Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (66)

72 ஆண்டுகளுக்கு முந்தைய கருஞ்சட்டை மாநாடு.

திருச்சியில் 1945 ஆம் ஆண்டு திராவிடர் கழக மாகாண மாநாடும் சுயமரியாதை மாநாடும் நடைபெற்றன. அம்மாநாட்டில் கருஞ்சட்டைப் படையொன்றை (தொண்டர் படை) அமைப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.

மாநாட்டின் தீர்மானத்திற்கேற்ப கருஞ்சட்டைப் படை 10.10.1945 அன்று உருவாக்கப்பட்டது.

சென்னையில் 10.2.1946 அன்று கருஞ்சட்டைப் படையினரின் அணி வகுப்பு நடத்தப்பட்டது.

பெரியாரும் அவரது தோழர்களும் 11.5.46 அன்று மதுரையில் திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டைப் படை மாநாட்டை நடத்தினர். 50,000 பேர் கலந்து கொண்ட அம்மாநாட்டையொட்டி நடத்தப்பட்ட பேரணியில் 20,000 பேர் பங்கேற்றனர். அப்பேரணியில் பெரியார், அண்ணா, எஸ்.ஆர்.காந்தி அம்மையார், இரா.நெடுந்செழியன் ஆகியோர் சாரட்டில் வந்தனர். ஈ.வெ.கி.சம்பத், க.அன்பழகன், இளம்வழுதி ஆகியோர் தொண்டர் படைத் தளபதிகளாகச் செயல்பட்டனர்.

அம்மாநாட்டுப் பந்தல் குண்டர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. மாநாட்டில் பங்கேற்றோர் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடந்தன. கருப்புச் சேலை அணிந்த ஒரு பெண் தோழர் நிர்வாணமாக்கப்பட்டார்.

ஏ.வைத்தியநாத அய்யர்தான் வன்முறையாளர்களுக்குப்  பணம் கொடுத்துத் தூண்டிவிட்டார் என்ற சந்தேகம் ஏற்பட்டதாக "குடி அரசு" (18.5.1946) எழுதிற்று.

#திராவிடம் அறிவோம் (65)

நீடாமங்கலம் சாதியக் கொடுமை நடைபெற்ற நாள் இன்று.

28.12.1937 அன்று பழைய தஞ்சை மாவட்டம், நீடாமங்கலத்தில் ‘தென்தஞ்சை ஜில்லா காங்கிரசின் 3-வது அரசியல் மாநாடு’ நடைபெற்றது.
மாநாடு அன்று பிற்பகல் சமபந்தி விருந்து நடந்தது.
சாதி, மத பேதமின்றி யாவரும் வரலாம் என்று மீண்டும் மீண்டும்  அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்பேரில் அங்கு வேடிக்கை பார்க்க நின்றிருந்த விவசாயக் கூலித்தொழிலாளர்களான தாழ்த்தப்பட்ட மக்கள் சிலர் மாநாட்டு விருந்தில் அமர்ந்து உணவருந்தினார். ஆனால் உணவருந்திக் கொண்டிருந்தபோதே அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அதற்கு மறுநாள் அவர்கள் வேலை பார்க்கும் பண்ணைகளுக்கும் தகவல் தரப்பட்டு, அங்கும் அவர்கள் தாக்குதலுக்குள்ளாயினர்.

 மரத்தில் கட்டிவைத்து உதைத்தும் மொட்டை அடித்தும் சாணிப்பாலை வாயில் புகட்டியும் கரும்புள்ளி – செம்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டும் அவர்கள் இழிவுபடுத்தப்பட்டனர். சுமார் 20 பேர் இத்தாக்குதல்களுக்கு உள்ளானார்கள்.

 இவ்வன்முறை நிகழ்விற்குச் சுயமரியாதை இயக்கம் உடனே எதிர்வினையாற்றியது. சுயமரியாதை இயக்க நாளேடான ‘விடுதலை’ யே இதனை முதன்முதலாக வெளியுலகிற்குக் கொண்டுசென்றது. ‘விடுதலை’ ’குடி அரசு’ இதழ்கள் இரண்டும் இணைந்து சுமார் ஆறுமாத காலத்திற்கும் மேலாக இந்த வன்நிகழ்வை மாகாணத் தமிழ் மக்களின் பேசுபொருளாக ஆக்கின.

மேலும், வன்முறைக்கு ஆளான தாழ்த்தப்பட்ட மக்களில் சிலரை இவ்வியக்கம் பாதுகாத்தும் வந்தது. இவற்றின் காரணமாக ஒரு தரப்பினரின் கோபத்துக்கு ஆளாகி, நீதிமன்ற வழக்குகளையும் சந்தித்தது ‘விடுதலை’ ஏடு.


#திராவிடம் அறிவோம் (64)

மிழ்மொழியைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒரு நூற்றாண்டு காலமாகத் தமிழ்நாட்டில் இருந்து வந்தது.

1918 மார்ச் 18 ஆம் நாள், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற புலவர்கள் கூட்டத்தில் சென்னை பல்கலைக்கழகம் தமிழ்மொழியைச் செம்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடு விடுதலை அடைந்த பின்பே, தமிழ்மொழியைச் செம்மொழியாக மைய அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

மறைமலை அடிகள், அப்பாதுரையார், தேவநேயப் பாவணர் முதலிய தமிழறிஞர்கள் இக்கோரிக்கையை வலியுறுத்திக் கட்டுரைகள் எழுதினர். பல்வேறு தமிழ் அமைப்புகள் தீர்மானங்களை நிறைவேற்றி மைய அரசுக்கு அனுப்பின. ஆனால், கலைஞர் வலியுறுத்தத் தொடங்கிய பின்பே இக்கோரிக்கைக்கு வலு சேர்ந்தது.

1996இல் முதலமைச்சர் கலைஞர் தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவிக்கக்கோரி மைய அரசுக்குக் கடிதம் எழுதினார். அக்கடிதத்தை மைய அரசு மைசூரில் உள்ள இந்திய மொழிகள் மைய நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தது. அந்நிறுவனம் அறிஞர்களுடன் கலந்தாய்வு செய்த பின்னர், தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்கலாம் என்று மைய அரசுக்குப் பரிந்துரை செய்தது.

1999 சனவரி 16 ஆம் நாள், சென்னையில் நடைபெற்ற திருவள்ளுவர் நாள் விழாவில் பேசிய முதலமைச்சர் கலைஞர், “தமிழ் செம்மொழியா? இல்லையா? என்ற விவாதம் இனிமேலும் தேவையில்லை. தமிழ் செம்மொழிதான்! மைய அரசு அதை உடனடியாக அறிவிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, 2003 ஏப்ரல் 22ஆம் நாள், கலைஞர் பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதினார்.

 2004 மே 27 ஆம் நாள், பிரதமர் மன்மோகன் சிங் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குறைந்த அளவுப் பொதுச்செயல் திட்டத்தை வெளியிட்டார். கலைஞர் வலியுறுத்தியதற்கிணங்கத் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படும் என்ற கோரிக்கை அத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. அதன்படி, 2004 செப்டம்பர் 17 ஆம் நாள் நடைபெற்ற மைய அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஆணையை மைய அரசு 2004 அக்டோபர் 12 ஆம் நாள் வெளியிட்டது.

மீனாம்பாள் சிவராஜ் அவர்களுடன்... ஒரு நேர்முகப் பேட்டி

http://dalitshistory.blogspot.com/2016/03/blog-post_22.html?m=1


காவல்துறையில் துணை ஆணையாளராக பதவியாற்றி ஓய்வுபெற்ற cவரது மகன் தயாசங்கர் இல்லத்தில்தான் மூதாட்டியார் அவர்கள் இருந்து வருகிறார்கள். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத்துடன் துவக்கத்தில் தொடர்பு கொண்டு உயிரோடு இருக்கக்கூடிய விரல்விட்டு எண்ணக்கூடியவர்களுள் ஒருவராக இருக்கக்கூடியவர் என்பதால், நீதிக்கட்சி பவள விழா மலரில் அவரை  நேர்முகமாக கண்டு பழைய நினைவுகளை புதிய தலைமுறையினரின் வெளிச்சத்துக்குக் கொண்டுவர  வேண்டும் என்ற அவாவில் அவரைச் சந்தித்தோம். திராவிடர் கழகத் தலைமை நிலைய செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றனுடன் வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் வி.எம்.நாராயணன், எஸ்ரே கருணாகரன் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

கேள்வி: தங்களுக்கும் நீதிக்கட்சிக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கும் தொடர்பு எப்படி ஏற்பட்டது?

பதில்: என்னுடைய பெரியப்பா வேணுகோபால் பிள்ளை இந்த இயக்கங்களுடன் தொடர்பு கொண்டவர். கடப்பையில் நகராட்சி ஆணையாளராகப் பணிபுரிந்தவர். சென்னை ஸ்பர்டாங் சாலையில் டாக்டர் டி.எம்.நாயர் ஆற்றிய உரை புகழ்பெற்ற ஒன்றாகும். அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களே இவர்தான். இந்த முறையிலே எங்கள் குடும்பத் தொடர்பு நீதிக்கட்சியோடு இருந்தது.

ஒரு நாள் சி.டி.நாயகம் அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தார். அப்பொழுது ராஜாஜி பிரதமராக இந்தியைத் திணித்த சமயம். பார்ப்பனர்கள் சூழ்ச்சியால் இந்தி திணிக்கப்படுகிறது. இதனை நாம் தடுத்து நிறுத்தாவிட்டால், வரும் காலத்தில் நம் பிள்ளைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். நாம் பெரியாரோடு சேர்ந்து கொண்டு ஏதாவது செய்தாக வேண்டும் என்று கூறினார்.
எனது துணைவர் சிவராஜ் அவர்கள் யோசிக்கலாம் என்றார். நான் திருமணம் ஆனபுதுசு. அப்பொழுது சட்டென்று சொன்னேன், இதில் யோசிக்க என்ன இருக்கிறது? தீவிரமாக இந்தியை எதிர்க்கத்தான் வேண்டும் என்று சொன்னேன். குழந்தை சொல்லுது; சரி என்று சொல்லுங்கள் என்றார் சி.டி.நாயகம்.

முதலில் சென்னை தியாகராயர் நகரில் பொதுக்கூட்டம் ஏற்பாடாயிற்று. அந்த கூட்டத்தை சுமங்கலிதான் துவக்கிவைக்க வேண்டும் என்றார் சி.டி.நாயகம். அந்த முறையிலே முதன் முறையாக நான் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் அது. பெண் ஒருவர் பேசுகிறார் என்றவுடன் ஆச்சரியத்துடன் கூடினார்கள். ஏனென்றால், அந்தக் காலத்தில் பெண்கள் எல்லாம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதோ பேசுவதோ மிகவும் அதிசயம்.

அடுத்து இராயப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவில் உள்ள பெரிய மைதானத்தில் எனது தலைமையில் இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டம். இந்தியை எதிர்த்துத் தீர்மானம் போடப்பட்டது.  அந்தத் தீர்மானத்தை எடுத்துக்கொண்டு பிரதமர் ராஜாஜியைச் சந்திக்கச் சென்றார்கள். நான் நல்ல எண்ணத்தோடு தான் இந்தியைக் கொண்டு வந்திருக்கிறேன், சுதந்திரம் வந்தால் இந்தியாவுக்குப் பொது மொழி இந்திதான். இதை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று ராஜாஜி பதில் கூறி அனுப்பிவிட்டார். இதனைத் தொடர்ந்து நாட்டில் ஏராளமான அளவில் இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டங்கள் நடக்கத் தொடங்கின. மீர்சாப்பேட்டை, தேனாம்பேட்டை என்று பரவியது.

ஒருநாள் கி.ஆ.பெ.விசுவநாதம் இராயப்பேட்டை ஆண்டியப்பத் தெருவில் உள்ள (கதவு எண்.12) எங்கள் வீட்டுக்கு வந்தார்., அவருடன் ஸ்டாலின் செகதீசன் என்பவரையும் அழைத்து வந்தார். இந்தியை எதிர்த்து எங்கள் வீட்டிலேயே ஸ்டாலின் செகதீசன் என்பவர் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். ஏராளமான பொதுமக்களும் பிரமுகர்களும் எங்கள் வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள்.

சென்னைக் கடற்கரையில் பெரியார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. பெரியாரைக் கைது செய்விட்டார்கள். பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமியையும் கைது செய்துவிட்டார்கள். அந்த நேரத்தில் நான் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினேன். ராஜாஜி என்னைக் கைது செய்யவில்லை. அதற்கு ஒரு காரணம் உண்டு. அந்தக் காலகட்டத்தில் வெள்ளைக்காரர்கள் வீட்டில் எல்லாம் சமையல்காரர்களாக (பட்லர்) பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் ராஜாஜியிடம் சென்று, மீனாம்பாள் அம்மாவை எந்தக் காரணத்தை முன்னிட்டும் கைது செய்யக்கூடாது; மீறி கைது செய்தால் நாங்கள் வேலைக்குப் போகமாட்டோம் என்று கூறிவிட்டார்கள். ராஜாஜியும் எப்படியோ என்னைக் கைது செய்யவேண்டாம் என்று கூறிவிட்டார்.

கேள்வி: தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தாங்கள் ஆற்றிய குறிப்பிடத்தக்க பணி என்ன?

பதில் : அகில இந்திய அளவில் தாழ்த்தப்பட்டோர் அமைப்புக்கு “கிறீறீ மிஸீபீவீணீ ஷிநீலீமீபீuறீமீபீ சிணீstமீ திமீபீமீக்ஷீணீtவீஷீஸீ” என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. பல மாநிலங்களில் எம்.சி.ராஜா அவர்களைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். உத்திரப்பிரதேசம், வங்காளம் போன்ற இடங்களில் எம்.சி.ராஜா அவர்களைத் தேர்ந்தெடுத்தனர். மத்தியப் பிரதேசத்தில் டாக்டர் அம்பேத்கரைத் தேர்ந்தெடுத்தார்கள்.

சென்னையிலே மாநாடு கூட்டி டாக்டர் அம்பேத்கர் அவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். எம்.சி.ராஜா எங்களுக்கெல்லாம் ஒரு வகையில் உறவினர். உறவினர்கள் எல்லாம் என்னிடம் வந்து உறவுக்காரர் என்றுகூடப் பார்க்கலாம். இப்படி  செய்கிறீர்களே என்றார்கள். நாட்டின் எதிர்காலத்தைப் பார்க்கவேண்டுமா? சொந்தபந்தத்தைப் பார்க்கவேண்டுமா? என்று திருப்பிக்கேட்டார்.

மாநாடு எங்கு நடத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது சென்னை “அய்லாண்டு திடலில் நீதிக்கட்சியின் மாநாடு” நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது 1919 திசம்பர் மாதத்தில் அந்த மாநாட்டுப் பந்தலில் ஒரு குறிப்பிட்ட நேரம் தாழ்த்தப்பட்டோர் மாநாடு நடத்துவதற்கு வாய்ப்பு அளித்தார்கள். நீதிக்கட்சி மாநாட்டின் செயலாளராக இருந்த சுந்தர்ராவ் நாயுடு இந்த உதவியைச் செய்ய முன்வந்தார்.

அந்தக் காலத்தில் பணத்துக்குப் பெருங்கஷ்டம், நான் போட்டிருந்த நான்கு பவுன் வளையல்களை அடமானம் வைத்து மற்ற செலவுகளைச் செய்தோம். இரண்டு மூன்று மணிநேரத்துக்குள்ளாகவே சுவரொட்டி அச்சிட்டு ஒட்டி மாநாட்டை சிறப்பாக நடத்திவிட்டோம். மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் அவர்களைத் தலைவராக தேர்ந்தெடுத்து தீர்மானத்தை அம்பேத்கர் அவர்களுக்கே அனுப்பிவைத்தோம்.

தந்தை என் சிவராஜ்
ஆனால், அம்பேத்கர் அவர்கள் தலைவர் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார். “நான் கோபக்காரன், எனக்கு இந்தப் பதவி எல்லாம் ஒத்துவராது நீயே இரு” என்று கூறி எனது கணவர் சிவராஜ் அவர்களை தலைவராக நியமித்தார்.

நாக்பூரில் மாநாடு நடத்தி சிவராஜ் அவர்கள் தலைவராக முறைப்படி அறிவிக்கப்பட்டார். அந்த மாநாட்டை ஏற்பாடு செய்தவரே டாக்டர் அம்பேத்கர் அவர்கள்தான். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் அகில இந்திய அமைப்பின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டது அப்பொழுது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகவே கருதப்பட்டது.

கேள்வி: தந்தை பெரியார் அவர்களோடு தாங்கள் இணைந்து பணியாற்றிய நிகழ்ச்சிகள் பற்றிக் கூறுங்கள்.

பதில்: நான் ஏராளமான சுயமரியாதைத் திருமணங்களுக்குத் தலைமை தாங்கி நடத்தி இருக்கிறேன். பெரியார் அவர்கள் கலந்துகொண்ட திருமணங்களிலும் கலந்துகொண்டு பேசி இருக்கிறேன்.

சென்னை, பெரம்பூரில் என் தலைமையிலும், பெரியார் தலைமையிலும் ஒரு சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. கடுமையான மழை, தாழ்த்தப்பட்டோர் பகுதி.. ஒரே சேறும் சகதியுமாகிவிட்டது. திருமணம் முடிந்து சாப்பிட்டுப் போகச் சொன்னார்கள். நான் ஏதோ சமாதானம் சொல்லி சாப்பிடவில்லை. பெரியார் என்ன செய்தார் தெரியுமா? மேலே இருந்த ஓலையைக் கீழே எடுத்துப்போட்டு அப்படியே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார். பெரியார் எந்தவித ஏற்றத்தாழ்வும் பார்க்கமாட்டார்.

நான், நாராயிணி அம்மாள், டாக்டர் தருமாம்மாள் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தபோது, காந்தியாருக்கு மகாத்மா என்ற பட்டம் கொடுத்து அழைக்கிறார்கள்; நாம் நம் மக்களுக்காக எல்லாவற்றிலும் முன்னின்று பாடுபடுகிற ஈ.வெ.ரா.அவர்களுக்கு ஒரு பட்டம் கொடுத்து அழைக்கவேண்டும் என்று முடிவு செய்தோம். அப்பொழுதுதான் ‘பெரியார்’ என்று அழைப்பது என்ற முடிவு செய்து, பிறகு பெண்கள் மாநாடு கூட்டி ‘பெரியார்’ என்று பட்டம் கொடுத்தோம். அதை ஒரு முக்கிய நிகழ்ச்சியாக தன் வாழ்நாளில் நான் கருதுகின்றேன்.
கேள்வி : வேறு முக்கிய நிகழ்ச்சிகள்...


பதில்: நான் எனது கணவர் சிவராஜ் அவர்களுடன் பம்பாயில் உள்ள அம்பேத்கர் அவர்கள் வீட்டுச் சென்று இருக்கிறேன். அவரே சமையல் செய்து எங்களுக்கு விருந்து பரிமாறிய நிகழ்ச்சி மறக்கமுடியாத ஒன்று.

சென்னைக்கு வேல்ஸ் இளவரசர் வந்தபோது, எங்களுக்குத் தனி அழைப்புக் கொடுக்கப்பட்டு, அந்த விருந்தில் கலந்துகொண்டோம்.

சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழக செனட் உறுப்பினராக இருந்திருக்கின்றேன். கவுரவ மாஜிஸ்ட்ரேட் போன்ற பொறுப்புகளில் இருந்திருக்கின்றேன். இரங்கூனில் எனது பாட்டனார் மதுரைப்பிள்ளை பிரபல ‘வணிகர் விக்டோரியா’, ‘மதுரை மீனாட்சி’ என்கிற இரண்டு லாஞ்சுகள் அவருக்குச் சொந்தமானவை. இண்டர்மீடியட் படித்துவிட்டுத் திருமணத்துக்காக 16வது வயதில் சென்னைக்கு வந்தேன். எனது கணவர் சிவராஜ் எனது அத்தைமகன் ஆவார். அந்தக் காலத்திலேயே வக்கீலுக்குப் படித்தவர். அப்பொழுதெல்லாம் இந்த சமுதாயத்தில் இவ்வளவு தூரம் படித்தவர்கள் மிகவும் குறைவு. அம்பேத்கர் அவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். தாழ்த்தப்பட்ட ஏழை-எளிய மக்களுக்கு இலவசமாக சட்ட உதவிகள் செய்வார்.

(பழைய நினைவுகளைப் பசுமை மாறாமல் எடுத்துச்சொன்ன மூதாட்டியாருக்கு நன்றி தெரிவித்து விடைபெற்று வந்தோம்)

நன்றி : நீதிகட்சி பவளவிழா மலர் - 1992



#திராவிடம் அறிவோம்(63)

மீனாம்பாள் சிவராஜ் – பிறந்த நாள் (26.12.1904).

சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலின பெண் துணை மேயர்;

இந்தி எதிர்ப்புப் போராளி;

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வல்லமை பெற்றவர் போன்ற பல்வேறு சிறப்புகள் உடையவர் மீனாம்பாள் சிவராஜ்.


1938 ஆம் ஆண்டு நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில்தான் பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த மாநாட்டுப் பந்தலிலேயே மூன்றாம் நாள் இறுதியில் ஆதிதிராவிடர் மாநாடு நடத்த மீனாம்பாள் சிவராஜ் நீதிக்கட்சித் தலைவர்களிடம் ஒப்புதல் பெற்று நடத்தினார். அவருடைய பிறந்தநாள் இன்று.

இணைப்பு: நீதிக்கட்சி பவள விழா மலரில் வெளிவந்த அவருடைய பேட்டி.

http://dalitshistory.blogspot.com/2016/03/blog-post_22.html?m=1



#திராவிடம் அறிவோம் (62)

(25.12.2018) இன்றிலிருந்து சரியாக 44 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவையே பரபரப்புக்கு உள்ளாக்கிய அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அது இராவண லீலா. அந்த நிகழ்ச்சிக்குக் காரணம் என்ன?

அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவரான பக்ருதீன் அகமது அலி மற்றும் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோருக்கு அன்னை மணியம்மையார் 26.10.1974 அன்று ஒரு தந்தி அனுப்பினார்.

‘திராவிட மாவீரன் இராவணனை எரிக்கும் இராமலீலா நிகழ்ச்சியில் தாங்கள் பங்கு கொள்வது மதச்சார்பின்மை கொள்கைக்கு முரணானது மட்டுமன்று. பல இலட்சக்கணக்கான திராவிட மக்களை, அவமானப்படுத்தி ஆத்திரமூட்டும் செய்கையுமாகும். எனவே, இந்நிகழ்ச்சிக்குச் செல்லக்கூடாது. மீறியும் அதில் பங்கு கொள்வீர்களானால், இலட்சக்கணக்கான திராவிட மக்கள் தமிழ்நாடெங்கிலும் இராமன் உருவத்திற்குத் தீயிட்டுக் கொளுத்த நேரிடும்’ என்பதுதான் அது.

எனினும், மணியம்மையாரின் குரலுக்கு குடியரசுத் தலைவரோ, பிரதமரோ செவிமடுக்கவில்லை. மருத்துவமனையில் இருந்த மணியம்மையார் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். நிகழ்ச்சியை நிறுத்துமாறு செய்யப்பட்ட எல்லா நடவடிக்கைகளையும் மீறி உறுதி தளராமல் இராமன், சீதை, இலட்சுமணன் ஆகிய உருவங்களுக்கு 25.12.1974 அன்று தமது கையாலேயே தீயிட்டார் அன்னையார். கைதும் செய்யப்பட்டார்.

    அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு நடந்த நாள் இன்று.


#திராவிடம் அறிவோம் (61)

அரசு அலுவலர்கள் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும் என்று 1978-இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண். 1134, கல்வித் துறை, நாள். 26.01.1978)

பின்னர், தமிழ்மொழியின் பயன்பாட்டினை செவ்வனே செயல்படுத்த உறுதுணையாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையின் துணைகொண்டு 2008-இல் செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. அரசாணையும் வெளியிடப்பட்டது. (அரசாணை எண். 41, தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை, நாள். 20.02.2008). அதன்படி,


தலைமைச் செயலகத் துறைகளில் அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும்.


சுற்றாணைக் குறிப்புகள் (Circulars) மற்றும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும்.


தலைமைச் செயலகம் மற்றும் துறைத் தலைமை அலுவலகப் பயன்பாட்டிலுள்ள கணினிகள் அனைத்திலும் தமிழ் மென்பொருள் பயன்படுத்தப்பட வேண்டும்.


துறைத் தலைமை அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் படிவங்கள் முடிந்த வரை தமிழிலேயே இருக்க ஆவன செய்ய வேண்டும். சான்றாக, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை போன்றவற்றில் பயன்படுத்தப்படும் படிவங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.


#திராவிடம் அறிவோம் (60)

இரணியண் அல்லது இணையற்ற வீரன் – பாரதிதாசன்

இராவண காவியம் – புலவர் குழந்தை

ஆரிய மாயை – அண்ணா

கருஞ்சட்டை ஒழிய வேண்டுமா – புலவர் பு. செல்வராசு

காந்தியார் சாந்தி அடைய – ஏ.வி.பி. ஆசைத்தம்பி

போர்வாள் – சி. பி. சிற்றரசு

தூக்குமேடை, உதயசூரியன் - கலைஞர்

    அரசால் தடை செய்யப்பட்ட திராவிட இயக்க எழுத்தாளர்களின் நூல்கள் இவை.

 திராவிட இயக்க வரலாற்றில் கருத்துரிமை நசுக்கப்படுவதை எதிர்த்து தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வந்தது. தி. மு. கழகம் 1950-இல் காங்கிரஸ் ஆட்சியாளரை எதிர்த்து, ‘பேச்சுரிமை-எழுத்துரிமைப் போர்’ என்று ஒரு போராட்டத்தையே நடத்திற்று.
   
1948-இல் தடை செய்யப்பட்ட ‘இராவண காவியம்’ நூலுக்கு 23 ஆண்டுகள் கழித்து கலைஞரால் 1971-இல் தடை நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

#திராவிடம் அறிவோம் (59)

திருக்குறளும் தந்தை பெரியாரும்!

1928 ஆம் ஆண்டு முதல் பெரியார், திருக்குறளை எழுத்துகள் வாயிலாகவும், சொற்பொழிவுகள் மூலமாகவும் மக்களிடையே தீவிரமாகப் பரப்பினார்.

1948 ல் சென்னையில் மிகப்பெரிய முதல் திருக்குறள் மாநாடு நடத்தினார். 'திருக்குறள் நாள் ' கொண்டாடச் செய்தார்.

1952 ல் 10000 திருக்குறள் புத்தகங்களை அச்சடித்து நான்கு அணா விலையில் தமிழ்நாடு முழுவதும் பரப்பினார்.

இதன் விளைவாக, தமிழகப் பள்ளிகளிலும், மேடைகளிலும், பத்திரிகைகளிலும், நூல்களிலும் திருக்குறள் சிறந்த செல்வாக்கு பெற்றது.

"நீங்கள் என்ன சமயத்தவர் என்று கேட்டால், வள்ளுவர் சமயம் என்று சொல்லுங்கள். உங்கள் நெறி என்னவென்றால் குறள் நெறி என்று கூறுங்கள். அப்படிச் சொன்னால் எந்தப் பிற்போக்குவாதியும், எப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரனும் எதிர்நிற்க மாட்டான். யாரும் குறளை மறுக்க முடியாததே இதற்குக் காரணம்".

- பெரியார்.

#திராவிடம் அறிவோம் (58)

7.07.1950 அன்று சென்னை உயர்நீதிமன்றம் ' வகுப்புரிமை இட ஒதுக்கீடு' அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது எனத் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றமும் சென்னைத் தீர்ப்பை உறுதி செய்தது.

 இத்தீர்ப்பை எதிர்த்து தந்தை பெரியார் திருச்சியில் 03.12.1950 இல் வகுப்புரிமை மாநாடு கூட்டினார்.

தந்தை பெரியாரின் போராட்டத்தின் காரணமாக முதன்முதலாக அரசியல் சட்டம் திருத்தப்பட்டது. அரசியல் சட்டத்தில் பிரிவு 15 (4) சேர்க்கப்பட்டது.

சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ செல்லாத தந்தை பெரியாரால் இந்தியாவில் வசிக்கும் அனைத்து பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வகுப்புவாரி உரிமை வழங்கப்பட்டது.

#திராவிடம் அறிவோம் (57)

காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவளித்ததில் பெரும் தொழிலதிபர்களும், பண்ணையார்களும் கணிசமான பங்கு  வகித்தனர். நிலச்சீர்திருத்தம் குறித்துப் பேசி வந்தாலும், அதற்காக காங்கிரஸ் அரசு எதையும் செய்யவில்லை.

கடுமையான போராட்டங்களின் விளைவாக 1961-இல் தமிழ்நாடு நிலச்சீர்திருத்த (உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரு தனி நபருக்கான நில உச்ச வரம்பாக 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பயனில்லை.

1970-ல் திமுக அரசு மிகுந்த துணிச்சலோடு உச்சவரம்பிற்கான அளவை 15 ஸ்டாண்டர்டு ஏக்கராகக் குறைத்தது. இதன் மூலம் கணிசமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, விவசாயத் தொழிலாளர்களுக்கும், சிறு விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

#திராவிடம் அறிவோம் (56)

நீதிக்கட்சி ஆட்சியில், 1922 மார்ச் 25 ஆம் நாள், தாழ்த்தப்பட்ட - பழங்குடி மக்களை இனி பஞ்சமர் உள்ளிட்ட சொற்களால் இழிவு படுத்தக்கூடாது. அவர்களைக் குறிப்பிடுவதற்கு, ஆதிதிராவிடர் என்ற சொல்லையே பயன்படுத்த வேண்டும் என்றும் சென்னை மாகாண சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவிலேயே தாழ்த்தப்பட்டோருக்காக தனியாக அமைச்சகத்தை அமைத்தது நீதிக் கட்சி அரசு.

#திராவிடம் அறிவோம் (55)


G.O.Ms.No.145, Personnel and Administrative Reorms Dept., dated: 30.09.2010.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணை இது.

கலைஞரின் ஆட்சிக்காலத்தில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இவ்வாணையின்படி, ஒரு குறிப்பிட்ட பணிக்குத் தேவையான அடிப்படைத் தகுதிக் கல்வியைத் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அந்தப் பணியிடங்களில் 20 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படியே, இன்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அரசுப் பணிக்குப் பணியாளர்களைத் தேர்வு செய்து வருகிறது.


Challenged in court and dismissed:
https://indiankanoon.org/doc/56235554/

Madras High Court
S.Gomathi Nayagam vs The State Of Tamil Nadu ... on 25 July, 2014
       

  

  

 
 
 BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT

DATED : 25.07.2014

CORAM
THE HONOURABLE MR.JUSTICE S.NAGAMUTHU

W.P.(MD)No.15383 of 2012

S.Gomathi Nayagam                ... Petitioner
                                   
     
Vs.

1.The State of Tamil Nadu represented by
   the Secretary to Government,
   Personnel and Administrative Reforms (S) Department,
   Secretariat, Chennai-600 009.

2.The Secretary,
   Tamil Nadu Public Service Commission,
   Near Government Dental Medical College,
   Frazer Bridge Road,
   V.O.C. Nagar, Park Town,
   Chennai-600 003.               ... Respondents

 
Writ Petition filed under Article 226 of the Constitution of India
praying for issuance of a Writ of Certiorarified Mandamus calling for the
records of the first respondent relating to G.O.Ms.No.145 (P&AR Department)
dated 30.09.2010 and quash the portion relating to the illustration and
consequential wrong selection made by the second respondent on 09.10.2012 and
20.11.2012 for the interview posts and non-interview posts respectively under
Group-II Examination and consequently direct the respondents to issue amended
Government Order so as to serve the purpose of twenty percent of special
reservation for persons studied in Tamil Medium (PSTM) in all categories and
issue fresh selection notification by the TNPSC within a specified time frame
that may be fixed by this Court.

  
!For Petitioner     : Mr.S.Visvalingam
^For Respondents : Mr.K.P.Krishnadoss,
     Government Advocate


:ORDER
Challenge in this writ petition is to the Government Order in G.O.Ms.No.145, Personnel and Administrative Reforms (S) Department, dated 30.09.2010.
2.The facts of the case are as follows:
The Government of Tamil Nadu promulgated an Ordinance as Tamil Nadu Ordinance 3 of 2010 providing horizontal reservation to 20% in all posts and Government Services for the candidates who were studied in Tamil Medium. With a view to give effect to the said Ordinance, which was later on substituted by an Act, the Government, in exercise of the powers conferred by sub-section (1) of Section 8 of the said Ordinance, issued Rules under the name ?Tamil Nadu appointment on preferential basis in the Services under the State of Persons studied in Tamil Medium Rules, 2010?. In the Rules, Rule-3 speaks of manner of selection for appointment, which reads as follows:
?3.Manner of selection for appointment: Twenty percent of all vacancies in the appointment in the services under the State which are to be filled through direct recruitment shall be set apart on preferential basis to persons studied in Tamil medium as illustrated below:- ILLUSTRATION Out of 200 seats, 40 seats shall be set apart on preferential basis to persons studied in Tamil medium, in their respective category, in the following manner:
General Turn Backward Classes (Other than Backward Classes Muslims) Most Backward Classes / De-notified Communities Scheduled Castes Backward Classes Muslims Scheduled Caste Arunthathiars Scheduled Tribes (BY ORDER OF THE GOVERNOR)?
3.In this writ petition, the petitioner's contention is that the illustration given in Rule-3, if worked out properly, would demonstrate that 20% as mandated under the Act, is not preserved.
4.When this writ petition was taken up, the learned counsel for the petitioner submitted that the illustration appended to Rule-3 is not correct and therefore the same requires correction. The learned counsel for the petitioner would further submit that the Secretary of Tamil Nadu Public Service Commission also forwarded a letter to the Government pointing out the above error in the illustration. The learned counsel for the petitioner would further submit that now the error has been rectified and G.O.Ms.No.40, Personnel and Administrative Reforms (S) Department, dated 30.04.2014 has been issued. The learned counsel for the petitioner would further point out that as per the said amendment, illustration earlier appended to Rule-3 has been now deleted and in its place, a new illustration has been substituted. The learned counsel for the petitioner would further submit that this revised illustration issued in G.O.Ms.No.40 is the correct one, which preserves 20% of employment for Tamil Medium candidates. Therefore, according to the learned counsel for the petitioner, as per G.O.Ms.No.40, the petitioner should be considered and he should be accordingly selected and posted in any one of the services in Group-II Examinations held as per the Advertisement No.258 issued by the Tamil Nadu Public Service Commission dated 30.12.2010.
5.The learned Government Advocate would vehemently oppose this writ petition. He would state that G.O.Ms.No.40 is only prospective in operation and if G.O.Ms.No.40 is to be given retrospective operation to the advertisement dated 30.12.2010 issued by the Tamil Nadu Public Service Commission, it would only create chaos and confusion, since in pursuance of the said advertisement, examinations were conducted, selection was completed and appointments have already been made. He would further submit that if the relief sought for by the petitioner is conceded to, then, many of the selected candidates may have to be sent out of service and many new faces may have to be allowed to be selected. This will only again create confusion and chaos and therefore, according to the learned Government Advocate, the request of the learned counsel for the petitioner to give retrospective operation of G.O.Ms.No.40 cannot be countenanced.
6.The learned counsel for the petitioner would however submit that when this writ petition was admitted, this Court passed an order as early as on 30.11.2012 directing that if any appointment is made, it will be subject to further orders to be passed in the writ petition, and the candidates so selected cannot claim equity. Referring to the said interim order passed, the learned counsel for the petitioner would submit that since the appointments made already are subject to the outcome of this writ petition, there will be no chaos or confusion, as it is sought to be projected by the learned Government Advocate.
7.I have considered the above submissions.
8.As I have already pointed out, what is under challenge is the illustration appended to G.O.Ms.No.145. The fact remains that by applying the illustration, selection was completed and appointments have already been made. At this stage, if it is declared by this Court that the said illustration is illegal and the same is quashed, then, all the appointments made earlier are to be set aside. Of course, it is true that in the interim order, this Court made an observation that any appointment made subsequent to the filing of the writ petition shall be subject to the outcome of this writ petition. But, at the same time, if this Court is inclined to set aside the Government Order in G.O.Ms.No.145, and to withdraw the benefits given to various candidates in pursuance of G.O.Ms.No.145, then, it becomes incumbent on the part of this Court to afford opportunity to all those selected candidates and to hear them, and then to pass appropriate orders. If, conceding to the request of the petitioner, the illustration appended to Rule-3 is examined and if any adverse order is passed, certainly, it will cause only chaos and confusion as several hundreds of candidates selected already and who are already working, will be disturbed. As I have already pointed out, that course cannot be done without affording opportunity to them. Therefore, at this length of time, in view of the subsequent development, I am not inclined to go into the correctness of G.O.Ms.No.145.
9.Apart from that, the illustration appended to G.O.Ms.No.145 has been now undone by G.O.Ms.No.40. Therefore the question is, whether G.O.Ms.No.40 can be retrospectively applied or not. That course is not possible, because if the illustration appended to G.O.Ms.No.40 is to be applied retrospectively for the advertisement dated 30.12.2010, in that event also, many of the selected candidates may have to be sent out of service and many new faces may have to be brought in. That will also create only chaos and confusion. That is the reason why I agree with the learned Government Advocate that G.O.Ms.No.40 is purely prospective in operation and therefore, the benefit of G.O.Ms.No.40 cannot be extended to the petitioner.
10.In view of all the above, the writ petition fails and accordingly it is dismissed. No costs.
Index  : Yes/No       25.07.2014
Internet : Yes/No

KM

To

1.The Secretary to Government,
   Government of Tamil Nadu,
Personnel and Administrative Reforms (S) Department, Secretariat, Chennai-600 009.
S.NAGAMUTHU, J.
KM
2.The Secretary, Tamil Nadu Public Service Commission, Near Government Dental Medical College, Frazer Bridge Road, V.O.C. Nagar, Park Town, Chennai-600 003.
W.P.(MD)No.15383 of 2012 25.07.2014

#திராவிடம் அறிவோம் (54)

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில், காங்கிரசைச் சேர்ந்த வ.வே.சுப்பிரமணிய ஐயர் தமிழ்க் குருகுலம் ஒன்றை காங்கிரஸ் மற்றும் பொதுமக்கள் அளித்த நிதியில் நடத்திவந்தார். அங்கு பார்ப்பன மாணவர்களுக்கும், பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கும் தனித்தனி இடங்களில் உணவு அளிக்கப்பட்டது.

இச்செய்தியை அறிந்து வெகுண்ட  தந்தை பெரியார், குருகுலத்திற்கு காங்கிரஸ் கமிட்டியிலிருந்து வழங்கப்படும் நிதியை நிறுத்திவிட்டார். எனினும் இன்னொருவர் மூலம் அந்த நிதியை வ.வே.சு. வாங்கிச் சென்றுவிட்டார்.

குருகுலத்தில் வர்ணாசிரம முறை கடைபிடிக்கப்படுவதை எதிர்த்து பெரியார் கண்டனக் கூட்டங்களை நடத்தினார். ‘குடிஅரசு’ இதழில் தொடர்ந்து எழுதினார்.

காந்தியோ, ‘ஒரு சாரார் மற்றவர்களோடு கலந்து அமர்ந்து சமபந்தி சாப்பாடு அருந்த விரும்பவில்லை என்றால் அவர்களின் அந்த உணர்வு மதிக்கப்பட வேண்டும்’ என்றார்.😳

போராட்டம் வலுவடைந்தது. குருகுலத்திற்கு நிதியுதவி அளித்தவர்கள் பின்வாங்கினர். குருகுலத்தின் நிர்வாகத்தில் இருந்து வ.வே.சு. பின்வாங்கி விலகினார்.

இந்நிகழ்வு குறித்த ஆவணங்களுடன் கூடிய வரலாறு பழ.அதியமானின் ‘சேரன்மாதேவி – குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்’ என்று நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.

படங்கள் : காந்தியின் கடிதம் 10.03.1925., தமிழ் நாடு ஏட்டில் வந்த கருத்துப் படம், 11.03.1925

(pictures missing)

#திராவிடம் அறிவோம் (53)

தந்தை பெரியார் காங்கிரசில் இருந்து விலகியது ஏன்?

1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புவாரித்தீர்மானம் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து மாநாட்டிலிருந்து பெரியார் வெளியேறினார் என்பதை நாம் அறிவோம்.

வகுப்புவாரித் தீர்மானத்தைக் காஞ்சிபுரம் மாநாட்டில் தந்தை பெரியார் கொண்டுவருவது முதன்முறையல்ல.
1920-இல் திருநெல்வேலி காங்கிரஸ் மாநாட்டில் கொண்டுவந்தபோது, பொதுநலனுக்குக் கேடு விளைவிக்கும் தீர்மானம் என்று சொல்லி மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய எஸ்.சீனிவாச அய்யங்கார் தீர்மானத்திற்கு அனுமதி மறுத்துவிட்டார்.

1921-இல் தஞ்சாவூர் காங்கிரஸ் மாநாடு- மாநாட்டுக்குத் தலைமை இராஜாஜி – தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

1923 – சேலம் – மீண்டும் நிராகரிப்பு.

1924 – திருவண்ணாமலை மாநாடு.

இம்முறை மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் பெரியார். ஆனால், எஸ்.சீனிவாச அய்யங்கார் உள்ளிட்ட தலைவர்கள் பெரியாருக்கு எதிராகப் பெரிய அளவில் உறுப்பினர்களைத் திரட்டியிருந்ததால், வகுப்புவாரித் தீர்மானம் நிறைவேறவில்லை.

1925-லும் திரு.வி.க. தீர்மானத்தை ‘ஒழுங்கற்ற தீர்மானம்’ என்று அனுமதி மறுக்க, ‘காங்கிரசால் பார்ப்பனர் அல்லாதார் நன்மை பெற முடியாது. காங்கிரசை ஒழிப்பதே இனி எனது வேலை’ என்று சொல்லி மாநாட்டிலிருந்து வெளியேறினார் தந்தை பெரியார்.

#திராவிடம் அறிவோம் (52)

தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்குக் கல்வி வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதில் நீதிக்கட்சி தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டது.

படத்தில் காணும் அரசாணை பனகல் அரசர் காலத்தில் வெளியிடப்பட்டது.

சென்னை மாநகராட்சி, பிற நகராட்சிகள் போன்றவை நடத்தும் பள்ளிகளில் இன்னும் மிகுதியாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் பள்ளியில் பயில்வோர் பட்டியலை அனுப்பும்போது பள்ளியில் சேர்க்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர் பற்றிய விவரங்களை அளிக்கவேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

[அரசாணை எண்.205, சட்டம்(கல்வி), நாள்: 11.02.1924]

இத்தகைய முயற்சி நீதிக்கட்சி தோல்வியடைந்த பின், சுயேட்சையான சுப்பராயன் தலைமையில் அமைந்த அமைச்சரவையிலும் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.

தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகளைச் சேர்க்க மறுக்கும் பள்ளிக்கூடங்களுக்கு உதவித்தொகை மறுக்கப்பட்டது. (குடிஅரசு, 02.11.1930).

#திராவிடம் அறிவோம் (51)

நீதிக்கட்சியினுடைய கொடி தராசு சின்னம் பொறித்த சிவப்பு வண்ணமுடையது. ஜே.எஸ்.கண்ணப்பர் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு கொடியும் மாற்றப்பட வேண்டும் என்ற கருத்து எழுந்தது.

இது குறித்துத் தந்தை பெரியார் குறிப்பிட்டது  என்னவென்றால், “கொடி காலத்திற்கேற்றாற் போல் மாற்றப்பட வேண்டும்; விஞ்ஞான அறிவு, இலட்சியம் இவைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்; அதோடு கொடி யாரும் சர்வசாதாரணமாகத் தயாரித்து விடக்கூடிய மாதிரியிலும் இருக்க வேண்டும்” என்பனவாகும்.

இன்றைய திராவிடர் கழகக் கொடியின் கருத்து, ஈரோடு சண்முகவேலாயுதம் என்பவருடையது. நடுவில் உள்ள சிவப்பு வண்ணத்தைக் கலைஞர் தம் பெருவிரலில் ஒரு குண்டூசியால் குத்தி குருதியைக் கொடியின் நடுவில் வைத்தார்.

கரூர் தவிட்டுப்பாளையத்தில் 1946ஆம் ஆண்டு முதன்முதலில் திராவிடர் கழகக் கொடியை ஏற்றினார் என்.இரத்தினம் என்பவர். கொடியை ஏற்றி அவர் உரையாற்றியது:
 ”நம்மில் சில தோழர்கள் கொடியில் கறுப்பு நிறம் இருப்பது நன்றாயில்லை என்கிறார்கள். அவர்களுக்குக் கூறுகிறேன், கறுப்பு எதிர்ப்புக்கு அறிகுறி. நாம் ஆரியத்துக்கு எதிர்ப்பு- வடநாட்டாருக்கு எதிர்ப்பு- சனாதனிகளுக்கு எதிர்ப்பு- சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் எதிர்ப்பு- வெள்ளையர் ஆட்சிக்கு எதிர்ப்பு- பட்டம் பதவி மோகிகளுக்கும் எதிர்ப்பு என்பன போன்ற பல எதிர்ப்பு வேலைகளை மேற்போட்டுக் கொண்டுள்ள நமது கொடி கறுப்புக் கொடியாக இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும் என்பதைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.
 எனவேதான், நமது நிலையையும், நமது எதிர்ப்பு வேலையையும் குறிக்கக் கறுப்பு நிறமும், நமது இலட்சியத்தையும் அதற்கான புரட்சி வேலைகளையும் எடுத்துக் காட்ட சிவப்பு நிறமும், நமது கொடியில் அமைக்கப்பட வேண்டும் என ஆசைப்படுகிறோம்”.

இந்நிகழ்வில் ஏற்றப்பட்ட கொடி முழுவதும் கறுப்பு நிறமாகவும், நடுவில் வட்ட வடிவமாகப் பொறிகளுடன்(spark) சிவப்பு நிறமும் இடம்பெற்று இருந்தது.

பின்னர் அதே ஆண்டு ஏப்ரலில் திருச்சியில் கூடிய தி.க. நிர்வாகக் குழு கொடியின் நடுவில் பொறிகளுடன் சிவப்பு நிறம் இடம் பெற்றிருப்பதை வட்டமான சிவப்பாக்கிப் பொறிகளை அகற்றிவிட்டு ஏற்றுக்கொண்டது.

#திராவிடம் அறிவோம் (50)

அண்ணல் அம்பேத்கரைப் பற்றித் தந்தை பெரியார்......

டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்குச் சமமாக இந்தியாவில் யாரையும் சொல்ல முடியாது. இன்று மட்டுமல்ல, முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே இதை நான் கூறியிருக்கிறேன். (விடுதலை 20.06.1972.)


பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களும் நானும் நெடுநாட்களாக நண்பர்கள் என்பது மாத்திரமல்ல. பல விஷயங்களில் எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். (விடுதலை 22.02.1959)


வடநாட்டில் இருக்கிற பேதத்தைப் பற்றி, இழிசாதித் தன்மையைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அங்கு இந்த உணர்ச்சியைக் கிளப்புவதென்றால் கடினமான காரியமாகும். ஆனால், அங்கேயே 1927,1928 லேயே அம்பேத்கர் சுயமரியாதைக் கொள்கைகளைப் பேசியிருக்கிறார். நாசிக்கில் கூடிய ஒரு மாநாட்டில் இராமாயணத்தைப் போட்டுக் கொளுத்தியிருக்கிறார். (விடுதலை 16.05.1952)


தோழர் அம்பேத்கர் இன்று போர்க்களத்தில் நிற்கும் தளபதியாக விளங்குகிறார். (விடுதலை 27.07.1946)


இந்தியா முழுவதிலும் அம்பேத்கர் போல படித்தவர், அறிவாளி, துணிவுள்ளவர், சாதிக்க முடியாத காரியத்தைச் சாதித்தவர் யாருமே இல்லை. (விடுதலை 14.06.1973)

#திராவிடம் அறிவோம் (49)

திராவிடம் என்ற சொல்லை உருவாக்கியவர்கள் பெரியாரோ, சுயமரியாதை இயக்கத்தினரோ, திராவிடர் கழகத்தினரோ, திமுகவினரோ, ஏன் நீதிக்கட்சியினரோ கூட அல்ல. இது குறித்து அறிஞர் இராம.சுந்தரம் கூறுவதாவது:

கால்டுவெல்லுக்கு முன் ’திராவிட’ என்கிற சொல் தென்னிந்தியர்களை / தென்மொழிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. குமரிலபட்டர் (கி.பி.7ஆம் நூற்றாண்டு) ‘திராவிட பாஷைகள்’ பற்றிக் குறிப்பிடுகிறார். மனு ஸ்மிருதியில் திராவிட இனம் பற்றிய குறிப்புண்டு. கிரியர்சன்  தனக்கு தெரிந்த மட்டில் ஹாட்சன் என்பவர்தான் ‘Dravidian’ என்ற சொல்லை முதன்முதலாகத் தென்னிந்திய மொழிகளைக் குறிக்கப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார். 1816-ல் வெளியான A.D.Campwell –இன் தெலுங்கு மொழி இலக்கண முன்னுரையில் எல்லீஸ் என்பார் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, மால்டோ முதலிய மொழிகளைத் ‘தென்னிந்திய மொழிகள்’ என்று குறிக்கிறார். சமஸ்கிருதம் தொடர்பாக நூல் எழுதிய ஆசிரியர்களும் திராவிட என்ற சொல்லை இனம்/மொழி தொடர்பாகக் குறித்தனர். 1854 வரை இது தொடர்கிறது.

எனவே ‘Caldwell coined the term’ என்று சொல்லுவதை விட, அவரே கூறுவது போல, ”The word I have chosen is ‘Dravidian“ from ‘Dravida, the adjectival form of Dravida” என்பது பொருந்தும். எனினும், இந்தச்சொல்லை – ‘திராவிட’ என்ற சொல்லை –வரையறுத்த பொருளில், பயன்படுத்தி உலகெங்கும் பரவச்செய்த பெருமைக்குரியவர் கால்டுவெல் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.

#திராவிடம் அறிவோம் (48)

பார்ப்பனர் அல்லாதோருக்கான முதல் அமைப்பாக, சென்னையில் “தி நான்-பிராமின் அசோசியேசன்” என்ற அமைப்பு, பி. சுப்பிரமணியம், எம். புருசோத்தம நாயுடு என்னும் இரு வழக்கறிஞர்களால் 1909-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எனினும் அவ்வமைப்பு தொடர்ந்து செயல்படவில்லை.

#திராவிடம்அறிவோம் (47)

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் தொடங்கப்படுவதற்கான கட்டாயம் என்ன என்பதைக் கீழுள்ள அட்டவணைகள் தெளிவாக உணர்த்தும்.



Source: நீதிக்கட்சி வரலாறு - திருநாவுக்கரசு

#திராவிடம் அறிவோம் (46)

சாதி,மத வேற்றுமைகளால் உண்மையான ஆன்மிக மக்களிடம் தழைக்கவியலாதவாறு, உயிர்க்கொலை வேள்வி செய்யும் மனிதநேயம் மறந்த புரோகிதரின் வழிப்பட்ட சடங்குகளே உண்மை சமயம் போன்று நிலவுவதைக் கண்டித்து, ‘சாதியிலே மதங்களிலே சாத்திரச் சந்தடிகளிலே ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்! இது அழகலவே’ எனவும்; ‘கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக’ எனவும் முழங்கிய வடலூர் வள்ளலாரின் சமரச சன்மார்க்கச் சிந்தனைதான், பின்னர் வளர்ந்த சுயமரியாதை இயக்க, சமூகநீதிக் கொள்கைகட்கெல்லாம் அடிப்படையாயிற்று எனலாம்.

- பேராசிரியர் அன்பழகன்.

#திராவிடம் அறிவோம் (45)

17.03.1969 அன்று தில்லியில் பத்திரிக்கையாளர்களிடம், மத்திய-மாநில அரசுகள் அதிகாரங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று தலைவர் கலைஞர் அறிவித்தார்.

இந்த அதிகாரப்பகிர்வு தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் இதுபற்றி ஆராய நீதிபதி இராஜமன்னார் தலைமையில் டாக்டர்.ஏ.லட்சுமணசாமி முதலியார், பி.சந்திராரெட்டி ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டு மத்திய-மாநில உறவுகளும் அதனிடையே அதிகாரப்பகிர்வும் குறித்து ஆராய்ந்து சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் இது குறித்தான ஷரத்துகளை அகில இந்திய அளவில் பல தரப்பினரிடம் கேட்கப்பட்டு ஒரு அற்புதமான அறிக்கையை 27.05.1971 இல் தலைவர் கலைஞரிடம் அந்தக் குழுவினர் வழங்கினர்.

383 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை இன்றைக்கும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற அரிய ஆவணமாகும்.

மத்திய-மாநில பிரச்சனைகள் எழும்போதெல்லாம் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் ஒரு மகா சாசனமாக உள்ளது.

#திராவிடம் அறிவோம் (44)

தீண்டாமை ஒழிப்புக்காகவும், சாதி ஒழிப்புக்காகவும் பணியாற்றிய லாகூரைச் சேர்ந்த ஜாத் பத் தோரக் மண்டல் என்னும் அமைப்பின் மாநாட்டில்(1936) உரையாற்ற அண்ணல் அம்பேத்கரை அழைத்தனர். அம்பேத்கர் தாம் ஆற்றவிருக்கும் உரையினைக் கட்டுரை வடிவில் (சாதியினை ஒழிக்கும் வழி) எழுதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பி வைத்தார்.

அக்கட்டுரையில் இந்துமதத்தைக் கடுமையாக விமர்சித்து அம்பேத்கர் எழுதியிருந்ததால், அந்த அமைப்பினர் அந்த மாநாட்டையே கூட்டாமல் விட்டுவிட்டனர்.

அடுத்த ஆண்டே தந்தை பெரியாரின் முயற்சியால் இவ்வுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு குடி அரசு இதழில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டது. சாதியை ஒழிக்கும் வழி (A.O.C) என்னும் பெயரால் நூல் ஒன்று 0.4.0 அணாவுக்கு விற்கப்பட்டது.

#திராவிடம் அறிவோம் (43)

தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் கொண்டாடப்பட்டபோது, பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் விதமாக ஒரு முக்கியமான நடவடிக்கையை எம்.ஜி.ஆர். எடுத்தார்.

“தமிழ்நாட்டில் சாலை, தெருப்பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்படும்” என்று அறிவித்தார் எம்.ஜி.ஆர்.

 1978 அக்டோபர் 3 அன்று இது குறித்த அரசாணை வெளியிடப்பட்டது. சாலை, தெருப்பெயர்களிலிருந்து சாதிப் பின்னொட்டுகள் நீக்கப்பட்டன.

#திராவிடம் அறிவோம் (42)

திராவிட நாடு கோரிக்கைக்காக ஆதரவு பெற பெரியார் 1940ஆம் ஆண்டு ஜின்னாவைச் சந்திப்பதற்காக சென்னை சென்றார்.

ஜனவரி 6 அன்று தாராவியில் தமிழ்க்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அடுத்தநாள் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பார்ப்பனியத்தை ஒழிப்பதில் தாமும் பெரியார் கொள்கையை ஒத்துக் கொள்வதாகவும், அன்று முதல் இன்று வரை பார்ப்பனியத்தை எதிர்த்துப் போராடியும், பார்ப்பனியத்தை அறைகூவி அழைத்து வருபவருமான ஒப்பற்ற தலைவர் பேசும் கூட்டத்திற்குத் தலைமை வகிக்கத் தமக்குக் கிடைத்த பாக்கியமே தமது வாழ்க்கையில் தாம் சிறந்த பாக்கியமாகக் கருதுவதாகவும் அம்பேத்கர் குறிப்பிட்டார். அம்பேத்கரின் பேச்சைத் தமிழர்களுக்காக அறிஞர் அண்ணா தமிழில் மொழி பெயர்த்தார். பம்பாயிலுள்ள தலைவர்களுக்காகப் பெரியாரின் பேச்சை அறிஞர் அண்ணா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

    பெரியார் பேசும்போது ”நான் பார்ப்பன ஆதிக்கத்தை முற்றிலும் வெறுக்கிறேன். அது மக்களின் மாபெரும் உணர்ச்சி வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி அவர்களையும் மதம், பொருளாதாரம், சமூகம், அரசியல், கடவுள் பெயரால் அழுத்தி வைத்திருக்கின்றது” என்றார்.

#திராவிடம் அறிவோம் (41)

சுயமரியாதை இயக்கம் பெண் போராளிகளுக்கான சிறப்பான இடத்தை வழங்கியது. ஒவ்வொரு சுயமரியாதை மாநாட்டுடனும் பெண்களுக்கான மாநாடும் நடத்தப்பட்டது. மாநாடுகளைத் தொடக்கி வைப்பது,  தொடக்கவுரை ஆற்றுவது போன்ற பொறுப்புகளால் பெண்கள் கெளரவிக்கப்பட்டனர்.

சான்றாக,1931-ஆம் ஆண்டு விருதுநகரில் மூன்றாவது சுயமரியாதை மாநாட்டை இந்திராணி பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

1932-ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட சுயமரியாதை மாநாட்டை குஞ்சிதம் அம்மையார் தொடங்கி வைத்தார்.

1933-ஆம் ஆண்டு, மூன்றாவது தஞ்சாவூர் மாவட்ட சுயமரியாதை மாநாட்டை நீலாவதி தொடங்கி வைத்தார்.

1934-ஆம் ஆண்டு, திருச்செங்கோடு தாலுகா ஆதிதிராவிட மாநாட்டை அன்னபூரணி தொடங்கி வைத்தார்.

1937-இல் திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிட மாநாட்டிற்கு மீனாம்பாள் சிவராஜ் தலைமை வகித்தார்.

1938-இல் மதுரை சுயமரியாதை மாநாட்டை ராஜம்மாள் தொடங்கி வைத்தார்.

#திராவிடம் அறிவோம் (40)

ஜாதி என்பது எந்த இடத்திலும் இல்லாது செய்யப்பட வேண்டும். நடப்பிலும் இல்லாது பார்த்துக்கொள்ளப்பட வேண்டும். ஜாதி உணர்ச்சி அறவே மறையும்படிச் செய்ய வேண்டும். இதனை வெறும் மனமாற்றத்தால் மட்டுமே செய்யமுடியுமென்று தத்துவார்த்தம் பேசி காலங்கடத்தாமல், “தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது. அதனை எந்த ரூபத்தில் கடைப்பிடித்தாலும் அது சட்டவிரோதம்” என்று அரசியல் சட்டத்தின் 17ஆவது விதி கூறுகிறதே, அவ்விதியில் உள்ள ‘தீண்டாமை’ (Untouchablility) என்பதற்குப் பதிலாக ‘ஜாதி’ (caste) என்ற சொல்லை மாற்றி ஜாதி ஒழிப்பை அரசியல் சட்டமே பிரகனப்படுத்துவதாக அமைய வேண்டும்.

 -சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் தந்தை பெரியார்(1972)

#திராவிடம் அறிவோம் (39)

தாழ்த்தப்பட்டோர் ஆலய நுழைவின் அவசியம் குறித்துத் தமது ‘குடி அரசு’ இதழில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார், தந்தை பெரியார்.

சென்னை கவர்னரின் மனைவியை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்று குப்புசாமி அய்யர் காட்டியதாகவும், அவருக்கு அந்தப் பெண்மணி நன்றி கூறியதாகவும் கிடைத்த செய்தியை வைத்து ‘குடி அரசு’ இதழில் எழுதப்பட்ட தலையங்கத்தில், “நமது மதத்துக்கு விரோதமாய்ப் பிரச்சாரம் செய்பவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்கும் நீங்கள், நமது மதத்தில் உள்ளவர்களைக் கோயிலுக்குள் விட மறுப்பது ஏன்?” என்று கேட்கிறார்.
(குடி அரசு, 17.01.1926)

#திராவிடம் அறிவோம் (38)

நெருக்கடி நிலையின்போது, மற்ற இதழ்களைப் போல விடுதலை ஏடும் தணிக்கைக்கு உள்ளானது.

விடுதலையின் முகப்பில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற வாசகம் அச்சிடப்பட்டிருக்கும். அம்முழக்கம் நீக்கப்பட்டால்தான் விடுதலையை அச்சிட முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. இச்செய்தி, அப்போதைய விடுதலை ஆசிரியர் ஈ. வெ. ரா. மணியம்மையாரிடம் தெரிவிக்கப்பட்டது. இறுதிவரை தணிக்கை அதிகாரியிடம் பேசியும், அதிகாரி ஒப்புக் கொள்ளாமல் போகவே ‘தமிழ்நாடு இந்திராவுக்கே என்று போட்டால்தான் வெளியிட அனுமதிப்பீர்கள் போலிருக்கிறது’ என்று கடுமையாகப் பேசினார், அமைதிக்குப் பேர்போன அன்னை மணியம்மையார்.

இந்நிகழ்வுக்குப் பிறகுதான், விடுதலை ஏட்டில் “வாழ்க பெரியார், வளர்க அவர் கொள்கை” எனும் முழக்கங்கள் அச்சிடப்பட்டு வெளிவரத் தொடங்கின.

#திராவிடம் அறிவோம் (37)

அனைத்து மக்களும் சாதி வேறுபாடு இல்லாது ஒரே இடத்தில் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் கலைஞரால் கொண்டு வரப்பட்டதே பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம். தமிழகம் எங்கும் 237 சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன. தலித்துகள் 40%, பிற்படுத்தப்பட்டவர்கள் 25%, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 25%, மற்ற வகுப்பினர் 10% என்று வீடுகள் ஒதுக்கப்பட்டன. சாலை வசதிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, பூங்கா, கல்விக் கூடங்கள், பொது மயானம் எனக் குடியிருப்புக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன.

மதுரை மாவட்டம், மேலக்கோட்டையில் முதல் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட தினம் இன்று. (17.08.2018)


Update: இன்றைய நிலை
https://twitter.com/srikkanthdTOI/status/1027097475113398272



#திராவிடம் அறிவோம் (36)



எங்கள் திராவிடம்!

தங்கம் விளைந்த நிலம் - எங்கள்
தாய்நிலம் போற் காண்கிலம்-உயர்
செங்கதிர் போல் திங்கள்போல் - துலங்கும்
திராவிட மாநிலமே!

எங்கும் வளப்பம் மிகும் - புகழ்
எண்ணத் தகும்தாயகம் - கழை
தெங்கும்செந் நெல் கமுகும் - விளையும்
திராவிட நல்லகமே!

அன்பு பதிந்த இடம் - எங்கள்
ஆட்சி சிறந்த இடம் - நல்
இன்பம் நிறைந்த இடம் - எமைஎல்லாம்
ஈன்ற திராவிடமே!

- பாவேந்தர் பாரதிதாசன்

(குயில் 25.08.1947)

#திராவிடம் அறிவோம் (35)

அரசியல் சட்டம் எழுதிய வர்கள் ஆறு பேர். அதில் நாலு பேர் பார்ப்பனர்கள். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், முன்ஷி, டி.டி. கிருஷ்ணமாச்சாரி, கோபால்சாமி அய்யங்கார் ஆகிய பார்ப்பனர்கள் எழுதினார்கள். மற்றவர்கள் இரண்டு பேரில் ஒருவர் அம்பேத்கர். மற்றவர் ஒரு சாயபு.

- தந்தை பெரியார் (விடுதலை 11.11.1957)


முருக பக்தர்களும் கிருஷ்ண பக்தர்களும் ஜாக்கிரதை - தமிழக RSS சீமான்

முருக பக்தர்களும் கிருஷ்ண பக்தர்களும் ஜாக்கிரதை - தமிழக RSS சீமான்

இந்துக்களுக்கு மொத்த இந்தியாவில் லட்சத்திற்கும் மேல் சிறுதெய்வங்கள் உண்டு. அவர்களுக்கு விஷ்ணு, சிவா, தேவி போன்றவர்களே பெருங்கடவுள்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அதிகமாக வணங்குவது Lord Ram, Bajrang Bhalli மற்றும் Lord Krishna.
இந்துத்துவம் பெருந்தெய்வங்களான விஷ்ணுவையோ, சிவாவையோ, தேவியையோ முதன்மைபடுத்தாமல் ராமரை முதன்மைபடுத்தி அரசியல் பொருளாக மாற்றியதற்கான முதல் காரணமே முதல் பத்தியில் இருக்கும் விடயம் தான்.
வடயிந்தியா முதல் தென்னிந்தியா வரை அனைவரையும் அந்த ஒரு கடவுளை வைத்து தான் மொத்த மக்கள்தொகையில் அதிகமான இந்துக்களை Cover செய்யமுடியும் என்பதால் தான் ராமரை அரசியலாக்கினார்கள். இந்துத்துவா வகையறாக்களுக்கும் பக்திக்கும் துளியும் தொடர்பில்லை. அதற்கு சாட்சியே, அவர்களின் தத்துவார்த்தவாதி சாவர்க்கர் ஒரு நாத்திகர் என்பது தான். இவர்களுக்கு தேவை, அதன் மூலம் கிடைக்கும் அரசியலும், அதிகாரமும் தான்.
அந்த திட்டம் தான் ஒரளவு வெற்றிப் பெற்று இன்று பெரும்பான்மையாக ஆட்சி அமைத்திருக்கிறார்கள். இவர்கள் கடவுள் பக்தியாளர்கள் அல்ல, ஆனால் இவர்களின் அரசியலுக்கு முட்டாள்களாக இருக்கும் கடவுள் பக்தர்கள் அதிகம் தேவைப்படுவார்கள்.
அதே போல், தமிழ்நாட்டில் இருக்கும் பெருந்தெய்வங்களில் அதிகமான மக்கள் வணங்குவது சிவன், முருகன், கிருஷ்ணன், ஐயப்பன், பெருமாள் மட்டுமே. எப்படி இந்திய-இந்து பண்பாட்டு மீட்சி என்ற குரலை உயர்த்தி இந்துத்துவ சக்திகள் ஆரம்பத்தில் உலாவியதோ, அதே பாணியில் தமிழ் பண்பாட்டு மீட்சி என்று சில கோமாளிகள் ஆராய்ச்சி என்ற பெயரில் Comics எழுதி கொண்டு இருக்கிறார்கள்.
இவர்கள் ஆதிபாட்டன் சிவன், முப்பாட்டன் முருகன், முப்பாட்டன் கிருஷ்ணன் என்று கூறுவதற்கான காரணமே பெரும்பான்மை மக்களை கவர்வதற்கு தான். அந்த பண்பாட்டு மீட்சியாளர்கள் கூறும் கூற்றுக்கு மாறாக அவர்களே எப்படி நடக்கிறார்கள் என நீங்களே பாருங்கள்.
தமிழ் இலக்கியங்களின் வாயிலாக பண்டைய தமிழ் மக்கள் ஐந்தினை நிலங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு திணை தெய்வ வழிபாடு இருந்தது. குறிஞ்சிக்கு(மலை பகுதி) - சேயோன், முல்லைக்கு(காடு பகுதி) - மாயோன், நெய்தலுக்கு (கடல் பகுதி)- வருணன் , மருதத்துக்கு(வயல் பகுதி)- இந்திரன், பாலைக்கு(வறண்ட நில பகுதி) - கொற்றவை என்று வணங்கி வந்துள்ளார்கள்.
இந்த பெயர்களை அப்படியே பயன்படுத்தி பேசினால் ஒரு நபரும் கேட்கமாட்டார்கள் என்பதனால் தான், தற்போது இருக்கும் பெருந்தெய்வங்களை ஒப்பிட்டு, திணை தெய்வ பெயர்களை மறைத்து பெரும்பான்மை தெய்வ பெயர்களை வைத்து அழைக்கிறார். முப்பாட்டன் சேயோன் என்று அழைப்பது தானே முறை, ஏன் முப்பாட்டன் முருகன் என அழைக்கவேண்டும்?
முருகன் தான் சேயோனாகவே இருந்தாலும்(நிறுபிக்கப்படவில்லை), பண்பாட்டை மீட்பவர்கள் சேயோனை முப்பாட்டனாக தானே மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்க வேண்டும். முருகனை மட்டும் மேடை தோறும் பேசியதிலிருந்தே அது இந்தத்துவாவின் ஒத்த அதே அரசியல் நகர்வு என்பது நமக்கு புலப்படுகிறது. கிருஷ்ணனை மாயோன் என எல்லா இடத்திலும் பயன்படுத்தமாட்டார். அடிக்கடி கிருஷ்ண பரமார்த்மாவை மேற்கோள் காட்டுவார்.
ஆனால், தப்பி தவறி கூட இந்திரனையோ மற்ற திணை தெய்வங்களையோ அதிகமாக பேசமாட்டார். அதில் வாக்குகளோ , மக்கள் கவர்ச்சியோ இல்லை. முருகன், செட்டியார்கள் வணிக கடவுளாக வணங்கக்கூடிய தெய்வம். அதிகமாக முருகனை வழிபட்டு, பழனி பாதயாத்திரை செல்பவர்கள் முக்குலத்தோர்கள். கிருஷ்ணனை வணங்குபவர்களில் கோனார்களும், வைணவ வன்னியர்களும் அடக்கம்.
ஆனால் இந்திரனோ, கொற்றவையோ ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட, அனைவராலும் வணங்கக்குடிய பெருந்தெய்வமாக இல்லை. இந்திரன் என்பது கணிசமான அளவு தேவேந்திரர்கள் வணங்குவார்கள் ஆனால் இந்திரனுக்கோ அதிகமான கோவில்களோ தளங்களோ இல்லை. கொற்றவை என்பது வேட்டுவ கவுண்டர்கள் வணங்கும் ஒரு குலதெய்வமாகவே உள்ளது. இதையெல்லாம் மறந்தும் முதன்மை படுத்தமாட்டார்கள். ஐந்தினைகளில் இல்லாத ஆதிபாட்டன் சிவனும், சேயோன் என்று சொல்லாமல் முப்பாட்டன் முருகன் என வருவதும், மாயோன் என சொல்லாமல் கிருஷ்ணன் என்பதே இவர்கள் வாயில் அதிகமாக உதிரும் வார்த்தைகளாகவே இருக்கிறது. ஏனென்றால் இவர்கள் கட்டமைக்கும் அந்த அரசியல் அப்படியானது.
அவர்கள் பக்தியை முதலீடாக கொண்டு அரசியல் என்றால், இவர்கள் பண்பாடு, தமிழ், தமிழர் என்ற வார்த்தையை கொண்டு பெரும்பான்மை அரசியல். இவர்கள் அனைத்து விடயத்திலும் உணர்வு, உணர்ச்சி, புனிதம் என்று எல்லாவற்றையும் பூசி மொளுகி ஒரு மாயையை உருவாக்க போராடி கொண்டிருக்கிறார்கள்.
இருவருக்கும் ராமனோ, முருகனோ முக்கியமில்லை, அதன் மூலம் கிடைக்கும் ஆதாயமும் லாபமும் தான் முக்கியம். பழனி மற்றும் ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் பள்ளிவாசலிலும் தேவாலயங்களிலும் தங்கி தண்ணீர் குடித்து விட்டு செல்வார்கள். அவர்கள் மனதில் இப்படிப்பட்ட வாதங்கள் நஞ்சை தான் விதைக்கும். நஞ்சு வேர்கள் கால்களை சுற்றும்போதே சுதாரித்து பிடிங்கி எறிவது நமக்கும் சமூகத்திற்கும் நலம். இவர்கள் பேசுவதற்கு பெயர் தமிழ்தேசியம் என்றால் பெரியாரும், தமிழரசனும், பிரபாகரனும் பேசியதற்கு வேறு பெயர் தான் வைத்தாக வேண்டும்.
பதிவுடைய கரு என்பது " முருக பக்தர்களும் கிருஷ்ண பக்தர்களும் ஜாக்கிரதை"
-விக்டர் இறைதாசன்

அம்பேத்கரையே இந்த இந்துத்துவம், அவருடைய ஆள் போல காட்டுகிறது

பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் பார்ப்பனியத்தையும் இந்து மதத்திற்குள் இருக்கும் சாதிய கட்டுமானங்களையும் எதிர்த்து எழுதி, போராடி இறுதியில் பெளத்தத்தை தன் வாழ்வியலாக ஏற்றுக்கொண்டு அதை ஒரு Solution ஆக சாதிய சகதிக்குள் சிக்கியவர்களுக்கு சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
அப்படிப்பட்ட அம்பேத்கரையே இந்த இந்துத்துவம், அவருடைய ஆள் போல காட்டுகிறது. உலகில் நடந்த எல்லா நிகழ்வுகளையும் பல கோணங்கள் வைத்து ஒரு Intellectual ஆக இருப்பவரால் எப்படி வேண்டுமானாலும் மடைமாற்றி எழுதி வரலாற்று புனைவு செய்ய இயலும். அதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
நாளை பெரியாரை கூட இந்து மதத்தவராக ஒரு புத்தகம் எழுதி அவருடைய ஆளாக காட்ட இயலும். அதை படிப்பவர்கள் நம்பும் அளவிற்கு வேறு கோணத்தில் எழுத முடியும். ஆனால் உண்மை கண்ணால் கண்டவர்களுக்கு தெரியும். அப்படி தான் ஒரு முட்டாள் கூட்டம் மொத்த 100 வருட தமிழக வரலாற்றில் 0.01% கூட தெரியாமல் 100 வருடத்தில் செய்த அனைத்து தவறுகளுக்கும் பல உள்நோக்கங்களை கற்பித்து, வரலாற்று புனைவை பேசுகிறார்கள்.
அதையெல்லாம் ஆராய்ந்து பார்க்குமளவிற்கு அக்கூட்டத்தில் உள்ளவர்களுக்கு வரலாற்று அறிவோ பகுத்தறிவோ இல்லை. அப்படி இருப்பவர்களும், இந்த மடைமாற்றத்தை வெற்றியாக்க உதவுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு விடயம் தான் பெரியாரை 1% கூட படிக்காமல் சில சம்பவங்களையும், நிகழ்வுகளையும் தவறுதலாக புனைந்ததை வைத்து திருப்பி திருப்பி உளறி கொண்டிருப்பது.
ஒரு மனிதன் சாதிவெறி பிடித்து இருப்பானே ஆனால், அவனுக்கு சாதி தான் பெரிதாக இருக்கும், மற்ற எதுவும் கண்ணுக்கு தெரியாது. அவன் சாதியை விமர்சிப்பவன் எல்லாம் நம்முடைய எதிரி சாதிக்காரன், வேற்றுசாதிவெறியன் என்று தான் இயல்பாக தோன்றும்.
ஒருவன் மதவெறி பிடித்து இருப்பானே ஆனால், அவனுக்கு மதம் தவிர ஒன்றுமே கண்ணுக்கு தெரியாது. அவன் மதத்தை விமர்சித்தால், அவன் மதத்தை அழிக்க வந்த எதிரி, வேற்றுமத வெறியன் என்று தான் இயல்பாக தோன்றும்.
 
ஒருவன் இனவெறி பிடித்து இருந்தால், அவனுக்கு அதை தவிர மற்றவை கண்ணுக்கு தெரியாது. அதை குறித்து கேள்வி எழுப்பினாலே வேற்றுஇனவெறியன் என்று தான் இயல்பாக தோன்றும்.
ஆனால் பெரியார் இம்மூன்றையும் தாண்டியவர் என்பது அவரை படித்தவர்களுக்கு தெரியும். அவர் சாதியை சாக்கடை என்றும், மதத்தை மலம் என்றும் பேசியவர். அவர் இனம் என்று வரும்போது, ஆரிய பார்ப்பனர்களை எதிர்க்க மட்டுமே திராவிட இனம் என்று பேசுவார். ஆனால் அவர் சாதி, மொழி, இனம், மதம் என அனைத்தையும் தாண்டி மனிதம் என்று புனிதத்தை மறுத்து உயிர்நேயம் மற்றும் சுயமரியாதையை பேசியவர்.
ஆகையால் அவரை அரைகுறையாக பார்க்கும் சாதிவெறியர்களுக்கு அவர் ஒரு வேற்று சாதிவெறியன் போலவும், மதவெறியர்களுக்கு இன்னொரு மதவெறியன் போலவும், இனவெறியர்களுக்கு இன்னொரு இனவெறியன் போலவும் தெரிவது இயல்பே. ஏனென்றால் அவர் சாதி, மத, மொழி, இனத்திற்கு அப்பாற்ப்பட்டு ஒரு நவீன கற்றறிந்த சமூகத்தை உருவாக்க நினைத்தார். ஆகையால் அந்த முட்டாள்களுக்கு அப்படி தான் தெரியும்.
இன்னும் பல முட்டாள்கள் அவரை புரிந்து கொள்ளாமல், அவர் இந்து மதத்தை அதிகம் விமர்சித்ததால் தான் இஸ்லாமியர்கள் அவர் பின்னால் செல்கிறார்கள் என உளறுகிறார்கள். அவர் பேசிய சுயமரியாதை தான் அவரை இந்து மதத்தை அதிகமாக விமர்சிக்க வைத்தது. அவர் அடிதட்டு உழைக்கும் இந்து மக்களை குறை கூறவில்லை, அவர் பார்ப்பனிய மதத்தை சாடினார்.
இந்து மதத்தின் உட்கூறான வர்ணாசிரமத்தால் சாதிய கட்டமைப்புகளில் சிக்கி தன்மானத்தை இழந்து அடிமைப்படும் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க தான் அதிகமாக மனுவையும் இந்து மத வேத புராண இதிகாசங்களில் இருக்கும், அவர்கள் எழுதி வைத்திருக்கும் வசனங்களையும் அப்படியே மேடையில் பேசினார். அதையே தான் காப்பியடித்து இந்த முட்டாள் கூட்டத்தின் தலைமை.ஒ-ம் ஒரு காலத்தில் பேசிவந்தார். அவரே தான் இந்து கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சராக வேண்டும் என்ற குரலை அதிகமாக ஒலிக்க செய்தார்.
அன்றைய காலத்தில் பல இஸ்லாமியர்கள், பெரியாரின் பிரச்சாரத்தை கேட்டு நாத்திகர்களாக பெரியாருக்கு பின்னால் அணி திரண்டார்கள். நிறைய பெரியார் சிலை கல்வெட்டுக்களில் இஸ்லாமிய பெயர்கள் தான் இடம்பெற்றிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். அவருடைய சில சிந்தனைகளை, கொள்கைகளை தவிர்த்து பலவற்றை இஸ்லாமியர்கள் படித்தும் பின்பற்றியும் தன் வாழ்க்கையை தகவமைத்து இருக்கிறார்கள்.
அவர் அனைத்து மதத்தையும், ஏன் இஸ்லாமிய மதத்தையும் உட்பட விமர்சித்துள்ளார், ஆனால் யாரும் அவரை ஹிந்து மதவெறியன் என்று விளித்தது இல்லை. ஆனால் அவர் இந்து மதத்தை எதிர்த்ததை, வைத்து அவரை இஸ்லாமிய கைக்கூலி என்று கூவியவர்கள் தான் அதிகம், அதன் நீட்சி தான் இன்று தமிழை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவோர்கள் வரை நீள்கிறது.
அவர் பேசாத தலைப்புகளே இல்லை, தமிழ் மொழி, பெண்ணியம், பார்ப்பனியம், ஆரியம், திராவிடம், சாதி ஒழிப்பு, இட ஒதுக்கீடு, திராவிட நாடு, தமிழ்த் தேசியம் என பலவற்றை பேசியுள்ளார். இதனுடன் சேர்த்தே அவருடைய கொள்கையான நாத்தீகத்தையும் பேசியுள்ளார். ஆனால் என் பின்னால் வருபவர்கள் அனைவரும் நாத்தீகர்களாக தான் இருக்க வேண்டும் என்றோ, அனைத்து திராவிடர்களும் நாத்தீகர்களாக தான் இருக்கவேண்டும் என்றோ கூறவில்லை.
அவருடைய அதிகமான கருத்து பகுத்தறிவாக தான் இருக்கும். நாத்தீகம் என்பது கடவுள் மறுப்பு ஆனால் பகுத்தறிவு என்பது முழுக்க நாத்திகம் இல்லை, அது பகுத்தாய்ந்து ஏற்றும் கொள்ளும் அறிவு. அதனால் தான், அறிஞர் அண்ணா பகுத்தறிவை பரவலாக்கினார். அவர் ஒட்டுமொத்த மக்களின் அடையாளமாக கடவுள் மறுப்பை தூக்கி புடிக்கவில்லை. அதுவும் அவருடைய ஒரு கொள்கை.
ஆனால் தமிழை வைத்து பிழைத்து எய்க்கும் கூட்டம் சொல்கிறது, "முப்பாட்டன் முருகன் என சொல்லும் போது எங்களை எதிர்க்கும் நீங்கள், கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரை ஏற்கிறீர்கள் " என்று உளறி கொட்டுகிறது. பெரியார் ஒரு சிந்தனைவாதி, அவர் ஆயிரம் சிந்தனைகளை பேசிவிட்டு சென்றிருக்கிறார், அதில் ஒரு சிந்தனை தான் கடவுள் மறுப்பு. ஒட்டு மொத்த மனிதர்களின் அடையாளமே நாத்திகம் என சொல்லவில்லை, பகுத்தறிவு என்றார்.
வெறி பிடித்தவர்கள் போல ஒரு கடவுளை அனைவருக்கும் முன்னோர் என அவர் சொல்லிவிட்டு சென்றால் எதிர்க்கலாம். கடவுள் இல்லை என்று தான் அவர் பிரச்சாரம் செய்து இருக்கிறார். ஒட்டு மொத்த மனித சமுதாயத்தின் பிரதிநிதியாக தன்னை நினைத்து கொண்டு கடவுள் இல்லை என சொல்லவில்லை.
ஆனால் இங்குள்ள மூடர் கூட்டம் தான், ஒட்டு மொத்த தமிழ் மொழி பேசுபவர்களின் பிரதிநிதியாக தன்னை கற்பனை செய்து கொண்டு பல நம்பிக்கைகளை பின்பற்ற கூடிய மக்கள் வாழும் நிலப்பகுதியில் "நம்முடைய முப்பாட்டன் என்று ஒருவரை" அறிவிக்கிறீர்கள். இன்னொருவனின் முப்பாட்டனை முடிவு செய்வது அவனே, நான் இல்லை. அது போல இன்னொருவன் ஒருவரை எனக்கு முப்பாட்டன் என்றால் அதை எதிர்க்கும் உரிமையும் எனக்கும் இல்லை. ஆனால் ஒரு மொழி பேசுபவர்களின் மூதாதை என்று ஒருவரை அறிவிக்கவோ, பேசுவதோ தவறு. [இந்த பத்தியை திரும்ப திரும்ப படித்தால் சித்தம் தெளிய சிவம் அருள்புரியும்]
இவர்கள் முப்பாட்டன், முன்னோர் வழிபாடு என்பதை மட்டுமே தமிழ்த் தேசியமாக கற்பனை செய்துகொண்டு கிறுக்குதனமாக உளறிக்கொண்டு இருக்கிறார்கள். பிரபாகரன், தமிழரசன் போன்ற போராளிகள் சொல்லாதவை, எல்லாம் இந்த கூமுட்டைகள் சொல்லி அதை தமிழ்த் தேசியம் என சொல்வது நகைப்பாக தான் உள்ளது. தமிழ்த் தேசியம் என்பது சாதி, மத, இனதுவேஷத்தை எதையும் உள்ளடக்காத அற்புதமான இன அரசியல்.
ஈழத்தில் அதற்கான கட்டாயம் வந்தது, அது துளிர்த்தது. அது போல் இந்தியமும் அதற்கான கட்டாயத்தை உருவாக்கும், அப்போது இந்த கும்பல் செய்வதை மட்டும் பாருங்கள். தமிழ்த் தேசியம் என்ற பெயரை கூறி சாதி, மத தேர்தல் அரசியலை செய்யும் அரைகுறை குடங்கள் இவை.
நான் முருகனுக்கோ, முருக வழிபாடுக்கோ, முருக பக்தர்களுக்கோ எதிராக என் எழுத்துக்களை வைக்கவில்லை, மாறாக அதை ராமரை போல் ஒரு அரசியலாக்கி அதன் மூலம் அதிகாரத்திற்கு வர துடிக்கும் இரத்த காட்டேறிகளை "முருக பக்தர்களுக்கு"அடையாளம் காட்டுகிறேன். முருகன், ஒரு சமயத்தின் கடவுள், அதை யாரும் இங்கு மறுக்கவில்லை. முருக வழிபாடு, ஒரு கூட்டத்தினர் செய்யும் வழிபாடு , அதை யாரும் இங்கு தடுக்கவோ விமர்சிக்கவோ இல்லை.
சில கூமுட்டைகள் தான் இதை மடைமாற்றி இஸ்லாமிய, கிறித்தவர்கள் முருகனை விமர்சிக்கிறார்கள் என இந்துத்துவ பாணி அரசியல் செய்கிறது. அதோடு மட்டுமில்லாமல், இவ்வளவு தெளிவாக எடுத்து கூறும் போதும் "நீங்க இப்படி விமர்சனம் வைக்கும்போது எங்கூர்ல இருக்குற கிறித்தவன், இஸ்லாமியன் மேல வெறுப்பு வருது, நான் இந்துத்துவாவுக்கு சென்றுவிடுவேன் என குரங்கு வித்தைகளை" போல சிறு குழந்தை பயம் காட்டுவது போல உளறுகிறார்கள்.
இவர்கள் தலையில் கொட்டி" டேய் லூசு பயலே நாங்க முருகனையோ, முருக வழிபாட்டையோ விமர்சிக்கல, ஒரு மதத்தோட கடவுளை ஏன்டா ஒட்டுமொத்த மக்களோட அடையாளமா மாத்தி மத அரசியல் பன்ற நாயே. முருக பக்தர்கள் பாவம். அவர்களை, இந்துத்துவம் போல, ராம பக்தர்களை பயன்படுத்தி நாட்டுல கலவரம் பன்னி ராம பக்தர்களை சிறை கம்பிக்குள் இருக்க வைத்து, மதநல்லிணக்கம் சீர்கெட்டதோ, அப்படியெல்லாம் இங்க நடக்ககூடாதுடா நாயேனு" சொல்றேன்னு சொன்னாலும் இவனுங்க மண்டையில ஏறப்போறது இல்ல.
ஆனால், என் மச்சான் முருகபக்தன் Prabakaran Sathasivamமாதிரி பல லட்சம் மக்கள் இருக்குற வரை இது போன்ற பாசிச கும்பல்களின் குரல் நோட்டா வரைக்கும் தான் கேட்கும்.
கிணற்றுதவளைகளின் குரல் கிணற்றை தாண்டாது ஒறவுகளே.
-விக்டர் இறைதாசன்

சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி மற்றுமொரு சிவசேனா - முரண்களின் மொத்த தொகுப்பு

சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி மற்றுமொரு சிவசேனா - முரண்களின் மொத்த தொகுப்பு

ஒரே தமிழன் சீமான்: சாதி, மதம் கடந்து தமிழர்களாக அனைவரும் ஒன்றுபடனும்
மக்கள்: அப்புறம் ,
ஒ.த.சீமான்: தமிழர்கள், நாங்கள் வீரசைவர்கள். முருகனுக்கு பால்காவடி எடுப்பது , தைப்பூச திருவிழா என்பது தமிழர் பெருவிழா. (பாஜகவின் பெரும்பான்மைவாத அரசியல்)
-------
ஒ.த.சீமான்: சாதி பார்த்து ஓட்டு போட்டா உன் ஓட்டு எனக்கு தீட்டு
மக்கள்: அப்புறம்
ஒ.த.சீமான்: கருணாநிதி, எம்ஜிஆர் தன் சாதியை சொல்லி ஒரு வார்டு கவுன்சிலர் ஆகிருக்கமுடியுமா.
(தமிழ்நாட்டு அரசியல் ஆதிக்க சாதிகளில் முதல்வர் எவரும் வரவில்லை ஆகையால் சாதிவெறியர்கள் என் பின்னால் அணி திரளுங்கள்)
ரஜினி என்ன ஆளுகனு கேட்டா இந்த மண்ணுல ஆளனும்னு ஆசை வருமா? (கமல் வைணவ ஐய்யங்கார் பச்சை தமிழர் )
-----
ஒ.த.சீமான்: இது தமிழனுக்கும் தெலுங்கனுக்குமான போர்
மக்கள்: அப்புறம்
ஒ.த.சீயின் அன்புதம்பி: மன வேட்பாளரு அண்ணகாரு கலைக்கோட்டுதயம்(தட் பாஜகக்கு இஸ்லாமியன் ஓட்டு மட்டும் வேனும் மொமன்ட்)
---
ஒ.த.சீமான்: பாஜகவோட எந்த காலத்திலும் கூட்டணி வைக்கமாட்டோம் ( ஆம் , வைக்கமாட்டார்கள். சிவசேனாவுடைய மறுவடிவம். சுயேட்சையாக உருவெடுப்பார்கள்)
மக்கள்: அப்புறம்
ஒ.த.சீமான்: உனக்கு பிள்ளையார் னா எனக்கு முருகன், உனக்கு வடநாட்டு சிவன்னா எனக்கு தென்னாட்டு சிவன், உனக்கு விநாயக சதூர்த்தி னா எனக்கு தைப்பூசம்
(இதிலிருந்து கூற வருவது என்னவென்றால் RSS ன் பாசிச கொள்கையின் தமிழ் Version நாங்கள் தான். பெரும்பான்மைவாதத்தை உணராத மதநல்லிணக்கத்துடன் இருக்கும் தமிழ் மக்களிடம், நம்ம கொள்கை தான் பெரும்பான்மை.
தமிழ் மொழி பேசுபவர்கள் இந்த இறை கொள்கையை தான் பின்பற்ற வேண்டும். பிரச்சாரம் செய்வது வேறு, ஆனால் இவர்கள் செய்வது பச்சையாக RSSன் தாய்மதம் திரும்பும் கொள்கையின் தமிழ் Version)
----
ஒ.த.சீமான்: இஸ்லாமியர்கள் சிறுபான்மை இல்லை அவர்கள் இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் (இதை சீமான் தான் முதலில் சொன்னதாக பெருமையடிப்பவர்கள், காயிதே மில்லத்தையும் பழநிபாபாவின் பேரை கூட அறியாத சிறுவர்கள். And Moreover வெளிநாட்டு பண உதவியும், consolidated muslim votes பெறுவதற்காக பேசக்கூடிய பேச்சு)
மக்கள்: அப்புறம்
ஒ.த.சீமான்: உருது பேசும் இஸ்லாமியர்கள் தமிழர்கள் இல்லை. அவங்கள எப்படி "நான்" தமிழனா ஏத்துக்குறது [இஸ்லாமியர்கள் அரசு பணியிடங்கள், கல்லூரிகள், பள்ளிகூடங்கள் என எல்லா இடத்திலும் தோற்றத்தால் பொதுபுத்தி பார்வையில் கொலை செய்யப்படுகிறார்கள்.
எனக்கே கோவையில் ஒருத்தனும் அறை கொடுக்கல என் பெயரை கேட்டுட்டு, என் பெயரை சொல்லாம என் நண்பனோட தங்கி பிறகு என் பெயரை கேட்டதும் ஓனரு அதிர்ச்சியே அடைந்தாரு.
இப்படியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தில் சென்று உருது தமிழ் மலையாளம்னு பிரிச்சு அரசியல் பன்னுவது, ஒடுக்கப்பட்டவர்களை பிரித்து ஆளுக்கொருத்தன் அடிச்சிட்டு போங்கடா என்பதாகும். RSSன் பிரித்து அடி சித்தாந்தம் தான்.
அதிலும் சீமான் ஏதோ தமிழ்நாட்டின் அதிபர் போல நான் ஏற்கமுடியாது என்று சொல்வது, ஒரு பிரிவை இயல்பாக ஏற்படுத்தும் என்றாலும், தமிழர் யார் என அடையாளப்படுத்தும் அதிகாரம் அவரிடம் இருப்பது போல தன் சகாக்களை நம்பவைக்கிறார்]
---
ஒ.த.சீமான்: ஆதிதமிழர் விடுதலை இல்லையேல் மீதி தமிழர் விடுதலை இல்லை
மக்கள் : அப்புறம்
ஒ.த.சீமான்: தெலுங்கு பேசும் அருந்ததியர்களை, அவர்களாகவே நாங்கள் ஏற்கிறோம். அவர்களின் முன்னேற்றத்திற்கு தமிழர்கள் நாங்கள் உழைப்போம். [இருப்பதிலே கடைசிநிலை ஒடுக்குமுறைக்கு ஆளாவது அருந்ததியர்கள் தான். வழிவழியாக நாம் பார்க்கவே கூச்சப்படும் மலத்தை தன் கையால் அள்ளி விஷவாயு தாக்கி இறந்தும் போகிறார்கள்.
அவர்களை ஏற்கனவே மனிதர்களாகவே பார்க்காமல் இருக்கிறார்கள் இதில் அவர்களை மொழி ரீதியாக சாதி ரீதியாக இரண்டாம்பட்சமாக பார்க்கும் இன்னொரு பார்வையை வளர்க்கிறார்.
இப்போது தான் ஒடுக்கப்பட்டவர்களான பறையர்களும் அருந்ததியர்களும் ஒன்றாக ஒருமித்த குரலில் போராடி கொண்டிருக்கும் வேளையில், இப்படியான முனுமுனுப்புகள் வர்ணாசிரமத்திற்கே இழுத்து செல்லும்]
---
ஒ.த.சீமான்: இது ஆரியருக்கும் தமிழருக்கும் நடக்கும் போர். திராவிடர்கள் அமைதியாக இருக்கவும்
மக்கள்: அப்புறம்
ஒ.த.சீமான்: திருச்சி சங்கரப்பா சொன்னாரு. அவரு ஒரு சுத்த தமிழ் ஐயர். மகாபாரதம் தமிழர்களுடைய போர்னு. தமிழ் பார்ப்பனர்களும் தமிழர் தான் [ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல சூத்திரன் என்றும் கீழ்சாதி என்றும் பார்த்தவர்கள் தமிழர்கள் ஆக்கிவிட்டு எந்த ஆரியர் கூட போர் புரிய போகிறார். இவர் பார்வையில் சூனா சாமி கூட தமிழர் தான். RSSன் தமிழ் Version. அவா இல்லாம RSS இயங்குமோ னா :) ]
---
ஒ.த.சீமான்: பிரபாகரனின் பிள்ளைகள் நாங்கள். பிரபாகரன் இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன்
மக்கள்: அப்புறம்
ஒ.த.சீமான்: நான் வர்ரவரைக்கும் பிரபாகரன் தீவிரவாதியா தான் தெரிந்தார்[ வரலாறு அறியாத சிறுபிள்ளைகள் வேண்டுமானால் இந்த கதைக்கு கைதட்டுவார்கள். ராமதாஸ், பழநிபாபா, கொளத்தூர் மணி, வைகோ என பல தலைவர்கள் பிரபாகரன் Active ஆக இருக்கும்போதே அவர்களுக்காக பேசி உதவி செய்து தடா, பொடா வாங்கியவர்கள்.
எம்ஜிஆரின் பண உதவி சொல்லும், விடுதலை புலிகளை தமிழக மக்கள் எப்படி நேசித்தார்கள் என்பதை. விடுதலை புலிகள் ஈழத்தில் செயலற்ற பிறகு பிரபாகரனை தீவிரவாதியிலிருந்து "புனிதப்படுத்தியது " போல் பேசுவது என்பது அவர் சகாக்கள் வேண்டுமானால் நம்பலாம்.]
--
இப்படியே அடுக்கி கொண்டே போகலாம். முரண்பாட்டின், குழப்பங்களின் மொத்த உருவமாக. உயிர்நேயம் மிக்க தமிழ் மக்களை , இனவெறி மிக்க சிங்களர்களாக மாற்ற தான் இவ்வளவு பாடுபடுகிறார் போலும்.
தமிழ்தேசியம் என்ற அழகான மண்ணுக்கான அரசியலை , இனவெறியுடன் குழப்பி, அதனுள் சாதிவெறியையும் மதவெறியையும் உட்கூறாக திணிப்பதில் இருந்தே தெரிகிறது. மூன்று வெறிகளும் ஓன்றாக சேரும் இடத்தில், எளிய மக்களின் உயிர் பலிகள் அதிகமாக இருக்கும் என்று.
அது அவர் சகாக்களின் உதிரும் வார்த்தைகளிலேயே தெரியும், அவர்கள் எவ்வளவு சகிப்புதன்மையற்றவர்கள் என்று. இவர்கள் வளர்ப்பது தமிழ்தேசியம் அல்ல, Neo fascism..
-விக்டர் இறைதாசன்

Friday, March 08, 2019

தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடத் தொடங்கிய காலத்தில் தமிழ்நாடு இருந்த நிலை

#தந்தை பெரியார் #தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடத் தொடங்கிய காலத்தில் #தமிழ்நாடு இருந்த நிலை...........
1.ஆதிதிராவிடர்கள், பார்ப்பன தெருக்கள், கோயில்களை சுற்றியுள்ள தெருக்கள் ஆகிய எதிலும் நடந்து கூடச் செல்லக் கூடாது.
2. ஆதி திராவிடர்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டிக்கட்டக் கூடாது.
3.தங்க நகைகள் அணியக் கூடாது.
4.மண் குடத்தை தான் தண்ணீர் பிடிக்க பயன்படுத்த வேண்டும்.
5.ஆதிதிராவிடர் விட்டுக் குழந்தைகள் படிக்கக் கூடாது.
6.சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது.
7.திருமணக் காலங்களில் மேளம் வாசிக்கக் கூடாது.
8.பூமி குத்தகைக்கு வாங்கி சாகுபடி செய்யக் கூடாது.
9.குதிரை மீது ஊர்வலம் செல்லக் கூடாது.
10.பொதுக் கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது.
11.மேல் அங்கியோ, துண்டுடோ அணிந்து கொண்டு செல்லக் கூடாது.
12.உயர்ந்தோர் குடியிருப்பின் வழியாக தாழ்ந்தோர் சுடுகாட்டிற்கு செல்லக் கூடாது.
13.பெண்கள் ரவிக்கைகள் அணியக் கூடாது என்பதோடு மேல் சாதியினர் வரும்போது மேலே அணிந்திருக்கும் வேறு துணிகளையும் எடுத்து அக்குலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
14.நீதி மன்றங்களில் சாட்சி சொல்ல நேரிட்டால் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும்.
..........இந்த நிகழ்வுகளெல்லாம் இன்று தமிழகத்தில் மாறியிருப்பதற்கு காரணம் யார்? '' தந்தை பெரியார்'' அல்லவா, இந்த நிகழ்வுகளை மக்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஏடுகள், 'குடி அரசு, ' புரட்சி', ' பகுத்தறிவு',போன்ற ஏடுகளே..........

Wednesday, February 27, 2019

பார்ப்பனர்கள்தான் இன்றைய எல்லா அரசியல் முறைகேடுகளுக்கும் பிள்ளையார் சுழி.

‘பார்ப்பனரல்லாதவர்கள்தான் ஊழல் செய்கிறார்கள். பார்ப்பனர்கள் நேர்மையின் சிகரம்’ என்கிற பொதுப்புத்தியை உருவாக்க ஊடகங்கள் வாயிலாகவும், சமூக ஊடகங்களிலும் பார்ப்பனர்கள் மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழக அரசியல் சூத்திரர்களை சார்ந்திருப்பதால் ‘எத்தை தின்றால் பித்தம் தெளியும்’ நிலையில் பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவுக்கே குதிரைப்பேர அரசியலை முதன்முறையாக அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி. பார்ப்பன தந்திரத்துக்கு பலியான முதல் சூத்திரக் கட்சி காமன் வீல் பார்ட்டி. மைனாரிட்டி காங்கிரஸ் அரசுக்கு முதல்வராக பொறுப்பேற்ற ராஜாஜி, மெஜாரிட்டி காட்டுவதற்காக செய்த தகிடுதத்தங்கள்தான் இன்றைய எல்லா அரசியல் முறைகேடுகளுக்கும் பிள்ளையார் சுழி.