Saturday, January 11, 2020

1884-ஆண்டு நெல்லையில் ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் எடுக்கப்பட்ட படம்

1884-ஆண்டு நெல்லையில் ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் எடுக்கப்பட்ட படம், ஒடுக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் தாகத்திற்கு தண்ணீர் குடிக்கிறார். அவருக்கு தருபவர் நீண்ட மூங்கில் தண்டின் மேல் புறத்தில் தண்ணீர் ஊற்ற கீழே வழியும் நீரைக் குடிக்கவேண்டும்.



அன்றைய காலகட்டத்தில் இப்போது உள்ளது போல் எந்த கிணற்றிலும் போய் தண்ணீர் எடுக்க முடியாது, குளத்தில் இறங்கி குளிக்க முடியாது, அடிபம்ப் என்பது எங்குமே இல்லை. அப்படி என்றால் குடிக்க தண்ணீர் எடுக்க என்ன செய்யவேண்டும்.

இதற்கு தமிழகத்தில் என்ன நடந்திருக்கும் என்று புலன்விசாரணை செய்யும் முன்பு உஜ்ஜைனின் 1922-ஆம் ஆண்டு ஒரு ஆங்கிலேயே அதிகாரியின் பதிவில் இருந்து “உஜ்ஜைனில் உயர்ஜாதியினரின் கழிவு நீர் தேங்கும் குழிக்கு அருகே ஒரு குழி வெட்டப்பட்டுள்ளது, அந்தக்குழியில் ஊற்று நீர்(கழிவு தொட்டியில் இருந்து வரும் நீர்) நிரம்பும் வரை காத்திருந்து பானைகளில் பிடித்துச் செல்கிறார்கள். இந்த அழுக்கு நீரை இவர்கள் பயன்படுத்துவதால் இவர்களின் குழந்தைகள் நோயுள்ளவர்களாக உள்ளனர். இவர்களுக்கு அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க டில்லியில் இருந்து கவர்னர் வேண்டுகோள் விடுத்தும் இந்த நாட்டின் (உஜ்ஜைன் ஆங்கிலேயரின் ஆளுமைகுட்பட்ட பகுதி அல்ல) தலைவர் மத சூத்திரத்தின் குறிப்புகளைச் சுட்டிக்காட்டி மறுத்துவிடுகிறார். மனம் வேதனைப்படுகிறது என்று எழுதியுள்ளார்.
இப்போது சங்கிகள் கூறும் ரொட்டிக்காகவும் காசுக்காகவும் மதம் மாறினார்கள் என்பது எந்த அளவிற்கு மோசடியான பொய்கள் என்று தெரியும்

1971ல், 1972ல் நடந்தேறிய அனைவரும் அறிய வேண்டிய மிக இன்றியமையாத அரசியல் வரலாறு.

1971ல், 1972ல் நடந்தேறிய அனைவரும் அறிய வேண்டிய மிக இன்றியமையாத அரசியல் வரலாறு.
ஒன்றிய அரசு நினைத்தால் எப்பற்ப்பட்ட அரசையும், சூழ்ச்சி செய்து, கவிழ்த்து விடலாம். 184 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்தை கூட நிலைகுலைய செய்யவும் முடியும். கபட நாடகத்தை அரங்கேற்றி ஒரு செல்வாக்கு பெற்ற நடிகரைக் கூட தனி கட்சியை தொடங்க வைக்க முடியும் என்பதற்கு கீழ்காணும் பதிவு. சான்று.
-----------------------
23.3.92 இல் தமிழ் வார இதழில் போலீஸ் அதிகாரி மோகன்தாஸ் எழுதி வெளிவந்துள்ள தொடர் கட்டுரையின் ஒரு பகுதியை எழுத்துப் பிசகாமல் அப்படியே தருகிறேன்
ஜூனியர் விகடன்
எஸ் எஸ் வாசன் என்ற
பிரபல காங்கிரஸ்காரரும்
ஜெமினி ஸ்டூடியோ அதிபரும் ஆனந்தவிகடன் நிறுவனமான செல்வாக்குடன் வாழ்ந்து மறைந்த ஒருவரின் புதல்வர் பாலசுப்ரமணியம் அவர்களால் நடத்தப்படும் ஏடு.
அந்த ஏட்டில் போலீஸ் மனிதர்கள் என்ற தலைப்பில் ஒரு தொடர் வெளிவந்து கொண்டு இருக்கிறது
நான் இங்கே குறிப்பிடுவது
13ஆவது தொடராகும்.
போலீஸ் உளவுத் துறை அதிகாரி ஒருவர் அவர் பணியாற்றியபோது நாட்டில் நடந்த சில நடப்புகளையும் விளக்குகிறார் அதைத்தான் வாசகர்களாகிய நீங்கள் இப்போது படிக்கப் போகின்றீர்கள்
அவர் பின்வருமாறு எழுதுகிறார்
எம்ஜிஆரை திமுகவில் இருந்து வெளியே கொண்டுவர ஒரு பெரிய நாடகம் நடத்தினோம்
அந்த நாடகத்தை எப்படி நடத்தினோம் தெரியுமா என்று ஆரம்பித்த
சிஐடி அதிகாரி தொடர்ந்து
சொல்லத் தொடங்கினார்.
எதிர்க்கட்சிகளை உடைப்பதற்கு தேவையான தகவல்களை திரட்டித் தரும் பொறுப்பும் ஒரு சில சமயம் உளவுத்துறையின் தலையில் விழும்
அதைச் செய்ய வேண்டுமானால்
அந்த கட்சியில் உள்ள தலைவர்களுருடைய தனிப்பட்ட வாழ்க்கை அவர்களுக்கு உள்ள
பலம் பலவீனங்கள் கண்டெடுக்கப்படும்
அவர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு போன்ற
புள்ளி விவரங்கள்
இன்டெலிஜன்ஸ் அதிகாரிகளுக்கு
தெரிந்திருக்க வேண்டும்
இல்லையென்றால் ஆழம் தெரியாமல் காலை விட்ட கதையாகும்.
1971 திமுக 25 எம்பிக்களை வைத்திருந்தது.
அரசியலில் கருணாநிதியும் ஒரு சூப்பர் மேனாக இருந்த நேரம்
மாநில சுயாட்சிக் கொள்கையை உரமூட்டி வளர்த்துக் கொண்டிருந்தார் தன்னுடைய மாநிலதில் தான்
சிறப்பான ஆட்சி என்று முழங்கினார் இந்த குரல்கள் எல்லாம்
பிரதமர் இந்திரா காந்தி
காதிலும் விழுந்திருந்தன
தமிழ்நாட்டைச் சுற்றி உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் தான் ஆண்டது தமிழ்நாடு மட்டும் ஒரு தீவாக திமுகவின் கையில் இருந்தது.
திமுகழக எம்பிக்களின் ஆதரவு
இந்திரா காந்தியின் அரசுக்கு
அப்போது தேவைப்பட்டது
அதே சமயத்தில் கருணாநிதி
தன் கைக்குள் இருக்க வேண்டும்
என்றும் நினைத்தார் இந்திரா காந்தி
இதற்கு என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தார்
திமுகவை உடைத்துவிட்டால் தான் அந்தக் கட்சி காங்கிரஸ் உதவியை தமிழ்நாட்டில் நாடும்
என்று முடிவெடுத்தார்.
அதற்கான வேலையை செய்ய இன்டெலிஜென்ஸ்
உயர் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்
உதவிக்கு காங்கிரஸ் பிரமுகர் ஒருவரும் அனுப்பப்பட்டார் அந்த காங்கிரஸ் பிரமுகர் இன்டலிஜன்ஸ் அதிகாரியோடு உட்கார்ந்து திட்டம் போட்டார்
எனக்கு கூட அப்போது வேறு மாநிலத்தில் தான் பணியில் இருந்தது
ஆனால் தமிழக அரசியல் தெரியும் என்பதால் எனக்கு
ஸ்பெஷல் ட்யூட்டி போட்டிருந்தனர்.
திமுகவில் முக்கிய புள்ளிகள் யார் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தபோது
என் கண்முன் எம்ஜிஆர் தான் முன்னணியில் இருந்தார்.
அதனால்தான் அவரை
திமுகத்திலிருந்து இழுக்க
நாங்கள் முயற்சி செய்தோம்.
அப்போது ஏராளமான படங்களில்
நடித்து கொண்டிருந்தார் எம்ஜிஆர் வருமானமும்அதிகமான இருந்த நேரம்
இதைக் கருத்தில் கொண்டு
வருமான வரி அதிகாரிகள்
அடுத்து வருவாய் கண்காணிப்பு அமலாக்க பிரிவு என்று
எல்லா அதிகாரிகளையும்
எம்ஜிஆர் வீட்டை முற்றுகையிட்டு குடைந்து எடுக்க வைத்தோம்
அப்போது அவர் ஒரு சினிமா படப்பிடிப்பு சம்பந்தமாக வெளிநாடு சென்று வந்திருந்தார்
அதற்கான கணக்கு வழக்குகளை விசாரித்தார்கள்
ஆனால் இதற்கெல்லாம்
பெரும் பின்னணி இருப்பது
எம்ஜிஆருக்கு தெரியாது.
இந்த சமயத்தில் எம்ஜிஆருடன் பேச என்னை அனுப்பினார்கள்
நான் போன போது எம்ஜிஆர் மிகவும் சோர்வாக இருந்தார்
நானே வழியே பேசி பிரச்சினைகளை சமாளிக்க டெல்லி போய் இந்திராகாந்தியை பாருங்க எல்லாம் சரியாய்ப் போய்விடும் என்று
யோசனை சொன்னேன்
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டார் எம்ஜிஆர்
பிறகு நானே முக்கியமான காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் பெயரைச் சொல்லி அவர் மூலமாக அம்மாவை மீட் பண்ணுங்க என்று கூறி வழி காட்டிக் கொடுத்தேன்
அதன்படி எம்ஜிஆர் அந்த காங்கிரஸ் பிரமுகர் மற்றும் தன் வழக்கறிஞரிடம் சென்று பிரதமரை சந்தித்தார்
சந்திப்பு நடந்து எம்ஜிஆர் உற்சாகமாக திரும்பினார்
இப்படித்தான் மெதுமெதுவாக தொடங்கி திமுகவில் உட்பூசல் உண்டாக்கி கடைசியில் 1972ல் எம்ஜிஆரை திமுகவிலிருந்து வெளியேற்ற வைத்தோம் என்று முடித்தார்
அந்த போலீஸ் அதிகாரி.
ஜூனியர் விகடன் வார இதழில் வந்துள்ள இந்த உண்மையை
20 ஆண்டுகளுக்கு முன்பு
நானும் திமுக தலைவர்களும்
பல ஆதாரங்களுடன்
மக்கள் மன்றத்தில் எடுத்துவைத்த போது இப்படியும் இருக்குமா என்று
எங்களை மூர்க்கத்தனமாக எதிர்த்தனர்
ஆனால் உண்மை 20 ஆண்டுகள் கழித்து சாட்சியுடன் வெளிவந்துள்ளது.
நெஞ்சுக்கு நீதி தொடரிலிருந்து
அண்ணன் Napa Mc.
_____________________
இது ஏதோ முரசொலியில் பதிவானது அல்ல. 'நான் ஏன் பிறந்தேன்' என்று தொடரை கொடுத்த ஆனந்த விகடன் குழுமத்தில் இருந்து வரும் ஜூனியர் விகடனில் வெளியானது.
உண்மைத்தன்மை நிறைந்திருக்கும். ஏனெனில் எழுதியவர் அரசியல்வாதி அல்ல. எழுதிய நேரத்தில் திமுக சட்டமன்றத்தில் 1 இடம் மட்டுமே வென்ற அரசியல் கட்சி.
கணக்கு வழக்குகளை கொடுக்க வேண்டிய பொருளாளர் எவ்வாறு கணக்கு கேட்பார் என்ற அடிப்படையே தெரியாத அறியாதவர்கள் அதிகம் வாழ்ந்த காலம் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்கவில்லை.
நிறைவாக, ஆளும் ஒன்றிய அரசு நினைத்தால் எந்த ஒரு நடிகரையும் கட்சியோ, மய்யமோ, மன்றமோ, இயக்கமோ தொடங்கி வைக்க முடியும்.
பெரும் பலம்வாய்ந்த ஒரு இயக்கத்தை தகர்க்க, ஆட்சியில் வராமல் தடுக்க எல்லா அரசியல் சித்து விளையாட்டுகளை அரங்கேற்றிக் கொண்டிருக்க முடியும்.
அன்று அந்த விவரமறியாத தமிழ்ச் சமூகம் ஏமார்ந்தது. இன்று நிச்சயம் ஏமாராது என்பதனை ஒவ்வொரு தேர்தலிலும் தமிழக மக்கள் உணர்த்தி உள்ளனர்.மீண்டும் உணர்த்துவார்கள்.

இரண்டு விளம்பரங்கள்.

இரண்டு விளம்பரங்கள்.
1. ராம்ராஜ் வேட்டி விளம்பரம்.
வேஷ்டி கட்டுவதில் 99% ஆட்கள் கிராமப்புற ஆட்கள். ஆனால் விளம்பரம் நகர்ப்புற முன்னேறிய பிரிவினரை அதுவும் சாதீய ரீதியிலான மொழி அடையாளங்களுடனே காட்டி விளம்பரம் செய்கிறார்கள்.
2. அடுத்து ஏதோ வாஷிங் பவுடர் விளம்பரம்.
மெஸ் மணி மாமாவிற்கு குழந்தைகள் உதவுவது போல.
இன்னும் ஏகப்பட்ட விளம்பரங்கள் இப்படித்தான் சமூகத்தின் பெருவாரியான மக்களிடம் பொருட்களை விற்க 3% முன்னேறிய பிரிவினரை வைத்து சாதி ரீதியாக கூட விளம்பரங்கள் வருகின்றன.
இதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும்.
1. விளம்பரம் எடுக்கும் ஏஜன்சியினரின் சாதிப்பாசம்.
2. பெருவாரியான மக்கள் அடிமை மனப்பான்மையில் இருப்பதால் இதுபோன்ற விளம்பரங்கள் பயனளிக்கும் என்று நினைக்கிறார்கள்.

"தை ஒன்னு" தமிழ் புத்தாண்டு இது வரலாற்று உண்மை

"தை ஒன்னு" தமிழ் புத்தாண்டு இது வரலாற்று உண்மை



ஆனால் அதை கலைஞர் சொல்லிவிட்டாரே அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்

#பார்ப்பன கைக்கூலிகளும்,
போலி தமிழ் #தேசியவாதிகளும் சேர்ந்த புலம்பும் புலம்பல்

மானமுள்ள தமிழா நீ முடிவு செய் யாரையும்💪 நம்பாதே வரலாற்றை ஆய்வு செய் பிறகு நீயே சொல்ல
"தை ஒண்ணா" அல்லது
"சித்திரை ஒண்ணா" என்று



தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழியே .. புது வருடத்தில் ஒரு நல்ல வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் வைக்கப்பட்டது !!! இந்த உண்மையை உணர்ந்து கலைஞர் தை ஒன்றை வருடப்பிறப்பாக மாற்றினார் !!! ஆனால் ஜெ ஆட்சிக்கு வந்து .. மீண்டும் தவறாத சித்திரை யை வருடப்பிறப்பாக மாற்றினார் ... அவர் நிலையை பார்த்தீர்களா ??? என்று மரித்தார் என்று தெரியவில்லை !!! கொலை செய்யப்பட்டாரா என்று தெரியவில்லை !!! சித்திரவதைக்கு ஆளானாரா என்றும் தெரியவில்லை !!!

இந்து மதம் அறிவியல் மதம் ப்ரூ...

இந்து மதம் அறிவியல் மதம் ப்ரூ...



சரிடா... திரேத யுகம் எத்தன வருஷம்?
12 லட்சத்தி 96 ஆயிரம் வருஷம் ப்ரு... பாருங்க. பைபிள் வெறும் 6,000 வருஷம்னு சொல்லுது. ஆனா அறிவியல் உலகம் தோன்றி கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகுதுனு சொல்லுது. அதுனால இந்துமதம் அறிவியல் மதம் ப்ரூ...
பொறுடா நாயே... வாமன அவதாரம் எந்த யுகம்?
சத்திய யுகம் ப்ரூ.
சரி. சத்திய யுகம் முடிவுல வாமன அவதாரம் வந்ததா வச்சுக்குவோம். இப்போ நாம இருக்குறது எந்த யுகம்?
கலியுகம் ப்ரூ. அதான் உங்கள மாதிரி நாத்திகர்கள் பெருகிட்டாங்க.
இப்போ திரேத யுகம், துவாபர யுகம் ரெண்டையும் சேத்து கூட்டு.
திரேத யுகம் 12,96,000 +
துவாபர யுகம் 8,64,000
= 21,60,000 வருஷம் ப்ரூ....
சரி. 20 லட்சம் வருஷம்னு வச்சுக்குவோம். அறிவியல் படி மனிதன் தோன்றி எவ்வளவு காலம் ஆகுது?
தெரியலையே ப்ரூ...
இது தெரியாமதான் நீ அறிவியல், அது இதுனு பேசுனியா? 3,00,000 ஆண்டுகள் முந்தைய படிம ஆதாரங்கள் இருக்கு. அதிக பட்சம் 5,00,000 வருடங்கள். இப்போ விஷயத்துக்கு வருவோம். எனக்கு 10,00,000 வருட பழமையான Homo sapiens எலும்பு/படிமம்/இதர ஆதாரம் ஏதாச்சும் காட்டு. நான் ஏத்துக்கிறேன்.
அது ப்ரூ... ஒவ்வொரு யுக முடிவிலையும் பிரளயம் வரும். எல்லாம் அழிஞ்சு போயிடும்.
அப்போ ஏன் ஆறு கோடி வருஷம் பழைய Tyrannosaurus rex எலும்பு கிடைக்குது?
அது யாரு பாஸ்? கிறிஸ்டின் ராஜாவா?
முண்டமே... அது டைனோசர்டா!
ப்ரூ... அது பெரிய விலங்கு ப்ரூ....
அப்போ 15 கோடி வருஷம் முன்னால வாழ்ந்த காக்கா சைஸ் archaeopteryx படிமம் கிடைச்சிருக்கு? ஏன் 10 லட்சம் வருட பழைய மனித எலும்பு கிடைக்கல?
இதெல்லாம் வெளிநாட்டுகாரன் சொல்ற கதை ப்ரூ. அறிவியல் எல்லாம் ஒரு கற்பனை ப்ரூ...
டேய்! நீதான அறிவயல் மதம்னு ஆரம்பிச்ச. இப்போ அறிவியல் கற்பனைனு சொல்ற? அப்போ உன் மதம் கற்பனையா?
ப்ரூ... நீங்க தியானம் பண்ணி மனச ஒருநிலைப் படுத்தி தேடுங்க. நான் சொல்றது புரியும்.
அப்போ அறிவியல்னு சொன்னதுக்கு ஆதாரம்?
அறிவியல் வேஸ்டு ப்ரூ.
அப்போ உன் அறிவியல் மதமும் வேஸ்டு.
உங்களுக்கு ஒரு நாள் புரியும் ப்ரூ.
ஆனா உனக்கு என்னைக்குமே புரியாது போல... பாவத்த. போய் உன் மகனோட 5-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்த வாங்கிப் படி.

Monday, December 30, 2019

காஞ்சி சங்கராச்சாரி 'தீக்குறளைச் சென்றோதோம்' எனும் திருப்பாவை வரிகளை திருக்குறளை எதிர்க்க பயன்படுத்தியது ஏன்?

காஞ்சி சங்கராச்சாரி 'தீக்குறளைச் சென்றோதோம்' எனும் திருப்பாவை வரிகளை திருக்குறளை எதிர்க்க பயன்படுத்தியது ஏன்?
Krishnan Nallaperumal, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்-இல் அறிவியற்புல முதன்மையர், மூத்த பேராசிரியர் (1992-தற்போது)
7 நவம்பர் அன்று பதில் அளிக்கப்பட்டது.
"காஞ்சி சங்கராச்சாரி 'தீக்குறளைச் சென்றோதோம்' எனும் திருப்பாவை வரிகளை திருக்குறளை எதிர்க்க பயன்படுத்தியது ஏன்?" என்ற உங்கள் வினாவின் விடையைப் புரிந்துகொள்ள, ஒரு சுருக்கமான "FLASHBACK" தேவைப்படுகிறது.
எழுத்துமுறையும், எண் முறையும் இல்லாமல், பேச்சுவழக்கில் மட்டுமே இருந்த வேதமொழியைப் பேசிக்கொண்டு வடமேற்கு இந்தியாவில் நுழைந்த ஆரியர்கள், சிந்து கங்கைச் சமவெளி தொடங்கி, இந்தியாவெங்கும் புலம் பெயர்ந்தனர்.
தொடக்க காலத்தில், அவர்களின் நாடோடி இன இலக்கியமாக வேதப்பாடல்களைச் செவி-வழியாக ஓதி, மனப்பாடம் செய்து, தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வந்தார்கள்.
ஆங்காங்கே குலம் குலமாகத் தங்கிய இடங்களில் வாழ்ந்த பண்டைய இந்திய மக்களுடன் பழகி, தங்கள் வாழ்வைத் தொடங்கினர்.
ஒரு காலத்தில், இந்தியா முழுவதும் இருந்த மக்கள் ஒரே மொழி பேசிய ஓரினம் என்பது இந்திய மொழிகள் அனைத்தும் ஒரே மொழி அமைப்பும் - Orthography, ஒரே வகை-எழுத்துமுறை-வரிசையும் - Ordering of Alphabets as Vowels, Consonants and Consonant-al Vowels கொண்டு விளங்குவதை ஆரியர்கள் நன்கு உணர்ந்து இருந்தார்கள்.
நாகரிகத்தில் பலபடிகள் முன்னேறி, எழுத்தும், எண் முறையும் கொண்ட வளர்ச்சியடைந்த மொழிகளைப் பேசிய பண்டைய இந்திய மக்கள், ஆரியர்களின் சிவந்த நிறமும், எடுப்பான ஓசையுடன் கூடிய வேத மொழியையும் கண்டு, ஏமார்ந்துவிட்டனர். ஆரியர்களை மிக மதிப்புடன் நடத்தினர்.
பண்டைய இந்திய மக்களின் ஏமாறும் தன்மையைக் கண்டுகொண்ட ஆரியர்கள் "அடிமை சிக்கிட்டாண்டா!" என்றார் வடிவேலு பாணியில், தங்களைப் 'பூசுரர்கள்' - அதாவது பூமியில் வாழும் தேவர்கள் என்றும், தாங்கள் பேசும் மொழி 'தேவபாஷை' என்றும் விட்ட கதைகளை நம்பியவர்களின் முகில் குதிரை ஏறி, ஓட்டத் தொடங்கினார்கள்.
உள்ளூர் மக்களுக்கு மழை வேண்டி யாகம், குழந்தை வேண்டி யாகம், ஆயுள் வேண்டி யாகம், பொருள் வேண்டி யாகம் என்று தங்கள் வேத வேள்வியை முழுநேரத் தொழிலாக ஆக்கிக்கொண்டு, பெரும் பணம் ஈட்டினர். உடல்-உழைப்பு இல்லாத மதிப்பான வாழ்க்கை, ஆரியர்களின் அதிகார போதையை அதிகப்படுத்தியது.
தங்கள் வேதமொழியைப் பிறர் அறியாதவாறு காக்க வேண்டும் என்று நினைத்ததால், வீட்டில் மட்டும் வேதமொழியைப் பேசினார்கள்.
பெண்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தமையால், உள்ளூர் பெண்களைத் திருமணம் செய்தனர். இதன் காரணமாக, ஆரியர்கள் பலரும் வீட்டில் உள்ளூர் மொழியையே பேச நேர்ந்தது. யாகம் செய்யும் தொழிலுக்காக, ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே வேதமொழி கற்றுத்தரப்பட்டது.
பெண்களுக்கு வேதக்கல்வி மறுக்கப்பட்டதால், வீட்டில் உள்ளூர் பிராகிருத மொழிகளே பேசப்பட்டு, காலப்போக்கில், வேதமொழி பேச்சுவழக்கில் இருந்து போய்விட்டது.
உள்ளூர் மக்களின் பிராகிருத எழுத்துமுறையை உள்வாங்கி, தங்கள் மொழிக்கு எழுத்துமுறையும், இலக்கண முறையும் உருவாக்கிக் கொண்டனர். அவற்றுக்கு பிராதி-சாக்கியங்கள் என்று பெயர்.
எனவே, வேதமொழிக்கான ஒலிப்பு ஒன்றாக இருந்தாலும், எழுத்துமுறை நாட்டுக்கு நாடு வேறுபட்டதால், காலப்போக்கில், பல வேறுபாடுகள் வேதத்தில் உருவாகின.
இவற்றை ஒன்றுபடுத்தினார் வேத வியாசர். இந்தியாவெங்கும் வாழ்ந்துவந்த ஆரியர்களுக்கு வேதம் எழுதுவதற்குப் பொதுவான எழுத்துமொழியாக, பாஷா என்ற ஏட்டு-எழுத்துமொழி உருவானது.
இந்தமொழிக்குத்தான் பாணினி 'வ்யாகரணம்' என்னும் இலக்கண நூல் எழுதினர். இதுவே பின்னாளில் சமஸ்கிருதம் ஆனது.
சமஸ்கிருதம் ஏன் எவருடைய தாய் மொழியும் இல்லை என்பது இப்போது வாசகர்களுக்குப் புரிந்திருக்கும்.
உள்ளூர்க்காரர்களை ஏமாற்றி, உடலுழைப்பு இல்லாமல் வாழும் வாழ்க்கைக்காக, வேத வேள்வி செய்த ஆரியர்கள், தொழிலுக்காகத் தாய்மொழியைத் தொலைத்துவிட்டனர். ஆரிய ஆண்களுக்குப் பொதுவான மொழியாக சமஸ்கிருதம் அன்றும், இன்றும் இருந்து வருகிறது.
எனவே, ஆரிய இனம், மாநிலத்துக்கு மாநிலம் உள்ளூர் மொழியைத் தாய்மொழியாகவும், சமஸ்கிருத மொழியை, வேள்வித் தொழிலுக்கான தந்தை மொழியாகவும் பயன்படுத்துகின்றனர்.
என்னதான் உள்ளூர் பிராகிருத மொழிகள், தாய் மொழிகளாக இருந்தாலும், ஆரிய மூதாதையருக்குச் சொந்தமான பண்டைய வேதமொழி என்னும் தாய்மொழியின் வேர்கள் சமஸ்கிருதத்தில் உள்ளதால், சமஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்துவதற்காக, பிராகிருத மொழிகளில், சம்ஸ்கிருதச் சொற்களிச் சேர்த்துப் பேசத் தொடங்கி, உள்ளூர் மொழிகளின் அடையாளத்தை அழிக்கத் தொடங்கினர்.
ஆரியர்களின் சதித்திட்டத்தை உணராத வடஇந்தியர்கள், தங்கள் மொழிகளின் மரபுச் சொற்களைப் பேணாமல், சமஸ்கிருதத்துக்குக் கொடுத்துவிட்டு, அவையே மீண்டும் சில பல மாற்றங்களுடன் சமஸ்கிருதச் சொற்களாகத் திரும்பி, அவர்தம் பிராகிருத மொழியில் சம்ஸ்கிருத அடையாளத்துடன் கலந்தன.
ஒவ்வொரு நூற்றாண்டிலும், பல சிதைவுகளை உண்டுபண்ணி, பிராகிருத மொழிகளைச் சின்னாபின்னப் படுத்தினர்.
தமிழகத்தில் ஆரியர் எண்ணிக்கை மிகக் குறைவான எண்ணிக்கையில் இருந்தமையாலும், தமிழர்களின் மொழிப் பற்றினாலும், தமிழ் மொழியை மட்டும் அவர்களால், அழிக்க முடியவில்லை.
ஆனால், தமிழுடன் வடமொழியைக் கலந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகள் உருவாகின. தமிழர்களின் எண்ணிக்கை நான்கில் ஒரு பகுதியாகக் குறைந்தது.
தனித்து இயங்க முடியாத ஏட்டுச் சுரைக்காய் சம்ஸ்கிருத மொழியைத் தமிழ் மொழியுடன் கலந்து பேசும் மொழிநடைக்கு 'மணிப் பவளம்' அல்லது 'மணிப்பிரவாளம்' என்று பெயர்.
மணிப்பிரவாளம் முற்றியதும், துஞ்சத்து இராமானுஜன் எழுத்தச்சன் (തുഞ്ചത്ത് രാമാനുജൻ എഴുത്തച്ഛൻ) என்பவர் மலையாள மொழிக்கு இலக்கணம் கிபி 16ம் நூற்றாண்டில் எழுதினர்.
இவ்வாறு, நான்கில் மூன்று பகுதி தமிழின மக்களை வடமொழி கலந்து வேற்று மொழியினராக்கிய ஆரியர்கள், தொடர்ந்து தனித்தன்மையுடன் இயங்கும் தமிழ் மொழியை எப்படியாவது சமஸ்கிருதம் கலந்து அழித்துவிடத் துடிக்கிறார்கள்.
FLASHBACK முடிந்தது! - ———————
இந்நிலையில்தான், கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஆரியப் பிராமணர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி காஞ்சி மடத்தின் தலைவரானார். சமஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள், ஹிந்தி, மராத்தி, வங்காளம் உள்ளிட்ட பல மொழிகளும் அறிந்தவர். மொழி இலக்கணங்கள் இவருக்கு அத்துபடி!
தமிழ் மொழியை எப்படியாவது சமஸ்கிருதப்படுத்தி, மாசுபடுத்தி, தமிழின் அடையாளத்தைஅழித்துவிடுவது என்ற சூழுரை கொண்டவர்.
சிந்தித்துப் பாருங்கள், தமிழ் மொழியிலிருந்து பிரிந்த கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளை ஏன் நீசமொழிகள் என்று ஆரியர்கள் சொல்வதில்லை?
இதற்கான விடை, மக்களால் பேசப்படும் இம்மொழிகளிலிருந்து சமஸ்கிருதச் சொற்கள் நீக்கப்பட்டால், அவை மீண்டும் தமிழாகிவிடும் என்பதால், கன்னடம் உள்ளிட்ட தென்மொழிகள் தம் தனித்தன்மையைக் காக்க, தங்கள் மொழிச் சொற்களில் சமஸ்கிருதக் கலவையைப் பாதுகாக்கவும், போற்றவும் பெருமையுடன் முற்படுகிறார்கள்.
ஆரியமொழி சமஸ்கிருதம் கலக்காமல் இயங்கும் தூய செம்மொழி பேசும் தமிழ்மொழி மக்கள், தமிழின் தனித்தன்மையைப் பாதுகாக்க, தமிழில் கலந்துள்ள ஓரிரு சமஸ்கிருதச் சொற்களையும் நீக்க முற்படுவதால், தமிழ் மொழியை மட்டுமே ஆரியர்கள் 'நீசமொழி' என்பார்கள்.
மகாப்பெரியவரின் ஆசியோடு, மத்திய அரசுகள், கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில், சமஸ்கிருதம் பேச்சுமொழியாக உள்ளது என்று தொடர்ந்து பொய்க்கணக்குக் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அக்கிராம மக்கள், பத்திரிக்கைக்காரர்கள் அந்தப் பக்கம் போனதும், கன்னடம் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள்.
என்னதான் அழகான மெழுகு பொம்மை உண்மைபோல் தோன்றினாலும், அதனுடன் குடும்பம் நடத்த முடியாதல்லவா? அப்படித்தான் சம்ஸ்கிருத மொழியில் நடைமுறை வாழ்வில் பேசுவது இயலாத காரியம்.
மகாப் பெரியவா அவர்களுடன் நெருங்கிப் பழகிய அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரியார் மகாப் பெரியவா-வின் தமிழ் வெறுப்பைப் பற்றி, அவரது இணையதளத்தில் வெளிட்டுள்ளார்.
"பூஜை வேளைகளில் 'நீசபாஷை' தமிழில் நான் பேசமாட்டேன்", என்று பெரியவா கூறியதாகவும், இச்செய்தி, காஞ்சிமடத்தில் அனைவரும் அறிந்த ஒன்று என்றும் தாத்தாச்சாரி தமது இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
காஞ்சி மகாப் பெரியவரின் போதாத காலம், பரிதிமாற்கலைஞர், தமிழ் மாமலைப் பெரியார் மறைமலையடிகள் ஆகியோர் தனித்தமிழ் இயக்கம் தொடங்கி, தமிழர்களுக்கு அவர்தம் மொழியின் தனித்தன்மை குறித்து விழிப்புணர்வு உருவாக்கினார்கள்.
"முடிந்தால் ஒழித்துவிடு! இல்லையேல் விழுங்கிவிடு!" என்பது ஆரியர்கள் இந்தியா நுழைந்ததிலிருந்து கடைப்பிடித்துவரும் ஆரிய மேலாண்மைத் தத்துவம். காஞ்சி மாமுனிவரின் கொள்கையும் அதுதான்.
தனித்தமிழ் இயக்கத்தால், 'தேவபாடை' சமஸ்கிருதச் சொற்கள் தமிழிலிருந்து பத்தாண்டு காலங்களுக்குள் ஏறத்தாழ நீக்கப்பட்டுவிட்டன. இதைப் பொறுக்க இயலாமல், புலம்பிய 'தெய்வத்தின் குரல்' உங்கள் பார்வைக்கு:
தமிழில் 'மனிதநேயம்' என்ற சொல் அறிமுகமானபோது மகாப்பெரியவா சொன்ன புலம்பல்:
"ஸமீபத்தில் `மனிதநேயம்’ என்ற ஒரு வார்த்தை உலாத்துகிறதாகப் பார்க்கிறேன். நல்ல வார்த்தைதான். காதுக்குக் கேட்கவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும் `மனிதாபிமானம்’ என்று இத்தனை நாளாகச் சொல்லி வந்ததில் `அபிமானம்’ என்ற ஸம்ஸ்கிருத வார்த்தை இருப்பது பிடிக்காமல் தான் இப்படி மாற்றியிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கும்போது பரிஹாஸமாகத்தான் இருக்கிறது!
ஏனென்றால், `நேயம்’ என்பதும் ஸம்ஸ்கிருத `ஹநேஹ’த்தின் திரிபுதான்! ஸம்ஸ்கிருதம் என்பது இலக்கண சுத்தமான பாஷை. அதையே பேச்சுக் கொச்சையாக இருக்கும்போது ப்ராக்ருதம் என்பார்கள்.
அந்த ப்ராக்ருத பாஷையில்தான் ஸம்ஸ்கிருதத்தில் உள்ள நாடகங்களில் ஸ்த்ரீகள், படிப்பில்லாதவர்கள் ஆகியவர்கள் ஸம்பாஷிப்பார்கள். அதிலே `ஸ்நேகம்’ என்றுதான் வரும்.அது போகட்டும்.
`மனிதநேயம்’ என்கிறதிலும் முதலில் மனித என்று வைத்துக் கொண்டிருக் கிறார்களே. அதுவும் ஸம்ஸ்கிருத `மநுஷ்ய’வின் திரிபுதானே?
ஒருத்தருக்கும் ஒரு ப்ரயோஜனமுமில்லாமல் இப்படியெல்லாம் வெறும் த்வேஷத்தில் செய்கிற காரியங்கள் கடைசியில் பித்துக்குளித்தனமாகத்தான் முடிகின்றன."
தமிழ்மொழியைத் தமிழர்கள் தூய்மை செய்யும்போது, இவருக்கு எப்படி பொத்துக்கொண்டு வழிகிறது பாருங்கள்!
பிராகிருத மொழிகள், தமிழ் மொழி ஆகிவற்றில் இருந்து எழுத்துமுறைகளை - Orthography கடன்வாங்கி, எழுத்துக்களை உருவாக்கிய சமஸ்கிருத மொழியின் கொச்சை வடிவம் பிராகிருத மொழியாம்! 'பேரன் பாட்டனைப் பெற்றான்' என்று 'மகாப் பெரியவா' சொன்னா ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே!
வரலாற்றுப் பேராசிரியர் ந. சுப்பிரமணியன் எழுதியுள்ள சுயசரிதையில் இவர் பற்றி இடம் பெற்றுள்ள ஒரு செய்தி தமிழின்மீது மகாப்பெரியவா கொண்ட வெறுப்பு எத்தகையதென்று வெளிப்படுத்துகின்றது.
குளித்துவிட்டு பூசை செய்து முடிக்கும்வரை இவர் தமிழில் பேச மாட்டாராம். சமஸ்கிருதத்தில்தான் பேசுவார். ஏனென்றால் தமிழ் `நீசபாசை’யாம். பூசை முடிந்தபிறகுதான் நீசபாசையில் பேசுவாராம்.
தமிழ் வழிபாட்டு மொழியாவதை எதிர்த்து வந்தவர் மகாப்பெரியவா.
தமிழர்கள் 'உலகப் பொதுமறை' என்று பெருமையுடன் அழைக்கும் தமிழ் நான்மறையாம் 'அறம், பொருள், இன்பம், வீடு' பேசும் 'திருக்குறளை' எப்படியாவது ஒழித்துவிடுவது என்பது காஞ்சி மகாப்பெரியவரின் முதல் திட்டமாயிருந்தது.
இத்திட்டத்திற்கு வரைபடம் போடுவதற்கு, முதலில் மார்கழி மாதத்தில் பெரும்பான்மைத் தமிழர்களின் வீடுகளிலும், தமிழக வைணவ, சைவத் திருக்கோயில்களிலும் மார்கழி மாதம் முழுவதும் பாடப்படும் திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்கள் பாடி, பாவை நோன்பு நோற்கும் விழாவைக் கையில் எடுத்தார் மகாப் பெரியவா.
திருக்குறளை ஒழிப்பதற்கும், திருப்பாவை-திருவெம்பாவை விழாவுக்கும் என்ன தொடர்பு என்று குழம்ப வேண்டாம். திருக்குறள் மோசமான நூல் என்று சொல்வதற்கு, திருப்பாவையில் வரும்
வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளிரோ; பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி,
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலே நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம்முடியோம்;
செய்யா தனசெய்யோம்; தீக்குறளை சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
என்னும் பாடலை, திருக்குறளுக்கு எதிராக முன்நிறுத்துவது என்பது மகாப்பெரியவரின் திட்டம்.
தமிழகமெங்கும் திருப்பாவை - திருவெம்பாவைப் பாடல்கள் திருக்கோயில்களில் பாடவும், அவை சார்ந்த மனப்பாடப் போட்டிகள், பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி ஆகியன நடத்த காஞ்சி சங்கர மடம் ஏற்பாடு செய்தது.
மகாப்பெரியவரின் அரசியல் செல்வாக்கால், இவ்விழாவைத் தமிழக அரசே இந்து அறநிலையத்துறை விழாவாக அறிவித்தது.
அப்படி நடந்த அரசுவிழாவில்தான் மகாப்பெரியவாவின் 'தெய்வத்தின் குரலாகத் திருவாய் மலர்ந்து' ("அது வேற வாய்; இது . . .வாய்" என்ற வடிவேல் காமெடி உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்லன்!) திருக்குறளுக்கு எதிராக 'தம் பிரம்மாஸ்திரமாக திருப்பாவைப் பாடல் விளக்கத்தைப் பொதுமேடையில் பேசினார்.
"திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளே இருக்கின்றன. வீடு என்பது இல்லை. நாற்பொருளைக் குறிப்பிடாத திருக்குறளை ஓதக் கூடாதென்ற பொருளில் தான் `தீக்குறள்’ என்று ஆண்டாள் நாச்சியார் குறிப்பிட்டுள்ளார்", என்ற புதிய விளக்கத்தை திருக்குறளுக்கு எதிராகச் சொன்னார் சங்கராச்சாரியார் மகாப்பெரியவா!!!
"பெரியவா சொன்னா பெருமாளே சொன்ன மாதிரி!" என்று தமிழர்களிடையே ஒரு சொல் வழக்கு உண்டு.
அப்படியிருக்க, "மகாப்பெரியவா சொன்னா பெருமாளே விஸ்வரூபம் எடுத்துச் சொன்ன மாதிரி!" என்று தம் 'தெய்வத்தின் குரல்' மக்களிடம் பரவி, திருக்குறள் ஒரே அடியாக மக்கள் மனதிலிருந்து ஒழிந்துவிடும் என்பது காஞ்சி மகாப்பெரியவா-வின் கணக்காக இருந்தது.
ஆனால், நடந்ததோ அவர் நினைத்ததற்குத் தலைகீழாக! குமுதம் நாளிதழ் மகாப்பெரியவா சொன்னதை சிறப்புச் செய்தியாக வெளியிட்டு, செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டது.
மகாப்பெரியவரின் திருக்குறளுக்கு எதிரான கருத்துக்கு, தமிழகமெங்கும் கண்டனக் கூட்டங்கள், எதிர்ப்புக் குரல்கள் என திமிலோகப்பட்டது. மகாப்பெரியவா-வின் கருத்துக்கு எதிராக எழுந்த வைணவர்களின் எதிர்ப்புக்குரல்கள் மிகக்கடுமையாக இருந்தன. குமுதம் 'வருத்தம்' தெரிவித்தது.
மகாப்பெரியவா தன்னிலை விளக்கமாக, ஒரு 'சப்பைக்கட்டு' சொல்லி, சமாளித்தார். ஆனால், வருத்தம் தெரிவிக்கவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்ட ஒன்றுக்காக அவர் ஏன் வருத்தப்பட வேண்டும்? திட்டம் 'பணால்' ஆனதற்கு கட்டாயம் வருத்தப்பட்டிருப்பார்.
'முடிந்தால் ஒழித்துவிடு!" என்ற ஆரிய முதல் ஆயுதத்தை ஏவிய , மகாப்பெரியவா செய்த வலக்காரங்கள்(தந்திரங்கள் என்பதன் தமிழ்) பலன் தரவில்லை.
இனி, "இல்லையேல் விழுங்கிவிடு!" என்ற அடுத்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார் மகாப் பெரியவா. அதுதான், திருக்குறளை ஆரிய சாஸ்திரங்களின் சுருங்கிய வடிவம் என்று பரப்புரை செய்து, திருக்குறள் ஆரிய நூலே என்று நிறுவுவது!
பெரியவா காலத்தில், தமிழ்ப் பேராசியர்களில் பல பல ஆரியக் கைக்கூலிகள், நான், நீ என்று போட்டி போட்டுகொண்டு எழுதித் தள்ளினார்கள். காலம் அவற்றைக் குப்பை கூடைகளில் கொண்டு சேர்த்தது.
சமீபத்தில், தமிழகத் தொல்லியல் துறையில் இயக்குனராகப் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற திரு.நாகசாமி என்ற ஆரியப் பார்ப்பனர் 'Tirukkural - An Abridgement of Sastras" என்ற தலைப்பில், தப்பும், தவறுமான ஆங்கிலத்தில் உளறிக் கொட்டி, ஒரு நூல் எழுதி, வெளியிட்டார்.
அந்த விழாவில்தான், 'மகாப்பெரியவா'-வின் இடத்தில் இன்று அமர்ந்திருக்கும் முன்னாளைய 'பாலப்பெரியவா', தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமரியாதை செய்தார் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்.
ஆரியர்கள் வேதாளம்-விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளங்கள்! மீண்டும் மீண்டும் தமிழை அழிக்க ஏதாவது ஒரு வடிவில் அவதாரங்கள் எடுப்பார்கள்.
பண்பாட்டு அளவில், ஆரியர்கள் "அழிக்கவும் இயலாமல், விழுங்கவும் இயலாமல்" தவிக்கும் திருக்குறளும், செம்மொழி தமிழும் அவர்களை உலகம் உள்ளவரை உறங்க விடாது என்பது உறுதி!
——————
அன்பர் பத்ரிநாத் பக்தவத்சலம் அவர்கள் என்னிடம் 'ஆண்டாள் நாச்சியார்' அன்னையின் திருப்பாவை குறித்த ஒரு விளக்கம் கேட்டிருந்தார். அனைவருக்கும் பயன்படும் என்பதால், இங்கு தருகிறேன்:
ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒருவராக அவதரித்த தாயார் ஆண்டாள் நாச்சியார் இறைப்பணியில் தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட சூடிக்கொடுத்த சுடர்க்கொடி நாச்சியார்.
'ஆண்டாள் நாச்சியார்' உலகத்துக்கே தாயார்! அன்னையார் 'தீக்குறளை' என்று சொன்னதன் பொருள் 'தீய கோள்கள் சொல்ல மாட்டோம், அதாவது புறம் பேசுதல் செய்ய மாட்டோம்' என்பதுதான்.
'மகாப்பெரியவா' தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள, 'தீய குறள்' என்று வேண்டுமென்றே திரித்துக் கூறிவிட்டார்.
சங்கராச்சாரியாரின் இப்பொருள் திரிப்புக் கருத்துக்கு, வைணவப் பெருமக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
உங்கள் ஐயம் சரிதான்.
வைணவப் பெருமக்கள் ஆழ்வார்களின் தமிழ்ப் பாசுரங்களுக்கே முதல் வழிபாடு செய்யும் தமிழ் மொழிப் பற்றாளர்கள்.
அன்னை ஆண்டாள் நாச்சியார் சொன்ன திருப்பாவை 'சங்கத் தமிழ் முப்பதும்' என்று நாச்சியாரின் திருவாய் மொழியே அருளி உள்ளதைக் காணுங்கள்!
அன்னை ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற இரண்டு திருப்பாசுரத் தொகுதிகளிலும் 'பிராமணர்' என்ற சொல்லை எங்குமே பயன்படுத்தவில்லை.
தாயார் தம்மைக் குறிக்க, 'பட்டர்பிரான் கோதை' மற்றும், 'விட்டுசித்தன் கோதை' என்ற இரண்டு அடைமொழிகளால் மட்டுமே குறித்துள்ளார் என்பது இங்கு அனைவரும் உற்றுக் கவனிக்க வேண்டிய ஒன்று.

Saturday, December 07, 2019

ஆரியப் பார்ப்பனர்களின் வேதங்கள் நான்கு

ஆரியப் பார்ப்பனர்களின் வேதங்கள் நான்கு. ரிக், யஜூர், சாமம், அதர்வணம். இவற்றில் மூன்று வேதங்களை முற்றாக ஓதத் தெரிந்தவர்களுக்குப் பெயர் திரிவேதி. நான்கு வேதங்களையும் கற்று ஓதத் தெரிந்தவர்களுக்குப் பெயர் சதுர் வேதி. திரி என்றால் மூன்று. சதுர் என்றால் நான்கு. அதனால்தான் இவர்களுக்கு அரசர்களால் தானம் வழங்கப்பட்ட நிலங்களுக்குப் பெயர் மங்கலம் என்று வழங்கப்படும். மூன்று வேதம் படித்தவர்களுக்கு திரிவேதி மங்கலம், நான்கு வேதம் படித்தவர்களுக்கு சதுர்வேதி மங்கலம், இரண்டு வேதம் படித்தவர்களுக்கு துவேதி மங்கலம், வேதத்தைச் சரியாகப் படிக்காத பார்ப்பனர்களுக்குக் கொடுத்த இடங்கள்தான் கிராமங்கள். வாஜபேய யாகம், பார்ப்பனர், புரோகிதராக அல்லது தலைமைக் குருவாக உயர்பதவி பெறும்பொழுது செய்யப்படும் யாகமாகும். அரசனும் இராசசூய யாகம் செய்த பின்னர், பேரரசாக மாறிய பொழுது வாஜபேய யாகத்தைச் செய்வார்கள். யாகங்கள் இருபத்தொன்றாகும். சோம யாகங்கள் ஏழு, ஹவிர் யாகங்கள் ஏழு, பாக யாகங்கள் ஏழு. இவற்றில் சோம யாகங்கள் ஏழில் ஒன்றாக வாஜபேய யாகம் உள்ளது. அந்த யாகத்தின் இறுதியில் உணவும், பானமும் கூட்டாக அருந்தப்பெறும். அதைச் செய்தவர்கள் வாஜபேயர்கள். வட தேசத்தில் பாஜபே என்று அவர்களைச் சொல்லுவார்கள். வாஜபேயம் பண்ணினவர்களுக்கு குளிக்கும் காலத்தில் அரசர்கள் சுவேதச் சத்திரம் (வெண்குடை) பிடிக்க வேண்டும். இப்ப இதெல்லாம் எதுக்குச் சொல்கிறாய் என்று கேட்கிறீர்களா? உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்தாண்டு 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களில் 2 பேர் ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் நேற்று காலை ரேபரேலியில் நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருந்தபோது, ஜாமினில் வெளியே வந்த 2 பேர், சிலருடன் சேர்ந்து, அவரை வழிமறித்து தீயிட்டு கொளுத்தினர். இதில் 90 சதவீதம் தீக்‍காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்ட அப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட பின்பும் கடுமையான தீக்காயம் அடைந்த அந்தப் பெண் நேற்று உயிரிழந்தார். சாகும் முன் சகோதரரிடம், ‘’அவனுங்களை விட்டுடாதீங்க.. நான் மீண்டு வந்து சட்டப்போராட்டம் நடத்தி தண்டனை வாங்கிக்கொடுப்பேன்’’என்று கூறியுள்ளார். மருத்துவர்களிடம், ‘’எனக்கு சாக விருப்பமில்லை. நான் வாழ விரும்புகிறேன். எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்...’’என்று கண்ணீர் விட்டுள்ளார். அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் பின்வருமாறு- ஹரிஷங்கர் திரிவேதி ராம்கிஷோர் திரிவேதி ஷுபம் திரிவேதி ஷிவம் திரிவேதி. உமேஷ் வாஜ்பாய் இப்போது முதலிலிருந்து படியுங்கள்.

Wednesday, November 27, 2019

மன்னர் குடும்பத்தில் பிறந்து மக்களுக்காகச் சிந்தித்தவரை கொண்டாடாமல்

மன்னர் குடும்பத்தில் பிறந்து மக்களுக்காகச் சிந்தித்தவரை கொண்டாடாமல் ஏழைத் தாயின் மகன் எனக் கூறி ஏழைகளை ஒழிப்பவரை ஏன் இந்தியாவின் பெரும்பான்மையினர் கொண்டாடுகின்றனர்...கொண்டாட வைக்கப்படுகின்றனர்?

காரணம் மிக எளிது...

வி.பி.சிங் நடைமுறைப்படுத்திய இரண்டு முன்னெடுப்புகள்:

1. BC/MBC பிரிவினருக்கு கல்வி மற்றும் மத்திய அரசு வேலையில் 27% இட ஒதுக்கீட்டை வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமுல் படுத்தியது.

2. அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கியது.

இவ்வளவு தான் சார் இந்தியா!

இதை உணர்ந்த ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே!!!

அதனால் தான் அந்த மன்னர் குடும்பத்து வாரிசு...அடுத்தப் பிறவி என ஒன்றிருந்தால் தமிழனாக பிறக்க வேண்டும் என்று சொல்லி மறைந்தார்.

திருவள்ளுவர் யாருக்கு சொந்தமானவர்?

திருவள்ளுவர் யாருக்கு சொந்தமானவர்?
திருவள்ளுவர் ஆண்டை அடிப்படையாக​ கொண்ட​ "தை" புத்தாண்டை தமிழ் புத்தாண்டாக​ கொண்டாடும் இனத்திற்கே சொந்தமானவர் திருவள்ளுவர்!
எங்கிருந்தோ வந்த​ ஆரியர்கள் இங்கே திட்டமிட்டு புகுத்திய "விகாரி, ஹேவிளம்பி" போன்ற​ சமஸ்கிருத​ ஆண்டுகளை தமிழ் புத்தாண்டாக​ கருதி கொண்டாடி திருவள்ளுவரை உதறிதள்ளிபவர்களுக்கு
திருவள்ளுவரை உரிமை கொண்டாட​ எவ்வித உரிமையும் இல்லை.
திருவள்ளுவர் ஆண்டு முறையில் வரும் தை புத்தாண்டை தமிழ் புத்தாண்டாக​ கொண்டாடுவதே தமிழனின் அடையாளத்திற்கும் பெருமைக்கும் உகந்தது. காரணம் திருவள்ளுவர் ஆண்டு தொடர்ச்சியாக​ வரும், ஆனால் சமஸ்கிருத​ ஆண்டோ தொடர்ச்சியாக​ வராமல் சுழற்சி முறையில் வரும். சுழற்சி முறையில் வரும் சமஸ்கிருத​ புத்தாண்டை கொண்டாடுவது தமிழனின் அடையாளத்தை அழித்து விடும்.
உதாரணமாக​,
நடக்கும் திருவள்ளுவர் ஆண்டு 2050. இன்னும் 600 வருடங்கள் கழித்து இது 2650-ஆக மாறும். அப்போது வாழும் அன்றைய​ உலக மக்களுக்கு தமிழனின் நாட்காட்டி 2650 வருடங்கள் வரலாறு கொண்டது என்கிற​ பெருமையையும் தமிழனின் அடையாளத்தையும் "தை தமிழ் புத்தாண்டு" பறைசாற்றி கூறும். திருவள்ளுவர் ஆண்டை வைத்து உங்களால் கணக்கீடுகளை செய்ய​ இயலும், வரலாற்று காலகட்டங்களை ஆராய​ இயலும்.
இப்போது ஆரியர்கள் கொண்டு வந்த​ புத்தாண்டுக்கு வருவோம் . நடக்கும் ஆண்டு விகாரி. 600 வருடங்கள் கழித்தும் இது விகாரியாக​ மட்டுமே இருக்கும். இதை வைத்து கொண்டு உங்களால் எந்த​ வித​ கணக்கீடுகளும் செய்ய​ இயலாது.
இதை வைத்து வரலாற்று காலகட்டங்களை உங்களால் அறியவே இயலாது. தமிழனின் நாட்காடி எத்தனை வருட​ வரலாறு கொண்டது என்பதை இந்த​ புத்தாண்டை வைத்து அறிய​ முடியாது. ​​இந்த​ புத்தாண்டு தமிழனின் அடையாளத்தையும் வரலாற்றையும் காலப்போக்கில் அழிக்கும். இவ்வாறு அழிக்க​ தான் ஆரியர்கள் திட்டமிட்டு இந்த​ புத்தாண்டை உருவாக்கினார்கள்.
ஆகவே, தமிழனின் அடையாளத்தையும் பெருமையையும் வரலாற்றையும் அழியாமல் காக்கும் திருவள்ளுவர் ஆண்டை புத்தாண்டாக​ கொண்டாடுபவர்களுக்கே வள்ளுவர் சொந்தம்!
மற்றவர்களெல்லாம் அப்படியே ஒரமாக​ போ

சாமி கும்பிட வந்த பெண்ணை ஒரு தீட்சிதர் அடித்திருக்கிறான்

சாமி கும்பிட வந்த பெண்ணை ஒரு தீட்சிதர் அடித்திருக்கிறான். இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள் இரண்டு.
1) அந்த தீட்சிதரை விட பொறுமையும், தொழிலும், 'சமஸ்கிருத ரைம்ஸ்களும்' தெரிந்துவைத்திருக்கும் வேறு சாதி இந்துவால் அந்தக் கோவிலுக்கு தீட்சிதர் ஆக முடியாது. அதாவது அந்த ரவுடிப் பார்ப்பானை விட தகுதி இருந்தாலும், இந்துத்துவாவிற்கு கூழைக்கும்பிடு போட்டாலும், அர்ஜூன் சம்பத், ராமதாஸ், கிருஷ்ணசாமி போன்ற இந்துத்துவ அடிமைகளின் சாதிகளில் பிறந்து வேதம் பயின்ற ஒருவனால் தீட்சிதர் பதவியை வாங்க முடியாது. தீட்சிதனிடம் முகரை வீங்க அறைதான் வாங்க முடியும்!
2) சாமி கும்பிட வந்த பெண் ஒரு மாமியாக இருந்தால் அவன் அறைந்திருக்க மாட்டான். கருவறைக்குள் போகவே தகுதில்லாத ஒரு சூத்திரச்சி தன்னைக் கேள்வி கேட்பதா என்பதுதான் அவன் கோபத்தின் அடிப்படை. காலம்காலமாக இந்து வர்ணாசிரம தர்மம் என்பது இதுதான்.
இந்தச் சம்பவம் சொல்லிக்கொடுக்கும் இந்த இரண்டு அடிப்படைகளை மட்டும் கொஞ்சம் பொறுமையாக யோசித்துப் புரிந்துகொண்டால் போதும். மானம் வந்துவிடும். வாய் தானாக "வாழ்க பெரியார்" சொல்லும்.
ஊர்காசில் உட்கார்ந்து தின்று கொழுப்பெடுத்துப்போய் திரியும் பூணூல் தடியன்களை 'சாமி' என்றோ, 'அய்யர்' என்றோ அழைத்துத் தொழாத அறிவையும், மானத்தையும், சுயமரியாதையையும் எமக்களித்த தந்தைப் பெரியார் வாழ்க.

வி.பி.சிங் எனும் வரலாற்று நாயகன்!

வி.பி.சிங் எனும் வரலாற்று நாயகன்!
கதிர் ஆர்.எஸ்
கட்டுரையாளர்
எப்படி பெரியாரை கடவுள் மறுப்பு என்ற எல்லைக்குள் சுருக்குகிறார்களோ அப்படித்தான் வி.பி.சிங் அவர்களை இட ஒதுக்கீடு என்ற வரையறைக்குள் சுருக்கி ஒரு சாரார் புறக்கணிக்கின்றனர்.
இந்தியாவின் பிரதமராக ஓர் ஆண்டு கூட நிறைவு செய்யாத வி.பி.சிங் செய்து முடித்த காரியங்கள் பல நூறு ஆண்டுகள் நினைவுக்கூறத்தக்கவை. பிரதமர் ஆவதற்கு முன்பும், பின்பும் அவர் செய்த சாதனைகளும் எடுத்த முடிவுகளும் எந்த ஒரு அரசியல் தலைவராலும் அத்தனை எளிதில் எடுக்க முடியாததாகும்.
முதல்வர் பதவியை துறந்ததாகட்டும், தான் சார்ந்த கட்சியின் மீதே கரிசனம் காட்டாமல் தான் வகித்த மத்திய அமைச்சர் பதவிக்கு மதிப்பளித்து எடுத்த முடிவுகளாகட்டும், அதனால் தலைமையுடன் ஏற்பட்ட முரண்களை விசிறியடித்து கட்சியை விட்டு வெளியேறியதாகட்டும், பிரதமர் பதவியை துறந்த பின்னும் தனது வாழ்நாளின் இறுதி மூச்சுவரை நோயுடன் போராடிய வேளையிலும் ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நடத்திய போராட்டங்களாகட்டும், உடலில் வலிமையிருந்தால் நான் இந்நேரம் ஒரு மாவோ போராளியாக இருந்திருப்பேன் என்று உறுதிபட முழங்கியதாகட்டும். எந்த அரசியல் வரம்புகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் இந்திய அரசியல் எனும் மாபெரும் உப்புகடலில் கலந்தபின்னரும் தனித்தன்மையுடன் நன்னீர் நதியாக பல்லாண்டுகாலம் மக்களுக்கான அரசியலை மட்டுமே முன்னெடுத்த மாவீரன் வி.பி.சிங் அவர்கள்.
1989ல் இந்திய அரசியலில் ஒரு மிகப்பெரிய புரட்சி நடத்தப்பட்டது. எந்த பெரிய தேசிய கட்சிகளின் தயவுமின்றி திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் ஒன்று சேர்ந்து அந்த புரட்சியை நிகழ்த்தினர். மாநில கட்சிகளின் பலம் என்ன என்பதும், அவை ஒன்று சேர்ந்து பணியாற்றினால் நாட்டில் எப்பேர்பட்ட மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று தில்லிக்கு தெரியவந்த காலகட்டம் அது.
நிலையற்ற அரசு என்ற விமர்சனங்கள் இருந்தாலும் அத்தனை ஆண்டுகளாக நிலையான அரசுகள் செய்த சாதனைகளை விஞ்சும் வகையில் சாதனை புரிந்த அரசாக வி.பி.சிங் அரசு இருந்தது. வி.பி சிங் அரசை கவிழ்க்க இரண்டு பிரதான கட்சிகளுமே மறைமுக கூட்டணி அமைத்தன என்று சொன்னால் அது மிகையில்லை.
“என்னை நீங்கள் தோற்கடிக்கலாம்; ஆனால் நான் இந்த நாட்டுக்கு செய்யவேண்டியதை எப்போதோ செய்து முடித்துவிட்டேன்” என்று பிரதமராக தனது இறுதி பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டார் வி.பி.சிங். தான் எப்போது அவுட் ஆவோம் என்று தெரியாமல் எத்தனை பந்துகள் மிச்சமிருக்கின்றன என்றும் தெரியாமல் அடித்து ஆடிய வி.பி.சிங் அடித்த சில சிக்சர்கள் கீழே:
1.இந்திய அரசியலமைப்பின் தந்தையாக இருந்தாலும் எந்த அரசு மரியாதையும் வழங்கப்படாமல் இருந்த பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கருக்கு "பாரத ரத்னா" பட்டம் வி.பி.சிங் ஆட்சியிலேயே வழங்கப்பட்டது.
2.நாடாளுமன்றத்தில் அம்பேத்கரின் படத்தை இடம் பெற வைத்த பெருமையும் வி.பி.சிங்கையே சேரும்.
3.ராஜிவ்காந்தி பிரதமராக இருந்த போது இலங்கைக்கு சென்றிருந்த இந்திய ராணுவத்தை திரும்ப பெற்றவர் வி.பி.சிங்.
4.1990 மே மாதம் சென்னை வந்திருந்த வி.பி.சிங்கிடம் செய்தியாளர்கள் விடுதலை புலிகளை தீவிரவாத இயக்கம் என்பதாக ஒரு கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், ”எவரையும் தீவிரவாதி என முத்திரை குத்தும் ரப்பர் ஸ்டாம்ப் எனது பாக்கெட்டில் இல்லை” என பதிலளித்தார்.
5.சங்பரிவார் நடத்திய ரத யாத்திரையை நிறுத்தி, அதற்கு தலைவராக இருந்த அத்வானியை பிஹார் முதல்வர் லல்லு பிரசாத் மூலம் கைது செய்ய வைத்தார். அந்த கைது அவர் பதவியையே பறிக்கும் என்று தெரிந்தபோதும் அதற்காக அவர் கவலைப்படவில்லை.
6.அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் வேண்டுகோளை ஏற்று காவிரி நடுவர் மன்றம் அமைத்திட உத்தரவிட்டது.
7.சென்னை மீனம்பாக்கத்திலுள்ள வெளிநாட்டு விமான தளத்துக்கு அண்ணா பெயரும், உள்நாட்டு விமான தளத்துக்கு காமராஜர் பெயரும் சூட்டவேண்டும் என்று கலைஞர் மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்ததும், அந்த வேண்டுகோளை ஏற்று அதனை விழா மேடையிலேயே அறிவித்தது.
8.பொற்கோயிலில் போய் இந்திரா காலத்தில் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார். கூடவே, பஞ்சாபில் அமைதி திரும்ப மனதார முன்னெடுப்புகள் எடுத்தார்.
9.வெகுகாலமாக கிடப்பில் கிடந்த மண்டல் கமிஷனின் பரிந்துரையான பிற்படுத்தபட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டை தனி மெஜாரிட்டி இல்லாத பொழுதும் தைரியமாக அமல்படுத்தியது.
இப்படி அரசியல்களத்தில் நாட்டின் பிரதமராக எந்த சமரசமுமின்றி துணிச்சலான பல முடிவுகளை எடுத்த விபி சிங் தனது அரசியல் வரலாற்றில் ஆரம்ப காலந்தொட்டே இத்தகைய அணுமுறை கொண்டவராகவே இருந்திருக்கிறார்.
உத்தரபிரதேசத்தில் தையா என்ற ராஜவம்சத்தைச் சேர்ந்தவர் விஷ்வநாத் பிரதாப் சிங் என்கிற வி.பி.சிங்.டமாண்டா என்கின்ற பகுதியை ஆண்டு வந்த ராஜ குடும்பத்தில், 1931-ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி பிறந்தார். இயற்பியல் படித்துக் கொண்டிருந்த காலத்தில், அவருடைய உச்சகட்ட லட்சியமாக இருந்தது, 'எதிர்காலத்தில் மிகப் பெரிய அணு விஞ்ஞானி ஆக வேண்டும்' என்பதுதான். காலம் அவரை அரசியல்வாதியாக்கியது. 1941-ம் ஆண்டு மாண்டாவின் ராஜ் பகதூராக வி.பி.சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரச குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவரது அரசியல் எளியோர்களுக்கானதாகவே இருந்தது. இளம் வயதிலேயே வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தில் ஈடுபாடு கொண்டதால், தன்னுடைய விளைநிலங்களை தானமாக அளித்த நிகழ்வு அவர் எப்படிப்பட்ட அரசியல்வாதி என்பதை உலகத்திற்கு உணர்த்துவதாக இருந்தது.
காங்கிரஸ் கட்சியின் மீது தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்த வி.பி.சிங். 1969-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் வென்று எம்எல்ஏ அமைச்சர் என்று அடுத்தடுத்து வளர்ந்து காங்கிரஸ்கட்சியின் மிக முக்கிய ஆளுமையானார். 1980-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில முதல் அமைச்சராக இந்திரா காந்தியால் தேர்வு செய்யப்பட்டார்.
இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி வென்று ராஜீவ் காந்தி பிரதமரானபோது நிதியமைச்சர் ஆனார் சிங். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அவர் தயங்கவில்லை. திருபாய் அம்பானி, நடிகர் அமிதாப் பச்சனின் சகோதரர் என எந்த வி.ஐ.பி-யும், வி.பி.சிங்கின் தாக்குதலில் இருந்து தப்ப முடியவில்லை. அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் கெடுபிடிகளைத் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் பணக்காரர்கள், ராஜீவ் காந்தியிடம் முறையிடவே, நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் வி.பி.சிங்.
ஆனால், அடுத்து வந்த காலங்களில் பாதுகாப்புத் துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த நேரத்தில் ராணுவத் தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக ஸ்வீடன் வானொலி அறிவித்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க, அமைச்சர் பதவி மற்றும் கட்சிப் பதவியிலிருந்தே நீக்கப்பட்டார் வி.பி.சிங்.
1989-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் திமுக, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத் போன்ற மாநில கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கினார். இந்தக் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பா.ஜனதா வெளியில் இருந்து ஆதரித்த நிலையில், இந்தியாவின் பத்தாவது பிரதமரானார் வி.பி.சிங். அதிலும், டிசம்பர் 1, 1989 அன்று வி.பி.சிங் நாடாளுமன்றத்தின் அவையில் தேவிலாலை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஹரியானாவின் ஜாட் தலைவரான தேவிலால், பரிந்துரையை ஏற்க மறுத்து வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார் என்பது கூடுதல் சிறப்பு. பா.ஜ.க ஒருபுறம், இடதுசாரிகள் மறுபுறம் என இருதுருவங்களின் ஆதரவுடன் ஆட்சியை மிகத் திறமையாக நடத்திக் கொண்டிருந்தார்.
அந்த காலகட்டத்தில் அவர் நிகழ்த்திக்காட்டிய சாதனைகளைத்தான் மேலே குறிப்பிட்டிருந்தோம். தனது பதவியை இழந்த பின்னர் மீண்டும் அந்த பதவியில் அமர விரும்பாத வி.பி.சிங், அதே கூட்டணியின் மூலம் 1996-ம் ஆண்டு தேவகௌடாவைவும், பின்னர் ஐ.கே.குஜ்ராலையும் பிரதமர் பதவியில் அமரத்த முக்கியப் பங்கு வகித்தார்.
ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர், பல ஆண்டுகள் பொதுவாழ்க்கையிலிருந்து ஒதுங்கியிருந்தவர், 2006-ம் ஆண்டு ஜனமோர்ச்சா கட்சியை மீண்டும் தொடங்கினார். 2006-ல் உத்தரபிரதேசத்தின் தாத்ரி பகுதியில், விவசாயிகளின் நிலங்களை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றியதைக் கண்டித்து, தீவிரமான போராட்டங்களில் பங்கெடுத்தார். தொடர் போராட்டங்களும் டயாலிசிஸ்களும் அத்துடன் சேர்ந்த புற்றுநோயும் உடலை வாட்ட, 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார்.
'பிரதமர் பதவியைவிட முக்கியமானது தேசத்தின் ஒற்றுமை’ என பாராளுமன்றத்தில் முழங்கிய விபிசிங் இந்தியாவின் ஒற்றுமைக்கு மதச்சார்பின்மை எவ்வளவு முக்கியம் என்பதை மட்டுமல்லாமல், பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் எவ்வளவு தூய்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர்.
இந்திய அரசியலையே புரட்டிப்போட்ட அந்த செம்மல் பதவியில் நீடிக்கமுடியாமல் போனது இந்தியாவின் துரதிருஷ்டம் என்றால் அது மிகையல்ல