Showing posts with label சாதி. Show all posts
Showing posts with label சாதி. Show all posts

Monday, July 16, 2018

கடைக்குட்டிச்சிங்கம்.

இந்துத்துவாவில் கடைந்தெடுத்த சிங்கம்//
ஜாதியை நிலைநிறுத்தும் ரேக்ளாபந்தயப் போதையுடன் படம் தொடங்குகிறது. கதாநாயகனின் சகோதரிகள் எல்லோருக்கும் வேலுநாச்சியார், சம்யுக்தா, பத்மாவதி, ஜான்சி என ராணிகளின் பெயர் வைக்கப்படுகிறது. கதாநாயகியின் பெயர் மட்டும் ‘கண்ணுக்கினியாள்’. உலகத்தில் எந்தப் பெண் வேண்டுமானாலும் ராணியாக இருக்கலாம். போராளியாகவும் இருக்கலாம். மனைவி மட்டும் கண்ணுக்கு இனியவளாக மட்டுமே இருக்க வேண்டும். அறிவுக்கினியாள், அறிவுக்கொடி, அறிவு என்றெல்லாம் மனைவி கேரக்டருக்குப் பெயர்கூட வைக்கக்கூடாது.
மற்ற பெண்கள் என்ன ட்ரெஸ் வேண்டுமானாலும் போடலாம். மனைவியும் கூட திருமணத்திற்கு முன்பு என்ன ட்ரெஸ் வேண்டுமானாலும் அணியலாம். ‘மனைவி’ ஆகிவிட்டால், சேலை, கே.ஆர்.விஜயா பொட்டு, மல்லிகை, மஞ்சள், ஆறடிக்கூந்தல் என்ற காம்போவுக்குள் அடங்கிவிடவேண்டும் என்ற பொதுப்புத்தியில் எல்லா போராளி இயக்குநர்களும் தெளிவாக இருக்கின்றனர்.
வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மண் கலயத்தில் தேநீர் கொடுக்கிறார்கள். வீட்டிற்கு வருபவர் களுக்குத் தாங்கள் புழங்கும் டம்ளர்களில் டீ கொடுக்காமல், யூஸ் அண்ட் த்ரோ போல மண் கலயத்தில் கொடுப்பது நவீனத் தீண்டாமை. இயற்கை விவசாயம் செய்யும் நிலஉடமையாளரின் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசாத தலித் வேலைக்காரர் வருகிறார். எத்தனை காலத்துக்கு இப்படி தலித் மக்களை அடிமைகளாக மட்டுமே காட்டிக் கொண்டிருப்பீர்கள்? அவருடைய மகனுக்காக, சொந்த ஜாதிக்காரனை எதிர்க்கிறாராம் கார்த்தி. என்னுடைய அடிமைக்கு வேறு எவனும் தொந்தரவு தரக்கூடாது என்பது தான் இதன் பொருள்.
ஆணவக் கொலைக்கு எதிராகப் படம் பேசுகிறது என்று ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. எதற்கு எதிராகவும் ‘பேசுவது’ என்பது சிக்கல் இல்லாதது.
ஆணவக்கொலைக்கு எதிராகப் பேசும் கடைக்குட்டிச் சிங்கம், இந்தப் படத்திலும், தனது வாழ்க்கையிலும் செய்வது, செய்தது சொந்த ஜாதித் திருமணம். தான்.
“சொத்து சேர்ப்பது சேமிப்பு அல்ல; சொந்தத்தைச் சேர்ப்பதுதான் சேமிப்பு” என்பது தான் படத்தின் போதனை. இவர்கள் கூறும் சொந்தம் என்பது ஜாதி சொந்தம் தான். அந்த ஜாதிச் சொந்தம், குடும்பம் என்ற அமைப்பு, குலதெய்வம், காதுகுத்து, தாய்மாமன், கூட்டுக்குடும்பம், சீர் செனத்திகள், என்று இப்படத்தில் பெருமைப்படுத்தப்படும் இந்து மத மற்றும் தமிழ்ப் பண்பாடுகள் தான் ஆணவக் கொலைகள் அனைத்திற்கும் அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன. இந்தப் பண்பாடுகளுக்கு எதிராக ஒரு புல்லைக்கூட பிடுங்க முடியாத இயக்குநர், ஆணவக்கொலையை எதிர்க்கிறாராம்.
ஆனால், இப்போ இதுதான் ட்ரெண்ட். நம்மாழ்வார், ஜல்லிக்கட்டு, ஆர்கானிக், வேட்டி, சேலைப் பண்பாட்டுப் பந்தாக்கள், அப்படியே சிறிதளவு தீண்டாமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குலதெய்வம், நாட்டார்தெய்வம், காதுகுத்து, பூப்புனிதநீராட்டுவிழா, தாய்மாமன், கூட்டுக்குடும்பம், நிலமே தெய்வம், மாடு தான் கடவுள், பசுமை விகடன், ஜாதி ஒழியணும்னா, ஜாதிச் சங்கங்கள் ஒழிய வேண்டும். நாடு வளரணும்னா அரசியல்வாதிகள் ஒழிய வேண்டும். ஊழல் ஒழிய வேண்டும்....
இப்படி எல்லாத்தையும் கலக்கி அடிச்சா..அதுதான் இன்றைய மய்யம், சிஸ்டம், தமிழ்த்தேசியம், தற்சார்பு, இந்துத்துவா, பொதுவுடைமை. (இந்தியாவில் மட்டும்) இந்த முற்போக்குப் பொதுப்புத்தியைப் பணமாக்கும் படவரிசையில் புதிய வரவுதான் கடைக்குட்டிச்சிங்கம்.

கொங்கு சுயம்வரங்கள்

#கொங்கு சுயம்வரங்கள்#
(பொறுப்புத் துறப்பு:
சில விஷயங்களுக்கான தீர்வுகள் கிடைக்க அவற்றைப் பொதுவெளியில் உடைத்துப் பேச வேண்டியிருக்கிறது. யாரையும் புண்படுத்துவது இந்தப் பதிவின் நோக்கமல்ல.)
//
34 வயசுக்குமேல் உள்ள ஆண்களும்
28 வயசுக்குமேல் உள்ள பெண் வரன்கள் கலந்து கொள்ளும் ...
கொங்கு கவுண்டர்கள் மணமாலை
*சுயம்வரம் விழா*
*08.07.2018* அன்று
பெருமாநல்லூர் to திருப்பூர் சாலையில்
அண்ணா நகரில் உள்ள
*A.K.C.ஹாலில்* நடைபெறும்
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்…..
//
இந்த விளம்பரத்தைத் தொடர்ந்து இந்த சுயம்வரத்துக்காகக் கூடிய கூட்டத்தில் அந்தப் பகுதியே ஸ்தம்பித்துள்ளது. ஆனால் அங்கே கூடிய அனைவருமே திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண்கள் மட்டுமே. பெண்கள் யாரும் வராததால் அல்லது மிகக் குறைந்த அளவே வந்திருந்ததால் நிகழ்ச்சி பெரிய தோல்வியில் முடிந்திருக்கிறது. இத்தனைக்கும் 5 வயதுக்குள் குழந்தை உள்ள மறுமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்கள் கலந்து கொள்ளலாம் என்றும் அழைப்பு இருந்தது. இதையடுத்து கவுண்டர் சமுதாயத்தில்தான் பெண் வேண்டும் என்று அச்சமுதாயத்து ஆண்கள் காத்திருப்பதில் எந்தப் பயனுமில்லை, கிடைத்த சாதியில் திருமணம் செய்து கொள்ளுங்கள் மாப்ளைகளா என்று வெளியான ஒரு பதிவு பலராலும் பல கோணங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. உண்மையில் இது நகைச்சுவையாகவோ, நக்கல் நையாண்டியாகவோ அணுகக்கூடிய ஒரு விஷயம் அல்ல. நடைமுறையில் காணப்படும் விடை தேடப்பட வேண்டிய ஒரு சமுதாயப் பிரச்னை.
ஒரு வகையில் பார்த்தால் தாங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் விதைத்ததையேதான் அறுவடை செய்து வருகிறது கொங்கு சமுதாயம். ஆதியிலிருந்து விவசாயம்தான் கவுண்டர் சமுதாயத்தின் ஒரே தொழில். ஆண் பிள்ளை பிறந்தால்தான் காலங்காலத்துக்கும் உழைத்துப் போடுவான். வீட்டிலேயே இருந்து விவசாயத்துக்கு உதவுவான். பெண் பிள்ளை என்றால் திருமண வயது வந்ததும் அடுத்த வீட்டுக்குப் போய் விடுவாள். செலவு வேறு. 'பொட்டப் பெருக்கான்' என்று முதியவர்கள் பெண்களை இழிவாக அழைப்பதை நானே கேட்டிருக்கிறேன். எனக்கு இரண்டாவது மகள் பிறந்தபோது 'அட ரெண்டும் புள்ளயாப் போச்சா, அட உடு பொட்டப்புள்ளதான் நாளக்கி போனா மேல உளுந்து அழுவும்' என்று ஏதோ துக்கம் விழுந்தது போல ஆறுதல் கூறியவர்கள் உண்டு. அதற்கு முக்கியமான காரணம் வரதட்சணை. அம்பது – அம்பது, இரவத்தஞ்சு – இரவத்தஞ்சு, 1 கிலோ என்பதெல்லாம் திருமணப் பேச்சின்போது காதில் விழும் தங்கத்தைக் குறிக்கும் அளவீடுகள். மாப்பிள்ளையின் படிப்பு மற்றும் வசதி பொறுத்து கார், இரு சக்கர வாகனம் என்று இத்யாதிகள் கூடும். இப்படி எதுவும் வாங்காமல் இருந்தால் மாப்பிள்ளையிடம் குறை இருக்குமோ என்று சந்தேகம் வேறு எழுப்புவார்கள். இது தவிர திருமணச் செலவு முழுமையும் பெண் வீட்டார் ஏற்க வேண்டும். பத்து பதினைந்து ஆண்டுகள் முன்பு வரை இதுதான் அங்கு நிலை.
இதன் காரணமாக பெண் பிள்ளைகள் பெற்றுக் கொள்வதை கடந்த முப்பது, நாற்பது வருடங்களாக பல விதமான வழிகளில் தவிர்த்து வந்தது கொங்கு சமுதாயம். மரபிலேயே பெண் குழந்தை என்றால் தாழ்வு என்ற எண்ணம் பதிந்திருந்ததுதான் காரணம். ஒரு தம்பதிக்கு முதலில் மகன் பிறந்தால் அடுத்து பிள்ளை பெறுவதைத் தவிர்த்து விடுவார்கள். வீட்டுக்கு ஒற்றைப் பிள்ளை இருக்கும் இடங்களில் பெரும்பாலும் ஆண் பிள்ளைகள்தான். வயிற்றில் இருக்கும் பிள்ளை ஆணா பெண்ணா என்று அறிவிப்பது சட்டப்படி குற்றமாக்கப்படும் வரை பெண் என்று அறிந்து கருவை அழித்தவர்களும் உண்டு. இப்படியாக ஆண் பெண் சம நிலையற்ற ஒரு சூழல் அந்தப் பகுதியில் கடந்த ஒரு தலைமுறையாக அங்கு மெல்ல உருவாகி வந்திருக்கிறது.
அதற்கு அடுத்தபடியாக பெண்களைப் படிக்க வைக்கும் வழக்கம் தமிழகத்தின் எந்தப் பகுதியையும் விட (கன்னியாகுமரி தவிர்த்து) கொங்கு பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. சதவிகித அளவில் பெரும்பாலான பெண்கள் பள்ளியைத் தாண்டி கல்லூரி வரை படிக்கிறார்கள். முக்கியமாக பையன்களை விட அவர்கள் நன்றாகவே படிக்கிறார்கள். கொடுமை என்னவென்றால் பெண்கள் அப்படி முனைந்து படிப்பது வேலைக்குப் போவது என்ற லட்சியத்துக்காக இல்லை. ஆனால் படித்த வேலைக்குப் போகும் மாப்பிள்ளை வேண்டுமென்றால் குறைந்த பட்சம் கல்லூரிப் படிப்பை முடிக்க வேண்டும். இப்படியாக வருடக்கணக்கில் ஒரு நல்ல மாப்பிள்ளைக்காக தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் கட்டாயத்துக்கு இந்த சமூகப் பெண்கள் தொடந்து தள்ளப்பட்டு வந்திருக்கிறார்கள். அந்தப் பந்தயத்தில் ஓட ஆரம்பித்த அவர்களை இப்போது மாப்பிள்ளைகள் துரத்த வேண்டிய சூழல். இளநிலைப் பட்டதாரிப் பெண்ணைத் திருமணம் செய்ய மாப்பிள்ளைகள் முதுநிலைப் பட்டதாரி ஆகவேண்டும். இளங்கலை படித்த பெண்ணைத் திருமணம் செய்ய பொறியாளர் ஆக வேண்டும்.
இப்போது நிகழ்காலத்துக்கு வருவோம். ஆண் பிள்ளைகள் பெறுவதை மட்டுமே விரும்பிய ஒரு சமூகத்தால் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டிருந்த சமனற்ற பாலினநிலை, ஆண்களை விட விகிதாச்சார அடிப்படையில் அதிகம் படிக்கும் பெண்கள் இவற்றோடு புலம் பெயர்ந்த கொங்கு சமுதாயத்தினர் சொந்த சாதிக்குள் திருமணம் செய்ய நகரங்களிலிருந்தும் கடல்கடந்தும் பெண் தேடிவரும் போட்டிச் சூழலும் சேர்ந்துகொண்டுள்ளது. ஐடி துறையின் வளர்ச்சியால் பெண்களும் பெருமளவு வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருப்பது இந்த சிக்கலின் அடுத்தகட்ட நகர்வு. இப்படி பல காரணிகளால் முப்பது வயதுக்கு மேற்பட்ட, நல்ல பொருளீட்டும் வேலையில் இல்லாத, சொந்த ஊரிலேயே வசிக்கும் கொங்கு சமுதாய ஆண்களுக்கு திருமணம் நடப்பது கிட்டத்தட்ட இயலாத காரியமாகியிருக்கிறது. இவற்றில் குலத்தொழிலான விவசாயம் செய்பவர்களும் அடக்கம். இங்கே விவசாயத்தைத் தனிமைப் படுத்திப் புறக்கணிக்கவேண்டும் என்பது பெண்களின் நோக்கமல்ல, ஆனால் புறக்கணிக்கப்படும் தொழில்களில் தனது நிலையற்ற வருமானத்தின் காரணமாக விவசாயம் சேர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த நாற்பது வருடங்களில் விவசாயத்துக்காக தனது பிள்ளையைத் தயார் செய்வதை இந்தச் சமூகமே முற்றாக நிறுத்திவிட்ட நிலையில் பெண்களிடம் மட்டும் அப்படி ஒரு தியாகத்தை எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை.
கூடவே, சாதியைத் தாண்டிய திருமணம் என்பது கவுண்டர் சமுதாயத்தில் சாத்தியமில்லாத ஒன்று. சட்டப்படி அது குற்றமில்லை என்றாலும் அப்படி செய்தவர்கள் உறவுகளிலிருந்து ஒதுக்கியே வைக்கப்படுவார்கள். உள்ளூரில் நிறைய சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும். சொந்த பந்தங்களின் கேள்விகளுக்கும் அறிவுரைகளுக்கும் பதில் சொல்ல நேரிடும். நீங்கள் பெருநகரங்களில் வாழ்ந்தாலும் விசேடங்களில் தலை காட்ட முடியாது. இப்படியான காரணங்களால் பெண் கிடைக்காத சூழலிலும் பல ஆண்கள் வயது கடந்து காத்திருக்க நேரிடுகிறது. இது சம்மந்தமான அந்த முகநூல் பதிவு சொல்லியிருக்கும்படி சொந்த சாதிப் பெண்களுக்காக காத்திருப்பதில் பொருளில்லை என்ற முடிவைச் சிலர் எடுக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக கேரளாவிற்குச் சென்று திருமண செலவுகள் செய்து தாங்களே நகைகளும் போட்டு மலையாளப் பெண்களைத் திருமணம் செய்து கூட்டி வரும் வழக்கம் அதிகரித்துள்ளது. இதற்காகவே தனியான தரகர்கள் உண்டு. வேற்று சாதியை விட இது கொஞ்சம் பரவாயில்லை என்ற சமாதானத்துக்கு சில குடும்பத்தினர் வந்திருக்கிறார்கள். பெண் தட்டுப்பாடு காரணமாக விதவைகள், மணமுறிவு ஏற்பட்ட பெண்களுக்கு மிக எளிதில் வரன்கள் கிடைக்கின்றன. படித்த, வசதியான மாப்பிள்ளைகளுக்கு இன்றும் வரதட்சணை கேட்கப்படுகிறது என்றாலும் இவ்வளவு வேண்டுமென்று கட்டாயப்படுத்துதல், தொடர்ந்து பெண் வீட்டாரைக் கொடுமைக்கு ஆளாக்குதல் ஆகியவை குறைந்து வருகின்றன.
இந்தப் பிரச்னை இனி எந்தத் திசையில் திரும்பும் என்று தெரியாது. ஆனால் இது கொங்கு சமுதாயத்தின் இறுக்கமான கட்டுமானத்தை சிறிது அசைத்துப் பார்த்திருக்கிறது. இதனால் பிற சாதியிலிருந்து வரன்களை ஏற்றுக் கொள்ளும் நிலை அங்கு வரும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. இதற்காக கொங்கு சமுதாயப் பெண்களை மட்டும் குற்றம் சொல்லிப் பயனில்லை. தங்களுக்குக் காலங்காலமாக மறுக்கப்பட்ட தனது துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைத்தான் அவர்கள் சமீப காலங்களில் மீட்டெடுத்து வருகிறார்கள். அதற்கு இயற்கையும் பொருளாதார மாற்றங்களும் கல்வியும் அவர்களுக்கு உதவியிருக்கின்றன. அதே நேரம், அந்தச் சமூகமும் இந்த இளைஞர்களின் விரக்தியை வெறும் மீம் போடும் விஷயமாகவோ பெண்கள் வேண்டுமென்ற வன்மத்துடன் செய்வதாகவோ தட்டையாகப் பார்க்காமல் இதன் தீவிரத்தை நீண்டகால அடிப்படையில் உணரத் தொடங்க வேண்டும். இந்தப் பிரச்னை ஒரே நாளில் உருவானதில்லை. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளில் பல முனைகளிலிருந்து மெல்ல உருக்கொண்டு இன்று தீவிர நிலையை அடைந்திருக்கிறது. இதை விரைவாகத் தீர்க்க நிறைய அடிப்படை மாற்றங்களும் வெளிப்படையான உரையாடல்களும் தேவை. தங்களுடைய எதிர்பார்ப்புகளை இத்துடன் சம்மந்தப்பட்ட எல்லாத் தரப்பினரும் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதுதான் இன்று அனைவர் முன்பாகவும் எழுந்து நிற்கும் கேள்வி.

Friday, July 13, 2018

"32 வயசுக்கு மேல ஆகி" கல்யாணம் பண்ணாத கவுண்ட பசங்க

கொங்கு சமுதாய சொந்தங்களுக்கு வணக்கம்...

8.7.18 நடந்த மணமாலை விழா ரொம்ப வேதனையாக முடிந்தது ....

கொங்கு சமுதாயம் எடுத்த முயற்ச்சி எந்த வகையிலும் வெற்றி பெறவில்லை என்பது பலபேர் போண் மூலமகா விமர்சனம் செய்தனர். காரணம் யாரும் இனி வரும் காலங்களில் தவறுகள் சரி செய்யபடும்..

ஆண்களின் ஜாதகம் 4568க்கு பெண்களின் ஜாதகம் 117 தான்.பதிவு

34 வயசுக்குமேல் உள்ள ஆண்களின்
வாழ்க்கைகாக அணைத்து சொந்தங்களும் ஒன்றுனைந்து இந்த விழாவை நடத்தினோம் ஆனால்
34 வயசுக்குமேல் உள்ள ஆண்களுக்கு 100 பேருக்கு 30 பெண்களே உள்ளனர்
என்பது மிக தெளிவாக தெரிகிறது..
மீதி 70 ஆண்களின் வாழ்க்கை கேள்வி குறிதான்... 
இவர்களின் வாழ்க்கைக்கான விடியலை தேடி சொந்தங்களின் உதவியுடன் தனது பணியை கொங்கு சமுதாயம் செய்துகொண்டே இருக்கும்.....
விழாவில் கலந்து கொண்ட
அனைத்து கொங்கு சொந்தங்களுக்கும் நன்றி..

என்ன காரணத்தினால் இந்த நிலை 1980 களில் என்ன நடந்ததால் இந்த நிலை? வரதச்சனை பிரச்சனை.... அதனால் ஏற்பட்ட கரு சிதைவே காரணம்.. 

முதலில் பெண்கள் 20 பர்செண்ட் குறைவு. அடுத்து பணக்காரர்களுக்கும் மட்டுமே பெண் குடுப்பர்.பெண் வீட்டார் நினைப்பது தங்கள் பெண் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் எண்றுதான் எதிர்பார்ப்பாங்க.பணவசதி குறைந்தவர்கள் படிப்பு கம்மியானவ.ர்கள் விவசாயம் செய்யும் இளைஞர்கள் இவர்களுக்கு பெண் இல்லை.அவர்களுக்கு ஒரு வாழ்க்கை வேண்டுமே

தயவுசெஞ்சு "32 வயசுக்கு மேல ஆகி" கல்யாணம் பண்ணாத கவுண்ட பசங்க(பெரிசுக) இனிமேலும் ஒரு கவுண்ட பொம்பள(பொண்ணு) பொண்டாட்டியா கெடைப்பா கல்யாணம் பண்ணிக்கலாம்னு நெனைச்சிட்டு இருந்தீங்கீனா உங்களவிட "கேனையனுக" நம்ம கொங்குநாட்டுலையே யாரும் இருக்கமுடியாது..எவ கெடைச்சாலும் கூட்டீட்டு போயி கல்யாணம் பண்ணிக்கிங்க...இல்ல சாதிதான் முக்கியம்னு நெனைச்சீங்கின்னா யாராவது கல்யாண பத்திரிக்கை குடுத்தா போயி நல்லா சாப்ட்டுட்டு மட்டும் வந்துருங்க.. "கொங்குசுயம்வரம்" நிகழ்ச்சிய கேள்விப்பட்டு திருப்பூர் அண்ணாநகர்ல பல்லாயிரக்கணக்கான கொங்கு ஆம்பளைங்க வந்து அண்ணாநகருக்கு தெற்கே அஞ்சு கிலோமீட்டாருக்கும், வடக்கே அஞ்சு கிலோமீட்டருக்கும் டிராபிக்ஜாம் ஆகி ஒட்டுமொத்த திருப்பூரே ஸ்தம்பித்துவிட்டது...ஆனா கொங்கு பொண்ணுக ஒண்ணுகூட வரல..பல லட்சங்கள் செலவு பண்ணி போடும் "கொங்கு மாநாட்டுக்கு" கூட இத்தனை கூட்டம் கூடாது!! இதில் நாம் வெட்கி தலைகுனிய வேண்டிய விசயம் ஆயிரக்கணக்கான கவுண்ட பசங்க கல்யாணம் ஆகாமல் சுத்திக்கொண்டிருக்கிறார்கள்...எவ கெடைச்சாலும் கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க வாழ்க்கைய பாருங்க...பங்காளிக ஊட்டுல பேசுவானுக... மாமன்,மச்சான் ஊட்டுல பேசுவானுக...சுத்தி இருக்குற சொந்தங்காரனுக பேசுவானுகனு கல்யாணம் பண்ணாம சும்மா இருந்தீங்க.. சாகற வரைக்கும் கல்யாணம் பண்ணாம "சொம்பையா" இருந்துட்டு சாகவேண்டியதுதான்...நாம வேற சாதி பொண்ண கல்யாணம் பண்ணுணா..நம்மள கேவலமா பேசுற எந்த கவுண்டனும் அவன் வீட்டு பொண்ண நமக்கு கல்யாணம் பண்ணி வெக்கமாட்டானுக...அதுனால மாப்ளைகளா..உங்களுக்கு புடிச்ச பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துற வழிய பாருங்க..!!!


Tuesday, July 10, 2018

பறையரை குறித்துப் பாரதி

தோழர்களே
உங்களுக்குத் தெரியுமா?



சென்னை எழும்பூரில் ஸ்பர்டேங்க் என்னுமிடத்தில் டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் பஞ்சமர் மாநாட்டில் 7.10.1917 அன்று பேசும்போது பார்ப்பனர்களை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். இதுகுறித்துப் பாரதி எழுதுவதைப் பார்ப்போம்.

“சென்னை பட்டினத்தில் நாயர் கஷிக் கூட்டமொன்றில், பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிகையில் வாசித்தோம்.”

“என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும்வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! அடே பார்ப்பனனைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் அவமதிப்பாகத் தான் நடத்துகின்றார்கள். எல்லோரையும் அடிக்க பறையரால் முடியுமா?”

ஆதாரம்; பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.394

திராவிட இயக்கங்கள் அயோத்தி தாச பண்டிதரையும் ரெட்டைமலை சீனிவாசனையும் இருட்டடிப்பு செய்ததா?


திராவிட இயக்கங்கள் அயோத்தி தாச பண்டிதரையும் ரெட்டைமலை சீனிவாசனையும் இருட்டடிப்பு செய்ததா?
திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டுவரப்பட்டது. அதில் நீதிக்கட்சி வரலாறு அயோத்தி தாசர் வரலாறு ரெட்டைமலை சீனிவாசன் வரலாறு எல்லாம் வைக்கப்பட்டது. அப்போது பார்ப்பனர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். தினமணியில் பிஞ்சு நெஞ்சில் நஞ்சு விதைப்பதாக எழுதினார்கள். ஜெயலலிதா ஆட்சியில் சமச்சீர் கல்வியை ஒழிக்க குழ அமைத்தார்கள். அதில் பார்ப்பனர்களை நியமித்து திருவள்ளுவர் படத்தைக்கூட மறைத்தார்கள். நீதிமன்றத் தீர்ப்பின்படி சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப் பட்டாலும் பார்ப்பன சூழ்ச்சியால் நம் தலைவர்களின் வரலாறுகள் இருட்டடிக்கப்பட்டன.
இப்படி பார்ப்பனர்கள் நம் தலைவர்களின் வரலாற்றை குழந்தைகளுக்கு சொல்லியே தரக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் போது அதனைக் கண்டிக்க வக்கில்லாமல் திராவிட இயக்கம்தான் அயோத்தி தாசரையும் ரெட்டைமலை சீனிவாசனையும் இருட்டடித்தது என்று பேசுவது என்ன வகையில் சேர்த்தி என்பது தெரியவில்லை

Sunday, July 08, 2018

குலப் பெருமை காட்டுற திருமணங்கள் எந்த வகையிலும் பசுமைத் திருமணங்கள் ஆகாது

பசுமைத் திருமணமாம் வெங்காயம்...
காரும், காளான் பிரியாணியும் கொடுத்தா அது இயற்கை விரோத திருமணம். கம்பஞ்சோறு போட்டு காங்கேயம் காளை தந்தா அது பசுமைத் திருமணமா??

வரதட்சணையா ஒரு சொம்பு குடுக்கறது கூட குற்றம்னு சட்டம் சொல்லுது. இவனுங்க சுயசாதிப் பெருமையை தம்பட்டம் அடிக்கவும், பழைமை, கலாச்சாரம்னு வரதட்சணை என்ற சமூக அநீதியை, பெண்ணடிமைத்தனத்தை எந்தக் குற்றவுணர்வும் இல்லாம அடுத்த தலைமுறை கிட்ட கடத்தவும் "பசுமைத் திருமணம்" னு ஒரு வார்த்தையை டைட்டிலா வெச்சுருக்கானுங்க.  சமூக அக்கறை கொஞ்சம் கூட இல்லாம ஊடகங்களும் இதையே வெளியிட்டிருக்கு.  இதுக்கு படம் வேற கேடு.

ரெஜிஸ்டிரார் ஆஃபீஸ்ல சத்தமே இல்லாம ரெண்டு பேர் போயி மாலை மாத்தி, கூட இருக்கற நாலு ஃப்ரெண்ட்ஸ்க்கு சாப்பாடு வாங்கி கொடுத்து நடக்குற திருமணங்கள் தான் உண்மையிலேயே பசுமையான திருமணங்கள்.

பத்து லட்சம் ரூபாய்க்கு மண்டபம் எடுத்து, சீரியல் செட்டு கட்டி, கார்ல வர்ற ஒறவுக்காரன மரியாதையா உபசரித்து, எலையில தேவைக்கு அதிகமான உணவுப் பொருட்களை வெச்சு வீணடிச்சு, வசதி வாய்ப்பை வெளிச்சம் போட்டுக் காட்டி, கடைசியா சீதனம் குடுக்கறதுல குலப் பெருமை காட்டுற  திருமணங்கள் எந்த வகையிலும் பசுமைத் திருமணங்கள் ஆகாது. இது நேஷனல் வேஸ்ட்;  சமூக அநீதி; பெண்ணடிமைத்தனம்.

Tuesday, July 03, 2018

நாம் கீழேயே இருக்க வேண்டுமாம். அவர்கள் மட்டும் நகத்தில் மண் படாமல் வேலை செய்து முன்னேற வேண்டுமாம்.

காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் முதல் நடவடிக்கையே குலக்கல்விமுறை ஒழிப்புதான். “சிலர் பரம்பரைத் தொழிலையே செய்து வர வேண்டும் என்கிறார்கள். நாம் கீழேயே இருக்க வேண்டுமாம். நம்மைப் படிக்காதவர்களாக வைத்திருந்து, நாம் ரோடு போடவும், கல் உடைக்கவும், ஏர் ஓட்டவும், சேறு சகதியில் நாற்று நடவும் பயன்பட வேண்டுமாம்.

அவர்கள் மட்டும் நகத்தில் மண் படாமல் வேலை செய்து முன்னேற வேண்டுமாம். எப்படியிருக்கிறது நியாயம்? நாமும் படித்து, நாலு தொழில் செய்து முன்னேற வேண்டாமா?” என்று நறுக்குத் தெறித்தார்போல் கூறினார்.

எந்தச் சொத்தும் இல்லாதவர்களுக்குக் கல்வி என்ற சொத்தை வழங்கி, வாழ்க்கையில் முன்னேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இலவசக் கல்வியையும், மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டுவந்தார். இதனால் 1957-ல் 15,800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகள், 1962-ல் 29,000 ஆக உயர்ந்தன. மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரித்தது. 637 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,995 ஆனது.

எலைட் தலித்துகள், சாரி இப்படி சொல்வது அவர்களை புண்படுத்தும். அதனால் தலித் பார்ப்பனர்கள்

இன்று திருமா அவர்கள் திமுக வை யாரும் அழிக்க முடியாது என்ற கருத்து கூறியவுடன் அதற்கு சங்கிகள் பதறியிருக்கறார்களோ இல்லையோ தலித் அரசியல் பேசுபவர்கள் அதிகமாக பொங்கியுள்ளார்கள். இவர்களுக்கு சமூக நீதி முக்கியமா அல்லது திராவிடமும் தலித்தியமும் பிரிவது முக்கியமா என்றால் கண்ணை மூடி கொண்டு திராவிடமும் தலித்தியமும் பிரிவது தான் முக்கியம் என்று கூறுவர்.
அவர்கள் செய்வதை பற்றி ஒன்றும் பிரச்சினை இல்லை‌. தமிழ் தேசியம் இந்திய தேசியம் என எதை எதையோ தூக்கி கொண்டு வந்து கடந்த நூறு வருடங்களாக திராவிடத்தை அழிக்க பலரும் பல வழியில் முயன்றுள்ளனர். ஆனால் அவர்களின் முயற்சி பலவும் விழலுக்கிறைத்த நீராக வீணாக போனது தான் வரலாறு. உண்மையில் இந்திய தேசியம் தமிழ் தேசியம் ஆகியவற்றை தூக்கி பிடித்ததும் திராவிடம் தான். திமுக தான்.
சீனாவுடனான போர் என்று வந்தவுடன் இப்பொழுது நமக்கு நம் நாடு தான் முக்கியம் என்று நாட்டுப்பற்றுடன் அதற்கான நன்கொடையையும் அதிகமாக வசூலித்து அனுப்பியவர்கள் திராவிடர்கள் தான். அண்ணா அவர்களின் பேட்டிகளில் உள்நாட்டு பேட்டிகளில் பத்திரிக்கைகளில் மத்திய அரசையும் இந்திய தேசியத்தையும் கிழித்து தொங்க விட்டிருப்பவர் அமெரிக்கா மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கொடுத்த பேட்டிகளில் ஒரு நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட மாநிலத்தின் முதல்வராக தனது நாட்டையும் தனது அரசையும் விட்டு தராமல் தான் பேசியிருப்பார்.
தமிழுக்கு திமுக செய்ததை பேசினால் அதற்கென்று ஒரு நூலகம் அமைத்து அந்த புத்தகங்களை அடுக்கும் அளவிற்கு இருக்கும். முதன்மையாக முக்கியமாக சில குறிப்புகள் சொன்னால்
1. தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது.
2. இருமொழி கொள்கை
3. திருக்குறளை எளிய மக்களிடம் கொண்டு சேர்த்தது. இது முக்கியமான ஒன்று. பச்சை தமிழன் என்று சொல்லப்படும் காமராஜர் ஆட்சியிலும் சரி தமிழ் மன்னர்களின் ஆட்சியிலும் சரி திருக்குறளை மக்களிடம் கொண்டு செல்லவே இல்லை. இராமாயணத்தையும் பாரதத்தையும் சிரமேற்கொண்டு மக்களிடம் சேர்த்த அவர்கள் திருக்குறளை கிஞ்சித்தும் மதிக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததிற்கு பிறகு தான் பேருந்தில் திருக்குறளை கொண்டு வந்தது, திருமண அழைப்பிதழில் திருக்குறளை அச்சிட வைத்தது, குமரி முனையில் வள்ளுவரை நிறுத்தியது என்று அதனை எல்லாரிடமும் கொண்டு சென்று சேர்த்தனர்.
4. தனித்தமிழில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது திராவிடர் கழகத்தின் மூலமாக ஒரு கொள்கையாக ஒரு முன்னெடுப்பாகவே தொடங்கப்பட்டது.
ஆனால் அவர்கள் நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று வாய் கூசாமல் பொய் பேசி இன்று பொய்யான பரப்புரைகளை செய்து வருகின்றனர். அவர்களையும் நாங்கள் கடந்து வந்தவர்கள் தான்.
இன்று ஒரு கூட்டம் எலைட் தலித்துகள், சாரி இப்படி சொல்வது அவர்களை புண்படுத்தும். அதனால் தலித் பார்ப்பனர்கள் என்றே குறிப்பிடுகிறேன். அவர்கள் வந்து திராவிடம் தலித் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று சொல்லி கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களிலும் தலித்துகளின் நிலை மற்றும் அவர்களுக்காக தொடங்கப்பட்ட செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் தமிழ்நாட்டில் அவர்களுக்கென திமுக செய்ததையும் ஒப்பிட்டாலே அவர்களுக்கு புரியும். இதை நாங்கள் எடுத்து சொன்னாலும் சொல்லி காட்டுறியா... இதான் டா உங்க சூத்திரபுத்தி என்று அவர்களின் சாதி ஒழிப்பு மனநிலையை அப்பட்டமாக காட்டுகின்றனர்.
பண்றது தான் பண்றாங்க என்னமோ பண்ணிட்டு போகட்டும் னு பார்த்தா அம்பேத்கரை என்னவோ அவர்களுக்கு மட்டுமான தலைவராக சித்தரித்து அவரை ஒரு இனத்திற்கான தலைவராக மட்டும் சித்தரிக்கிறார்கள். உலகின் மாபெரும் சிறந்த சிந்தனைவாதி ஆகச்சிறந்த அறிவாளி போற்றத்தக்க பொருளாதார நிபுணர் ஆகிய அம்பேத்கரை இப்படி ஒரு கூண்டுக்குள் அடைக்க முயல்வது அவருக்கு செய்யும் துரோகம் தான்.
நீங்கள் சொல்வதால் அம்பேத்கரை விட்டு விட்டு செல்ல முடியாது. வள்ளலார், இராமானுஜர், பசவர் ஆகியோரின் வரிசையில் அவரையும் பார்ப்பனர்களிடம் பறிகொடுக்க நாங்கள் தயாராய் இல்லை.
ஜெய் பீம் என்பதை என்னவோ அவர்களுக்கான வாசகமாகவே நிறுத்த முயல்கிறார்கள். அதை நீங்கள் எவ்வளவு பாடுபட்டாலும் அடைய முடியாது. அவர் எங்களுக்குமானவர். எல்லாருக்குமானவர். பெருமையாக சொல்வேன். உரத்து சொல்வேன். திரும்ப திரும்ப சொல்வேன்...
ஜெய் பீம் 🖤🖤🖤
ஜெய் பீம்💙💙💙
ஜெய் பீம் ❤️❤️❤️

Monday, July 02, 2018

மற்றும் சிலர்

மற்றும் சிலர்
-லதாமகன்
கள்ளிச்செடி வளர்ப்பவன், பக்கம் 33


சட்டை போடாமல்
தோள்துண்டை கக்கத்தில் வைத்து வரும்
மாயாண்டிக்கு

தொடாமல் சோறு போடு என்பாள் அம்மா

அவர் பையனுடன் விளையாட வேண்டாம் என்பார் அப்பா

மரியாதை குடுக்க தேவையில்லை
என்பார்கள் நண்பர்கள்

பெரியவங்க பேச்ச கேளுங்க சாமி
என்பார் மாயாண்டி 

இந்துக்கள் vs பட்டியல் சமூகத்தினர்

1) யாரெல்லாம் இந்துக்கள் என்று இந்து மத வேதம் கூறுகிறது?



    பிராமனர், ஷத்ரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என்ற நான்கு பிரிவுகளை ஒப்புக்கொண்டவர்கள் இந்துக்கள் என இந்து மத வேதம் கூறுகிறது.




2) இந்து மதத்தின் அடிப்படைத் தத்துவமான வர்ணாஷ்ரம தர்மா என்றால் என்ன?

      பிராமனர் - புரோகிதம் தொழிலை செய்பவர்.
   
      ஷத்ரியர் - போர் புரியும் தொழிலை செய்பவர்.

      வைசியர் - வானிபம் செய்பவர்.


      சூத்திரர் -  ஏவல் தொழில் செய்பவர்.


அதாவது மேல் உள்ள மூன்று வர்ணத்தார்கும் அடிமை தொழில் செய்பவர்.  மேல் உள்ள வர்ணத்தாரின் தேவையை பூர்த்தி செய்பவர்.



      இந்த வர்ணங்களில் இருக்கும் சந்ததிகள் அந்த வர்ணத்திற்குரிய தொழில்களை செய்ய வேண்டும்...

 வேறு வழியல்லையேல் தனக்கு கீழ் உள்ள வர்ணத்தாரின் வேலைகளை செய்யலாம் ஆனால் தனக்கு மேல் உள்ள வர்ணத்தாரின் வேலைகளை செய்யக்கூடாது.

 திருமணத்திற்கும் இதே முறைதான்... தன் முதல் மனைவி தன் வர்ணத்திலும் அடுத்தடுத்த மனைவிகள் தனக்கு கீழ் உள்ள வர்ணத்தை சேர்ந்த பெண்களை மணக்கலாம் ஆனால் தன் மேல் நிலையிலுள்ள வர்ணத்தை சேர்ந்த பெண்களை மணக்க கூடாது...




3) பட்டியல் சமூக மக்கள் எந்தப் பிரிவின் கீழ் வருகின்றனர்?


            இந்த கேடுகெட்ட வர்ணத்தை ஏற்காமல் புத்தரின் நெறிக்கொள்கையை பற்றி பிடித்தவர்கள்தான் இன்றைய பட்டியல் சமூகத்தினர் ... இவர்கள் இந்த இந்து மத வர்ணத்தை ஒப்புக்கொள்ள மறுத்தவர்கள்.



4) பட்டியலினத்தைச் சார்ந்த சாதிகளை(SC)  இந்தியா முழுவதிலும் எதனடிப்படையில் பட்டியலிட்டனர்?

               பட்டியல் இனம்  (SC) பத்து நெறிமுறைகளை கொண்டு பிரிக்கப்பட்டனர்...

அவையாவன ::


1) பிராமணர்கள் அனைவரிலும் உயர்ந்தவர்கள் என்பதை மறுத்தவர்கள்.

2) பிராமண குரு மற்றும் அங்கிகரிக்கப்பட்ட வேறு இந்து குருவிடமிருந்து மந்திர உபதேசம் பெறாதவர்கள்.

3) வேதங்களின் அதிகாரத்தை மறுப்பவர்கள்.

4) பெரிய இந்துக்கடவுளர்களை வழிபடாதவர்கள்.

5) பிராமனர்களுக்கு சேவை செய்ய மாட்டார்கள்.

6) பிராமண புரோகிதலர்களை வைத்து எந்த நிகழ்ச்சிகளையும் செய்யாதவர்கள்.

7) சாதாரண இந்துக் கோவில்களின் உள்ளே அனுமதிக்கப்படாதவர்கள்.

8) தீட்டு ஏற்படுத்துவதாக கூறப் படுபவர்கள்.

9) தங்களின் இறந்தவர்களை புதைப்பவர்கள்.

10) மாட்டிறைச்சி உண்பவர்கள்.

இந்த பத்து கோட்பாட்டின் அடிப்படையில் 1911 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது இவ்வாறு பட்டியலிடப்பட்டனர்.





5) இந்துக்களாக கருதப்பட்டிருந்தால் இந்தியா முழுமைக்கும்

 ( இங்கு ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்தக் காகாலத்தில் இந்தியா ஒரு நாடாக இல்லை. எண்ணிலடங்கா நாடுகளாக இருந்தது.)

 ஏன் பட்டியல் சமூக மக்கள் ஊருக்குள் இல்லாமல் தனியாக சேரியில் தங்கினார்கள்?

        மற்ற சாதி இந்துக்களால் ஒதுக்கப்பட்டதாலும்...
இவர்கள் அவர்களிடம் இருந்து ஒதுங்கியதாலும் சேரிகளில் தனிமை படுத்தப்பட்டனர்.

Friday, June 29, 2018

ஜீன் - 30 -1997 - ஈன சாதி பயலுக்கு தலைவர் பதிவி கேட்குதா


கடந்த 1997 ம் ஆண்டு சூன் 30ந் தேதி மதுரை மாவட்டம் மேலூர் தாலுக்கா மேலவளவு ஊராட்சி மன்ற தலைவர் பதவி தாழ்த்தபட்டோருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த ஊரில் வசித்த ஆதிக்க சாதி வெறியர்கள் அம்பலகார்ர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகாரத்திற்க்கு வருவதை இரண்டு முறை யாரும் போட்டியிடாதவாறு தடுத்து நிறுத்தினார்.இதை மீறி துணிச்சலாக முருகேசன் என்பவர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு மேலவளவு பஞ்சாயத்து தவைவரானார்.இதை பொருத்து கொள்ள முடியாத சாதிவெறியர்கள் பேருந்தில் பயணித்து கொண்டிருந்த முருகேசன் உள்ளிட்டவர்களை வெட்டி சாய்த்தனர்.


ஜீன் - 30 -1997
அன்றொரு நாள் இப்படித்தான் அமைதியாக விடிந்தது
மேலவளவு நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தை 50 க்கும் மேற்பட்ட ஜாதி வெறி மிருகங்கள் அரிவாள், கத்திகளோடு மறித்தன. இதை பார்த்ததும் பேருந்தின் நடத்துனரும் ஓட்டுநரும் தலை தெறிக்க ஓடுகின்றனர்.
மக்கள் அலறி அடித்து கொண்டிருக்கையில் அந்த சம்பவம் நடைபெறுகிறது. 7 பேர் பட்டப் பகலில் வெட்டி கொலை செய்யப்படுகிறார்கள்..
என்ன நடந்தது ??? - வாக்குமூலம்
"ஈன சாதி பயலுக்கு தலைவர் பதிவி கேட்குதா " என்றபடி, தான் பதுக்கி வைத்திருந்த (அருவாள்) ஆயுதத்தால் அழகர்சாமி முருகேசனின் வலது தோளில் வெட்டினார். பேருந்திலிருந்த பயணிகள் அலறி அடித்து இறங்கி ஓடினார்கள்.



அழகர்சாமி முருகேசனின் தலையைத் துண்டித்து, துண்டித்த தலையோடு மேற்கு நோக்கி ஓடினார்” (சாட்சி கிருஷ்ணன்).
2. “மார்க்கண்டன் முருகேசனின் வயிற்றில் குத்தினார். அய்யாவு முருகேசனின் வலது உள்ளங்கையை வெட்டினார். அழகர்சாமியோ முருகேசனின் தலையைத் துண்டித்து, துண்டித்த தலையை எடுத்துக்கொண்டு வடமேற்கு திசை நோக்கி ஓடினார்” (சாட்சி ஏகாதெசி).3.
“முருகேசனின் துண்டிக்கப்பட்ட தலை, பேருந்தின் படிக்கட்டில் வந்து விழுவதைப் பார்த்தேன். அழகர்சாமி அந்தத் தலையை எடுத்துக் கொண்டு போய்விட்டார்” (சாட்சி மாயவர்).4.
“சக்கரமூர்த்தி முருகேசனின் கைகளை அருவாளால் வெட்டினார். அழகு முருகேசனை சரமாரியாக வெட்டினார்” (சாட்சி கல்யாணி).5.
"அழகர்சாமி முருகேசனை அருவாளால் வெட்டினார். அழகு முருகேசனின் இடது கன்னத்தை வெட்டினார்; பாரதிதாசன் முருகேசனின் இடது கையை வெட்டினார்; நாகேஷ் முருகேசனின் இடது மணிக்கட்டை வெட்டினார். கதிர்வேல், தங்கமணி, கணேசன், மணி ஆகியோரும் முருகேசனின் வயிற்றுப் பகுதி மற்றும் மார்புப் பகுதியில் வெட்டினார்கள். அழகர்சாமி முருகேசனை வெட்டுவதைப் பார்த்தேன். முதல் வெட்டு முருகேசனின் வலது தோளில் விழுந்தது. பின்னர் முருகேசன் இழுக்கப்பட்டு மற்ற அம்பலக்காரர்களும் முருகேசனை வெட்டினார்கள், குத்தினார்கள்” (சாட்சி பழனி).6.
“அழகர்சாமி முருகேசனின் வலது தோளில் அருவாளால் வெட்டினார். பேருந்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடினார்கள். அப்போது மேலும் சில அம்பலக்கார சாதியினர் அங்கு வந்து, ஆதி திராவிடர்களைத் தாக்கினார்கள். இத்தாக்குதல்களினால் முருகேசன், மூக்கன், ராஜா, பூபதி, செல்லத்துரை, சேவகமூர்த்தி ஆகியோர் செத்துவிட்டனர். நான் பார்த்துக் கொண்டிருந்தபோது, முருகேசனின் தலையில்லா உடல் பேருந்திலிருந்து வெளியே வீசி எறியப்பட்டது” (சாட்சி கணேசன்)
இப்படி ஒரு கொடூரம் எதற்காக நடந்தது ??
1997 ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படுகிறது அதில் மேலவளவு ஊராட்சி தனித்தொகுதியாக அறிவிக்கப்படுகிறது.
சாதி இந்துக்கள் ஊர் மந்தையில் கூட்டம் போட்டு தலித்துகள் யாரும் போட்டியிடக்கூடாது மீறி போட்டியிட்டால் கொலை செய்யவும் தயங்கமாட்டோம் என சபதமிட்டார்கள்....

நமது பகுதியில் நாம் பெரும்பான்மையாக இருக்குமிடதில் நாம் இவர்களின் அச்சுறுத்தல்களுக்கு பயந்து தேர்தலில் போட்டியிடாமல் இருந்தால் சரியா வராது என எண்ணி மேலவளவு திமுக கிளை செயலாளர் முருகேசன் அவர்கள் திமுக சார்பில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு பிறகு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்....
மீண்டும் ஊர் மந்தையில் சாதி இந்துக்கள் ( கள்ளர் சமூகம்) கூடினார்கள் மீண்டும் எச்சரிக்கை செய்தார்கள் வேண்டாம் முருகேசா மனுவை வாபஸ் வாங்கிவிடு இல்லையென்றால் சொன்னபடி செய்வோம் என எச்சரிக்கை செய்தார்கள்...
எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நான் போட்டியிடுகிறேன் உங்களுக்கு தெரிந்ததை பார்த்துகொள்ளுங்கள் என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்...
பல்வேறு குளறுபடிகளுக்கு நடுவில் தேர்தல் நடந்து (அப்போது வாக்குச்சீட்டு முறை)வாக்குகள் எண்ணப்பட்டன மேலவளவு ஊராட்சி மன்ற தலைவராக பெரியப்பா முருகேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்....
சாதி இந்துக்களுக்கு ஒரே தலைகுனிவாய் போனது...
வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாச்சு...
இரண்டு மூன்று நாட்கள் கழித்து ஊராட்சி பணிகள் குறித்தும் பாதுகாப்பு குறித்தும் மதுரை மாவட்ட கலெக்டர் அவர்களை சந்திக்க முருகேசன் உள்ளிட்ட ஒரு பத்து பதினைந்து பேர் கிளம்பி சென்றார்கள் இந்த தகவலை ஓர் உளவாளி மூலம் பெரும் பணம் கொடுத்து சாதி இந்துக்கள் தெரிந்து கொண்டனர்...
அதே கயவனை உளவாளியாக அமர்த்தி எப்போது எங்கே வருகிறீர்கள் என்கிற தகவல்களை சொல்லசொல்லி அனுப்புகிறார்கள் அப்போது அவர் சாதி இந்துக்களிடம் கேட்கிறான் என்னை ஒன்றும் செய்துவிட மாட்டீர்களே என்று அதற்கு சாதி இந்துக்கள் நீ நம்மபயயா உன்னை ஒன்றும் செய்யமாட்டோம் தகவலை சரியாக சொல்லிவிடு என்று அனுப்பி வைத்தார்கள்...
காலையில் மதுரை சென்று கலெக்டர் அவர்களை சந்தித்து விட்டு வந்து உணவருந்தும் போது பொது தொலைபேசியில் சாதி இந்துக்களை அழைத்து சாப்பிட்டு விட்டு சற்று நேரத்தில் கிளம்பி விடுவோம் என தகவல் சொல்லி விட்டார்.
மதுரையில் இருந்து கிளம்பி மேலூர் வந்து இறங்கியவுடன் மீண்டும் அவர்களுக்கு தெரியாமல் பொது தொலைபேசியில் மூலம் அழைத்து இந்த பஸ்ஸில் ஊருக்கு வந்து கொண்டிருக்கிறோம் என தகவல் சொல்லி விட்டார்....
அந்த பஸ்ஸின் ஓட்டுனர் நடத்துனர் எல்லாம் சாதி இந்துக்கள் அவர்களுக்கு ஏற்கனவே தகவல் சொல்லியாச்சு பஸ்ஸை எங்கே நிறுத்த வேண்டும் என்று பஸ் கிளம்பி மேலவளவு நோக்கி சென்று கொண்டிருக்கிறது அப்போது ஊருக்கு முன் உள்ள வளைவில் பஸ் நிறுத்தப்படுகிறது.
பஸ்ஸை நிறுத்தி விட்டு ஓட்டுனரும் நடத்துனரும் இறங்கி ஓட்டெமடுத்தார்கள் சாதி இந்துக்கள் கும்பலாக கையில் பயங்கரமான ஆயுதங்களோடு பஸ்ஸின் இருவாயில்களிலும் நின்றார்கள் பொதுமக்களை விரட்டியது அக்கும்பல் முருகேசன் உள்ளிட்ட உறவுகள் தப்பிக்க முற்படும் போது முதல் வெட்டு உளவு சொன்ன கயவனுக்கு விழுந்தது பணத்துக்காக இனத்தானையே காட்டி கொடுத்த நீ நாளை எங்களை காட்டி கொடுக்க மாட்டைனு என்னடா நிச்சயம் என...
அவரோடு சேர்த்து 7 பேர் தலைதுண்டித்து படுகொலை செய்யப்பட்டனர்....(அவர்தான் உளவாளி என யாருக்கும் தெரியாமல் போயிருக்கும் அவரின் மனைவி அழுகும் போது ஒரு ப்புளோவில் உன்னை வெட்டமாட்டாங்கனு சொன்னியே ஆனா உன்னைதான் முதல்ல வெட்டியிருக்காங்க என அழுததால் அனைவருக்கும் தெரிந்தது)
படுகொலையை கண்டித்து மேலூர் மதுரை என தென்மாவட்டங்களில் கலவரம் மூண்டது பட்டியலின மக்களின் உடமைகள் சிதைக்கப்பட்டன மேலூரில் பெரும் கலவரம் மூண்டது...
பின்பு எல்லாம் அடங்கிய பிறகு 7பேரின் உடல்கள் அடக்கம் செய்ய கொண்டுவரப்பட்டது ...

ஒரு ஊராட்சி மன்ற பதவியில் கூட பட்டியலினத்தவர் அமரக்கூடாது - என்று கள்ளர் ஜாதி வெறி பிடித்த மிருகங்களால் நடத்தப்பட்ட பச்சை படுகொலை
இந்த ஜாதி வெறியை, ஆதிக்கத்தை வீழ்த்தத்தான் புரட்சியாளர் அம்பேத்கரும் ,தந்தை பெரியாரும் தன் வாழ் நாள் முழுதும் போராடினார்கள்
ஜாதி ஒழிப்பே சமூக விடுதலை
மேலவளவு போராளிகளுக்கு வீர வணக்கம்



Friday, June 22, 2018

பழைய தெரு நாய் புது வெறியுடன்

அம்பேத்கர் சவுதார் குளத்தில் தலித்கள் தண்ணீர் எடுக்கும் உரிமைக்காக போராடிய போது அந்தக் குளத்தில் தலித் மக்கள் வளர்க்கும் கால்நடைகள் கூட சவுதார் குளத்தில் நீர் குடிக்கலாம் ஆனால் தலித்கள் நீர் எடுத்தால் குளம் தீட்டாகி விடும் என்பது தான் பார்ப்பன மத வாதமாக இருந்தது
காந்தி தனது ஆசிரமத்தில் ஒரு தலித் குடும்பத்தை சேர்த்த போது அங்குள்ள கிணற்றில் அந்த தலித் குடும்பம் நீர் எடுத்ததாலையே தண்ணீர் தீட்டாகி விட்டதாக பார்ப்பன மதம் தன் குரலை உயர்த்தியது
மகாராஷ்டிராவில் நேற்று பொது கிணற்றில் குளித்த காரணத்தினால் இரண்டு தலித் சிறுவர்களை நிர்வாணமாக்கி தன்னை மிகக் கேவலமான சித்தாந்தம் என்று மீண்டும் நிரூபித்து இருக்கிறது பார்ப்பன மதம்
ஒரு விசயத்தை இங்கே கவனிக்க வேண்டும் சவுதார் குளத்திலும் காந்தியின் ஆசிரமத்திலும் தலித்கள் தண்ணீரைத் தொடுவதால் தீட்டு என்று சொல்லும் பார்ப்பன மதம் மாற்று மதத்தினர்கள் அந்த தண்ணீரை தொடுவதை எப்போதும் எதிர்த்ததில்லை
நேற்றைய மகாராஷ்டிர குளத்திலும் வேற்று மதத்தினர் குளிப்பதற்கு எந்த தடையும் இருக்காது என்றே நினைக்கிறேன்
தனது எதிரி இஸ்லாம் தான் என்று பரப்பும் அதே வேளையில் இஸ்லாமியர்கள் பொது கிணற்றில் தண்ணீர் எடுப்பதை தீட்டு என்று எதிர்க்கவில்லை மாறாக தன் மதத்தின் ஒரு அங்கம் என்று செல்லக்கூடிய சமூக பிரிவினரை தீட்டு என்று தள்ளி வைக்கிறது
அதாவது பார்ப்பன மதத்தில் தன்னை உயர்ந்த ஜாதியாகவும் வேறு சமூக பிரிவை தாழ்ந்த ஜாதியாகவும் சிந்திக்கும் உளவியல் தான் இருக்குமேயன்றி வேற்று மதத்தவரை தாழ்ந்த மதமாக பார்க்கும் உளவியல் இருப்பதில்லை
நாய் வால் நிமிர்ந்தாலும் நிமிரலாம் காளை மாட்டில் பால் வந்தாலும் வரலாம் மோடி உண்மையை பேசினாலும் பேசலாம்
ஆனால் பார்ப்பன மதத்தில் சமத்துவம் சகோதரத்துவம் என்பது எல்லாம் நிர்மலா சீதாராமன் வாய் மீது சத்தியமாக வாய்ப்பே இல்லை
இந்து மதத்தை சீர்திருத்தம் செய்வது என்பது சாத்தியம் இல்லாதது அதில் இருந்து விலகி மதம் மாறுவதே இழிவில் இருந்து விடுபடும் வழி
- அம்பேத்கர்

கிரஹப்பிரவேசம் என்பது தீட்டு அகற்ற செய்யும் சடங்கு!

கிரஹப்பிரவேசம் என்பது தீட்டு அகற்ற செய்யும் சடங்கு!

இந்த வீட்டில் கீழ்சாதிக்காரர்கள் கொத்தனாராக சித்தாளாக வேலை பார்த்திருப்பார்கள் அதனால் தீட்டாகி இருக்கும், அந்தத் தீட்டைப் போக்க பிராமணரை வைத்து மந்திரம் சொல்லிப் பசு மாட்டு மூத்திரம் சாணியைக் கரைத்துத் தெளித்தால் தீட்டுப் போகும் என்றே செய்கிறார்கள்.

அதனை நம்பி உழைக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும் அதேபோல செய்து தான் சார்ந்திருக்கும் உழைக்கும் இனத்தையே இழிவுபடுத்தி பிராமண அடிமையாகிறார்கள்.

மனுதர்மம் அத்தியாயம் 5 சுலோகம் 124 :

"வீடு முதலானவற்றிற்கு சண்டாளாதிகளால் அசுத்தம் நேரிட்டபோது விளக்குதல் மெழுகுதல் கோமூத்திரம் தெளித்தல் கொஞ்சம் மேல் மண்ணை எடுத்துப்போடுதல் பசுமாட்டை ஒரு நாள் வசிக்கும்படிச் செய்தல் இவ்வைந்தினால் அப்பூமி பரிசுத்தப் படுத்தப்படுகிறது."

(சண்டாளாதிகள் - கீழ்சாதிக்காரர்கள்)

உங்கள் வீட்டிலாவது "கிரஹப்பிரவேசம்" எனும் பெயரில் நீங்கள் வசிக்க வீடுகட்டி கொடுத்த தொழிலாளர்களை அவமானப்படுத்தாமல் இருங்கள்... கடவுள் நம்பிக்கை உடையவராக இருப்பின், கடவுளுக்கும் உங்களுக்கும் இடையில் புரோகிதர் எனும் ஏமாற்றுக்காரனுக்கு இடமளிக்காதீர்கள்... சொந்தங்களையும், நண்பர்களையும் அழைத்து விருந்தளிப்பதோடு முடித்துக் கொள்ளுங்கள்...

சொல் நானும் ஒரு இந்து என்று

பிராமணனைப்போல்
நீயும்
இந்துதானே..
அவன்
உனக்கு எப்போது வாடகைக்கு வீடு கொடுக்கிறானோ
அப்போது சொல்,
நானும் ஒரு இந்து என்று,
உன் வீட்டுக்குவந்து நீ சமைத்த உணவை
எப்போது
உளப்பூர்வமாக உண்ணுகிறானோ
அப்போதுசொல்
நானும் ஒரு இந்து என்று,
உன் உரிமைக்காக
உன் போராட்டத்தில் எப்போது அவன் கைகோர்க்கிறானோ
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
கோவிலின் கருவறைக்குள்,
நீயும் அவனும் எப்போது
ஒன்றாக நின்று
அர்ச்சனை செய்கிறாயோ அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
அவனை
தமிழில் மந்திரம் சொல்லவைக்க
தெம்பும் திரானியும்
உனக்கு எப்போது வருகிறதோ
அப்போது சொல்
நானும் இந்து என்று.
நீ பூசாரியாக இருக்கும் கோவிலுக்கு,
அவன் எப்போது குடும்பத்தோடு வந்து
நீ கொடுக்கும் திருநீரை
அவனின் நெற்றியில்
பூசிக்கொள்கிறானோ..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
எப்போது அவனும்
உன்னோடு சேர்ந்து
சிலைகளை உடைக்கிறானோ அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
அவன் எந்த மாநிலத்துக்குப்போனாலும்..
இந்து பிராமணன்தான்.
நீ
எந்தமாநிலத்துக்குப்போனாலும் தமிழன்தான்.
உன்னை தமிழனாகமட்டும் பார்க்காமல்,
பிறமாநிலத்தவனும்
பிராமணனைப்பார்ப்பதுபோல்..
உன்னையும்
இந்துவாக பார்த்தால்
நடத்தினால்..
அப்போது சொல் நானும் ஒரு இந்து என்று.
மாநில கோர்ட்டுகளிலேயே மல்லுக்கட்டுகிறாயே
உன்னாலும் சுப்ரீம் கோர்ட்
நீதிபதியாக முடியும்
என்றால்..
உன்னை வரவிடுவார்களென்றால்..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
உன்னால் உன் மகனால்..
இந்திய கிரிக்கெட் அணியில் நுழைய முடிந்தால்..
உன்னையெல்லாம் நுழைய
விட்டால்..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
உன்னால்..
அவர்களால்
நியமிக்கப்படும்
ஜனாதிபதியாகத்தான்முடியும்.
ஆனால்,
ஒரு
ஜனாதிபதியையே நியமிக்கும்,
பிரதமராக
உன்னால் வர
முடியும் என்றால்..
அப்போது சொல் நானும்
ஒரு இந்து என்று.
இரண்டுபேரும்
இந்துக்கள்தானே..
உன்வீட்டுக்கல்யாணத்தை,
அவன் நடத்திவைப்பதைப்போல..
சாஸ்த்திர சம்பிரதாயங்களை
நீயும் கற்றபின்...
அவன் வீட்டு கல்யாணத்தை நீ..
நடத்திவைக்க
அவன் அனுமதித்தால்..
அப்போது
சொல்
நானும் ஒரு இந்து என்று.
இயல் இசை நாடக சபையில்,
உன்னையும் மனிதனாக மதித்து,
உன்னையும் தலைவனாக ஏற்றுக்கொண்டால்.
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
மத்திய அரசு வங்கிகளில்..
தமிழ்நாட்டில்
விண்ணப்பங்களை
தமிழிலேயே அச்சடித்தால்..
அப்போது சொல்
நானும் இந்து என்று.
காவிரி நீரை எப்போது
சமமாக தருகிறானோ..
நதிநீர் பங்கீட்டுப்போராட்டத்தில்..
உன்னோடு பிராமணனும் எப்போது
கலந்து கொள்கிறானோ..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
விவசாயிகளின் போராட்டத்தில் எப்போது அவன் கலந்துகொள்கிறானோ
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
நீட் தேர்வுக்கு எதிரான
போராட்டத்தில் எப்போது
அவனும் கலந்து கொள்கிறானோ அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
நீதான்
நான்தமிழன்
நான்தமிழன் என்கிறாய்.
அவன் எப்போதாவது சொல்கிறானா.
அவனும்
தன்னை தமிழன் என்று
எப்போது ஒப்புக்கொள்கிறானோ
அப்போது சொல்
நானும் இந்து என்று.
நாரதகான சபையில்
முறையாக சங்கீதம் கற்றும்
உன்னை பாட
அனுமதித்தால்..
அவர்கள் பார்வையாளராக
அமர்ந்தால் அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
உன்னால்..
சங்கரமடத்தில் சங்கராச்சாரியாரோடு
சரிக்குசமமாக
சம்மணமிட்டு
அமரமுடிந்தால்..
அப்போதுசொல்
நானும் ஒரு இந்து என்று.
இந்து அறநிலைய கோவில்களில்
காசுவாங்காமல்..
உன்னை கருவறைக்குள் விட்டால்,
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
அடித்தட்டு மக்களின்
வரிப்பணத்தில்
மருத்துவம் படித்துவிட்டு,
ஊசி போட..
அமெரிக்காவுக்கு ஓடுபவனை,
தடுத்துநிருத்தியபின்
சொல்
நானும் ஒரு இந்து என்று.
ஒவ்வொரு அலுவலகத்திலும்
அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து,
மற்றவர்களை மட்டம்
தட்டுகிறார்களே..
அதை அவர்கள் நிறுத்தியபின் சொல்
நானும் ஒரு இந்து என்று.
பயணங்களில்..
நீ கீழ்தட்டுவர்க்கம்
என்று தெரிந்தவுடன்
பதரியடித்தபடி எழுந்து வேரு இடம் தேடுகிறானே
அந்த பதட்டத்தை அவன் குறைத்துக்கொள்ளும்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
நீ
முருகனை கும்பிடு
முத்துமாரியம்மனை
கும்பிடு
அதுவல்லபிரச்சினை.
இந்து என்று சொல்லிச்சொல்லி.
உன்னை வீதியில்
இறக்கிவிட்டு
அவன்மட்டும் வீட்டுக்குள் இருந்துகொண்டு வேடிக்கை பார்க்கிறானே.
அதுதான் வேதனையை
தூண்டுகிறது.

Thursday, June 21, 2018

பொறுப்பும் பொறுப்பின்மையும் - படங்களில் சாதி 1980 களின் மத்தியிலேயே தொடங்கி விட்டது

பொறுப்பும் பொறுப்பின்மையும் .
சங்கிலி முருகன் தான் தயாரித்த எல்லா படங்களின் முதல் காட்சியிலும் இரண்டு அடையாளங்களை வைப்பார். முதலாவதாக மாட்டிலிருந்து செம்பு நிறைய பால் கறக்கும் காட்சி. அடுத்ததாக சிலையாகவோ படமாகவோ முத்துராமலிங்கத் தேவரின் பிம்பம் இடம் பெற்று விடும். முதல் அடையாளம் சினிமாவிற்கான சகுனம். அடுத்த அடையாளம் ஏன் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
இப்போக்கு 1980 களின் மத்தியிலேயே தொடங்கி விட்டது. நினைவே ஒரு சங்கீதம் (1987) நம்ம ஊரு நல்ல ஊரு (1986) போன்ற படங்களில் பசும்பொன் என்ற ஊர்ப் பெயரிலிருந்து தான் காட்சிகள் தொடங்கும். தங்கள் சொந்த சாதிய பிம்பங்களையும் கதையாடல்களையும் தான் இந்த இயக்குநர்கள் இப்படங்களில் காட்டினர். இவையே வளர்ந்து 1990 களின் சினிமா கதையாடல்களை ஆட்டிப்படைத்தன. அதன் தொடர்ச்சியில் நடிகர் கார்த்திக்கை சாதியின் பிம்பமாக அவருக்கே காட்டித் தந்தனர். சிவாஜி கணேசன் பாரதிராஜா போன்றோரும் அந்த வாசனைக்கு இலக்காகினர்.இக்கதையாடல்கள் வணிக வெற்றிக்கான பார்முலாவாக ஆனதால் அச்சாதியினர் அல்லாதவர்களும் அவ்வகை படங்களையே எடுத்தனர். தமிழ்ச் சினிமாவில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட பாடல்களில் முத்துராமலிங்கத் தேவர் புகழ்ச்சி (சீமானே எழுதிய பாஞ்சாலங்குறிச்சி படப் பாடல் உள்பட) இடம் பெற்றுள்ளது.இது வேறு எவருக்கும் கிடையாது.
இவை யாவும் பிராமணரல்லாத வட்டார பெரும்பான்மை சாதி கதையாடல்கள் என்பது தெளிவு. இவர்களும் பிராமணர்களால் சாதிய ரீதியாக வஞ்சிக்கப்பட்டவர்கள் என்றே அரசியல் ரீதியாக சொல்லப்படுகின்றனர். அதன் தொடர்ச்சியினாலேயே தலித்துகளை ஒடுக்குபவர்களாக இருந்தாலும் பிராமணர் எதிர்ப்பு என்ற வகையில் தலித்துகளோடு ஒத்தவர்களாக சொல்லப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் இது மகத்தான அரசியல் கதையாடல்.
இந்த கதையாடலின்படி இடைநிலை பிரிவினர் பிராமணர் எதிர்ப்பு அரசியல் குறியீடு என்ற முறையில் பெரியாரை ஏற்றிருக்க வேண்டும். அதோடு பெரியாரின் உழைப்பால் அதிகாரத்திற்கு வந்த திராவிட அரசியலால் பலன் பெற்றவர்கள் என்ற முறையிலும் பெரியாருக்கு / பிராமணர் அல்லாத அரசியலுக்கு விசுவாசமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இவர்களிடம் அதற்கான எந்த ஓர்மையும் இருந்ததில்லை. உள்ளூரில் சாதிய சமூக அதிகாரத்தை கைக்கொண்டிருக்கும் இவர்கள் பெரியார் போன்றோரின் பிராமணரல்லாத அரசியலின் பலனையும் எவ்வித தீவிர பங்களிப்பும் இல்லாமலே பெற்றிருக்கின்றனர். ஆனால் இவ்வகுப்பினர் தாங்கி பிடித்து வந்திருப்பதோ தத்தம் சாதிகளுக்கேயுரிய பிம்பங்களையே. அதன்படி தான் மேற்கண்ட முத்துராமலிங்கத் தேவர் பிம்பங்களை பார்க்க வேண்டியுள்ளது.
ஆனால் பிராமணரல்லாதோர் அரசியலால் பயன் பெற்றோர் என்ற முறையில் இவர்கள் பெரியாரை ஏன் காட்டவில்லை? என்ற கேள்வியோ மாறாக அவரை காட்ட வேண்டும் என்ற நெருக்கடியோ அரசியல் சமூகத்திடமிருந்து இதுவரையிலும் ஒரு கேள்வியாக எழுப்பட்டதில்லை.
இடைநிலை வகுப்பினர் சாதியவாதிகளாக இருப்பது இயல்பானதாக பார்க்கப்படுவதே இதற்கான அடிப்படைக் காரணம். எனவே அவர்களிடம் வலியுறுத்துவதற்கோ எதிர்பார்ப்பதற்கோ எதுவுமில்லை என்று கருதப்படுகிறது. எனில் சாதிக்கு எதிராக இருக்க வேண்டிய பொறுப்பும் அதற்கு எதிராக போராடி இழப்புகளை சந்திக்க வேண்டிய நிலையும் தலித்துகளுடையதாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் அவ்வகை போராட்டங்களின் பலன் பிராமணர் அல்லாதவர் என்ற முறையில் இடைநிலை சாதியினருக்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும் என்ற சொல்லப்படாத அரசியல் விளக்கமும் இங்கிருக்கிறது. அதிலிருந்து விலகுவதாக சந்தேகப்படும் போதெல்லாம் தலித்துகள் தங்களை நிருபிக்கும் வரையிலும் தாக்கப்படுகிறார்கள்.

லஷ்மி அக்கா


நேற்று 19 ந்தேதி, காலை உணவுக்காக வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு உணவகம் சென்றேன்...... அப்போது எனது எதிரில் உள்ள இருக்கைகளில் இரண்டு மாநகர துப்புரவு தொழிலாளர்கள் உணவருந்த வந்து அமர்ந்தார்கள்.... அவர்களில் ஒருவர் எனது நெருங்கிய உறவினரும் கூட....
"நைனா உன் போட்டா போட்டு ஒரு பேனர் அங்க கட்டியிருந்துச்சே...ஸ்கூல் பசங்க போட்டால்லாம் கூட இருந்துச்சே....

" ஆமாம் மா படிக்கிற பசங்களுக்கு பரிசு தர்றோம்.... மத்த பசங்களுக்கு ஊக்கமா இருக்கும் இல்ல அதனால தான் "
" நீயும் அம்பேத்கர் அது இதுன்னு என்னன்னமோ பண்ற, நம்ம ஜனங்களுக்கு நல்லது நடந்தா சரி"
என்று சொல்லிவிட்டு அவரது தோழியுடன் உரையாடலை தொடர்ந்தார்....
அப்போதுதான் அவரது இடது கையை கூர்ந்து கவனித்தேன்.... அதில் லஷ்மி என்று பச்சை குத்தப்பட்டிருந்தது.. பொதுவாக மனம் கவர்ந்த மற்றவர்களின் பெயரைதான் தங்களின் கைகளில் பச்சை குத்திக்கொள்வார்கள்.....
இது என்ன புதுசா இருக்கே.... ஏனெனில் அவரின் பெயர் லஷ்மி என்பதை நான் நன்கு அறிவேன்.... குழப்பமும் ஆர்வமும் கலந்த உணர்வினால் உந்தப்பட்டு அல்லாடிக் கொண்டிருந்தேன்...
இறுதியில் கேட்டுவிட துணிந்தேன்....

"உங்க பேரையே ஏன் நீங்க பச்சை குத்திட்டிருக்கீங்க என்றேன்....
" அதுவா.... ஒன்னுமில்ல என்றவர், சிறிது நேர தயக்கத்திற்கு பிறகு பேச ஆரம்பித்தார்.... நாங்க சின்ன வயசா இருக்கும் போது உன்ன மாதிரி அம்பேத்கர் பத்தி எங்களுக்கு சொல்லிக்கொடுத்து இப்படியெல்லாம் பரிசு குடுத்திருந்தா நான் ஏன் நைனா இப்படி என் பேரையே பச்சை குத்திக்கிட்டு அலையப்போறேன் "
கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்களேன் என்றேன்...
" அப்பல்லாம் நாங்க பள்ளிக்கூடம் போறதே மத்திய சோத்துக்காகத்தான்.. படிப்போட அருமை தெரியாது... அத தெரிஞ்சு சொல்றத்துக்கும் யாருமில்லை.....
எங்கப்பா பிணம் அறுக்கற வேல..... அந்த பிணத்தின் மேல சுத்தற வெள்ள காடா துணி யை தான் நாங்க யூனிபார்ம் தச்சு போட்டுட்டு போவோம்.... பட்டினிய ஜெயிக்கறதுதான் எங்களோட மிகப்பெரிய போராட்டமாக இருந்ததால படிப்பு ஏறல....
அவ்ளோதான்...
அப்புறம் நகராட்சி யில் துப்புரவு வேலைக்கு போயி சேர்ந்தேன்...
அப்பல்லாம் பம்பாய் கக்கூசு கிடையாது...நாத்தம் குடல புடுங்கும்..
என்ன பண்றது.... வயித்தக் கழுவனுமே... சமாளிச்சிட்டு செய்வேன்....
அப்பதான்... "மஸ்டரோல்" ல (வருகை பதிவேடு) கண்டிப்பா கையெழுத்து போடனும் னு மேஸ்திரி strict ஆ சொல்லிட்டாரு.... இந்த வேலைய விட்டுடக்கூடாதுன்னு.... எவ்வளவோ முயற்சி பண்ணேன்...எழுத வரல... அஞ்சில வராதது அம்பதுலியா வரும்..? அப்புறம் ஒரு ஐடியா பண்ணேன், போயி எம்பேர பச்சை குத்திக் கிட்டேன்.... இதைப்பார்த்து பார்த்து தான் கையெழுத்து போடுவேன்.... அப்ப படிப்போட அரும தெரியல.... என்னா பண்றது நைனா...
நம்ப புள்ளைங்களுக்கு எங்கள மாதிரி நிலம வரக்கூடாது நைனா....படிப்பு தான் நைனா நம்ம சொத்து..... ஊர் அழுக்கையெல்லாம் சுத்தம் பண்ண நமக்கு சொந்தமா பொட்டு நிலம் கிடையாது..... பாட்டன் சேத்து வச்ச சொத்தும் கிடையாது..... படிப்புதான நைனா.. அதான் நீ தான் அம்பேத்கர் கட்சிக்காரனாச்சே உனக்கு தெரியாதா? என்று சொல்லிவிட்டு ஊர் அழுக்க சுத்தம் பண்ண கிளம்பிட்டாங்க...
இன்னும் அதிகமாக இப்படியான நிகழ்ச்சிகள் நடத்தி... சுய மரியாதை உணர்வூட்டி, மாண்புள்ள மனிதர்களை உருவாக்க வேண்டிய தேவையும் அவசரமும் நிறைய இருக்கு என்று எண்ணிக் கொண்டேன்....
ஓடிப்போய் நிகழ்ச்சிக்கான நோட்டீசை அவர்களிடம் கொடுத்தேன்.....வருவதாக உறுதியளித்தார்...
ஆம் கல்வி ஆயுதமே...
சமூகத்தையும் சேர்த்து படிக்கும் கல்வி புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னதுபோல்
ஓர் ஆயுதமே......

Wednesday, June 20, 2018

பார்ப்பன சங்கராச்சாரியின் சாதி வெறி vs கக்கன்

செத்துப்போன சங்கராச்சாரி சந்திரசேகரன், ஒரு தாழ்த்தப்பட்டவரை நேரடியாக கண்ணால் பார்க்கக் கூடாது என்பதற்காக, அமைச்சர் கக்கனுக்கும் தனக்கும் இடையில் ஒரு பசுமாட்டை நிறுத்தி வைத்துப் பார்த்தான். அப்பாவியான அமைச்சர் கக்கனின் எளிமையும், நேர்மையும் அவருடைய சுயமரியாதையைக் காப்பதற்குக் கூட பயன்படவில்லை.
இன்று மறைந்த கக்கன் அவர்களின் பிறந்த நாளில் அன்னாரை நினைவு கூறும் அதே நேரத்தில் பார்ப்பன சங்கராச்சாரியின் சாதி வெறியை நாம் மறக்கக்கூடாது

Tuesday, June 19, 2018

ஈத்தரபயலுகளா..

சேவல்கள் எண்ணிக்கொள்ளுமாம் தாங்கள் கூவுவதால் தான் பொழுது விடிகிறதென்று..
சில அரைகுறைகள் திராவிடத்தை மேம்போக்காக அறிந்துக்கொண்டு.. பெரியாரை கலைஞரை விமர்சிக்கின்றன.. 
எதற்கெடுத்தாலும் முன்பே இந்த புரட்சி நடந்திருக்கிறது.. கலைஞர் வந்து தான் செய்தாரென்பதை ஏற்கமுடியாது..
பெரியார் இல்லாவிட்டாலும் படித்திருப்போம்.. இன்றைக்கும் சாதி ஒழிந்துவிட்டதா .. சாதியை வளர்ப்பதே திராவிடம் தான் என்றெல்லாம் பேசுகிறார்கள்...
பேசுங்கள் எதையும் அறிந்துக்கொண்டு அறிந்ததை ஆய்ந்து உண்மைதானா என விளங்கி பின் விமர்சனம் செய்யுங்கள்.. 
..
சாதியை பார்த்துதானே தேர்தலில் ஆளை நிறுத்துகிறார்கள் என கேட்போருக்கு மறுக்கவில்லை.. அந்தந்த பகுதியில் வாழும் சமுதாய மக்களின் பிரதிநிதியாய் அதே சமுதாயத்தை சேர்ந்தவரை நிறுத்துவதென்பது இயல்பான ஒன்று ‍.அதில் கூட சில இடங்களில் பிற சமூகத்தவரை நிறுத்தியிருக்கிறது.. ஆனால் தேர்தல் அரசியலில் வெற்றி முக்கியம் என்பதும் அதே வேளை கொள்கை சார்ந்தவர்களை நிறுத்தவேண்டியதும் அவசியம்.. குறைகளே இல்லையா என கேட்டால் உண்டு ஆனாலும் பிற கட்சிகளை விட திமுக மிக நேர்மையாக நடந்துவந்திருக்கிறது என்பதை மறுக்கமுடியாது..
..
இனம் மொழி கலாச்சாரத்திற்கு திமுக செய்ததைப்போல வேறு எந்த கட்சியும் செய்ததில்லை காரணம் அடிப்படையிலிருந்து மாறாத கொள்கைப்பிடிப்பே காரணம்.. தமிழ்மொழியை செம்மொழியாக்கியதொன்றே போதும்.. வள்ளுவனுக்கு சிலை வடித்து வானுயர புகழ் சேர்த்தது .. தமிழ்ப்புத்தாண்டை தை மாதமென்ற சட்டமேற்றியது ..பின் வந்த ஆரியமங்கை தான் சார்ந்த இனத்தின் கலாச்சார திணிப்பை மீண்டும் கொண்டுவந்தார்.. தமிழனின் பண்பாட்டை கட்டிகாப்பதில் எப்போதும் திமுக பின்வாங்கியதில்லை..
..
எந்தவொரு திட்டமானாலும் உடனே சில அறிவுஜீவி..? கள் நாங்கள் ஏற்கனவே சிந்தித்தது நாங்கள் சொல்லிதான் செய்தது திமுக என உளற தொடங்கியிருக்கிறார்கள் 
ஏன் அதற்கு முன் இருந்த ராஜாஜி பக்தவச்சலம் போன்றவர்களின் காங்கிரஸ் ஆட்சியில் செய்திருக்கவேண்டியதுதானே.. அல்லது மகோரா ‌மற்றும் ஜெயா ஆட்சியில் கேட்டு பெற்றிருக்கவேண்டியதுதானே என்றால் பதில் இல்லை .. பதில் வராது.. ஏனெனில் இவர்களையெல்லாம் அருகில் அண்டவிடுவதே இல்லை அல்லது இவர்களை ஒரு பொருட்டாக மதித்ததில்லை.. அது எந்த சாதி மதத்தினராக இருந்தாலும் கலைஞரை தவிர மற்றவர்கள் நடத்திய விதம் அப்படிதான்..காரணம் சிநிதிக்கும் திறனற்ற எடுப்பார்கைப்பிள்ளையை போல அடுத்தவரின் நிழலில் அறிவில் குளிர்காய்கிறவர்களாக இருந்தார்கள் ..
அல்லது அவர்களிடம் கேட்க ஒருவித பயமிருந்தது.. ஆனால் கலைஞர் எல்லோரையும் கடுமையாக எதிர்க்கிறவர்களின் கருத்தையும் உள்வாங்கியகிறவராக அவர்களின் கருத்தை கோரிக்கைகளை ஏற்கிறவராக அதில் நியாமிருந்தால் நடைமுறைபடுத்த தயங்காதவராக இருந்தார்.. இந்திய வரலாற்றில் உச்சபட்ச ஜனநாயகவாதியாக திகழ்ந்தவர் கலைஞர் மட்டும்தான் ..
..
பெரியார் இல்லையென்றாலும் படித்திருப்போம் .. சரி..
ஆராயிரம் பள்ளிகளை மூடினாரே மூதறிஞர்..? என நம்பபட்ட ராஜாஜி அப்போது அவருக்கெதிராக ஏன் யாரும் அசையவில்லை .. குலக்கல்வி கொண்டுவந்து அவனவன் சாதி தொழிலை செய்யுங்களென சொன்னபோது என்ன பிடிங்கி கொண்டிருந்தீர்கள் .. காமராஜரை நிறுத்தி ராஜாஜியை புறமுதுகிட்டு ஓட செய்தது பெரியார் தானே .. ஆராயிரம் பள்ளியை மூடிவிட்டார் நீயாவது திறந்து எம்ம பிள்ளைகள் படிக்க ஏற்பாடு செய் என்ற கோரிக்கைதானே .. ஊரெங்கும் துவக்கப்பள்ளி வர காரணமாக இருந்தது.. பள்ளி திறந்தும் யாரும் வர மாட்டேங்கிறாங்கய்யா என்ற போது மதிய சோறு போட்டாவது பசங்களை படிக்க வைத்தது திராவிடம்தானே.. மதிய உணவிற்கு போதிய நிதி ஆதாரம் இல்லையென்ற போது பணக்காரர்கள் செல்வந்தர்கள் ..என கையேந்தி.. கடைசியில் விவசாயிகளிடம்.. முதல் மரைக்காய சாமிக்கும் இரண்டாவது மரைக்காய ஊர்கோவிலுக்கும் தரிங்க மூணாவது மரைக்காய எனக்கு தாங்க பிள்ளைகளுக்கு சோறு போடுறேன் என்றாரே .. இதற்கெல்லாம் மூலகாரணமாக ராஜாஜியை வீழித்தி காமராஜரை கொண்டுவந்து குழந்தைகள் படிககணுமென்ற பெரியாரை ..
இவர் இல்லாவிட்டாலும் படிச்சிருப்போமென்பது எவ்வளவு பெரிய கயமைத்தனம்.. பெரியாரின் வழிவந்த கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகுதானே நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்தி..படிப்படியாக உயர்நிலை மேல்நிலையென கிராம்தோறும் கொண்டு சேர்த்தார் ..மாவட்டம் தோறும் கலைக்கல்லூரி .. தொழில்நுட்ப கல்லூரியென ..செய்து இந்தியாவிலேயே மாவட்டம் தோறும் மருத்துவக்கல்லூரியை நிறுவியது இந்த பெரியாரின் நேரடி சீடர் கலைஞர் தானே.. பெண்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து மகளிர் கல்லூரி மாவட்டம்தோறும்.. ஏன் முதல்பட்டதாரிக்கு கல்விக்கட்டணம் இல்லை.
அடுக்கிகொண்டு போகலாம்.. 
கல்வியில் புரட்சியை செய்தது திராவிடம்தான்..
..
இவையெல்லாவற்றையும் அனுபவித்து கொண்டே என்ன செய்தது திராவிடம் என்பவர்களை எப்படி அழைப்பது
ஈத்தரபயலுகளா..

சிவகுமார் - சாதிவெறியன் - பழைமைவாதம் பேசி திரியும் மூடர்

சிவகுமார்..
சாதிவெறியன் எனச் சொல்லி கடந்துவிடலாம் ஆனால் முன்பு பேசியதை மீண்டும்,கதைப்பதிலிருந்தே இந்த சமூகத்தில் வாழும் சில விசகிருமிகளில் தானும் ஒருவராக சொல்கிறார்..
..
ஆண்களும் பெண்களும் சேர்ந்து வேலை செய்தால் தவறு நடக்குமென சொல்வதிலிருந்து அது பழைய சங்கராச்சாரியர் வேலைக்கு போகும் பெண்களை விபச்சாரி என்றாரே அதையை இவர் மீண்டும் மொழிகிறார்.. சினிமா பின்னணியில் வாழ்ந்தவரிடம் தான் சார்ந்த துறையில் பெண்களை இவர் எந்தளவிற்கு மதித்திருப்பாரென நமக்கு புரிகிறது.. யோக்கியனாக தன்னை காட்டிக்கொள்ளும் இவரின் சாதிய பின்புலம் அதனோடு கொண்ட வெறி ஏற்கனவே நமக்கு தெரிந்ததென்றாலும்.. ஒரு பொதுவெளில் குறிப்பிட்ட அதிலும் IT துறை சார்ந்த பெண்களை கண்ணிய குறைவாக தரம்தாழ்த்தி பேசுவதென்பது இவரின் மனதின் கசடை நமக்கு உணர்த்துகிறது..
நாமும் அவரைப் போல இறங்கி கதைக்க தேவையில்லை.. அவரின் பிறவி கோளாறென கருதுவோம்.. 
..
சினிமாவில் நாயகன் வேசம் கட்டினால் நாலும் தெரிந்தவன் போல் பேச இங்குதான் முடிகிறது .. தெளிவற்ற வறட்டு சிந்தனையை கொண்டுவந்து இங்கே கொட்டுகிறார்கள்.. தங்களை யோக்கியர்கள் போலவும் .. மிக சிறந்த பண்பாளர்கள் போலவும் காட்டிக்கொள்ள நினைக்கும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் தொடர்ந்து வருகிறது.. அரசியல் ஆன்மீகம் என பழைய நடிகர்கள் பொழுது போகாமல் எதையாவது பேசி சர்ச்சையில் மாட்டிக்கொள்கிறார்கள்.. மிக மோசமான விமர்சனபார்வையை சிவகுமார் வைத்துள்ளார்.. என்ன ஆச்சர்யம் .. IT துறையில் அதிகளவில் மேட்டுக்குடியினரே இருந்தும் யாரும் அவருக்கெதிராக கருத்தை கண்டத்தனத்தை சிறு எதிர்ப்பை கூட பதியவில்லை..
..
பெண்கள் பல்வேறு துறைகளில் தங்களின் திறமையை பறைசாற்றும் காலகட்டத்தில் பழைமைவாதம் பேசி திரியும் இப்படிபட்ட மூடர்களை புறந்தள்ளவேண்டும் .. பெண்கள் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது .. பிற்போக்குவாதிகளில் வெற்று கூச்சலை கடந்து வெற்றி பெறுவோம் .. பெண்களை இழிவு செய்யும் மடையர்களை விரட்டியடிப்போம்.. சிவகுமார் போன்ற பிற்போக்குவாதிகளின் குடும்ப பெண்களுக்கு ஆறுதலை சொல்வோம்.. 
..
பெண்களை இழிவாக பேசும் சிவகுமார் நாவடக்குவது நல்லது.. 

பள்ளியில் சேர்க்கும் போது சாதி குறிப்பிடாமல் விட்டால், சாதி ஒழிந்து விடுமா

கேள்வி: பள்ளியில் சேர்க்கும் போது சாதி குறிப்பிடாமல் விட்டால், சாதி ஒழிந்து விடும் என்கிறார்களே? இன்னும் சிலர் சாதி/சமயம் என்னும் இடத்தில் மனிதன், தமிழன், இந்தியன் என்றெல்லாம் குறிப்பிடலாம் என்கிறார்களே?
பதில்:
சாதியை அழித்தொழிக்கும் வழி என்று அண்ணல் அம்பேத்கர் ஒரு நூல் எழுதியுள்ளார். அவர் கூட இப்படி எல்லாம் சாதியை ஒழிக்கலாம் என்று கூறவில்லை.
எப்படி ஏழை மக்களுக்குப் பயன்படக்கூடிய சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுப்பதை ஒரு பெரிய புரட்சி போல பரப்பினார்களோ, அதே போல் இதையும் விசமத்தனமாக ஒரு சாதனை போன்று பரப்புகிறார்கள்.
பெரும்பான்மை மக்களுக்கு இட ஒதுக்கீடு பற்றிய சரியான அறிமுகம் இல்லா நிலையில், எந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு மிகவும் பயன்படுமோ, அவர்கள் தான் இதை நம்பிப் பலியாவார்கள்.
இட ஒதுக்கீடு என்பது பல தலைமுறைகள் போராடிப் பெற்ற அரசியல் சாசன உரிமை. அது உங்கள் முன்னோர் உங்கள் குழந்தைகள் பெயரில் விட்டுச் சென்ற சொத்து. அதை விற்றுத் திங்க உங்களுக்கு உரிமை கிடையாது. இட ஒதுக்கீடு தனக்கு தேவையா இல்லையா என்று உங்கள் குழந்தை தான் முடிவெடுக்க வேண்டும்.
நீங்கள் உயிரின வகையில் மனிதன். இனத்தால் திராவிடர். மொழியால் தமிழர். நாட்டால் இந்தியர். எனக்கு மதமே இல்லை என்று நீங்கள் எழுதிக் கொடுத்தாலும் அரசியச் சாசன வரையறைப் படி நீங்கள் கிறித்தவம், இசுலாம் போன்ற பிற நாட்டுச் சமயங்களைப் பின்பற்றாவிட்டால் தானாகவே இந்து என்று கணக்கில் கொள்ளப்படுவீர்கள். அந்த இந்து சமய நூல்கள் உங்களைச் சூத்திரன் (வேசி மகன்) என்றும் பஞ்சமன் (அதனினும் இழிவான தீண்டத்தகாதவன்) என்றும் தான் எழுதி வைத்திருக்கின்றன.
எனவே, சாதி/சமயம் என்னும் இடத்தில் மனிதன், தமிழன், இந்தியன் என்றெல்லாம் குறிப்பிடும் அப்துல்கலாம் தனமான பம்மாத்துகளை ஒழித்து விட்டு சாதிச் சான்றிதழில் உங்கள் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு அரசியல் சாசன உரிமையைப் பேணுங்கள்.