Tuesday, January 24, 2017

கடமை கண்ணியம் கட்டுப்பாடு - காவல்துறை உங்கள் நண்பன்

போலீஸ் என்பது ஒரு monolithic organization - பல மக்கள் இருக்கும் ஒரு மிகப்பெரிய ஜீவன். அதில் இருப்பவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சேர்ந்து,   ஒருவருக்காக மற்றறொருவர் என இருப்பவர்கள். காவல்துறை (Department ) தான் முக்கியம், அதில் உள்ள காவலர்கள் அனைவரும் ஒரு என்ஜினில் உள்ள சிறு பகுதி போல. துறையின் ஒட்டு மொத்த பலமும் அவர்கள் ஒற்றுமையில்தான் உள்ளது. ஒரு எறும்பு புற்றில் இருக்கும் -- புற்றினால் எறும்பு, எறும்பால் புற்று என்பது போல இருப்பவர்கள்.



ஒரு பெரிய அதிகாரி கல்லூரிகளுக்கு சென்று "காவல்துறை உங்கள் நண்பன், உங்களுக்காகவே செயல்படும் உங்கள் சேவகன்" என்று கூறுவதெல்லாம் இடது கையால் தட்டிக் கொடுத்து வலது கையால் பிடரியில் அடிப்பது போல. கூட்டிக்  கழித்துப் பார்த்தால், கடைசியில் அவரும் காவலரே.

மேலிடத்தில் உத்தரவு கொடுத்தால் "உங்கள் நண்பன்" என்று சொன்னதற்கு ஆரவாரம் செய்தவனை கட்டுப்பாடு இழந்து, கண்ணியம் இல்லாமல் (அ ) தயவு தாட்சணியம் பார்க்காமல் பூட்ஸ் காலால் மிதிக்கும் காவல்துறையின் ஒரு கடமை மிக்க அலுவலரே.


Friday, January 20, 2017

ஜல்லிக்கட்டுக்காக மார்க்கண்டேய கட்ஜு

ஜல்லிக்கட்டு விவகாரத்தில், ஆரம்பத்தில் இருந்தே ஆதரவுக் குரல் கொடுத்துவருபவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு. இந்த நிலையில், 'அவசரச் சட்டம் ஒன்றுதான் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஒரே தீர்வு!' என்று அவர் உறுதிபடத் தெரிவித்திருக்கும் கருத்து தமிழக இளைஞர் மத்தியில் பெரும் எழுச்சியை உருவாக்கியிருக்கிறது.
Former Supreme Court Justic Markandey Katju has been a supporter of Jallikkattu from the beginning. His opinion that an ordinance is the only solution to conduct jallikkattu has caused a great uprising among Tamil youth.

ஜல்லிக்கட்டு மற்றும் தமிழர் பாரம்பர்யம் குறித்த நமது கேள்விகளுக்கு அவர் கொடுத்துள்ள பதில்கள் இங்கே....
Here are his answers to our questions about Jallikkattu and Tamil culture....


ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை மாநில அரசு தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும், அது குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர், ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டை நானே முன்னின்று நடத்துவேன் என்று தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
The central government has sent the ordinance for conducting Jallikkattu to the Ministry of Internal Affairs. Tamil Nadu Chief Minister says he will conduct Jallikkattu from the front once it is approved by the President. What are your thoughts about this?

பதில் - இதை நான் மிகவும் வரவேற்கிறேன். மேலும் அவசர சட்டமானது குடியரசுத்தலைவரின் ஒப்புதலோடே அமல்படுத்தப்படுவதால் இனி இந்த வழக்கில் சட்டரீதியான பிரச்னை இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.
Answer - I welcome this. Moreover, since this ordinance will be enacted with the President's approval, I think there won't be any further issues with the pending case.

ஜல்லிக்கட்டுக்கு நீங்கள் ஆதரவளிக்க காரணம் என்ன?
What are your reasons for supporting Jallikkattu?

தமிழும் தமிழர்களும் நீண்ட பாரம்பர்யமும் பண்பாடும் உடையவர்கள். 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களிலேயே ஜல்லிக்கட்டுப் பற்றிய குறிப்புகளை நான் படித்ததாய் எனக்கு நினைவு. மேலும், பல கலாச்சாரங்களைக் கொண்ட இந்தியாவில் அந்தந்த மாநிலங்களின் கலாச்சாரத்தையும் பாரம்பர்யத்தையும் மதிப்பது அவசியமாகிறது.
Tamil and Tamil people have a long civilization. I remember reading about jallikkattu in Sanga classics that are over 2000 years old. Also, in a multicultural India, it is important to respect the culture and traditions of every state.

ஜல்லிக்கட்டு
Jallikkattu

ஜல்லிக்கட்டுக்காக அறவழியில் போராடிவரும் இளைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது...
What are you words to the youth fighting for jallikkattu in a peaceful way...


பதில் - அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கூடிய விரைவில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும், அதன்காரணமாக, அவர்களின் போராட்டம் வெற்றியடையும் என்றும் எனக்கு நம்பிக்கையுள்ளது.
Answer - I wish them wholeheartedly. I am confident that an ordinance will be issued soon and jallikkattu will happen, and their campaign will succeed.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் இந்த வழக்கில், தீர்ப்பு காலதாமதம் ஆவதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?
Who do you think is the reason for this case being delayed for more than 2 years?

பதில் - கடந்த காலத்தைப் பற்றிப் பேச வேண்டாம். இனிமேல், நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளைகளுக்கு எதிரான எந்தவொரு செயலும் மேற்கொள்ளப்படாது என்பதை உறுதிசெய்ய வேண்டியது அவசியம்.
Answer - Let's not talk about the past. We have to ensure that all jallikkattu competitions conducted from now on won't have any opposition.

ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, இந்தாண்டே நடக்கும் பட்சத்தில், அதில் நீங்கள் பங்கேற்கும் எண்ணம் உள்ளதா?
Do you have any intention to participate in jallikkattu if an ordinance is enacted and the event is conducted this year?

பதில் - சட்டரீதியாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் பட்சத்தில், அதை நேரில் கண்டுகளிக்க மிகவும் ஆவலாக உள்ளேன். ஜல்லிக்கட்டு நடத்தும் அமைப்புகள் ஏதாவது எனக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தால், அந்த அழைப்பை கண்டிப்பாக ஏற்பேன்.
Answer - If jallikkattu happens legally after an ordinance is  passed, I am eager to watch it in person. If the organizations conduction jallikkattu invite me personally, I will definitely accept it.

Friday, May 20, 2016

கிளம்புங்க...கிளம்புங்க...காத்து வரட்டும்!

மானத் தமிழன், வீரத் தமிழன் விலை போய் விட்டதால் தோற்றேன் என்கிறார் சீமான். ஆட்கள் கிடைத்தார்கள் என்பதற்காக எல்லா தொகுதியிலும் நின்றது, முதலமைச்சர் ஆகி விட்டதாகவே கனவு கண்டு, பிரச்சாரத்தில் அலப்பரை செய்து, தான் ஒருவன் மட்டும் தான் தமிழன் என்று நினைத்து மற்ற கட்சி தலைவர்களை நகையாடியது, எல்லாம் தான் காரணம். இவர் மட்டுமாவது வெற்றி பெற்றிருந்தாலோ அல்லது 2-3 தொகுதிகளிலாவது டெபொசிட் வாங்கி இருந்தாலோ சொல்லலாம்.

தலைவன் ஆவதற்குரிய முதல் தகுதி பொறுமை, அது இவரிடத்தில் இல்லை.

அவன் புத்திசாலி தமிழன். யாரை எங்கே வைப்பது என்று அவனுக்கு நன்கு தெரியும். உங்களை வெளியே தூக்கி போட்டான். ஸ்டாலினை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறான். அம்மாவுக்கு எதிராக ஒரு பலமான எதிர்கட்சியை கொடுத்து அவரை செக்கில் வைத்திருக்கிறான். இன்னும் என்ன வேண்டும்?

"தி.மு.கவும் அ.தி.மு.கவும் பணத்தைக் கொட்டி வேலை பார்த்தார்கள்," என்கிறார். இந்தத் தேர்தலில் அவர்களின் வெற்றிக்கு அதுவல்ல முக்கிய காரணம். அவர்களின் தேர்தல் பரப்புரைகளில் எதிரிகளின் பெயரை வெகு அரிதாகவே உச்சரித்தார்கள். மக்களுக்காக என்ன செய்தோம், செய்துகொண்டிருக்கிறோம், செய்யப்போகிறோம் என்பதைப் பற்றி மட்டுமே அதிகம் பேசினார்கள். அ.தி.மு.க. வின் தேர்தல் வாக்குறுதிகள் பெறும்பாலும் பெண்கள் நலம் சார்ந்து இருந்ததே அவர்களின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது. மற்ற கட்சிகள் அவர்களின்மீது கூறிய குற்றச்சாட்டுகளை புத்திசாலித்தனமாக (பெரும்பாலும் பதில் சொல்லாமல்) அதனை எதிர்கொண்டதும் ஒரு காரணம்.

சீமானின் செயல்பாடுகளும் பேச்சுக்களும் தேர்தலை மையப்படுத்தி மட்டுமே உள்ளது. அது பெரிய பிரச்சனை! நாம் தமிழர் கட்சி ஆரம்பித்து 6 வருடங்களுக்கு மேலிருக்கும். இது வரை மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, இயற்கை வளக் கொள்ளை, மின்வெட்டு போன்ற பொதுப் பிரச்சனைகளில் இந்தக் கட்சி எவ்வளவு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது?

இப்படியே ஸ்ரீலங்கா போய் அங்க தேர்தலில் நின்னா கொஞ்சம் வாக்கு கிடைக்கும். பக்கத்துல இருக்கிற தமிழன் படும் பாடு பற்றி எந்த கவலையும் இல்லை. இந்தியாவில் வேறு மாநிலத்தில் துன்பப்படும் தமிழர்களுக்கு குரல் கொடுக்க துப்பு இல்லை. இதில் தொப்புகொடியே, என் இனமேனு வசனம் பேசிகிட்டு, இங்க இருக்கிறவனையே  மானம்கெட்ட பய, வக்கு இல்லாத பயனு பேசிகிட்டு திரியறது. அப்புறம் உங்களுக்கு வோட்டு மட்டும் இங்க இருகிறவன் போடணும் எதிர் பார்த்தா இப்படித்தான்.

மற்ற கட்சிகள் தான் திராவிடம் பேசி சாதியம் பேசி மக்களை பிளவு செய்கின்றன என்று குற்றம்சாட்டுகிறார் சீமான். சரி, நாம் தமிழர் கட்சி சாதி கடந்து தமிழரை ஒன்றிணைக்கும் கட்சி என்றால் உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை குறித்து நிலைப்பாடு என்ன? அதில் சம்மந்தப்பட்ட இருவரும் தமிழ்ச் சாதியினர் தானே?

தமிழர் ஆளக் கூடாதென்று யார் சொன்னது? தமிழரை ஆள விடக்கூடாதென்று எவர் ஒன்று கூடி சதித்திட்டம் தீட்டியது? எதை வைத்து ஒருவரை தமிழர் தமிழரல்லாதவர் என்று இனம் காண்கின்றார்? சாதியை வைத்துத் தான் என்றால், பிறகு சாதிக் கட்சிக்கும் இவர் கட்சிக்கும் என்ன வித்தியாசம்? சாதியின் அடிப்படையில் மக்களை இனம் பிரித்த பிறகு அவர்களுக்கிடையே உள்ள சாதீய ஏற்றத் தாழ்வுகளை மட்டும் எவ்வாறு களைவது? நேற்று வரை சாதி தெரியாமல் சகஜமாய் பழகி வந்த இளைஞர்கள் கூட தன்னுடன் இருப்பவன் என்ன இனம் என்று தெரிந்து கொள்ள அவனின் சாதியை ஆராய தொடங்கி உள்ளார்கள். இது சமூக நல்லிணக்கத்திற்கு நல்லதில்லை. அருந்ததியினரை வந்தேறி தெலுங்கர் என்று கூறிக் கொண்டு , சேரிகளுக்குள் எப்படி கட்சியை வளர்க்க முடியும்? சீமான் மேடையிலேயே தெலுங்கர் ஓட்டு எங்களுக்கு தேவையில்லை என்கிறார். இது போன்ற செயல்பாடுகள் ஒருபோதும் கட்சியை பலப்படுத்தாது. பொத்தாம் பொதுவாய் இங்கு வாழும் சாமனிய மக்களின் ஒரு பகுதியினரை வந்தேறி என்று வார்த்தைக்கு வார்த்தை பட்டம் சூட்டிக் கொச்சைப்படுத்தாமல் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடிக்கிய ஒரு முழுமையான பொதுக் கட்சியாக சீர் தூக்கட்டும் பார்க்கலாம்.

தமிழக அமைதியை குலைக்கும் அவரின் தேசவிரோத, இனவெறி, தீவிரவாத, பிரிவினை, வன்முறை அரசியலை தமிழக மக்கள் முற்றிலும் புறக்கணித்து இருக்கிறார்கள். தமிழக மக்கள் ஊழல் அரசியல்வாதிகளை கூட மன்னிப்பார்கள் ஆனால் தேசதுரோக அரசியல்வாதிகளை என்றுமே மன்னிக்க மாட்டார்கள், அதற்க்கு அவரது கட்சியின் படுதோல்வியும் வைகோவின் தோல்வியுமே சாட்சி. இவரின் ஹிட்லர் பாணி இனவெறி அரசியலுக்கு தமிழகத்தில் என்றுமே இடம் கிடையாது.

இதென்ன சினிமாவா? அல்லது தன் கட்சி என்ன ஆம் ஆத்மி பார்ட்டி மாதிரி கொள்கை உள்ள கட்சியா? ஏதோ கட்சி ஆரம்பித்து 234 தொகுதிலேயும் ஆட்களை நிறுத்திவிட்டால் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைத்தாரோ? அப்படி பார்த்தால் ரஜினி கமல் மாதிரி செல்வந்தர்கள் எல்லாம் ஒரு தொகுதிக்கு 10 பேரை நிற்க வைக்க கூடிய சக்தி இருந்தும் ஏன் அவர்கள் எல்லாம் அடக்கமாக இருக்கிறார்கள்? ஆண்டவன் ஆட்டுக்கு ஏன அளந்து வைத்திருக்கிறான் என்று இப்போவாவது புரிகிறதா? தமிழனாம், கட்சியாம், புடலங்காய்!!

கிறுக்கு தனமாக புலி, பிரபாகரன் , வீரப்பனை போற்றினால் இது தான் நடக்கும். நல்ல தமிழர்கள் இவர் கண்களுக்கு தென்படவில்லையா? பிரபாகரனையும் அவர் படத்தையும் போட்டு காண்பித்தால் தமிழன் என்ன உடனே பின்னாடி வந்துவிடுவானா?

தமிழ் நாட்டு வாக்களர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை. இந்த நாட்டில் இன்று நாம் டெலிபோன், மொபைல், சாட்டிலைட், கம்ப்யூட்டர் துறைகளில் முன்னோக்கி செல்ல காரணமான தலைவரை கொன்றவரை ரோல் மாடலாகக்  கொண்டு பிரிவினை வாதத்தையும், தீவிரவாதத்தையும், சபை நாகரீகம் தெரியாமல் ஒரு மூத்த கட்சி தலைவரை "லூசு" என்று சொன்ன, குறுகிய காலத்திலேயே 234 தொகுதிக்கும் (வேட்பாளர்கள் கிடைப்பது இருக்கட்டும். தேர்தல் செலவுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் கிடைத்தது?) வேட்பாளர்களை நிறுத்திய ஒரு கட்சியை புறகணித்திருகிறார்கள். மிக்க மகிழ்ச்சி. திரு. சீமான் அவர்களே நீங்கள் மட்டும் விலை போகவில்லைய?

நீங்கள் மட்டும் மானம் கேட்ட மனிதர் இல்லையா? உங்களுக்கு எப்படி தேர்தலில் செலவு செய்ய பணம் கிடைத்து? உங்கள் சம்பாத்தியம் என்று சொல்லாதீர்கள். நீங்கள் திரைப்படம் டைரக்ட் செய்து நெடுங்காலம் ஆகிவிட்டது. நீங்கள் ஒன்றும் பெரிய ஹீரோ நடிகர் அல்ல. "நன்றி - சீமான்" என்று டைட்டிலில் வரும் அளவுக்குதான் இருக்கிறீர்கள். எங்கிருந்து வந்தது இந்த பணம்? சாக்கடையில் விழுந்து விட்டு மற்றவர்களையும் இந்தியர்களையும், தமிழர்களையும் இந்திய குடியுரிமை பெற்ற நீங்கள் குறை சொல்லி பேசக்கூடாது.

2021ம் ஆண்டு நமக்கான ஆண்டாக இருக்கும் என்று இவரும் இவரது வெளிநாடு வாழ் facebook தொண்டர்களும் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். உண்டியல் குலுக்கி தமிழனிடம் கையேந்தி நின்றோம் என்கிறார். ஏற்கனவே இப்படி உண்டியல் குலுக்கிக் குலுக்கி காம்ரேடுகள் இன்று கையுடைந்து போய் நிற்கிறார்கள். இவருக்கு மட்டும் இப்படி கூட்டம் நடத்தப் பணம் வருகிறது? சொந்தப் பணமா? அல்லது எவனோ கொடுத்த கள்ளப்பணமா?

எப்போது பார்த்தாலும் கூடவே 50 பாடிகார்டுகள். பிரதமருக்கு கூட இவ்வளவு பாதுகாப்பு கிடையாது. இதற்கெல்லாம் யார் காசு கொடுத்தது? இப்படி தினமும் 50 பாடி கார்டுகளுக்கு தீனி போட, இவர்  உண்டியல் குலுக்கினால், அதில் காசு போடுபவன் உண்மையில், கேவலமான, முதுகெலும்பில்லாத, சொரணை இல்லாதத் தமிழனாய் இருப்பான்.

இப்போது தமிழன் மிக ஜாக்கிரதையாகத்தான் ஓட்டு போட்டிருக்கிறான். உப்புமா கட்சி நடத்துபவர்களை ஒட்டு மொத்தமாக ஓரம் கட்டி இருக்கிறான். ஒவ்வொரு தேர்தலின் போதும், ஒவ்வொரு கட்சியை வைத்துக்கொண்டு எலும்புத் துண்டை எதிர் நோக்கி காத்திருக்கும் நாய்களைப் போல, காசுக்காக பெரிய கட்சிகளுடன பேரம் பேசுவதுதான் இந்த உப்புமா கட்சிகளின் வேலை. இந்த தேர்தலில் அது தவிடு பொடியாகி விட்டது.. அந்த வகையில், ஜெயாவை வெறுக்கும் நான் கூட வரை பாராட்டுகிறேன்.

சும்மா வீரம், சோரம் என்று அவர் குடும்பத்தையும் சில பல அடிவருடிகளையும் வேண்டுமென்றால் ஏமாற்றி பிழைக்கலாம். இதற்கெல்லாம் தமிழ் மக்கள் கவலைப்பட மாட்டார்கள். திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் ஊழலும் அடிதடியும் இருந்தாலும் கூட மக்கள் கொஞ்சம் நிம்மதியாக வாழ்கிறார்கள். இவரை மாதிரியும் அல்லது சாதி வெறி பிடித்த ராமதாஸ் கட்சி மாதிரி ஆட்களை கொண்டு வந்து ஆட்சியில் வைத்தால் என்ன ஆகும்? யோசித்து பாருங்கள். தெருவெல்லாம் ரத்த ஆறும் பிணமும் தான் இருக்கும். தமிழர்களை நிம்மதியாக இருக்க விடுங்கள். வேண்டுமென்றால் ஈராக் அல்லது சிரியா சென்று அங்கே ஆட்சியை பிடியுங்கள். அப்புறம் உங்களோட வீரத்தை மெச்சுகிறோம். கிளம்புங்க...கிளம்புங்க...காத்து வரட்டும்!!

Tuesday, February 03, 2009

என்ன‌ கொடுமை ச‌ர‌வ‌ண‌ன் இது!!

விஜ‌யின் புதிய‌ அவதார‌ம் ஒபாமா! இவ‌ர்க‌ள் திருந்துவார்க‌ளா?



இது ம‌ட்டும் அல்ல‌ சே குவேராவாக‌ "த‌லித் புய‌ல்" "அண்ண‌ர்" திருமா, க‌ருப்பு எம்.ஜி.ஆர்-ஆக‌ "காப்ட‌ன் விஜ‌ய‌காந்த்", அன்னை மேரியாக‌ "புர‌ட்சித் த‌லைவி" "அம்மா" ஜெய‌ல‌லிதா, எங்கே செல்லும் இந்த‌ பாதை??

- பிர‌பு க்ரிஷ்-ன் வ‌லைப் ப‌திவிலிருந்து. இதில் என்ன‌ சொல்ல‌ வ‌ருகிறார்க‌ள் . க‌லைஞ‌ர் க‌ருணாநிதி = ராம், அண்ணா துரை = ஹ‌னும‌ன்?





இன்னும் ப‌ல‌ - Snap Judge

Sunday, February 11, 2007

தத்துவம் - பகுதி 3

பஸ்-ல கண்டக்டர் தூங்கினா யாருக்கும் டிக்கெட் கெடக்காது ஆனா ட்ரைவர் தூங்கினா எல்லாருக்கும் டிக்கெட் கெடக்கும்

என்னதான் "பொண்ணா" இருந்தாலும் வண்டிய ஸ்டார்ட் பன்றதுக்கு முன்னாடி அத "ஆண்" பன்னனும்

அன்று காந்தி உழைத்தார் மக்களுக்காக இன்று மக்கள் உழைக்கிறார் காந்திக்காக.

டெய்லி நீ காலன்டர்-ல தேதி கிழிக்கரது முக்கியம் இல்ல நீ அந்த தேதி-ல என்ன கிழிச்சேங்கரது தான் முக்கியம்

பஸ்ல நாம ஏறினாஅ ப்ரயானி, பஸ் நம்ம மேல ஏரின பிரியானி

Kalaignar Gilmanithi...

அசின், நயன்.தாரா என்று சொல்லும்போது உதடுகள் ஒட்டாது,
நமீதா என்று சொல்லும்போதுதான் உதடுகள் கூட ஒட்டும்

Tuesday, February 28, 2006

கொட்டாங்குச்சி Song

ஏய் டண்டணக்கா டணக்கு நக்கா
தட்டி பாத்தேன் கொட்டாங்குச்சி
வெளிய வந்தது கரப்பான்பூச்சி
ஊதி பாத்தேன் ஓடி போச்சி
நசுக்கி பாத்தேன் செத்து போச்சு
டண்டணக்கா டணக்கு நக்கா

- T Rajendar
Ode to the unknown கரப்பான்பூச்சி

Friday, January 13, 2006

பொங்கலோ பொங்கல்!

எல்லாருக்கும் என்னோட உள்ளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்! உங்க வாழ்க்கை கரும்பு, சக்கரை பொங்கல், பாயாசம் போல இனிக்கட்டும், வெண் பொங்கல் போல சுவைக்கட்டும், மெது வடை போல செழுமையா இருக்கட்டும்! ஜல்லிக் கட்டு வீரனின் தெம்பும் சக்தியும் கிடைக்கட்டும்.

நன்றி: Rediff

Wednesday, January 11, 2006

தத்துவங்கள் - பகுதி 2

பேன்ட் போட்டு முட்டிப் போட முடியும், முட்டிப் போட்டு பேன்ட் போட முடியாது!

ஃபேனுக்கும் ரெக்கை இருக்கு, பறவைக்கும் ரெக்கை இருக்கு. ஃபேனால பறக்க முடியாது, பறவையால சுத்த முடியாது. ஃபேன (ஸ்விச்ச) அமுக்கினா சுத்தும், பறவைய அமுக்கினா கத்தும்!

டூல் பாக்ஸ்ல டூல்ஸ பாக்க முடியும், மேட்ச் பாக்ஸ்ல மேட்ச பாக்க முடியுமா?

இருக்குறப்ப என்னதான் காம்ப்லான், போர்ன்விடா குடிச்சாலும் செத்ததுக்கப்புறம் எல்லாருக்கும் பால்தான்!

சௌத் இன்டியால நார்த்தங்காய் கிடைக்கும், நார்த் இன்டியால சௌத்தங்காய் கிடைக்குமா?

பச்சை மொளகாயிலே பச்சை இருக்கும், கொடை மொளகாயிலே கொடை இருக்குமா?

லன்ச் பேக்ல லன்ச் எடுத்துட்டு போகலம், ஸ்கூல் பேக்ல ஸ்கூல் எடுத்துட்டு போக முடியாது!

நீ எவ்வளொ பெரிய பருப்பா இருந்தாலும், உங்க வீட்டு சமயலுக்கு பருப்ப கடைலதான் வாங்கனும்!

மெழுக வச்சு மெழுகுவத்தி செய்யலாம், கொசுவ வச்சு கொசுவத்தி செய்ய முடியாது!

கோவில் மணிய நாம அடிச்சா சத்தம் வரும், கோவில் மணி நம்ம அடிச்சா ரத்தம் வரும்!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

இந்த ஆண்டு இனிதே அமையட்டும். எல்லா மக்களும் சந்தோஷமா இருங்க



நன்றி: The Hindu, Chennai

Thursday, December 15, 2005

தத்துவம், தத்துவம்

ஆம்பிளைக்கு அடிபட்டா ஏத்திகிட்டு போக ஆம்புலன்ஸ் இருக்கு. ஆன பொம்பளைக்கு அடிபட்டா ஏதிக்கிட்டு போக பொம்புலன்ஸ் இருக்கா ?

தண்ணில மீன் இருக்குறதால, தண்ணி நான் வெஜ் ஆகாது

நடந்து போனா கால் வலிக்கும் ஆனா கால் வலிச்சா நடக்க முடியுமா?

கால கடிக்கிற செருப்பால முள்ள கடிக்க முடியாது

எவ்வளவு நீச்சல் தெரிஞ்சாலும் டம்ப்ளர் தண்ணீல நீந்த முடியாது

வாயால மூச்சு வாங்கலாம், ஆனா மூக்கால தண்ணி குடிக்க முடியாது

வாயால "நாய்"னு சொல்ல முடியும் ஆன நாயால "வாய்"னு சொல்ல முடியாது

ரயில் எவ்வளவு வெகமா போனாலும், கடைசி பெட்டி கடைசியதான் போகும்

அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம், பல் கொட்டினா வேற பல் வங்கலாம், ஆனா தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியது

செல்லுல பாலன்ஸ் இல்லனா கால் பண்ண முடியாது, மனுஷனுக்கு கால் இல்லனா, பாலன்ஸ் பண்ண முடியாது

பஸ் போயிட்டா பஸ் ஸ்டான்ட் அங்கயேதான் இருக்கும் ஆனா சைக்கிள் போயிட்டா சைக்கிள் ஸ்டான்ட் கூடவே போகும்

ஃபைல்ஸ்னா ஒக்காந்து பாக்கனும், பைல்ஸ்னா பாத்து ஒக்காறனும்

Monday, October 31, 2005

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

இந்த ப்லாகை ஆரம்பிச்சு ஒரு வருஷத்துக்கு மேல ஆனத நம்பவே முடியல! இப்ப பம்பாயில தீபாவளி ஆர்ம்பமாயிடும், இன்னும் மூனு நாளைக்கு ஒரே பட்டாசு சத்தம்-தான்.

ரொம்ப நாளா ப்லாக் எழுத்வே முடியல. வேலை பளு ரொம்ப அதிகம். ஆங்கிலத்தில எழுதரது சுலபமா இருக்கு - சும்மா வோர்டை கெளப்பி டபடபனு தட்டிகிட்டே போலாம்.

இதை படிக்கிற எல்லாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! சந்தோசமா, சத்தமில்லாத, புகையில்லாத, தொந்தரவில்லாத தீபாவளியக் கொண்டாடுங்க.


நன்றி: BBC UK

என்னோட போன வருஷத்து தீபாவளி போஸ்ட்

Wednesday, August 31, 2005

கண்ணீர் அஞ்சலி

என்னோட கல்லூரியில படிச்ச 'குச்சி' கார்த்திகேயன் பெங்கலூரில பைக் விபத்தில் இறந்துட்டான். என்னால நம்பவே முடியல. அவன பாத்துதான் இந்த தமிழ் blog்-அ ஆரம்பிச்சேன். இந்த போஸ்ட அவன் நினைவா எழுதறேன். :'(

Thursday, January 20, 2005

அம்மா இங்கே வா வா!

அம்மா இங்கே வா வா!
Arrest Warrant தா தா!
வேலூர் ஜெயிலில் போட்டு
கண்ணுல தண்ணியும் காட்டு!

அப்புவும் ரவியும் கூட்டு
சின்ன 'சாமி'க்கும் வேட்டு
குடுத்தாங்க மாமீங்க பேட்டி
சாயம் போச்சுது காவி வேட்டி

பெருசுங்க பொருளுங்க குட்தாங்க
கூடவே போட்டாவும் புட்ச்சாங்க
எதிராளிய குத்தம் சொன்னாங்க
மீதிய அமுக்கினு போனாங்க

போஸ்டரு நோட்டிசு அடிப்பாங்க
கட்டவுடுக்கு பாலும் ஊத்துவாங்க
அந்த 'ஸ்டாரோட' குஞ்சு-கல காணோங்க
பாலில்ல!ஒருபுள்ள போச்சுதுங்க

அபலைங்க சோகமும் பார்த்தாச்சி
அனுதாபமும் எரக்கமும் பட்டாச்சி
பழய துணிமணி கொடுத்தாச்சி
சுனாமி சோகமும் போயாச்சி

மிருனாள் சென் -ஆ! யாருங்க?
ஜெயலச்சுமி செரினா தெரியுங்க
ஐயோ! 'ரவி'-க்கு கை காலு போயிருச்சி
அப்புறம் அண்ணாமலையும் தொடங்கிருச்சி

பொங்கலு பண்டிகை வந்தாச்சி
TV-ல பிகருங்க பேத்தலு ஸ்டார்ட்டாச்சி
தலை-ங்க வாழ்த்து கொடுத்தாச்சி
வாழ்க்க மாமுலுக்கு திரும்பிடிச்சி

சமுதாய சிந்தன போதுங்க
ஊட்டுல சீனி கேட்டாங்க
முக்கு கடைல ச்சீப்புங்க
வாங்கிகினு வெரசா போறனுங்க

Monday, December 27, 2004

நில நடுக்கம்

காகா உட்கார பனம் பழம் விழுந்த கதை மாதிரி, 1000 கி.மீ. தள்ளி இருக்கிற சுமத்ராவில நடந்த நில நடுக்கத்தில சென்னை அடிபட்டிருச்சு! 21 000 பேருக்கு மேல உயிர் இழந்துட்டாங்களாம், கேக்கவே ரொம்ப கஷ்டமாயிருக்கு. நம்ம ஊருல சின்ன புயல் வந்தாலே தாங்காது, இதுல இப்படி ஒன்னு வேற. "எப்ப வருவேன், எப்பிடி வருவேன்னு சொல்ல மாட்டேன், வர வேண்டிய நேரத்தில கண்டிப்பா வருவேன்" அப்படீன்னு ரஜினி சொல்ற மாதிரி இருக்கு, கஷ்டப் படரது அப்பாவி மக்கள்தான்.

Thursday, December 16, 2004

வேலை

இன்னும் ரென்டு மாசத்தில படிப்பு முடிஞ்சுடும். இங்க வேலை தேட ஆரம்பிச்சாச்சு, ஆனா கம்பனி எதுவும் நம்ம்ள கண்டுக்க மாட்டேங்கறான், இப்போதைக்கு! பெரிய எடத்துல படிச்சுட்டு வேலை கெடக்காம வெளிய போனா, வெக்கக் கேடுதான். நாலரை லட்சம் செலவி பண்ணியும் உபயோகமில்லாம்ப் போயிடும்.

Saturday, December 11, 2004

Chilled Beer (Child Bear)

ஆங்கிலம் நம்ம அடிமைப் படுத்தியவங்களொட மொழி அதனால இந்தி மட்டுமே ஆட்சி மொழியாவும், பயிற்ச்சி மொழியாவும் இருக்கனும் அப்படீன்னு சொன்னாங்க. அதனால் தமிழ் நாடு முழுக்க போராட்டமெல்லாம் நடந்துச்சாம். அப்படி ஆங்கிலம் வேண்டாம்னு முடிவு பண்ணியிருந்தா, இந்தியா முழுக்க இந்தா மாதிரி அறிவிப்புப் பலகைகள பார்க்கலாம். BPO, Outsourcing அப்படீன்னு, இப்போ பேசிட்டிருக்க முடியுமா? இது தில்லி மாநகரத்தில பார்த்தது!



'குளிர்ந்த பியர்' அப்படீங்கரத 'குழந்தைக் கரடி' அப்படின்னு அர்த்தம் வர மாதிரி எழுதி இருக்காங்க!

Saturday, December 04, 2004

திருமதி ஜெயலலிதா கருணாநிதி?

தமிழ் நாடு கொஞ்சம் அமைதியாக ஒரு வழி. இங்க உள்ள ஒரு நண்பர் அனுப்பிய படம். சூரியன் இலையை கைப் பிடிச்சா இலை கருகீடாதா? மக்கள் ஒத்துக்குவாங்களா?

Wednesday, November 24, 2004

ட்ராஃபிக் ஜாம்

சென்னையிலே ட்ராஃபிக் தொல்லை ரொம்ப அதிகம். எவ்வளவு அதிகம்? 'Traffic Jam' அப்படின்னு ஒரு உணவகத்துக்கு (Restaurant-க்கு) பெயர். இது அடையாறு (Adyar) பேருந்து நிலையத்துக்கு அருகில இருக்கு

Image Hosted by ImageShack.us

Tuesday, November 16, 2004

கல்லிலே கலை வண்ணம்

எனக்கு கோவில்களிலே புடிச்சது மூனு: அமைதி, கட்டடக் கலை, பஞ்சாமிர்தம். (சில கோவில்களிலே வெண் பொங்கல், ஆனா அதிக இடங்களிலே தர்ரதில்லை). முருகன் கோவில்லே பாடர பாட்டு ரொம்ப பிடிக்கும். சிவன் கோவில்லே இருக்கிற அமைதியான் சூழல் வேற எங்கயும் கிடைக்காது.

நம்ம ஊரு கோயில்களோட புகைப்படங்கள் சிலது ஒரு தளத்திலே பார்த்தேன், ரசித்தேன். அதில இருந்து ஒன்னு. கல்லிலே சிற்பம் செஞ்ச காலம் போயி சிமென்டுல செஞ்சாலும் ரொம்ப அற்புதமாவே இருக்கு. இதத்தான் 'கல்லிலே கலை வண்ணம் கண்டான்' அப்படீன்னு பாடி வெச்சிருக்கான்.

Image Hosted by ImageShack.us