Showing posts with label Pseudoscience. Show all posts
Showing posts with label Pseudoscience. Show all posts

Thursday, July 26, 2018

நவீன மருத்துவம் குறித்து நம்மாழ்வார் ஐயாவின் அற்புத அரிய உரை

நவீன மருத்துவம் குறித்து நம்மாழ்வார் ஐயாவின் அற்புத அரிய உரை:
1) அமெரிக்காவுல தயாரிக்கற மாத்திரைக்கு இங்க நோயைக் கண்டுபிடிக்கறாங்க. (ஃபார்மக்காலஜி லைன்ல வாங்க)
2) டெங்கு காய்ச்சலுக்கு ஆஸ்பத்திரிக்கு போனவங்க செத்தாங்க. வீட்ல நிலவேம்பு குடிச்சவங்க பிழைச்சாங்க. (ஜெனரல் மெடிசின் லைன்ல வாங்க)
3) அலோபதி மருத்துவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இந்த ஹீலர்களுக்கு இருக்கு. (கம்யுனிட்டி மெடிசின் லைன்ல வாங்க)
4) பஞ்சகவ்யா மூக்குச்சளி முதல் எய்ட்ஸ் உட்பட அனைத்து நோயையும் குணமாக்கும். (வைராலஜி யாராவது இருக்கீங்களா?)
5) பஞ்சகவ்யம் குடித்தால் கண்ணாடி போட வேண்டியதில்லை. (தம்பி, ஆப்தல்மாலஜி அதான் ஐயா சொல்லிட்டார்ல!)
6) வெள்ளைக்காரன் நாற்காலியைக் கொண்டுவந்துதான் நோயைப் பரப்பினான். அதனால் எப்போதும் சம்மணம் போட்டு உக்காருங்க. (பிஸியோ எங்கப்பா?)
7) இங்கிலீஷ் டாக்டருங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் உடம்பைக் கிழிச்சி தைக்கிறது மட்டும்தான். ஏன்னா அதுக்கு அவங்க்கிட்ட லைசன்ஸ் இருக்கு. கிழிச்சு தைச்சதுக்கப்புறம் அந்த உடம்பு என்னத்துக்கு ஆகும்? (சர்ஜரி கைஸ், கேட்டீங்களா?!)
8). உடம்பைக் கிழிச்சு தைச்சதுக்கப்புறம் அது எதுக்கு ஆகும்? இதை நாகரிகம்ங்கிற பேர்ல நாமளும் ஏத்துக்கறோம். (ரிஹேப் பசங்களா, கேட்டீங்களா?!)
9) வயித்தைக் கிழிச்சு குழந்தையை எடுக்கறதுக்கு எதுக்கு ஒம்போது மாசம் வைத்தியம் பாத்தீங்க, ஸ்கேன் பண்ணுனீங்க? (கைனக்ஸ் ஆன்சர் ஐயா'ஸ் கொஸ்டின்)
10) வீட்ல வச்சு பிரசவம் பாத்து எதாச்சும் ஆச்சுன்னா போலீஸ் கம்ப்ளைன்ட் குடுத்துருவேன்னு சொன்ன அந்த பெண்ணோட அம்மாவை நினைச்சு ஐயா எக்காளமாய் சிரிக்கறது எவ்வளவு அழகு தெரியுமா! (மெடிக்கோ லீகல்! ஹாஹாஹா!!)
11) குழந்தையை ஒவ்வொரு உறுப்பையும் உண்டாக்கற தாயோட உடம்பு இதயத்தையும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒழுங்காத்தான் உண்டாக்குது. அப்படிப்பட்ட தாயோட உடம்பு தன்னோட இதயத்துல இருக்கற ஓட்டைய அடைச்சுக்காதா? (ஏம்ப்பா கார்டியாலஜி துரை, ஐயா கேட்டது புர்தா?!)
12) வீட்டுக்குள்ள இருக்கற குப்பையைக் கூட்டி வெளில தள்ளிட்டு விட்டுர்றோம். அதேமாதிரி உடம்பு குப்பை, கழிவுன்னு தனக்கு தேவையில்லாததை மலக்குடல் வழியா வெளிய தள்ளிடுது. அதப்போயி இவிங்க மலப் பரிசோதனைன்னு பண்ணிகிட்டு இருக்காங்க. ஹாஹாஹா! ஃபன்னி கைஸ்!! (லேபுக்கார தம்பி, அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துராதப்பா!).
இதெல்லாம் சின்ன சாம்பிள். விஞ்ஞானி என்று அறிமுகப்படுத்தி வைக்கப்படும் நம்மாழ்வாரின் அறிவியல் இதுதான். இந்த மாதிரியான கோட்பாடுகளை வைத்து இன்று விவசாயம் செய்தால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.
சாவு அடுத்தவன் வீட்டில் விழும்வரை அது நமக்கு செய்திதான். நமது மனைவியோ, கணவனோ, குழந்தையோ, தாயோ, தகப்பனோ இறந்தால்தான் அதனுடைய வேதனை புரியும்.
சாவு எல்லோருக்கும் ஒருநாள் வரும்தான். ஆனால் அதை நமது முட்டாள்தனத்தால் நாமே வரவழைத்துக்கொள்வதோ, நமக்கு நெருங்கியவர்களுக்கு வரவழைப்பதோ கொலை செய்தலுக்கு ஒப்பாகும்.
நம்மாழ்வார்கள், ஹீலர்கள், வாழ்வியல் புடலங்காய் புண்ணாக்கு விற்பன்னர்களை நம்பி யாரும் அகாலமரணம் அடையக்கூடாது.

அறிவியல் மற்றும் மருத்துவம் என்பது குறி சொல்வது போன்றது அல்ல.

//கண் பார்வை சரியாக தெரியவில்லை என்றால் கண்ணாடி அணியக்கூடாது. ஏன் அணியக்கூடாது என்றால் அது இயற்கைக்கு எதிரானது , ஏனெனில் மனிதர்கள் குழந்தையாக பிறக்கும்போது கண்ணாடியுடன் பிறப்பதில்லை//
இரண்டாண்டுகளுக்கு முன்பு செந்தமிழன் மணியரசன் என்பவரின் இந்த பேச்சுக்காக அவரிடம் பேஸ்புக்கிலும் அதில் ப்ளாக் ஆனதைத் தொடர்ந்து நீயா நானா நிகழ்ச்சியிலும் மல்லுக்கட்டியது நினைவுக்கு வருகிறது.
நீயா நானா நிகழ்ச்சியில் அவர் தன்னால் கண்ணாடி போடாமல் பார்வையை கொண்டுவருகிற சிகிச்சை முறையை இந்த உலகத்துக்கு குறைந்தபட்சம் தமிழ்நாட்டு மக்களுக்காவது தெரியப்படுத்தவேண்டும் என்று கேட்டபோது கடைசிவரை அவர் அந்த சிகிச்சை முறையை சொல்லவேயில்லை. ஏன் இன்றுவரையிலும் அவர் சொல்லவில்லை !
கடைசியாக கோபிநாத் “கத்தியைக் கொண்டு பழத்தையும் நறுக்க லாம் ஆளையும் கொலை செய்யலாம்” என்ற மொண்ணையான பட்டிமன்ற பேச்சு போல “செந்தமிழன் ! உங்களைப்போன்ற இயற்கையோடு வாழ்பவர்களுக்கு வேண்டுமானால் நீங்கள் சொல்வது சரிவரும். எல்லாருக்கும் அல்ல “ என பேசி எங்கள் இருவருக்கும் பொதுவாக பேசி சமாதானம் செய்து முடிப்பது போல முடித்தார்.
அறிவியல் மற்றும் மருத்துவம் என்பது குறி சொல்வது போன்றது அல்ல. என் கிட்ட வந்தா தான் நடக்கும் , மற்றவர்களால் அதை பண்ணமுடியாது என புருடா விடுவதல்ல மருத்துவம்.
இந்தியாவில் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றால் இங்கிலாந்திலும் அதே 24 மணி நேரம் தான். இங்க ஒருத்தன் வாயையும் மூக்கையும் பொத்துனா செத்துடுவான் என்றால் ஆஸ்திரேலியாவில் இருக்கறவனை அப்படி பண்ணாலும் செத்துடுவான். இதுதான் அறிவியல்.
அறிவியல் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதல்ல. அது ஆய்வுகளோடும் தரவுகளோடும் உலகம் முழுவதும் நிரூபிக்கப்படவேண்டும்.
வெள்ளிக்கிழமை சாயங்காலம் வீட்டுல வெளக்கு ஏத்தலன்னா வீட்டுக்கு ஆகாது என்பது ஒரு சிலரின் நம்பிக்கை. அது மூட நம்பிக்கையோ ஏதோ ஒரு நம்பிக்கை. ஆனால் அறிவியல் என்பது தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் ஒரு வீட்டுல வெள்ளிக் கிழமை விளக்கு ஏத்தலன்னா வீட்டுக்கு ஆபத்து என்றால் அமெரிக்காவில் கலிபோர்னியா வில் இருக்கிற ஒரு வீட்டுலயும் வெளக்கு ஏத்தலன்னா லும் ஆபத்து ஏற்படவேண்டும். அப்ப தான் அது அறிவியல்.
துரதிர்ஷ்டவசமாக சிலர் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிரூபிக்கப்பட்ட அறிவியல் மருத்துவத்தை ஏதோ பன்னாட்டு சதி போல நினைத்துக்கொண்டு / அப்படி பொய்ப்பரப்புரையில் மயங்கி , “ மருந்தே இல்லாமல் நோயை குணமாக்குகிறேன் , ஊசி ஆஸ்பத்திரி இல்லாமலேயே பிரசவம் பண்ணலாம் , எருமை சாணியை இளநீரோடு சேர்த்து குடித்தா டாக்டர் கிட்டயே போகவேணாம் “ என்றெல்லாம் பசப்புகிற மோசடிப்பேர்வழிகளை நம்பி திசை மாறுவது வருந்தத்தக்கது.

ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் !

ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் !

திருப்பூர் கிருத்திகாவின் மரணம் , அறிவியலற்ற விஞ்ஞானமல்லாத ஹீலர் பாஸ்கர் - பாரி சாலன் வகை பித்தலாட்டங்களை யூ-டியூபில் ரசிக்கும் கூட்டம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் அபாயத்தை முன்னறிவிக்கின்றது.

திருப்பூரை அடுத்துள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருத்திகா, வயது 28. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். கணவர் கார்த்திகேயன் பனியன் கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார். இவர்களுக்கு ஏற்கனவே நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் கிருத்திகா இரண்டாவது முறையாக கருவுற்றுள்ளார். தமிழகத்தில் சமீபமாக சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்சப் போன்ற ஊடகங்களில் பரவி வரும் ’இயற்கை வாழ்வியல்’ குறித்து இத்தம்பதியினருக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளது.

திருப்பூர் கிருத்திகா மரணம்
கார்த்திகேயன் – கிருத்திகா தம்பதியினர்
இந்நிலையில் கார்த்திகேயனின் நண்பர் பிரவீன், தனது மனைவிக்கு இயற்கையான முறையில் மருத்துவ உதவி இன்றி வீட்டிலேயே சுக பிரசவம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். தனது மனைவிக்கு மட்டுமின்றி தனக்குத் தெரிந்த வேறு சிலருக்கும் வீட்டிலேயே இயற்கை முறையில் சுக பிரசவம் மேற்கொள்ள தான் உதவியதாகவும் தெரிவித்துள்ளார். கிருத்திகாவுக்கும் இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் செய்து கொள்ள தான் உதவுவதாக முன்வந்துள்ளார். ஏற்கனவே ’இயற்கை’ முறைகளின் மேல் ஆர்வம் கொண்ட கார்த்திகேயனுக்கு அவரது நண்பரின் ஆலோசனைகள் ஆர்வமேற்படுத்தியுள்ளன. அதைத் தொடர்ந்து தாங்களும் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்வதாக கார்த்திகேயன் – கிருத்திகா தம்பதியினர் முடிவு செய்துள்ளனர்.

மேலும் இயற்கை முறையிலான பிரசவம் குறித்து யூ-டியூப் இணையதளத்தில் ஏராளமான வீடியோக்களைப் பார்த்து தங்களைத் ‘தயார்படுத்தி’க் கொண்டிருக்கிறார்கள். இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் தங்களது முடிவில் உறுதியாக இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 22-ம் தேதி கிருத்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அப்போது உடனடியாக கார்த்திகேயன் தனது நண்பரான பிரவீன் – லாவண்யா தம்பதியரை வீட்டுக்கு அழைத்துள்ளார். அங்கு கார்த்திகேயன், அவரின் தாயார் காந்திமதி மற்றும் பிரவீன் – லாவண்யா தம்பதி சேர்ந்து கிருத்திகாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

பிரசவத்தில் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்த கிருத்திகாவுக்கு நஞ்சுக் கொடி வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிகளவு இரத்தப் போக்கு ஏற்பட்டு நிமிடங்களில் கிருத்திகா மயக்கமடைந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கிருத்திகாவை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து போனார்.

இது போன்ற கோமாளித்தனங்கள் திருப்பூருக்குப் புதிதல்ல. கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி திருப்பூர் முத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஸ் என்கிற ’இயற்கை’ ஆர்வக்கோளாறு நபர் இதே போல் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். தற்செயலாக அந்தப் பிரசவத்தில் தாய்க்கும் சேய்க்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனால், இவ்வாறு பிரசவம் நடந்துள்ளதை அறிந்த அரசு மருத்துவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சதீசின் வீட்டிற்குச் சென்று குழந்தைக்கு தடுப்பூசி போட முயற்சித்துள்ளனர். இதற்கு சதீஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனினும், மருத்துவர்கள் அவரது குடும்பத்திற்கு எடுத்துச் சொல்லி தடுப்பூசி போட்டுச் சென்றுள்ளனர்.

இந்த விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கினர் ஹீலர் பாஸ்கரும் பாரி சாலனும். ஆங்கில மருத்துவ சதி, அமெரிக்க சதி போன்ற இத்தியாதிகளோடு இரண்டு அவுன்ஸ் இலுமினாட்டி சதியையும் போட்டுக் குலுக்கி இருவரும் வீடியோக்களை வெளியிட்டனர். நவீன அலோபதி மருத்துவமே கொடூர வில்லன் போலச் சித்தரித்த இவர்கள், குழந்தை பெற்றுக் கொள்வதும், அதை எப்படிப் பெற்றுக் கொள்வது, எப்படி வளர்ப்பது என்றெல்லாம் தீர்மானிப்பதும் தனிமனித சுதந்திரம் என வியாக்கியானம் செய்திருந்தனர்.

தற்போது அந்த ‘தனிமனித சுதந்திரம்’ கிருத்திகா என்கிற பெண்ணின் உயிரைப் பறித்துள்ளது. அறிவியலுக்கு முரணான வழியில் மக்களுக்கு வழிகாட்டியதற்கும் அதன் மூலம் ஒரு உயிரைப் பறித்ததற்கும் இவ்விரு முட்டாள்களின் மேலும் வழக்குத் தொடர்ந்து கைது செய்ய வேண்டும். ஒரு புது விதமான ’டிரெண்ட்’ தற்போது பரவி வருகிறது. சாதி அடிப்படையிலான தமிழ் தேசியம், கொஞ்சம் நம்மாழ்வார் மற்றும் இயற்கை வேளாண்மை, சிறுதானிய உணவு, பழந்தமிழர் பண்பாட்டு பகுமானங்கள், அறைகுறையான சூழலியல் புரிதல், குலப்பட்டம் மற்றும் குலதெய்வம், பழைய நிலபிரபுத்துவ குடும்ப உறவுகளைப் புனிதப்படுத்தல் (தாய்மாமன் சடங்கு இத்தியாதி), பசுமை விகடன்.. என்கிற இந்த களேபரமான கூட்டணியோடு இலுமினாட்டி சதி மற்றும் ஆங்கில மருத்துவத்தின் மீதான அவநம்பிக்கையும் கை மருத்துவத்தின் மீதான காதலும் சேர்த்து மொத்தமாக டப்பாவில் போட்டு குலுக்கி யூ-டியூப் வீடியோக்களாக இறக்குகின்றனர்.

இந்த மோஸ்தரில் ஹீலர் பாஸ்கர் முதலில் ’பிரபலமானார்’; அடுத்து பாரி சாலன். நவீன மருத்துவம் கார்ப்பரேட்மயமாகவும் ஏகபோகமாகவும் மாறி வருவது; இதன் விளைவாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு அது எட்டாக்கனி ஆகி வருவது ஒருபுறமும், நவீன சமூகத்தில் உருவாகும் புதுப்புது வியாதிகள் இன்னொரு புறமும் மக்களை அச்சுறுத்துகின்றன. இது உண்மையின் ஒரு பகுதி – இதே உண்மையின் இன்னொரு பகுதி நவீன மருத்துவமே விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது என்பதாகும். ஆனால், இலுமினாட்டி பிரச்சாரகர்கள் உண்மையின் முதற்பகுதியை மட்டும் கத்தரித்து எடுத்துக் கொண்டு அதனோடு சதிக் கோட்பாடுகளைக் கலந்து கடை விரிக்கும் போது படித்த இளைஞர்களே கூட அதற்கு பலியாகிப் போகின்றனர்.

இந்த சிக்கலுக்குத் தீர்வு அரசின் சுகாதாரத் துறையை வலுப்படுத்த வேண்டும், அரசு மருத்துவமனைக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையாகவும், அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு நவீன மருத்துவத்திலேயே இலவச சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யப் போராடுவது என்பதாகவும்தான் இருக்க வேண்டும். மாறாக, மக்களை விஞ்ஞானமல்லாத மருத்துவ முறைகளுக்குள் நெட்டித் தள்ளி சாகடிப்பது தீர்வல்ல. பாரி – ஹீலர் வகையறாக்கள் இதில் இரண்டாவதைச் செய்கிறார்கள். அப்படிச் செய்வதன் மூலம் மருத்துவத்துறை கார்ப்பரேட்மயமாவதற்கு எதிராக மக்கள் போராடுவதைத் தடுத்து மடைமாற்றி அவ்வாறு கார்ப்பரேட்மயமாகும் போக்கை நிலைநிறுத்த துணை போகின்றனர். இப்படி மக்களை சுடுகாட்டுக்கு அனுப்பும் பாதைக்கு ‘தற்சார்பு’ பொருளாதார முறை என்கிற அலட்டலான பெயரையும் சூட்டியுள்ளனர்.

அறிவியலற்ற விஞ்ஞானமல்லாத ஹீலர் – பாரி வகை பித்தலாட்டங்களை யூ-டியூபில் ரசிக்கும் கூட்டம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றது. ஆனால் அவர்கள் சொல்லும் வாழ்வியல் நடைமுறையில் இறங்குவதற்கு ஒரு விதமான முரட்டு முட்டாள்தனம் தேவை. அவ்வாறானவர்கள் கொங்கு பகுதியில் கணிசமாக இருக்கிறார்கள் என்பதையே கிருத்திகாவின் மரணம் உணர்த்தியுள்ளது. ஆச்சரியம் என்னவென்றால் பாரி சாலனும் ஹீலர் பாஸ்கருமே கூட கோவையைச் சேர்ந்தவர்கள் தாம். கோவையைச் சுற்றி அனேகமாக இந்தியாவில் உள்ள அனைத்து கார்ப்பரேட் சாமியார்களுக்கும் கிளைகள் உண்டு. ஜக்கி, அமிர்தானந்தமயி, மனவளக் கலை வேதாத்ரி போன்றோரின் தலைமையகமே கோவைதான்.

திருப்பூர் கிருத்திகா மரணம்
பித்தலாட்ட ஹீலரும், பாரிசாலனும்
மூட நம்பிக்கைகளுக்கு கொங்கு பகுதியில் ஒரு கொழுத்த சந்தை உண்டு. அது அ.தி.மு.க / பா.ஜ.க ஆதரவு மனநிலையாகட்டும், ஈமு கோழி வகை ரெண்டாம் நம்பர் பிசினஸ் ஆகட்டும், கார்ப்பரேட் சாமியார்கள் ஆகட்டும், இயற்கை வாழ்வியல் ஆர்வக்கோளாறுகள் ஆகட்டும், அனைத்தையும் பரிசோதித்துப் பார்க்க தயாராக இருக்கும் மேல் நடுத்தர வர்க்கப் பிரிவினர் கோவையில் அதிகம். மிகப் பிற்போக்கான நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தை இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் திடீர் பணக்காரர்கள் நிறைந்த பகுதி என்பதால் ஹீலர் வகையறாக்கள் கடை விரிக்க ஏதுவாக இருக்கிறது.

சமூக வலைத்தளங்களின் மூலம் இவ்வாறான அறிவியலுக்குப் புறம்பான மருத்துவ முறைகளையும், சதிக் கோட்பாடுகளையும் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் எடுக்காது. ஏனெனில், மக்கள் அறியாமை இருளில் மூழ்கிக் கிடப்பது ஆளும் வர்க்கத்துக்கு ஆதாயமானதுதானே. கிருத்திகாவைப் போன்ற ஓரிரு உயிர்கள் அதற்காக கொடுக்கத்தக்க விலை என்பதே ஆளும் வர்க்கத்தின் கணக்காக இருக்க முடியும். எனவே ஹீலர் வகையறாக்களை ஒரு கட்டம் வரை வளர அனுமதிப்பார்கள்; தங்களாலேயே தாங்க முடியாத நியூசென்ஸ் கேசாக மாறும்வரை விட்டு வைத்து விட்டு, தங்கள் மார்பிலேயே பாயும்போது நடவடிக்கை எடுப்பார்கள்.

இந்தியாவிலேயே குழந்தை இறப்பு தடுப்பு விகிதத்தில் கேரளத்திற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் தமிழகம் இருப்பதும், இங்கு குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சினை நாட்டிலேயே குறைவாக இருப்பதும் நவீன மருத்துவத்தால்தான் சாத்தியாமானதே தவிர பாட்டி வைத்தியத்தால் அல்ல. மக்கள் இதை உணர்ந்து கொண்டு அறிவியலுக்குப் புறம்பான வைத்திய முறைகளையும், அதை முன்வைக்கும் அறிவுக்குப் பொருந்தாத இலுமினாட்டி சதிக் கோட்பாடுகளையும் புறம் தள்ளுவதோடு நவீன மருத்துவம் எல்லோருக்கும் இலவசமாக கிடைப்பதை உறுதி செய்யவும் அரசு மருத்துவமனை கட்டமைப்பு மக்களுக்கானதாக நீடிக்கவும் போராட முன்வர வேண்டும்.

Wednesday, July 25, 2018

திருப்பூர் கொலை

திருப்பூர் கொலை
அந்த காலத்துல இத்தனை நோயா இருந்துச்சு எங்க ஆத்தா பதினாறு பிரசவமும் வீட்லயேதா பாத்துச்சு என்று பெருமை பேசி திரிபவர்கள் ஆபத்தானவர்கள்.அவர்களை போன்ற ஒரு கொலைகார கணவன் தான் இன்று திருப்பூரில் வீட்டிலேயே 'You Tube' வழியாக பிரசவம் பார்த்து ஒரு இளம் பெண்ணை கொடூரமாக கொன்று இருக்கிறான். பெரிய பெரிய மகப்பேறு மருத்துவர்களே பிரசவத்தின் பயம், எதிர்பாரா பிரச்சனைகள் என்று தவிக்கும் போது ஒரு வீடியோவை துணையாக கொண்டு பிரசவம் பார்ப்பேன் என்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்? பிரசவித்ததில் இருந்து ஒரு தடவை கூட 'செக் அப்' செல்ல வில்லையாம்.பற்றிக்கொண்டு வருகிறது
இதற்கு காரணம் வறுமையா என்றால் இல்லை.
அரசாங்கம் முதல் மாதத்தில் இருந்து கவனித்து மருந்து கொடுத்து ஊசி போட்டு கரு வளர வளர காசும் கொடுக்கிறது.ஏன் சீமந்தம் கூட நடத்துகிறது குழந்தை பிறந்த பின் மீதி தொகையும் கொடுத்து குழந்தை பராமரிப்பு சாமான்களும் கொடுக்கிறது.அனைத்து தடுப்புஊசிகளும் தாய்க்கும் சேய்க்கும் அனைத்தும் இலவசமாக தருகிறது.
இதற்கு காரணம் அறியாமையா என்றால் இல்லை.அந்த பெண் தனியார் பள்ளியில் ஒரு ஆசிரியை.அந்த கொலைகாரனும் டெக்ஸ்டைல்ஸ் கம்பெனியில் வேலை செய்கிறான்.
இதற்கு காரணம் மருத்துவமனை இல்லாத ஊரா என்றால் அதுவும் இல்லை தெருவுக்கு தெரு ஊருக்கு ஊர் ஆரம்ப சுகாதார நிலையங்களும் மகப்பேறு மருத்துவமனை களும் உள்ள திருப்பூர்.
என்ன காரணம்?? அரைகுறை வீடியோக்களும், மெர்சல் த்ரீ இடியட்ஸ் போன்ற முட்டாள் சினிமாக்களும்
'முன்னோர்கள் என்ன முட்டாள்களா' டைப் வாட்ஸப் பார்வேர்டுகளும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களும் தான்.
இனிமேல் யாராவது வீட்டு பிரசவ பெருமை பேசினால் உடனே அறைந்து விடுங்கள்.இதுபோன்ற ஒரு உயிர் போவது தடுக்க படும்.அந்த கொடூரனை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும். பொய் மருத்துவ வீடியோக்கள் தகவல்கள் தருவோரை சிறையில் தள்ள வேண்டும்.அப்போது தான் இந்த சமூகம் உருப்படும்

Monday, July 23, 2018

ஆற்றுநீர் வீணாகப்போய் கடலில் கலக்கிறதே

'காவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு'
- இப்படி பேசும் ஆட்கள் வெறும் முட்டாள்கள் மட்டும் அல்ல அதையும் தாண்டி ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமே எதிரான ஆட்கள்தான்.
ஆற்று நீர் கடலில் கலப்பது 'வேஸ்ட்' என சிலர் எந்த அடிப்படையில் பேசுறாங்க? மனித சக்தியால் உருவாக்கப்படும் ஒரு பொருளையோ திரவத்தையோ வீணாக்கினால்தான் அது வேஸ்ட். ஆனால் மனித சக்திக்கு தொடர்பில்லாத, இயற்கையால் உருவாக்கப்பட்ட ஆற்று நீரை, அது காலம் காலமாக பயணித்து, கடலில் கலந்ததை தடுத்து மனித தேவைக்கு பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த நீர் முழுவதுமே மனித தேவைக்கானது என சொல்லி அது கடலில் கலப்பது வீண் என சொல்லும் அறியாமைதான் அடுத்த தலைமுறையை அழிக்கப்போகும் விஷ விதை.
இந்தியா என்ற ஒரு நாடு, தமிழ்நாடு என்றவொரு மாநிலம், காவிரியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டுகள் என எல்லாமே இந்த ஒரு நூறாண்டுகளுக்குள்தான் இருக்கும்.
ஆனால் காவிரி என்ற ஆறு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதை உடையது. குடகு மலையில் பிறந்து கர்நாடக மேட்டுநிலப்பகுதியை தாண்டி, மேட்டூருக்கு கீழே சமவெளிப்பகுதியில் பரந்து விரிந்து வண்டல் மண் டெல்டாவில் ஓடி பூம்புகார் வழியே காலங்காலமாக கடலில் கலந்துவந்தது.
மனித தேவைகளுக்காக காவிரியில் பல அணைகள் கட்டி காவிரி நீர் கடலுக்கு போகும் அளவு தடுக்கப்பட்டது. அதாவது கடல் குடித்துவந்த நீரை மனிதன் தட்டிப்பறித்துக்கொண்டான்.
இயற்கை சுழற்சியை மனிதன் தடுத்தான். ஆறானது கடலில் கலக்கும். நன்னீர் கடலில் கலக்கும்போது கடல் நீரில் உள்ள உப்பின் அளவு மாறுபடாமல் இருக்கும். அது நடக்காதபோது கடல்நீரின் உப்பு அளவு அதிகரிக்கும், கடல்வாழ் தாவரங்கள், மீன்வளங்கள் பாதிக்கப்படும். இயற்கையான சுழற்சி தடைபடுவதால் பருவமழை பெய்யும் காலமும் அளவும் மாறிமாறி வரும். சமயத்தில் மழைப்பொழிவே இருக்காது.
ஒவ்வொரு கடலுக்கும் சில பிரத்யேகமான கடல்வாழ் உயிரினங்கள் உண்டு. தமிழக கடற்பகுதியில் காணப்படும் சில மீன் இனங்கள் அரேபிய வளைகுடாவில் காணப்படாது. அதற்கு காரணம் அந்தந்த கடலில் இருக்கும் உப்பின் அடர்த்தி. கடல் நீர் உப்பின் அடர்த்தியை சீராக வைத்திருக்க உதவுவது அதில் கலக்கும் ஆற்று நீர்.
அதைவிட முக்கியமாக கடற்கரையோட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் உப்புநீர் ஊடுருவும்.
சந்தேகம் இருப்பவர்கள் சீனா மஞ்சாளாற்றின் குறுக்கே கட்டிய பிரமாண்டமான அணையையும் அந்த அணையினால் பெருமளவு தண்ணீர் கடலுக்கு போகாததால் மஞ்சாளாற்று கழிமுக பகுதிகளில் கடல்நீர் ஊடுருவி தற்போது புல்பூண்டுக்கூட முளைக்காத பாலைவனமாக மாறிப்போன நிகழ்வையும் தேடிப்படியுங்கள்.
நல்ல நிலங்கள் பாலைவனமாக மாறியதால் அதை சரிசெய்ய சீனா தற்போது கடுமையாக போராடி வருகிறது. தற்போது அணையில் பாதியளவு மட்டுமே தண்ணீரை வைத்துக்கொண்டு மீதியை கடலுக்கே விட்டுவிடுகிறது.
இதே போல நம் முந்தைய தலைமுறையில் நடந்த நிகழ்விலிருந்தும் நாம் பாடம் கற்கவில்லை. ரஷ்யாவின் ஏரல் கடல் என சொல்லப்பட்ட பிரம்மாண்டமான ஏரி மறைந்துபோன கதை தெரியுமா?
'ஏரல் கடல்' நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட இந்த பிரம்மாண்டமான ஏரி ஒரு காலத்தில் (1950க்கு முன்பு) உலகில் உள்ள 4 மிகப்பெரிய ஏரிகள் ஒன்று. இன்று?
முந்தைய வல்லரசான சோவியத் ரஷ்யா இந்த ஏரிக்கு சென்றடையும் ஆறுகளான அமு தர்யா மற்றும் சிர் தர்யா எனும் ஆறுகளை நீர்ப்பாசனத்திற்காக திசை திருப்பியது. இப்போது இந்த ஏரிப்பகுதி மனித வாழ்விடத்திற்கே மிக சிரமான பகுதியாக மாறியிருக்கிறது.
ஏரல் கடலுக்கு ஏற்பட்ட நிலைமை காவிரி பாயும் கடற்கரையோர மாவட்டங்களுக்கு ஏற்பட இதேபோன்று யோசித்தாலே போதும் 'காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது'என.
காவிரி நீர் என்பது கர்நாடக தமிழக மக்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அது ஒட்டுமொத்த இயற்கைக்குமானது. நாமும் இயற்கையின் ஒரு அங்கம். நாம் மட்டுமே அதை சொந்தமாக்கிக்கொள்ளும்போது இயற்கையின் தொடர் சங்கிலியை நாம் உடைக்கிறோம். இயற்கை சங்கிலியில் ஒரு கன்னி விடுபடும்போது ஒட்டுமொத்த சங்கிலி அமைப்புமே சிதைந்துவிடும் என நமக்கு புரிவதில்லை.
மனித தேவை, மனிதனின் சுயநலம் இது இரண்டு மட்டும் காலம் காலமாக இயற்கையின் கட்டமைப்புகளை சிதைத்து வந்திருக்கிறது. இதனால் கடைசியாக பாதிக்கப்படபோவது நாம்தான்.
நேரம் இருப்பவர்கள் 'ஈஸ்டர் தீவு' பற்றியும் அங்கிருக்கும் 'ராப்பா நூயி' சிலைகளை பற்றியும் படியுங்கள். மனிதனின் வெட்டி கௌரவத்தால் அங்கிருந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட கடைசியில் ஒரு மரம்கூட இல்லாத அந்த தீவில் படகு செய்து மீன்பிடித்து உயிர்வாழவோ, படகு செய்து தீவை விட்டு தப்பியோடவோ ஒரு மரம் இல்லாததால் ஒட்டுமொத்த மனித இனமே அந்த தீவில் அழிந்துபோனது. ஈஸ்டர் தீவிற்கு மரம் என்றால் நமக்கு ஆறுகள்.
காவிரி டெல்டாவின் நில அமைப்பு பற்றி தெரியாதவர்கள்தான் நிறைய உளறுகிறார்கள். கர்நாடகாவில் 3 அணைகள் இருக்கிறதே நம்மிடம் மேட்டூர் அணை மட்டும்தான் இருக்கிறதே என்ற புரிதல் இல்லாத உளறல்தான் அது.
முதலில் ஒரு அணையை கட்ட எந்த மாதிரியான நில அமைப்பு இருக்க வேண்டும் என யோசித்தாலே இதற்கான பதில் கிடைத்திருக்கும்.
பொதுவாக அணைகள் மேட்டுப்பாங்கான நிலத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையில்தான் கட்டப்படும். கர்நாடகாவிலிருக்கும் 3 அணைகளும் நம் மேட்டூர் (மேட்டூர் - பெயரிலேயே அர்த்தம் இருக்கே?) அணையும் அப்படி கட்டப்பட்டதுதான்.
மேட்டூருக்கு கீழே அதுபோன்ற அணைகள் கட்டக்கூடிய நில அமைப்பு கிடையாது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டிணம் போன்றவை சமவெளிப்பகுதிகள். சமவெளியில் அணைகளை கட்டமுடியாது. ஏரி, குளங்களைதான் அமைக்க முடியும். அதனால்தான் நம் முன்னோர்கள் நிறைய ஏரி, குளங்களை காவிரி டெல்டா பகுதியில் வெட்டினார்கள்.
சிலர் வந்து காவிரி டெல்டாவில் கல்லணை கட்டப்படவில்லையா என கேட்கலாம். கேட்பவர்கள் நிச்சயம் கல்லணையை முன்பின் பார்த்திருக்காதவர்களாகத்தான் இருப்பார்கள். கல்லணை என்பது டி.எம்.சி கணக்கில் தண்ணீரை தேக்கி வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தும் அணை கிடையாது. காவிரியில் வரும் நீரை தடுத்து உள்ளாறு(கொள்ளிடம்), காவிரி , வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரித்து அனுப்பும் பிரம்மாண்டமான மதகுதான் கல்லணை.
அக்காலத்தில் காவிரியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திலிருந்து பயிர்களை பாதுகாக்க கட்டப்பட்டதுதான் கல்லணை. காவிரியில் வெள்ளம் வரும்போது அது கொள்ளிடத்தில் திருப்பிவிடப்படும். கொள்ளிடம் வெள்ள நீர் எவ்வளவு போனாலும் தாங்கும். அந்த வெள்ளநீரை பயன்படுத்திக்கொள்ள வெட்டப்பட்டதுதான் கடலூர் மாவட்டத்திலிருக்கும் வீராணம் ஏரி.
காவிரியில் கர்நாடகா கட்டியிருக்கும் 3 அணைகளின் மொத்த கொள்ளளவு 112 டி.எம்.சி. தமிழ்நாட்டிலிருக்கும் மேட்டூர் அணையின் கொள்ளளவு மட்டுமே 93 டி.எம்.சி.
நமக்கு மேட்டூர் அணை மட்டுமே போதும். ஏனென்றால் மேட்டூர் அணை முழுமையாக நிரம்புவதற்கான தண்ணீரே நமக்கு கிடைப்பதில்லை. மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்திலிருந்து (1934) தற்போதுவரை வெறும் 33 முறை மட்டுமே அணையின் முழு கொள்ளளவான 120 அடிவரை நீர் நிரம்பியிருக்கிறது.
நாம் செய்யவேண்டியது இருக்கக்கூடிய நீர்நிலைகளை பாதுகாத்து ஏரி, குளங்களில் தண்ணீரை தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டியது மட்டும்தான். மழைநீர்தான் நமக்கான நீர், ஆற்றுநீர் நமக்கும் கடலுக்குமான நீர்.
இனி யாராவது ஆற்றுநீர் வீணாகப்போய் கடலில் கலக்கிறதே என சொன்னால் அவர்களின் அறியாமையை நினைத்து பரிதாபப்படுங்கள்.
“தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்கக் கடற்கரை
மெலிக்கும் காவிரிப் பேரியாற்று"
என்கிறது அகநானூறு (126 : 4-5)

Friday, July 06, 2018

பாரிசாலன் பூரி சால்னா

கொஞ்ச நாள் முன்பு திடீரென கொஞ்ச நேரம் பாரிசால்னா என்ற பெயர் சோமீயில் அடிபட்டது. யார்ராவன் என்று பார்த்தால், இலுமினாட்டிகளே உலகின் சகல துன்பங்களுக்கும் காரணம் எனும் தத்துவத்தை பரப்பும் கோமாளி கூட்டத்தின் விஐபி கோமாளி.
சால்னாவின் ஒன்னு ரெண்டு வீடியோக்களை பார்த்தேன். ச்சே இவ்வளவு நாளா இவனை தெரிஞ்சிக்காம ஆதித்யா சேனல காசு கொடுத்து வாங்கிட்டமேன்னு என்னை நினைச்சி எனக்கே வெக்கமாகி, உடனே கண்ல தென்பட்ட ஒரு பெண்மணியின் பதிவில் போய் ஆணாய் பிறந்ததற்கே அவமானப்படுகிறேன் டோலின்னு கமெண்ட் போட்டேன். அவசரத்தில் சமையல் குறிப்பு பதிவில் வந்து அப்படி ஒரு கமெண்ட் போட்டு கன்பூஸ் செய்ததற்கு மன்னிச்சு டோலி.
சால்னா ஒரு முக்கிய யுட்யூப் ஸ்டார், ஆனால் எங்கு முக்குவது என்பதை புரிந்து கொள்ளாமல் பைக் சர்வீஸுக்கு விட்ட இடத்தில் போய் முக்கியிருக்கிறார். அங்கு தகராறாகிவிட்டது. உடனே அண்ணன் யுட்யூபுக்கு போய் பைக் கம்பெனி non-தமிழன் நடத்துவது நானோ ஒரு naam-தமிழர் என்று வீடியோ போட, தமிழன் என்று எவன் சொன்னாலும் நட்டுக்கும் (முடியை சொன்னேன்) கூட்டம் ஒன்று போய் பஜாஜ் சர்வீஸ் செண்டரின் ஊழியர்களை தாக்க, சால்னா உட்பட பலருக்கும் முகத்தில் தக்காளி சாஸ். இருவருமே ஒருவர் மேல் ஒருவர் புகார் கொடுக்க, போலீஸ் சால்னாவை பிடித்து உள்ளே வைத்துவிட்டது.
இப்ப அண்ணன் மேல் விவிடி நிறுவனம் வேற வழக்கு போட்டிருக்காங்களாம். அதாவது விவிடி நிறுவனம் விற்பது தேங்காயெண்ணெயே அல்ல என்று சால்னா ஆதாரமில்லாமல் கிளப்பி விட்டதற்காக காண்டாகி அவதூறு வழக்கு போட்டிருக்கிறார்கள். சரி படம் முடிஞ்சிடுச்சி, எதிர்பார்த்த ஐந்து நிமிட புகழ் கிடைச்சிடுச்சி இனி காணாம போய்டுவான்னு நினைச்சா அங்கதான் ஆண்ட்டி-க்ளைமேக்ஸ். இன்னிக்கி திடீர்னு ஐ_சப்போர்ட்டு_பாரிசாலன் டொக்கு (tag) கிளம்பியிருக்கு.
அதாவது சால்னா பேசிய “தமிழ் தேசியத்துக்கு பயந்து நடுங்கியே இவர் மீது இத்தனை வழக்குகள் என்றால் தமிழ் தேசியம் என்ற சிந்தனை திராவிட, இந்திய கும்பலுக்கு எத்தனை கலக்கத்தை உண்டாக்கும் என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும்” என்கிறார்கள் சால்னா ஆதரவாளர்கள்.
அதாவதாகப்பட்டது 43 பேருக்கு தெரிந்த பாரிசாலன் ஒரு போராளி, அவன் சொல்லும் டுபாக்கூர் கதைகள் தூங்கிக்கொண்டிருக்கும் தேசிய மைனாக்களை எழுப்பி, அதனால் புரட்சி வெடித்து, அதனால் எடப்பாடி அரசு கவிழ்ந்து, எதுக்கு ப்ரச்னைன்னு பயந்து போய் அரசாங்கம் அவனை கைது செய்து.. நினைச்சாலே தலைசுற்றல், வாந்தி, மயக்கம் முதலிய பத்து வித ஸ்கின் ப்ராப்ளம்ஸும் வருதா? எனக்கு
சின்ன வயசில் படித்த கதை ஒன்று ஞாபகத்துக்கு வந்தது.
ஒரு ஊரில் சேறு கபோதிதா என்ற பெயர் கொண்ட கொசு ஒன்று இருந்தது. யாரும் கேட்காமலே தான் பலான விஷயத்தில் பலான பலான ஆள், 180 நிமிடங்கள் நிற்காமல் செயல்படுவேன் என்றெல்லாம் கண்டபடி சவடால் விடும். ஒரு நாள் டேய் போதும்டா போன் ஒயர் பிஞ்சி ரெண்டு வாரம் ஆயிடுச்சி என்று யாரோ பேச்சு வாக்கில் சொல்லிவிட கொசுவுக்கு அவமானமாக போய்விட்டது. ரோஷப்பட்ட கொசு நான் யானையை ‘செஞ்சி’ காட்றேன் என்று சவால் விட்டு தனது யுட்யூப் ரசிகர்களை எல்லாம் யானை லாயத்துக்கு வரச்சொல்லி ரசிகர்கள் எல்லாம் வந்ததும் கொசு போய் யானையின் பின்பக்கம் உட்கார்ந்து கொண்டது. ரொம்ப நேரமாக சத்தமே இல்லை. ரசிகர்கள் சஸ்பென்ஸோடு இருக்கிறார்கள். அப்ப பார்த்து ஒரு தேங்காய் எதேச்சையாக யானை தலையில் விழ, யானை பிளிற, உடனே கொசு யானையைப் பார்த்து “வலிக்குதா?” என்று கேட்டுவிட்டு யுட்யூப் ரசிகர்களை பெருமிதமாக பார்க்க, ரசிகர்கள் ஐ_லவ்_கொசு என்று டேக் போட்டு பதிவு எழுதினார்கள். சுபம்!

Monday, July 02, 2018

விவசாயம் - 3

சில வாரங்களுக்கு முன் விவசாயத்தில் சாதியம் பற்றியும், சாதிய அமைப்புக்கு விவசாயத்தின் தொண்டு பற்றியும் எழுதியதற்கு நானே எதிர்பார்த்திராத வகையில், பலர் தன் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து இதைப் பற்றி மேலும் பேசுவது அவசியமான ஒன்று, மேலும் தொடர்ந்து எழுதுங்கள் என கூறியிருந்தனர்.
சாதிய அமைப்புக்கு அடுத்து விவசாயத்தில் நடக்கும் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், குழந்தைகளை விவசாயம் மற்றும் அது சார்ந்த வேலைகளில் ஈடுபடுத்தி அவர்களின் வாழ்க்கையையும், குழந்தை பருவத்தையும் அழிப்பது.
இதைப்பற்றி நான் எழுதுவதற்கு காரணம் விவசாயத்தை அழிப்பதற்காகவோ, நான் அதன் எதிராளியோ அல்ல. என்னுடைய அவா அனைத்தும் விவசாயத்தின் குறைகள் களையப்பட வேண்டும். குறைந்த பட்சம் அவற்றைப் பற்றி விழிப்புணர்வாவது மக்களிடம் வர வேண்டும். ஒரு சிலர் அறிவாளிகள், வேற எந்த தொழிலிலும் இதெல்லாம் இல்லையானு கிளம்பி வராதீங்க.
According to the Child Labour Act, 1986, a complete prohibition has been imposed on employment or involvement of child labour (A person below the age of 14) in any establishment whether hazardous or not. An amendment was made to the CL Act in 2016 and it was changed to Childhood and Adolescent (Prohibition and Regulation) Labour Act 1986. According to this law, children between 14 to 18 can be involved in helping the family after the school hours or during vacation.
இந்த கொடுமை விவசாயத்தில் சர்வ சாதாரணமாக அரங்கேறும். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், அது தவறே இல்லை என்று வேற வாதாடுவார்கள். யோசித்து பாருங்கள் எத்தனை குழந்தைகளின் குழந்தைப் பருவம் அழிக்கப்பட்டு, அவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியாக்கப் பட்டிருக்கிறது. உடனே, நானும் விவசாய குடும்பத்தில் தான் பிறந்தேன், நானும் வயலில் வேலை செய்து தான் வளர்ந்தேன், நான் நல்லா தான் இருக்கேன்னும் சொல்லிட்டு வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப் படுகிறது.

விவசாயம் - 2

கேள்வி: கிழவி இரண்டு நாட்களுக்கு முன் விவசாயத்தில் சாதி இருப்பதாகவும், விவசாயம் சாதிய அமைப்பை நம்பி இருப்பதாகவும் பதிவிட்டீர்கள். உங்களுக்கு ஏன் விவசாயத்தின் மீது இவ்வளவு வெறுப்புணர்வு? விவசாயத்தில் சாதி பாகுபாடு இருப்பதை ஏற்கிறேன். ஆனால், விவசாயத்தில் மட்டும் தான் சாதி உள்ளதா? அனைத்து தொழில்களிலும் சாதி உள்ளதே, அதைப்பற்றி ஏதும் வாயைத் திறக்காமல் விவசாயத்தை மட்டும் சாடுவது ஏன்? விவசாயம் எவ்வளவு இன்றியமையாத ஒன்று?
மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே என சமூகத்தால் வரையறுக்கப்பட்ட, மக்களின் உயிர்களை காவு வாங்கும், மலம் அள்ளுதல் போன்ற தொழில்களைத் தவிர, சாதிய பாகுபாடின்றி அனைவராலும் அவரவர் தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்க இயலும் எந்த தொழிலின் மீதும் எனக்கு வெறுப்புணர்வு இல்லை. இங்கு தான் கொஞ்சம் பார்வையை ஆழமாக்க வேண்டும். தொழிலைத் தேர்ந்தெடுத்த பிறகு வேலை செய்யும் இடத்தில் சாதி அடக்குமுறை இருப்பதற்கும், தொழிலைத் தேர்ந்தெடுப்பதே இந்த சாதி மட்டும் தான் என வரையறை இருப்பதற்கு வேறுபாடு உண்டு. உடனே அப்போ அங்கு சாதி அடக்குமுறைகள் இருக்கலாமா என கிளம்பி வராதீர்கள். சாதிய அடக்குமுறை எங்கு இருந்தாலும் அதை எதிர்ப்பவள் நான்.
இந்துக்கள் இந்தியாவின் நோயாளிகள் என அம்பேத்கர் கூறியுள்ளார். இந்துக்கள் இருக்கும் இடமெங்கும் சாதிய வேறுபாடு இருக்கும். அது பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும், வெளிநாடாகட்டும், வேலை செய்யும் இடமாகட்டும். ஒரு இந்துவாக உங்களை நினைத்துக்கொண்டு நீங்கள் எங்கு இருந்தாலும் உங்களை அறியாமல் சாதிய எண்ணங்கள் உங்கள் ஆழ்மனதில் வேரூன்றி இருக்கும். மக்கள் இந்து மதத்தையும், மதகருத்துகளையும் விட்டொழித்தாலொழிய சாதிய பாகுபாட்டைக் களைய இயலாது.
எல்லா தொழில்களிலும் சாதி பாகுபாடு இருக்கும்போது விவசாயத்தை மட்டும் சாடுவது ஏன் எனக்கெட்டால், விவசாயத்தில் மட்டும் தான் சாதி பாகுபாடு என்பதை, அது வாழ்வியல் முறை அப்படித்தான் இருக்கவேண்டும், என்பது போல ஒடுக்கப்பட்டவர்களின் மனதில், இவர்கள் தான் நாட்டுக்கே சோறு போடுகிறார்கள் என்று உணர்ச்சியூட்டி பதியவைக்கப்படுகிறது. அவர்கள் எதிர்த்து கேள்வி கேட்கவோ, நினைத்தால் வேறு வேலைக்கு செல்லவோ விவசாயிகளுக்கு அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை. விவசாய கூலிகள் பலர் வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் வேலைக்கு தொடர்ந்து சென்றுகொண்டிருப்பதும், சித்ரவதைப்படுவதும் அவர்களது அன்றாட வாழ்க்கையாகி போயிருப்பது இதற்கு சான்று. மேலும், விவசாயம் செய்பவர்களே பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்கள்தான் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
விவசாயத்தை உணர்ச்சிகளை நீக்கி ஒரு தொழிலாக மட்டுமே பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதுதான் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும். இல்லையேல், விவசாயம் என் உயிர்மூச்சு என்போர் அதே விவசாயத்திற்கு பலி ஆகவும் நேரிடும். இதைப்பற்றி மேலும் விவரத்திற்கு Please google, "Impacts of Climate Change on Agriculture", "Economic Survey 2018". தொழில்நுட்ப உதவியுடன் விவசாயத்தை மேம்படுத்தாமல், இயற்கை, மரபு என சென்றால் என்ன ஆகும் என்பதற்கு இவை சான்று. மேலும் விரிவாக பிறகு பார்ப்போம்.
விவசாயத்தில் இருக்கும் அளவிற்கோ அல்லது அதிகமாகவோ சாதிய தலையீடு இருக்கும் தொழில்களை பட்டியலிடவும். அறிந்துக் கொள்ள மிக ஆவல். ஒரு ஆசிரியரை விட, ஒரு மருத்துவரை விட, ஒரு பொறியிலாளரை விட, ஒரு எழுத்தாளரை விட, ஒரு அரசு அதிகாரியை விட, (பல எடுத்துக்காட்டுகள்) விவசாய கூலி தொழிலில் சாதி வேறுபாடு குறைவு தான், எல்லாருக்கும் நல்ல எதிர்காலத்தை கொடுக்கும் என்றால் ஆதாரத்தோடு கூறுங்கள், அடுத்த கணமே நான் உங்களுடன்.
Don't allow your faith to substitute emotion for evidence.

விவசாயம் - 1

"நாம் பாரம்பரிய தொழிலை இழந்துவிட்டோம். இந்தியா ஒரு விவசாய நாடு. ஆனால், ஊருக்கே சோறு போடும் விவசாயத்தையும், விவசாயியையும் நாம் மதிப்பதே இல்லை," இது போன்ற வசனங்கள் இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் கொட்டிக்கிடக்கின்றன. போதாதற்கு நம்மாழ்வார் போன்று ஒரு சில அதிதீவிர சமூக ஆர்வலர்கள் வேற இயற்கை விவசாயம், அது இதுன்னு உணர்ச்சி பொங்க பேசி பல இளைஞர்கள் மூளை மழுங்கி, "விவசாயம் என் உயிர்மூச்சு, அதிலும் இயற்கை விவசாயம் என் உயிர்மூச்சுக்கு ரெண்டு படி மேல" என்பன போன்ற வசனங்கள் பேசுவதையும் பார்க்கமுடிகிறது.
இவையெல்லாம், மத நம்பிக்கைகளைப் போல விவசாயத்தை புனிதப்படுத்தும் இழிவான செயல் என்பதை படித்த இளைஞர்கள் உணர மறுப்பது ஏனோ! மற்ற தொழில்களைப் போல விவசாயம் ஒரு தொழில். அவ்வளவே. என்னைக் கேட்டால் விவசாயத்தை விட மற்ற தொழில்கள் மேலானவை என்பேன். ஏனெனில், விவசாயத்திற்கு சாதி அமைப்பை ஊட்டி வளர்த்து தாங்கிப் பிடிப்பதில் மிக முக்கிய பங்குள்ளது. ஒரு விவசாயியின் மகளாக எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து கண்கூடாக நான் இதை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
பல ஆண்ட சாதி பிரியர்கள் அரசின் 100 நாள் வேலைத்திட்டம் விவசாயத்தை அழித்துவிட்டது எனப் புலம்புவதிலிருந்து என் கூற்று நிரூபணமாகும். 100 நாள் வேலைத்திட்டத்தில் மக்கள் வேலையே செய்வதில்லை என்பதெல்லாம் பிறகு வாதிடலாம். நில உடமையாளர்களின் நிலத்தில் வேலை செய்ய செல்லும் ஆட்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். ஆண்டைகள் அவர்களின் மகன், மகள்களை படித்துவிட்டு நல்ல வேலைக்கோ, வெளிநாட்டிற்கோ அனுப்பிவிட்டு, அவர்கள் நிலத்தில் வேலை செய்ய யாரும் இப்போதெல்லாம் வருவதில்லை! 100 நாள் வேலைத்திட்டம் தான் கெடுத்துவிட்டது! விவசாயத்தை காப்பற்ற யாரும் இல்லை! என்று வெற்று சாதிவெறி கூச்சல் போடுவார்கள். ஆக, ஒடுக்கப்பட்டவர்கள் படித்து வேறு வேலை பார்த்து மேலே வரக்கூடாது, அவர்களிடமே கைகட்டி வேகும் வெயிலில் கூலி வேலை செய்ய வேண்டும் என்பது எவ்வளவு அப்பட்டமான சாதிவெறி.
நமது நாட்டில் நிலவுகிற வேலையில்லா திண்டாட்டத்திற்கு சாதி அமைப்பை ஒரு நேரடிக் காரணம் ஆக டாக்டர் அம்பேத்கார் முன்வைக்கிறார். தொழில் பிரிவினையோடு இல்லாமல், தொழிலாளர்களையும் பிரிப்பது தான் சாதி. பிரிந்த தொழிலாளர்கள் தங்களுக்கு பிரிக்கப்பட்ட தொழிலையே செய்யவேண்டும் என்பது வேலையில்லா நிலைமைக்கு இட்டுச்செல்கிறது எனவும் கூறுகிறார். விவசாய நிலத்தில் அடிமைகளைப்போல இரவும், பகலும் வேலை செய்யும் தொழிலாளர்கள் இப்படி பிரிக்கப்பட்டு ஒடுக்கப்படுபவர்கள் தான் கூலி விவசாயிகள்.
அவர்கள் தெளிந்தால் என்ன ஆகும் என பயந்து பீதியில் தான் விவசாயம் ஒரு புனித பிம்பமாக கட்டமைக்கப்படுகிறது. விவசாயமாகிய ஒரு தொழிலுக்கு உணர்ச்சி ஊட்டப் படுகிறது. இளைஞர்களைக் கவர இயற்கை விவசாயம் என கவர்ச்சியூட்டப் படுகிறது.

நீங்களும் ‘போலி அறிவியலுக்கு’ப் பலி ஆனவரா?

#ஆன்மீக_அறிவியல்
#பகுத்தறிவு
#நம்முனோர்கள்_முட்டாள்கள்
#பார்பனமுன்னோர்கள்_அயோக்கியர்கள்
வேப்பிலை ‘ஆண்டிபயாடிக்’ என்றும், அதனால்தான் அம்மை நோயின்போது அதனைக் கட்டுவதாகக் கூறி வரும் நண்பர்களுக்கு ‘அம்மை நோய்’ வைரசினால் ஏற்படும் நோய் என்பதும், ‘ஆண்டிபயாடிக்’ என்பது பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்து என்பதும் வைரசும் பாக்டீரியாவும் வேறு வேறு என்பதும் தெரியாது....
---- venu gopaala shanger எழுதுகிறார்...
இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்த உலகில் உள்ள அனைத்து போலி அறிவியல் தத்துவங்களையும் உங்களின் கண்முன் நிறுத்துவது அல்ல. மாறாக, போலி அறிவியலின் அடிப்படைகளை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு உண்மையான அறிவியல் எது? போலி எது? என்று அடையாளம் காணுவதே ஆகும்.
சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உள்ள இடத்தில்தான் பூமியின் காந்தப் புல மய்யம் உள்ளது என்று ஆரம்பித்து அம்மைநோயின்போது வேப்பிலைகள் கட்டுவது அது ஒரு ‘ஆண்டி-பயாடிக்’ என்ற அறிவியல் உண்மையின் காரணமாகத்தான் என்பதுவரை உங்களிடம் யாரேனும் ஆன்மீக அறிவியல் பாடம் எடுத்திருக்கக்கூடும்.
இவற்றையெல்லாம் அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள், முன்னோர்கள் முட்டாள்களில்லை என்றும் புலம்பியிருக்கக்கூடும்.
மேற்கண்ட கருத்துகளை நீங்கள் நம்பி இருந்தால் நீங்களும் ‘போலி அறிவியலுக்கு’ப் பலி ஆனவர்தான்.
பூமி கோள வடிவிலானது, ஒரு கோளத்தின் காந்த மய்யம் அதன் நடுவில்தான் இருக்க முடியுமே தவிர அதன் வெளிப் பரப்பில் இருக்க முடியாது. வேப்பிலை ‘ஆண்டிபயாடிக்’ என்றும், அதனால்தான் அம்மை நோயின்போது அதனைக் கட்டுவதாகக் கூறி வரும் நண்பர்களுக்கு ‘அம்மை நோய்’ வைரசினால் ஏற்படும் நோய் என்பதும், ‘ஆண்டிபயாடிக்’ என்பது பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்து என்பதும் வைரசும் பாக்டீரியாவும் வேறு வேறு என்பதும் தெரியாது.
போலி அறிவியல் உருவாகக் காரணம் : நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் இடையேயான ‘சண்டை’ பல நூற்றாண்டுகால வரலாறு கொண்டது. கலிலியோ பூமி உருண்டை என்றபோது, மதவாதிகள் அவரைக் ‘குற்றவாளி’ என்றனர். மத நூல்கள் பூமி தட்டை என்று கூறுவதாகவும் கலிலியோ கடவுளுக்கு எதிராகப் பேசுவதாகவும் கூறி அவரைக் கொல்ல முனைந்தனர். டார்வின் உயிரி தோற்றக் கொள்கையை வெளியிட்டபோது, அது கடவுளுக்கு எதிரானது என்றும், கடவுள்தான் அனைத்து உயிரிகளையும் படைத்தார் என்றும் அவரை மதவாதிகள் சாடினர். ‘மரபியலின் தந்தை கிரிகர் மெண்டல்’ செய்த ஆய்வுகள் கடவுளின் படைப்பிற்கு எதிரானது என்று கூறி கிறிஸ்துவப் பாதிரியார்கள் அவரை இருட்டறையில் அடைத்தனர். பாரதத்தை மூடநம்பிக்கைகளின் தலைநகரம் என்றே நாம் கருதலாம். பாரம்பரியம், மரபு, கலாச்சாரம், மத நம்பிக்கைகளின் பெயரில் எதனை வேண்டுமானாலும் மக்களை நம்ப வைக்கலாம்.
மதத்தில் உள்ள கட்டுக் கதைகள் மிகுந்த கற்பனை வளம் கொண்டவை. அதன் கதைகளில் பூமியைக் கடத்திக் கொண்டு போய் பூமியில் உள்ள கடலிலிலேயே மறைத்து வைத்திருப்பார்கள். பகுத்தறிவும் அறிவியலும் வளர ஆரம்பித்த காலங்களில் முதலில் நமது மதவாதிகள் அறிவியலால் தீங்கு ஏற்படும் என்று பிரச்சாரம் செய்தனர். ஆனால் அறிவியல் வளர வளர அடிப்படைவாதிகளால் அறிவியலை முழுமையாக எதிர்க்க முடியவில்லை. மக்கள் அறிவியலைப் பின்பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். இதே நிலை தொடர்ந்தால் மதவாதிகளின் பிழைப்பில் மண் விழுந்துவிடும். என்ன செய்வது என்று சிந்தித்துத் திட்டம் போட்டவர்களின் கண்டுபிடிப்பே போலி அறிவியல் ஆகும். அறிவியலை எதிர்த்த நாட்கள் போய், இப்போது ஒவ்வொரு மதநிறுவனமும் எங்கள் மதம்தான் அறிவியல் பூர்வமானது என்று அடித்துக் கொள்ளும் நிலை வந்துவிட்டது.
இந்தப் போலி அறிவியலின் அடிப்படை எளிமையானது. அது வீழ்த்த இயலாத எதிரியை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். இதன்படி அறிவியலையும், நம்பிக்கைகளையும், கட்டுக்கதைகளையும், பாரம்பரிய மருத்துவ முறைகளையும் கோர்த்துவிடுவதுதான். இதன்படி மூடநம்பிக்கைகள் அனைத்தும் அறிவியல் பூர்வமானது என்று மக்கள் கருதுவார்கள். உதாரணமாக "இந்த Dark energy எனப்படும் ஆற்றலே தலயாய ஆற்றல் அதை எதனாலும் அளவிட இயலாது என்கிறது அறிவியல் அந்த ஆற்றலே நாம் சிவம் என்கிறோம்" இவ்வாறு வரலாறு உள்ள மனித கற்பிதங்களை இதுவரை தெரியாத அறிவியலுடன் முடிச்சுப்போடுவார்கள்.
இவ்வாறு மதத்தில் உள்ள ஒவ்வொரு மூடநம்பிக்கையின் பின்பும் ஒரு அறிவியல் உள்ளதாக கதை கிளப்பி விடப்படுகின்றது. தாலி கட்டுவது, தீ மிதிப்பது, மந்திரம் ஓதுவது, ஓமம் வளர்ப்பது, கோமியம் குடிப்பது, கோயில் சுற்றுவது, தோப்புக்கரணம் போடுவது போன்ற அனைத்தும் இன்று அறிவியல் பூர்வமானது என்று கதை கட்டப்பட்டு உள்ளது. அந்தக் கதைகளின் மூலம் மீண்டும் மதநிறுவனங்கள் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ள முனைகின்றன.
இந்தக் கதைகளைக் கட்டுவதற்கென்று ஆன்மீக எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். இவர்கள் ஆன்மீகத்தை மையமாகக் கொண்டு வெளிவரும் பத்திரிகைகளின் மூலம் இதனைச் செய்கின்றனர். ஒவ்வொரு வாரமும் ஒரு புதுக்கதை இருக்கும். எடுத்துக்காட்டாக, அதன் தலைப்புகள் ‘அம்மி மிதிப்பதன் அறிவியல் அடிப்படை’, ‘குளத்தைச் சுற்றினால் சரியாகும் தோல் நோய்’ என்றவாறு இருக்கும்.
அமெரிக்காவில் உள்ள நாசாவும், நமது திருமூலரும்தான் இவர்களால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள். எதற்கெடுத்தாலும் நாசாவிலேயே சொல்லிவிட்டார்களாம் என்பார்கள். இல்லையென்றால் திருமூலர் அப்பவே இதைச் சொல்லி வைத்துவிட்டு போய்விட்டார் என்பார்கள்.
ஒன்றை இன்னொன்றோடு முடிச்சுப்போடுவார்கள். அணுவின் இயக்கத்திற்கும் நடராஜர் நடனத்திற்கும்கூட முடிச்சுப்போடுவார்கள். ‘காஸ்மிக் டான்ஸ்’ அதனைக் குறிப்பால் உணர்த்தவே நடராஜர் ‘நடனம்’ ஆடுகின்றார் என்பார்கள். ஏன் நடராஜர் ஆடுவது டிஸ்கோ டான்சைக் குறிப்பால் உணர்த்துவதாக இருக்கலாம் என்று நாம்கூட கூறிவிட்டுபோகலாம். கேட்பவர் சுயமாக யோசிப்பதே இங்கு முக்கியம். ஆதாரமற்ற எவற்றையும் புறந்தள்ளுவதே புத்திசாலித்தனம்.
எதிர்காலத்தைக் கணிப்பதற்கு, சுகமான வாழ்வு வாழ, செல்வவளம் பெற கைரேகை, ஜாதகம், கம்ப்யூட்டர் ஜாதகம், நாடி ஜோதிடம், கிளி ஜோசியம், நியுமராலஜி, நேமாலஜி, மலையாள மாந்த்ரீகம், வாஸ்து சாஸ்திரம், பரிகார முறைகள், தனலட்சுமி எந்திரம், தாயத்து, பில்லி சூனியம், ஏவல் மற்றும் பல மரபு வழி முறைகள் நம்மைச்சுற்றி இன்றும் பரவலாகப் பின்பற்றப்படுகின்றன.
மேற்கண்ட முறைகளில் ஏதேனும் ஒன்றை வைத்துத் தொழில் செய்து மக்களை ஏமாற்றுபவர்கள் தங்களுக்கென்று ஒரு தொழில் தர்மத்தை வைத்திருக்கின்றனர். அது என்னவெனில், ஒருவர் மற்றவரைக் குறை சொல்லக் கூடாது. காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதுதான்.
எடுத்துக்காட்டாக ஜாதகம் கணிப்பவர், நியுமராலஜி அல்லது நேமாலஜி தவறான முறை என்று கூறுவதில்லை. கிளி ஜோசியம் பார்ப்பவர் அருகில் கைரேகை பார்ப்பவர் முறை தவறெனக் கூறுவதில்லை.
அதேபோல தங்கள் முறைதான் சரியானது, அறிவியல் பூர்வமானது, மற்ற முறைகள் தவறானவை என்று ஒருவர் மற்றவரை தொலைக்காட்சியில் பேசும் போதோ விவாதங்களின் போதோ காட்டிக் கொடுப்பதில்லை. ஆனால் நாடி ஜோதிடத்திற்கும், கிளி ஜோதிடத்திற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் இவர்கள் அனைவரும் அறிவியலுக்கு, பகுத்தறிவுக்கு எதிரானவர்கள். மூடநம்பிக்கையை வைத்து மக்களை ஏமாற்றுபவர்கள். எனவே இவர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர்.
ஒவ்வொருவரும் இந்த ஆன்மீக அறிவியலைவைத்து ஏமாற்றும் ஏமாற்றுக்காரர்களை இனங்கண்டுகொள்வது அவசியமாகிறது.

Tuesday, June 19, 2018

எளிமையை ரொமாண்டிசைஸ் பண்றவன் பொறாமை படைத்தவன்

யார் எல்லாம் எளிமையை ரொமாண்டிசைஸ் பண்றானோ அவன் எல்லாம் அடிப்படையில் பொறாமை குணம் படைத்தவனாக இருக்க வாய்ப்பு அதிகம்.
ஒரு முதல்வரோ இல்லை அரசியல்வாதியோ செய்யக்கூடிய செய்த ஏராளமான நல்லவிசயங்கள் இருக்கும்போது அதை விட்டுவிட்டு அவர் சாகும்போது அவரிடம் இரண்டு வேட்டிதான் இருந்தது தெரியுமா என்கிற ரேஞ்சில் பேசிக்கொண்டிருப்பார்கள்.
அதாவது ஒரு டாக்டர் சைக்கிளில் போய் வைத்தியம் பார்த்தால் அவர் நல்ல டாக்கடர். அதுவே கார், பங்களா என்று இருந்தால் மோசமான டாக்டர். இதுதான் நம்ம ஆட்களின் மனநிலை.

Monday, June 18, 2018

வாட்சப் செய்திகளை நம்பாதீர்கள்

இந்தப் பதிவு எழுத வேண்டும் என நினைத்து நேரமின்மையால் இன்று எழுதுகிறேன்.
கடந்த வாரத்தில் மூன்று சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் என்னிடம் வந்தனர்.
மூன்று பேரும் கடந்த சில ஆண்டுகளாக என்னுடைய ஆலோசனை மற்றும் கண்காணிப்பில் மருத்துவம் செய்து வருகின்றனர். ஆனால் , சில மாதங்களாக ஆளையே காணவில்லை.
இவர்களின் கதையைப் பார்ப்போம்.
முதலாமவர் ஒரு ஆறுமாத இடைவெளிக்குப் பின் என்னிடம் வந்தார். வரும் போதே சோர்வாக , முடியாமல் வந்தார். என்ன சார் ஆளையே காணோம்? வெளியூர் போயிட்டீங்களா என்றேன். இல்லை டாக்டர், இங்கே தான் இருக்கேன் என்றார். ஒரு ஆய்வக சோதனை தாளை காட்டி னார். சர்க்கரை அளவு கள் ஏகப்பட்டது ஏறி இருந்தது. நானூறை தாண்டி இருந்தன.
என்ன கடந்த ஆறுமாதமாகவே இப்படி சர்க்கரை ஏறிப்போய் உள்ளது? நீங்கள் தொடர் சிகிச்சை க்கு வரவில்லை , என்ன காரணம் எனக் கேட்டேன்.
அவர் சொன்னார் , டாக்டர் திட்டக் கூடாது என்று பீடிகை போட்டார்.
சரி சரி சொல்லுங்க என்றேன்.
நான் ஆறு மாதங்களுக்கு மேல் இந்த மாத்திரை எல்லாம் சாப்பிடல. இதற்குப் பதிலாக நாட்டு மருந்து சாப்பிடுகிறேன் என்றார்.
எதுக்கு?
சர்க்கரை நோய்க்கு.

சரி ஐந்து மாதம் முன்பே சர்க்கரை ஏறிடுச்சி தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் அதிகமாக உள்ளதே , நீங்கள் இது குறித்து பய ப்படவில்லையா? முன்பெல்லாம் 200 மி.கி தாண்டினாலே பரபரப்பாகி என்னை வழிப் பண்ணிடுவீங்களே என்றேன்.
அது வந்து டாக்டர், அடுத்தடுத்த மாதங்களில் குறையும் னு நினைச்சேன் , குறையவே மாட்டேங்குது என கவலைப் பட்டார்.
இரண்டாமவர் வந்தார். அவர் ஓராண்டு க்குப் பிறகு வருகிறார். சர்க்கரை அளவு 600 மி.கி க்கு மேல்.
காரணம் : எந்தவொரு சிகிச்சை யும் எடுத்துக் கொள்ள வில்லை. வந்த்தன் நோக்கம் பிறப்பு உறுப்பில் புண் வெடிப்பு. ஏன் சர்க்கரை நோய் மருத்துவத்தை நிறுத்தினீர்கள் எனக் கேட்டால் , சர்க்கரை நோய்னு ஒன்று இல்லவே இல்லை என்றார். அதனால் மாத்திரை எடுக்கல என்றார். நான் ஆடிப்போய்ட்டேன். ( நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் மாடுலேசனில் படிக்கவும்)
மூன்றாம் நபர் நெஞ்சு வலியோடு வந்தார். இவர் இரண்டு ஆண்டுகள் கழித்து வருகிறார். Sugar , BP, cholesterol எல்லாம் அதிக அளவு இருந்தது. இசிஜி யில் anterior wall ischemia வேறு. அவர் மனைவி தான் அக்கறையோடு அனைத்து வகையான கேள்விகளையும் கேட்டார். ஏன்மா தொடர் சிகிச்சை க்கு வரவில்லை. எதுவுமே கட்டுப் பாட்டில் இல்லையே. இவ்வளவு சிரம்ப் படுகிறாரே. மாத்திரை மருந்து எல்லாம் சாப்பிடராறா இல்லையா என்றேன். அந்தம்மா மாத்திரை சாப்பிடல சார். மருந்து மட்டும் சாப்பிடறார் என்றார்.
என்ன மருந்து என்றேன்.
அந்தம்மா சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைய வேண்டாம். நான் இப்போதெல்லாம் அப்படியே ஷாக் ஆவதில்லை.
சீரகத் தண்ணி குடுக்குறேன் டாக்டர் என்றார். அப்பவும் அடைப்பு நீங்கவில்லைன்னு சொல்றீங்க டாக்டர். அப்ப நான் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு கொடுத்தது எல்லாம் வேஸ்டா? என்றார். மிகுந்த நம்பிக்கை யோடு சீரகத் தண்ணி கொடுத்த அவருக்கு பெருத்த ஏமாற்றம். நல்லா பார்த்து சொல்லுங்க டாக்டர் என்றார் நாலைந்து முறை.
சீரகத் தண்ணி கரோனரி ப்ளாக்க கரைத்து விடுமாம்.
வாழ்க நம்பிக்கை.என்றேன்.
இந்த மூவரிடமும் ஏன் இப்படி திடீரென ட்ரீட்மெண்ட் ட மாற்றினீர்கள் ? எனக்கேட்டேன்.
மூன்று பேரும் ஒரே பதிலைத் தான் சொன்னார்கள்.
வாட்சப்புல படிச்சோம் சார். அதனால் மாத்திரைகளை ஊசிகளை நிறுத்தி விட்டோம் . வாட்சப்பில் போட்டிருந்த மாதிரி சீரகத் தண்ணி, வெந்தயம், வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீர் என பலவற்றை எடுத்து முயற்சி செய்து பார்த்துள்ளனர்.
வாட்சப் செய்திகளின் வீச்சை, அது ஏற்படுத்தும் தாக்கத்தை எண்ணி அரண்டு போனேன். இதைப்போல அன்றாடம் ஓரிருவர் வருகின்றனர்.
இவர்களுக்கு , கவுன்சலிங் தந்து வாட்சப் செய்திகளை நம்பாதீர்கள்.என்றேன்.
ஏதாவது சந்தேகம் எழுந்தால் மருத்துவரை ஆலோசித்து செயல்படுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தேன்.
சமூக வலை தளத்தில் வரும் உடல்நலம் தொடர்பான செய்திகள் ப்ளூ வேல் விளையாட்டுக்கு ஒப்பானவை என்பது நமக்குத் தெரிகிறது. மக்களுக்குத் தெரிவது எப்போது?

Tuesday, June 12, 2018

பச்சை பொய்களை அவிழ்த்துவிடும் திரு-சுகி சிவம்

வளைகுடா நாட்டில் நோன்பு நேரத்தில் பொது வெளியில் இசுலாமியர் அல்லாதவர் உணவு உண்ண முடியாது. இவர்கள் பாத்ரூமில் உட்கார்ந்து தான் உணவு உண்ண வேண்டும்.
-------------------------------------------------------------------------------
இந்து மத ஆன்மீக
பேச்சாளர் திரு-சுகி சிவம். அவர்கள்
------------------------------------------------------------------
தலையிலிருந்து பிறந்தவன் பிராமணன்அதனால் மேல் சாதி என கற்பனை கதை கட்டி ஊரை ஏமாற்றி ஏய்த்து ஊ---- பிழைக்கிற எத்துவாளி கூட்டங்கள் என்று தான் உண்மையை சொல்லியிருக்கிறது??அல்லது ஒத்து கொண்டிருக்கிறது?????
---
25 வருட என் சவுதி அனுபவத்தில் நாங்கள் அரச குடும்பத்திலும் (அமீர் ) மிக பெரிய பணக்காரர்கள் (’ஷேக்) வீ்ட்டிலும் நடுத்தர மக்கள் வீ்ட்டிலும் படங்கள் வரைந்திருக்கிறோம்-நோன்பு நேரத்தில் நாங்கள் சாப்பிட்டிருக்கிறோம்-ஏன் எங்களுக்கு அவர்களே உணவு தந்ததுமுண்டு-சில இடங்களில் சாப்பிடலாமா என்று கேட்டால் முஸ்லீம்களுக்குத்தான் நோன்பு- உங்களுக்கென்ன சாப்பிடுங்கள் என்று தான் சொல்லியிருக்கிறார்களே தவிர எவரும் சாப்பிடகூடாது அல்லது பாத்ரூமில் போய் சாப்பிடு என சொன்னதேயில்லை
--
-குழந்தைகள் -மற்றும் நோயாளிகளுக்கு-பிறமதகாரர்களுக்கு -நோன்பில் இஸ்லா ம் விலக்கு அளித்துள்ளது- இதெல்லா ம் முறையாக பிறக்க வேண்டிய இடத்தில பிறக்காமல் தலையில பிறந்ததாக பிதற்றும் தறுதலைகளுக்கு தெரியாது
--
பல பேர் பட்டினியாக இருக்கும் இடத்தில் அவர்களை பார்க்க வைத்து நாம் சாப்பிடுவது-உலக மகாஅயோக்கியத்தனம் என்பதால் நாங்கள் நாகரீகமாக அவர்கள் பார்க்காத இடத்தில் போய் ்சாப்பிடுவோமே தவிர எவரும் சாப்பிடாதே என இது நாள் வரை சொன்னதில்லை-
---
விதி விலக்குகள்“ எல்லாவற்றிலும் உண்டு-எல்லா மதத்திலும் மத வெறியர்கள் உண்டு அவரில எவராவது ஒருவேளை அப்படிசொல்ல வாய்பபு உண்டு-அதுவும் அபுார்வமே
--
-இந்த சாதி சாக்கடைகூட்டணி மதக்காரனுக்கு இநத உலகத்தில் எந்த மதக்காரனையுமே விமரிசிக்க குறை சொல்ல மயிரளவு தகுதுி கிடையாது-சக இந்துவை நீ கீழ்சாதி என் கோவிலில் ஏறாதே என் தெருவில் வராதே- காலில் செருப்பிடாதே- பைக்கில வேகமாக போகாதே- தேர் இழுக்காதே என கிராமங்களில் தீண்டாமை தடைகள் போடுகிற சாதி வெறி பிடித்த உலக மகா அயோக்கிய நாய்கள் உலகில் வேறு எந்த மதத்திலிருக்கிறார்கள்????
--
-சக பட்டியலின இந்துவிற்கு கிராமங்களில் தனி கிளாஸ்(இரட்டை குவளை முறை) வைக்கிற அவனை கீழே உட்கார வைத்து ஆதுிக்க சாதி வெறி நா--கள் மேலே உட்காருகிற அயோக்கியதனங்களை
உலகில் இன்று வேறு எந்த மதக்காரன் செய்கிறான்???
-
அனைத்து நாட்டுமுஸ்லீம்களும் ஒன்றாக நின்று தொழுகிற காட்சி ஒன்றாக உண்கிற காட்சி-அதை பார்க்க கோடிக்கண் வேண்டும்-நாட்டை ஆளும் ராஜாவானாலும் எவனானாலும் அந்த இடத்தில அனைவரும் ஒன்றே--
-
- நம் நாட்டைபோலல்லாமல் கக்கூஸ் சுத்தம் செய்கிறவனாகயிருந்தாலும்அவன் எந்த நாட்டுக்காரனாகயிருநதாலும் எந்த ஏறற தாழ்வும் பார்க்காமல் அவனோடு உணவருந்துவார்கள்-இஸ்லாமின் மிகப்ரெிய சிறப்பே இது தான்
--
பச்சை பொய்களை அவிழ்த்துவிடும் திரு-சுகி சிவம். அவர்கள் குண்டிதெரியும் தன் கிழிந்த மத நிக்கரை
முதலில தைக்கட்டும்-அதன் பி்ன் மற்ற மதக்காரன் சட்டை பட்டனை தைக்கலாம்--
--
-சாதிக்கொரு கடவுள்- விதி- வீதி- நீதி உண்வு- உடை-சடங்கு சம்பிரதாயம் -சுடுகாடு என பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்திலுமே ஏற்ற தாழ்வை வைத்துக்கொண்டு அனைத்திலும் சமத்துவம் பேசும் ( சில பெண்ணுரிமை தவிர) இஸ்லாமை எந்த மூஞ்சியை வைத்து தோலில் சூடு சொரணை மானம் ரோசம் வெட்கம் இல்லாமல் குறை சொல்கிறார்கள்???
அட துார்ாாாாாாாாா
-( குறிப்பு-இந்திய கிறிஸ்தவன் பைபிள் படிக்கும்சாதிவெறி ிபிடித்த இந்து தான்)

Thursday, May 17, 2018

இதுபோன்ற மூளை வளர்ச்சி இல்லாதவர்களை புறக்கனியுங்கள்

தடுப்பூசி எதிர்ப்பு, சித்த வைத்தியம், இயற்கை விவசாயம், நாட்டுமாட்டு பால் என்று இயற்கையாகவே மூளை வளராமல் இருக்கும் இன்றைய சில இளைஞர்களுக்கு எந்த வகையிலும் உங்கள் பெண்ணையோ அல்லது தெரிந்தவர்கள் பெண்ணையோ கல்யாணம் செய்து கொடுக்காதீர்கள் என்பதே நீங்கள் அந்த பெண்களுக்கு செய்யும் நன்மை,
ஏனென்றால் கல்யாணத்திற்கு பிறகு அவர்கள் பிரசவத்திற்கு தங்கள் மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் வீட்டிலேயே வைத்து சுகபிரசவம் செய்து சாவடிப்பார்கள்.
அப்படியும் தாயும் குழந்தையும் பிழைத்தால் குழந்தைக்கு தடுப்பூசி போடாமல் சாகடிப்பார்கள் அல்லது நோய் பாதிப்பில் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
அதிலும் தப்பித்தால் டெங்கு போன்ற நோய்கள் வரும்போது மருத்துவரிடம் செல்லாமல் நிலவேம்பு கசாயம் கொடுத்து கொன்றுவிடுவார்கள்.
அதிலும் மீறி சக்கரை அல்லது கேன்சர் என்ற கொடும் நோய் வரும்பட்சத்தில் அதெல்லாம் நோயே இல்லை கார்பரேட்டுகள் பணம் சம்பாதிக்க அதை நோய் என்று சொல்லி பணம் சம்பாதிக்கிறார்கள் என்று வெட்டி நியாயம் பேசி வீட்டிலேயே வைத்து கண்டிப்பாக சாவடித்துவிடுவார்கள்.
ஆகையால் திருமணம் நிச்சயம் செய்யுமுன் மாப்பிள்ளையின் முகநூலையாவது குறைந்தபட்சம் கண்டறிந்து இதுபோன்ற மூளை வளர்ச்சி இல்லாதவர்களை புறக்கனியுங்கள்..

Monday, February 26, 2018

ஏழாம் அறிவு விஷம் தோய்ந்த வசனம்

சன் டிவியில் ஏழாம் அறிவு திரைப்படம் ஒடிக் கொண்டிருக்கிறது.
அதில் ஸ்ருதிஹாசன் கேரக்டர்
“நம்ம நாடு ரிசர்வர்வேசன் ரெக்கமெண்ட்டேசன் பண்றதாலத்தான் திறமையானவங்க வெளிநாடு போறாங்க” என்று சிபாரிசுடன் சமூகநீதி விஷயமான இடப்பங்கீட்டையும் சேர்த்து விடுகிறார்.
எவ்வளவு விஷம் தோய்ந்த வசனம் இது.
இதை இயக்கிய முருகதாசும் சரி,
படத்தை தயாரித்த உதயநிதி ஸ்டாலினும் சரி நிச்சயமாக பார்ப்பனர்கள் அல்ல.
ஆனால் பார்ப்பனியத்தை இவ்வசனம் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
உதயநிதி இப்படத்தை பார்த்திருப்பார்தானே.
இந்த வசனம் அவரை உறுத்தவில்லையா என்ன ?
உதாரணமாக ஒரு வில்லன் கதாபாத்திரத்துக்கு
கருணாநிதி என்று முருகதாஸ் பெயர் கொடுத்திருந்தால் உதயநிதி பெயரை மாற்ற சொல்லி இருப்பார்.
ஏனென்றால் உதயநிதியின் உணர்வும் அறிவும் அதைப் புரிந்து கொள்கிறது.
ஆனால் உதயநிதியின் காதுகள் ரிசர்வேசன் வசனத்தை புரிந்து கொள்ளவில்லை. ஏனென்றால் அவருக்கு அடிப்படை சமூகநீதியை கருணாநிதியோ, ஸ்டாலினோ கற்றுக் கொடுக்கவில்லை.
இவர் நாளை திமுக தலைவராகவும் ஆகிவிட்டால் இதே பார்ப்பனிய அறிவோடுதான் எந்தப் பிரச்சனையையும் கையாள்வார்.
வெளங்கிரும்.
திராவிட கழகத்தினர் முதலில் கலைஞர் ஃபேமிலி குழந்தைகளுக்கு ஸ்பெசல் டியூசன் எடுங்கப்பா.
முதல்லேயே அவுங்கள தயார் படுத்துங்க. நாட்டுக்கு அதுதான் நல்லது.
சுப வீரபாண்டியன ஹோம் டியூசன் சொல்லிக் கொடுக்க அனுப்பி வைங்க.
டியூசன் ஃபீஸ் வேணா கலெக்ட் பண்ணி தரோம்.

Wednesday, January 31, 2018

வேதங்களைப் பற்றிய `ஜீபூம்பா’ கருத்துகள் அனைத்தும் பொய்யானவை; தவறானவை.

இது பிராமணாள் ஸ்பெஷல்...

பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது"-எழுத்தாளர் சாரு நிவேதிதா..

பெரியார்மீது எனக்குக் கொஞ்சம் மனஸ்தாபம் இருந்தது. மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அவர் நடத்திய போராட்டத்தில் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பல செழுமையான பகுதிகளும் அடித்துக் கொண்டு போய் விட்டனவே என்பதுதான் என் மனஸ்தாபத்திற்குக் காரணம். உதாரணமாக, பிராமணீயத்தை எதிர்ப்பதற்காக சமஸ்கிருத மொழியை எதிர்த்தார். அதனால் காளிதாசன் எழுதிய அதி அற்புத காவியங்களை நாம் படிக்க முடியாமல் போயிற்று. வருணபேதத்தை முன்னிறுத்துகின்றன என்பதால் புராணங்களையும் இதிகாசங்களையும் எதிர்த்தார். அதனால் உலக இலக்கியங்களிலேயே தலைசிறந்த காவியம் என்று உலக எழுத்தாளர்களால் போற்றப்படும் மகாபாரதத்தைப் படிக்காமல் விட்டோம். இப்படியெல்லாம் இவ்வளவு காலம் நினைத்துக் கொண்டிருந்தேன். அதனால் சமஸ்கிருதத்தில் உள்ள முக்கிய நூல்களை நானே படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது. முக்கியமாக வேதத்தைப் படித்தபோது. ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களே இந்து மதத்தின் பெரிய புனித நூல்களாகக் கருதப்படுபவை. வேதம் படித்தவனே அறிஞனாகக் கருதப்படுகிறான். மேலும், சூத்திரனோ அல்லது நான்கு வருணங்களுக்கு அப்பாற்பட்ட விளிம்பு நிலையில் தள்ளப்பட்டு, இழி தொழிலைச் செய்ய நிர்பந்திக்கப்பட்ட அடிமை மக்களோ வேதத்தைக் கேட்டாலே போதும், அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொல்கிறது மனு தர்மம். வேதத்தை முற்றாக அறிந்தவன், வேதாந்தி என அழைக்கப்பட்டான். வேதத்தில் இல்லாததே இல்லையென்று இன்றளவும் கருதப்படுகிறது. நான்கு வேதங்களையும் ஆரம்பத்திலிருந்து முடிவு வரையும், பின்னர் முடிவிலிருந்து ஆரம்பம் வரை தலை கீழாகவும் ஓதத்தெரிந்தவர்கள் கனபாடிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இக்காரணங்களால் வேதத்தை நான் மிகுந்த மரியாதையுடனேயே வாசிக்க ஆரம்பித்தேன். பிறகுதான் தெரிந்தது... தெருவில் நடக்கும்போது காலில் அசிங்கத்தை மிதித்து விட்டேன் என்று. ஆம்! வேதத்தில் அவ்வளவு அசிங்கமும் ஆபாசமும் உள்ளன.

இந்துக்களில் அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் வீட்டில் எந்த சுப காரியங்கள் நடந்தாலும் அங்கே தவறாமல் அழைக்கப்படுபவர்கள் புரோகிதர்கள். `வாத்தியார்’ என்று பார்ப்பனர்களின் பேச்சு மொழியால் அழைக்கப் படும் அப்புரோகிதர்கள் அந்த சுபகாரியத்தின்போது ஹோமம் வளர்த்து பல மந்திரங்களை மணிக்கணக்கில் ஓதுவார்கள். அந்த மந்திரங்களின் அர்த்தத்தைக் கேட்டால் நீங்கள் எல்லோரும் பயந்து ஓடி விடுவீர்கள். ஆம்!

ஒரு சுப தினத்தின்போது `என்னை எதிர்ப்பவர்கள் நாசமாகப் போக; அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்க! புல் பூண்டு இல்லாமல் அவர்கள் வம்சம் அழிந்து போக!’ என்ற ரீதியில் மணிக்கணக்கில் ஒருவர் சாபம் விட்டால், அவ்வார்த்தைகள் அந்தச் சூழலை எவ்வளவு அரு வருப்பாக மாற்றும்? வேதம் முழுக்கவும் இம்மாதிரி அருவருப்பான வசைகளே நிறைந்திருக்கின்றன. இடையிடையே கவித் துவம் நிரம்பிய சில அற்புதமான பகுதிகளும் உண்டு. உதாரணமாக: `நான் தேனைவிட தேனாயுள்ளேன். மதுரத்தைவிட மதுவாயுள்ளேன். நீ என்னையே தேன் மிகும் சாகையாக விரும்பு’ `எனது சலனம் தேன் மயம். என் கமனம் தேன்மயம். நான் மொழியால் தேன் மயமாய் மொழிகிறேன். நான் தேன் தோற்றமாக வேண்டும்’ (அதர்வண வேதம்; காண்டம் : 1,34 தேன் மயம்)

ஆனால் இந்தக் கவித்துவத்தையும் மீறி வேதம் முழுக்கவும் நிரம்பியிருப்பது: துவேஷம், எதிரிகள் மீதான துவேஷம். எதிரிகள் யார் என்று பார்த்தால் பார்ப்பனர்களுக்கு அடிமையாகத் தங்களை ஒப்புக்கொடுக்காதவர்கள். அவர்கள் மீதான சாபத்தைப் பாருங்கள். `இந்திரன் தனது வச்சிராயுதத்தால் அவர்களது சிரங்களைத் துண்டித்திடுக’ `எங்கள் பசுவை நீ இம்சித்தால் நாங்கள் உன்னைக் குத்திக் கொல்வோம்’ (அத்தியாயம்:சம்ஹாரம்).
`எங்கள் எதிரிகளை ருத்திரன் நாசம் செய்க’
`சாபத்தால் சபிப்பவள், தன் மக்களையே புசிப்பாளாக’
`தனது மகனையும் சகோதரியையும் பெண்ணையுமே புசித்திடுக’
`அக்னியே! எங்களைத் துவேஷிப்பவனை உனது சுடரால் எரித்து விடு’
`இம்சை செய்பவனே! உங்களது புன்மைகள் மறுபடியும் பின்புறமே வீழ்க! உங்கள் தோழனைப் புசியுங்கள்;
உங்களது மாமிசத்தைப் புசியுங்கள்’
`இந்திரா’ சத்துரு சேனையை மயக்கம் செய்க. அதன் கண்களைப் பிடுங்கு’`அவனைக் கொல்லு; அவனது விலா எலும்புகளை நொறுக்கு. அவன் சீவனற்றவனாகுக. அவன் சுவாசம் நீங்குக இந்திரா! இதோ பிழிந்த சோமன். மதத்துக்கு இதனைப் பருகு. விரிந்து விசாலமாயுள்ள உனதுவயிற்றில் அச்சோமனைப் பொழிந்து கொள். எங்கள் எதிரிகளைக் கொன்று அவர்களின் பசுக்களைப் பாழாக்கு’

இப்போது புரிகிறதா, சில சாமியார்கள் கொலை, கொள்ளைகளில் ஈடுபடுவது ஒன்றும் சாத்திரங்களுக்கு விரோதமானதல்ல என்பதும், வேதங்களைப் பின்பற்றியே அவர்கள் அக்காரியங்களில் ஈடுபடுகின்றனர் என்பதும்? ஆனால் என்ன செய்வது? 3000 ஆண்டு-களுக்கு முன்பு இப்போது இருப்பதுபோல நீதிமன்றங்கள் இல்லை என்பதை சாமியார்கள் மறந்து விடுகின்றனர். மேலே கூறியுள்ள சுலோகங்கள் அனைத்தும் அதர்வண வேதத்தில் உள்ளவை. இப்படியே அந்த வேதத்தில் 20 காண்டங்கள் உள்ளன. எதிரிகளும் தங்களுக்கு அடிமை-யாக மறுப்பவர்களும் அழிய வேண்டும் என்ற `அரிய’ கருத்துக்கு அடுத்தபடியாக வேதங்களில் தெரியும் மற்றொரு `உன்னத’ குணாம்சம்; சுய நலம். நானும் என் இனத் தைச் சார்ந்தவர்களும் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்ற சுயநலம். இந்த சுயநலத்திற்காக தேவர்களுக்கு வேள்வி வளர்த்து அதில் நெய்யையும் குதிரைகளையும் போட்டு எரித்து, சொர்க்கத்திலிருக்கும் அவர்களை பூலோகத்துக்கு வரவழைத்து, சோம பானம் என்ற லஞ்சத்தைப் படையல் செய்து எதிரிகளை அழித்து விட்டு, எங்களை மட்டும் வாழவை என்று அவர்களை வேண்டுவதே வேதம்! வேத மந்திரங்கள் முழக்கவும் இத்தகைய சுய நலத்தையும் துவேஷத்தை யும்தான் முழங்குகின்றன. இன்றைய சாமியார்கள் ரவுடிகளுக்குப் பணம் கொடுத்து தங்கள் எதிரி களைக் கொலை செய்கிறார்களே, அதே கதை தான் வேதங்கள் முழுக்கவும் விரவிக் கிடக்கிறது. `ஜயித்த பொருள் நம்முடையது. தோன்றுவது நம்முடையது. ருதம் நம்முடையது. தேஜ° நம்முடையது. பிரம்மம் நம்முடையது. சுவர்க்கம் நம்முடையது. யக்ஞம் நம்முடையது. பசுக்கள் நம்முடையது’ அதர்வண வேதத்தில் ஜயகோஷம் என்ற அத்தியாயம். `நான் சொல்வதை ஜயிக்க வேண்டும். நான் செல்வம் மிகுந்தவனாக வேண்டும்; நீ என்னில் செல்வத்தை அளி’

அதர்வண வேதம் செல்வம் என்ற அத்தியாயம். `அடுத்தவன் அழிய வேண்டும்; நான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும்’ என்ற `உயரிய’ கருத்தை வலியுறுத்தும் வேத மந்திரங்களை இங்கே மேற்கோள் காட்டுவது மிகவும் சிரமமானது. ஏனென்றால் எல்லா மந்திரங்களுமே அப்படித்தான் உள்ளன. நான்கு வேதங்களில் அதர்வண வேதம் மட்டும் சிறிது பரவாயில்லை என்று கூறலாம். ஏனென்றால், அதிக காமம் பற்றிய சில கவித்துவமான பகுதிகள் உள்ளன. ரிக் வேதமோ முழுக்க முழுக்க துதிப்பாடல்கள் `இந்திரனே இங்கு வா, சோமத்தைப் பருகு. தலைவனான நீ, வழிபடும் மற்றவர்களையெல்லாம் கடந்து எங்களிடம் துரிதமாகவும் எங்களுக்கு மிக்க உணவை அளிக்கவும்’ இப்படி ரிக் வேதத்தில் உள்ள மொத்த மந்திரங்களின் எண்ணிக்கை 10,552. விஞ்ஞான வளர்ச்சியுற்ற இன்றைய கால கட்டத்தில் இத்தகைய வெற்றுச்சொற்களுக்கு எந்த அர்த்தமுமே இருக்க முடியாது. நாகரிக வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியிருந்த ஓர் இனம் (clan) எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக இயற்கையையும் வானுலகில் வசிப்பதாக அவர்கள் நம்பிய தேவர்களையும் துணைக்கு அழைத்த பிரார்த்தனைப் பாடல்களே வேதங்கள். அந்நியர்களைக் குறித்த இவர்களது பயமே சுயநலமாகவும் துவேஷமாகவும் மாறியுள்ளது. ஆனால், தமிழினப் பாரம்பரியமோ `இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்கிறது. நமக்குத் தீமை புரிந்த ஒருவனைத் தண்டிக்கும் வழி என்னவென்றால், அவன் வெட்கப்படும் விதத்தில் அவனுக்கு நன்மை புரிவதே. இதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதுதான். இப்படிப்பட்ட சிந்தனையின் ஒரு கீற்றைக் கூட நான்கு வேதங்களிலும் காண முடியவில்லை. எனவே `யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சீரிய தமிழ்மரபுக்கு `இந்திரனே! நான் அளிக்கும் சாராயத்தைக் குடித்து விட்டு என் எதிரியின் கண்களைத் தோண்டு’ என்று உபதேசிக்கும் வேதங்கள் நான்கும் முற்றிலும் மாறுபட்டது. எனவே, வேதங்களைப் பற்றிய `ஜீபூம்பா’ கருத்துகள் அனைத்தும் பொய்யானவை; தவறானவை.

Monday, January 08, 2018

நமது பாரம்பரிய அரிசி பற்றிய Whatsup பதிவு

நமது பாரம்பரிய அரிசி பற்றிய Whatsup பதிவு ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. நல்ல விசயம்தான். பாரம்பரிய நெல் ரகங்களை பயிர் செய்ததில் என்னுடைய கேள்விகள் மற்றும் அனுபவங்கள்.

  • கருப்பு கவுணி : மன்னர்கள் சாப்பிட்ட அரிசி
  • புற்றுநோள் வராது இன்சுலின் சுரக்கும்
  • மாப்பிள்ளை சம்பா : நரம்பு, உடல் வலுவாக்கும், ஆண்மை
  • பெருகும்.
  • பசுங்கார் அரிசி  : சுகப் பிரசவம், தாய்ப்பால் பெருகும்
  • காட்டுயானம் : நீரழிவு, மலச்சிக்கல் புற்று நோய் சரியாகும்.
  • கருத்தக்கார்ர் : மூலம், மலச்சிக்கல் சரியாகும்.
  • புத்தர் சாப்பிட்டது.
  • காலா நாமக் : மூளை, நரம்பு, இரத்தம் சரியாகும்
  • மூங்கில் : மூட்டு வலி, முழங்கால் வலி சரியாகும்
  • அறுபதால் குறுவை : எலும்பு குணமாகும்
  • தங்கச்சம்பா : பல், இதயம் வலுவாகும்
  • கருங்குறுவை : இழந்த சக்தியை மீட்டுத் தரும்
  • குடை வாழை : குடல் நோய் சரியாகும்
  • கிச்சிலி சம்பா : இருடி, சுண்ணாம்பு சத்து அதிகம்
  • கார் அரிசி : தோல் நோய் சரியாகும்
  • நீலம் சம்பா : இரத்த சோகை நீங்கும்
  • சீரகச் சம்பா : அழகு தரும்
  • துய மல்லி : உள் உறுப்புகள் சரியாகும்
  • சேலம் சன்னா : தசை, நரம்பு வலுவாகும்
  • பிசினி அரிசி : மாதாவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
  • வாடான் சம்பா  : அமைதியான துக்கம்


1. மொத்தமாக அறுவடை முடிந்தவுடன் விற்று பணம் ஈட்ட முடியுமா?
என்னால் முடியவில்லை. ஆனால் 4/5 மூட்டைனு ஒரு 4 மாதத்தில் உண்மை தமிழர்களிடம் சில்லரையாக விற்கப்பட்டது.
பாடம்: பணம் மொத்தமாக தேவை என நினைக்கும் விவசாயிகள் இந்த பரிட்சையில் இறங்கி கதறவேண்டாம்.
2. உங்க பக்கத்து வயல் விவசாயி ஆந்திரா பொண்ணி போட்டு உங்கள் பாரம்பரிய ரகத்தினை விட இரு மடங்கு விளைச்சல் எடுத்து உடனே மொத்தமாக விற்று உங்களை ஏளனமாக பார்ப்பார்.
நீங்கள் தற்சார்பு வாழ்வியலை பின்பற்றாத விவசாயி இல்லை எனில் இந்த ஏளன பார்வையை கடந்து செல்வது கடினம்.
3. கருப்புகவுணி போட்டு விற்கமுடியாமல் கதறிய பல பசுமை/பச்சைபொய் விகடன் விவசாயிகளை நான் அறிவேன்.
பாடம்: Modern உண்மை தமிழன் பாரம்பரிய அரிசியை சாப்பிடுவதில்லை. Whatsup share செய்யும் உண்மை தமிழரில் 0.00000001% மட்டுமே பாரம்பரிய அரிசி சாப்பிடுகிறார்கள்.
4. நெல்லை ஒரு 6 மாதத்திற்க்கு பாதுகாக்க இடமும் அனுபவமும் இல்லை எனில் பாரம்பரிய நெல் சாகுபடியை கடந்து செல்லவும்.
மேலும் தொடரும்.....
இந்த பயணத்தில் எங்களுக்கு உதவிய உண்மை தமிழனில் ஒருவனான நண்பன் Sriram Ramani மற்றும் Surya farms and hotels owner திரு.மோகன்தாஸ் அவர்களுக்கும் மிக்க நன்றி.
உண்மை தமிழன் எனில் இந்த பதிவினை கடந்து செல்லவும்.

இயற்கை விவசாயத்தின் யதார்த்த நிலை என்ன?

இயற்கை விவசாயத்தின் யதார்த்த நிலை என்ன? என்கிற கேள்விக்கு நிறைய அனுபவ பகிர்வுகள் வந்து சேர்ந்தன. கூடவே யோசனைகளும், அறிவுரைகளும், ஏளனங்களுமாக. ஏளனங்களுக்கு பதிலளித்து, அவர்களது மகிழ்ச்சியை குலைக்க விரும்பவில்லை.
சில யோசனைகளை பரிசீலிப்பது அவசியம் என்று பட்டது. அதன் குறை நிறைகளை விவாதிப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் தோன்றியது. சில விமர்சனங்களையும் பொருட்படுத்த வேண்டும் என்று தோன்றியது. அவற்றை பரவலாக விவாதிக்க வேண்டும் என்று நினைக்கிறன்.
விமர்சனம்
கார், பங்களா வாங்க வேண்டும் என்று நினைப்போர் இயற்கை விவசாயத்திற்குள் இறங்காதீர்கள். இது ஒரு தவம், அனுபவம், வாழ்வியல் etc etc.
தவம் என்று நம்புவோர் மேலும் தவம் செய்து முக்தி அடைய வாழ்த்துக்கள். என்னுடைய(மற்றும் பலருடைய) எதிர்பார்ப்புகள் கார், பங்களா வாங்குவது பற்றியல்ல. உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரின் பிறந்த நாளுக்கு உங்களால் துணிமணி இயற்கை விவசாயத்தில் சம்பாதித்த பணத்தில் வாங்கித்தர இயலுமா? உங்கள் பிள்ளைகளின் மேற்படிப்புக்கு தங்குதல், உணவு, போக்குவரத்து செலவுக்கு உங்ககளால் இயற்கை விவசாய லாபத்திலிருந்து ஆதரவளிக்க இயலுமா என்பது பற்றியே. கடன் வாங்கிய பணத்திற்கு வட்டி கட்டுவது பற்றி பிறகு கவலை படலாம், வட்டியே இல்லாமல் கடன் கொடுத்தால் கடனை அடைக்க முடியுமா என்பது பற்றியே இந்த விவாதம்.
யோசனைகள்
1) பல பயிர் சாகுபடி: ஒரே பயிரை பயிரிடாமல், பல பயிர்களை பயிரிட்டால் ஒவ்வொன்றிலும் குறைவான உற்பத்தி மற்றதை சமன் செய்யும். அதை சந்தையில் எளிதாக விற்க முடியும்.
2)விவசாயியே விற்பனையாளர்: ஒவ்வொரு உழவனும் விற்பனையாளாக மாற வேண்டும். முகநூல் வாட்ஸாப் போன்ற தொடர்பு ஊடகங்கள் வழியாக தங்கள் விற்பனையை மேம்படுத்தி கொள்ள இயலும். லாபமும் சம்பாதிக்கலாம்.
3) ஒருங்கிணைந்த பண்ணையம்: வெறும் பயிரையே நம்பி இருக்காமல், ஆடு, மாடு கோழி, பன்றி, மீன் போன்றவற்றை வளர்ப்பதன் மூலம் விவசாயி மீண்டு வரமுடியும்.
மேற்படி யோசனைகளின் குறை நிறைகளை நண்பர்கள் தங்கள் அனுபவத்தை வைத்து விவாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நண்பர்கள் தங்களது கருத்துக்களை தெளிவாக பகிர்ந்து கொண்டால் உபயோகமாக இருக்கும்.

விவசாயி எந்தப்பொருளையும் உற்பத்தி செய்ய தயார்தான். வணிகம்தாங்க சிக்கல்.

விவசாயி எந்தப்பொருளையும் உற்பத்தி செய்ய தயார்தான்.
வணிகம்தாங்க சிக்கல்.
அழுகக்கூடிய பொருட்களை பெரிய அளவில் உற்பத்தி செய்தால் விற்கவே முடியாது.
தக்காளி நட்டால் அன்றே விற்க வேண்டும்.
கீரை மணிக்கணக்குதான்.
கத்தரி இரண்டு நாளுக்குள்.
இந்த ஆர்கானிக் வணிகர்கள் நடச்சொல்லி நச்சரிக்கிறார்கள்.
விளைந்தபிறகு எடுக்கச்சொன்னால் எனக்கு நாலு பாக்ஸ் போதுமென்பார்கள்.
நாற்பது பாக்ஸ் வந்திருக்கும்.
அடுத்து மார்க்கெட்டுக்கு தூக்கிக்கொண்டு ஓட வேண்டும்.
பூச்சிக்கொல்லியின்றி, ரசாயனமின்றி விளைந்தவற்றின் உருவம், அளவு, நிறம் ஆகியவை கவர்ச்சியாக இருப்பதில்லை.
நீங்கள் ரசாயனமல்லாத முறையில் விளைவித்ததற்கு தண்டனையாக10%விலைகுறைப்பு கிடைக்கும்.
விளைச்சலும் சற்று குறைந்திருக்கும்.
உழைப்பு கூடுதல். ஆள்கூலியெனில் கூடுதல் செலவு.
உள்ளூர் கட்டில்கடை வணிகத்துக்கு மட்டும்தான் சரிவரும்.
பழைய கட்டில்கடை வியாபாரம்.
பெண்களுக்கான சிறுவாடு.
பெரிய அளவு உற்பத்தி இந்த இயற்கை வணிகர்களை நம்பி செய்வது முட்டாள்தனம்.
திருப்திக்காக என்கிறார்கள்.
திருப்திக்காக வேறு வருவாய் உள்ளவர்கள் செய்யலாம்.
விவசாயத்தையே நம்பியிருப்பவர்கள் என்ன செய்ய?

விரக்தியான விவசாயியும்/ வெறுக்க தக்க வியாபாரமும்

# விரக்தியான விவசாயியும்/ வெறுக்க தக்க வியாபாரமும் #
இன்று நம் "வள்ளுவம் பண்ணையில்" இயற்கை வழி விவசாயத்தின் வழி விளைந்த அவரைகாய் 14.5கிலோ'வை உள்ளூர் ஏலக்கடையில் விற்க போனேன்
சந்தை ஏலத்தில் 1கிலோ 10ரூபாய் வீதம் 14கிலோ 140 ரூபாயாகவும் கமிசன் 10 ரூபாய் போக 130 ரூபாய் கொடுத்தனர். இதே போலதான் வெண்டைக்காயை , கொத்தவரையை , பரங்கியை மிக மலிவாககேட்டதால் திருப்பி எடுத்து வந்துவிட்டேன்.. உறவினர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் மனம்மகிழ கொடுத்து மகிழ்ந்தேன்.. அப்படியும் மீதமிருந்த காய்களை வற்றல் போட்டு வைத்து கொண்டோம்... (10கிலோ காயை காய வைத்து 1கிலோ வற்றலாக மாற்றிக் கொண்டோம்.) ஆனால் அவரைக்காயை அப்படி செய்ய இயலாது.. வந்த விலைக்கு கொடுத்துவிட்டு வந்தேன். நான் பாடுபட்டு விவசாயத்தில் விளைந்த காய்க்கு என்னால் விலை நிர்ணயம் செய்யமுடியவில்லை. ( நானாவது பரவாயில்லை, மற்றொரு விவசாயி கைகாசுபோட்டு நாலுமுறை உயிர்கொல்லி விசமடித்து பலபலவென 25கிலோ அவரைக்காய் கொண்டுவந்து ஏலக் கடையில் வேதனையுடன் கமிசன் போக 310 ரூபாயை விரக்தியிடன் பெற்றுச்சென்றார் 1கிலோவிற்கு 13ரூபாய் போட்டுகொடுத்தனர் )
நான் : ஏன் அந்த காய்க்கு மட்டும் 13 ரூபாய் ஏலம் போகிறதென கேட்டேன்...
🥒 : அது பலபலன்னு காய் ஒரே சைஸ்ல இருக்கே தம்பி என்றார் .
( பாவம் நாலு விச கொல்லி வேற செலவழிச்சுஇருக்காரு... போகட்டும்... நுகர்வோர் அறியாமையும்.. வியாபாரியின் விருப்பமும் அப்படியானதாக இருந்தால் ... பாவம் கெட்டதறியாத அந்த விவசாயி என்ன செய்வார்.. ஆனாலும் விடிய பனி'ல கிடந்து காய் பறிச்சு வந்து விலை கிடைக்காத அவஸ்தை... விவசாயிக்கு கஷ்டம் தான்... ) . இது இன்றல்ல காலம்காலமாக இருப்பது தான்.. ஆனாலும் நாம விழிக்க வேண்டிய நேரமிது...
முன்னதாகவே நண்பர்களிடம் முயற்சித்தேன் ... இயற்கை அங்காடி வைத்திருக்கும் நண்பர்களிடம் தந்துவிடலாம் என்றென்னி மதுரையிலிருக்கும் இயற்கை நேய நண்பர்களிடம் கேட்டேன் அவர்கள் இன்று வரை பதிலளிக்கவில்லை , பின்னர் திண்டுக்கலில் மகாத்மா அங்காடி நண்பர்கள் என் மீதான அன்பால் நல்ல விலைக்கே இருமுறை பெற்றுக் கொண்டனர் அவர்களுக்குள்ளே பகிர்ந்தும் கொண்டனர் ஆனாலும் அவர்களுக்கான நுகர்வோர் வட்டம் துவக்கமென்பதாலும் அதனால் நுகர்வோர் குறைவென்பதால் அதிகமாக விற்பனை செய்ய இயலவில்லை அதனால் அவர்களை சிரம்மபடுத்த நான் விரும்பவில்லை . ஆகவே அதற்கான சரியான கட்டமைப்பையும்.. நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்த நினைக்கிறேன் . நண்பர்களின் ஆலோசனையை நாடுகிறேன்...
# இயற்கை வழி விவசாயம் செய்றத விட... செய்யுங்கனு சொல்றத விட அதற்கான நியாயமான சந்தைய அமைக்கிறதும் ... நுக்வோருக்கு விழிப்புணர்வ கொண்டுசேக்குறதும் தான் முக்கியம்னு நெனைக்கிறேன் . இதில் மாத சந்தைகளும் வார சந்தைகளும் காய்கறிகளை சந்தைபடுத்த ஒத்துவராது.. ஆக இயற்கை காய்கறிகளுக்கான சந்தையமைப்பை உருவாக்க மக்களை நோக்கி இன்னும் நிறைய பயணிக்கனும்... #