Saturday, March 09, 2019

முருக பக்தர்களும் கிருஷ்ண பக்தர்களும் ஜாக்கிரதை - தமிழக RSS சீமான்

முருக பக்தர்களும் கிருஷ்ண பக்தர்களும் ஜாக்கிரதை - தமிழக RSS சீமான்

இந்துக்களுக்கு மொத்த இந்தியாவில் லட்சத்திற்கும் மேல் சிறுதெய்வங்கள் உண்டு. அவர்களுக்கு விஷ்ணு, சிவா, தேவி போன்றவர்களே பெருங்கடவுள்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அதிகமாக வணங்குவது Lord Ram, Bajrang Bhalli மற்றும் Lord Krishna.
இந்துத்துவம் பெருந்தெய்வங்களான விஷ்ணுவையோ, சிவாவையோ, தேவியையோ முதன்மைபடுத்தாமல் ராமரை முதன்மைபடுத்தி அரசியல் பொருளாக மாற்றியதற்கான முதல் காரணமே முதல் பத்தியில் இருக்கும் விடயம் தான்.
வடயிந்தியா முதல் தென்னிந்தியா வரை அனைவரையும் அந்த ஒரு கடவுளை வைத்து தான் மொத்த மக்கள்தொகையில் அதிகமான இந்துக்களை Cover செய்யமுடியும் என்பதால் தான் ராமரை அரசியலாக்கினார்கள். இந்துத்துவா வகையறாக்களுக்கும் பக்திக்கும் துளியும் தொடர்பில்லை. அதற்கு சாட்சியே, அவர்களின் தத்துவார்த்தவாதி சாவர்க்கர் ஒரு நாத்திகர் என்பது தான். இவர்களுக்கு தேவை, அதன் மூலம் கிடைக்கும் அரசியலும், அதிகாரமும் தான்.
அந்த திட்டம் தான் ஒரளவு வெற்றிப் பெற்று இன்று பெரும்பான்மையாக ஆட்சி அமைத்திருக்கிறார்கள். இவர்கள் கடவுள் பக்தியாளர்கள் அல்ல, ஆனால் இவர்களின் அரசியலுக்கு முட்டாள்களாக இருக்கும் கடவுள் பக்தர்கள் அதிகம் தேவைப்படுவார்கள்.
அதே போல், தமிழ்நாட்டில் இருக்கும் பெருந்தெய்வங்களில் அதிகமான மக்கள் வணங்குவது சிவன், முருகன், கிருஷ்ணன், ஐயப்பன், பெருமாள் மட்டுமே. எப்படி இந்திய-இந்து பண்பாட்டு மீட்சி என்ற குரலை உயர்த்தி இந்துத்துவ சக்திகள் ஆரம்பத்தில் உலாவியதோ, அதே பாணியில் தமிழ் பண்பாட்டு மீட்சி என்று சில கோமாளிகள் ஆராய்ச்சி என்ற பெயரில் Comics எழுதி கொண்டு இருக்கிறார்கள்.
இவர்கள் ஆதிபாட்டன் சிவன், முப்பாட்டன் முருகன், முப்பாட்டன் கிருஷ்ணன் என்று கூறுவதற்கான காரணமே பெரும்பான்மை மக்களை கவர்வதற்கு தான். அந்த பண்பாட்டு மீட்சியாளர்கள் கூறும் கூற்றுக்கு மாறாக அவர்களே எப்படி நடக்கிறார்கள் என நீங்களே பாருங்கள்.
தமிழ் இலக்கியங்களின் வாயிலாக பண்டைய தமிழ் மக்கள் ஐந்தினை நிலங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு திணை தெய்வ வழிபாடு இருந்தது. குறிஞ்சிக்கு(மலை பகுதி) - சேயோன், முல்லைக்கு(காடு பகுதி) - மாயோன், நெய்தலுக்கு (கடல் பகுதி)- வருணன் , மருதத்துக்கு(வயல் பகுதி)- இந்திரன், பாலைக்கு(வறண்ட நில பகுதி) - கொற்றவை என்று வணங்கி வந்துள்ளார்கள்.
இந்த பெயர்களை அப்படியே பயன்படுத்தி பேசினால் ஒரு நபரும் கேட்கமாட்டார்கள் என்பதனால் தான், தற்போது இருக்கும் பெருந்தெய்வங்களை ஒப்பிட்டு, திணை தெய்வ பெயர்களை மறைத்து பெரும்பான்மை தெய்வ பெயர்களை வைத்து அழைக்கிறார். முப்பாட்டன் சேயோன் என்று அழைப்பது தானே முறை, ஏன் முப்பாட்டன் முருகன் என அழைக்கவேண்டும்?
முருகன் தான் சேயோனாகவே இருந்தாலும்(நிறுபிக்கப்படவில்லை), பண்பாட்டை மீட்பவர்கள் சேயோனை முப்பாட்டனாக தானே மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்க வேண்டும். முருகனை மட்டும் மேடை தோறும் பேசியதிலிருந்தே அது இந்தத்துவாவின் ஒத்த அதே அரசியல் நகர்வு என்பது நமக்கு புலப்படுகிறது. கிருஷ்ணனை மாயோன் என எல்லா இடத்திலும் பயன்படுத்தமாட்டார். அடிக்கடி கிருஷ்ண பரமார்த்மாவை மேற்கோள் காட்டுவார்.
ஆனால், தப்பி தவறி கூட இந்திரனையோ மற்ற திணை தெய்வங்களையோ அதிகமாக பேசமாட்டார். அதில் வாக்குகளோ , மக்கள் கவர்ச்சியோ இல்லை. முருகன், செட்டியார்கள் வணிக கடவுளாக வணங்கக்கூடிய தெய்வம். அதிகமாக முருகனை வழிபட்டு, பழனி பாதயாத்திரை செல்பவர்கள் முக்குலத்தோர்கள். கிருஷ்ணனை வணங்குபவர்களில் கோனார்களும், வைணவ வன்னியர்களும் அடக்கம்.
ஆனால் இந்திரனோ, கொற்றவையோ ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட, அனைவராலும் வணங்கக்குடிய பெருந்தெய்வமாக இல்லை. இந்திரன் என்பது கணிசமான அளவு தேவேந்திரர்கள் வணங்குவார்கள் ஆனால் இந்திரனுக்கோ அதிகமான கோவில்களோ தளங்களோ இல்லை. கொற்றவை என்பது வேட்டுவ கவுண்டர்கள் வணங்கும் ஒரு குலதெய்வமாகவே உள்ளது. இதையெல்லாம் மறந்தும் முதன்மை படுத்தமாட்டார்கள். ஐந்தினைகளில் இல்லாத ஆதிபாட்டன் சிவனும், சேயோன் என்று சொல்லாமல் முப்பாட்டன் முருகன் என வருவதும், மாயோன் என சொல்லாமல் கிருஷ்ணன் என்பதே இவர்கள் வாயில் அதிகமாக உதிரும் வார்த்தைகளாகவே இருக்கிறது. ஏனென்றால் இவர்கள் கட்டமைக்கும் அந்த அரசியல் அப்படியானது.
அவர்கள் பக்தியை முதலீடாக கொண்டு அரசியல் என்றால், இவர்கள் பண்பாடு, தமிழ், தமிழர் என்ற வார்த்தையை கொண்டு பெரும்பான்மை அரசியல். இவர்கள் அனைத்து விடயத்திலும் உணர்வு, உணர்ச்சி, புனிதம் என்று எல்லாவற்றையும் பூசி மொளுகி ஒரு மாயையை உருவாக்க போராடி கொண்டிருக்கிறார்கள்.
இருவருக்கும் ராமனோ, முருகனோ முக்கியமில்லை, அதன் மூலம் கிடைக்கும் ஆதாயமும் லாபமும் தான் முக்கியம். பழனி மற்றும் ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் பள்ளிவாசலிலும் தேவாலயங்களிலும் தங்கி தண்ணீர் குடித்து விட்டு செல்வார்கள். அவர்கள் மனதில் இப்படிப்பட்ட வாதங்கள் நஞ்சை தான் விதைக்கும். நஞ்சு வேர்கள் கால்களை சுற்றும்போதே சுதாரித்து பிடிங்கி எறிவது நமக்கும் சமூகத்திற்கும் நலம். இவர்கள் பேசுவதற்கு பெயர் தமிழ்தேசியம் என்றால் பெரியாரும், தமிழரசனும், பிரபாகரனும் பேசியதற்கு வேறு பெயர் தான் வைத்தாக வேண்டும்.
பதிவுடைய கரு என்பது " முருக பக்தர்களும் கிருஷ்ண பக்தர்களும் ஜாக்கிரதை"
-விக்டர் இறைதாசன்

அம்பேத்கரையே இந்த இந்துத்துவம், அவருடைய ஆள் போல காட்டுகிறது

பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் பார்ப்பனியத்தையும் இந்து மதத்திற்குள் இருக்கும் சாதிய கட்டுமானங்களையும் எதிர்த்து எழுதி, போராடி இறுதியில் பெளத்தத்தை தன் வாழ்வியலாக ஏற்றுக்கொண்டு அதை ஒரு Solution ஆக சாதிய சகதிக்குள் சிக்கியவர்களுக்கு சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
அப்படிப்பட்ட அம்பேத்கரையே இந்த இந்துத்துவம், அவருடைய ஆள் போல காட்டுகிறது. உலகில் நடந்த எல்லா நிகழ்வுகளையும் பல கோணங்கள் வைத்து ஒரு Intellectual ஆக இருப்பவரால் எப்படி வேண்டுமானாலும் மடைமாற்றி எழுதி வரலாற்று புனைவு செய்ய இயலும். அதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
நாளை பெரியாரை கூட இந்து மதத்தவராக ஒரு புத்தகம் எழுதி அவருடைய ஆளாக காட்ட இயலும். அதை படிப்பவர்கள் நம்பும் அளவிற்கு வேறு கோணத்தில் எழுத முடியும். ஆனால் உண்மை கண்ணால் கண்டவர்களுக்கு தெரியும். அப்படி தான் ஒரு முட்டாள் கூட்டம் மொத்த 100 வருட தமிழக வரலாற்றில் 0.01% கூட தெரியாமல் 100 வருடத்தில் செய்த அனைத்து தவறுகளுக்கும் பல உள்நோக்கங்களை கற்பித்து, வரலாற்று புனைவை பேசுகிறார்கள்.
அதையெல்லாம் ஆராய்ந்து பார்க்குமளவிற்கு அக்கூட்டத்தில் உள்ளவர்களுக்கு வரலாற்று அறிவோ பகுத்தறிவோ இல்லை. அப்படி இருப்பவர்களும், இந்த மடைமாற்றத்தை வெற்றியாக்க உதவுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு விடயம் தான் பெரியாரை 1% கூட படிக்காமல் சில சம்பவங்களையும், நிகழ்வுகளையும் தவறுதலாக புனைந்ததை வைத்து திருப்பி திருப்பி உளறி கொண்டிருப்பது.
ஒரு மனிதன் சாதிவெறி பிடித்து இருப்பானே ஆனால், அவனுக்கு சாதி தான் பெரிதாக இருக்கும், மற்ற எதுவும் கண்ணுக்கு தெரியாது. அவன் சாதியை விமர்சிப்பவன் எல்லாம் நம்முடைய எதிரி சாதிக்காரன், வேற்றுசாதிவெறியன் என்று தான் இயல்பாக தோன்றும்.
ஒருவன் மதவெறி பிடித்து இருப்பானே ஆனால், அவனுக்கு மதம் தவிர ஒன்றுமே கண்ணுக்கு தெரியாது. அவன் மதத்தை விமர்சித்தால், அவன் மதத்தை அழிக்க வந்த எதிரி, வேற்றுமத வெறியன் என்று தான் இயல்பாக தோன்றும்.
 
ஒருவன் இனவெறி பிடித்து இருந்தால், அவனுக்கு அதை தவிர மற்றவை கண்ணுக்கு தெரியாது. அதை குறித்து கேள்வி எழுப்பினாலே வேற்றுஇனவெறியன் என்று தான் இயல்பாக தோன்றும்.
ஆனால் பெரியார் இம்மூன்றையும் தாண்டியவர் என்பது அவரை படித்தவர்களுக்கு தெரியும். அவர் சாதியை சாக்கடை என்றும், மதத்தை மலம் என்றும் பேசியவர். அவர் இனம் என்று வரும்போது, ஆரிய பார்ப்பனர்களை எதிர்க்க மட்டுமே திராவிட இனம் என்று பேசுவார். ஆனால் அவர் சாதி, மொழி, இனம், மதம் என அனைத்தையும் தாண்டி மனிதம் என்று புனிதத்தை மறுத்து உயிர்நேயம் மற்றும் சுயமரியாதையை பேசியவர்.
ஆகையால் அவரை அரைகுறையாக பார்க்கும் சாதிவெறியர்களுக்கு அவர் ஒரு வேற்று சாதிவெறியன் போலவும், மதவெறியர்களுக்கு இன்னொரு மதவெறியன் போலவும், இனவெறியர்களுக்கு இன்னொரு இனவெறியன் போலவும் தெரிவது இயல்பே. ஏனென்றால் அவர் சாதி, மத, மொழி, இனத்திற்கு அப்பாற்ப்பட்டு ஒரு நவீன கற்றறிந்த சமூகத்தை உருவாக்க நினைத்தார். ஆகையால் அந்த முட்டாள்களுக்கு அப்படி தான் தெரியும்.
இன்னும் பல முட்டாள்கள் அவரை புரிந்து கொள்ளாமல், அவர் இந்து மதத்தை அதிகம் விமர்சித்ததால் தான் இஸ்லாமியர்கள் அவர் பின்னால் செல்கிறார்கள் என உளறுகிறார்கள். அவர் பேசிய சுயமரியாதை தான் அவரை இந்து மதத்தை அதிகமாக விமர்சிக்க வைத்தது. அவர் அடிதட்டு உழைக்கும் இந்து மக்களை குறை கூறவில்லை, அவர் பார்ப்பனிய மதத்தை சாடினார்.
இந்து மதத்தின் உட்கூறான வர்ணாசிரமத்தால் சாதிய கட்டமைப்புகளில் சிக்கி தன்மானத்தை இழந்து அடிமைப்படும் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க தான் அதிகமாக மனுவையும் இந்து மத வேத புராண இதிகாசங்களில் இருக்கும், அவர்கள் எழுதி வைத்திருக்கும் வசனங்களையும் அப்படியே மேடையில் பேசினார். அதையே தான் காப்பியடித்து இந்த முட்டாள் கூட்டத்தின் தலைமை.ஒ-ம் ஒரு காலத்தில் பேசிவந்தார். அவரே தான் இந்து கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சராக வேண்டும் என்ற குரலை அதிகமாக ஒலிக்க செய்தார்.
அன்றைய காலத்தில் பல இஸ்லாமியர்கள், பெரியாரின் பிரச்சாரத்தை கேட்டு நாத்திகர்களாக பெரியாருக்கு பின்னால் அணி திரண்டார்கள். நிறைய பெரியார் சிலை கல்வெட்டுக்களில் இஸ்லாமிய பெயர்கள் தான் இடம்பெற்றிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். அவருடைய சில சிந்தனைகளை, கொள்கைகளை தவிர்த்து பலவற்றை இஸ்லாமியர்கள் படித்தும் பின்பற்றியும் தன் வாழ்க்கையை தகவமைத்து இருக்கிறார்கள்.
அவர் அனைத்து மதத்தையும், ஏன் இஸ்லாமிய மதத்தையும் உட்பட விமர்சித்துள்ளார், ஆனால் யாரும் அவரை ஹிந்து மதவெறியன் என்று விளித்தது இல்லை. ஆனால் அவர் இந்து மதத்தை எதிர்த்ததை, வைத்து அவரை இஸ்லாமிய கைக்கூலி என்று கூவியவர்கள் தான் அதிகம், அதன் நீட்சி தான் இன்று தமிழை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவோர்கள் வரை நீள்கிறது.
அவர் பேசாத தலைப்புகளே இல்லை, தமிழ் மொழி, பெண்ணியம், பார்ப்பனியம், ஆரியம், திராவிடம், சாதி ஒழிப்பு, இட ஒதுக்கீடு, திராவிட நாடு, தமிழ்த் தேசியம் என பலவற்றை பேசியுள்ளார். இதனுடன் சேர்த்தே அவருடைய கொள்கையான நாத்தீகத்தையும் பேசியுள்ளார். ஆனால் என் பின்னால் வருபவர்கள் அனைவரும் நாத்தீகர்களாக தான் இருக்க வேண்டும் என்றோ, அனைத்து திராவிடர்களும் நாத்தீகர்களாக தான் இருக்கவேண்டும் என்றோ கூறவில்லை.
அவருடைய அதிகமான கருத்து பகுத்தறிவாக தான் இருக்கும். நாத்தீகம் என்பது கடவுள் மறுப்பு ஆனால் பகுத்தறிவு என்பது முழுக்க நாத்திகம் இல்லை, அது பகுத்தாய்ந்து ஏற்றும் கொள்ளும் அறிவு. அதனால் தான், அறிஞர் அண்ணா பகுத்தறிவை பரவலாக்கினார். அவர் ஒட்டுமொத்த மக்களின் அடையாளமாக கடவுள் மறுப்பை தூக்கி புடிக்கவில்லை. அதுவும் அவருடைய ஒரு கொள்கை.
ஆனால் தமிழை வைத்து பிழைத்து எய்க்கும் கூட்டம் சொல்கிறது, "முப்பாட்டன் முருகன் என சொல்லும் போது எங்களை எதிர்க்கும் நீங்கள், கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரை ஏற்கிறீர்கள் " என்று உளறி கொட்டுகிறது. பெரியார் ஒரு சிந்தனைவாதி, அவர் ஆயிரம் சிந்தனைகளை பேசிவிட்டு சென்றிருக்கிறார், அதில் ஒரு சிந்தனை தான் கடவுள் மறுப்பு. ஒட்டு மொத்த மனிதர்களின் அடையாளமே நாத்திகம் என சொல்லவில்லை, பகுத்தறிவு என்றார்.
வெறி பிடித்தவர்கள் போல ஒரு கடவுளை அனைவருக்கும் முன்னோர் என அவர் சொல்லிவிட்டு சென்றால் எதிர்க்கலாம். கடவுள் இல்லை என்று தான் அவர் பிரச்சாரம் செய்து இருக்கிறார். ஒட்டு மொத்த மனித சமுதாயத்தின் பிரதிநிதியாக தன்னை நினைத்து கொண்டு கடவுள் இல்லை என சொல்லவில்லை.
ஆனால் இங்குள்ள மூடர் கூட்டம் தான், ஒட்டு மொத்த தமிழ் மொழி பேசுபவர்களின் பிரதிநிதியாக தன்னை கற்பனை செய்து கொண்டு பல நம்பிக்கைகளை பின்பற்ற கூடிய மக்கள் வாழும் நிலப்பகுதியில் "நம்முடைய முப்பாட்டன் என்று ஒருவரை" அறிவிக்கிறீர்கள். இன்னொருவனின் முப்பாட்டனை முடிவு செய்வது அவனே, நான் இல்லை. அது போல இன்னொருவன் ஒருவரை எனக்கு முப்பாட்டன் என்றால் அதை எதிர்க்கும் உரிமையும் எனக்கும் இல்லை. ஆனால் ஒரு மொழி பேசுபவர்களின் மூதாதை என்று ஒருவரை அறிவிக்கவோ, பேசுவதோ தவறு. [இந்த பத்தியை திரும்ப திரும்ப படித்தால் சித்தம் தெளிய சிவம் அருள்புரியும்]
இவர்கள் முப்பாட்டன், முன்னோர் வழிபாடு என்பதை மட்டுமே தமிழ்த் தேசியமாக கற்பனை செய்துகொண்டு கிறுக்குதனமாக உளறிக்கொண்டு இருக்கிறார்கள். பிரபாகரன், தமிழரசன் போன்ற போராளிகள் சொல்லாதவை, எல்லாம் இந்த கூமுட்டைகள் சொல்லி அதை தமிழ்த் தேசியம் என சொல்வது நகைப்பாக தான் உள்ளது. தமிழ்த் தேசியம் என்பது சாதி, மத, இனதுவேஷத்தை எதையும் உள்ளடக்காத அற்புதமான இன அரசியல்.
ஈழத்தில் அதற்கான கட்டாயம் வந்தது, அது துளிர்த்தது. அது போல் இந்தியமும் அதற்கான கட்டாயத்தை உருவாக்கும், அப்போது இந்த கும்பல் செய்வதை மட்டும் பாருங்கள். தமிழ்த் தேசியம் என்ற பெயரை கூறி சாதி, மத தேர்தல் அரசியலை செய்யும் அரைகுறை குடங்கள் இவை.
நான் முருகனுக்கோ, முருக வழிபாடுக்கோ, முருக பக்தர்களுக்கோ எதிராக என் எழுத்துக்களை வைக்கவில்லை, மாறாக அதை ராமரை போல் ஒரு அரசியலாக்கி அதன் மூலம் அதிகாரத்திற்கு வர துடிக்கும் இரத்த காட்டேறிகளை "முருக பக்தர்களுக்கு"அடையாளம் காட்டுகிறேன். முருகன், ஒரு சமயத்தின் கடவுள், அதை யாரும் இங்கு மறுக்கவில்லை. முருக வழிபாடு, ஒரு கூட்டத்தினர் செய்யும் வழிபாடு , அதை யாரும் இங்கு தடுக்கவோ விமர்சிக்கவோ இல்லை.
சில கூமுட்டைகள் தான் இதை மடைமாற்றி இஸ்லாமிய, கிறித்தவர்கள் முருகனை விமர்சிக்கிறார்கள் என இந்துத்துவ பாணி அரசியல் செய்கிறது. அதோடு மட்டுமில்லாமல், இவ்வளவு தெளிவாக எடுத்து கூறும் போதும் "நீங்க இப்படி விமர்சனம் வைக்கும்போது எங்கூர்ல இருக்குற கிறித்தவன், இஸ்லாமியன் மேல வெறுப்பு வருது, நான் இந்துத்துவாவுக்கு சென்றுவிடுவேன் என குரங்கு வித்தைகளை" போல சிறு குழந்தை பயம் காட்டுவது போல உளறுகிறார்கள்.
இவர்கள் தலையில் கொட்டி" டேய் லூசு பயலே நாங்க முருகனையோ, முருக வழிபாட்டையோ விமர்சிக்கல, ஒரு மதத்தோட கடவுளை ஏன்டா ஒட்டுமொத்த மக்களோட அடையாளமா மாத்தி மத அரசியல் பன்ற நாயே. முருக பக்தர்கள் பாவம். அவர்களை, இந்துத்துவம் போல, ராம பக்தர்களை பயன்படுத்தி நாட்டுல கலவரம் பன்னி ராம பக்தர்களை சிறை கம்பிக்குள் இருக்க வைத்து, மதநல்லிணக்கம் சீர்கெட்டதோ, அப்படியெல்லாம் இங்க நடக்ககூடாதுடா நாயேனு" சொல்றேன்னு சொன்னாலும் இவனுங்க மண்டையில ஏறப்போறது இல்ல.
ஆனால், என் மச்சான் முருகபக்தன் Prabakaran Sathasivamமாதிரி பல லட்சம் மக்கள் இருக்குற வரை இது போன்ற பாசிச கும்பல்களின் குரல் நோட்டா வரைக்கும் தான் கேட்கும்.
கிணற்றுதவளைகளின் குரல் கிணற்றை தாண்டாது ஒறவுகளே.
-விக்டர் இறைதாசன்

சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி மற்றுமொரு சிவசேனா - முரண்களின் மொத்த தொகுப்பு

சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி மற்றுமொரு சிவசேனா - முரண்களின் மொத்த தொகுப்பு

ஒரே தமிழன் சீமான்: சாதி, மதம் கடந்து தமிழர்களாக அனைவரும் ஒன்றுபடனும்
மக்கள்: அப்புறம் ,
ஒ.த.சீமான்: தமிழர்கள், நாங்கள் வீரசைவர்கள். முருகனுக்கு பால்காவடி எடுப்பது , தைப்பூச திருவிழா என்பது தமிழர் பெருவிழா. (பாஜகவின் பெரும்பான்மைவாத அரசியல்)
-------
ஒ.த.சீமான்: சாதி பார்த்து ஓட்டு போட்டா உன் ஓட்டு எனக்கு தீட்டு
மக்கள்: அப்புறம்
ஒ.த.சீமான்: கருணாநிதி, எம்ஜிஆர் தன் சாதியை சொல்லி ஒரு வார்டு கவுன்சிலர் ஆகிருக்கமுடியுமா.
(தமிழ்நாட்டு அரசியல் ஆதிக்க சாதிகளில் முதல்வர் எவரும் வரவில்லை ஆகையால் சாதிவெறியர்கள் என் பின்னால் அணி திரளுங்கள்)
ரஜினி என்ன ஆளுகனு கேட்டா இந்த மண்ணுல ஆளனும்னு ஆசை வருமா? (கமல் வைணவ ஐய்யங்கார் பச்சை தமிழர் )
-----
ஒ.த.சீமான்: இது தமிழனுக்கும் தெலுங்கனுக்குமான போர்
மக்கள்: அப்புறம்
ஒ.த.சீயின் அன்புதம்பி: மன வேட்பாளரு அண்ணகாரு கலைக்கோட்டுதயம்(தட் பாஜகக்கு இஸ்லாமியன் ஓட்டு மட்டும் வேனும் மொமன்ட்)
---
ஒ.த.சீமான்: பாஜகவோட எந்த காலத்திலும் கூட்டணி வைக்கமாட்டோம் ( ஆம் , வைக்கமாட்டார்கள். சிவசேனாவுடைய மறுவடிவம். சுயேட்சையாக உருவெடுப்பார்கள்)
மக்கள்: அப்புறம்
ஒ.த.சீமான்: உனக்கு பிள்ளையார் னா எனக்கு முருகன், உனக்கு வடநாட்டு சிவன்னா எனக்கு தென்னாட்டு சிவன், உனக்கு விநாயக சதூர்த்தி னா எனக்கு தைப்பூசம்
(இதிலிருந்து கூற வருவது என்னவென்றால் RSS ன் பாசிச கொள்கையின் தமிழ் Version நாங்கள் தான். பெரும்பான்மைவாதத்தை உணராத மதநல்லிணக்கத்துடன் இருக்கும் தமிழ் மக்களிடம், நம்ம கொள்கை தான் பெரும்பான்மை.
தமிழ் மொழி பேசுபவர்கள் இந்த இறை கொள்கையை தான் பின்பற்ற வேண்டும். பிரச்சாரம் செய்வது வேறு, ஆனால் இவர்கள் செய்வது பச்சையாக RSSன் தாய்மதம் திரும்பும் கொள்கையின் தமிழ் Version)
----
ஒ.த.சீமான்: இஸ்லாமியர்கள் சிறுபான்மை இல்லை அவர்கள் இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் (இதை சீமான் தான் முதலில் சொன்னதாக பெருமையடிப்பவர்கள், காயிதே மில்லத்தையும் பழநிபாபாவின் பேரை கூட அறியாத சிறுவர்கள். And Moreover வெளிநாட்டு பண உதவியும், consolidated muslim votes பெறுவதற்காக பேசக்கூடிய பேச்சு)
மக்கள்: அப்புறம்
ஒ.த.சீமான்: உருது பேசும் இஸ்லாமியர்கள் தமிழர்கள் இல்லை. அவங்கள எப்படி "நான்" தமிழனா ஏத்துக்குறது [இஸ்லாமியர்கள் அரசு பணியிடங்கள், கல்லூரிகள், பள்ளிகூடங்கள் என எல்லா இடத்திலும் தோற்றத்தால் பொதுபுத்தி பார்வையில் கொலை செய்யப்படுகிறார்கள்.
எனக்கே கோவையில் ஒருத்தனும் அறை கொடுக்கல என் பெயரை கேட்டுட்டு, என் பெயரை சொல்லாம என் நண்பனோட தங்கி பிறகு என் பெயரை கேட்டதும் ஓனரு அதிர்ச்சியே அடைந்தாரு.
இப்படியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தில் சென்று உருது தமிழ் மலையாளம்னு பிரிச்சு அரசியல் பன்னுவது, ஒடுக்கப்பட்டவர்களை பிரித்து ஆளுக்கொருத்தன் அடிச்சிட்டு போங்கடா என்பதாகும். RSSன் பிரித்து அடி சித்தாந்தம் தான்.
அதிலும் சீமான் ஏதோ தமிழ்நாட்டின் அதிபர் போல நான் ஏற்கமுடியாது என்று சொல்வது, ஒரு பிரிவை இயல்பாக ஏற்படுத்தும் என்றாலும், தமிழர் யார் என அடையாளப்படுத்தும் அதிகாரம் அவரிடம் இருப்பது போல தன் சகாக்களை நம்பவைக்கிறார்]
---
ஒ.த.சீமான்: ஆதிதமிழர் விடுதலை இல்லையேல் மீதி தமிழர் விடுதலை இல்லை
மக்கள் : அப்புறம்
ஒ.த.சீமான்: தெலுங்கு பேசும் அருந்ததியர்களை, அவர்களாகவே நாங்கள் ஏற்கிறோம். அவர்களின் முன்னேற்றத்திற்கு தமிழர்கள் நாங்கள் உழைப்போம். [இருப்பதிலே கடைசிநிலை ஒடுக்குமுறைக்கு ஆளாவது அருந்ததியர்கள் தான். வழிவழியாக நாம் பார்க்கவே கூச்சப்படும் மலத்தை தன் கையால் அள்ளி விஷவாயு தாக்கி இறந்தும் போகிறார்கள்.
அவர்களை ஏற்கனவே மனிதர்களாகவே பார்க்காமல் இருக்கிறார்கள் இதில் அவர்களை மொழி ரீதியாக சாதி ரீதியாக இரண்டாம்பட்சமாக பார்க்கும் இன்னொரு பார்வையை வளர்க்கிறார்.
இப்போது தான் ஒடுக்கப்பட்டவர்களான பறையர்களும் அருந்ததியர்களும் ஒன்றாக ஒருமித்த குரலில் போராடி கொண்டிருக்கும் வேளையில், இப்படியான முனுமுனுப்புகள் வர்ணாசிரமத்திற்கே இழுத்து செல்லும்]
---
ஒ.த.சீமான்: இது ஆரியருக்கும் தமிழருக்கும் நடக்கும் போர். திராவிடர்கள் அமைதியாக இருக்கவும்
மக்கள்: அப்புறம்
ஒ.த.சீமான்: திருச்சி சங்கரப்பா சொன்னாரு. அவரு ஒரு சுத்த தமிழ் ஐயர். மகாபாரதம் தமிழர்களுடைய போர்னு. தமிழ் பார்ப்பனர்களும் தமிழர் தான் [ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல சூத்திரன் என்றும் கீழ்சாதி என்றும் பார்த்தவர்கள் தமிழர்கள் ஆக்கிவிட்டு எந்த ஆரியர் கூட போர் புரிய போகிறார். இவர் பார்வையில் சூனா சாமி கூட தமிழர் தான். RSSன் தமிழ் Version. அவா இல்லாம RSS இயங்குமோ னா :) ]
---
ஒ.த.சீமான்: பிரபாகரனின் பிள்ளைகள் நாங்கள். பிரபாகரன் இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன்
மக்கள்: அப்புறம்
ஒ.த.சீமான்: நான் வர்ரவரைக்கும் பிரபாகரன் தீவிரவாதியா தான் தெரிந்தார்[ வரலாறு அறியாத சிறுபிள்ளைகள் வேண்டுமானால் இந்த கதைக்கு கைதட்டுவார்கள். ராமதாஸ், பழநிபாபா, கொளத்தூர் மணி, வைகோ என பல தலைவர்கள் பிரபாகரன் Active ஆக இருக்கும்போதே அவர்களுக்காக பேசி உதவி செய்து தடா, பொடா வாங்கியவர்கள்.
எம்ஜிஆரின் பண உதவி சொல்லும், விடுதலை புலிகளை தமிழக மக்கள் எப்படி நேசித்தார்கள் என்பதை. விடுதலை புலிகள் ஈழத்தில் செயலற்ற பிறகு பிரபாகரனை தீவிரவாதியிலிருந்து "புனிதப்படுத்தியது " போல் பேசுவது என்பது அவர் சகாக்கள் வேண்டுமானால் நம்பலாம்.]
--
இப்படியே அடுக்கி கொண்டே போகலாம். முரண்பாட்டின், குழப்பங்களின் மொத்த உருவமாக. உயிர்நேயம் மிக்க தமிழ் மக்களை , இனவெறி மிக்க சிங்களர்களாக மாற்ற தான் இவ்வளவு பாடுபடுகிறார் போலும்.
தமிழ்தேசியம் என்ற அழகான மண்ணுக்கான அரசியலை , இனவெறியுடன் குழப்பி, அதனுள் சாதிவெறியையும் மதவெறியையும் உட்கூறாக திணிப்பதில் இருந்தே தெரிகிறது. மூன்று வெறிகளும் ஓன்றாக சேரும் இடத்தில், எளிய மக்களின் உயிர் பலிகள் அதிகமாக இருக்கும் என்று.
அது அவர் சகாக்களின் உதிரும் வார்த்தைகளிலேயே தெரியும், அவர்கள் எவ்வளவு சகிப்புதன்மையற்றவர்கள் என்று. இவர்கள் வளர்ப்பது தமிழ்தேசியம் அல்ல, Neo fascism..
-விக்டர் இறைதாசன்

Friday, March 08, 2019

தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடத் தொடங்கிய காலத்தில் தமிழ்நாடு இருந்த நிலை

#தந்தை பெரியார் #தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடத் தொடங்கிய காலத்தில் #தமிழ்நாடு இருந்த நிலை...........
1.ஆதிதிராவிடர்கள், பார்ப்பன தெருக்கள், கோயில்களை சுற்றியுள்ள தெருக்கள் ஆகிய எதிலும் நடந்து கூடச் செல்லக் கூடாது.
2. ஆதி திராவிடர்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டிக்கட்டக் கூடாது.
3.தங்க நகைகள் அணியக் கூடாது.
4.மண் குடத்தை தான் தண்ணீர் பிடிக்க பயன்படுத்த வேண்டும்.
5.ஆதிதிராவிடர் விட்டுக் குழந்தைகள் படிக்கக் கூடாது.
6.சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது.
7.திருமணக் காலங்களில் மேளம் வாசிக்கக் கூடாது.
8.பூமி குத்தகைக்கு வாங்கி சாகுபடி செய்யக் கூடாது.
9.குதிரை மீது ஊர்வலம் செல்லக் கூடாது.
10.பொதுக் கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது.
11.மேல் அங்கியோ, துண்டுடோ அணிந்து கொண்டு செல்லக் கூடாது.
12.உயர்ந்தோர் குடியிருப்பின் வழியாக தாழ்ந்தோர் சுடுகாட்டிற்கு செல்லக் கூடாது.
13.பெண்கள் ரவிக்கைகள் அணியக் கூடாது என்பதோடு மேல் சாதியினர் வரும்போது மேலே அணிந்திருக்கும் வேறு துணிகளையும் எடுத்து அக்குலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
14.நீதி மன்றங்களில் சாட்சி சொல்ல நேரிட்டால் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும்.
..........இந்த நிகழ்வுகளெல்லாம் இன்று தமிழகத்தில் மாறியிருப்பதற்கு காரணம் யார்? '' தந்தை பெரியார்'' அல்லவா, இந்த நிகழ்வுகளை மக்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஏடுகள், 'குடி அரசு, ' புரட்சி', ' பகுத்தறிவு',போன்ற ஏடுகளே..........

Wednesday, February 27, 2019

பார்ப்பனர்கள்தான் இன்றைய எல்லா அரசியல் முறைகேடுகளுக்கும் பிள்ளையார் சுழி.

‘பார்ப்பனரல்லாதவர்கள்தான் ஊழல் செய்கிறார்கள். பார்ப்பனர்கள் நேர்மையின் சிகரம்’ என்கிற பொதுப்புத்தியை உருவாக்க ஊடகங்கள் வாயிலாகவும், சமூக ஊடகங்களிலும் பார்ப்பனர்கள் மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழக அரசியல் சூத்திரர்களை சார்ந்திருப்பதால் ‘எத்தை தின்றால் பித்தம் தெளியும்’ நிலையில் பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவுக்கே குதிரைப்பேர அரசியலை முதன்முறையாக அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி. பார்ப்பன தந்திரத்துக்கு பலியான முதல் சூத்திரக் கட்சி காமன் வீல் பார்ட்டி. மைனாரிட்டி காங்கிரஸ் அரசுக்கு முதல்வராக பொறுப்பேற்ற ராஜாஜி, மெஜாரிட்டி காட்டுவதற்காக செய்த தகிடுதத்தங்கள்தான் இன்றைய எல்லா அரசியல் முறைகேடுகளுக்கும் பிள்ளையார் சுழி.

Tuesday, February 05, 2019

யார் இந்த "பார்ப்பான்"?

யார் இந்த "பார்ப்பான்"? ......
தான் பிராமணன் எனக்கூறி நம்மை சூத்திரனாக்கி பார்ப்பான்.
சூத்திரன் எனக்கூறி நம்மை கருவறையில் நுழைய விடாது பார்ப்பான்.
ஆனால் "கர் வாப்சி" என அனைவரையும் இந்துவாக்க பார்ப்பான்.
இந்துவாக்கி, நம்மை பிரித்து நான்காக்கிப் பார்ப்பான்.
நான்கில் தன்னைத்தானே மேலென பார்ப்பான்.
நான்கில் மற்றவறை "தாழ்வென பார்ப்பான்.
தமிழை நீச பாஷையாக்க பார்ப்பான்.
செத்த சமஸ்கிருதத்தை தேவ பாஷையாக்க பார்ப்பான்.
பகவத் கீதையை தேசிய நூலாக்க பார்ப்பான்.
அதில் நான்கு சாதி படைத்த கிருஷ்ணனை கடவுளாக்கி பார்ப்பான்.
தவறெனச் சொன்னால் உன்னை கொல்லவும் பார்ப்பான்.
நேரடியாக மோத துணிவற்ற பார்ப்பான்
அதனை குறுக்கு வழியில் செய்யவும் பார்ப்பான்.
உன் சகோதரனை உனக்கு எதிரியாக்கிப் பார்ப்பான்
உன் தோழனை உனக்கு துரோகியாக்கிப் பார்ப்பான்.
எதிலும் தானே மேல் எனக்கூறும் பார்ப்பான்
திருவள்ளுவருக்கும் பூணூல் போட பார்ப்பான்
பார்ப்பான் என்றால் சினம் கொண்டு பார்ப்பான்
நீ யாரென்றால் நான் ஒரு பூணூல் போட்ட பார்ப்பான்
என ஊடகத்தில் சட்டையை கழட்டப் பார்ப்பான்
அவனே பார்ப்பான் தமிழா! அவனே பார்ப்பான்.

பார்ப்பனர்கள் நேர்மையின் சிகரம்

‘பார்ப்பனரல்லாதவர்கள்தான் ஊழல் செய்கிறார்கள். பார்ப்பனர்கள் நேர்மையின் சிகரம்’ என்கிற பொதுப்புத்தியை உருவாக்க ஊடகங்கள் வாயிலாகவும், சமூக ஊடகங்களிலும் பார்ப்பனர்கள் மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழக அரசியல் சூத்திரர்களை சார்ந்திருப்பதால் ‘எத்தை தின்றால் பித்தம் தெளியும்’ நிலையில் பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவுக்கே குதிரைப்பேர அரசியலை முதன்முறையாக அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி. பார்ப்பன தந்திரத்துக்கு பலியான முதல் சூத்திரக் கட்சி காமன் வீல் பார்ட்டி. மைனாரிட்டி காங்கிரஸ் அரசுக்கு முதல்வராக பொறுப்பேற்ற ராஜாஜி, மெஜாரிட்டி காட்டுவதற்காக செய்த தகிடுதத்தங்கள்தான் இன்றைய எல்லா அரசியல் முறைகேடுகளுக்கும் பிள்ளையார் சுழி.

திருமணங்களில் இந்த மந்திரங்களின் உண்மை பொருளை அறிந்து கொள்

திருமணங்களில் இந்த மந்திரங்களின் உண்மை பொருளை அறிந்து கொள்
பிராமண புரோகிதர் தலைமையில் நடக்கும் சமஸ்கிருத வைதிக திருமண முறையை ஸ்டாலின் விமர்சித்து விட்டார் என பொங்குபவர்கள், தங்கள் வீட்டு திருமணங்களில் இந்த மந்திரங்களின் உண்மை பொருளை அறிந்து கொள்ள, சமஸ்கிருதத்துக்கு பதிலாக தமிழிலேயே சொல்ல வலியுறுத்துவார்களா??

இதோ அவாளே வேதம் ஓதி, அவாளே விளக்கமும் தருகிறாளே! தமிழில் இந்த விளக்கங்களை அளித்தவர் அக்னிஹோத்ரி இராமானுஜ தாத்தாச்சாரியார் என்ற வேத & சமஸ்கிருத அறிஞர்..



'"'சோமஹ ப்ரதமோவிவேத கந்தர்வவிவிதே உத்ரஹத்ருதியோ அக்னிஸடேபதிஸ துரியஸதேமனுஷ்ய ஜாஹ''''

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. நீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.

அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம்.

ஸப்தர்ருஷ்ய: ப்ரதமாம் க்ருதிகாநா மருந்ததீம் / யத் த்ருவதாகும் ஹ நிந்யுஷ் ஷட்க்ருத்திகா முக்ய யோகம் வஹந்தீய மஸ்மாக மேத த்வஷ்டமீ //

“ஸப்தரிஷிகள், கிருத்திகை எனப் பெயர் கொண்ட தங்கள் மனைவிகளுக்குள்ளே முதலான வளான அருந்ததியை எப்படி நிலைத்திருக்கச் செய்தார்களோ, அப்படி மற்ற ஆறு கிருத்திகைகள் அருந்ததியின் முக்கியமான சேர்க்கையைச் செய்கின்றனர். இந்த அருந்ததியைத் தரிசனம் செய்ததால் என்னுடைய இந்த மனைவி எட்டாமவளாக வளர்ச்சி பெறட்டும்.”

“தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வயஸ்யாம் பீஜம்/
மனுஷ்யா பவந்த்தீயான ஊரு உஷதி/
விஸ்ரயாதையஸ்யா முஷந்தஹா ப்ஷரே/
பஷேபம்….”



இது வேதத்தில் சொல்லப்பட்ட மந்த்ரம் இதை கல்யாண மேடையிலே பெண்ணையும், மாப்பிள்ளையையும் உட்கார்த்தி வைத்து சத்தமாக சொல்கிறார் வாத்யார் (புரோகிதர்). இந்த மந்த்ரத்தின் அர்த்தம் புரிந்தால்… அந்த வாத்யாரை நீங்கள் வாத்சாயணர் என்றுதான் அழைப்பீர்கள்.

அப்படி என்ன சொல்கிறது இந்த மந்த்ரம்?
நான் அவளை கட்டிப்பிடிப்பேன். (அவளோடு உறவு கொள்ளும்பொழுது) அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை சரியாக பொருந்தச் செய்யுமாறு… தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்.

இந்த மந்த்ரத்தின் அர்த்தத்தை இதைவிட நாகரிகமாக சொல்ல முடியாது. விளக்கமாக நான் சொல்லியிருப்பேன் என்றால்…. என் மீது உங்களுக்கு இருக்கும் மரியாதை போய்விடும். அப்படிப்பட்ட மந்த்ரம் அது.

உதீர்ஷ்வாதோ விஸ்வாவஸோ நம ஸேடா மஹேத்வா / அந்யா மிச்ச ப்ரபர்வயகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்ருஜ//

விசுவாசு என்னும் கந்தர்வனே, இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத் தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக.”

“உதிர்ஷ்வாத: பதிவதீ ஹ்யேஷா விஸ்வாஸுந் நமஸா கீர்ப்பிரீட்டே / அந்யாமிச்ச பித்ருபதம் வ்யக்தாகும் ஸ தே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி //

“இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்கு கணவன் இருக்கிறானல்லவா? விசுவாசுவான உன்னை வணங்கித் துதித்துக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும் இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டதென்பதை நீ அறிவாயாக.”

குறிப்பு : திருமணத்துக்கு மட்டுமல்ல, “முதல் இரவுக்கும்” மந்திரங்கள் இருக்கின்றன. முதலிரவில் படுக்கையில் தம்பதிகளுக்கு இடையே படுத்திருக்கும் கந்தர்வனை எழுப்பிப் போகச் சொல்லி தம்பதிகள் உறவு கொள்ள அனுமதி கோருகிறது, மேற் குறிப்பிட்ட மந்திரம். திருமணத்துக்கு பார்ப்பனர் களை வைத்து ‘மந்திரம்’ ஓத விரும்புவோர்கூட முதலிரவுக்கு சாஸ்திரப்படி மந்திரங்கள் ஓதுவதை கைவிட்டு விட்டார்கள். அத்தகைய சடங்குகள் விபரீதமாகிவிடும் என்பதை பகுத்தறிவோடு புரிந்து கொள்ளும் பழமைவாதிகள், திருமணங்களில் புரோகித மந்திரங்களை ஏன் கைவிடக் கூடாது?

காசு கொடுத்து ஐயரை வரவழைத்து இந்த சமஸ்கிருத மந்திரங்கள் ஓதுவதால் என்ன மாறுதல் நடந்துவிடப்போகிறது?

-நன்றி சமஸ்கிருத அறிஞர்: ராமானுஜ_தாதாச்சாரியார்!

Logic படி மடக்கணுமா பார்ப்பானை? இதோ!:)

11-16 வயதில் ஒரு பொண்ணுக்கு உடம்பு சூடானால்
ஏன் சூடான அக்னி கிட்டயே போய் வேண்டுற?
ஸோமன் (சந்திரன்) கிட்ட தானே குளிர்ச்சி? எ. வினவுங்கள்!

இவனுங்களால் பதில் சொல்ல முடியாது!
ஏன்னா, பொய்.. பொருந்த ஷொல்லணும்!😂

பிராமணீயம்= அசிங்கம் By Design!

எம்.ஆர். ராதா  பார்ப்பான்களுக்கு Prove பண்ணிட்டு இருக்க மாட்டாரு!

டேய்.. யாருடா அது ஸோமன் சந்திரன்?
பொண்ணுங்களைத் தான் 'பாதுகாப்பா'னாமா?
ஆம்பிளைகளைப் 'பாதுகாக்க' மாட்டானாமா?

Hormone பொண்ணுங்களுக்கு மட்டும் தான் சுரக்குதா? எ. கரகர குரலில் எட்டி உதைப்பாரு!😂


marriage according to parpana traditions (homam, purohit, mantras, etc) purohit would've told groom to say this.

पूषा तवेतो नयतु हस्तग्र्ह्याश्विना तवा पर वहतांरथेन |
poosha thavetho nayatu hasthagrahayasvinau tva pravahathamrathena
गर्हान गछ गर्हपत्नी यथासो वशिनी तवंविदथमा वदासि ||
garhan gaccha garhapatni yathaso vashini tvamvidathamavadasi
सोमः परथमो विविदे गन्धर्वो विविद उत्तरः |

GROOM SAYS:
soma prathamo vivide gandharvo vividh uththarah
तर्तीयोग्निष टे पतिस्तुरीयस्ते मनुष्यजाः ||
சோமா முதலில் இவளை அடைந்தான், பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான் 
tartiyogrishte pathisthuriyasthe manushyajaah
பிறகு யோகினிகளுக்கு "சேவை" புரிந்தாள் இப்பொழுது மானுடபெண்ணுக்கு பிறந்த எனக்கு வாழ்க்கைப்படுகிறாள்


सोमो ददद गन्धर्वाय गन्धर्वो दददग्नये |
somo dadada gangharvaya gandarvo dadadagraye
சோமாவிடமிருந்து கந்தர்வனுக்கு கிடைத்தது, கந்தர்வனிடமிருந்து அக்னிக்கு கிடைத்தது
रयिं चपुत्रांश्चादादग्निर्मह्यमथो इमाम ||
rayim chaputran schadadgrirmahyamatho imam
அக்னி இறுதியாக வரதட்சணையும் இவளையும் நான் அனுபவிக்க எனக்கு குடுத்தான்.

மவுனத்தால் கொன்று விட்டார்கள்

Whenever I expose brahminism I have been victimized by them with conspiracy of silence or condemnation on filmsy grounds or they dismiss it useless. - Dr. Ambedkar

நான் பார்ப்பனியத்தை தோலுரித்து காட்டும்போதெல்லாம் அவர்கள் அதை பற்றி பேசாமலேயே விவாதிக்காமலேயே அல்லது மிக மிருதுவாக கண்டித்துவிட்டு இருட்டடிப்பு செய்து விடுவார்கள் என்று அம்பேத்கர் கூறுவார். அப்படித்தான் ஸ்டாலின் இந்து திருமணத்தில் இருக்கும் சடங்குகளை விமர்சித்தத்தை மவுனத்தால் கொன்று விட்டார்கள். அங்காங்கே சில பார்ப்பனர்கள் ஸ்டாலின் வளர்ச்சி மீது திடீர் பாசம் கொண்டு அதை வருடலோடு கண்டித்ததை பார்க்க முடிகிறது. ஆனால் ஆண்டாள் விவகாரத்தில் நடந்த போராட்டம் போல இல்லை. கலைஞரின் ராமர் விமர்சனத்துக்கு எழுந்த கண்டன கூட்டங்கள் போல எங்கும் நடக்கவில்லை. அதை பற்றி பேசி நாலு பேர் உண்மையை தெரிந்து கொண்டு விடுவானோ என்று அதை பற்றியே பேசாமல் விட்டு விடுகிறார்கள்.

எம்.ஜி.ஆர். மேல் சபையை ஏன் ஒழித்தார்

எம்.ஜி.ஆர். மேல் சபையை ஏன் ஒழித்தார்

வெண்ணிற ஆடை நிர்மலாவை சட்டமன்ற மேலவைக்கு வேட்பாளராக அறிவித்து விட்டார். ஆனால் நிர்மலா தான் திவாலாகி விட்டதாக மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து நீதிமன்றத்தில் அது நிலுவையிலிருந்தது. இது திமுகவுக்கு தெரியவந்து தேர்தல் அதிகாரியிடம் புகாராக போனது. மனுதாக்கல் நாள் முடிந்த பிறகு பட்டாதாரி ஆசிரியர் தொகுதிகளில் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாக திடுதிப்பென்று ஒரே நாளில் நிர்மலா கடன்களை அடைத்து மஞ்சள் நோட்டீசஸை வாபஸ் வாங்கினார். ஆனால் தேர்தலுக்கு மனு தாக்கல் செய்த போது திவால் நோட்டீஸ் குறித்த வழக்கு நிலுவையில் இருந்ததால் போட்டியிட முடியாது என தேர்தல் அதிகாரி மனுவை தள்ளுபடி செய்தார். இது ஒரு காரணம்.
.
இன்னொன்று பட்டதாரி, ஆசிரியர் தொகுதிகளில் திமுக கணிசமான வெற்றிகளை பெற்று மேலவை தலைவராக கலைஞர் வந்துவிடுவார் என்ற சூழல் ஏற்பட்டதாலும் மொத்தமாக கலைத்து விட்டார்.
.
மிக மிக முக்கியமான காரணம் வேறு ஒன்றும் உண்டு. 1982ல் கட்சியில் சேர்ந்து மளமளவென கட்சியில் தனக்கு நிகராக வளர்ந்து வந்த ஒருவருக்கு இணையாக அல்லது போட்டியாக நிர்மலாவை அரசியலில் இழுத்து விட நினைத்தார். ஆனால் அந்த முயற்சி பலிக்கவேயில்லை.
.
மேலவை கலைப்பினால் ரொம்ப பாதிக்கப்பட்ட தலைவர்களில் ஒருவர் மறைந்த பெரியவர் ம.பொ.சி. அவர் தொடர்ந்து எம்.ஜி.ஆரால் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
.
சட்டமன்ற மேலவை இருந்த காலத்தில்தான் வாக்குகள் அடிப்படையில் சிறுபான்மையாக இருந்த சமுதாயத்தை சேர்ந்த டாக்டர் எச்.வி.ஹண்டே (துவக்கத்தில் மேலவை உறுப்பினராக நியமனமானார்), ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்களும் ராகவானந்தம் போன்றவர்களும் போன்ற மூத்த கட்சியினரும் எம்.எல்.சியாக இருந்துதான் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் அமைச்சர்களாக தொடர்ந்தனர்



லைக்கபட்ட பின்னர் ஆர்எம்வீ திருநெல்வேலி இடைதேர்தலில் நிற்க வேண்டியிருந்தது


திமுக மீண்டும் மேலவை அமைக்க முயன்று அந்த மசோதா டெல்லியில் நிலுவையிலிருந்த போது மீண்டும் ஆட்சிக்கு வந்த "ஜெ" அதை திரும்ப பெற சட்டமன்றத்தில் தீர்மானம் திரும்ப பெற்றுக்கொண்டார்


ஒரு சாராருக்கு மட்டும் எதுக்கு இரண்டு ஓட்டு என்ற தீர்க்கதரிசனமெல்லாம் வெண்ணிற ஆடை நிர்மலாவை வேட்பாளராக அறிவித்த போதும் எம்.ஜி.ஆருக்கு வரலை. நிர்மலாவுக்காக கடன்களை அடைத்து மஞ்சள் நோட்டீசை வாபஸ் வாங்கிய போதும் தோணலை. ஆனால் நிர்மலாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பிறகுதான் இந்த சீரிய சிந்தனை எம்.ஜி.ஆருக்கு தோன்றியது என்பது மட்டும் வரலாற்று உண்மை.


மோடியின் அமைச்சரவையே மக்களாட்சிக்கு எதிரானது

மோடியின் அமைச்சரவையே மக்களாட்சிக்கு எதிரானது

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 282  உறுப்பினர்கள் இருக்கும் போது செல்வந்தர்கள்,கார்ப்பரேட்டுகளுக்கு வழக்குரைஞர்களாக இருந்தவர்கள், தேர்தலையே சந்திக்காதவர்களை மற்றும் தேர்தலில் இதுவரை வெற்றி பெறாதவர்களை மத்திய அமைச்சராக்கி அழகுபார்த் துள்ளார், மோடி - இன்று பொருளாதாரத்தில் பெரும் பணக்காரர்களுக்கு பெரும் லாபமும், ஏழைகள் மேலும் நலிவடைந்து போகவும் இந்த அமைச்சர்களின் 'கைவண்ணமே' காரணம்!  புறவாசல் வழியாக வந்த அமைச்சர்களில் அனை வருமே அதிமுக்கியத்துவம் வாய்ந்த கேபினட் பதவி வகிப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அருண் ஜெட்லி தேர்தலில் தோல்வியுற்று பின்புறமாக நுழைந்தவர், அவர்தான் நிதி அமைச்சர்!

நிர்மலா சீத்தாராமன் தேர்தலில் போட்டியிடாமல் பின்புறமாக நுழைந்தவர், அவர் தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்! ஸ்மிருதி இராணி தேர்தலில் போட்டியிட்டு வைப்புத்தொகை இழந்து பிறகு மோடியால் மனித வளத்துறை அமைச்சராக்கப்பட்டார்.  இவர் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக குறுகிய காலம் இருந்து பிறகு ஜவுளித்துறை அமைச்சரானார்.  சுரேஷ் பிரபு - சிவசேனா கட்சியில் இருந்த இவர் பாஜகவிற்கு தாவியதற்காக இவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் இவர் ரயில்வே அமைச்சராக இருந்த போதுதான் அதிகம் விபத்து நடைபெற்றது, 2017 அக்டோபர் மாதம் தொடர்ந்து தினசரி ஒரு விபத்து என அய்ந்து விபத்துக்கள் நடந்த நிலையில் எதிர்க்கட்சிகள் பதவி விலக வற்புறுத்தியும் இவர் பதவி விலகவில்லை. பிறகு அமைச்சரவை மாற்றத்தின் போது இவருக்குத் தரையில் ஊரும் ரயிலிலிருந்து வானில் பறக்கும் விமானம் அதாவது சிவில் விமானப் போக்கு வரத்து துறை வரை அமைச்சராக பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்ற பிறகு ஏர் இந்தியாவின் 100 விழுக்காடு பங்குகளும் விற்பனைசெய்ய முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரவிசங்கர் பிரசாத் - இவரும் எந்த ஒரு தேர்தலையும் சந்தித்ததில்லை, இருப்பினும் இவர் பின்வாசல் வழியாக அமைச்சர் பதவியைப் பெற்று தகவல் தொடர்புத்துறை அமைச்சரானார்.  முக்தார் அப்பாஸ் நக்வி - இவரும் பீகார் சட்ட மன்றம், நாடாளுமன்றம் இரண்டிலுமே போட்டியிட்டு தோல் வியைக் கண்டவர். இவருக்கும் பின்வாசல் வழியாக கேபினட் அமைச்சர் பதவியைத் தூக்கிக் கொடுத்தார் மோடி.

மகாராட்டிராவைச் சேர்ந்த பிரகாஷ் ஜாவ்டேகர்  - இவரும் எந்த ஒரு தேர்தலையும் சந்தித்ததே கிடையாது. இவருக்கு மனிதவளத்துறை அமைச்சர்  என்ற 'பரிசு'  கிடைத்துள்ளது, பெட்ரோலியத்துறையில் கொடிகட்டிப் பறந்த கோயல் குடும்பத்தைச்சேர்ந்த விஜய் கோயல் இதுவரை மேடையேறிப் பேசி வாக்கு வாங்கியது கிடையாது. ஆனால் இவருக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் பதவி!

பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான பிரபல பத்திரிகையாளர் எம்.ஜே.அக்பர். இவரும் தேர்தலைச் சந்தித்ததே கிடையாது. இவருக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பதவி!

சிவசேனாவில் இருந்து காங்கிரசிற்குத் தாவி அதன் பிறகு தனிக் கட்சி துவங்கி, பிறகு மீண்டும் காங்கிரசுக்கு வந்து நாடாளுமன்றத்தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வி அடைந்து பாஜகவில் சேர்ந்தார்  நாராயணரானே, இவர் சேர்ந்த உடனேயே இவருக்கு கேபினட் அமைச்சர் தகுதி வழங்கப்பட்டு கொள்கை முடிவு எடுக்கும் குழுவில் இவரும் ஒருவரானார்.   மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 282 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களிலிருந்து மோடி கேபினட் அமைச்சர் பதவிக்கு தேர்தெடுக்காமல் தனக்குத் தேவையான மற்றும் கார்ப்பரேட்டுகளுடன் எப்போதும் உறவாடிக் கொண்டு இருப்பவர்களுக்கு மட்டுமே கேபினட் அமைச்சர் பதவி கொடுத்துள்ளார். பா.ஜ.க. ஆட்சி என்றாலே - பார்ப்பன - பனியா (கார்ப்பரேட்)வுக்கான ஆட்சி என்று சுருக்கமாகவே கூறிவிடலாம்.

அன்று 1952இல் ஆச்சாரியார் (ராஜாஜி) கொல் லைப்புறமாக வந்து முதல் அமைச்சர் ஆனவர். அவர் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிடாதவர் என்பதும் நினைவூட்டத்தக்கதாகும்!

கிராமக் கலாச்சாரம், பண்பாடு எல்லாம் தற்குறிகளின் ஹம்பக்

இந்தியர்கள் கிராமத்துப் பெருமை பேசும்போதெல்லாம் அல்லது கலாச்சாரப் பெருமை பேசும்போதெல்லாம் முட்டாள்தனமான ஒரு பெருமிதம் ஊறுகிற காலம் இருந்தது. ஆனால், நம்முடைய கிராமங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டிய அளவிற்கு சனாதன அமைப்பிற்குள் அழுகி மட்கிப் போயிருக்கிறது.
கிராமக் கலாச்சாரம் பண்பாடு போன்ற வறட்டுக் கூச்சல்கள், இரண்டொரு நாட்கள் விடுமுறைக்கு வருகிற இணைய தலைமுறைக்கு வேண்டுமானால் நிலைத்தகவல் விருப்பங்களுக்குப் பயன்படலாம். மற்றபடி நமது இந்தியக் கிராமக் கட்டமைப்பு உடைந்து பன்னாட்டு வணிகச் சூழலின் ஆக்டோபஸ் பிடிக்குள் சிக்குவது ஒரு வகையில் சனாதன இருக்கத்தை தளர்த்தும். ஆனால் அங்கு உருவாகும் வர்க்கச் சிக்கலை எப்படி எதிர்கொள்வது என்று யோசிக்கலாம்.
கிராம அமைப்பும் நில உடமைச் சமூகமும் இலவசமாகக் கிடைக்கிற சாதிப் பெருமையை ஒரு போதும் விட்டுக் கொடுக்க விரும்பாது. அறிவாலும், உழைப்பாலும் தகுதிகளை உயர்த்திக் கொள்ளாத தற்குறிகளுக்குக் கிடைத்த அற்புதப் பரிசு பிறவியில் கிடைக்கிற உயர் சாதிக் குறியீடு.
கிராமங்கள் அழிந்து முற்றிலும் நீர்த்துப் போகிற போது சாதிக்கான வெளி சவாலுக்கு ஆளாகும், பக்கவாட்டில் பட்டியல் இனங்கள், நாடார் சமூகத்தைப் போலவோ தேவேந்திரர்களைப் போலவோ சமூகப் பொருளாதாரத் தளங்களை உடைத்து வெளியேறி தங்கள் அடையாளங்களை மறுதலித்து அடுத்த தளங்களை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
கிராமக் கலாச்சாரம், பண்பாடு எல்லாம் தற்குறிகளின் ஹம்பக்.

Road to Nandikadal, Page 366

ஈழப்போரின் உச்சகட்டத்தில் கூட, யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருந்த ஈழத்தமிழர்கள் சாதிவாரியாக பிரிந்திருந்தனர். அங்கிருந்த ஆதிக்க சாதியினரான வெள்ளாளர்கள், சிங்கள இராணுவத்துடன் நட்பு பாராட்டி இணக்கமாக நடந்து கொண்டனர். அதே நேரம், தாழ்த்தப்பட்ட சாதியினர் பகைவர்களாக நடந்து கொண்டனர். பெரும்பாலான புலிப்போராளிகள் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இந்தத் தகவல், யாழ் நகரை கைப்பற்றும் போரில் ஈடுபட்ட மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன எழுதிய "நந்திக்கடல் நோக்கிய பாதை" எனும் நூலில் எழுதப் பட்டுள்ளது.

1995 ம் ஆண்டு, அதற்கு முன்பு பல வருடங்களாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்த யாழ் குடாநாட்டை கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா இராணுவம் படையெடுத்தது. பலாலி முகாமில் இருந்து வெளியேறிய இராணுவம் புலிகளின் எதிர்த் தாக்குதல்களை சமாளித்து, உரும்பிராய், கோண்டாவில் வழியாக யாழ் நகரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. "ஒப்பெறேஷன் ரிவிரெச" எனப் பெயரிடப்பட்ட போர் நடவடிக்கை உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது.

அப்போது புலிகள், யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதியான வலிகாமம் பிரதேசத்திலிருந்த மக்கள் அனைவரையும் வெளியேறி, குடாநாட்டின் கிழக்கே இருந்த புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்லுமாறு உத்தரவிட்டனர். அதற்கமையை 95% மக்கள் வெளியேறி விட்டனர். ஆனால், 5% மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டனர். அவர்கள் கோயில்கள், பாடசாலைகளில் தஞ்சம் புகுந்தனர். அவ்வாறு இடம்பெயர்ந்த அகதிகளுடனான தனது அனுபவம் பற்றி கமால் குணரட்ன இந்த நூலில் பின்வருமாறு எழுதி இருக்கிறார்:

//யாழ் நகர் சென். பற்றிக்ஸ் கல்லூரி இடம்பெயர்ந்தோர் முகாமாக இருந்தது. அங்கு தங்கியிருந்த சுமார் ஐநூறு பேர் மத்தியில் சாதிய பாகுபாடுகள் எழுந்தன. உயர்சாதி வெள்ளாளர்கள் தாழ்ந்த சாதியினராக கருதப்பட்ட கள்ளிறக்குவோர், மீனவர்கள், துணி துவைப்போர், முடி திருத்துவோர், சுத்திகரிப்போர் போன்றோருடன் ஒன்றாக சேர்ந்து சாப்பிட மறுத்தனர். அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து வீடியோவில் படம் பார்க்க கூட விரும்பாத அளவிற்கு தீவிரமாக இருந்தனர்!

இந்தப் பிரச்சினை எனது கவனத்திற்கு கொண்டுவரப் பட்ட நேரம் "நாசமாகப் போங்கள்!" என்று சொல்லத் தூண்டப் பட்டேன். இருப்பினும், உயர்சாதியினர் எமது நடவடிக்கைகளை பாராட்டி, எம்முடன் இணக்கமாக நடந்து கொண்ட படியால், கலாச்சார வித்தியாசங்களுக்கு மதிப்பளித்து இந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்க முடிவெடுத்தேன்.   தாழ்ந்த சாதியினராக கருதப் பட்டவர்களில் பெரும்பான்மையினர் எம்முடன் வெளிப்படையாகவே எதிரிகளாக நடந்து கொண்டனர். பெரும்பாலான தீவிரவாதிகள் (புலிப் போராளிகள்) அந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தமை ஒரு காரணமாக இருக்கலாம். அதனால், ஒரு தற்காலிக தீர்வாக, உயர்சாதியினரையும், தாழ்ந்த சாதியினரையும்  வெவ்வேறு இடங்களில் தனித்தனியாகப் பிரித்து வைத்தோம்.//

- மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன (Road to Nandikadal, Page 366)


பிராமண புரோகித சமஸ்கிருத கல்யாண மந்திரத்தில்

பிராமண புரோகித சமஸ்கிருத கல்யாண மந்திரத்தில் ஆபாசமில்லை, பெண்ணை காத்தவர்கள் என்ற பொருளில் தான் சோமன், காந்தர்வன் , அக்னி அதன் பின் அந்த கணவர் பொறுப்பு ஏற்கிறார் என்று சொல்பவர்களின் கவனத்திற்கு.. சரி, அப்படி என்றால் அந்த கடவுள்களின் வரிசையில் கணவன் ஏன் பட்டியலிடப்பட்டார்? சரி, பதி என்றால் காவலன் என்றால், அப்போது அந்த பட்டியலில் ஏன் இந்தப் பெண்ணை ஏறத்தாழ இருபத்தைந்து வருடங்கள் பாதுகாத்து, வளர்த்து, காத்த அப்பெண்ணின் பொற்றோர் வரவில்லை? பெற்றவர்கள் பெண்ணைக் காப்பதே இல்லையா? ஆபாச சமஸ்கிருத மந்திரங்களை மறைத்து, திரித்து, நியாயப்படுத்தும் கயமையை அறிந்து கொண்டால் போதும் !!!!

Lockup death நாயகன்..

Lockup death நாயகன்..



பல்பொடி மட்டுமே கொடுத்த பத்துவருச ஆட்சியாளன்..
சென்னை வெள்ளத்தின் போது நிவாரண பணியாக "சின்னவீடு" படம் பார்த்த சீர்திருத்த செம்மல்..
பொருளாதார இடஒதுக்கீட்டின் முன்னோடி..
அரசு நிலத்தை அம்பிகா-ராதாவிற்கு பட்டா போட்டு கொடுத்த பாரிவள்ளல்..
வெண்ணிற ஆடை நிர்மலாவுக்காக சட்ட மேலவையை நிர்மூலமாக்கியவன்..
கட்சி தாவலை தடுக்க தொண்டர்களை பச்சை குத்த சொன்ன சனநாயகவாதி..
பாரிவேந்தர்,ஜெப்பியார்,உடையார்,பழக்கடையார்,முனுஆதி போன்ற பல அகிம்சாவாதிகளை கல்வித்தந்தையாக்கிய இதயதெய்வம்..
விவசாயிகள்,மாணவர்கள்,மீனவர்கள்,தொழிலாளர்கள் புரட்சி செய்தால் அன்போடு துப்பாக்கிசூடு நடத்திய புரட்சிதலைவன்..


Tasmac தமிழக மக்களுக்கு 1983 ல் அறிமுகம் செய்த ஆசான்

வேலூர் vit முதல் காஞ்சிபுரம் ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ் வரை அவர் கட்சிக்காரர்களுக்கு தமிழ்நாட்டை தாரை வார்த்து கொடுத்தவர் அதனாலதான் வள்ளல் என்று பெயர் எடுத்தவர்

நான் போட்ட கையெழுத்து என்னுடையது இல்லை என்றும். எல்லோரும் கத்தி வைத்துக்கொள்ளுங்கள் என்றும் உளறியவர் தான்

ராதா மற்றும் அம்பிகா தவிர ,

உடையாருக்கு இராமச்சந்திரா மருத்துவ மனை ஆரம்பிக்க நூறு குடிசைகளை அரசு அதிகாரிகளே காலி செய்த அலங்கோலம் அப்போதும்

தினத்தந்தியில் வராமல் பரவிய செய்தி,


மக்களிடம் கொள்ளையடித்த லஞ்சபணத்தை இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே சுவிஸ்
வங்கியில் பண்ரொட்டி மூலம் பதுக்கி வைத்த முதல் அரசியல் வாதி இந்த
மூதேவி தான்.


திராவிட முகமூடி போட்ட ஆரிய (பார்பன) ஒற்றன் வளர்த்துவிட்ட இயக்கத்தையே உடைத்து ஆரியத்துக்கு சேவகம் செய்த அய்யோக்கியன் டெல்லி பட்டனத்தின் தயவால் 10 வருடம் தொடர்ந்து ஆட்சி செய்தாலும் திராவிடத்துக்கு எதிராக தாக்கு பிடிக்க முடியாமல் அற்ப ஆயுளில் அழிந்தவன்

மேல்மருவத்தூர் அம்மா வை கள்ள நோட்டு மாற்றியதில் அவனை காப்பாற்றியது இந்த பொம்பளச் செம்மல் தான்.

கர்மவீரர் காமராஜர் அண்றேசொண்ணார் கூத்தாடிகிட்ட நாட்டை கொடுத்தால் அவண் கூத்தியாகிட்ட நாட்டை கொடுப்பாண் அப்படி கூத்தியாவிடம் மாட்டிய நாம் இண்று சிரழிந்து சிண்ணாபிண்ணமாகி கொண்டிருக்கிறோம்

டுக்கைக்கு வரலன்னு கட்டினவன ராமாவரம் தோட்டத்தில் பைத்தியமாகும் வரை கட்டிப்போட்டு அடிச்ச புள்ள பெத்துகுடுக்க திரானியில்லாத காமகொடூரன்

பெரியார் ஏன் 72 வயதில் திருமணம் செய்தார்?

பெரியார் ஏன் 72 வயதில் திருமணம் செய்தார்?
தெரியாத தமிழ் மக்களிற்கு இந்த பதிவு சமர்ப்பணம்!
1948ஆம் ஆண்டு பெரும் செல்வந்தரான அந்த கிழவனுக்கு வயது 72. முதுமைக்கே உண்டான நோய்கள் ஒருபுறம், தன் போராடி வரும் மக்களின் மேம்பாட்டு பற்றிய சிந்தனை ஒருபுறம், அதற்காக உருவாக்க பட்ட கழகத்தின் எதிர்காலம் பற்றிய கவலை ஒருபுறம், தனது மரணத்திற்கு பின் சொத்துக்களை அனுபவிக்க காத்து கிடக்கும் கூட்டம் மறுபுறம் என அவரின் சிந்தனைகள் படபடத்து கொண்டிருக்கிறது.
மருத்துவ வசதிகள் இல்லாத அந்த கால கட்டத்தில் மருத்துவரோ ஜாடையாக உடலை கவனித்து கொள்ள கூறுவதை அந்த கிழவனால் ஊகித்து கொள்ள முடிகிறது. முதலில் தன் சொத்துக்களை மக்களுக்கு அதாவது கழகத்திற்கு எழுதி வைத்து விட தீர்மானிக்கிறார். தனது சட்ட ஆலோசகர்கள் வந்துவிட்டார்கள். தீராத வயிற்று வலி, நிற்காத சிறுநீர் என வேதனைகளை புறம்தள்ளி விட்டு தொடங்குகிறார்.
எனது சொத்துக்கள் பல கோடிகள் உள்ளது. அதை வைத்து என்னால் உயிரை நீட்டித்து கொள்ளவும் முடியாது. நாளை நான் கண் விழிப்பேனா என்றால் அதை என் மருத்துவர் தான் சொல்ல வேண்டும். ஆதலால் என் சொத்துக்களை கழகத்திற்கு எழுதி வைக்க முடிவு செய்து விட்டேன். அதற்கு தேவையான ஆவணங்களை தயாரித்து தாருங்கள். எங்கு கையொப்பம் இட வேண்டுமோ அங்கே கையொப்பம் இடுகிறேன். இதை உடனடியாக செய்தாக வேண்டும் என்று தன் வயிற்றில் கையை வைத்து தன் வலியை கட்டுபடுத்த முயன்று கொண்டே கட்டளை இடுகிறார் அந்த கிழவர்.
சட்டச் சிக்கல்கள்:
கிழவனின் உடல்நிலையை அறிந்த சட்ட ஆலோசகர்களோ தயக்கத்துடன், ஐயா! உங்கள் சொத்துக்கள் சட்டபடி உங்கள் வாரிசுகளுக்கே போகும். அதை நீங்கள் மாற்றி வேறு ஒருவருக்கு எழுதவேண்டுமானால் அதற்கு உங்கள் வாரிசின் சம்மதமும் கையொப்பமும் வேண்டும் என்ற சட்ட சரத்தை கூறுகிறார்கள்.
இளம் வயதில் தன் மனைவியை பறிகொடுத்த அந்த கிழவன், இறந்து பிறந்த குழந்தைகள் என தற்சமயம் வாரிசுகள் யாரும் இல்லை அவருக்கு. ஆதலால் தனது சொத்துக்கள் தன் சகோதரர் குடும்பத்தினருக்கு தான் சேரும் என்றனர் சட்ட ஆலோசகர்கள். உடனே தன் சகோதரரை நாடுகிறார் அவர். சகோதரரோ சொத்துக்களை கழகத்திற்கு எழுதி வைக்க உடன்படவில்லை.
யாருக்கு தான் அன்றைய கால மதிப்பில் பல கோடிகளை தானம் செய்ய மனம் வரும்.
மீண்டும் சட்ட ஆலோசகர்கள் கூட்டப்படுகிறார்கள். மாற்று வழிகளை ஆராய்கிறார்கள்.
திருமணமே தீர்வு:
72 வயது முதியவருக்கு இருந்த ஒரே வழி ஒரு வாரிசை உருவாக்க வேண்டும்! எப்படி என்பது தான் சிக்கல். குழந்தைகளையோ இல்லை பெரியவர்களையோ தத்து எடுத்து வாரிசு ஆக்க சட்டம் அனுமதிக்க வில்லை. அப்படியானால் ஒரே வழி திருமணம் மட்டுமே!
முடியாது என்கிறார் அவர்!. சரி திருமணம் தான் வழி என்றால் எப்படி 70 வயது முதியவரை ஒருவர் திருமணம் செய்து கொள்வர்?
அன்றைய காலத்தில் பெண்களுக்குகான திருமண வயதோ 13. எப்படி சாத்தியம். முடியாது என்ற தீர்க்கமான முடிவை எடுக்கிறார் அந்த முதியவர்.
இதை முவதுமாக பார்த்துக் கொண்டிருந்த அந்த முதியவரின் 32 வயது திருமணமாகாத பணிப்பெண் முன் வந்தார்.
சட்டத்திற்காக தானே திருமணம்:
சட்டத்திற்காக தானே திருமணம். எப்படியும் நான் இந்த முதியவருடன் முழு நேரமும் இருந்து பணியாற்றி வருகிறேன். முதியவரின் உடல்நிலை கருதியும் அவரின் நல்ல நோக்கத்திற்காகவும் இதை நானே செய்கிறேன் என்கிறார்.
சட்ட வல்லுநர்களோ இதை விட்டால் வழி இல்லை என்கிறார்கள். உடன் இருப்பவர்களில் சிலருக்கு இதில் உடன்பாடு இல்லை. ஆனால் தனது சொத்துக்கள் குடும்பத்தினருக்கு போவதில் உடன்பாடு இல்லை. உடல்நிலையோ அவர் கையில் இல்லை.
தீர்க்கமான சிந்தனைக்கு பின் இசைகிறார். 1949ஆம் ஆண்டுஏப்ரல் திங்கள் 9ஆம் நாள் அந்த திருமணம் நடக்கிறது. உடன்பாடு இல்லாதவர்கள் விலகி செல்கிறார்கள். ஆனால் தனது கோடிக்கணக்கான சொத்துக்களை தன் சமுதாயத்திற்காக எழுதி வைத்த நிம்மதியோடு தன் வயிற்றில் உண்டாகும் வலியை மறந்து பெருமூச்சு விடுகிறார் அந்த கிழவர்.
இவர் தாம் பெரியார்.

சதிக்கல், மாசதிக்கல், மாஸ்திக்கல்


வால்மீகி இராமாயணத்தில் இராவணனுடைய தாய் வேதவதி தன் கணவர் குஷ்தவகா மாண்டதும் சிதையில் தானும் விழுந்து உயிர்விடுகிறாள்.
மகாபாரதத்தில் வாசுதேவன் என்பவர், இறந்ததும் தேவகி, சுபத்ரா, ரோகிணி, மதுரா. ஆகியோரும், கிருஷ்ணன் இறந்தபோது அவர் மனைவியர் ருக்மிணி, காந்தாரி, கைபியா, ஹேமாவதி, ஜாம்பவதி ஆகியோர் நெருப்பில் விழுந்து வீர சுவர்க்கம் அடைந்தனர் என்று கூறப்படுகிறது.
சங்க இலக்கியத்தில் பூதப்பாண்டியன் இறந்ததும் மனைவி பெருங்கோப்பெண்டு சிதையில் விழுந்து தற்கொலை செய்ததைப் புறநானூற்றின் 246-ஆம் பாடல் பகிர்கிறது.
சோழன் பல்தடக்கைப் பெருவிறற்கிள்ளி மாண்டபோதும், சேரன் குடக்கோ நெடுஞ் சேரலாதன் மாண்டபோதும் அவர்களின் துணைவியர் கணவர்தம் மார்பைத் தழுவியவாறே உயிர் விட்டனர் என்பதைச் சங்கப்பாடல் புறநானூறு சுட்டிக்காட்டுகிறது.
.... பெண்டிரும்
பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
மார்பகம் பொருந்தி யாங்கமைந்தனரே!
என்கிறது புறநானூற்றின் 62-ஆம் பாடல்.
கொடும்பாளூர் குறுநிலவேந்தரான வீரசோழ இளங்கோவேளார் மாண்டபோது அவன் மனைவி கங்கமாதேவி கோயிலில் விளக்கு வைக்க ஏற்பாடு செய்துவிட்டுத் தான் பலியானதைச் சங்க இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. (கல்வெட்டுக் கலை நூல் சொ. சாந்தலிங்கம் பொ. இராஜேந் திரன் பக்கம் 159)
சோழ மண்டலத்தை ஆண்டு வந்த சுந்தர சோழன் மாண்டபோது அவனது காதல் மனைவி வானவன் மாதேவி சிதையில் விழுந்து உடன்கட்டை ஏறினாள். (தெ.இ. கல்வெட்டு II) இவ்வாறு அவள் மாண்டபோது அவளது மகள் குந்தவை நாச்சியார் தஞ்சைப் பெரிய கோவிலில் வானவன் மாதேவிக்குச் சிலை எடுப்பித்து அணி கலன்களை வழங்கியதாகச் சோழர் கல்வெட்டு சொல்கிறது.
இவ்வாறு மாண்டோரின் நினைவாக நினைவுக் கற்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவைகள் சதிக்கல், மாசதிக்கல், மாஸ்திக்கல் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
இதுபோலப் பல இடங்களில் பெண்கள் தீயில் புகுந்து உயிர் நீத்துச் சதியானதால் அவர் களுக்காக எடுக்கப்பட்ட கோயில்கள் தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் என்று வழிபடப்பட்டு வருகின்றன.
ஏன்டா நாராவாய் நாராயணா
இந்தக் காலங்களில் இஸ்லாம் என்ற ஒரு மதம் தோன்றவேயில்லை என்பதை அனைவரும் அறிவர்.
எச்சப் பொறுக்கி பயலுகளுக்கு எதையாவது சொல்லி பிழைப்பு நடத்தணும்.

ஏன் உங்களுக்குப் போட்டி போட்டு வெல்ல வலிக்கிறது

கேள்வி: இட ஒதுக்கீட்டின் தேவை புரிகிறது. ஆனால், எங்கள் முன்னோர் செய்த தவறுக்கு எங்களுக்குத் தண்டனையா?
பதில்:
என்னா man!
பாவம், புண்ணியம், ஏழு பிறவி, கர்மா
எல்லாம் நீங்க கண்டுபிடிச்ச Concept தான man!
அப்படிப் பார்த்தால் உங்கள் முன்னோர் செய்ததற்கு நீங்கள் தானே அனுபவிக்க வேண்டும்!
சூத்திரனும் பஞ்சமனும் படித்தாலே அவன் நாக்கை வெட்டு, காதில் ஈயத்தை ஊற்று என்று அல்லவா சட்டம் எழுதி வைத்திருக்கிறீர்கள்?
இப்போது அது போலவா சொல்கிறோம்!
நீங்களும் போட்டி போட்டு படியுங்கள், வேலைகளைப் பெறுங்கள் என்று தானே சொல்கிறோம்!
இது எப்படி தண்டனை ஆகும்?
ஆண்கள் ஆண்கள் பிரிவிலும்
பெண்கள் பெண்கள் பிரிவிலும்
போட்டியிடுவது போல,
SC/ST/BC/MBC அவங்க அவங்க பிரிவில் போட்டி இடட்டும். அங்கே யார் வெல்கிறார்கள் என்பது உங்களுக்குத் தேவை இல்லாத கவலை.
3% மக்களுக்கு 31% பொதுப்பிரிவு இடங்கள் போதாதா?
நீங்கள் தான் மிகவும் திறமையானவர்கள் ஆயிற்றே!
பொதுப்போட்டியில் எல்லாருடனும் மோதி வென்று 31% இடங்களையும் எடுத்துக் கொள்ளுங்களேன்!
ஏன் உங்களுக்குப் போட்டி போட்டு வெல்ல வலிக்கிறது?

கிணறு வெட்டியவர்... கிணற்றில்தண்ணீர் எடுக்கக்கூடாது

அர்த்தமுள்ள இந்து மதம்...

கிணறு வெட்டியவர்... கிணற்றில்தண்ணீர் எடுக்கக்கூடாது...

ரோடு போட்டவர் அதில் நடக்கக்கூடாது...
ஊருக்கெல்லாம் செருப்பு செய்து கொடுப்பவர் செருப்பணிந்து செல்லக்கூடாது..

கோவில், கருவறை, சிலை செய்பவர்... கருவறைக்குள் வரக்கூடாது..

அக்கிரகாரத்தில், நாய், கழுதை போகலாம்... மனிதன் போகக்கூடாது..

சூத்திரன் தூக்கினால், தீட்டில்லை.. தொட்டால் தீட்டு...

.... இன்னும் பல...

யஜுர் வேதத்தில் ஆரியப் பார்ப்பனர்களின் கூத்து

யஜுர் வேதத்தில் ஆரியப் பார்ப்பனர்களின் கூத்து
**********************************************
(பசுவதைக்காக நீலிக் கண்ணீர் விடும் சங்கராச்சாரியார்கள் இந்து மத சாஸ்திரங் களில் பசுவைக் கொன்று யாகம் நடத்துவது குறித்து அலங்காரமாகப் பேசப்படுகிறதே - இதற்கு என்ன பதில்) (அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2காண்டம் 6)
#
பொருள்: யாகத்திற்கு கொண்டு வந்த பசு மரணத்தைக் காண்கிறது; மரணத்தினின்றும் தேவர்களைக் காண்கிறது. தேவர்கள் பசுவைப் பார்த்து: நாங்கள் உன்னை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லுகின்றோம் என்பார்கள். பசு கொல்லப்பட்டபிறகு அதன் சதையை அறுத்தெடுக்க வேண்டிய முறை மந்திரமாவது:-
#
அந்த ரே வோஷ் மாணம் வாரயத்வா திதி பசுஷ் வேவதத் ப்ராணன் தாதி ஸ்யேன மாஸ்ய வக்ஷ க்ருணுதாத் ப்ரசஸா பாஹு சலா தோஷ்ணீ கஸ்யபேவாம் ஸாச்சித் ரேஸ்ரோணீ கவவேஷாரூஸ்ரேக பர் ணாஷ்டீ வந்தாஷட்விம் சதி ரஸ்ய வங்கா யஸ்தா அனுஷ்ட யோச்யா வயதாத்; காத்ரம் காத்ரமஸ் யானூனம்.
(அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)
#
பொருள்: மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பின் கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலிருந்து அம்பு வடிவமாக இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். தோளிலிருந்து ஆமையின் வடிவமாக இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தந்த அவயவங் களிலிருந்து இருபத்தாறு துண்டுகளை அறுத்தெடுத்த பின் எல்லாவற்றையும் அறுத்தெடுத்துக் கொள்க.
#
பசுவின் மல மூத்திரம் முதலியவை தரையில் புதைக்கப்பட வேண்டும். அதற் குப் பிரமாணம்:-
உத்ய கோஹம் பார்த்திவம் (அய்த ரேய பஞ்சி 2 கா6)
#
பசுவைக் கொல்லும் போது ஹோதா என்னும் புரோகிதன் சொல்ல வேண்டியது:-
அத்ரிகோ சமீத்வம் ஸுசமீ சமீத்வம்
#
சமீத்வ மத்ரிகா அத்ரிகா அத்ரகா உர் இதித்ரிர்ப் ரூயாத்
(அய்த பஞ்சிகா 5 காண்டம் 7)
பொருள்: நன்றாக அடித்துக் கொல், கொல், கொல். அடிப்பதை நிறுத்தாதே. அஸ்நாரக்ஷ ஸம்ஸ்ருஜதாத் இத்யாஹ (ஜத... காண்டம் 7)
#
உதிரத்தை (இரத்தம்) ராட்சதருக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்லு கிறார். அதன்பின் வபாஹோமம் செய் யச் சொல் லுகிற மந்திரம்:-
தஸ்ய வபாமுத்கித்யாஹரந்தி தாமத் வர்யு: ஸ்ருவேணாபிதா ரயன்னாஹ
(ஜத... கண்டம் 12)
#
பொருள்: பசுவின் வபா என்னும் கொழுப்பை எடுத்த அத்வயு என்பவன் ஸ்ருவம் என்னும் பாத்திரத்தில் வைக் கின்றான்.
ஸர்வமாயுரேதிய ஏவம் வேத பொருள்: எவனொருவன் இதை இவ்வாறு அறிகின்றானோ (இந்த யாகத்தை நடத்துகிறவன்) அவன் நெடு நாள்கள் உயிரோடிருப்பன்.
#
வபாயாமா ஹுதாயாம் ஸ்வரக்கோ லோக: ப்ராக்யாயத. பொருள்: கொழுப்பை சேமித்தால் ஸ்வர்க்கலோகம் கிடைக்கும்.
#
ஸோக்நேர் தேவயோன்யாம் ஆஹு திப்ய: ஸம்பூய ஹிரண்ய சரீர உனர்தவ: ஸ்வர்க்கம் லோகமேதி
பொருள்: அக்கினியில் தேவயோனியில் ஆஹுதி கொடுப்பதால் யாகம் செய்பவன் பொன்னாலாக்கப் பெற்ற சரீரத்தையுடை யவனாய் மேலே சுவர்க்க லோகத்தை அடையா நிற்பன்.
#
பசுவைக் கொலை செய்து அதன் சதையை முப்பத்தாறு பங்குகளாகப் பிரிக்க வேண்டும். இதை முறைப்படி உணர்ந் தவன் சுவர்க்கத்தை அடைகின்றான். இவ்வித யாகமானது ரிஷிகளால் கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் இறந்து போனபின் தேவர்கள் கீழிறங்கி வந்து இந்த யாகவிதியை உபதேசித்தார்கள் என்று கீழ்க்குறித்த மந்திரம் சொல்லுகிறது.
#
தத் ஸ்வர்க்காஸ்ச லோகானாப்னு வந்தி ப்ராணேஷு சைவதத் ஸ்வர்க்கேஷு ப்ராதி திஷ்டம் தோயித ஏதாம் பசோர் விபக்திம் ஸ்ரௌத ரிஷிர் தேவபாகோ விதாஞ்சகார கிரிஜாய பாப்ரவ்யாயா மனு ஷ்ய: ப்ரோவாச (ஜத.. பஞ்சிகா 7 காண்டம் 1)
12-04-2014 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 2.


காமராசரை கொலை செய்ய முயன்ற கூட்டத்தின் ஆதரவாளர்கள்

காமராசரை கொலை செய்ய முயன்ற கூட்டத்தின் ஆதரவாளர்கள் தான் இன்று காமராசரை தமிழர்கள் தோற்கடித்தார்கள் என்று புலம்பி திரிகிறது..

மின்சார விளக்குகள் தேவையில்லை - பழைய குத்துவிளக்குத்தான் இருக்கவேண்டும்

மின்சார விளக்குகள் தேவையில்லை -
பழைய குத்துவிளக்குத்தான் இருக்கவேண்டும்.
விமானம் பறக்கக்கூடாது -
கருடன்தான் பறக்கவேண்டும்.
ரயில் வண்டி கூடாது -
கட்டை வண்டிதான் சிறந்தது.
தீப்பெட்டி தேவையில்லை - சிக்கி முக்கிக் கல்தான் தேவை.
துப்பாக்கியா வேண்டாம் - வேலும் வில்லும் போதும்.
மாளிகைகள் தேவையில்லை - பர்ணகசாலைதான் வேண்டும் என்று யாரும் பேசுவதில்லை.
ஆனால், இந்தக் காலம் கெட்டுவிட்டது.
பழைய காலம்தான் நல்ல காலம் என்று பேசவோ தயங்குவதில்லை. இப்படிப் பேசலாமா? பேசுவது நாணயமா?
- பேரறிஞர் அண்ணா

நான்கு வேதங்கள் என்ன சொல்கிறது ?

Dear சூத்திராஸ் !!😍😘
"நான்கு வேதங்கள் என்ன சொல்கிறது ? "
ஒன்றைப்பற்றி ஒன்றும் தெரியாமலே , பலரும் சொல்கிறார்கள் என்பதற்காக , அதை தானும் உயர்ந்ததாக எண்ணுவதும் கூறுவதும் மக்களிடையே காணப்படுகிறது . இதற்க்கு சரியான எடுத்துக் காட்டு இந்த "வேதங்கள் உயர்ந்தது " என்ற எண்ணம் .
ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தபின் அவர்கள் வாழ்வியல் வழிபாட்டை
○ கூற புனையப்பட்டவையே வேதங்கள் ஆகும் . ரிக் , யசூர் , சாமம் , அதர்வணம் , இவை நான்குமே வேதங்கள் எனப்படுகிறது .
ரிக் வேதம்: ஆரியர்கள் தாங்கள் வணங்கிய காற்று , நீர் , இடி , மழை போன்ற இயற்க்கை சக்திகளை போற்றிப் பாடிய பாடல்கள் அடங்கியது ,
சாமவேதம் : ரிக் வேதத்தை இசையுடன் பாட ஏற்படுத்தப் பட்டதே சாமவேதம்.
யசூர் : தாங்கள் வணங்கிய இயற்க்கை சக்திகளுக்கு சடங்கு செய்யும் முறைகளை பின்னாளில் உண்டாக்கினர் . யாகங்கள் செய்யும் முறைகளை உண்டாக்கினர் . இம்முறைகளை விளக்குவதே யசூர் வேதம் .
அதர்வண வேதம் : ஆரியர்களது முற்கால வாழ்க்கையையும் , பிராத்தனைகளையும் உள்ளடக்கியது அதர்வண வேதம் .
ஆக இது ஆரியர்களின் வாழ்வியல் வழிபாடு என்பதைத் தவிர வேறு என்ன சிறப்பு இருக்கிறது . இதனால் மற்றவர்களுக்கு என்ன பயன் ? என்ன லாபம் ? ஏதாவது சிக்கலை தீர்க்க இவை பயன்படப் போகின்றனவா ? தீர்த்ததாக ஆதாரம் உண்டா ?
உண்மை இப்படி இருக்க வேதம் என்றால் ஏதோ இந்த உலகையே வாழவைக்கும் ஆதாரமாகவும் . அதில் இல்லாததே இல்லை என்பது போலவும் போற்றிப் புகழுகின்றனர்.
வள்ளுவன் எழுதிய திருக்குறளுக்கு ஈடாகுமா இவைகள் ? திருக்குறள் தான் வாழ்வியல் நெறிகளை கற்றுத்தரும் உயர்ந்த நூல், அனைத்து மக்களுக்கும் பயன்படும் நூல் . நியாயப்படி தமிழர்கள் இதைத்தான் வேதமாக கருத வேண்டும் .

Thursday, January 24, 2019

மதத்துக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் அருமை BC/MBC/OBC மக்களே.. உங்களின் கவனத்துக்கு..

மதத்துக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் அருமை BC/MBC/OBC மக்களே.. உங்களின் கவனத்துக்கு..
பிராமணர்களுக்கு வெண்ணையும், பெரும்பான்மை இந்துக்களான BC/MBC/OBC சாதிகளுக்கு சுண்ணாம்பையும் பூசும் பிஜேபி RSS அரசு..
ஒருபக்கம், ஏற்கனவே 70% இடங்களை மத்திய கல்வி & வேலைவாய்ப்புகளில் ஆக்கிரமித்துள்ள, மக்கள்தொகையில் வெறும் 5% சதமே உள்ள பிராமணர் ஒருசில முற்பட்ட சாதிகளுக்கு மேலும் 10% இடஒதுக்கீட்டை கொடுத்துவிட்டு, மறுபக்கம், மக்கள் தொகையில் 55% உள்ள ஓபிசி (BC+MBC) மக்களுக்கு உள்ள 27% சதவீத ஒதுக்கீட்டை, நீர்த்துப்போக செய்து வருகிறது மத்திய பிஜேபி RSS ஹிந்துத்துவா அரசு..
மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு நீக்கி பலநூறு பிசி/எம்பிசி மருத்துவர்களின் கனவில் மண்ணை அள்ளிப் போட்டது மத்திய ஆர்எஸ்எஸ் பிஜேபி இந்துத்துவ ஆட்சி..
அடுத்து, ஓபிசி கிரீமி லேயர் வருமான கணக்கெடுப்பில் மாத சம்பளத்தையும் விவசாய வருமானத்தையும் சேர்க்க மத்திய ஆர்எஸ்எஸ் பிஜேபி இந்துத்வா ஆட்சி ஆணை.. இதனால் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான லட்சம் பிற்படுத்தப்பட்ட மிகப்பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் இளைஞர்களும் கிரீமிலேயர் என்னும் வரம்பில் வந்துவிடுவார்கள்.. அவர்களுக்கு ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்காது.. இவர்களின் இடங்களை அனைத்தும் பார்ப்பனர் உள்ளிட்ட மேல்சாதியினர் ஆக்கிரமித்துக் கொள்வார்கள்..
இப்போது, பேராசிரியர் பணிக்கு புது ஆப்பு... காலியிடங்களை கணக்கிடும் முறையை பிஜேபி அரசு மாற்றி அமைத்தால், BC/MBC/OBC மற்றும் SC/ST களுக்கு கிடைக்கவேண்டிய பணியிடங்கள் குறைப்பு.. அந்த இடங்களை முன்னேறிய வகுப்புகளுக்கு ஒதுக்கீடு...
இப்படி ஓபிசி இட ஒதுக்கீட்டை சரியான முறையில் அமல்படுத்தாமல், பல்லாயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட இளைஞர்களின் எதிர்காலத்தில் மண்ணள்ளிப் போட்டுவிட்டு, மறுபக்கம் பிராமணர் ஒருசில முற்பட்ட சாதிகளுக்கு கூடுதலாக மேலும் 10% இடஒதுக்கீட்டை மத்திய ஆர் எஸ் எஸ் பிஜேபி இந்துத்துவா ஆட்சி..
ஏற்கனவே மத்திய அரசின் கல்வி & வேலைவாய்ப்புகளிலும் OBC (BC&MBC)க்கள் வெறும் 17% சதம் தான் இருக்கிறார்கள்.. இப்பொழுது அதற்கும் வேட்டு..
அனைவரும் இந்துக்கள்.. நாம் ஹிந்துக்கள் என பிற்படுத்தப்பட்ட & மிக பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு மதவெறியை ஊட்டி, மத கலவரம் செய்ய அழைக்கும் பிஜேபி RSS கும்பல், கல்வி & வேலைவாய்ப்பு என வந்தால், BC/MBC/OBC சமூக இந்துக்களுக்கு வெறும் நாமத்தை பூசிவிட்டு, பிராமணர் உள்ளிட்ட சில முன்னேறிய சாதிகளுக்கு மட்டும் வாய்ப்பளிகிறது.. இந்து.. இந்து.. என்று வெறியேற்றி, BC MBC SC ST பிரிவு மக்களின் கையில் சபரிமலை, ராமர் கோயில் போன்ற மத பூசல்களை கொடுத்துவிட்டு, கல்வி & வேலைவாய்ப்பு முழுதும் அவாக்களே அபகரித்துக் கொள்ள வழிவகை செய்கிறது RSS ஹிந்துத்துவா பிஜேபி ஆட்சி.

Thursday, January 17, 2019

பார்ப்பனர்களின் கையில் அகப்பட்ட தயிர் சோத்தைப் போல வதைபடும் இந்திய ஊடகங்களின் ethics

"ஏழைங்க, மிடில் க்ளாஸ்ட்ட புடுங்கி இப்படி பணக்காரங்க கிட்ட கொடுக்கிறியே... நீயெல்லாம் உருப்படுவியா?" என்கிற தொனியில் அந்த பாஜககாரர் மோடியிடம் லைவ் நிகழ்ச்சியில் கேள்வி கேட்டுவிட்டார். பதில் சொல்ல முடியாமல், "ச்சலியே புடுச்சேரி கோ வணக்கம்," என நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஓடிவிட்டார் மோடி. இது நாமெல்லாம் காணொளியில் கண்ட உண்மை சம்பவம்.
இச்சம்பவத்தை, "மோடியை ஓட விட்ட பாண்டிச்சேரி பாஜககாரர்," என ஏதாவது செய்தித்தாளில் செய்தி பார்த்தீர்களா?
ஆனால் துபாயில் ராகுல்காந்தியை திணறடித்த சிறுமி என்கிற செய்தியை இவர்களாகவே உருவாக்கி, நடக்காத ஒரு செய்திக்கு ஏதோ ஒரு சிறுமியின் புகைப்படம் ஒன்றை எடுத்து மார்ஃப் செய்து வெளியிட்டிருக்கிறது தினமலர், தினகரன் உள்ளிட்ட பத்திரிக்கைகள். இதை பொய் என பிபிசி செய்திவெளியிட்டவுடன் தினகரன் மட்டும் மன்னிப்பு வெளிட்டுள்ளது.
மோடியை மாற்றினாலோ, பாஜகவை மாற்றினாலோ நிரந்தரமாக எதுவும் மாறாது. பார்ப்பனர்களின் கையில் அகப்பட்ட தயிர் சோத்தைப் போல வதைபடும் இந்திய ஊடகங்களின் ethics சரிசெய்யப்பட்டால் மட்டும்தான் உண்மையான ஜனநாயகத்தை உருவாக்க முடியும். இல்லையென்றால் எல்லாமே கேலிக்கூத்துதான்.

Wednesday, January 16, 2019

தமிழர்களே... பார்ப்பனர்கள் உங்களைப் போல முட்டாள்கள் அல்ல

இந்த தடவையும் ஸ்டாலின் அவ்ளோதானா? இந்த வாட்டியும் திமுக வேடிக்கை பாக்க வேண்டியதான் போல... என்றெல்லாம் நக்கல் அடிக்கும் மூளைச் சலவை செய்யப்பட்ட தமிழர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கும். ஏதோ திமுக ஆட்சிக்கு வருவது திமுகவுக்கு மட்டுமே நன்மை பயக்கும் ஒன்று என்கிற கருத்து ஒழுங்காக சுத்தம் செய்யப்படாத பொதுக் கழிப்பிடத்தைப் போல அவர்கள் மூளையில் செருகி வைக்கப்பட்டிருக்கிறது. ஏதோ ஜெயலலிதா இருந்தபோது இதைச் சொன்னால் கூட பரவாயில்லை. ஆனால் எடப்பாடி காலத்திலும் எப்படி இவர்களால் சொல்ல முடிகிறது? நீட் மூலம் நம் குழந்தைகளின் படிப்பு முற்றிலும் போய்விட்டது. இன்று இட ஒதுக்கீட்டையும் கண்முன் களவாடிக் கொண்டுவிட்டார்கள். அடுத்து கட்டாய இந்தித் திணிப்பைக் கொண்டு வருகிறார்கள்.
வரலாற்றில் எப்போதாவது இப்படி தங்களுக்கு முழுச்சாதகமாக அமையும் அரசை வைத்து தங்கள் இனத்துக்கு என்னவெல்லாம் நல்லது செய்துகொள்ள முடியுமோ, திராவிட இனத்துக்கு என்னவெல்லாம் தீங்கு செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டுவிட்டார்கள். முன்காலத்தில் திராவிடர்களுக்கும் இப்படி முழுச்சாதகமாக ஒரு அரசு அமைந்தது.


அது வி.பி.சிங் அரசு. அதை வைத்து தனது மாநிலத்தில் இருக்கும் தன் இனத்துக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் அடுத்தடுத்து பல நன்மைகளைச் செய்துகொடுத்தார் கலைஞர்.கருணாநிதி.
ஆனால் நமக்கோ நன்றி என்பது துளியும் இல்லை. எவனோ கொளுப்பெடுத்து எவனையோ கொல்லப்போக, நாமோ கலைஞரையும் ஆட்சிக்கு வரவிடவில்லை. வி.பி.சிங்கையும் ஆட்சிக்கு வரவிடவில்லை.
ஆனால் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் தமிழர்களே... பார்ப்பனர்கள் உங்களைப் போல முட்டாள்கள் அல்ல. தங்களுக்கு நன்மை செய்யும் அரசை மீண்டும் மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்த்த என்ன்ன்ன்ன்ன வேண்டுமானாலும் செய்வார்கள். எதை வேண்டுமானாலும் ஆதரிப்பார்கள். அமித்ஷா மகனின் வருமானம் 16000 மடங்கு உயர்ந்ததே எவனாவது வாயைத் திறந்தானா? ஆனால் உதயநிதி திருவாரூரில் நிற்கப்போகிறார் என்பதை கடுமையாகப் பரப்பி நம்மையெல்லாம் அதையே பேசவைத்து ஏதோ அது ஒன்றுதான் நாட்டில் பிரச்சினை போல மடைமாற்றுவார்கள். ஆனால் அமித்ஷாவின் கொள்ளுப்பேரன் தேர்தலில் நின்றாலும் தங்கள் வேலை நடக்கும்வரை பார்ப்பனர்கள் எந்தக் கூச்சமும் இன்றி ஓட்டு குத்துவார்கள்.
ஆனால் நாமோ, cbse சிறந்தது, சமச்சீர் மட்டம் என்று திரும்பத் திரும்பச் சொன்னால் நம்புவோம். நீட் கல்வித்தரத்தை உயர்த்தும் என்றால் நம்புவோம். எட்டு லட்சம் சம்பாதிக்கும் உயர்சாதி ஏழைகள் பாவம்தானே என்றால் நம்புவோம். அதிமுக நீட் தேர்வுக்கு சொம்படிச்சா என்னப்பா, நமக்கு உதயநிதி தானே முக்கியம். தினகரன் பாஜக கதவுகளை எல்லாம் தட்டித் தட்டி சோர்ந்துபோன ஆளாக இருந்தால் என்ன, டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றினால் என்ன? எந்த வித கூச்சமும் நாச்சமும் இன்றி நாம் அவரை ஆதரிப்போம். ஏன்? ஏனென்றால் நமக்கு திமுவை பிடிக்காது. பொடனியில் அடித்ததைப் போல உண்மையைச் சொல்லும் பல திமுககாரர்களைப் பிடிக்காது. ஆஹா... எவ்வளவு அழகான நடுநிலை அரசியல்!!
என்றாவது ஒரு பார்ப்பனன் நடுநிலை அரசியல் பேசி, உட்டோப்பிய கனவு கண்டு, தூய்மைவாதம் பேசி பார்த்திருக்கிறீர்களா? வாருங்கள் வாக்கு போடாமல் இயக்க அரசியல் மட்டுமே செய்வோம் எனப் பேசி பார்த்திருக்கிறீர்களா? மாட்டவே மாட்டார்கள். உங்களை பேசவைப்பார்களே தவிர அவர்கள் பேச மாட்டார்கள். ஆயிரம் விமர்சனங்கள் ஒரு கட்சியின் மீது இருந்தாலும் தங்கள் இனத்துக்கு எந்தக் கட்சியால் அதிகபட்ச நன்மை இருக்குமோ அந்தக் கட்சிக்கு ஓட்டை குத்துவார்கள். அதுமட்டுமல்ல, அந்தக் கட்சிதான், அந்த நபர்தான் நாட்டுக்கே நல்லது, எல்லோருக்கும் நல்லது, சர்வரோக நிவாரணியே அந்தக் கட்சிதான் என சிரமம் மேற்கொண்டு பரப்பி வெற்றி அடைவார்கள். மோடி என்கிற 3% பணக்காரர்களுக்காகவும், 4% பார்ப்பனர்களுக்காகவும் மட்டுமே உழைக்கும் ஒரு அடிமையை ஒட்டுமொத்த இந்தியா தலையிலும் கட்டி வைத்தார்களே அதைப்போல!!
ஈழமாயையை கட்டமைத்து ஜெயித்தார்கள். 2ஜி எனும் கட்டுக்கதையை கட்டி ஜெயித்தார்கள். நீட்டில் ஜெயித்தார்கள். ஜி.எஸ்.டியில் ஜெயித்தார்கள். இதோ இட ஒதுக்கீட்டிலும் ஜெயித்துவிட்டார்கள். நாளை இந்தி திணிப்பிலும் ஜெயிப்பார்கள். இதிதெலாம் பெரும்சோகம் அவர்கள் நாடாளுமன்றத்தில் ஜெயிப்பது அல்ல. தமிழக மக்கள் மனங்களிலும் இதையெல்லாம் சரி என உணர வைத்து ஜெயிப்பதே பெருஞ்சோகம். அதுதான் நமக்கும், நம் குழந்தைகளுக்கும் சரிசெய்ய முடியாத பேரிழப்பை கொடுத்துவிட்டுப் போகப்போகிறது.
எதையெல்லாம் பலநூறு ஆண்டுகள் போராடிப்பெற்றோமோ அதையெல்லாம் ஐந்தாண்டுகளில் சரசரவென இழந்திருக்கிறோம். அதுவும் நம் முழு ஒத்துழைப்புடன். இது எல்லாமே காலம் காலமாக, எதெல்லாம் பார்ப்பனர்களுக்கு நல்லதோ அதுதான் நாட்டுக்கும் நல்லது, எதெல்லாம் பார்ப்பனர்களுக்கு கெட்டதோ அதெல்லாம் நாட்டுக்கும் கெட்டது என்கிற பரப்புரையை மட்டுமே மையநோக்காகக் கொண்டு இயங்கிவரும் பார்ப்பன ஊடக அமைப்பு எனும் கண்ணுக்கு தெரியாத கோயபல்ஸ் அமைப்பினால் சாத்தியப்பட்டிருக்கிறது.
பெரியார் மிகத்தெளிவாக சொல்கிறார். "வாக்கு அதிகாரத்தை பயன்படுத்த பார்பனர்களிடம் இருக்கும் தெளிவு நம் மக்களிடம் இல்லை. அதனால் சுலபமான வழி ஒன்று உண்டு. பார்ப்பனர்கள் யாரை எதிர்க்கிறார்களோ அவர்களை ஆதரியுங்கள். பார்ப்பன ஊடகங்கள் யாரை வில்லன்களாக சித்தரிக்கிறதோ அவர்களை கண்ணை மூடிக்கொண்டு ஆதரியுங்கள். இது ஒன்றுதான் வழி," என்கிறார்.
ஆனால் நமக்குள் இருக்கும் விபீடணர்களோ பார்பனர்களுடன் சேர்ந்துகொண்டல்லவா நம்மை காட்டிக்கொடுக்கிறார்கள்!!! நம் மக்களை முட்டாள்கள் ஆக்குகிறார்கள். மாடுமேய்க்க வைக்கிறேன் என்கிறான் ஒருவன். படிப்பெல்லாம் ஒன்றுமே இல்லை. தூக்கிப்போட்டு இயக்க அரசியலுக்கு வா என்கிறான் இன்னொருவன். திமுகவும், அதிமுகவும், பாஜகவும் ஒன்னுதான் சார் என்கிறான் இன்னொருவன். தாங்கள் ஆளும் மாநிலத்தில் கைரிக்‌ஷாவைக் கூட ஒழிக்க முடியாத ஒருவன் ரிக்‌ஷாவையே கிட்டத்தட்ட ஒழித்துவிட்ட தமிழ்நாட்டுக்கு பாடம் எடுக்கிறான்.
இனியும் அறிவின்மைமிக்க ஒரு பேரினமாக வாட்சப்களையும், ஆமைக் கறிக்கதைகளையும், யாருக்கும் ஓட்டுப்போடாதீர்கள் விஷத்தையும், பார்ப்பன பொய்ப்பிரச்சாரங்களையும் பருகிக்கொண்டே இருந்தோமேயென்றால் சிறுகச் சிறுக சேர்த்துவைத்ததை எல்லாம் கூட துடைத்து வழித்துவிட்டுப் போய்விடுவார்கள். அரசியல்/சமூகப் புற்றுநோயின் இறுதி ஸ்டேஜில்தான் திருந்துவேன் என்கின்றவர்களை யாரால் என்ன செய்ய முடியும்!!!
ஆனால் நேத்து கேட்டதே ஒரு குரல், "இதென்ன அநியாயமா இருக்கு," என்கிற குரல். அது ஒற்றைக் குரல் அல்ல. அது பெரியாரின் கைத்தடியில் இருந்து எழுந்த சத்தம். அண்ணாவின் பேனாவிலிருந்து எழுந்த சத்தம். மெரினாவில் இருக்கும் கலைஞரின் ஒருநொடி டில்லியில் எழுப்பிய பெருங்கோபம். அது ஒன்றுதான் ஒளிக்கீற்று. அது ஒன்றுதான் விமோசனம். அது ஒன்றுதான் விமோசனம்!

check source

Tuesday, January 15, 2019

நமக்கு கிடைத்த வள்ளுவராண்டின் வரலாறு

ஹிச்டாரிக்கல் பிகராக (வரலாற்று சித்திரம்) அதாவது ரத்தமும் சதையுமாக நிஜமாக வாழ்ந்த மனிதர் என ஒரு பிரபலம் அறியப்பட அவரது இருப்பிற்கான பிஸிகல் எவிடென்ஸ் கிடைக்கவேண்டும். உதா: அவரது சவபெட்டி, எலும்புகூடு முதலானவை
பல சமயங்களில் அத்தகைய எவிடென்ஸ் கிடைப்பது கிடையாது (உதா: ராஜராஜ சோழன்). அத்தகைய சமயங்களில்
அவரை பற்றி அவர் வாழ்ந்த காலத்தில் எழுதபட்ட நூல்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், பாடல்கள் மூலம் அவரைபற்றி அறியலாம். அவர் ஹிஸ்டாரிகல் பிகர் என்ற முடிவுக்கு வரலாம்.அவர் வாழ்ந்த காலத்து வரலாற்று ஆசிரியர்கள் அவரைபற்றிய குறிப்பு எழுதி இருப்பார்கள். உதா: அலெக்சாந்தர் காலத்து வரலார்று ஆசிரியர் காலிஸ்தனிஸ் அவரது வாழ்க்கை வரலாறு குறித்து எழுதியுள்லார். அலெக்சாந்தர் படையெடுத்து சென்ற நாடுகள் முழுக்க அவரது வரலாறு பதிவாகியுள்ளது.
வள்ளுவரை பொறுத்தவரை:
மேலே சொன்ன எந்த ஆதாரஙக்ளும் நம்மிடம் கிடையாது. நம்மிடம் இருப்பவை மிக பிற்காலத்தில் எழுதப்பட்ட வள்ளுவமாலை, வள்ளுவர் கோயில், சிலை, அவர் பற்றி நிலவும் தொன்மகதைகள் ஆகியவையே
வள்ளுவர் ஆணா,பெண்ணா, அரசரா, துறவியா, அவர் வயது என்ன, என்ன தொழில் செய்தார், எங்கே பிறந்தார் என எத்தகவலும் நம்மிடம் கிடையாது. நம்மிடம் இருப்பது அவரது திருக்குறள் எனும் நூல் மட்டுமே. அதில் அவர் தன்னை பற்றிய எக்குறிப்பையும், தன் பெயர் வள்ளூவன் என்பதையும் கூட கொடுக்கவில்லை.
திருவள்ளுவரின் உண்மையான பெயர் என்ன? வள்ளுவர் என்பது அவரது பெற்றோர் அவருக்கு வைத்த பெயரா? பட்ட பெயரா? ஜாதி பெயரா?
தெரியாது...அவர் பல்வேறு உரை ஆசிரியர்களால் பல்வேறு பெயர்களில் அழைக்கபடுகிறார், நாயனார், தேவர், மாதானுபாங்கி, பெருநாவலர் இப்படி பல பெயர்களில் அழைக்கபடுகிறார். இதில் எப்படியோ திருவள்ளுவர் எனும் பெயர் பரவி நம்மிடையே தங்கிவிட்டது. முதல்முதலாக அச்சொல் எந்த நூலில் காணப்படுகிறது, அந்நூலின் ஆசிரியர் யார் என்ற ஆய்வை செய்யவேண்டும். அதுபோல் திருக்குறள் உரை ஆசிரியர்கள் கால ஆய்வையும் செய்யவேண்டும்.
இவற்றுக்கான பிஸிகல் எவிடென்ஸ் எதுவும் நம்மிடம் இல்லை. திருக்குறள் எனும் நூல், அந்த நூல் வேறு எந்த எந்த நூல்களில் கோட் செய்ய்படுகிறது, அவற்றின் காலம் என்ன என்பதை வைத்து தோராயமாக குறள் எழுதபட்ட நூற்ராண்டை கணிக்க முடியும். அத்தகைய ஆய்வுகள் நிகழ்ந்து உள்ளன. ஆனால் வள்ளுவர்/தேவர்/நாயனார்/நான்முகன் எனும் அந்த நூலின் ஆசிரியர் பற்றி வேறு எதுவும் நமக்கு தெரியாது. நம்மிடம் இருப்பவை அவர் குறித்த தொன்மங்கள் மட்டுமே.
ஆக தொன்மங்கள், நூல் இவற்றை வைத்து மட்டுமே வள்ளுவர் நிஜமாக வாழ்ந்த மனிதர்/ இங்கே வாழ்ந்தார் என எதையும் கண்டறிய முடியாது.
ஆனால் திருக்குறள் என்ற நூல் ஒன்று இருக்கிறது. அதை எழுதியவர் யாரோ இருக்கவெண்டும் அல்லவா என கேட்கலாம்.
ஆமாம். திருக்குறள் என்ற நூல் உள்ளது. அதை எழுதியவர் வள்ளுவர் என்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம்மிடயே உள்ள தகவல். இதற்குமேல் எதுவும் தெரியாது. யாரோ எழுதி இருக்காமல் அந்த நூல் உருவாகி இருக்காது. அது இருவரா, ஒருவரா, பலர் சேர்ந்து எழுதினார்களா, காலவெள்ளத்தில் தொகுக்கபட்ட பழமொழிகளின் தொகுப்பா..எப்படி வேண்டுமனாலும் இருக்கலாம். ஆனால் நூலின் நடை, ஒழுங்கு ஆகியவற்றை வைத்து ஆராய்கையில் அதை பலர் சேர்ந்து எழுதினார்கள் என சொல்ல இடமில்லை.
இதுதான் நமக்கு வள்ளுவர் பற்றி தெரிந்தது. வரலார்றில் நாம் மிக வீக். பல சங்கபாடல்களை எழுதியவர் பெயர் கூட தெரியாமல் பாடலின் முதல்வரியை அவருக்கு பெயராக சூட்டி விடுகிறோம்.
அதே சமயம் தமிழக அரசு திருவள்ளுவர் பிறந்தநாள் ஜனவரி 15 31 பி.சி என அறிவித்துள்ளது,
இந்த நாளில் வள்ளுவர் பிறந்தார் என நமக்கு எப்படி தெரியும்?
1935ம் ஆண்டுவாக்கில் சென்னையில் "திருவள்ளுவர் திருநாட் கழகத்தினர்" என்ற அமைப்பு ஒன்று உருவாகிறது. அந்த அமைப்பின் தலைவர் மறைமலை அடிகளார். அவரும் இன்னபிற தமிழ அறிஞர்களான சுப்பையாபிள்ளை, கண்ணுசாமி பிள்ளை முதலானோர் திருவள்ளுவர் நாள் ஒன்று கொண்டாட வேண்டும் என முடிவெடுக்கின்றனர். அதன்பின் பச்சையப்பன் கல்லூரியில் அன்றைய சென்னை ராஜதானி அமைச்சர்களான முத்தையா முதலியார், தெய்வநாயகம் பிள்ளை முன்நிலையில் "வள்ளுவர் பிறந்தது கிமு 30" "வள்ளுவர் நாள் என்பது மே 18" என மறைமலை அடிகள் அறிவிக்கிறார். அதற்கு எந்த ஆதாரமும் அவர் கொடுக்கவில்லை. யாரும் கேட்கவும் இல்லை, காரணம் வள்ளுவர் நாள் என்ற நாள் ஒன்றை தேர்ந்தெடுத்து அன்று தமிழ்நாடெங்கும் வள்ளுவர் தின கொண்டாட்டங்களை செய்யவேண்டும், உணவிடவேண்டும் என்பதே அதன் நோக்கம். அதன்பின் ஒட்டுமொத்த திருவள்ளுவர் திருநாள் கழகமும் மயிலை வள்ளுவர் கோயிலுக்கு சென்று வழிபடுகிறது. அக்கோயிலில் வைகாசி அனுஷ நட்சத்திரதன்று வள்ளுவர் தினம் கொண்டாடபடுகிறது. அதன் அடிபப்டையில் மே 18 எனும் நாள் தேர்ந்தெடுக்கபட்டிருக்கலாம்.
அதன்பின் 1963ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு (எப்ரல் 14) அன்று திருவள்ளுவர் விழா ஒன்றில் அறிஞர் அண்னாவும், பக்தவத்சலனாரும் கலந்துகொள்கிறார்கள். அகூட்டத்தில் வள்ளுவர் தினமாக ஜூனில் இருந்து ஜூலைக்குள் ஏதோ ஒரு நாள் அறிவிக்கபடவேண்டும் என வேண்டுகோள் விடபட்டு அன்றைய தமிழக அரசும் ஜூன் 2 நாளை வள்ளுவர் தினமாக அறிவிக்கிறது. அதை தேர்ந்தெடுக்க ஸ்பெஷல் காரணம் எதுவும் இல்லை.
அதன்பின் 1971ல் கலைஞர் முதல்வர் ஆனபின் வள்ளுவர் பிறந்தது தை 1 என சொல்லி, வள்ளுவர் பிறந்தநாளை ஜனவரி 15, கிமு 31 ஆக அறிவித்து வள்ளுவர் ஆண்டை உருவாக்குகிறார். அதற்கு சொல்லபட்ட காரணம் தமிழருக்கு தனி ஆண்டு முறை வேண்டும் என்பது. பொங்கல் சமயத்தில் துவக்குவது பிராக்டிகலாக இருக்கும் என்பதாலும் மாற்றி இருக்கலாம். மறைமலை அடிகள் தலைமையில் 1921ல் நடந்த அறிஞர் குழு ஒன்று தை 1 தான் வள்ளுவர் பிறந்தார் என அறிவித்ததாக கலைஞர் கூறினார்.
ஆக வள்ளுவரை அடைப்படையாக வைத்து நமக்கு கிடைத்த வள்ளுவராண்டின் வரலாறு இதுவே