Tuesday, March 26, 2019

#திராவிடம் அறிவோம் (84)

அரசு ஊழியர்கள் ஏன் திமுக விற்கு வாக்களிக்க வேண்டும் ?

1972-ஆம் ஆண்டுக்கு முன்னர், அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் நடத்தை பற்றிய இரகசியக் குறிப்பேடு முறை இருந்து வந்தது. இதன் மூலம் தனக்கு வேண்டாதவர்களைப் பற்றி கண்டதையும் எழுதி பலரது பதவி உயர்வைத் தடுக்க இக் குறிப்பேட்டு முறை பயன்பட்டது. (அந்நாளில் அரசுப் பணிகளில் பெரும்பான்மையாக இருந்த பார்ப்பனர்கள் இதைப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்கள் பதவி உயர்விற்கு வருவதைத் தடுத்தனர்). இந்த இரகசியக் குறிப்பேட்டு முறையை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்தது. அக்கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் கலைஞர் இரகசியக் குறிப்பேட்டு முறையை நீக்கி 1972 ஏப்ரல் முதல் வாரத்தில் ஆணை பிறப்பித்தார்.


அரசு அலுவலர்கள் பணிக் காலத்தில் இறந்துவிட்டால், அவர்கள் குடும்பத்திற்கு உடனடி நிவாரணத் தொகையாக ரூ. 10,000 வழங்க ஆணையிட்டவர் முதல்வர் கலைஞர்.

மேலும், அரசு அலுவலர்கள் பணிக்காலத்தில் இறந்தால், அவர்கள் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கும் திட்டத்தை 1972-ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் நாள் கலைஞர் தொடங்கி வைத்தார்.


இவையெல்லாம், அரசு அலுவலர்கள் நலன் கருதி, இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் முதன்முதலாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாகும்.

#திராவிடம் அறிவோம் (83)

1966-இல் கல்லூரியில் புதுமுக வகுப்பு வரையில் மட்டுமே தமிழ் பயிற்றுமொழியாக இருந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின்புதான் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு ஆகியவற்றிலும் தமிழ் பயிற்றுமொழியாக்கப்பட்டது.


பொறியியல் பட்டப் படிப்பிலும் தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு வந்தது தி. மு. க. ஆட்சிதான்.


1996-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிக்கென்று தனியாக ஓர் அமைச்சகத்தை உருவாக்கியது தி. மு. க. அரசு.


2006-ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்கிச் சட்டம் இயற்றியதும் தி. மு. க. அரசுதான்.

திமுகவும் தமிழும்...

திராவிடம் அறிவோம் (82)

ஆங்கிலேயர்கள் வெளியேற வேண்டும் என்பதில் பெரியார் இயக்கத்திற்கு இரண்டு கருத்துகள் ஒருபோதும் இருந்ததில்லை.

“அவர்களின் இடத்தை நிரப்பப் போவது யார்?” என்பதுதான் அவர்களது முதன்மையான அக்கறையாக இருந்தது.

திராவிடம் அறிவோம் (81)

திராவிடம், திராவிடர், திராவிட நாகரிகம் என்பன தமிழர்களால் உருவாக்கிக் கொள்ளப்பட்ட மொழி, பண்பாடு, சமூக, அரசியல் குறிப்புச் சொற்களே. அவை இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலகட்டத்தில் முகிழ்த்த தமிழ்தேசிய அரசியலுக்கான குறிப்புச் சொல்லாக அமைந்தன.

அத்தமிழ்த் தேசிய அரசியலுமே ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகாலம் பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்களின் அளவு ரீதியான வளர்ச்சி, பண்பு ரீதியான பாய்ச்சலாக மாறியதன் வெளிப்பாடே என்பதும், தமிழர்களின் சுய அடையாளத்தையோ, தேசிய உணர்வையோ நசுக்குவதற்காக நீதிக்கட்சியில் இருந்த பிற மொழியினரால் உருவாக்கப்பட்டவையல்ல என்பதும் தெளிவு.

Saturday, March 23, 2019

புலிகள் செய்த எல்லா தவறுகளையும் குற்றங்களையும் மறைக்க ஒருவர் தேவைப்பட்டார். அவர் தான் கலைஞர்.

புலிகள் செய்த எல்லா தவறுகளையும் குற்றங்களையும்
மறைக்க ஒருவர் தேவைப்பட்டார். அவர் தான் கலைஞர்.

ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இறுதிப்போரில் (2006-2009) நடந்த உண்மைகள்
வெளிவந்துக் கொண்டுள்ளது.

உலக நாடுகள் முழுமையாக ஒன்றிணைந்து புலிகளை ஒழிக்க நடத்திய போரை தடுத்து நிறுத்த ஒரு மாநில முதல்வரால் முடியுமா?

எந்த ஒரு சூழலிலும் பிரபாகரனோ புலிகள் அமைப்போ கலைஞரால் போரை நிறுத்தமுடியும் என்று எண்ணவில்லை.

கலைஞரால் என்ன முடியும் என்பது புலிகளுக்கு தெரியும். புலிகளை தன்னால் காப்பாற்ற முடியாது என்பதும் கலைஞருக்கும் தெரியும்.

அதே சமயம் ராஜீவ் கொலைப்பழி சுமந்த கலைஞரால் புலிகளை நேரடியாக ஆதரிக்க முடியாது என்பதும் புலிகளுக்கு தெரியும்.

அவருடைய உண்ணாவிரதம் கூட அப்பாவி மக்கள் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்பதாகவே இருந்தது.

இலங்கை அரசின் கனரக ஆயுதத்தை பிரயோகிக்கமாட்டோம் என்ற உத்திரவாதத்தை பிரணாப் முகர்ஜி கலைஞருக்கு காண்பித்த பின்னரே கலைஞர் உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது. மேலும் ஈழத்தந்தை செல்வாவின் மகனிடம் உரிய விவரம் கேட்டறிந்த பின்னரே கலைஞரின் 6AM to 1PM
உண்ணாவிரதம் வாபஸ் ஆனது.

கலைஞர் அனுமதியுடன் திமுக சார்பில் புலிகளை காப்பாற்ற  எடுக்கப்பட்ட  முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பதும் யாருக்கும் தெரியாது . அதற்கு புலிகள் உரிய ஒத்துழைப்பையும் அப்போது வழங்கவில்லை.

ஈழத்தமிழருக்கு கலைஞர் துரோகம் செய்து விட்டதாக பார்ப்பணர்களும் , பார்ப்பன அடிமைகளும் செய்து வருவது விஷமத்தனமான பொய்ப் பிரச்சாரம்

கலைஞர் இறந்த பின்னும் வன்மம் கொண்டு போலி தமிழ்தேசியவாதிகள் ஈழத்தமிழர் முகமூடியுடன் தூற்றிவருவதை
விபரம் தெரிந்த ஈழத்தமிழர்களே ஏற்கவில்லை.

கலைஞரின் எழுத்தும் பேச்சும்
ஈழத்தமிழர்களின் போராட்ட உணர்வை தட்டி எழுப்பியது எனினும் கலைஞரே ஈழமும் வாங்கித் தருவார் என்று நம்பி, ஈழத் தமிழர்கள் போராட்டத்தை தொடங்கவில்லை.

அவரது அரசியல் செல்வாக்கு தமிழ்நாட்டு எல்லைகளுக்குட்பட்டது என்பது அவர்களுக்கு எப்போதும் தெரிந்திருந்தது.

புலிகளால் டெலோ அழிக்கப்பட்ட சகோதர யுத்தம் காரணமாக தான் ஆதரவை விலக்கிக் கொண்டதாக
நினைக்கமுடியாது. அதன் பின்னரும் கலைஞர் புலிகளை ஆதரித்தார்.

இந்திய அமைதிப்படையை  எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த புலிகளை, ஒரு இந்திய மாநில முதல்வர் ஆதரிப்பதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். அந்த ஆண்மை கலைஞரிடம் இருந்தது.

இந்திய அமைதிப்படையை வரவேற்க மறுத்து தேசத்துரோகி பட்டமும் சுமந்த கலைஞர் புலி ஆதரவு நிலைப்பாட்டால் ஆட்சியை இழந்தார். அதன் பின்னர் நடந்த ராஜீவ் படுகொலையால் 1991 தேர்தலில் மீண்டும் ஆட்சியை இழந்தது திமுக.

1991 ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு தான், கலைஞர் தனது புலி ஆதரவு நிலைப்பாட்டை கைவிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்.

அன்று கொண்டு வரப்பட்ட தடா சட்டத்தால் பெருமளவில் பாதிக்கப் பட்டவர்கள் திமுக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் தான்.

எந்த ஒரு காலத்திலும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட தயாராக இல்லாத ஒரு மிதவாதக் கட்சியான திமுக இடமிருந்து அதிகமாக எதிர்பார்க்க முடியாது.

அன்று நடந்த இறுதிப்போரை நிறுத்தும் வல்லமையும் கலைஞரிடம் இருக்கவில்லை என்பதே உண்மை

அன்று பதவியிலிருந்த கலைஞரும், திமுக உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்து சட்டசபையை கலைத்திருக்கலாம் .
ஆனால் எதுவும் நடந்திருக்காது.
அப்போதே ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பார்.

இறுதி போரின்போது  சர்வதேச நாடுகளின் பின்புலத்தில் நடந்து கொண்டிருந்த அரசியல் மற்றும் இராணுவ திட்டங்கள் தமிழ்தேசியவாத மூடர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

ராஜபக்சே கேட்டும் சிங்கள படை தளபதி பொன்சேகா மறுத்து விட்டதை இங்கிருக்கும் மூடர்கள் அறியமாட்டார்கள்.

கடைசி சில நாட்கள்  நடந்த இறுதிப் போர் முழுமையாக இராணுவ தளபதியின் கட்டுப்பாட்டில்தான் நடந்தது.ராஜபக்சே நினைத்து இருந்தாலும் அதை தடுத்திருக்க முடியாது.

ஏனென்றால் சிங்களத் தரப்பில் முப்படையினர் தரப்பிலுமாக, நான்கு கட்ட ஈழப்போர்களிலும், 24,693 படையினர் கொல்லப்பட்டிருந்தனர் அல்லது காணாமற்போயினர்.

மேலும் ஒட்டுமொத்தப் போரிலும், 82,104 சிங்கள படையினர் காயமுற்று உடல் ஊனமுற்றதாக கூறப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது

இந்திய மத்திய அரசுக்கு கலைஞர் கொடுத்த அழுத்தத்தை விட, பல மடங்கு அதிக அழுத்தங்கள் மேற்கத்திய நாடுகளின் அரசுகள் மீது பிரயோகிக்கப் பட்டன.

கனடாவில், டொரோண்டோ நகரில் ஆயிரக்கணக்கில் கூடிய ஈழத்தமிழர்கள், நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்தை மறித்து ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். இதை விட ஒவ்வொரு மேலைத்தேய தலைநகரத்திலும் நடந்த ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்களை, அந்நாட்டு காவல்துறையினர் தலையிட்டு அடக்குமளவிற்கு ஆக்ரோஷமாக நடந்து கொண்டிருந்தன.

இந்த அழுத்தங்கள் எல்லாம் இராஜதந்திர அரசியலில் தோல்வியுற்றதற்கு ஒரு பிரதானமான காரணம் இருந்தது.

இந்தியாவும், மேற்கத்திய நாடுகளும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அகப்பட்டிருந்த பொது மக்களை விடுவித்தால் மட்டுமே மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று அறிவித்திருந்தன. ஆனால், மக்களை செல்ல விடுவது தற்கொலைக்கு சமமானது என்று கருதிய புலிகள் அந்த நிபந்தனைகளுக்கு சம்மதிக்க மறுத்தனர்.

இதற்கிடையில் அப்போது நடக்கவிருந்த இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜக வென்றால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று வைகோ புலிகளுக்கு தகவல் அனுப்பினார்.

அன்று புலிகள் தமக்கு நெருக்கமாக இருந்த வைகோ சொன்னதை நம்பி ஏமாந்தனர்.

புலிகளின் நம்பிக்கைக்குரிய முகவரான கேபி அனுப்பிக் கொண்டிருந்த ஆயுதக் கப்பல்கள் அனைத்தும் பிடிபட்டுக் கொண்டிருந்தது

மேற்கத்திய நாடுகளில் இயங்கிய புலிகளின் சர்வதேச கிளைகளை சேர்ந்தவர்களும், “அமெரிக்க கப்பல் வந்து காப்பாற்றும்” என்று சொல்லி நம்ப வைத்து ஏமாற்றினார்கள்.

இதுபோன்ற துரோகங்களை மறைப்பதற்காகவே இன்று பலர் கலைஞரை வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள்.

புலிகள் செய்த எல்லா தவறுகளையும் குற்றங்களையும்
மறைக்க ஒருவர் தேவைப்பட்டார். அவர் தான் கலைஞர்.

Thursday, March 21, 2019

சங்கிகள் செய்யும் குற்றங்களை நியாயப்படுத்தும் வழிமுறை

சங்கிகள், அவர்கள் செய்யும் கொலைகளையும் பாலியல் வன்புணர்வு குற்றங்களையும் நியாயப்படுத்த ஒரு வழிமுறையை வைத்திருக்கிறார்கள்.

போலியாக ஒரு செய்தியை வதந்தியை உருவாக்குவார்கள். அதாவது எங்காவது கிறிஸ்தவர்கள் அல்லது இஸ்லாமியர் இதுபோன்ற குற்றங்களை செய்தது போல. அவற்றை அவர்கள் வைத்திருக்கும் போலி செய்தி இணையதளங்களில் போடுவார்கள்.

பிறகு அவற்றை ஆதாரம் என்று சொல்லி, இதை நீங்கள் கண்டித்தீர்களா? அதனால் நாங்கள் செய்யும் கொலைகளை எப்படி கேட்பீர்கள் என்று வருவார்கள்.

தாங்கள் செய்யும் கொலைகளை இப்படித்தான் காலங்காலமாக ஞாயப்படுத்துகிறார்கள்.

சில்லரை பேச்சாளர் சைமன் இப்ப படியளக்க ஜெ இல்லை

தமிழகத்தில் முதல் சில்லரை பேச்சாளர் சைமன் இப்ப படியளக்க ஜெ இல்லை. ஆதலால் இப்ப யாருமே தமிழரில்லை என்பது இவரது கோஷம்.

அவர்:-இந்தி மொழி திணிப்பை எதிர்த்ததில் 1%கூட "இந்திமொழியர்" திணிப்பை எதிர்ப்பதில் காணோம்!
நான்:- அதான் அதை மொத்தமாக சீமான் கூட்டம் சொல்கிறதே! "பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதே மானுட சிறப்பு!

அவர்:-மொரட்டு முட்டு. சொந்த வீட்டிலேயே அகதிகளைப்போல முகாம்களில் அடைத்து வைத்துள்ள தொப்புள்கொடி உறவுகளுக்கு இது பொருந்தாதா தோழர்?
நான்:- "தொப்புள்கொடி" உறவு வாதம் எல்லாம் உணர்வும், வரலாறும் சம்பந்தப்பட்டது! தற்போது நாம் சார்ந்திருக்கும் ஒன்றியத்தின் படி அவர்கள் இன்னொரு நாட்டில் இருந்து வந்து சட்டப்படி அல்லாமல் குடியேறியவர்கள் நீங்கள் சொல்வது போல் அகதிகள் இந்தியாவில் நம் தமிழகத்தில் வந்து குடியேறியவர்களை போல உலகில் எல்லா நாடுகளிலும் ஏறத்தாழ குடியேறியிருக்கிறார்கள் சட்டமும் வெளியுறவு துறையும் தான் முடிவு செய்யும்! இது உங்களுக்கு தெரியாததும் அல்ல- தொப்புள்கொடி என்று நீங்கள் சொல்வது தான் போலித்தனமாக தெரிகிறது நான் முட்டு கொடுக்கவில்லை நிதர்சனத்தை சொல்கிறேன்!

அவர்:- நேர்மையாக கூறுங்கள். தொப்புள்கொடி என்கிற போலித்தனத்தை அண்ணாவும் கலைஞருமே கூறியுள்ளார்கள்.
நான்:-அதில் தவறென்று சொல்லவில்லை! இன்று திடீர் போராளிகள் அதை பயன் படுத்துவது நெருடல், அண்ணா கலைஞர் இப்பொது உங்களுக்கு தேவை படுகிறார்கள், உங்கள் கருத்துக்கு பலம் சேர்க்க எப்பொழுதும் பெரியார் சொன்னதை சொல்வீர்களே! அதையும் சொல்லுங்கள் "ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்" என்பதையும் சொல்லுங்கள் .

முடிவாக இந்த அபாயகரமான சூழலில் தமிழகம் இருக்கும் தருவாயில், அவர் சொல்ல வருவது காங்கிரஸ்சும் வேண்டாம் பிஜேபி யும் வேண்டாம் அவர்களை துடைத்து எறியவேண்டும் என்பதே! அல்லது நோட்டா என்பதே! இவர் திமு காந்தி யின் தொண்டராக இருப்பார் என்று அவதானிக்கிறேன்.

வாக்களில்லாமல் இருப்பதும் நோட்டாவுக்கு போடணும் என்பதும் ஒன்று தான் "விழலுக்கு இறைத்த நீர்" பிஜேபிக்கு எதிராக யார் மூலம் நமக்கு நல்லது நடக்கும் காங்கிரஸ் சை தவிர வேறு வழியில்லை!

அதான் வலிமையான அகில இந்திய கட்சியை காங்கிரஸ் சை ஆதரிக்கிறோம்.

உள்ளபடியே "பிஜேபி-காங்கிரஸ்" எல்லாம் அவர்கள் வாயால் சொல்வதற்கு தான், வெறும் திமுக மீதான காழ்ப்புணர்வு வாதமே!

நல்லது நீங்கள் அப்படிய இருந்துகொள்ளுங்கள் நன்றி!

எனக்கெல்லாம் என் தமிழ்நாடு தான் முதன் முக்கியம்!
சுயநலம் தான் எங்களுக்கு .....

Wednesday, March 13, 2019

அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்த பாடங்கள்

அம்பேத்கர் 1913ல் உலகின் தலைச்சிறந்த பல்கலைக்கழகங்களின் ஒன்றான கொலம்பியா பல்கலைக்கழகத்தில் M.A படிக்க சென்றார். 2 1/2  -3 ஆண்டுகள் அவர் அங்கு இருந்தார். அவர் படிப்பதற்கு பரோடா மன்னர் ஒரு மாதத்திற்கு 11 பிரிட்டிஷ் பவுண்ட் என்ற அளவினாலான ஸ்காலர்ஷிப்ப அளித்திருந்தார். இந்த குறைந்த பணத்தை வைத்துக்கொண்டு அவர் 60 பாடங்கள் படித்திருக்கிறார்! வெறும் 10 பாடங்கள் படித்திருந்தாலே அவருக்கு M.A பட்டம் கொடுத்திருப்பார்கள். இது மிகப்பெரிய சாதனை. இந்த சாதனையை பாராட்டி அவருக்கு பேராசிரியர்கள் விருந்தளித்திருக்கிறார்கள். வெறும் வேலை வாய்ப்புக்காக தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்க அவர் படிக்கவில்லை. தனது படிப்பு யாருக்கு எதற்கு பயன்பட போகிறது என்று அறிந்தே பாடங்களை தேர்ந்தெடுத்து படித்திருக்கிறார். அம்பேத்கரை படிக்க படிக்க மனது வேறு எதிலும் கவனம் செலுத்த மறுக்கிறது. 20 ஆண்டுகள் முன் அம்பேத்கரை படித்திருக்க வேண்டும். மிகவும் வருந்துகிறேன்.

அவர் படித்த பாடங்கள் வருமாறு:

29 courses in economics, 11 in history, 6 in sociology, 5 in philosophy, 4 in anthropology, 3 in politics,  and 1 each in elementary French and German

COURSES TAKEN AT COLUMBIA

SUMMER 1913 
Economics s112  Money and Banking
Economics s120  Corporation Finance

SUMMER 1914 
Economics s205  Modern Economic Theories
Sociology s102  Principles of Sociology--Historical
Economics s125  The Classical Economists

SUMMER 1915 
French sA1  Elementary Course
German sA1  Elementary Course

1913-1914 
Economics 101-102  Science of Finance
Economics 125  The Economic Problems of Germany
Economics 201  Econ. Readings: Classical English Economists
Economics 207  Principles and Methods of Statistics
Economics 210  Social Statistics
Economics 204  History of Economics since Adam Smith
Sociology 151  Principles of Sociology--Analytical
Sociology 256  Social Statistics
Economics 206  Economic Theory
Economics 106  The Trust & Corporation Problem
Economics 205  Economic Theory
Economics 114  Marx & Post-Marxian Socialism
Economics 104  Commerce & Commercial Policy
Economics 304  Seminar in Political Economy & Finance
Sociology 258  The Theory of Social Evolution
Economics 303  Seminar in Political Economy & Finance
History 226  The Protestant Revolt

1914-1915 
Economics 105  The Labor Problem
Economics 108  Railroad Problems--Econ. Social & Legal
Economics 109  History of Socialism
Economics 242  Radicalism & Soc. Reform in 19th Cent. Lit.
History 103  History of India & of Persia
History 121  Hist. of Intellectual Class in Europe--I
History 122  Hist. of Intellectual Class in Europe--II
History 228  The Reforms of the French Revolution
Economics 119  Economic History
Economics 211-212  Statistical Economics
Politics 107  Comparative Politics & Government
Politics 108  Comparative Politics & Government
Sociology 255-256  Soc. Evol. Ethnic & Civil Origin--Lib. & Democracy
Philosophy 231  Psych. Ethics & Moral & Political Philosophy
History 155-156  Origins European Society: Soc. & Indust., Mod. Engl.
Economics 301-302  Seminar in Political Economics & Finance
History 226  Europe in the 12th & 13th Centuries
Economics 228  Types of Economic Theory

1915-1916 
History 169-170  The Expansion of Europe: 1st & 2nd Phases
History 223  Primitive Institutions in European History
Philosophy 179-180  Present Day Philos. & Problems of Evolution
Anthropology 137-138  General Ethnology--Primitive Man & Physic. Envir.
Anthropology 139-140  Gen'l Ethn. Prim. Religion & Mythology--Soc. Org.
Economics e183  Development of Railroad Transportation
Philosophy 131-132  Moral & Political Philosophy
Politics 214  The Principles of Politics


Source: Office of the Registrar, Columbia University.

“அவனுங்களை நடுரோட்டுல வச்சு எரிக்கணும், கல்லாலால அடிச்சுக் கொல்லணும், ஆணுறுப்பை வெட்டணும்”

சமூக வலைதளங்களில், பொள்ளாச்சி சம்பவங்கள் பற்றி வரும் கருத்துக்கள் எல்லாம் “அவனுங்களை நடுரோட்டுல வச்சு எரிக்கணும், கல்லாலால அடிச்சுக் கொல்லணும், ஆணுறுப்பை வெட்டணும்” ங்கற ரேஞ்சுலதான் இருக்கு ஆனா உணர்ச்சிகளுக்கும், சட்டநடைமுறைகளுக்கும் வெகு தூரம்ங்கறதுதான் உண்மை.

நீதித்துறை……

மனிதன்னு சமீபத்துல ஒரு படம் வந்துச்சு, தீம்காவின் முன்றாம் கலைஞர் உதயநிதி நடிச்சது. அதுல ஒரு பணக்காரன் சாலையோம் படுத்துருக்கறவங்களை காரை ஏத்தி கொன்னுருவான். அந்த வழக்குல நம்ம ராம்ஜெத்மலானி மாதிரி ஒரு பெரிய வக்கில் (பிரகாஷ்ராஜ்) வழக்காடி அந்த கேசை ஒன்னுமில்லாம பண்ணிருவார் அப்புறம் நம்ம முன்றாம் கலைஞர் போராடி அந்த கேசுல சாட்சியை கோர்ட்ல ஆஜர்ப்படுத்துவார். அப்ப ஜட்ஜ் (ராதாரவி) ஒரு வசனம் பேசுவார்.

“கோர்ட்ல இங்க உட்காந்துட்டு இருக்கறவங்க மட்டுமில்ல, எல்லோருக்கும் தெரியும் இந்த ஆக்ஸிடன்டை யார் பண்ணதுன்னு, ஆனா நான் ஒரு ஜட்ஜ், மத்தவங்க நினைக்கறத வச்சு நான் தீர்ப்பு சொல்லமுடியாது, நான் சரியான தீர்ப்பு கொடுக்கணும்னா அதுக்கு சாட்சி, ஆதாரம் தேவை, ஆனா ஆதாரம்….. இந்த கேஸ் வந்த முதல் நாளே தெரியும், இதை யார் பண்ணதுன்னு, சரி அவனுக்கு தண்டனை கொடுக்கலாம்ன்னா அதுக்கு ஆதாரம் ? யாராவது ஆதாரம் கொடுப்பாங்களான்னு பாத்தா…..

வெயிட் பண்ணிட்டே இருப்பேன் ஆதாரம் அப்ப வரும் ஆதாரம் இப்ப வரும்ன்னு ஆனா ஆதாரம் ஒண்ணு கூட இருக்காது. பைல் மட்டும் குப்பை மாதிரி சேரும் அதுல ஒரு பேப்பராவது நான் திருப்தியா “ ஆமாண்டா, இதுதாண்டா ஆதாரம்” ன்னு சொல்ற மாதிரி இருக்காது. சாட்சிகளும் பணத்துக்கோ, பயத்துக்கோ விலை போயிடுவாங்க, அப்புறம் நான் என்ன பண்ண முடியும், குற்றவாளி கைய வீசிட்டு வெளிய போயிடுவான். இதுவரைக்கும் இதுதான் நடந்துருக்கு..”

காவல்துறை……

இந்த வழக்கில் ஊடகங்கள் எட்டு வருசம், 1500 பொண்ணுங்க லட்சம் வீடியோன்னு ஆளுக்கொரு கதை சொல்லிக் கொண்டிருந்தாலும், ஒரே ஒரு பெண்தான் புகார் அளித்துள்ளார். அதுவும் நான்கு பேர் கொண்ட கும்பல் தன்னை காரில் அழைத்துச் சென்று மேலாடையைக் கழற்றி புகைப்படம் மற்றும்  விடியோ எடுத்து தங்கச் சங்கிலியை மிரட்டி பிடுங்கி கொண்டதாகவும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் தர புகாரை பெற்று கீழ்கண்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

354-A : ஒருப் பெண்ணை உடல் ரீதியான தொடுதல், உரசுதல் அல்லது தவறான எண்ணத்துடன் பாலியல் ரீதியாக ஒரு பெண்ணின் உடலைக் கையாளுதல் (தண்டனை :1 லிருந்து 4 ஆண்டுகள் வரை)

354-B :  ஓரு பெண்ணின் மீது தவறான எண்ணத்துடன், பலம் கொண்டு அவருடைய உடையை கலைந்து நிர்வாணமாக்குதல் (தண்டனை :1 லிருந்து 3 ஆண்டுகள் வரை)

392 IPC : செயினை பறித்தற்கு

66 (E ) SEXUAL ASSAULT ( பாலியல் தொல்லை)

அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட புகாருக்கு மேல் சட்டப்பிரிவுகள் இருந்தால் சார்ஜ் ஷீட் போட்ட இன்ஸ்பெக்டைரை குனிய வச்சு ராடை சொருகிடும் கோர்ட்.

ஒருவரிடம் புகார் பெறப்பட்டால் மட்டுமே, ஒரு தனிநபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியும்,

வீடியோவுல அவங்க முகம் தெரியுதேன்னு ஆரம்பிங்கறவங்களுக்காக.

2010 வருடம் என் குருநாதர் ஸ்ரீலஸ்ரீ நித்யானந்தாசுவாமிகள் ரஞ்சிதாவுடன் ஆன்மீக ஆராய்ச்சில இருந்தப்போ எடுத்த வீடீயோவை டெல்லி, மத்திய தடய ஆய்வகத்துக்கு அனுப்பி அவங்களும் அந்த வீடியோவ ஆராய்ச்சி பண்ணி அந்த வீடீயோ உண்மைதான் சொன்னது 2017 ஆம் வருசம். ஒரு வீடியோவை உண்மைன்னு சொல்லவே ஏழு வருசம். நாடே நாறின கேசுக்கே எழு வருசம்னா இந்த கேசுக்கு எத்தனை வருசம் ஆகும்ன்னு சொல்ல வேண்டியதில்லை.

எங்க ஊரு பப்ளிக்…………..

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி தென்மாவட்டத்தில் நடந்தது.

“கைய ஏண்டா வெட்டின”

“நேத்து எந்தங்கச்சி காலேஜ் போயிட்டு வரும் போது, குறுக்காட்டி கைய புடிச்சு இழுத்துருக்கான் சார், வீட்டுல வந்து சொல்லிட்டு அழுதா அதான் இழுத்த கைய வெட்டிட்டேன்”

முதல் பாராவை படிங்க….

Modi ji often asks a question what congress has achieved for the country for the last 60 years.

For just facts:- Modi ji often asks a question what congress has achieved for the country for the last 60 years.

This is the answer for him.

 By JULIUS REBEIRO IPS(Retd)
(Former DGP, Maharashtra)

As a citizen of the country I felt it has to be conveyed to them.

Modi ji, there is no point in shouting standing in a stage and asking question that what is achieved in 60 years.

Dont think that the citizen of our country are fools.

You are a Prime Minister of a country which was under British rule for more than 200 years.

The people were living just like slaves.

Congress came to power in 1947 after independence started with zero.

 There was nothing in this country except the garbages left out by the British.

India didn't even had the resource to produce even a pin since Britishers left India.

The electricity was available only for 20 villages across the country.

Telephone facility was available only for 20 rulers (kings) in this country.

There was no drinking water supply.

 There was only 10 small dams.

No hospitals, no educational institutions.

No fertiliser, no feeds, no water supply for cultivation.

There was no job & only starvation in the country.

There was many infant death.

 Very few military staff in the border.

Only 4 planes, 20 tankers & fully open borders on all 4 sides of the country.

Very minimum roads & bridges.

Empty exchequer.

Nehru came power in these circumstances.

What is India after 60 years ?

World's largest army.

Thousands of war planes, tankers.

Lakhs of industrial institutions.

Electricity in all villages.

Hundreds of electic power stations.

Lakhs kilometre of national highways & over bridges.

New railway projects, Stadiums, super speciality hospitals, most of the Indian households with television, telephone for all the countrymen.

All infrastructure to work in and outside the country, Banks, Universities, AIMS, IITS, IIMS, Nuclear weapons, sub-marines, nuclear stations, ISRO, Navarathna Public sector units.

Indian Army barging till Lahore years back?

 Split Pakistan into 2 pieces ?

1 lakh of military & commanders surrendered to Indian army?

 India started exporting minerals & food items ?

Bank nationalisation by Mrs. Indira Gandhi?

Computer introduces to India & many job opportunities in India and outside the country?

You have become PM using information technology?

When you took over as the PM, India was the top 10 economies in the world?

 Apart from this, GSLV, Mangalyan, Monorail, Metro rail, International airports, Prithvi, Agni, Naag, Nuclear submarines....all these were achieved before you became PM.

Please do not come to people asking what Congress has achieved in 60 years.

Please tell people what you have achieved in the last 4 ½ years except changing names, doing statue and cow politics, failed demonetisation, poorly executed GST, and making people stand in long queues.

Hypocrite BJPians opposed FDI like anything and now BJP is supporting FDI shamelessly.

BJP is selling India to Ambani and Rafale deal to Anil Ambani's 2-month old company over HAL owned by government of India is a prime example of it.

BJP made petrol, diesel, and LPG price go up by putting more tax, while the price of crude oil became cheaper.

Modi government through SBI in the form of fine collected whopping Rs 1771 crore for not able to maintain minimum balance from the poor people of India.

Vikas is happening for Amit Shah's son, Amit Shah, Shaurya Doval, Ambanis, Adani, baba Ramdev's Patanjali group, and the people who sponsors BJP..

 3000 crores have been spent by BJP to clean river Ganga, this corruption each and everyone can find out by taking a dip in river Ganga.

This is not an advertisement for the Congress campaign.

 I’m an Indian first before anything else.

 I’m an informed voter who feels it is an insult to his intelligence each time the current government says our country has been no good over the last 60 years!

#திராவிடம் அறிவோம் (80)

தமிழர் சாதிவாரியாகப் பிரிந்து கிடப்பதால் எந்தவொரு குறிப்பிட்ட சூத்திர சாதியாரும் ஆதிக்க சாதியாகி விடக்கூடாது என்பதற்காகவும், அந்த சூத்திர சாதியார் ஆதிக்கத்தால் தாழ்த்தப்பட்டோர் அரசியலதிகாரத்தில் உரிய பங்கினைப் பெற முடியாமல் போய்விடக்கூடாது என்பதற்காகவும் 1940 ஆகஸ்ட் 24, 25 இல் திருவாரூரில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தையும், தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்காளர் தொகுதியை வலியுறுத்தும் தீர்மானத்தையும் நிறைவேற்றச் செய்தார் தந்தை பெரியார்.

#திராவிடம் அறிவோம் (79)

திராவிடம் அறிவோம் (79)

’சுயராஜ்யமா? சுயமரியாதையா?’ என்ற கேள்வியை எழுப்பி ‘சுயமரியாதையை அடைவதே முதன்மையான இலட்சியம்’ எனப் பெரியார் இடைவிடாது கூறிவந்ததற்குக் காரணம், குடிமைச் சமுதாயத்தில் (civil society) மாற்றத்தை ஏற்படுத்தாமல் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதை மட்டும் குறிக்கோளாகக் கொள்வதை அவர் எப்போதும் ஆதரிக்கவில்லை.


தமிழர்களின் கைகளுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பதாக இருந்தாலும் கூட, பார்ப்பனர் ஆதிக்கத்தையும் பார்ப்பனியத்தையும், சாதி ஏற்றத்தாழ்வுகளையும் ஒழிக்காத ஒரு குடிமைச் சமுதாயத்தில் மீண்டும் பார்ப்பன-பார்ப்பனீய ஆதிக்கம் தொடரவே செய்யும் என்று அவர் இடைவிடாது கூறிவந்தார்.

#திராவிடம் அறிவோம் (78)

திராவிடம் அறிவோம் (78)

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு தனது இன்னுயிரை ஈந்தவர்கள் நடராசன், தாளமுத்து ஆகியோர்.

போராட்டக் களத்தில் முதல் பலியானவர் நடராசன். ஆறு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, கடுமையான வயிற்றுவலியால் சனவரி 15, 1939 – இல் மரணமடைந்தார்.

சிறைக்கொடுமையால் கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்து, அதே ஆண்டு மார்ச் 12 – ஆம் நாள் உயிரழந்தார். மூலக்கொத்தளம் மயானத்தில் இருவருடைய உடல்களும் புதைக்கப்பட்டன. சாதிக்கொரு சுடுகாடு இருக்கிற நாட்டில், ஆதிதிராவிடரான  நடராசனும், நாடாரான தாளமுத்துவும் ஒரு இடத்தில் புதைக்கப்பட்டது தமிழ் உணர்வுப் போராட்டத்தின் சான்று. அதை சாதித்துக் காட்டியது திராவிட இயக்கம்.

இன்று தோழர் தாளமுத்துவின் நினைவு நாள்.


#திராவிடம் அறிவோம் (77)

திராவிடம் அறிவோம் (77)

தந்தை பெரியார் இந்தித் திணிப்புக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கிய பின், தமிழ்நாட்டில் மொழிப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்டிருந்த பல்வேறு சக்திகளும், நீரோட்டங்களும் சுயமரியாதை இயக்கத்துடன் வந்து சேர்ந்து சங்கமித்ததன் காரணமாக உருவானதுதான், தனித்தமிழ்நாடு(திராவிட நாடு) கோரிக்கையாகும். அந்த வரலாற்றுச் சூழலிணைவில்தான் ‘தமிழ்த்தேசியம்’ முதன்முதலாக உருவாகியது.

நூற்றாண்டு ! அன்னை மணியம்மையார் !

நூற்றாண்டு !
அன்னை மணியம்மையார் !

தந்தை பெரியார் அவர்கள் உடல் நலமில்லாமல் இருக்கின்றார் . வந்து போவோர் அனைவரும் கவலையுடன் "அய்யா உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள் , உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் " என்று சொல்கின்றார்கள் . பெரியார் மிகவும் கோபமாக " எல்லோரும் இதையே  தானே சொல்கின்றீர்கள் ! யாரவது எப்படி என்று சொல்கின்றீ ர்களா ? " என்கிறார் .

அடுத்த சில நாட்களிலே ஒரு பெண்மணி வருகின்றார் . அம்மா என்ன வேண்டும் என்கின்றார் ?
அய்யா நான் தங்களைக் கவணித்துக் கொள்ள வந்துள்ளேன் . அப்பா சொன்னார்கள் என்கின்றார் . அவர் சிரித்துக் கொண்டே " நீங்கள் சின்ன பெண்,வேறு வேலையில்லையா உங்கட்கு , வீட்டிற்குப் போங்கள் " என்கின்றார்.அவரோ முடியாது,தங்களைப் பார்த்துக் கொள்வது தான் என் வேலை   என்கின்றார். ஒவ்வொன்றாகப் பார்த்துச்  சரி செய்து  எள் என்றால் எண்ணையாக , அனைத்தையும் கவணித்துக் கொண்டு ,வந்தவர்களை ஒழுங்கு படுத்தி அவரது உணவு, ஓய்வு  என்று மிகவும் கண்டிப்பாக  பெரியரையே , இது உங்கட்கு ஒத்துக் கொள்ளாது  உண்ணக்  கூடாது என்று கண்டிப்புடன் இருக்கும் வரை அனைத்தும் அவரே என்ற அளவிற்கு பணி புரிகின்றார். பெரியார் அவரைப்  பல முறை நீங்கள் திருமணம் செய்து கொண்டு வாழும் படி , போகச்  சொல்லி முயற்சி செய்து பார்க்கின்றார் . அவரது தந்தையாரிடமும் சொல்கின்றார். அய்யா இப்போது  தான் நீங்கள் நலமுடன் இருக்கின்றீர்கள் . அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று சொல்லி விடுகின்றார் .

முகம் சுளிக்காமல் பெரியாருக்கு அனைத்தையும் செய்து செவிலியராக, சமையல் காரராக ,( அதுவும் வேனில் பயணம் செய்யும் போதே காய்கறிகளை நறுக்கிவைத்துக் கொண்டு நிற்கும் இடத்தில் சமைத்து உணவு தயார் !), செயலராக , தாயாக, மகளாக அவருடைய கோவத்தை அடக்கும் அமைதியாளராக அவரையே கண்டிக்குக்கும் மருத்துவராக இப்படித் தன் வாழ் நாளே  பெரியார், தன் வாழ்க்கையே அவரது உடல் நலம் என்று வாழ்ந்து காட்டினார் ! எத்தனை ஆண்டுகள் ? உலகில் யாரும் இப்படி இருந்ததாக வரலாறே இல்லை ! நேரே பார்த்தவர்களுக்குத்தான் அதன் முழு ஆழமும் தெரியும் !
அவரை விட  அம்மா சிக்கனம் என்றால் சாப்பாட்டில் உள்ள மிளகும், கறிவேப்பிலையுங் கூட  அடுத்த சமையலுக்கு உதவும் என்ற அளவு சிக்கனம் ! எதையும் வீணாக்கியதாகச் சரித்திரமே இல்லை ! எளிமையின் சின்னம் அவர் !

உழைப்பு எப்போதும்  சுறு சுறுப்புடன் தான் ! வீணாக்க நேரங்கிடையாதே ! மாநாடு கூட்டங்கள் என்றால் அங்கே அவர்தான் புத்தக வியாபாரி ! கூட்டம் முடிந்ததும்  அய்யாவிடமிருந்து  முதல் கேள்வி  எவ்வளவு புத்தகம் விற்றது என்பது தான் !

அவர் பட்ட அவமானம் கொஞ்ச  நஞ்சமல்ல ! அனைத்தையும் தூசியாகத் தட்டி விட்டவர். தூற்றியவர்களே  பின்னர் போற்றினார்கள் என்பதுதான் வரலாறு !
கொள்கையிலே அய்யாவைப் போன்றே துணிவும், சமரசம் செய்யாத மானமும் ! திருசியிலே சிறையில் இறந்தவர்களின் உடலைத் தர மறுத்த போது முதல்வர் காமராசரை நேரிலே பார்த்து அவரே அஞ்சும்  படி கர்ச்சித்தவர் ! உடலைப் பெற்று ஊர்வலம் நடத்திக் காட்டியவர். இராவண லீலாவை நடத்திக் காட்டியவர் . அடக்குமுறையின் போது கழகத்தைக்  கட்டிக் காத்தவர்.

அங்கு நான்சென்றிருந்த போது அவ்வளவு பெரிய பெரியார் திடலிலே அம்மா வெறுந்தரையிலே அமர்ந்திருக்கின்றார்கள் . அருகே அய்யா ஆளவந்தார் மட்டுந்தான் இருக்கின்றார் . எனக்கோ அதிர்ச்சி ! ஆளவந்தார்  என்னை விரட்டுகின்றார் ! நீ ஏன் இங்கே வந்தாய், உடனே சென்று விடு என்கின்றார் ! அவ்வளவு கடுபிடி ! அதில் அம்மாவின் உடல் நலம் மிகவும் பாதிக்க வைத்து விட்டார்கள் எதிரிகள் ! கழகத்தை ஒழித்துவிட நல்ல தருணம் என்று எதிரிகள் கணக்குப் போட்டுத் துரோகிகளுடன் இணைந்து முயன்றனர். ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டனர் என்றே சொல்லும் அளவில் நிலை இருந்தது ! வருமான வரித்துறையின் மூலம் முடக்கப் பார்த்தனர்.

ஒரு சமயம் ஆசிரியர் அய்யாவிடம் உங்கள் உழைப்பிலேயே எதை மிகவும் மகிழ்ச்சியாக நினைவு கூறுகின்றீர்கள்   என்று கேட்டேன் .அப்போது  சொன்னார் வருமான வரி டிரிப்யூனலில் இருந்து மீண்டதைத்தான்  என்றார் ! மீண்டது மட்டுயமல்ல தொகையை வட்டியுடன் திரும்பப் பெற்றோம் என்றார் !

நாகம்மை குழந்தைகள் இல்லம் அம்மா அவர்களின்  இதய மகிழ்ச்சி ! அதில் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை ! அந்தக் குழந்தைகளின் அம்மா அம்மா தான் அவர்க்குப் பிடித்த இன்னிசை !

அம்மாவின் கடைசி நாட்கள் சோதனைகள் நிரம்பியனவாக இருந்தாலும் அவர் ஆசிரியர் மீது வைத்திருந்த நம்பிக்கை அவருக்கு  ஆறுதலைத்  தந்தது என்று தான் சொல்ல வேண்டும் ! யாரிடம் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் அம்மா நன்கு உணர்ந்து சொல்லியும் சென்றிருப்பார்கள் என்று தான் நம்புகின்றேன்.

நூற்றாண்டு  கொண்டாடுகின்றோம் என்றால் அது நன்றியும், மகிழ்ச்சியும் கலந்த நினைவுகள் . நேரிலே கண்டவர்கள் மறக்க முடியாது !
அவர் ஓர் உன்னதப் பிறவி ! அர்ப்பணித்த வாழ்க்கை ! மனதில் நிறைந்தவர் !
வாழ்க அம்மா !
வாழ்க  பெரியார் ! வளர்க  பகுத்தறிவு !

Saturday, March 09, 2019

திராவிட இயக்கம் வந்திருக்காவிட்டால் நம் தாய்த்தமிழின் நிலை

திராவிட இயக்கம் வந்திருக்காவிட்டால் நம் தாய்த்தமிழின் நிலை இப்படியேதான் தொடர்ந்திருக்கும்...
திராவிடத்தால் வீழ்ந்தோம்னு சொல்லும் தமிழ்தேசிய தும்பிகள் போயி கூப்புல உக்காருங்கடா..


SC என்ற பிரிவுதான் அந்த சமூகத்தினரை தரம் தாழ்த்தி விட்டதா?

பட்டியலின வெளியேற்றத்தால் தேவேந்திர குல வேளாளர்கள் வாழ்க்கை தரம் உயர்வாக வாய்ப்புள்ளது என்ற கருத்து பற்றி?.. கிராமங்களில் அவங்க SC ஆளுக என்ற கருத்து பரவலானது... அது பட்டியலின வெளியேற்றத்தால் காலப்போக்கில் மாற வாய்ப்புள்ளது....ஏன் என்றால் SC ஆளுக என்று சொல்லும் சமூக அமைப்பு MBC ஆளுக BC ஆளுக என்று அழுத்தி சொல்வதில்லை.... உண்மையில் SC பட்டியலில் தேவேந்திர குல வேளாளர்கள் சேர்க்கப்பட்டது சரியானது தான்.. அவர்கள் அடைந்த நன்மை அளப்பரியது... இன்னும் ஒரு 100 ஆண்டுகளாவது அந்த சலுகை இருக்கும் பட்சத்தில் அப்பிரிவினர் முன்னேற வாய்ப்புகள் அதிகம் .... உண்மையில் SC என்ற பிரிவுதான் அந்த சமூகத்தினரை தரம் தாழ்த்தி விட்டதா??

என்ன தான் அண்ணல் அம்பேத்கர் அமேரிக்கா வாழ் நபர் என்றாலும் அவர் என்றும் தாழ்த்தப்பட்டவர்தான். இளையராஜா சிந்து பைரவி இசைத்தபின்பு தான் பலர் அவரை இசையில் திறமையுள்ள வர் என இந்து நாளிதழில் கண்டேன் ..ஆக SC என்றவுடன் அவர்களை விட சாதிஏணியில் உயர இருப்போர் என்றும் ஏளனமாக பார்ப்பர்..ஆனால் இதற்கு தீர்வு இல்லை. இது மனித இயல்பு..ரயிலில் முதல் வகுப்பு பயணசீட்டு வைத்திருப்போர் இரண்டாம் வகுப்பினை பார்க்கும் மனநிலை தான். அவர்கள் ' நான் அடிமை இல்லை ' என்று தம் மனம் உயர்த்திக் கொண்டு ..வந்த வாய்ப்பினை பயன்படுத்த வேண்டும்..கிருட்டினசாமி சொல் கேட்கக்கூடாது


SCல இருந்து MBC ஆயிட்டா பள்ளப்பசங்கனு சொல்லுவாங்க அவ்வளவு தான் நடக்கும்


காரணம் MBC ஆகிவிட்டால் PCR Act வராது. அதனால, என்னதான் இவங்க தேவேந்திர குல வேளாளர்ன்னு சொல்லிகிட்டாலும்
அவனுங்க, ஏப்பா அந்தா போற பள்ளன கூப்புடுப்பா,
ஏன் பள்ள தம்பி சவுக்கியமா, ஏல தள்ளி இருல அந்த ஓரமா பள்ளன் உட்காரட்டும் என
்றுதான் ஏளனம் பேசுவான். ஒன்னும் பண்ணமுடியாது.
PCR பாதுகாப்பும் போயிடும். தைரியமா சாதி பேர சொல்லி அசிங்க படுத்துவான்.

ஆமா கேணசாமி நம்ம ஆளுங்க கொஞ்சம் பேரு கிறிஸ்தவனா ஆகி BC யாவே ஆயிட்டான். அவங்கள்ளாம் இப்ப பள்ளகுடியில வாழராங்களா? அவங்க வாழ்க்க தரம் கூடிதான் போச்சா... இல்ல எவனாவது அவங்கள BC ன்னு கூப்புடுறானா?...
ஒத்த எம் பி சீட்டுக்கு (கடைசியில் தென்காசி ரிசர்வு தொகுதியாம்) ஒட்டு மொத்த சமூகத்தயே காவு கொடுக்க துணிந்துவிட்ட இந்த கேணசாமிய நம்பி நம்ம தலமுற அழியனுமா?

மதுரையில் ரயில் வண்டி புறப்படுகிறது...

மதுரையில் ரயில் வண்டி புறப்படுகிறது; காலியாக இருக்கும் அன்ரிசர்வ் கம்ப்பார்ட்மெண்ட்டில் ஒருவர் காலை நீட்டிக் கொண்டு படுக்கிறார். அடுத்ததாக கொடை ரோடு வருகிறது; ரிசர்வ் டிக்கெட் வைத்திருப்பவர்கள் எல்லாம் ஏறுகிறார்கள்; இன்னும் சிலர் அன்ரிசர்வ் கம்ப்பார்ட்மெண்ட்டில் ஏறுகிறார்கள்; ஏற்கெனவே காலை நீட்டிப் படுத்துக் கொண்டிருந்தவரை, அய்யா, காலை மடக்கிக் கொள்ளுங்கள்; நான் உட்கார வேண்டும்'' என்று சொன்னால்,
காலை நீட்டிப் படுத்துக் கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்க்கிறார்; ஒரு அரை மணிநேரம் வசதியாக காலை நீட்டிப் படுத்துக் கொண்டிருந்தவர், யோவ், வேற கம்ப்பார்ட் மெண்டிற்குச் செல்லலாமே; என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய்'' என்பார்.
ஏனென்றால், அரை மணிநேரம் படுத்து அனுபவித்த சுகத்தினை இழப்பதற்கு அவருக்கு மனதில்லை. எதையோ இழந்ததைப் போன்றுதான் அவர் காலை மடக்கிக் கொள்வார். அடுத்தவர்களுடைய உரிமையை மதிக்கவேண்டும் என்பதற் காக அவர் காலை மடக்கி உட்கார மாட்டார்.
அதுபோன்றுதான், இன்றைக்கு முற்பட்டவர்கள் என்று சொல்லக்கூடிய முன்னேறிய ஜாதிக்காரர்கள், காலங்காலமாக அனுபவித்தவர்கள். அவர்களை நாங்கள் ஒன்றும் சொல்ல வில்லை. அய்யா நாங்களும் பயணச்சீட்டு வாங்கியிருக்கிறோம்; எங்களுக்கும் உரிமை இருக்கிறது; கொஞ்சம் எழுந்திருங்கள் என்றவுடன், படுத்திருந்தவர், எதையோ இழந்தது போன்று கூக்குரல் எழுப்புகிறார்.
இதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். அரை மணிநேரம் வசதியை அனுபவித்தவருக்கே அவ்வளவு இழப்பு உணர்ச்சி இருந்தால், ஆயிரக்கணக்கான ஆண்டு களாக அனுபவித்தவர்களே கொஞ்சம் உங்களுடைய உரிமைகளைவிட்டு, எங்களுடைய உரிமைகளை நீங்கள் அங்கீ கரியுங்கள் என்று சொன்னால், சுலபமாக விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
எனவே, இதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். உரிமைக்குக் குரல் கொடுக்கத் தயங்கக்கூடாது. அதற்காக நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்
இந்திய யூனியன் வங்கியின் வெள்ளி விழாவில் தமிழர் தலைவரின் கருத்துரையின் ஒரு பகுதி.
நன்றி. விடுதலை 26.2. 2019

தேவதாசி முறை : நியாயப்படுத்தும் குற்றவாளிகள் !

தேவதாசி முறை : நியாயப்படுத்தும் குற்றவாளிகள் !
பூரி ஜெகன்னாதர் கோவிலில் தேவதாசி முறையை நீட்டிக்க முயற்சிகள் நடந்த 1996-ம் ஆண்டில் புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரை இது. தேவதாசி முறை குறித்த வரலாற்றுப் புரிதலை இக்கட்டுரை ஏற்படுத்துமென்று நம்புகிறோம். படியுங்கள், பகிருங்கள்.
– வினவு
ஜெகன்னாதபுரி, தீண்டாமையை ஆதரித்தும், பெண்கள் வேதம் படிக்கக் கூடாது என்றும், இன்று வரை குரலெழுப்பித் திரியும் பூரி சங்கராச்சாரியின் திருத்தலம். இவ்வூர்க் கோயிலின் தெய்வமான பூரிஜெகன்னாதருக்கு விமரிசையாக நடத்தப் படும் நாபகலிபார் என்ற திரு விழா 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடம் (1996) கொண்டாடப்பட இருக்கிறது.
இவ்விழாவில் ஜெகன்னாதருக்காகக் கதறி அழுது, 10 நாட்கள் விதவையாக வாழும் சடங்கு ஒன்றிற்கு தேவதாசிகள் தேவை. கோவிலின் கடைசி தேவதாசியான கோகிலபிரபா 1993 -ல் மறைந்த போது தனக்கென்று வாரிசாக யாரையும் நியமிக்கவில்லை. தற்போது உயிருடன் வாழும் பரஸ்மணி, சசி மணி என்ற முன்னாள் தேவதாசிகளும் வாரிசுகள் யாரையும் நியமிக்காமல், கோவில் சேவைகளிலிருந்தும் விலகி வாழ்கின்றனர்.
இப்படி தேவதாசிகள் இல்லாமல் போனால் நாபகலிபார் திருவிழாவை எப்படி நடத்துவது? பழி பாவத்துக்கு அஞ்சிய கோவில் நிர்வாகம் உடனடியாக வேலையில் இறங்கியது. பதிவேடுகளைப் புரட் டியது. 1988 -ஆம் ஆண்டில் கஜால் குமாரி ஜெனா என்ற பெண்ணும், அவரது சீடர்களான ஏனைய நான்கு பெண்களும் தேவதாசி சேவைக்கு விண்ணப்பித்திருந்தனர். தூசி தட் டிய விண்ணப்பங்களை 7 ஆண்டுகளுக்குப் பிறகு கையிலெடுத்த நிர்வாகம் ஐவரையும் நேர்காணலுக்கு வருமாறு அழைத்தது.
செப்டம்பர் 11 நேர்காணலுக்கு வந்த பெண்களும், கோவில் நிர்வாகமும் அங்கு குவிந்திருந்த பத்திரிகையாளர்களை எதிர்பார்க்கவில்லை. அவர்களது கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியவில்லை. தொடர்ந்து ஒரு வார காலமாக பல்வேறு பெண்கள் அமைப்புகள், பத்திரிக்கைகள், சில அரசியல் கட்சிகள் என வெளி உலகின் கண்டனங்களை சந்திக்க நேர்ந்த பூரி கோவில் நிர்வாகம் வேறு வழியின்றி முடிவெதுவும் எடுக்காமல் அமைதி காத்து வருகின்றது.
***
இந்த நூற்றாண்டின் (20-ம் நூற்றாண்டு) தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் இருந்ததாக தெரியவருகின்றது. பல நூறு ஆண்டுகள் வலுவாக நீடித்திருந்த தேவதாசி முறை தேவதாசி ஒழிப்புச் சட்டம் மூலம் ஏனைய கோவில்களில் ஒழிக்கப்பட் டாலும் பூரியில் மட்டும் இன்று வரை உயிருடன் உள்ளது ஏன்?
“ஏனென்றால் தமிழ்நாட்டி லும், ஆந்திராவிலும் தேவதாசி முறை விபச்சாரமாகப் பரிணமித்தது போல் பூரியில் நடக்கவில்லை. இங்கு மட்டும் தான் உண்மையாக உள்ளது” என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
முன்னாள் தேவதாசி பரஸ்மணி
எது உண்மை? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன கடைசி தேவதாசி கோகில பிரபா உண்மையில் தனது உறவுப் பெண்கள் இருவரை தத்தெடுத்து தேவதாசியாவதற்குரிய அனைத்துப் பயிற்சிகளையும் அளித்துள்ளார். இருப்பினும் அந்தப் பெண்கள் இருவரும் தேவதாசியாவது அவமானகரமானது என்பதை உணர்ந்து இறுதியில் மறுத்து விட்டனர். மேலும் 1954 , 55 -ல் பூரி கோவில் நிர்வாகத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் போது 30 -க்கும் மேற்பட்ட தேவதாசிகள் கடவுளுக்கு சேவை செய்து வந்தனர். அவர்கள் அனைவரும் சமூக வாழ்க்கைக்குத் திரும்பி விட்டனர். தேவதாசிகளது ஆரம்பமும் முடிவும் வறுமையோடு பிணைந்திருக்கிறது என்பது ஆச்சரியமில்லா உண்மை.
ஒடிஸி நடனத்தைப் பயிலுவதற்காக பூரிக்கு வந்த பிரடரிக் ஏ. மார்க்லின் என்ற பெண் (மனிதவியல் ஆய்வாளர்) அறிஞர், “கடவுளரின் மனைவியர்” என்ற தமது புத்தகத்தில் தேவதாசிகளது வாழ்க்கையை விரிவாக ஆராய்ந்திருக்கிறார். பெற்றோர் தமது பெண்களை தேவதாசிகளாக அனுப்புவதற்குக் காரணம் அவர்களை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து வைக்க இயலாத வறுமையே என்கிறார் மார்க்லின்.
“தேவதாசி சேவைக்காக பெண்களை நாங்கள் அழைத்ததாகக் கூறப்படுவது தவறு. இந்தப் பெண்கள் தாங்களாகவே சேவை செய்ய முன் வந்ததினால்தான் அதைப்பற்றி விவாதிக்க அவர்களை அழைத்தோம். தேவதாசிமுறை தலைமுறை தலைமுறையாக பூரி கோவிலில் இருந்து வரும் முறைதான்” என்கிறார் பூரியின் மாவட்டஆட்சித் தலைவரும், கோவில் நிர்வாக கமிட்டியின் உதவித் தலைவருமான கே.கே. பட்நாயக்.
“இந்து தர்மம்” காக்க பெண்களை ‘சமர்ப்பணம்’ செய்வது அல்லது பலியிடுவது என்பது புதிதல்ல. 1987 -ல் இராஜஸ்தான் மாநிலத்தில் ரூப்கன்வர் என்ற பெண்ணை உடன் கட்டை ஏற்றிக் கொன்ற இந்துத்துவ வெறியர்களின் செயலைக் கண்டு நாடே அதிர்ந்த போது, “சதி”யைப் நியாயப்படுத்தினார் பாரதீய ஜனதாவின் அகில இந்திய துணைத் தலைவர் விஜயராஜே சிந்தியா. பூரியின் ராஜகுடும்ப புரோகிதர் ரமேஷ் சந்ர ராஜகுரு, “நேர்காணலுக்கு வந்த பெண்களிடம் முன்பு ஆடச் சொன்னதாகக் கூறப்படுவது சிலரின் வளமான கற்பனை. 50 ஆண் டுகளுக்கு முன்பே நடனத்தை நிறுத்தி விட்டோம். எவ்வித காரண மும் இல்லாமல் தேவதாசி முறை என்றாலே உடனே விபச்சாரத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்று குமுறுகிறார்.
ராஜகுருவின் கோபத்தை பரிசீலிப்பதற்கு நாம் மன்னர்கள் காலத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். அதற்கு முன்பாக, முன்னாள் தேவதாசியான பரஸ்மணியிடம் ஒரு கேள்வி – ஆண்டவன் முன் நடனம் ஆடுவது பற்றி என்ன கூறுகின்றீர்கள்? “நான் ஜகன்னாதருக்கு மணமுடிக்கப்பட்டவள். தன் கணவனுடன் இரவு என்ன செய்தாள் என்பதை மணமான பெண் ஒருத்தி உலகத்திற்கு எப்படிக் கூற முடியும்?” என்று புன் சிரிப்புடன் மறுக்கிறார். இப்படி நடனம் ஆடுவது தொடருவது மட்டுமல்ல, ஒரு தேவதாசியின் வாழ்க்கை என்பது திறந்த புத்தகமல்ல.
தேவதாசிகளாவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண் வேறெந்த ஆடவருடனும் உறவு வைத்திராத தூய்மை வாய்ந்தவளாக இருத்தல் வேண்டும். பின்னர் அவளுக்கு ஆடல், பாடல், அலங்காரம் உட்பட பல்வேறு கலைகளில் வளர்ப்புத் தாயாரால் (தேவதாசி) பயிற்சி அளிக்கப்படுகிறது. தக்க காலம் வந்த பிறகு அவள் ஜெகன்னாதருக்கு மணமுடிக்கப்படுகிறாள். மணப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு “பொட்டுக் கட்டுதல்” என்றழைக்கப் படும் இந்நிகழ்ச்சி தேவதாசியின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வு. அவள் இறக்கும் போதும் மணப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டே எரியூட்டப்படுகிறாள். இப்படி ஏனைய இந்துப் பெண்களுக்குள்ள ‘விதவை அபாயம்’ தேவதாசிகளுக்கு இல்லையென்றாலும், ஏனைய இந்துப் பெண்களின் மண வாழ்க்கை தேவதாசிகளுக்குக் கிடையாது.
ஒடிஸி நடனக் கலைஞர் சஞ்ஜுக்தா பானிகிரஹி
சனாதனிகளின் பார்வையில் மன்னன் என்பவன் யார்? விஷ்ணுவின் அவதாரம், உயிருள்ள ஜெகன்னாதர்களான மன்னர்களுக்கு செய்யும் அந்தப்புரச் சேவை தேவதாசிகளின் கடமையாகும். ராசராச சோழன் காலத்து தேவதாசிகள் “அரசனின் திருமேனிப் பணியாளராக” அந்தப்புரத்தில் சேவை செய்து வந்தனர் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.
தேவதாசிகளுக்கு பொட்டுக் கட்டும் சடங்கு முதல் அவளது கோவில் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்ற பண்டா என்றழைக்கப்படும் பார்ப்பன புரோகிதனுக்கு செய்யும் சேவை ஜெகன்னாதருக்குச் செய்யும் சேவையைப் போலவே முக்கியத்துவம் உடையது. இதையெல்லாம் சகித்துக் கொள்ளும் தேவதாசி, இவர்களுக்கு அப்பாற்பட்டு வெளி ஆடவருடன் தொடர்பு கொண் டால், மன்னனும், பண்டாவும் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
மன்னர்கள், பார்ப்பனர்கள், பின்னாளில் ஜமீன்தார்கள் என்று உயர்ரக மேட்டுக் குடியினரோடு உறவு கொண்டாக வேண்டிய தேவதாசி அவர்களுடன் பகிரங்கமாக வாழ முடியாது. தேவதாசியின் வாழ்க்கை பட்டு சரிகையைப் போல மின்னினாலும் அதன் பின்னே உள்ள அவலமும், துயரமும், அழுகுரலும் – ஜெகன்னாதர் கோவிலில் நெடிதுயர்ந்து நிற்கும் கருங்கற்களுக்கு மட்டும் தான் தெரியும்.
“அரசாங்கம்; சாராயம், கள் இவைகளை எப்படி வருவாயாகக் கருதி நடத்த வேண்டுமோ அது போலவே பெரும் கோவில்களையும் உண்டாக்கி அரசு வருவாய்க்கு வழி தேட வேண்டும்.” என்று சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் வலியுறுத்துகின்றார்.
பூரியின் முன்னாள் ராஜா திவ்ய சிங் தேவ்
பெருமளவு மக்களின் வாழ்க்கையும், அரசின் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கின்ற நிறுவனங்களாகவே கோவில்கள் இருந்தன. இன்றைய ஐந்து நட்சத்திர விடுதிகளின் சகல வசதிகளும் அன்றைய கோவில்களில் இருந்தன. இதில் ஆடல், பாடல் மூலம் மன்னனை மகிழ்விக்க பார்ப்பனர்களால் நியமிக்கப்பட்டவர்களே தேவதாசிகள்.
பண்டைய கதைகளை இங்கு கிசுகிசுக்க வேண்டாம், தேவதாசி சேவைக்கு நாங்கள் விண்ணப்பத்திருக்கும் காரணங்களை சற்றுக் கவனியுங்கள் எனும் கஜால் ஜெனா என்ன கூறுகின்றார்? “ஐந்து வயதிலேயே கண்ணன் என்னுள் வியாபித் திருப்பதை உணர்ந்தேன். 19 வயதில் தீட்சை பெற்றுக் கொண்டேன். நின்று போன தேவதாசி சேவையை உயிர்ப்பிப்பது கடமை என்று கருதி என் சிஷ்யைகளுடன் விவாதித்தேன். ஏதோ ஒரு வகையில் ஜெகன்னாதருக்கு சேவை செய்ய விரும்பும் எங்கள் பக்தி தனிப்பட்ட விசயம். இவ்வளவு இருந்தும் கடவுளின் முன்பு அநீதியான செய்கைகளைச் செய்வது போல எங்களை ஏன் கோரமாக மதிப்பிடுகிறீர்கள்?”
இல்லை புனிதமாகவே மதிப் பிட முயலுவோம். காலையில் திருப்பள்ளி எழுச்சி, இரவிலே பள்ளியறைப்பாட்டு, மாலையில் கால் வலிக்க நடனம் எதுவானாலும், திரைச்சீலையிட்ட ஜெகன்னாதரின் கருவறைக்கு வெளியே, வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் தான் நடத்த முடியும், தேவதாசி ‘அபவித்ரா’ (தூய்மை இல்லாதவள்) வாகக் கரு தப்படுவதால், பூஜைகள் செய்யும் போது ‘பண்டா’ (பார்ப்பனப் புரோகிதன்) அவள் கையால் குடிநீர் கூடக் குடிக்க மாட்டான், தன்னைத் தொடவும் அனுமதிக்க மாட்டான். உள்ளம் உருக, பக்தி பெருக கீத கோவிந்தம் பாடும் தேவதாசிகளுடைய புனிதத்தின் கதி இதுதான்.
முன்னாள் ராஜாக்கள், ராணிகள், பாரதீய ஜனதாவில் உலாவரும் இந்நாளில் ஜெகன்னாதபூரியின் ராஜா திவ்ய சிங் தேவ் இந்து முன்னணிக் குரலில் ஒரு கேள்வி கேட்கிறார். “கடவுளின் சேவைக்காக வாழ்க்கையைத் துறந்து, தங்களது சொந்த முடிவில் பொருளியல் உலகை மறந்து, பெண்கள் துறவிகளாகவும், சகோதரிகளாகவும் மாறுவது அனைத்து மதங்களிலும் உள்ளதுதான். தேவதாசி முறையும் அத்தகையதுதான்”.
உண்மையில தேவதாசி முறை அத்தகையதல்ல. தேவதாசிகளாவதற்கு நீங்கள் வைத்திருக்கும் தகுதி என்ன? ஆடல், பாடல், அழகுக் கலை, அலங்காரம் இவைதானே? பிறமதத்துப் பெண்கள் துறவறத்தின் மூலம் சமூகத்தின் பாதுகாப்பையும், மதிப்பையும் பெறும்போது, தேவதாசியாக மாறும் பெண்ணோ – பாதுகாப்பின்மையையும், அவமதிப்பையும் பெறுகிறாளே அது ஏன்?
ஆக மன்னர்கள், பார்ப்பனர்கள், அதிகாரிகள் என அனைவரும் தேவதாசிகளுக்காக பேச முற்படும் போது “கலைஞர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா?
இன்று தமிழ்நாட்டு பார்ப்பனப் பெண்களால் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் பரதக் கலை தேவதாசிகளால் தான் வளர்த்து உருவாக்கப்பட் டது என்பதில் உவகை அடைகிறார் இந்தியா டுடே வாஸந்தி. ஒடிசி நட னக் கலைஞர் சன்ஜூக்தா பாணிக்கிரஹியும் இக்கருத்தை ஆதரித்து, தேவதாசி முறையில் எவ்விதத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும், தானே பகுதி நேர தாசி சேவை செய்ய விரும்புவதாகவும் கூறுகிறார்.
அமெரிக்காவை பூலோக சொர்க்கமாக மாற்றியமைப்பதற்கு ஆப்ரிக்க கருப்பர்களைக் கடத்தி வந்த அடிமை முறை உதவி செய்திருக்கிறது என்பதாக நாகரீக உலகின் எந்த ஒரு மனிதனும் கொண்டாட மாட்டான். தேவதாசிகள் காற்சலங்கை கட்டிக் கொண்டு நடனம் ஆடும் போது பாதம்படுகின்ற இடங்களில் உறைந்திருக்கும் ரத்தம் நம்மை உலுக்குகிறது. அதே சமயம் பாதத்தின் பதத்தையும், ஆட்டத்தின் அபிநயத்தையும் மெய்சிலிர்த்து ரசிக்கிறார்கள் வாஸந்தியும், பாணிகிரஹியும்.
***
1930 -களில் தேவதாசி முறையை எதிர்த்துக் கிளம்பிய இயக்கத்தை அறியும்போது வாழையடி வாழையாக சனாதனிகளின் குரல் இன்றைக்கிருப்பது போல் ஒலிப்பதைக் கேட்க முடியும். பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கமும், காங்கிரசாரும் – இந்தியப் பெண்கள் சங்கத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் தேவதாசி முறையை ஒழிக்க போராடி வந்தார்கள்.
1930 -ல் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டுவந்தபோது, இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார் என்பதை முத்துலட்சமி கூறுகிறார். காங்கிரசில் ராஜாஜிக்கு போட்டியான சத்திய மூர்த்தி அய்யர், “இன்றைக்கு தேவதாசி முறையை ஒழிக்கச் சொல்வீர்களானால் நாளைக்கு பார்ப்பனர்களை அர்ச்சகராக்குவதையும் எதிர்க்கலாம். தேவதாசிகளை ஒழித்துவிட்டால் பகவானின் புண்ணிய காரியங்களை யார் செய்வார்” என்று வாதிட்டார்.
“பகவானுடைய புண்ணியத்தை இதுவரை எங்கள் குலப் பெண்கள் பெற்றுவந்தனர். வேண்டுமானால் இனி அவரது (சத்திய மூர்த்தி அய்யர்) இனப்பெண்கள் அந்த புண்ணியத்தை ஏற்றுக்கொள் ளட்டுமே? அது என்ன எங்கள் குலத்திற்கே ஏகபோக காப்பிரைட்டா?” என்று திருப்பிக் கேட்டார் முத்துலட்சுமி ரெட்டி.
இந்துத்துவ முகங்களில் மிதவாதத்தை காங்கிரசும், தீவிரவாதத்தை பாரதீய ஜனதாவும் இன்றைக்கு பிரதிநித்துவம் செய்வது போன்று அன்றைக்கு ராஜாஜியும், சத்தியமூர்த்தியும் விளங்கினார்கள்.
இச்சூழலில்தான் 1883-இல் தாசி குலத்தில் பிறந்து, இளவயதிலேயே பொட்டுக் கட்டப்பட்டுவிட்ட இராமாமிர்தம் அம்மையார், தன் சொந்த அனுபவங்களைக் கொண்டு, தேவதாசி ஒழிப்பை வலி யுறுத்தி “தாசிகள் மோசவலை” எனும் நாவலை மிகுந்த சிரமத்துக்கிடையில் 1936 -இல் வெளியிட்டார்.
***
20 -ம் நூற்றாண்டிலும் இந்துத்துவம் தனது வருணாசிரம நெறியை இருத்திக் கொள்ள மூர்க்கமாக முயலுகிறது. பாபர் மசூதி இடிப்பு, பிள்ளையார் பால் குடித்த புரளி, என ஒவ்வொன்றிலும் “ஹிந்து எழுச்சி ஆரம்பித்து விட்டது” எனக் கும்மாளமிடும் இந்தக் கும்பல்தான் தேவதாசி முறையை நியாயப்படுத்தும் நபர்களின்-கருத்துக்களின் அடித்தளம்.
அந்த அடித்தளத்தை தகர்க்க 60 ஆண்டுகளுக்கு முன்பு “தாசிகள் மோசவலை” என்ற தனது நாவல் மூலம் வழி காட்டுகிறார் இராமமிர்தம் அம்மையார். அவரது ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு சுரணையூட்டும்.
நாவலில் இருந்து, “ஒரு குறிப்பிட்ட பெண் சமூகத்தை விபசாரத்துக்குத் தயார் செய்துவைத்திருப்பது இந்நாட்டு ஆண் சமூகத்தின் மிருக இச்சைக்குதக்க சான்றாக இருக்கிறது. பகுத்தறிவும் நாகரீகமும் வளர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் தேவதாசி முறையை ஒழிப்பது சாஸ்திர விரோதம், சட்ட விரோதம், கலை விரோதம் என்று கூக்குரல் கிளப்பும் சாஸ்திரிகளும், தலைவர்களும் இருப்பது மானக்கேடாகும். தேவதாசி முறைக்கு அடிப்படையாக இருக்கும் கடவுள், மதம், ஸ்மிருதி, ஆகமம், புராணம் ஆகியவைகளை முதலில் ஒழிக்க வேண்டும். இவைகளை ஒழித்து விட்டால் தேவதாசிக் கூட்டம் இருப்பதற்கே நியாயமிருக்காது.” என அறிவோம் அரசியல் தெளிவோம்.
-இளநம்பி
( புதிய கலாச்சாரம், பிப்ரவரி – 1996 )

நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன்

நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் மறைவுற்று ஒரு ஆண்டுகள் ஆகிவிட்டது (28.2.2018). தன்னடக்கம், மனித நேயம் என்ற சிறப்பான குணங்களை தன்னகத்தே கொண்டு அனைவரிடத்திலும் அன்பு செலுத்திய பெருமகன்.
இன்றைக்கு இந்தியா முழுமையும், பெரும்பான்மை மக்களாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள், மத்திய அரசின் வேலை வாய்ப்பில் 27 இட ஒதுக்கீடு பெறுவதற்கு, உச்ச நீதிமன்றத்தில் அவர் அளித்த தீர்ப்புதான் வழிவகுத்தது என்பது மிகையல்ல.
அரசமைப்புச் சட்டத்தின் 340-விதியின்படி அமைக்கப்பட்ட மண்டல் குழு அறிக்கையின் பரிந்துரையில் ஒன்றான, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு எனும் ஆணையை, அன்றைய பிரதமர், சமுக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் 7.8.1990 அன்று பிறப்பித்தார்.
அந்த ஆணையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பளித்தது. அதில், நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும் என்று பல சான்றுகளுடன் அளித்த தீர்ப்புதான், பெரும்பான்மை தீர்ப்பாக மாறுவதற்கும், அதன் காரணமாக, உரிமை மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள், மத்திய அரசின் பணிகளில் இட ஒதுக்கீடு பெறவும் முடிந்தது.
244 பாராக்கள் கொண்ட, நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அளித்த தீர்ப்பு (16.11.1992), திராவிடர் இயக்கத்தின் சமுக நீதிக் கோட்பாட்டின் மீது அவர் கொண்ட நம்பிக்கையையும், உணர்வையும், ஆழத்தையும், வெளிப்படுத்தியது.
இந்த இட ஒதுக்கீடு ஆணை, பாரத் ரத்னா பி.ஆர்.அம்பேத்கர், தந்தை பெரியார், ராம் மனோகர் லோகியா ஆகியோரது கனவை நனவாக்கும் செயல் என வி.பி.சிங் நாடாளுமன்றத்தில் கூறிய வார்த்தைகளை, தனது தீர்ப்பில் கூறி, தான் யார் என்பதையும் வெளிக்காட்டினார்.
அடுத்து Second Judges Case வழக்கிலும் (6.10.1993), மகளிர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டோரின் பிரதிநிதித்துவம், நீதித்துறையில் வேண்டும் என்ற தீர்ப்பை அளித்தார்.
தற்போது, சமுக நீதிக்கெதிரான நிலைப்பாடுகளை மத்திய அரசு எடுத்து வரும் நிலையில், அதனை எதிர்த்து, நீதிமன்றத்தில் வாதாடும்போது, நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்கள், இட ஒதுக்கீடு குறித்து அளித்த தீர்ப்பு, நமக்கு ஆதாரமாகவும், வழிகாட்டுதலாகவும் உள்ளது.
இருப்பினும், நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் போன்று, இன்றைய நீதிமான்கள், அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதல்படி தீர்ப்பளித்து சமுக நீதியைக் காப்பாற்றுவார்களா? என்ற ஏக்கமும் கூடவே இணைகிறது.
அவரின் சமுக நீதிச் சிந்தனைகளை மனதில் ஏந்தி, வெற்றி பெறுவதே, அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த நினைவேந்தலாகும்.
நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்களுக்கு வீர வணக்கம்.