Thursday, January 24, 2019

மதத்துக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் அருமை BC/MBC/OBC மக்களே.. உங்களின் கவனத்துக்கு..

மதத்துக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் அருமை BC/MBC/OBC மக்களே.. உங்களின் கவனத்துக்கு..
பிராமணர்களுக்கு வெண்ணையும், பெரும்பான்மை இந்துக்களான BC/MBC/OBC சாதிகளுக்கு சுண்ணாம்பையும் பூசும் பிஜேபி RSS அரசு..
ஒருபக்கம், ஏற்கனவே 70% இடங்களை மத்திய கல்வி & வேலைவாய்ப்புகளில் ஆக்கிரமித்துள்ள, மக்கள்தொகையில் வெறும் 5% சதமே உள்ள பிராமணர் ஒருசில முற்பட்ட சாதிகளுக்கு மேலும் 10% இடஒதுக்கீட்டை கொடுத்துவிட்டு, மறுபக்கம், மக்கள் தொகையில் 55% உள்ள ஓபிசி (BC+MBC) மக்களுக்கு உள்ள 27% சதவீத ஒதுக்கீட்டை, நீர்த்துப்போக செய்து வருகிறது மத்திய பிஜேபி RSS ஹிந்துத்துவா அரசு..
மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு நீக்கி பலநூறு பிசி/எம்பிசி மருத்துவர்களின் கனவில் மண்ணை அள்ளிப் போட்டது மத்திய ஆர்எஸ்எஸ் பிஜேபி இந்துத்துவ ஆட்சி..
அடுத்து, ஓபிசி கிரீமி லேயர் வருமான கணக்கெடுப்பில் மாத சம்பளத்தையும் விவசாய வருமானத்தையும் சேர்க்க மத்திய ஆர்எஸ்எஸ் பிஜேபி இந்துத்வா ஆட்சி ஆணை.. இதனால் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான லட்சம் பிற்படுத்தப்பட்ட மிகப்பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் இளைஞர்களும் கிரீமிலேயர் என்னும் வரம்பில் வந்துவிடுவார்கள்.. அவர்களுக்கு ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்காது.. இவர்களின் இடங்களை அனைத்தும் பார்ப்பனர் உள்ளிட்ட மேல்சாதியினர் ஆக்கிரமித்துக் கொள்வார்கள்..
இப்போது, பேராசிரியர் பணிக்கு புது ஆப்பு... காலியிடங்களை கணக்கிடும் முறையை பிஜேபி அரசு மாற்றி அமைத்தால், BC/MBC/OBC மற்றும் SC/ST களுக்கு கிடைக்கவேண்டிய பணியிடங்கள் குறைப்பு.. அந்த இடங்களை முன்னேறிய வகுப்புகளுக்கு ஒதுக்கீடு...
இப்படி ஓபிசி இட ஒதுக்கீட்டை சரியான முறையில் அமல்படுத்தாமல், பல்லாயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட இளைஞர்களின் எதிர்காலத்தில் மண்ணள்ளிப் போட்டுவிட்டு, மறுபக்கம் பிராமணர் ஒருசில முற்பட்ட சாதிகளுக்கு கூடுதலாக மேலும் 10% இடஒதுக்கீட்டை மத்திய ஆர் எஸ் எஸ் பிஜேபி இந்துத்துவா ஆட்சி..
ஏற்கனவே மத்திய அரசின் கல்வி & வேலைவாய்ப்புகளிலும் OBC (BC&MBC)க்கள் வெறும் 17% சதம் தான் இருக்கிறார்கள்.. இப்பொழுது அதற்கும் வேட்டு..
அனைவரும் இந்துக்கள்.. நாம் ஹிந்துக்கள் என பிற்படுத்தப்பட்ட & மிக பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு மதவெறியை ஊட்டி, மத கலவரம் செய்ய அழைக்கும் பிஜேபி RSS கும்பல், கல்வி & வேலைவாய்ப்பு என வந்தால், BC/MBC/OBC சமூக இந்துக்களுக்கு வெறும் நாமத்தை பூசிவிட்டு, பிராமணர் உள்ளிட்ட சில முன்னேறிய சாதிகளுக்கு மட்டும் வாய்ப்பளிகிறது.. இந்து.. இந்து.. என்று வெறியேற்றி, BC MBC SC ST பிரிவு மக்களின் கையில் சபரிமலை, ராமர் கோயில் போன்ற மத பூசல்களை கொடுத்துவிட்டு, கல்வி & வேலைவாய்ப்பு முழுதும் அவாக்களே அபகரித்துக் கொள்ள வழிவகை செய்கிறது RSS ஹிந்துத்துவா பிஜேபி ஆட்சி.

Thursday, January 17, 2019

பார்ப்பனர்களின் கையில் அகப்பட்ட தயிர் சோத்தைப் போல வதைபடும் இந்திய ஊடகங்களின் ethics

"ஏழைங்க, மிடில் க்ளாஸ்ட்ட புடுங்கி இப்படி பணக்காரங்க கிட்ட கொடுக்கிறியே... நீயெல்லாம் உருப்படுவியா?" என்கிற தொனியில் அந்த பாஜககாரர் மோடியிடம் லைவ் நிகழ்ச்சியில் கேள்வி கேட்டுவிட்டார். பதில் சொல்ல முடியாமல், "ச்சலியே புடுச்சேரி கோ வணக்கம்," என நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஓடிவிட்டார் மோடி. இது நாமெல்லாம் காணொளியில் கண்ட உண்மை சம்பவம்.
இச்சம்பவத்தை, "மோடியை ஓட விட்ட பாண்டிச்சேரி பாஜககாரர்," என ஏதாவது செய்தித்தாளில் செய்தி பார்த்தீர்களா?
ஆனால் துபாயில் ராகுல்காந்தியை திணறடித்த சிறுமி என்கிற செய்தியை இவர்களாகவே உருவாக்கி, நடக்காத ஒரு செய்திக்கு ஏதோ ஒரு சிறுமியின் புகைப்படம் ஒன்றை எடுத்து மார்ஃப் செய்து வெளியிட்டிருக்கிறது தினமலர், தினகரன் உள்ளிட்ட பத்திரிக்கைகள். இதை பொய் என பிபிசி செய்திவெளியிட்டவுடன் தினகரன் மட்டும் மன்னிப்பு வெளிட்டுள்ளது.
மோடியை மாற்றினாலோ, பாஜகவை மாற்றினாலோ நிரந்தரமாக எதுவும் மாறாது. பார்ப்பனர்களின் கையில் அகப்பட்ட தயிர் சோத்தைப் போல வதைபடும் இந்திய ஊடகங்களின் ethics சரிசெய்யப்பட்டால் மட்டும்தான் உண்மையான ஜனநாயகத்தை உருவாக்க முடியும். இல்லையென்றால் எல்லாமே கேலிக்கூத்துதான்.

Wednesday, January 16, 2019

தமிழர்களே... பார்ப்பனர்கள் உங்களைப் போல முட்டாள்கள் அல்ல

இந்த தடவையும் ஸ்டாலின் அவ்ளோதானா? இந்த வாட்டியும் திமுக வேடிக்கை பாக்க வேண்டியதான் போல... என்றெல்லாம் நக்கல் அடிக்கும் மூளைச் சலவை செய்யப்பட்ட தமிழர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கும். ஏதோ திமுக ஆட்சிக்கு வருவது திமுகவுக்கு மட்டுமே நன்மை பயக்கும் ஒன்று என்கிற கருத்து ஒழுங்காக சுத்தம் செய்யப்படாத பொதுக் கழிப்பிடத்தைப் போல அவர்கள் மூளையில் செருகி வைக்கப்பட்டிருக்கிறது. ஏதோ ஜெயலலிதா இருந்தபோது இதைச் சொன்னால் கூட பரவாயில்லை. ஆனால் எடப்பாடி காலத்திலும் எப்படி இவர்களால் சொல்ல முடிகிறது? நீட் மூலம் நம் குழந்தைகளின் படிப்பு முற்றிலும் போய்விட்டது. இன்று இட ஒதுக்கீட்டையும் கண்முன் களவாடிக் கொண்டுவிட்டார்கள். அடுத்து கட்டாய இந்தித் திணிப்பைக் கொண்டு வருகிறார்கள்.
வரலாற்றில் எப்போதாவது இப்படி தங்களுக்கு முழுச்சாதகமாக அமையும் அரசை வைத்து தங்கள் இனத்துக்கு என்னவெல்லாம் நல்லது செய்துகொள்ள முடியுமோ, திராவிட இனத்துக்கு என்னவெல்லாம் தீங்கு செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டுவிட்டார்கள். முன்காலத்தில் திராவிடர்களுக்கும் இப்படி முழுச்சாதகமாக ஒரு அரசு அமைந்தது.


அது வி.பி.சிங் அரசு. அதை வைத்து தனது மாநிலத்தில் இருக்கும் தன் இனத்துக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் அடுத்தடுத்து பல நன்மைகளைச் செய்துகொடுத்தார் கலைஞர்.கருணாநிதி.
ஆனால் நமக்கோ நன்றி என்பது துளியும் இல்லை. எவனோ கொளுப்பெடுத்து எவனையோ கொல்லப்போக, நாமோ கலைஞரையும் ஆட்சிக்கு வரவிடவில்லை. வி.பி.சிங்கையும் ஆட்சிக்கு வரவிடவில்லை.
ஆனால் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் தமிழர்களே... பார்ப்பனர்கள் உங்களைப் போல முட்டாள்கள் அல்ல. தங்களுக்கு நன்மை செய்யும் அரசை மீண்டும் மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்த்த என்ன்ன்ன்ன்ன வேண்டுமானாலும் செய்வார்கள். எதை வேண்டுமானாலும் ஆதரிப்பார்கள். அமித்ஷா மகனின் வருமானம் 16000 மடங்கு உயர்ந்ததே எவனாவது வாயைத் திறந்தானா? ஆனால் உதயநிதி திருவாரூரில் நிற்கப்போகிறார் என்பதை கடுமையாகப் பரப்பி நம்மையெல்லாம் அதையே பேசவைத்து ஏதோ அது ஒன்றுதான் நாட்டில் பிரச்சினை போல மடைமாற்றுவார்கள். ஆனால் அமித்ஷாவின் கொள்ளுப்பேரன் தேர்தலில் நின்றாலும் தங்கள் வேலை நடக்கும்வரை பார்ப்பனர்கள் எந்தக் கூச்சமும் இன்றி ஓட்டு குத்துவார்கள்.
ஆனால் நாமோ, cbse சிறந்தது, சமச்சீர் மட்டம் என்று திரும்பத் திரும்பச் சொன்னால் நம்புவோம். நீட் கல்வித்தரத்தை உயர்த்தும் என்றால் நம்புவோம். எட்டு லட்சம் சம்பாதிக்கும் உயர்சாதி ஏழைகள் பாவம்தானே என்றால் நம்புவோம். அதிமுக நீட் தேர்வுக்கு சொம்படிச்சா என்னப்பா, நமக்கு உதயநிதி தானே முக்கியம். தினகரன் பாஜக கதவுகளை எல்லாம் தட்டித் தட்டி சோர்ந்துபோன ஆளாக இருந்தால் என்ன, டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றினால் என்ன? எந்த வித கூச்சமும் நாச்சமும் இன்றி நாம் அவரை ஆதரிப்போம். ஏன்? ஏனென்றால் நமக்கு திமுவை பிடிக்காது. பொடனியில் அடித்ததைப் போல உண்மையைச் சொல்லும் பல திமுககாரர்களைப் பிடிக்காது. ஆஹா... எவ்வளவு அழகான நடுநிலை அரசியல்!!
என்றாவது ஒரு பார்ப்பனன் நடுநிலை அரசியல் பேசி, உட்டோப்பிய கனவு கண்டு, தூய்மைவாதம் பேசி பார்த்திருக்கிறீர்களா? வாருங்கள் வாக்கு போடாமல் இயக்க அரசியல் மட்டுமே செய்வோம் எனப் பேசி பார்த்திருக்கிறீர்களா? மாட்டவே மாட்டார்கள். உங்களை பேசவைப்பார்களே தவிர அவர்கள் பேச மாட்டார்கள். ஆயிரம் விமர்சனங்கள் ஒரு கட்சியின் மீது இருந்தாலும் தங்கள் இனத்துக்கு எந்தக் கட்சியால் அதிகபட்ச நன்மை இருக்குமோ அந்தக் கட்சிக்கு ஓட்டை குத்துவார்கள். அதுமட்டுமல்ல, அந்தக் கட்சிதான், அந்த நபர்தான் நாட்டுக்கே நல்லது, எல்லோருக்கும் நல்லது, சர்வரோக நிவாரணியே அந்தக் கட்சிதான் என சிரமம் மேற்கொண்டு பரப்பி வெற்றி அடைவார்கள். மோடி என்கிற 3% பணக்காரர்களுக்காகவும், 4% பார்ப்பனர்களுக்காகவும் மட்டுமே உழைக்கும் ஒரு அடிமையை ஒட்டுமொத்த இந்தியா தலையிலும் கட்டி வைத்தார்களே அதைப்போல!!
ஈழமாயையை கட்டமைத்து ஜெயித்தார்கள். 2ஜி எனும் கட்டுக்கதையை கட்டி ஜெயித்தார்கள். நீட்டில் ஜெயித்தார்கள். ஜி.எஸ்.டியில் ஜெயித்தார்கள். இதோ இட ஒதுக்கீட்டிலும் ஜெயித்துவிட்டார்கள். நாளை இந்தி திணிப்பிலும் ஜெயிப்பார்கள். இதிதெலாம் பெரும்சோகம் அவர்கள் நாடாளுமன்றத்தில் ஜெயிப்பது அல்ல. தமிழக மக்கள் மனங்களிலும் இதையெல்லாம் சரி என உணர வைத்து ஜெயிப்பதே பெருஞ்சோகம். அதுதான் நமக்கும், நம் குழந்தைகளுக்கும் சரிசெய்ய முடியாத பேரிழப்பை கொடுத்துவிட்டுப் போகப்போகிறது.
எதையெல்லாம் பலநூறு ஆண்டுகள் போராடிப்பெற்றோமோ அதையெல்லாம் ஐந்தாண்டுகளில் சரசரவென இழந்திருக்கிறோம். அதுவும் நம் முழு ஒத்துழைப்புடன். இது எல்லாமே காலம் காலமாக, எதெல்லாம் பார்ப்பனர்களுக்கு நல்லதோ அதுதான் நாட்டுக்கும் நல்லது, எதெல்லாம் பார்ப்பனர்களுக்கு கெட்டதோ அதெல்லாம் நாட்டுக்கும் கெட்டது என்கிற பரப்புரையை மட்டுமே மையநோக்காகக் கொண்டு இயங்கிவரும் பார்ப்பன ஊடக அமைப்பு எனும் கண்ணுக்கு தெரியாத கோயபல்ஸ் அமைப்பினால் சாத்தியப்பட்டிருக்கிறது.
பெரியார் மிகத்தெளிவாக சொல்கிறார். "வாக்கு அதிகாரத்தை பயன்படுத்த பார்பனர்களிடம் இருக்கும் தெளிவு நம் மக்களிடம் இல்லை. அதனால் சுலபமான வழி ஒன்று உண்டு. பார்ப்பனர்கள் யாரை எதிர்க்கிறார்களோ அவர்களை ஆதரியுங்கள். பார்ப்பன ஊடகங்கள் யாரை வில்லன்களாக சித்தரிக்கிறதோ அவர்களை கண்ணை மூடிக்கொண்டு ஆதரியுங்கள். இது ஒன்றுதான் வழி," என்கிறார்.
ஆனால் நமக்குள் இருக்கும் விபீடணர்களோ பார்பனர்களுடன் சேர்ந்துகொண்டல்லவா நம்மை காட்டிக்கொடுக்கிறார்கள்!!! நம் மக்களை முட்டாள்கள் ஆக்குகிறார்கள். மாடுமேய்க்க வைக்கிறேன் என்கிறான் ஒருவன். படிப்பெல்லாம் ஒன்றுமே இல்லை. தூக்கிப்போட்டு இயக்க அரசியலுக்கு வா என்கிறான் இன்னொருவன். திமுகவும், அதிமுகவும், பாஜகவும் ஒன்னுதான் சார் என்கிறான் இன்னொருவன். தாங்கள் ஆளும் மாநிலத்தில் கைரிக்‌ஷாவைக் கூட ஒழிக்க முடியாத ஒருவன் ரிக்‌ஷாவையே கிட்டத்தட்ட ஒழித்துவிட்ட தமிழ்நாட்டுக்கு பாடம் எடுக்கிறான்.
இனியும் அறிவின்மைமிக்க ஒரு பேரினமாக வாட்சப்களையும், ஆமைக் கறிக்கதைகளையும், யாருக்கும் ஓட்டுப்போடாதீர்கள் விஷத்தையும், பார்ப்பன பொய்ப்பிரச்சாரங்களையும் பருகிக்கொண்டே இருந்தோமேயென்றால் சிறுகச் சிறுக சேர்த்துவைத்ததை எல்லாம் கூட துடைத்து வழித்துவிட்டுப் போய்விடுவார்கள். அரசியல்/சமூகப் புற்றுநோயின் இறுதி ஸ்டேஜில்தான் திருந்துவேன் என்கின்றவர்களை யாரால் என்ன செய்ய முடியும்!!!
ஆனால் நேத்து கேட்டதே ஒரு குரல், "இதென்ன அநியாயமா இருக்கு," என்கிற குரல். அது ஒற்றைக் குரல் அல்ல. அது பெரியாரின் கைத்தடியில் இருந்து எழுந்த சத்தம். அண்ணாவின் பேனாவிலிருந்து எழுந்த சத்தம். மெரினாவில் இருக்கும் கலைஞரின் ஒருநொடி டில்லியில் எழுப்பிய பெருங்கோபம். அது ஒன்றுதான் ஒளிக்கீற்று. அது ஒன்றுதான் விமோசனம். அது ஒன்றுதான் விமோசனம்!

check source

Tuesday, January 15, 2019

நமக்கு கிடைத்த வள்ளுவராண்டின் வரலாறு

ஹிச்டாரிக்கல் பிகராக (வரலாற்று சித்திரம்) அதாவது ரத்தமும் சதையுமாக நிஜமாக வாழ்ந்த மனிதர் என ஒரு பிரபலம் அறியப்பட அவரது இருப்பிற்கான பிஸிகல் எவிடென்ஸ் கிடைக்கவேண்டும். உதா: அவரது சவபெட்டி, எலும்புகூடு முதலானவை
பல சமயங்களில் அத்தகைய எவிடென்ஸ் கிடைப்பது கிடையாது (உதா: ராஜராஜ சோழன்). அத்தகைய சமயங்களில்
அவரை பற்றி அவர் வாழ்ந்த காலத்தில் எழுதபட்ட நூல்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், பாடல்கள் மூலம் அவரைபற்றி அறியலாம். அவர் ஹிஸ்டாரிகல் பிகர் என்ற முடிவுக்கு வரலாம்.அவர் வாழ்ந்த காலத்து வரலாற்று ஆசிரியர்கள் அவரைபற்றிய குறிப்பு எழுதி இருப்பார்கள். உதா: அலெக்சாந்தர் காலத்து வரலார்று ஆசிரியர் காலிஸ்தனிஸ் அவரது வாழ்க்கை வரலாறு குறித்து எழுதியுள்லார். அலெக்சாந்தர் படையெடுத்து சென்ற நாடுகள் முழுக்க அவரது வரலாறு பதிவாகியுள்ளது.
வள்ளுவரை பொறுத்தவரை:
மேலே சொன்ன எந்த ஆதாரஙக்ளும் நம்மிடம் கிடையாது. நம்மிடம் இருப்பவை மிக பிற்காலத்தில் எழுதப்பட்ட வள்ளுவமாலை, வள்ளுவர் கோயில், சிலை, அவர் பற்றி நிலவும் தொன்மகதைகள் ஆகியவையே
வள்ளுவர் ஆணா,பெண்ணா, அரசரா, துறவியா, அவர் வயது என்ன, என்ன தொழில் செய்தார், எங்கே பிறந்தார் என எத்தகவலும் நம்மிடம் கிடையாது. நம்மிடம் இருப்பது அவரது திருக்குறள் எனும் நூல் மட்டுமே. அதில் அவர் தன்னை பற்றிய எக்குறிப்பையும், தன் பெயர் வள்ளூவன் என்பதையும் கூட கொடுக்கவில்லை.
திருவள்ளுவரின் உண்மையான பெயர் என்ன? வள்ளுவர் என்பது அவரது பெற்றோர் அவருக்கு வைத்த பெயரா? பட்ட பெயரா? ஜாதி பெயரா?
தெரியாது...அவர் பல்வேறு உரை ஆசிரியர்களால் பல்வேறு பெயர்களில் அழைக்கபடுகிறார், நாயனார், தேவர், மாதானுபாங்கி, பெருநாவலர் இப்படி பல பெயர்களில் அழைக்கபடுகிறார். இதில் எப்படியோ திருவள்ளுவர் எனும் பெயர் பரவி நம்மிடையே தங்கிவிட்டது. முதல்முதலாக அச்சொல் எந்த நூலில் காணப்படுகிறது, அந்நூலின் ஆசிரியர் யார் என்ற ஆய்வை செய்யவேண்டும். அதுபோல் திருக்குறள் உரை ஆசிரியர்கள் கால ஆய்வையும் செய்யவேண்டும்.
இவற்றுக்கான பிஸிகல் எவிடென்ஸ் எதுவும் நம்மிடம் இல்லை. திருக்குறள் எனும் நூல், அந்த நூல் வேறு எந்த எந்த நூல்களில் கோட் செய்ய்படுகிறது, அவற்றின் காலம் என்ன என்பதை வைத்து தோராயமாக குறள் எழுதபட்ட நூற்ராண்டை கணிக்க முடியும். அத்தகைய ஆய்வுகள் நிகழ்ந்து உள்ளன. ஆனால் வள்ளுவர்/தேவர்/நாயனார்/நான்முகன் எனும் அந்த நூலின் ஆசிரியர் பற்றி வேறு எதுவும் நமக்கு தெரியாது. நம்மிடம் இருப்பவை அவர் குறித்த தொன்மங்கள் மட்டுமே.
ஆக தொன்மங்கள், நூல் இவற்றை வைத்து மட்டுமே வள்ளுவர் நிஜமாக வாழ்ந்த மனிதர்/ இங்கே வாழ்ந்தார் என எதையும் கண்டறிய முடியாது.
ஆனால் திருக்குறள் என்ற நூல் ஒன்று இருக்கிறது. அதை எழுதியவர் யாரோ இருக்கவெண்டும் அல்லவா என கேட்கலாம்.
ஆமாம். திருக்குறள் என்ற நூல் உள்ளது. அதை எழுதியவர் வள்ளுவர் என்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம்மிடயே உள்ள தகவல். இதற்குமேல் எதுவும் தெரியாது. யாரோ எழுதி இருக்காமல் அந்த நூல் உருவாகி இருக்காது. அது இருவரா, ஒருவரா, பலர் சேர்ந்து எழுதினார்களா, காலவெள்ளத்தில் தொகுக்கபட்ட பழமொழிகளின் தொகுப்பா..எப்படி வேண்டுமனாலும் இருக்கலாம். ஆனால் நூலின் நடை, ஒழுங்கு ஆகியவற்றை வைத்து ஆராய்கையில் அதை பலர் சேர்ந்து எழுதினார்கள் என சொல்ல இடமில்லை.
இதுதான் நமக்கு வள்ளுவர் பற்றி தெரிந்தது. வரலார்றில் நாம் மிக வீக். பல சங்கபாடல்களை எழுதியவர் பெயர் கூட தெரியாமல் பாடலின் முதல்வரியை அவருக்கு பெயராக சூட்டி விடுகிறோம்.
அதே சமயம் தமிழக அரசு திருவள்ளுவர் பிறந்தநாள் ஜனவரி 15 31 பி.சி என அறிவித்துள்ளது,
இந்த நாளில் வள்ளுவர் பிறந்தார் என நமக்கு எப்படி தெரியும்?
1935ம் ஆண்டுவாக்கில் சென்னையில் "திருவள்ளுவர் திருநாட் கழகத்தினர்" என்ற அமைப்பு ஒன்று உருவாகிறது. அந்த அமைப்பின் தலைவர் மறைமலை அடிகளார். அவரும் இன்னபிற தமிழ அறிஞர்களான சுப்பையாபிள்ளை, கண்ணுசாமி பிள்ளை முதலானோர் திருவள்ளுவர் நாள் ஒன்று கொண்டாட வேண்டும் என முடிவெடுக்கின்றனர். அதன்பின் பச்சையப்பன் கல்லூரியில் அன்றைய சென்னை ராஜதானி அமைச்சர்களான முத்தையா முதலியார், தெய்வநாயகம் பிள்ளை முன்நிலையில் "வள்ளுவர் பிறந்தது கிமு 30" "வள்ளுவர் நாள் என்பது மே 18" என மறைமலை அடிகள் அறிவிக்கிறார். அதற்கு எந்த ஆதாரமும் அவர் கொடுக்கவில்லை. யாரும் கேட்கவும் இல்லை, காரணம் வள்ளுவர் நாள் என்ற நாள் ஒன்றை தேர்ந்தெடுத்து அன்று தமிழ்நாடெங்கும் வள்ளுவர் தின கொண்டாட்டங்களை செய்யவேண்டும், உணவிடவேண்டும் என்பதே அதன் நோக்கம். அதன்பின் ஒட்டுமொத்த திருவள்ளுவர் திருநாள் கழகமும் மயிலை வள்ளுவர் கோயிலுக்கு சென்று வழிபடுகிறது. அக்கோயிலில் வைகாசி அனுஷ நட்சத்திரதன்று வள்ளுவர் தினம் கொண்டாடபடுகிறது. அதன் அடிபப்டையில் மே 18 எனும் நாள் தேர்ந்தெடுக்கபட்டிருக்கலாம்.
அதன்பின் 1963ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு (எப்ரல் 14) அன்று திருவள்ளுவர் விழா ஒன்றில் அறிஞர் அண்னாவும், பக்தவத்சலனாரும் கலந்துகொள்கிறார்கள். அகூட்டத்தில் வள்ளுவர் தினமாக ஜூனில் இருந்து ஜூலைக்குள் ஏதோ ஒரு நாள் அறிவிக்கபடவேண்டும் என வேண்டுகோள் விடபட்டு அன்றைய தமிழக அரசும் ஜூன் 2 நாளை வள்ளுவர் தினமாக அறிவிக்கிறது. அதை தேர்ந்தெடுக்க ஸ்பெஷல் காரணம் எதுவும் இல்லை.
அதன்பின் 1971ல் கலைஞர் முதல்வர் ஆனபின் வள்ளுவர் பிறந்தது தை 1 என சொல்லி, வள்ளுவர் பிறந்தநாளை ஜனவரி 15, கிமு 31 ஆக அறிவித்து வள்ளுவர் ஆண்டை உருவாக்குகிறார். அதற்கு சொல்லபட்ட காரணம் தமிழருக்கு தனி ஆண்டு முறை வேண்டும் என்பது. பொங்கல் சமயத்தில் துவக்குவது பிராக்டிகலாக இருக்கும் என்பதாலும் மாற்றி இருக்கலாம். மறைமலை அடிகள் தலைமையில் 1921ல் நடந்த அறிஞர் குழு ஒன்று தை 1 தான் வள்ளுவர் பிறந்தார் என அறிவித்ததாக கலைஞர் கூறினார்.
ஆக வள்ளுவரை அடைப்படையாக வைத்து நமக்கு கிடைத்த வள்ளுவராண்டின் வரலாறு இதுவே

Friday, January 11, 2019

எம்ஜிஆர் வழியில் தம்பிதுரை கலைஞர் வழியில் கனிமொழி தினமலரே வரலாற்றை திரிக்காதே!

எம்ஜிஆர் வழியில் தம்பிதுரை
கலைஞர் வழியில் கனிமொழி
தினமலரே வரலாற்றை திரிக்காதே!



பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு 1979 வரை 31% இருந்தது.
திடீரென அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் தவறாக ஆலோசனைகளால் வழிநடத்தப்பட்டு ஆண்டுக்கு 9000 ரூபாய் வருமானம் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கு இனி இட ஒதுக்கீடு கிடையாது என்று அறிவித்தார்.

02.07.1979 அன்று 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை தமிழக அரசு பிறப்பித்தது. சமூகநீதியான இடஒதுக்கீட்டில் தேவையின்றி பொருளாதார அளவுகோலை கொண்டு வந்தார் எம்.ஜி.ஆர்.

திராவிடர்கழகம் 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை நாடு முழுவதும் கொளுத்தியது.
சின்னஞ்சிறுவனாக அறியாப்பருவத்தில் அரசாணை எரிப்பு போராட்டத்தில் எனது தந்தையுடன் கலந்து கொண்டது என் நினைவுகளில் நிலழாடுகிறது.

அனைத்து கட்சிகளும் போராடிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் 1980 நாடாளுமன்றத் தேர்தல் வந்தது.
எவராலும் வெல்லமுடியாதவர் என்று வர்ணிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். இரண்டு இடங்களை மட்டும் பெற்று படுதோல்வியை சந்தித்தார்.

அதிர்ச்சியடைந்த எம்.ஜி.ஆர் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தார்.
இது நீதிக்கட்சி காலத்திலிருந்து சமூகநீதி செழித்து வளர்ந்த பெரியார் மண் என்ற உண்மையை உணர்ந்தார்!

உடனடியாக 24.01.1980அன்று
9000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை ரத்து செய்தார்.
ரத்து செய்ததோடு நிறுத்தியிருந்தால் உத்தரவை ரத்து செய்த முதல்வராக மட்டுமே இருந்திருப்பார்.

ஆனால் தான் உணர்ந்த உண்மையை செயல்படுத்தினார்...
பிற்படுத்தப்பட்டோருக்கு 31 விழுக்காடாக இருந்த இட ஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்தி வரலாற்றை படைத்தார்.

அதற்கடுத்து ஆட்சிக்கு வந்த
டாக்டர் கலைஞர் 1989ல்
மிக பிற்படுத்தப்பட்டோருக்கு அதில் 20 விழுக்காடு பிரித்துக் கொடுத்தார்.

இவர்களது இந்த அரிய முயற்சியினால்தான் இன்று நம் பிள்ளைகள் படித்து பட்டம் பெற்று உயர்நிலைக்கு வரத் துவங்கியிருக்கிறார்கள்.
ஆனால் பார்ப்பன தினமலர் பத்திரிக்கை எம்ஜிஆருக்கு விரோதமாக தம்பிதுரையும், கலைஞருக்கு விரோதமாக கனிமொழியும் செயல்படுவதாக அப்பாவி மக்களையும், அறியாத் தொண்டர்களையும் குழப்பி வரலாற்றை திரிக்கிறது.

தினமலர் கும்பல் யாரை நோக்கி நஞ்சை கக்கினாலும் அவர்கள் நமக்கானவர்கள் என்ற புரிதல் நம்மவர்களுக்கு வரவேண்டும்.

எம்ஜிஆர் வழி நின்று தம்பிதுரையும்,
கலைஞர் வழி நின்று கனிமொழியும் பொருளாதார அளவுகோலை முறியடிக்க குரல் கொடுக்கிறார்கள்!
அதிமுகவின் தம்பிதுரை அவர்களையும், திமுகவின் கனிமொழி அவர்களையும் கட்சி பேதமின்றி ஆதரித்து நிற்பது நமது கடமை என்பதை உணரவேண்டும்.

அன்புள்ள இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற உறுப்பினரும் அமமுக நிறுவனருமான தினகரனுக்கு வணக்கம்!

அன்புள்ள இராதாகிருஷ்ணன் நகர் என்கிற, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினரும், அமமுக என்கிற கட்சியின் நிறுவனருமான அண்ணண் தினகரனுக்கு வணக்கம்!..

உங்கள் மீது எங்களுக்கு ஓரளவுக்கு மரியாதை இருந்தது!..

ஏன் தெரியுமா?!..

எடப்பாடி மற்றும் பன்னீர் போன்ற அடிமைகளை எதிர்த்து இயக்கம் கண்டது. மேலும் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதம், பேட்டி கொடுக்கும் விதம், பேசும் விதம், என கண்களுக்கு வித்தியாசமாகவே தெரிந்தீர்கள்!..

இப்போது நிலைமையே வேறு!..

எங்கள் உயிருக்கு நிகரான என் தலைவனை நீங்கள் விமர்சித்த விதம் எங்களை கோபத்தின் உச்சாணி கொம்பில் ஏற்றிவிட்டது!..

நீங்கள் பேசியது முறையா?!..

1949 ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் திமுக எனும் மாபெரும் இயக்கம் தொடங்கப்பட்டபோது கார் வைத்திருந்தவர் எங்கள் தலைவர்!..

நெடுஞ்செழியன் தெரியுமா? சின்னப்பையன் சார் நீங்க,
சரி கேளுங்க!..

நெடுஞ்செழியன் வீட்டு திருமணத்திற்கு அண்ணா தலைமை. நேரம் ஆகிக்கொண்டே போகிறது. கொஞ்ச நேரத்தில் அண்ணா வருகிறார். நெடுஞ்செழியன் கேட்கிறார் என்ன தாமதமாக வந்துள்ளீர்கள் என்றவுடன்,,,

ஏம்ப்பா நம்ம இயக்கத்தில் கார் வைத்துள்ளவர் தம்பி கருனாநிதிதானே. அவர் வருவதற்கு தாமதமாகிவிட்டது என்று பேரறிஞர் அண்ணா சொன்னது இன்றும் வரலாறு. அதற்கப்புறம் நடந்த கதையெல்லாம் வரலாறு!..

சரி மேட்டருக்குள் போவோம்!..

சரி சார்! நீங்கள் போடுகின்ற சட்டைகளின் காலர் யாரை பார்த்து தைக்க ஆரம்பித்தீர்கள்? ஏனென்றால் எங்கள் தளபதி 89ஆம் ஆண்டே அப்படியான சட்டைகளை போட்டவர். இன்றும் போடுகிறார்!..

89இல் நீங்கள் எங்கு இருந்தீர்கள்?
சொல்ல முடியுமா?
நல்ல சட்டை உண்டா?
நல்ல உணவு உண்டா?
நல்ல வீடு உண்டா?
நல்ல சைக்கிள் இருந்ததா? இல்லை, நீங்கள் என்ன மைசூர் மகாராஜா குடும்பமா?!..

சரி! அடிக்கடி சிறைக்கு போனேன் என்கீர்களே?!..

மிசா கைதியாகாவா?
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைதாகினீர்களா?
சட்ட எரிப்பு போராட்டத்தில் கைதாகினீர்களா?
ஈழ ஆதரவு போராட்டத்தில் கைதாகினீர்களா?
ரயில் மறியல் போராட்டத்தில் கைதாகினீர்களா?
சாலை மறியல் போராட்டத்தில் கைதாகினீர்களா?
அரசுக்கு எதிரான போராட்டத்தில் கைதாகினீர்களா?
மத்திய மாநில அரசு அலுவலக முற்றுகை போராட்டத்தில் கைதாகினீர்களா?..

உங்களால் சொல்ல முடியுமா?!..

வாருங்கள்! உங்க முதல் சிறைவாழ்க்கை பற்றி தெரிந்து கொள்வோம்!..

தன்னை படு கேவலமாக தொடர்ந்து சித்தரித்து கொண்டிருந்த #சன் டிவியால் பெரும் பாதிப்புக்குள்ளான  ஜெயலலிதா உங்களிடம் நாமமும் ஒரு டிவி தொடங்க வேண்டும் என்ற விருப்பத்தை சொல்ல, உடனே ஜெஜெ டிவி ஆரம்பிக்க பட்டது!..

உண்மையா?!.. இல்லையா?!..

ஜெஜெ டிவிக்காக வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்ட மின்னனு சாதனங்களில் வரி ஏய்ப்பு செய்ததை கண்டுபிடித்து எப்படி போர்பேர்ஸ் ஊழலில் சோனியா காந்தியை பணிய வைத்தாரோ அதே போல்
ஜெயலலிதாவை பணிய வைக்க  நரசிம்மராவினால் போடப்பட்ட வழக்கு தான் #பெரா கேஸ்!..
உண்மையா?!.. இல்லையா?!..

சரிங்க இந்த நரசிம்மராவ் பையன் வந்து நக்மா கூட இருட்டறையில் முரட்டு குத்து குத்தும் போது ரூமுக்கு வெளியே நின்றீர்களா? அல்லது விளக்கு பிடித்தீர்களா?

அரசிலுக்கு வருவதுக்கு முன்பே இந்த பெராவினால் ஜெயலலிதாவுக்காக சுமார் ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவித்தார் நீங்கள்!..

உண்மையா?!.. இல்லையா?!..

ஊரை அடித்து உலையில் போட்டு கைதாகிவிட்டு சிறையில் இருந்ததை பெருமையாக பேசும் போது வெட்கமாக இல்லையா?!..
சரி! உங்களுக்கு தோல் தடிமனாக இருக்கும் போல!..

வாருங்களேன் மஞ்சப்பை கதைக்கு போவோம்!..

எங்கள் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் மஞ்சள் பையுடன் வந்தார் என்றே வைத்துக்கொண்டால்,,,
தன் மூளையை திருவாரூரில் அழுக்கு தேய்த்து குளிக்கும் குளமான கமலாலயத்தில் தூக்கி போட்டுவிட்டா வந்தார்?!..

நீங்கள் சொல்ல மறந்தது,,,

அந்த மஞ்சள் பையில் ஒரு பேனாவும், அப்பேனாவில் முழுவதுமாக நிரப்பப்பட்ட  இங்க் மற்றும் புரட்சிகர கருத்துக்களும், நிறைய கைப்பட எழுதிய கதைகளும்  இருந்தது என சொல்லியிருக்கலாம்!.. நமக்கெல்லாம் இல்லாத மூளையும் அவருடன் வந்தது என சொல்லியிருக்கலாம்!..

சரி அவராவது மஞ்சள் பை எடுத்துவந்தார் அவர் கையால் மஞ்சள் தாலி கட்டிக்கொண்ட உங்கள் குடும்பம் எந்த கலர் பை கொண்டுவந்தது?!..

வாய்மை விரும்பி நாஞ்சில் சம்பத் அவர்களின் உருட்டுப் புரட்டு வசனங்களில் பேசியதையும், கண்ணதாசன் தன்னால் முடியவில்லையே என்ற பொறாமை எண்ணத்தோடு எழுதிய வனவாச புத்தகத்தை படித்தும்,  ஒற்றை கண் பெங்களூர் புகழேந்தியின் அறிவுரையை ஏற்று நடக்கும் நீங்கள் சொல்லுங்கள்!..

ஜாஸ் சினிமாஸ்,
பீனிக்ஸ் மால் தியேட்டர்கள் இது எல்லாம் யாருடையது சார்?!..

இந்த லட்சணத்தில் ஊடகங்களில் அறிவுஜீவிகள், சமூக அக்கறையுள்ள ஊடக நெறியாளர்களின் விவாதங்களாய் உங்களை பற்றி பேசுகின்றனர் எவ்வளவு கொடுத்தீர்கள்?!..

வாருங்கள் தினகரன் சார்! உங்கள் ஊழல்கள் பற்றி உலாவருவோம்!..

நீங்கள் ஊழல் சேற்றில் ஊறியவர்தான் என்பதை பட்டியல் சொல்வதை பார்ப்போம்!..

ஒரு காலகட்டத்தில் நீங்கள் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தீர்கள். நீங்கள் செய்த முறைவாசல் வேலைக்கு சன்மானமாக மக்களவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர், அதிமுக பொருளாளர் என ஏராளமான பதவிகளை ஜெயலலிதா வாரி வழங்கினார்!..

ஜெயலலிதா முறைகேடான வழிகளில் குவித்த சொத்துக்களை வெளிநாடுகளில் முதலீடு செய்வதுதான் உங்களின் முதன்மைப் பணியாக இருந்தது!..

1991 & 96 ஆட்சிக்காலத்தில் 62,61,313 அமெரிக்க டாலரை (ரூ.40 கோடி) இங்கிலாந்தின் விர்ஜின் தீவுகளில் உள்ள டிப்பர் இன்வெஸ்மென்ட் நிறுவனத்தின் பெயரில் இங்கிலாந்தின் சட்டன் நகரில் உள்ள பார்க்லேய்ஸ் வங்கியில் முதலீடு செய்தது தொடர்பான வழக்கில் உங்களுக்கு ரூ.31 கோடி அபராதம் விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்தது!..

உண்மையா?!.. இல்லையா?!..

இந்த வழக்கில் நீங்கள் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அன்னிய செலாவணி மேல்முறையீடு வாரியம் அபராதத்தை ரூ.28 கோடியாக குறைத்தது. அதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நீங்கள் மேல்முறையீடு செய்தீர்கள் . உங்கள் வீரதீர செயலை எண்ணி அபராதம் ரூ.25 கோடியாக குறைக்கப்பட்டது. அந்த அபராதத்தை நீங்கள்  இதுவரை செலுத்தாமல் தாமதித்து வருகிறீர்கள்!

உண்மையா?!.. இல்லையா?..

பார்க்ளேய்ஸ் வங்கியில் டிப்பர் இன்வெஸ்மென்ட் நிறுவனத்தின் கணக்கில் 1,04,93,313 அமெரிக்க டாலரை (ரூ.67 கோடி) முதலீடு செய்தது தொடர்பான வழக்கு 21 ஆண்டுகளாக சென்னை எழும்பூர் பொருளாதார விவகாரங்களுக்கான நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது!

உண்மையா?!.. இல்லையா?!..

இந்த வழக்கில உங்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், சாட்சிகள் விசாரணை முடிந்து ஓரிரு மாதங்களில் தீர்ப்பளிக்கப்படவுள்ளது. ஆனால், இந்த வழக்கை தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காக இதில் சம்பந்தப்பட்ட 17 சாட்சிகளை மீண்டும் குறுக்குவிசாரணை செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நீங்கள் மாறி மாறி மேல்முறையீடு செய்து வருகிறீர்கள்!

உண்மையா?!.. இல்லையா?!..

இந்த வழக்கில் உங்களுக்கு 2 ஆண்டுகளோ அல்லது அதற்கும் கூடுதலாகவோ சிறைத்தண்டனை
கிடைக்க வாய்ப்பு இருக்கிறது!

உண்மையா?!.. இல்லையா?!..

வாருங்கள்! உங்கள் ஊழல் குடும்பம் பற்றி அலசுவோம்!..

ஜெயலலிதாவின் 5 ஆண்டு பதவிக்காலத்தில் செய்த ஊழல் பணத்திலிருந்து சுமார் ரூ.107 கோடியை நீங்கள்  வெளிநாடுகளில் முதலீடு செய்ததாக ஆதாரங்களோடு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்படியானால், அந்த 5 ஆண்டுகளில் நீங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்த ஒட்டுமொத்த தொகையின் மதிப்பு எவ்வளவு?..

அடுத்தடுத்த ஆட்சிக்காலங்களில் நீங்கள் முதலீடு செய்த தொகை எவ்வளவு? என்பதையெல்லாம் யூகித்துப்பார்த்தால் நீங்கள் எந்த அளவுக்கு காந்தியவாதி என்பது தெரிகிறது!..

நீங்கள் மட்டுமின்றி, உங்கள்  குடும்பத்தினர் பலரும் ஊழலுக்காக தண்டிக்கப்பட்டவர்கள்தானே?..

வருவாய்க்கு மீறி சொத்துக்குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் தலா 4 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்!..

உண்மையா?!.. இல்லையா?!..

வருவாய்க்கு மீறிய வகையில் சுமார் ரூ.4 கோடி சொத்து குவித்தது தொடர்பான வழக்கில் உங்கள் சகோதரி ஸ்ரீதளா தேவியும், அவரது சகோதரர் ரிசர்வ் வங்கி பாஸ்கரனும் தண்டிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பாஸ்கரனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.20 லட்சம் அபராதமும், ஸ்ரீதளா தேவிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை சென்னை உயர்நீதிமன்றமும் அண்மையில் உறுதி செய்தது!..

உண்மையா?!.. இல்லையா?!..

வாருங்கள்! முள்ளிவாய்க்கால் குட்டி சுவர் நடராஜனுக்கு தண்டனை பார்ப்போம்!..

வெளிநாட்டில் இருந்து லக்சஸ் கார் இறக்குமதி செய்ததில் ரூ.1.62 கோடி வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான வழக்கில் உங்கள் சித்தி சசிகலாவின் கணவர் நடராஜன், உங்கள் சகோதரர் பாஸ்கரன் உள்ளிட்ட நால்வருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது!..

உண்மையா?!.. இல்லையா?!..

சிறுதாவூர் பங்களாவுக்காக 2 ஏக்கர் இடத்தை மிரட்டலுக்குப் பணிந்து பறிகொடுத்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்குத் தெரியாமலேயே பத்திரம் மாற்றிப் பதியப்பட்டுள்ளது!..

உண்மையா?!.. இல்லையா?!..

தஞ்சாவூரில் தனது 10 ஏக்கர் நிலத்தை உங்க சித்தியின் அண்ணணிடம் ஒருவர் இழந்தார். அந்த நிலத்தின் உரிமையாளர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கே 2 ஆண்டுகள் போராடி மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் என்று பலரை சந்தித்தும் பலன் இல்லாது போகவே உயரநீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்து ஆணை வாங்கிய பின்னரே முதல் தகவல் அறிக்கை பதியப் பட்டது. வழக்கு இன்னும் இழுவையில் உள்ளது!..

உண்மையா?!.. இல்லையா?!..

இப்படி,
ஊழலில் பிறந்து,
ஊழலில் வளர்ந்து,
ஊழலில் திளைத்த குடும்பம் உங்கள் குடும்பம்!..

அதிமுக என்ற ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாக ஜெயலலிதா இருக்க அந்த சாம்ராஜ்ஜியத்தை ஆட்டிப்படைத்தவர்கள் சசிகலாவும், நீங்களும்தானே!..

எந்த வித சுயகூச்சமும் இன்றி  எப்படி எங்கள் தலைவரை குற்றம் சொன்னீர்கள்?!..

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட நீங்கள் எப்படி எங்கள் தலைவர் மீது குற்றம் சொன்னீர்கள்?!..

வாங்க திருப்பி தலைவர் கலைஞர் கதைக்கு போவோம்!..

1944ல் தன் இருபதாவது வயதில் ஜூபிடர் பிக்சர்ஸ்ல் கதாசிரியராக வேலைக்கு சேர்ந்து விட்டார்!
1957ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக பதவி.  ஒருவர் அரசாங்க உத்யோகத்தில் சேர்த்தால் அதிக பட்சமாக 42 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம்!..

1957ல் அரசாங்க சம்பளம் வாங்க ஆரம்பித்த இவர் தன்  இறுதிக்காலம் வரை கிட்ட தட்ட அரை  நூற்றாண்டுகள் கடந்தும் 60 வருடங்களாக அரசாங்க சம்பளம் வாங்கி கொண்டுள்ளார்.
இதில் ஐந்து முறை முதல்வராக சட்டமன்ற சம்பளத்தில் அதிகப்படியான சம்பளம் வாங்கியுள்ளார்!..

இவர் வாங்கும் அரசாங்க சம்பளம் என்பது இன்று ஐடி துறையில் பணி செய்வோர் வாங்கும் சம்பளத்தை விட அதிகம். ஒரு வருடத்தில் ஐடி துறையில் வேலை பார்ப்பவர்களே உடனே ஒரு கார், சொந்தவீடு என சுபிட்சமாக இருக்கும் போது 56 வருடங்கள் அரசாங்க சம்பளம் வாங்கி கொண்டு இருக்கும் இவர் கோடீஸ்வரனாக இருக்க கூடாதா என்ன?!..

சரி போகட்டும்!..
உங்களுக்குதான் அறிவே இல்லையே,,,

நாம இப்படிக்கா போவோம்,,,

அரசாங்க உத்யோகம் இவருக்கு கைகூடும் முன்னர் என்ன செய்தாரெனில் தன் 20வது வயதில் திரைத்துறைக்கு வந்து தன் 24வது வயதில் ராஜகுமாரி என்னும் படத்துக்கே வசனம் எழுத ஆரம்பித்து விட்டார். அது தான் உங்கள் தொப்பிக்கு முதல் படம்!..

தன் 28வது வயதில் இவர் எழுதிய பராசக்தி படம் திரையுலகில் ஒரு திருப்புமுனை படம். அந்த படத்தின் சம்பளம் எல்லாம் வாங்கி எல்லாம் முடிந்த பின்னர் அதன் வசனங்களை மட்டும் சிறிய புத்தகமாக போட்டு விற்பனை செய்யலாம் என ஏ வி எம் மெய்யப்ப செட்டியார் முடிவு செய்தார்!..

அதற்கு அந்த மஞ்சள் பையுடன் பேசி அனுமதி கேட்டபோது அதற்காக கேட்ட தொகை பத்தாயிரம் ரூபாய். அப்போது ஒரு சவரன் 20 ரூபாய்!..

இப்பபொழுது சொல்! மஞ்சள்பை உழைச்சு சம்பாரிச்சதா இல்லையா?!..

அப்போது ப்யூக் கார் விலையே 7000 ரூபாய் மட்டுமே. அப்போதே கார் வாங்கி விட்டார்.
எம் ஜி ஆர், சிவாஜி ஆகியோர் கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருந்த போதே அவ்வளவு சம்பளம் வாங்கியது இல்லை!..

1957ல் சட்டமன்ற உறுப்பினர் ஆகும் முன்னரே 30000 (முப்பதாயிரம் ரூபாய்)க்கு தான் வசிக்கும் கோபாலபுரம் வீட்டை வாங்கிவிட்டார்!..

இவர் திரைத்துறையில் சம்பாதிக்க பணம் எடுத்துக்கொண்டு  திருவாரூரில் இருந்து வரவேண்டும் என்பதில்லையே?!..

தலைவர் கலைஞர் திரைத்துறையில் பணியாற்றினார் என்று மட்டுமே தெரிந்த நமக்கு
அவர் எத்தனை திரைப்படங்களில்  நடித்துள்ளார் என்னும் விபரத்தை சௌம்யா தியேட்டர்ஸ் உரிமையாளரும், வசனகர்த்தா, பாடலாசிரியர், சினிமா தயாரிப்பாளர், நாடக நடிகர், பத்திரிக்கையாளர் என பன்முக திறமையாளர் அய்யா திரு. டி. வி. ராதாகிருஷ்ணன் 8 பாகங்களாக தன் வலைப்பூவில் எழுதி அதை, "அகநாழிகை" பதிப்பகத்தால் புத்தகமாக தலைவர் கலைஞரின் 87ஆம் அகவையில் வெளியிடப்பட்டு, செம்மொழி மாநாட்டில் அகநாழிகை பதிப்பகத்தாரால் பலருக்கு இலவசமாக வழங்கப்பட்டது!..

நீங்கள் ஆர்.கே.நகரில் 20ரூபாய் டோக்கன் கொடுத்து ஒட்டு வாங்கியது போல் வாங்காமல் 
உண்மையான 20 ரூபாய் கொடுத்து புத்தகத்தை வாங்கி படித்து தெரிந்து கொள்ளவும்!..

கிடைக்குமிடம்,,,
"அகநாழிகை பதிப்ப்கம்",
33, மண்டபம் தெரு,
மதுராந்தகம்,
பின்: 603 306 ,
போன்: 999 4541010...

இனி இது போல் எங்கும் பேசி உங்கள் மரியாதையை குறைத்து கொள்ளாதீர்கள்!..

உங்களுக்கு எங்கும் மரியாதை இல்லை எனபது தெரியும் இருந்தாலும் நீங்களும் மனிதன்தானே!..

ஜெயலலிதா போல் நாயே  என்று சொல்ல மாட்டோம்!..

காரணம் நாங்கள் நல்ல ஆசானிடம் பாடம் பயின்ற மாணவர்கள்!..

உங்க நல்லநேரம் ஒருத்தர் திமுகவில் இல்லை, இருந்திருந்தால் இந்நேரம் வாயில் ரத்தம் வந்திருக்கும்!..

2016 டிசம்பர் மாதம் ஜெயலலிதா அம்மையார் இறக்கிறார்.

2016 டிசம்பர் மாதம் ஜெயலலிதா அம்மையார் இறக்கிறார்.

2017 ஏப்ரல் மாதம் அவருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை செய்யப்பட்டார்.

காவலாளியை கொலை செய்துவிட்டு உள்ளே புகுந்து திருடியுள்ளனர்.

யார் திருடினார்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால் சிசிடிவி காமிரா வேலை செய்யவில்லை.

கொடநாடு எஸ்டேட்டுக்குள் புகுந்து அங்கிருந்த விலையுயர்ந்த கடிகாரங்களை திருடினார்கள் என எப்ஐஆர் போடப்பட்டது.

ஓரிரு மாதங்கள் கழித்து ஜெயலலிதா வின் கார் ஓட்டுநர் கனகராஜ் அவரது குடும்பத்தோடு கார் விபத்தில் மரணமடைகிறார்.

பிறகு சில நாட்கள் கழித்து கொடநாடு எஸ்டேட் சிசிடிவி ஆபரேட்டர் இறந்துவிடுகிறார்.

திருடியவர்களில் ஒருவர் என சந்தேகிக்கப்படும் நபர் சயன் என்பவர் அவரது குடும்பத்தோடு ஓரிரு மாதங்கள் கழித்து காரில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் அவரைத்தவிர அவரது குடும்பம் செத்துபோனது.

அந்த உயிர்பிழைத்த நபர் சயன் மற்றும் திருட்டில் இன்னொரு கூட்டாளியான கேரளாவை சேர்ந்த வலையார் மனோஜ் இருவரது பேட்டியைத்தான் இன்று டெல்லியில் பத்திரிகையாளர் வெளியிட்டுள்ளார்.

ஓ மை காட் .. கடந்த இரண்டு வருஷத்துல தமிழ்நாட்டில இதெல்லாம் நடந்துச்சா ? எந்த டிவிலேயும் நியூஸ் பார்த்தா மாதிரி ஞாபகம் இல்லையே என்று தானே நினைக்கிறீர்கள் ?

யாராச்சும் திமுக தொண்டர் ஓட்டல் ல பரோட்டோவுக்கு ஓசி சால்னா கேட்டு சண்டையிடமாட்டாரா என எதிர்பார்த்து ஊடகங்கள் காத்திருந்ததில் இந்த செய்திகளை ஒளிபரப்ப மறந்திருக்கலாம்.

Wednesday, January 09, 2019

போலீஸ் கேஸ் உங்களவாக்கு அமெரிக்க விசா எங்களவாக்கு

//அடிதடி கலவரம் போலீஸ் கேஸ் உங்களவாக்கு.. ஐஐடி, ஐஐஎம், நீட் மெடிக்கல், மத்திய அரசு வேலை, அமெரிக்க விசா எங்களவாக்கு.. //
ஆர் எஸ் எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகள் முன்வைக்கும் அரசியல் என்பது பெரும்பான்மையான இந்துக்களுக்கு எதிரானது.. அதாவது இந்துக்களில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் பிரிவு மக்களுக்கு எதிரானது. ஆர்எஸ்எஸ் பிஜேபி இந்துத்துவ அரசியல் என்பது ஒரு சில கார்ப்பரேட்டுகள் உள்ளிட்ட பார்ப்பனர் போன்ற சில மேல் சாதிகளுக்கு மட்டுமே பலனளிப்பது..
இந்துக்களிலேயே பெரும்பான்மையாக உள்ள, அதாவது இந்துக்களில் 85% சதவீதம் உள்ள பிற்படுத்தப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் பிரிவு மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காக, அவர்களின் வேலைவாய்ப்புகளுக்காக ஆர்எஸ்எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகள் இதுவரை என்ன செய்திருக்கின்றன??
பிசி எம்பிசி எஸ்சி பிரிவு மக்களின் கல்வி வேலைவாய்ப்புகளுக்காக போராடுவது திராவிட மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற முற்போக்கு இயக்கங்கள் தான்.. இவர்களின் போராட்டத்தில்தான் நாட்டில் இந்த பிரிவு மக்களுக்கு அதாவது இந்துக்களில் பெரும்பான்மையான மக்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைக்கின்றன..
ஆனால், ஆர்எஸ்எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகள் கல்வி வேலைவாய்ப்புகளுக்காக எத்தனை போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள்?? இவர்கள் இந்து இந்து என போதையேற்றி, பிசி எம்பிசி sc மக்களை மத கலவரத்தில் அடியாட்களாக பயன்படுத்திவிட்டு, கல்வி வேலைவாய்ப்பில் பார்ப்பனர் போன்ற முன்னேறிய சாதியினர் ஆக்கிரமிக்க வழி வகுப்பார்கள்.. எனவே இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் பிரிவு மக்கள் இது போன்ற இந்துத்துவ கும்பல்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..
அதாவது பார்ப்பன உயர்சாதியினர் எல்லாம், நல்லா படிச்சி அமெரிக்காவுல செட்டில் ஆகனும், எங்க பிசி எம்பிசி எஸ்சி இளைஞர்கள் எல்லாம் மத கலவரங்களுல வெட்டிட்டும், உருட்டிட்டும் போலீஸ் கேஸ், கோர்ட்டு, ஜெயில்ன்னு எதிர்காலத்த சீரழிச்சிகனும்... அந்தப் பக்கம் பார்த்தா, பார்ப்பனர் போன்ற உயர் சாதியினர் எல்லோரும் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ்ல படிச்சி மேல் படிக்கவும், வேலைக்கும் அமெரிக்கா விசா வாங்க கியூவுல நிப்பாங்க..
இதுதான் ஆர்எஸ்எஸ் இந்துத்துவா பிளான்.. ஏன்னா, இங்க தூண்டிவிட்ட மத கலவரங்கள்ல போலீஸ் கேஸ்ல சிக்கணுவுங்க பூர SC/BC/MBC பசங்கத்தான்.. கலவரங்கள தூண்டிவிடுற பார்ப்பன சாதி பசங்க யாரும் கிடையாது..
சரி, அப்படியே உண்மையா "இந்துக்கள்" மீது அக்கறைன்னா, வெறும் 3% இருக்குற பார்ப்பன வகுப்பினர் 90% ஆக்கிரமிச்சி இருக்குற ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் படிப்புகளில் & மத்திய அரசு பணிகளில் எங்க SC/BC/MBC இந்துக்களுக்கு ஒழுங்கான இடஒதுக்கீடு கிடைக்க குரல்குடு பாக்கலாம்..
இங்கே உள்ள எந்த ஹிந்து அமைப்புகள் & ஆர்எஸ்எஸ் பிஜேபி இந்துத்துவா இயக்கத்தினரோ அல்லது அவர்களது தலைவர்களோ இதுவரை இந்துக்களில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்ட பட்டியல் பிரிவு மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்விகாக குரல் கொடுத்தார்களா??? கிடையாது...
இங்க தமிழ் நாட்டுலேயும் திராவிட & நீதி கட்சி ஆட்சிகளுக்கு முன்பு 90% அரசு வேலைகள், படிப்புகளை பார்ப்பனர்கள்தான் ஆக்கிரமிச்சி வைத்திருந்தார்கள்... திராவிட இயக்கத்தின் போராட்டங்களால், பெரியார் & நீதி கட்சி முன்னோடிகளின் செயல்பாடுகளால் தானே அந்த சூழல் மாறி, பார்ப்பனரல்லாத மக்கள் படிப்புலேயும், வேலையிலேயும் இடம் பிடிச்சாங்க..

பினராயி விஜயனும் சரி, மாயாவதியும் சரி பொருளாதார இட ஒதுக்கீட்டை ஆதரிப்பது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது

கேள்வி: நான் கம்யூனிஸ்ட். எனக்கு திராவிட கட்சிகளை பிடிக்காது. என் நண்பன் தலித் அரசியல் பேசுவான். தலித்துகள் ஆண்டால்தான் தலித்களின் நிலை மாறும் என்பான். ஆனால் பினராயி விஜயனும் சரி, மாயாவதியும் சரி பொருளாதார இட ஒதுக்கீட்டை ஆதரிப்பது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. ஒன்றும் புரியவில்லை.
பதில்: இந்த அதிர்ச்சி கூட உங்களுக்கு வந்ததற்கான காரணம் நீங்கள் தமிழர் என்பதால். அதாவது, திராவிட இயக்கம் கிளை பரப்பி அரசியல்மயப்படுத்திய தமிழ்நாட்டுத் திராவிடத் தமிழர் என்பதால். அதனால்தான் இட ஒதுக்கீடு என்பது சமூகநீதி திட்டமே தவிர, வறுமை ஒழிப்பு திட்டம் அல்ல என்பது உங்களுக்கு புரிந்திருக்கிறது. உங்களைப் போலவே திராவிட இயக்கத்தின் வாக்கரசியல் தலைமையான முக.ஸ்டாலினுக்கும் இது தெரிந்திருக்கிறது. அதனால்தான் பினராய் போல அல்லாமல், மாயாவதியைப் போல அல்லாமல், பொருளாதார இட ஒதுக்கீடு என்கிற மோசடியை கடுமையாக எதிர்க்கிறார்.
திராவிடம் வெறும் அரசியல் கோட்பாடு அல்ல. அது இந்த மண்ணுக்காகவே, இந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் ஆதிக்கக்காரர்களின் மூளையைப் படித்து, அவர்களின் எல்லா விதமான அயோக்கியத்தனங்களையும் உடனுக்குடன் கண்டறிந்து எதிர்க்கும் வண்ணம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட customized அரசியல்.
திராவிடம் என்கிற கறுப்பில் இந்த மண்ணுக்குத் தேவையான சிவப்பும், நீலமும் உள்ளடங்கியே இருக்கிறது. அதனால்தான் அம்பேத்கர், "தமிழ்நாட்டில் உங்களை வழிநடத்த பெரியார் இருக்கிறார்," என தைரியமாகச் சொன்னார்.
மேலும் கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநிலங்களைவிட தமிழகத்தில் பொருளாதார சமன்பாடு மேம்பட்டிருக்கிறது. தலித் கட்சிகள் என சொல்லிக் கொள்ளும் கட்சிகள் ஆளும் மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் தலித்களின் நிலை பன்மடங்கு மேம்பட்டுள்ளது. உள்ளங்கை நெல்லிக்கனியாக இருக்கும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள பலருக்கும் மனம் இருக்காது என்றாலும், மறுத்துப் பேச இது கருத்து(opinion) அல்ல உண்மை(fact). எவ்வளவு கசந்தாலும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். தமிழகம் டென்மார்க்கோ, சிங்கப்பூரோ இல்லைதான். ஆனால் நிச்சயம் உபியைவிட, மேற்குவங்கத்தை விட உயர்ந்தது.
எனவே தமிழகத்தில் இல்லாவிட்டால் நீங்கள் கம்யூனிஸ்டாக, தலித் அரசியல் மட்டுமே பேசுகின்றவராக இருப்பதில் தவறில்லை. ஏனெனில் பிற மாநிலங்களில் திராவிட சித்தாந்த அரசியல் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும்பட்சத்தில் திராவிட மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டை மேற்கு வங்கமாக, உத்திர பிரதேசமாக, பீகாராக மாற்ற முயற்சிக்காமல், ஏனைய இந்தியாவையும், சிவப்பு+கருப்பு+நீலம் கலந்த திராவிட அரசியல் பேசும் நாடாக மாற்ற முயற்சியுங்கள்.
அதைச் செய்ய உங்களுக்கு திராவிடக் கட்சிகளை பிடித்திருக்க வேண்டும் என அவசியம் இல்லை. விமர்சனங்களோடு அவர்களை அணுகுங்கள். இருப்பதில் சிறப்பானதை பெரியாரைப் போல விமர்சனங்களோடு ஆதரியுங்கள். கொள்கையில் தீவிரமாக இருங்கள். திராவிட இயக்கத்தவனாக இருங்கள். போதும்.

ஈழத்தில சாதி கிடையாதா?? அடேய் சாதினாலதான் அங்க போரே நடந்துச்சு??

ஈழத்தில சாதி கிடையாதா?? அடேய் சாதினாலதான் அங்க போரே நடந்துச்சு??
கொழும்பில் வேளாளர்கள் நடத்திய வணிக ஆதிக்கமே இத்துணை பெரிய அழிவிற்கு காரணம். இது தான் ஆணிவேர்.அதெல்லாம் விட்டுட்டு உதவ வந்தவனை கொலைகாரன்!துரோகி!என சாடுவது எந்த வித நியாயம்??

மூக்கால அழுகிறவன், எல்லாம் கால்ல பிறந்த சூத்திரர்கள் தான்

சபரிமலை ..யில் புனிதம் கெட்டுவிட்டது ,என நெற்றியில் பிறந்தஒரு தந்திரி கூட தற்கொலை பண்ணல..ஏன் கேவலம் அந்த பதவியை கூட ராஜினாமா பண்ணவில்லை..?

மூக்கால அழுகிறவன், எல்லாம் கால்ல பிறந்த சூத்திரர்கள் தான்.

இன்னுமா விளங்கவில்லை..."!

நாங்கள் 25 ஆண்டுகளாக பார்ப்பன ஒழிப்பு பிரச்சாரம் செய்து வருகிறோமே

நாங்கள் 25 ஆண்டுகளாக பார்ப்பன ஒழிப்பு பிரச்சாரம் செய்து வருகிறோமே!எவ்வளவு பேசியிருக்கிறோம்.அதனால் ஏதாவது சிறு கலவரமாவது உண்டாயிற்றா??

ஒரு பார்ப்பானுக்காவது சிறு அடியாவது பட்டிருக்குமா? எந்த பார்ப்பான் வீட்டிலாவது கலவரம் செய்தோமா?அவர்களின் கொள்கைகளை அவற்றின் சுழ்ச்சிகளை திராவிடர்களுக்கு எடுத்துக்காட்டி பிரச்சாரம் மட்டுமே செய்து வந்தோம்.

சமுதாயத்தில் அவர்கள் வேறு,நாம் வேறு நம் விடுதலைக்கு முற்போக்காக நம் மக்கள் நடந்து கொள்ளவேண்டியதை பேசுகிறோம். நாகரிகமான முறையில் போராடுகிறோமே தவிர குத்து,வெட்டு கொலை,பலாத்காரம்,நாசம் ஒழுங்கு மீறிய காரியம் செய், கொள்ளையடி! என்றா சொல்லிக்கொண்டா திரிந்தோம். அதற்காக நம் கருத்து வெற்றி பெறாமலா போய்விட்டது?

விடுதலை - 20.9.1952

ஆனால் மறுமுனையில் சர்வ வல்லமை பொருந்திய கடவுளின் பக்தாள்கள் பார்ப்பானின் பசப்புகளை நம்பி கலவரம் செய்து காவல் துறைக்கு அஞ்சி ஓடும் அழகை காணீர்..


the power of பார்ப்பனியம்

இடஒதுக்கீடு வரம்புக்குள் வரும் அத்துணை பேருக்கும், பெரும் போராட்டத்திற்கு பின்னேதான் தங்களுக்கான இடஒதுக்கீடு கிடைத்தது. ஆனால் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசிக் கொண்டே இருப்பவர்களுக்கு எந்த போராட்டமும் செய்யாமல், கேட்காமலேயே, ஜஸ்ட் லைக் தட் இடஒதுக்கீடு கிடைத்திருக்கிறது!

Please understand the power of பார்ப்பனியம்!

சமூகநீதி அரசியல்ங்குறது எல்லோருக்குமாது

இந்த பெரியார் பாய்ஸ்தான் கடவுளே இல்லைனு சொல்ரானுங்கலே அப்புறம் என்ன மயிருக்கு பெண்களை அனுமதிக்கனும் மாட்டு கறிய சபரிமலையில் சமைக்கனும்னு சொல்ரானுங்க
கடவுளே இல்லை என்று சொல்ரவன் எதர்க்கா இந்து கடவுளை மட்டும் விமர்சனம் பன்றாங்க

சமூகநீதி அரசியல்ங்குறது எல்லோருக்குமாது. ஆண் பெண் மூன்றாம் பாலினம் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூதாய மக்கள் அனைவருக்குமாது. சிலரை போல இந்துக்களுக்காக குரல் கொடுப்போம்னு பார்ப்பனர் உயிர் சாதி வசதி படைத்த மக்களுக்கான அரசியல் இல்லை !!  

பிராமணர்கள் மட்டுமே முற்பட்ட பிரிவினர் கிடையாது ப்ரோ..

பிராமணர்கள் மட்டுமே முற்பட்ட பிரிவினர் கிடையாது ப்ரோ..
அது எங்களுக்கும் தெரியும் ப்ரோ, ஆனா, பிராமணர்களுடன், பிற முற்பட்ட சாதிகளை ஒரே பிரிவாக சேர்த்து எத்தனை ஒதுக்கீடு கொடுத்தாலும், அத்தனையும் பிராமணர்களுக்கே செல்லும்.. முற்பட்ட பிரிவிலுள்ள மற்றவர்கள் நாக்கை தான் வழிக்க வேண்டும்..
முற்பட்ட பிரிவிலுள்ள எல்லா வகுப்புகளும் ஒரே சமூக & கல்வி நிலையில் கிடையாது.. பிராமணர்கள், வட மாநில ராஜ்புத் தாகூர் & வைசியர்கள் ஒரு நிலையிலும், விவசாய வேளாண்மை சார்ந்து இருக்கும் சைவ வேளாளர், சைவ முதலியார், சைவ பிள்ளை, நாட்டுக்கோட்டை செட்டியார், வட மாநிலங்களில் இருக்கும் ஜாட், குஜ்ஜர், பூமிஹார், படேல், மராத்தா போன்ற வகுப்புகள் வேறு நிலையிலும் இருகிறார்கள்.
தற்போதைய நிலையில் மத்திய அரசு பணிகள் & கல்வியில் 68% சதவீதத்தை பெற்று ஆதிக்கம் செலுத்துவது பிராமணர்கள், வட மாநில ராஜ்புத் தாகூர் & வைசியர்கள் தான்.. அதே முற்பட்ட பிரிவில் வரும் சைவ வேளாளர், சைவ முதலியார், சைவ பிள்ளை, நாட்டுக்கோட்டை செட்டியார், வட மாநிலங்களில் இருக்கும் ஜாட், குஜ்ஜர், பூமிஹார், படேல், மராத்தா போன்றவர்கள் கல்வி & வேலைகளில் மிக குறைவாக இருகிறார்கள்.. மேலும், இட ஒதுக்கீடு வேண்டும் என பல ஆண்டுகளாக போராடிவருபவர்கள் இவர்கள் தான்.
இவர்கள் அனைவரையும் ஒரே தளத்தில் வைத்து 10% ஒதுக்கீடு கொடுத்தால், அதை அப்படியே பிராமணர்கள், வட மாநில ராஜ்புத் தாகூர் & வைசியர்கள் மட்டுமே எடுத்துக்கொள்வார்கள்.. மக்கள் தொகையில் 15% சதம் இருக்கும் முற்பட்ட பிரிவில், இவர்கள் 5% சதவீதம் தான், மீதம் 10% சதவீதம் இருப்பவர்கள் சைவ வேளாளர், சைவ முதலியார், சைவ பிள்ளை, நாட்டுக்கோட்டை செட்டியார், வட மாநிலங்களில் இருக்கும் ஜாட், குஜ்ஜர், பூமிஹார், படேல், மராத்தா போன்றவர்கள்.. இவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது.
எப்படி முன்னர் தனி MBC பிரிவு இல்லாமல், BC பட்டியல் மட்டும் இருந்தபோது, சில வகுப்பினர்களுக்கு உரிய பங்கு கிடைக்காமல், தனி MBC ஒதுக்கீடு தேவை என போராடினார்களோ, அப்படி முற்பட்ட பிரிவினர்களுக்கு இடையே பிரச்னை வரும்.

உயர் ஜாதியில் ஏழைகளுக்காகப் பொங்குபவர்களே!

உயர் ஜாதியில் ஏழைகளுக்காகப் பொங்குபவர்களே!
உயர்ஜாதியினரை யாராவது படிக்கக்கூடாது என்று சொன்னார்களா?
எங்களைச் சொல்லி இருக்கிறார்கள்.
நீங்கள் படித்தால் நாக்கை அறு என்று சொன்னார்களா?
எங்களைச் சொன்னார்கள்.
நீங்கள் படிப்பதைக் காதால் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று சொல்லி இருக்கிறார்களா? எங்களைச் சொல்லி இருக்கிறார்கள்.
படிப்பதை நெஞ்சில் தேக்கி வைத்திருந்தால் நெஞசைப்பிள என்று சொன்னார்களா? எங்களைச் சொன்னார்கள்.
உங்களுக்கு யாராவது கல்வி கற்றுத் தர மாட்டோம் என்று சொன்னார்களா?
எங்களுக்குச் சொன்னார்கள்.
உங்களைப் பள்ளியில் சேர்த்துக் கொள்ள மறுத்தார்களா? எங்களுக்கு மறுத்தார்கள்.
உங்களைப் பள்ளி இருக்கும் தெருவில் நடக்க அனுமதி மறுத்தார்களா? எங்களுக்கு மறுத்தார்கள்.
உங்களுக்குப் படிப்பு வராது என்று சொன்னார்களா? எங்களைச் சொன்னார்கள்.
நீங்கள் குலத்தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்று சொன்னார்களா? எங்களைச் சொன்னார்கள்.
உங்களைத் தொட்டால் தீட்டு என்று யாராவது சொன்னார்களா?
எங்களைச் சொன்னார்கள். உங்களைப் பார்த்தால் பாவம் என்று சொன்னார்களா? எங்களைச் சொன்னார்கள்.
உங்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று சொன்னார்களா? எங்களைச் சொன்னார்கள்.
உங்களை வீதியில் நடக்கக் கூடாது என்று சொன்னார்களா? எங்களைச் சொன்னார்கள்.
உங்களைக் காலில் செருப்புப் போடக் கூடாது என்று சென்னார்களா?
எங்களைச் சொன்னார்கள்.
உங்களை உயர் கல்வி கற்க அனுமதி மறுத்தார்களா? எங்களுக்கு மறுத்தார்கள்.
உங்களுக்கு தகுதி திறமை இல்லை என்று சொன்னார்களா? எங்களைச் சொன்னார்கள்.
உங்களைப் பள்ளியில் தனி இடத்தில் அமர வைத்தார்களா? எங்களை அமர வைத்தார்கள்.
உங்களுக்கு தாகத்திற்குத் தண்ணீர் தர மறுத்தார்களா? எங்களுக்கு மறுத்தார்கள்.
நீங்கள் சொத்து வைத்துக் கொள்ள வேண்டாம் என்று யாராவது சொன்னார்களா? எங்களுக்குச் சொன்னார்கள்.
நீங்கள் சொத்து வைத்திருந்தால் யாராவது பறித்துக் கொண்டார்களா? எங்கள் சொத்தைப் பறித்துக் கொண்டார்கள்.
உங்களிடம் கூலி கொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்று சொன்னார்களா?
எங்களுக்குச் சொன்னார்கள்.
அப்படி இருக்க எங்களுக்குக் கொடுக்கும் இட ஒதுக்கீட்டை உங்களுக்கும் கேட்கிறீர்கள்?
கொஞ்சமாவது உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா? சிந்தித்துப் பாருங்கள்.
எதற்காக உங்களுக்கு இட ஒதுக்கீடு?
பெல் ம.ஆறுமுகம்

பார்ப்பனர்கள் தங்களின் பிறவிக் குணத்தை...

எத்தியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக் கொண்டாலும், சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், பார்ப்பனர்கள் தங்களின் பிறவிக் குணத்தை (Clannishness) மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள் : டி எம் நாயர்
பேராசைப் பெருந்தகையே போற்றி
பேசநா இரண்டுடையாய் போற்றி
தந்திர மூர்த்தி போற்றி
ஒட்டுவித்தை கற்றோய் போற்றி
உயர் அநீதி உணர்வோய் போற்றி
எமது இனம் கெடுத்தோய் போற்றி
ஈடில்லாக் கேடே போற்றி
இரை இதோ போற்றி! போற்றி
எத்தினேன் போற்றி போற்றி
பேரறிஞர் அண்ணா

பார்ப்பனர்கள் இன்றும் பெரியாரை எதிர்க்க காரணம்...

ஈ.வெ.ராமசாமி ஒரு தேசத்துரோகி...

ஆங்கிலேயனுக்கு காவடி தூக்கியவர் தான்
ஈ.வெ.ராமசாமி....

பார்ப்பனர்கள் இன்றும் பெரியாரை எதிர்க்க காரணம்...

இந்தியாவை ஆண்ட மாமன்னர்களும், சக்கரவர்த்திகளும், ஆண்ட, பேண்ட, மோண்ட , வீரத் தமிழ் மன்னர்களும்
மனுதர்ம படியே ஆட்சி
புரிந்தனர்.

ஆனால் 1620 கள் தொடங்கி
ஆட்சிசெய்த
ஆங்கிலேயர்கள்
மனுதர்ம சட்டத்தில் பலவற்றை நீக்கினார்.

இதுவே
பார்ப்பனர்கள்
ஆங்கிலேயரை எதிர்க்க காரணமாயிருந்தது.

1773 ல் வர்ணமுறைப்படி சூத்திரர் அடிமை என்பதை ஒழித்து "சட்டத்தின் முன் அனைவரும் சமம் " என்ற நிலையை கொண்டுவந்தனர்.

1795 ல் பார்ப்பன்களும் சத்திரியர்கள் மட்டுமே சொத்து வாங்கலாம் என்றிருந்த நிலையை மாற்றி அனைவரும் சொத்து வாங்கலாம் என்று சட்டமியற்றினார்கள்.

1804 ல்
'பெண் சிசுக்களை' கொலை செய்வதைத் தடுக்க சட்டமியற்றினார்கள்.

1813 ல் கொத்தடிமை சட்டத்தை ஒழித்தார்கள்.

1817 ல் பார்ப்பனர்கள் எந்த குற்றம் செய்தாலும் தண்டனை இல்லை என்பதை‌ ஒழித்து,அவர்களுக்கும் தண்டனை பெற்ற சட்டம் இயற்றினர்.

1819 ல் சூத்திரப் பெண் திருமணமான உடன் ஏழு நாட்கள்‌ கோயிலில் (கோயில்களில் பள்ளியறைகள் இன்றும் உள்ளன ) பார்ப்பனர்களுடன்...... இருக்க வேண்டும்
(நீங்கள் நினைப்பது தான்) தடை செய்தனர்.

1828 ல் குழந்தைத் திருமணத்தடைச் சட்டம் கொண்டு வந்தனர்.

1829 ல் விதவைகள் உடன்கட்டை (சதி)ஏறுவதை தடைசெய்யும் சட்டம் கொண்டு வந்தனர்.

1835 ல் பார்ப்பனர்களுக்கும் சத்திரியர்களுக்கு மட்டுமே கல்வி என்ற நிலையை மாற்றி சூத்திரர்களும் கல்வி பயில சட்டம் இயற்னர்.

சூத்திரர் முதல் ஆண் பிள்ளையை கங்கையில்
போட்டு,கங்காதானம்‌ செய்வதற்கு தடைச் சட்டம்.

சூத்திரர் நாற்காலியில் உட்கார அனுமதிக்கும் சட்டம் கொண்டுவந்தனர்.

1868 ல் இந்து மனு(அ)தர்ம சட்டத்திற்கு
முழுமையான தடை கொண்டு வந்தனர்.

இவை அனைத்தும் சட்டவரைவு பெற்றதால் ஆங்கிலேயரை கடுமையாக எதிர்த்தார்கள், பிராமணர்கள்.

ஆங்கிலேயர் செய்த சீர்திருத்தங்கள் அனைத்தையும் பெரியார் வரவேற்றார்.

அதனால் பெரியாரையும் எதிர்க்கிறார்கள் இன்றளவும்...

பெரியார் பார்ப்பனீயம் இருக்கும் வரை தேவை...

மானுடன் உள்ள வரை தேவை......

சுய மரியாதை உள்ள வரை தேவை....

அறிவு உள்ளவரை தேவை....

(தமிழர்களின் உரிமைக்கு எதிரி யார்?
பக்கம் 22.23...)

Tuesday, January 08, 2019

கெட்ட வார்த்தை .. கருணாநிதி

உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டா? எழுபது எண்பதுகளில் நாமெல்லாம் ஒரு பூச்சி புழுக்களை போல பயந்து பதுங்கி இருந்தோம் .. வவுனியா தாண்டி விட்டால் ரெயிலில் எல்லாம் தமிழ் பத்திரிகைகளை படிக்க மாட்டோம் அப்புறம் வருடா வருடம் அடி .. அது பூதாகரமாகி பேயடி பிசாசடி .. உலகத்தில் எந்த நாட்டுக்கும் இது ஒரு பெரிய பிரச்சனையாக தெரியவில்லை . ஒரு சின்னஞ்சிறு நாட்டின் உள்நாட்டு குழப்பம் என்ற அளவில் மட்டுமே இது பார்க்கப்பட்டது!.. அடுத்த அடி எப்போது எங்கிருந்து என்று நடுங்கி கொண்டிருந்ததோம் . அந்த காரிருள் நாட்களில் ஒரு வெளிச்சமும் எமக்கு தெரியவில்லை .. எந்த திசையில் இருந்தும் அபய அளிக்கும் குரல் கேட்கவில்லை .. அந்த நீண்ட நெடிய இரவை கிழித்து கொண்டு ஒரு செய்தி வந்தது பிபிசி மூலம் கேட்டது . தமிழ்நாட்டில் கலவரம் ..ஆர்ப்பாட்டம் ... கருணாநிதி ஆர்ப்பாட்டம் ..கருணாநிதி கோரிக்கை மத்தியரசு செவி சாய்க்கவேண்டும .. கருணாநிதி உண்ணாவிரதம் .கருணாநிதி மனித சங்கிலி .. கருணாநிதி சாலை மறியல் .. கருணாநிதி ரெயில் மறியல் ... எங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொருவர் வாயிலும் ஒரு மந்திர சொல் போல உச்சரிக்கப்பட்ட அந்த வார்த்தை கருணாநிதி . அதுவரை எந்தவித நிதானமும் இன்றி சிங்களதேசம் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் கருணாநிதி என்ற சொல்லுக்கு செவி சாய்த்து பதிலளித்தார் இந்திரா காந்தி அம்மையார் .. நரசிம்ம ராவை அனுப்பினர் . நரசிம்ம ராவ் கட்டுநாயக விமான நிலையத்தில் வந்து இறங்கினார் ,, முதல் முதலாக ஸ்ரீ லங்கா அறிந்து கொண்டது இனி தமிழர்களை தாக்க முடியாது ,, பக்கத்தே இருப்பது தமிழ்நாடு .. அங்கே இருக்கிறார் கருணாநிதி ! அன்றில் இருந்து கருணாநிதி என்ற சொல் முழு சிங்கள தேசத்திற்கும் கெட்ட சொல்லானது . அது முதல் நாங்கள் அதிகம் கேட்ட வார்த்தை அந்த அந்த கெட்ட வார்த்தை .. கருணாநிதி!

Monday, January 07, 2019

"பார்ப்பனர்களும் – தீட்டும்"

"பார்ப்பனர்களும் – தீட்டும்"
----------------------------------------------------
சபரிமலைக்குச் சென்று இரு பெண்கள் வழிபட்டார்கள் என்பதற்காக கோவிலை பூட்டிவிட்டு கேரள பார்ப்பன நம்பூதிரிகள் தீட்டுக் கழித்தனர் என்ற செய்தி உங்களுக்குத் தெரியும், இதே போன்ற இழிசெயலை பல இடங்களில் பலமுறை பார்ப்பனர்கள் செய்துள்ளனர் என்ற வரலாறு இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா.

1) 1927ல் திருச்சி மலைக்கோட்டை கோவில் நுழைவுக்கு ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்ற நீதிக்கட்சியின் தலைவர்கள் ஜே.என்.இராமநாதன்,டி.வி.சுப்பிரமணியன் ஆகியோர் பார்ப்பனர்களால் படிகளில் உருட்டிவிடப்பட்டு மூர்க்கமாக தாக்கப்பட்டனர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

2) 1929ல் ஈரோடு கோவில் கருவறைக்குள் நுழைய உரிமை கோரி தாழ்த்தப்பட்ட தோழர்களுடன் உள்ளே சென்ற மாயூரம் நடராசன்,பட்டுக்கோட்டை அழகிரி உள்ளிட்ட தோழர்களைப் பார்பனர்கள் கோவிலுக்குள்ளே வைத்துப் பூட்டினர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

3) 1927ல் திருவண்ணாமலைக் கோவிலுக்கு நீதிக்கட்சியைச் சேர்ந்த திரு.கண்ணப்பன் தோழர்களுடன் சென்றபோது பறையர்கள் வருகிறார்கள் என்று பார்ப்பனர்கள் கோயிலையே இழுத்துப் பூட்டி விட்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

4) 1874ல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வழிபட வந்த நாடார்களை பார்ப்பனர்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியதோடு அது தொடர்பாக நடந்த வழக்கில் நாடார்கள் கோவிலுக்குள் நுழைய உரிமை கிடையாது என்று தீர்ப்பு வழங்கப்பட்ட வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

5) 1939ல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்டோர் நுழைவுப் போராட்டம் நடந்தவுடன் கோவிலை விட்டு மீனாட்சியே ஓடிப்போய் விட்டால் என்று பார்ப்பனர்கள் பிரச்சாரம் செய்து கோவிலுக்கும் பூட்டுப் போட்டுவிட்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

6) 1984ல் பூரி ஜெகந்நாதர் கோவிலுக்குள் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியையே(அவர் பார்சி வகுப்பைச் சேர்ந்தவரை திருமணம் செய்தார் என்பதால்) உள்ளே விட பார்ப்பனர்கள் மறுத்துவிட்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

7) 1946ல் திருவையாறு தியாகராயர் விழாவில் தண்டபாணி தேசிகர் தமிழ்ப் பாட்டுப் பாடினார் என்பதற்காக மேடை தீட்டாகி விட்டது என்று பார்ப்பனர்கள் தீட்டுக் கழித்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

8) 1925ல் கன்னியாகுமரிக்கு கோவிலுக்கு வந்த காந்தியடிகளை பிரகாரத்தை மட்டுமே சுற்றி வருவதற்கு பார்ப்பனர்கள் அனுமதித்தார்கள்,கோவிலுக்குள்ளே விடவில்லை என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

9) 1927ல் சிதம்பரத்துக்கு காந்தியார் வந்தபோது ஆதிதிராவிடர்களை உள்ளே அழைத்துச் சென்று விடாமல் தடுக்க தீட்சிதப் பார்ப்பனர்கள் கோவிலின் நான்கு கதவுகளையும் இழுத்து மூடிவிட்டனர்,கோவிலுக்குள் இருத்த பக்தர்கள் அன்று முழுவதும் உள்ளேயே அடைபட்டு கிடந்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

10)  1979ல் பாபு ஜெகஜீவன்ராம் துணைப் பிரதமராக இருந்தபோது சம்பூர்ணானந்தா சிலையைத் திறந்து வைத்தார். ஒரு தாழ்த்தப்பட்டவரால் திறக்கப்பட்டது என்பதாலேயே சம்பூர்ணானந்தா சிலை பசுவின் சிறுநீரும் கங்கை நீரும் தெளித்து தீட்டுக் கழிக்கப்பட்டது என்ற வரலாறு தெரியுமா உங்களுக்கு?

11)  2014ல் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர், மதுபானி மாவட்டத்தில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே சென்றதும் பார்ப்பனர்கள் கோயிலைக் கழுவி தீட்டுக் கழித்தனர் என்ற வரலாறு தெரியுமா உங்களுக்கு?

12)  2018ல் இந்தியாவின் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் அவர்களையும், அவரது துணைவியாரையும், தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதனால்,இராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்குள்  நுழையவே அனுமதிக்கவில்லை. கோவில் படிக்கட்டில் அமர்ந்து பக்தி பூஜை செய்தனர் என்ற வரலாறு தெரியுமா உங்களுக்கு?