Thursday, August 01, 2019

தமிழனுக்கு மதம் கிடையாது!

தமிழனுக்கு மதம் கிடையாது!
தமிழனுக்கு மதம் என்பது ஒன்று இருந்ததாக ஆதாரம் கிடையாது. மதம் என்கிற சொல் தமிழ்ச் சொல் இல்லை. மனிதன் மற்றொரு மனிதனிடத்தில் நடந்து கொள்ள வேண்டிய பண்புகளைத் தான் நமது முன்னோர்கள் நெறி, ஒழுக்கம், நீதி, கோட்பாடு என்கின்ற தலைப்பில் எழுதி இருக்கிறார்கள். அன்றி மதம் என்ற சொல்லுக்கும் தமிழனுக்கும், தமிழுக்கும் சிறிதும் சம்பந்தம் கிடையாது. தமிழனுக்கு ஜாதியும் இருந்ததில்லை. அப்படி இருந்திருந்தால் திருக்குறளில் கடவுள், மதம், ஜாதி முதலியவை இடம் பெற்றிருக்க வேண்டும் அல்லது தமிழில் அதற்கு சொல் இருக்க வேண்டும்.
(பெரியார், குடி அரசு - 07.05.1949)

சங்கராச்சாரிகள் எப்போதும் கையில் தண்டம் (புனித கோல்) வைத்திருப்பார்கள்

சங்கராச்சாரிகள் எப்போதும் கையில் தண்டம் (புனித கோல்) வைத்திருப்பார்கள். "எந்த சூழலிலும் அதைவிட்டு பிரியக்கூடாது"என்பது அவர்களுடைய விதிமுறைகளில் ஒன்று.

அந்த புனித கழியில் இருந்து அதை பிடித்திருக்கும் கைகளுக்கு நேரடியாக புனித சக்தி ஒன்று ஊடுருவிக் கொண்
டே இருப்பதாக அவர்கள் ஐதீகம் கூறுகிறது.

அந்த தண்டத்தை போட்டுவிட்டுதான் காஞ்சி மடத்தைவிட்டு திருட்டுத்தனமாய் ஓடிப்போனார் ஜெயேந்திர சரஸ்வதி. அவரை காணவில்லை என இந்தியா முழுவதும் பதற்றமானது.

3 வது நாளில் தலை காவிரியில் கண்டுபிடிக்கப்பட்ட அவரிடம், "தண்டத்தை ஏன் விட்டு சென்றீர்கள்?" என்று பத்திரிகையாளர்கள் அறிவார்ந்த (?) கேள்வியை கேட்ட போது,

"தண்டத்தின் சக்தியை நான் உடலில் ஏற்றுக் கொண்டுதான் சென்றேன்" என்றார் சங்கராச்சாரி. ஒரு பத்திரிகை நிருபருக்கு கூட அதை எதிர்த்து கேள்வி கேட்கத் தெரியவில்லை. அந்த அற்புத சக்தியை தாங்கிக் கொண்டே சிலை கடத்தல்கள், பாலியல் குற்றங்கள், பணம் கையாடல், கொலைகள் வரை நடத்தினார் சங்கராச்சாரி.

அதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது அதே சக்தியை (தண்டம்) வைத்திருக்க அவருக்கு சலுகை அளிக்கப்பட்டது. ஆச்சாரமாக சமைக்க சமையல்காரர், மலத்தை நேரடியாக கழிப்பறையில் இருப்பதற்கு பதில் ஆச்சாரமாக வாழை இலையில் மலம் கழிக்கும் சங்கராச்சாரி என்பதால் அதற்கும் அனுமதி.

இப்படி ஏக போக மரியாதையுடன் அரசு ஆதரவோடு குற்றவாளிக்குரிய எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல், அதே சங்கராச்சாரி கௌரவத்தோடு சிறையில் இருந்து வெளிவந்த பிறகும் நடந்து கொண்டார்.

சங்கராச்சாரியிடம் இருந்த அந்த சக்திக்கு அத்தனை மதிப்பு. அந்த புனித சக்திக்கு சக்கரை நோய் டோஸ் மிக அதிகரித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதே நாளில் சங்கராச்சாரியோடு இறந்தும் போனது.

சிலை கடத்தல்கள் குறித்து கூறியிருந்தோம் அல்லவா?

சங்கராச்சாரி ஒருகோயில் இருந்து திருடிய 11 சிறிய லிங்க சிலைகளில் ஒன்று இதோ ஆஸ்ரேலியா மருத்துவமனையில் கிடக்கிறதே இந்த சக்தியிடம் உள்ளதாம்.... எப்படியும் அந்த பெரும் வலிமையுள்ள லிங்க சிலை காப்பாற்றிவிடும் என்றால் எதற்காக இது வெளிநாட்டு மருத்துவமனைக்கு ஓடி வந்திருக்கிறது?

பார்ப்பன்யம் பார்ப்பனீயத்தை மட்டும் சுவிகரித்துக் கொள்ளவில்லை. பார்ப்பனீய மோசடியில் பெரும் வெற்றியை பெறும் பார்ப்பனரல்லாத மோசடி பேர்வழிகளையும் அல்லவா கொண்டாடுகிறது? நாட்டின் பிரதமர் முதல் குடிமகன்கள் வரை கொண்டாடும் அந்த சக்திக்கு இப்போது எங்கே போயிற்று அற்புத சக்தி?

ஆனால் ஈஷா கும்பல், குரு வெளிநாடுகள் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அவரை குறித்து வரும் செய்திகள் அவருக்கு திருஷ்டி கழிப்பது போன்று என உளறுகிறார்கள். தண்டம் வைத்திருந்த சக்திக்கே சக்கரை அளவு அதிகரித்து அட்டாக்கில் இறந்து போனான். இந்த கஞ்சா குடிக்கி எம்மாத்திரம்?

Thursday, July 25, 2019

மத்திய அரசுப் பணிகளில் OBC 27% இட ஒதுக்கீடு இருப்பதே பல பேருக்குத் தெரியாது.

கொடுமை என்னவென்றால் மத்திய அரசுப் பணிகளில் OBC 27% இட ஒதுக்கீடு இருப்பதே பல பேருக்குத் தெரியாது.
அப்படியே தெரிந்தாலும் 6 மாதத்துக்கு ஒரு முறை Creamy layer இல்லை என்று சான்றிதழ் வாங்க அலைய வேண்டும்.
இந்தியாவில் 120 கோடி மக்கள் வருமான வரி கட்டுவது இல்லை. இவர்கள் எல்லோரும் கண்டிப்பாக Creamy layerக்குக் கீ்ழ் தான் வருவார்கள்.
தமிழ்நாட்டில் உள்ளது போல் BC, MBC எல்லோரும் போட்டியிடலாம் என்றால் இவர்கள் சிரமம் இல்லாமல் போட்டியிடுவார்கள்.
யாரோ ஒரு பணக்காரரை வடிகட்டுகிறோம் என்று கோடிக் கணக்கான ஏழைகளை அல்லாட விடுகிறார்கள்.
கடைசியில் எல்லோரும் பொதுப்போட்டியில் போட்டியிட்டு வாய்ப்பை இழப்பார்கள்!
இதைத் தான் பொருளாதார அறிஞர் exclusion error என்கிறார்.
யாருக்காக ஒரு திட்டம் கொண்டு வரப்படுகிறதோ அவர்களைப் போய் சேர்வதில்லை.
கடைசி வரை OBC பணியிடங்களைக் காலியாக வைத்து ஊத்தி மூடுவார்கள்.
பிறகு, இட ஒதுக்கீடு என்றாலே SC/STக்கு மட்டும் தான் என்று நினைத்துத் திட்டுவார்கள்.
Creamy layer என்ற ஒரு சொல்லே அரசியல் சாசனத்தில் இல்லை.
இல்லாத ஒரு சொல்லை எழுதாத சட்டமாக்கி வைத்துள்ளது உச்சநீதிமன்றம்!

10% பிராடு ஒதுக்கீடு!

அந்தக் காலத்திலே தில்லிக்கும் மும்பைக்கும் போன நம்மாள் பிழைப்பதற்காக ரயிலேறிய கூலித் தொழிலாளிகள் (ஆதாரம்: காலா, நாயகன் திரைப்படம் ;) )
ஆனால், அவாளோ மத்திய அரசுப் பணியாளர்களாகச் சென்றார்கள். மும்பையின் மாதுங்கா பகுதி, செகந்திராபாத் போல ஒவ்வொரு பிற மாநிலப் பெரு நகரத்திலும் அவாக்கள் கூடி வாழும் பகுதிகளைக் காணலாம். (ஆதாரம்: ரோஜா, மௌன ராகம் திரைப்படம் ;) )
இன்றும் சென்னை, கோவை போன்ற நகரங்களில் உள்ள ரயில்வே, LIC, அஞ்சல் துறை பெரு அலுவலகங்களுக்குச் சென்றால் அவாக்கள் நிறைந்திருப்பதைக் காணலாம்.
இத்தனை நாள் பொதுப்போட்டி என்ற பெயரில் SC/ST இடங்கள் தவிர மற்ற 77.5% இடங்களை எல்லாம் அவர்கள் தான் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார்கள்.
ஏன் என்றால் இந்த வேலைக்கு எல்லாம் எங்கு விண்ணப்பம் வாங்குவது என்பதே நமக்கு 20 ஆண்டுகளாகத் தான் தெரியும்.
இப்போது தான் ஊருக்கு ஊர் ஒரு IAS academy, Officers training academy வந்து நம்ம ஆட்கள் இந்தப் பணிகளுக்கு முட்டி மோதிப் போட்டியிடுகிறார்கள்.
இது பொறுக்காமல் தங்கள் ராஜாங்கம் கை நழுவிப் போகக் கூடாது என்று கொண்டு வரப்பட்டது தான்
இந்த 10% பிராடு ஒதுக்கீடு!

Sunday, June 23, 2019

1986ல் கலைஞர் உட்பட 10,000 திமுகவினர் இந்தித் திணிப்பை எதிர்த்து சிறை சென்றனர்

எல்லோரும் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்ட வரலாற்றை 1965 உடன் முடித்து விடுகிறார்கள்.
1986ல் கலைஞர் உட்பட 10,000 திமுகவினர் இந்தித் திணிப்பை எதிர்த்து சிறை சென்றனர். 10 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி இழந்தனர்.
வெறும் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வரலாறே தெரியாமல் அரசியல் தற்குறிச் சமூகமாகத் தான் சுற்றுக் கொண்டிருக்கிறோம்!
**
அறிஞர் அண்ணா எந்த இந்தியை எதிர்த்தாரோ அதே அண்ணா பெயரில் கட்சி நடத்திய மகோரா அவர் பெயருக்கு களங்கம் உண்டாக்கும் விதமாக ஒரு நிலைப்பாடை எடுத்தார்.
அதுதான் 86களில் இந்தி வாரம் தமிழ்நாட்டில் கடைப்பிடிப்பதென வந்த சுற்றறிக்கை, நவோதையா பள்ளிகள். மீண்டும் திமுக களத்தில் இறங்கி அனைவரையும் ஒன்று திரட்டியது. மாணவர்கள் ஒன்று திரண்டனர். இந்தி அரக்கி என்று ஒரு பெண் உருவபொம்மையை எரித்தனர்.
பேராசிரியர் தான் அப்போது சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், அவர் தலைமையில் அரசியலமைப்பு அரசியலமைப்பு சட்ட நகலை எரித்திட கோவையில் இந்தி எதிர்ப்பு மாநாடு முடிவெடுக்கப்பட்டது.
திட்டமிட்டபடி நவம்பர் 17ம் தேதி 1986ல் திமுக தலைவர் கலைஞர் தலைமையேற்று வழியனுப்பி வைக்க பேராசிரியரும் சென்னையின் மற்ற 6 சட்டமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்பு சட்ட நகலை எரித்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.
பேராசிரியர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு
மாநிலம் முழுவழும் திமுகவினர் போராட்டத்தின் போது கைதாகினர்.
சட்டமன்றத்தில் சபாநாயகர் பாண்டியன் அந்த 7 பேரின் உறுப்பினர் பதவியை ரத்து செய்ய தீர்மானம் போட்டார்.
திமுகவின் மதுராந்தகம் ஆறுமுகம் சபையில்,"அண்ணாவின் படத்தை இந்த சபையில் மாட்டிவைத்துவிட்டு இப்படி செய்தால் முறையா ? அறிஞர் அண்ணாவே அன்று சட்ட நகலை எரித்தவர் தானே ? அண்ணாவின் திருவுருவ படத்தை எடுத்துவிட்டு வேண்டுமானால் இதை நீங்கள் செய்யலாம் என்று கேட்க, அவரை உதாசீனப்படுத்தினார் சபாநாயகர்.
நாஞ்சில் மனோகரன், ரகுமான்கான் போன்ற உறுப்பினர்களை பேச அனுமதி கேட்டும் அனுமதி கொடுக்காமல் போக அவர்களும் வெளிநடப்பு செய்தனர்.
ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கும், ஆளுநருக்கும் கடிதம் மூலம் 7 பேரின் பதவியை பிடிங்கிட ஆணை பிறப்பிக்க கோரியதைத்தாண்டி, எந்த நாவலர் நெடுஞ்செழியன் 23 ஆண்டுகளுக்கு முன்னால் சபையில் காரசாரமாக விவாதம் நடத்தினாரோ அதே நாவலர் ஆளும் கட்சி சார்பாக 7 பேரின் பதவிப்பரிப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அந்த நேரத்தில், அதே போன்று ஒரு சட்டநகலை புதுடில்லியில் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் வைகோபாலசாமி எரித்த போது, இந்தியை பலவந்தமாக திணிக்க முனைந்த காங்கிரஸ் கட்சியினர் அவரின் பதவியை பறிக்கவில்லை என்பது கொசுறுத் தகவல்.
கலைஞர், பேராசிரியர் உட்பட 10000 திமுகவினர் கைதாகி சிறையில் இருந்தனர். நாவலரின் இந்த தீர்மானம் கலைஞருக்கும் பேராசிரியருக்கு பேரதிர்ச்சியைத் தந்தது.
பேராசிரியர் உட்பட திமுகவின் சமஉ விடுதலை பெற்றிட, எழும்பூர் நீதிமன்றம் கலைஞரை வாக்குமூலம் கேட்க,
"கழனியில் களைப்பறிக்கும் விவசாயி கழனியை அவமதித்தவன் ஆகமாட்டான். ஐந்து கோடி தமிழர்களின் எதிர்காலத்தில் இருள் சூழாதிருக்கவே போராடினோம், எனவே நாங்கள் குற்றவாளிகள் அல்ல" என்று வாக்குமூலம் கொடுத்தார்.
உண்மையை சொன்னதற்காக திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு 10 வாரம் கடுங்காவல் சிறைவாசம் கொடுத்தது நீதிமன்றம். சிறைக்கைதிகள் உடையை சிறையில் அதிகாரிகள் கொடுத்து உடுத்திக்கொள்ளுமாறு அணையிட்டனர்.
சுற்றி இருந்த திமுகவினர் வருந்தி கண் கலங்க, மிகச்சாதாரணமாக,'என் தாய் தமிழிமொழியைக் காக்க இந்தியை எதிர்த்து நான் போராட்டம் நடத்திச் சிறைக்கு வந்திருக்கும் போது சிறை ஆடைகளை அணிவதும் எனக்கு கிடைத்த பெருமை தான்' என்று ஏற்றுக்கொண்டார். மாலையில் சிறைக்குள்ளேயே நடைப்பயிற்சி செய்யவும், மற்றவர்களை சந்திக்கவும் தடை விதித்தனர்.

Saturday, June 22, 2019

காயத்திரி மந்திரம் சொல்லி மூளை வீங்கிய விஞ்ஞானி எஸ்.வீ.சேகர்

காயத்திரி மந்திரம் சொல்லி மூளை வீங்கிய விஞ்ஞானி எஸ்.வீ.சேகர் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் ஆரியபவன்தான் உள்ளது திராவிடபவன் இல்லை என சமீபத்தில் கிண்டல் செய்துள்ளார்.

தமிழகமெங்கும் ஆரியபவன்கள் மட்டுமல்ல முட்டை பப்ஸ் விற்கும் ஐயங்கார் பேக்கரிகளும் உண்டு. ஆனால் இவற்றில் 99% கடைகளை நடத்துவது பார்பனரல்லாதோர்/ஆரியரல்லாதோர். அதாவது, பேருதான் ஆரியபவன். முதலாளி பெரும்பாலும் திராவிடன்தான்.

இதில் இன்னொரு விஷயமும் உண்டு. நேற்று ப்ரஸ்டீஜ் "RO water purifier" விளம்பரம் ஒன்றைப் பார்த்தேன். அது வைரஸ், பேக்டீரியாவை கொல்லுவதோடு, இறந்துபோன வைரஸ், பேக்டீரியாவை நீரில் இருந்து அகற்றுமாம். எனவே அது தருவது சுத்தமான வெஜிடேரியன் நீராம்! அதாவது "100% சைவ நீர்" என விளம்பரம் செய்திருந்தார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? '100% சுத்த சைவம்' என போர்டு மாட்டினாலோ, ஆரியம் என பெயர் வைத்தாலோ, ஐயங்கார் என பெயர் வைத்தாலோ பல்லைக் காட்டிக்கொண்டு எஸ்.வீ.சேகரின் கும்பல் வந்து பொருளை வாங்கும் என்றும், தின்றுவிட்டுப் போகும் என்றும் சாதாரண முதலாளிகளில் இருந்து கார்ப்பரேட் கம்பனிகள் வரை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஆனால் திராவிடத் தமிழர்கள் அப்படி அல்ல. குப்பன், சுப்பன் அசைவ ஓட்டல் நடத்தினாலும் சரி, ஏன் ஐயர்/ஐயங்கார்கள் அசைவ ஓட்டல் நடத்தினாலும் சரி, நன்றாக இருந்தால் போய் சாப்பிடுவார்கள். "100% சுத்தமான அசைவம்" என்கிற பீத்தபெருமைகளோ, திராவிடபவன் என முத்திரை குத்தினால்தான் சாப்பிடுவோம் என்கிற இனவெறியெல்லாம் அவர்களுக்குக் கிடையாது. சைவம் சாப்பிட நினைத்தால் ஆரியபவன்களிலும் சாப்பிடுவார்கள்.

சைவம் சாப்பிடுகிறோம் என்கிற பெயரில் முழு கேணையர்களாக இருந்துகொண்டு, ரூபாய் நோட்டுகளில் சிப் வைத்தார்கள் என்றெல்லாம் பேசிக்கொண்டு, திராவிடத்தமிழர்களை கிண்டல் செய்வதற்கெல்லாம் நிஜமாகவே ஒரு முரட்டுத்தனமான முட்டாள்த்தனம் வேண்டும். அது எஸ்.வீ.சேகர் வகையறாக்களிடம் நிறையவே இருக்கிறது.

*திராவிடமும் அணைகளும்*

*திராவிடமும் அணைகளும்*



தமிழ்நாட்டில் காவிரி பிரச்சனை பெருசாகும் போதெல்லாம்
காமராசர் அணைக்கட்டினார்
காமராசர் அணைக்கட்டினார்
என்று அள்ளிவிடுவோர் யாருக்கேனும் அவர் எத்தனை அணைக்கட்டினார் என்று தெரியுமா என கேட்டால்...

நிச்சயம் தெரியாது.
நாமே அதையும் சொல்லுவோம்...
எப்படி?
தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையின் அதிகாரப்பூர்வ, ஆதாரப்பூர்வ இணையதளத்தின் வழியே...
காமராசர் 9 வருடம் முதல்வராகயிருந்தார். அவர் காலத்தில் கட்டப்பட்ட அணைகள் தான் இங்கே சிவப்பு வண்ணத்தில் கட்டம் போட்டு காண்பிக்கப்பட்டிருக்கிறது.



சரி, அப்போ திமுக/அதிமுக என்ன செய்தது?
இங்கு இணைக்கப்பட்டிருக்கும் பட்டியலில் உள்ள வருடங்களை படித்துப்பார்த்தாலே எளிதில் தெரிந்துவிடும்
திமுக மட்டுமே 36 அணைகள் கட்டியுள்ளது.
நான்காவது புகைப்படம் *காவேரிக்கு குறுக்கே மட்டும் இதுவரை கட்டிய அணைகளின் விபரம்* தருகிறது.
தமிழ்நாடு காவிரியில் வெள்ளம் வரும்போதெல்லாம் வீணாக்கிவிடுகிறது. எல்லாமே கடலில் தான் போய் சேர்கிறது. தடுப்பணைகளே இல்லை என்றும் ஒரு அறிவில்லா புலம்பல் இருக்கிறது.
அப்படியா? என்று அதையும் ஆராய்ந்துப் பார்ப்போம்.
சேலம் மாவட்டம் மேட்டூர் முதல் திருச்சி வரை காவேரி குறுக்கே உள்ள அணைகள் விவரம்.
மேட்டூர் அணை முதல் கல்லணை (டெல்டா ஆரம்பம்) வரை 14 அணைகள் உள்ளன.
இதில் காலிங்கராயன் அணை மட்டும் பவானி காவேரி ஆற்றில் கலக்கும் இடத்தில் உள்ளது.
மற்ற அணைகள் அனைத்தும் காவேரி குறுக்கே உள்ளது.
மேட்டூர் முதல் திருச்சி வரை 210கிமீ நீளம் உள்ள ஆற்றில் 13 அணைகளில் தான் தலைக்காவேரிலிருந்து வரும் நீரை சேமிக்கப்படுகிறது.
சேலம்,
ஈரோடு
நாமக்கல்,
கரூர்
மாவட்டங்கள்
காவேரி டெல்டா மாவட்டங்களான
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினத்தை விட மேட்டில் உள்ளதால் *(9)* தடுப்பு அணைகள் இந்த மாவட்டங்களில் கடந்த முப்பது ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளது!
இதில் விவசாயம் (குறிப்பாக டெல்டா மாவட்டங்களுக்கு), குடி தண்ணீர் தேவை மற்றும் மின்சார தேவைக்கு தண்ணீர் சேர்த்து வைக்கப்படுகிறது!
*காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தால் தான் இந்த அணைகளுக்கு முறையாக தண்ணீர் வரும்!!*
கல்லணை அடுத்து காவேரி பல நதிகளாக பிரிந்து கடலில் கலக்கிறது. இந்த சின்ன சின்ன ஆறுகளிலும் நிறைய தடுப்பணை உள்ளது. அடுத்த கட்டமாக கொள்ளிடம் ஆற்றில் சில தடுப்பணை கட்டும் பணிகளும் நடந்து வருகிறது.
மேட்டூர் போல பிரம்மாண்ட அணை கட்ட புவியியல் இடம் மேட்டூரை தாண்டி தமிழகத்தில் இல்லை.
*தமிழகத்தில் அணைகள் இல்லை,யாரும் கட்டவில்லை என்று உங்களிடம் இனி எவனாவது பாடமெடுத்தால் தயங்காமல் செருப்பை தூக்கிக் காட்டுங்கள்.*
எல்லோரும் அறிய, பொதுவெளியில் இருக்கும் ஒரு விவரத்தை எடுத்து, அதைப் பற்றி ஆராய்ச்சி செய்ததைப்போல இவ்வளவு எழுதுவதற்கு வெட்கமாகத்தான் இருக்கிறது.
ஆனால், பொதுவெளியில் இவ்வளவு விவரங்கள் இருக்கும்போதே இவ்வளவு கேவலமாக பொய் சொல்கிறார்களே, அதை நினைத்தால் இந்த தயக்கம் போய்விடுகிறது.

பெரியார் & வைக்கம் போராட்டம் - துக்ளக் என்னும் துப்புக் கெட்ட இதழ் ஒரு கூச்ச நாச்சில்லாமல் என்ன எழுதுகிறது

இந்த வாரம் 'துக்ளக்' இதழில் (26.6.2019) எழுதப்பட்ட ஒரு கட்டுரையின் (பக்கம்6) தொடக்கமே இவ்வாறு இருக்கிறது.
"ஈ.வெ.ரா.பெரியார் வைக்கம் போராட்டத்தில் கடைசிக் கட்டத்தில்தான் கலந்துகொண்டு தலைமையேற்றார். ஆனால் தமிழ்நாட்டில் வைக்கம் போராட்டம் பெருமை முழு வதும் அவருக்கே தரப்படுகிறது" என்று எழுதப்பட்டுள்ளது.
ஒன்றை எழுதும் போது ஆதாரப்பூர்வமாக எந்த வருடம்; எந்தத் தேதியில் என்ன நடந்தது என்று எழுதும் யோக்கியதை இந்தக் கூட்டத்திற்கே கிடையாது. காரணம் - உண்மையாக இருந்தால் தானே அவ்வாறெல்லாம் ஆதாரப் பூர்வமாக எழுத முடியும்.
போகிற போக்கில் அள்ளித் தெளிக்கும் கோணல் புத்தி அந்தக் கும்பலின் குருதியில் எப்பொழுதுமே கொப்பளிப்பது வழக்கமே!
அவர்களுக்குச் சொல்லா விட்டாலும் வாசகர்களுக்கு உண்மை விவரம் போய்ச் சேர வேண்டும் என்ற பொறுப் புணர்ச்சியோடு நாம் சொல்லத்தான் செய்வோம்.
தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தின் கடைசிக் கட்டத்தில்தான் போனார் என்கிறதே 'துக்ளக்' அது உண்மையா?
ஒரு வழக்கு விசாரணைக்காக ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் மாதவன் நீதிமன்றம் சென்றார்.
நீதிமன்றமோ திருவிதாங்கூர் மன்னரின் கொட்டாரத்தில் (அரண்மனையில் ஓரிடம்) இருக்கிறது. அப்பொழுது மன்னரின் பிறந்த நாள் விழாவுக்காக எல்லாப் பாகத்திலும் பந்தல் போடப்பட்டு இருந்தது. நீதிமன்றம் உள்ள இடமும் பந்தலுக்குள் அடக்கம். அரசருக்காக முறை ஜெபம் தொடங்கப் பெற்றது.
இந்த நிலையில் மாதவன் ஈழவர் (நாடார்) சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் நீதிமன்றம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பிரச்சினையின் தொடக்கப் புள்ளி இதுதான்.
இதனை எதிர்த்து சத்தியாக்கிரகம் நடத்த வேண்டும் என்று ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் முடிவு செய்தார்கள். வக்கீல் மாதவன், டி.கே. மாதவன், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.பி.கேசவமேனன் முதலியோர் இணைந்தனர்.
கொல்லம் சுயராஜ்ஜிய ஆசிரமத்தில் கேரள காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றிய நாள் 16.2.1924.
கிளர்ச்சி தொடங்கப்பட்ட நாள் 30.3.1924. வைக்கம் கோயிலைச் சுற்றி நான்கு வீதிகள் இருப்பதால் சத்தியாக்கிரம் செய்ய வைக்கத்தைத் தேர்வு செய்தனர்.
கிளர்ச்சி தொடங்கியது முதல் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு 6 மாதம் தண்டனை அளிக்கப்பட்டது. கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப் உட்பட 19 முக்கிய தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கிளர்ச்சியினைத் தொடர்ந்து நடத்திட தலைவர்களும் இல்லை - கிளர்ச்சியில் ஈடுபட தொண்டர்களும் இல்லாத கையறு நிலை.
அந்தக் கால கட்டத்தில் இதுபோன்ற சமுக சீர்திருத்த கிளர்ச்சிக்குத் தலைமையேற்று வெற்றிகரமாக நடத்த வல்லவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.ரா.தான் என்று முடிவு செய்து குரு நீலகண்டன் நம்பூதிரி பெரியாருக்கு தந்திகளைக் கொடுத்தார். (4.4.1924 மற்றும் 12.4.1924).
ஜார்ஜ் ஜோசப் மற்றும் பாரிஸ்டர் கேசவமேனனும் கையொப்பமிட்டுக் கடிதமும் எழுதுகிறார்கள். அந்த நிலை யில் பெரியார் வைக்கம் புறப்பட்டு அடைந்த தேதி 13.4.1924.
இந்த இடத்தில் மிக மிக முக்கியமாகக் கோடிட்டுக் கவனிக்கத்தக்கது என்ன? கிளர்ச்சி தொடக்கப்பட்டது மார்ச் முப்பது - தந்தை பெரியார் வைக்கம் சென்றடைந்தது. 13.4.1924 இரண்டே வாரத்தில் வைக்கம் சென்று போராட்டத் துக்குத் தலைமை தாங்குகிறார்.
உண்மை இவ்வாறு இருக்க, 'துக்ளக்' என்னும் துப்புக் கெட்ட இதழ் ஒரு கூச்ச நாச்சில்லாமல் என்ன எழுதுகிறது"
"ஈ.வெ.ரா. பெரியார் வைக்கம் போராட்டத்தின் கடைசி கட்டத்தில்தான் கலந்து கொண்டு தலைமையேற்றார் என்று எழுதுகிறது என்றால், இந்தக் கூட்டத்தின் யோக்கியதை என்ன என்பதைநம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்."
கிளர்ச்சிக்குத் தந்தை பெரியார் தலைமை தாங்கியதும் போராட்டம் சூடு பிடித்து விட்டது. அவர் உரையைக் கேட்க மக்கள் பெரும் அளவில் திரள ஆரம்பித்தனர்.
"கீழ் ஜாதி மக்கள் தெருவில் போவதால் அது தீட்டுப்பட்டு விடும் என்று சொல்லும் வைக்கத்து அப்பனை (கடவுள் மகாதேவனை) கீழே போட்டு வேட்டித் துவைக்கணும்" என்றார்.
"நாயும், கழுதையும், பன்றியும் வைக்கம் தெருக்களில் தாராளமாக நடமாடுகின்றனவே, அவை சத்தியாக்கிரகம் நடத்தியா அவ்வுரிமைகளைப் பெற்றன?" என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்ளுமாறு நச்சு நச்சென்று நாப்பறை கொட்டினார்.
பத்து நாள்கள் அரசு ஒன்றுமே செய்யவில்லை; காரணம் அரசர் தந்தை பெரியாருக்கு நண்பர். அவர் வடக்கே செல்லும் பொழுதெல்லாம் அவர் தங்குவது ஈரோட்டில் தந்தை பெரியார் மாளிகையில்தான். அரசரின் பரிவாரங்கள் தங்குவது தந்தை பெரியாருக்குச் சொந்தமான சத்திரத்தில் தான். அதனால் தொடக்கத்தில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
தந்தை பெரியார் பேச்சைக் கேட்க பெரு வாரியாக மக்கள் திரளுகிறார்கள். கிளர்ச்சி பெரும் அளவில் வெடிக்கும் என்ற நிலை ஏற்பட்ட சூழலில் கைது செய்து,ஒரு மாதம் அருவிக் குத்தி சிறையில் அடைக்கப்படுகிறார்.
விடுதலையான நிலையில் முன்னிலும் தீவிரமாகக் கிளர்ச்சியில் ஈடுபட்டார். இவரை இனி வெளியில் விட்டு வைக்கக் கூடாது என்று முடிவு செய்து திருவிதாங்கூர் சிறையில் 6 மாதத் தண்டனை அளிக்கப்பட்டார்.
பெரியாரோ சிறையில்! போராட்டத்தின் கெதி என்ன என்ற நிலையில் தந்தை பெரியாரின் மனைவி நாகம்மை யாரும், தங்கை கண்ணம்மாள் அவர்களும் போராட்டத்தைத் தொய்வில்லாமல் தலைமை தாங்கி நடத்தினர் என்ற வரலாறு எல்லாம் குடுமி குருமூர்த்தி கூட்டத்திற்குத் தெரியுமா?
அல்லது தெரிந்திருந்தும் பார்ப்பனீயத்துக்கே உரித்தான பித்தலாட்டத்தில் அரங்கேற்றமா என்பதை வாசகர்களின் அறிவார்ந்த முடிவுக்கே விட்டு விடுவோம்!
தந்தை பெரியார் சிறையில் இருந்தபோது அவரை சாகடிப் பதற்கு சவுண்டிகளான நம்பூதிரிகள் சத்துரு சம்ஹார யாகம் நடத்தினார்கள்; எதிரியை (பெரியாரை) சாகடிப்பதற்கான யாகமாம்.
என்ன வேடிக்கையென்றால் மன்னர் மண்டையைப் போட்டு விட்டார். பட்டம் சூட்டிக் கொண்ட இராணி சிறைக் கைதிகளை விடுதலை செய்தார்.
தந்தை பெரியாருடன் இராணி பேசினால், பெரியாருக்கு மரியாதை கூடி விடும் என்று - அதுவரை வைக்கம் போராட்டத்துக்கு ஆதரவாக பெரிய அளவில் எதையும் செய்யாத காந்தியாரை, இராணியுடனான சமரசப் பேச்சுக்குக் கொண்டு வந்தது குல்லுகப் பட்டர் ராஜாஜியே. இன்னும் சொல்லப் போனால் போராட்டத்தை இடையில் நிறுத்தி விடுமாறு கூறியவர்தான் காந்தியார். வைக்கத்தில் தந்தைபெரியார் தலைமை தாங்கி கிளர்ச்சி நடத்திக் கொண்டிருந்த முக்கியமானகால கட்டத்தில் சீனிவாசய்யங்காரை வைக்கத்திற்கே இவர் அனுப்பி, சென்னைக்குத் திரும்பி விடுமாறு சொன்னவர் ராஜாஜி.
"எனக்குக் காரியம் தான் முக்கியமே தவிர, வீரியமல்ல" என்ற கருத்துடையவர் தந்தை பெரியார். காந்தியார் இராணியுடன் பேசியே நாங்கள் கோரியது நடக்கட்டும் என்றார்.
முதற்கட்டமாக ஈழவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்காக எல்லா வீதிகளும் திறந்து விடப்பட்டன என்பதுதான் வரலாறு. வைக்கம் வெற்றி விழா 29.11.1925 இல் நடைபெற்றது. அந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தவரே பெரியார்தான்.
வைக்கம் போராட்டத்தின் உண்மை வரலாற்றை, தந்தை பெரியார் அவர்களின் பங்கினைத் தெரிந்து கொள்ள வேண் டுமானால் இரு நூல்கள் முக்கியமானவை. பாரிஸ்டர் கே.பி. கேசவமேனன் எழுதிய கழிஞ்ச காலம் (கடந்தகாலம்) பல்கலைக் கழகப் பேராசிரியர் டி.கே. இரவீந்திரன் எழுதிய (பிறகு துணைவேந்தர்) Vaikam Satya Graha and Gandhi என்ற நூல் முக்கியமானது இரண்டாவது பதிப்பில் Hundred Yards to Freedom என்று தலைப்பு மாற்றப்பட்டது.
இன்னொரு முக்கிய ஆதாரம்: இந்தியாவின் பொது ஆளுநருக்கு சென்னை மாகாணத்தில் முதல்வராக இருந்த (Agent to the Governor - General, Madras) சி.டபுள்யூ இகாட்டன் எனும் அய்.சி.எஸ். அதிகாரி, சென்னைதலைமைச் செயலாளருக்கு 1924 ஏப்ரல் 21 நாளிட்டு எழுதிய மடல் முக்கியமானதாகும்.
"சத்தியாக்கிரக இயக்கத்திற்கு திருவாங்கூருக்கு வெளியில் உள்ளவர்களின் உதவி கிடைக்காதிருந்தால், அது வெகு நாட் களுக்கு முன்பே பிசுபிசுத்துப் போயிருக்கும். ஆனால், வைக்கம் அறப்போருக்குச் சென்னையிலிருந்து நிதியாகவும் தலைமைப் பொறுப்பு என்ற வகையிலும் கிடைத்த ஆதரவு அபரிமிதமாகவும், மனதில் படும்படியாகவும் இருந்தது. ஈ.வெ. ராமசாமி நாயக்கரின் தலைமை இயக்கத்திற்குப் புத்துயிர் ஊட்டியது. கேரளாவிற்குப் புறப்படுவதற்கு முன் தமிழக மக்களுக்கு அவர் விடுத்த உணர்ச்சி மிக்க வேண்டுகோள் தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் ஆழப் பதிந்தது." பெரியாரின் அறிக்கையைத் தமது மடலில் கொடுத்து விட்டு, மேலும் காட்டன் எழுதுகிறார்: வைக்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், திருவாங்கூரின் மற்ற இடங்களிலும் அவர் பேசியவை மக்களின் உள்ளங்களை ஆழமாகத் தொட்டன. அவ ருடைய தீர்க்க மான தர்க்க முறையில் அமைந்த வாதங்கள், தடு மாற்றமுள்ளவர் களைச் சத்தியாக்கிரகத்திற்குச் சார்பாக மாற்றிய துடன், எதிர்த்தவர்களையும் அவ்வாறே ஆக்கியது. சத்தியாக்கிர கத்திற்குச் சில நாட்கள் தலைமை ஏற்றார். பின்பு கிராமங்களுக்குச் சென்று அதன் கொள்கைகளையும் குறிக்கோள்களையும் பிரச் சாரம் செய்தார். அடுத்துக் காங்கிரஸ் குழுவோடு சேர்ந்து வெவ் வேறு இடங்களுக்குச் சென்றார். ராமசாமி நாயக்கருடைய பேச்சு மக்கள் எளிதில் பதியக் கூடியதாகவும், காரசாரமான ஆற்றல் பெற்றதாகவும், திருவாங்கூர் அரசாங்கத்தின் கவுரவத்தைக் குலைப்பதாகவும் இருந்தது. எனவே, அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்"
இதற்கு மேல் என் ன ஆதாரம் வேண்டும் - உங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைக்கப் போகிறீர்கள். குருமூர்த்திகளே!
தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் அப்பொழுது காங்கிரஸ் ஏடான நவசக்தியில் என்ன எழுதினார் என்பதாவது குருமூர்த்தி வகையறாக்களுக்குத் தெரியுமா?
வைக்கம் வீரர் என்று தலைப்பிட்டு திரு.வி.க. எழுதுகிறார் - படியுங்கள், படியுங்கள்.
"ஸ்ரீமான் நாயக்கர் செல்வமெனும் களியாட்டில் அமர்ந்தவர்; உண்டாட்டில் திளைத்தவர்; வெய்யில் படாது வாழ்ந்தவர்; ஈரோட்டு வேந்தரென விளங்கியவர். ஈ.வெ. ராமசாமி நாயக்கர் தமது செல்வம் முதலிய மாயைகளை மறந்து, வறியார் போல் எளிய உடை தரித்து எளிய உணவு உண்டு, இரவு பகல் ஓயாது தேசத் தொண்டிற்கே தமது வாழ்வை அர்ப்பணம் செய்துள்ளதை எவரே அறியார்?" என்று நவசக்தியில் தீட்டினாரே (24.5.1924).
எவரே அறியார் என்று திரு.வி.க. 95 ஆண்டுகளுக்கு முன் கேட்டார். ஆனால் அப்படி கேட்கும் இனத்துவேஷ விரியன்கள் இன்னும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
இன்னும் உண்டு கேளுங்கள், கேளுங்கள் - உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கேரளத்தைச் சேர்ந்த எம். கோவிந்தன் நாயர் எழுதுகிறார் (1929).
"உலகத்தில் உள்ள எல்லா மக்களும் ஒரே ஜாதியினர் என்று உபதேசித்தவர் காலஞ்சென்ற பெரியார் திரு நாராயண குருசாமி அவர்கள். மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதே அவரது மதத்தின் சாரம். இவ்வுண்மையை உள்ளபடி நன்கு உணர்ந்தவர் திரு கே. அய்யப்பன். என்றும் பிறர்க்கு என வாழும் வாலிபர். அவர் இவ்வுதேசத்தைப் பரப்பி வருகிறார். மேற்கு மலைத் தொடர்ச்சிக்குப் பக்கத்தே என் நண்பர் திரு ஈ.வெ. ராமசாமியார், மற்றெவரையும்விட நன்றாக இவ்வுண்மையை உணர்ந்து ஜாதி என்னும் பேயைப் போராடி ஒழிக்கத் தமது ஆயுள் முழுவதிலும் உழைக்கத் தயாராக முன் வந்துள்ளார். வைக்கம் சத்தியாக்கிரக நாட்களில், யான் இவ ருடன் முதன் முதல் அறிமுகமானேன். வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு இவரே உயிராக இருந்தார். அந்நீண்ட தொடர்ச்சியான போரைச் சித்தியேற் படும்படியான முடிவிற்குக் கொண்டு வந்து விட்டுத் திரு. இராமசாமியார் சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கினார். கோட்டயத்தில் நடைபெற்ற எஸ்.என்.டி.பி. (சிறி நாராயண குரு தர்ம பரிபாலன்) மாநாட்டில், 10000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு, இவர் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவங்களைப் பற்றிச் செய்த சொற்பொழிவை யான் கேட்டேன். சொற்பொழிவு எளிதாகவும், நேரானதாகவும் இருந்தது. அவரது வாயினின்றும் வந்த ஒவ்வொரு சொல்லும், உண்மையுணர்வோடு வந்தது. மிகுந்த கவனத்தோடு மக்கள் கேட்டனர் .களங்கமற்ற கோடிக்கணக்கான மக்களுக்கு இந்நாட்டில் பிறப்பினால் ஏற்பட்டிருக்கும் அநீதியான தடையை நீக்கவும், ஒவ்வொரு மனிதனும் யாதொரு தடையுமின்றி முன்னேற் றமடைய வாய்ப்பும் வசதியும் அளிக்கவும், நாகரிக உலகத்தால் எள்ளி நகையாடப் பாத்திரமாகவிருக்கும் தாழ்ந்த நிலைமையிலிருந்து இந்தியாவை முன்னேற்றவும், திரு இராமசாமியார் சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கினார்"
வைக்கம் வெற்றி விழாவில் உரையாற்றிய மன்னம் பத்மநாபன் பேசுகிறார். நாகம்மையார் அனைவருக்கும் தாய் என்றும் போராட்டக் காலத்தில் மக்களின் இன்னலைப் பகிர்ந்துகொள்ள வந்த அவர் வெற்றி விழாவிற்கும் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள வந்திருக்கிறார் என்று நெகிழ்ந்து கூறியதுண்டே!
சென்னை மாநகர மேயராகவும், சட்டப் பேரவை உறுப்பினரா கவும் அண்ணல் அம்பேத்கருக்கு உற்ற தோழராக இருந்தவருமான வழக்குரைஞர் ராவ்சாகிப் என். சிவராஜ் என்ன கூறுகிறார்? (1928).
"தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்காக மகத்தான வேலை செய்திருக்கும் திரு நாயக்கர் அவர்களை எங்கள் சமுகத்தார் என்றும், மறக்கவே முடியாது. வைக்கத்தில் அவர் செய்துள்ள வேலை அளவிடற்பாலது. அவர் ஒரு காலத்தில் தேசியப் போராட்டத்தில் மிதவாதக் கொள்கை உடையவராக இருந்தார். சமுக சீர்திருத்தமின்றி அரசியல் சுதந்திரம் கொடுக்கப்படுமாயின், அதனால் எவ்வித நன்மையும் ஏற்படாது. சீர்திருத்தக்காரர்கள் பின்பற்றத் தகுந்த தலைவர் நாயக்கர் ஒருவரேயாவர்" என்று ஒடுக்கப்பட்ட சமுதாயத் தலைவர் படம் பிடித்துக் காட்டி கோணல் புத்திக்காரர்களின் செவிளில் அறைந்துள்ளாரே - இதற்குப் பிறகாவது புத்தி வருமா?
தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் என்பது சாதாரணமானதல்ல. மாகத் என்னும் ஊரில் அண்ணல் அம்பேத்கர் நடத்திய போராட்டத்துக்கே தூண்டுகோலாக இருந்தது என்பது கூடுதல் தகவல். தகர டப்பாக்களே இனி மேலாவது உளறுவதை நிறுத்திக் கொள்க!
திருவாங்கூர் சிறைச்சாலையில் பெரியார்
வைக்கம் போராட்டத்தில் சிறை பிடிக்கப்பட்டவர்களில் பாரிஸ்டர் கேசவ மேனன் ஒருவராவார். தமது சிறைவாசம் எப்படி இருந்தது என்பதுபற்றி எழுதுகிறார்.
"சுற்றிலும் தாழ்வரையுள்ள விசாலமானதொரு அறையில் மாதவனுக்கும், எனக்கும் படுத் துறங்கக் கட்டில்கள் போட்டிருந் தார்கள். குளியலறையும், எழுது வதற்கும், படிப்பதற்கும் வசதி யுள்ள இடமும், நடப்பதற்கு முற்றமும் இருந்தன. அந்தந்த நேரத்திற்கு ஏற்ற விருப்பமான உணவு கிடைத்தது. எங்களுக்கு வேண்டியதை அறிந்து உடனுக் குடன் நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் கருத்தாக இருந்த னர். செய்திப் பத்திரிகைகளும், புத்தகங்களும் எங்களுக்குக் கொண்டு வந்து தந்தார்கள். உற வினருக்கும், நண்பர்களுக்கும் கடிதங்கள் எழுதவும், அவர் களிடமிருந்து வரும் பதில் கடி தங்களைப் பெறுவதற்கும் அனுமதியளித்தனர். அன்றாடம் குறித்த நேரத்தில் எங்களைக் காண வருபவர்களுடன் பேசுவ தற்கும் தடை ஏதுமில்லை. சிறையில் இருந்து வெளியே செல்ல முடியாது என்ற ஒன்றைத் தவிர மற்ற வாழ்க்கை வசதி களைப் பொருத்து எங்களுக்குத் தேவைப்பட்ட எல்லாம் எளி தாகவே கிடைத்தன."
என்று கூறுகிறார் பாரிஸ்டர் கேசவ மேனன். அதே கே.பி. கேசவமேனன் திருவாங்கூர் சிறைச்சாலையில் தந்தை பெரியார் எப்படி நடத்தப்பட் டார்? அவர் அனுபவித்த கொடுமை என்ன என்பதையும் எழுதியுள்ளார். அதைப் படித்த பிறகாவது படமெடுத்தாடும் பார்ப்பனர் கூட்டத்தின் கடும் நஞ்சினைப் பார்ப்பனர் அல்லா தார் புரிந்து கொள்ள வேண்டும்.
"கால்களில் விலங்குச்சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் ஒரு குல்லாய், முழங்காலுக்குக் கீழே தொங்குகின்ற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிக்கப் பட்ட ஒரு மரப்பட்டை, இவற் றோடு ஈ.வெ.ராமசாமி கொலை காரர்களோடும், கொள்ளைக் காரர்களோடும் வேலை செய்து கொண்டிருக்கின்றார். தண் டனை அடைந்த ஒரு சாதாரணக் கைதி எவ்வளவு ஒரு நாளைக்கு வேலை செய்வானோ, அது போல் இருமடங்கு வேலை செய்கிறார்.
ஒரு 'ஜாதி இந்து' என்று சொல்லக்கூடிய நிலையிலே உள்ள ஒருவர் கேரளத்திலுள்ள தீண்டத்தகாத மக்களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்ப தற்காக செய்த தியாகம் நமக்குப் புதுவாழ்வு தந்திருக்கிறது. இந்தப் பெரிய உன்னத இலட்சியத் திற்காக அவர் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறார்.
ஈ.வெ.ரா. அவர்களுக்கு இருக்கக்கூடிய நாட்டுப்பற்று, உற்சாகம், அனுபவம், பெருந் தன்மை, பெரும் பக்குவம் இவைகளெல்லாம் உடைய இன் னொருவரை இந்த நாட்டிலே அந்த அளவுக்குக் காண முடியுமா? இந்த மாநிலத்து மக்கள் அனுபவிக்கிற கொடு மையை நீக்க வேண்டும் என்பதற்காக - தான் எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை வேண்டு மானாலும் ஏற்கலாம் என்று சொல்லி ஒரு தலைவர் வந்தாரே - அதைப் பார்த்து இந்த மாநில மக்களாக இருக்கிற யாருக்குமே வெட்கமேற்படவில்லையா? கேரளத்தின் முதிர்ந்த அனுபவ மிக்க தலைவர்கள் தங்கள் சாய்வு நாற்காலியைத் தூக்கி யெறிந்து விட்டு தங்கள் பங்கைச் செலுத்த இப்போதாவது வர வேண்டாமா?"
- கே. பி. கேசவமேனன் (மலையாளத்தில் தன் வரலாறு, பக்கம் 108)
இதனைப் படிக்கும் பொழுது - ஒரு செல்வச் சீமான் தீண் டாமை ஒழிப்புக்காக எத்தகைய விலையைக் கொடுத்திருக்கிறார் என்பதை உணர வேண்டாமா?
அட, வெட்கம் கெட்ட குருமூர்த்திகளே! உங்களுக்கு அறிவு நாணயம் என்ற ஒன்றே கிடையாதா?

Friday, June 21, 2019

இங்கே வரலாறே எது உண்மை எது உண்மை இல்லை என்று தெரியாத ஒரு நிலை

இங்கே வரலாறே எது உண்மை எது உண்மை இல்லை என்று தெரியாத ஒரு நிலை இருக்கையில் இந்த வரலாற்று இடைச்செருகல்கள் என்று ஒரு விஷயம் இருக்கிறது.
அதாவது பல காலமாக உண்மையான வரலாறு என்று நம்பப்பட்டு வரும் கற்பனைக்கு அப்பாற்பட்ட , நிதர்சனங்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்.
குறிப்பாக இதை எடுத்துக் கொள்வோமே.
சில ஆண்டுகளுக்கு முன்பாக இதுதான் திருவள்ளுவரின் மனைவி வாசுகி புகைப்படம் என்று ஒரு புகைப்படம் இங்கு முகநூலில் உலாவியது .அப்பொழுது நாமெல்லாம் அதை மிகவும் கிண்டல் செய்து திருவள்ளுவர் காலத்தில் கேமரா வந்தது எப்படி என்றுஅந்த புகைப்படத்தை பதிவிட்டவர்களை மிக மோசமாக விமர்சனம் செய்தோம்.
ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் யாரை எல்லாம் முட்டாள் என்று இழிவு செய்தோமோ அவர்களைவிட நாமே பெரிய முட்டாளாக தான் இருந்திருக்கிறோம். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் திருவள்ளுவரின் மனைவி வாசுகி தண்ணீர் பிடிக்கும் பொழுது திருவள்ளுவர் அழைத்தார் என்றால் அவர் அவருடைய அந்த தண்ணீர் பிடிக்கும் வாலி அதாவது பக்கெட் அப்படியே அந்தரத்தில் தொங்கும் against the gravity... அதாவது புவி ஈர்ப்பு விசையை மீறி அந்த பக்கெட் அந்தரத்தில் அப்படியே தொங்கிக்கொண்டிருக்கும் இதை எந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் சொன்னாரா என்று பார்த்தால் இல்லை . பின்பு இது நடக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் நம் முன்னோர்கள் என்ன திருவள்ளுவர் வீட்டில் உட்கார்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்களா அப்படியே இருந்தாலும் இதெல்லாம் சாத்தியமா ஆனால் என்றைக்காவது அறிவுபூர்வமாக அறிவியல் ரீதியாக இது எப்படி உண்மையாக இருக்க முடியும் என்று நாம் கேள்வி எழுப்பி இருக்கிறோமா? குறிப்பாக பள்ளிக்கூடத்தில் இது நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பாட புத்தகத்தில் இல்லை என்றாலும் நம் தமிழ் ஆசிரியர் திருவள்ளுவரைப் பற்றி பேசும் போது இது போன்ற சில விஷயங்களை அடித்துவிடுவார். இன்னொரு முக்கியமான விஷயம் இதை தாண்டி பல தமிழ் அறிஞர்கள் மேடைகளில் பேசும் பொழுதும் பட்டிமன்றங்களில் பேசும் பொழுதும் இதை உண்மையாக நடந்த ஒரு விஷயம் போல் திருவள்ளுவரின் மனைவி அவரின் கர்ப்பு , அவர்களின் தாம்பத்தியத்திற்கு சான்றாக இதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறார்கள். நாம் எப்படி இதையெல்லாம் நம்பினோம் ?தமிழ் சமூகம் அறிவு சார்ந்த ஒரு சமூகமாக இருக்கிறது தமிழ் என்பது வெறும் மொழியாக மட்டும் இல்லாமல் பகுத்தறிவையும் அதனோடு தொடர்பு படுத்திக்கொண்டு இருக்கும்போது எப்படி இந்த கேள்விகளை நாம் கேட்காமல் போனோம்?
இன்னும் சொல்லப்போனால் மிக முக்கியமான ஒரு விஷயத்தை நான் சொல்ல வேண்டும் திருவள்ளுவர் என்றால் யாரென்று நமக்குத் தெரியாது .திருவள்ளுவர் அவர் பெயர் கூட கிடையாது .அப்படி இருக்கையில் வாசுகி தான் திருவள்ளுவரின் மனைவி பெயர் என்று சொன்னது யார் ? திருவள்ளுவர் என்று பின்னாளில் நாம் அழைத்த மனிதனின் மனைவி பெயர் வாசுகி என்று எந்த கல் வெட்டில் இருக்கிறது? எந்த ஓலைச் சுவடியில் இருக்கிறது?
"ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான் வளர்ச்சி" என்பார்கள் என்னை பொறுத்தவரை மொழியும் வளரவேண்டும் மொழியோடு சேர்ந்து பகுத்தறிவும் வளரவேண்டும். பகுத்தறிவு வளர வேண்டுமென்றால் நாம் பழைய கற்பிதங்களை கேள்விகள் கேட்கவேண்டும் ,பழைய முறைகளை நாம் சவாலுக்கு உட்படுத்த வேண்டும்.
இது மட்டுமல்ல தமிழர் வரலாற்றில் இதுபோன்ற பல செருகல்கள் இருக்கின்றன.
குறிப்பாக அவ்வையார் எப்படி ஒரே பாட்டில் குமரியாக இருந்து கிழவியாக மாறினார்? பாரி எப்படி முல்லைக்கு தேர் கொடுத்தான்? இன்னொரு மன்னன் எப்படி மயிலுக்கு போர்வை பொத்தினான்? போன்ற பலவிதமான இடைச் செருகல்களை நாம் கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது இது எல்லாம் ஒரு விதமான urban legends. உண்மை வரலாறு கிடையாது.
இன்னும் சொல்லப் போனால் எப்படி lord of the rings இல்லை கேம் ஆப் த்ரோன்ஸ் உண்மை வரலாறு என்று அடித்து போட்டாலும் நாம் நம்ப மாட்டோமோ அதேபோல் இதுபோன்ற தமிழ் வரலாற்றில் இருக்கும் சில தேவையற்ற பொய்களையும் நாம் கேள்வி கேட்டே ஆக வேண்டும்.
பகுத்தறிவோடு கேள்வி கேட்கும் சமூகமே முன்னேறும். லாஜிக்கல் கேள்வி கேட்பதே அறிவின் சான்று.

யோகாவும் இல்ல...ஒரு #ஹைகோர்ட்டும் இல்லை

இவனுக #குடுமி சும்மா ஆடாது.
யோகாவும் இல்ல...ஒரு #ஹைகோர்ட்டும் இல்லை.
#யோக்கியர்கள் யோகா செய்யச் சொல்லும் நோக்கம் #இதுதான்.



இந்தப் படத்தில் இருப்பவர்தான் கே.பி.ஹெட்கேவர்.
அதாவது கேசவ பலராம் ஹெட்கேவர்.
ஆந்திராவில் நிஜாம் மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட குந்த் குர்த்தி என்ற ஊர்தான் இவரின் பூர்வீகம்.
அங்கிருந்து குடும்பத்தோடு அடித்து விரட்டப்பட்டு மகாராஷ்டிரா நாக்பூரில் குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

சித்பவன பார்ப்பனர்.அதாவது பார்ப்பனர்களில் பல பிரிவு உண்டு. கடவுளுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள்தான் சித்பவனப் பிரிவாம்.

இந்தியாவில் மூன்றுமுறை தடை செய்யப்பட்ட RSS தீவிரவாத அமைப்பை உருவாக்கியவர் இவர்தான்.
1925 ல் நாக்பூரில் இவருடைய வீட்டில் வைத்துதான் RSS தொடங்கப்பட்டது.
மராட்டிய தலித் மக்களின் எழுச்சியை ஒடுக்கவே இந்த அமைப்பை அன்று தொடங்கினார்கள்.

RSS நடத்தும் முகாம்களில் யோகாவும் ஒரு நிகழ்ச்சி,
இதை வலியுறுத்தியவர் இந்த ஹெட்கேவர்.
அந்த முகாம்களில் பாடும் பாடல் இதுதான்.
இதற்கு சமஸ்தே சதாவஸ்தே என்று பெயர்.

SOLUTATIONS TO YOU, O MOTHER LAND
WHERE I AM BORN

SOLUTATIONS TO YOU, LAND OF ARYAS
WHERE I HAVE GROWN

SOLUTATIONS TO YOU, O SACRED LAND
WHERE I HAVE WORKED,

இதன் பொருள் என்ன?

நான் பிறந்த தாய் நாடே உன்னை வணங்குகிறேன்
என்னை வளர்த்த ஆரிய நாடே உன்னை வணங்குகிறேன்
நான் உழைக்கும் புனித நாடே உன்னை வணங்குகிறேன்.

ஆரிய நாடாம்.கொழுப்பப் பாத்தேளா.
இந்த யோக்கிய சிகாமணியின் நினைவு நாள் ஜூன் 21.
அந்த ஆள விழுந்து கும்புடச் சொல்றானுக.
யோகா என்ற பெயரில்.

அயோக்கியத்தனத்தையும், உழைக்கும் மக்களிடத்தில் அடிமைப் புத்தியை வளர்ப்பதுதான். இந்த பார்ப்பன அயோக்கியர்கள் தன்னுடைய வாழ் நாள் வேலைத்திட்டமாக வைத்துள்ளார்கள் என்பதை மானமுள்ள தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
யோகா என்பது உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்கி அவர்களை வஞ்சகம் செய்வதற்காகவும் தன்னெழுச்சியாக தனது உரிமையை போராடி பெறக் கூடாது என்பதற்காகவும் அவர்களுடைய போராட்ட குணங்களை மழுங்கடிப்பதற்கு இந்த பார்ப்பன அயோக்கியர்களின் தந்திரம்தான் "#யோகா" என்ற ஆயுதம் அதை அறிவார்ந்த முறையில் புரிந்து கொண்டு தமிழர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

வாள் அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்கள்

கேள்வி:
"பார்ப்பனர்களுக்கென 'Brahministan' என்னும் பெயரில் ஒரு தனி நாடு வேண்டும் என்றக் கோரிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?"
பதில்:
உண்மையில் பார்ப்பனர்கள் மட்டுமே நிறைந்த தேசம் ஒன்று இருக்கவே முடியாது என்பதுதான் என் கருந்து.
காரணம், ஒருவன் தன்னைப் பார்ப்பனனாகக் கருதிக்கொள்கிறான் என்றால் அவன் இந்து வேதங்களின்படி தன்னை பிறப்பால் உயர்ந்தவன் என்று நம்புகிறான் என்றுப் பொருள்.
வேதங்களின்படியும், மனுநீதியின்படியும் சமூகத்தில் மந்திரம் ஓதுவது, கோயிலில் மணியாட்டிப் பிச்சை எடுப்பதுப் போன்ற பணிகள் மட்டுமே தனக்குரியவை என்றும், மற்ற உடல் உழைப்பு தேவைப்படும் பணிகள் அனைத்தும் பார்ப்பனரல்லாத மக்களுக்கு உரியவை என்றும் நம்புகிறவன் என்றுப் பொருள்.
இப்படி ஒரு உழைப்புக்கு அஞ்சும் கையாலாகாத அயோக்கியக் கும்பலால் எப்படி ஒரு நாட்டை கட்டியெழுப்பமுடியும்? ஏற்கனவே உருவான ஒரு நாட்டைக் கொடுத்தால் அதிலாவது இவர்களால் இயங்கமுடியுமா?
இவர்கள் கேட்கும் பார்ப்பனர்களுக்குரிய தனிநாட்டில் வயலில் இறங்கி உழப்போவது யார்? துணியை நெசவு செய்யப்போவது யார்? கட்டிடங்களைக் கட்டப்போவது யார்? உடல் நோக உழைக்கப்போவது யார்? மலம் அள்ளப்போவது யார்?
உழைப்பு இல்லாமல் எப்படி ஒரு நாட்டை உருவாக்கமுடியும்? கோடிக்கணக்கான பார்ப்பனரல்லாத மக்களின் உழைப்பில் நோகாமல் உட்கார்ந்து உண்டுக்கொழுத்த தண்டக் கருமாந்திரங்களுக்கு தனிநாடு ஒருக் கேடா?
"இல்லை இல்லை.. கடுமையாக உழைக்கும் பணிகளை செய்வதற்கு பார்ப்பனரல்லாதவர்களை இங்கிருந்து அழைத்துக்கொள்வோம்" என்று அவர்கள் சொல்வார்களேயானால், "உங்களுக்கு உழைக்கப்பதற்காக பார்ப்பனரல்லாத மக்கள் வேண்டும் என்றால், இந்தியாவிலேயே அப்படித்தானே சுரண்டிப் பிழைக்கிறீர்கள். பிறகு என்ன மயித்துக்கு தனிநாடு வேண்டும்?" என்றக் கேள்வி எழும்.
"இல்லை இல்லை. நாங்களும் எங்கள் நாட்டில் உயர்வு தாழ்வு பார்க்காமல் சமத்துவமாக அனைத்துப் பணிகளையும் செய்வோம். உடல்ரீதியாக உழைப்போம்" என்று அவர்கள் சொல்வார்களேயானால், "பிறகு எப்படி நீங்கள் பார்ப்பனர்கள்? அந்த வெங்காயத்தை இங்கேயே செய்யலாமே? சமத்துவம் தழைக்குமே! அதைத்தானே திராவிட இயக்கம் சொல்கிறது?" என்றக் கேள்வி எழும்.
ஆக, எப்படிப் பார்த்தாலும் அவாள் அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்கள்.

திராவிடர் என்பதற்கு பதிலாக தமிழர்கள் என்று ஏன் வழங்கக் கூடாது

திராவிடர்  என்பதற்கு பதிலாக தமிழர்கள் என்று ஏன் வழங்கக் கூடாது என்று சிலர் கேட்கிறார்கள் . தமிழர்கள் என்று சொன்னாலே பார்ப்பனர்கள்  தாங்களும் தமிழர்கள் தாம் என்று கூறி அதில் சேர்ந்து கொள்கிறார்கள்.

நாங்களும் தமிழ்நாட்டில் பிறக்கிறோம், வளர்கிறோம், தமிழே பேசுகிறோம், தமிழ்நாட்டிலேயே இருக்கிறோம் அப்படி இருக்கும்போது எப்படி எங்களைத் தமிழர் அல்லர் என்று நீங்கள் கூறமுடியும் ? என்று கேட்கிறார்கள்.

ஒருகாலத்தில் தமிழர் என்பது  தமிழ் ( திராவிட)ப் பண்புள்ள மக்களுக்கு  அரிய பெயராக இருந்திருக்கக் கூடுமானாலும் - இன்று அது மொழிப் பெயராக மாறிவிட்டிருப்பதால் அம்மொழி வேதம் ஆரிய பண்புடைய மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்ற உரிமை பாராட்ட முன்வந்து விடுகிறார்கள்.
அத்தோடு ஆரியப்பண்பை நம்மீது சுமத்த அந்த சேர்க்கையைப் பயன்படுத்தி விடுகிறார்கள்.

அவர்களும் நாமும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் நாம் சூத்திரர்களாகிறோம். ஆகவே, நம் கூட்டத்திலிருந்து அவர்களை விலக்கிப் பேசித்தான், நம்மை திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நம்மில் தமிழன் என்று சொல்லும் - ஏமாளிகளைத்தான் பார்ப்பனர்களால் ஏமாற்ற முடியுமே ஒழிய , திராவிடர் என்றால் அவர்களால் ஏமாற்ற முடியாது .

சிதம்பரத்தில் 29.9.1948 இல் சொற்பொழிவு.

Thursday, June 20, 2019

நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்?

சமீபத்தில் புதிதாக நான் சேர்த்துள்ள நிறுவனத்தில், உடன் வேலை செய்யும் ஐயர் நண்பருடன் மதிய சாப்பாடு சாப்பிட்டு கொண்டிருந்த நேரத்தில்,
"பாகற்காய் சாப்பிடுங்க. முடிஞ்சா vegetarian ஆ மாறிடுங்க. நீங்க சாப்பிடற எல்லா விஷயத்தில இருக்க சத்தும் இங்கேயும் இருக்கு. நாமளும் ஒரு உயிர் தானே? எப்படி இன்னொரு உயிரை சாப்பிடுற காரியத்த பண்றமோ" ன்னு சலிப்போட சொன்னார்.
பதிலுக்கு நானும், "லோகத்துல இப்போ மரம் செடி தான் கம்மியா இருக்காம். ஏன் நீங்க அதை இன்னும் இன்னும் அழிச்சுண்டு இருக்கேள்? நாம எல்லாரும் காட்டுவாசியா இருந்தவங்க தானே? நீங்க ஏன் கொஞ்ச காலத்துக்கு நம்ம பக்கம் வரப் படாது?"ன்னு கேட்டேன்.
அதோட அமைதியா சாப்பிட்டு எழுந்து போன அவர், இப்போ வரை என் பக்கமே திரும்பல.
நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்?

ழ்மாரிகள் நாட்டுக்கும் வீட்டுக்கும் மொழிக்கும் கேடு.

ழ் தான் தமிழ்.
ழ் சொன்னா தான் தமிழன் என்று தொங்கும் " ழ்மாரிகள் " எல்லாம் புறந்தள்ளப்படவேண்டியவர்கள்...
ஒரு செத்த மொழியை ஒரு கூட்டமே தூக்கி சுமக்கிறது..தேவ பாஷை, தேவ பாடை என்று பெயரில்லாம் கொடுத்து ஆதிக்க தெனவட்டுடன் சுமக்கிறது. Syllable, phonetics எல்லாம் பற்றி கவலைப் படாமல் வாயில் வெற்றிலை போட்டுக் கொண்டு
ஓழ்ம் பூழ் பூழ்வ சுவஹ.
தத் சவிதுழ்ழ் வழேனியம்
பழ்ழ்ழ்கோ தேவஷ்ஷ்ய தீமஹிழ்
தியோ யோன பிழரசோதயாழ்த்
என்று ஓவர் ழகரம் போட்டு பேசுகிறது.
அவர்களை தமிழர்கள் என்று நாம் நினைத்தாலும்கூட அவர்களில் 99% ஆட்கள் தங்களை தமிழர்கஒ என்று நினைக்கத் தயார் இல்லை. அதனால் தான் தமிழ் வாழ்க என்று நாம் முரசறைந்தால் " ஜெய் ஹிந்த், பாராத் பேட்டி கி ஜெய் " என்கிறது..
நம்மை பார்த்து அதே வெற்றிலைக் கொதப்பும் வாயால் " கையெழுத்தெல்லாம் தமிழ்லயா ஓய் போட்டேள்..."
"வெழ்த்து கோஷம் ஒய்..இதெல்லாம் அவை குழிப்புல வழாது தெழியுமோண்ணோ.." என்று "ழ்"மாரித்தனத்துடன் பேசுபவர்களை எல்லாம் ஒரு காமெடி பீசாக அனுகினால் போதும்..
முதலில் மனிதம். உணர்வு..அதன்பின் தான் மொழி.
சில மாதம் முன்பு ஒரு சேட்டு அம்மா நீயா நானாவில் அட்டகாசமாக தமிழ் பேசினார். இன்னும் பல அயல் மொழிக்காரர்கள் ழகர உச்சரிப்பு வராமல் பேசினார்கள். ஆனால் அவர்கள் உணர்வால் தமிழர்கள் என்று நினைத்தால் அவர்கள் தமிழர்கள் தான். ழகரம் வந்தால் தான் தமிழன் என்றால் கொங்கு பிரதேசத்தையே கேரளாவுக்கு எழுதிக் கொடுங்கள்.
நெல்லைக் கண்ணன் கூட தான் ழ கரத்தை மிகச் சரியாக உச்சரிப்பார்..
அதுக்காக அவர எல்லாம் முற்போக்கிஸ்ட்டுன்னு சொல்லிட முடியுமா... ?
இந்த ழ் பஞ்சாயத்தைக் கிளப்பும் வெற்றிலை வாய் கொதப்பி ழ்மாரிகளிடம் ஒன்றே ஒன்று மட்டும் கேளுங்கள்..
"சரிங்க ழ் மாரி சார்..ழ் வராதவன் தமிழாவே இல்லாமல் போகட்டும்..உங்க வாய்ல தான் ழ் எல்லாம் நல்லா வந்து அக்மார் ழ்த்தமிழனாய் இருக்கிறீர்களே..அனைத்து கோவில்களிலும் இனிமேல் ழ் சிறந்த தமிழிலேயே அர்ச்சனை செய்துவிடலாமே..ஏன் ஒரு புரியாத செத்த மொழி?.." என்று கேளுங்கள்...
ஹெ ஹெ..அது வந்து ஓய்ய் என்று பிரசங்க கதாகலாட்சேபம் ஒன்றைத் தொடங்குவார்கள்.
நீ ஊதவே வேணாம் என்று சொல்லி வேறு வேலையைப் பாருங்கள்.
ழ்மாரிகள் நாட்டுக்கும் வீட்டுக்கும் மொழிக்கும் கேடு.
ழ் மாரிகள் cause cancer.
ழ்மாரி kills..

குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும்னு ஜோசியம் தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்

முகநூல் நண்பர் ஒருத்தர் தனக்கு தேவதை பிறந்திருக்கான்னு போஸ்ட் போட்டிருந்தார். எப்பவுமே இந்த மாதிரி போஸ்ட் போட்டா வாழ்த்துகள் சொல்லிட்டு நகர்ந்துடுவேன். ஆனா அதே போஸ்ட்ல கமெண்ட்ல தன் குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும்னு ஜோசியம் தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்னு கமெண்ட் போட்டிருந்தார். நம்ம வாய் சும்மா இருக்காதே. கீழ இருக்கிறதை கமெண்ட்டா போட்டுவிட்டுட்டு வந்துட்டேன் 😝 அவரு வந்து பார்த்துட்டு ப்ளாக் பண்ணிக்கட்டும் 🤣🤣
பொறந்து முழுசா 12 மணி நேரம் கூட ஆகல. அதுக்குள்ல அவங்க எதிர்காலம் தெரியனுமா? சரி எனக்குத்தெரிஞ்ச எதிர்காலம் சொல்லட்டுமா?
உங்க பாப்பா கொஞ்ச நாளைக்கு படுத்துட்டு மட்டும் இருப்பாங்க. பாத்ரூம்லாம் அவங்க அறியாமயே போயிடுவாங்க. நீங்கதான் ஆய் கழுவிவிடனும். கொஞ்சநாள் கழிச்சு தவழுவாங்க. அவங்களுக்கு நீங்கதான் நடக்க சொல்லிக்கொடுக்கவேண்டி இருக்கும். அப்புறம் நடப்பாங்க. பேச ஆரம்பிப்பாங்க. தமிழே தடுமாறும், நீங்கதான் அதையும் சொல்லித்தரவேண்டியிருக்கும்.
அப்புறம் ஓடுவாங்க, பாடுவாங்க, ஆடுவாங்க. ஸ்கூல் போவாங்க, திங்கள்கிழமை ஸ்கூல் போக அடம்பிடிப்பாங்க. அப்புறம் பெரியமனுஷி ஆவாங்க. அவங்க விருப்பப்படியோ இல்ல விதியேன்னு உங்க விருப்பப்படியோ கல்யாணம் பண்ணுவாங்க. புருஷன் கூட சண்டைப்போடுவாங்க, அவங்களும் குழந்தை பெத்துப்பாங்க.
அவங்களும் குழந்தையோட எதிர்காலம் தெரியனும்னு போஸ்ட் போட்டா, மீதியை அவங்ககிட்ட சொல்லிக்கிறேன். 🤣🤣

ஆதி திராவிடர் பெயர் காரணம்

ஆதி திராவிடர் பெயர் காரணம் !
*பறையர்,பள்ளர் போன்ற*
*தமிழ் குடிகளை #ஆதித்தமிழர் என அழைக்காமல் #ஆதிதிராவிடர் என
*ஏன் அழைக்கிறார்கள்?*
இதுதான் திராவிடம்
செய்த சதி என சிலர்
வரலாற்றை திரித்து
கதை சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் உண்மை என்ன?
பிரிட்டிஷ் இந்தியாவின் கால கட்டத்தில் மதராஸ் மாகாண சட்டசபையில்
20 ஜனவரி 1922ல் M.C.ராசா
சட்டசபையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
அந்த தீர்மானத்தின்படி
#பறையர், #பள்ளர் என்ற பெயர்
நீக்கப்பட்டு ஆதிதிராவிடர் என்ற
பெயர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசாணை எண் 817 மூலம் (25.03.1922) பறையர், பள்ளர் மக்களுக்கு #ஆதிதிராவிடர் எனப் பெயர்
மாற்றம் செய்யப்பட்டது.
பெயர் மாற்றம் செய்யப்பட்டு
2ஆண்டுகளாகியும் பல பத்திரப் பதிவு அலுவலகங்களில் பறையன், பஞ்சமன் என்றே பதிவு செய்யப்படுகிறது.
இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என இரட்டைமலைசீனிவாசன் 25.08.1924ல் சட்டசபையில் முறையிட்டார். உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் பனகல் அரசர் பதிலளித்தார்.
இந்த காலகட்டத்தில் (1925 வரை) பெரியார் காங்கிரசில் இருந்தார்.
நீதிகட்சி 'ஆதிதிராவிடர் 'என பெயர் மாற்றிய தீர்மானத்திற்கும்
பெரியாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
1892ல் ஆதி திராவிடர் என்ற வார்த்தையை பதிவு செய்தவர் அயோத்திதாசர்.
1.12.1891ல் பண்டிதர்அயோத்திதாசர் நீலகிரியில் திராவிட மகா சபையின் முதல் மாநாட்டைக் கூட்டினார்.
அதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றி ஆங்கில அரசுக்கும், காங்கிரஸ்கட்சிக்கும் அனுப்பிவைத்தார்.
1892ல் அதை
"ஆதிதிராவிட மகாசன சபை" எனப்
பெயர் மாற்றி பதிவும் செய்தார்.
இதனை அடிப்படையாக கொண்டு நீதிக்கட்சி ஆட்சியில்
1922ல் பள்ளர், பறையர் என அழைக்கப்பட்ட சாதிகளுக்கு "ஆதிதிராவிடர் " என அரசு அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டியது.
M.C.ராஜா பட்டியல் சமூகத்தை சார்ந்தவர். அவர் தன்னுடைய சமூகத்தின் பெயரை எப்படி அழைக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவரின் மனநிலையிலிருந்து முடிவெடுத்தார்.
அதற்கு உறுதுணையாக இருந்தது
தாத்தா இரட்டைமலை சீனிவாசன்.
எதிர்காலத்தில் நீதிகட்சியிலிருந்து திராவிடர்கழகம் பிறக்கும் என்ற ஜோசியத்தை M.C.ராஜா அறிந்திருக்க வாய்ப்பு இல்லை
வரலாற்றை திரிக்கும் சிலர் சொல்வதுபோல ஆதி திராவிடர் என்ற பெயர் திராவிட கழகங்களால் கொடுக்கப்படவில்லை.
1891ல் அயோத்திதாசரால்
கொடுக்கப்பட்ட பெயர்.
அப்போது பெரியாருக்கு வயது 12.
'ஆதி திராவிடர்' என பெயர் மாற்றும்போது இந்தியா என்ற ஒரு சுதந்திர நாடே அப்போது கிடையாது. தமிழ்நாடு என்றவொரு
மாநிலமும் அப்போது இல்லை.
திராவிட கட்சிகள் அப்போது
பிறக்கவே இல்லை.
அப்போது பிறக்காத திராவிட இயக்கங்களை இழுத்து அவர்கள்தான் ஆதித்தமிழருக்கு ஆதி திராவிடர் என பெயர் சூட்டியதாகப் பொய்யை சொல்லி வரலாற்றை திரித்து அரசியல் செய்வது தற்போது நடக்கிறது.

தோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும்….

தோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும்….
( தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் )

நண்பர்களே…

தமிழ் செய்தி சேனலில் ( NEWS 18 ) தோழர் பெ.மணியரசனின் பேச்சைக் கேட்டேன். நன்றாகப் படித்த படிக்கின்ற பண்புள்ள அவர் பொய்யையும் புளுகையும் அள்ளி வீசியது எனக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. அவருடைய பெரும் புளுகுகளில் இரண்டை மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அவர் புளுகுகிறார் என்பதற்கான ஆதாரங்களையும் அந்த ஆதாரங்களைக் கொண்டுள்ள நூல்களின் இணைப்பையும் உங்களுக்குத் தருகின்றேன்.

தோழரின் பொய்1. தமிழ்நாட்டில் வேத வேள்விகளை பார்ப்பனர்களைக் கொண்டு செய்து அவர்களுக்கு நிலங்களைக் கொடுத்தது “களப்பிரர்கள்“ என்று கூறினார். உண்மையி்ல் சங்க கால சேர சோழ பாண்டிய மன்னர்களே வேத வேள்விகளைத் தொடங்கி வைத்து பார்ப்பனர்களுக்கு நிலம் வழங்கியவர்கள் என்பதை சங்க நூல்கள் பல இடங்களில் குறிப்பிடுகின்றன. சங்க இலக்கியங்களில் உள்ள இத்தகைய வேத வேள்விகள் சார்ந்த ஆதாரங்களை குறிப்பிடும் பாடல்களையும் அப்பாடல்கள் இடம் பெற்றுள்ள பகுதிகளையும் தொகுத்து விரிவாகப் பேசுகின்ற “சங்கநூல்களும் வைதீக மார்க்கமும்” என்ற நூலை நீங்கள் வாசிப்பதற்கு உதவியாக அந்த நூலின் இணைப்பைக் கொடுத்துள்ளேன்.

சங்ககால தமிழ் மன்னர்களால் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களை களப்பிரர்கள் மீண்டும் பறித்தார்கள். அதனால் அவர்கள் பிற்காலத்தில் வந்த வேதம் சார்ந்த வைதீகர்களால் தூற்றப்பட்டார்கள் என்ற வரலாற்றுச் செய்தி பதிவாகி உள்ளது.  இந்தச் செய்தியைக் குறிப்பிட்டுள்ள நூலின் பக்கத்தை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். இதே நூலை இலங்கையிலும் மொழிபெயர்த்துள்ளார். இந்த மொழிபெயர்ப்பை தரவிறக்கம் செய்து கொள்ள இதன் இணைப்பை இத்துடன் இணைத்துள்ளேன்.

தோழரின் பொய் 2. சோழர் காலத்தில் “குலுக்குச் சீட்டு“ முறையில் பார்ப்பனர்களை மட்டும் பார்ப்பனார்களால் மட்டும் குலுக்கி எடுக்கப்பட்ட பார்ப்பன சபை அங்கத்தினர்களைப் பற்றிக் கூறுகின்ற ஒரு இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. அதனை உத்திரமேரூர் கல்வெட்டு என்று சொல்லுவார்கள். இந்தக் கல்வெட்டுகளைச் சுட்டிக்காட்டி  தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு ஜால்ரா அடித்து வந்த அடிவருடி கல்வியாளர்களும் சோழர்காலத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் முறை இருந்ததாக தமிழ் மக்களின் காதுகளில் பூ சுற்றி கப்சா அடித்து வந்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இத்தகைய கப்சாவை தானும் அடித்து ஒரு கூடுதல் கப்சாவையும் தோழர் இணைத்துக் கொள்கிறார். அது என்னவென்றால் இந்த இரண்டு கல்வெட்டுகளும் கி.பி.919 இல் முதலாம் பராந்தக சோழன் என்று குறிப்பிடப்படுகின்ற இராஜராஜனின் பாட்டனாரால் வெளியிடப்பட்டது என்பதை மறைத்து இராஜராஜ சோழன் வெளியிட்டார் என்பதுதான். இந்தச் செய்திகான ஆதாரத்திற்கான படத்தையும் இணைத்துள்ளேன்.

( “சங்கநூல்களும் வைதீக மார்க்கமும்” )
http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ0luUy&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D#book1/

(தென் இந்திய வரலாறு - இலங்கை மொழிபெயர்ப்பு)
http://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81

குறிப்பு
கி.பி. 8 ம் நூற்றாண்டு வாக்கில் வெளியிடப்பட்ட வேள்விகுடி செப்பேடு சங்ககால மன்னர்கள் பார்ப்பனர்களுக்கு வழங்கிய நில கொடைகள் களப்பிரர்கள் பறித்து பொது மக்களுக்கு அளித்ததாகவும்  நெடுஞ்சடையன் பராந்தகன் என்ற பாண்டிய மன்னன் பொது மக்களிடமிருந்த நிலங்களை மீண்டும் பறித்து பார்ப்பனர்களுக்கு வழங்கியதைப் பேசுகின்றது. இந்த வேள்விகுடிச் செப்பேடு பதிவாகியுள்ள  பாண்டிய செப்பேடுகள் பத்து என்ற பெரிய நூலின் இணைப்பையும் கொடுத்துள்ளேன்.

(பாண்டியர் செப்பேடுகள் பத்து) வேள்விகுடி செப்பேடும் இதனுள் உள்ளது.
http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI8kJQy&tag=%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81

தோழர் பெ.மணியரசன் அவர்களின் வீடியோ இணைப்பு https://www.facebook.com/tamizhdesiyam/videos/2063637237273502/

Wednesday, June 19, 2019

ராமநதி அணை கட்டியது கலைஞர் ஆட்சி காலத்தில்

எங்கள் ஊருக்கு அருகில், ராமநதி அணை என்ற ஒன்று உள்ளது. அந்த அணையில் குளித்துக் கொண்டிருக்கும் போது, ஒருவர் சொன்னார்... காமராஜருக்கு பிறகு யாரும் அணை கட்டவில்லை என்று.
இதில் வேடிக்கை என்னவென்றால், ராமநதி அணை கட்டியது கலைஞர் ஆட்சி காலத்தில்.
அந்த அணையில் குளித்துக் கொண்டிருக்கும், 99 சதவீத ஆட்களிடம் அது கலைஞர் ஆட்சியில் கட்டியது என்றால், நம்ப மாட்டார்கள். கழுத்தைப் பிடித்து கல்வெட்டு முன் இழுத்துச்சென்று அதில் எழுதியிருப்பதை வாசிக்க சொன்னால் கூட நம்பமாட்டார்கள்.
சிலருக்கு பால் ஒவ்வாமை இருப்பது போல, நீதிக்கட்சி, பெரியார், கலைஞர் ஒவ்வாமை இருக்கிறது.
பால் ஒவ்வாமை "lactose intolerance" இருப்பது பாலின் குற்றமல்ல.

பார்ப்பனரைப் பார்த்து வாழக் கத்துக்க'ன்னு பெரியார் சொன்னது

பக்தியில ஆடுவதும்
பாடையில போவதும் நாமதான்டா..!

எந்த பார்ப்பனராவது சாமிவந்து ஆடுறானா..
தீ' மிதிச்ச பார்ப்பனரை பார்த்ததுண்டா..

குழிமாற்று பூஜை செய்த உச்சிக் குடுமிகளை கண்டதுண்டா..

கடவுளுக்கு மொட்டைப் போட்ட அம்பிகளை சொல்ல முடியுமா..

நாட்டில் காவடி தூக்கிய பூணூல்கள் உண்டா..

சாட்டையில அடிச்சிக்கிட்டு, ரத்தபூஜை செய்த பார்ப்பனன் இருக்காணா..

மிளகாய் அரைச்சு பூசி, நேர்த்திக்கடன் அவன் செய்ததுண்டா..

இதத்தானே சொன்னார் பெரியார்,
பார்ப்பனரைப் பார்த்து வாழக் கத்துக்க'ன்னு..!
வேறென்ன, சொத்திலையா பங்கு கேட்டார்..?

தீபாவளி தமிழர் விழாவா? - தந்தை பெரியார்

தீபாவளி தமிழர் விழாவா? - தந்தை பெரியார்

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்!

இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல; தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.
“மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆரியரின் இறக்குமதியே தீபாவளி! வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ற மடமையினால் கொண்ட கருத்துகளை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களை தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று, அவற்றிற்கு அடிமையாகி, பின்பற்றி தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள்.

அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக, பண்டிகை - விரதம், நோன்பு - உற்சவங்களாக நல்லநாள் தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.

இஸ்லாம், கிறிஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையே ஒரு அளவுக்குத் தலைகீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும்கூட, இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறுஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்!

எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால், எப்படி - யார் - எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!

இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில், இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக் கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக் காட்டாகக் கூற முடியும்?

நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நம் மக்களுக்கு இந்த, இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட அறிவைக் கொடுக்க வில்லையென்றால் இக்கல்விக் கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? இதில் வதியும் - பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதத்தில் தான் மானமும் அறிவும் விளைய முடியும்?

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, “கங்காஸ்நானம் ஆயிற்றா?’’ என்று கேட்பதும், நாம் ‘ஆமாம்’ என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

-தந்தை பெரியார்