Friday, January 26, 2018

தமிழ் ஒரு நீசபாஷை; தமிழில் பேசியபின் ஸ்நானம் செய்க!

தமிழ் ஒரு நீசபாஷை; தமிழில் பேசியபின் ஸ்நானம் செய்க! -- காஞ்சி சங்கர மடத்தின் தமிழின் மீதான துவேஷம்..
அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச் சாரியார் எழுதிய ``இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற நூலிலிருந்து...
காஞ்சி சங்கராச்சாரியார் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதியும் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரும் திருவிடை மருதூர் சத்திரத்தில் உரையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
நாங்கள் பேசிக் கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர்களுக்குக்கூட நாங்கள் பேசிக் கொள்வது புரியாது.
``ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன?’’ என்று மகா பெரியவர் நகர்ந்தபிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்.
``உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒரு நாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்? புரிந்து நடந்து கொள்..’ என்றேன்.
சங்கராச்சாரியார் தமிழைப் பேசினால். அவர் தீட்டுப்பட்டு விடுவார்; காரணம் தமிழ் நீஷப்பாஷை. தமிழை நீஷப்பாஷையான பிராமணோத்தமர் பேசினால்., அவர் நாக்கினை நீஷப்பாஷை தொட்டு விட்டால், பிரம்மாவின் நெற்றியிலே பிறந்தவர் தீட்டுப்பட்டு விட மாட்டாரா?
தமிழைப் பற்றியும் தமிழர்களைப்பற்றியும் பார்ப்பனர்களின் நிலை என்ன என்பதைத் தெரிந்தவர்களுக்கு இது கண்டிப்பாக ஆச்சரியத்தைக் கொடுக்காது.
கோயில் கருவறைக்குள் தமிழன் அர்ச்சகன் ஆனால் சாமி தீட்டாகிவிடும்; தமிழில் வழிபட்டாலும் தீட்டாகி விடும் என்பதுதானே அவர்களின் நிலை.
இந்த உரிமைகளுக்காக நாம் குரல் கொடுக்கும் பொழுதெல்லாம் சங்கராச்சாரியார்கள் பார்ப்பனர்கள் எப்படியெல்லாம் நடந்து கொண்டு வருகிறார்கள் என்பதை நாளும் அனுபவித்துக் கொண்டுதானே வருகிறோம்.
ஆட்சி மொழிக் காவலர் கி.இராமலிங்கனார் அவர்களை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது சைவப் பழமாகக் காட்சி அளிக்கக் கூடியவர்கள்! ஊராட்சி, நகராட்சி, நகரியம், ஒன்றியம் என்கிற அழகிய சொற்களைத் தமிழுக்குத் தந்த பெருமகன் அவர்.
அவர் பேட்டியின் ஒரு பகுதி இதோ:
கேள்வி: சங்கராச்சாரியாரைத் தாங்கள் சந்தித்தது பற்றி ஒரு செய்தி சொல்லப்படுகிறதே. அதன் முழுவிபரம் என்ன என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
கீ. இரா: நான் காஞ்சிபுரத்திலே ‘ரேஷனிங்’ ஆபீசராக இருந்தேன். சங்கராச்சாரி மடத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது. அவர்கள் எப்படியும் அரிசி வாங்கி செலவு செய்து கொள்ளலாம் என்றார்கள். நான் சொன்னேன் ‘அய்யா’ இது நியாயமல்ல. எல்லாருக்கும் ஒரு சட்டம்தான். உங்க மடத்துல உள்ள அத்தனைப்பேருடைய கணக்கைக் கொடுங்க. எத்தனை பேர் இருந்தாலும், அத்தனைபேருக் கும் உண்டு என்றேன். யானை இருக்கு குதிரை இருக்கு என்றார்கள். அதற்கும் உண்டு என்றேன். எல்லாம் சொல்லி யும் அவர்கள் கேட்கவில்லை. வெளியிலே போய்ட்டா... கிராமத்துக்குப்போயிட்டடா நாம் எப்படியும் இருந்து கொள் ளலாம். என்று நினைத்து கிராமத்துக்குப் புறப்படத்தயாராக யிருந்தார்கள். அதற்குமுன் சங்கராச்சாரியார் என்னைப் பார்க்கணும் என்று சொன்னாராம். நரசிம்மய்யர் என்பவர் காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலிலே நிர்வாக அதிகாரியாக இருந்தார். அவர் என்னை வந்து அழைத்தார்.
நான் இந்த வேஷம் கட்டி இருக்கிறேன்... கால் சட்டை மேல் சட்டையோட.... இதோடு அவரை நான் எப்படி பார்க்க முடியும் என்று கேட்டேன். அதெல்லாம் வரலாம் என்றார். சதாரணமாக அவர்களைப் பார்க்கும் போது மேல சட்டை யோடு போகமுடியாது...
கேள்வி: காரியம் ஆகணும் என்கிற பொழுது அவர்கள் எதற்கும் தயாரானவர்களாயிற்றே...
கீ.இரா. ஆமாம்..... ஆமாம்...! சரி... நான் வருகிறேன் என்ற ஒப்புக்கொண்டு போனேன். அவரே வண்டி கொண்டு வந்திருந்தார். அதில் தான் போனேன். ஆச்சாரியார் வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்தார். அங்கு சென்றேன். இவர் அந்த பக்கம் பிரகாரத்தில் வந்துகிட்டிருக்கிறார்.... அப்பொழுது இந்த நரசிம்மய்யர் என்னைச்சீண்டுகிறார் .... நமஸ்காரம் பண்ணுங்க... நகமஸ்காரம் பண்ணுங்க என்கிறார். விழுந்து கும்பிட சொல்கிறார். நான் ஒன்றும் செய்யவில்லை.
பிரகாரத்தில் ஒரு பக்கத்தில் சுவர் ஓரமாக சங்கராச்சாரியார் நின்று கொண்டார். வலக்கை பக்கமாக நானும் நரசிம்மய்யரும் நின்று கொண்டோம். இடதுகை பக்கம் ஒரு சமஸ்கிருத ஆசிரியர் நின்றார். இவர் கேள்வி கேட்கிறார்: ரேஷனிங் பற்றி அது என்ன இது என்ன என்று கேட்கிறார். கேள்வி கேட்கிறதை சமஸ்கிருதத்தில் கேட்கிறார். அதை சமஸ்கிருத ஆசிரியர் தமிழில் சொல்கிறார் எனக்கு. தமிழிலே பதில் சொல்கிறேன் நான்.
பேச்சு முடிந்து வெளியே வந்தோம். வெளியே வரும் பொழுது அந்த நரசிம்ம அய்யரைக்கேட்டேன்: என்ன அய்யா, அவர்தான் தமிழிலே சொன்னா தெரிஞ்சிக் கிறாரே... பின்னே ஏன் அவர் சமஸ்கிருதத்தில் பேசுகிறார். என்று கேட்டேன் அதற்குச் சொன்னார்..... இதிலே பாருங்கோ.... இந்த பன்னிரெண்டரை மணிக்கெல்லாம் சந்திர மௌலீஸ்வரர் பூஜை இருக்கில்லையா, அதுவரைக்கிலும் எந்த நீசப் பாஷையிலும் பேச மாட்டார் என்றார். எனக்கோ அறைந்துவிடலாமான்னு இருந்தது.
அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாவின் கூற்றும் ஆட்சி மொழிக்காவலர் கீ. இராமலிங்கனார் அவர்களின் தகவலும் ஒத்துப் போவதிலிருந்து தமிழ்மீது சங்கராச்சாரியாருக்கு இருந்த காழ்ப்பு - வெறுப்பு அவர்கள் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் ‘துவேஷம்’ எந்த அளவுக்கு இருந்தது என்பது கனமாகவே விளங்கும்.

தமிழ் தாய் வாழ்த்து & மனோன்மணியம் சுந்தரனார்... -- சில தகவல்கள்

தமிழ் தாய் வாழ்த்து & மனோன்மணியம் சுந்தரனார்... -- சில தகவல்கள்..
நீராரும் கடலுடுத்த என துவங்கும் தமிழ் தாய் வாழ்த்தை எழுதியவர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, அவர் வாழ்ந்த காலக்கட்டம் 1855 - 1897.
நாடக நூலான மனோன்மணீயம் இவரால் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது, அந்த நூலின் வணக்கப் பாடல்தான், "நீராரும் கடலுடுத்த.." என்னும் பாடல்..
"ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
- அதாவது, "ஆரியம் போல உலகவழக்கழிந்து சிதையவில்லை.. " என்ற வரிகள் தள்ளப்பட்டு தமிழ்த்தாயைப் புகழும் வகையில் அமைந்த வரிகள் மட்டும் ஏற்கப்பட்டு, 1970ஆம் ஆண்டு கலைஞர் திரு.கருணாநிதியின் தலைமையின் கீழ் செயற்பட்ட தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.
அமரிக்காவில் சமய மாநாட்டில் கலந்துகொண்டபின், விவேகானந்தர் இங்கே திருவனந்தபுரத்தில் இந்து மறுமலர்ச்சியைப் பற்றிப் பேசியபோது, அவருடைய முகத்துக்கு நேரே "நாங்கள் இந்துக்கள் இல்லை" என்று சொன்னவர் தமிழ்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள்... "நீங்கள் யார்" என்று விவேகானந்தர் கேட்டபோது, "தமிழர்களுக்குத் தனிச் சமயங்கள் உண்டு அந்தச் சமயங்களுக்குத் தனித் தத்துவங்கள் உண்டு' என்றார் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை... இவைகள் நடந்தது 1890களில்.. அப்போது திராவிட இயக்கங்களோ, பெரியாரின் பகுத்தறிவு பிரச்சாரங்களோ இல்லை..

பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார்

//பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார் - பிஜேபி RSS அடிவருடிகள் //
ஆமாம், அந்த காலகட்டத்தில் பழைமையான மொழி, நவீன காலத்துக்கு ஏற்ப்ப மாற்றமடையாத மொழி என்ற அர்த்தத்தில் பெரியார் சொன்னார்..
அவர் சொன்னது, வெறும் தமிழ் மொழி பற்று, மொழியில் புலமை மட்டும்மே, தமிழினத்தை உயர்த்திவிடாது.. ஆங்கில அறிவு & கல்வி அவசியம், அப்போது தான், தமிழர் வாழ்வு ஏற்றமடையும்.. இன்றைய நிலையை பார்த்தால், பெரியாரின் தொலைநோக்கு புரிகிறது.. தமிழ்நாட்டினர் பிற மாநிலத்தவர்களைவிட கூடுதலாக பெற்றுள்ள ஆங்கில மொழி அறிவால்தான், கணிணி & தொழில்நுட்ப வேலைகளி்ல் கோலோச்சுகிறார்கள்..
சரி, அந்த பொரியார், திருக்குறள் மாநாடெல்லாம் நடத்தியிருக்கிறார்..
பொங்கல் பண்டிகையை தமிழரின் கலாசார பண்பாட்டு விழாவாக அனைவரும் கொண்டாடவேண்டும் என்று வலியுறுத்தியவர் பெரியார்...
திருக்குறள் மாநாட்டை முதன்முதலில் நடத்தி, பார்ப்பனர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்த குறளை, அனைவரும் அறியசெய்தவர் பெரியார்...
தமிழ் எழுத்து சீர்திருத்தம் செய்து, இன்றைய காலத்துக்கு ஏற்றமுறையில் நவீனப்படுதியவர் பெரியார்... நமஸ்காரம் போய் வணக்கம் வந்த்து பொரியாரின் திராவிட சுயமரியாதை இயக்கத்தால்.. இதுபோன்று தமிழில் கலந்து, கெடுத்திருந்த பல சமஸ்கிருத சொற்களுக்கு பதிலாக, தமிழ் சொற்களை பழக்கத்திற்கு கொண்டுவந்தது, பெரியாரின் திராவிட சுயமரியாதை இயக்கம்..
அனைத்துக்கும் மேலாக தமிழர்களுக்கு சுயமரியாதையை ஊட்டியவர், தமிழ் மொழியை அழிக்கவந்த ஹிந்தி & சம்ஸ்கிருத ஆதிக்கங்களை எதிர்த்து போர்முழக்கம் செய்தவர், மூடபழக்கவழக்கங்களை ஒழிக்க பாடுபட்டவர், பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் முன்னேற்றம் கொடுக்கும் இடஒதுக்கீட்டை சட்டபூர்வமாக்க காரணமானவர் தந்தை பெரியார்.....
ஆனால், உங்க பெரியவா காஞ்சி சங்கராச்சாரி தீய குறளை ஓதக் கூடாது என்ற பொருளில் தீக்குறளை ஓத மாட்டோம் என்கிறார்... நீச பாஷை என தமிழை இழிவுபடுத்துகிறார்.. தமிழ் கடவுள் முருகனுக்கு கூட தமிழில் அர்ச்சனை செய்தால் புரியாது, சமஸ்கிருத அர்ச்சனைதான் தேவை என்கிறார்..

டுபாகூரான காஞ்சி சங்கர மடமும் தமிழும்...

வடக்கே பத்ரிநாத், மேற்கே துவாரகா, கிழக்கே பூரி, தெற்கே சிருங்கேரி இவை நான்கு மட்டுமே சங்கரர் ஏற்படுத்திய அத்வைத மடங்கள் என்பர். இந்நான்கு சங்கராச்சாரிகளும் காஞ்சியிலுள்ள மடத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மேற்கண்ட நான்கு மடங்களும் ஆதிசங்கரரால் நிறுவபட்டதாக 1972இல் ஒரு தீர்ப்பில் உச்சநீதி மன்றமும் உறுதி செய்துள்ளது. இத்தீர்ப்பில் காஞ்சி மடம் பற்றி ஏதும் கூறப்படவில்லை.
உண்மையில் சிருங்கேரி மடத்துனான முரண்பாட்டில் உருவானதே காஞ்சிமடம். சிருங்கேரியில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற பார்ப்பனர்களை சிருங்கேரி சங்கராச்சாரியை தரிசிக்க அனுமதிக்கவில்லை. இவர்களுடைய கோத்ர அனுஷ்டானங்களின்படியும் பின்பற்றும் சாஸ்த்திர சம்பிரதாயங்களின்படியும் இவர்கள் தோஷமுடையவர்களாக இருப்பதாகவும் அம்மடத்தின் வைதீக எல்லைக்கு வெளியில் இருப்பதாகவும் கூறி அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதனால் கோபமுற்ற இவர்கள் சங்கமேஸ்வரம் என்ற இடத்தில் ஒரு புதிய மடத்தை உருவாக்குகிறார்கள். பிறகு இதற்கொரு கிளையை காஞ்சியில் உருவாக்குகிறார்கள். இதற்கிடையில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களின் ஆதரவு கிடைத்ததால் கும்பகோணத்தில் மடத்தை அமைக்கிறார்கள்.
சென்னை முதன்மையான நகராக உருவெடுத்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் பூரி சங்கராச்சாரியாரின் செல்வாக்கு சென்னையில் உயரத் தொடங்கியது. இதனால் தம் எல்லைக்குள் அவருடைய செல்வாக்கு வளர்வதை விரும்பாது அதன் அருகேயுள்ள காஞ்சிபுரத்துக்கு மடம் மாற்றப்பட்டது. ஆனாலும் இன்றளவிலும் காஞ்சி மடத்தை மற்ற சங்கராச்சாரிகள் ஒப்புக்கொள்வதில்லை. இப்போதே அப்படி என்றால் அக்காலத்தில் எப்படி இருந்திருக்கும்? எனவே காஞ்சி மடம் ஆதிசங்கரர் ஏற்படுத்திய மடம்தான் என்பதை நிறுவுவதற்கு துணிந்தனர். பல மோசடியான சான்றுகளை உருவாக்கினர். இம்மோசடிப் பற்றி 1977இல் வெளிவந்த ‘அனைத்திந்திய பகவத்பாத சிஷ்யர்கள் சபை’-மதுரை வெளியிட்ட ‘தஷிணாம் நாய பீடம் சிருங்கேரியா? காஞ்சியா?’ என்ற நூல் விரிவாக பேசுகிறது. உருவாக்கப்பட்ட செப்பேட்டு ஆதாரங்கள், 1586இல் இறந்துபோனவர் 1719இல் எழுதிய ஸ்ரீமத் ராமாயண கிருஷ்ண தர்மாசுரம் என்கிற வியாக்கியான நூல் பற்றிய மோசடிகளை எல்லாம் விரிவாக பேசி இந்நூல் அச்சான்றுகளை அம்பலப்படுத்துகிறது. நாம் அதற்குள் போக வேண்டாம்.
செய்தி என்னவென்றால் மற்ற நான்கு மடங்களுக்கும் ஆதிசங்கரர் சொல்லிய சமஸ்கிருத சுலோகங்கள் சான்றுகளாக இருக்கின்றன. ஆனால் இந்த தேவமொழி காஞ்சி மடத்தை கைவிட்டுவிட்டது. இவ்விடத்தில் தீட்டு மொழியான தமிழ்தான் உதவி செய்தது. இறுதியில் இவர்கள் சான்றுகளாக காட்ட கிடைத்தது என்னவோ வெறும் மூன்று தமிழ் பாடல்கள்தான். இம்மூன்று பாசுரங்களும் ‘பக்த மான்மியம்’ என்ற நூலில் இருந்து பெறப்பட்டது. இதில் ‘ஆச்சார்யாள் ஜம்புகேசுவரத்தில் தாடங்க பிரதிஷ்டை பண்ணியதையும், காஞ்சிபுரம் வந்து ஏகாம்பநாதரை தரிசனம் செய்து காமாட்சி ஆலயத்தில் தரிசனம், காமகோடி யந்திர ஸ்தாபனம் செய்து’ என்று விளக்குகிறது. (இதையும் மற்ற மடத்துக்காரர்கள் ஏற்கவில்லை என்பது தனிச்செய்தி).
ஆக தமிழ் தந்த சான்றில்தான் இன்று வரை இவர்கள் பிழைப்பு ஓடுகிறது. இதற்கு மட்டும் இவர்களுக்கு தமிழ் தேவையாம். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து தேவையில்லையாம்.
உதவிய நூல்கள்:
1) (காஞ்சி) சங்கராச்சாரியார் யார்? – ஓர் ஆய்வு – கி. வீரமணி
2) இந்துமதம் எங்கேப் போகிறது? – அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர்

Thursday, January 25, 2018

நம் உணவு... நம் உரிமை

வெஜிட்டேரியன் என்று ஜீவகாருண்யத்தால்
( ????)பெருமிதமாய் உணரும் நண்பர்களை ஒரே ஒரு விஷயம் செய்யக் கேட்கிறேன்.
மாடுகள் பற்றி விசாரியுங்கள்.
உங்கள் அம்மா,அப்பா தாத்தா,பாட்டிகள் மிகுந்த வயதானவர்கள், தற்போது மாடு வளர்ப்பவர்கள், மாடுகளை மொத்தமாக பாலுக்கு வளர்ப்பவர்களிடம் அந்த மாடுகள் என்னவாகின்றன என்று கேளுங்கள்.
”அத அதுகப்புறம் கொடுத்திருவோம். வித்திருவோம்” என்று சொல்பவர்களை கிடுக்கிப்பிடியாய் பிடித்து “யாருக்குக் கொடுப்பீர்கள். எதற்கு கொடுப்பீர்கள்” என்று கேளுங்கள்.
கொஞ்சம் வசதிக்குறைவான வேலைதான்.
ஆனால் இதைச் செய்யுங்கள்.
பருப்பும் நெய்யும் கொள்ளை விலை விற்கும் போது மிக மலிவாக கிடைக்கும் மிக அருமையான ஒரு புரத உணவை இப்படி மொக்கைக் காரணங்களால் ஒதுக்கித் தள்ளுவது இந்தியாவுக்கு பின்னடைவையே தரும்.
இந்தியாவின் ஜனத்தொகை, இந்தியாவின் உணவு தேவை, இந்தியாவின் குழந்தைகளும் கர்பிணிகளும் அனுபவிக்கும் புரதக் குறைவினால் வரும் நோய்கள் இது பற்றியெல்லாம் கொஞ்சம் படியுங்கள்.
1970 யில் உலக மக்கள் தொகை எவ்வளவு இருந்தோ அதிலிருந்து இப்போது இருமடங்காகி இருக்கிறது. அதாவது 100 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
இந்தியாவின் 1970 மக்கள்தொகை 55 கோடி. இப்போதைய மக்கள் தொகை 133 கோடி.
(133/55 x 100) -100 = 141
அதாவது உலக மக்கள்தொகை இருமடங்காகி இருக்கும் போது, இந்தியாவின் மக்கள்தொகை மட்டும் இரண்டரை மடங்காகி இருக்கிறது.
நமக்கு எவ்வளவு புரதம் தேவையாயிருக்கும். இதையெல்லாம் உணராமல் மேலோட்டமாக சிந்தித்துக் கொண்டிருப்பதற்காக நாம் பட்டம் எல்லாம் பெற்றோம்.
சாதரண உணவுச்சங்கிலி விஷயத்தை மிகுந்த காம்பிளிகேட்டாக புரிந்து கொண்டு கவனம் செலுத்த எவ்வளவோ விஷயங்கள் இருக்கும் போது ஒருவன் உணவு உரிமையில் தலையிட்டுக் கொண்டு, அசைவம் சாப்பிடுபவன் மனதில் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டு
எப்போது திருந்தப் போகிறோம் நண்பர்களே.
புனிதத்துக்கும் சைவத்துக்கும் சம்ந்தமில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இந்த வேலையை அசைவம் சாப்பிடுவர்கள்தாம் ஆரம்பித்து வைக்கிறார்கள். வெள்ளி செவ்வாய் சனி அசைவம் சாப்பிடுவதில்லை. கோவிலுக்கு போவதானால் அசைவம் சாப்பிடுவதில்லை. இதிலிருந்து அவர்களே அசைவம் என்பதை புனிதமில்லாத பொருளாக கட்டமைக்கிறார்கள். அங்கிருந்து வரும் ஆழ்மன உணர்வுதான் இறுதி வரை ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியை அடையச் செய்கிறது.
-அசைவத்துக்கும் இறைவழிபாட்டுக்கும் சம்பந்தமில்லை
- அசைவத்துக்கும் புனிதத்துக்கும் சம்பந்தமில்லை.
-அசைவத்துக்கும் ஆன்மிகத்துக்கும் உணர்வுக்கும் சம்ந்தமில்லை
-அசைவத்துக்கும் உடல்நலமின்மைக்கும் சம்ந்தமில்லை.
- பிராய்லர் கோழியில் ஸ்டீராய்ட் எல்லாம் இல்லை. ஸ்டீராய் போட்டு வளர்த்தால் ஒரு கோழி ஆயிரம் ரூபாய்க்கும் மேலேதான் விற்க வேண்டும்.
- குறைவான உடல் உழைப்பை கொண்டவர்கள் அசைவம் சாப்பிடத் தேவையில்லை என்ற கருத்து தவறானது.
இதையெல்லாம் புரிந்துக்கொள்ளுங்கள்.
இன்றிலிருந்து வெள்ளி செவ்வாய் சனி போன்ற கிழமைகளில் சைவம் என்பதை முதலில் கட் செய்யுங்கள். முட்டையாவது சாப்பிட்டு அந்த சைவ புனித கோட்பாடுகளை அறுத்துவிடுங்கள்.
என் மகளை அப்படித்தான் நான் வளர்த்து வருகிறேன். அவளுக்கு வெள்ளி சனி செவ்வாய் தெரியாது.
நினைத்துப் பாருங்கள். உயிர்தான் உணவாக முடியும். உயிரிலிருந்து வராததை Anything Inorganic ஆன பொருளை உணவாக கொள்ள முடியுமா? உப்பு ஒரு Inorganic பொருள். அதை சுவைக்குப் போட முடியுமேதவிர உணவாக கொள்ள முடியாது.
உங்கள் தட்டில் விழும் எதற்கும் ஒரு உயிர் உண்டு.
இளைஞர்களே உங்கள் அம்மா அப்பா குருநாதர்கள் அனைவரும் மரமண்டைகள். அவர்களைத் திருத்த முடியாது.
ஆனால் நீங்கள் மாற்றம் கொண்டு வரலாம். கொஞ்சம் யோசித்தால் போதும்.
நம் உணவு... நம் உரிமை

கோவில் என்பது பார்ப்பனர்களால் கட்டமைக்கப்பட்டது. அவன் தான் அசைவம் சாப்பிட்டால் கோவிலுக்கு வராதே என்றும் பூனூல் போட்டிருக்கும் கடவுளுக்கு உகந்ததல்ல என்ற கட்டுக்கதையை கட்டவிழ்த்து விட்டான். 

கடவுள் நம்பிக்கை கொண்ட நம் முன்னோர்கள் கூட்டம் உண்மை என்று நம்பி முருக பக்தர்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் சாப்பிடுவதை நிறுத்தி கொண்டார்கள்.

இவர்களுடைய உண்மையான தெய்வங்களான ஐயனார் முனியப்ப சாமிகளுக்கு கிடா சேவல் பன்றிகளை பலியிட்டு அங்கேயே சமைத்து உண்டுவிட்டு வந்த தமிழன் பார்ப்பனன் பேச்சை கேட்டு இன்று ஞாயிற்று கிழமைகளில் கூட பெருமாளுக்கு சாப்பிடாமல் வாழும் வாழ்வியல் முறைக்கு சென்று விட்டான்.

Monday, January 22, 2018

ஆண்டாளைப் பற்றிய சரித்திர க் குறிப்புகள்

ஆண்டாளைப் பற்றிய சரித்திர க் குறிப்புகள் மிகச்சிலவே. குரு பரம்பரை அவர், கலியுகத்தின் ஒரு நள வருஷத்தில் ஆடி மாதம் சுக்ல சனிக்கிழமை கூடிய பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வார் எடுத்து 'கோதை' எனப் பெயரிட்டு வளர்த்தார்.
அவர் பிறந்தது கி.பி. 885 நவம்பர் 25 அல்லது 886 டிசம்பர் 24.( 'வெள்ளை யெழுந்து வியாழம் உறங்கிற்று' ) என்கிற வான சாஸ்திரக் குறிப்பிலிருந்து திரு.மு.ராகவையங்கார் அவர்கள் ஆராய்ச்சி செய்து இந்தத் தேதிகளாக இருக்கலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்.
அவருடைய தந்தை தாய் யாரென்று தெரியவில்லை. அந்தக் காலங்களின் தெய்வீகம் எதும் கலக்காமல் இதை ஆராய்ந்தால் துளசித்தோட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட குழந்தை என்பது தெரிகிறது. பெரும்புலவரான பெரியாழ்வாரிடம் நிச்சயம் அவர் தமிழ் இலக்கியமும் இலக்கணமும் பயின்றிருக்க வேண்டும். பயின்று அதில் தந்தையின் பக்தி ரசம் மிகுந்த பாடல்களில் திளைத்து கண்ணனின் மேல் ஆசை வந்திருக்க வேண்டும். கடவுளுக்காக தன்னை அர்ப்பணித்த பெண்கள் சரித்திரத்தில் பலர் உள்ளனர்.
மீராபாய்,அக்கமகாதேவி,காரைக்கால் அம்மையார் போன்ற பல உதாரணங்கள் உண்டு. ஆண்டாள் பாடல்கள் அனைத்திலும் ஒருமித்த கருத்தான கண்ணனை மணப்பதையே எண்ணிகொண்டிருப்பதற்கு சிகரம் வைத்ததுபோன்ற திருப்பாவை. பாவை என்பது ஒரு நோன்பு. இங்கே அந்த நோன்புக்கடவுளை அடைவதற்கு உடலை வருத்தி அதிகாலை எழுந்து பலவித விரதங்கள் அனுசரித்து ஒருவிதமான தவம்போல ஒரு மாதம் இருப்பது.
திருப்பாவை நோன்பு,"மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் தீக்குறளை சென்றோதோம்"
என்று கட்டுப்பாடாக இருக்கும் நோன்பு. அதற்காக தோழிகளை எழுப்பி நீராட அழைக்கும் காலை நேரப் பாடல்களில் இருக்கும் நுட்பமான அன்றாட சங்கதிகள் பல நம்மை பிரமிக்க வைக்கின்றன.
"ஆழியுள் புக்கு முகுந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியம் தோளுடை பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர
மழைபோல் வாழ உலகினில் பெய்திடாய்"
என்பதில் மழையின் மின்னல் இடி முழக்கங்களை திருமாலின் ஆயுத முழக்கங்களுக்கு ஒப்பிடும் கவிதை நயத்துடன் விஞ்ஞானப்படி மழை பெய்வதன் காரணம். சமுத்திர நீர் மேலே சென்று உயர்ந்து மேகங்களாக மாறி மீண்டும் பெய்யும் உண்மை, அந்த ஒன்பதாம் நூற்றாண்டில் ஆண்டாளுக்குத் தெரிந்திருந்தது விந்தையே.
காலை நேரத்தின் பலவித சப்தங்களையும் நடைமுறைகளையும் இயல்பாகச் சொல்லும் திருப்பாவை பக்தியும் இலக்கிய நயமும் கலந்த மிகச் சிறந்த நூல்களில் ஒன்று. அதை எழுதிய இளம் பெண் நூற்றாண்டுகள் கடந்தும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறாள்.
-சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
சுஜாதா
கோகுலம் கதிர்,ஜனவரி 1998

முலைவரி!

இந்து நாடாக இருந்த திருவாங்கூர் சமஸ்தானத்தில் கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் இருந்தன. தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட "18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணிவது மாபெரும் குற்றம்."
இந்த ஜாதிப் பெண்கள் தங்கள் முலைகளை உயர் சாதியினருக்கு எப்பொழுதும் காட்டி மரியாதை செய்யவேண்டும். பிறந்த குழந்தையிலிருந்து இறக்கும் வரை எல்லா பெண்களும், இந்த 18 ஜாதிகளில் பிறந்திருந்தால், எவனுடைய மனைவியாக, மகளாக, சகோதரியாக, தாயராக, பாட்டியாக, இருந்தாலும் "முலைகளை காட்டிக் கொண்டு தான் இருக்கவேண்டும்."
இந்த இந்துத்துவ அடக்குமுறையை கூறும்போது கண்டிப்பாக நாங்கிலி என்ற பெண்ணைபற்றி கூறியே ஆகவேண்டும்.
நடந்த காலம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன். இடம் திருவிதாங்கூர் இராஜ்யம், நாங்கிலி கிராமம், சேர்த்தலா வட்டம். இப்போது கேரள மாநிலத்தில் இருக்கின்றது. ‘நாங்கிலி’ என்ற சொல்லுக்கு ‘அழகு’ எனப் பொருள். ‘நாங்கிலி’ என்பது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் பெயர்.
இவர் முப்பது வயதை அடைந்த அழகிய மாது. ஒரு கட்டத்தில் இவர் தன்னுடைய மார்பகத்திற்கு விதிக்கப்பட்ட வரியைச் செலுத்துவதில்லை என உறுதி கொண்டாள். ஆனால், திருவிதாங்கூர் இராஜ்யத்தின் உயர்ஜாதி ஆட்சியாளர்கள் விடுவதாக இல்லை.
(முலைகள் அளவுக்கு ஏத்தா மாதிரி வரி; பெரிய முலைகளென்றால் வரி அதிகம். வரி கட்ட முடியாவிட்டால், முலைகள் அறுத்து எறியப் பட்டது.)
தொடர்ந்து மார்பக வரி வசூலிப்பவர்களை நாங்கிலியின் வீட்டுக்கு அனுப்பி வரியைச் செலுத்தக் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், அழகி நாங்கிலி இந்த வரியைச் செலுத்துவதை மிகப் பெரிய அவமானமாகக் கருதினார். அதனால் மார்பக வரியை தருவதில்லை என்ற தனது உறுதியில் தளராமலிருந்தாள்.
இந்த மார்பக வரிக்கு மலையாள மொழியில் முலைக்கர்ணம் என்று பெயர்.
தொடர்ந்து வரியைக் கட்டிட அவள் மறுத்து வந்ததால் வரி பாக்கி அதிகரித்துக் கொண்டே சென்றது.
‘முலைக்கர்ணம் பார்வத்தியார்’ அதாவது மார்பக வரியை வசூல் செய்யும், பார்வத்தியார் ஒரு நாள் நாங்கிலியை தேடிப் போய்விட்டார்.
நாங்கிலி தன் வீட்டுக்கு வந்த அவரை, சற்றுப் பொறுங்கள் இதோ வரித் தொகையோடு வருகின்றேன் என்று வீட்டிற்குள் சென்றாள்.
ஓர் வாழை இலையை எடுத்து விரித்தாள். விளக்கொன்றை ஏற்றி வைத்தாள். தன் மார்பகங்களை ஒவ்வொன்றாக அறுத்து வைத்தாள். அப்படியே சாய்ந்து இறந்தாள்.
மார்பக வரியை வசூலிக்க வந்த பார்வத்தியாருக்கு இந்த மார்பகங்களைத் தந்தாள்.
நூறு ஆண்டுகளுக்கு முன் அழகி நாங்கிலி அறுத்து வைத்த மார்பகங்கள் தாம் ‘முலைவரி’ என்ற மார்பக வரிக்கு எதிராக எழுந்த எதிர்ப்பலை. இக்கொடுமையை செய்த உயர் சாதி இந்துக்களுக்கு எதிராக தோழ்ச்சீலை கலகம் வெடித்தது.
மார்பக வரிக்கு எதிராகத் கிறிஸ்தவ மிஷ்னரிகளின் கடும் முயற்சிக்கு பின், இங்கிலாந்து அரசின் வற்புறுத்தலால் திருவாங்கூர் நீதிமன்ற உத்தரவோடு அது சமுதாயத்தில் ஒழிக்கப்பட்டது.
இந்த அதிர்வான நிகழ்ச்சிக்குப் பின் அவள் வாழ்ந்த இடம் ‘முலைச்சிபரம்பு’ (மார்பகப் பெண் வாழ்ந்த இடம்) என்றே வழங்கப்பட்டது.
பின்னர் இந்த போராட்ட வரலாற்றை வரலாற்றுச் சுவடுகளிலிருந்து மறைத்திட விரும்பினார்கள் பார்ப்பனர்கள். அதனால் அந்த இடத்தை ‘முலைச்சிபரம்பு’ என்பதற்குப் பதிலாய் ‘மனோரமா காவலா’ என மாற்றினார்கள்.
ஆனால், அவள் வாழ்ந்த அந்த ஓலைக்குடிசை இடிபாடுகளுடன் அதே இடத்தில் இருக்கின்றது. முரளி என்ற ஓவியர் இந்த வரலாற்றைச் சித்திரமாகத் தீட்டி அந்த இடத்தில் வைத்திருக்கின்றார். அந்த ஊர் மக்கள் ஒவ்வொருவரும் “நாங்கள் இந்த வரலாற்றை செவி வழி செய்தியாகக் கேட்டு வளர்ந்தோம். இப்போது எங்கள் உள்ளக் கிடக்கையை அப்படியே சித்திரமாக வரைந்துள்ளார் முரளி’’ என அவரை பாராட்டுகின்றார்கள்.
இந்த வரலாறுகள் எல்லோரும் தெரிந்திருக்க வேண்டியவை. ஆரிய இந்து மதத்தின் சாதி பிரிவினைகளும் அடக்குமுறைகளும் தமிழரை எவ்வாறு பாடாய்படுத்தியது என்பதை எமது சந்ததிக்கு எடுத்து சொல்லவேண்டியது எமது கடமை.

சாணாரின் நிழல் பட்டால், பார்ப்பான் தீட்டாகிப் போய்விடுவானாம்

பனை மரத்தில் சாணார் கள் எடுக்கும்போது கீழே பார்ப்பான் நடந்துபோனால்மே லே இருப்பவர் கைதட்டவேண்டும். அந்த சத்தம் கேட்டு, பார்ப்பான் ஒதுங்கிப்போவான். காரணம், சாணாரின் நிழல் பட்டால், பார்ப்பான் தீட்டாகிப் போய்விடுவானாம்!

Sunday, January 21, 2018

பார்ப்பான்களுக்கும் ஷர்மாக்களுக்கும் இந்த பதிவு சமர்பணம்...

பார்ப்பான்களுக்கும்
ஷர்மாக்களுக்கும் இந்த பதிவு சமர்பணம்...
ஆ ஊன்னா..
முத்து இராமலிங்க தேவரை ஆன்மீகம்னு சப்போர்ட்டுக்கு இழுத்துக்கிற பார்ப்பான் பணியா ஷர்மாக்களே....
அடேய் 1939ல வைத்தியநாத அய்யர் தலித்துகளுடன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தியபோது அவரை சனாதான தர்மத்திற்கு எதிராக செயல்பட்டால் அவரை கொலைசெய்ய தயங்க மாட்டோம் என பட்டர்கள் சொன்னபோது..
அவர்களுடன் நான் வருகிறேன் என்று முடிந்தால் தடுங்கள் என்று அப்பொழுதே உங்களை விரட்டியவர் தேவர்..
உடனே நடேசஅய்யர் தலைமையிலான பட்டர்கள் கோவிலில் சாணார்கள் பறையர்கள் நுழைந்ததால் மீனாட்சி வெளியேறிவிட்டாள் இனி மீனாட்சி இருக்குமிடம் நடேசய்யர் வீடு அமைந்த முனிசிபல் ஆபிசில் சிலையை வைத்து அதை வழிபட்டார்கள். மக்கள் யாரும் கண்டு கொள்ளாததால் ஒரு வருடம் கழித்து மீண்டும் மீனாட்சியம்மன் கோவிலில் பூஜையை தொடங்கினார்கள்.
தேவர் தொடை தட்டி நின்னதே உங்க சானதான வர்ணாசிரமத்தை எதிர்த்துதான்டா ஷர்மாக்களா..
அப்ப தேவர் வாழ்ந்த
ஆன்மீகம் எது தெரியுமா..??
அவர் வாழ்ந்தது தமிழின மார்க்கமான வள்ளலார் பெருமானை பின்பற்றினார்..
வள்ளலாரைப் போலவே அமர்ந்த நிலையில் சமாதி வைக்கச் சொல்லி மறைந்து போனவரை..
உங்களது கலவர அரிப்பிற்காக ஒரு பெரும்பான்மை சமூகத்தை அடியாளாக்கி தேவர் சமுதாயத்தை சூழ்ச்சி வலையில் விழ வைக்கமுடியாது அம்பிகளா..
தமிழன் தன் வரலாறை
நன்றாக அறிந்தவன்
ரொம்ப சாபம் வுட்டா அப்புறம் கட்டி உங்களுக்குதான் வரும்..
மிகச் சிறப்பான பதிவு மாமா
கங்கை வடகரை மா.த.குமார்

திருமாவளவனின் கட்டப் பஞ்சயத்தும் காஞ்சிபுரம் ரயில்வே நிலையம் நிகழ்ச்சியும்

திருமாவளவனின் கட்டப் பஞ்சயத்தும் காஞ்சிபுரம் ரயில்வே நிலையம் நிகழ்ச்சியும்:
ரஜினிகாந்த் பற்றிய என் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களில் இரண்டு வகை சுவாரசியமானவை.
திருமா கட்டப் பஞ்சாயத்துச் செய்தாரே என்கிறார்கள். அழகிரி என்ன சாக்ரடீஸ் பஞ்சாயத்தா செய்தார்? ஸ்டாலின், ஜெயா, சசி, மற்ற மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் செய்யாத எதை திருமா செய்துவிட்டார். திருமா எந்த தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரையும் மானப் பங்கம் செய்ததில்லை, செய்தி நிறுவன அலுவலகத்தை எரித்ததில்லை, சொந்தக் கட்சிக்காரரை ரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டதில்லை, இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் செய்தவர்களைப் பற்றி மிகப் பெருமையாகப் பேசும் கட்சிக்காரர்களை அறிவேன். இதோ வைரமுத்து விவகாரத்தில் அவர் தோலின் நிறம் முதல் அவர் தாயார் வரை வசைப் பாடி தீர்த்துவிட்டார்கள் அக்கிரஹாரத்து ஜெண்டில்மேன்கள். இந்த வைரமுத்து எதிர்ப்பாளர்களை விட ராமதாஸ் மேன்மையானவர் ஏனென்றால் அவரால் அவர் சமூகத்திற்கு கொஞ்சமாவது நன்மை ஏற்பட்டது. திருமாவின் ஜாதி தான் அவரை மட்டும் தனித்து வேறொரு அளவுகோலில் வைத்து அளக்கச் செய்கிறது.
ஒரு ஐயங்கார் எனக்கு அனுப்பியச் செய்தி வி.சி.க தொண்டர்கள் காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் வரையப்பட்டிருந்த சங்கரர் படத்தை தார் பூசி அழிப்பது. அனுப்பியவர் 'இது vandalism இல்லையா' என்றார். இதில் முதல் vandalism செய்தவர்கள் தென்னக ரயில்வே நிர்வாகத்தினர் என்றேன். போன வருடம் இத்தாலி சென்றேன். அஸிசி நகரம் கத்தோலிக்கத்தின் மிக முக்கியமானப் புனிதர் பிறந்த இடம் ஆனால் அந்நகரின் ரயில்வே நிலையத்தில் அதற்கான எந்தத் தடையமும் இருக்காது. பொது மக்களின் வரிப்பணத்தில் சகலரும் வந்துப் போகும் இடத்தில் இது தேவையில்லாத வேலை என்றேன். அவர் "இது இந்திய வழி" என்றார் சிகாகோவில் இருந்துக் கொண்டு. "ஏன் இப்படித் தான் செய்ய வேண்டுமா, இங்கெல்லாம் இப்படியாச் செய்கிறார்கள், மதச் சார்பின்மையை பின் பற்றலாமே" என்றால் "நாம் ஏன் இவர்களிடம் இருந்து கற்க வேண்டும்" என்றார் அந்த அமெரிக்கா வாழ் இந்து. இவர்கள் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்றுச் சொல்கிறார்களோ அப்படி அமெரிக்கா இருந்தால் ஒரே நாளில் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று இந்தியாவுக்கு ஓடி விடுவார்கள். இங்கே இந்துக்களுக்கோ அவர்கள் வாழ்க்கை முறைக்கோ ஏதேனும் சிக்கல் வந்தால் அவை மிகக் கவனமாகவே கையாளப் படுகின்றன அதற்கு பல நிகழ்ச்சிகளை சுட்டிக் காட்ட முடியும்.
"அதைச் செய்தது ஒரு நிர்வாக முடிவு, யாரோச் சிலரின் தனிப்பட்ட முடிவு அல்ல அதையும் தார்ப் பூசி அழிப்பதையும் ஒன்றாக்கக் கூடாது" என்றார். இந்த வெளிப்புற வன்முறையை விட நாசூக்கான வன்முறை தான் அருவருப்பானது என்றேன். தமிழ் போன்ற ஒரு மொழியை பிராந்திய மொழி என்று ஒதுக்கி சமஸ்கிருதம் பல்கலைக் கழகங்களில் முன்னிறுத்தப் பட்டக் காலம் ஒன்றுண்டு தமிழ் நாட்டில். தஞ்சை SBI அலுவலகத்துக்கு நவராத்திரியின் போதுச் சென்றால் அக்கிரஹாரத்துக்குச் சென்ற உணர்வு வரும். மொழி, மதம், ஜாதி என்ற எந்த வகையிலேனும் பெரும்பான்மைச் சேர்ந்து விட்டால் நம்மவர்கள் அடிக்கும் கொட்டம் அலாதியானது. நோகடிப்பது வேறொரு நாட்டில் பன்மைத் தன்மைப் பற்றியும் சிறு பான்மையினரை எப்படி அரவனைத்துச் செல்வது என்றும் அன்றாடம் விவாதம் நடக்கும் சூழலில் பல்லாண்டு காலம் அந்த விவாதங்களின் பலனை அனுபவித்துக் கொண்டு இந்தியர்களுக்கு இன்னொருப் பாடத்தை அறிவுறுத்தும் ஹிபாக்ரஸி அருவருப்பானது.
மேலும் அவரிடம் சொன்னேன். இந்த மாதிரி சுவரெல்லாம் சங்கரர் படத்தை வரைவதற்குப் பதில் ஒரு தகவல் மையம் அமைத்து நகரின் முக்கிய இடங்கள் பற்ரி ஒரு நல்ல வரலாற்றுக் குறிப்பை அளிக்கலாம் அதில் சங்கரர், காஞ்சி மடம் எல்லாம் இருக்கலாமே என்றேன். 'அதெல்லாம் எங்கே சார் செய்வது' என்று அலுத்துக் கொண்டார். இன்று வரை சங்கரர், ஆண்டாள், ஆழ்வார்கள், வேதங்கள், கீதை இவைப் பற்றி வெகு ஜன வாசகனுக்கு உரிய நல்லப் புத்தகங்கள் கிடையாது. இது தற்செயல் அல்ல. அவைப் பற்றிய புரிதல் மேதைகளுக்கானத் தங்களுக்கு மட்டுமே என்றும் சராசரி குடி மகனுக்கு சுவரில் ஓவியம் போதும் என்ற மேட்டிமைக் குணமுமே காரணம்.
அவரே வேளாங்கன்னி ரயில்வே நிலையத்திலும் இப்படி ஓவியங்கள் இருக்கலாம் என்று எனக்குத் தூண்டில் போட்டார். அதுவும் தவறே என்றேன். இணையத்தில் வேளாங்கன்னி ரயில்வே நிலைய புகைப்படம் கிடைத்தது. ரயில்வே நிலையம் என்னமோ சர்ச் போல் இருக்கிறது கட்டுமானத்தில். ஆனால் ஓவியமோ சிலுவையோ இல்லை. காஞ்சிபுரத்தில் சிவ லிங்கமே வரையப்பட்டிருந்தது. அந்த வேளாங்கன்னி ரயில்வே நிலையத்தின் புகைப்படத்தோடு ஒரு செய்திக் குறிப்பும் இருந்தது. ரயில்வே நிலையத்தில் அடிப்படை வசதிகளே இல்லை என்று.
நான் கடைசியாக தமிழகத்தில் ரயிலில் சென்றது 2010-இல். ஏஸி முதல் வகுப்பில் கரப்பான் பூச்சிகள் இருந்தன, கொடுக்கப்பட்ட கம்பளிப் போர்வை சலவையையேப் பார்த்திராதது, பரிமாறப்பட்ட உணவு பரலோகத்துக்கான டிக்கெட். தென்னக ரயில்வே எந்தப் பாரம்பர்யத்தையும் தன் தலை மேல் போட்டுக் கொண்டு காப்பாற்ற முயல வேண்டாம் அது செய்ய வேண்டிய வேலையை ஒழுங்காகச் செய்தால் மக்கள் சந்தோஷப் படக் கூடும்.

மனம் புண்படுகிறது விமர்சிக்காதே

இன்றைக்கு மனம் புண்படுகிறது விமர்சிக்காதே ன்னு சொல்லுவான்
அப்புறம் நீ மட்டும் ஏன் விரதம் இருக்கல
சனிக்கிழமை ஏன் கோவிலுக்கு வரலை
தொழப்போற நேரத்தில் ஏன் கடையை திறந்து வைச்சிருக்கே
தசமபாகம் ஏன் கொடுக்கல
பாவமன்னிப்பு ஏன் கேட்கலை
இப்படி வரிசையா எதையாவது தூக்கிட்டு வருவான்
அதுக்கெல்லாம் இடமே கொடுக்கப்பிடாது .
கடவுள் இல்லை ஏமாத்தாதே ஏமாறாதேன்னு முதல்லே அடிச்சிடனும். நேரம் வாய்ப்பு
கிடைக்கும் போதெல்லாம் விமர்சிக்கனும்

இன்னும் பெண்கள் தனியே செய்ய இயலாத மனத்தடையில்தான் இருக்கிறார்கள்

”எங்க ஸ்கூல்ல வேலை பாக்குற மேக்சிமம் லேடி டீச்சர்ஸ் அவுங்க ஏடிம் கார்ட ஹஸ்பண்ட் கிட்டதான் கொடுத்திருக்காங்க “என்றார் ஒரு சிறுநகரத்து ஆசிரியர்.
“அவுங்க அவுங்க ஏடிம் கார்ட அவுங்க அவுங்க வெச்சிக்கிறதான முறை”
“கேட்டா ‘எதுக்கு அவரு எல்லா செலவையும் பாத்துகிறாரு. போக வர பஸ்ஸுக்கு காசு கொடுக்குறாரு. அல்லது பைக்ல டிராப் பண்றாரு. ஈவினிங் வீட்டுக்கு போகப் போறேன்” அவ்வளவுதான” என்பார்களாம்.
வேலை முடிந்த பிறகான ஒரு மாலைப் பொழுதை ஒரு சிறுநகரத்து பெண் அவள் இஷ்டப்படி போக்குவதற்கான தைரியத்தை இன்னும் அடையவில்லை.
- சும்மா ஒரு கடையில் போய் எதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டு போகலாம்.
- சும்மா தெருக்கடையில் நின்று டீ குடிக்கலாம்.
- சும்மா பிளாட்பாரக்கடையில் இருக்கும் புத்தகங்களை எல்லாம் வேடிக்கை பார்த்து ஏதாவது ஒரு புக் வாங்கி செல்லலாம்.
- மதியத்துக்கு மேல் திடீர் என்று சொல்லிவிட்டு ஒரு சினிமா பார்க்கலாம்.
இது மாதிரி நிறைய விஷயங்களை இன்னும் பெண்கள் தனியே செய்ய இயலாத மனத்தடையில்தான் இருக்கிறார்கள்.
அந்த மனத்தடையில் விளைவதுதான் ஏடிம் கார்டை கேள்வியே இல்லாமல் கணவனிடம் ஒப்படைப்பது.
இன்னொரு ஆசிரியை ஒரு சம்பவம் சொன்னார். ஒரு பயிற்சியின் போது மதியம் அவர் கூட வந்தவர்கள் அனைவரும் மீல்ஸ் சாப்பிடப் போய்க் கொண்டிருக்க “அட என்னப்பா டெய்லி மீல்ஸா” என்று இவர் மட்டும் தனியே சென்று சிக்கன் பிரியாணி சாப்பிட்டிருக்கிறார்.
இதைக் கண்டு சக நட்புகள் வியந்திருக்கிறார்கள். மெலிதாக கடிந்திருக்கிறார்கள்.
“நீங்க தனியா போய் பிரியாணி சாப்பிட்டீங்களா”
“எப்படித்தான் தனியா போனீங்களோ”
“பரவால்ல நீங்க நல்ல வேகம்தான்”
ஒரு பெண் தன் கூட்டத்தை விட்டு தனியே சிக்கன் பிரியாணி சாப்பிட்டது இன்னமும் பெரிய வியப்பான அதிசயமாக பார்க்கப்படுகிறது.
இப்படி வியப்பவர்கள்தான் பட்டிமன்றத்தில் சுகிசிவம், வக்கீல் சுமதி, பாரதி பாஸ்கர் போன்றவர்கள் சொல்லும் ஜோக்குகளை ரசித்து விழுந்து விழுந்து சிரிப்பவர்கள்.
இவர்களுக்கு அப்துல் கலாமும், இறையன்பும் பிடிக்கும்.