Sunday, June 06, 2021

நாடு என்ற சொல் அவர்களை அச்சறுத்தவே செய்யும்.

 நாடு என்ற சொல் அவர்களை அச்சறுத்தவே செய்யும்.
ஏனெனில் அவர்கள் நாடற்றவர்கள்.
நாடோடி கூட்டத்தினர்.
பிறதேசத்திலிருந்து வந்ததாலேயே பரதேசி என்று சொல் உருவானது.

தமிழகத்தில் வாழும் எந்தவொரு மதம், சாதியினரும் அந்தந்த வட்டார வழக்குகளில் தான் பேசுவார்கள்.

இவர்களோ கன்னியாகுமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை, வெச்சு, நோக்கு,நேக்கு, தோப்பனார், ஆத்திலே,த்வம்சம், பண்ணிப்புடுத்து,
அவாளை, வந்துண்டு, இருக்கச்சே, பேஷா இதுபோல் ஒரே மாதிரியாகப் பேசுவார்கள்.

அவர்களின் தாய் மொழி சமஸ்கிருதம்.
மொழிவாரியாக மாநிலங்கள் உருவான போது சமஸ்கிருத மொழியின் படி மாநிலம் அமையவில்லை.
ஏனெனில் அது தேவபாஷா.
மற்ற மொழிகள் அனைத்தும் நீசபாஷா.

தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகள் அனைத்தும் மக்கள் மொழி.
சமஸ்கிருதம் மந்திரமொழி.
எனவே அது வளரவில்லை.
135 கோடி மக்களில் 24,000 பேர் வரை மட்டுமே நாளது தேதியில் பேசுவதாகச் சொல்லப்படும் மொழி.

ஒரு பொது மொழி,ஒரு பொது பண்பாடு,ஒரு பொது நிலப்பரப்பு இவற்றைக் கொண்டு வரலாற்றில் நீடித்து நிலைத்து வாழ்ந்த ஒரு இனமே தேசிய இனம்.அந்த இனம் வாழும் பகுதியே நாடு. பலநாடுகள் சேர்ந்த துணைக்கண்டமே இந்தியா.

எனவே தங்களுக்கான நாடு இது அல்ல என்பதால், நாடு என்ற சொல்லே இருக்கக்கூடாது என கதறுகிறார்கள். உரக்கச் சொல்வோம். இது தமிழ்நாடு தான்.

இவர்கள் மீதான கோபத்திற்கு ஒரே காரணம் தான்.
ஈராயிரம் ஆண்டுகள் வாழ்ந்த இந்த மண் மீதும், இங்கு வாழும் மக்கள் மீதும் இப்போதுவரை வெறுப்பு பாராட்டுகிறார்களே என்பது தான்.

சகலமும் உங்களது வேற
எங்களது வேற.

தேவதாசி

 #தேவதாசி

 20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.

கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.

 இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது.
முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார். சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணி இதை எதிர்த்தனர். பெண் விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.

இதற்கு பார்ப்பனர்கள் சொன்ன காரணம் என்னவென்றால்.. இது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து நான் ஜெயிலுக்குப் போனாலும் போவோமே தவிர, சாஸ்திரத்தை எதிர்த்து நாங்கள் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டோம் என்று கூறி தேவதாசி பெண்களை வைத்தே இந்த தீர்மானத்தை எதிர்த்து போராட வைத்தனர்.

இந்த இக்கட்டான சூழலில் பெரியாரிடம் வந்து "இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் என்ன செய்வது" என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் ஆலோசனை கேட்டார்.

அதற்கு பெரியார் " நான் சொல்லுகிறபடி நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள்" என்று சொல்லி அனுப்பினார். பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் விளக்கம் கொடுக்கத் தயாராக இருந்தார்.
 
அப்போது சத்தியமூர்த்தி அய்யர் பேசினார். "தேவர்களுக்கு அடியாள் என்றால் அது கடவுள் தொண்டு என்று அர்த்தம் என்று சொன்னார். அவர்கள் தங்களை அர்ப்பணித்து தொண்டு செய்வதால் புண்ணியம் பல சேர்த்து புண்ணியவதியாகிறார்கள்.'' என்றார்

அதற்கு முத்துலட்சுமி அம்மையார், எதிர்க்கட்சி பார்ப்பனர்களைப் பார்த்து "தேவதாசி ஒழிப்பு தீர்மானத்திற்கு எதிராக பேசும் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன். இதுவரையில் எங்க ஜாதியிலேயே கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். எக்கச்சக்க புண்ணியத்தை சேர்த்து வைத்துள்ளார்கள்.
இனிமேல் அந்தத் தொண்டை உங்கள் பிராமண பெண்களே செய்யட்டும்.. நீங்களும் புண்ணியம்  சேர்த்து கொள்ளுங்கள், அதற்கு யாரும் எதிர்ப்பு கூறமாட்டார்கள், உங்கள் சாத்திர சம்பிரதாயங்களும் கெட்டுப் போகாது" என்றார்.

இதைக் கேட்ட பார்ப்பனர்களுக்கு, ஒரு செருப்பை வாயில கவ்வக் கொடுத்து, இன்னொரு செருப்பை சாணில முக்கி அடித்தது போல் இருந்தது.

இவ்வளவு பிரச்சினைகளை மீறித்தான் தேவதாசி ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

#பெரியார்_என்றாலே ஏன் பார்ப்பனர்கள் வெறுப்பை உமிழ்கிறார்கள் என்று இப்பொழுதாவது புரிகிறதா..?

மத்திய அரசு.. ஹிந்து மதம்.. இரண்டுமே மாயாபஜார்தான்..

 மத்திய அரசு.. ஹிந்து மதம்..
இரண்டுமே மாயாபஜார்தான்..

பல தடவை சொல்லி விட்டோம், இந்தியா என்பது ஒரு நாடு அல்ல. பல்வேறு தேசிய இனங்கள் கொண்ட ஒரு துணைக்கண்டம். அரசியல் சாசன சட்டப்படி அதன்பெயர் யூனியன் ஆப் இந்தியா.

இந்த பாரத் மாதா கி ஜே என்பதெல்லாம், பிரிட்டிஷ்காரன் நம்மை அடிமைப்படுத்திய போது அவனை எதிர்த்து போராட ஆரம்பித்தபோது வந்தவைதான்.

மன்னர்கள் ஆண்டபோது பாரதமாதா கான்செப்ட் எல்லாம் இல்லை..

பல்வேறு தேசங்களாக சமஸ்தானங்களாய் சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த பகுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக அடிமைப்படுத்தினான் வியாபாரி வடிவில் வந்த பிரிட்டிஷ்காரன்.  

அவன் நம்மை காலில் போட்டு மிதித்த போது வலி எடுக்கவே எல்லோரும் ஒன்று சேர்ந்து கதறினோம். அவனுக்கு எதிராக போராட ஆரம்பித்தோம். ஜெய் ஹிந்த் பாரத் மாதா இன்குலாப் ஜிந்தாபாத் ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் எல்லாம் முளைத்தன.

இப்படி சுதந்திரப் போராட்டம் தேசபக்தி என அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து  சுதந்திரம் பெற்று இந்தியா என ஒரு அரசை பெற்றிருக்கிறோம்.

மத்திய அரசு என்பது பல தேசிய இனங்கள் கொண்ட மாநிலங்கள் தங்களுக்குள்ளாக செய்து கொண்ட ஒரு ஏற்பாடு.. அவ்வளவுதான்..

இங்கே மாநிலங்கள் உண்டு. யூனியன் பிரதேசங்கள் உண்டு. அவற்றுக்கு சொந்தமான நிலங்கள் உண்டு. ஆனால் மத்திய அரசுக்கு என எங்குமே ஒரு அடி நிலம் கூட சொந்தம் கிடையாது.

ராணுவம் விண்வெளி ஆராய்ச்சி  ரயில்வே என எந்த வகையிலாட்டும், அதன் அடிமனை ஏதாவது ஒரு மாநிலத்திற்கு சொந்தமாக தான் இருக்கும்.  உள்ளாட்சி அமைப்புக்கு கீழ்தான் வரும்.

மாநில அரசுகளிடம் இருந்து வரி வருவாய் வாங்கி அதில் தன் செலவுக்கு கொஞ்சம் போக மீதியைக் பகிர்ந்து கொடுப்பது தான் மத்திய அரசின் வேலை.

ராணுவம், ரிசர்வ் வங்கி, வெளியுறவுத்துறை விண்வெளி ஆராய்ச்சி ரயில்வே போன்றவற்றை மட்டுமே வைத்துக்கொண்டு உலக அளவில் இந்தியா என்ற தேசத்தின் தன் பிரதிநிதியாக செயல்படுவது மட்டுமே  மத்திய அரசின் வேலை. அதற்கான அடையாளமும் அவ்வளவுதான்.

இந்த இந்துமதமும் அப்படித்தான். மற்ற மதங்களைப் போல் இந்து மதம் எனப்படுவதற்கு ஒற்றைத் தலைமையோ இதுதான் பிறப்பிடம் என்றோ என்பதெல்லாம் கிடையாது.

பல்வேறு தேசிய இனங்களின் மத நம்பிக்கை அடிப்படையில் ஒரு மெல்லிய இழையால் கட்டப்பட்ட ஒரு கற்பனைதான் இந்துமதம்.

இன்னும் சொல்லப்போனால் இஸ்லாம் கிறிஸ்தவம் போன்ற வேற்று மதங்களை சாராதவர்களை ஒரு குடையின் கீழ் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பெயர் வைத்தான், அதுதான் இந்து மதம்

தமிழனும் ஹிந்துதான். பீகார் காரன் ராஜஸ்தான்காரன் மலையாளி தெலுங்கன் ஆகியோரும் ஹிந்து தான்.

ஆனால் எல்லோருடைய இந்து மத நம்பிக்கையும் 100% ஒரே மாதிரியாகவா இருக்கின்றன?

நம்ம சிவனுக்கு அழகான முருகன் என்ற கடவுள் உண்டு. வடநாட்டான் சிவனுக்கு முருகன் என்ற கான்செப்ட்டே கிடையாது.

தமிழனுக்கு இந்தப் புராணம் இதிகாசம் எல்லாம் கிடையாது. அதிகபட்சம் பக்தி இலக்கியங்கள்தான்..

வடநாட்டு ஹிந்துவுக்கு திருக்குறள் தேவாரம் திருவாசகம் மற்றும் ஐம்பெரும் காப்பியங்கள் எல்லாம் தெரியுமா?

இல்லை நமக்குத்தான் அவருடைய பக்தி இலக்கியங்கள் கலாச்சாரம் பண்பாடு போன்றவை பொருந்துமா?

பத்து நாட்கள் ரொட்டி சாப்பிடவில்லை என்றால் அவன் நாக்கு காலி. 10 நாட்கள் அரிசி சோறு சாப்பிடவில்லை என்றால் நம்முடைய நாக்கு காலி.

இந்தியனோ இந்துவோ, ஒரு கூட்டமைப்பின் அடிப்படையில் பன்முகத் தன்மையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தி தேசிய மொழி இல்லாவிட்டாலும் இங்கிலீஷ்  தெரியாத மற்றவர்களுக்கு தொடர்பு மொழியாக பயன்படுவதால் அதனை அனுமதித்து கொண்டிருக்கிறோம்.

வெளி உலக சூழலில் அவசியம் வரும்போது இந்தியன் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்து தேசத்தின் குடிமகனாக திகழ்கிறோம்.  தவிர மற்ற நேரங்களில் கூட்டாட்சித் தத்துவத்தின் அவரவர் மாநிலத்தின் தனித்தன்மையோடு வாழ்ந்து  கொண்டிருக்கிறோம் அவ்வளவுதான்.

பெரியாரின் லேட்டஸ்ட் வெர்சன் தான் கலைஞர்

 இன்றைய தேதிக்கு சங்கிகள் பின்னால மெளகா பொடி வெச்சா மாதிரி எரியணும்னா ரெண்டு பேர் பெயரை சொன்னால் போதும். முதலாமவர் பெரியார்...  இன்றைக்கும் கதறி அழுவானுக இவரு பேரை சொன்னாலே.  அவரின் சிலை இன்றும் அவமானப்படுத்தப்படுவது ஒன்றே அதற்கு சாட்சி.

இன்னொருவர்... முத்துவேலன் கருணாநிதி.... #கலைஞர் ...

அண்ணாவை ரொம்ப மைல்டா தான் கையாளுவானுக இந்த குரூப்.  ஆனா கலைஞரை இன்னமும் இவனுகளால ஜீரணிச்சுக்கவே முடியாம தவியா தவிக்கிறானுவ.

கலைஞர் அளவுக்கு உயிரோட இருக்கும்போது இம்சை பட்ட தலைவன் வேற யாருமில்ல.  அந்தாளை நிம்மதியா ஆட்சி கூட நடத்தவிடல.  அவ்வளவு இம்சைகள் தினம் தினம்.  எல்லாத்துக்கும் காரணம் இந்த ஆரிய கூட்டம்.

ஊழல், கமிஷன், அறிக்கைன்னு எதையாவது புதுசு புதுசா கெளப்பி விட்டுட்டே இருப்பானுவ.  சரி எங்கடா ஆதாரம்னு கேட்டால., "இது விஞ்ஞானப்பூர்வமானது.  அதனால ஆதாரமே இல்ல" ன்னுவானுக.  விஞ்ஞானத்துக்கு அடிப்படையே நிரூபணமும், ஆதாரமும் தான்.  அது இல்லன்னா அது விஞ்ஞானமே இல்லை.  இதை தெரிஞ்சுக்கூட அறிவுகூட இல்லாத இவனுகளை என்னானு திட்றதுன்னு தெர்ல.

கலைஞரை எந்த ஆதாரமும் இல்லாமல் இவ்வளவு பேசும் இவனுக தான், நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டவர்களை இரும்பு ராடு, அயர்ன் தூண் அப்டினு தினமும் துதி பாடுறானுவக.

தினம் ஒரு அவதூறு... தினம் ஒரு பொய், வதந்தின்னு அவரோட பேரை அடுத்த தலைமுறைக்கு எந்தளவு எதிர்மறையா உருவாக்கம் செய்யணுமோ அவ்ளோ பண்ணினானுக.  ஆனா எல்லாத்தையும் லெஃப்ட் ஹேண்ட்ல டீல் பண்ணி தான் அரசியலில் கடைசி வரை மையப்புள்ளியாகவே திகழ்ந்தார் கலைஞர்.

இலங்கை பிரச்னைக்காக ஆட்சியை இழந்த அவர் ஈழ துரோகி.  ஆனா பிரபாகரனை தூக்கிலிட வேண்டும்.  போர்னு வந்தா மக்கள் சாவது சகஜம்... விடுதலைபுலிகள் இயக்கம் தடைன்னு திரிஞ்சவங்க இந்த நாட்ல ஈழத்தாய் என்று உருவாக்கப்பட்டனர்.

பிடிவாதமாக அவரோட பெயரை கெடுத்தே தீருவதுன்னு கங்கணம் கட்டி திரிஞ்சவனுக, அட ஆட்சில இருக்கும் போது தான் இம்சை குடுத்தானுகனு பார்த்தால், இறந்த பிறகும் கூட இன்னமும் அவரை திட்டி தீர்த்துட்டு தான் இருக்கானுவ.

இதுக்கெல்லாம் காரணம் என்ன.....

பெரியார், ஆரிய கும்பலின் அட்டகாசங்களை தோலுரிச்சு காண்பிச்சு நம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் எதிர் கேள்வி கேட்க அடிப்படை காரணமாக இருந்தார்.  ஆனால் அவர் அரசியல், ஆட்சி, அதிகாரம்ங்கிற வட்டத்துக்குள்ள வராததால் அவைகளை சட்டமாக்க முடியவில்லை.

ஆனால்  கலைஞரோ மக்கள் ஆதரவோட ஆட்சிக்கு வந்து பெரியார் கனவுகள் பலவற்றை சட்டமாக்கினார்.  சமூகநீதி, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை மேலோங்க செய்தல், வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கான நியாயமான பங்கு, பெண்களுக்கான கல்வி, முன்னேற்றம், அவர்களுக்கான சரியான அங்கிகாரம், சொத்தில் சம்பங்கு என்று அவர் தொடாத விசயங்களே இல்லை.

சமத்துவபுரம் திட்டமெல்லாம் சாதீயரீதியில் பிரித்து வைத்தே வாழ்க்கையை ஓட்டி வந்த குறிப்பிட்ட பிரிவினருக்கு மிகுந்த சங்கடத்தை அளித்த விசயமாகும்.

எல்லாவற்றிற்கும் உச்சமாய் அனைத்து சமூகமும் அர்ச்சகராகலாம்னு சட்டம் கொண்டு வந்தது அவர்களை செய்வதறியாமல் கையை பிசைய வைத்துவிட்ட ஒன்று.

எங்க அடிச்சா வலிக்கும்னு நல்லா தெரிஞ்ச மனுசன் கலைஞர்.  அதனாலேயே அவரை நம் தமிழ் சமூகத்திலருந்து எப்படியாவது ஒதுக்கி வெச்சிடணும்னு பாடாக பட்டானுவ.  இன்னக்கிம் பட்டுட்டு தான் இருக்கானுவ.

கலைஞர் என்கிற ஒரு பெயரே தமிழகத்தின் அரசியல் அச்சாணி.  இவர் பெயரை விடுத்து தமிழக அரசியலே இல்லை.  ஏன் தமிழகமே இல்லை.

இதற்கு இன்று கதறும் எதிரிகளின் கதறலே சாட்சி....

பெரியாரின் லேட்டஸ்ட் வெர்சன் தான் கலைஞர் என்னும் சமூக நீதி காத்த இளைஞன்.... பெரியார் 2.0

#கலைஞர்_98
#HBDKalaignar98

Saturday, June 05, 2021

கலைஞரின் உண்ணாவிரதம் - நோக்கம் என்ன, நடந்தது என்ன

 போர் நிறுத்தம் என்றால் என்ன
சண்டை போடும் இரு தரப்பும் நிறுத்துவது

ஒரு தரப்பு மட்டும் போரை நிறுத்தி அடுத்த தரப்பு நிறுத்தாவிட்டால் அது போர் நிறுத்தமா
கண்டிப்பாக கிடையாது


14 அக்டோபர் 2008
போரை நிறுத்த உதவக்கோரி நடேசன் அவர்கள் திமுகவிற்கு கடிதம் எழுதுகிறார்
திமுக இந்திய அரசு மூலம் இலங்கை அரசிடம் பேசிய போது
இலங்கை தரப்பில் “புலிகள் தனி ஈழம் கோரிக்கையை கைவிடுவதாக” அறிவித்தால் இலங்கை போரை நிறுத்தலாம் என்று கூறினார்கள்
ஆனால்
புலிகள் அதை ஏற்கவில்லை
இது யார் தவறு
திமுகவின் தவறா, அல்லது புலிகளின் தவறா

பிறகு மார்ச் 30 அன்று நடேசன் மீண்டும் ஒரு கடிதம் எழுதுகிறார்
போரை நிறுத்த உதவ வேண்டும் என்கிறார்
புலிகள் தனி ஈழ கோரிக்கையை கைவிடுவதாக கூறுகிறார்
கண்கெட்ட பிறகு பரிதி வழிபாடு
இலங்கை தரப்பில் “புலிகள் தனி ஈழம் கோரிக்கையை கைவிடுவதாக” அறிவித்தால் இலங்கை போரை நிறுத்தலாம் என்று 2008 அக்டோபரில் கூறினார்கள்
ஆனால்
கிளிநொச்சியை கைப்பற்றி பலமாக இருந்த இலங்கை இம்முறை தங்களின் கோரிக்கையை அதிகப்படுத்தியது
“தனி ஈழம் கோரிக்கையை கைவிட்டால் மட்டும் போதாது. புலிகள் ஆயுதங்களை துறக்க வேண்டும்” என்று கூறியது
திமுக தரப்பில் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தும் பிரபாகரன் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை
இப்பொழுது ஏற்றுக்கொள்ளுங்கள். இலங்கை மேலும் வலுவடைந்தால் உங்களை சரணடையச்சொல்வார்கள் என்று கூறியும்
பிரபாகரன் அதை புரிந்து கொள்ளவில்லை
இது யார் தவறு
பிரபாகரனின் தவறா, அல்லது கலைஞரின் தவறா

அதற்கு பதில்
பிரபாகரன் போரை தொடர்கிறார்
ஆனந்தபுரம் யுத்தத்தை துவங்குகிறார்
படுதோல்வியடைகிறார்

கீழ்க்கண்ட புலிகள் மரணமடைகிறார்கள்
Velayuthapillai Baheerathakumar alias Theepan (Overall commander of the LTTE northern front fighting formations)
Manickapodi Maheswaran alias Keerthi (Special commander of Jayanthan Infantry brigade)
Selvaratnam Sundaram alias Nagesh (Special commander)
Viduthalai alias Amuthan alias Gaddafi (Bodyguard of LTTE leader Velupillai Prabhakaran, later a commander of the Imran-Pandian regiment)
Gopith (Special commander the Charles Anthony infantry brigade)
Vidhusha (Special commander of Maalathi regiment)
Kamalini (Second-in-Command of Maalathi regiment)
Durga (Special commander of Sothia regiment)
Mohana (Second-in-Command of Sothia regiment)
Manivannan (Leader of the "Kittu" artillery regiment)
Gopal (Chief of the "Kutty Sri" mortar regiment)
Seralaathan (In-charge of the Tiger TV "Nitharsanam")
S. Thangan (Deputy-political commissar and administrative officer under S. P. Thamilselvan)
Senior leaders named Ruban, Panjan, Nehru, Anton, Maankuyil, Amudha, Iniyawan, Aadithyan, Chitrangan and Mahindan.[4]

கீழ்க்கண்ட புலிகள் பிடிக்கப்பட்டனர்
Anbu (Deputy-commander of Radha regiment)
Asmi (Leader of "Ponnamman" mining unit)

இந்நிலையில்
இலங்கை அரசு தரப்பு மேலும் வலுவடைகிறது

மனித கேடயமாக நிறுத்தப்பட்ட ஈழ மக்களின் உயிரை காக்க
போரை நிறுத்த திமுக வேண்டுகோள் வைக்கிறது

இலங்கை அரசோ,
புலிகள் சரணடைந்தால் மட்டுமே போரை நிறுத்த முடியும் என்கிறார்கள்
புலிகள் சரணடைந்தால் மட்டுமே போர் நிறுத்தம் என்றும் வேறு எந்த கோரிக்கையும் ஏற்கப்படாது என்று கூறுகிறது

திமுக தரப்பில் இருந்து புலிகளை தொடர்பு கொண்டு
தயவு செய்து சரணடைந்து உங்கள் மக்களை காத்துக்கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் வருகிறது

அதற்கு புலிகள் தரப்பில் என்ன சொல்கிறார்கள் என்றால்
இலங்கை தொடர்ந்து சுட்டுக்கொண்டுள்ளார்களே
நாங்கள் எப்படி சரணடைய முடியும் என்கிறார்கள்

அப்படி என்றால் என்ன வேண்டும் என்ற கேள்விக்கு
இலங்கை சுடுவதை நிறுத்தினால் மட்டுமே நாங்கள் சரணடைய முடியும் என்கிறார்கள்

மத்திய அரசு மூலம் அழுத்தம் அளித்து இலங்கை போரை நிறுத்த ஏற்றுக்கொள்ளவில்லை
பிரபாகரன் என்பவர் கோழை, சொன்ன வாக்குறுதியை கடைபிடிக்காதவர்
புலிகளை சரணடையும் அறிவிப்பை சொல்லச்சொல்லுங்கள்
அவர்கள் போரை நிறுத்தி சரணடைவோம் என்று சொன்னால் நாங்களும் போரை நிறுத்துகிறோம் என்று இலங்கை அரசு சொல்கிறது

இப்படி இரண்டு தரப்பும் முறுக்கிக்கொண்டு இருக்கும் போது

அப்பாவி மக்களை காக்கும் பொருட்டு
இருவரும் போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன்
கலைஞர் உண்னாவிரதம் இருந்தார்

அவரது உண்ணாவிரதத்தை மதித்து 6 மணி நேரத்தில்
போரை நிறுத்துவதாக கூறியது இலங்கை அரசு
தொடர்ந்து புலிகளும் போரை நிறுத்துவதாக அறிவித்திருந்தால்
மக்கள் உயிர் பிழைத்திருப்பார்கள்

ஆனால்
இலங்கை 28 ஏப்ரல் அன்று போரை நிறுத்துவதாக அறிவித்த பிறகும் கூட
புலிகள் போரை நிறுத்துவதாக அறிவிக்கவே இல்லை

இலங்கை அரசு 27ஆம் தேதி முழுவதும் பொறுத்து பார்த்தது
புலிகள் போர் நிறுத்தம் அறிவித்து சரணடையவில்லை

28ஆம் தேதி கலைஞர் உண்ணாவிரதம் இருக்கிறார்
அதை மதித்து இலங்கை போர் நிறுத்தம் அறிவிக்கிறது
28ஆம் தேதி முழுவதும் பொறுத்து பார்த்தது
அன்றும் புலிகள் போர் நிறுத்தம் அறிவித்து சரணடையவில்லை

29ஆம் தேதி முழுவதும் பொறுத்து பார்த்தது
அன்றும் புலிகள் போர் நிறுத்தம் அறிவித்து சரணடையவில்லை


புலிகள் தரப்பில் இருந்து போர் நிறுத்தம் என்ற சொல் வரவே இல்லை

இலங்கை மீண்டும் போரை துவக்குகிறார்கள்
இது யார் பிழை ?
கலைஞரின் பிழையா, பிரபாகரனின் பிழையா

மனித கேடயத்தில் இருக்கும் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டே வருகிறார்கள்
சுமார் 30000 மக்கள் இறந்த பிறகு
அதாவது மனித கேடயத்திற்கு மேலும் மக்கள் இல்லை என்ற நிலை வந்த பிறகு
புலிகள் சரணடைகிறோம் என்று
பத்திரிகையாளர் மேலி கோல்வின் மூலம் சொல்கிறார்கள்

பிறகு சரணடைந்த புலிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்
முக்கிய விஷயம்
புலித்தலைவர்கள் யாரும் சயணைட் எல்லாம் சாப்பிடவில்லை
சயணைட் எல்லாம் குழந்தைகளுக்கும் தொண்டர்களுக்கும் தான்

புலித்தலைவர்கள் எல்லாம் சரணடைந்த பிறகு
சுடப்பட்டு அல்லது மண்டை பிளக்கப்பட்டு தான் இறந்தார்கள்

இப்பொழுது கேள்விகள்
1. அக்டோபரில் புலிகள் தனி ஈழ கோரிக்கையை கைவிடாதது யார் தவறு
திமுக 1970களிலேயே தனி நாடு கோரிக்கையை கைவிட்டு சுபிட்சமாக உள்ளதே
புலிகள் தவறான முடிவு எடுத்ததற்கு திமுக எப்படி பொறுப்பாகும்

2. 2009 மார்ச்சில் ஆயுதங்களை கீழே போடாதது யார் தவறு
திமுகவின் தவறா, புலிகளின் தவறா

3. 2009 ஏப்ரம் 27 அன்று சரணடைகிறோம் என்று அறிவிக்காதது யார் தவறு
திமுகவின் தவறா, புலிகளின் தவறா

கலைஞரின் உண்னாவிரதத்தை மதித்து இலங்கை போர் நிறுத்தம் அறிவித்தது
புலிகள் சரணடைந்திருந்தால் மக்களை காத்திருக்கலாம்
ஆனால்
அதை மதிக்காமல் தொடர்ந்து போர் செய்தது யார் தவறு

போர் நிறுத்தம் என்றால்
இரு தரப்பும் நிறுத்த வேண்டும்
புலிகள் போரை நிறுத்துவதா என்று சொன்னார்கள் ?

4. மனித கேடயமாக இருந்து 30000 பேரை பலி கொடுத்தபின் 2009 மே 15க்கு பின் சென்று சரணடைந்ததற்கு பதில்
2009 ஏப்ரல் 27 சரணடைந்து இருந்தால் மக்களை காத்திருக்கலாம் அல்லவா

இவ்வளவு தவறும் செய்து விட்டு
அந்த உண்னாவிரதத்தை கொச்சை படுத்துவது எந்த விதத்தில் நியாயம்
திமுகவை குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம்

உடலாலும் மனதாலும் தளர்ந்த பின்னர் எந்தப் பதவியிலோ பொறுப்பிலோ இருக்கக்கூடாது என்பதும்
பதவி பொறுப்புகளில் இருக்கும்போது உறவுகள் சொந்தங்கள் குறித்து அதிக எச்சரிக்கை வேண்டும்
என்பதையும் தமிழ் கூறும் நல்லுலகு பட்டறிவு மூலம் உணர்ந்த நாள் இது.

பதினொரு ஆண்டுகள் கடந்துவிட்டன. உடலாலும் மனதாலும் தளர்ந்த பிரபாகரன் செய்த பல்வேறு பிழைகளால்
இன்று ஈழ மக்கள் அகதிகளாக உள்ளார்கள்.
கற்றுக்கொண்ட பாடங்களை மீளவும் நினைவுபடுத்துவோம்.
வெறுப்புகள் தேவையில்லை. கற்றுக்கொள்வோம். அது போதும்.


தமிழர்கள் அனைவரும்
இதை படித்து
ஈழ மாயை, பிரபாகர மாயையில் இருந்து வெளிவாருங்கள்

Saturday, May 22, 2021

நீதிபதி முத்துசாமி ஐயர் எனும் முன்னால் சங்கி - இந்தியாவின் முதல் ஐகோர்ட் நீதிபதி

 

நீதிபதி முத்துசாமி ஐயர் எனும் முன்னால் சங்கி - இந்தியாவின் முதல் ஐகோர்ட் நீதிபதி.

மகாராஷ்டிராவில் 16 வயதுச் சிறுமியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டவரிடம்  'அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளத் தயாரா?' னு கேக்குற உச்ச நீதிமன்ற நீதிபதி யோக்கியதை ஏதோ இப்போ பிஜேபி வந்த பின்பு தான் நீதிபதி எல்லாம் சங்கியா ஆயிட்டாங்கனு யோசிக்க வேண்டாம்.

முதல் கோணலே முற்றிலும் கோணலுங்கிற கதையா இந்தியாவின் முதல் ஐகோர்ட் நீதிபதி மிஸ்டர் முத்துசாமி அய்யர்ல இருந்தே இது தொடங்குது. "தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்தவர், ஒரு ரூபாய் கூலிக்கு வேலை செஞ்சி படிச்சவர், அறிவு கூர்மையுடையவர், சிறந்த சிந்தனைவாதி, இவர் தான் இந்தியாவின் முதல் ஐகோர்ட் நீதிபதி"னு பார்ப்பர பயக நெறைய கதைகள சொல்லி பரப்பிட்டுஇருக்காங்க.

1878 இல் முத்துசாமி ஐயரை சென்னை உயர்நீதிமன்ற ஜட்ஜ் ஆக நியமிக்கப்பட்டது உண்மைதான். ஆனால் அந்தாலு நீதிபதி ஆகுறது பார்ப்பனர்களை தவிர யாருக்கும் புடிகல. "ஒரு பார்ப்பானை நீதிபதியாக நியமித்தால் ஜாதிகளின் அடிப்படையில்தான் நீதிகள் கிடைக்கும்"னு மெட்ராஸ் மெயில் 5.9.1878ல்  இங்கிலீஷ் நாளேட்டில் பல கண்டனங்கள் வெளியிடப்பட்டது.  

"ஒரு பார்ப்பனன் நீதிபதியா  நியமிக்கப்படுறது உங்களுக்கெல்லாம் எரியுதோ"னு ஆறு பார்ப்பன பயங்க ஒன்னு சேந்து ஒரு பத்திரிகை ஆரம்பிச்சு முத்துசாமி அய்யர் நீதிபதி நியமத்துக்கு ஆதரவா செய்திய பரப்புறாங்க. சுதந்திரத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிக்கை ங்கிற பேருல பிராமணர்களுக்கு செம்பு தூக்க ஜி. சுப்பிரமணி அய்யரால் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை தான் "தீ ஹிண்டு"

பத்திரிகை ஆரம்பிச்சு முத்துசாமி அய்யருக்கு செம்பு தூக்குற அளவுக்கு அந்தாளு நீதிபதியா இருந்து என்ன கிழிச்சிட்டாருனு பார்போம்.

இந்துமதக் கோயில்களில் தீண்டத்தகாதாரை அனுமதிக்கக் கோரித் தொடரப்பட்ட வழக்கில், இந்த அய்யர் நீதிபதி "முஸ்லீம்களுக்கும், தீண்டத்தகாதவருக்கும், ஜாதி கெட்டவர்களும் கும்பிடுவதற்காக கோவில்கள் கட்டப்படவில்லை"னு தீர்ப்பு எழுதிருக்காப்பல.. (நாகர்கோயில் வழக்குரைஞர் பி . சிதம்பரம் பிள்ளை தம் நூலில் , "Right of Temple Entry" பக்கம் 8)

அடுத்து "சனாதன வழக்கங்களைப் பின்பற்றி நடக்காதவர்களை ஜாதிப் பிரஷ்டம் செய்திடுவது அர்ச்சகப் பார்ப்பனரின் உரிமை" னு வேற தீர்ப்பு எழுதியிருக்காப்ல. (சி . சங்கரன் நாயர் எழுதிய Auto biography of Sir.
C.Sankaran Nair எனும் நூலில் பக்கம் 64)

1890ஆம்ஆண்டு சிறு பெண்கள் பூப்பெய்துவதற்கு முன்னதாக 8 வயது, 10 வயதிலயே திருமணம் செய்துவைப்பதை எதிர்த்து வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த முத்துசாமி அய்யர் "சிறுமிகளுக்கு திருமணம் செய்வது என்பது சமூக தகுதியை, மத தர்மத்தையும் பாதுகாக்கவே ஆகும். சிறுமிகளுக்கு திருமணம் என்பது புனிதச்சடங்கு,  அதை உதாசீனப்படுத்தினால் வழக்கம் மீறப்படுவது ஆகிவிடும். வேதகாலத்து சட்டங்களாதலால்பழக்கம் காப்பாற்றப்படவேண்டும். பார்ப்பனியப் பழக்கமோ, ஆரிய பழக்கமோ, வேதபழக்கமோ, புராண பழக்கமோ எதுவாக இருந்தாலும் கடைப்பிடிக்கப் படவேண்டியவை"னு சனதானத்தை காப்பாற்றியிருக்காப்ல.

அடுத்த வழக்கு "என் கணவன் வைப்பாட்டி வைத்துக்கொண்டு அவளுடன் இருப்பதால் எனக்கு அவனிடமிருந்து பிரிந்து வாழ உத்தரவும், வாழ்க்கை நடத்த நஷ்டஈடு பணமும் வழங்கவேண்டும்" னு ஒரு பெண் தொடரப்பட்ட வழக்கில இந்த ஐயர் நீதிபதி "வைப்பாட்டி வைச்சிருக்குறது குற்றமல்ல, இது இந்து தர்மத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று தான்"னு வழக்கைத் தள்ளுபடி பண்ணிட்டாப்ல. (இண்டியன் சோசியல் ரிபார்மர் நூல் 2.2.1895, பக்கம் 169)

அடுத்து ஒரு புருஷன் தன் பெண்டாட்டிய அடித்து கை உடைந்து போன வழக்கை விசாரித்த தாலுகா மாஜிஸ்திரேட் மூன்று மாத சிறைத் தண்டனை விதித்தார் . "அதெல்லாம் முடியாது நாங்க கோர்டுல பாத்துக்குறோம்"னு அந்த புருஷன் மேல் முறையீடு செஞ்ச வழக்கை நீதிபதி முத்துசாமி அய்யர், தண்டனையை நீக்கினதுமில்லாம "மனு நீதியின் படி புருஷன் பொண்டாட்டிய அடிக்கலாம் ஆகவே புருஷன் செய்தது குற்றமல்ல"னு தீர்ப்பு எழுதிருக்காப்ல.

இந்த அய்யர் நீதிபதி எந்த வழக்கையும் விசாரிக்க போகுறதுக்கு முன்னாடி, (முக்கியமான, ஹிந்து மதம், சடங்கு பற்றிய வழக்குகளை) விசாரிக்க போகுறதுக்கு முன்னாடி திருவாரூருக்குப் போய் மடிசஞ்சிப் பார்ப்பனர்களை சந்தித்துப் பேசி, சாஸ்திர தர்மத்தை  கேட்டு தெரிஞ்சிகிட்ட பின்பு தான் தீர்ப்பே அழுதுவாப்ல. அந்தளவுக்கு பார்ப்பனிய வெறி ஊறிப்போன சங்கி தான் முத்துசாமி அய்யர்.

இந்த லட்சணத்தில நீதி வழங்குன முத்துசாமி அய்யர் 25.1,1895இல் இறந்து போனாதுக்கு அப்பறம். அய்யருக்கு செம்பு தூக்கி பத்திரிகை நடத்தின  பார்ப்பன பயலுக, உயர்நீதிமன்ற வளாகத்தில் அவருக்கு சிலை வைக்க வேண்டும்னு  ஆங்கிலேய அரசாங்கத்திட்ட கோரிக்கைய வச்சாங்க.

அதுக்கு பதில் சொல்ற விதமா ஆங்கிலேயே அரசு  "நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு போற்றப்பட வேண்டடிய அளவுக்கு அந்தாளு எதையாவது திறமையாக செய்திருக்கவேண்டும், அய்யர் வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்ததை விட வேற எதுவும் செய்யவில்லை. முத்துசாமி அய்யர் வேலை தான் செய்தார், திறமையான நீதிபதியாக இருக்கவில்லை" னு தெளிவா சொல்லிருச்சி.

இருந்தும் பார்ப்பனர்கள் பத்திரிகையின் மூலம் செய்திகள் வெளியிட்டு அதிக நெருக்கடி கொடுக்கவே சென்னை ஐகோர்ட் வளாகத்தில் முதல் நீதிபதி சங்கிக்கு ஆங்கிலேயர் ஆட்சியில்  சிலை வைக்கப்பட்டது.

ஒரு பார்ப்பனன் எவ்வளவு தான் படிச்சாலும், உயர் பதவியில் இருந்தாலும், வெளிநாட்டில பெரிய சயின்ஸ், டெக்னாலஜி கம்பெனில வேலை செஞ்சாலும் அவனோட மூளை சனதானத்தையும், சாணியையுதான் சுத்திட்டு கெடக்கும் ங்கிறத மாதிரி ஒரு முழு சங்கியா மனு வேதம், சனதான தர்மம், சாத்திரம் சம்பிரதாயம், பெண்களுக்கு எதிரான தீர்ப்புகள் னு பார்ப்பன மத வழக்கத்தை பாதுகாக்கவே 17 வருசம் நீதிபதியாய் இருந்த முத்துசாமி அய்யர் தான் பெண் கல்வி, விதவை மறுமணம் போன்ற சமூக சீர்திருத்தக் கொள்கைகளுக்கு ஆதரவளித்தார் னு விக்கிப்பீடியா எழுதியிருக்கானுக. இது எவ்வளவு பெரிய வரலாற்று மோசடிங்கிறத நாம தான் புரிஞ்சிகனும்.

Thursday, May 13, 2021

German காரர் கடைசி வரை விடை கிடைக்காமல் போயிட்டார்

 நான் 2009 Webmethods சென்னை ல வேலை பார்க்கும் போது Operations Manager சம்பத் அப்படின்னு ஒரு மஞ்சள் நாமம் போடும் 60 வயசு ஐயங்கார் ஒருத்தர் இருந்தார்.
அந்த கம்பெனிய ஒரு ஜெர்மன் கம்பெனி acquire பண்ணிட்டு ஜெர்மன் ல இருந்து ஒரு உயர் அதிகாரி வந்தாரு.  அவருக்கு டீ காப்பி சாப்பாடு ரூம் எல்லாம் போட்டு குடுத்துட்டு ஐயங்கார் லஞ்ச் மீட்டிங் க்கு வந்தார். அந்த ஜெர்மன் ஆளு கேட்டார் நெத்தியில் என்ன அப்படின்னு...பேசாம God faith இல்லாட்டி Hindu religion அப்படின்னு சொல்லி விட்டு இருக்கலாம்... This is high in society, Direct connection to God அப்படின்னு சொன்னார். உடனே அந்த ஜெர்மன் காரர்- If I put this can I connect with Jesus அப்படின்னு கேட்டார்...😂🤪
உடனே இவர்  - No No it is only to Vishnu - our God அப்படின்னு சொன்னார். Then why all others not putting the yellow line - you guys don't want to connect with Vishnu அப்படின்னு கேட்ட உடன் சம்பத் சொன்னார்..No no everyone can't put this அப்படின்னு...
குழம்பிப் போன German காரர்- Ok let us change the topic அப்படின்னு சொல்லிட்டு கடைசி வரை விடை கிடைக்காமல் போயிட்டார்

பார்ப்பன மொழி மட்டும் எங்கு சென்றாலும் ஒரே மாதிரி இருக்கும் - ஆத்துல, ஜலம், அவா இவா

 தமிழகத்தில் பல்வேறு வகையான தமிழ் உச்சரிப்பு, ஒலிப்பு, பேச்சு வழக்கு உண்டு. அனைவரும் அந்த அந்த வட்டார தமிழ் பேசி வளர்ந்த மக்கள்தான்... ஆனால் வேலைக்கு வந்தபின் நம்மை யார் என்று கண்டுபிடிக்க முடியாத Neutral Tamil என்று ஒன்று உண்டு. அது கிட்டத்தட்ட திருச்சி தஞ்சை தமிழ் போல... அதை கஷ்டப்பட்டு பழக வேண்டிய அவசியம் வரும். சென்னை வந்த புதிதில் கடைக்கு போய் சீனி குடுங்க அப்படின்னு கேட்டு கடைக்காரர் என்ன தெற்கு ஊரா அப்படின்னு கேட்டார். ஏன் அப்படின்னு கேட்டேன்...இங்க சர்க்கரை இல்லாட்டி அஸ்கா அப்படின்னு solluvaanga அப்படின்னாரு, கைலி சாரம் - லுங்கி ஆனது, வத்தல் - காஞ்ச மிளகாய் ஆனது, மல்லி- தனியா ஆனது...

ஆனால் பார்ப்பன மொழி மட்டும் எங்கு சென்றாலும் ஒரே மாதிரி இருக்கும்  - ஆத்துல, ஜலம், அவா இவா

இவங்க டிசைன் அப்படி

எங்க முன்னாடி செருப்பு போடக் கூடாதுன்னு சொன்னக் கூட்டம் தான், செருப்பு போடாம இருந்தா எளிமைன்னு உருட்டிக்கிட்டு இருக்கானுங்க.

இதோட உளவியல் என்னவென்றால்

நம்ம அரிசி சாப்பிட தொடங்குனவுடனே இவனுங்க கூழ் குடிப்பானுங்க,

நம்ம ஜீன்ஸ் pant போட்ட உடனே, வேட்டி புகழ் பாடுவானுங்க,

நம்ம ஆட்கள் engineering/medical படிச்சா, உடனே சுய தொழில் பத்தி பேசுவானுங்க

இவங்க டிசைன்  அப்படி

"அதென்ன! அசுவமேத யாகம் ?…"

 ராஜாக்கள் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு… அடித்து விரட்டி விடுவார்கள். அக்குதிரை எங்கெங்கு சென்றுவிட்டு வருகிறதோ.. அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்துவிட்டு அந்த வெற்றியை  கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம் தான் அசுவமேத யாகம். ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப்போட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள்.

இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும். அப்போது ஓரிரவு முழுவதும் சம்பந்தப்பட்ட ராஜா வீட்டுப்பெண்கள் முக்கியமாக ராணி குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்தக் கடமை முக்கியமாக ராணிக்கு தான். இதைக் கூற சங்கோஜமாகத் (கூச்சமாக) தான் இருக்கிறது. அசுவ மேதயாக ஸ்லோகமே அப்படித் தான் இருக்கிறது.

“அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்து
பத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே…”

எனப்போகிறது ஸ்லோகம். அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி  ராணி வழிபட வேண்டிய முறையைத் தான் விளக்குகிறது இந்த ஸ்லோகம்.

இரவு இந்தக் கடமை முடிந்ததும்… மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பமாகும் வரை எரித்து விடுவார்கள். இது தான் அஸ்வமேத யாகம்.

மக்களைப் போலவே, ராஜ குடும்பத்தினரும் பிராமணர்களின் மந்திரயாகத்துக்கு கட்டுப்பட்டிருந்தார்கள். யாகம் முடிந்ததும் “ஏ…ராஜா… இந்த யாகத்தை நல்லவிதமாக பூர்த்தி செய்தாகி விட்டது. இதற்காக நீ பொன்னும் பொருளும் தட்சணை கொடுத்தாய். அஃதோடு யாகத்தில் பங்குகொண்ட உன் ராணியையும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணையாக்கி பிறகு அழைத்துச் செல்ல வேண்டும்” என்றார்களாம்.

இதையல்லாம் பார்த்து வெகுண்டார் புத்தர். மனித தர்மம், மிருக காருண்யம் இரண்டையுமே பொசுக்கி யாகம் செய்கிறீர்களே…? ஏன் இப்படி…? என யாகம் நடத்தும் இடத்துக்கே போய் யாகம் நடத்தியவரிடம் (பிராமணர்களிடம்) கேள்விகள் கேட்டார்.

பிராமணர்கள் பதில் சொன்னார்கள், “குதிரைக்கு மோட்சம் கிடைக்கும். லோகத்துக்கு ஷேமம் கிடைக்கும்” என்று கூற... புத்தர் திரும்பக் கேட்டார்.“ஒன்றும் தெரியாமல் வளர்ந்து, வாழ்ந்து சாகப்போகும் குதிரைக்கு மோட்சம் தருகிறீர்களே.. எல்லாம் அறிந்த பிராமணனாகிய நீங்கள் மோட்சம் பெற வேண்டாமா? அந்த அக்கினி குண் டத்தில் யாகம் நடத்தும் உங்களையும் தூக்கிப் போட்டால் உங்களுக்கும் மோட்சம் கிட்டுமல்லவா?. ப்ராகிருத மொழியில் மக்களிடமும் இதே கேள்வியை புத்தர் பரப்ப… திடுக்கிட்டுப் போனார்கள் பிராமணர் கள்

நன்றி: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய இந்து மதம்  எங்கே போகிறது என்ற புத்தகத்திலிருந்து...

நன்றி: அருந்தமிழிலிருந்து..

ஐடா ஸ்கடர்

 1877ம் ஆண்டு..!




நம் நாட்டில் கடுமையான பஞ்சம்.. பட்டினி சாவு 50 லட்சத்தை தாண்டியது... பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட சாப்பாடு இல்லாத நிலை!!

அதனால், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் மருத்துவ சிகிச்சை, உணவு தருவதற்காக இந்தியா வந்தன. அப்படி ராணிப்பேட்டைக்கு வந்தவர்தான் டாக்டர் ஜான்.. இவரது 14 வயது மகள் ஐடா ஸ்கடர்!

ஒரு நாள் இரவு கதவு தட்டப்படுகிறது.. ஐடா கதவை திறக்கிறாள்.. ஒரு பிராமணர் நின்று கொண்டிருந்தார். "அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்... உடனே வாங்க" என்று பதறுகிறார்..!

ஐடாவோ, "நான் டாக்டரல்ல, என் அப்பாதான் டாக்டர், கொஞ்சம்  இருங்க அவரை எழுப்பறேன்" என்கிறார்.

"இல்லம்மா.. என் மனைவிக்கு 14 வயசு தான். நாங்க பிராமணாளுங்க.. பெண்ணை ஒரு ஆம்பள தொட அனுமதி இல்லை" என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

கொஞ்ச நேரத்தில் ஒரு முஸ்லிம் நபர் கதவை தட்டுகிறார்.. மனைவிக்கு பிரவச வலி என்பதால் உடனே வருமாறு அழைத்தார். ஐடா தன் தந்தையை பற்றிக்கூற, "வேண்டாம்மா... நாங்கள் இஸ்லாமியர்கள்... எங்க வீட்டு பொண்ணை ஆண்கள் பார்க்கவே கூடாது" என்று அவரும் சோகத்துடனே திரும்பிவிடுகிறார்.

அந்த பெண்களுக்கு என்ன ஆச்சோ என்று இரவெல்லாம் பதட்டத்துடன் தவிக்கிறாள் ஐடா... மறுநாள் காலை அந்த கர்ப்பிணிகளின் சடலம் தன் வீட்டை கடந்து கொண்டு செல்லப்படுவதை பார்த்து அதிர்ந்து தேம்பி தேம்பி அழுகிறாள் ஐடா.

"என்ன தேசமிது? பெண்களை படிக்க வைக்க மாட்டாங்களாம், ஆனால் பெண்ணுக்கு பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்? இந்த  நாட்டில் பெண்களை படிக்கவிடவில்லை என்றால் என்ன, நான் படித்துவிட்டு வந்து இந்த பெண்களை காப்பாற்றுவேன்" என சபதமேற்று அமெரிக்கா சென்று படிக்கிறார்.. டாக்டராகிறார்..!

சக நண்பர் ஒருவர் ஐடாவை காதலிக்கிறார்..  ஆனால் ஐடா அந்த காதலை நிராகரிக்கிறார்.. மருத்துவம் படித்து முடித்ததுமே அமெரிக்காவிலேயே வேலை வாய்ப்புகள் வந்தன.. ஐடா அதையும் நிராகரிக்கிறார்.. தமிழகத்தில் இறந்து போன அந்த பெண்களின் சடலங்கள் மட்டுமே கண்முன் வந்து வந்து போயின!!

ஆனால், வெறும் படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வளவு பேரை தமிழ்நாட்டில் காப்பாற்ற முடியும் என்று நினைத்து, ஒரு ஆஸ்பத்திரி தேவை என்பதை உணர்கிறார்.. பல நாடுகளில் இந்தியாவின் அவலத்தை சொல்லி நிதி உதவி கேட்கிறார்.. ஓரளவு நிதியும் சேர்கிறது...!

இனி ஒரு கர்ப்பிணியைகூட சாக விடமாட்டேன் என்ற உறுதியுடன் 20-ம் நூற்றாண்டின்,  முதல் நாளில் தமிழகத்தில் கால் பதிக்கிறார் ஐடா.

ஆஸ்பத்திரி கட்டும் பணியை ஆரம்பிக்கிறார்.. படாதபாடு பட்டு, இறுதியில் 40 படுக்கை வசதியுடன் அந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு விட்டது.

பெண்ணுரிமை என்ற பேச்சுக்கே இடமில்லாத நேரத்தில், பெண்களுக்காகவே ஒரு மருத்துவமனையையே கட்டி முடித்தார் இளம்பெண் ஐடா!

அதுதான் ஆசியாவிலேயே தனிப்பெருமை வாய்ந்து.. நூற்றாண்டையும் கடந்து இன்றும் பிரம்மாண்டமாய் நிற்கும் வேலூர் "சிஎம்சி" ஆஸ்பத்திரி!!

யார் இந்த பெண்?  இவர் ஏன் நமக்காக அழுதார்? இவர் ஏன் நமக்காக உருகினார்?  இவர் ஏன் நமக்காகவே வாழ்ந்தார்?

எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, நம்ம நாட்டுக்கு தன் வாழ்க்கையையே மொத்தமாக அர்ப்பணித்த ஐடா, அன்னை தெரசாவுக்கே "வழிக்காட்டி" என்று சொன்னால் நம்ப முடிகிறதா?!!

அங்குமிங்கும் அலைந்து திரிந்து 5 இளம்பெண்களை திரட்டி, அவர்களுக்கு பயிற்சி தருகிறார் ஐடா.. இவர்கள் தான் தமிழகத்தின் முதல் 5 நர்ஸ்கள்..!

நம்முடைய பெண்கள் மருத்துவம் படிக்க விதை போட்டதே, இந்த ஐடா தான் என்பதை எத்தனை பேர் இன்று நினைத்து பார்க்கிறார்களோ தெரியவில்லை !

ஆனால், ஒரு பெண் தனி ஆளாக நின்று ஏற்றிய மெழுகுவர்த்தி, இன்று பிரகாசமாக, உலகத் தரத்தோடு, வேலூரில் இன்னமும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.. லட்சக்கணக்கான மக்களுக்கு உயிர் தந்து கொண்டுமிருக்கிறது..!

நர்ஸ் தினமான இன்றைய நாளில், ஐடா என்ற மனித தெய்வத்துக்கு மட்டுமில்லை, இன்றைய ஆபத்தான சூழலில்,  உயிரை பணயம் வைத்து சிகிச்சை தந்து வரும் அனைத்து வெள்ளுடை தாய்களுக்கும் என் கோடி நன்றிகள்!!

Thursday, May 06, 2021

கால்டுவெல் : திராவிட அடையாளம்

 இராபர்ட் கால்டுவெல் வாழ்ந்த காலம் 77 ஆண்டுகள். அயர்லாந்தில் பிறந்தார்; ஸ்காட்லாந்தில் வளர்ந்தார்; இந்தியாவில் வாழ்ந்தார்; தமிழர்களின் நெஞ்சில் நிறைந்தார்.

இந்த நூற்றாண்டில் அதிகமாகப் பேசப் பட்ட வார்த்தைகளான திராவிடம் - இன உணர்வு - விடுதலை சுயமரியாதை - தனித்தமிழ் இயக்கம் - தமிழ் - தமிழர் என்ற அனைத்து நெருப்புக்குமான மூலப் பொறி கால்டுவெல்லின் மூளையிலிருந்தே மூண்டது என்ற வரலாற்றுப் பேருண்மையை தம் ஆய்வின் மூலம் நிலை நிறுத்துகிறார் கவிப் பேரரசு வைரமுத்து.

சமஸ்கிருதம்தான் இந்திய மொழிகளுக் கெல்லாம் தாய் என்ற மாயை உலகை வலம் வந்தது. மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் வடமொழி இலக்கியம் - கலை - பண்பாடு - வாழ்வியல் என்பதைத் தாண்டி தென் திசை நோக்கி அவர்கள் பார்வை திரும்பவே இல்லை. கால்டுவெல் இலண்டன் மிஷனரி சொசைட்டியில் சேர்ந்தார். சமயம் பரப்ப சென்னை வந்தார். கடற்பயணம் இடர் பயணமாய் அமைந்தது. சூறாவளி சுழன்றது. பிரெஞ்சுக் கப்பலுடன் மோதி சிதைந்தது. மதம் பரப்ப வந்த முப்பது பேரில் கடலில் மூழ்கி மாண்டவர்கள் 24 பேர். உயிர் பிழைத்தவர்கள் அறுவர். அதில் கால்டுவெல் ஒருவர்.

08.01.1838 இல் சென்னை வந்தடைந்தார். ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் கொண்டவர். 18 மொழிகளைக் கற்றறிந்த பன்மொழி வித்தகர். துரூ என்பவரிடம் தமிழ் கற்றார். உவின்சுலோ, போப், பவர், ஆண்டர்ஸன் முதலியோர்களும் கால்டு வெல்லுக்கு தமிழ் போதித்தனர். பிரவுன் என்பவரிடம் சமஸ்கிருதம் கற்று தேர்ந்தார்

தமிழ் மொழி, தமிழ்நாடு, தமிழர் வாழ்வியல் இவற்றை முழுமையாய் உணர்ந்து , கொள்ள வடகோடி சென்னையிலிருந்து தென்கோடி குமரிமுனை வரை நடந்து கடந்தார். பட்ட சிரமங்கள் பட்டியலில் அடங் காது; சத்திரத்தில் தங்கவும் அனுமதி மறுக்கப் பட்டது.

தமிழனின் மூலமுகவரி அறிந்து சொன்ன மூதறிஞன் தங்கிட மாட்டுக்கொட்டகையில் இடம் கொடுத்தான் இருளில் உழன்ற தமிழன். இளமையில் பைன் மரங்களுக்கிடையே தவழ்ந்த கால்டுவெல், தமிழ் தழைக்க 50 ஆண்டுகள் பனை மரங்களுக்கு மத்தியில் வாழ்ந்தார்.

இடையன் குடிதான் அவர் வாழ்ந்த ஊர்; கள்ளியும் முள்ளியும் நிறைந்த பகுதி; வெப்பம் அனலாய் தகிக்கும். வாழ்வின் ஒவ்வொரு நாளும் கசக்கும்.

அந்த கிராமத்திலே தங்கியிருந்து, பள்ளிக்கூடம் ஏற்படுத்தி, கல்வி கற்பித்து, மதிய உணவு வழங்கி, மருத்துவ வசதி ஏற்படுத்தி, சுகாதாரத்தைச் சொல்லிக் கொடுத்து நாகரீக உலகிற்கு நாட்டு மக் களை கைப்பிடித்து அழைத்துச் சென்ற பெரும்பணிகளுக்கு மத்தியில் 15 ஆண்டுகள் மூளையைக் கசக்கி, காலத்தால் அழியாத இலக்கண நூலைப் படைத்தார்.

திராவிடம் என்ற சொற்சுட்டு
கால்டு வெல்லால் உண்டாக்கப்பட்டதன்று.
அது ஓர் ஆதிச்சொல்.

மணோன்மணியம் சுந்தரம் பிள்ளை,
தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும் என்கின்றார். ரவீந்திரநாத் தாகூர்,
திராவிட உத்கல வங்கா என்கின்றார்.
தாயுமானவர், திராவிடத்திலே என்கின்றார்.

லீலா திலகம் எனும் 14ஆம் நூற்றாண் டைச் சேர்ந்த மலையாள இலக்கியம், திராவிடம் என்கிறது.

குமரிலபட்டர் 8-ஆம் நூற்றாண்டில் ஆந்திர திராவிட பாஷா என்கின்றார்.

பாகவத புராணத்தில் சத்திய விரதன் என்ற இந்திய மூதாதை திராவிட மன்னன் என்றே அழைக்கப்படுகின்றான். மனுதர்ம சாஸ்திரம், திராவிடர் என்பதை இழி இனத்தவராகக் குறிக்கின்றது.

திராவிடம் எனும் சொல்லை இலக்கியங் களும், இலக்கணங்களும், புராணங்களும் தம்தம் வசதிக்கேற்ப பொருள் சுட்ட, கால்டுவெல் மட்டும்தான் திராவிடம் என்பது ஓர் இனக்குழு நாகரிகத்தின் மூத்த மொழிச்சுட்டு என்பதை அறிவியல் அடிப்படையில் மெய்ப்பித்தார்.

எல்லிஸ் எனும் அறிஞர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்றவை ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை அல்ல. அது தனி மொழிக் குடும்பம் என்றார். அதனை  அடிப்படையாக வைத்துக் கொண்டு கால்டுவெல் தமிழாராய்ச்சி பணி நிகழ்த்தினார். கடும் உழைப்பின் பயனாய் ஆவணத் தரவுகளோடு ஒரு நூல் முகிழ்த்தது. அப்புத்தகம் தான் ஒரு மாபெரும் புரட்சியை நிகழ்த்தியது. 1856 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த நூல் தான் A Comparative Grammar of the Dravidian or South Indian Family Tamil Languages. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்நூல் திராவிட கருத்தியலை இமயத்திலே ஏற்றிவைத்தது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு இதுவரை 23 பதிப்புகள் வெளிவந்திருக்கின்றது. கிளாஸ்கோ பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறது. திராவிடர்களை உலகம் அறிய இந்நூல் உதவியது. திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி தமிழ். தமிழில் இருந்துதான் தெலுங்கு, மலையாளம், கன்னடம், உட்பட்ட 28 மொழிகள் பிறந்ததாக வரலாற்று மொழியியல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு போன்ற மொழிகள் பேசும் மக்கள் திராவிடர்கள் என வரலாற்று ஆவணங்களைச் கொண்டு நிறுவியவர் கால்டுவெல்.

தமிழை வளர்க்க வந்தவர்கள் மதத்தைப் பரப்பினார்கள்; மதத்தைப் பரப்ப வந்த கால்டுவெல் தமிழை வளர்த்தார்.

கால்டுவெல்லின், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூல் வரலாற்றில் திருப்பு முனை. நூல் உரைக்கும் உண்மைகள்:

1. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு நேர் எதிர் தன்மை கொண்ட திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. 2. தமிழில் உள்ள சமஸ்கிருத சொற்களை எடுத்துவிட்டாலும் தமிழ் தானாக இயங்கும் ஆற்றல் கொண்ட செம்மொழி 3. தமிழ் மரபு என்பது வேத - பார்ப்பன - இந்து மரபின் தொடர்ச்சி அல்ல. 4. பார்ப்பன எதிர்ப்பு மரபாக உள்ளது.

கால்டுவெல்லின் ஆய்வு வெறும் மொழியாராய்ச்சியாக நின்றுவிடவில்லை. தமிழினத்தின் பல்வேறு வாழ்வியலைக் குறித்த ஆய்வாக உள்ளது.

திராவிட மொழிக் குடும்பத்தைத் திருந்திய மொழிகள் என்றும் திருந்தா மொழிகள் என்றும் இரண்டாகப் பிரிக்கிறார் ஆய்வாளர் கால்டுவெல்.

திருந்திய மொழிகள் ஆறு : தமிழ், மலை யாளம், தெலுங்கு, கன்னடம், துளு, குடகு திருந்தா மொழிகள் ஆறு: துதம், கோதம், கோண்ட், கூ, ஒரியன், ராஜ்மகால் சமஸ்கிருதத்திலிருந்தே திராவிட மொழிகள் பிறந்தன எனும் கூற்று உண்மைக்குப் புறம்பானது என்பதைத் திருந்தா மொழிகளைக் கொண்டே நிறுவுகிறார்.

ஈபுரு மொழியில் வழங்கும் துகி என்னும் சொல் தமிழின் தோகை என்னும் சொல்லின் திரிபு எனவும், அரிசி என்பது கிரேக்க மொழியில் அருசா என வழங்குவதையும் கால்டுவெல் குறிப்பிடுகிறார்.

கொற்கை துறைமுகம் குறித்து ஆய்வு நிகழ்த்தி இருக்கிறார். கடல் உள் வாங்கியிருப்பதை தெளிவாக பதிவு
செய்துள்ளார்.

சிங்கள இலக்கிய நூலான மகா வம்சம் என்ற நூலின் துணை கொண்டு தமிழ் - ஈழ உறவுகளை ஆய்வு செய்துள்ளார்.

திராவிடர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் ; உண்மையானவர்கள் ; நேர்மையானவர்கள்; விசு வாசமானவர்கள் என்பது அவர் கண்டறிந்து உலகிற்கு உடரைத்த உண்மைகளாகும்.

பரிதிமாற் கலைஞர் செம்மொழிக்காகக் குரல் கொடுத்தது 1887 இல். ஆனால் கால்டுவெல் செம்மொழிக்காக எழுப்பிய முதல் குரல் ஒலித்தது 1856 இல்.

கால்டுவெல் மனிதநேயம் மிக்கவர், தமிழோடு அவர் உறவு முடிந்து விட வில்லை. தமிழ் மக்கள் மீதான அன்பு பெருக் கெடுத்தது. தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது பாசம் பொழிந்தார்.

'தமிழ் என்று குறிப்பிட்டாலும், திராவிடம் என்று குறிப்பிட்டாலும் அது ஆரியத்திற்கு எதிரானது' என்று  விளக்கிச் சென்றிருக்கும்
இராபர்ட்டு கார்டுவெல் அவர்களின் பிறந்த நாளில் (07-05-1814)  தமிழியக்கம் தனது புகழ் வணக்கம் செலுத்துகிறது.

Wednesday, March 17, 2021

காந்தளூர் சாலையும் இராஜராஜ சோழனும்!

 தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ம் காந்தளூர் சாலையும் இராஜராஜ சோழனும்! தொடர்பிருக்கிறது. அதனால்தான் ஓர் உரையாடலாக இந்தப் பதிவு. 2373 words... எவ்வளவு பெரிய மாத்திரை! தமிழக அரசர்கள் முதன் முதலாக பேரரசர்களாக உயர்ந்தது பிற்கால சோழர்களின் காலத்தில்தான். அதற்கு வித்திட்டவர் இராஜராஜ சோழன். பாண்டியர்களையும் சேரர்களையும் ஒடுக்கி மொத்த தமிழகத்தையும் ஒரே அரசின் கீழ் கொண்டு வந்தவர் இவர்தான். தன் வாழ்நாளில் எண்ணற்ற போர்களில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடியவரும் இவரேதான். ஆனால், இவரது மெய்கீர்த்திகள் அனைத்தும் ஒரு வெற்றியில் இருந்தே தொடங்குகிறது. மட்டுமல்ல. இவருக்கு பிறகு வந்த அனைத்து சோழ மன்னர்களும் ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டுகளுக்கு திரும்பத் திரும்ப இராஜராஜ சோழரின் குறிப்பிட்ட அந்த வெற்றியை தங்கள் மெய்கீர்த்திகளில் சொன்ன பிறகே தங்களது சாதனைகளை பட்டியலிட்டுள்ளார்கள்; கல்வெட்டிலும் பொறித்துள்ளார்கள்; சாசனமாகவும் வடித்திருக்கிறார்கள். அதுதான் ‘காந்தளூர் சாலை கலமறுத்த’ என்ற சொற்றொடர். ‘திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் / தனக்கேயுரிமை பூண்டமை மனங்கொளக் கருதிக் / காந்தளூர்ச் சாலை கலமறுத்தறுளி...’ இப்படித்தான் இராஜராஜ சோழனின் மெய்கீர்த்தி தொடங்குகிறது. ‘காந்தளூர் சாலை’ வெற்றியை இராஜராஜ சோழன் முதல் அனைத்து பிற்கால சோழர்களும் தங்கள் மெய்கீர்த்திகளில் பெருமையாக குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றால் - ‘காந்தளூர் சாலை’ என்பது மக்கள் வாழ்ந்த ஒரு நிலப்பரப்பா..? பல்லவர்கள், பாண்டியர்கள், சேரர்கள் போல் ஏதேனும் அரசக் குடியா..? இல்லை. அது ஒரு கல்விக்கூடம்! ஒரு பள்ளியின் ஒரு பிரிவை ‘கலம் அறுத்ததைதான்’ இராஜராஜ சோழன் முதல் அனைத்து பிற்கால சோழர்களும் மாபெரும் சாதனையாக கருதியிருக்கிறார்கள்! ஏன் ஒரு கல்விக்கூடத்தின் மேல் இராஜராஜர் படையெடுத்துச் சென்றார்..? இதற்கான விடையை அறிவதற்கு முன், இந்த ‘காந்தளூர்’ எங்கிருக்கிறது... என்று பார்த்துவிடுவோம். தமிழகக் கல்வெட்டுகளில் காந்தளூர் என்னும் ஊர்ப்பகுதி முதன் முதலில் முத்தரையர் கல்வெட்டு ஒன்றில் இடம்பெறுகிறது. இதற்கு அடுத்து திருவண்ணாமலை திருக்கோயிலில் காணப்படும் முதலாம் பராந்தகர் காலத்து கல்வெட்டு ஒன்று காந்தளூர் என்னும் நாட்டுப் பகுதியை, ‘ஸ்வஸ்தி ஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேசரி பன்மர்க்கு யாண்டு 15வது வாணகோப்பாடி பெண்ணை வடகரைக் காந்தளூர் நாட்டு விச்சூர்...’ என்று குறிப்பிடுகிறது. இந்த இரண்டு கல்வெட்டுகளிலும் இடம்பெறும் காந்தளூரும் இராஜராஜர் மெய்கீர்த்தியில் குறிப்பிடப்படும் காந்தளூரும் ஒன்றல்ல என்கிறார்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஒரே குரலில். இன்றைய மாநில வரைபடங்களில் காந்தளூரை தேடினால் பலப்பல ஊர்கள் அதே பெயரில் வந்து நிற்கின்றன. செங்கல்பட்டுக்கு அருகில், திருச்சிக்கு அருகில், கேரள இரிஞ்ஞாலக் குடைக்கருகில் ஒன்று... என பட்டியல் நீள்கிறது. இவற்றில் இராஜராஜர் குறிப்பிடும் காந்தளூர் எது? அறிந்து கொள்ள, காந்தளூரை அடுத்து வரும் ‘சாலை’ என்னும் பதம் உதவுகிறது. ‘சாலை’கள் சமஸ்கிருதத்தில் ‘சாலா’ என்றழைக்கப்பட்டன. இந்தியா முழுவதும் அக்காலத்தில் நிறுவப்பட்ட ‘கடிகா’ அல்லது ‘கடிகை’ என்னும் நிறுவனங்களை ஒட்டியே ‘சாலை’களின் செயல்பாடுகள் அமைந்தன. பல்லவர்கள் காலத்தில் மட்டுமல்ல சோழர் காலத்திலும் கடிகைகள், சாலைகள் தமிழகம் எங்கும் இயங்கியிருக்கின்றன. இதற்கான கல்வெட்டு ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன. கடிகைகளும், சாலைகளும் ஏதாவது ஒரு திருக்கோயிலோடு தம்மை இணைத்துக் கொண்ட நிறுவனங்களாகவே செயல்பட்டிருக்கின்றன. இதற்கான முக்கியமான ஆதாரம் ஆய்வேள் மன்னர் கோக்கருந்தடக்கரின் செப்பேட்டில் காணப்படுகிறது. இதில் பார்த்திவசேகரபுரத்து விஷ்ணு பட்டாரகர் திருக்கோயிலை ஒட்டி, தாம் அமைக்கப்போகும் சாலையைப் பற்றிய பல முக்கியத் தகவல்களை பகிர்ந்திருக்கிறார். ஆக, காந்தளூரில் அமைந்திருந்த சாலையும் ஏதோ ஒரு திருக்கோயிலுடன் தொடர்புள்ளதாக இருக்க வேண்டும். அந்தக் கோயில் இப்போது எங்கிருக்கிறது? கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் நெரிசல் மிக்க வலியசாலை பகுதியில் அமைந்திருக்கும் ஜுவாலா மகாதேவர் திருக்கோயிலே என்கிறார் அறிஞர் டி.ஏ.கோபிநாத ராவ். தான், பதிப்பித்த ‘திருவிதாங்கூர் சமஸ்தானக் கல்வெட்டுகள்’ என்னும் தொகுப்பின் இரண்டாம் பாகத்துக்கான முன்னுரையில் காந்தளூர் பற்றியும் சாலை குறித்தும் ஆழமாக விவாதித்திருக்கிறார். ஜுவாலா மகாதேவர் திருக்கோயிலை காந்தளூருடன் நேரடியாக தொடர்புபடுத்தும் ஒரே ஆதாரம், திருவனந்தபுரம் அனந்தபத்மநாபஸ்வாமி ஆலயத்தில் பாதுகாக்கப்படும் ‘மதிலகம் ஆவணம்’. இந்த ஆவணங்களில் இக்கோயில் ‘காந்தளூர் மகாதேவர் கோயில்’ என்றே குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டும் டி.ஏ.கோபிநாத ராவ், இக்கோயிலுடன்தான் காந்தளூர் சம்மந்தப்பட்டிருக்க வேண்டும் என்கிறார். இக்கோயில் இறைவனின் பெயரான ‘ஜுவாலா மஹாதேவர்’ என்பதும் ‘சாலா மகாதேவர்’ என்பதன் திரிபே. ஏனெனில் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி கூற்றுப்படி ‘சாலா’ என்னும் சொல் வடமொழியில் ‘ஜுவாலா’. இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஆதாரம், ஜுவாலா மகாதேவர் திருக்கோயில் என்கிற ‘சாலா மகாதேவர்’ திருக்கோயிலின் கருவறை மேற்குச்சுவரில் காணப்படும் முதலாம் இராஜேந்திரரின் சிதைந்த மெய்கீர்த்தி! இதற்கிடையில் பரதப்புழா நதிக்கரையில் வேறொரு காந்தளூர் திருக்கோயிலை வில்லியம் லோகனின் புகழ்பெற்ற ‘மலபார் மேனுவல்’ அறிமுகம் செய்வதை சில ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால், பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்கள் இதை மறுத்து டி.ஏ.கோபிநாத ராவ் குறிப்பிடுவதையே ஏற்கிறார்கள். அடுத்து சாலை. காந்தளூரில் அமைந்திருந்த சாலை பற்றி இன்றைய தேதியில் விரிவாக விவாதிக்கும் ஒரே கட்டுரை, கேரள வரலாற்று அறிஞர் எம்.ஜி.எஸ்.நாராயணன் எழுதியுள்ள ‘Bachelors of Science’. இதில் சாலைப் பாரம்பரியம் பற்றியும் அங்கு கொடுக்கப்பட்ட பல்வேறு விதமான பயிற்சிகள் குறித்தும் அலசுகிறார். ‘சட்டர்கள்’ என்றழைக்கப்பட்ட அந்நாளைய நம்புதிரி அந்தணர்களுக்கு வேதம், வேதாந்தம், வியாகர்ணம் (இலக்கணம்), அரசியல் மற்றும் போர்ப் பயிற்சி முறைகளை கற்றுத் தந்த இடம்தான் சாலை என்கிறார். கேரளத்தில் காந்தளூரையும் சேர்த்து குறைந்தபட்சம் நான்கைந்து சாலைகள் அமைந்திருந்தன. அவை அனைத்தும் 13 - 14ம் நூற்றாண்டு வரை செயல்பட்டிருக்கின்றன. ஆக காந்தளூர் சாலை என்பது அந்நாளில் கேரளத்தில் - சேர நாட்டில் - மிகவும் புகழ்பெற்று விளங்கிய ஒரு கல்வி நிறுவனம் என்பது தெளிவாகிறது. இப்போது இராஜராஜ சோழருக்கு வருவோம். அவருடைய வெற்றிகளைப் பதிவு செய்யும் திருவாலங்காடு செப்பேடு, அவர் மதுரையில் இருந்து தனது திக்விஜயத்தை தொடங்கினார் என்றும் அமரபுஜங்கன் நெடுஞ்செழியனை வென்றார் என்றும் குறிப்பிடுகிறது. ஆனால், இந்த மதுரை வெற்றியையும் அமரபுஜங்கனையும் இராஜராஜர் ஏனோ தமது மெய்கீர்த்திகளில் அவ்வளவாக குறிப்பிடவில்லை. பாண்டியரையே பொதுவாக ‘செழியரைத் தேசு கொள்’ என்று கூறி சென்றுவிடுகிறார். ஆனால், காந்தளூர் இராஜராஜருக்கு முக்கியமாக இருந்திருக்கிறது. தமக்கென்று முறையான மெய்கீர்த்தி உருவாக்கப்படும் காலம் வரை அவர் தன்னை ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிய கோ இராசகேசரி வர்மர்’ என்றுதான் குறிப்பிட்டுக் கொள்கிறார். அப்படி என்ன இராஜராஜருக்கு காந்தளூர் மேல் பகை? அப்போது அங்கே யார் அவரை எதிர்த்தார்கள்? சாலையோ ஒரு கல்வி நிறுவனம். அதனை அவர் தாக்க வேண்டிய அவசியம் என்ன? அது என்னவிதமான தாக்குதல்? நிச்சயம் காந்தளூரை ஒட்டுமொத்தமாக அழித்தொழித்த தாக்குதல் அல்ல. ஏனெனில் இராஜராஜருக்கு பிறகு மீண்டும் மீண்டும் பல மன்னர்கள் - சோழர்கள் - காந்தளூரை கலமறுத்துள்ளனர். அட... ‘மூன்று கை மாசேனை’ என்னும் சோழப் படை கூட காந்தளூரை கலமறுத்ததாக கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி கூறுகிறார். போலவே ‘வேலை அழித்ததும் சாலை கொண்டதும் தண்டு கொண்டு அல்லவோ’ என்கிற ‘கலிங்கத்துப் பரணி’யின் வினாவிலும் அழித்தொழிப்பது வேறு சாலை கொள்வது வேறு என்ற அர்த்தம் நிரம்பி வழிகிறது. சாலை கொள்வதற்கும் சாலை கலமறுப்பதற்கும் என்ன தொடர்பு? இதை சரிவர புரிந்து கொள்ள அப்போதைய அரசியல் பின்னணியை கொஞ்சம் பார்க்க வேண்டும். தென்னாட்டின் அந்நாளைய அரசியல் நிலவரம் சேரர், சோழர், பாண்டியர் என்று அறியப்பட்ட முப்பெரும் சக்திகளாலும் அவர்களுக்குக் கீழ் தத்தம் நிலப்பகுதிகளை ஆண்டு வந்த குறுநில மன்னர்களாலுமே வரையறுக்கப்பட்டது. இவர்களுக்குள் நிரந்தர நட்போ பகையோ என்றுமே இருந்ததில்லை. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தங்களுக்குள் கூட்டு சேர்ந்தார்கள் அல்லது சண்டையிட்டார்கள். தமிழகத்துக்கு வடக்கே அமைந்திருந்த தேசங்கள் இந்த மூன்று மண்டலங்களையும் வளைக்கத் தருணம் பார்த்து காத்திருந்தன. பலகீனமான சமயங்களில் ஆதாயம் தேடின. ஏதாவது ஒரு சக்தியுடன் இணைந்து மற்ற இரு சக்திகளையும் அழித்து தமது இராஜ்ஜியத்தை பெரிதாக்கிக் கொள்ள எப்பொழுதும் சிந்தித்தன. இதன் விளைவுதான் தமிழகத்தின் 2 ஆயிரம் கால வரலாறு. இந்த இடத்தில் சேர நாட்டின் அரசியல் மற்றும் சமுதாய அமைப்பைக் குறித்து தெரிந்து கொள்வது நல்லது. கி.மு.2ம் நூற்றாண்டு முதல் கி.பி.3ம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் ஒரு பகுதியாக அறியப்பட்ட சேர நாடு அதற்குப் பின்வந்த காலத்தில் மெல்ல மெல்ல தனக்கென தனியாக அரசியல் மற்றும் கலாசாரப் பின்னணியை உருவாக்கிக் கொண்டது. களப்பிரர் ஆட்சி கேரளத்தில் பரவவில்லை. களப்பிரர்களுக்கு பின் தமிழகத்தில் பல்லவர்கள் ஆதிக்கம் மலர்ந்த அதே காலத்தில் சேர நாட்டில் பெருமாள் வம்சத்தவரின் ஆட்சி உருவாகியது. இக்குலத்தின் மூத்த மன்னராக அறியப்படும் குலசேகரப் பெருமாள், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். இவருக்குப் பின் குறிப்பிடத்தக்க சேர மன்னராக திகழ்ந்தவர் 64 நாயன்மார்களில் ஒருவரான பெருமாக்கோதையார். இவரது இயற்பெயர் மறைந்து ‘சேரமான் பெருமாள்’ என்றே பக்தி இலக்கியங்களில் அறியப்படுகிறார். உண்மையில் பெருமாள் வம்சத்து மன்னர்கள் அனைவருமே ‘சேரமான் பெருமாள்’ என்றழைக்கப்பட்டனர். பெருமாள் வம்சத்து அரசர்கள் தங்களைக் ‘கேரளாதிநாதர்’, ‘சக்ரவர்த்திகள்’, ‘கோனேரின்மை கொண்டான் கோ’ என பலவாறு அழைத்துக் கொண்டாலும் அவர்களது அரசியல் பலமும் அதிகாரமும் குறுகியது. உண்மையில் மலைநாட்டின் அரசியல் பலத்தை நிர்ணயித்தது அதன் பல்வேறு கூறுகளாக அமைந்திருந்த நாடுகளும் அந்தந்த நாடுகளில் தத்தம் அதிகாரங்களை செலுத்திய நாடுவாழிகளுமே. இவர்களை கிட்டத்தட்ட தமிழக குறுநில மன்னர்களுடன் ஒப்பிடலாம். கேரளத்தின் வடக்கே அமைந்திருந்த கொளத்து நாட்டில் தொடங்கி புரைக்கிழநாடு, குறும்பொறை நாடு, இராம வளநாடு, குட்ட நாடு என்று விரிந்து தெற்கில் வேணாடு, வள்ளுவநாடு, குறுநாடு, படப்பாநாடு, முடாலநாடு என்று படர்ந்து நாஞ்சில் நாட்டில் முடியும். ‘நாடுவாழிகள்’, ‘நாடுடையவர்கள்’ என்று அழைக்கப்பட்ட இந்த மரபினர் வம்சாவழியாகத் தத்தம் பகுதிகளில் ஆட்சி செய்தனர். இவர்களுக்கென்று படை, அதிகாரம், வருமானம்... என எல்லாம் இருந்தன. போர்க் காலங்களில் ‘பெருமாளுக்கு’ தோள் கொடுக்க படைகளை அனுப்புவார்கள். இப்படி கேரளத்தின் முக்கிய அரசியல் மற்றும் சமுதாய சக்தியாக நாடுவாழிகள் மட்டும் விளங்கவில்லை. இவர்களை ஈடுகட்டும் வகையில் வலிமை வாய்ந்த பிரிவினராக நம்புதரி அந்தணர்கள் வளர்ந்திருந்தார்கள்! ‘ரிஷிபர்யனான’ (பரசுராமரை குறிக்கும் மலையாள சொல்) பார்க்கவ இராமன் தன் வலிமை வாய்ந்த கோடரியைக் கொண்டு நிறுவிய ‘பிரம்ம ஷேத்திரமாக’ மலை நாட்டை கேரள அந்தணர்கள் கொண்டாடினார்கள்; கொண்டாடுகிறார்கள். இவர்களது மூத்த குடியிருப்புகள் கேரளா முழுக்க 32 கிராமங்களில் வேரூன்றியிருந்தன. இவற்றுள் ‘பெருஞ்செல்லூர்’ முதலான கிராமங்கள் சங்ககாலம் முதல் அறியப்பட்டிருந்தவை. இந்த கேரள அந்தணர்கள் தத்தம் கிராமங்களில் பண்டைய ஆகம முறைப்படி கோயில்கள் அமைத்தார்கள். ஊருக்கு மேற்கே விஷ்ணு, கிழக்கே சிவன் ஆலயங்கள். இந்தக் கோயில்களுக்கான நிலங்கள், ‘சேரமான் பெருமாள்’களால் நிவந்தங்களாக வந்து சேர்ந்தன. கோயில் வழிபாடுகளைக் கண்காணிக்கவும், ஊரை நிர்வகிக்கவும் மகாசபை என்னும் அமைப்புகள் தோன்றின. இவற்றுள் அரசியல் வலிமை வாய்ந்த அமைப்பாக மகோதயபுரத்தின் ‘நாலுதளிச்சபை’ உருவானது. மகோதகையின் நான்கு திக்குகளிலும் அமைந்திருந்த மூழிக்குளம், ஜரணிக்குளம், பரவூர் மற்றும் இரிஞ்ஞாலக் குடை என்னும் அந்தண கிராமங்களில் அமைந்திருந்த கீழ்த்தளி, மேற்றளி, நெடியதளி, சிங்கபுரத்தளி என்ற நான்கு திருக்கோயில்களின் தளியதிகாரிகளைக் கொண்டிருந்த அமைப்பே ‘நாலுதளிச்சபை’. ஒவ்வொரு கோயிலில் இருந்தும் இரு தளி அதிகாரிகள் இந்த அமைப்பில் செயல்பட்டார்கள். இந்த ‘நாலுதளிச்சபை’, சேரமான் பெருமாளின் அந்தரங்க ஆலோசனைக் குழுவாக விளங்கியது! மேலே குறிப்பிட்ட நான்கு கிராமங்களும், கேரளா முழுக்க அமைந்திருந்த 32 கிராமங்களுக்கும் தலைமை செயலகமாக விளங்கியது! இவர்களது குரலே சேர நாட்டின் குரல்! தமிழகம் முழுவதும் அக்காலத்தில் பல்லாயிரக்கணக்கான கோயில்கள் இருந்தும், சேர நாட்டின் ‘நாலுதளிச்சபை’க்கு இணையான அரசியல் - சமுதாய அமைப்பு இங்கு தோன்றவேயில்லை! ஆனால், பல்லவ, சோழ, பாண்டிய தேசங்களில் அப்படி தோன்ற வேண்டும் என்று ‘நாலுதளிச்சபை’ பல நூற்றாண்டுகளாக முயன்றது! இதற்காகவே சாலை அல்லது சாலா என்றழைக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இது கிட்டத்தட்ட பல்லவர் காலத்தில் காஞ்சியில் இயங்கிய கடிகைக்கு சமமானது என்றாலும் நம்புதரி அந்தணர்களின் பின்புலத்தை ஒட்டி வேறுபட்டும் இருந்தன. இந்த வேறுபாடுகளில் குறிப்பிடத்தக்கது சாலைகளில் பயிற்றுவிக்கப்பட்ட ஆயுதப் பயிற்சி! இந்த ஆயுதப் பயிற்சி முறைகள் முதுபெரும் நம்புதரி ஆசான்களால் உருவாக்கப்பட்டு நுட்பமான முறையில் அந்தண மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டன. பயிற்சி எடுத்த அந்தண மாணவர்கள், ‘சட்டர்கள்’ அல்லது ‘சாத்திரர்கள்’ என்றழைக்கப்பட்டார்கள். பின்னாளில் தமிழக வழக்கத்துக்கு வந்த ‘சட்டாம் பிள்ளை’ என்ற சொல்லுக்கான வேர், ‘சட்டர்கள்’தான்! பயிற்சி பெறும் அந்தண மாணவர்கள் இடையே ‘கலங்கள்’ என்றழைக்கப்பட்ட பிரிவுகள் இருந்தன. பவிஷிய சரணத்தார் கலம், தைத்திரிய சரணத்தார் கலம், தலவகார சரணத்தார் கலம்... என வேதாகமங்களை ஒட்டி ஒவ்வொரு கலத்துக்கும் பெயரிடப்பட்டன. வேதம், வேதாந்தம், இலக்கணம், பண்டைய சாத்திரங்கள், அரசியல் விவகாரங்கள், மருத்துவம், விஞ்ஞானம், மாந்திரீகம், வர்மம், நுண்கலைகள்... என சகலமும் அந்தண மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டன. அரசர்கள் சாலைகளை பராமரிக்க நிலங்களை நிவந்தங்களாகக் கொடுத்ததால், இதற்கு ஈடாக அந்த அரசருக்கு தேவையான அமைச்சர்கள், தளபதிகள், போர் வீரர்களை சாலைகள் உருவாக்கிக் கொடுத்தது. ‘நான்தான் சிறந்தவன்... நான் சொல்வதே சரி... நான் எழுதுவதே வரலாறு... சிம்மாசனத்தில் தாராளமாக யார் வேண்டுமானாலும் அமரலாம்... ஆனால், அப்படி அமர்பவர்கள் என் சொல்படியே கேட்டு நடக்க வேண்டும்... வருவாய், வரிகளை தீர்மானிப்பது முதல் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்... என்ன செய்யக் கூடாது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் எனக்கே உண்டு...’ என சாலைகளில் பயிற்சி பெறும் ஒவ்வொரு அந்தண மாணவர்களும் நினைத்தார்கள். அப்படி நினைக்க வைப்பதற்காகவே விவரம் தெரியும் வயதுக்குள் சாலைகளுக்கு அனுப்பப்பட்டார்கள். எனவே அந்தண மாணவர்களின் சிந்தனை, நினைப்பு, செயல்... என சகலத்தையும் முதுபெரும் நம்புதரி ஆசான்களால் வடிவமைக்க முடிந்தது. இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும். சேர நாட்டின் - கேரளத்தின் - இப்படிப்பட்ட சமுதாய அமைப்பு தமிழகத்துக்கு எப்படி பொருந்தும்..? இதற்கும் இராஜராஜ சோழருக்கும் என்ன தொடர்பு..? இதற்கான விடை சேர அரசர்களுக்கும் தமிழக அரசர்களுக்கும் நிலவி வந்த அரசியல் உறவுகளில் புதைந்திருக்கிறது! பன்னெடுங்காலமாக சேர நாடு பல்லவ, சோழ, பாண்டியர்களோடு கொண்டிருந்த நெருங்கியத் தொடர்புகளால் கேரளத்தின் குறுநில மன்னர்களும் இதர பிரிவினரும் - குறிப்பாக அந்தணர்கள் - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிபெயர்ந்தனர். இவர்கள் அனைவருமே ‘சாலை’களுடன் தொடர்புடையவர்கள்! இக்குடியினரில் மிகவும் தொன்மை வாய்ந்தவர்கள் ‘தில்லை மூவாயிரவர்’ என சுந்தரமூர்த்தி பெருமானால் குறிக்கப்படும் சிதம்பரத்தின் தில்லைவாழ் அந்தணர்கள்! சோழ அரசர்கள் தில்லையம்பதியின் பெருமானை தங்கள் குலதெய்வமாக குறித்தனர். சோழ வம்சத்தவர் சக்கரவர்த்தியாக முடிசூடும்போது மணிமுடியை மன்னரின் முடியில் இருத்தும் உரிமை தில்லைவாழ் அந்தணர்களுக்கே இருந்தது! இந்த இடத்தில் தில்லைவாழ் அந்தணர்களின் வரம்பு மீறிய அதிகாரத்தைக் குறைக்க நந்திவர்ம பல்லவன் தில்லை ஆலயத்தில் பெருமாள் சிலையை வைத்ததும்... அதை எதிர்த்து தில்லைவாழ் அந்தணர்கள் கலகம் செய்ததையும்... பிறகு தில்லைவாழ் அந்தணர்களின் துர்போதனையை ஏற்று அந்த பெருமாள் விக்கிரகம் குலோத்துங்க சோழன் காலத்தில் கடலில் போடப்பட்ட நிகழ்வும்... இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மூண்ட சைவ - வைணவ மதக் கலவரங்களையும் நினைவில் கொள்வது நல்லது! போலவே தில்லை ஆலயத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தேவார ஓலைகளை இராஜராஜ சோழர் படையுடன் சென்று மீட்டு மக்களுக்கு கொடுத்த சம்பவத்தையும்! விஷயத்துக்கு வருவோம். சிதம்பரத்தை தவிர திருச்சிக்கு அருகில் அமைந்துள்ள பழுவூரிலும் சேர மரபினர் வாழ்ந்து வந்தனர். திருஞானசம்பந்தரின் பழுவூர்ப் பதிகம் இதை நிரூபிக்கிறது. தவிர, ‘மன்னுபெரும் பழுவூர்’ என்றே கல்வெட்டுகள் பழுவூரைக் குறிக்கின்றன. சோழர் காலத்தில் இப்பகுதி சேர மரபை சார்ந்த பழுவேட்டரையர்கள் என்னும் குறுநில மன்னரின் ஆளுக்கு உட்பட்டிருந்தது. சோழ அரசக் குலத்தவருடன் இவர்கள் மணவினைத் தொடர்புகள் வைத்திருந்தார்கள். இந்த பழுவேட்டரையர்களும் ‘சாலை’களுடன் தொடர்பு கொண்டவர்களே! பிற்கால சோழர்களுள் பெருவீரராக விளங்கிய முதலாம் ஆதித்த சோழர் காலத்தில் சோழ - சேர உறவு மிக நெருக்கமாக வளர்ந்தது. அப்போது சேர நாட்டை ஆட்சி செய்து வந்த ஸ்தாணு ரவியின் நெருங்கிய நண்பராக முதலாம் ஆதித்தர் விளங்கினார். இந்த சோழ - சேர உறவு முதலாம் ஆதித்தரின் மகனான முதலாம் பராந்தகர் காலத்தில் மேலும் பலப்பட்டது. ஸ்தாணு ரவியின் பேத்தியான கோக்கிழானடிகளையே முதலாம் பராந்தகர் மணந்தார். இந்த சேர இளவரசிக்கும் முதலாம் பராந்தகருக்கும் பிறந்தவர்தான் சோழ இளவரசரான இராஜாதித்தர். சோழ இளவரசர் தங்கள் வம்சத்தின் கொழுந்து என்பதால் சேர நாடே அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது. குறிப்பாக அங்கிருந்த ‘சாலை’கள்! தங்கள் அதிகாரத்தை சேர நாட்டில் நிலை நாட்டியது போலவே சோழ தேசத்திலும் நிறுவலாம் என ‘சாலை’களின் ஆசான்களான நம்புதரி அந்தணர்கள் திட்டமிட்டார்கள். சோழ சைன்யத்தின் வடதிசை தளபதியாக விளங்கிய இராஜாதித்தரின் படையில், சேர வீரர்களைக் கொண்ட தனிப்படை ஒன்று இயங்கி வந்தது. இப்படை வீரர்கள் அனைவரும் ‘சாலை’களில் பயிற்சி பெற்றவர்கள்! இராஜாதித்தரின் அந்தரங்க மெய்க்காப்பாளாராகவும் சேனானிநாயகமாக விளங்கியவரும் மலைநாட்டின் வள்ளுவ நாடுவாழிகள் குடும்பத்தை சேர்ந்த மாவீரரான நந்திக்கரைப்புத்தூர் வெள்ளிங்குமரன்தான்! (பார்க்க Travancore Archaeological Series Vol 1, Page 291). முதலாம் பராந்தகர் காலத்தில் உடையார்குடிக்கு அருகில் வீரநாராயணபுரம் என்னும் சதுர்வேதி மங்கல குடியேற்றமும் அதனைத் தொடர்ந்து அனந்தீசுவரம் என்னும் கோயிலும் உருவாகின. இப்பகுதியில் பலகாலமாகவே புகழ்பெற்றதொரு திருமால் கோயில் இருந்து வந்தது. ஆழ்வார்கள் இத்தலத்தின் வீரநாராயண பெருமாளை பாடியுள்ளனர். இப்படி கீழ்த்தளியான அனந்தீசுவரம், மேற்றளியான விண்ணகரக் கோயில் என்று நம்புதரி அந்தணர்களால் சேர நாட்டில் வகுக்கப்பட்ட இலக்கணத்துடன் தமிழகத்தில் - சோழ தேசத்தில் - முதன் முதலில் உருவான வீர நாராயண சதுர்வேதி மங்கலத்தில் கணிசமான அளவில் ‘சாலை’களால் பயிற்றுவிக்கப்பட்ட சேர நாட்டு அந்தணர்கள் குடியேறினார்கள். இந்த அந்தணர்கள்தான் - உடையார்குடி - பின்னாளில் இராஜராஜ சோழரின் அண்ணனான ஆதித்த கரிகாலனை கொலை செய்யப் போகிறார்கள்! இப்படி நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த சோழ - சேர உறவில் முதல் விரிசலை ஏற்படுத்தியது தக்கோலப் பெரும் போர். முதலாம் ஆதித்த சோழர் இராஷ்டிரகூடத்து இளவரசியை மணந்திருந்தார். இந்த இளவரசி வழியாக அவருக்கு கன்னர தேவன் என்ற மகன் பிறந்திருந்தார். இந்த கன்னரதேவன் பட்டம் ஏற்காமல் பராந்தகர் சோழர் தில்லைவாழ் அந்தணர்களின் ஆதரவுடன் சிம்மாசனம் ஏறியது இராஷ்டிரகூடர்களுக்கு பிடிக்கவில்லை. பகை முற்றி இராஷ்டிரகூடத்து மன்னர் மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்தார். இன்றைய அரக்கோணமான அன்றைய தக்கோலத்தில் சோழர் படை இராஷ்டிரகூடர்களை சந்தித்தது. இப்பெரும் போரில் கங்க அரசன் பூதுகன், யானை மீதிருந்த இளவரசர் இராஜாதித்தரை தாக்கிக் கொன்றார். நமது வம்சத்து இளவல் சோழ அரியணையில் அமரப் போகிறார் என்று கனவு கண்டு வந்த சேர மன்னர் - குறிப்பாக ‘சாலை’களின் ஆசான்களான நம்புதரி அந்தணர்கள் - இராஜித்தரின் மரணத்தை அடுத்து நிலைகுலைந்தார்கள். சோழ நாட்டின் அரசியல் நிலவரமும் இதன் பிறகு பலம் குன்றியது. வடக்கே இராஷ்டிரகூடர்கள் வலு பெற்றார்கள். தெற்கிலோ ஈழத்துடன் இணைந்து பாண்டியர்கள் பல்வேறு தொல்லைகளை கொடுத்தார்கள். இதற்கிடையில் சேர நாட்டுடன் தாய்வழியில் உறவு கொண்டிருந்த பாண்டிய அரசர் இராஜசிம்மர், மலைநாட்டில் அடைக்கலம் புகுந்து அங்கேயே காலமானார். பராந்தகருக்கு பின் சோழ அரியணை ஏறிய கண்டராதித்தர், அரிஞ்சய சோழர், அரிஞ்சயரின் புதல்வரான இரண்டாம் பராந்தகர் என்கிற சுந்தர சோழர்... என்று தொடர்ந்த சோழ இராஜ வம்சத்தில் சேர குலத்துடனான உறவு பழையபடி வலுவாக இல்லாமல் அதேநேரம் முற்றிலும் துடைக்கப்படாமலும் இருந்தது. இதற்குக் காரணம் சேர வம்சத்தை சேர்ந்த பழுவேட்டரையர்களுடன் சோழர்கள் நெருக்கமான மணவினை உறவு வைத்திருந்ததே. என்றாலும் இரண்டாம் பராந்தகர் என்கிற சுந்தர சோழர் காலத்தில் உரிய வயதை எட்டியிருந்த கண்டராதித்தரின் புதல்வரான மதுராந்தகருக்கு இளவரசர் பட்டம் சூட்டப்படவில்லை. மாறாக சுந்தர சோழரின் மூத்த மகனான இரண்டாம் ஆதித்தர் என்கிற ஆதித்த கரிகாலனுக்கு இளவரசு பட்டம் சூட்டப்பட்டது. இதை ‘சாலை’களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த உடையார்குடி அந்தணர்கள் ஏற்கவில்லை. இராஜாதித்தர் வழியே தாங்கள் நிறைவேற்ற எண்ணிய கனவை - சேர நாட்டைப் போன்ற சமுதாய அமைப்பை - மதுராந்தகர் வழியே நிறைவேற்றலாம் என அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். எனவே மதுராந்தகர் சிம்மாசனத்தில் அமராமல் ஆதித்த கரிகாலன் சோழ மன்னரானால் தங்கள் கனவே சிதைந்துவிடும் என்ற முடிவுக்கு வந்த உடையார்குடி அந்தணர்கள் - ‘சாலை’களுடன் ஏதோ ஒருவகையில் தொடர்பு கொண்டிருந்த தமிழக குறுநில மன்னர்களை ஒன்றிணைத்து ஆதித்த கரிகாலனை படுகொலை செய்தார்கள். இதனையடுத்து அவர்கள் எதிர்பார்த்தது போலவே மதுராந்தகர் சோழ சிம்மாசனத்தில் அமர்ந்தார். தனது சிற்றப்பா மதுராந்தகர், சோழ சிம்மாசனத்தின் மீது ஈடுபாடு கொண்டிருக்கும் வரை அதனை தன் மனதாலும் தீண்டுவதில்லை என ஆதித்த கரிகாலனின் தம்பியான அருள்மொழி என்கிற இராஜராஜர் திட்டவட்டமாக அறிவித்ததாக திருவாலங்காட்டுச் செப்பேடுகள் பதிவு செய்துள்ளன. படிப்படியாக பலவீனம் அடைந்து கொண்டிருந்த சோழ சாம்பிராஜ்ஜியத்தை மேலை சாளுக்கிய மன்னரான சத்யாச்ரயர் கி.பி.980ல் தாக்கியபோது, உத்தம சோழர் என்று அழைக்கப்பட்ட மதுராந்தகரால் அவரை வெற்றி கொள்ள இயலவில்லை. இத்தோல்வியின் முடிவில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் சோழ நாட்டில் நடந்தன. ‘சாலை’களின் ஆதிக்கத்தாலேயே சோழர்கள் பலவீனமடைந்திருக்கிறார்கள் என மற்ற தமிழக குறுநில மன்னர்கள் உணர்ந்தார்கள். வேறுவழியின்றி கி.பி.985ல் உத்தம சோழர் என்கிற மதுராந்தகர் பதவி விலகினார். இராஜராஜர் என்னும் அடைமொழியுடன் அருள்மொழி சோழ சிம்மாசனத்தில் அமர்ந்தார். பட்டம் ஏற்ற கையோடு இராஜராஜர் செய்த முதல் காரியம், தன் அண்ணன் ஆதித்த கரிகாலரின் படுகொலைக்கு காரணமாக இருந்த - ‘சாலை’களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த - உடையார்குடி அந்தணர்கள் அனைவரையும் - குழந்தை, பெண்கள், வயதானவர்கள் உட்பட - உடுத்திய ஆடைகளுடன் கால்நடையாக நடந்து நாடு கடக்கும்படி செய்ததுதான். உடையார்குடி அனந்தீஸ்வரம் திருக்கோயிலின் விமான மேற்குச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள இராஜராஜரின் இரண்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டு (Epigraphia Indica, Vol 21, No 27) இதற்கான தெளிவான சான்று. இராஜராஜ சோழர் வழங்கிய இந்தத் தண்டனையை தனிப்பட்ட முறையில் தங்களுக்கு வழங்கப்பட்டதாகக் கருதிய ‘சாலை’கள் மதுராந்தகர் என்னும் உத்தம சோழரின் மகனை சோழ சிம்மாசனத்தில் அமர்த்த திட்டமிட்டன. இதற்காக ஆதித்த கரிகாலனை போலவே இராஜராஜ சோழரையும் படுகொலை செய்யவும் உள்நாட்டில் குழப்பங்களை உருவாக்கவும் காய்களை நகர்த்தினார்கள். இதற்கு மேலும் ‘சாலை’களை விட்டு வைத்தால் சோழ தேசத்தின் - தமிழகத்தின் - எதிர்காலமே கேள்விக்குறியாகும்... சேர நாட்டின் சமூக அமைப்பு இங்கும் உருவாகும்... அதைத் தடுக்க வேண்டும் என்றே ‘சாலை’களின் தலைமையகமாக விளங்கிய ‘காந்தளூர் சாலை’ மீது இராஜராஜர் போர் தொடுத்தார். அங்கு பயிற்றுவிக்கப்பட்ட பாடங்களில் ஒரு பிரிவினரை - கலம் - ஒடுக்கினார். அதேநேரம், நம்புதரி அந்தணர்கள் மட்டுமே - சேர சமுதாயத்தை எல்லா இடங்களிலும் ஏற்படுத்த முற்படுபவர்களே - தங்கள் எதிரி என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய அவசியம் இராஜராஜருக்கு ஏற்பட்டது. எனவேதான் பழைய கோயில்களை புனரமைத்தார். புதிய ஆலயங்களை எழுப்பினார். அரசு பதவி, அதிகாரங்களில் ஆர்வம் செலுத்தாத மற்ற அந்தணர்களுக்காக ஏராளமான பிரம்மதேயங்களை உருவாக்கினார். ஒரு மன்னராக இப்படி தராசு முள் எப்பக்கமும் சாயாதபடி பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்தது. அதேநேரம் இப்படி பிரம்மதேயங்களால் பலனடைந்த அந்தணர்கள் ‘சாலை’ சட்டர்களாக மெல்ல மெல்ல மாறுவதையும் அவரால் தடுக்க முடியவில்லை. இராஜராஜர் காலத்தில் மட்டுமல்ல... அதன் பிறகு ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ‘சாலை’கள் தமிழகத்தில் கால் பதிக்கத் துடித்தன. அதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டன. இதனால்தான் பிற்கால சோழர்களில் பெரும்பாலானவர்கள் ‘காந்தளூர் சாலை’யை கலமறுத்தபடியே இருந்தார்கள். கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாகியும் ‘சாலை’கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. ‘நான்தான் சிறந்தவன்... நான் சொல்வதே சரி... நான் எழுதுவதே வரலாறு... ஆட்சியில் தாராளமாக யார் வேண்டுமானாலும் அமரலாம்... ஆனால், அப்படி அமர்பவர்கள் என் சொல்படியே கேட்டு நடக்க வேண்டும்... வருவாய், வரிகளை தீர்மானிப்பது முதல் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்... என்ன செய்யக் கூடாது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் எனக்கே உண்டு...’ என்று கருதும் ‘காந்தளூர் சாலை’யின் மாணவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கைப்பாவை வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் அவர்கள் செல்வதை கண்கூடாகப் பார்க்கலாம். தங்களை ஆலோசகராக, வழிகாட்டியாக ஏற்காத அரசியல் கட்சியை, தலைமையை எந்தளவு அவதூறு செய்கிறார்கள்? ‘என்னைத் தவிர ஒருத்தனுக்கும் எதுவும் தெரியாது...’ என்ற கர்வமும் உடல்மொழியும் ‘காந்தளூர் சாலை’ சட்டகர்களிடம் வெளிப்படுவதை கணம்தோறும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ‘தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும்...’ என்று நினைக்கும், பேசும், எழுதும் ‘காந்தளூர் சாலை’ சட்டகர்களை எதிர்க்க தந்தை பெரியார் எடுத்த ஆயுதம் அற்புதமானது மட்டுமல்ல; வலுவானதும் கூட. ஆம். ‘உங்களுக்கு எதுவும் தெரியாது... நீங்க திருடங்க... பொய் சொல்லி ஏமாத்தறவங்க... ஃபிராடு...’ என்ற முழக்கத்தைக் கண்டுதானே ‘காந்தளூர்சாலை’ சட்டகர்கள் அலறுகிறார்கள். ‘காந்தளூர் சாலை’ என்பது இன்று குறியீடு. இது எந்தளவு உண்மையோ அதே அளவுக்கு நிஜம், இப்போது நம்புதரி அந்தணர்கள் மட்டுமல்ல... எல்லா சமுதாய மக்களும் ‘சாலை’களில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்பது. சற்றே ஏமாந்தால் சேர நாட்டின் சமுதாய அமைப்பு தமிழகத்திலும் வேரூன்றி விடும். மக்களுக்கான ஆலயங்கள் ‘சட்டர்களின்’ பிடிக்கு சென்றுவிடும். வாக்களிப்பது நம் உரிமை. உரிமையை பறிகொடுக்காமல் இருக்க ‘காந்தளூர் சாலை’க்கு எதிராக வாக்களிப்போம்!

Tuesday, March 02, 2021

இதெல்லாம் ஒரு செக்ஸுவல் ஹாரஸ்மெண்டா

 

ராஜேஷ் தாஸ் தனக்கு கீழ் வேலை செய்த பெண் காவல் அதிகாரியிடம் செக்ஸுவலாக அத்துமீறியதைத் தொடர்ந்து எஃப் ஐ ஆர் போடப்பட்டு இருக்கிறது. அதை மேம்போக்காகப் படித்துப் பார்த்தேன்.
காரில் தனக்குப் பக்கத்தில் ஏற்றிக்கொண்டு அந்தப் பெண் அதிகாரி சாய்ந்து கொள்ள தலைக்கு குஷன் வைக்கிறார். அந்தப் பெண் அதிகாரியின் கைகளைப் பற்றிக்கொண்டு பேசுகிறார். கடைசி வரை ஐயா "கைவிடவில்லை". தான் முன்பே எடுத்த அவரின் புகைப்படத்தைத் தன் மொபைலில் காட்டுகிறார். இப்படி போகிறது ரிப்போர்ட்.
இதைப் படிக்கும் ஆண்களுக்கும் , சில பெண்களுக்கும் இதெல்லாம் ஒரு செக்ஸுவல் ஹாரஸ்மெண்டா என்று தோன்றும். அந்தப் பெண் அதிகாரி ஓவராக சீன் போடுவதாகத் தோன்றும். ஆனால் இதையெல்லாம் தைரியமாகப் புகார் அளிக்கத்தான் வேண்டும். இல்லையென்றால் , அமைதியாக இருப்பதை சம்மதமாக எடுத்துக்கொண்டு ,அடுத்த முறை முலையைக் கசக்கி விடுவார்கள். அப்போது அந்தப் பெண் எதிர்க்குரல் எழுப்பினால் ,
கையைப் புடிச்சப்ப ஏன் சும்மா இருந்தா ? இப்ப ஏன் சீன் போட்றா ? என்று சமூகமே கேட்கும்.
பெண் மனசு ஆழம் என்று பஜனை செய்துகொண்டிருந்தார்கள். எனக்கு சக ஆண்கள் இப்போது படு மர்மமான ஆசாமியாகத் தெரிகிறார்கள். பல ஆண்களுக்கே இந்த விஷயம் தெரியாது. ஆண்களிடம் சகஜமாக இயல்பான மனிதன் போல பழகிக்கொண்டிருக்கும் ஒரு ஆண் , பெண்ணிடம் முற்றிலும் வேறான ஒரு மனிதனாகப் பழகுகிறான். பாதிக்கப்பட்ட பெண் அவனைப்பற்றி புகார் சொன்னால் , உடன் பழகிய ஆண்களால் அதை நம்பவே முடியாது. "அவனா?" என்று ஆச்சர்யப்பட்டு , புகார் சொன்ன அந்தப் பெண்ணையே சந்தேகப்படுவோம்.
எனக்கு பர்ஸ்னலாக தெரிந்த சில அனுபவங்களைச் சொல்கிறேன்.
என் தங்கை மருத்துவர். ஒரு மைதானத்தில் காலையில் ஓட ஆரம்பித்து இருக்கிறார். மூன்றாவது நாளே அரசுப் பயிற்சியாளர் என அறிமுகப்படுத்திக்கொண்டு ஒரு நபர் வழிந்திருக்கிறார். தினமும் பேச ஆரம்பித்து இருக்கிறார். எடுத்த உடனே நீங்க அழகா இருக்கீங்க என்றவர் , உங்க ஸ்ட்ரக்ச்சர் செமையா இருக்கு என்று சொல்லி, போன் நம்பர் கேட்டிருக்கிறார். தங்கை மறுத்து விட்டு ஓட ஆரம்பித்து இருக்கிறார். மறுநாள் இரவு தங்கையின் மொபைலுக்கு போன் வருகிறது. அந்த ஆசாமிதான். எப்படி நம்பர் கிடைத்தது என்று பார்த்தால் , மெனக்கெட்டு அவள் பணிபுரியும் அரசு மருத்துவமனைக்கு வந்து அவளின் போன் நம்பரை வாங்கிச்சென்றிருக்கிறான். தொடர்ந்து மெசேஜ் டார்ச்சர்.
வேறு ஒரு திருட்டு பிரச்சனைக்காக நான் தான் அவளை காவல் நிலையம் செல்லச் சொன்னேன். அவள் தயங்கினாள். நீயே இப்படி பயந்தா எப்படி ? இப்பல்லாம் நிறைய நேர்மையான இளம் அதிகாரிகள் வந்து விட்டார்கள். அரசு மருத்துவர் என்று சொல். டீஸண்டாக நடந்து கொள்வார்கள் என்றேன். போனாள், புகார் கொடுத்தாள். உதவி ஆய்வாளர் மரியாதையாக "மேடம் " "மேடம் " என்று அழைத்து பரபரப்பாக துப்பு துலக்கியிருக்கிறார். இரண்டு நாட்கள் தான். துப்பு துலங்கவில்லை . அடுத்த நாளில் இருந்து அந்த உதவி ஆய்வாளர் , குட் மார்னிங்க் மெசேஜ் அனுப்ப ஆரம்பித்து இருக்கிறார். குட் நைட் , நாம ஃபிரண்ட்ஸா இருக்கலாமா ....இப்படியாகத் தொடர்ந்து டார்ச்சர் வர பிளாக் செய்து விட்டாள்.
என் அலுவலகத்தில் மேனேஜர் ஒரு பெண். அவர்தான் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார். இடத்தின் உரிமையாளர் பெரும் பணக்காரர்.வயது 79 இருக்கும். இந்த பெண்தான் மாதாமாதம் அவரிடம் வாடகை செலுத்துவார். ஒருநாள் , திடீரென்று சார் , இனிமே நீங்களே வாடகை கொடுங்க என்றார். ஏங்க, என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு , அவரு ஒரு மாதிரியா பிஹேவ் பண்றாரு சார் என்றார். நாகரீகம் கருதி அதை நான் விளக்கமாகக் கேட்கவில்லை. ஆனால் மகள் , மகள் மாதிரி என்று சொல்லிக்கொண்டு ஐயா ஏதோ விளையாடி இருக்கிறார். அடுத்த மாதத்தில் இருந்து நான் வாடகை கொடுக்கப் போனேன். இந்தப் பெண் அவருடன் பேசுவதை நிறுத்தி விட்டார். அடுத்த இரண்டு மாதங்களில் எங்களை காலி செய்யச் சொல்லி விட்டார்.
ஒரு பெண்ணுடன் நாம் உடன் இருக்கையிலேயே கிடைக்கும் சைக்ளிக் கேப்பில் அத்து மீறும் ஆண்களும் இருக்கிறார்கள்.
ஒரு தோழியுடன் டீ குடிக்கச் சென்றிருந்தேன். ரெண்டு ஜிஞ்சர் லெமன் சொல்லி விட்டு காத்திருந்தேன். அந்த ஆசாமி , தலையைக் கூட ஆட்டவில்லை. அதாவது நான் ஒருவன் டீ ஆர்டர் செய்ததே தெரியாத மாதிரி , நான் என்ற ஒருவன் அங்கே இல்லாதது மாதிரி பரப்பிரம்மம் போல டீ போட்டுக் கொடுத்தார். நான் சீக்கிரம் குடித்து விட்டு ரெண்டு இழுப்பு இழுக்கலாம் என வெளியே வந்து விட்டேன்.
தோழி வெளியே வந்து , அந்த டீ மாஸ்டர் ஓவரா பேசறான் என்றார். ஜிஞ்சர் டீ பெண்களுக்கு அகாதாம்,அவரு உங்களுக்கு தப்பா வாங்கிக் குடுத்துட்டாரு. நீங்க லெமன் டீ தான் குடிக்கணும். உங்க மூஞ்சி அழகா இருக்கு. லெமன் குடிச்சா இன்னும் பளபளப்பா மாறும்.டயட்ல இருக்கீங்களா ? யோகா பண்றீங்களா ? உங்க உடல் வாகுக்கு ....இப்படியே போட்டுத் தாக்கி இருக்கிறான்.
ஒரு முறை மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது ஒரு பப்புக்கு போனோம். கர்ப்பிணி குடிக்கலாமா என்று கொந்தளிக்க வேண்டாம். அவள் குடிக்கவில்லை. அந்த அதிரும் இசையில் குழந்தை துடிக்கிறதா என்று சும்மா ஜாலியாகப் பார்க்கலாம் என்று போனோம். கொஞ்ச நேரம் இருந்து விட்டு வந்து விடலாம் என்றுதான் திட்டம். ஒரு பியர் நான் மட்டும் குடித்துவிட்டு பில் சொல்லி விட்டு ரெஸ்ட் ரூம் போனேன். திரும்பி வந்து பார்ப்பதற்குள் ஒருவன் நம்பர் கேட்டிருக்கிறான். ஒருவன் டிரிங்க் ஆர்டர் பண்ணவா என்றிருக்கிறான். நீங்க க்யூட்டா இருக்கீங்க , நாம வெளில மீட் பண்ணலாம் என்றிருக்கிறான். இதெல்லாம் நான் மூத்திரம் பேயும் 3 நிமிட கேப்பில். நான் திரும்பி வருகையில் இதற்கான தடயமே இல்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான அறிகுறியே இல்லை. இதற்கே அவள் 8 மாத கர்ப்பத்தில் வயிற்றைத் தூக்கி வைத்துக்கொண்டு இருந்தாள்.
நாம் பழகும் சமூகத்தில் நம் கண்ணுக்கே புலப்படாமல் நொடிகளில் இதைப்போல அத்துமீறி விட்டு அமைதியாகி விடுவார்கள்.
பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கையில் , ஓலா , ஊபர் , ஆட்டோக்களில் செல்கையில் , ஷாப்பிங்க் செய்கையில் , மருத்துவமனைக்குச் செல்கையில் , பொதுக்கழிப்பிடம் செல்கையில் என எங்கும் பெண்களிடம் அத்துமீற ஆண்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். நம் கண்ணுக்கேத் தெரியாது.
என் தங்கை பரிதாபமாகச் சொன்னாள். இந்த தடியனால பாருண்ணா நான் ஓடறதையே நிறுத்திட்டேன்.
இதைப்போல பல அடிப்படைச் செயல்களையே பெண்கள் இதைப்போன்ற அத்துமீறல்களால் நிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.
அதனால் சின்ன அத்துமீறல் என்றாலும் புகார் அளித்தால்தான் , இதற்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும். டென்ஷன் இல்லாமல் பெண்கள் பொதுவெளியில் தங்களுக்குத் தேவையான அடிப்படைச் செயல்களையே செய்ய முடியும். இப்போது ஆரம்பித்தால்தான் இன்னும் ஒரு 100 வருடங்கள் கழித்து கொஞ்சம் மாற்றம் வரும்.
பி.கு: மென்மையான சீண்டல்கள் என்று வகைப்படுத்துவதால் இந்த வகை சீண்டல்களைக் குறிப்பிட்டு இருக்கிறேன். வன்மையான சீண்டல்கள் பல இருக்கின்றன. அது தனி ஏரியா.

Sunday, November 01, 2020

ஜப்பான் ஒழித்த சாதி



 
 
100 ஆண்டுகளுக்கு முன்பும் ஜப்பான் நாட்டிலும் தீண்டாமை தலைவிரித்தாடியது
கீழ் சாதியினர் என்ற வார்த்தைக்கு ஈடாக ஜப்பானிய மொழியில் 'புராக்குமீன்' (Burakumin) என்று கூறி சில மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.
இந்தியாவில் இருப்பது போல அவர்களையும் "சேரி" களிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் மட்டுமே வைத்திருந்தனர்
அவர்களை தொட்டால் தீட்டு, வீட்டுக்குள் வந்தால் தீட்டு என்ற அனைத்து சாதிய அடக்குமுறைகளுமே இருந்தது
அவர்களுக்கு செருப்பு, தோல், சாக்கடை கழுவுதல் சார்ந்த தொழில்கள் மட்டுமே தரப்பட்டது.
1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் முடிவில் ஜப்பான் இரண்டு அணு குண்டுகளால் படு தோல்வியடைந்த பிறகு குறைவான மக்கள் தொகையில்,
பொருளாதாரமற்ற சூழ்நிலையில் திக்கு முக்காடியது...
இனி ஜப்பான் அவ்வளவு தான், சரித்திரத்தின் பக்கங்களில் காணாமல் போய்விடும் என்று உலகம் உச்சுக்கொட்டியது.
காலங்காலமாக ஆண்ட பரம்பரையாக இருந்து, நாட்டை உலகப்போரில் சீர்குலைத்ததற்கு மன்னர் "ஹிரோஹிட்டோ' (Hirohito) பொதுமன்னிப்பு கேட்டு ஆட்சி அதிகாரத்திலிருந்து விலகி கொண்டார்...
அவருக்கு பதில் போர்களில் பெரும் பங்கு வகித்த அவரது மந்திரி 'டோஜோ' (Tojo) போர் வெறியை தூண்டியதற்காக தூக்கிலிடப்பட்டார்...
(அப்பவும் மன்னர்களே தப்பினர் அவரின் எடுபுடிகளான மந்திரிகள் மாட்டிக்கொண்டனர்)
பின்னர் வந்த மக்களாட்சி முறை ஜப்பானிய மக்கள் மத்தியிலுள்ள சாதி பிரிவினைகளை முதலில் ஒழித்தது..
ஜப்பான் வளர வேண்டுமென்றால் அனைவருமே 'ஜப்பானியர்' என்ற சொல்லை தவிர 'நான் சாமுராய் இனம், என்‌ பரம்பரை வீரப்பரம்பரை, நான் அவன் நான் இவன்' போன்ற வீண் பெருமைக்கு இனி இடமில்லை என்று திட்டவட்டமாக நின்றது
பொது மக்களின் வேலை நேரத்தை அதிகரித்தது..விடுமுறைகளை குறைத்தது...
புராக்குமீன்களை ஊருக்குள் அழைத்தது...ஊரார் அனைவருக்கும் ஒரே கல்வியை தந்தது...
சாதிய புனைப்பெயர்களை அழித்தது...உலக நாடுகளின் பண உதவியுடன் ஜப்பானியர் அனைவருமே தம் தம் திறமையை வைத்து ஏற்றுமதி தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் தந்தது...
அமெரிக்காவுடனும் ஐரோப்பிய நாடுகளுடனும் தொழில் ரீதியாக கைகோர்த்து நின்றது... முதலாளித்துவமாக வெளியே தெரிந்தாலும் உள்ளே சிறந்த சோசலிச கொள்கை கொண்ட நாடாக பரிணமித்தது.
"ஜப்பானிய நாட்டில் தயாரிக்கப்பட்டது"(Made in Japan) என்றால்
அதன் தரமே உலக நாடுகளின் தரத்தை விட உயர்ந்த தரமாக இருக்க வேண்டும்
என்பதில் எள்ளவும்
விட்டுகொடுக்கவில்லை
நாடு மெல்ல மெல்ல முன்னேறியது.
இத்துபோன பழைய பெருமைகள் பேசி, எங்கள் சாதி, எங்கள் பரம்பரை, எங்கள் இனம் என்று முட்டுகட்டையாக கூவிய சில பழமைவாதிகளை ஈவிரக்கமின்றி கைது செய்து கடுமையாகக் தண்டித்தது,
ஆன்மீகத்தை விட அறிவியல் சார் நாத்திகத்தையே முதல் கொள்கையாக பாவித்தது.
கலப்பு சாதி திருமணங்களை வலு கட்டாயமாக்கியது,
சம்பந்தி வீட்டார் என்ன சாதி? நம் மேனேஜர் என்ன சாதி? சக பணியாளர் என்ன சாதி? எதிர் வீட்டுக்காரன் என்ன சாதி ? என்று மோப்பம் பிடிப்பதை அரசாங்கம் தண்டனை குற்றமாகவே மாற்றியது,
சாதியை பற்றி பேசினாலே கடும் தண்டனை என்பதால் வெறும் 30 ஆண்டுகளில் கடை சாதியான புராக்குமீன்
இரத்தமும் ஆண்ட சாதியான சாமூராய் இரத்தமும் அனைத்து ஜப்பானியர் உடலிலும் ஓடியது.
விளைவு...??
இந்தியா இன்னமும் 100 ஆண்டுகளில் வளரமுடியாத சமூக வளர்ச்சியை பெற்று இன்று ஜப்பான் நாம் எட்ட முடியாத தூரத்தில் உயர்ந்து நிற்கிறது‌.
"புராக்குமீன்" என்ற வெறுப்பை ஒரு கடந்தகால கனவாக ஜப்பான் மக்களிடம் மறக்கடித்து சாதி பிரிவினைகளை வென்று உலக நாடுகளில் சிறந்த மக்கள் மேம்பாடான முதல் 10 நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்கிறது‌.
நாமும் அறிவியல்சார் நாத்திகமும்,
மக்கள் மேம்பாடுமே
எங்களின் இரு கண்கள் என்போம்,

Friday, October 02, 2020

உத்திரப்பிரதேசம் சென்றிருக்கிறீர்களா?

 உத்திரப்பிரதேசம் சென்றிருக்கிறீர்களா?
நிலவுடமையின் கோர முகத்தை அங்கு காணலாம்.
அங்கு வீடுகளின் உயரத்தைக் கூட சாதிதான் தீர்மானிக்கிறது.

தாக்கூரின் வீடு பார்ப்பானின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், யாதவர்களின் வீடு தாக்கூர்களின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க  வேண்டும், தலித்துகளின் வீடுகள் யாதவர்களின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், முசாகர்களின் வீடுகள் தலித்துகளின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும்.

முசாகர்கள் வயலில் இருக்கும் எலியை பிடித்து உணவாக உண்பார்கள். எலியைத் திண்பதால் அவர்களது வீடுகளும் எலி நுழைவதைப் போலவே இருக்க வேண்டும் என்பது இன்றைய தேதி வரை அங்கு நீடிக்கும் ஏற்பாடு.
கதவுகளும் அவ்வாறே அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதால், முசாகர்களின் வீட்டுக்குள் நுழைவது என்பது எலி வலைக்குள் நுழைவது போலத்தானிருக்கும்.

இந்த மக்கள் தான் சாதிக் கொடுமையால் ஊர்களை விட்டு ஓடி, குடும்பம் குடும்பமாக டெல்லி, நொய்டா போன்ற இடங்களில் பிளாட்பார வாழ்க்கை நடத்துபவர்கள்.

குடியிருப்புகள் அமைந்திருக்கும் திசைகூட காற்றின் திசைக்கு ஏற்ப தான் இருக்க வேண்டும். அதாவது தலித்துகளின் குடியிருப்பைக் கடந்து மேல்சாதியினரின் குடியிருப்புக்குக் காற்று கூட செல்லக் கூடாது. ஓலைக் குடிசையாய் இருந்த தனது வீட்டை ஒரு முசாகர் காரை வீடாக கட்டியதற்காக சமீபத்தில் அதை இடித்துத் தள்ளிய செய்தி வந்தது.

தமிழகத்தில் பெரியார் என்ன செய்தார் என்பதை இதிலிருந்து பொருத்திப் பார்க்கலாம்.

Tuesday, September 01, 2020

தமிழர்களிடம் நாலு காசு கையில் சேர்ந்தால்...

தமிழர்களிடம் நாலு காசு கையில் சேர்ந்தால் சில விடயங்களில் தேடிப்போய் தூக்கி சுமப்பார்கள்.
*ஜாதி சங்கத்தில் உறுப்பினராக இணைந்து ஆண்ட பரம்பரை கனவில் மிதப்பது.
*கோவில் கட்டுவது(சாய்பாபா இவர்களின் லேட்டஸ்ட் க்ரேஸ்)
*விட்டிற்கு ஆரிய புரோகிதர்களை அழைத்து யாகம் வளர்த்து, அவர்களின் காலில் வயது வித்யாசமில்லாமல் விழ்ந்து வணங்குவது.
*சாமிகளின் பேருக்கு பின்பு "ஸ்ரீ" என்று போட்டு ஆரிய தூய்மைவாதம் காட்டுவது.
*ஞாயிற்று கிழமை தவிற மற்ற நாட்களை எல்லாம் சுத்த சைவ நாட்களாக மாற்றிக்கொண்டு பஜனை பாடுவது.
*கையில் ராசிக்கல் போட்டுக்கொள்வது.ஒவ்வொரு ராசி கல்லுக்கு ஒவ்வொரு கோளுக்கு தொடர்பு இருக்கிறது என்று WhatsApp விஞ்சானம் பேசுவது. சிலர் பத்து விரலுக்கு பன்னிரெண்டு ராசிக்கும் ராசிக்கல் போட்டுக்கொள்கிறார்கள்.
ஏன் அப்படி?அதாவது பன்னிரெண்டு கோளையும் நட்பு சக்தியாக வைத்துக்கொள்வது.
*அரசு பள்ளி கல்லூரியில் படித்து,இட ஒதுக்கீட்டை அனுபவித்து பல்நாட்டு நிறுவத்தில் வேலை கிடைத்த பின்பு ஆரியர்களிடன் இணைந்து " இட ஒதுக்கீட்டால் வீழ்ந்தோம் ஒறவே" என்று நரி ஊளையிடுவது.
*தன் பிள்ளைகளை ICSE சேர்த்துவிட்டு சூத்திர ஜாதி வன்முறையை,சக மனிதர்களை தன் முன்னோர்கள் இழிவாக நடத்தியதை ஜாதி பெருமையாக ஊட்டி வளர்ப்பது.அவர்களின்
உழைப்பை திருடி தின்றதை கௌரமாக நினைப்பது.
"நாய் வளர்ப்பு(அரை டவுடர் மாட்டிக்கொண்டு ஏரியாவில் நாய் மேய்த்து " நாங்களும் வி.ஐ.பி." தான் என்று கெத்து காட்டுவது)
*இறுதியில் அக்ரஹாரத்தில் நமக்கொரு வீடு கிடைக்குமா என்று அலைந்து திரிந்து அரை பார்ப்பனராக மாறுவது.

Saturday, August 22, 2020

அங்கே பார்ப்பனியம் கோரைப்பல் தெரியச் சிரிக்கிறது. நாமோ கொழுக்கட்டைக்கு நாக்கைச் சப்புக் கொட்டுகிறோம்.

 

 
சங்க இலக்கியத்திலோ சிலப்பதிகாரத்திலோ விநாயகரைப் பற்றி ஒரு சொல் இல்லை. தமிழகத்தின் மிகப்பழைய விநாயகரான பிள்ளையார்பட்டி தேசிகவிநாயகர் (பல தேசங்களுக்கும் சென்று வர்த்தகம் செய்வோர் தேசிகர். அநேகமாக இன்றைய மகாராட்டிரப் பகுதியிலிருந்து விநாயகர் வழிபாட்டை தேசிகர்கள் கொண்டு வந்திருக்க வேண்டும்) கூட நான்காம் நூற்றாண்டளவினதான புடைப்புச் சிற்பம் தானாம். அதிலும் கூட யானைக்கான கூறுகளே அதிகம் என்கிறார் பேரா.தொ.பரமசிவன்.
பரஞ்சோதியார் வாதாபியைத் தீக்கிரையாக்கி வெற்றிச் சின்னமாகக் கொண்டுவந்து காஞ்சியில் நிறுவிய வாதாபி கணபதியும் மிகப்பழைய விநாயகர் என்கிறார்கள். எதைக் கொண்டு வந்து வைத்தாலும் பஜனை பாட ஒரு கூட்டம் இங்கே உண்டு. "வாதாபி கணபதிம் பஜே" என்ற ஒரு பிரபலமான கீர்த்தனை உண்டு.
புத்தர் கடவுளாக்கப்பட்ட பிறகு அவரது பிறப்பை விதந்தோதும் கதைகள் பிறந்தன. அதிலொன்று அவரது தாயார் மாயாதேவியின் வயிற்றில் அவலோகிதரான போதிசத்துவர் ஒரு வெள்ளையானை வடிவில் வந்து கருவாகத் தங்கினார் என்கிறது. இதன் காரணமாக, புத்தம் தழைத்தோங்கிய காலத்தில், அரசமரத்தடியில் யானைச் சிலையை நிறுவி வழிபடும் வழக்கம் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
வைதீகமதம் தலையெடுத்த பொழுது அது யானைச் சிலையை அப்புறப்படுத்திவிட்டு விநாயகரை நிறுவியது என்றும் அதற்காகப் பார்வதி-அழுக்குருண்டை-பாத்ரும் காத்தல்-சிவனுடன் சண்டை- கழுத்தறுப்பு-யானைத்தலை ஒட்டல்-விநாயகர் பிறத்தல் என்று கதை புனைந்து கொண்டது என்கிறார்கள். இந்தக் கதை தான் அடியேன் முதன்முதலாக வாசித்த தொடர். இரண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்ததாக நினைவு. அழகழகான படங்களுடன் சிறுவர் மலரில் வெளியாகிப் பரவசப்படுத்தியது.
இன்னொரு கருதுகோள், அரசமரத்தடியில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுப் பரவலாக வழிபடப்பட்டன. ஆனால் பௌத்தத்தை வீழ்த்திய வைதீகம், அந்த புத்தர் சிலைகளுக்குப் பதிலாக யானைத்தலையும் மனித வடிவும் கொண்ட விநாயகரை அமர்த்தியது என்கிறது.
ஆனால் எனக்கென்னவோ இந்தக் கருதுகோள்களில் முழுஉண்மை இருப்பதாகப்படவில்லை. விநாயகர் கதை பௌத்த வீழ்ச்சியை மட்டுமே சுட்டி நிற்பதாகத் தெரியவில்லை. இன்னொன்றின் வீழ்ச்சியையும் அது சுட்டி நிற்கிறதாகவே படுகிறது.
ஆசீவகத்தின் சின்னம் யானை. ஆசீவகத்தின் கடவுளரான ஐயனார்களின் வாகனமும் கூட. பௌத்தம் வீழ்ந்த பின்னும் கிட்டத்தட்டப் பதினான்காம் நூற்றாண்டு வரை உயிரைப் பிடித்துக் கொண்டு இருந்த மதம் ஆசீவகம். புத்தர் காலத்தில், புத்தரே பொறாமைப்படும் அளவிற்கு அந்த மதம் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்திருக்கிறது.
சிவன் ஆனை அரக்கனைக் கொன்று அதன் தோலைப் போர்த்துக் கொண்டு கஜசம்ஹாரமூர்த்தி ஆனான் என்னும் கதை சைவம் ஆசீவகத்தை அழித்ததன் உருவகம் தானே? திருநாவுக்கரசர் ஆயிரம் ஆசீவகர்களை யானைக்காலால் இடறச் செய்தார் என்கிறது பெரியபுராணம். மதுரையில் திருஞானசம்பந்தரும் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் கூன்பாண்டியனை மனம்மாற்றிக் கைக்குள் போட்டுக்கொண்டு எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றிக் கொன்று ஒழித்தார்கள் அல்லவா? அந்த எட்டாயிரம் பேரில், ஜைனர்களுடன் ஆசீவகர்களும் உண்டு என்று கொள்வதே மதி! மதுரையைச் சுற்றிக் காணக்கிடைக்கும் கற்படுகைகள் பலவும் ஆசீவகர்களுக்கு உரியவை என்கின்றன அண்மை ஆய்வுகள்.
வைணவம் ஆசீகத்திற்கு ஆதரவளித்திருக்கிறது. முதலை, காலைக் கவ்வியதும் 'ஆதிமூலம் ஆதிமூலம்' என்று அபயக்குரல் எழுப்பிய ஆனையை மகாவிஷ்ணு பறந்துவந்து காப்பாற்றினார் எனும் கதை இதை விளக்கும். ஐயனாருக்கு நாமம் போடும் பழக்கத்தை எண்ணிப்பார்க்கலாம். ஆனால், விநாயகர் புராணத்தின்படி வைணவமும் கூட ஆசீவகத்தை எதிர்த்திருக்கிறது.
விநாயகர் புராணத்தின்படி, சிவனால் தலை துண்டிக்கப்பட்ட பார்வதி பாலனை உயிர்பிக்கத் தேவர்கள் காட்டிற்குள் செல்கிறார்கள். அவர்களை எதிர்க்கும் முதல் விலங்கின் தலையைக் கொய்துவரவேண்டும் என்பது ஈஸ்வரன் ஆணை. அப்படி எதிர்த்து வந்த களிறின் தலையைக் கொய்வது விஷ்ணுவின் சக்கரம்!
இங்கே, சாக்தம், சைவம், வைணவம் மூன்றும் கூடி விநாயகனை உண்டாக்குகின்றன. இதில் சைவத்தின் ஆணைப்படி, வைணவம் ஆசீவகச் சின்னமான யானையின் தலையைத் துண்டிக்கிறது. அந்தத் தலையைத் தலையற்ற புத்தர் உடலில் சைவம் பொருத்துகிறது. ஆசீவகமும் பௌத்தமும் சேர்ந்த ஒரு கலவையான தெய்வம் உருவாகிறது. இப்போது அந்த தெய்வத்தை ஆசீவகமும் உரிமை கோரமுடியாது. பௌத்தமும் கொண்டாட முடியாது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! வைதீகம் புத்தரையும் ஆசீவகத்தையும் இணைத்து ஸ்வீகரித்துக்கொண்டது. காரணம் வெகுமக்களிடமிருந்த பௌத்த ஆசீவக ஆதரவை நைச்சியமாக ஒழித்துக்கட்ட வைதீகம் செய்த வழக்கமான புரட்டாகவே இதை நான் பார்க்கிறேன்.
விநாயகரை ஞானக் கடவுள் என்கிறார்கள். வைதீகத்திற்கும் ஞானத்திற்கும் ஸ்நானப் ப்ராப்த்தி கூடக் கிடையாது. பொய்யும் புனைசுருட்டும் வஞ்சமும் சூழ்ச்சியும் நிறைந்தது அது. ஆனால் பௌத்தமும் ஆசீவகமும் உண்மையிலேயே ஞானத்தை போதித்த மதங்கள். அவற்றின் கூட்டான விநாயகரை ஞானக்கடவுளாகச் சொல்வதில் வியப்பொன்றும் இல்லை.
ஜெயமோகன், சிலப்பதிகாரத்தைத் திரியோ திரி என்று திரித்துக் 'கொற்றவை' எழுதினார். அதில் கதை தொடங்குவது குமரிக்கண்டத்தில்! அங்கே சிவனின் மூத்த மகனாக, ஞானக்கடவுளாக வருவது யார் தெரியுமோ? ஆனைத்தலை விநாயகர்! வைதீகப் புரட்டை எங்கு கொண்டுபோய் வைக்கிறார் பாருங்கள்! தமிழின் பேரெதிரி, தமிழரைக் காட்டிக் கொடுக்கும் புல்லுருவி தான் இன்றைக்குத் தமிழின் நம்பர் ஒன் ரைட்டர்!
ஆனால், வெகுமக்களைப் பொறுத்தவரை இந்தக் கதைகளுக்கு எந்தப் பொருளும் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை பிள்ளையாருக்கு உருவம் கிடையாது. ஒரு பிடி மாட்டுச் சாணமோ, ஒரு உருண்டை மஞ்சளோ போதும். பிள்ளையாராக்கி விடுகிறார்கள். தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி வெகுமக்களிடையே பிரபலமானது மிக அண்மையில் தானே? அதற்கும் முன்புவரை அவர்களைப் பொறுத்தவரை விநாயகர் என்பவர் அவர்களது கையால் உருவாகும் விருப்பத்திற்குரிய தெய்வம். அது புத்தரா ஐயனாரா என்று கூடக் கவலைப்பட்டதில்லை. அவர்களது முதல் பூசைக்குரிய கடவுளும் அவர் தான்.
எங்கள் பகுதியில் நிலாப்பிள்ளை என்று ஒரு அழகிய திருவிழா ஒன்று உண்டு. அதில் பிள்ளையாரைப் பற்றிப் பாடும் கும்மிப்பாடல் வரியொன்று ரசமானது.
"பிள்ளாயா பொண்டாட்டி எப்பேருப் பட்டவ?
மாரு நெறஞ்சவ மங்கிலியம் பூண்டவ"
தங்கள் பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ செய்த பிள்ளையார் சிலைகளைப் பெருமையாகப் பதிவிடும் பெரியாரியர்களை நேற்று முதல் காணமுடிகிறது. பிள்ளைப் பருவத்தில் பெரியாரை ஊட்டாமல் பிள்ளையாரை ஊட்டுகிறார்கள். அங்கே பார்ப்பனியம் கோரைப்பல் தெரியச் சிரிக்கிறது. நாமோ கொழுக்கட்டைக்கு நாக்கைச் சப்புக் கொட்டுகிறோம்.

Tuesday, July 21, 2020

பெரியார் பேசுகிறார் : வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்! - சித்திரபுத்திரன்

பெரியார் பேசுகிறார் : வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்!
தந்தை பெரியார்

நகை வியாபாரி:   அய்யா, தாங்கள் என்னிடம் காலையில் காசு மாலை வாங்கி வந்தீர்களே! அது தங்களுக்குத் தேவையா இல்லையா என்பதை தெரிவித்துவிட்டால் வேறு ஒருவர் வேண்டும் என்று சொல்லி மத்தியானமிருந்து கடையில் காத்துக்க்ண்டிருக்கிறார். அவருக்காவது கொடுத்துவிடலாம் என்று வந்திருக்கிறேன். எனக்குப் பணத்துக்கு மிகவும் அவசரமாகயிருப்பதால் தயவு செய்து உடனே தெரிவித்துவிடுங்கள்.

வைதீகன்: செட்டியாரே, அந்த நகை தேவையில்லை. வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும்போது பூனை குறுக்கே போச்சுது, அப்பொழுதே வேண்டியதில்லை என்று தீர்மானித்துவிட்டேன். வீட்டில் பெண்டுகள் பார்த்து மிகவும் ஆசைப்பட்டு மாலையிலுள்ள காசை எண்ணிப் பார்த்தார்கள். அதில் 68 காசு இருந்தது. எட்டு எண்ணிக்கைக் கொண்டது. எதுவும் எங்கள் குடும்பத்திற்கு ஆயிவருவதில்லை. அதனால் அவர்களும் உடனே கீழே போட்டுவிட்டார்கள். ஆனதினால் அது எங்களுக்கு வேண்டியதில்லை.

நகை வியாபாரி: அப்படியானால் தயவு செய்து கொடுத்துவிடுங்கள். வேறு ஒருவர் காத்துக்கொண்டிருக்கிறார்.

வைதீகர்: ஆஹா, கொடுத்துவிடுவதில் ஆட்சேபணையில்லை. காலமே நேரத்தில் வாருங்கள், கொடுத்து விடுகிறேன்.

நகை வியாபாரி: அவர் இன்று ராத்திரிக்கு ஊருக்குப் போகின்றவர் ஆனதால் தயவு செய்து இப்பொழுதே கொடுத்துவிடுங்கள்.

வைதீகர்: செட்டியாரே, தாங்கள் என்ன நாஸ்திகராய் இருக்கின்றீர்கள்! வெள்ளிக்கிழமை, அதுவும் விளக்கு வைத்த நேரம், இந்த சமயத்தில் நிறைந்த வீட்டிலிருந்து பொன் நகையை வெளியில் கொடுக்கலாமா?

நகை வியாபாரி: என்ன அய்யா! வியாபாரத்திற்காக பெண்டுகளுக்கு காட்டிவிட்டு கொண்டு வருகிறேன் என்று எடுத்துக்கொண்டு வந்த நகையை வேறு ஒருவர் அவசரமாகக் கேட்கின்றார்கள் என்று வந்து கேட்டால் ‘வெள்ளிக்கிழமை, விளக்கு வைத்த நேரம்’ என்கிறீர்களே, இது என்ன ஒழுங்கு. ஊரார் நகைக்கு நாள் என்ன? நேரம் என்ன? என்பது எனக்கு விளங்கவில்லையே?

வைதீகர்: (தனக்குள்ளாகவே இந்த இழவு நகையை நாம் ஏன் ‘இந்த மனிதனிடம் வாங்கி வந்தோம்’ என்று நினைத்துக்கொண்டு) என் புத்தியை விளக்குமாற்றால் புடைக்க வேண்டும். உம்ம கடைக்கு வந்ததே பிசகு, தவிரவும் உம்மிடம் நகையை எடுக்கும்போதே மணி பத்தரை இருக்கும், நல்ல ராகு காலத்தில் எடுத்து வந்தேன். அது எப்படியானாலும் கலகமாய்த்தான் தீரும். எனக்கு புத்தி வந்தது. இனி இம்மாதிரி செய்ய மாட்டேன். தயவு செய்து நாளைக்கு வாருங்கள்.

நகை வியாபாரி: இது என்ன அய்யா தமாஷ் செய்கின்றீர்களா என்ன? உங்கள் நகையை யாராவது கேட்டால் நாள், கோள் எல்லாம் பார்த்துக்கொள்ளுங்கள்.  ஊரார் நகைக்கு இதையெல்லாம் பார்க்கச் சொல்லி உங்களுக்கு எவன் புத்தி சொல்லிக்கொடுத்தான். அவனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள் அவனுக்கு நல்ல புத்தி கற்பிக்கின்றேன். மரியாதையாய் நகையை கொடுங்கள், நேரமாகுது.

வைதீகர்: நீங்கள் ‘குடிஅரசு’ பத்திரிகை கட்சியைச் சேர்ந்தவர்களா என்ன? நாளையும் கோளையும் சாஸ்திரத்தையும், கேலி செய்கின்றீர்களே! அந்தக் கூட்டத்திற்குத்தான் நல்லது இல்லை; கெட்டது இல்லை; மேல் இல்லை; கீழ் இல்லை; கோவில் இல்லை; புராணம் இல்லை; பறையனும், பார்ப்பானும் ஒண்ணு என்று ஆணவம் பிடித்து நாத்திகம் பேசிக்கொண்டு திரிகிறார்கள். நீங்களும் அதுபோல் பேசுகின்றீர்களே!

நகைக்காரர்: நீரே ரொம்பவும் ஆஸ்திகராயிருந்துகொள்ளும், அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. மரியாதையாய் நகையைக் கொடுத்துவிடும். பவுன் விலை இறங்கப் போகின்றது. இன்றைக்கு விற்காவிட்டால் எனக்கு நஷ்டம் வந்துவிடும். வேறு ஓர் ஆசாமியும் மிகவும் ஆசையாய் காத்திருக்கின்றார். இனி தாமதம் செய்யாதீர், இருட்டு ஆகப்போகிறது. சீக்கிரம் எடுத்துக்கொண்டு வாரும்.

வைதீகர் (வீட்டிற்குள் போய் சம்சாரத்திடன் யோசிக்கின்றார்) என்ன செட்டியார் நகை கேட்கின்றார்!

அம்மா: இன்றைக்கு வெள்ளிக்கிழமை, விளக்கு வைத்த நேரம், லட்சுமியை வீட்டைவிட்டு வெளியில் கொடுக்கலாமா?

புருஷன்: எல்லாம் நான் சொல்லிப் பார்த்தாய்விட்டது. செட்டியார் ஒரே பிடியாய் இப்போதே கொடுத்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொண்டு வெளியில் காத்துக் கொண்டிருக்கிறார்.

அம்மா: (பலமாய் சத்தம் போட்டுக்கொண்டு வெளியில் வருகிறபோது பேசிக் கொண்டு வருவதாவது) செட்டியாருக்குப் புத்தியில்லை. அவர் என்ன செட்டியா, மட்டியா? வீடு வாசல் வைத்து பிழைத்த மனிதரா, நாடோடித் தடம் போக்கியா? நிறைந்த வீட்டில் விளக்கு வைத்த நேரத்தில் கலகம் பண்ண வந்திருக்கின்றான். நான் போய் கேட்கிறேன். என்ன செட்டியாரே உமக்குப் புத்தியில்லை. இப்பொழுதுதான் ஏதோ கொஞ்சம் ஓஹோ என்று எங்கள் குடும்பம் தலை எடுக்கின்றது. அதுக்குள் நீர் எமனாய் வந்துவிட்டீர். நாளைக்கு காலமே வாருமே. அதற்குள் என்ன நீர் கொள்ளையில் போய்விடுவீரா அல்லது வேறு ஒரு மனிதன் நகை வாங்க வந்தவன் என்கிறீரே, அவன் கொள்ளையில் கோய்விடுவானா? உமக்குத்தான் புத்தியில்லாவிட்டாலும் அவனுக்காவது புத்தியிருக்கவேண்டாமா? வெள்ளிக்கிழமை நகையைப் போய்க் கேட்கச் சொல்லாமா என்கிற அறிவில்லாமல் உம்மை இங்கே அனுப்பி ரகளை பண்ணச் சொல்லி இருக்கிறானே, அத்தனை அவசரம் என்ன?

(இந்தச் சமயத்தில் மகன் வந்துவிட்டான்.)

மகன்: என்ன அம்மா கூச்சல் போடுகிறாய்? இவர் யார்?

தாயார்: இவரா? இவர் ஒரு நகை வியாபாரியாம். இவர் தலையில் நெருப்பைக் கொட்ட! வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரத்தில் காசி மாலையைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டுமாம். ரகளைக்கு நிற்கிறார்!

மகன் அதெல்லாம் இருக்கட்டும்! ஜாஸ்தி பேசாதே! நமக்கு காசி மாலையேது? நம் வீட்டில் இல்லையே - அப்பதான் வாங்க வேண்டும் என்று நேத்து மத்தியானம் பேசிக் கொண்டிருந்தார். அதற்குள்ளாவா வந்துவிட்டது?

தாயார்: உங்கப்பா யார் முகத்தில் முழித்தாரோ! காலையில் கடைக்குப் போனார். இந்தச் செட்டியாரிடம் மாலை ஒன்று இருந்தது. அதை எனக்குக் காட்டுவதற்காக வாங்கிவந்தார். நேற்று நினைக்கும்போதே ராகுகாலம். இன்று செட்டியார் கடையில் நகை வாங்கும்போதும் ராகு காலம், வழியில் வரும்போது பூனை குறுக்கே போச்சுதாம்; அப்பொழுதே உங்கப்பா வேண்டாமென்று தலையைச் சுத்தியெறிந்துவிட்டு வரவேண்டாமா? அப்படி செய்யாமல் என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார். அது கொஞ்சம் நன்றாய் இருந்தது. நானும் ஆசைப்பட்டு வாங்கலாம் என்று முடிவுகட்டி எண்ணிப் பார்த்தேன். காசு அறுபத்தி எட்டாயிருந்தது. உடனே தலையைப் சுற்றி எறிந்துவிட்டேன். உங்கப்பா பெட்டியில் வைத்துவிட்டார். இப்ப வந்து செட்டியார் அவசரப்படரார்; யாரோ வேறே கிராக்கி காத்துக் கொண்டிருக்கின்றதாம்; வெள்ளிக்கிழமை, விளக்கு வைத்த நேரம், முதலாவது பெட்டியைத் திறக்கலாமா? நீயே சொல்லு பார்ப்போம்.

மகன்: அய்யய்யோ! இதென்ன பெரிய அழுக்கு மூட்டையாயிருக்குது. குருட்டு நம்பிக்கைப் பிடுங்கலாயிருக்கின்றது. வெள்ளியாவது, சனியாவது, ராகுவாவது, கேதுவாவது! ஊரார் வீட்டு நகையை வாங்கிக் கொண்டு வந்து பெட்டியில் வைத்துப் பூட்டிக் கொண்டு வெள்ளியும் சனியும் பேசுவது வெகு ஒழுங்காய் இருக்கின்றது! பேசாமல் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்துவிடு; இல்லாவிட்டால் பெட்டியை உடைத்துவிடுவேன் தெரியுமா?

(அதற்குள் அப்பா வந்துவிட்டார்)

அப்பா: என்னடா பயலே! பலே அதிகப் பிரசங்கியாய் போய்விட்டே! நான் அப்போதே உன்னை குடிஅரசு பத்திரிகையைப் படிக்கவேண்டாம், கெட்டுப் போவாய் என்று சொன்னேனா இல்லையா? அது போலவே படித்து கெட்டுக் குட்டிச் சுவராய் போய்விட்டாயல்லவா? கர்மம், கர்மம், இந்த இழவு பத்திரிகை ஒன்று முளைத்து, ஊரிலுள்ள சிறுபிள்ளைகளையெல்லாம் நாஸ்திகராக்கிவிட்டது.

மகன்: வெகு நன்றாயிருக்கிறது என்று சொல்லிக்கொண்டு உடனே அம்மாள் இடுப்பில் சொருகி இருந்த சாவியைப் பிடுங்கி கொண்டு போய் பெட்டியைத் திறந்து நகையை எடுத்துக்க்ண்டு வந்து கொடுத்து செட்டியாரை மன்னிக்கும்படிக் கேட்டுக் கொண்டான்.

பிறகு புருஷனும், பெண்ஜாதியும் ராகு காலத்தில் அந்தச் செட்டியாரிடம் நகை வாங்கி வந்ததே பிசகான காரியம். இதுவும் வரும், இன்னமும் வரும் எவ்வளவோ கெடுதியும் வரும் என்னை அடிக்கவேண்டும்..... லே.

(8.1.1928 குடிஅரசு இதழில் “சித்திரபுத்திரன்’’ என்ற புணைப் பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை.)

Wednesday, July 15, 2020

சங்கீ வகைகள் 4

சங்கீ வகைகள் 4

முதலாவது வகை, நேர்மையான அப்பாவிகள், மோடி தான் இந்தியாவை காப்பாற்ற முடியும், என்று நம்பி கொரானாவை விரட்ட விளக்கு ஏற்றுவார்கள், கைதட்டுவார்கள், வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் அவதிப்படுவார்கள், ரேஷனில் பொருள் வாங்கிவிட்டு எப்படியும் இரண்டு நாளில் புதிய இந்தியா பிறக்க போகுதுன்னு நம்பிக்கையுடன் தூங்க செல்வார்கள்

இரண்டாவது வகை, முருகன் முப்பாட்டன், பார்பனரும் தமிழர்களே, சாதி என்பது செய்யும் தொழில் சார்ந்த இனக்குழு பெயர்கள், நடுவில் யாரோ அதை பிறப்புடன் இணைத்துவிட்டார்கள் என்பார்கள் அந்த யாரோ யார் என்று யார் கேட்டாலும் சொல்லமாட்டார்கள், இவர்களும் வீட்டு வாடகை கொடுக்கமுடியாமல் அவதிப்படுவார்கள் ஆனால் அரசு கொடுத்த டீ.வி எல்லாம் தூக்கி போட்டு உடைப்பார்கள், கொரானாவை விரட்ட விளக்கு ஏற்றுவார்கள், கைதட்டுவார்கள்

மூன்றாவது வகை, முருகன் சிவன் எல்லாம் தமிழரின் முன்னோர் வழிபாட்டின் எச்சம், சங்ககாலத்துலேயே, நியூட்டனின் 3 விதிகள் பற்றி பாட்டு இருக்கு, இதில் சிவன் முருகன் எல்லாம் எம்மாத்திரம், இந்து மதம் அதை எல்லாம் உள்ளே எடுத்து கொண்டது என்பார்கள், இந்துமதத்தில் யார் எடுத்துக்கொண்டார்கள் என்று கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள், வாடகை எல்லாம் ஒழுங்காக கட்டிவிடுவார்கள், டீ.வீ எல்லாம் தூக்கி போட்டு உடைக்கமாட்டார்கள், கொரானாவை விரட்ட விளக்கு ஏற்றுவார்கள், கைதட்டுவார்கள், கேட்டால் ஊரோடு ஒத்து வாழ் என்பார்கள், சேரி தனியாக இருக்கிறதே என்று கேட்டால். அது தப்புதான் கொஞ்சகொஞ்சமாக தான் சரியாகும், இப்போ எல்லாம் யாரு சார் சாதி பாக்குறாங்க என்பார்கள், ரொம்ப கேள்வி கேட்டால் குவாண்டம் பிசிக்கஸ் பற்றி நக்கீரர் என்ன சொல்றார் தெரியுமா என்று முதலில் இருந்து தொடங்குவார்கள்

கடைசி நாலாவது வகை, பவுத்தம் சமணம் போன்ற மதங்களுக்கு ஆதி வடிவம் தான் ஆசீவகம், யானை, பாம்பு, சிலைகள் தமிழர் ஆதிமதம், அய்யனார் சாஸ்தா என்று கலந்து கட்டி, ஆசு + ஈவு+ அகம், அப்போவே சித்தர்கள் கால யந்திரம் வைத்திருந்தார்கள், தமிழர்களுக்கு தொன்மங்களின் மேலே பற்று இல்லை அவற்றை காக்கவில்லை என்று கிறிஸ்டோபர் நோலன் ரேஞ்சுக்கு, பெரிய திரைக்கதை எல்லாம் சொல்லுவார்கள், ஏதாவது கேட்டால் நகை கடை விளம்பரத்தில் வருவது போல நம்பிக்கை தானே எல்லாம் என்று  முடித்து கொள்வார்கள், சாதி குறித்து எல்லாம் என்ன பெரிய பேச்சு என்பது போல மெத்தனமாக ஒரு லுக் விடுவார்கள், கோரான குணப்படுத்த ஆசீவகம் தான் ஒரே வழி அதில் ஒன்று தான் கபசுர குடிநீர் என்பார்கள், ரொம்ப கேள்வி கேட்டா போதிதர்மர் கூட ஆசீவகம் தான், லைன் போட்டு தர்றேன் பேசுறியா என்று ஆரம்பிப்பார்கள் 

பார்க்க பேச எப்படி இருந்தாலும், மேலே சொன்ன, நாலு வகையும் மறக்காமல் சொல்வது

ஈ.வே.ரா தான் தமிழ் நாட்டை கெடுத்தார்