Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (49)

திராவிடம் என்ற சொல்லை உருவாக்கியவர்கள் பெரியாரோ, சுயமரியாதை இயக்கத்தினரோ, திராவிடர் கழகத்தினரோ, திமுகவினரோ, ஏன் நீதிக்கட்சியினரோ கூட அல்ல. இது குறித்து அறிஞர் இராம.சுந்தரம் கூறுவதாவது:

கால்டுவெல்லுக்கு முன் ’திராவிட’ என்கிற சொல் தென்னிந்தியர்களை / தென்மொழிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. குமரிலபட்டர் (கி.பி.7ஆம் நூற்றாண்டு) ‘திராவிட பாஷைகள்’ பற்றிக் குறிப்பிடுகிறார். மனு ஸ்மிருதியில் திராவிட இனம் பற்றிய குறிப்புண்டு. கிரியர்சன்  தனக்கு தெரிந்த மட்டில் ஹாட்சன் என்பவர்தான் ‘Dravidian’ என்ற சொல்லை முதன்முதலாகத் தென்னிந்திய மொழிகளைக் குறிக்கப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார். 1816-ல் வெளியான A.D.Campwell –இன் தெலுங்கு மொழி இலக்கண முன்னுரையில் எல்லீஸ் என்பார் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, மால்டோ முதலிய மொழிகளைத் ‘தென்னிந்திய மொழிகள்’ என்று குறிக்கிறார். சமஸ்கிருதம் தொடர்பாக நூல் எழுதிய ஆசிரியர்களும் திராவிட என்ற சொல்லை இனம்/மொழி தொடர்பாகக் குறித்தனர். 1854 வரை இது தொடர்கிறது.

எனவே ‘Caldwell coined the term’ என்று சொல்லுவதை விட, அவரே கூறுவது போல, ”The word I have chosen is ‘Dravidian“ from ‘Dravida, the adjectival form of Dravida” என்பது பொருந்தும். எனினும், இந்தச்சொல்லை – ‘திராவிட’ என்ற சொல்லை –வரையறுத்த பொருளில், பயன்படுத்தி உலகெங்கும் பரவச்செய்த பெருமைக்குரியவர் கால்டுவெல் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.

#திராவிடம் அறிவோம் (48)

பார்ப்பனர் அல்லாதோருக்கான முதல் அமைப்பாக, சென்னையில் “தி நான்-பிராமின் அசோசியேசன்” என்ற அமைப்பு, பி. சுப்பிரமணியம், எம். புருசோத்தம நாயுடு என்னும் இரு வழக்கறிஞர்களால் 1909-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எனினும் அவ்வமைப்பு தொடர்ந்து செயல்படவில்லை.

#திராவிடம்அறிவோம் (47)

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் தொடங்கப்படுவதற்கான கட்டாயம் என்ன என்பதைக் கீழுள்ள அட்டவணைகள் தெளிவாக உணர்த்தும்.



Source: நீதிக்கட்சி வரலாறு - திருநாவுக்கரசு

#திராவிடம் அறிவோம் (46)

சாதி,மத வேற்றுமைகளால் உண்மையான ஆன்மிக மக்களிடம் தழைக்கவியலாதவாறு, உயிர்க்கொலை வேள்வி செய்யும் மனிதநேயம் மறந்த புரோகிதரின் வழிப்பட்ட சடங்குகளே உண்மை சமயம் போன்று நிலவுவதைக் கண்டித்து, ‘சாதியிலே மதங்களிலே சாத்திரச் சந்தடிகளிலே ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்! இது அழகலவே’ எனவும்; ‘கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக’ எனவும் முழங்கிய வடலூர் வள்ளலாரின் சமரச சன்மார்க்கச் சிந்தனைதான், பின்னர் வளர்ந்த சுயமரியாதை இயக்க, சமூகநீதிக் கொள்கைகட்கெல்லாம் அடிப்படையாயிற்று எனலாம்.

- பேராசிரியர் அன்பழகன்.

#திராவிடம் அறிவோம் (45)

17.03.1969 அன்று தில்லியில் பத்திரிக்கையாளர்களிடம், மத்திய-மாநில அரசுகள் அதிகாரங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று தலைவர் கலைஞர் அறிவித்தார்.

இந்த அதிகாரப்பகிர்வு தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் இதுபற்றி ஆராய நீதிபதி இராஜமன்னார் தலைமையில் டாக்டர்.ஏ.லட்சுமணசாமி முதலியார், பி.சந்திராரெட்டி ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டு மத்திய-மாநில உறவுகளும் அதனிடையே அதிகாரப்பகிர்வும் குறித்து ஆராய்ந்து சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் இது குறித்தான ஷரத்துகளை அகில இந்திய அளவில் பல தரப்பினரிடம் கேட்கப்பட்டு ஒரு அற்புதமான அறிக்கையை 27.05.1971 இல் தலைவர் கலைஞரிடம் அந்தக் குழுவினர் வழங்கினர்.

383 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை இன்றைக்கும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற அரிய ஆவணமாகும்.

மத்திய-மாநில பிரச்சனைகள் எழும்போதெல்லாம் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் ஒரு மகா சாசனமாக உள்ளது.

#திராவிடம் அறிவோம் (44)

தீண்டாமை ஒழிப்புக்காகவும், சாதி ஒழிப்புக்காகவும் பணியாற்றிய லாகூரைச் சேர்ந்த ஜாத் பத் தோரக் மண்டல் என்னும் அமைப்பின் மாநாட்டில்(1936) உரையாற்ற அண்ணல் அம்பேத்கரை அழைத்தனர். அம்பேத்கர் தாம் ஆற்றவிருக்கும் உரையினைக் கட்டுரை வடிவில் (சாதியினை ஒழிக்கும் வழி) எழுதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பி வைத்தார்.

அக்கட்டுரையில் இந்துமதத்தைக் கடுமையாக விமர்சித்து அம்பேத்கர் எழுதியிருந்ததால், அந்த அமைப்பினர் அந்த மாநாட்டையே கூட்டாமல் விட்டுவிட்டனர்.

அடுத்த ஆண்டே தந்தை பெரியாரின் முயற்சியால் இவ்வுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு குடி அரசு இதழில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டது. சாதியை ஒழிக்கும் வழி (A.O.C) என்னும் பெயரால் நூல் ஒன்று 0.4.0 அணாவுக்கு விற்கப்பட்டது.

#திராவிடம் அறிவோம் (43)

தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் கொண்டாடப்பட்டபோது, பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் விதமாக ஒரு முக்கியமான நடவடிக்கையை எம்.ஜி.ஆர். எடுத்தார்.

“தமிழ்நாட்டில் சாலை, தெருப்பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்படும்” என்று அறிவித்தார் எம்.ஜி.ஆர்.

 1978 அக்டோபர் 3 அன்று இது குறித்த அரசாணை வெளியிடப்பட்டது. சாலை, தெருப்பெயர்களிலிருந்து சாதிப் பின்னொட்டுகள் நீக்கப்பட்டன.

#திராவிடம் அறிவோம் (42)

திராவிட நாடு கோரிக்கைக்காக ஆதரவு பெற பெரியார் 1940ஆம் ஆண்டு ஜின்னாவைச் சந்திப்பதற்காக சென்னை சென்றார்.

ஜனவரி 6 அன்று தாராவியில் தமிழ்க்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அடுத்தநாள் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பார்ப்பனியத்தை ஒழிப்பதில் தாமும் பெரியார் கொள்கையை ஒத்துக் கொள்வதாகவும், அன்று முதல் இன்று வரை பார்ப்பனியத்தை எதிர்த்துப் போராடியும், பார்ப்பனியத்தை அறைகூவி அழைத்து வருபவருமான ஒப்பற்ற தலைவர் பேசும் கூட்டத்திற்குத் தலைமை வகிக்கத் தமக்குக் கிடைத்த பாக்கியமே தமது வாழ்க்கையில் தாம் சிறந்த பாக்கியமாகக் கருதுவதாகவும் அம்பேத்கர் குறிப்பிட்டார். அம்பேத்கரின் பேச்சைத் தமிழர்களுக்காக அறிஞர் அண்ணா தமிழில் மொழி பெயர்த்தார். பம்பாயிலுள்ள தலைவர்களுக்காகப் பெரியாரின் பேச்சை அறிஞர் அண்ணா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

    பெரியார் பேசும்போது ”நான் பார்ப்பன ஆதிக்கத்தை முற்றிலும் வெறுக்கிறேன். அது மக்களின் மாபெரும் உணர்ச்சி வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி அவர்களையும் மதம், பொருளாதாரம், சமூகம், அரசியல், கடவுள் பெயரால் அழுத்தி வைத்திருக்கின்றது” என்றார்.

#திராவிடம் அறிவோம் (41)

சுயமரியாதை இயக்கம் பெண் போராளிகளுக்கான சிறப்பான இடத்தை வழங்கியது. ஒவ்வொரு சுயமரியாதை மாநாட்டுடனும் பெண்களுக்கான மாநாடும் நடத்தப்பட்டது. மாநாடுகளைத் தொடக்கி வைப்பது,  தொடக்கவுரை ஆற்றுவது போன்ற பொறுப்புகளால் பெண்கள் கெளரவிக்கப்பட்டனர்.

சான்றாக,1931-ஆம் ஆண்டு விருதுநகரில் மூன்றாவது சுயமரியாதை மாநாட்டை இந்திராணி பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

1932-ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட சுயமரியாதை மாநாட்டை குஞ்சிதம் அம்மையார் தொடங்கி வைத்தார்.

1933-ஆம் ஆண்டு, மூன்றாவது தஞ்சாவூர் மாவட்ட சுயமரியாதை மாநாட்டை நீலாவதி தொடங்கி வைத்தார்.

1934-ஆம் ஆண்டு, திருச்செங்கோடு தாலுகா ஆதிதிராவிட மாநாட்டை அன்னபூரணி தொடங்கி வைத்தார்.

1937-இல் திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிட மாநாட்டிற்கு மீனாம்பாள் சிவராஜ் தலைமை வகித்தார்.

1938-இல் மதுரை சுயமரியாதை மாநாட்டை ராஜம்மாள் தொடங்கி வைத்தார்.

#திராவிடம் அறிவோம் (40)

ஜாதி என்பது எந்த இடத்திலும் இல்லாது செய்யப்பட வேண்டும். நடப்பிலும் இல்லாது பார்த்துக்கொள்ளப்பட வேண்டும். ஜாதி உணர்ச்சி அறவே மறையும்படிச் செய்ய வேண்டும். இதனை வெறும் மனமாற்றத்தால் மட்டுமே செய்யமுடியுமென்று தத்துவார்த்தம் பேசி காலங்கடத்தாமல், “தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது. அதனை எந்த ரூபத்தில் கடைப்பிடித்தாலும் அது சட்டவிரோதம்” என்று அரசியல் சட்டத்தின் 17ஆவது விதி கூறுகிறதே, அவ்விதியில் உள்ள ‘தீண்டாமை’ (Untouchablility) என்பதற்குப் பதிலாக ‘ஜாதி’ (caste) என்ற சொல்லை மாற்றி ஜாதி ஒழிப்பை அரசியல் சட்டமே பிரகனப்படுத்துவதாக அமைய வேண்டும்.

 -சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் தந்தை பெரியார்(1972)

#திராவிடம் அறிவோம் (39)

தாழ்த்தப்பட்டோர் ஆலய நுழைவின் அவசியம் குறித்துத் தமது ‘குடி அரசு’ இதழில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார், தந்தை பெரியார்.

சென்னை கவர்னரின் மனைவியை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்று குப்புசாமி அய்யர் காட்டியதாகவும், அவருக்கு அந்தப் பெண்மணி நன்றி கூறியதாகவும் கிடைத்த செய்தியை வைத்து ‘குடி அரசு’ இதழில் எழுதப்பட்ட தலையங்கத்தில், “நமது மதத்துக்கு விரோதமாய்ப் பிரச்சாரம் செய்பவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்கும் நீங்கள், நமது மதத்தில் உள்ளவர்களைக் கோயிலுக்குள் விட மறுப்பது ஏன்?” என்று கேட்கிறார்.
(குடி அரசு, 17.01.1926)

#திராவிடம் அறிவோம் (38)

நெருக்கடி நிலையின்போது, மற்ற இதழ்களைப் போல விடுதலை ஏடும் தணிக்கைக்கு உள்ளானது.

விடுதலையின் முகப்பில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற வாசகம் அச்சிடப்பட்டிருக்கும். அம்முழக்கம் நீக்கப்பட்டால்தான் விடுதலையை அச்சிட முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. இச்செய்தி, அப்போதைய விடுதலை ஆசிரியர் ஈ. வெ. ரா. மணியம்மையாரிடம் தெரிவிக்கப்பட்டது. இறுதிவரை தணிக்கை அதிகாரியிடம் பேசியும், அதிகாரி ஒப்புக் கொள்ளாமல் போகவே ‘தமிழ்நாடு இந்திராவுக்கே என்று போட்டால்தான் வெளியிட அனுமதிப்பீர்கள் போலிருக்கிறது’ என்று கடுமையாகப் பேசினார், அமைதிக்குப் பேர்போன அன்னை மணியம்மையார்.

இந்நிகழ்வுக்குப் பிறகுதான், விடுதலை ஏட்டில் “வாழ்க பெரியார், வளர்க அவர் கொள்கை” எனும் முழக்கங்கள் அச்சிடப்பட்டு வெளிவரத் தொடங்கின.

#திராவிடம் அறிவோம் (37)

அனைத்து மக்களும் சாதி வேறுபாடு இல்லாது ஒரே இடத்தில் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் கலைஞரால் கொண்டு வரப்பட்டதே பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம். தமிழகம் எங்கும் 237 சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன. தலித்துகள் 40%, பிற்படுத்தப்பட்டவர்கள் 25%, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 25%, மற்ற வகுப்பினர் 10% என்று வீடுகள் ஒதுக்கப்பட்டன. சாலை வசதிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, பூங்கா, கல்விக் கூடங்கள், பொது மயானம் எனக் குடியிருப்புக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன.

மதுரை மாவட்டம், மேலக்கோட்டையில் முதல் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட தினம் இன்று. (17.08.2018)


Update: இன்றைய நிலை
https://twitter.com/srikkanthdTOI/status/1027097475113398272



#திராவிடம் அறிவோம் (36)



எங்கள் திராவிடம்!

தங்கம் விளைந்த நிலம் - எங்கள்
தாய்நிலம் போற் காண்கிலம்-உயர்
செங்கதிர் போல் திங்கள்போல் - துலங்கும்
திராவிட மாநிலமே!

எங்கும் வளப்பம் மிகும் - புகழ்
எண்ணத் தகும்தாயகம் - கழை
தெங்கும்செந் நெல் கமுகும் - விளையும்
திராவிட நல்லகமே!

அன்பு பதிந்த இடம் - எங்கள்
ஆட்சி சிறந்த இடம் - நல்
இன்பம் நிறைந்த இடம் - எமைஎல்லாம்
ஈன்ற திராவிடமே!

- பாவேந்தர் பாரதிதாசன்

(குயில் 25.08.1947)

#திராவிடம் அறிவோம் (35)

அரசியல் சட்டம் எழுதிய வர்கள் ஆறு பேர். அதில் நாலு பேர் பார்ப்பனர்கள். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், முன்ஷி, டி.டி. கிருஷ்ணமாச்சாரி, கோபால்சாமி அய்யங்கார் ஆகிய பார்ப்பனர்கள் எழுதினார்கள். மற்றவர்கள் இரண்டு பேரில் ஒருவர் அம்பேத்கர். மற்றவர் ஒரு சாயபு.

- தந்தை பெரியார் (விடுதலை 11.11.1957)


முருக பக்தர்களும் கிருஷ்ண பக்தர்களும் ஜாக்கிரதை - தமிழக RSS சீமான்

முருக பக்தர்களும் கிருஷ்ண பக்தர்களும் ஜாக்கிரதை - தமிழக RSS சீமான்

இந்துக்களுக்கு மொத்த இந்தியாவில் லட்சத்திற்கும் மேல் சிறுதெய்வங்கள் உண்டு. அவர்களுக்கு விஷ்ணு, சிவா, தேவி போன்றவர்களே பெருங்கடவுள்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அதிகமாக வணங்குவது Lord Ram, Bajrang Bhalli மற்றும் Lord Krishna.
இந்துத்துவம் பெருந்தெய்வங்களான விஷ்ணுவையோ, சிவாவையோ, தேவியையோ முதன்மைபடுத்தாமல் ராமரை முதன்மைபடுத்தி அரசியல் பொருளாக மாற்றியதற்கான முதல் காரணமே முதல் பத்தியில் இருக்கும் விடயம் தான்.
வடயிந்தியா முதல் தென்னிந்தியா வரை அனைவரையும் அந்த ஒரு கடவுளை வைத்து தான் மொத்த மக்கள்தொகையில் அதிகமான இந்துக்களை Cover செய்யமுடியும் என்பதால் தான் ராமரை அரசியலாக்கினார்கள். இந்துத்துவா வகையறாக்களுக்கும் பக்திக்கும் துளியும் தொடர்பில்லை. அதற்கு சாட்சியே, அவர்களின் தத்துவார்த்தவாதி சாவர்க்கர் ஒரு நாத்திகர் என்பது தான். இவர்களுக்கு தேவை, அதன் மூலம் கிடைக்கும் அரசியலும், அதிகாரமும் தான்.
அந்த திட்டம் தான் ஒரளவு வெற்றிப் பெற்று இன்று பெரும்பான்மையாக ஆட்சி அமைத்திருக்கிறார்கள். இவர்கள் கடவுள் பக்தியாளர்கள் அல்ல, ஆனால் இவர்களின் அரசியலுக்கு முட்டாள்களாக இருக்கும் கடவுள் பக்தர்கள் அதிகம் தேவைப்படுவார்கள்.
அதே போல், தமிழ்நாட்டில் இருக்கும் பெருந்தெய்வங்களில் அதிகமான மக்கள் வணங்குவது சிவன், முருகன், கிருஷ்ணன், ஐயப்பன், பெருமாள் மட்டுமே. எப்படி இந்திய-இந்து பண்பாட்டு மீட்சி என்ற குரலை உயர்த்தி இந்துத்துவ சக்திகள் ஆரம்பத்தில் உலாவியதோ, அதே பாணியில் தமிழ் பண்பாட்டு மீட்சி என்று சில கோமாளிகள் ஆராய்ச்சி என்ற பெயரில் Comics எழுதி கொண்டு இருக்கிறார்கள்.
இவர்கள் ஆதிபாட்டன் சிவன், முப்பாட்டன் முருகன், முப்பாட்டன் கிருஷ்ணன் என்று கூறுவதற்கான காரணமே பெரும்பான்மை மக்களை கவர்வதற்கு தான். அந்த பண்பாட்டு மீட்சியாளர்கள் கூறும் கூற்றுக்கு மாறாக அவர்களே எப்படி நடக்கிறார்கள் என நீங்களே பாருங்கள்.
தமிழ் இலக்கியங்களின் வாயிலாக பண்டைய தமிழ் மக்கள் ஐந்தினை நிலங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு திணை தெய்வ வழிபாடு இருந்தது. குறிஞ்சிக்கு(மலை பகுதி) - சேயோன், முல்லைக்கு(காடு பகுதி) - மாயோன், நெய்தலுக்கு (கடல் பகுதி)- வருணன் , மருதத்துக்கு(வயல் பகுதி)- இந்திரன், பாலைக்கு(வறண்ட நில பகுதி) - கொற்றவை என்று வணங்கி வந்துள்ளார்கள்.
இந்த பெயர்களை அப்படியே பயன்படுத்தி பேசினால் ஒரு நபரும் கேட்கமாட்டார்கள் என்பதனால் தான், தற்போது இருக்கும் பெருந்தெய்வங்களை ஒப்பிட்டு, திணை தெய்வ பெயர்களை மறைத்து பெரும்பான்மை தெய்வ பெயர்களை வைத்து அழைக்கிறார். முப்பாட்டன் சேயோன் என்று அழைப்பது தானே முறை, ஏன் முப்பாட்டன் முருகன் என அழைக்கவேண்டும்?
முருகன் தான் சேயோனாகவே இருந்தாலும்(நிறுபிக்கப்படவில்லை), பண்பாட்டை மீட்பவர்கள் சேயோனை முப்பாட்டனாக தானே மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்க வேண்டும். முருகனை மட்டும் மேடை தோறும் பேசியதிலிருந்தே அது இந்தத்துவாவின் ஒத்த அதே அரசியல் நகர்வு என்பது நமக்கு புலப்படுகிறது. கிருஷ்ணனை மாயோன் என எல்லா இடத்திலும் பயன்படுத்தமாட்டார். அடிக்கடி கிருஷ்ண பரமார்த்மாவை மேற்கோள் காட்டுவார்.
ஆனால், தப்பி தவறி கூட இந்திரனையோ மற்ற திணை தெய்வங்களையோ அதிகமாக பேசமாட்டார். அதில் வாக்குகளோ , மக்கள் கவர்ச்சியோ இல்லை. முருகன், செட்டியார்கள் வணிக கடவுளாக வணங்கக்கூடிய தெய்வம். அதிகமாக முருகனை வழிபட்டு, பழனி பாதயாத்திரை செல்பவர்கள் முக்குலத்தோர்கள். கிருஷ்ணனை வணங்குபவர்களில் கோனார்களும், வைணவ வன்னியர்களும் அடக்கம்.
ஆனால் இந்திரனோ, கொற்றவையோ ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட, அனைவராலும் வணங்கக்குடிய பெருந்தெய்வமாக இல்லை. இந்திரன் என்பது கணிசமான அளவு தேவேந்திரர்கள் வணங்குவார்கள் ஆனால் இந்திரனுக்கோ அதிகமான கோவில்களோ தளங்களோ இல்லை. கொற்றவை என்பது வேட்டுவ கவுண்டர்கள் வணங்கும் ஒரு குலதெய்வமாகவே உள்ளது. இதையெல்லாம் மறந்தும் முதன்மை படுத்தமாட்டார்கள். ஐந்தினைகளில் இல்லாத ஆதிபாட்டன் சிவனும், சேயோன் என்று சொல்லாமல் முப்பாட்டன் முருகன் என வருவதும், மாயோன் என சொல்லாமல் கிருஷ்ணன் என்பதே இவர்கள் வாயில் அதிகமாக உதிரும் வார்த்தைகளாகவே இருக்கிறது. ஏனென்றால் இவர்கள் கட்டமைக்கும் அந்த அரசியல் அப்படியானது.
அவர்கள் பக்தியை முதலீடாக கொண்டு அரசியல் என்றால், இவர்கள் பண்பாடு, தமிழ், தமிழர் என்ற வார்த்தையை கொண்டு பெரும்பான்மை அரசியல். இவர்கள் அனைத்து விடயத்திலும் உணர்வு, உணர்ச்சி, புனிதம் என்று எல்லாவற்றையும் பூசி மொளுகி ஒரு மாயையை உருவாக்க போராடி கொண்டிருக்கிறார்கள்.
இருவருக்கும் ராமனோ, முருகனோ முக்கியமில்லை, அதன் மூலம் கிடைக்கும் ஆதாயமும் லாபமும் தான் முக்கியம். பழனி மற்றும் ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் பள்ளிவாசலிலும் தேவாலயங்களிலும் தங்கி தண்ணீர் குடித்து விட்டு செல்வார்கள். அவர்கள் மனதில் இப்படிப்பட்ட வாதங்கள் நஞ்சை தான் விதைக்கும். நஞ்சு வேர்கள் கால்களை சுற்றும்போதே சுதாரித்து பிடிங்கி எறிவது நமக்கும் சமூகத்திற்கும் நலம். இவர்கள் பேசுவதற்கு பெயர் தமிழ்தேசியம் என்றால் பெரியாரும், தமிழரசனும், பிரபாகரனும் பேசியதற்கு வேறு பெயர் தான் வைத்தாக வேண்டும்.
பதிவுடைய கரு என்பது " முருக பக்தர்களும் கிருஷ்ண பக்தர்களும் ஜாக்கிரதை"
-விக்டர் இறைதாசன்

அம்பேத்கரையே இந்த இந்துத்துவம், அவருடைய ஆள் போல காட்டுகிறது

பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் பார்ப்பனியத்தையும் இந்து மதத்திற்குள் இருக்கும் சாதிய கட்டுமானங்களையும் எதிர்த்து எழுதி, போராடி இறுதியில் பெளத்தத்தை தன் வாழ்வியலாக ஏற்றுக்கொண்டு அதை ஒரு Solution ஆக சாதிய சகதிக்குள் சிக்கியவர்களுக்கு சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
அப்படிப்பட்ட அம்பேத்கரையே இந்த இந்துத்துவம், அவருடைய ஆள் போல காட்டுகிறது. உலகில் நடந்த எல்லா நிகழ்வுகளையும் பல கோணங்கள் வைத்து ஒரு Intellectual ஆக இருப்பவரால் எப்படி வேண்டுமானாலும் மடைமாற்றி எழுதி வரலாற்று புனைவு செய்ய இயலும். அதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
நாளை பெரியாரை கூட இந்து மதத்தவராக ஒரு புத்தகம் எழுதி அவருடைய ஆளாக காட்ட இயலும். அதை படிப்பவர்கள் நம்பும் அளவிற்கு வேறு கோணத்தில் எழுத முடியும். ஆனால் உண்மை கண்ணால் கண்டவர்களுக்கு தெரியும். அப்படி தான் ஒரு முட்டாள் கூட்டம் மொத்த 100 வருட தமிழக வரலாற்றில் 0.01% கூட தெரியாமல் 100 வருடத்தில் செய்த அனைத்து தவறுகளுக்கும் பல உள்நோக்கங்களை கற்பித்து, வரலாற்று புனைவை பேசுகிறார்கள்.
அதையெல்லாம் ஆராய்ந்து பார்க்குமளவிற்கு அக்கூட்டத்தில் உள்ளவர்களுக்கு வரலாற்று அறிவோ பகுத்தறிவோ இல்லை. அப்படி இருப்பவர்களும், இந்த மடைமாற்றத்தை வெற்றியாக்க உதவுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு விடயம் தான் பெரியாரை 1% கூட படிக்காமல் சில சம்பவங்களையும், நிகழ்வுகளையும் தவறுதலாக புனைந்ததை வைத்து திருப்பி திருப்பி உளறி கொண்டிருப்பது.
ஒரு மனிதன் சாதிவெறி பிடித்து இருப்பானே ஆனால், அவனுக்கு சாதி தான் பெரிதாக இருக்கும், மற்ற எதுவும் கண்ணுக்கு தெரியாது. அவன் சாதியை விமர்சிப்பவன் எல்லாம் நம்முடைய எதிரி சாதிக்காரன், வேற்றுசாதிவெறியன் என்று தான் இயல்பாக தோன்றும்.
ஒருவன் மதவெறி பிடித்து இருப்பானே ஆனால், அவனுக்கு மதம் தவிர ஒன்றுமே கண்ணுக்கு தெரியாது. அவன் மதத்தை விமர்சித்தால், அவன் மதத்தை அழிக்க வந்த எதிரி, வேற்றுமத வெறியன் என்று தான் இயல்பாக தோன்றும்.
‎ 
ஒருவன் இனவெறி பிடித்து இருந்தால், அவனுக்கு அதை தவிர மற்றவை கண்ணுக்கு தெரியாது. அதை குறித்து கேள்வி எழுப்பினாலே வேற்றுஇனவெறியன் என்று தான் இயல்பாக தோன்றும்.
ஆனால் பெரியார் இம்மூன்றையும் தாண்டியவர் என்பது அவரை படித்தவர்களுக்கு தெரியும். அவர் சாதியை சாக்கடை என்றும், மதத்தை மலம் என்றும் பேசியவர். அவர் இனம் என்று வரும்போது, ஆரிய பார்ப்பனர்களை எதிர்க்க மட்டுமே திராவிட இனம் என்று பேசுவார். ஆனால் அவர் சாதி, மொழி, இனம், மதம் என அனைத்தையும் தாண்டி மனிதம் என்று புனிதத்தை மறுத்து உயிர்நேயம் மற்றும் சுயமரியாதையை பேசியவர்.
ஆகையால் அவரை அரைகுறையாக பார்க்கும் சாதிவெறியர்களுக்கு அவர் ஒரு வேற்று சாதிவெறியன் போலவும், மதவெறியர்களுக்கு இன்னொரு மதவெறியன் போலவும், இனவெறியர்களுக்கு இன்னொரு இனவெறியன் போலவும் தெரிவது இயல்பே. ஏனென்றால் அவர் சாதி, மத, மொழி, இனத்திற்கு அப்பாற்ப்பட்டு ஒரு நவீன கற்றறிந்த சமூகத்தை உருவாக்க நினைத்தார். ஆகையால் அந்த முட்டாள்களுக்கு அப்படி தான் தெரியும்.
இன்னும் பல முட்டாள்கள் அவரை புரிந்து கொள்ளாமல், அவர் இந்து மதத்தை அதிகம் விமர்சித்ததால் தான் இஸ்லாமியர்கள் அவர் பின்னால் செல்கிறார்கள் என உளறுகிறார்கள். அவர் பேசிய சுயமரியாதை தான் அவரை இந்து மதத்தை அதிகமாக விமர்சிக்க வைத்தது. அவர் அடிதட்டு உழைக்கும் இந்து மக்களை குறை கூறவில்லை, அவர் பார்ப்பனிய மதத்தை சாடினார்.
இந்து மதத்தின் உட்கூறான வர்ணாசிரமத்தால் சாதிய கட்டமைப்புகளில் சிக்கி தன்மானத்தை இழந்து அடிமைப்படும் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க தான் அதிகமாக மனுவையும் இந்து மத வேத புராண இதிகாசங்களில் இருக்கும், அவர்கள் எழுதி வைத்திருக்கும் வசனங்களையும் அப்படியே மேடையில் பேசினார். அதையே தான் காப்பியடித்து இந்த முட்டாள் கூட்டத்தின் தலைமை.ஒ-ம் ஒரு காலத்தில் பேசிவந்தார். அவரே தான் இந்து கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சராக வேண்டும் என்ற குரலை அதிகமாக ஒலிக்க செய்தார்.
அன்றைய காலத்தில் பல இஸ்லாமியர்கள், பெரியாரின் பிரச்சாரத்தை கேட்டு நாத்திகர்களாக பெரியாருக்கு பின்னால் அணி திரண்டார்கள். நிறைய பெரியார் சிலை கல்வெட்டுக்களில் இஸ்லாமிய பெயர்கள் தான் இடம்பெற்றிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். அவருடைய சில சிந்தனைகளை, கொள்கைகளை தவிர்த்து பலவற்றை இஸ்லாமியர்கள் படித்தும் பின்பற்றியும் தன் வாழ்க்கையை தகவமைத்து இருக்கிறார்கள்.
அவர் அனைத்து மதத்தையும், ஏன் இஸ்லாமிய மதத்தையும் உட்பட விமர்சித்துள்ளார், ஆனால் யாரும் அவரை ஹிந்து மதவெறியன் என்று விளித்தது இல்லை. ஆனால் அவர் இந்து மதத்தை எதிர்த்ததை, வைத்து அவரை இஸ்லாமிய கைக்கூலி என்று கூவியவர்கள் தான் அதிகம், அதன் நீட்சி தான் இன்று தமிழை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவோர்கள் வரை நீள்கிறது.
அவர் பேசாத தலைப்புகளே இல்லை, தமிழ் மொழி, பெண்ணியம், பார்ப்பனியம், ஆரியம், திராவிடம், சாதி ஒழிப்பு, இட ஒதுக்கீடு, திராவிட நாடு, தமிழ்த் தேசியம் என பலவற்றை பேசியுள்ளார். இதனுடன் சேர்த்தே அவருடைய கொள்கையான நாத்தீகத்தையும் பேசியுள்ளார். ஆனால் என் பின்னால் வருபவர்கள் அனைவரும் நாத்தீகர்களாக தான் இருக்க வேண்டும் என்றோ, அனைத்து திராவிடர்களும் நாத்தீகர்களாக தான் இருக்கவேண்டும் என்றோ கூறவில்லை.
அவருடைய அதிகமான கருத்து பகுத்தறிவாக தான் இருக்கும். நாத்தீகம் என்பது கடவுள் மறுப்பு ஆனால் பகுத்தறிவு என்பது முழுக்க நாத்திகம் இல்லை, அது பகுத்தாய்ந்து ஏற்றும் கொள்ளும் அறிவு. அதனால் தான், அறிஞர் அண்ணா பகுத்தறிவை பரவலாக்கினார். அவர் ஒட்டுமொத்த மக்களின் அடையாளமாக கடவுள் மறுப்பை தூக்கி புடிக்கவில்லை. அதுவும் அவருடைய ஒரு கொள்கை.
ஆனால் தமிழை வைத்து பிழைத்து எய்க்கும் கூட்டம் சொல்கிறது, "முப்பாட்டன் முருகன் என சொல்லும் போது எங்களை எதிர்க்கும் நீங்கள், கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரை ஏற்கிறீர்கள் " என்று உளறி கொட்டுகிறது. பெரியார் ஒரு சிந்தனைவாதி, அவர் ஆயிரம் சிந்தனைகளை பேசிவிட்டு சென்றிருக்கிறார், அதில் ஒரு சிந்தனை தான் கடவுள் மறுப்பு. ஒட்டு மொத்த மனிதர்களின் அடையாளமே நாத்திகம் என சொல்லவில்லை, பகுத்தறிவு என்றார்.
வெறி பிடித்தவர்கள் போல ஒரு கடவுளை அனைவருக்கும் முன்னோர் என அவர் சொல்லிவிட்டு சென்றால் எதிர்க்கலாம். கடவுள் இல்லை என்று தான் அவர் பிரச்சாரம் செய்து இருக்கிறார். ஒட்டு மொத்த மனித சமுதாயத்தின் பிரதிநிதியாக தன்னை நினைத்து கொண்டு கடவுள் இல்லை என சொல்லவில்லை.
ஆனால் இங்குள்ள மூடர் கூட்டம் தான், ஒட்டு மொத்த தமிழ் மொழி பேசுபவர்களின் பிரதிநிதியாக தன்னை கற்பனை செய்து கொண்டு பல நம்பிக்கைகளை பின்பற்ற கூடிய மக்கள் வாழும் நிலப்பகுதியில் "நம்முடைய முப்பாட்டன் என்று ஒருவரை" அறிவிக்கிறீர்கள். இன்னொருவனின் முப்பாட்டனை முடிவு செய்வது அவனே, நான் இல்லை. அது போல இன்னொருவன் ஒருவரை எனக்கு முப்பாட்டன் என்றால் அதை எதிர்க்கும் உரிமையும் எனக்கும் இல்லை. ஆனால் ஒரு மொழி பேசுபவர்களின் மூதாதை என்று ஒருவரை அறிவிக்கவோ, பேசுவதோ தவறு. [இந்த பத்தியை திரும்ப திரும்ப படித்தால் சித்தம் தெளிய சிவம் அருள்புரியும்]
இவர்கள் முப்பாட்டன், முன்னோர் வழிபாடு என்பதை மட்டுமே தமிழ்த் தேசியமாக கற்பனை செய்துகொண்டு கிறுக்குதனமாக உளறிக்கொண்டு இருக்கிறார்கள். பிரபாகரன், தமிழரசன் போன்ற போராளிகள் சொல்லாதவை, எல்லாம் இந்த கூமுட்டைகள் சொல்லி அதை தமிழ்த் தேசியம் என சொல்வது நகைப்பாக தான் உள்ளது. தமிழ்த் தேசியம் என்பது சாதி, மத, இனதுவேஷத்தை எதையும் உள்ளடக்காத அற்புதமான இன அரசியல்.
ஈழத்தில் அதற்கான கட்டாயம் வந்தது, அது துளிர்த்தது. அது போல் இந்தியமும் அதற்கான கட்டாயத்தை உருவாக்கும், அப்போது இந்த கும்பல் செய்வதை மட்டும் பாருங்கள். தமிழ்த் தேசியம் என்ற பெயரை கூறி சாதி, மத தேர்தல் அரசியலை செய்யும் அரைகுறை குடங்கள் இவை.
நான் முருகனுக்கோ, முருக வழிபாடுக்கோ, முருக பக்தர்களுக்கோ எதிராக என் எழுத்துக்களை வைக்கவில்லை, மாறாக அதை ராமரை போல் ஒரு அரசியலாக்கி அதன் மூலம் அதிகாரத்திற்கு வர துடிக்கும் இரத்த காட்டேறிகளை "முருக பக்தர்களுக்கு"அடையாளம் காட்டுகிறேன். முருகன், ஒரு சமயத்தின் கடவுள், அதை யாரும் இங்கு மறுக்கவில்லை. முருக வழிபாடு, ஒரு கூட்டத்தினர் செய்யும் வழிபாடு , அதை யாரும் இங்கு தடுக்கவோ விமர்சிக்கவோ இல்லை.
சில கூமுட்டைகள் தான் இதை மடைமாற்றி இஸ்லாமிய, கிறித்தவர்கள் முருகனை விமர்சிக்கிறார்கள் என இந்துத்துவ பாணி அரசியல் செய்கிறது. அதோடு மட்டுமில்லாமல், இவ்வளவு தெளிவாக எடுத்து கூறும் போதும் "நீங்க இப்படி விமர்சனம் வைக்கும்போது எங்கூர்ல இருக்குற கிறித்தவன், இஸ்லாமியன் மேல வெறுப்பு வருது, நான் இந்துத்துவாவுக்கு சென்றுவிடுவேன் என குரங்கு வித்தைகளை" போல சிறு குழந்தை பயம் காட்டுவது போல உளறுகிறார்கள்.
இவர்கள் தலையில் கொட்டி" டேய் லூசு பயலே நாங்க முருகனையோ, முருக வழிபாட்டையோ விமர்சிக்கல, ஒரு மதத்தோட கடவுளை ஏன்டா ஒட்டுமொத்த மக்களோட அடையாளமா மாத்தி மத அரசியல் பன்ற நாயே. முருக பக்தர்கள் பாவம். அவர்களை, இந்துத்துவம் போல, ராம பக்தர்களை பயன்படுத்தி நாட்டுல கலவரம் பன்னி ராம பக்தர்களை சிறை கம்பிக்குள் இருக்க வைத்து, மதநல்லிணக்கம் சீர்கெட்டதோ, அப்படியெல்லாம் இங்க நடக்ககூடாதுடா நாயேனு" சொல்றேன்னு சொன்னாலும் இவனுங்க மண்டையில ஏறப்போறது இல்ல.
ஆனால், என் மச்சான் முருகபக்தன் Prabakaran Sathasivamமாதிரி பல லட்சம் மக்கள் இருக்குற வரை இது போன்ற பாசிச கும்பல்களின் குரல் நோட்டா வரைக்கும் தான் கேட்கும்.
கிணற்றுதவளைகளின் குரல் கிணற்றை தாண்டாது ஒறவுகளே.
-விக்டர் இறைதாசன்

சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி மற்றுமொரு சிவசேனா - முரண்களின் மொத்த தொகுப்பு

சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி மற்றுமொரு சிவசேனா - முரண்களின் மொத்த தொகுப்பு

ஒரே தமிழன் சீமான்: சாதி, மதம் கடந்து தமிழர்களாக அனைவரும் ஒன்றுபடனும்
மக்கள்: அப்புறம் ,
ஒ.த.சீமான்: தமிழர்கள், நாங்கள் வீரசைவர்கள். முருகனுக்கு பால்காவடி எடுப்பது , தைப்பூச திருவிழா என்பது தமிழர் பெருவிழா. (பாஜகவின் பெரும்பான்மைவாத அரசியல்)
-------
ஒ.த.சீமான்: சாதி பார்த்து ஓட்டு போட்டா உன் ஓட்டு எனக்கு தீட்டு
மக்கள்: அப்புறம்
ஒ.த.சீமான்: கருணாநிதி, எம்ஜிஆர் தன் சாதியை சொல்லி ஒரு வார்டு கவுன்சிலர் ஆகிருக்கமுடியுமா.
(தமிழ்நாட்டு அரசியல் ஆதிக்க சாதிகளில் முதல்வர் எவரும் வரவில்லை ஆகையால் சாதிவெறியர்கள் என் பின்னால் அணி திரளுங்கள்)
ரஜினி என்ன ஆளுகனு கேட்டா இந்த மண்ணுல ஆளனும்னு ஆசை வருமா? (கமல் வைணவ ஐய்யங்கார் பச்சை தமிழர் )
-----
ஒ.த.சீமான்: இது தமிழனுக்கும் தெலுங்கனுக்குமான போர்
மக்கள்: அப்புறம்
ஒ.த.சீயின் அன்புதம்பி: மன வேட்பாளரு அண்ணகாரு கலைக்கோட்டுதயம்(தட் பாஜகக்கு இஸ்லாமியன் ஓட்டு மட்டும் வேனும் மொமன்ட்)
---
ஒ.த.சீமான்: பாஜகவோட எந்த காலத்திலும் கூட்டணி வைக்கமாட்டோம் ( ஆம் , வைக்கமாட்டார்கள். சிவசேனாவுடைய மறுவடிவம். சுயேட்சையாக உருவெடுப்பார்கள்)
மக்கள்: அப்புறம்
ஒ.த.சீமான்: உனக்கு பிள்ளையார் னா எனக்கு முருகன், உனக்கு வடநாட்டு சிவன்னா எனக்கு தென்னாட்டு சிவன், உனக்கு விநாயக சதூர்த்தி னா எனக்கு தைப்பூசம்
(இதிலிருந்து கூற வருவது என்னவென்றால் RSS ன் பாசிச கொள்கையின் தமிழ் Version நாங்கள் தான். பெரும்பான்மைவாதத்தை உணராத மதநல்லிணக்கத்துடன் இருக்கும் தமிழ் மக்களிடம், நம்ம கொள்கை தான் பெரும்பான்மை.
தமிழ் மொழி பேசுபவர்கள் இந்த இறை கொள்கையை தான் பின்பற்ற வேண்டும். பிரச்சாரம் செய்வது வேறு, ஆனால் இவர்கள் செய்வது பச்சையாக RSSன் தாய்மதம் திரும்பும் கொள்கையின் தமிழ் Version)
----
ஒ.த.சீமான்: இஸ்லாமியர்கள் சிறுபான்மை இல்லை அவர்கள் இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் (இதை சீமான் தான் முதலில் சொன்னதாக பெருமையடிப்பவர்கள், காயிதே மில்லத்தையும் பழநிபாபாவின் பேரை கூட அறியாத சிறுவர்கள். And Moreover வெளிநாட்டு பண உதவியும், consolidated muslim votes பெறுவதற்காக பேசக்கூடிய பேச்சு)
மக்கள்: அப்புறம்
ஒ.த.சீமான்: உருது பேசும் இஸ்லாமியர்கள் தமிழர்கள் இல்லை. அவங்கள எப்படி "நான்" தமிழனா ஏத்துக்குறது [இஸ்லாமியர்கள் அரசு பணியிடங்கள், கல்லூரிகள், பள்ளிகூடங்கள் என எல்லா இடத்திலும் தோற்றத்தால் பொதுபுத்தி பார்வையில் கொலை செய்யப்படுகிறார்கள்.
எனக்கே கோவையில் ஒருத்தனும் அறை கொடுக்கல என் பெயரை கேட்டுட்டு, என் பெயரை சொல்லாம என் நண்பனோட தங்கி பிறகு என் பெயரை கேட்டதும் ஓனரு அதிர்ச்சியே அடைந்தாரு.
இப்படியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தில் சென்று உருது தமிழ் மலையாளம்னு பிரிச்சு அரசியல் பன்னுவது, ஒடுக்கப்பட்டவர்களை பிரித்து ஆளுக்கொருத்தன் அடிச்சிட்டு போங்கடா என்பதாகும். RSSன் பிரித்து அடி சித்தாந்தம் தான்.
அதிலும் சீமான் ஏதோ தமிழ்நாட்டின் அதிபர் போல நான் ஏற்கமுடியாது என்று சொல்வது, ஒரு பிரிவை இயல்பாக ஏற்படுத்தும் என்றாலும், தமிழர் யார் என அடையாளப்படுத்தும் அதிகாரம் அவரிடம் இருப்பது போல தன் சகாக்களை நம்பவைக்கிறார்]
---
ஒ.த.சீமான்: ஆதிதமிழர் விடுதலை இல்லையேல் மீதி தமிழர் விடுதலை இல்லை
மக்கள் : அப்புறம்
ஒ.த.சீமான்: தெலுங்கு பேசும் அருந்ததியர்களை, அவர்களாகவே நாங்கள் ஏற்கிறோம். அவர்களின் முன்னேற்றத்திற்கு தமிழர்கள் நாங்கள் உழைப்போம். [இருப்பதிலே கடைசிநிலை ஒடுக்குமுறைக்கு ஆளாவது அருந்ததியர்கள் தான். வழிவழியாக நாம் பார்க்கவே கூச்சப்படும் மலத்தை தன் கையால் அள்ளி விஷவாயு தாக்கி இறந்தும் போகிறார்கள்.
அவர்களை ஏற்கனவே மனிதர்களாகவே பார்க்காமல் இருக்கிறார்கள் இதில் அவர்களை மொழி ரீதியாக சாதி ரீதியாக இரண்டாம்பட்சமாக பார்க்கும் இன்னொரு பார்வையை வளர்க்கிறார்.
இப்போது தான் ஒடுக்கப்பட்டவர்களான பறையர்களும் அருந்ததியர்களும் ஒன்றாக ஒருமித்த குரலில் போராடி கொண்டிருக்கும் வேளையில், இப்படியான முனுமுனுப்புகள் வர்ணாசிரமத்திற்கே இழுத்து செல்லும்]
---
ஒ.த.சீமான்: இது ஆரியருக்கும் தமிழருக்கும் நடக்கும் போர். திராவிடர்கள் அமைதியாக இருக்கவும்
மக்கள்: அப்புறம்
ஒ.த.சீமான்: திருச்சி சங்கரப்பா சொன்னாரு. அவரு ஒரு சுத்த தமிழ் ஐயர். மகாபாரதம் தமிழர்களுடைய போர்னு. தமிழ் பார்ப்பனர்களும் தமிழர் தான் [ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல சூத்திரன் என்றும் கீழ்சாதி என்றும் பார்த்தவர்கள் தமிழர்கள் ஆக்கிவிட்டு எந்த ஆரியர் கூட போர் புரிய போகிறார். இவர் பார்வையில் சூனா சாமி கூட தமிழர் தான். RSSன் தமிழ் Version. அவா இல்லாம RSS இயங்குமோ னா :) ]
---
ஒ.த.சீமான்: பிரபாகரனின் பிள்ளைகள் நாங்கள். பிரபாகரன் இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன்
மக்கள்: அப்புறம்
ஒ.த.சீமான்: நான் வர்ரவரைக்கும் பிரபாகரன் தீவிரவாதியா தான் தெரிந்தார்[ வரலாறு அறியாத சிறுபிள்ளைகள் வேண்டுமானால் இந்த கதைக்கு கைதட்டுவார்கள். ராமதாஸ், பழநிபாபா, கொளத்தூர் மணி, வைகோ என பல தலைவர்கள் பிரபாகரன் Active ஆக இருக்கும்போதே அவர்களுக்காக பேசி உதவி செய்து தடா, பொடா வாங்கியவர்கள்.
எம்ஜிஆரின் பண உதவி சொல்லும், விடுதலை புலிகளை தமிழக மக்கள் எப்படி நேசித்தார்கள் என்பதை. விடுதலை புலிகள் ஈழத்தில் செயலற்ற பிறகு பிரபாகரனை தீவிரவாதியிலிருந்து "புனிதப்படுத்தியது " போல் பேசுவது என்பது அவர் சகாக்கள் வேண்டுமானால் நம்பலாம்.]
--
இப்படியே அடுக்கி கொண்டே போகலாம். முரண்பாட்டின், குழப்பங்களின் மொத்த உருவமாக. உயிர்நேயம் மிக்க தமிழ் மக்களை , இனவெறி மிக்க சிங்களர்களாக மாற்ற தான் இவ்வளவு பாடுபடுகிறார் போலும்.
தமிழ்தேசியம் என்ற அழகான மண்ணுக்கான அரசியலை , இனவெறியுடன் குழப்பி, அதனுள் சாதிவெறியையும் மதவெறியையும் உட்கூறாக திணிப்பதில் இருந்தே தெரிகிறது. மூன்று வெறிகளும் ஓன்றாக சேரும் இடத்தில், எளிய மக்களின் உயிர் பலிகள் அதிகமாக இருக்கும் என்று.
அது அவர் சகாக்களின் உதிரும் வார்த்தைகளிலேயே தெரியும், அவர்கள் எவ்வளவு சகிப்புதன்மையற்றவர்கள் என்று. இவர்கள் வளர்ப்பது தமிழ்தேசியம் அல்ல, Neo fascism..
-விக்டர் இறைதாசன்

Friday, March 08, 2019

தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடத் தொடங்கிய காலத்தில் தமிழ்நாடு இருந்த நிலை

#தந்தை பெரியார் #தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடத் தொடங்கிய காலத்தில் #தமிழ்நாடு இருந்த நிலை...........
1.ஆதிதிராவிடர்கள், பார்ப்பன தெருக்கள், கோயில்களை சுற்றியுள்ள தெருக்கள் ஆகிய எதிலும் நடந்து கூடச் செல்லக் கூடாது.
2. ஆதி திராவிடர்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டிக்கட்டக் கூடாது.
3.தங்க நகைகள் அணியக் கூடாது.
4.மண் குடத்தை தான் தண்ணீர் பிடிக்க பயன்படுத்த வேண்டும்.
5.ஆதிதிராவிடர் விட்டுக் குழந்தைகள் படிக்கக் கூடாது.
6.சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது.
7.திருமணக் காலங்களில் மேளம் வாசிக்கக் கூடாது.
8.பூமி குத்தகைக்கு வாங்கி சாகுபடி செய்யக் கூடாது.
9.குதிரை மீது ஊர்வலம் செல்லக் கூடாது.
10.பொதுக் கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது.
11.மேல் அங்கியோ, துண்டுடோ அணிந்து கொண்டு செல்லக் கூடாது.
12.உயர்ந்தோர் குடியிருப்பின் வழியாக தாழ்ந்தோர் சுடுகாட்டிற்கு செல்லக் கூடாது.
13.பெண்கள் ரவிக்கைகள் அணியக் கூடாது என்பதோடு மேல் சாதியினர் வரும்போது மேலே அணிந்திருக்கும் வேறு துணிகளையும் எடுத்து அக்குலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
14.நீதி மன்றங்களில் சாட்சி சொல்ல நேரிட்டால் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும்.
..........இந்த நிகழ்வுகளெல்லாம் இன்று தமிழகத்தில் மாறியிருப்பதற்கு காரணம் யார்? '' தந்தை பெரியார்'' அல்லவா, இந்த நிகழ்வுகளை மக்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஏடுகள், 'குடி அரசு, ' புரட்சி', ' பகுத்தறிவு',போன்ற ஏடுகளே..........

Wednesday, February 27, 2019

பார்ப்பனர்கள்தான் இன்றைய எல்லா அரசியல் முறைகேடுகளுக்கும் பிள்ளையார் சுழி.

‘பார்ப்பனரல்லாதவர்கள்தான் ஊழல் செய்கிறார்கள். பார்ப்பனர்கள் நேர்மையின் சிகரம்’ என்கிற பொதுப்புத்தியை உருவாக்க ஊடகங்கள் வாயிலாகவும், சமூக ஊடகங்களிலும் பார்ப்பனர்கள் மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழக அரசியல் சூத்திரர்களை சார்ந்திருப்பதால் ‘எத்தை தின்றால் பித்தம் தெளியும்’ நிலையில் பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவுக்கே குதிரைப்பேர அரசியலை முதன்முறையாக அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி. பார்ப்பன தந்திரத்துக்கு பலியான முதல் சூத்திரக் கட்சி காமன் வீல் பார்ட்டி. மைனாரிட்டி காங்கிரஸ் அரசுக்கு முதல்வராக பொறுப்பேற்ற ராஜாஜி, மெஜாரிட்டி காட்டுவதற்காக செய்த தகிடுதத்தங்கள்தான் இன்றைய எல்லா அரசியல் முறைகேடுகளுக்கும் பிள்ளையார் சுழி.