Thursday, May 17, 2018

பிரபாகரனின் அக்காவிற்கும், அண்ணனுக்கும் இல்லாத தாய் பாசமா

இதோ ஒருவர் வந்தார், கலைஞர் பிரபாகரனின் தாயாரை ஏன் அனுமதிக்கவில்லை, அவர் துரோகி அவர் தமிழன் எதிரி ஒப்புகொள், பார்வதி அம்மா பிரபாகரனி தாய் மட்டும் அல்ல, தமிழரின் தாய், ஏய் திராவிட மோசக்கார.............என பொங்கி கதறினார்
பிரபாகரனின் தாய் தமிழர்களின் தாயா இல்லையா என்பதை முடிவு செய்யவேண்டியது நான் அல்ல, ஆனால் பிரபாகரனின் உடன் பிறந்த அக்கா விநோதினி இன்னொரு அண்ணன் எல்லோரும் கனடாவில்தானே வசிக்கின்றார்கள்
கனடாவில் என்ன தடை சொல்லுங்கள்? இந்தியாவினை விட எவ்வளவு நவீன மருத்துவ வசதிகளை கொண்ட நாடு?. சொந்த பிள்ளைகளுக்கு இல்லாத அக்கறையா கலைஞருக்கு வரவேண்டும்.
சரி இப்பொழுது ஒரு விஷயம் ஓடிக்கொண்டிருக்கின்றது கவனித்தீரா? வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஜெயலலிதாவினை சந்திக்க விரும்பி கோரிக்கை வைக்கின்றார், ஆனால் முதல்வர் பார்த்தீர்களா, கள்ள தோணியில் எல்லாம் ராமேஸ்வரம் வந்து ஜெயலலிதாவினை பார்க்கமுடியாது, விசாவிற்காக காத்திருக்கின்றார்
டெல்லி இன்னும் விசா கொடுத்தபாடில்லை, என்ன பிரச்சினை பேசபோகின்றீர்கள்? அரசியல் உறவென்றால் எம்மிடம்தான் தெரிவிக்கவேண்டும், என இழுத்தடிக்கின்றது டெல்லி, அதாவது இன்னொரு நாட்டினருக்கு விசா அளிப்பது, மத்திய அரசின் முடிவு, கூடவே பாதுகாப்புதுறையின் ஒப்புதலும் அவசியம்.
இப்படி பட்ட சூழலில் கலைஞர் என்ன செய்திருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? அந்த விமானத்தை இந்தோனேசியாவில் இறக்கி கள்ளதோணி மூலமாகவா அவரை கொண்டு வருவீர்கள்??
ஏற்கனவே கள்ளதோணிகளை 1990ல் அனுமதித்து அது பத்மநாபா கொலையில் முடிந்து அவர் அரசு கலைந்தது போதாதா? யார் என்றே தெரியாத ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் எனும் ஈழ கொலைகாலர்களுக்கு வேலூர் வாசலில் கொடிபிடிக்கும் சிலர், பார்வதி அம்மாள் வந்தால் சும்மா இருப்பீர்களா?
கனடாவிலும் ஐரோப்பாவிலும் எத்தனை புலிகள் உண்டு, புலிகளின் சொத்துக்கள் உண்டு, இந்த பார்வதி அம்மாவினை அழைத்து வைத்தியம் பார்க்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்?
சீமானையும், வைகோவையும் அழைத்து எத்தனை கூட்டம் நடத்தினார்கள், அந்த செலவில் நூற்றிலொரு பங்கினை இந்த தாய்க்கு செய்ய மனம் அவர்களுக்கு வரவில்லையா?
எல்லாம் பிரபாகரன் எனும் ஒற்றை மனிதனின் பெயருக்காக குவிந்த சொத்துக்கள் தானே, அதில் ஒரு துளியினை பிரபாகரனின் தாயாருக்கு செலவழிக்க மனமில்லாதவர்கள் யார்? கலைஞரா? சோனியாவா?
மருத்துவத்தில் எவ்வளவோ முன்னேறிய நாடுகள் இருக்க, அந்த மூதாட்டியினை இந்தியாவிற்குத்தான், அதுவும் சென்னைக்குத்தான் கொண்டுவருமோம் என அவருக்கு முடியாத அந்த அவசர காலத்திலுமா அரசியல் செய்வார்கள்? அசிங்கமாக இல்லை?.
பிரபாகரனின் அக்காவிற்கும், அண்ணனுக்கும் இல்லாத தாய் பாசமும் அக்கறையும் , பிரபாகரன் பெயரினை சொல்லி சம்பாதித்தவர்களுக்கு வராத அக்கறையும்கலைஞருக்கும் மன்மோகன் சிங்கிற்கும் கண்டிப்பாக வரவேண்டும் இல்லையா?

பிரபாகரன் மட்டும்தான் துப்பாக்கி தூக்கினாரா? வேறு எல்லோரும் வேறு எதனை தூக்கினார்கள்?

"அண்ணே பிரபாகரனை விமர்சிங்க, ஆனால் அவர் ஏன் துப்பாக்கி தூக்கினார் தெரியுமா? சிங்களன் அட்டகாசம், அதனை நீங்கள் சொல்லவே இல்லை
பிரபாகரன் மட்டும்தான் துப்பாக்கி தூக்கினாரா? வேறு எல்லோரும் வேறு எதனை தூக்கினார்கள்?
சும்மா சொல்லாதீங்கண்ணே, பிரபாகரன் மட்டும்தான் துப்பாக்கி எடுத்தார், அவருக்கு மட்டும்தான் தைரியம் இருந்தது, வேற ஒருத்தனும் எடுக்கவே இல்லை
இந்த குட்டி மணி, தங்கதுரை?
யார்ணே அது வீரப்பன் கூட இருந்தாங்களா?
சிவகுமரன்?
அவர் யார்ணே சினிமா நடிகரா?
இந்த சபாரத்னம், உமா மகேஸ்வரன், பத்மநாபா?
அப்படி யாருமே இல்லண்ணே, தைரியமாக துப்பாக்கி தூக்கிய ஒரே தமிழன் பிரபாகரன் தான்
சரி போராளிகள்தான் தெரியவில்லை, இந்த சிந்தனையாளர்கான ராஜனி, நீலன் திருச்செல்வம், அமிர்தலிங்கம் போன்றோராவது தெரியுமா?
தெரியாது
அவங்கெல்லாம் எப்படி செத்தாங்கண்ணு தெரியுமா?
போர்ல அதெல்லாம் சஜம்ணே
அடேய் அவங்க சிங்கணால் கொல்லபட்டால் நியாயம், புலிகளே கொன்றால் என்னடா நியாயம்?
அண்ணே எப்படியும் சாக போறாங்க, யார் கொன்னா என்னண்ணே விடுங்க‌ , அண்ணே நேதாஜி துப்பாக்கி தூக்கல அப்படித்தான்
அடேய் நேதாஜி நாட்டுக்கு வெளிய இருந்து போராடுனார், காந்திக்கு குண்டு அனுப்பினாரா? இல்ல ஜெர்மன் ஜப்பான் காரன்கிட்ட பகைச்சாரா? அந்த மனுஷன உங்க கூட சேர்த்து பேசினால் குரலவளைய கடிச்சிருவேன் ஓடிரு
ஹிஹிஹிஹி நான் சொல்ல வந்தது என்னண்ணா?
என்னதாண்டா சொல்ல போறே?
இருந்த ஒரே ஒருத்தர் பிரபாகரன், அவரை கைதூக்கிவிட்டது புரட்சி தலைவர்
ஓஹோ அப்புறம்?
ஈழதமிழர் நாடு அடைந்து பிரபாகரன் எனும் தமிழர் ஆண்டுவிடுவார்னு இந்தியா ஓடிபோய் தடுத்தது, இந்தியா தலையிடலண்ணா எப்பவோ நாடு கிடைச்சிருக்கும்
சரி இந்தியா எப்போ தலையிட்டது?
சரியா தெரிலண்ணே, ஆனா முழு இலங்கையும் புலிகள் பிடிச்சிருவாங்கண்ணு பயந்து ஓடி போய் தடுத்துட்டு
ஓஓ அப்படியே புலிகள் இந்தியாவினை பிடிச்சி, அப்புறம் பாகிஸ்தானை, சீனாவை எல்லாம் பிடிச்சிருவாங்கண்ணு பயந்து, அப்படித்தானே
ஆமாண்ணே அதே தான்
அடேய், ஒண்ணும் தெரியலண்ணா ஓடிப்போயிரு, வடமாராட்சில பிரபாகரனை சிங்களபடை சுற்றி முள்ளிவாய்க்கால் போல சங்கு ஊதும்போதுதாண்டா இந்தியா உள்ள போச்சுது
அதுசரிண்ணே, போய்ட்டு வந்திரவேண்டிதான, எதுக்கு அங்க அமைதிபடை போகணும்?
பின்ன, சிங்களன் போட்டு அடிக்கிறான், புலிகளால சமாளிக்க முடியல இங்க அகதிகளா மக்கள் ஓடிவாரங்க, அதனால சண்டை நிறுத்தம் செய்ய அமைதிபடை போனது
இல்லண்ணே, அது ஆக்கிரமிப்பு படை, கற்பழிப்பு படை, சாத்தானின் படை
ஏண்டா அங்க சண்டை யாருக்க்கும் ? யாருக்கும்?
சிங்களன் தமிழனை அடிச்சான், தமிழன் திருப்பி அடிச்சான் சமரசம் செய்ய இந்திய படை போனது
அப்படியானால் புலிகள் யாருக்கு துணை செய்திருக்க வேண்டும்?
இந்தியபடைக்கு
பின் ஏன் சண்டையிட்டார்கள்? அப்படி செய்திருந்தால் இந்த சர்சை எல்லாம் வந்திருக்குமா? புலிகள் இந்திய சண்டை நடந்தபின்புதான் இம்மாதிரி செய்திகள் வந்தன
ம்ம் ம்ம் இந்தியபடை அங்கேயே இருந்தா
பின் எப்படிண்ணே தனியா நாடு வாங்குறது, அதான் அடிச்சோம், மானமுள்ள இனம்ணே
ஏது இந்தியா எதிரிநாடு அதனால் உறவே கிடையாது, இந்திய ராணுவத்தோடு சண்டையிடுவோம் ஆனால் இந்தியாவின் தமிழகத்தில் ரகசியமாக வந்து போவோம், தங்கி இருப்போம் என்பதா? இதா மானம்? மானம்ணா என்னணு தெரியுமாடா? சரி, அடிச்சீங்க நாங்க வந்துட்டோம், பின் நீங்களே சிங்களன அடிச்சி நாடு பிடிச்சிருக்க வேண்டியதான, நாங்கதான் அதன்பின் அந்த பக்கமே வரலியே
அடிச்சோம்ணே, எங்க வீரவரலாறு படிங்க‌
என்னடா கிழிச்சீங்க, சந்திரிகா அடிச்ச அடியில யாழ்பாணத்த போட்டு ஓடிட்டீங்க, அதன் பின் என்றாவது அதை மீட்க முடிந்ததா?
ம்ம்ம் அது தந்திரம்ணே
மண்ணாங்கட்டி, தோற்றால் தந்திரமா? ஏதோ முழு இலங்கையும் நீங்க பிடிச்சு வைத்திருந்தது போலவும் இந்தியா வந்து கெடுத்தது போலவும் பேசிகிட்டிருக்க?
அப்படி இல்லண்ணே இந்தியா கெடுத்துட்டு, சிங்களனுக்கு ஆயுதம் எல்லாம் கொடுத்துட்டு
ஏன் நீங்களும் உலக நாடுகள்கிட்ட கேட்கலாமே, ஒரு நண்பனும் இல்லையா? சிங்களனுக்கு உலகமே கொடுக்க உங்களுக்கு ஏன் ஒரு பயலும் இல்ல?
உலகத்துக்கே எங்கள பார்த்து பொறாமைண்ணே
அட மண்டையா, சரி என்னடா செய்திருக்கணும்?
நாடு கொடுத்து பிரபாகரன அதிபர் ஆக்கிருக்கணும்
ஏன்?
அவர் துப்பாக்கி தூக்கி போராடுனார்ணே, குறிதவறாம சுட்டாரு
அவர் பாண்டிபஜார்ல குறிதவறாம சுட்டது ஊருக்கே தெரியும், ஏண்டா துப்பாக்கி தூக்கினவனுக்கு எல்லாம் நாடுண்ணா, உலகத்துல எத்தனை ஆயிரம் நாடு இருக்கும் தெரியுமா? ஆணானபட்ட அராபத்தே சுயாட்சிக்கு வந்தார், நீங்கெல்லாம் அவரை விட பெருசாடா?
அட போங்கண்ணே, எங்க வீரம் வேற அதுக்கு நாடு கொடுத்தே தீரணும்
எது பொட்டபுள்ள மேல குண்டு கட்டி அனுப்புறதா?
அது தந்திரம்ணே
ஓஹோ, அப்போ இந்தியா என்ன செய்திருக்கணும்?
அப்படி கேளுங்கண்ணே, புலிகள் இலங்கை ராணுவத்தை ஜெயிச்சா கண்டுக்காம இருக்கணும், புலிகள் தோற்றா ஓடி வந்து காப்பத்தணும்
ஆனா காப்பாத்திட்டு இந்தியா சொன்னத ஏத்துக்க மாட்டீங்க?
நாங்க ஏன் ஏத்துக்கணும், தேசிய இனம்ணே. அதனால நாங்க இந்தியா சொன்னத எல்லாம் கேட்கவே மாட்டோம், ஏன் இந்தியாவில் கொலை எல்லாம் செய்வோம், மீறி இந்திய ராணுவம் வந்தா அடிப்போம், யாரையும் கொல்வோம் அதெல்லாம் போராட்டம்ணே
ஓஹோ, பின் எப்படி இந்தியா வரும்?
வரணும்னே, எங்களுக்கு ஆபத்துண்ண வரணும் காப்பாத்தி விட்டு போய்ட்டே இருக்கணும், நாங்க என்ன செய்தாலும் கண்டுக்க கூடாது
ஒரு பெரிய நாடு ஒரு சுண்டையாய் நாட்டுல கடுகு மாதிரி இருந்த குரூப் பின்னால இப்படி போகுமாடா? போன இந்தியா எங்கயாவது தலைகாட்ட முடியுமா? பாகிஸ்தான் டெரரிஸ்ட் எல்லாம் டீ குடிக்க கூப்பிடமாட்டானா?
அண்ணே நீங்க தமிழின துரோகி, உங்கள குறிச்சி வச்சிருக்கோம், சீமான் முதல்வராகட்டும் அப்புறம் உங்களுக்கு இருக்குண்ணே"

பிரபாகரனை மிக மிக வன்மையாக சாடியவர் ம.பொ.சி

பத்மநாபா கொல்லபட்டபொழுது சென்னையில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பிரபாகரனை மிக மிக வன்மையாக சாடியவர் ம.பொ.சி
ஒருகாலமும் பிரபாகரனால் ஈழம் அமையாது எனவும், அந்நாட்டை பிரபாகரன் சுடுகாடு ஆக்குவார் எனவும் சொன்னது அவர்தான்
அதற்கும் மேலாக சொன்னார், "தமிழக இளைஞர்கள் இந்த பாசிச புலிகளிடம் மிக மிக கவனமாக இருக்கவேண்டும், இவர்களால் பலர் வாழ்வை தொலைக்க நேரிடும் ஜாக்கிரதை"
அவர் சொன்னதையும் கேளாமல் வாழ்வை தொலைத்தவர்கள்தான் ராஜிவ்கொலை கேமரா ஹரிபாபு, இப்போது பரோலில் வந்த பேரரிவாளன், நளினி இன்னபிற புலி ஆதரவு கொலையாளிகள்
அந்த ம.பொ.சிக்கு , பிரபாகரன் படம் பிடித்தலையும் சைமன் கோஷ்டி அஞ்சலி செலுத்துகின்றதாம்
ம.பொ.சிக்கு எவ்வளவு அவமனானம்? அஞ்சலி செலுத்த ஒரு தகுதி வேண்டாமா?
யார் செத்தாலும் வீரவணக்கம் என கிளம்புவார்கள் இவர்கள், அவருக்கு அஞ்சலி செலுத்த நமக்கு என்ன தகுதி இருகின்றது, கொள்கை இருக்கின்றது என கொஞ்சமும் யோசிப்பதில்லை.
இதன் பெயர்தான் தமிழ் தேசியமாம். என்ன கருமாந்திரமோ தெரியவில்லை
போகிற போக்கில் ராஜிவ்காந்திக்கும் , ஜெயவர்த்தனேவிற்கும் கூட வீரவணக்கம் இவர்கள் தெரிவிப்பார்கள் பாருங்கள்.
அது என்ன மா.போ. சி?
அவர் மா.பொ.சியா? ம.போ.சியா?
முதலில் தமிழை ஒழுங்காக எழுத பழகுங்கள் காலி டம்ளர் பாய்ஸ்
மிஸ்டர் அங்கிள் சைமன்
பிரபாகரனை சற்றும் ஏறெடுத்துபார்க்காமல், அவரின் செயல்பாடுகளால் வெறுப்புற்ற ம.பொ.சி சிலை முன்னால் நின்றுகொண்டு என்ன அஞ்சலி?
நான் இந்தியன் அதன் பின் தமிழன் என நின்றிருந்த அந்த மாபெரும் தலைவன் சிலை முன்னால் நின்று கண்டதை பேசி பிரபாகரன் ஸ்டைல் வணக்கம் சொல்ல கொஞ்சமேனும் வெட்கமே இல்லையா?

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டம் இரண்டாவது தவணையாக சுப உதயகுமாரன் தலைமையில்

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டம் இரண்டாவது தவணையாக சுப உதயகுமாரன் தலைமையில் புதுவேகம் எடுத்தநாட்கள். ஊடகங்கள் அவரை மகாத்மாவாக கொண்டாடிய துவக்க காலம். தலைமைச்செயலகத்தில் அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தபின் ஒரு பேட்டி கொடுத்தார். “அம்மாவை சந்தித்தோம்” என்று ஆரம்பித்தார். அந்த நொடியே அவர்மீதான அத்தனை மரியாதையும் போனது. மற்ற பல போராளிகளைப்போல இதுவும் ஒரு போலி என்று அடையாளம் காட்டிய சொல் அவர் உதிர்த்த “அம்மா” என்கிற அந்த ஒற்றைச்சொல். முதல்வர் ஜெயலலிதாவை இவர் பெயர்குறிப்பிட்டுச் அழைக்கச் சொல்லவில்லை. மாண்புமிகு முதல்வரை சந்தித்தோம் என்று மரியாதையாக சொல்வதே முறையான, நாகரீகமான வழியாக இருந்திருக்கும். மாறாக அவர் “அம்மா” என்றார். எம்ஜிஆரை “புரட்சித்தலைவர்” என்ற கம்யூனிஸ்ட் தலைவர்களைப்போல அன்றே இவரது சாயம் என்னளவில் வெளுத்தது. அது உலகுக்கு வெளுக்க இத்தனை ஆண்டுகள் பிடித்தன.
பிகு: உண்மையில் கூடங்குளத்தை ஆரம்பத்தில் எதிர்த்த குழுவினர் பலர் இவர் தலைமையிலான இரண்டாம் தவணை போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது பலரும் கவனிக்க மறந்த செய்தி.

உங்கள மாதிரி ஆட்கள் எதையுமே உள்வாங்காமத் தான் தமிழ் நாடு இந்தளவிற்கு மோசமாகி விட்டது

துபாயில் என்னுடைய அறைக்கு தமிழகத்தில் இருந்து திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருந்து BE படித்து விட்டு சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிந்து அவர்களின் புதிய ப்ராஜக்ட்காக துபாய் அனுப்பப்பட்ட ஒரு 28 வயது இளைஞர் புதிதாக வந்திருந்தார். தம்பி அரசியல் விசயங்களின் வாட்ஸ் அப் தகவல்களை சில நேரம் என்னிடம் காட்டுவார், மேலும் சீமானின் அரசியலை பற்றி என்னிடம் சிலாகிப்பார். நானும் புதிதாக வந்த தம்பி தானே எங்கே சென்று விடுவார் என்று ஒரு புன்னகையுடன் கேட்டு கொள்வேன். ஒரு முறை திராவிட கட்சிகள் இலவசங்களை கொடுத்து நம்மை பிச்சைகாரர்களாக ஆக்கி விட்டது என்று கோபம் கொப்பளக்க தன் செல்பேசியை பார்த்து கொண்டே சொன்னார். நான் வழக்கம் போல ஒரு புன்னகையை உதிர்த்தேன். தம்பி டென்சனாகி, என்னண்ணே உங்கள மாதிரி ஆட்கள் எதையுமே உள்வாங்காமத் தான் தமிழ் நாடு இந்தளவிற்கு மோசமாகி விட்டது என்றவுடன், தம்பியுடன் நடந்த ஒரு 15 நிமிட உரையாடலை இங்கு பதிவு செய்கிறேன்.
நான்: சரி தம்பி, தமிழ்நாடு இந்தளவிற்கு மோசமாக போயடுச்சுன்னு சொல்ற, எந்த விதத்தில் மோசமாக போயிடுச்சு, யாருடன் ஒப்பிட்டு இந்த முடிவை நீ சொல்கிறாய்? ஏன்னா ஒப்பீடு என்று வரும் போது ஏதாவது ஒன்றுடன் தான் மற்றொன்றை அளவிட்டு முடிவு சொய்வோம். இந்திய மாநிலங்களில் எந்த மாநிலத்துடன் ஒப்பிட்டு தமிழகத்தின் நிலையை முடிவு செய்தாய்?
தம்பி: என்னண்ணே இப்படி கேக்குறீங்க, கல்வியை எடுத்து பாருங்க
நான்: கல்வியில் நாம் மோசமாக இருக்கிறோம் என்பதற்கான தரவுகள் உன்னிடம் இருக்கிறதா?
தம்பி: பாத்தலே தெரியலையா உங்களுக்கு
நான்: தமிழகத்தில் ஆரம்ப கல்வியும், உயர் கல்வியும் மிகச் சிறப்பாக இருப்பதாக மத்திய மனிதவளத் துறையின் ஆய்வுகள் தெரிவிக்கிறது. உயர்கல்வியில் இந்தியாவிலேயே அதிக சதவீதம் படிப்பவர்களுக்கு குறிப்பாக பெண்கள், ஆதி திராவிடர்கள் தமிழகத்தில் தான் என தரவுகள் தெரிவிக்கின்றன. இந்திய பல்கலைக் கழகங்களில் தமிழக பல்கலைக் கழகங்கள் குறியீட்டு அளவில் முண்ணனியிலும், போலி பல்கலைக் கழகங்கள் கணக்கெடுப்பில் தமிழகத்தில் அப்படி ஒன்று இல்லை என்றும் தரவுகள் சொல்கின்றன. நிலைமை இப்படி இருக்கும் போது நீ எதை வைத்து இந்த குற்றச்சாட்டை வைக்கிறாய்..
தம்பி: நீங்க என்னண்ணே என்னண்ணமோ சொல்றீங்க..
நான்: இதாண்ட தம்பி உங்ககிட்ட இருக்கிற பிரச்சனை, சரி அத விடு... ஒரு சில கேள்விகள் கேட்டால் தப்பாக எடுத்து கொள்ள மாட்டாய் என்றால் நான் உன்னிடத்தில் கேட்கிறேன்
தம்பி: கேளுங்கண்ணே
நான்: என்ன படித்திருக்கிறாய், உன் தந்தையின் தொழில் என்ன? உன் தாத்தாவின் தொழில் என்ன?
தம்பி: BE, ECE படிச்சிருக்கேண்ணே, அப்பா சமையல் வேலை செய்பவர். தாத்தாவும் சமையல் வேலை செய்பவர் தான்
நான்: நீ எப்படி BE படிக்க முடிந்து என்று என்றாவது யோசித்து பார்த்திருக்காய் என்றேன்.
தம்பி: நானா படிச்சு, நல்ல மார்க் எடுத்து காலேஜ்ல லோன் வாங்கி படிச்சேண்ணே, இன்னும் 42 ஆயிரம் லோன் கட்டணும்ணே
நான்: வெரிகுட்றா தம்பி.. ஆனா சமையல் வேல செய்கிற உங்க அப்பா ஏண்டா படிக்கல
தம்பி: எங்க தாத்தா இருந்த சூழல்ல எங்கப்பான்னால படிக்க முடியலண்ணே
நான்: ஏண்டா உங்க அப்பா மாதிரி தான் உங்க தாத்தாவும் சமையல் வேலை செய்தவர், அவரால ஏண்டா படிக்க முடியல
தம்பி: எங்கப்பா காலத்துல எங்க ஊர்ல பள்ளிக்கூடமே இல்லைண்ணே, அதுக்கும் மேல எங்காளுக யாரும் படிக்கிறத பத்தி நெனச்சதே இல்லைன்னு எங்கப்பா சொல்லிருக்காரு... அதுக்கு வசதியும் இல்லைண்ணே
நான்: சரிடா, உங்கப்பாட்ட நல்ல வசதி இருக்கும் போல, அதான் நீ BE படிச்சு இங்க வந்திருக்க
தம்பி: ஏண்ணே நீங்க வேற, நான் சம்பாரிச்சு தான் வீடே கட்டணும். ஊர்ல கவர்ன்மெண்ட் ஸகூல்ல படிச்சு, கவுன்சிலிங்ல கோட்டாவுல BE கெடச்சுச்சு லோன் வாங்கி தான் படித்தேன்
நான்: இந்த கவர்ன்மெண்ட் ஸகூல், கவுன்சிலிங், கோட்டா, பேங்க் லோன்லாம் இல்லாம இருந்தருந்தா நீ படிச்சிருக்க முடியுமாடா?
தம்பி: முடயாதுண்ணே
நான்: இந்த வசதிகள் உங்கப்பாவுக்கு ஏன் கெடக்கல, உனக்கு எப்படி கெடச்சதுன்னு என்னக்கிவாது யோசிச்சு பார்த்தியா?
தம்பி: இல்லண்ணே
நான்: இது தான் கடந்த ஐம்பது வருடங்களில் திராவிட அரசுகள் செய்த சமூக நீதிக்கான செயல்பாடுகள். இதன் மூலம் கல்வி அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் அதன் மூலம் ஒவ்வொருவரும் பொருளாதார தன்னிறைவு அடைய முடியும் என திராவிட கட்சிகளின் கொள்கையால் வந்த பலன். அரசு பள்ளியில் படித்த நீ, இன்று தகவல் தொழில் நுட்ப துறையில் வெளிநாட்டில் தமிழ் தவிர்த்த ஆங்கிலத்தில் உரையாடும் பணி சூழலில் பணி செய்ய வைக்கும் அளவிற்கு தமிழக கல்வி தரம் இருக்கிறது. ஆகவே, இனிமேலாவது வாட்ஸ்அப் செய்திகளை தவிர்த்து விட்டு கொஞ்சம் அரசியல், சமூக வரலாற்றை படி. அதன் மூலம் உனக்குள் கேள்விகளை எழுப்பு..
தம்பி: சரிண்ணே... இதெல்லாம் எப்படிண்ணே உங்களுக்கு தெரியும்
நான்: வாட்ஸ் பல் வர்ர எதையுமே படிக்கிறதில்லடா, சேர் செய்றதும் இல்ல.. அவ்வளவு தான்

புலிகள் தோற்றுப் போனதற்கான காரணங்கள் என்ன?

 புலிகள் தோற்றுப் போனதற்கான காரணங்கள் என்ன?
வான்படை வைத்திருக்கும் அளவுக்கு இராணுவ அமைப்பாகக் கட்டமைக்கப்பட்டிருந்த புலிகள் இயக்கம் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டது. இதற்கான காரணங்கள் என்ன?
விடுதலைப் போராட்டத்தின் எந்த அம்சத்திலும் மக்களின் பங்களிப்பு இல்லாமலேயே இருந்தது. புலிகள் ஆணையிட்டால் மக்கள் நிதி தர வேண்டும். ஆர்ப்பாட்டங்களுக்கு வர வேண்டும். தேர்தலைப் புறக்கணிப்பதோ பங்கேற்பதோ செய்ய வேண்டும். எந்தப் பிரச்சினையிலும் மக்களின் கருத்து விருப்பம் கேட்டு நடப்பதில்லை. தாங்கள் ஈழத்தைப் பெற்றுத் தரும் சக்தி எனவும், அதற்கு மக்கள் கட்டுப்பட்டவர்கள் என்பதே புலிகளின் செயல்;பாடாக இருந்தது. இதனால் மக்களிடமிருந்து போராட்டம் அந்நியப்படத் தொடங்கியது. பிரபாகரன் முடிவெடுத்தால் சரியாக இருக்கும் அவர் என்றைக்குமே தோல்வியடைய மாட்டார் என்பதே புலிகள் மக்களிடம் உருவாக்கிய சிந்தனையாகும்.
இன்றுவரைக்கும் புலிகளின் வாலுகளும் ஒரு சில ஊடகங்களும் புலிகள் செய்தவை எல்லாம் சரி என்று வாதாடுகின்றன, அது ஏதோ ஒரு
வகையில் அவர்களின் பிழைப்பை
கொண்டு செல்ல உதவுகின்றது .
ஆனால் புலிகளில் இருந்து ஒதுங்கி இருப்பவர்கள் இந்த வாலுகளை ஒதுக்கி வைத்துள்ளனர் .

புலிகளை யாரும் வெளியில் இருந்து அழிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. புலிகள் தோற்றுப் போனதற்கான காரணங்கள்:
1. மற்றவர்களுடைய பலவீனத்தை அறிந்த புலிகளுக்கு தங்களுடைய பலவீனத்தை அறிய முடியவில்லை. அதுதான் புலிகளின் தோல்விக்கு அடிப்படைக்காரணம்.
2. அவர்கள் தங்கள் பலவீனத்தை அறிய முடியாமல் செய்தது - உங்களைப் போன்றவர்கள் எவ்வித கேள்வியும் இல்லாமல் புலிகளைச் சுற்றி விம்பம் கட்டி அவர்களை தன்னிலை மறக்கும் அளவுக்கு அதிகாரப் போதையை ஊட்டியது.
3. புலிகளின் அழிவுக்கு வெளிச்சக்திகள் காரணம் இல்லை. புலிகளுக்குள் நடைபெற்ற அதிகாரப் போட்டியே முக்கிய காரணம். புலிகளின் முக்கிய தளபதியான மாத்தையாவும் அவரது படையணியில் இருந்த 700 வரையான போராளிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருந்த கருணா அம்மான் பிரிந்த போதும் பல நூற்றுக்கணக்காண போராளிகள் கொல்லப்பட்டனர். புலிகளின் வெற்றிகளுக்குக் காரணமான இரு தளபதிகளையும் அவர்களது போராளிகளையும் இழந்த பின் பிரபாகரனால் போராட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை.
4. புலிகள் தங்களைச் சுற்றியிருந்த நட்பு சக்திகளை எல்லாம் படுகொலை செய்து தங்களைச் சுற்றி எதிரிகளை உருவாக்கினர். சகோதர இயக்கப் படுகொலைகளைச் செய்து அவர்களை எதிரிகளாக்கினர். முஸ்லீம்களை படுகொலை செய்து அவர்களை இனச்சுத்திகரிப்புச் செய்து அவர்களை எதிரிகளாக்கினர். சிங்கள மக்களைப் படுகொலை செய்து சிங்கள மக்களை எதிரிகளாக்கினர். ராஜிவ் காந்தியைப் படுகொலை செய்து தமிழகத்தையும் இந்தியாவையும் எதிரியாக்கினர்.
5. புலிகள் ஆயுதங்களில் காதல் கொண்டதற்குப் பதிலாக மக்களைக் காதலித்து இருந்தால் சக மக்களுடைய இதயங்களை வென்றிருந்தால் அவர்களும் வெற்றி பெற்றிருப்பார்கள்.
6. புலிகளுக்கு ஆயுதங்களைப் பயன்படுத்த தெரிந்த அளவுக்கு அரசியலைப் பயன்படுத்தும் அறிவு இருக்கவில்லை. அவர்கள் கற்றறிந்து தேர்ச்சி பெற்ற மொழி ஆயுதமும் வன்முறையும். அதற்கே அவர்கள் இறுதியில் பலியாகி உள்ளனர்.

ஆரம்பத்தில் உதவிய இந்தியாவை பகைக்காமல் இருந்திருந்தால் வடக்கு கிழக்கு இணைந்த மானில ஆட்சியாவது கிடைத்திருக்கும் தனிஈழம் என்று ஆசைப்பட்டு எண்ணாயிரம் மைல்களுக்கப்பால் உள்ள மேற்குலகை நம்பி ஐம்பதினாயிரம் வீரர்கள் உயிரை இழந்துவிட்டோம் என்று இன்றும் உணராதவர்களுக்கு நீங்கள் எது சொன்னாலும் புரியாது மேலும் மேற்குலகு எவ்வளவு சக்திபடைத்தாலும் இந்தியாவிக்கு அல்லது சீனாவுக்கு அருகில் வந்து நிலை கொள்ளவிடுவார்களா? அதற்கான சக்தியை என்னவிலை கொடுத்தும் அழிக்க தயராக இருப்பார்கள் என்பதெல்லாம் ஏற்பதற்கு கசப்பாகத்தான் இருக்கும்.சூழ்நிலையில் போராளியானவர்களுக்கு மறுபடியும் புனர்வாழ்வுக்காக அழைப்பதைவிட புலம்பெயர் தேசத்தில் போலிப்பெயர்களையும் முகவலயத்தளங்களையும் வைத்திருப்போரை இனங்கண்டு அவர்களுக்கு புனர்வாழ்வு கொடுப்பதற்கு காலம் வரவில்லை.

ஈழத்து சேகுவாரா என்று அழைக்கப்படும் பத்மநாபா

காந்தி, லிங்கன், இந்திரா வரிசையில் தோழர் பத்மநாபா.

தேச விடுதலைக்குப் பாடுபட்ட மகாத்மா காந்தி அவர்கள் கொலைகாரன் ஒருவனால் வழிபாட்டு ஸ்தலத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். சமய வேறுபாடுகள் நீங்கி சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என்ற உயரிய கொள்கை அவரது உயிரை வாங்கியது.

நிறவெறி ஒழித்து அடிமை விலங்கொடித்து மனித சமுதாயத்தை உய்விக்கப் பாடுபட்ட அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் திரையரங்கு ஒன்றில் நிறவெறிக் கொடியவன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்திய ஒருமைப்பாட்டுக்கும் சமய ஒற்றுமைக்கும் மக்கள் நல்வாழ்வுக்கும் அரும்பாடுபட்ட அன்னை இந்திராகாந்தி அவர்கள் பட்டப்பகலில் பதைக்கப் பதைக்கச் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தத் தலைவர்கள் இறந்தும் இறவாப் புகழ் எய்திவிட்டனர். சரித்திரத்தின் ஏடுகளில் இடம் பிடித்து விட்டனர். அவர்களுடைய பூதவுடல் மறைந்தாலும், அவர்களுடைய கொள்கைகள் உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. அவர்களுடைய கொள்கைகள் வெற்றிநடை போட்டு வருகின்றன.

அவர்களது வரிசையில் இடம்பெற்றுவிட்டார் அமரர் பத்மநாபா. வெறும் 39 வயதே நிரம்பிய பத்மநாபா புலிகளால்சுட்டுக்கொல்லப்பட்டார். அவரோடு அவரது ஏனைய தோழர்கள் 12பேர் படுகொலைக்கு ஆளானார்கள். ஈழ மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள் தமிழ்நாட்டு மண்ணில் பிணமானார்கள்.காட்டி கொடுத்து ,தேநீர் குடித்து விட்டு சுட்டுத்தள்ளுவது என்பது புலிக்கொள்கை, எமது ஈழத்து சேகுவாரா என்று அழைக்கப்படும் பத்மநாபாவையும் அப்படிதான் புலிகள் சுட்டுகொன்றார்கள் .

பிரபாகரனும் ,தலைவர் பத்மநாபாவும் இப்போது 
உயிருடன் இருந்திருந்தால் 
வட கிழக்கில் ஒரு ஜனநாயக தேர்தலில் போட்டியிட்டிருந்தால் தலைவர் பத்மநாபா அவர்களுக்கு மக்கள் ஆதரவு எவ்வளவு இருந்தது என்பதை சர்வதேசம் பார்த்திருக்கும்,
இந்த பத்மநாபா என்ற தலைவனை வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் உள்ள முன்னாள் புலிகளே ஆதரிதிருப்பர்கள், பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று சொல்லும் ஒரு சில புலிகள் பத்மநாபாவை ஆதரிக்க மாட்டார்கள், ஏனெனில் பிரபாகரன் வந்தால் முதல் வெடி இவர்களுக்கு தான் என்ற பயம்.

புலிகளை ஆதரிப்பவர்கள், ஒன்று கைகூலி அல்லது பயந்தாங்கொள்ளி அல்லது விவரம் தெரியாத பதர்கள், இம்மூன்று அன்றி எதுவும் சாத்தியமில்லை.அவர்களை மனிதர்கள் என்றே உலகம் ஒப்புகொள்ளாதபோது, போராளிகள் என்று எப்படி சொல்லமுடியும்? நிச்சயம் தமிழ் நாகரீகம் அறிந்த யாரும் அவர்களை ஆதரிக்கமாட்டார்கள்,

இந்திய துணையின்றி ஈழத்தில் விடுதலை கிடையாது என்று கூறியதற்காக பத்மநாபாவை மண்ணுக்கு அனுப்பிய பிரபாகரன் அதே இந்திய துணையில்லாமையால் இறுதியில் சிங்களர்களால் மண்ணுக்கு அனுப்பப்பட்டார் 
என்பது தான் வரலாறு.வரலாறு அவருக்கு சந்தர்ப்பம் தராவிட்டாலும், வரலாறு அவரது தூரநோக்கு சரி என நிரூபித்து வருகிறது.

அடக்குமுறையும்,அகங்காரமும் கொண்ட ஒரு குழு,ஒரு இனத்தையே வேரோடு அழித்து ,தாங்களும் அழிந்து போனார்கள் ,இதற்கு அவர்கள் செய்த தூரோகங்களே காரணம், புலிகளே உண்மையான துரோகிகள் ,ஆனால் அடுத்தவர்களுக்கு துரோகி பட்டம் 
கொடுப்பதில் புலிகள் வல்லவர்கள் .

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அவரது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருவது குறித்து அவர் மகிழ்ச்சி அடைந்தாலும் தமிழ்நாட்டில் பிரிவினை சக்திகள் வளர்வதையும், அதற்குத் தீனி போட்டு வளர்க்கும் தலைவர்களையும் அவர் ஒருபோதும் ஆதரித்ததில்லை.

இந்தியாவின் ஒத்துழைப்போடுதான் தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார்.

பத்பநாபா தான் பிறந்து வளர்ந்த நாட்டை நேசித்தது போலவே இந்தியாவையும் நேசித்த ஒருவர். இந்தியா, ஈழத்து மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு நேசக் கரம் நீட்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவர்.

நாபா இந்தியாவில் ஏராளமான நண்பர்களைப் பெற்றிருந்தார். தமிழ்நாட்டில் அவர் சந்திக்காத பிரமுகர்களோ மக்கள் அணியினரோ இல்லை என்றே சொல்லலாம். அன்னாரின் மறைவுக்கு அஞ்சலி தெரிவித்து இரங்கற் செய்தி வெளியிடாத மக்கள் இயக்கங்களே இல்லை எனலாம்.

மலையக மக்கள் , முஸ்லீம் மக்கள் மத்தியில் வாழ்ந்து அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்ட ஒருவர், ஈழவிடுதலை இயக்கங்கள் மத்தியில் இருந்தார் என்றால் அது பத்மநாபா ஒருவராகவே இருக்கும். மரணித்த தியாகிகளின் குடும்பங்களைச் சென்று சந்தித்து அவர்களின் கஷ்ட நஷ்டங்களைக் கேட்டறிந்து, முடிந்தவரை அவற்றை எல்லாம் தீர்த்து வைக்கும் கடமையை எப்போதும் முதன்மையானதாய் கருதி செயலாற்றினார். பத்பநாபா மக்களை நேசித்த மகத்தான மனிதர்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் கொள்கை, அரசியல் நிலைப்பாடு பற்றி பிறர் என்ன கூறுகிறார்கள் என்று அறிந்துக்கொள்ள பிறர் கூறும் அரசியல் கருத்துக்கள் பற்றி உன்னிப்பாகவும், அடக்கமாகவும் கேட்டு கிரகித்துக் கொள்ளும் தன்மை உடையவர் பத்மநாபா.

அவரது மரணம் விடுதலை இயக்கத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். மறைந்த பத்மநாபா தமிழர் நெஞ்சங்களில் எல்லாம் நீங்காத இடம் பெற்று என்றென்றைக்கும் நிலைத்து நிற்பார் என்பதில் ஐயமில்லை. வாழ்க அமரர் பத்மநாபா புகழ்.

இறுதியாக முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அவர்கள் ,பத்மநாபா பற்றி கூறிய ஒருசில தகவல்கள் இதோ உங்களுக்காக.

தோழர் நாபாவின் தனிமனித குணாம்சங்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவை ஆகும். உயரமான மனிதனான தோழர் அவர்கள் உடல் ரீதியிலும் உள்ளத்தாலும் உணர்வாலும் குணத்தாலும் பண்பாலும் உயர்ந்த மனிதராக வாழ்ந்தார். ஒரு மனிதனின் சிறந்த வாழ்வுக்கு உதாரணபுருஷராக அவர் வாழ்ந்து காட்டியுள்ளார். ஆஜானுபாகுவான அவரது தோற்றம் அவரது உயர்ந்த மனித அம்சங்களையே பிரதிபலித்தது.

நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் உள்ளத்தில் உண்மையும் வாக்கில் ஒளியும் அவரிடம் நிறைந்து காணப்பட்டன. அழுக்காறு, வெகுளி, இன்னாச்சொல் நான்கும் அறவேயற்ற அறவாழ்க்கையை அவர் இயல்பாகவே கொண்டிருந்தார். நிதானம், பொறுமை. கடுமையான உழைப்பு. தன்னலமின்மை. கடும்சொல் பேசாமை. மனிதாபிமானம் என்பன இயற்கையிவேயே அவரோடு கூடிப்பிறந்திருந்தன.

அவர் கொள்கைப் பிடிவாதமுடைய ஒரு சமதர்மப் புரட்சிவாதி. மார்க்சிசம், வர்க்கம், புரட்சி, போராட்டம் என்ற வார்த்தைப் பிரயோகங்களை உருப்போடும் வரட்டுத்தனமோ அல்லது தனது சுயநல அரசியல் நோக்கங்களுக்காக புரட்சிக் கோட்பாட்டைப் பயன்படுத்தும் பாசாங்குத்தனமோ அவரது புரட்சி வாழ்க்கையில் எள்ளளவும் இருந்ததில்லை.

அவர் சமூகப் புரட்சிக்காக உணர்வுபூர்வமாக உழைத்தார்: சமூக புரட்சியாளர்களை உள்ளத்தால் நேசித்தார். நேர்மையான சமூகப் புரட்சியாளர்கள் மீது - அவர்கள் தன்னை விமர்சிப்பவர்களாயினும் சரி எதிர்ப்பவர்களாயினும் சரி அவர்கள்மீது உளமார அன்பு செலுத்தினார். அவ்வாறானவர்களோடு பழகுவதிலும் நட்புக்கொள்வதிலும் பெருமிதமும் மகிழ்சியும் கொண்டார்.

தோழர் நாபாவிடம் கர்வம், தலைக்கனம், அதிகார வெறி என்பனவற்றை இம்மியளவேனும் யாரும் கண்டிருக்க முடியாது. பல்லாயிரக்கணக்கான இளம் தோழர்கள் அவர் சுட்டு விரலுக்குக் கட்டுப்பட்டு எதையும் செய்யத் தயாரான நிலையில் இருந்த போதிலும் , அவர் எந்தக் கட்டத்திலும் அதிகார மமதை - பதவி வெறி பிடித்து செயற்பட்டதில்லை - தலைக்கனம் பிடித்து நடந்ததில்லை. ஸ்தாபனத்தின் ஜனநாயகப்பூர்வமான பொது முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் ஒரு கட்டுப்பாடான உறுப்பினனுக்கு முன்னுதாரணமாக அவரே திகழ்ந்தார்.

எந்தத் தோழருடனும் அன்பாகப் பழகுவார். அவர்களின் குற்றங்கள் குறைகளைத் தானே நேரில் கேட்டறிந்து கொள்வார். ஸ்தாபனத்தின் உறுப்பினர்களோடு வரையறை வைத்துப் பழகுவது தனது தலைமைக்கு அவசியம் என்று அவர் எந்தக் கட்டத்திலும் நடந்து கொண்டதுமில்லை: அவ்வாறான கருத்தைக் கொண்டிருக்கவுமில்லை. எந்தத் தோழரும் அவரைச் சந்திக்கலாம் பேசலாம் என்ற நிலையையே அவர் கடைப்பிடித்து வந்தார்.

அதேபோல் ஸ்தாபனத்தின் நண்பர்களாயினும் சரி, மாற்று அணிகளின் எந்த மட்ட உறுப்பினர்களாயினும் சரி, பத்திரிகையாளர்களாயினும் சரி, வேறு வெளியார்களாயினும் சரி அவரைச் சந்திப்பதில் எந்தக் கடினத்தையும் அவர் வைத்திருக்கவில்லை. பத்pரிகையாளர்கள் அவரை எந்த நேரமும் சந்திக்கக் கூடிய ஒருவர் என்றே பல தடவைகள் குறிப்பிட்டுள்ளனர்.

தோழர் நாபா அவர்கள் எப்போதும் அமைதியாகப் பேசும் சுபாவம் கொண்டவர். கத்திப் பேசித்தான் தனது கருத்தை மற்றவர்கள் மத்தியில் பதியவைக்க முடியம் என்ற கருத்து அவரது பேச்சுநடைமுறையில் இருக்கவில்லை. அவர் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாரோ அந்த நபருக்கு மட்டுமே கேட்கக்கூடிய வகையிலேயே பேசுவார். மற்றவர்களோடு நேரடியாகப் பேசும்போது மட்டுமல்ல தொலைபேசியிலும் பேசும் திறன் அவருக்கிருந்தது. சலசலப்பற்ற அவரது செயற்திறன் போலவே அவரது சத்தமற்ற பேச்சுத்திறனும் அமைந்திருந்தது.

* இன்று சகோதர யுத்தத்தை நடத்துவோரை நீங்கள் தேடி அழிக்க வேண்டியதில்லை அவர்கள் தம்மைத்தாமே அழித்துக் கொள்வார்கள். 
பத்மநாபா 1987

* நாம் மரணத்தை கண்டு அஞ்சவில்லை ஒரு அடிமையாய் அனாதையாய் 
தெருக்களில் மரணித்துப் போவதைத்தான் வெறுக்கிறோம்.
பத்மநாபா 1987.

என்ன அதிசயம் அவர் கூறிய
அனைத்தும் நடந்து முடிந்து விட்டது.

நாபாவை கொன்ற புலிகளுடன் சேர்ந்து பெரும் துரோகத்தை செய்து விட்டு , தற்போது 
இந்த மாபெரும் தலைவனை வைத்து தனது அரசியல் பிழைப்பை நடாத்த தொடங்கியுள்ளார் சுரேஷ் பிரேமச்சந்திரன், இவர் இனிவரும் காலங்களில் இருக்கும் இடமே தெரியாமல் போகலாம்.

பத்மநாபாவும் , ராஜீவ் காந்தியும் கொலை செய்யப்படாமல் இருந்திருந்தால்

1990 களில் பத்மநாபாவும் , ராஜீவ் காந்தியும் கொலை செய்யப்படாமல் இருந்திருந்தால், வெறும் 700 ற்கும் உட்பட்ட போராளிகள் மாத்திரம் தான் இறந்திருப்பார்கள்.
அவைகள் மட்டும் அல்ல 90ம் ஆண்டு முதற்கொண்டு 2009 மே 18 வரை லட்சக்கணக்கான மக்கள் இறந்திருக்க மாட்டார்கள்.
50,000 ற்கு மேற்பட்ட இளைஞர்கள்,யுவதிகள்,சிறுவர்,சிறுமியர் புதைகுழிக்குள் சென்றிருக்க மாட்டார்கள்.
அல்பிரெட் துரையப்பா முதற்கொண்டு மகேஸ்வரி வேலாயுதம் வரை அரசியல்வாதிகள், தலைவர்கள், கல்விமான்கள், பலகலைக்கழக மாணவர்கள்,பாடசாலை அதிபர்கள், புத்திஜீவிகள், தொழிலதிபர்கள் , என்று பலர் இன்றும் உயிர் வாழ்ந்திருப்பார்கள்.
தமிழ்நாடில் இலங்கைத் தமிழ் அகதிகளின் சித்திரவதை முகாம் உருவாகியிருக்காது.
வலிகாமம் வடக்கு மக்கள் தங்கள் பூர்வீக இடங்களில் நிம்மதியாக வாழ்ந்திருப்பார்கள்.
இராணுவ உயர்பாதுகாப்பு வலயங்கள் உருவாக சந்தர்ப்பம் இருந்திருக்காது..
இந்திய இராணுவத்திடம் தமிழ்ப் பெண்கள் தங்கள் மானத்தைப் பறிகொடுத்தீருக்க வேண்டி வந்திருக்காது.
வட பகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேறவேண்டி வந்திருக்காது.
அரசியல் கைதிகள் என்று யாரும் சிறையில் இருந்திருக்க மாட்டார்கள்.
வன்னிக்காடுகள் எங்கும் இராணுவப் பிரசன்னம் வந்திருக்காது.
புத்திஜீவிகள் கல்விமான்கள், தொழிலதிபர்கள் இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
கூட்டமைப்பு என்ற கூத்தாடிகள் உருவாகியிருக்க மாட்டார்கள்.
வி வாண்ட் டமில் ஈழம் என்று வெளிநாட்டு உண்டியல் குலுக்கிகள் கத்தி இருக்க மாட்டார்கள்.
முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் மாண்டிருக்க மாட்டார்கள்.


புலிகள் உருவாக்கியது தேச பக்கதர்களை அல்ல சர்வதேச மாபியாக்களையே

உன்னைச்சொல்லி குற்றமில்லை .புலிகள் உருவாக்கியது தேச பக்கதர்களை அல்ல
சர்வதேச மாபியாக்களையே!
புலிகளின் பணத்தில் இரண்டு கோடி ரூபாய் செலவில் தன் மகளை helicopter இல் அழைத்துவந்து பூப்புனித நீராட்டுவிழா கொண்டாடியுள்ளார் கனடாவில் உள்ள சுரேஸ் என்பவர்.
இவர் 2009 வரை கனடாவில் உள்ள புலிகளின் சொத்துக்களை மேற்பார்வை செய்து வந்துள்ளதுடன் அதன்பின் தனது சொந்த உடமையாக்கியுள்ளார்.
இப்போது பலகோடி மதிப்பிலான pizza hut , shopping mall என்பவற்றை வாங்கி வாடகைக்குக் கொடுத்துள்ளார்.
இதை விடவும் கனடாவின் Ajax பகுதியில் தற்போது புதிதாக ஒரு வியாபார நிலையத்தைச் சொந்தமான வாங்கியுள்ளார்.
(பதிவு:Rajh Kumar)
இயக்கப் பணத்தை வைத்துக்கொண்டு இவர்கள் ஆடும் ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா..?? நட்சத்திர விடுதிகளில் உல்லாசம் ஹிலிகப்டர் பயணம் பல கோடிரூபாய் பெருமதியான மாளிகளைகள் கடைகள் , பணத்தை வட்டிக்கு கொடுப்பது இன்னும் ஏராளம்.
ஈழத்தில் மக்கள் ஒரு வேளை உணவிற்கு கையேந்தி நிற்கின்றனர் ஆனால் இவர்களோ ஆடம்பர வாழ்க்கையில் கொளிக்கின்றனர்.
கை கால் இன்றி ,உணவின்றி புலம்பெயர் தேசங்களில் கையேந்தி தவிக்கின்ற வேளையிலும் இவர்களின் மனம் இரங்கவில்லை?
போராடிய போராளியெல்லாம் முடமாகிக் கிடக்கின்ற வேளையில் இவர்களின் மனம் எப்படி அமைதிகொள்கின்றது ?
உங்களின் பாவச் செயல்களை நாளை உங்களின் சந்ததிகளே அனுபவிக்கும்.
இவர்களைப் போல் பதுக்கியவர்கள் ஏரளமானவர்கள் யோக்கியர்கள் போல நடமாடிவருகின்றனர், அதில் இவனும் ஒருவன் ,
இவனை போல் லண்டன் ,டென்மார்க் , இத்தாலி , கனடா என ஏனைய நாடுகளிலும் இருக்கிறானுகள் அவர்கள் இதுவரை காலமும் பாதிக்க பட்டவர்களுக்கு எந்த உதவியும் செய்ததில்லை,
அவர்களின் படங்களும் முழு விபரங்களும் வெகு விரைவில் வெளியிடப்படும்

 .

முள்ளிவாய்க்காலின் அவலம் யாரால் ஏற்பட்டது

போரில் உயிரிழந்த எமது உறவுகளுக்கு அஞ்சலிகள்.
இது யாரால் ஏற்பட்டது ?
சகோதர படுகொலைகளும், இரு நாடுகளின்
இருபெரும் தலைவர்களான ராஜீவ் காந்தி,
பிரேமதாசா உட்பட, பத்மநாபா
அமிர்தலிங்கம் ,துரையப்பா ,லக்ஸ்மன் கதிர்காமர் , ஆகிய பெரும் தலைவர்களையும்
புலிகள் கொன்றது தான் முள்ளிவாய்க்காலின் அவலத்துக்கு முக்கிய காரணமாகும். மூர்க்கத்தனமாகவும் ,முட்டாள்தனமாகவும் செயல்பட்ட புலிகள் இந்த சகோதரப்படுகொலைகளையும், தலைவர்களையும் கொன்றவுடனே
செத்துவிட்டார்கள்.
சாகசத்தை நம்புபவர்களால்நீண்ட தூரம் பயணிக்க முடியாது. புலிகள் காட்டியதும் ஒருசாகசம்தான், அதனால்தான்
புலன் பெயர்ந்த விசுக்கோத்துகள் புலிகளை கண்மூடித்தனமாக ஆதரித்தார்கள்,
எதிர்பார்த்தார்கள் ,நம்பினார்கள்,இறுதியில்
முட்டாள்தனமாக ஏமார்ந்தார்கள்.
இவர்கள்தான் தற்போது போர்க்குற்றங்களைப் பற்றி பேசுகிறார்கள் ,
போர்க் குற்றங்களுக்காக இலங்கை அரசும் இலங்கை ராணுவமும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோருகிறார்கள் நல்லது. அதேசமயம், மறுபக்கம் புலிகளும் போர்க் குற்றங்களை இழைத்தவர்கள்தான் அவர்களும் தண்டிக்க படவேண்டும். ஒருபுறம், வெள்ளைக்கொடிகளோடு சரணடைந்த புலித் தலைவர்களைக் கொன்றது குற்றம் இல்லையா என்று இலங்கை ராணுவத்தை நோக்கிக் கேட்பவர்கள் மறுபுறம், பச்சிளம் குழந்தைகளின் கழுத்தில் எல்லாம் சயனைடு குப்பிகளைக் கட்டி ,பெண்களுக்கு வெடிகுண்டுகளை கட்டி அனுப்பிய நீங்கள் உங்கள் உயிரைக் காத்துக்கொள்ள வெள்ளைக்கொடி ஏந்திச் சென்றதும் குற்றம்தானே என்று புலி ஆதரவாளர்களை நோக்கிக் கேட்கும் நெஞ்சுரமும் வேண்டும்.
புலிகள் வன்னியில் காலடி வைக்கும் வரை அமைதி பூங்காவாக இருந்தது வன்னி, இராணுவத்தின் வாசனை அறியாத பூமி வன்னி!
ஆனால் வன்னியில் யுத்தம் நடத்தப் பணத்தைக் கொட்டிக் கொடுத்த விசுக்கோத்துகள்
இன்று இனப்படுகொலை என்று அழுகிறார்கள்!
மக்களை வெளியேற அனுமதித்திருந்தால் அவர்கள் முள்ளிவாய்க்காலில் அகப்பட்டிருக்கமாட்டார்கள், முள்ளிவாய்க்காலின் எல்லையில் சென்று ஆயுதங்களைப் போட்டு காலில் வீழ்ந்தீர்களே
அதை ஏன் முதலில் செய்ய முடியாமல் போனது?
இனப்படுகொலை என ஒப்பாரி வைக்கும் புலன்
பெயர்ன்த விசுக்கோத்துகளே
நீங்கள் கொடுத்த நிதியில் நடந்த யுத்தத்தில்தானே மக்கள் கொல்லப்பட்டார்கள்?ஆகவே இனப்படுகொலையில் உங்களுக்கும் பங்கு உன்டு என்பதை மறந்து விடாதீர்கள்.
நீங்கள் மாத்திரம் ஊரை விட்டு ஓடி வந்து கல்யாணம் கட்டி,பிள்ளைகளை பெற்று ,நல்ல பாடசாலையில் படிக்கவிட்டு ,
பிறந்தநாள் கொண்டாடி சந்தோசமாக இருக்கவேணும், ஊரில் உள்ளவர்களின் கஷ்டப்பட்டவர்களின் பிள்ளைகள் அடிபட்டு சாக வேணும், முதலில் உங்கட பிள்ளைகளை கொண்டு போய் வன்னியில் ஒரு 5 நிமிடம் செருப்பில்லாமல் வெய்யிலில்
நிற்க சொல்லுங்கள் . அப்போதுதான் உங்களுக்கு
போராடி இறந்தவர்களின் அருமை தெரியும் .
இப்படியானவர்களுக்கு அழிவுதான் பிடிக்கும். ஆக்கத்துக்குப் பிடிக்காது. ஆக்கத்துக்கு நிதி கேட்டால் கொடுக்க மாட்டார்கள்
கரும்புலிப் படகு தயாரிக்க காசு கேட்டால் அள்ளிக் கொடுப்பார்கள்
தாய்நாட்டின் விமான நிலையத்தையும் விமானங்களையும் தாக்கி அழித்தால் விருந்து கொண்டாடி மகிழ்வார்கள் ,இலங்கைக்க்குத் திரும்பிப் போனால் உயிராபத்து என்று வழக்காடி விசாக் கிடைத்த பின்னர் சிறிலங்கா விமானத்தில் பயணம் செய்து கட்டுநாயக்காவில் இறங்கி யாழ்ப்பாணம் போய் நல்லூர்த் திருவிழா கொண்டாடுவார்கள்,
இலங்கைக்குப் போட்டு வந்து நாடு அந்த மாதிரி இருக்கெண்டும் சொல்லுவார்கள்.
காணாமல் போனவர்கள் பற்றி பேசவேண்டுமானால் முதலில் புலிகளின் துணுக்காய் சித்திரவதை முகாமில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் அல்ல ,
முள்ளிவாய்க்கால் முடிவுற்ற இடமே .
சுமார் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை அடைத்து வைத்து
அவர்கள் மீது கொடிய சித்திரவதைகளை மேற்கொண்டு
ஏறத்தாழ இரண்டாயிரம் தமிர்களைக் கொலை செய்த புலிகளின் பாரிய சிறைக் கூடம். 28 வருடங்களுக்குப் பின்னர் அந்த இடம். புலிகளால் ஈரக்கமின்றி கொன்று எரிக்கப்பட்ட எமது மக்களுக்கு அங்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டும்.
சர்வாதிகாரி பொல்பொட்டின் சித்திரவதை முகாம்களையே முறியடித்த புலிகளின் துணுக்காய் சித்திரவதை முகாம். அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் 5000 பேர்புலிகளினால் கொன்று புதைக்கப்பட்டனர்.
துணுக்காய் பாசிஸ புலிகளின் வதை முகாம் பொறுப்பாளன் மல்லி.அங்கே புலிகளின் கைதிகளாக இருந்த 4,200 இற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு அடையாளம் தெரியாது புதைக்கப்பட்டார்கள். இவனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமான இளைஞர்கள். இவனெல்லாம் மாவீரன் ?
ஒரு விடுதலைப் போராட்ட இயக்கமாகத் தொடங்கப்பட்டஅமைப்பு இறுதியில் சொந்த மக்களையே பலி கொண்டமோசமான பயங்கரவாத இயக்கமாகத் தன் கதையை முள்ளிவாய்க்காலில் முடித்துக்கொண்ட வரலாறுதான் புலிகளுடையது.
இன்று புலிகள் அமைப்பு யார்?
உலகின் 40-க்கும்மேற்பட்ட நாடுகளால் தடை விதிக்கப்பட்ட, உலகின் மோசமானபயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாக முத்திரை குத்தப்பட்ட, முற்றிலும் வலுவிழந்த, கிட்டதட்ட அழிந்தேவிட்டே ஓர் இயக்கம். சரியாக சொன்னால், பல் பிடுங்கப்பட்ட, அடித்து துவைக்கப்பட்ட, கிட்டத்தட்டசெத்தேவிட்ட அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு பாம்பு.இவர்களை ஆதரிப்பவர்கள் ஒன்றில் பயந்தாங்கொள்ளிகள் அல்லது அவர்களிடம் இருந்து எதாவது ஒரு வழியில் ஆதாயம் பெறுபவர்கள்.
இன்று புலிகளின் பெயரால் இயங்குபவர்கள்அவர்களுடைய பினாமிகள்; அவர்கள் ஏன் இன்னமும் புலிகளின்பெயரை உச்சரிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு அதில்ஆதாயம் இருக்கிறது.
இன்னுமொரு பிரபாகரனும், இன்னுமொரு முள்ளிவாய்க்காலும் ,இன்னுமொரு சீமானும்
எமக்கு வேண்டாம்.
ஒருதடவை அமிர்தலிங்கம்
பிரபாகரனை பற்றி இப்படி சொன்னார், "தம்பி பிரபாகரன் தமிழனித்திற்காக சிறுவயதில் இருந்தே போராடுவது வரவேற்கதக்கது, ஆனால் எதனை செய்யவேண்டும், எதனை செய்யகூடாது எனும் அறிவு அவரிடம் இல்லை, பக்குவம் இல்லை, முதிர்ச்சி இல்லை.இவர் இப்படியே செய்துகொண்டிருந்தால் அது பெரும் அழிவில் முடியும், அவர் பின்னால் இளைஞர்கள் செல்வது நல்ல அறிகுறி அல்ல..."
எவ்வளவு அனுபவமான வார்த்தைகள்.
அவ்வளவுதான் ஒரு சுபநாளில், பேச்சுக்கு என சென்ற புலிகள் அவர் வீட்டில், அவர் மனைவி கையாலே தேநீர் குடித்து, அமிர்தலிங்கத்தை கொன்று அவர் தாலி அறுத்தனர், பயிற்சி அப்படி
அமிர்தலிங்கத்தின் வார்த்தைகள் சீமானுக்கும் பொருந்தும் " அவரின் தமிழின உணர்வு வரவேற்கதக்கது, ஆனால் எதனை பேச வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்ற அறிவோ திட்டமோ ஒன்றும் சீமானிடம்
இல்லை,புலிகள் எவ்வாறு தமிழ் அப்பாவி மக்களை கொண்டு வந்து முள்ளி வாய்க்காலில் விட்டார்களோ , அதை தான்
சீமானும் செய்ய துடிக்கின்றார்.
ஒரு விடயம் மட்டும் இன்னும் சரியாக புரியவில்லை அதாவது ஏழு கோடி தமிழ் மக்கள் உள்ள தனது சொந்த நாட்டில் சீமான்
ஈழம் கேட்காமல் வெறும் ஒரு சில இலச்சங்கள்
தமிழர்கள் மாத்திரமே உள்ள அயல் நாடான இலங்கையில் ஈழம் கேட்பதன் மர்மம் என்ன?
இவர் தடை செய்த பயங்கரவாத இயக்கமான புலியின் கொடியையும் , பிரபாகரனின் படத்தையும் வைத்துதான் அரசியல் செகின்றார்,
அதனால்தான் இவரால் தமில் நாட்டில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை,சீமான் நல்லதொரு பேச்சாளன் அவருடைய பேச்சுக்கள் அபாரம் ஆனால் இலங்கை தமிழர்கள் பற்றி பேசும் போது மிகவும் அபாயகரமாகவுள்ளது.
இது கண்டிப்பாக இன்னுமொரு முள்ளிவாய்க்காலை உருவாக்கும் ஆரம்பமே!
புலன் பெயர்ந்தோர்களே இனிமேலாவது உங்களின் சுயநலமான எண்ணங்களை விட்டுட்டு,
உங்களால் பரிதாப நிலையில் நடுத்தெருவில் நிற்கும் முன்னாள் போராளிகளுக்கு உதவி செய்தாவது நீங்கள் செய்த பாவத்துக்கு பரிகாரம் செய்யுங்கள் ,உதவி செய்ய முடியாவிட்டால் ஒதுங்கி இருங்கள்

மனுதர்ம'த்தில் மண்டியிட்ட தமிழ் மன்னர்கள்

மன்னர்களுக்கான சிலைகளை கானவில்லையாம்;
இதோ மனுதர்ம'த்தில் மண்டியிட்ட தமிழ் மன்னர்கள் கதைகளை கேள்மின்......
மாரவர்மன் சுந்தரபாண்டியன் ‘மனுநெறி தலைப்ப மணிமுடி சூடி’ ஆள்கிறான் என
அவன் மெய்க்கீர்த்தி பறைசாற்றுகிறது...
குலசேகரப் பாண்டியனோ, “முத்தமிழும் மனு நூலும் நான்மறை முழுதும் எத்தவச்
சமயமும் இனிதுடன் விளங்க” இறைமாட்சி நடத்தி இருக்கிறான்...
சோழர்கள் என்ன பாண்டியர்களுக்கு இளைத்தவர்களா?
“ஒப்பரிய மறைநூலும் உரை திறம்பா மனுநூலும்,
செப்பரிய வடகலையும் தென்கலையும் தலையெடுப்ப
நீதிதரு குலநான்கும் நிலைநான்கும் நிலைநிற்ப
ஆதியுகம் குடிபுகுத அறு சமயம் தழைத்தோங்க” மூன்றாம் இராசராச சோழன்
ஆட்சி நடத்தியிருக்கிறான்.
முதலாம் இராசாதிராசன் “விளங்கு மனுநெறி அசுவமேதஞ் செய்து” பரிபாலனஞ் செய்திருக்கிறான்.
இராசமகேந்திர சோழனோ, “தருமநெறி நிற்ப மனுநெறி நடாத்திய”மன்னனாகத் தன்னை மார்த்தட்டி அறிவித்துக் கொள்கிறான்.
முதலாம் குலோத்துங்கன் ‘மனுவாறு பெருக’ மக்களை ஆள்வதாக மகிழ்ச்சியோடு
அறிவிக்கிறான்.
விக்கிரமச் சோழனோ “மனுநெறி வளர்த்து” நாடாள்வதாக நாப்பறை அடிக்கிறான்.
இரண்டாம் குலோத்துங்கனோ ‘மனுவாறு விளங்க’ செங்கோல் செலுத்துவதாகச் செம்மாந்து கூறுகிறான்.
இரண்டாம் இராசராசன் “மனுவாணை தனி நடாத்தி” மக்களைப் புரந்ததாகப் பெருமை கொள்கிறான்.
இரண்டாம் இராசாதிராசன் “அமைவில்லா மனுவொருக்க ஆதியம் பாடி நிலைநிற்க”
அகிலத்தை ஆண்டதாக அறைந்து கூறுகிறான்.
மூன்றாம் குலோத்துங்கன் “மனுவின் நெறி தழைத்தோங்க”, “செயல் வாய்ந்த மனுநூலும்” - பெருக கோலோச்சினான் என அவன் மெய்க்கீர்த்தி விளக்குகிறது.
மூன்றாம் இராசராசன் “பொருவில் மனுநெறி வாழ பொன் மகுடம் கவித்தருளி”
புரோகிதக் கூட்டத்திற்கு பொழுதளந்து சேவை செய்திருக்கிறான்.
நம் மன்னாதி மன்னன் எவனுக்கும் சட்டம் செய்யும் உரிமை இருந்ததில்லை. இது
இந்திய அரசியல் கொள்கை. அவன் தர்ம சாஸ்திரங்களின் கட்டளைகளை சமூகத்தில்
நிறைவேற்றும் ஒரு கருவி மட்டுமே. அண்ணா ‘சிவாஜி கண்ட இந்துராச்சியம்’
எப்படிப்பட்டதென்பதை விளக்கினார். ‘இந்து ராச்சியத்தில்’ எல்லா
மன்னர்களும் சிவாஜிகளே! இநதப் பொது விதிக்குத் தமிழ் மன்னர்கள் மட்டும்
விதிவிலக்கல்ல!
வேதபுரியினர் இட்ட கட்டளைப்படி அவரவர்க்கு ஒரு குலத்தொழில் விதித்து அதை
மீறுவோர்க்கு கொடும் தண்டனையும் வழங்கி உள்ளார்கள். சாதி ஆச்சாரத்தை
நிலைநிறுத்தும் பொறுப்பை பிரமதேய (அக்கிரகார) சதுர்வேதி மங்களங்களின்
ஊர்ச் சபைகளே ஏற்றிருந்தன. பார்ப்பனர் அக்ரகாரத்தில் தனித்து வாழ்வதை
அரசர்கள் பெருமையோடு காத்து வந்தனர். அவர்களுக்கு மானியங்களாக இறையிலி
நிலங்கள்; பாரத விருத்தி, பட்ட விருத்தி, வேத விருத்தி, புராண விருத்தி, தேவதாயம் - இப்படி எத்தனையோ பெயர்களில் அவர்களுக்கு நாட்டிலுள்ள நல்ல நிலங்களை எல்லாம் தாரை வார்த்தார்கள்.
இடையில் வந்த ‘களப்பிரர்கள்’ அந்த நிலங்களை பிடுங்கி உழவர்க்கு கொடுத்தனர். ஆனால், அவர்களை ஒழித்துக் கட்டி மீண்டும் வந்த மனுநீதி தவறா தமிழ் மன்னர்கள் திரும்பவும் உழவர்களிடமிருந்த நிலங்களைப் பார்ப்பனரிடமே
சேர்த்து விட்டனர்

பாஸ்கர சேதுபதி - நாடார்களின் வரலாறு




14.05.1897 அன்று இருளப்ப நாடார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நாடார் சமூகத்தினர் கமுதி மீனாட்சி அம்மன் கோவிலில் தீப்பந்தம் ஏந்தி, பால்குடம் தலையில் சுமந்து மேள தாள ஆரவாரத்துடன் சிலை வழிபாடு செய்த பிறகு அன்றைய கோவில் நிர்வாகி பாஸ்கர சேதுபதியால், நாடார்களின் கோவில் நுழைவு கோவில் சிலையை தீட்டுப்படுத்தியதாக மதுரை சார்பு நீதிமன்றத்தில் வழக்கிடப்பட்டு நீதிமன்றம் இந்து மத சாஸ்திரங்களை அலசி ஆராய்ந்து நாடார்கள் கோவிலுக்குள் நுழைந்ததை கண்டித்து ஐநூறு ரூபாய் அபராதம் விதித்தது.
உயர்நீதிமன்ற மேல்முறையீட்டில் ஒத்திசைவுக்கு சம்மதித்த சேதுபதி தரப்பு முப்பத்திஐந்தாயிரம் பெற்றுக்கொண்டு கோவிலுக்குள் அனுமதிக்க இசைந்து முன்பணமாக ஐந்தாயிரம் பெற்றுக்கொண்ட பிறகு அவரது மகனின் பாதுகாவலராக மனைவியைக்கொண்டு ஒத்திசைவுக்கு எதிராக வாதிட்டது.அன்றைய தேதிகளில் தங்கத்தின் விலை ஒரு பவுன் 18 ரூபாய் என்பது நினைவு கூரத்தக்கது.மெட்றாஸ் உயர் நீதிமன்றமும் இந்து சாஸ்திரங்களின் துணையுடன் நாடார்களின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.
கிட்டத்தட்ட அதே காலத்தில்(1890)பாஸ்கர சேதுபதி இந்து மதத்தின் மேன்மையை மேலை நாடுகளில் பரப்ப, விவேகானந்தருக்கு
பண உதவி செய்து அவர்அமெரிக்க சிகாகோ மாநாட்டில் சகோதரர்களே !
சகோதரிகளே !! என முழக்கமிட்டு கைத்தட்டல் பெற்ற போது அவரது உள்ளூர் சகோதர சகோதரிகள் கோவிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டு தங்களை உள்ளே அனுமதிக்க சனாதன இந்து தர்மவான்களை கெஞ்சிக்கொண்டிருந்தனர்.
ஆயிரக்கணக்கான நாடார்கள் கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் தழுவினர்.
தங்களது வழக்கு உயர் நீதிமன்றத்தில் 18.09.1902 இல் தோல்வி அடைந்தாலும் நாடார்கள் மனந்தளராமல் மன்னர் மன்றம் வரை (privy council) 42000 ரூபாய் செலவிட்டு அங்கும் நாடார்களின் கோவில் நுழைவு கேலிக்குள்ளாகி அவர்களது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
கேரள ஆலய பிரவேச சட்டத்தின் நிறைவேறக் காரணம் மதம் மாறுவோம் என கேரளத்தின் 12 சதவிகித மக்கள் தொகையை கொண்ட ஈழவர் மற்றும் தீயர் சமூக மாநாடு அறிவித்ததே என டாக்டர் அம்பேத்கர் அம்பலப்படுத்தினார்.
நாடார்களின் கடந்த இரு நூற்றாண்டுகள் நடந்த சமூக விடுதலைப் போராட்டம் சனாதன இந்து மதத்திற்கு எதிரானது.
நாடார்களின் வரலாறு கறுப்பே ! காவியல்ல


ஈழ வியாபாரம்

ஈழ வியாபாரம்
’’ஈழம், இந்த முழக்கம் ஒரு உரிமைப் போரையே நடத்தியது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை ஈகை செய்தது என்று மட்டுமே நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.
ஆனால் தமிழகத்தில் இந்த முழக்கம் ஒரு மிகப்பெரிய வியாபாரம் என்று நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை
சமூக பொருளாதார அரசியல் நீதி ஆகியவற்றின் நுண்ணறிவு இல்லாத ஆனால் தமிழ் அபிமானம் கொண்ட மற்றும் மாற்றத்தை வேண்டும் இளைஞர்களை இந்த ஈழ முழக்கம் அணி திரளச்செய்கிறது, போராட்ட களத்தை நோக்கி சுண்டி இழுக்கிறது என்பதே நிதர்சனம்
தமிழகம் ஒரு தனி நாடாகும் அடிப்படை உள்கட்டமைப்பைக்கூட கொண்டிராத நிலையில், தமிழ் தேசியம் சாத்தியமேயில்லை என்ற உண்மையை அறிந்திருந்தும், ஈழ முழக்கம் தமிழக இளைஞர்கள் மத்தியில் தமிழ்தேசியம் காணும் எதிர்பார்ப்பு வரை இட்டுச் சென்றிருக்கிறது என்பதுவரை நாம் அறிந்திருக்கிறோம்.
ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி, ஈழம் எனும் முழக்கம் கோடிகளை கொட்டிக்கொடுக்கும் மிகப்பெரிய வணிகம் என்பதை எளிய மக்களாகிய நாம் அறியவில்லை, ஆனால் நம்மை தூண்டும் தமிழ்தேசிய வியாதிகள் நன்கு அறிந்தேயிருக்கின்றனர்.
இலங்கை மற்றும் இந்தியா தாண்டி வாழும் பெரும்பாலான வெளிநாட்டுவாழ் தமிழர்கள், ஈழம் தொடர்பான அனைத்து முன்னெடுப்புகளுக்கும் தேவையான பணத்தை நன்கொடையாக அளிக்கின்றனர். இதில் ஒருசில பகுதிகளையே செலவு செய்துவிட்டு மீதமுள்ள பணத்தை ஆட்டயப்போட்டு பங்கு பிரித்துக் கொள்கின்றனர் நமது தமிழ்தேசிய வியாதிகள்.
உற்று கவணித்துப்பாருங்கள், இந்த தமிழ்தேசிய வியாதிகள் ஈழத்திற்காக பல போராட்டங்களை நடத்துவார்கள், ஆனால் அகதிகள் முகாம்களில் வாழும் ஏதிலிகளுக்கு ஆக்கப்பூர்வமான எந்த உதவியையும் செய்திருக்க மாட்டார்கள். காரணம் உதவி செய்வது தமிழ்தேசிய வியாதிகளின் வேலையல்ல. கோடிகளை வாரிக்குவிக்கும் ஈழம் மற்றும் தமிழ்தேசியத்திற்கான போராட்டங்களை நடத்துவது மட்டுமே முக்கியம்
தமிழகத்தில், ஈழம் என்பது வருமானம் ஈட்டும் வியாபாரச் சந்தையே
மே மாதம் ஆனாலே ஈழ வியாபரம் கொடி கட்டிப் பறக்கும்

ஈழப்போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே சகல ஈழத்தமிழ் அரசியல் சக்திகளையும் தொடர்ந்து சந்தித்து உரிய முன்னெடுப்பை எடுத்தது முழுக்க் முழுக்க திமுகவும் அதை சார்ந்த திராவிடர் அமைப்புக்களும்தான் .. பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுகவும் எம்ஜியாரும் அத்தனை அழிவுக்கும் வழி சமைத்தனர் ஈழ போராட்டத்தின் இடையில் புகுந்த எம்ஜியார் பிரபாகரனை மட்டும் தனித்து தூக்கி பிடித்து கொம்பு சீவி விட்டு , பிரபாகரன் அத்தனை சகோதர படுகொலைகளையும் அரங்கேற்றி கொண்டிருந்த பொழுது அவற்றை எல்லாம் ஏதோவொரு வீர் தீர செயல்களாக ரசித்த எம்ஜியார் மேலும் மேலும் பிரபாகரனுக்கு அந்த போதையை ஏற்றி ஏற்றி திருத்தவே முடியாத தவறுக்கு வழி சமைத்தார் .. அண்மையில் இடம்பெற்ற அத்தனை அவலங்களுக்கும் எம்ஜியாரின் பங்களிப்பு அளவற்றது . எம்ஜியார் இன்று இருந்திருந்தால் ஐ நா மனித உரிமை ஆணையும் முன்னால் நிறுத்த பட்டிருப்பார்


Wednesday, May 16, 2018

ஆண்டன் பாலசிங்கம் எழுதிய "War and Peace Efforts of LTTE" என்ற புத்தகத்தில் எம்.கே.நாராயணன் குறித்து

ஆண்டன் பாலசிங்கம் எழுதிய "War and Peace Efforts of LTTE" என்ற புத்தகத்தில்..
எம்.கே.நாராயணன் (புலிகளின விடுதலைப் போராட்டத்தை எதிர்த்தவர்) குறித்தும், அவருடன் தானும், பிரபாகரனும் நடத்திய ஆலோசனைகள் குறித்தும் பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.
"எம்.கே.நாரயணன், பிரபாகரன், ஆண்டன் பாலசிங்கம் இடையேயான முதல் சந்திப்பு வட இந்தியாவில் உள்ள காசி நகரில் முதன் முதலாக நடைபெறுகிறது. ராஜீவ் காந்தி பிரதமராக பொறுப்பேற்ற நேரம் அது. இந்திரா காந்தி சிங்கள அரசுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடுகளுக்கு மாறாக சிங்கள அரசுடன் இணக்கமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த ராஜீவின் ஆலோசகர்கள் ராஜீவ் காந்திக்கு அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி புலிகளை சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இந்திய அரசின் உளவு நிறுவனமான ரா நெருக்குதல் செய்து கொண்டிருந்தது. இவ்வாறான சூழலில் தான் எம்.கே.நாராயணன் பிரபாகரனையும், ஆண்டன் பாலசிங்கத்தையும் சந்திக்கிறார். இதில் தொடங்கி 1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகும் சூழ்நிலை வரை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்த அதிகாரிகளில் எம்.கே.நாராயணனும் ஒருவர்.
இவ்வாறு இலங்கை விவகாரத்தில் பணியாற்றிய எம்.கே.நாராயணன் இன்றைக்கு இந்திய பிரதமருக்கு பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் சூழலில், மைய அரசு பெரும்பாலும் "பாதுகாப்பு" என்ற காரணம் காட்டி தமிழக அரசியல்வாதிகளை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சூழலில் இந்தியா இந்தப் பிரச்சனையில் தமிழர்களுக்கு இணக்கமாக இருக்கும் என்ற நம்பிக்கை இல்லை. கலைஞரால் இந்த நிலையை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை.
விடுதலைப் புலிகளின் போர் வெற்றிகள் மட்டுமே சிங்கள அரசை மறுபடியும் பேச்சுவார்த்தைக்கு கொண்டுவரும். இந்தியாவும் புலிகளுடன் பேசுமாறு சிங்கள அரசை தூண்டும். புலிகள் பலவீனப்பட்டிருப்பதாக ஒரு பிம்பம் தற்பொழுது உருவாகியுள்ள சூழலில் புலிகளை தோற்கடிக்கவே இந்தியாவும் விரும்பும். 20 வருடங்களாக இந்தியாவின் நிறைவேறாத ஆசை அது.
புலிகள் போர் வெற்றிகளை பெற முடியுமா ? புலிகள் பலவீனம் அடைந்து விட்டார்கள் என்ற சிங்கள அரசின் பிராச்சாரத்தை முறியடிக்க முடியுமா ? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.
அதுவரை, ஈழப் போராட்டம் பற்றிய உண்மை நிலையை தமிழக மக்களிடம் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பாக தற்போதைய கலைஞரின் ஆட்சியை கருத வேண்டும். இந்த வாய்ப்பை "தீவிரவாதம்" பேசி, கலைஞர் ஆட்சிக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி சிதைத்து விடக்கூடாது."
மிகவும் தெளிவாக இச்செய்தியை ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் சொல்லியும் சிங்களப் பேரினவாதம் எதிர்ப்பார்த்த நெருக்கடியை கலைஞருக்கு அளித்த தமிழகத்து போலி தமிழ் தேசியர்கள் யாருக்கானவர்கள்? என்கிற கேள்வியை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

Tuesday, May 15, 2018

ராஜீவ்காந்தி உயிருடன் இருந்திருந்தால் இன்று பிஜேபி என்ற ஒன்றே இருந்திருக்க வாய்ப்பில்லை

காங்கிரஸை ஒழிக்கனும் அதற்கு பிஜேபியை ஆதரிக்கனும் இந்தியாவே அழிந்தாலும்
திமுகவை ஒழிக்கனும் அதற்கு அடிமை அதிமுகவை ஆதரிக்கனும் கடைசித் தமிழன் சாகும் வரை
இதுதான் ஈழத்தின் பெயரில் அரசியல் செய்யும் அத்தனை பேரின் அஜெண்டா.
நான் தொடர்ந்து கேள்வி கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் இப்படித்தான் இருக்கும், என்ன நேரடியாக சொல்ல மாட்டார்கள். காங்கிரஸ் வந்தா மட்டும் என்ன ஆகப்போகிறது, திமுக வந்தால் மட்டும் என்ன ஆகப்போகிறது என்பார்கள்.
ஈழம் போரடித்து விட்டால் காஷ்மீர் குழந்தைகளுக்காகவும், நீட்டை எதிர்த்தும் குரல் கொடுப்பார்கள், மறைமுகமாக பிஜேபியையையும் அதிமுகவையும் ஆதரித்து கொண்டே.
அழிவுப்பாதையில் அழைத்து செல்பவர்களை நம்பினால் அழிவது உறுதி.
இத்தகைய மனநிலை உள்ளவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டும் பழகுவதற்கு ஆபத்தானவர்கள்.
தங்களிடம் எந்த தீர்வும் இல்லாமல் இருப்பவை அத்தனையையும் அழிக்க வேண்டும் என்று நினைக்கும் கொடூர மனம் படைத்தவர்கள்.

"2009 மே மாதத்தில் எங்கள் அழுகுரலை கேட்காது படுகொலைக்கு துணை நின்ற காங்கிரஸ்க்கு மரணஅடி விழுந்து கொண்டே இருக்கிறது. இப்போ பஞ்சாப் மற்றும் புதுச் சேரி மட்டுமே காங்கிரஸ் வசம். பாஜகவை ஒழித்துக்கட்ட இனி மாநிலகட்சிகள் திரளட்டும். காங்கிரஸ் ஒழிக்கப்படும் என்ற தமிழர்களின் சபதம் நிறைவேறியது ."

இந்த வாதத்தை ஆயிரமாவது முறை படிக்கிறேன் அல்லது கேட்கிறேன். ஈழத்தமிழர்களிடம் இருந்து. 2009 மேமாதம் ஈழத்தமிழரின் அழுகுரலை கேட்காது அவர்களின் படுகொலைக்கு துணை நின்றதால் தான் காங்கிரஸ் கட்சிக்கு இந்தியத்தேர்தல்களில் தொடர்ந்து மரண அடி விழுந்துகொண்டிருக்கிறது என்கிற வாதத்தை ஏற்றுக்கொண்டால் இரண்டு எதிர்கேள்விகள் எழுகின்றன. ஈழத்தில் காங்கிரஸ் செய்த பாவத்துக்கான தண்டனைதான் அதன் இந்திய தேர்தல் தோல்விகள் என்றால் முள்ளிவாய்க்காலில் துள்ளத்துடிக்க கொல்லப்பட்ட பல்லாயிரம் ஈழத்தமிழர்கள் எவ்வளவு பெரிய பாவங்களை செய்திருந்தால் அவர்களுக்கு அப்படி ஒரு கோர முடிவு நேர்ந்திருக்கும்? பிரபாகரன் குடும்பமே பூண்டோடு அழிந்து போனதே அதற்கு அவர் செய்த பாவங்கள், கொடூரங்கள் தான் காரணமா? அவரது மகன் சிறுவன் பாலசந்திரன் என்னபாவம் செய்து அப்படி ஒரு கோர முடிவை சந்தித்தான்? ஒருவேளை தமிழ் ஈழத்தில் பெற்றோரின் விருப்பமின்றி பலவந்தமாக பிரபாகரனால் பிடித்துச்செல்லப்பட்ட ஏராளமான சிறார்போராளிகளின் பெற்றோர் விட்ட சாபம் தான் பிரபாகரன் சின்னஞ்சிறு பிள்ளையை காவுவாங்கியது என்று காங்கிரஸ்காரர்கள் சொன்னால் அது எவ்வளவு ஆபாசமாக இருக்குமோ அவ்வளவு ஆபாசம் இந்த ஆத்திரம் பொங்கும் பதிவு. எனக்கு இரண்டுகண்ணும் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு ஒரு கண்ணேனும் போனதே என்று ஆறுதல் அடையும் மடத்தனத்தில் இருந்தும் சொந்த மகன் செத்தாலும் பரவாயில்லை வந்த மருமக தாலியறுந்தே ஆகணும் என்கிற சுயசிதைவு பழிவாங்கும் வெறியில் இருந்தும் விடுபடாதவரை ஈழத்தமிழரின் அரசியல் பார்வையும் விவாதகளமும் சமூக செயல்பாடுகளும் ஒருநாளும் 21ஆம் நூற்றாண்டிற்கேற்றவையாக மாறவே போவதில்லை. இத்தகையவர்களிடம் இன்னும் அரசியல் பேச முடியும் என்கிற சுபவீ போன்றோரின் செயல் பாலைக்கு இறைக்கும் குடிநீராக பாழாகுமே தவிர எந்த பயனும் தராது. குறிப்பாக தமிழ்நாட்டுத்தமிழருக்கு.
பிகு: காங்கிரஸை கரித்துக்கொட்டிக்கொண்டே இந்தியாவில் இருக்கமுடியும். திமுகவை திட்டிக்கொண்டும் தமிழ்நாட்டில் இருக்கலாம். இயங்கலாம். அரசியல் பேசலாம் பல்கலைக்கழகங்களிலேயே படிப்பிக்கலாம். அந்த அளவு அடிப்படை சுதந்திரத்தை அனுபவிக்கும் இவர் போன்றவர்களுக்கு அவர்கள் தரத்துக்கே கீழிறங்கி ஒரே ஒரு கேள்வியை எழுப்பமுடியும். விடுதலைப்புலிகளை விமர்சிக்கக்கூட வேண்டாம் சந்தேகித்தாலே கழுத்தில் டயர்போட்டு எரித்ததும் வீதியில் விளக்கு கம்பத்தில் பொதுவில் தூக்கிட்டு தொங்கவிட்டதும் எந்த மண்? தமிழ் ஈழம் என்கிற புனிதமண் தானே? அத்தோடு ஒப்பிட காங்கிரஸின் இந்தியாவும் திமுகவின் தமிழ்நாடும் ஜனநாயகரீதியிலும் மனித உரிமைகளை மதிப்பதிலும் மேம்பட்டே இருந்தன. இருக்கின்றன. அடுத்து காங்கிரஸ் மோசம், திமுக மோசம் என்பதன் மறுபக்கம் பாஜக நல்லது அதிமுக அதைவிட நல்லது என்பது தானே? குஜராத்தில் மோடி முஸ்லிம்களுக்கு எதிராக செய்த “நற்செயல்களும்” தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஒட்டுமொத்த தமிழருக்கும் செய்வித்த ஏராளமான “நன்மைகளும்” இவரைப்போன்ற ஈழத்தமிழர்களுக்கு இனிக்கும். ஏனென்றால் எழுபதாயிரம் முஸ்லிகளை கட்டியதுணியோடு யாழ்ப்பாணத்தை விட்டு விரட்டியடித்த “விடுதலைப்போராளிகளுக்கு” விழுந்து கும்பிட்டு ஆதரித்த கூட்டத்துக்கு மோடிகளும் லேடிகளும் ஆதர்ஷமாய் இருப்பதில் வியப்பென்ன?

ராஜீவ்காந்தியைக் கொன்று அமிர்தலிங்கத்தை கொன்று பத்மநாபாவைக்கொன்று திராவிடர் இயக்கங்கள் மேல் ஜனநாயக இயக்கங்கள் என மக்கள்கொண்டிருந்த நம்பிக்கையை கொன்று பாசிச ஜெயலலிதாவும் பார்ப்பன பாரதியஜனதாவும் பெருவளர்ச்சியடைய ஆதரவாகவும் எதிர்மறையாகவும் முக்கியப்பங்காற்றி தமிழ்நாட்டை முட்டாள்களின் படுகுழியில் தள்ளிவிட்டுவிட்டு தன்னையும் அழித்துக்குட்டிச்சுவராக்கிக் கொண்டது ஈழப்போராட்டம்.

ராஜீவ்காந்தி கொலையை தொடர்ந்து அடித்த பெரு அலையில்தான் ஜெயலலிதா என்ற பாசிஸம் தமிழகத்தில் பச்சை பிடித்தது. தமிழர்களின் அழிவு அன்றிலிருந்துதான் தொடங்கியது. ராஜீவ்காந்தி உயிருடன் இருந்திருந்தால் இன்று பிஜேபி என்ற ஒன்றே இருந்திருக்க வாய்ப்பில்லை. ஒற்றை கொலையில் எங்களின் அத்தனை தீமைகளையும் கொண்டுவந்து சேர்த்தவர்கள் நீங்கள்.


பெரியார் இல்லையென்றால் இவனுங்க தலை நிமிர்ந்திருக்க முடியாது

நேற்று பேருந்து பயணத்தின் போது ஒரு முதியவர் அருகில் வந்தமர்ந்தார். சற்றே நீண்ட பயணத்தை அவர் தனியாக மேற்கொண்டார். அவரது பெயர் ராமஜெயம். தமிழ் அய்யங்கார் குடும்பம் என்பதை அவரது நெற்றிக்கோடுகள் அறிவித்து கொண்டிருந்தன. தமிழ் வித்வான். அரசு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். 1987–ம் வருடத்திலேயே ஓய்வு பெற்றுள்ளார். 31 வருடங்கள் கடந்து விட்டதை ஆச்சரியத்துடன் பகிர்ந்தார். ஓய்வூதியம் 38,000 ரூபாய் பெற்று வருகிறார். தனது பெயர் பள்ளியில் ஒரு பலகையில் பொறிக்கப்பட்டிருக்கும் என்றார். பள்ளியில் எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை என்றார். ஆனால் அது அவரது புகாரில்லை. அவர் மிகவும் நிறைவாக காணப்பட்டார். 89 வயது அவருக்கு. அவருடைய பேரக்குழந்தைகளே பெரிய ஆளாகி விட்டார்கள். காஞ்சிபுரத்தில் இருக்கும் தனது மகள் வழி பேரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு தான் சென்று கொண்டிருந்தார். பெருமாள் அனுக்கிரகத்தால் எந்த நோயும் இல்லை. அதனால் தனியே போக பயமில்லை என்றார். அயன் மாத்திரையாவது எடுத்து கொள்ளுங்கள் என்று மருத்துவர் கேட்டதற்கு கீரைகளில் அதை பெற்று விடுகிறேன் என்றுள்ளார். விடைபெறும் நேரத்தில் அவர் வேலை பார்த்த பள்ளியின் பெயரை கேட்டேன். ஈ.வெ.ரா–நாகம்மை பள்ளி என்றார். ‘அவர்(பெரியார்) ஏதோ அந்த காலத்தில் டொனேஷன் கொடுத்துள்ளார்’ என்று கூறினார். நான் சற்று இடைவெளி விட்டு ‘பெரியார் பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என்று கேட்டேன். சற்று யோசித்தவாறு, ‘பழமைகளை ஒழித்து புதுமைகளை கொண்டு வந்தவர். தமிழர்களுக்கு தன்மானத்தை ஊட்டியவர். பெரிய துணிச்சல்காரர்’ என்றெல்லாம் புகழ்ந்தார். பெரியாருக்கு பாராட்டுரை என்பது புதிதல்ல. யாரிடமிருந்து அது வருகிறது என்பது முக்கியம் தானே. 1987–ல் அந்த முதியவர் ஓய்வு பெறும் போது 4000 பேர் அப்பள்ளியில் படித்ததாக கூறினார். கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சமூகநீதி கொள்கை நிலைநாட்டப்பட போராடியதோடு பள்ளிக்கூடங்களை சொந்த காசில் கட்டி தமிழர்கள் படிக்க நேரடி உதவியும் செய்துள்ளார். ராமஜெயம் அய்யங்காருக்கு தெரிந்திருக்கிறது — பெரியார் இல்லையென்றால் இவனுங்க தலை நிமிர்ந்திருக்க முடியாதென்று. இன்று மத்தியதர வர்க்க வாழ்க்கையை சுவைத்து கொண்டிருக்கும் முன்பு கல்வி மறுக்கப்பட்ட சூத்திரர்கள் எத்தனை பேருக்கு நன்றி உணர்ச்சி உள்ளது?


Monday, May 14, 2018

இராஜபாளையம் குற்றப்பரம்பரையின் தெரு

விருதுநகர்மாவட்டத்தின் முக்கியமான ஊர் இராஜபாளையம்.
பெயர்தான் நகரம். ஆனால் சாதிவாரியாக தெருக்கள் இருக்கும் நகரம்.
தெய்வமான மாரியம்மனுக்கும் திரௌபதி அம்மனுக்கும் திருவிழா எடுப்பதில் கூட சாதி வாரியாக விழாக்கள் நடக்கும்.
அந்த ஊரில் உள்ள ஒரு தெரு வடக்குக் காவல் நிலையத்தில் மிகுந்த பெயர் பெற்றது.
ஊரில் சாதிக் கலவர மேகங்கள் சூழின் காவல்துறை முதலில் நுழையும் தெரு அது.
சாதியின் இளந்தாரிகள் எல்லாம் ஊர்ச்சாவடியில் ஒரு BA, BSc, Diploma எனப்படித்து விட்டு வேலை வெட்டி இல்லாது கார்த்திக்கும் பிரபுவுக்கும் இரசிகர் மன்றம் வைத்துக் கொண்டு யார் சுத்த ரத்த சாதிக்காரன் எனச் சண்டை வளர்த்துக் கொண்டிருந்த காலம்.
அக்னி நட்சத்திரம் படம் வெளியான போது கட்டி உருண்டு சண்டை போட்ட இளந்தாரிகள் நிறைந்த தெரு அது.
89 ல் கலைஞர் ஆட்சி அமைந்த பின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுதியை உருவாக்குகையில் இந்த சாதியையும் சேர்க்கின்றார் அத்தொகுதியினுள்.
Denotified community என ஆங்கிலத்தில் குற்றப்பரம்பரையின் எச்ச சொச்சமாக இருந்த பெயரையும் சீர்மரபினர் என மாற்றி அத்தொகுதியினுள் நுழைத்த பின்னாலேதான் அச்சாதியில் இருந்து பெருவாரியான இளைஞர்கள் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் வாசலை மிதிக்க முடிந்தது.
இத்தனைக்கும் 90 களில் தமிழகத்தின் மொத்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 33 -34 தான்.
இந்த இட ஒதுக்கீட்டின் விளைவால் முதல் செட் இளைஞர்கள் உள்நுழைந்து பின்னால் வந்த இளைஞர்களுக்கு உதாரணமாய்த் திகழ்ந்தனர்.
இன்றைக்கும் ஊரில் சாதி உள்ளது. காவல் நிலையம் உள்ளது. ஆனால் அந்தத் தெரு இளந்தாரிகள் பல்வேறு நகர்களில் நல்ல நல்ல வேலைகளில் இருக்கின்றனர்.
திராவிடம் சாதித்தது என்ன என நாக்கூசாமல் கேட்போருக்குப் பதிலாக தமிழகத்தின் ஒவ்வோர் ஊரிலும் இது போலும் உள்ள தெருக்களும் அந்தத் தெருக்களில் இருந்து பட்டதாரிகளாகிப் போன இளைஞர்களும் சாட்சிகளாக இருக்கின்றனர்.