எங்க முன்னாடி செருப்பு போடக் கூடாதுன்னு சொன்னக் கூட்டம் தான், செருப்பு போடாம இருந்தா எளிமைன்னு உருட்டிக்கிட்டு இருக்கானுங்க.
இதோட உளவியல் என்னவென்றால்
நம்ம அரிசி சாப்பிட தொடங்குனவுடனே இவனுங்க கூழ் குடிப்பானுங்க,
நம்ம ஜீன்ஸ் pant போட்ட உடனே, வேட்டி புகழ் பாடுவானுங்க,
நம்ம ஆட்கள் engineering/medical படிச்சா, உடனே சுய தொழில் பத்தி பேசுவானுங்க
இவங்க டிசைன் அப்படி
Thursday, May 13, 2021
இவங்க டிசைன் அப்படி
"அதென்ன! அசுவமேத யாகம் ?…"
ராஜாக்கள் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு… அடித்து விரட்டி விடுவார்கள். அக்குதிரை எங்கெங்கு சென்றுவிட்டு வருகிறதோ.. அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்துவிட்டு அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம் தான் அசுவமேத யாகம். ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப்போட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள்.
இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும். அப்போது ஓரிரவு முழுவதும் சம்பந்தப்பட்ட ராஜா வீட்டுப்பெண்கள் முக்கியமாக ராணி குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்தக் கடமை முக்கியமாக ராணிக்கு தான். இதைக் கூற சங்கோஜமாகத் (கூச்சமாக) தான் இருக்கிறது. அசுவ மேதயாக ஸ்லோகமே அப்படித் தான் இருக்கிறது.
“அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்து
பத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே…”
எனப்போகிறது ஸ்லோகம். அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி ராணி வழிபட வேண்டிய முறையைத் தான் விளக்குகிறது இந்த ஸ்லோகம்.
இரவு இந்தக் கடமை முடிந்ததும்… மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பமாகும் வரை எரித்து விடுவார்கள். இது தான் அஸ்வமேத யாகம்.
மக்களைப் போலவே, ராஜ குடும்பத்தினரும் பிராமணர்களின் மந்திரயாகத்துக்கு கட்டுப்பட்டிருந்தார்கள். யாகம் முடிந்ததும் “ஏ…ராஜா… இந்த யாகத்தை நல்லவிதமாக பூர்த்தி செய்தாகி விட்டது. இதற்காக நீ பொன்னும் பொருளும் தட்சணை கொடுத்தாய். அஃதோடு யாகத்தில் பங்குகொண்ட உன் ராணியையும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணையாக்கி பிறகு அழைத்துச் செல்ல வேண்டும்” என்றார்களாம்.
இதையல்லாம் பார்த்து வெகுண்டார் புத்தர். மனித தர்மம், மிருக காருண்யம் இரண்டையுமே பொசுக்கி யாகம் செய்கிறீர்களே…? ஏன் இப்படி…? என யாகம் நடத்தும் இடத்துக்கே போய் யாகம் நடத்தியவரிடம் (பிராமணர்களிடம்) கேள்விகள் கேட்டார்.
பிராமணர்கள் பதில் சொன்னார்கள், “குதிரைக்கு மோட்சம் கிடைக்கும். லோகத்துக்கு ஷேமம் கிடைக்கும்” என்று கூற... புத்தர் திரும்பக் கேட்டார்.“ஒன்றும் தெரியாமல் வளர்ந்து, வாழ்ந்து சாகப்போகும் குதிரைக்கு மோட்சம் தருகிறீர்களே.. எல்லாம் அறிந்த பிராமணனாகிய நீங்கள் மோட்சம் பெற வேண்டாமா? அந்த அக்கினி குண் டத்தில் யாகம் நடத்தும் உங்களையும் தூக்கிப் போட்டால் உங்களுக்கும் மோட்சம் கிட்டுமல்லவா?. ப்ராகிருத மொழியில் மக்களிடமும் இதே கேள்வியை புத்தர் பரப்ப… திடுக்கிட்டுப் போனார்கள் பிராமணர் கள்
நன்றி: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது என்ற புத்தகத்திலிருந்து...
நன்றி: அருந்தமிழிலிருந்து..
ஐடா ஸ்கடர்
1877ம் ஆண்டு..!
நம் நாட்டில் கடுமையான பஞ்சம்.. பட்டினி சாவு 50 லட்சத்தை தாண்டியது... பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட சாப்பாடு இல்லாத நிலை!!
அதனால், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் மருத்துவ சிகிச்சை, உணவு தருவதற்காக இந்தியா வந்தன. அப்படி ராணிப்பேட்டைக்கு வந்தவர்தான் டாக்டர் ஜான்.. இவரது 14 வயது மகள் ஐடா ஸ்கடர்!
ஒரு நாள் இரவு கதவு தட்டப்படுகிறது.. ஐடா கதவை திறக்கிறாள்.. ஒரு பிராமணர் நின்று கொண்டிருந்தார். "அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்... உடனே வாங்க" என்று பதறுகிறார்..!
ஐடாவோ, "நான் டாக்டரல்ல, என் அப்பாதான் டாக்டர், கொஞ்சம் இருங்க அவரை எழுப்பறேன்" என்கிறார்.
"இல்லம்மா.. என் மனைவிக்கு 14 வயசு தான். நாங்க பிராமணாளுங்க.. பெண்ணை ஒரு ஆம்பள தொட அனுமதி இல்லை" என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.
கொஞ்ச நேரத்தில் ஒரு முஸ்லிம் நபர் கதவை தட்டுகிறார்.. மனைவிக்கு பிரவச வலி என்பதால் உடனே வருமாறு அழைத்தார். ஐடா தன் தந்தையை பற்றிக்கூற, "வேண்டாம்மா... நாங்கள் இஸ்லாமியர்கள்... எங்க வீட்டு பொண்ணை ஆண்கள் பார்க்கவே கூடாது" என்று அவரும் சோகத்துடனே திரும்பிவிடுகிறார்.
அந்த பெண்களுக்கு என்ன ஆச்சோ என்று இரவெல்லாம் பதட்டத்துடன் தவிக்கிறாள் ஐடா... மறுநாள் காலை அந்த கர்ப்பிணிகளின் சடலம் தன் வீட்டை கடந்து கொண்டு செல்லப்படுவதை பார்த்து அதிர்ந்து தேம்பி தேம்பி அழுகிறாள் ஐடா.
"என்ன தேசமிது? பெண்களை படிக்க வைக்க மாட்டாங்களாம், ஆனால் பெண்ணுக்கு பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்? இந்த நாட்டில் பெண்களை படிக்கவிடவில்லை என்றால் என்ன, நான் படித்துவிட்டு வந்து இந்த பெண்களை காப்பாற்றுவேன்" என சபதமேற்று அமெரிக்கா சென்று படிக்கிறார்.. டாக்டராகிறார்..!
சக நண்பர் ஒருவர் ஐடாவை காதலிக்கிறார்.. ஆனால் ஐடா அந்த காதலை நிராகரிக்கிறார்.. மருத்துவம் படித்து முடித்ததுமே அமெரிக்காவிலேயே வேலை வாய்ப்புகள் வந்தன.. ஐடா அதையும் நிராகரிக்கிறார்.. தமிழகத்தில் இறந்து போன அந்த பெண்களின் சடலங்கள் மட்டுமே கண்முன் வந்து வந்து போயின!!
ஆனால், வெறும் படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வளவு பேரை தமிழ்நாட்டில் காப்பாற்ற முடியும் என்று நினைத்து, ஒரு ஆஸ்பத்திரி தேவை என்பதை உணர்கிறார்.. பல நாடுகளில் இந்தியாவின் அவலத்தை சொல்லி நிதி உதவி கேட்கிறார்.. ஓரளவு நிதியும் சேர்கிறது...!
இனி ஒரு கர்ப்பிணியைகூட சாக விடமாட்டேன் என்ற உறுதியுடன் 20-ம் நூற்றாண்டின், முதல் நாளில் தமிழகத்தில் கால் பதிக்கிறார் ஐடா.
ஆஸ்பத்திரி கட்டும் பணியை ஆரம்பிக்கிறார்.. படாதபாடு பட்டு, இறுதியில் 40 படுக்கை வசதியுடன் அந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு விட்டது.
பெண்ணுரிமை என்ற பேச்சுக்கே இடமில்லாத நேரத்தில், பெண்களுக்காகவே ஒரு மருத்துவமனையையே கட்டி முடித்தார் இளம்பெண் ஐடா!
அதுதான் ஆசியாவிலேயே தனிப்பெருமை வாய்ந்து.. நூற்றாண்டையும் கடந்து இன்றும் பிரம்மாண்டமாய் நிற்கும் வேலூர் "சிஎம்சி" ஆஸ்பத்திரி!!
யார் இந்த பெண்? இவர் ஏன் நமக்காக அழுதார்? இவர் ஏன் நமக்காக உருகினார்? இவர் ஏன் நமக்காகவே வாழ்ந்தார்?
எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, நம்ம நாட்டுக்கு தன் வாழ்க்கையையே மொத்தமாக அர்ப்பணித்த ஐடா, அன்னை தெரசாவுக்கே "வழிக்காட்டி" என்று சொன்னால் நம்ப முடிகிறதா?!!
அங்குமிங்கும் அலைந்து திரிந்து 5 இளம்பெண்களை திரட்டி, அவர்களுக்கு பயிற்சி தருகிறார் ஐடா.. இவர்கள் தான் தமிழகத்தின் முதல் 5 நர்ஸ்கள்..!
நம்முடைய பெண்கள் மருத்துவம் படிக்க விதை போட்டதே, இந்த ஐடா தான் என்பதை எத்தனை பேர் இன்று நினைத்து பார்க்கிறார்களோ தெரியவில்லை !
ஆனால், ஒரு பெண் தனி ஆளாக நின்று ஏற்றிய மெழுகுவர்த்தி, இன்று பிரகாசமாக, உலகத் தரத்தோடு, வேலூரில் இன்னமும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.. லட்சக்கணக்கான மக்களுக்கு உயிர் தந்து கொண்டுமிருக்கிறது..!
நர்ஸ் தினமான இன்றைய நாளில், ஐடா என்ற மனித தெய்வத்துக்கு மட்டுமில்லை, இன்றைய ஆபத்தான சூழலில், உயிரை பணயம் வைத்து சிகிச்சை தந்து வரும் அனைத்து வெள்ளுடை தாய்களுக்கும் என் கோடி நன்றிகள்!!
Thursday, May 06, 2021
கால்டுவெல் : திராவிட அடையாளம்
இராபர்ட் கால்டுவெல் வாழ்ந்த காலம் 77 ஆண்டுகள். அயர்லாந்தில் பிறந்தார்; ஸ்காட்லாந்தில் வளர்ந்தார்; இந்தியாவில் வாழ்ந்தார்; தமிழர்களின் நெஞ்சில் நிறைந்தார்.
இந்த நூற்றாண்டில் அதிகமாகப் பேசப் பட்ட வார்த்தைகளான திராவிடம் - இன உணர்வு - விடுதலை சுயமரியாதை - தனித்தமிழ் இயக்கம் - தமிழ் - தமிழர் என்ற அனைத்து நெருப்புக்குமான மூலப் பொறி கால்டுவெல்லின் மூளையிலிருந்தே மூண்டது என்ற வரலாற்றுப் பேருண்மையை தம் ஆய்வின் மூலம் நிலை நிறுத்துகிறார் கவிப் பேரரசு வைரமுத்து.
சமஸ்கிருதம்தான் இந்திய மொழிகளுக் கெல்லாம் தாய் என்ற மாயை உலகை வலம் வந்தது. மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் வடமொழி இலக்கியம் - கலை - பண்பாடு - வாழ்வியல் என்பதைத் தாண்டி தென் திசை நோக்கி அவர்கள் பார்வை திரும்பவே இல்லை. கால்டுவெல் இலண்டன் மிஷனரி சொசைட்டியில் சேர்ந்தார். சமயம் பரப்ப சென்னை வந்தார். கடற்பயணம் இடர் பயணமாய் அமைந்தது. சூறாவளி சுழன்றது. பிரெஞ்சுக் கப்பலுடன் மோதி சிதைந்தது. மதம் பரப்ப வந்த முப்பது பேரில் கடலில் மூழ்கி மாண்டவர்கள் 24 பேர். உயிர் பிழைத்தவர்கள் அறுவர். அதில் கால்டுவெல் ஒருவர்.
08.01.1838 இல் சென்னை வந்தடைந்தார். ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் கொண்டவர். 18 மொழிகளைக் கற்றறிந்த பன்மொழி வித்தகர். துரூ என்பவரிடம் தமிழ் கற்றார். உவின்சுலோ, போப், பவர், ஆண்டர்ஸன் முதலியோர்களும் கால்டு வெல்லுக்கு தமிழ் போதித்தனர். பிரவுன் என்பவரிடம் சமஸ்கிருதம் கற்று தேர்ந்தார்
தமிழ் மொழி, தமிழ்நாடு, தமிழர் வாழ்வியல் இவற்றை முழுமையாய் உணர்ந்து , கொள்ள வடகோடி சென்னையிலிருந்து தென்கோடி குமரிமுனை வரை நடந்து கடந்தார். பட்ட சிரமங்கள் பட்டியலில் அடங் காது; சத்திரத்தில் தங்கவும் அனுமதி மறுக்கப் பட்டது.
தமிழனின் மூலமுகவரி அறிந்து சொன்ன மூதறிஞன் தங்கிட மாட்டுக்கொட்டகையில் இடம் கொடுத்தான் இருளில் உழன்ற தமிழன். இளமையில் பைன் மரங்களுக்கிடையே தவழ்ந்த கால்டுவெல், தமிழ் தழைக்க 50 ஆண்டுகள் பனை மரங்களுக்கு மத்தியில் வாழ்ந்தார்.
இடையன் குடிதான் அவர் வாழ்ந்த ஊர்; கள்ளியும் முள்ளியும் நிறைந்த பகுதி; வெப்பம் அனலாய் தகிக்கும். வாழ்வின் ஒவ்வொரு நாளும் கசக்கும்.
அந்த கிராமத்திலே தங்கியிருந்து, பள்ளிக்கூடம் ஏற்படுத்தி, கல்வி கற்பித்து, மதிய உணவு வழங்கி, மருத்துவ வசதி ஏற்படுத்தி, சுகாதாரத்தைச் சொல்லிக் கொடுத்து நாகரீக உலகிற்கு நாட்டு மக் களை கைப்பிடித்து அழைத்துச் சென்ற பெரும்பணிகளுக்கு மத்தியில் 15 ஆண்டுகள் மூளையைக் கசக்கி, காலத்தால் அழியாத இலக்கண நூலைப் படைத்தார்.
திராவிடம் என்ற சொற்சுட்டு
கால்டு வெல்லால் உண்டாக்கப்பட்டதன்று.
அது ஓர் ஆதிச்சொல்.
மணோன்மணியம் சுந்தரம் பிள்ளை,
தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும் என்கின்றார். ரவீந்திரநாத் தாகூர்,
திராவிட உத்கல வங்கா என்கின்றார்.
தாயுமானவர், திராவிடத்திலே என்கின்றார்.
லீலா திலகம் எனும் 14ஆம் நூற்றாண் டைச் சேர்ந்த மலையாள இலக்கியம், திராவிடம் என்கிறது.
குமரிலபட்டர் 8-ஆம் நூற்றாண்டில் ஆந்திர திராவிட பாஷா என்கின்றார்.
பாகவத புராணத்தில் சத்திய விரதன் என்ற இந்திய மூதாதை திராவிட மன்னன் என்றே அழைக்கப்படுகின்றான். மனுதர்ம சாஸ்திரம், திராவிடர் என்பதை இழி இனத்தவராகக் குறிக்கின்றது.
திராவிடம் எனும் சொல்லை இலக்கியங் களும், இலக்கணங்களும், புராணங்களும் தம்தம் வசதிக்கேற்ப பொருள் சுட்ட, கால்டுவெல் மட்டும்தான் திராவிடம் என்பது ஓர் இனக்குழு நாகரிகத்தின் மூத்த மொழிச்சுட்டு என்பதை அறிவியல் அடிப்படையில் மெய்ப்பித்தார்.
எல்லிஸ் எனும் அறிஞர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்றவை ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை அல்ல. அது தனி மொழிக் குடும்பம் என்றார். அதனை அடிப்படையாக வைத்துக் கொண்டு கால்டுவெல் தமிழாராய்ச்சி பணி நிகழ்த்தினார். கடும் உழைப்பின் பயனாய் ஆவணத் தரவுகளோடு ஒரு நூல் முகிழ்த்தது. அப்புத்தகம் தான் ஒரு மாபெரும் புரட்சியை நிகழ்த்தியது. 1856 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த நூல் தான் A Comparative Grammar of the Dravidian or South Indian Family Tamil Languages. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்நூல் திராவிட கருத்தியலை இமயத்திலே ஏற்றிவைத்தது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு இதுவரை 23 பதிப்புகள் வெளிவந்திருக்கின்றது. கிளாஸ்கோ பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறது. திராவிடர்களை உலகம் அறிய இந்நூல் உதவியது. திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி தமிழ். தமிழில் இருந்துதான் தெலுங்கு, மலையாளம், கன்னடம், உட்பட்ட 28 மொழிகள் பிறந்ததாக வரலாற்று மொழியியல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு போன்ற மொழிகள் பேசும் மக்கள் திராவிடர்கள் என வரலாற்று ஆவணங்களைச் கொண்டு நிறுவியவர் கால்டுவெல்.
தமிழை வளர்க்க வந்தவர்கள் மதத்தைப் பரப்பினார்கள்; மதத்தைப் பரப்ப வந்த கால்டுவெல் தமிழை வளர்த்தார்.
கால்டுவெல்லின், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூல் வரலாற்றில் திருப்பு முனை. நூல் உரைக்கும் உண்மைகள்:
1. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு நேர் எதிர் தன்மை கொண்ட திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. 2. தமிழில் உள்ள சமஸ்கிருத சொற்களை எடுத்துவிட்டாலும் தமிழ் தானாக இயங்கும் ஆற்றல் கொண்ட செம்மொழி 3. தமிழ் மரபு என்பது வேத - பார்ப்பன - இந்து மரபின் தொடர்ச்சி அல்ல. 4. பார்ப்பன எதிர்ப்பு மரபாக உள்ளது.
கால்டுவெல்லின் ஆய்வு வெறும் மொழியாராய்ச்சியாக நின்றுவிடவில்லை. தமிழினத்தின் பல்வேறு வாழ்வியலைக் குறித்த ஆய்வாக உள்ளது.
திராவிட மொழிக் குடும்பத்தைத் திருந்திய மொழிகள் என்றும் திருந்தா மொழிகள் என்றும் இரண்டாகப் பிரிக்கிறார் ஆய்வாளர் கால்டுவெல்.
திருந்திய மொழிகள் ஆறு : தமிழ், மலை யாளம், தெலுங்கு, கன்னடம், துளு, குடகு திருந்தா மொழிகள் ஆறு: துதம், கோதம், கோண்ட், கூ, ஒரியன், ராஜ்மகால் சமஸ்கிருதத்திலிருந்தே திராவிட மொழிகள் பிறந்தன எனும் கூற்று உண்மைக்குப் புறம்பானது என்பதைத் திருந்தா மொழிகளைக் கொண்டே நிறுவுகிறார்.
ஈபுரு மொழியில் வழங்கும் துகி என்னும் சொல் தமிழின் தோகை என்னும் சொல்லின் திரிபு எனவும், அரிசி என்பது கிரேக்க மொழியில் அருசா என வழங்குவதையும் கால்டுவெல் குறிப்பிடுகிறார்.
கொற்கை துறைமுகம் குறித்து ஆய்வு நிகழ்த்தி இருக்கிறார். கடல் உள் வாங்கியிருப்பதை தெளிவாக பதிவு
செய்துள்ளார்.
சிங்கள இலக்கிய நூலான மகா வம்சம் என்ற நூலின் துணை கொண்டு தமிழ் - ஈழ உறவுகளை ஆய்வு செய்துள்ளார்.
திராவிடர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் ; உண்மையானவர்கள் ; நேர்மையானவர்கள்; விசு வாசமானவர்கள் என்பது அவர் கண்டறிந்து உலகிற்கு உடரைத்த உண்மைகளாகும்.
பரிதிமாற் கலைஞர் செம்மொழிக்காகக் குரல் கொடுத்தது 1887 இல். ஆனால் கால்டுவெல் செம்மொழிக்காக எழுப்பிய முதல் குரல் ஒலித்தது 1856 இல்.
கால்டுவெல் மனிதநேயம் மிக்கவர், தமிழோடு அவர் உறவு முடிந்து விட வில்லை. தமிழ் மக்கள் மீதான அன்பு பெருக் கெடுத்தது. தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது பாசம் பொழிந்தார்.
'தமிழ் என்று குறிப்பிட்டாலும், திராவிடம் என்று குறிப்பிட்டாலும் அது ஆரியத்திற்கு எதிரானது' என்று விளக்கிச் சென்றிருக்கும்
இராபர்ட்டு கார்டுவெல் அவர்களின் பிறந்த நாளில் (07-05-1814) தமிழியக்கம் தனது புகழ் வணக்கம் செலுத்துகிறது.
Wednesday, March 17, 2021
காந்தளூர் சாலையும் இராஜராஜ சோழனும்!
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ம் காந்தளூர் சாலையும் இராஜராஜ சோழனும்! தொடர்பிருக்கிறது. அதனால்தான் ஓர் உரையாடலாக இந்தப் பதிவு. 2373 words... எவ்வளவு பெரிய மாத்திரை! தமிழக அரசர்கள் முதன் முதலாக பேரரசர்களாக உயர்ந்தது பிற்கால சோழர்களின் காலத்தில்தான். அதற்கு வித்திட்டவர் இராஜராஜ சோழன். பாண்டியர்களையும் சேரர்களையும் ஒடுக்கி மொத்த தமிழகத்தையும் ஒரே அரசின் கீழ் கொண்டு வந்தவர் இவர்தான். தன் வாழ்நாளில் எண்ணற்ற போர்களில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடியவரும் இவரேதான். ஆனால், இவரது மெய்கீர்த்திகள் அனைத்தும் ஒரு வெற்றியில் இருந்தே தொடங்குகிறது. மட்டுமல்ல. இவருக்கு பிறகு வந்த அனைத்து சோழ மன்னர்களும் ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டுகளுக்கு திரும்பத் திரும்ப இராஜராஜ சோழரின் குறிப்பிட்ட அந்த வெற்றியை தங்கள் மெய்கீர்த்திகளில் சொன்ன பிறகே தங்களது சாதனைகளை பட்டியலிட்டுள்ளார்கள்; கல்வெட்டிலும் பொறித்துள்ளார்கள்; சாசனமாகவும் வடித்திருக்கிறார்கள். அதுதான் ‘காந்தளூர் சாலை கலமறுத்த’ என்ற சொற்றொடர். ‘திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் / தனக்கேயுரிமை பூண்டமை மனங்கொளக் கருதிக் / காந்தளூர்ச் சாலை கலமறுத்தறுளி...’ இப்படித்தான் இராஜராஜ சோழனின் மெய்கீர்த்தி தொடங்குகிறது. ‘காந்தளூர் சாலை’ வெற்றியை இராஜராஜ சோழன் முதல் அனைத்து பிற்கால சோழர்களும் தங்கள் மெய்கீர்த்திகளில் பெருமையாக குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றால் - ‘காந்தளூர் சாலை’ என்பது மக்கள் வாழ்ந்த ஒரு நிலப்பரப்பா..? பல்லவர்கள், பாண்டியர்கள், சேரர்கள் போல் ஏதேனும் அரசக் குடியா..? இல்லை. அது ஒரு கல்விக்கூடம்! ஒரு பள்ளியின் ஒரு பிரிவை ‘கலம் அறுத்ததைதான்’ இராஜராஜ சோழன் முதல் அனைத்து பிற்கால சோழர்களும் மாபெரும் சாதனையாக கருதியிருக்கிறார்கள்! ஏன் ஒரு கல்விக்கூடத்தின் மேல் இராஜராஜர் படையெடுத்துச் சென்றார்..? இதற்கான விடையை அறிவதற்கு முன், இந்த ‘காந்தளூர்’ எங்கிருக்கிறது... என்று பார்த்துவிடுவோம். தமிழகக் கல்வெட்டுகளில் காந்தளூர் என்னும் ஊர்ப்பகுதி முதன் முதலில் முத்தரையர் கல்வெட்டு ஒன்றில் இடம்பெறுகிறது. இதற்கு அடுத்து திருவண்ணாமலை திருக்கோயிலில் காணப்படும் முதலாம் பராந்தகர் காலத்து கல்வெட்டு ஒன்று காந்தளூர் என்னும் நாட்டுப் பகுதியை, ‘ஸ்வஸ்தி ஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேசரி பன்மர்க்கு யாண்டு 15வது வாணகோப்பாடி பெண்ணை வடகரைக் காந்தளூர் நாட்டு விச்சூர்...’ என்று குறிப்பிடுகிறது. இந்த இரண்டு கல்வெட்டுகளிலும் இடம்பெறும் காந்தளூரும் இராஜராஜர் மெய்கீர்த்தியில் குறிப்பிடப்படும் காந்தளூரும் ஒன்றல்ல என்கிறார்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஒரே குரலில். இன்றைய மாநில வரைபடங்களில் காந்தளூரை தேடினால் பலப்பல ஊர்கள் அதே பெயரில் வந்து நிற்கின்றன. செங்கல்பட்டுக்கு அருகில், திருச்சிக்கு அருகில், கேரள இரிஞ்ஞாலக் குடைக்கருகில் ஒன்று... என பட்டியல் நீள்கிறது. இவற்றில் இராஜராஜர் குறிப்பிடும் காந்தளூர் எது? அறிந்து கொள்ள, காந்தளூரை அடுத்து வரும் ‘சாலை’ என்னும் பதம் உதவுகிறது. ‘சாலை’கள் சமஸ்கிருதத்தில் ‘சாலா’ என்றழைக்கப்பட்டன. இந்தியா முழுவதும் அக்காலத்தில் நிறுவப்பட்ட ‘கடிகா’ அல்லது ‘கடிகை’ என்னும் நிறுவனங்களை ஒட்டியே ‘சாலை’களின் செயல்பாடுகள் அமைந்தன. பல்லவர்கள் காலத்தில் மட்டுமல்ல சோழர் காலத்திலும் கடிகைகள், சாலைகள் தமிழகம் எங்கும் இயங்கியிருக்கின்றன. இதற்கான கல்வெட்டு ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன. கடிகைகளும், சாலைகளும் ஏதாவது ஒரு திருக்கோயிலோடு தம்மை இணைத்துக் கொண்ட நிறுவனங்களாகவே செயல்பட்டிருக்கின்றன. இதற்கான முக்கியமான ஆதாரம் ஆய்வேள் மன்னர் கோக்கருந்தடக்கரின் செப்பேட்டில் காணப்படுகிறது. இதில் பார்த்திவசேகரபுரத்து விஷ்ணு பட்டாரகர் திருக்கோயிலை ஒட்டி, தாம் அமைக்கப்போகும் சாலையைப் பற்றிய பல முக்கியத் தகவல்களை பகிர்ந்திருக்கிறார். ஆக, காந்தளூரில் அமைந்திருந்த சாலையும் ஏதோ ஒரு திருக்கோயிலுடன் தொடர்புள்ளதாக இருக்க வேண்டும். அந்தக் கோயில் இப்போது எங்கிருக்கிறது? கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் நெரிசல் மிக்க வலியசாலை பகுதியில் அமைந்திருக்கும் ஜுவாலா மகாதேவர் திருக்கோயிலே என்கிறார் அறிஞர் டி.ஏ.கோபிநாத ராவ். தான், பதிப்பித்த ‘திருவிதாங்கூர் சமஸ்தானக் கல்வெட்டுகள்’ என்னும் தொகுப்பின் இரண்டாம் பாகத்துக்கான முன்னுரையில் காந்தளூர் பற்றியும் சாலை குறித்தும் ஆழமாக விவாதித்திருக்கிறார். ஜுவாலா மகாதேவர் திருக்கோயிலை காந்தளூருடன் நேரடியாக தொடர்புபடுத்தும் ஒரே ஆதாரம், திருவனந்தபுரம் அனந்தபத்மநாபஸ்வாமி ஆலயத்தில் பாதுகாக்கப்படும் ‘மதிலகம் ஆவணம்’. இந்த ஆவணங்களில் இக்கோயில் ‘காந்தளூர் மகாதேவர் கோயில்’ என்றே குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டும் டி.ஏ.கோபிநாத ராவ், இக்கோயிலுடன்தான் காந்தளூர் சம்மந்தப்பட்டிருக்க வேண்டும் என்கிறார். இக்கோயில் இறைவனின் பெயரான ‘ஜுவாலா மஹாதேவர்’ என்பதும் ‘சாலா மகாதேவர்’ என்பதன் திரிபே. ஏனெனில் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி கூற்றுப்படி ‘சாலா’ என்னும் சொல் வடமொழியில் ‘ஜுவாலா’. இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஆதாரம், ஜுவாலா மகாதேவர் திருக்கோயில் என்கிற ‘சாலா மகாதேவர்’ திருக்கோயிலின் கருவறை மேற்குச்சுவரில் காணப்படும் முதலாம் இராஜேந்திரரின் சிதைந்த மெய்கீர்த்தி! இதற்கிடையில் பரதப்புழா நதிக்கரையில் வேறொரு காந்தளூர் திருக்கோயிலை வில்லியம் லோகனின் புகழ்பெற்ற ‘மலபார் மேனுவல்’ அறிமுகம் செய்வதை சில ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால், பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்கள் இதை மறுத்து டி.ஏ.கோபிநாத ராவ் குறிப்பிடுவதையே ஏற்கிறார்கள். அடுத்து சாலை. காந்தளூரில் அமைந்திருந்த சாலை பற்றி இன்றைய தேதியில் விரிவாக விவாதிக்கும் ஒரே கட்டுரை, கேரள வரலாற்று அறிஞர் எம்.ஜி.எஸ்.நாராயணன் எழுதியுள்ள ‘Bachelors of Science’. இதில் சாலைப் பாரம்பரியம் பற்றியும் அங்கு கொடுக்கப்பட்ட பல்வேறு விதமான பயிற்சிகள் குறித்தும் அலசுகிறார். ‘சட்டர்கள்’ என்றழைக்கப்பட்ட அந்நாளைய நம்புதிரி அந்தணர்களுக்கு வேதம், வேதாந்தம், வியாகர்ணம் (இலக்கணம்), அரசியல் மற்றும் போர்ப் பயிற்சி முறைகளை கற்றுத் தந்த இடம்தான் சாலை என்கிறார். கேரளத்தில் காந்தளூரையும் சேர்த்து குறைந்தபட்சம் நான்கைந்து சாலைகள் அமைந்திருந்தன. அவை அனைத்தும் 13 - 14ம் நூற்றாண்டு வரை செயல்பட்டிருக்கின்றன. ஆக காந்தளூர் சாலை என்பது அந்நாளில் கேரளத்தில் - சேர நாட்டில் - மிகவும் புகழ்பெற்று விளங்கிய ஒரு கல்வி நிறுவனம் என்பது தெளிவாகிறது. இப்போது இராஜராஜ சோழருக்கு வருவோம். அவருடைய வெற்றிகளைப் பதிவு செய்யும் திருவாலங்காடு செப்பேடு, அவர் மதுரையில் இருந்து தனது திக்விஜயத்தை தொடங்கினார் என்றும் அமரபுஜங்கன் நெடுஞ்செழியனை வென்றார் என்றும் குறிப்பிடுகிறது. ஆனால், இந்த மதுரை வெற்றியையும் அமரபுஜங்கனையும் இராஜராஜர் ஏனோ தமது மெய்கீர்த்திகளில் அவ்வளவாக குறிப்பிடவில்லை. பாண்டியரையே பொதுவாக ‘செழியரைத் தேசு கொள்’ என்று கூறி சென்றுவிடுகிறார். ஆனால், காந்தளூர் இராஜராஜருக்கு முக்கியமாக இருந்திருக்கிறது. தமக்கென்று முறையான மெய்கீர்த்தி உருவாக்கப்படும் காலம் வரை அவர் தன்னை ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிய கோ இராசகேசரி வர்மர்’ என்றுதான் குறிப்பிட்டுக் கொள்கிறார். அப்படி என்ன இராஜராஜருக்கு காந்தளூர் மேல் பகை? அப்போது அங்கே யார் அவரை எதிர்த்தார்கள்? சாலையோ ஒரு கல்வி நிறுவனம். அதனை அவர் தாக்க வேண்டிய அவசியம் என்ன? அது என்னவிதமான தாக்குதல்? நிச்சயம் காந்தளூரை ஒட்டுமொத்தமாக அழித்தொழித்த தாக்குதல் அல்ல. ஏனெனில் இராஜராஜருக்கு பிறகு மீண்டும் மீண்டும் பல மன்னர்கள் - சோழர்கள் - காந்தளூரை கலமறுத்துள்ளனர். அட... ‘மூன்று கை மாசேனை’ என்னும் சோழப் படை கூட காந்தளூரை கலமறுத்ததாக கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி கூறுகிறார். போலவே ‘வேலை அழித்ததும் சாலை கொண்டதும் தண்டு கொண்டு அல்லவோ’ என்கிற ‘கலிங்கத்துப் பரணி’யின் வினாவிலும் அழித்தொழிப்பது வேறு சாலை கொள்வது வேறு என்ற அர்த்தம் நிரம்பி வழிகிறது. சாலை கொள்வதற்கும் சாலை கலமறுப்பதற்கும் என்ன தொடர்பு? இதை சரிவர புரிந்து கொள்ள அப்போதைய அரசியல் பின்னணியை கொஞ்சம் பார்க்க வேண்டும். தென்னாட்டின் அந்நாளைய அரசியல் நிலவரம் சேரர், சோழர், பாண்டியர் என்று அறியப்பட்ட முப்பெரும் சக்திகளாலும் அவர்களுக்குக் கீழ் தத்தம் நிலப்பகுதிகளை ஆண்டு வந்த குறுநில மன்னர்களாலுமே வரையறுக்கப்பட்டது. இவர்களுக்குள் நிரந்தர நட்போ பகையோ என்றுமே இருந்ததில்லை. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தங்களுக்குள் கூட்டு சேர்ந்தார்கள் அல்லது சண்டையிட்டார்கள். தமிழகத்துக்கு வடக்கே அமைந்திருந்த தேசங்கள் இந்த மூன்று மண்டலங்களையும் வளைக்கத் தருணம் பார்த்து காத்திருந்தன. பலகீனமான சமயங்களில் ஆதாயம் தேடின. ஏதாவது ஒரு சக்தியுடன் இணைந்து மற்ற இரு சக்திகளையும் அழித்து தமது இராஜ்ஜியத்தை பெரிதாக்கிக் கொள்ள எப்பொழுதும் சிந்தித்தன. இதன் விளைவுதான் தமிழகத்தின் 2 ஆயிரம் கால வரலாறு. இந்த இடத்தில் சேர நாட்டின் அரசியல் மற்றும் சமுதாய அமைப்பைக் குறித்து தெரிந்து கொள்வது நல்லது. கி.மு.2ம் நூற்றாண்டு முதல் கி.பி.3ம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் ஒரு பகுதியாக அறியப்பட்ட சேர நாடு அதற்குப் பின்வந்த காலத்தில் மெல்ல மெல்ல தனக்கென தனியாக அரசியல் மற்றும் கலாசாரப் பின்னணியை உருவாக்கிக் கொண்டது. களப்பிரர் ஆட்சி கேரளத்தில் பரவவில்லை. களப்பிரர்களுக்கு பின் தமிழகத்தில் பல்லவர்கள் ஆதிக்கம் மலர்ந்த அதே காலத்தில் சேர நாட்டில் பெருமாள் வம்சத்தவரின் ஆட்சி உருவாகியது. இக்குலத்தின் மூத்த மன்னராக அறியப்படும் குலசேகரப் பெருமாள், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். இவருக்குப் பின் குறிப்பிடத்தக்க சேர மன்னராக திகழ்ந்தவர் 64 நாயன்மார்களில் ஒருவரான பெருமாக்கோதையார். இவரது இயற்பெயர் மறைந்து ‘சேரமான் பெருமாள்’ என்றே பக்தி இலக்கியங்களில் அறியப்படுகிறார். உண்மையில் பெருமாள் வம்சத்து மன்னர்கள் அனைவருமே ‘சேரமான் பெருமாள்’ என்றழைக்கப்பட்டனர். பெருமாள் வம்சத்து அரசர்கள் தங்களைக் ‘கேரளாதிநாதர்’, ‘சக்ரவர்த்திகள்’, ‘கோனேரின்மை கொண்டான் கோ’ என பலவாறு அழைத்துக் கொண்டாலும் அவர்களது அரசியல் பலமும் அதிகாரமும் குறுகியது. உண்மையில் மலைநாட்டின் அரசியல் பலத்தை நிர்ணயித்தது அதன் பல்வேறு கூறுகளாக அமைந்திருந்த நாடுகளும் அந்தந்த நாடுகளில் தத்தம் அதிகாரங்களை செலுத்திய நாடுவாழிகளுமே. இவர்களை கிட்டத்தட்ட தமிழக குறுநில மன்னர்களுடன் ஒப்பிடலாம். கேரளத்தின் வடக்கே அமைந்திருந்த கொளத்து நாட்டில் தொடங்கி புரைக்கிழநாடு, குறும்பொறை நாடு, இராம வளநாடு, குட்ட நாடு என்று விரிந்து தெற்கில் வேணாடு, வள்ளுவநாடு, குறுநாடு, படப்பாநாடு, முடாலநாடு என்று படர்ந்து நாஞ்சில் நாட்டில் முடியும். ‘நாடுவாழிகள்’, ‘நாடுடையவர்கள்’ என்று அழைக்கப்பட்ட இந்த மரபினர் வம்சாவழியாகத் தத்தம் பகுதிகளில் ஆட்சி செய்தனர். இவர்களுக்கென்று படை, அதிகாரம், வருமானம்... என எல்லாம் இருந்தன. போர்க் காலங்களில் ‘பெருமாளுக்கு’ தோள் கொடுக்க படைகளை அனுப்புவார்கள். இப்படி கேரளத்தின் முக்கிய அரசியல் மற்றும் சமுதாய சக்தியாக நாடுவாழிகள் மட்டும் விளங்கவில்லை. இவர்களை ஈடுகட்டும் வகையில் வலிமை வாய்ந்த பிரிவினராக நம்புதரி அந்தணர்கள் வளர்ந்திருந்தார்கள்! ‘ரிஷிபர்யனான’ (பரசுராமரை குறிக்கும் மலையாள சொல்) பார்க்கவ இராமன் தன் வலிமை வாய்ந்த கோடரியைக் கொண்டு நிறுவிய ‘பிரம்ம ஷேத்திரமாக’ மலை நாட்டை கேரள அந்தணர்கள் கொண்டாடினார்கள்; கொண்டாடுகிறார்கள். இவர்களது மூத்த குடியிருப்புகள் கேரளா முழுக்க 32 கிராமங்களில் வேரூன்றியிருந்தன. இவற்றுள் ‘பெருஞ்செல்லூர்’ முதலான கிராமங்கள் சங்ககாலம் முதல் அறியப்பட்டிருந்தவை. இந்த கேரள அந்தணர்கள் தத்தம் கிராமங்களில் பண்டைய ஆகம முறைப்படி கோயில்கள் அமைத்தார்கள். ஊருக்கு மேற்கே விஷ்ணு, கிழக்கே சிவன் ஆலயங்கள். இந்தக் கோயில்களுக்கான நிலங்கள், ‘சேரமான் பெருமாள்’களால் நிவந்தங்களாக வந்து சேர்ந்தன. கோயில் வழிபாடுகளைக் கண்காணிக்கவும், ஊரை நிர்வகிக்கவும் மகாசபை என்னும் அமைப்புகள் தோன்றின. இவற்றுள் அரசியல் வலிமை வாய்ந்த அமைப்பாக மகோதயபுரத்தின் ‘நாலுதளிச்சபை’ உருவானது. மகோதகையின் நான்கு திக்குகளிலும் அமைந்திருந்த மூழிக்குளம், ஜரணிக்குளம், பரவூர் மற்றும் இரிஞ்ஞாலக் குடை என்னும் அந்தண கிராமங்களில் அமைந்திருந்த கீழ்த்தளி, மேற்றளி, நெடியதளி, சிங்கபுரத்தளி என்ற நான்கு திருக்கோயில்களின் தளியதிகாரிகளைக் கொண்டிருந்த அமைப்பே ‘நாலுதளிச்சபை’. ஒவ்வொரு கோயிலில் இருந்தும் இரு தளி அதிகாரிகள் இந்த அமைப்பில் செயல்பட்டார்கள். இந்த ‘நாலுதளிச்சபை’, சேரமான் பெருமாளின் அந்தரங்க ஆலோசனைக் குழுவாக விளங்கியது! மேலே குறிப்பிட்ட நான்கு கிராமங்களும், கேரளா முழுக்க அமைந்திருந்த 32 கிராமங்களுக்கும் தலைமை செயலகமாக விளங்கியது! இவர்களது குரலே சேர நாட்டின் குரல்! தமிழகம் முழுவதும் அக்காலத்தில் பல்லாயிரக்கணக்கான கோயில்கள் இருந்தும், சேர நாட்டின் ‘நாலுதளிச்சபை’க்கு இணையான அரசியல் - சமுதாய அமைப்பு இங்கு தோன்றவேயில்லை! ஆனால், பல்லவ, சோழ, பாண்டிய தேசங்களில் அப்படி தோன்ற வேண்டும் என்று ‘நாலுதளிச்சபை’ பல நூற்றாண்டுகளாக முயன்றது! இதற்காகவே சாலை அல்லது சாலா என்றழைக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இது கிட்டத்தட்ட பல்லவர் காலத்தில் காஞ்சியில் இயங்கிய கடிகைக்கு சமமானது என்றாலும் நம்புதரி அந்தணர்களின் பின்புலத்தை ஒட்டி வேறுபட்டும் இருந்தன. இந்த வேறுபாடுகளில் குறிப்பிடத்தக்கது சாலைகளில் பயிற்றுவிக்கப்பட்ட ஆயுதப் பயிற்சி! இந்த ஆயுதப் பயிற்சி முறைகள் முதுபெரும் நம்புதரி ஆசான்களால் உருவாக்கப்பட்டு நுட்பமான முறையில் அந்தண மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டன. பயிற்சி எடுத்த அந்தண மாணவர்கள், ‘சட்டர்கள்’ அல்லது ‘சாத்திரர்கள்’ என்றழைக்கப்பட்டார்கள். பின்னாளில் தமிழக வழக்கத்துக்கு வந்த ‘சட்டாம் பிள்ளை’ என்ற சொல்லுக்கான வேர், ‘சட்டர்கள்’தான்! பயிற்சி பெறும் அந்தண மாணவர்கள் இடையே ‘கலங்கள்’ என்றழைக்கப்பட்ட பிரிவுகள் இருந்தன. பவிஷிய சரணத்தார் கலம், தைத்திரிய சரணத்தார் கலம், தலவகார சரணத்தார் கலம்... என வேதாகமங்களை ஒட்டி ஒவ்வொரு கலத்துக்கும் பெயரிடப்பட்டன. வேதம், வேதாந்தம், இலக்கணம், பண்டைய சாத்திரங்கள், அரசியல் விவகாரங்கள், மருத்துவம், விஞ்ஞானம், மாந்திரீகம், வர்மம், நுண்கலைகள்... என சகலமும் அந்தண மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டன. அரசர்கள் சாலைகளை பராமரிக்க நிலங்களை நிவந்தங்களாகக் கொடுத்ததால், இதற்கு ஈடாக அந்த அரசருக்கு தேவையான அமைச்சர்கள், தளபதிகள், போர் வீரர்களை சாலைகள் உருவாக்கிக் கொடுத்தது. ‘நான்தான் சிறந்தவன்... நான் சொல்வதே சரி... நான் எழுதுவதே வரலாறு... சிம்மாசனத்தில் தாராளமாக யார் வேண்டுமானாலும் அமரலாம்... ஆனால், அப்படி அமர்பவர்கள் என் சொல்படியே கேட்டு நடக்க வேண்டும்... வருவாய், வரிகளை தீர்மானிப்பது முதல் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்... என்ன செய்யக் கூடாது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் எனக்கே உண்டு...’ என சாலைகளில் பயிற்சி பெறும் ஒவ்வொரு அந்தண மாணவர்களும் நினைத்தார்கள். அப்படி நினைக்க வைப்பதற்காகவே விவரம் தெரியும் வயதுக்குள் சாலைகளுக்கு அனுப்பப்பட்டார்கள். எனவே அந்தண மாணவர்களின் சிந்தனை, நினைப்பு, செயல்... என சகலத்தையும் முதுபெரும் நம்புதரி ஆசான்களால் வடிவமைக்க முடிந்தது. இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும். சேர நாட்டின் - கேரளத்தின் - இப்படிப்பட்ட சமுதாய அமைப்பு தமிழகத்துக்கு எப்படி பொருந்தும்..? இதற்கும் இராஜராஜ சோழருக்கும் என்ன தொடர்பு..? இதற்கான விடை சேர அரசர்களுக்கும் தமிழக அரசர்களுக்கும் நிலவி வந்த அரசியல் உறவுகளில் புதைந்திருக்கிறது! பன்னெடுங்காலமாக சேர நாடு பல்லவ, சோழ, பாண்டியர்களோடு கொண்டிருந்த நெருங்கியத் தொடர்புகளால் கேரளத்தின் குறுநில மன்னர்களும் இதர பிரிவினரும் - குறிப்பாக அந்தணர்கள் - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிபெயர்ந்தனர். இவர்கள் அனைவருமே ‘சாலை’களுடன் தொடர்புடையவர்கள்! இக்குடியினரில் மிகவும் தொன்மை வாய்ந்தவர்கள் ‘தில்லை மூவாயிரவர்’ என சுந்தரமூர்த்தி பெருமானால் குறிக்கப்படும் சிதம்பரத்தின் தில்லைவாழ் அந்தணர்கள்! சோழ அரசர்கள் தில்லையம்பதியின் பெருமானை தங்கள் குலதெய்வமாக குறித்தனர். சோழ வம்சத்தவர் சக்கரவர்த்தியாக முடிசூடும்போது மணிமுடியை மன்னரின் முடியில் இருத்தும் உரிமை தில்லைவாழ் அந்தணர்களுக்கே இருந்தது! இந்த இடத்தில் தில்லைவாழ் அந்தணர்களின் வரம்பு மீறிய அதிகாரத்தைக் குறைக்க நந்திவர்ம பல்லவன் தில்லை ஆலயத்தில் பெருமாள் சிலையை வைத்ததும்... அதை எதிர்த்து தில்லைவாழ் அந்தணர்கள் கலகம் செய்ததையும்... பிறகு தில்லைவாழ் அந்தணர்களின் துர்போதனையை ஏற்று அந்த பெருமாள் விக்கிரகம் குலோத்துங்க சோழன் காலத்தில் கடலில் போடப்பட்ட நிகழ்வும்... இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மூண்ட சைவ - வைணவ மதக் கலவரங்களையும் நினைவில் கொள்வது நல்லது! போலவே தில்லை ஆலயத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தேவார ஓலைகளை இராஜராஜ சோழர் படையுடன் சென்று மீட்டு மக்களுக்கு கொடுத்த சம்பவத்தையும்! விஷயத்துக்கு வருவோம். சிதம்பரத்தை தவிர திருச்சிக்கு அருகில் அமைந்துள்ள பழுவூரிலும் சேர மரபினர் வாழ்ந்து வந்தனர். திருஞானசம்பந்தரின் பழுவூர்ப் பதிகம் இதை நிரூபிக்கிறது. தவிர, ‘மன்னுபெரும் பழுவூர்’ என்றே கல்வெட்டுகள் பழுவூரைக் குறிக்கின்றன. சோழர் காலத்தில் இப்பகுதி சேர மரபை சார்ந்த பழுவேட்டரையர்கள் என்னும் குறுநில மன்னரின் ஆளுக்கு உட்பட்டிருந்தது. சோழ அரசக் குலத்தவருடன் இவர்கள் மணவினைத் தொடர்புகள் வைத்திருந்தார்கள். இந்த பழுவேட்டரையர்களும் ‘சாலை’களுடன் தொடர்பு கொண்டவர்களே! பிற்கால சோழர்களுள் பெருவீரராக விளங்கிய முதலாம் ஆதித்த சோழர் காலத்தில் சோழ - சேர உறவு மிக நெருக்கமாக வளர்ந்தது. அப்போது சேர நாட்டை ஆட்சி செய்து வந்த ஸ்தாணு ரவியின் நெருங்கிய நண்பராக முதலாம் ஆதித்தர் விளங்கினார். இந்த சோழ - சேர உறவு முதலாம் ஆதித்தரின் மகனான முதலாம் பராந்தகர் காலத்தில் மேலும் பலப்பட்டது. ஸ்தாணு ரவியின் பேத்தியான கோக்கிழானடிகளையே முதலாம் பராந்தகர் மணந்தார். இந்த சேர இளவரசிக்கும் முதலாம் பராந்தகருக்கும் பிறந்தவர்தான் சோழ இளவரசரான இராஜாதித்தர். சோழ இளவரசர் தங்கள் வம்சத்தின் கொழுந்து என்பதால் சேர நாடே அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது. குறிப்பாக அங்கிருந்த ‘சாலை’கள்! தங்கள் அதிகாரத்தை சேர நாட்டில் நிலை நாட்டியது போலவே சோழ தேசத்திலும் நிறுவலாம் என ‘சாலை’களின் ஆசான்களான நம்புதரி அந்தணர்கள் திட்டமிட்டார்கள். சோழ சைன்யத்தின் வடதிசை தளபதியாக விளங்கிய இராஜாதித்தரின் படையில், சேர வீரர்களைக் கொண்ட தனிப்படை ஒன்று இயங்கி வந்தது. இப்படை வீரர்கள் அனைவரும் ‘சாலை’களில் பயிற்சி பெற்றவர்கள்! இராஜாதித்தரின் அந்தரங்க மெய்க்காப்பாளாராகவும் சேனானிநாயகமாக விளங்கியவரும் மலைநாட்டின் வள்ளுவ நாடுவாழிகள் குடும்பத்தை சேர்ந்த மாவீரரான நந்திக்கரைப்புத்தூர் வெள்ளிங்குமரன்தான்! (பார்க்க Travancore Archaeological Series Vol 1, Page 291). முதலாம் பராந்தகர் காலத்தில் உடையார்குடிக்கு அருகில் வீரநாராயணபுரம் என்னும் சதுர்வேதி மங்கல குடியேற்றமும் அதனைத் தொடர்ந்து அனந்தீசுவரம் என்னும் கோயிலும் உருவாகின. இப்பகுதியில் பலகாலமாகவே புகழ்பெற்றதொரு திருமால் கோயில் இருந்து வந்தது. ஆழ்வார்கள் இத்தலத்தின் வீரநாராயண பெருமாளை பாடியுள்ளனர். இப்படி கீழ்த்தளியான அனந்தீசுவரம், மேற்றளியான விண்ணகரக் கோயில் என்று நம்புதரி அந்தணர்களால் சேர நாட்டில் வகுக்கப்பட்ட இலக்கணத்துடன் தமிழகத்தில் - சோழ தேசத்தில் - முதன் முதலில் உருவான வீர நாராயண சதுர்வேதி மங்கலத்தில் கணிசமான அளவில் ‘சாலை’களால் பயிற்றுவிக்கப்பட்ட சேர நாட்டு அந்தணர்கள் குடியேறினார்கள். இந்த அந்தணர்கள்தான் - உடையார்குடி - பின்னாளில் இராஜராஜ சோழரின் அண்ணனான ஆதித்த கரிகாலனை கொலை செய்யப் போகிறார்கள்! இப்படி நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த சோழ - சேர உறவில் முதல் விரிசலை ஏற்படுத்தியது தக்கோலப் பெரும் போர். முதலாம் ஆதித்த சோழர் இராஷ்டிரகூடத்து இளவரசியை மணந்திருந்தார். இந்த இளவரசி வழியாக அவருக்கு கன்னர தேவன் என்ற மகன் பிறந்திருந்தார். இந்த கன்னரதேவன் பட்டம் ஏற்காமல் பராந்தகர் சோழர் தில்லைவாழ் அந்தணர்களின் ஆதரவுடன் சிம்மாசனம் ஏறியது இராஷ்டிரகூடர்களுக்கு பிடிக்கவில்லை. பகை முற்றி இராஷ்டிரகூடத்து மன்னர் மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்தார். இன்றைய அரக்கோணமான அன்றைய தக்கோலத்தில் சோழர் படை இராஷ்டிரகூடர்களை சந்தித்தது. இப்பெரும் போரில் கங்க அரசன் பூதுகன், யானை மீதிருந்த இளவரசர் இராஜாதித்தரை தாக்கிக் கொன்றார். நமது வம்சத்து இளவல் சோழ அரியணையில் அமரப் போகிறார் என்று கனவு கண்டு வந்த சேர மன்னர் - குறிப்பாக ‘சாலை’களின் ஆசான்களான நம்புதரி அந்தணர்கள் - இராஜித்தரின் மரணத்தை அடுத்து நிலைகுலைந்தார்கள். சோழ நாட்டின் அரசியல் நிலவரமும் இதன் பிறகு பலம் குன்றியது. வடக்கே இராஷ்டிரகூடர்கள் வலு பெற்றார்கள். தெற்கிலோ ஈழத்துடன் இணைந்து பாண்டியர்கள் பல்வேறு தொல்லைகளை கொடுத்தார்கள். இதற்கிடையில் சேர நாட்டுடன் தாய்வழியில் உறவு கொண்டிருந்த பாண்டிய அரசர் இராஜசிம்மர், மலைநாட்டில் அடைக்கலம் புகுந்து அங்கேயே காலமானார். பராந்தகருக்கு பின் சோழ அரியணை ஏறிய கண்டராதித்தர், அரிஞ்சய சோழர், அரிஞ்சயரின் புதல்வரான இரண்டாம் பராந்தகர் என்கிற சுந்தர சோழர்... என்று தொடர்ந்த சோழ இராஜ வம்சத்தில் சேர குலத்துடனான உறவு பழையபடி வலுவாக இல்லாமல் அதேநேரம் முற்றிலும் துடைக்கப்படாமலும் இருந்தது. இதற்குக் காரணம் சேர வம்சத்தை சேர்ந்த பழுவேட்டரையர்களுடன் சோழர்கள் நெருக்கமான மணவினை உறவு வைத்திருந்ததே. என்றாலும் இரண்டாம் பராந்தகர் என்கிற சுந்தர சோழர் காலத்தில் உரிய வயதை எட்டியிருந்த கண்டராதித்தரின் புதல்வரான மதுராந்தகருக்கு இளவரசர் பட்டம் சூட்டப்படவில்லை. மாறாக சுந்தர சோழரின் மூத்த மகனான இரண்டாம் ஆதித்தர் என்கிற ஆதித்த கரிகாலனுக்கு இளவரசு பட்டம் சூட்டப்பட்டது. இதை ‘சாலை’களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த உடையார்குடி அந்தணர்கள் ஏற்கவில்லை. இராஜாதித்தர் வழியே தாங்கள் நிறைவேற்ற எண்ணிய கனவை - சேர நாட்டைப் போன்ற சமுதாய அமைப்பை - மதுராந்தகர் வழியே நிறைவேற்றலாம் என அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். எனவே மதுராந்தகர் சிம்மாசனத்தில் அமராமல் ஆதித்த கரிகாலன் சோழ மன்னரானால் தங்கள் கனவே சிதைந்துவிடும் என்ற முடிவுக்கு வந்த உடையார்குடி அந்தணர்கள் - ‘சாலை’களுடன் ஏதோ ஒருவகையில் தொடர்பு கொண்டிருந்த தமிழக குறுநில மன்னர்களை ஒன்றிணைத்து ஆதித்த கரிகாலனை படுகொலை செய்தார்கள். இதனையடுத்து அவர்கள் எதிர்பார்த்தது போலவே மதுராந்தகர் சோழ சிம்மாசனத்தில் அமர்ந்தார். தனது சிற்றப்பா மதுராந்தகர், சோழ சிம்மாசனத்தின் மீது ஈடுபாடு கொண்டிருக்கும் வரை அதனை தன் மனதாலும் தீண்டுவதில்லை என ஆதித்த கரிகாலனின் தம்பியான அருள்மொழி என்கிற இராஜராஜர் திட்டவட்டமாக அறிவித்ததாக திருவாலங்காட்டுச் செப்பேடுகள் பதிவு செய்துள்ளன. படிப்படியாக பலவீனம் அடைந்து கொண்டிருந்த சோழ சாம்பிராஜ்ஜியத்தை மேலை சாளுக்கிய மன்னரான சத்யாச்ரயர் கி.பி.980ல் தாக்கியபோது, உத்தம சோழர் என்று அழைக்கப்பட்ட மதுராந்தகரால் அவரை வெற்றி கொள்ள இயலவில்லை. இத்தோல்வியின் முடிவில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் சோழ நாட்டில் நடந்தன. ‘சாலை’களின் ஆதிக்கத்தாலேயே சோழர்கள் பலவீனமடைந்திருக்கிறார்கள் என மற்ற தமிழக குறுநில மன்னர்கள் உணர்ந்தார்கள். வேறுவழியின்றி கி.பி.985ல் உத்தம சோழர் என்கிற மதுராந்தகர் பதவி விலகினார். இராஜராஜர் என்னும் அடைமொழியுடன் அருள்மொழி சோழ சிம்மாசனத்தில் அமர்ந்தார். பட்டம் ஏற்ற கையோடு இராஜராஜர் செய்த முதல் காரியம், தன் அண்ணன் ஆதித்த கரிகாலரின் படுகொலைக்கு காரணமாக இருந்த - ‘சாலை’களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த - உடையார்குடி அந்தணர்கள் அனைவரையும் - குழந்தை, பெண்கள், வயதானவர்கள் உட்பட - உடுத்திய ஆடைகளுடன் கால்நடையாக நடந்து நாடு கடக்கும்படி செய்ததுதான். உடையார்குடி அனந்தீஸ்வரம் திருக்கோயிலின் விமான மேற்குச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள இராஜராஜரின் இரண்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டு (Epigraphia Indica, Vol 21, No 27) இதற்கான தெளிவான சான்று. இராஜராஜ சோழர் வழங்கிய இந்தத் தண்டனையை தனிப்பட்ட முறையில் தங்களுக்கு வழங்கப்பட்டதாகக் கருதிய ‘சாலை’கள் மதுராந்தகர் என்னும் உத்தம சோழரின் மகனை சோழ சிம்மாசனத்தில் அமர்த்த திட்டமிட்டன. இதற்காக ஆதித்த கரிகாலனை போலவே இராஜராஜ சோழரையும் படுகொலை செய்யவும் உள்நாட்டில் குழப்பங்களை உருவாக்கவும் காய்களை நகர்த்தினார்கள். இதற்கு மேலும் ‘சாலை’களை விட்டு வைத்தால் சோழ தேசத்தின் - தமிழகத்தின் - எதிர்காலமே கேள்விக்குறியாகும்... சேர நாட்டின் சமூக அமைப்பு இங்கும் உருவாகும்... அதைத் தடுக்க வேண்டும் என்றே ‘சாலை’களின் தலைமையகமாக விளங்கிய ‘காந்தளூர் சாலை’ மீது இராஜராஜர் போர் தொடுத்தார். அங்கு பயிற்றுவிக்கப்பட்ட பாடங்களில் ஒரு பிரிவினரை - கலம் - ஒடுக்கினார். அதேநேரம், நம்புதரி அந்தணர்கள் மட்டுமே - சேர சமுதாயத்தை எல்லா இடங்களிலும் ஏற்படுத்த முற்படுபவர்களே - தங்கள் எதிரி என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய அவசியம் இராஜராஜருக்கு ஏற்பட்டது. எனவேதான் பழைய கோயில்களை புனரமைத்தார். புதிய ஆலயங்களை எழுப்பினார். அரசு பதவி, அதிகாரங்களில் ஆர்வம் செலுத்தாத மற்ற அந்தணர்களுக்காக ஏராளமான பிரம்மதேயங்களை உருவாக்கினார். ஒரு மன்னராக இப்படி தராசு முள் எப்பக்கமும் சாயாதபடி பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்தது. அதேநேரம் இப்படி பிரம்மதேயங்களால் பலனடைந்த அந்தணர்கள் ‘சாலை’ சட்டர்களாக மெல்ல மெல்ல மாறுவதையும் அவரால் தடுக்க முடியவில்லை. இராஜராஜர் காலத்தில் மட்டுமல்ல... அதன் பிறகு ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ‘சாலை’கள் தமிழகத்தில் கால் பதிக்கத் துடித்தன. அதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டன. இதனால்தான் பிற்கால சோழர்களில் பெரும்பாலானவர்கள் ‘காந்தளூர் சாலை’யை கலமறுத்தபடியே இருந்தார்கள். கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாகியும் ‘சாலை’கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. ‘நான்தான் சிறந்தவன்... நான் சொல்வதே சரி... நான் எழுதுவதே வரலாறு... ஆட்சியில் தாராளமாக யார் வேண்டுமானாலும் அமரலாம்... ஆனால், அப்படி அமர்பவர்கள் என் சொல்படியே கேட்டு நடக்க வேண்டும்... வருவாய், வரிகளை தீர்மானிப்பது முதல் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்... என்ன செய்யக் கூடாது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் எனக்கே உண்டு...’ என்று கருதும் ‘காந்தளூர் சாலை’யின் மாணவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கைப்பாவை வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் அவர்கள் செல்வதை கண்கூடாகப் பார்க்கலாம். தங்களை ஆலோசகராக, வழிகாட்டியாக ஏற்காத அரசியல் கட்சியை, தலைமையை எந்தளவு அவதூறு செய்கிறார்கள்? ‘என்னைத் தவிர ஒருத்தனுக்கும் எதுவும் தெரியாது...’ என்ற கர்வமும் உடல்மொழியும் ‘காந்தளூர் சாலை’ சட்டகர்களிடம் வெளிப்படுவதை கணம்தோறும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ‘தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும்...’ என்று நினைக்கும், பேசும், எழுதும் ‘காந்தளூர் சாலை’ சட்டகர்களை எதிர்க்க தந்தை பெரியார் எடுத்த ஆயுதம் அற்புதமானது மட்டுமல்ல; வலுவானதும் கூட. ஆம். ‘உங்களுக்கு எதுவும் தெரியாது... நீங்க திருடங்க... பொய் சொல்லி ஏமாத்தறவங்க... ஃபிராடு...’ என்ற முழக்கத்தைக் கண்டுதானே ‘காந்தளூர்சாலை’ சட்டகர்கள் அலறுகிறார்கள். ‘காந்தளூர் சாலை’ என்பது இன்று குறியீடு. இது எந்தளவு உண்மையோ அதே அளவுக்கு நிஜம், இப்போது நம்புதரி அந்தணர்கள் மட்டுமல்ல... எல்லா சமுதாய மக்களும் ‘சாலை’களில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்பது. சற்றே ஏமாந்தால் சேர நாட்டின் சமுதாய அமைப்பு தமிழகத்திலும் வேரூன்றி விடும். மக்களுக்கான ஆலயங்கள் ‘சட்டர்களின்’ பிடிக்கு சென்றுவிடும். வாக்களிப்பது நம் உரிமை. உரிமையை பறிகொடுக்காமல் இருக்க ‘காந்தளூர் சாலை’க்கு எதிராக வாக்களிப்போம்!
Tuesday, March 02, 2021
இதெல்லாம் ஒரு செக்ஸுவல் ஹாரஸ்மெண்டா
Sunday, November 01, 2020
ஜப்பான் ஒழித்த சாதி
Friday, October 02, 2020
உத்திரப்பிரதேசம் சென்றிருக்கிறீர்களா?
உத்திரப்பிரதேசம் சென்றிருக்கிறீர்களா?
நிலவுடமையின் கோர முகத்தை அங்கு காணலாம்.
அங்கு வீடுகளின் உயரத்தைக் கூட சாதிதான் தீர்மானிக்கிறது.
தாக்கூரின் வீடு பார்ப்பானின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், யாதவர்களின் வீடு தாக்கூர்களின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், தலித்துகளின் வீடுகள் யாதவர்களின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், முசாகர்களின் வீடுகள் தலித்துகளின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும்.
முசாகர்கள் வயலில் இருக்கும் எலியை பிடித்து உணவாக உண்பார்கள். எலியைத் திண்பதால் அவர்களது வீடுகளும் எலி நுழைவதைப் போலவே இருக்க வேண்டும் என்பது இன்றைய தேதி வரை அங்கு நீடிக்கும் ஏற்பாடு.
கதவுகளும் அவ்வாறே அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதால், முசாகர்களின் வீட்டுக்குள் நுழைவது என்பது எலி வலைக்குள் நுழைவது போலத்தானிருக்கும்.
இந்த மக்கள் தான் சாதிக் கொடுமையால் ஊர்களை விட்டு ஓடி, குடும்பம் குடும்பமாக டெல்லி, நொய்டா போன்ற இடங்களில் பிளாட்பார வாழ்க்கை நடத்துபவர்கள்.
குடியிருப்புகள் அமைந்திருக்கும் திசைகூட காற்றின் திசைக்கு ஏற்ப தான் இருக்க வேண்டும். அதாவது தலித்துகளின் குடியிருப்பைக் கடந்து மேல்சாதியினரின் குடியிருப்புக்குக் காற்று கூட செல்லக் கூடாது. ஓலைக் குடிசையாய் இருந்த தனது வீட்டை ஒரு முசாகர் காரை வீடாக கட்டியதற்காக சமீபத்தில் அதை இடித்துத் தள்ளிய செய்தி வந்தது.
தமிழகத்தில் பெரியார் என்ன செய்தார் என்பதை இதிலிருந்து பொருத்திப் பார்க்கலாம்.
Tuesday, September 01, 2020
தமிழர்களிடம் நாலு காசு கையில் சேர்ந்தால்...
Saturday, August 22, 2020
அங்கே பார்ப்பனியம் கோரைப்பல் தெரியச் சிரிக்கிறது. நாமோ கொழுக்கட்டைக்கு நாக்கைச் சப்புக் கொட்டுகிறோம்.
Tuesday, July 21, 2020
பெரியார் பேசுகிறார் : வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்! - சித்திரபுத்திரன்
தந்தை பெரியார்
நகை வியாபாரி: அய்யா, தாங்கள் என்னிடம் காலையில் காசு மாலை வாங்கி வந்தீர்களே! அது தங்களுக்குத் தேவையா இல்லையா என்பதை தெரிவித்துவிட்டால் வேறு ஒருவர் வேண்டும் என்று சொல்லி மத்தியானமிருந்து கடையில் காத்துக்க்ண்டிருக்கிறார். அவருக்காவது கொடுத்துவிடலாம் என்று வந்திருக்கிறேன். எனக்குப் பணத்துக்கு மிகவும் அவசரமாகயிருப்பதால் தயவு செய்து உடனே தெரிவித்துவிடுங்கள்.
வைதீகன்: செட்டியாரே, அந்த நகை தேவையில்லை. வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும்போது பூனை குறுக்கே போச்சுது, அப்பொழுதே வேண்டியதில்லை என்று தீர்மானித்துவிட்டேன். வீட்டில் பெண்டுகள் பார்த்து மிகவும் ஆசைப்பட்டு மாலையிலுள்ள காசை எண்ணிப் பார்த்தார்கள். அதில் 68 காசு இருந்தது. எட்டு எண்ணிக்கைக் கொண்டது. எதுவும் எங்கள் குடும்பத்திற்கு ஆயிவருவதில்லை. அதனால் அவர்களும் உடனே கீழே போட்டுவிட்டார்கள். ஆனதினால் அது எங்களுக்கு வேண்டியதில்லை.
நகை வியாபாரி: அப்படியானால் தயவு செய்து கொடுத்துவிடுங்கள். வேறு ஒருவர் காத்துக்கொண்டிருக்கிறார்.
வைதீகர்: ஆஹா, கொடுத்துவிடுவதில் ஆட்சேபணையில்லை. காலமே நேரத்தில் வாருங்கள், கொடுத்து விடுகிறேன்.
நகை வியாபாரி: அவர் இன்று ராத்திரிக்கு ஊருக்குப் போகின்றவர் ஆனதால் தயவு செய்து இப்பொழுதே கொடுத்துவிடுங்கள்.
வைதீகர்: செட்டியாரே, தாங்கள் என்ன நாஸ்திகராய் இருக்கின்றீர்கள்! வெள்ளிக்கிழமை, அதுவும் விளக்கு வைத்த நேரம், இந்த சமயத்தில் நிறைந்த வீட்டிலிருந்து பொன் நகையை வெளியில் கொடுக்கலாமா?
நகை வியாபாரி: என்ன அய்யா! வியாபாரத்திற்காக பெண்டுகளுக்கு காட்டிவிட்டு கொண்டு வருகிறேன் என்று எடுத்துக்கொண்டு வந்த நகையை வேறு ஒருவர் அவசரமாகக் கேட்கின்றார்கள் என்று வந்து கேட்டால் ‘வெள்ளிக்கிழமை, விளக்கு வைத்த நேரம்’ என்கிறீர்களே, இது என்ன ஒழுங்கு. ஊரார் நகைக்கு நாள் என்ன? நேரம் என்ன? என்பது எனக்கு விளங்கவில்லையே?
வைதீகர்: (தனக்குள்ளாகவே இந்த இழவு நகையை நாம் ஏன் ‘இந்த மனிதனிடம் வாங்கி வந்தோம்’ என்று நினைத்துக்கொண்டு) என் புத்தியை விளக்குமாற்றால் புடைக்க வேண்டும். உம்ம கடைக்கு வந்ததே பிசகு, தவிரவும் உம்மிடம் நகையை எடுக்கும்போதே மணி பத்தரை இருக்கும், நல்ல ராகு காலத்தில் எடுத்து வந்தேன். அது எப்படியானாலும் கலகமாய்த்தான் தீரும். எனக்கு புத்தி வந்தது. இனி இம்மாதிரி செய்ய மாட்டேன். தயவு செய்து நாளைக்கு வாருங்கள்.
நகை வியாபாரி: இது என்ன அய்யா தமாஷ் செய்கின்றீர்களா என்ன? உங்கள் நகையை யாராவது கேட்டால் நாள், கோள் எல்லாம் பார்த்துக்கொள்ளுங்கள். ஊரார் நகைக்கு இதையெல்லாம் பார்க்கச் சொல்லி உங்களுக்கு எவன் புத்தி சொல்லிக்கொடுத்தான். அவனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள் அவனுக்கு நல்ல புத்தி கற்பிக்கின்றேன். மரியாதையாய் நகையை கொடுங்கள், நேரமாகுது.
வைதீகர்: நீங்கள் ‘குடிஅரசு’ பத்திரிகை கட்சியைச் சேர்ந்தவர்களா என்ன? நாளையும் கோளையும் சாஸ்திரத்தையும், கேலி செய்கின்றீர்களே! அந்தக் கூட்டத்திற்குத்தான் நல்லது இல்லை; கெட்டது இல்லை; மேல் இல்லை; கீழ் இல்லை; கோவில் இல்லை; புராணம் இல்லை; பறையனும், பார்ப்பானும் ஒண்ணு என்று ஆணவம் பிடித்து நாத்திகம் பேசிக்கொண்டு திரிகிறார்கள். நீங்களும் அதுபோல் பேசுகின்றீர்களே!
நகைக்காரர்: நீரே ரொம்பவும் ஆஸ்திகராயிருந்துகொள்ளும், அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. மரியாதையாய் நகையைக் கொடுத்துவிடும். பவுன் விலை இறங்கப் போகின்றது. இன்றைக்கு விற்காவிட்டால் எனக்கு நஷ்டம் வந்துவிடும். வேறு ஓர் ஆசாமியும் மிகவும் ஆசையாய் காத்திருக்கின்றார். இனி தாமதம் செய்யாதீர், இருட்டு ஆகப்போகிறது. சீக்கிரம் எடுத்துக்கொண்டு வாரும்.
வைதீகர் (வீட்டிற்குள் போய் சம்சாரத்திடன் யோசிக்கின்றார்) என்ன செட்டியார் நகை கேட்கின்றார்!
அம்மா: இன்றைக்கு வெள்ளிக்கிழமை, விளக்கு வைத்த நேரம், லட்சுமியை வீட்டைவிட்டு வெளியில் கொடுக்கலாமா?
புருஷன்: எல்லாம் நான் சொல்லிப் பார்த்தாய்விட்டது. செட்டியார் ஒரே பிடியாய் இப்போதே கொடுத்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொண்டு வெளியில் காத்துக் கொண்டிருக்கிறார்.
அம்மா: (பலமாய் சத்தம் போட்டுக்கொண்டு வெளியில் வருகிறபோது பேசிக் கொண்டு வருவதாவது) செட்டியாருக்குப் புத்தியில்லை. அவர் என்ன செட்டியா, மட்டியா? வீடு வாசல் வைத்து பிழைத்த மனிதரா, நாடோடித் தடம் போக்கியா? நிறைந்த வீட்டில் விளக்கு வைத்த நேரத்தில் கலகம் பண்ண வந்திருக்கின்றான். நான் போய் கேட்கிறேன். என்ன செட்டியாரே உமக்குப் புத்தியில்லை. இப்பொழுதுதான் ஏதோ கொஞ்சம் ஓஹோ என்று எங்கள் குடும்பம் தலை எடுக்கின்றது. அதுக்குள் நீர் எமனாய் வந்துவிட்டீர். நாளைக்கு காலமே வாருமே. அதற்குள் என்ன நீர் கொள்ளையில் போய்விடுவீரா அல்லது வேறு ஒரு மனிதன் நகை வாங்க வந்தவன் என்கிறீரே, அவன் கொள்ளையில் கோய்விடுவானா? உமக்குத்தான் புத்தியில்லாவிட்டாலும் அவனுக்காவது புத்தியிருக்கவேண்டாமா? வெள்ளிக்கிழமை நகையைப் போய்க் கேட்கச் சொல்லாமா என்கிற அறிவில்லாமல் உம்மை இங்கே அனுப்பி ரகளை பண்ணச் சொல்லி இருக்கிறானே, அத்தனை அவசரம் என்ன?
(இந்தச் சமயத்தில் மகன் வந்துவிட்டான்.)
மகன்: என்ன அம்மா கூச்சல் போடுகிறாய்? இவர் யார்?
தாயார்: இவரா? இவர் ஒரு நகை வியாபாரியாம். இவர் தலையில் நெருப்பைக் கொட்ட! வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரத்தில் காசி மாலையைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டுமாம். ரகளைக்கு நிற்கிறார்!
மகன் அதெல்லாம் இருக்கட்டும்! ஜாஸ்தி பேசாதே! நமக்கு காசி மாலையேது? நம் வீட்டில் இல்லையே - அப்பதான் வாங்க வேண்டும் என்று நேத்து மத்தியானம் பேசிக் கொண்டிருந்தார். அதற்குள்ளாவா வந்துவிட்டது?
தாயார்: உங்கப்பா யார் முகத்தில் முழித்தாரோ! காலையில் கடைக்குப் போனார். இந்தச் செட்டியாரிடம் மாலை ஒன்று இருந்தது. அதை எனக்குக் காட்டுவதற்காக வாங்கிவந்தார். நேற்று நினைக்கும்போதே ராகுகாலம். இன்று செட்டியார் கடையில் நகை வாங்கும்போதும் ராகு காலம், வழியில் வரும்போது பூனை குறுக்கே போச்சுதாம்; அப்பொழுதே உங்கப்பா வேண்டாமென்று தலையைச் சுத்தியெறிந்துவிட்டு வரவேண்டாமா? அப்படி செய்யாமல் என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார். அது கொஞ்சம் நன்றாய் இருந்தது. நானும் ஆசைப்பட்டு வாங்கலாம் என்று முடிவுகட்டி எண்ணிப் பார்த்தேன். காசு அறுபத்தி எட்டாயிருந்தது. உடனே தலையைப் சுற்றி எறிந்துவிட்டேன். உங்கப்பா பெட்டியில் வைத்துவிட்டார். இப்ப வந்து செட்டியார் அவசரப்படரார்; யாரோ வேறே கிராக்கி காத்துக் கொண்டிருக்கின்றதாம்; வெள்ளிக்கிழமை, விளக்கு வைத்த நேரம், முதலாவது பெட்டியைத் திறக்கலாமா? நீயே சொல்லு பார்ப்போம்.
மகன்: அய்யய்யோ! இதென்ன பெரிய அழுக்கு மூட்டையாயிருக்குது. குருட்டு நம்பிக்கைப் பிடுங்கலாயிருக்கின்றது. வெள்ளியாவது, சனியாவது, ராகுவாவது, கேதுவாவது! ஊரார் வீட்டு நகையை வாங்கிக் கொண்டு வந்து பெட்டியில் வைத்துப் பூட்டிக் கொண்டு வெள்ளியும் சனியும் பேசுவது வெகு ஒழுங்காய் இருக்கின்றது! பேசாமல் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்துவிடு; இல்லாவிட்டால் பெட்டியை உடைத்துவிடுவேன் தெரியுமா?
(அதற்குள் அப்பா வந்துவிட்டார்)
அப்பா: என்னடா பயலே! பலே அதிகப் பிரசங்கியாய் போய்விட்டே! நான் அப்போதே உன்னை குடிஅரசு பத்திரிகையைப் படிக்கவேண்டாம், கெட்டுப் போவாய் என்று சொன்னேனா இல்லையா? அது போலவே படித்து கெட்டுக் குட்டிச் சுவராய் போய்விட்டாயல்லவா? கர்மம், கர்மம், இந்த இழவு பத்திரிகை ஒன்று முளைத்து, ஊரிலுள்ள சிறுபிள்ளைகளையெல்லாம் நாஸ்திகராக்கிவிட்டது.
மகன்: வெகு நன்றாயிருக்கிறது என்று சொல்லிக்கொண்டு உடனே அம்மாள் இடுப்பில் சொருகி இருந்த சாவியைப் பிடுங்கி கொண்டு போய் பெட்டியைத் திறந்து நகையை எடுத்துக்க்ண்டு வந்து கொடுத்து செட்டியாரை மன்னிக்கும்படிக் கேட்டுக் கொண்டான்.
பிறகு புருஷனும், பெண்ஜாதியும் ராகு காலத்தில் அந்தச் செட்டியாரிடம் நகை வாங்கி வந்ததே பிசகான காரியம். இதுவும் வரும், இன்னமும் வரும் எவ்வளவோ கெடுதியும் வரும் என்னை அடிக்கவேண்டும்..... லே.
(8.1.1928 குடிஅரசு இதழில் “சித்திரபுத்திரன்’’ என்ற புணைப் பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை.)
Wednesday, July 15, 2020
சங்கீ வகைகள் 4
முதலாவது வகை, நேர்மையான அப்பாவிகள், மோடி தான் இந்தியாவை காப்பாற்ற முடியும், என்று நம்பி கொரானாவை விரட்ட விளக்கு ஏற்றுவார்கள், கைதட்டுவார்கள், வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் அவதிப்படுவார்கள், ரேஷனில் பொருள் வாங்கிவிட்டு எப்படியும் இரண்டு நாளில் புதிய இந்தியா பிறக்க போகுதுன்னு நம்பிக்கையுடன் தூங்க செல்வார்கள்
இரண்டாவது வகை, முருகன் முப்பாட்டன், பார்பனரும் தமிழர்களே, சாதி என்பது செய்யும் தொழில் சார்ந்த இனக்குழு பெயர்கள், நடுவில் யாரோ அதை பிறப்புடன் இணைத்துவிட்டார்கள் என்பார்கள் அந்த யாரோ யார் என்று யார் கேட்டாலும் சொல்லமாட்டார்கள், இவர்களும் வீட்டு வாடகை கொடுக்கமுடியாமல் அவதிப்படுவார்கள் ஆனால் அரசு கொடுத்த டீ.வி எல்லாம் தூக்கி போட்டு உடைப்பார்கள், கொரானாவை விரட்ட விளக்கு ஏற்றுவார்கள், கைதட்டுவார்கள்
மூன்றாவது வகை, முருகன் சிவன் எல்லாம் தமிழரின் முன்னோர் வழிபாட்டின் எச்சம், சங்ககாலத்துலேயே, நியூட்டனின் 3 விதிகள் பற்றி பாட்டு இருக்கு, இதில் சிவன் முருகன் எல்லாம் எம்மாத்திரம், இந்து மதம் அதை எல்லாம் உள்ளே எடுத்து கொண்டது என்பார்கள், இந்துமதத்தில் யார் எடுத்துக்கொண்டார்கள் என்று கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள், வாடகை எல்லாம் ஒழுங்காக கட்டிவிடுவார்கள், டீ.வீ எல்லாம் தூக்கி போட்டு உடைக்கமாட்டார்கள், கொரானாவை விரட்ட விளக்கு ஏற்றுவார்கள், கைதட்டுவார்கள், கேட்டால் ஊரோடு ஒத்து வாழ் என்பார்கள், சேரி தனியாக இருக்கிறதே என்று கேட்டால். அது தப்புதான் கொஞ்சகொஞ்சமாக தான் சரியாகும், இப்போ எல்லாம் யாரு சார் சாதி பாக்குறாங்க என்பார்கள், ரொம்ப கேள்வி கேட்டால் குவாண்டம் பிசிக்கஸ் பற்றி நக்கீரர் என்ன சொல்றார் தெரியுமா என்று முதலில் இருந்து தொடங்குவார்கள்
கடைசி நாலாவது வகை, பவுத்தம் சமணம் போன்ற மதங்களுக்கு ஆதி வடிவம் தான் ஆசீவகம், யானை, பாம்பு, சிலைகள் தமிழர் ஆதிமதம், அய்யனார் சாஸ்தா என்று கலந்து கட்டி, ஆசு + ஈவு+ அகம், அப்போவே சித்தர்கள் கால யந்திரம் வைத்திருந்தார்கள், தமிழர்களுக்கு தொன்மங்களின் மேலே பற்று இல்லை அவற்றை காக்கவில்லை என்று கிறிஸ்டோபர் நோலன் ரேஞ்சுக்கு, பெரிய திரைக்கதை எல்லாம் சொல்லுவார்கள், ஏதாவது கேட்டால் நகை கடை விளம்பரத்தில் வருவது போல நம்பிக்கை தானே எல்லாம் என்று முடித்து கொள்வார்கள், சாதி குறித்து எல்லாம் என்ன பெரிய பேச்சு என்பது போல மெத்தனமாக ஒரு லுக் விடுவார்கள், கோரான குணப்படுத்த ஆசீவகம் தான் ஒரே வழி அதில் ஒன்று தான் கபசுர குடிநீர் என்பார்கள், ரொம்ப கேள்வி கேட்டா போதிதர்மர் கூட ஆசீவகம் தான், லைன் போட்டு தர்றேன் பேசுறியா என்று ஆரம்பிப்பார்கள்
பார்க்க பேச எப்படி இருந்தாலும், மேலே சொன்ன, நாலு வகையும் மறக்காமல் சொல்வது
ஈ.வே.ரா தான் தமிழ் நாட்டை கெடுத்தார்
Sunday, July 05, 2020
கொஞ்சம் கழனியில் இறங்கி விவசாயம் செய்யட்டுமே
நகரத்து குழந்தைகள் பெற்றோரிடம் போதிய நேரம் செலவிட முடியாமல் தவிப்பதாகவும், கிராமங்களில் பெற்றோரின் அரவணைப்பில் குழந்தைகள் மகிழ்வோடு வாழ்கிறார்கள் என்றும் கதைப்பவர்கள் என சிலருக்கு கிராமத்தில் வாழ்க்கை, விவசாயம் மற்றும் ஏனைய தொழில்கள் எப்படி இருக்கும் என்று தெரியுமா ?,
வயலும் வயல் சார்ந்த வாழ்க்கையே கொண்ட கிராமங்களில், எல்லா பெற்றோர்களின் பகலும் ,இரவும் வயலில்தான் கழியும்,
விவசாயம் என்பதை புனித தொழிலாக பரப்புரை செய்யும் அனேகர், அந்த தொழில் IT மற்றும் இன்ன பிற தொழிற்சாலை வேலைகளை விடவும் கொடூரமாக விவசாயிகளின் உழைப்பை சுரண்டி கொண்டு இருக்கிறது என்பதை அறிவார்களா?
பூர்விக சொத்து என்று பெரிதாக பெரும்பாலானவர்களிடம் இருக்காத விவசாய கூலிகள், தங்கள் உழைப்பில் வாங்கிய வயலில், வேலை பார்க்க வருபவர்களோடு, தன்னையும் ஒரு கூலி ஆளாக “பாத்தி-பாசன” கணக்கு போட்டு வேலை செய்பவர்களாகதான் இருக்கின்றனர்.
குழந்தைகளை முந்தானையில் முடிந்து தோளில் போட்டுக்கொண்டு வயல் வேலை பார்க்கும் அம்மாக்கள் உண்டு, ஆண்களுக்கு சளைக்காத கடின உழைப்பாளிகள்.
காலை 5 மணியில் தொடங்கி, இரவு 7 மணி வரை வயலில் ஓயாத உழைப்பு பின் வீட்டில் அடுத்தநாளைய வேலைக்கு செய்ய வேண்டிய தயாரிப்புகள், பிள்ளைகளுக்கு தேவையான உணவிற்க்கு சமையல் பின் சிறிது ஓய்வு, இதுதான் அவர்களின் routine…
பிள்ளைகள் தூங்கி எழும் முன்னே வயலுக்கு செல்லும் அவர்கள், தூங்கும் நேரத்திற்க்குதான் வீடு திரும்புவார்கள், வீட்டிற்க்கு வந்து சாப்பாடு செய்ய ஆரம்பிக்கும் போதே குழந்தைகள் தூங்க ஆயத்தமாகிவிடுவர். பெற்றோரிடம் ஆற அமர பேசிய interactions எல்லாமே பிள்ளைகளின் பள்ளி ஓய்வு நாட்களில், அவர்களின் பெற்றோர்களோடு ஓயாயமல் வயல்காட்டில் சிறு வேலைகளை செய்துகொண்டிருந்த நேரங்களில்தான்.
இப்படிப்பட்ட குடும்பங்களில் பெரும்பாலும் அவர்களின் மூத்த சகோதரிகள்தான் பெற்றோர் இல்லாத குறையை சிறிது தீர்த்து வைக்கிறார்கள்,
கிராமங்களில் 1980 மற்றும் 90களின் தொடக்கத்தில்
காலை மற்றும் இரவு வேளைகளில் இட்லி, மதியம் சூடான சோறு என்பதே பல வீடுகளில் மிகவும் அரிதான உணவு.
அப்படி சாப்பிடும் ஆட்களே பெரிய பணக்காரங்க என்று எண்ணும் குழந்தைகள் உண்டு (அது சிறிதளவு உண்மையும் கூட)
சொல்லப்போனால் இட்லி, தோசை என்பது கோவில் திருவிழா காலங்களில் மட்டுமே பெரும்பாலான விவசாய குடும்பங்களில் கிடைத்திருக்கிறது.
அதே போல, விவசாய குடும்பங்களில் தீபாவளி பண்டிகையை பெரிய அளவில் அதாவது நகரங்களில் கொண்டாடுவது போல் கொண்டாடி பார்த்ததே இல்லை, இன்றும் சிலருக்கு தீபாவளி எப்படி கொண்டாடுவது என்று தெரியாது, காரணம் பெரிய அளவில் அவர்களின் பெற்றோர்கள் வீட்டில் அந்த பண்டிகையை கொண்டாடியதே கிடையாது
(ஆனால் இன்று வீட்டில் விடுமுறை தினமாக கொண்டாடி கொள்கின்றனர் )
சரியாக பண்டிகை நாளில்தான் அந்த வீட்டு குழந்தைகளுக்கு புத்தாடைகள் வாங்கப்படும், பெரிசா சொல்லிக்கொள்ளும் அளவுக்கு டிசைன்கள் என்பதே அன்றை பொழுதில் இருக்காது, எல்லாரும் பார்த்து கழித்து போட்ட துணிதான் கிடைக்கும்,
இதற்க்கெல்லாம் முக்கிய காரணம் அவர்களின் விவசாய வேலை, கிராமத்து வாழ்க்கைமுறை.
அந்த கடின உழைப்புக்கு பலனாக அவர்கள் சம்பாதித்தது, சேமித்தது என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை..
தன்னை கழித்தது என்று கிராமத்தில் சொல்வார்களே, அது போல வரவுக்கும் செலவுக்கும் சரியாய் இருந்து இருக்கிறது. பெண்களுக்கு நகை செய்து திருமணம் செய்தது, ஆண் பிள்ளைகளை படிக்க வைத்தது என்பதை தவிர அவர்களின் சேமிப்பு என்று சொல்லிக்கொள்ளபடி எதுவுமே இருப்பதில்லை.
நான் கண்டும் கேட்டும் அனுபவித்த கிராமத்து விவசாய வாழ்க்கையில்,
நல்லதோ கெட்டதோ IT வேலை பார்க்கும் அல்லது பிஸியானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நகரத்து ஆட்களை போலவேதான் தங்கள் குழந்தைகளை வளர்க்கிறார்கள்
ஆனால் நகரத்து குழந்தைகளுக்கு கிடைக்கும் வெளி உலக தொடர்போ, exposureயோ அந்தந்த வயதில் சரியாக கிராமத்தில் கிடைப்பதில்லை என்பதுதானே உண்மை. ஆனால் அதற்க்கு பதிலாக சாதிய இறுக்கங்களை புற்றுநோய் போல திணித்துவிடுவதும் கிராமங்கள்தானே?
நான் கணினியை தொட்டது என்னுடை கல்லூரியில்தான் ஆனால் என் மகன் ஒன்றரை வயதில் மடிக்கணியை ஆன் ஆஃப் செய்ய கற்றுக்கொண்டான்..
என் பிள்ளைகள் இட்லியும் தோசையும் சாப்பிட்டுக்கொண்டு பீஸாவுக்கு கனவு காண்பவர்களாக நகரத்தில் வளர்ந்து இருக்கிறார்கள் இந்த வளர்ச்சியில் எனக்கு மகிழ்ச்சியே..
யாரோ எவனோ எங்கோ உட்கார்ந்து கொண்டு மைக்ரோ பாலிடிக்ஸ் செய்ய விவசாய/கிராமத்து வாழ்க்கை மட்டுமே சொர்க்கம் என்று கற்பனையில் எழுதுவதை படித்தும் பார்த்தும் இந்த தொழிலுக்கு அந்த தொழில் மேல், இந்த ஊருக்கு அந்த ஊர் மேல் என்பதல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை போல்தானே தவிர வேறோன்றும் இல்லை.
சிறு குறு விவசாயிகளின் / விவசாய கூலிகளின் வாரிசுகளே உங்கள் தலைமுறையை உயர் கல்வி கற்க செய்யுங்கள், இதுவரையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பிறர் கொஞ்சம் கழனியில் இறங்கி விவசாயம் படிக்கட்டும்,பின் செய்யட்டுமே....
Monday, June 01, 2020
இந்திய பொருளை எந்த ஒரு நல்ல குடிமகனும் மட்டம் தட்டவில்லை!
Tuesday, May 26, 2020
Cable 06CHENNAI954 : US Consulate Chennai to US Defense Intelligence Agency [Wikileaks] - No actual support for LTTE/Prabhakaran in Tamil Nadu - (Makes us wonder if Stalin & Seeman are nothing but full buruda) - Cable Notes VAIKO MAY HAVE GOT CASH FROM LTTE IN EXCHANGE FOR HIS SUPPORT & POLITICS
Summary: Despite the fact that Tamil Nadu is home to the largest population of Tamils in the world, there is virtually no support in the state for the LTTE. There is no financial support coming from the state, no significant supplies flowing from Tamil Nadu to the LTTE, and almost no public sentiment in support of the LTTE in Tamil Nadu.
[2](c) All the sources with whom Post has discussed this issue, including law enforcement officials, say that Tamils in Tamil Nadu and the relative few Tamils who live elsewhere in India, are not a source of financial support for the Liberation Tigers of Tamil Eelam (LTTE). This was not always the case, however. Prior to the assassination of Rajiv Gandhi by an LTTE terrorist in 1991, there was significant support for the LTTE cause in the state that likely included financial support. But support for the LTTE cause vanished almost overnight after Rajiv Gandhi's death. It may be, however, that some financial support flows the other way, that is, from the LTTE to certain political leaders in Tamil Nadu, notably Vaiko, founder and General Secretary of the Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK). Some people, including Tamil refugee NGO leader Chandrahasan, believe that the LTTE provided initial financial support for Vaiko in establishing his MDMK party after he split from the DMK party in 1993. Vaiko has been an outspoken supporter of the LTTE but any financial link remains unproven (Reftel).
[3] substantial financial support for the LTTE comes from Tamils in other countries, notably Canada, the United Kingdom, Netherlands and Germany. Each of these countries has a significant Tamil population. Some sources suggest that Tamils in these countries are encouraged to give up to 10 percent of their income to support the LTTE cause. This encouragement, which may be closer to extortion, is often administered through local religious institutions or Tamil cultural organizations in these countries.
[4] Tamil Nadu government under former Chief Minister J Jayalalithaa took against LTTE elements in the state. Post expects the newly elected DMK government to continue that tough anti-LTTE policy. The expectation is based on the DMK's record in controlling the LTTE when it was last in power from 1996 to 2001.
[6] It may seem strange that in the Indian state of Tamil Nadu, which literally means Tamil country, there is so little support for the LTTE, an organization that professes to be dedicated to establishing a homeland for all Tamils. But the situation today can be directly traced to the day in May 1991, when an LTTE suicide bomber terrorist killed Rajiv Gandhi here in Tamil Nadu. Opinion instantly turned against the LTTE and their tactics. Dravidian political parties that had been supportive of the LTTE in the past fell silent in their support and later stepped up efforts to rid the state of any remnants of LTTE activity. That anti-LTTE sentiment remains today and is unlikely to change in the foreseeable future.
LTTE recruited kids, paid media people and doctors to exaggerate death tolls, a few doctors even came out saying they were threatened to lie about all this. It's like.. Do you really think they had the support of eezham tamil people?
Prabhakaran wanted to become a dictator, he let a lot of tamil people die at the hands of SL Army. They attacked sinhala civilians, constantly broke ceasefire, never actually defended any tamil civilians. Eezham people supported LTTE, once, some 30 years ago. When people actually had something to fight for.. When people who fought were all volunteers and not conscripted. What they did in the 2000s to tamil people is what led to that addage about betrayal.. "dhrogatthil valarndha eezham" or something like that. LTTE hijacked it with their media people and changed it's meaning to Prabhakaran being betrayed by MK.
LTTE is and always will be cancer and people who they claimed to protect absolutely hated them by the end. Don't ever let anyone tell you otherwise. Just notice when you're arguing with them.. They'll only talk about 1980s LTTE.. They'll NOT even disagree about the conscription, extortion and abduction on tamil people. But, they will still claim LTTE has eezham's support. In the 1980s, yes, they supported them. When people saw the true colors of Prabhakaran, they tried to back out and LTTE forced them to support, they were too strong to oppose.. My friend's father called it "puli vaal pudichi savaari panrathu mathiri.." Now their fanboys will force you to believe they are still liked by the eezham.
In that other thread, this idiot brought up maaveerar nal, November 27 as proof that tamil people support LTTE. Just look up Prabhakaran, who came up with this particular date as maaveerar nal, look up his birthday. That entire week was usually celebrated by the LTTE because Prabhakaran threw himself big birthday parties.. Ask any Sri Lankan guy if this didn't happen.
They control the story too much, you've to read between the lines but when you do, it's painfully obvious how glad we must be that they were defeated.
Monday, May 25, 2020
பாரத் மாதா என்றால் என்ன
பாரத் மாதா என்பது வங்காள மாநிலத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட நாடகத்தில் உள்ள ஒரு கதா பாத்திரம் .இந்த நாடகம் 1873 ம் ஆண்டுநடத்த பட்டது . நடத்தியவர் கிரன் சந்திர பேனர்ஜி. அந்த நாடகத்தில் பாரத் மாதா பிரிட்டிஷ் அரசை தோற்கடிக்க உதவுவது போல் அமைக்க பட்டது. பின்னர் இது விடுதலை போராட்டத்தில் மிகவும் பிரபலமானது.
1882 ல் வந்தே மாதரம் என்ற முத்திரை வாக்கியம் அனந்தமாத் என்பவர் தனது கதை புஸ்தகத்தில் அறிமுகம் செய்தார்.
பாரத் மாதா படத்தை 1907 ம் ஆண்டு தான் முதல் முதலில் ஓவியமாக அபினிந்திரநாத் தாகூர் அவர்களால் வரையப்பட்டது.
1920 ம் ஆண்டு மெதுவாக மத சாயல் கொடுக்க பட்டது.
1936 ல் பாரத் மாதா வுக்கு கோயில் பெனாரஸ் என்ற இடத்தில் காந்தி அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த கதா பாத்திரத்தை வைத்து எச்ச ராஜா எல்லா மதத்தினரும் ஒற்றுமையாக வாழும் குமரி மாவட்டத்தில் கலவரம் உண்டாக்க முயற்சி செய்கிறான்..
இதில் போலிசாரை வேறு இவன் மிரட்டுகிறான்..
நான் கேட்கிறேன், விடுதலை போராட்டத்தில் பிரிட்டிஷ் அரசின் ராணுவத்தில் ஆட்களை சேர்த்தவனுக்கும், காலை நக்கியவனும், மன்னிப்புக் கடிதத்தை எழுதி கொடுத்தவனுக்கும், சுபாஷ் மற்றும் காந்தி யின் விடுதலை போராட்டத்தில் முட்டு கட்டையாக இருந்தவர்களும், இன்று எப்படி இந்த கோஷம் மற்றும் பாரத் மாதாவை உபயோகிக்கலாம்?
Saturday, May 23, 2020
பார்ப்பன காவிகளின் ஆகச் சிறந்த அடிவருடி
இதற்கு முன்பு 1982ஆம் ஆண்டு மண்டைக்காடு கலவரத்தின்போது பார்ப்பன காவிகளுக்காக அப்பாவி மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது எம்.ஜி.ஆர் அரசு.
ஆர்.எஸ்.எஸ் நடத்தும் 'விஜயபாரதம்' பத்திரிகையின் 21.10.2016 தேதியிட்ட இதழில், "எம்.ஜி.ஆர் போல ஹிந்துத்வ ஆதரவு முதல்வர் நேற்றும் இல்லை, நாளையும் இல்லை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையே வெளியாகும் அளவுக்கு அ.தி.மு.கவின் பார்ப்பனப் பாசம் ஊரறிந்தது.
(ஆதாரம்: பின்னூட்டத்தில்)
ஆகவே, பார்ப்பனப் பெண்ணான ஜெயலலிதா அ.தி.மு.க தலைவரானதால்தான் அந்தக்கட்சி பார்ப்பன அடிமையானது என்று நாம் கருதினால், அது தவறு. அது ஏற்கனவே பார்ப்பன அடிமையாக இருந்ததால்தான் ஜெயலலிதா எல்லாம் அதன் தலைவராக வரமுடிந்தது.
அதன் நீட்சியாகத்தான் ஜெயலலிதாவால் அண்ணாவின் பெயரில் ஒரு திராவிடக் கட்சிக்கு தலைமைதாங்கிக்கொண்டே பாபர் மசூதியை இடிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் கரசேவைக்கு ஆட்களை அனுப்பமுடிந்தது.
தற்போது 'பொன்மனச்செம்மல்' எம்.ஜி.ஆர்ஜி, 'இரும்புப் பெண்மணி' ஜெ.ஜெயாலலிதாஜி ஆகிய இருவரையே மிஞ்சும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிஜி அவர்கள் பார்ப்பன காவிகளின் ஆகச் சிறந்த அடிவருடியாகத் திகழ்கிறார்.
உள்நாட்டு ஃபார்வட் ப்ளாக் என்கிற இடது ஆதரவுக் கட்சியின் சரிவை ஆராய்வது வெளிச்சத்தைத் தரலாம்
நாளடைவில், காங்கிரசில் இருந்தபடியே தமது ஆதரவாளர்களை இணைத்து ஃபார்வர்ட் பிளாக்கை 1939 இல் உருவாக்கினார் போஸ்.
அதில் புரட்சிகர எண்ணப் போக்குகள் இருப்பினும் அவை மார்க்சிய தத்துவப் பின்புலத்தைக் கொண்டவையாக இருக்கவில்லை.
இனவெறியாளன் ஹிட்லரைச் சந்தித்து ஆதரவு கேட்கத் தயங்காத போஸின் நிலைப்பாட்டிற்கு இதுவும் ஒரு காரணம்.
மேற்கத்திய கல்வி தந்த அறிவும்
உள்ளூர் ஹிந்து தேசிய உணர்வும் சேர்ந்து 'ஜெய்-ஹிந்த்' என்று முழங்கிய போஸை, பசும்பொன் முத்துராமலிங்கத்திற்கு மிகவும் பிடித்துப் போனது.
ஆனால் போஸின் ஐஎன்ஏ, போரில் தோற்று, பிறகு போஸ் அடையாளமற்று தொலைந்து போனதும், பார்வர்ட் ப்ளாக் தொய்வடைந்தது.
பிறகு, 1946இல் போஸ் ஆதரவாளரான R.S.ரூய்க்கர், அக்கட்சியை மீள் உருவாக்கம் செய்தார். அதில், ஜோக்லேகர் போன்ற இடதுசாரி தலைவர்களும் இணைய, ஃபார்வட் ப்ளாக் வர்க்க முரண்களை எதிர்த்துப் போராடும் இடதுசாரி கட்சியாக உருவெடுத்தது.
எனினும், 1948லேயே இரண்டாக அக்கட்சி உடைந்தது. அது, இடதுசாரி குழுக்களின் தொடர் உடைபடு பண்பை ஒத்திருந்தது.
எது எவ்வாறாயினும், நாட்டின் பிற பகுதிகளில் ஃபார்வட் ப்ளாக் இடது நிலைப்பாட்டில் பிற இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து தேர்தல்களை சந்தித்து வருகிறது.
ஆனால், தமிழகத்தில் மட்டும் அக்கட்சி பசும்பொன் மு.ராம் ஆதரவு முக்குலத்தோர் கட்சியாக சீரழிந்தது.
எந்த அளவுக்கு என்றால் ஒரு கட்டத்தில் அதன் தமிழகத் தலைவராக நடிகர் கார்த்திக்கை உட்கார வைத்திருந்தனர்.
அவ்வகையில் ஒரு பாபி குறுங்குழு,பார்ப்பனீய அடிமைத்தனத்தில் ஊறியபடி,தனது சூத்திர ஜாதி ஆணவ உளவியலை வலிமைப்படுத்த சிறுவர் சிறுமியரை வைத்து டிக்டோக் போடும் உரிமைக்காக துடித்துக் கொண்டுள்ளது.
வடிவேலன்(எ)வசுமித்ரா- நிர்மலா கூட்டணியை இங்கு நினைவூட்டிக் கொள்ளவும்.
உலகப் பாட்டாளி வர்க்க விடுதலைக் கருத்தியலாக இயங்கும் மார்க்சியமானது, இந்தியாவுக்குள் வந்ததும் பார்ப்பனீய + ஜாதி ஆண்டை உளவியலால் திரிந்து போகும் ஆபத்தை எதிர்கொண்டபடியே இருப்பதேன் என்கிற கேள்விக்கு, உள்நாட்டு ஃபார்வட் ப்ளாக் என்கிற இடது ஆதரவுக் கட்சியின் சரிவை ஆராய்வது வெளிச்சத்தைத் தரலாம்.
இதில் A போனா என்ன! B போனா என்ன! இழப்பு திமுகவிற்கு இல்லை.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் இயற்றினார்,
விளைவு.....
பார்ப்பனர்கள் (திராவிடரல்லாதார்) திமுகவை எதிரியாக பார்த்தனர்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார்,
விளைவு.....
பார்ப்பனர்கள் (திராவிடரல்லாதார்), பிள்ளைகள், முதலியார்கள் திமுகவை எதிரியாக பார்த்தனர்,
BC Category 50% இடஒதுக்கீடு தொகுப்பிலிருந்து 20% மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு (வன்னியர், பரமலைக் கள்ளர்) வழங்கினார்,
விளைவு.....
வெள்ளாளர்கள், தேவர்கள், உடையார்கள், கோனார்கள் திமுகவை எதிரியாக பார்த்தனர்.
சமத்துவபுரம் அமைத்து அனைத்து சாதியினரும் ஒரே ஊரில் பிறந்து, ஒரே சுடுகாட்டில் எரிக்கப்பட வேண்டும் என்றார்.
விளைவு.....
முன்வரிசையில் முண்டியடித்துக் கொண்டு நின்று வீட்டை வாங்கி கொண்ட முதலியார்கள், வெள்ளாளர்கள், தேவர்கள், உடையார்கள், கோனார்கள், பார்ப்பனர்கள் எல்லாம் இந்த கருணாநிதி பய, நம்மையெல்லாம் ....... .......களோட வாழ சொல்றான் என்று திமுகவை, கலைஞரை எதிரியாக பார்த்தனர்.
அய்யோ,
கலைஞர் அவர்களே, எங்களுக்காக எல்லா சாதியினரும் உங்களை கை விட்டு விட்டனர். உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்.
மற்ற கட்சிகளில் Reserve தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தகூட முடியாத அளவுக்கு 100% தாழ்த்தப்பட்ட மக்களும் உங்கள் பின்னாடி உள்ளோம் என்று எத்தனை தலைவர்கள் கலைஞரின் கரத்தை வலுப்படுத்தினீர்கள்!!!???
ராமச்சந்திரன் கட்சியை உடைத்துக் கொண்டு போனதிலிருந்து இன்று வரை 30% தாழ்த்தப்பட்ட மக்கள் தானே திமுகவிற்கு வாக்களிக்கின்றனர்.
இதில் A போனா என்ன! B போனா என்ன!
இழப்பு திமுகவிற்கு இல்லை.
ஊட்டுப்புரைகளும் ஓட்டுப்புரைகளும்.!
உலக வரைபடத்தில் அனைவரும் எளிதாக அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய இடங்கள் மூன்று.
தென் அமெரிக்காவின் தென் கோடியிலுள்ள கேப் ஹார்ண் என்ற கொம்பு முனை, ஆப்பிரிக்காவின் கேப் ஆஃப் குட் ஹோப் என்ற நன்னம்பிக்கை முனை, இந்தியாவின் தென் முனையான
கேப் காமரின் என்ற குமரிமுனை.
அங்கிருந்து மேற்காக ஒரு கிலோமீட்டர் மேற்கு கடற்கரை சாலையில் தென் மேற்கிலிருந்து வீசும் இதமான பருவக்காற்றின் ஊடே பயணித்து உண்மையான தென்முனையான கல்முனையை தாண்டி, கடல் மணல் சூழ்ந்த கோவளம் கிராமத்தில் மிக அழகிய கருங்கற்களால் கட்டப்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயத்தையும்,
நான் பாடும் பாடல்’ திரைப்படத்தில் நடித்த வருடம் முழுக்க தளும்பிக் கிடக்கும் தலைக்குளத்திற்கு அருகே இலந்தையடிவிளை ஊருக்கு முன் சற்று விலகி வடக்கே ஒரு கிலோமீட்டர் பயணித்தால் மலையாள சினிமாவின் தந்தையான ஜே.சி.டேனியல் , ரெட் டீ அல்லது எரியும் பனிக்காடு நூலாசிரியர் பி.எச்.டேனியல், குமரி அனந்தன் ஆகியோரது ஊரான ஏறத்தாழ ஒன்பதாயிரம் மக்கள் தொகை கொண்ட அகஸ்தீஸ்வரம் கிராமத்தை அடைய முடியும்.
அங்கு 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரையில் ஊர் முழுக்க ஓலைப் புரைகள் என்ற தென்னை ஓலை கூரை வீடுகளே இருந்தன , திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமியின் பிரதிநிதியாக ஆட்சி செய்த மார்த்தாண்ட வர்மாவின் ராம ராஜ்யத்தில் அவ்வூரில் வசித்தவர்கள் ஓட்டு வீடுகள் அமைக்க அனுமதியில்லை.அவ்வூரின் முதல் ஓட்டு வீடு 1935 ஆம் ஆண்டில் மன்னராட்சி புதைக்கப்பட்டுகொண்டிருந்த காலகட்டத்தில் கீழச்சாலையில் கட்டப்பட்டது.
அவ்வூர் மக்கள் மூன்று கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் கன்னியாகுமரி பகவதி அம்மனை வழிபட அனுமதிக்கப்பட்டது 12.11.1936 ஆம் நாளில்தான். 1933 ஆம் ஆண்டில் கோவில் நுழைவை அவ்வூர் மக்களுக்கு மறுத்த அதே சி.பி.ராமசாமி ஐயர் 1936 ஆம் ஆண்டு அனுமதித்த மனமாற்றத்திற்கு காரணம் முன்னதாக
ஈழவர், தீயர், பில்லவர்கள், நாடார்கள் ஆகியோர் மதம்மாற தீர்மானித்து கிறிஸ்தவத்தையோ இஸ்லாமையோ தழுவுவது குறித்து மாநாடு ஒன்று நடத்தியதால் என டாக்டர் பாபாசகேப் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். (1)
1952 ஆம்ஆண்டு வரை அங்கு ஒரு ஆரம்ப பள்ளி மட்டுமே இருந்தது.அது 24.05.1954 அன்று நடுநிலைப்பள்ளியாக உயர்ந்தது.10.06.1959 ஆம் ஆண்டு கு.காமராஜ் அவர்கள் முதல்வராக இருந்த போது உயர்நிலைப்பள்ளியாக மேம்படுத்தப்பட்டது.
11.08.1965 ஆம் ஆண்டு 165 பியூசி மாணவர்களோடு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி உள்ளூர் பெரியவர்களால் நிலமும் பணமும் வழங்கப்பட்டு அரசு மானியத்துடன் தொடங்கப்பட்டது. கல்கத்தா ராமகிருஷ்ணா மிஷனுக்கும் இக்கல்லூரிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
தி.மு.க ஆட்சியின் போது 1968 ஆம் ஆண்டில் அக்கல்லூரியில் பெண்களையும் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது. பிஎஸ்சி வேதியியல் , உயிரியியல் ஆகிய பிரிவுகள் தொடங்கின.பணியாளர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் அரசு மானியம் வழங்கப்பட்டது.
அகஸ்தீஸ்வரத்தில் இன்று ஞான தீபம் என்ற ஆங்கிலப் பள்ளி ஒன்று இயங்குகிறது.அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாகி விட்டது.
விவேகானந்தா கல்லூரி முதுகலை கல்லூரியாகவும், தொழில் நுட்பக் கல்லூரியாகவும், கல்வியியல் கல்லூரியாகவும் விரிவடைந்து விட்டது.
ஊரின் தெற்கே கல்லூரிச் சாலையில் அமைந்த மேம்படுத்தப்பட்ட சுகாதார மையமும்
சுதந்திரத்திற்கு பின்னர் அமைக்கப்பட்டதுதான்.
சுதந்திரத்திற்கு முன் மருந்துக்கு மூன்று அரசு ஊழியர்கள் என்ற எண்ணிக்கை இன்று முற்றிலுமாக மாறி இன்று அகஸ்தீஸ்வரத்தின் பள்ளி ஆசிரியர்கள் , கல்லூரி விரிவுரையாளர்கள் , முதல்வர்கள்,, மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் கல்வி அதிகாரிகள் என அரசுப் பணியாளர்கள் எண்ணிக்கை நூறுகளைத் தொடும்.
பாம்பே இயற்கை வரலாற்று சங்க இயக்குனர் பாலச்சந்திரன் , வசந்த் அன்ட் கோ வசந்த குமார், எல்லோரும் பயின்றது அரசு பள்ளிகளில்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் , மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், பட்டியல் சாதியினரும் மட்டுமே வாழும் மாடிவீடுகள் நிறைந்த இவ்வூரில் இன்று ஒரு ஓலைப்புரை வீட்டை பார்ப்பது அரிது.
ஏறத்தாழ அகஸ்தீஸ்வரத்தைப் போன்ற கிராமங்கள்தான் கன்னியாகுமரி மாவட்டம் முழுக்க.
2011 கணக்கெடுப்பின்படி 18 இலட்சம் மக்கள் தொகை கொண்ட இம்மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் எண்ணிக்கை 460.(2)
33 இலட்சம் மக்கள் தொகை கொண்ட பக்கத்து மாவட்டமான திருவனந்தபுரத்திலேயே அதே வருட கணக்கெடுப்பின்படி மேல்நிலைப் பள்ளிகள் எண்ணிக்கை 181.
காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகள் ஆட்சியில்தான் 92% கல்வியைப்பெற்றது இம்மாவட்டம்.
தமிழ்நாட்டில் மிகக்குறைந்த கல்வியறிவான 74 விழுக்காட்டைப் பெற்ற தர்மபுரியை விடக் குறைவான உத்தர பிரதேசத்தின் அலஹபாத் மாவட்டமே அம்மாநிலத்திலேயே மிகையான கல்வியறிவான 72 விழுக்காட்டைப் பெற்ற மாவட்டம்.
உத்தரப்பிதேச ஷிராவதி மாவட்டத்தில் அதே கணக்கெடுப்பில் கல்வியறிவு 49 விழுக்காடு மட்டுமே.
ஒரு வேளை மாடுகளுக்கு பள்ளிகள் இருந்திருந்தால் உத்தரப்பிரதேசம் கல்வியில் முதன்மை பெற்றிருக்கும் .
கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்கள் அகஸ்தீஸ்வரம் போன்றவையே, ஏன் தமிழகம் முழுவதுமே அது போலத்தான்!.
காங்கிரஸ் மற்றும் திராவிடக் கட்சிகளின்
இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை பெற்ற மக்கள் தங்களை கோவில்களுக்கும், பள்ளிகளுக்கும் , அரசு வேலைகளுக்கும் வெளியே நிறுத்திய மன்னன் மார்த்தாண்ட வர்மாவின், பசுக்களுக்கும் பிராமணர்களுக்குமான ராமராஜ்யத்தை கனவு காண்பதும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேச பயிற்றுவிக்கப் படுவதும் மிகப்பெரிய வரலாற்று முரண்.
இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசிய கூட்டத்தினர் இன்று 10 விழுக்காடு உயர்சாதி இட ஒதுக்கீட்டைப் பெற்றது அதைவிட வேடிக்கை.
இன்று குழந்தைகளுக்கு பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படுவதைப் போல திருவிதாங்கூர் அரசரது ஆட்சியில் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கோவில்கள் தோறும் ஊட்டுப்புரைகள் அமைக்கப்பட்டு நாளொன்றுக்கு இருமுறை பிராமணர்களுக்கு மட்டும் சத்துணவு வழங்கப்பட்டது.கோவில் இருக்கும் தெருக்களில் கூட அம்மாவட்டத்தின் மனப்பிறழ்வு கொண்ட உயர்சாதியினரால் பெரும்பான்மையான தீண்டாமை முத்திரை குத்தப்பட்ட மக்கள் அனுமதிக்கப்படவில்லை.
அதே காலகட்டத்தில் 02.03.1809 ஆம் ஆண்டு பிறந்த அய்யா வைகுண்டர் அனைத்து மக்களையும் சாதி மத பேதமற்று வழிபடவும் உணவருந்தவும் உருவாக்கிய பதிகளில் ஒன்று அகஸ்தீஸ்வரத்தில் உள்ளது.
1869 ஆம் ஆண்டு சிறையில் இருந்த பிராமணக் கைதிகளுக்கு தீட்டு ஏற்படாமலிருக்க அவர்கள் தினமும் உணவு வேளைகளில் சிறைக்கு வெளியே சென்று சாப்பிடும் வசதி அரசால் செய்து தரப்பட்டிருந்தது.(3)
ஐஏஎஸ் என பொதுவாக அறியப்படும் குடிமை உரிமைப் பணிகளில் தேர்வானதும் டேராடூன் பயிற்சியின் ஒரு பகுதியாக பாரத் தர்ஷன் என்றவொரு சுற்றுலா அழைத்து செல்வார்கள் .எந்த வட மாநிலத்திற்கு சென்றாலும் அங்கு கல்வி, சுகாதாரம், குடும்ப நலன், எல்லாவற்றிலும் அவை தமிழகத்தையும் கேரளாவையும் விட பின் தங்கியிருப்பதைக் கண்டு தமிழ்நாடு மற்றும் கேரள மாநில பயிற்சிப் பணியாளர்கள் கர்வத்துடன் தலை நிமிர்ந்து கொள்வார்கள்.
‘தமிழக பேச்சாளருக்கும் மைக்குக்கும் இடையே பெரும் சண்டை ஒன்று நிகழும், தன் முன்னால் நிற்கும் ஒலிவாங்கியை ஒரு எதிரியாக நினைத்து உரக்க சத்தமிட்டு அதன் கழுத்தை உலுக்கி, திருகி, நெரித்து அதைக் கொன்று போட்டு விடப்போகிறார் என நினைக்கத் தோன்றும்’ என
‘ஊரும் சேரியும்’ என்ற அழகிய தன்வரலாற்று நூலை எழுதிய கவிஞர் சித்தலிங்கையா கூறியிருப்பார்,
இப்போது தமிழகத்தில் பொய் கதைகளை மூலதனமாக்கி, பெரியாரின் போராட்டங்களை , அதன் பயன்களை மறுக்கும், கவிஞர் சித்தலிங்கையா விவரித்ததைப் போன்ற உணர்ச்சிவச பேச்சாளர்கள் மற்றும் பொலிட்டிக்கல் மெர்சனரீஸ் அல்லது அரசியல் கூலிப்படையினர் , பிகார், ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஒரிசா கிராமங்கள் முழுக்க பாரத் தர்ஷன் சுற்றுலா முடித்து அதன்பின் பச்சைமட்டை அரசியல் பாடம் எடுப்பது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லது.
நல்ல வேளை தமிழ்நாட்டில் திருவாளர்கள் யோகியோ மோடியோ முதல்வராக இருந்ததில்லை ஒருவேளை இருந்திருந்தால் இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் இந்தி படித்த புலம்பெயர் தொழிலாளர்களாக டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி நடந்து இந்நேரம் ஹைதராபாத் அருகே வந்து கொண்டிருப்பார்கள் .
தி.லஜபதி ராய்
23.05.2020
அடிக்குறிப்புகள்
1. பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு- தொகுதி 16 பக்கம் 515
2. கன்னியாகுமரி மாவட்ட அறிக்கை 2016
3. சாமுவேல் மட்டீர் - லாண்ட் ஆஃப் சாரிட்டி
Land of charity 1871 பக்கம் 75 .
படம் உதவி:திரு.அய்யாசாமி பாண்டியன், அகஸ்தீஸ்வரம்.
1935 ஆம் ஆண்டின் அகஸ்தீஸ்வரம் ஊரின் முதல் ஓட்டுப்புரை.
லஜபதிராய்
முகநூல் பதிவு
நாடார் வரலாறு கருப்பா காவியா நூல் ஆசிரியர்



