பேசிக்கொண்டே வந்தார். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு அழுத்தமான முடிவை அவர் வைத்திருப்பதைப் பார்த்து நான் வியந்தேன்.
*நீங்க சொல்றதப் பாத்தா ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளாக்கிட்டானே, அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே?* என்று வினாத் தொடுத்தேன்.
தலைவர் குலுங்கக் குலுங்கச் சிரித்தார். *டேய் கிறுக்கா, நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்?*
ராமன், கிருஷ்ணன்கிறது *கற்பனைக் கதாபாத்திரம்னேன்*. அதையெல்லாம் நம்மாளு கடவுளாக்கிட்டேன்னேன்!!!. இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயகனுக்குக் *கட்அவுட்* வைக்கிறானில்லையா, அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப்பட்ட ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான். அந்தப் *புத்தங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற விசயங்கள எடுத்துக்கணும், ஆசாமிய விட்டுபுடணும்*. காலப்போக்குல என்னாச்சுன்னா, லட்சக்கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி *கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி.* அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க களவாணிப் பசங்க.
புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சித்தான் நம்ம சனங்கள அடிமையா ஆக்கிவச்சிருக்கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான், நவராத்திரி கதையைச் சொல்லி சரஸ்வதி பூசை பண்றான். விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை சனங்களையும், பாமர சனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான்.
நான் தீபாவளி கொண்டாடுனதுமில்ல, எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல, புதுசு கட்டுனதுமில்ல. பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். *நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம சலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்* என்று விளக்கினார்.
*மதம் என்பதே மனிதனுக்கு அபின், அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடுதான் போலத் தோணுதே?* என்று ஒரு கேள்வியைப் போட்டேன் .
தலைவர், நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விசயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா? *ஏழை* வீட்டுப் பெண்ணுக்கு ஒரு *தோடு , மூக்குத்திக்குக்* கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில *வைர* ஒட்டியாணம் செஞ்சி *காளியாத்தா* இடுப்புக்குக் கட்டி விடறான். *கறுப்புப் பணம்* வச்சிருக்கிறவன் *திருப்பதி* உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் *காசில ரோடு* போட்டுக் கொடுக்கலாம், ரெண்டு *பள்ளிக்கூடம்* கட்டிக் கொடுக்கலாமில்லையா?, அதையெல்லாம் செய்யமாட்டான்., *சாமிக்குத்தம்* வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான். *மதம் மனிதனை பயமுறுத்தியே வைக்குதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா?* படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன் என்றார்.
*கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா?* இதிலேருந்து எப்போ விலகுனீங்க?” என்று கேட்டேன்.*
சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே *பத்ரகாளியம்மன்* கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூசை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930-க்கு முன்னாலே *சஞ்சீவரெட்டியோட திருப்பதி* மலைக்குப் போனேன். அவர் *மொட்டை* போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுகிட்டேன். அப்பொறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. *போயும் போயும் கடவுள், தலை முடியத்தானா கேக்குறாரு?* எல்லாம் முடி வெட்டுரவன் (Barber Shop ) தொழில் யுக்தின்னு சிந்திச்சேன், விட்டுட்டேன். ஆனா , சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். *தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பானுங்க ஆனா ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப்பானா?* என்று கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.
*அப்படியானா, மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே, அதப்பத்தி?* என்று கேட்டேன்.
*அடுத்த மனுசன் நல்லாருக்கணும்கிறதுதான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை,* இதுல நாம சரியா இருந்தா, தெய்வம்னு ஒன்னு இருந்தா அது நம்ம வாழ்த்தும்னேன்!!!
காமராசர் என்கிற அந்த *மனிதாபிமானி* என் மனத்தில் அந்த நிமிடமே சிம்மாசனம் போட்டு உட்காருகிறார். சட்டென்று காரை நிறுத்துகிறார். வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டையோ இல்லாமல் நடந்து போன சிறுவர்களைப் பார்த்து *ஏன் பள்ளிக்கூடம் போகலியா?* என்கிறார். அவர் இவ்வளவு நேரம் பேசிய பேச்சின் விளக்கம் எனக்குக் கிடைத்து விடுகிறது.
இப்படி உண்மையை உடைத்து பேசியவரை காவி பாஜகவின் தாய் வீடான ஆர்எஸ்எஸ் டெல்லியில் வைத்து அவரை தீ வைத்து கொளுத்தி சாகடிக்க பார்த்தானுங்க.

Monday, April 17, 2017

ஒரு பஞ்சாயத்து ஓடிகொண்டிருக்கின்றது, அதாவது காமராஜருக்கு பின் அணைகளை கட்டியது யார்?
காமராஜர் அடித்து விளையாடிவர், டெல்லிவரை அவருக்கு செல்வாக்கு இருந்தது, அவர் கேட்டால் நேரு முதல் சாஸ்திரி வரை மறுபேச்சின்றி கொடுத்தார்கள், இதனால் காமராஜர் பல திட்டங்களை கொண்டுவர முடிந்தது
இந்நிலையில்தான் அண்ணாவின் ஆட்சி தொடங்கிற்று, மறைக்க ஒன்றுமில்லை, டெல்லியினை எதிர்த்து ஆட்சி செய்வது ஒரு கலை, அரசியல் அப்படித்தான். பல பிரச்சினைகளை சமாளித்து ஆள வேண்டும், மாநில அரசியலின் நிலை அது.
மத்திய அரசோடு மல்லுகட்ட வேண்டும், அதனுடன் வாதிட வேண்டும் , நிலமை முற்றினால் பிரிவினை வாதம் பேசிவிடவும் கூடாது, ஒரு மாதிரியாக கையாள வேண்டிய சிக்கல் நிறைந்தது மாநில கட்சிகளின் மாநில ஆட்சி
அண்ணா அதில் சமார்த்தியமாக தேர் நகர்த்தினார், மக்களிடம் தன் பெயர் கெடாமல் அதே நேரம் டெல்லியினை பகைக்காமல் ஆண்டார், தமிழகத்திற்கு செய்யவேண்டியதை செய்தார், தமிழ்நாடு பெயர் உட்பட‌
பின் கலைஞர் வந்தார், சும்மா சொல்ல கூடாது மதுகடைகள் திறந்ததை தவிர வேறு ஒரு குறையும் சொல்லிவிட முடியாது, கள்ளசாராய சாவுகளும் இன்னும் பல சிக்கல்களும் அவரை அதற்கு தூண்டின, மக்களின் எதிர்ப்பால் அதனை மூடும் மனநிலையில்தான் அவரும் இருந்தார்
அணை கட்டுவதில் திமுக அரசு நன்றாகத்தான் செயல்பட்டது, அணை கட்டுவது ஜெயா சமாதி போன்ற எளிதான பணி அல்ல, அதற்கு பல இயற்கை அமைப்புகள் பொருந்திவரவேண்டும்
அப்படி இல்லாவிட்டால் சிறு அணைகள்தான் கட்டமுடியும், கலைஞர் காலத்தில் அந்த அரசால் முடிந்த அளவு சிறு, பெரும் அணைகள் கட்டத்தான் பட்டன‌
கலைஞர் நிம்மதியாக ஆண்டது வெறும் 3 ஆண்டுகளே, அதன் பின் அவருக்கு நெருக்கடி பல வகையில் தொடங்கியது, இந்திரா ஒரு பக்கம் , ராமசந்திரன் ஒரு பக்கம் என கிளம்பினார்கள்
மிசா எல்லாம் அசைக்கமுடியாத கலைஞரை ராமசந்திரன் அசைத்தார், 1977ல் ஆட்சிக்கு வந்தார்
ராமசந்திரன் டெல்லி கைப்பாவை, அவர் நினைத்திருந்தால் பல நல்ல திட்டங்களை கொண்டுவந்திருக்கலாம், ஆனால் சறுக்கினார்
எந்த பெரும் தொலைநோக்கு திட்டமும் அவரிடம் இல்லை, சத்துணவு போட்டார், ஆனால் அரிசி வரும் வழி அறியவில்லை, மதுகடைகளை மறுபடி திறந்தார்,
அவர் கவனமெல்லாம் ஆட்சி, மேக் அப், தாய்குலங்களை கவர சரோஜா தேவி, லதா, ஜெயலலிதா என்றே இருந்தது
முல்லை பெரியாறு அணை மட்டத்தினை குறைத்து கொண்டது , ராஜிவ் அமைதிபடையினை அனுப்பும்பொழுது மவுனம் காத்தது, ராஜிவ் எங்களை ஏமாற்றினார் என்ற பிரபாகரனின் குரலை கண்டுகொள்ளமால் இருந்தது என ஏக சர்ச்சைகளுக்கு சொந்தக்காரன் அந்த ராமசந்திரன்
10 ஆண்டுகள் ஆண்டுவிட்டு அடுத்து ஜெயாவிற்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு மெரீனா சென்றார் நடிகர் ராமசந்திரன், அவர் மறையும்பொழுது விவசாயத்திற்கு ஒன்றும் செய்திருக்கவில்லை, விவசாயி படம் மட்டும் நடித்திருந்தார்
ஜெயா இன்னும் அகம்பாவி, சசிகலா குடும்பத்திற்கு நன்றிகடன் காட்டினார், சொத்துக்களை குவிப்பதில் அவருக்கு கவனம் இருந்தது, கூடவே 30 வயது குழந்தையினை தத்தெடுத்து அதற்கு திருமணமும் செய்துவைத்து தன்னை தானே தெரசா என சொல்லிகொண்டார்
அணை கட்டும் திட்டமோ, தொலைநோக்கோ அவரிடம் இல்லை,
ஒரு மாதிரியான அடக்குமுறை அவரிடம் இருந்தது, அதுவும் ஆட்சிபற்றி சொல்ல்விட்டால் அவதூறு என வழக்கு தொடரும் அளவிற்கு வன்மம் அவரிடம் இருந்தது, ஒரு ராணியின் மனநிலை அது..
2001ல் ஆட்சிக்கு வந்தாலும் ஜெயா திருந்தியதாக இல்லை, மன்னார்குடி குடும்பத்தில் அவர் எடுத்தமுடிவெல்லாம் வெறும் 1 மாதம் கூட தாண்டவில்லை,
பதவியில் இருந்தபொழுதே சிறைசென்ற முதல்வர் எனும் பெரும் சாதனையினை தவிர எதுவும் ஜெயா செய்ததில்லை, அதனையும் மீறி அவர் வென்றதெல்லாம் தமிழக சாபக்கேடு அல்லது ஜெயாவின் பூர்வ ஜென்ம புண்ணியம்..
1996ல் ஆட்சிக்கு வந்த கலைஞர் நல்ல விஷயங்களை செய்தார், பல அணைகள் தமிழகத்தில் கட்டபட்டன‌
குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் மட்டும் 8 அணைகள் கட்டபட்டன, அளவுகளில் வேறுபாடு உண்டு. காரணம் கைபற்ற வேண்டிய நிலங்களை தமிழக அரசால் எடுக்க முடியவில்லை, தொழிலதிபர்கள் பலம் அப்படி, மத்திய அரசின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு
இன்னும் தமிழகத்தில் பெரும் அணைகள் உருவாகாமல் இருக்க தொழிலதிபர்கள் வளைத்து வைத்திருக்கும் மலைகளும் காரணம், கேட்டால் நீதிமன்ற கதவுகளை தட்டுவார்கள்,அவர்களில் பலர் ராமசந்திரன் கட்சி என்பது குறிப்பிடதக்கது
இப்படியாக கலைஞர் டெல்லி, அதிமுக இன்னபிற அட்டகாசங்களை சமாளித்துதான் ஆட்சி நடத்தினார்
2006ல் அவர் மறுபடியும் ஆட்சிக்கு வரும்பொழுது, கலைஞருக்கு சில சோதனைகள் உள்ளும் புறமும் வந்தன, இன்னும் ஆதாரம் சமர்பிக்க முடியாத ஸ்பெக்ட்ரம் வழக்கு விஸ்வரூபமெடுத்தது, ஒரு பக்கம் மெஜாரிட்டி இல்லாமல் தடுமாறினார்
அப்பொழுதும் புதிய சட்டமன்றம், அண்ணா நூலகம், திருவள்ளுவர் சிலை என அவர் செய்ய தவறவில்லை
ஆக சுருக்கமாக இப்படி பார்க்கலாம்
கிடைத்த காலமெல்லாம் ஏதாவது ஒரு வகையில் தன் முத்திரையினை தமிழகத்தில் பதித்தது திமுக‌
தமிழ்நாடு பெயர்மாற்றம், சீர்திருத்த திருமண சட்டம், வள்ளுவர் கோட்டம், பூம்புகார், பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, எட்டயபுரம் பாரதி நினைவகம் , இன்னும் பல வரலாற்று அடையாளம் எல்லாம் அவர்கள் கொடுத்தார்கள்
அம்பேத்கர் சட்ட கல்லூரி , இட ஒதுக்கீடு, எல்லாம் அவர்கள் கொடுத்தார்கள்
சென்னை கடற்கரையில் தமிழ் அறிஞர் சிலை எல்லாம் அவர்களால் நிறுவபட்டது
சென்னை போக்குவரத்து போல எல்லா மாநகராட்சிகளும் அவர்களால் சீர்பட்டது, வள்ளுவர் சிலை வரை கலைஞர் நன்றாகத்தான் செய்தார்
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வரை அவர்கள் திட்டத்தில் குறை இல்லை..
இப்படி ஒப்பிட்டு பார்த்தால் ராமசந்திரன் ஜெயா சாதனை என்ன?
ஒரு புல்லும் புடுங்காமலே இறந்தார் ராமசந்திரன், ஒரு திட்டமும் அறிவும் அவரிடம் இல்லை, தொப்பியும் கண்ணாடியும் சிரிப்புமாகவே செத்தார், அதுதான் ஆட்சி
ஜெயா போயஸ், சிறுதாவூர், கொடநாடு என பங்களாக்களாக கட்டினார், மன்னார்குடி குடும்பம் எல்லாம் மன்னர்கள் ஆனது
கலைஞர் வள்ளுவர் கோட்டம், முதல் புதிய சட்டமன்ற கட்டடம் வரை கட்டிவைத்துவிட்டுத்தான் ஓய்ந்தார்
ஜெயா செய்ததெல்லாம் தனக்காக, கலைஞர் செய்ததெல்லாம் மாநிலத்திற்காக, உள்ளங்கை நெல்லிகனியான உண்மை இது
ராமசந்திரன், ஜெயா போல பெரும்பான்மையும், டெல்லி ஆதரவும் இன்ன பிற வசதிகளும், ஆளும் வர்க்க ஆதரவும் கிடைத்திருந்தால் கலைஞர் இன்னும் தூள்பறத்தியிருப்பார்
நல்ல பேட்டை வைத்து கொண்டு, குஜராத் ஐபில் பவுலர்கள் போல சொத்த பேட்டை வைத்துகொண்டு சிக்சர் அடிப்பதில் பெருமை இல்லை
ஓட்டை பேட்டினை வைத்து கொண்டு, அதன் உடைந்த கைப்பிடியினை பிடித்துகொண்டு நல்ல பவுலர் பந்தில் சிக்சர் அடிப்பதுதான் சாமார்த்தியம்
கலைஞர் இரண்டாம் வகை, அவருக்கு இருந்த அல்லது உருவாக்கபட்ட எல்லா சிக்கல்களையும் தாண்டி இவ்வளவு செய்திருப்பது பெரும் விஷயம்..
தமிழகத்திற்கோ, தமிழனுக்கோ ஒரு நல்ல காரியமும் செய்யாதவர்கள்தான் ராமசந்திரனும், ஜெயலலிதாவும், இன்று இல்லையென்றாலும் ஒரு நாள் புரியும், வரலாறு அப்படித்தான் பதிவு செய்திருக்கின்றது
ஒரு காலமும் அதிமுக அரசின் சாதனையுடன் கலைஞர் அரசினை ஒப்பிட முடியாது, ஏணி வைத்தாலும் எட்டாது
ஏன் ஏணியே வைக்கமுடியாது, அவ்வளவு பெரும் இடைவெளி அது

Stanley Rajan

source: https://www.facebook.com/rajarajan.rajamahendiran/posts/10207827885049676