Friday, September 21, 2018

கருநாக்கின் வாக்கு/சாபம் பலிக்குமா?

கேள்வி:
கருநாக்கின் வாக்கு/சாபம் பலிக்குமா?
பதில்:
எனக்கு தெரிந்த பெரியவர் ஒருத்தர் சொல்லுவார், நான் சொன்னா மழை வரும் தெரியுமான்னு, அதை என் போன்ல இருக்கும் அப்ளிகேசனே சொல்லுமேன்னு நான் சொல்லுவேன்
ஒரு படத்தில் சந்தானம் ஒரு ஹோட்டலில் வேலை செய்வார், சந்தானம் எதாவது தப்பு செய்யும் போது ஹோட்டல் முதலாளி வேலைய விட்டு போன்னு சொல்லுவார், தான் கருநாக்கு சொன்னால் பலிக்கும் மிரட்டியே சந்தானம் வேலையில் இருப்பார்
இப்படி சினிமாவையும், புத்தகத்தில் படித்தும் தான் மக்கள் மூடநம்பிக்கையை வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள், சீமான் கூட ஒருமுறை முப்பான் முருகன் தான் தமிழனத்தின் முதல் போராளி என்றார், எப்படி சொல்றிங்கன்னு கேட்டதுக்கு திருவிளையாடல் படம் பார்க்கலையான்னு கேட்டாரு, நான்ல்லாம் இப்ப நினைச்சாலும் சிரிச்சிகிட்டு இருக்கேன்
சாபம் பற்றி
உங்களை யாராவது திட்டினால் நீங்கள் எதும் தவறு செய்யவில்லை என்றால் உங்களுக்கு கோவம் வரும், தவறு செய்திருப்பின் அமைதியாக இருப்பீர்கள். அது ஒரு எதிர்வினை.
உங்கள் முகத்துக்கு நேராக ஒருவர் சாபம் விடும் பொழுது, அவருக்கு நான் எதும் தீங்கிழைத்து விட்டமோ, நம்மால் அவர் பெரும் இழப்பை சந்திப்பு விட்டாரோ என உங்களுக்கு குற்ற உணர்வு வந்தால் அது மன உளைச்சலை உண்டாக்கும், மன உழைச்சல் உங்களை எந்த வேலையும் செய்ய விடாது, எல்லார் மீதும் எரிந்து விழுவீர்கள், உங்களுக்கு நீங்களே கொடுத்து கொள்ளும் தண்டனையே சாபத்தின் பலனாக நீங்களே உணர்வீர்கள்.
உங்க மனசாட்சிபடி நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை, வேலையந்த வெட்டிபய எதோ சாபம் விட்டு போறான்னு நகர்ந்து சென்றால் அது உங்களை எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.
யாரும் சாபம் விடனும்னு அவசியமில்லை, குற்ற உணர்வே சாபம் தான், அதனால் முடிந்த வரை உங்கள் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் இருங்கள். அதுவே நிறைவான வாழ்க்கை

குர்ஆனும், அதன் சுய முரண்பாடுகளும்

குர்ஆனும், அதன் சுய முரண்பாடுகளும்
குர்ஆன் தனக்குத்தானே எவ்வாறு முரண்படுகிறது என்பதை கீழே தரப்பட்டுள்ள பட்டியல் சுருக்கமாக விளக்குகிறது.
கீழே காணப்படும் எண்கள் குர் ஆனின் வசனங்களைக் குறிப்பிடுகிறது.
1) படைப்பாளன்
அல்லாஹ் மட்டுமே : 39:62, 40:62
படைப்பாளர்களில் சிறந்தவன் : 23:14, 37:125 (மற்ற படைப்பாளர்கள் யார்?)
2) படைப்பின் காரணம்
அல்லாஹ்வை வணங்குவதற்காக : 2:21, 51:56, 13:15
நரகத்திற்காக : 7:179, 50:30, 19:71
படைப்பினங்களிடமிருந்து எவ்வித
தேவைகளற்றவன் : 3:97, 35:15
3) பூமி மற்றும் வானங்களின் படைப்பு
பூமி முதலில் படைக்கப்பட்டது : 2:29, 41:9-12
வானம் முதலில் படைக்கப்பட்டது : 7:54, 10:3, 11:7, 32:4, 79:27-30
ஆறு நாட்களில் படைக்கப்பட்டது : 7:54, 10:3, 11:7, 25:59
எட்டு நாட்களில் படைக்கப்பட்டது : 41:9-12
‘குன்’ என்றால்உடனே உருவாகிவிடும் : 2:117, 3:59, 19:35
4) பூமி மற்றும் வானங்களின் வாரிசு
படைப்பினங்களிடமிருந்து பெறப்பட்டது : 3:180, 15:23, 19:40, 21:89, 28:58
அல்லாஹ்வே அனைத்திற்கும் உரிமையாளன் : 2:116, , 3:189, 9:116,10:55, 20:6, 21:19, 57:2 , 44:85
அல்லாஹ்வே அனைத்திற்கும் வாரிசு : 15:23
5) மனிதன் படைக்கப்பட்டது
தூசியிலிருந்து : 3:59
ஈரமான கருப்பு களி மண்ணிலிருந்து : 17:61, 38:71
சுடப்பட்ட களி மண்ணிலிருந்து : 15:26
அல்லாஹ்வின் இருகைகளால் : 38:75
தண்ணீரிலிருந்து : 21:30
எதுவுமாக இல்லாத நிலையிலிருந்து : 19:9, 19:67
எதுவுமாக இல்லாத நிலையிலிருந்து படைக்கப்படவில்லை : 52:35
‘குன்’ என்றால்உடனே உருவாகிவிடும் : 2:117, 3:59, 19:35
6) அல்லாஹ்விற்கு வாரிசு
அவன் நாடினால் தன்னிலிருந்தே உருவாக்க முடியும் : 39:4
(பெண்) துணை இல்லாததால் வாரிசு இல்லை : 6:101-102
அல்லாஹ்வின் ஆணையால் மரியம் (ஆண்) துணையின்றி தாயானார் : 19:21
‘குன்’ என்றால் உடனே உருவாகிவிடும் : 2:117, 3:59, 19:35
7) பாதுகாவலர்களும் நண்பர்களும்
அல்லாஹ் மட்டுமே : 2:107, 5:55, 9:116, 17:111, 29:22, 32:4, 42:28
வானவர்கள் : 13:11, 41:31-32, 82:10
நபிமார்கள் : 5:55, 13:11
நம்பிக்கையளர்கள் : 9:71,
கிருஸ்துவர்கள் : 5.82
8 ) வேதங்களின் நிலை
மக்காவிற்கும் அதை சுற்றியிருக்கும் பகுதி மக்களுக்காக : 42:7
நன்கு விவரிக்கப்பட்டுள்ளது : 2:85, 2:159, 3:138, 6:103,6:116,10:37, 16:89
பல பொருள் தரும் வசனங்கள் உள்ளது : 3:7
யூதர்களும் கிருஸ்துவர்களும் மாற்றிவிட்டனர் : 2:75 79, 3:78, 3:187, 4:46, 5:13, 5:41, 41:43, 7:162, 9:169
யாரும் மாற்ற இயலாது : 6:34, 6:115, 10:64,
அல்லாஹ் மாற்றுவான் : 2:106, 13:39, 16:101
9) மறுப்பாளர்களுக்கு சவால்
ஒரு அத்தியாயத்தைக் கொண்டுவர முடியுமா? : 2:23, 10:38
பத்து அத்தியாயங்களை கொண்டுவர முடியுமா? : 11:13
முழு குர்ஆனைக் கொண்டுவர முடியுமா? : 17:88, 52:34
இரண்டு வேதங்களைக் கொண்டுவர முடியுமா? : 28:49
10) மனிதனுடைய செயல்களுக்கு காரணம்
மனிதனின் அறிவே : 2:6, 4:79, 6:12, 6:149, 8:55, 11:118,
30:9, 42:30
சைத்தான் : 4:120, 38:41
அல்லாஹ்வின் விதி : 2:6-7, 2:272, 4:78, 6:9, 57:22, 36:7…
11) அல்லாஹ்வின் ஒருநாள் என்பது மற்றும் மறுமை நாளின் அளவு என்பது
1,000 ஆண்டுகள் : 22:47
50,000 ஆண்டுகள் : 70:4
12) யூதர்களும் கிருஸ்துவர்களும்
அவர்களின் செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பளிக்கப்படும் : 2:62, 2:139
நிரந்தரமான நரக தண்டனை : 4:150-151, 9:17, 9:30
அவர்கள் கொல்லப்படவேண்டும் : 5:33, 5:54, 8:39, 9:5, 9:29, 47:4,
நெருங்கிய நண்பர்கள் : 5:82
(கிருஸ்துவர்கள்)எதிரிகள் : 3:118, 5:51, 5:57, 5:82 (யூதர்கள்),
58:14, 60:13
அவர்களை மன்னிக்கவும் : 5:13
அவரவர் பாதை அவரவர்களுக்கு : 109:6
அவர்களின் பெண்களைத் திருமணம் செய்யலாம் : 5:5, 9:30
அவர்களின் பெண்களைத் திருமணம் செய்யக்கூடாது : 2:221, 60:10
13) நபிமார்களின் நிலை
நபிமார்களிடையே பேதம் பார்க்கக்கூடாது : 4:152
அவர்களிடையே தகுதி வேறுபாடு இருந்தது : 2:253, 17:55
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டனர் : 16:36, 29:27, 35:24
சமுதாயத்தின் மொழியிலே அனுப்பிவைக்கப்பட்டனர் : 14:4
அரேபியர்களிடையே அனுப்பப்படவில்லை : 28:46, 32:3, 34:44, 36:6
நபி ஈஸா இறக்கவில்லை : 4:157, 4:158
நபிமார்களுக்கும் மரணம் உறுதியானது : 3:144, 23:15, 39:30
நபி யூனுஸ் வெட்டவெளியில் வீசப்பட்டார் : 37:145
நபி யூனுஸ் வெட்டவெளியில் வீசப்படவில்லை : 68:49
14) பத்ரு போரில்
1000 வானவர்கள் : 8:9
3000 வானவர்கள் : 3:124
5000 வானவர்கள் : 3:125
15) தீர்ப்பு நாளில்
எவருடைய பரிந்துரைகளும் ஏற்கப்படமாட்டாது : 2::48, 2:123, 2:254, 6:51, 78:37
பரிந்துரைகள் ஏற்கப்படும் : 10:3, 34:23, 20:109, 21:23, 53:56
16) நரகத்தில் மறுப்பாளர்களுக்கு உணவு
ஜக்கூம் பழம் மட்டுமே : 37:62 – 66
தரி என்ற முள் வகை மரம் மட்டுமே : 88:6
துர்நாற்றமான சீழ் மட்டுமே : 69:36

கட்டபொம்மன் என்று எடுக்கப்பட்ட திரைப்படம் பாதிக்கு மேல் வரலாற்றுப் பிழை

சும்மா கிடந்த சங்கை.... ஊதிக் கெடுத்தான் ஆண்டி.
வீரபாண்டியக்(?) கட்டபொம்மனுக்கும் வெள்ளையன் கலெக்டர் ஜாக்சனுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியை தமிழ்வாணன் அவர்கள் தன்னுடைய ‘கட்டபொம்மன் கொள்ளைக்காரன்!’ நூலில் குறிப்பிட்டுள்ளதை மிகச் சுருக்கமாக இங்கே .
திருநெல்வேலி கலெக்டர் ஜாக்சன், வரிகட்டச் சொல்லி வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கு கடிதம் மேல் கடிதம் அனுப்புகிறார். வீரபாண்டியக் கட்டபொம்மனோ தவணை மேல் தவணை சொல்லித் தட்டிக்கழித்து வருகிறான். இதனால் ஆத்திரம் கொண்ட ஜாக்சன், தன்னை 05.09.1798 அன்று இராமநாதபுரத்திற்கு நேரில் வந்து பார்த்து விளக்கம் (பேட்டி) தரவேண்டும் இல்லையேல் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையம் பறிமுதல் செய்யப்படும் என்று கடிதம் அனுப்பினார்.
ஜாக்சனின் கடிதத்தைக் கண்டதும் கட்டபொம்மன் குறிப்பிட்ட நாளில் ஜாக்சனைப் பார்க்க இராமநாதபுரத்திற்குத் தன் பறிபாரங்களுடன் செல்கிறார். கட்டபொம்மன் தன்னைப் பார்க்க வருகிறார் என்று அறிந்ததும் ஜாக்சன் குற்றாலத்திற்குக் கிளம்பிவிடுகிறார். கட்டபொம்மன் ஜாக்சனை சந்திப்பதற்காக, ஜாக்சனை பின் தொடர்ந்து குற்றாலத்திற்கு செல்கிறார் அங்கும் கட்டபெம்மனை பார்க்க ஜாக்சன் மறுத்துவிடுகிறான். இப்படியே ஒவ்வொரு ஊராக அதாவது சொக்கம்பட்டி, சேத்தூர், சிவகிரி, சிறிவில்லிபுத்தூர், பேரையூர், பவாலில், பள்ளிமடை, கமுதி என்று சுற்றி இறுதியில் இராமநாதபுரத்தை வந்தடைந்தார் ஜாக்சன். கட்டபொம்மனும் ஜாக்சன் சென்ற ஊருக்கெல்லாம் அவரை பின் தொடர்ந்து சென்றார். இதில் எந்த ஊரிலும் கட்டபொம்மனை சந்திக்க விரும்பாமல் அலைகழித்து வந்தார்.
இறுதியில் கட்டபொம்மன் இராமநாதபுரத்தில் ஜாக்சனை சந்தித்து விளக்கம் கொடுத்தான், வரிகட்டாமையைப் பற்றி ஜாக்சன் கேட்க, தான் கட்ட வேண்டிய பணத்தையும் கையோடு கொண்டுவந்துள்ளதாகக் கூறினான். அடுத்து அரசு கிராமங்களில் குழப்பம் ஏற்படுத்தியது தொடர்பாக கேட்க, அப்படியேதும் நான் செய்யவில்லை என்று கட்டபொம்மன் மறுத்துக் கூறுகிறார். இறுதியாக, “நமக்குள் ஏற்பட்ட இந்த உரையாடலைச் சென்னைத் தலைமைக்கு அனுப்புகிறேன் அதற்கான பதில் வரும் வரை நீங்கள் இங்கு இருக்கவேண்டும்” என்று ஜாக்சன் கூறியதும் கட்டபொம்மன் அஞ்சி அங்கிருந்து தப்பிவிடுகிறார். அவர் தப்பும் போது ஏற்படுகிற கலவரத்தில் ஒரு வெள்ளையன் கொலை செய்யபடுகிறான். கட்டபொம்மனின் அமைச்சனும் ஆலோசகனுமான தானாபதிப் பிள்ளை கைது செய்யப்படுகிறார்.
இந்த நிகழ்வு கட்டபொம்மனை வீரனாகக் காட்டுகிறதா? அல்லது வெள்ளையனுக்கு அடிபணிந்தவனாகக் காட்டுகிறதா? மேற்கண்ட நிகழ்வு பற்றிய பதிவு இன்றும் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது என்கிறார். அப்படி என்றால் கட்டபொம்மன் வெள்ளையனுக்கு அஞ்சினான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அந்நூலில் குறிப்பிட்டுள்ள மற்றுமொரு நிகழ்வைக் குறிப்பிட வேண்டும் அதாவது கட்டபொம்மனைத் தூக்கில் போடுவதற்கு கூறப்பட்ட காரணங்களும் நிகழ்வுகளும் ஆகும்.
கட்டபொம்மனை பற்றிக் கூற ஆரம்பித்ததில் இருந்தே கட்டபொம்மன் தன்னுடைய பாளையத்தை விடுத்து மற்றைய பாளையங்களில் அவ்வப் போது கொள்ளையடித்து வந்துள்ளான் என்று கூறிப்பிட்டுள்ளார். அதில் ஊற்று மலைப் பாளையத்தார் தங்கள் பாளையத்தில் கட்டபொம்மன் கொள்ளையடித்ததை வெள்ளையனிடம் புகார் தெரிவித்துள்ளார். அடுத்து சிவகிரி பாளையத்தில் தந்தைக்கும் மகனுக்கும் ஆட்சியைப் பிடிப்பதில் ஏற்பட்ட போட்டியில் கட்டபொம்மன் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்தியது மற்றுமொன்று தனது தம்பி மற்றும் தனது அமைச்சன் தானாபதிப் பிள்ளையின் மகன் திருமணத்திற்காக வெள்ளையனின் நெற் களஞ்சியத்தைத் தன் ஆட்களை விட்டுக் கொள்ளையடித்தது. இது போன்ற புகார்களை அடுத்து கட்டபொம்மனை மேஜர் பானர்மென் தன்னை சந்தித்து விளக்கம் தரக் கூறுகிறார். கட்டபொம்மன் ஜாக்சனை சந்திக்க அஞ்சு நாட்களைக் கடத்துகிறார். தன்னை சந்திக்காமல் காலம் கடத்தியதால் பானர்மென் பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுக்கிறார். சண்டை நடக்கும் போதே கட்டபொம்மன் தனது பாளையத்தில் இருந்து தப்பிவிடுகிறார். (இந்த இடத்தில் தமிழ்வாணன் ஒன்றைக் குறிப்பிடுகிறார் அதாவது கட்டபொம்மன் தப்பித்ததே திருச்சியில் உள்ள வெள்ளைகார மேல் அதிகாரியிடம் சென்று மன்னிப்புக்கேட்டு தப்பிவிடலாம் என்பதற்காகவே தப்பினான் என்கிறார்).
கட்டபொம்மனைப் பிடிப்பதற்காக பானர்மேன் எட்டயபுர பாளையத்திடம் இருந்து நன்கு வழிகளைத் தெரிந்த சில வீரர்களை கேட்டுப் பெற்றுக் கொண்டு கட்டபொம்மனைத் தேடலானான். அதன் பிறகு கட்டபொம்மன் புதுக்கோட்டைப் பாளையத்தில் உள்ள ஒரு காட்டில் மறைந்திருப்பதை அறிந்ததும் பானர்மேன் கட்டபொம்மனைப் பிடித்துத் தரும்படி கேட்கப் புதுக்கோட்டைப் பாளையத் தளபதி அம்பலக்காரன் தலைமையிலான குழு கட்டபொம்மனைப் பிடித்து பானர்மேனிடம் ஒப்படைத்தார்கள். மேற்கண்ட பத்தியில் குறிப்பிட்டுள்ள காரணங்களைக் காட்டி தூக்கில் போடுகிறார்கள்.
இந்நூல் மூலம் நமக்கு தெரியவருவதுயாதெனில்,
வெள்ளைக்காரனுக்கு அவ்வப்போது பணிந்து சென்ற ஒருவரை முழுக்க முழுக்க வெள்ளையனை எதிர்த்தான் என்று பொய்ப் பரப்புரை செய்து கட்டப்பட்ட பிம்பமே கட்டபொம்மு.
எட்டப்பன் என்ற ஒருவனைத் தமிழ்வாணன் அவர்கள் குறிப்பிடவேயில்லை. ஆனால் திரைபடத்தில், காட்டிக் கொடுத்தான் என்று எட்டப்பன் என்ற ஒருவனைக் காட்டியுள்ளது. இது பொய்.
ஆக, கட்டபொம்மன் என்று எடுக்கப்பட்ட திரைப்படம் பாதிக்கு மேல் வரலாற்றுப் பிழையாகவே இருக்கும் என்று கருதுகிறேன். அதில் “வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் தரவேண்டும் கிஸ்தி (வரி)” போன்ற நீண்ட வசனத்தைப் பேசியிருக்க மாட்டான்.
தமிழர்கள் அவசியம் இந்நூலை வாங்கிப் படித்து தமிழ்நாட்டின் உண்மை வரலாற்றை அறிந்துக் கொள்ளுங்கள்.

பிள்ளையார் ஊர்வலத்தை முன்வைத்து ஓர் உரையாடல் .

பிள்ளையார் ஊர்வலத்தை முன்வைத்து ஓர் உரையாடல் .
சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு தமிழகத் தில் பிள்ளையார் சிலைகள் எண்ணிக்கை அதிகம் என மார்தட்டி , ஆன்மிக எழுச்சி என புழங்காகிதம் அடைந்தார் அந்த காவிசங்கி .
நான் பார்த்ததை ,விசாரித்து அறிந்ததை , தகவல் சேகரித்ததைக் கொண்டு அசை போட்டேன் .
தமிழகத்தின் எந்த மூலையில் பார்த்தாலும் பிள்ளையாரைக் கரைக்க ஊர்வலம் போகும் போது பத்து பதினைந்து விடலைப் பசங்கள் சீருடை பனியன் அணிந்து சென்றனர் மக்கள் கண்டு கொள்ளவே இல்லை .
சுற்றுச்சூழலை நீர்நிலையை மாசுபடுத்தாத பிள்ளையார் என்பதை இந்த வெறிக்கூட்டம் கிஞ்சிற்றும் மதிக்கவே இல்லை.சமூக அக்க றையோ ,பொதுநல சிந்தனையோ அற்ற மதவெறியே அதில் மேலோங்கி நிற்கக் காணலாம் .
இந்த விடலைப் பிள்ளைகள் ஆன்மீகம் ,மதம் எல்லாம் அறிந்தவரல்ல ; உசுப்பிவிட்டதால் நாக்கில் தேன் தடவியதால் வந்த கூட்டமே . போதையும் வெறிக்கூச்சலும் தவிர வேறு எதுவும் அவர்களுக்குத் தெரியாது ஊர்வலத் தில் ஒலிபரப்பட்ட பாடல் கூட பெரும்பாலும் சினிமா குத்துப்பாட்டே ;சாமி பாட்டல்ல .
கொங்கு மண்டலம் சார்ந்த மோடிக்கு கடந்த தேர்தலில் ஆதரவு நல்கிய குமார் துரைசாமி கூறுகிறார் ,“வசூல் செய்வதும் ஊர்வலங்கள் நடந்துவதும் எனக்கு தெரிந்து 25 வருசங்க ளாக நடக்குது . அந்த அந்த பகுதியில் உள்ள 25 வயதுக்கு உட்பட்ட வாலிபர்கள் தாங்கள் நண்பர்களோடு இணைந்து செய்வார்கள்.
ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் அவங்க அவங்க வேலையை பார்த்துட்டு போய் விடுவார்கள். புதிய குழுக்கள் வருவார்கள்.
ஈரோட்டில ஒரு காலத்துல முன்னாடி நின்னு நடந்திய யாரும் அரசியலுக்கு வரவில்லை அவங்க அரசியல் கருத்தை இந்த விழா
முடிவு செய்யவில்லை,இப்பயாரும் முன்னாடி நின்னு நடத்திட்டு இருக்கவில்லை
இவரின் இந்த கணிப்பை நான் நிராகரிக் கவும் இல்லை ;அப்படியே ஏற்கவும் இல்லை .
தமிழகம் முழுவதும் சுமார் 25,000 பிள்ளை யார் என மிகக்குறைவாக கணக்குப் போட்டாலும், ஒரு பிள்ளையார் பின்னால் சுமார் 15 விடலைப் பையன்கள் என்று மிகக்குறைவாகக் கணக்குப் போட்டாலும் சுமார் ஆறு லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் அவர்களில் 2 சதம் பேரிடம் மதவெறி விஷம் ஏறினும் சுமார் 12,500 பேர் .
வருடாவருடம் இதேபோல் எனில் மெல்ல மத வெறி விஷம் ஏற்றப்படுகிறது.அதன் பேரா பத்தைப் புரிந்து முற்போக்காளர்கள் எதிர் வினை ஆற்றல் அவசியம்.மதச்சார்பின்மை மற்றும் அறிவியல் சிந்தனைக்குப் பின் விடலைப் பருவ இளைஞர்களை திரட்டல் மிகமிக அவசிய அவசரப் பணியாகும்,
"கோவையில் பெரும் பணக்காரர்கள் (இந்துக்கள்தான்) வசிக்கும் ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி (வனக்கல்லூரியை ஒட்டி உள்ள பகுதி), ரேஸ் கோர்ஸ் சாலை" ஆகிய பகுதிகளில் வினாயகர் சிலைகள் அநேக மாக இல்லை.
இந்த ஆட்சியால் பெரும்பாலும் லாபமடைந்த ஆதிக்க சாதிகளை சேர்ந்தவர்கள், பனியாக் கள்,மார்வாரிகள்,ஜெய்ன்கள்,யாரும் வினாய கர் பந்தல்களில் உட்கார்ந்திருக்கவுமில்லை.
வினாயகரின் அதிதீவிர பக்தைகளான பெண்கள் இல்லை. பண்பாட்டு நடவடிக்கை கள் இல்லை. ஆன்மீகச் சொற்பொழிவுகள் இல்லை. நமது கோவில்களில் வினாயகர் சதுர்த்தி அன்று இருந்த கொண்டாட்ட மனநிலை அறவே இல்லை.
உழைக்கும் வர்கங்களைச் சேர்ந்த இளைஞ ர்கள் பந்தலில் உட்கார்ந்திருக்கிறார்கள். போலீஸ்காரர்கள் இருக்கிறார்கள்.
நமது பாரம்பரியத்திலிருந்து அன்னியப்பட்டு நிற்கிறது இந்த வழிபாட்டு முறை.” என்கிறார் இரா. முருகவேள்.
“இவர் சொல்வதில் உண்மையுண்டு .சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பிள்ளையார் சிலை வைக்கப்பட்ட போது கும்பிடவும் பூஜை செய்யவும் முண்டியடித்த பெண்கள் கூட்டம் இப்போது கிட்டத்தட்ட இல்லை.
மது போதை வாசம் மிக்க சில காலிகளின் பிள்ளைப்பருவ சேட்டையாய் மாறிக்கொண் டிருக்கிறது இப்பிள்ளயார் விழாக்கள் .இது இந்து முன்னணி ஏற்பாடு செய்யும் பிள்ளை யாரின் அவலம் மட்டுமே .பாரம்பரியமான பிள்ளையார் கோயில்களில் இன்றும் கூட்டம் முட்டி மோதத்தான் செய்கிறது .
“பிள்ளையாரை கேடயமாகி செங்கோட்டை யில் எச் ராசா வகையறா திட்டமிட்டு நடத்திய சிறுபான்மை மீதான தாக்குதல் அவர்கள் நோக்கத்தை நிறைவேற்ற உதவவில்லை . மதக் கலவரமாக பற்றவில்லை.தமிழகம் மதவெறித் தீயில் பொசுங்கவில்லை.
இது மட்டுமல்ல .அண்மையில் சங்பரிவாரின் இத்தகைய முயற்சி எல்லாம் இந்தியா முழுவதும் ஒரு பக்க கொதிப்பாய்த்தான் முடிகிறது .
இந்தியாவெங்கும் இந்துக்களோ ,முஸ்லீம்க ளோ ,இதரர்களோ மதக்கலவரத்தை விரும்ப வில்லை .மக்கள் ஒற்றுமையை சீர்குலைப் போர் யாராயினும் மக்கள் நிராகரிப்பர் .
இதுவே நமக்கு நல்ல செய்தி .அவர்களுக்கு கெட்ட செய்தி .” என நான் இட்ட பதிவும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கதே .
ஆக ,’ ஆன்மீகப் பேரெழுச்சி” என்கிற சங்கிகளின் ஆரவாரக் கூச்சலைக் கண்டு மனம் தளரவும் வேண்டாம் ,மதவெறி நச்சை மெல்ல பரப்பும் அவர்களின் முயற்சியைக் குறைத்து மதிப்பிட்டுவிடவும் வேண்டாம் .
மதச்சார்பின்மைக்காகவும் அறிவியல் மற்றும் சமத்துவ விழிப்புணர்வுக்குமான நம் போராட்டம் ,முயற்சி அனைத்தும் இளைஞர் மாணவர் ,பெண்கள் மத்தியில் இன்னும் பலமடங்கு வீச்சோடும் நுடபத்தோடும் முன்னெடுக்கப்பட வேண்டும் .

பெண்களை அசிங்க படுத்துறதுதான் இந்த காவியங்களோட நோக்கமா?

இராமாயணத்துல சூர்ப்பனகை என்ற இராவணனின் தங்கை இராமன் மீது கொண்ட மோக உணர்வால் அவனை அடைய வேண்டி இராமனிடம் கேட்ட பொழுது சூர்ப்பனகையோடு மனம் 
குளிர பேசி விட்டு என்னால் முடியாது. நான் ஏக பத்தினி விரதன்.
என் தம்பி அர்ச்சுனனிடம் கேட்டு பார்.முடிந்தால் உன் ஆசையை பூர்த்தி செய்து கொள் என்று ஏளனம் 
செய்தவன் இராமன். இது போக 
அவள் மூக்கை வேற இரண்டு பேரும் 
அறுத்து விட்டாங்க.தர்மத்தின் 
ஊற்று இராமனோட லீலை.
மகாபாரதத்தில பாண்டவர்கள் ஐந்து 
பேருக்கும் பத்தினியா இருக்கிற பாஞ்சாலியை வைச்சிக்கிடுறதில 
அஞ்சு பேரும் ஒரு உடன்படிக்கை 
போடுறாங்க.ஒரு வருடத்துக்கு ஒருத்தன் கூட இருக்கனும்.
இந்த ஒரு வருடம் மற்ற நாலு பேரும் 
பாஞ்சாலி கூட ஒப்பந்த காரன் இருக்கிறதை பார்க்க கூடாது.
அப்படி பார்த்து விட்டால் ஒரு வருடம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
தருமனும் பாஞ்சாலியும் தனிமையில் இருக்கும் போது பிராமணனுக்கு ஏற்பட்ட துயரம் 
போக்குவதற்காக தன்னுடைய 
வில்லை எடுக்க அந்த அறையில் 
நுழைந்து விடுகிறான் .
இதனால் ஒப்பந்த விதி படி நாட்டை விட்டு போகிறான். போன இடத்துல 
கங்கையில களிச்சிகிட்டு இருக்கும் போது உலூபி என்ற நாக கன்னிகை 
அவன் அழகில் மோகம் கொண்டு 
அவனிடம் நேரடியாக முறையிடகிறாள்.அர்ச்சுனனும் அதை ஏற்று அவள் ஆசைய அன்று இரவு நிறைவேற்றினான்.
பெண்களை அசிங்க படுத்துறதுதான் இந்த காவியங்களோட நோக்கமா?
இராமன் கடவுள் அவதாரம்.
நினைச்சா சூர்ப்பனகை எண்ணத்தை மாற்றி இருக்கலாம்.
அதை செய்யாமல் ஏறுக்கு மாறா 
கிறுக்கு தனம் பண்ணி இராவணன் 
சீதாவை தூக்கிட்டு போற அளவுக்கு
ஒரு காரணத்தை உண்டாக்கணுமா?
அருமை அருமை.😐😐


அர்ஜுனன் ஒரு பெண்பித்தன் அவனது மனைவிகளுக்கு எண்ணிக்ககையே இல்லை..அல்லி எனும் மனைவி அவனுக்கு மிகவும் பிடித்தமானவள்..அல்லிஅர்ஜுனன் என்ற பெயரே அவனுக்கு உண்டு..அர்ஜுனனுக்கு போறஇடமெல்லாம் பொண்டாட்டி என்ற பழமொழியே உண்டு..இந்த ஒழுக்க சீலருக்குத்தான் அந்த கோபியர் கண்ணன் கீதை என்ற அறிவுரை கொடுக்கிறான்..வெட்கக் கேடு..இவர்களைவாழ்வியல் நாயகர்களாக கொண்டதால்தான் பார்ப்பனியம் ஒழுக்கக்கேட்டின் உறைவிடமாக இருக்கிறது.

வென்றவன் சொல்வதெல்லாம் வேதம் என்பதால் இப்படி எழுதியிருக்கிறார்கள் . இன்று எச்.ராஜா பேசுவதும் அப்படித்தான்



😐



வென்றவன் சொல்வதெல்லாம் வேதம் என்பதால் இப்படி எழுதியிருக்கிறார்கள் . இன்று எச்.ராஜா பேசுவதும் அப்படித்தான்

புரியும் வரை நீ ஆடு

அருமை இளைஞனே..
உன் தலையில் ஒரு காவி ரிப்பன் கட்டியிருந்தாய்.
புதிய டி ஷர்ட் அணிந்திருந்தாய்... அதில் வீரசிவாஜி படம் இருந்தது. உன் நெற்றியில் காவி செந்தூரம் இருந்தது...அந்த புதிய டி ஷர்ட் கிழே உன் பழைய டிரவுசர் அல்லது தூக்கி கட்டிய கைலி இருந்தது. கால்கள் எல்லாம் பழுப்பேறி இருந்தது.
உன்னை போலவே உங்களை சேர்ந்த ஒருவர் உங்களுக்கு தொகைகளை பிரித்துகொண்டிருந்தான். உங்களை போலவே ஆடையணிந்த சிலர் பறை அடிக்க நீங்கள் நகர்ந்தீர்கள்..
நாக்கை துறுத்திய படி நீ ஆட.. உன் சக தோழர்களும் அப்படியே ஆட....ங்கொத்த டே நல்லா குத்துடா... என நீ பறை தோழர்களை நோக்கி விசிலடித்து ஆடினாய்.... தன் கையில் இருப்பது ஆதிதமிழனின் பறை என்பது அறியாது , அது ஆலயங்களில் இருந்து தூக்கி எறியபட்டது அறியாது அவனும் அடித்தான்... மேற்கு தொடர்சி மலை அடிவாரம் தொட்டு அது எதிரொளித்தது..
உன் பின்னால் சிலர்.... வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்திருந்தார்கள்... பாவம் அவர்களுக்கு வீரசிவாஜி டி ஷர்ட் கிடைக்கவில்லை. நெற்றியில் காவி செந்தூரம் இல்லை. வேர்வை கூட வராமல் நடந்து வருகிறார்கள்.
முன்னாடி உங்களில் ஒருவன் கணபதி பப்பா மோரியா என கத்துகிறான்.தொடர்ந்து ஏதோ கத்துகிறான். சாலையின் ஓரத்தில் நிற்கும் பெரும்பாலான கைகள் பிள்ளையாரை வழிபடவே இல்லை. ஏதோ ஒரு மரத்தின் அடியில் இருக்கும் பிள்ளையாரை கூட கும்பிட்டபடி வாகனத்தில் செல்பவர்கள் தான் அவர்கள்... ஆனால் உங்களை ஏதோ ஒரு பூச்சியை போலவே பார்த்தார்கள்.
உங்களை கடந்து சென்றேன்... நேற்றைய பயணம் முழுவதும். பிறகு மாலை கலவரம் கைது என்றதும் பார்த்தேன்... அந்த வெள்ளை வேட்டியோ சட்டைகள் இல்லை. அவர்களுக்கு பின்னால் கொஞ்சம் வெள்ளை நிறத்தில் ஏசி காரில் வந்தவர்களோ ஒருவர் கூட இல்லை... அந்த கைதில்.... ஒரு ஸ்டேஷன் வாசலில்.. அந்த பிளாஸ்டிக் பறைகள் புடுங்கி வைக்கப்பட்டு இருந்தன... சிலர் அமர்ந்திருந்தார்கள்...
தாத்தா ரெட்டமலையில் தொடங்கி அம்பேத்கர் வழியாக பெரியார் சொன்ன எதுவும் உனக்கு வந்து சேரவில்லை என புரிந்தது... எப்படியும் இந்நேரம் உன்னை வெளியே எடுத்திருப்பார்கள் கூடுதலாக ஒரு இருநூறு கிடைத்திருக்கும். இனி அடுத்த ஆண்டு நீ தேவைப்படுவாய்.... காத்திரு இளைஞனே.
சாதீய கொடுவாள்கள் கொத்தாது இருந்தால்.. அடுத்தாண்டும் நீ ஆடு... உன்னை முன்னால் விட்டு அவர்கள் பின்னால் ஆடுவார்கள்... அது புரியும் வரை நீ ஆடு...

Tuesday, September 11, 2018

முதல்மரியாதை...

#1
பாரதிராஜாவின் கைவண்ணத்தில் ஹிட்டடித்த சிவாஜி படம்....
கடைந்தெடுத்த ஒரு சாதிவெறிப்படம் என்றால் இது தான். படத்தில் ரஞ்சனி ஒரு சக்கிலியப்பெண். தேவர் வகுப்பை சேர்ந்தவர் தீபன். சிவாஜி பெருந்தன்மையாக சாதி பார்க்காமல் திருமணம் செய்து வைத்ததும் ரஞ்சனியின் தந்தை கையெடுத்து கும்பிட்டு கலங்குவதாக வரும் காட்சி. இந்தக்காட்சியில் பாரதிராஜா என்கிற கலைஞனைவிட பாரதிராஜா தேவர் தான் மனதில் வந்தார்.
அப்புறம் அந்த வடிவுக்கரசி. ராமாயணக்கூனி போல் சித்தரிக்கப்பட்ட கேரக்டர். வடிவுவின் நிலையை நினைத்துப்பாருங்கள். பருவகாலத்தில் வடிவு சத்யராஜை காதலிக்கிறார். காதலுக்காக இணைகிறார்கள். வடிவு கர்ப்பமாகிறார். ஒரு வைத்தியரிடம் செல்ல வைத்தியர் வடிவுவின் அப்பாவிடம் பொட்டுக்கொடுக்கிறார். சத்யராஜ் அவரை வெட்டிவிட்டு ஜெயிலுக்கு போகிறார். அரிவாளும், ஆத்திரமும் அந்த பகுதிக்கு புதிதல்ல.
'மந்தையிலே நின்னாலும் வீரபாண்டி தேரு' எனச்சொன்னதற்காகவும், கைகழுவி மீன் குழம்பு சோறு கொடுத்ததற்காகவும் சிவாஜி ராதாவுக்காக அரிவாளை தூக்கியது நியாயமென்றால் தன் உடலையே கொடுத்த காதலிக்காக சத்யராஜ் வைத்தியரை வெட்டியதில் என்ன அநியாயம் இருக்கிறது? ஜெயிலிலிருந்து வந்தாலும் காதலியையும், மகளையும் பார்க்க வருகிறாரென்றால் எத்தனை காதல் இருக்கவேண்டும்.
வடிவுவின் நிலையோ காதலன் சிறையில்.. தந்தை தன் பேச்சை கேட்காமல் ஒரு ஆடு மேய்ப்பவனை(சிவாஜி) திருமணம் செய்துவிட்டாரே என்கிற ஆத்திரம். தன் நிலை அறிந்தும் கட்டிக்கிறானே என்ற வெறுப்பு. இதுவே வடிவுவை சிவாஜி மேல் எரிச்சலடைய வைக்கிறது. மேலும் சத்யராஜ் தொட்ட உடம்பை சிவாஜிக்கு எல்லாம் மறந்தும் கொடுத்துவிடவில்லை. 'புவனா ஒரு கேள்விக்குறி' சுமித்ரா செய்தால் நியாயம். வடிவுக்கரசி செய்தால் அநியாயமா?
வடிவுவின் குழந்தை அருணா. அருணாவுக்கு எல்லாம் தெரிந்த சிவாஜி ஒரு திருடனை மாப்பிள்ளையாக்கவேண்டும்?. தனக்கு பிறக்காததால் தானே. தன் சொந்தக்காரன் தீபன் ஆசைப்பட்டால் ரஞ்சனியை மணமுடித்துவைக்கும் சிவாஜி அருணாவுக்கு திருடனைக்கட்டிக்கொடுப்பாராம். பின் அவரே போலீசை கூப்பிட்டு நியாயத்தை நிலை நாட்டுவாராம்.
இந்தப்படத்தில் சத்யராஜ், வடிவுக்கரசி, அருணா கேரக்டர்கள் தான் மனித உளவியலை பறைசாற்றிய கேரக்டர்கள்.....
#2
இந்த சிறுக்கிமவ ஒரு தப்பு பண்ணிப்புட்டேன்...
இல்லேன்னு சொல்லல....
ஒரு நாள்.... ஒரு பொழுது...
ஒருத்தனோட படுத்து எந்திரிச்சேன்...
வயத்துல ஒரு புள்ளயோட வந்தேன்...
அதுக்காக உன் தலையில கட்டிவச்சு
எனக்கு ஆயுசு பூராவும் தண்டனையா....
இந்த வசனம் முதல்மரியாதை படத்துல... வடிவுக்கரசிங்கிற வில்லி காரக்டர் சொல்றது... நடிகர் திலகம் சிவாஜி தான் ஹீரோ..
இந்தப்படத்துல வெள்ளையும் சொள்ளயுமா சிவாஜி பந்தாவா பண்ணையார் மாதிரி வலம் வந்தாலும் அவர் மனசுக்குள்ள ஒரு ஆறாத சோகம் இருந்துகிட்டேயிருக்குறமாதிரி தான் கதைக்கரு அமைஞ்சிருக்கும்... எப்பப்பாத்தாலும் நொய்நொய்யின்னு வடிவுக்கரசி தன் புருசனை வஞ்சி கிட்டேயிருக்குறமாதிரியும்.. இவர் பரம பொறுமைசாலியா எல்லாத்தையும் சகிச்சிகிட்டு அதை கண்டுக்காம வர்றது மாதிரியும் தான் திரைக்கதை அமைச்சிருப்பாங்க.... ரசிகர்கள் எல்லாருக்கும் சிவாஜிமேல அனுதாபமும்... வடிவுக்கரசி மேல கோபமும் தான் வரும்...
இந்த படம் ரிலீசாகி கிட்டத்தட்ட முப்பது வருசம் ஆகப்போகுது... இதுநாள் வரைக்கும் முன்று தலைமுறை ஆட்கள் இந்த படத்தை பாத்துருப்பாங்க... ஆனா எல்லாருடைய பார்வையிலும் சிவாஜி தான் ஹீரோ... வடிவுக்கரசி கொடுமைக்கார வில்லி... அதைத் தாண்டி ஏன் எதுக்குங்கிற ரீதியில யாரும் சிந்திச்சிருப்பாங்களானனு தெரியல.... ஏன்னா மேலாப்புல பாத்தா அப்படித்தான் தெரியுது... இதை நியாயப்படுத்துறமாதிரி தான் பின்னணி இசையும் இயக்குநர் ஆலோசனைப்படி இளையராஜாவும் அமைச்சிருப்பாரு... சிவாஜியைக் காட்டும் போது பரிதாபம் ஏற்படுத்தக் கூடிய சோக இசைப்பின்னணி... நம்மளயும் அப்படித்தான் ஃபீல் பண்ண வைக்கும்....
கதைப்படி வடிவுக்கரசி ஒரு நாட்டாமையோட மகள்... பிறந்ததிலிருந்து செல்வச்செழிப்புடன் வாழ்ந்து வந்திருப்பா... ஒரு நாள் திருவிழாவுக்கு போயிருந்தப்ப.. அங்க ஆண்ட்டி ஹீரோ சத்யராஜ் இவரை கரெக்ட் பண்ணி எல்லாம் முடிஞ்சிருக்கும்... கிராமத்துப் பெண்ங்கிறனாலயும்... காதல் காமம் கருவுறுதல் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லததாலும் பருவத்தில் இயற்கையாகவே ஏற்பட்ற சலனத்தினாலும் தான் அந்த சூழ்நிலைக்கு பழியாகியிருப்பாங்க... அது சரின்னும் சொல்ல முடியாது தப்புன்னும் சொல்லமுடியாது...
பரம்பரை கௌரவம் அதுயிதுன்னு பல காரணங்களுக்காக அதை மறைச்சு தன் மருமகன் சிவாஜிக்கு வடிவுக்கரசியை கல்யாணம் பண்ணிய கையோட வடிவுக்கரசியோட அப்பனும் போய்ச் சேர்ந்துருவாப்ல... ஆனா கல்யாணம் பண்ணின நாள்ளயிலுருந்து கிட்டத்தட்ட இருபது வருசத்துக்கும் மேல தன் தாலிகட்டின மனைவி கிட்ட படுக்கையை பகிர்ந்துருக்கமாட்டாரு... சிரிச்சும்பேச மாட்டாரு... அது அந்தப் படத்துல நான் மொத பாராவில சொன்னவடிவுக்கரசி டயலாக்குக்கு அப்றம் சிவாஜி பேசறதுலயே தெரியும்...
தான் அறியாத வயசுல அந்த செயலுக்காக... தன்னோட வாழ்க்கை முழுவதும் கலவியின்பத்துல இருந்து தள்ளி வைக்கப்பட்டு... கணவன்ங்கிற அந்த ஒரு ஜீவன் கிட்ட யிருந்து ஒரு மனம் கனிந்த பேச்சும் இல்லாம ஒரு எந்த ஒரு மனைவியுமே இருந்தா... இது மாதிரி தானே நடந்திருப்பா... இது உளவியல் ரீதியான ஒரு பாதிப்பு தானே... அப்புறம் எப்படி வடிவுக்கரசி நெகட்டிவ் கேரக்டர் ஆவார்....
நியாயமா பாத்தா இந்தப்படத்துல சிவாஜி அமைதியா ஆர்ப்பாட்டம் இல்லாம இருந்தாலும் சிவாஜி காரக்டர் தான் வில்லன் காரக்டர்... சாடிஸ்ட் காரக்டர்... தன் மாமனார் கால்ல விழுந்ததுக்காக இருபது வருசம் செருப்பே போடாம நடக்குற பாமரத்தனமான காரக்டர்... தன் மாமனாருக்காக குழந்தையோட இருக்குற பெண்ணை கல்யாணம் பண்ணினாலும்... அதையே காரணமா வச்சு அவளோட வாழ்க்கைய வாழா வெட்டியா ஆக்கி... அவளையும் சந்தோசமா வாழவிடாம... தானும் சந்தோசமா வாழாம... மனைவியை மனஉளைச்சல்ல பதற்றமான சூழ்நிலையிலேயே வாழ வச்சு... அதனால தானும் மனஉளைச்சலுக்கு ஆளாகி... சோகத்துல ஆலமரத்துக்கு அடியில ஒக்காந்து கிட்டு...பூங்காத்து திரும்புமா... ஏம்பாட்டவிரும்புமா.. எனக்கொரு தாய் மடி கிடைக்குமான்னு ஃபீல் பண்ணிட்ருப்பாரு....
தன் மனைவியின் நிறைகுறைகளை மன்னிச்சு.. அவ கூட வாழ்ந்திருந்தா இவருக்கு வடிவுக்கரசி மடியே போதுமாக இருந்திருக்குமே.. தாய் மடி தேவைப்பட்ருக்காதே....
இவரு சோகத்துல இருக்கும் போது... இவர் சோகத்துக்கு வடிகாலா மீன்காரி ராதா மேல காதல் அரும்புமாம்... இவரு மனசு விட்டு சோகராகம் பாட.... பதிலுக்கு மீன்காரி எசப்பாட்டுபாட... ரெண்டு பேரும் பார்வையாலயே காதல் பண்ண... அந்த காதலே ஒரு திருப்பு முனையா காட்டிருப்பாங்க... ஆனாஊனான்னா புருசனை வய்யிற வடிவுக்கரசி தன் புருசனோட அந்த காதலை அரசல் புரசலா காதுக்கு வந்துதும்.. ராதா வௌக்கமாத்தால அடிக்கபுறப்பட்றது கூட தன் புருசன் மேல தான் வெளிக்காட்டாம உள்வச்சிருக்குற அதீத காதலின் விளைவாக ஏற்படும் பொசசிவ்நஸ் தான்...
ஆனா பருவத்துலயே சலனப்பட்டு வழுக்கி விழுந்தஅந்த பணக்கார திமிர் பிடிச்ச வடிவுக்கரசி காரக்டர்... அதுக்கப்புறம் தன் புருசன் தன் கூட படுக்கமாட்டேங்கிறான்ங்கிறதுக்காக வேற ஒருத்தன் கூட காதலோ காமமோ பகிர்ந்துகிட்ட மாதிரி கதையில இருக்காது... அப்டீன்னா... நியாயமா பாத்தா... வடிவுக்கரசி தானே பெஸ்ட் இந்த படத்துல...
செம்பு நிறைய காப்பித்தன்னியும்... நகை நட்டு உடம்பு பூராவும் போட்டு.. வயிறு நிறைய கவிச்சிச்சோறு தின்னுட்டா... ஒரு பெண் சுகபோகமா வாழ்ந்துருவாளா.. அவ மனதிலும் ஆசாபாசங்கள்.. அன்பு பாராட்டுதல்கள்... காதல் சிந்தனைகள் தோன்றாதா..
என்னை்ப் பொறுத்தவரையில் ஏதோ ஒரு சித்தாந்தத்தில் பலத்த பெண்ணடிமைத்தனத்தைத்தான் இந்தப் படம்போதித்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்வேன்.. இ்ன்னொருவன் தொட்டுட்டா கெட்டுப் போனவ ங்கிற அவளை தொட்டா கூட பாவம் ங்கிற கேவலமான சித்தாந்தைத்தை ஆணித்தரமா சொல்லுகின்ற படம் தான் இது...
திரு.செல்வராஜ் அவர்களின் கதையில் பாரதிராஜாவின் இயக்கத்தில் வந்த பெண்ணடிமை போதிக்கும் இந்த படம் 1985ம் வருடத்திய தமிழ் மொழியில் சிறந்த படத்திற்கான தேசிய விருதினை வென்றது என்பதும் வருத்தத்துடன் குறிப்பிடத்தக்கது...

Friday, September 07, 2018

அகத்தியருக்கு ஏன் கமண்டலமுனி என்று பெயர் வந்தது என்ற கேள்விக்கான பதில்.

அகத்தியருக்கு ஏன் கமண்டலமுனி என்று பெயர் வந்தது என்ற கேள்விக்கான பதில்.
இப்போது நீங்கள் ஒரு முப்பதாயிரம் துவாபரயுகம் முன்னோக்கி அழைத்து செல்ல போகிறேன். டிக்கெட் எல்லாம் எடுக்காதவங்க எடுத்துக்கோங்க...
அந்த நாள் சிவனுக்கு திருமணம். பார்வதியுடனான திருமணம். அப்போது நமது பிரம்மா தான் புரோகிதராக இருந்தார். அவரை நல்லவர் என்று எண்ணி அழைத்து வந்தவர்களுக்கு நல்ல வேளையை செய்து காட்டினார் பிரம்மா.
சிவனும் பார்வதியும் அக்னியை வலம் வரும்போது பார்வதி அந்த பாதகன் இருப்பதை அறியாமல் சேலையை தூக்கி பிடித்து சென்ற போது பிரம்மா கீழே உட்கார்ந்திருந்ததால் சேலையின் வழியாக தொடையை தரிசித்தார். தொடையை பார்த்த தருணம் அவரால் அவரை கட்டுப்படுத்த முடியாததால் இந்திரியம் பெருக்கெடுத்தது. அதனை அடக்க முடியாத அவர் தான் கொண்டு வந்திருந்த கமண்டலத்தில் ஒரு சிறு பகுதியை விட்டார். அதில் இருந்து உதித்தவர் தான் நம் அகத்திய முனிவர். கமண்டலத்தில் இருந்து வந்ததால் கமண்டலமுனி என்று அழைக்கப்பட்டார்.
எப்படி விந்து மட்டும் ஒரு குழந்தையை உருவாக்க முடியும் என்று கேட்டாலோ அல்லது புரோகிதம் பண்ண போனவனுக்கு இந்த பொறுக்கி வேலை எதற்கு என்று கேட்டாலோ இந்து விரோதி என்றும் பாவாடை என்றும் தீவிரவாதி என்றும் அன்போடு அழைக்கப்பட்டு நாடு கடத்தப்படுவீர்கள்...
கொசுறு தகவல்: பின்னரும் கட்டுப்படுத்த முடியாத அவர் வெளியேற்றிய இந்திரியத்தில் இருந்து ஒரு அரக்கனும் உருவாகினான். பின்னர் தன் இந்திரியத்தை தா*ரை மலரில் விட அதிலிருந்து சரஸ்வதி உருவாகினார்.
உருவான பின் இன்னும் கட்டுப்படுத்த முடியாத கட்டிளங்காளையாக திமிறிக்கொண்டிருந்த பிரம்மா தன் மகளையே பெண்டாள துணிந்தார். சரஸ்வதி சாத்திரங்கள் சொல்லி அதை தவிர்க்க முயல சாஸ்திராதிபதி பிரம்மா மகளை பெண்டாளலாம் அதில் எந்த தவறும் இல்லை என்பதற்காக ஒரு சுலோகத்தை உருவாக்கி அதனை சொல்லி உஷார் பண்ணி கடைசியில் தன்............
#கமண்டலமுனி
#சரஸ்வதி

Thursday, September 06, 2018

தை தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்

இது தான் 1832 ஆம் ஆண்டின் ஆண்டு விடுமுறைகள்.
ஜனவரி 12,13 - பொங்கல் விழா
ஏப்ரல் 2,11 - பிராமண புத்தாண்டு
2008 ஆம் ஆண்டு , கலைஞரின் திராவிட முன்னேற்ற கழகம், தமிழ்நாடு புத்தாண்டு (அறிவிப்பு) சட்டம் 2008 படி தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜனவரிக்கு மாற்றப்பட்டது.
இந்த மாற்றத்திற்கான சட்டம் அமல்படுத்தப்பட்ட போது, ஏப்ரல் மாதத்தில் புத்தாண்டினைக் கொண்டாடும் வழக்கம் கொண்ட குறிப்பிட்ட சதவிகித தமிழ் இந்துக்கள், குறிப்பாக பிராமணர்கள் இந்த மாற்றத்தினை ஏற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. காரணம், அவர்களது பிராமணீய மனம் அந்த மாற்றத்தினை ஏற்றுக்கொள்ள மறுத்தது. காலம் காலமாக அனுஷ்டிக்கப்படும் பாரம்பரியம் இது என்றும் இது வேதத்திற்கு ஒப்பான உண்மை என்றும் அதனை எவ்வாறு மீற முடியும் என்றும் கூறினர்.
சித்திரையில் இருந்து தைக்கு புத்தாண்டு மாற்றப்பட்டதற்கு 2 காரணங்கள் சொல்லப்பட்டது.
1. இந்த புகைப்படத்தில் இருப்பதே சித்திரைப் புத்தாண்டு பிராமணர்களுடன் தொடர்புடையது என்றும் சமஸ்கிருத பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது என்று நமக்கு உணர்த்துகிறது.
2. தை தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பது தமிழ் இலக்கியங்களின் வழி நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது.

Friday, August 24, 2018

சாதி அறிந்ததினம்

#சாதி_அறிந்ததினம்
5வது படித்துக்கொண்டிருந்த சமயத்தில், நானும், ஜெகதீஸும், பாலாவும், குமாரும் சென்று (எல்லாரும் 5வது வேறு வேறு பள்ளி) 10வது படிக்கும் அண்ணனின் வீட்டிற்கு சென்று விளையாட, அந்த அண்ணனோ நாங்கள் பிள்ளைமார், நீங்கள் என்ன என்று வினவ, எங்களுக்கு என்ன கேட்கின்றார் என்றே புரியவில்லை.
அப்போது வெளியில் உட்கார்ந்து எனது அம்மா, பாலாவின் அம்மா மற்றும் குமாரின் அம்மா அனைவரும் அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர் (அப்போ எதப்பத்தி பேசியிருப்பாங்க? இப்போவாச்சும் சீரியல பத்தி பேசலாம், சரி அத விடுங்க). நேராக சென்றவுடன் நான்தான் முதலில் கேட்டேன், "அம்மா நாம என்ன மார்னு கேட்டேன்" அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
என்னடா கேட்கிறேன்னு சொல்ல, குமார் கேட்டான், இல்லம்மா அந்த அண்ணே ஏதோ மார்னு சொன்னாங்க, நீங்க என்னானு கேட்டாங்கம்மானு சொல்ல, என்னடா சொல்றீங்கன்னு குமார் அம்மா வினவ, உடனே பாலா தெளிவாகச் சொன்னான், அந்த அண்ணே பிள்ளைமாராம், எங்கள என்ன மார்னு கேட்டார்னு.
உடனே அனைத்து அம்மாக்களும் சிரித்து விட்டு, பதில் சொல்ல, அப்போதும் குழப்பம் ஏனெனில் என்னுடைய அம்மாவும், குமாரின் அம்மாவும் மாரில் முடியும்படி பதிலைக் கூற, பாலாவின் அம்மா மட்டும் வேறு ஏதோ பதில் கூறினார், மீண்டும் குழப்பம், பாலா கேட்டான், அம்மா இதுல என்ன மார்னே சொல்லலியேன்னு. பிறகுதான் அவன் அம்மா கூறினார், அது மார் இல்லடா தம்பி, அதன் பெயர் ஜாதி என்று. அப்போதுதான் கொஞ்சம் புரிந்தது.
பிறகு 6வது சேர்க்கையில் அப்ளிகேசனில் எழுதும்பொழுது எனது தந்தை என்னிடம் கூறி கூறித்தான் நிரப்பினார் அந்த விண்ணப்பத்தினை, அதிலும் கேட்டிறுந்தார்கள், அதில் அப்பா வேறு சாதிப்பெயர் போட, நான் குழப்பத்துடன் கேட்டேன் மார்லைல முடியும், நீங்க என்ன ளர் ல முடியுற மாதிரி எழுதுறீங்கன்னு, அப்போதுதான் சொன்னார், இரண்டும் ஒன்னுதாண்டானு, இப்படித்தான் சாதி தெரிய ஆரம்பித்தது.
பிறகு 7வது படிக்கும்பொழுது, இடைவேளை நேரத்தில், சாதியைப் பற்றி அறியவர எனது நெருங்கிய நண்பன் தன்னை '' சேர்வார்" எனக்கூற, இன்னொரு நெருங்கிய நண்பன் அருணாச்சலம் அரண்டு போய், (அந்த நண்பன் வேறுபக்கம் சென்றபிறகு) என்னிடம் ''டேய் செந்திலு சேர்வாரோடு சேரவேண்டாம்னு ஆத்திச்சூடில இருக்குடான்னு" பயமுறுத்த, வீட்டிற்குச் சென்று அப்பாவிடம் கேட்டால், விளக்கமளித்தார், இந்த சேர்வார்ன்றவங்க, முந்தி காலத்துல இராஜாவுக்கு தளபதியா இருந்தவங்கடா, நீ ஆத்திச்சூடில படிச்ச சேர்வார்ன்றது வேற, அது பொய் சொல்றவங்க, ஏமாத்துறவங்கள சொல்றது, ரெண்டும் வேற வேறடான்னு, அதே விளக்கத்தினை அருணாச்சலத்திற்கு அடுத்த நாள் நான் கூற, அதற்குமுன் அவன் வீட்டிலும் இரண்டு திட்டுகளோடு விளக்கம் கிடைக்கபெற்றதனை அறிந்துகொண்டேன்.
இப்படியே சென்றுகொண்டிருந்த எனக்கு சாதிய பிரிவினையால் ஏற்பட்ட இழப்பு என்றால் அது 10வது முடித்து டிப்ளமோவிற்கு விண்ணப்பம் கொடுக்க, என்னை விட கம்மியான மார்க் எடுத்த பையனிற்கு தமிழ்நாடு பாலிடெக்னிக்கில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் கொடுத்திருந்தார்கள், ஆனால் எனக்குக் கிடைக்கவில்லை, என் தந்தையிடம் இதுல ஏதோ மிஸ்டேக் இருக்குப்பா, வாங்க போய் கேட்போம்னு சொன்னபொழுது, விளக்கமளித்தார், அவங்க எஸ் சி கேட்டகரிடா தம்பி, நீ பிசி கேட்டகரி அதுனால உனக்கு சீட் கிடையாதுன்னு.
பிறகு பாலிடெக்னிக் போக அங்கு ஒரே சாதிமயம்தான். சென்று சில வாரங்களில் அங்கிருந்தவர்களின் சாதி தெரியவந்தது. இருந்தாலும் பிரிவினையில்லை. பிறகு படித்து முடித்து வெளியில் வந்தால் அப்போதுதான் இந்த சாதிய விளையாட்டு கொஞ்சம் கொஞ்சமாய் புரிய ஆரம்பித்தது.
பிறகுதான் உணர்ந்தேன் இந்த சாதியமே இந்துத்துவத்தின் முதல் எதிரி என்பதினை.

Monday, August 20, 2018

சென்னை மாநகராட்சி மழை வெள்ளங்கள்

# வெள்ளம்
பல மழை வெள்ளங்கள் சென்னையை தாக்கினாலும் 2015 தவிர மற்ற சமயங்களில் சென்னை மாநகராட்சி சிறப்பாகவே செயல்பட்டதென்று சொல்லலாம். ஆது எந்த திராவிட கட்சியாய் இருந்தாலும் சரி.
புயல் சின்னம் ஏற்பட்டவுடனே கொடியேற்றி மக்களை அலர்ட் செஞ்சு, மாநகராட்சி பள்ளிகளை தயார் படுத்தி, உணவு, மற்றும் தேவையான பொருட்களை சேமித்து, ப்ளீச்சிங் பவுடர், காலரா மாத்திரை, மருத்துவக்குழு என்று பக்காவாக அனைத்தும் தயார் நிலையில் வைத்திருப்பர். எந்த ஏரியாக்களில் தாக்கமிருக்கிறதோ முன் எச்சரிக்கை நடவடிக்கையாய் கரண்ட் கட் பண்ணிவிடுவார்கள்.
பிரதான சாலைகளில் மரம் விழுந்தால் மின்னல் வேகத்தில் அப்புறப்படுத்துவார்கள். லோக்கல் கவுன்சிலர்கள் ஒரு கூட்டத்துடன் சற்றிக்கொண்டே அதிகாரிகளுடன் தொடர்பிலிருப்பார்கள். ஜுலை ஆகஸ்ட் மாதமே சாக்கடை தண்ணீர் போகும் குழாய் அடைப்புகளை எடுத்து விடுவார்கள். இப்படி சுறுசுறுப்பாக பணிகள் பார்த்த சென்னை மாநகராட்சிக்கு சோதனையாய் வந்தது 2015 டிசம்பர் சென்னை மழை வெள்ளம் யாருமே அனுமானிக்க முடியாமல் போனது ஒரு துரதிர்ஷ்டமே. CNN BBC கூட இவ்வளவு பெரிய மழை பெய்யும் என்று சொல்லவில்லை. கடும் மழையால் செம்பரம்பாக்கம் ரொம்பி உத்தரவு சரிவராமல் கோட்டைவிட்டது தான் உயிர் உடமை சேதங்களுக்கு காரணமாய் அமைந்தது.
ஆனால் வெள்ளத்தின்போது சின்ன சின்ன சூப்பர் மார்க்கெட் அநியாய விலை வைத்து அடித்த கொள்ளை அய்யய்யோ. கேவலம். எரியறவீட்ல பிடிங்கின மாதிரி பிடிங்கினாங்க. நம்ம ஜனங்களும் அடுத்தவனும் வாழணும் என்று நினைக்காமல் ஷெல்ப்ல இருந்த அத்தனையும் பில்போட்டு பணத்திமிர்ல அனைத்தையும் அள்ளிக்கொண்டு போனது கசப்பான உண்மை. ஆனால் அதற்கு பிறகு உடனடி உதவி வந்தது, உணவு, பால், தண்ணீர் என்று லாரிகளில் வந்து வீடுவீடாக வழங்கினார்கள். கரண்ட் வரத்தான் தாமதமாகியது. ரேடியோவின் வீச்சும் உதவியும் அப்போதுதான் பலருக்கு தெரியவந்தது. பிறகு மாநில மத்திய போர்கால நடவடிக்கையில் சென்னை மீண்டது.
அனைவர் முகத்திலும் ஸ்மைல் "ஸ்டிக்கர்😁😂" அனைத்தும் சுபமே.
உங்க அனுபவம் என்னவோ.

ஜெயிச்ச பீலிங். பட் தோத்த மாதிரியும் இருக்கு.

நான் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். பி.எஸ்.சி. கணிதம் எடுத்து அதில் 80 விழுக்காடு மதிப்பெண் மேல் எடுத்து தேர்ச்சி பெற்றேன். அப்போது குரூப் 4 போட்டி தேர்வில் கலந்து கொண்டு ஆர்.ஐ வேலைக்கு செலக்ட் ஆனேன். ஏனோ என் மனம் அரசாங்க வேலைக்கு செல்ல பணிக்கவில்லை. கணிதம் என் அறிவை வேற லெவெலுக்கு முழிக்க வைத்திருந்தது. வீட்டில் மிக்க வறுமை. வெத்தலை பாக்கு கடை வைத்திருந்தார் என்னுடைய அப்பா. அன்றாடம் செலவுகளுக்கே மிகவும் கஷ்டம். கெஞ்சி கூத்தாடி சாப்பிடாமல் இருந்து அஹிம்சை மூலியமாக அப்பாவை இருக்கிற கடையை விற்று ஈரோடு கல்லூரியில் எம்.சி.ஏ சேர்ந்தேன். மூன்று வருட படிப்பு. மிகவும் கஷ்டப்பட்டு இஷப்பட்டு படித்தேன். ஆங்கிலம் கொஞ்சம் தடுமாற்றம் தான். என்னுடைய அம்மாவின் மாமா மும்பையில் உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்று இருந்தார்.அவரிடம் போன் செய்து வேலைக்கு உதவுமாறு கேட்டேன். அவரும் வர சொல்லி விட்டார். மிகவும் குஷியாக சென்றேன்.மும்பை பழக்கம் இல்லாததால் அவர் வீட்டிலேயே தங்க சொன்னார். சென்ற 10 நாட்களில் டாடா கம்பெனியில் வேலை கிடைத்து. கை நிறைய சம்பளம். நான் வேறு வீடு எடுத்து இருப்பதற்கு மறுப்பு சொன்னார். என் அப்பா அம்மாவை கூடி வர திட்டம் வைத்திருந்தேன். அவர்கள் பட்ட கஷ்டங்களை நான் அறிவேன். மும்பையில் 10 மாதம் அட்வான்ஸ் கொடுக்க வேண்டும். கொஞ்ச நாள் போகட்டும் என்று காத்து இருந்தேன். 
என் அம்மாவின் மாமாவுக்கு மகள் வழி பேத்தி இருந்தாள். வார வாரம் நான் தங்கி இருந்த தாத்தா வீட்டிற்கு வருவாள்.பார்க்க நம்ம ஊரு நார்த் இந்தியா ஹீரோயின் மாதிரி இருப்பாள். நான் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தேன். இருந்தாலும் இளமை அழகு அவள் மேல் ஈர்ப்பு கொள்ள செய்தது. அவர்கள் வீட்டிலும் நாங்கள் பழகுவதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை.என் அப்பா அம்மாவை கூட்டி வருவதை தற்காலிகமாக ஒத்தி வைத்து அவளுடன் ஆவலுடன் சுற்றினேன். திருநெல்வேலி பையனுக்கு இதெல்லாம் ரொம்ப புதுசு. அம்மாவிடம் அவளை திருமணம் செய்ய கேட்குமாறு கேட்டேன். எல்லோரும் சரி சொல்லி கல்யாண நாளும் குறிக்க பட்டது. அப்போதே கல்யாணத்துக்கு அப்புறம் தங்க மீண்டும் வீடு பார்த்தேன் - அப்பா அம்மாவை கூட்டி கொண்டு வந்து விடலாம் என்று நினைத்தேன். தாத்தா மற்றும் மாமா அத்தை - இப்போது என்ன அவசரம் கல்யாணம் முடியட்டும் என்றார்கள். 
கல்யாண நாள் நெருங்கியது. மும்பையில் அவர்கள் நம்ம ஊரில் மாப்பிள்ளைக்கு கொடுக்கும் மரியாதை துளி கூட கொடுப்பதில்லை. வேலைக்கு சேர முதல் நாள் அவர்கள் வீட்டில் எப்படி பணிவாக இருந்தேனோ அதே போல் தான் நடத்தினார்கள். கல்யாணம் பேசி முடித்த பிறகும் அவ்வாறு நடத்துவது எனக்கு வித்யாசமாக பட்டது. அவள் அப்பாவோடு இது சம்பந்தமாக பேசினேன். அவர் உன் தகுதிக்கு என் மகளை கொடுப்பதே பெரிய விஷயம் என்ற அர்த்தத்தில் பேசினார். 
எனக்கு தூக்கி வாரி போட்டது. அவளை மிகவும் பிடிக்கும். ஆனால் சுய மரியாதை அவசியம் என்று நினைத்தேன். கல்யாணம் முடியட்டும் அவள் என்னவள் ஆகி விட்டால் இவர்கள் யார் நமக்கு என்று எனக்கு நானே சமாதானம் செய்தேன். இருந்தாலும் புகைச்சல் ஆரம்பித்து விட்டது. கல்யாண வீட்டிலும் எதிரொலித்தது. நாங்கள் யாரும் மதிக்க பட வில்லை. கல்யாணம் முடித்து மீண்டும் மும்பை சென்றேன். சென்ற ஒரே வாரத்தில் வீடு பார்த்து நண்பனிடம் கடன் வாங்கி வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்தேன். மனைவியை வா போகலாம் என்று கூப்பிட்டேன்.அவள் எங்கு என்றாள். நம் வீட்டுக்கு என்றேன். இது தான் நம் வீடு. நாம் இங்கேயே இருக்கலாம் என்றாள். 
சண்டை ஆரம்பம் ஆனது.ஏற்கனவே கல்யாணத்தில் எங்கள் வீடு ஆட்களை உதாசீனப்படுத்தியது எல்லாம் சேர்ந்து அவளை நான் பார்த்த வீட்டுக்கு வந்தே ஆக வேண்டும் என்று கட்டாய படுத்தினேன். என் பெற்றோர்களும் என் மீது சந்தேகம் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.அவர்களை நான் கவனிப்பேனா மாட்டேனா என்று. ஏனெனினில் நான் சம்பளம் வாங்கியது முதல் அவளுக்கே எல்லா செலவுகளையும் செய்திருந்தேன். 
1 மாதம் பல்லை கடித்து வாழ்ந்தேன். மனம் புரட்டி போட - வாழுகிற வாழ்க்கை நரகமாய் தோண - போட்ட சட்டையுடன் தனியாக மீண்டும் திருநெல்வேலிக்கே வந்து விட்டேன். அப்பா அம்மாவுக்கு தெரிந்து விட்டது. கல்யாணத்திலேயே அவர்களுக்கு யூகிக்க முடிந்தது. பையன் தங்களுக்காக வாழ்க்கையை தியாகம் செய்து வந்து விட்டான் என்று. வீட்டோட மாப்பிள்ளையாக இருந்தால் இருந்துருக்கலாம். ஆனால் உறவுகள் முக்கியம் என்று வந்து விட்டேன். நான் அவர்கள் தாத்தா வீட்டில் இப்போது கண்டிப்பாக சமாதானம் பேச வருவார்கள் என்று நினைத்தேன். 2 வருடம் ஓடியது. டிவோர்ஸ் நோட்டீஸ் தான் வந்தது. விழுந்து அடித்து ஓடினேன். அவளை பார்த்து சேர்ந்து வாழ வேண்டும் என்று கெஞ்சினேன். பிரிந்தது சேர தான் ஒழிய நிரந்தமாக அல்ல என்றேன். அவள் ஏளனமாக என்னை பார்த்து ஒதுங்கி போய் விட்டாள். 
ரிஜெக்ஷன் - மிக கொடுமை. அதோடு நான் ஒரு ஆணே இல்லை என்ற ரீதியில் பொய்கள் பரப்ப பட்டது. பரப்பியது அந்த பெண்ணின் அப்பா அம்மா. நெஞ்சம் வலித்தது. மீண்டும் 2 ஆண்டுகள் ஓடியது. நண்பர்கள் பெற்றோர் எல்லோரும் டிவோர்ஸ் செய்து விடு என்று வலியுறுத்த அவளுடைய ஏளன பார்வையும் ஏளன பேச்சுகளும் வெறியேற்ற டிவோர்ஸ் கையெழுத்து போட்டு விட்டேன். ஆணே இல்லை என்ற பேச்சு பரவலாக பேசப்பட அதை உடைப்பதற்காகவே மறு திருமணத்திற்கு சம்மதித்தேன். இப்போது எங்கள் ஊரு பெண்ணொருத்தியை திருமணம் செய்து 2 குழந்தைகளோடு வாழ்கிறேன். 
ரிஜெக்ஷன் - மிக கொடுமை. மன வேதனையில் செய்கிற சாப்ட்வேர் வேலையில் கவனம் செலுத்தினேன். இன்று எங்கள் உறவினர்களில் விரல்ஐ விட்டு என்னும் பணக்காரர்களில் நானும் ஒருவன். போன வாரம் வைட் இன்னோவா டூரிங் ஸ்போர்ட் 28 லட்ச ருபாய் காரில் சொந்த ஊர் கோயில் விழாவுக்கு சென்றேன். முன்னாள் மாமாவும் அத்தயும் ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். எங்களை காரை குடும்பத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்து சென்றார்கள். அவள் மகளுக்கு வரன் பார்த்தார்கள். ஒன்றும் அமைய வில்லை. ஜெயிச்ச பீலிங். பட் தோத்த மாதிரியும் இருக்கு.

Friday, August 17, 2018

கார்கில் நாயகன் என சங்கிகள் பிதற்றுகிறார்கள்

கார்கில் நாயகன் என சங்கிகள் பிதற்றுகிறார்கள்
கார்கில் போரின் வரலாறு தெரியுமா இவர்களுக்கு
நாட்டின் எல்லையை காக்கும் இராணுவ வீர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கி அதாவது கடும் குளிர் காலம் வரும் போது அதனை எதிர்கொள்ள போதிய வசதியை ஏற்படுத்தி தராத காரணத்தால் இராணுவ வீரர்கள் எல்லையை விட்டு (மலை பிரதேசம் ) விலகி நாட்டிற்குள் தஞ்சம் புகும் நிலையை ஏற்படுத்திய அன்றைய பாஜகவின் வாஜ்பாய் அரசின் கவன குறைவாலும் திறம்பட செயல்படாத நிர்வாக திறனையும் நன்கு அறிந்த பாகிஸ்தான் அரசு நம் எல்லையில் ஊடுருவினர் அதன் பின்னர் சில மாதங்களாக இதனை அறியாத மத்திய பாஜக அரசிடம் ஒரு ஆடு மேய்க்கும் தொழிலாளி கூறிய பின்னர் சுதாகரித்து கொண்ட மத்திய அரசு நிலத்தை கையகபடுத்த வேறு வழி இன்றி பல ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதார நிலையை மேம்படுத்தி வந்த முந்தைய காங்கிரஸ் அரசின் கஜானாவில் இருந்த பல ஆயிரம் கோடிகளை செலவழித்தும் காஷ்மீரத்து நிலத்தை பாகிஸ்தான் அரசிடம் இருந்து மீட்டனர்
அன்றைய கவனக்குறைவும் திறனற்ற பாஜகவின் நிர்வாகத்தாலும் நாம் இழந்தது இந்திய அரசின் வளர்ச்சியில் பெரும் சரிவு ...
இதனை அறியாத சங்கிகள் வரலாற்றை வெறும் சுண்ணாம்பு கொண்டு அடைக்க முயல்கின்றனர் ...
வரும் கால சந்ததிகள் இந்த வரலாற்றை அறியும் போது கோமியத்தை கொண்டு கழுவினாலும் நாற்றம் தான் எடுக்கும் என்பதை சங்கிகள் மறவ வேண்டாம் 

இந்த அய்யப்பன் எங்கே போனான்

நான் தெரியாமல் தான் கேட்கிறேன்
பெண்கள் கோவிலுக்குள் போக கூடாது என்று சொன்ன பார்பன நம்பூதிரிகள் வீட்டிற்குள் தண்ணீர் போகாமல் அய்யப்பன் புலியின் மீது வந்து பந்தோபஸ்த்து கொடுத்தானா
அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து ஜால்ரா தட்டி மேல் ஜாதி இந்துக்கள் என்று சொல்லி கொள்ளும் நாயர் வீடுகளுக்குள் தண்ணீர் போகாமல் அய்யப்பன் அனை கட்டி தடுத்தானா
இயற்கை கொஞ்சம் அதிகமாக மழை பெய்து வருகிறது அவ்வளவு தான் அதற்கு அய்யப்பன் தான் காரணம் என்றால் ஜாதியை காட்டி இந்த ஜாதி மக்கள் இவ்வளவு தூரத்தில்இருந்து சாமி கும்பிட வேண்டும் என்று சொல்லி பெரும்பான்மை மக்களை வெளியே நிறுத்தியது யார் அய்யப்பனா ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் அய்யப்பன் கோவிலில் நம்பூதிரியை தொடாமல் பிரசாதம் வாங்கி கொள்ளவும் என்று இன்றும் தீண்டாமை வெறி கொண்டு மக்களை இழிவு படுத்தும் செயலை செய்வது யார் அய்யப்பனா
இன்னும் பெண்களுக்கு பல்வேறு கொடுமைகள் செய்தது தான் பார்பனியம்
உடன்கட்டை ஏற்றியது
மொட்டை அடித்து மூளையில் உட்கார வைத்தது
நம்பூதிரி பார்பனியத்திற்கு முன்னாள் பெண்கள் மாராப்பு போடக்கூடாது என்று சொல்லி கொடுமை படுத்தியது
தேவதாசி முறையை பயன்படுத்தி பெண்களை போக பொருளாக்கியது
அப்போதெல்லாம் இந்த அய்யப்பன் எங்கே போனான் பெண்களின் துன்பம் தெரியவில்லையா ???

Thursday, August 16, 2018

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், கலைஞரை மெரினாவில் அடக்கம் பண்ண அனுமதித்திருப்பாரா......?

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்,
கலைஞரை மெரினாவில் அடக்கம் பண்ண அனுமதித்திருப்பாரா......?
கிழவனுக்கு இழுத்துட்டு இருக்குன்னு தெரிஞ்சதுமே, மெரினாவில் இனி யாரையும் அடக்கம் பண்ணக் கூடாதுன்னு அவசரச்சட்டம் கொண்டு வந்திருப்பார். ராஜாஜீ ஹாலில் ஒரு மாதத்துக்கு அரசு பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்திருப்பார்.......
அடக்கம் பண்ண இடம் கிடைக்காமலும்,
பொது மக்கள் அஞ்சலி செலுத்த இடம் கிடைக்காமலும் செய்திருப்பார்.......
திமுகவினர் வழக்குப் போட்டாலும்,
அதை இழுத்தடித்து பிணத்தை நாறடித்திருப்பார்....
இப்படி ஒரு அதிமுக நண்பர் பதிவிட்டிருந்தார்......
முதலில் அவரை நாம் மனதார பாராட்ட வேண்டும், அம்மையாரின் உண்மையான குணாதிசயங்களை அப்படியே பொதுவெளியில் ஒளிவுமறைவில்லாமல் சொன்னதற்காக.........
அடுத்ததாக,
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதற்கேற்ப,
அம்மையார் ஜெயலலிதா உயிரோடிருந்திருந்தால், இந்நேரம் உடன்பிறவா சகோதரி சசிகலாவுடன் பெங்களூரு சிறையில் பல்லாங்குழி ஆடிக் கொண்டிருப்பார் என்பதை மறந்தே போய் விட்டார் அந்த அதிமுக நண்பர்......
எல்லாவற்றுக்கும் மேலாக,
ஒருவேளை ஜெயலலிதா உயிரோடிருந்து,
சிறையில் கம்பி எண்ணாமல் முதல்வராக இருந்திருந்தால், கலைஞரின் உயிரற்ற உடலைப் பார்த்து அவரது மனைவி, மக்கள், பிள்ளைகள், பேரன், பேத்திகள் என அவரது குடும்பத்தார் கதறியழுததைப் பார்த்து, இப்படி ஒரு அன்பான அழகான பாசமான குடும்பம் நமக்கும் இல்லையே என்ற ஏக்கத்திலேயே புழுங்கித் தவித்து மனம் வெந்து நொந்து போயிருப்பார்........

வாஜ்பாய் தீவிர மதவெறியர்

‘ஜென்டில்மேன் வாஜ்பாய்’ என்று சில தமிழ் நாட்டு தலைவர்கள் அவரைப் புகழ்ந்தாலும் வாஜ்பாய் தீவிர மதவெறியர் அவரது வரலாறு.
சில சான்றுகள்:
1. பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் லக்னோவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வாஜ்பாய் இவ்வாறு பேசினார்:
“நாளை அயோத்தியில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. கூரிய கற்கள்மீது அமர்ந்து கொண்டு, பக்திப் பாடல்களைப் பாட முடியாது. மண்ணைச் சமன்படுத்தி அமர்வதற்கு ஏற்றபடி சமன் செய்ய வேண்டும்.
” இதன் பொருள் என்ன? மசூதியை இடித்து தரைமட்டமாக்கி சமன் செய்ய வேண்டும் என்பதுதானே!
மசூதி இடிப்புக்குப் பிறகு, ‘அவுட் லுக்’ பத்திரிகை அவரை சந்தித்து இந்தப் பேச்சு பற்றி கேட்டது. “நான் பேசியது உண்மைதான். அது நகைச்சுவைக்காக பேசப்பட்டது” என்றார், வாஜ்பாய்.
அடுத்த மதக்காரர் வழிபாட்டுத் தலத்தை இடித்து ‘சமன் செய்ய’ சொல்வது வாஜ்பாய்க்கு நகைச்சுவை பேச்சு போலும்!
2. குஜராத்தின் மோடி ஆட்சி 2002இல் இஸ்லாமியர் இனப்படுகொலையை நடத்தியபோது அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன், பிரதமர் வாஜ்பாயுடன் அவசரமாக தொடர்பு கொண்டு, உடனே குஜராத்துக்கு இராணுவத்தை அனுப்பி, கலவரத்தைத் தடுக்க வேண்டும் என்று கேட்டார். வாஜ்பாய் அந்தக் கோரிக்கையை உதறித் தள்ளினார்.
3. பிரதமராக இருந்தபோது அமெரிக்காவுக்கு பயணம் போனபோது அங்கு ஸ்டேட்டன் தீவில் விசுவ இந்து பரிஷத் நிகழ்ச்சியில் பேசும்போது இப்படி கூறினார்:
“ஆர்.எஸ்.எஸ்.சில் இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். இப்போது எங்கள் ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை. இருந்திருக்குமானால் அயோத்தியில் இராமர் கோயிலைக் கட்டியிருப்போம்” என்று பேசினார்.
4. ஆர்.எஸ்.எஸ். அதிகாரபூர்வ ஏடான ‘ஆர்கனைசரில்’ வாஜ்பாய், ‘ஆர்.எஸ்.எஸ். என் ஆன்மா’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார் (7.5.1955). அதில் முஸ்லிம்களை வழிக்குக் கொண்டு வர மூன்று வழி முறைகளை முன் வைத்தார்.
இந்துக்களை அணி திரட்டி, முஸ்லிம்கள் அடை யாளங்களை இழக்கச் செய்து அவர்களையும் செரிமானம் (Assimilation) செய்ய வேண்டும் என்றும், முஸ்லிம்கள் இதற்கு ஒத்து வரா விட்டால், நாட்டின் ‘குடிமக்கள்’ என்ற நிலையி லிருந்து ஒதுக்கிட வேண்டும் என்றும் எழுதினார்.
5. மோடியின் குஜராத்தில் டாங்கல் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மதவெறியர்கள் கலவரம் செய்தபோது அங்கு நேரில் பார்வையிடச் சென்ற பிரதமர் வாஜ்பாய், கலவரத்தைக் கண்டிக்கவில்லை. மாறாக, மதமாற்றம் பற்றிய தேசிய விவாதம் தேவை என்று விவாதத்தைத் தொடங்கி வைத்தார்.
6. பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக நியமிக்கப்பட்ட லிபரான் ஆணையத்தில் மசூதி இடிப்பு குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர் வாஜ்பாய்.
7. மொரார்ஜி பிரதமராக இருந்த ஜனதா ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டுத் துறை அமைச்சராக இருந்தார் வாஜ்பாய். அப்போது யூதவெறி பிடித்த இஸ்ரேல் நாட்டுடன் தூதரக உறவு இந்தியாவுக்கு இல்லை. அதையும் மீறி இஸ்ரேல் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ‘மோஷி தயான்’ என்பவரை ரகசியமாக இந்தியா வுக்கு வரச் சொல்லி சந்தித்தவர் வாஜ்பாய். மோஷி தயான் மாறு வேடத்தில் போலி ‘கடவுச் சீட்டில்’ இந்தியாவுக்கு வந்து, வெளியுறவுத் துறை அமைச் சராக இருந்த வாஜ்பாயை சந்தித்துப் பேசினார். முதலில் மறுத்த வாஜ்பாய், மொரார்ஜி பதவி விலகிய பிறகு சந்தித்ததை ஒப்புக் கொண்டார்.
8. 1942இல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக் கத்தையொட்டி ம.பி. மாநிலம் பட்டேசுவரத்தில் கலவரம் வெடித்தது. இதில் வாஜ்பாய், தனது சகோதரர் பிரேம் பிகார் லால் பாஜ்பாய் என்பவருடன் கலந்து கொண்டார். அப்போது கைது செய்யப்பட்ட வாஜ்பாய், சிறையிலிருந்து தன்னை விடுதலை செய்து கொள்வதற்காக உள்ளூரில் ‘கலவரக்காரர்கள்’ பெயர்களை காவல் துறைக்கு காட்டிக் கொடுத்து விட்டு நீதிபதிக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விடுதலை யானார். (வாஜ்பாய் எழுதித் தந்த மன்னிப்பு கடிதத்தை ‘பிரன்ட் லைன்’ ஏடு ஆவணக் காப்ப கத்திலிருந்து தேடிப் பிடித்து வெளியிட்டது)
வாஜ்பாய் சகோதரர் பீகார் லால் பாஜ்பாயும் ம.பி. அரசே நடத்திய ‘சந்தேஷ்’ எனும் பத்திரிகையில் இது உண்மைதான் என ஒப்புக் கொண்டு கட்டுரை எழுதினார் (12.5.1973 இதழ்).

Sunday, August 12, 2018

கலைஞர் கருணாநிதி தீர்க்கதரிசிதான்......

கலைஞர் கருணாநிதி தீர்க்கதரிசிதான்......

ஆயிரம் விமர்சனங்கள் கலைஞர் கருணாநிதி மீது உண்டு என்றாலும், "அவர் நம்ம ஆளு" என்பதை உணர மறுத்தால் இங்கு மதவாதிகள் உள்ளே வருவதை யாராலும் தடுத்துவிட முடியாது.....

கலைஞர் கருணாநிதியை நான் வியந்து பார்க்கும் இரண்டு சம்பவங்கள் மிக முக்கியமானதாகும்.....

ஒன்று,
அக்டோபர் 2002 ல் ஆன்ரூ தேவாலய கிறிஸ்தவர்கள் கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி பேசும்போது "இந்து என்றால் திருடன்" என்று பேச்சின் போக்கில் அப்படி ஒரு கருத்தைப் பதிவு செய்கிறார். அப்போதைக்கு கடும் விமர்சனங்கள் நாடு முழுக்க எழும்புகிறது. குறிப்பாக, பா.ஜ.க மற்றும் இந்து அடிப்படைவாதிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவர் கலைஞர் தலைக்கு விலைவைத்து தலையைக் கொண்டு வருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கவும் செய்தார்......

மற்றொரு புறம் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இருவர் வழுக்கும் தொடுக்கின்றனர்.  அன்றைய ஜெயலளிதா அரசாங்கம் அதற்கு பல வகையிலும் உதவி புரிந்தன என்பதெல்லாம் நினைவில் கொள்ளத்தக்கவை. இது ஒருபுறமிருக்கட்டும்........

ஆனால், கலைஞர் கருணாநிதி ஆதாரம்-தரவுகள் இல்லாமல் அப்படி பேசமாட்டார் என்பது இந்த முட்டாள்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அனைவரும் வாய்பிளந்து வாய்மூடிக் கொள்ளும்படியாக "விஷ்வகோஷ் தொகுந்த இந்தி அகராதியை" மேற்கோள் காட்டி, இந்து என்றால் திருடன் என்ற பொருளும் உண்டு, நீங்களே! படித்தறிந்து கொள்ளலாம் என்றார். பிறகு வழக்கு நிற்குமா, என்ன? வழக்கு தள்ளுபடியானது என்பது பிற்கால வரலாறு.......

இப்போது, வந்துகொண்டிருக்கும் செய்திகளை உற்று கவனித்தால் இந்து கடவுளைத் திருடியவர்கள் யாவரும் இந்துக்கள் என்பதை உணரலாம். அப்படியானால், கலைஞர் சொன்னது உண்மையல்லவா!......

இரண்டு,
சேது சமுத்திர திட்டம் பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருந்த காலக்கட்டம். 2007 என்று நினைக்கிறேன்.  அப்போது, பா.ஜ.க மற்றும் இந்து அடிப்படைவாதிகள் ராமர்பாலம் என்ற கதையை அவுத்துவிட்டார்கள். கலைஞர் கருணாநிதி என்ன செய்தார் தெரியுமா?.....

17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மனிதன் வாழ்ந்தானாம்....
அவன் பெயர் ராமனாம்....
அவன் கட்டிய பாலம் ராமர் பாலமாம்.... அந்தப் பாலத்தின் மீது யாரும் கை வைக்கக் கூடாதாம்.......
அந்த ராமன் எந்தப் பொறியியல் கல்லூரிக்குச் சென்று படித்து விட்டு வந்து இந்தப் பாலத்தைக் கட்டினான்?.... அதற்கு ஆதாரம் இருக்கிறதா?.....
என்று, கலைஞர் கருணாநிதி கேட்டார்......

யோசித்துப்பாருங்கள் ஆட்சியின் அதிகாரபீடத்தை அடைந்த கலைஞர் கருணாநிதி கேட்டார் என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டியது. அரசு-ஆட்சி-அதிகாரம்- என்பதெல்லாம் எவ்வளவு சமரசங்களுக்கிடையில் இயங்கவேண்டியதிருக்கும் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அந்த சமரசங்களுக்கிடையிலும் கொள்கைநெறி தவறாத தோழர் அல்லவா கலைஞர் கருணாநிதி......

இவரை நாம் விட்டுக்கொடுக்கலாகாது....
இவர் நம்முடையை தோழர்.....

விமர்சியுங்கள் அது உங்கள் உரிமை.....
கைவிட்டுவிடாதீர்கள் பா.ஜ.க கழுகு வானத்தில் வட்டமிடுகிறது.......

Thursday, August 09, 2018

ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்?

ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்?
தமிழீழத்தின் தலைநகராக புலிகளால் சித்தரிக்கப்பட்ட கிளிநொச்சி, சிங்கள இராணுவத்தால் கடந்த ஜனவரியில் தாக்கி அழிக்கப்பட்ட பின்னர் புலிகள் பின்வாங்கி முல்லைத் தீவுக்கு நகர்ந்தார்கள். சிங்கள இராணுவத் தாக்குதலிலிருந்து தப்பிக்க, ஏறத்தாழ 3 லட்சம் மக்கள் புலிகளோடு முல்லைத் தீவு நோக்கி நெடும்பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
இம்மக்கள் கூட்டத்தின் நடுவே இருந்தால் சிங்கள இராணுவம் தங்கள் மீது பாரிய தாக்குதல் தொடுக்காது என்றும், அதையும் மீறி தாக்குதல் தொடுத்தால், மக்கள் கொல்லப்படுவதன் விளைவாக மேலைநாடுகள் தலையிட்டுப் போரை நிறுத்துமாறு சிங்கள அரசை நிர்பந்திக்கும் என்றும் புலிகள் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால், சிங்கள இராணுவமோ, கனரக ஆயுதங்களைக் கொண்டும் பாஸ்பரஸ் குண்டுகளை வீசியும் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றொழித்தது. வாயளவில் கண்டனம் தெரிவித்தற்கு மேல் எந்தவொரு மேலை நாடும் சிங்கள அரசை நிர்பந்திக்கவோ, தலையீடு செய்யவோ முன்வரவுமில்லை.
எந்த மக்களைப் பாதுகாப்புக் கேடயமாக புலிகள் கருதினார்களோ, அந்த மக்கள் சிங்கள இராணுவத்தின் கொடிய போர்த் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தவிக்க, புலிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தக் கையறு நிலையில், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேற ஆரம்பித்தார்கள். புலிகளால் இதனைத் தடுக்கவும் இயலவில்லை. பின்வாங்கும் பயணம் நீண்டு போகப் போக, புலிகள் தமது ஆயுதக் கிடங்குகளையும் பாதுகாப்பு அரண்களையும் கைவிட்டு செல்ல வேண்டியதாயிற்று. எந்த ஆயுதங்களைத் தமது விடுதலைக்கான அச்சாணியாக புலிகள் கருதினார்களோ, அவையெல்லாம் பெருஞ்சுமையாக மாறிப்போயின. சிங்கள இராணுவமோ, நவீன ஆயுதங்களைக் கொண்டு கொடூரத் தாக்குதலை வகைதொகையில்லாமல் கூட்டிக் கொண்டே போனது.
கொரில்லாப் போர் முறையிலிருந்து முன்னேறி, கிரமமான இராணுவத்தையும் வான்படையையும் கட்டியமைத்து வலுவடைந்த புலிகள், பிந்தைய அசாதாரண நிலையை கவனத்தில் கொண்டு, தமது நிலையைத் தக்க வைத்துக் கொள்ளவும், இலட்சக்கணக்கான மக்களைப் பாதுகாக்கவும் இராணுவ ரீதியில் தமது செயல்தந்திரங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டிய தேவை எழுந்த போதிலும் அதனை உதாசீனப்படுத்தினார்கள். கிரமமான படைகளைக் கலைத்துவிட்டு, மீண்டும் தற்காப்பு கொரில்லா போர்முறைக்கு மாற வேண்டிய கட்டாயத்துக்கு புறநிலைமைகள் நிர்பந்தித்த போதிலும், அதை ஏற்க மறுத்தார்கள். மேலைநாடுகள் சிங்கள அரசுக்கு நிர்பந்தம் கொடுக்கும், இந்தியத் தேர்தல் முடிவுகள் போர்நிறுத்தத்தைக் கொண்டு வரும் என்று குருட்டுத்தனமாக நம்பிப் பேரழிவையும் பின்னடைவையும் சந்தித்துள்ளார்கள்.
புலிகள் மட்டுமே தமிழீழத்தின் ஏகபோக பிரதிநிதிகளாகச் சித்தரிக்கப்பட்டு வந்துள்ள நிலையில், புலிகள் இயக்கத் தலைவர்களும் தளபதிகளும் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டு, புலிகள் இயக்கத்துக்கு ஏற்பட்டுள்ள பெருந்தோல்வியால், இன்று ஈழ விடுதலைப் போராட்டம் தலைமை ஏதுமின்றித் தத்தளிக்கிறது. புலிகளின் சர்வதேசத் தொடர்பாளரான பத்மநாபன், தமிழகத்தின் ஈழ ஆதரவாளர்களால் ‘துரோகி’ என்று முத்திரை குத்தப்பட்டுள்ள நிலையில், இயக்கத்தை ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்ல எவருமே இல்லாத அவலம் நீடிக்கிறது. ஈழத்தின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடி வந்த இதர குழுக்களும் தனிநபர்களும் துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டு புலிகளால் ஒடுக்கப்பட்டு விட்ட நிலையில், இன்று ஈழ விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திச் செல்ல தலைமை ஏதுமின்றி, ஒரு பாரிய வெற்றிடம் நிலவுகிறது.
இது கசப்பான உண்மை என்ற போதிலும், இத்தகைய பின்னடைவுக்கும் பேரழிவுக்கும் காரணம் என்ன? சீனாவும் பாகிஸ்தானும் சிங்கள பாசிச அரசுக்கு நவீன ஆயுதங்களை வழங்கி ஆதரவாக நின்றதும், இந்தியா இந்த இனப்படுகொலைப் போருக்கு இறுதிவரை துணை நின்று வழிநடத்தியதும் தான் காரணமா? அல்லது ஐ.நா. மன்றமும் மேலை நாடுகளும் பாராமுகமாக இருந்ததுதான் காரணமா?
இவையெல்லாம் புறக்காரணிகள்தாம். இத்தகைய நிலைமைகளை எதிர்கொண்டு இயக்கத்தை வழிநடத்திச் செல்லும் ஆற்றல்மிக்கதாகச் சித்தரிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் மூடத்தனமும் இராணுவ சாகசவாதமும்தான் இப்பேரழிவுக்கும் மீளமுடியாத பின்னடைவுக்கும் பெருந்தோல்விக்கும் முதன்மையான காரணங்கள். புலிகளிடம் சரியான அரசியல் தலைமை இல்லாமை, சரியான இராணுவ உத்திகள் இல்லாமை, யாரையும் பயன்படுத்திக் கொண்டு காரியம் சாதிப்பது என்கிற சந்தர்ப்பவாதம்; அரசியல் நேர்மையற்ற அணுகுமுறை, புலிகள் இயக்கத்துக்குள்ளும் ஜனநாயகமற்ற பாசிச சர்வாதிகாரம் முதலான ஈழ விடுதலைக்கே எதிரான போக்குகளே இப்பேரழிவையும் மீண்டெழ முடியாத தோல்வியையும் தோற்றுவித்துள்ளன.
எந்தவொரு விடுதலைக்கான இயக்கமும் இலட்சியத்தையும் கடமைகளையும் வகுத்துக் கொண்டு, அந்த இலட்சியத்தை அடைவதற்குத் தடையாக நிற்கும் எதிரிகள் யார், நண்பர்கள் யார், ஊசலாட்டம் கொண்ட சமரச சக்திகள் யார், எந்தச் சக்திகளுடன் ஐக்கியப்பட வேண்டும், எந்த சக்திகளை வென்றெடுக்க வேண்டும் என்பதைத் தெளிவாக வகுத்துக் கொண்டு தமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் விடுதலைப் புலிகளோ தொடக்கம் முதலே இந்த அடிப்படையான பிரச்சினையில் தெரிந்தே தவறிழைத்தார்கள்.
ஈழ விடுதலைக்குத் தொடக்கம் முதலே எதிரியாக இருந்து சீர்குலைத்த இந்திய அரசுடன் பகைத்துக் கொள்ளாமல், “தாஜா” செய்ததோடு, இந்திய உளவுப் படையான “ரா” (RAW)விடம் ஆயுதங்களும் பயிற்சியும் நிதியும் பெற்று, அதன் வழிகாட்டுதலின்படி அப்பாவி சிங்கள குடிமக்களைக் கொன்றும், ஈழத்திலிருந்து இசுலாமியர்களைக் கெடு வைத்து விரட்டியும், இதர போராளிக் குழுக்களை அழித்தொழித்தும், தமது ஏகபோக சர்வாதிகாரத்தை நிறுவிக் கொண்டனர்.
எந்தவொரு விடுதலைக்கான இயக்கமும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஜனநாயகப்படுத்தப்பட்ட சூழலை உருவாக்க வேண்டும். மக்கள் மத்தியில் எந்தளவுக்கு ஜனநாயகம் பேணப்படுகிறது என்பது, இனவிடுதலையின் மீது கொண்டுள்ள உறுதிக்கு ஒரு அளவுகோல். ஆனால் சிங்கள இனவெறியை எதிர்த்தும் ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் நின்று, புலிகளின் மனித உரிமை மீறல்களையும் ஜனநாயக விரோதச் செயல்பாடுகளையும் விமர்சித்த குற்றத்திற்காக ராஜினி திரணகம, வசந்தன் முதலாலோனார் உள்ளிட்டு ஏராளமானோர் புலிகளால் கொன்றொழிக்கப்பட்டார்கள்; அல்லது அவர்கள் காணாமல் போனார்கள். புலிகள் இயக்கத்துக்குள்ளேயே பல முன்னணித் தலைவர்களும் தளபதிகளும் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். பிரபாகரனும் அவரது வட்டாரத்தைச் சேர்ந்த விசுவாசிகளும் கொண்ட சிறுகும்பலாக இயக்கத் தலைமை மாறிப் போனது.
தேசிய இன விடுதலை என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கொண்டதாகவும் சுயசார்பானதாகவும் இருக்க வேண்டும். எந்த அளவுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஒரு தேச விடுதலை இயக்கம் ஊன்றி நிற்கிறது என்பதுதான் அதன் புரட்சிகர தன்மைக்கான அளவுகோல். இன்றைய சூழலில், ஏகாதிபத்திய உலகமயமாக்கலை எதிர்க்காமல், எந்தவொரு தேசிய இனமும் விடுதலையைச் சாதிக்கவும் முடியாது.
ஆனால் புலிகளோ, எந்த ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து எந்தப் போராட்டத்தையும் நடத்தியதேயில்லை. தமது தலைமையிலான தமிழீழம் இந்தியாவுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் கீழ் படிந்தே இருக்கும் என்று புலிகள் வாக்குறுதி அளித்து, அந்நாடுகளைத் “தாஜா” செய்தார்கள். கிழக்கு திமோர், கொசாவோ பாணியில் மேலைநாடுகள் தலையிட்டு தமக்கென தனி ஈழத்தை அமைத்துத் தரும் என்று நம்பினார்கள். அந்த அளவுக்குத்தான் அவர்களது உலக அரசியல் கண்ணோட்டம் இருந்தது. ஏகாதிபத்திய உலகக் கட்டமைவில் தேசிய இன விடுதலை என்பது எவ்வளவு சிக்கலானது, உலக நாடுகளின் மக்கள் மத்தியில் இதற்கு ஆதரவாக பொதுக்கருத்தையும் பொது நிர்பந்தத்தையும் வளர்த்தெடுக்க வேண்டும் என்பன போன்ற விரிந்த அரசியல் பார்வை புலிகளிடமோ, அவர்களின் ஊதுகுழலாகச் செயல்பட்ட தமிழக பிழைப்புவாத அரசியல்வாதிகளிடமோ இருந்ததில்லை. மேலை நாடுகள் தங்களைப் பயங்கரவாதிகள் எனத் தடை செய்திருப்பதற்கான உலக அரசியல் சூழல் மற்றும் பிற காரணிகளைப் புலிகள் புரிந்து கொள்ளவுமில்லை.
ஒருபுறம் அமெரிக்க உலக மேல்நிலை வல்லரசு; அதன் தெற்காசிய விசுவாச அடியாளாக இந்திய பிராந்திய மேலாதிக்க வல்லரசு. மறுபுறம், உலகமயமாக்கலைச் சாதகமாக்கிக் கொண்டு புதிய சந்தைக்காகவும் ஆதிக்கத்துக்காகவும் விரிவடைந்து வரும் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் போட்டா போட்டி. இந்துமாக் கடலில் போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை, இன்று இந்த ஆதிக்க சக்திகளின் பகடைக் காயாக மாற்றப்பட்டிருக்கிறது. ஏகாதிபத்திய சக்திகளின் போட்டியையும் கூட்டையும் பயன்படுத்திக் கொண்டு, ஈழ விடுதலைப் போரை அரசியல் ரீதியிலும் இராணுவ ரீதியிலும் ராஜபக்சே அரசு எவ்வித எதிர்ப்புமின்றி நசுக்கும் சூழலைப் பற்றி புலிகள் பாரதூரமாக உணரவில்லை. அதற்கேற்ப தமது அரசியல் இராணுவ செயலுத்திகளை வகுத்துக் கொள்ளவுமில்லை.
இன்னும் சொல்லப்போனால், மக்களைத் திரட்டி எந்தவொரு அரசியல் போராட்டத்தையும் புலிகள் நடத்தியதேயில்லை. கடந்த பத்தாண்டுகளில் போர் நிறுத்தத்தின் மூலம் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் அணிதிரட்டலையும் அரசியல் போராட்டங்களையும் நடத்த புலிகள் முயற்சிக்கவேயில்லை. அரசியல் பிரிவு என்றழைக்கப்பட்ட ஒரு குழுவை புலிகள் உருவாக்கியிருந்த போதிலும், அது மக்களிடம் அரசியல் பிரச்சாரம் எதையும் செய்ததுமில்லை. மக்களின் அளப்பரிய ஆற்றலைக் கொண்டு மாபெரும் அரசியல் எழுச்சிகளைத் தோற்றுவித்து எதிரியை மண்டியிடச் செய்ய முடியும் என்பதை புலிகள் எந்தக் காலத்திலும் உணரவுமில்லை.
அவர்களது கவனமெல்லாம் நவீன ஆயுதங்களின் இருப்பை அதிகரிப்பதிலும் சாகசவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலும்தான் இருந்தது. சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக இராணுவ ரீதியில் மேலாண்மை பெற்றுவிட்டாலே, ஏகாதிபத்திய நாடுகள் சிங்கள அரசுக்கு நிர்பந்தம் கொடுத்து தனி ஈழத்தை உருவாக்கித் தரும் என்று கணக்கு போட்டு, ஏகாதிபத்திய நாடுகளின் ஆதரவைப் பெறுவதுதான் அவர்களது ‘அரசியல்’ வேலையாக இருந்தது.
சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சே கும்பலின் இனவெறி பாசிச சர்வாதிகாரத்தை எதிர்க்கும் அரசியல் சக்திகளுடன் இணைந்து, பொது எதிரிக்கு எதிராக பரந்த ஐக்கிய முன்னணி கட்டியமைத்துப் போராட சாத்தியப்பாடுகள் இருந்தபோதிலும், அரசியல் மூடத்தனத்தால் அவற்றை புலிகள் அறிந்தே புறக்கணித்தார்கள். இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கே தேர்தலில் தோற்றதற்கும், ராஜபக்சே கும்பல் ஆட்சிக்கு வந்ததற்கும் மிக முக்கிய காரணமே புலிகளின் சந்தர்ப்பவாத அரசியல்தான்.
இந்த சந்தர்ப்பவாதம் 2002இல் தாய்லாந்து நாட்டில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானபோது அப்பட்டமாக வெளிப்பட்டது. தேசிய சுயநிர்ணய உரிமைக்கு சந்தர்ப்பவாதமாகவும் துரோகத்தனமாகவும் “பிரதேச தன்னாட்சி” என்று விளக்கமளித்தார், புலிகளின் அரசியல் தலைமை குருநாதர் ஆண்டன் பாலசிங்கம். ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டு தமது ஏகபோக ஆட்சி அமைவதையே “பிரதேச தன்னாட்சி” என்று விளக்கமளித்தார். அதேசமயம், தனிஈழம் கோரிக்கையை இன்னமும் கைவிட்டுவிடவில்லை என்று காட்டிக் கொள்வதற்காக இது “இடைக்காலத் தீர்வு” என்று பூசி மெழுகினார்.
இப்படி சந்தர்ப்பவாதமும் சாகச வழிபாடும் தனிநபர் துதியும் கொண்ட புலிகள், முப்பதாண்டு காலமாக பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் கண்ட ஈழ விடுதலைப் போராட்டத்தை மீளாய்வு செய்து படிப்பினைகளைப் பெற முன்வராமல், தொடர்ந்து பிரமைகளில் மூழ்கிப் போயினர். மறுபுறம், ஏகாதிபத்தியங்களின் ஆசியோடும், சிங்கள இனவெறி சக்திகளின் ஆதரவோடும், நவீன ஆயுதங்களின் வலிமையோடும் மிகக் கொடிய போரை ராஜபக்சே கும்பல் ஈழ மக்கள் மீது ஏவியது. உலக வரலாற்றில் மிகக் கொடூரமான இனவெறிப் படுகொலைகளில் ஒன்றாக அமைந்த இப்போரில், பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களோடு, புலிகளின் தலைமையும் கொன்றொழிக்கப்பட்டு, ஈழ விடுதலைப் போராட்டம் பேரழிவையும், பின்னடைவையும் சந்தித்து கையறு நிலையில் தத்தளிக்கிறது. ஈழத் தமிழினத்தையே தோற்கடித்து விட்ட வெற்றிக் களிப்பில் கூத்தாடுகிறது, சிங்கள இனவெறி.
புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு விட்டாலும், ஈழத் தமிழ் மக்கள் தமது நியாயமான விடுதலைப் போராட்டத்தைத் தொடர்வதற்கு துணை நிற்க வேண்டியது புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமை; நம் கடமை.