Monday, December 11, 2017

ஏன் மதம் மாறுறான்.. எப்புடி மாத்த முடியுது

இப்ப facebook'ல troll videos'க்கு அடுத்து அதிகமா பாக்க முடியிறது மதம் மாத்த வர கிறிஸ்தவ மிஷ்னரிகளை காவி வேஷ்டி கட்டியவர்கள் திருப்பி அனுப்புற videos தான்.. இது தான் இப்ப trending..
நேத்து ஒருபடி மேலே போய் ஒரு கிரிஸ்தவ ஜெப கூட்டத்தில் நுழைந்து நாற்காலிகளை வீசி எறிந்து பாதிரியார் மண்டை உடைக்கப்பட்டது.. இதை பல பக்தாக்கள் பெருமையா வேற share பண்ணிட்டு இருக்காங்க..
நாட்டில் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் அதைபத்தி எதுவுமே கண்டுக்காம எங்களுக்கு மதம் மட்டும் தான் ஒரே பிரச்சனைனு ஒரு கூட்டத்தை நம்ப வைத்து இத வச்சே எல்லாத்தையும் சமாளிக்கிறதுலாம் வேற லெவல் அரசியல் வித்தை. இதை செய்வதில் நம் பக்தாளை அடிச்சிக்க யாராலும் முடியாது.
சரி முதலில் ஏன் மதம் மாறுறான்.. எப்புடி மாத்த முடியுது.. ஒருத்தனை நீ கால்ல இருந்து பிறந்தவன் உனக்கு கோயிலுக்குள்ள வரவே உரிமை இல்லன்னு மறுக்கப்படும்போது அவன் மாறுவதில் என்ன தவறு இருக்கு?
தாழ்டப்பட்டவனை பல போராட்டங்கள், எதிர்ப்புகளை மீறி பல இடங்களில் ஆலய நுழைவு போராட்டம்னு செஞ்சி தான் கோயிலுக்கு உள்ளயே கூட்டி போக முடிஞ்சிருக்குன்னா அப்ப அடிப்படையில் அவனை உன் மதம் எங்கே வைத்திருந்திருக்கறது?
கூலுக்கும் ரொட்டிக்கும் ஆசைப்பட்டு மதம் மாறிய பாவாடை, வாலுக்கு பயந்து மண்டி போட்டு மதம் மாறிய துலுக்கன்னு மதம் மாறியவனை பார்த்து நீங்க பேசுவது பெருமையான விஷயம் இல்ல, உங்களுக்கு வெட்கக்கேடு, ஏன்ன்னா அவனை அந்த அளவிற்கு வறுமையிலும் பாதுகாப்பில்லாமலும் வச்சிருந்தது உங்க நிலப்பிரபுத்துவ ஜாதிய கட்டமைப்பு தான.. அந்த நிமிடத்தில் அவன் குடும்பத்திற்காக எங்கே பாதுகாப்பும் பசிக்கு உணவும் கிடைக்குதோ அங்கே போய் தான ஆகணும்..
நீங்க குலக்கல்வி முறைனு இவன் மட்டும் தான் படிக்கணும், இவன் பானை செய்ய போனும், இவன் பீ அள்ள போனும்னு சொல்லுவீங்க.. அவனும் அதை கேட்டுட்டு அது தான் எசமான் சரினு கும்பிடு போட்டு அக்குல்ள துண்ட இடுகிக்கிட்டு பொத்திட்டு இருக்கணும்.. எல்லாரும் ஏகலைவனா மாறி சாத்திட்டு போனும், அர்ஜுனர்கள் மட்டும் வாழனும்.. மீறி அவன் வாய்ப்பை அவன் இன்னொரு மதத்தை வைத்து தேடுனா அவன் உங்களுக்கு துரோகி.
இதுல உங்களுக்குள்லயே ஒரு க்ரூப் சாதி தான் இந்து மதத்தின் ஆணி வேர்னு ஒரு பெரிய சைஸ் அல்வாவ கிண்டி உங்களுக்கு குடுத்துக்குட்டே இருகாணுங்க.. பக்தாக்களே இவனுங்க தான் உங்க பக்கம் இருக்க எட்டப்பன்ஸ்.. இப்புடி சாதியை தூக்கி புடிச்சி
மதம் மாற்றத்துக்கு எதிரா பொங்குறவன் எல்லாம் பெரும்பாலும் OC, BC, MbC category ஆ தான் இருக்காங்க, அது ஏன்னா எனக்கு கீழ இருக்கவன நீ மதம் மாத்தி கூட்டி போயிட்டா அப்புறம் என் மதத்தில் நா யார தாழ்த்தி என்ன பெரிய ஆளா காட்டிக்கிறதுங்கிற பதட்டத்தின் வெளிபாடாவே தான் இருக்கு..
உண்மையில் இந்த சாதி கொண்டைகளால் தான் மற்றவர்களால் ஈஸியா மதம் மாத்த முடியுது.. இவங்க சாதியையும் வர்ணாசிரமத்தையும் தூக்கி புடிக்க புடிக்க அங்கே ஏற்படும் ஏற்றத்தாழ்வை வைத்து தாழ்த்தப்பட்டவனை ஈஸியா மதம் மாத்த முடியுது..
சாதியை ஸ்ட்ராங்கா புடிக்கிரவன மதம் மாத்தவே முடியாதுன்னா க்ரிஸ்ட்டியன் நாடார், வன்னிய கிறிஸ்டியன், பள்ளர் கிரிஸ்டியன்லாம் எங்க இருந்து வந்தாங்க?
ஒரு தாழ்த்தப்பட்டவன் மதம் மாறும்போது, மாத்தும்போது வர்ற கோவம், அவன் கடைசி வரைக்கும் இந்துவாவே இருக்கணும்னு நினைக்கும் உங்க எண்ணம்லாம்,
ஊரில் கோயில் தேர் இழுக்கும்போது எங்க தேரை ஒண்ணா சேந்து நீங்க இழுக்குர அளவுக்கு வந்துருச்சானு அவர்களை வெட்டும்போது பலர் செத்தாங்களே, அப்ப அவன் இந்து இல்லயா?
ஊர் குளத்துல தண்ணி எடுக்க கூடாதுனு சொன்னப்ப அவன் இந்து இல்லையா?
அவங்க பிணம் ஊர் தெரு வழியா வர கூடாதுனு மரிச்சு ஊருக்கு வெளிய அனுப்புனப்ப, சாவிலும் சாதி பார்த்து தனி சுடுகாடுங்கிற அவலம் வரைக்கும் எடுத்துட்டு வந்து விட்ருக்கமே.. அப்ப அவன் இந்து இல்லையா?
நெற்றியில் விபூதியிட்ட
கார்ப்பரேஷன் தொழிலாளி தண்ணி கேக்கும்போது சொம்புல குடுக்காம கை படாம use & throw பாட்டிலில் குடுக்கும்போதும், மீறி அவங்க கை உன் மேல பட்டா உடனே கையை சோப்பு போட்டு கழுவிட்டு வீட்டுக்குள்ள போகும்போதும் அவன் இந்து இல்லயா?
போன வருஷம், எங்க தெரு பிள்ளையாரை விட உங்க தெரு பிள்ளையார் பெருசா இருக்கு, ப** பயலுகளுக்கு பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடுகிற அளவுக்கு திமிர் வந்துருச்சானு தாக்குதல் நடத்தி உடைக்கும்போது அவன் இந்து இல்லயா?
ஒரு தாழ்த்தப்பட்டவனை உன் வீட்டு பெண் இழத்துட்டு ஓடுனா ஆணவ கொலை செய்வது தப்பே இல்ல.. அவள் கர்ப்பமா இருந்தாலும் கருவருங்கள்னு பேசுனப்ப கை தட்டுனீங்களே அப்ப அவன் இந்து இல்லயா?
ஒவ்வொரு கலவரத்தின் போதும் வீட்டையும் வாகனங்களையும் குறிவைத்து கொழுத்தி நீங்கல்லாம் படிச்சி வீடும், காரும் வாங்கவும் தான்டா திமிர் வந்துருச்சுனு பொருளாதார சேதம் ஏற்படும்போது அவன் இந்து இல்லயா?
ஒரு சாதி கட்சி தலைவரின் தலைமையில் 2012'இல் 49 சாதி சங்கத்தை இணைத்து "தலித் அல்லாதோர் கூட்டமைப்பு"க்கு முன்னோட்டம் போட்டீங்களே அப்ப அவன் இந்து இல்லயா?
இவ்ளோ அநீதிக்கு அவனை ஏண்டா தள்ளுறீங்க அவன் சக இந்துனு உங்களில் மதம் மாற்றத்தை எதிர்க்கும் எத்தனை பேர் அவனுக்காக அப்ப நின்னீ்ங்க?
நான் மேலே சொன்ன பட்டியல் மிக குறைவு, இப்புடி எல்லாவற்றிலும் ஒருசாராரை ஒதுக்கி கீழே தள்ளி அவனை அவமானப்படுத்தும்போது இன்னொரு மதத்திடம் அவன் போக தான் செய்வான்.. இது தான் இயல்பு. எல்லாராலும் இங்கே பெரியாரையும் , சே,வையும், கார்ல் மார்க்ஸையும் இறுக்கி பிடிக்க முடியாது.. எளிய மனிதர்களுக்கு கடவுள் தேவைப்படுகிறார்.. உங்கள் கடவுள் அவனை வேண்டாம்னு சொல்லும்போது அவன் இன்னொரு கடவுளை நோக்கி போக தான் செய்வான்..
ஏன் மற்ற மதங்களில் சாதியே இல்லயா, மதம் மாறியவுடன் சாதிய ஏற்றத்தாழ்வு ஒழிஞ்சிருமா, அங்கே உட்பிரிவுகளே இல்லயானு உங்களோட template அரைகுறை கேள்வியை இங்கே கேட்கலாம்.. மனிதன் இருக்க எல்லா இடங்களிலும் உட்பிரிவுகளும் ஏற்றதாழ்வுகளும் இருந்துக்குட்டே தான் இருக்கு.. ஆனா அப்புடியே மற்ற மதங்களில் இருந்தாலும் இந்து மதம் அளவிற்கு இல்லை என்பதே நிதர்சனம். ஏன்னா நீங்களே சொல்ற மாறி இது நால்வர்ணங்களால் கட்டப்பட்டது.. அப்புடியே மற்ற மதத்தில் இருந்தாலும் அது அவன் பிரச்சனை, ஒரு வீட்டில் நிறைய வலியும் அவமானமும் இருந்தா அந்த வீட்டை காலி செய்வது அவன் கடமை, அது அவன் நிம்மதி, சுயமரியாதை சம்பந்தபட்ட விஷயம்.. இன்னொரு வீடு எப்புடி இருக்கும்ங்கிறது வேறு விஷயம்.
தாழ்த்தப்பட்ட மக்களை கிறிஸ்தவர்கள் கொஞ்சம் சத்தம் போட்டு அவர்கள் பக்கம் ஈர்க்குறாங்கன்னா சத்தமே இல்லாம புத்திஸ்ட்டுகள் பெரும் எண்ணிக்கையில் மக்களை அவங்க பக்கம் இழுத்துகுட்டே இருக்காங்க.. உங்க சாதிய அழுக்கால mass converstions நடந்துகுட்டே தான் இருக்கு, இருக்கும்.. நீங்க மாறும்வரை..
எங்க அவன் மிச்சம் இருக்கவனையும் மதம் மாத்திருவானோங்கிற
பதட்டம் உங்களை ஆழமா பாதிக்கவும் தான் இதுவரை நாடார் ஒற்றுமை, வன்னியர் ஒற்றுமை, தேவர் ஒற்றுமைனு கேட்ட இந்த ஊரில் "இந்து ஒற்றுமை"ங்கிற வார்த்தையே வருது.. இவ்வளவு நாள் நீ வேற ஆளு, தள்ளி நில்லுனு சொன்னவன் கிட்ட ஒரு பேச்சுக்காச்சும் நாமெல்லாம் ஒரே மதம், இந்து மதம்னு சொல்லவச்சி, உங்களுக்குள்ள இந்த ஒற்றுமைய எடுத்துட்டு வந்த conversion நல்லது தான..
எல்லா மதத்திற்கும் அதற்கான updation தேவைப்படுகிறது.. இனியும் உங்களை நீங்க அப்டேட் பண்ணிக்காம நால் வர்ணம், மனு, வர்ணாசிரமம்னு பழைய பஞ்சாங்கமாவே இருந்தீங்கன்னா யார் நினைச்சாலும் மதம் மாற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது.. இந்த விஷயங்களை எல்லாம் நீங்களே சரி செஞ்சுகிட்டா இன்னொருவனை திட்ட வேண்டிய அவசியம் வராது.. முதலில் உங்க
முதுகுல இருக்க அழுக்கை தொடைங்க.. அதுக்கப்புறம் தொடைக்க வர்றவன திட்டலாம்..

No comments: