Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts

Tuesday, July 24, 2018

குழந்தை வளர்ப்புக்காக, ஒரு பெண் தன் இயல்பை இழந்து புருஷனுக்கும் குடும்பத்திற்கும் அடிமையாகி விடுகிறாள்

" குழந்தைப் பெறுவதாலேயே பெண்கள் தங்களின் சுதந்திரம், மானம், அறிவு எல்லாவற்றையும் விட்டுவிட நேர்கிறது. பெண்ணானவள் ஒன்றிரண்டு பிள்ளைகளைப் பெற்றவுடனேயே விரக்தியடைந்து குழந்தையின் வளர்ச்சிக்கும் புருஷனுக்கும் குடும்பத்திற்கும் அடிமையாக கிடக்கிறாள். பெண்கள் கர்ப்பத்தடையை அனுசரிக்கவேண்டியது அவசியமாகும். ஆண் - பெண் இருவரின் சுயேட்சைக்குமே பிள்ளைப்பேறு ஒரு பெரும் இடையூறாகும்"!!! - பெரியார்!!!//
பெரியாரின் இந்தச் சிந்தனையை எப்போது எங்கு, யார் பதிவிட்டாலும் அதில் சில பின்னூட்டங்கள் அதிகம் இடப்படும்.
1.இயற்கைக்கு விரோதமாக பெரியார் யோசித்திருக்கிறார்.
2.இந்த அறிவுரையை பெரியாரின் தாய்க்கு சொல்லாமல் விட்டு விட்டார்கள்.
3. மனித இனமே அழிந்து விடும்.
கருக்கலைப்பு,கர்ப்பத்தடை,செயற்கைக் கருத்தரிப்பு எல்லாம் சாதாரணமாகி விட்ட காலத்திலும் இயற்கை விதி பேசுவது செம காமெடி.
மற்றபடி, பெண்கள் கர்ப்பத்தடையை அனுசரிக்க வேண்டியது அவசியம் என்கிற வரிகளை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்குவதற்குக் காரணமுண்டு.
குழந்தை வளர்ப்புக்காக, ஒரு பெண் தன் இயல்பை இழந்து புருஷனுக்கும் குடும்பத்திற்கும் அடிமையாகி விடுகிறாள் என்கிற வரிகள் நம் மனதைத் தொந்தரவு செய்கின்றன.
உடனே, நம் அன்றாட வாழ்வின் ஒழுங்கு குலையுமோ என்கிற ரகசிய அச்சம் எழுந்து விடுகிறது.
எனவே, இப்படி ஒரு கருத்தைச் சொல்ல வேண்டிய தேவை ஏன் எழுந்தது என்கிற கோணத்தில் சிந்திப்பதை விட,
இயற்கைக்கு விரோதமானதென முரட்டடி அடிக்கப் புறப்பட்டு விடுகிறது நம் மனம்.
குழந்தை பெற்றாலும் பெண்கள் தங்களின் சுதந்திரம், மானம், அறிவு உள்ளிட்டவற்றை இழக்க நேராத ஒரு சூழல் ஏன் இங்கில்லை என்று யோசிக்கத் துவங்குவதே சரியான அணுகுமுறை.
அதுதான், தற்சார்பற்று ஒடுக்கப்படும் பெண்கள் மீதான குடும்ப வன்முறைகள் பற்றி யோசிக்கத் தூண்டும்.
குழந்தை பெற்றே ஆக வேண்டும் அப்போதுதான் ஒரு பெண் முழுமையடைகிறாள் என்கிற கருத்து வன்முறை பெண்ணுடல் மீது செலுத்தப்படுவது தவிர்க்கப் படும்.
குழந்தைப் பேறு என்பது,சமூக/ குடும்ப அமைப்பின் அழுத்தத்தினால் அல்லாமல், ஒரு பெண்ணின் உள்ளார்ந்த விருப்பத்தினால் மட்டுமே நிகழ முடியும் என்கிற சூழல்தான் ஒரு வளர்ந்த சமூகத்திற்கான குறியீடாக இருக்க முடியும்.

Tuesday, July 17, 2018

காமராசரின் ஆட்சியே பெரியாரின் ஆட்சிதான்

காமராசரை திராவிடர் இயக்கத்திற்கு எதிராக நிறுத்தும் கைக்கூலிகளுக்கு

காமராசரின் ஆட்சியே பெரியாரின் ஆட்சிதான்

காமராசரும்,சுந்தரவடிவேலுவும் ஒரு தடவை டெல்லியில் இருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் வர நேரிட்டது,,,சுந்தர வடிவேலு அருகில் சென்று அமர்ந்து கொண்ட காமராஜர் தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டிய கல்வித் திட்டங்கள் பற்றி பேசிக்கொண்டே வந்தார்,,

`நாட்டுப்புற ஜனங்களுக்கு மேல் படிப்பு ரொம்ப சுலபமா கிடைக்கணும்,,அதுதான் முக்கியம். நகரத்திலே இருக்கிறவன் எவ்வளவு தொகை கொடுத்தும் படிப்பான்,, கிராமவாசி எங்க போவான்? அவனால் மெட்ராஸ்லேயெல்லாம் வந்து தங்கி படிக்கிறது கட்டுப்படி யாகாது'

 சாதாரண பள்ளிக்கூட படிப்புக்கே அவன் ஆடு,மாடு,கோழியெ ல்லாம் விக்க வேண்டியிருக்கு,,,மேல் படிப்பையெல்லாம் கிராமப்புற காலேஜ்களுக்கும் பரவலாக்குங்க,,, ஏழை வீட்டுப் பிள்ளைங்க அந்தந்த ஊர்லயே பெரியபடிப்பு படிக்கட்டும்” என்றார் காமராஜர்,,,

உடனே அதிகாரி சுந்தரவடிவேலு , இப்போது, கல்லூரிகளில் சேர்ந்து படிப்பவர்களில் நூற்றுக்கு அறுபது பேர்,பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள்” என்றார்,,, “அதைத்தானே நாம விரும்பினோம். அதுக்குத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டோம். ஒரு தலைமுறை படிச்சி மேல வந்துட்டான்னா அப்புறம் அவன் மூலம் அந்த கிராமமே மேல வந்திடுமில்லையா" என்றார் காமராஜர்,,

 அதற்கு சுந்தர வடிவேலு பதில் அளிக்கையில், நான் பெரியார் ஐயாகிட்டே இந்த விவரத்தைச் சொன்னேன். அவரு மிகுந்த மகிழ்ச்சியோடு இவ்வளவு க்கும் காரணம் காமராசர் தான், அவருக்குத்தான் தமிழன் கடன்பட்டிருக்கிறான்,,,அவர் மட்டும் இல்லேன்னா 1952-ல் இலேயே நம்ம தலைமுறையையே ஆச்சாரியார் குழிதோண்டிப் புதைத்திருப்பார்” என்று பெரியார் ஐயா சொன்னார் என்றார்,,,

உடனே காமராஜர், “அதுஎப்படின்னேன்? எல்லாம்பெரியார்ஐயாவாலேதானேநடக்குது,,,அவர்சொல்றார்நாமசெய்யிறோம்! #காரணகர்த்தா_அவருதானே…?

 இது1952இல்ஆரம்பிச்சபிரச்சனையாஎன்ன? #ஐயாயிரம்வருஷமாஇருக்கறதாச்சே,, தெய்வத்தின் பேராலேயும் மதத்தின் பேராலே யும் நம்மள ஒடுக்கி வச்சிட்டானே… இப்படி இருக்கிறது என் தலையெழுத்துன்னு சொல்லிட்டானே! இதப்பத்தி யார் கவலைப்பட்டார்?” “பெரியார்ஒருத்தர்தானேஎல்லாத்தையும்தலையில்எடுத்துப்போட்டுகிட்டுபண்ணிகிட்டிருக்கார்,,

அவருமட்டும்இல்லேன்னாநம்மபுள்ளைங்ககதிஎன்னவாகியிருக்கும்…? அத்தனைப்பேரும் கோவணத்தோட வயல்லே ஏரோட்டிக் கிட்டிருப்பான்…! இன்னிக்கு டெபிடி கலெக்டராகவும், ஜாயிண்ட் செகரட்டரியாவும்ல ஒக்காந்திருக்கான்…! நம்மகிட்ட அதிகாரம் இருக்கிறதாலே பெரியார்நெனச்சகாரியத்தஏதோகொஞ்சம்பண்ணிக்கொடுக்கிறோம்

அவருஎந்தஅதிகாரத்தையும்கையிலவச்சிக்காமஊர்ஊராதிரிஞ்சிசத்தம்போட்டுக்கிட்டுவராரு.! அவராலேதான்நமக்கெல்லாம்பெருமை…!” என்று உணர்ச்சி பொங்கக் காமராசர் கூறினார்.

“எவ்வளவு பெருந்தன்மை இவருக்கு! தான் செய்கிற எல்லா நலத் திட்டங்களையும் தந்தை_பெரியாருக்கே காணிக்கையாக்குகிற இவரது மேன்மைதான் என்னே?” என்று எண்ணி அதிகாரி சுந்தர வடிவேலு
 பூரித்துப்போனார்.


Tuesday, July 03, 2018

முதல்வர் அண்ணாவின் சிகிச்சைக்கு பணம் கொடுக்க தயாராக இருந்த அளவிற்கு பெரியாரிடம் பணம் இருந்ததா.?

முதல்வர் அண்ணாவின் சிகிச்சைக்கு பணம் கொடுக்க தயாராக இருந்த அளவிற்கு பெரியாரிடம் பணம் இருந்ததா.? என நண்பர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
oOo
அது அறிவினாவோ, அறியாவினாவோ, இல்லை பெரியாரின் நேர்மையை கேள்வி எழுப்புகிற ஐய வினாவோ நானறியேன்.
நான் சொன்னேன்.
oOo
ஆமாம், 1900 களிலே அந்த ஈரோட்டுப் பெரும் தனக்காரன், கோடிகளில் சொத்து பத்துகளை கொண்டிருந்தவன் .
முதல் வகுப்பு பயணசீட்டு வாங்கிக்கொடுத்தால்,
அந்த கஞ்சன்
அதை மாற்றி காசாக்கி கட்சி நிதியில் சேர்த்துவிட்டு
மூன்றாம் வகுப்பில் பயணித்து மிச்சம் பிடிப்பான்.
இரண்டு ரூபாய்க்கு காய்கறி வாங்கிவிட்டு , 1 அணாவுக்கு கறிவேப்பிலை வாங்கி வந்தவரிடம் , ஒரு அணாவை வீணாக்கிவிட்டாயே, கொசுறாக கறிவேப்பிலை வாங்கத்தெரியாத என்று கடிந்துகொள்வான்.
அந்த கஞ்சன் பெரியார் தான் அண்ணாவுக்கு சிகிச்சை பணம் தேவை என்றதும்,அரசை ஏன் கேட்கிறீர்கள் நான் தருகிறேன் என்று அள்ளிக்கொண்டு வந்தான்.
அதே போல் திருச்சியில் கல்லூரி கட்ட அரசுக்கு பல லட்சங்களையும் தன் நிலத்தையும் அள்ளிக்கொடுத்தான்.
ஈட்டத் தெரிந்தும், ஈட்டியதை அனுபவிக்க நாட்டமில்லாமல் தன்னைத், தன் பொருளை
இயக்கச் சொத்தாக்கி மக்களுக்குத் தந்துவிட்டுப் போனவன்.
அவனை கஞ்சனென்பது பிழை புரிதல்
அவன் தான் துறவி என்பது நன்றியறிதல்.

Friday, June 29, 2018

1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது கைதான பெரியார் நீதிமன்றத்தில் கொடுத்த எழுத்துப்பூர்வமான வாக்கு மூலத்தின் சில பகுதிகள்

1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது கைதான பெரியார் நீதிமன்றத்தில் கொடுத்த எழுத்துப்பூர்வமான வாக்கு மூலத்தின் சில பகுதிகள்:

“இந்தக் கோர்ட்டு காங்கிரசு அமைச்சர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்டது. நீதிபதியாகிய தாங்களும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவைதவிர இந்தி எதிர்ப்புக்கிளர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்பதில் காங்கிரசு அமைச்சர்கள் அதிதீவிர உணர்ச்சியுடன் உள்ளார்கள். அதுவிஷயத்தில் நியாயம் அநிநாயம் பார்க்க வேண்டியதில்லை என்றும், கையில்
கிடைத்த ஆயுதத்தைப் பயன்படுத்தி ஒழித்தாக வேண்டும் என்றும், இந்தி எதிர்ப்புகிளர்ச்சியைத் திடீரென்று வகுத்து புகுந்த திருடர்களுடன் ஒப்பிட்டும் மாண்புமிகு அமைச்சர்கடற்கரைக் கூட்டத்தில் பேசியுள்ளார். இந்தி எதிர்ப்பு விஷயத்தில் அமைச்சர்கள் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் அடக்குமுறையே என்பது என் கருத்து. அடக்குமுறைக் காலத்தில் இம்மாதிரிக் கோர்ட்டுகளில் நியாயம் எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம். இந்த இந்தி எதிர்ப்புக்கிளர்ச்சி ஒரு செயல் விளக்கம் (Demonstration) ஆக மேற்கொள்ளப்பெற்று வருகிறதேயொழிய அதில் எவ்வித நிர்ப்பந்தப்படுத்தும் கருத்தும் இல்லையென்று தெரிவித்துக் கொள்ளகிறேன். இந்தி எதிர்ப்புக்கிளர்ச்சி நிறுவனத்தின் கொள்கையில் சட்டம் மீறக்கூடாதென்பது முக்கிய நோக்கமாகும்.

நான் சம்பந்தப்பட்ட சுயமரியாதை இயக்கம், தமிழரியக்கம், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி, ஜஸ்டிஸ் இயக்கம் ஆகியவையும் சட்டத்திற்கு உட்பட்டே கிளர்ச்சி செய்ய வேண்டும் என்ற கொள்கையுடைவைகளே. இதுவரை அக்கொள்கை மாற்றப்படவே இல்லை. என்னுடைய பேச்சு முழுவதையும் படித்துப்பார்த்தால் இது தெளிவாகும். ஆகவே, நீதிமன்றத்தார் அவர்கள் தாங்கள் திருப்தி அடையும் வண்ணம் அல்லது அமைச்சர்கள் திருப்தி அடையும் வண்ணம் எவ்வளவு அதிகத் தண்டனை வழங்கமுடியுமோ அதையும், பழிவாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க முடியுமோ அதையும் கொடுத்து, வழக்கு விசாரணை நாடகத்தை முடித்து விடும்படி வணக்கமாகக் கேட்டுக் கொள்கிறேன்.”


....தொடரும்

-'பெரியார் சிந்தனைகள்' குறித்து பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் ஆற்றிய உரையிலிருந்து..

Sunday, May 27, 2018

பெரியார் ஒரு தொலைநோக்காளர் - பிராமணாள் சங்கம் vs தமிழ்ச்சங்கம்

ஃபெட்னா எனும் அமெரிக்க தமிழ்ப்பேரவையே மாஃபாய் பாண்டியராஜனுக்கு சொம்பு தூக்கும் ஒரு செமி-தமிழ்ச்சங்கம். அந்த செமி தமிழ்ச்சங்கத்தினர் நியூஜெர்சியில் உள்ள TNF தமிழ்ச்சங்க (TamilNadu Foundation) நிகழ்வில் கலந்து கொண்டு அந்த கரகாட்ட கோஷ்டியை இந்த கரகாட்ட கோஷ்டியின் நிகழ்வுக்கு அழைத்திருக்கிறார்கள். அப்போது ஃபெட்னா குழுவினர் தூத்துக்குடியில் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தலாம் எனச் சொல்கிறார்கள். உடனே அங்கிருக்கும் பார்ப்பனர்கள், "தேவையில்லை தேவையில்லை," என எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். உடனே ஃபெட்னா கோஷ்டியும், "சரி சரி சரி," என ஆமாம் சாமி போட்டு ஒப்புக்கொள்கிறது. நிற்க.
பார்ப்பனர்கள் தனி இனம். எந்தெந்த ஊருக்கு போகிறார்களோ அந்தந்த மொழியை பேசுவார்கள். தமிழ் பேசுவதால் சீமான் போன்ற 'அபிஷ்டுக்கள்' வேண்டுமானால் திருச்சி சங்கர் அப்பா சொன்னார், மைலாப்பூர் மணிரத்னம் அப்பா சொன்னார் (சங்கர் அப்பா என்பவர் சீமானுக்கு மூக்கில் விரலை வைக்கும் வரலாற்றுத் தகவல்களை எழுதிக்கொடுக்கும் பார்ப்பன வரலாற்று அறிஞர்.) என அவர்களை தமிழர்களாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அவர்களே அவர்களை மனதார தமிழர்களாகக் கருத மாட்டார்கள். வெளிநாடுகளிலும் சரி, நம்மூர் அப்பார்ட்மெண்டுகளிலும் சரி, குடியேறியவுடன் அவர்கள் 'தமிழ்ச்சங்கம்' என்ற பெயரில் சங்கம் வைப்பதே 'பிராமணாள் சங்கம்,' என வைத்தால் கேவலமாக இருக்கும் என்பதால்தானேயொழிய அதில் தமிழ்ப்பற்று ஒன்றும் கிடையாது. ஃபில்டர் காபியும், தயிர் சோறும் தமிழரின் பாரம்பரிய உணவுகள் என பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் 12 தமிழர்கள் உயிர் போனால் இரங்கல் கூட தெரிவிக்காத கொடூரர்கள். மீன்கறியைப் பார்த்தால் மூக்கை மூடுவார்கள். ஆட்டுக்கறியைப் பார்த்தால் கண்ணை மூடுவார்கள். ஆனால் மனிதக்கறி என்றால் ஒன்பது ஓட்டைகளிலும் அவர்களுக்கு எச்சில் ஊறும்.
நீங்களே சொல்லுங்கள். அனிதா மரணத்தில் இருந்து, கிருஷ்ணசாமி மரணத்தில் இருந்து, தூத்துக்குடி தமிழர் மரணம் வரை அவர்களின் கருத்துக்கள் எப்படியிருந்தன? அந்த 3% மட்டும் தனித்து தெரிந்தார்களா இல்லையா? காலம்காலமாக இதுதான் இவர்களின் குணம்.
தமிழ்ச்சங்கம், தமிழர் அடையாளம் எல்லாம் இவர்களுக்கு முகமூடி. Camouflage! அவர்களால் இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழராக ஆகவோ, உணரவோ முடியாது. (3% பார்ப்பனர்களில் 0.00003% மைக்ரோ மைனாரிட்டியாக சின்னக்குத்தூசி போன்ற சமூகநீதி போற்றும் பார்ப்பனர்கள் பிறப்பதுண்டு. அது விதிவிலக்கு). திராவிட இயக்கம் தமிழ்நாட்டில், தமிழருக்காக, தமிழர் முன்னேற்றத்திற்காக இயங்கினாலும், ஆயிரம் நன்மைகளைச் செய்திருந்தாலும் தமிழர் இயக்கம் என இயங்காது திராவிட இயக்கம் என இயங்கியதன் காரணம் இதுதான். தமிழர் இயக்கம் என இயங்கியிருந்தால் இந்நேரத்துக்கு அதுவும் நம்மூர் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ போலவோ, தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் போலவோ, நியூஜெர்சி தமிழ்ச்சங்கம் போலவோதான் ஆகியிருக்கும்!! பெரியார் ஒரு தொலைநோக்காளர்!!!

Monday, May 21, 2018

ஏனெனில், அவர் பெரியார்!

யார் இந்த பெரியார்? ஏன் அவரைப் பற்றி இன்றும் பேசுகிறோம்?
பெரியாரை இன்றைய தலைமுறையினர் சரியாகப் புரிந்து கொள்ள உதவும். படியுங்கள்.
"ஏனெனில்_அவர்_பெரியார்"
-----------------------------------
பெரியார் படத்தின் மீது, சிறுநீர் கழிக்கப்படுகிறது,....
செருப்பால் அடிக்கப்படுகிறது,....
இன்று அவர் இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைவார்; அவமானப்பட மாட்டார்.
அவரே சொன்னார்...
'பொதுத் தொண்டுக்கு வந்தவன், மானம் - அவமானம் பார்க்க முடியாது; மானம் பார்த்தால் தொண்டு செய்ய முடியாது!’
கடலூர் மஞ்சக்குப்பத்தில் கூட்டத்தை முடித்துவிட்டு, திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தை நோக்கி கைவண்டியில் பயணித்துக்கொண்டு இருந்தார் பெரியார். நள்ளிரவு நேரம். பகலிலேயே அவர் மீது கல், சாணி விழும். அனைத்தையும் பார்த்தும் பயம் இல்லாமல்தான் பேசுவார். ராத்திரி நேரத்தில் பயணம் செய்யும்போது சும்மா இருப்பார்களா? திடீரென, கயிறுபோல ஏதோ ஒன்று அவர் மேல் விழுந்தது. அது... பச்சைப் பாம்பு. எடுத்துத் தூக்கிப் போட்டுவிட்டு, வண்டியை வேகமாகச் செலுத்தச் சொன்னார். கொஞ்சம் தூரம் போனதும், வண்டியைத் திருப்பச் சொல்லி வந்த வழியே மீண்டும் போகச் சொன்னார். வண்டியை ஓட்டுபவருக்கு ஒன்றும் புரியவில்லை; உடன் வந்தவர்களுக்கும் ஒரு விவரமும் தெரியவில்லை. வண்டியைவிட்டு இறங்கிய பெரியார், காலால் தடவியவாறு இருட்டில் எதையோ தேடினார். ஒரு செருப்பு கிடந்தது. அதை கையில் எடுத்த பெரியார், 'அதுதானே பார்த்தேன்! நான் போகும்போது என் மேல ஒரு செருப்பு விழுந்தது. ஒரு செருப்பை வீசினவரால் இன்னொரு செருப்பை வெச்சுட்டு பிரயோஜனம் இல்லை. அதனால் அந்த இடத்துலதானே போட்டுட்டுப் போயிருக்கணும். அதை எடுக்கத்தான் வந்தேன்’ எனச் சொன்னார். அவர் மீது செருப்பு வீசப்பட்டதே மற்றவர்களுக்கு அப்போதுதான் தெரியும்.
30 ஆண்டுகள் கழிந்தது. செருப்பு வீசப்பட்ட அதே இடத்தில் பெரியாருக்கு வெண்கல சிலை வைக்கப்பட்டது. 'செருப்பொன்று வீசினால் சிலையொன்று முளைக்கும்’ என கவிஞர் கருணானந்தம் எழுதினார். பெரியாரின் 'ராசி’ இறப்புக்குப் பிறகும் செருப்பு மாலைகள்!
ஈரோட்டில் மளிகைக்கடை மண்டிவைத்து வெறும் ராமசாமி நாயக்கராக செல்வத்தில் புரண்டு கிடக்காமல், அவர் தலையெழுத்து... தமிழர்களுக்காக இரவும் பகலும் வெயிலிலும் மழையிலும் அலைந்து, குடல் இறக்கம் காரணமாக மாட்டு வயிறுபோல தொங்கிய தன் வயிற்றைத் தூக்கிக்கொண்டு திரிந்து, சிறுநீர் கழிக்க முடியாத நிலையிலும் மூத்திரச் சட்டியுடன் மேடையில் அமர்ந்து, சிறுநீர் பிரியும்போதெல்லாம் 'அம்மா... அம்மா...’ என மரண அவஸ்தைப்பட்டு, அந்தக் கிழவன் பாடுபட்டதன் வினை என்ன தெரியுமா? அவரது படத்துக்கு ஓர் இளைஞர் செய்கிறார் சிறுநீர் அபிஷேகம்!
'உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான்’ எனச் சொன்னவர் பெரியார். சாதியை எதுவெல்லாம் காப்பாற்றியதோ அதையெல்லாம் எதிர்த்து பிரசாரம் செய்தார். மதம், சாஸ்திரம், கடவுள் எதிர்ப்புக் கருத்துக்களை அவர் அதிகம் பேசியது அதனால்தான். 'எனக்கு கண்ணை உறுத்திக்கொண்டு இருப்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இழிதன்மைகள்தான். அவர்களைச் சுதந்திரம் அடையச் செய்வதே என் கண் நோய்க்கான தீர்வு’ என்பதைத் தெளிவாகச் சொன்னவர் அவர். அந்த லட்சியத்துக்காகப் பேசியவர்; போராடியவர். அதில் சிறுபகுதிதான் கடவுள் மறுப்பு. 'சாதியை மதம் காப்பாற்றுகிறது. மதத்தைக் கடவுள் படைத்தார் என்றால், அப்படிப்பட்ட கடவுளும் மதமும் தேவையா?’ என்றே அவர் கேட்டார்.
கடவுள் மறுப்பு வாசகங்களை, தன் சிலைக்குக் கீழே செதுக்கிவைத்திருக்கச் சொன்னதே, அவரது கிண்டலான எதிர்வினைதான். 'சும்மா சிலையை மட்டும் வைத்தால் சில ஆண்டுகளுக்குப் பின், இவர் ஏதோ சாமியார்போல என நினைத்து மாலை போட்டுக் கும்பிட ஆரம்பிச்சுருவான். அப்படி ஆகிவிட கூடாதுனுதான் இப்படி எழுதச் சொன்னேன்’ என்றார்.
கடவுள் இல்லை என நா தழும்பேறி நாத்திகத்தை பிரசாரம் செய்த பெரியார், கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவம் நிச்சயம் கவனிக்க வேண்டியது.
தான் நடத்திய அநாதை இல்லத்தில் பெரியார் உட்கார்ந்து இருந்தார். அவரைச் சந்திக்க வந்த கல்வி நெறியாளர் நெ.து.சுந்தரவடிவேலு பேசிக்கொண்டு இருந்தார். கடவுள் வாழ்த்து என்ற பாடலை அந்தப் பிள்ளைகள் வாசித்ததை நெ.து.சு. கவனித்து, 'உங்கள் பிள்ளைகள் மட்டும் கடவுள் வாழ்த்து படிக்கிறார்களே?’ என பெரியாரிடம் கேட்டார். 'ஆதரிக்க ஆள் இல்லாத அநாதைப் பிள்ளைகள் இவர்கள். சோறு போட்டுக் காப்பாற்றுகிறேன் என்பதற்காக நாத்திகத்தை அவர்கள் தலையில் திணிக்கவில்லை. வயதுவந்தால் அவர்கள் படித்துத் தெரிந்துகொள்வார்கள். தங்கள் சிந்தனையால் அவர்கள் நாத்திகர்களானால் சரி’ எனச் சொன்ன பண்பு, இன்று தமிழ்ச் சமூகத்திடம் இருக்கிறதா?
'என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு’ என்பதுதான் பெரியாரின் நடத்தை. தனது கருத்துக்கு எதிரானவர்கள் அனைவரையும் தன்னைவிட உயர்வாக மதித்தவர் அவர்.
சைவ நெறியாளரான மறைமலை அடிகளுக்கும் பெரியாருக்கும் கடுமையான மோதல்கள் நடந்தன. சைவ சமயக்கூட்டத்தில் இவரது ஆட்களும், சுயமரியாதை இயக்கக் கூட்டங்களில் சைவ சமயத்தவரும் மோதிக்கொள்வார்கள். ஒருகட்டத்தில் இரண்டு இயக்கத்தவருக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டது. மறைமலை அடிகள், பெரியாருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதை 'திராவிடன்’ இதழில் பிரசுரிக்கச் சொன்னார் பெரியார். ஆசிரியர் குழுவினர், 'மன்னிப்புக் கடிதம்’ எனத் தலைப்பிட்டு பிரசுரித்துவிட்டார்கள். துடித்துப்போன பெரியார், 'இந்தத் தலைப்புக்காக நிபந்தனை இல்லாமல் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்’ எனப் பகிரங்கமாகப் பணிந்தார்.
சைவப்பழமான திரு.வி.க-வுடன் பெரியாரின் நட்பு உருக்கமானது. 'நான் செத்தால் அழுவதற்கு என நீங்கள்தான் இருக்கிறீர்கள்’ என இறப்புக்குச் சில நாட்களுக்கு முன் பெரியாரிடம் சொன்னவர் திரு.வி.க. அவர் மறைந்தபோது தனது தொண்டர்களுடன் மயானக் கரைக்கு வந்தார் பெரியார். திராவிடர் கழகத்தினர், திரு.வி.க-வுக்குக் கொள்ளி வைக்கத் தயாராக இருந்தனர். அப்போது தமிழ் அறிஞர் களான அ.ச.ஞானசம்பந்தனும்
மு.வரதராசனாரும் வந்து, 'திரு.வி.க. எங்கள் இருவரைத்தான் கொள்ளி வைக்கச் சொல்லியிருக்கிறார்’ எனச் சொன்னார்கள். 'சரி’ என, தன் தொண்டர்களை அமைதியாக இருக்கச் சொன்னார் பெரியார். 'திருவாசகத்தில் சிவபுராணத்தைப் பாடப்போகிறோம்’ என அ.ச.ஞா சொன்னார். 'அப்படியே செய்யுங்க’ எனச் சொல்லிவிட்டு அவர்கள் பாடும்போது எழுந்து நின்றவர் பெரியார்.
கடவுளை மிகக் கடுமையாக விமர்சிக்கும் பெரியாரைச் சந்திக்க நினைக்கிறார் குன்றக்குடி அடிகளார். ஈரோடு வந்த அடிகளார், பெரியாரைச் சந்திக்க வருவதாகச் சொல்கிறார். 'நீங்கள் மகா சந்நிதானம். என்னைத் தேடிவரக் கூடாது. நானே வருகிறேன்’ எனச் சொல்லிவிட்டு பெரியார் சென்றார். அவரைப் பார்த்ததும் எழுந்து நின்றார் அடிகளார். 'மகா சந்நிதானம் எழுந்து நிற்கக் கூடாது’ எனச் சொல்லிவிட்டு அருகில் இருந்த நாற்காலியில் அமரப் போகிறார். 'இந்த இருக்கையில் இரண்டு பேர் உட்காரலாம். என் அருகில் உட்காருங்கள்’ என அடிகளார் சொல்ல, 'சந்நிதானத்துக்குச் சமமாக நான் உட்காரக் கூடாது’ என மறுத்தார். இருவரும் நீண்ட நேரம் பேசினார்கள். 'சாதியை உங்கள் கடவுளும் மதமும் ஒழிக்கவில்லையே’ என பெரியார் சொல்ல, 'சாதியை கடவுள் உருவாக்கவில்லை’ என அடிகளார் சொல்ல, 'ஆனால், உங்கள் கடவுள் அதைத் தட்டிக் கேட்கவில்லையே’ என பெரியார் சொல்ல... அந்தச் சந்திப்புதான் இருவரையும் சாதி எதிர்ப்புப் போராட்டங்களில் கரம் கோக்கவைத்தது.
அப்போது பெரியார் சொல்லி அடிகளார் குலுங்கிச் சிரித்த ஜோக்: 'எனக்கும் கடவுளுக்கும் என்ன முன்விரோதமா? நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை!’
அடிகளாரைப் பார்க்க, அவரது குன்றக்குடி மடத்துக்கே பெரியார் ஒருமுறை போனார். அவருக்கு வைதீகமாக பூரணக் கும்ப மரியாதை தரப்பட்டது. அடிகளார், மரியாதையின் அடையாளமாக விபூதியை எடுத்துப் பூசினார். பெரியார் அழிக்கவில்லை. சில நாட்கள் கழித்து பெரியாரிடம் ஒரு தொண்டர் கேட்டபோது, 'விபூதியை நான் எடுத்துப் பூசிக்கொள்ளவில்லை. அடிகளார்தான் பூசிவிட்டார். அப்போது தலையைத் திருப்புவது அவரை அவமதிப்பதுபோல் ஆகாதா?’ எனக் கேட்டார். அடுத்தவர் உணர்வுக்கு மரியாதை கொடுத்து நடந்தவரின் படத்தை இன்று சிறுநீரால் அவமதிக்கிறார்கள்.
பிராமண துவேஷி என அவர் தூற்றப்படுகிறார். உண்மையில், அவர் சாதி துவேஷிதானே தவிர, குறிப்பிட்ட ஒரு சாதியின் துவேஷி அல்ல. எல்லா சாதிகளையும் அதன் ஆணவத்தையும் கண்டித்தவர். சிலர் 'தங்களை ஆண்ட பரம்பரை’ எனச் சொன்னபோது, 'பட்டாளத்தில் இருந்த எல்லாரும் ஆண்ட பரம்பரைதான்’ என நெத்தியடி அடித்தவர். 'பறையர் பட்டம் போகாமல் சூத்திரர் பட்டம் போகாது’ என்றவர்.
அனைத்துக்கும் மேலாக தான் சார்ந்த சமூகத்தையே விமர்சிக்கத் தயங்காதவர். ஒருவன் தான் பிறந்த மதத்தை, தான் பிறந்த சாதியை விமர்சிப்பதற்குத்தான் வீரம் வேண்டும். நாயக்க மன்னர்களின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒரு கிராமத்தில் மரியாதைக் குறைவாக நடத்தியபோது, 'இரண்டு பேருக்கும் என்ன வித்திசாயம்?’ எனக் கேட்டவர். 'இந்து’ கஸ்தூரி சீனிவாசன், நியூஸ் ஏஜென்சியை ஆரம்பித்தபோது பணம் முதலீடு செய்தார். சிம்சன் அனந்த ராமகிருஷ்ணன் இயந்திரக் கலப்பையை உற்பத்தி செய்தபோது பார்க்கப் போனார்.
மகா பெரியவர் காஞ்சி சந்திரசேகர ஸ்வாமிகள் மயிலாப்பூருக்கு வந்தபோது, திராவிடர் கழகத்தினர் அங்கு குழும, ரசபாச சூழல் ஏற்பட்டது. அரை மணி நேரத்தில் அந்த இடத்துக்கு வந்த பெரியார், 'பெரியவருக்குப் பாதுகாப்பு கொடுக்கவேண்டியது உங்கள் வேலை’ என தி.க-வினருக்கு அறிவுறுத்தினார்.
கவியோகி சுத்தானந்த பாரதி தனது வீட்டுக்கு வந்தபோது, பூட்டப்பட்டுக் கிடந்த பூஜை அறையைத் திறந்துவிட்டு, தட்டில் பூ கொண்டுவைத்தவர் பெரியார். வடலூர் சத்தியஞான சபைக்கு வந்தார். ஒருகட்டம் வரை வந்தவர் ஜோதி எரிந்துகொண்டிருக்கும் இடத்துக்குள் நுழைய மறுத்தார். அங்கே, 'கொலை, புலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே வரவும்’ என எழுதப்பட்டிருந்தது. எவ்வளவோ வலியுறுத்தினார்கள். 'நான் எல்லா அசைவ உணவையும் சாப்பிடுபவன். உள்ளே வர மாட்டேன்’ என மறுத்த மாண்பாளர்.
அவரது படத்துக்கா இன்று சிறுநீர் கழிப்புகள்?
அந்தக் காலத்தில் மாலி என்பவர் 'கடவுள் எங்கே?’ என்ற தலைப்பில் நாடகம் நடத்தினார். பெரியாரைக் கடுமையாகத் திட்டிய நாடகம் அது. ம.பொ.சி-யின் நண்பர் அவர். பெரியாரைச் சந்திக்கப் போன ம.பொ.சி., தன்னோடு மாலியையும் அழைத்துப்போய் அறிமுகப்படுத்தினார். ' 'கடவுள் எங்கே?’ நாடகம் போட்ட பையனா நீ?’ எனக் கேட்டார். 'உங்களை எதிர்த்து அதில் நிறைய வசனங்கள் வருது’ என்றார் மாலி. 'அதனால் என்ன... உன் கருத்தை நீ சொல்ற... என் கருத்தை நான் சொல்றேன். இதுல தப்பு ஒண்ணும் இல்லை. மக்கள் முடிவு பண்ணிப்பாங்க’ என இந்தச் சமூகத்தில் தனக்கு எவ்வளவு உரிமையை எடுத்துக்கொண்டாரோ, அதே உரிமையை தனது கொள்கை எதிரிக்கும் வழங்கினார். ஆனால், அவர் எந்த மரியாதையை மற்றவர்களுக்குக் கொடுத்தாரோ அது அவருக்குத் திரும்பக் கிடைக்கவில்லை. அதைப் பெரியார் எதிர்பார்த்தவரும் அல்ல. 'மனித ஜீவனிடம் நன்றியை எதிர்பார்ப்பது அறிவில்லாத தன்மை’ எனச் சொன்ன அவர், 'எனக்கு யாரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்றும் சொன்னார்.
ஏனெனில், அவர் பெரியார்!

Tuesday, May 15, 2018

பெரியார் இல்லையென்றால் இவனுங்க தலை நிமிர்ந்திருக்க முடியாது

நேற்று பேருந்து பயணத்தின் போது ஒரு முதியவர் அருகில் வந்தமர்ந்தார். சற்றே நீண்ட பயணத்தை அவர் தனியாக மேற்கொண்டார். அவரது பெயர் ராமஜெயம். தமிழ் அய்யங்கார் குடும்பம் என்பதை அவரது நெற்றிக்கோடுகள் அறிவித்து கொண்டிருந்தன. தமிழ் வித்வான். அரசு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். 1987–ம் வருடத்திலேயே ஓய்வு பெற்றுள்ளார். 31 வருடங்கள் கடந்து விட்டதை ஆச்சரியத்துடன் பகிர்ந்தார். ஓய்வூதியம் 38,000 ரூபாய் பெற்று வருகிறார். தனது பெயர் பள்ளியில் ஒரு பலகையில் பொறிக்கப்பட்டிருக்கும் என்றார். பள்ளியில் எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை என்றார். ஆனால் அது அவரது புகாரில்லை. அவர் மிகவும் நிறைவாக காணப்பட்டார். 89 வயது அவருக்கு. அவருடைய பேரக்குழந்தைகளே பெரிய ஆளாகி விட்டார்கள். காஞ்சிபுரத்தில் இருக்கும் தனது மகள் வழி பேரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு தான் சென்று கொண்டிருந்தார். பெருமாள் அனுக்கிரகத்தால் எந்த நோயும் இல்லை. அதனால் தனியே போக பயமில்லை என்றார். அயன் மாத்திரையாவது எடுத்து கொள்ளுங்கள் என்று மருத்துவர் கேட்டதற்கு கீரைகளில் அதை பெற்று விடுகிறேன் என்றுள்ளார். விடைபெறும் நேரத்தில் அவர் வேலை பார்த்த பள்ளியின் பெயரை கேட்டேன். ஈ.வெ.ரா–நாகம்மை பள்ளி என்றார். ‘அவர்(பெரியார்) ஏதோ அந்த காலத்தில் டொனேஷன் கொடுத்துள்ளார்’ என்று கூறினார். நான் சற்று இடைவெளி விட்டு ‘பெரியார் பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என்று கேட்டேன். சற்று யோசித்தவாறு, ‘பழமைகளை ஒழித்து புதுமைகளை கொண்டு வந்தவர். தமிழர்களுக்கு தன்மானத்தை ஊட்டியவர். பெரிய துணிச்சல்காரர்’ என்றெல்லாம் புகழ்ந்தார். பெரியாருக்கு பாராட்டுரை என்பது புதிதல்ல. யாரிடமிருந்து அது வருகிறது என்பது முக்கியம் தானே. 1987–ல் அந்த முதியவர் ஓய்வு பெறும் போது 4000 பேர் அப்பள்ளியில் படித்ததாக கூறினார். கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சமூகநீதி கொள்கை நிலைநாட்டப்பட போராடியதோடு பள்ளிக்கூடங்களை சொந்த காசில் கட்டி தமிழர்கள் படிக்க நேரடி உதவியும் செய்துள்ளார். ராமஜெயம் அய்யங்காருக்கு தெரிந்திருக்கிறது — பெரியார் இல்லையென்றால் இவனுங்க தலை நிமிர்ந்திருக்க முடியாதென்று. இன்று மத்தியதர வர்க்க வாழ்க்கையை சுவைத்து கொண்டிருக்கும் முன்பு கல்வி மறுக்கப்பட்ட சூத்திரர்கள் எத்தனை பேருக்கு நன்றி உணர்ச்சி உள்ளது?


Wednesday, May 02, 2018

இந்துக்கள் வீடு vs வெள்ளைக்காரன் வீடு

இந்துக்கள் வீட்டில் பஞ்சாங்கம் இருக்கும். வெள்ளைக்காரன் வீட்டில் அட்லஸ் இருக்கும். வெள்ளைக்காரன் வீட்டில் சின்ன நூல்நிலையம் இருக்கும். இந்துக்கள் வீட்டில் . பூசையறை இருக்கும். படிப்பதற்கு தனீயறை வைத்திருப்பது வெள்ளைக்காரனுடைய பண்பாடு. ஆன காரணத்தினால்தான் உலகில் கண்டுபிடிக்கப்பட்ட யந்திரங்கள், கருவிகளில் 99 விழுக்காடு மேற்குல நாட்டுக்காரன்தான் கண்டுபிடித்தவைதான்.தமிழன் கண்டு பிடித்த ஒரு கண்டுபிடிப்பைச் சொல்லுங்கள் பார்க்கலாம்? அது அவனது குருதியில் இல்லை. மழை வேண்டுமா? உடனே யாகம் செய்கிறான். பிள்ளை இல்லையா? அதற்கும் யாகம் செய்கிறான். திருமணமாகவில்லையா? அதற்கும் யாகம் இருக்கிறது! ஆனால் மழை பெய்கிறதா என்றால் இல்லை. பிள்ளை பிறக்கிறதா என்றால் அதுவும் இல்லை.ஆனால் இன்னறைய மருத்துவர்கள் மலட்டுத் தன்மைக்கான காரணங்களைக் கண்டுபிடித்து நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு அதனை நீக்குகிறார்கள்.

Friday, April 20, 2018

முதல்வர் ஆனதும் பெரியாரை காண காமராஜர் வருகிறார்

முதல்வர் ஆனதும் பெரியாரை காண காமராஜர் வருகிறார்.
ஐயா முதல்வர் ஆகிவிட்டேன் உங்களுடைய வேண்டுகோள் என்ன என்று காமராஜர் கேட்கிறார்.
இந்து சமய அறநிலையத் துறைக்கு மந்திரியாக ஒரு தாழ்த்தப்பட்டவரை நியமியுங்கள் என்கிறார்.
திரு. பரமேஸ்வரன் என்ற இளைஞரை காமராஜர் மந்திரியாக்குகிறார்.
இதை அண்ணா புகழ்ந்து எழுதுகிறார்;
பரமேஸ்வரன் மந்திரியானதும்
ஸ்ரீரங்க நாதரும் தில்லை நடராஜரும் பதறிய காட்சி கண்டேன், அந்த மாட்சி கண்டேன் என்றார்,
இதோ என் இனத்தைச்சேர்ந்த இளைஞன் ஆலயத்தினுள் அமர்ந்துவிட்டான் இதற்கு பெரியாரே காரணம் என்று அம்பேத்கர் மகிழ்ந்து கடிதம் எழுதினார். இது இந்தியாவில் எங்கேயாவது நடக்குமா அது பெரியார் மண்ணில்தான் சாத்தியம் ஆகும் என்றார்.
இதுதான் தி.க, திமுக, காமராஜர், அம்பேத்கர் வரலாறு.
இன்று காமராஜரும், அம்பேத்கரும் இல்லை.
ஆனால் தி.கவும், திமுகவும் இருக்கிறது, கடந்த காலம் போலவே, இப்போதும் செயல்படுகிறது.

Friday, January 26, 2018

பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார்

//பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார் - பிஜேபி RSS அடிவருடிகள் //
ஆமாம், அந்த காலகட்டத்தில் பழைமையான மொழி, நவீன காலத்துக்கு ஏற்ப்ப மாற்றமடையாத மொழி என்ற அர்த்தத்தில் பெரியார் சொன்னார்..
அவர் சொன்னது, வெறும் தமிழ் மொழி பற்று, மொழியில் புலமை மட்டும்மே, தமிழினத்தை உயர்த்திவிடாது.. ஆங்கில அறிவு & கல்வி அவசியம், அப்போது தான், தமிழர் வாழ்வு ஏற்றமடையும்.. இன்றைய நிலையை பார்த்தால், பெரியாரின் தொலைநோக்கு புரிகிறது.. தமிழ்நாட்டினர் பிற மாநிலத்தவர்களைவிட கூடுதலாக பெற்றுள்ள ஆங்கில மொழி அறிவால்தான், கணிணி & தொழில்நுட்ப வேலைகளி்ல் கோலோச்சுகிறார்கள்..
சரி, அந்த பொரியார், திருக்குறள் மாநாடெல்லாம் நடத்தியிருக்கிறார்..
பொங்கல் பண்டிகையை தமிழரின் கலாசார பண்பாட்டு விழாவாக அனைவரும் கொண்டாடவேண்டும் என்று வலியுறுத்தியவர் பெரியார்...
திருக்குறள் மாநாட்டை முதன்முதலில் நடத்தி, பார்ப்பனர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்த குறளை, அனைவரும் அறியசெய்தவர் பெரியார்...
தமிழ் எழுத்து சீர்திருத்தம் செய்து, இன்றைய காலத்துக்கு ஏற்றமுறையில் நவீனப்படுதியவர் பெரியார்... நமஸ்காரம் போய் வணக்கம் வந்த்து பொரியாரின் திராவிட சுயமரியாதை இயக்கத்தால்.. இதுபோன்று தமிழில் கலந்து, கெடுத்திருந்த பல சமஸ்கிருத சொற்களுக்கு பதிலாக, தமிழ் சொற்களை பழக்கத்திற்கு கொண்டுவந்தது, பெரியாரின் திராவிட சுயமரியாதை இயக்கம்..
அனைத்துக்கும் மேலாக தமிழர்களுக்கு சுயமரியாதையை ஊட்டியவர், தமிழ் மொழியை அழிக்கவந்த ஹிந்தி & சம்ஸ்கிருத ஆதிக்கங்களை எதிர்த்து போர்முழக்கம் செய்தவர், மூடபழக்கவழக்கங்களை ஒழிக்க பாடுபட்டவர், பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் முன்னேற்றம் கொடுக்கும் இடஒதுக்கீட்டை சட்டபூர்வமாக்க காரணமானவர் தந்தை பெரியார்.....
ஆனால், உங்க பெரியவா காஞ்சி சங்கராச்சாரி தீய குறளை ஓதக் கூடாது என்ற பொருளில் தீக்குறளை ஓத மாட்டோம் என்கிறார்... நீச பாஷை என தமிழை இழிவுபடுத்துகிறார்.. தமிழ் கடவுள் முருகனுக்கு கூட தமிழில் அர்ச்சனை செய்தால் புரியாது, சமஸ்கிருத அர்ச்சனைதான் தேவை என்கிறார்..

Friday, January 12, 2018

ஒடிசி & தாமரை தின்னிகள் :: பெரியார் & தமிழக மக்கள்



Theodoor van Thulden என்ற டச்சு ஒவியர் 1632 ஆம் வருடம் வரைந்த ஒவியம்.
இதில் கிரேக்க காப்பியமான ஒடிசியில், ஒடிசி மன்னன் அவன் நண்பர்களை, கூட பயணம் செய்பவர்களை “தாமரை தின்னி” போதையாளர்களிடம் இருந்து மீட்டு வரும் காட்சியை ஒவியர் வரைந்திருக்கிறார்.
ட்ராய் நகரத்து போர் முடிந்ததும் ஒடிசி மன்னன் தன் சொந்த ஊருக்கு திரும்பும் போது நிறைய கடற்பயண சவால்களை சந்திக்கிறான்.
அதுதான் ஒடிசி கதை. அப்படி தன் சகாக்களோடு வரும் போது தாமரை தின்னிகள் இருக்கும் தீவுக்கு அவன் கப்பல் ஒதுங்குகிறது. தீவில் யார் என்று பார்த்து வர இருவரை முதலில் அனுப்புகிறான்.
அவர்கள் திரும்ப வில்லை.
அவர்களை பார்க்க இன்னும் சிலரை அனுப்புகிறான்.
அவர்களும் திரும்பவில்லை. என்ன இது போனவர்கள் போனவர்களாக இருக்கிறார்களே என்று ஒடிசி அவனே சென்று என்ன விஷயம் என்று பார்க்கப் போகிறான்.
அங்கே அவன் “தாமரை தின்னிகள்” (Lotus Eaters) மனிதர்களைப் பார்க்கிறான்.
அவர்கள் அந்த தீவில் இருக்கும் ஒரு தனித்துவமான நீர்தாவரத்தின் பூவை தின்று கொண்டு இருக்கிறார்கள். அது அவர்களுக்கு போதை ஊட்டுவதாய் இருக்கிறது.
அதை சாப்பிட்டவர்கள் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
ஊரில் உள்ள மனைவி குழந்தைகளை மறக்கிறார்கள். தாங்கள் இனி எங்கும் போக வேண்டாம் அந்த தாமரை தின்னி தீவிலேயே அப்பூக்களை பறித்து தின்று போதையிலேயே இருக்கலாம் என்று முடிவு செய்து மயங்கிக் கிடக்கிறார்கள்.
அவர்களிடம் ஒடிசி எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறான்.
அந்த பூக்களின் போதை அவர்களை விடுவதாய் இல்லை. ஒடிசி சொல்வதை கேட்கவில்லை. வேறு வழியில்லாமல் ஒடிசி அவர்கள் மண்டையில் தட்டி உச்சி முடியை பிடித்து இழுத்து வந்து கப்பல் ஏற்றி அந்த போதையிலிருந்து, போதை சிந்தனையில் இருந்து காப்பாற்றுகிறான்.
கப்பலில் ஏறி போதை தெளிந்த பிறகுதான் அவர்களுக்கு ஒடிசி எவ்வளவு நன்மை செய்தான் என்று தெரிகிறது.
அந்த ஒடிசி மன்னன் நிலையில்தான் தமிழ்நாட்டில் பெரியாரும் இருந்தார்.
தமிழக மக்கள் மத மூடநம்பிக்கை என்னும் தாமரை தின்னிகளாக இருந்தார்கள். தமிழக மக்கள் சாதி என்னும் தாமரை தின்னிகளாக இருந்தார்கள்.
தமிழக ஆண்கள் பெண்களை ஆதிக்கம் செலுத்தும் தாமரை தின்னிகளாக இருந்தார்கள்.
தமிழக பெண்கள் ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதை ரசிக்கும் தாமரை தின்னிகளாக இருந்தார்கள். இந்த சாதி மத ஆணாதிக்க போதைப் பூக்களை தின்று “அனைவரும் சமம்” என்ற குறிக்கோளை அடையத் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் போது பெரியார் தன்னால் முடிந்த மட்டும் மக்களின் முடியை பிடித்து இழுத்து பகுத்தறிவு கப்பலில் ஏற்றி விட்டார். ஒடிசி கதையில் ஒடிசியின் தாமரை தின்னி மயக்க நண்பர்கள் எண்ணிக்கை அளவில் குறைந்தவர்கள். அதனால் அவன் ஒருவனால் இழுத்து கப்பலில் ஏற்ற முடிகிறது. ஆனால் பெரியார் விஷயத்தில் நாலு கோடி மக்கள் தாமரை தின்னிகளாக இருந்தார்கள்.
பெரியார் தன் 94 வயது வரை தன்னால் முடிந்த மட்டும் மக்களை கப்பலில் பகுத்தறிவு ஏற்றி விட்டார்.
ஆனால் முழுமையாய் அவரால் ஏற்றி விட முடியவில்லை. அது பெரியாருடைய தோல்வி இல்லை. பெரியாரால் அனைவரையும் பகுத்தறிவு கப்பலில் ஏற்ற முடியவில்லை என்பதைச் சொல்லி ரசிப்பது முட்டாள்தனம்.
பெரியாரின் பணியை நாம் ஒவ்வொருவரும் இங்கே செய்ய வேண்டும்.
நம் அருகில் இருக்கும் குடும்பதில் இருக்கும் தாமரை தின்னிகள்,
நண்பர்கள் வடிவத்தில் இருக்கும் தாமரை தின்னிகள்,
அருகில் பயணம் செய்யும் தாமரை தின்னிகள் என்று அனைவரையும் பகுத்தறிவு கப்பலில் ஏற்றி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
அப்படி அவர்களை விழிப்படைய வைத்து பகுத்தறிவு கப்பலில் ஏற்றி விடும் போது போதையில் இருக்கும் அந்த தாமரை தின்னிகளே நம்மை கிண்டலும் செய்வார்கள்தான்.
“உங்க பெரியாரால ஒண்ணும் செய்ய முடியலையே. எல்லாத்தையும். நீ என்ன செய்துரப் போற “ என்பார்கள்தாம்.
அதற்காக நாம் சோர்ந்து விடக் கூடாது.
பெரும்பான்மையானவராக இருப்பதாலே நாங்கள் சரியானவர்கள் என்று அவர்கள் சொல்வது தவறு என்ற தெளிவு பகுத்தறிவு பேசும் இளைஞனுக்கு இருக்க வேண்டும்.
அவர்கள் கிண்டல் மொழிக்காக எல்லாம் அவர்களை பகுத்தறிவு கப்பலில் ஏற்றாமல் இருக்க கூடாது.
ஏற்றி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
பெரியார் இப்போது நம்மிடையே இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் இவர்களை எப்படி பகுத்தறிவு கப்பலில் ஏற்ற வேண்டும் என்ற வழிமுறையை அவர் எழுத்தில் பேச்சில் சொல்லி வைத்திருக்கிறார்.
பெரியாரை இன்னும் இன்னும் ஆழமாக படிப்போம்.
அவர் சொன்ன வழியில் வாழ்க்கையில் குறைந்தது ஒரு தாமரை தின்னியையாவது போதையில் இருந்து மீட்டு பகுத்தறிவு கப்பலில் ஏற்றிவிடுவோம்.
பெரியாரை படிப்போம்.
சலிக்காமல் பேசிக் கொண்டே இருப்போம்.

Thursday, January 04, 2018

கடவுள் மறுப்பை பெரியார் கையில் எடுத்த காரணம்

கடவுள் மறுப்பை, பெரியார் கையில் எடுத்த காரணம், "மக்கள் தன்னை திரும்பிப் பார்க்கவேண்டும்
என்பதே" என்ற ஒரு நண்பரின் குற்றச்சாட்டிற்கு பதில்
-
அறிந்து சிந்திக்கிறவர் எவரும் பெரியாரின் கடவுள் மறுப்பின் ஆதாரம் புரிந்தால் பெரியார் கருத்தை மறுக்கவே முடியாது.
-
மனிதனை பிரிக்கின்ற , மனிதர்களுக்கிடையில் சமத்துவமற்ற எந்த ஒரு வேற்றுமையையும் சாடியவர் பெரியார்.
அது பாலினம், மதம், சாதி, பொருளாதாரம் உட்பட்ட என்ன காரணமாக இருந்தாலும் ஒரு மனிதன் மேல் இன்னோர் மனிதன் செய்கின்ற ஆதிக்கத்தை தகர்த்தே தீரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் பெரியார்.
.
வர்ணாசிரமத்தின் அடித்தளத்தில் உருவான இந்துமதம், நால்வகை பிரிவுகளை வைத்து மனிதனை பிறப்பின் அடிப்படையிலே சமத்துவமற்றவனாக வைத்திருந்தது.
அம்பேத்கர் இந்துமதத்தின் கொடும்பிணியை தெளிவாய்ச் சொன்னார்.
"இந்து மதம் என்பது பல அடுக்குகள் கொண்ட மாளிகை;
ஒரு அடுக்குக்கும் இன்னொரு அடுக்குக்கும் படிக்கட்டும் இல்லை வாசலும் இல்லை ஒரு அடுக்கில் பிறந்தவன் அதிலே சாக வேண்டும். வேற அடுக்குக்கு போகவும் முடியாது வெளியே வரவும் முடியாது" என்று .
-
அந்த வர்ணாசிரமத்தை, சாதியை எதிர்க்கிற பெரியார் அதன் அடியோடு அடியாக இழைந்து கிடந்த கடவுளையும் எதிர்க்கவேண்டிய கட்டாயம் வந்தது.

சாதியில் இருந்து உன் மதத்தை , கடவுளை பிரித்துக் கொண்டு போக உன்னால் முடியுமானால், பிரித்துக்கொண்டு போ அதில் எனக்கு எந்த வேறுபாடும் இல்லை.
உன் மதம், உன் கடவுள் சாதியோடு, வர்ணாசிரமத்தோடு தான் பின்னிக்
கிடப்பார் என்றால் அதை எதிர்த்தே தீருவேன் என்று சொன்னார்.
மூடநம்பிக்கைகளும் , கொடூரமான பழக்கவழக்கங்களும் மதத்தின் பேரால் தான் மக்கள் வாழ்விலே திணிக்கப்பட்டன என்பதை அறிவுடையோர் அறிவர்.
-
"ஒடுக்கபட்டவரை தாங்கள்
ஒடுக்கப்பட்டது சரிதான் என்று எண்ணவைக்கிற அமைப்பு தான் மதம்" என்ற வழக்கின் படியும், மதத்தை எதிர்த்தே ஆகவேண்டியதும் அவசியம்.
இவை எல்லாம் அறிந்திருந்தும், தெளிவான சிந்தனை இன்றி, வெறுமனே மக்களை திரும்பிப் பார்க்க வைக்க இறைமறுப்பை வலியுறுத்தியதாக சித்தரிக்க முயல்வது அறிவுடைமை ஆகாது.
மேலும், பெரியாரின் வழி நடப்பவர்களை பலர் அவ்வப்போது தேச துரோகிகள் என்று சொல்வதுண்டு.
அது என்னவோ உண்மை தான்,.
நாங்கள் மனிதனை தவிர வேறு எதன் மீதும் பற்றுகொண்டவர்கள் அல்ல. தேசமோ, மொழியோ, மதமோ , சாதியோ, மனிதனை பிரிக்கும் எனில் அவற்றிக்கு எல்லாம் நாங்கள் துரோகிகளாவே இருக்க ஆவலுறுகிறோம்

வரலாற்று நிகழ்வுகள்.

மும்பையில் வசித்த அண்ணல் அம்பேத்கரை சந்திக்க அன்று பெரும் பதவி வகித்த சி.பி.ராமசாமி ஐயர் நேரில் வந்துக்கொண்டிருந்தாக தகவல் வருகிறது, உடனே தன் உதவியாளரை அழைத்து அண்ணல் தான் எப்போதும் வாசித்த பின்பு பழைய தினசரிகளில் கத்தரித்து வைத்த காகிதங்களை ஒரு குறிப்பிட்ட பையில் இருப்பதை உடனே எடுத்து வரச்சொல்கிறார். அது 12 வருடத்திற்கு முந்தைய நாளிதழில் கத்தரித்த துண்டு அது.அதில் இருந்த செய்தி என்னவெனில்,கோயில் நுழைவு போராட்டத்தை எதிர்த்தும்,தீண்டாமையை ஆதரித்தும் அன்றைய காலகட்டத்தில் சி.பி.ராமசாமி ஐயர் பேசிய பேச்சு அது.மேற்கண்ட ஐயர் அண்ணலின் வீட்டுக்கு வந்தவுடன் அவரிடம் அந்த நாளிதழ் கத்தரிப்பை அவரிடமே காட்டி தீண்டாமையை ஆதரிக்கும் உங்களிடம் பேச எனக்கு ஒன்றுமில்லை முகத்திற்கு நேராக கூறி திருப்பி அனுப்பி கடுமையாக பார்ப்பனிய ஆதிக்கத்தை எதிர்த்தவர் வடக்கின் அறிவாசான் புரட்சியாளர் அம்பேத்கர்,
தாழ்த்தப்பட்ட மக்கள் கூலி உயர்வு கேட்ட ஒரே காரணத்திற்காக பலர் உயிரோடு எரிக்கப்பட்ட நிகழ்வான கீழ்வெண்மணிப் படுகொலைகள் நடந்த பின் அதனை முன்னின்று நடத்திய கோபாலகிருஷ்ண நாயுடு பெரியாரை தேடி அவரின் வீட்டுக்கு வந்தபோது அந்த கேடுகெட்ட மனிதனை சந்திக்க மறுத்து உன்னை நீதிமன்றத்தில் சந்திக்கிறேன் என திருப்பி அனுப்பியவர் தெற்கின் அறிவாசான் தந்தை பெரியார்.
இருவரும் எந்தவித தகவல் தொடர்புகள் அற்ற அந்த காலகட்டத்தில் வெகுதூரத்தில் இருந்தாலும் ஒத்த கருத்தோடு ஆதிக்கத்திற்கு எதிராக எந்தவித தயவுமின்றி துரத்தியடித்தது வரலாற்று சிறப்பு மிக்க துணிவான செயல்களே.
இன்று அந்த இருவரையும் தான் பல வழிகளிலும் துண்டாட துடிக்கிறது பார்ப்பனிய சக்திகள்.

Wednesday, January 03, 2018

பெரியார் அரசியல்

பெரியார் சொல்கிறார், "எனக்கும் என் கொள்கைக்கும் யார் நெருக்கமாக , யார் ஒத்து வருகிறார்களோ அவர்களை ஆதரிப்பேன். அவர்களை வைத்து என் கொள்கைகளை ஆனவரை நிறைவேற்றிக் கொள்ளப் பார்ப்பேன். ஒத்துவரவில்லை அந்த ஆட்சியை அகற்ற தெருவில் இறங்கி போராடுவேன்." இதுதான் பெரியார் அரசியல். ஜனநாயகத்தை, அதன் எல்லைகளை எவ்வளவு அழகாகப் புரிந்து வைத்திருக்கிறார். பெரியாரின் அத்தனை ஆண்டுகால அரசியலையும் பார்த்தீர்கள் என்றால் அவர் எந்த காலகட்டத்திலுமே ஓட்டரசியல் கட்சிகளை, "எல்லாமே ஒன்னுதான். யாரையுமே நம்பாதே. நான் மட்டும்தான் நல்லவன்," என 'நடுநிலை' வகிக்கிறேன் என்கிற பெயரில் சொன்னதில்லை. ஏனெனில் அதனால் மக்களுக்கு யாதொரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்பதை அறிந்திருந்ததால், ஓட்டுக்கட்சிகளின் எல்லைகள் புரிந்தாலும் எப்போதுமே ஏதாவது ஒரு பக்கம் தன் ஆதரவை தந்தபடியேதான் இருந்திருக்கிறார். நேரம் வரும்போது குத்தியபடியேதான் இருந்திருக்கிறார்.
ஆனால் இன்று பெரியாரியர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் பலரும் மக்களுக்கு எது நல்லது, மக்களுக்கு எது பரவாயில்லை என ஆராய்ந்து சார்புநிலை எடுக்காமல், தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்வதிலேயே முனைப்பாக இருக்கிறார்கள்.
என்னிடம் பலர் கேட்பார்கள். நீங்கள் திமுக சார்பாக எழுதாமல் நடுநிலையாக எழுதினால் இன்னும் நல்ல பேர் கிடைக்குமே. உங்கள் அரசியலை நிலைப்பாட்டைத் தாண்டி உங்கள் எழுத்தின்மேல் பலருக்கு மரியாதையுள்ளது என்று. நானும் ஒரு பதிவில்/ஒரு கட்டுரையில் அதிமுக/திமுகவை மாறிமாறி திட்டலாம்தான். "நான் நடுநிலை, நான் நடுநிலை," எனக் காட்டிக்கொள்ளலாம்தான். "அசோக் நடுநிலையா எழுதுவாருப்பா," என்கிற பெயர் வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால் மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்றால் ஜனநாயகத்தில் நடுநிலையை வைத்து நாக்கு கூட வழிக்க முடியாது. இங்கே ஒரு பக்க சார்பு எடுக்காமல் நடுநிலையாக இருப்பதைப் போன்ற அயோக்கியத்தனம், மக்கள் விரோதம் வேறொன்றும் இல்லை.
ஆனால் எவ்வளவு சொன்னாலும் so called பெரியாரியர்கள், அம்பேத்கரியர்கள் காதிலேயே வாங்குவதில்லை. "அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்," என கூவிவிட்டு சென்றுவிடுவார்கள். ஏனெனில் இங்கே மக்களுக்கு நல்லது நினைப்பதைவிட நல்லவனாய் காட்டிக்கொள்ளுதல் முக்கியமாகிவிட்டது.