Tuesday, May 22, 2018

அரசுகளும் அதன் ஆயுதம் தாங்கி அமைப்புகளும் யாருக்கானவை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தின் நூறாவது நாளை உயிர்க்காவு வாங்கி நிறைவு செய்திருக்கிறது லாபவெறி முதலாளித்துவம்.
உண்மையில், அரசுகளும் அதன் ஆயுதம் தாங்கி அமைப்புகளும் யாருக்கானவை என்பதை, பொட்டிலடித்துக் கற்பித்திருக்கிறது தூத்துக்குடி.
அரச பயங்கரவாதம்,லாக்கப் கொலைகள்,துப்பாக்கிச் சூடுகள் உள்ளிட்டவை தலித் மக்களுக்கே அதிகம் பரிச்சயமானவை.
பரமக்குடியும், தாமிரபரணியும் அழியாது நினைவில் நிற்பவை.
பொதுச் சமூகமோ, முன்னணி ஹீரோக்கள் விறைப்பான காவல் அதிகாரிகளாக நடித்து, 'நான் போலிஸ் இல்ல பொறுக்கி'.. என வசனம் பேசுவதைக் கண்டு, கைதட்டிச் செல்வதாகவே இருந்தது.
இப்போது, காவல் துறை பொதுமக்களைச் சுட்டுத் தள்ளிய பிறகு,ஆவேசமும் ஆற்றாமையுமாக நிற்கின்றது.
ஆட்சி மட்டுமே பிரச்சினை என்பது போல பார்வைகளும் முன் வைக்கப் படுகின்றன.
ஆனால், கவனிக்க வேண்டியது காவல்துறை எனும் இயந்திரம் அடிப்படையிலேயே வன்முறைக் கருவியாகவே நிறுவப் பட்டது என்பதைத் தான்.
மேலும், வெறும் காவல்துறை எதிர்ப்புணர்ச்சியாக இதைக் குறுக்கிக் கொள்வது கூட போதாமை தான்.
முதலாளித்துவமும், பார்ப்பனீயமும், ஹிந்துத்துவா அடிப்படைவாத அரசியல் சக்திகளும் கைகோர்த்து இயங்குவதைக் கற்பிக்க வேண்டும்.
குறிப்பாக, தூத்துக்குடி தாக்குதல் என்பது, ஏற்கெனவே தமிழகம் சந்தித்து வரும் பல்முனைத் தாக்குதல்களின் ஒரு பகுதி மற்றும் நீட்சியே என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நிச்சயமாக, நாம் ஒரு இருண்ட காலத்தில் இருக்கிறோம்.
இதை, எப்படிக் கடக்கப் போகிறோம் என்பதில் தான் தமிழகத்தின் எதிர்காலம் இருக்கிறது.

அராஜகத்தை, அத்துமீறலை, துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கு காரணம் தேடி அலைவதை தொடர்ந்து கொண்டிருக்கிறது நம் ஜனநாயக அரசு

வழக்கறிஞர் சு. கலைச்செல்வன்
இராமமூர்த்தியின் பதிவு #வதந்திகளுக்கு_முற்றுப்புள்ளிவையுங்கள்..
காலையில் பத்து மணி அளவில் போராட்டக் குழுக்கள் அனைவரும் தத்தமது போராட்டக் களத்திலிருந்து மிகவும்அமைதியான முறையில் ஒருங்கிணைந்து மாதா கோவில் வளாகத்தில் கூடிய பிறகு அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி புறப்பட்டோம்.. மாதா கோவிலுக்கு செல்லும் முன்னரே நாங்கள் சென்ற புதுத்தெரு போராட்டக் குழுவை தடுக்க முற்பட்டனர்.. வாக்குவாதம் செய்து முன்னேறினோம்..
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியெங்கும் பல காவல்துறை வாகனங்களை வைத்து தடுக்க முற்பட்டனர்.. அனைத்து தடைகளையும் தகர்த்துக் கொண்டே முன்னேறி சென்றோம் இளைஞர்கள், போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பொதுமக்கள் அனைவரும்.. முக்கியமாக சில திருநங்கைகள் உட்பட..
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் பாதையில் இருக்கும் பாலத்திற்கு கீழே முதன்முதலில் பெட்ரோல் குண்டுகளை வீசியது காவல்துறை.., அதையும் மீறி முன்னேறினோம்.. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்ணீர் புகை குண்டுகளை தொடர்ச்சியாக வீசியதும் காவல்துறையே..
அதையும் மீறி போராட்டக்காரர்கள் கலெக்டர் ஆஃபீஸ் உள்ள போயிட்டாங்க., போனது மட்டும் தான் உண்மை, உள்ள ஒரு மிகப்பெரிய படையே காத்திருந்தது.. அங்கு கொளுத்தப்பட்டதாக கூறப்படும் வேன் மக்கள் கொளுத்தியது நிச்சயமாக அல்ல.. அரசே திட்டமிட்டு கலவரத்தை உண்டாக்க இவ்வாறு தீ வைத்துவிட்டு, துப்பாக்கி சூடு நடத்துவதற்கான காரணமாக அதை கூறி உயிர்ப்பலிகளுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறது கையாலாக அரசு..
எத்தனை பெட்ரோல் குண்டுகள், எத்தனை கண்ணீர் புகை குண்டுகள், எத்தனையெத்தனையோ துப்பாக்கிச் சூடுகள் அத்தனையும் தாண்டி மீண்டும் மீண்டும் முன்னேறி உள்ளே சென்று மாண்டு மாண்டு வெறும் உடலாய் மட்டும் திரும்பினர் நம் உறவுகள்..
அவர்களிடம் இருந்த வலி, வேதனை, கையறு நிலை, ஆதங்கம், வெறுப்பு, ஸ்டெர்லைட்டை இழுத்து மூடியே ஆகனும்கிற வெறி ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் கடைசி சொட்டு இரத்தம் வரை ஊறியிருந்ததை பார்க்க முடிந்தது..
பெண்களின் பாதுகாப்பு கருதி பெண்களை மட்டும் பாதுகாப்பாக திருப்பி அனுப்பினர்.. நாங்கள் திரும்பி வரும் வழியில் சந்தித்த அடக்குமுறைகளோ உட்சபட்சம்.. இரண்டு கிலோ மீட்டரில் சேர வேண்டிய இடத்திற்கு 8கிலோமீட்டர் அளவில் சுற்றி வந்தும், மெயின் ரோட்டிற்கு வந்தபோது, யதேச்சையாக வருவது போல் வந்து பெண்கள் என்றும் பாராமல் (வயதான பெண்கள், குழந்தைகள் உட்பட) கண்மூடித்தனமாக அடித்து விரட்டிய ஏவல்துறை..
இன்னும் அவர்களின் அராஜகத்தை, அத்துமீறலை, துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கு காரணம் தேடி அலைவதை தொடர்ந்து கொண்டிருக்கிறது நம் ஜனநாயக அரசு..
மாண்டு போவோம், ஆனால் மீண்டு வருவோம்.. உங்கள் அடக்குமுறையாலும் ஒடுக்குமுறையாலும் எங்கள் உயிரை மட்டும் தான் எடுக்க முடியும்.. எங்களின் சந்ததியை காக்கும் போராட்ட வெறியை சிறு துளி கூட உங்களால் சீர்குலைக்க முடியாது..
பிகு: துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகு நடந்த வாகனங்கள் மீது கல்லெறிந்தது உண்மைதான்.. அப்புறம் நீ துப்பாக்கி குண்டால எங்க மார்பை துளைச்சா உனக்கு பூவா பரிசளிப்போம்..

Monday, May 21, 2018

இனி புலிகளின் உண்மை முகத்தை கிழிக்கும் வகையில் நிச்சயம் புத்தகம் வரும், நிறைய வரும்

நாம் நிச்சயம் திமுக அல்ல, ஆனால் ஈழவிவகாரங்களில் திமுகவினை சாடுவது சுத்தமாக ஏற்றுகொள்ளமுடியா விஷயம் என்றுதான் பதிவுகளில் சொன்னோம்

நம் பதிவுகளால் பலருக்கு புதிய கோணம் கிடைத்ததாக சொல்கின்றார்கள், அப்படி யாரும் பெற்றிருந்தால் நல்லது

இத்தேசத்தின் குடிமகனாக என்ன சொல்லவேண்டுமோ அதனைத்தான் சொன்னோம்

சிலர் நீ இதனை புத்தகமாக எழுதினால் என்ன? என கேட்கின்றார்கள், இன்றல்ல 2010லே எழுதும் விருப்பம் இருந்தது

ஆனால் அப்படி எழுதினால் உன் வீட்டின் முன் தீகுளிப்பேன் என பகிரங்கமாக மிரட்டினார்கள். கொளுத்துவோம் கொல்வோம் என்றார்கள்

நாம் என்ன? ஆசான் Pa Raghavan என்பவரே பிரபாகரனை பற்றி எழுதிய தொடரை சில சக்திகள் நிறுத்த செய்தன, அவ்வளவு இறுக்கம். அப்படி ஆசான் என்ன சொன்னார் என்றால் பிரபாகரன் இறந்துவிட்டார் என்றார்

அதற்குத்தான் அந்த குதி குதித்தார்கள்

இப்பொழுது எல்லாம் தளர்ந்துவிட்டது. புலிகள் மீதான பிம்பம் சரியதொடங்கிற்று, சைமனே விரைவில் அடிவாங்குவார் போல் தெரிகின்றது

இனி புலிகளின் உண்மை முகத்தை கிழிக்கும் வகையில் நிச்சயம் புத்தகம் வரும், நிறைய வரும்

வாய்பிருந்தால் ஆசான் Pa Raghavan கூட‌ எழுதலாம்.

ஆனால் நிச்சயம் புலிகளையும் இங்குள்ள போலிதமிழுணர்வு இம்சைகளையும் கண்டித்து புத்தகம் வரவேண்டும்

உள்ளே இருக்கின்றானே பேரரிவாளன், அவர் 1990ல் என்ன செய்தார் தெரியுமா?

சாத்தானின் படைகள் (the satanic force) என நளியின் அண்ணன் கும்பலோடு இந்திய ராணுவத்தினை இழித்து இங்கே புத்தகம் அச்சிட்டவர், அந்த கும்பலில் அவரும் ஒருவர்

அப்படிபட்ட கொடூர புத்தகம் வந்த நாட்டில் இன்னும் புலிகளின் கொடுமையினை கண்டித்து புத்தகம் வரவில்லை என்பதுதான் கொடுமை

புலிகளை விமர்சித்து வந்த "முறிந்த பனை" எழுதிய ராஜினியினை கொன்ற புலிகள், இந்திய அமைதிபடைக்கு எதிராக அவசரமாக புத்தகம் எழுதியது மாபெரும் அயோக்கியதனம்

தங்களுக்கு எதிராக யாரும் எழுத கூடாது, ஆனால் நாங்கள் யாரையும் எழுதுவோம் என்ற தலைக்கணம் பிடித்த நிலையில் இருந்தனர் புலிகள்

அந்த அளவு இங்கு ஒரு இறுக்கத்தை தேசவிரோதிகள் உருவாக்கி வைத்திருக்கின்றார்கள், இனி அது தகர்ந்து
ஒன்றல்ல பல வரட்டும்

"அரக்கர் கூட்டம்", "திருந்தாத ஜென்மம்", "சயனைடு கோஷ்டி", "ஆயுதத்தை காதலித்த மனநோயாளி" என ஏகபட்ட தலைப்புகளில் வரட்டும்

ஒன்றல்ல பல வரட்டும், தும்பி வைரஸ்ஸ்கள் அதனால் முற்றிலும் அழியட்டும்,

பிள்ளை பிடிகாரர் = LTTE


Drawing by Vanni IDP school student showing herself (in yellow) escaping from pillai piddikarar (LTTE recruiters in black) amidst shelling from the Sri Lanka army through huts towards (Pudu)mathalan beachfront area.

https://link.springer.com/article/10.1186/1752-4458-4-22 - "Collective trauma in the Vanni- a qualitative inquiry into the mental health of the internally displaced due to the civil war in Sri Lanka", Daya Somasundara, 28 July 2010.



காத்தாங்குடி தாக்குதல் தெரியுமா

1990 ஆக் 3,
காத்தாங்குடி மக்கள் இரவு தொழுகையான இஷா தொழுகையில் ஈடு பட்டுகொண்டிருக்கும் போது விடுதலை புலிகள் நுழைந்து சிறுவர்கள் பெரியவர்கள் என ஈவு இரக்கும் இன்றி 
கண்மூடித்தனமான 150 பேர்களை சுட்டு படுகொலை செய்தனர்

புலிகளுக்கும் மோசே தயானுக்கும் என்ன சம்ப்ந்தம்



மோஷே தயானின் பிறந்த நாள் இன்று, ஆச்சரியமாக இதே நாளில்தான் புலிகளும் முடிந்ததாக அறிவிக்கபட்டது
புலிகளுக்கும் மோசே தயானுக்கும் என்ன சம்ப்ந்தம் என்றால் கண்டிப்பாய் உண்டு
1983ல் ஈழபோராளிகளுக்கு பயிற்சி என்றவுடன் புலிகளை தவிர எல்லோரும் அராபத்திடம் பயிற்சிபெற பாலஸ்தீனம் சென்றனர், உமா மகேஸ்வரன், பத்மநாபா எல்லாம் அவ்வகை
புலிகள் இலங்கையிலே கண்ணில்பட்டோரை கொன்று பயிற்சி என சொல்லிகொண்டிருந்தனர். இந்தியா இதன் பின்பே மொத்தமாக எல்லோரையும் அழைத்து பயிற்சி அளித்தது எனினும் பாஸ்தீன அராபத் என்பவரே முதலில் ஈழபோராளிகளுக்கு பயிற்சி அளித்தவர், பயிற்சி கொடுத்த இடம் லெபனான்
இலங்கை அரசு சாமான்யபட்டதா? அவர்களுக்கு அன்று அதுலத் முதலி என்றொரு சூரர் இருந்தார் அவர் சொன்னார இவர்களுக்கு பாலஸ்தீனம் என்றால் நமது தேர்வு இஸ்ரேல் தவிர யாராக இருக்க முடியும்?
இஸ்ரேல் சிங்கள உறவு வலுவடைந்தது. சிஐஏ சிரித்துகொண்ட்டிருந்தது அதுவரை லண்டனில் பாடம் நடத்தி வெள்ளைக்கார மனைவியுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த பாலசிங்கம் இனி நானே புலிகளின் வழிகாட்டி என வந்து அமர்ந்தார்
பாலசிங்கம் ஏன்? எப்படி வந்தார் என தெரியாது, அவர் வந்தபின்பே புலிகளின் போக்கு மாறிற்றி. இந்தியா அவர்களின் எதிரியானது. இதனால்தான் பாலசிங்கத்தை இந்தியா கடைசிவரை உள்ளே விடவில்லை
நம்புவீர்களோ இல்லையோ நடந்தது இதுதான், நடந்த ஒவ்வொன்று இஸ்ரேலுக்கு சாதகமனது
பாலஸ்தீனில் பயிற்சி பெற்ற ஒவ்வொருவரும் புலிகளால் கொல்லபட்டனர், உமா , பத்மநாபா என எல்லோரும் வரிசையாக அனுப்பிவைக்கபட்டனர். உச்சமாக இஸ்ரேல் எதிரியான ராஜிவிம் அனுப்பி வைக்கபட்டார்
இதனால்தான் கடைசி வரை பிடல் காஸ்ட்ரோ புலிகளை போராளி என்று சொல்லவே இல்லை. அவர் புலிகளை கணக்கில் வைக்கவே இல்லை
இஸ்ரேலின் கணக்கு துல்லியமானது. ஒருவேளை இலங்கையில் பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் வென்றிருந்தால் அவர்கள் பாலஸ்தீனத்தை ஆதரிப்பார்கள், அது சிக்கல். முளையிலே கிள்ள வேண்டும்
ராஜிவ் உயிருக்கு ஆபத்து என அராபத் அலறியதும் இதனாலே
ராஜிவின் மரணத்திற்கு பின்பே இந்தியா இஸ்ரேலுடன் நெருங்கியது,
வெளியே பார்த்தால் புலிகள், சிங்களம், இந்தியா என்றிருந்த போராட்டத்தில் உள்ளே உளவுதுறை சண்டைகளும் உண்டு
இப்படியாக பாஸ்தீன ஆதரவு போராளி எல்லாம் புலிகளால் தொலைக்கபட்டனர், புலிகள் விடுவார்களா?
அந்த அதுலத் முதலியினையும் கொன்றதும் இஸ்ரேலுக்கு அப்செட், எனினும் இனி பாலஸ்தீன ஆதவாளர்கள் யாரும் களத்தில் இல்லை என்பதால் அமைதிகாத்தது
புலிகள் இருந்தாக வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு இருந்தது, அமெரிக்காவிற்கு இருந்தது, அதைகாட்டி ஆயுதம் விற்கும் வியாபாரம் இஸ்ரேலுக்கும் இருந்தது இதனால் இந்தியா ஈழத்தை விட்டு ஒதுங்கியதும் இஸ்ரேல் அமைதிகாத்தது
2005களில் இனி புலிகள அகற்றபட வேண்டும் என மேற்குலகம் தீவிரமாக இறங்க புலிகளை ஒழிக்க பலநாட்டு தளபதிகள் களத்தில் இறங்கினர். அதில் இஸ்ரேலிய பாணி வித்தியாசமாயிருந்தது
சிங்கள தளபதிகளுக்கு புது கோணத்தில் பாடம் நடத்தினார்கள்
அதுவரை சிங்களம் தெற்கே இருந்து "பாதை போ பாதை போ பயிற்றங்காய் பறியாமல் போ" என செல்லும் புலிகள் வந்து தடுப்பர் நேருக்கு நேர் சண்டையிடுவார்கள் ராணுவம் திரும்பும்
இஸ்ரேலியர் சுற்றி வளைத்து அடிக்கும் நுட்பத்தை சொல்லிகொடுத்து புலிகளை கலைத்து அடிக்க சொல்லிகொடுத்தனர்
குறிப்பாக ஆழ ஊடுருவும் அணி இஸ்ரேல் பாணி, ஒரு நபர் ஒரே ஒரு நபர் புலிகள் கட்டுபாட்டு பகுதியில் ஊடுருவுவார் , தகவல் அனுப்புவார் கொலை செய்வார் இன்னும் ஏராளம்
ஆனால் செய்தது யார் என தெரியாது, தடயம் இருக்காது. புலிகளுக்குள்ளே சண்டை வரும். சந்தேகம் மேலோங்கும் தங்களுக்குள்ளே எதிரி இருப்பதாக நினைத்து உள்ளுக்குள் மோதி பலமிழப்பர்
இவ்வகை ஆட்டமும் இறுதி யுத்தத்தில் நடந்தது.
கவனியுங்கள் 2006ல் இருந்து புலிகளை மூன்றுபக்கம் சுற்றி அப்படியே முள்ளிவாய்க்காலை நோக்கி நகர்த்தி கடைசியில் மண்டையில் போட்ட யுத்தம் அது, அற்புதமான வியூகம்
புலிகளும் முதலாம் உலகப்போருக்கு முந்தைய பாதுகாப்பான மண் அரண்களை அமைத்து சிங்களன் இதை தாண்டுவானா என கேட்டுகொண்டிருந்தனர், அதை கண்ட இஸ்ரேலியருக்கு சிரிப்புத்தான் வந்தது
இஸ்ரேலிய கிபீர் விமானமும், இஸ்ரேலிய படை வியூகமும் ஈழப்போரில் முக்கிய பங்கு வகித்தன‌
இந்த வியூகங்கள் எல்லாம் அன்றே சொல்லிகொடுத்தது மோசே தயான்
தீவிரவாதிகளுக்கு எதிரான போர் என வாழ்நாள் முழுவதும் யுத்தம் நடத்திய தயான், அற்புதமான அனுபவங்களை விட்டு சென்றிருந்தார்
"அதில் 100 மக்கள் செத்தாலும் 1 தீவிரவாதி தப்ப கூடாது, காரணம் தப்பிய 1 தீவிரவாதி பின்னால் 1000 மக்களை கொல்வான், குறைந்த சேதாரம் தவிர்க்கமுடியாதது"
இந்த தத்துவத்தில்தான் ஈழப்போர் நடந்தது, புலிகள் சிங்கள ராணுவத்தில் லஞ்சம் மூலம் ஊடுருவியிருந்தனர் அதை களைந்ததிலும் இஸ்ரேலிய பங்கு உண்டு.
எப்படி என்றால் பாம்பின் கால் பாம்பறியும், கடைசி வரை கொழும்பில் புலிகள் பெரும் தாக்குதல் நடத்தாமல் போனது இப்படித்தான்
ஆக என்றோ மோசே தயான் சொன்ன பாடங்கள் பின்பு புலிகளுக்கு எதிராகவும் திரும்பின‌
எல்லாம் சரி, இலங்கை மேல் இஸ்ரேலுக்கு என்ன பாசம்?
ஒரு மண்ணும் இல்லை , கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அவர்கள் குறிவைத்திருப்பார்கள். முன்பு சிங்கப்பூரை விழுங்குவேன் என கொக்கரித்த இந்தோனேஷிய அதிபர் சுகர்னோவினை அடக்கியதிலும் இஸ்ரேல் பங்கு உண்டு
உலகெல்லாம் தேவைபடுவோர்க்கு உதவி தனக்கு வெண்டியவர்களாக மாற்றுவதில் கில்லாடி அவர்கள்
இந்தியா பாலஸ்தீன ஆதரவு நாடாக இருந்ததும் இலங்கைக்கு அவர்கள் உதவ முக்கிய காரணம்
மிக சரியாக மோசே தயான் பிறந்த நாளில்தான் இலங்கையிலும் அவர்கள் சாகசமக புலிகளை துடைத்தெறிந்தார்கள்
புலிகளை வைத்தே பாலஸ்தீன் பயிற்சி பெற்ற போராளிகளை கொன்றுவிட்டு, ராஜிவினையும் கொன்றுவிட்டு, பிரேமதாசவினையும் கொன்றுவிட்டு சகலைரையும் கொன்றுவிட்டு கடைசியில் புலிகளையும் அழித்துவிட்டது ஒரு அறிவார்ந்த கூட்டம்
உலகின் மிக இறுக்கமான கொடூர, தற்கொலை தாக்குதலை எல்லாம் அசால்ட்டாக நடத்தும் என சொல்லபட்ட புலிகளை, தீவிராவதத்தை அனுதினமும் எதிர்கொள்ளும் நாடு என கருதபடும் இஸ்ரேல் உதவியுடன் இலங்கை ஒழித்துகட்டபட்ட கதை இதுதான்
உலக நிலவரம் இப்படி இருக்க இங்கு கலைஞர் கொன்றார், சோனியா கொன்றார் என சொல்பவர்கள் சொல்லிகொண்டே இருப்பார்கள், அவர்கள் அப்படித்தான்

LTTE யால் கொல்லப்பட்ட சில முக்கிய மிதவாத ஈழத்தமிழ் தலைவர்கள்

LTTE யால் கொல்லப்பட்ட சில முக்கிய மிதவாத ஈழத்தமிழ் தலைவர்கள் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் LTTE ஆல் கொல்லப்பட்ட மற்ற போராளித்தலைவர்கள் மற்றும் சாதாரண தமிழ் மக்கள் விபரம் சேர்க்கப்படவில்லை. ஏனென்றால் அது பல்லாயிரங்களை தாண்டும்.
இவர்களையெல்லாம் ஏன் LTTE யினர் கொல்லவேண்டும். ? இந்த கூட்டத்தையா கலைஞர் காப்பாற்றி இருக்க வேண்டும்.?
தமிழ் MP க்கள்
1)A. அமிர்தலிங்கம் (Leading Sri Lankan Tamil politician .)
2)அருணாசலம் தங்கதுரை(Member of Parliament for Trincomalee District.)
3)ஆல்பிரட் துரையப்பா( Former Sri Lanka Freedom Party member of the parliament .)
4)M. கனகரத்தினம் ( Former Tamil United Liberation Front MP for Pottuvil)
5)A. L.அப்துல் மஜீத் ( Former Sri Lanka Freedom Party MP for Mutur)
6)S. சன்முக நாதன்(Former Democratic People's Liberation Front MP for Vanni District)
7)நிமலன் சவுந்தர நாயகம்(- Former Tamil United Liberation Front MP for Batticaloa District)
8)சாம் தம்பிமுத்து(Former Eelam People's Revolutionary Liberation Front MP for Batticaloa District)
9)நீலன் திருச்செல்வம் ( Scholar, international activist, )
10)G. யோகேஸ்வரி ( Former MP for Jaffna District)
11)V. யோகேஸ்வரன் (United Liberation Front MP for Jaffna district)
மக்கள் சேவைப் பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள்
..................................................
1) செல்வி தியாகராஜா (- Founder of feminist journal called Tholi, International PEN award winner in 1992)
2)பால நடராஜா அய்யர் ( Sri Lankan Tamil activist, writer and poet)
3) லோகநாதன் (Kethesh Loganathan- Tamil political activist, Human Rights advocate )
4) ரஜனி திரணகாமா (Rajani Thiranagama..University lecturer, Tamil human rights activist and feminist)
5)ரேலங்கி செல்வராஜா (Relangi Selvarajah- Tamil broadcaster and actress.)
மற்ற துறையை சேர்ந்தவர்கள்
1)C. E.ஆனந்தராஜா ( Sri Lankan educationist and former principal of St. John's College, Jaffna.)
2)V. M. பஞ்சலிங்கம் (- Leading Sri Lankan Tamil civil servant) and former District Secretary of Jaffna
3)S. நடராஜா ( Sri Lankan Tamil lawyer, )politician and former member of the Senate of Ceylon.
4) சரோஜினி யோகேஸ்வரன் ( Former Mayor of Jaffna)
5) கோபாலசாமி மகேந்தரராஜா ( Former Deputy leader of the LTTE)
6)உமா மகேஸ்வரன் ( Founder of the People's Liberation Organisation of Tamil Eelam.)
7) குமாரசாமி நந்த கோபாலன்( Former president of the Tamil Makkal Viduthalai Pulikal)

டெலோ அழிக்கப்பட்டது எப்படி?

டெலோ அழிக்கப்பட்டது எப்படி?
பருத்தித்தித்துறை இராணுவ முகாமை தாக்க பல படையணிகளுடன் பயிற்சி பெற்ற நாம் திடீரென்று புலிகளின் யாழ் தளபதி கிட்டுவால் ஒரு அவசர கூட்டத்திற்கு அழைக்கப்படுகிறோம். நாம் ரெலோ மீது தாக்குதல் நடத்த போகிறோம் என்று கூறியவுடன் எமக்கு எதுவுமே புரியவில்லை. எமது போராளிகளை அவர்கள் கைப்பற்றி வைத்திருக்கிறார்கள் அவர்களை மீட்க நாம் கல்வியங்காட்டை சுற்றிவளைக்கப் போகிறோம் என்ற விளக்கத்துடன் பாரிய சகோதரப் படுகொலைக்கான திட்டமிடல் தொடங்குகிறது. அதீத விசுவாசம் கொண்டவர்கள் தலைமை கூறியதை விட மோசமான மனிதவதைகளை செய்தனர்!
தலைமைக்கு பணிந்தவர்கள் தலைமை கூறியதை அப்படியே செய்தார்கள். மனிதாபிமானமுள்ளவர்கள் விறைத்துப் போய் செய்வதறியாது திகைத்து நின்றனர். சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்! தூங்கியவர்கள்இ தூங்க முடியாது வருத்தத்தில் படுத்திருந்தவர்கள்இ தப்பியோடியவர்கள் வெள்ளைக்கொடி பிடித்தவர்கள்இ பிடிக்காதவர்கள் என்று ஒருவரைக் கூட மிச்சம் வைக்காது வேட்டையாடல் நடைபெற்றது.
தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணிக்க தயாராக இருந்த நூற்றுக்கணக்கான போராளிகள் தெருநாயை சுடுவது போல் வேட்டையாடப்பட்டார்கள். ஆனால் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். 3 நாட்களாக கல்வியங்காட்டு சந்தியில் காவல் கடமையில் இருந்த எனக்கு கோப்பி முதல் 3 நேர உணவும் தந்து உபசரித்தார்கள். தமிழ் மக்களின் விடுதலைக்காக என்று கட்டியெழுப்பிய மற்றைய இயக்கங்கள் தம் சொந்த சகோதரர்கள் வேட்டையாடப்படுகையில் கைகட்டி மௌனமாக வேடிக்கை பார்த்தார்கள்!
நரபலி எடுத்துக் களைத்த அனைவரும் மீண்டும் முகாம் திருப்புகிறோம். மனச்சாட்சி உறுத்தியவர்கள் ஒரு சிலர் ஒளிவில் சிகரட் புகைக்க ஒதுங்கி பேசா மடந்தைகளாக அப்படியே மௌனத்து போனோம்! பயம் ஒரு புறம்! போராட்டம் சூன்யமாகி விட்டதே என்ற ஆதங்கம் ஒரு புறம்! கொல்லப்பட்டவர்கள் எம்மவர்கள் என்ற மனச்சாட்சியின் உறுத்தல் ஒரு புறம்! அன்று முதல் நாம் ஒரு நடைபிணமாகவே மாறி விட்டோம். ஆனால் அந்த வேதனை ஆறுவதற்கு முன்பே ஆயுதங்களை கட்டி தாக்குதலுக்கு தயாராகச் சொல்லி மீண்டும் ஒரு கட்டளை மே 6ம் திகதி அதிகாலை வருகிறது! தலையிடி காய்ச்சல் என்று சாக்கு கூறிய இரண்டு போராளிகள் தும்புக்கட்டையால் நையப்புடைக்கப்பட்டதை பார்த்ததும் எல்ப் ட்ரக்கில் முண்டியடித்தபடி கோழைகளாக அடுத்த கொலைக்களத்திற்கு புறப்பட்டோம்.
அன்று கோண்டாவில் சுற்றிவழைப்பில் எனக்கு கோண்டாவில் பஸ் டிப்போவிற்கு அருகில் காவல் கடமை! ஒரு வயது முதிர்ந்தவர் என்னுடன் பேசினார். நான் கொஞ்சம் விரக்தியாக பேசியதாலே என்னவோ துணிந்து ஒரு விடயத்தை கூறினார். தம்பி துவக்கெடுத்தவனுக்கு துவக்காலை தான் சாவு! இது எல்லாம் ஒரு பெரிய அழிவிலைதான் முடியும்! மேலை ஒருத்தன் பாத்துக் கொண்டிருக்கிறான் எண்டதை மறந்திடாதை என்று கூறிவிட்டு போய்விட்டார்.
சில மணித்துளிகளுக்குள் ரெலோ இயக்க தலைவரும் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார் என்று வோக்கியில் செய்தி வந்தது. 1987 மே மாதம் ஒரு புகையிலைத் தோட்டத்தில் மறைந்து நிராயுதபாணியாக இருந்த சிறீ சபாரத்தினம் அவர்கள் கையை உயர்த்தியபடி கிட்டு பேசுவோம் பேசித் தீர்ப்போம் என்று கூறியபடி வெளியில் வந்து கிட்டுவின் மெய்ப்பாதுகாவல் கடமையிலிருந்த சாந்தமணியின் அருகில் சென்று அவரின் துப்பாக்கியை பறிக்க முற்பட்டதாகவும் உடனடியாக கிட்டு அவரை சுட்டுக்கொன்றதாகவும் வோக்கி டோக்கி அலறியது! இந்தியாவுடன் சேர்ந்து புலிகளை அழிக்க சதி செய்த ரெலோ புலிகளால் அழிக்கப்பட்டது என்று செய்தி எங்கும் அலறியது.
எல்லாம் முடிந்து விட்டது. ரெலோ இயக்கம் மக்களிடம் களவெடுத்த பொருட்கள் என்று பல கண்காட்சிகள் யாழ் நகரில் காட்டப்பட்டது. அண்மையில் நான் யாழ்ப்பாணம் சென்ற போது கூட எனது நண்பர் கூறினார் ரெலொ களவெடுத்த படியால்தான் புலியள் அவையை அழிச்சவை என்று! பாவம் அந்த அப்பாவி மக்களிற்கு இன்றும் தெரியாது கண்காட்சியில் காட்டப்பட்ட பொருட்களில் முக்கால்வாசிக்க மேற்பட்ட பொருட்கள் எமது இயக்கத்தால் கொள்ளையடிக்கப்பட்டவை என்று…
சரியாக 22ஆண்டுகள் கழித்து 2009மே மாதம் தொலைக்கட்சி ரேடியோ ஏன் உலகம் எல்லாமே அலறியது வெள்ளைக்கொடியுடன் பேசச் சென்றவர்கள் சுட்டக்கொல்லப்பட்டார்கள் என்று!
அன்று கோண்டாவிலில் அந்த பெரியவர் என்ன சொன்னாரே அது நடந்தேறி விட்டது! வெள்ளைக் கொடிஇ சரணடைவுஇ நிராயுதபாணியாக கொலை என்று நாம் மீளவும் இன்று அங்கலாய்கிறோம்… ஆத்திரப்படுகிறோம்… அவமானப்படுகிறோம். ஆனால் அன்றும் இது நடைபெற்றது. யாரும் ஆத்திரப்படவில்லைஇ அவமானப்படவில்லைஇ ஐநாவிடம் சென்று நியாயமும் கேட்கவில்லை!
25 ஆண்டுகள் சென்று விட்டது இன்று கூட இதைப்பற்றி ஒரு சுயவிமர்சனத்தை செய்யவோ குறைந்த பட்சம் ஒரு பொது மன்னிப்பு கேட்க கூட தயாராக இல்லை.கேட்க ஆயத்தப்படுத்தியவரையும் துரோகியாக்கி இறுதியில் அவரின் மன்னிப்பையும் காட்டிக்கொடுப்பு என்று ஏளனம் செய்கிறார்கள்.
By
ரெலோ மீது தாக்குதல் நடத்திய முன்னாள் புலி உறுப்பினர் வாசுதேவன்!

அவனுங்குள்ளேயே காட்டியும் கொடுத்துப்பானுங்க

யாழ் தமிழன், மட்டகிளப்பு தமிழன், கொழும்பு தமிழன் ஒன்றுமையாக இருந்ததே கிடையாது. அவனுங்குள்ளேயே காட்டியும் கொடுத்துப்பானுங்க.
இவர்கள் மலையக இந்திய தமிழர்களை மனிதனாகவே மதித்ததில்லை.
புலிகளுடன் சேர்ந்து இனத்துக்காக போரிடாமல் உயிருக்கு பயந்து வெளிநாடு ஓடிய வசதியான ஈழத்தமிழர்கள் கலைஞரை இனத்துரோகி என்கின்றனர்
நல்லாயிருக்குடா உங்க நியாயம்
நீங்கதான்டா ஒரிஜினல் இனத்துரோகி

இலங்கை வடக்கு மாகாணத் தமிழன் கிழக்கு மாகாணத் தமிழன் ஒருவருக்கு ஒருவர் காட்டிக்கொடுத்து தங்களை தாங்களே அழித்துக் கொண்டனர் என்பதே உண்மை
இருநூறு வருசமா மலையகத்தமிழர்கள் லயன் வீடுகளில் வறுமையில்தான் உள்ளனர்
சீமான் போன்ற தமிழ்தேசியக்காரனுக்கு மலையக தமிழன் கண்ணுக்கே தெரிவதில்லை ஏன்?
பிரயோசனம் இல்லாத விசயத்தில் அண்ணன் தலையிட மாட்டாரோ அவன் மூலமா 10 பைசா கிடைக்காதே
 அவன் மூலமா 10 பைசா கிடைக் அவன் மூலமா 10 பைசா கிடைக்காதே

ஈழக்கதை

ஈழ இயக்கங்கள் உருவான வரலாறும் தமிழக அரசியலும்

LTTE இயக்கம் 5 May 1976 உமா மகேஸ்வரனை தலைவராகவும் பிரபாகரனை கமேன்டராகவும் கொண்டு தொடங்கப்பட்டது.
ஆனால் உமா மகேஸ்வரன் ஊர்மிளா என்னும் பெண்ணை காதலித்ததால் அவரை இயக்கத்திலிருந்து வெளியேற்றி 1979 இல் பிரபாகரன் தானே தலைவரானார். உமா மகேஸ்வரன் PLOT என்னும் இயக்கத்தை உருவாக்கினார்.
EROS (1975), TELO (1979), PLOTE (1980), EPRLF (1980) and TELA (1982) போன்ற இயக்கங்களும் உருவாயின.

'70 களில் கலைஞருடன் ஈழ மிதவாத தலைவர்கள் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தனர். கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்

அப்போது Tamil Eelam Liberation Organisation (TELO) தலைவர் சபாரத்தினம் கலைஞரோடு நெருக்கமாக இருந்தார்.

கலைஞருக்கு எதிராக செய்யவேண்டும் என்பதற்காக ஆட்சியில் இருந்த M.G.R தானும் ஈழ ஆதரவாளர் எனக் காட்டிக் கொள்ள LTTE யுடன் நெருங்கினார். அதனால் விடுதலைப்புலிகள் அவருடன் நெருக்கமாக இருந்தனர்.

தமிழகமெங்கும் கலைஞர் ஈழவிடுதலை ஆதரவுநிதிதிரட்டி அனைத்து இயக்கங்களுக்கும் பகிர்ந்தளித்தபோது அதை வாங்கமறுத்தவர் பிரபாகரன். ஏனென்றால் எம்.ஜி.ஆரிடமிருந்து பெரும்தொகையினை நிதியாக பெற்றிருந்தார் பிரபாகரன். எனவே கலைஞர் கொடுத்த நிதியை பெற மறுத்துவிட்டார் பிரபாகரன்.

1986 இல் LTTE க்கும் TELO விற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது TELO தலைவர் சபாரத்தினம் உட்பட அவ்வியக்கத்தின் ஆயிரக்கணக்கான போராளிகள் பிரபாகரனால் கொல்லப்பட்டனர்.அதன் பிறகு
அவ்வாறே EPRLF இயக்கத்தினரும் கூண்டோடு புலிகளால் அழிக்கப்பட்டனர்.

1986ல்ஈழவிடுதலைஇயக்கங்களை ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தி என்டிராமராவ்,ஃபரூக்அப்துல்லா,
பிஜுபட்நாயக் என பல பெருந்தலைவர்களை அழைத்து மதுரையில் ஈழ ஆதரவுமாநாடு நடத்தினார் கலைஞர்.மறுவாரமே சிறீசபாரத்னத்தையும்அவரதுபடையணியினரையும் சதிசெய்து கொன்றனர் LTTEயினர்.

தமிழ் MP க்கள்
அமிர்தலிங்கம்
அருணாசலம் தங்கதுரை
ஆல்பிரட் துரையப்பா
M. கனகரத்தினம்
A. L.அப்துல் மஜீத்
S. சன்முக நாதன்
நிமலன் சவுந்தர நாயகம்
சாம் தம்பிமுத்து
நீலன் திருச்செல்வம்
G. யோகேஸ்வரி
V. யோகேஸ்வரன் எல்லோரும் LTTE ஆல் கொல்லப்படவர்களில்
சிலர்.

மேலும் மக்கள் சேவைப் பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என LTTE யால் கொல்லப்பட்டவர்கள் பட்டியல் மிகப்பெரியது.

சபாரத்தினம் கொல்லப்பட்டப் பின்னரும் கூட கலைஞர் பிரபாகரனை தவறாக விமர்சித்ததில்லை. ஒவ்வொரு முறையும் சகோதர யுத்தம் வேண்டாம் என்றே வலியுருத்தினார். ஆனால் அதையெல்லாம் பிரபாகரன் ஒரு பொருட்டாக கூட மதித்ததேயில்லை.

மிக நீண்ட காலத்திற்கு பின் திமுக 1989 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 1990 ஜூன் 19 இல் EPRLF தலைவர்கள் பத்மநாபா உட்பட 13 பேர் இலங்கையிலிருந்த வந்த LTTE யினரால் சென்னையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள்.

இது கலைஞருக்கு பேரிடியாய் அமைந்தது. கலைஞர் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக பேசப்பட்டு திமுக ஆட்சி இரண்டே வருடத்தில் கலைக்கப்பட பிரபாகரனே காரணமாயிருந்தார்.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் விடுதலைப் புலிகளுக்குக் கருணாநிதி எல்லா வசதிகளும் செஞ்சு கொடுத்தா. விடுதலைப் புலிகள் இங்கே பெட்ரோல் பங்க் நடத்துனா. கோயம்புத்தூரில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கிற தொழிற்சாலை வெச்சிருந்தா. எல்.டி.டி.ஈ.க்கு யூனிஃபார்ம் தைச்சுக் கொடுத்தா. இதைப்பத்தி எல்லாம் எனக்கு ரிப்போர்ட் வந்தது. நான்தான் சந்திரசேகர்கிட்ட எடுத்துச் சொல்லி, 'கருணாநிதி தீவிரவாதிகளுக்கு சப்போர்ட்ட பண்றா, அவா அரசைக் கலைச்சிடுவோம்னு' சொன்னேன்." என சுப்பிரமணியன் சுவாமி
('விகடன் மேடை' - வாசகர் கேள்விகள் பகுதி, 04.07.2012) இல்
தெரிவித்தை கொண்டு திமுக ஆட்சியில் LTTE யினர் வளமாக இருந்ததை புரிந்துக் கொள்ளலாம்.

சீருடைக்கு உதவி செய்தார் என்பதற்காகத்தான் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த சுப்புலட்சுமி ஜகதீசன் சிறையில் அடைக்கபட்டார்

1990 இல் அன்று முதல்வராக இருந்த கலைஞர் இலங்கை தமிழர்களை கொன்ற இந்தியப்படையை வரவேற்க முடியாது என திடமாக மறுத்தார் கலைஞர் அவர்கள்.

1991இல் LTTE இயக்கத்தை ஆதரித்ததற்காக கலைஞரின் திமுக அரசை ஜெயலலிதா கலைக்க போராடினார். திமுக அரசும் கலைக்க பட்டது.

அதன்பின்னர்1991மே 21 இல் ராஜீவ் காந்தி LTTE யால் கொல்லப்பட்டபோது அன்று ஆட்சியை மீண்டும் பிடிக்கும் வாய்ப்பை திமுக இழந்ததுடன் பிரபாகரனால் திமுக ராஜீவ் கொலைப்பழியையும் சுமக்க நேர்ந்தது.

திமுக ஆட்சியை இழந்து
மதிமுக ஆரம்பிக்கப்பட்டவுடன் ஏற்கனவேயிருந்த கள்ளத்தோனி உறவை பிரபாகரனுடன் பலப்படுத்திக் கொண்டார் வைக்கோ.

வைக்கோவின் அறிவுரைப்படி நடந்த பிரபாகரன் அதன் பின்னர் கலைஞரின் ஆலோசனையை காது கொடுத்து கேட்டதில்லை.

தன் அரசியல் சுயநவத்திற்காக பிரபாகாரனுக்கும் கலைஞருக்கும் இடையே எந்த நட்பும் புரிதலும் வராது பார்த்துக்கொண்டனர் வைக்கோ & கோ

கலைஞரை என்றுமே லட்சியம் செய்யாத பிரபாகரன் போரை துவங்கும் போதாவது அல்லது நடந்த போதாவது கலைஞரை தொடர்பு கொண்டதுண்டா ?
ஏன் செய்யவில்லை ?

இறுதிப்போருக்கான காரணம் இலங்கையா?

LTTE மாவிலாறு அணையை 21 July 2006 மூடியதே இறுதிப்போருக்கான காரணமாக அமைந்தது. இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்த 15000 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட போர் மூண்டது. 2009 இல் முடிவுக்கு வந்தது.

கனிமொழி யார் யாரையெல்லாம் சந்தித்தார், யார் யாரிடமெல்லாம் போர் நிறுத்தத்திற்காக மன்றாடினார் என்பது கனிமொழி வட்டத்தில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும்..
கலைஞர் யார் யாரிடமெல்லாம் பேச முடியுமோ அத்தனை பேரிடமும் பேசவே செய்தார்..

விடுதலைப் புலிகள், ராஜீவ் காந்தியை கொன்று விட்டு அதே குடும்பத்திடம் இருந்து கருணையை பெற்றுத் தரும்படி கலைஞரை நிர்பந்தித்தார்கள்..
கலைஞரும் முயற்சி செய்தார்..
‘அவர்கள் ராஜீவ் காந்தியை கொலை செய்தது உங்களுக்கு ஒரு விசயமாகவேப் படவில்லையா?’ என்று மத்திய அரசைச் சார்ந்த பலரும் கலைஞரைக் கேட்டது நடக்கவே செய்தது.

இன்றும் ராகுல்காந்தி கலைஞரை சந்திக்காமலே இருப்பதற்கு ராகுல்காந்தி கலைஞரை பிரபாகரன் ஆதரவாளர் என்று தீர்மானமாக நம்புவதே காரணம்..

அன்று கலைஞரால் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியவில்லை..
விடுதலைப் புலிகளை அழிப்பதென்பது அமெரிக்கா உட்பட்ட சர்வதேசநாடுகள் சேர்ந்தெடுத்த முடிவு.. அந்த முடிவில் அவர்கள் தீர்மானமாக இருந்தார்கள்.
கலைஞரும் கனிமொழியும் என்ன செய்து விட முடியும்..
கனிமொழி கடைசி நேரத்தில் புலிகளை காப்பாற்ற முயற்சித்தது உண்மைதான்.

அவர் இது தொடர்பாக மத்திய அமைச்சர் சிதம்பரத்தை தொடர்பு கொண்டு பேசியதும் உண்மைதான். அவர் பேசிய நேரம் எல்லாம் கை மீறி போய்விட்டதும் உண்மைதானே.

சரணடைதல் எப்படி நடந்தது தெரியுமா?

நடேசன், புலித்தேவன் இருவருமே தமிழராகிய இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு மூலமாக சரணடைதல் பற்றி இலங்கை அரசுடன் நேரடியாகப் பேசியுள்ளனர். இலங்கை வெளியுறவுச் செயலர் பாலித கோஹனே மூலம் ராஜபக்சே சகோதரர்களிடம் நடந்த பேச்சுவார்த்தைகளும் ஐ.நா. அறிக்கை யில் பதிவாகியுள்ளது. சில பதிவுகள் இங்கே:

* மே 17, ஞாயிறு மாலை 3.29க்கு பாலித கோஹனே ஐரோப்பிய இடைப்பாட்டாளர் ஊடாக நடேச னுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி: "வெள்ளைக் கொடி. இரு கைகளையும் உயர்த்தி மெதுவாக நடங்கள்.'

* மாலை 6.30. நடேசன், சந்திரநேருவுக்கு: "தலைமையின் அறி வுறுத்தலின்படி நாங்கள் சரணடையத் தயாராயுள்ளோம்.'

* மாலை 7.30 மணி பசில் ராஜபக்சே, சந்திரநேருவுக்கு: "சரணடை தல் நிபந்தனைகளை அதிபர் ஏற்று விட்டார்.'

* மே 18 அதிகாலை 1.30: நடேசன், நேருவுக்கு தொலைபேசு கிறார். "3,000 போராளிகளும், 22,000 பொதுமக்களும் சரணடையவுள்ளோம். ஆனால் எறிகணைகள் வீசுகிறார்கள்.'

* அதிகாலை 1.45: "அமெரிக்காவோடும் நேரடியாகப் பேசுகிறோம்' என நடேசன் நேருவுக்குச் சொல்கிறார்.

* அதிகாலை 3.30: புலித்தேவன், நார்வே அதிகாரிகளுக் குத் தொலைபேசி, சரணடைதல் தகவல் சொல்லி உதவியும் கோருகிறார்.

* காலை 5 மணி: நடேசன், சந்திரநேருவுக்கு தொலை பேசி, தங்களை நோக்கிய எறிகணை வீச்சு தொடர்வதாகக் கூறுகிறார்.

* காலை 5.30: மேரி கோல்வின், விஜய் நம்பியாரை அழைத்து சரணடைதலை மேற் பார்வையிட கொழும்பில் இருக்கும் அவர் செல் லாதது தவறு என வாதிடுகிறார்.

* காலை 5.51: கொழும்பு பிரித்தானிய தூதரகத்தின் இரண்டாம் செயலர் சந்திரநேருவை அழைத்து சரணடைதல் பற்றி அரசுடன் தாங்களும் பேசுவதை தெரிவிக்கிறார்.

* காலை 6.10: சந்திரநேரு, அதிபர் ராஜபக்சேவிடம் பேசுகிறார். சரணடைதலை மேற்பார்வையிட தான் செல்ல விரும்புவதை தெரிவிக்கிறார். "அவசியமில்லை, எமது ராணுவம் கட்டுக்கோப்பானது' என ராஜபக்சே கூறுகிறார்.

* காலை 6.20: புலித்தேவன் முன்செல்ல சரணடைதல் பயணம் தொடங்கிவிட்டது தெரிவிக்கப்படுகிறது.

* காலை 8 மணி: சந்திரநேருவின் நண்பரும் பாராளு மன்ற உறுப்பினருமான ஜான்ஸ்டன் பெர்னான்டோ தொலைபேசியில் அழைத்து "நடேசனும் ஏனையவர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள்' என்கிறார்.

கோத்தபய்யா உத்தரவின் பேரில் ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாதான் இப்படுகொலைகளை நிகழ்த்தியது. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியற் தொடர்ச்சியினை முற்றாக அழிப்பதே கோத்தபய்யாவின் நிலைப்பாடாக இருந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தின் வெவ்வேறு நிலைகளில் உள்ளவர்கள் தமி ழகத்திலிருந்த தமது தொடர்பு களோடு பேசினார்கள் என் பதும் உண்மைதான். ஆனால் சரணடைதல் பேச்சுவார்த்தை களில் நேரடியாக சம்பந்தப் பட்டிராத கனிமொழி எப்படி சரணடையும் அறிவுறுத்தலை வழங்கியிருக்க முடியும்?

முள்ளிவாய்க்கால் சரணடைதலில் அரசியல் செய்ய அவரது ஆளுமையால் இயலாது.

இறுதியாக புலிகளின் தோல்விக்கு சில காரணங்களை குறிப்பிடலாம்.
1. மக்களை அரசியல் படுத்தாமல், ஆயுதமே எல்லாம் என்று நம்பவைத்து ஆயுதங்களின் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்தது...

2. சகோதர இனமான முஸ்லிம்களின் நம்பிக்கையை பெறத் தவறியது...
3. ராஜீவ் காந்தியை கொன்றதனால் இந்திய ஆதரவையும், தமிழ் மக்களின் தார்மீக ஆதரவையும் ஒரு சேர இழந்தது....

4. சிங்களவர்களுக்கு எதிராக போராடக்கூடிய மற்ற போராளிக்குழுக்களை இல்லாது அழித்தொழித்தது....

5. ஓரளவுக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியிருக்க கூடிய ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிராகரித்தது....

6. 2001 செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டைகோபுர தகர்ப்புக்கு பின் மாறிய உலக நிலைமைகளை கவனிக்கத் தவறியது...

7. இறுதியில் தனது மக்களை விட்டு பிரிந்து மீண்டும் கொரில்லா போர்முறையை பயன்படுத்தி போரிட முயற்சிக்காதது..

8. கிழக்கு மற்றும் மேற்கு மாகாண மக்களின் மதிப்பையும்
ஆதரவையும் பெறத்தவறியது போன்று பல உள்ளது.

இதையெல்லாம் விட்டு விட்டு கலைஞர் போரை நிறுத்தவில்லை
என்பது நகைச்சுவையின் உச்சக்கட்டம்.

உச்சக்கட்ட போரின்போது சிங்கள வீரர்களை அச்சமயம் ராஜபக்சேவால் கூட கட்டுப்படுத்தியிருக்க முடியாது.
அத்தனை இழப்புகளை சிங்களப்படை சந்தித்துள்ளது.

போர் நேரத்தில் உங்களுக்காக பேச கனிமொழியை தவிர உங்களுக்கு யாருமே கிடைக்கவில்லை என்பதிலிருந்து உங்களுக்காக பேச யாருமே இல்லாமல் இருந்ததை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள்.

கனிமொழியை இந்திய பிரதமர் லெவலுக்கு கொண்டு போய் கதைக்கிறீர்கள். அவர் தந்தையை இந்திய ஜனாதிபதி லெவலுக்கு கற்பனை செய்து கதைக்கிறீர்கள். இவர்களால் உங்கள் மக்களை காப்பாற்றி இருக்க முடியுமா? கொஞ்சம் அறிவை பயன்படுத்தி சிந்தியுங்கள். நீங்கள் சொல்லும் கனிமொழிதான் ஆறுமாதங்கள் ஜெயிலில் இருந்தார். அவர் தந்தை கலைஞரால் என்ன செய்ய முடிந்தது.

போரின் போது நீங்கள் சொல்வது போல ராஜினாமா செய்திருந்தால் மீண்டும் ஜெயா ஆட்சிக்கு வந்திருப்பார். அது சரி கலைஞர் அரசு எத்தனை முறை ஈழப்பிரட்சினையால் பதவி இழப்பது?

திமுகவுக்கு ஓட்டு போட்டது நீங்களா இல்லை தமிழக மக்களா?

ஐநா முதற்கொண்டு யாரையுமே உங்கள் நாட்டில் உள்ளே வந்து விசாரிக்க அனுமதிக்க மறுக்கும் லங்கா அரசை கனிமொழியால் கேள்வி கேட்க முடியுமா?

இதுவரையில் திமுக உங்கள் மக்களுக்கு
சாதகமாக நடந்து ராஜீவ் கொலை பழி வரை சுமந்ததே அதற்கு நீங்கள் என்ன நன்றி காண்பித்தீர்கள்?

இன்றும் கலைஞர் குடுப்பத்தை சொல்ல கூசும் அளவிற்கு அசிங்க படுத்தி கொண்டுள்ளீர்கள். இப்படியே தொடர்ந்து செய்தால் நாதியில்லாமல் போய்விடுவீர்கள்.
உச்சகட்ட போரில் சரணடைந்த ஆயிரக்கணக்கானவர்கள் கனிமொழி சொல்லியா சரணடைந்தனர்? கனிமொழி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சரணடைவதை விட வேறு வழி அப்போது இருந்ததா?

வேண்டுமென்றே திமுக மீது பழிபோடும் மடத்தனத்தை நிறுத்துங்கள். உங்கள் மக்களை உண்மையில் நேசிப்பவர்கள் திமுகவினரே. தம்பி பிரபாகரன் என்றுமே கலைஞரையும் திமுகவையும் மதித்து ஆலோசனை கேட்டதேயில்லை. சகோதர யுத்தம் வேண்டாம் என்ற போதும் சகோதர போராளிக் குழுக்கள் அழிக்கப்பட்டனர்.

இப்போதும் சொல்கிறேன் திமுவை அசிங்கப்படுத்தி தமிழ்நாட்டில் உங்களுக்கு இருக்கும் கொஞ்ச நெஞ்ச ஆதரவையும் கெடுத்துக்கொள்தீர்கள்.
இதை வருத்தத்துடன் சொல்லிக்கொள்கிறேன்.

மானங்கெட்ட பயல்களே

இந்தியப்படை வந்து ஈழப் பெண்களை கற்பழிச்சதாவும் பொது மக்களை கொன்னதாகவும் சொல்லி 1500 இந்திய படையினரை கொன்னீங்களே !
எங்க நாட்டு பிரட்சினையை நாங்களே பார்த்துக்குறோம். இந்தியா எங்க பிரட்சினையில் தலையிட வேண்டாம் எனச் சொல்லி சிங்கள ராணுவத்தோடு
கூட்டு சேர்ந்து சதி செய்து
இந்தியப்படையை துரத்தி அடிச்சீங்களே
ஈழ மக்களே !
அப்புறம் எதற்கு உங்க ஈழத்தில் நீங்களும் சிங்களனும் போட்ட சண்டையை இந்தியா நிறுத்தனும்?
இந்திய அரசு மூலமா கலைஞர் சண்டைய நிறுத்த முயற்சிக்காம
ஈழ மக்களுக்கு கலைஞர் துரோகம்
பண்ணிட்டார் என்று கலைஞரை துரோகி
எனச் சொல்றீங்க?
கொஞ்சம் கூட வெட்கமாயில்லியாடா
அதே இந்திய படையை அனுப்பித்தானே
உங்கள காப்பாத்தியிருக்க முடியும்
மானங்கெட்ட பயல்களே

நாய் டம்ளர்

கிறுக்கன் :- நான் தமிழர்... நான் தமிழர்...
பொதுமக்கள்:- டேய்.. நீ தமிழன்னா நாங்க யாருடா?
கிறுக்கன் :- இது என் கட்சி பேரு
பொதுமக்கள்:- உன் கட்சி கொள்கை என்ன?
கிறுக்கன் :- தனி ஈழம் வாங்கிறது
பொதுமக்கள் :- அப்ப ஈழத்தில் போய் கட்சி ஆரம்பிக்காம இங்க ஏன் கத்திக்கிட்டு இருக்க.
கிறுக்கன் :- தமிழகத்தில் ஆட்சியை பிடிச்சி தனி ஈழம் வாங்குவோம்
பொதுமக்கள் :- ஆட்சியை பிடிப்பீங்களா !!
கிறுக்கன் :- 2010 ல் ஆரம்பிச்ச கட்சி. மொத்த இளைஞர்களும் எங்க பக்கம்தான்
பொதுமக்கள் :- அப்படியா 2016ல்
232 தொகுதியில் போட்டி போட்டு
எல்லாத்திலும் டெபாசிட் காலியாமே மொத்தமே 4,00,000 ஓட்டுதானே வாங்குனே
கிறுக்கன்:- அடுத்த தேர்தலில்
ஜெயிப்போம் .
பொதுமக்கள்:- பாமக 25 லட்சம் ஓட்டோடு 20 வருசமா ஆட்சிக்கு வரலியே. இன்னும் 20 வருசம் ஆனாலும் எப்படியும் ஜெயிக்கவே போறதில்லைன்னு தெரிஞ்சே ஈழம் வாங்கப்போறேன்னு சொல்லி அதுவும் வெளிநாட்டில் வாங்கப்போறேன்னு சொல்லி அந்த ஈழத்தமிழர்களை ஏமாற்றுவது நியாயமா?
கிறுக்கன் :- அதெல்லாம் இல்லீங்க. நிச்சயம் தனி ஈழம்தான்.
பொதுமக்கள் :- ( தலையில் அடித்துக் கொண்டே) உருப்படவே மாட்டீங்கடா

இதுதான் சாதாரண "துன்பியல் சம்பவமா"??

1991 மே 21ஆம் தேதி இரவு சரியாக 10:21 மணிக்கு தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார், அவரை கொன்றவரும் பலியானார்.
முப்பது வயதான ஒரு பெண், சந்தன மாலையை அணிவிப்பதற்காக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அருகில் சென்றார். அவர் கால்களைத் தொடுவதற்காக அந்த பெண் கீழே குனிந்தார், காதுகளை செவிடாக்கும் பெரும் சப்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது.
அங்கிருந்து சுமார் பத்தடி தொலைவில் கல்ஃப் நியூஸின் செய்தியாளராக பணிபுரிந்தவரும் தற்போது டெக்கான் க்ரானிகலின் பெங்களூர் நிருபராகவும் பணிபுரியும் நீனா கோபால், ராஜீவ் காந்தியின் நண்பர் சுமன் துபே ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர்.
"என் கண்களின் முன்னால் வெடிகுண்டு வெடித்தது"
நீனா சொல்கிறார், "சுமனுடன் நான் பேச தொடங்கி இரண்டு நிமிடங்கள் கூட ஆகியிருக்காது, என் கண் முன்னே குண்டு வெடித்தது. வழக்கமாக வெண்ணிற ஆடைகளை அணியாத நான் அன்று வெள்ளை நிறப் புடவை அணிந்திருந்தேன். குண்டு வெடித்த பிறகு என் வெண்ணிற புடவை கறுப்பாக உருமாற, அதில் சிவப்பு வண்ணத்தில் ரத்தமும், சதை துண்டுகளும் ஒட்டிக் கொண்டிருந்தன. அவ்வளவு அருகில் இருந்த நான் எப்படி உயிர் தப்பினேன்! மிகப்பெரிய அதிசயம்தான்".
குண்டுவெடிப்புக்கு முன்னர் பட்டாசு வெடித்தது போல பட படவென்ற ஓசை கேட்டது, பின்னர் மிகப்பெரிய சப்தத்துடன் குண்டு வெடித்தது. நான் முன்னோக்கி சென்றபோது, அங்கிருந்தவர்களின் துணிகளில் நெருப்பு பற்றி எரிந்துக் கொண்டிருந்தது. அங்கிருந்தவர்கள் அலறினார்கள். நாலாபுறமும் ஓடினார்கள் ஒரே குழப்பமாக இருந்தது, ராஜீவ் காந்தி உயிரோடிருக்கிறாரா இல்லையா என்றே தெரியவில்லை."
ஸ்ரீபெரும்புதூரில் குண்டுவெடித்ததும், அந்த இடத்தில் இருந்த தமிழ்நாடு காங்கிரசின் ஜி.கே.மூப்பனார், ஜெயந்தி நடராஜன், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் ராஜீவ் காந்தியை தேடி அலைந்தார்கள். புகை சற்று அடங்கிய பிறகு ராஜீவ் காந்தியின் உடல் தெரிந்தது. பூமியை நோக்கி அவருடைய உடல் குப்புறக் கவிழ்ந்து கிடந்தது. அவரது மண்டை பிளந்து கிடந்தது. சிதறிக்கிடந்த ராஜீவின் மூளை, மரணத்தின் இறுதி கணங்களை நெருங்கிக் கொண்டிருந்த ராஜீவின் பாதுகாப்பு அதிகாரி பி.கே. குப்தாவின் காலடியில் கிடந்தது.
குண்டு வெடிப்புக்குப் பிறகு
இந்த துயர நிகழ்வுக்கு பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் ஜி.கே மூப்பனார் இவ்வாறு கூறினார், "வெடிப்பு சப்தம் கேட்டவுடனே அனைவரும் ஓடத் தொடங்கினார்கள். காயமடைந்து கீழே விழுந்தவர்களும், இறந்து போனவர்களும் என சிதைந்த உடல்களே என் முன்னால் இருந்தன. அப்போது ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரி பிரதீப் குப்தா உயிருடன் இருந்தார். அவர் என்னை பார்த்து ஏதோ சொல்ல முயன்றார், ஆனால் வாயிலிருந்து வார்த்தைகள் குழப்பமாக வெளிப்பட்ட நிலையிலேயே, என் கண் முன்னரே அவரது உயிர் பிரிந்தது".
"ராஜீவ் காந்தியை யாரிடமாவது ஒப்படைக்க வேண்டும் என்று விரும்பினார் என்று தோன்றியது. அவரது தலையை தூக்க முயன்றேன், ஆனால் கையில் சதையும், ரத்தமுமாக கொழகொழவென்று வந்தது, உடனே துண்டை எடுத்து மூடினேன்" என்று அந்த கொடுமையான சம்பவத்தை மூப்பனார் நினைவு கூர்ந்திருந்தார்.
மூப்பனார் இருந்த இடத்திற்கு சற்றுத் தொலைவில் நின்றிருந்த ஜெயந்தி நடராஜன் திகைத்துப் போய் அதிர்ச்சியில் சிலையாக உறைந்து நின்றார்.
அந்த கணத்தைப் பற்றி பிறகு ஒரு நேர்காணலில் ஜெயந்தி நடராஜன் இவ்வாறு கூறினார்: "போலிஸ் விலகி ஓடியது, முதலில் திகைத்து நின்ற நான், அந்த சடலங்களுக்கு இடையில் ராஜீவ் காந்தி இருக்கமாட்டார் என்ற நம்பிக்கையுடன் சுற்றும் முற்றும் பார்த்தேன். முதலில் என் கண்ணில்பட்டது பிரதீப் குப்தா. அவரது முழங்கால் அருகே தரையில் கிடந்த ஒரு தலையை பார்த்தேன்., இருந்தது... "ஓ மை காட், திஸ் லுக்ஸ் ராஜீவ்" என்ற வார்த்தைகள் என்னையறிமால் வாயில் இருந்து வெளிவந்தன.
குண்டு வெடித்த பிறகு சில நொடிகளில் நீனா கோபால், ராஜீவ் காந்தி இறுதியாக நின்ற இடத்திற்கு சென்றார்.
"ராஜீவ் காந்தியின் உடலை பார்த்துவிட்டேன். அவரது காலணி அடையாளம் தெரிந்தது. சந்தேகத்தில் கையை பார்த்தேன், அதில் இருந்த கைக்கடிகாரம் அது ராஜீவ் காந்தி தான் என்பதை உறுதி செய்துவிட்டது. இந்த துயர சம்பவம் நடைபெறுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக காரின் முன் இருக்கையில் ராஜீவ் காந்தி அமர்ந்திருக்க, பின் இருக்கையில் நான் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அவரது கரத்தில் இருந்த கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்த்ததால் அது எனக்கு நன்றாக நினைவில் இருந்தது" என்று நினைவுகூர்கிறார் நீனா.

ஏனெனில், அவர் பெரியார்!

யார் இந்த பெரியார்? ஏன் அவரைப் பற்றி இன்றும் பேசுகிறோம்?
பெரியாரை இன்றைய தலைமுறையினர் சரியாகப் புரிந்து கொள்ள உதவும். படியுங்கள்.
"ஏனெனில்_அவர்_பெரியார்"
-----------------------------------
பெரியார் படத்தின் மீது, சிறுநீர் கழிக்கப்படுகிறது,....
செருப்பால் அடிக்கப்படுகிறது,....
இன்று அவர் இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைவார்; அவமானப்பட மாட்டார்.
அவரே சொன்னார்...
'பொதுத் தொண்டுக்கு வந்தவன், மானம் - அவமானம் பார்க்க முடியாது; மானம் பார்த்தால் தொண்டு செய்ய முடியாது!’
கடலூர் மஞ்சக்குப்பத்தில் கூட்டத்தை முடித்துவிட்டு, திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தை நோக்கி கைவண்டியில் பயணித்துக்கொண்டு இருந்தார் பெரியார். நள்ளிரவு நேரம். பகலிலேயே அவர் மீது கல், சாணி விழும். அனைத்தையும் பார்த்தும் பயம் இல்லாமல்தான் பேசுவார். ராத்திரி நேரத்தில் பயணம் செய்யும்போது சும்மா இருப்பார்களா? திடீரென, கயிறுபோல ஏதோ ஒன்று அவர் மேல் விழுந்தது. அது... பச்சைப் பாம்பு. எடுத்துத் தூக்கிப் போட்டுவிட்டு, வண்டியை வேகமாகச் செலுத்தச் சொன்னார். கொஞ்சம் தூரம் போனதும், வண்டியைத் திருப்பச் சொல்லி வந்த வழியே மீண்டும் போகச் சொன்னார். வண்டியை ஓட்டுபவருக்கு ஒன்றும் புரியவில்லை; உடன் வந்தவர்களுக்கும் ஒரு விவரமும் தெரியவில்லை. வண்டியைவிட்டு இறங்கிய பெரியார், காலால் தடவியவாறு இருட்டில் எதையோ தேடினார். ஒரு செருப்பு கிடந்தது. அதை கையில் எடுத்த பெரியார், 'அதுதானே பார்த்தேன்! நான் போகும்போது என் மேல ஒரு செருப்பு விழுந்தது. ஒரு செருப்பை வீசினவரால் இன்னொரு செருப்பை வெச்சுட்டு பிரயோஜனம் இல்லை. அதனால் அந்த இடத்துலதானே போட்டுட்டுப் போயிருக்கணும். அதை எடுக்கத்தான் வந்தேன்’ எனச் சொன்னார். அவர் மீது செருப்பு வீசப்பட்டதே மற்றவர்களுக்கு அப்போதுதான் தெரியும்.
30 ஆண்டுகள் கழிந்தது. செருப்பு வீசப்பட்ட அதே இடத்தில் பெரியாருக்கு வெண்கல சிலை வைக்கப்பட்டது. 'செருப்பொன்று வீசினால் சிலையொன்று முளைக்கும்’ என கவிஞர் கருணானந்தம் எழுதினார். பெரியாரின் 'ராசி’ இறப்புக்குப் பிறகும் செருப்பு மாலைகள்!
ஈரோட்டில் மளிகைக்கடை மண்டிவைத்து வெறும் ராமசாமி நாயக்கராக செல்வத்தில் புரண்டு கிடக்காமல், அவர் தலையெழுத்து... தமிழர்களுக்காக இரவும் பகலும் வெயிலிலும் மழையிலும் அலைந்து, குடல் இறக்கம் காரணமாக மாட்டு வயிறுபோல தொங்கிய தன் வயிற்றைத் தூக்கிக்கொண்டு திரிந்து, சிறுநீர் கழிக்க முடியாத நிலையிலும் மூத்திரச் சட்டியுடன் மேடையில் அமர்ந்து, சிறுநீர் பிரியும்போதெல்லாம் 'அம்மா... அம்மா...’ என மரண அவஸ்தைப்பட்டு, அந்தக் கிழவன் பாடுபட்டதன் வினை என்ன தெரியுமா? அவரது படத்துக்கு ஓர் இளைஞர் செய்கிறார் சிறுநீர் அபிஷேகம்!
'உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான்’ எனச் சொன்னவர் பெரியார். சாதியை எதுவெல்லாம் காப்பாற்றியதோ அதையெல்லாம் எதிர்த்து பிரசாரம் செய்தார். மதம், சாஸ்திரம், கடவுள் எதிர்ப்புக் கருத்துக்களை அவர் அதிகம் பேசியது அதனால்தான். 'எனக்கு கண்ணை உறுத்திக்கொண்டு இருப்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இழிதன்மைகள்தான். அவர்களைச் சுதந்திரம் அடையச் செய்வதே என் கண் நோய்க்கான தீர்வு’ என்பதைத் தெளிவாகச் சொன்னவர் அவர். அந்த லட்சியத்துக்காகப் பேசியவர்; போராடியவர். அதில் சிறுபகுதிதான் கடவுள் மறுப்பு. 'சாதியை மதம் காப்பாற்றுகிறது. மதத்தைக் கடவுள் படைத்தார் என்றால், அப்படிப்பட்ட கடவுளும் மதமும் தேவையா?’ என்றே அவர் கேட்டார்.
கடவுள் மறுப்பு வாசகங்களை, தன் சிலைக்குக் கீழே செதுக்கிவைத்திருக்கச் சொன்னதே, அவரது கிண்டலான எதிர்வினைதான். 'சும்மா சிலையை மட்டும் வைத்தால் சில ஆண்டுகளுக்குப் பின், இவர் ஏதோ சாமியார்போல என நினைத்து மாலை போட்டுக் கும்பிட ஆரம்பிச்சுருவான். அப்படி ஆகிவிட கூடாதுனுதான் இப்படி எழுதச் சொன்னேன்’ என்றார்.
கடவுள் இல்லை என நா தழும்பேறி நாத்திகத்தை பிரசாரம் செய்த பெரியார், கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவம் நிச்சயம் கவனிக்க வேண்டியது.
தான் நடத்திய அநாதை இல்லத்தில் பெரியார் உட்கார்ந்து இருந்தார். அவரைச் சந்திக்க வந்த கல்வி நெறியாளர் நெ.து.சுந்தரவடிவேலு பேசிக்கொண்டு இருந்தார். கடவுள் வாழ்த்து என்ற பாடலை அந்தப் பிள்ளைகள் வாசித்ததை நெ.து.சு. கவனித்து, 'உங்கள் பிள்ளைகள் மட்டும் கடவுள் வாழ்த்து படிக்கிறார்களே?’ என பெரியாரிடம் கேட்டார். 'ஆதரிக்க ஆள் இல்லாத அநாதைப் பிள்ளைகள் இவர்கள். சோறு போட்டுக் காப்பாற்றுகிறேன் என்பதற்காக நாத்திகத்தை அவர்கள் தலையில் திணிக்கவில்லை. வயதுவந்தால் அவர்கள் படித்துத் தெரிந்துகொள்வார்கள். தங்கள் சிந்தனையால் அவர்கள் நாத்திகர்களானால் சரி’ எனச் சொன்ன பண்பு, இன்று தமிழ்ச் சமூகத்திடம் இருக்கிறதா?
'என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு’ என்பதுதான் பெரியாரின் நடத்தை. தனது கருத்துக்கு எதிரானவர்கள் அனைவரையும் தன்னைவிட உயர்வாக மதித்தவர் அவர்.
சைவ நெறியாளரான மறைமலை அடிகளுக்கும் பெரியாருக்கும் கடுமையான மோதல்கள் நடந்தன. சைவ சமயக்கூட்டத்தில் இவரது ஆட்களும், சுயமரியாதை இயக்கக் கூட்டங்களில் சைவ சமயத்தவரும் மோதிக்கொள்வார்கள். ஒருகட்டத்தில் இரண்டு இயக்கத்தவருக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டது. மறைமலை அடிகள், பெரியாருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதை 'திராவிடன்’ இதழில் பிரசுரிக்கச் சொன்னார் பெரியார். ஆசிரியர் குழுவினர், 'மன்னிப்புக் கடிதம்’ எனத் தலைப்பிட்டு பிரசுரித்துவிட்டார்கள். துடித்துப்போன பெரியார், 'இந்தத் தலைப்புக்காக நிபந்தனை இல்லாமல் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்’ எனப் பகிரங்கமாகப் பணிந்தார்.
சைவப்பழமான திரு.வி.க-வுடன் பெரியாரின் நட்பு உருக்கமானது. 'நான் செத்தால் அழுவதற்கு என நீங்கள்தான் இருக்கிறீர்கள்’ என இறப்புக்குச் சில நாட்களுக்கு முன் பெரியாரிடம் சொன்னவர் திரு.வி.க. அவர் மறைந்தபோது தனது தொண்டர்களுடன் மயானக் கரைக்கு வந்தார் பெரியார். திராவிடர் கழகத்தினர், திரு.வி.க-வுக்குக் கொள்ளி வைக்கத் தயாராக இருந்தனர். அப்போது தமிழ் அறிஞர் களான அ.ச.ஞானசம்பந்தனும்
மு.வரதராசனாரும் வந்து, 'திரு.வி.க. எங்கள் இருவரைத்தான் கொள்ளி வைக்கச் சொல்லியிருக்கிறார்’ எனச் சொன்னார்கள். 'சரி’ என, தன் தொண்டர்களை அமைதியாக இருக்கச் சொன்னார் பெரியார். 'திருவாசகத்தில் சிவபுராணத்தைப் பாடப்போகிறோம்’ என அ.ச.ஞா சொன்னார். 'அப்படியே செய்யுங்க’ எனச் சொல்லிவிட்டு அவர்கள் பாடும்போது எழுந்து நின்றவர் பெரியார்.
கடவுளை மிகக் கடுமையாக விமர்சிக்கும் பெரியாரைச் சந்திக்க நினைக்கிறார் குன்றக்குடி அடிகளார். ஈரோடு வந்த அடிகளார், பெரியாரைச் சந்திக்க வருவதாகச் சொல்கிறார். 'நீங்கள் மகா சந்நிதானம். என்னைத் தேடிவரக் கூடாது. நானே வருகிறேன்’ எனச் சொல்லிவிட்டு பெரியார் சென்றார். அவரைப் பார்த்ததும் எழுந்து நின்றார் அடிகளார். 'மகா சந்நிதானம் எழுந்து நிற்கக் கூடாது’ எனச் சொல்லிவிட்டு அருகில் இருந்த நாற்காலியில் அமரப் போகிறார். 'இந்த இருக்கையில் இரண்டு பேர் உட்காரலாம். என் அருகில் உட்காருங்கள்’ என அடிகளார் சொல்ல, 'சந்நிதானத்துக்குச் சமமாக நான் உட்காரக் கூடாது’ என மறுத்தார். இருவரும் நீண்ட நேரம் பேசினார்கள். 'சாதியை உங்கள் கடவுளும் மதமும் ஒழிக்கவில்லையே’ என பெரியார் சொல்ல, 'சாதியை கடவுள் உருவாக்கவில்லை’ என அடிகளார் சொல்ல, 'ஆனால், உங்கள் கடவுள் அதைத் தட்டிக் கேட்கவில்லையே’ என பெரியார் சொல்ல... அந்தச் சந்திப்புதான் இருவரையும் சாதி எதிர்ப்புப் போராட்டங்களில் கரம் கோக்கவைத்தது.
அப்போது பெரியார் சொல்லி அடிகளார் குலுங்கிச் சிரித்த ஜோக்: 'எனக்கும் கடவுளுக்கும் என்ன முன்விரோதமா? நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை!’
அடிகளாரைப் பார்க்க, அவரது குன்றக்குடி மடத்துக்கே பெரியார் ஒருமுறை போனார். அவருக்கு வைதீகமாக பூரணக் கும்ப மரியாதை தரப்பட்டது. அடிகளார், மரியாதையின் அடையாளமாக விபூதியை எடுத்துப் பூசினார். பெரியார் அழிக்கவில்லை. சில நாட்கள் கழித்து பெரியாரிடம் ஒரு தொண்டர் கேட்டபோது, 'விபூதியை நான் எடுத்துப் பூசிக்கொள்ளவில்லை. அடிகளார்தான் பூசிவிட்டார். அப்போது தலையைத் திருப்புவது அவரை அவமதிப்பதுபோல் ஆகாதா?’ எனக் கேட்டார். அடுத்தவர் உணர்வுக்கு மரியாதை கொடுத்து நடந்தவரின் படத்தை இன்று சிறுநீரால் அவமதிக்கிறார்கள்.
பிராமண துவேஷி என அவர் தூற்றப்படுகிறார். உண்மையில், அவர் சாதி துவேஷிதானே தவிர, குறிப்பிட்ட ஒரு சாதியின் துவேஷி அல்ல. எல்லா சாதிகளையும் அதன் ஆணவத்தையும் கண்டித்தவர். சிலர் 'தங்களை ஆண்ட பரம்பரை’ எனச் சொன்னபோது, 'பட்டாளத்தில் இருந்த எல்லாரும் ஆண்ட பரம்பரைதான்’ என நெத்தியடி அடித்தவர். 'பறையர் பட்டம் போகாமல் சூத்திரர் பட்டம் போகாது’ என்றவர்.
அனைத்துக்கும் மேலாக தான் சார்ந்த சமூகத்தையே விமர்சிக்கத் தயங்காதவர். ஒருவன் தான் பிறந்த மதத்தை, தான் பிறந்த சாதியை விமர்சிப்பதற்குத்தான் வீரம் வேண்டும். நாயக்க மன்னர்களின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒரு கிராமத்தில் மரியாதைக் குறைவாக நடத்தியபோது, 'இரண்டு பேருக்கும் என்ன வித்திசாயம்?’ எனக் கேட்டவர். 'இந்து’ கஸ்தூரி சீனிவாசன், நியூஸ் ஏஜென்சியை ஆரம்பித்தபோது பணம் முதலீடு செய்தார். சிம்சன் அனந்த ராமகிருஷ்ணன் இயந்திரக் கலப்பையை உற்பத்தி செய்தபோது பார்க்கப் போனார்.
மகா பெரியவர் காஞ்சி சந்திரசேகர ஸ்வாமிகள் மயிலாப்பூருக்கு வந்தபோது, திராவிடர் கழகத்தினர் அங்கு குழும, ரசபாச சூழல் ஏற்பட்டது. அரை மணி நேரத்தில் அந்த இடத்துக்கு வந்த பெரியார், 'பெரியவருக்குப் பாதுகாப்பு கொடுக்கவேண்டியது உங்கள் வேலை’ என தி.க-வினருக்கு அறிவுறுத்தினார்.
கவியோகி சுத்தானந்த பாரதி தனது வீட்டுக்கு வந்தபோது, பூட்டப்பட்டுக் கிடந்த பூஜை அறையைத் திறந்துவிட்டு, தட்டில் பூ கொண்டுவைத்தவர் பெரியார். வடலூர் சத்தியஞான சபைக்கு வந்தார். ஒருகட்டம் வரை வந்தவர் ஜோதி எரிந்துகொண்டிருக்கும் இடத்துக்குள் நுழைய மறுத்தார். அங்கே, 'கொலை, புலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே வரவும்’ என எழுதப்பட்டிருந்தது. எவ்வளவோ வலியுறுத்தினார்கள். 'நான் எல்லா அசைவ உணவையும் சாப்பிடுபவன். உள்ளே வர மாட்டேன்’ என மறுத்த மாண்பாளர்.
அவரது படத்துக்கா இன்று சிறுநீர் கழிப்புகள்?
அந்தக் காலத்தில் மாலி என்பவர் 'கடவுள் எங்கே?’ என்ற தலைப்பில் நாடகம் நடத்தினார். பெரியாரைக் கடுமையாகத் திட்டிய நாடகம் அது. ம.பொ.சி-யின் நண்பர் அவர். பெரியாரைச் சந்திக்கப் போன ம.பொ.சி., தன்னோடு மாலியையும் அழைத்துப்போய் அறிமுகப்படுத்தினார். ' 'கடவுள் எங்கே?’ நாடகம் போட்ட பையனா நீ?’ எனக் கேட்டார். 'உங்களை எதிர்த்து அதில் நிறைய வசனங்கள் வருது’ என்றார் மாலி. 'அதனால் என்ன... உன் கருத்தை நீ சொல்ற... என் கருத்தை நான் சொல்றேன். இதுல தப்பு ஒண்ணும் இல்லை. மக்கள் முடிவு பண்ணிப்பாங்க’ என இந்தச் சமூகத்தில் தனக்கு எவ்வளவு உரிமையை எடுத்துக்கொண்டாரோ, அதே உரிமையை தனது கொள்கை எதிரிக்கும் வழங்கினார். ஆனால், அவர் எந்த மரியாதையை மற்றவர்களுக்குக் கொடுத்தாரோ அது அவருக்குத் திரும்பக் கிடைக்கவில்லை. அதைப் பெரியார் எதிர்பார்த்தவரும் அல்ல. 'மனித ஜீவனிடம் நன்றியை எதிர்பார்ப்பது அறிவில்லாத தன்மை’ எனச் சொன்ன அவர், 'எனக்கு யாரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்றும் சொன்னார்.
ஏனெனில், அவர் பெரியார்!

பிரபாகரனை எதிர்ப்பதில் நமக்கு தயக்கம் தேவையில்லை

பிரபாகரன் தான் ஸ்ரீ சபாவை கொன்றார்,

அமீர் அண்ணாவை கொன்றார்,
பத்மநாபாவை கொன்றார்,

400டெலோ புலிகளை டயர் போட்டு கொளுத்தி கொன்றார். தொழுகையில் இருந்த 200காத்தான்குடி முஸ்லீம்களை கொன்றார்.

75 ஆயிரம் யாழ்ப்பாண முஸ்லீம்களை 2மணி நேர கெடுவில் ஊரை விட்டு விரட்டி அடித்தார் , இங்கு வந்து ராஜீவையும் 18 தமிழர்களையும் கொன்றார்.

இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கைக்கு சற்றும் குறையாது பிரபாவால் கொல்லப்பட்ட தமிழர்கள் எண்ணிக்கை.

தன் பிறந்தநாளில் 2.5லட்சம் நிதி திரட்டி அப்போதிருந்த 5 அமைப்புகளுக்கு தலா 50ஆயிரம் கொடுத்தார் கலைஞர்.

எல்லா அமைப்புகளும் ஏற்றுக்கொண்டபோது புலிகள் அமைப்பு மட்டும் அந்தப்பணத்தை ஏற்க மறுத்தார்கள்.

திமுக தொண்டர்களின் ஆதரவின் அடையாளமாக இருக்கும் அந்தப்பணத்தை பிரபாகரன் எப்படி மறுக்கலாம் .

கலைஞரின் தலைமையில் எல்லா போராளி அமைப்புகளின் தலைவர்களின் கூட்டமும் நடந்தது.

அதில் கூட பிரபா கலந்து கொள்ள மறுத்தார்.

சபா கொல்லப்பட்டபோது, சகோதர யுத்தம் வேண்டாம் என தலையால் அடித்துக்கொண்டவர் கலைஞர்.

"எல்லோரையும் இணைந்து செயல்பட சொல்லி, சபா கொல்லப்பட நானும் ஒரு விதத்தில் காரணமாகிவிட்டேனே" என கலங்கிப்போய் நின்றவர் கலைஞர் .

இத்தோடு முடியவில்லை. பிரபாகரனால் தான் ஒருமுறை நம் ஆட்சி கலைக்கப்பட்டது, இன்னொரு ஆட்சிக்கான வாய்ப்பையும் 1991ல் இழந்துபோனோம். இதெல்லாம் திமுகவையும் கலைஞரையும் பிரபா உதாசீனப்படுத்திய சம்பவங்கள்.

ஆனாலும் கூட , 2009ல் , பிரபாகரன் ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்ட தகவல் வந்தபோது, ஒருவேளை பிரபா கைது செய்யப்பட்டால் புருஷோத்தம மன்னரைப்போல் நடத்தப்பட வேண்டும் என பேசினார் கலைஞர்.

ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்வது அவசியம். இலங்கையில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு மட்டும் தான் பிரபாகரன் தலைவர்.

அதே இலங்கையில் இருக்கும் முஸ்லீம் தமிழனும், நம் மலையக தமிழனும் கூட பிரபாகரனை தலைவனாக ஏற்கவில்லை என்னும்போது இந்தியத்தமிழனான நாம மட்டும் பிரபாவை எதுக்கு ஏத்துக்கணும்.

ஒரு வேளை தமிழ் ஈழம் அமைந்திருந்தாலும் கூட , முஸ்லீம் தமிழனும், மலையகத்தமிழனும் கூட அதில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் எண்ணும்போது இவர்களைப்பற்றி நாம் எதுக்கு தம் கட்டி பேசணும் .

புலிகளால் இன்றளவும் கடைபிடிக்கப்படும் மாவீரர் தினம் என்பது , ஈழப்போராட்டத்தில் இறந்த எல்லா இயக்க போராளிகளுக்கு்மானது இல்லை என்பதை நாம் ஏற்கிறோமா?

இறுதிப்போரில் புலிகளால் மனித கேடயமாக வைக்கப்பட்டு இறந்து போன அந்த ஆன்மாக்களுக்கும், பிரபாகரனின் ஆணைக்கு வேறு வழியில்லாமல் இணங்கி இறந்துபோன அந்த போராளிகளுக்கும் நம் கனிவுப்பார்வையும், அனுதாபங்களும், வீர வணக்கங்களும் உண்டு .

ஆனால் பிரபாகரனை எதிர்ப்பதில் நமக்கு தயக்கம் தேவையில்லை. பிரபாவை எதீர்ப்பதில் , ஒரு கட்சியாக திமுகவுக்கு சில தர்ம சங்கடங்கள் இருக்கும்.

ஆனால் இணைய திமுககாரனுக்கு அதெல்லாம் இல்லை . நம் தரப்பு நியாய தர்மங்களை உரக்க எடுத்து சொல்லலாம்

Sunday, May 20, 2018

புலிகளுக்கு எப்பொழுதுமே ஒரு தந்திரம் உண்டு

புலிகளுக்கு எப்பொழுதுமே ஒரு தந்திரம் உண்டு, சிங்களரை தாக்கிவிட்டு ஊருக்குள் ஓளிவது. புலிகளை தேடுகின்றோம் என வரும் ராணுவம் ஊரையே கொளுத்தும்
இதனால் பலர் பாதிக்கபட உடனே ராணுவத்தை எதிர்க்க எங்களோடு கிளம்புங்கள் என ஆள்சேர்ப்பர் புலிகள்
அவர்களின் எக்கால தந்திரமும் இதுவேதான்
இப்படித்தான் 1983ல் சிங்கள வீரர்களை கொன்று பெரும் கலவரத்தை ஏற்படுத்தி ஆள்பிடித்து இயக்கம் வளர்த்தனர்
இதற்கு அவர்கள் வைத்த பெயர் என்ன தெரியுமா?
"அம்மை நோய்க்கு மருந்து செலுத்தும்பொழுது முதலில் காய்ச்சல் வரும், உடம்பு வலிக்கும் பின் சுகமாகும்
அப்படி மக்கள் இதனை பொறுக்க வேண்டும்"
எது? இவர்கள் சிங்களனை சுட்டுவிட்டு ஓடிவருவார்களாம் , மக்கள் அடிவாங்கி இவர்கள் பின்னால் வரவேண்டுமாம்
ஆதரவில்லா அபலைகள் வேறுவழியின்றி வந்தன, இதில் வெற்றிகண்ட புலிகள் தமிழகத்திலும் இதே பாணியினை தொடங்க நினைத்தன‌
அதற்கு ராஜிவ் கொலையினை பயன்படுத்த திட்டமிட்டனர்
ராஜிவினை கொல்லும் திட்டம் புலிகளுக்கு வந்தவுடன் அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் டெல்லி. ஆதிரை எனும் மனிதவெடிகுண்டு அங்குதான் அனுப்பபட்டாள்
ஆனால் இந்திராபடுகொலையினை தொடர்ந்து சீக்கியர் தாக்கபட்டது போல, தமிழரும் தாக்கபடுவர் அது கலவரமாகும் என திட்டமிட்டனர்
( ராஜிவ் செத்தவுடன் சு,சாமி எனும் சர்வதேச சக்திகளின் கைப்ப்பாவை தன்னையும் மீறி ராஜிவினை கொன்றது புலிகள் என கத்தியது இதனாலே
நிச்சயம் ராஜிவ் கொலை இங்கு பெரும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆசை பல சக்திகளுக்கு இருந்தன, புலி அதில் ஒரு அடியாள், சு.சாமி இன்னொரு கையாள்..)
ஆனால் தமிழகத்திலே ராஜிவினை கொல்ல முடிவு செய்தனர் புலிகள் , அப்பொழுதுதான் தமிழகம் ஆர்பரித்து புலிகள் பின்னால் செல்லுமாம்
காரணம் இந்தியா முழுக்க தமிழரை அடிபபர்கள், தமிழகத்தார் இந்தியாவினை வெறுப்பார்கள. வைகோ பழநெடுமாறன் எல்லாம் கத்த தமிழ் இளைஞர்கள் ஓடி போய் பிரபாகரனே தஞ்சம் என நிற்பார்கள்
தமிழகத்தை சுடுகாடாக்கி இளைஞர்களை அள்ளிகொண்டு பலிகொடுக்கும் பெரும் திட்டம் புலிகளுக்கு இருந்தது, அதை எதிர்பார்த்தார்கள்
ஆனால் தமிழகம் தேசிய உணர்வோடு நின்றது. வைகோ இருந்த திமுகவினைத்தான் அடித்தார்களே தவிர மற்ற மக்கள் மேல் ஒரு கீறலில்லை
இந்திய மக்களும் சு.சாமி சொன்னதை நம்பி புலிகள் தமிழர்கள், புலிகளை வளர்த்தது தமிழகத்தார் என கலவரங்களில் இறங்கவில்லை
இந்த தேசம் அமைதி காத்தது, ஒரு கலவரம் வரவில்லை
நாடு தலைவனை இழந்தோம் என அழுததே தவிர தமிழன், வடக்கத்தவன் என்றெல்லாம் பார்க்கவே இல்லை
அன்றே மனதார செத்தான் பிரபாகரன்
ஆனால் கடைசியில் எப்படியாவது கட்டுகதைகளை அவிழ்த்துவிட்டு தமிழக இளைஞர்களை கொண்டு செல்லலாம் என 2006களில் திட்டமிருந்தது
தமிழக இளைஞர்கள் ஈழபோரில் பங்கேற்க வேண்டும் என பகிரங்கமாக பேசியவர் நெடுமாறன் எனும் துரோகி
ஆனால் இந்தியா அந்த ஆபத்துக்களை கடந்தது , தமிழகம் விடுபட்டது
இந்த நாள் தமிழக தமிழர்கள் இந்தியர்களாக நின்ற நாள். இந்தியா புலிகளின் பெரும் கனவில் மண் அள்ளி போட்ட நாள்
அந்த ஆன்ம வலியிலும் அமைதிகாத்து நின்றது இத்தேசம்...
அவ்வகையில் இத்தேசத்தை எண்ணி பெருமை அடைகின்றோம்

1987ல் ராஜிவ் காந்தி கொழும்பு

இன்றைய இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு இது பொய்யென்று 40வயதுக்கு மேல் உள்ள எவனும் கூற மாட்டான் சிலவிஷமிகள் வரலாறையே மாத்தி பேசுவதால் இப்பதிவு
உணவு கொடுத்து, தமிழனிடமும்,அவனுக்கு எதிரான சிங்களவன் என இருவரிடமும் பகையான ராஜிவ் காந்தி..
1987ல் ராஜிவ் காந்தி கொழும்பு சென்றிருந்தார், ஈழவிவகாரத்தில் இந்தியா ஒரு தீர்வினை கொடுத்துவிட வேண்டும் என்ற வேகம் அவரிடம் இருந்தது
காரணம் புலிகளை நம்புவதற்கில்லை, வடமராட்சியில் சிங்களன் சுற்றி அடித்துகொண்டிருந்தான் , தமிழர்கள் உணவு மருந்து இன்றி சிக்கிகொண்டனர், பெரும் தொகை மக்கள் சாகும் நேரம்,
புலிகளின் முடிவு நெருங்கிகொண்டிருந்தது, இனி புலிகளால் சிங்களனை வெல்லமுடியாது என்ற உண்மை தெரிந்துகொண்டிருந்தது, ஏராளமான மக்கள் உணவின்றி தவித்தபொழுது, முதலில் ராஜிவ் உணவுபொருள் கப்பலைத்தான் அனுப்பினார்...
இலங்கை திருப்பி அனுப்பியது, அந்த கோபத்தில்தான் இந்திய விமானபடை விமானங்கள் அத்துமீறி நுழைந்து வடமராட்சியில் உணவுபொருளை வீசின....அது கூட பரவாயிலை அதற்கு துணையாக ஏவுகனைகளுடன் இந்திய மிக் விமானங்கள் பறந்தபொழுது கொழும்பு அலறிற்று...
ஆம் அதனை சிங்களன் தடுத்திருந்தால் அன்றே இந்திய இலங்கை போர் வெடித்திருக்கும், பணிந்தது இலங்கை..
அதன் பின் இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது, புலிகள் முரண்டு பிடித்தார்கள், பின் சில சலுகைகளுக்காய் மவுனமானார்கள்
ஆனால் இந்திய தலையீடு அவர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, அதே நேரம் சிங்களனை முழுக்க வெல்லவும் அவர்களுக்கு முடியவில்லை, ஆனால் மக்கள் செத்துகொண்டே இருந்தார்கள்
உலகம் அதனை பற்றி கவலைபட்டது, புலிகளுக்கோ துளியும் கவலை இல்லை
பிரபாகரன் பெரும் திட்டத்தோடு கொஞ்சம் ஒதுங்கினார், அவர் மனதில் இது என்ன ஒப்பந்தம்? நமக்கு கிடைக்கும் வரை லாபம் பின் ஒரு சுபதினத்தில் சண்டையினை தொடங்கலாம் என தந்திரமாய் ஒதுங்கினார், எந்த முடிவிற்கும் வரும் நபரல்ல அவர்.
சிங்கள தரப்போ அலறிகொண்டிருந்தது, இந்தியா தன் போர்விமானங்களை காட்டி தங்களை வலுகட்டாயமாக அடிமைபடுத்தியதாக பொங்கியது
அதிலும் அர்த்தம் இருந்தது, வடமராட்சியில் இந்தியா களமிறங்காவிட்டால் 1987லே பிரபாகரன் கதை முடிந்திருக்கும் முள்ளிவாய்க்கால் போல ஒரு அழிவு நடந்து 30 வருடம் ஆகியிருக்கும்.
இந்த வெறியில் சில ராணுவ வீரர்கள் கொலைதிட்டம் தீட்டினார்கள், நம் நாட்டு விவகாரத்தில் தலையிடும் இந்த ராஜிவினை கொன்றால் என்ன?
பெரும் சதி இருக்கலாம், ஆனால் வெளிவந்த விவரம் இதுதான்.
விஜமுனி விஜதா ரோகனா எனும் கடற்படை வீரன் அதற்கு தயாரானான், திட்டம் வகுக்கபட்டது..
ராஜிவ் அணிவகுப்பில் வரும்பொழுது அவரை கொல்லவேண்டும், ஆனால் அந்த அணிவகுப்பில் தோட்டா இல்லாத துப்பாக்கிதான் கொடுப்பார்கள், சுட முடியாது. மற்ற இடத்திலும் முடியாது. கடும் பாதுகாப்பில் வருவார் ராஜிவ் காந்தி..
அவருக்கு சீக்கிய, காஷ்மீரிய இன்னும் பல இயக்கங்கள் குறிவைத்திருப்பதால் மற்ற வகையில் நெருங்க முடியாது, ஒரே வழி அணிவகுப்பில் போட்டு தள்ளுவது, ஆனால் தோட்டா இல்லை என்ன செய்ய?
தோட்டா இல்லாவிட்டால் பரவாயில்லை, துப்பாக்கி முனையில் கத்தி இருக்கின்றது, விஜமுனி சொன்னான்..
"நான் அடிக்கின்றேன் அவர் கீழே விழுவார், மூவரும் சேர்ந்து துப்பாக்கி முனை கத்தியால் கிழித்துவிடலாம்"
அப்படி அணிவகுப்பில் நின்றார்கள், இதே நாளில் ராஜிவிற்கு ராணுவ மரியாதை கொடுக்கபட்டது, அவரும் நடந்து சென்று மரியாதையினை ஏற்றுகொண்டிருந்தார்..
விஜயமுனி தயாரானான், அவர் அருகில் வரவும் திட்டபடி துப்பாக்கி பின்புறத்தால் அடித்தான், ஆனால் நிழல் கண்டு தப்பினார் ராஜிவ் அடி பலமாக இல்லை..
எல்லோரும் பார்த்துகொண்டிருக்க இதற்கு மேல் தாங்காது என்பதால் உடனே சிங்கள வீரர்கள் அவனை பிடித்தனர், திட்டம் பிசகிய அதிர்ச்சியில் மற்ற இரு வீரர்கள் தங்களை காட்டிகொள்ளவில்லை..
பெரும் அதிர்ச்சி அலைகளை உலகம் முழுக்க இது கிளப்பியது, பாரத பிரதமரை சிங்களன் அடிப்பதா? என இந்தியாவே ஆர்பரித்தது..
இனி இந்தியா இலங்கையின் சோலியினை முடித்துவிடும், இன்றே படையெடுப்பு உறுதி என்றெல்லாம் செய்திகள் வந்தன.
ஆனால் ராஜிவ் நிதானமாக இருந்தார், இதனை பெரிதுபடுத்தவேண்டாம் என சொல்லிவிட்டு ஒப்பந்ததை நிறைவேற்றிவிட்டு வந்துவிட்டார்..
அவரின் பெருந்தன்மை அது, சிங்கள அரசின் ஒப்புதலின்றி இது நடக்காது என அவருக்கும் தெரியும், என்ன செய்வது? சர்வதேச அரசியல் அப்படித்தான்
ஈழதமிழர்களுக்காக சிங்களனிடம் தன் உயிரை பணயம் வைக்கும் அளவிற்கு சென்ற ராஜிவ்காந்திதான், வட மராட்சியில் புலிகளையும் தமிழ் மக்களையும் காத்ததற்காக ஒரு சிங்களனிடம் உயிர்தப்பிய ராஜிவ்தான் பின் புலிகளால் கொல்லபட்டார்..
புலிகளின் நன்றிகடன் அப்படி இருந்திருக்கின்றது..
இன்று அந்த நாள், புலிகளிடம் சாவதற்காக‌ விஜமுனியிடமிருந்து அவர் உயிர்தப்பிய நாள்.
சரி அந்த விஜமுனி என்ன ஆனான்?
சிங்களன் அவரை கொண்டாடினான், வீரமும் மானமும் உள்ள சிங்களபரம்பரை என அவனுக்கு பட்டம் கொடுத்தார்கள், தேர்தலில் வென்று எம்பியாக எல்லாம் இருந்தான், இன்னும் இருக்கின்றான்..
அவனை எல்லாம் புலிகள் கொல்லமாட்டார்கள், எந்த ஈழ தமிழனும் ஒன்றும் சொல்லவும் மாட்டான்..
ஏன் ஈழதமிழனுக்கு உதவிக்கு வருகின்றாய் என கொலைவரை சென்ற விஜமுனி சிங்களன் ஹீரோவாக இருப்பான்..
ஆனால் ஈழதமிழருக்கு உதவியாய் சென்ற ராஜிவ் இப்பொழுது இல்லை, கொன்றது யார்? சாட்சாத் ஈழத்தவர்..
விசித்திரமான சிக்கல் இலங்கையில் இந்தியாவிற்கு...
ஆம் எங்கள் போராட்டத்தை கெடுத்தது இந்தியா என ஈழத்தவரும், 1987லே புலிகளை ஒழித்திருப்போம், படை அனுப்பி கெடுத்தது இந்தியா என சிங்களனும் ஒருசேர கத்திகொண்டே இருந்தார்கள்..
அது எப்படி ஒரு தேசம் இரு இனங்களுக்கும் எதிரியாக முடியும்? ஆனால் இந்தியா அப்படி ஆனது..
பின் என்னவெல்லாமோ நடந்து, நாசமாய் போங்கள் என இந்தியா ஒதுங்கியது, அதன் பின் இந்தியா எங்கள் விரோதி என சொல்லிகொண்ட இருவரும் தங்களுக்குள் மோதி புலிகள் அழிந்தனர்.
ஈழமக்கள் துயரம் இன்னும் தொடர்கின்றது, எந்த உரிமைக்காக போராட கிளம்பினார்களோ, அதில் ஒரு உரிமையும் அவர்கள் பெற்றுவிடவில்லை மாறாக இருந்த உரிமைகளும் பறிகொடுத்து அபலகளாய் நிற்கின்றார்கள்.

சொந்த மக்களையே திட்டமிட்டு பலி கொடுத்து யார்

சற்று சிந்தித்துப் பாருங்கள் ?
பள்ளிக்கூட பிள்ளைமுதல் , பல்லுப்போன கிழவிவரை , கைகளில் ஆயுதம் கொடுத்து அதை இணையத்தளத்தில் ஏற்றி
ரனுவத்திடம் காட்டிக்குடுத்தது யார் ?
குறிப்பிட்ட நிலப்பரப்புக்கள் வீழ்ச்சி அடைந்ததும் மக்களை சுயமாக செயல்ப்பட
வீடாது மக்களை இறுதிவரை தங்களது பாதுகாப்பரணகா முள்ளி வாய்க்கால் வரை கொண்டு சென்றது யார் ?
மக்கள்தான் புலிகள் புலிகள்தான் மக்கள் என்று ஒட்டு மொத்த மக்களையும் ஆயுததாரிகளாக்கி அதை இணையத்தளங்களில் ஏற்றி காட்டிக்கொடுத்து சொந்த மக்களையே திட்டமிட்டு பலி கொடுத்து யார் ?
இதற்க்கெல்லாம் காரணமானவர்கள் புலிகளும் அதன் ஆதரவாளர்களும்
இப்படியானவர்களே இன்று முள்ளி வாய்க்காலில் நீலக்கண்ணிர் வடிக்கின்றார்கள்.
இந்த முள்ளி வாய்க்கால் நினைவு தினங்களை செய்ய தகுதியானவார்கள் உறவுகளை இழந்த உறவுகள் மட்டும்தான்.
மற்றும்படி எந்த அரசியல் கட்ச்சிக்கோ
பல்கலை கழகத்திற்க்கோ எந்தவித தகுதியும் இல்லை.
உண்மையிலேயே உறவுகளை இழந்த உறவுகள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.


சிங்களவன் கொல்வதற்கும் சொந்த இனம் கொல்வதற்கும் நிறைய வேறுபாடுகள், இனக்கலவரங்களின்போது சிங்களப் பகுதிகளில் மட்டும்தான் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். பிரபாகரன் போராடிய காலத்தில் தமிழர்களின் சொந்த வீடுகளிலும் , தெருக்களிலும் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.


ஈழவிடுதலை போராட்டம் ஆரம்பித்த நாள்முதல்
இலங்கை இந்திய ஒப்பந்தம்வரை ஏற்பட்ட இழப்புக்கள் 600.

இந்த 600 பேருடைய இழப்புக்களுமே பேரிழப்பாக எண்ணி இதற்க்குமேற் இழப்புக்கள் ஜீரணிக்க முடியாது என்று இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற ஒரு பொன்னான வாய்ப்பை பலர் ஏற்றுக்கொண்டமைக்கு
பல காரணங்களில் இதுவும் ஒன்று.

அன்று பலராலும் ஏற்றுக்கொண்ட அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்லாமல்.ஏதிரியான சிங்களவனுடன் இணைந்து துரோகத்தையும் செய்தார்கள்.

ஈழ விடுதலைப்போராட்டத்தில்
இலங்கை ரானுவத்துடன் சேர்ந்தியங்கிய முதல் இயக்கம் புலிகள்.

அப்போதெல்லாம் மாற்றியக்கங்கள் புலிகளை தேசத்துரோகி என்றே பகிரங்கமாக குறிப்பிட்டார்கள்.

அண்று முடிந்திருக்க வேண்டிய பிரச்சனையை
இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டவர்களை எந்தப் பட்டியலில் இடுவது என்பதை நீங்களே முடிவெடுங்கள்



1987 October இல் IPKF கொக்குவில் பிரம்படியில் சரியாக செயற்பட்டு பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால்;
1. IPKF பிரசன்னத்துடன் அதிகாரமிக்க இணைந்த வடகிழக்கு மாகாண சபையினை பெற்றிருப்போம் .
2.முள்ளிவாய்கால், நவாலி, செம்மணி பேரவலங்கள் மற்றும் 1995 உட்பட பல அவலமான
மக்கள் இடப்பெயர்வுகள் தடுக்கப்பட்டிருக்கும்.
3.இந்தியாவில் தமிழ் நாடு போன்று வடகிழக்கு மாகாணமும் அபிவிருத்தியடைந்திருக்கும்.
4.அமிர்தலிங்கம், நீலன் , உமாமகேஸ்வரன் போன்ற தலைவர்களை இழந்திருக்க மாட்டோம் .



தவறான தலமைகளின் வளிநடத்தலே இன்றைய இன்நிலமைக்கு காரணமே தவிர சாதாரண போராளிகள் அல்ல.

ஆயுதத்தால் மட்டுமே சகலதையு ஆளுமை செய்தவர்கள் புலிகள்.
சகோதர இயக்கங்களை தடை செய்து தங்களை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆயுதத்தால் பதில் சொன்னவர்கள் புலிகள்.
ஜனனாயக வளிக்குவந்தால் தங்களுடைய சர்வதிகாரநிமித்தம் மக்களால் ஓரங்கட்டப்பட்டுவிடுவோம் என்ற பயத்தில் இலங்கை இந்திய ஒப்பந்தம்முதல் அதற்க்கு பிற்ப்பட்ட காலப்பகுதியில் கிடைத்த சகல சமாதான சந்தர்ப்பங்களையும் தட்டிக்களித்தவர்கள் புலிகள்.
அரக்கன் என்று கருதிய சிங்கள ரானுவத்துக்கு எதிராக பலதடவைகள் ஆர்ப்பாட்டம் செய்த எமது மக்கள் புலிகளை எதிர்த்து சத்தமாக பேசமுடியாது சுவருக்கும் காதிருக்கென்று கூறி தமது இரும்புக்கரத்தால் அடக்கி வைத்திருந்தவர்கள் புலிகள்.
இவ்வாறு இருந்த புலிகள் என்று ஆயுதம் இல்லாமல் நிற்க்கிறார்களோ அன்று மக்களிடம் இருந்து விரட்டப்படுவார்கள் என்று பலர் அண்று கூறியது.
இன்று நிறைவேறியது.
ஏற்க்கனவே முகாமில் இருந்த மக்களால் புலிகள் தாக்கப்பட்டதும் ரானுவம் வந்து தலையிட்டு புலிகளை வேறு இடங்களுக்கு மாற்றியமைத்ததுமான வேடிக்கையான சம்பவங்கள் அனேகர் அறிந்ததே.
அதன்பிறகு முன்னாள் போராளிகள் என்ற காரணத்தால் சமூகத்தில் இருந்து ஒரங்கட்டப்பட்ட சம்பவங்களும் நிறையவே உண்டு.
இன்று அதையும் தாண்டி உச்சக்கட்டமாக
புலிகள் இறுதியாக களமாடி தங்கள் தலைவரை இழந்த இடத்திலேயே முன்னாள்
புலிகளை முதுகில் கை வைத்து வெளியேற்றியமையானது பெரும் அதிர்ச்சியே.
தவறான தலமைகளின் வளிநடத்தலே இன்றைய இன்நிலமைக்கு காரணமே தவிர சாதாரண போராளிகள் அல்ல.
எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன்.
மண்மீது பற்றுக்கொண்டு களமாடிய சாதாரண போராளிகளை நாம் ஓரம் கட்டுவது முறையல்ல.



நீதி எங்கே கிடைக்கும்.? பத்தோடு பதினொன்றான துன்பியல்தான்

Rajh Selvapathi:


வங்காலையினூடாக செல்ல நேர்ந்த போது 2006 ல் இப்பகுதியில் ந்டந்த ஒரு கோர சம்பவம் ஞாபகத்துக்கு வந்து சென்றது. முள்ளிவாய்க்கால் முடிவு என்றால் அதன் தொடக்கம் இந்த வங்காலை சம்பவம்தான்.

ஜூன் 09,2006 நாள் மன்னார் வங்காலை பத்தாம் வட்டாரத்திலுள்ள தோமஸ்புரி கிராமத்தில் தந்தை, தாய், மகன், மகள் என நால்வர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் நால்வரும் வெட்டிக் கொல்லப்பட்டிருந்தனர். இளம் தாய் தந்தையர். இதில் தந்தையும், மகனும் படுகொலை செய்யப்பட்ட பின்னர் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தனர்.

2002 சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தானதன் பின்னர் இந்தியாவிலிருந்து திரும்பி தமது ஊரில் வாழ்ந்து வந்த சின்னையா மூர்த்தி மார்ட்டீன்(35) அவரது மனைவி சித்ரா என் அழைக்கப்பட்ட அந்தோனி மேரி மெட்டலின் (27), மகள் ஆன் லக்சிதா(09), மகன் நிலக்ஷன் அன்பியா(07) ஆகியோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட துரதிஸ்டசாலிகளாவர். மறுநாள் காலை ஏழு மணியாகியும் வீட்டிலிருந்த எவரும் வெளியே வராததால் பக்கத்து வீட்டிலிருந்த கொலைசெய்யப்பட்ட பெண்ணின் சகோதரி இவர்களது வீட்டுக்குச் சென்று முன் கதவைத் திறந்து பார்த்து அலறிதுடித்திருந்தார் வீட்டின் வரவேற்பறையில் ஆடைகள் அலங்கோலமான நிலையில் மேரி மெட்டலின் (சித்திரா 27 வயது) இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அப்பகுதியெங்கும் இரத்தம் உறைந்து போய்க் கிடந்தது. இவரது அலறல் சத்தத்தை கேட்டு ஏனையோர் அங்கு திரண்டு வந்து பார்த்தபோது, இறந்து கிடந்த பெண்ணின் உடலின் பல பகுதிகளிலும் பலத்த காயங்கள் காணப்பட்டதுடன் கூரான உளிகளால் குத்தி இவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. மேரி கொலை செய்யப்படும் முன் காட்டுமிராண்டிதனமாக பலியல் வன்புணர்வு செய்ய்ப்பட்டிருந்தார் அத்துடன், இவர் கொலை செய்யப்பட முன்னர் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்களுமிருந்தன. இவரது கணவரையும் இரு பிள்ளைகளையும் அங்கு தேடியபோது, அருகிலுள்ள அறையொன்றினுள் மூவரதும் சடலங்கள் சுருக்குக் கயிறுகளில் தொங்கிக் கொண்டிருந்தன. அறையின் தரையில் பெருமளவு இரத்தம் உறைந்து போயிருந்தது.

இப் பகுதியில் சில மாதங்களாகவே இடம்பெற்று வந்த அச்சமூட்டும் சம்பவங்களால், தோமஸ்புரி கிராம மக்களில் மிகப்பெரும்பாலானோர் இரவு நேரங்களில் வங்காலை புனித ஆனாள், தேவாலயத்திற்குச் சென்று தங்கிவிட்டு அதிகாலையில் வீடு திரும்புவர். எனினும் படுகொலை நடந்த வீட்டைச் சேர்ந்தவர்களும் இவர்களது உறவினர்களான நான்கு குடும்பங்களும் வேறு ஒரு சில குடும்பங்களும் இரவு நேரத்தில் இடம்பெயராது தங்கள் வீடுகளிலேயே தங்கியிருந்தனர். இந்த நிலையில், தச்சுத் தொழிலாளியான மூர்த்தி மார்டின் (35) என்பவரது வீட்டினுள் நுழைந்தவர்கள் இந்தக் கொடூரப் படுகொலைகளையும் சித்திரவதைகளையும் புரிந்து விட்டுச் சென்றிருந்தனர்.

இந்த அப்பாவி பொதுமக்களை யார் படுகொலை செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? என்பது இன்றுவரை மறைக்கப்பட்ட விடயமாகவே உள்ளது. இவர்களுக்கு நீதி வேண்டாமா? இது இன அழிப்பு இல்லையா? இன்னும் சில நாட்களில் இந்த குடும்பம் சிதைக்கப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடைகின்றது. குறைந்தது ஒரு மெழுகு திரியையேனும் ஏற்றி வைப்பார்களா?

யாழ் பலகலைகழக வவுனியா வளாக guys கவனதுக்கு. வங்காலை உங்கள் இடத்தில் இருந்து கைக்கெட்டிய தூரத்தில்தான் உள்ளது.



Ponniya Rasalingam: இந்த படுகொலை தமிழ்
தேசியவாத. காட்டு. மராண்டி அரசியல் வாதிகளுக்கு புரிவதில்லை

Rajh Selvapathi: ஒருவேலை படுகொலையாளிகள் அவர்களின் இயக்குனநகளாக இருக்கலாம் அல்லவா?

Charles J Forman: கோரமான இப்படங்களைப் பொதுத் தளத்தில் போடுவதன் மூலம் இதே கொலைகள் மீண்டும் செய்யப்பட்டிருக்கின்றன. இப்படங்கள் யாரால் எடுக்கப்பட்டு, பொதுப் பாவிப்புக்கு அனுப்பப்பட்டது?

Rajh Selvapathi: இந்த சம்மவத்துடன் தொடர்புடைய இதைவிட மிக மோசமான படங்கள் அப்போது பொதுவெளியில் பிரச்சாரத்துக்காக விடப்பட்டது. இப்போதும் கூகுலில் உள்ளது.

Ganeshalingam Kanapathipillai: இது புலிகள் செய்ததாக்வே முன்னர் அறிந்தேன்.

Ganeshalingam Kanapathipillai: புலிகள் எப்போதும் பிரச்சாரங்களுக்காகவும் அப்பாவிகளைக் கொலைசெய்ததை நானறிவேன்.இதேபோல இன்ன்மொரு சம்பவமும் நடந்தேறியிருந்தது. ஒர் 6 வயதுக்குழந்தையை தூக்கில் போட்டுவிட்டு குழந்தையின் குறியில் காயங்களை ஏற்படுத்தி இராணுவம் செய்த்தாகப் பிரச்சாரம் செய்தனர்.



Thevi Tharma-Bala: இராணுவம் என அன்று ஆணித்தரமாக தேவாலய போதகர் குறிப்பிட்டிருந்தார்.

Rahu Rahu Kathiravelu:

தமிழ் மக்களின் அழிவுக்கே காரணமானவர்களே இந்த பாதர்மார்கள்தானே. யாரையோ குற்றம் சாட்டி உண்மையான குற்றவாளிகளை தப்பவைத்தார்கள்.

உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிரேன் நேர்மையாகப் பதில் சொல்லுங்கள். பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி கொல்பவர்கள் எதற்கு ஆணுறை பாவிக்க வேண்டும்.

புலிகள் எவ்வளவு உஷாரானவர்கள் பாதிர்மார்களுக்கு தியாமல் போனது எப்படி?

தங்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதி யில் இப்படி கொலைகள் செய்தால் தங்கள் மேல் பழி வரும் என்று கடற்படைக்கு தெரியாமலிருந்ததோ?

Rahu Rahu Kathiravelu: படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலிகள் நடாத்திய திட்டமிட்ட கொலைதான் இது.

சமாதான காலத்தில் புலிகள் இப்படியான கொலைகளை பரவலாகச் செய்தனர். தென்மராட்சி கனகம்புளியடியில் ஒரு குடும்பம் கொலை , புங்குடுதீவில் தர்சினி என்று கொலை செய்யப்பட்டார்கள்.

அல்லைப்பிட்டியில் ஒரு குடும்பம், மானிப்பாயில் மூன்று பெண்கள் என்று பல இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதில் திட்டமிட்டு பல கொலைகளை மேற்கொண்டனர்.

வங்காலையில் கொல்லப்பட்ட மார்ட்டின் குடும்பம் கொல்லப்பட்டவுடன் புலிகளின் இணையதளமான தமிழ்நெற் சுடச்சுட செய்தியை படங்களுடன் வெளியிட்டது.

கடற்படையினர்மேல் பழியைச் சுமத்த புலிகள் திட்டமிட்டுச் செய்த கொலைகள் புலிகளுக்கு வெற்றியைக் கொடுத்தது.

இந்தக் கொலை நடந்தவுடன் வங்காலை மக்கள் அச்சத்தில் வெளியேறத் தொடங்கினார்கள்..

அல்லைப்பிட்டியில் கொலை நடந்தவுடன் அல்லைப்பிட்டி மக்கள் வெளியேறி புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிக்குச் சென்றார்கள். வன்னிக்குச் செல்ல மறுத்த மாவீரர் குடும்பம் ஒன்று மானிப்பாயில் கொல்லப்பட்டது.

உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் வசித்த 6 மாதக் குழந்தை உட்பட பெற்றோரும் கொல்லப்பட்டனர்.

இந்தக் கொலைகளை நடத்திவிட்டு அருகே ஆணுறையும் ஆதாரமாக காட்டப்பட்டது .ஒரு பெண்பிள்ளையை கற்பழித்துக் கொல்கின்ற கடற்படை எதற்கு ஆணுறை பாவிக்க வேண்டும்.

அங்கு பதிந்திருந்த பூட்ஸ் அடையாளம்தானாம் கடற்படையினர் இதனைச் செய்ததற்கான ஆதாரம்.

தமிழ் மக்களுக்கு உளவியல் ரீதீயாக தாக்கம் ஏற்பட புலிகள் செய்த படுகொலைகள் ஏராளம்.

இராணுவ சீருடை அணிந்து வவுனியா எல்லைக் கிராமங்களில் புலிகள் பல தமிழ் மக்களைக் கொன்றதாக தயா மாஸ்டரே கூறினார்.

வித்தியா கொலை கூட கடற்படையின்ர் மேல் பழிபோடும் முகமாகவே திட்டமிட்டு நடத்தப்பட்டது ஆனால் கொலையாளிகள் மாட்டிக்கொண்டனர்.. இல்லையென்றால் அது கூட கடற்படையினர் செய்ததாகவே மக்கள் நம்பவைக்கப்படிருப்பார்கள்

சுதாகரன், சுவர்ணவதி, மற்றும் 6 மாதக் குழந்தை வதனன் ஆகியோர் கனகம்புளியடியில் புலிகளால் கொல்லப்பட்டனர்

இக்காலத்தில் நடந்த கொலைகள் எல்லாம் கூ ரிய ஆயுதங்கள் பாவிக்கப்பட்டு கொடூரமான முறையில் நடந்தது

Rathnakumar SE: இந்த சம்பவத்தை நான் இணையத்தளத்தில் பார்க்கும் போது அருகில் இருந்த ஒரு சிங்கள நண்பர் கூறினார் இது புலிகளின் வேலைதான் என இராணுவம் இதை செய்தால் இவ்வாறு உடல்களை கொடூரமாக போட வேண்டிய தேவையில்லை என்றார்

Rahu Rahu Kathiravelu: சமாதான காலத்தில் கூரிய ஆயுதங்களால் கொல்லும் வழக்கத்தை புலிகள் கையாண்டார்கள். இராணுவம் கிரிஷாந்தி சாரதாம்பாள் ஆகியோரைக் கொன்றிருக்கிறது , ஆனால் இப்படி கொடூரமாகவெட்டிக் கொல்லவில்லை.

பாவை வேந்தன்: கொலைகளை செய்வதை கலைகளாகக் கொண்டவர்கள் புலிகள்.

95 இற்க்கு பிற்ப்பாடு ரானுவக்கட்டுப்பாட்டு பிரதேசமான பகுதிகளுக்குள் மக்களோடு மக்களாக நின்று கைக்குண்டை வீசிவிட்டு ஓடிவிடுவார்கள்
புலிகள்.

ஏற்கனவே பதட்டத்தில் நிக்கின்ற ரானுவம் செய்வதறியாது துப்பாக்கி
பிரயோகம் செய்வான் அதில் வீதியால் செல்லும் அப்பாவி மக்கள் ஒரு சிலர் பலியாவார்கள்.

உடனடியாக புலிகளின் குரலில் ரானுவத்தின் கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத்தில் அப்பாவி பொதுமக்கள் பலி என்பார்கள்.

இதுதான் புலிகளின் தந்திரம்.

இவர்கள் குண்டெறிந்தபடியால்தான்
இவ்வளவு நடத்தது மக்கள் மத்தியில் நின்று இவர்கள் ஏன் குண்டெறிந்தார்கள்
என்று ஒரு சிலரே சிந்திப்பார்கள்.

Gv Venkatesan: இதே வேலையை IPKF இடம் செய்து. பயிற்சி பெற்றார்கள்... அவர்களை விரட்டி அடித்தனர்

http://www.lankaweb.com/news/items04/040204-5.html