Monday, September 11, 2023
Types of Sanghis:
சங்கி நம்பர் 1. (Factory Manufactured)
எப்ப பாத்தாலும் கலவரத்துல பொறந்தாமாதிரியே இருப்பான். சிவாஜி, கோல்வாக்கர், மோடி, பாரதமாதா, எச்ச.ராஜா, கோட்சே போன்ற படங்களை ப்ரபைல்ல வச்சிருப்பான். மூச்சுக்கு முன்னூறு தரம் பாரத்மாத்தாக்கி ஜெய்ன்னு சொல்லிட்டு யாரு சேலைய உருவலாம்னு காத்திருப்பான். ஜெய்ஹிந்துன்னு தூக்கத்துல பெனாத்துவான். இந்துவா ஓன்றினைவோம்னு சொல்லுவான்...ஆனா திருமாவை கண்டாலே கொட்டை வெடிச்ச பன்றி மாதிரி கதருவான். கண்டிப்பா முஸ்லீம் பெயர்லயும் கிறிஸ்டியன் பெயர்லயும் ஃபேக் ஐடி வச்சிகிட்டு இந்து மதத்தை பத்தி அசிங்க அசிங்கமா அவனே பதிவு போடுவான். கண்டிப்பா போட்டோஷாப் தெரிஞ்சவனா இருப்பான். இந்தியா வாழ்கன்னு சொல்லாம பாகிஸ்தான் ஒழிகன்னு கத்திகிட்டே இருப்பான். காந்திய கொன்னது சரிதான்னு சொல்லுவான் ஆனா RSS ஐ எதிர்த்த பகத்சிங்க பாராட்டுவான். மோடி மூத்திரம் போனாலும் அது உலக சாதனைன்னு பம்முவான். 16000 கல்யாணம் பண்ணி சொந்த அத்தையவே ஆட்டயபோட்ட காமக்கொடூரன் கிருஷ்ணன கும்புடுவான் ஆனா 11 கல்யாணம் பண்ண முகமது நபிய காமவெறியன்னு கத்துவான். முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு போகனும்னு சொல்லுவான்... சுதந்திர பேராட்டத்துல பங்கெடுத்த சங்கி ஓருத்தன் பேர சொல்லுடான்னு கேட்டா... குந்துற எடத்துல மொளகா சாந்த தேச்சாமாதிரி எரிச்சலாவான். இந்த குவாலிட்டி உள்ளவன்லாம் சின்ன வயசுலயே RSS ஷாகா க்ளாசுக்கு போய் இருப்பான்... Perfectly manufactured export quality . இந்தி படிக்கனும் சொல்லுவான்...ஆனா தமிழ தப்புதப்பா எழுதுவான்... தேசத்துக்கு ஓரு ஆபத்துன்னா உசுர குடுப்பேன்னு சொல்லுவான் ஆனா ராணுவத்துக்கு ஆளு எடுத்தா ...பின்னங்கால் பிடறியில அடிக்க ஓடுவான்
சங்கி நம்பர் 2 (Factory Assembled)
இவனுங்க எப்பவுமே சங்கி நம்பர் ஒன்னோட சுத்தகிட்டு இருப்பானுக. நல்லா படிச்சி நல்ல வேலைல இருப்பானுவ. 50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில எதுவுமே நடக்கலன்னு சங்கி நம்பர் ஓன்னு போட்ட போட்டோஷாப்பா தலைல தூக்கிகிட்டே அலைவானுவ. நம்ம நட்பு வட்டத்துலயும் இருப்பானுவ. கண்டமேனிக்கு எல்லா போஸ்ட்டயும் என்ன ஏதுன்னு பாக்காம ஷேர் பண்ணுவானுக. நாம ஒன்னு கேட்டா...நம்ம அசந்துபோறாமாதிரி புரியாத ஓரு விளக்கத்த கொடுப்பானுவ. கோமியத்துல நோய் தடுப்பு சக்தி இருக்குன்னு வாதம் பண்ணுவானுவ. மந்திரம் சொன்னா உடம்பு சரி ஆகிடும்னு சொல்லிட்டு, சின்ன இருமலுக்கு கூட ஆஸ்பித்திரக்கு ஓடுவானுவ. கலாச்சாரத்த பத்தி பேசுவானுவ. ஆனா சமயம் கெடச்சா சுடிதார புடிச்சி இழுப்பானுவ. முஸ்லீம துலுக்கன்னும் கிருத்துவன பாவாடைன்னு சொல்லி ஆர்கஸ்ம் ஆவானுவ. சங்கி நம்பர் ஒன்னு போடுற பதிவுல எல்லாம் ஆர்டின் விடுவானுவ. கோயில் கருவரையில வன்புணர்வு நடந்தாகூட எதுவுமே நடக்காதமாதிரி சப்பகட்டு கட்டுவானுவ. மாடு அம்மா மாதிரின்னு சொல்லுவானுவ... ஆனா அதே மாடு பால் கொடுக்குறத நிப்பாட்டிட்டா ஒடனே அடிமாட்டுக்கு வித்துடுவானுவ. ப்ரபைல்ல கண்டிப்பா சிவனோட படம் இருக்கும்.
சங்கி நம்பர் 3 (Defected and Rejected Product)
இந்த சங்கிக பெரும்பாலும் எல்லா கட்சியிலயும் இருப்பானுவ. பெரும்பாலும் குழப்பத்துலயே இருப்பானுவ. கண்டிப்பா நெத்தியில குங்கும பொட்டும் விபூதியும் இருக்கும். பெரும்பாலும் தேசியக்கொடிய ப்ரபைலா வச்சிருப்பானுவ. இது என் தேசம்னு சொல்லிகிட்டே, மணல் கொள்ளை, குவாரி கொள்ளைன்னு இயற்கை வளத்தை ஒன்றுவிடாமல் சுரண்டுவானுவ. நாட்டுல தன்னோட கட்சிக்கு எதிராக யார் கருத்து சொன்னாலும் "ங்கோத்தா...ங்கோம்மான்னு" நவரச தமிழ்ல நாறடிப்பானுவ. இவனுங்க எழுதுற கெட்டவார்த்தயகூட தம்மில்லாம எழுதமாட்டானுவ.
சங்கி நம்பர் 4 (Scrap)
பசு எங்கள் தெய்வம்...தாய்மாதிரின்னு சொல்லிட்டு சாயங்காலமா பீஃப் ஸ்டால்ல நிப்பானுவ. முகநால்ல இருப்பானுவ ஆனா பதிவு போடமாட்டானுவ...ஒன்லி ஷேர்தான். தமிழன "டுமீலன்னு" சொல்லுவானுவ. ராத்திரி எட்டு மணியாச்சின்னா டாஸ்மாக்ல சீனியர் சங்கி வாங்கி குடுக்குற சரக்க போட்டுட்டு "பெரியார்" "அம்பேத்கர்" சிலைய ஒடைப்பானுவ. கலவரம் பண்ணுறது, கலவரத்துல பிரியாணி அண்டாவ தூக்குறது, நைட்டி திருடுறது, காண்டம் திருடுறது எல்லாம் இந்த குரூப்புதான். அதேமாதிரி ஜெயிலுக்கு போறதும் இந்த குரூப்புதான். மத்த மூனு சங்கிகளும் இவிங்கள மனுசனாகூட மதிக்கமாட்டானுவ. ஆனாலும் "இந்து" அப்படிங்கிற ஒற்றை சொல்லுல "ஊளாலா" ஆகிடுவானுவ. எச்.ராஜா, அர்ஜுன் சம்பத், ரோகோபாலன் படங்கள ப்ரபைல்ல வச்சிருப்பானுக... மேலே சொன்னது எல்லாமே தம்பிகளுக்கும் பொருந்தும்.
Sunday, July 16, 2023
சர்க்காரியா கமிஷன் என்னும் புஸ்வானம்
ஏறத்தாழ நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட அவதூறு ஒன்று திமுகவையும் கலைஞரையும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அது கலைஞர் கருணாநிதி விஞ்ஞானப்பூர்வ ஊழல் செய்தார் என சர்க்காரியா கமிஷன் கூறியிருக்கிறது என்கிற அவதூறுதான். இந்த விமர்சனம் வைக்கும் பலருக்கும் சர்க்காரியா கமிசனில் என்ன ஊழல் குறித்து விசாரிக்கப்பட்டது என்பதெல்லாம் தெரியாது. கலைஞரையும் திமுகவினரையும் ஊழல்வாதிகளாக சித்தரிக்கவேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தில் கட்டப்படும் பொய் இது. சர்க்காரியா கமிசனிலும் சரி, 2ஜி வழக்கிலும் சரி, ஊழல் நடைபெற்றதாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் மீண்டும் மீண்டும் பொய் மூலம் திமுகவைக் களங்கப்படுத்தும் முயற்சி மட்டும் விடாமல் நடந்து வருகிறது. இதற்கு ஒருபடி மேலே போய் சர்க்காரியா கமிசன் விசாரித்த ஊழல் புகாரால்தான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது என்றும் கூறுகிறார்கள். முதலில் சர்க்காரியா கமிஷனில் விஞ்ஞானப்பூர்வ ஊழல் என்கிற வார்த்தையே இல்லை. இது எம்ஜிஆர் திமுகவிற்கு எதிரான பிரச்சாரங்களில் பயன்படுத்திய வார்த்தை. அக்காலத்தில் மக்களுக்கு விஞ்ஞானம் பற்றிய அறிவு குறைவு என்பதால் விஞ்ஞான விசயங்களை புரிந்துகொள்ள முடியாமல் இருந்தனர். உதாரணத்திற்கு ஸ்விட்ச் போட்டால் ரேடியோவில் எப்படிப் பாட்டு கேட்கிறது என்று, அன்றைய பாமர மக்களுக்குப் புரியாது .கிட்டத்தட்ட விஞ்ஞானத்தை ஒரு மாயமந்திரமாக பார்க்கும் போக்கு மக்கள் மத்தியில் இருந்தது. இந்தப் போக்கை திமுக மீது அவதூறு சொல்வதற்குப் பயன்படுத்திக் கொண்டார் எம்ஜிஆர். திமுகவின் ஊழல் நிரூபிக்கப்படவில்லை என்று சொல்வதற்குப் பதிலாக,யாரும் புரிந்துகொள்ளமுடியாதபடி விஞ்ஞானப் பூர்வ ஊழல் செய்துவிட்டார் கலைஞர் என்று பொய்யைப் பரப்பி விட்டார். ஒரு விசயம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே விஞ்ஞானப் பூர்வமானது என்று ஒப்புக்கொள்ளப்படும் என்பதெல்லாம் அன்றைக்கு இருந்த பாமர மக்களுக்கு தெரியவில்லை. அதனால் நிரூபிக்க முடியாத ஊழல் குற்றச்சாட்டை விஞ்ஞானப் பூர்வமான ஊழல் என நம்பத் தொடங்கினர். ஊழலே நடைபெறவில்லை என்றால் கமிசன் எப்படி அமைக்கப்பட்டது? ஏன் அமைக்கப்பட்டது?. திமுகவில் இருந்து விலகுவது என முடிவு செய்துவிட்ட பின் எம்.ஜி.ஆர். பொதுவெளியில் கணக்கு கேட்டார் அதனால் திமுக அவரை விலக்கிவைத்துவிட்டது என்கிற தகவல் பெரும்பாலானோருக்கு தெரியும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் எம்ஜிஆர் வருமானக் கணக்கு கேட்ட போது அவர்தான் கட்சியின் பொருளாளர். கட்சியின் பணம் கையாடல் செய்யப்பட்டிருக்கிறது என்றால் அது அவருக்குத்தான் முதலில் தெரிந்திருக்கும். அவர் மூலம்தான் நடைபெற்று இருக்க முடியும். ஆனால் விநோதமாக கட்சியின் மற்ற உறுப்பினர்களிடம் கணக்கு கேட்டார் எம்.ஜி.ஆர். அத்தோடு நிற்காமல், அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் , திமுகவின் பதினெட்டாயிரம் கிளைச் செயலாளர்கள் வரை அனைவரும் தங்களது சொத்துக் கணக்கையும் தங்களது குடும்பத்தினரின் சொத்துக் கணக்கையும் கொடுக்கவேண்டும் என்று கூறினார். எம்.ஜி.ஆர். ஏன் இப்படிச் செய்தார்?. அவருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி தரவில்லை என்பதற்காக இப்படிச் செய்தார். ஆனால் அதுமட்டும் காரணமல்ல. 2017 ஆம் ஆண்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்ததற்கு காரணம் தன்னுடைய முதலைமைச்சர் பதவி பறிக்கபடப்போகிறது என்பது மட்டுமல்ல தனக்குப் பின்னால் மத்திய அரசின் ஆட்சியில் இருக்கும் பாஜக இருக்கிறது என்பதும் தான். அதேதான் எம்ஜிஆருக்கும் நிகழ்ந்தது. திமுகவும் கலைஞரும் மிகப்பெரும் சக்தியாக தமிழ்நாட்டில் உருவாகி வருவதைப் பொறுக்க முடியாமல் , அன்றைய இந்திரா காந்தி அரசு எம்ஜிஆரை கைப்பாவையாக்கி திமுகவை உடைக்க முயன்றது. ஓபிஎஸ் எப்படி ஒரு ஆணையம் அமைத்து ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தைத் தீர்க்கவேண்டும் என்று கோரினாரோ அதே போல எம்ஜிஆரும் திமுகவிற்கு எதிரான ஊழல் புகார் குறித்து விசாரிக்க, ஒரு ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரினார். அதன்பிறகு எப்படி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு விசாரணையில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வம் மறுத்தாரோ அதே போல சர்க்காரியா கமிசன் விசாராணைக்கு எம்ஜிஆர் வர மறுத்தார். இத்தனைக்கும் 32 புகார்கள் அடங்கிய பட்டியலை எடுத்துக் கொண்டு அப்போதைய கவர்னர் கே.கே.ஷாவிடம் ஊர்வலமாகச் சென்று கொடுத்தார் எம்.ஜிஆர். இந்தப் புகார் பட்டியலை அப்போதைய முதல்வர் என்பதால் கலைஞர் கருணாநிதிக்கு அனுப்பப்போவதாக கவர்னர் தெரிவிக்க , புகாரை எடுத்துக் கொண்டு திரும்பிவிட்டார்.
அதன்பிறகு குடியரசுத் தலைவர் வி.வி கிரியை 1972 நவம்பர் 5-ஆம் தேதி சந்தித்து அதே புகார் பட்டியலை அனுப்பினார். அவர் அதைப் பிரதமர் அலுவகத்திற்கு அனுப்ப, பிரதமர் அலுவலகம் விளக்கம் கேட்டு அதே புகார்களை மீண்டும் கலைஞர் கருணாநிதிக்கே அனுப்பியது. நவம்பர் 15 ஆம் தேதி வந்த விளக்கம் கேட்ட நோட்டீஸுக்கு விரிவான விளக்கத்தை டிசம்பர் 14 ஆம் தேதி அனுப்பினார் கலைஞர். அத்தோடு எல்லா புகார்களுக்குமான விளக்கங்களை சட்டசபையிலேயே விளக்கமாகத் தெரிவித்தார். கலைஞர் அளித்த விளக்கத்தில் என்ன குறைபாடு என்று சொல்லாமல், விசாரணைக் கமிசன் அமைக்க வேண்டும் என்று மட்டும் கோரிக்கை விடுத்தார் எம்ஜிஆர். இதெல்லாம் மத்திய அரசும் எம்ஜிஆரும் சேர்ந்து, திமுக ஆட்சியைக் கலைக்க நடத்தும் நாடகம் என்று சூசகமாக குற்றம்சாட்டி 1973 மே 28 ஆம் தேதி கடிதம் ஒன்றை இந்திராகாந்திக்கு அனுப்பினார் கலைஞர். அதன்பிறகு குடியரசுத் தலைவர் வி.வி கிரியை 1972 நவம்பர் 5-ஆம் தேதி சந்தித்து அதே புகார் பட்டியலை அனுப்பினார். அவர் அதைப் பிரதமர் அலுவகத்திற்கு அனுப்ப, பிரதமர் அலுவலகம் விளக்கம் கேட்டு அதே புகார்களை மீண்டும் கலைஞர் கருணாநிதிக்கே அனுப்பியது. நவம்பர் 15 ஆம் தேதி வந்த விளக்கம் கேட்ட நோட்டீஸுக்கு விரிவான விளக்கத்தை டிசம்பர் 14 ஆம் தேதி அனுப்பினார் கலைஞர். அத்தோடு எல்லா புகார்களுக்குமான விளக்கங்களை சட்டசபையிலேயே விளக்கமாகத் தெரிவித்தார். கலைஞர் அளித்த விளக்கத்தில் என்ன குறைபாடு என்று சொல்லாமல், விசாரணைக் கமிசன் அமைக்க வேண்டும் என்று மட்டும் கோரிக்கை விடுத்தார் எம்ஜிஆர். இதெல்லாம் மத்திய அரசும் எம்ஜிஆரும் சேர்ந்து, திமுக ஆட்சியைக் கலைக்க நடத்தும் நாடகம் என்று சூசகமாக குற்றம்சாட்டி 1973 மே 28 ஆம் தேதி கடிதம் ஒன்றை இந்திராகாந்திக்கு அனுப்பினார் கலைஞர். இந்தப் புகார்களுக்கு எல்லாம் ஏற்கனவே தெளிவாக சட்டமன்றத்தில் விளக்கம் கொடுத்திருந்த கலைஞர் சர்க்காரியா கமிசனை வரவேற்றார். விசாரணை ஆணையம் முன் ஆஜராகி விளக்கங்களும் கொடுத்தார். விசாரணைக்கு எம்ஜிஆர் அழைக்கப்பட்டார். எப்படி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சமூக விரோதிகள் இருக்காங்க என்று பேசிவிட்டு விசாரணை ஆணையத்தில் ஆஜராக ரஜினி மறுத்தாரோ அதே போல ஊர்வலமாகச் சென்று ஊழல் புகார் எல்லாம் கொடுத்துவிட்டு, எம்ஜிஆர் விசாராணைக்கு வர மறுத்துவிட்டார். புகார்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது, சேலம் கண்ணன் என்கிற வழக்கறிஞர் கொடுத்த புகாரைத்தான் கொடுத்தேன் என எழுத்துமூலம் ஆணையத்தில் பதிலளித்தார். இதை சர்க்காரியா கமிசன் விசாரணையில் உதவியாக இருந்த மத்தியப் புலனாய்வுக் குழு தலைவர் இராஜகோபாலன் தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். இப்படி எம்ஜிஆரே சாட்சி சொல்ல வரமறுத்த மொன்னையான புகார்கள்தான் சர்க்காரியா கமிசனால் விசாரிக்கப்பட்டன. கலைஞர் எம்.எல்.ஏ. ஆவதற்கு முன்பே வாங்கிவிட்ட கோபாலபுரம் இல்லம் கூட முதல்வரான பிறகு ஊழல் செய்து வாங்கினார் என்று புகார் அளிக்கப்பட்டிருந்தது. இலண்டனில் முதல்வர் என்பதற்காக கலைஞர் கருணாநிதிக்கு கொடுக்கப்பட்ட டிராக்டரை காட்டூரில் தனது சொந்த நிலத்தை உழுவதற்கு பயன்படுத்தினார் என்று ஒரு புகார் இருந்தது. காட்டூரில் கலைஞருக்கு சொந்த நிலமே இல்லை , அந்த டிராக்டர் எப்போதோ வேளாண் கல்லூரிக்கு வழங்கப்பட்டு அது பத்திரிகைகளில் செய்தியாகவும் வந்திருந்தது. இவை எல்லாம் விசாரிக்கத்தக்கவை என்று எடுத்துக் கொண்ட புகார் என்றால், விசாரிக்கத் தகுதியற்ற எத்தனைப் போலியான புகார்களை எம்ஜிஆரும் அதிமுகவினரும் கொடுத்திருப்பார்கள் என்று தெரிந்துகொள்ளலாம். சர்க்காரியா கமிசன் விசாரணை முடிவடையும் முன்பே தேர்தல் வந்து இந்திரா காந்தியின் ஆட்சி கவிழ்ந்தது. திமுக அங்கம் வகித்த ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. 1977 ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். சர்க்காரியா கமிசன் விசாரணை நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நிறுத்தப்படவில்லை. காரணம் கலைஞருக்கு மடியில் கனமில்லை அதனால் பயமில்லை. முழு விசாரணையும் முடியட்டும் என்று காத்திருந்தார் கலைஞர். இதன் பிறகு மீண்டும் 1980 ல் ஒரு நாடாளுமன்ற தேர்தல் வந்தது. அதில் திமுகவுடன் கூட்டணி வைத்த இந்திரா தமிழகத்திற்கு வந்து மக்களிடம் மன்னிப்பு கேட்டார். மீண்டும் பிரதமரானார் . இப்போதும் சர்க்காரியா கமிசனுக்கு எதிராக கலைஞர் கருணாநிதி எதுவும் கூறவில்லை. ஆனால் இந்திராகாந்தி தானே முன்வந்து சர்க்காரியா கமிசன் மூலம் போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற்றுக் கொண்டார். இந்திரா காந்தி தான் செலுத்திய விஷத்தை தானே எடுத்துக் கொண்டார் என்று பின்னாளில் பேட்டியளித்தார் கலைஞர் கருணாநிதி.
இப்படிப் போலியாக கட்டமைக்கப்பட்ட ஒரு ஊழல் புகார். அதுவும் புகார் அளித்தவரே சாட்சி சொல்ல மறுத்துவிட்டார். விசாரணை ஆணையம் அமைத்தவர் தானே வழக்குகளைத் திரும்பப்பெற்றார். இவற்றுக்கெல்லாம் பிறகுதான் திமுகவை ஊழல் குற்றம்சாட்டுகிறார்கள். ஊழலுக்காகத்தான் ஆட்சி கலைக்கப்பட்டது என்று நாக்கூசாமல் பொய் சொல்கிறார்கள். சர்க்காரியா கமிசன் பற்றிய பொய்களை சங்கிகளும் அதிமுக அடிமைகளும் நிறுத்தப்போவதில்லை. அவர்கள் நிறுத்தாத வரையில் நாமும் உண்மையைச் சொல்லாமல் விடப்போவதில்லை.
Tuesday, July 11, 2023
மாமன்னன் திரைப்படத்தின் மையப்புள்ளி
*மாமன்னன் திரைப்படத்தின் மையப்புள்ளி*. இடைவேளை முடிந்த பின் வடிவேலு பேசும் dialogue:-
*எனக்கு கிடைத்த கொஞ்ச அதிகாரத்தை என் உரிமைனு நினைக்காம அடுத்தவன் போட்ட பிச்சைனு நினைச்சு காலம் பூராவும் கண்டவன் முன்னாடி நின்னே கழிச்சன் பாத்தியா அதுதான் நான் பண்ணுன பெரிய தப்பு பெரியதப்பு* .
அதற்கு முன் நம் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் உள்ளது.
இங்கே சமூகம் என்பது ஜாதியம் தான்.இந்த ஜாதிய சமூகமாகட்டும், ஜாதிமய பொருளாதாரமாகட்டும் இவற்றில் ஷெட்யூல்டு மக்களுடைய பங்கு (Role & level play ) ஒன்றும் கிடையாது. ஷெட்யூல்டு மக்களிடம் நிலம் கிடையாது,
வியாபாரம் பண்ண முடியாது, தொழில் செய்ய முடியாது (உதாரணம் கடைகள் வைக்க முடியாது, பஸ் போக்குவரத்து வைக்க முடியாது)
இப்படிபட்ட நிலைமை இருப்பதால் தான் ஷெட்யூல்டு மக்களுடைய பங்கு (Role & level play ) தவிர்க்க முடியாததாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் அரசியலில் பங்கு எடுக்க தமது வாழ்க்கை முழுவதும் போராடினார் டாக்டர் அம்பேத்கர்.
அவை, முதலில்,ஷெட்யூல்டு மக்களுக்கு Separate Electorate வேண்டும் என்று போராடி பெற்றார். ஆனால், அது அறிவிக்கப்பட்ட உடனேயே காங்கிரஸ்-காந்தியால் பறிக்கப்பட்டது.
இரண்டாவது, Joint electorate இரட்டை வாக்குரிமை அதையும் வீணாக்கிவிட்டது காந்தி-காங்கிரஸ் கம்பெனி. Joint electorate மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷெட்யூல்டு பிரதிநிதிகளையே வாய்பூட்டப்பட்ட நாய்கள் (MUZZLED DOGS) என்றார் டாக்டர் அம்பேத்கர். குரைக்கவே முடியாது இதில் எங்கே போய் கடிப்பது.
மூன்றாவது,சுதந்திரத்திற்கு பிறகு Reserve தொகுதி முறை, பார்ப்பன காங்கிரஸ் மற்றும் இதர ஜாதியவாதிகளால் அனுமதிக்கப்பட்ட (permitted)/வரையறுக்கப்பட்ட (limited) அரசியல் அதிகாரம் தான் இந்த Reserve தொகுதி ஆகும். இதன் மீது டாக்டர் அம்பேத்கர் பெரிய நாட்டம் வைக்கவில்லை. காரணம்,ஏற்கனவே joint electorate மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் போலத்தான், இந்த Reserve தொகுதி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் இருப்பார்கள் என்றார் டாக்டர் அம்பேத்கர்.
தங்கள் தொகுதி பிரச்சினைகளை *நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பேசமுடியாது* . இதில் எங்கே போய், தான் *சார்ந்த ஷெட்யூல்டு மக்கள் பிரச்சினைகள் பற்றி குரல் எழுப்பமுடியும்* என்றார் *டாக்டர் அம்பேத்கர்* . இது தான் Reserve தொகுதிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட MP,MLA க்கள் நிலைமை.
Reserve தொகுதிகள், ஷெட்யூல்டு மக்களுக்கான தொகுதிகள் கிடையாது. ஷெட்யூல்டு மக்களில் இருந்து பொறுக்கி எடுத்து வாய்பூட்டப் பட்டவர்களே இங்கே ஷெட்யூல்டு மக்கள் பிரதிநிதிகளாக நம்ப வைக்கப்படுகிறோம்.
ஷெட்யூல்டு மக்களுக்கு இருக்கிற குறைந்தபட்ச பாதுகாப்பு தளம் அரசியல்,
அதில் உள்ள ஓட்டுரிமை மட்டுமே. இந்த உரிமை மட்டும் இல்லாமல் போயிருந்தால் ஷெட்யூல்டு மக்கள் முழுவதும் அழிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகி இருக்கும்.
இதற்காக தான் *Reserve தொகுதி இருந்து விட்டு போகட்டும் என அனுமதித்தார் அம்பேத்கர்* .
மாமன்னன் படத்தில் ஒருமுறை வில்லன் வளர்த்த நாய்களை அவிழ்த்து விட்டு பன்றி தொழுவத்தில் விட்டு பன்றிகளை கடிக்க விடுவான். இறுதியில் தனது கைதுப்பாக்கியை எடுத்து அத்தனை பன்றிகளையும் சுட்டு கொன்று விடுவான்.
*ஜாதிய நாய்கள் அரசியல் கட்சிகள் யாவும் ஷெட்யூல்டு மக்களுடைய கட்சிகள் இல்லை.* இவர்கள் தங்களுக்கு பிடித்த கட்சியில் இருக்கிறார்கள்.
இந்த கட்சிகளில் அவற்றில் உள்ள ஷெட்யூல்டு உறுப்பினர்களையும், பிரதிநிதிகள் என்று சொல்ல வைக்கப்படுகிற *Reserve தொகுதி MP, MLA க்கள்* மற்றும் இந்த கட்சிகளுக்கு ஒட்டுப்போட்ட மக்களையும் பன்றிகளாத்தான் இந்த கட்சிகள் நடத்துகின்றன.
என்னுடைய *அரசியல் கொள்கை எது,* என்னுடைய *கட்சி* எது என்று தெரியாதவரை *பன்றிகளாகத்தான்* இருக்க முடியும்.
மீண்டும் ஒருமுறை மேலே சொன்ன வடிவேலு டயலாக்கை வாசிக்கவும்
*எனக்கு கிடைத்த கொஞ்ச அதிகாரத்தை என் உரிமைனு நினைக்காம அடுத்தவன் போட்ட பிச்சைனு நினைச்சு காலம் பூராவும் கண்டவன் முன்னாடி நின்னே கழிச்சன் பாத்தியா அதுதான் நான் பண்ணுன பெரிய தப்பு பெரியதப்பு*.
ஜெய் பீம்..
Thursday, May 18, 2023
இன்று நாடார் குலமென்று நெஞ்சு நிமிர்த்தி திரிகின்ற சாணார்கள்
இன்று நாடார் குலமென்று நெஞ்சு நிமிர்த்தி திரிகின்ற சாணார்கள்
19'ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் 18 வகை கீழ் சாதி பட்டியலில் தான் இருந்தார்கள்.
ஆனால் இப்போது...
கன்னியாகுமாரி மாவட்ட பாஜகவின் தூண்களாக இருப்பவர்கள் இவர்களே.!
1754-ல் திருதாங்கூர் சமஸ்தானத்தின் இராணுவச் செலவுகளுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ‘தலைஇறை’ எனும் வரி விதிக்கப்பட்டது. இத்தலைஇறையைக் கட்ட முடியாமல் பலரும் வாழ வழி தேடி திருநெல்வேலிக்குத் தப்பியோடினர்.
1807-ல் மட்டும் ஈழவர், நாடார், சாம்பவர் சாதி மக்களிடம் ‘தலைஇறை’யாக வசூலிக்கப்பட்ட தொகை 88,000 ரூபாய். இவ்வரி வசூலிப்பு, ஆடவரின் மீசைக்கு வரி, வளைந்த கைப்பிடியுள்ள குடைக்கு வரி, பெண்களின் மார்புக்கு வரி எனப் பல்வேறு வகைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
இப்பார்ப்பனியக் கொடுங்கோன்மையை எதிர்த்த ஐயா முத்துக்குட்டி என்பவர் தமது ‘அகிலத் திரட்டு’ எனும் நூலில் அன்று நடைமுறையிலிருந்த பல்வேறு வரிகளைப் பதிவு செய்கிறார். “தாலிக்கு ஆயம்; சருகு முதல் ஆயம்; கம்புத் தடிக்கு ஆயம்; தாளமேறும் சான்றோருக்கு ஆயம்; அரிவாள் தூர்வெட்டிக்கு ஆயம்; வட்டிக்கு ஆயம்; வலங்கை சென்றோர் கருப்புக் கட்டிக்கும் ஆயம் வைத்தானே கருநீசன்” என்று குறிப்பிடுகிறார்.
மேற்கண்ட அரையாடை சாதிக்கொடுமைகள் நடைபெற்ற பொழுது, இந்துமத மடாதிபதிகளோ சைவ மடாதிபதிகளோ, சங்கராச்சாரிகளோ அச்சாதிக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை.
ஆதிக்கத்திலிருந்து விடுதலை...
1800களில் நாடார், பரவர், ஈழவர், முக்குவர், புலையர்..உள் ளிட்ட 18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணி வது மாபெரும் குற்றம் எனப்பட்டது. முழங்காலிற்கு கீழும் இடுப்பிற்கு மேலும் ஆடை (முண்டு) அணியக் கூடாது.!
பொது வெளியில் முலைகளை திறந்து காட்டிக் கொண்டே தான் திரிய வேண்டும். திருவிதாங்கூர் மன்னன் நகர்வலம் வரும் போது பாதையெங்கும் வரிசையாக திறந்து காட்டிக் கொண்டே தான் நிற்க வேண்டும். குறிப்பாக நம்பூதிரி பெண்கள் முன்னால் அடுத்த சாதிப் பெண்கள் கொங்கைகளை ஆட்டிக் கொண்டு தான் நிற்க வேண்டும்.
முலைகளின் அளவிற்கு ஏற்ப "முலை வரி" விதிக்கப் பட்டது.! இந்தக் கொடுமைக்கு எதிராக பெண்கள் கொதித்து எழுந்தார்கள்.
போராட்டம் வெடித்தது.!
அவ்வப்போது போராட்டங்களும் அடக்கு முறைகளும் தொடர்ந்தன. இந்நிலையில் மீட் 'எனும் ஆங்கில பாதிரியாரின் முயற்சியால் 1823 இல் கிறிஸ்தவ பெண்கள் குப்பாயம் எனும் மேலாடை அணியலாம் என்று உத்தரவாயிற்று. தன்மானமுள்ள நாடார் பெண்கள் மானத்தை மறைக்க கிறிஸ்தவர்களாக மாற ஆரம்பித்தனர்!
கிறிஸ்தவம் திருவாங்கூரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக புனிததோமாவால் தொடர்ந்த நிலைமாறியது. ஹிந்து நாடார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த மானமுள்ள நாடார்களும் குப்பாய உரிமைக்காக வெகுண்டு எழுந்தார்கள்! ஐயா வைகுண்டர் தலைப்பாகை அணிந்து தனிமதமேகண்டார். கலவரங்கள் தொடர்ந்தன! வழக்குகளும் தொடர்ந்தன.
முலைவரி சட்டம் கடுமையாக பின்பற்றிருந்த காலத்தில், நாஞ்செலி என்ற பெண்ணிடம் திருவிதாங்கூர் சமஸ்தான அதிகாரிகள் உன்னோட முலை பெரிதாக உள்ளது ரெண்டு வரி கட்ட வேண்டும் என்று கேட்க, அப்போது கோபம் கொண்ட நாஞ்செலி வீட்டுக்குள்ள சென்று அரிவாள் எடுத்து தனது முலையை அறுத்து எரிந்தாள். அதன் பிறகு தான் முலைவரி சட்டம் நீக்கப்பட்டது.
அத்தகைய வீர மூதாதையருக்கு பிறந்த நபர்கள் தான் இன்றும் பார்ப்பனர்களுக்கு வால் பிடித்துக் கொண்டு திரிகின்றனர்.
மருத்துவம்*
1820 களில் ஆரம்பித்த காலரா தொற்று நோயால், இந்தியா முழுவதும் பிணங்கள் கொத்து கொத்தாக விழுந்து கொண்டிருந்தன! மருந்தே இல்லாத காலராவிற்கு பலியானவர்கள் 15 இலட்சம் பேரென்று புள்ளி விபரம் சொல்கிறது!
அந்த நேரத்தில் மெடிக்கல் மிஷனால் 1838 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது தான் நெய்யூர் மருத்துவ மனை! உலகின் பழமையான மிஷன் மருத்துவ மனை.! இந்தியாவின் முதல் புற்று நோய் ஆராய்ச்சி நிலையம் என்று அதற்கு அளவில்லாத பெருமைகள் உண்டு.
டாக்டர். தாம்சன், டாக்டர். வேத மாணிக்கம் ஆகியோரால் 1883 ஆம் ஆண்டு மார்த்தாண்டத்தில் கட்டப் பட்டது மார்த்தாண்டம் மிஷன் மருத்துவமனை. ( பொன்னாரின் சிலுவைப் பாலம் ஆரம்பிக்கிற இடம்)
1895 இல் சால்வேஷன் ஆர்மியால் வடசேரியில் கட்டப் பட்டது கேத்ரின் பூத் மருத்துவ மனை! 1936 இல் குளச்சலில் கட்டப் பட்டது சார்லஸ் பீஸ் தொழுநோய் மருத்துவ மனை.! இன்னுமுண்டு பட்டியல்.!
இன்று போல கிட்னியை விற்று கல்லீரலை ரிப்பேர் செய்ய வேண்டிய அவசியமில்லை. இவை அத்தனையும் இலவச மருத்துவ மனைகள்.!
நாஞ்சில் மண்ணில் காலராவிற்கு தப்பித்த யாரோ ஒருவனின் சந்ததி தான் நம்மிடம் "பார்.. பார் .! குஜராத்தை பார்" என்று அக்குளை சொறிகிறான்.!
கல்வி !!!.
நாஞ்சில் நாட்டு கிறிஸ்தவ மிஷினறி பள்ளிக் கூடங்களை குறித்து தனித்து எழுத வேண்டிய அவசியம் இல்லை!
இலவசகல்வி வழங்கிய பல பள்ளிக் கூடங்கள் நூறு வயதைக் கடக்கின்றன.
இது மதம் சார்ந்த பதிவல்ல ஆனால் ஒரு மதத்தின் ஒடுக்கமுறையிலிருந்து மீண்ட சமூகம் இன்று அதே பார்ப்பனிய சூழ்ச்சியால் மத வெறி பிடித்து அலைகிறார்கள். அந்த பார்ப்பனிய சூழ்ச்சியில் இருந்து விடுபட அந்த சமூக இளைஞர்கள் தங்களுடைய பழைய வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் எந்த பக்கம் நிற்க வேண்டும் என்ற தெளிவு வரும்.
ஒடுக்கப்பட்ட சமூக
தோழர்கள் உள்பட அனைவரும்
#நாடார்_வரலாறு
#கறுப்பா? #காவியா? என்ற புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டுகிறேன்.
Sunday, February 05, 2023
இசை வாணி தோன்றும் ரின் சோப் விளம்பரம்
ஹமாம் விளம்பரங்கள் எப்போதும் வலிந்த பிராமண ஒப்பனையுடன்தான் வரும். மற்ற விளம்பரங்களிலுமே இத்தகு சாய்வைக் காணலாம். சில ஆண்டுகள் முன் ஏதோ பைக் விளம்பரத்தில் ஐயர் என்று பெயரிட்டுப் பிரச்சனை ஆகிப் பின் நீக்கினார்கள்.
இதற்கெல்லாம் காரணம் விளம்பரம் எழுதும், இயக்கும், தயாரிக்கும் நிறுவனம், அந்த பிராண்ட் எல்லாம் உயர் சாதியினர் என்பதுதான். இன்னொரு காரணம் அப்படிக் காட்டும் போதுதான் உயர்சாதியினர் மட்டுமல்ல; சகல சாதியினரும் போட்டி போட்டு வாங்குவார்கள் ("ஆனானப்பட்ட பார்ப்பானே வாங்கற ப்ராண்டுங்க.") ஐயர் காஃபி, அய்யங்கார் பேக்கரி என்று இதற்குப் பல உதாரணம் சொல்லிக் கொண்டே போகலாம்.
உயர் சாதி reference இல்லை என்றாலும் தலித் அல்லது பழங்குடிச் சாய்வு விளம்பரங்களில் இல்லாமல் கவனமாகப் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் இதற்கு ஒரு விதிவிலக்கு கூட சொல்ல முடியாது. ஏழ்மையில் இருப்பவர்களைக் காட்டுவார்கள், ஆனால் சாதியில் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற தொனி இருக்கவே இருக்காது. ஏனெனில் ஒரு பொருளை அப்படி விளம்பரம் செய்த பின் அந்தப் பொருளை உயர்சாதியினர், பிற்பட்ட சமூகத்தினர் எவரும் வாங்க மாட்டார்கள். இந்தியர்களின் சாதி வெறி அத்தகையது.
இந்தச் சூழலில் இசை வாணி தோன்றும் ரின் சோப் விளம்பரம் வெளிப்படையாக அவர் ஒடுக்கப்பட்டவர் என்று குறிப்பிட்டு அவரை நாயகியாக முன்வைக்கிறது. டிடி நேஷனல் 1982ல் தொடங்கப்பட்டதை இந்தியத் தொலைக்காட்சி விளம்பர ஆரம்பமாகக் கொண்டால் நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பே இந்தப் பாய்ச்சல் நிகழ்ந்திருக்கிறது.
இந்த விளம்பரத்தை எழுதியவருக்கும், இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்துக்கும் ஒரு பலமான கைகுலுக்கல்.
Friday, February 03, 2023
குரைக்கும் வாய்கள்
*குரைக்கும் வாய்கள்* 👇
கோடிக் கணக்கில் செலவழித்து ஜெயலலிதா கொட நாட்டிற்கு ஹெலிகாப்டரில் போகும் போது வராத கோபம் ..
அப்போலோ மருத்துவமனையில் ஒரு கோடிக்கு இட்லி சாப்பிட்ட போது வராத கோபம்..
ஒரு முதலமைச்சரை 75 நாட்கள் மருத்துவமனையில் யாரையும் பார்க்க விடாமல் ரகசியமாய் கூத்தடித்து இட்லிக்கு தேங்காய் சட்னி தொட்டு கொண்டார் என்றும், இல்லை இல்லை வெங்காய சட்னி தான் தொட்டுக் கொண்டார் என்றும் மக்களை இளிச்சவாயர்களாக்கிக் கேவலப்படுத்திய போது வராத கோபம்...
வளர்ப்பு மகனின் திருமணத்தை அரசு உயர் அதிகாரிகளை வேலைக்காரனாக்கி, 100 கோடிக்கு மேல் செலவழித்து நடத்திய போது வராத கோபம்...
மக்களின் லட்சக்கணக்கான வரிப் பணத்தை 0 ஓட்டு வாங்கும் மாநிலக் கட்சித் தலைவருக்கு Z பிரிவு பாதுகாப்பு என்ற பெயரில் வீணடிக்கும் போது வராத கோபம்.....
மூன்று முறை நீதிமன்றத்தால் "ஊழல் குற்றவாளி" என்று தீர்ப்பளிக்கப்பட்ட போதும், நாட்டை ஆண்ட கோமாளிகளால் அரசுப் பணத்தில் கோடிக்கணக்கில் செலவழித்து, நினைவு மண்டபம் கட்டிய போது வராத கோபம்....
"எம்ஜிஆர் நூற்றாண்டு விழா" என்ற பெயரில் தமிழ்நாட்டின் மாவட்டங்கள் தோறும் கோடிக்கணக்கான ரூபாய் அரசுப் பணத்தை செலவு செய்து, *தரையில் தவழ்ந்து சென்றே ஆட்சியைப் பிடித்த அடிமைகள்* கொள்ளை அடித்த போது வராத கோபம்...
8500, கோடியில் தனி விமானம் வாங்கி அதில் போகும் போது வராத கோபம்...
3000 கோடி ரூபாய் செலவில் படேல் சிலை வைத்தபோது வராத கோபம்....
ஆவணப் படங்கள் கொடூர கொலைக் குற்றவாளிகள் என்று சொல்லும் போது வராத கோபம்.....
மக்களின் வரிப் பணத்தை கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு வாரி வாரிக் கொடுக்கும் போது வராத கோபம்......
தமிழர்களின் தன்மானத்தைத் தலை நிமிரச் செய்த ஒரு பேனா வைக்கும் போது மட்டும் பொத்துக் கொண்டு வருகிறது என்றால்❓❓❓❓
ஏதோ வீசும் எச்சில் இலைச் சோற்றுக்கு பெற்ற தாயை விற்கத் துணியும் ஈனர்கள் செயல் இது என்றும்,
சிந்தனையில் சீழ் பிடித்த மனநோயாளிகளின் பிதற்றலே இது என்றும்,
வீசும் காசின் அளவுக்கேற்பக்குரைக்கும் பிராணியின் செயல் இது என்றும் *பேனா கொண்டு எழுதத் தெரிந்தவர்களால்* எண்ணத் தோன்றுகிறது.
குரைப்போர் குரைக்கட்டும்.
பிஸ்கெட் வீசிக்கொண்டிருப்பதற்கு நமக்கு நேரமில்லை.
*அறிவை விரிவு செய்வோம்*
🔥 *"வாள் முனையை விட பேனா முனை வலியது"*🔥
பார்ப்பனீயம் எதிர்க்கும் பேனா நினைவுச் சின்னம்!
பார்ப்பனீயம் எதிர்க்கும் பேனா நினைவுச் சின்னம்!
“1944 இசைச் சித்தர்,வெங்கலகுரலோன் சிதம்பரம் ஜெயராமனின் தங்கையான பத்மாவதி அம்மையாரை திருமணம் செய்து முடிந்து தேனிலவுக்காக மாமானார் வீடான சிதம்பரம் செல்ல ஆயத்தமான நிலையில் 144 தடையுத்தரவு!!
அதுவும் இந்திய வரலாற்றில் தனி ஒரு மனிதனுக்காக பிறப்பித்தது ஆச்சரியமான செய்தி!
ஆம்! கருணாநிதி என்ற 22 வயது புது மாப்பிள்ளைக்கு தான் !!
ஏன் தெரியுமா?
அன்றைக்கு பார்ப்பனீய அமைப்புக்கள் சார்பாக சிதம்பரத்தில் வர்ணாசிரம மாநாடு அதை கண்டித்து தனது முரசொலியில் கலைஞர் எழுதுகிறார்;
"பரணி பல பாடி பாங்குடன் வாழ்ந்த பைந்தமிழ் நாட்டில் சொரனையில்லா சுயநலத்துச் சோதர்கள் ஒன்று கூடி வர்ணத்தை நிலைநாட்ட வகையின்றி
கரணங்கள் போட்டாலும் மரணத்தின் உச்சியில் நின்று மானங்காத்திட மறத்தமிழா போராடு"!
இந்த வரிகள் தான் வர்ணகும்பல்களை கலங்கடித்தது மாநாட்டை சீர்குலைக்க சதி என்று முரசொலி மீது புகார் அளித்து சிதம்பரம் நகருக்குள் நுழைய கலைஞருக்கு தடையாணையை பிறப்பித்தது
அன்றைய அரசாங்கம்!
அதனால் தான்
அன்று முதல் இன்று வரை பார்ப்பனீயம் கலைஞரை எதிர்க்கிறது அந்த ஆரியத்தையும் அதன் சூத்திர அடிவருடிகளையும் சுட்டெரித்தது கலைஞரின் பேனா !!
அதை நினைவுச் சின்னமாக அமைத்தால் அவர்களுக்கு எரியத்தானே செய்யும்!!!
யவன குமாரன்
Monday, November 28, 2022
ஊழல் ஓழிப்பு போராளி H. Raja வும் - Lotus benefit fund -ம்
ஊழல் ஓழிப்பு போராளி
H. Raja வும் - Lotus benefit fund -ம்
பாஜகவின் (முன்னாள்) மாநிலத் துணைத் தலைவர் ஹெச்.ராஜா பல்வேறு மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்களுக்கு ஓர் அதிரடிக் கடிதம் வந்துள்ளது.
பணத்தை பறிகொடுத்த திருச்சியை சேர்ந்த பழனியப்பன்-ரேவதி தம்பதியினர் பத்திரிக்கைக்கு அளித்த கண்ணீர் பேட்டி:-
பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரையின் பெயரில் 'லோட்டஸ் பெனிபிட் பண்ட்' என்ற நிதி நிறுவனத்தை குடும்ப நிறுவனமாக 1997 ஆம் ஆண்டு காரைக்குடியில் துவக்கினார் ஹெச்.ராஜா. அப்பொழுது நான் பா.ஜ.க.வின் திருச்சி மாவட்டத் தலைவராக இருந்தேன்.
ராஜா, மாநில செயலாளராக இருந்த பரிச்சயத்தால், அவர் மேலுள்ள நம்பிக்கையால், அவர் கேட்டுக்கொண்டபடி, முதலில் ரூ.50000 மட்டும் 'லோட்டஸ் பெனிபிட் பண்ட்'டில் முதலீடு செய்தேன். அதற்கு 2 வட்டி வீதம் கொடுத்திருந்தார். அதற்குப் பிறகு, ரூ.2 லட்சம் கூடுதலாக முதலீடு செய்தேன்.
அதற்குப் பிறகு ரூ.8 லட்சம் என பத்தரை லட்சம் ரூபாயை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தேன்.
திடுமென வட்டி வருவது நின்று விட, என்ன என்று கேட்டதற்கு, "நிறுவனத்தில் திருடு போய்விட்டது" என்றார்.
அதற்குப் பிறகு இன்றுவரை திருச்சியிலிருந்து, காரைக்குடிக்கு 200 தடவைக்கு மேல் வந்து சென்றுவிட்டேன். அவர் எனக்குப் பணத்தைக் கொடுப்பதாகத் தெரியவில்லை. ஆளை வைத்து கொலை செய்வதாக மிரட்டுகிறார். என்னைப்போல் அந்த நிதி நிறுவனத்தில் ஏமாந்தவர்கள் அதிகம். பணத்தை இழந்த அத்தனைப் பேரும் எங்களது பா.ஜ. கட்சியினரே.
கட்சியில் மாவட்டப் பொறுப்பிலிருந்த எனக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களின் நிலை வாய் மூடி மௌனித்திருப்பதே" என்றார் பழனியப்பன்
முன்னாள் தேசியக்குழு உறுப்பினரும், பழனியப்பனின் மனைவியுமான ரேவதி கூறுகையில்,
"முதலில் ரூ.50000, அடுத்து ரூ.2 லட்சம் என அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தது போதும் என்றிருந்தோம். அப்போது சின்னக்கடை வீதியில் எங்களுக்கு சொந்தமான சொத்தை விற்று வங்கியில் போட்டு வைத்திருந்தோம்.
அதை தெரிந்துகொண்ட ஹெச்.ராஜா, "பேங்க்கில் சும்மாதானே பணம் கிடக்குது. இதை எங்ககிட்ட முதலீடு செஞ்சா, 2 வட்டி கிடைக்குமில்ல" என்றார். நாங்களும் அவர் பேச்சை நம்பி முதலீடு செய்து, நடுத்தெருவில் நிற்கிறோம். இப்ப, என் பெண்ணிற்கு திருமண ஏற்பாடு நடக்குது. அதற்காகக் கூட தந்துவிடலாமில்லையா?
வரும் தை பொங்கலுக்குள் எங்களுக்கு தரவேண்டிய பணத்தை தராவிட்டால் நான், என் கணவர், என் மகள் உட்பட மூன்று பேரும் ஹெச்.ராஜா வீட்டின் முன்னால் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம்" என்றார் ரேவதி.
பாஜக-வின் தமிழக தலைவர்களில் இந்த ஹெச்.ராஜா என்பவர் ஒரு தினுசானவர். இவர் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும்போது ஆதரங்களைப் பற்றி இம்மியளவும் கவலைப்படாமல் துணிந்து பேசக்கூடியவர். மறுதரப்பினரை பேச அனுமதிக்காமல் குறுக்கே பேசியும், கத்தியும் ஜனநாயகத்தை நிலைநாட்டக் கூடியவர்.
குறிப்பாக நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைப் பற்றியோ, காங்கிரஸின் மீதான பொருளாதார குற்றச்சாற்றுகள், ஊழல்கள் பற்றி பேசும் போதோ கொந்தளிக்கக் கூடியவர்.
ஆனால் அவரே ஊழல்வாதி தான்
சாதுவான பார்ப்பனர்களை ஜாதி வெறியர்களாக தூற்றுவது சரியா
ஜாதியை இன்று
தூக்கி பிடித்து காப்பாற்றும் இடைநிலை சாதி
வெறியர்களை விட்டு விட்டு எப்போது பார்த்தாலும் சாதுவான
பார்ப்பனர்களை
ஜாதி வெறியர்களாக
தூற்றுவது சரியா
#நண்பரின் பதில்
நான் நம்புவது அவர்களுக்காக அல்ல!அவர்கள் ஜாதியத்தை பெரிதாக வளர்ப்பதில்லை
நம் திராவிட கட்சிகளே ஜாதியத்தை வளர்க்கிறது.
நான் வெகு அரிதாகத்தான் கோவிலுக்கு செல்வேன்.
அர்ச்சனைகள் தட்டில் காசு கூட வெகு சில சமயத்தில்தான் இடுவேன்.
ஐயர்கள் மேல் எனக்கு பெரிய கோபம் ஏதும் இல்லை.
எனக்கும் கடவுளுக்கும் நடுவில் புரோக்கர்கள் யாரும் தேவையில்லை ஏன கருதுகிறேன்.
உங்கள் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
நான் பார்த்தவரையில் பிராமணர்கள் மூலம் ஏற்படும் ஜாதிய வேறுபாடுகளை விட ஆதிக்கஜாதிகள் செய்யும் ஜாதிய வேறுபாடுகளே அதிகம்.
அதை எதிர்த்து குரல் கொடுக்க யாரும் வருவதில்லை.
திகவினர் கூட ஜாதியத்தை வளர்கின்றனர்.
#என்பதில்
Mano Haran
எரிவதை பிடுங்கினால்
கொதிப்பது அடங்கும்
ஜாதிக்கு விறகும் வைத்து
நெய்யும் ஊற்றுவது
பிராமணர்கள்
அவர்களின் மனுநீதி தர்மங்கள்
மூலம் எது என்று
அறியாத மூடர்கள்தான்
இடைஜாதி வெறியர்களை
குறை கூறுவார்கள்
இடைசாதி வெறியர்கள்
கல்வி அறிவு இல்லாமல்
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக
அரசர்கள் மூலம்
பார்ப்பனியம் வழி நடத்தப்பட்டதால்தான்
அவன் ஜாதி வெறியானக
இருக்கிறான்
அவனுக்கு முதலில் கல்வி
கொடுக்கவேண்டும்
என்பதை பெரியார் புரிந்தே....
காமராஜர் மூலம் பல ஆயிரம்
கல்வி கூடங்களை திறந்தார்/
திறக்க வைக்க துணை நின்றார்
அண்ணா இது மட்டும் போதாது
நம் மக்கள்
ஆட்சிக் கட்டிலில்
ஏறினால்தான்
பார்ப்பனீயம் அடங்கும்
என்று தேர்தல் அரசியலுக்குள்
வந்தார்...
அண்ணா எதிர்பார்த்தது போலவே
பார்ப்பனீயம்
காமராஜரை அரசியலில் இருந்து இந்திராவை பிடித்து
ஒதுக்கியது...
அண்ணாவுக்கு
தன் திட்டத்தை நிறவேற்ற
ஆயுள் இல்லை...
அடுத்து வந்த கலைஞர்
கட்சியை காப்பாற்ற
பல தில்லு முல்லுகளை
செய்யவேண்டியதாகிவிட்டது
இதை வைத்து திராவிடத்தை
உடைக்க இந்திரா திட்டத்தில்
உதித்தவர் எம்ஜிஆர்
ஆனால் அவர் நேராக பார்ப்பனீய இந்திரா காங்கிரசில் இணையாமல்
தனி தவில் வாசித்தார்
அவரிடம் அதிகம் இருந்தவர்கள் ஜாதி மத வெறியர்கள்தான்
போலி திராவிட கொள்கையை
வைத்து மக்களை முட்டாளாக்கி
ஜாதி சனாதனம் வளர உதவியது
அதிமுக
நாம் என்ன ஆயுதம்
எடுக்க வேண்டும் என்பதை
எதிரி தீர்மானிக்கிறான்
என்ற தத்துவப்படி
கலைஞரும் ஜாதி சாக்கடையில் இறங்கினார்
சூழ்நிலைக்கு தக்க தன்னை
தகவமைத்த உயிரே
நிலைத்து வாழும்
அப்படித்தான் திமுக
இன்று வரை
உயிர்ப்போடு இருக்கிறது
ஜாதி சனாதனத்தை
எதிர்த்து போராடுகிறது
காரணம் கலைஞர்
ஒரு MBC தழ்ந்த ஜாதி பிரிவில்
பிறந்தவர்
அந்த வலி அவருக்கு தெரிந்திருந்தது.
2600 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இனம் நகர நாகரீகத்துடன்
#பகிர்வு
2600 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இனம் நகர நாகரீகத்துடன் எழுத, படிக்க, கடல் கடந்து வாணிபம் செய்ய முடிந்தது என்றால்_....
அந்த இனம் இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்வி அறிவு பெற்ற இனமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
_அப்படி கல்வியறிவுடன் முன்னேறியிருந்த இனம் 19ஆம் நூற்றாண்டின் முதல் பகுதி வரையிலும் படிப்பறிவில்லாமல் இருந்தது ஏன்..எப்படி?!_
*மூட நம்பிக்கை*
*இறை நம்பிக்கை*
*மத நம்பிக்கை*
_இந்த மூன்று மந்திரங்களை வைத்து, அரசர்களின் உதவியுடன் ஒரு சிறு நாடோடி குழு, ஒட்டு மொத்த தமிழினத்தையும் 2000 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைப்படுத்தி வைத்திருந்துள்ளது._
_*மன்னர்களிடம் இருந்த நாடு பிடிக்கும் பேராசையை பயன்படுத்திக் கொண்டு*_
_1. இந்த திசையில் சென்றால் வெல்லலாம்._
_2. இந்த குறிப்பிட்ட நாளில் படையெடுத்துச் சென்றால், எதிரியை தோற்கடிக்கலாம்._
_3. இத்தனை பெண்களை மணமுடித்தால், சாம்ராஜ்யம் பெருகும்._
_4. இந்த இறைவனுக்கு கோவில் கட்டினால் மகாராஜாவாக ஆகலாம்._
_5. ராஜாவின் மனைவி அந்த புரோகிதருடன் உடலுறவு கொண்டால், புத்திர பாக்கியம் கிட்டும்._
_6. அந்த வேதியருக்கு, அந்த பண்டிதருக்கு 5000 வேலி நிலமும் 10 கிராமங்களும் தானமாக கொடுத்தால் உங்கள் தோஷம் தீரும்._
_*என்று அரசர்களை முட்டாள்களாக்கி, அவர்கள் கல்விக் கூடங்கள், மருத்துவ கூடங்கள் அமைக்க விடாது தடுத்து, அறிவு வளர்ச்சியடைந்த ஒரு இனத்தையே 2000 ஆண்டுகள் கல்வியறிவு இல்லாமல் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.*_
_*தமிழ்நாட்டில் இருந்த பாண்டிய, சோழ, சேர, பல்லவ மன்னர்கள் யாவரும் கல்வி சாலைகளை திறக்காமல், மருத்துவ வசதிகள் கூடங்கள் இல்லமால், இரண்டு கிலோமீட்டர் இடைவெளியில் கோவில்களை "மட்டுமே" கட்டி, அந்த கோவில்களுக்கு நிலங்களை ஒதுக்கி, அதனை சமஸ்கிருதம் தேவபாஷை என்று கூறி ஏமாற்றி வந்த ஒரு குரூப் இடம் ஒப்படைத்து விட்டனர்.*_
_20ம் நூற்றாண்டில் எனது தாய்வழி தாத்தாவிடம் சுமார் 18 ஏக்கர் நிலம் இருந்தது, படிப்பு?! ஓரளவு படிப்பார், கையெழுத்து போடுவார். தந்தைவழி தாத்தாவிடம் 20 ஏக்கர் நிலம் இருந்தது, படிப்பு?! ஓரளவு படிப்பார், கையெழுத்து போடுவார். அவ்வளவுதான்.
_*காமராஜர் ஆட்சி காலத்தில் பள்ளிகள் திறக்க முற்பட்ட பொழுது, எங்கள் கிராமத்தில் பள்ளிக்கூடம் அமைக்க, தந்தைவழி தாத்தா தானாக முன்வந்து தனது 1/2 ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்தார். திவான்கள் , ஜமீன்கள் எவரிடமும் எதுவும் பெயரவில்லை.*_
_எனது பெரியப்பா 3ஆம் வகுப்பு வரை சென்றார், அத்தை பள்ளிக்கே செல்லவில்லை, அப்பா 6ஆம் வகுப்பு வரை சென்றார், அம்மா 3ஆம் வகுப்பு வரை சென்றார்._
_என் தந்தை வழி உறவில் முதல் பட்டதாரி மற்றும், ஒரே பட்டதாரி நான் மட்டுமே! தாய்வழி உறவிலும் முதல் பட்டதாரி நான். இப்பொழுது தான் எங்கள் அடுத்த சந்ததி அனைவரும் பள்ளி கல்லூரிகளில் அடி எடுத்து வைக்கின்றனர்._
_*இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், சமூகத்தில் உயர்நிலையில் இருப்பதாக கூறிக்கொள்ளும், நிலவுடமைச் சமூகமே இப்பொழுதுதான் கல்வியை உணருகிறது என்றால் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை..?!*_
_*ஒருவேளை, பிரிட்டிஷ் ஆட்சி அமையாமல் அரசாட்சியே தொடர்ந்திருந்து, டாக்டர் நடேசன் (முதலியார்), பெரியார் போன்ற திராவிட தலைவர்களின் முன்னெடுப்பு இல்லாமல் இருந்திருந்தால்!?*_
_ஏன் ஒரு குரூப் , பிரிட்டிஷார் மற்றும் கிறித்தவர்களை திட்டிக்கொண்டே இருக்கின்றனர் என்று இப்பொழுதாவது புரிகிறதா?!_
_*மீண்டும் சூழ்ச்சிகள் மூலம் தடைகளை ஏற்படுத்து கின்றனர். அன்று அவர்களுக்கு கிடைத்த பேராசை அடிமைகள், சோழ,பாண்டிய, சேர, பல்லவ மன்னர்கள். இன்று பழனிச்சாமி, நரேந்திர தாமோதரதாஸ்.*_
_கல்விச் சாலைகள் முழுக்க இராமாயணம், மகாபாரதம் என்று மாறிக் கொண்டிருக்கிறது. மீண்டும் சமஸ்கிருதம் எல்லா துறைகளிலும் எட்டிப் பார்க்கிறது_
_*அதானி, அம்பாணி, பிர்லா, மிட்டல், பஜாஜ், கோத்தாரி, கோத்ரெஜ், வேதாந்தா போன்றவர்கள் நமது நிலங்களை எடுத்துக்கொள்ள ஏற்கனவே சட்டம் இயற்றிவிட்டனர். அடுத்து கல்வி பறிபோகும். அடுத்து உரிமை?!*_
_*எவன் ஒருவன், ஏ!! இந்துக்களே, வாருங்கள் நாம் இந்துக்களாக ஒன்றிணைவோம், உலக நாடுகளுக்கு தலைமை ஏற்கலாம் என்று மதத்தை தூக்கிக்கொண்டு வருகின்றானோ, அவன் அடுத்த 500 ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்த போகின்றான் என்று விளங்கிக் கொள்ளுங்கள்.*_
_*நாம் விழிப்புடன் இருந்து நமது சந்ததியினரின் உரிமைகளை காப்போம்.*_
கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்மோனிய பொட்டி இளையராஜாவிடம்
*கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்மோனிய பொட்டி இளையராஜாவிடம்*
#கம்யூனிஸ்ட்_இயக்கத்திற்குதான் #நன்றிகடன்பட்டவர்கள்_இவர்கள்!
கேரளாவில் #இஎம்எஸ் தலைமையிலான ஆட்சி நடந்தபோது தேவிக்குளம், பீர்மேடு தொகுதி இடைத்தேர்தலுக்காக பிரச்சார மேடைகளில் பாடுவதற்காக மாயாண்டி பாரதி மூணாறு பண்ணைப் புரத்தில் தோட்டவேலை செய்து வந்த பாவலர் வரதராஜனை அழைத்து வந்துள்ளார்.
தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் வெற்றி பெற்றபின் தலைவர்கள் எல்லாம் ஊருக்கு திரும்பியபின் மாயாண்டி பாரதியிடம் வாழ்க்கை நடத்த வழிச்சொல்லுங்கள் எனக்கூற, அதற்கு ஐமாபா, "நான் என்ன முதலாளியா? பணக்காரனா? என்ன செய்ய முடியும்? கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகையில் உன் பாட்டை பற்றி எழுதுகிறேன். ஆனா நீ ஒத்த குரல்ல பாடுனா பத்தாது. ஒரு கச்சேரி மாதிரி கொடுக்கனும்"ன்னு சொன்னார் ஐமாபா.
அதற்கு, "என் தம்பி பயல்கள் 10 ,15 வயசு. அவனுங்கள கூட்டிட்டு வரேன்" என்றார் பாவலர் வரதராஜன். அதன்படி, தமிழ்நாட்டில் பாட்டு கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பாவலர் தம்பி பாஸ்கர், தபேலா போட, ராசய்யா (இளையராஜா) பெண் குரலில் பாட, அமர்சிங் (கங்கை அமரன்) ஜால்ரா போட, கச்சேரிகள் நடந்துள்ளது.
தனியாக பாட்டு மட்டும் பாடி கம்யூனிஸ்ட் கட்சிக்கு கலை அழகு கொடுக்க முடியாது என எண்ணி, கச்சேரி நடத்த தபேலா, ஹார்மோனியம், ஜால்ரா வாங்க தோழர்களிடம் நிதி தாரீர் என பத்திரிகையில் செய்தி வெளியிட்டப்பட்டது.
அதற்கு தோழர்கள் அளித்த உதவியில் பாவலரின் இசை க்குழுவிற்கு இசைக்கருவிகள் கட்சியால் வாங்கப்பட்டுள்ளது.
மாயாண்டி பாரதியால் சென்னையில் கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இப்படி தான் தங்களது இசைப் பயணத்தை பாவலர் குடும்பம் தொடங்கியது.
#கம்யூனிஸ்ட் கட்சியால் அறிமுகம் செய்யப்படாமல் போயிருந்தால், இந்த நால்வரும் பண்ணைப்புரத்திலேயே இப்போதும் தோட்ட வேலை செய்து கொண்டிருந்திருப்பார்கள்.
வாழ்க்கை தந்த கம்யூனிஸ்ட் கட்சியை மறந்து பேசும் இவர்களை (கங்கை அமரன் மற்றும் இளையராஜா) போன்ற ஆயிரக்கணக்கான சுயநலவாதிகள் இந்த தேசத்தில் உள்ளனர்.
Saturday, November 26, 2022
கடவுள்னு நீங்க கும்பிடுற சிலையே பார்ப்பனர்கள் காலுக்கு கீழதான்
கடவுள்னு நீங்க கும்பிடுற சிலையே பார்ப்பனர்கள் காலுக்கு கீழதான் என்கிறார்களா ஐயன்மீர்?
அடே சங்கீஸ் இது என்ன அபிஷேகம் னு கேட்டு சொல்லுங்கடா.
சனாதனக் கதை
சனாதனம்.. சனாதனம் என்று சங்கிகள் பொங்கிக் கொண்டிருக்கும் இந்த அற்புதமான சுபமுகூர்த்த வேளையிலே.. சனாதனம் பற்றி நாமும் அறிந்து கொள்ள சனாதனத்தின் மிக முக்கியமான இதிகாசமான மஹாபாரதத்தில் இருந்து கதைகள் சிலவற்றை அறிந்து கொண்டு சனாதனத்தின் சிறப்பை உணர்வோமாக!
சனாதனக் கதை - 1
யயாதியின் மகள் மாதவி
மஹாபாரதம் உத்தியோக பருவத்தில் இந்தக் கதை வருகிறது.
விசுவாமித்திரர் என்னும் அந்த மஹாமுனியிடம் சீடனாக இருந்து பொறுமை என்பதைக் கற்றுக் கொண்ட கலவன் என்னும் பிராமணன், விசுவாமித்திரரிடம், "நான் உங்களுக்கு ஏதாவது குருதட்சணை தர வேண்டும். தயவு செய்து என்ன வேண்டும் என்று கூறுங்கள்" என்றானாம். விசுவாமித்திரர் "எனக்கு எதுவும் தேவை இல்லை" என மறுக்க, மீண்டும் மீண்டும் கலவன் அவரைத் தொல்லை செய்து கொண்டே இருந்தானாம். விசுவாமித்திரர் கொஞ்சம் எரிச்சலாகி, "எனக்குக் கருப்பு நிறக் காதுகள் உடைய வெள்ளை நிறக் குதிரைகள் எண்ணூறு வேண்டும்" என்றாராம்.
"இப்படிப்பட்ட தரமான எண்ணூறு குதிரைகள் வாங்கிப் பரிசளிக்கும் அளவுக்கு என்னிடம் செல்வம் இல்லையே என்ன செய்வேன்? விஷ்ணுவிடம் சரணடைந்து கேட்கலாமா? என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் கருடன் அவன் முன் தோன்றி, "வா நான் உனக்கு வழிகாட்டுகிறேன்" என்று தன் மீது அமர்ந்து கொள்ளச் சொல்லிப் பறந்தான்.
"உலகத்தில் பிராமணர்களுக்கு வேண்டிய செல்வத்தைத் தரவே அரசர்கள் இருக்கிறார்கள். வா உன்னை காசியை ஆளும் யயாதி என்னும் அரசனிடம் அழைத்துச் செல்கிறேன்" என்று யயாதியிடம் சென்றார்கள். யயாதியிடம் குதிரைகள் வேண்டும் என்று கேட்க, யயாதியோ "எண்ணூறு உயர்தரக் குதிரைகள் தரும் அளவுக்கு செல்வம் இல்லை. யாசகம் கேட்டு வந்த பிராமணர்களைத் திருப்பி அனுப்பினால் என்னுடைய குலமே அழிந்து விடும். செல்வம் இல்லாவிட்டாலும், என்னிடம் மாதவி என்னும் மகள் இருக்கிறாள். அவள் உலகமே வியக்கும் பேரழகி, அரசர்கள் முதல் அசுரர்கள் வரை அவள் கரம் பிடிக்கப் போட்டி போடுகிறார்கள். எண்ணூறு குதிரைகள் என்ன? இவளை எந்த அரசனுக்குக் கொடுத்தாலும் அவன் உலகத்தையே உங்களுக்குக் கொடுத்து விடுவான்" என்று கூறினார். கருடனும் "நான் உனக்கு வழி காட்டிவிட்டேன். இனி உன் திறமை" என்று கூறிவிட்டு பறந்துவிட்டார்.
அந்த கன்னிகையை அழைத்துக் கொண்டு கலவன் அயோத்தியை ஆண்ட ஹர்யாஸ்வா என்னும் இஷ்வாகு (ராமன் பிறந்ததாகக் கூறப்படும் வம்சம்) அரசனிடம் அழைத்துச் சென்று, "இவளை நீ மனைவியாக ஏற்றுக் கொள். இவள் உனக்கு நான்கு நல்ல மகன்களைப் பெற்றுத் தருவாள். ஆனால், அதற்குப் பதிலாக ஸ்த்ரீதனமாக எனக்கு வெள்ளைநிறமும் கருப்புநிறக் காதுகளும் உடைய எண்ணூறு குதிரைகள் தர வேண்டும்" என்றார்.
அந்த மன்னன் "ஆஹா!இவள் பேரழகி தான். எனக்கு நன்மக்களைப் பெற்றும் தருவாள். ஆனால் என்னிடம் இருநூறு குதிரைகள் தான் இருக்கின்றன. நான் ஒரே ஒரு மகனை மட்டும் இவள் மூலம் பெற்றுக் கொள்கிறேன்" என்று சொன்னானாம்.
இதைக் கேட்ட மாதவி கலவனிடம், "ஐயா.. பரவாயில்லை. எனக்கு உறவு கொண்டு குழந்தை பெற்றாலும் மீண்டும் கன்னித்திரை உருவாகி விடுகிற வரம் இருக்கிறது. அதனால், நீங்கள் நான்கு மன்னர்களிடம் என்னை அழைத்துப் போய் குழந்தை பெற வைத்து எண்ணூறு குதிரைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்றாளாம்.
அது போலவே செய்து அந்த மன்னனுக்குக் குழந்தை பிறந்தவுடன் குழந்தையை விட்டுவிட்டு மாதவியை அழைத்துக் கொண்டு கலவன் என்னும் அந்த பிராமணர் அடுத்த மன்னனைப் போய்ப் பார்த்தார். அவன் பீமஸேனனின் மகனாகிய திவோதசன். திவோதசனும் "நானும் இதை ஏற்கனவே கேள்விப்பட்டேன். இது எனக்கு மிகப்பெரிய மரியாதை" என்று கூறி மாதவியை ஏற்றுக் கொண்டு ஒரு குழந்தையைப் பெற்றுக் கொண்டு இருநூறு குதிரைகளைக் கொடுத்தானாம்,
அடுத்ததாக மாதவியை அழைத்துக் கொண்டு கலவன் போஜ அரசனாகிய உசீநரனிடம் சென்றார். அவனும் முன்னவர்களைப் போலவே ஒரே ஒரு குழந்தையை மட்டும் மாதவி மூலம் பெற்றுக் கொண்டு இருநூறு குதிரைகளை மட்டும் கொடுத்துவிட்டானாம்.
கலவன் அறுநூறு குதிரைகளையும், மாதவியையும் வைத்துக் கொண்டு அடுத்து யாரிடம் போகலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் கருடன் அவரிடம் வந்து, மீதமிருக்கும் இருநூறு குதிரைகளுக்கு பதிலாக விசுவாமித்திரருக்கு இந்த மாதவியைக் கொடுத்து ஒரு மகனைப் பெற்றுக் கொள்ளச் சொல்லலாம் என்று யோசனை கூற, அது போலவே விசுவாமித்திரரிடம் சென்று கலவன் கூறினான். விசுவாமித்திரரோ, "இதை நீ முன்பே சிந்தித்து இருந்தால், இவ்வளவு பேரிடம் போக வேண்டிய தேவை இல்லை. நானே, மாதவியுடன் கூடி நான்கு மகன்களைப் பெற்றிருப்பேனே?" என்று கேட்டு, மாதவியையம் அறுநூறு குதிரைகளையும் பெற்றுக் கொண்டு கலவனை அனுப்பிவிட்டாராம்.
மாதவியுடன் கூடி விசுவாமித்திரர் அஷ்டகன் என்னும் மகனைப் பெற்றெடுத்து அவனிடம் அறுநூறு குதிரைகளை விட்டுவிட்டு, மாதவியை மறுபடியும் கலவனிடம் கொடுத்துவிட்டாராம்.
கலவனும் மாதவியிடம் "பெண்ணே! நீ என்னையும் உன் தந்தையையும் நான்கு மன்னர்களையும் உன் மகன்களைப் பெரும் சக்தியால் காப்பாற்றிவிட்டாய். சென்று வா!" என்று கூறி தந்தை யயாதியிடம் கொடுத்து விட்டான்.
இதற்கு மேலும் தனக்கு மணவாழ்க்கை வேண்டாம் என்று எண்ணிய மாதவி துறவறம் பூண்டு காடுகளில் வாழ்ந்து மடிந்தாள்.
---------------------------------------------------------------------
இது ஒரு கதை தான். உண்மையான நிகழ்வு என்று நாம் கூறவில்லை. ஆனால், இப்படி ஒரு கதை எழுதப்பட்டதும் அது மிகப்பெரும் இதிகாசத்தில் பகுதியாக இன்றும் இருப்பதும் உண்மை.
இந்தக் கதையை எழுதியவர் வேதங்களைத் தொகுத்த, பிரம்மசூத்திரம் என்னும் வேதாந்தத்தின் அடிப்படை நூலை எழுதிய, பல புராணங்களை எழுதிய ரிஷி என்று சனாதனிகள் நம்புகிற வேதவியாசர்.
இந்தக் கதை மூலம் மக்களுக்கு அவர் சொல்ல விரும்பியது என்ன?
1.பிராமணர்கள் தானம் என்று கேட்டால் மறுத்தால் வம்சமே அழிந்து விடும்.
2. அவர்கள் கேட்பதைக் கொடுக்க முடியாவிட்டாலும் அதற்கு ஈடாக எதையாவது கொடுத்தே ஆக வேண்டும்.
3. தந்தை தன்னைத் தானமாக எவனோ ஒருத்தனுக்குக் கொடுத்தாலும் எந்த எதிர்ப்பும் இன்றி சென்றுவிட வேண்டும்.
4. தானம் வாங்கியவர் தன்னை எப்படி பயன்படுத்தினாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது.
5. பிள்ளை பெற்றுக் கொடுக்கும் தன்னுடைய கடமையை எவன் செய்யச் சொன்னாலும் பெண் செய்ய வேண்டும்.
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
இப்படிப்பட்ட கதைகளை உருவாக்கி, மக்கள் மத்தியில் பரப்பி தன்னுடையதும் தான் சார்ந்த கூட்டத்தின் நலத்தையும் மற்றவர்கள் எப்பாடுபட்டாவது எவ்வளவு கேவலமான செயல்களைச் செய்தாவது கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே சனாதனம். இந்த சனாதனம் நாட்டை அல்ல; ஒரு சிறு கூட்டத்தை மட்டுமே கட்டிக் காக்கிறது என்பதே உண்மை.✍🏼🌹
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை ஏமாற்றி முட்டாளாக்கிய ஸ்ரீரங்கம் பார்ப்பனர்கள்
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை ஏமாற்றி முட்டாளாக்கிய ஸ்ரீரங்கம் பார்ப்பனர்கள் - இன்றுவரை தொடரும் பார்ப்பன தந்திர அரசியல்...
13ஆம் நூற்றாண்டில் ஒரு சம்பவம்..
திருச்சிக்குப் பக்கத்தில சிறீரங்க கோயில்ல துலாபாரம் நடத்துருக்கு.. செஞ்ச பாவத்துக்கு ஏத்த மாதிரி எடைக்கு எடை பொருள கடவுளுக்கு குடுக்கப்படுறதா சொல்லிட்டு, ஐயர்ங்க ஆட்டய போடுற நிகழ்ச்சி தான் துலாபாரம்.
இந்த பார்ப்பனர்களுக்கு துலாபாரம் கொடுத்து அதிகமான அரசர்கள் பார்ப்பனர்களால் ஏமாற்றிப்பட்டுருக்காங்க. அதுல ரெம்ப அப்ராணியா, முட்டாளா ஏமாந்தவன் தான் சுந்தர பாண்டியன் ங்கிற மன்னன். இப்படி சொன்னா நம்ம ஆளுகளுக்குத் தெரியாது. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் னு சொன்னா தெரியும். நம்மாள்களுக்கு சினிமாவோடு லிங்க் பண்ணிதான் தெரிய வைக்கணும்
அந்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஒரிசா வரைக்கும் படைஎடுத்துக்கொண்டு போனான். தெற்கே இலங்கை வரைக்கும் படை எடுத்துப் போனான். இந்த நாடு முழுவதையும் அவனுடைய ஆட்சியின் கீழ கொண்டுவந்து பெரிய பேரரசாக சக்கரவர்த்தியாக ஆண்டான் னு வரலாறு சொல்லுது.
ஒரு ஐயர் சுந்தரபாண்டிய மன்னனிடம் "நீ பல போர்களை செய்திருக்கிற, பல உயிர்களைக் கொன்றிருக்கிற.. அந்தப் பாவத்தைப் போக்கத் துலாபாரம் செய்ய செய்யணும்" னு சொல்லிருக்குறான். மன்னனும் "சரி செஞ்சிட்டா போச்சி.. துலாபாரம் எங்கே செய்யலாம்?" னு கேக்க., "சிறிரங்கத்தில போயி பெருமாளுக்கு செய்வோம்"னு பூணுல் போட்ட ஐயர் சொல்ல, மன்னனும் "சரி.. அப்படியே பண்ணிறலாம்"னு சொல்லிட்டான்.
சுந்தரபாண்டியன் துலாபரம் கொடுக்குற மேட்டர கோயிலுள இருக்குற ஐயர்ங்கிட்ட சொல்ல.. ஐயர்ங்க கோயிலில தராசு கட்டி துலாபரத்துக்கு ரெடி பண்றாங்க
சுந்தரபாண்டியன் பட்டுச் சட்டை வேட்டியோடு துண்டை எல்லாம் போட்டு கோயிலுல இருக்குற ஜனங்களுக்கு ஒரு கும்புட போட்டு தராசில் உட்காரப் போனான். அப்போ.. ஒரு பட்டர் கேக்குறான் "மன்னா.. எடைக்கு எடை என்ன தரப் போகிறீர்"னு
(எடைக்கு எடை சாக்குப்பை நிறையா வெள்ளரிக்காய் தாறேன், கத்தரிக்காய் தாறேன், தக்காளி தாறேன், பழம் தாறேன் னு சொன்னா.. ஐயர்பயலுக மூடிட்டு வாங்கிட்டு வீட்டுக்கு போயிருப்பாங்க...)
ஆனா.. சுந்தரபாண்டியன் சொன்னது"நான் எடைக்கு தங்கம், பொருள்கள் தரப் போகிறேன்" னு
இவன் இப்படி சொன்னதும் பார்ப்பன மூளை வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சி.. "எடைக்கு எடை தங்கம், வைரம் எல்லாம் கொடுக்கப் போறாான். எல்லாம் நம்மவாளுக்குத்தான் கிடைக்க போது, இவன் பட்டு வேட்டி சட்டையோட தாரசுல உட்காரக் கூடாது" னு ஒரு ஐயர் ஆரம்பிக்கான் "மன்னா.. நீங்கள் எதற்காக துலாபாரம் செய்கிறீர்கள்?"னு கேக்க, மன்னன்"போர்க்களத்திலே பெற்ற வெற்றிக்காகவும், அங்கே செய்யப்பட்ட படுகொலைக்கு பாவ சாந்திக்காகவும் தான்"னு சொல்ல,
"ரொம்ப மகிழ்ச்சி. நீங்க துலாபாரம் செய்யுங்கள். அந்தத் தங்கத்தை எல்லாம் கொடுங்க.. ஆனால் ஒன்று. நீங்கள் போர்க் களத்திற்கு எப்படி போனீர்களோ அந்த மாதிரி உடை, பொருள்களை அணிந்து கொண்டு உட்காருங்கள்"னு ஒரு ஐயர் சொல்றான்.
அங்க இருக்குற எல்லா ஐயர் பயபுள்ளைகளும் கணக்கு போட ஆரம்பிச்சுட்டாங்க "போர்க்களத்திற்குப் பட்டு வேட்டியையும் துண்டையுமா கட்டிக் கொண்டு போவான்? போர்க்களத்திற்கு எப்படி போவான்? பெரிய இரும்பு உடைவாள், ஈட்டி, கேடயம் இரும்புக் கவசம், தலைப்பாகை இதை எல்லாத்தையும் கொண்டு போவான்.. இதுவே ஒரு 50 கிலோக்கு சேரும், அப்றம் சுந்தரபாண்டியன் ஒல்லியான ஆள் இல்ல,. நல்ல குண்டான ஆள். இந்த உடைகளைப் எல்லாம் போட்டால் இன்னும் 50 கிலோ வைரம் எக்ஸ்ட்ரா வரும்" னு பிளான்ன போட்டு... "சுந்தரபாண்டிய மன்னா.. நீங்க போருக்கு எப்படி போனீங்களோ.. அத மாதிரி தராசுல உக்காருங்க,.. அப்போதான் நீங்க செஞ்ச பாவம் போகும்"னு ஐயர்ங்க சொல்ல ஆரம்பிட்டாங்க.
போரில எதிரிகள பாத்து நடுங்காத சுந்தரபாண்டியன் இந்த ஐயர், பட்டர் பயக கோரஸ்ஸா சொன்னத பாத்து நடிங்கிட்டான். உடனே தளபதிய கூப்ட்டு.., உடைவாள், கவசம், ஈட்டி எல்லாம் எடுத்துட்டு வர சொல்லி, போருக்கு போன மாதிரியே தராசில் உட்காரப் போறான்.
"கொஞ்சம் பொறுங்க மன்னா" னு இன்னொரு பூணுல் போட்ட பெரிய பட்டர் கேக்குறான் "நீ எதற்காக துலாபாரம் இப்படி செய்யப் போகிறாய்?"னு கேக்க.., இப்ப யாரு.. னு பாத்த மன்னன் "போர்க் களத்திலே பெற்ற வெற்றிக்காக அங்கே செய்யப் பட்ட படுகொலை பாவங்களைப் போக்குவதற்காக செய்கிறேன்"னு சொல்ல,
அதுக்கு பட்டர் "சரி, நல்லா பண்ணுங்கோ... திவ்யமா பண்ணுங்கோ... ஆனா ஒன்னு, போர்க்களத்திற்கு எதன்மீது போனீர்கள்" என்று கேட்டவன் "போர்க்களத்திற்கு யானை மீது தானே போனாய்?"
(யானையோட, ஒவ்வொரு தந்தமும் மட்டும் 20 கிலோ எடை இருக்கும். மன்னனோட யானை டன் கணக்குல வெய்ட் இருக்கும்) இத கணக்குபோட்ட பட்டர் "யானையோடு வந்து மன்னன் சுந்தர பாண்டியன் உட்கார வேண்டும். யானையோடு மட்டுமல்ல, யானை மீது உட்கார்ந்திருந்த அம்பாரியோடு உக்காரவேண்டும்"னு சொல்ல அங்க இருக்குற ஜனங்க, பொண்டு பொடுசுக எல்லா சிரிச்சிட்டாங்க.
பக்கத்திலே இருந்த ஐயர்ங்க எல்லாம் கோரஸா.."ஆமா மன்னா.. நீங்கள் அவர் சொல்லுகிற மாதிரி யானைமீது வாருங்கள்"னு சொல்ல ஆரம்பிக்க.. அங்க இன்னோரு ஐயர் குருப்பு "இப்ப எப்படி இவன் துலாபாரம் கொடுக்கிறான்னு பார்ப்போம். அதும் யானை மீது அம்பாரி கொடுக்கிற அளவுக்கு"னு பேசி சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
சுந்தரபாண்டியன் சிரிக்கல "யானைக்கு எடையா எதுல வச்சி கொடுக்க, தாரசு இல்லயே ?"னு கேக்க, அதுக்கு ஐயர் பயக "அத நாங்க பாத்துக்குறோம்.. நீங்க யானையோட வந்தா மட்டும் போதும்"னு சொல்லிட்டு தாரசு ரெடி பண்ண ஆத்தங்கர மண்டபத்திற்குப் போனாங்க, காவிரியில நிறையத் தண்ணீ ஓடுனது வசதியா போனதால.., இரண்டு பரிசலைப் யானையயும், பொருளயும் வைக்கிற மாதிரி பெருசா செஞ்சி.., ரெண்டையும் ஆத்துல மிதக்க விட்டுடாங்க.
அப்றம் சுந்தரபாண்டியன யானையோட ஒரு பரிசல்ல நிக்க வச்சிட்டு, இன்னொரு பரிசல்ல பொருள்கள கொட்ட சொன்னானுக. சுந்தரபாண்டியனும் தங்கம், அரண்மனல இருக்குற பொருள எல்லாம் கொட்டி சிறிரங்க கோயிலுக்கு துலாபரம் கொடுத்தான். அதற்கப்புறம் சுந்தரபாண்டியன பார்ப்பனர்கள் மேளதாளத்துடன் கூட்டிப் போக பெரிய திருவிழா மாதிரி கொண்டாடியிருக்காணுக.
எல்லாம் முடிச்சதும் ஏமாளியான சுந்தரபாண்டியன், அந்த கோயில் தலைமை பட்டரைப் பார்த்து "சாமி... எனக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது"னு கேக்கான்.
(சுந்தரபாண்டியன் யாரு..?.. மன்னாதி மன்னன். தென்னாட்டு சக்ரவர்த்தி, பேரரசன், அவனுடைய கண் அசைவுக்கும், கை அசைவுக்கும் மக்கள், மன்னர்கள், கைகட்டி காத்திருக்கின்றாங்க.. அவ்வளவு பெரிய இந்த சக்கரவர்த்தி.. பட்டரிடம் "சாமி, எனக்கு ஒரு கோரிக்கை இருக்கு.. இந்தக் கோவில் வளாகத்திற்குள்ளயே என்னுடைய சிலை ஒன்றை வைத்துக் கொள்கிறேன்" னு கேக்க..
அதுக்கு அந்த பட்டர் பய.."இல்ல, இல்ல.. ஆண்டவனுடைய ஆலயத்தில் சாதாரண மனிதனுடைய சிலை வைப்பதற்கு இடம் இல்லை"னு மறுத்துட்டான்.
சுந்தரபாண்டியன் நினைச்சிருந்தா இந்தக் கோவிலையே இடித்து தரைமட்டமா ஆக்கியிருக்கலாம். அவனுடைய ஆதிக்கத்தில தான் அந்த கோவிலும் இருக்கு. இந்த ஐயர், பட்டரெல்லாம் அவன் போடுற பிச்சையில உயிர் வாழ்ரவுங்க, அந்தப் பெருமாளும், கோயிலுமே அவன் போடுற பிச்சையில தான் வாழ்ற நிலைமை இருக்க, அவன் இவ்வளவு செல்வத்தைக் கொடுத்தும், ஒரு ஓராமா கூட அவனுடைய சிலைய வைக்க விடல.
அதுக்கு பிறகு ஒரு கட்டப்பஞ்சாயத்து நடத்தி,... "சிலையெல்லாம் வைக்க விடமாட்டோம், வேணுமுனா.. நீங்க பிறந்த நட்சத்திரத்தில உங்களுக்கு ஒரு பூஜைய போடுறோம், அர்ச்சனைய பண்றோம் னு பட்டர்கள் சுந்தரபாண்டியன்கிட்ட சொல்லியிருக்கானுக. அந்த அர்ச்சனை சிறிரங்கத்து கோயிலுல இன்னைக்கு வரைக்கும் நடந்துட்டு இருக்கு..
BJP காரன் போட்டோ சாப்புக்கு 2 ரூபாய் குடுக்குற மாதிரி, இந்த ஐயர் பயபுள்ளகளுக்கு தட்டுல 1 ரூபாயோ, 2 ரூபாயோ போட்டாலே போதும் அர்ச்சனைய பண்ண போராணுக.. மலைபோல செல்வத்தை கொடுத்துட்டு ஒரு அர்ச்சனைக்காக மன்னன் அங்கே கைகட்டி நின்னுருக்கானா.... எவ்வளவு பெரிய முட்டாளா இருப்பான் சுந்தரபாண்டியன்..?
நம் முன்னோர்கள் அப்பவே முட்டாள்தான் பாஸு...
நான் சொல்லுவதெல்லாம் கதை இல்ல. எல்லாமே சீறீரங்கம் கோயில் கல்வெட்டில் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் போய் பார்த்துக் கொள்ளலாம்.
இந்த பூணூல் பார்ப்பனர்கள் அந்த காலத்துல இருந்து இப்போ வரைக்கும் நம்மள இப்படித்தான் ஏமாத்திட்டு வாரங்க.. இதுக்கு உதாரணமா நடைமுறைல இருக்குற.. பார்ப்பனர்களின் RSS இயக்கத்தால் வழிநடத்தப்படுற மோடி ஆட்சிய சொல்லலாம்.. மக்களோட வரிப் பணத்தையெல்லாம் பார்ப்பன முதலாளிகளுக்கும், பானியா முதலாளிகளுக்கும் வாரி கொடுக்குறது, பார்ப்பனர்களுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்புல 10% இடஒதுக்கீடு னு அவன் நோகமா சவ்ரிய மைரா வாழ்றதுக்கு நாட்டுல இருக்குற மீத 97% முட்டாளா ஆக்கிட்டான்.
பார்ப்பனன் இன்னும் நம்ம கோமணத்த தான் உறுவல னு நீங்க நினைக்க வேண்டாம் மக்களே. எப்போ 3% பூணூல்காரனுக்கு 10% இடஒதுக்கீடு செல்லும் னு கோர்ட் சொல்லிச்சோ., அப்பவே 97% இருக்குற நாம நிர்வாணமா ஆக்கப்பட்டுவிட்டோம்.✍🏼🌹
EWSReservation Must Read
Thread!
#EWSReservation
Must Read!
facebookல் ஒரு நண்பரின் பதிவு. கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று👇
நேத்து ஒரு அதிமுக நண்பன் கிட்ட பேசிட்டிருந்தேன். மிக நெருங்கிய நண்பன் அவன். #EWS ஆதரிச்சு ரொம்ப ஆவேசமா பேசிட்டிருந்தான். இட ஒதுக்கீட்டால SC/STதான் எல்லா வாய்ப்புகளையும்..
..பறிச்சு முன்னேறிட்டதாகவும் தன் சமூகம் பின் தங்கிவிட்டதாகவும் அடிச்சு பேசினான். அவன் MBC
"குப்பை அள்ளுபவர்களுக்கு 75 ஆயிரம் சம்பளம், அவர்கள் 2 கோடியில் வீடு கட்டுகிறார்கள்" என்றெல்லாம் WhatsAppல் வந்த தகவல்களையெல்லாம் பேசிக் கொண்டிருந்தான். அதெல்லாம் பொய்கள் என்று..
..சில Dataக்களைச் சொன்னேன். இதுதான் உங்ககிட்ட இருக்கிற பிரச்சனை.. சும்மா Bookக்க படிச்சிட்டு, Data படிச்சிட்டு பேசுவீங்க. அதெல்லாம் உண்மையில்ல. Data எல்லாமே பொய்னு ஒரே அடியா அடிச்சிட்டான்.
திடீர்னு "இதுக்கெல்லாம் திமுக ஆட்சிதான் காரணம், தீபாவளி வாழ்த்து ஏன் சொல்லல?.."
"..ஆ.ராசா இந்துக்கள இழிவு படுத்திட்டாரு, திருமா நாடககாதலை ஊக்குவிக்கிறாரு, இந்து முஸ்லிம்.. ப்ளா ப்ளா ப்ளா"ன்னு பாஜக குரல்ல சங்கித்தனமா பேச ஆரம்பிச்சான்.
இவன் இப்டி பேசற ஆள் இல்லையே.. என்னடா இவ்வளவு எமோசனலா பேசறான்னு குழப்பமா இருந்துச்சு.
கடைசியா அதற்கான பதில் அவனே சொன்னான்.
"அம்பது வருஷமா இட ஒதுக்கீட்டால SC/ST பயனடஞ்சாங்கள்ல.. இந்த 10% EWSனால நாங்க பயனடையக் கூடாதா?"ன்னு கேட்டான்.
"அடேய்.. EWSல உனக்கும் பங்கு கிடைக்கும்னுதான் இவ்ளோ நேரம் பேசிட்டிருந்தியா?"னு கேட்டேன்.
Basically அவன் நல்லவன் தான்..
..வெளிப்படையா 'ஆமா'னு ஒத்துக்கிட்டான். அவன் தன்னையும் அரியவகை ஏழையா நெனச்சுட்டு இருந்திருக்கான்.
உயர்ஜாதி ஏழைகள் என்கிற வார்த்தை எவ்வளவு நுட்பமானது, சூழ்ச்சிகரமானது என்று அப்போதான் புரிஞ்சுது எனக்கு. சமூகத்தில் தன்னை உயர்ஜாதியாக கருதிக்கொள்கிற BC, MBCயில் இருக்கும்..
..பலரை கூட இந்த EWS இடஒதுக்கீடு தமக்கானது என நம்ப வைக்கப்பட்டிருப்பது ஆபத்தானது. இதற்கெதிரான பெரிய எதிர்ப்புக்குரல் எதுவும் வராததன் பின்னணியில் இந்தச் சூழ்ச்சிதான் இருக்கிறது
இந்த EWS என்கிற வழிப்பறிக்கெதிராக பேசாமல், ஜாதியை உயர்த்திப்பிடிக்கும் ஜாதிக்கட்சி தலைவர்களின்..
..சூழ்ச்சிகரமான அமைதிக்குப் பின்னால் இருக்கும் ஆதாய கணக்கீடுகளில் பலியாக்கப்படுவது இவனைப்போன்ற அப்பாவிகள்தான்
ஜாதி உளவியல், தனக்கு மேலடுக்கில் உள்ளவர்களின் ஆதிக்கம் குறித்து கவலையோ வெட்கமோ கொள்வதில்லை. ஆனால் தனக்குக் கீழடுக்கில் இருப்பவர்களின் குறைந்தபட்ச...
..முன்னேற்றத்தைக்கூட சகித்துக்கொள்ள இயலாதபடி இரக்கமற்ற முறையில் சூழ்ச்சிகரமாக வார்க்கப்படிருக்கிறது
இந்த WhatsApp வதந்திகள் மனிதர்களின் சிந்தனையை மலினப்படுத்தி, சக மனிதர்களின் மீதான கண்ணோட்டத்தை எவ்வளவு தூரம் ஊனப்படுத்திவிடுகிறது என்பதை நினைக்கும்போது கவலையாக இருக்கிறது
எதார்த்தத்தில் அவன் படித்தவன். சிந்திக்கும் தன்மையுடையவன் தான். சிந்திக்க விடாமல் தடுத்திருக்கும் பார்ப்பனியக் கருத்தியலையும் வாட்சப் பல்கலைக்கழகத்தையும் தாண்டி என்றாவது வெளியே வந்து தன்னைச்சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் வலையைப் புரிந்துகொள்வான் என்று நம்பிக்கை இருக்கிறது
ஆனால் எவ்வளவு நாள் காத்திருப்பது. அதற்குள் மீண்டும் நம்மை பழைய நிலைக்கு கொண்டு செல்வார்கள். ஒரு 100வருடங்கள் பின் தங்குவோம்.
இந்த ஆபத்தை புரிந்துகொண்டு அனைத்து ஜனநாயகவாதிகளும் ஒன்றிணைந்து இந்த சமூக அநீதிக்கு எதிராக போராட வேண்டும். எதிர்கால சந்ததியினரை காப்பாற்றவேண்டும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த மோசடிகள் அனைத்தும் எந்த ஒரு வெளிநாட்டவரும் செய்யவில்லை
தாஜ்மஹால் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது;
செங்கோட்டை = முஸ்லிம்களால் கட்டப்பட்டது;
குதுப்மினார் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது;
சார் மினார் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது;
கோல் கும்பஸ் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது;
சிவப்பு கதவுகள் = முஸ்லிம்களால் செய்யப்பட்டவை;
ஏவுகணை = முஸ்லீம் செய்யப்பட்டது (டாக்டர் கலாம்);
இந்தியா கேட் = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது
இந்தியாவின் நுழைவாயில் = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது
ஹவுரா பாலம் = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது;
பாராளுமன்ற மாளிகை = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது;
ராஷ்டிரபதி பவன் = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது;
வடக்கு-தெற்கு தொகுதி = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது;
கன்னாட் பிளேஸ் = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது..... (கட்டப்பட்டவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள்.)
அரசியலமைப்பு = எஸ்சி உருவாக்கப்பட்டது (டாக்டர் அம்பேத்கர்);
அப்படியென்றால் இந்தியாவில் இந்த புண்ணிய பிராமணர்கள் என்ன செய்கிறார்கள்???
- நாட்டை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்!
நாடு, மதம், கலாச்சாரம், நாகரிகம், சமூகம் ஆகியவற்றை பலவீனப்படுத்துகிறது!
நாட்டில் சாதி, மதத்தின் பெயரால் கலவரங்களை உருவாக்கி வருகின்றனர்.
- நாட்டை உடைத்திருக்கிறார்கள்!
நாட்டுச் செல்வம், மதப் பயம் என்ற பெயரில் கோயில்களில் வசூல் செய்து வருகின்றனர்!
1987 - போஃபர்ஸ் பீரங்கி ஊழல், 960 கோடி
1992 - பங்கு ஊழல், 5,000 கோடி.
1994 - சர்க்கரை ஊழல், 650 கோடி
1995 - முன்னுரிமை ஒதுக்கீடு ஊழல், 5,000 கோடி
1995 - சுங்க வரி மோசடி, 43 கோடி
1995 - கப்லர் ஊழல், 1,000 கோடி
1995 - தினார் / ஹவாலா ஊழல், 400 கோடி
1995 - மேகாலயா வன ஊழல், 300 கோடி
1996 - உர செவ்வக ஊழல், 1,300 கோடி
1996 - தீவன ஊழல், 950 கோடி
1996 - யூரியா ஊழல், 133 கோடி
1997 - பீகார் நில ஊழல், 400 கோடி
1997 - மியூச்சுவல் ஃபண்ட் ஊழல், 1,200 கோடி
1997 - சுக்ராம் டெலிகாம் ஊழல், 1,500 கோடி
1997 - SNC மின் திட்ட ஊழல், 374 கோடி
1998 - உதய் கோயல் விவசாய விளைபொருள் ஊழல், 210 கோடி
1998 - தேக்கு மரக்கன்று ஊழல், 8,000 கோடி
2001 - டால்மியா பங்கு ஊழல், 595 கோடி
2001 - UTI ஊழல், 32 கோடி
2001 - கேதன் பரிக் பத்திர ஊழல், 1,000 கோடி
2002 - சஞ்சய் அகர்வால் வீட்டு முதலீட்டு ஊழல், 600 கோடி
2002 - கல்கத்தா பங்குச் சந்தை ஊழல், 120 கோடி
2003 - முத்திரை ஊழல், 20,000 கோடி
2005 - ஐபிஓ காரிடார் ஊழல், 1,000 கோடி
2005 - பீகார் வெள்ளப் பேரிடர் ஊழல், 17 கோடி
2005 - சார்பியன் நீர்மூழ்கிக் கப்பல் ஊழல், 18,978 கோடி
2006 - பஞ்சாப் சிட்டி சென்டர் ஊழல், 1,500 கோடி
2008 - கருப்புப் பணம், 2,10,000 கோடி
2008 - சத்யம் ஊழல், 8,000 கோடி
2008 - ராணுவ ரேஷன் ஊழல், 5,000 கோடி
2008 - ஸ்டேட் பேங்க் ஆஃப் சவுராஷ்டிரா, 95 கோடி
2008 - ஹசன் அலி ஹவாலா ஊழல், 39,120 கோடி
2009 - ஒரிசா சுரங்க ஊழல், 7,000 கோடி
2009 - அரிசி ஏற்றுமதி ஊழல், 2,500 கோடி
2009 - ஜார்க்கண்ட் சுரங்க ஊழல், 4,000 கோடி
2009 - ஜார்க்கண்ட் மருத்துவ உபகரண ஊழல், 130 கோடி
2010 - ஆதர்ஷ் வீடு ஊழல், 900 கோடி
2010 - உணவு தானிய ஊழல், 35,000 கோடி
2010 - பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஊழல், 2,00,000 கோடி
2011 - 2ஜி அலைக்கற்றை ஊழல், 1,76,000 கோடி
2011 - காமன் வெல்த் ஊழல், 70,000 கோடி
இந்த மோசடிகள் அனைத்தும் எந்த ஒரு வெளிநாட்டவரும் செய்யவில்லை, எந்த முஸ்லீமும் இல்லை, எந்த கிறிஸ்தவரும் இல்லை, எந்த SC, ST, OBC களும் இல்லை, இந்த மோசடிகள் அனைத்தும் போலி தேசபக்தியுள்ள பிராமண-பனியாக்கள் என்று அழைக்கப்படுபவர்களால் செய்யப்பட்டுள்ளன. அதற்கு மேல், இடஒதுக்கீட்டால் நாடு பின்னோக்கிப் போகிறது என்று இந்த அயோக்கியர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
வாழ்க இந்தியா... வாழ்க அரசியலமைப்பு...
பங்கு பங்கு
மேலும் பகிர்வதன் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
Tuesday, November 22, 2022
காசி தமிழ் சங்கமம் பித்தலாட்டம்
என்னுடன் முன்பு பணிபுரிந்த உத்திரபிரதேசத்திலுள்ள நண்பனிடம் நேற்று பேசினேன் லக்னோவை பூர்வீகமாக கொண்டவன் சமாஜ்வாடி கட்சிகாரன்.
அவனிடம் என்னப்பா உங்க ஊரே #காசி_தமிழ்_சங்கமத்தில் கோலகலமாக இருக்கிறதே என்று சொன்னவுடன்.
அப்படியா அந்த மாதிரி செய்திகள் எதுவும் லோக்கல் தொலைகாட்சிலயோ இல்லை ஊடகங்களிலயோ வந்தா மாதிரி தெரியலையே என்றான்..
காசியில் நடந்த விழா உண்மையில் தமிழ்நாட்டை தாண்டி ஒருத்தருக்கும் தெரியவில்லை.. தஞ்சை சாஸ்தா கல்லூரியில் படிக்கும் 300 க்கும் மேற்பட்ட மாணவர்களை இலவசமாக காசிக்கு கொண்டு சென்று கூட்டத்தை சேர்த்து ஒரு போலி நாடகத்தை நடத்தியுள்ளது பாஜக..
போராட்டம் என்றால் கொள்கை உறுதி என்றால் என்ன தெரியுமா?!
ஆதார் அட்டை கேட்டதற்கு பேரணியே வேண்டாமென்று ஓடிய கயவர்களைக் கண்டிருக்கிறோம் ..
போராட்டம் என்றால் கொள்கை உறுதி என்றால் என்ன தெரியுமா?!
நவம்பர் 26 1957
சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்பிரிவுகளை எரிக்க வேண்டும் என பெரியார் போராட்டத்திற்கு அழைக்கிறார்.
அழைத்தவர் பெரியார்...
திராவிடர் இயக்கத் தொண்டர்கள் 10000 பேர் அரசியல் சட்டத்தில் சாதியைப் பாதுகாக்கும் பக்கங்களைக் கொளுத்தினர்.
தமிழக காவல்துறை
பெண்கள் சிறுவர்கள் உட்பட போராட்டத்தில் கலந்து கொண்டாரில் 3000 பேரை கைது செய்தனர்.
சென்னையில் – 35 இடங்கள், வட ஆற்காடு மாவட்டம் – 30 இடங்கள், தென் ஆற்காடு மாவட்டம் – 26 இடங்கள், சேலம் மாவட்டம் – 41 இடங்கள், கோவை மாவட்டம் – 14 இடங்கள், இராமநாதபுரம் மாவட்டம் – 4 இடங்கள், மதுரை மாவட்டம் – 13 இடங்கள், நெல்லை மாவட்டம் – 8 இடங்கள், தர்மபுரி – 18 இடங்கள், செங்கல்பட்டு – 9 இடங்கள், கன்னியாகுமாரி – 5 இடங்கள், திருச்சிராப்பள்ளி – 107 இடங்கள், தஞ்சாவூர் – 161 இடங்கள், புதுச்சேரி – 6 இடங்கள், பெங்களூர் மற்றும் ஆந்திரா – 1 இடம்.
பெரியார் போராட்டத்தை அறிவித்த பின்னர்தான் அரசு சட்டத்தை எரிப்பவர்களுக்கு 3 ஆண்டு சிறை என்று எச்சரித்து புதிதாக ஒரு சட்டத்தையும் இயற்றியது . அதுவரை அரசியலமைப்புச் சட்டத்தை எரிப்பவர்களுக்கு என்ன தண்டனை என ஒரு சட்டமே இல்லை .
அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுடைய தியாகத்தைப் பற்றி சொல்வதானால் தனி புத்தகம் எழுத வேண்டும்.
அவர்களுடைய உறுதியை பற்றி சொல்வதானால் பேனாவில் மை நிரப்பக் கூடாது . எரிமலை குழம்பு தான் நிரப்ப வேண்டும்.
இன்றைக்கு சாதி ஒழிப்புக்கு திராவிடர் இயக்கம் என்ற செய்தது எனக் கேட்கத் துணிவோர் தம் காலாணிகளை எடுத்து தங்களையே அடித்துக்கொள்ள வேண்டும்.
திராவிடர் இயக்கத்தினரின் தியாகங்கள் அத்தனையும் சொல்ல என் எழுத்தால் சொல்ல முடியாதால் ஒன்றை மட்டும் சொல்கிறேன்.
வாளாடியைச் சார்ந்த 16 வயது சிறுவன் பெரியசாமி. கருஞ்சட்டை தொண்டர். இன்னும் இளமை முழுதும் தொடங்காத அந்த உள்ளம் பெரியாரின் உரைகள் கேட்டு இரும்பின் இன்னொரு பிம்பமாய் நின்றது.
போராட்டத்தில் கைதாகி சிறைத் தண்டனை பெற்றவர்களில் ஒருவர்.
பெரியசாமி க்கு விதிக்கப்பட்டது தூத்துக்குடி தட்டப்பாறை சிறை இரண்டு ஆண்டுகள் .
சிறைச்சாலையில் பார்வையிட வந்திருந்த அன்றைய ஆளுநர் விஷ்ணுராம் மேதி,. இளம் வயதில் ஒரு சிறுவன் அடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து என்ன என்று விசாரிக்க ...
உடனிருந்தோர் பெரியாரின் போராட்டம் அதில் பெரியசாமியின் பங்களிப்பு அத்தனையும் கூற
இந்தச் சிறு வயதில் இப்படி ஒரு போராட்டத்தில் எப்படி ஈடுபட்டார் என்று அதிர்ந்து போயிருந்தார். பெரியசாமியை அழைத்துக் கேட்கிறார்.. இந்தச் சிறுவயதில் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கலாமா?! நான் உன்னை மன்னித்து விடுதலை செய்ய ஏற்பாடு செய்கிறேன். மீண்டும் சட்டத்தை எரிக்க மாட்டேன் என்று எழுதிக் கொடுப்பாயா என்று கேட்கிறார் அன்றைய ஆளுநர் விஷ்ணுராம் மேதி....
“என் தலைவர் பெரியார் இந்தப் போராட்டத்தை அறிவித்தபோது நான் மட்டும் தான் சட்டத்தை எரித்தேன், வெளியே அனுப்பினால் என் தோழர்களைக் கூட்டி மீண்டும் எரிப்பேன்.” என்கிறார் அந்தப் பெருந்தொண்டர் பெரியசாமி என்கிற சிறுவன்.
மலைத்துப் போய் வாய் பேச முடியாத விஷ்ணு ராம் மேதி..மெல்ல தன்னைத் தேற்றி . கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும் என்று சொல்லிவிட்டு போகிறார்..
ஏற்கனவே சிறை... விடுதலை செய்கிறேன் என்ற உறுதி.. இன்னலில் இருந்து தப்பி விடலாம் என்று எவரேனும் நினைக்கக்கூடும்... திராவிட இயக்கத்தின் சீர்மிகு தொண்டன் பெரியசாமி மீண்டும் போராடத்தான் செய்வேன் சட்டத்தை எரிப்பேன் என்று காட்டிய உறுதி எங்கே....
ஆதார் அட்டை கேட்டவன் பேரணியே வேண்டாம் என்று கலைந்து போன ஆர்எஸ்எஸ் கயவர் கூட்டம் எங்கே ..?!..
சொல்லாமல் விடமுடியுமா ...
கீழ்வாளாடி பெரியசாமி என்கிற திராவிட இயக்கத்தின் சமராளி...
22.12.58ல் சிறையிலே நோயுற்று இறந்தே போனார். பெரியாரும் மணியம்மையாரும் அந்த கொள்கை மறவனுக்கு கண்ணில் நீரொழுக அஞ்சலி செலுத்திய படம்
வீரமாமுனிவர்
தமிழ்மொழியின் இனிமையால் ஈர்க்கப்பட்டு தன் பெயரையே மாற்றிக்கொண்ட மகத்தான தமிழ் அறிஞர் #வீரமாமுனிவர் பிறந்த தினம் - நவம்பர் 8:
இத்தாலியில் பிறந்த வர். கிறிஸ்தவ குருவான இவர் மதப் பிரச்சாரத்துக்காக 1710-ம் ஆண்டு கோவாவுக்கு வந்தார். அங்கிருந்து தமிழகம் வந்து சேர்ந்தார்.
மதத்தைப் பரப்ப உள்ளூர் மொழியைத் தெரிந்துகொள்வது அவசியம் என்பதை உணர்ந்தார். அதற்காகத் தமிழ் கற்றார். தமிழ் அவரைத் தன்னுள் இழுத்துக்கொண்டது. சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். விரைவிலேயே இலக்கியப் பேருரை கள் நடத்தும் அளவுக்குப் புலமை பெற்றார்.
கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தனது இயற்பெயரை முதலில் தைரியநாதன் என்றுதான் மாற்றிக் கொண்டார். பிறகு அதுவும் சமஸ்கிருதம் என்று அறிந்து வீரமாமுனிவர் என்று வைத்துக்கொண்டார் இந்த முன்னுதாரணப் புலவர்.
இலக்கணம், இலக்கியம், அகராதி ஆகியவற்றைப் படைத்தார். திருக்குறளை லத்தீன் மொழியிலும் தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகிய வற்றை பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
வெளிநாட்டினர் தமிழ் கற்கவும், தமிழர்கள் பிறமொழி களைக் கற்கவும் உதவியாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். ஆயிரம் தமிழ்ச் சொற்களுக்கு லத்தீனில் விளக்கம் கொடுத்தார். தொடர்ந்து 4400 சொற்களைக் கொண்ட தமிழ் -போர்ச்சுகீசிய அகராதியைப் படைத்தார். நிகண்டுக்கு மாற்றாக பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி ஆகிய பகுப்புகளைக் கொண்ட சதுரகராதியைத் தொகுத்தார்.
அந்த காலத்தில் சுவடிகளில் மெய் எழுத்துகளுக்குப் புள்ளி வைக்காமல் கோடு போடுவது வழக்கம். நெடில் எழுத்துகளைக் குறிக்க, ‘ர’ சேர்த்தனர். இதை மாற்றி ‘ஆ’, ‘ஏ’, ‘ஓ’ ஆகிய நெடில் எழுத்துகளைக் கொண்டுவந்தார். பல்வேறு தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்தன. மக்கள் சிரமமின்றிப் படிக்கவேண்டும் என்ற நோக்கில் அவற்றை உரைநடையாக்கினார்.
தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார். கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதன்முதலாகப் பேச்சுத் தமிழை விவரித்தார்.
உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், வாமன் கதை ஆகியவற்றைப் படைத்தார். தமிழின் முதல் நகைச்சுவை இலக்கியம் என்று போற்றப்படும் ‘பரமார்த்த குருவின் கதை’ நூலைப் படைத்ததும் இவரே.
இயேசு காவியமான தேம்பாவணியை இயற்றினார். இவரைப்போல வேறு எந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை என பல இலக்கிய வகைகளிலும் நூல்கள் படைத்ததில்லை.
தமிழில் 23 நூல்களை எழுதியுள்ளார். ஒன்பது மொழிகளில் புலமை பெற்றவர். பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழ்ந்தவர், தனது 67-வது வயதில் மறைந்தார்.
திருநெல்வேலி தொல்லியல் கழகம்
Sunday, November 20, 2022
காசியும் பெரியாரும்
பெரியாருக்கு வயது 25. ஒரு சமயம் அப்பா மீது வந்த கோபத்தில் காசிக்குப் போய் சாமியாராக முடிவு செய்தார். பெரியார் வீட்டை விட்டுப் புறப்பட்டுவிட்டார். பலவாறு பாடுபட்டு கசியை அடைந்த பெரியாருக்கு சோறு கிடைக்கவில்லை. பல நாள் பட்டினி. அவர் கையில் காசு கிடையாது. பசியைத் தாங்க முடியவில்லை. ஒரு சாப்பாடு சத்திரத்திற்குள் நுழைய முயன்றார். சத்திரத்தில் பார்ப்பன ஜாதியினருக்குத்தான் இலவசமாக சாப்பாடு கிடைக்கும். இவர் பார்ப்பனர் அல்ல என்பதைக் கண்ட காவலாளி பெரியாரை வெளியே தள்ளினான். அப்போது எச்சிலைகளை வெளியே கொண்டுவந்து எறிந்தனர். பெரியார் பார்த்தார்.
பசிக்கொடுமை, எச்சிலை அருகில் ஓடினார். சட்டமாக அமர்ந்தார். எச்சிலையிலிருந்து சோற்றை வழித்து சாப்பிட்டார். இடுப்பில் ஒன்றரைப் பவுன் மோதிரமிருக்க பெரியார் இச்செயலைச் செய்தார்.
பிறகு காசியில் பெரியார் வேலை தேடினார். ஒன்றும் கிடைக்கவில்லை. தாடி, மீசையை எடுத்தார். மொட்டையடித்துக் கொண்டு சாமியாரானார்.
காசியில் பெரியாருக்கு ஒரு மடத்தில் வேலை கிடைத்தது. பெரியாருடைய வேலை பூசைக்காக வில்வ இலை பறிக்க வேண்டும். விளக்குப் போட வேண்டும். இந்தக் காரியங்களை அதிகாலையில் குளித்து உடம்பில் திருநீறு அணிந்து செய்ய வேண்டும். பெரியாருக்கு அதிகாலையில் எழுந்து குளிப்பது கஷ்டமாக இருந்தது. ஒரு நாள் குளிக்காமல் திருநீறு பூசிக்கொண்டு பூசைக்கு வந்தார். இப்படிப் பலநாள் செய்தார். ஒரு நாள் உண்மை தெரிந்தது. வேலையிலிருந்து விரட்டப்பட்டார்.
பெரியார் மறுபடியும் பிச்சை எடுத்தார். சாமியார் வாழ்க்கையை வெறுத்தார். சாமியார்களிடம் இருந்த ஒழுக்கக் குறைவு பெரியாருக்குப் பிடிக்கவில்லை.
தன்னிடம் இருந்த மோதிரத்தை விற்றார். பணத்துடன் காசியை விட்டுப் புறப்பட்டார்.
காசி நகரம், ஆத்திகர் ராமசாமியை நாத்தீகராக மாற்றி அனுப்பி வைத்தது!



