Monday, December 30, 2019

காஞ்சி சங்கராச்சாரி 'தீக்குறளைச் சென்றோதோம்' எனும் திருப்பாவை வரிகளை திருக்குறளை எதிர்க்க பயன்படுத்தியது ஏன்?

காஞ்சி சங்கராச்சாரி 'தீக்குறளைச் சென்றோதோம்' எனும் திருப்பாவை வரிகளை திருக்குறளை எதிர்க்க பயன்படுத்தியது ஏன்?
Krishnan Nallaperumal, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்-இல் அறிவியற்புல முதன்மையர், மூத்த பேராசிரியர் (1992-தற்போது)
7 நவம்பர் அன்று பதில் அளிக்கப்பட்டது.
"காஞ்சி சங்கராச்சாரி 'தீக்குறளைச் சென்றோதோம்' எனும் திருப்பாவை வரிகளை திருக்குறளை எதிர்க்க பயன்படுத்தியது ஏன்?" என்ற உங்கள் வினாவின் விடையைப் புரிந்துகொள்ள, ஒரு சுருக்கமான "FLASHBACK" தேவைப்படுகிறது.
எழுத்துமுறையும், எண் முறையும் இல்லாமல், பேச்சுவழக்கில் மட்டுமே இருந்த வேதமொழியைப் பேசிக்கொண்டு வடமேற்கு இந்தியாவில் நுழைந்த ஆரியர்கள், சிந்து கங்கைச் சமவெளி தொடங்கி, இந்தியாவெங்கும் புலம் பெயர்ந்தனர்.
தொடக்க காலத்தில், அவர்களின் நாடோடி இன இலக்கியமாக வேதப்பாடல்களைச் செவி-வழியாக ஓதி, மனப்பாடம் செய்து, தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வந்தார்கள்.
ஆங்காங்கே குலம் குலமாகத் தங்கிய இடங்களில் வாழ்ந்த பண்டைய இந்திய மக்களுடன் பழகி, தங்கள் வாழ்வைத் தொடங்கினர்.
ஒரு காலத்தில், இந்தியா முழுவதும் இருந்த மக்கள் ஒரே மொழி பேசிய ஓரினம் என்பது இந்திய மொழிகள் அனைத்தும் ஒரே மொழி அமைப்பும் - Orthography, ஒரே வகை-எழுத்துமுறை-வரிசையும் - Ordering of Alphabets as Vowels, Consonants and Consonant-al Vowels கொண்டு விளங்குவதை ஆரியர்கள் நன்கு உணர்ந்து இருந்தார்கள்.
நாகரிகத்தில் பலபடிகள் முன்னேறி, எழுத்தும், எண் முறையும் கொண்ட வளர்ச்சியடைந்த மொழிகளைப் பேசிய பண்டைய இந்திய மக்கள், ஆரியர்களின் சிவந்த நிறமும், எடுப்பான ஓசையுடன் கூடிய வேத மொழியையும் கண்டு, ஏமார்ந்துவிட்டனர். ஆரியர்களை மிக மதிப்புடன் நடத்தினர்.
பண்டைய இந்திய மக்களின் ஏமாறும் தன்மையைக் கண்டுகொண்ட ஆரியர்கள் "அடிமை சிக்கிட்டாண்டா!" என்றார் வடிவேலு பாணியில், தங்களைப் 'பூசுரர்கள்' - அதாவது பூமியில் வாழும் தேவர்கள் என்றும், தாங்கள் பேசும் மொழி 'தேவபாஷை' என்றும் விட்ட கதைகளை நம்பியவர்களின் முகில் குதிரை ஏறி, ஓட்டத் தொடங்கினார்கள்.
உள்ளூர் மக்களுக்கு மழை வேண்டி யாகம், குழந்தை வேண்டி யாகம், ஆயுள் வேண்டி யாகம், பொருள் வேண்டி யாகம் என்று தங்கள் வேத வேள்வியை முழுநேரத் தொழிலாக ஆக்கிக்கொண்டு, பெரும் பணம் ஈட்டினர். உடல்-உழைப்பு இல்லாத மதிப்பான வாழ்க்கை, ஆரியர்களின் அதிகார போதையை அதிகப்படுத்தியது.
தங்கள் வேதமொழியைப் பிறர் அறியாதவாறு காக்க வேண்டும் என்று நினைத்ததால், வீட்டில் மட்டும் வேதமொழியைப் பேசினார்கள்.
பெண்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தமையால், உள்ளூர் பெண்களைத் திருமணம் செய்தனர். இதன் காரணமாக, ஆரியர்கள் பலரும் வீட்டில் உள்ளூர் மொழியையே பேச நேர்ந்தது. யாகம் செய்யும் தொழிலுக்காக, ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே வேதமொழி கற்றுத்தரப்பட்டது.
பெண்களுக்கு வேதக்கல்வி மறுக்கப்பட்டதால், வீட்டில் உள்ளூர் பிராகிருத மொழிகளே பேசப்பட்டு, காலப்போக்கில், வேதமொழி பேச்சுவழக்கில் இருந்து போய்விட்டது.
உள்ளூர் மக்களின் பிராகிருத எழுத்துமுறையை உள்வாங்கி, தங்கள் மொழிக்கு எழுத்துமுறையும், இலக்கண முறையும் உருவாக்கிக் கொண்டனர். அவற்றுக்கு பிராதி-சாக்கியங்கள் என்று பெயர்.
எனவே, வேதமொழிக்கான ஒலிப்பு ஒன்றாக இருந்தாலும், எழுத்துமுறை நாட்டுக்கு நாடு வேறுபட்டதால், காலப்போக்கில், பல வேறுபாடுகள் வேதத்தில் உருவாகின.
இவற்றை ஒன்றுபடுத்தினார் வேத வியாசர். இந்தியாவெங்கும் வாழ்ந்துவந்த ஆரியர்களுக்கு வேதம் எழுதுவதற்குப் பொதுவான எழுத்துமொழியாக, பாஷா என்ற ஏட்டு-எழுத்துமொழி உருவானது.
இந்தமொழிக்குத்தான் பாணினி 'வ்யாகரணம்' என்னும் இலக்கண நூல் எழுதினர். இதுவே பின்னாளில் சமஸ்கிருதம் ஆனது.
சமஸ்கிருதம் ஏன் எவருடைய தாய் மொழியும் இல்லை என்பது இப்போது வாசகர்களுக்குப் புரிந்திருக்கும்.
உள்ளூர்க்காரர்களை ஏமாற்றி, உடலுழைப்பு இல்லாமல் வாழும் வாழ்க்கைக்காக, வேத வேள்வி செய்த ஆரியர்கள், தொழிலுக்காகத் தாய்மொழியைத் தொலைத்துவிட்டனர். ஆரிய ஆண்களுக்குப் பொதுவான மொழியாக சமஸ்கிருதம் அன்றும், இன்றும் இருந்து வருகிறது.
எனவே, ஆரிய இனம், மாநிலத்துக்கு மாநிலம் உள்ளூர் மொழியைத் தாய்மொழியாகவும், சமஸ்கிருத மொழியை, வேள்வித் தொழிலுக்கான தந்தை மொழியாகவும் பயன்படுத்துகின்றனர்.
என்னதான் உள்ளூர் பிராகிருத மொழிகள், தாய் மொழிகளாக இருந்தாலும், ஆரிய மூதாதையருக்குச் சொந்தமான பண்டைய வேதமொழி என்னும் தாய்மொழியின் வேர்கள் சமஸ்கிருதத்தில் உள்ளதால், சமஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்துவதற்காக, பிராகிருத மொழிகளில், சம்ஸ்கிருதச் சொற்களிச் சேர்த்துப் பேசத் தொடங்கி, உள்ளூர் மொழிகளின் அடையாளத்தை அழிக்கத் தொடங்கினர்.
ஆரியர்களின் சதித்திட்டத்தை உணராத வடஇந்தியர்கள், தங்கள் மொழிகளின் மரபுச் சொற்களைப் பேணாமல், சமஸ்கிருதத்துக்குக் கொடுத்துவிட்டு, அவையே மீண்டும் சில பல மாற்றங்களுடன் சமஸ்கிருதச் சொற்களாகத் திரும்பி, அவர்தம் பிராகிருத மொழியில் சம்ஸ்கிருத அடையாளத்துடன் கலந்தன.
ஒவ்வொரு நூற்றாண்டிலும், பல சிதைவுகளை உண்டுபண்ணி, பிராகிருத மொழிகளைச் சின்னாபின்னப் படுத்தினர்.
தமிழகத்தில் ஆரியர் எண்ணிக்கை மிகக் குறைவான எண்ணிக்கையில் இருந்தமையாலும், தமிழர்களின் மொழிப் பற்றினாலும், தமிழ் மொழியை மட்டும் அவர்களால், அழிக்க முடியவில்லை.
ஆனால், தமிழுடன் வடமொழியைக் கலந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகள் உருவாகின. தமிழர்களின் எண்ணிக்கை நான்கில் ஒரு பகுதியாகக் குறைந்தது.
தனித்து இயங்க முடியாத ஏட்டுச் சுரைக்காய் சம்ஸ்கிருத மொழியைத் தமிழ் மொழியுடன் கலந்து பேசும் மொழிநடைக்கு 'மணிப் பவளம்' அல்லது 'மணிப்பிரவாளம்' என்று பெயர்.
மணிப்பிரவாளம் முற்றியதும், துஞ்சத்து இராமானுஜன் எழுத்தச்சன் (തുഞ്ചത്ത് രാമാനുജൻ എഴുത്തച്ഛൻ) என்பவர் மலையாள மொழிக்கு இலக்கணம் கிபி 16ம் நூற்றாண்டில் எழுதினர்.
இவ்வாறு, நான்கில் மூன்று பகுதி தமிழின மக்களை வடமொழி கலந்து வேற்று மொழியினராக்கிய ஆரியர்கள், தொடர்ந்து தனித்தன்மையுடன் இயங்கும் தமிழ் மொழியை எப்படியாவது சமஸ்கிருதம் கலந்து அழித்துவிடத் துடிக்கிறார்கள்.
FLASHBACK முடிந்தது! - ———————
இந்நிலையில்தான், கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஆரியப் பிராமணர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி காஞ்சி மடத்தின் தலைவரானார். சமஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள், ஹிந்தி, மராத்தி, வங்காளம் உள்ளிட்ட பல மொழிகளும் அறிந்தவர். மொழி இலக்கணங்கள் இவருக்கு அத்துபடி!
தமிழ் மொழியை எப்படியாவது சமஸ்கிருதப்படுத்தி, மாசுபடுத்தி, தமிழின் அடையாளத்தைஅழித்துவிடுவது என்ற சூழுரை கொண்டவர்.
சிந்தித்துப் பாருங்கள், தமிழ் மொழியிலிருந்து பிரிந்த கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளை ஏன் நீசமொழிகள் என்று ஆரியர்கள் சொல்வதில்லை?
இதற்கான விடை, மக்களால் பேசப்படும் இம்மொழிகளிலிருந்து சமஸ்கிருதச் சொற்கள் நீக்கப்பட்டால், அவை மீண்டும் தமிழாகிவிடும் என்பதால், கன்னடம் உள்ளிட்ட தென்மொழிகள் தம் தனித்தன்மையைக் காக்க, தங்கள் மொழிச் சொற்களில் சமஸ்கிருதக் கலவையைப் பாதுகாக்கவும், போற்றவும் பெருமையுடன் முற்படுகிறார்கள்.
ஆரியமொழி சமஸ்கிருதம் கலக்காமல் இயங்கும் தூய செம்மொழி பேசும் தமிழ்மொழி மக்கள், தமிழின் தனித்தன்மையைப் பாதுகாக்க, தமிழில் கலந்துள்ள ஓரிரு சமஸ்கிருதச் சொற்களையும் நீக்க முற்படுவதால், தமிழ் மொழியை மட்டுமே ஆரியர்கள் 'நீசமொழி' என்பார்கள்.
மகாப்பெரியவரின் ஆசியோடு, மத்திய அரசுகள், கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில், சமஸ்கிருதம் பேச்சுமொழியாக உள்ளது என்று தொடர்ந்து பொய்க்கணக்குக் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அக்கிராம மக்கள், பத்திரிக்கைக்காரர்கள் அந்தப் பக்கம் போனதும், கன்னடம் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள்.
என்னதான் அழகான மெழுகு பொம்மை உண்மைபோல் தோன்றினாலும், அதனுடன் குடும்பம் நடத்த முடியாதல்லவா? அப்படித்தான் சம்ஸ்கிருத மொழியில் நடைமுறை வாழ்வில் பேசுவது இயலாத காரியம்.
மகாப் பெரியவா அவர்களுடன் நெருங்கிப் பழகிய அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரியார் மகாப் பெரியவா-வின் தமிழ் வெறுப்பைப் பற்றி, அவரது இணையதளத்தில் வெளிட்டுள்ளார்.
"பூஜை வேளைகளில் 'நீசபாஷை' தமிழில் நான் பேசமாட்டேன்", என்று பெரியவா கூறியதாகவும், இச்செய்தி, காஞ்சிமடத்தில் அனைவரும் அறிந்த ஒன்று என்றும் தாத்தாச்சாரி தமது இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
காஞ்சி மகாப் பெரியவரின் போதாத காலம், பரிதிமாற்கலைஞர், தமிழ் மாமலைப் பெரியார் மறைமலையடிகள் ஆகியோர் தனித்தமிழ் இயக்கம் தொடங்கி, தமிழர்களுக்கு அவர்தம் மொழியின் தனித்தன்மை குறித்து விழிப்புணர்வு உருவாக்கினார்கள்.
"முடிந்தால் ஒழித்துவிடு! இல்லையேல் விழுங்கிவிடு!" என்பது ஆரியர்கள் இந்தியா நுழைந்ததிலிருந்து கடைப்பிடித்துவரும் ஆரிய மேலாண்மைத் தத்துவம். காஞ்சி மாமுனிவரின் கொள்கையும் அதுதான்.
தனித்தமிழ் இயக்கத்தால், 'தேவபாடை' சமஸ்கிருதச் சொற்கள் தமிழிலிருந்து பத்தாண்டு காலங்களுக்குள் ஏறத்தாழ நீக்கப்பட்டுவிட்டன. இதைப் பொறுக்க இயலாமல், புலம்பிய 'தெய்வத்தின் குரல்' உங்கள் பார்வைக்கு:
தமிழில் 'மனிதநேயம்' என்ற சொல் அறிமுகமானபோது மகாப்பெரியவா சொன்ன புலம்பல்:
"ஸமீபத்தில் `மனிதநேயம்’ என்ற ஒரு வார்த்தை உலாத்துகிறதாகப் பார்க்கிறேன். நல்ல வார்த்தைதான். காதுக்குக் கேட்கவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும் `மனிதாபிமானம்’ என்று இத்தனை நாளாகச் சொல்லி வந்ததில் `அபிமானம்’ என்ற ஸம்ஸ்கிருத வார்த்தை இருப்பது பிடிக்காமல் தான் இப்படி மாற்றியிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கும்போது பரிஹாஸமாகத்தான் இருக்கிறது!
ஏனென்றால், `நேயம்’ என்பதும் ஸம்ஸ்கிருத `ஹநேஹ’த்தின் திரிபுதான்! ஸம்ஸ்கிருதம் என்பது இலக்கண சுத்தமான பாஷை. அதையே பேச்சுக் கொச்சையாக இருக்கும்போது ப்ராக்ருதம் என்பார்கள்.
அந்த ப்ராக்ருத பாஷையில்தான் ஸம்ஸ்கிருதத்தில் உள்ள நாடகங்களில் ஸ்த்ரீகள், படிப்பில்லாதவர்கள் ஆகியவர்கள் ஸம்பாஷிப்பார்கள். அதிலே `ஸ்நேகம்’ என்றுதான் வரும்.அது போகட்டும்.
`மனிதநேயம்’ என்கிறதிலும் முதலில் மனித என்று வைத்துக் கொண்டிருக் கிறார்களே. அதுவும் ஸம்ஸ்கிருத `மநுஷ்ய’வின் திரிபுதானே?
ஒருத்தருக்கும் ஒரு ப்ரயோஜனமுமில்லாமல் இப்படியெல்லாம் வெறும் த்வேஷத்தில் செய்கிற காரியங்கள் கடைசியில் பித்துக்குளித்தனமாகத்தான் முடிகின்றன."
தமிழ்மொழியைத் தமிழர்கள் தூய்மை செய்யும்போது, இவருக்கு எப்படி பொத்துக்கொண்டு வழிகிறது பாருங்கள்!
பிராகிருத மொழிகள், தமிழ் மொழி ஆகிவற்றில் இருந்து எழுத்துமுறைகளை - Orthography கடன்வாங்கி, எழுத்துக்களை உருவாக்கிய சமஸ்கிருத மொழியின் கொச்சை வடிவம் பிராகிருத மொழியாம்! 'பேரன் பாட்டனைப் பெற்றான்' என்று 'மகாப் பெரியவா' சொன்னா ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே!
வரலாற்றுப் பேராசிரியர் ந. சுப்பிரமணியன் எழுதியுள்ள சுயசரிதையில் இவர் பற்றி இடம் பெற்றுள்ள ஒரு செய்தி தமிழின்மீது மகாப்பெரியவா கொண்ட வெறுப்பு எத்தகையதென்று வெளிப்படுத்துகின்றது.
குளித்துவிட்டு பூசை செய்து முடிக்கும்வரை இவர் தமிழில் பேச மாட்டாராம். சமஸ்கிருதத்தில்தான் பேசுவார். ஏனென்றால் தமிழ் `நீசபாசை’யாம். பூசை முடிந்தபிறகுதான் நீசபாசையில் பேசுவாராம்.
தமிழ் வழிபாட்டு மொழியாவதை எதிர்த்து வந்தவர் மகாப்பெரியவா.
தமிழர்கள் 'உலகப் பொதுமறை' என்று பெருமையுடன் அழைக்கும் தமிழ் நான்மறையாம் 'அறம், பொருள், இன்பம், வீடு' பேசும் 'திருக்குறளை' எப்படியாவது ஒழித்துவிடுவது என்பது காஞ்சி மகாப்பெரியவரின் முதல் திட்டமாயிருந்தது.
இத்திட்டத்திற்கு வரைபடம் போடுவதற்கு, முதலில் மார்கழி மாதத்தில் பெரும்பான்மைத் தமிழர்களின் வீடுகளிலும், தமிழக வைணவ, சைவத் திருக்கோயில்களிலும் மார்கழி மாதம் முழுவதும் பாடப்படும் திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்கள் பாடி, பாவை நோன்பு நோற்கும் விழாவைக் கையில் எடுத்தார் மகாப் பெரியவா.
திருக்குறளை ஒழிப்பதற்கும், திருப்பாவை-திருவெம்பாவை விழாவுக்கும் என்ன தொடர்பு என்று குழம்ப வேண்டாம். திருக்குறள் மோசமான நூல் என்று சொல்வதற்கு, திருப்பாவையில் வரும்
வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளிரோ; பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி,
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலே நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம்முடியோம்;
செய்யா தனசெய்யோம்; தீக்குறளை சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
என்னும் பாடலை, திருக்குறளுக்கு எதிராக முன்நிறுத்துவது என்பது மகாப்பெரியவரின் திட்டம்.
தமிழகமெங்கும் திருப்பாவை - திருவெம்பாவைப் பாடல்கள் திருக்கோயில்களில் பாடவும், அவை சார்ந்த மனப்பாடப் போட்டிகள், பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி ஆகியன நடத்த காஞ்சி சங்கர மடம் ஏற்பாடு செய்தது.
மகாப்பெரியவரின் அரசியல் செல்வாக்கால், இவ்விழாவைத் தமிழக அரசே இந்து அறநிலையத்துறை விழாவாக அறிவித்தது.
அப்படி நடந்த அரசுவிழாவில்தான் மகாப்பெரியவாவின் 'தெய்வத்தின் குரலாகத் திருவாய் மலர்ந்து' ("அது வேற வாய்; இது . . .வாய்" என்ற வடிவேல் காமெடி உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்லன்!) திருக்குறளுக்கு எதிராக 'தம் பிரம்மாஸ்திரமாக திருப்பாவைப் பாடல் விளக்கத்தைப் பொதுமேடையில் பேசினார்.
"திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளே இருக்கின்றன. வீடு என்பது இல்லை. நாற்பொருளைக் குறிப்பிடாத திருக்குறளை ஓதக் கூடாதென்ற பொருளில் தான் `தீக்குறள்’ என்று ஆண்டாள் நாச்சியார் குறிப்பிட்டுள்ளார்", என்ற புதிய விளக்கத்தை திருக்குறளுக்கு எதிராகச் சொன்னார் சங்கராச்சாரியார் மகாப்பெரியவா!!!
"பெரியவா சொன்னா பெருமாளே சொன்ன மாதிரி!" என்று தமிழர்களிடையே ஒரு சொல் வழக்கு உண்டு.
அப்படியிருக்க, "மகாப்பெரியவா சொன்னா பெருமாளே விஸ்வரூபம் எடுத்துச் சொன்ன மாதிரி!" என்று தம் 'தெய்வத்தின் குரல்' மக்களிடம் பரவி, திருக்குறள் ஒரே அடியாக மக்கள் மனதிலிருந்து ஒழிந்துவிடும் என்பது காஞ்சி மகாப்பெரியவா-வின் கணக்காக இருந்தது.
ஆனால், நடந்ததோ அவர் நினைத்ததற்குத் தலைகீழாக! குமுதம் நாளிதழ் மகாப்பெரியவா சொன்னதை சிறப்புச் செய்தியாக வெளியிட்டு, செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டது.
மகாப்பெரியவரின் திருக்குறளுக்கு எதிரான கருத்துக்கு, தமிழகமெங்கும் கண்டனக் கூட்டங்கள், எதிர்ப்புக் குரல்கள் என திமிலோகப்பட்டது. மகாப்பெரியவா-வின் கருத்துக்கு எதிராக எழுந்த வைணவர்களின் எதிர்ப்புக்குரல்கள் மிகக்கடுமையாக இருந்தன. குமுதம் 'வருத்தம்' தெரிவித்தது.
மகாப்பெரியவா தன்னிலை விளக்கமாக, ஒரு 'சப்பைக்கட்டு' சொல்லி, சமாளித்தார். ஆனால், வருத்தம் தெரிவிக்கவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்ட ஒன்றுக்காக அவர் ஏன் வருத்தப்பட வேண்டும்? திட்டம் 'பணால்' ஆனதற்கு கட்டாயம் வருத்தப்பட்டிருப்பார்.
'முடிந்தால் ஒழித்துவிடு!" என்ற ஆரிய முதல் ஆயுதத்தை ஏவிய , மகாப்பெரியவா செய்த வலக்காரங்கள்(தந்திரங்கள் என்பதன் தமிழ்) பலன் தரவில்லை.
இனி, "இல்லையேல் விழுங்கிவிடு!" என்ற அடுத்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார் மகாப் பெரியவா. அதுதான், திருக்குறளை ஆரிய சாஸ்திரங்களின் சுருங்கிய வடிவம் என்று பரப்புரை செய்து, திருக்குறள் ஆரிய நூலே என்று நிறுவுவது!
பெரியவா காலத்தில், தமிழ்ப் பேராசியர்களில் பல பல ஆரியக் கைக்கூலிகள், நான், நீ என்று போட்டி போட்டுகொண்டு எழுதித் தள்ளினார்கள். காலம் அவற்றைக் குப்பை கூடைகளில் கொண்டு சேர்த்தது.
சமீபத்தில், தமிழகத் தொல்லியல் துறையில் இயக்குனராகப் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற திரு.நாகசாமி என்ற ஆரியப் பார்ப்பனர் 'Tirukkural - An Abridgement of Sastras" என்ற தலைப்பில், தப்பும், தவறுமான ஆங்கிலத்தில் உளறிக் கொட்டி, ஒரு நூல் எழுதி, வெளியிட்டார்.
அந்த விழாவில்தான், 'மகாப்பெரியவா'-வின் இடத்தில் இன்று அமர்ந்திருக்கும் முன்னாளைய 'பாலப்பெரியவா', தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமரியாதை செய்தார் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்.
ஆரியர்கள் வேதாளம்-விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளங்கள்! மீண்டும் மீண்டும் தமிழை அழிக்க ஏதாவது ஒரு வடிவில் அவதாரங்கள் எடுப்பார்கள்.
பண்பாட்டு அளவில், ஆரியர்கள் "அழிக்கவும் இயலாமல், விழுங்கவும் இயலாமல்" தவிக்கும் திருக்குறளும், செம்மொழி தமிழும் அவர்களை உலகம் உள்ளவரை உறங்க விடாது என்பது உறுதி!
——————
அன்பர் பத்ரிநாத் பக்தவத்சலம் அவர்கள் என்னிடம் 'ஆண்டாள் நாச்சியார்' அன்னையின் திருப்பாவை குறித்த ஒரு விளக்கம் கேட்டிருந்தார். அனைவருக்கும் பயன்படும் என்பதால், இங்கு தருகிறேன்:
ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒருவராக அவதரித்த தாயார் ஆண்டாள் நாச்சியார் இறைப்பணியில் தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட சூடிக்கொடுத்த சுடர்க்கொடி நாச்சியார்.
'ஆண்டாள் நாச்சியார்' உலகத்துக்கே தாயார்! அன்னையார் 'தீக்குறளை' என்று சொன்னதன் பொருள் 'தீய கோள்கள் சொல்ல மாட்டோம், அதாவது புறம் பேசுதல் செய்ய மாட்டோம்' என்பதுதான்.
'மகாப்பெரியவா' தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள, 'தீய குறள்' என்று வேண்டுமென்றே திரித்துக் கூறிவிட்டார்.
சங்கராச்சாரியாரின் இப்பொருள் திரிப்புக் கருத்துக்கு, வைணவப் பெருமக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
உங்கள் ஐயம் சரிதான்.
வைணவப் பெருமக்கள் ஆழ்வார்களின் தமிழ்ப் பாசுரங்களுக்கே முதல் வழிபாடு செய்யும் தமிழ் மொழிப் பற்றாளர்கள்.
அன்னை ஆண்டாள் நாச்சியார் சொன்ன திருப்பாவை 'சங்கத் தமிழ் முப்பதும்' என்று நாச்சியாரின் திருவாய் மொழியே அருளி உள்ளதைக் காணுங்கள்!
அன்னை ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற இரண்டு திருப்பாசுரத் தொகுதிகளிலும் 'பிராமணர்' என்ற சொல்லை எங்குமே பயன்படுத்தவில்லை.
தாயார் தம்மைக் குறிக்க, 'பட்டர்பிரான் கோதை' மற்றும், 'விட்டுசித்தன் கோதை' என்ற இரண்டு அடைமொழிகளால் மட்டுமே குறித்துள்ளார் என்பது இங்கு அனைவரும் உற்றுக் கவனிக்க வேண்டிய ஒன்று.

Saturday, December 07, 2019

ஆரியப் பார்ப்பனர்களின் வேதங்கள் நான்கு

ஆரியப் பார்ப்பனர்களின் வேதங்கள் நான்கு. ரிக், யஜூர், சாமம், அதர்வணம். இவற்றில் மூன்று வேதங்களை முற்றாக ஓதத் தெரிந்தவர்களுக்குப் பெயர் திரிவேதி. நான்கு வேதங்களையும் கற்று ஓதத் தெரிந்தவர்களுக்குப் பெயர் சதுர் வேதி. திரி என்றால் மூன்று. சதுர் என்றால் நான்கு. அதனால்தான் இவர்களுக்கு அரசர்களால் தானம் வழங்கப்பட்ட நிலங்களுக்குப் பெயர் மங்கலம் என்று வழங்கப்படும். மூன்று வேதம் படித்தவர்களுக்கு திரிவேதி மங்கலம், நான்கு வேதம் படித்தவர்களுக்கு சதுர்வேதி மங்கலம், இரண்டு வேதம் படித்தவர்களுக்கு துவேதி மங்கலம், வேதத்தைச் சரியாகப் படிக்காத பார்ப்பனர்களுக்குக் கொடுத்த இடங்கள்தான் கிராமங்கள். வாஜபேய யாகம், பார்ப்பனர், புரோகிதராக அல்லது தலைமைக் குருவாக உயர்பதவி பெறும்பொழுது செய்யப்படும் யாகமாகும். அரசனும் இராசசூய யாகம் செய்த பின்னர், பேரரசாக மாறிய பொழுது வாஜபேய யாகத்தைச் செய்வார்கள். யாகங்கள் இருபத்தொன்றாகும். சோம யாகங்கள் ஏழு, ஹவிர் யாகங்கள் ஏழு, பாக யாகங்கள் ஏழு. இவற்றில் சோம யாகங்கள் ஏழில் ஒன்றாக வாஜபேய யாகம் உள்ளது. அந்த யாகத்தின் இறுதியில் உணவும், பானமும் கூட்டாக அருந்தப்பெறும். அதைச் செய்தவர்கள் வாஜபேயர்கள். வட தேசத்தில் பாஜபே என்று அவர்களைச் சொல்லுவார்கள். வாஜபேயம் பண்ணினவர்களுக்கு குளிக்கும் காலத்தில் அரசர்கள் சுவேதச் சத்திரம் (வெண்குடை) பிடிக்க வேண்டும். இப்ப இதெல்லாம் எதுக்குச் சொல்கிறாய் என்று கேட்கிறீர்களா? உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்தாண்டு 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களில் 2 பேர் ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் நேற்று காலை ரேபரேலியில் நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருந்தபோது, ஜாமினில் வெளியே வந்த 2 பேர், சிலருடன் சேர்ந்து, அவரை வழிமறித்து தீயிட்டு கொளுத்தினர். இதில் 90 சதவீதம் தீக்‍காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்ட அப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட பின்பும் கடுமையான தீக்காயம் அடைந்த அந்தப் பெண் நேற்று உயிரிழந்தார். சாகும் முன் சகோதரரிடம், ‘’அவனுங்களை விட்டுடாதீங்க.. நான் மீண்டு வந்து சட்டப்போராட்டம் நடத்தி தண்டனை வாங்கிக்கொடுப்பேன்’’என்று கூறியுள்ளார். மருத்துவர்களிடம், ‘’எனக்கு சாக விருப்பமில்லை. நான் வாழ விரும்புகிறேன். எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்...’’என்று கண்ணீர் விட்டுள்ளார். அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் பின்வருமாறு- ஹரிஷங்கர் திரிவேதி ராம்கிஷோர் திரிவேதி ஷுபம் திரிவேதி ஷிவம் திரிவேதி. உமேஷ் வாஜ்பாய் இப்போது முதலிலிருந்து படியுங்கள்.

Wednesday, November 27, 2019

மன்னர் குடும்பத்தில் பிறந்து மக்களுக்காகச் சிந்தித்தவரை கொண்டாடாமல்

மன்னர் குடும்பத்தில் பிறந்து மக்களுக்காகச் சிந்தித்தவரை கொண்டாடாமல் ஏழைத் தாயின் மகன் எனக் கூறி ஏழைகளை ஒழிப்பவரை ஏன் இந்தியாவின் பெரும்பான்மையினர் கொண்டாடுகின்றனர்...கொண்டாட வைக்கப்படுகின்றனர்?

காரணம் மிக எளிது...

வி.பி.சிங் நடைமுறைப்படுத்திய இரண்டு முன்னெடுப்புகள்:

1. BC/MBC பிரிவினருக்கு கல்வி மற்றும் மத்திய அரசு வேலையில் 27% இட ஒதுக்கீட்டை வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமுல் படுத்தியது.

2. அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கியது.

இவ்வளவு தான் சார் இந்தியா!

இதை உணர்ந்த ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே!!!

அதனால் தான் அந்த மன்னர் குடும்பத்து வாரிசு...அடுத்தப் பிறவி என ஒன்றிருந்தால் தமிழனாக பிறக்க வேண்டும் என்று சொல்லி மறைந்தார்.

திருவள்ளுவர் யாருக்கு சொந்தமானவர்?

திருவள்ளுவர் யாருக்கு சொந்தமானவர்?
திருவள்ளுவர் ஆண்டை அடிப்படையாக​ கொண்ட​ "தை" புத்தாண்டை தமிழ் புத்தாண்டாக​ கொண்டாடும் இனத்திற்கே சொந்தமானவர் திருவள்ளுவர்!
எங்கிருந்தோ வந்த​ ஆரியர்கள் இங்கே திட்டமிட்டு புகுத்திய "விகாரி, ஹேவிளம்பி" போன்ற​ சமஸ்கிருத​ ஆண்டுகளை தமிழ் புத்தாண்டாக​ கருதி கொண்டாடி திருவள்ளுவரை உதறிதள்ளிபவர்களுக்கு
திருவள்ளுவரை உரிமை கொண்டாட​ எவ்வித உரிமையும் இல்லை.
திருவள்ளுவர் ஆண்டு முறையில் வரும் தை புத்தாண்டை தமிழ் புத்தாண்டாக​ கொண்டாடுவதே தமிழனின் அடையாளத்திற்கும் பெருமைக்கும் உகந்தது. காரணம் திருவள்ளுவர் ஆண்டு தொடர்ச்சியாக​ வரும், ஆனால் சமஸ்கிருத​ ஆண்டோ தொடர்ச்சியாக​ வராமல் சுழற்சி முறையில் வரும். சுழற்சி முறையில் வரும் சமஸ்கிருத​ புத்தாண்டை கொண்டாடுவது தமிழனின் அடையாளத்தை அழித்து விடும்.
உதாரணமாக​,
நடக்கும் திருவள்ளுவர் ஆண்டு 2050. இன்னும் 600 வருடங்கள் கழித்து இது 2650-ஆக மாறும். அப்போது வாழும் அன்றைய​ உலக மக்களுக்கு தமிழனின் நாட்காட்டி 2650 வருடங்கள் வரலாறு கொண்டது என்கிற​ பெருமையையும் தமிழனின் அடையாளத்தையும் "தை தமிழ் புத்தாண்டு" பறைசாற்றி கூறும். திருவள்ளுவர் ஆண்டை வைத்து உங்களால் கணக்கீடுகளை செய்ய​ இயலும், வரலாற்று காலகட்டங்களை ஆராய​ இயலும்.
இப்போது ஆரியர்கள் கொண்டு வந்த​ புத்தாண்டுக்கு வருவோம் . நடக்கும் ஆண்டு விகாரி. 600 வருடங்கள் கழித்தும் இது விகாரியாக​ மட்டுமே இருக்கும். இதை வைத்து கொண்டு உங்களால் எந்த​ வித​ கணக்கீடுகளும் செய்ய​ இயலாது.
இதை வைத்து வரலாற்று காலகட்டங்களை உங்களால் அறியவே இயலாது. தமிழனின் நாட்காடி எத்தனை வருட​ வரலாறு கொண்டது என்பதை இந்த​ புத்தாண்டை வைத்து அறிய​ முடியாது. ​​இந்த​ புத்தாண்டு தமிழனின் அடையாளத்தையும் வரலாற்றையும் காலப்போக்கில் அழிக்கும். இவ்வாறு அழிக்க​ தான் ஆரியர்கள் திட்டமிட்டு இந்த​ புத்தாண்டை உருவாக்கினார்கள்.
ஆகவே, தமிழனின் அடையாளத்தையும் பெருமையையும் வரலாற்றையும் அழியாமல் காக்கும் திருவள்ளுவர் ஆண்டை புத்தாண்டாக​ கொண்டாடுபவர்களுக்கே வள்ளுவர் சொந்தம்!
மற்றவர்களெல்லாம் அப்படியே ஒரமாக​ போ

சாமி கும்பிட வந்த பெண்ணை ஒரு தீட்சிதர் அடித்திருக்கிறான்

சாமி கும்பிட வந்த பெண்ணை ஒரு தீட்சிதர் அடித்திருக்கிறான். இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள் இரண்டு.
1) அந்த தீட்சிதரை விட பொறுமையும், தொழிலும், 'சமஸ்கிருத ரைம்ஸ்களும்' தெரிந்துவைத்திருக்கும் வேறு சாதி இந்துவால் அந்தக் கோவிலுக்கு தீட்சிதர் ஆக முடியாது. அதாவது அந்த ரவுடிப் பார்ப்பானை விட தகுதி இருந்தாலும், இந்துத்துவாவிற்கு கூழைக்கும்பிடு போட்டாலும், அர்ஜூன் சம்பத், ராமதாஸ், கிருஷ்ணசாமி போன்ற இந்துத்துவ அடிமைகளின் சாதிகளில் பிறந்து வேதம் பயின்ற ஒருவனால் தீட்சிதர் பதவியை வாங்க முடியாது. தீட்சிதனிடம் முகரை வீங்க அறைதான் வாங்க முடியும்!
2) சாமி கும்பிட வந்த பெண் ஒரு மாமியாக இருந்தால் அவன் அறைந்திருக்க மாட்டான். கருவறைக்குள் போகவே தகுதில்லாத ஒரு சூத்திரச்சி தன்னைக் கேள்வி கேட்பதா என்பதுதான் அவன் கோபத்தின் அடிப்படை. காலம்காலமாக இந்து வர்ணாசிரம தர்மம் என்பது இதுதான்.
இந்தச் சம்பவம் சொல்லிக்கொடுக்கும் இந்த இரண்டு அடிப்படைகளை மட்டும் கொஞ்சம் பொறுமையாக யோசித்துப் புரிந்துகொண்டால் போதும். மானம் வந்துவிடும். வாய் தானாக "வாழ்க பெரியார்" சொல்லும்.
ஊர்காசில் உட்கார்ந்து தின்று கொழுப்பெடுத்துப்போய் திரியும் பூணூல் தடியன்களை 'சாமி' என்றோ, 'அய்யர்' என்றோ அழைத்துத் தொழாத அறிவையும், மானத்தையும், சுயமரியாதையையும் எமக்களித்த தந்தைப் பெரியார் வாழ்க.

வி.பி.சிங் எனும் வரலாற்று நாயகன்!

வி.பி.சிங் எனும் வரலாற்று நாயகன்!
கதிர் ஆர்.எஸ்
கட்டுரையாளர்
எப்படி பெரியாரை கடவுள் மறுப்பு என்ற எல்லைக்குள் சுருக்குகிறார்களோ அப்படித்தான் வி.பி.சிங் அவர்களை இட ஒதுக்கீடு என்ற வரையறைக்குள் சுருக்கி ஒரு சாரார் புறக்கணிக்கின்றனர்.
இந்தியாவின் பிரதமராக ஓர் ஆண்டு கூட நிறைவு செய்யாத வி.பி.சிங் செய்து முடித்த காரியங்கள் பல நூறு ஆண்டுகள் நினைவுக்கூறத்தக்கவை. பிரதமர் ஆவதற்கு முன்பும், பின்பும் அவர் செய்த சாதனைகளும் எடுத்த முடிவுகளும் எந்த ஒரு அரசியல் தலைவராலும் அத்தனை எளிதில் எடுக்க முடியாததாகும்.
முதல்வர் பதவியை துறந்ததாகட்டும், தான் சார்ந்த கட்சியின் மீதே கரிசனம் காட்டாமல் தான் வகித்த மத்திய அமைச்சர் பதவிக்கு மதிப்பளித்து எடுத்த முடிவுகளாகட்டும், அதனால் தலைமையுடன் ஏற்பட்ட முரண்களை விசிறியடித்து கட்சியை விட்டு வெளியேறியதாகட்டும், பிரதமர் பதவியை துறந்த பின்னும் தனது வாழ்நாளின் இறுதி மூச்சுவரை நோயுடன் போராடிய வேளையிலும் ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நடத்திய போராட்டங்களாகட்டும், உடலில் வலிமையிருந்தால் நான் இந்நேரம் ஒரு மாவோ போராளியாக இருந்திருப்பேன் என்று உறுதிபட முழங்கியதாகட்டும். எந்த அரசியல் வரம்புகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் இந்திய அரசியல் எனும் மாபெரும் உப்புகடலில் கலந்தபின்னரும் தனித்தன்மையுடன் நன்னீர் நதியாக பல்லாண்டுகாலம் மக்களுக்கான அரசியலை மட்டுமே முன்னெடுத்த மாவீரன் வி.பி.சிங் அவர்கள்.
1989ல் இந்திய அரசியலில் ஒரு மிகப்பெரிய புரட்சி நடத்தப்பட்டது. எந்த பெரிய தேசிய கட்சிகளின் தயவுமின்றி திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் ஒன்று சேர்ந்து அந்த புரட்சியை நிகழ்த்தினர். மாநில கட்சிகளின் பலம் என்ன என்பதும், அவை ஒன்று சேர்ந்து பணியாற்றினால் நாட்டில் எப்பேர்பட்ட மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று தில்லிக்கு தெரியவந்த காலகட்டம் அது.
நிலையற்ற அரசு என்ற விமர்சனங்கள் இருந்தாலும் அத்தனை ஆண்டுகளாக நிலையான அரசுகள் செய்த சாதனைகளை விஞ்சும் வகையில் சாதனை புரிந்த அரசாக வி.பி.சிங் அரசு இருந்தது. வி.பி சிங் அரசை கவிழ்க்க இரண்டு பிரதான கட்சிகளுமே மறைமுக கூட்டணி அமைத்தன என்று சொன்னால் அது மிகையில்லை.
“என்னை நீங்கள் தோற்கடிக்கலாம்; ஆனால் நான் இந்த நாட்டுக்கு செய்யவேண்டியதை எப்போதோ செய்து முடித்துவிட்டேன்” என்று பிரதமராக தனது இறுதி பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டார் வி.பி.சிங். தான் எப்போது அவுட் ஆவோம் என்று தெரியாமல் எத்தனை பந்துகள் மிச்சமிருக்கின்றன என்றும் தெரியாமல் அடித்து ஆடிய வி.பி.சிங் அடித்த சில சிக்சர்கள் கீழே:
1.இந்திய அரசியலமைப்பின் தந்தையாக இருந்தாலும் எந்த அரசு மரியாதையும் வழங்கப்படாமல் இருந்த பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கருக்கு "பாரத ரத்னா" பட்டம் வி.பி.சிங் ஆட்சியிலேயே வழங்கப்பட்டது.
2.நாடாளுமன்றத்தில் அம்பேத்கரின் படத்தை இடம் பெற வைத்த பெருமையும் வி.பி.சிங்கையே சேரும்.
3.ராஜிவ்காந்தி பிரதமராக இருந்த போது இலங்கைக்கு சென்றிருந்த இந்திய ராணுவத்தை திரும்ப பெற்றவர் வி.பி.சிங்.
4.1990 மே மாதம் சென்னை வந்திருந்த வி.பி.சிங்கிடம் செய்தியாளர்கள் விடுதலை புலிகளை தீவிரவாத இயக்கம் என்பதாக ஒரு கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், ”எவரையும் தீவிரவாதி என முத்திரை குத்தும் ரப்பர் ஸ்டாம்ப் எனது பாக்கெட்டில் இல்லை” என பதிலளித்தார்.
5.சங்பரிவார் நடத்திய ரத யாத்திரையை நிறுத்தி, அதற்கு தலைவராக இருந்த அத்வானியை பிஹார் முதல்வர் லல்லு பிரசாத் மூலம் கைது செய்ய வைத்தார். அந்த கைது அவர் பதவியையே பறிக்கும் என்று தெரிந்தபோதும் அதற்காக அவர் கவலைப்படவில்லை.
6.அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் வேண்டுகோளை ஏற்று காவிரி நடுவர் மன்றம் அமைத்திட உத்தரவிட்டது.
7.சென்னை மீனம்பாக்கத்திலுள்ள வெளிநாட்டு விமான தளத்துக்கு அண்ணா பெயரும், உள்நாட்டு விமான தளத்துக்கு காமராஜர் பெயரும் சூட்டவேண்டும் என்று கலைஞர் மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்ததும், அந்த வேண்டுகோளை ஏற்று அதனை விழா மேடையிலேயே அறிவித்தது.
8.பொற்கோயிலில் போய் இந்திரா காலத்தில் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார். கூடவே, பஞ்சாபில் அமைதி திரும்ப மனதார முன்னெடுப்புகள் எடுத்தார்.
9.வெகுகாலமாக கிடப்பில் கிடந்த மண்டல் கமிஷனின் பரிந்துரையான பிற்படுத்தபட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டை தனி மெஜாரிட்டி இல்லாத பொழுதும் தைரியமாக அமல்படுத்தியது.
இப்படி அரசியல்களத்தில் நாட்டின் பிரதமராக எந்த சமரசமுமின்றி துணிச்சலான பல முடிவுகளை எடுத்த விபி சிங் தனது அரசியல் வரலாற்றில் ஆரம்ப காலந்தொட்டே இத்தகைய அணுமுறை கொண்டவராகவே இருந்திருக்கிறார்.
உத்தரபிரதேசத்தில் தையா என்ற ராஜவம்சத்தைச் சேர்ந்தவர் விஷ்வநாத் பிரதாப் சிங் என்கிற வி.பி.சிங்.டமாண்டா என்கின்ற பகுதியை ஆண்டு வந்த ராஜ குடும்பத்தில், 1931-ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி பிறந்தார். இயற்பியல் படித்துக் கொண்டிருந்த காலத்தில், அவருடைய உச்சகட்ட லட்சியமாக இருந்தது, 'எதிர்காலத்தில் மிகப் பெரிய அணு விஞ்ஞானி ஆக வேண்டும்' என்பதுதான். காலம் அவரை அரசியல்வாதியாக்கியது. 1941-ம் ஆண்டு மாண்டாவின் ராஜ் பகதூராக வி.பி.சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரச குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவரது அரசியல் எளியோர்களுக்கானதாகவே இருந்தது. இளம் வயதிலேயே வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தில் ஈடுபாடு கொண்டதால், தன்னுடைய விளைநிலங்களை தானமாக அளித்த நிகழ்வு அவர் எப்படிப்பட்ட அரசியல்வாதி என்பதை உலகத்திற்கு உணர்த்துவதாக இருந்தது.
காங்கிரஸ் கட்சியின் மீது தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்த வி.பி.சிங். 1969-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் வென்று எம்எல்ஏ அமைச்சர் என்று அடுத்தடுத்து வளர்ந்து காங்கிரஸ்கட்சியின் மிக முக்கிய ஆளுமையானார். 1980-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில முதல் அமைச்சராக இந்திரா காந்தியால் தேர்வு செய்யப்பட்டார்.
இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி வென்று ராஜீவ் காந்தி பிரதமரானபோது நிதியமைச்சர் ஆனார் சிங். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அவர் தயங்கவில்லை. திருபாய் அம்பானி, நடிகர் அமிதாப் பச்சனின் சகோதரர் என எந்த வி.ஐ.பி-யும், வி.பி.சிங்கின் தாக்குதலில் இருந்து தப்ப முடியவில்லை. அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் கெடுபிடிகளைத் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் பணக்காரர்கள், ராஜீவ் காந்தியிடம் முறையிடவே, நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் வி.பி.சிங்.
ஆனால், அடுத்து வந்த காலங்களில் பாதுகாப்புத் துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த நேரத்தில் ராணுவத் தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக ஸ்வீடன் வானொலி அறிவித்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க, அமைச்சர் பதவி மற்றும் கட்சிப் பதவியிலிருந்தே நீக்கப்பட்டார் வி.பி.சிங்.
1989-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் திமுக, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத் போன்ற மாநில கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கினார். இந்தக் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பா.ஜனதா வெளியில் இருந்து ஆதரித்த நிலையில், இந்தியாவின் பத்தாவது பிரதமரானார் வி.பி.சிங். அதிலும், டிசம்பர் 1, 1989 அன்று வி.பி.சிங் நாடாளுமன்றத்தின் அவையில் தேவிலாலை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஹரியானாவின் ஜாட் தலைவரான தேவிலால், பரிந்துரையை ஏற்க மறுத்து வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார் என்பது கூடுதல் சிறப்பு. பா.ஜ.க ஒருபுறம், இடதுசாரிகள் மறுபுறம் என இருதுருவங்களின் ஆதரவுடன் ஆட்சியை மிகத் திறமையாக நடத்திக் கொண்டிருந்தார்.
அந்த காலகட்டத்தில் அவர் நிகழ்த்திக்காட்டிய சாதனைகளைத்தான் மேலே குறிப்பிட்டிருந்தோம். தனது பதவியை இழந்த பின்னர் மீண்டும் அந்த பதவியில் அமர விரும்பாத வி.பி.சிங், அதே கூட்டணியின் மூலம் 1996-ம் ஆண்டு தேவகௌடாவைவும், பின்னர் ஐ.கே.குஜ்ராலையும் பிரதமர் பதவியில் அமரத்த முக்கியப் பங்கு வகித்தார்.
ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர், பல ஆண்டுகள் பொதுவாழ்க்கையிலிருந்து ஒதுங்கியிருந்தவர், 2006-ம் ஆண்டு ஜனமோர்ச்சா கட்சியை மீண்டும் தொடங்கினார். 2006-ல் உத்தரபிரதேசத்தின் தாத்ரி பகுதியில், விவசாயிகளின் நிலங்களை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றியதைக் கண்டித்து, தீவிரமான போராட்டங்களில் பங்கெடுத்தார். தொடர் போராட்டங்களும் டயாலிசிஸ்களும் அத்துடன் சேர்ந்த புற்றுநோயும் உடலை வாட்ட, 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார்.
'பிரதமர் பதவியைவிட முக்கியமானது தேசத்தின் ஒற்றுமை’ என பாராளுமன்றத்தில் முழங்கிய விபிசிங் இந்தியாவின் ஒற்றுமைக்கு மதச்சார்பின்மை எவ்வளவு முக்கியம் என்பதை மட்டுமல்லாமல், பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் எவ்வளவு தூய்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர்.
இந்திய அரசியலையே புரட்டிப்போட்ட அந்த செம்மல் பதவியில் நீடிக்கமுடியாமல் போனது இந்தியாவின் துரதிருஷ்டம் என்றால் அது மிகையல்ல

பெரியார் சட்ட எரிப்புப் போராட்ட அறிவிப்புக்குப் பிறகு

பெரியார் சட்ட எரிப்புப் போராட்ட அறிவிப்புக்குப் பிறகுதான் அடுத்த சில நாட்களிலேயே அரசியல் சட்டம் கொளுத்துவதும், காந்தி படம் போன்ற தேசத் தலைவர்களின் படத்தைக் கொளுத்துவதும் தேசிய அவமதிப்பு என்றும் அப்படிச் செய்கிறவர்களுக்கு *மூன்று ஆண்டு சிறை * என்றும், தமிழ்நாடு அரசு அவசர சட்டம் ஒன்றைக் கொண்டு வருகிறது அது குறித்து பெரியார் என்ன எழுதினார்?

“அரசமைப்புச் சட்டம் முதலியன கொளுத்துவது பற்றி சென்னை அரசாங்கம் செய்திருக்கும் புதிய சட்டம் விஷயமாய் பொது மக்கள் சிறிதும் கவலைப்பட வேண்டியதில்லை. மற்றும் என் மீது கடுந்தண்டனைக்கு ஏற்ற வழக்கு தொடுத்திருப்பது பற்றியும் பொது மக்கள் கவலைப்பட வேண்டிய தில்லை.

இவைகள் எல்லாம் பார்ப்பனர்களால் எய்யப்படும் அம்புகளே தவிர, சென்னை அரசாங்க மந்திரிகளாகிய அம்புகளுக்குச் சிறிதும் சம்பந்தப்படாதவைகளேயாகும். அன்றியும் பார்ப்பனர் வெளியேற்றப்பட வேண்டும் என்பதற்கும், வடநாட்டான் ஆதிக்க ஆட்சியிலிருந்து (இந்திய யூனியனிலிருந்து) பிரிந்து முழு சுதந்திரத் தமிழ்நாடு ஆட்சி பெற்றாக வேண்டும் என்பதற்கும் இவை (பார்ப்பனர் நடத்தைகளும் அவர்களுக்கு வடநாட்டான் ஆதரவுகளும்) சரியான காரணங்களாகும். அதற்காகத் துரிதமாகவும், தீவிரமாகவும் கிளர்ச்சி செய்யவும், இது வலிமை மிக்க தூண்டுதலாகும். சென்னை அரசாங்க மந்திரிகள் நம் மக்களின் கல்வி சம்பந்தமாக எடுத்துக் கொண்டிருக்கிற முயற்சிகள் நாம் பாராட்டத்தக்கதும், நன்றி செலுத்தத் தக்கவையும் ஆகும். இம்முயற்சி பார்ப்பனர்களுக்குப் பெரும் கேடானதால் இந்த பார்ப்பனர்கள் என் மீது கொண்டுள்ள ஆத்திரத்தையும், பழிவாங்கும் எண்ணத்தையும்விட, இன்றைய மந்திரி சபை மீது கொண்டுள்ள ஆத்திரமும், பழி வாங்கும் எண்ணமுந்தான் பேயாட்டமாக ஆடி இப்படிப்பட்ட தொல்லைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன.

ஆதலால், பொது மக்கள் இச்சம்பவங்களுக்காக இன்றைய மந்திரி சபையிடமோ, குறிப்பாக திரு.காமராசரிடமோ எவ்விதமான அதிருப்தியும் காட்டவோ கொள்ளவோ வேண்டியதில்லை. (‘விடுதலை’ 16.11.1957) - என்று எழுதினார்.

அடக்குமுறைகளை தனது போராட்டத்துக்கான உந்து சக்தியாக்கிக் கொண்டு ஆர்வத்தோடு அவற்றை வரவேற்றார் பெரியார். வரலாற்றில் பார்ப்பன எதிர்ப்புக் களத்தில் பெரியார் முன்னேறிச் செல்ல முயன்றதற்கு பெரியாரின் இந்த நுட்பமான அணுகுமுறைகளே மிக முக்கிய காரணிகளாக இருந்திருக்கின்றன.

Even a brāhmaṇa would not accept foodstuff prepared by his wife

"Even a brahmana would not accept foodstuff prepared by his wife, because woman is considered sudra"

- Swami Prabhupada (ISKCON Founder)

Source : https://prabhupadabooks.com/conversations/1976/aug/new_mayapur_(french_farm)/august/02/1976-1

[Even a brāhmaṇa would not accept foodstuff prepared by his wife, because woman is considered śūdra. The woman, when she becomes the wife of a brāhmaṇa, then she is called brāhmaṇī, but she's not offered brahminical culture. She remains as śūdra. So therefore a strict brāhmaṇa does not accept foodstuff prepared by his wife. Still there are in U.P. The wife will arrange for cooking, and he'll sit down and cook dāl, cāpāṭis. Then he will eat, and whatever remains, that is there, that will be taken by her. But he will not take foodstuff cooked by his even wife. And if there are several brāhmaṇas, so each one of them will cook his own food.]

1957 நவம்பர் 26 சட்ட எரிப்பு நாள்

1957 நவம்பர் 26 உள்துறை அமைச்சரை கலாய்த்த பெரியார் தொண்டர்கள்
நவம்பர் 3 அன்று சாதியை பாதுகாக்கும் சட்டப் பிரிவுகளை நீக்க தந்தை பெரியார்  கெடு விதித்த போது அதனை சட்டை செய்யாமல் எட்டு நாட்களில் அரசியல் சட்டத்தை கொளுத்தினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என்று நவம்பர் 11 அன்று வேகவேகமாய் சட்டம் இயற்றிய இந்திய அமைச்சரை சரியாக பதினைந்து நாட்களில் அரசியல் சட்டத்தை கொளுத்திய பிறகு நவம்பர் 26 அன்று

இரண்டு இளைஞர்கள் உள்துறை அமைச்சருக்கு பின்வருமாறு கடிதம் எழுதினர்
நீங்கள் அல்லும் பகலும் கண் துஞ்சாது  கஷ்டப்பட்டு கடினப்பட்டு துன்பப்பட்டு துயரப்பட்டு எழுதிய சட்டத்தை கிஞ்சிற்றும் மதிக்காமல் தங்கள் காவல்துறை சட்டம் கொளுத்திய எங்களை இன்னும் கைது செய்யாமல் உள்ளனர்
ஆகவே உடனே நீங்கள் எங்களை கைது செய்ய ஆவண செய்யும்மாறு கேட்டுக்கொள்கிறோம்

நீங்கள் நம்பமாட்டீர்கள் என்பதால் இத்துடன் சட்டத்தை கொளுத்திய #காகித_சாம்பலை  இணைத்துள்ளேன்

சட்ட எரிப்பு நாள்

தேவதாசி

தேவதாசி

20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.

கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.

இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது.
முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார்.

சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணி இதை எதிர்த்தனர். பெண் விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.

இதற்கு பார்ப்பனர்கள் சொன்ன காரணம் என்னவென்றால்.. இது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து நான் ஜெயிலுக்குப் போனாலும் போவோமே தவிர,

சாஸ்திரத்தை எதிர்த்து நாங்கள் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டோம் என்று கூறி தேவதாசி பெண்களை வைத்தே இந்த தீர்மானத்தை எதிர்த்து போராட வைத்தனர்.

இந்த இக்கட்டான சூழலில் பெரியாரிடம் வந்து "இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள்.

இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் என்ன செய்வது" என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் ஆலோசனை கேட்டார்.

அதற்கு பெரியார் " நான் சொல்லுகிறபடி நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள்" என்று சொல்லி அனுப்பினார்.

பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் விளக்கம் கொடுக்கத் தயாராக இருந்தார்.

அப்போது சத்தியமூர்த்தி அய்யர் பேசினார். "தேவர்களுக்கு அடியாள் என்றால் அது கடவுள் தொண்டு என்று அர்த்தம் என்று சொன்னார்.

அவர்கள் தங்களை அர்ப்பணித்து தொண்டு செய்வதால் புண்ணியம் பல சேர்த்து புண்ணியவதியாகிறார்கள்.'' என்றார்

அதற்கு முத்துலட்சுமி அம்மையார், எதிர்க்கட்சி பார்ப்பனர்களைப் பார்த்து "தேவதாசி ஒழிப்பு தீர்மானத்திற்கு எதிராக பேசும் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன்.

இதுவரையில் எங்க ஜாதியிலேயே கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். எக்கச்சக்க புண்ணியத்தை சேர்த்து வைத்துள்ளார்கள்.
இனிமேல் அந்தத் தொண்டை உங்கள் பிராமண பெண்களே செய்யட்டும்..

நீங்களும் புண்ணியம் சேர்த்து கொள்ளுங்கள், அதற்கு யாரும் எதிர்ப்பு கூறமாட்டார்கள், உங்கள் சாத்திர சம்பிரதாயங்களும் கெட்டுப் போகாது" என்றார்.

இதைக் கேட்ட பார்ப்பனர்களுக்கு, ஒரு செருப்பை வாயில கவ்வக் கொடுத்து, இன்னொரு செருப்பை சாணில முக்கி அடித்தது போல் இருந்தது.

இவ்வளவு பிரச்சினைகளை மீறித்தான் தேவதாசி ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

#பெரியார்_என்றாலே ஏன் பார்ப்பனர்கள் வெறுப்பை உமிழ்கிறார்கள் என்று இப்பொழுதாவது புரிகிறதா..?

#தந்தைபெரியார்

காஞ்சி சங்கராச்சாரி தண்டத்தை மடத்தில் போட்டுட்டு வெங்கட்ராமன் என்பவரின் மகளைக் கூட்டிக் கொண்டு...

// வரலாறு நெடுக ஆடிட்டர் குருமூர்த்திகள் இப்படியாகவே தான் இருக்கிறார்கள் //

உங்களுக்கு ஒரு கதை தெரியுமா?

1986 ல் காஞ்சி சங்கராச்சாரி தண்டத்தை மடத்தில் போட்டுட்டு வெங்கட்ராமன் என்பவரின் மகளைக் கூட்டிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் மடத்தை விட்டே ஓடிப் போனார்.

அப்ப பத்திரிக்கையில் சங்கராச்சாரியைக் காணவில்லையென பரபரப்பா செய்தி போட்டுக்கிட்டே இருந்தானுக.
தினமலர் பார்ப்பான் தினமும் மூக்குச்சிந்தி அழுகுறா மாதிரி செய்தி போட்டான்.
நானெல்லாம் அப்ப கல்லூரியில் அந்த மாமியைப் பற்றி தான் பேசிக்கிட்டு இருப்போம்.

எங்கு தேடியும் தக்காளியை ஆளைக் காணோம்.
கண்டுபிடிக்கும் பொறுப்பை சிபிஐ வசம் ஒப்படைத்தனர்.
இரண்டு மாதம் கழித்து தலைக்காவிரியில் அந்தப் பெண்ணுடன் பிடித்தார்கள்.

அப்போது தான் இப்ப இருக்கிற ஆளை நியமித்தார்கள்.
அதனால் தான் மூத்த சங்கரன், இளைய சங்கரன்னு ரெண்டு பேர் இருந்தாங்க.

சங்கராச்சாரிக்கு அந்தப் பெண்ணை அறிமுகம் செய்து வைத்த
வெப்பன் சப்ளையர் யார் தெரியுமா?
குருமூர்த்தி தான்.
அதன் பிறகு தான் புரோக்கர் குருமூர்த்தின்னு பட்டம் பெற்றார்.
வீரத்தமிழன்னு ஓபிஎஸ் வாங்குனா மாதிரி.

இப்ப உங்க கேள்வி என்னன்னா
சங்கராச்சாரி வச்சிருந்த மாமியை
இப்ப யாரு வச்சிருக்கான்னு தானே?

தெரிஞ்சுக்கிற மூடுல நீங்க இருந்தாலும்
சொல்லுற மூடுல நான் இல்லை.
ஆனா மாமாவுக்கு நெருக்கமா இருக்கு அந்த மாமி.

Monday, November 25, 2019

நாஞ்செலி



தென்னிந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சோ்ந்த 18 சாதிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு முலை வரிப்போட்ட மனு தர்ம பாா்ப்பன சனாதன இந்துமதம்...

கேரளா ஈழவா சமூகத்தை சோ்ந்த நாஞ்செலி என்ற பெண்ணிடம் உனது முலை பெரிதாக உள்ளதால் இரட்டைவரி கட்ட வேண்டும் என்று முலைவரி கேட்டுவந்த திருவிதாங்கூா் சமஸ்தானம் அதிகாரிகளிடம் தனது முலையை அறுத்து வாழை இலையில் வைத்து எடுத்துக்கொள் என்றாள்.

நான் வரி கட்டமாட்டேன். முலை இருந்தால் தானே வரி கேட்பாய் என்று முலையை அறுத்து இறந்து போனாள்.

அதன் பிறகு தான் முலைவரி ரத்து செய்யப்பட்டது என்பது வரலாறு.

அந்த பெண்மணி நாஞ்செலியின்  நினைவாக கேரளாவில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இப்படி எந்த ஒரு மதத்தில் யாவது இந்த கேடுகெட்ட செயல் நடந்துள்ளதா?

இந்து பெண்களே சிந்திப்பீா்...!!!

இந்து மதம் என்பது minority யை சேர்ந்த கிறிஸ்தவம், இஸ்லாமியம், சீக்கியம், பெளத்த மதத்தை பின்பற்றுபவரிடம் இருந்து பார்ப்பனர்கள் பெரும்பான்மைக்காக Majority க்காக மட்டுமே ஆங்கிலேயர்களால் குறியீடு செய்யப்பட்டது இந்து மதம் என்று,

பார்ப்பனர் தவிர்த்து மற்றவர்களை அதாவது சத்திரியன், வைசியன், சூத்திரன் மற்றும் பெண்களை இந்துமதம் என்று பெயரளவில் சொல்வார்களே தவிர,

மற்றபடி ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு சாஸ்திர சம்பிரதாயம் என்று வர்ணாசிரம கோட்பாடான சனாதன தர்மம் தர்மத்தை பார்ப்பனர்கள் ஒரு போதும் விலக்கி கொள்ள மாட்டார்கள் தமிழர்களே சிந்தியுங்கள்...

தமிழர்கள் இந்துக்களும் இல்லை!
பார்ப்பனர் சக இந்துக்களுக்கு சம வாய்ப்பு கொடுக்க போவதும் இல்லை!!

Thursday, November 21, 2019

ஆதிதமிழர்களின் வரலாற்றை இரண்டே நிமிடத்தில் சொல்ல டாக்டர் திருமாவளவன் அவர்களால் மட்டுமே முடியும்

ஆதிதமிழர்களின் வரலாற்றை இரண்டே நிமிடத்தில் சொல்ல டாக்டர் திருமாவளவன் அவர்களால் மட்டுமே முடியும்.

(என் குறிப்பு: இந்து என்கிற பெயரில் முதல் முதலில் அழைத்தவர்கள் சிந்து நதிக்கரையில் வணிகம் செய்ய வந்த அரேபியர்கள். பின்னர் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் யாரெல்லாம் கிறித்தவர், முஸ்லிம் இல்லையோ அவர்கள் ஹிந்துக்கள் என அறிவிக்கப்பட்டது.

வரலாற்றில் முந்தையது சைவம். ஆரியர் வருகைக்கு பின் வேத காலத்தில் வைணவம் பரவியது. பிற்காலத்தில் சைவம், வைணவம் பின்பற்றிய மக்கள் சடங்குகளை எதிர்த்து தோன்றிய புரட்சிகர மதங்களான பௌத்தம், சமணத்தை ஏற்றனர்.

இதில் சமணத்தை ஏற்றவர்கள் சைவர்களால் கழுவேற்றப்பட்டனர். இன்றும் தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு சைவ கோவில்களின் சமணர்கள் கழுவேற்றப்பட்ட சிலைகளை காணலாம்.

பௌத்தத்தை ஏற்றவர்கள் புத்தர் மறைந்த பின் வைணவர்களால் விரட்டி அடிக்கப்பட்டனர். பலர் எரித்து கொல்லப்பட்டனர். புத்த விஹார்கள் பெருமாள் கோவில் ஆக மாறின. விரட்டி அடிக்கப்பட்ட மக்கள் தான் பிற்காலத்தில் தீண்டாமைக்கு ஆளாகினர்.

புத்தரின் காவி உடை, தாமரை போன்ற மத அடையாளங்களை தான் பார்ப்பனியம் முதல் பாஜக வரை பயன்படுத்தி வருகிறது! இங்கே இன்னொரு சந்தேகம் எழும்.. பிறகு ஏன் சிங்கள பௌத்தன் சைவ தமிழனை தாக்க வேண்டும்?

இலங்கையில் உள்ள தமிழர்கள் சைவத்தின் வழி வந்தவர்கள். சிங்கள பௌத்தர்கள் வட இந்தியாவில் இருந்து குடியேறிய வைண வழி தோன்றல்கள்.  மத அடையாளத்தில் அவர்கள் பௌத்தர்களாக இருந்தாலும் இன அடையாளத்தில் ஆரியர்கள்.

அதனால் தான் இலங்கையில் கொல்லப்பட்ட சைவ தமிழர்களுக்கு இந்துக்களின் கட்சி என கூறும் பாஜக எந்த கண்டனமும் வெளியிட்டதில்லை. மாறாக சிங்கள பௌத்தர்களுடன் கைகோர்த்து நிற்கிறது. அங்கே நடப்பது மத அரசியல் அல்ல, இன அரசியல்.)

விட்டில் பூச்சிகளாக அவர்களிடம் பலியாகின்றனர் பார்ப்பணரல்லாத அப்பாவி மக்கள். 😔

சுவாதி படுகொலையில் முஸ்லிம்கள் மீது அவதூறு பேசி சட்டம் ஒழுங்கு கெடுவது போல கருத்துச் சொன்ன ஒய்.ஜி.மகேந்திரன் கைது செய்யப்படவில்லை.

தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்சை ஆண்மையற்றவர்கள் என்று சொன்ன துக்ளக் குருமூர்த்தி கைது செய்யப்படவில்லை.

காவல்துறையினரிடமே ஹைகோர்ட்டாவது மயிராவது என்று சொல்லி சட்டத்துக்கு புறம்பாக பேசிய ஹெச்.ராஜா கைது செய்யப்படவில்லை.

பெண் பத்திரிக்கையாளர்களை கீழ்த்தரமாகவும், அவதூறாகவும் பேசிய எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை.

பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற சனாதன முறையை நியாயப்படுத்தியும்,  நாயையும் மனிதர்களையும் இணைத்தும் சாதி வெறியோடு கருத்துச் சொன்ன  வெங்கடகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்படவில்லை.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணின் கன்னத்தில் அடித்த தீட்சிதர் தர்ஷன் இதுவரை கைது செய்யப்படவில்லை.

விசிக தலைவர் அண்ணன் திருமாவளவனை செருப்பால் அடிக்க வேண்டும் என்று வன்முறையை தூண்டும் விதமாக பேசிய நடிகை காயத்ரி ரகுராம் கைது செய்யப்படவில்லை.

இவர்கள் அனைவரும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு கொண்ட பார்ப்பண சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

இதே பாஜக, ஆர்.எஸ்.எஸ்-சுடன் தொடர்பு உள்ள பார்ப்பணரல்லாத கல்யாண ராமன் போன்றவர்களை எல்லாம் மிகவும் இலகுவாக கைது செய்யும் அரசு இயந்திரம் ஒரு பார்ப்பண சமுதாயத்தை சேர்ந்தவரை கைது செய்ய முடியவில்லை. அவர்கள் குற்றமிழைத்துள்ளனர் என்று தெளிவாக தெரிந்தும் அவர்கள் கைது செய்யப்படுவதில்லை.

இந்த உண்மைகள் எல்லாம் இவ்வளவு தெளிவாக தெரிந்தும் விட்டில் பூச்சிகளாக அவர்களிடம் பலியாகின்றனர் பார்ப்பணரல்லாத அப்பாவி மக்கள். 😔