Monday, November 18, 2019

சென்னை உயர்நீதி மன்றம் - பார்ப்பன ஆதிக்கமும் சமூகநீதியும்

"சென்னை உயர்நீதி மன்றம். பார்ப்பன -
              - ஆதிக்கமும் - சமூகநீதியும் "
                     
             (1861 - 1973 = 112)...!

             *தோழர்களே வணக்கம்...!!

*சென்னை உயர்நீதி மன்றம் 1861 இல் துவங்கி 1948 வரை 87 ஆண்டுகள் வரும் வரையிலும் - நீதிக்கட்சி ஆட்சிக்கு வரும் வரையிலும் நீதிபதிகளாக இருந்தவர்கள்

1)டி.முத்துசாமி அய்யர்.
2) சுப்பிரமணிய அய்யர்.
3)பாஷ்யம் அய்யங்கார்.
4)எ.ஏம். குமாரசாமி சாஸ்திரி.
5)வி. கிருஷ்ணசாமி அய்யர்.
6)ஏ.சுந்தரம் அய்யர்.
7)டி.சதாசிவ அய்யர்.
8)டி.வி.சேசாஸ்திரி அய்யர்.
9)எஸ்.வரதாச்சாரி.
10)எஸ்.கிருஷ்ணசாமி அய்யர்.
11) பதஞ்சலி சாஸ்திரி.
12)எம்.சந்திரசேகர் அய்யர்.
13)டி.எஸ்.வெங்கட்ராம அய்யர்.
14)எஸ்.பஞ்சாப கேசு அய்யர்.
15).வி.இராஜ கோபால் அய்யர்‌.
16)பி. பாலகிருஷ்ண அய்யர்.
17)ஏ.எஸ். பஞ்சாகேச அய்யர்‌.
18)பி.எஸ். இராமசாமி அய்யர் ‌.
19)என். இராஜகோபால அய்யங்கார்.
20) குப்புசாமி அய்யர்.
21) அனந்த நாராயண அய்யர்‌.
22)ஜெகதீஸ் அய்யர்.
23) சீனிவாச அய்யர்.
24) இராமகிருஷ்ண அய்யர்.

*87 ஆண்டுகள் மக்கள் தொகையில் 3%
மட்டுமே உள்ள பார்ப்பனர்கள் (அய்யர்- அய்யங்கார்- சாஸ்திரி - சர்மா என ) மிகப்
பெரும் எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்தி வந்தனார்.

*1948 இல் சென்னை மாகாண அரசை காங்கிரஸ், ஓமந்தூர் இராமசாமி ரெட்டி
யார் முதலைச்சைராக ஆண்டு வந்தது.
அவர் சமூக நீதியில் ஆழ்ந்த பற்றும்,
பார்ப்பனர் அல்லாத மக்கள் உயர்ந்த
பதவிகளுக்கு வர வேண்டும் என்று
விருப்பம் கொண்டிருந்தவர். அப்போது
சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு நீதிபதி காலியானது.

*அந்த இடத்தில் சிதம்பரம் (சைவப்பிரிவு)
- பிரபல குற்றவியல் வழக்குரைஞர் நாக
- பூசனம் சோமசுந்தரம் (பிள்ளை) என்ற முற்ப்படுத்தப்பட்ட சமூகத்தை தமிழரை
நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை
செய்தார்.

தோழர்களே! கவனியுங்கள்;
ஒரு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகப்
பிற்படுத்தப்பட்டவர்களிலிருந்து கூட அல்ல..!
ஒரு முற்படுத்தப்பட்டவரைத்தான் ,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு
முதலமைச்சர், நியமன பரிந்துரை செய்ய அதிகாரம் உள்ளவர், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.

* அன்று மத்தியில் நேரு பிரதமர்.சர்தார்
வல்லபாய் பட்டேல் ‌உள்துறை அமைச்சர்.
இந்த சூழிலில் மத்திய அரசில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்த குலக்கல்வி சூதுமதிபடைத்த குல்லகபட்
டர் இராஜகோபால ஆச்சாரியும், - இன்னொரு பாதுகாப்புத்துறை அமைச்சரும், நேருவின் நெருங்கிய நண்பருமான கோபால்சாமி அய்யங்கார்
மருமகனான வீ.கே. திருவேங்கடாச்சாரி
யைமீண்டும் நீதிபதியாக , நியமனம் செய்ய வேண்டும் என்றும் சிபாரிசு செய்கிறார்கள்.

*பிரதமர் நேரு ஒருதலைப்பட்சமாக
முதலமைச்சரை அழைத்து; " நீங்கள் பிராமணர் அல்லாதார் அரசை ஜாதி
அடிப்படையில் நடத்ப்பார்கிறீர்கள் என்று
உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல்
முன் கண்டிக்கிறார். இராஜகோபால ஆச்சாரியின் பரிந்துரையை ஏற்க முயல்
கிறார் நேரு..

*முதலமைச்சர் ஓமந்தூரார் பிரதமர் நேருவிடம் இரண்டு வெள்ளைத்தாள்
களைக் கேட்டு வாங்கி, ஒன்றில் மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சராகிய நான் பரிந்துரைத்த
நாகபூசனம் சோமசுந்தரத்தின் நியமனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்...!

* இல்லையென்றால் என்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்கி-றேன் என்று இரண்டு கடிதங்களை  கொடுத்தார்...

*உடனிருந்து உள்துறை அமைச்சர் பட்டேல் நேருவிடம்; "இந்த இராஜினாமா
வை ஏற்றால் , சென்னை மாகாணத்தில்
பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் மிகப்பெரிய
எழுச்சியை காங்கிரஸின் மத்திய,மாநில
அரசுகளுக்கு எதிராக தோற்றுவிப்பார்" என எச்சரித்தார். அதனை ஏற்று நேரு நியமனத்திற்கு ஒப்பதல் அளித்தார்.

*ஒரு முற்ப்படுத்தப்பட்ட தமிழர் உயர்நீதிமன்ற நீதிபதியாக வருவதற்கு முதலமைச்சர் தன் பதவியை ராஜினாமா
 செய்யகிற எல்லை வரை போய்தான் இந்த பதவி தமிழருக்கு வந்தது.!

*அப்படி என்றால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எப்படி இது போல் உயர்பதவிக்கு வர முடிந்தது என்பதை நாளை பதிவில்....

#தொடரும்......!

*இந்த முதல் பகுதி பதிவுக்கு உதவிய சான்று ஆவணங்கள் நன்றியுடன்...!

1) உயர்நீதிமன்ற நீதிபதிகளின்    பெயர்கள் பொறித்த கல்வெட்டு

2) அன்றைய திராவிடர் கழகப்பிரச்சாரச்
       செயலாளர்;"சொல்வேந்தர்" திருச்சி
         நீ.செல்வேந்திரன் அவர்களின்
        உரைகளின் தொகுப்பு-( C.D.கள்)

3) " மார்க்ஸிஸ்ட்கள் சிந்தனைக்கு" -
      தோழர் மின்சாரம் அவர்கள் எழுதிய
       திராவிடர் கழக வெளியீடு-நூல்.

தெரிந்துக்கொள்வீர் சூத்திர இந்துகளே

பார்ப்பனர்கள் நலனுக்காகவும் அவர்களின் அடிவருடிகளாக இருக்கவும் தான் இந்து இயக்கங்கள் வேலை செய்கிறதா? பொள்ளாச்சியில் ஆளும்கட்சி பிரமுகர்களால்  பாதிக்கப்பட்ட இந்து பெண்களுக்காவும் எந்த இந்து இயக்கங்களும் போராடவில்லை சிதம்பரம் கோயிலில் தீட்சிதரால தாக்கப்பட்ட இந்து பெண்ணிற்காகவும் எந்த இந்து இயக்கமும் குரல் கொடுக்கவில்லை. இந்து முன்னணி சந்து முன்னணி என பெயர் வைத்துக்கொள்வதை விடுத்து பார்ப்பனிய முன்னணி என வைத்துக்கொள்ளட்டும் இப்படி நவதுவாரங்களையும் மூடிக்கொண்டிருப்பதற்கு?

இதுவே மற்ற மதத்தினர் கூட வேண்டாம் மற்ற சாதி இந்துகளில் யாராவது ஒருவர் ஒரு பார்ப்பானை பார்ப்பனத்தியை இதேபோல கன்னத்தில் அறைந்திருந்தால் இந்நேரம் இப்படி கள்ள மவுனம் சாதித்திருப்பார்களா?

தெரிந்துக்கொள்வீர் சூத்திர இந்துகளே..!!! இந்துத்துவா சித்தாந்தமும் அதன் இந்து இயக்கங்களும் பார்ப்பனிய நலனுக்காக மட்டுமே இயங்குகின்றன என்ற உண்மையை உணருங்கள் இனிமேலாவது...இந்துத்துவாவின் பின் செல்வதை தவிர்த்திடுங்கள் அவர்களின் அடியாட்களாக இருந்தது போதும். சுயநினைவுக்கொள் மானமுள்ளவர்களே!!!

இந்து மதம் ஒரு கேலிக்கூத்து

இந்து மதம் !

காஞ்சி கோவிலின் உள்ளேயே சங்கரராமன் என்ற அந்தணன் வெட்டி கொல்லப்பட்டதற்காக கோவிலை மூடவில்லை?

அதே ஊரில் இன்னொரு அந்தணன் கோவில் கருவறையில் பக்தையுடன்
காம களியாட்டம் ஆடியபோது அந்த கோவில் மூடப்படவில்லை?

காஷ்மீரில் ஏழு வயது சிறுமியை எட்டு மனிதநாய்கள் எட்டு நாட்கள் வைத்து கற்பழித்துக் கொன்ற கோவில் மூடவில்லை!

ஆனால் அய்யப்பனை வணங்குவதற்காக கோவிலுக்குள் பெண்கள் சென்றதால் கோவில் மூடப்படுகிறதாம் சபரிமலைக்கோவில்?
கருமம் இவனுங்க செய்றது மார்க்கமும் இல்லை... மதமும் இல்லை....

பாபா சாகேப் சொன்னது போல...
இந்து மதம் ஒரு கேலிக்கூத்து

இதான் சபரிமலை உண்மை

இதோ
சபரிமலை செல்லாத பெண்கள் பாத்துக்கோங்க!

இதான் சபரிமலைக் கருவறை
மூல விக்ரஹ அய்யப்பன் சிலை!

ஒட்டமொத்த சபரிமலையே காட்டுத்தீயில் எரிந்து போயிற்று!
ஸ்வாமியாவது? மாமியாவது? எ. பார்ப்பான்கள் Escape!😂

அப்போது திராவிட இயக்க முன்னோடி PT ராஜன் தான், அய்யப்பனை மீள் கட்டிக் கொடுத்தார்!



1950, மொத்த சபரிமலையும் சாம்பல்!
அய்யப்ப விக்ரஹம் அம்பேல்!
பார்ப்பான்கள், ஸ்வாமியை விட்டே ஓடிவிட்டார்கள்!

அப்போது "திராவிட இயக்க முன்னோடி" PT ராஜன்
பெருந்தொகை கொடுத்து மீள்கட்டியதே சபரிமலை!
கருவறை மூலவர் சிலை, உட்பட!

இதோ காண்க!
மீண்டும் பணம் வந்ததும், பார்ப்பான் வந்துவிட்டான்😂


இதோ.. சபரிமலை ஐயப்பன் மூல விக்ரஹம்!

பெண்கள் பார்க்கவே படாது-ன்னு கதை வுட்டவன்
இப்போ என்ன செய்வான், இணையத்தில்?:)

அறிக: அய்யப்பன்= புராண ஹரி ஹர சுதன் அல்ல!
அய்யப்பன்= அய்யனார்! தமிழ் ஆசீவக அய்யனார்!


சபரிமலை அய்யப்பன்
*பழைய கல்சிலை, தீயில் நாசம் ஆனது
*புதிய உலோகச் சிலை, மீள் நிறுவப்பட்டது
திராவிட இயக்க PT ராஜன் கொடையால்!

எங்கே போனது ஆகமம்?
நகராத கல்சிலையை மாற்றி
நகரக் கூடிய உலோகச் சிலை எப்படி நிறுவினார்கள்?

பார்ப்பான் உயிருக்குப் பயந்து ஓடிவிட்டான்!:)
மக்கள் நிறுவினார்கள்!



சபரிமலை தீப் பிடிக்கும் முன் மாளிகைப்புரத்து அம்மன் சன்னிதியே கிடையாதே? எப்படி முளைத்தது பிறகு மட்டும்? அப்போ எங்கே போனது ஆகமம்? அறிக: பார்ப்பானுக்கு வசதி எனில், ஆகமம்! இல்லையேல் ஆகமம் ஆவது? பூகமம் ஆவது? பழங்குடி நாகர்கள், ஆசீவகம் இதை ஸ்வாஹா செய்ததே= இன்றைய பார்ப்பன சபரிமலை!


இன்று.. ஈழம் கதிர்காமத்தில்
பழங்குடி வேடர்களின் கந்தவேளை, எப்படிச் சிங்களன் ஸ்வாஹா செய்தானோ..

போலவே சபரிமலையில்
பழங்குடி ஆசீவக அய்யப்பனை, பார்ப்பான் ஸ்வாஹா செய்தான்!

வேதங்களில் அய்யப்பன் எ. பேர் உண்டா?:) இல்லை!
ஆனாலும் புலி, பால் குடுத்த புருடா கட்டி விட்டான்ல?😂

*சபரி மலை= தமிழ்ப் பேரு
*அய்யப்பன்= தமிழ்ப் பேரு
*சாத்தன்= தமிழ்ப் பேரு (சாஸ்தா அல்ல)

அப்பறம் என்ன மயி***க்கு "தத்வமஸி"?

எங்கே சாம வேதத்தில் வரும் தத்வமஸி Pageல
அய்யப்பன் எ. சொல்லைக் காட்டு பார்ப்போம்?

திராவிட மக்கள் கட்டிக் கொடுத்த கோயிலுக்கு
எதுக்குடா ஆரிய Label ஒட்டுனீங்க?

இனி, உரக்கச் சொல்லிக் கொண்டே இருங்கள்!

சபரிமலை அய்யப்பன் கருவறையில் உள்ள
மூல விக்ரஹத்தைத் தந்ததே..
"திராவிட இயக்க முன்னோடி" தான்!

இதோ, இவர் தான் அவர்! Sir PT Rajan!

நீதிக் கட்சி/ Non Brahmin Movement முன்னோடி!
பொதுப்பணித் துறை அமைச்சர்
4 மாதங்களுக்கு மதறாஸ் மாநில முதலமைச்சர்!

இணையம் பூரா..
இன்று பார்ப்பான் பொய் எழுதி வச்சிருக்கான்!

1950 சபரிமலைத் தீ= கிறித்துவர்கள் வைச்சாங்கன்னு!

இதோ ஆவணம்!
Sabarimala Temple Case
Enquiry Report of Kesava (Menon), Special Branch CID

ஹிந்து எ. பொதுப் பேரில்,
பார்ப்பனீயத்தில் அறியாமல் உழன்றாலும்,

பழங்குடித் தமிழ்த் தொன்மம், இறைத் தொன்மம்
காத்துக் கொடுத்தது = "திராவிட இயக்கம்" தான்!

மதம் = போலி என்றாலும், அதில் மக்கள் உழல்வதால்
அதற்குச் சமூகநீதி
மக்களாட்சி (ஜனநாயகம்) ஏற்படுத்திக் கொடுத்ததும்
திராவிட இயக்கமே!


அறிக: So called இந்துக்களே!

*பார்ப்பான் உங்களுக்கு, கோயில் நுழைய உரிமை கொடுக்கவில்லை!
*உங்களுக்கு, கோயில் உரிமை பெற்றுத் தந்தது= சீர்திருத்த/ திராவிட இயக்கங்களே!

இன்றும், நீங்கள்.. கருவறைப் பூசகர் ஆகமுடியாது, அதற்குப் படித்திருந்தாலும்:(( தடுப்பதும் பார்ப்பான் தான்!


தான் இறையை நம்பாவிட்டாலும்..
நீங்கள் நம்புகிறீர்கள் எ. ஒரே காரணத்துக்காக..

உங்களுக்குச் "சமநீதி" பெற்றுத் தந்த
திராவிட இயக்கம் மேல்..
"நன்றி" எ. ஒரு சொல்லுக்கு உரியவராய் இருங்கள்!

அதுவே இறையழகு! இறையறம்!

போலி Senti பக்தியில் இருந்து விலகி,
"இயற்கை இறை"யில், தோயப் பழகுவோம்!


பிளேபாய் கிருஷ்ணரின் பொண்டாட்டிகளின் பெயர்கள் பின்வருமாறு...👇

பிளேபாய் கிருஷ்ணரின் பொண்டாட்டிகளின் பெயர்கள் பின்வருமாறு...👇

ருக்மணி
சத்யபாமா
ஜாம்பவதி
நக்னசித்தி
மித்திரவிந்தை
இலக்குமணை
காளிந்தி
பத்திரை ஆகியோர்.

இதேபோக எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸாக👇

தேவேந்திரனின் பொண்டாட்டி இந்திராணி
ஆண்டாள்
ராதை
பூமாதேவி

மற்றும் இது போதாதென்று

ஒரு லட்சம் கோபிகையர்களும்...

இதெல்லாம் பத்தாது னு கடைசியா

சிவன் கூட மேட்டர் பண்ணி ஐயப்பனையும்

நாரதர் கூட மேட்டர் பண்ணி அறுபது பேரையும் பெத்து தள்ளிருக்காரு.

இதுல கிருஷ்ணனுக்கு ஜெயந்தி வேற😝😝😝😝

ஐயர் ஐயங்கார் டெக்னாலஜியின் கதை - வெட்கமே இல்லாமல் சொல்லிக்கொள்கிறோம்....இது 'பெரியார் மண்' என்று

ஐயர் ஐயங்கார் டெக்னாலஜியின் கதை !!

இம்முறை ஐயர் ஐயங்கார் டெக்னாலஜியின் ( I.I.T) மானம் கப்பலேறுவதை தடுப்பது சற்றுக்  கடினம்தான். காரணம்,  கொல்லப்பட்டது, இளிச்சவாய தமிழ்நாட்டு மாணவரல்ல. போராட்டக்குணமுள்ள கேரள மண்ணின் மாணவி. ஐ.ஐ.டி மற்றும் அதனை ஆதரிக்கும் சங்கிகளுக்கு  கூடுதல் தலைவலி ....கொல்லப்பட்டவர் முஸ்லிம்.

1992 முதல் சென்னை ஐ.ஐ.டியின் முகத்திரையைக் கிழித்தது இரண்டே இதழ்கள்தான். ஒன்று 'நக்கீரன்' மற்றொன்று உங்கள் 'தாகம்'.

ஐ.ஐ.டி நிறுவனத்தால் பழிவாங்கப்பட்ட கணித மேதை  பேராசிரியர் வசந்தா  கந்தசாமி அம்மாவை நான் 'நக்கீரன்' அலுவலகம் அழைத்துச்சென்றேன். அவர் பட்ட துன்பங்களைக் கேட்ட அண்ணன் நக்கீரன் கோபால், அண்ணன் லெனினை உடனே தன் அறைக்கு அழைத்தார். 'தம்பி ...கேட்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. நீங்கள் அம்மாவிடம் பேசுங்கள் ' என்றார்.

அந்த வார 'நக்கீரன்' அட்டைப்படக் கட்டுரை வசந்தா கந்தசாமி அம்மாதான். 'நக்கீரன்' கடைக்கு வந்தவுடன், அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கு வந்த முதல் தொலைபேசியின் குரல் அவரை இப்படி மிரட்டியது...." என்ன கோபால்...யார் மேல கை வைக்கறீங்க? ஐ.ஐ.டி கோபால்  !! " மிரட்டியவர்......மாலன் !!

அந்தத் தொலைபேசி வரும்போது நான் அண்ணன் அறையில் இருந்தேன். 'இந்து' ராம் தொடங்கி பல முன்னணி பத்திரிகையாளர்கள் அவரிடம் பேசியபடியே இருந்தனர். அண்ணன் சிரித்தபடி அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருந்தார். " நக்கீரன் " தந்த பலத்த அடியில்....ஆடிப்போனது ஐ.ஐ.டி 'அவாள்' கூடாரம்.

அடுத்த இரண்டாண்டுகளுக்கு 'தாகம்' இதழில், 'ஐ.ஐ.டி எனும் மர்ம தேசம்'  தலைப்பில் பேராசிரியர் வசந்தா கந்தசாமி தொடர் கட்டுரை எழுதினார்.  கட்டுரை வாங்க நான் ஒவ்வொரு முறை அம்மாவை சந்திக்க  ஐ.ஐ.டி உள்ளே நுழையும்போதும் கடுமையாக மிரட்டப்படுவேன். எச்சரிக்கப்படுவேன். கிண்டி முதல் அடையாறு வரை ஒட்டப்படும் 'தாகம்' இதழின் சுவரொட்டிகளை ஐ.ஐ.டி நிர்வாகம் சம்பளத்துக்கு ஆள் வைத்து கிழிக்கும். அப்பகுதி கடைகளுக்கு 'தாகம் ' வந்த அடுத்த நொடி, மொத்த இதழ்களையும் ஒரு ஜீப் வந்து பணம் கொடுத்து அள்ளிச்சென்று தீ வைத்துக் கொளுத்திவிடும்.

இன்று உள்ளது போல் அன்று சமூக வலைதளங்கள் இல்லை. ஐ.ஐ.டி செய்தியை வெளியிட அத்தனைப் பத்திரிகைகளும் மறுத்துவிடும்.

'தாகம்' இதழில் வந்த பேராசிரியர் வசந்தா கந்தசாமியின் கட்டுரையைக் கண்டித்து Hindu frontline கட்டுரை எழுதியது. Thirdrate filthy magazine Thaagam என்று நமக்குப் பட்டம் சூட்டியது.  ' ஏன் முதல்வர் ஜெயலலிதா இதுபோன்ற தீவிரவாத பத்திரிகைகளை தடை செய்யாமல் விட்டுவைத்து இருக்கிறார் ' என்று கேள்வியும் எழுப்பியது.  frontline ஆசிரியர் 'இந்து' ராம்.

அப்போது நான் 'நந்தன்' இதழிலும் உதவி ஆசிரியராக பணியாற்றினேன். ஐ.ஐ.டியை அதிலும் வெளுத்தோம்.

அடையாறு முதல் என் சொந்த ஊரான புதுச்சத்திரம் வரை என்னை ஐ.பி பின்தொடரும். உபயம் ஐ.ஐ.டி.

வெறும் செய்தி வெளியீட்டால் ஐ.ஐ.டியை வெல்ல முடியாது என்று முடிவு செய்தேன். வசந்தா அம்மாவை அண்ணன் வைகோவிடம் அழைத்துச்சென்றேன். ஐ.ஐ.டி அக்கிரமங்களை கேட்டவர் அதிர்ந்தார். ம.தி.மு.க சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் வசந்தா அம்மாவுக்கு விருது வழங்கி சிறப்பித்தார். ஐ.ஐ.டி நிர்வாகத்தைக் கண்டித்துப் பேசினார்.

அடுத்து நான் அம்மாவை அழைத்துச் சென்றது அண்ணன் திருமாவளவனிடம். சைதாப்பேட்டை முதல் ஐ.ஐ.டி வரை விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தமிழ் அமைப்புகள் நடத்திய பிரம்மாண்ட முற்றுகைப்போராட்டத்தால் ஐ.ஐ.டி இயக்குநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

' தாகம் ' இதழில் வெளிவந்த ஐ.ஐ.டி தொடரை கலைஞர் தொடர்ந்துப்படித்து வந்ததின் விளைவு....தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கலைஞர் பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்களுக்கு 'கல்பணா சாவ்லா' விருதை அறிவித்தார்.

அதன் பிறகுதான் ஊடகங்கள் அவர் குறித்த செய்திகளை வெளியிட தொடங்கின....

நேற்று வசந்தா அம்மாவிடம் பேசினேன்....' அவனுங்க(ஐ.ஐ.டி) திருந்தமாட்டானுங்கடா தம்பி ! ' என்றார் கோபமாக.

இன்னும் எத்தனை மாணவர்களை கொல்லப்போகிறோம்.....ஐ.ஐ.டியை என்று வெல்லப்போகிறோம் தோழர்களே?

வெட்கமே இல்லாமல் சொல்லிக்கொள்கிறோம்....இது 'பெரியார் மண்' என்று . அது உண்மை என்றால் இன்நேரம் ஐ.ஐ.டி இயக்குநர் சிறையில் இருப்பானே!!

- தாகம் செங்குட்டுவன்

நாங்கல்லாம் ஆண்ட பரம்பற...

இந்தியால அதிக மருத்துவ படிப்பு எந்த ஸ்டேட்ல இருக்கு..??
தமிழ் நாட்ல.

அதிக எஞ்சினியரிங் படிப்பு எங்க இருக்கு?
தமிழ் நாட்ல..

அதிக சுகாதார நிலையம் எங்க இருக்கு??
தமிழ் நாட்ல..

அதிக அரசாங்க வேலை வாய்ப்பு எங்க இருக்கு??
தமிழ் நாட்ல..

விவசாயத்துக்கு இலவச மின்சாரம் எங்க இருக்கு??
தமிழ் நாட்ல

ஆசியால பெரிய இலவச நூலகம் எங்க இருக்கு
தமிழ்நாட்ல..

முதல் தலைமுறை பட்டதாரிக்கு இலவச உயர்கல்வி எங்க இருக்கு???
தமிழ் நாட்ல

அதிக அளவில் பாலங்கள் போக்குவரத்து வசதி எங்க இருக்கு??
தமிழ் நாட்ல..

பெண்ணுக்கு சொ‌த்துரிமை திட்டம் எங்க இருக்கு??
தமிழ் நாட்ல

இதெல்லாம் பண்ணது யாரு ?

கலைஞர் மு.கருணாநிதி.

சரி இருந்தும் அவர ஏன் குறை சொல்ற??

அவரு விபூதி வச்சுக்கல..
அப்புறம்??
பண்டிகைக்கு வாழ்த்து சொல்லல...
ம்ம் அப்பறம்,???
எல்லா மக்களும் ஒண்ணுனு மாத்த பாக்கறாரு..

ஏன் இல்லையா..???
நாங்கல்லாம் ஆண்ட பரம்பற...

போடா லூசு........ ..!!!!!

முத்துராமலிங்கர் - புனிதர் போன்ற எந்த அடையாளமும் தேவை அற்றது

முத்துராமலிங்கர் என்ற மனிதர் சுதந்திர போராட்ட வீரர் மட்டுமே.....அதற்கு மேல் புனிதர் போன்ற எந்த அடையாளமும் தேவை அற்றது ....சில சமூக வரலாற்று உண்மைகளை தெளிவு படுத்திகிறேன்...

1..இன்னும் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பிராமணர்கள் அதிகம் இருந்த அன்றய காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு பல வருடங்களாக அந்த சட்டத்தை நீக்கும் செயல்பாடு இவரிடம் தீவிரமாக இல்லாது இருந்தது கடுமையான விமர்சினம் இன்றும் உண்டு....அதில் இவரின் சிறிய பங்கை மட்டுமே பெரிதாகி பலரின் பெரும்பங்கை பங்களிப்பை மூடி மறைத்து விடும் பார்பனியசூழ்ச்சியை அப்டியே விடமுடியாது....1937 ஆம் ஆண்டு தேர்தலில் குற்றப் பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை மீட்டெடுத்து அவர்களுக்கு மறுவாழ்வையும் அவர்களது வாழ்வில் புரட்சிகர மாற்றங்களையும் உண்டாக்கிய நீதிக்கட்சியின் வேட்பாளராக இராமநாதபுரம் ராஜாவான சண்முக இராஜேசுவர சேதுபதி களத்தில் நின்றார். அவரை எதிர்த்து குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக அதுவரை ஒரு துரும்பைக்கூட அசைக்காத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முத்துராமலிங்கத் தேவர் நிறுத்தப்பட்டார்.

முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக அவரது தந்தையார் உக்கிரபாண்டித் தேவரே நேரடியாக பெரியாருக்கும் நீதிக்கட்சிக்கும் ஆதரவாகப் பிரச்சாரம் ஏன் செய்தார் என்று உண்மையை புரிந்தால் அனைத்தும் தெளிவாகும்...ஆனால் தேர்தலில் காங்கிரசே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இராஜாஜி பார்ப்பனர் முதல்வரானார். அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் ஒழிப்பேன் என்று சூளுரைத்தவர்கள் அந்த அடக்குமுறைச் சட்டங்களை முன்பைவிட மிகக் கடுமையாக மக்களிடம் செயல்படுத்தத் தொடங்கினர். தேவர் வேடிக்கை பார்த்தார்.

2. பெரியாரின் குடிஅரசு 02.10.1938 அன்றய பத்திகையில் -->நீதிக்கட்சி அரசுகளால் தோற்றுவிக்கப்பட்ட 2000 பள்ளிகளை 1938 இல் இராஜாஜி தனது ஆட்சியில் இழுத்து மூடினார். 125 பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். மூடப்பட்ட பள்ளிகளில் படித்த ஆயிரக்கணக்கான கள்ளர், தேவர் சாதியைச் சார்ந்த மாணவர்களும் தமது எதிர்காலத்தை இழந்தனர். இக்கொடுமையை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சிகள் வெடித்தன. அதனை அடக்க பிரிட்டிஷ் அரசின் கிரிமினல் திருத்தச் சட்டத்தை ஏவினார் இராஜாஜி. இதில் நூற்றுக்கணக்கான கள்ளர்கள் தேவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் சிறைப்படுத்தப்பட்டனர். அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்தார் தேவர். பெரியாரும் இக்கொடிய சட்டத்தில் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார்.

சங்கரலிங்கனார் ஏன் உயிர் துறந்தார்?

சங்கரலிங்கனார் ஏன் உயிர் துறந்தார்?

கோரிக்கைகள் 3-12 படித்துப் பாருங்கள்.

1. மொழிவழி மாநிலம் அமைத்திட வேண்டும்
2.சென்னை இராஜ்ஜியம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிட வேண்டும்.
3. இரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் பயணம் செய்ய வேண்டும்.
4. வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை விலக்கி, சைவ உணவு மட்டுமே அளித்திட வேண்டும்.
5. அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் அணிய வேண்டும்.
6. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களைப் போல் வாழ வேண்டும்.
7. தேர்தல் முறையில் மாறுதல் செய்திட வேண்டும்.
8. தொழிற் கல்வி அளிக்கப்பட வேண்டும்.
9. இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்.
10. விவசாயிகளுக்கு 60 விழுக்காடு வரை விளைச்சலில் வாரம் அளித்தல் வேண்டும்.
11. மத்திய அரசு இந்தியை மட்டுமே பயன்படுத்தக் கூடாது.
12. பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்வதைத் தடுத்திட வேண்டும்

ஏன் கீழடியை இழுத்து மூட முயற்சிக்கிறார்கள்

எனக்கு பலவருடங்களாக இருந்த சந்தேகம், சில வருடங்களுக்கு முன்பு முகநூலிலும் கேட்டதாக ஞாபகம். அதற்கான பதில் கீழடியில் கிடைத்தது.

மேற்கே ஆப்கானிஸ்தானில் இருந்து கிழக்கே அஸ்ஸாம் வரையும் வடக்கே காஷ்மீரில் இருந்து தெற்கே ஆந்திரா வரையும் ஆட்சி செய்த சந்திரகுப்த மௌரியர்கள் தமிழகத்தை மட்டும் விட்டு வைத்ததின் மர்மம் என்ன?

வட்டெழுத்திற்கு முந்தைய தமிழின் எழுத்து வடிவத்திற்கு பிராமி என்று யார் எப்படி வைத்தார்கள் என்று தெரியவில்லை. இதற்கு முன்புவரை வட இந்தியாவில் கிடைத்த ஆகப் பழைய எழுத்து வடிவம் 2300 ஆண்டுகளுக்கு முந்தையது மட்டுமே. தமிழின் எழுத்து வடிவங்கள் அதற்கு முந்தையது கிடைக்க வில்லை.

ஏன் கீழடியை இழுத்து மூட முயற்சிக்கிறார்கள் என்பதற்கான காரணம், அறிவியல் ரீதியாக கீழடியில் கிடைத்த எழுத்துக்கள் 2600 வருடங்களுக்கு முந்தையவை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.

வட இந்தியாவில் கிடைத்த பிராகிருதம் இன்று அழிந்துவிட்டது. ஆனால் கீழடியில் கிடைத்த ஆதன் என்ற பெயரை இன்று வரை நம் குழந்தைகளுக்கு சூட்டுகிறோம்.

எழுத்து முறை தமிழகத்திலிருந்துதான் வட இந்தியாவிற்கு சென்றது என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.

அறிவிலும் நாகரிகத்திலும் வட இந்தியர்களைவிட நாம் பல மடங்கு முன்னேறியிருந்தோம் என்பதற்குமான ஆதாரம் கீழடி.

பத்ரி சேஷாத்திரியிலிருந்து பக்‌ஷிராஜன் வரை பதறியடித்து கீழடியை ஏளனம் செய்வதற்கான காரணம் அது இந்தியாவின் உண்மையான வரலாற்றை ஆதாரப்பூர்வமாக நிறுவியிருப்பதுதான்.

அறிவிலும் நாகரிகத்திலும் இவ்வளவு முன்னேறியிருந்த சமூகம் என்பதால், நம்மிடமிருந்து எழுத்து முறையை கற்றுக்கொண்டவர்கள் நம்மீது படையெடுக்காமல் இருந்திருக்கலாம்.

அசல் மனுதர்ம சாஸ்திரம் 1919ன் பதிப்பு :

அசல் மனுதர்ம சாஸ்திரம் 1919ன் பதிப்பு :
   🤔பிராமணன் எந்தத் தவறு செய்தாலும் தண்டனை கூடாது😁
     பிரம்ம ஹத்தியை விட அதிகமான பாவம் உலகத்தில் கிடையாது. ஆதலால் பிராமணனை கொல்ல வேண்டும் என்று அரசன் மனதிலும் நினைக்கக் கூடாது. மனு.அதி8:சுலோ 381.

     பிரமணன் எல்லா பாவஞ்செய்தாலும் அவனைக் கொல்லாமல் காயமின்றி,அவன் பொருட்களுடன் ஊரை விட்டு துரத்த வேண்டியது.மனு அத் 8; சுலோ 380:

     பிரமணனை தலை மொட்டை செய்வது கொலைத் தண்டனையாகும்.மற்றவருணத்தாருக்கு😫 கொலை தண்டம் உண்டுமனு 8: சுலோ 379(என்ன அநீதி பாருங்கள்.மனுநீதி சட்டப்படி பாவம் செய்த பிராமணனுக்கு கொலை தண்டனை என்பது மொட்டையடிப்பதாம்.அவன் என்ன கொடுமை செய்தாலும் காயம் எதுவும் படுத்தாமல் அவனுடைய எல்லாப் பொருட்களையும் கொடுத்து வெளியே அனுப்பி விட வேண்டுமாம்⁉

     பிராமணனை கொல்ல வேண்டுமென்று நினைத்து தடி முதலான ஆயுதத்தை ஓங்கினால் நூறு வருஷம் வரையிலும்,அதினால் அடித்தால் 1000 வருஷம் வரையிலும் நரகத்தில் வாசம் செய்வான்.மனு11 சுலோ 206:

      பிராமணன் சரீரத்தில் ஏற்பட்ட இரத்தம் பூமியில் விழுந்து எவ்வளவு பரமாணுக்கள் நனைகிறதோ அவ்வளவு ஆயிரம் வருஷம் நரகத்தில் வாசம் செய்வான்(வேறு வருணத்தார்)மனு 11 சுலோ 207 ;

      பிராமணனை புசிப்பித்ததாலும் பூரணமான பலன் உண்டாகிறது.மனு 3 / 129.அதாவது பிராமணனை தின்று கொழுக்க உணவு கொடுத்து மற்றவர்கள் பூசைகளில் தர வேண்டும்;

       பிராமணர்கள் புசிக்கும் போது சண்டாளன் உயிர்ப் பன்றி,கோழி,நாய்,மாதவிடாயான ஸ்திரிபார்க்காமல் இருக்க செய்ய வேண்டும்,மனு 3/239;

      பெண்கள் விஷயத்தில் பிராமணனுக்கு சலுகை❓பிராமணனுக்கு தன் சாதியிலும் மற்ற மூன்று சாதியிலும் விவாகம் செய்துக்கொள்ளலாம். மனு.2/13;

      பிராமணனுக்கு விவாகம் செய்துக்கொண்ட வைசிய மனைவியிடத்தில் பிறந்தவன்"அம்பஷ்டன்" என்றும்,அவ்விதம் சூத்திர மனைவியிடத்தில் பிறந்தவன்"நிஷாதன்" என்றும் சொல்லப்படுகிறான்.மனு 10/8;

      உலகத்தில் நான்கு வருணத்தாருக்கும் சங்கர சாதியில்(கலப்பு) பிறந்தவர்களில் சிலர் மிலேச்ச பாஷை (தமிழ் உட்பட)உள்ளவர்களாயும், சிலர் சமஸ்கிருத போன்ற உயர்ந்த பாஷை உள்ளதுர்களாயும் இருக்கிறார்கள்.ஆகிலும் அவர்கள் தஸ்யூக்கள் என்று சொல்லப்படுவார்கள்.மனு 10/45;

      உயர்ந்த சாதி கன்னிகையை புணர்ந்த தாழ்ந்த சாதியானுக்கு மரணம் வரையில் சிட்சையை விதிக்க வேண்டியது.மனு.8/366;(பிராமணனுக்கு எந்த சாதியினரையும் விவாகம் செய்ய தடையில்லை.ஆனால் பிறக்கும் குழந்தைகளின் நிலைகளில் தான் மாறுபாடுகள்).

      👺இப்படி பிராமண மனு தர்மத்தில் சட்டம் இருக்க ஆரிய-பிராமண இந்துத்துவாவாதிகள் கிறிஸ்தவர்களும்,இஸ்லாமியரும் தான் சாதியை கொண்டு வந்தார்கள் என்று வரலாற்று பொய்யை பொய்யர்கள் கூறுகிறார்கள்.இப்படி கூறுகிறவர்கள் யார்? திராவிட  காட்டிக் கொடுக்கும்🚩வந்தேறி கூட்டத்தாரின் கைக்கூலிகள்.
    
      அறிவுள்ளோர் சிந்திப்பது நல்லது. தொடர்ந்து பிராமண மனுதர்ம சட்டம் அறிவோம்.

காஞ்சிக் காமக்கோடிப் பீடச் சங்கராச்சாரியாரின் கரைகடந்த தமிழ் வெறுப்பு

சில ஆண்டுகட்கு முன், இற்றைக் காஞ்சிச் சங்கராச்சாரியார், ஆண்டாள் திருப்பாவையின் "செய்யா தனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்" என்னும் அடியிலுள்ள தீக்குறளை சென்றோ தோம்" என்னும் தொடருக்கு, தீய திருவள்ளுவரின் குறளை யாங்கள் ஓத மாட்டோம் என்று ஆண்டாள் சொன்னதாகப் பொது மேடை யிற் பொருள் கூறி, தம் தமிழிலக்கண அறியாமையையும் தமிழ் வெறுப்பையும் வடமொழி வெறியையும் ஒருங்கே காட்டினார்.

    ஆட்சிமொழிக் காவலர் திரு. கீ. இராமலிங்கனார் ஆச்சாரி யார் மடத்திற்குச் சென்று இதுபற்றி வினவியபோது, ஆச்சரியார் நேரடியாகத் தமிழில் விடையிறுக்காது. தம் அணுக்கத் தொண்டர் தமிழில் மொழிபெயர்த்துச் சொல்லுமாறு சமற்கிருதத்திலேயே விடை கூறினாராம். "சுவாமிகளுக்கு நன்றாகத் தமிழ் தெரியுமே! தமிழிலேயே எனக்கு நேரடியாய் விடை கூறலாமே!" என்று ஆட்சி மொழிக் காவலர் சொன்னதற்கு, "சுவாமிகள் பூசை வேளையில் நீச பாஷையில் பேசுவதில்லை" என்று அணுக்கத் தொண்டர் மறு மொழி கூறினாராம். எது நீச மொழி என்பதை, 'எது தேவமொழி?' என்னும் பகுதியிற் காண்க.


இந்து மதம் என்பது ....

1. "இந்து மதம் என்பது சரியில்லாத பெயர்"
- காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி
"Hinduism is a later, incorrect appellation"
- Indian express dated December 8 1981, page 5

2. "இந்து என்னும் பதத்தை (மதத்திற்கு) வழங்க எனக்கு இஷ்டமில்லை"
- சுவாமி விவேகானந்தர், நூல்: ஸ்ரீ விவேகானந்த விஜயம், மகேஷ் குமார் சர்மா, பக்கம் 26

3. "இந்து என்ற சொல் ஒரு முறையான சமயக் கோட்பாடு அல்லது கடவுள் பற்றின ஒருமைப்பட்ட அமைப்பு என எவரையும் நினைக்க வைக்கலாம் எனினும் இந்து என்பது ஒரு மதம் அன்று"
-சுவாமி தர்ம தீர்த்தா
"The word Hindu might lead one to think that the unity is one creed of faith. Hinduism is not a religion"
book: The menace of Hindu imperialism, page 194

4. "இந்து மதம் என்பது ஒரு அண்மைக்கால புதிய பெயர்" - சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி
"Hinduism is a modern word":  Hinduism-Doctrine and way of Life, page 15

5. "இந்து மதம் என்பது யாது?
- இந்து எனும் சொல் நமது பழமையான இலக்கியங்களில் காணப் பெறவில்லை. கடவுள் நம்பிக்கை (மதம்) என்ற வகையில் இந்து இயல் என்பது தெளிவற்றது. ஒழுங்கான உருவமைப்பு பெறாதது. பல்வகை தோற்றக்கூறுகள் உடையது. எல்லா மக்களுக்கும் எல்லா செய்திகளும் என்பதான தன்மை படைத்தது. அதை வரையறை செய்வதோ அல்லது அது வழக்கிலுள்ள கருத்தின்படி ஒரு மதமா இல்லையா என மெய்யாகவே உறுதிமொழி இயலும் செயலன்று" - ஜவகர்லால் நேரு
"What is Hinduism?
The word Hindu does not occur at all in our ancient literature. Hinduism, as a faith, is vague, amorphous, many sided, all things to all men. it is hardly possible to define it or indeed to say definitely whether it is a religion or not in the usual sense of the word"
Jawaharlal Nehru
Book: Discovery of India, page 108

6. "வடமொழி அகரமுதலி களிலும் இக் காலம் வரையிலான வடமொழி இலக்கியம் அனைத்திலும் ஹிந்து, ஹிந்த், இந்துஸ்தான், என்ற சொல் எதுவும் கிடையாது
- "மகாமகோபாத்தியாய பண்டித ராஜ்"  ஷியாம்குமார் ஆச்சார்யா
"There is no such word as Hindu, hind, Hindustan in any of our Sanskrit dictionaries and the entire Sanskrit literature up to date.
Book: Danger to Bharat - Freedom, page 84

7. "இந்து என்ற சொல் எந்த காலத்தில் வந்தது என்ற ஆராய்ச்சி எனக்குத் தேவையில்லை என்றாலும் அது பிற்காலத்தில் வந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன். தமிழர்களில் ஒரு பகுதியினர் இந்துக்கள் ஆயினர்.
- கவிஞர் கண்ணதாசன்
நூல்: அர்த்தமுள்ள இந்து மதம், பகுதி 2, பக்கம் 50

8. "இந்து யார் என்று தெரியவில்லை. இந்து மதத்தைப் பற்றி சிந்திக்கும் பொழுது கவலையும் ஏமாற்றமும் ஏற்படுகின்றது இது புராதன காலமாக நம் நாட்டில் கைக்கொள்ளப்பட்டு வரும் கொள்கையா அல்லது ஏடுகளில் எழுதி வைக்கப்பட்டு இருப்பது தான் இந்து மதமா? எது இந்துமதம்? ஒன்றுமே புரியவில்லை. இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளும் யாருக்குமே புரியவில்லை. இந்து என்ற பதம் நம் நாட்டை சேர்ந்த தில்லை"
பேசியவர்: TSS இராஜன்
இந்து மதாபிமான சங்க விழா
காரைக்குடி
12.10.1934

9. "இந்து மதம் என்பதாக ஒரு மதமே கிடையாது. இந்து என்ற பெயர் நமக்கு அந்நியர் கொடுத்ததேயாகும்"
- பேசியவர்: வீ. பாஷ்யம் ஐயங்கார்,
ஆரியர் மாநாடு,
மணி ஐயர் மண்டபம், திருவல்லிக்கேணி
ஆதாரம் : "Madras Mail" dated 10.12.1940

முதலில் கங்கைக் கரையில் திருவள்ளுவர்சிலையை வச்சிருடா!

எங்கள் மண்ணில் வடவன் விவேகானந்தனை காலடியில் மிதித்தவனை!



இந்து துறவினுத் தூக்கிட்டுப்போனான் தருண்விஜய் !
குமரியில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதன் திறப்பு விழா, ஹரித்துவாரில்  நடக்க இருந்தது. ஆனால் தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருவள்ளுவர் சிலையை, கங்கை கரையோரம் நிறுவ அங்குள்ள இந்து சாதுக்கள் திருவள்ளுவன் தாழ்த்தப்பட்டவன் அவன்சிலையை புனிதமானக்கங்கையில் வைக்கவிடமாட்டோமென்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏராளமான இந்துக்கள் கங்கை கரையில் குவிந்ததால், பதற்றம் நிலவியது. பாதுகாப்பு கருதி ஏராளமான காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, கடைசி நேரத்தில் உத்தரகாண்ட் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியையும் உத்தரகாண்ட் முதலமைச்சர் ஹரிஷ் ராவத், ஆளுநர் கிருஷண் காந்த் பால் ஆகியோர் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். கடைசி நேரத்தில் விழா ரத்து செய்யப்பட்டது!

இவனுகதான் திருவள்ளுவரை இந்துனுத் தூக்கிட்டு வாரானுக!

இராஜா முதலில் கங்கைக் கரையில் திருவள்ளுவர்சிலையை வச்சிருடா!அப்புறம் காவியா கருப்பானுப் பார்ப்போண்டா!

நவம்பர் 7 வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்கள்.

நவம்பர் 7 வரலாற்றில் மறைக்கப்பட்ட  பக்கங்கள்.

பெருந்தலைவர் காமராஜர் வீட்டிற்கு தீவைத்து, கொலை செய்ய முயன்ற இந்துத்வா சக்திகள்..

காலம் : 7 - 11 - 1966
இடம் : புது தில்லி

அன்று தான் இந்தியப் பாராளுமன்றத்தின் மீது சங்கராச்சாரியார்களின் தலைமையில் சாதுக்கள் என்று தம்மைத்தாமே அழைத்துக் கொள்வோர் தாக்குதல் நிகழ்த்துகின்றனர்...

 ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜன சங்கம் போன்ற மத அமைப்புகளின் துணையுடன் (அட காந்தியைக் கொன்ற அதே கூட்டம் தான் கருப்புக் காந்தியையும் கொலை செய்ய முயன்று இருக்கின்றன).

தாக்குதலுக்கு பெரிய காரணம் என்று ஒன்றும் இல்லை... 'பசு வதைத் தடுப்புச் சட்டத்தினை' இந்திய நாட்டில் சட்டமாக அமுலாக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையே ஆகும். இந்தக் கோரிக்கையினை நிறைவேற்ற பாராளுமன்றத்தின் உறுப்பினர்களை வேண்டியே தில்லியின் வீதிகளில் சூலாயுதங்கள், பெட்ரோலில் நனைக்கப்பட்ட துணிகளோடு இன்னும் பல ஆயுதங்களுடன் 'அமைதியான' நிர்வாண சாமியார்கள் கூட்டம் அன்றுக் கூட்டம் போடுகின்றது.

ஒரு சனநாயக நாட்டினில் சட்டத்தினை கொண்டு வருவதற்கு ஆயுதங்கள் எந்தளவு பயன்படுத்தப்படும் என்று எனக்குத் தெரியவில்லை...ஆனால் அன்றைக்கு சாதுக்கள் ஆயுதங்களுடன் தான் களம் இறங்கி இருக்கின்றனர்....அதனுடையே வானொலி நிலையத்தினை தாக்குவது, தபால் நிலையத்தினை கொளுத்துவது, பாராளுமன்றத்தின் மீது கல் எரிந்துத் தாக்குவது, பேருந்துக்களை எரிப்பது போன்ற செயல்களையும் அவர்கள் செய்து இருக்கின்றனர்.

ஆனால் பசுவதைக்காக அவர்கள் ஏன் இந்தளவு ஆர்ப்பாட்டம் பண்ணினர் என்பது தான் புரியாதப் புதிராக இருக்கின்றது. காரணம் அவர்கள் புனிதமாக கருதும் வேதங்களிலேயே பசுவினைக் கொன்று விருந்து நடத்தி அதன் மாமிசத்தினைப் புசித்த பகுதிகள் எல்லாம் இருக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது இவர்கள் ஏன் திடீர் என்று பசுவின் மேல் இத்தனைப் பாசம் கொண்டு எழுந்து இருக்கின்றனர் என்பதும் சிந்திக்கத்தக்கதான ஒன்றாக இருக்கின்றது.

இவை அனைத்துடனே அவர்கள் செய்த மற்றுமொரு விடயம் பாராளுமன்றத்தில் இருந்து விலகி இருந்த காமராசரின் இல்லத்தில் அவர் உள்ளே இருக்கும் பொழுதே தீ வைத்து தாக்குதல் நிகழ்த்தியது தான். மதிய உணவினை அருந்தி விட்டு காமராசர் ஓய்வு எடுக்கும் பொழுது அந்தத் தாக்குதல் நிகழ்ந்து இருக்கின்றது. அதில் மயிரிழையில் உயிர் பிழைத்து இருக்கின்றார் காமராசர்.

இந்த சம்பவத்திற்கு முன்னர் அவர் ஆற்றிய உரைகளில் நாட்டின் சில பணக்காரர்களுக்கும் மத அமைப்பாளர்களுக்கும் தொடர்பு இருக்கின்றது என்றும் கூறி இருக்கின்றார்.

"பணக்காரனும் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களும் தான் சோசியலிசத்திற்கு எதிரிகள். பிறப்பால் உயர்ந்தவர்கள் ஏன் சோசியலிசத்தை எதிர்கின்றார்கள் தெரியுமா? பணக்காரர்களோடு சேர்ந்து சோசியலிசத்தை வர விடாது தடுத்து விட்டால் தங்களுடைய சாதியின் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்டிக் கொள்ளலாம் என்று நினைகின்றார்கள். நாம் விட்டு விடுவோமா என்ன?" - நவசக்தி (3-11-1966)

பின்னர் அவர் வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்திற்கு பின்னர் சேலத்தில் ஆற்றிய உரையில்,

"குறிப்பாக அவர்களுக்கு பயம் என்னைப் பற்றித்தான். இந்த காமராஜ் தான் சோசியலிச சமுதாயத்தினை அமைத்தே தீருவேன் என்று சொல்கின்றான். அவன் தான் அதிலே தீவிரமாக இருக்கின்றான் என்று நினைகின்றார்கள். என் வீட்டுக்கு தீ வைக்கின்றான். ஆனால் நான் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். கடமையை நான் செய்தே தீருவேன்..." -

 11-12-1966 சேலம் பேரூரை - நவசக்தி - 15-12-1966..

நன்றி..

காமராஜர் கொலைமுயற்சி சரித்திரங்கள்.

இந்த வரலாறு தெரியாமல், காமராஜரை கொலை செய்ய முயன்ற சக்திகளுக்கு ஆதரவளிக்கும் சகோதரர்கள் புரிந்து கொள்ளட்டும்

அமைதியையும் சமாதானத்தையும் போதித்த மண்ணுக்கு சொந்தமான பெரிய மதங்கள் இரண்டே

இந்த தேசத்தில் பிறந்து அமைதியையும் சமாதானத்தையும் போதித்த மண்ணுக்கு சொந்தமான  பெரிய மதங்கள் இரண்டே..

அந்த சமணத்தையும் பவுத்தத்தையும் தழுவிய என் தமிழ் மக்களையும் கூட தன் நயவஞ்சகத்தால் பார்ப்பனியம் கழுவிலேற்றி கொன்றதே வரலாறு...
பழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் பவுத்த சமண நூல்கள் என்பதே முழுமுதல் ஆதாரம்...

அந்த நூல்களை அச்சிலேற்றும் போது  தங்களை உள்நுழைத்த சண்டாளர்கள் பார்ப்பனியர்...

திருக்குறளிலேயே 30 குறள்கள் பார்ப்பனியத்தால் திணிக்கப்பட்டதென்று சங்கிகள் கொண்டாடும்  வ.வு.சி யே ஆய்ந்தறிந்து கூறியுள்ளார்....

அன்று முதலே ஆள்பவர்களை அடிமையாக்கி தங்களை சுமக்க வைக்கும் சூட்சுமம் பார்ப்பனியத்திற்கு கைவந்த கலை...

தன் முன்னோர்களை கொன்ற
வந்தேறி பார்ப்பனிய இந்து மதம் ஏற்பவன் வரலாறு தெரியாத பார்ப்பனிய அடிமை....

யார் இந்த அர்சூன் சம்பத்

யார் இந்த #அர்சூன்_சம்பத்

இவரைப்பற்றி தெறிந்து கொள்வோம்!

அர்சூன் சம்பத் 20 ஏப்ரல் 1965ல் பிறந்தார். சிறு வயது முதல்  கிறிஸ்தவ பள்ளியில்  படித்தார். படிப்பு சரியாக ஏறவில்லை என்ற காரணத்தால் 12ம் வகுப்பை பாதியில் விட்டு வெளியே வந்தார். அதன்பிறகு தந்தையின் சலூனில் சிறிது காலம் வேலை செய்தார். அப்போது அங்கு முடி வெட்ட வந்த சில இந்துத்துவ மதவெறியர்களுடன் அர்சூன் சம்பத்துக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்களுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்து கொண்டார். பிறகு இந்து முன்னனி ராம கோபாலுடன் இனைந்து முஸ்லீம் விரோத செயலில் ஈடுபட்டார் உயர்சாதி ராம கோபாலனோ இவரை சூத்திரன் (தாழ்ந்த சாதி) என்பதால் எடுபுடி வேலைக்குமட்டும் பயன்படுத்திக்கொண்டு சற்று தள்ளியே வைத்திருந்தார் அதை பொருத்துகொள்ளமுடியாமல் தானும் ஒரு தலைவனாகி M L A வாகும் ஆசையில் தொடர்ந்து இந்து மக்கள் கட்சி  ( ? )என்ற ஒரு கட்சியை தொடங்கி மத வெறுப்பு அரசியல் செய்ய துவங்கினார்.

இதை கண்ட அர்சூன் சம்பத்  தந்தை கந்திப்பான், தாயார் தங்கமனி அம்மாள் இருவரும் மிகுந்த மனஉளைச்சல் அடைந்தனர். கடைசியில் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்ற பின் அவர்கள் மன நிம்மதி கிடைத்ததால் இருவரும் அந்த பெந்தகொஸ்தே சபையில் ஞானஸ்தானம் எடுத்து மதம் மாறினர். இதை கண்டு எரிச்சல் அடைந்த அர்சூன் சம்பத் அவர்களுடன் தொடர்பை துண்டித்தார்.

அதற்கு பின்பு அர்சூன் சம்பத் மனைவி சுப்புரத்தினம், கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். தான் வேலை செய்யும் குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியின் அருகில் உள்ள கிறிஸ்தவ சபையில் அங்கத்தினராக மாறினார். இந்த சமயத்தில் தான் நித்தியானந்தா சாமியாரால் இந்த செய்தி வெளி உலகுக்கு  தெரியவந்தது. அர்சூன் சம்பத்தும், அவர் மகனும் சுப்புரத்தினத்தை  அனுதினம் இந்து மதத்துக்கு வா என்று தொல்லை கொடுத்து மிரட்டி வந்தனர். குடும்பத்தில் நிலவும் பிரச்னை காரணமாக, அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை தின்று, செப்டம்பர் 19, 2017 அன்று  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். KG மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பின்பு காப்பாற்றப் பட்டார்.

அதன் பிறகு நீ கிறிஸ்தவ மதத்தில் இருந்து கொள், எனக்கு ஆட்சேபனை இல்லை என்று அர்சூன் சம்பத் சொன்னார். தற்போது அர்சூன் சம்பத் மனைவி, தாய், தந்தை அனைவரும் கிறிஸ்தவர்கள்.
இவர் மட்டும் சொகுசு வாழ்க்கைக்காக RSS மற்றும் VHP மற்றும் ப ஜ கவின் கைபாவையாக முஸ்லீம் மற்றும் கிருஸ்த்துவ மதத்துக்கு எதிராக தினம் ஒரு TV விவாதத்தில் பங்கெடுத்து தலைப்புகளுக்கு சம்மந்தம் சம்மந்தமில்லால் பேசிவருபவர். சமீபத்தில் ஒரு மாலை வாங்கிசென்று
நடிகர் ரஜினியை சத்தித்து நல்லவர் வல்லவர் என்று புகழ்பாடினார் ரஜினியும் இவர் சரித்திம் தெறிந்து கூடநின்று ஒருபோட்டோவுக்கு போஸ் கொடுத்து இனி திரும்பி இங்கே வரவேண்டாம் சாமி என்றுசொலி வந்த வழி அனுப்பினார்.
  பிறகு நடிகர் கமல்ஹாசனை சந்திக்க சென்றார் இவரின் ஜாதகம் கமலுக்கு அத்துபடி அதனால்  போட்டோஎடுக்காமலே வழியனுப்பி வைத்தார்.
   எங்கெல்லாம் இந்து முஸ்லீம் ஒற்றுமையோ அங்கெல்லாம் சென்று ஏதாவது ஒரு பிரச்சின்யை உண்டுபன்னி பிரிவினையை ஏற்படுத்துவதே இந்த "தேச"பக்தரின் வேலை

திருடத்துடிக்கிறது சனாதனக் கூட்டம்.

காவி நிறத்தையே சமண மதத்திடமிருந்து திருடியதுதான் இந்த சனாதனக் கூட்டம்.

புலால் மறுப்பை பௌத்தத்திடமிருந்து திருடியது.

முருகனை சைவத்திடமிருந்து திருடியது.

கண்ணனை வைணவத்திடமிருந்து திருடியது.

பிராமணீய உயிர் கொலை யாகத்தை எதிர்த்து புரட்சி செய்தப் புத்தரை விஷ்ணு அவதாரம் என்று திருடியது.

இந்துத்துவாவை மறுத்து சமரச சன்மார்க்கம் கண்ட வள்ளலாரைத் திருடியது.

இந்து என்பதை ஏற்காது தனியொரு வழிபாட்டை  உருவாக்கிய
சாமி வைகுண்டரைத் திருடியது.

இசுலாமியர்களோடு இயைந்து வாழ்ந்த மராத்திய சூத்திரர் சிவாஜியைத் திருடியது.

ஆர்எஸ்எஸ்சை தடை செய்த பட்டேலை காங்கிரஸ் கட்சியிடமிருந்து திருடியது.

'இந்துவாக ஒருநாளும் இறக்க மாட்டேன்' என்று முழங்கிய அண்ணல் அம்பேத்கரைத் திருட நெடுநாளாய் முயற்சித்தது.

தற்போது அதன் நீட்சியாக, வள்ளுவரைத் திருடத்துடிக்கிறது.

கழக கொள்கைப்பரப்பு செயலாளர்
                திரு.ஆ.ராசா எம்.பி

கீதாசாரம்

கீதாசாரம்:
.
.
இந்த பெயரில் பல விதமான பதாகைகள் நீங்கள் பார்த்திருப்பீர்கள், பலர் பலவிதமான உரைகள் விளக்கங்கள் சொல்லி கேட்டிருப்பீர்கள்
.
.
நான் நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் லிளக்க முயல்கிறேன்
.
.
போர்க்களத்தில் அர்ஜுனன், தன் ஆயதங்களை கீழே போட்டுவிட்டு, இறங்கி விடுகிறான், கிருஷ்ணன் என்ன ஆயிற்று அர்ஜுனா, உன் உறவினர்களை கொல்ல வேண்டுமே என்று குழப்பம் அடைந்து தயங்குகிறாயா என்று கேட்கிறான்.
.
.
அர்ஜுனன் இல்லை கிருஷ்ணா போர்களத்துக்கு வந்துவிட்டால் சண்டை செய்து தான் ஆகணும் என்று எனக்கும் தெரியும், ஆனால் இந்த போரில் வந்திருக்கும் எல்லா சத்திரிய வீரர்களையும் நான் கொன்றுவிட்டால்
.
.
அவர்களின் மனைவிகள், மகள்கள் மற்றும் மற்ற சத்ரிய பெண்கள் எல்லாரும் இந்த போருக்கு பின், திருமணம் செய்து கொள்ள சத்திரிய ஆண்கள் குறைவாக இருப்பதால் வேறு சாதி மற்றும் வருண ஆண்களை திருமணம் செய்து கொண்டு வர்ணகலப்பு ஏற்பட்டு, இந்த புனிதமான மனுதர்மம் அழிந்து விடுமே என்று தான் அஞ்சுகிறேன் என்று சொல்கிறான்
.
.
அதற்கு கிருஷ்ணன் “சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்” இந்த நாலு வர்ணம் என்பதை உருவாக்கியவனே நான் தான் என்று மேற்கோள் காட்டி, இந்த நாலு வர்ணம் சார்ந்தவர்கள் என்ன என்ன செய்ய வேண்டும் என்ன என்ன செய்ய கூடாது என்றெல்லாம் விளக்கமாக சொல்லிவிட்டு
.
.
கடைசியாக அர்ஜுனனை பார்த்து சொல்லும் பகவத்கீதையின் கடைசி வரிகள் இது தான்
.
.
பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
.
.

அதாவது நீ எதை பற்றியும் கவலைபடாதே அர்ஜுனா, எப்போதெல்லாம் இந்த மனுதர்மத்தை யாராவது கெடுக்க அழிக்க முயற்சி செய்கிறார்களோ, அப்போதெல்லாம் நான் யுகங்கள் தோறும் பிறப்பெடுத்து, மனு தர்மத்தை காப்பேன்
என்று அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் உத்திரவாதம் கொடுத்த பிறகே அர்ஜுனன் பாரதபோரில் ஈடுபடுகிறான்
.
.

இதுவே ஒரு தேங்காய் சிரட்டையின் பின்பக்கம் (Nutshell) எழுதும் அளவுக்கு சுருக்கமான  கீதையின் மொத்த சாரம்,                  
.
.
FYI: மேலே உள்ள மொத்த பதிவு 192 வார்த்தைகள் கொண்டது 100ல் முடிக்க முடியவில்லை என்று வருந்துகிறேன்.

ஆரிய வேதத்திற்கு எதிரானது தமிழ் குறள்..

ஆரியம் நான்கு வருணம் என்கிறது..
குறள் பிறப்பொக்கும் என்கிறது..
ஆரியம் ஏர்பிடிப்பது சூத்திரனுக்குரியதாக கூறுகிறது..
குறள் உழவனை போற்றுகிறது..
ஆரிய புராணங்களில் சூதாட்டங்கள் வருகின்றன..
குறள் சூதாடுவது தவறு என்று கூறுகிறது..
பிராமணன் பிச்சை வாங்க வேண்டும் என்கிறது ஆரியம்..
இரந்து வாழின் உலகியற்றியவன் கெட்டழியட்டும் என்கிறது குறள்..
மரணம் வரின் எந்தச் செயலையும் செய்யலாம் என்கிறது ஆரியம்..
மானம் உயிரினும் பெரிது என்கிறது குறள்..
ஆரிய புராணங்களில் பல மனைவிகள் உண்டு..
குறள் பிரண்மணை நோக்காமை என்கிறது..
வேதம்..பசு, குதிரைகளை, வேள்வியில் இடலாம் என்கிறது..
குறள் கொல்லாமை பற்றி பேசுகிறது..
வேதம் விதி வலியது என்கிறது..
குறள் விதியை முயற்சியால் வெல்லலாம் என்கிறது..
வேதம் தாழ்ந்த சாதிகள் கல்வி கற்க கூடாது என்கிறது.
குறள் எல்லோரும் கற்க சொல்கிறது..
ஆரிய வேதம்=சுயநலம்.
தமிழ் குறள்=பொதுநலம்
வேதத்திற்கு எதிரானது குறள்..
வாழ்க தமிழ்..
வாழ்க திருவள்ளுவர்..
வாழ்க திருக்குறள்..

குடமுழுக்கு(கும்பாபிசேகம்)

குடமுழுக்கு(கும்பாபிசேகம்)
சூத்ரர்களும்,பஞ்சமர்களும் கோயிலுக்குள் போகமுடியாது அதற்கு காரணம் ஆகமம் போட்ட ஆணைதான் காரணம் அதைத்தான் பார்ப்பனர்கள் பின்பற்றி வந்தனர்;
ஆகமம் அப்படி என்னதான் ஆணையிட்டது?
"த்ருஷ்ட்வா தேவஹா பலாயதே என்று போகிற பாஞ்சாராத்ர ஆகம ஸ்லோகம் என்ன உத்தரவிடுகிறதென்றால் பல ஆச்சார அனுஷ்டாங்களின் அடிப்படையில் பகவானை விக்ரகங்களில் இருத்தி வைத்திருக்கிறோம்.இந்த புனிதமான கோயில்களுக்குள் சூத்ரனோ,பஞ்சமனோ ஒரு அடி எடுத்து வைத்தால் கூட அனுஷ்டாங்கள் கறைப்பட்டு விடும்.அதனால் அந்த விக்ரகங்களில் இருந்து பகவான் பட்டென ஓடிப்போய் விடுவார்.

    அதனால் சூத்ரனோ,பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் எடுத்து வைத்தால்...விக்ரகம் வெறுங்கல்லாகி விடும்.பகவான் அதில் கஷணம் கூட தங்கமாட்டார்.எனவே அவர்களை கோயிலுக்குள் விடாதே...என்கிறது ஆகமம்.

  ஒரு வேளை மீறி நுழைந்து விட்டால்?...

  அதற்கு பரிகாரம்தான் சம்ப்ரோக்ஷணம் அதாவது குடமுழுக்கு(கும்பாபிசேகம்)என பரிகாரமும் பண்ணி வைத்திருக்கிறது ஆகமம்.

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்-2

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்-2

பாட புத்தகத்தில் இரட்டைமலை சீனிவாசனார் மற்றும் எம்.சி.ராஜா வரலாறு 😍

ஆங்கில வழியில் 76,77 வது பக்கங்களிலும்
தமிழ் வழியில் 85,86 வது பக்கங்களிலும் இடம்பெற்றுள்ளது 💥💥


நாங்க ஒடுக் பிராமணர்கள்...

நாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான்.. !

இந்தியாவில் செட்டில் ஆன கொஞ்ச நாளில் கறி மீனை சாப்பிடும் பழக்கத்தை இழந்தோம். சொந்த பெண்களுக்கு மொட்டை போட்டு மூளியாக்கும் உரிமையை இழந்தோம்.
அதை மீட்க இப்போது முயன்றால்..
எங்காத்துப் பெண்களே எங்களை விளக்கமாற்றால் அடிப்பார்கள்.

கடவுள் கையேந்தி நிற்கும் அவலம் கண்டதுண்டா நீங்கள்? அது தமிழ்நாட்டில் தினசரி காணக்கிடைக்கும் காட்சி.

கடவுளுக்கும் மேலான எங்களை கடவுளாகவே மக்கள் கருதி வந்தார்கள். கோயில் ராஜாக்கள் வசம் இருந்தது. ராஜாக்களோ எங்கள் வசம் இருந்தார்கள். எங்கள் வீடுகள் வெள்ளம் அண்டாத மேடான நிலத்தில் இருந்தது.

வயலில் கால் வைக்காமலேயே எங்கள் வெள்ளாமை வீடு வந்து சேர்ந்தது. ”சாப்பிடுறதுதான் தயிர் சாதம், மோதிப்பார்த்தா உயிர்சேதம்” என ஸ்டேட்டஸ் போடவேண்டிய நிலை
எங்களுக்கு அன்று இல்லை.
காரணம் ஊரில் எல்லோருக்கும் அது தெரிந்திருந்தது.

ஹிந்து ராஜாக்கள் காலத்தில் வாழ்ந்தது போலவே முகலாயர்கள் காலத்திலும் சௌபாக்கியத்துக்கு குறைவின்றியே வாழ்ந்துவந்தோம்.
வெள்ளைக்காரன் காலத்திலும் அசௌகர்யம் என்று ஒன்று இல்லை.

சாதி ஒழிப்பு, சூத்திரர்களுக்கு கல்வி போன்ற சில அனாச்சாரங்கள் அப்போது இருந்தன என்றாலும் அதிகாரம் எங்களிடம் இருந்தது. உலகமே பயந்த ஹிட்லருக்கு நாங்கள் பயப்படவில்லை, அவன் வருகையை எதிர்பார்த்து ஜெர்மன் மொழி கற்ற வீர சமூகம் எங்களுடையது.

ஆனால் இன்று அவை பழங்கதை ஆகிவிட்டன. முதல்வரைக் காட்டிலும் அதிகாரம் கொண்ட தலைமைச் செயலாளர் எங்களவர். ஆனாலும் மக்களிடம் மரியாதை இல்லை. எல்லா பெரிய நிறுவனங்களின் தலைமைப் பீடங்களும் எங்கள் வசம்தான். ஆனாலும் எங்கள் குலக் கொழுந்துகளுக்கு மீடியா பெண்களை வேசி என அழைக்கும் உரிமைகூட மறுக்கப்படுகிறது.

மீடியா ஓனர்கள் எங்களை பாத கமலங்களில் வீழ்ந்துகிடக்கும் சூழல் இருந்தாலும் எங்கள் பிள்ளை பாண்டேவால்கூட எங்களை முழுமையாக ஆதரிக்கமுடியவில்லை. வியாபாரத்துக்காக பா.ஜ.க.வை நோண்டி நோண்டி கேள்வி கேட்கவேண்டிய தலைவிதியல்லவா அவனுக்கும்?

ஆயிரம்தான் கூமுட்டையாக இருந்தாலும் சுப்ரமணியசாமியை கோமாளிபோல பார்ப்பது நியாயமா? குருமூர்த்தியும் எச்.ராஜாவும் தமது குலவழக்கப்படி
ஒரு வதந்தியைக்கூட ட்விட்டர் வாயிலாக பரப்ப முடியாத அளவுக்கு மக்கள் அவர்களை அம்பலப்படுத்துகிறார்கள்.

அப்படிப்பட்ட கொடியவர்களின் கூடாரமாக இந்த மாநிலம் இருக்கிறது. மோடியையே அதிகாரம் செய்யவல்ல ஜாதி எங்களுடையது.

ஆனாலும் ஷர்மா சாஸ்திரிகளால் ”நம்ம ஜாதி பிள்ளைகள் ஸ்கூல்ல மத்த சாதி கொழந்தைகளோட சாப்பாட்டுல கைவச்சு சாப்பிடக்கூடாது” ன்னு நேரடியாக சொல்ல முடியவில்லை.. அது சுகாதாரம் இல்ல, அதனால் பல விளைவுகள் ஏற்படும்னு மையமாக புலம்ப வேண்டியிருக்கு.

எங்கள் தர்மத்தைக்கூட குசுவைப்போல நசுக்கி விடவேண்டியிருக்கிறது. இதையெல்லாம் சொல்லி புலம்பி ஸ்டேட்டசோ வீடியோவோ போட்டால் 28 லைக் வருவதற்கும் 750 ஹாஹா ஸ்மைலிகள் அசுர பாணங்களாக வந்து எங்கள் நெஞ்சைத் தைக்கிறதே…

கோட்சே எங்கள் பிள்ளை.
கோட்சேவை கொஞ்சி மகிழ முடியவில்லை. தொட்டால் பட்டுக்கொள்ளும் அம்பேத்கரை எல்லாம் பாராட்டித்தொலைய வேண்டியிருக்கிறது.

சொந்தப் பிள்ளைக்கு இன்ஷியல் கொடுக்க முடியாமல் ஊரான் பிள்ளையை தன் பிள்ளையென கொஞ்ச வேண்டிய துரதிருஷ்டம் வேறு ஜாதிக்கு வாய்த்திருக்கிறதா?

மஹாராஜாக்களை எங்கள் காலடியில் விழுந்து கிடக்க வைத்த சமூகம் இன்று காமெடியன்களை ஐகான்களாக வைத்திருக்க வேண்டிய அவல நிலையில் இருக்கிறது.

இன்று இருக்கும் பிராமண தலைவர்களை பாருங்கள், சுப்ரமணிய சாமி, எஸ்.வி.சேகர், எச்.ராஜா, நிர்மலா சீதாராமன்… இந்த பெயர் வரிசையை படிக்கும்போது கெடா குமாரு, டுமீல்குப்பம் வவ்வாலு எனும் சினிமா டயலாக் எனக்கே நினைவு வந்து தொலைக்கிறது.

பிறகு ஊர்ஜனம் மட்டும் சிரிக்காமல் இருக்குமா? இந்த எழவெடுத்த இன்டர்நெட் ஒருகாலத்தில் எங்கள் அக்ரஹார திண்ணை போல எத்தனை ரம்மியமாக இருந்தது. இப்போது பீஃப் கடைக்கு போவதுபோல நாங்கள் அங்கு ரகசியமாகத்தான் போக வேண்டியிருக்கிறது.

ஆசிட் அடிப்பது கஞ்சா கேஸ் போடுவது என பல வீர வரலாறு இருந்தாலும் எங்கள் குலமங்கை ஜெயாவை வைத்தே சங்கராச்சாரியை கைது செய்ய வைத்துவிட்டதே இந்த சூத்திர கும்பல்.

சரி நிம்மியை அடுத்த ஜெ.வாக மாற்றிவிட்டால் எல்லாம் ஷேமமாக நடக்கும் என நாங்கள் ஆறுதல்படும் வேளையில், அந்த தைரிய லட்சுமியை கண்டாலே தமிழக இளைஞர்கள் கூட்டம் ஓணானைக் கண்ட 80-ஸ் கிட்ஸாக மாறி விர்ச்சுவல் கல்லெடுத்து அடிக்கின்றன.

போகட்டும் ஜனநாயக மேக்கப் போட்ட பத்ரியை தலைவராக்கலாம் என்றால் அவருக்கும் அதே ஓணான் டிரீட்மெண்ட் கிடைத்துவிடுமோ என அடிவயிறு கலங்குகிறது.

அதுமட்டும் இல்லாமல் இருக்கும் மிச்சம் மீதியெல்லாம் பொறுக்கியாகவும் கூமுட்டையாகவும் இருக்கிறது. இதில் இருக்கும் டெமாக்ரடிக் மூஞ்சியையும் காவு கொடுக்க பயமாயிருக்கிறது.

மோடியின் ராஜகுரு குருமூர்த்தி அரும்பாடுபட்டு அறிமுகம் செய்த தீபா விளங்கவில்லை.. ஓ.பி.எஸ்.சை வளர்க்கிறேன் என கிளம்பினார் அதனால் சசிகலா மீதிருந்த ஜனங்களின் கோபம் குறைந்து போனதுதான் மிச்சம்.

ரஜினியை உசுப்பினார், அன்றிலிருந்து அது வரலாற்றில் இல்லாத அளவுக்கு உச்சகட்ட மெண்டல்போல உளறிவைக்கிறது. இதையெல்லாம் பார்த்த எங்கள் வீட்டு மாமியே, இந்த தரித்திரம் பிடித்தவன் மூஞ்சியில் முழிச்சிட்டு போனா பால் பாக்கெட்கூட கிடைக்கிறது இல்லை என புலம்புகிறாள்.

இத்தனை காலம் நாத்திகம் பேசி மாட்டுக்கறி தின்றவராயிற்றே எனும் நன்றியில்லாமல்..பிராமண வீட்டுப் பிள்ளை கமலையும் கழுவி ஊற்றுகிறார்கள், அய்யங்கார் வீட்டு மருமகன் ரஜினியையும் பார்க்குமிடமெல்லாம் துப்புகிறார்கள்.

இவனுங்களை எப்படி கரெட்க் பண்றதுன்னே தெரியலையே என ஆர்யா போல புலம்பியே எங்கள் மாமாக்கள் பலர் உலக வாழ்வை முடித்துக்கொண்டு விட்டார்கள்.

ஒரு காலத்தில் எங்கள் வீட்டு நாயாக இருந்த மக்களின் பிள்ளைகள் எதிரியின் வேட்டை நாயாக மாறி எங்களையே கடிக்க வருகின்றன.

ஏதோ ஆதிக்க சாதிச்சங்கங்களும் கிருஷ்ணசாமி வகையறாக்களும் (பேரை மாத்தி வச்சுக்கோடாம்பி… அவா அவாளுக்குன்னு ஒரு கல்ச்சர் இருக்கோல்யோ) எங்களை காலைக் கழுவி சேவகம் செய்வதால் எங்கள் மூச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

கிருஸ்தவ சூத்திரன் விஜய் படத்தை காலி செய்ய எங்கள் பிராமண தளபதி ராஜாவை அனுப்பினால்..தமிழக அசுர கும்பல் அந்த மெர்சல் படத்தை வெறித்தனமாக ஓடவைக்கிறது. அதன் பிறகு கோடம்பாக்க டைரக்டர்கள் எல்லோரும் பா.ஜ.க.வை திட்டி காட்சி அமைப்பதற்கென்றே தனி டிஸ்கஷன் வைத்தார்கள் என கேள்விப்பட்டேன்.

ஏதோ வருமான வரித்துறை எங்கள் வசம் இருப்பதால் தப்பித்தோம். அடுத்த விஜய் படத்தை ஒழிக்க நாங்கள் ஜெயமோகன் எனும் சூத்திரனைத்தான் அனுப்ப வேண்டியிருந்தது.

ஒரு காலத்தில் எங்கள் காலடியில்தான் கிடந்தது சினிமாத்துறை. மணி சார், பாலச்சந்தர் சார் என பயபக்தியோடு ஒலித்த குரல்களை இன்று கேட்க முடியவில்லை. அரவிந்த் சாமி, மாதவன் என வெண்ணிற சாக்லேட் பாய்களை இன்று சீந்த நாதியில்லை.. விஜய் சேதுபதி போன்ற கருப்பர் கூட்டமோ கால்ஷீட் இல்லாமல் பறந்து பறந்து வேலை செய்துகொண்டிருக்கிறது.

சினிமா மட்டுமா எங்களை விட்டு தொலைந்தது? கஷ்டப்பட்டு மந்திரம் ஓதி மஹாராஜாக்களுக்கு சோப்பு போட்டு சம்பாதித்த சதுர்வேதி மங்கலங்கள் எம்மிடம் இருந்தன.. அவற்றை எல்லாம் நோகாமல் – உழைத்துப் பிழைத்த மக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தர்மம் செய்தோம்..

இந்தியாவில் செட்டில் ஆன கொஞ்ச நாளில் கறி மீனை சாப்பிடும் பழக்கத்தை இழந்தோம். சொந்த பெண்களுக்கு மொட்டை போட்டு மூளியாக்கும் உரிமையை இழந்தோம். அதை மீட்க இப்போது முயன்றால் எங்காத்துப் பெண்களே எங்களை விளக்கமாற்றால் அடிப்பார்கள்..

ஸ்கூல் வாத்தியார், தாசில்தார், பேங்க் மேனேஜர் என நாங்கள் கட்டியாண்ட துறைகள் எல்லாம் கையைவிட்டுப் போய்விட்டது. ஆடிட்டர், நீதிபதி, கவர்னர் என சில டிபார்ட்மெண்ட்கள் மட்டும் மிச்சம் இருக்கின்றன. ஆனாலும் அங்கேயும் சில கறுப்பு உருவங்கள் வந்து எங்களோடு ஈஷிக்கொண்டு நிற்கின்றன.

மயிலாப்பூர் மாம்பலமாவது மிச்சமானதா என்றால் அதுவும் இல்லை. அயோத்தியா மண்டப சொற்பொழிவானாலும் தெற்கு மாடவீதி எஸ்.வி.சேகர் மீட்டிங் ஆனாலும் எங்கள் இனத்தில் இருந்து வெறும் கிழடு கட்டைகள்தான் வருகின்றன. சுகர் பேஷண்ட்டுக்களை வைத்து எங்கிருந்து இன்னொரு குருஷேத்ரப் போரை நடத்துவது? அப்படி போரை நடத்தினாலும் அதை முன்னின்று நடத்த வேண்டிய சின்ன சங்கராச்சாரி மல்லாக்கப் படுத்தால் எழவே மாமாங்கம் ஆகும் போலிருக்கிறது.

போகட்டும், இன்றைய தமிழகம் வேண்டுமானால் எங்களை நக்கல் செய்யலாம். ஆனாலும் எங்களை ஆண்டவன் அப்படி அம்போவென விட்டுவிடமாட்டான்.

இன்னமும் கோயில்கள் எங்கள் வசம்தான் இருக்கின்றன. அங்கேயெல்லாம் ஷாகா நடத்தி வேண்டிய அளவுக்கு முட்டாள்களையும் பொறுக்கிகளையும் ரவுடிகளையும் உருவாக்குவோம்.

எங்கள் பிள்ளைகள் எல்லாம் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டன. மேற்கத்திய சாவர்க்கர் ட்ரம்ப் அவர்கள் அதிபராக இருக்கிறார். ஆகவே அங்கிருந்து எங்கள் ராஜாங்கத்தை நடத்துவோம்.

மோடி என்றில்லை யார் இந்தியாவின் பிரதமரானாலும் அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் காணாமல் போகும் அல்லது தனியாருக்கு கைமாற்றிப்போகும்.

இலவசக் கல்வி ஒழிக்கப்பட்டு நாடெங்கும் படிப்பறிவற்ற முட்டாள்கள் இருந்தால்
வாட்சப் வீடியோ வழியே வந்து நாங்கள் ராமராஜ்யம் அமைப்போம்.

சூத்திர துதிகளின் பக்தியும் முட்டாள்த்தனமும் எங்களைக் காப்பாற்றும்..
கிட்டுணசாமி, அரிச்சுனசாமிகளின் அடிமை சாசனம் எங்களை கவசம்போல் காப்பாற்றும்.
வாட்சப் ஃபார்வேர்டு தகவல்களை நம்பும் மிடில்கிளாஸ் அரைவேக்காடுகள் உள்ளவரை பிராமணீயம் எந்த சவாலையும் தாங்கும்.

ஐஐடி உணவுக்கூடம்


படம் 1:
ஐஐடி உணவுக்கூடத்தில் அசைவம் சாப்பிடுவோருக்கு மட்டும் எதிராக எழுதப்பட்ட #அதர்மம்.


படம் 2:
#ஐஐடிசைவங்கள் இருவகைப்படும். 'வெங்காயம்-பூண்டு இல்லா சைவம்' அதில் ஒருவகை. இரண்டு சைவத்துக்கும் தனித்தனி உணவுக்கூடம்.


படம் 3:
அசைவம்/சைவம் சாப்பிடும் இடம்தான் தனித்தனியாக பார்த்திருக்கிறேன்... ஆனால், #கைகழுவுமிடமும் #தனித்தனியாக ஐஐடியில்தான் காண்கிறேன்.

இதில் இரண்டை கேள்விக்குட்படுத்தி கொஞ்சம் சிந்திப்போம்:

1. அசைவதுக்கு எதிராக மட்டும் வைக்கப்பட்டது போல... பூண்டு-வெங்காயத்துக்கு எதிரான ஏதேனும் ஒரு வாசகம், அதை சாப்பிடும் இடத்தில் ஏதுமில்லையே ஏன்..?

2. தனித்தனி உணவுக்கூடம் இருந்தாலும்... பூண்டு-வெங்காயமற்ற சைவத்துக்கும் சாதா சைவத்துக்கும் தனித்தனி கைகழுவும் இடமில்லையே ஏன்..?

அப்படின்னா...
இந்த பாகுபாடுகள் யாவும் 'உணவை அடிப்படையாக வைத்து அல்ல' என்று நமக்கு எளிதாக புரிகிறதல்லவா..?!

Monday, November 11, 2019

அயோத்தி பாபரி மஸ்ஜித் தீர்ப்பு: அரசியலமைப்பின் மாணவராக தீர்ப்பை ஏற்றுக் கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாக உள்ளது!

அயோத்தி பாபரி மஸ்ஜித் தீர்ப்பு: அரசியலமைப்பின் மாணவராக தீர்ப்பை ஏற்றுக் கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாக உள்ளது!- முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்கூலி!

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நீதிபதி அசோக் குமார் கங்குலி, அயோத்தி தீர்ப்பு அவரது மனதில் ஒரு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது என்றும் அவர் “மிகவும் குழம்பிப்போய் உள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:
அங்கு ஒரு மஸ்ஜித் இருந்ததை சிறுபான்மையினர் பல தலைமுறைகளாகக் கண்டு வருகிறார்கள்.  அது இடிக்கப்பட்டுள்ளது.  அதன் மீது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, ஒரு கோயில் கட்டப்பட இருக்கிறது.  இது என் மனதில் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளது….  அரசியலமைப்பின் மாணவராக, அதை ஏற்றுக்கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாகும்.

1856-57 இல் இல்லையென்றாலும், நிச்சயமாக 1949 முதல், அங்கு தொழுகை நடத்தப்பட்டு வந்துள்ளது., அது ஆவணங்களில் உள்ளது.  எனவே, நமது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோதும், தொழுகை அங்கு நடத்தப்பட்டு வந்துள்ளது.  தொழுகை நடத்தப்பட்ட அந்த இடம்,  ஒரு மஸ்ஜித் என்று அங்கீகரிக்கப்பட்டால், சிறுபான்மை சமூகத்திற்கு அவர்களின் மத சுதந்திரத்தை பாதுகாக்கும் உரிமை உண்டு -அது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமை.

ஒரு முஸ்லீம் இன்று என்ன பார்ப்பார்?  ஒரு மஸ்ஜித் பல ஆண்டுகளாக இருந்தது, அது இடிக்கப்பட்டது.  இப்போது அந்த இடம் ராம் லல்லாவுக்கு சொந்தமானது என்று கூறி, அந்த இடத்தில் ஒரு கட்டிடம் வர நீதிமன்றம் அனுமதிக்கிறது.  பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த நில உடைமை குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யுமா?  அரசியலமைப்பு வந்தபோது அங்கு ஒரு மஸ்ஜித் இருந்தது என்பதை உச்ச நீதிமன்றம் மறக்குமா? ”அரசியலமைப்பு மற்றும் அதன் விதிகள் மூலம், அதைப் பாதுகாப்பது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பாகும். ”
அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு இருந்தவை உச்சநீதிமன்றத்தின் பொறுப்பில் வராது.  அதற்கு முன்பு இந்திய ஜனநாயக குடியரசு என்று எதுவும் இருக்கவில்லை.பின்னர்
ஒரு மஸ்ஜித் இருந்த இடத்தில், , ஒரு பெளத்த ஸ்தூபம் இருந்த இடத்தில், ஒரு தேவாலயம் இருந்த இடத்தில்… இதுபோன்ற தீர்ப்புகளை  நாம் வழங்க ஆரம்பித்தால் , நிறைய கோயில்கள் மற்றும் மஸ்ஜிதுகள் மற்றும் பிற கட்டமைப்புகள்   இடிக்கப்பட வேண்டியிருக்கும்.  நாம் புராண ‘உண்மைகளுக்கு’ செல்ல முடியாது.  ராம் யார்?  வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட சூழ்நிலை ஏதேனும் உள்ளதா?  இது நம்பிக்கை சார்ந்த விஷயம்.

விசுவாசத்தின் அடிப்படையில், நீங்கள் எந்த முன்னுரிமையையும் பெற முடியாது என்று உச்ச நீதிமன்றம் இந்த முறை கூறியது.  மஸ்ஜிதின் கீழ், கட்டமைப்புகள் இருந்தன என்று அவர்கள் சொல்கிறார்கள்.  ஆனால் அந்த கட்டமைப்பு ஒரு கோயில் அல்ல.  ஒரு கோவிலை இடித்ததன் மூலம் மஸ்ஜித் கட்டப்பட்டது என்று யாரும் சொல்ல முடியாது.  இப்போது ஒரு மஸ்ஜிதை இடிப்பதன் மூலம், ஒரு கோயில் கட்டப்படுகிறதா?

500 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தை யார் வைத்திருந்தார்கள், யாருக்கும் தெரியுமா?  நாம் வரலாற்றை மீண்டும் உருவாக்க முடியாது.  எது இருந்ததோ அதைப் பாதுகாப்பதே நீதிமன்றத்தின் பொறுப்பு.  எதுவாக இருந்தாலும் உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும்.  வரலாற்றை மீண்டும் உருவாக்க நீதிமன்றத்திற்கு எந்த கடமையும் இல்லை.  ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு என்ன இருந்தது, என்பதை நீதிமன்றம் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. மஸ்ஜித் இருந்தது என்றுதான் நீதிமன்றம் சொல்ல வேண்டும் – அது ஒரு உண்மை.  ஒரு வரலாற்று உண்மை மட்டுமல்ல, (ஆனால்) எல்லோரும் பார்த்த ஒரு உண்மை.  அதன் இடிப்பு அனைவராலும் பார்க்கப்பட்டது.  அதை மீட்டெடுக்க வேண்டும்.  அவர்களுக்கு(முஸ்லிம்களுக்கு) ஒரு மஸ்ஜிதை வைத்திருக்க உரிமை இல்லை என்றால், ஒரு மஸ்ஜிதை கட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்குமாறு அரசாங்கத்தை எவ்வாறு வழிநடத்துகிறீர்கள்?  ஏன்?  மஸ்ஜித் இடிக்கப்பட்டது முறையானது அல்ல என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.

நானாக இருந்தால்  ஒன்று அந்த பகுதியில் மஸ்ஜிதை மீண்டும் கட்டியிருக்க சொல்லியிருப்பேன்.  அல்லது அது சர்ச்சைக்குரியதாக இருந்தால், அந்த பகுதி, ‘மஸ்ஜிதும் இல்லை, அந்த பகுதியில் கோயிலும் இல்லை’ என்று சொல்லியிருப்பேன்.  நீங்கள் ஒரு மருத்துவமனையையோ அல்லது பள்ளிக்கூடத்தையோ,  அல்லது கல்லூரியை உருவாக்கலாம் என்று கூறியிருப்பேன்.  வெவ்வேறு பகுதிகளில் ஒரு மஸ்ஜித அல்லது கோவில் கட்டவும் கூறியிருப்பேன்.  அதை இந்துக்களுக்கு கொடுக்க முடியாது.  இது விஸ்வ இந்து பரிஷத் அல்லது பஜ்ரங் தளத்தின் கோரிக்கை.  அவர்கள் எந்த மஸ்ஜிதையும் -  - இன்றோ, பின்னரோ இடிக்க முடியும்.  அவர்கள் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுள்ளனர்;  இப்போது அவர்கள் நீதித்துறையின் ஆதரவையும் பெறுகிறார்கள்.  நான் மிகவும் கலக்கம் அடைகிறேன்.  பெரும்பாலோர் இதை தெளிவாக சொல்லப்போவதில்லை, ”

Source: telegraph

பாவம் கபாலீஸ்வரர்..மூலப்பத்திரம் தேடுகிறார்..😜😜😜

பாவம் கபாலீஸ்வரர்..மூலப்பத்திரம் தேடுகிறார்..😜😜😜

மயிலை (சென்னை) கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கும்  இந்து விரோதிகளின் பட்டியலை அக்கோயிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 473 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். ஹிந்துக்கள் 471 பேரில் சில முதலியார்கள், நாடார்கள் தவிர ஆகப் பெரும்பான்மையினர்  அய்யர்-அய்யங்கார்களாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கபாலி கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பார்ப்பனகளின் பட்டியல் பெரிது.

வாடகை கொடுக்காத ப்ராடுகளின் பட்டியலில் முக்கியமானது பாரதிய வித்யா பவன். கதர் அணிந்த காக்கி டவுசர் பேர்வழியும்,  காந்தி கொலைக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றியவருமான கே.எம்.முன்ஷியால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் பாரதிய வித்யா பவன். இதன் முக்கியத் தூண்களில் ஒருவர் ராஜாஜி. கல்வியைப் பரப்புவது என்ற பெயரில் பார்ப்பனியத்தையும், சமஸ்கிருதத்தையும் பரப்பி வரும் இந்த ஆர்.எஸ்.எஸ். பினாமி நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் வாடகை பாக்கி 32 இலட்ச ரூபாய்.

அடுத்தது, மயிலாப்பூர் கிளப். ஜனவரி,1, 1903 அன்று தொடங்கப்பட்ட பெருந்தனக்காரர்களின் தனி உடைமை கிளப்பான இது,  3 அய்யர், 3 அய்யங்கார் மற்றும் ஒரு முதலியாரை உரிமையாளர்களாகக் கொண்டது. பின்னர் இதன் தலைவர் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார். கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுகளுக்கு மேட்டுக்குடிக் குலக்கொழுந்துகளைத் தயார்படுத்தும் பயிற்சித் திடல், உறுப்பினர்களுக்குச் சீட்டாட்டம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஜிம், வட இந்தியதென் இந்திய உணவு விடுதிகள் மற்றும் 24 மணி நேர பார் போன்ற வசதிகள், சாஸ்திரி ஹால் என பல கிரவுண்டு கோயில் நிலத்தைக் குத்தகைக்கு வளைத்துப் போட்டிருக்கும் இந்த ஆன்மீக மெய்யன்பர்கள் கபாலிக்கு வைத்திருக்கும் குத்தகை பாக்கி 3.57 கோடி ரூபாய்.

‘தேசியத் தலைவர்’ எனப் ’பெத்த பேர்’ வாங்கிய தெலுங்கு பார்ப்பனரான நாகேஸ்வர ராவினால் ஆரம்பிக்கப்பட்டு, ஊருக்கெல்லாம் தலைவலி தைலம் தரும் அமிருதாஞ்சன்  நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் குத்தகைப் பாக்கி ரூ.6 கோடியே 45 இலட்சம்.

கல்விக்கும் ஒழுக்கத்துக்கும் பேர் போனதாக மெச்சிக் கொள்ளப்படுவது பி.எஸ். ஹைஸ்கூல் என்று அழைக்கப்படும்  பெண்ணாத்தூர் சுப்பிரமணிய அய்யர் மேல்நிலைப் பள்ளி. கோயிலுக்குச் சொந்தமான 76 கிரவுண்ட் நிலத்தை 1928-இல் குத்தகைக்கு எடுத்தது. பின்னர் குத்தகை ஒப்பந்தம் 1979-இல் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இன்று ஒரு கிரவுண்ட் நிலத்தின் சந்தை விலை ரூ.5 கோடிக்கும் மேலாகும். பல பிரபல உயரதிகாரிகளை உருவாக்கியதாகப் பீற்றிக்கொள்ளும் இந்தப்பள்ளி, 76 கிரவுண்டுகளுக்கு ஆண்டு குத்தகையாக ரூ. 1250 ஐ மட்டும் ஒரே ஒருமுறை தந்துவிட்டு, கபாலீசுவரரைக் கோர்ட்டுக்கு இழுத்து வாய்தாவுக்கு அலைய விட்டுக் கொண்டிருக்கிறது.

மயிலாப்பூரில் காமதேனு திரையரங்குக்கு எதிரே கபாலீசுவரருக்குச் சொந்தமான 25 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமித்திருப்பவர் பார்த்தசாரதி அய்யங்கார். இன்று அந்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல். 1901- இல் 99 வருடக் குத்தகையாக எடுத்த அய்யங்கார், இதனை உள்குத்தகைக்கு விட்டு, அது பல கை மாறி இன்று வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் எழுப்பப்பட்டு, 35 பேர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இப்படியே போகிறது பட்டியல். முதலை வாயில் சிக்கிய இந்தச் சொத்துகளை ஒவ்வொன்றாக மீட்பதற்கு நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள். பாரம்பரியமிக்க பெரிய மனிதர்களின் கிளப் என்று கூறப்படும் மயிலாப்பூர் கிளப்பின் வாசலில், “இது கபாலீசுவரர் கோயில் சொத்து” என்று போர்டு எழுதி வைத்திருக்கிறது இந்து அறநிலையத்துறை. அய்யர், அய்யங்கார்வாள்கள் இதையெல்லாம் பார்த்துக் கூச்சப்பட்டு சொத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவார்களா என்ன?

அற்ப வாடகை, குத்தகை பாக்கியைக்கூடக் கொடுக்காமல், அறநிலையத்துறையை இவர்கள் கோர்ட்டுக்கு இழுப்பதன் நோக்கமே கோயில் சொத்தை விழுங்குவதுதான்.

ராமர் படத்தைப் பெரியார் செருப்பால் அடித்தார்

ராமர் படத்தைப் பெரியார் செருப்பால் அடித்தார் என்று பல ஆண்டுகளாக, நடக்காத ஒன்றை, ‘#இராமபக்தர்கள்’ கூறிக்கொண்டே இருக்கிறார்கள். நடந்த உண்மை பற்றி திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வெளியிட்ட கட்டுரையின் மீள் பதிவு இது.

அவரது கட்டுரையில் கூறியிருப்பதாவது, "இராமர் படத்தைப் பெரியார் செருப்பால் அடித்தார் என்று பல ஆண்டுகளாக, நடக்காத ஒன்றை, ‘இராமபக்தர்கள்’ கூறிக்கொண்டே இருக்கிறார்கள். ஒருவேளை, அது அவர்களின் உள்மன விருப்பமாக இருக்கலாம்.

நடந்தது என்ன என்பதை நம் அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும்.

1971ஆம் ஆண்டு தொடக்கத்தில், திராவிடர் கழகம் சார்பில், சேலத்தில் ஒரு பெரிய மாநாடும், பேரணியும் நடைபெற்றன. அந்தப் பேரணியில் பெரியார் ஓர் ஊர்தியில் அமர்ந்து ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார். பின்னால் வந்த இன்னொரு ஊர்தியில், ‘இதுதான் இந்துக் கடவுளர்களின் கதை’ என்பதை விளக்கும் சித்திரங்களைக் கொண்ட வெட்டுருக்கள் வந்து கொண்டிருந்தன.

பேரணி வந்த பாதையில், ஜனசங்கம் (இன்றைய பா.ஜ.க.) கட்சியைச் சேர்ந்த சிலர், அய்யாவிற்குக் கறுப்புக் கொடி காட்டினர். அவர்களுக்கு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. அன்று ஆட்சியிலிருந்த, கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசுதான், ஜனநாயக அடிப்படையில் கறுப்புக் கொடிப் போராட்டத்திற்கு அனுமதி அளித்திருந்தது. வன்முறை ஏதுமின்றி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று காவல் துறை அனுமதித்திருந்தது. காவிக் கொடி களைக் கீழே போட்டுவிட்டு, நம் கொடியான கறுப்புக் கொடியை ஏந்தி நின்ற ஜனசங்கத்தினரைப் பார்த்துப் புன்னகைத்தபடி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.

அப்போது, அக்கூட்டத்திலிருந்து ஒருவன், அய்யா பெரியாரை நோக்கித் தன் செருப்பை வீசினான். அது குறி தவறி, பின்னால் வந்த, கடவுளர்கள் படம் வைக்கப்பட்டிருந்த ஊர்தியில் போய் விழுந்துவிட்டது. அந்த வாகனத்தில் இருந்த தொண்டர்கள், அவர்கள் வீசிய செருப்பை எடுத்து, அவர்கள் கடவுளையே அடித்தார்கள். முன்னால் சென்று விட்ட பெரியாருக்கு, இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததே தெரியாது.

வன்முறையைத் தொடங்கியவர்கள் யார் என்பதை இப்போது உணர்ந்து கொள்ளலாம். பிறகு அவர்களே நம்மீது வழக்கும் போட்டார்கள். அது ஒன்றுமில்லாமல் போய்விட்டது. நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால் ஹெச். ராஜாக்கள் இன்னும் அதனைத் தள்ளுபடி செய்யாமல், இராமர் செருப்பால் அடிபட்ட கதையைத் திரும்பத் திரும்ப அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக் கொண்டுள்ளனர்.

அந்த மாநாட்டையொட்டி இன்னொரு வழக்கும் நடைபெற்றது. அது ‘இந்து’ ஏட்டின் மீது திராவிடர் கழகம் தொடுத்த வழக்கு. மாநாட்டுத் தீர்மானம் ஒன்றைத் திரித்து வெளியிட்டதாகக் கூறி வழக்குத் தொடுக்கப்பட்டது. இன்றைய தி.க. தலைவர், ஆசிரியர் வீரமணி அவர்களே நீதிமன்றத்தில் வாதாடினார். அந்த நாளேடு வருத்தம் தெரிவித்துக் கொண்டதால், வழக்கு கைவிடப்பட்டது.

அப்போதே செய்தியைத் திரித்து ‘துக்ளக்’ ஒரு கேலிப்படம் வெளியிட முயன்றது. இராமர் படத்தைக் கலைஞர் செருப்பால் அடிப்பது போலவும், அருகில் நின்று பெரியார் கைகொட்டிச் சிரிப்பது போலவும் கேலிப்படம். ஆளாளுக்குச் செருப்பால் அடிப்பதைப் போல் அவர்களே கற்பனை செய்து கொண்டார்கள் போலும்!

இந்நிகழ்ச்சி நடைபெற்ற சில வாரங்களிலேயே, பொதுத் தேர்தல் நடைபெற்றது. சேலம் நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கம், தேர்தலில் தி.மு.க.விற்குப் பெரும் சரிவை ஏற்படுத்தும் என்று ஏடுகள் பல எழுதின. அவ்வளவுதான், தி.மு.க. ஆட்சி என்று ஆரவாரக் குரல்கள் எழுந்தன.

எதிர் அணியில் கைகோத்து நின்ற காமராசர், ராஜாஜி அணியின் வெற்றியை இனி எவரும் தடுக்க முடியாது என்று பலரும் கருதினர். ‘இந்துக் கடவுளைச் செருப்பால் அடித்த கட்சிக்கா, உங்களின் ஓட்டு?’ என்று ஊர் ஊராகக் கேட்டனர். நிகழ்ச்சி நடந்தது என்னவோ, சேலத்தில் மட்டும்தான். ஆனால காங்கிரசாரும், சுதந்திராக் கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் பரப்பிவிட்டனர். ‘இவ்வளவு செய்தும், கடவுள் அவர்களை ஒன்றுமே செய்யவில்லையே, கடவுள் என்று எவரும் இல்லை என்று பெரியார் சொல்வதுதான் உண்மையோ’ என்று பக்தர்களுக்கே சந்தேகம் வந்துவிட்டது.

கவிஞர் கண்ணதாசன், ஜெயகாந்தன், சோ மூவரும் ஓர் அணியாகப் பயணப்பட்டு தமிழகம் முழுவதும் சுற்றியலைந்து, தி.மு.க.விற்கு எதிராகத் தேர்தல் பரப்புரை செய்தனர். தமிழக நிலைமைகளைக் கவனித்த, ஒரு மூத்த காவல்துறை அதிகாரி, தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பே, வெளிப்படையாகக் காமராஜரைச் சந்தித்து, ‘அடுத்த முதல்வர் நீங்கள்தான்’ என்று கூறிப் பூங்கொத்தைக் கொடுத்தார்.

இத்தனை கூத்துகளுக்கும் சேலம் நிகழ்ச்சிதான் காரணமாக இருந்தது. ஆனால் 1971ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவோ, வேறு மாதிரியாக இருந்தது.

1967 தேர்தலில் 138 இடங்களில் வென்ற தி.மு.க., 1971 தேர்தலில் 183 இடங்களில் வெற்றிபெற்றது. பெரிய வேடிக்கை என்னவென்றால், எந்த சேலத்தில் அந்நிகழ்ச்சி நடைபெற்றதோ, அந்த சேலத்தின் இரண்டு தொகுதிகளிலுமே தி.மு.கழகம்தான் வென்றது. வெற்றி பெற்றவர்களின் பெயர்கள், இப்போதும் சிலருக்கு நினைவிருக்கலாம். ஒருவர் ராஜாராம், இன்னொருவர் ஜெயராம். ஆமாம், அந்த இராமர் சிக்கல் மக்களிடையே எடுபடாமல் தோற்றுப் போய், இந்த இராமர்கள் இருவரும் வெற்றிபெற்றனர்.

ராஜாஜி மனம் நொந்து, ஒரு வார ஏட்டில், “தமிழ்நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதியற்ற நாடாகிவிட்டது. மகா புருஷர்கள் எல்லோரும் நாட்டைவிட்டே புறப்படத் தயாராகிவிட்டனர்” என்று எழுதினார். சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற நன்றியறிவிப்புக் கூட்டத்தில் பேசிய நாவலர், தனக்கேயுரிய குறும்புடன், “மகா புருஷர்கள் எல்லாரும், சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டு விடாதீர்கள். தேதியைக் குறிப்பிட்டால், நாங்கள் அனைவரும் வந்து வழியனுப்பி வைக்கிறோம்” என்றார்.

இன்னமும் புறப்பட்டுப் போகாமல் இருக்கின்ற ‘மகாபுருஷர்களில்’ ஒருவரான ஹெச்.ராஜா போன்றவர்கள், சாதாரணப் புருஷர்களைப் போலவேனும் பேசப் பழக வேண்டும்.”

இவ்வாறு உண்மையை திரித்து, கலவரத்தை உண்டாக்கி அரசியல் செய்யும் இந்து அமைப்பினரின் முகத் திரையை கிழித்தெரியும் வகையில் அமைந்திருக்கிறது பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் கட்டுரை!

Friday, November 08, 2019

வீர் சாவர்க்கர் - 'வீர்'ன்னு அவருக்கு எப்படி பேர் வந்துச்சு தெரியுமா

எச்ச ராஜா வீர் சாவர்க்கர் வீடியோ ஒண்ணு ஷேர் பண்ணியிருக்காப்புல..
சரி 'வீர்'ன்னு அவருக்கு எப்படி பேர் வந்துச்சு தெரியுமா..
1926 'ல சித்ரகுப்தான்னு ஒருத்தரு 'Life of Barrister Savarkar' ன்னு ஒரு புத்தகத்துல சாவார்க்கரோட வீர சாகசங்கள்.. அவரோட தைரியம்.. போர் குணங்களை விலாவரியா புகழ்ந்து எழுதியிருந்தார்.. அதுலதான் சாவர்க்கர் க்கு 'வீர்'ன்னு ஒரு பட்ட பேரு கொடுத்து எழுதியிருந்தார்...
அப்புறம் சாவர்க்கர் செத்து பல வருஷம் அப்புறம் அந்த புத்தகத்தோட இரண்டாவது அச்சு 1986 'ல வெளியாச்சு.. அந்த புத்தகத்தை வெளியிட்ட 'வீர் சாவர்க்கர் ப்ரகாஷன்'ன்ற அமைப்பை சார்ந்த அதிகாரபூர்வ வெளியீட்டாளர் ரவீந்தர ராம்தாஸ் ஒரு தகவலை தன்னோட முன்னுரைல வெளியிட்டாரு..
அது என்னான்னா.. அந்த புத்தகத்தை எழுதுன சித்ரகுப்தரே 'சாவர்க்கர்'தான்... 😂😂😂😂
'வீர்' சாவர்க்கரை போற்றுவோம் ப்ரெண்ட்ஸ்..

ஏன் ப்ரோ நீங்க பாஜகவை ஆதரிக்குறீங்க?

ப்ரோ - ஏன் ப்ரோ நீங்க பாஜகவை ஆதரிக்குறீங்க?
சகோ - எனக்கு மோடிஜியை ரொம்ப பிடிக்கும்ங்க. பாஜகதான் ஒழுங்கான கட்சி, ஊழலில்லாத கட்சி, குடும்ப அரசியல் இல்லாத கட்சி. அதனாலதான்.
ப்ரோ - சூப்பர் ப்ரோ. அப்ப தமிழ்நாட்டுல நடந்த குட்கா ஊழல், சிபிஐ ரெய்டு, தலைமைச்செயலகத்துல நடந்த ரெய்டு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டையெல்லாம் பார்த்துட்டு நீங்களும் அதிமுகவை எதிர்க்குறீங்களா?
சகோ - ஐயய்யோ இல்ல சகோ. மத்தியில் பாஜக, மாநிலத்தில் அதிமுக ஆதரவு ப்ரோ நான்.
ப்ரோ - அது எப்படி ப்ரோ ஒரே நேரத்துல ஊழல் இல்லாத ஒழுங்கான கட்சியவும் ஆதரிக்கிறீங்க? ஊழலுக்காக 4 வாட்டி ஜெயிலுக்குப்போய், குற்றவாளியாகவே செத்துப்போன கட்சித்தலைவரையும் ஆதரிக்கிறீங்க?
சகோ - அவங்க ஒண்ணும் குற்றவாளி இல்ல சகோ. குற்றம் சாற்றப்பட்டவர் மட்டும்தான், அவங்க இறந்துட்டாங்க. அதனால அவங்க நிரபராதி.
ப்ரோ - அடடா. பின்றீங்க ப்ரோ. அப்ப இரண்டாம் குற்றவாளியா நிரூபிக்கப்பட்டு சிறையில் இருக்கும் சசிகலாவை ஆதரிக்கிறீங்களா?
சகோ - இல்ல சகோ. அவங்க குற்றவாளி, ஊழல் பேர்வழி. அவங்களை எதிர்க்கிறேன்.
ப்ரோ - அது எப்படி ப்ரோ? ஒரே குற்றம். முதல் குற்றவாளியை இரும்புப்பெண்மணின்னு ஆதரிக்கிறீங்க. இரண்டாம் குற்றவாளியை ஊழல்வாதின்னு எதிர்க்கிறீங்க? சரி, சசிகலாவை எதிர்த்தீங்கன்னா, சசிகலா கொண்டு வந்த முதல்வர்தான் இப்ப இருக்க எடப்பாடி பழனிச்சாமி அய்யா. அவரையும் எதிர்க்குறீங்களா?
சகோ - இல்லை சகோ, வாழும் கடவுள் எடப்பாடி அய்யாவை ஆதரிக்கிறேன்.
ப்ரோ - நீங்க சொல்றது ஒண்ணுமே புரியல ப்ரோ. எதையெல்லாம் நீங்க ஆதரிக்கிறீங்க ப்ரோ? எதையெல்லாம் எதிர்க்கிறீங்க? கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.
சகோ - பாஜகவை ஆதரிக்கிறேன். அதிமுகவை ஆதரிக்கிறேன். பாமகவை ஆதரிக்கிறேன். இந்து மத ஆர்வலர். எங்க ஜாதிச்சங்கத்துல முக்கியப்புள்ளி. முக்குலத்தோர், கொங்கு, வன்னியர் இப்படி மெஜாரிட்டி ஜாதில இருக்கவங்க எல்லாரையும் ஆதரிப்பேன். திருட்டு திராவிடர்களை எதிர்ப்பேன், ராமசாமியை எதிர்ப்பேன், திமுகவை எதிர்ப்பேன், காங்கிரஸை எதிர்ப்பேன், ஊழலை எதிர்ப்பேன், ஜாதிமறுப்பு பேசுறவங்கள எதிர்ப்பேன், இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறேன், விசிகவை எதிர்க்கிறேன், இன்னும் நிறைய. திராவிடத்தால்தான் நாம வீழ்ந்தோம் சகோ.
ப்ரோ - ரொம்ப நல்லது ப்ரோ. யூ பீப்புள் கண்டினியூ. 🙏🏽

திருக்குறளைப் பழித்தாரா பெரியார்?

கடந்த 24.05.2019 அன்று இந்து-தமிழ் நாளிதழுக்கு, துக்ளக் ஆசிரியர் திரு. எஸ். குருமூர்த்தி அளித்துள்ள பேட்டியில், ‘பெரியார் திருக்குறளை மலம் என்றார்’ என்று கூறியுள்ளார். தந்தை பெரியார் குறித்த இவ்விதமான அவதூறுகள் பல, காவிகளாலும், போலித் தமிழ்த்தேசியவாதிகளாலும் சமூக ஊடகங்களில் தொடந்து பரப்பப்பட்டு வருகின்றன. உண்மையில் திருக்குறள் குறித்துத் தந்தை பெரியார் கொண்டிருந்த பார்வை என்ன என்பதை நாம் சிறிது ஆராயலாம். பெரியாருக்குத் திருக்குறள் அறிமுகமானது எவ்வாறு?
திருக்குறளைத் தமக்கு அறிமுகம் செய்து வைத்ததாகத் தந்தை பெரியார் கூறும் நபர், பா. வே. மாணிக்கநாயக்கர் என்பவராவார். அடிப்படையில் பொறியியல் அறிஞரான இவர், தனித்தமிழ் இயக்கத்தின் புரவலராக விளங்கியவர். பெரியாரின் உற்ற தோழர். மாணிக்கநாயக்கர் மூலமாகவே குறளில் அடங்கியிருக்கும் பல கருத்துகளை அறிய முடிந்ததாகப் பல இடங்களில் குறிப்பிடுகிறார் பெரியார்.
திருக்குறள் – பொய்யுரையும் புனைவுகளும்
தொடக்கத்தில் இந்து மதப் புராண இதிகாசங்களில் உள்ள குற்றம், குறைகளை எடுத்துக் கூறி வருவது போல, குறளைப் பற்றியும் கூறி வந்தார் பெரியார். அதற்குக் காரணம், குறளுக்கு ஆரியரும், ஆரிய உணர்ச்சியுள்ள மதவாதிகளும் செய்த உரைகளை உண்மை என்று எண்ணியதே காரணமாகும். இதனைப் பெரியாரின் பேச்சின் மூலமாகவே அறியலாம்.
“புராணங்களைப் போலவே வள்ளுவர் குறளையும் பகுத்தறிவுக்கு ஏற்ற்தல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல்’ என்று கேட்பார்கள். நான், ‘இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது, அதை எடுத்துவிடு என்றால் அந்த இடத்தில் என்ன வைப்பது? என்று கேட்பதா’ என்று பதில் கூறுவேன்.
பிறகு நாளாக ஆக, திராவிட உணர்ச்சி மிக்கவர்களோடு, நம் உணர்ச்சியுள்ள அறிவாளிகளோடு பழகியபோது குறளின் மேன்மை பற்றி அவர்கள் எடுத்துக் கூறினார்கள். நான் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே…. இந்த இடத்தில் இப்படியிருக்கிறதே என்று கேட்டேன். அது பரிமேலழகரின் உரை, அது குறளாசிரியர் கருத்தல்ல என்று எடுத்துக் கூறி உண்மை உரையினைச் சொன்னார்கள். அந்தக் காலத்தில் பரிமேலழகர் உரைதான் சிறந்த உரை என்று கொண்டாடப்பட்டது. அவர் மனுதர்ம சாஸ்திரப்படி குறளுக்கு உரை எழுதிவிட்டார். பின்னர் வந்த அறிவாளிகள் அதைக் கண்டித்து, குறளின் உண்மைத் தன்மையை எடுத்துச் சொன்னார்கள். அதிலிருந்துதான் நான் குறளைப் பற்றிப் பேசுகிறேன்”. (23.05.1950 அன்று பெங்களூர் திருவள்ளுவர் கழக ஆண்டு விழாவில் தந்தை பெரியார் பேசியது)
பரிமேலழகரின் உரையை மனுதர்மத்தின் மறுபதிப்பு என்று விமர்சிக்கும் பெரியார், குறளின் உண்மைத்தன்மை மறைக்கப்பட்டதற்குக் காரணம் இவைபோன்ற உரைகளே என்கிறார். இத்தகைய உரைகளைக் கொண்டு குறளின் உண்மைத் தத்துவங்களை எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும் என்ற கேள்வியையும் முன்வைக்கிறார்.
தந்தை பெரியாரின் பார்வையில் குறளுக்குக் கேடு விளைவித்தது தவறான உரை மட்டுமல்ல, வள்ளுவர் குறித்த பொய்யான புராணக் கதைகளும்தான். வள்ளுவரின் பிறப்பைக் குறித்தும், வள்ளுவரின் மனைவியாகக் கூறப்படும் வாசுகியின் கற்புத்தன்மை குறித்தும் சொல்லப்படும் புனைவுகள் பல. சான்றாதாரங்கள் இல்லாத இவையனைத்தும் வழிவழியாக வாய்மொழியாகச் சொல்லப்படுவன.
“குறள் பாடிய வள்ளுவனாரை எங்கோ நள்ளிரவில் ஒரு சத்திரத்தில் ஒரு புலைச்சிக்கும், ஒரு பாப்பானுக்கும் நேரிட்ட கள்ளப் புணர்ச்சியில் பிறந்த பிள்ளையாக்கி, அதன்மூலம் அவரை ஒரு சண்டாளராக்கி, அவருடைய வாக்கிற்கு மதிப்பில்லாதபடி செய்துவிட்டார்கள்” என்று விமர்சிக்கும் பெரியார், இதற்கான தீர்வையும் முன்வைக்கிறார்.
“குறளை யார் எழுதியது, அவர் காலமென்ன என்ற கவலையை எல்லாம் ஆராய்ச்சி வல்லுநர்களான சரித்திரப் பேராசிரியர்களுக்கே விட்டுவிட்டு, நாம் குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை மட்டுமே ஆராய்ந்து பார்த்து அவற்றின்படி நம் வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொள்ள வேண்டும்”. (விடுதலை 17.01.1949)
குறள் பரவாமைக்குக் காரணம் என்ன?
குறளைச் சிறப்பித்துக் கூறும் அதே வேளையில், பெரிய புராணம், இராமாயணம், மகாபாரதம், கீதை, மனுதர்மம் என அத்தனை நூல்களையும் குறளுக்கு எதிராக முன்னிறுத்துகிறார், தந்தை பெரியார். திருக்குறள் ஆரிய தர்மத்தை – மனுதர்மத்தைக் கண்டிப்பதற்காகவே எழுந்த கண்டன நூல் என்கிறார்.
பக்தி இயக்கத்தின்போதும், அதற்குப் பின்னரும் தோன்றிய இலக்கியங்கள் பெரும்பான்மை மக்களைச் சென்றடைந்துள்ளன. அதே நேரம், பக்தி இயக்கம் தோன்றுவதற்குச் சில நூறாண்டுகளுக்கு முன்பே தோன்றிய திருக்குறள் மக்களிடம் பரவாததற்குக் காரணம் என்ன என்ற கேள்வியை எழுப்பி, அதற்குப் பெரியாரே விடை தருகிறார்.
“எந்த ஒரு நூலும் பார்ப்பனக் கூட்டத்தால் புகழப்பட்டால்தான் அவற்றிற்குப் புகழ் ஏற்படும். இன்றேல் புகழ் கிடையாது. இதுதான் இன்றைய நிலை. பழைய கால நிலையும் அதுதான்”. (விடுதலை 25.03.1948)
“எவ்வளவோ ஆபாசமான நூல்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெருமையில் நூறில் ஒரு பங்கு பெருமைகூட நமது திருக்குறளுக்குக் கொடுக்கப்படுவதில்லை”. (விடுதலை 25.03.1948)
“திருவள்ளுவருடைய கொள்கைகளையும், அவருடைய பாட்டின் அருமையையும், அவற்றால் திராவிடநாடு பெற்றிருக்க வேண்டிய பலனையும் கம்பனது இராமாயணம் அடியோடு கெடுத்து விட்டது. (விடுதலை 05.11.1948)
எனவே, குறளைப் பரப்பும் முயற்சியில் இரண்டு விதமான செயல்பாடுகளைக் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார். ஒன்று, குறளைப் பரப்பும் ஆக்கவேலை. மற்றொன்று, குறளின் கருத்துக்கு எதிரான நூல்களை மறையச் செய்யும் அழிவு வேலை.
“ஒரு காரியத்திற்காக ஆக்க வேலையும், அழிவு வேலையும் ஒரு உடலுக்கு இரண்டு கைகளைப் போன்றதாகும். குறள் விஷயத்தில் குறளைப் பிரச்சாரம் செய்து மக்களிடையே பரப்புவது, குறள் நிர்மாண, ஆக்க வேலைகளாகும். குறளுக்கு எதிரான கருத்துகளை, காரியங்களை, நூல்களை மறையச் செய்வது என்பது குறள் ஆக்கத்திற்காகச் செய்யப்படும் அழிவு வேலையாகும்”. (விடுதலை 13.01.1951)
மனுதர்ம – இந்துமத எதிர்ப்பு நூல் திருக்குறள்
”திருக்குறள் ஆரியக் கொள்கைகளை மறுக்க, அவைகளை மடியச் செய்ய, அக்கொள்கைகளிலிருந்து மக்களைத் திருப்ப எழுதப்பட்ட நூல் என்றுதான் நான் கருதுகிறேன்” என்கிறார் பெரியார். (விடுதலை 25.03.1948)
குறள் இந்துமதக் கருத்தியலுக்கு எதிரானது என்பதைக் குறளிலிருந்தே அடுக்கடுக்கான சான்றுகளைக் கொண்டு நிறுவுகிறார்.
“பார்ப்பனர்கள் எதை எதை உயர்வு என்று கருதி தங்கள் பெருமையை வெளிப்படுத்தினார்களோ, அவைகளை எல்லாம் ஒழித்துக் கட்டவே இக்குறளை வள்ளுவர் இயற்றி இருக்கிறார்.
பார்ப்பனர்கள் கலப்பையைத் தொட்டால்கூட பாவம். உழுவது என்பது பாவம். கலப்பையைத் தொடக்கூடாது என்று எழுதி வைத்து, உழைக்காமல் உண்ணும் வழியைத் தேடிக் கொண்டார்கள். (மனுதர்மத்தில் உழவுத்தொழில் பாவகரமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது). ஆனால் வள்ளுவர் இதை எதிர்த்துக் கூறி இருக்கிறார். உலகத்திலேயே உழவுத்தொழிலுக்கு ஈடு இணையான தொழில் கிடையாது என்று கூறியுள்ளார்.
”உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”
என்று கூறுகிறார்”.
“குடிசெய்வார்க் கில்லை பருவம்” (குறள் 1028). (பொருள்: குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை). ஒரு காரியத்தை ஒரு மனிதன் எப்பொழுது செய்ய வேண்டும் என்று தீர்மானித்தானோ, எண்ணினானோ உடனேயே அதைச் செய்திட வேண்டும். அதற்காக ராகு காலம், எமகண்டம், குளிகை பார்க்க வேண்டியதில்லை. இந்தக் காலங்களை எதிர்நோக்கிக்கொண்டு சோம்பலாய் இருந்தால் காரியம் கைகூடுவது கடினம் தான். ஆகையால்தான் காலத்தை எதிர்பாராமல் செய்ய வேண்டுமென்று சொல்லுகிறார். (விடுதலை 11.09.1951, 12.09.1951). எந்த ஒரு செயலையும் நல்ல நேரம் பார்த்து ஆரம்பிக்க வேண்டும் என்னும் இந்து மத சடங்கிற்கு நேரெதிர்க் கருத்தை முன்வைப்பது இக்குறள்.
”தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்”
என்ற குறளில், ’பூஜையின்றேல் மழையில்லை, தானமின்றேல் மழையில்லை’ என்ற ஆரியக் கருத்தை அப்படியே மறுத்திருக்கிறார். மக்களுக்கு தெய்வத்தினிடம் பக்தி இல்லையென்றால், மக்களுக்கு ஒழுக்கம் இல்லையென்றால் மழை பெய்யாது என்று ஆரிய நீதி கூறுகிறது. மழையில்லை என்றால் மக்கள் பக்திசெய்ய மாட்டார்கள்; ஒழுக்கமாகவும் இருக்க மாட்டார்கள் என்று கூறுகிறார் வள்ளுவர்.
மனுதர்மம் மாமிசம் சாப்பிட வேண்டும். யாகம் செய்ய வேண்டும். அதில் ஆடு, மாடு, குதிரை முதலியவைகளைப் பலி தர வேண்டும் என்கிறது. திருக்குறள் ஜீவ இம்சையே கூடாது. மாமிசம் சாப்பிடக் கூடாது. யாகம் கூடாது என்கிறது.
”கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”.
பார்ப்பனர்களுடைய கொள்கை, வேள்வி-யாகம் செய்ய வேண்டும் என்பதாகும். அதுமட்டுமல்ல, வேள்வியைச் செய்யாதவர்கள், வெறுக்கிறவர்கள், கண்டிக்கிறவர்கள் எல்லாம் சூத்திரர்கள் – சண்டாளர்கள் – அரக்கர்கள் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த யாக வேள்வியைப் பற்றி வள்ளுவர் என்ன சொல்கிறார்.
”அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று”
(பொருள்: நெய் முதலிய பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட, ஒன்றன் உயிரைக் கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது)
”இந்த ஒரு குறளே, இது கண்டன நூல் என்பதைத் தெரிவிக்கவில்லையா? கண்டன நூல் என்றால், ஆரியத்தை – ஆரியப்பண்பை – அதிலுள்ள உண்மை ஒழுக்கத்துக்கும் பகுத்தறிவுக்கும் ஏற்காத ஆபாச மூடப் பழக்கவழக்கங்களைக் கண்டிக்கும் கண்டன நூல் என்றே எண்ணலாம்”. (விடுதலை 25.03.1948, 8-11.11.1949) குடிஅரசு 07.05.1949)
இவ்வாறு இந்துமத எதிர்ப்புக்கான பல்வேறு சான்றுகளைத் திருக்குறளிலிருந்தே எடுத்தாளும் பெரியார், திருக்குறளின் அடிப்படையாகப் பல்வேறு இடங்களில் முன்வைப்பது, நால்வருணத்தை வலியுறுத்தும் மனுதர்மத்திற்கு மாற்றான, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் திருக்குறளைத்தான்.
பெரியார் முன்வைத்த விமர்சனங்கள்
“ஓர் இலக்கியம் எந்தக் காலத்தில் எழுதப்படுகிறதோ, அந்தக் காலகட்டத்தின் சூழலில் நின்றுதான் விமர்சனம் செய்ய வேண்டுமேயல்லாது, இருபது நூற்றாண்டுகளுக்குப் பின்னால் வந்து நின்று கொண்டு அதனை இன்றைய நிலையோடு ஒப்பிட்டு ஆய்வு செய்வது பொருத்தமாக இருக்காது” என்கிறார் பேராசிரியர் சுப. வீரபாண்டியன். (குறள் வானம், பக்கம் 67). இதைத்தான் பெரியாரும் கூறுகிறார்.
”திருவள்ளுவர் நல்ல அறிவாளி. ஆராய்ச்சிக்காரர். அந்தக் காலத்தில் மக்களிடம் பரவி இருந்த மூட எண்ணங்களோடு போராடிய அறிஞர் என்ற அளவில்தான் ஒத்துக்கொள்ள முடியும். அந்தப்படியிருக்க 2000 ஆண்டுகளுக்கு முன்னதாகத் திருவள்ளுவர் சொன்னவை எல்லாம் அப்படியே இன்றைக்கும் ஏற்றதாக இருக்க முடியுமா?”.
திருக்குறளைச் சிறப்பித்துக் கூறும் அதே வேளையில், தமக்கு ஏற்பில்லாத கருத்துக்களை விமர்சிக்கவும் தவறவில்லை பெரியார். “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று வள்ளுவரே கூறியிருக்கிறார் அல்லவா!
“நான் குறளின் மேம்பாட்டைப் போற்றுவதன்மூலம், குறள் முழுவதையும் ஒப்புக் கொண்டவன் என்றோ, குறளின்படி நடக்கிறவன் என்றோ யாரும் கருதி விடாதீர்கள். எனக்கு/எங்களுக்குப் பொருந்தாத குறளுமிருக்கலாம். அதாவது எங்களால் பின்பற்ற முடியாத குறளுமிருக்கலாம். ஆனால் எனக்கு/எங்களுக்கு வேண்டியவைகள் மீதம் அதில் இருக்கின்றன” (குடிஅரசு 07.05.1949) என்பதுதான் பெரியாரின் நிலைப்பாடாக அறிய முடிகிறது.
குறளில் ‘வாழ்க்கைத் துணைநலம்’ மற்றும் ‘பெண்வழிச் சேரல்’ ஆகிய இரண்டு அதிகாரங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, இவற்றில் மிகவும் அடிமைத்தன்மை புகுத்தப்பட்டிருப்பதாகவே பெரியார் கருதுகிறார்.
சான்றாக ஒரு குறளைக் காணலாம்.
”தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”. (குறள் 55)
(பொருள்: வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு, தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்).
”ஆணைத் தொழுதெழ பெண்ணுக்கு நிபந்தனை இருந்தால், பெண்ணைத் தொழுதெழ ஆணுக்கு நிபந்தனை இருக்க வேண்டும். அதுதான் சம உரிமை என்பது. இருபாலர்க்கும் சமநிபந்தனை குறளில் இல்லை”. (குடிஅரசு 12.02.1928)
திருவள்ளுவர் ஓர் ஆணாயில்லாமல் பெண்ணாயிருந்து இக்குறளை எழுதியிருப்பாரானால் இம்மாதிரி கருத்துகளைக் காட்டியிருப்பாரா என்று பெரியார் கேட்கும் கேள்வி நியாயமானதுதானே?
“குறளிலும் சிற்சில இடங்களில் ஆரியப் பண்பு கலப்பு இருக்கின்றது என்று இன்று பல பெரியோர்கள் கருதுகிறார்கள். அதற்கேற்றபடி சில எடுத்துக்காட்டுகளையும் காட்டுகிறார்கள்.
ஏதோ சில இருக்கலாம் என்றே வைத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்டவைகளை நாம் இக்காலத்துக்கும், குறளாசிரியரது பெரும்பாலான கருத்துக்கும் ஒப்பிட்டுப் பார்த்து நல்ல கவலையுடன் சிந்தித்தோமேயானால், ஏதாவது நம் கருத்துக்கு ஏற்ற தெளிபொருள் விளங்கும் என்றே கருதுகிறேன். விளங்காவிட்டாலும் அவை குறளின் தத்துவத்துக்கு முரண்பாடானது என்றாவது தோன்றலாம். அதுவும் இல்லாவிட்டால், நம் பகுத்தறிவுப்படி பார்த்து, கொள்வதைக் கொண்டு விலக்குவதை விலக்கலாம்” என்கிறார் பெரியார். (குறள் மாநாடு நடத்துவது குறித்துத் தந்தை பெரியாரின் அறிக்கை, விடுதலை, 10.01.1948)
திருக்குறளைப் பரப்பிய பெரியார்
”புலவர்கள் வீட்டுப் புத்தக அலமாரிகளில் புதைந்திருந்த திருக்குறளை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் பெரியார்” என்கிறார் ஆசிரியர் வீரமணி.
1929 ஆம் ஆண்டிலிருந்தே பெரியார், திருக்குறளை எழுத்துகள் வாயிலாகவும், சொற்பொழிவுகள் மூலமாகவும் மக்களிடையே தீவிரமாகப் பரப்பினார். 1949 ல் சென்னையில் மிகப்பெரிய முதல் திருக்குறள் மாநாடு நடத்தினார். 'திருக்குறள் நாள் ' கொண்டாடச் செய்தார். 1952 ல் 10000 திருக்குறள் புத்தகங்களை அச்சடித்து நான்கு அணா விலையில் தமிழ்நாடு முழுவதும் பரப்பினார்.
இதன் விளைவாக, தமிழகப் பள்ளிகளிலும், மேடைகளிலும், பத்திரிகைகளிலும், நூல்களிலும் திருக்குறள் சிறந்த செல்வாக்கு பெற்றது.
திராவிடர்களின் நீதிநூல் - திருக்குறள்
திருக்குறளைத் திராவிடர்களுக்கான ஒரே நீதிநூல் என்று குறிப்பிடும் பெரியார், குறளை ஆதரிக்கவேண்டிய இடத்தில் ஆதரித்தும், விமர்சிக்க வேண்டிய இடத்தில் விமர்சித்துமிருக்கிறார். திருக்குறளைத் திராவிட இயக்கத்தவரிடமிருந்தும், தந்தை பெரியாரிடமிருந்தும் அந்நியப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இன்றைய சூழலில் அம்முயற்சிகளை முறியடிப்பது நமது தலையாய கடமையாகும்.

திருவள்ளுவர் நாத்திகரா

திருவள்ளுவர் நாத்திகராக இருக்க முடியாதாம்.....
ஹலோ நாத்தீகம்னா என்னனு தெரிஞ்சிகிட்டு பேசுங்க.
நாத்திகம் என்றால் கடவுள் மறுப்பு என்று நாமாகவே தவறாக புரிந்துக்கொள்கிறோம்.
கடவுள் மறுப்புக்கு வேறு பெயர் உண்டு: நிரீஷ்வர்வாத்.
நிர்+ஈஷ்வர்+வாத்.

அப்படியானால் நாத்திகம் என்றால் என்ன?
நாத்திகம் = வேத மறுப்பு.
“நாஸ்தீக வேத நிந்திதஹ” என்றே குறிப்பிடுகிறார்கள்.
தட் மீன்ஸ், “உன் உடான்ஸ் வேதத்தை நான் மதிக்கல போடா!” என்கிற மனிதர்கள் = நாஸ்திகர்கள்.
Why take this stand?
Because வேதம்= பிறப்பின் அடிப்படைவாதம்.
உயர் தாழ்வு, ஜாதி, privilege, entitlement, Supremacy மாதிரியான விஷயங்களை கறாராக சொல்கிறது. நம்ப வைக்க முயல்கிறது. இத்தகைய மக்கள் விரோத அம்சங்களை ஏற்காதவரை வேதம் தண்டிக்க முற்படுகிறது.
எட்டாம் நூற்றாண்டின் classification படி ஆதிக்க மதங்கள்: சைவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம், வைணவம். இவை எல்லாமே சதுர் வர்ணமெனும் racist கோட்பாட்டை ஏற்றவை.
அதே கிளாஸிபிகேஷன் படி நாத்தீக மதங்கள்: சார்வாகம், ஆசீவகம், பௌத்தம், ஜெய்னம். இவை எல்லாவற்றுக்குமான பொது அம்சம்: வேதம் விட்ட நான்கு வகை சமூக அந்தஸ்து கப்ஸாவை நம்பாமல் சொந்த அறிவை பயன்படுத்தியவர்கள். இதில் ஜயினர்கள் பிறவி, மறுப்பிறவி, மாதிரியான கருத்துக்களை வைத்திருந்ததால் அவர்கள் கொஞ்சம் வைதீகத்தோடு ஒத்துப்போனார்கள்.
ஆனால் ஆசீவர்கள் ஒரு போதும் ஒத்து போகவேயில்லை.
ஆதி தமிழரது மதம் ஆசீவகம்.
திருவள்ளுவர் ஆசீவக மதத்தை சேர்ந்தவராக இருக்கக்கூடும்.
ஆசீவகர்களை சமணர் என்று அழைப்பர்.
இவர்கள் தத்துவம், வானியல், மருத்துவம் ஆகியவற்றில் ஜித்தர்கள். ஜித்து=சித்து.
திருநாவுக்கரசருக்கு சூளை நோய்க்கு அறுவை சிகிச்சை செய்தவர் ஆசீவக துறவியர். இந்த துறவியரை தான் பிறகு சைவர்கள் கழுவில் ஏற்றி கொன்றார்கள்.
இவர்கள் தீவர வேத எதிர்ப்பாளர்கள், அதனால் நார்தீகர்கள்!!
One lineல சொல்லணும்னா:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
vs
சதுர்வர்ணம் மயா சிருஷ்ட்டம்.
நீங்கள் எந்த பக்கம்?

Tuesday, October 15, 2019

சீமான் மனிதனாக மதிக்கப்படக் கூட தகுதியானவர் இல்லை.

சீமான் நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கியது முதலே இவர் ஒரு ப்ராடு என்பதை நான் அறிவேன். சீமானின் அரசியல் துவக்கமே, சீமானும் பிரபாகரனும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை சென்னை நகர் முழுக்க சுவரொட்டிகளாக ஒட்டுவதிலிருந்து தொடங்கியது. (பிரபாகரன் இறந்த பிறகு) அமைதி காலத்தில், புலிகள் அமைப்பினர் தமிழகத்திலிருந்து பலரை அழைத்து சந்தித்தனர். அப்போதெல்லாம் சீமான் ஒரு சாதாரண இயக்குநர். பிரபல இயக்குநர் கூட கிடையாது. பிரபாகரனை சந்தித்து வந்தவர்கள், சீமான் – பிரபாகரன் சந்திப்பு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே கூறினர்.

2008 ஜூலையில் நான் சிறையில் இருந்தேன். அப்போது எனக்கு அடுத்த ப்ளாக்கில், “தம்பி அண்ணா” என்று புலிகளின் உளவுப் பிரிவில் இருந்த ஒருவரை ராமேஸ்வரத்தில் இருந்து கைது செய்து வைத்திருந்தனர். தம்பி அண்ணாவோடு பேசிக் கொண்டிருக்கையில், அவர், தம்பி சீமானை என்னை வந்து சந்திக்க சொல்லுங்கள் என்றார். அதன் பிறகு சென்னை உயர்நீதிமன்ற வாயிலில், ஜனவரி 2009ல் வழக்கறிஞர்கள், ஈழத் தமிழருக்கு ஆதரவாக ஒரு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கையில் அதில் கலந்து கொள்ள சீமான் வந்தார். அப்போதுதான் அவர் பொது வாழ்வில் இறங்குகிறார். வழக்கறிஞர் புகழேந்தியிடம் தம்பி அண்ணா பேசியது குறித்து கூறியதும், “நீயே போயி பேசுய்யா” என்றார். சீமானிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு விபரத்தை கூறினேன். தம்பி அண்ணா விடுதலையாகி, அகதிகள் முகாமுக்கு சென்ற பிறகும், கடைசி வரை சீமான் அவரை சந்திக்கவேயில்லை. சீமானுக்கு புலிகள் இயக்கம் பற்றிய எந்த புரிதலும், இல்லை என்பதை அவரோடு உரையாடியபோது புரிந்து கொண்டேன்.

10 ஜூலை 2010ல், சீமானை கருணாநிதி அரசு கைது செய்தது. பின்னர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தது. அப்போது சீமான் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜூலை 10, 2010 முதல், டிசம்பர் 10, 2010 வரை சீமான் வேலூர் சிறையில் இருந்தார். அந்த ஆறு மாதங்களும், சீமான், ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட முருகன், ரவி, ராபர்ட் பயஸ், போன்றோரோடு கழித்தார். முருகன் புலிகள் இயக்கத்தில் மூத்த பொறுப்பில் இருந்தவர். அவர்களோடு உரையாடித்தான் சீமான் புலிகள் இயக்கம், அதன் செயல்பாடுகள் பற்றியெல்லாம் அறிந்து கொண்டார்.

அதற்கு பின்னர்தான், ஆமைக் கறி கதை, ஏகே 76, அரிசிக் கப்பல் கதையெல்லாம். சீமான் ஒரு கடைந்தெடுத்த அயோக்கியன் என்ற எனது எண்ணம், மீண்டும் மீண்டும் உறுதியானது.

ஆறு மாதங்களை அவர்களோடு கழித்த சீமானுக்கு 28 ஆண்டுகளாக சிறையில் இருப்பதன் வலியும் வேதனையும் புரிந்திருக்க வேண்டும்.

வெறும் கைதட்டல்களுக்காக அவர்களின் விடுதலையே நாசமானால் கூட பரவாயில்லை என்று பேசும் சீமான் மனிதனாக மதிக்கப்படக் கூட தகுதியானவர் இல்லை.

இன்றும் சீமானை நம்பி அவர் பேசுவதை ரசித்து அவர் பின் செல்லுபவர்கள், அறிவு வளர்ச்சிக் குறைந்தவர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.