Showing posts with label Brahmin. Show all posts
Showing posts with label Brahmin. Show all posts

Monday, July 16, 2018

உலகக் கால்பந்துப் போட்டியும், அக்கிரஹார அழிச்சாட்டியமும்!

உலகக் கால்பந்துப் போட்டியும், அக்கிரஹார அழிச்சாட்டியமும்!
...தேசிய கால்பந்து தலைமைப் பயிற்சியாளரும் முன்னாள் தேசிய கால்பந்து அணி வீரருமான சய்யத் நயிமுதீனின் கூற்று மெய்யாக்குகிறது. “நான் தேசிய கால்பந்து அணிக்குப் பயிற்சியாளராக இருந்தபோது பயிற்சியின்போது விளையாட்டு வீரர்களுக்குப் பாதுகாப்பான பாட்டில் குடிநீர், பழ ரசம் போன்றாவற்றுக்குக்கூட அதிகாரிகளிடம் போராடித்தான் வாங்க வேண்டியிருந்தது. வெறும் வயிற்றுடன் கால் பந்து விளையாட முடியுமா?” அதிகாரிகளில் மிகப் பெரும்பான்மையினர் பார்ப்பனரே என்பதுதான் இந்நிலைக்கான அடிப்படை.
... Indoor Games எனப்படும் சற்றுக் குறைந்த உடல் உழைப்புள்ள விளையாட்டுகளில் வென்று விளையாட்டு ஒதுக்கீட்டில் மேற்படிப்பு களைப் படித்து அல்லது இதையே தகுதியாக அமெரிக்கா போன்ற நாடுகளில் காட்டி அங்கு செட்டிலும் ஆகின்றனர். இது பெரும்பான்மையான பார்ப்பனரல்லாதோரால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத டெக்னிக். அது மட்டுமல்ல பார்ப்பனர்களின் வெளிநாட்டுத் தொடர்புகள் போல நமக்குக் கிடையாது என்பதும் இங்குள்ள சமூகச் சூழல்.
...தற்போது தரமான மாணவர்கள் கிடைத்தாலும் அவர்களை உருவாக்க கல்விக்கான நேரங்கள் அனுமதிப்பதில்லை. பெற்றோரும் கல்விக்குச் சமமாக இவ்விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஒன்பதாம் வகுப்பு வந்தவுடனேயே அம்மாணவன் கல்விக்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். மேலும் இவ்விளையாட்டுகள் ஊடகங்களால் முதன்மைப் படுத்தப்படுவதில்லை. 

Thursday, July 12, 2018

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை ஏமாற்றி முட்டாளாக்கிய ஸ்ரீரங்கம் பார்ப்பனர்கள்

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை ஏமாற்றி முட்டாளாக்கிய ஸ்ரீரங்கம் பார்ப்பனர்கள்....
13ஆம் நூற்றாண்டில் ஒரு சம்பவம்
பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஒரு துலாபாரம் நடந்தது. திருச்சிக்குப் பக்கத்தில் சிறீரங்கத்திற்குப் பக்கத்தில் ஒரு கோயில் இருக்கிறதில்லையா அங்கேதான் நடந்தது. அங்கே துலாபாரம் கொடுத்தவர் யார் தெரியும்களா?
சுந்தர பாண்டியன். சுந்தரபாண்டியனை நம்முடைய ஆள்களுக்குத் தெரியாது. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்றால் தெரியும். ஏனென்றால் நம்மாள்களுக்கு சினிமாவோடு லிங்க் பண்ணிதான் தெரியும்.
அந்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஒரிசா வரைக்கும் படைஎடுத்துக்கொண்டு போனான். தெற்கே இலங்கை வரைக்கும் படை எடுத்துக்கொண்டு போனான். இந்த நாடு முழுவதையும் அவனுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவந்து பெரிய பேரரசாக சக்கரவர்த்தியாக ஆண்டான். என்று வரலாறு சொல்லுது.
ஒரு அய்யர் மன்னனிடம் "நீ பல போர்களை செய்திருக்கிறாய். பல உயிர்களைக் கொன்றிருக்கிறாய். அந்தப் பாவத்தைப் போக்கத் துலாபாரம் செய்ய வேண்டும்" என்றார்.
சரி, துலாபாரம் செய்யலாம். எங்கே செய்யலாம்? சிறீரங்கத்தில் போய் பெருமாளுக்கு செய்வோம் என்று சொன்னார்கள். சரி என்று வந்தான்.
கோயிலில் தராசு கட்டினார்கள். பட்டுச் சட்டை வேட்டியோடு துண்டை எல்லாம் அணிந்து கொண்டு வந்தான். மகாராஜா அல்லவா?
சக்ரவர்த்தி அல்லவா? வந்து தராசில் உட்காரப் போனான். அப்பொழுது ஒரு பட்டர் கேட்டார், எடைக்கு எடை என்ன தரப் போகிறீர்கள்? என்று.
அவன் வெள்ளரிக்காய் தருகிறேன், கத்தரிக்காய் தருகிறேன் என்றால் வாங்கிக்கொண்டு போயிருப்பார்கள். வாழைப்பழம் தருகிறேன். முருங்கைக்காய் தருகிறேன். என்றால் வாங்கிக்கொண்டு போயிருப்பார்கள்.
ஆனால், அவன் சுந்தரபாண்டியன் சொன்னான், "நான் எடைக்கு எடை பணம் தரப் போகிறேன், வைரம் தரப் போகிறேன்" என்றான்.
உடனே பார்ப்பன மூளை வேலை செய்தது.
அவர்கள் என்ன செய்தார்கள்? ஓகோ, எடைக்கு எடை கொடுக்கப்போனால் தங்கம்- வைரம் எல்லாம் கொடுக்கப் போகிறான். அதுவும் நம்மவர்களுக்குத்தான் தரப் போகின்றான். அவன் வெறும் பட்டு வேட்டி கட்டி உட்காரக் கூடாது.
நீங்கள் எதற்காக துலாபாரம் செய்கிறீர்கள்? போர்க்களத்திலே பெற்ற வெற்றிக்காகவும், அங்கே செய்யப்பட்ட படுகொலைக்கு பாவ சாந்திக்காகவும் தான் என்று சொன்னான்.
ரொம்ப மகிழ்ச்சி. நீங்கள் துலாபாரம் செய்யுங்கள். அந்தத் தங்கத்தை எல்லாம் கொடுங்கள். ஆனால் ஒன்று. நீங்கள் போர்க் களத்திற்கு எப்படி போனீர்களோ அந்த மாதிரி உடை, பொருள்களை அணிந்து கொண்டு உட்காருங்கள் என்று சொன்னார்கள்.
போர்க்களத்திற்குப் பட்டு வேட்டியையும் துண்டையுமா கட்டிக் கொண்டு போவான்? போர்க்களத்திற்கு எப்படி போவான்? பெரிய இரும்பு உடைவாள், ஈட்டி, கேடயம் இரும்புக் கவசம், தலைப்பாகை இவைகளை எல்லாம் கட்டிக்கொண்டு செல்வான்.
இதுவே ஒரு 50 கிலோ சேர்ந்து போகும். அப்பொழுது இருந்த சுந்தரபாண்டியன் எல்லாம் என்னை மாதிரி இல்லிங்க. நல்ல குண்டான ஆள். இந்த உடைகளைப் போட்டால் இன்னும் 50 கிலோ வைரம் வரும். இன்னும் 50 கிலோ தங்கம் வருமல்லவா?
போரிலே செய்கின்ற படுகொலைப் பாவங்களைப் போக்கத்தானே வந்திருக்கிறீர்கள்? அதனால் போருக்கு போகிற மாதிரியே உட் காருங்கள் என்று சொன்னார்கள். சுந்தரபாண்டியன் பார்த்தான் பயந்துவிட்டான். பகைவரைக் கண்டு நடுங்காத சுந்தரபாண்டியன் இந்த பட்டரைக் கண்டு நடுங்குகின்றான். உடனே தளபதியை மன்னன் அழைத்தான். உடைவாள், கவசம் எல்லாம் வந்தது. போய் தராசில் உட்காரப் போறான்.
இன்னொரு பட்டர் சொல்றான்...
இவன் என்னான்னான். கொஞ்சம் நில்லு! நீ எதற்காக துலாபாரம் இப்படி செய்யப் போகிறாய்? நான் தரப்போகிறேன். போர்க் களத்திலே பெற்ற வெற்றிக்காக அங்கே செய்யப் பட்ட படுகொலை பாவங்களைப் போக்குவதற்காக செய்கிறேன் என்று சொன்னார்.
சரி, நல்லா பண்ணுங்கோ... திவ்யமா பண்ணுங்கோ... ஆனால் ஒன்று, போர்க்களத்திற்கு எதன்மீது போனீர்கள் என்று கேட்டான். சின்னக் குழந்தைகள் எல்லாம் சிரிக்கிறது. சுந்தரபாண்டியன் சிரிக்கவில்லை.
போர்க்களத்திற்கு யானை மீது தானே போனாய்?
யானையினுடைய ஒவ்வொரு தந்தமும் 25 கிலோ எடை கொண்டது. பட்டத்து யானையோ ஆயிரம் கிலோ. யானையோடு வந்து மன்னன் சுந்தர பாண்டியன் உட்கார வேண்டும்.
யானையோடு மட்டுமல்ல, யானை மீது உட்கார்ந்திருந்த அம்பாரி-அது ஒரு 100 கிலோ.இவ்வளவோடும் நீ வந்து உட்கார்ந்து செய்தால் தான் உன்பாவம் போகும் என்று சொல்லிவிட்டான்.
பக்கத்திலே இருந்த அய்யர், ஆமாம் மகாராஜா. நீங்கள் அவர் சொல்லுகிற மாதிரி யானைமீது வாருங்கள் என்று சொன்னார்.
இன்னொருத்தன், இவன் எப்படி துலாபாரம் கொடுக்கிறான் பார்ப்போம். யானை மீது அம்பாரி கொடுக்கிற அளவுக்கு இவன் எப்படித் துலாபாரம் கொடுக்கிறான் பார்ப்போம் என்று சொன்னார்.
மன்னனும் அப்படியே கொடுப்பது என்று சொல்லிவிட்டான். தராசா இல்லை? நான் கண்டு பிடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, எல்லோரும் அம்மாமண்டபத்திற்கு வந்தார்கள். அந்த மண்டபத்தில் இப்பொழுது சீட்டாடுகிறார்கள். அப்பொழுது இல்லை.
அம்மாமண்டபத்திற்குப் போனார்கள். அப்பொழுதெல்லாம் காவிரியில் நிறையத் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இரண்டு பரிசலைப் பெரிதாகச் செய்தார்கள். யானை ஏறி நிற்கிற மாதிரி ஒரு பரிசல்.
இன்னொன்று அதே அளவுக்குப் பரிசல். இரண்டையும் கயிற்றிலே கட்டி காவிரி ஆற்றிலே மிதக்கவிட்டார்கள்.
தண்ணீரில் யானையைப் பரிசலில் நிற்க வைத்து, அதற்குச் சமமாக இன்னொரு பரிசலில் தங்கத்தை, வைடூரியத்தை கொட்டு என்று சொன்னார்கள். அப்படி எல்லாவற்றையும் கொட்டினார்கள். சுந்தரபாண்டியன் மலை அளவு செல்வத்தை அவன் வாரி வழங்கினான்.
எல்லாமே பார்ப்பானுக்குப் போய்விட்டது. ஆக துலாபாரத்தை சுந்தரபாண்டியன் கொடுத்து விட்டான். அதற்கப்புறம் சுந்தரபாண்டியனை பார்ப்பனர்கள் மேளதாளத்துடன் கூட்டிக் கொண்டு போகிறார்கள்.
கோயில் வாசலிலே சுந்தரபாண்டியன் நிற்கிறான். அப்பொழுது அந்த தலைமை பட்டரைப் பார்த்து கேட்கிறான். எனக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது என்று மன்னன் சொன்னான் சுந்தரபாண்டியன்.
யார்? மன்னாதி மன்னன். தென்னாட்டு சக்ரவர்த்தி, பேரரசன். அவனுடைய கண் அசைவுக்கும், கை அசைவுக்கும் மன்னர்கள். கைகட்டி காத்திருக்கின்றார்கள்.
அவ்வளவு பெரிய இந்த சக்கரவர்த்தி பட்டரிடம் சாமி, எனக்கு ஒரு கோரிக்கை என்று கேட்டான். இந்தக் கோவில் வளாகத்திற்குள்ளே என்னுடைய சிலை ஒன்றை வைத்துக் கொள்கிறேன் என்று கேட்டான்.
உடனே அந்த பட்டர் சொன்னார், இல்லை, இல்லை. ஆண்டவனுடைய ஆலயத்தில் சாதாரண மனிதனுடைய சிலை வைப்பதற்கு இடம் இல்லை என்று சொன்னார். மறுத்துவிட்டான்.
சுந்தரபாண்டியன் நினைத்திருந்தால் இந்தக் கோவிலையே இடித்து தரைமட்டமாக்கி யிருக்கலாம். அவனுடைய ஆதிக்கத்தில் கோவில் இருக்கிறது. இந்த பட்டரெல்லாம் அவன் போடுகின்ற பிச்சையில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அந்தப் பெருமாளே அவன் போடுகின்ற பிச்சையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அந்த அளவுக்கு இருக்கிறது நிலைமை.
ஆனால் அவன் இவ்வளவு செல்வத்தைக் கொடுத்தானல்லவா? ஒரு ஓரத்தில் அவனுடைய சிலையை வைப்பதில் என்ன குறைந்து போய்விட்டது?
கடைசி வரைக்கும் வைக்கவில்லை.
அதன் பிறகு ஒரு கட்டப்பஞ்சாயத்து பண்ணினார்கள். நீங்கள் பிறந்த நட்சத்திரத்தில் உங்களுக்கு ஒரு பூஜை பண்ணுகிறோம், அர்ச்சனை பண்ணுகிறோம் என்று பட்டர்கள் சுந்தரபாண்டியனுக்காகச் சொன்னார்கள். அந்த அர்ச்சனை இன்றைக்கும் நடக்கிறது. தட்டுல 5பைசா போட்டாலே இந்த அய்யர் அர்ச்சனை பண்ணுவான். மலைபோல் இந்த செல்வத்தைக் கொடுத்துவிட்டு ஒரு அர்ச்சனைக்காக மன்னன் அங்கே கைகட்டி நின்றான்.
நான் சொல்லுவதெல்லாம் கதை அல்ல. எல்லாமே சீறீரங்கம் கோயில் கல்வெட்டில் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் போய் பார்த்துக் கொள்ளலாம்...

ஆரியர்கள் திராவிடர்கள் - 2

பார்ப்பனர், பார்ப்பனீயம் போன்ற சொற்களை கேட்கும் நடுநிலைகள், மற்றும் சக தோழர்களுக்கு சிறிது என்மேல் கோபம் வரும். பொறுத்து கொண்டு விளக்கத்தை கேளுங்கள். அய்யா சுப வீ இதற்கு ஏற்கெனெவே சில முக்கிய விளக்கங்களை கொடுத்து இருக்கிறார். அதை நான் ஏற்று கொண்ட காரணத்தினால் அவர் கருத்து சாரத்திலேயே நானும் பதிலளிக்கிறேன்.
பார்ப்பனர் என்பது வசை சொல் அல்ல. அதை பாரதியாரை தவிர யாருமே வசை சொல்லாக பயன்படுத்தியது இல்ல.
பாவலேறு பெருஞ்சித்தரனார் சொன்னது போல தச்சு வேலை செய்பவர் தச்சர் என்பது போல, பார்ப்பான் என்றால் கணி பார்ப்பார் சோதிடம் பார்ப்பான் என்பவை ஆகும். சரி ஏன் பிராமணர்கள் என்ற பெயரில் அழைத்தால் என்ன?.
பிராமணன் என்றால் பிரம்மனில் இருந்து வந்தவன் என பொருள். அந்த பிரம்மனையே மறுக்கும் நான் எப்படி அந்த வார்த்தை சொல்லி அழைக்க. தெரியாமல் சில வார்த்தைகளை நான் அழைக்கலாம். ஆனால், தெரிந்தே செய்வது நான் எதிர்க்கும் தத்துவத்தையே ஏற்போது போல் ஆகாதா?.
சரி ஏன் அவர்களை பெரியார் எதிர்த்தார் அல்லது திராவிட கொள்கை எதிர்த்தது?.
பெரியார் அல்லது திராவிட கொள்கை ஏன் இந்து மதத்தை மட்டும் எதிர்க்கிறது?
திருத்தம், பெரியார் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை,
பெரியார் இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கவில்லை.
பெரியார் ஆதிக்கத்தை எதிர்த்தார். வர்ணத்தின் பெயரால் அடுக்கு, அடுக்கின் முடிவில் சாதி, சாதிக்குள் உட்சாதி என ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனீயம் என்ற ஆதிக்க மனநிலையை தான் பெரியார் எதிர்த்தார்.
அவர் எந்த குறிப்பிட்ட சமூகத்திற்கும் எதிரி அல்ல. அவர் ஆதிக்கத்தின் எதிரி.
இந்து மத சடங்கில் இருக்கும் இழிவான காரியங்களை அவர் விமர்சித்தார். மற்ற மதங்களை விட இந்து மதத்தின் மீது கடுமையான சொற்போர் தொடுக்கப்பட்டது உண்மை தான். ஆனால், அதற்கான முக்கிய காரணம் சாதியை மதமே ஆதரிக்கிறதே எனும் கோட்பாடு தான் காரணம்.
ஆக, பெரியார் மூட நம்பிக்கையின் எதிரியே தவிர்த்து, எந்த மதத்திற்கும் எதிரி அல்ல.
இந்து மதத்தை போல அவர் பிறப்பின் அடிப்படியிலான அடையாளத்தை உருவாக்குபவரில்லை. உனக்கு மட்டும் ஏன் பூணூல் என கேட்பார் தூக்கி எறிந்து விட்டால் அவரை திராவிடம் அரவணைக்க தயங்கியதில்லை.
ஆக, "திராவிடம் ஆரியம்" என்பது பெரியாரின் கோட்பாட்டை பொறுத்த வரையில், "ஒடுக்கப்படுபவர் ஆதிக்கம்" என்ற அளவுகோலோடு செங்கோல் ஓச்சுகிறது. ஆனால், ஆரியமோ இன்னும் பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பிக்கிறது.
பெரியார் வாழ்க...!

ஆரியர்கள் திராவிடர்கள் - 1

"கும்பிடுறேன் சாமி" என்ற அடிமை தமிழையும், "நமஸ்காரம்" என்ற சமஸ்கிருத ஆதிக்கத்தையும் ஒழித்து "வணக்கம்" என்ற சுய மரியாதை மிக்க சொல்லை பிரபலபடுத்தியது திராவிட இயக்கம் தான். "வணக்கம்" என்கிற கலக சொல்லோடு எழுத ஆரம்பிக்கிறேன்.
ஆரியர்கள் திராவிடர்கள் என்றவுடன் என் நண்பர்கள் சிலரே என்னை பிரிவினைவாதியாக பார்த்ததுண்டு. அதற்கான விளங்கங்களை சில பதிவுகளை பகிர்வதன் மூலம் தெளிவு படுத்தி இருக்கிறேன். ஆனால், இன்னும் கூட அவர்கள் என்னை புரிந்து கொள்ளாதது வேதனை அளிக்கிறது. அதற்காக வருத்தப்பட்டு கொண்டே இருப்பதை விட, இன்னும் தெளிவாக என் கொள்கைகளை (தந்தை பெரியாரின் கொள்கைகளே என் கொள்கைகள்) இன்னும் எடுத்துரைக்க வேண்டும் என்பது வெகு நாட்களாக என் அவா. ஆனால், இந்த பதிவைகூட அவர்கள் படிப்பார்களோ இல்லையோ எனக்கு தெரியாது. பெரியாரை இந்த இடத்தில் முன்னிறுத்துகிறேன்.
அவர் எந்த இடத்தில் அவனமானப்படுத்தப்பட்டாரோ, அந்த இடத்திலேயே அவர் வாழ்ந்த காலத்திலேயெ அவருக்கு சிலை வைக்கப்பட்ட்டது. அவர் படத்தை செருப்பால் அடித்தற்கு பெரியாரின் மறுமொழி, "என் படத்தை செருப்பால் அடிப்பவருக்கு ஒரு செருப்பும் என் உருவ படமும் வழங்கப்படும்" என்பதாகும். ஏன் என கேட்டதற்கு, நம் கொள்கை பரவ இது ஒரு வாய்ப்பு என்றார். அதையே நானும் பயன்படுத்தி கொள்ள போகிறேன். இதையே வாய்ப்பாக கருதி திராவிட கருத்தியலை பரவ வழி செய்ய வேண்டும். அரசியல் கருத்துக்கு ஒத்து போகும் தோழர்களுக்கும் பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறேன்.
அரசியல் என்பதே உனக்கான எதிரியை வழி மொழிதலில் இருந்து தான் துவங்கு கிறது. தேசியம் என்பதே அரசியல் தான் என்னை பொறுத்தவரை. ஒவ்வொரு தேசியத்தின் ஆதிக்கத்தை எதிர்த்தும் ஒவ்வொரு தேசியம் கட்டமைக்கப்படும். உந்தன் அடையாளம் எதன் பொருட்டு நீ அடிமையாக்கப்பட்டாயோ அதன் பொருட்டே நீ போராடியாக வேண்டும். அது உந்தன் அடையாளமாகி போகும். உதாரணத்திற்கு, ஸ்பார்ட்டகஸை கூறலாம். அடிமை மரபில் பிறந்து ரோமிற்கு எதிராக இருந்த அனைத்து அடிமைகளையும் திரட்டி போராடிய புரட்சியாளன்.
அதே அடிப்படை தான் வந்தது பெரியாருக்கும். திராவிடம் திராவிடர் தமிழர் போன்ற அடையாளங்களை முன்னிறுத்தி ஆதிக்கத்திக்கு எதிரான மிக பெரிய புரட்சியை முன்னெடுத்தார் நம் தந்தை பெரியார்.
ஏன் அந்த கட்டாயம் ஏற்பட்டது? என்பதை பார்க்க நம் ஒரு நூற்றாண்டு பின்னோக்க வேண்டும். நாம் வாழ்ந்த முறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே இந்த கட்டுரை தொடர். முடிந்த வரை கருத்துகளை பகிருங்கள். தரமான விமர்சனங்களுக்கு கண்டிப்பாக முடிந்தவரை என் அறிவுக்குட்பட்டு முடிவு சொல்கிறேன். நன்றி.

பார்ப்பன தந்திரம் - 3

எப்படி எல்லாம் மக்கள் மத்தியில் சாதிய வன்மத்தை ஆழமாய் பதிய வைத்திருப்பார்கள் என்று ஒவ்வொறு வேதங்களையும் படிக்கும் போது உணரமுடிகிறது.
பார்ப்பான் அன்று விதைத்த விதை இன்று வேரூன்றி மிகப்பெரும் ஆலமரமாய் வளர்ந்து நிற்க்கிறது.அதில் சதியை உணர்ந்த சில சனகிளை மட்டும் பட்டு துண்டுற்று மனிதம் போற்ற தொடங்கியது.மீதமுள்ள கிளைகல் இன்றும் செழித்து வளர்கிறது.
வேதமும் கீழ்சாதி மக்களும்.
------------------------------------------------
பிராமணன் பற்றி தீதாக பேசிய சூத்திரன் நாக்கை அறுத்திட வேண்டும்.
முதல் மூன்று உயர் சாதியினரோடும் தன்னை சமமாக என்னும் அளவுக்கு எந்த கீழ்சாதி காரணும் நெஞ்சுரம் கொண்டால் அவனை சவுக்கல் அடிக்க வேண்டும்.
வேதம் ஒதுவதை அவன் காதால் கேட்டுவிட்டால் அவன் காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும்.
அவன் வேதத்தை உச்சரித்தால் அவன் நாக்கை அறுத்து துண்டாக்கிட வேண்டும்.
வேதங்களை அவன் உள்ளத்தில் தேக்கி வைத்தால் அவன் உடலை கண்டதுண்டமாக வெட்டி வீச வேண்டும்.
பிராமண தர்மத்தை சூத்திரன் ஒருவன் கற்றுக்கொள்ளவோ, கற்றுக்கொடுக்கவோ
துணிவானேயானால் அவனுடைய காதுகளிலும் வாயிலும் ஈயத்தை காய்ச்சி ஊற்றிட வேண்டும்.
கடைசியா என்ன சொல்லி முடிக்கிறானுங்கன்னு பாருங்க மக்களே..
பிராமணன் என்னதான் குரூரமான குற்றத்தை செய்தாலும்....
அவனை தண்டிக்க இயலாது.அவனை தண்டிப்பது நேரடியாக கடவுளை தண்டிப்பது போலாகும்.

பார்ப்பன தந்திரம் - 2

சென்ற மாதம் நடந்த என் சொந்த(30-6-18) நிகழ்வோடு தொடங்குகிறேன்.
கடவுள் இல்லை என்று நான் நம்ப தொடங்கி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆக போகிறது.இத்ததனை ஆண்டுகளில் எத்தனை நிகழ்வுகள் எத்னை தர்ம சங்கட சூழ்நிலைகள் அனைத்தையும் நாத்திகனாகவே கடந்து விட்டேன்.
என் பாட்டிக்கு முதலாம் ஆண்டு திவசம் கொடுக்கும் விடயத்தில் எனக்கும் அம்மாவுக்கும் ஒரு வாரமாக வாக்குவாதம் நடக்கிறது.கடைசியில் ஒரு வார்த்தை சொல்லி அம்மாதான் வென்றார்.
ஆமான்டா,நான் அண்ணன் தம்பிகூட பிறந்திருந்தா எங்க அம்மாவுக்கு எல்லாத்தையும் அவனுங்க நல்ல முறையில செஞ்சிருப்பானுங்க.நான் கூட பிறப்பில்லாம கெடக்குற அனாதை தானே அதான் இவளோ கெஞ்ச விடுறீங்க.
இதுதான் அம்மா சொன்னது.இந்த ஒற்றை வரியில் என் அம்மாவின் இளமை காலத்து பாசத்தின் ஏக்க போராட்டம் என் கண் முன்பே தோன்றி மறைந்தது.கண்ணீரை மறைத்துகொண்டு ஒப்புக்கொண்டேன்.
ஒரு புறம் நம் கொள்கைக்கு துரோகம் செய்கிறோமே என்ற உறுத்தல் இருந்தாலும் அம்மாவிற்க்காக சகித்துக்கொண்டேன்.
இங்கிருந்து தொடங்குவோம்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு,பலர் கேள்விபட்டிருக்க கூடும்.அங்குதான் சரியாக காலை 6 மணிக்கெல்லாம் எத்தியாயிற்று.
ஒரு சிறிய பேரூராட்சி இவ்வளவு பரபரப்பாகவும் சுறுசுறுப்பாவும் இயங்குகிறதா என்று ஆச்சசரியபட்டால்,போக போகதான் புரிந்தது அதன் காரணம்.
சென்றவுடன் முதல் வேளையாக காய்கறி பச்சரிசி பருப்பு எல்லாம் சேர்த்து 700ரூபாய்க்கு வாங்கியாயிற்று.
திவசம் கொடுக்கும் மண்டபத்துக்குள் நுலைந்தால்....அப்பப்பா எவ்வளவு கூட்டம்.மூன்றாம் வேற்றுமை நாள் காரியம்.16ஆம் நாள் காரியம் வருட திதி என்று பல வகையில் சூத்திரர்கள் காத்து கிடக்கின்றனர்.
ஒரு வழியாக ஒரு ஐயரை பிடித்து காரியம் செய்ய தேவையான ஏற்ப்பாடுகளை அம்மா செய்துகொண்டிருந்தார்.அதற்க்குள் நான் குளித்துவிட்டு ஈர துணியுடன் வந்து முதன்முதலாய் மிக அருகில் ஒரு பிராமணனை சந்திக்கிறேன்.
வெறும் மூன்றே நிமிடங்கள் தான் ஐயர் தனது மந்திரங்கள் அனைத்தையும் ஓதி முடித்து எழ சென்னார்.காரியம் முடிந்தது.
அம்மா அவருக்கு 1000ரூபாய் கொடுத்தார்.நான் மீண்டும் குளித்துவிட்டு உடுத்தி வந்த புதிய ஆடைகளை அங்கேயே விட்டுவிட்டு வந்தேன்.
இதில் கொடுமை என்னவென்றால் காரியம் செய்ய ஐயர் ஆபர் வேறு தருகிறார்.300,500,800,1000,1500.இதில் நம் வசதிற்க்கேற்ப்ப தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.இந்த 300க்கும்.1500க்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை.
எல்லாம் சரி.ஒரு ஆச்சாரமான பிராமணனுக்கு எப்படி ஒரு சூத்திரன் வாங்கி கொடுத்த அரிசியும் காய்கறிகளும் ஒத்துக்கொண்டது என்று தெரியவில்லை.
இருந்த இடத்தில் இருந்தே ஒரு நாளைக்கு 8லிருந்து 15ஆயிரம் வரை சம்பாதித்து விடுகிறார்.அத்தனையும் சூத்திரனின் பனம்.சூத்திரனை ஏற்க்கமாட்டேன்.ஆனால் அவன் தரும் பனத்தை தவிற்க்க மாட்டேன்.
எல்லாம் சரிதான் இதுல பிராமணனின் தந்திரம் எங்கே இருக்கிறது.என உங்களின் கேள்வி என் காதுகளுக்கு கேட்க்கிறது.
என்மே மாதா ப்ரவது லோபசரதி
அன்னவ் வ்ரதோ ஆபுரண்யஹா
அவபத்ய நாம.
என்னுடைய அம்மா யாருடன் படுத்து என்னை பெற்றாளோ தெரியவில்லை.ஏதோ ஒரு நம்பிக்கையில்தான் அவளை என்னுடைய அப்பாவின் மனைவியாக கருதுகிறேன்.அந்த அம்மாவிற்க்கு இந்த திவசம் போய் சேரட்டும்.
இதை எத்தனை இந்துக்களுக்கு தெரியும் என்பது சந்தேகம் தான்.
அப்படி திவசம் கொடுக்கவில்லை என்றால் என்னன்ன விளைவுகள் நேரும் என்பதை கருடபுராணம் சொல்கிறது.
ஆரோக்கிய குறைபாடு, அகால மரணம், திருமண தடை,தீய பழக்கங்கள்,ஊனமுடன் குழந்தை பிறத்தல்.மூளை வளர்ச்சி இல்லாத குழந்தை பிறத்தல்,என்று இன்னும் நிறைய நீள்கிறது.
இப்போது புரிகிறதா பார்பண தந்திரம்.
என் தாய்த்தமிழ் இரத்தங்களே தயவு கூர்ந்து வருடவருடம் தேவையில்லாமல் வெறும் மூன்று நிமிடத்தில் 1000,2000காசை கொடுத்து நம் தாய் தந்தையை கொச்சை படுத்துவதை விட...
ஒன்றும் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு உங்கள் தாய் தந்தையை மனதில் நினைத்து அவர்களுக்கு வயிறார ஒரு வேளை உணவளியுங்கள்.அதுவே அவர்களுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய ஆத்ம திருப்தி.

பிராமணர்களை தவிர வேறு யாரும் இல்லை

உலகத்தில் இருக்கிற எந்த முன்னேறிய சாதியும், மேட்டுக்குடி சாதியும் தாங்கள் வளர அடுத்தவர்களை சுரண்டுவது உண்மைதான். ஆனால் படிக்காதே, வருமையிலும் ஏழ்மையிலும் இரு என்பதற்காக கடவுளின் பெயரால் ஒரு தத்துவத்தை கண்டுபிடித்து அந்த தத்துவத்தை சுமத்தி மிகப்பெரிய சமுதாயத்தில் 95% மக்களை அறியாமையிலும், ஏழ்மையிலும், கல்வி அறிவு இல்லாமலும் வைத்திருக்கிற ஒரு கொடுமைக்கு சொந்தக்காரர்கள் யார் என்று சொன்னால் இந்தியாவில் உள்ள பிராமணர்களை தவிர வேறு யாரும் இல்லை.
அண்ணல் அம்பேத்கர் ❤️

உலகத்திலேயே படைச்சவன்கிட்ட பேசுறதுக்கு பாஷை கண்டுபிடிச்ச நாடு நம்ம நாடுதான்.

உலகத்திலேயே படைச்சவன்கிட்ட 
பேசுறதுக்கு பாஷை கண்டுபிடிச்ச 
நாடு நம்ம நாடுதான்.
எவ்வளவு பெருமையா இருக்கு/
அதுவும் அந்த பாஷை குறிப்பிட்ட 
ஒரு சமூகத்திற்கு மட்டும்தான் 
தெரியுமாம்.அந்த பாஷையில 
அர்ச்சனை ,பூசை, புனஸ்காரம் 
பண்ணுனா மட்டும்தான் கடவுளுக்கு 
புரியுமாம். அவரும் மனப்பூர்வமா 
அதை ஏத்துக்கிடுவாராம். வேற 
பாஷையெல்லாம் அவருக்கு 
தெரியாதாம்.
அடப்பாவிகளா/நீங்க மட்டும் இங்கிலீஷ்,ஹிந்தி,குஜராத்தி,மராட்டி,
அது இதுன்னு கத்துகிட்டு கடவுள 
கத்துக்குட்டியா ஆக்கிட்டீங்களே/
கடவுளுக்கு கல்யாணம் முடிச்சி வைக்கிறீங்க,தேர்ல வைத்து ஊரை 
சுற்றி காட்டுறீங்க, சில கடவுளுக்கு 
சந்தோஷத்தை உண்டு பண்ண 
கூத்தியாள் வீட்டுக்கெல்லாம் கொண்டு விடுறீங்க, பாலாபிஷேகம்,
தேனாபிஷேகம்,அப்படீன்னு பல 
அபிஷேகங்களை நடத்தி உச்சி குளிர வைச்சிட்டு ஊர்ல உள்ள 
ஜனங்க பேசுற பாஷையில ஒன்னு 
கூடபடிச்சி கொடுக்காம விட்டுட்டீங்கீளே/இது கடவளுக்கு 
செய்கிற துரோகமா ஒருத்தருக்கு 
கூட தெரியலையா?😒😒😒😒

பார்பணனின் சூழ்ச்சிகள் - சிப்பாய்க் கலவரம்

இதுதான் இந்துமத சாத்திர சம்பரதாயம் - பார்பணனின் சூழ்ச்சிகள் - விக்ட்டோரியா சாசனம்..
1857-இல் நடந்த சிப்பாய்க் கலவரமானது சுதந்திர உணர்ச்சியின் பேரில் ஏற்பட்ட கலவரம் அல்ல; அன்று ஆட்சி செய்த வெள்ளைக்காரன் செய்த சில சமுதாயச் சீர்திருத்தங்கள் காரணமாகப் பார்ப்பனர்கள் தூண்டிவிட்ட கலவரமாகும்.
அன்று இந்த நாட்டில் புருஷன் இறந்தால் அவனுடன் அவன் மனைவியையும் உயிருடன் பாடையில் வைத்துக் கயிறு போட்டுக் கட்டி, கொளுத்தும் வழக்கம் இருந்தது.
இந்தப் பழக்கத்தை பல்வேறு காலங்களில் பல முஸ்லிம் அரசர்கள் எதிர்த்துப் பார்த்து, தோல்வியே கண்டார்கள்.
வங்கத்தில் தோன்றிய இராஜாராம் மோகன்ராயின் அண்ணன் இறந்தபோது, அவருடைய மனைவியை உயிருடன் பிணத்துடன் சேர்த்துக் கொளுத்தப் பார்ப்பனர்கள் முற்பட்டார்கள். அது கண்டு அந்த அம்மாள் திமிறிக்கொண்டு ஓட ஆரம்பித்தார், பார்ப்பனர்கள் விடவில்லை; விரட்டிப் பிடித்துக் கொடூரமாகத் தாக்கி நெருப்பில் தூக்கிப் போட்டுக் கொளுத்தினர்.
இந்த நிகழ்ச்சி சிறந்த கல்விமானான இராஜாராம் மோகன்ராய் மனதை வாட்டியது. அவர் இந்தக் கொடிய உடன்கட்டை ஏறும் வழக்கத்தை முறியடிக்க முயற்சி செய்தார்.
வெள்ளைக்கார அரசாங்கத்தை அணுகி, ``என்ன நாகரிகம் வாய்ந்தவர்கள் நாங்கள் என்று பறைசாற்றிக்கொள்ளுகின்றீர்கள்.உங்கள் ஆட்சியில் தானே ``சதி’’ என்ற இந்தக் கொடுமை நடக்கின்றது? இதனைத் தடை செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.
அரசாங்கமும் ஏற்றுக்கொண்டு `சதி’ என்று உடன்கட்டை ஏறும் பழக்கத்தையும் சட்ட விரோதமாக்கியது.
வைதீகப் பார்ப்பனர்களும், மதவாதிகளும் எதிர்த்துப் பார்த்துத் தோல்வியே அடைந்தனர்.
இதுதான் இந்திய வரலாற்றிலேயே ஏற்பட்ட முதல் சீர்திருத்தமாகும்.
அடுத்து இந்த நாட்டில் பெண் குழந்தை பிறந்தால் கழுத்தைத் திருகிக் கொன்றுவிடும் பழக்கம் அன்று இருந்து வந்திருக்கின்றது. அதனையும் ஆங்கில அரசாங்கம் சட்ட விரோதமாக்கித் தடுத்து விட்டது.
அந்தக் காலத்தில் விவசாயத் தோட்டங்களுக்கும், விசேச கட்டிடம், கோவில்கள், மண்டபங்கள் கட்டுவதற்கும் சூத்திர மனிதர்களை நரபலி கொடுத்து திருஷ்டி கழிக்கும் வழக்கம் இந்தநாட்டில் நடந்து இருக்கின்றது. அதனையும் வெள்ளைக்கார ஆட்சி ஒழித்தது.
அடுத்து அது செய்த `பாவம்’ பெண்களுக்குப் பள்ளி ஏற்படுத்தியதும், ஆஸ்பத்திரி ஏற்படுத்தியதும் ஆகும்.
இதனால் பார்ப்பனர்கள் கொதிப்படைந்து, தந்திரமாகப் பட்டாளத்துக்காரன்களைத் தூண்டி விட்டுக் குழப்பம் பண்ணச் செய்தார்கள்.
முஸ்லிம் தோழர்களிடம் சென்று, ``நீங்கள் உபயோகப்படுத்தும் துப்பாக்கியில் பன்றிக் கொழுப்பு தடவி இருக்கின்றார்கள். உங்கள் மதத்துக்குப் பன்றி கூடாது. உங்கள் மத உணர்ச்சியைக் குலைக்கவே பன்றிக் கொழுப்புத் தடவி இருக்கின்றார்கள்’’ என்று தூண்டிவிட்டார்கள்.
இந்துக்களாக இருக்கின்ற சோல்ஜர்களிடம் சென்று, நீங்கள் உபயோகிக்கும் துப்பாக்கியிலும், தோட்டாவிலும் பசுமாட்டுக் கொழுப்பல்லவோ தடவி இருக்கின்றார்கள்.
இந்துக்கள் கடல் தாண்டுவது என்பது சாஸ்திர விரோதமானதாகும்.உங்களை எல்லாம் கப்பலில் ஏற்றிக் கொண்டு போய் வெளி இடங்களுக்குச் சென்று சண்டை போடச் சொல்லுகின்றார்கள்’’ என்று தூண்டி விட்டார்கள். அன்று பட்டாளத்தில் இந்துக்களும் அதிகமாக இருந்தபடியால் கலகம் பண்ணினார்கள்.
அரசாங்கத்துக்குக் கீழ்ப்படிய மறுத்ததோடு வெள்ளைக்காரர்கள் மீது துப்பாக்கியை நீட்டவும் ஆரம்பித்தார்கள்.
ஏராளமான வெள்ளைக்காரர்களும், பெண்களும் குழந்தைகளும் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். வெள்ளைக்காரர்கள் பயந்து அங்குமிங்குமாக ஓடினார்கள்.
பார்ப்பனர்கள் ஒரு படகைக் கொண்டு வந்து நிறுத்தி ``இதில் ஏறிக்கொள்ளுங்கள்; உங்களைப் பாதுகாப்பான இடத்தில் கொண்டு விடுகின்றோம்’’ என்று ஏற்றிச் சென்று, நடுக்கடலில் கொண்டு போய்ப் படகைக் கவிழ்த்துவிட்டு அத்தனை பேர்களையும் கொன்று விட்டார்கள்.
வெள்ளைக்காரனால் கட்டுப்படுத்த முடியாமல் போகவே பார்ப்பனர்களைக் கூப்பிட்டு ஏன் இப்படிக் கலகம் பண்ணுகின்றீர்கள் என்று ராணி பேசினார்.
பார்ப்பனர்கள் ``நீங்கள் எங்கள் மதத்திலே, பழக்க வழக்கங்களிலே தலையிடக் கூடாது’’ என்று உறுதி கேட்டார்கள். அதன்படி எழுதிக் கொடுக்கப்பட்டது. அதுதான் விக்டோரியா மகாராணியின் மகாசாசனம் ஆகும்.
ஆதாரம் வேணுமுனா அத படிச்சி தொலைங்க..
அறிவில்லாம இன்னும் எத்தனை நாளைக்குத்தான் மாட்டுமூளையோடு இருக்கப் போறீங்க.
உங்களுக்கெல்லாம் உடன்கட்டை ஏறுதல், பெண்சிசு கொலை பற்றிய வரலாறு தெரியாதா?
எப்படியோ ஐயர் கொடுக்குற தீர்தத்தை குடிச்சிட்டு நாசமா போங்க..

Tuesday, July 10, 2018

பார்ப்பனீயத்தின் ஒடுக்குமுறைகளை தகர்தெறியாமலே நேராக தனித்தமிழ் தேசம் கேட்கும் இனவாத அறிவு ஜீவிகள்

பார்ப்பனீயத்தின்
மொழி ஒடுக்குமுறை,
பண்பாட்டு ஒடுக்குமுறை,
பொருளியல் வாழ்வின் மீதான ஒடுக்குமுறை,
அறிவின் மீதான ஒடுக்குமுறை,
சாதிய படிநிலை ஒடுக்குமுறைகளை ஒழித்தாலே அதன் நீட்சியான நம் நகர்வு பார்ப்பனீயத்தின்தேசிய ஒடுக்குமுறையை தகர்தெறிவதில்தான் இயல்பாகவே பயணிக்கும் என்பதை பெரியார் மிகத் தெளிவாக உணர்ந்திருந்தார்.

ஆனால், பார்ப்பனீயத்தின் ஒடுக்குமுறைகளை தகர்தெறியாமலே நேராக தனித்தமிழ் தேசம் கேட்கும் இனவாத அறிவு ஜீவிகள் தங்களை அறியாமலே பார்ப்பனீயத்திற்கு துணை போகின்றனர் என்பதே உண்மை.

பறையரை குறித்துப் பாரதி

தோழர்களே
உங்களுக்குத் தெரியுமா?



சென்னை எழும்பூரில் ஸ்பர்டேங்க் என்னுமிடத்தில் டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் பஞ்சமர் மாநாட்டில் 7.10.1917 அன்று பேசும்போது பார்ப்பனர்களை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். இதுகுறித்துப் பாரதி எழுதுவதைப் பார்ப்போம்.

“சென்னை பட்டினத்தில் நாயர் கஷிக் கூட்டமொன்றில், பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிகையில் வாசித்தோம்.”

“என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும்வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! அடே பார்ப்பனனைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் அவமதிப்பாகத் தான் நடத்துகின்றார்கள். எல்லோரையும் அடிக்க பறையரால் முடியுமா?”

ஆதாரம்; பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.394

Tuesday, July 03, 2018

கமலும் பிராமணர் சங்கமும்



கமலின் வாழ்க்கையில், குறிப்பாக மண வாழ்வில், சறுக்கல்கள் உண்டு. வாணியோடு திருமண பந்தத்தில் இருந்த போதே சரிகாவோடு தொடர்பு. அப்புறம் திருமணம் ஆகாமலே இரண்டு மகள்கள். அப்புறம் சிம்ரன், கௌதமி என்று நீண்ட வரலாறு. இதையெல்லாம் கமலும் மறைத்ததில்லை. அப்போதெல்லாம் பிராமணர் சங்கத்துக்கு எந்த அவமானமும் வந்துவிடவில்லை ஆனால் தனக்கு பூணூல் பிடிக்கவில்லை என்று சொன்ன போது மட்டும் வெகுண்டெழுகிறார்கள். ஹ்ஹ்ம்ம்ம்

பூணூல் பார்ப்பனர் ,க்ஷத்ரியர் ,வைசியர் என மூன்று வர்ணங்களுக்கும் உண்டு .சூத்திரர்களுக்கு தான் கிடையாது 

ஒவ்வொரு வர்ணத்துக்கும் பூணூல் நூல் மாறுபடும்.போடும் முறையும்,வயதும் மாறும்,பூணூலை வைத்தே வர்ணத்தை,உட்பிரிவை கண்டுபிடித்து விடலாம்.இதனால் தான் பல இந்து கோவில்களில் பூணூல் மட்டும் அணிந்து அரைநிர்வாணமாக ஆண்கள் வர வேண்டும் என்ற விதி இருந்தது,இருக்கிறது 

கமல் பொதுவாக பிடிக்காத நூல் பூணூல் என்று தான் சொன்னார். பூணூல் அணியும் வழக்கம் கொண்ட இந்து மதத்தை சார்ந்த மூன்று வர்ணங்களில் பார்ப்பன சங்கங்கள் மட்டும் பொங்குவது வியப்பாக இருக்கிறது

Monday, July 02, 2018

கமலின் வைணவ மூளை - நயவஞ்சகமான வார்த்தைகள் -ஆச்சரியம் இல்லை

கமலின் வைணவ மூளையில் இருந்து வெளிப்பட்ட இடஒதுக்கீடு எதிரான நயவஞ்சகமான வார்த்தைகளின் கோர்வையுடன் கூடிய பதிவை பார்த்தேன்...ஆச்சரியம் இல்லை...தன்னை இவ்வளவு சீக்கிரமாக அமபலப்படுத்தி கொண்டார் என்பதே எனக்கு ஆச்சரியம் தருகிறது.....
ஏழாம் அறிவு படத்தில் கமலின் மகள் இடஒதுக்கீடு எதிரான வசனம் பெரும் சர்ச்சையாக போனது..... பிற்பாடு அந்த படத்தின் இயக்குனர் முருகதாஸ் தன்னுடைய பேட்டியில் சுருதிஹாசன் அதை வசனத்தில் சேர்த்ததாக எங்கோ படித்த ஞாபகம்.
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி போட்டியில் சூர்யா முன்னிலையில் பாரதியார் கோயில் சம்பவம் மற்றும் பாடல்கள் பற்றி பாடம் எடுத்தார் தன் மகளுக்கும் சூர்யாவுக்கும்....ஆனால் சமத்துவம் மற்றும் பெண்ணியம் பேசிய அதே பாரதியை மறந்து விடுவார்...
இதில் இன்னொரு ஆச்சரியம் எதற்கு இதில் கேரளாவை மேற்கோள் காட்டினார் என்று தெரியவில்லை...கேரளா கல்வியில் முன்னிலையில் இருந்தாலும் சாதிய கட்டமைப்பில் விடுபடும் எண்ணத்தில் பலவருடங்கள் பின்தங்கி இருக்கிறது...சில மாதங்கள் முன் நீயா நானா விவாதத்தில் ஒரு கேரள நடிகை மேனன் என்று கேரள சாதிய பழக்கத்தை கரு பழனியப்பன் விவாதத்தில் கேள்விகளால் அவரை அமபலப்படுத்தினர்...இதில் தமிழகம் பெரியாரின் போராட்டத்தால் எப்போவோ முற்போக்கு மாநிலமாகி விட்டது....இன்னும் 50 களில் மற்றும் 60 வயதுகளில் இருக்கும் சாதி நாய்களை செருப்பால் அடித்தால் முழுமையாக மாறிவிடும்...
எழுத்தாளர் ஞாநி 1982 கமலுடன் பேட்டியில் , ஞாநி தன்னுடைய கடைசி வரியில் இவருக்கு இரண்டு முகங்கள் இருக்கிறது என்று எச்சரித்தார்...
இவரை நம்புவார்கள் அழிவது நிச்சயம்


Friday, June 29, 2018

பிராமணர்கள் எங்காவது கலவரத்தில் வன்முறையில் ஈடுபட்டு பார்த்திருக்கிறீர்களா.!?

பிராமணர்கள் எங்காவது கலவரத்தில் வன்முறையில் ஈடுபட்டு பார்த்திருக்கிறீர்களா.!?
-எஸ்வி.சேகர்-
இவரின் கூற்றில் ஒழிந்து கிடக்கும் உண்மையை நாம் விவாதிக்காமல் எளிதாக தவிர்த்து விட்டு கடந்து செல்வது யாரை ஏமாற்றும் செயல்..!!??
கூட்டுக் களவாணிகளில் பார்ப்பனர்களை மட்டும் குற்றம் சுமத்துவது ஒருதலை பட்சமாக இல்லையா.!?
நத்தம் நாயக்கன்கொட்டாய் 350 தலித் வீடுகளை கொளுத்தியது யார்.!? பார்ப்பனர்களா.!?
இளவரசன் கோகுல்ராஜ் நாகமுத்து சங்கர் முத்தழகு வை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
1968 கீழ்வெண்மணியில் 44 தலித்துகளை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
1978 விழுப்புரத்தில் 12 தலித்துகளை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
1979 உஞ்சனையில் 5 தலித்துகளை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
1992 வாச்சாத்தியில் 186 பழங்குடியின குடும்பங்களையும் துண்புறுத்தியும் 18 சிறுமிகள் பெண்களை வன்புணர்ந்து வன்கொடுமை செய்தது​ யார்.!? பார்ப்பனர்களா.!?
1995 கொடியங்குளம் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தியது​ யார்.!? பார்ப்பனர்களா.!?
அதை தொடர்ந்து நெல்லை விருதுநகரில் 75 பேரை அரிவாள் வீசி கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
இந்த கலவரத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தது யாரால்.!? பார்ப்பனர்களாலா.!?
1997 மேலவளவு 7 தலித்துகளை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
2000 ம.புளிபங்குடி 3 தலித்துகளை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
2002 திண்ணியத்தில் தலித்துகள் வாயில் மலத்தை திணித்தது யார்.!? பார்ப்பனர்களா.!?
2003 கண்ணகி முருகேசனை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
2017 வடபழஞ்சி முத்தழகை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
கீரிப்பட்டி பாப்பாபட்டி நாட்டார்மங்களம் கொட்டக்காச்சியெந்தல் பஞ்சாயத்துகளில் தேர்தலை நடக்க முடியாமல் செய்தது யார்.!? பார்ப்பனர்களா.!?
தேசிய கொடியை தொட்டதற்காக சொட்டத்தட்டி பஞ்சாயத்து தலைவரை செருப்பால் அடித்தது யார்.!? பார்ப்பனர்களா.!?
எழுத்தாளர் பெருமாள் முருகனை முடக்கியது யார்.!? பார்ப்பனர்களா.!?
எழுத்தாளர் புலியூர் முருகேசன் மீது கொடூர தாக்குதல் நடத்தியது​ யார்.!? பார்ப்பனர்களா.!?
நந்தினியை வன்புணர்ந்து கொன்றது யார்.!?
பார்ப்பனர்களா.!?
ஆக வன்முறையிலும் கலவரத்திலும் ஈடுபடும் கூட்டுக் களவாணியான பெருந்திரள் வாக்குவங்கி இடைநிலை சூத்திர சாதி இந்துக்களையும்​ இக்கணம் விமர்சிப்பதை விட்டுட்டு
மற்றொரு கூட்டுக் களவாணியான எஸ்வி.சேகர் போன்ற பார்ப்பனர்கள் மீது மட்டும் ஒட்டு மொத்த பழியையும் சுமத்த முயல்வது தூற்றுவது எவ்வளவு பெரிய அய்யோக்கியத்தனம் பித்தலாட்டம் ஏமாற்றுவேலை

பௌத்த விஹாரையே அபேஷ் பண்ணுனதுக்கு என்ன செய்யிறதாம்?

திருப்பதி ஜீயருக்கு ஆண்டுக்கு 1.5 கோடி சம்பளம் என்று சொன்னதற்கே ஆச்சரியப்படுறீங்க.
பௌத்த விஹாரையே அபேஷ் பண்ணுனதுக்கு என்ன செய்யிறதாம்?
கி.பி.7 ம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் பரவிய காலத்தில் தான் இந்த நிலப்பரப்பில் கோவில்கள் கட்டப்பட்டன.
ஆழ்வார்களும்-நாயன்மார்களும் கடுமையான மதமாற்றப் பணிகளை செய்து முடித்தனர்.
அவர்களுக்கு இணையான மதமாற்றத்தை உலகில் இதுவரை எவரும் செய்ததில்லை.
கிறிஸ்தவர்கள் மதமாற்றம் செய்கிறார்கள் என்ற ஆர்.எஸ்.எஸ் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதற்கு ஒரே உதாரணம் ஆண்டாண்டு காலமாக கிறிஸ்தவ மக்கள் தொகை 4% சதத்தை தாண்டாதது தான்.
கிறிஸ்தவம் இந்திய நிலப்பரப்பில் வளராமல் போனதற்கு அடிப்படையான காரணம் ஒன்று உண்டு.
அது யாதெனில் கிறிஸ்துவின் பிறப்பு குறித்ததும் கிருஷ்ணரின் பிறப்பு குறித்ததும் ஒன்றுதான்.
மதமாற்றம் செய்வது வேறு
மதம் மாறுவது என்பது வேறு.
இங்கு அதிகாரம் மூலம் மட்டுமே மதம் மாற்றப்பட்டார்கள்.
மதம் மாறுவது என்பது தனிநபர் மனம் சார்ந்த தேடல் மட்டுமே.
ஒரு நடிகனின் ரசிகனாக இருப்பவனை
மற்றொரு நடிகனின் ரசிகனாக மாற்ற முடியாது எளிதில்.
பௌத்தமும்-சமணமும் அதிகாரத்தின் துணை கொண்டே அழிக்கப்பட்டு
வைதீகம் வந்து சேர்ந்தது.
வைதீகத்தின் வசங்கெட்ட செயலால் அதிலிருந்து பிரிந்ததே சைவமும்-வைணவமும்.
வைணவத்தின் இருகிய தன்மையை உடைத்ததே ராமானுஜரின் தென்கலை வைணவம்.
வடகலை இன்றும் வக்கிரங்களோடு வாழ்கிறது.
ராஜாஜி முதல் ஜெயலலிதா வரை வடகலை வைணவர்களே.
இந்த நிலப்பரப்பெங்கும் இருந்த பௌத்த ஆலயங்கள் கி.பி.7 க்குப் பிறகு அப்படியே சைவ-வைணவ பங்குளாக பிரிக்கப்பட்டன.
திருப்பதி பெருமாள் கோவிலும் பௌத்த ஆலயமே.
இன்றுள்ள பெருமாள் சிலையின் அலங்காரத்தை அகற்றினால் உள்ளே புத்தரே இருப்பார்.
எந்த பெருமாள் கோவிலிலும் மொட்டையடிக்கும் வழக்கம் கிடையாது.
பௌத்த வழக்கமே மொட்டையடித்தல்.
நேற்று ஒரு நண்பர் இதைப்பற்றி கடந்த பதிவில் கேட்டார்.
அவருக்காக இந்தப் பதிவு.
உங்களுக்கு பயன்பட்டாலும் கூட.
புத்தரை தூக்கி எறிந்த சந்தோச முழக்கமே கோவிந்தா.கோவிந்தா.
கோ என்றால் அரசன் என்ற பொருள் உண்டு.
அந்த அரசன் புத்தனே.
இந்திய வரலாறு என்பது
பௌத்தத்திற்கும்-பார்பபனியத்திற்கும் நடந்த யுத்தமே என்ற அண்ணல் அம்பேத்கரின் கருத்து நினைவில் கொள்ளத்தக்கது.
இதுவே அங்குள்ள சிலை.

கோயில்கள் பெருத்த ஊர் மட்டுமல்ல கும்பகோணம்...பார்ப்பனர்களுக்காக தேவதாசிகள் நிறைந்த ஊரும் அதுவே

கோயில்கள் பெருத்த ஊர் மட்டுமல்ல கும்பகோணம்...பார்ப்பனர்களுக்காக  தேவதாசிகள் நிறைந்த ஊரும் அதுவே, என்பது குறித்த ஒரு வரலாற்று பதிவு.

கும்பகோணத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவானது குறித்து ஆய்வுக்காக அப்போதைய ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்ட அரசு அதிகாரி கில்பர்ட் ஸ்லேட்டர், கும்ப்கோணம் நகராட்சி அதிகாரியை சந்தித்து விவரம் கேட்கிறார்.

அதிகாரிகள் இங்கே 12 கோயில்கள் இருக்கின்றன, தேவதாசிகள் பெருமளவில் இங்கே இருக்கிறார்கள், அதனால் பிறப்பு விகிதம் குறைவு என்கின்றனர். உடனே அவர் அரசு மருத்துவமணைக்கும் சென்று ஆய்வு செய்கிறார்.

அங்கே ஏராளமான பெண்கள் "கனோரியா" மற்றும் "சி்பிலிஸ்" போன்ற நோய் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார், அவர்களில் அயந்து  பேரில் 4 பெண்கள் பார்ப்பன சமூகத்தைச் சார்ந்தவர்கள், அவர்கள் கோயில்களில் தேவதாசிகளாக பணிபுரிபவர்கள் என்பதனை மருத்துவ அதிகாரிகள் மூலம் அறிகிறார்.

ஆதாரம்:- இந்திய நாகரீகத்தில் திராவிடப் பண்புகள் (Dravidian Elements in Indian Culture-Book Page No. 111) எனும் நூலின் பக்கம் 111.

சமஸ்கிருதத்தின் கேவலம் புரிகிறதா?

சில நாட்களுக்கு முன்னர்
என்னுடைய  இளமைக்கால தோழி ஒருவரை அவர் கணவரோடு
சந்தையில் சந்திக்க நேர்ந்தது..

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு சந்தித்தேன்..

இருதரப்பு நல விசாரிப்புகளுக்கு பின், தத்தம் குழந்தைகள் பற்றி பேச்சு திரும்பியது..

அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள்.

மூத்தவள் +2 வும்
இளையவள் 8 ஆம் வகுப்பும் படிக்கிறார்கள்

என்ன பெயர் வைத்திருக்கிறிர்கள்
எனக் கேட்டேன்..

பெரியவ பேர் "மகிஷா.."
சின்னவ "கேஷு.. "

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது..

பேர்ல என்ன அதிர்ச்சின்னு கேக்குறிங்களா..?

ஆமா..
மூத்தவ பொறந்த உடனே இவர்தான்
ஐயர் கிட்ட ஜாதகம் பார்த்து பேர் எழுதி வாங்கியாந்தார்ன்னு தன் கணவரை கை காட்டினார்..

சின்னவளுக்கும் அதே ஐயர்தான்
ஜாதகம் பாத்து பேர் எழுதி கொடுத்தார்ன்னும் சொன்னாங்க..

மூத்த பொண்ணு முழுப்பேரு மகிஷாசுரமர்த்தினி!
அடுத்த பொண்ணு முழுப்பேரு
கேஷ்வர்த்தினி!
அவரே சுருக்கமா மூத்தவள "மகிஷா"ன்னும்
சின்னவளை
"கேஷு" ன்னும் கூப்பிடலாம்ன்னாராம்..
..
இப்ப நான் ஏன் அதிர்ச்சியானென்ற
மேட்டருக்கு வருவோம்..
அந்த மகிஷாவுக்கும் கேஷுவுக்கும்
அர்த்தம் என்ன தெரியுமா..?
..
மகிஷான்னா "எருமை"
கேஷுன்னா  "மயிரு"
சமஸ்கிருதத்துல..
..
பெத்தவங்களுக்கு தெரியாது,
பேர் வச்ச பாப்பானுக்கு தெரியுமில்லையா..?

தன்னை நம்பி வந்தவர்களுக்கு
பணத்தை வாங்கிட்டு அவன் காட்டிய
நன்றிய பார்த்தீங்களா..?
இதான் பார்ப்பனியம்..
..
இன்னும் குழந்தை பிறந்தால்
இவனுங்கிட்ட ஜாதகம் எழுதி
பெயர் வைக்கக் கோரும் எத்தனையோ பெற்றோர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..
அவர்களின் குழந்தைகளுக்கு
இவனுங்க வைக்கும் பெயரின்
லட்சணம் இதுதான்..
..
இன்றைக்கு பார்ப்பன அயோக்யத்தனத்தினால் கட்டுண்டு கிடக்கும் ஊடகங்கள்,
தமது நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி தொடர்கள் வழியாகவும் சமஸ்கிருத பெயர்களை அறிமுகம் செய்ய,
இன்றைய பெற்றோர் சமஸ்கிருதத்தில் பெயர் வைப்பதை நாகரீகமாக, பெருமையாக, ஸ்டைலாக நினைக்கின்றனர்..
அப்படி அவர்கள் வைக்கும் பெயர்களின்
உண்மைப் பொருள் தெரிந்தால், கேவலப்படுவார்கள்..

எடுத்துக்காட்டாக,
பிருத்வி என்ற சமஸ்கிருதப் பெயருக்கு
மண்ணாங்கட்டி என்று பொருள்.
மண்ணாங்கட்டி என்று தமிழில் வைத்தால் கேவலமாக நினைப்பவன்,
அதையே சமஸ்கிருதத்தில் வைத்துக்கொண்டு பெருமையாகத் திரிகிறான்!

பெண்ணுக்கு யாஷிகா என்று  சமஸ்கிருதப் பெயர் வைத்து பெருமை கொள்கிறார்கள்.
அதற்கு என்ன பொருள்?
யாஷிகா என்றால் யாசகம் எடுப்பவள்,
அதாவது பிச்சைக்காரி என்று அர்த்தம்.
தமிழில் பிச்சைக்காரி என்று
பெயர் வைத்துக்கொள்வாளா?
ஆனால், அதையே சமஸ்கிருதத்தில் வைத்துக்கொண்டு பெருமையாகத் திரிகிறார்கள்.

அதேபோல் கேசவன் என்று
சமஸ்கிருதப் பெயர் வைத்துக்கொள்கிறான்.
அதன் பொருள் மயிரான்.
கேசம் - மயிர்

கோபிகா என்றால் பால்காரி..

தாமோதரன் என்றால் கயிற்றால் கட்டப்பட்டவன்.

அபர்ணா என்றால் நிர்வாணமானவள்,
ஆடை இல்லாதவள்.

வாசுகி என்றால்
"என்னை அனுபவி "என்று பொருள்.
(திருவள்ளுவர் மேல எவ்ளோ கடுப்பு இருந்திருந்தா அவர் பொண்டாட்டிக்கு
இப்டி ஒரு பெயரை வச்சிருப்பானுங்க)

கோபால் என்றால் பசும்பால் என பொருள்.
(கோ- பசு தமிழ்ல ஆட்டையை போட்ட சொல்)

சுந்தரலிங்கம்,
மகாலிங்கம்,
ஜம்புலிங்கம், இது போன்ற மிகக்கேவலமான கெட்ட வார்த்தைகளை குறிக்கும் (அர்த்தம் கேக்காதீங்க) பெயர்களைக்கூட பெருமையுடன் வைத்துக்கொண்டு இருக்கிறார்களே!
நாம் என்ன செய்யமுடியும்?

கருப்பன், இருளன் என்று பெயர் வைத்தால் கேவலமாக என்னும் நாம்
அதையே சமஸ்கிருதத்தில் கிருஷ்ணா..
கிருஷ் என வைத்துக்கொள்வோம். 

கிருஷ்ணவேணி என்று சமஸ்கிருதப் பெயரை வைப்பதற்கு என்ன பொருள் தெரியுமா? கருவாச்சி

 சமஸ்கிருதத்தின் கேவலம் புரிகிறதா?
..
தமிழ்மேல் எத்தகைய காழ்ப்புணர்வு இருந்தால், இந்த பார்ப்பனியம் இத்தகைய கயமையை இந்த விவரமறியா மக்கள் மேல் கட்டவிழ்த்து விடும்..
..
ஆமா.. உங்க குழந்தைகளுக்கு
என்ன பெயர் வச்சிருக்கிங்க..?
..
பாப்பாங்கிட்ட கேட்டிருந்தா பண்ணாடப்பயலுக நிச்சயம் ஏதாவது கெட்ட வார்த்தையத்தான் பேரா வச்சிவிட்டிருப்பானுங்க..
நீங்க வேணும்ன்னா செக் பண்ணி பாருங்க..

இனியாவது..
போலி கவுரவத்தால் அறிவிழக்காமல் பிள்ளைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயரைச் சூட்டுங்கள்.

Friday, June 22, 2018

கிரஹப்பிரவேசம் என்பது தீட்டு அகற்ற செய்யும் சடங்கு!

கிரஹப்பிரவேசம் என்பது தீட்டு அகற்ற செய்யும் சடங்கு!

இந்த வீட்டில் கீழ்சாதிக்காரர்கள் கொத்தனாராக சித்தாளாக வேலை பார்த்திருப்பார்கள் அதனால் தீட்டாகி இருக்கும், அந்தத் தீட்டைப் போக்க பிராமணரை வைத்து மந்திரம் சொல்லிப் பசு மாட்டு மூத்திரம் சாணியைக் கரைத்துத் தெளித்தால் தீட்டுப் போகும் என்றே செய்கிறார்கள்.

அதனை நம்பி உழைக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும் அதேபோல செய்து தான் சார்ந்திருக்கும் உழைக்கும் இனத்தையே இழிவுபடுத்தி பிராமண அடிமையாகிறார்கள்.

மனுதர்மம் அத்தியாயம் 5 சுலோகம் 124 :

"வீடு முதலானவற்றிற்கு சண்டாளாதிகளால் அசுத்தம் நேரிட்டபோது விளக்குதல் மெழுகுதல் கோமூத்திரம் தெளித்தல் கொஞ்சம் மேல் மண்ணை எடுத்துப்போடுதல் பசுமாட்டை ஒரு நாள் வசிக்கும்படிச் செய்தல் இவ்வைந்தினால் அப்பூமி பரிசுத்தப் படுத்தப்படுகிறது."

(சண்டாளாதிகள் - கீழ்சாதிக்காரர்கள்)

உங்கள் வீட்டிலாவது "கிரஹப்பிரவேசம்" எனும் பெயரில் நீங்கள் வசிக்க வீடுகட்டி கொடுத்த தொழிலாளர்களை அவமானப்படுத்தாமல் இருங்கள்... கடவுள் நம்பிக்கை உடையவராக இருப்பின், கடவுளுக்கும் உங்களுக்கும் இடையில் புரோகிதர் எனும் ஏமாற்றுக்காரனுக்கு இடமளிக்காதீர்கள்... சொந்தங்களையும், நண்பர்களையும் அழைத்து விருந்தளிப்பதோடு முடித்துக் கொள்ளுங்கள்...

பார்ப்பன தந்திரம் - 1

பார்ப்பன தந்திரம்.....
ஒரு மாத சுய ஆலோசனைக்கு பிறகு இப்பதிவை எழுதுகிறேன்.
பிராமணன் தமிழர்களை எப்படி எல்லாம் மாற்றியிருக்கிறார்கள் என்பதை உணர்த்தவே இப்பதிவு.
நாம் நிறைய கேள்விபட்டிருப்போம் நம் பாட்டி, கொள்ளுபாட்டி,பூட்டி எல்லாம் ஏழு வயதிலும் எட்டு வயதிலும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று.அப்போதெல்லாம் நான் நினைத்துக்கொண்டிருந்தேன் அந்த காலத்தில் விஞ்ஞான வளர்ச்சி இல்லாததால் மக்களுக்கு போதிய அறிவின்மையின் காரணமாக நிகழ்ந்திருக்கும் என்று.
பிறகுதான் என் மூளைக்குள் ஒரு மணி அடித்தது.
விஞ்ஞானமா?அப்படி என்றால் என்ன என்று தெரியாத காலத்திலேயே கடல் தாண்டி வணிகம் செய்த இனம் எப்படி அறிவில் குன்றியதாக இருக்கும்.அப்படி என்றால்,அந்த காலத்தில் நடந்த குழந்தை திருமணத்திற்க்கு என்னதான் காரணம் என்று ஆராய்ந்தால் கிடைத்தது பதில்.
எல்லாம் சரி,இதற்க்கும் பிராமணனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க்கிறீரா.இருக்கிறதே...
மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா
பிதா பிபதி கோனிதம்.
இது என்னவென்று புரியவில்லையா....இது தான் பதில்...ஆம் இக்காலத்து அப்பாக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிள்ளை,ஆனால் அக்காலத்து அப்பாக்களுக்கு இது நன்றாக தெரியும்.
நான் இந்து நான் இந்து என்று மார்தட்டிக்கொண்டு திரியும் ஒரு சில இக்காலத்து அப்பாக்களும் இதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்க்காகவே இப்பதிவு.
இந்து தர்ம நீதி நெறிகளை வகுத்த மநுவின் தர்மம்...எட்டு வயதிற்க்குள் உன் மகளை கன்னிகாதானம் செய்து விட வேண்டும்,இல்லையென்றால் அதற்க்கு கிடைக்கும் தண்டனை மரணத்தை விட கொடியது.
மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா
பிதா பிபதி கோனிதம்.
அட கையாளாகாத அப்பா,உன் பெண்னை நீ எட்டு வயதிற்குள்ளேயே இன்னொருத்தனுக்கு பிடித்து கொடுக்க வேண்டும்,ஆனால் நீ அதை செய்ய தவறிவிட்டாய்,அவள் இப்போது ருதுவாகிவிட்டாள்,ருதுவான பின் மூன்று வருடத்திற்க்குள் அவளுக்கு மனமுடிக்கவில்லை என்றால் அவளாகவே சுயம்வரம் நடத்தி தன் கணவனை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.ஆனாலும் ருதுவாகும் வரை அவளை நீ உன் வீட்டில் வைத்திருப்பது எப்படி சரியாகும்.
அதனால் இதோ தண்டனை,ருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை உன் பெண்னுடைய பஹிஷ்டை காலத்தில்(அதாவது மாதவிலக்கு காலத்தில்) வெளியேற்றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும்.இப்படி ஒரு தண்டனையை பெருகிறோமே என நீ வருத்தப்பட வேண்டும்.அதற்க்காககதான் இந்த தண்டனை.
இப்படி ஒரு கருத்தை சுமந்து நிற்ப்பதை நினைத்து அந்த சமஸ்கிருதம மொழியே நாணி தீயில் கருகிவிடலாம்.இந்த எலவு மொழியைதான் இன்று இந்தியா முழுவதிற்க்கும் விநியோகம் செய்ய பலர் முயற்சிக்கின்றனர்.
சரி இதற்க்கு பரிகாரமே கிடையாதா என்றால்..மகா தர்மத்தலைவன் மநு அவர்கள் ஒரு பரிகாரத்தை சொல்கிறார்.
இதிலிருந்து நீ தப்பிக்க அவளின் ஒவ்வொரு பஹிஷ்டையின் போதும் ஒரு பசுவை பிராமணனுக்கு தானம் பன்னிவிடு.இந்த கோதானம் தான் உனக்கு பரிகாரம்.அதாவது மகள் ருதுவாகி கல்யாணம் ஆகும்வரை அவளுக்கு எத்தனை பஹிஷ்டை நேருகிறதோ அத்தனை பசுக்களை தானம் செய்ய வேண்டும்....
இந்த கொடுமையை கணவில் கூட நினைத்து பார்க்க முடியாது.
இருந்த இடத்திடல் இருந்தே எம் மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்த கூட்டம்.
ஆதாரம் வேண்டும் என கேட்ப்பவர்கள்.தாத்தாச்சாரியாரின் இந்து மதம் எங்கே போகிறது என்ற கட்டுரையில் தேடி கண்டுபிடித்து கொள்ளுங்கள்.

சொல் நானும் ஒரு இந்து என்று

பிராமணனைப்போல்
நீயும்
இந்துதானே..
அவன்
உனக்கு எப்போது வாடகைக்கு வீடு கொடுக்கிறானோ
அப்போது சொல்,
நானும் ஒரு இந்து என்று,
உன் வீட்டுக்குவந்து நீ சமைத்த உணவை
எப்போது
உளப்பூர்வமாக உண்ணுகிறானோ
அப்போதுசொல்
நானும் ஒரு இந்து என்று,
உன் உரிமைக்காக
உன் போராட்டத்தில் எப்போது அவன் கைகோர்க்கிறானோ
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
கோவிலின் கருவறைக்குள்,
நீயும் அவனும் எப்போது
ஒன்றாக நின்று
அர்ச்சனை செய்கிறாயோ அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
அவனை
தமிழில் மந்திரம் சொல்லவைக்க
தெம்பும் திரானியும்
உனக்கு எப்போது வருகிறதோ
அப்போது சொல்
நானும் இந்து என்று.
நீ பூசாரியாக இருக்கும் கோவிலுக்கு,
அவன் எப்போது குடும்பத்தோடு வந்து
நீ கொடுக்கும் திருநீரை
அவனின் நெற்றியில்
பூசிக்கொள்கிறானோ..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
எப்போது அவனும்
உன்னோடு சேர்ந்து
சிலைகளை உடைக்கிறானோ அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
அவன் எந்த மாநிலத்துக்குப்போனாலும்..
இந்து பிராமணன்தான்.
நீ
எந்தமாநிலத்துக்குப்போனாலும் தமிழன்தான்.
உன்னை தமிழனாகமட்டும் பார்க்காமல்,
பிறமாநிலத்தவனும்
பிராமணனைப்பார்ப்பதுபோல்..
உன்னையும்
இந்துவாக பார்த்தால்
நடத்தினால்..
அப்போது சொல் நானும் ஒரு இந்து என்று.
மாநில கோர்ட்டுகளிலேயே மல்லுக்கட்டுகிறாயே
உன்னாலும் சுப்ரீம் கோர்ட்
நீதிபதியாக முடியும்
என்றால்..
உன்னை வரவிடுவார்களென்றால்..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
உன்னால் உன் மகனால்..
இந்திய கிரிக்கெட் அணியில் நுழைய முடிந்தால்..
உன்னையெல்லாம் நுழைய
விட்டால்..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
உன்னால்..
அவர்களால்
நியமிக்கப்படும்
ஜனாதிபதியாகத்தான்முடியும்.
ஆனால்,
ஒரு
ஜனாதிபதியையே நியமிக்கும்,
பிரதமராக
உன்னால் வர
முடியும் என்றால்..
அப்போது சொல் நானும்
ஒரு இந்து என்று.
இரண்டுபேரும்
இந்துக்கள்தானே..
உன்வீட்டுக்கல்யாணத்தை,
அவன் நடத்திவைப்பதைப்போல..
சாஸ்த்திர சம்பிரதாயங்களை
நீயும் கற்றபின்...
அவன் வீட்டு கல்யாணத்தை நீ..
நடத்திவைக்க
அவன் அனுமதித்தால்..
அப்போது
சொல்
நானும் ஒரு இந்து என்று.
இயல் இசை நாடக சபையில்,
உன்னையும் மனிதனாக மதித்து,
உன்னையும் தலைவனாக ஏற்றுக்கொண்டால்.
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
மத்திய அரசு வங்கிகளில்..
தமிழ்நாட்டில்
விண்ணப்பங்களை
தமிழிலேயே அச்சடித்தால்..
அப்போது சொல்
நானும் இந்து என்று.
காவிரி நீரை எப்போது
சமமாக தருகிறானோ..
நதிநீர் பங்கீட்டுப்போராட்டத்தில்..
உன்னோடு பிராமணனும் எப்போது
கலந்து கொள்கிறானோ..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
விவசாயிகளின் போராட்டத்தில் எப்போது அவன் கலந்துகொள்கிறானோ
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
நீட் தேர்வுக்கு எதிரான
போராட்டத்தில் எப்போது
அவனும் கலந்து கொள்கிறானோ அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
நீதான்
நான்தமிழன்
நான்தமிழன் என்கிறாய்.
அவன் எப்போதாவது சொல்கிறானா.
அவனும்
தன்னை தமிழன் என்று
எப்போது ஒப்புக்கொள்கிறானோ
அப்போது சொல்
நானும் இந்து என்று.
நாரதகான சபையில்
முறையாக சங்கீதம் கற்றும்
உன்னை பாட
அனுமதித்தால்..
அவர்கள் பார்வையாளராக
அமர்ந்தால் அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
உன்னால்..
சங்கரமடத்தில் சங்கராச்சாரியாரோடு
சரிக்குசமமாக
சம்மணமிட்டு
அமரமுடிந்தால்..
அப்போதுசொல்
நானும் ஒரு இந்து என்று.
இந்து அறநிலைய கோவில்களில்
காசுவாங்காமல்..
உன்னை கருவறைக்குள் விட்டால்,
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
அடித்தட்டு மக்களின்
வரிப்பணத்தில்
மருத்துவம் படித்துவிட்டு,
ஊசி போட..
அமெரிக்காவுக்கு ஓடுபவனை,
தடுத்துநிருத்தியபின்
சொல்
நானும் ஒரு இந்து என்று.
ஒவ்வொரு அலுவலகத்திலும்
அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து,
மற்றவர்களை மட்டம்
தட்டுகிறார்களே..
அதை அவர்கள் நிறுத்தியபின் சொல்
நானும் ஒரு இந்து என்று.
பயணங்களில்..
நீ கீழ்தட்டுவர்க்கம்
என்று தெரிந்தவுடன்
பதரியடித்தபடி எழுந்து வேரு இடம் தேடுகிறானே
அந்த பதட்டத்தை அவன் குறைத்துக்கொள்ளும்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
நீ
முருகனை கும்பிடு
முத்துமாரியம்மனை
கும்பிடு
அதுவல்லபிரச்சினை.
இந்து என்று சொல்லிச்சொல்லி.
உன்னை வீதியில்
இறக்கிவிட்டு
அவன்மட்டும் வீட்டுக்குள் இருந்துகொண்டு வேடிக்கை பார்க்கிறானே.
அதுதான் வேதனையை
தூண்டுகிறது.