Saturday, January 13, 2018

தமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப் புத்தாண்டு எது? தையா? சித்திரையா

தமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப் புத்தாண்டு எது? தையா? சித்திரையா

தமிழர்கள் யாவரும் தமிழ்ப் புத்தாண்டைப் பற்றிய தெளிவின்மையோடு, எதை நம்புவது எதைப் புறக்கணிப்பது என்ற குழப்பத்தில்  சிக்கியுள்ளார்கள். தமிழக மக்கள் இந்த விசயத்தில் எக்காரணம் கொண்டும் தெளிவுபெற்றுவிடக் கூடாது என்பதில் இப்போது ஆட்சியில் இருப்போரும், அவர்க்கு அறிவுரை வழங்கி வரும் கூட்டமும்  மிகத்  தெளிவாய் இருக்கிறது. அதன்படி தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாய்  கலைஞர் அறிவித்ததை மாற்றி மீண்டும் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக  அறிவித்துள்ளது தற்போதைய தமிழக அரசு. இந்நிலையில் எதற்காக தமிழர்கள் தை முதல் நாளை புத்தாண்டாகக்  கொண்டாட வேண்டும் என்பது குறித்து விளக்கவே இந்தக் கட்டுரை. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு ஏன் எதற்கு என்பதைப் பற்றியெல்லாம் ஆராயும் முன், நாம் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சித்திரை முதல் நாளில் ஆரம்பிக்கும் ஆண்டுகளின் கணக்கு சுழற்சி முறையில் இருக்கும்.

அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் 'பிரபவ' முதல் 'அட்சய' என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது பெயர்களில் ஒன்று கூட தமிழ்ப் பெயர் கிடையாது. அனைத்துமே வடமொழிப் பெயர்கள். தமிழ் வருடங்கள் எனச் சொல்லப்படுகிற வருடங்களின் பெயர்கள் வடமொழியில் இருப்பதன் ரகசியம் என்ன? அப்படி இருக்கலாமா? அப்படி இருத்தல் உலகத்தின் மூத்தகுடியான தமிழுக்கும் தமிழர்க்கும் மரியாதையாய்  இருக்குமா? இந்த அறுபது ஆண்டு சுழற்சி முறையைக் குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்குப் பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாகப் பரப்பப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிலைநிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டின் பூர்வகுடி (தமிழ்) மக்களின்  பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்த சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் நடைமுறைப் பழக்கத்திற்கு வந்துவிட்டது. அறுபது ஆண்டு சுழற்சி முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் 'சஷ்டியப்த பூர்த்தி' என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழக்கம் இருப்பதைக் கவனியுங்கள். அதாவது ஆரியர்கள் உருவாக்கிய 60 ஆண்டுகளைக் கடந்து வாழ்கிறார் என்பதை இது குறிக்கிறது. ஒரு சுற்று வந்து விட்டார் என்பது இதன் கரு.

தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள்.  வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் - (தை---மாசி மாதங்களுக்குரியது)

2.    முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)

3.    கார் - (வைகாசி - ஆனி மாதங்களுக்குரியது)

4.    கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)

5.    முன்பனி (புரட்டாசி - அய்ப்பசி மாதங்களுக்குரியது)

6.    பின்பனி (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)

மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை-  வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.  சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள்.  காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு (மீணீஷீஸீ) பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான்.  இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

தமிழர்கள்  நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்து  பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்,

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம்   கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

            −

தமிழ் புத்தாண்டு எப்போது:

அவரவர் பின்பற்றப்படும்  மாதங்கள் 👇👇👇

ஆங்கிலேயர்களுக்கு

1. சனவரி
2. பிப்ரவரி
3 . மார்ச்
4. ஏப்ரல்
5. மே
6. சூன்
7. சூலை
8. ஆகத்து
9. செப்டம்பர்
10. அக்டோபர்
11. நவம்பர்
12. திசம்பர்

வடமொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு

1. சித்திரை
2. வைகாசி
3. ஆனி
4. ஆடி
5. ஆவணி
6. புரட்டாசி
7. ஐப்பசி
8. கார்த்திகை
9. மார்கழி
10. தை
11. மாசி
12. பங்குனி

 தமிழர்களுக்கு

1. சுறவம் (தை)
2. கும்பம் (மாசி )
3. மீனம் ( பங்குனி)
4. மேழம் ( சித்திரை)
5. விடை (வைகாசி)
6. ஆடவை (ஆனி)
7. கடகம் (ஆடி)
8. மடங்கல் (ஆவணி)
9. கன்னி (புரட்டாசி )
10. துலை (ஐப்பசி )
11. நளி (கார்த்திகை)
12. சிலை (மார்கழி)

வரலாற்றில் தெளிவு பெறாத இனம் எழுச்சி பெற முடியாது.

எனவே தமிழர்களுக்கு தை திருநாளே தமிழ் புத்தாண்டு

Friday, January 12, 2018

பொங்கல் திருவிழா

எந்தவொரு சாதி , மத குறியீடுகள் இல்லாமல் இன்று தமிழர்களுக்கு என்றிருக்கும் ஒரே பெருவிழா அது பொங்கல் திருவிழா. மற்ற பண்டிகைகளைப்போல் தீட்டு என்பது பொங்கலுக்கு கிடையாது. பொங்கலன்று வீட்டில் ஒருவர் இறந்துவிட்டால் உடலை எடுத்தவுடனே பொங்கல் வைத்து படையல் போடலாம். இதுவே பொங்கல் மத அடையாளமில்லாத பண்டிகை என்பதற்கான மிகச் சிறந்த சான்று.
மற்ற பண்டிகைகளை போல் ஹிந்துத்வம் பொங்கல் பண்டிகையையும் உண்டு செரித்து வருகிறது. மத குறியீடுகளுடன் கூடிய பொங்கல் கொண்டாட்டங்கள் அதிகரித்துவருவதே இதன் அறிகுறிகள். இதைத் தடுத்து நிறுத்தவில்லையென்றால் கார்த்திகை தீபம்போல் நாம் பொங்கலையும் இழந்துவிடுவோம் என்பதே உண்மை.
இதற்கு ஒரே தீர்வு அணைத்து மதத்தினரும் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடுவது. இதன்மூலம் பொங்கல் பண்டிகையின் மீது பரவும் மத குறியீடுகள் தடுத்து நிறுத்தப்படும்.
மதங்களைத் துறந்து, சாதியைக் கடந்து எந்தவொரு குறியீடுகளும் இல்லாமல் தமிழர் திருநாளை சிறப்பாகக் கொண்டாடுவோம்.

ஒடிசி & தாமரை தின்னிகள் :: பெரியார் & தமிழக மக்கள்



Theodoor van Thulden என்ற டச்சு ஒவியர் 1632 ஆம் வருடம் வரைந்த ஒவியம்.
இதில் கிரேக்க காப்பியமான ஒடிசியில், ஒடிசி மன்னன் அவன் நண்பர்களை, கூட பயணம் செய்பவர்களை “தாமரை தின்னி” போதையாளர்களிடம் இருந்து மீட்டு வரும் காட்சியை ஒவியர் வரைந்திருக்கிறார்.
ட்ராய் நகரத்து போர் முடிந்ததும் ஒடிசி மன்னன் தன் சொந்த ஊருக்கு திரும்பும் போது நிறைய கடற்பயண சவால்களை சந்திக்கிறான்.
அதுதான் ஒடிசி கதை. அப்படி தன் சகாக்களோடு வரும் போது தாமரை தின்னிகள் இருக்கும் தீவுக்கு அவன் கப்பல் ஒதுங்குகிறது. தீவில் யார் என்று பார்த்து வர இருவரை முதலில் அனுப்புகிறான்.
அவர்கள் திரும்ப வில்லை.
அவர்களை பார்க்க இன்னும் சிலரை அனுப்புகிறான்.
அவர்களும் திரும்பவில்லை. என்ன இது போனவர்கள் போனவர்களாக இருக்கிறார்களே என்று ஒடிசி அவனே சென்று என்ன விஷயம் என்று பார்க்கப் போகிறான்.
அங்கே அவன் “தாமரை தின்னிகள்” (Lotus Eaters) மனிதர்களைப் பார்க்கிறான்.
அவர்கள் அந்த தீவில் இருக்கும் ஒரு தனித்துவமான நீர்தாவரத்தின் பூவை தின்று கொண்டு இருக்கிறார்கள். அது அவர்களுக்கு போதை ஊட்டுவதாய் இருக்கிறது.
அதை சாப்பிட்டவர்கள் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
ஊரில் உள்ள மனைவி குழந்தைகளை மறக்கிறார்கள். தாங்கள் இனி எங்கும் போக வேண்டாம் அந்த தாமரை தின்னி தீவிலேயே அப்பூக்களை பறித்து தின்று போதையிலேயே இருக்கலாம் என்று முடிவு செய்து மயங்கிக் கிடக்கிறார்கள்.
அவர்களிடம் ஒடிசி எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறான்.
அந்த பூக்களின் போதை அவர்களை விடுவதாய் இல்லை. ஒடிசி சொல்வதை கேட்கவில்லை. வேறு வழியில்லாமல் ஒடிசி அவர்கள் மண்டையில் தட்டி உச்சி முடியை பிடித்து இழுத்து வந்து கப்பல் ஏற்றி அந்த போதையிலிருந்து, போதை சிந்தனையில் இருந்து காப்பாற்றுகிறான்.
கப்பலில் ஏறி போதை தெளிந்த பிறகுதான் அவர்களுக்கு ஒடிசி எவ்வளவு நன்மை செய்தான் என்று தெரிகிறது.
அந்த ஒடிசி மன்னன் நிலையில்தான் தமிழ்நாட்டில் பெரியாரும் இருந்தார்.
தமிழக மக்கள் மத மூடநம்பிக்கை என்னும் தாமரை தின்னிகளாக இருந்தார்கள். தமிழக மக்கள் சாதி என்னும் தாமரை தின்னிகளாக இருந்தார்கள்.
தமிழக ஆண்கள் பெண்களை ஆதிக்கம் செலுத்தும் தாமரை தின்னிகளாக இருந்தார்கள்.
தமிழக பெண்கள் ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதை ரசிக்கும் தாமரை தின்னிகளாக இருந்தார்கள். இந்த சாதி மத ஆணாதிக்க போதைப் பூக்களை தின்று “அனைவரும் சமம்” என்ற குறிக்கோளை அடையத் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் போது பெரியார் தன்னால் முடிந்த மட்டும் மக்களின் முடியை பிடித்து இழுத்து பகுத்தறிவு கப்பலில் ஏற்றி விட்டார். ஒடிசி கதையில் ஒடிசியின் தாமரை தின்னி மயக்க நண்பர்கள் எண்ணிக்கை அளவில் குறைந்தவர்கள். அதனால் அவன் ஒருவனால் இழுத்து கப்பலில் ஏற்ற முடிகிறது. ஆனால் பெரியார் விஷயத்தில் நாலு கோடி மக்கள் தாமரை தின்னிகளாக இருந்தார்கள்.
பெரியார் தன் 94 வயது வரை தன்னால் முடிந்த மட்டும் மக்களை கப்பலில் பகுத்தறிவு ஏற்றி விட்டார்.
ஆனால் முழுமையாய் அவரால் ஏற்றி விட முடியவில்லை. அது பெரியாருடைய தோல்வி இல்லை. பெரியாரால் அனைவரையும் பகுத்தறிவு கப்பலில் ஏற்ற முடியவில்லை என்பதைச் சொல்லி ரசிப்பது முட்டாள்தனம்.
பெரியாரின் பணியை நாம் ஒவ்வொருவரும் இங்கே செய்ய வேண்டும்.
நம் அருகில் இருக்கும் குடும்பதில் இருக்கும் தாமரை தின்னிகள்,
நண்பர்கள் வடிவத்தில் இருக்கும் தாமரை தின்னிகள்,
அருகில் பயணம் செய்யும் தாமரை தின்னிகள் என்று அனைவரையும் பகுத்தறிவு கப்பலில் ஏற்றி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
அப்படி அவர்களை விழிப்படைய வைத்து பகுத்தறிவு கப்பலில் ஏற்றி விடும் போது போதையில் இருக்கும் அந்த தாமரை தின்னிகளே நம்மை கிண்டலும் செய்வார்கள்தான்.
“உங்க பெரியாரால ஒண்ணும் செய்ய முடியலையே. எல்லாத்தையும். நீ என்ன செய்துரப் போற “ என்பார்கள்தாம்.
அதற்காக நாம் சோர்ந்து விடக் கூடாது.
பெரும்பான்மையானவராக இருப்பதாலே நாங்கள் சரியானவர்கள் என்று அவர்கள் சொல்வது தவறு என்ற தெளிவு பகுத்தறிவு பேசும் இளைஞனுக்கு இருக்க வேண்டும்.
அவர்கள் கிண்டல் மொழிக்காக எல்லாம் அவர்களை பகுத்தறிவு கப்பலில் ஏற்றாமல் இருக்க கூடாது.
ஏற்றி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
பெரியார் இப்போது நம்மிடையே இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் இவர்களை எப்படி பகுத்தறிவு கப்பலில் ஏற்ற வேண்டும் என்ற வழிமுறையை அவர் எழுத்தில் பேச்சில் சொல்லி வைத்திருக்கிறார்.
பெரியாரை இன்னும் இன்னும் ஆழமாக படிப்போம்.
அவர் சொன்ன வழியில் வாழ்க்கையில் குறைந்தது ஒரு தாமரை தின்னியையாவது போதையில் இருந்து மீட்டு பகுத்தறிவு கப்பலில் ஏற்றிவிடுவோம்.
பெரியாரை படிப்போம்.
சலிக்காமல் பேசிக் கொண்டே இருப்போம்.

ஆணாதிக்கம் மிகுந்த இந்தியாவில் குடிப்பது

தனிமனித சுதந்திர அடிப்படையில் குடிப்பது பெரிய தவறாகாது.
கொஞ்சம் மதுவை எடுத்து உடம்பை புத்துணர்ச்சி அடைய வைப்பதில் பெரிய பிரச்சனையில்லைதான். ஆனால் ஆணாதிக்கம் மிகுந்த இந்தியாவில் அதற்கான அர்த்தம் வேறாக இருக்கிறது.
ஆண்களின் குடி பெண்களையும் குழந்தைகளையும் அதிகம் பாதிக்கிறது.
இந்தப் பார்வையைத்தான் இளைஞர்களிடம் திரும்ப திரும்ப சொல்லி ஏற்படுத்த வேண்டும்.
ஒருவருடம் முன்பு கேள்விப்பட்ட சம்பவம் ஒன்று அச்சமயத்தில் என்னை இரண்டு நாட்களாக தூங்கவிடாமல் செய்தது.
ஒரு அப்பா தன் ஏழுவயது மகனுடன் சிறுநகர பேருந்தில் இன்னொரு பெருநகரத்துக்கு பயணம் செய்வதற்காக ஏறியிருக்கிறார்.
அவர் குடித்துப் பழகியவர். பொதுவாக குடித்து ரசித்தவர்கள் இரவு பஸ் பிரயாணத்தில் குடித்து விட்டு தூங்க விரும்புவார்கள். இந்த அப்பாவும் அதை விரும்பியிருக்கிறார். மகனை எப்படி மதுக்கடைக்கு அழைத்துச் செல்வது. முடியாது.
“நீ இதோ இங்க இருந்துக்க. அப்பாவோட சீட்ட யாருக்கும் கொடுத்திராத கேட்டியா. அப்பா இதோ ஒண்ணுக்கிருந்துட்டு வந்திர்றேன் என்ன?” என்று சொல்லிவிட்டு மதுவாங்கி அருந்த போயிருக்கிறார்.
பையன் சரி என்றிருக்கிறான். அப்பாவின் பையை இருக்கையில் பிடித்துக் கொள்கிறான்.
இறங்கி அப்பா கண் மறைவதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான். உருவம் மறைந்ததும் பயம் வருகிறது. அப்பா இங்கேதானே போயிருக்கிறார்
வந்துவிடுவார்.
இங்கே பார்க்கிறான் அங்கே பார்க்கிறான். அப்பா அருகே இருக்கும் போது சாதரணமாக தெரிந்த மனிதர்கள் அனைவரும் அப்பா அருகில் இல்லாமல் இருக்கும் போது பெரிய பெரிய உருவங்களாகவும், பயமுறுத்துபவர்களாகவும், அதிகாரமிக்கவர்களாகவும் தெரிகிறார்கள்.
ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கிறான். அப்பா வரவில்லை. தன் கால்களுக்கு கீழே இருக்கும் கடலைத் தொலிகளை, பஸ் சீட் கிழிசலை, பஸ் கம்பியின் துருவை, அத்துருவில் இருந்து கிளம்பும் உலோக வாடையை, சீட் ரிவெட்டுகளை, கண்ணாடிகளை கவனிக்கிறான். ஜன்னல் வழியே பார்க்கிறான். அப்பா வரவில்லை.
வெளியே பழவண்டி, எச்சித்துப்பல்,காய்ந்த சிறுநீர் குட்டைத்தடங்கள், உணவங்கள், டீக்கடை, டீக்கடையில் கத்தி பேசும் கண்டக்டர் டிரைவர்கள் என்று பார்த்து விட்டு அப்பாவைப் பார்க்கிறான். அப்பா வரவில்லை.
அப்பா எப்படி வராமல் போவார். வந்துவிடுவாராய் இருக்கும். இதோ இந்த கூட்டத்தில் அப்பா அப்படி தோன்றுவார். இதோ எதுவுமில்லாமல் இருக்கிறது. அதில் அப்பா அப்படி அப்படித்தான் சட்டென்று சிரித்தபடி வந்துவிடுவார். அப்படி நினைக்கிறான் அவன்.
எல்லா பொருட்களும் மனிதர்களும் அவன் கண்களில் இருந்து மறைந்துவிட்டன. இனிமேல் ரசிப்பதற்கு எதுவுமில்லை என்று அவன் மூளை அப்பதட்டத்தில் நினைத்துவிட்டது. அங்கே ஒரு வெட்ட வெளி மட்டும்தான் இருக்கிறது. வெட்டவெளியில் அப்பா தோன்றுகிறாரா இல்லையா என்பது மட்டும்தான் அவன் கவலையாகிவிட்டது. ஒரு சுற்றும் உலகத்தில் அவனிருந்தான்.
“என்ன தம்பி டேய் ரொம்ப நேரமா இங்க இருக்க. உன் கூட யாரு வந்தா. தனியா இருக்கியேன்னு கேட்டேன்”
என்கிறார் பக்கத்தில் உள்ள சீட்காரர்.
“அப்பா அப்பா வருவாங்க”
“அப்ப எங்குன போயிருக்காரு”
“பாத்ரூமுக்கு”
அவர் அமைதியாகிவிட்டார். ஏழு வயது பையனுக்கு இப்போது கண்கலங்க ஆரம்பித்துவிட்டது. மெல்ல முனகிக் கொண்டு அழக் காத்திருக்கிறான். பஸ்ஸில் கண்டக்டர் ஏறிவிட்டார். இவனைப் பார்க்க ஏதோ வித்தியாசம் தெரிய, அருகில் வந்ததும் பையன் அழ ஆரம்பித்துவிட்டான். மற்றவர்கள் எழுந்து என்ன என்று பார்த்ததும் விசாரித்ததும் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்துவிட்டான்.
“அப்பாவ காணோம். அப்பா வரல”
“எங்க போயிருக்காரு”
“பாத்ரூமுக்கு”
“யூரின் போக இவ்வளவு நேரமாகாதே. போன் நம்பர்
தெரியுமா”
“.. தெரியும்”
“சொல்லு”
“84.................”
போன் அடித்தால் நாட் ரீச்சபிள் வருகிறது. இன்னும் பலரும் போன் அடிக்க அப்போதும் நாட் ரீச்சபிள் வருகிறது.
பையன் இன்னும் அழ ஆரம்பித்துவிட்டான்.
“தம்பி வேற யாராவது நம்பர் தெரியுமா”
“சித்தப்பா நம்பர் ஞாபகமிருக்கு கொஞ்சம்”
“அவுங்க எங்க இருக்காங்க”
“இங்கதான் அவுங்க வீட்டுக்குதான் வந்தோம்”
“சரி சொல்லு”
“...84.........”
போன் செய்கிறார்கள்.
“நீங்க பையனோட சித்தப்பாவா. இங்கே இப்படி விஷயம்”
“பையன அப்படியே வெச்சிருங்க சார். நான் இன்னும் பத்து நிமிசத்துல வந்துருவேன்”
“சீக்கிரம் வாங்க சார். பஸ்ல இருந்து இறக்கியும் விட மனசில்ல. பையன் ரொம்ப அழறான். நீங்க வந்துட்டா நாங்க நிம்மதியாயிருவோம்”
“இதோ பைக்க ஸ்டார்ட் பண்ணிட்டேன் சார். பத்து நிமிசம்தான்”
பையன் அழுது கொண்டே இருக்கிறான்.
“அழாதப்பா சித்தப்பா வந்திருவாராம்”
“அப்பா எங்க”
“சித்தப்பாவ வந்துட்கிட்டே இருக்காரு”
“அப்பா எங்க ”
“வருவாரு அப்பா. சித்தப்பாவும் வந்துகிட்டே இருக்காரு”
சித்தப்பா ஒடிவந்து பஸ்ஸுக்குள் ஏறுகிறார். போய் பையனை அணைத்துக் கொள்கிறார்.
சித்தபாவைப் பார்த்ததும் பையன் ஒவென்று அழுகிறான்.
அவன் முகத்தின் சதையெல்லாம் திமிருகிறது. அந்தத் சதையைத் தாங்கும் எலும்புக் கூட திமிருகிறது. கண்கள் சுருங்கி அந்த பயந்த முகத்தில் காணாமல் போகிறது. எங்கிருந்தோ கண்ணீர் வருவது மாதிரி இருக்கிறது. பையனை இறக்கி கீழே இறங்க பையை எடுக்கும் போது அப்பா அங்கிருந்து ஒடிவருகிறார்.
அசடு வழிந்தபடி ஒடிவருகிறார். அவர் எங்கு போய்விட்டு வருகிறார் என்று அனைவருக்கும் தெரியும். பஸ்ஸில் உள்ளவர்கள் அனைவரும் கண்டபடி திட்டுகிறார்கள்.
தம்பிக்கு அண்ணனைத் திட்ட வருகிறது. ஆனால் சுற்றி உள்ளவர்கள் திட்டும் போது வேறு வழியில்லாமல் அண்ணனைக் காப்பாற்றி விடுகிறார். பஸ் எடுக்கும் நேரம் வந்தாயிற்று. அப்பா பையன் அருகே அமர்ந்து கொள்கிறார்.
பையனிடம் எதுவும் பேசவில்லை.
பையன் அப்பா தோளில் சாய்ந்து கொள்கிறான். பையன் தோளில் அப்பாவின் கைகள் விழுந்திருக்கின்றன. கூட்டம் அவரவர் இருக்கையில் அமர்ந்து பேருந்து ஒட்டத்தை ஆரம்பிக்கும் போது “நாதான் வந்திருவேன்னு சொன்னேன்லால. பிறகு எதுக்கு அழுது இவ்வளவு கூட்டத்த கூட்டினா நீ ..பொட்டப்பயல. பொம்பளையால நீ. இப்படியால அழுவ. பொட்டப்பயல” என்று சொல்லி அவன் தலையில் தன் கைமுட்டியை மடக்கி இரண்டு கொட்டு கொட்டி விட்டிருக்கிறார்.
அப்பா காணாமல் போன துன்பத்தை விட அந்த வலி கொடுக்கும் துன்பம் அவனுக்கு பெரிதாக தெரியவில்லை.
ஆனால் அந்த மனஇறுக்கமும், பதட்டமும் அவனுக்குள் படிந்து விட்டிருக்கலாம்.
தன் பையனின் பர்சனாலிட்டி வளர்ச்சியில் எவ்வளவு பெரிய கல்லைத் தூக்கிப் போட்டிருக்கிறோம் என்று தெரியாமல் அந்த குடிக்கார அப்பா தூங்கிக் கொண்டிருக்கிறார்.
நெடுநாள்வரைக்கும் அப்பா வீட்டுக்குள் வரும் போது ஒருவிதமான நடுக்கம் பையனுக்கு ஏற்பட்டு பின் சரியானது என்று கேள்விப்பட்டேன்.
இளைஞர்களே குடித்துப் பழகாதீர்கள். எதற்காகவும் எப்போதும்
ஏதாவது ஒரு இடத்தில் அது துன்பம் தராமல் போகவே போகாது.

Thursday, January 11, 2018

துளி திட்டம்

இந்த சீமான் சந்து பொந்துல பேசுறத எல்லாம் கூட எப்படி முன்னால ஒரு கேமரா பின்னால ஒரு கேமரா, audience reaction, silhoutteனு பக்கா editing பண்ணி போடுறானுங்கன்னு யோசிச்சப்ப தான் ஒன்னு புரிஞ்சது.
ஐரோப்பாவில் படித்த காலங்களில் புலம் பெயர் ஈழத் தமிழர் வீடுகளுக்குப் போனால், "ஓயாத அலைகள்" 1, 2, 3னு விடுதலைப்புகள் களத்தில் போராடும் live war sceneகளை dvdகளில் போட்டுப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
அப்படிப் பார்ப்பவர்கள் தாலிக்கொடி முதற்கொண்டு அனைத்தையும் கழற்றி புலிகளுக்கு அனுப்பி வைப்பார்கள் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
சீமானின் பேச்சுகள் தான் அவரது marketing material. அவருக்குப் பணம் கொடுப்பவர்கள் வெளிநாடுகளில் உட்கார்ந்து அதனை இணையத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
2009 பேரழிவுக்குப் பிறகு புலிகளுக்குக் காசு கொடுத்து வளர்த்து விட்டு பெருந்தவறு செய்து விட்டோம் என்று பல புலம்பெயர் தமிழர்கள் வெளிப்படையாகவே புலம்பினார்கள்.

----

வணக்கம்,

உலகத் தமிழர்களையெல்லாம் ஒன்றிணைத்து தமிழர் உரிமை வென்றிட நாம் தமிழர் கட்சி மிகுந்த வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. ஊடகங்களால் நாம் செய்யும் நற்பணிகள் மற்றும் போராட்டங்கள் மறைக்கப்படுகின்றது. இருந்தாலும் நம்மால் இயன்ற வழியில் மக்களை சென்றடைகிறோம்.

மக்களை சென்றடைய, நம்மிடம் இப்பொது இருக்கும் மிகப்பெரிய தேவைகளில் ஒன்று தான் நிதி.
அதை சரி செய்ய நாம் எடுத்திருக்கும் திட்டம் தான் " துளி திட்டம் ".

ஒவ்வொரு மதமும் 1000 பேர் 1000 ருபாய். இதை பற்றி சீமான் அண்ணன் ஒரு காணொளி வெளியுட்டுள்ளார். நீங்க நாம் தமிழர் இணையத்தில் காணலாம்.

https://youtu.be/.......

இந்த நிதியானது, அலுவலகம் / சம்பளம் / பதாகைகள் / மேடை அமைத்தல் போன்ற அனைத்து விதமான கட்சி பணிகளுக்கும் பயன்படும்.
நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு மாத மாதம் ரசீதும் அனுப்பபடும்.
ஒவ்வொரு மாதமும் செலவு கணக்குகளை ஈமெயில் மூலம் மாத இறுதியில அனுப்ப முடிவெடுத்துள்ளோம்.

மேலும் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை நாம் தமிழர் கூட்டம் (கானபெரென்ஸ் கால் ) நடைபெறுகிறது. அதில் உங்களுடைய கருத்துக்களை நீங்கள் தெரிவிக்கலாம்.


Reminder:NTK Meeting Invite
Agenda: thuli thittam
Date: Every (Wednesday)
Time:6.00PM-PST/ 8.00PM-CST/ 9:00 PM-EST
Audio: Dial-in Number: United States  (555) 123-4567
Access Code: 123456
Online Meeting Link:
https://www.***.com/naamtamilar_northamerica

தங்களுக்கு ஏதுனும் சந்தேங்கள் இருந்தால் நாம் தமிழர் அமெரிக்க பொறுப்பாளர்கள் உதவுவார்கள்.
தங்களுது நேரத்திற்கு மிக்க நன்றி.

நாம் தமிழர் !!!!!!

வைரமுத்துகளின் நிலைமைதான் எல்லோருக்கும்

‘தீரர்’ சத்தியமூர்த்தி அய்யரின் வாரிசுதாரர்களான தினமணி வைத்தியநாதய்யர்களின் அனுக்ரகத்தில் பெருமை தேட நினைக்கும் வைரமுத்துகளுக்கு ஹெச்.ராஜா சர்மாக்களிடமிருந்து வசவுகள்தான் மிஞ்சும். என்னதான் வெள்ளை வெளேரென ‘ஆம்பளை’ சுடிதாரும், பக்தி இலக்கிய ஃபேர் அண்ட் லவ்லியும் போட்டு மேடையேறினாலும், பிறப்பிலேயே அமைந்த இயல்பான கறுப்பு நிறம்தான் அவாள்களின் கண்களுக்குத் தெரியும். எத்தனை யுகங்களானாலும் பிறப்பின் அடிப்படையிலேயே மனிதர்களைப் பார்க்கும் மைக்ராஸ்கோப் கண்கள் கொண்டவர்களாயிற்றே! 
ஆண்டாளையா தேவதாசி குலத்தில் பிறந்ததாகச் சொன்னாய் என கவிப்பேரரசு மீது பாய்ந்து பிறாண்டுகின்றன ஒரிஜினல் ஆன்மிக அரசியல் ஓநாய்கள். பேரரசின் பரம்பரைக்கே டி.என்.ஏ. டெஸ்ட் நடத்துகிறார்கள். எதிரில் நிற்கும் படைக்கு முன்னால், இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி போல ‘வெள்ளைக் கொடி’ உயர்த்துவது தவிர வேறு வழியில்லை கவிப்பேரரசுக்கு.
வின்னர் வடிவேலு பாணியில், ‘உன் தாய் பத்தினின்னு ஒத்துக்குறேன்’ என வருத்தம் தெரிவித்து, எவர் மனமும் புண்பட்டிருந்தால் அதற்கு புணுகு தடவத் தயார் எனச் சொல்லி, அடுத்தடுத்த விருதுகளுக்கு ஆபத்தில்லாதபடி காத்துக் கொண்டது கவிப்பேரரசின் சாமர்த்தியம். நம்மாளு ஒருத்தர் இத்தனை சாமர்த்தியத்துடன் இருக்கிறார். அத்துடன் எப்போதும் கலைஞரின் நண்பர் என்பதை உரக்க உரைக்கிறார் என்பதில் நமக்கும் பெருமகிழ்ச்சிதான்.
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் யாருக்குப் பிறந்தார் என்பது நமக்குப் பிரச்சினையல்ல. ஆண்டாளை தேவதாசி என்று யாரோ எழுதியதை மேற்கோள்காட்டிப் பேசிய கவிஞர் குற்றவாளி என்றால், தேவதாசி என்ற முறையை கோவில்களில் புகுத்தி, பெண்களை இழிவும் அடிமையும்படுத்தி, ஆயிரம் ஆண்டு காலத்திற்கு அதனைக் குலத்தொழிலாக மாற்றி வைத்த பெருங்குற்றவாளிகளை யார் அடையாளப்படுத்துவது? பேசியவரைத் தண்டிப்போம் என்பவர்கள், ஆயிரங்காலத்து அவமானத்திலிருந்து மீளமுடியாத சமூகங்களையும் பிறப்பின் அடிப்படையிலான பேதங்களையும் உருவாக்கியவர்களுக்கும் அதனைக் கட்டிக்காத்து அரசியல் செய்பவர்களுக்கும் என்ன தண்டனைத் தரப்போகிறார்கள்? ஆண்டாளை விட்டுவிடுவோம். அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆண்டுகொண்டிருப்போரை என்ன செய்யப்போகிறோம்?
வைரமுத்துவை நோக்கி ஹெச்.ராஜா வகையறாக்காளல் வீசப்பட்ட வார்த்தைகள் என்பவை சூத்திரனாக்கப்பட்ட-அதற்கும் கீழான நிலைக்குத் தள்ளப்பட்ட அனைவரின் மீதும் காலங்காலமாக வீசப்படும் வார்த்தைகள். சூத்திரன் என்றால் வேசி மகன் என எழுதி வைக்கப்பட்டிருப்பதை எடுத்துச் சொன்ன பெரியாரும், இந்து என்றால் திருடன் என அகராதியில் சொல்லப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டிய கலைஞரும் மதஉணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாக அவாள்களைவிட இவாள்கள் போடும் பெருங்கூச்சல்களும் காலந்தோறும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
புண்படுத்தலாமா எனக் கேட்டபடி அவர்களுக்கு, நமது பின்புறத்தை வசதியாக காட்டிக் கொண்டே இருக்கும்வரை வைரமுத்துகளின் நிலைமைதான் எல்லோருக்கும்.
தி.பி.2048 மார்கழி 26

Wednesday, January 10, 2018

ஆதிக்க வர்க்க திமிர்க்கு தேவதாஸி முறை பெண்களை பலி கொடுத்தது.

கிராமத்து வீட்ல மாக்கான் ,பக்கிரின்னு ரெண்டு பேர் மாடுகளை பார்த்து கொள்ளும் வேலைக்கு வருவாங்க. நான் சொல்வது 99/2000 அந்த வருடங்கள நடந்தவை.. இருவருக்கும் 15 வயதுகுள் தான் இருக்கும்..
காலைல வந்து மாடுகளை குளத்தில் குளிப்பாட்டி தீவனம் வைத்து புல் அறுத்து போட்டு கொட்டகைல மாத்தி கட்டனும். எங்க வீட்ல சாப்ட்டு அங்கிருந்தே ஸ்கூல் போகனும்...சாயந்திரம் வந்து மாட்டுக்கு தீவனம் வத்து வைக்கோல் போட்டு வேற கொட்டகைல மாத்தி கட்டிட்டு..எங்க வீட்லயே டி வி பாப்பாங்க..நைட் சாப்ட்டு வீட்டுக்கு போவாங்க .

மாக்கான் நல்லா சாப்டுவான்.தட்ல சாதம் போட்டா பத்தாது..சில்வர் பேஸின்ல தான் சாதம் போடனும்.. ஒரே முறைல சாதம் போட்றனும்..அம்மா தான் சாதம் போடுவாங்க. பேஸன வச்சுட்டு இந்தாரு.( அம்மாவ அப்டி தான் கூப்டுவான் ) உன் புருஷனுக்கு சோறு போடற மாதிரி போடாத குழம்புக்கு ஒரு முறை ,ரசத்துக்கு ஒரு முறைன்னு ..மொத்தமா கொட்டு அப்டின்னு சொல்வான்..

நான் அம்மாகிட்ட மரியாதையா பேசு மாக்கான்னு சொன்னா...எனக்கு தெரியும் .உன் வேலை பாரு...நீ என்னங்கம்மான்னு கேப்ப . ஆனா எதயாவது எடுத்து குடுன்னு கேட்டா போம்மா உனக்கு வேலை இல்லன்னு போவ. நான் அது எத தேடுதுன்னு கண்ண வச்சே கண்டுபுடிச்சு கேக்றதுக்கு முன்ன எடுத்து தருவேன் .உன்ன விட எனக்கு மரியாதை தெரியும் மூடிகிட்டு போன்னு திட்டுவான்.
சாப்பாட்ட சுவர் பக்கம் திரும்பி உட்கார்ந்து மறச்சு தான் சாப்டுவான். எங்க கண் பட்றுமாம்.நான் தான டா சோறு போடறேன் எனக்கு தெரியாதான்னு அம்மா கேட்டா உன்னால இவ்லோ சோறு திங்க முடியாது. உனக்கு வேலை குறவு வயிறு கொல்லாது ..ஆனா நான் 100 கிலோ மூட்டை ஈசா தூக்குவேன்..எனக்கு இவ்லோ சோறு வேணும்...உன்னால முடிலன்னு உன் வயறு பொறாமை படும்..அதான் மறைச்சு சாப்டறேன் .போய்ட்டே இரு .வேடிக்கை பாக்காதன்னு அம்மாவ தொறத்திடுவான்..

சாயந்திரம் டியூஷனுக்கு அப்பா கூப்டா வர மாட்டான்..அம்மா டியுஷன் போலன்னா சோத்த கொறச்சுடுவேன்னு மிரட்டினா கடனேன்னு வந்து உட்காருவான்..
. ஏன் இது இப்ப ? மாக்கானோட அப்பாவும் என் சித்தப்பாவும் அச்சு அசல் ஒரே மாதிரி இருப்பாங்க..என் தாத்தா தன் மைனர் வேலைக்கு தந்த பலி மாக்கானோட பாட்டி..அவங்க எங்க வீட்ல பண்ணை கூலியா வேலை பார்த்தவங்க.
தேவதாசி முறை என்பது தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் அதிகம் தஞ்சாவூர், திருவாரூர், நாகைபட்டினம் , ஆச்சாள் புரம் ,பெரம்பூர் பகுதிகளில் தேவதாசி குடும்பத்தினர் அதிகம் வசித்தனர்.
ஏன் தஞ்சை மாவட்டத்தில் அதிகம் என்ற விவாதத்தின் போது .தஞ்சை மாவட்டம் முப்போகம் விளையும் பகுதி.நல்ல விளைச்சல் ,நல்ல காசு, நல்ல உணவு , விவசாய வேலை வருடத்தில் மூன்று மாதம் தான் வேலை இருக்கும் .நிறைய காசும் ஓய்வும்.தின்னு புட்டு சும்மா இருக்க முடியாம எல்லா மைனரும் திமிர் எடுத்து அலைஞ்சது . அவர்கள் பொழுது போக்க சங்கீதம் ,நடனம் , தஞ்சை மாவட்டத்தில் வளர்க்க பட்டது..ஏற்கனவே பக்தி அதிகம் அப்றம் கேட்கவா வேணும் .ஊருக்கு ஒரு பொண்டாட்டி. அதும் பத்தாததுக்கு வீட்ல வேலை செய்பவர்கள்..என்று அப்பா சொல்ல கேட்டது.
என் அப்பாவோட தாத்தாவுக்கு அப்பா பெரம்பூர்ல ஒரு கீப். அவங்களுக்கு அல்வா பிடிக்கும்னு அந்த பாட்டி கோதுமை அல்வா கிண்டி டப்பால போட்டு. கார் பின் சீட்ல வச்சுடுமாம்..அவங்க எடுத்துப்பாங்களாம்..(கொழுப்புன்னா கொஞ்ச நஞ்ச கொழுப்பில்ல..எல்லாத்தையும் சோறே போடாம சித்திரை மாசம் வெய்யில்ல காவிரி ஆத்து மண்ல காய போடனும்.).
ஆதிக்க வர்க்க திமிர்க்கு தேவதாஸி முறை பெண்களை பலி கொடுத்தது. நீதி கட்சி ஆட்சியில் தேவதாஸி முறை ஒழிக்கபட்டதும். சட்டமன்ற் விவாதத்தில் முத்துலெட்சுமி அம்மா தந்த பதிலும் நாம் அறிந்தது தான்...
எவனாவது தேவதாசி முறை தெய்வ வழிபாடு என்று சொன்னால் அது அயோக்கியத்தனதின் முதல் வரி. வேணும்னா ஆண்கள் தேவதாஸன்களா இருந்துக்கங்கடான்னு நடு மண்டைல கொட்டனும்..

Tuesday, January 09, 2018

கா. நமச்சிவாயனார்

கா. நமச்சிவாயனார்
தமிழ் உலகில் பெரும் புலமைக்குச் சொந்தக் காரர் வரிசையில் கா. நமச்சிவாயனார் அவர் களுக்குப் பெருமை மிக்க இடம் உண்டு.
திராவிடர் இயக்கம் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறியும் திராவிடர் திரு நாள் பொங்கல் என்றும் மக்களிடையே பரப்பி தமிழர் பண்பாட்டுத் திசை யில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது என்பது கல்லில் செதுக்கப்பட்ட எழுத்தாகும்
அந்தக் கால கட்டத் தில் (1934இல்) தமிழின் உயர்வினை கா. நமச் சிவாயனார் கீழ்க்கண்ட வாறு பாடுகிறார்.
தேனினும் இனிய நாத செந்தமிழ் மொழியே
தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே
ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே
உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே
வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே
மாந்தருக் கிருகணா வயங்குதென் மொழியே
தானியல் சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே
தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே!
என்று தமிழுணர்வின் பெருமையைப் பாடினார் கா. நமச்சிவாயனார்.
அவர் குறித்துத் தந்தை பெரியார் கூறும் ஒரு தகவல் - அந்தக் கால கட்டத்தில் தமிழின் - தமிழரின் நிலை எப்படி இருந்தது என்பதனை விளக்கவல்லதாகும்.
முன்பெல்லாம் ஒரு காலேஜில் ஒரு சமஸ் கிருத புரொஃபசர் வாங் கும் சம்பளத்துக்கும், தமிழ்ப் பண்டிதர் (புரொஃபசர்) வாங்கும் சம்பளத்துக்கும் மலை அளவு வித்தியா சம் இருக்கச் செய்தது. அரசாங்கத்தில் சமஸ் கிருதம் படித்தவனுக்கு அவ்வளவு சலுகை! சமஸ் கிருத புரொஃபசருக்கு ரூ.350 சம்பளம்.
தமிழ்ப்பண்டிதருக்கு 75 ரூபாய்தான்சம்பளம் சமஸ்கிருத ஆசிரியருக்குப் பெயர்- புரொஃபசர்; தமிழ் ஆசிரியருக்குப் பெயர் - ஆசிரியர்.
காலஞ்சென்ற பேராசிரியர் திரு கா.நமச்சிவாய - முதலியார் அவர்கள் பிரசிடென்சி காலேஜில் புரொஃபசராக இருந்த போது வாங்கின சம்பளம் ரூபாய் 81 என்பதாகத் தான் ஞாபகம் - அதே நேரத்தில் அங்கு சமஸ் கிருத புரொஃபசராக இருந்த திரு. குப்புசாமி சாஸ்திரி (என்ற ஞாபகம்) என்பவர் வாங்கிய சம் பளம் சுமார் ரூ.300க்கும் மேல்; ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கத்தில் முதல் மந்திரியாக இருந்த திரு பனகல் ராஜா அவர்களே இதைக் கண்டு மனம் கொதித்து என்னிடத்தில் நேரில் சொல்லி, நீங்கள் இதைக் கண்டித்து ஒரு தலையங்கம் எழுதுங்கள்! என்றும் சொன்னார். பிறகு அரசாங்க உத்தரவு போட்டு அதன் மூலம் இவ்வேற்றுமையை ஒழித்தார் என்று தந்தை பெரியார் எழுதினார்.
(விடுதலை 15.2.1960)
இது ஒரு பானை சோற் றுக்கு ஒரு பருக்கைப் பதம்!
குறிப்பு: இன்று பெரும் புலவர் கா.நமசிவாய (முதலி யார்) பிறந்த நாள் (1876).
- மயிலாடன்
தேவதாசி என்ற வார்த்தை க்கு தான் சங்கிகள் இறைவனுக்கு தொண்டு செய்யும் மகளிர் என அர்த்தம் கற்பித்தார்களே பின் ஏன் ஆத்திரபடுகிறார்கள்

"தேவதாசி" முறையை புண்ணியம் / ஆண்டவனுக்குச் செய்யும் தொண்டு / பாக்கியம் அப்புடீன்னு சொன்ன கூட்டம் தான் இன்னக்கி கவிஞர் வைரமுத்துவ கரிச்சு கொட்டுது...
இதன்மூலமா,
1. அவங்க வாயாலேயே "தேவதாசி" முறை எவ்வளவு கொடுமையானதுன்னும் ஒத்துக்குறாங்க
2. பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட மக்கள எப்புடி எல்லாம் ஏமாத்தி கொடுமை படுத்தீருக்காங்கன்னு புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் உருவாக்கி குடுத்துருக்காங்க
"தேவதாசி" முறைய ஒழிக்க பாடுபட்ட அனைத்து முன்னோர்களுக்கும் ஒரு பெரிய கும்புடு

சீமானை விரட்டி அடிப்பது முக்கியமானது

யாருக்கு சாதியைப் பற்றியும், மதத்தைப் பற்றியும், முதலாளித்துவ பயங்கரவாதத்தைப் பற்றியும் எந்தக் கருத்தும் இல்லையோ, அவர்கள் மொழியையையும், இனத்தையும் வைத்து அந்த இடத்தை நிரப்புகின்றார்கள்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இந்தப் போக்கு மிக அதிகமாகக் காணப்படுகின்றது. அனைத்து வகையிலும் தமிழர் நிலத்தை தமிழன்தான் ஆளவேண்டும் என்ற ஒற்றை முழக்கத்தையும், அதன் பின்னணியில் இருந்தே அனைத்து வகையிலும் தமிழகத்தை முன்னேற்ற முடியும் என்ற கருத்தையும் முன்வைக்கின்றார்.
உண்மையில் சீமானுக்கு தமிழ்மக்களின் நலனில் அக்கறை இருக்குமானால், அவர் அனைவரையுமே தமிழர்கள் என்றே கருதுவாரேயானால், வீதிக்கு வந்து சாதிவெறியர்களுக்கு எதிராக களமாடட்டும்.
ஒரு வன்னிய தமிழனும், தேவர் தமிழனும், கவுண்டர் தமிழனும் பறையர் வீட்டிலும், பள்ளர் வீட்டிலும் பெண் கொடுத்து பெண் எடுக்க வேண்டும் என்று குறைந்த பட்சம் நாம் தமிழர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அவர் கட்சிக்குள்ளேயாவது உத்தரவு போடட்டும், அதைக் கட்டாயமாக்கட்டும். இதை ஒன்றுமட்டும் செய்தார் என்றால் கூட அவரது நேர்மையை, தமிழர்கள் மீதான அவரது உண்மையான அன்பை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அதைச் செய்யாமல் தமிழன், தமிழ் இனம், தமிழ்மொழி என்று பேசுவதும், சாதியை அடிப்படையாக வைத்து அனைவரையும் தமிழன் - தமிழன் அல்லாதவன் என மிரட்டுவதும் கீழ்த்தரமான பாசிச நடவடிக்கையாகும்.
ரஜினியை தமிழக அரசியல் களத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது சீமானை விரட்டி அடிப்பது. சாதியத்தை தாங்கி நிற்கும் பார்ப்பன இந்து மதத்தையும், அதனுடன் கள்ள உறவு வைத்திருக்கும் முதலாளித்துவத்தையும் வீழ்த்த வேண்டும் என்றால், அதனோடு தொடர்பு வைத்திருக்கும் அனைவரையும் நாம் சமரசமற்று எதிர்த்தாக வேண்டும் - அது ரஜினியாக இருந்தாலும் சரி, இல்லை சீமானாக இருந்தாலும் சரி.

ஆண்டாள் தேவதாசி

ஆண்டாளை, "தேவதாசி பெண்ணாக இருக்கக்கூடும்" என்று வைரமுத்து சொல்லி விட்டாராம். தமிழ்நாட்டு காவி கூட்டத்திடம் இருந்து கண்டனங்கள் தெறிக்கின்றன.
தேவதாசி என்றால் இவர்கள் ஏன் பதற்றப்படுகிறார்கள்?
தேவதாசி வழக்கத்தை கோயிலுக்குள் நுழைத்து, பெண்களை விபச்சாரம் செய்வதற்கு 'தேவதாசி' என்ற இந்து பண்பாடு வளர்த்தவர்களுக்கு இன்று தேவதாசி என்றால் அவமானமாக இருக்கிறதா?
இந்த மானம் / அவமானம் உணர்வை உருவாக்கியதே திராவிடர் பேசிய பகுத்தறிவு தானே?
மார்கழி மாதத்தில் நாய்கள் மஜாவுக்கு அலைவது போல், ஆண்டாளின் மார்கழி மாத புலம்பல் ஒப்பாரிகளை 'மார்கழி மாதத் திருப்பாவை' என்று இன்றும் கொண்டாடித் திரிய வேண்டுமா?
"என் பெரிய முலை மார்புகள் உனக்குத் தான்..."
"உன்னுடன் ஒவ்வொரு நாளும் செக்ஸ் செய்தே தீர வேண்டும்..."
"என் சாய்ந்த முலைகளால் உன் உடல் முழுவதும் தடவ வேண்டும்..."
இப்படி ஏராளமான காமக் கிளர்ச்சி வார்த்தைகளால் நாரயணன் கோயிலேயே கிடந்து,,,, தினம்,,, தினம் காமம் கொள்ள துடித்துக் கொண்டிருந்த ஆண்டாள், 'ஏன் தேவதாசியாய் இருந்திருக்கக் கூடாது?' என்கிற ஆய்வுக்கு வைரமுத்து வரக் காரணம் எது?
அந்நாளைய குடும்பப் பெண்களுக்கும் கடவுளுக்கு என்று நேர்த்தி விடப்பட்ட தேவதாசி (விபச்சாரம்) பெண்களுமான பழக்க வழக்கங்களிலும் உள்ள வேறுபாடுகள்.
தேவதாசி பெண்கள் கோயிலுக்குள் பெரும்பாலும் இசை நாட்டியம் பாடல்கள் கோயிலுக்கு வரும் ஆண்களுடன் காமம் கொள்ளுதல் என்பதை இந்து மதம் அங்கீகரித்த இந்து பண்பாட்டு முறையை பகுத்தறிவால் தகர்த்தது பார்ப்பன ஆரியனா? பகுத்தறிவு பேசிய திராவிடமா?
இன்று ஆண்டாளை தேவதாசி என்று சொல்லிவிட்டதால் பதறும் பதர்கள் சிந்திக்க வேண்டும். ஆண்டாள் காமத்தில் உழன்று காமப் பாடல்களால் தன் சுயஇச்சைகளில் திருப்தி கொண்ட ஒரு பெண்ணாக மட்டுமே பார்க்க முடியுமே தவிர,,, அவள் போற்றிப் புகழும் ஆரிய திருப்பாவையாக அறிவார்ந்த சமூகம் விரும்பாது!

ஆன்மிக அரசியல் & நீதிக்கட்சி

ஆன்மிக அரசியல் என்பது தமிழ்நாட்டிற்குப் புதியதல்ல. அது திராவிட இயக்கத்திற்கு எதிரானதும் அல்ல. ஆன்மிகத்தை எப்படி கையாளவேண்டும் என்பதை அரசியல் களத்தில் ஆயுதமாக ஏந்திய வரலாறு அதற்கு உண்டு. சரியாக சொல்லவேண்டும் என்றால், திராவிடத்தின் முதல் அரசியல் இயக்கமான நீதிக்கட்சி தோன்றியதே ஆன்மிக உரிமையினால்தான்.
100 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பவுன் தங்கம் 10 ரூபாய்க்கும் குறைவாக விற்ற காலத்தில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் திருப்பணிக்கு 10ஆயிரம் ரூபாய் நிதியளித்தார் சென்னை மாநகராட்சித் தலைவராக (முதல் மேயர்) இருந்த பிட்டி.தியாகராயர். குடமுழுக்கு நாளில் பிராமணர்கள் பலர் கோபுரத்தின் மீது நின்றனர். ஆனால், 10ஆயிரம் கொடுத்த தியாகராயர் பிராமணரல்லர். ஒரு சூத்திரர் என்பதால் அவரை கோவில் கோபுரத்தின் மீது ஏற விடவில்லை. பிறப்பின் காரணமாக அவருக்கு அந்த உரிமையில்லை என்று தடுத்தவர், சென்னை (மா)நகராட்சியில் அவரிடம் வேலை பார்த்த பிராமண வகுப்பைச் சேர்ந்த ஒரு குமாஸ்தா. அந்த குமாஸ்தா பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்.
திருப்பணிக்கு பணம் வாங்கும்போது பிறப்பில் பேதம் தெரியாத நிலையில், கோபுரத்தில் ஏறவும், கருவறையில் நுழையவும் பிறப்பின் அடிப்படையில் பேதம் காட்டப்படுவதால் விரக்தியும் கோபமும் அடைந்த தியாகராயர் அங்கிருந்து வெளியேறி, டி.எம்.நாயரையும் நடேசனாரையும் சந்தித்ததன் விளைவுதான், மூவரும் இணைந்து 1916-ல் உருவாக்கிய நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம். ஆன்மிக உரிமையின் காரணமாக தொடங்கப்பட்ட திராவிட இயக்கம் கல்வி-வேலை வாய்ப்பு என அனைத்து நிலையிலும் சமூக நீதியை நிலைநாட்டி, இந்தியாவுக்கே வழிகாட்டியானது.
1920ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் நடைபெற்ற சென்னை மாகாணத்திற்கான தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சமூக நீதி அடிப்படையிலான அதன் செயல்பாடுகளில் ஆன்மிக உரிமையும் அடங்கியிருந்தது. அதன் விளைவுதான் 1925-ல் பனகல் அரசர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்து அறநிலைய பாதுகாப்பு மசோதா. இதனைக் கொண்டு வருவதற்கு முன்பாக சங்கராச்சாரியார் உள்ளிட்ட "இந்துமத மேலோர்'களிடமும் "நூலோர்'களிடமும் ஆலோசனை பெற்று அதன் பின்னரே, 1925-ல் சட்டமாக நிறைவேற்றினார் பனகல் அரசர் ராமராய நிங்கர். அதுபோலவே, குறிப்பிட்ட சமூகத்து பெண்களை கோவில் பணி என்னும் பெயரில் இழிவாக நடத்தும் தேவதாசி முறையை ஒழிக்கும் சட்டமும் நீதிக்கட்சி ஆட்சியில் 1929-ல் நிறைவேற்றப்பட்டது.
அதனைப் பொறுக்க முடியாத காங்கிரஸ் தலைவரான சத்தியமூர்த்தி அய்யர் சட்டமன்றத்திலேயே, ""தாசிகள் கோவில் பணிகளுக்கெனப் படைக்கப்பட்டவர்கள். அது சாஸ்திர சம்பந்தமானது. அதை ஒழிப்பதென்பது கடவுள் கட்டளையை மீறும் அடாத செயலாகும்'' என்றார். அதற்கு பதிலளித்த தமிழக சட்டமன்றத்தின் முதல் பெண் உறுப்பினரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ""இது கடவுள் தொண்டு என்றால் அந்த தொண்டினை ஒரு குலத்துப் பெண்கள் மட்டும்தான் செய்யவேண்டுமா? உங்கள் சமூகம் உள்பட மற்ற குலத்துப் பெண்கள் ஏன் செய்யக்கூடாது?''’என்று சத்தியமூர்த்தியைப் பார்த்துக்கேட்டு "ஷட் அப்' செய்தார்.
நாத்திகரான பெரியாரின் பங்கேற்புக்குப் பிறகு நீதிக்கட்சி வேகம் பெற்று, திராவிட இயக்கத்தின் அரசியல் புதிய பரிணாமத்தை அடைந்தபோதும், ஆன்மிக உரிமைகளில் சமூக நீதி என்பது மேலும் தீவிரமான போராட்டமாக மாறியது. பெரியாருடன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் உள்ளிட்ட சமய அறிஞர்கள் ஆரியத்திடமிருந்து தமிழை மீட்பதில் இணைந்திருந்தனர். தமிழகத்திலும் மலேயாவிலும் (மலேசியா-சிங்கப்பூர்) சுயமரியாதை பிரச்சாரத்தை பெரியார் மேற்கொண்டபோது, அவருக்கு போட்டியாக ஆன்மிக பிரச்சாரம் செய்ய அனுப்பப்பட்டவர்தான் குன்றக்குடி அடிகளார். பின்னர் இருவரும் சந்தித்தபோது, ஆரியத்தின் பிடியிலிருந்து ஆன்மிகத்தை விடுவித்து, சமூக நீதியை நிலைநாட்டுவதில் பெரியாருடன் இணைந்து செயல்பட்டார் குன்றக்குடி அடிகளார்.
ஆன்மிகத்திலும் "சமூகநீதி' என்கிற அரசியல் ஆயுதத்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் உறுதியாகக் கையாண்டது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கோவிலில் நாடார் சமூகத்தினர் உள்ளிட்ட பலரை அனுமதிக்க மறுத்ததை எதிர்த்து 1926-ல் கோவில் நுழைவுக் கிளர்ச்சி நடந்தது. 1927-ல் "திராவிடன்' இதழ் ஆசிரியர் ஜே.எஸ்.கண்ணப்பர் திருவண்ணாமலை கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கப்பட்ட ஆதிதிராவிடர்களை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்ததற்காக அவர்களை கோவிலுக்குள்ளேயே வைத்துப் பூட்டிய கொடுமையும் நடந்தது. இது தொடர்பாக வழக்கும் போடப்பட்டு பின்னர் விடுதலையடைந்தனர்.
1927-ல் திருச்சி- மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துக் கொண்டு சென்ற சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த இராமநாதனை தடுத்துத் தாக்கிய அடியாட்கள், கோவிலில் நுழைய முயன்றவர்களைப் படிக்கட்டுகளில் உருட்டிவிட்டார்கள். அதே ஆண்டில், மயிலாடுதுறை மயூரநாதசாமி கோவிலுக்குள் அனைத்துச் சாதியினரையும் அழைத்துச் செல்லும் போராட்டம் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் தலைமையில் நடந்தது.
1929-ல் ஈரோடு -கோட்டை ஈஸ்வரன் கோவிலில் ஆதி திராவிடர் சமூகத்தினரை அழைத்துக் கொண்டு பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும் குத்தூசி குருசாமி, பொன்னம்பலனார் போன்றோரும் நுழைந்தனர். அவர்களை உள்ளே வைத்துப் பூட்டிய கும்பல், இரண்டு நாட்களுக்கு கதவைத் திறக்கவில்லை. திராவிட இயக்கம் மேற்கொண்ட இந்தப் போராட்டங்களுக்குப் பிறகு, 1939ஆம் ஆண்டில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருடன் ஆலயப் பிரவேசம் செய்தார் காங்கிரஸ் தலைவர் வைத்தியநாத அய்யர். அந்தப் போராட்டத்திற்குப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உறுதுணையாக இருந்தார்.
கோவிலுக்குச் சென்று வழிபடுகிற உரிமை மட்டுமல்ல, கருவறையில் வழிபாட்டை நடத்துகின்ற உரிமையும் அனைத்து சமூகத்தினருக்கும் வழங்கவேண்டும் என்பதற்கான போராட்டக் களத்திற்குப் பெரியார் தயாரானார். இதனையடுத்து, 1970-ல் தமிழ்நாடு அரசின் அர்ச்சகர் சட்டத்தை கலைஞர் அரசு கொண்டு வந்தது. அதற்கு நீதிமன்றம் மூலம் நடைமுறைத் தடைகளை ஏற்படுத்தியபோது, அந்த உரிமைப் பறிப்பை, "தன் நெஞ்சில் தைத்த முள்' என்று பெரியார் குறிப்பிட்டார். 2006-ல் தி.மு.க. ஆட்சி அமைந்தபோது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஆகமப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. பயிற்சி பெற்ற பல சமூகத்து அர்ச்சக மாணவர்களும் தங்கள் உரிமைக்கான சட்டப் போராட்டத்தை ஆரியச் சதியை எதிர்த்து இன்றளவும் நடத்தி வருகிறார்கள்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தமிழகத்தின் தனிப்பட்ட ஆன்மிக முறையை ஆரியம் அழிக்க முற்படுவதும் அதனை எதிர்த்து தமிழகம் போராடி மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதும் வள்ளுவர் காலத்திலிருந்து வள்ளலார் காலம்வரை தொடர்ந்து, தற்போதும் நீடிக்கிறது. இந்து மதத்தை அமெரிக்காவரை பரப்பி புகழ்பெற்ற சுவாமி விவேகானந்தரிடமே, ""நாங்கள் இந்துக்களல்ல, திராவிடர்கள். எங்கள் சமய நெறிமுறை மாறுபட்டது''’என்று விளக்கம் சொன்ன மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை போன்ற திராவிட அரசியல் இயக்கத்துக்கு முற்பட்டவர்களும் உண்டு. சிதம்பரம் நடராஜர் கோவிலின் சிற்றம்பலத்தில் தமிழ் மந்திரமான தேவாரம் ஒலிப்பதற்கு தடை போட்ட ஆரியத்தை எதிர்த்து முழங்கிய ஓதுவார் ஆறுமுகசாமி பக்கம் நின்று போராடிய மனித உரிமை பாதுகாப்பு மையம் போன்ற திராவிட இயக்க அரசியலுக்குப் பின்னர் தோன்றிய முற்போக்கு அமைப்புகளும் உண்டு.
தமிழ்ப் பண்பாட்டின் மீதான படையெடுப்பை ஆரியம் நேரடியாகவும் மேற்கொள்ளும், தனது கைக்கூலிகள் வழியாகவும் கையாளும். தமிழையே ஆயுதமாக ஏந்தி ஆரியத்தின் பிடியிலிருந்து இம்மண்ணில் ஆன்மிகத்தைக் காத்த அரசர்களும் புலவர்களும் உண்டு. அதற்காக உயிர்நீத்தவர்களும் உண்டு. கொலை செய்யப்பட்டவர்கள் உண்டு. கழுவில் ஏற்றப்பட்டவர்கள் ஏராளம்.
வருணாசிரமக் கோட்பாட்டின் அடிப்படையில் பகவத்கீதையில் சொல்லப்படும் நான்கு வருணங்களைக் கொண்டு பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவன்-தாழ்ந்தவன் எனப் பிரித்து வைக்கும் ஆன்மிக முறையைக் கையாள்கிறது ஆரியம்.
வள்ளுவர் வகுத்த ‘"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'’ என்கிற குறள் நெறியின் அடிப்படையில் அனைத்து மக்களுக்குமான ஆன்மிக சமத்துவத்தை வலியுறுத்துகிறது திராவிடம். இதனைத்தான் தமிழகத்தில் உள்ள இடதுசாரி இயக்கங்கள், சமூகநீதி சக்திகள், ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான அமைப்புகள் உள்ளிட்டவையும் முன்னிறுத்துகின்றன.
ஆன்மிக அரசியலை ஆதரிப்பவர்கள் சமஸ்கிருத பகவத் கீதை வழியைக் கையாளப் போகிறார்களா? தமிழ்மறையான திருக்குறள் பாதையில் நடக்கப் போகிறார்களா? தேர்ந்தெடுக்கும் முறையில் அடங்கியிருக்கிறது ஆன்மிக அரசியலின் உண்மை முகம்.
-மாவலி (நக்கீரன்)

எச்ச. ராஜா கலைஞர் ஜெயலிதா வாஜ்பாயி அத்வானி

கடவுளை விமர்சித்ததால்தான் கலைஞரின் பேச்சை கடவுள் புடுங்கிட்டார்.
- எச்ச. ராஜா
அட வெண்ண, நீ முதல்ல 90 வயசுவரைக்கும் தாங்குறையான்னு பாரு... அப்புறம் பேசலாம்..
"வாழ்நாள் முழுவதும் கடவுளை வணங்கிய வாஜ்பாயிக்கு அதை புடுங்கியது யார்? வெளியே கூட காட்டமுடியாம "மம்மி" கணக்கா வெச்சிட்டு இருக்கீங்க..
விதவிதமான பூஜை புனஸ்காரங்கள், ஏராளமான யாகங்கள், மந்திரங்கள், கோயில் வழிபாடுகள் என வாழ்ந்த ஜெயலிதாவின் பீசை சீக்கிரமாகவே பிடுங்கியது யார்??
அதைவிடக் கொடுமை. ராமனுக்காக கோயில் கட்டப்போகிறேன் என்று நாடு முழுவதும் ரத யாத்திரை நடத்திய அத்வானி இன்று ஆளும் பா.ஜ.கவின் உதிர்ந்த ரோமமாக, அரசியல் அனாதையாக ஆகிவிட்டது எதனால்?"
என்று நாங்களும் கேட்கலாம். ஆனால் கேட்கமாட்டோம் 

"சித்தி விநாயகனே" என்ற பக்தித் தமிழ்ப் பாட்டுப்பாடியதால் தீட்டான மேடை

"சித்தி விநாயகனே" என்ற பக்தித் தமிழ்ப் பாட்டுப்பாடியதால் தீட்டான மேடையை, சாணம் போட்டு கழுவிய வரலாறு தெரியுமா??
//இசைக்கு சாதி கிடையாது - பாடகர் ஸ்ரீநிவாஸ்.//
முன்பு இசைக்கு மொழி கிடையாது என்று சொல்லிக்கொண்டு இருந்தீர்கள்.
ஆனால் உங்கள் பாட்டன் கள் இசைக்கு மொழி உண்டு சாதி உண்டு என்றல்லவா செய்து காட்டிவிட்டு சென்றுள்ளார்கள்.
திருவையாறு தியாகப் பிரம்ம உற்சவத்தில், தியாகய்யர் அஞ்சலியில் பாட்டுப் பாடிய தண்ட பாணி தேசிகர் - அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைக் கல்லூரி பேராசிரியர், "சித்தி விநாயகனே" என்ற பக்தித் தமிழ்ப் பாட்டுப்பாடி மேடையை அசுத்தப்படுத்தி தீட்டாக்கி விட்டார் என்றுகூறி, அடுத்துப் பாட வந்த பார்ப்பன சங்கீத வித்துவான் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் மேடையை சாணம் போட்டு மெழுகி சுத்தம் செய்த பிறகே பாடுவேன் என்று அடம் பிடித்ததை மறுக்க முடியுமா?
இதுபற்றி குடிஅரசில் (9.2.1946) "தீட்டாயிடுத்து" என்று கலைஞர் எழுதியதுண்டே!
ராகவேந்திரா மண்டபத்தில் எப்படி மட்டன் பிரியாணி கூட போட முடியாதோ, அதுபோல மியூசிக் அகாதமி யில் கானா கன்சர்ட் பண்ண முடியாது. இரண்டிலும் மொழி, சாதி, அரசியல் எல்லாம் உள்ளது.

தேவதாசி குலம் குறித்து

தேவதாசி குலம் குறித்து 1901 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கொடுக்கும் விளக்கம் என்னவென்றால், “வேறு வேறு சாதிகளை சேர்ந்த ஆண் - பெண் இருவரின் தவறான நடத்தையால் பிறக்கும் பெண்களே கோயில்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டார்கள். கோயில்களில் பாட்டு, நடனம் என்பது இவர்களது தொழில்” என்கிறது.
தேவதாசிமுறை ஒழிப்பு தொடர்பான மசோதா, 1920களின் இறுதியில் சென்னை மாகாண சட்டமன்றத்தில் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரால் கொண்டுவரப்படுகிறது. அதை எதிர்த்துப் பேசிய அன்றைய காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி அய்யர், “தேவதாசிகள், ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள். புனிதத்தன்மை பெற்றவர்கள். இந்த மசோதா மூலமாக சமூக ஒழுங்கு கெடக்கூடும். சமூகத்துக்கு தாசிகள் தேவை. இவர்கள் இல்லாவிட்டால் சங்கீதம் மற்றும் பரதக்கலை அழிந்துவிடும்” என்றெல்லாம் எதிர்த்துப் பேசினார். முத்து லட்சுமி ரெட்டி கொடுத்த பதிலடி மிகவும் பிரபலம்.
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் ஒரு மகளிர் கல்லூரியில் பரதநாட்டியம் தொடர்பான ஒரு கருத்தரங்கம் நடந்தது. அப்போது பரதநாட்டிய மங்கையான சொர்ணமால்யா விழாவில் கலந்துக்கொண்டு தேவதாசி முறையை ஆதரித்துப் பேசினார். என் நினைவு சரியாக இருக்குமேயானால் “தாசிகள் என்போர் கடவுளர்களின் துணைவியர்” என்று சொல்லியிருந்தார். திராவிட இயக்கம் தேவையில்லாமல் அரசியல் செய்து அந்த புனித முறையை ஒழித்தது என்று பேசி, கடுமையான எதிர்ப்புகளை சம்பாதித்தார்.
தினமணி விழாவில் கவிஞர் வைரமுத்து, அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்த ‘Indian movement : some aspects of dissent, protest and reform' என்கிற நூலில், “Aandal was herself a devadasi" என்று குறிப்பிடப்பட்டிருப்பதை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார். இப்போது வைரமுத்துவை யார் எதிர்க்கிறார்கள், எதற்கு எதிர்க்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ள மேற்கண்ட பத்திகள் உதவலாம்.

பிஜேபி ஹெச்.ராஜா & தேவதாசி

பிஜேபி ஹெச்.ராஜாவுக்கு வாழ்த்துகள்.. "தேவதாசி" குறித்து இப்போதுதாவது உண்மையை ஒப்புக்கொண்ட ஹெச்.ராஜாவுக்கு பாராட்டுக்கள்..
தனது பார்ப்பன வகுப்பை சேர்ந்த ஆண்டாளை, "தேவதாசி" என எப்படி குறிப்பிடலாம்?? என்று கவிபேரரசு வைரமுத்துவை தரக்குறைவாக பிஜேபி ஹெச்.ராஜா பேசும் காணொளியை பார்த்தேன்.. மனம் குளிர்ந்தேன்.. இதற்கு காரணமான தந்தை பெரியாரின் பெரும் தொண்டை நினைவுக்கூர்ந்தேன்.. காரணம் கீழே....
பார்ப்பன வகுப்பை சேர்ந்த ஆண்டாளை தேவதாசி என வைரமுத்து சொன்னது மகா தவறு, ஆண்டாளுக்கு மிகபெரிய இழுக்கு என்றால், அந்த "தேவதாசி" என்னும் சொல் ஹெச்.ராஜாவை எந்தளவுக்கு கொந்தளிக்க வைத்துள்ளது என்பது புரிகிறதா?? அப்படியென்றால், ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை, பெரிய ஹிந்து கோயில்களில், இந்த தேவதாசி முறை நடைமுறையில் இருந்துவந்ததே.. அதை நிறுத்தக்கூடாது என அப்போதை ஹிந்து வகுப்புவாதிகளும், ஹெச்.ராஜா போன்றோரின் முன்னோர்களும் கடுமையாக எதிர்த்து ஏன்??
குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை கோவில்களுக்கு பொட்டுக்கட்டி "தேவதாசிகளாக", பார்ப்பன் புரோகிதர்கள், கோயில் முக்கியஸ்தர்கள், ஊர் பணக்காரர்களுக்கு தாசிகளாக மாற்றும் முறையை ஒழிக்க "தேவதாசி ஒழிப்பு" மசோதாவை, 1930 ஆம் ஆண்டில் கொண்டு வந்து அம்முறையை முற்றிலும் ஒழித்தது திராவிட இயக்கத்தின் முன்னோடியான அப்போதைய நீதிக்கட்சி அரசு. தேவதாசி ஒழிப்பு மசோதாவை கொண்டுவந்து, அதை சத்தியமூர்த்தி அய்யர் போன்ற பெரிய பார்ப்பனத் தலைவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சட்டமாக மாற்ற பெரும்பாடுபட்டவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
நீதிக் கட்சி ஆட்சியில் (1930) தேவதாசி ஒழிப்பு மசோதாவை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கொண்டு வந்தபோது,
திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர்வாள் பஞ்சக்கச்சத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு, பூணூலை முறுக்கிக் கொண்டு இப்படித்தான் சட்டமன்றத்திலே முழங்கினார்.
கோயில்களிலே தேவதாசிகளாக இருப்பது, தேவர்களுக்கு அடியார்களாக இருப்பது என்பது சாதாரண காரியமல்ல; அது தெய்வத் தொண்டு - இந்தப் பிறவியில் தேவதாசிகளாக இருந்தால், அடுத்த ஜென்மத்தில் மோட்சம் கிடைக்கும் -
தெய்வ காரியத்தில் அரசு தலையிடக் கூடாது என்று கூச்சல் போட்டார்.
தந்தை பெரியாரிடம் அறிவுரை கேட்டார் டாக்டர் முத்துலட்சுமி - மறுநாள் அதன்படி சட்டமன்றத்தில் பேசினார்.
`மோட்ச லோகம் செல்வதுபற்றி திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் நேற்று அவையிலே பேசினார். இதுவரை எங்கள் குலப் பெண்கள் - தேவர்களுக்கு அடியார்களாக இருந்து, எங்கள் பெண்களே தொடர்ந்து மோட்சத்துக்குப் போய்க் கொண்டு இருக்கிறார்கள்.
இனிமேல் திருவாளர் சத்தியமூர்த்தி அய்யரின் பரம்பரையினர் கோயிலுக்குப் பொட்டுக் கட்டி விடப்பட்டு, தேவடியாள்களாக இருந்து, அந்தமோட்ச லோகத்துக்குப் போகட்டுமே - அதில் எங்களுக்கு எந்தவித அட்டியும் இல்லை என்று சொன்னாரே பார்க்கலாம் - வாயாடி சத்தியமூர்த்தி அய்யர் வாயில் ஆயிரம் ஊசிகள் போட்டுத் தைத்தது போல அடங்கி உட்கார்ந்து விட்டார்..
இப்போது சொல்லுங்கள், ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை பார்ப்பன கும்பல் காப்பாற்ற போராடிய "தேவாதாசி" என்னும் சொல், இப்போது எச்ச.ராஜா அய்யர்வாள்களுக்கு எட்டிகாயாய் கசக்க தந்தை பெரியாரும், திராவிட முன்னோடியான நீதி கட்சியும், டாக்டர் முத்துலட்சுமி அமையாரும் தானே காரணம்.
வாழ்க தந்தை பெரியார்.. வளர்க அவர் தொண்டு..

Monday, January 08, 2018

பார்ப்பனீய சம்பாஷணை

மணி: ஏன்டா சேஷா ! நம்ம தலைவர்களான ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி , ரெங்கசாமி அய்யங்கார் , சீனிவாச சாஸ்திரி, சிவசாமி அய்யர், ஊ.ஞ. அய்யர் மற்றுமுள்ள பிராமணோத்தமர்கள் எல்லாம் இந்த எலக்ஷனில் எவ்வளவோ பாடுபட்டு மடாதிபதிகள் மகந்துகள் பணத்தை லட்சக்கணக்காக செலவு செய்து ஜெயித்து விட்டோம், ஜெயித்து விட்டோம் என்று தப்பட்டை அடித்தார்களே, கடைசியில் பார்க்கிறபோது பழையபடி மூன்று சூத்திரர்கள் தானே மந்திரிகளாய் விட்டார்கள். இதில் என்ன நமக்கு லாபம். ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, ரெங்கசாமி அய்யங்கார். ஆ.மு ஆச்சாரியார், வெங்கிட்ட ரமணய்யங்கார் இவர்களெல்லாம் மந்திரிகளாய் வருவார்கள் என்றல்லவா நாம் எல்லோரும் எவ்வளவோ பாடுபட்டோம். கணக்கு, மணியக்காரர், காப்பிக் கடை, பஞ்சாங்கம், புரோகிதம், வக்கீல் குமாஸ்தா, வக்கீல், முனிசீப், ஜட்ஜ், நிர்வாக சபை எல்லாம் பாடுபட்டும் பழையபடி சூத்திர ராஜாங்கம்தானே ஆகிவிட்டது.
சேஷன்: மணி! நீ என்ன பெரிய முட்டாளாயிருக்கிறாயே. நமக்கு எவ்வளவு பெரிய வெற்றி தெரியுமா? இந்தப் பணகால் ராஜாவை ஒழிச்சமே அது ஒன்றே போதுமே.
மணி: பணகால் என்ன அவ்வளவு மோசமான ஆசாமியா?
சேஷன் : அட பயித்தியமே! நம்ம கூட்டத்திற்கே இந்த ஆள் பெரிய எமனாக வல்லவா 6 வருஷமாய் வந்து உட்கார்ந்துக் கொண்டு பிராமணாள் வாயில் நிரந்தரமாய் மண்ணை போடத்தக்க மாதிரி எவ்வளவோ வேலை செய்து சூத்திரர்களை யெல்லாம் கை தூக்கி விட்டார். நீயே நன்றாய் கவனித்துப் பார். பணகால் மந்திரியானபிறகு, சூத்திரன்களில் எவனாவது பிராமணனைக் கண்டால் சுவாமி என்கிறானா? கும்பிடுகிறானா? பிராமணன் என்கிற மரியாதை வைத்துப் பேசுகிறானா? இதை நினைத்தால் வயிறு எரிகிறதே.
மணி: நீ சொல்வது தப்பு. இன்னமும் கிராமாந்திரங்களில் எவ்வளவு பெரிய மிராஸ்தாரானாலும் ஒரு சின்ன பிராமணப் பையனைக் கண்டால் எழுந்து நிற்கிறான். வாங்க, வாங்க சாமி என்று குனிந்து கும்பிடுகிறான். இந்தப் பையன் அடே போடா வாடா என்று பேசினாலும் அவர்கள் அதை இழி வாய்க் கருதுவதில்லை. கிராமாந்திரங்களில் தாசிகள் பிராமணாளிடத் தில் பணமே வாங்குவதில்லை. பிராமணன் என்றால் இன்னம் எவ்வளவோ காரியங்கள் நடக்கிறது. சும்மா பனகால் மீதில் வீண் பழி சுமத்துகிறாயே.
சேஷன்: அட மண்டுவே! நீ பட்டிக்காட்டான் ஆனதினால் கிராமத்து சங்கதியை கட்டிக் கொண்டு அழுகிறாய். பட்டண வாசல்களில் நடக்கும் அபாயம் உனக்கு என்ன தெரியும்? காப்பிக்கடையில் போய் பார். முன்னெல்லாம் சுவாமி சுவாமி ஒரு இட்டெலி கொண்டு வாருங்கள் என்று வணக்கமாய் கேட்பார்கள். இப்போது ஓய் ஐயரே இட்டிலி கொண்டு வா என்று அதிகாரம் பண்ணுகிறான். வக்கீல்களைக் கண்டால் நடுங்குகிறவர்கள் இப்போது குடியானவன் கூட வாய்யா போய்யா என்கிறான். தாசி வீட்டிற் குப் போனால் பிச்சை எடுக்கிற பார்ப்பானுக்கு தேவடியா ஒரு கேடா என்கி றாள். பெரிய பெரிய அதிகாரமுள்ள உத்தியோகத்தில் எல்லாம் சூத்திரன் களே வந்துவிட்டார்கள். தாலுக்கா, ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி இது களில் சூத்திரன்களே நிறைந்து விட்டார்கள். ஒரு பிராமணன் அந்தஸ்துக்கு வரவேண்டுமானால் எவ்வளவோ திருப்தி செய்ய வேண்டியதாயிருக்கிறது. பனகாலினால் பிராமணனுக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமோ? பட்டிக் காட்டான் நீ என்ன கண்டாய்!
மணி: நீ சொல்லுகிறபடி எனக்குத் தோன்றவில்லையே. எங்கு பார்த்தாலும் முனிசீப்புகள், ஜட்ஜுகள், அங்குள்ள குமாஸ்தாக்கள் எல்லாம் நம்ம பிராமணாளாகத்தானே இருக்கிறார்கள். நீ நன்றாய் கவனித்து பாரு.
சேஷன்: சரி! சரி!! அது ஒன்றுதான் நமது தலைவர்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு சூத்திரன்கள் கைக்குப் போகாமல் வைத்திருக்கிறார்கள். அதுதான் உன் கண்ணுக்கு தெரிகிறதாக்கும். இதில் பனகாலுக்கு ஒரு அதிகா ரமும் இல்லை தெரியுமா? அல்லாமலும் அந்த இலாக்கா சட்ட மெம்பர் என்கின்ற பேரால் நமது பிரம்மஸ்ரீ சி.பி.ராமசாமி அய்யர்வாளண்டையில் இருக்கிறது. அல்லாமலும் அந்த அதிகாரமுள்ள ஐகோர்ட் ஜட்ஜிகளுக்கு எவ்வளவோ நல்ல பிள்ளைகளாய் நம்மவர்கள் நடந்து கொண்டிருப்பதால் அதில் நம்மிடவளே ரொம்பி இருக்கிறார்கள். இல்லாவிட்டால் எத்தனை சாயபு முனிசீப்பாய் விடுவார்? எத்தனை கிறிஸ்தவர் முனிசீப்பாய் விடு வார்? எத்தனை கவரை நாயுடு, முதலி, செட்டி, பிள்ளை முதலிய ஆள்கள் முனிசீப், ஜட்ஜிகளாக வந்து விடுவார்கள் தெரியுமா? ஒரு மலையாளி ஐகோர்ட்டுக்கு வந்ததில் எத்தனை ஜட்ஜி, முனிசீப்புகள் மலையாளிகளாக வந்து விட்டார்கள் பார். என்னமோ நம்முடைய நல்லவேளை சுயமரியாதை உள்ள சூத்திரன்கள் ஐகோர்ட்டில் சரியானபடி இல்லாததால் நம்ம பாடு இவ்வளவிலாவது இருக்கிறது.
மணி: மற்ற இலாக்காக்களில் நம்மிடவாள் இல்லையென்றா சொல்லு கிறாய்.
சேஷன்: இருந்தென்ன பிரயோஜனம். நாமே ஏகபோகமாய் அனுப வித்து வந்தது போய் இப்போது அவர்களும் நமக்கு கிட்டக் கிட்ட சரியாய் வந்து விடுவார்களே. மெடிகல் இலாக்கா என்கிற வைத்திய இலாக்காவிலும் இந்த பனகால் வெள்ளைக்காரன்கள் தலையிலும் கையை வைத்து எல்லாம் சூத்திரன் களாகவே கொண்டு வந்தாய் விட்டது. அதனால்தான் வெள்ளைக் காரர்களுக்கும் பனகாலைக் கண்டால் பிடிக்கிறதில்லை.
மணி: வெள்ளைக்காரனை ஒழித்தது நல்லது தானே?
சேஷன்: நீ சுத்த அசடாயிருக்கிறாயே! நீ பிராமண விந்தே அல்ல போல் இருக்கிறது. வெள்ளைக்காரன் இல்லாவிட்டால் நம்ம பாடு ஆபத்து தானே. அது தெரியுமா? வெள்ளைக்காரனை எப்படியாவது சரிபடுத்திக் கொண்டு நாம் சுகமாக காலம் கழிக்கலாம். சூத்திரன்கள் வந்து விட்டால் நம்ம கதி அதோ கதிதான். அவன் சூத்திரன்களையே தேடித் தேடி உத்தி யோகத்திற்கு நியமிப்பான். வெள்ளைக்காரனைச் சரிபடுத்த நமக்குத் தெரிந்த தந்திரமும் நமக்குள்ள சௌகரியமும் சூத்திரன்களுக்குக் கிடையாது. இருந் தாலும் செய்ய மாட்டார்கள். பிராமணாதிக்கம் வேண்டுமானால் வெள்ளைக் கார உத்தியோகமும் ஆதிக்கமும் இருப்பதே மேல்.
மணி : அப்படியானால் நம்ம பிராமணாள்தானே சுயராஜ்யம் வேணும், சுயராஜ்யம் வேணும் என்றும், இரட்டை ஆட்சி ஒழிய வேண்டும் என்றும், பூரா சுயராஜ்யம் அதாவது வெள்ளைக்கார ஆதிக்கமேகூடாது என்றும் சத்தம் போடுகிறார்கள். அப்படி இருக்க நீ வெள்ளைக்கார ஆதிக்கம்தான் பிராமணாளுக்கு நல்லது என்கிறாயே! அதன் இரகசிய மென்ன?
சேஷன்: அட கேனமே! அதெல்லாம் சும்மா, சும்மா. வெள்ளைக் காரருக்கும் நமக்கும் இரகசிய ஒப்பந்தம். “நான் நோகாமல் அடிக்கிறேன் நீ ஓயாமல் அழு” என்கிற மாதிரி சூத்திரன்களை ஏமாற்ற நம்மிட பெரியவாள் ஏற்பாடு செய்து வைத்த தந்திரம். உண்மையான சுயராஜ்யம் வந்தால் பிராமணாள் சங்கதி பெரிய ஆபத்தாயல்லவா முடியும். இவ்வளவு உத்தியோகமும், பணமும், அதிகாரமும், பதவியும் பிராமணாளுக்குக் கிடைத்து விடுமா? எல்லாவற்றையும் சூத்திரன்கள் பிடுங்கிக் கொள்வார்கள். ஒரு சப்பட்டை மந்திரி உத்தியோகப் பனகாலால் எத்தனை சூத்திரன் களுக்கு உத்தியோகம் வந்து விட்டது. இரட்டை ஆட்சியை ஒழிப்பது என்பதன் இரகசியம் உனக்குத் தெரியாதா? எல்லா உத்தியோகமும் அதிகாரமும் வெள்ளைக்காரன் கையிலே இருக்க வேண்டும். எங்களுக்கு கொடுத்தது தப்பு. அது சூத்திரன்களுக்கே அநுகூலமாய் போய்விட்டது. இப்படி ஆகுமென்று தெரியாமல் கேட்டு விட்டோம். ஆதலால் திரும்பவும் நீயே எடுத்துக் கொண்டு ஒத்தை ஆட்சி ஆக்கிக் கொள் என்பதுதான் அதன் தத்துவம்.
மணி : அது சரி, பூரா சுதந்திரம் என்பது என்ன?
சேஷன்: அது ரொம்ப இரகசியம். விளையாட்டுக்காவது அப்படிச் சொன்னால் தான் பாமர ஜனங்கள் நம்முடன் சேருவார்கள். தவிர, கதர், தீண்டாமை, மதுவிலக்கு இதெல்லாம் பனகால் எடுத்துக் கொண்டு வேலை செய்யப்போவதாக கேள்விப்பட்டதால் அதற்கும் மேலாக மிகவும் தீவிர மான கொள்கை நம்மிடம் இருப்பதாக ஜனங்கள் நினைக்கும்படி காட்டிக் கொள்ள வேண்டாமா? அதற்காகத்தான் இந்த தோது செய்தார்கள். தவிரவும் இப்படிச் சொன்னால்தான் வெள்ளைக்காரரும் நம்மையே நம்புவார்கள். ஏனென்றால் ஒரு சமயம் அம்மாதிரி கிளர்ச்சி ஏற்பட்டு விட்டால் என்ன செய்கிறது என்று பயந்து நம்மிடவாள் இடமே எல்லா பெரிய உத்தியோகத் தையும் நம்பிக் கொடுத்து வைப்பான். சூத்திரனிடம் கொடுத்தால் ஒரு சமயம் தங்களை எதிர்த்தாலும் எதிர்த்து விடுவார்கள் என்கிற பயம் இப்போதும் வெள்ளைக் காரருக்கு உண்டு.
உண்மையான முழுச் சுதந்திரம் கேட்பவர்கள் நடந்து கொள்வதைப் பார்த்தே நீ தெரிந்து கொள்ளக் கூடாதா? விடிந்தெழுந்தால் வெள்ளைக் காரர்களிட கச்சேரிக்கு போய் அவர்களைக் கெஞ்சி µ 10, 20 ஆயிரம் வக்கீலிலும், ஜட்ஜிலும், முனிசீப்பிலும், கலெக்டர் முதலிய பல உத்தியோகத் திலும் சம்பாதிப்பவர்கள் வெள்ளைக்காரர்களை ஓட்டுவதாக சொல்ல முடியுமா?
மணி: சரி, அப்படியானால் பனகால் போனது பிராமணாளுக்கு நல்லதாச்சுது. சில சூத்திரன்களும் பணகால் போகணும் போகணும் என்று கத்தினான்களே அதென்ன?
சேஷன்: அதெல்லாம் நம் ஸ்ரீநிவாசய்யங்கார் மடாதிபதிகளிடம் வாங்கின பணத்தைக்கொண்டு சில சூத்திரன்களுக்கு கூலி கொடுத்து கத்தச் சொன்னது தானே. நிஜமாலுமா அவன்கள் கத்தினான்கள்?
மணி: அது சரி, மறுபடியும் வந்திருக்கும் சூத்திர மந்திரிகள் பணகால் மாதிரி ஆகமாட்டார்களா?
சேஷன்: ஒருக்காலும் ஆகமாட்டார்கள்.
மணி: அதென்ன அவ்வளவு தைரியம்?
சேஷன் : இந்த மந்திரிகள் மூன்று பேரும் நம் தலைவர்களால் சாணியில் பிடித்த பிள்ளையார்கள் போல்தானே. நாம் சொல்லுகிறபடி கேட்டுக் கொண்டிருக்கிற வரையில் அவர்கள் பிள்ளையார்கள் (மந்திரிகள்) தான். கொஞ்சம் தவறினால் உடனே சாணிப் பிள்ளையாரை எருவாமுட்டை (நம்பிக்கை இல்லாத தீர்மானம்) தட்டி விட மாட்டார்களா? அந்த பயம் அவர்களுக்கும் உண்டு. இவ்வளவு பாடுபட்ட நம்மடவாளுக்கு இது தெரியா மல் இருக்குமென்றா நினைத்தாய்? தவிரவும் சூத்திரன்களைக் கொண்டே சூத்திரன்கள் கண்ணைக் குத்துவது நல்லதே ஒழிய நாம் பிரவேசித்தால் பார்ப்பான் செய்து விட்டான் என்று கூப்பாடு போடுவான்கள். உதாரணமாக காஞ்சீபுரம் மகாநாட்டில் ஒருவன் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானம் கொண்டு வந்ததற்கு ஒரு சூத்திரன் பிரசிடெண்டாயிருந்ததினால்தான் நமது தலைவர்கள் வெகு சுலபத்தில் அத் தீர்மானத்தை மீட்டிங்குக் கூட கொண்டு வராமல் தள்ளச் செய்ய சவுகரியமாயிருந்தது. பாமர ஜனங்களும் நம்பி னார்கள். அப்படிக்கில்லாமல் ஒரு பிராமணன் அந்த ஸ்தானத்தில் இருந்தி ருந்தால் கட்டாயம் அத்தீர்மானம் நிறைவேறியேயிருக்கும். அல்லாமலும் அத்தீர்மானத்தை ஒரு பிராமணன் தள்ளியிருந்தால் பெரிய கூப்பாடு போட்டிருப்பான்கள். ஆதலால் இப்படி இருப்பதுதான் நல்லது.
மணி: சரி !சரி! எனக்கு இப்போதுதான் புரிந்தது. நானும் இனிமேல் இம்முறைகளைக் கைக்கொள்ளுகிறேன்.
(குடி அரசு - உரையாடல் - 19.12.1926)

நமது பாரம்பரிய அரிசி பற்றிய Whatsup பதிவு

நமது பாரம்பரிய அரிசி பற்றிய Whatsup பதிவு ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. நல்ல விசயம்தான். பாரம்பரிய நெல் ரகங்களை பயிர் செய்ததில் என்னுடைய கேள்விகள் மற்றும் அனுபவங்கள்.

  • கருப்பு கவுணி : மன்னர்கள் சாப்பிட்ட அரிசி
  • புற்றுநோள் வராது இன்சுலின் சுரக்கும்
  • மாப்பிள்ளை சம்பா : நரம்பு, உடல் வலுவாக்கும், ஆண்மை
  • பெருகும்.
  • பசுங்கார் அரிசி  : சுகப் பிரசவம், தாய்ப்பால் பெருகும்
  • காட்டுயானம் : நீரழிவு, மலச்சிக்கல் புற்று நோய் சரியாகும்.
  • கருத்தக்கார்ர் : மூலம், மலச்சிக்கல் சரியாகும்.
  • புத்தர் சாப்பிட்டது.
  • காலா நாமக் : மூளை, நரம்பு, இரத்தம் சரியாகும்
  • மூங்கில் : மூட்டு வலி, முழங்கால் வலி சரியாகும்
  • அறுபதால் குறுவை : எலும்பு குணமாகும்
  • தங்கச்சம்பா : பல், இதயம் வலுவாகும்
  • கருங்குறுவை : இழந்த சக்தியை மீட்டுத் தரும்
  • குடை வாழை : குடல் நோய் சரியாகும்
  • கிச்சிலி சம்பா : இருடி, சுண்ணாம்பு சத்து அதிகம்
  • கார் அரிசி : தோல் நோய் சரியாகும்
  • நீலம் சம்பா : இரத்த சோகை நீங்கும்
  • சீரகச் சம்பா : அழகு தரும்
  • துய மல்லி : உள் உறுப்புகள் சரியாகும்
  • சேலம் சன்னா : தசை, நரம்பு வலுவாகும்
  • பிசினி அரிசி : மாதாவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
  • வாடான் சம்பா  : அமைதியான துக்கம்


1. மொத்தமாக அறுவடை முடிந்தவுடன் விற்று பணம் ஈட்ட முடியுமா?
என்னால் முடியவில்லை. ஆனால் 4/5 மூட்டைனு ஒரு 4 மாதத்தில் உண்மை தமிழர்களிடம் சில்லரையாக விற்கப்பட்டது.
பாடம்: பணம் மொத்தமாக தேவை என நினைக்கும் விவசாயிகள் இந்த பரிட்சையில் இறங்கி கதறவேண்டாம்.
2. உங்க பக்கத்து வயல் விவசாயி ஆந்திரா பொண்ணி போட்டு உங்கள் பாரம்பரிய ரகத்தினை விட இரு மடங்கு விளைச்சல் எடுத்து உடனே மொத்தமாக விற்று உங்களை ஏளனமாக பார்ப்பார்.
நீங்கள் தற்சார்பு வாழ்வியலை பின்பற்றாத விவசாயி இல்லை எனில் இந்த ஏளன பார்வையை கடந்து செல்வது கடினம்.
3. கருப்புகவுணி போட்டு விற்கமுடியாமல் கதறிய பல பசுமை/பச்சைபொய் விகடன் விவசாயிகளை நான் அறிவேன்.
பாடம்: Modern உண்மை தமிழன் பாரம்பரிய அரிசியை சாப்பிடுவதில்லை. Whatsup share செய்யும் உண்மை தமிழரில் 0.00000001% மட்டுமே பாரம்பரிய அரிசி சாப்பிடுகிறார்கள்.
4. நெல்லை ஒரு 6 மாதத்திற்க்கு பாதுகாக்க இடமும் அனுபவமும் இல்லை எனில் பாரம்பரிய நெல் சாகுபடியை கடந்து செல்லவும்.
மேலும் தொடரும்.....
இந்த பயணத்தில் எங்களுக்கு உதவிய உண்மை தமிழனில் ஒருவனான நண்பன் Sriram Ramani மற்றும் Surya farms and hotels owner திரு.மோகன்தாஸ் அவர்களுக்கும் மிக்க நன்றி.
உண்மை தமிழன் எனில் இந்த பதிவினை கடந்து செல்லவும்.

இயற்கை விவசாயத்தின் யதார்த்த நிலை என்ன?

இயற்கை விவசாயத்தின் யதார்த்த நிலை என்ன? என்கிற கேள்விக்கு நிறைய அனுபவ பகிர்வுகள் வந்து சேர்ந்தன. கூடவே யோசனைகளும், அறிவுரைகளும், ஏளனங்களுமாக. ஏளனங்களுக்கு பதிலளித்து, அவர்களது மகிழ்ச்சியை குலைக்க விரும்பவில்லை.
சில யோசனைகளை பரிசீலிப்பது அவசியம் என்று பட்டது. அதன் குறை நிறைகளை விவாதிப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் தோன்றியது. சில விமர்சனங்களையும் பொருட்படுத்த வேண்டும் என்று தோன்றியது. அவற்றை பரவலாக விவாதிக்க வேண்டும் என்று நினைக்கிறன்.
விமர்சனம்
கார், பங்களா வாங்க வேண்டும் என்று நினைப்போர் இயற்கை விவசாயத்திற்குள் இறங்காதீர்கள். இது ஒரு தவம், அனுபவம், வாழ்வியல் etc etc.
தவம் என்று நம்புவோர் மேலும் தவம் செய்து முக்தி அடைய வாழ்த்துக்கள். என்னுடைய(மற்றும் பலருடைய) எதிர்பார்ப்புகள் கார், பங்களா வாங்குவது பற்றியல்ல. உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரின் பிறந்த நாளுக்கு உங்களால் துணிமணி இயற்கை விவசாயத்தில் சம்பாதித்த பணத்தில் வாங்கித்தர இயலுமா? உங்கள் பிள்ளைகளின் மேற்படிப்புக்கு தங்குதல், உணவு, போக்குவரத்து செலவுக்கு உங்ககளால் இயற்கை விவசாய லாபத்திலிருந்து ஆதரவளிக்க இயலுமா என்பது பற்றியே. கடன் வாங்கிய பணத்திற்கு வட்டி கட்டுவது பற்றி பிறகு கவலை படலாம், வட்டியே இல்லாமல் கடன் கொடுத்தால் கடனை அடைக்க முடியுமா என்பது பற்றியே இந்த விவாதம்.
யோசனைகள்
1) பல பயிர் சாகுபடி: ஒரே பயிரை பயிரிடாமல், பல பயிர்களை பயிரிட்டால் ஒவ்வொன்றிலும் குறைவான உற்பத்தி மற்றதை சமன் செய்யும். அதை சந்தையில் எளிதாக விற்க முடியும்.
2)விவசாயியே விற்பனையாளர்: ஒவ்வொரு உழவனும் விற்பனையாளாக மாற வேண்டும். முகநூல் வாட்ஸாப் போன்ற தொடர்பு ஊடகங்கள் வழியாக தங்கள் விற்பனையை மேம்படுத்தி கொள்ள இயலும். லாபமும் சம்பாதிக்கலாம்.
3) ஒருங்கிணைந்த பண்ணையம்: வெறும் பயிரையே நம்பி இருக்காமல், ஆடு, மாடு கோழி, பன்றி, மீன் போன்றவற்றை வளர்ப்பதன் மூலம் விவசாயி மீண்டு வரமுடியும்.
மேற்படி யோசனைகளின் குறை நிறைகளை நண்பர்கள் தங்கள் அனுபவத்தை வைத்து விவாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நண்பர்கள் தங்களது கருத்துக்களை தெளிவாக பகிர்ந்து கொண்டால் உபயோகமாக இருக்கும்.

விவசாயி எந்தப்பொருளையும் உற்பத்தி செய்ய தயார்தான். வணிகம்தாங்க சிக்கல்.

விவசாயி எந்தப்பொருளையும் உற்பத்தி செய்ய தயார்தான்.
வணிகம்தாங்க சிக்கல்.
அழுகக்கூடிய பொருட்களை பெரிய அளவில் உற்பத்தி செய்தால் விற்கவே முடியாது.
தக்காளி நட்டால் அன்றே விற்க வேண்டும்.
கீரை மணிக்கணக்குதான்.
கத்தரி இரண்டு நாளுக்குள்.
இந்த ஆர்கானிக் வணிகர்கள் நடச்சொல்லி நச்சரிக்கிறார்கள்.
விளைந்தபிறகு எடுக்கச்சொன்னால் எனக்கு நாலு பாக்ஸ் போதுமென்பார்கள்.
நாற்பது பாக்ஸ் வந்திருக்கும்.
அடுத்து மார்க்கெட்டுக்கு தூக்கிக்கொண்டு ஓட வேண்டும்.
பூச்சிக்கொல்லியின்றி, ரசாயனமின்றி விளைந்தவற்றின் உருவம், அளவு, நிறம் ஆகியவை கவர்ச்சியாக இருப்பதில்லை.
நீங்கள் ரசாயனமல்லாத முறையில் விளைவித்ததற்கு தண்டனையாக10%விலைகுறைப்பு கிடைக்கும்.
விளைச்சலும் சற்று குறைந்திருக்கும்.
உழைப்பு கூடுதல். ஆள்கூலியெனில் கூடுதல் செலவு.
உள்ளூர் கட்டில்கடை வணிகத்துக்கு மட்டும்தான் சரிவரும்.
பழைய கட்டில்கடை வியாபாரம்.
பெண்களுக்கான சிறுவாடு.
பெரிய அளவு உற்பத்தி இந்த இயற்கை வணிகர்களை நம்பி செய்வது முட்டாள்தனம்.
திருப்திக்காக என்கிறார்கள்.
திருப்திக்காக வேறு வருவாய் உள்ளவர்கள் செய்யலாம்.
விவசாயத்தையே நம்பியிருப்பவர்கள் என்ன செய்ய?

விரக்தியான விவசாயியும்/ வெறுக்க தக்க வியாபாரமும்

# விரக்தியான விவசாயியும்/ வெறுக்க தக்க வியாபாரமும் #
இன்று நம் "வள்ளுவம் பண்ணையில்" இயற்கை வழி விவசாயத்தின் வழி விளைந்த அவரைகாய் 14.5கிலோ'வை உள்ளூர் ஏலக்கடையில் விற்க போனேன்
சந்தை ஏலத்தில் 1கிலோ 10ரூபாய் வீதம் 14கிலோ 140 ரூபாயாகவும் கமிசன் 10 ரூபாய் போக 130 ரூபாய் கொடுத்தனர். இதே போலதான் வெண்டைக்காயை , கொத்தவரையை , பரங்கியை மிக மலிவாககேட்டதால் திருப்பி எடுத்து வந்துவிட்டேன்.. உறவினர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் மனம்மகிழ கொடுத்து மகிழ்ந்தேன்.. அப்படியும் மீதமிருந்த காய்களை வற்றல் போட்டு வைத்து கொண்டோம்... (10கிலோ காயை காய வைத்து 1கிலோ வற்றலாக மாற்றிக் கொண்டோம்.) ஆனால் அவரைக்காயை அப்படி செய்ய இயலாது.. வந்த விலைக்கு கொடுத்துவிட்டு வந்தேன். நான் பாடுபட்டு விவசாயத்தில் விளைந்த காய்க்கு என்னால் விலை நிர்ணயம் செய்யமுடியவில்லை. ( நானாவது பரவாயில்லை, மற்றொரு விவசாயி கைகாசுபோட்டு நாலுமுறை உயிர்கொல்லி விசமடித்து பலபலவென 25கிலோ அவரைக்காய் கொண்டுவந்து ஏலக் கடையில் வேதனையுடன் கமிசன் போக 310 ரூபாயை விரக்தியிடன் பெற்றுச்சென்றார் 1கிலோவிற்கு 13ரூபாய் போட்டுகொடுத்தனர் )
நான் : ஏன் அந்த காய்க்கு மட்டும் 13 ரூபாய் ஏலம் போகிறதென கேட்டேன்...
🥒 : அது பலபலன்னு காய் ஒரே சைஸ்ல இருக்கே தம்பி என்றார் .
( பாவம் நாலு விச கொல்லி வேற செலவழிச்சுஇருக்காரு... போகட்டும்... நுகர்வோர் அறியாமையும்.. வியாபாரியின் விருப்பமும் அப்படியானதாக இருந்தால் ... பாவம் கெட்டதறியாத அந்த விவசாயி என்ன செய்வார்.. ஆனாலும் விடிய பனி'ல கிடந்து காய் பறிச்சு வந்து விலை கிடைக்காத அவஸ்தை... விவசாயிக்கு கஷ்டம் தான்... ) . இது இன்றல்ல காலம்காலமாக இருப்பது தான்.. ஆனாலும் நாம விழிக்க வேண்டிய நேரமிது...
முன்னதாகவே நண்பர்களிடம் முயற்சித்தேன் ... இயற்கை அங்காடி வைத்திருக்கும் நண்பர்களிடம் தந்துவிடலாம் என்றென்னி மதுரையிலிருக்கும் இயற்கை நேய நண்பர்களிடம் கேட்டேன் அவர்கள் இன்று வரை பதிலளிக்கவில்லை , பின்னர் திண்டுக்கலில் மகாத்மா அங்காடி நண்பர்கள் என் மீதான அன்பால் நல்ல விலைக்கே இருமுறை பெற்றுக் கொண்டனர் அவர்களுக்குள்ளே பகிர்ந்தும் கொண்டனர் ஆனாலும் அவர்களுக்கான நுகர்வோர் வட்டம் துவக்கமென்பதாலும் அதனால் நுகர்வோர் குறைவென்பதால் அதிகமாக விற்பனை செய்ய இயலவில்லை அதனால் அவர்களை சிரம்மபடுத்த நான் விரும்பவில்லை . ஆகவே அதற்கான சரியான கட்டமைப்பையும்.. நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்த நினைக்கிறேன் . நண்பர்களின் ஆலோசனையை நாடுகிறேன்...
# இயற்கை வழி விவசாயம் செய்றத விட... செய்யுங்கனு சொல்றத விட அதற்கான நியாயமான சந்தைய அமைக்கிறதும் ... நுக்வோருக்கு விழிப்புணர்வ கொண்டுசேக்குறதும் தான் முக்கியம்னு நெனைக்கிறேன் . இதில் மாத சந்தைகளும் வார சந்தைகளும் காய்கறிகளை சந்தைபடுத்த ஒத்துவராது.. ஆக இயற்கை காய்கறிகளுக்கான சந்தையமைப்பை உருவாக்க மக்களை நோக்கி இன்னும் நிறைய பயணிக்கனும்... #