Tuesday, April 10, 2018

தொலைந்து போன ஆறுகள்


ஆளாளுக்கு காவேரி போயிற்று என பொங்குகின்றார்கள், காவேரி நிச்சயம் மீட்கபட வேண்டும் ஆனால் அப்படி தொலைந்து போன ஆறுகள் இங்கு நிரம்ப உண்டு
அதில் ஒன்று நெல்லை மாவட்டம் நம்பியாறு
ஒரு காலத்தில் அது மாபெரும் நதியாக இருந்திருக்கின்றது, வற்றாமல் ஓடியிருக்கின்றது , அதன் கரையில் பண்டை காலத்தில் மக்கள் பெரும் அடையாளங்களோடு குடியிருந்திருக்கின்றனர்
சித்தூர் மகாராஜா சாஸ்தா ஆலயம் அதற்கு பெரும் எடுத்துகாட்டாய் இன்றும் நிலைத்து நிற்கின்றது, அதன் சந்ததிகள் என வரும் மக்கள் கூட்டம் அதை நிரூபிக்கின்றது
அப்பகுதியினை உற்று கவனித்தால் நாயக்கர் கால அடையாளம் உண்டு, ஆம் சித்தூர், முத்துலாபுரம், நாகலபுரம் எல்லாம் ஆந்திர பகுதி பெயர்கள்
தெற்கே வந்த நாயக்கர்கள் முதலில் ஆற்றங்கரையில்தான் அமர்ந்தார்கள், அவர்கள் நம்பியாற்றுபக்கமும் வந்திருக்கலாம் அப்படி அவர்கள் காலத்தில் இந்த பகுதியில் சில பெயர்கள் அவர்கள் பாணியில் மாற்றபட்டிருக்கலாம்
ஆக பெரும் நதியாக யாரெல்லாமோ வந்து வாழும் பகுதியாக செழிப்பாக இருந்ததுதான் நம்பியாறு
பின் ஏனோ அதில் நீரோட்டம் தடைபட்டது, தடைபட்டது ஏன் என இன்றுவரை தெரியவில்லை, ஆனால் காரணம் இருக்கின்றது என்கின்றார்கள்
காவேரியும், வைகையும், தாமிரபரணியும் , தென்பண்ணையும் வழி மாறாமல் பாயும் தமிழகத்தில் நம்பியாறு மட்டும் நின்றுவிட்டது என்றால் எப்படி?
அதன் உற்பத்தியிடம் மேற்கு தொடர்ச்சி மலை, சிற் சில ஓடைகள் இணைந்தே நதியாக உருவெடுக்கும், அப்படி நம்பியாற்றின் உற்பத்தி இடங்களில் ஏற்பட்ட சில இயற்கை தடைகளிலோ அல்லது செயற்கை தடைகளிலோ அந்த நதியின் முக்கிய நீர் ஆதாரம் மேற்கே சரிந்துவிட்டது என்கின்றார்கள்
யாரும் இதுவரை அந்த நீர் ஆதாரங்களை சோதித்ததுமில்லை, அதில் அவ்வளவு தூரம் செயல்பட யாரும் இல்லை. நம்பியாற்றில் நீர் இல்லை என சொல்லிவிட்டு அமைதியானார்கள்
ஆனால் ஆறு மேல்தான் நீர் ஓடவில்லையே தவிர, ஆற்று மணலுக்கு அடியில் அது சுரந்துகொண்டே இருந்தது. நம்பியாறு மிக சிறிய நீர்வீழ்ச்சியாக நம்பி மலையில் கொட்டும் கொஞ்சதூரம் வந்து காணாமல் போய்விடும்
அது ஆற்று மணலில் புகுந்து அது கடலில் கலக்கும் ஆத்தங்கரை வரை சென்றது
வைகை மட்டும் ஊற்றுபெருக்கால் நீர் ஊட்டும் ஆறு அல்ல, நம்பியாறும் அப்படியே
அக்காலத்தில் எந்த கோடையிலும் அந்த ஆற்றுமணலை 2 அடி தோண்டினாலே நீர் சுரக்கும், அற்புதமான ஆற்று நீர்
அதுவரை அந்த ஆறு பகுதி எல்லாம் குடிநீருக்கோ, நிலத்தடி நீருக்கோ சிக்கல் இல்லை
சிக்கல் மணற்கொள்ளை வடிவில் வந்தது, மகாபாரத போர் வேகத்தில் அள்ளினார்கள் , லாரி லாரியாக எறும்பு போல் தொடர்ச்சியாக அள்ளிகொண்டே இருந்தார்கள்
தடுத்தவர் மேல் கல்லை போட்டு, இல்லை வழக்கு போட்டு அள்ளிகடத்தினார்கள்
தடுத்து கதறியவர்கள் குரல் யார் காதில் கேட்டது? பல்லாயிரம் காலம் ஆண்டு அப்பகுதிக்கு நீர் ஊற்றிய நம்பியாறு, காலம் கெடுத்தாலும் அரைமயக்கத்தில் அடிவயிற்றில் இருந்து நீர் கொடுத்த அந்த நம்பியாறு கொல்லபட்டது
இன்று ஒரு கூடை மணல் கூட இல்லை, சுரண்டியாயிற்று
குடிநீர் தட்டுபாடும், நிலத்தடி நீர் தட்டுபாடும் தலைவிரிக்கின்றன‌
உலகில் எந்த நதிக்கும் இல்லா சிறப்பு நம்பியாற்றிற்கு உண்டு
அதன் தொடக்கம் புனிதமான நம்பியாழ்வார் கோவில் அவர் பாதத்தில் இருந்தே அது புறப்படும்
பின் திறுக்குறுங்குடி வழியாக சில ஆலயங்களை தொட்டு வரும்
பிரசித்தி பெற்ற சிறுவளஞ்சி ஆலயத்தை அது சுற்றி வணங்கும்
(ஜெயலலிதாவிற்கே அவர் ஆலயங்களில் ஆடுகோழி வெட்ட தடை என்றபொழுது "சீக்கிரம் உன் அட்டகாசம் ஒழியும்" என ஆருடம் சொன்ன சிறுவளஞ்சி ஆலயம் அதன் கரையில்தான் உண்டு, அது அப்படி சொல்லி 12 ஆண்டுகளில் ஜெயலலிதா இல்லை, மர்மமாக மறைந்தார்)
ஏர்வாடி தர்காக்கள் அந்த ஆற்றின் அருகே உண்டு
சித்தூர் எனும் மகா பழமையான சாஸ்தா கோவிலை அது வணங்கும்
அணைக்கரை எனும் கிறிஸ்தவர்களின் மிக பழமையான ஆலயத்தின் ஓரம் வந்து அது வளைந்து வணங்கும்
அப்படியே கடலில் கலக்கும் முன் இஸ்லாமியரின் புனிதமான ஆற்றங்கரை பள்ளிவாசலையும் தரிசித்துவிட்டு கடலில் கலக்கும்
இப்படி எல்லா மதத்தவருக்கும் மிக மிக நெருக்கமான நதி அது, அற்புதமான ஆறு
ஒரு காலத்தில் தாமிரபரணி போல் இருந்த‌ ஆற்றினை முதலில் மர்ம்மான முறையில் யாரோ கொன்றார்கள், ஏதோ நடந்திருக்கின்றது. ஆற்றுநீர் குறைந்திருக்கின்றது
அதன் பின் மண்ணில் ஊறி அந்த ஆறு தன் கடமையினை செய்திருக்கின்றது
அந்த அரைமயக்க நிலையில் அந்த ஆற்றினை கதற கதற கொன்ற கொடுமை அதிமுக ஆட்சியில் நடந்தது, இதனை சொல்ல ஒரு தயக்கமும் இல்லை
ராட்சத புல்டோசர்களும், பெரும் எந்திரங்களும் இரவெல்லாம் மணல் அள்ளும் போது ஏற்பட்ட அந்த பெரும் ஒலி அந்த ஆற்றின் மரண ஓலம்
லாரிகளில் நீர் வடிய வடிய அதனை ஏற்றிசென்றபொழுது அந்த ஆற்றின் ரத்தம் வழிந்து கிடப்பதாகவே பட்டது
காவேரிக்காக பொங்கும் யாரும் அழிந்துவிட்ட நம்பியாற்றை பற்றி பேசமாட்டார்கள்
நம்பியாறு தென்நெல்லை மக்களின் தாய், இன்று தொலைந்துவிட்ட அல்லது அடித்துவிரட்டபட்ட தாய்
அவள் இல்லை என்றாலும் அவளின் தடம் அப்படியே நிற்கின்றது, நீருமின்றி மணலுமின்றி அந்த பாறைகள் பழம் வரலாற்றையும், நிகழ்ந்துவிட்ட பெரும் கொடுமையினையும் சொல்லிகொண்டே இருக்கின்றன‌
புனிதமான நம்பிகோவிலின் அருகே பிரமாண்டமாக ஆர்பரித்த நம்பியாறு இன்று மிக சிறு அருவியாக கொட்டுகின்றது
அந்த சிற்றருவி ஆர்பரிக்காது மாறாக வாழ்ந்துகெட்ட ஒரு மூதாட்டி முணகி அழும் அழுகை ஒலி போலவே கேட்கும்
அப்படி மாபெரும் கொடுமை அந்த ஆற்றுக்கு நிகழ்ந்தது, இதனால் பாதிக்கபட்ட கிராமங்களும் மக்களும் கால் நடைகளும் ஏராளம்
இன்றும் மழை கொட்டினால் அந்த தாய் தன் மக்களை சந்திக்க ஆர்பரித்து வருகின்றாள் , ஆனால் 1 மாதத்திற்குள் அந்த நீர் வற்றிவிடுகின்றது, ஒரே ஒரு சிறு தடுப்பணை தவிர ஏதும் அந்த ஆற்றில் கிடையாது.
அக்காலங்கள் அவ்வளவு சுகமானவை
எந்த கோடை ஆனாலும் 2 அடியில் நீர் கொடுத்த மணல் அது. எந்த வெயில் காலமானாலும் இரவு துண்டை விரித்தால் ஏசி குளிமெத்தை கொடுத்த இரவுகள் அவை
இன்றும் அந்த ஆற்றுகரை ஆலயங்களில் விழா நடக்கின்றது, விமரிசையாக நடக்கின்றது. ஆனால் தள்ளி இருந்து அந்த ஆற்றின் குளிர்மணலில் இருந்து அந்த ஆலயத்தை நோக்கிய அந்த சுகமான அனுபவம் யாருக்குமில்லை
உணவை மட்டும் கொண்டு சென்று ஆற்றில் 2 அடி தோண்டி நீர்பருகிய காலமெல்லாம் போய் , அந்த மணலும் போய் இன்று வெற்றுபாறையில் வெற்று பாட்டில்களை வீசி வருகின்றார்கள்
இதெல்லாம் கண்டு நிச்சயம் அந்த ஆற்றின் ஆன்மா அழுதுகொண்டே இருக்கும்
அழ ஒரு காலம் உண்டென்றால், சிரிக்கவும் ஒரு காலம் உண்டு
அந்த ஆறு இன்று வரண்டு விட்டாலும், இன்னொரு நாளில் அதன் பழமையான காலம்படி ஆண்டுமுழுக்க செழித்து ஓடும், அந்த மலையில் அதன் பாதையில் ஏற்பட்ட மாற்றங்களை கண்டு அதனை மீட்டெடுத்தல் வேண்டும்
வந்தது மறையும், சென்றது திரும்பும் என்பது உலகவிதி, இது ஆற்றுக்கும் உண்டு.
ஆற்றை மீட்டுவிடலாம், காலம் வரும். நிச்சயம் வரும்
ஆனால் அந்த மணலை மீட்டெடுப்பது யார்?ஆற்றின் உயிர் நிச்சயம் அந்த மணல்தான்.
ஆற்றினை திருப்பி கொண்டுவந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த உயிரை திருப்பிவிடலாம் , வருங்கால சந்ததிக்கு பாதுகாப்பாக விட்டுவிட்டு செல்லலாம்
தமிழகத்தில் காக்க வேண்டிய ஆறுகளில் நம்பியாற்றுக்கு மிக முக்கிய‌ இடம் உண்டு

1970களின் கலைஞரின் அசாத்தியமும் ஆற்றலும் அவர் எதிர்கொண்ட சிக்கலும்

எந்த சர்ச்சை வந்தாலும் இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி கலைஞரை கொச்சைபடுத்துவது இங்கு புதிதல்ல, ராமசந்திரனாலும் பின் ஜெயாவினாலும் சில பிரச்சினைகளை சந்தித்த கலைஞரின் பின்னாளைய அரசியலில் சில சர்ச்சைகள் இருக்கலாம்
ஆனால் 1970களில் கலைஞரும் இந்திராவும் ஆடிய ஆட்டம் சுவாரஸ்யமும், திருப்பங்களும் நிறைந்தது. உலக நாடுகளுக்கே சவால்விட்ட இந்திராவினை கலைஞர் பல இடங்களில் திகைக்கவிட்டார்
திமுக இந்தியாவில் முதன் முதலில் ஆட்சிக்கு வந்த மாநில கட்சி, இது டெல்லியின் கண்களை உறுத்த பல சதிவலை பின்னபட்டது. அந்த நேரத்தில்தான் காவேரி சிக்கல் ஒப்பந்தமும் வந்தது
1972ல் கலைஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நர்மதா நீர் பகிர்வு, கிருஷ்ணா நீர் பகிர்வு போல முடிந்திருக்கும் விஷயம் அது, ஆனால் இந்திரா தந்திரம் செய்தார்
இதற்கெல்லாம் ஏன் வழக்கு? வழக்கினை வாபஸ் வாங்குங்கள் பேச்சு நடத்தலாம் என அழைத்தார்
இந்திய நீதிமன்றங்களின் தன்மையினை உணர்ந்த கலைஞரும் வழக்கினை வாபஸ் வாங்கினார், இந்திரா உறுதிமொழி கொடுத்தபடி பேச்சுகளும் தொடங்கின‌
இப்படி போக்குகாட்டிவிட்டு அப்பக்கம் ராமசந்திரனை இழுத்து கொண்டுவந்து கலைஞருக்கு சிக்கலை உருவாக்கினார் இந்திரா, இந்நிலையிலும் காவேரி உரிமைகளை மீட்க போராடினார் கலைஞர்
ஆனால் மிசா சட்டமும் அதனை தொடர்ந்து கலைஞரை விசாரிக்க வேண்டும் என மனுவோடு நின்ற ராமசந்திரனும் இந்திராவிற்கு சாதகமானவை
ராமசந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க சர்காரியா கமிஷன் அனுப்பபட்டது
எந்த கலைஞர் காவேரிக்காக வழக்கு தொடர்ந்தாரோ, அவரை வாபஸ் பெற சொல்லிவிட்டு அரசியல் ஆட்டம் ஆடி சர்ர்காரியாவினை அனுப்பினார் இந்திரா
எப்படிபட்ட தந்திரம் அது
அதன் பின் சர்காரியா தாடியினை பிய்த்து ஓடியதும், விஞ்ஞான ஊழல் நடந்தது என்பதும் உலகறியும்
விஞ்ஞானத்திற்கு தேவையே ஆதாரம்தான், ஆனால் ஆதாரமில்லா ஊழல் எப்படி விஞ்ஞான ஊழலாகுமொ தெரியாது
ஆக 1975ல் ஆட்சியினை விட்ட கலைஞர் திரும்ப வந்தது 1996ல் இடையில் 1.5 வருடம் இருந்தார் அது மிக குறுகிய காலம் அப்பொழுது மண்டல் கமிஷனுக்காக போராடி, அமைதிபடை மீட்புக்காக போராட்கொண்டிருந்தார்
அந்நிலையிலும் விபிசிங் மூலம் காவேரி நடுவர் மன்றம் அமைக்கவும் அவர் தவறவில்லை, அதன் பின் உச்சநீதிமன்றத்திற்கு சென்றது கன்னடம்,
கன்னட கலவரம் எல்லாம் முடிந்து ஒரு அமைதி திரும்பிய நேரமது, அதற்குள் கலைஞர் ஆட்சியும் முடிந்தது
பின்னாளில் டெல்லி முழுக்க காங்கிரஸ் கன்னடத்திற்கு ஆதரவாய் மாற, ஜனதாவும் அதனையே செய்ய, இப்பொழுது பாஜகவும் அதனையே செய்ய காவேரி சிக்கலில் வந்து நிற்கின்றது
இதில் பெரும் பொய் ஒன்று பரவுகின்றது
அதாவது சர்காரியா கமிஷனுக்கு பயந்து கலைஞர் காவேரி வழக்கினை வாபஸ் வாங்கினாராம்
1975க்கு பின் வந்த சர்காரியா கமிஷனுக்காக 1972களில் தொடுத்த வழக்கை வாபஸ் வாங்கினாராம்
இதனையும் ஒரு கருத்தாக பலர் சொல்லி கொண்டிருக்கின்றான் பலர் ஆமாம் அவர் அப்படித்தான் என சொல்லிகொண்டிருக்கின்றார்கள்
சரி அடுத்து வந்த ராமசந்திரன் என்ன செய்தார், முல்லை பெரியாறு நீர்மட்டத்தையே 132 அடியாக குறைத்தவர் அவர், காவேரிக்கு என்ன செய்திருப்பார்? ஒன்றுமில்லை
பிற்கால கலைஞரில் சில சர்ச்சை இருக்கலாம் ஆனால் 1970களின் கலைஞரின் அசாத்தியமும் ஆற்றலும் அவர் எதிர்கொண்ட சிக்கலும் கொஞ்சம் அல்ல‌
அவரின் முகாமில் இருந்தே ராமசந்திரன் எனும் கோடரி காம்பினை எடுத்து டெல்லிவெட்டிய சதிகளையும் தாண்டித்தான் அவர் இவ்வளவுதூரம் வளர்ந்து நின்றார்
அந்த கோடரி காம்பு இன்னொரு தலைவலியினையும் அந்த தலைவலி சில கோமாளிகளையும் உருவாக்கிவிட்டது வேறுகதை
அந்த கோமாளிகளை இன்று டெல்லியின் பாஜக அட்டகாசமாக உருட்டி மிரட்டி ஆடுகின்றது

உலகம் புரியாத பிரபாகரன்

2002 பேச்சுவார்த்தைக்கு பின் புலிகள் இயக்கத்தில் சலசலப்பு வந்தது.
முன்பே நாம் சொன்ன விஷயம்தான் ஆனையிறவின் மகத்தான வெற்றிக்குபின்னும் புலிகள் யுத்தத்தை தொடரவில்லை. காரணம் ஆட்கள் பற்றாகுறை
யாழ்பாணத்தார் வசதியானவர்கள் என்பதால் புலிகளுக்கு கப்பம் கட்டிவிட்டு ஐரோப்பா , கனடா என தப்ப புலிகளின் ஆள்திரட்டல் குறி வறுமையான கிழக்கும் பக்கம் பதிந்தது
இந்நிலையில் நார்வே வேறு பேசிகொண்டிருந்தது, இம்முறை புலிகள் முடிவிற்கு வந்தே தீரவேண்டும் என கட்டளை இட்டன மேற்குலக நாடுகள்
பிரபாகரனோ நார்வேக்கு போக்குகாட்டிவிட்டு ஆட்களை திரட்டி யுத்தம் செய்ய முயன்றார், நார்வேயினை விரட்டிவிட்டு இந்தியா சமரசம் பேசவரவேண்டும் என்றார்
இனி புலிகள் யுத்தம் தொடர்வார்கள் என்றால் மிக கேவலமான தோல்வியினை சந்திர்ப்பார்கள் என்ற இலங்கைக்கான அமெரிக்க தூதர் எச்சரித்தும் புலிகள் கண்டுகொள்ளவில்லை
இந்நிலையில்தான் நார்வேயில் நடந்த பேச்சுவார்த்தையில் சமாதானத்தை பரிசீலிப்போம் , நல்ல தீர்வு ஏற்பட்டால் ஆயுதம் தொடமாட்டோம் என முடிவு சொல்லி வந்தனர் பாலசிங்கமும், கருணாவும்
உலகம் புரியாத பிரபாகரனுக்கு இது பொறுக்கவில்லை, போராட்டத்தை விற்றுவிட்டார்கள் என குதித்த அவர் பாலசிங்கத்தையே விரட்டினார், நார்வே தூதர் எரிக் சோல்கிம்மிடம் எதையும் புரியும் மனநிலையில் பிரபாகரன் இல்லை, இனி லட்சகணக்கான மக்கள் சாகும் என சொல்லிவிட்டு விடைபெற்றார்
கருணாவின் நிலை சிக்கல், காரணம் கிழக்கு மாகாணம் அவன் கட்டுபாட்டில் இருந்தது. கருணா அமைதிபடை காலத்தில் பிரபாகரனை காத்தது முதல், ஆனையிறவு வரை அபாரமாக சண்டையிட்டவன்
பிரபாகரனின் வலதுகை என்ற முறையில் அவன் தைரியமாக சொன்னான் "இனி யுத்தம் தொடர்வது சாத்தியமில்லை, இந்தியா வரவே வராது. இலங்கைக்கு உலகமே உதவுகின்றது, நமக்கோ யாருமில்லை.
தொடர்ந்து சண்டையிட்டால் அழிவே தவிர வேறு ஒன்றுமில்லை"
அவ்வளவுதான் பிரபாகரனின் பதில் சீறியது, "மாத்தையா மாதிரியே நீயும் பேசுகின்றாயா?",
யோசிப்போம் என சொன்னேன் என பதிலளித்த கருணா அதன் பின் சென்றுவிட்டான்
ஆனால் அந்த பிரபாகரனின் வார்த்தை அவனை உறங்கவிடவில்லை, மாத்தையா போல என்றால் என்ன அர்த்தம்?
மாத்தையா கருணா போல பிரபாகரன் வலதுகை, சுத்தமான வீரன். ஆனால் அமைதிபடை காலத்திற்கு பின் , ராஜிவ் கொலைக்கு பின் அவன் போரை தொடர விரும்பவில்லை, சமாதனமாய் செல்ல ஆசைபட்டான்
இது இந்திய ராவுடன் மாத்தையா தொடர்பு என திரிக்கபட்டு, பிரபாகரனை கொல்ல மாத்தையா சதி என சொல்லபட்டு மாத்தையா பிரபாகரனால் கொல்லபட்டான்
மாத்தையா பிரிவு போராளிகள் 700 பேர் புலிகளால் கொல்லபட்டனர்
இதனை நேரில் இருந்து பார்த்தவன் கருணா என்பதால் பிரபாகரன் சொன்னதற்கு என்ன அர்த்தம் என்பது அவனுக்கு புரிந்தது
கீழ்மட்ட தலமைகளுக்கு உறுதியாக சொன்னான், யாழ்பாணத்தான் எல்லாம் ஐரோப்பா சென்று வாழ கிழக்குமாவட்ட நாங்கள் மட்டும் போரில் சாகவேண்டுமா? ஆள் எல்லாம் திரட்டமுடியாது, ஆனதை பாருங்கள்
இங்கோ பிரபாகரனுக்கு சிக்கல், அவன் தான் ஒழிந்தான் அந்த படைகள் முக்கியம். கிழக்கு அணி உடனே வரவேண்டும் என கட்டளையிட்டார்
அவர்கள் ஆயிரம் பேர் இருக்கலாம், பலர் எங்கோ சென்றார்கள், உண்மையான போராளிகள் குழம்பி நின்றார்கள்
பிரபாகரனின் உத்தரவு எல்லோரும் கிளம்புங்கள் என கட்டளை இட்டனர், ஆனால் போராளிகள் கருணா உத்தரவும் வேண்டும் என்றனர். உடனே புலிகள் முடிவு செய்தனர் நீங்கள் எல்லாம் துரோகிகள், கருணா விசுவாசிகள்
ஆம் மாத்தையாவோடு கிட்டதட்ட 700 பேர் கொல்லபட்ட கொடூரம் மறுபடியும் அரங்கேறியது
வெறுகல் என்பது கிழக்கில் ஓடும் ஆறு, அங்கே கருணா தரப்பு போராளிகளுக்கும் புலிகளுக்கும் மோதியது
சிங்களனை எதிர்க்க கிளம்பியவர்கள் தங்களுக்குள் மோதினர்,
புலிகளுக்கோ மாத்தையா விசுவாசிகள் போல இவர்கள் கருணா விசுவாசிகள் , போதும் இவர்கள் சாகட்டும் என முடிவெடுத்தனர்
தண்டனை எனும் பெயரில் அந்த வெறுகல் படுகொலை அரங்கேறிற்று, கிட்டதட்ட 500 போராளிகள் கொல்லபட்டனர்
"அண்ணா, நாங்களும் போராட வந்தவர்கள், சகோதர தமிழர்கள் எங்களை கொல்லாதீர்கள்.." என கண்ணீரோடு நின்ற அவர்களை பிரபாகரன் உத்தரவின் பேரில் கொடூரமாக கொன்றவர்கள் புலிகள்
தன் படைபிரிவு தன் கண்முன்னாலே கொல்லபடுவதை கண்ட கருணாவிற்கு வேறுவழி இல்லை, மாத்தையா போல என்பதன் அர்த்தம் அவன் கண்முன் தெரிய ஆரம்பித்தது
என் படைபிரிவினை கலைக்கின்றேன் இனி நான் போராளி அல்ல என சொல்லிவிட்டு தன் உயிரை பாதுகாக்க தப்பினான். இந்தியா அவனை சந்தேக கண்ணோடு நோக்கிவிட்டு நீ திருந்தியது உண்மை என்றால் சிங்களன் பக்கம் போ என சொல்லிவிட்டு நகர்ந்தது
கோத்தபாயா அவனை அரவணைத்து கொண்டான்.
மாத்தையா சொல்லி கேட்காமல் அவனை 700 போராளிகளோடு விசாரணை என சொல்லி கொன்ற பிரபாகரனுக்கு கருணாவினை அப்படி கொல்லமுடியவில்லை
மாத்தையாவினை கொன்ற பாவம் பின்னாளில் கருணா மூலம் பிரபாகரனை பழிவாங்கிற்று
அடுத்து நடந்த யுத்தத்தில் கிழக்கு மாகாண போராளிகள் இல்லை , கருணா இல்லை
விளைவு படு மோசமான வீழ்ச்சியினை சந்தித்து புலிகள் இயக்கம் அழிந்தும் போயிற்று
ஜப்பான் முதல் அமெரிக்கா வரை பரந்த இவ்வுலகில் புலிகளுக்கு ஆதரவாக ஒரு நாடும் வரவில்லை என்றால் காரணம் இம்மாதிரி விஷயங்கள்தான்
இதை எல்லாம் வைகோ, பழநெடுமாறன், சைமன், திருமுருகன் காந்தி, வேல்முருகன் என எவனும் சொல்லமாட்டார்கள், அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போல் கம்மென்று இருப்பார்கள்
ஆனால் மே 17 என்றாலோ நவம்பர் 26 என்றாலோ ஏ இந்திய தேசியமே என குட்டிகரணம் அடிப்பார்கள், அயோக்கியர்கள்
மே 17க்கு முன்பான மிக கொடுமையான நாள் ஏப்ரல் 10
ஈழம் அமைவதை யார் கெடுத்தார் என்றால் சாட்சாத் புலிகள்தான், ஒருவேளை அது அமைந்தால் கூட சிரியா போல் ஆகியிருக்குமே அன்றி அமைதி வந்தே இருக்காது
புலிகளின் தலமை எவ்வளவு கொடூரமான ரத்தவெறி பிடித்தது என்பது டெலோ ஒழிப்பு, பத்மநாபா படுகொலை, மாத்தையா கொலை, அமிர்ந்தலிங்கம் கொலை என வரலாறு எங்கும் காண கிடக்கின்றது
இதெல்லாம் புலிகள் தமிழரை கொன்ற கணக்கு, ராஜிவ் கொலை, அமைதிபடை பலி, சிங்கள பலி எல்லாம் தனி கணக்கு
இப்படி கொல்வது மட்டுமே கொள்கை என செயல்படுத்திய இயக்கம் எப்படி உருப்படும், உலகநாடுகள் எல்லாம் சேர்ந்து வெறிநாயினை அடிப்பது போல அடித்து கொன்றார்கள்
அந்த புலிகளிடம் சிக்கிய கிழக்கு மாகாண போராளிகள் 500 பேர் வெறுகல் ஆற்றுகரையில் கொடூரமாக கொல்லபட்ட நாள் இன்று
இதே ஏப்ரல் 10ம் தேதி, 2004ல் அக்கொடுமை நடந்தது
இப்படி எல்லோரையும் கொன்று தங்களை கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்து இறுதியில் அழிந்தே போனது புலிகள் இயக்கம்
ஆனால் இங்கிருப்பவன் கலைஞர் கெடுத்தார்,காங்கிரஸ் கெடுத்தது என சொல்லிகொண்டே இருப்பான்
அந்த வெறுகல் ஆற்றங்கரையில் புலிகளால் கொல்லபட்ட அந்த தமிழ்போராளிகளுக்கு வீரவணக்கம்

காவேரிக்காக ஸ்டாலின் போராடுவது

காவேரிக்காக ஸ்டாலின் போராடுவது வேடிக்க்கையாக இருக்கிறது - சீமான்
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்து இந்த நொடிவரை விவசாயத்தை காத்து நிற்பது திமுக‌
பலமுறை விவசாய கடனை ரத்து செய்ததும் திமுக‌
உரமானியம் முதல் பலமானியங்களை வழங்கியதும், உழவர் சந்தை வரை அமைத்துகொடுத்ததும் திமுக‌
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்தது முதல் டெல்டா கால்வாய்களை தூர்வாரியதும் திமுக‌
காவேரியில் 1970ல் இருந்து போராடி 1990ல் காவேரி நடுவர்மன்றம் அமைய காரணமாயிருந்ததும் திமுக‌
இடைபட்ட காலங்களில் அவசரவழக்கு பல தொடுத்ததும் திமுக‌
நேற்றுகூட அந்த நடுவர்மன்ற தீர்ப்பின் அடிப்படையிலே இறுதி தீர்ப்புவழங்கியதாக உச்சநீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டிருக்கின்றார்
ஆக காவேரிக்காக உருப்படியாக போராடிய கட்சி திமுக அதனை எல்லாம் சொல்லாத சைமன், ராமசந்திரன் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் குறைத்தது, இன்றைய பழனிச்சாமியின் நெஞ்ஞ்சாண்கிடை பற்றி எல்லாம் கூட சொல்லவில்லை
அங்கிள் சைமன்
காவேரிக்கு திமுக முதல் வழக்கு தொடுத்த காலத்தில் நீர் பிறக்கவே இல்லை
காவேரி நடுவர்மன்றத்தை திமுக அமைத்தபொழுது நீர் கல்லூரியில் அரியர் வைத்து முட்டிகொண்டிருந்தீர்
கலைஞர் அமைதிபடையினை திரும்பபெற்றபொழுது உமக்கு இலங்கை எங்கிருக்கின்றது என்றே தெரியாது
கலைஞர் இலவச மின்சாரம் கொடுத்தபொழுது உமது தோட்டத்திலும் இலவச மின்சாரம் என மகிழ்ந்தீர்
1991ல் நடுவர்மன்ற தீர்ப்பு அரசு இதழில் வந்து கன்னடம் பற்றி எரிந்தபொழுது நீர் பாரதிராஜா கேமராவினை துடைத்துகொண்டிருந்தீர்
1997களில் தேவகவுடாவுடன் திமுக காவேரிக்காக‌ மல்லுகட்டியபொழுது நீர் பாலுமகேந்திரா காலடியில் இருந்து மரப்பசு நாவல் படித்துகொண்டிருந்தீர்
திமுக உழவர் சந்தையினை அமைத்தபொழுது நீர் பாஞ்சாலங்குறிச்சி படம் இயக்கிகொண்டிருந்தீர்
இன்னும் உரமானியம், டெல்டா பாசன சீரமைப்பு என திமுக பிசியான காலங்களில் நீர் "வாழ்த்துக்கள்" படம் எடுத்தீர், விஜயலட்சுமிக்கு தமிழ் சொல்லிகொடுத்தீர்
2009 வரை நீர் கோடம்பாக்கத்தின் கேமரா தவிர எதை சுற்றி வந்தீர்?
இப்பொழுது ஏதோ ஆமைகறி அரசியல் செய்யலாம் என வந்து குதிக்கின்றீர்
திமுகவின் 60 ஆண்டுகால சாதனை, அது செய்திருக்கும் சில முயற்சிகளையாவது தெரிந்துவிட்டு வந்து பேசும்
இல்லாவிட்டால் எங்களிடம் கேளும், ஆமைகறி அளவு இல்லை என்றாலும் பூனைகறி போட்டாவது சொல்லி தருகின்றோம்
அது அல்லாமல் அந்தரத்தில் கம்பு சுற்றும் உம்மை கண்டால் மகா வேடிக்கையாக இருக்கின்றது

சென்னையில் ராணுவ கண்காட்சி

ராணுவ கண்காட்சி ஏன் சென்னையில் நடத்தபட வேண்டும், இப்போதுள்ள சூழலில் இது தமிழரை அவமதிக்கும் செயல் என்கின்றனர் சிலர்
இது முன்பே திட்டமிட்ட விஷயம், காவேரி விவகாரம் தீர்ப்பு வழங்கும் முன்பே திட்டமிடபட்டது
ராணுவத்தினை எதிர்த்து முணுமுணுக்கின்றார்களாம், இதெல்லாம் தமிழனை ராணுவத்தை காட்டி பயமுறுத்தும் முயற்சியாம்
எது?
ஆவடி ராணுவ தொழிற்சாலையால் இவனுக்கு வேலை வேண்டும்
திருச்சி பகுதி ராணுவ தளவாட தொழிற்சாலையாலும் வேலை வேண்டும்
இன்னும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழகம் முழுக்க ராணுவத்தால் இவர்களுக்கு தொழில் வேண்டும்
ஆனால் ராணுவ கண்காட்சி மட்டும் நடக்க கூடாது, மோடியும் வரகூடாது
அற்ப பதர்களே, சென்னை கோட்டை என்ன தமிழ் உணர்வாளர்கள் கட்டியதா?
அது பிரிட்டிஷ் ராணுவத்தால் உருவாக்கபட்டு இன்று இந்திய ராணுவத்தின் வசம் இருக்கும் கோட்டை
தமிழக அரசு வாடகைக்குத்தான் இயங்குகின்றது, அந்த அவமானம் போக்கத்தான் கலைஞர் ஒரு மன்றம் கட்டினார் அதுவும் அந்த வசந்தசேனைக்கு பொறுக்கவில்லை அதனை கெடுத்துவிட்டுத்தான் செத்தார்
நியாயமாக இந்த ராணுவ கண்காட்சி சென்னை கோட்டையில்தான் நடக்க வேண்டும்
ஏதோ பெரியமனதோடு அதற்கு வெளியில் நடத்துகின்றார்கள்
ஒரு சட்டசபை கட்டடத்திற்கே வழியில்லை , அப்படி ஒரு மனிதன் உருவாக்கியதையும் ஒருவர் கெடுத்தார், மனதறிந்து கெடுத்தார்
அப்படி தமிழரை சட்டசபை இல்லாமல் செய்த அவருக்கு பல கோடியில் நினைவு மண்டபமாம்
வெட்கமாக இல்லை, இக்கொடுமை எங்காவது நடக்குமா?
வாடகை கட்டடத்தில் இயங்கும் அரசு, அதற்கு காரணமானவருக்கு பல கோடியில் மண்டபம் கட்டுமாம்
எப்படிபட்ட வெட்க கேடு? ச்சீ மாபெரும் அவமானம்
அந்த அளவு மானமும் அறிவும் இல்லாமல் போயிவிட்டது
இதனை எவனாவது கேட்கின்றானா என்றால் இல்லை.
இந்த பெரும் மானக்கேட்டில் உங்களுக்கெல்லாம் கோபம் வேறு வருகின்றதா?

மலேசியாவில் சாதி

மலேசியாவில் தமிழர் களம் என்ற ஒரு அமைப்பு தமிழகத்தைச் சார்ந்த திரு.அரிமாவளவன் என்பவரது வழிகாட்டுதலுடன் இயங்கத் தொடங்கியிருப்பதாகவும் இக்குழு ஒவ்வொரு தமிழரிடமும் சாதியைத் துருவித் துருவிக் கேட்டு சாதி அடையாளத்தை உரக்கச் சொல்ல வேண்டும் என முழங்கி வருவதாகவும், சாதியும், குலமும் தான் தமிழரின் அடையாளம் எனவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பதை நேற்று நண்பர்கள் வழி அறிந்தேன். முன்னரே இந்த விசயம் தொடர்பாக நான் ஒரு கண்டனப் பதிவினை வெளியிட்டிருந்தேன்.
நேற்று கிள்ளானில் நடந்த இலக்கிய நிகழ்விலும் இக்குழுவைச் சேர்ந்த ஒருவர் மிகக் கோவத்துடன் சாதியைத் தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என காரசாரமாக கருத்து தெரிவித்தார். அவரிடம் ஏன் எனத் தொடர்ந்து கேள்வி கேட்டால் பதிலளிக்க எந்த அறிவுப்பூர்வமான பதிலும் அவரிடம் இல்லை.
இங்கு மலேசியாவில் ஏற்கனவே சாதிப் பைத்தியம் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடித்து இப்போது தமிழர்கள் மத்தியில் ஒரு பிளவு இலைமறைக்காயாய் வளர்ந்து வருகிறது. இந்தப் பிளவை வளர்க்கும் நடவடிக்கைகளைத் தமிழகத்திலிருந்து இயங்கும் “தமிழ் அடையாளம்” கொண்ட அமைப்புக்கள் மலேசியாவில் கடைவிரிக்க வேண்டாம். இந்தியாவைச் சாதிச் சிந்தனை சிதைத்ததும் சிதைத்து வருவதும் போதும். அதனைத் தமிழர் வாழும் ஏனைய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டாம்!

காவி அம்பேத்கர்

உ.பி. படானில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை சீரமைக்கப்பட்டு காவி நிறம் பூசப்பட்டுள்ளது. காவி நிறம் 'தூய்மை'யின் நிறம் என்பதால் அம்பேத்கர் சிலைக்கு காவி நிறத்தை தேர்ந்தெடுத்ததாக குறிப்பிடுகிறார். இன்னும் சில காவி கும்பல்கள், 'பௌவுத்தத்தின் நிறம் காவி' தானே என்கிறார்கள். 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் புத்தர் கடவுள் மறுப்பை பேசி, பார்ப்பன மனு தர்ம கோட்பாடுகளை எதிர்த்து இயக்கமாக பௌவுத்த தத்துவத்தை அறிவித்தார். இயக்கத்தின் கொடி காவி நிறத்திலும் இயக்கத்தவர்களுக்கு காவி உடையும் தேர்ந்தெடுத்தார்.

இந்த இயக்கத்திற்கு மக்களிடம் வரவேற்று அதிகரிக்கவே பிராமண வேத மதத்தவர்கள் உணவில் விஷத்தை கலந்து புத்தரை கொன்றனர். இதற்கு பின் சில நூற்றாண்டுகளிலேயே புத்தரை கிருஷ்ணனின் அவதாரம் என்றும் புத்தர் விகாரங்களை திருத்தம் செய்து பூணூல் அணிவித்தும், இந்து சின்னத்தை மார்பிலும் செதுக்கி புத்தரை இந்து கடவுளின் அவதாரம் என்று சுவீகரித்துக் கொண்டது.

'நான் இந்து அல்ல' என்று அறிவித்த புரட்சியாளர் அம்பேத்கருக்கு இன்று காவி நிறத்தையும் இந்துத்துவத்தை அம்பேத்கர் ஆதரித்தார் என்று காவிக் கூட்டங்கள் புரட்டு பேசி திரிகின்றன.

நல்ல வேளையாக காவி அம்பேத்கர் சிலையை ஏற்காத அம்பேத்கரியவாதிகள் சிலைக்கு கருப்பு நிறத்திற்கு மாற்றியுள்ளனர்.

குரங்குகள் சேஷ்டையும் சங்கி மங்கி காவிகள் சேஷ்டையும் ஒன்று. அவப்போது இதுகளை குரங்காட்டிகள் போன்று அடக்கி ஒடுக்கி வைத்திருக்க வேண்டும்!


அம்பேத்கர் சிலை பொதுவாக நீல நிற கோட் அணிந்தபடி கையில் சட்டபுத்தகத்தை ஏந்திய வண்ணம் அமைந்திருக்கும். ஆனால்உத்தரப் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அம்பேத்கர்சிலைக்கு காவி நிற வண்ணம் அடிக்கப்பட்டிருந்தது,இந்நிலையில் உள்ளூர் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஹிமேந்திர கவுதம், காவி நிறத்தை நீக்கிவிட்டு அதில் "நீல" நிற பெயிண்ட் அடித்தார்.

ஊட்டி அருகேயுள்ள மாயாறு

காவேரி ஆறு தமிழகத்தில் தான் உற்பத்தியாகிறது. ஊட்டியில் அணைகட்டினால் கர்நாடகாவிற்கு செல்லும் காவேரி நீரை தடுத்து நாம் பயன்படுத்தலாம். அதனால் கர்நாடகா நம்மிடம் தண்ணீருக்கு பிச்சை எடுக்கும் நிலை உருவாகும்” என்று ஒரு தவறானா தகவல் கட்ந்த சில தினங்களாக திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது,
ஊட்டி அருகேயுள்ள மாயாறு(moyar) அணை பற்றி தான் தற்போது இணையதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. மாயாறு என்பது 50 கி.மீ நீளம் மட்டுமே கொண்ட காட்டாறு. அந்த ஆற்றின் நீர்வரத்தின் மூலம் தமிழ்நாடு அரசு 36 மெகா வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. இதற்கு ஊட்டியில் இருக்கும் சிறு சிறு ஏரி குளங்கள் மூலம் தான் நீர் வருகிறது. காவேரி ஆற்றின் மூலம் கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள் ஒரு வருடத்திற்கு பயன்படுத்தும் நீரின் அளவு மட்டும் 740 டிம்சி. 50 கிமீ தூரம் மட்டுமே ஒடும் காட்டாற்றை தடுத்து தீர்த்து விட்டால் காவேரி ஆற்றையே தடுத்துவிடலாம் என்பது சீப்பை ஒழித்து வைத்துவிட்டு கல்யாணத்தை நிறுத்தும் கதை தான்.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஊட்டி மலைப்பகுதிகளில் உள்ள மேற்சொன்ன ஏரி, குளங்களை தேக்கி அணை கட்டியதன் மூலம் தான் மாயாறுக்கு நீர் வருகிறது. கிளையாறுகள் ஏதும் இன்றி எங்கும் பிரியாமல் மலை பள்ளத்தாக்குகளில் இறங்கி நேராக பவாணிசாகர் அணைக்கு தான் அதன் மொத்த நீரும் வந்தடைகிறது. ஆற்றின் 26 கிமீ பகுதி கர்நாடகா வழியாகவே வருகிறது . இருப்பினும் கிளை ஆறு ஏதும் கிடையாது. 60கிமீ தொலைவில் இருக்கும் கர்நாடக கபினி அணையும், மாயாறும் இணைவதற்கு துளியளவும் வாய்ப்பில்லை. மேலும் ஒரு ஆற்றின் மொத்த நீரும் பம்பு செட்டு பைப்பில் வருவது போல் ஒரே ஊற்றில் வாராது. அதன் நீர் பிடிப்பு பகுதிகள் முழுவதுமாக மழையில் இருந்து நீர் பிடித்து வருவதுதான்
இந்த கதை பாவனிக்கு வேண்டுமென்றால் பொருந்தும். அதுதான் தமிழ் நாட்டில் இருந்து கேரளாவிற்குள் போய் வருவது. ஆனால் பவானி, காவேரியின் கிளை நதி என்பதால் கேரளாவிற்குள் போவதை நாம் தடுத்தால் அது நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது. பின் நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடகாவில் இருந்து 192 டி.எம்.சி தண்ணீர் கேட்பதில் சிக்கல் வரும்.
அதிக அளவிலான சமவெளிப் பரப்பை கொண்ட கடைமடை பகுதி விதிகளை மீற முடியாது. காவேரி, பாவானி, நொய்யல் என எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காவேரி மேலாண்மை வாரியம்தான். அதன் கட்டுப்பாட்டில் அனைத்து அணைகளையும் கொண்டுவருவதுதான். அதனால்தான் தமிழக விவசாயிகள் காவேரி மேலாண்மைவாரியம் அமைப்பதுதான் ஒரே தீர்வு என்று டெல்லியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடக்கும் போராட்டத்தை திசை திருப்ப ஊட்டியில் அணை என்று குழப்புகிறார்கள் சங்கிகள்

''அண்ணா பல்கலைக்கழகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு செல்கிறது.''

50 வருட தமிழகத்தின் சமுக நீதி கல்வி வளர்சிகள் ஒரு சிலர் சுயநலத்துகாய் அடகு வைக்கபடுகிறது.
ஒடுக்கபட்டவர்களின் முன்னேற்றத்திற்கான ஓரே துடுப்பு கல்வி.
ஒரு சமூகத்தை கூலிகளாக மாற்ற கல்வியை மறுத்தாலே போதும்.

ஆர்.எஸ்.எஸ் மோடி கும்பல்களுக்கு இந்தியாவில் கல்வியில் மிகச் சிறந்த மாநிலமாகவும் முதல் இடத்தையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் கல்வி மையங்களை அபகரித்து கல்வியை சீர்படுத்துவதற்கு பதிலாக சீரழிவு நடத்த துடித்துக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாகவே அனைத்து மக்களுக்கும் அனைத்து கல்வியும் கிடைத்து விடக் கூடாது என்பதில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறது.

ஜெயலலிதா எதிர்த்த நீட் திட்டம் அப்போலோவில் இருந்த போது அனுமதி கொடுத்ததாக கூறி தமிழ்நாட்டுக்குள் நீட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தால் கிராம மாணவர்கள் மருத்துவர் கனவை இழந்தனர். அனிதா தற்கொலை செய்தார். ஆந்திர மாநிலத்தில் 12 மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்னும் வெறி தீராத இந்த கும்பல் தமிழக பல்கலைக்கழகத்தை கைப்பற்ற முனைகிறது!


50 வருஷமா ஒன்றுமே செய்யல, தமிழகம் பின்தங்கி இருக்கு

இங்க 50 வருஷமா ஒன்றுமே செய்யல, தமிழகம் பின்தங்கி இருக்கு. இதெல்லாம் தமிழ் தேசியம், இந்து தேசியவாதி என்று சொல்லிக்கிட்டு சுத்தரவங்க கடந்த 10 வருஷமா கட்டமைத்த பிரச்சாரம். இவங்க எடுத்துகிட்ட ஆயுதம் காமராஜர். ஏன் என்றால் தமிழ் தேசியவாதி பரிசோதனையில் கிடைச்ச கடைசி தமிழ் தலைவர் அவர் தான், காமராஜரின் சாதி சேர்ந்தவர்கள் அதிகம் இந்து தேசியவாதி கட்சியில் இருப்பதால் அவர்களும் இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துக்கிட்டு சென்றார்கள். ஆனால், இதை இரண்டையுமே அவர் ஏற்றுகொண்டது இல்லை. இந்த பஜனையை வைத்து திராவிட கட்சிகள் தேவை என்ன, எதற்கு மக்கள் தேர்ந்து எடுத்தார்கள், 1950-67 நடந்து பிரச்சனை என்ன என்று கூட யோசிக்கவிடமால் இளைஞர்களை முட்டாள் ஆகவே மாற்றிவிட்டார்கள். அவரோட அரசியல் நிலைப்படு கூட தெரியாது.
இங்க படிச்ச பெரும்பாலான இளைஞர்களுக்கும், பக்தாளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டும் மூடர் கூட்டங்களே. கையில் போன் இருக்கு, டேட்டா நெறையா இருக்கு, என்ன பயன். ஊழல் என்று சொன்னால் என்னவென்று தெரிஞ்சிக்காமலே வெறும் ஊழல் என்று சொல்லவேண்டியது. நீதிமன்றம் விடுதலை செய்தால், இந்த சட்டமே இப்படி தான் பெரிய ஓட்டை இருக்கு அதையும் குறை சொல்லவேண்டியது. சரி அந்த பெரிய ஓட்டை என்னவென்று தெரிஞ்சிக்க, தீர்ப்பை எடுத்து படிக்க கூட யோசனை வராது. ஆனால் மீம், ஸ்டேட்டஸ் மட்டும் எக்கச்சக்கமாக போட்டு பொலம்ப நேரம் இருக்கும். இங்கே அணைகள் கட்டவில்லை என்று சொன்னதும், அதை பற்றி தேடி பார்ப்போம் என்ற என்னம் இல்லை. சட்டமன்றம் இந்த தீர்மானம்/சட்டம் அந்த வருஷம் போட்டு ஏமாதிடாங்க என்று யார் சொன்னாலும் நம்ப வேண்டியது, போய் சட்டமன்ற வளைதளத்தில் தேடி பார்ப்போம் என்று கூட தோன்றாது. அந்த browser எதுக்கு தான் வச்சி இருக்கீங்க. எல்லாத்தையும் facebook, whatsapp'லயே நம்பிக்கட்டு இருந்தா என்ன மாற்றம் கொண்டுவரப்போறீங்க.
விஜய், அஜித் சண்டையில் கூட sources கேட்டு சண்டை போட்டானுங்க. இங்க அரசு வளைதளக்கள் இருந்தும் கூட கேர்க்க/தேட தோன்றவில்லை..
ஆண்ட கட்சிக்கும், புதிய கட்சிக்கும் சண்டை வந்தால் ஆண்ட காட்சிகளை திட்டுவது. அரசியல்வாதிக்கும், அரசு அதிகாரிக்கு சண்டை வந்தால் அரசியல்வாதியை திட்டுவது. ஊழியர்களுக்கும், மக்களுக்கும் சண்டை வந்தால் ஊழியர்களை திட்டுவது. கடைசி என்ன பிரச்சனை என்று தெரிஞ்சிக்காமலே இருந்து எதை சரி செய்யலாம் என்று இருக்கீங்க.
கண்முடித்தனமான நம்பிக்கை, கண்முடித்தனமான கோவம் இந்த இரண்டையும் வைத்து எதையும் கயட்ட முடியாது!!!
இந்தியாவின் முன்னிலை மாநிலத்துக்கே இந்த நிலைமை என்றால், என்ன சொல்லறது....

ஸ்டாலின் சாதனை

நேற்று சன்டீவியில் தனி ஒருவன் திரைப்படம் பழைய நினைவுகளை கிளறிவிட்டது

இரண்டாயிரத்தின் துவக்கத்தில் ஹார்ட் அட்டாக், கேன்சர், ஜான்டிஸ் போன்ற நோய்களுக்கு நாங்கள் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தோம். தமிழகத்தில் பயோடேக்னாலாஜி மாணவர்கள் மத்தியில் பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம் அது. கேன்சருக்கு நியுபோஜன்என்ற மருந்தின் விலை 45000 ரூபாய். சோதனைக்கு ரெபரன்சாக அந்த மருந்து தேவை என கேட்கும்போதெல்லாம் மேனேஜரிடமிருந்து திட்டு விழும். அதன் விலை இப்பொழுது வெகுவாக குறைந்துவிட்டது.

அப்போது சென்னையில் டைசல் பார்க்கை கலைஞர் தொடங்கினார்.

அதன் தொடர்ச்சியாக டைசல் பயோபார்க் –II என்று ஸ்டாலின் அதே வளாகத்தில் கட்டி முடித்தார்.

உயிர் காக்கும் மருந்துகளை கண்டுபிடிக்க, அதனை பரிசோதனை செய்து பார்க்க என்று கோடிக்கணக்கில் செலவாகும் , எனவே அந்த ஆராய்ச்சியில் இறங்க பலரும் பயந்தார்கள், அதற்கு ஒரு வழி செய்தார்கள்.

ஒரு முழு அளவிலான ரிசர்ச் செண்டர் டைசல் பயோ பார்க்கில் திறக்கப்பட்டது. தேவையான அத்தனை இயந்திரங்களும் கோடிக்கணக்கில் வாங்கி நிறுவப்பட்டது, நீங்கள் எத்தனை ஆண்டுகாலம் தேவையோ அத்தனை ஆண்டுகாலம் வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் , இதனால் பெருமளவில் நிறுவனங்களின் செலவீனம் குறைக்கப்படும், ஆராய்ச்சி வெற்றியடைந்தால் தனியே அவர்கள் தொழிற்சாலை தொடங்கிக் கொள்வார்கள்.

ஆனால் பரிதாபம், திமுக ஆட்சி அத்தோடு முடிவுற்றது, அடுத்து வந்த அதிமுக ஆட்சி அதற்குண்டான பராமரிப்பில் கவனம் செலுத்தாததால் நிருவப்பட்ட அத்தனை இயந்திரங்களும் சிறிதளவும் பயன்படுத்தாமல் உள்ளது. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் தரமணியில் உள்ள டைசல் பயோ பார்க்கில் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கடந்த ஆறாண்டுகளில் தமிழக அரசின் சாதனை என்று எதையாவது குறிப்பிட முடியுமா, திமுக ஆட்சியில் இருந்தால் நம் வீட்டுப் பிள்ளைகள் அடுத்த மாநிலத்திற்கு வேலை தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்குமா ? அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் இந்தியா முழுக்க உள்ள பயோடேக்னாலாஜி நிறுவனங்களில் தமிழக மாணவர்களே பணிபுரிகின்றனர்

செயல் தலைவரின் சாதனை என்ன என்று கேள்வி கேட்கும் ஊடகங்கள், ஸ்டாலின் திறந்து வைத்த குடிநீர் திட்டங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களின் இன்றைய கதி என்ன என்று இன்றைய அரசைக் கேள்வி கேட்குமா ?

ஒருநாள் டைடல்பார்க் வாசலிலும், டைசல் பயோபார்க் வாசலிலும் நின்று பாருங்கள், திமுகவின் சாதனையும் தெரியும், இன்றைய அதிமுக அரசின் அவலமும் தெரியும்.

ஆசியாவின் முதல் ஈரடுக்குப் பாலம்



ஆசியாவின் முதல் ஈரடுக்குப் பாலம் எங்குள்ளது என்று நேற்று என்னிடம் கேட்டிருந்தால் சிங்கப்பூர் அல்லது ஹாங்காங் என்றுதான் கூறி இருப்பேன்.

நம்ம நாட்டு ஆட்சியாளர்கள் மீது அவ்வளவு அவநம்பிக்கை.

உண்மையில் அது நமது நாட்டில், நமது மாநிலத்தில்தான் இருக்கிறதாம்.

இப்படிச் சொன்னவுடன் "எவனாவது வெள்ளைக்காரன் கட்டியிருப்பான்" என்ற நினைப்பு அடுத்து தோன்றும்

அதுவும் தவறுதானாம். பாலம் கட்டுறதுனா கலைஞரவிட்டா வேறு யாரு?

ஆம். 1973ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியின்போது திருநெல்வேலியில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. அதாவது இன்றைக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு.

திருக்குறளைப் போல ஈரடுக்குல இருக்கிறதால அந்தப் பாலத்துக்கு "திருவள்ளுவர் பாலம்" என்ற பெயரையும் கலைஞர் சூட்டியுள்ளார்.

"சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்"னு முழங்குற திமுக, தன்னுடைய சாதனைகளில் ஒன்றாக இந்தப் பாலத்தைக் குறிப்பிட்டதாக நான் அறியவில்லை.

சுதந்திரத்திற்கு பிறகு தமிழகத்தில் கட்டப்பட்ட அணைகள்

சுதந்திரத்திற்கு பிறகு தமிழகத்தில் கட்டப்பட்ட பெரிய அணைகள் - 5 
அதில் கலைஞர் கட்டியது - 3 
காங்கிரஸ் ஆட்சியில் கட்டியது - 2 

சுதந்திரத்திற்கு பிறகு தமிழகத்தில் கட்டப்பட்ட சிறிய/நடுத்தர அணைகள் - 90
திமுக ஆட்சியில்(21 வருடங்கள்) கட்டப்பட்ட அணைகள் - 36
காங்கிரஸ் ஆட்சியில்(19 வருடங்கள்) கட்டப்பட்டவை - 25

பெரிய அணைகளுக்கான ஆதாரம் -http://www.india-wris.nrsc.gov.in/wrpinfo/index.php?title=Large_Dams_in_India

சிறிய/நடுத்தர அணைகளுக்கான ஆதாரம் - http://www.india-wris.nrsc.gov.in/wrpinfo/index.php?title=Dams_in_Tamil_Nadu

ஆதாரத்தோடு போட்டதை படிச்சுட்டு தொங்கிடு.



காவிரி ஆற்றின் குறுக்கே ஏன் மேலும் அணைகள் கட்டவில்லை

காவிரி ஆற்றின் குறுக்கே ஏன் மேலும் அணைகள் கட்டவில்லை? - காவிரி டெல்டா பாசன விவசாயி ஒருவரின் பதில்.

எங்கே கட்டுவது உங்க தலையிலா? முப்பாட்டன் ராஜராஜ சோழனும், பாட்டன் ராஜேந்திரனும், சின்ன பாட்டன் பல்லவனும், ஒன்று விட்ட பாட்டன் பாண்டியனும், அவ்வளவு பெரிய பெரிய கோவில்கள் எழுப்பினார்களே அவர்களுக்கு அறிவில்லையா, அணைகள் கட்ட? 

இவர்களுக்கு முன்பே இருந்த கரிகாலன் கல்லணை கட்டியுள்ளான், பிறகு ஏன் இவர்கள் கட்டவில்லை? கல்லணையின் பயன்பாடு என்ன?? அதில் கையளவு தண்ணீர் தேக்க முடியாது! அது ஏன்? ஏனெனில் மணல் பகுதி நீரை உறிஞ்சும்!

கல்லணையின் பயன்பாடு, ஆற்று நீரை மடைமாற்றுதல் மட்டுமே! அவ்வளவு அற்புதமாக சிற்பங்கள் செய்து நுணுக்கமாக கோவில் கட்டிய உன் பாட்டன்களுக்கு அணை கட்ட தெரியாதா?

கட்ட முடியும்! ஆனால் நீரை உறிஞ்சும் பகுதியில் கட்டி என்ன பயன்? அணையின் பயன் தண்ணீர் தேக்கி தேவையான போது விடுதல்!

சரி, அணை கட்டியாகிவிட்டது என்றே சொல்லலாம்! தண்ணீர் எங்கிருந்து வரும்? மழைநீர் தேக்கமா? அறிவு குஞ்சுகளா! அதுவும் பூமிக்குள் தான் போகும்.

ஏரி வெட்டலாமே? அட வெண்ணெய்! வீராணம் ஏரி வெட்டியவனுக்கு, டெல்டாவில் ஏரி வெட்ட தெரியாதா? பயனளிக்காது. அதான் தண்ணீர் பூமிக்குள் தான் போகும்.

அடேய்களா, நீங்க சொல்லுறமாதிரி, நினைத்த இடத்தில் ஓர் அணையை கட்டிவிடமுடியாது.

ஆற்றுநீர், மலைகளிலிருந்து இறங்கும் இடத்திலோ, நீர்பிடிப்பு இடங்கள் என்று இயற்கையாக நிலவமைப்பு இருக்கும் இடத்திலோதான் அணைகள் கட்டமுடியும்

_*பெரிய அணைகள் கட்ட வேண்டும் என்றால், மலைதொடர்களுக்கு இடையே இயற்கையாக நிலப்பரப்பில் அதற்கான அமைப்பு இருக்க வேண்டும்.*_

தமிழகத்தில் மேட்டூரை தாண்டினால், காவிரி பாயும் பகுதிகளில் அப்படியான பெரிய நிலபரப்பு கிடையாது. சமவெளி பகுதிகளில் அணைகளை கட்டமுடியாது. தமிழகத்தில் சமவெளிதான் அதிகம்.. வற்றாத ஆறுகளும் கிடையாது.. மழையளவும் சராசரிதான்.

கர்நாடகா எப்படி ஹேமாவதி, கபினி என சில காவிரி துணையாறுகளில் அணைகளை கட்டியதோ, அதே போல, தமிழகத்தில் உள்ள காவிரி துணையாறுகளான பவானியிலும், நொய்யலிலும், அமராவதியிலும் அணை கட்டியுள்ளது தமிழகம்.

1. அண்டை மாநிலங்களை விட தமிழகத்தில் மழை அதிகம் அதை சேமிக்க வேண்டும்!

_விளக்கம் :- அதிகம் என்பது தவறு, தமிழகத்தில் மழை குறைவு! கடலோர மாவட்டங்களில் மழையும் புயலும் கூடுதல், சரி மழை நீரை எங்கே சேமிப்பது... எப்படி பாசனத்திற்கு விடுவது? கீழிருந்து மேலாகவா? தண்ணீர் போகுமா?_

2. காவிரியில் 1000 கால்வாய்கள் உள்ளது, அதையெல்லாம் கான்கிரீட் செய்தால் இரண்டு நாளில் கடைமடை போகும்!

_விளக்கம் :- எதுக்கு?? போய் கடலில் கலக்கவா? மீண்டும் மீண்டும் தண்ணீர் வேண்டுமே பாசனத்திற்கு அது எங்கிருந்து வரும்?.. எப்படி வரும்? கான்கிரீட் போட்டால் பிரச்சனை முடியும் என்றால், சில ஊழல் அரசியல்வாதிகள் பணத்துக்காகவது செய்துருப்பார்களே! ஏன் செய்யவில்லை?_

_காரணம் கான்கிரீட்டில் இல்லை! தொடர்ந்து தண்ணீர் வரத்து வேண்டும், அது எங்கிருந்து வரும்? எப்படி வரும்?.. கடைமடை காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்வாய்களும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே கான்கிரீட் போடப்பட்டது, பயன் ஒன்றும் இல்லை! தண்ணீர் வந்தால் தானே பாசனம் செய்ய முடியும்!_

_வயல்களில் வண்டல் மண், தண்ணீர் பூமிக்குள் இறங்குவது குறைவு! ஆறுகளில் சரளை மண், தண்ணீர் இறங்கும், நிலத்தடி. நீர் மட்டம் உயரும், கட்டுமானத்திற்கு தேவையான மணலும் கிடைக்கும்! ஆற்றில் தண்ணீர் ஓடவேண்டும்._

3. பிளாஸ்டிக் குழாய்கள் பதித்து, சொட்டு நீர் பாசனம் செய்யவேண்டும்.

_விளக்கம் :- இது என்ன பண்ணை விவசாயமா? நினைத்ததும் குழாய் மாட்டி சொட்டு நீர் தெளிக்க? காவிரி பாசன பரப்பளவு ஏறத்தாழ. 270000 ஏக்கர், தண்ணீர் இல்லாமலும், ரியல் எஸ்டேட், நகரமயமாக்கல் இவைகளால் குறைந்து இருக்கும், 2 இலட்சம் ஏக்கருக்கு மேல் குழாய் மாட்டி பாசனம் செய்ய முடியுமா?_

_சொட்டு நீர் பாசனத்தில் நெல் விளையுமா? பயிரை மாற்றலாமே! ஓ மாற்றலாமே! மண்ணும் காலநிலையும் மாறினால், பயிரையும் மாற்றலாம்!_

4. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு பாசனத் திட்டங்களுக்கு செலவிட்டது குறைவு!?

_விளக்கம் :- பாதி உண்மை! மீதி தவறு! பாசனத்திற்கு கூடுதல் செலவிட்டதாக கூறும் மாநிலத்தில் விவசாய சாவுகளை விட தமிழகத்தில் குறைவு! எப்படி? செலவிட்டது ஏட்டில் உள்ளது, ஆனால் உண்மையில் இல்லை!_

கடைசியாக என்னதான் சொல்லுற?

காவிரியில் தண்ணீர் வந்தே ஆகவேண்டும்! மாற்றுப் பயிர், பாசன முறை பிறகு பேசலாம், ஆம் காவிரியில் தண்ணீர் வந்தே ஆகவேண்டும், காவிரி நீர் டெல்டாவில் மட்டும் அல்ல, சென்னை வரை குடிநீர் கொடுப்பது, வடமாவட்டங்களில் விவசாய குடிநீர் கொடுப்பது, தமிழகத்தின் நிலத்தடி நீரை சீராக வைத்திருப்பது எல்லாமே அந்த காவிரி ஆறு தான்.

வட மற்றும் டெல்டா கடலோர மாவட்டங்களில் கடல் உள்புகுந்து நிலத்தடி நீர் உவர்ப்பாகி விட்டது, கடற்கரையில் இருந்து 65 கிலோ மீட்டர் வரை வந்துவிட்டது, இதை தடுக்க காவிரி பாய்ந்து கடலில் கலக்கவேண்டும்...ஆம் கடலில் கண்டிப்பாக கலக்கவேண்டும், ஒவ்வொரு நதியின் நீதியும் இயற்கையும் அதுதான், நீரை சேமித்தால் மட்டும் போதாது அது கடலிலும் கலக்க வேண்டும் அதுதான் சுற்றுச்சூழலை காக்கும், கடல்சார் உயிரினங்கள் முகத்துவாரத்தில் பல்கிப் பெருகும்.

சரி, காவிரியில் தண்ணீர் வந்தால் நமது பிரச்சனைகள் தீர்ந்து விடுமா? கண்டிப்பாக தீராது! அதன் பிறகுதான் கூடுதல் கவனத்துடன் செயலாற்ற வேண்டும்.

முதலில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து! காவிரியில் தண்ணீர் வரட்டும், பிறகு பேசலாம் நதிநீர் மேலாண்மை குறித்து!!!

ஏழை கடைமடை விவசாயி

வால்பாறை நீரார் அணை



வால்பாறை உச்சியில் உள்ள "நீரார் அணை" கட்டப்பட்டது காமராஜரால். ஆனால் இதனால் தமிழகத்திற்கு யாதொரு பிரயோஜனமும் இல்லை. ஏனெனில் அணை மதகுகள் திறக்கப்பட்டதும் தண்ணீர் கேரள எல்லையைத் தொட்டுவிடும். இந்தத் தண்ணீர் தான் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சிக்கான major source.

அதன்பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க-வின் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவியேற்ற கலைஞர் அவர்கள் அந்த அணைக்கு எதிர்ப்புறம் மலையைக் குடைந்து அந்த தண்ணீரை சோலையாறு அணைக்கு கொண்டு செல்ல திட்டம் தீட்டி அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடர்ந்தார். 20-அடிக்கு 20-அடி என்ற அளவில் "D" போன்ற அமைப்பில் 8.5 கி.மீட்டர் தூரத்துக்கு ஒரே நேர்கோட்டில் வெட்டப்பட்ட குகைக் கால்வாய் இது. பராமரிப்பு பணிகளுக்காக இந்த குகைக்குள் முழு 8.5 கி.மீட்டருக்கும் இன்றும் டிராக்டரில் பயணிக்கிறார்கள்.

அடுத்து பேரறிஞர் மறைய முதல்வராக கலைஞர் பதவியேற்க, சாதிக்பாட்சா அவர்கள் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்து இத்திட்டத்தை முடித்து வைத்தார். கலைஞர் திறந்து வைத்தார். இந்த காலகட்டம் 1968 முதல் 1972 வரை ஆகும்.

இந்தத் தண்ணீர் மலைக்குகையை விட்டு வெளியேறிய பின்னர் அதே பாதையில் "நீர் மின்சாரம்" உற்பத்தி செய்யப் படுகிறது. அதுதான் "காடம்பாறை நீர் மின் உற்பத்தித் திட்டம்" ஆகும். இதுவும் தி.மு.க தான் திட்டமிட்டு நிறைவேற்றியது. பின்னர் சோலையார் அணையிலிருந்து மலைப் பகுதியில் திறந்த வெளிக் கால்வாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு ஆழியாறு அணையை சென்றடைகிறது. இதன்மூலம் தான் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பகுதிகள் பாசன வசதி பெற்றன. இது வரலாறு.

தி.மு.க-வினருக்கே இது புதிதாகத் தோன்றலாம். பதிவில் சொன்னபடி இதுதான் உண்மை. கலைஞரின் சாதனைகள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப் படுகின்றன.

ஊட்டியில் தமிழகம் அணை கட்டுகிறது "கர்நாடகம் அதிர்ச்சி"

What's app லும் ,Facebook லும் அணை கட்டும்,
ஊட்டியில் தமிழகம் அணை கட்டுகிறது "கர்நாடகம் அதிர்ச்சி" என்று தகவல் என்று பொய்யாய் தகவல் பரப்பும் அறிவு ஜீவீகள் கவனத்திற்கு,,

இந்த காவிரி பிரச்னை, வறட்சி பிரச்னை போன்றவைகள் வந்தாலே, பல அறிவாளிகள், தமிழகத்து உரிமைகள் பறிபோவதை குறித்து பேசாமல், இங்கே கடந்த ஐம்பது ஆண்டுகளாக அணைகளையே கட்டவில்லை என்ற பொய்யை பரப்புவார்கள்.. அவர்களுக்கான உண்மை,

தமிழ் நாட்டில் உள்ள அணைகள் / பெரிய நீர் தேக்கங்கள் எண்ணிக்கை - 85
அரசர்கள் & ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவை -- 10
காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்டவை -- 14
50 ஆண்டுகால திராவிட கட்சிகள் ஆட்சியின் போது கட்டப்பட்டவை -- 61 (எங்கெல்லாம் அணை கட்ட வாய்ப்பிருக்கிறதோ, நீரை தேக்கும் வாய்ப்பிருக்கிறதோ அங்கெல்லாம் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துவிட்டது,, இயற்கையாய் அமைந்த அமைப்பை தாண்டி புதிதாக ஏதாவது புது விதத்தில் அணை கட்ட வேண்டிய தொழில்நுட்பம் வந்தால் வரவேற்போம் அறீவு ஜீவீகளே)

அதேபோல, நினைத்த இடத்தில் ஓர் அணையை கட்டிவிடமுடியாது. நீர், மலைகளிலிருந்து இறங்கும் இடத்திலோ, நீர்பிடிப்பு இடங்கள் என்று இயற்கையாக நிலவமைப்பு இருக்கும் இடத்திலோதான் அணைகளை கட்டமுடியும். பெரிய அணைகள் கட்ட வேண்டும் என்றால், மலைதொடர்களுக்கு இடையே இயற்கையாக நிலப்பரப்பில் அதற்கான அமைப்பு இருக்க வேண்டும். தமிழகத்தில் மேட்டூரை தாண்டினால், காவிரி பாயும் பகுதிகளில் அப்படியான பெரிய நிலபரப்பு கிடையாது.. சமவெளி பகுதிகளில் அணைகளை கட்டமுடியாது..

கர்நாடகா எப்படி ஹேமாவதி, கபினி என சில காவிரி துணையாறுகளில் அணைகளை கட்டியதோ, அதே போல, தமிழகத்தில் உள்ள காவிரி துணையாறுகளான பவானியிலும், நொய்யலிலும் , அமராவதியிலும் அணை கட்டியுள்ளது தமிழகம்..

மேலும், காவிரி தொடர்பான 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு, 1974-ஆம் ஆண்டு அதை அப்போது கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது புதுப்பிக்காததால் தான் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்கவில்லை என சிலர் உளறிக்கொண்டு இருகிறார்கள்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூட, காவிரி தொடர்பாக 1892 மற்றும் 1924 ல் போடப்பட்ட ஒப்பந்தங்கள் இன்றும் செல்லுபடியாகும். என்று தான் தீர்ப்பு வந்துள்ளது... செல்லுபடியாகும் ஒப்பந்தத்தை எதற்காக புதுப்பிக்கவேண்டும்?? சரியான கூமூட்டைகளாக இருக்கிறார்களே...

1989-90 களில், தமிழக முதல்வராக இருந்த கலைஞர், மத்தியில் விபி.சிங் அவர்கள் ஆட்சில், போராடி, காவிரி நடுவர் மன்றத்தை அமைத்து காட்டினார்.. தொடர்ந்து காவிரி நடுவர்மன்றத்தில் வாதாடி, 2007-இல் திமுக ஆட்சியின்போது, 192 டிஎம்சி காவிரி நீர் தமிழகத்திற்கு என்ற தீர்ப்பை பெற்றுத்தந்தார்... ஆனால், இப்போது, திமுக அரசு பெற்றுத் தந்த தண்ணீரின் அளவை, உச்ச நீதிமன்றம் குறைத்து விட்டதற்கு முழு காரணம் அதிமுக அரசு தான். வழக்கை சரியான முறையில் இவர்கள் நடத்தவில்லை, சொத்தையான வக்கீல்களை வைத்து, காவிரியில் தமிழகத்தின் உரிமைகள் அனைத்தையும் கெடுத்துவிட்டனர். தமிழகத்தை, தமிழக விவசாயிகளை வஞ்சித்துவிட்டனர்..

காவிரி டெல்டா

"டெல்டா" பெயர் காரணம் அறிந்தால் தடுப்பணை ஏன் கட்டவில்லை என்பது தற்க்குறிகளுக்கு தெரியும்.!

3000"அடி உயரத்திலிருந்து குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி... மேட்டூர் அணையை வந்தடையும் போது கடல்மட்டத்திலிருந்து சுமார் 400"அடி உயரமே!

ஆனால்! சுமார் 2600"அடி பள்ளத்தை கடக்கும் தூரம் 200"கிலோமீட்டர் கூட இல்லை
தலைக்காவிரிக்கும் மேட்டூருக்கும்

மேட்டூருக்கும் கடலில் கலக்கும் காவிரியின் முகத்தூரத்திற்கும் இடையே சுமார் 400"கிமீ தூரத்தை வெறும் 400"அடி கடல்மட்டத்தில் கடக்கும் சமதளபரப்பு என்பதால் தான் (சமவெளி) கடல்மட்மும் ஆற்றுப்படுகையும் கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பின் அப்பகுதிக்கு #டெல்டா பகுதி என்று உலகம் முழுவதும் அழைக்கப்படுகிறது.

கா(விரி) பெயர் காரணம் கூட
விரிந்து தமிழகத்தில் புரண்டு ஓடுவதால் தான் மேட்டூர்வரை கா(குறி) தான்
குறுகிய வழித்தடத்தில் புரண்டுவருவதால்

டெல்டா பகுதியில் தடுப்பணைகள் அதிகமாக கட்டி நீரைத்தேக்கினால், கடல்நீர் உட்புகுந்து கடலை ஒட்டிய விளைநிலங்கள் உவர்நிலங்களாக மாறும். படிப்படியாக கல்லணைவரை உவராக (உப்பு) மாறவும் கூடும் காலப்போக்கில்..

காமராஜர் அண்ணா கலைஞர் எம்ஜிஆர் ஜெயா
எல்லோரும் கட்டத் தவறியிருந்தாலும்..!

கரிகாலன் கட்டிய கல்லணைக்குப் பிறகு பலகோயில்கள் குளங்களை எழுப்பிய ராஜராஜன் ராஜேந்திர சோழ வம்சாவழியினர் கட்டியிருக்க மாட்டார்களா?

முல்லைப்பெரியார் உள்ளிட்ட பல அணைகளை கட்டிய ஆங்கிலேயர்களுக்கு தெரியாதா
கல்லணைக்கு பின் தடுப்பணைகள் எழுப்ப?

முகத்துவாரம் செல்லுங்கள்
டெல்டா என்றால் என்ன என்பதை தெரிந்து பேசுங்க..!
ஊட்டிமலை உயரத்தில் இருந்து குடகுமலை உயரத்திற்கு நீர்வழித்தடம் ஏற்படுத்தி
கர்நாடகம் நீர் சேமிக்கிறது என்ற கட்டுக்கதை போன்று
கதைவிட வேண்டாம்.!

விஸ்வேஸ்வரய்யா கஷ்டப்பட்டு கட்டிய காவிரி

பத்து வருடம் முன்பு பெங்களூருவில் நான் வேலை பார்த்த நிறுவனத்தில்,
27 ஊழியர்களுக்கு நான் மேலாளர். 27 பேரும் (ஆண் பெண் உட்பட முப்பது வயதுக்குக் குறைவான இளைஞர்/இளைஞிகள்.
7 கன்னடர்கள், 9 தமிழர்கள், 5 தெலுங்கர்கள், மீதி வடநாட்டவர்.
ஒரு நாள் coffee இடைவெளியில் பேசிக்கொண்டிருக்கும்போது, நந்தகுமார் என்ற இளைஞர் (கன்னடர்- மைசூர் - பிறந்து வளர்ந்தது - MBA பெங்களூரு பல்கலைக்கழகம்) சற்றுத் தயங்கி,
"சார், தப்பா நினைக்கக் கூடாது. நீங்கள் நியாயவாதி என்பதால் உங்களைக் கேட்கிறேன். கேட்கலாமா?" என்றார்.
அப்போது, இன்று போலவே காவிரி நீர்ப் பிரச்னை உச்சம்.
"கேளேன் நந்து" என்றேன். அவர் கேட்டது (ஆங்கிலத்தில்தான்)

"சார், கன்னட மக்கள் உழைப்பில், கர்நாடக அரசின் முதலீட்டில் விஸ்வேஸ்வரய்யா கஷ்டப்பட்டு கட்டிய காவிரியிலிருந்து தமிழக மக்கள் பங்கு கேட்பது எந்த விதத்தில் நியாயம் ?: என்று கேட்டார்.
""அதாவது KRS அணை பற்றிக் கேட்கிறீர்கள் இல்லையா" ? என்றேன்.

"அதுவும்தான்" என்றார். எனக்கு புரை ஏறிவிட்டது.
"காவிரியை விச்வேஸ்வரய்யா கட்டினாரா?" என்றேன்.

அவர் குழப்பத்துடன் "பின்னே" என்றார்.

அவரிடம் இருந்த குழப்பமே, மீதி இருந்த ஆறு MBAக்களிடமும் இருந்தது.
நான் உடனே சொன்னேன், "நந்து, இதற்குப் பதில் பின்னால் சொல்கிறேன். முதலில் உங்களுக்கு அரை நாள் விடுமுறை தருகிறேன். உங்கள் வேலையை நான் செய்து கொள்கிறேன். நீங்கள் கூகிள் இல் உட்காருங்கள். நான் இப்போது எழுதிக்கொடுக்கும் பத்து வார்த்தைகளைத் தேடி, விக்கிபீடியாவில் அவை எல்லாம் முழுதாகப் படித்து விட்டு, மாலை என்னிடம் வரவேண்டும்" என்றேன்.
"சரி சார்" என்றார். நான் எழுதிக் கொடுத்தேன்.
Cauvery River, #Chola Kingdom, Kallanai, #KarikaalChola, Raja Raja Chola, Tanjore, Coorg, Upper Riparian State, Lower Riparian State, KRS Dam

மாலை தொங்கிப் போன முகத்தோடு வந்தார். "எல்லாம் படித்து விட்டேன். நீங்கள் சொல்ல ஏதும் இல்லை சார். சாரி" என்று சென்று விட்டார்.

"ஒரு நிமிடம்.... நந்து, நீங்கள் படித்ததையெல்லாம் உங்கள் மீதி நண்பர்களுக்கும் சொல்லுங்கள்" என்றேன்.
நான் மேலே சொன்னதை நம்புபவர்கள் நம்புங்கள். நம்பாதவர்கள், கர்நாடகாவில் யாரிடமாவது காவிரி பற்றிப் பேசிப் பாருங்கள்.

-----
நிறைய பேருக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை.
குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்கிருந்து நேரடியாக ஓடி வந்து தமிழகத்தின் வழியாக ஓடிப்போய் கடலில் கலந்துவிடுவது போலவும், அப்படி கடலில் கலக்க விட்டுவிட்டு ஏதோ கர்நாடகக்காரன் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரில் பங்கு கேட்டு தமிழகம் தகராறு செய்வது போலவும் சிலர் பேசிட்டு இருக்காங்க.

அவங்க பேசுவதை பார்த்தால் காவிரி ஆறு உற்பத்தியாகி 200 ஆண்டுகள்தான் ஆனதுபோல இருக்கு.
ஒரு விஷயம் அவுங்களுக்கு புரியவே இல்லை, பூகோள ரீதியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நதி கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக ஓடி கடலில் கலந்துகொண்டுதான் இருந்தது.
அப்போது காவிரி டெல்டாவில் முப்போகம் விவசாயம் நடந்துகொண்டேதான் இருந்தது.

ஆனால் பிரச்சனை ஆரம்பித்ததே 1932ல் காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டப்பட்ட பிறகுதான்.
அதுவரை தடையின்றி ஓடிக்கொண்டிருந்த நதி காவிரி டெல்ட்டாவை தாண்டி தினமும் பல மில்லியன் லிட்டர் தண்ணீரை கடலுக்குள் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டே இருந்தது.

KRS அணை கட்டப்பட்ட பிறகு காவிரியில் ஒரு சொட்டு நீர்கூட வர முடியவில்லை. காரணம் காவிரியை தடுத்து கட்டப்பட்ட KRS அணையில் நீர் அடைபட்டது.
அந்த அணை நிரம்பும் தருவாயில் உபரி நீர் மட்டும் வெளியேறிக்கொண்டிருக்கும். அதாவது இயற்கையான போக்கில் ஓடின நதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
(KRS அணையை தொடர்ந்து கபினி,ஹேமாவதி,ஹாரங்கி அணைகள் கட்டப்பட்டபோதும் அப்படித்தான்)
நம்முடைய நதி நீரை கேட்பது நமது உரிமை.

சிலர் அதை என்னமோ யாசகம் போல நினைத்துக்கொண்டு மழை நீரை சேகரிக்க கூடாதா? கடல் நீரை குடி நீராக்கி குடிக்க கூடாதா என்கிறார்கள்.
அவர்களுக்கு ஒன்று புரியவில்லை.

நதி நீர் என்பது நிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல, கடலுக்கும் சொந்தமானது. நதி நீர் கடலில் கலந்தேயாக வேண்டும். அது கட்டாயம். அதுதான் இயற்கை.

புவியியல் வல்லுந‌ர்களிடம் கேட்டுப்பாருங்கள் இதற்கான விளக்கத்தை தருவார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் சீனா மஞ்சளாற்றின் குறுக்கே உலகின் மிகப்பெரிய ஒரு அணையை கட்டியது.
அந்த தண்ணீரை பாலைவனத்தின் பக்கம் திருப்பி பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை சோலைவனமாக்கியது. ஆனால் அந்த ஆறு கடலில் சேரும் பகுதியில் நதி நீர் ஓடாததால் உப்பு நீர் நிலத்தடி நீருக்குள் ஊடுறுவியது. அந்த பகுதி கடற்கரையின் உப்பு அளவு அதிகரித்தது.
கடற்கரையோரம் இருந்த மஞ்சள் ஆறு பாசன பகுதிகள் பாலைவனமானது. மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த சீனா தற்போது அதை சரி செய்ய முயன்று வருகிறது.

அதுபோல காவிரி நீர் கடலில் கலக்காவிட்டால் காவிரி கழிமுக மாவட்டங்கள் பாலைவனமாகும்.
நம் மாநிலத்திற்குள் அணைகளே கட்டக்கூடாது என நான் சொல்லவில்லை. அணைகள் கட்டி அந்த தண்ணீர் ஏரி, குளங்களில் சேமிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கட்டாயம் கடலில் கலந்தேயாக வேண்டும்.

அணைகள் பற்றி பேசுவோம். கர்நாடகாவிலிருக்கும் KRS, கபினி, ஹேரங்கி, ஹேமாவதி அணைகளில் தேக்கப்படும் தண்ணீரை நம் மேட்டூர் ஸ்டேன்லி அணை என்ற ஒரு அணையில் தேக்கிவிடலாம். இந்த 5 அணைகளில் மேட்டூர் அணைதான் மிகப்பெரியது.
கர்நாடகத்திலிருக்கும் அனைத்து அணைகளும் மலைப்பாங்கான மேட்டு நிலத்தில் இருக்கும் அணைகள்தான்.
ஆனால் தமிழகத்தில் மேட்டூருக்கு கீழே அப்படிப்பட்ட நில அமைப்பு இல்லை.

காவிரி டெல்டா மாவட்டங்கள் சமவெளிப்பகுதிகளை கொண்டது. அதில் கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் ஸ்டேன்லி போன்ற அணைகளை கட்ட முடியாது ஆனால் சிறு சிறு தடுப்பணைகளை மட்டும் கட்ட முடியும்.
இது பூகோள ரீதியில் உள்ள நீர் வடி நிலம், டெல்டா சமவெளி.

சிலர் கல்லணை மட்டும் டெல்டா பகுதியில் இல்லையா என கேட்கலாம்.
ஆம். கேள்வி சரிதான்.
கல்லணை ஒன்றும் நீங்கள் நினைப்பதுபோல் டி.எம்.சி கணக்கில் நீரை தேக்கி வைத்து வறட்சி காலத்தில் திறந்துவிட்டு பயன்படுத்தும் அணை கிடையாது. அது ஓடும் காவிரியின் குறுக்கே தண்ணீரை தடுத்து நிறுத்தி பல சிறு சிறு வாய்க்கால்களுக்கு பிரித்து அனுப்பும் ஒரு மிகப்பெரிய மதகு போன்றது. கல்லணையில் ஒரு டி.எம்.சி நீரை கூட தேக்க முடியாது.

காவிரி நதியை பொறுத்தவரை மேட்டூர் ஸ்டேன்லி நீர் தேக்கம் ஒன்று மட்டுமே போதும்.
அதிலிருந்து வரும் தண்ணீரை சேமிக்க முயற்சிக்கலாம்.
நிறைய சிறு சிறு தடுப்பணைகள் கட்டி நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்தலாம், அந்த நீரை ஏரி, குளங்களில் சேமிக்கலாம்.

ஆனால் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட கடலுக்கு விடமாட்டேன் என நாம் நினைத்தால் இயற்கை நம்மை பழிக்கும்.
டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய அணையை கட்டுவேன் என யாராவது சொன்னால் அது கற்பனையாகத்தான் இருக்கும்.

உண்மையில் காவிரி டெல்டா சமவெளியில் பெரிய அணைகளை கட்ட முடியாது. சிறு, குறு தடுப்பணைகளை மட்டுமே கட்ட முடியும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிறைய தடுப்பணைகளை கட்டிக்கொள்ளாதது நம்முடைய தவறுதான்.

தர்க்க ரீதியில் தவறுதான் ஆனால் இயற்கையை நாம் மாற்ற முயற்சிக்கவில்லை என்ற வகையில் அது சரி.

இதற்காக நமக்கு காவிரியில் உரிமை இல்லாதது போலவும், கர்நாடகாவை தொந்தரவு செய்வது போலவும் யாரும் பேசாதீர்கள்.

சர்வதேச நதி நீர் தாவா சட்டத்தின்படி ஒரு நதி மீது அதிக உரிமை அதன் கீழ் பகுதியில் இருப்பவர்களுக்குத்தான்.

நமது உரிமையைத்தான் கேட்கிறோம் பிச்சை அல்ல. நமது அரசியல் சண்டைக்காக நமது உரிமையை ஏளனப்படுத்தாதீர்கள்!
முடிவாக ஒன்று. காவிரியில் நமக்கு இருக்கும் உரிமை போன்றே வங்கக்கடலுக்கும் உரிமை இருக்கிறது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நீரை வங்கக்கடலும் குடித்து வந்திருக்கிறது. அதை கர்நாடகாவும், நாமும் முழுவதும் எடுத்துக்கொண்டால் இயற்கைக்கான பங்கை யார் கொடுப்பது?

வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா - இலை மலர்ந்தால் ஈழம் மலரும்

வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா காவிரி பிரச்சனை இந்தளவுக்கு சென்றிருக்காது, தண்ணீர் தானா வந்திருக்கும் என அரைவேக்காட்டுத்தனமா கூவுறவிங்க யாருன்னா பார்த்தா, ஒரு காலத்தில் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று அம்மையாருக்கு சாமரம் வீசிய சில்லறைகள்.

வீரப்பனை சட்டத்தின் முன்தான் நிறுத்தவேண்டுமே தவிர அவர் உயிருக்கு காவல்துறையால் எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்தவர் கலைஞர். 

வீரப்பனை கொன்று பிடிக்கவேண்டும். அதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் என காவல்துறைக்கு உத்தரவிட்டு அதை செய்தும் காட்டியவர் ஜெயலலிதா. 

அது எப்படிங்கடா ஒரு பக்கம் வீரப்பனையும் தூக்கிப்பிடிக்க முடிகிறது. இன்னொரு பக்கம் ஜெயலலிதாவையும் வாழ்த்திப்பேச உங்களால் முடிகிறது..? இது என்ன எழவு நிலைப்பாடு..?

காவிரி விவகாரத்தில் திமுக துரோகம் இழைத்துவிட்டது...

காவிரி விவகாரத்தில் திமுக துரோகம் இழைத்துவிட்டது...

சரி, இப்போது எதற்கு போராட்டம் நடைபெறுகிறது...? 

காவிரி மேலாண்மை மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சொன்னது யார்...?

உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்றம் ஏன் அமைக்க சொல்லியது...?

காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பில் மேலாண்மை வாரியம் அமைக்க சொல்லியதால்.

காவிரி நடுவர் மன்றம் என்ன, எப்போது இறுதி தீர்ப்பு வழங்கியது...?

திமுக ஆட்சியில் 2007 பிப்ரவரி 5ல் 192 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். அதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தையும் அமைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

காவிரி நடுவர்மன்றம் இடைக்கால தீர்ப்பு என்ன, எப்போது வழங்கப்பட்டது..?

திமுக ஆட்சியால் 1991 ஜூன் 25ல்
205 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
(1991 ஜூன் 24 ஜெயலலிதா முதல்முறையாக முதல்வராக பதவி ஏற்பு.. மறுநாள் தீர்ப்பு. இதில் அதிமுகவுக்கு வேறு எந்த சம்பந்தமும் இல்லை)

காவிரி நடுவர் மன்றம் ஏன் இடைக்கால தீர்ப்பை வழங்கியது...?

நடுவர் மன்றத்தில் வழக்கு முடிய நீண்ட காலம் ஆகும். எனவே இடைக்கால நிவாரணமாக ஒரு ஏற்பாடு வேண்டும் என திமுக ஆட்சியில் வழக்கு தொடுக்கப்பட்டதால். அதனால் நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பை வழங்கியது.

சரி, அந்த காவிரி நடுவர் மன்றம் எப்போது, யாரால் அமைக்கப்பட்டது..?

திமுக ஆட்சியில் 1990 ஜூன் 2ம் தேதி, மத்தியில் திமுக கூட்டணி அங்கம் வகித்த தேசிய முன்னணி அரசால் அப்போதைய பிரதமர் வி.பி.சிங் அவர்களால் அமைக்கப்பட்டது.

சரி... இப்ப சொல்லு இதில் திமுக எங்கே துரோகம் இழைத்தது...?

அன்று திமுகவால் அமைக்கப்பட்ட நடுவர்மன்றத்தால் தான் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் அதை உறுதிப்படுத்தி உச்சநீதிமன்ற தீர்ப்பும் வந்துள்ளது...

காமராஜர் நல்லாட்சி - காமராஜர் ஏன் தோற்றார்.

காமராஜர் நல்ல ஆட்சியைத்தான் தந்தாரு... மக்கள் தோக்கடிச்சாங்க... ஆனா அதே தேர்தல்ல 51 காங்கிரஸ் ஆளுங்க ஜெயிச்சாங்க... அப்ப தப்பு யார் மேல? மக்கள் மேலயா இல்ல தோற்கடிச்ச திமுக மேலயா இல்ல காங்கிரஸ் மேலயா? இன்னொன்னும் சொல்லுறேன்...டவுசர் பயலுக காமராஜர புகழ்றது எல்லாம் திராவிட ஆட்சியாளர்களை குறை சொல்ல மட்டும்தானே தவிர அக்கறை அன்பு எல்லாம் சுத்தமா கிடையாது... ஏன்னா அதே காமராஜர எரிச்சி கொலை பண்ண முயற்சி செஞ்சவனுங்கதான் இந்த டவுசர் பயலுக... இத்தன நாளா அணை கட்டல அணை கட்டலன்னு சொன்னானுங்க... இப்ப ஆத்துமேல கட்டுனது எல்லாம் அணையான்னு கேட்குறானுங்க.... வரலாற்றை இரட்டிப்பாக்கி பொய் பிராடு பித்தலாட்டம் இதையே மூலதனமா கொண்டு விஷமத்தை பரப்பும் டவுசர்களா பெரியார் காலத்துலேயே எப்பேர்பட்ட எதிர்ப்பையும் சமாளித்து வளர்ந்த இயக்கம்டா... இது நவீன யுகம் உங்க பிராடு பித்தலாட்டம் எல்லாம் ரொம்ப நாள் தாங்காது...

உண்யையிலேயே இன்று வரும் வாட்சப் புரளிகளை போல காமராஜர் ஆட்சி பொற்கால ஆட்சி தானா. அப்படி இருந்திருந்தால் காமராஜர் ஏன் தோற்கடிக்கப்பட்டார்.

அதற்குமுன் அவர் தமிழினத்திற்கு எதிராக செய்த செயல்களை பட்டியலிட்டு விடலாம். 

1. அப்போதிருந்த மதராஸ் மாகாணம் என்ற பெயர் மாற்றப்பட்டு தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டுமென்ற கோரிக்கை பல நாட்களாக வைக்கப்பட்டு வந்தது. அதனை காமராஜர் எதிர்த்தார். அதற்கு அவர் கூறிய பதில் பெயர் மாற்றம் சிக்கலான ஒன்று. தமிழ்நாடு என்கிற பெயர் மற்றவர்களுக்கு எப்படி புரியும் என்பது தான். பின் 1967 ல் ஆட்சிக்கு வந்த அறிஞர் அண்ணாவின் ஆட்சியில் தான் தமிழ்நாடு என்ற பெயர் வைக்கப்பட்டது.

2. அவர் காலத்தில் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. வாரம் ஒருநாள் அரிசியை பார்ப்பதும் ஒருநாளுக்கு ஒருமுறை உணவு உண்பதுமே கஷ்டம் என்கிற சூழல் உருவானது. அப்போது நிருபர் கேட்டதற்கு (கோபத்திலோ ஏதோ ஒன்றிலோ) பக்தவச்சலம் எலிக்கறி கிடைக்கிறதே அதை சாப்பிட வேண்டியது தானே என்று கூறினார். அதை சத்தமில்லாமல் கடந்து சென்றார் காமராஜர்.

3. 1965 ல் இந்தி எதிர்ப்பு உச்சத்தில் இருந்த சமயத்தில் காங்கிரஸ் ஆட்சி தான். அவர் அதற்கு முன்னரே முதல்வர் பதவியை துறந்து விட்டு காங்கிரஸ் கட்சியை வளர்க்க சென்று விட்டார். பெரியாரும் சொன்னார். இந்த சிக்கலான நேரத்தில் நீங்கள் பதவியை துறப்பது நல்ல முடிவல்ல என்று. ஆனால் அவருக்கு அப்போது தமிழ்நாட்டின் நலனை விட கட்சியின் நலன் பெரிதாக தெரிந்தது.

4. அந்த சமயத்தில் கோட்டையை நோக்கி வந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது பக்தவச்சலம் தலைமையிலான அரசு. அப்போது காவல்துறை அமைச்சராக இருந்தவர் கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரரான கக்கன். நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு கொல்லப்பட்ட போது காமராஜர் இருந்தது அப்போதைய காங்கிரஸ் தலைவரான நிஜலிங்கப்பா வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில்.

5. காவிரி நீர் உற்பத்தி ஆகும் இடமான குடகுமலையில் உள்ள கபினி பகுதியை சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். அவர்கள் நாங்கள் தமிழ்நாடுடன் தான் இணைவோம் என்று கூறிய போது எங்கே இருந்தால் என்னப்பா எல்லாரும் இந்தியாக்குள்ள தான இருக்க போறோம் என்று கூறி பிரித்தவர் காமராஜர் தான். இதே பதில் தான் பல ஊர்களை கேரளத்திற்கு தாரைவார்க்கும் போது வந்ததும். இதற்கு மேல் ஆந்திரப்பிரிவினையின் போது தமிழகத்திற்கு சேர்ந்த திருப்பதியை ஆந்திராவிற்கு கொடுத்த போதும் வந்த பதிலும் இதேதான்.

6. கச்சத்தீவை கொடுத்தபோது காங்கிரஸ் தலைவராக இருந்தவரும் காமராஜர் தான். அது 1974 மற்றும் 1976 என்று இரு ஒப்பந்தங்களால் நிறைவேற்றப்பட்ட ஒன்று. அறிவுஜீவிகள் யாரும் 1975 ல் இறந்த காமராஜரால் எப்படி 1976 ல் கொடுக்கப்பட்ட கச்சத்தீவிற்கு பொறுப்பாக முடியும் என்று கேட்க வேண்டாம். முதல் ஒப்பந்தம் போடப்பட்ட போது காங்கிரஸ் தலைவராக இருந்தவர் காமராஜர் தான்.

இன்னும் உள்ளன. ஆனால் இதுவே உங்கள் தேடலை தூண்டும் என்ற நம்பிக்கையில் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்.

காமராஜர் தலைவர் தான் மிகப்பெரிய தலைவர் தான். ஆனால் அவர் தமிழினத்தை விட இந்திய தேசியத்தை பெரிதாக எண்ணிய தலைவர். அவர் ஒன்றும் புனிதரல்ல. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல. அவர் மனிதர் தான் விமர்சனத்திற்கு உட்பட்டவர்தான்.

இனியாவது காமராஜர் காரில் சென்று கொண்டிருந்த போது வகையான வாட்சப் புரளிகளுக்கு ஆர்கசம் அடையாமல் உண்மையை தேடுங்கள். அதுதான் வரலாறை தெரிந்து கொள்ள ஒரே வழி...