நான் 2009 Webmethods சென்னை ல வேலை பார்க்கும் போது Operations Manager சம்பத் அப்படின்னு ஒரு மஞ்சள் நாமம் போடும் 60 வயசு ஐயங்கார் ஒருத்தர் இருந்தார்.
அந்த கம்பெனிய ஒரு ஜெர்மன் கம்பெனி acquire பண்ணிட்டு ஜெர்மன் ல இருந்து ஒரு உயர் அதிகாரி வந்தாரு. அவருக்கு டீ காப்பி சாப்பாடு ரூம் எல்லாம் போட்டு குடுத்துட்டு ஐயங்கார் லஞ்ச் மீட்டிங் க்கு வந்தார். அந்த ஜெர்மன் ஆளு கேட்டார் நெத்தியில் என்ன அப்படின்னு...பேசாம God faith இல்லாட்டி Hindu religion அப்படின்னு சொல்லி விட்டு இருக்கலாம்... This is high in society, Direct connection to God அப்படின்னு சொன்னார். உடனே அந்த ஜெர்மன் காரர்- If I put this can I connect with Jesus அப்படின்னு கேட்டார்...😂🤪
உடனே இவர் - No No it is only to Vishnu - our God அப்படின்னு சொன்னார். Then why all others not putting the yellow line - you guys don't want to connect with Vishnu அப்படின்னு கேட்ட உடன் சம்பத் சொன்னார்..No no everyone can't put this அப்படின்னு...
குழம்பிப் போன German காரர்- Ok let us change the topic அப்படின்னு சொல்லிட்டு கடைசி வரை விடை கிடைக்காமல் போயிட்டார்
Thursday, May 13, 2021
German காரர் கடைசி வரை விடை கிடைக்காமல் போயிட்டார்
பார்ப்பன மொழி மட்டும் எங்கு சென்றாலும் ஒரே மாதிரி இருக்கும் - ஆத்துல, ஜலம், அவா இவா
தமிழகத்தில் பல்வேறு வகையான தமிழ் உச்சரிப்பு, ஒலிப்பு, பேச்சு வழக்கு உண்டு. அனைவரும் அந்த அந்த வட்டார தமிழ் பேசி வளர்ந்த மக்கள்தான்... ஆனால் வேலைக்கு வந்தபின் நம்மை யார் என்று கண்டுபிடிக்க முடியாத Neutral Tamil என்று ஒன்று உண்டு. அது கிட்டத்தட்ட திருச்சி தஞ்சை தமிழ் போல... அதை கஷ்டப்பட்டு பழக வேண்டிய அவசியம் வரும். சென்னை வந்த புதிதில் கடைக்கு போய் சீனி குடுங்க அப்படின்னு கேட்டு கடைக்காரர் என்ன தெற்கு ஊரா அப்படின்னு கேட்டார். ஏன் அப்படின்னு கேட்டேன்...இங்க சர்க்கரை இல்லாட்டி அஸ்கா அப்படின்னு solluvaanga அப்படின்னாரு, கைலி சாரம் - லுங்கி ஆனது, வத்தல் - காஞ்ச மிளகாய் ஆனது, மல்லி- தனியா ஆனது...
ஆனால் பார்ப்பன மொழி மட்டும் எங்கு சென்றாலும் ஒரே மாதிரி இருக்கும் - ஆத்துல, ஜலம், அவா இவா
இவங்க டிசைன் அப்படி
எங்க முன்னாடி செருப்பு போடக் கூடாதுன்னு சொன்னக் கூட்டம் தான், செருப்பு போடாம இருந்தா எளிமைன்னு உருட்டிக்கிட்டு இருக்கானுங்க.
இதோட உளவியல் என்னவென்றால்
நம்ம அரிசி சாப்பிட தொடங்குனவுடனே இவனுங்க கூழ் குடிப்பானுங்க,
நம்ம ஜீன்ஸ் pant போட்ட உடனே, வேட்டி புகழ் பாடுவானுங்க,
நம்ம ஆட்கள் engineering/medical படிச்சா, உடனே சுய தொழில் பத்தி பேசுவானுங்க
இவங்க டிசைன் அப்படி
"அதென்ன! அசுவமேத யாகம் ?…"
ராஜாக்கள் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு… அடித்து விரட்டி விடுவார்கள். அக்குதிரை எங்கெங்கு சென்றுவிட்டு வருகிறதோ.. அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்துவிட்டு அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம் தான் அசுவமேத யாகம். ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப்போட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள்.
இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும். அப்போது ஓரிரவு முழுவதும் சம்பந்தப்பட்ட ராஜா வீட்டுப்பெண்கள் முக்கியமாக ராணி குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்தக் கடமை முக்கியமாக ராணிக்கு தான். இதைக் கூற சங்கோஜமாகத் (கூச்சமாக) தான் இருக்கிறது. அசுவ மேதயாக ஸ்லோகமே அப்படித் தான் இருக்கிறது.
“அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்து
பத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே…”
எனப்போகிறது ஸ்லோகம். அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி ராணி வழிபட வேண்டிய முறையைத் தான் விளக்குகிறது இந்த ஸ்லோகம்.
இரவு இந்தக் கடமை முடிந்ததும்… மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பமாகும் வரை எரித்து விடுவார்கள். இது தான் அஸ்வமேத யாகம்.
மக்களைப் போலவே, ராஜ குடும்பத்தினரும் பிராமணர்களின் மந்திரயாகத்துக்கு கட்டுப்பட்டிருந்தார்கள். யாகம் முடிந்ததும் “ஏ…ராஜா… இந்த யாகத்தை நல்லவிதமாக பூர்த்தி செய்தாகி விட்டது. இதற்காக நீ பொன்னும் பொருளும் தட்சணை கொடுத்தாய். அஃதோடு யாகத்தில் பங்குகொண்ட உன் ராணியையும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணையாக்கி பிறகு அழைத்துச் செல்ல வேண்டும்” என்றார்களாம்.
இதையல்லாம் பார்த்து வெகுண்டார் புத்தர். மனித தர்மம், மிருக காருண்யம் இரண்டையுமே பொசுக்கி யாகம் செய்கிறீர்களே…? ஏன் இப்படி…? என யாகம் நடத்தும் இடத்துக்கே போய் யாகம் நடத்தியவரிடம் (பிராமணர்களிடம்) கேள்விகள் கேட்டார்.
பிராமணர்கள் பதில் சொன்னார்கள், “குதிரைக்கு மோட்சம் கிடைக்கும். லோகத்துக்கு ஷேமம் கிடைக்கும்” என்று கூற... புத்தர் திரும்பக் கேட்டார்.“ஒன்றும் தெரியாமல் வளர்ந்து, வாழ்ந்து சாகப்போகும் குதிரைக்கு மோட்சம் தருகிறீர்களே.. எல்லாம் அறிந்த பிராமணனாகிய நீங்கள் மோட்சம் பெற வேண்டாமா? அந்த அக்கினி குண் டத்தில் யாகம் நடத்தும் உங்களையும் தூக்கிப் போட்டால் உங்களுக்கும் மோட்சம் கிட்டுமல்லவா?. ப்ராகிருத மொழியில் மக்களிடமும் இதே கேள்வியை புத்தர் பரப்ப… திடுக்கிட்டுப் போனார்கள் பிராமணர் கள்
நன்றி: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது என்ற புத்தகத்திலிருந்து...
நன்றி: அருந்தமிழிலிருந்து..
ஐடா ஸ்கடர்
1877ம் ஆண்டு..!
நம் நாட்டில் கடுமையான பஞ்சம்.. பட்டினி சாவு 50 லட்சத்தை தாண்டியது... பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட சாப்பாடு இல்லாத நிலை!!
அதனால், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் மருத்துவ சிகிச்சை, உணவு தருவதற்காக இந்தியா வந்தன. அப்படி ராணிப்பேட்டைக்கு வந்தவர்தான் டாக்டர் ஜான்.. இவரது 14 வயது மகள் ஐடா ஸ்கடர்!
ஒரு நாள் இரவு கதவு தட்டப்படுகிறது.. ஐடா கதவை திறக்கிறாள்.. ஒரு பிராமணர் நின்று கொண்டிருந்தார். "அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்... உடனே வாங்க" என்று பதறுகிறார்..!
ஐடாவோ, "நான் டாக்டரல்ல, என் அப்பாதான் டாக்டர், கொஞ்சம் இருங்க அவரை எழுப்பறேன்" என்கிறார்.
"இல்லம்மா.. என் மனைவிக்கு 14 வயசு தான். நாங்க பிராமணாளுங்க.. பெண்ணை ஒரு ஆம்பள தொட அனுமதி இல்லை" என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.
கொஞ்ச நேரத்தில் ஒரு முஸ்லிம் நபர் கதவை தட்டுகிறார்.. மனைவிக்கு பிரவச வலி என்பதால் உடனே வருமாறு அழைத்தார். ஐடா தன் தந்தையை பற்றிக்கூற, "வேண்டாம்மா... நாங்கள் இஸ்லாமியர்கள்... எங்க வீட்டு பொண்ணை ஆண்கள் பார்க்கவே கூடாது" என்று அவரும் சோகத்துடனே திரும்பிவிடுகிறார்.
அந்த பெண்களுக்கு என்ன ஆச்சோ என்று இரவெல்லாம் பதட்டத்துடன் தவிக்கிறாள் ஐடா... மறுநாள் காலை அந்த கர்ப்பிணிகளின் சடலம் தன் வீட்டை கடந்து கொண்டு செல்லப்படுவதை பார்த்து அதிர்ந்து தேம்பி தேம்பி அழுகிறாள் ஐடா.
"என்ன தேசமிது? பெண்களை படிக்க வைக்க மாட்டாங்களாம், ஆனால் பெண்ணுக்கு பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்? இந்த நாட்டில் பெண்களை படிக்கவிடவில்லை என்றால் என்ன, நான் படித்துவிட்டு வந்து இந்த பெண்களை காப்பாற்றுவேன்" என சபதமேற்று அமெரிக்கா சென்று படிக்கிறார்.. டாக்டராகிறார்..!
சக நண்பர் ஒருவர் ஐடாவை காதலிக்கிறார்.. ஆனால் ஐடா அந்த காதலை நிராகரிக்கிறார்.. மருத்துவம் படித்து முடித்ததுமே அமெரிக்காவிலேயே வேலை வாய்ப்புகள் வந்தன.. ஐடா அதையும் நிராகரிக்கிறார்.. தமிழகத்தில் இறந்து போன அந்த பெண்களின் சடலங்கள் மட்டுமே கண்முன் வந்து வந்து போயின!!
ஆனால், வெறும் படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வளவு பேரை தமிழ்நாட்டில் காப்பாற்ற முடியும் என்று நினைத்து, ஒரு ஆஸ்பத்திரி தேவை என்பதை உணர்கிறார்.. பல நாடுகளில் இந்தியாவின் அவலத்தை சொல்லி நிதி உதவி கேட்கிறார்.. ஓரளவு நிதியும் சேர்கிறது...!
இனி ஒரு கர்ப்பிணியைகூட சாக விடமாட்டேன் என்ற உறுதியுடன் 20-ம் நூற்றாண்டின், முதல் நாளில் தமிழகத்தில் கால் பதிக்கிறார் ஐடா.
ஆஸ்பத்திரி கட்டும் பணியை ஆரம்பிக்கிறார்.. படாதபாடு பட்டு, இறுதியில் 40 படுக்கை வசதியுடன் அந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு விட்டது.
பெண்ணுரிமை என்ற பேச்சுக்கே இடமில்லாத நேரத்தில், பெண்களுக்காகவே ஒரு மருத்துவமனையையே கட்டி முடித்தார் இளம்பெண் ஐடா!
அதுதான் ஆசியாவிலேயே தனிப்பெருமை வாய்ந்து.. நூற்றாண்டையும் கடந்து இன்றும் பிரம்மாண்டமாய் நிற்கும் வேலூர் "சிஎம்சி" ஆஸ்பத்திரி!!
யார் இந்த பெண்? இவர் ஏன் நமக்காக அழுதார்? இவர் ஏன் நமக்காக உருகினார்? இவர் ஏன் நமக்காகவே வாழ்ந்தார்?
எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, நம்ம நாட்டுக்கு தன் வாழ்க்கையையே மொத்தமாக அர்ப்பணித்த ஐடா, அன்னை தெரசாவுக்கே "வழிக்காட்டி" என்று சொன்னால் நம்ப முடிகிறதா?!!
அங்குமிங்கும் அலைந்து திரிந்து 5 இளம்பெண்களை திரட்டி, அவர்களுக்கு பயிற்சி தருகிறார் ஐடா.. இவர்கள் தான் தமிழகத்தின் முதல் 5 நர்ஸ்கள்..!
நம்முடைய பெண்கள் மருத்துவம் படிக்க விதை போட்டதே, இந்த ஐடா தான் என்பதை எத்தனை பேர் இன்று நினைத்து பார்க்கிறார்களோ தெரியவில்லை !
ஆனால், ஒரு பெண் தனி ஆளாக நின்று ஏற்றிய மெழுகுவர்த்தி, இன்று பிரகாசமாக, உலகத் தரத்தோடு, வேலூரில் இன்னமும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.. லட்சக்கணக்கான மக்களுக்கு உயிர் தந்து கொண்டுமிருக்கிறது..!
நர்ஸ் தினமான இன்றைய நாளில், ஐடா என்ற மனித தெய்வத்துக்கு மட்டுமில்லை, இன்றைய ஆபத்தான சூழலில், உயிரை பணயம் வைத்து சிகிச்சை தந்து வரும் அனைத்து வெள்ளுடை தாய்களுக்கும் என் கோடி நன்றிகள்!!