Thursday, July 12, 2018

அம்பேத்கர் திரைப்படத்தில் வரும் காட்சிகள்

அம்பேத்கர் திரைப்படத்தில் வரும் காட்சிகள் :
மாணவன் 1: "டேய், நமக்குப் பாடம் எடுக்கப்போறவன் ஒரு தீண்டத்தகாதவனாம்!"
மாணவன் 2: "எங்க அப்பாவுக்கு இது தெரிஞ்சது, அவ்வளவுதான்"
மாணவன் 3: "இந்தத் தீண்டத்தகாதவன் நம்மகிட்ட இங்கிலீஷ்ல பேசப் போறானாம்!"
மாணவர்கள் தங்களுக்குள் சிரித்துக்கொள்கின்றனர்.
அம்பேத்கர்: "I am professor ambedkar. நான் உங்களுக்கு எடுக்கப் போற சப்ஜெட், அரசியல்-பொருளாதாரம். ஒருவேள நான் உங்களுக்கு என்ன கத்துக்குடுக்க முடியுமின்னு நீங்க நெனைச்சீங்கன்னா.. என் அறிமுகம் உங்க சந்தேகத்த போக்கும். I have a M.A and Ph.d in Public Finance from the Colombia university in new york. My thesis covered the financial history of india from 1765 to the present. In addition i am working towards an Msc from the London school of economics. இனியும் எனக்குக் கற்பிக்கத் தகுதியில்லை என்று உங்களில் யாரேனும் நினைத்தால், அவர்கள் தாராளமாக வகுப்பறையைவிட்டு வெளியே செல்லலாம்.Now!"
மாணவர்களிடையே அமைதி.
"சரி, நாம் துவங்குவோமா?"
அடுத்தக் காட்சி :
இடைவேளையின் போது Professor'களுக்கான அறையில் வைக்கப்பட்டிருந்த பானையில் அம்பேத்கர் நீர் அருந்த முயலும் போது, ஒருவர் குறுக்கிடுகிறார்.
"டாக்டர் அம்பேத்கர்!"
"யெஸ்"
"நான் Professor திரிவேதி. இந்தக் குடிதண்ணீர் இங்குப் பணிபுரியும் Professor'களுக்கு மட்டும்தான்"
"அப்படியென்றால் நான் யார்?"
"யெஸ்..யெஸ்.. நீங்களும் Professor'தான்னு நாங்க ஒத்துக்கிறோம். ஆனா ஒரு முக்கியமான விஷயம், நீங்கள் குடிக்கும் தண்ணீரை உங்கள் வீட்டிலிருந்துதான் கொண்டுவர வேண்டும்"
அம்பேத்கர் குவளையில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு அங்கிருக்கும் அனைவரையும் பார்த்துச் சொல்கிறார்,
"இந்தக் குடிநீரை நான் குடிப்பது மெத்த படித்த உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் அருந்தும் குடிநீரை உங்கள் வீட்டிலிருந்து கொண்டுவாருங்கள்"
பின் நீரை அருந்திவிட்டுச் சொல்கிறார்,
"அல்லது தூய்மைப்படுத்துங்கள்"
அடுத்து, திரிவேதியைப் பார்த்துக் கேட்கிறார்,
"நீங்கள் திரிவேதி (அதாவது,மூன்றுவேதம் கற்றவர்). உங்களுக்குத் தீட்டுப்பட்ட நீரைத் தூய்மைப்படுத்தும் மந்திரம் தெரிந்திருக்கனுமே.. தெரியாது?"
திரிவேதி தலைகுனிகிறார்.
"தெரியாதெனில் நான் கூறுகிறேன். அமேதீஸ்டுவ சண்டாள மத்தியமாம் சாதி தூஷிட்டா ஹர்ஸமித் ஹர்ரிஷ்ட்ட ஸ்மிருதி.."
குவளையை வைத்துவிட்டு, புத்தகத்தை எடுத்துக்கொண்டு, "மீண்டுமொருமுறை சொல்லவா?" என அவரைக் கேட்டுவிட்டு, அந்த சுலோகத்தைச் சொல்லிச் செல்கிறார்.

ஆர் எஸ் எஸ் என்றால் என்ன ?

ஆர் எஸ் எஸ் என்றால் என்ன ?
ஒரு சிறு குறிப்பு.....
இன்றைய இளைஞர்கள் பலருக்கு "ஆர் எஸ் எஸ்
இயக்கம்" என்னவென்றால்.....
1. ஆர் எஸ் எஸ் என்பது - ராஷ்ட்டிரிய சுயம் ஷேவக்
சங்கம் - இது இந்து மத வெறி முகமூடி அணிந்த
பார்ப்பனர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனம்.
2. இதுக்கு உலகெங்கும் உள்ள பார்ப்பன
மதவெறியர்கள் நன்கொடை அளித்து
நடத்தி வரும் ஒரு பயங்கரவாத அமைப்பு.
3. இதுதான் கோட்சே மூலம் காந்தியை சுட்டு கொன்றது. இதுதான் சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் அரசியல் படுகொலை.
இன்று இந்தியாவில்
இருக்கும் மத கலவரங்களுக்கும், சாதி மோதல்களுக்கும் இதுதான் காரணம்.
4. இந்தியாவில் பயங்கரவாத செயல்கள்
இன்று அரங்கேற காரணம் இந்த
அமைப்பு தான்.
5. இதன் நோக்கம் பார்ப்பனர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதும் மற்றவர்கள் அடிமையாக ,
தீண்டத் தகாதவர்களாக
இருக்கவேண்டும் என்பதுவே இதன்
குறிக்கோள்.
6. இது உலகின் மிக பெரிய பாசிச
அமைப்புகளில் பயங்கரமானது.
7. இந்த அமைப்பில் ராணுவ தளபதி
முதல்,
நீதிபதி வரை உறுப்பினர்களாக இருப்பார்.
பெரும்பாலும் "பார்ப்பனர்கள்"
அதிகாரத்தில் இருப்பர்.
8. இந்த அமைப்பில் அடியாளாக "ஆதிக்க சாதி" இளைஞர்கள் இருப்பார்கள். ஒடுக்கப்பட்ட மற்றும்
தலித் மக்களுக்கு எதிராகவும்,
சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும்
கொலைகள் -குற்றங்கள் நடத்த
பயன்படுத்தப்படுவர்.
9. இவர்கள் மக்களிடம் அதிகமான மூட
நம்பிக்கை கருத்துக்களை பரப்புவர்.
புராணத்தில் சொல்லப்பட்ட கதா
பாத்திரங்களை உண்மையான
கடவுள்கள் என மக்களிடம் பிரச்சாரம்செய்து மக்களை மூட நம்பிக்கையில்
புதைப்பார்கள். ராமன் என்பவன் ஒரு
கதையின் கதா பாத்திரம் அதை உண்மை கடவுள் என்று மக்களிடம் பரப்பி ,
அந்த கடவுளின் கோவில் பாபர் மசூதி
உள்ள இடத்தில் முன்பு இருந்தது என்று பொய் சொல்லி அப்பாவி
இந்துக்களை
இஸ்லாமியருக்கு எதிராக திருப்பி பாபர் மசூதியை குண்டு
வைத்து இடித்து இந்த நாட்டில் பயங்கரவாதத்தை
வித்திட்டனர்.
11. விநாயகர் ஊர்வலம் ஒன்று முன்பு வடநாட்டில் மட்டுமே இருந்த ஒன்றை இங்கே தமிழ் நாட்டிலும்
கொண்டு வந்து மதநல்லிணக்கத்தை
சிதைத்தனர்.
அந்நேரங்களில் சட்ட ஒழுங்கு அழிக்கபடுகிறது.
12. இவர்கள் அரை டவுசர் போட்டு,
கையில் தடியுடன் , பொது சாலையில் இஸ்லாமியருக்கு எதிராக முழக்கம் போட்டு ஊர்வலம் போவார்கள்....
இவர்களுக்கு, முழு டவுசர் போட்ட "காவல் துறை " முழு பாதுகாப்பு கொடுக்கும்.
13. இவர்களது அமைப்புக்கு ஒய்வு
பெற்ற காவல்துறை அதிகாரிகள் ,
ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள்
ஆயுத பயிற்சி, துப்பாக்கி சுடுதல்,
குண்டு வைத்தல் ஆகிய பயிற்சிகளை
கொடுப்பார்கள்.
14. ராணுவ கிடங்கிலிருந்து மிக
எளிதாக இவர்களுக்கு ஆயுதங்கள் கிடக்கும்.
15. பெரும்பாலான அரசுகள் (மத்திய -
மாநில அரசுகள் ) இவர்களின் அமைப்பு
மீது பெரிய குற்றவியல் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்காது என்பது யதார்த்தம்.
16. இந்த அமைப்புகளின் தலைவர்கள்
"மாற்று மதத்தினரை இழிவு படுத்தும்
உரைகளை பொது இடங்களில் வாசிப்பர் -
அரசு இயந்திரம் கண்டு கொள்ளாது.
17. சமஸ்கிருதம், இந்தி இவை இரண்டையும் எல்லோரும் படிக்க
வேண்டும் என வற்புறுத்துவார்கள்.
பசு மாட்டை தெய்வம் என்று சொல்லி
"மாட்டு கறி உண்பதை தடை" செய்வார்கள்.
18. அதிகமான "அம்மண-சாமியார்கள் -
பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி
திரிவார்கள் .. அவர்களை இவர்கள்
"ரிஷிகள் அமைப்பு என " ரவுடிகளாக
பயன்படுத்தி கொள்ளுவார்கள்.
19. இவர்களின் மூட நம்பிக்கை
கருத்க்க்களை எதிர்க்கும் -
அறிவுஜீவிகள் , எழுத்தாளர்கள் ,
கம்யுனிஸ்டுகள் , பகுத்தறிவாளர்கள் ,
பெரியாரிஸ்டுகள் ஆகியோர்களை
தாக்கி கலவரம் செய்வர் - பல நேரங்களில்
கொலையும் செய்வர் --இப்படி பல அறிஞர்களை கொலை
செய்திருக்கின்றனர்.
20. இவர்கள் பல துணை அமைப்புகளை
வைத்துள்ளனர்.
அவைகள்:
விஷ்வ ஹிந்து பரிசத்
பஜ்ரங் தள்
ஹிந்து முன்னணி
ஹிந்துஸ்தான் விராத்
நிர்மான் சபா
ஹிந்து சபா
அகில பாரத் வித்யார்த்தி
பவன் என்ற மாணவர் அமைப்பு
சேவா தள்
இந்து மக்கள் கட்சி மாநில சுயாட்சி கொண்ட சிவசேனா
ரன்பீர் சேனா (பிகாரில் நில பிரபுக்கள் படை )
மற்றும் அரசியல் கட்சியாக -பாரதிய ஜனதா
பார்டி. BJP.
21. பெயருக்கு தேச பற்று என்று
கூச்சலிடுவார்கள் - இந்திய தேசிய மூவண்ண கொடியை இவர்களது
அமைப்பு எப்போதும் ஏற்றுக் கொள்ளாது.
22. இவர்களின் தலைமை பீடம் "(RSS )
நாக்பூரில் , சென்ற ஆண்டு வரை
தேசிய கொடி ஏற்றப் படவே இல்லை.
23. இவர்களின் அமைப்பு " சமூக நீதிக்கு
-இடஒதுகீட்டு எதிரானது".
24. இவர்களது அமைப்பு சமத்துவத்தை
எதிர்க்கும் ஒரு பாசிச அமைப்பு.
25. உரிமை -ஜனநாயகம் அதற்கான போராட்டம் - இவற்றை அடிப்படையிலே
மறுக்கும் கொள்கை கொண்டது - அந்த
தருணத்தில்-ரத்தகளரி
கொண்டு போராட்டங்களை
ஒடுக்கவேண்டும் என்ற
கொள்கையை கொண்டது - அங்கங்கு உள்ள அரசு இயந்திரங்கள் மூலம் அதை செய்து
கொண்டு இருக்கிறது.
26. இந்தியாவில் இதுவரை 10000
மேற்பட்ட கலவரங்களை தூண்டி
லட்சக்கனக்கான மக்களை காவு வாங்கி
உள்ளது.
26. உயர் சாதி - கிழ் சாதி - தீண்டாமை
என்பவை - மனுதர்ம -வர்ணாசிரம
கொள்கையை உயிர் மூச்சாக
கொண்டவை.
27. இன்றைய சூழலில் தமிழ்
நாட்டில்எல்லா சாதி
அமைப்புகளிலும் "
இவர்கள்தான் "தலைமை பொறுப்பை
கைபற்றி கொண்டனர்.
( கோகுல்ராஜ்
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட
"யுவராஜ் கூட ஆர்.எஸ். எஸ் அமைப்பினன் என்பது
குறிபிடத்தக்கது..)
நன்றி-கவிஞர் அறிவுமதி

மனைவியை ஐயருக்கு கூட்டிக்குடுத்து நாயன்மாரான இயற்பகையார்

மனைவியை ஐயருக்கு கூட்டிக்குடுத்து நாயன்மாரான இயற்பகையார் - காரித்துப்புர மாதிரி இருக்கு இந்துமதம்...


காவிரிப்பூம் பட்டினத்தில், வைசியர் குலத்தில் பிறந்த இயற்பகையார். 63 நாயன்மார்களில் இவனும் ஒருவன். சாமியார்கள் (ஐயர்) எதைக்கேட்டாலும் மறுக்காமல் கொடுத்து வருபவன். இவரது ஏமாளித்தனத்தை, புரிந்து கொண்ட சிவனடியார் ஒருவர் (ஐயர்) இயற்பகையாரிடம் வந்து ஒருமுறை, அவரது மனைவியைக் கேட்கிறார்.
(சிவனடியாருக்கு எதற்கு அவரது மனைவி? அப்படி அவர் கேட்பது நியாயமா? நல்லொழுக்கமா? என்றெல்லாம் வேள்வி கேட்ககூடாது.) சிவனடியார் (ஐயர்) உருவில் வந்து சிவனே கேட்டார் என்று இவரைப்பற்றி பெருமையுடன் கூறுகிறார்கள். அவ்வாறு முட்டாள் தமிழன் நம்பவைக்கப்பட்டுள்ளான்.
மானமும், ரோஷமும் உள்ள மனிதன் தனது மனைவியை கேட்டவனை என்ன செய்து இருப்பான்? அப்படியெல்லாம் இயற்பகையார் மானம், ரோசம், போன்ற பண்புகளோ, ஒழுக்கமோ பற்றி கவலைப்படவில்லை. சந்தோசமாக, "என்மனைவிதான் உங்களுக்கு வேண்டுமா? இதோ, எடுத்துகொள்ளுங்கள். அவளை உங்களுடனே கூட்டிக் கொண்டு போங்கள். என்று அனுப்பிவைக்கிறான்.
அவனுக்குதான் புத்தி இல்லை, ஒழுக்கம் இல்லை, சிவனடியாரான உனக்குமா அறிவில்லை? நீ எப்படி அவனது மனைவியைக் கேட்கலாம்? என்று அவனது உறவினர்கள், நல்லொழுக்கத்துடன் வாழ்ந்துவந்த தமிழர்கள் கோபப்படுகிறார்கள். இந்த அநீதியை, அக்கிரமத்தை தடுக்கிறார்கள்.
இதைபார்த்த இயற்பகையார், "ஐயர் உருவத்தில் வந்த சிவனையே தடுக்குறீங்களா.." என்று தனது மனைவியை சிவனடியார் அழைத்து போவதை தடுத்த, தனது உறவினர்கள் அனைவருடனும் எதிர்த்து போரிட்டு, உறவினர்களை வெட்டி வீசிவிட்டு, சிவனடியாருடன் (ஐயருடன்) தனது மனைவியை அனுப்புகிறான்.
அதுமட்டுமல்ல திருச்சாய்க்காடு என்ற இடம் வரை அவர்களுக்குப் பாதுகாப்பாக பின்தொடர்ந்து செல்கிறான். அப்படிப்பட்டவரை, இத்தகைய நற்பண்பு, நல்லொழுக்கம் உள்ளவரை, சும்மா விட்டுவிட முடியுமா? அரிய இந்த செயலைச் செய்த அவரது நற்பணியை நினைவு கூற வேண்டும், அவரது வழியில் நாம் நடக்க வேண்டும் என்று, அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவனாக இயற்பகையாரை வைத்து, போற்றி புகழ்ந்து வருகிறது இந்துமதம். இந்த கருமத்த நம்மை வழிபடவும் வைத்துள்ளார்கள்.
பொண்டாட்டியைக் அடுத்தவனுக்கு கூட்டிகொடுத்தவனும், கூட்டிப்போன சிவனடியாரும் பிராமணீயத்தின் பிரதிபலிப்பா? இல்லை, இதுதான் தமிழர்களின் உன்னத நாகரீகமா? இந்து சாமி கும்புடுறவனுக இப்படித்தான் பண்ணிட்டு இருக்கீங்களா...? டே...

குதிரை வண்டியில் வந்தால் எரிகிறது என்றால் பார்ப்பன தன்மை உன்னை ஆழ்கிறது என்று அர்த்தம்

பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட விட மாட்டேன் என்ற அதே ஊரில்
பன்றிக்கு பூணுல் போடுவோம் என்ற அதே ஊரில்
மாநாட்டு பதாகைகள் மாட்டு சாணத்தால் மதவாதிகள் அளித்தபோதும்
அதே இடத்தில்
திராவிடர் கழகத்தின் தலைவர்
தமிழர் தலைவர் ஆசிரியர்
ஆயிரமாயிரம் திராவிட இளைஞர்கள் சூழ,
குடந்தை நகரில் சாரட் வண்டியில்
பவனி வருகையில்,
தமிழர் உள்ளமெல்லாம் மகிழ்கிறது.
பார்ப்பனீய நஞ்சூறிப் போன நெஞ்செல்லாம்
நெருப்பு வைத்த பஞ்சைப் போல் எரியுது.
அன்றைக்கு
(ஈரோடு திராவிடர் கழக மாநாடு -1948 அக்டோபர்)
பெரியார் அண்ணாவை சாரட் வண்டியில் அழைத்துவந்த போதும்
அப்படித்தான் பார்ப்பனியத்தின் அடிவயிறு
பற்றி எரிந்தது
-
இன்று
குடந்தை திராவிட மாணவர் கழகத்தின் பவளவிழா மாநில மாநாடு (8.7.2018) ஆசிரியர் குதிரை வண்டியில் வந்தால் எரிகிறது என்றால் பார்ப்பன தன்மை உன்னை ஆழ்கிறது என்று அர்த்தம்.

எல்லா குப்பைகளும் ஐக்கியமாகும் இடம் திராவிட எதிர்ப்பு எனும் புள்ளி

ஊரே ஜன்டாவ அடிச்சு தொவைச்சுட்டு இருக்கும் போது, இந்த குபீர் பகுத்தறிவாதிகள் எல்லாம் தனி ட்ராக்ல மானமிகு ஆசிரியர் மீது சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களின் தர்க்கம் எப்படி இருக்கும் என்றால் தன்னை ஆகச்சிறந்த அறிவாளி என்று காட்டிக்கொள்ள தலைவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பது இதில் பெரியாரே சொல்லியிருக்கிறாரே உன் புத்திக்கு எது சரி என்று படுகிறதோ என்ற டயலாக்கை வேற துணைக்கு எடுத்துக் கொள்வது.
தமிழ்நாட்டில் இந்த வெங்காயங்களுக்கும் கமலஹாசனுக்கும் தான் போட்டி போல!
இவர்களின் பகுத்தறிவு இப்படி தான் சிந்திக்கும்,
1. கலைஞரின் வீட்டில் பெண்கள் கோவிலுக்கு போகிறார்கள் அவரெல்லாம் ஒரு பகுத்தறிவாதியா?
2. கலைஞர் மஞ்ச துண்டு அணிகிறார் இது பகுத்தறிவா?
3. ஸ்டாலின் தன் கட்சியில் 90% பேர் இந்துக்கள் என்று கூறினார் அவரெல்லாம் இந்துத்துவாவை எதிர்ப்பாரா
4. ஸ்டாலின் எப்படி குங்குமம் வைக்க அனுமதிக்கலாம் அவர் கண்டிப்பாக இந்துத்தவாவை எதிர்க்க மாட்டார்
இதில் சிறப்பு என்னவென்றால், இந்த மாதிரி திக,திமுக,கலைஞர் எதிர்ப்பில் காவி மற்றும் சாதிவெறியர்கள் ஸ்லீப்பர் செல்கள் இந்த அரைகுறையாய் வெந்தவர்கள் உடன் கூட்டணியில் இருப்பர்.
எல்லா குப்பைகளும் ஐக்கியமாகும் இடம் திராவிட எதிர்ப்பு எனும் புள்ளி.

தேர்தல் அரசியலில் ஈடுபட்டதினால் திராவிட இயக்கம் அடைந்த பலன் என்ன, பாதகம் என்ன?

பெரியாரின் விருப்பத்திற்கு மாறாக அண்ணா தேர்தல் அரசியலில் ஈடுபட்டார். இதனால் திராவிட இயக்கம் அடைந்த பலன் என்ன, பாதகம் என்ன?
எழுத்தாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன். :
என்னைப் பொறுத்தவரை, அதிகாரப் பகிர்வு என்கிற விஷயத்தில் காந்தியை விட நேருவிடமும், பெரியாரை விட அண்ணா, கலைஞரிடமும் அதிக மரியாதை உண்டு.
காரணம் இவர்கள் தங்கள் கைகளில் கறைபடிவதற்கு அனுமதித்துக் கொண்டார்கள்.
மார்க்சை விட லெனின் பெரிய ஆள். ஏனெனில் அவர் கொள்கைகளை மட்டும் பேசாமல் ஒரு அரசையும் நடத்த வேண்டியிருந்தது.
நீங்கள் நம்பும் ஒரு கொள்கையை, அரசு என்கிற இயந்திரத்தோடு தினந்தோறும் எதிர்கொள்வது மிகப்பெரிய சவால். இதுதான் மிகக்கடினமான பணி.
அரசியலில் நுழையும்போது தன் மீது புழுதி வாரி இறைப்பார்கள் என்பதும், சில விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டிவரும் என்பதும் அவர்களுக்குத் தெரியாமல் இல்லை.
ஆனாலும் மாற்றம் என்பது அந்த அரசு இயந்திரத்தினால் தான் சாத்தியம் என்பதை அவர்கள் அறிந்திருந்திருந்தார்கள்.
வள்ளுவனாக இருப்பது சுலபம். வள்ளுவன் சொல்படி கேட்டு நடக்கிற அரசனாக இருப்பது கடினம்.
தத்துவத்தை முன்வைப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் எழாது. தத்துவத்தை செயல்படுத்துபவன் சிலுவையை சுமக்க வேண்டியவனாக இருக்கிறான்.
எனவே அவர்கள் இருவரையும் ஒப்பிடுவதே தவறு என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

அவர் மட்டும் இல்லைனா பெரியார் திடலுக்கு பூட்டு போட்டிருக்க வேண்டியிருந்திருக்கும்

ஆசிரியர் மீது இவங்களுக்கு என்ன காண்டுனே தெரியலை.. ஆனா, ஊனா பெரியாரின் கொள்கைகளைப் பரப்பாமல் பணமாக்கி விட்டார்னு மொன்னையா ஒரு விமர்சனம் வைப்பாங்க..
அவர் மட்டும் இல்லைனா பெரியார் திடலுக்கு பூட்டு போட்டிருக்க வேண்டியிருந்திருக்கும் என்பதே உண்மை.. தந்தை பெரியாரின் இறுதிக் காலத்திலேயே வருமான வரித் துறையைக் கொண்டு கழகத்தை முடக்க எல்லா முயற்சிகளையும் மேற் கொண்டது மத்திய அரசு. அய்யாவிற்குப் பின் மணியமையார் காலத்தில் அவரை மிசாவில் சிறையில் தள்ளி 60 லட்சம் வரி கட்ட வேண்டும் என்றது. வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.. இதற்காக கழகத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள், மேல் முறையீடுகள் என அனைத்திலும் கழகத்திற்கு எதிராகவே தீர்ப்பு வந்தது..
ஆசிரியர் தலைமைப் பொறுப்பு வந்த பின்னே இதை டிரிபியூனலுக்கு கொண்டு சென்று, வழக்கை வென்று, வருமான வரித் துறை அதுவரை வசூலித்த தொகையை வட்டியோடு திரும்பப் பெற்றது வரலாறு..
அதனால, ஆசிரியரை குதிரை வண்டில மட்டுமில்ல.. பெரிய தேர் கூட வைச்சு கூட்டிட்டு வருவோம்.. வயிறு எரிஞ்சா பஞ்ச காவியா குடித்துத் தணிக்கவும் !

மனிதர்களை அடிமைப்படுத்துவதற்கு மிகச்சிறந்த ஆயுதம் கற்பனை

மனிதர்களை அடிமைப்படுத்துவதற்கு மிகச்சிறந்த ஆயுதம் கற்பனை.
யார் மிகச்சிறந்த சுவாரசியமான கதைகளை காவியங்களை அவர்களுக்கு சாதகமாக உருவாக்குகிறார்களோ அவர்களால்தான் மற்றவர்களை எளிதில் அடிமைப்படுத்த முடிகிறது.
பல்வேறு பழங்குடிகளிடமும் ஆன்மா, கடவுள் நம்பிக்கைகள் இருந்தாலும் அவர்களில் யார் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இல்லை.
முதன் முதலில் மக்களை அடிமைப்படுத்துவதற்கு கதைகளை உருவாக்க வேண்டும்.
அதாவது கடவுள் மனிதர்களை தலையிலிருந்தும், மார்பிலிருந்தும் இடுப்பிலிருந்தும் காலில் இருந்தும் படைத்தார், தலையில் பிறந்தவர்கள் உயர்ந்தவர்கள், காலில் பிறந்தவர்கள் தாழ்ந்தவர்களென்று முதல் கதையை உருவாக்கினார்கள்.
இதை கேட்கிற ஆட்கள் சும்மா இருப்பார்களா? ஏன் கடவுள் எங்களை தாழ்ந்தவர்களாக படைத்தார் என்று கேட்டார்கள்.
இந்த கேள்விகளை சமாளிக்க அடுத்த கதையை உருவாக்கினார்கள் அதாவது முன்ஜென்மம், மறுஜென்ம கதை. அதாவது போன ஜென்மத்தில் நீ தவறு செய்தாய் அதனால் இப்பொழுது கஷ்டப்படுகிறாய். இதையெல்லாம் பொறுத்துக்கொள் அடுத்த ஜென்மத்தில் சரியாகிவிடும்.
இந்த கதையை கேட்டு உண்மை என்று நம்பும் யாராவது ஏன் என்னை இப்படி அடிமைப்படுத்துகிறாய் என்று கேட்பார்களா? விதி என்று கடைசி வரை அடிமையாய் இருப்பார்கள். அப்படித்தான் இரண்டாயிரம் வருடங்களாக நம் மக்கள் அடிமையாக இருந்தனர்.
மக்கள் அடிமையாக இருப்பது அரசர்களுக்கு வசதி. அதனால்தான் இந்த கதைகளை ஊர் ஊராக பரப்ப மன்னர்கள் ஆதரவளித்தனர். குப்தர்கள் ஆட்சிக்காலத்தில் மகாபாரதம் எழுதப்பட்ட்டு ஊர் ஊராக பாரதம் பாட தனி மானியம் ஏற்படுத்தினார்கள்.
அதற்கு பிறகு மக்களே மனமுவந்து இதை கிராமத்திருவிழாக்களில் பாரதம் பாட வைத்தனர்.
உலகில் எங்கு சுரண்டல் அதிகம் நடைபெறுகிறதோ அங்குதான் புரட்சி முதலில் ஏற்பட்டிருக்க வேண்டும். அதன்படி பார்த்தால் பிரஞ்சுப் புரட்சிக்கு முன்பாகவே இந்தியாவில் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கு எந்த முனுமுனப்பும் இல்லை.
அதற்கு காரணம் எளிய மக்கள் இந்த கதைகளை நம்பினர். தாங்கள் இப்பொழுது சுரண்டப்படுவதற்கு காரணம் போன ஜென்மத்தில் செய்த பாவம் என்று நம்பினர். விதி என்று நம்பினர். அப்படிப்பட்ட மக்களிடம் சுயமரியாதையுணர்வு இருக்காது.
நாம் தொடரந்து அடிமையாக இருந்தது வாளினால் ஆன பலாத்காரத்தால் அல்ல. கற்பனையான கதைகளை நம்பியதால்.
இங்கு உருவாக்கப்பட்ட ஒவ்வொரு புராணமும், காவியமும் நன்கு திட்டமிடப்பட்டு பெருவாரியான மக்களை அடிமையாக வைத்திருக்க ஒரு தரப்பிற்கு சாதகமாக எழுதப்பட்டவை.
புராணங்களை கதைகளாக பாருங்கள், அதை உண்மையென்று நீங்கள் நம்பும் தருணத்தில் அடிமையாவீர்கள்.

சாரட்டின் சக்கரத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு....

சாரட்டின் சக்கரத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு....
===========================================


நிற்க, தொடக்கத்திலேயே ஒன்றைச் சொல்லிவிடுகிறேன்.
இந்தக் கட்டுரை “அப்படித் தான் செய்வோம்! இப்போ என்னான்றீங்க?” என்று தான் முடியப் போகிறது. எனவே, அதை மனதில் கொண்டு கட்டுரையை வாசிக்கக் கோருகிறேன். ஆனால், நிச்சயம் பலரின் கேள்விகளுக்கான விளக்கமும், விவாதங்களுக்கான பதிலும் இருக்கும்... குறிப்பாகப் புதிய தோழர்களுக்கு! இனி மேற்கொண்டு செல்க!
*****************************************************************


கடந்த 20 நாட்களில் மட்டும் இது மூன்றாவது முறை! எங்கள் மீதான அவதூறுகளும், பொய்ப் பிரச்சாரங்களும், அவற்றுக்கு நாங்கள் பதில் சொல்வதும் எங்களுக்குப் பழகிப் போனவை!
கடந்த மாதத்தின் மத்தியில், ஆசிரியர் பேரன் தம்பி கபிலன் திருமணம் ஜாதி பார்த்து, தாலி கட்டி நடந்த திருமணம் என்றொரு அவதூறு; 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தோழர் ஹரிஷின் திருமண காணொளியை எடுத்துப் போட்டு, இது ஆசிரியர் பேரனின் திருமணம் என்றார்கள். விஜயபாரதம் வரை அந்தப் பொய் வெவ்வேறு வடிவங்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. உரிய பதில்கள் வழங்கப்பட்டுள்ளன. பொய் என்பதற்கு சான்றுகளுடன் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மற்றொன்று. ”பெரியார் திடலில் திராவிடர் கழக ஏற்பாட்டில் ’காமராஜர் காலம் இருண்ட காலம்’ என்ற தலைப்பில் வே.மதிமாறன் பேசினார். சவாலுக்கு வருவாரா வீரமணி?” என்று ‘ஒன்று’ மல்லுக்கு வந்தது. அக் கூட்டத்தினை திராவிடர் கழகம் ஏற்பாடு செய்யவில்லை; தலைப்பும் அது இல்லை; கூட்டத்தின் நோக்கமும் அது இல்லை; வே.மதிமாறன் பேச்சிலும் அப்படி இல்லை; இதற்கும் ஆசிரியர் கி.வீரமணிக்கும் தொடர்பே இல்லை என்பதெல்லாம் தெரிந்தபின்னும் அவதூறுக்கு மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கவில்லை அளந்துவிட்ட ‘அவாள்’ சேவகர்கள்.
வீரமணி பல்லக்கில் போனார் என்பது நேற்று எழுப்பப்பட்ட இன்னொரு அவதூறு.
எங்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாம் - அவதூறுகளும், பொய்ப் பிரச்சாரங்களும் தான் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபணமான பின், அதை நேர்மையாக ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் இல்லாதவர்கள் தான் பெரும்பாலோர் என்று தெரிந்தும் தான் பொறுமையாக விளக்கங்களும் தருகிறோம். காழ்ப்புணர்ச்சியும், வயிற்றெரிச்சலும் பாவம் அவர்களை வாட்டுகின்றன என்பதைத் தெரிந்ததால் பரிதாபமும் படுகிறோம். காரணம் - இது கடினமான, அவர்கள் அறிவுக்கு சரி என்று படவோ, பட்டாலும் ஏற்பதற்குத் துணிச்சல் அவ்வளவு எளிதில் வந்துவிடவோ இயலாத கொள்கை. அதனால், எங்காவது குறை கண்டு அதை சாக்குச் சொல்லி நாம் ஒதுங்கிக் கொள்ளலாமா என்று தான் அவர்களின் மூளை தேடும். போகட்டும்.
இவற்றில் மூன்றாவதான ஆசிரியர் பல்லக்கில் தூக்கி வரப்பட்டார் என்ற அவதூறு குறித்து நேரடியாகத் தொடர்பும், மாநாடு - பேரணியை நடத்திய திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் பதில் சொல்லக்கூடிய உரிமையும் உடையவன் என்ற வகையில் நான் எழுதுவது பொருத்தமானதாக இருக்கும்.
ஆசிரியர் கி.வீரமணி அவர்களை விமர்சித்துவிட்ட காரணத்தினாலேயே அவர்கள் அனைவரையும் சங்கிமங்கிகள், காவிக் கூட்டத்தினர் என்று வகைப்படுத்திவிட நான் விரும்பவில்லை. நான் பார்த்தவரை அவர்களில் சில வகையினர் உண்டு.
1. நேரடியாகப் பார்ப்பனர்கள்; ஆர்.எஸ்.எஸ்காரர்கள்; பார்ப்பனர்களின் அடிமையாகத் தான் இருக்கிறோம் என்று தெரிந்து, கால் நக்கிக் கிடப்பதில் சுகம் கண்டவர்கள்; டம்ளர்கள்
2. தங்களுக்கு நம்புவதற்கு வசதியாக எது வந்தாலும், அதை எவ்வித ஆராய்ச்சியும், கேள்வியும் இல்லாமல் அப்படியே பார்வேர்டு செய்யும் பார்வேர்டிஸ்டுகள்; பொதுப் புத்திக்காரர்கள்
3. திராவிடர் கழகம் என்ன செய்தாலும், அதில் எதையாவது நொட்டை சொல்லத் தேடும், இயல்பாகவே திராவிடர் கழகத்தின் மீது, ஆசிரியர் மீது கடுப்பில் இருக்கும் பார்ப்பனரல்லாத ஜாதி வெறியர்கள்.
4. உட்டோப்பியாவில் வாழும் முற்போக்காளர்கள், அதிலும் பெரும்பாலும் இயக்கம் சாராதவர்கள்.
5. இயக்கங்களில் பங்கேற்காமல், புதிதாக பெரியாரையோ, அண்ணல் அம்பேத்கரையோ பேசத் தொடங்கியுள்ளவர்கள். இப்படி செய்வதால் கொள்கைத் தீட்டு எதுவும் பட்டுவிட்டதோ என்று பதறும் தோழர்கள். + பிறரிடம் தங்களைப் பியூரிஸ்ட்கள் என்று காட்டிக் கொள்ள விரும்பி, நடப்பு அரசியல்-சமூகச் சூழல் புரிதலின்றி எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒரு நிலைப்பாடு எடுத்தே ஆக வேண்டும் என்று கருதுபவர்கள்.
எனவே, எம்முடைய பதிலில் யாருக்கு எது உரியதோ, அவரவர் அவரவர்க்குரியதை எடுத்துக் கொள்ள வேண்டுமாய் வணக்கத்துடன் கேட்டுக் கொள்கிறேன். நாம் விளங்கவைக்க நினைப்பது கடைசிப் பிரிவினைருக்கே!
************************************************************************
’சாவு ஊர்வலம், பிண ஊர்வலம் போக வேண்டிய வயசில சாரட்டு வண்டியில ஊர்வலம் போற’ என்று சிலர் எழுதியிருந்தார்கள். இவர் மட்டுமல்ல, எங்கள் தலைவர்கள் எல்லாம் அல்ப ஆயுசில் போய்விட வேண்டும்' என்று சிலர் நினைக்க நினைக்க, பாவம் எம் தலைவர்கள் எல்லாம் நிறைவாழ்வு வாழ்ந்து, ஆரியத்துக்கான சவப்பெட்டியில் ஆணி அடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
தலைவர் வீரமணி அவர்களுக்கு இன்று நேற்றல்ல 30 ஆண்டுகளுக்கு முன்பே பாடை கட்டித் தூக்கினார்கள் பார்ப்பனர்கள். பின்னர் “சக பார்ப்பான் பிணத்தையே தூக்காத பார்ப்பான் சூத்திரன் வீரமணிக்கு பாடை கட்டித் தூக்கினால் அதுவும் பெரியாரின் வெற்றியே” என்று ஆசிரியர் வீரமணி சொன்ன பதிலில் மூக்கறுபட்டுப் போனார்கள் என்பது வரலாறு!
அய்ந்து முறைகளுக்கு மேலாக, தன் கொள்கைப் பணிகளுக்காக உயிர்த் தாக்குதலுக்கு இலக்காகி மீண்டவர் தான்; மூன்று முறை இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னும் ஓயாமல் உழைப்பவர் தான். அதனால் உங்கள் வயிற்றெரிச்சல் எங்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.
எனவே, நீங்கள் புலம்பிக் கொண்டே இருங்கள் என்று தான் இவர்களைப் பார்த்துச் சொல்ல முடியும்.
ஆசிரியர் கி.வீரமணி பல்லக்கில் வந்தார் என்று புரளி கிளப்பியவர்களும் இவர்களே! படத்தைக் கிராப் செய்து சக்கரமும், குதிரையும் தெரியாமல் படத்தைப் பரப்பியவர்களும் இவர்களே! இதைப் பார்த்துத் தான் பல பேர் பொங்கித் தீர்த்தார்கள். பிறகு உண்மை தெரிந்தபின்னும் பின் வாங்க மனமில்லாமல், அடுத்தடுத்து சமாளிபிகேஷன் பதிவுகளைப் போட்டார்கள். குதிரைக்கு வலிக்கிறது என்று புளூ கிராஸ் அவதாரம் எடுக்கவில்லை என்பதைத் தவிர, எல்லாவிதமான வாதங்களையும் வைத்துப் பார்த்துவிட்டார்கள், பாவம்.
நிற்க,
எது வந்தாலும் அப்படியே பரப்பிக் கொண்டிருக்கும் இன்னொரு குருப் இதையும் பரப்பியது. அரசியல்வாதிகள் என்றாலே அலர்ஜி என்று தங்களைக் காட்டிக் கொள்ளும் இவர்களுக்கு, பெரியார் தொண்டர்கள் என்றால் கூடுதலாகக் கொஞ்சம் அலர்ஜி - அவ்ளோதான்!
மனிதனை மனிதன் சுமக்கக் கூடாது; மனிதனை வைத்து மனிதன் வாகனம் இழுக்கக் கூடாது என்று தடை போட்ட திராவிட ஆட்சியின் சிறப்பெல்லாம் சிலருக்குத் தெரியாது; தெரிந்துகொள்ளவும் விருப்பமில்லை. அதை தமிழகத்தில் திராவிட இயக்கம் எப்போது செய்தது? வங்காளம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் எப்போது செய்தன என்பதையும் வசதியாக மறந்துவிடுவார்கள். பல்லக்கில் தூக்கிச் செல்லக் கூடாது; பார்ப்பனர்களைச் சுமக்கக் கூடாது என்று கடந்த ஆண்டுவரை போராடி வருவதும், அரசுத் தடை இருந்தும் திருட்டுத் தனமாக பார்ப்பனர்கள் பல்லக்கில் ஏறிச் செல்ல முயன்று நடத்துவதையும் கண்டுகொள்ளவோ தெரிந்துகொள்ளவோ மூளை வேலை செய்யாது இவர்களுக்கு!
உப்புமா உழைப்பாளர்களுக்கானது என்றும், அதில் கொஞ்சம் சீனியைச் சேர்த்துக் கிண்டினால் கிடைக்கும் கேசரி பூர்ஷ்வா உணவு என்றும் தரம் பிரித்து மயிர்பிளக்கும் வாதங்களை வைக்கும் உட்டோப்பியா முற்போக்காளர்கள் ஒரு சிலர் ரொம்பப் புலம்பித் திரிந்தார்கள்!
சாரட்டு வண்டியில் தான் அழைத்து வந்தோம். நாங்கள் தான் அழைத்து வந்தோம். எங்கள் தலைவர்களை நாங்கள் கொண்டாடத் தான் செய்வோம். இதுவரையும் கொண்டாடித் தான் வந்திருக்கிறோம். எங்களுக்குத் தலைவர்கள் இருக்கிறார்கள் - நாங்கள் கொண்டாடுகிறோம். அவர்தம் உழைப்பால் பலன்பெற்ற சமூகத்தில் நன்றியுடையோர் நாங்கள்! அதைக் காட்டத் தான் செய்வோம்.
குறிப்பாக, குடந்தை மண்ணில் எங்களுக்கு இது வெற்றிப் பேரணி!
சங்கர மடத்தின் போலிக் கிளையின் பூர்வாசிரமம் என்று சொல்லப்படும் குடந்தையில்...
இரட்டை தண்ணீர்ப்பானை வைத்து கல்லூரியில் பேதம் பார்த்த குடந்தையில்...
அக்ரஹாரத்தில் இருக்கும் கழிவறையைச் சுத்தம் செய்யவோ, மலத்தை எடுக்கவோ கூட தாழ்த்தப்பட்டவர்கள் வரக்கூடாது; தாழ்த்தப்பட்டவர்கள் தொட்டால் எங்கள் மலம் கூட தீட்டாகிவிடும் என்று நகராட்சியில் தீர்மானம் போட்ட குடந்தையில்...
தங்களுக்கென காவிரியில் தனிப் படித்துறை என்று கட்டிக் கொண்ட குடந்தையில்...
இது எங்களின் வெற்றிப் பேரணி தான்!
அந்த வெற்றியைக் குறிக்கும் விதமாக சாரட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தோம்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக நாளும் உழைக்கும் தலைவரை அப்படித் தான் அழைத்து வருவோம்! இப்போ என்னான்றீங்க?
இப்போது மட்டுமல்ல... இதற்கு முன்னும் பல முறை அழைத்து வந்திருக்கிறோம்.. இனியும் அழைத்து வருவோம்!
தோளில் துண்டு அணிவது கூடாது என்றவர்களை எதிர்க்கும் அடையாளமாகத் தான் அண்ணா, கலைஞர், ஆசிரியர் உள்ளிட்ட இரண்டாம் தலைமுறை திராவிட இயக்கத் தலைவர்கள் துண்டு அணிந்தார்கள். வரலாற்றைத் தொடர்ந்து படிக்காவிட்டால் இந்தத் ‘துண்டு வரலாறு’ புரியாமல், துண்டு துண்டாகத் தான் தோன்றும்.
சாரட்டு வண்டிக்கே இப்படின்னா? தந்தை பெரியாரைப் போலவே, தமிழர் தலைவர் ஆசிரியருக்கும் எடைக்கு எடை வெள்ளிக் காசுகள், காசுகள், ரூபாய் தாள்கள், பிறகு வெள்ளி, தங்கம் கொடுத்தோம். இனியும் கொடுப்போம். ஏனெனில் அவை எப்போதும் அவர் வீட்டுக்கோ, இரத்தக் குடும்பங்களுக்கோ போகப் போவதில்லை. அனைத்தும் தந்தை பெரியார் தந்த சொத்துகளைப் போல், கொள்கை பரப்பப் பயன்படும். அவருக்கு எடைக்கு எடை வெள்ளியாகத் தந்த பணம்தான் டெல்லியில் இடமானது. எடைக்கு எடை தங்கமாகத் தந்த பணம் தான் பெரியார் மய்யமானது. அவருக்குத் தரும் ஒவ்வொரு காசும் இந்த இனத்திற்கான பிரச்சாரத்திற்கு அடித்தளம்!
சாரட்டு வண்டிகளில் அழைத்து வரலாமா? பெரியார் காலத்தில் இப்படி உண்டா? பெரியார் இதை ஏற்பாரா? பெரியார் கொள்கையை இப்படி செய்கிறார்களே? என்று சிலர் புலம்பினார்கள். ‘பெரியாரையே அழைத்து வந்திருக்கிறோம். பெரியாரும் அழைத்து வந்திருக்கிறார்’ என்றதும், ‘பெரியாரே செய்தாலும் சரியாகுமா? இப்படிச் செய்வது பகுத்தறிவுக்கு முரணாகாதா? ஏதாவது கொள்கைக் குத்தமாகிவிடப் போகிறது?’ என்றெல்லாம் பிறகு டிராக் மாற்றினார்கள். அவ்வளவு பதற வேண்டிய அவசியமும் இல்லை. இது வழக்கமான நடைமுறை தான். இந்த வரலாறு தெரியாததனால் பலர் குழம்பினார்கள்.
சாரட்டு வண்டிகளின் சரிதம்!
அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில் தலைவர்களை அழைத்துவருவது தமிழர்களின் பழக்கம் தான். வரவேற்பு உலா நடத்துவதும், வெற்றி உலா வருவதும் நம் பண்பாட்டின் நீட்சி தான்.
தந்தை பெரியாரை இப்படி அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில் அழைத்துச் சென்றது உண்டு. மாட்டுவண்டியிலோ, குதிரை வண்டிகளிலோ, திறந்தவெளி டிரக்குகளிலோ, கார்களிலோ, அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்களிலோ எல்லா ஊர்களிலும் அழைத்துச் சென்றிருக்கிறோம். முதல் சுயமரியாதை மாநாடு செங்கல்பட்டில் நடந்தபோது தொடங்கி, தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு மாநாடுகளிலும், தங்கள் சுயமரியாதை இயக்கத் தலைவர்களை தெருத் தெருவாய் இப்படித் தான் ஊர்திகளில் அழைத்துவந்து சிறப்பித்தார்கள்.
1948 ஈரோடு தனி மாநாட்டில் அறிஞர் அண்ணா, தோழர் குஞ்சிதம், தோழர் குருசாமி, தோழர் இந்திராணி பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோரை இரட்டை செங்காளைகள் பூட்டிய சாரட்டு வண்டியில் அழைத்து வந்து, உற்சாக நடை நடந்து வந்தார் பெரியார்!
1958 நவம்பர் 26 ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் சட்டத்தை எரித்து சிறை சென்ற தோழர்களில் விடுதலை ஆகியிருந்த தோழர்களுக்கான வரவேற்பு விழாவில் சிதம்பரத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார் பெரியார். அவருடன் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில், ‘அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்’ என்று ஒப்புமை காட்டி புரட்சிக் கவிஞரால் எழுதப்பட்டதுதான் ’அவர் தாம் பெரியார்.. தொண்டு செய்து பழுத்த பழம்!’ என்ற பாடல்.
1967 செப்டம்பர் 17 திருச்சியில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவில் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் அழைத்து வரப்பட்டார்கள். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று சேர்ந்து உற்சாகப்படுத்தியது பேரணி!
1971 சேலத்தில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் தந்தை பெரியார் வந்த டிரக் மீது வீசப்பட்ட செருப்பு தான் தவறி அடுத்த வண்டியில் விழுந்து, ராமனுக்கு செருப்படி வாங்கித் தந்தது.
திருவாரூர், தஞ்சாவூர், சேலம், மதுரை, காரைக்குடி என ஒவ்வொரு ஊரிலும் இத்தகைய வரவேற்புகள் நடத்தப்பட்டதுண்டு.
பேரணியில் தலைவர் வர வேண்டுமென்பதற்காக யாருமே வண்டி தராத சூழலில், ராமேஸ்வரத்தில் கடும் எதிர்ப்புக்கும், அச்சுறுத்தலுக்கும், வன்முறைகளுக்கும் மத்தியில் நடைபெற்ற மாநாட்டில், இந்தத் தலைவருக்குத் தராமல் நான் என்ன செய்யப் போகிறேன் என்று தன் சைக்கிள் ரிக்சாவின் மேற்பகுதியைக் கழற்றிவிட்டு ஒரு ரிக்சாக்காரர் தந்த வாகனத்தில் ஊர்வலம் விட்ட வரலாறுகள் உண்டு.
1993 மதுரை சமூகநீதி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், எஸ்றா சற்குணம், மலேசியா திருச்சுடர் கே.ஆர்.ஆர் உள்ளிட்டோர் அலங்கார ஊர்தியில் அழைத்து வரப்பட்டனர்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு எத்தனையோ முறை இப்படிப்பட்ட வரவேற்புகள் தரப்பட்டதுண்டு.
தலைவர்களுக்கு மட்டுமல்ல... இசைஞானி இளையராஜா அய்ரோப்பா சென்று சிம்பனி வாசித்து மேஸ்ட்ரோ பட்டத்தோடு திரும்பியபோது அவருக்கு வரவேற்பளித்து பெரியார் திடலில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது தந்தை பெரியார் தமிழிசை மன்றம். அப்போது இசைஞானியை அழைத்து வர, இதே தமிழர் தலைவர் ஆசிரியர் ஏற்பாடு செய்திருந்ததும் இதே போல சாரட்டு வண்டி தான். பாராட்ட, உயர்த்திப் பிடிக்க இது பண்பாட்டு ரீதியாக ஒரு வழிமுறை... இது ஒரு பெருமிதம். நாங்கள் இவரை உயர்த்திப் பிடிக்கிறோம் என்று சொல்லும் செய்கை.
இதையெல்லாம் தனி மனிதத் துதி என்றும், வழிபாடு என்றும் கொள்ள வேண்டியதில்லை. ஒவ்வோர் இயக்கத்துக்கும் ஒரு நடைமுறை உண்டு. திராவிட இயக்கம் தத்துவங்களையும், அதை வழிநடத்தும் தலைவர்களையும் அடிப்படையாகக் கொண்டது தான். இங்கே தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. உருவாகிறார்கள். பிற இயக்கங்களில் வேறு நடைமுறை இருக்கலாம். யாருக்கு எது சரிப்பட்டு வருகிறதோ, அதை எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு தலைவரைப் பின்பற்றுவது என்றால், அவரது சிறப்பு கருதி அவரைக் கொண்டாடத் தான் செய்வோம். தலைவர்கள் லெனினையும், ஸ்டாலினையும், சேகுவேராவையும், பகத்சிங்கையும் கொண்டாடாதவர்களா? இந்தியாவில் எவரும் பிற தலைவர்களைக் கொண்டாடுவதில்லையா? அப்படித்தான் நாங்கள் பெரியாரை, அண்ணாவை, ஆசிரியரை, கலைஞரை, அம்பேத்கரை, இன்னபிற முற்போக்குத் தலைவர்களைக் கொண்டாடுகிறோம். கண் முன்னே எங்கள் சமூகத்தை உயர்த்தியவர்களை, எங்கள் பாதுகாப்பு அரண்களை நாங்கள் தூக்கிப் பிடிப்பது கொண்டாட மட்டுமல்ல.. கூடுதலாக கேடயங்களாகவும் தான்!
எனவே, இங்கு யாரும் யாரையும் தூக்கிச் சுமப்பதில்லை. திராவிடர் கழகத்தில் சூத்திரனும் இல்லை; பஞ்சமனும் இல்லை. இங்கு எல்லோரும் இந்த இழிவுகளை உதறித் தள்ளிய தமிழர்கள் - திராவிடர்கள். வர்க்க பேதம் - வர்ண பேதம் இல்லாத இயக்கம் திராவிடர் கழகம்.
குதிரையா, மாடா, சைக்கிள் ரிக்சாவா, டிரக்கா, டிராக்டரா, மகிழுந்தா என்பதெல்லாம் சூழலையும் வசதியையும் பொறுத்தது. அதெல்லாம் ஊர்வலத்தின் ஒரு பகுதி அவ்வளவே!
இதைத் தவிர மாநாட்டில் நடந்தவை எவ்வளவோ! வழிகாட்டும் தீர்மானங்கள், வியக்க வைத்த உரைவீச்சுகள், மாணவச் செல்வங்களின் உணர்வுப்பூர்வமான முழக்கம், கட்டுப்பாடு நிறைந்த அணிவகுப்பு, எடுத்துக்கொண்ட உறுதிமொழிகள் என்று பேசுவதற்கு எவ்வளவோ உண்டு. இவை பற்றியெல்லாம் எதுவும் பேசிவிடக் கூடாது என்று தானே சாரட்டு வண்டியின் சக்கரத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மறைப்பு வேலைகளையெல்லாம் கடந்து தான் எங்கள் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறோம். இனியும் செய்வோம்.
‘இனியாவது...’ என்று ஆலோசனை சொல்ல ஆரம்பித்தால், “வெயிட் தோழர், அய்டியா கேட்கும் போது சொல்லுங்க!”
இந்த விவாதங்களில் ஒன்று தெளிவாகத் தெரிந்தது. இயக்கம் சார்ந்து இயங்கக் கூடியவர்களும், இயக்கங்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிந்தவர்களும், திராவிடர் கழகத்தவர், திராவிட முன்னேற்றக் கழகத்தவர் மட்டுமல்ல, மற்ற பிறரும், பேரணியைப் பெரிதாகக் கருதினார்கள்; அதன் வெற்றியைக் கண்டு மகிழ்ந்தார்கள்; கட்சி மாச்சரியங்களைக் கடந்து இந்துத்துவா கூட்டத்திற்கு இப் பேரணியும், அணிவகுப்பும், மாநாடும், வரவேற்பும் தந்திருக்கும் செய்தி என்ன என்பதையும் புரிந்துள்ளார்கள். இன்னும் களத்திற்குப் பழக்கப்படாதவர்களும், 'நீங்கள் இதைக் கண்டித்தீர்களா?’ என்று யாராவது நாளை கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே சகல பிரச்சினைகளுக்கும் அட்டெண்டன்ஸ் போடும் தொடக்க கால மனநிலையில் இருக்கும் இயக்கங்கள் சாராத தோழர்களுக்குத் தான் அணுகுமுறைக் குழப்பம்.
85 வயதிலும், கல்வியில் திணிக்கப்படும் அத்தனை ஆபத்துகளையும் முன்னுணர்ந்து, எச்சரித்து, ஒருங்கிணைத்து, களம்கண்டு முறியடிக்கும் எங்கள் பாதுகாவலரை, இனத்தின் விளக்கொளியை, மாணவர் சமூகத்தவர் நாங்கள் இன்னும் உயர உயர தூக்கிப் பிடிப்போம்! இன்னும் இன்னும் வேலை வாங்குவோம்! இதுவும் அவர் சொன்னது தான். எப்போதெல்லாம் அவருக்குச் சிறப்பென்று நாங்கள் செய்கிறோமோ, அப்போதெல்லாம் “இன்னும் என்னை வேலை வாங்கத்தானே இதனைச் செய்கிறீர்கள். என் ஆயுள் முடியும்வரை அப் பணியைச் செய்து கடன் தீர்ப்பேன்” என்று தான் அவர் உறுதியேற்பார்.
எனவே, வரலாற்றின் இந்த முக்கியமான தருணத்தில் சில்லறைப் பிரச்சினைகள், துருப்பிடித்த தூய்மைவாதக் குழப்பங்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு களத்திற்கு வாருங்கள். களநிலவரமும் அங்கு செயல்படுவது எப்படி என்பதும் உங்களுக்குப் புரியும். பேரணியில் சிறப்பு ஊர்தியில் தலைவர் வருவதைக் கண்ட பொதுமக்கள் எத்தனை மகிழ்வோடு இதனை வரவேற்றார்கள்; கொள்கை மாறுபாடு கொண்டவர்களாக, கடவுள் நம்பிக்கையாளராக இருந்தாலும், பார்ப்பனியத்திடமிருந்து நம்மை மீட்கும் இயக்கம், தலைமை இதோ நம் ஊரில் என்று பெருமை கொண்டார்கள் என்பதும் புரியும்.
கொஞ்சம் நீளமாகிவிட்டதற்காக வருந்துகிறேன்.
மற்றபடி இறுமாப்போடு சொல்கிறோம்.. எங்கள் தலைவர்! தன்னலம் பாராத தலைவர்! நாங்கள் தூக்கிப் பிடிப்போம்! கொண்டாடுவோம்! அப்படித் தான் செய்வோம்! இப்போ என்னான்றீங்க?


பிராமணர்களை தவிர வேறு யாரும் இல்லை

உலகத்தில் இருக்கிற எந்த முன்னேறிய சாதியும், மேட்டுக்குடி சாதியும் தாங்கள் வளர அடுத்தவர்களை சுரண்டுவது உண்மைதான். ஆனால் படிக்காதே, வருமையிலும் ஏழ்மையிலும் இரு என்பதற்காக கடவுளின் பெயரால் ஒரு தத்துவத்தை கண்டுபிடித்து அந்த தத்துவத்தை சுமத்தி மிகப்பெரிய சமுதாயத்தில் 95% மக்களை அறியாமையிலும், ஏழ்மையிலும், கல்வி அறிவு இல்லாமலும் வைத்திருக்கிற ஒரு கொடுமைக்கு சொந்தக்காரர்கள் யார் என்று சொன்னால் இந்தியாவில் உள்ள பிராமணர்களை தவிர வேறு யாரும் இல்லை.
அண்ணல் அம்பேத்கர் ❤️

ஆலயங்கள் தேவிடியா கூடமா?

ஆலயங்கள் தேவிடியா கூடமா ? - இந்தாளு உருப்படியா சொன்னது இதுவாதான் இருக்கும்..
தமிழ்நாட்டில் காந்தியார் சுற்றுப்பயணம் செய்தார். அப்பொழுது அவரிடம் கேள்வி ஒன்று மெயில் ஏட்டின் சார்பில் கேட்கப் பட்டது.
தாசிகள் இல்லத்தில் எந்த அளவு கடவுள் இருக்கிறாரோ, அந்த அளவுதான் சில ஆலயங்களில் இருக்கிறார் என்று நீங்கள் சொல்வதைப்பற்றிப் பலர் குறைபட்டுக் கொள்கிறார்களே? என்று கேட்டதற்கு,
காந்திஜி அதில் ஒரு சொல்லை மாற்றுவதற்குக் கூட நான் விரும்பவில்லை. ஒரு வகையில் அது நூற்றுக்கு நூறு உண்மைதான்.
கடவுள் எங்கும் இருக்கிறார். திருடர்கள் வாழும் குகைகளில் கூட இருக்கிறார். ஆனால் அதற்காக நாம் வழிபடுவதற்கு அந்த இடங்களுக்குப் போவதில்லையே! அதற்குப் பதிலாக ஆலயங்களுக்குத்தானே செல்கிறோம்?
ஆலயங்களில் தூய்மையான சூழ்நிலை நிலவும் என்பதற்காகத் தானே செல்கிறோம்?
அந்தப் பொருளில் தான் ஆண்டவன் சில ஆலயங்களில் இல்லை என்று நான் சொல்கிறேன். நேரடியாக அறிந்த சில ஆலயங்களைப் பற்றித்தான் இவ்வாறு கூறினேன்.
அதனால் தான் அந்த ஆலயங்களில் ஆண்டவன் இருந்தாலும் ஒரு தாசியின் இல்லத்தில் எவ்வாறு ஆண்டவன் இருப்பாரோ, அப்படித்தான் இருப்பார் என்று நான் சொன்னேன்.
இவ்வாறு நான் கூறியது சில இந்துக்களின் மன உணர்ச்சியைப் புண்படுத்துவதாக இருந்தால் அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
ஆனால் இந்து சமயத்தின் நலனுக்காகவாகிலும், என்னுடைய அறிக்கையைத் திரும்பப் பெறவோ, மாற்றவோ முடியாது
SOURCE: -(தமிழ்நாட்டில் காந்தி பக்கம் 586-587). (ஆனந்தவிகடன் 25.2.2007)

உலகத்திலேயே படைச்சவன்கிட்ட பேசுறதுக்கு பாஷை கண்டுபிடிச்ச நாடு நம்ம நாடுதான்.

உலகத்திலேயே படைச்சவன்கிட்ட 
பேசுறதுக்கு பாஷை கண்டுபிடிச்ச 
நாடு நம்ம நாடுதான்.
எவ்வளவு பெருமையா இருக்கு/
அதுவும் அந்த பாஷை குறிப்பிட்ட 
ஒரு சமூகத்திற்கு மட்டும்தான் 
தெரியுமாம்.அந்த பாஷையில 
அர்ச்சனை ,பூசை, புனஸ்காரம் 
பண்ணுனா மட்டும்தான் கடவுளுக்கு 
புரியுமாம். அவரும் மனப்பூர்வமா 
அதை ஏத்துக்கிடுவாராம். வேற 
பாஷையெல்லாம் அவருக்கு 
தெரியாதாம்.
அடப்பாவிகளா/நீங்க மட்டும் இங்கிலீஷ்,ஹிந்தி,குஜராத்தி,மராட்டி,
அது இதுன்னு கத்துகிட்டு கடவுள 
கத்துக்குட்டியா ஆக்கிட்டீங்களே/
கடவுளுக்கு கல்யாணம் முடிச்சி வைக்கிறீங்க,தேர்ல வைத்து ஊரை 
சுற்றி காட்டுறீங்க, சில கடவுளுக்கு 
சந்தோஷத்தை உண்டு பண்ண 
கூத்தியாள் வீட்டுக்கெல்லாம் கொண்டு விடுறீங்க, பாலாபிஷேகம்,
தேனாபிஷேகம்,அப்படீன்னு பல 
அபிஷேகங்களை நடத்தி உச்சி குளிர வைச்சிட்டு ஊர்ல உள்ள 
ஜனங்க பேசுற பாஷையில ஒன்னு 
கூடபடிச்சி கொடுக்காம விட்டுட்டீங்கீளே/இது கடவளுக்கு 
செய்கிற துரோகமா ஒருத்தருக்கு 
கூட தெரியலையா?😒😒😒😒

எதிர்க்கட்சியின் இலக்கணம்

கேள்வி: திமுக ஏன் எப்போது பார்த்தாலும் வெளிநடப்பு செய்கிறது. ஆளும்கட்சி செய்யும் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டுமா.?
பதில்: ஆம். கண்டிப்பாக எதிர்த்து தான் ஆக வேண்டும். அதுதான் எதிர்க்கட்சியின் இலக்கணம். இதற்கு ஒரு உதாரணம் சொன்னால் சரியாக புரியும்.
சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் என்று ஒருவர் இருந்தார். அறிஞர். தந்தை பெரியாரின் வலது கையாக விளங்கியவர். அவர் இந்தியாவினுடைய ஆலோசகராக லண்டனுக்கு சென்ற போது விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவர் எதிர்க்கட்சியாக இருந்த போது அவரை பார்த்து காங்கிரஸ் காரர் ஒருவர் கேட்கிறார்,
"நீங்கள் சட்டசபையில் இருந்து எதை எடுத்தாலும் அதை எதிர்த்து பேசியிருக்கிறீர்களே. காங்கிரஸ் ஆட்சி செய்யும் நண்பர்களை கூட நீங்கள் ஏற்றுக்கொள்ளாமல் பேசியிருக்கிறீர்களே" என்று கேட்டார்.
அதற்கு அவர், "ஆமாம் எதிர்க்கட்சி என்றால் அப்படித்தான் பேச வேண்டும். எதிர்க்கட்சிக்கு என்று சில இலக்கணங்கள் இருக்கின்றன. எதிர்க்கட்சி என்றால் அப்படித்தான் பேச வேண்டும்" என்றார்.
உடனே அவர், "சரி நாளைக்கு ஆதிதிராவிட மக்களுக்கு அனைவருக்கும் ஆளுக்கு ஒரு வீடு தருவதாக காங்கிரஸ் அரசு அறிவித்தால் அதை எதிர்ப்பீர்களா ஆதரிப்பீர்களா.?" என்று கேட்டார்.
"ஆதரிப்பேன். ஆதரித்து விட்டு ஒரு யோசனை சொல்வேன். வீடு கொடுத்தால் மட்டும் போதாது. வீடு கொடுத்து விட்டு வீட்டுக்கு 200 ரூபாய் தர வேண்டும் என்றும் சொல்வேன். அதுதான் எதிர்க்கட்சி காரனுடைய இலக்கணம்" என்றார்.
அவரைத்தான் parliamentarian, பாராளுமன்ற வித்தகர், தந்தை பெரியாருடைய மாணவர், அறிஞர் அண்ணாவினுடைய தோழர், எங்களுக்கெல்லாம் தலைவர் என்று கலைஞர் அவர்கள் குறிப்பிட்டிருப்பார்.
விமர்சனங்களில் வளர்ச்சிக்கான விமர்சனம் வீழ்ச்சிக்கான விமர்சனம் என்று இருவகை உள்ளது. ஆங்கிலத்தில் constructive criticism, destructive criticism என்று கூறுவர். இதில் திமுக செய்வது முதல் வகையை சேர்ந்தது. வளர்ச்சிக்கான விமர்சனம் constructive criticism. போக்குவரத்து துறையின் நஷ்டத்தை குறைக்க ஆலோசனை கூறியதில் இருந்து காவிரி நதிநீர் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் அறிவித்ததில் இருந்து நீட் எதிர்ப்பு மீத்தேன் எதிர்ப்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பு நியூட்ரினோ எதிர்ப்பு, இன்று லோக் ஆயுக்தா சட்டமசோதா எதிர்ப்பு வரை திமுக செய்து வருவது வளர்ச்சிக்கான விமர்சனங்களே.
இதுதான் எதிர்க்கட்சியின் இலக்கணம். அளவே வக்கில்லாதவர்கள் ஆளுங்கட்சியாக இருப்பதால் தான் அடிக்கடி வெளிநடப்பு செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது.
ஜனநாயக முறைப்படி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியால் காட்ட முடிந்தது அதிகபட்ச எதிர்ப்பே வெளிநடப்பு மட்டும் தான்.
அதனால் சட்டசபையில் வெளிநடப்பு செய்வதால் என்ன ஆகிவிடும்.?
எல்லா திட்டங்களையும் எதிர்க்கலாமா.?
செயல்படுவதே இல்லை
போன்ற ஆஃபாயில் தனமான விமர்சனங்களை வைக்காமல் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து பேசுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது...

பார்பணனின் சூழ்ச்சிகள் - சிப்பாய்க் கலவரம்

இதுதான் இந்துமத சாத்திர சம்பரதாயம் - பார்பணனின் சூழ்ச்சிகள் - விக்ட்டோரியா சாசனம்..
1857-இல் நடந்த சிப்பாய்க் கலவரமானது சுதந்திர உணர்ச்சியின் பேரில் ஏற்பட்ட கலவரம் அல்ல; அன்று ஆட்சி செய்த வெள்ளைக்காரன் செய்த சில சமுதாயச் சீர்திருத்தங்கள் காரணமாகப் பார்ப்பனர்கள் தூண்டிவிட்ட கலவரமாகும்.
அன்று இந்த நாட்டில் புருஷன் இறந்தால் அவனுடன் அவன் மனைவியையும் உயிருடன் பாடையில் வைத்துக் கயிறு போட்டுக் கட்டி, கொளுத்தும் வழக்கம் இருந்தது.
இந்தப் பழக்கத்தை பல்வேறு காலங்களில் பல முஸ்லிம் அரசர்கள் எதிர்த்துப் பார்த்து, தோல்வியே கண்டார்கள்.
வங்கத்தில் தோன்றிய இராஜாராம் மோகன்ராயின் அண்ணன் இறந்தபோது, அவருடைய மனைவியை உயிருடன் பிணத்துடன் சேர்த்துக் கொளுத்தப் பார்ப்பனர்கள் முற்பட்டார்கள். அது கண்டு அந்த அம்மாள் திமிறிக்கொண்டு ஓட ஆரம்பித்தார், பார்ப்பனர்கள் விடவில்லை; விரட்டிப் பிடித்துக் கொடூரமாகத் தாக்கி நெருப்பில் தூக்கிப் போட்டுக் கொளுத்தினர்.
இந்த நிகழ்ச்சி சிறந்த கல்விமானான இராஜாராம் மோகன்ராய் மனதை வாட்டியது. அவர் இந்தக் கொடிய உடன்கட்டை ஏறும் வழக்கத்தை முறியடிக்க முயற்சி செய்தார்.
வெள்ளைக்கார அரசாங்கத்தை அணுகி, ``என்ன நாகரிகம் வாய்ந்தவர்கள் நாங்கள் என்று பறைசாற்றிக்கொள்ளுகின்றீர்கள்.உங்கள் ஆட்சியில் தானே ``சதி’’ என்ற இந்தக் கொடுமை நடக்கின்றது? இதனைத் தடை செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.
அரசாங்கமும் ஏற்றுக்கொண்டு `சதி’ என்று உடன்கட்டை ஏறும் பழக்கத்தையும் சட்ட விரோதமாக்கியது.
வைதீகப் பார்ப்பனர்களும், மதவாதிகளும் எதிர்த்துப் பார்த்துத் தோல்வியே அடைந்தனர்.
இதுதான் இந்திய வரலாற்றிலேயே ஏற்பட்ட முதல் சீர்திருத்தமாகும்.
அடுத்து இந்த நாட்டில் பெண் குழந்தை பிறந்தால் கழுத்தைத் திருகிக் கொன்றுவிடும் பழக்கம் அன்று இருந்து வந்திருக்கின்றது. அதனையும் ஆங்கில அரசாங்கம் சட்ட விரோதமாக்கித் தடுத்து விட்டது.
அந்தக் காலத்தில் விவசாயத் தோட்டங்களுக்கும், விசேச கட்டிடம், கோவில்கள், மண்டபங்கள் கட்டுவதற்கும் சூத்திர மனிதர்களை நரபலி கொடுத்து திருஷ்டி கழிக்கும் வழக்கம் இந்தநாட்டில் நடந்து இருக்கின்றது. அதனையும் வெள்ளைக்கார ஆட்சி ஒழித்தது.
அடுத்து அது செய்த `பாவம்’ பெண்களுக்குப் பள்ளி ஏற்படுத்தியதும், ஆஸ்பத்திரி ஏற்படுத்தியதும் ஆகும்.
இதனால் பார்ப்பனர்கள் கொதிப்படைந்து, தந்திரமாகப் பட்டாளத்துக்காரன்களைத் தூண்டி விட்டுக் குழப்பம் பண்ணச் செய்தார்கள்.
முஸ்லிம் தோழர்களிடம் சென்று, ``நீங்கள் உபயோகப்படுத்தும் துப்பாக்கியில் பன்றிக் கொழுப்பு தடவி இருக்கின்றார்கள். உங்கள் மதத்துக்குப் பன்றி கூடாது. உங்கள் மத உணர்ச்சியைக் குலைக்கவே பன்றிக் கொழுப்புத் தடவி இருக்கின்றார்கள்’’ என்று தூண்டிவிட்டார்கள்.
இந்துக்களாக இருக்கின்ற சோல்ஜர்களிடம் சென்று, நீங்கள் உபயோகிக்கும் துப்பாக்கியிலும், தோட்டாவிலும் பசுமாட்டுக் கொழுப்பல்லவோ தடவி இருக்கின்றார்கள்.
இந்துக்கள் கடல் தாண்டுவது என்பது சாஸ்திர விரோதமானதாகும்.உங்களை எல்லாம் கப்பலில் ஏற்றிக் கொண்டு போய் வெளி இடங்களுக்குச் சென்று சண்டை போடச் சொல்லுகின்றார்கள்’’ என்று தூண்டி விட்டார்கள். அன்று பட்டாளத்தில் இந்துக்களும் அதிகமாக இருந்தபடியால் கலகம் பண்ணினார்கள்.
அரசாங்கத்துக்குக் கீழ்ப்படிய மறுத்ததோடு வெள்ளைக்காரர்கள் மீது துப்பாக்கியை நீட்டவும் ஆரம்பித்தார்கள்.
ஏராளமான வெள்ளைக்காரர்களும், பெண்களும் குழந்தைகளும் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். வெள்ளைக்காரர்கள் பயந்து அங்குமிங்குமாக ஓடினார்கள்.
பார்ப்பனர்கள் ஒரு படகைக் கொண்டு வந்து நிறுத்தி ``இதில் ஏறிக்கொள்ளுங்கள்; உங்களைப் பாதுகாப்பான இடத்தில் கொண்டு விடுகின்றோம்’’ என்று ஏற்றிச் சென்று, நடுக்கடலில் கொண்டு போய்ப் படகைக் கவிழ்த்துவிட்டு அத்தனை பேர்களையும் கொன்று விட்டார்கள்.
வெள்ளைக்காரனால் கட்டுப்படுத்த முடியாமல் போகவே பார்ப்பனர்களைக் கூப்பிட்டு ஏன் இப்படிக் கலகம் பண்ணுகின்றீர்கள் என்று ராணி பேசினார்.
பார்ப்பனர்கள் ``நீங்கள் எங்கள் மதத்திலே, பழக்க வழக்கங்களிலே தலையிடக் கூடாது’’ என்று உறுதி கேட்டார்கள். அதன்படி எழுதிக் கொடுக்கப்பட்டது. அதுதான் விக்டோரியா மகாராணியின் மகாசாசனம் ஆகும்.
ஆதாரம் வேணுமுனா அத படிச்சி தொலைங்க..
அறிவில்லாம இன்னும் எத்தனை நாளைக்குத்தான் மாட்டுமூளையோடு இருக்கப் போறீங்க.
உங்களுக்கெல்லாம் உடன்கட்டை ஏறுதல், பெண்சிசு கொலை பற்றிய வரலாறு தெரியாதா?
எப்படியோ ஐயர் கொடுக்குற தீர்தத்தை குடிச்சிட்டு நாசமா போங்க..

Wednesday, July 11, 2018

தஞ்சை கலைஞரின் மண்...

தஞ்சாவூர் ..
தஞ்சை திமுக.. பிற மாவட்டங்களை விட இங்கே திராவிடத்தின் வேர் ஆழ ஊடுறுவியிருக்கும்..காரணம் அதிகம்  அடிமைபட்டுகிடந்த  மக்களை விழுப்புணர்வை ஊட்டி சுயமரியாதைக்காரர்களாக்கியது திராவிடம்
தஞ்சை என்றாலே நிலகிழார்கள் மட்டுமே நினைவுக்கு வருவார்கள் .. ஆயிரம் ஏக்கர் நஞ்சை ஆயிரத்துஐநூறு ஏக்கர் புஞ்சை என ஒரு சில குடும்பங்களே ஆட்சி செலுத்தியது.. கபிஸ்தலம் மூப்பனார்  உக்கடை தேவர்..  பூண்டி  வாண்டையார் என கொடிகட்டி ஆட்சிசெய்தார்கள்.. அவர்கள் வைத்தது தான் எழுதபடாத சட்டம் ..  அவர்களை மீறி எதுவுமே நடக்காது .. யாரும் எதிர்க்க முடியாது  அவர்களது அரசியல் காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமே..
அதோடு சிறு சிறு நிலக்கிழார்கள்.. அதாவது ஐம்பது அறுபது ஏக்கர் வைத்திருப்போர்.. சிலரிடம் நூற்றுக்கணக்கில் இருக்கும் ..சில இஸ்லாமிய குடும்பங்களும் நிலகிழார்களாக இருந்தன .. பார்பனர்கள் காவிரிக்கரைகளில் இனாமா பெற்ற நிலங்கள் மற்றும் கோவில் நிலங்களோடு ஏறக்குறைய ஆட்சி செய்தார்கள்
அவர்களும் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தார்கள்.. சிறு சிறு முதலாளிகள் கூட விவசாயத்தை பிரதானமாக கொண்டவர்கள் கூட பெரும் "ஆண்டைகளின்"அருகில் தான் இருந்தார்கள்..  இவர்களையெல்லாம் மீறி சரியாக சொல்லவேண்டுமெனில் எதிர்த்து  கட்சியை வளர்த்தெடுத்தில் பெரும் பங்கு கலைஞருக்கு மட்டுமே உண்டு ..
..
ஏதாவது பேராட்டம் பொது கூட்டமென்றால் காங்கிரஸ்காரர்களை மீறி தஞ்சை மாவட்டத்தில் எதுவுமே செய்ய முடியாது மீறினால் அவர்கள் நிலங்களில் வேலையில்லை குத்தகை இல்லை.. குடும்பம் அந்த ஊரில் குடியிருக்கவே முடியாது.. எந்தவொரு போராட்டமும் ஆரம்பத்திலேயே ஒடுக்கபடும் ..
ஒருங்கிணைந்த தஞ்சையின் பழைய  மாவட்டத்தின் செயலாளராக இருந்த நீலமேகம் எங்கண்ணே நம்ப கூப்பிட்டா வரவா போறானுக என்ற பேச்சை கேட்காமல் கிராமம் கிராமமாக மக்களை சந்தித்து .. திராவிட கொள்கைகளை ..யாருக்காக திமுக  துவங்கபட்டதென்பதை.. யாருக்கும் அடிமையாக இருக்க தேவையில்லை என  சுயமரியாதை தட்டியெழுப்பி .. மரியாதையோடு நடத்தாதவர்களோடு நமக்கென்ன வேலை என கூறி.. மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்தவர் கலைஞர் .. பிற மாவட்டங்களை விட தஞ்சை மீது கலைஞருக்கு தனி கவனமிருக்கும்.. சொந்த மாவட்டமென்பதால் மட்டுமல்ல சொந்த மண்ணில் எப்படி புறக்கணிக்கபடுகிறோம்.. ஒரு சில  குடும்பங்களும் ..சில பார்பனர்களும் மட்டுமே ஆட்சி செய்கின்ற நிலையை நேரில் கண்டு படித்தவர்..  மண்ணின் நிறம் அறிந்தவர்
மக்களின் மனதறிந்தவர்..
தஞ்சை திமுக என்றாலே மன்னையும் மணியும் நினைவுக்கு வந்தாலும் அடித்தளமிட்டது கலைஞர்தான்..
..
அண்ணன் கோ.சி.மணியை பற்றி சொல்லவேண்டும் இன்றைக்கு மூன்று மாவட்டங்களாக இருக்கும் ஒருங்கிணைந்த தஞ்சையில் ஒற்றை ஆளாய் சுற்றி திரிந்து கட்சியை வளர்த்தவர் கலைஞருக்கு பிறகு ஒவ்வொரு கிராமத்திலும் கட்சிகாரனை பெயர் சொல்லி அழைத்து அவனோடு நெருக்கம் காட்டியவர்.. அண்ணனோடு பழகி அந்த நாட்கள் இன்னமும் பசுமையாய்..
..
கலைஞர் கட்டியெழுப்பிய கோட்டை தஞ்சை
ஒடுக்கபட்ட சமூக பின்னணியில் இருந்த உயரத்தை எட்டியவர் .. அதனால் தான் எந்த கோவிலில் ஓரமாய் நின்று கதைக்க இசைக்க வேண்டுமென்றார்களோ  அதே கோவிலில் பட்டு சட்டையோடு  நாற்காலியில் அமர்ந்து பார்ப்பன கூத்தாடியின் நடனத்தை ரசித்ததெல்லாம் நமக்கு நிறைய உணர்த்தும்.. சுயமரியாதை விட்டுகொடுக்காத.. யாரால் எதற்காக புறக்கணிக்கபட்டோமே அவர்களை கொண்டே சிறப்பு பெறுவது.. அவர்களின் வினைக்கு எதிர்வினையாற்றுவது.. பல்லக்கில் நீ மட்டும்தான் செல்வாயா ..நாங்களும் செல்வோம் சாரட்டில்
என்று சொல்லாமல் வினையாற்றும்..
காவிரிக்கரை பிராமணர்கள்  ஜமீன்கள்  நிலக்கிழார்கள்  மிராசுகள்  தங்களை குறுநில மன்னர்களைப்போல நினைத்தார்கள் இது பிற மாவட்டங்களில் அதிகமில்லை..
இவர்களை எதிர்த்து  பேசவோ.. அவர்கள் முன் அமரவோ.. ஏன் உரக்க பேச கூட முடியாத சூழலை மாற்றியது திராவிட இயக்கம் அதில் பெரும்பங்கு கலைஞருக்குண்டு.. கலைஞர்  தன் எழுத்து நாடகம் பேச்சு என மக்களை தினம் தினம் சந்தித்து இன உணர்வை சுயமரியாதையை ஊட்டினார்..
தஞ்சை சுயமரியாதை மண்ணாக மாற்றியதில்
திராவிட உணர்வாளர்களை அதிகம் உருவாக்கியதும் கலைஞரின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி..

கோடைகாலங்களில் வயல்வெளிகளில் கலை நாடகம் இசையென கூத்து நடக்கும்.  அதில் புராணங்களும் மத பிரசங்கங்களும் நடக்கும்.. அங்கும் பகுத்தறிவு நாடகங்களை .. கொள்கை முழக்கும் தெருமுனை கூத்துகளை.. செய்து தஞ்சையில் திமுகவை வளர்த்தவர் கலைஞர் பெருமகன்..   அதனால் தான் எல்லோரையும் தோற்கடிக்க முடிந்த காமராஜாரால் கலைஞரை தோற்கடிக்க இயலவில்லை
தஞ்சை கலைஞரின் மண்.. எனது மண்ணும் கூட..
..
ஆலஞ்சியார்

Tuesday, July 10, 2018

பார்ப்பனீயத்தின் ஒடுக்குமுறைகளை தகர்தெறியாமலே நேராக தனித்தமிழ் தேசம் கேட்கும் இனவாத அறிவு ஜீவிகள்

பார்ப்பனீயத்தின்
மொழி ஒடுக்குமுறை,
பண்பாட்டு ஒடுக்குமுறை,
பொருளியல் வாழ்வின் மீதான ஒடுக்குமுறை,
அறிவின் மீதான ஒடுக்குமுறை,
சாதிய படிநிலை ஒடுக்குமுறைகளை ஒழித்தாலே அதன் நீட்சியான நம் நகர்வு பார்ப்பனீயத்தின்தேசிய ஒடுக்குமுறையை தகர்தெறிவதில்தான் இயல்பாகவே பயணிக்கும் என்பதை பெரியார் மிகத் தெளிவாக உணர்ந்திருந்தார்.

ஆனால், பார்ப்பனீயத்தின் ஒடுக்குமுறைகளை தகர்தெறியாமலே நேராக தனித்தமிழ் தேசம் கேட்கும் இனவாத அறிவு ஜீவிகள் தங்களை அறியாமலே பார்ப்பனீயத்திற்கு துணை போகின்றனர் என்பதே உண்மை.

பறையரை குறித்துப் பாரதி

தோழர்களே
உங்களுக்குத் தெரியுமா?



சென்னை எழும்பூரில் ஸ்பர்டேங்க் என்னுமிடத்தில் டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் பஞ்சமர் மாநாட்டில் 7.10.1917 அன்று பேசும்போது பார்ப்பனர்களை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். இதுகுறித்துப் பாரதி எழுதுவதைப் பார்ப்போம்.

“சென்னை பட்டினத்தில் நாயர் கஷிக் கூட்டமொன்றில், பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிகையில் வாசித்தோம்.”

“என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும்வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! அடே பார்ப்பனனைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் அவமதிப்பாகத் தான் நடத்துகின்றார்கள். எல்லோரையும் அடிக்க பறையரால் முடியுமா?”

ஆதாரம்; பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.394

திராவிட இயக்கங்கள் அயோத்தி தாச பண்டிதரையும் ரெட்டைமலை சீனிவாசனையும் இருட்டடிப்பு செய்ததா?


திராவிட இயக்கங்கள் அயோத்தி தாச பண்டிதரையும் ரெட்டைமலை சீனிவாசனையும் இருட்டடிப்பு செய்ததா?
திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டுவரப்பட்டது. அதில் நீதிக்கட்சி வரலாறு அயோத்தி தாசர் வரலாறு ரெட்டைமலை சீனிவாசன் வரலாறு எல்லாம் வைக்கப்பட்டது. அப்போது பார்ப்பனர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். தினமணியில் பிஞ்சு நெஞ்சில் நஞ்சு விதைப்பதாக எழுதினார்கள். ஜெயலலிதா ஆட்சியில் சமச்சீர் கல்வியை ஒழிக்க குழ அமைத்தார்கள். அதில் பார்ப்பனர்களை நியமித்து திருவள்ளுவர் படத்தைக்கூட மறைத்தார்கள். நீதிமன்றத் தீர்ப்பின்படி சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப் பட்டாலும் பார்ப்பன சூழ்ச்சியால் நம் தலைவர்களின் வரலாறுகள் இருட்டடிக்கப்பட்டன.
இப்படி பார்ப்பனர்கள் நம் தலைவர்களின் வரலாற்றை குழந்தைகளுக்கு சொல்லியே தரக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் போது அதனைக் கண்டிக்க வக்கில்லாமல் திராவிட இயக்கம்தான் அயோத்தி தாசரையும் ரெட்டைமலை சீனிவாசனையும் இருட்டடித்தது என்று பேசுவது என்ன வகையில் சேர்த்தி என்பது தெரியவில்லை

Sunday, July 08, 2018

குலப் பெருமை காட்டுற திருமணங்கள் எந்த வகையிலும் பசுமைத் திருமணங்கள் ஆகாது

பசுமைத் திருமணமாம் வெங்காயம்...
காரும், காளான் பிரியாணியும் கொடுத்தா அது இயற்கை விரோத திருமணம். கம்பஞ்சோறு போட்டு காங்கேயம் காளை தந்தா அது பசுமைத் திருமணமா??

வரதட்சணையா ஒரு சொம்பு குடுக்கறது கூட குற்றம்னு சட்டம் சொல்லுது. இவனுங்க சுயசாதிப் பெருமையை தம்பட்டம் அடிக்கவும், பழைமை, கலாச்சாரம்னு வரதட்சணை என்ற சமூக அநீதியை, பெண்ணடிமைத்தனத்தை எந்தக் குற்றவுணர்வும் இல்லாம அடுத்த தலைமுறை கிட்ட கடத்தவும் "பசுமைத் திருமணம்" னு ஒரு வார்த்தையை டைட்டிலா வெச்சுருக்கானுங்க.  சமூக அக்கறை கொஞ்சம் கூட இல்லாம ஊடகங்களும் இதையே வெளியிட்டிருக்கு.  இதுக்கு படம் வேற கேடு.

ரெஜிஸ்டிரார் ஆஃபீஸ்ல சத்தமே இல்லாம ரெண்டு பேர் போயி மாலை மாத்தி, கூட இருக்கற நாலு ஃப்ரெண்ட்ஸ்க்கு சாப்பாடு வாங்கி கொடுத்து நடக்குற திருமணங்கள் தான் உண்மையிலேயே பசுமையான திருமணங்கள்.

பத்து லட்சம் ரூபாய்க்கு மண்டபம் எடுத்து, சீரியல் செட்டு கட்டி, கார்ல வர்ற ஒறவுக்காரன மரியாதையா உபசரித்து, எலையில தேவைக்கு அதிகமான உணவுப் பொருட்களை வெச்சு வீணடிச்சு, வசதி வாய்ப்பை வெளிச்சம் போட்டுக் காட்டி, கடைசியா சீதனம் குடுக்கறதுல குலப் பெருமை காட்டுற  திருமணங்கள் எந்த வகையிலும் பசுமைத் திருமணங்கள் ஆகாது. இது நேஷனல் வேஸ்ட்;  சமூக அநீதி; பெண்ணடிமைத்தனம்.

Friday, July 06, 2018

பாரிசாலன் பூரி சால்னா

கொஞ்ச நாள் முன்பு திடீரென கொஞ்ச நேரம் பாரிசால்னா என்ற பெயர் சோமீயில் அடிபட்டது. யார்ராவன் என்று பார்த்தால், இலுமினாட்டிகளே உலகின் சகல துன்பங்களுக்கும் காரணம் எனும் தத்துவத்தை பரப்பும் கோமாளி கூட்டத்தின் விஐபி கோமாளி.
சால்னாவின் ஒன்னு ரெண்டு வீடியோக்களை பார்த்தேன். ச்சே இவ்வளவு நாளா இவனை தெரிஞ்சிக்காம ஆதித்யா சேனல காசு கொடுத்து வாங்கிட்டமேன்னு என்னை நினைச்சி எனக்கே வெக்கமாகி, உடனே கண்ல தென்பட்ட ஒரு பெண்மணியின் பதிவில் போய் ஆணாய் பிறந்ததற்கே அவமானப்படுகிறேன் டோலின்னு கமெண்ட் போட்டேன். அவசரத்தில் சமையல் குறிப்பு பதிவில் வந்து அப்படி ஒரு கமெண்ட் போட்டு கன்பூஸ் செய்ததற்கு மன்னிச்சு டோலி.
சால்னா ஒரு முக்கிய யுட்யூப் ஸ்டார், ஆனால் எங்கு முக்குவது என்பதை புரிந்து கொள்ளாமல் பைக் சர்வீஸுக்கு விட்ட இடத்தில் போய் முக்கியிருக்கிறார். அங்கு தகராறாகிவிட்டது. உடனே அண்ணன் யுட்யூபுக்கு போய் பைக் கம்பெனி non-தமிழன் நடத்துவது நானோ ஒரு naam-தமிழர் என்று வீடியோ போட, தமிழன் என்று எவன் சொன்னாலும் நட்டுக்கும் (முடியை சொன்னேன்) கூட்டம் ஒன்று போய் பஜாஜ் சர்வீஸ் செண்டரின் ஊழியர்களை தாக்க, சால்னா உட்பட பலருக்கும் முகத்தில் தக்காளி சாஸ். இருவருமே ஒருவர் மேல் ஒருவர் புகார் கொடுக்க, போலீஸ் சால்னாவை பிடித்து உள்ளே வைத்துவிட்டது.
இப்ப அண்ணன் மேல் விவிடி நிறுவனம் வேற வழக்கு போட்டிருக்காங்களாம். அதாவது விவிடி நிறுவனம் விற்பது தேங்காயெண்ணெயே அல்ல என்று சால்னா ஆதாரமில்லாமல் கிளப்பி விட்டதற்காக காண்டாகி அவதூறு வழக்கு போட்டிருக்கிறார்கள். சரி படம் முடிஞ்சிடுச்சி, எதிர்பார்த்த ஐந்து நிமிட புகழ் கிடைச்சிடுச்சி இனி காணாம போய்டுவான்னு நினைச்சா அங்கதான் ஆண்ட்டி-க்ளைமேக்ஸ். இன்னிக்கி திடீர்னு ஐ_சப்போர்ட்டு_பாரிசாலன் டொக்கு (tag) கிளம்பியிருக்கு.
அதாவது சால்னா பேசிய “தமிழ் தேசியத்துக்கு பயந்து நடுங்கியே இவர் மீது இத்தனை வழக்குகள் என்றால் தமிழ் தேசியம் என்ற சிந்தனை திராவிட, இந்திய கும்பலுக்கு எத்தனை கலக்கத்தை உண்டாக்கும் என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும்” என்கிறார்கள் சால்னா ஆதரவாளர்கள்.
அதாவதாகப்பட்டது 43 பேருக்கு தெரிந்த பாரிசாலன் ஒரு போராளி, அவன் சொல்லும் டுபாக்கூர் கதைகள் தூங்கிக்கொண்டிருக்கும் தேசிய மைனாக்களை எழுப்பி, அதனால் புரட்சி வெடித்து, அதனால் எடப்பாடி அரசு கவிழ்ந்து, எதுக்கு ப்ரச்னைன்னு பயந்து போய் அரசாங்கம் அவனை கைது செய்து.. நினைச்சாலே தலைசுற்றல், வாந்தி, மயக்கம் முதலிய பத்து வித ஸ்கின் ப்ராப்ளம்ஸும் வருதா? எனக்கு
சின்ன வயசில் படித்த கதை ஒன்று ஞாபகத்துக்கு வந்தது.
ஒரு ஊரில் சேறு கபோதிதா என்ற பெயர் கொண்ட கொசு ஒன்று இருந்தது. யாரும் கேட்காமலே தான் பலான விஷயத்தில் பலான பலான ஆள், 180 நிமிடங்கள் நிற்காமல் செயல்படுவேன் என்றெல்லாம் கண்டபடி சவடால் விடும். ஒரு நாள் டேய் போதும்டா போன் ஒயர் பிஞ்சி ரெண்டு வாரம் ஆயிடுச்சி என்று யாரோ பேச்சு வாக்கில் சொல்லிவிட கொசுவுக்கு அவமானமாக போய்விட்டது. ரோஷப்பட்ட கொசு நான் யானையை ‘செஞ்சி’ காட்றேன் என்று சவால் விட்டு தனது யுட்யூப் ரசிகர்களை எல்லாம் யானை லாயத்துக்கு வரச்சொல்லி ரசிகர்கள் எல்லாம் வந்ததும் கொசு போய் யானையின் பின்பக்கம் உட்கார்ந்து கொண்டது. ரொம்ப நேரமாக சத்தமே இல்லை. ரசிகர்கள் சஸ்பென்ஸோடு இருக்கிறார்கள். அப்ப பார்த்து ஒரு தேங்காய் எதேச்சையாக யானை தலையில் விழ, யானை பிளிற, உடனே கொசு யானையைப் பார்த்து “வலிக்குதா?” என்று கேட்டுவிட்டு யுட்யூப் ரசிகர்களை பெருமிதமாக பார்க்க, ரசிகர்கள் ஐ_லவ்_கொசு என்று டேக் போட்டு பதிவு எழுதினார்கள். சுபம்!