Showing posts with label Reservation. Show all posts
Showing posts with label Reservation. Show all posts

Monday, July 02, 2018

மநுவை ஒழித்தால் தான் சாதி ஒழியுமே தவிர சாதி சான்றிதழை கிழித்தால் அல்ல

சாதி சான்றிதழை கிழித்தால் சாதி ஒழியுமென்ற அதிமேதாவிக்கு.. மநுவை ஒழித்தால் தான் சாதி ஒழியுமே,தவிர சான்றிதழை அல்ல.. சாதி சான்றிதழை கிழிக்க சொல்வதின் பின்ணணியை பார்க்க வேண்டும் மிகவும் ஒடுக்கபட்ட சமூகத்தின் அடித்தட்டிலிரு்து மேலே வர முடியாமல் சுழன்று திரியும் எம் மக்களை .. மிகவும் பிற்படுத்தபட்டவராய்.. சமூகத்தில் தொடர்ந்து புறக்கணிக்கபட்டு கல்வி வேலைவாய்ப்பில் ..உயர்சாதியினரோடு போட்டியிட முடியவில்லை.. பொருளாதாரம்..கட்டமைப்பு வசதி அதற்கான வாய்ப்புகள் மறுக்கபட்டவர்களையும் .. உயர்கல்விகளுக்கு வருவதற்கு .. அவர்களுக்கான விகிதாசாரத்தை தருவது தானே சரி .. அவர்களை எப்படி இனங்காண்பது..
இன்றைக்கும் உயர்பதவிகளில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரே ஆதிக்கம் செலுத்துகிற அவலம்.. உச்சநீதிபீடம் முதல் .கவர்னர்...அரசு அதிகாரிகள் ..செயலர்கள் என அதிகார அமைப்பையே பார்பனர்கள் வைத்திருக்கிறார்கள்.. இடைநிலை கடைநிலை பணிகள் தான் ..பிற்படுத்தபட்ட தாழ்த்தபட்ட மக்களுக்கு கிடைக்கிறது அதையும் ஒழித்துகட்ட சாதி சான்றிதழ் மறுப்பு பயன்படுமே தவிர...அவர்களை ஒருபோதும் தூக்கிவிடாது..
..
சாதியை ஒழிக்க வேண்டாமா என கேட்பவருக்கு .. முதலில் 3% விழுக்காடு பார்பானுக்கு அவன் விகிதாசாரப்படி 1.5 % விழுக்காடு கொடுத்துவிட்டு மீதமுள்ளதை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க சொல்லுங்கள்..
இடஒதுக்கீட்டின் படி முழுவதுமாக நிரப்பபடாமல் இருக்கிறது..
அப்படியே எம் குழந்தைகள் உயர்கல்வியை தகுதி இடஒதுக்கீட்டின்படி பெற்று வந்தால் அவர்களை கொலை செய்து தற்கொலையென கதைகட்டி.. அந்த இடத்தை அபகரிக்கும் செயல் ..
இந்தியாவில் இடஒதுக்கீடில்லாமல் உயர்பதவி அதிகாரங்களில் பார்பனர்கள் எப்படி இத்தனை பதவிகளில் என எப்போதாவது கேட்டதுண்டா.. சாதி சான்றிதழை ஒழித்தால் எல்லாவற்றையும் பொதுவாக்கினால் மொத்தமும்,கொள்ளை போகும்.. இப்போதே நீட்டென்ற பெயரில் மருத்துவத்தில் எம் குழந்தைகளின் உரிமைகள் பறிபோகிறது
இதெல்லாம் திடீர் அரசியல்வாதிக்கு புரியாது..
இந்த மண்ணின் மக்களை ..அவர்தம் உரிமைகளை தடுக்க நினைக்கும் செயல் இது..
***********************************
சிலைகள் கடத்தபடுவது குறித்து ஏதேனும் கருத்து சொல்லியிருக்கிறாரா... கதவை உடைத்தோ சுவரை உடைத்தோ சிலைகள் திருடபடவில்லை .. கருவறைக்குள் நுழையும் அதிகாரம் பெற்ற திருடர்கள்.. அதேபோல் பித்தளை சிலையை வைத்துவிட்டு ஐம்பொன்சிலையை கடத்துவதாகவும்.. தமிழக கோவில்களில் 7000 கோவில்களில் டூப்ளிகேட் சிலைகள் தான் உள்ளன என்கிறார்
பொன். மாணிக்கவேல்.. இதற்காகதான் அறநிலையத்துறையை நாங்களே நிர்வகிப்போமென எச்.ராசா சொல்லி வருகிறாரா.. சிலைதிருட்டில் பாஜக தேசிய பொறுப்பில் உள்ளவருக்கு தொடர்பு இருப்பதாகவும் ..அதனால் தான் பொன்.மாணிக்கவேல் அவசர அவசரமாக ரயில்வேதுறைக்கு மாற்றபட்டதாகவும் செய்திகள் வருகின்றன ..இது குறித்து திமுக போராட்டத்தை நடத்த வேண்டும்.. சட்டமன்றத்தில் முதல்வர் சொன்ன பதிலுரை திருப்தியாகவே இல்லை வழக்கம் போல நீதிமன்றத்தில் இருக்கிறது.. பொன்.மாணிக்கவேல் அரசுக்கு ஒத்துழைக்கவில்லையென்கிறார்.. ஆம் அரசுக்கு ..ஒத்தூதவில்லை அவர்..சிலை திருட்டிற்கு காரணமாக உள்ள பாப்பான்களை காப்பாற்ற அரசு முயல்கிறது
திருசெந்தூர் முருகனின் வேல் காணமல் போனதற்காக .. நீதிகேட்டு நெடும்பயணம் நடத்திய வரலாறெல்லாம் உண்டு.. இந்த சிலை கடத்தலில் தொடர்புடையவர்கள் டெல்லி வரை செல்வாக்கு பெற்றியிருப்பதாக சொல்லபடுகிறது..
எதற்காக நாங்களே நிர்வகிக்கிறோமென சொல்கிறார்கள் என்பதன் பொருள் இப்போது விளங்கும்.. சிலை திருடர்களை அடையாளம்காண வேண்டும்..
..
கோவில் கூடாதென்பதல்ல கொடியவரின் கூடாரமாய் ஆககூடாது..

Tuesday, June 19, 2018

பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு

பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதில்லை என்ற குற்றச்சாட்டை களைய என்ன செய்யலாம்?
கல்வி வேலைவாய்ப்பு, அதிகாரப் பதவிகள், நீதித்துறை என அனைத்து இடங்களிலும் 100 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டுவரவேண்டும்! பார்ப்பனர்களின் எண்ணிக்கைக்கேற்ப 4% இட ஒதுக்கீடு தரப்படவேண்டும்! சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் வகுப்பு வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 100 சதவீத இடங்களும் அதற்கேற்றவாறு முழுமையாக பகிரப்படவேண்டும்..!
இதற்கு பார்ப்பனர்கள் தங்களது முழு ஆதரவையும் தரவேண்டும்!

Monday, February 26, 2018

ஏழாம் அறிவு விஷம் தோய்ந்த வசனம்

சன் டிவியில் ஏழாம் அறிவு திரைப்படம் ஒடிக் கொண்டிருக்கிறது.
அதில் ஸ்ருதிஹாசன் கேரக்டர்
“நம்ம நாடு ரிசர்வர்வேசன் ரெக்கமெண்ட்டேசன் பண்றதாலத்தான் திறமையானவங்க வெளிநாடு போறாங்க” என்று சிபாரிசுடன் சமூகநீதி விஷயமான இடப்பங்கீட்டையும் சேர்த்து விடுகிறார்.
எவ்வளவு விஷம் தோய்ந்த வசனம் இது.
இதை இயக்கிய முருகதாசும் சரி,
படத்தை தயாரித்த உதயநிதி ஸ்டாலினும் சரி நிச்சயமாக பார்ப்பனர்கள் அல்ல.
ஆனால் பார்ப்பனியத்தை இவ்வசனம் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
உதயநிதி இப்படத்தை பார்த்திருப்பார்தானே.
இந்த வசனம் அவரை உறுத்தவில்லையா என்ன ?
உதாரணமாக ஒரு வில்லன் கதாபாத்திரத்துக்கு
கருணாநிதி என்று முருகதாஸ் பெயர் கொடுத்திருந்தால் உதயநிதி பெயரை மாற்ற சொல்லி இருப்பார்.
ஏனென்றால் உதயநிதியின் உணர்வும் அறிவும் அதைப் புரிந்து கொள்கிறது.
ஆனால் உதயநிதியின் காதுகள் ரிசர்வேசன் வசனத்தை புரிந்து கொள்ளவில்லை. ஏனென்றால் அவருக்கு அடிப்படை சமூகநீதியை கருணாநிதியோ, ஸ்டாலினோ கற்றுக் கொடுக்கவில்லை.
இவர் நாளை திமுக தலைவராகவும் ஆகிவிட்டால் இதே பார்ப்பனிய அறிவோடுதான் எந்தப் பிரச்சனையையும் கையாள்வார்.
வெளங்கிரும்.
திராவிட கழகத்தினர் முதலில் கலைஞர் ஃபேமிலி குழந்தைகளுக்கு ஸ்பெசல் டியூசன் எடுங்கப்பா.
முதல்லேயே அவுங்கள தயார் படுத்துங்க. நாட்டுக்கு அதுதான் நல்லது.
சுப வீரபாண்டியன ஹோம் டியூசன் சொல்லிக் கொடுக்க அனுப்பி வைங்க.
டியூசன் ஃபீஸ் வேணா கலெக்ட் பண்ணி தரோம்.

Friday, February 09, 2018

இட ஒதுக்கீட்டு முறையை நீக்கி விடலாம்

இட ஒதுக்கீட்டு முறை என்பது அநீதியானது, சற்றும் தகுதியற்ற ஒரு சாராருக்கு அநியாய சலுகை அளிக்கும் திட்டம் என்று நினைப்பவருக்கு - சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடுதான். இட ஒதுக்கீட்டு முறை வேண்டாம். அதற்கு முன்னதாக:
ரொம்ப வேண்டாம் - ஒரு இருநூறு ஆண்டுகளுக்கு தலித் அல்லாதவர்கள் - தலித் வீடுகளில் பண்ணைக்கு இருக்கலாம். கொடுக்கும் கூழையும் கஞ்சியயும் குடித்துவிட்டு மாடாய் அவர்களுக்கு உழைத்துக் கொட்டிவிடலாம். அவர்கள் வீடுகளில் பண்ணைக்கு செல்லும்போது செருப்பு அணியாமல் சென்று விடுவோம் - நம் வீட்டுப் பெண்கள் மேலாடை இல்லாமலேயே சென்று வரட்டும். நம் தந்தயைரை அவனே இவனே என்று அவர்கள் வீட்டுப் பொடியர்கள் அழைப்பதை செவிக்கினியதாக கேட்டும் விடுவோம். நமது சில தலைமுறைகள் கல்வியற்ற மூடர்களாய்ப் போகட்டும். நம் அடையாளம் சாராயமும் மாட்டுக்கறியுமாக ஆகட்டும். ஆண்ட பரம்பரை தலித்கள் கால்மேல் கால்போட்டு அதிகாரம் செய்து நம் உழைப்பைத் திருடட்டும் - அதுவே நியாயம் என்று நம்மையும் சொல்ல வைக்கட்டும். மலக்குழியில் இறங்கி பீ அள்ளுதல், பிணங்களை புதைத்தல், சாக்கடை சுத்தம் செய்தல் என்று கேவலமானதாக கருதப்படும் வேலைகளையே செய்து ஊருக்கு ஒதுக்குப்புறங்களில் நமக்கான சேரிகளில் வாழ்ந்துவிடுவோம். நம்மைப்பார்த்து அவர்கள் மூக்கில் துண்டை வைத்து பொத்திக் கொண்டு போகட்டும்.
கொடிய பசியில் கடுமையாய் உழைப்பத்துதான் எத்தனை சுகமாக இருக்கிறது நமக்கு, அந்த உழைப்பின் பயனை ஆண்ட பரம்பரை தலித்துகள் அனுபவிக்கும் போது ஒரு இன்பம் கிடைக்குமே... ஆஹா!. சுயமரியாதை பொங்கி நாம் கொந்தளிக்கும் போது நம் வாயில் மலத்தையும் மூத்திரத்தியும் ஊற்றட்டும். நம் நிலை நொந்து கடவுளே துணை என்று - கோயிலுக்கு வெளியே நின்று மட்டும் - வேண்டிக்கொள்வோம்.
ஒரு நூறாண்டு வாக்கில், மிகவும் கொடிய பழக்கங்களில் சில பல வழக்கொழிந்து போகலாம் - என்றாலும் அவர்கள் நம்மை ஆண்ட பரம்பரை என்று பேசித்திரிவதைப் பற்றி, இன்றும் சாக்கடை அள்ள எப்போதும் நம்மில் ஒருவரையே அவர்கள் தேடி வருவது பற்றி, அவர்களுக்கு விவசாய அடிமை வேலை செய்யாமல் நாம் எதோ ஒரு வழியில் பொருளீட்ட முடிந்தால் (100 நாள் வேலை வாய்ப்புத்திட்டம் போன்று) அது தவறென வாதிடும் நிலை பற்றி, அவர்கள் உடலுழைப்பைத் தரத் தயாரில்லை என்ற நிலைபற்றி, வெளியே தெரியாதானாலும் உள்ளிருக்கும் சாதிவெறி பற்றி, ஒடுக்கப்பட்ட அடிமைகளாய் வாழ்ந்துவிட்ட நம்மில் பலர் இன்னும் அவர்களை அண்டி வாழ்வதே நமக்கு விதிக்கப்பட்டது என்றெண்ணி வாழ்வது பற்றி, எல்லாவற்றிற்கும் மேலாக - மறுக்கப்பட்ட கல்வியின் விளைவாக நாம் பிந்தங்கிப்போனதைப் பற்றி பேச என்ன வேண்டியிருக்கிறது? சரிதானே?
பிறகு சமத்துவத்துக்கென்ன தடை? இட ஒதுக்கீட்டு முறையை நீக்கி விடலாம்