Monday, January 08, 2018

இயற்கை விவசாயத்தின் உட்சிக்கல்கள் என்ன

இயற்கை விவசாயத்தின் உட்சிக்கல்கள் என்ன? அதன் யதார்த்த நிலை என்ன என்பது பற்றி விவசாயிகள் பலரும் உள்ளுக்குள் பொருமிக்கொண்டிருந்தாலும் வெளியில் பேச மறுக்கின்றனர். அங்கொன்றும், இங்கொன்றுமாக தனித்தனி அனுபவங்களை பல நண்பர்கள் பகிர்ந்து கொண்டபோதும், இன்னும் இயற்கை விவசாயத்தின் யதார்த்த நிலை வெகுவாக விவசாயிகள் மத்தியிலேயே பேசப்படவில்லை. இந்த நிலை நீடிப்பது, இயற்கை விவசாய போதகர்கள், பிரச்சாரகர்கள், பிரசங்கிகள், வழிபாட்டாளர்கள், வியாபாரிகளுக்கும் எதிராகவே முடியும். எனது தனிப்பட்ட அனுபவங்கள் சற்றே கசப்பானவை. அதே சமயம் என் அனுபவத்தை மட்டுமே வைத்து இந்த பூமியை அளக்க விரும்பவில்லை. பலரும் தங்களது அனுபவங்களை பகிரும்போதும், அதிலிருந்து மீள என்ன வழி என்று யோசித்தால் தான் பிழைத்திருக்க முடியும்.
அவ்வாறில்லாமல், எல்லாம் சொர்க்கமாக இருக்கிறது நம்பும் ஆசாமியாக நீங்கள் இருந்தால், உங்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். உங்களை நம்பி ஏமாறுவோருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஓரளவு சுயமாக சிந்திக்க விரும்புவோருக்கு மட்டுமே இந்த பதிவு, அதிகாலை பஜனை பாடல்கள் இங்கே ஒலிபரப்பப்படுவதில்லை. அடுத்தவனை சுரண்டி அல்வா தின்பவர்களும் இங்கே கோஷமிட வேண்டாம். புதிதாக களம்புக விரும்பும் ஐ.டி நண்பர்களே உங்களை கிடா வெட்டி விருந்து வைக்கும் முன்பு யோசித்து செயல்படுங்கள்

பல ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வரும் நம் நண்பர் அருள்... போதுமான இலாபம் கிடைப்பதில்லை, ஒருங்கிணைப்பு இல்லை, சிறிய அளவில் செய்தால் தப்பிக்கலாம், இதிலும் போட்டி & விளம்பரமெல்லாம் வந்து விட்டதாகச் சொல்கிறார். 

+நவீன நாடகக் குழுக்களைப் போல இன்னும் இயற்கை விவசாயம் வெகுமக்களுக்கு வெளியேதான் இருக்கிறது.

இன்னிக்கு வரைக்கும் தானியங்களைத்தவிர எதையும் விற்க முடியலை.
நொந்ததுதான் மிச்சம் தோழர்.
வியாபாரம்தான் பெரிய சிக்கல்.

+4 வருடங்களாக இயற்கை விவசாயம் செய்யும் சிலரின் ஆலோசனையின் பெயரில் நெல் பயிர் செய்கிறேன். ஒரு ஏக்கர் 8 முதல் 10 மூட்டைகள்தான் கிடைக்கிறது. 4 லட்சம் கடன்தான் மிச்சம்.

+வாங்கின நிலத்தை தண்ணி இல்லாம சும்மா போட்டு வெச்சது தான் மிச்சம்.

+விவசாயி எந்தப்பொருளையும் உற்பத்தி செய்ய தயார்தான்.
வணிகம்தாங்க சிக்கல்.
அழுகக்கூடிய பொருட்களை பெரிய அளவில் உற்பத்தி செய்தால் விற்கவே முடியாது.

தக்காளி நட்டால் அன்றே விற்க வேண்டும்.
கீரை மணிக்கணக்குதான்.
கத்தரி இரண்டு நாளுக்குள்.
இந்த ஆர்கானிக் வணிகர்கள் நடச்சொல்லி நச்சரிக்கிறார்கள்.
விளைந்தபிறகு எடுக்கச்சொன்னால் எனக்கு நாலு பாக்ஸ் போதுமென்பார்கள்.
நாற்பது பாக்ஸ் வந்திருக்கும்.
அடுத்து மார்க்கெட்டுக்கு தூக்கிக்கொண்டு ஓட வேண்டும்.
பூச்சிக்கொல்லியின்றி, ரசாயனமின்றி விளைந்தவற்றின் உருவம், அளவு, நிறம் ஆகியவை கவர்ச்சியாக இருப்பதில்லை.
நீங்கள் ரசாயனமல்லாத முறையில் விளைவித்ததற்கு தண்டனையாக10%விலைகுறைப்பு கிடைக்கும்.
விளைச்சலும் சற்று குறைந்திருக்கும்.
உழைப்பு கூடுதல். ஆள்கூலியெனில் கூடுதல் செலவு.
உள்ளூர் கட்டில்கடை வணிகத்துக்கு மட்டும்தான் சரிவரும்.
பழைய கட்டில்கடை வியாபாரம்.
பெண்களுக்கான சிறுவாடு.
பெரிய அளவு உற்பத்தி இந்த இயற்கை வணிகர்களை நம்பி செய்வது முட்டாள்தனம்.
திருப்திக்காக என்கிறார்கள்.
திருப்திக்காக வேறு வருவாய் உள்ளவர்கள் செய்யலாம்.
விவசாயத்தையே நம்பியிருப்பவர்கள் என்ன செய்ய?

+இயற்கை விவசாயம் , விளைச்சல் குறைவாகவே இருக்கும் . -
-அதிக விளைச்சல் ,லாபம் என்பதெல்லாம் பேச்சளவில்தான். - நடைமுறையில் பல சிக்கல்கள் அனுபவித்தவர்களைப் பார்த்திருக்கிறேன். 

+இயற்கை விவசாயம் என்பதை நான் எனது தேவைக்கு மட்டும் என்று சுருக்கி ( விற்க வக்கில்லாதவன் என்ற பெயர் எடுத்துவிட்டேன் ) கொண்டு விட்டேன். வந்து நேரில் சந்தித்து பணம் கொடுத்து பொருள் வேண்டும் என்று சொன்னால் மட்டும் பயிர் செய்வது என்று முடிவுடன்.( வர போவது இல்லை )

இன்று கை கொடுப்பது என்னவோ நான்கு ஜெர்சி கலப்பின மாடும் , இரண்டு HF கலப்பின மாடுகள் , சில ஆடுகளும் தான் . 

விவசாய போராளி வாழ்க்கை முடிந்து ,உதவும் நிலையும் முடிந்து இன்று எந்த இயற்கை விவசாய போதகர்கள், பிரச்சாரகர்கள், பிரசங்கிகள், வழிபாட்டாளர்கள், வியாபாரிகளுக்கும் சிக்காமல் ஓடி ஓரமாய் உள்ளேன். களநிலவரம் வேறு ,கணிபொறி நிலவரம் வேறு , இரண்டையும் கலந்து கொஞ்சம் பிழைக்கலாம்.

களத்தில் உற்பத்தி செய்து , கணிப்பொறியில் ( முகபுத்தகம் வழியாக ) அளவாய் விற்று பிழைக்க முடிகிறது. அழுகும் பொருளுக்கு இதுவும் சாத்தியம் இல்லை .

தியாகராஜ சுவாமிகள் சக்கிலியராகவோ, நாயுடுவாகவோ இருந்திருந்தால்…?

தியாகராஜ சுவாமிகள் சக்கிலியராகவோ, நாயுடுவாகவோ இருந்திருந்தால்…?
**
பூணூல் போட்டவா யாரும் மேளம் அடிக்க மாட்டா, மேளம் அடிக்கிறவா யாரும் பூணூல் போட மாட்டா, அதனாலேயே தோளில் துண்டும் போட விட மாட்டா
*
இசைக்கு மொழியில்லை ஜாதி இருக்கிறது அதுதான் சுருதி சேர்க்கிறது லயமாகவும் பின் தொடர்கிறது
*
பாடல்களில் மொழியை விட இசையே சிறப்பு. இசை தான் வார்த்தைகளைத் தாண்டிய உணர்வுகளை பிரதிபலிக்கும் என்று அடிக்கடி எழுதுகிறீர்கள். அதைத்தான் பார்ப்பனர்களும் சொல்கிறார்கள். “கர்நாடக சங்கீதத்தை தமிழில் பாடு” என்றால், “இசைக்கு மொழி முக்கியமில்லை. மொழிகளை கடந்தது இசை” என்கிறார்கள். உங்களின் இசை பற்றிய கருத்து தமிழ் விரோதமும் பார்ப்பன தன்மையும் உள்ளதாக இருக்கிறது. அவர்களுக்கும், இசை பற்றிய உங்களின் புரிதலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை?
-வீரபாண்டியன்.
நிச்சயம் இருக்கிறது.
வார்த்தைகளால் பாடுவதைவிட வாத்தியக் கருவிகளால் இசைக்கப்படுகிற இசையே உன்னதம். அது தருகிற உணர்வுகளை ஒரு போதும் மொழியால் முடியவே முடியாது, என்பதை இன்னும் கூடுதலாக அழுத்திச் சொல்கிறேன். பாடலில் கூட ‘சந்தம்’ தான் உங்களை முதலில் ஈர்க்கிறது. மொழி இரண்டாம் பட்சம்தான்.
இதை நீங்கள் திரை இசை, கருநாடக சங்கீதம், மேற்கத்திய இசை இவைகளோடு ஒப்பிட்டு பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் என்பதல்ல, தமிழர்களின் வாழ்க்கையோடு கலந்த பறை, தவில், நாதஸ்வரம் இவைகளே அதற்கு சாட்சி. இவைகளில் குரலிசை பாடல் என்பதே இல்லை. இசை மட்டும்தான். பறையும் நாதஸ்வரமும் தவிலும்; துக்கம், மகிழ்ச்சி, எழுச்சி இன்னும் பல உணர்வுகளை நம் உள்ளமெங்கும் அள்ளித் தெளிக்கும்.
பறை இசைக் கலைஞர், நாதஸ்வரம்-தவில் கலைஞர்கள் சொல்லலாம், “இசைக்கு மொழி முக்கியமில்லை. மொழிகளை கடந்தது இசை” என்று.
ஆனால், கருநாடக சங்கீத வித்துவான்கள் அப்படி சொல்வதற்கு தகுதியற்றவர்கள், அருகதையற்றவர்கள். ஏனென்றால் கருநாடக சங்கீதத்தில் பிரதானமே குரல் தான். அங்கு வாத்தியங்களுக்கு பெயரே பக்க வாத்தியம்.
கருநாடக சங்கீதத்தில் உள்ள பிரச்சினை, மொழியல்ல; அதில் ஜாதிய கண்ணோட்டம் நிறைந்த அரசியல் இருக்கிறது. ‘தமிழை விட சமஸ்கிருதம் உயர்ந்தது’ என்பது போலவே ‘கருநாடக இசைக்கு தெலுங்குதான் பொருத்தமானது’ என்கிற எண்ணமும்.
அதற்குக் காரணம் அவர்களுக்கு தெலுங்கு மேல் உள்ள ஈடுபாடல்ல;
தியாகராஜர் ஒரு தெலுங்கு பார்ப்பனர். அவர் கீர்த்தனைகளை தெலுங்கில்தான் பாடியிருக்கிறார். தியாகராஜர் மீது உள்ள ஈடுபாடுதான் தெலுங்கின் மீது உள்ள ஈடுபாடு போல் பிரதிபலிக்கிறது. தியாகராஜர் தெலுங்கு பேசிய நாயுடுவாகவோ, இன்னும் குறிப்பாக சக்கிலியராகவோ இருந்திருந்தால்…? ‘அப்படி ஒருத்தர் இருந்தாரா?’ என்ற நிலை ஏற்பட்டிருக்கும்.
தியாகராஜர் நம்பூதிரியாக இருந்து மலையாளத்தில் பாடியிருந்தால் இவர்களுக்கும் மலையாள உணர்வு பொங்கி வழிந்திருக்கும்.
அதனால்தான் தெலுங்கு கீர்த்தனைகளுக்கு முன்பே தமிழில் கீர்த்தனைகள் பாடிய அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை இவர்களை விட தியாகய்யர், சியாமா சாஸ்திரிகள், முத்துச்சாமி தீட்சிதர் இவர்களின் தெலுங்கு, சமஸ்கிருத கீர்த்தனைகள் ‘அவர்களுக்கு’ பிடிக்கிறது என்பது மட்டுமல்ல உயர்வாகவும் தெரிகிறது.
காரணம் ‘அவர்கள் தமிழில் பாடினார்கள்’ என்பதினால் அல்ல, அவர்கள் பெயருக்கு பின் ஜயர், சாஸ்திரிகள், தீட்சிதர் என்ற பெயர் இல்லாததினால்தான்.
அப்படி இருந்திருந்தால், தெலுங்கு கீர்த்தனைகளை மட்டும் விரும்பி பாடுகிற ‘தமிழர்களான இவர்களுக்கு’ தமிழ் உணர்வும் நிறைந்திருக்கும். ‘தியாகராஜருக்கு முன்பே கீர்த்தனைகளைப் பாடியவர்கள் இவர்கள்தான்’ என்று அவர்களுக்குரிய மரியாதையும் முறையாக கிடைத்திருக்கும்.
இன்னும் நெருக்கிப் பார்த்தோமானால், அதை நிரூபிப்பது போல் இன்றைய சாட்சியாகவும், அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை இவர்களின் கீர்த்தனைகளை, தமிழ் பாடல்கள் பாடும்போது கூட ‘அவர்கள்’ பாடுவதில்லை.
மாறாக, கோபால கிருஷ்ண பாரதியார், பாபநாசம் சிவன், சுப்பிரமணிய பாரதியார் பாடல்களை தான் உணர்ந்து, உருகி தமிழ் உணர்வாக வெளிபடுத்துகிறார்கள். காரணம் ‘இவர்கள்’ பெயருக்குப் பின்னால் ‘அது’ இல்லாவிட்டாலும் பெயருக்குள் ‘அது’ தானே இருக்கிறது.
‘நாதஸ்வர-தவில்’ இசை மிக துல்லியாமான செவ்வியல் இசை வடிவம். அது தியாகராஜர் காலத்துக்கு முன்பிருந்த அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை காலத்துக்கு முந்தைய காலத்திலிருந்தே இருக்கிறது.
‘இவர்கள்’ பாடுகிற எல்லா கீர்த்தனைகளையும் நாதஸ்வர இசையில் வாசிக்கிறார்கள். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலையோடு வளர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து இசைப் பாடலையும் நாட்டியத்தையும் தங்களின் கண்டுபிடிப்பாக, தகுதி திறமையாக அடையாளப்படுத்திக் கொண்ட ‘இவர்கள்’,
ஏன் ‘நாதஸ்வர-தவில்’ வாசிப்பில் இன்றுவரை ஒருவர்கூட பங்கெடுக்கவில்லை? தோளில் வைத்து வாசிக்க வேண்டிய மேற்கத்திய இசையின் வாத்தியக் கருவியான, வெள்ளைக்காரனின் violin – னை குழந்தையை போல் மடியில் வைத்து கர்நாடக சங்கீதத்திற்கு பயன்படுத்துகிற இவர்கள் ஏன் நாதஸ்வரம்-தவில் வாசிப்பதில்லை?
இந்தக் கேள்வியோடு தமிழ் இசை-கருநாடக சங்கீதம் இவைகளுக்குள்ள அரசியல் பிரச்சினையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
‘கருநாடக சங்கீதத்தை தமிழில் பாடு’ என்றால், ‘இசைக்கு மொழி முக்கியமில்லை. மொழிகளை கடந்தது இசை’ என்கிறார்கள், பல நேரங்களில் அவர்களாகவும் சில நேரங்களில் இவர்களாகவும் திடீரென்று சிவலிங்கத்தைப் போல் ‘அரூபமாக’வும் காட்சித் தருகிற ‘அவர்கள்-இவர்கள்’.
அதையே நான் இப்படி கேட்கிறேன்,
‘இசைக்கு மொழி முக்கியமில்லை. மொழிகளை கடந்தது இசை. அப்போ தெலுங்குல மட்டும் எதுக்குப் பாடனும்?

அவையெல்லாம் இந்த சீழ் பிடித்த சமூகத்தின் பொது பிரச்சனை இல்லை

சில பதிவுகளை படித்த பின் அதற்கான பதில் இது.
தலித்துகளுக்காக தலித்தியவாதிகளாக போராடுங்க, யாரு வேண்டாம் என தடுத்தார்கள் ?
இஸ்லாமியர்களை சிறுப்பான்மையினராக ஒடுக்குவதை எதிர்த்து, கை கொடுங்க யார் வேண்டாம் என்றார்கள் ?
பெண்களுக்காக பெண்ணியவாதிகளாக போராடுங்க, யாரு வேண்டாம் என்று தடுக்கிறார்கள் ?
அத விட்டுட்டு நீங்க வந்து கை கோர்க்கும் வரை, அவங்க குரல் எழுப்பாம இருக்கனுமா ? அல்லது நீங்க தான் போராளிகள் என்பதற்கான பேட்டண்ட் ரைட் வாங்கி இருக்கீங்களா ?
அட என்ன தான் உங்க நியாயம் ?
ஜல்லிக்கட்டு என்றவுடன் பதறிகிட்டு போய் கூட்டம் தானா தானே சேர்ந்தது ?
அதே கூட்டம் ஏன் தலித் வன்கொடுமைக்கும் ஜாதிக்கு எதிராகவும் சிறுபான்மையினரை கொல்லும் போதும்... பெண்கள் மீது வன்முறை நிகழ்த்தும் போதும் வரதில்லை...?
ஓ.... அது அவங்கவங்களுக்கான உரிமை போராட்டமா ? அதனால உங்களுக்கெல்லாம் தானா போய் அவர்களோடு போராட முடியாது போல !!! 
அப்ப ஜாதி, ஆணாதிக்கம், மதத்தின் பெயரால் நடக்கும் ஒடுக்குதலிலெல்லாம் உங்களுக்கு பாதிப்பு இல்லை. பாதிக்கப்பட்டது, ஒடுக்கப்பட்ட ஜாதியினர், பெண்கள் மற்றும் இஸ்லாமியர்கள். அதனால அவையெல்லாம் இந்த சீழ் பிடித்த சமூகத்தின் பொது பிரச்சனை இல்லை. மஞ்சு விரட்டு தான் பொது பிரச்சனை. அடேயப்பா... ஜாதி இந்த சமூகத்தின் சீர்கேடு என உணராமல் அது தலித்துக்களின் பிரச்சனை என நினைத்தால், அது பார்ப்பன மேட்டுக்குடி மனநிலை தான்.
கருப்பர் இன போராட்டத்தில் ( சிவில் ரைட்ஸ் மூவ்மண்ட்) தானாகவே போராடியவர்களில் வெள்ளை இனத்தவர்கள் உண்டு. கருப்பர்கள் அவர்களின் உரிமைப் போராட்டத்தை அவர்களே தான் மேற்கொண்டார்கள்.
ஆனால் இங்கே இருக்கும் சில கோட்பாடுவாதிகள் ஜாதி ஏதோ தலித்துகள் பிரச்சனை என்பது போல யோசித்துக் கொள்வதும் ஜாதிய சமூகம் தன்னை கேவலப்படுத்துகிறது என்ற சுரணையின்றி தலித்துகளுக்கு பாடம் நடத்துகிறது.
ஜிக்னேஷ் மேவானி தான் தலித் போராளி, ரஞ்சித் ஜாதி வெறியன் என்று ஒப்பீடு செய்து, தங்களை போராளிகளை ரேட்டிங் செய்யும் போராளி நீதிபதிகளாக தீர்ப்பெழுதுவதெல்லாம் என்ன வகையான சிந்தனையோ ?
ஜாதி ஒழிப்பு போராட்டத்தில் உங்கள எல்லாம் வெத்தலை பாக்கு வச்சி அழைக்கனுமோ ? இந்தந்த அடையாளத்தில் தான் போராடுவேன் என்று சொல்லிக் கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டும், நிதானமாக ஜாதி கட்டமைப்பிற்குள் உட்கார்ந்து கொண்டே புரட்சி பேசறவங்க பேசிக்குங்க. போராடறவங்க போராடுங்க. தலித் என உணராதவனெல்லாம் கொடி பிடிக்க நேரம் பார்த்துட்டு உட்காரட்டும்.
அவன்/ள் தலித், பிறப்பால் ஜாதி கட்டமைப்பை ஏற்க்காதவள்... அவள்/ன் எல்லா வழிகளிலும் போராட்டத்தை தொடங்கிவிட்டான்/ள்.
டாட்.

இசைக்கு ஜாதி இல்லை

இசைக்கு ஜாதி இல்லை
இசை வேளாளர் என்கிற ஒரு ஜாதியே இங்கு இருக்கிறது அறிவாளிகளே.
அதுமட்டுமில்லாமல் அந்த சமூகத்தை சார்ந்த பெண்கள் தேவதாசிகளாக அடிமை படுத்தப்பட்டார்கள்கள்.அவர்களின் ஆண்கள் சட்டை இல்லா வெறும் உடம்போடு இசைக்க கட்டாயப்படுத்தபட்டார்கள்.
மேளக்கார்கள் என்று அழைக்கப்பட்ட அவர்கள் பந்தியில் மற்றவர்கள் சாப்பிட்ட பின் கடைசியில் தான் சாப்பிட வேண்டும்.
அவர்களுக்கு மேலே துண்டு போடும் உரிமையை திராவிட இயக்கதலைவர் திரு பட்டுக்கோட்டை அழகிரி வாங்கி தந்தார். அதன் நினைவில் தான் அந்த சமூகத்தை சேர்ந்த தலைவர் கலைஞர் தன் பிள்ளைக்கு அழகிரி என்று பெயரிட்டார்.
அந்த சமூகத்தை சார்ந்த நாதஸ்வர வித்வான் டி என் ராஜரத்தினம் பிள்ளை கோயில் ஒன்றில் வாசிக்க போக ,அவரை சட்டை அணிய விடாமல் செய்ய,சட்டை போடாமல் வாசிக்க மாட்டேன் என்று அவர் தீர்க்கமாய் கூற வேறு வழியின்றி அவரை சட்டை அணிய அனுமதித்தது இன்னொரு வரலாறு.
இவ்வளவு இருக்கிறது மக்களே....
இதில் எதுவும் தெரியாமல் இசைக்கு ஜாதி இல்லை என்று சொல்லுவதெல்லாம் உச்ச பட்ச முட்டாள்தனம்/அயோக்கியத்தனம்.

"இசைக்கு ஜாதி கிடையாது ".
ஆனா பாருங்க..தேடித் தேடி இசை வேளாளர் ஜாதில இருக்க பொன்னுங்களுக்கு பொட்டு கட்டி தேவரடியார் பட்டம் சூட்டி, இசையயே வாழ்க்கையா வச்சிருந்தவங்கள, இச்சைக்கு இணங்கச்சொல்லி, "தீரர்" சத்திய மூர்த்தி அய்யர் வாயால " தேவரடியார் அவசியம் தேவை. சமூக நலனுக்கு தேவரடியார் தேவை" ன்னு சட்ட மன்றத்துல பேசி , வேணும்னா உங்க ஜாதி பொன்னுங்க வந்து அத செய்யலாமேன்னு ஒரு அம்மா கேட்டு செருப்படி எல்லாம் வாங்குனோம்...
ஏன்னா..இசைக்கு ஜாதியே கெடியாது..

இசைக்கு ஜாதி எல்லாம் கெடையாது பாருங்கோ.. நாங்களும் சேரிகள்ல எல்லாம் வாழுறோம் ...
எந்த சேரி சார் ?
வேளச்சேரி, பாண்டிச்சேரி.. நாங்க பாடுறது கூட கச்சேரி ன்னா பாத்துக்கோங்கோ.

இசைக்கு ஜாதி இல்லை...
#ஸ்ரீனிவாஸ்
அந்த பூணூலை அத்தெரிஞ்சுட்டு அப்புறம் பேசு...

இசைக்கு சாதி இல்லை
சரி வா மைலாப்பூர் கோவிலுக்கு உள்ள பறையடிக்கலாம் 


Sunday, January 07, 2018

பன்றி,& பிராய்லர் கோழி கறியும் முஹம்மதும்! (ஓர் ஆய்வு😀😁)

பன்றி,& பிராய்லர் கோழி கறியும் முஹம்மதும்! (ஓர் ஆய்வு😀😁)
பதிவின் தலைப்பை பார்த்தவுடன் மூமின்களுக்கு ஒவ்வாமையாக இருக்கக்கூடும் ...வருத்தபடாதீர்கள் மூமின்களே பன்றியை படைத்த அதே அல்லாஹ்த்தான் முஹம்மதையும் படைத்தான் என்று உங்கள் கஃல்பை/இதயத்தை ஆசுவாசபடுத்திக்கொள்ளுங்கள்
முஸ்லிம்கள் ஆடு,மாடு கோழியெல்லாம் சூப்பரா மசாலா போட்டு குருமா,கபாப்,சாப்பீஸ் வருவல் ,சுக்கா, தாளிச்சா தனிகறி அது...இது ..என்று ஏக ரகளையா இருக்கும் ...சரி பன்றி கறியை சமைப்பிர்களா என்று கேட்டால் உங்களை கொலை வெறியுடன் துரத்துவார்கள் ...ஏன் பன்றியை தின்னக்கூடாது என்பதற்கு குரானிலோ ,ஹதீஸ்களிலோ எந்தவொரு அறிவார்ந்த விளக்கமும் இல்லவே இல்லை குரானுக்கு விளக்கம் சொல்லவந்த முஹம்மதுக்கே விளக்கம் தெரியாத காரணத்தால் ..அந்த மேட்டரை முஹம்மது அம்போன்னு விட்டுட்டார் இருந்தாலும் பிஜை , ஜாகீர் போன்ற கார்பெட் புரோகிதர்கள் நிறைய கதைகள் கூறி வழக்கம் போல் முஸ்லிம்களை முட்டாளாக்கி சீடி வியாபாரம் செய்துக்கொண்டிருக்கிறார்கள்..ஓகே...நாம் பதிவுக்கு செல்வோம்
பன்றிக்கறி சாப்பிடுவது தடை செய்யப்பட்டிருப்பது பற்றி முஹம்மதின் குர்ஆனில் குறைந்தது நான்குஅத்தியாயங்கள் வரை மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
//தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். ஸூரத்துல் பகரா 2:173
😀😀தானாக செத்தது ??? மனுசனுக்கு மட்டும்தான் அல்லாஹ் மலக்குகளை அனுப்பி "உயிரை" புடுங்குவான் போலே விலங்கெல்லாம் தானாக செத்துடுமாம் அப்புறம் யாரவது நிர்பந்தித்தால் பன்றி குருமாவை முஸ்லிம்கள்.சுவைத்துக்கொள்ளலாம் என்ற அனுமதியையும் தருகிறான் 😀😀😀
// செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; ஸூரத்துல் மாயிதா 5:3
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மனிதன் புசிக்கக்கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டு விட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட வஹியில் நான் காணவில்லை. ஆயினும், செத்தவை, வடியக்கூடிய இரத்தம், பன்றியின் மாமிசம் ஆகியவை நிச்சயமாக அசுத்தமாக இருப்பதனால் இவையும், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறுவது பாவமாய் இருப்பதனால் அவ்வாறு கூறப்பட்டவையும் (தடுக்கப்பட்டுள்ளன.)" ஸூரத்துல் அன்ஆம் (6:145
நீங்கள் புசிக்கக் கூடாது என்று உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவையெல்லாம்; தானே செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், எதன் மீது அல்லாஹ்(வின் பெயர்) அல்லாத வேறு (பெயர்) உச்சரிக்கப்பட்டதோ அதுவுமேயாகும், (தடைசெய்யப்பட்டதாகும்)
ஸூரத்துந் நஹ்ல் ( 16:115
செத்த மீன் ,இரால் ,நண்டு கருவாடு இவைகள் மட்டும் முஸ்லிம்களுக்கு கூடும் என்பது தனி கதை😁 செத்துப்போனது ஹராம் என்றால் அது கடலாய் இருந்தால் என்ன கரையாய் இருந்தால் என்ன?
மேற்கூதிய இவைகள் தான் முஸ்லிம்களை பன்றி கறியை உண்ணக்கூடாது என்று தடுக்கும் முஹம்மதின் குரான் வசனங்கள் இதுதான் ...ஆனால் இன்று பன்றி மனிதர்களுக்கான உணவு என்பதையும் தாண்டி மருத்துவ பயனீடு அதன் கொழுப்புகள் அழகு சாதன பயன்பாடு என்று வந்த பிறகுதான் முஸ்லிம்கள் தங்களை அறியாமலே பன்றிக்குள் தங்களின் ஈமான் சென்றுவிட்டதை தாமதமாக கண்டு சுதாரித்து வேறு வழி யின்றி பயான் செய்யும் நிலைக்கு வந்துள்ளார்கள். இங்கு இன்னோரு கதையும் சுற்றுகிறது
இந்த பன்றியானது, நோவாவின் காலத்தில் அவர் உருவாக்கிய கப்பலில் இருந்த மிருகங்களின் கழிவுகலை அகற்றுவதற்காக படைக்கப்பட்டதாக ஒரு பாகிஸ்தானை சேர்ந்த ஒரு மௌலவி கூற கேட்டிருக்கிறேன்!லாஜிக்கிக்கா பேசுறானுங்களாம்😁😁
இப்படி இன்னோரு கதை!
//பன்றியின் இறைச்சி' என்று தான் வருகிறதே யொழிய பன்றியே ஹராம் என்று வரவில்லை. பன்றியைப் பற்றி படிப்பது, பன்றியைப் பற்றி ஆராய்ச்சி செய்வது இவை எல்லாம் இஸ்லாத்தில் தடை இல்லை. காரணம் இல்லாமல் ஒரு படைப்பை இறைவன் ஏன் படைக்க வேண்டும்?' என்று புலம்பும் அளவிற்கு முல்லாக்களும் முல்லாக்களில் அடிமைகளும் வந்து விட்டார்கள் ...இப்படியே போனால்..பன்றியை படைத்த அல்லாஹ்தான் " கஞ்சா" வையும் படைத்தான் என்ற வாதத்ற்கு நாளைய முல்லாக்கள் வரக்கூடும்! சரி குரான்வழி முஹம்மது மதுவை தடை செய்தார் காரணம் குரைஷியர்கள் மது பிரியர்களாக இருந்தார்கள் என்ற லாஜிக் இருந்தது ...குரான் வழி முஹம்மது வட்டியை தடை செய்தார் இதுவும் முஹம்மது வாழ்ந்த காலத்தில் அந்த பகுதியில் அந்த சமூகத்தில் இருந்தது அதை தடை செய்ததிலும் ஒரு லாஜிக் இருந்தது (வட்டி/லாபம்/ வரி இல்லாத வணிகமோ பொருதாரமோ கிடையாது என்பது வேறு கதை) ஆனால் எந்த குரைஷியர்கள் பன்றியை தன் தின,சிறப்பு உணவாக்கி வைத்திருந்தார்கள் ? குரைஷியர்களிடம் ஆடு மாடு ,கழுதை குதிரை ஒட்டக கறி உணவு முறை கள் இருந்ததாக ஹதீஸ் ஆதாரங்கள் இருக்கிறதே தவிர குரைஷியர்கள் ஆரம்பத்தில் பன்றிக்கறியை உணவாக பயன் படுத்தியதாக ஒரு ஆதாரமும் இல்லை பிறகு ஏன் முஹம்மது பன்றிகறியை தடை செய்தார்?
யாராவது குதிரை முட்டையை இனி உண்ணாதீர்கள் என்று தடை செய்தால் நாம் அவரை என்னக்கூறுவோம் ? அதையேத்தான் முஹம்மது செய்திருக்கிறார் அதாவது ஒரு சமூகம் தின்று அறியாத உணவையே .தின்னக்கூடாது என்று தடைசெய்கிறார் அதுவும் அல்லாஹ்வின் பெயரால் அப்படியென்றால் பன்றி தின்னாத குரைஷியர்களை பன்றியை உண்ணாதீர்கள் என்று தடுத்த ரகசியம்தான் என்ன?
இதுதான் அந்த ரகசியம்
7 பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாக பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது, அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். லேவியராகமம் 11:7
//8 இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம், இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. லேவியராகமம் 11:8 // 3 அந்த ஜனங்கள் என் சந்நிதியிலே நித்தம் எனக்குக் கோபமுண்டாக்கி, தோட்டங்களிலே பலியிட்டு, செங்கற்களின்மேல் தூபங்காட்டி, ஏசாயா 65:3//
4 பிரேதக்குழிகளண்டையில் உட்கார்ந்து, பாழான ஸ்தலங்களில் இராத்தங்கி, பன்றியிறைச்சியைத் தின்று, தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் ஆணத்தை வைத்திருந்து: ஏசாயா 65:4///
5 நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில்வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள், இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள். ஏசாயா 65:5/
பைபிளில் ஐந்து இடத்தில் தடை செய்த பன்றியைத்தான் முஹம்மது தன் குரானில் நான்கு இடங்களில் தடுக்கிறார் அவ்வளவுதான் !/ குரானில் உள்ள பல செய்திகள் பைபிள் குப்பையிலிருந்து வந்ததுதான் ....இதை தவிர வேறு எந்த ஆதாரத்தின் அடிப்படையிலும் முஹம்மது பன்றியை ஹராமாக்க வில்லை ! இதில் பெரும் காமெடி என்னன்னா பைபிள் தடுத்த பன்றிகறியை கிருத்துவர்களில் பலர் உண்டு மகிழ்கிறார்கள் ஆனால் முஹம்மதின் சமூகம் பன்றி ஹராம் என்று க்கூறிக்கொண்டே பன்றியை பயன் படுத்தி கொள்கிறது இன்றைய முஸ்லிம்கள் பன்றிகறிக்கு சொல்லும் லாஜிக் அக்கறி நம் குடலுக்கு ஏற்றதல்ல என்பதுதான் சரி பன்றி கறி உடலுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என்பதை ஒரு வாதத்திற்கா ஏற்றுக்கொள்வோம் இப்பொழுது பிராய்லர் கோழிக்கு வருவோம் முஸ்லிம்களின் வணிகத்திலும் உணவிலும் பிராய்லர் கோழி இரண்டர கலந்து விட்டது முஸ்லிம்கள் உண்ணாத பன்றிகறியில் இருக்கும் பிரச்சனையை விட பிராய்லர் கோழியில் எக்கசக்க பிரச்சனைகள் நோய்கள் இருக்கிறது இதை எதிர்த்து ஜாகிர் நாய்க் ,பிஜை ப்போன்ற எந்த மௌலவி"பயலுகளும்" பேசுவது இல்லையே ஏன்? பன்றிக்கறியில் பேசிய ஆரோக்கியம்,அறிவியல் எல்லாம் பிராய்லர் கோழியில் வரவில்லை?
பிராய்லர் கோழிக்கறியை உண்ணுவதால் ஏற்ப்படும் பிரச்சனைகளை கொஞ்சம் பார்ப்போம்
இக்கோழிகள் அதிக சதையோடு வளர்வதற்கு பல்வேறு விதமான மருந்துகளை ஊசிகளின் மூலம் கோழிகளு க்கு செலுத்துகிறார்கள்.அதன் பாதிப்பு அதை உண்ணும் ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்கள் அழிக்கப் படுகிறது. பெண்குழந்தைகள் பத்து பதினோரு வயதிலேயே பருவமடைந்துவிடுகிறார்கள்.
பிராய்லர் கோழியின் சதையில் கெட்ட கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும் போது நம் உடலில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது, நமது கல்லீரலில் வீக்கத்தையும் ரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
சுற்று சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவக்குழு உறுப்பினர் டாக்டர் புகழேந்தி இப்படிக்கூறுகிறார்
“ பிராய்லர் கோழிகளை பொறுத்தவரை இப்போது மிகப் பெரிய வியாபாரமாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அதனால் அது சத்தான பொருள் என்பதிலிருந்து வேறு வடிவத்திற்கு மாறி வருகிறது. பிராய்லர் கோழிகளை வளர்ப்பில் கோழிகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்கும், கால் மற்றும் வயிற்று பகுதிகள் அபரிதமான வளர்ச்சியடைவதற்கும், ஹார்மோன் ஊசிகள் என்று பல்வேறு வகையான ஊசிகளை போடுகிறார்கள், அதற்கு கொடுக்கப்படும் உணவுகளிலும் ரசாயணம் கலக்கிறார்கள். இது ஒவ்வொரு கோழிப்பண்ணைக்கும் வேறுபடும்.
அப்படியான ஊசிகளும், உணவுகளின் மூலமும் வளரும் கோழி மனிதர்களுக்கு பல பிரச்னைகளை தோற் றுவிக்கிறது. முக்கியமாக இதுமாதிரியான ஹார்மோன் ஊசிகளை போடும்போது. ஆண்களுக்கு ஆண்மைக் குறைவும் பெண்களுக்கு சிறு வயதில் பூப்படைதல் என்று பிரச்னைகள் வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் கோழிகளுக்கு அதிக அளவு ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை கொடுப்பதால் அதை சாப் பிடும் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு பல்வேறு வகையான உடல் உபாதைகளை தோற் றுவிக்கிறது. இன்றைக்கு நாம் அதிக அளவு லெக் பீஸைத்தான் விரும்பி சாப்பிடுகிறோம்.
அமெரிக்க கம்பெனிகளும் லெக் பீஸைதான் நம்மிடம் முன்னிறுத்துகிறது. அதிலிருக்கும் அரசியல் மிக முக்கியமானது. கோழிகளின் கால்பகுதியில் அதிக அளவு கொலஸ்ட்ரால் கன்ட்டன்ட் இருக்கிறது. வயிற்று பகுதியில் குறைவாகத்தான் இருக்கிறது. அதனால்தான் அமெரிக்கர்கள் கோழிக்கால்களை சாப்பி டமாட்டார்கள். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கோழிக்கால்களை அவர்கள் வெறும் கழிவு பொருளாகத் தான் கருதுகிறார்கள்.
பெரிய பெரிய நிறுவனங்கள் விளம்பரங்களின் மூலம் நம்மை நம்மை கோழி கால்களுக்கு அடிமைப்படுத் திவிட்டார்கள். கோழிக்கறி என்றாலே லெக் பீஸ்தான் நம் நினைவுக்கு வருகிறது. அந்த லெக்பீஸ் நமக்கு மிக விரைவில் ரத்த அழுத்ததை ஏற்படுத்திவிடும். பிராய்லர் கோழிகளால் ஏற்படும் தீமைகளை super size என்கிற ஆவணப்படத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
நாட்டுக்கோழியின் முட்டையில் மஞ்சள் கரு அதிக மாகவும் வெள்ளைக்கரு குறைவாகவும் இருக்கும், பிராய்லர் கோழிகளில் வெள்ளைக் கரு அதிகமாக இருக்கிறது. இப்போதைக்கு பிராய்லர் என்பது மக் களின் ஊட்டச்சத்து சார்ந்ததாக இல்லை. வணிக நோக்கம் கொண்டதாகவே இருக்கிறது. பிராய்லர் கோழிகளால் இது மாதிரியான பிரச்னைகள் கட்டாயம் மனிதர்களுக்கு ஏற்படுகிறது” என்கிறார் இப்பொழுது ஜாகிர் நாய்க் பிஜை போன்ற புரோகித அரபி அடிமைகள் என்ன செய்யப்போகிறார்கள்? பிராய்லர் கோழிக்கு " ஹராம் " ஃபத்வா கொடுப்பார்களா? கொடுக்கமாட்டார்கள் ஏனென்றால் இங்கு ஒரு நபி வழி அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது அதாவது பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படைவது இது அவர்களின் முன்மாதிரி முஹம்மதுவின் வழி முறையை செயல்படுத்த உதவுகிறது அல்லவா?
முஸ்லிம்கள் பன்றியை உண்ணாத பன்றியை வணக்க வழிபாட்டில் உண்ணாதே...உண்ணாதே என்று கூறுவதை விட்டு விட்டு உண்ணும் பிராய்லர் கோழியை தடுத்து க்கொள்ளட்டும் அது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் அவர்களின் பெண் குழந்தைகளின் வாழ்விற்கும் நல்லதாக அமையும் !

பகுத்தறிவு இல்லாத பதர்களாத் தானே இருக்கான் எல்லாவனும்

6:00 மணிக்கு ஒரு பெல் சத்தம், “காலை ஆறு மணி” அப்டீன்னு ஒரு வாயிஸ், அதை தொடர்ந்து புனித பைபிள்ள இருந்து ஒரு வசனம் சத்தமா கேட்டுது. எங்க ஊர் சர்ச்ல இருக்கிற பெரிய க்ளாக் டவர்ல உச்சியில ஆட்டோமெட்டிக் அலாரம் க்ளாக் இருக்கு. அதுல இருந்து தான் டெய்லி இந்த சத்தம் வருது. இனி 12 மணிக்கும் சாயங்காலம் 6 மணிக்கும் கூட கேக்கும்னு மம்மி சொன்னாவ.
சரியா 7:00 மணிக்கு கொஞ்சம் வித்தியாசமா மறுபடியும் கேட்டுது. ஆனா இந்த முறை கௌசல்யா சுப்ரஜா ராமபூர்வா டைப்ல ஒரு ஸ்லோகம் வந்துது. இது ஏதுன்னு விசாரிச்சா, பக்கத்துல ஒரு இந்துக்கோவில்லயும் இப்ப சேம் செட்டப் வச்சிருக்கானுவளாம். கிட்டத்தட்ட 20 வருஷங்களுக்கு முன்ன கிறித்தவ சர்ச்கள்ள ஏற்படுத்தப்பட்ட இந்த அலாரம் சிஸ்டத்தை இப்ப இந்துக் கோவில்கள்ளயும் கடைபிடிக்கானுவ.
இப்டிதான் குமரி மாவட்டத்துல உள்ள மதவாத கிருத்திருமித்தனத்தை எல்லாம் தொடங்கி விட்டு மக்கள் மனசு பகுத்தறிவு அடைஞ்சிராம பார்த்துக்கிறதுல முன்னோடிகள் இந்த மாவட்டத்துல 80%க்கும் அதிகமா இருக்கிற தென்னிந்திய கிறித்தவ சபையினர் தான். இவனுவள பார்த்து இந்து முன்னணிகாரனுவளும் எழுச்சி அடைஞ்சிருக்கானுவ.
ரோட்டுல பெரிய பெரிய ஸ்பீக்கர் கட்டி வச்சி மதப்பாடல்களை முழங்கி விடியற்காலையிலேயே குழந்தைகள் படிப்பை கெடுக்கிறது முதல், ஆவிக்குரிய எழுச்சி கூட்டங்கள் நடத்தி நைட் மக்களை நிம்மதியா உறங்க விடாம இருக்கிறது வரை அம்புட்டு அநியாயத்தையும் தொடங்கி விடுவானுவ இந்த கிறித்தவ பயலுவ. அதுக்கப்புறம் அதையே ஃபாலோ பண்ணி இந்துப்பயலுக செய்யிறது. இவன் கிறிஸ்மஸ்னு சொல்லி ஒரு மாசம் கொன்னா, அவன் பிள்ளையார் சதுர்த்தின்னு சொல்லி 10 நாள் சாவடிப்பான்.
கடந்த டிசம்பர் 24ம் தேதியும் 25ம் தேதியும் நைட் பூரா பாட்டு போட்டு முழங்கினானுவ. நான் தூங்க முடியல, public nuisanceன்னு சொல்லி, போலீஸ்க்கு போன் பண்ணப்போறேன்னு நின்னப்போ எங்க வீட்ல உள்ளவங்க எல்லாம் சேர்ந்து தடுத்து நிறுத்திட்டாங்க. லீவுக்கு வந்து நாலு நாள் நிக்கிறப்போ பிரச்சனை வேண்டாம்னு கடும் கோவத்தோட வீட்டுக்காரவுங்க கிட்ட சத்தம் மட்டும் போட்டுட்டு பல்லக்கடிச்சி சகிச்சுகிட்டேன்.
செரி, இம்புட்டு தெய்வபக்தியோட இருக்குறியே, அப்பறம் ஏண்டா உங்க மாவட்டத்துல ஓகி புயல் அடிச்சு இம்புட்டு அழிவு? “உன்னை காக்கிறவர் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை” அப்டீன்னு உங்க பைபிள் சொல்லுதே, அப்டி கண்ணுமூடாத உங்க கடவுள் நோவாகிட்ட “இனிமே நான் பூமியை தண்ணீரால் அழிப்பதில்லை” அப்டீன்னு வாக்குறுதி குடுத்தது உண்மைன்னா, அவுருக்கு மனசாட்சின்னு ஒன்னு இருந்திருந்தா, எதுக்குடா இப்டி இயற்கை சீற்றம் அடையிறப்போ உங்களையும் உங்க சொத்துக்களையும் உங்க கர்த்தர் (ராமரும் அல்லாவும் கூட பிசியா இருந்திருப்பாக போல) பாதுகாக்கல? யோசிங்கடா டேய்!
இந்த மாதிரி ஸ்பீக்கர் கட்டி முழங்கி பொது மக்களுக்கு இடையூறு செய்யிற மதவாதத்தை தட்டி கேக்க யாராச்சும் இருக்காவளான்னு கேட்டா ஒரு பயலும் இல்ல. கேட்டா 100% படிப்பறிவுள்ள மாவட்டமாம். என்னத்த படிச்சு என்னத்த பிரயோஜனம்! பகுத்தறிவு இல்லாத பதர்களாத் தானே இருக்கான் எல்லாவனும்! இதச்சொன்னா நம்மள... 😷😷

Friday, January 05, 2018

RSS ஆதரவு மனநிலை கொண்டவர்கள் யார் யார்?

1) நீட் தேர்வை ஆதரிப்பவர்கள்
2) இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள்
3) ஆணவக்கொலைகளை ஆதரிப்பவர்கள். குறிப்பாக சங்கர் கொலை தீர்ப்பு வந்தபொழுது கௌசல்யாவை திட்டியவர்கள்.
4) மாடு புனிதமானது, பஞ்ச கவ்யம் எயிட்ஸ், கேன்சர் நோய்களை குணப்படுத்தும் என்று சொல்பவர்கள்.
5) குழந்தைகளுக்கான நோய் தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்துகளை எதிர்ப்பவர்கள்.
6) அருந்ததியர் போன்ற மிகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள்.
7) போக்குவரத்து ஊழியர் போன்ற தொழிலாளர் போராட்டங்களின் போது அவர்கள் மீது வன்மத்தை கக்கி தனியார்மயப்படுத்த வேண்டும் என்று சொல்பவர்கள்.
8.) மொடியின் பணமதிப்பழிப்பை ஆதரித்தவர்கள்.
9) சாதி ரீதியான கொலைகள், மதரீதியான கலவரங்களை ஆதிக்கத்தை பெரிய பிரச்சனையாக சொல்லாமல் ஊழல்தான் பெரிய பிரச்சனை என்று சொல்பவர்கள்.
10) குஜராத் தமிழகத்தைவிட வளர்ந்த மாநிலம் என்று பொய் சொல்பவர்கள்.
11) ஒருவரின் திறமையும் குணமும் சாதி அடிப்படையிலானது என்று நம்புபவர்கள்.
12) இந்தி படிக்காததால் வளர்ச்சியடையவில்லை என்று சொல்பவர்கள்.
13) சிறுபான்மை மத மக்கள் மீது எப்பொழுதும் வெறுப்பை விதைப்பவர்கள்.

இந்த சைக்கிள் புதுசுதாங்கோ...ரொம்ப பழசெல்லாம் இல்லை...



மிழா நம் முன்னோர்களின் விஞ்ஞானம் பார்...வெள்ளைகாரன் சைக்கிள் ஓட்டும் முன்பே அதாவது 1300 வருடத்திறக்கு முன்பே சைக்கிள் ஓட்டினோம் என இந்த அய்யாவின் சைக்கிள் இணையதளங்களில் ரெக்கை கட்டி ஓடி கொண்டு இருக்குறது ..இதுல தமிழா ஷேர் பண்ணு வேற..

உண்மை என்ன ...

இது உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவிலில் உள்ள சிற்பம் தான்..

கோவில் பழமையானது தான்...ஆனால் இந்த சிற்பம் புதுசு...

சுவாமி சுயம்பு லிங்கம்..

உதங்க முனிவருக்கு ஈசன் ஐந்து காலங்களில் ஐந்து நிறங்களில் காட்சி நல்கிய தலம்..

உதங்க முனிவர் தன்னுடைய மனைவியுடன் கங்கையில் நீராடிய போது, அவர் மனைவி முதலையால் இழுத்துச் செல்லப்பட்டார். உதங்க முனிவர் வேதம், ஆகமம், புராணங்களில் வல்லவராக இருந்தமையால், அவருக்கு மனைவியின் இறப்பு பற்றி தெரிந்தது. ஞானியாக இருந்தாலும் மனைவி இழந்தமையால் பித்துபிடித்தவரானார். பல இடங்களில் சுற்றித் திரிந்து பின்பு உறையூர் சிவலாயத்திற்கு வந்தார். இங்கு இறைவன் காலை வழிபாட்டில் ரத்தினலிங்கமாகவும், உச்சிகால வழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன் லிங்கமாகவும், முதல் ஜாம வைர லிங்கமாகவும் மற்றும் அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திர லிங்கமாகவும் காட்சியளித்தார். இதனால் இத்தல மூலவருக்கு பஞ்சவர்ணேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.

உதங்க முனிவருக்கு இறைவன் ஆடிப்பவுர்ணமியில் இந்த ஐந்த வண்ணம் காட்டியதால் இறைவனை ஆடிப்பவுர்ணமியில் தரிசிப்பது சிறப்பாகும்.

கோட்செங்க சோழனின் மாட கோவிலாகும்...

ஐந்து வேளையும் நிறம் மாறகூடியவர் தான்..சம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம்...இத்தனை பெருமைகள் உடைய கோவில்...

ஆனால் நாம் காண்பது சமீபத்திய கட்டுமானம் ..அதாவது சுமார் நூறு ஆண்டுகளுக்குள்ளான கால கட்டத்தை சேர்ந்தது.இத்தகைய திருப்பணி முறைக்கு “நகராத்தார் திருப்பணி” அல்லது “செட்டியார் திருப்பணி” என்று பெயர்.அந்த வகையில் இந்த சைக்கிள் சிற்பம் சமீபத்திய படைப்பு தான்..

இன்னும் உதாரணம் வேண்டுமென்றால் திருவையாறு ஜயாறப்பர் கோயில் அம்பாள் சன்னதி முன் மண்டப தூண்களில் காந்தி, நேரு போன்றவர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன....
அப்ப இவங்க வருவாங்க என 1000 வருடங்களுக்கு முன்னாடியே தமிழனுக்கு தெரிஞ்சுடுச்சோ..

ஆக இந்த சைக்கிள் புதுசுதாங்கோ...ரொம்ப பழசெல்லாம் இல்லை...

தமிழா என ஆரம்பித்து தமிழா என முடித்தால் அது எதுவாக இருந்தாலும் உடனே ஷேர் பண்ணிடுவாங்களோ..

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் இணைய உலகமே? - யாருக்கு யாரோ புகழ் "சாம்ஆண்டர்சன்"

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் இணைய உலகமே? - யாருக்கு யாரோ புகழ் "சாம்ஆண்டர்சன்"
எழுதியது ஈரோடு கதிர்

இரண்டு வருடங்கள் இருக்கும், இந்தக் கொடுமையைப் பாருங்கள் எனப் பரிந்துரைக்கப்பட்ட சுட்டியில் இருந்த சினிமாப்பாடலையும், நடனத்தையும் பார்த்துவிட்டு உபரியாக அந்தப் பாடலின் கீழ் இடப்பட்ட பின்னூட்டங்களையும் கண்டு அதிர்ந்துபோனது நிஜம். அதன் கீழ் இருக்கும் பின்னூட்டங்களைக் கண்டு வயிறு வலிக்கச்சிரித்தாலும் அதில் இருக்கும் அறுவெறுப்பு சகிக்கமுடியாத ஒன்றாகவே இருந்தது. Youtube சுட்டிகள் ஒவ்வொன்றையும் பார்த்தவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருப்பதும் ஆச்சரியமாக இருந்தது. ”யாருக்கு யாரோ” புகழ் ”சாம் ஆண்டர்சனை” தமிழ் இணைய உலகம் தவிர்க்க இயலாமால் அவ்வப்போது பயன்படுத்தி சிரித்துச் சிரித்து சலித்துக்கொண்டுதான் இருக்கின்றது என்பது புரிந்தது.


சென்ற வார ஆனந்தவிகடனில் வந்த சாம்ஆண்டர்சன் குறித்த ஒரு நகைச்சுவை பேட்டிதான், பட்டிதொட்டி முதல் ஃபாரின் வரை மீண்டும் சாம் ஆண்டர்சனை எடுத்துச் சென்றது. அதுவரை அவர் ஈரோடு எனத்தெரிந்தாலும் அவரைக் கண்டுபிடிப்பது இயலாததாகவே இருந்தது அல்லது பெரிதாக முயலவில்லை. விகடன் பேட்டியில் இருந்த சதர்ன் கூரியர் என்ற வார்த்தைதான் மீண்டும் அவரைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது.

”யாருக்கு யாரோ படம்”

செவ்வாய்க்கிழமை (02.08.11) காலையில் வந்தவுடன் இன்று எப்படியாச்சும் அந்தப் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்று Youtubeல் ஒருவழியாய் வரிசையாய்ப் பார்த்து முடித்தவுடன், ”என்ன ஆனாலும் சரி இந்தாளை இன்னிக்கு எப்படியாச்சும் புடிச்சிடனும்”னு ஒரு கிறுக்குத்தனம் வந்தது. அப்போது நண்பர் கார்த்தியும் வந்து சேர, ஒரு வழியாய் சதர்ன்கொரியர் எண் பிடித்து அங்கிருக்கும் நண்பரிடம் சாம்ஆண்டர்சன் எண் வாங்குவது என முடிவு செய்து, உள்ளுக்குள் ஓடிய ஆயிரம் கேள்விகளை கொஞ்சம் ஒதுக்கிவிட்டு, அந்த நண்பருக்கு போன் அடித்தேன். அவர் போனை எடுத்ததும் ”சாம்ஆண்டர்சன் உங்ககூடத்தான் இருக்கார!?” எனக் கேட்கும் போதே என் வார்த்தைகளை என் சிரிப்பே தின்று தீர்த்தது. ஒருவழியாய் அவரின் தொடர்பு எண்ணைப்பெற்று, அவரை அழைக்கலாமா வேண்டாமா என பல தயக்கங்களுக்குப் பிறகு ஒரு அசட்டுத்துணிச்சலில் அழைப்புவிடுத்தேன்.

வாகனத்தில் செல்லும் இரைச்சலோடு சாம்ஆண்டர்சன் போனை எடுத்தார். எனக்கு ”ஹலோ” சொல்லும் முன்னே மீண்டும் சிரிப்பு வந்து தொலைத்தது. சாம்ஆண்டர்சனா எனக் கேட்டு, அவர் ஆமாம் சொல்லுங்க என்று சொல்லும்முன்னே மீண்டும் எனக்கு சிரிப்பு கொப்பளித்து வந்தது. ஒருவழியாய் சமாளித்து பேச முற்பட, “என்ன விசயம், நீங்க யாரு சார்?” எனக்கேட்டார்.

கார்த்தியிடம் போனைக் கொடுத்து ”நீங்க பேசி சமாளிங்க” என்றுசொல்ல, அவரும் மறுத்து எஸ்கேப் ஆகிவிட, நான் டரியலாகி நின்றேன்

சட்டென “உங்கள் ரசிகன்” என்று அப்பட்டமாக அவரை ஓட்ட மனது வரவில்லை,

”இந்தமாதிரி இந்தமாதிரி விகடன்ல உங்க பேட்டி பார்த்தேன், நெட்ல உங்க படம் பார்த்தேன்” என ஒருமாதிரி சொதப்பி பேசத் துவங்கினேன்.

“நெம்பர் யாரு குடுத்தாங்க, நீங்க யாரு” என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் உளறி, ஒருவழியாய் “உங்களைச் சந்திக்கமுடியுமா, ஒரு பேட்டி எடுக்கனும்” என்றேன்.

அவரின் சந்தேகம் அப்போதுதான் அதிகரித்தது “நான் கூரியர் டெலிவரில இருக்கேன், எதுக்கு சார் பேட்டி எடுக்கனும், நீங்க யாரு, எங்கேயிருக்கீங்க,” என அவர் மடக்க.

என் பெயர் முகவரி எல்லாம் சொல்ல அவரே “சார் உங்க ஆபிஸ்க்கு வந்து நானே கூரியர் குடுத்திருக்கேன்” என்று சொல்லி பேச்சைக் கொஞ்சம் எளிதாக்கினார்.

உங்களை சந்திக்க முடியுமா என மீண்டும் கேட்க அவர் கூரியர் டெலிவரியில் திண்டல் பகுதியில் இருப்பதால், ”டெலிவரி முடிச்சிட்டு, சாப்டவே 4 மணிக்குத்தா வருவேன், நால்ர மணிக்கு உங்க ஆபிஸ்க்கே வர்றனே” என்றார்.

போனை வைத்த பிறகு, பேசியது நிஜம்தானா என்னை நானே ஒருநிமிடம் கேட்டுக்கொண்டேன். நண்பர் கார்த்தியிடம் ”சாம்ஆண்டர்சன் மாலை 4 மணிக்கு வர்றதா ஒப்புக்கொண்டார்” எனச் சொல்லிவிட்டு, சந்திப்பு குறித்து ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பகிர்ந்து, அவரைச் சந்திக்கும் தைரியத்துக்கு மக்களிடம் பாராட்டு வாங்கி காத்திருக்க ஆரம்பித்தேன். துணைக்கு லவ்டேல் மேடி, ஜாபர், கார்த்தி, கருவாயன் சுரேஸ் என ஆள் அம்போடு எப்போது 4 மணி ஆகும் என காத்திருக்க ஆரம்பித்தோம்.

மணி நாலைத் தாண்டியது, சாம்ஆண்டர்சன் மட்டும் வந்த பாடில்லை. மீண்டும் போன் அடிக்க, “சார் இப்போதா வீட்ல சாப்ட்டேன், ஒரு பத்து நிமிசம்” எனத் தள்ளிப்போட்டார். ஆவலோடு காத்திருந்த நண்பர்கள் காதில் புகைவழிய முறைக்க, 10……15….. 20 நிமிடம் ஆனது, அவர் வரவில்லை.

மீண்டும் அழைக்க இன்னொரு 5 நிமிடம் என்றார். ”வர்றேன்னு சொல்லிட்டு ஏமாத்துறாரோ” எனச் சந்தேகம் வந்தது. அதற்குள் லவ்டேல் மேடி “தல, சாம்ஆண்டர்சன் வராட்டி, இன்னிக்கு நீங்க தான் ட்ரீட்” என மிரட்ட ஆரம்பித்தார். ட்ரீட் என்பது ஒரு டீயும், க்ரீம் பன்னும்தான் என்றாலும் சாம்ஆண்டர்சன் வராமால் போனால், ட்விட்டர், ஃபேஸ்புக் உலகத்தில் எப்படி முகத்தைக் காட்டுவது என்ற குழப்பம்தான் (ங்கொய்யால இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல)

ஒரு வழியாய் 5.15 மணிக்கு வந்து சேர்ந்தார், இணைய உலகம் பார்த்து ரசித்துக் கொண்டாடி, திட்டி மகிழ்ந்த ”ராசாத்தி ஏ ராசாத்தி” பாடல் நாயகன்.

PIT சுரேஷ் - சாம் ஆண்டர்சன்
கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள், அவர் ஒரு சினிமாவில் கதாநாயகனாக நடித்து அந்தப் படம் தியேட்டரிலும், ஜீ தொலைக்காட்சியிலும் கூட ஓடியது என்றால். நேரில் பார்த்தபோதுதான் அடையாளம் புரிந்தது நானும் அவரை சில முறை பார்த்திருக்கிறேன் என்பது.

நாங்கள் ஐந்து பேர் குழுவாக அமர்ந்திருப்பதைக் கண்டவுடன் அவரிடம் ஒரு திடுக்கிடல் தோன்றியது. ஒரு வழியாய் அறிமுகப்படலம் முடிந்து அவரின் சினிமா, இப்போது செய்துவரும் பணி, சமீபத்தைய விகடன் பேட்டி குறித்து பல விசயங்கள் உரையாடினோம்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் எனில் அந்தப் படத்தின் இயக்குனர் அவரின் பெரியப்பா. மத்திய அரசு சார் நிறுவத்தில் இசைத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அவருக்கு ஒரு சினிமா எடுக்க வேண்டும் என்ற தீராத ஆசை, அதற்கான முயற்சிகள் எடுக்கும் போது கதாநாயகன் கிடைப்பதில் ஏதோ சிக்கல் வர, இவரை நடிக்கச் சொல்லியிருக்கார். தயாரிப்பு அவர்கள் குடும்பத்தின் சொந்த தயாரிப்பு.

சாம் ஆண்டர்சன், லவ்டேல் மேடி, ஜாபர்

நடிப்பு என்பது துளியும் வராத அவரை வைத்து ஒரு வழியாய் படத்தை இயக்கியிருக்கிறார். முதல் காட்சியில் கதாநாயகியின் கையை பிடிக்கும் போது, நம்ம ஆள் பயத்தில் மயங்கி விழுந்திருக்கிறார். அது போன்ற பல சுவாரசிய சம்பவங்கள்

படத்தை வலிந்து சில திரையரங்குகளில் வெளியிட்டு ஓட்ட முயற்சி செய்து அதுவும் வெற்றியடையவில்லை. ஜீ டிவி அதை வாங்கியது ஒரு சிறு ஆறுதல். இரண்டு கதாநாயகி வேண்டும் என தீர்மானித்து வேறு ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்ய, அவர் முதல் நாள் படப்பிடிப்புக்கு வரும்போதே ஆயிரத்தெட்டு பந்தா செய்ய அவரை மாற்றி அவசர அவசரமாக வேறு பெண்ணை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்

நண்பர் ஜாபர் கேட்ட சில கேள்விகளில் குறிப்பாக ”படத்தின் தவறுகள் என்ன”வென்று கேட்டபோது, வெள்ளந்தியாக அவர் சொன்னது ”எல்லாமே தவறுதான் சார், அதிலும் நடிக்கவே தெரியாத நான் நடித்ததுதான் பெரிய தவறு” என்றார்.

படம் எடுத்த செலவுகள் குறித்துப்பேசும் போது, அப்போது செலவிட்ட தொகைக்கு ஒரு ரூட் பஸ் வாங்கியிருக்கலாம் என்றும் பேச்சு வந்தது. படத்தை சென்சாரில் மட்டுமே பாராட்டியிருக்கிறார்கள், பார்த்தவர்கள் பலரும் எப்படியாவது தொடர்புகொண்டு கிண்டலடித்திருக்கிறார்கள் அல்லது திட்டியிருக்கிறார்கள். அனைவருக்கும் அவர் சொன்னது, சொல்ல விரும்புவது “ஒன்னுமே தெரியாம ஒரு முயற்சி எடுத்தேன், அது சொதப்பிடுச்சு, எல்லோருமே எடுத்தவுடனே 100 மார்க் வாங்கிடமுடியுமா, அந்தப் படத்திற்குப் பிறகுதான் பலவிசயங்கள் கற்றுக்கொண்டேன், இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன். திட்றவங்க திட்டிட்டுப்போறாங்க சார்,” என்பதுதான்.

அடுத்து விகடன் பேட்டி குறித்து கேள்விகள் திரும்ப, விகடனும் எங்கெங்கோ தேடி ஜீ டிவி மூலம் தொடர்பு கிடைத்து தன்னிடம் பேசியதாகவும். விகடனில் வெளிவந்த பேட்டியில் பெரும்பாலானவை அவர்களாகவே நகைச்சுவைக்காக எழுதிக்கொண்டதாகவும் அப்பாவியாகச் சொன்னார். ஆனால், விகடன் பேட்டி வெளிவந்த பிறகு அவர் கூரியர் கொடுக்கச் செல்லுமிடத்தில் புதிது புதிதாக மக்கள் அடையாளம் கண்டு பேசுவதாகக் கூறினார்.

இணையத்தில் YouTubeல் அவரின் படக் காட்சிகளை பல லட்சம் முறை பார்த்திருப்பது, கேவலாமாகத் திட்டி கருத்துகள் வந்திருப்பது, சாம்ஆண்டர்சன் ரசிகர் குழு என்ற பெயரில் ஆர்குட்டில் 1800 பேர் & ஃபேஸ்புக்கில் 400 பேர் இருப்பது, அவருக்கென விக்கிப்பீடியாவில் ஒரு பக்கத்தில் அவரைப்பற்றிய குறிப்பு என்று பொய்யான தகவல்கள் இருப்பது, அவருடைய ”யாருக்கு யாரோ” ராசாத்தி ஏ ராசாத்தி பாடல் ”ராமசாமி” குறும்படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது…. என்பது போன்ற வரலாற்று நிகழ்வுகள் குறித்துக் கேட்கும் போது “அப்படியா சார், இப்படியெல்லாம் இருக்கா, விக்கிப்பீடியானா என்ன சார்” என அப்பாவியாக் கேட்ட போது கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.

இணையம் குறித்து மருந்துக்கும் தெரியாத மனிதனையா, இந்த இணைய உலகம் இவ்வளவு குத்திக் குதறுகிறது (அ) கொண்டாடுகிறது?. ஒரு வகையில் அவரைக் குறித்து தரம் தாழ்ந்த வார்த்தைகளை அந்த மனிதன் பார்க்கவில்லையென்பதை நினைக்கும் போது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

சில நாட்களுக்கு முன்புதான் ஃபேஸ்புக்கில் கணக்குத் துவங்கியதாகச் சொன்னார், ஆனால் அதன் பயனர்பெயர் கூட அவருக்கு சரியாகச் சொல்லத் தெரியவில்லை. இன்னொரு படம் செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருப்பதாகவும், ஆனால் எப்போது எப்படி என்பது குறித்து இன்னும் முடிவுசெய்யமுடியவில்லை என்றும் கூறினார்.

லவ்டேல் மேடி, நான், கார்த்தி, சாம் ஆண்டர்சன்
ஒரு சினிமாவில் நடித்திருக்கிறோம் என்ற பந்தா சிறிதும் இல்லாத வெகுளித்தனம் மட்டுமே நிறைந்த அவரைப் பார்க்கும் போது, சந்திக்கும் முன் வரை இருந்த கிண்டலும், குறும்பும், குறுகுறுப்பும் அன்பாக உருவெடுத்தது. சினிமாவில் நடித்துவிட்டோம் இனி எப்படியாவது சினிமாவிலேயேதான் இருக்க வேண்டும் என்று இல்லாமல் தினம் தினம் முகவரிகள் தேடித்தேடி கூரியர் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதே சமயம் இன்னொரு நல்ல வாய்ப்புக் கிடைத்தால் முடிந்தவரை நல்லபடியாக செய்யவேண்டும் என்ன எண்ணமும் ஆவலும் இருக்கிறது!

நமக்கு அவரைக் கிண்டல் செய்ய எவ்வளவு சுதந்திரத்தை இந்த உலகம் கொடுத்திருக்கிறதோ அதைவிட அதிகமாக, அவர் விருப்பப்பட்டதை அவர் செயல்படுத்த அதிக சுதந்திரமும் உரிமையும் இருப்பதை நாம் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

அவரைச் சந்தித்து இரண்டு நாட்கள் கழிந்தபின்பு இன்று YouTubeல் அந்தப் பாடலை பார்க்கும்போது சிரிப்பு பொங்கிவரத்தான் செய்தது ஆனால், அதற்கு கீழே எழுதப்பட்டிருக்கும் பின்னூட்டங்களைப் பார்க்க மனம் விரும்பவில்லை!

Thursday, January 04, 2018

கடவுள் மறுப்பை பெரியார் கையில் எடுத்த காரணம்

கடவுள் மறுப்பை, பெரியார் கையில் எடுத்த காரணம், "மக்கள் தன்னை திரும்பிப் பார்க்கவேண்டும்
என்பதே" என்ற ஒரு நண்பரின் குற்றச்சாட்டிற்கு பதில்
-
அறிந்து சிந்திக்கிறவர் எவரும் பெரியாரின் கடவுள் மறுப்பின் ஆதாரம் புரிந்தால் பெரியார் கருத்தை மறுக்கவே முடியாது.
-
மனிதனை பிரிக்கின்ற , மனிதர்களுக்கிடையில் சமத்துவமற்ற எந்த ஒரு வேற்றுமையையும் சாடியவர் பெரியார்.
அது பாலினம், மதம், சாதி, பொருளாதாரம் உட்பட்ட என்ன காரணமாக இருந்தாலும் ஒரு மனிதன் மேல் இன்னோர் மனிதன் செய்கின்ற ஆதிக்கத்தை தகர்த்தே தீரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் பெரியார்.
.
வர்ணாசிரமத்தின் அடித்தளத்தில் உருவான இந்துமதம், நால்வகை பிரிவுகளை வைத்து மனிதனை பிறப்பின் அடிப்படையிலே சமத்துவமற்றவனாக வைத்திருந்தது.
அம்பேத்கர் இந்துமதத்தின் கொடும்பிணியை தெளிவாய்ச் சொன்னார்.
"இந்து மதம் என்பது பல அடுக்குகள் கொண்ட மாளிகை;
ஒரு அடுக்குக்கும் இன்னொரு அடுக்குக்கும் படிக்கட்டும் இல்லை வாசலும் இல்லை ஒரு அடுக்கில் பிறந்தவன் அதிலே சாக வேண்டும். வேற அடுக்குக்கு போகவும் முடியாது வெளியே வரவும் முடியாது" என்று .
-
அந்த வர்ணாசிரமத்தை, சாதியை எதிர்க்கிற பெரியார் அதன் அடியோடு அடியாக இழைந்து கிடந்த கடவுளையும் எதிர்க்கவேண்டிய கட்டாயம் வந்தது.

சாதியில் இருந்து உன் மதத்தை , கடவுளை பிரித்துக் கொண்டு போக உன்னால் முடியுமானால், பிரித்துக்கொண்டு போ அதில் எனக்கு எந்த வேறுபாடும் இல்லை.
உன் மதம், உன் கடவுள் சாதியோடு, வர்ணாசிரமத்தோடு தான் பின்னிக்
கிடப்பார் என்றால் அதை எதிர்த்தே தீருவேன் என்று சொன்னார்.
மூடநம்பிக்கைகளும் , கொடூரமான பழக்கவழக்கங்களும் மதத்தின் பேரால் தான் மக்கள் வாழ்விலே திணிக்கப்பட்டன என்பதை அறிவுடையோர் அறிவர்.
-
"ஒடுக்கபட்டவரை தாங்கள்
ஒடுக்கப்பட்டது சரிதான் என்று எண்ணவைக்கிற அமைப்பு தான் மதம்" என்ற வழக்கின் படியும், மதத்தை எதிர்த்தே ஆகவேண்டியதும் அவசியம்.
இவை எல்லாம் அறிந்திருந்தும், தெளிவான சிந்தனை இன்றி, வெறுமனே மக்களை திரும்பிப் பார்க்க வைக்க இறைமறுப்பை வலியுறுத்தியதாக சித்தரிக்க முயல்வது அறிவுடைமை ஆகாது.
மேலும், பெரியாரின் வழி நடப்பவர்களை பலர் அவ்வப்போது தேச துரோகிகள் என்று சொல்வதுண்டு.
அது என்னவோ உண்மை தான்,.
நாங்கள் மனிதனை தவிர வேறு எதன் மீதும் பற்றுகொண்டவர்கள் அல்ல. தேசமோ, மொழியோ, மதமோ , சாதியோ, மனிதனை பிரிக்கும் எனில் அவற்றிக்கு எல்லாம் நாங்கள் துரோகிகளாவே இருக்க ஆவலுறுகிறோம்

அன்னை மீனாம்பாள் சிவராஜ்



பெண் விடுதலைக்காகவும், பட்டியலின மக்களின் விடுதலைக்காக போராடுவததைத் தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டிருந்த அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்களின் பிறந்ததினம்  26/12/1904.
பெரியாருக்கு சரித்திர புகழ்வாய்ந்த பெயரான 'பெரியார்' என்ற பெயரை சூடியவரும் அன்னைதான்.
என் அன்புச் சகோதரி என்று அண்ணல் அம்பேத்கர் உள்ளன்போடு அழைத்ததும் அன்னை மீனாம்பாள் அவர்களைத்தான்.
பெண்கள் முன்னேற்றத்திற்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர்.
இந்தி எதிர்ப்பு போரின் முதல் படைத்தலைவி
சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலினப் பெண் துணை மேயர்...
இன்னும் எண்ணற்ற பெரும் பதவிகளை அலங்கரித்தவர்.
30 நவம்பர் 1992 இல் நம்மை விட்டு மறைந்தார்.

கடவுள் மதம் ஆன்மிகம் பற்றி காமராசர்

--1--
நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விசயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல.
பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா?,
ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு , மூக்குத்திக்குக் கூட வழியில்ல.
இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான்.
கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான்.
அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம், ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலாமில்லையா?,
அதையெல்லாம் செய்யமாட்டான்.
சாமிக்குத்தம் வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான்.மதம் மனிதனை பயமுறுத்தியே வைக்குதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன்
--2--
“லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள்.
அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம் பிச்சிட்டான்.
சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட் டான் நம்மாளு.
கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா?.
அரேபியாவிலே இருக்கிறவன் “அல்லா” ன்னான், ஜெருசலத்தல இருக்கிறவன் “கர்த்தர்” ன்னான்,
அதிலேயும் சிலபேரு மேரியக் கும்பிடாதேன்னான்.
கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு ‘டெனாமினேஷன்’ உண்டாக்கிட்டான்.
மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமியச் சொன்னான்.
நம்ம நாட்டு பூர்வீகக் குடிமக்களான திராவிடர்கள் காத்தவராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான்.
எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்?.
அவனவனும் அவனவன் இஷ்டத்துக்கு ஒரு சாமிய உருவாக்கினான்.
ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான். காங்கிரஸ் – கம்யூ னிஸ்ட் – தி . மு . க . மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி.
யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான்.
மதம் மனிதனுக்குச் சோறு போடுமா?, அவன் கஷ்டங்களப் போக்குமா?.
இந்தக் குறைந்த பட்ச அறிவுகூட வேண்டாமா மனுசனுக்கு?
உலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா – நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே!!! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே!!!
இப்படியெல்லாம அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்?”
--3--
"டேய் கிறுக்கா, நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்?. ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதாபாத்திரம்னேன்.
அதையெல்லாம் நம்மாளு கடவுளாக்கிட்டேன்னேன்!!!.
இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயகனுக்குக் ‘கட்அவுட்’ வைக்கிறானில்லையா, அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப்பட்ட ராமனுக்கும் ,
கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான்.
அந்தப் புத்தங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற விசயங்கள எடுத்துக்கணும்,
ஆசாமிய விட்டுபுடணும். காலப்போக்குல என்னாச்சுன்னா, லட்சக்கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும்,
அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி.
அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு.
ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க களவாணிப் பசங்க. புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சித்தான் நம்ம சனங்கள அடிமையா ஆக்கிவச்சிருக்கான்.
நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான், நவராத்திரி கதையைச் சொல்லி சரஸ்வதி பூசை பண்றான்.
விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான்.
இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை சனங்களையும், பாமர சனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான்.
நான் தீபாவளி கொண்டாடுனதுமில்ல, எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல, புதுசு கட்டுனதுமில்ல.
பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம சலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்
--4--
சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடக்கும்.
அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூசை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன்.
1930-க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன்.
அவர் மொட்டை போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுகிட்டேன். அப்பொறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போயும் போயும் கடவுள், தலை முடியத்தானா கேக்குறாரு?, எல்லாம் பார்பர் ஷாப் (Barber Shop ) காரன் செட்-அப் அப்புடீன்னு சிந்திச்சேன், விட்டுட்டேன்.
ஆனா , சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப்பானா?
அடுத்த மனுசன் நல்லாருக்கணும்கிறதுதான் வழிபாடு.
ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை.
இதுல நாம சரியா இருந்தா, தெய்வம்னு ஒன்னு இருந்தா அது நம்ம
வாழ்த்தும்னேன்

ஆத்மா மோசடி

எழுத்தாளர்: பெரியார்
மனிதன் செத்துப் போனான் என்பதற்குப் பொருள்: 
மனிதன் இயங்குவதற்கு ஆதாரமாகவுள்ள சுவாசம் அதாவது மனிதன் மூக்கால், வாயால் உள்ளே இழுத்து வெளியே விடும் காற்றுப் போக்குவரத்து நின்றுவிட்டால், அதாவது அந்தக் காற்றை இழுக்கும் சக்தி அந்த உடலுக்கு இல்லாமல் போனால் செத்துப் போனான் என்பது பொருள்.
உடனே மனிதன் பிணமாகி விடுகிறான், இந்த காற்றுப் போக்குவரத்திற்குக் காரணமான உடலிலிருக்கும் சக்தி வேலை செய்யச் சக்தியற்றுப் போய்விட்டால் சுவாசம் நின்று விடுகிறது.
இந்த நிலையைத்தான் மதவாதிகள் மூடநம்பிக்கைக்காரர்கள், ஆத்மா உடலை விட்டுப் பிரிந்து போய் விட்டது என்று சொல்லுகிறார்கள் ஆத்மா என்றாலே சுவாசம் (காற்று) என்றுதான் பொருள். அது பிரிவதும் இல்லை. பிரிந்து எங்கும் போவதுமில்லை. உதாரணமாக; ஒரு மனிதனின் மூக்கையும் வாயையும் காற்று போகாமல், வராமல் மூடி அழுத்திப் பிடித்துக் கொண்டோமானால் அந்த மனிதன் துள்ளிக் குதித்து ஆடி அமர்ந்து செத்தே போகிறான். இப்படி ஆகிவிடுவதில் ஆத்மா பிரிகிறது எங்கே இருக்கிறது? ஆத்மாவை சொன்னவன் ஆத்மாவிற்கு உருவமில்லை, அரூபம், கண்ணுக்குத் தெரியாதது, சூட்சுமம், கண்டுபிடிக்க முடியாதது என்றுதான் சொன்னானேயொழிய அதை ஒரு வஸ்துவாக்கவில்லை.
இந்தப்படி முடித்து விட்டுப் பிறகு அது மேல் லோகத்திற்குப் போய் உருவெடுத்து அதே மனிதனாகிக் கர்மத்தை அனுபவிக்கிறது என்று புளுகி இருக்கிறான்.
கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் இதில் கொஞ்சம் மாற்றம் செய்து சரீரத்தை விட்டு ஆத்மா பிரிந்தாலும், விசாரணை - தீர்ப்புக்காலம் வந்தவுடன், பிரிந்த ஆத்மா மறுபடியும் சரீரத்திற்குள் வந்து புகுந்து தீர்ப்பை (ஜட்ஜ்மென்டை) ஏற்கிறது என்பதாகக் கருதுகிறார்கள்.
இப்படியெல்லாம் மதக்காரர்கள் ஏன் சொல்கிறார்கள் என்றால், கடவுளுக்கு மனிதன் மீது ஒரு அதிகாரம் (வேலை) வேண்டுமென்பதற்காகவேயாகும். மனிதன் செத்த பிறகு கடவுள் அவனை ஒன்றும் செய்ய முடியாது என்றாகிவிட்டால், கடவுளை எவன்தான் சட்டை செய்வான்? ஏன், எதற்காகச் சட்டை செய்வான்?
ஆனதினாலேயே கடவுள் பெயரால் முட்டாள்களும், பிழைக்க வேண்டிய அயோக்கியர்களும் இந்த ஏற்பாடு செய்து விட்டார்கள். சரீரத்தை விட்டு ஆத்மா பிரிந்தால் அது மோட்சத்திற்குப் போவதா? நரகத்திற்குப் போவதா? மறுஜன்மம் எடுப்பதா? பிதிர் லோகத்தில் வாழ்வதா? பேயாய் அலைவதா? செத்தவனுக்காகச் செய்யப்படும் காரியங்களை அனுபவிப்பதா? இவற்றில் எந்தக் காரியத்திற்குச் செத்தவன் ஆளாவது?
செத்தவனைப் புதைத்தால் உடல் முழுவதும் நீராக, மண்ணாக ஆகிவிடுகிறது. நெருப்பில் கொளுத்தினால் சரீரம் முழுவதும் சாம்பலாக ஆகிக் காற்றில் பறந்து மறைந்து விடுகிறது.
இரண்டுமில்லாமல் பூமியில் கிடந்தால் கழுகு, காக்கை, நரி, நாய் மற்றும் மாமிச பட்சிணி ஜீவன்கள் தின்று தீர்த்துவிடுகின்றன.
ஆகவே, செத்த மனிதன் எப்படி இருப்பான், எதை அனுபவிப்பான், எங்கே இருப்பான் என்பனவற்றையும், இந்த அனுபவம் எல்லாம் மனிதனுக்கு மாத்திரம் தானா? மற்ற ஜீவன்களுக்கும், மற்றும் செத்துப்போன பட்டுப்போன மரம், செடி, கொடி, புல், பூண்டுகளுக்கும் உண்டா என்பதையும் ஆறறிவுள்ள மனிதன் சிந்தித்துப் பார்ப்பானாக.
14.6.1970 உண்மை இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை

சாவித்திரி ராவ் பூலே

சாவித்திரி ராவ் பூலே
(3 January 1831 – 10 March 1897)
ஆயிஷாவை உயர்த்திய படிகள்.
பெண்ணுரிமை போராளிகள் தொடர்
டிசம்பர் இறுதி, நல்ல பனி, இரவு பதினொரு மணி , கோவை பேருந்து புறப்பட இன்னும் கால் மணி நேரம் இருக்கிறது. மடிக்கணிணியை இருக்கையில் வைத்து விட்டு கீழிறங்கி நின்ற போதுதான் மசூது பாய் எதிரில் வந்தார். கூடவே அவர் மகள் ஆயிஷா. ,
சலாம் சொல்லி விட்டு அவரே தொடங்கினார். "லீவு முடிஞ்சு காலேஜுக்கு போறா?! அதான் பஸ் ஏத்தி விட வந்தேன் .நீங்களும் கோயம்புத்தூருக்கா , இறங்கும் போது பாத்துகிடுங்க ". எஞ்சினியரிங் இரண்டாம் ஆண்டு படிக்கிறாளாம். கொஞ்சநேரம் பேசிகொண்டிருக்கும் போதே பேருந்து நகர ஆரம்பித்தது. மசூது பாய், ஆயிஷாவிடம் இறங்கியதும் போன் பண்ணச் சொல்லிவிட்டு போய்விட்டார்.
.
ஆயிஷா யார் துணையும் இன்றி ஒரு இரவுப் பயணத்தை தாண்டி தன் உயர்கல்விக்க்காக செல்கிறாள். தமிழகத்தில் இன்றைய நாளில் இது இயல்பானது. இதில் வியப்படைவதற்கு எந்த காரணமும் இல்லை என்றாலும் இது எப்படிச் சத்தியப் பட்டது , சாத்தியப் படுத்த உழைத்த கரங்கள் எவை என்பதில் தான் சிந்தனை.
இன்றில் இருந்து சற்றேறக் குறைய நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னான இந்தியாவில் இதை யாரும் கற்பனை செய்து பார்க்க முடிந்திருக்குமா ?!
சமைக்க, துணி துவைக்க, இரவில் இயைந்து கொடுக்க,
வரிசையாய் பெற்றுத்தள்ள, வாழ்நாள் எல்லாம் வளர்த்து வரும் ஒரு அடிமை என்ற எண்ணம் தாண்டி பெண்களைக் கண்டிராத ஒரு காட்டுமிராண்டிச் சமுதாயத்தில், பெண்கள் படிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தை , அதைச் சாத்தியமாக்க 1840களில் உழைத்த கரங்கள் சொல்லவா ?!
மகாராஷ்டிரத்தின் நய்காவ்ன் என்கிற ஊரில் பிறந்த சாவித்திரி ராவ் பூலே(பிறப்பு: 1831 ஜனவரி 03) தெரியுமா?!, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை . அவர் கணவர் ஜோதிராவ் பூலே, முதல் பெண்கள் பள்ளியை உருவாக்கியவர். குழந்தை திருமணம் வழக்கத்தில் இருந்த நேரம், சாவித்திரி ராவின் ஒன்பதாம் வயதில் திருமணம். மனைவியாய் தானே பாடம் நடத்தி அவரை கல்வியாளராய் உருவாக்குகிறார் ஜோதிராவ் புலே .
அண்டை அயலார் ஏற்கவில்லை. "பொட்டச்சிக்கு என்ன படிப்பு வேண்டிகிடக்கு?!" என்ற முப்பாட்டன் காலத்து வசனங்கள் மெல்லக் கடிந்து , அவை கேட்கப் படாது போன போது வன்முறை கட்டவிழ்த்து விட்டும் பார்த்தன.
யாருக்கும் அஞ்சினார்கள் இல்லை. எதிர்த்து நின்றார்கள் கணவனும், மனைவியும். படித்ததோடு மட்டும் அல்ல , மற்ற பெண்களையும் படிக்க வைத்தாக வேண்டும். அதிலும் விவசாயப் பெருங்குடிப் பெண்கள் படிக்க வேண்டும் என்று சாவித்திரி ராவ் பூலே உரக்கச் சொல்கிறார்.

பத்தாம்பசலிகள், பழம் பெருச்சாளிகள் , என்னென்னவோ செய்து பார்க்கின்றனர். சாவித்திரி ராவ் பூலேவைப் பற்றி அசிங்கமான அர்ச்சனைகள் , சாலையில் நடக்கும் போது கல் எறிந்து பார்த்தார்கள். சாணத்தை எறிந்து பார்த்தார்கள். ஒரு நாள் அப்படி கல்லெறிய வந்தவனுக்கு கன்னம் பழுத்தது. சாவித்திரி தான். அதிர்ந்து அடங்கிப் போனது சில கும்பல்கள்.

பெண்களைப் படிக்க வைக்க பெண் தான் சரி என்று முதல் பெண் ஆசிரியையை தானே உருவெடுத்தார். 1848 இல். அது தான் முதல் பெண்களுக்கான பள்ளி . கூட இணைந்து கொண்ட இன்னோர் பெண் பாத்திமா ஷேக் .
பள்ளி நடந்து கொண்டிருந்தாலும்,ஒளிந்திருந்து சேறு வீசுகிறவர்கள் முழுதும் அடங்கியபாடில்லை. கருத்து ஒத்துப் போன கணவர் ஜோதிராவ் புலே ஆலோசனைப் படி பள்ளிக்கு செல்லும் போது பழைய புடவை உடுத்திச் செல்வார். சாணம் வீசுகிறவர்கள் தங்கள் பணிகளைச் செய்வார்கள். சாவித்திரி பள்ளிக்கு சென்றதும் சேறான புடவையை மாற்றி புதிய புடவையை உடுத்திக் கொள்வார். எடுத்த பணியில் சோர்ந்து போனதாய்த் தெரியவில்லை.
பெண்களுக்கான பணி, கல்வி மட்டும் இல்லை என்றும் உணர்கிறார்கள் புலே தம்பதியினர்.
ஆண்களுக்கு என்றுமே பெண்கள் போகப் பொருட்கள்,
அவள் உடை, இடை,நடை என அனைத்தும் ஆண்களுக்காகவே படைக்கப் பட்டவை என்ற எண்ணம் இன்றும் மறையாத ஒன்று.
கணவன் இல்லா உலகம், பெண்ணுக்கு அவசியம் இல்லை என்று உறுதியாக நம்பிய காலம். உடன் கட்டையும், விதவையானால் முடி மழித்து மூலையில் இருத்தும் வழக்கத்தில் இருந்த காலம்.
ஏன் விதவைகள் மொட்டை அடிக்க வேண்டும் என்று கேட்டார்கள் புரட்சித் தம்பதியினர். முடிதிருத்தும் தொழிலாளர்களை ஒன்று திரட்டுகிறார்கள் . விதவைகள் தலையில் கை வைப்பதில்லை என்று முடிவெடுக்கிறார்கள் முடிதிருத்துவோர்.
இந்நேரத்திலே(1849-50) பெண்களுக்கான ஐந்து பள்ளிகளை உருவாக்குகிறார்கள்.
அடுத்த படியாக தாழ்த்தப்படோர்களுக்கான பெண்கள் பள்ளி(1852).
1870களில் , பஞ்சம் நிலவிய காலத்திலும் உண்டு உறைவிடப் பள்ளிகள் ஐம்பதிற்கும் மேல் நிறுவியிருந்தார்கள் புலே தம்பதியினர்.
சமூகத்துடன் இடைவிடா போராட்டத்துடன் நகர்ந்த நேரத்தில் ஜோதிராவ் பூலே , சாவித்திரியை தனியே போராடவிட்டு இறந்து போனார்(1890, நவம்பர் . 28). "வீதிவரை மனைவி" என்ற வெட்டிச் சொற்களை எல்லாம் சாவித்திரி புலே ஏற்க மறுத்து, தனக்கான உரிமை என ஜோதிராவ் புலேவின் சிதையை தீ மூட்டி அவரை வழி அனுப்பி வைத்தார். பெண் போகாத இடம் ஏது என்றார். ஜோதிராவ் என்னவோ மகிழ்வோடு தான் காற்றில் கரைந்திருப்பர் என நினைக்கிறேன்.
ஜோதிராவ் மறைந்த பின்னரும், எடுத்த பணி நோக்கியே நகர்ந்த சாவித்திரி ராவ் புலேவை (1897 மார்ச் 10) பிளேக் நோய் கொண்டு சென்றது.
இன்றைக்கு சில நூறு கிலோமீட்டர் தூரம் தாண்டிப் உயர்கல்வி பயிலும் மசூது பாய் மகள் ஆயிஷா, சாவித்திரி பாய் பூலேவை அறிந்திருப்பாளா ?! பாத்திமா ஷேக் யார் என்று கேட்டால் சொல்வாளா ?!
நாளை காந்திபுரம் நிறுத்தத்தில் இறங்கும் போது கேட்க வேண்டும். அவள் அறிந்திருப்பதன் சாத்தியம் குறைவு தான்.

இந்திய வரலாறல்ல ,உலக வரலாற்றிலே கூட பெண்களுக்கான பக்கங்கள் மிகச் சிறிய எழுத்துகளால் தானே எழுதப் படுகின்றன.
இன்னும் ஆயிஷாக்களை, மணிமேகலைகளை, மேரிகளை உயர்த்த நினைத்த படிக்கட்டுகளைக் குறித்து சொல்ல வேண்டும்.
படிகள் உயரும்

வரலாற்று நிகழ்வுகள்.

மும்பையில் வசித்த அண்ணல் அம்பேத்கரை சந்திக்க அன்று பெரும் பதவி வகித்த சி.பி.ராமசாமி ஐயர் நேரில் வந்துக்கொண்டிருந்தாக தகவல் வருகிறது, உடனே தன் உதவியாளரை அழைத்து அண்ணல் தான் எப்போதும் வாசித்த பின்பு பழைய தினசரிகளில் கத்தரித்து வைத்த காகிதங்களை ஒரு குறிப்பிட்ட பையில் இருப்பதை உடனே எடுத்து வரச்சொல்கிறார். அது 12 வருடத்திற்கு முந்தைய நாளிதழில் கத்தரித்த துண்டு அது.அதில் இருந்த செய்தி என்னவெனில்,கோயில் நுழைவு போராட்டத்தை எதிர்த்தும்,தீண்டாமையை ஆதரித்தும் அன்றைய காலகட்டத்தில் சி.பி.ராமசாமி ஐயர் பேசிய பேச்சு அது.மேற்கண்ட ஐயர் அண்ணலின் வீட்டுக்கு வந்தவுடன் அவரிடம் அந்த நாளிதழ் கத்தரிப்பை அவரிடமே காட்டி தீண்டாமையை ஆதரிக்கும் உங்களிடம் பேச எனக்கு ஒன்றுமில்லை முகத்திற்கு நேராக கூறி திருப்பி அனுப்பி கடுமையாக பார்ப்பனிய ஆதிக்கத்தை எதிர்த்தவர் வடக்கின் அறிவாசான் புரட்சியாளர் அம்பேத்கர்,
தாழ்த்தப்பட்ட மக்கள் கூலி உயர்வு கேட்ட ஒரே காரணத்திற்காக பலர் உயிரோடு எரிக்கப்பட்ட நிகழ்வான கீழ்வெண்மணிப் படுகொலைகள் நடந்த பின் அதனை முன்னின்று நடத்திய கோபாலகிருஷ்ண நாயுடு பெரியாரை தேடி அவரின் வீட்டுக்கு வந்தபோது அந்த கேடுகெட்ட மனிதனை சந்திக்க மறுத்து உன்னை நீதிமன்றத்தில் சந்திக்கிறேன் என திருப்பி அனுப்பியவர் தெற்கின் அறிவாசான் தந்தை பெரியார்.
இருவரும் எந்தவித தகவல் தொடர்புகள் அற்ற அந்த காலகட்டத்தில் வெகுதூரத்தில் இருந்தாலும் ஒத்த கருத்தோடு ஆதிக்கத்திற்கு எதிராக எந்தவித தயவுமின்றி துரத்தியடித்தது வரலாற்று சிறப்பு மிக்க துணிவான செயல்களே.
இன்று அந்த இருவரையும் தான் பல வழிகளிலும் துண்டாட துடிக்கிறது பார்ப்பனிய சக்திகள்.

Wednesday, January 03, 2018

பெரியார் அரசியல்

பெரியார் சொல்கிறார், "எனக்கும் என் கொள்கைக்கும் யார் நெருக்கமாக , யார் ஒத்து வருகிறார்களோ அவர்களை ஆதரிப்பேன். அவர்களை வைத்து என் கொள்கைகளை ஆனவரை நிறைவேற்றிக் கொள்ளப் பார்ப்பேன். ஒத்துவரவில்லை அந்த ஆட்சியை அகற்ற தெருவில் இறங்கி போராடுவேன்." இதுதான் பெரியார் அரசியல். ஜனநாயகத்தை, அதன் எல்லைகளை எவ்வளவு அழகாகப் புரிந்து வைத்திருக்கிறார். பெரியாரின் அத்தனை ஆண்டுகால அரசியலையும் பார்த்தீர்கள் என்றால் அவர் எந்த காலகட்டத்திலுமே ஓட்டரசியல் கட்சிகளை, "எல்லாமே ஒன்னுதான். யாரையுமே நம்பாதே. நான் மட்டும்தான் நல்லவன்," என 'நடுநிலை' வகிக்கிறேன் என்கிற பெயரில் சொன்னதில்லை. ஏனெனில் அதனால் மக்களுக்கு யாதொரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்பதை அறிந்திருந்ததால், ஓட்டுக்கட்சிகளின் எல்லைகள் புரிந்தாலும் எப்போதுமே ஏதாவது ஒரு பக்கம் தன் ஆதரவை தந்தபடியேதான் இருந்திருக்கிறார். நேரம் வரும்போது குத்தியபடியேதான் இருந்திருக்கிறார்.
ஆனால் இன்று பெரியாரியர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் பலரும் மக்களுக்கு எது நல்லது, மக்களுக்கு எது பரவாயில்லை என ஆராய்ந்து சார்புநிலை எடுக்காமல், தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்வதிலேயே முனைப்பாக இருக்கிறார்கள்.
என்னிடம் பலர் கேட்பார்கள். நீங்கள் திமுக சார்பாக எழுதாமல் நடுநிலையாக எழுதினால் இன்னும் நல்ல பேர் கிடைக்குமே. உங்கள் அரசியலை நிலைப்பாட்டைத் தாண்டி உங்கள் எழுத்தின்மேல் பலருக்கு மரியாதையுள்ளது என்று. நானும் ஒரு பதிவில்/ஒரு கட்டுரையில் அதிமுக/திமுகவை மாறிமாறி திட்டலாம்தான். "நான் நடுநிலை, நான் நடுநிலை," எனக் காட்டிக்கொள்ளலாம்தான். "அசோக் நடுநிலையா எழுதுவாருப்பா," என்கிற பெயர் வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால் மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்றால் ஜனநாயகத்தில் நடுநிலையை வைத்து நாக்கு கூட வழிக்க முடியாது. இங்கே ஒரு பக்க சார்பு எடுக்காமல் நடுநிலையாக இருப்பதைப் போன்ற அயோக்கியத்தனம், மக்கள் விரோதம் வேறொன்றும் இல்லை.
ஆனால் எவ்வளவு சொன்னாலும் so called பெரியாரியர்கள், அம்பேத்கரியர்கள் காதிலேயே வாங்குவதில்லை. "அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்," என கூவிவிட்டு சென்றுவிடுவார்கள். ஏனெனில் இங்கே மக்களுக்கு நல்லது நினைப்பதைவிட நல்லவனாய் காட்டிக்கொள்ளுதல் முக்கியமாகிவிட்டது.

காமராஜர்

அந்த நாட்களின் தேவையான அத்தியாவசிய தேவைகளான உணவு, கல்வி தன்னிறைவுக்கான திட்டங்களை செய்தவர் காமராஜரே.. கலைஞர் அடுத்த கட்டத்திற்கு தமிழகத்தை நகர்த்திச் சென்றார். இருவரும் தமிழ்நாட்டுக்கு உழைத்தவர்கள். I love both of them. Why do some suddenly support Kamarajar just  to debase Karunanidhi? Bhaktavatchalam's policies as CM were more or less what current and previous CMs are doing  (I am referring to OPS & EPS). Bhaktavatcalam lost because he forced Hindi in Madras State and ended PDS implemented by Kamarajar. காமராஜரோட கொள்கைகளை அவரோட கட்சிக்காரரே follow பண்ணல...  பக்தவச்சலம் தூக்கி எறிந்த policies-அ திரும்ப கொண்டு வந்தது அண்ணாதுரை & கருணாநிதி. MGR expanded some for his own constituency needs, but he followed them. இன்னிக்கி "திராவிடத்தால் வீழ்ந்தோம்  காமராஜர் காலம் பொற்காலம்"னு சொல்றவனுங்க, அடுத்து காமராஜரையும் தூக்கி எரிஞ்சிடுவாங்க. குல கல்வி திட்டம் ஒழித்தவர், சத்துணவு திட்டம் கொண்டு வந்தவர், ஹிந்தி எதிர்த்தவர் அப்டினு அவரையும் கேவலப்படுத்துவானுங்க.

கலைஞர் சாதனைகள் சில

கலைஞரோட சாதனைகள் சிலவற்றை மட்டும் இங்கே!! பலமுறை இதை பதிவிட்ட திமுக
முகநூல் தொண்டர்களுக்கு நன்றி்...
1. போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்
2. போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்
3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்
4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்
5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்
6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்
7. முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்தது கலைஞர்
8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு மையம் அமைத்தது கலைஞர்
9. கையில் இழுக்கும் ரிக்‌ஷா ஒழித்து இலவச சைக்கில் ரிக்‌ஷா கொடுத்தது கலைஞர்
10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர்
11. குடியிருப்பு சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர்
12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்
13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர்
14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர்
15. அரசியலமைப்பில் BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர்
16. P.U.C வரை இலவச கல்வி உருவாக்கியது கலைஞர்
17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்
18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்
19. முதல் விவசாய கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்
20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர்
21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்
22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்
23. கோவில்களில் குழந்தைகளுக்கான " கருணை இல்லம் " தந்தது கலைஞர்
24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்
25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்
26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர்
27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர்
28. SIDCO உருவாக்கியது கலைஞர்
29. SIPCOT உருவாக்கியது கலைஞர்
30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது கலைஞர்
31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர்
32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர்
33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்
34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர்
35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபபட்டோரில்
இணைத்தது கலைஞர்
36. மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர்
37. மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
38. தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
40. மிகபிர்படுத்தபபட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்
41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளகலை பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்
42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது
43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்
44. சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்
45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 % இடஒதுக்கீடு தந்தது கலைஞர்
46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது கலைஞர்
47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்
48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்
49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்
50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்
51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்
52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்
53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்
54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்
55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்
56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர்
57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர் கலைஞர்
58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர்
59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு
60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்
61. மெட்ராஸ், சென்னையாக்கியது கலைஞர்
62. முதல் தடவை விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் அளித்தது கலைஞர்
63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்தது கலைஞர்
64. முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்
65. கான்கிரீட் சாலை அமைத்தது கலைஞர்
66. 24 மணி நேர மருத்துவ சேவை தந்தது கலைஞர்
67. தொழிற்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு
68. சமத்துவபுரம் தந்தது கலைஞர்
69. கிராமங்களில் மினி-பஸ் சேவையை கொண்டுவந்தது கலைஞர்
70. இந்தியாவிலே முதன் முறையாக டாக்டர். அம்பேத்கார் சட்ட கல்லூரி நிறுவியது கலைஞர்
71. பெரியார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்
72. உலக தமிழர்களுக்கு உதவ, தமிழ் மெய்நிகர் பல்கலைகழகம் தந்தது கலைஞர்
73. உருது அக்காடமி தந்தது கலைஞர்
74. சிற்பான்மையினர் பொருளாதார வளர்ச்சி அமைப்பு ஏற்படுத்தியது கலைஞர்
75. உழவர் சந்தை திட்டம் தந்தது கலைஞர்
76. வருமுன் காப்போம் திட்டம் தந்தது கலைஞர்
77. கால்நடை பாதுகாப்பு திட்டம் தந்தது கலைஞர்
78. 133 அடி திருவள்ளுவர் சிலை கன்னியாகுமாரியில்
வைத்தது கலைஞர்
79. டைடல் பார்க் சென்னையில் அமைத்தது கலைஞர்
80. வீட்டுமனை வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்
81. மாவட்ட, மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வருவோருக்கு மேற்படிப்பு உதவி தொகை தந்தது கலைஞர்
82. ஆசியாவிலே மிக பெரிய பேருந்து நிலையம் சென்னை கோயம்பேடு நிலையம் அமைத்தது கலைஞர்
83. விவசாய கூலி வேலை செய்வோர் நல வாரியம் அமைத்தது கலைஞர்
84. பொது கூலி வேலை செய்வோர் நல வாரியம் அமைத்தது கலைஞர்
85. அறிஞர்களுக்கும், தியாகிகளுக்கும் மணிமண்டபம் கட்டியது கலைஞர்
86. 20 அணைகள் கட்டியது கலைஞர்
87. பள்ளிகளில் உணவோடு முட்டை தந்தவர் கலைஞர்
88. 9 மாவட்டங்களில் புதிய மாவத்டாட்சியர் அலுவலகம்
கட்டியவர் கலைஞர்
89. மதுரை நீதிமன்றம் கட்டியது கலைஞர்
90. இலவச பஸ் பாஸ் தந்தவர் கலைஞர்
91. அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர்
92. நமக்கு நாமே திட்டம் தந்தவர் கலைஞர்
93. நலிவுற்ற குடும்பநல திட்டம் தந்தது கலைஞர்
94. 104 கோடி ரூபாயில் சென்னை பொது மருத்துவமணை புதிய கட்டிடம் தந்தது கலைஞர்
95. 13000 மக்கள் நல பணியாளர்கள் நியமனம் செய்தது கலைஞர்
96. முதல் முறையாக 10000 சாலை பணியாளர்களை நியமனம் செய்தது கலைஞர்
97. சென்னையில் 9 மேம்பாலங்கள் தந்தது கலைஞர்
98. 1500 கோடி ரூபாயில் 350 துணை மின்நிலையம் உருவாக்கியது கலைஞர்
99. ஒப்பந்த பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தந்தது கலைஞர்
100. போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தந்தது கலைஞர்
101. வேலூர், தூத்துகுடி, கன்னியாகுமாரியில் புதிய மருத்துவ கல்லூரி அமைத்தது கலைஞர்
102. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டம்
103. பொது விநியோக திட்டத்தின் மூலம் சமையல் எண்னை மற்றும் பல வீட்டு பொருட்க்கள் நியாயவிலையில் தந்தவர் கலைஞர்
104. 10 சமையல் பொருட்க்களை 50 ரூபாய்க்கு தந்தது கலைஞர்
105. விவசாய கடன் 7000 கோடி தள்ளுபடி செய்தது கலைஞர்
106. சரியான நேரத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்றது கலைஞர்
107. மேம்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ 1050 ஆக உயர்த்தியது கலைஞர்
108. வகைபபடுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ 1100 ஆக உயர்த்தியது கலைஞர்
109. 172 உழவர் சந்தையாக உயர்த்தியதும் கலைஞர்
110. ஒரு டன் கரும்பின் கொள்முதல் விலை ரூ 2000 ஆக உயர்த்தியது கலைஞர்
111. மாவட்டத்திற்க்குள் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்
112. ரூ 189 கோடி செலவில் காவிரி - குண்டூர் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்
113. ரூ 369 கோடி செலவில் தாமிரபரணி - கருமேனியாரு - நம்பியாரு நதிநீர் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்
114. காமராஜர் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு தினமாக அறிவித்தது கலைஞர்
115. பொது நுழைவு தேர்வு ரத்து செய்தது கலைஞர்
116. 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயமாக்கியது கலைஞர்
117. 623 கோடி செலவில் 5824 கோவில்கள் புனராமைத்து கும்பாபிஷேகம் பணி செய்தது கலைஞர்
118. அர்ச்சகர்கள், பூஜாரிகளுக்கு இலவச சைக்கில் வழங்கியது கலைஞர்
119. 2 லட்சம் மதிப்புள்ள இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தந்தது கலைஞர்
120. இதய நோய், சர்க்கரை நோய், புற்று நோய்க்கான " நலமான தமிழகம் திட்டம் " தந்தது கலைஞர்
121. மத்திய அரசோடு இணைந்து 108 ஆம்புலன்ஸ் தந்தது கலைஞர்
122. 25 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி 37 புது நிறுவனங்களை வர செய்து 41,090 கோடி முதலீடை கொண்டுவந்தது கலைஞர்.
123. 37 நிறுவன அனுமதியால் 3 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கியது கலைஞர்
124. 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தந்தது கலைஞர்
125. புதிய டைடல் பார்க் திருச்சி கோவை மதுரை திருநெல்வேலியில்யில் உருவாக்கியது கலைஞர்
126. அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம் தந்தது கலைஞர்
127. பேருந்து கட்டணம் ஏற்றாமல் 13000 புதிய பேருந்துகள் தந்தது கலைஞர்
128. அருந்ததியினர் இனத்திற்க்கு 3% தனி இடஒதுக்கீடு தந்தது கலைஞர்
129. அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோடு 10,096 கிராம பஞ்சாயத்து உருவாக்கியது கலைஞர்
130. 420 பேரூராட்சிகள் உருவாக்கி " அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம்" தந்தது கலைஞர்
131. அனைத்து இனத்தினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை பெற்று தந்தது கலைஞர்
132. உலக தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் நிறுவியது கலைஞர்
133. ஆசியவையே திரும்பி பார்க்க வைத்த புதிய சட்டமன்றம் நிறுவியது கலைஞர்
134. அடையார் சூழியல் ஆராய்ச்சி பூங்கா அமைத்தது கலைஞர்
135. சென்னை செம்மொழி பூங்கா அமைத்தது கலைஞர்
136. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தந்தது கலைஞர்
137. ஜப்பான் நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில் திட்டம் தந்தது கலைஞர்
138. ஒக்கேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது கலைஞர்
139. ராமநாதபுரம் - பரமக்குடி கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது கலைஞர்
140. கலைஞர் வீடு திட்டம் தந்தது கலைஞர்
141. முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியது கலைஞர்
142. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தது கலைஞர்
143. 119 புதிய நீதிமன்றம் உருவாக்கியது கலைஞர்
144. மாலை நேரம், மற்றும் விடுமுறை தின நீதிமன்றம் உருவாக்கியவர் கலைஞர்
145. அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் திருச்சி கோவை மதுரை திருநெல்வேலியில் உருவாக்கியது கலைஞர்
146. தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய ஆணையம் அமைத்தது கலைஞர்
147. சமச்சீர் கல்வி தந்தது கலைஞர்
148. இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்
149) முதல் பட்டதாரிக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு 80,000 பொறியியல் கல்வி கட்டணம் வழங்கியவர் கலைஞர்.
150) இஸ்லாமியர்களுக்கு 3.5% தனி இட ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர்..
151) இலவச எரிவாயு உருளை வழங்கியவர் கலைஞர்.
152) பேருந்து கட்டணம், பால் விலை, மின்சார கட்டண உயர்தாதவர் கலைஞர்.
153) மாவட்ட தலை நகரங்களில் மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி துவக்கியவர் கலைஞர்.
154) மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தி வழங்கியவர் கலைஞர்..
""இதுல 30% தான் இன்னும் இருக்கு....""