Sunday, June 16, 2019

தமிழ் நாட்டு முட்டாள் மனங்களின் மீது இடி ஒன்றை இறக்கி விட்டு சென்றவர் யாரென்றால்

பெரியார் ★

தமிழ் நாட்டு முட்டாள் மனங்களின் மீது இடி ஒன்றை இறக்கி விட்டு   சென்றவர் யாரென்றால் அது பெரியார் தான்

தமிழ் நாட்டு மக்கள் ஒரு பக்கம் பெரியாரை பாராட்டி கொண்டு இருக்கிறார்கள்
இன்னொரு பக்கம் மோசமாக கெட்ட வாரத்தையில் வசை பாடி கொண்டு இருக்கிறார்கள்

இரண்டுக்கும் உரிய மனிதராக அறியப்படுகிறார் பெரியார்

ஆழ்ந்து கற்று கொண்டதால் வந்ததில்லை
பெரியாரின் பகுத்தறிவு

அது இயல்பாகவே அவருக்குள் ஊற்றெடுத்தது

பெரியார் என்றால் சுயமரியாதை

அத்தனை   அழகான வார்த்தை அது

ஆனால் ஓஷோ கூட சில இடங்களில் சுயமரியாதை என்னும் வார்த்தையை நேரடையாக பயன்படுத்துகிறார்

அப்படியே பகுத்தறிவு என்னும் வார்த்தையை உபயோகிக்கிறார்

அப்போதெல்லாம் நான் பெரியாரை
ஆழமாக விரும்ப தொடங்கினேன்

ஓஷோவும் எனக்கு சுயமரியாதை மிக முக்கியமானது என்கிறார்

அதை ஒரு இயக்கமாக சமூக தளத்தில் மக்களிடம்  கொண்டு சென்று
தன்னுணர்ச்சியை ஊட்டி  சென்றவர் யாரென்றால்  பெரியார் தான்

பெரியார் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து விட்டு
அந்த இடத்தை காலியாக விட்டு வைத்தார்

அந்த இடத்தை முழுமையாக நாத்திகம் நிரப்பி கொண்டது

நாத்திகம் என்றாலே வறட்சியானது யென்று சிலருடைய எண்ணம்

என்னை பொறுத்தவரை மோசமான ஆன்மிகத்தை விட
நாத்திகமே மேலானது

உண்மையில் நல்ல ஆன்மிகம் என்பது
ஒரு விதத்தில் நாத்திகமே

இந்த இந்து மதம் பெரியாரின் கண்களை மிகவும் உறுத்தி கொண்டே இருந்தது

பெரியார் சமரசமின்றி அவற்றை வெட்டி வீழ்த்தினார்

உலகிலேயே முட்டாளின் மதமென்றால் அது இந்து மதம் தான்

மனிதர்களை மதத்தின் பெயரில் எத்தனை அசிங்க படுத்த முடியுமோ.?
அத்தனை வேலைகளையும் இந்து மதம் செய்தது

இந்தியா பின் தங்கி இருப்பதற்கு இந்து மதமே காரணம் எனலாம்

மக்கள் முட்டாள் தனத்தை நம்புகிறார்கள்
அதை விரும்புகிறார்கள்

அதை கொண்டாடி கொள்கிறார்கள்

அவர்கள் விருப்பத்தில் நீங்கள் குறுக்கிடும் போது அதை அவர்கள் ஏற்று கொள்வதில்லை

அது அவர்களை குறுக செய்கிறது

பெரியார் அந்த குறுகிய தனத்தை உடைத்தெரி ந்தார்

மக்களை அடிமைத்தனம்  உறைந்த போக செய்துள்ளது

அந்த உறைநிலையை பெரியார் உடைத்தெறிந்தார்

மக்கள் அதில் பாதுகாப்பை உணர்ந்தார்கள்

அது சுத்தமாக பெரியாருக்கு பிடிக்கவில்லை

அடித்து நொறுக்கினர்

பெரியார் என்றாலே அதிரடி தான்

உண்மையில் தமிழர்கள் மிகவும் பழமையானவர்கள்

அவர்கள் அவர்களுடைய பழமையை நினைத்து கொண்டு பெருமை பட்டு கொள்வார்கள்

மிக நீண்ட தொன்மையான பாரம்பரியம் மிக்கவர்கள் தமிழர்கள்

அதை நீங்கள்  கொச்சைப்படுத்தினால்

அதை அவர்கள் ஏற்று கொள்வதில்லை

தமிழ் வாழ்வியலுக்கு முற்றிலும் எதிரானவர் பெரியார்

வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பிலே வாழ்ந்து  கழித்தவர் பெரியார்

அதுதான் அவருக்கு பெரிய பலமே

எதிர்ப்பு தான் அவருக்கு எல்லாவற்றையும் கொண்டு வந்து சேர்ந்தது

எதிர்ப்பை போலவே ஆதரவும் அவருக்கு கூடியது

உண்மையில் தமிழர்களின் வரலாறு என்பதே
பெரியார் தான்

பெரியாரின் வரலாறு தான் தமிழர்களின் வரலாறு

அதை அத்தனை எளிதில் யாரும் துடைத்தெறிந்து விட முடியாது

பெரியாரை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது

மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்று பெரியார் பேசி கொண்டு இருக்கவில்லை

நல்ல பெயர் வாங்க என்ன என்ன ஒரு மனிதன் செய்ய  வேண்டுமோ?
அதையெல்லாம் பெரியார் வெறுத்து தள்ளினார்

உண்மையாக இருப்பதின் ஆபத்து மிக பெரிது

பெரியார் ஆபத்தை விரும்பினார்

உண்மையை யார்தான் விரும்புகிறார்கள்

பெரியாரை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது  ஏனென்றால்

அனைத்து வகை மனிதர்களின் கர்வத்தை பெரியார்

உடைத்தெறிந்து விட்டார்

இந்திய நில பரப்பில் இரண்டாயிரம் ஆண்டுகளாக
அடிமைப்பட்டு கிடந்த மக்களின் உரிமையை பேசியவர் பெரியார் மட்டும் தான்

இப்போதும் பாருங்கள் முட்டாள் மக்கள்

மன்னரின் ஆட்சி பொற்காலம்  என்றெல்லாம்

பிதற்றி கொள்வார்கள்

உண்மையில் மக்கள் மக்களாட்சிக்கு எதிராணவர்களே

அதனால் தான் சில நாடுகளில் புரட்சி தோன்றுவதே இல்லை

மக்கள் விழித்தெழுவதே இல்லை

மக்கள் உற்சாகம் கொள்வதில்லை

பெரியார் போன்ற ஒருவர் வரும் போது
எல்லாம் தாக்குதலுக்கு உள்ளாகிறது

அப்போது வரலாறு புதிய மாற்றத்தை உள் வாங்கி கொள்கிறது

தமிழரின் தலைவிதி! தோழர் உதயகுமாரின் பதிவு

தமிழரின் தலைவிதி!  தோழர் உதயகுமாரின் பதிவு

கூடங்குளம் அணுக்கழிவுப் பிரச்சினை தொடர்பாக இன்று (யூன் 15, 2019) சென்னையில்  நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு 'நாம் தமிழர் கட்சி' சார்பாக யாரையும் அழைக்கவில்லையா என்று பலரும் என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

மற்ற தலைவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும்போது, தோழர் சீமான் அவர்களுக்கும் அந்தக்  குறுஞ்செய்தியை நான் அனுப்பினேன். 'பூவுலகின் நண்பர்கள்' தோழர் சுந்தரராஜன் கைப்பேசியில் அழைத்தபோது, தோழர் அழைப்பைத் துண்டித்திருக்கிறார். பின்னர் சுந்தர் தோழர் பாக்கியராசனை அழைத்திருக்கிறார். அவர் ஒரு மணி நேரத்தில் மீண்டும் தொடர்புக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் தொடர்பு கொள்ளவில்லையாம். கட்சியின் முன்னணித் தலைவர் ஒருவரையாவது நிகழ்வுக்கு அனுப்பியிருக்கலாம். '

அதுபோல, நெல்லை மாவட்டத்தில் 'நாம் தமிழர் கட்சி' நடத்திய நிகழ்வுக்கு நான் போகவில்லை என்றும் சிலர் குறைபட்டுக்கொள்கிறார்கள். என்னை யாரும்  அழைக்கவே இல்லையே? எங்கே, என்ன நடந்தது என்று இப்போது வரை எனக்குத் தெரியாது!

நாம் தமிழர் கட்சி'  தம்பிகள் உரிமையோடும், கோபத்தோடும் என்னிடம் கேள்வி கேட்பதற்கு முன்னர், உங்கள் கட்சிக்குள் என்ன நடக்கிறது என்றும் கொஞ்சம் விசாரியுங்கள்.

அவன் நம் வீட்டுக்கு தீ வைத்து கொளுத்திக்  கொண்டிருக்கிறான், நாமோ 'நீயா, நானா' போட்டியில் கவனமாக இருக்கிறோம். எல்லாம் தமிழரின் தலைவிதி!

S P Udayakumaran

பா.ரஞ்சித் சோழனை இப்படி சொல்லி விட்டார்.. அப்படி சொல்லி விட்டார்

பா.ரஞ்சித் சோழனை இப்படி சொல்லி விட்டார்.. அப்படி சொல்லி விட்டார் என்று அவர் மீதான வெறுப்பு பதிவுகளைப் பார்த்தேன்.

அவர்கள் இதை கட்டாயம் படிக்க வேண்டும்.

தமிழக கல்வெட்டுகளில்

அறவழி கோட்பாடுகள் என்ற புத்தகத்தில் முனைவர் கா.அரங்கசாமி எழுதிய அந்தப் புத்தகத்தில் இருந்து சில தகவல்களை எடுத்து இங்கே கொடுக்கிறேன்.

இவை அனைத்தும் கிபி 1000 வருசத்தில் இருந்து 1500 வருசம் வரைக்கும் நடந்த விஷயங்களாக கொள்ளுங்கள் ( தோராயமாக)

1.பிற்கால சோழர்கள் ஆட்சிக்கு பிறகு தமிழகத்தில் வடமொழி கல்வி பிரபலம் ஆகிறது. வடமொழி இலக்கியங்கள், வடமொழி சொற்கள், வடமொழி நீதி ( அநீதி) நூலான மனுநீதி நூல் பிரபலம் ஆகிறது. மன்னர்களும், குட்டி மன்னர்களும், நிலச்சுவான்தார்களும், பணக்காரர்களும், மக்களும் பிராமண மதமே சிறந்த மதம் என்று நம்புகிறார்கள். தந்திரமாக நம்ப வைக்கப்படுகிறார்கள். அதையொட்டி அடுத்த 800 வருடங்கள் பிராமணர்கள் நினைத்துப் பார்க்க முடியாத சலுகைகளை பெற்று வாழ்கிறார்கள்.

2. தேவராயன் கல்வெட்டில் முக்கிய செய்தி இருக்கிறது. அதன்படி ஒரு அரசனின் நிலம் என்பது அவன் தங்கை மாதிரி. அதை ஒரு பிராமணனுக்கு தானம் செய்வது என்பது நிலம் என்னும் தங்கையை இன்னொரு ஆணுக்கு கல்யாணம் செய்து கொடுப்பதாகும். ஒருவேளை அந்த நிலத்தை மறுபடியும் அரசன் பிராமணனிடம் இருந்து திரும்ப பெற்றால் சொந்த தங்கையை மறுபடி ஒரு அண்ணன் வலுக்கட்டாயமாக திருமணம் செய்த பாவத்துக்கு ஆளாகிவிடுவான். அந்த தோஷம் அவனைப் பிடிக்கும்” என்கிறது. இதிலிருந்து பிராமணர்கள் தங்கள் நிலங்களை எவ்வாறெல்லாம் தக்கவைக்க தந்திரங்கள் செய்திருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

3.இராசேந்திரன் சர்வசி பண்டிதர்க்கு அதாவது ஆரிய தேசம், மத்திய தேசம் தேசங்களின் வந்த பண்டிதர்களுக்கு நிறைய கிராமங்களை தானம் செய்துள்ளான். முதலாம் குலோத்துங்கன், கொங்கு சோழன் ஏராளமான நிலங்களை பிராமணர்களுக்கு கொடுத்துள்ளான்.

4. பிராமணர்களுக்கு கொடுக்கும் நிலத்தை பிரம்மதேயம் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். அவர்களுக்காக உருவாக்கப்படும் குடியிருப்புகளுக்கான நிலத்தை சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கிறார்கள்.

5. இந்த பிரம்மதேயத்தையும் சதுர்வேதிமங்கலத்தையும் பிராமணர்களுக்கு தானமாக கொடுத்த கல்வெட்டு மட்டும் தமிழில் நூற்றுக்கு மேலே இருக்கிறதாம். அக்கல்வெட்டுகள் மூலம் அரசர்கள் பிராமணர்களுக்கு கொடுத்த தானங்களின் விவரமாக தெரியவருகிறது.

6.எதிரிலிச் சோழன் சம்புவரையன் தான் வெற்றிபெற யாகம் வளர்த்தவருக்கு 167 வேலி நிலம் கொடுத்துள்ளான். வீரராசேந்திரன் நாற்பதாயிரம் பிராமணர்களுக்கு நிலம் கொடுத்துள்ளான். முதலாம் பரமேசுவரன் 20 பிரம்மதேயம் கொடுத்துள்ளான். பராந்தவீர நாராயணன் எண்ணிறைந்த பிரம்மதேயம் கொடுத்துள்ளான்.முதலாம் சடையவர்மன் குலசேகரன் 1030 பிராமணர்களுக்கு பிரம்மதேயம் கொடுத்துள்ளான். ( . பிராமணர்களுக்கு கொடுக்கும் நிலத்தை பிரம்மதேயம் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.

7.சேந்தன் மாறன் 121 பிராமணர்களுக்கு 200 வேலி நிலம் கொடுக்கிறார். அச்சுதேவராயர் பட்டர்களுக்கு என்று தனிப்பாதையே அமைத்துக் கொடுக்கிறார். அதில்லாமல் 1000 பசுக்களை தானம் கொடுக்கிறார்.

8.பாதவிருத்தி, பட்டவிருத்தி, புராணவிருத்தி போன்ற ஊர்பெயரால் பல ஊர்கள் பிராமணர்களுக்கு தானமாக வழங்கப்பட்டிருக்கிறது.

9.இராசராசன் கல்வெட்டில் பிராமணர்கள் இருக்கும் ஊரில் பிராமணர்கள் அல்லோதோர் கட்டாயம் நிலத்தைக் பிராமணர்களுக்கே கொடுத்து விடும்படியான கட்டளை பிறப்பிக்கப்பட்டும் மற்றவர்கள் ஊரைவிட்டு விரட்டப்பட்டனர்.

10. குந்தவை பிராட்டி பிராமணர்கள் அல்லோதோர் நிலத்தை விலைக்கு வாங்கி அதை கருந்திட்டைக்குடிக் கோவிலுக்கு விளக்கு எரிக்க தானமாக கொடுத்தார். முக்கியமாக வேளாளர்களின் நிலம் மொத்தமாக பிடுங்கபட்டன.

11. எந்த உழைப்பையும் கொடுக்காமலேயே பிராமணர்களுக்கு 12 நாழி நெல் கொடுத்து விட வேண்டும் என்ற உத்தரவு இருந்திருக்கிறது.
.
12.அச்சமயத்தில் அன்னதானம் என்றாலே அது பிராமணர்களுக்கு இடும் தானமாகத்தான் கருதப்பட்டது. அவர்களுக்கு தானம் கொடுப்பது புண்ணியம் என்பதை மக்கள் மேல் திணித்தார்கள். சாப்பாடு,கறிவகை, பருப்பு, நெய், பற்படகம், உப்பேறி, பச்சடி, கறியமுது, வெற்றிலை இவை அனைத்தும் சேர்ந்ததுதான் ஒரு பிராமண போஜனம். எந்த பிராமணருக்கு அன்னதானம் செய்தாலும் இதில் ஒரு வகை கூட குறையக் கூடாது என்று கல்வெட்டு சொல்கிறது.

13. பிராமணர்கள் கொலை செய்தால் அவர்களுக்கு மரண தண்டனை கிடையாது. மற்ற சாதியினருக்கு உண்டு. உதாரணமாக ஆதித்த கரிகாலனை கொன்ற ரவிதாசன் என்ற பிராமணனுக்கு வடமொழி நீதி நூல் அடிப்படையில் நாடுகடத்தல் தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது என்பதை உடையார்குடி கல்வெட்டு சொல்கின்றது.

14.கொலை செய்தால் அவர்களை நரபலி இட்டுவிடுங்கள். ஆனால் பிராமணர்களை மட்டும் நரபலி கொடுக்காதீர். சிறைத்தண்டனை போதும் என்று விஜயநகர கல்வெட்டு சொல்கிறது.

15. வடமொழி நீதிநூலின் மொழியான “தருமத்துக்காக பாவம் செய்யலாம்” என்ற கொள்கையை பல்வேறு கவ்லெட்டுகள் கூறுகின்றன. ( அந்த தருமமம் என்பது பிராமணர்களின் நலமே )

பதினைந்து பாயிண்டுகள் என்பது நான் உதாரணத்துக்கு எழுதியது. புத்தகத்தில் நிறைய இருக்கிறது.

பிராமணர்கள் எப்படி தமிழகத்தில் நிலம் பெற்றார்கள்?

அரசர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி பிராமணர்கள் நிலத்தை வாங்கி இருக்கிறார்கள்.

அரசர்களை எப்படி பிராமணர்கள் கவர்தார்கள்?

அவர்களை மதம் மூலம் நம்ப வைத்து கவர்கிறார்கள்.

தங்களுக்கு பல்வேறு சலுகைகளை பிராமணர்கள் பெறுகிறார்கள். எப்படி பெற்றார்கள்?

பிராமணர் என்பவர் உயர்ந்தவர் என்ற இந்து மதக்கருத்தை திரும்ப திரும்ப மகாபாரதம், ராமாயணம், புராணக் கதைகள் மூலமாக சொல்லி மக்களை நம்ப வைத்து பெற்றார்கள்.

பல தண்டனைகளில் இருந்து பிராமணர்கள் தப்பினார்கள். எப்படி தப்பினார்கள்?
பிராமணரைக் கொன்றால் பிரம்மஹத்தி தோசம் வந்து விடும் என்று இந்து மதம் வாயிலாக நம்ப வைத்து தப்பினார்கள்.

கோவிலை எப்படி பிராமணர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தினர்?

கோவிலுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஏராளமான செல்வத்தையும், நிலத்தையும் கோவிலுக்கு வாங்கிக் கொண்டனர்.

கோவிலுக்குள் தாங்கள் மட்டுமே அதிகாரமிக்க ஆட்கள் என்று இந்து மதத்தில் சொல்லி இருக்கிறது என்று மதத்தின் பெயரால் கோவிலை சாதகமாக்கிக் கொண்டனர்.

ஆக பிராமணர்கள் இவை அனைத்தையுமே இந்து மதம் என்ற மதத்தின் மூலமாகவே செய்திருக்கிறார்கள்.

நம்மோடு இஸ்லாமியர்களும்,தெலுங்கர்களும் சுமூகமாக தானே வாழ்கிறார்கள் ??

இம்மண்ணில் தன்னை இந்துவாக உணர்பவர்களுக்கும்,தமிழனாக உணர்பவர்களுக்கும் முதல் எதிரியாக ஆரிய பார்ப்பனக் கூட்டமாக தான் இருக்க முடியும்,,,

ஆனால் இந்துக்களிடம் இஸ்லாமியர்கள் தான் எதிரி என்றும்,,,தமிழர்களிடம் தெலுங்கர்கள் தான் எதிரி என்றும் ஆரிய பார்ப்பனக் கூட்டம் கச்சிதமாக தனது கைக்கூலிகளை வைத்து இன்றைய இளைஞர்களிடம் பரப்புள்ளது,,,

நம்மோடு இஸ்லாமியர்களும்,தெலுங்கர்களும் சுமூகமாக தானே வாழ்கிறார்கள் ?? அவர்கள் இந்துக்களுக்கோ,தமிழர்களுக்கோ என்ன தீங்கு செய்தார்கள் என ஆராயும் அறிவெல்லாம் இல்லாத இளைஞர்களை எல்லாம் சோம்பிக்கள் கூட்டமாக மாற்றி வைத்துள்ளனர்,,,

ஆனால் இந்த எதிரிப்பட்டியலில் ஏனோ ஆரிய பார்ப்பனர்கள் சீனிலேயே இல்லை,,,அது எப்படி வருவார்கள் ?? இஸ்லாமியர்களையும்,தெலுங்கர்களையும் எதிரிகளாக சித்தரித்ததே தங்கள் பெயரை எதிரி பட்டியலில் இருந்து நீக்கத்தானே !!

Thursday, June 13, 2019

வாழ்க மனுநீதி சோழன்

வாழ்க மனுநீதி சோழன்

ஆதித்த கரிகால சோழனை கொலை செய்தனர் சில ஆரிய பார்ப்பனர்கள். மனுசாஸ்த்திர படி பார்ப்பனர்களை  தண்டித்தால் பிரம்மஹத்தி தோஷம் வந்துவிடும் என்பதாலும் மனுசாஸ்த்திரத்தில் பிராமணர்களுக்கு தண்டனையே இல்லையென்பதாலும் மனுசாஸ்த்திரபடி ஆட்சி செய்த ராஜராஜன் கொலைகார பிராமணர்களை தண்டிக்காமல் நாடு கடத்தியவன் ராஜ ராஜ சோழன். என்ன ஒரு நீதி!!! மனுநீதி!!! அதனால் தான் அவர் மனுநீதி சோழன் என்று ஆரியர்களால் புகழப்பட்டார்.

பெரிய கோயிலில் முடி திருத்துபவர்களுக்கு, `ராஜராஜ பெரு நாவிதன்’,  அரச அறிவிப்புகளை பறையறைந்து சொல்பவர்க்கு "ராஜராஜ பெரும் பறையன்" பட்டம் கொடுத்து கவுரவிச்சிருக்கான்யா ராஜராஜன்..
வாவ்.. என்னே சமூக நீதி...

பட்டத்த மட்டும் பாட்டாளிக்கு கொடுத்திட்டு நிலத்தையெல்லாம் பார்ப்பானுக்கு கொடுத்திருக்கான்யா..

என்னடா செஞ்சான் சோழன்னு கேட்டா, கோயில கட்டுனான் குளத்த வெட்டுனான்னு பெருமையா சொல்றானுங்க.

நாலு கல்விக்கூடம் கட்டி நாலு பேர படிக்க  வைக்க துப்பு இல்ல. கோயில் கட்டுனது குளம் வெட்டுனதெல்லாம் ஒரு சாதனைனு தூக்கிட்டு வரானுங்க.

கட்டுன கோயிலுகுள்ளயும் தமிழர்கள் எல்லாருக்கும் அனுமதி இல்லை,

வெட்டுன குளத்துக்குள்ளயும் நம்ம எல்லாருக்கும் அனுமதி இல்லை.

அப்புறம் என்ன கூந்தலுக்கு கட்டுனானுங்க வெட்டுனானுங்கனு கேட்டா, நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லைனு சொல்றானுங்க தன்மானமில்லாத முட்டாள்கள்.

வேத,சமஸ்கிருத பாடசாலைகளை அமைத்த ராஜராஜ சோழன் தமிழருக்கும் தமிழுக்கும் ஒரேயொரு பள்ளிக்கூடம்  கூட அமைக்கவில்லையே இவன் எப்படிடா தமிழரின் பெருமை மிகு அடையாளமாக இருக்க முடியும்.

"பார்ப்பானிடம் மண்டி போட்டா"
அது பொற்காலம் ! ராஜராஜன் காலம் பொற்காலம்

அதுவே "பார்ப்பான் மண்டி போட்டா"
அது இருண்டகாலம் !! களப்பிரர்கள் காலம் ஆரியத்தின் ஆதிக்கத்தை ஒழித்த காலம் அதனால் அது இருண்ட காலம்.

இது தான் இந்த மண்ணின் உண்மை வரலாறு !!

எச்ச ராஜா Rss காவிக்கூட்டம் ராஜராஜனுக்காக பொங்கும் போதே தெரியவேண்டாமா ராஜராஜ சோழன் ஆட்சியில் யார் பயன்பட்டார்கள் அந்த ஆட்சி யாருக்கு பொற்காலம்னு

  மனுநீதி பிறழாமல் ஆட்சி செய்து ஆரியரிடம் மனுநீதி சோழன் என்று பட்டம் வாங்கிய ராஜராஜன் தமிழ்,தமிழர்  விரோதியே

Wednesday, June 12, 2019

டோலி :- உங்களுக்கு என்ன அப்படி ராஜராஜன் மேல கோவம்

டோலி :- உங்களுக்கு என்ன அப்படி ராஜராஜன் மேல கோவம் ...அவர் எவ்வளவு பெரிய தமிழ் மன்னன் ...அவரை அசிங்கப்படுத்துறீங்க நீங்க
நான் :- ஒரே கேள்வி ..... உங்களிடம் நான் "தோழனாக பழகவா ???? இல்லை சோழனாக பழகவா ???
டோலி :- ஏன் அப்படி கேக்குறீங்க
நான் :- 12. மனைவிகளையும் .....342. அந்தப்புர காம கிழத்திகளையும் வைத்துக்கொண்டிருந்தவன் ராஜராஜ சோழன் ..( அதைவிட கொடுமை அவன் இறந்ததும் அவன் சொல்லிவைத்தபடி இவர்கள் அனைவரையும் உடன்கட்டை ஏற்றி ..உயிரோடு கொளுத்தினான் அவரின் பார்ப்பன ராஜ குரு ....)
சொல்லுங்க சோழன் சிறந்தவனா இல்லை தோழன் சிறந்தவனா
டோலி :- ரெண்டு ஹார்டின் ...மூணு கிச் ......
நான் :- இது யாருக்கு ....ராஜராஜனுக்கா ???
டோலி :- அந்த பொம்பள பொறுக்கிக்கு நான் ஏன் குடுக்க போறேன் ...ஹாஹா
நான் :- என்னங்க இப்படி பொசுக்குன்னு ஒரு தமிழ் மாமா மண்ணனை திட்டிபுட்டிங்க ....
டோலி :- ... ஹாஹாஹா
நான் :- அப்போறோம் ஒரு கொசுறு செய்தி ..இந்த "ராஜராஜன்" என்கிற பட்டம் எப்படி வந்தது என்றால் அக்கம் பக்கத்தில் இருந்த தமிழ் மன்னர்களை கொன்று குவித்து ..தமிழ் மக்களை சூறையாடி வாங்கிய பட்டம் தான் ராஜராஜன் ....
டோலி :- போதும் இனிமே அந்தாள பத்தி என்கிட்டே பேசாதீங்க ....
நான் :- யாரு நானா ?? அது சரி
......................
புரியாத தடிமாடுகள் கவனத்திற்கு ... ....ராஜராஜன் மட்டும் இல்லை ....ஏறக்குறைய அணைத்து மன்னர்களும் இப்படித்தான் .... மக்களின் வரிப்பணத்தில் மஞ்சத்தில் உண்டு கழித்த கழிசடைகள் தான் ..மண் ஆசை வெறியில் சொந்தமக்களையே போர் போர் என்று கொன்று குவித்த வெறியர்கள் தான் ....போய் வேறே பிழைப்பு மயிரை பார்க்கவும்

Tuesday, June 11, 2019

பாவம் கிரேஸி மோகன்; இது முறையல்ல

பாவம் கிரேஸி மோகன்; இது முறையல்ல
*
திரைபிரபலம் மரணத்திற்கு; பிரபலங்களிடம் பேட்டி, காட்சிகளை ஒளிபரப்புவதின் மூலம் நல்ல ரேட்டிங் இருப்பதால், தமிழர்கள் மண்டையில் மாபெரும் சோகமாகத் திணிக்கின்றன ஊடகங்கள்.
அப்படிதான் சமீபத்தில் மறைந்த திரு. கிரேசி மோகன் மரணமும் ரேட்டிங்காக. அவரின் இறப்பு வருத்ததிற்குரியதாகப் பார்க்கப்படுவதற்குப் பதில், சுவாரஸ்யமானதாக மாற்றப்பட்டது, அவருக்கு ஏற்பட்ட மரியாதைக்குறைவு.
ஊடகங்கள் பிரபல படுத்துகிற மரணங்களுக்காக உடன் சேர்ந்து ஒப்பாரி வைப்பது சமூக வலைதளங்களில் வழக்கமாகி வருகிறது. அதில் சில முற்போக்காளர்களும் மூக்கை சிந்தி சுவற்றில் தேய்த்து விடுகிறார்கள்.
ஒருவரை மிகைப்படுத்தப்பட்ட மதிப்பிடுகளால் அஞ்சலி செய்வது, பொய்யான செய்தியை உண்மையாக்குகிறோம் என்பதை அறியாமலே அறிவாளிகளும் செய்து முடித்து விடுகிறார்கள்.
S.V.சேகர், Y.G. மகேந்திரனுடன் ஒப்பிடும்போது கிரேசி மோகனின் காமெடி சிறப்பானதுதான். ஆனால், ஒரே மாதிரியானது. முதல் இரண்டு படங்களில் என்ன எழுதினாரோ அதையேதான் தொடர்ந்து எழுதி அலுப்பேற்றினார்.
நாயகிகளுக்கு ஜானகி, மைதிலி என்கிற அய்யங்கார் பெயர்களை மட்டுமே எப்படி வைத்தாரோ அதுபோல்.
‘உங்களுக்கு எப்படித் தெரியும்?’ ‘இப்பதானே நீங்க சொன்னீங்க’ என்ற பாணியில்.
எப்பவாவது விதி விலக்கும் உண்டு. காயத்திரி என்ற அய்யர் பெயரையும் வைத்ததுபோல்.
அவரின் காமெடிகள் இப்போது சிரிப்பை வரவைக்காது என்பதினால்தான் இப்போது ‘அள்ளி விடுகிற’ இதே ஊடகங்கள் அவர் எழுதிய காமெடிகளைத் தனியாக ஒளிபரப்பியதே இல்லை. (கவுண்டமணி பேசியதை தவிர)
90 களில் தொடர்ந்து ஒரே மாதிரியான வசனங்களால் நம்மை வருத்தப்பட வைத்த கிரேசி மோகனின் காமெடியிலிருந்து மீட்டு, உலகின் மாபெரும் காமெடி காட்சிகளுக்குத் தரம் உயர்த்தியவர் வடிவேலு.
*
‘இந்துல எழுதுற, சந்துல எழுதுற பார்த்தசாரதிதானே நீ’ எனக் கவுண்டமணி அவரை ஒரு படத்தில் கேட்டாரே, அந்தப் பார்த்தசாரதி போலவே சில படங்களில் எழுதியும் இருக்கிறார்.
வியாட்நாம் காலனி என்ற மலையாளப் படம் தமிழில் பேசியபோது, ஒரு காட்சியில் சாம்பார் சாதத்தை நாய் சாப்பிட்டு விடும். அதற்கு டேவிட் என்கிற காதாபாத்திரம் நாயகனை பார்த்து,
‘அய்யிரே.. சிக்கன வேணான்னு திருப்பிக் கொடுத்திட்டே. அங்க பாரு மனுசன் சாப்பிட வேண்டிய சாம்பார் சாதத்தை நாய் சாப்பிடுது. நாய் சாப்பிட வேண்டிய சிக்கனை கீழே மனசங்க சாப்பிடுறாங்க’ எனப் பேசும்.
அய்யர் பேச வேண்டிய வசனத்தைச் சிக்கன் விரும்பி சாப்பிடுகிற டேவிட் பேசுவதைப்போல் எழுதியதில் கிரேசி மோகனின் அரசியல் மட்டுமல்ல அவரின் தந்திரமும் தெரியும்.
மனோரமா ‘வெங்கட கிருஷ்ணன்’ என்ற பெயரை, வெங்கட கிச்சுனன் என சென்னை தமிழில் சொல்வார். அதற்கு டேவிட், ‘நாக்குல தர்பையை வச்சு வழிச்சா சரியா பேர சொல்வ’ என்பார். இதுவும் அய்யர் பேசிய வேண்டிய வசனமே.
இன்னும் விரிவாக எழுத வேண்டிய சூழல் இதுவல்ல, இதுவும் கூட மிகைப்படுத்தப்பட்ட மதிப்பிடுகளை மறுக்க வேண்டிய அரசியல் கடமை எனக்கு இருப்பதால் எழுதினேன். இதை எழுதியதற்கும் நான் காரணமல்ல என்றாலும் யாருக்கும் வருத்தம் ஏற்பட்டால் வருந்துகிறேன்.

ஜெயலலிதா vs கலைஞர்

காட்சி 1
--------
வண்ணக்கிளி அண்ணன் இயற்பெயர் மாரிமுத்து. துணை வட்டாட்சியர்.
நான் கேஷியராக பணிபுரிந்த நட்சத்திர விடுதி பாரில் வண்ணக்கிளி அண்ணண் பேரர். அண்ணணுடைய அப்பா வருவாய் துறையில் அலுவலக உதவியாளர்(பியூன்). திடீரென ஒருநாள் பணியில் இருக்கும் போதே இறந்துவிட்டார்.
வண்ணக்கிளி அண்ணண் பத்தாவது தேர்ச்சி பெற்றவர். ஒரு சிட்பண்டில் சொற்ப சம்பளம். சிறு வயதிலேயே திருமணம். இரண்டு குழந்தைகள். சோறு போட்ட அப்பா இறந்ததால் குடும்பம் தத்தளிக்கிறது.
வண்ணக்கிளி அண்ணண் கருணை அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பித்தார். இப்போதுதான் மிகப்பெரிய சோதனை. அவர் அப்பா இறந்த அன்று அண்ணணிண் வயது நிர்ணயிக்கப்பட்ட வயதைவிட மூன்று மாதங்கள் கூடுதலாக இருந்து தொலைந்து விடுகிறது. இதனால் அவரது வேலைகோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.
வண்ணக்கிளி அண்ணண் வயது வரம்பை தளர்த்தி பணியிடம் வழங்குமாறு மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கிறார்.
கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர், வயது வரம்பு தளர்வை அரசு மட்டுமே செய்ய முடியும் என்பதால் வயது வரம்பில் தளர்வு வழங்கி ஆணை வழங்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்கிறார்.
இதற்கு வருவாய்த்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, நிதித்துறை ஆகிய துறைகள் ஒப்புதல் அளித்து முதல்வருக்கு அனுப்பி கையொப்பம் பெற வேண்டும்.
ஆனால் வருவாய்த்துறைக்குப் போன கோப்பு வயது வரம்பில் தளர்வு தர இயலாது எனக்கூறி கோப்பினை திருப்பி அனுப்பி விடுகிறது.
எங்கள் உறவினர் ஒருவர் தலைமைச்செயலகத்தில் பிரிவு அலுவலராக பணியாற்றினார். அவர் மூலம் ஏதேனும் செய்யலாம் என ஆறுதல் கூறினேன்.
மீண்டும் விண்ணப்பித்தோம்.
தபால் உரிய செக்க்ஷனுக்கு போகிறதா என கண்காணித்தபடியே இருந்தோம். அந்த பிரிவு அலுவலரும் ஒவ்வொரு இடமாக கோப்பினை தள்ளி தள்ளி விட்டார். ஆனால் கோப்பு வருவாய் துறையை தாண்டவில்லை.
அதன்பிறகு ஆட்சி மாற்றம். கலைஞர் முதல்வராக பதவியேற்றார். ஒரு வழியாக கோப்பு மூன்று துறைகளையும் தாண்டி முதல்வர் கலைஞருக்கு சென்று விட்டது.
கலைஞர் எல்லா கோப்புகளையும் படித்து பார்த்துதான் கையொப்பம் இடுவார் என கேள்வி பட்டிருந்தோம். அதனால் என்ன செய்வாரோ என பயந்து கொண்டே இருந்தோம். காலையில் போன கோப்பு அன்று மாலையே திரும்பியதாக அறிந்தோம். ஒப்புதல் கொடுக்கப்பட்டதா அல்லது மறுக்கப்பட்டதா என தெரியாமல் குழம்பி தவித்தோம்.
மறுநாள் இருவரும் விடுப்பு சொல்லிவிட்டு தலைமைச்செயலகம் சென்றோம். அந்த பிரிவு அலுவலரை சென்று பார்த்தோம். அவர் கட்டைவிரலை உயர்த்தி வெற்றி என்றார். மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது. இந்த இடத்திற்கு வருவதற்கு முழுதாக ஐந்து வருடம் தேவைப்பட்டது.
தயங்கி தயங்கி கலைஞரின் கையொப்பத்தை பார்க்கலாமா என்றோம். வெளியாட்கள் அரசு கோப்பை பார்க்க அனுமதி இல்லை என்றார். மிகுந்த வற்புறுத்தலுக்குப்பின் கலைஞர் வேறு ஏதேனும் கோப்பில் குறிப்புகள் எழுதி இருக்கிறாறா என்றோம்.
ஆமாம் .."மேலும் தாமதிக்காமல் தொடர்புடையவர் ஒரு வாரத்திற்குள் பணியேற்றிடும் வகையில் ஆணை வழங்கவும்" என குறிப்பு எழுதியுள்ளார்.
அதே போல ஒரு வாரத்துக்குள் வண்ணக்கிளி அண்ணண் இளநிலை உதவியாளராக பணியேற்று இன்று துணை வட்டாட்சியராக பதவி உயர்வு பெற்று பணிபுரிகிறார்.
இதில் நாங்கள் பிரமித்த விஷயம் என்னவெனில் அம்பாரமாய் கோப்புகள் குவிந்து கிடந்தபோதும் மேம்போக்காக கையொப்பம் இடாமல் ஒவ்வொன்றையும் படித்து அக்கறையாக குறிப்பெழுதி கையெழுத்திடும் கலைஞரின் பண்பு.
மற்றவர்களிடம் கோப்புகள் வருடக்கணக்கில் தேங்கி கிடந்தாலும் தன்னால் தாமதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அந்த மனிதரின் மனித நேயம் சொல்லில் அடங்காதது. என்ன ஒரு மனிதர் அவர்!

காட்சி 2
--------
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் தத்தளிக்கிறது. அங்குள்ள இளநிலை பொறியாளரே தண்ணீரைத் திறந்து விடுவது தான் முறை. ஆனால், தமிழகத்தில் தன்னைக் கேட்காமல் எதுவும் நடக்கக் கூடாது என்பது ஜெயலலிதா கட்டளை.
தண்ணீரைத் திறந்து விடக் கோரிய கோப்பு ஒரு வாரமாக முதல்வரின் அறையில் உறங்குகிறது. முதல்வர் எங்கு உறங்கினார் என்று தெரியவில்லை.
கடைசி நேரத்தில் அடைமழை நேரத்தில் ஏரியைத் திறந்து விட்டு குறைந்தது 500 பேர் இறந்து போகிறார்கள். பலர் உடமைகளை, தொழில்களை இழக்கிறார்கள்.
***
வரலாறு ஜெயலலிதாவை Able administrator என்று குறித்துக் கொண்டது. என்னடா Able admininstrator என்றால் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் வேலையை விட்டு நீக்கி வீட்டுக்கு அனுப்பினாராம்.
வாழ வைப்பவர் தானே தலைவர் ஆவார்,
வேலையைப் பறிப்பவர் எப்படி தலைவர் ஆனார்
என்று யாரும் கேட்கவும் இல்லை.
அதற்கு யாரும் பதில் சொல்லவும் இல்லை!

சுடுகாட்டில் பட்டியலின மக்களுக்கு வரும் எதிர்ப்பை அன்றே தொடங்கி வைத்தவன் ராஜ ராஜ சோழனே..

தமிழ் நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களில் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது.
வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில் ஊருக்கு வெளியே தீண்டாச் சேரியும், பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன... இன்றும் பொது சுடுகாட்டில் பட்டியலின மக்களுக்கு வரும் எதிர்ப்பை அன்றே தொடங்கி வைத்தவன் ராஜ ராஜ சோழனே..
தாழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழல்வதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும், பல்லக்கு சுமப்பதும் கட்டாயமானது.
ராஜராஜனின் பொற்காலம் பற்றிப் பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையைப் பற்றியோ, சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதே இல்லை.
கோவிலை மையமாகக் கொண்ட சோழர் கால அதிகார அமைப்பில் சாதிவாரிக் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டன.
பார்ப்பன, வெள்ளாள நிலவுடைமை ஆதிக்க சாதிகள் ஒருபுறமும் விவசாயத் தொழிலாளிகள், அடித்தட்டு உழைப்பாளர் மற்றும் உடைமை,உரிமை அற்ற சமூக அடிமைகளாக கடைச் சாதி தீண்டப்படாதோர் மறுபுறமுமாக சமூகமே பிரிந்து கிடந்தது.
பொற்காலத்தில் கொழித்த பார்ப்பனர்களும், ஆண்டைகளின் ஜனநாயகமும்!
ராஜராஜனின் ‘பொற்கால ஆட்சி’யை அனுபவித்தவர்கள் யார்? தீட்சிதப் பார்ப்பனர்கள் தனக்கு பட்டம் சூட்ட மறுத்ததால் பீகார் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை சோழநாட்டிற்கு அழைத்து வந்து ராஜராஜன் அவர்களைக் குடியேற்றினான். தமிழக மன்னர்களின் வரலாற்றில் முதன்முதலாக ராஜகுரு என்றொரு பதவியை உருவாக்கி, ஈசான சிவப் பண்டிதர் எனும் காஷ்மீரப் பார்ப்பனரை அப்பதவியில் நியமித்தான். பின்னர் பார்ப்பனர்களே இப்பதவிக்கு வருவது மரபாக்கப்பட்டது. ராணுவப் படையெடுப்பு போன்றவற்றை தான் கவனித்துக் கொண்டு, குடிமக்கள் நிர்வாகத்தை ராஜகுருவின் ஆலோசனைக்கு விட்டிருந்தான்.
பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக் கிராமங்கள், கோவில்கள், மடங்கள் ஆகியவை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. 250 ஊர்கள் சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன....
இந்தியச் சட்டங்கள் எவையும் செல்லுபடியாகாத இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போன்றே , குற்றவிசாரணைக்காகக்கூட அரசப்படையினர் இத்தகைய ‘மங்கலங்களின்’ உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது....

Monday, June 10, 2019

திரிவேதி மங்கலம் சதுர்வேதிமங்கலம் etc

மூன்று வேதம் கற்றவர்களுக்கு திரிவேதி மங்கலம்..
நான்கு வேதம் கற்றவர்களுக்கு சதுர்வேதிமங்கலம்...
வேதம் எல்லாரும் கத்துக்கலாமா?
என்ன கேள்வி இது?
வேதத்தை பார்த்தே கண்ணை நோண்டுவோம்.
நாக்கை துண்டிப்போம்..
கேட்டே...காதுல ஈயத்தை காய்ச்சி ஊத்துவோம்...
அப்போ வேதம் கத்துக்காதவங்களுக்கு????
அதோ மாடு மூத்திரம் பெய்யுது பார்....புடிச்சிக் குடிச்சுட்டு படுத்து தூங்கு...

நீங்களும்.. உங்கள் ஹிந்தியும்..!! மனிதனை பசியில்லாமல் வாழ வைங்கடா முதலில்

சற்று முன் சில டாக்குமெண்ட் காப்பிகளை பிரதி எடுக்க கடைக்குச் சென்றிருந்தேன். அங்கு வடநாட்டு இளைஞர் ஒருவரும் ஏதோ பிரதி எடுக்க வந்திருந்தார்.
அவரிடம், “இங்கிலீஸ் மாலும்..” என்றேன்.
'தெரியாது!' என தலையாட்டினார்.
“தமிழ் மாலும்..” என்றேன். அதற்கும் 'தெரியாது' என தலையாட்டினார்.
பக்கத்தில் இருந்த, இந்தி தெரிந்த ஒருவர் மூலம் அந்த இளைஞரிடம் பேசினேன்.
“எந்த மாநிலம்..?”
”உத்திரப்பிரதேஷ்”
“என்ன படிச்சிருக்கே..?”
“பத்தாம் வகுப்பு”
”இங்கே என்ன வேலை..?”
”பெயிண்ட்டர்!”
“இந்தி படிச்சா வேலை கிடைக்கும்னு சொல்றாங்களே..! உங்க உ.பி.யில வேலை கிடைக்கலையா.. உனக்கு ?”
”அங்கே ஒண்ணுமே இல்லே..! யோகி னு ஒரு சாமியார் ஆள் முதலமைச்சராகி
படு கேவலமான முறையில் ஆட்சி நடத்திறான். அவன் ஆட்சி இந்த பீரியடும் தொடர்ந்திதுனா உத்திரப் பிரதேசமே சுடுகாடாகிடும். முழுக்க முழுக்க ராமரின் பெயரால் அயோக்கியத்தனம் பண்ணும் பக்கா கிரிமினல் அவன். எங்க ஊர் ஏழைப் பெண்களின் கற்புக்கும் குடும்ப வாழ்விற்க்கும் உத்தரவாதமே கிடையாது. தமிழர்கள் தெய்வங்கள்.
உண்மையில் ராமராஜ்யம் என்பதை
நான் இங்கேதான் காண்கிறேன்.
என் மனைவியும் எனது இரண்டு பிள்ளைகளும் சத்தியமாக பசியில்லாமல் நாளைக் கழிக்கும்
அந்த சொர்க்க தினங்கள் எனக்கு
இங்கேதான் கிடைத்தது. விரைவில் உங்கள் மொழியை எப்படியாவது கற்றுக் கொண்டு நான் ஒரு தமிழனாக மாறவே விரும்புகிறேன். தமிழ்நாட்லதான் நிறைய பில்டிங் கட்றாங்க.. வேலை நிறைய கிடைக்குது எங்க பசியெல்லாம் பஞ்சாப் பறக்குது.. !” மூச்சு விடாமல் பேசிக் கொண்டே போனான்.
"அடப் போங்கடா..!!. நீங்களும்.. உங்கள் ஹிந்தியும்..!! மனிதனை பசியில்லாமல் வாழ வைங்கடா முதலில்!!!! அப்புறம் பாத்துக்கலாம்.. ஆட்சி, அதிகாரம், மொழி, இனம், கடவுள் எல்லாம்!!!!

பசு மாடு பார்ப்பனர்களின் கடவுளா?

பசு மாடு பார்ப்பனர்களின் கடவுளா?
பசு மாடுகளை உணவிற்காகக் கொல்லப்பட்டால் பார்ப்பனர்களுக்குத் தேவையான பால்,தயிர்,வெண்ணெய்,நெய் (இவையெல்லாம் ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர்) போன்ற பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடுகள் வருமென்பதால், அதைத் தடுப்பதற்காகப் பார்ப்பனர்கள் பசு மாட்டிற்குக் கோமாதா என்று பெயரிட்டு அதற்கு ஒரு கதை கட்டி அனைவரும் கடவுகளாக வணங்கவேண்டுமென்றும் பசுவைக் கொள்வது பாவமென்றும் பொய்யுரைகளைப் பரப்பி வைத்துள்ளனர்.
பால் தொழிற்சாலைகளின் வளர்ச்சியால் தற்பொழுது அனைவரும் பால் பொருட்களை எந்தவித தட்டுப்பாடுகளும் இல்லாமல் பயன்படுத்தி வரும் வேளையிலும் மாட்டுக் கறி அரசியலைத் தூக்கிப் பிடிப்பதற்கு மாட்டுக் கறி ஏற்றுமதியே காரணம்.
உலகில் மாட்டுக் கறி ஏற்றுமதியில் இந்தியா முன்னோடியாக இருக்கிறது அதில் பார்ப்பனர்களே முக்கியப் புள்ளிகளாகவும் இருக்கிறார்கள்.
ஏதோவொரு வகையில் பசு மாடு பார்ப்பனர்களுக்குப் பயன்பட்டுக் கொண்டே இருக்கிறது,அதுவரை அவர்கள் பசுவைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்திக்கொண்டு தான் இருப்பார்கள். இனி பயனில்லை என்றவுடன் பசுவைத் தூக்கி ஓரம் வைத்துவிடுவார்கள். இந்திரன், பிரம்மன் போன்ற கடவுள்களையே தூக்கி ஓரம் வைத்தவர்களுக்குப் பசுவெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.
பார்ப்பனர்கள் பசுமாட்டைக் கடவுளாக வணங்குவதில்லை, மற்றவர்களைத் தான் வணக்க சொல்லி இருக்கிறார்கள். இரண்டிற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.
இதைப் புரிந்துகொண்டு,இனி மாட்டுக் கறி சாப்பிடுவதைப் புரட்சி என்று நம்பி உணர்ச்சிவசப்படாமல், நல்ல கறியாக வாங்கி குறிப்பாக beef steak வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். சுவையாக இருக்கும்.

Sunday, June 02, 2019

பார்பனர்கள் மிக தெளிவாகதான் செயல்படுகிறார்கள்

தமிழகத்தை சேர்ந்த இரு பார்பனருக்கு மத்திய அமைச்சர் பதவி அதிலும் முக்கியம் வாய்ந்த பதவிகள் உடனே சிலர் மோடி தமிழகத்தை புறக்கணிக்கவில்லை என்கிறார்கள் முதலில் தமிழர்களுக்கு மந்திரிசபையில் இடமளிக்கவில்லை பார்பனருக்கு அளிக்கபட்டிருக்கிறதென தமிழர்களுக்கு புரியவைக்கவே கஷ்டபடவேண்டியிருக்கிறது
பாஜக கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து உயர்பதவிகள் பார்பனர்கள் வசமே சென்றடைந்ததை உணராதவரை எதுவும் பலனில்லை
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களில் பார்பனர்கள் அதிகளவில் இடம் பெறுகிறார்கள் .. மொத்த தொகுதிகளில் 543 ல் பட்டியிலினத்தவர்கள் 131 தவிர்த்து 412 ல் 232  பேர் பார்பனர்கள்
சிறுபான்மையினர் தவிர்த்து ..120 பேர்தான் பிற சாதியினர் அதாவது( OBC,BC,MBC )..
இதையெல்லாம் உணராமல் பாஜக இந்துக்களுக்கான கட்சியென பார்பனர் அல்லாதோர் மல்லுகட்டுவதுதான் கொடுமை
26 கேபினட் அமைச்சர்களில் 13 பேர் பார்பனர்கள் இது எங்கே செல்கிறது.. யார் மந்திரியாகவேண்டுமென நாக்பூர் தீர்மானிக்கிறது அதை உணராததால் தான் வடஇந்தியா இன்னமும் தாழே கிடக்கிறது ..
..
தமிழகம் உட்பட தென்னகத்தில் பார்பன ஆதிக்கத்தை சிதைத்ததில் பெரும்பங்கு பெரியாருக்கு உண்டு அவர் மனிதர்களின் அறிவோடு பேசினார் அவர்களை தட்டியெழுப்பி பார்பனன் உன்னை அடிமைபடுத்தி மதமென்ற பெயரில் பிரித்து வர்ணமென்று கதையடித்து அவன் உயர செல்ல உன்னை படிகளாக்குகிறான் .. உனதுரிமையை பிடிங்கிக்கொண்டு உன் கைகளைக்கொண்டே உன் விழிகளை குத்துகிறானென புரியவைத்ததால் இன்று சுயமரியாதையோடு போராடுகிறான்.. அதையும் மீறி எழும்ப எண்ணுகிற போதெல்லாம் பெரியாரின் தடிகொண்டு அடித்தமர்த்துகிறோம் .. ஆனாலும் சில  துரோகிகளும் அடிமைகளும் தன் சுயமிழப்பதறியாமல் பார்பன அடிவருடியாய் வாழ்வது சாபகேடு ..
..
பார்பனர்கள் மிக தெளிவாகதான் செயல்படுகிறார்கள்
உழைப்பதற்கும் மக்கள் ஏசும் மொழிகளை கேட்பதற்கும், கிண்டல் கேலிக்கு ஆளாகி மானங்கெட்டு திரிவதற்கும் இந்த சூத்திர அடிமைகள் இருக்கிறார்கள் யாருக்கும் உதவாத பதவியை கொடுத்துவிட்டு நாம் அவர்களை ஆட்டிவைக்கலாம் .. அதிகாரம் பதவி எனும் போது நோகாமல் நோங்கு தின்னலாம் ஆம் தறிகெட்டு பேசுவதற்கும் ஓயாது உழைப்பதற்கும் சாதிவெறி மதவெறியை தூண்டுவதற்கும் பொன்னர் தமிழிசை அர்ஜூன் போன்ற சூத்திரர்கள் இருக்கிறார்கள் ...
ஆளுமைமிக்க பதவிகளுக்கு பார்பனர்கள் .. மக்களை சந்திக்காமல் வெயில் மழையென அலையாமல் ஊரூராய் சென்று அவதிபடாமல்
யாரை இரைஞ்சாமல் பதவி தானாக தேடிவரும்
இது புரியாதவரை அக்கா தமிழிசை போன்றவர்கள் கத்திக்கொண்டே திரியவேண்டியதுதான்
மக்கள் செல்வாக்கோடு வென்ற பொன்னருக்கு இணையமைச்சர் மக்களுக்கு யாரென்றே,தெரியாத நிர்மலாவிற்கு ராணுவ அமைச்சர் பதவி தந்தவர்கள் தான் ..இரண்டாவது முறை வென்றவுடன் பார்பனீய ஆதிக்கமும் அதிகமாகியிருக்கிறது .. யார் பதவிக்கு வரவேண்டும் யாருக்கு தரவேண்டுமென மோடி தீர்மானிக்கமுடியாது பார்பன தலைமை பீடம் நாக்பூர் தான் தீர்மானிக்கும் .. பாஜக என்பது  பார்பன (ஜாதி)ஜனதாகட்சி இதுதான் உண்மை இந்துகளுக்கான கட்சியென்பது மிகப்பெரிய பொய்
இதை சூத்திர அர்ஜூனும் பொன்னரும் தமிழிசையும் உணர்ந்தால் நல்லது
..
பணிசெய் பலனை எதிர்பாராதே இது பார்பனீயம்
பணி செய்து பலனை பெறு .. திராவிடம்

தமிழகத்தை பூர்வீகமாக சொல்லிக்கொள்ளும்

தமிழகத்தை பூர்வீகமாக சொல்லிக்கொள்ளும் நிர்மலா சீதாராமன் - ஜெய்சங்கர் மத்திய அமைச்சர்கள் ஆனார்கள் !
மத்திய அமைச்சர் பதவி.. ஐயங்காருக்கு ஒன்னு.. ஐயருக்கு ஒன்னு...

பாவம் இங்க வெயில்ல வெந்து, ரோடு ரோடா சுத்துன நாடாரு, கவுண்டரு, தேவருக்கெல்லம் அல்வாவா.. பாவம் பிஜேபிக்கு ஆதரவா ஃபேஸ்புக் வாட்ஸ்அப்ல கம்பு சுத்தின சூத்திரர்கள்.. பதவி அதிகாரத்திற்கு அவா.. கொடி பிடிக்கவும், கோஷம் போடவும், கலவரம் செய்யவும் சூத்திரா...
அக்ராகாரத்தில் பிறந்தால் தேர்தலில் நிக்காமலே கேபினட் அமைச்சர் ஆகலாம்.😊

தெருத்தெருவா சுத்துனாலும் பொன்னார் தமிழிசை அக்காவெல்லாம் தெருவிலதான் நிக்கணும்..
பிஜேபி ஜெயிக்காத கேரளாவுக்கு கூட இடம் கொடுத்திருக்காங்க, தமிழ்நாட்டுக்கு இல்ல போல..

டாக்டர் அம்பேத்கர் 1943ல் அளித்த பேட்டியில் இந்தியாவைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிடுகிறார்

டாக்டர் அம்பேத்கர் 1943ல் அளித்த பேட்டியில் இந்தியாவைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிடுகிறார். “இந்தியாவின் மிகக் கொடூரமான பிரச்சனை என்னவெனில், அதீத பிரக்ஞையுடனும், ஆழ்ந்த கவனத்
துடனும் உள்ள ஒரு சிறுபான்மைச் சமூகம் (பார்ப்பனர்கள்), உருவமற்ற, அறியாமைக்குரிய பெரும்பான்மைச் சமூகத்தை எப்பொழுதுமே
தங்களுக்குச் சாதகமான கட்டுப்பாடுகளை விதித்தபடியே வைத்துள்ளது என்கிறார். இது பார்ப்பனர்கள் வடிவமைத்த சாதியின் குணாம்சங்களில் செயல்படுத்தப்படுகிறது. சாதி ஏற்றத்தாழ்வு என்பது இந்தியாவுக்கு மட்டுமேயான பிரத்யேகமான நோய். இந்தியாவில் ஊடுருவிய ஆரியர்களினாலேயே சாதி கண்டுபிடிக்கப்பட்டது, இறக்குமதி
செய்யப்பட்டது, செயல்படுத்தப்பட்டது.” ரோமிலா தாப்பரின் ஆரியர்கள் படையெடுக்கவில்லை, அலை, அலையாக வந்தனர் என்ற வாதத்தினை மறுக்கும் வகையில் சமீபத்தில் நடந்த நவீன மரபணுச் சோதனைகளை விரிவாக ஆய்ந்த ஆந்திரப்பல்கலைக்கழகம், ஆரியர்கள் படையெடுத்தே வந்தனர் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது.

டாக்டர் அம்பேத்கர் மீண்டும் எழுதுகிறார். பார்ப்பனியத்தின்
வர்ண, சாதி அமைப்பின் ஆறு முக்கிய கொள்கைகளாக...
1. பல்வேறு வர்க்கங்களிடையே படிநிலை சமநிலையின்மையை உருவாக்குவது.
2. சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள், ஆகியோர்களை எப்போதும் முற்றிலும் நிராயுதபாணிகளாக வைத்திருப்பது.
3. சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்களை எப்பொழுதும் கல்வி கிடைக்காதபடி முற்றிலும் தடை விதிப்பது.
4. சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் அதிகாரமும், தலைமையும் வகிக்கும் இடங்களை முற்றிலும் தடை செய்வது.
5. சொத்துகளின் மீதான உரிமைகளை முற்றிலும் தடை செய்வது.
6. பெண்களை முற்றிலும் அடக்கி, ஒடுக்கி வைத்திருப்பது.
இந்த ஆறு கொள்கைகளையும் உள்ளடக்கி அம்பேத்கர் இறுதியாகச் சொல்வது என்னவெனில்.
சமநிலையற்றதன்மை (Inequality) என்பதே பார்ப்பனியத்தின் (இன்று, இந்துமதத்தின்) அதிகாரபூர்வமான கொள்கை என்கிறார். எனவே இந்துமதத்தினை விட்டு அனைவரும் வெளியேறவேண்டும் என்றார்.

இந்தியாவின் நோய்க்கூறுகளைக் கண்டுபிடித்து உலகுக்கு வெளிப்படுத்தியவர் புத்தர். அதை ஒரு சித்தாந்தமாக மாற்றி செயல்திட்டத்தை வரைத்தவர் மகாத்மா ஜோதிராவ் பூலே. இவர்கள் இருவரையும் இணைத்து செரித்து சமநிலையின்மைக்கு எதிரான அதிகார பூர்வமான கோட்பாடுகளை உருவாக்கி செயல்படுத்தியவர் டாக்டர் அம்பேத்கர். சமூக மாற்றம் (social change) மட்டுமே தீர்வைக் கொண்டு வரும் என்று நம்பினார். எனவேதான் நல்ல
இந்துவாகவும், தீண்டாமையை ஒழிப்பவராகவும் காட்டிக் கொண்ட காந்தியை விமர்சித்தார். அப்படி ஒருநிலைப்பாடு,
சமூகசீர்த்திருத்தம் (social tranformation) என்பதை பொய்யென்றார். இந்து மதத்திலிருந்து என்ற நிலையினை கவனத்தில் கொள்ளாத, மேலோட்டமான
வர்க்கப் போராட்டம் என்பதையும், அது சாதிய இந்தியாவில் எவ்வளவு தூரம் சாத்தியம் என்று கேள்விக்குள்ளாகுகிறார்.

நிர்மலா சீதாராமன் & தமிழிசை ஒரு ஒப்பீட்டு பார்வை!

நிர்மலா சீதாராமன் & தமிழிசை ஒரு ஒப்பீட்டு பார்வை!
++++++++++++++++++
பிறந்த ஆண்டு:
நிர்மலா=1956
தமிழிசை=1961
(தமிழிசை இளையவர்)

கல்வித்தகுதி:
நிர்மலா=MA(eco) Phd(textile trade)
தமிழிசை=MBBS.Sonology&FET in canda
(கைனகாலஜிஸ்ட்)

பிஜேபி கட்சி இணைவு:
நிர்மலா=2006
தமிழிசை=1999
(தமிழிசைதான் சீனியர்)

பதவி உயர்வு கிராப்:

நிர்மலா:
++++++++
கட்சி இணைவு=2006

செய்தி தொடர்பாளர்=2008
(நிதின் கட்கரி தயவால்)

தனி அமைச்சக அமைச்சர்=2014
(நிதி&கார்ப்ரேட் விவகாரம்)

காபினெட் அமைச்சர்=2016

பாதுகாப்புத்துறை அமைச்சர்=2017
(வியர்வை சிந்தாம வெல்லம் திங்கறது இதுதானோ?!)

தமிழிசை:
+++++++++
கட்சி இணைவு=1999

தென்சென்னை மருத்துவர் அணி செயலர்=1999

மாநில மருத்துவர் அணி செயலர்=2001

தென்னிந்திய மருத்துவர் அணி துணை செயலர்=2005

மாநில பொது செயலர்=2007

மாநில துணை பிரெசிடெண்ட்=2010

பிஜேபி தேசிய செயலர்=2013

தமிழக பாஜக தலைவர்=2014

பாரத் பெட்ரோலிய டைரக்டர்=2017

தேர்தல் பங்கெடுப்பு:

நிர்மலா:
++++++++
தேர்தலா?மூச்.. (எப்பவும் ராஜ்யசபா எம்பி தான்..வெய்யில்ல அலைஞ்சி திரிஞ்சி எம்பி ஆகுறது சூத்திரச்சி பாணி!)

ஆந்திரா ராஜ்யசபா எம்பி=2014

கர்நாடக ராஜ்யசபா எம்பி=2016

தமிழிசை:
+++++++++
எந்த தேர்தல்லயும் கெலிச்சதில்ல!

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி(தோல்வி)=2006

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி(தோல்வி)=2011

வடசென்னை மக்களவை தொகுதி(தோல்வி)=2009

தூத்துக்குடி மக்களவை தொகுதி(தோல்வி)=2019

(பாவம்..இந்தக்கா எத்தன தடவ தேர்தல்ல நின்னு தோத்திருக்கு..

ஒரு ராஜ்யசபா எம்பி ஆக்க மனசில்லயே "ச்சண்டா" அமித்சாவுக்கு!

பாப்பாத்தியா இருந்தா ஆக்கியிருப்பானுவ)

பிறகுறிப்புகள்:
++++++++++++
நிர்மலா:
+++++++
நிர்மலா கட்சியில் சேர்ந்தது 2006ல்..ஆனால் 2007ல் நிர்மலாவின் கணவர்,நடிகர் சிரஞ்சீவி ஆரம்பித்த பிரஜாராஜ்யம் கட்சியில் இணைகிறார்..சிரஞ்சீவி காங்.உடன் கட்சியை இணைத்ததும் மீண்டும் பிஜேபிக்கே வருகிறார்!

தமிழிசை:
+++++++++
தமிழிசையின் கணவர் சௌந்தர்ராஜன் எப்போதும்
பிஜேபிதான்!இருந்தும் என்ன புண்ணியம்?

எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தார் சௌந்தர்ராஜன்..ஆனால் அந்த பதவி "சுதா சேஷைய்யன்" என்ற பாப்பாத்திக்குத்தான் போய் சேர்ந்தது!

தகுதி திறமை படிப்பு உழைப்பு என அனைத்து தகுதிகளும் தமிழிசைக்கு இருந்தாலும்,

அவரால் மத்திய அரசில் ஒரு இணை அமைச்சர் பதவி கூட பெற முடியவில்லை!

ஆனால் எந்த தகுதியும் இல்லாமல் ஸ்மிதி இரானி எல்லாம் கூட மத்திய அமைச்சர் ஆக முடிகிறது!

கட்சியில் சேர்ந்த குறைந்த காலத்தில்

இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற உயர்நிலைக்கு நிர்மலாவால் போகமுடிகிறது என்றால்,

அதுவும் எந்த தேர்தலிலும் பங்கெடுக்காமல்,மக்களை சந்திக்காமல்,

ராஜ்யசபா எம்பி எனும் பின்வாசல்வழியாக வந்து காபினெட் அமைச்சராக ஆக முடிகிறதென்றால் பார்பணீயத்தின் பலத்தை புரிந்துகொள்ள வேண்டும்!

வியர்வை சிந்தாமல்,

வெய்யிலில் அலையாமல்,

வசை சொற்களை ஏற்காமல்,

வாத பிரதிவாதங்களுக்கு பதில் சொல்லாமல்,
மக்களின் சாபங்களை பெறாமல்,
தேர்தல் தோல்விகளை அடையாமல்,
தெருப்புழுதி மேனியில் படாமல்,
முதல்பந்தியில் அமர்ந்து மூக்குபிடிக்க பாயசம் குடிப்பதுதான் பார்ப்பணீயம்!

தெருநாய் போல் சிந்தாலாடி,

கட்சிசெய்யும் தவறுகளுக்கெல்லாம் முட்டுக்கொடுத்து,

பாசிச பாஜக ஒழிக என்றகோஷங்களுக்கெல்லாம் சண்டையிட்டு வக்காலத்து வாங்கி,
தாமரை மலர்ந்தே தீரும் என்று தொண்டை தண்ணீர் வற்ற கத்தி,

கேலிச்சித்திரங்கள்,
மீம்சுகள்,உருவத்தை கேலிப்பொருளாக்கி பேசுபவர்களை
சமாளித்து,

கட்சி வளர்ப்பது தமிழிசை மாதிரியான ஏமாளிகள்தான்!

இந்நாட்டில் "நோகாமல் நுங்கு தின்பது" நிர்மலா சீதாராமன் போன்ற பாப்பாத்திகள்தான்!

நமக்கு புரிந்துவிட்டது..!

தமிழிசைக்கு இது எப்போதுதான் புரியும்?

பிஜேபியில சாதி பார்க்கிறாங்கனு யாரு சொன்னது?
ச்சே!ச்சே...

உருது மொழியை கட்டாய பாடமாக சட்டம் - தெளிவு பெறுக!

உருது மொழியை கட்டாய பாடமாக சட்டம் - தெளிவு பெறுக!
-------------------------------------------------------------------------------

உருது மொழியை கட்டாய பாடமாக சட்டம் இயற்றுவதாக தளபதி கூறினார் என்று தினமணி பத்திரிக்கை வெளியிட்டு இருக்கும் செய்தியும் அதன் மேல் " திமுகவில் சுரணை உள்ள இந்துகள் யாராவது இருக்கீங்களா?

"என்ற வாசகம் உள்ள புகைப்படமும் தற்போது இணையத்தில் சுற்றி வருகிறது.

இந்துக்களோ, இஸ்லாமியர்களோ, கிருஸ்துவர்களோ யாராக இருந்தாலும் ''சுரணை உடையவர்கள் மட்டும்தான்" திமுகவில் இருக்கிறோம்.

இப்போது தினமணி திரித்து இருக்கும் செய்தியின் பின்னணியைப் பார்ப்போம்.

நம்முடைய கல்வி திட்டத்தில் ஓரியண்டல் பள்ளிகள் என்ற ஒரு அமைப்பு உண்டு.

மொழிச் சிறுபான்மையினர் தங்களின் தாய்மொழியில் பயில்வதற்காக அரசு ஏற்படுத்திய வசதி அது. சம்ஸ்கிருத ஓரியண்டல் பள்ளிகள், உருது ஓரியண்டல் பள்ளிகள் கன்னட தெலுங்கு ஓரியண்டல் பள்ளிகள் என பல ஓரியண்டல் பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன.

இது போக அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் தாய்மொழியான தமிழ் தவிர்த்து முதலாம் மொழியாக இந்தி, ஃபிரஞ்ச், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளைத் தேர்வு செய்யலாம்.

சமஸ்கிருதத்திற்கு என்று தனியாக ஓரியண்டல் பள்ளிகள் இருந்தாலும் மற்ற அரசு,மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவர்கள் விரும்பினால் சமஸ்கிருதத்தை முதலாம் மொழியாக எடுத்துப் படிக்கலாம்.

ஆனால் உருது, கன்னடம்,தெலுகு உள்ளிட்ட பிற மொழி மாணவர்கள் ஓரியண்டல் பள்ளிகளில்தான் அதைப் பயில இயலுமே பிற பள்ளியில் முதன்மை மொழிப்பாடமாக எடுக்க முடியாது.
அதென்ன சமஸ்கிருதத்திற்கு மட்டும் விதிவிலக்கு? வேறொன்றும் இல்லை...

1950 களில் பள்ளிகளில் பெரும்பாலும் பிராமண சமூகத்தவரே ஆசியர்களாக இருந்தனர். ஆங்கிலப் பாடமோ, கணிதமோ அல்லது இன்ன பிற பாடங்களை எடுக்கும் பிராமண ஆசிரியர் பெரும்பாலும் சமஸ்கிருதமும் அறிந்தவர்களாக இருந்த காரணத்தால் அதற்கென்று தனியாக ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டிய கட்டாயம் இல்லாததாலும் இதனால் அரசுக்கு எந்த செலவும் இல்லை என்பதாலும் ஓரியண்டல் பள்ளிகளில் அல்லாமல் பிற பள்ளிகளிலும் சமஸ்கிருதத்தை பாடமாக படிக்க அரசு அனுமதித்தது. ஆனால் ஒரு மாணவர் தனக்கென்று உருது ஆசிரியரோ அல்லது தெலுகு ஆசிரியரோ கேட்டால் அதற்கென ஒரு ஆசிரியரைத் தனியாக நியமிப்பது கடினம். எனவே அரசு அவர்களை ஓரியண்ட்ல் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கச் சொன்னது.

இப்போது அரசு பள்ளிகளில்,மெட்ரிக் பள்ளிகளில் சமஸ்கிருதம் அறிந்த ஆசிரியர்களும் இல்லை. சமஸ்கிருதத்திற்கு என்று தனியாக ஆசியர்களும் இல்லை.

அதை மொழிப்பாடமாக எடுக்கும் மாணவர்கள் தனியாக பயிற்சி பெற்று எழுதுகின்றனர்.
இதேபோன்ற வாய்ய்பு எங்களும் வேண்டும்

என்றும், பிற மொழியை ஓரியண்டல் பள்ளியில் மட்டும் அல்லாமல் விரும்பும் பட்சத்தில் சமஸ்கிருதத்தைக் கற்பது போல அனைத்து பள்ளியிலும் பயிலும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது பிற மொழியினரின் நீண்டநாள் கோரிக்கை. அதற்கான அரசு ஆணை வெளியிட பரிசீலிக்கப்படும்.

என்று தளபதி சொன்னதைத்தான் " தமிழகத்தில் இருக்கும் எல்லாருக்கும் கட்டாய உருது" என்பது போல திரிக்கிறது "பொய் மணி"

பொருட்கள் கீழ் நோக்கித்தான் விழும்னு மாடு சானி போடுறத பாத்தா தெரியாதா?



பொருட்கள் கீழ் நோக்கித்தான் விழும்னு மாடு சானி போடுறத பாத்தா தெரியாதா?
Inverse Square Law
G M m /R²
M - mass of object 1
m - mass of object 2
R - distance between both objects
G - universal gravitational constant
இரு பொருள்களுக்கு இடையே உள்ள புவி ஈர்ப்பு விசை என்ன என்பதைச் சொல்லும் இந்த விதியைக் கண்டறிந்தவர் நீயூட்டன். நியூட்டனின் இயக்க விதிகள் (Three laws of motion), நியூட்டனின் குளிரும் வேக விதி (Newton's law of cooling), நியூட்டனின் பாகுத்தன்மை விதி (Newton's law of viscosity) போன்ற பல இயற்பியல் விதிகளைக் கண்டறிந்தவர். மேலும் அறிவியலின் அச்சாணியாகத் திகழும் வகைநுன் கணிதம் தைகைநுன் கணிதம் (differential calculus, integral calculus), பல வேதியல் சோதனைகள், ஒளியியல் (optics) கண்டுபிடிப்புகள் என எண்ணற்ற முறையில் நவீன அறிவியலுக்கு அவர் ஆற்றிய பங்கு ஏராளம்.

ஒரு கல்லை இன்னொரு கல் மீது அடுக்கி தஞ்சை பெரிய கோயிலுக்கு முன் எவனும் கட்டவில்லையா? பிரமிடு இதைவிடப் பழசுதானே? அப்போ தமிழன் எகிப்துக்காரன பாத்து காப்பி அடிச்சானா?

நியூட்டன் மத நம்பிக்கை உள்ளவராக இருந்தாலும் தன் கண்டுபிடிப்புகளை அறிவியல் நோக்கோடு மட்டுமே பதிவு செய்தார். இந்தத் தமிழர்களோ கோவில் கட்டி பார்ப்பனன் வயிறு வளர்க்க உழைக்கும் மக்கள் நிலத்தைப் பிடுங்கி ஊதாரிகளின் கையில் தந்தனர். இதில் பெருமைப்பட எதுவும் இல்லை. வெட்கப்பட வேண்டிய விஷயம்.

பி.கு: மேலே உள்ள நியூட்டன் பற்றிய தகவல்கள் அனைத்தும் நான் பள்ளியில் படித்தவை. இந்த நாய்க பள்ளிக்கூடத்துல படிக்காம டீச்சரப் பாத்து கையடிச்சிட்டு இங்க வந்து வாயால ஓல் போட்டு சுத்துதுக!

Saturday, June 01, 2019

முனிசிபல் பொது ரோட்டுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம் பார்ப்பனரல்லாத ஜட்ஜிகளின் தீர்ப்பு

முனிசிபல் பொது ரோட்டுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம் பார்ப்பனரல்லாத ஜட்ஜிகளின் தீர்ப்பு

                                                          தந்தை பெரியார்

ஏழு எட்டு மாதங்களுக்கு முன்பு பாலக்காடு கல்பாத்தி ரோட்டில் ஒரு ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த ஈழவர் ஸ்ரீ சங்கரன் என்பவர் சர்க்கார் வேலை யாக பைசைக்கிள் மீது சென்றதற்காக அவ்வீதியில் உள்ள ஒரு பார்ப்பனர் அவரைத் தடுத்து நிறுத்தி மிரட்டி ரோட்டிற்கு புண்ணியார்ச்சனையையும் கும்பாபிஷேகமும் செய்ய 15 ரூபாய் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தி வண்டியையும் மேல் வேஷ்டியையும் பிடுங்கி வைத்துக் கொண்டதற்காக, போலீசார் இவ்விஷயமறிந்து ஸ்தலத்திற்குப் போய் பை சைக்கிளையும் வேஷ்டியையும் பிடுங்கி கொடுத்துவிட்டு அந்தப் பார்ப்பனர் மீது கிரிமினல் நடவடிக்கை நடத்தினார்கள்.

 அதில் பார்ப்பனருக்கு 30 ரூபாய் அபராதம் விழுந்தது.  அதன் பேரில் பார்ப்பனர்கள் ஐகோர்ட்டில் அப்பீல் செய்து கொண்டார்கள்.  அப்பீலில், பார்ப்பனரல்லாத இரண்டு ஐகோர்ட் ஜட்ஜிகள் பார்ப்பனர் செய்தது அக்கிரம மென்றும் ஜனங்கள் வரிப் பணத்தில் முனிசிபா லிட்டியாரால் பரிபாலிக்கப்படும் எந்த ரோட்டிலும் யாரும் நடக்கலாம் என்றும், பார்ப்பனர் 30 ரூபாய் அபராதம் கொடுக்க வேண்டியதுதான் என்றும் தீர்ப்புச் சொல்லி விட்டார்களாம்.

  இது மிகவும் சந்தோஷப்படக்கூடிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை. இதே ஐகோர்ட் ஜட்ஜ் ஸ்தானத்தில் வர்ணாசிரமப் பார்ப்பனரோ அல்லது தன்னை உயர்ந்த ஜாதி என்று நினைத்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரோ அல்லது பார்ப்பனர் சொல்லுப்படி ஆடுகிற பார்ப்பனரல்லாதாரோ (நமது மந்திரிகளைப் போல்) ஜட்ஜிகளாய் இருந்திருந்தால் இந்த கேசின் முடிவு இப்படியிருக்குமென்று உறுதி கூற முடியுமா? ஜட்ஜிமெண்டு என்பது மிக பரிசுத்த ஜட்ஜிமெண்டு என்பதே அவரவர்கள் மனச்சாக்ஷியைப் பொறுத்ததாகத்தானே இருக்கும்.  மனச்சாக்ஷி என்பதே எல்லோருக்கும் ஒன்றுபோல் இருக்காது.

 ஐரோப்பியருக்கு மாடு சாப்பிடுவது மனச்சாக்ஷிக்கு விரோதமாகாது.  பார்ப்பனரல்லாதாருக்கு ஆடு தின்பது மனச்சாட்சிக்கு விரோதமென்பதாகத் தோன்றாது.  பார்ப்பனருக்கு இவர்கள் சாப்பிடுவதை கண்ணில் கூட பார்க்கக்கூடாது என்பது மனச்சாக்ஷிக்கு விரோதமாகத் தோன்றாது.  ஆதலால் இதே ஐகோர்ட் ஜட்ஜி ஸ்தானத்தில் ஒரு வருணாசிரம பார்ப்பனர் இருந்தால் அவர் கண்டிப்பாய் இந்த ரோட்டில் நடந்தது தப்பு என்றும் போட்ட அபராதம் வாப்பீஸ் செய்து நடந்தவனை தண்டிக்க வேண்டும் என்று சொன்னால் தான் அவர் மனச் சாக்ஷிப்படி நடந்தவராவர்.

 அதனால்தான் நாமும் நமது சுயமதிப்பையும் மனச்சாக்ஷியையும் உத்தேசித்து ஐகோர்ட் ஜட்ஜ் முதல் எல்லா ஸ்தானங்க ளிலும் பார்ப்பனரல்லா தாரே இருக்கவேண்டுமென்று கோருகிறோமே  அல்லாமல் வேறில்லை.  இதுபோலவேதான் பார்ப்பனர்களுக்கு தங்களது ஆதிக்கத்தை உத்தேசித்து பார்ப்பன ஜட்ஜிகளே இருக்க வேண்டுமென்று கோருகிறார்கள். அவர்கள் கோருவதைப்பற்றி நாம் அவர்கள் பேரில் குற்றம் சொல்ல வரவில்லை.  ஆனால் அது நிறைவேறினால் நமது சமூகத்திற்கும் நமது சுயமரியாதைக்கும் ஆபத்து என்றுதான் சொல்வதோடு நம்மால் கூடுமானவரை தடுக்க வேண்டியதும் நம்முடைய கடன் என்கிறோம்.

 அவர்கள் 4000, 5000 சம்பளம் வாங்குவதாலும் அவர்கள் ஜாதி வக்கீல்களையே முன்னுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்து அவர்களுக்கு அனுகூலம் செய்து நம்ம ஜாதி வக்கீல்களை சிறுமைப்படுத்தி  விரோதம் செய்வதினாலும் மற்றும் அவர்கள் ஜாதியாருக்கே முனிசீப்பு, சப் ஜட்ஜி, ஜட்ஜி முதலிய உத்தியோகங்கள் கொடுத்து நம்முடைய ஜாதியாரின் உரிமையை ஒழிப்பதினாலும் நமக்கு அவ்வளவு ஆபத்திருப்பதாய் நாம் நினைப்பதில்லை. 

ஆனால் கல்பாத்தி பொது ரோட்டு வழிநடை உரிமை போன்ற விஷயங்களில் பார்ப்பன ஜட்ஜிகளிடம் இருந்தும் பார்ப்பன சட்டமெம்பர்களிடமிருந்தும் நமது சுயமரியாதைக்கும் அனுகூலமான தீர்ப்பு பெற முடியுமா என்கிற விஷயத்தில்தான் பயமாயிருக்கிறது. 

உதாரணமாக கல்பாத்தி ரோட்டில் யாரும் நடக்கலாம் என்று சட்டசபையில் தீர்மானம் ஏற்பட்டும் சட்டமெம்பர் ஸ்ரீமான் சர்.சி.பி. பார்ப்பனர் வேலையிருந்தால்தான் போகலாம் என்று சொல்லி வியாக்கி யானம் செய்யவில்லையா?  அதுபோலவே இந்த வழக்கும் பார்ப்பன ஜட்ஜாயிருந்தால் ஈழவர் அந்த ரோட்டில் நடந்தது குற்றமானாலும்  நடக்க உரிமையில்லை. ஆனாலும், அதற்கு வேறு மார்க்கம் செய்து நடக்கவிடாமல் செய்துவிட வேண்டுமே அல்லாமல் தடுத்தது குற்றம் என்றாவது சொல்லி அபராதத்தைக் காயம் செய்ய அவரது மனச்சாக்ஷி சொல்லுமே அல்லாமல் பார்ப்பனரல்லாத ஜட்ஜியைப் போல் சர்க்கார் பொது ரோட்டில் யாரும் தாராள மாய் போகலாம் என்று துணிந்து இயற்கை தர்மத்தை சொல்லியிருப்பார் என்று எண்ண நமக்கு தைரியமில்லை.

 இது எப்படியோ இருக்கட்டும். இனியாவது பாலக்காட்டு பார்ப்பனர்கள் கல்பாத்தி ரோட்டில் யாரும் நடக்க சுதந்திரம் கொடுப்பார்களா?  அல்லது அந்த தீர்ப்பை வாங்கி பாலக்காட்டு முனிசீப்பு கோர்ட்டில் நிறைவேற்றி சர்க்கார் பந்தோபஸ்துடன் போய்க் கொண்டு இருக்க வேண்டுமா என்று தான் கேட்கிறோம். அது போலவே, திருநெல்வேலி சந்நியாசி அக்கிரஹாரப் பார்ப்பனர்களுக்கும் கும்பகோணம் அய்யங்கார் தெரு, வியாசராய மடத்தெரு, பட்டாச்சாரி தெரு பார்ப்பனர்களுக்கும் இந்த தீர்ப்பே போதுமா அல்லது அங்கும் பெரிய கிளர்ச்சி செய்து பார்ப்பனர்களின் அட்டூழியங்களை மக்களுக்கு வெளிப்படுத்தி, சத்தியாக்கிரகம் செய்து ஜெயிலுக்குப் போய் ஐகோர்ட்டுக்குப் போய் நீதி பெற வேண்டுமா என்றுதான் கேட்கிறோம்.

  அல்லது மகாத்மா இந்த ஊர்களுக்கு வந்த சமயம் பார்த்து இந்த தெருவுகளில் நுழைந்து இந்த பார்ப்பனர்களின் நிலைமையை அவர் அறியச் செய்ய வேண்டுமா என்றுதான்  கேட்கிறோம்.  ஆனால், இந்தப் பார்ப்பனர்கள் எதற்கும் பயப்படமாட்டார்கள்.  ஏனெனில் ஐகோர்ட், கவர்ன்மெண்டு, சட்ட மெம்பர், சட்டசபை மற்றும் அதிகாரம் செல்வாக்கு முதலியவைகளில் அவர்கள் இருப்பதால் இதையெல்லாம் கால் தூசிக்கு சமானமாய்தான் நினைப்பார்கள்.

 ஆனாலும், பாமர மக்கள் இவ்வாங்கில அரசாட்சியிலேயே தெருவில் நடக்க தெருவைத் தொடாமல் பைசைக்கிளின் மேல் போக உரிமை கொடுக்க மறுக்கும் இக்  கல்நெஞ்சக் கூட்டங்கள் தங்களுக்கு சுய ஆட்சி வந்தால் எப்படி நடப்பார்கள்? நம்மை எவ்வித கொடுமை செய்வார்கள்?  நம்மை மனு தர்ம சாஸ்திரமோ  பராசரஸ்மிருதியோ அல்லது  இதில் பட்ட ஆச்சாரிய சுவாமிகளோதான் ஆளுவார்கள்.  ஆனாலும் மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி வந்துவிட்டால் பிறகு என்ன ஆகும் என்பதுதான் நமது கவலை.

       குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.03.1927
#பெரியார்காலவரிசைப்பதிவுதீண்டாமை.

Wednesday, May 29, 2019

இந்து மதத்தை ஏன் நாங்கள் எதிர்க்கிறோம்

இந்து மதத்தை ஏன் நாங்கள் எதிர்க்கிறோம்...?

சொந்த மகனின் திருமணம் என்றாலும், விதவைத் தாய் முன் நின்று வாழ்த்த முடியாது. 

ஏனென்று கேட்டால், கழுத்தில் தாலி இல்லை; நெற்றியில் குங்குமம் இல்லை; பூ இல்லை, பொட்டு இல்லை, என்று சொல்லி, நம்முடைய சொந்தத் தாயையே விதவை என்று சொல்லி, தள்ளி வைத்தக் கொடுமைக்குப் பெயர்தான் ஆரிய மதம் - வேத மதம் - இந்து மதம் என்கிற வைதீக மதம். இதுதான் பார்ப்பனீயம் என்பதை நன்றாக நினைத்துப் பாருங்கள். 

அதற்காகத்தான் அந்த மதத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.