Thursday, July 05, 2018

சுந்தரபாண்டியன்

சுந்தரபாண்டியன் எனும் ஓர் திரைப்படம் படத்தின் துவக்க காட்சியில் ஒரு இளைஞனை ஒரு புதர் மண்டிய மலை பகுதியில் இரண்டு பேர் அடித்து "ஏன்டா நாங்க எங்க வீட்டு பொண்ணுங்கள பாராட்டி சீராட்டி வளர்த்தா நீங்க பேண்ட் சட்டை மாட்டிக்கிட்டு எங்க வீட்டு பொண்ணுங்கள காதலிப்பீங்களா " ( வசனம் சரியாக ஞாபகம் இல்லை ஆனால் இதே போன்ற வசனம் தான் அது ) என கூறி அந்த இளைஞனின் கழுத்தை அறுத்து கொலை செய்வார்கள்
இந்த காட்சி வருவதற்கு முன் தேவர் சாதி பெருமைகள் காட்டும் காட்சிகள் படமாக்கப் பட்டிருக்கும். இவ்வகையான காட்சிகளை பெருமையாக வைத்து அதை கொண்டாட்டமாக ரசிக்கும் மனப்பான்மை படித்தவர்களிடமும் இருக்கிறது.


“சுந்தரபாண்டியன்”’ திரைப்படம் ஒன்றும் நாட்டை ‘திருத்த’ வந்த கருத்து சினிமா இல்லை. அப்படி அவர்களும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் இந்த திரைப்படம் மோசமான பிற்போக்குத்தனங்களையும், அசூசையான பிழைப்புவாதத்தையும் நேர்மறையில் உணர்த்துகிறது. அவற்றை அன்றாட வாழ்க்கையின் இயல்புகள் போல சித்தரிக்கிறது. காமடி, செண்டிமெண்ட் முதலான அதுவும் தேய்ந்து போன அரதப்பழசான காட்சிகளின் ஓட்டத்தில் பார்வையாளர்கள் அதை உணர்வாளர்களா என்பது சந்தேகம்தான்.
சுந்தர பாண்டியன்’ என்ற தலைப்பில் துருத்திக் கொண்டு தெரியும் “பாண்டியன்”’ என்ற சொல், இந்தப் படத்தின் ரசிக இலக்கு யார் என்பதை நமக்கு கோடிட்டுக் காட்ட… திரை விலகி ஆரம்பக் காட்சியிலேயே இது ஓர் அப்பட்டமான தேவர் சாதி படம்’ என்பதை வெளிப்படையாக சொல்கின்றனர்.
“இதுதான் உசிலம்பட்டி”’ என்ற வாய்ஸ் ஓவரில் முத்துராமலிங்க தேவர் பெயர் பலகையுடன் துவங்குகிறது படம். சுவரில் போஸ்டர் ஒட்டும் ஒருவரை “எங்க ஆளுகளை தவிர யாரும் ஒட்டக்கூடாது… போ, போ’” என்று விரட்டிவிடுகிறார் ஒரு வயதானவர். தமிழ்நாட்டில் எவ்வளவோ நடிகர்கள் இருந்தாலும் இவர்களுக்கு பிரபுவும், கார்த்திக்கும்தான் ஸ்டார்கள்’ என்கிறது குரல். இருவரும் தேவர் சாதி நடிகர்கள் என்பது நமக்கு உணர்த்தப்படுகிறது. “தமிழ்நாட்டில் ஆயிர கட்சிகள் இருந்தாலும் இவர்கள் வட இந்திய தலைவர்களை அழைத்து வந்து கூட்டம் நடத்துவார்கள். நேதாஜிதான் இவர்களுக்குத் தலைவர்”’ என்கிறார்கள். ஃபார்வர்டு பிளாக் பற்றியும் முத்துராமலிங்க தேவர் பற்றியும் நமக்கு நினைவூட்டப்படுகிறது.
“எவ்வளவு பாசக்காரய்ங்களோ, அதே அளவுக்கு கோபக்காரய்ங்க. குலசாமியா நினைச்சு வளர்க்கும் பொண்ணுங்க மனசை காதல், அது இதுன்னு எவனாவது கெடுத்துட்டா என்ன செய்வாங்க தெரியுமா?”’ என குரல் நிறுத்த.. இளைஞர் ஒருவரை கருவேலங்காட்டுக்குள் சுற்றி வளைத்து வெட்டிக் கொல்கிறது ஒரு கும்பல். “குல கவுரவத்த சீண்டுறவனை கருவருக்குற இடம் இதுதான்”’ என்கிறது குரல். எங்க கிட்ட மோதினா இதுதான் கதி’ என்று நமக்கு மிரட்டல் விடப்படுகிறது. சாதித் திமிரே பெருமிதமாக, ஒரு கொலையை நியாயப்படுத்தும் நீதியாக காட்டும் இந்தக் காட்சிகளை உசிலம்பட்டி பற்றிய டாக்குமென்டரி’ என்கிறார்கள் சிலர். ஆனால், இதுதான் உசிலம்பட்டியா? தேவர்கள் மட்டும்தான் உசிலம்பட்டியா?
ஆயிரமாயிரம் ஒடுக்கப்பட்ட மக்களும் அதே உசிலம்பட்டியில்தான் வாழ்கின்றனர். பாப்பப்பட்டியும், கீரிப்பட்டியும் கூட உசிலம்பட்டிக்கு மிக அருகில்தான் இருக்கின்றன. இவர்கள் யாரும் அந்தக் காட்சியின் வரம்புக்குள் வரவில்லை. தலித்துக்களையும் இதர சாதி உழைக்கும் மக்களையும் கணக்கிலேயே எடுக்காமல் உசிலம்பட்டியின் ஒவ்வொரு அங்குலமும் தேவர் சாதிக்கு மட்டுமே பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டதை போல “இதுதான் உசிலம்பட்டி”’ என்கிறார்கள்.
இதை விட முக்கியமானது.. இந்த சுந்தரபாண்டியன் படமாகட்டும்… இதேபோல அண்மை ஆண்டுகளாக மதுரையை மையப்படுத்தி வந்த மற்ற தேவர் சாதி படங்களாகட்டும்… அனைத்தும் தேவர் சாதிவெறி நடவடிக்கைகளை ஒரு நகைச்சுவையான அழகியலுடன் சித்தரிக்கின்றன. இதை ஒரு ரசனையாகவே மாற்றி வைத்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். படங்களில் அவரை நல்லவர் என்று நிறுவ வேண்டியதில்லை. ஏனெனில் ரசிகர்களின் மனங்களில் ஆல்ரெடி எம்.ஜி.ஆர் நல்லவராக இருக்கிறார். மிச்சக்கதையை சொன்னால் போதும். அதுபோல கடந்த கால தேவர் சாதி பெருமித படங்கள், அந்த சாதி வெறியை ரசிக்க பழக்கப்படுத்தியிருக்கின்றன. அந்த அஸ்திவாரத்தில்தான் சுந்தரபாண்டியன் எழுந்து நிற்கிறது.
கதாநாயகன் சசிகுமார் அந்த ஊரின் பெரிய குடும்பத்தின் பையன். வேலை வெட்டி எதுவும் இல்லை. நண்பர்களுக்கு உதவுவதையே முழுநேர வேலையாக செய்கிறார். அந்த ஊர் வழியே செல்லும் பேருந்தில் கல்லூரி சென்று வரும் ஹீரோயினை சசிகுமாரின் நண்பர் காதலிக்கிறார். அவருக்கு உதவ இவர் போக… அங்கு ஏற்கெனவே அதே பெண்ணை இன்னொருவர் காதலிக்கிறார். அந்த இன்னொருவர் சசிகுமாரின் நண்பனின் நண்பன். உடனே “நீ ஒரு மாசம், அவன் ஒரு மாசம்”’ என அந்த பெண்ணை காதலிப்பதற்கான வாய்ப்பை நண்பர்களுக்கு ஓப்பன் டெண்டர் விடுகிறார். ஆனால் தன்னை டெண்டர் விட்ட சசிகுமாரையே காதலிக்கிறாள் அந்தப் பெண். பிறகு ஒரு கொலை, அதற்கான பழிவாங்கல்… என்று போகிறது கதை. இதில் நாம் பல விஷயங்கள் பேசலாம் என்றாலும், முக்கியமானது கதாநாயகின் பாத்திரம்.
தன்னை இரண்டு பேர் காதலிக்கிறார்கள். அந்த இரண்டு பேரிடமும் ஆளுக்கு ஒரு மாதம் என தன்னை ஒருவன் ஏலம் விடுகிறான் என்பதை அறிந்ததும் ஒரு பெண்ணுக்கு கோபம் வர வேண்டாமா? சாதி, வர்க்கம், ஆண்&பெண் பேதம் எல்லாம் பிறகு. முதலில் சுயமரியாதையுடன், ‘என்னை ஏலம் விட நீ யாருடா நாயே?’ என்றல்லவா கேட்டிருக்க வேண்டும்? ஆனால் கதையின் நாயகியோ, தன்னை ஏலம் விட்டது தெரிந்த பிறகும் சசிக்குமார் மீது கோபப்படவில்லை. மாறாக அவரையே காதலிக்கிறார். காரணம், மூவரில் சசிகுமார்தான் பணக்காரர் என்பதாலா? சுயமரியாதை இழிவுபடுத்தப்படுவதை ஏற்கும் இந்த பெண்தான் நாயகி. செய்பவன் நாயகன்.
“யார் மீது காதல் வரும் என்று எப்படி சொல்ல முடியும்?”’ என்று கேட்கலாம். எனில் மற்ற இருவரையும் நிராகரித்துவிட்டு, சசிகுமாரை ஓ.கே. செய்வதற்கு கதைப்படி எந்த தர்க்க நியாயமும் இல்லையே?! அதுபோலவே, தனக்கு யார் மீது காதல் இருக்கிறது என்பதை அந்த பெண்தான் முடிவு செய்ய வேண்டும். சசிகுமாரோ, தனது நண்பர்களில் ஒருவரை காதலிக்குமாறு கட்டாயப்படுத்துகிறார். “பயலுகளை பின்னாடி சுத்த விடுறதுல உங்களுக்கு ஒரு சந்தோஷம்”’ என்ற தொனியில் கதாநாயகியை பார்த்து சசிகுமார் பேசும் வசனத்தை வேறு பல படங்களிலும் கேட்டிருக்கிறோம். ஆனால் கதாநாயகன்தான் வேலை வெட்டி இல்லாமல் எல்லா படங்களிலும் பல பெண்களின் பின்னால்தான் சுற்றுகிறான்.
பொறுக்கித்தனத்தை ஹீரோயிசமாக முன்னிருத்தும் தமிழ் சினிமா ஃபாமுலாவில் இருந்து துளியும் மாறாமல் இருக்கிறது சசிகுமாரின் பாத்திரம். நாம் அனைவரும் வேலைபார்த்துதான் வாழ்கிறோம். சுந்தரபாண்டியன் படத்தை பார்க்கும் ரசிகர்களும் ஏதோ ஒரு வேலை பார்ப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் படத்தின் கதாநாயகனுக்கோ எந்த வேலைவெட்டியும் இல்லை. எந்த வேலையுமே இல்லாமல் ஒருவன் எப்படி இருக்க முடியும்? இருக்கிறான். நாமும் அதை ஏற்றுக்கொள்கிறோம். அவருக்கு மட்டுமில்லை… சசிகுமாரின் நண்பர்களுக்கும் வேலை இல்லை. அவர்கள் வேலை பார்ப்பது போல் ஒரு காட்சி கூட இல்லை. அவர்களின் வேலை எல்லாம் டீக்கடையில் அமர்ந்துகொண்டு பெண்களை கிண்டல் செய்வது, பேருந்தில் வரும் பெண்களை சைட் அடிப்பது, காதலில் கஷ்டப்படும் நண்பர்களுக்கு உதவுவது… இவைதான்.
இதில் அப்புக்குட்டியின் கதாபாத்திரம் தோற்றத்தை வைத்து மோசமாக கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது. குட்டையான, குண்டான, கருப்பான அப்புக்குட்டி மாதிரியான ஆண்கள், அழகிய’ பெண்களை கனவில் கூட நினைத்துப் பார்ப்பது தப்பு என்கிறார் இயக்குநர். இங்கும் இயக்குநருக்கு கை கொடுப்பது முந்தைய ‘எம்.ஜி.ஆர் உதாரணம்’தான். “அழகற்ற அசிங்கமான ஆண்கள் அழகான பெண்களை விரும்புவது கிண்டலுக்குரியது”’ என்பது ஏற்கெனவே ரசிக மனதில் பதிந்திருப்பதால் இயக்குநர் அதை பயன்படுத்தி அந்த கிண்டலை வில்லத்தனமாக மாற்றுகிறார். இதனால் அப்பு குட்டி போன்ற தோற்றத்தில் ‘அழகில்லாதவர்கள்’ குரூர குணம் கொண்டவர்களாக இப்படம் உணர்த்துகிறது. ஆனால் தான் காதலிக்கும் பெண்ணுக்காய் விட்டுக்கொடுக்காமல் சண்டையிடும் அப்புக்குட்டி வில்லன் என்றால் ஒரு காலத்தில் காதலித்த பெண்ணை மற்ற இருவரிடமும் ஏலம் விடும் சசிகுமார் யார்?
அக்காவையும், தங்கையையும் ஒருசேர திருமணம் செய்துகொண்டவர் சசிகுமாரின் அப்பா. வழக்கொழிந்து போய்விட்ட இருதார மணம் எந்த விமர்சனமுமின்றி அழகியல் அம்சமாக காட்டப்படுகின்றது. கதைக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத இந்த காட்சி எதற்கென தெரியவில்லை. ஒருவேளை ஊரில் உள்ள பெண்களை எல்லாம் கிண்டல் செய்து திரியும் சசிகுமாரின் பாத்திரத்தை நியாயப்படுத்த அப்பாவையும் அதேபோல மைனர் குஞ்சுவாக அமைத்திருக்கிறார்களோ என்னவோ…  ஆனால் இந்த மைனர் குஞ்சுகள் படத்தில் நெஞ்சு நிமிர்த்திய கனவான்களாக வரும்போதுதான் சகிக்க முடியவில்லை.
சசிகுமார் பாத்திரம் திருமணம் ஆன, ஆகாத முறைப் பெண்களை தொடர்ச்சியாக கிண்டல் செய்கிறது. இப்படிப்பட்ட காட்சிகளை இப்போதும் நாம் கிராமங்களில் காணலாம். ஆனால் அந்த முறைப்பையன்கள் யாரும் அந்த முறைப்பெண்களை திருமணம் செய்துகொள்வது இல்லை. கிண்டல் செய்வதற்கு மட்டும் அவர்கள்.. திருமணம் செய்துகொள்ள தங்கள் வசதிக்கு ஏற்ற வேறு பெண்கள்… என காரியவாதமாக பிரித்துக் கொள்கிறார்கள். சுந்தரபாண்டியனிலும் அப்படித்தான். ‘மாமா, மாமா’ என்று சசிகுமாரையே சுற்றி வரும் பக்கத்து வீட்டுப் பெண்ணை கிண்டல் செய்யும் எல்லையில் நிறுத்தி வைக்கும் சசிகுமார், தன் சொந்த சாதியில், தனக்கு இணையான வசதியில் உள்ள பெண்ணையே திருமணத்துக்கு தேர்ந்தெடுக்கிறார்.
எந்த விழுமியங்களுமற்ற நட்பு, காரியவாதமான காதல், பெண்களை அசிங்கப்படுத்தும் பாத்திரப் படைப்பு, தோற்றத்தை வைத்து கீழ்மைப்படுத்தும் வக்கிரம், சாதித் திமிர் என அனைத்து வகையான பிற்போக்குத்தனங்களையும் சிறு விமர்சனமும் இல்லாமல் நேர்மறையில் அணுகும் இந்தப் படத்தை சிலர் பயங்கர ஜாலியான படம் என்கிறார்கள். வலையுலகிலும், சமூக வலைதளங்களிலும் குடும்பத்துடன் இந்தப் படத்தை பார்க்கச் சொல்லி பரிந்துரைக்கின்றனர்.
அவர்களிடம்…. இதே கதையை இப்படி எடுக்க முடியுமா என்று பாருங்களேன்… ‘இதுதான் பரமக்குடி…’ என்று வாய்ஸ் ஓவர் துவங்குகிறது. இமானுவேல் சேகரன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. தேவர் படம் போட்ட போஸ்டர் ஒட்ட வரும் இளைஞர்களை ‘ஏம்பா.. யாருப்பா இங்கே போஸ்டர் ஒட்டுறது.. எங்க ஆளுக மட்டும்தான் ஒட்டனும்’ என்று ஒரு பெரியவர் விரட்டிவிடுகிறார். படம் நெடுக காட்டப்படும் தேவர் குறியீடுகளுக்கு மாற்றாக அம்பேத்கர், இமானுவேல் சேகரன் படங்கள் காட்டப்படுகின்றன. ஒரு பெண், திருமணம் ஆன/ஆகாத தன் முறை பையன்களை எல்லாம் கிண்டல் செய்கிறாள். சாத்தியமா இவை எல்லாம்? கிரியேட்டரின்’ மூளையே இந்த சிந்தனையை சுய தணிக்கை செய்துவிடும். அதை மீறி வெளியே வந்தால் தணிக்கைத்துறை தாளித்துவிடும்.
உசிலம்பட்டி பற்றி வரும் துவக்கக்காட்சியை அப்படியே கத்தரித்துவிட்டாலும் படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அந்தக் காட்சியை வலுக்கட்டாயமாக திணித்து, “இது அசல் தேவர் சினிமா”’ என்று உணர்த்தி, குறைந்தப்பட்ச சந்தையை பிடிக்கிறார்கள். ஆகவே சுந்தரபாண்டியன் மற்றுமொரு குடும்பப்படம் அல்ல. இது ஒரு திட்டமிட்டு எடுக்கப்பட்ட ஆபத்தான அழுக்கான சினிமா! மதுரை வழக்கில் மயங்கியவர்கள் அந்த அழுக்கின் வீச்சை உணரவேண்டும்.


கலைஞரின் சொத்தை பற்றி கேள்வி கேட்கும் அதிமுக பா.ம.கா ,நாம் தமிழர், பா.ஜா.க கட்சியினரே.

கலைஞரின் சொத்தை பற்றி கேள்வி கேட்கும் அதிமுக பா.ம.கா ,நாம் தமிழர், பா.ஜா.க கட்சியினரே...... தங்கள் தலைவர்கள் கட்சி ஆரம்பிக்கும் முன்பு என்ன சொத்து வைத்திருந்தனர்.?
தங்கள் தலைவர்கள் கட்சி ஆரம்பிக்கும் முன்பு என்ன சொத்து வைத்திருந்தனர்.?
இன்று அவர்களிடம் என்ன சொத்துக்கள் உள்ளது என என்றாவது சிந்தித்தது உண்டா?
அதை அறிந்துக் கொள்ள முயன்றது உண்டா?
ஆட்டு மந்தைகள் போலத்தானே இருக்கிறீர்கள்.
உங்கள் தலைவர்கள் அக்மார்க் யோக்கியர்கள் என்பதை உறுதி செய்த பின்தானே நீங்கள் மற்றக் கட்சித் தலைவர்களை கேள்வி கேட்க முடியும்?
உங்கள் தலைவர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதை மறக்க வேண்டாம் ஆட்டு மந்தைகளே.
கொஞ்சம் மூளையை உபயோகிங்க.
1)1976 ஜனவரியில் திமுக ஆட்சியை கலைத்த இந்திராவால் ஏன் எமர்ஜென்சி காலத்திலேயே கலைஞர் மீதான குற்றச்சாட்டுகளின் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை? ஏன் வெட்டித்தனமா கமிசன் போடனும்? ஒரு FIR கூட போட முடியாதது ஏன்?
2) 10 வருசம் ஆட்சியிலிருந்த MGR ரால் கலைஞர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதது ஏன்?
3)1991 இல் ஆட்சியை பிடித்த ஜெயலலிதா பழிவாங்காத ஆளே கிடையாதே.
கலைஞர் மீது 1996 வரை எந்த நடக்கையையும் எடுக்க முடியாதது ஏன்?
4) 1996 முதல் 2016 வரை சொத்துக்குவிப்பு வழக்கால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஜெ மற்றும் சசி குடும்பத்தினர் கலைஞர் மீது மிக மோசமான கோபத்தில் இருந்திருப்பார்கள்.
10 வருட ஆட்சி அதிகாரம் அவர்கள் கையில்தானே இருந்தது.
கலைஞர் குடும்பச்சொத்தை நீங்களெல்லாம் பதிவு போடும் போது அந்த விபரம் கலைஞரை பழிவாங்க காத்திருந்த உளவுத் துறையையே கையில் வைத்திருந்த அவர்களுக்கு தெரியாதா?
ஏனென்றால் கலைஞர் சொத்துக்கள் என நீங்கள் போட்ட பட்டியலே டுபாக்கூர்தான்.
18 வயது முதல் 90 வரை 72 வருடங்கள் ஆண்டுகள் உழைத்தவருக்கு சொத்துக்கள் இல்லாமலா இருக்கும்?
அவற்றுக்கு முறையாக கணக்கு காண்பித்திருந்ததால்தான் ஜெயாவினால் கலைஞர் மீது ஒரு
FIR கூட போடமுடியவில்லை.
கலைஞரால் 20 வருடம் நிம்மதியிழந்த சகல அதிகாரம் படைத்த ஜெயலலிதாவாலேயே
எதுவும் செய்ய முடியாத போது
இந்த சில்லரை கட்சி மூடர்கள் தினம் தினம் கலைஞரை பற்றி கதை கட்டுவது கேடு கெட்ட
மொள்ளமாரித்தனமே

Wednesday, July 04, 2018

யார் சிவன்? யார் முருகன்?யார் ஜக்கி?

யார் சிவன்? யார் முருகன்?யார் ஜக்கி?
சிவனுக்கு தமிழ் தெரியாது என்கிறார் ஜக்கி வாசுதேவ்.
சிவனின் உடுக்கையிலிருந்து தான் தமிழும் சமஸ்கிருதமும் பிறந்தன என்கின்றனர் இல.கணேசன் உள்ளிட்ட சங்கிகள்.
மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகம் என்பது இன்றிலிருந்து 5000 வருடங்களுக்கு முந்தையது.அதாவது பார்ப்பனியப் படையெடுப்புக்கு முந்தையது. பார்ப்பனியப் படையெடுப்பு கிமு 1 க்கும் கிபி 1 க்கும் இடைப்பட்டதே. சிவன் தான் அந்த மக்கள் வழிபட்ட தெய்வம் என்பது ஆய்வாளர் ஜான் மார்சல் கருத்து.
பார்ப்பனியம் இந்தியப் படையெடுப்புக்குப் பிறகு அது உருவாக்கியதே மும்மூர்த்தி கொள்கை. இந்த மும்மூர்த்திக் கொள்கைப்படி பிரம்மா படைப்பவராகவும், விஷ்ணு காப்பவராகவும்,சிவன் அழிப்பவராகவும் முன்னிறுத்தப்பட்டனர்.
படைத்தல் காத்தல் போன்ற நல்ல வேலை அவர்களுக்கு.அழித்தல் மட்டும் சிவனுக்கு. இங்க தான் இவனுக டகால்டி வேலை ஆரம்பமாகுது.
மொகஞ்சதாரோ, ஹரப்பா மக்களை அவர்கள் உருவாக்கிய அணையை உடைத்தே பார்ப்பனியம் அழித்தது என்பது ஆய்வு. பார்ப்பனிய சம்பிரதாயங்கள் படி வருண பகவானைத் தடுக்ககூடாது என்பதையும் கவனத்தில் கொள்க.
வடநாட்டு சிவனை அழிப்பவராக மட்டுமே முன்னிறுத்திய பார்ப்பனிய அரசியலுக்கு எதிராக உருவானதே தென்னாட்டு சைவ மரபு. தென்னாடுடைய சிவனே போற்றி என்பதிலிருந்து வடநாட்டு சிவனோடு தென்னாட்டவருக்கு தொடர்பில்லை.
வடநாட்டு சிவனை யாரும் அங்கு தொட்டு வழிபடலாம்.அதற்கு தீண்டாமை இல்லை என்று அர்த்தமல்ல. அங்கு சிவனே தீண்டப்படாதவர் தான். வடநாட்டு சிவனுக்கு அழித்தல் மட்டுமே வேலையாக பார்ப்பனியம் நிச்சயித்தது.
ஆனால் தென்னாட்டு சிவன் ஐந்து வேலைகளைச் செய்வதாக நம்புவது சைவ மரபு.
படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல், அருளல் ஆகியவையே அந்த ஐந்தொழில்.
இந்த ஐந்தை மையமாக வைத்தே சிதம்பரம் நடராஜர் உருவம் இருக்கும். அவர் தென் மேற்கே பார்த்து தான் ஆடுவார்.ஏனெனில் பொதிகை மலைக் காற்றை சுவாசித்து ஆடுவதாக ஐதீகம்.
நடனத்தின் அரசனாக சிவனை பாவிப்பதும் தென்னாட்டில் மட்டுமே. தென்னாடு என்பது தமிழ்நாடு மட்டுமே.
தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற தெய்வங்கள் கொற்றவையும் அவர் மகன் முருகனும் தான். கொற்றவையின் கணவன் சிவன் அல்ல. அப்போது தாய்வழிச் சமூக மதிப்பீடே இருந்தது.தந்தை வழி மதிப்பீடு இல்லை. கொற்றவையும் முருகனும் கிபி 7 ம் நூற்றாண்டில் ஆரியத்தை நோக்கி இழுக்கப்பட்டனர்.
ஆரியக் கடவுளான ஸ்கந்தனுடன் முருகன் இணைக்கப்பட்டான். முருகனின் மனைவியாக அதுவரை இருந்த வள்ளி இரண்டாமவளாக ஆக்கப்பட்டு ஸ்கந்தனின் மனைவி தேவசேனை முதல் மனைவியாக ஆக்கப்பட்டாள்.முருக வரலாறு ஸ்கந்த புராணமாக இக்காலத்தில் மாற்றப்பட்டது.
சங்க இலக்கியங்களில் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தோடு பிசைந்து திணை மாவை படையலிடுவார்கள். அப்போது வேலன் என்ற தனது பூசாரியின் மீது ஆவி உருவில் வந்து குறி சொல்வான் முருகன். பார்ப்பனியம் முருகனைக் கையிலெடுத்த போதுதான் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட புனிதமான ஸ்கந்தனாக மாறி தேவசேனாதிபதியாக ஆக்கப்படுகிறான். சேயோன், செவ்வேள்,வேலன் என்ற அடையாளங்கள் அகற்றப்பட்டு ஸ்கந்தன்,சண்முகன்,சுப்பிரமணியன் என்ற அடையாளங்கள் முன்னிறுத்தப்படுகின்றன.
கொற்றவை,மாரி,பேச்சி போன்ற பெண் தெய்வங்கள் பார்வதியின் பிம்பங்களாக மாற்றப்படுகிறது. சுடலை மாடன் காடன் ஆகியவை சிவனின் பிம்பங்களாகவும் மாற்றப்படுகிறது.உழைக்கும் மக்களின் லட்சக்கணக்கான கிராம தெய்வங்கள் அனைத்தும் அவதாரம்,அம்சம்,புராணக்கதைகள் மூலம் பார்ப்பனிய ஆளுமையின் கீழ் கொண்டு வந்ததே கிபி 7 ம் நூற்றாண்டில் உருவான பக்தி இயக்கம்.அது உருவாக்கிய பெரிய புராணமும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேல் வழிபாடும், அதன் பிறகு முருக வழிபாடும் நடந்த இடம் பரங்குன்றம்.இலக்கியங்களில் வேற் கோட்டம் என அழைக்கப்பட்ட இடமே பரங்குன்றம். கிபி 7 ம் நூற்றாண்டில் உருவான பக்தி இயக்கத்தின் பிதாமகன்கள் திருநாவுக்கரசர்,திருஞான சம்பந்தர்,சுந்தரர் ஆகிய மூவரும் இதை சிவத்தளமாக மாற்றி தேவாரம் பாடினர்.சிவனுக்கும் முருகனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே அவர்கள் பாடலின் மையக்கரு. அன்றிலிருந்து பாண்டி நாட்டின் பதினான்கு பாடல் பெற்ற தளமாக பரங்குன்றம் திருப்பரங்குன்றமாக மாற்றப்பட்டது.
தேவாரத்தின் படியான பூஜை முறையால் இங்கு கடைபிடிக்கும் பூஜை மரபு சிவமரபு தான்.இங்கு ஏற்றப்பட்டுள்ள கொடி முருகனுக்குரிய சேவற் கொடி அல்ல. சிவனுக்கான ரிஷபக் கொடி தான். பள்ளியறையும் சிவனுக்குத்தான்.முருகனுக்கல்ல. ஆனால் பக்தர்கள் முருகன் கோவில் என்றே இங்கு வருகிறார்கள். நேர்த்திக்கடன் கழிக்கிறார்கள். ஆனால் சிவாச்சாரியார்கள் இது ஈஸ்வரத்தலம் என்று வெளிப்படையாகச் சொல்லாமல் உள்ளுக்குள் தங்களுக்கான காரியத்தை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
வைதீகக்கூட்டத்தின் மாற்று மரபுக்கும், உழைக்கும் மக்களின் முருக வழிபாட்டிற்கும் இடையே நடக்கும் நிழல் யுத்தப் போர்க்களம் தான் திருப்பரங்குன்றம்.
எந்தப் பார்ப்பனரும் முருகன் என்று பெயர் வைத்துக் கொள்வதில்லை.
ஆனால் சுப்பி்ரமணி என்று எல்லா சூத்திர பஞ்சமர்களும் பெயர் வைப்பார்கள்.
முருகன் தமிழகத்தில் இவர்களுக்கு அரசியல் கருவிதான்.ஆனால் பக்தர்களுக்கு பண்பாட்டின் நீட்சியே.
சக்கி வாசுதேவ் தமிழனோ, தென்னாட்டு சைவனோ அல்ல. வடநாட்டு சிவனை ருத்ரனாகப் பார்க்கும் தெலுங்கைப் பூர்விகமாகக் கொண்ட கன்னடனே.
சிவன் வடக்கே கெட்டதை மட்டுமே அழிப்பவர். இவன் இங்கு நல்ல பலதையும் சிவன் பெயரைச் சொல்லி அழிப்பவனே.
இங்குள்ள முருகன் வதம் செய்ய வேண்டியது சூரனை அல்ல.
ஜக்கி வாசுதேவையே.

Tuesday, July 03, 2018

நாம் கீழேயே இருக்க வேண்டுமாம். அவர்கள் மட்டும் நகத்தில் மண் படாமல் வேலை செய்து முன்னேற வேண்டுமாம்.

காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் முதல் நடவடிக்கையே குலக்கல்விமுறை ஒழிப்புதான். “சிலர் பரம்பரைத் தொழிலையே செய்து வர வேண்டும் என்கிறார்கள். நாம் கீழேயே இருக்க வேண்டுமாம். நம்மைப் படிக்காதவர்களாக வைத்திருந்து, நாம் ரோடு போடவும், கல் உடைக்கவும், ஏர் ஓட்டவும், சேறு சகதியில் நாற்று நடவும் பயன்பட வேண்டுமாம்.

அவர்கள் மட்டும் நகத்தில் மண் படாமல் வேலை செய்து முன்னேற வேண்டுமாம். எப்படியிருக்கிறது நியாயம்? நாமும் படித்து, நாலு தொழில் செய்து முன்னேற வேண்டாமா?” என்று நறுக்குத் தெறித்தார்போல் கூறினார்.

எந்தச் சொத்தும் இல்லாதவர்களுக்குக் கல்வி என்ற சொத்தை வழங்கி, வாழ்க்கையில் முன்னேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இலவசக் கல்வியையும், மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டுவந்தார். இதனால் 1957-ல் 15,800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகள், 1962-ல் 29,000 ஆக உயர்ந்தன. மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரித்தது. 637 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,995 ஆனது.

முதல்வர் அண்ணாவின் சிகிச்சைக்கு பணம் கொடுக்க தயாராக இருந்த அளவிற்கு பெரியாரிடம் பணம் இருந்ததா.?

முதல்வர் அண்ணாவின் சிகிச்சைக்கு பணம் கொடுக்க தயாராக இருந்த அளவிற்கு பெரியாரிடம் பணம் இருந்ததா.? என நண்பர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
oOo
அது அறிவினாவோ, அறியாவினாவோ, இல்லை பெரியாரின் நேர்மையை கேள்வி எழுப்புகிற ஐய வினாவோ நானறியேன்.
நான் சொன்னேன்.
oOo
ஆமாம், 1900 களிலே அந்த ஈரோட்டுப் பெரும் தனக்காரன், கோடிகளில் சொத்து பத்துகளை கொண்டிருந்தவன் .
முதல் வகுப்பு பயணசீட்டு வாங்கிக்கொடுத்தால்,
அந்த கஞ்சன்
அதை மாற்றி காசாக்கி கட்சி நிதியில் சேர்த்துவிட்டு
மூன்றாம் வகுப்பில் பயணித்து மிச்சம் பிடிப்பான்.
இரண்டு ரூபாய்க்கு காய்கறி வாங்கிவிட்டு , 1 அணாவுக்கு கறிவேப்பிலை வாங்கி வந்தவரிடம் , ஒரு அணாவை வீணாக்கிவிட்டாயே, கொசுறாக கறிவேப்பிலை வாங்கத்தெரியாத என்று கடிந்துகொள்வான்.
அந்த கஞ்சன் பெரியார் தான் அண்ணாவுக்கு சிகிச்சை பணம் தேவை என்றதும்,அரசை ஏன் கேட்கிறீர்கள் நான் தருகிறேன் என்று அள்ளிக்கொண்டு வந்தான்.
அதே போல் திருச்சியில் கல்லூரி கட்ட அரசுக்கு பல லட்சங்களையும் தன் நிலத்தையும் அள்ளிக்கொடுத்தான்.
ஈட்டத் தெரிந்தும், ஈட்டியதை அனுபவிக்க நாட்டமில்லாமல் தன்னைத், தன் பொருளை
இயக்கச் சொத்தாக்கி மக்களுக்குத் தந்துவிட்டுப் போனவன்.
அவனை கஞ்சனென்பது பிழை புரிதல்
அவன் தான் துறவி என்பது நன்றியறிதல்.

கமலும் பிராமணர் சங்கமும்



கமலின் வாழ்க்கையில், குறிப்பாக மண வாழ்வில், சறுக்கல்கள் உண்டு. வாணியோடு திருமண பந்தத்தில் இருந்த போதே சரிகாவோடு தொடர்பு. அப்புறம் திருமணம் ஆகாமலே இரண்டு மகள்கள். அப்புறம் சிம்ரன், கௌதமி என்று நீண்ட வரலாறு. இதையெல்லாம் கமலும் மறைத்ததில்லை. அப்போதெல்லாம் பிராமணர் சங்கத்துக்கு எந்த அவமானமும் வந்துவிடவில்லை ஆனால் தனக்கு பூணூல் பிடிக்கவில்லை என்று சொன்ன போது மட்டும் வெகுண்டெழுகிறார்கள். ஹ்ஹ்ம்ம்ம்

பூணூல் பார்ப்பனர் ,க்ஷத்ரியர் ,வைசியர் என மூன்று வர்ணங்களுக்கும் உண்டு .சூத்திரர்களுக்கு தான் கிடையாது 

ஒவ்வொரு வர்ணத்துக்கும் பூணூல் நூல் மாறுபடும்.போடும் முறையும்,வயதும் மாறும்,பூணூலை வைத்தே வர்ணத்தை,உட்பிரிவை கண்டுபிடித்து விடலாம்.இதனால் தான் பல இந்து கோவில்களில் பூணூல் மட்டும் அணிந்து அரைநிர்வாணமாக ஆண்கள் வர வேண்டும் என்ற விதி இருந்தது,இருக்கிறது 

கமல் பொதுவாக பிடிக்காத நூல் பூணூல் என்று தான் சொன்னார். பூணூல் அணியும் வழக்கம் கொண்ட இந்து மதத்தை சார்ந்த மூன்று வர்ணங்களில் பார்ப்பன சங்கங்கள் மட்டும் பொங்குவது வியப்பாக இருக்கிறது

எலைட் தலித்துகள், சாரி இப்படி சொல்வது அவர்களை புண்படுத்தும். அதனால் தலித் பார்ப்பனர்கள்

இன்று திருமா அவர்கள் திமுக வை யாரும் அழிக்க முடியாது என்ற கருத்து கூறியவுடன் அதற்கு சங்கிகள் பதறியிருக்கறார்களோ இல்லையோ தலித் அரசியல் பேசுபவர்கள் அதிகமாக பொங்கியுள்ளார்கள். இவர்களுக்கு சமூக நீதி முக்கியமா அல்லது திராவிடமும் தலித்தியமும் பிரிவது முக்கியமா என்றால் கண்ணை மூடி கொண்டு திராவிடமும் தலித்தியமும் பிரிவது தான் முக்கியம் என்று கூறுவர்.
அவர்கள் செய்வதை பற்றி ஒன்றும் பிரச்சினை இல்லை‌. தமிழ் தேசியம் இந்திய தேசியம் என எதை எதையோ தூக்கி கொண்டு வந்து கடந்த நூறு வருடங்களாக திராவிடத்தை அழிக்க பலரும் பல வழியில் முயன்றுள்ளனர். ஆனால் அவர்களின் முயற்சி பலவும் விழலுக்கிறைத்த நீராக வீணாக போனது தான் வரலாறு. உண்மையில் இந்திய தேசியம் தமிழ் தேசியம் ஆகியவற்றை தூக்கி பிடித்ததும் திராவிடம் தான். திமுக தான்.
சீனாவுடனான போர் என்று வந்தவுடன் இப்பொழுது நமக்கு நம் நாடு தான் முக்கியம் என்று நாட்டுப்பற்றுடன் அதற்கான நன்கொடையையும் அதிகமாக வசூலித்து அனுப்பியவர்கள் திராவிடர்கள் தான். அண்ணா அவர்களின் பேட்டிகளில் உள்நாட்டு பேட்டிகளில் பத்திரிக்கைகளில் மத்திய அரசையும் இந்திய தேசியத்தையும் கிழித்து தொங்க விட்டிருப்பவர் அமெரிக்கா மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கொடுத்த பேட்டிகளில் ஒரு நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட மாநிலத்தின் முதல்வராக தனது நாட்டையும் தனது அரசையும் விட்டு தராமல் தான் பேசியிருப்பார்.
தமிழுக்கு திமுக செய்ததை பேசினால் அதற்கென்று ஒரு நூலகம் அமைத்து அந்த புத்தகங்களை அடுக்கும் அளவிற்கு இருக்கும். முதன்மையாக முக்கியமாக சில குறிப்புகள் சொன்னால்
1. தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது.
2. இருமொழி கொள்கை
3. திருக்குறளை எளிய மக்களிடம் கொண்டு சேர்த்தது. இது முக்கியமான ஒன்று. பச்சை தமிழன் என்று சொல்லப்படும் காமராஜர் ஆட்சியிலும் சரி தமிழ் மன்னர்களின் ஆட்சியிலும் சரி திருக்குறளை மக்களிடம் கொண்டு செல்லவே இல்லை. இராமாயணத்தையும் பாரதத்தையும் சிரமேற்கொண்டு மக்களிடம் சேர்த்த அவர்கள் திருக்குறளை கிஞ்சித்தும் மதிக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததிற்கு பிறகு தான் பேருந்தில் திருக்குறளை கொண்டு வந்தது, திருமண அழைப்பிதழில் திருக்குறளை அச்சிட வைத்தது, குமரி முனையில் வள்ளுவரை நிறுத்தியது என்று அதனை எல்லாரிடமும் கொண்டு சென்று சேர்த்தனர்.
4. தனித்தமிழில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது திராவிடர் கழகத்தின் மூலமாக ஒரு கொள்கையாக ஒரு முன்னெடுப்பாகவே தொடங்கப்பட்டது.
ஆனால் அவர்கள் நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று வாய் கூசாமல் பொய் பேசி இன்று பொய்யான பரப்புரைகளை செய்து வருகின்றனர். அவர்களையும் நாங்கள் கடந்து வந்தவர்கள் தான்.
இன்று ஒரு கூட்டம் எலைட் தலித்துகள், சாரி இப்படி சொல்வது அவர்களை புண்படுத்தும். அதனால் தலித் பார்ப்பனர்கள் என்றே குறிப்பிடுகிறேன். அவர்கள் வந்து திராவிடம் தலித் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று சொல்லி கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களிலும் தலித்துகளின் நிலை மற்றும் அவர்களுக்காக தொடங்கப்பட்ட செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் தமிழ்நாட்டில் அவர்களுக்கென திமுக செய்ததையும் ஒப்பிட்டாலே அவர்களுக்கு புரியும். இதை நாங்கள் எடுத்து சொன்னாலும் சொல்லி காட்டுறியா... இதான் டா உங்க சூத்திரபுத்தி என்று அவர்களின் சாதி ஒழிப்பு மனநிலையை அப்பட்டமாக காட்டுகின்றனர்.
பண்றது தான் பண்றாங்க என்னமோ பண்ணிட்டு போகட்டும் னு பார்த்தா அம்பேத்கரை என்னவோ அவர்களுக்கு மட்டுமான தலைவராக சித்தரித்து அவரை ஒரு இனத்திற்கான தலைவராக மட்டும் சித்தரிக்கிறார்கள். உலகின் மாபெரும் சிறந்த சிந்தனைவாதி ஆகச்சிறந்த அறிவாளி போற்றத்தக்க பொருளாதார நிபுணர் ஆகிய அம்பேத்கரை இப்படி ஒரு கூண்டுக்குள் அடைக்க முயல்வது அவருக்கு செய்யும் துரோகம் தான்.
நீங்கள் சொல்வதால் அம்பேத்கரை விட்டு விட்டு செல்ல முடியாது. வள்ளலார், இராமானுஜர், பசவர் ஆகியோரின் வரிசையில் அவரையும் பார்ப்பனர்களிடம் பறிகொடுக்க நாங்கள் தயாராய் இல்லை.
ஜெய் பீம் என்பதை என்னவோ அவர்களுக்கான வாசகமாகவே நிறுத்த முயல்கிறார்கள். அதை நீங்கள் எவ்வளவு பாடுபட்டாலும் அடைய முடியாது. அவர் எங்களுக்குமானவர். எல்லாருக்குமானவர். பெருமையாக சொல்வேன். உரத்து சொல்வேன். திரும்ப திரும்ப சொல்வேன்...
ஜெய் பீம் 🖤🖤🖤
ஜெய் பீம்💙💙💙
ஜெய் பீம் ❤️❤️❤️

Monday, July 02, 2018

ஆத்திகராக இருங்கள் நாத்திகராக இருக்காதீர்கள் என்று சொல்லும் ஆளுனருக்கு பல கேள்விகள்

ஆத்திகராக இருங்கள்
நாத்திகராக இருக்காதீர்கள் என்று சொல்லும் ஆளுனருக்கு
பல கேள்விகள்?
முதலில் நாட்டில் சாதி மத கலவரத்தை தூண்டுவது *ஆத்திகமா?, நாத்திகமா?*
கோயில் கருவறையிலே பாலியலில் ஈடுப்பட்டது *ஆத்திகனா?நாத்திகனா?*
கோயில் சிலையை (சாமி உங்களுக்கு)
திருடி சென்று அயல் நாட்டிற்கு விற்பனை செய்தவன் *ஆத்திகனா? நாத்திகனா?*
பழனி கோயிலில் சிலை செய்ய கொடுத்த தங்கத்தை திருடிய கயவன்
*ஆத்திகனா? நாத்திகனா?*
சிறுமி என்றும்பாராமல் கோயிலிலே அடைத்து வைத்து கொடூரமாக பாலியல் வன்முறை செய்த அயோக்கிய நாதாரி
*ஆத்திகனா?, நாத்திகனா?*
கடவுளின் பெயரால் திருவிழா நடத்தும் போது அடிதடி மோதலை உருவாக்கி ஊரையே தீயி்க்கு இரையாக்குவது *ஆத்திகனா?, நாத்திகனா?*
பாபர் மசூதியை இடித்து தள்ளி மதக்கலவரத்தை தூண்டியவன் *ஆத்திகனா?, நாத்திகனா?*
*இப்படி எல்லா ஒழுக்க கேட்டையும் செய்யும் ஒரே ஆள் யாருன்னா அது ஆத்திகன் தான்.*
*இப்ப சொல்லுங்க ஆத்திகனா இருப்பது நல்லதா*
*இல்லைன்னா நாத்திகனா இருப்பது நல்லதான்னு*
*எப்பவுமே நாத்திகமே சிறந்ததும், மேலாதும் கூட*
மன்னிக்கவுமi
*கடைசி வரி* *எப்பவுமே நாத்திகமே சிறந்ததும், மேலானதும் கூட என்று திருத்தி வாசிக்கவும்*

நான் ஏன் நரேந்திர மோதியை வெறுக்கிறேன்

நான் ஏன் நரேந்திர மோதியை
வெறுக்கிறேன்.
*****************************
1. டிமானிஸ்டேஷன்
---------------------------------
வருமானத்துக்கு அதிகமா செலவு செய்யமுடியாதபடி எல்லாமே சரியா இருக்கனும் அது இங்க இல்லையே.
ஒரு எடுத்துகாட்டுக்கு ஐந்து லெட்சம் வருமானம் உள்ள நான்
ஐந்து கோடி ரூபாய்க்கு வீடோ நிலமோ காரோ வாங்குனா..இவ்வளவு பைசா என்கிட்ட எப்படிவந்ததுனு கேட்க யாருமே இல்ல..
இருக்குற Income tax Department லையும் தேவையான அளவு Employee இல்ல..
பின்ன வருமானத்துக்கு அதிகமா யாரு வேணாலும் செலவு செய்யலாமே..
நான் பைக்குள போனா
என் பைக்குக்கு ஆர்சி புக்கு இருக்கா இன்சூரன்ஸ் இருக்கா
லைசன்ஸ் இருக்கானு கேக்கிறதுக்கு போலீஸ் இருக்கு ஆன என் பைக்கு என் வருமானத்தில் வாங்கபட்டதா என்று கேட்பதற்கு யாருமே இல்லையே. .
எனது வருமானதுக்கு அதிகமாக நான் தாராளமாய் செலவு செய்துகொள்ளலாம்..
அதிகபட்சம் செலவுகளுக்கான வரி மட்டும் தான் கட்டவேண்டும்..
இங்கே வருமானதுக்கு அதிகமாக செலவு செய்யமுடியாத சூழ்நிலை இருக்குமாயின்
எந்த போலிஸ்காரனும் லஞ்சம் வாங்கமாட்டான்
எந்த அரசியல் வாதியும்
ஊழல் செய்யமாட்டான்
ஊழல லஞ்சத்த ஓழிக்கனும்னா Police department விட Income tax department க்கு தான் அதிக Employee வேணும்..
ஒரு பேங்குக்கு லோன் வாங்கபோனா உங்களுக்கு Security இருக்கா Property இருக்கானு கேக்குறான்..
ஆனா அதே பேங்குல பைசா போட போனா எதுவுமே கேக்காம பேன் கார்ட வாங்கி Tax கட் பண்ணிட்டு பைசாவ அக்கவுண்டுல போட்டுகிடுதான்..
நான் லோன் கேட்டா ஆயிரம் கேள்வி கேக்கிறவன் ..
நான் பைசா போட்டா அந்த பைசா எங்கிருந்து வந்தாலும் அவனுக்கு கவலஇல்லை...
டிமானிஸ்டேஷன் என்பது வருமானதுக்கு அதிகமாக செலவு செய்யமுடியாத சூழ்நிலை இருக்கும்போது யாராக இருந்தாலும் தவறான வழியில் வந்த வருமானத்தை பணமாக பதுக்குவார்கள்..
அப்படி பதுக்கி வைத்திருக்கும் போது அறிவிக்கபடும் டிமானிஸ்டேஸன் தான் Successful ஆகுமேதவிர வருமானதுக்கு அதிகமான செலவை தாராளமாக செய்யும் தேசத்தில் ஒருநாளும் டிமானிஸ்டேஸன் Successful ஆகாது..
ஓட்டைப் பானையில்
தண்ணீரை ஊற்றி வைத்துவிட்டு
நான் தண்ணீரை சேமிக்கிறேன் என்று சொல்வதும்,நினைப்பதும்
முட்டாள் தனம்
மிஸ்டர் மாரிதாஸ்.
மேலும் மோடி ஆட்சியில் கொண்டுவரபட்ட டிமானிஸ்டேஸன் ஆனது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக அல்ல
அது Cashless economy யை கொண்டுவருவதற்காக மட்டும் தான்..
ஆன் லைன் வர்த்தகத்தில் நம்பிக்கையில்லாத மக்களை குறிபிட்ட காலத்திற்கு ஆன் லைனில் உளாவவிட்டால் தானாக மக்கள் சில்லரை வர்த்தகத்திலிருந்து வெளியேறி கார்ப்ரேட்டின் அடிமையாவார்கள்..
என்ற நோக்கத்தில் கொண்டுவரபட்டதுதான் இந்த டிமானிஸ்டேஷன்..
இதை Successful ஆக முடித்து தருவதற்காக அம்பானியால் இலவசமாக இறக்குமதி செய்யபட்டது தான்
Jio sim..
இது நாளடைவில் தன் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அன்று நாம் ஆன் லைன் வர்த்தகத்திலிருந்து வெளிவர முடியாத நிலையில் இருப்போம்
2. GST.
மோடி முதலமைச்சராக இருந்த
போது எதிர்த்த GST யை
பிரதமரானப் பிறகு
செயல்படுத்தினார்.
உள் நாட்டு பொருட்களுக்கும்
வெளிநாட்டுப் பொருட்களுக்கும்
ஒரே மாதிரியான வரியை
விதித்துவிட்டால்
அந்நிய முதலீடு அதிகரிக்கும்
அதே சமயம் உள்நாட்டுப்
பொருட்களின் விற்பனை
வீழ்ச்சியடையும்
இதன் மூலம் இந்திய ரூபாய்
மதிப்பும் வீழ்ச்சியடையும்.
இது தாங்கள் அறியாததா
மிஸ்டர் மாரிதாஸ்.
மேலும் சுற்று சூழலை பாதிக்கும் பொருளுக்கும்
பாதிக்காதப் பொருளுக்கும்
ஒரே மாதிரியான வரிகொள்கை
மூலப்பொருளுக்கும்
மதிப்புகூட்டு பொருளுக்கும்
ஒரே மாதிரியான GST வரி ..
என்ன சார் இது ..
3.பிளைட் மோட்
வெளிநாட்டு உறவை மோடிதான்
மேம்படுத்த வேண்டுமானால்
எதர்க்காக சுஷ்மா சுவராஜை
வெளியுறவுத்துறை
அமைச்சராக நியமிக்க வேண்டும்.
4. Free wifi
உப்புக்கு வரிகட்ட மாட்டோம்னு
சொல்லி உப்பு சத்தியாகிரஹம்
பண்ணிட்டு சத்தமே
இல்லாம சாப்பாட்டுக்கு
வரிக்கட்டிக் கொண்டு இருக்கிறோம்.
இன்னும் பத்துவருடத்தில்
தண்ணீருக்கும் வரிக்கட்டுவோம்.
அதப்பத்தி கவலைபடாம
ரயில் நிலையத்தில்
குடிதண்ணீரை இலவசமா
கொடுக்காம
எதுக்கு சார் Free wifi ..
கொடுக்குறாங்க..
5.மாட்டுக்கறி அரசியல்
மாட்டுக்கறி ஏற்றுமதிக்கு
தடைவிதிக்காமல்
ஏற்றுமதி செய்து
அந்நியனுக்கு உணவாக்கலாம்
ஆனால் சொந்த நாட்டு
மக்கள் உண்பதால்
மாட்டுக்கறி அரசியல்
ஆகிறதோ..
6. நிரவ் மோதி,மல்லையா
ஒருவிவசாயி பேங்குல
லோன் வாங்கி மாடு
வாங்குனா அந்த
மாட்டுக் காதுல சீல்
அடிச்சுவிடத்தெரிஞ்ச
பேங்குக்கு
பதினொராயிரத்து ஐந்நூறு
கோடி கடன் வாங்குனவனுக்கும்
அவன் சொத்துக்கும் சீல் அடிக்கத் தெரியல
அவன் வெளிநாட்டு
பணபரிவர்த்தனைய
தடுக்கத் தெரியல
அவன் பாஸ்போட்டையும்
முடக்கத்தெரியல.
என்னனு கேட்டா
ஏதோ அவரு பதினோராயிரத்து
ஐந்நூறு கோடிய
ஷீ ஷாக்சுலையும்
சட்ட பாக்கெட்டுலையும்
மறைச்சு வைச்சு கொண்டு
போன மாதிரி பேசுறது..
7. Clean India
பிளாஸ்டிக் ப் பொருட்களுக்கு
எந்த தடையும்,கட்டுப்பாடும்
விதிக்காமல் என்னடா
கீளின் இந்தியா..
8. விலைவாசியும் குறையல
வேலைவாய்ப்பும் கொடுக்கல
என்னடா காமன் இந்தியா
இருக்குற ட்ரெய்ன
சரி பண்ணாம
எதுக்குடா புல்லட் ட்ரென்னு.
9.. கெட்ட வார்த்தைகள்
மேலும் மோடியின் சிறப்பாட்சியில்
அதிகமாய் பேசப்படும்
கெட்டவார்த்தைகள்
தலித்,ஹிந்துத்துவா,RSS
மற்றும் பல..
10. மிஸ்டர் மாரிதாஸ்
நான் ஏன் மோடியை ஆதரிக்கிறேன்னு நீங்க
ஒரு புத்தகம் வெளியிட்டா..
நான் ஏன் மோடியை வெறுக்கிறேன் என்று
என்னால் பத்து புத்தகம்
வெளியிட முடியும்..
ஒரு வீடியோ போட்டுட்டு விவாதிக்கலாமானு
கேப்பீங்களே
வாங்க சார் விவாதிக்கலாம்
ஐ எம் வெயிட்டிங்.

விவசாயம் - 3

சில வாரங்களுக்கு முன் விவசாயத்தில் சாதியம் பற்றியும், சாதிய அமைப்புக்கு விவசாயத்தின் தொண்டு பற்றியும் எழுதியதற்கு நானே எதிர்பார்த்திராத வகையில், பலர் தன் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து இதைப் பற்றி மேலும் பேசுவது அவசியமான ஒன்று, மேலும் தொடர்ந்து எழுதுங்கள் என கூறியிருந்தனர்.
சாதிய அமைப்புக்கு அடுத்து விவசாயத்தில் நடக்கும் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், குழந்தைகளை விவசாயம் மற்றும் அது சார்ந்த வேலைகளில் ஈடுபடுத்தி அவர்களின் வாழ்க்கையையும், குழந்தை பருவத்தையும் அழிப்பது.
இதைப்பற்றி நான் எழுதுவதற்கு காரணம் விவசாயத்தை அழிப்பதற்காகவோ, நான் அதன் எதிராளியோ அல்ல. என்னுடைய அவா அனைத்தும் விவசாயத்தின் குறைகள் களையப்பட வேண்டும். குறைந்த பட்சம் அவற்றைப் பற்றி விழிப்புணர்வாவது மக்களிடம் வர வேண்டும். ஒரு சிலர் அறிவாளிகள், வேற எந்த தொழிலிலும் இதெல்லாம் இல்லையானு கிளம்பி வராதீங்க.
According to the Child Labour Act, 1986, a complete prohibition has been imposed on employment or involvement of child labour (A person below the age of 14) in any establishment whether hazardous or not. An amendment was made to the CL Act in 2016 and it was changed to Childhood and Adolescent (Prohibition and Regulation) Labour Act 1986. According to this law, children between 14 to 18 can be involved in helping the family after the school hours or during vacation.
இந்த கொடுமை விவசாயத்தில் சர்வ சாதாரணமாக அரங்கேறும். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், அது தவறே இல்லை என்று வேற வாதாடுவார்கள். யோசித்து பாருங்கள் எத்தனை குழந்தைகளின் குழந்தைப் பருவம் அழிக்கப்பட்டு, அவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியாக்கப் பட்டிருக்கிறது. உடனே, நானும் விவசாய குடும்பத்தில் தான் பிறந்தேன், நானும் வயலில் வேலை செய்து தான் வளர்ந்தேன், நான் நல்லா தான் இருக்கேன்னும் சொல்லிட்டு வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப் படுகிறது.

விவசாயம் - 2

கேள்வி: கிழவி இரண்டு நாட்களுக்கு முன் விவசாயத்தில் சாதி இருப்பதாகவும், விவசாயம் சாதிய அமைப்பை நம்பி இருப்பதாகவும் பதிவிட்டீர்கள். உங்களுக்கு ஏன் விவசாயத்தின் மீது இவ்வளவு வெறுப்புணர்வு? விவசாயத்தில் சாதி பாகுபாடு இருப்பதை ஏற்கிறேன். ஆனால், விவசாயத்தில் மட்டும் தான் சாதி உள்ளதா? அனைத்து தொழில்களிலும் சாதி உள்ளதே, அதைப்பற்றி ஏதும் வாயைத் திறக்காமல் விவசாயத்தை மட்டும் சாடுவது ஏன்? விவசாயம் எவ்வளவு இன்றியமையாத ஒன்று?
மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே என சமூகத்தால் வரையறுக்கப்பட்ட, மக்களின் உயிர்களை காவு வாங்கும், மலம் அள்ளுதல் போன்ற தொழில்களைத் தவிர, சாதிய பாகுபாடின்றி அனைவராலும் அவரவர் தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்க இயலும் எந்த தொழிலின் மீதும் எனக்கு வெறுப்புணர்வு இல்லை. இங்கு தான் கொஞ்சம் பார்வையை ஆழமாக்க வேண்டும். தொழிலைத் தேர்ந்தெடுத்த பிறகு வேலை செய்யும் இடத்தில் சாதி அடக்குமுறை இருப்பதற்கும், தொழிலைத் தேர்ந்தெடுப்பதே இந்த சாதி மட்டும் தான் என வரையறை இருப்பதற்கு வேறுபாடு உண்டு. உடனே அப்போ அங்கு சாதி அடக்குமுறைகள் இருக்கலாமா என கிளம்பி வராதீர்கள். சாதிய அடக்குமுறை எங்கு இருந்தாலும் அதை எதிர்ப்பவள் நான்.
இந்துக்கள் இந்தியாவின் நோயாளிகள் என அம்பேத்கர் கூறியுள்ளார். இந்துக்கள் இருக்கும் இடமெங்கும் சாதிய வேறுபாடு இருக்கும். அது பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும், வெளிநாடாகட்டும், வேலை செய்யும் இடமாகட்டும். ஒரு இந்துவாக உங்களை நினைத்துக்கொண்டு நீங்கள் எங்கு இருந்தாலும் உங்களை அறியாமல் சாதிய எண்ணங்கள் உங்கள் ஆழ்மனதில் வேரூன்றி இருக்கும். மக்கள் இந்து மதத்தையும், மதகருத்துகளையும் விட்டொழித்தாலொழிய சாதிய பாகுபாட்டைக் களைய இயலாது.
எல்லா தொழில்களிலும் சாதி பாகுபாடு இருக்கும்போது விவசாயத்தை மட்டும் சாடுவது ஏன் எனக்கெட்டால், விவசாயத்தில் மட்டும் தான் சாதி பாகுபாடு என்பதை, அது வாழ்வியல் முறை அப்படித்தான் இருக்கவேண்டும், என்பது போல ஒடுக்கப்பட்டவர்களின் மனதில், இவர்கள் தான் நாட்டுக்கே சோறு போடுகிறார்கள் என்று உணர்ச்சியூட்டி பதியவைக்கப்படுகிறது. அவர்கள் எதிர்த்து கேள்வி கேட்கவோ, நினைத்தால் வேறு வேலைக்கு செல்லவோ விவசாயிகளுக்கு அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை. விவசாய கூலிகள் பலர் வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் வேலைக்கு தொடர்ந்து சென்றுகொண்டிருப்பதும், சித்ரவதைப்படுவதும் அவர்களது அன்றாட வாழ்க்கையாகி போயிருப்பது இதற்கு சான்று. மேலும், விவசாயம் செய்பவர்களே பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்கள்தான் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
விவசாயத்தை உணர்ச்சிகளை நீக்கி ஒரு தொழிலாக மட்டுமே பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதுதான் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும். இல்லையேல், விவசாயம் என் உயிர்மூச்சு என்போர் அதே விவசாயத்திற்கு பலி ஆகவும் நேரிடும். இதைப்பற்றி மேலும் விவரத்திற்கு Please google, "Impacts of Climate Change on Agriculture", "Economic Survey 2018". தொழில்நுட்ப உதவியுடன் விவசாயத்தை மேம்படுத்தாமல், இயற்கை, மரபு என சென்றால் என்ன ஆகும் என்பதற்கு இவை சான்று. மேலும் விரிவாக பிறகு பார்ப்போம்.
விவசாயத்தில் இருக்கும் அளவிற்கோ அல்லது அதிகமாகவோ சாதிய தலையீடு இருக்கும் தொழில்களை பட்டியலிடவும். அறிந்துக் கொள்ள மிக ஆவல். ஒரு ஆசிரியரை விட, ஒரு மருத்துவரை விட, ஒரு பொறியிலாளரை விட, ஒரு எழுத்தாளரை விட, ஒரு அரசு அதிகாரியை விட, (பல எடுத்துக்காட்டுகள்) விவசாய கூலி தொழிலில் சாதி வேறுபாடு குறைவு தான், எல்லாருக்கும் நல்ல எதிர்காலத்தை கொடுக்கும் என்றால் ஆதாரத்தோடு கூறுங்கள், அடுத்த கணமே நான் உங்களுடன்.
Don't allow your faith to substitute emotion for evidence.

விவசாயம் - 1

"நாம் பாரம்பரிய தொழிலை இழந்துவிட்டோம். இந்தியா ஒரு விவசாய நாடு. ஆனால், ஊருக்கே சோறு போடும் விவசாயத்தையும், விவசாயியையும் நாம் மதிப்பதே இல்லை," இது போன்ற வசனங்கள் இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் கொட்டிக்கிடக்கின்றன. போதாதற்கு நம்மாழ்வார் போன்று ஒரு சில அதிதீவிர சமூக ஆர்வலர்கள் வேற இயற்கை விவசாயம், அது இதுன்னு உணர்ச்சி பொங்க பேசி பல இளைஞர்கள் மூளை மழுங்கி, "விவசாயம் என் உயிர்மூச்சு, அதிலும் இயற்கை விவசாயம் என் உயிர்மூச்சுக்கு ரெண்டு படி மேல" என்பன போன்ற வசனங்கள் பேசுவதையும் பார்க்கமுடிகிறது.
இவையெல்லாம், மத நம்பிக்கைகளைப் போல விவசாயத்தை புனிதப்படுத்தும் இழிவான செயல் என்பதை படித்த இளைஞர்கள் உணர மறுப்பது ஏனோ! மற்ற தொழில்களைப் போல விவசாயம் ஒரு தொழில். அவ்வளவே. என்னைக் கேட்டால் விவசாயத்தை விட மற்ற தொழில்கள் மேலானவை என்பேன். ஏனெனில், விவசாயத்திற்கு சாதி அமைப்பை ஊட்டி வளர்த்து தாங்கிப் பிடிப்பதில் மிக முக்கிய பங்குள்ளது. ஒரு விவசாயியின் மகளாக எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து கண்கூடாக நான் இதை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
பல ஆண்ட சாதி பிரியர்கள் அரசின் 100 நாள் வேலைத்திட்டம் விவசாயத்தை அழித்துவிட்டது எனப் புலம்புவதிலிருந்து என் கூற்று நிரூபணமாகும். 100 நாள் வேலைத்திட்டத்தில் மக்கள் வேலையே செய்வதில்லை என்பதெல்லாம் பிறகு வாதிடலாம். நில உடமையாளர்களின் நிலத்தில் வேலை செய்ய செல்லும் ஆட்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். ஆண்டைகள் அவர்களின் மகன், மகள்களை படித்துவிட்டு நல்ல வேலைக்கோ, வெளிநாட்டிற்கோ அனுப்பிவிட்டு, அவர்கள் நிலத்தில் வேலை செய்ய யாரும் இப்போதெல்லாம் வருவதில்லை! 100 நாள் வேலைத்திட்டம் தான் கெடுத்துவிட்டது! விவசாயத்தை காப்பற்ற யாரும் இல்லை! என்று வெற்று சாதிவெறி கூச்சல் போடுவார்கள். ஆக, ஒடுக்கப்பட்டவர்கள் படித்து வேறு வேலை பார்த்து மேலே வரக்கூடாது, அவர்களிடமே கைகட்டி வேகும் வெயிலில் கூலி வேலை செய்ய வேண்டும் என்பது எவ்வளவு அப்பட்டமான சாதிவெறி.
நமது நாட்டில் நிலவுகிற வேலையில்லா திண்டாட்டத்திற்கு சாதி அமைப்பை ஒரு நேரடிக் காரணம் ஆக டாக்டர் அம்பேத்கார் முன்வைக்கிறார். தொழில் பிரிவினையோடு இல்லாமல், தொழிலாளர்களையும் பிரிப்பது தான் சாதி. பிரிந்த தொழிலாளர்கள் தங்களுக்கு பிரிக்கப்பட்ட தொழிலையே செய்யவேண்டும் என்பது வேலையில்லா நிலைமைக்கு இட்டுச்செல்கிறது எனவும் கூறுகிறார். விவசாய நிலத்தில் அடிமைகளைப்போல இரவும், பகலும் வேலை செய்யும் தொழிலாளர்கள் இப்படி பிரிக்கப்பட்டு ஒடுக்கப்படுபவர்கள் தான் கூலி விவசாயிகள்.
அவர்கள் தெளிந்தால் என்ன ஆகும் என பயந்து பீதியில் தான் விவசாயம் ஒரு புனித பிம்பமாக கட்டமைக்கப்படுகிறது. விவசாயமாகிய ஒரு தொழிலுக்கு உணர்ச்சி ஊட்டப் படுகிறது. இளைஞர்களைக் கவர இயற்கை விவசாயம் என கவர்ச்சியூட்டப் படுகிறது.

இந்து மதத்தை யார் முதலில் விட்டொழிக்க வேண்டும்

இந்து மதத்தை யார் முதலில் விட்டொழிக்க வேண்டும் என்று கேட்டால், பெண்கள் தான் முதலில் இந்த கருமத்தை விட்டொழிக்க வேண்டும் எனக் கூறுவேன். ஏனெனில், இந்து மத நூல்கள், "பெண்ணாய்ப் பிறப்பதை விட கெட்ட பிறப்பு வேறு எதுவுமில்லை" என்று கூறுவதில் தொடங்கி, பெண்களின் மீது எந்த அளவிற்கு அநீதிகளையும், அநியாயங்களையும் கட்டவிழ்க்க முடியுமோ அந்த எல்லை வரை சென்று கற்பனைக்கும் எட்டா கொடுமைகளை பெண் சமூகத்திற்கு இந்து மதம் இழைத்துள்ளது.
இந்துமத வர்ண தர்மத்தின் படி, கடைசி படி நிலையில் உள்ள சூத்திரர்களை விட கீழ் நிலைக்கு தள்ளி, பெண்களை வர்ண மாற்றவர்களாக காட்டி அனைத்து வருணங்களில் உள்ள ஆண்களுக்கும் அடிமைகளாகவே சித்தரிக்கிறது. புரட்சி சமுதாய சிற்பிகளான தந்தை பெரியார் தென்னாட்டிலும், டாக்டேர் அம்பேத்கார் வடநாட்டிலும் மனுதர்மத்தை எரித்ததில் வியப்பேதுமில்லை.
இப்படிப்பட்ட கேவலமான அடிப்படைவாத இந்துத்துவ சித்தாந்தங்களில் முழுவதும் ஊறி போய் இருக்கும் அரசு (BJP, RSS) ஆளுகையில் தன் மக்களுக்கு என்ன செய்யும் என்பதற்கு இதோ மற்றுமொரு சாட்சி.


நமது இந்தி(து)ய திருநாடு, பெண்கள் பெண்களாக இருப்பதற்கே (வாழ்வது அடுத்தது) மிகவும் அபாயகரமான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து சாதித்துள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நான்காவது இடத்தில் இருந்தது என்பது கூடுதல் தகவல்.
இந்து மதமும், கோவில்களும், அதனை பின்பற்றுபவர்களுக்கும் சிறிதும் மனிதம் இல்லை என்பது, சமீபத்தில் கோவிலில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, சித்திரவதை செய்து ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்பட்ட ஆசிஃபா ஒரு சான்று. சில சமயங்களில் இந்த இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு அனைவரும் சாட்சிகளாகவே செத்து மடிவார்களோ என்ற பயமும் அச்சுறுத்த தவறியதில்லை. இந்துத்துவ BJP அனைத்து அடிப்படை சக்திகளுக்கும் முழு அதிகாரம் கொடுத்து கொம்பு சீவி விட்டுக் கொண்டிருக்கும் அந்த பயங்கர வாதிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.


எம்.ஜி.ஆர் ஒரு டம்மி பீசு. - எடப்பாடி எங்கிருந்து வந்தார் என்று புரிகிறதா

எம்.ஜி.ஆர் ஒரு டம்மி பீசு.
தமிழக மக்கள் செய்த மிகப்பெரிய தவறு
காமராஜரை தோற்கடித்தது அல்ல. எம்.ஜி.ஆரை ஜெயிக்க வைத்தது தான்.
1975ல் இந்திராகாந்தி அமல்படுத்திய
எமர்ஜென்சியை எதிர்த்த ஒரே மாநிலம்
தமிழ்நாடு.அப்போதைய முதல்வர்
கலைஞர்.
எம்.ஜி.ஆர் பயந்து டெல்லி சென்று
எமர்ஜென்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.
திமுக செயற்குழுவை கூட்டி எமர்ஜென்சிக்கு
எதிராக தீர்மானம் போட்டார் கலைஞர்.
அதிமுக பொதுக்குழுவை கூட்டி
ஆதரவாக தீர்மானம் போட்டார்
புரட்சித் தலைவர்.
எமர்ஜென்சியை எதிர்க்கும் மாநில
கட்சியை தடை செய்வோம் என்றார்
இந்திரா.முடிந்தால் திமுகவை தடை
செய்து பாருங்கள் என்றார் கலைஞர்.
தன் கட்சிப் பேரையே அனைத்திந்திய
அதிமுக என்று மாற்றினார் MGR.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான்
ஜனநாயக காற்று வீசுகிறது என்றார்கள்
வடமாநில அரசியல்வாதிகள்.
அப்படிப்பட்ட கலைஞரை மீண்டும்
தேர்ந்தெடுக்காமல் 1977-ல் MGR-ஐ
முதல்வராக்கினர் தமிழக மக்கள்.
அப்போது மட்டும் மக்கள் கலைஞரோடு
நின்று அவர் கரத்திற்கு வழு
சேர்த்திருந்தால் தமிழகம் இன்னும்
வேறு உயரத்திற்கு சென்றிருக்கும்.
ஜெயலலிதா,எடப்பாடி என்று
கலைஞரின் ஆளுமைக்கு நிகரில்லாதவர்கள் எல்லாம் திமுகவுக்கு
மாற்றாக ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள்.வேறு ஒரு தகுதியான
மாற்று கட்சியாவது வந்திருக்கும்.
"நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்" என்று சினிமாவில்
பாடிய MGR சினிமாவில் மட்டுமே
ஹீரோவாக இருந்திருக்கிறார்.
"தென்றலைத் தீண்டியதில்லை
தீயைத் தாண்டியிருக்கிறேன்" என்று
வசனம் எழுதிய கலைஞர் நிஜத்திலும்
ஹீரோவாக வாழ்ந்திருக்கிறார்...
எடப்பாடி எங்கிருந்து வந்தார்
என்று புரிகிறதா.??

நீங்களும் ‘போலி அறிவியலுக்கு’ப் பலி ஆனவரா?

#ஆன்மீக_அறிவியல்
#பகுத்தறிவு
#நம்முனோர்கள்_முட்டாள்கள்
#பார்பனமுன்னோர்கள்_அயோக்கியர்கள்
வேப்பிலை ‘ஆண்டிபயாடிக்’ என்றும், அதனால்தான் அம்மை நோயின்போது அதனைக் கட்டுவதாகக் கூறி வரும் நண்பர்களுக்கு ‘அம்மை நோய்’ வைரசினால் ஏற்படும் நோய் என்பதும், ‘ஆண்டிபயாடிக்’ என்பது பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்து என்பதும் வைரசும் பாக்டீரியாவும் வேறு வேறு என்பதும் தெரியாது....
---- venu gopaala shanger எழுதுகிறார்...
இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்த உலகில் உள்ள அனைத்து போலி அறிவியல் தத்துவங்களையும் உங்களின் கண்முன் நிறுத்துவது அல்ல. மாறாக, போலி அறிவியலின் அடிப்படைகளை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு உண்மையான அறிவியல் எது? போலி எது? என்று அடையாளம் காணுவதே ஆகும்.
சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உள்ள இடத்தில்தான் பூமியின் காந்தப் புல மய்யம் உள்ளது என்று ஆரம்பித்து அம்மைநோயின்போது வேப்பிலைகள் கட்டுவது அது ஒரு ‘ஆண்டி-பயாடிக்’ என்ற அறிவியல் உண்மையின் காரணமாகத்தான் என்பதுவரை உங்களிடம் யாரேனும் ஆன்மீக அறிவியல் பாடம் எடுத்திருக்கக்கூடும்.
இவற்றையெல்லாம் அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள், முன்னோர்கள் முட்டாள்களில்லை என்றும் புலம்பியிருக்கக்கூடும்.
மேற்கண்ட கருத்துகளை நீங்கள் நம்பி இருந்தால் நீங்களும் ‘போலி அறிவியலுக்கு’ப் பலி ஆனவர்தான்.
பூமி கோள வடிவிலானது, ஒரு கோளத்தின் காந்த மய்யம் அதன் நடுவில்தான் இருக்க முடியுமே தவிர அதன் வெளிப் பரப்பில் இருக்க முடியாது. வேப்பிலை ‘ஆண்டிபயாடிக்’ என்றும், அதனால்தான் அம்மை நோயின்போது அதனைக் கட்டுவதாகக் கூறி வரும் நண்பர்களுக்கு ‘அம்மை நோய்’ வைரசினால் ஏற்படும் நோய் என்பதும், ‘ஆண்டிபயாடிக்’ என்பது பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்து என்பதும் வைரசும் பாக்டீரியாவும் வேறு வேறு என்பதும் தெரியாது.
போலி அறிவியல் உருவாகக் காரணம் : நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் இடையேயான ‘சண்டை’ பல நூற்றாண்டுகால வரலாறு கொண்டது. கலிலியோ பூமி உருண்டை என்றபோது, மதவாதிகள் அவரைக் ‘குற்றவாளி’ என்றனர். மத நூல்கள் பூமி தட்டை என்று கூறுவதாகவும் கலிலியோ கடவுளுக்கு எதிராகப் பேசுவதாகவும் கூறி அவரைக் கொல்ல முனைந்தனர். டார்வின் உயிரி தோற்றக் கொள்கையை வெளியிட்டபோது, அது கடவுளுக்கு எதிரானது என்றும், கடவுள்தான் அனைத்து உயிரிகளையும் படைத்தார் என்றும் அவரை மதவாதிகள் சாடினர். ‘மரபியலின் தந்தை கிரிகர் மெண்டல்’ செய்த ஆய்வுகள் கடவுளின் படைப்பிற்கு எதிரானது என்று கூறி கிறிஸ்துவப் பாதிரியார்கள் அவரை இருட்டறையில் அடைத்தனர். பாரதத்தை மூடநம்பிக்கைகளின் தலைநகரம் என்றே நாம் கருதலாம். பாரம்பரியம், மரபு, கலாச்சாரம், மத நம்பிக்கைகளின் பெயரில் எதனை வேண்டுமானாலும் மக்களை நம்ப வைக்கலாம்.
மதத்தில் உள்ள கட்டுக் கதைகள் மிகுந்த கற்பனை வளம் கொண்டவை. அதன் கதைகளில் பூமியைக் கடத்திக் கொண்டு போய் பூமியில் உள்ள கடலிலிலேயே மறைத்து வைத்திருப்பார்கள். பகுத்தறிவும் அறிவியலும் வளர ஆரம்பித்த காலங்களில் முதலில் நமது மதவாதிகள் அறிவியலால் தீங்கு ஏற்படும் என்று பிரச்சாரம் செய்தனர். ஆனால் அறிவியல் வளர வளர அடிப்படைவாதிகளால் அறிவியலை முழுமையாக எதிர்க்க முடியவில்லை. மக்கள் அறிவியலைப் பின்பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். இதே நிலை தொடர்ந்தால் மதவாதிகளின் பிழைப்பில் மண் விழுந்துவிடும். என்ன செய்வது என்று சிந்தித்துத் திட்டம் போட்டவர்களின் கண்டுபிடிப்பே போலி அறிவியல் ஆகும். அறிவியலை எதிர்த்த நாட்கள் போய், இப்போது ஒவ்வொரு மதநிறுவனமும் எங்கள் மதம்தான் அறிவியல் பூர்வமானது என்று அடித்துக் கொள்ளும் நிலை வந்துவிட்டது.
இந்தப் போலி அறிவியலின் அடிப்படை எளிமையானது. அது வீழ்த்த இயலாத எதிரியை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். இதன்படி அறிவியலையும், நம்பிக்கைகளையும், கட்டுக்கதைகளையும், பாரம்பரிய மருத்துவ முறைகளையும் கோர்த்துவிடுவதுதான். இதன்படி மூடநம்பிக்கைகள் அனைத்தும் அறிவியல் பூர்வமானது என்று மக்கள் கருதுவார்கள். உதாரணமாக "இந்த Dark energy எனப்படும் ஆற்றலே தலயாய ஆற்றல் அதை எதனாலும் அளவிட இயலாது என்கிறது அறிவியல் அந்த ஆற்றலே நாம் சிவம் என்கிறோம்" இவ்வாறு வரலாறு உள்ள மனித கற்பிதங்களை இதுவரை தெரியாத அறிவியலுடன் முடிச்சுப்போடுவார்கள்.
இவ்வாறு மதத்தில் உள்ள ஒவ்வொரு மூடநம்பிக்கையின் பின்பும் ஒரு அறிவியல் உள்ளதாக கதை கிளப்பி விடப்படுகின்றது. தாலி கட்டுவது, தீ மிதிப்பது, மந்திரம் ஓதுவது, ஓமம் வளர்ப்பது, கோமியம் குடிப்பது, கோயில் சுற்றுவது, தோப்புக்கரணம் போடுவது போன்ற அனைத்தும் இன்று அறிவியல் பூர்வமானது என்று கதை கட்டப்பட்டு உள்ளது. அந்தக் கதைகளின் மூலம் மீண்டும் மதநிறுவனங்கள் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ள முனைகின்றன.
இந்தக் கதைகளைக் கட்டுவதற்கென்று ஆன்மீக எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். இவர்கள் ஆன்மீகத்தை மையமாகக் கொண்டு வெளிவரும் பத்திரிகைகளின் மூலம் இதனைச் செய்கின்றனர். ஒவ்வொரு வாரமும் ஒரு புதுக்கதை இருக்கும். எடுத்துக்காட்டாக, அதன் தலைப்புகள் ‘அம்மி மிதிப்பதன் அறிவியல் அடிப்படை’, ‘குளத்தைச் சுற்றினால் சரியாகும் தோல் நோய்’ என்றவாறு இருக்கும்.
அமெரிக்காவில் உள்ள நாசாவும், நமது திருமூலரும்தான் இவர்களால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள். எதற்கெடுத்தாலும் நாசாவிலேயே சொல்லிவிட்டார்களாம் என்பார்கள். இல்லையென்றால் திருமூலர் அப்பவே இதைச் சொல்லி வைத்துவிட்டு போய்விட்டார் என்பார்கள்.
ஒன்றை இன்னொன்றோடு முடிச்சுப்போடுவார்கள். அணுவின் இயக்கத்திற்கும் நடராஜர் நடனத்திற்கும்கூட முடிச்சுப்போடுவார்கள். ‘காஸ்மிக் டான்ஸ்’ அதனைக் குறிப்பால் உணர்த்தவே நடராஜர் ‘நடனம்’ ஆடுகின்றார் என்பார்கள். ஏன் நடராஜர் ஆடுவது டிஸ்கோ டான்சைக் குறிப்பால் உணர்த்துவதாக இருக்கலாம் என்று நாம்கூட கூறிவிட்டுபோகலாம். கேட்பவர் சுயமாக யோசிப்பதே இங்கு முக்கியம். ஆதாரமற்ற எவற்றையும் புறந்தள்ளுவதே புத்திசாலித்தனம்.
எதிர்காலத்தைக் கணிப்பதற்கு, சுகமான வாழ்வு வாழ, செல்வவளம் பெற கைரேகை, ஜாதகம், கம்ப்யூட்டர் ஜாதகம், நாடி ஜோதிடம், கிளி ஜோசியம், நியுமராலஜி, நேமாலஜி, மலையாள மாந்த்ரீகம், வாஸ்து சாஸ்திரம், பரிகார முறைகள், தனலட்சுமி எந்திரம், தாயத்து, பில்லி சூனியம், ஏவல் மற்றும் பல மரபு வழி முறைகள் நம்மைச்சுற்றி இன்றும் பரவலாகப் பின்பற்றப்படுகின்றன.
மேற்கண்ட முறைகளில் ஏதேனும் ஒன்றை வைத்துத் தொழில் செய்து மக்களை ஏமாற்றுபவர்கள் தங்களுக்கென்று ஒரு தொழில் தர்மத்தை வைத்திருக்கின்றனர். அது என்னவெனில், ஒருவர் மற்றவரைக் குறை சொல்லக் கூடாது. காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதுதான்.
எடுத்துக்காட்டாக ஜாதகம் கணிப்பவர், நியுமராலஜி அல்லது நேமாலஜி தவறான முறை என்று கூறுவதில்லை. கிளி ஜோசியம் பார்ப்பவர் அருகில் கைரேகை பார்ப்பவர் முறை தவறெனக் கூறுவதில்லை.
அதேபோல தங்கள் முறைதான் சரியானது, அறிவியல் பூர்வமானது, மற்ற முறைகள் தவறானவை என்று ஒருவர் மற்றவரை தொலைக்காட்சியில் பேசும் போதோ விவாதங்களின் போதோ காட்டிக் கொடுப்பதில்லை. ஆனால் நாடி ஜோதிடத்திற்கும், கிளி ஜோதிடத்திற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் இவர்கள் அனைவரும் அறிவியலுக்கு, பகுத்தறிவுக்கு எதிரானவர்கள். மூடநம்பிக்கையை வைத்து மக்களை ஏமாற்றுபவர்கள். எனவே இவர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர்.
ஒவ்வொருவரும் இந்த ஆன்மீக அறிவியலைவைத்து ஏமாற்றும் ஏமாற்றுக்காரர்களை இனங்கண்டுகொள்வது அவசியமாகிறது.

ஆர்எஸ்எஸை தமிழகத்தை விட்டு ஒழிந்தாலே மதவாதம் ஒழியும்

ஆர்எஸ்எஸை தமிழகத்தை விட்டு ஒழிந்தாலே மதவாதம் ஒழியும் ..திமுக ஆட்சிக்கு வந்தால் ஆர்எஸ்எஸை அகற்றிவிடுவோம்..
#மானமிகு_கனிமொழி..
..
இப்போதுதான் சரியான பாதையில் செல்கிறது மிகவும் ஆபத்தான தேசத்தின் ஒருங்கிணைப்பை வெட்டி சாய்க்கும் இயக்கமாய்.. இந்தியர்களின் ஒற்றுமைக்கு இடைஞ்சலாய் .. ஒருசாரார் வெளிப்படையாகவே சொல்ல வேண்டுமெனில் பார்பனர்களின் இயக்கமாய் .. சாதிய வெறியை தூண்டி மக்களை கலவரத்தோடு வைத்து ...மதவெறியை தூண்டி அதில் தங்கள் மட்டுமே பயனடைய வேண்டுமென்ற நோக்கோடு செயல்படும் இயக்கம்..
தொடங்கபட்ட காலத்திலிருந்தே.. அது இடைசாதி கடைசாதியினருக்கெதிராக இருந்தது.. சூத்திரன் கல்வியை கேட்டால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று என வெளிப்படையாகவே சொல்லி திரிந்தவர்கள்.. ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்காக .. இந்த மண்ணின் பூர்வகுடிகளை தாழ்ந்தவனாய் காட்டி சமுக ஏற்றதாழ்வை மனதில் ஆழமாக பதித்ததில் ஆர்எஸ்எஸின் பங்கு அதிகம்..
..
ஆரியம் அஞ்சுகிற ஒரே சொல் திராவிடம்.. ஆரியத்தை வேரறுக்க நீங்கள் எதை கொண்டுவந்தாலும் அதை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிந்துவிடுவார்கள் அல்லது முனை மழுங்கிய கதையாகும் ..இன்றைக்கு நடக்கிற அவலங்களுக்கெல்லாம் காரணியான பாசிசத்தை நம் மீது திணிக்க நாமே காரணமென்றால் அது உண்மையும் கூட.. மதம் சாதி என மெல்ல கடித்து குதறும் விடயங்களில் ஆரியர்கள் அடிக்கடி அரவணைத்து நம் குரல்வளையை கடித்து குதறுகிற போது நம்மவரை கொண்டே நம் கைகளை கட்டி போடுகிறார்கள்.. கல்வியில் நமக்கான உரிமையை பறித்து .. நாமே நமக்காக உண்டாக்கிய மருத்துவ கல்லூரிகளில் அவர்களினி குழந்தைகள் படிக்க வைக்க நம்மை கொண்டே சொல்லவைத்திருக்கிறார்.. இன்னும் நிறைய வரும் வராதுவந்த வாய்ப்பினை மிக கெட்டியாக பிடித்துக்கொண்டு இனியொரு வாய்ப்பு கிடைக்காதென்பதால் அரியகிட்டிய அடிமைகளை வைத்து கூத்தாட்டம் நடத்துகிறார்கள்.. அது தப்பாட்டம் என தெரிந்தும் காலம் கடத்த வேண்டியிருக்கிறது..
..
அளவிற்கு அதிகமாக பார்பனர்கள் பொதுவெளியில் ..விவாதங்களில் திமிரோடு பேச தொடங்கியிருக்கிறார்கள்.. மௌனமாய் இருந்ததால் நம்மீது கத்திவீச தொடங்கியிருக்கிறார்கள்.. எங்கு அடித்தால் இவர்களின் ஆட்டம் அடங்குமென அறிந்து வீசியடிக்கிறார் கனிமொழி..



..
என்வீட்டில் எல்லோருமே திமுக ..கனிமொழி மட்டும் திராவிடர் கழகம் .. ஆசிரியரின் மாணவியாய் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி என்றார் கலைஞர் ..
ஆம் இந்த துணிவு பெரியார் திடலோடான தொடர்பில் வந்தது ஆரியத்தை வீழித்த பார்பனர்களின் ஆட்டத்தை அடக்க திராவிடத்தை ..அதன் சித்தாந்தத்தை பற்றிபிடித்து கொள்ளுங்கள்..
வெல்லலாம்.. நிச்சயமாக பாசிசவாதிகள் அஞ்சுகிற ஒற்றைச் சொல் .. திராவிடம்..
குலைநடுங்க செய்கிற ஒரு பெயர் உண்டெனில் இது பெரியார் தான்..
பெரியாரை முன்னெடுக்கிற.. பெரியாரை கொண்டு நடந்தால் மட்டுமே இலக்கை அடைய முடியும் அதுவே .. தமிழகத்திற்கு விடிவை தரும் தமிழர்க்கு நிம்மதியை தரும்.. வாழ்த்துகள் கனிமொழி..
..
சரியான பாதையில் 

மநுவை ஒழித்தால் தான் சாதி ஒழியுமே தவிர சாதி சான்றிதழை கிழித்தால் அல்ல

சாதி சான்றிதழை கிழித்தால் சாதி ஒழியுமென்ற அதிமேதாவிக்கு.. மநுவை ஒழித்தால் தான் சாதி ஒழியுமே,தவிர சான்றிதழை அல்ல.. சாதி சான்றிதழை கிழிக்க சொல்வதின் பின்ணணியை பார்க்க வேண்டும் மிகவும் ஒடுக்கபட்ட சமூகத்தின் அடித்தட்டிலிரு்து மேலே வர முடியாமல் சுழன்று திரியும் எம் மக்களை .. மிகவும் பிற்படுத்தபட்டவராய்.. சமூகத்தில் தொடர்ந்து புறக்கணிக்கபட்டு கல்வி வேலைவாய்ப்பில் ..உயர்சாதியினரோடு போட்டியிட முடியவில்லை.. பொருளாதாரம்..கட்டமைப்பு வசதி அதற்கான வாய்ப்புகள் மறுக்கபட்டவர்களையும் .. உயர்கல்விகளுக்கு வருவதற்கு .. அவர்களுக்கான விகிதாசாரத்தை தருவது தானே சரி .. அவர்களை எப்படி இனங்காண்பது..
இன்றைக்கும் உயர்பதவிகளில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரே ஆதிக்கம் செலுத்துகிற அவலம்.. உச்சநீதிபீடம் முதல் .கவர்னர்...அரசு அதிகாரிகள் ..செயலர்கள் என அதிகார அமைப்பையே பார்பனர்கள் வைத்திருக்கிறார்கள்.. இடைநிலை கடைநிலை பணிகள் தான் ..பிற்படுத்தபட்ட தாழ்த்தபட்ட மக்களுக்கு கிடைக்கிறது அதையும் ஒழித்துகட்ட சாதி சான்றிதழ் மறுப்பு பயன்படுமே தவிர...அவர்களை ஒருபோதும் தூக்கிவிடாது..
..
சாதியை ஒழிக்க வேண்டாமா என கேட்பவருக்கு .. முதலில் 3% விழுக்காடு பார்பானுக்கு அவன் விகிதாசாரப்படி 1.5 % விழுக்காடு கொடுத்துவிட்டு மீதமுள்ளதை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க சொல்லுங்கள்..
இடஒதுக்கீட்டின் படி முழுவதுமாக நிரப்பபடாமல் இருக்கிறது..
அப்படியே எம் குழந்தைகள் உயர்கல்வியை தகுதி இடஒதுக்கீட்டின்படி பெற்று வந்தால் அவர்களை கொலை செய்து தற்கொலையென கதைகட்டி.. அந்த இடத்தை அபகரிக்கும் செயல் ..
இந்தியாவில் இடஒதுக்கீடில்லாமல் உயர்பதவி அதிகாரங்களில் பார்பனர்கள் எப்படி இத்தனை பதவிகளில் என எப்போதாவது கேட்டதுண்டா.. சாதி சான்றிதழை ஒழித்தால் எல்லாவற்றையும் பொதுவாக்கினால் மொத்தமும்,கொள்ளை போகும்.. இப்போதே நீட்டென்ற பெயரில் மருத்துவத்தில் எம் குழந்தைகளின் உரிமைகள் பறிபோகிறது
இதெல்லாம் திடீர் அரசியல்வாதிக்கு புரியாது..
இந்த மண்ணின் மக்களை ..அவர்தம் உரிமைகளை தடுக்க நினைக்கும் செயல் இது..
***********************************
சிலைகள் கடத்தபடுவது குறித்து ஏதேனும் கருத்து சொல்லியிருக்கிறாரா... கதவை உடைத்தோ சுவரை உடைத்தோ சிலைகள் திருடபடவில்லை .. கருவறைக்குள் நுழையும் அதிகாரம் பெற்ற திருடர்கள்.. அதேபோல் பித்தளை சிலையை வைத்துவிட்டு ஐம்பொன்சிலையை கடத்துவதாகவும்.. தமிழக கோவில்களில் 7000 கோவில்களில் டூப்ளிகேட் சிலைகள் தான் உள்ளன என்கிறார்
பொன். மாணிக்கவேல்.. இதற்காகதான் அறநிலையத்துறையை நாங்களே நிர்வகிப்போமென எச்.ராசா சொல்லி வருகிறாரா.. சிலைதிருட்டில் பாஜக தேசிய பொறுப்பில் உள்ளவருக்கு தொடர்பு இருப்பதாகவும் ..அதனால் தான் பொன்.மாணிக்கவேல் அவசர அவசரமாக ரயில்வேதுறைக்கு மாற்றபட்டதாகவும் செய்திகள் வருகின்றன ..இது குறித்து திமுக போராட்டத்தை நடத்த வேண்டும்.. சட்டமன்றத்தில் முதல்வர் சொன்ன பதிலுரை திருப்தியாகவே இல்லை வழக்கம் போல நீதிமன்றத்தில் இருக்கிறது.. பொன்.மாணிக்கவேல் அரசுக்கு ஒத்துழைக்கவில்லையென்கிறார்.. ஆம் அரசுக்கு ..ஒத்தூதவில்லை அவர்..சிலை திருட்டிற்கு காரணமாக உள்ள பாப்பான்களை காப்பாற்ற அரசு முயல்கிறது
திருசெந்தூர் முருகனின் வேல் காணமல் போனதற்காக .. நீதிகேட்டு நெடும்பயணம் நடத்திய வரலாறெல்லாம் உண்டு.. இந்த சிலை கடத்தலில் தொடர்புடையவர்கள் டெல்லி வரை செல்வாக்கு பெற்றியிருப்பதாக சொல்லபடுகிறது..
எதற்காக நாங்களே நிர்வகிக்கிறோமென சொல்கிறார்கள் என்பதன் பொருள் இப்போது விளங்கும்.. சிலை திருடர்களை அடையாளம்காண வேண்டும்..
..
கோவில் கூடாதென்பதல்ல கொடியவரின் கூடாரமாய் ஆககூடாது..

ஸ்ரீரங்கம் கோவில் தீட்டாகிவிட்டதாம்

ஸ்ரீரங்கம் கோவில் தீட்டாகிவிட்டதாம் அதற்கு கோவிலுக்கு பரிகாரம் செய்யவேண்டும் அதாவது தீட்டுகழித்து சுத்தம் செய்யவேண்டும்..
சொல்வது யார்.. மந்திரியென்றும் பாராது மந்தியைப்போல காலடியில் அமர்ந்து .. சென்றவுடன் பழைய கும்பகோணமடமாகிய காஞ்சி மடத்தை சுத்த செய்து தீட்டு கழித்தார்களே அந்த பொன்னர் சொல்கிறார்..
ஆதிதிராவிட சகோதரன் கை பட்டால் தான் தீட்டு ஆனால் பார்த்தாலே தீட்டென்று .. பனைமரத்தில் ஏறி நிற்கிறவனின் நிழல் கூட படகூடாதென்று அந்த வழியே அந்தணன் (பாப்பான்) போனால் மட்டை தட்டி ஓசை எழுப்பவேண்டும் இவர் சொல்கிறார்..
ஸ்டாலினால் நாத்திகன் வந்து போனதால் ஸ்ரீரங்கம் கோவிலை சுத்தம் செய்யவேண்டும்..
..
ஆத்திகர்களின் அயோக்கியத்தனங்கள் மதமென்ற பெயரில் ..இந்து கிருஸ்துவ இஸ்லாமிய மத குருக்களின் காமலீலைகள் நாடு கண்டு சிரிக்கிறது.. துறவி வேசம் போடுகிறவன் மத போதகன் வேசம் கட்டி சோக்காலி வாழ்க்கை வாழ்கிறான்.. இதில் சங்கராச்சாரியார் ஜகத் குரு என்று சொல்லி ஜெயேந்திரர் ஆடிய ஆட்டத்தை அந்த சமூகத்து எழுத்தாளரே ..பகிரங்கமாக குற்றம்சாட்டியதும்..
பி.ஜே எனும் நவீன இஸ்லாமிய போதகன் காமகளியாட்ட ஒலிநாடா வும்..பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை தந்ததும்.. ஆன்மீகத்தின் உண்மைதன்மையை .. ஆன்மீகம் என்ற பெயரில் அடிக்கிற கூத்திற்கு license உரிமம் வழங்கபட்டதைப்போல நாடே காரி உமிழ்கிறது..
மதபோதை மக்களின் சிந்தனை திறனை மழுங்கடித்து செய்யும் கேடுகெட்ட செயல்களை நியாயபடுத்த வைக்கிறது.. பி.ஜேவின் அடிவருடிகள்.. தனிநபரின் தவறுக்காக அவரின் தவறிய நிலையில் முன் போதித்த நல்லவகைகளை மறக்க கூடாதென்று பேசுகிற நிலை இதுவொருவகை மூளைச்சலவை ...நம்பியவரின் நடத்தைகளை நியாயபடுத்தி சுக்கான் பிடிக்கும் அயோக்கியத்தனம்.. அது ஜெயேந்திரர் விடயத்திலும் நடந்தது..
ஒருசிலரின் தவறை எப்படி ஆன்மீகத்தோடு சேர்ப்பதென்ற கேள்வி எழாமல் இல்லை.. அவர்களை பின்தொடர்கிற கூட்டத்தையும் சேர்த்து வழிகெடுப்பதைதான் எதிர்க்கிறோம்..
..
ஸ்டாலின் பொட்டை அழித்தாரென்று புலம்பி தீர்க்கும் பொன்னர்.. இந்தியாவின் முதல் குடிமகனை காவலாளி கைப்பிடித்து கோவிலுக்கு நுழையவிடாமல் தடுத்தது குறித்து பேச மறுக்கிறார்.. தொடர்ந்து ஸ்டாலினைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால் மோடியின் எட்டுவழிச்சாலை துரோகத்தை மக்கள் மறந்துவிடுவாரென நினைக்கிறார்.. இதே கோவிலுக்கு யாரென்றே தெரியாத ஒரு பாப்பான் பூணூலோடு வந்தால் காவலாளி தள்ளிவிடுவானா..? .. தேசத்தின் முதல் குடிமகனுக்கே இந்த நிலை.. இங்கே நீயாராக இருந்தாலும் பூணூல் இல்லையென்றால் அதுவும் தாழ்த்தபட்டவனென்றால் அடி உதை மிதிதான்.. எந்த கொம்பனாக இருந்தாலும் .. இதுதான் மதம் ஆன்மீகம்..
இவர் வேண்டாமென்கிற நாத்திகம் ..
மனிதனை சகமனிதனாக பார்க்க சொன்னது ஏற்றதாழ்வில்லை.. உன்னைப்போலவே அவனுக்கு சகலஉரிமைகளும் உண்டு.. அதேபோல பாலின வேறுபாட்டைச்சொல்லி கூடுதல் குறைவென்று பிரிப்பதை எதிர்த்தது..
பொன்னரும் எச்சையும் சமமானவர் என்றது.. எல்லோருக்கும் கல்வி ... அவனவன் விருப்பபடி உண்ண உடுத்த .. வாழ உரிமை ஒரே வார்த்தையில் சொன்னால் நல்லதை சொல்லும் நாத்தீகம்.. 
..
பொய் புரட்டு ஏமாற்று ஏற்றதாழ்வென ஆன்மீகத்தோடு வாழ்வதைவிட.. நாத்திகன் எனும் சொல் நல்லது பொன்னரே..

அதிமுக வாயில் உலக்கையை வைத்து குத்தும்போது வீரம் எங்கோ போனது

இன்றய ஹிந்து தமிழ் விஷமத்தனம் என்னவென்றால் சீமானிடம் பேட்டியில் இப்படி கேட்கப்படுகின்றன....கடந்த கால மத்திய மாநில அரசின் பெயரை வெளிப்படையாக சொல்லி கேட்டுவிட்டு அதைவிட இப்பொழுதைய அடக்குமுறைகள் மோசமானதா..? ..அதற்கு சீமான் இப்பொழுதைய மாநில மத்திய அரசையும் அதன் சர்வாதிகாரத்தை பற்றி மட்டுமே விமர்சிக்கிறார்...ஏன் ஹிந்து தமிழ் வெளிப்படையாக பிஜேபி அதிமுக என்று சொல்லி கேட்க வேண்டியது தானே..?
இந்த பேட்டியில் சீமான் சொல்லிய பதிலில் மிக பெரிய காமெடி என்னவென்றால் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது யுத்ததந்திரம் அதுவே சமயோசித வீரம் என்கிறார்... இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பிரச்சாரம் செய்தவர் அந்த அம்மையார் இருக்கும் வரை பெரிய போராட்டம் செய்யாமல் பம்மியது உலகம் அறிந்தது..அதே வீரனை அதே அதிமுக என்ற கட்சி இப்பொழுது வாயில் உலக்கையை வைத்து குத்தும்போது வீரம் எங்கோ போனது..????

அசுரர்களிடம் குறியீடு முறை - ஆரியர்களிடம் எழுத்து முறையே கிடையாது

எழுதப்படிக்க தெரியாதவர்களுக்கு அடுத்தவர்களுக்கு ஒரு கருத்தை தெரியப்படுத்த பேச்சினால் மட்டுமே முடியும். எழுதப் படிக்க தெரிந்தவர்களுக்கு பேசாமல் எழுத்தினால் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள முடியும்.
தஜிகிஸ்தானில் இருந்து கைபர் போலன் கணவாயை கடந்து முதன் முதலில் ஆரியர்கள் அசுரர்களிடம் வியாபாரத்தொடர்பை ஏற்படுத்திய பொழுது அசுரர்களிடம் குறியீடு முறையிலான எழுத்து முறைகள் இருந்தன. ஆனால் ஆரியர்களிடம் எழுத்து முறையே கிடையாது. அதாவது அவர்களிடம் கல்வியறிவே இல்லை. ஆதாவது கி.மு 1800 வரை கூட ஆரியர்களுக்கு குரல் மூலமாக செய்திகளை கடத்த முடியுமே தவிர எழுத்து மூலமாக எதையும் உணர்த்த தெரியாது.அதற்கு பலகாலம் பிறகு கூட அவர்கள் எழுத படிக்க கற்றுக்கொள்ள சிரமப்பட்டனர்.
ஆக அரக்கர்கள் ஆரம்பம் முதலே கல்வியறிவுடன் இருந்தவர்கள்தான். நம்ம பிள்ளைங்களுக்கு எல்லாம் படிப்பு வராது என்று நினைத்தால் அந்த எண்ணத்தை கைவிடுங்கள்.
( வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகத்தில் இருந்து புரிந்து கொண்டது )


கமலின் வைணவ மூளை - நயவஞ்சகமான வார்த்தைகள் -ஆச்சரியம் இல்லை

கமலின் வைணவ மூளையில் இருந்து வெளிப்பட்ட இடஒதுக்கீடு எதிரான நயவஞ்சகமான வார்த்தைகளின் கோர்வையுடன் கூடிய பதிவை பார்த்தேன்...ஆச்சரியம் இல்லை...தன்னை இவ்வளவு சீக்கிரமாக அமபலப்படுத்தி கொண்டார் என்பதே எனக்கு ஆச்சரியம் தருகிறது.....
ஏழாம் அறிவு படத்தில் கமலின் மகள் இடஒதுக்கீடு எதிரான வசனம் பெரும் சர்ச்சையாக போனது..... பிற்பாடு அந்த படத்தின் இயக்குனர் முருகதாஸ் தன்னுடைய பேட்டியில் சுருதிஹாசன் அதை வசனத்தில் சேர்த்ததாக எங்கோ படித்த ஞாபகம்.
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி போட்டியில் சூர்யா முன்னிலையில் பாரதியார் கோயில் சம்பவம் மற்றும் பாடல்கள் பற்றி பாடம் எடுத்தார் தன் மகளுக்கும் சூர்யாவுக்கும்....ஆனால் சமத்துவம் மற்றும் பெண்ணியம் பேசிய அதே பாரதியை மறந்து விடுவார்...
இதில் இன்னொரு ஆச்சரியம் எதற்கு இதில் கேரளாவை மேற்கோள் காட்டினார் என்று தெரியவில்லை...கேரளா கல்வியில் முன்னிலையில் இருந்தாலும் சாதிய கட்டமைப்பில் விடுபடும் எண்ணத்தில் பலவருடங்கள் பின்தங்கி இருக்கிறது...சில மாதங்கள் முன் நீயா நானா விவாதத்தில் ஒரு கேரள நடிகை மேனன் என்று கேரள சாதிய பழக்கத்தை கரு பழனியப்பன் விவாதத்தில் கேள்விகளால் அவரை அமபலப்படுத்தினர்...இதில் தமிழகம் பெரியாரின் போராட்டத்தால் எப்போவோ முற்போக்கு மாநிலமாகி விட்டது....இன்னும் 50 களில் மற்றும் 60 வயதுகளில் இருக்கும் சாதி நாய்களை செருப்பால் அடித்தால் முழுமையாக மாறிவிடும்...
எழுத்தாளர் ஞாநி 1982 கமலுடன் பேட்டியில் , ஞாநி தன்னுடைய கடைசி வரியில் இவருக்கு இரண்டு முகங்கள் இருக்கிறது என்று எச்சரித்தார்...
இவரை நம்புவார்கள் அழிவது நிச்சயம்


மற்றும் சிலர்

மற்றும் சிலர்
-லதாமகன்
கள்ளிச்செடி வளர்ப்பவன், பக்கம் 33


சட்டை போடாமல்
தோள்துண்டை கக்கத்தில் வைத்து வரும்
மாயாண்டிக்கு

தொடாமல் சோறு போடு என்பாள் அம்மா

அவர் பையனுடன் விளையாட வேண்டாம் என்பார் அப்பா

மரியாதை குடுக்க தேவையில்லை
என்பார்கள் நண்பர்கள்

பெரியவங்க பேச்ச கேளுங்க சாமி
என்பார் மாயாண்டி 

இந்துக்கள் vs பட்டியல் சமூகத்தினர்

1) யாரெல்லாம் இந்துக்கள் என்று இந்து மத வேதம் கூறுகிறது?



    பிராமனர், ஷத்ரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என்ற நான்கு பிரிவுகளை ஒப்புக்கொண்டவர்கள் இந்துக்கள் என இந்து மத வேதம் கூறுகிறது.




2) இந்து மதத்தின் அடிப்படைத் தத்துவமான வர்ணாஷ்ரம தர்மா என்றால் என்ன?

      பிராமனர் - புரோகிதம் தொழிலை செய்பவர்.
   
      ஷத்ரியர் - போர் புரியும் தொழிலை செய்பவர்.

      வைசியர் - வானிபம் செய்பவர்.


      சூத்திரர் -  ஏவல் தொழில் செய்பவர்.


அதாவது மேல் உள்ள மூன்று வர்ணத்தார்கும் அடிமை தொழில் செய்பவர்.  மேல் உள்ள வர்ணத்தாரின் தேவையை பூர்த்தி செய்பவர்.



      இந்த வர்ணங்களில் இருக்கும் சந்ததிகள் அந்த வர்ணத்திற்குரிய தொழில்களை செய்ய வேண்டும்...

 வேறு வழியல்லையேல் தனக்கு கீழ் உள்ள வர்ணத்தாரின் வேலைகளை செய்யலாம் ஆனால் தனக்கு மேல் உள்ள வர்ணத்தாரின் வேலைகளை செய்யக்கூடாது.

 திருமணத்திற்கும் இதே முறைதான்... தன் முதல் மனைவி தன் வர்ணத்திலும் அடுத்தடுத்த மனைவிகள் தனக்கு கீழ் உள்ள வர்ணத்தை சேர்ந்த பெண்களை மணக்கலாம் ஆனால் தன் மேல் நிலையிலுள்ள வர்ணத்தை சேர்ந்த பெண்களை மணக்க கூடாது...




3) பட்டியல் சமூக மக்கள் எந்தப் பிரிவின் கீழ் வருகின்றனர்?


            இந்த கேடுகெட்ட வர்ணத்தை ஏற்காமல் புத்தரின் நெறிக்கொள்கையை பற்றி பிடித்தவர்கள்தான் இன்றைய பட்டியல் சமூகத்தினர் ... இவர்கள் இந்த இந்து மத வர்ணத்தை ஒப்புக்கொள்ள மறுத்தவர்கள்.



4) பட்டியலினத்தைச் சார்ந்த சாதிகளை(SC)  இந்தியா முழுவதிலும் எதனடிப்படையில் பட்டியலிட்டனர்?

               பட்டியல் இனம்  (SC) பத்து நெறிமுறைகளை கொண்டு பிரிக்கப்பட்டனர்...

அவையாவன ::


1) பிராமணர்கள் அனைவரிலும் உயர்ந்தவர்கள் என்பதை மறுத்தவர்கள்.

2) பிராமண குரு மற்றும் அங்கிகரிக்கப்பட்ட வேறு இந்து குருவிடமிருந்து மந்திர உபதேசம் பெறாதவர்கள்.

3) வேதங்களின் அதிகாரத்தை மறுப்பவர்கள்.

4) பெரிய இந்துக்கடவுளர்களை வழிபடாதவர்கள்.

5) பிராமனர்களுக்கு சேவை செய்ய மாட்டார்கள்.

6) பிராமண புரோகிதலர்களை வைத்து எந்த நிகழ்ச்சிகளையும் செய்யாதவர்கள்.

7) சாதாரண இந்துக் கோவில்களின் உள்ளே அனுமதிக்கப்படாதவர்கள்.

8) தீட்டு ஏற்படுத்துவதாக கூறப் படுபவர்கள்.

9) தங்களின் இறந்தவர்களை புதைப்பவர்கள்.

10) மாட்டிறைச்சி உண்பவர்கள்.

இந்த பத்து கோட்பாட்டின் அடிப்படையில் 1911 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது இவ்வாறு பட்டியலிடப்பட்டனர்.





5) இந்துக்களாக கருதப்பட்டிருந்தால் இந்தியா முழுமைக்கும்

 ( இங்கு ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்தக் காகாலத்தில் இந்தியா ஒரு நாடாக இல்லை. எண்ணிலடங்கா நாடுகளாக இருந்தது.)

 ஏன் பட்டியல் சமூக மக்கள் ஊருக்குள் இல்லாமல் தனியாக சேரியில் தங்கினார்கள்?

        மற்ற சாதி இந்துக்களால் ஒதுக்கப்பட்டதாலும்...
இவர்கள் அவர்களிடம் இருந்து ஒதுங்கியதாலும் சேரிகளில் தனிமை படுத்தப்பட்டனர்.