Thursday, June 13, 2019

வாழ்க மனுநீதி சோழன்

வாழ்க மனுநீதி சோழன்

ஆதித்த கரிகால சோழனை கொலை செய்தனர் சில ஆரிய பார்ப்பனர்கள். மனுசாஸ்த்திர படி பார்ப்பனர்களை  தண்டித்தால் பிரம்மஹத்தி தோஷம் வந்துவிடும் என்பதாலும் மனுசாஸ்த்திரத்தில் பிராமணர்களுக்கு தண்டனையே இல்லையென்பதாலும் மனுசாஸ்த்திரபடி ஆட்சி செய்த ராஜராஜன் கொலைகார பிராமணர்களை தண்டிக்காமல் நாடு கடத்தியவன் ராஜ ராஜ சோழன். என்ன ஒரு நீதி!!! மனுநீதி!!! அதனால் தான் அவர் மனுநீதி சோழன் என்று ஆரியர்களால் புகழப்பட்டார்.

பெரிய கோயிலில் முடி திருத்துபவர்களுக்கு, `ராஜராஜ பெரு நாவிதன்’,  அரச அறிவிப்புகளை பறையறைந்து சொல்பவர்க்கு "ராஜராஜ பெரும் பறையன்" பட்டம் கொடுத்து கவுரவிச்சிருக்கான்யா ராஜராஜன்..
வாவ்.. என்னே சமூக நீதி...

பட்டத்த மட்டும் பாட்டாளிக்கு கொடுத்திட்டு நிலத்தையெல்லாம் பார்ப்பானுக்கு கொடுத்திருக்கான்யா..

என்னடா செஞ்சான் சோழன்னு கேட்டா, கோயில கட்டுனான் குளத்த வெட்டுனான்னு பெருமையா சொல்றானுங்க.

நாலு கல்விக்கூடம் கட்டி நாலு பேர படிக்க  வைக்க துப்பு இல்ல. கோயில் கட்டுனது குளம் வெட்டுனதெல்லாம் ஒரு சாதனைனு தூக்கிட்டு வரானுங்க.

கட்டுன கோயிலுகுள்ளயும் தமிழர்கள் எல்லாருக்கும் அனுமதி இல்லை,

வெட்டுன குளத்துக்குள்ளயும் நம்ம எல்லாருக்கும் அனுமதி இல்லை.

அப்புறம் என்ன கூந்தலுக்கு கட்டுனானுங்க வெட்டுனானுங்கனு கேட்டா, நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லைனு சொல்றானுங்க தன்மானமில்லாத முட்டாள்கள்.

வேத,சமஸ்கிருத பாடசாலைகளை அமைத்த ராஜராஜ சோழன் தமிழருக்கும் தமிழுக்கும் ஒரேயொரு பள்ளிக்கூடம்  கூட அமைக்கவில்லையே இவன் எப்படிடா தமிழரின் பெருமை மிகு அடையாளமாக இருக்க முடியும்.

"பார்ப்பானிடம் மண்டி போட்டா"
அது பொற்காலம் ! ராஜராஜன் காலம் பொற்காலம்

அதுவே "பார்ப்பான் மண்டி போட்டா"
அது இருண்டகாலம் !! களப்பிரர்கள் காலம் ஆரியத்தின் ஆதிக்கத்தை ஒழித்த காலம் அதனால் அது இருண்ட காலம்.

இது தான் இந்த மண்ணின் உண்மை வரலாறு !!

எச்ச ராஜா Rss காவிக்கூட்டம் ராஜராஜனுக்காக பொங்கும் போதே தெரியவேண்டாமா ராஜராஜ சோழன் ஆட்சியில் யார் பயன்பட்டார்கள் அந்த ஆட்சி யாருக்கு பொற்காலம்னு

  மனுநீதி பிறழாமல் ஆட்சி செய்து ஆரியரிடம் மனுநீதி சோழன் என்று பட்டம் வாங்கிய ராஜராஜன் தமிழ்,தமிழர்  விரோதியே

Wednesday, June 12, 2019

டோலி :- உங்களுக்கு என்ன அப்படி ராஜராஜன் மேல கோவம்

டோலி :- உங்களுக்கு என்ன அப்படி ராஜராஜன் மேல கோவம் ...அவர் எவ்வளவு பெரிய தமிழ் மன்னன் ...அவரை அசிங்கப்படுத்துறீங்க நீங்க
நான் :- ஒரே கேள்வி ..... உங்களிடம் நான் "தோழனாக பழகவா ???? இல்லை சோழனாக பழகவா ???
டோலி :- ஏன் அப்படி கேக்குறீங்க
நான் :- 12. மனைவிகளையும் .....342. அந்தப்புர காம கிழத்திகளையும் வைத்துக்கொண்டிருந்தவன் ராஜராஜ சோழன் ..( அதைவிட கொடுமை அவன் இறந்ததும் அவன் சொல்லிவைத்தபடி இவர்கள் அனைவரையும் உடன்கட்டை ஏற்றி ..உயிரோடு கொளுத்தினான் அவரின் பார்ப்பன ராஜ குரு ....)
சொல்லுங்க சோழன் சிறந்தவனா இல்லை தோழன் சிறந்தவனா
டோலி :- ரெண்டு ஹார்டின் ...மூணு கிச் ......
நான் :- இது யாருக்கு ....ராஜராஜனுக்கா ???
டோலி :- அந்த பொம்பள பொறுக்கிக்கு நான் ஏன் குடுக்க போறேன் ...ஹாஹா
நான் :- என்னங்க இப்படி பொசுக்குன்னு ஒரு தமிழ் மாமா மண்ணனை திட்டிபுட்டிங்க ....
டோலி :- ... ஹாஹாஹா
நான் :- அப்போறோம் ஒரு கொசுறு செய்தி ..இந்த "ராஜராஜன்" என்கிற பட்டம் எப்படி வந்தது என்றால் அக்கம் பக்கத்தில் இருந்த தமிழ் மன்னர்களை கொன்று குவித்து ..தமிழ் மக்களை சூறையாடி வாங்கிய பட்டம் தான் ராஜராஜன் ....
டோலி :- போதும் இனிமே அந்தாள பத்தி என்கிட்டே பேசாதீங்க ....
நான் :- யாரு நானா ?? அது சரி
......................
புரியாத தடிமாடுகள் கவனத்திற்கு ... ....ராஜராஜன் மட்டும் இல்லை ....ஏறக்குறைய அணைத்து மன்னர்களும் இப்படித்தான் .... மக்களின் வரிப்பணத்தில் மஞ்சத்தில் உண்டு கழித்த கழிசடைகள் தான் ..மண் ஆசை வெறியில் சொந்தமக்களையே போர் போர் என்று கொன்று குவித்த வெறியர்கள் தான் ....போய் வேறே பிழைப்பு மயிரை பார்க்கவும்

Tuesday, June 11, 2019

பாவம் கிரேஸி மோகன்; இது முறையல்ல

பாவம் கிரேஸி மோகன்; இது முறையல்ல
*
திரைபிரபலம் மரணத்திற்கு; பிரபலங்களிடம் பேட்டி, காட்சிகளை ஒளிபரப்புவதின் மூலம் நல்ல ரேட்டிங் இருப்பதால், தமிழர்கள் மண்டையில் மாபெரும் சோகமாகத் திணிக்கின்றன ஊடகங்கள்.
அப்படிதான் சமீபத்தில் மறைந்த திரு. கிரேசி மோகன் மரணமும் ரேட்டிங்காக. அவரின் இறப்பு வருத்ததிற்குரியதாகப் பார்க்கப்படுவதற்குப் பதில், சுவாரஸ்யமானதாக மாற்றப்பட்டது, அவருக்கு ஏற்பட்ட மரியாதைக்குறைவு.
ஊடகங்கள் பிரபல படுத்துகிற மரணங்களுக்காக உடன் சேர்ந்து ஒப்பாரி வைப்பது சமூக வலைதளங்களில் வழக்கமாகி வருகிறது. அதில் சில முற்போக்காளர்களும் மூக்கை சிந்தி சுவற்றில் தேய்த்து விடுகிறார்கள்.
ஒருவரை மிகைப்படுத்தப்பட்ட மதிப்பிடுகளால் அஞ்சலி செய்வது, பொய்யான செய்தியை உண்மையாக்குகிறோம் என்பதை அறியாமலே அறிவாளிகளும் செய்து முடித்து விடுகிறார்கள்.
S.V.சேகர், Y.G. மகேந்திரனுடன் ஒப்பிடும்போது கிரேசி மோகனின் காமெடி சிறப்பானதுதான். ஆனால், ஒரே மாதிரியானது. முதல் இரண்டு படங்களில் என்ன எழுதினாரோ அதையேதான் தொடர்ந்து எழுதி அலுப்பேற்றினார்.
நாயகிகளுக்கு ஜானகி, மைதிலி என்கிற அய்யங்கார் பெயர்களை மட்டுமே எப்படி வைத்தாரோ அதுபோல்.
‘உங்களுக்கு எப்படித் தெரியும்?’ ‘இப்பதானே நீங்க சொன்னீங்க’ என்ற பாணியில்.
எப்பவாவது விதி விலக்கும் உண்டு. காயத்திரி என்ற அய்யர் பெயரையும் வைத்ததுபோல்.
அவரின் காமெடிகள் இப்போது சிரிப்பை வரவைக்காது என்பதினால்தான் இப்போது ‘அள்ளி விடுகிற’ இதே ஊடகங்கள் அவர் எழுதிய காமெடிகளைத் தனியாக ஒளிபரப்பியதே இல்லை. (கவுண்டமணி பேசியதை தவிர)
90 களில் தொடர்ந்து ஒரே மாதிரியான வசனங்களால் நம்மை வருத்தப்பட வைத்த கிரேசி மோகனின் காமெடியிலிருந்து மீட்டு, உலகின் மாபெரும் காமெடி காட்சிகளுக்குத் தரம் உயர்த்தியவர் வடிவேலு.
*
‘இந்துல எழுதுற, சந்துல எழுதுற பார்த்தசாரதிதானே நீ’ எனக் கவுண்டமணி அவரை ஒரு படத்தில் கேட்டாரே, அந்தப் பார்த்தசாரதி போலவே சில படங்களில் எழுதியும் இருக்கிறார்.
வியாட்நாம் காலனி என்ற மலையாளப் படம் தமிழில் பேசியபோது, ஒரு காட்சியில் சாம்பார் சாதத்தை நாய் சாப்பிட்டு விடும். அதற்கு டேவிட் என்கிற காதாபாத்திரம் நாயகனை பார்த்து,
‘அய்யிரே.. சிக்கன வேணான்னு திருப்பிக் கொடுத்திட்டே. அங்க பாரு மனுசன் சாப்பிட வேண்டிய சாம்பார் சாதத்தை நாய் சாப்பிடுது. நாய் சாப்பிட வேண்டிய சிக்கனை கீழே மனசங்க சாப்பிடுறாங்க’ எனப் பேசும்.
அய்யர் பேச வேண்டிய வசனத்தைச் சிக்கன் விரும்பி சாப்பிடுகிற டேவிட் பேசுவதைப்போல் எழுதியதில் கிரேசி மோகனின் அரசியல் மட்டுமல்ல அவரின் தந்திரமும் தெரியும்.
மனோரமா ‘வெங்கட கிருஷ்ணன்’ என்ற பெயரை, வெங்கட கிச்சுனன் என சென்னை தமிழில் சொல்வார். அதற்கு டேவிட், ‘நாக்குல தர்பையை வச்சு வழிச்சா சரியா பேர சொல்வ’ என்பார். இதுவும் அய்யர் பேசிய வேண்டிய வசனமே.
இன்னும் விரிவாக எழுத வேண்டிய சூழல் இதுவல்ல, இதுவும் கூட மிகைப்படுத்தப்பட்ட மதிப்பிடுகளை மறுக்க வேண்டிய அரசியல் கடமை எனக்கு இருப்பதால் எழுதினேன். இதை எழுதியதற்கும் நான் காரணமல்ல என்றாலும் யாருக்கும் வருத்தம் ஏற்பட்டால் வருந்துகிறேன்.

ஜெயலலிதா vs கலைஞர்

காட்சி 1
--------
வண்ணக்கிளி அண்ணன் இயற்பெயர் மாரிமுத்து. துணை வட்டாட்சியர்.
நான் கேஷியராக பணிபுரிந்த நட்சத்திர விடுதி பாரில் வண்ணக்கிளி அண்ணண் பேரர். அண்ணணுடைய அப்பா வருவாய் துறையில் அலுவலக உதவியாளர்(பியூன்). திடீரென ஒருநாள் பணியில் இருக்கும் போதே இறந்துவிட்டார்.
வண்ணக்கிளி அண்ணண் பத்தாவது தேர்ச்சி பெற்றவர். ஒரு சிட்பண்டில் சொற்ப சம்பளம். சிறு வயதிலேயே திருமணம். இரண்டு குழந்தைகள். சோறு போட்ட அப்பா இறந்ததால் குடும்பம் தத்தளிக்கிறது.
வண்ணக்கிளி அண்ணண் கருணை அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பித்தார். இப்போதுதான் மிகப்பெரிய சோதனை. அவர் அப்பா இறந்த அன்று அண்ணணிண் வயது நிர்ணயிக்கப்பட்ட வயதைவிட மூன்று மாதங்கள் கூடுதலாக இருந்து தொலைந்து விடுகிறது. இதனால் அவரது வேலைகோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.
வண்ணக்கிளி அண்ணண் வயது வரம்பை தளர்த்தி பணியிடம் வழங்குமாறு மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கிறார்.
கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர், வயது வரம்பு தளர்வை அரசு மட்டுமே செய்ய முடியும் என்பதால் வயது வரம்பில் தளர்வு வழங்கி ஆணை வழங்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்கிறார்.
இதற்கு வருவாய்த்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, நிதித்துறை ஆகிய துறைகள் ஒப்புதல் அளித்து முதல்வருக்கு அனுப்பி கையொப்பம் பெற வேண்டும்.
ஆனால் வருவாய்த்துறைக்குப் போன கோப்பு வயது வரம்பில் தளர்வு தர இயலாது எனக்கூறி கோப்பினை திருப்பி அனுப்பி விடுகிறது.
எங்கள் உறவினர் ஒருவர் தலைமைச்செயலகத்தில் பிரிவு அலுவலராக பணியாற்றினார். அவர் மூலம் ஏதேனும் செய்யலாம் என ஆறுதல் கூறினேன்.
மீண்டும் விண்ணப்பித்தோம்.
தபால் உரிய செக்க்ஷனுக்கு போகிறதா என கண்காணித்தபடியே இருந்தோம். அந்த பிரிவு அலுவலரும் ஒவ்வொரு இடமாக கோப்பினை தள்ளி தள்ளி விட்டார். ஆனால் கோப்பு வருவாய் துறையை தாண்டவில்லை.
அதன்பிறகு ஆட்சி மாற்றம். கலைஞர் முதல்வராக பதவியேற்றார். ஒரு வழியாக கோப்பு மூன்று துறைகளையும் தாண்டி முதல்வர் கலைஞருக்கு சென்று விட்டது.
கலைஞர் எல்லா கோப்புகளையும் படித்து பார்த்துதான் கையொப்பம் இடுவார் என கேள்வி பட்டிருந்தோம். அதனால் என்ன செய்வாரோ என பயந்து கொண்டே இருந்தோம். காலையில் போன கோப்பு அன்று மாலையே திரும்பியதாக அறிந்தோம். ஒப்புதல் கொடுக்கப்பட்டதா அல்லது மறுக்கப்பட்டதா என தெரியாமல் குழம்பி தவித்தோம்.
மறுநாள் இருவரும் விடுப்பு சொல்லிவிட்டு தலைமைச்செயலகம் சென்றோம். அந்த பிரிவு அலுவலரை சென்று பார்த்தோம். அவர் கட்டைவிரலை உயர்த்தி வெற்றி என்றார். மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது. இந்த இடத்திற்கு வருவதற்கு முழுதாக ஐந்து வருடம் தேவைப்பட்டது.
தயங்கி தயங்கி கலைஞரின் கையொப்பத்தை பார்க்கலாமா என்றோம். வெளியாட்கள் அரசு கோப்பை பார்க்க அனுமதி இல்லை என்றார். மிகுந்த வற்புறுத்தலுக்குப்பின் கலைஞர் வேறு ஏதேனும் கோப்பில் குறிப்புகள் எழுதி இருக்கிறாறா என்றோம்.
ஆமாம் .."மேலும் தாமதிக்காமல் தொடர்புடையவர் ஒரு வாரத்திற்குள் பணியேற்றிடும் வகையில் ஆணை வழங்கவும்" என குறிப்பு எழுதியுள்ளார்.
அதே போல ஒரு வாரத்துக்குள் வண்ணக்கிளி அண்ணண் இளநிலை உதவியாளராக பணியேற்று இன்று துணை வட்டாட்சியராக பதவி உயர்வு பெற்று பணிபுரிகிறார்.
இதில் நாங்கள் பிரமித்த விஷயம் என்னவெனில் அம்பாரமாய் கோப்புகள் குவிந்து கிடந்தபோதும் மேம்போக்காக கையொப்பம் இடாமல் ஒவ்வொன்றையும் படித்து அக்கறையாக குறிப்பெழுதி கையெழுத்திடும் கலைஞரின் பண்பு.
மற்றவர்களிடம் கோப்புகள் வருடக்கணக்கில் தேங்கி கிடந்தாலும் தன்னால் தாமதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அந்த மனிதரின் மனித நேயம் சொல்லில் அடங்காதது. என்ன ஒரு மனிதர் அவர்!

காட்சி 2
--------
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் தத்தளிக்கிறது. அங்குள்ள இளநிலை பொறியாளரே தண்ணீரைத் திறந்து விடுவது தான் முறை. ஆனால், தமிழகத்தில் தன்னைக் கேட்காமல் எதுவும் நடக்கக் கூடாது என்பது ஜெயலலிதா கட்டளை.
தண்ணீரைத் திறந்து விடக் கோரிய கோப்பு ஒரு வாரமாக முதல்வரின் அறையில் உறங்குகிறது. முதல்வர் எங்கு உறங்கினார் என்று தெரியவில்லை.
கடைசி நேரத்தில் அடைமழை நேரத்தில் ஏரியைத் திறந்து விட்டு குறைந்தது 500 பேர் இறந்து போகிறார்கள். பலர் உடமைகளை, தொழில்களை இழக்கிறார்கள்.
***
வரலாறு ஜெயலலிதாவை Able administrator என்று குறித்துக் கொண்டது. என்னடா Able admininstrator என்றால் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் வேலையை விட்டு நீக்கி வீட்டுக்கு அனுப்பினாராம்.
வாழ வைப்பவர் தானே தலைவர் ஆவார்,
வேலையைப் பறிப்பவர் எப்படி தலைவர் ஆனார்
என்று யாரும் கேட்கவும் இல்லை.
அதற்கு யாரும் பதில் சொல்லவும் இல்லை!

சுடுகாட்டில் பட்டியலின மக்களுக்கு வரும் எதிர்ப்பை அன்றே தொடங்கி வைத்தவன் ராஜ ராஜ சோழனே..

தமிழ் நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களில் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது.
வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில் ஊருக்கு வெளியே தீண்டாச் சேரியும், பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன... இன்றும் பொது சுடுகாட்டில் பட்டியலின மக்களுக்கு வரும் எதிர்ப்பை அன்றே தொடங்கி வைத்தவன் ராஜ ராஜ சோழனே..
தாழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழல்வதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும், பல்லக்கு சுமப்பதும் கட்டாயமானது.
ராஜராஜனின் பொற்காலம் பற்றிப் பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையைப் பற்றியோ, சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதே இல்லை.
கோவிலை மையமாகக் கொண்ட சோழர் கால அதிகார அமைப்பில் சாதிவாரிக் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டன.
பார்ப்பன, வெள்ளாள நிலவுடைமை ஆதிக்க சாதிகள் ஒருபுறமும் விவசாயத் தொழிலாளிகள், அடித்தட்டு உழைப்பாளர் மற்றும் உடைமை,உரிமை அற்ற சமூக அடிமைகளாக கடைச் சாதி தீண்டப்படாதோர் மறுபுறமுமாக சமூகமே பிரிந்து கிடந்தது.
பொற்காலத்தில் கொழித்த பார்ப்பனர்களும், ஆண்டைகளின் ஜனநாயகமும்!
ராஜராஜனின் ‘பொற்கால ஆட்சி’யை அனுபவித்தவர்கள் யார்? தீட்சிதப் பார்ப்பனர்கள் தனக்கு பட்டம் சூட்ட மறுத்ததால் பீகார் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை சோழநாட்டிற்கு அழைத்து வந்து ராஜராஜன் அவர்களைக் குடியேற்றினான். தமிழக மன்னர்களின் வரலாற்றில் முதன்முதலாக ராஜகுரு என்றொரு பதவியை உருவாக்கி, ஈசான சிவப் பண்டிதர் எனும் காஷ்மீரப் பார்ப்பனரை அப்பதவியில் நியமித்தான். பின்னர் பார்ப்பனர்களே இப்பதவிக்கு வருவது மரபாக்கப்பட்டது. ராணுவப் படையெடுப்பு போன்றவற்றை தான் கவனித்துக் கொண்டு, குடிமக்கள் நிர்வாகத்தை ராஜகுருவின் ஆலோசனைக்கு விட்டிருந்தான்.
பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக் கிராமங்கள், கோவில்கள், மடங்கள் ஆகியவை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. 250 ஊர்கள் சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன....
இந்தியச் சட்டங்கள் எவையும் செல்லுபடியாகாத இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போன்றே , குற்றவிசாரணைக்காகக்கூட அரசப்படையினர் இத்தகைய ‘மங்கலங்களின்’ உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது....

Monday, June 10, 2019

திரிவேதி மங்கலம் சதுர்வேதிமங்கலம் etc

மூன்று வேதம் கற்றவர்களுக்கு திரிவேதி மங்கலம்..
நான்கு வேதம் கற்றவர்களுக்கு சதுர்வேதிமங்கலம்...
வேதம் எல்லாரும் கத்துக்கலாமா?
என்ன கேள்வி இது?
வேதத்தை பார்த்தே கண்ணை நோண்டுவோம்.
நாக்கை துண்டிப்போம்..
கேட்டே...காதுல ஈயத்தை காய்ச்சி ஊத்துவோம்...
அப்போ வேதம் கத்துக்காதவங்களுக்கு????
அதோ மாடு மூத்திரம் பெய்யுது பார்....புடிச்சிக் குடிச்சுட்டு படுத்து தூங்கு...

நீங்களும்.. உங்கள் ஹிந்தியும்..!! மனிதனை பசியில்லாமல் வாழ வைங்கடா முதலில்

சற்று முன் சில டாக்குமெண்ட் காப்பிகளை பிரதி எடுக்க கடைக்குச் சென்றிருந்தேன். அங்கு வடநாட்டு இளைஞர் ஒருவரும் ஏதோ பிரதி எடுக்க வந்திருந்தார்.
அவரிடம், “இங்கிலீஸ் மாலும்..” என்றேன்.
'தெரியாது!' என தலையாட்டினார்.
“தமிழ் மாலும்..” என்றேன். அதற்கும் 'தெரியாது' என தலையாட்டினார்.
பக்கத்தில் இருந்த, இந்தி தெரிந்த ஒருவர் மூலம் அந்த இளைஞரிடம் பேசினேன்.
“எந்த மாநிலம்..?”
”உத்திரப்பிரதேஷ்”
“என்ன படிச்சிருக்கே..?”
“பத்தாம் வகுப்பு”
”இங்கே என்ன வேலை..?”
”பெயிண்ட்டர்!”
“இந்தி படிச்சா வேலை கிடைக்கும்னு சொல்றாங்களே..! உங்க உ.பி.யில வேலை கிடைக்கலையா.. உனக்கு ?”
”அங்கே ஒண்ணுமே இல்லே..! யோகி னு ஒரு சாமியார் ஆள் முதலமைச்சராகி
படு கேவலமான முறையில் ஆட்சி நடத்திறான். அவன் ஆட்சி இந்த பீரியடும் தொடர்ந்திதுனா உத்திரப் பிரதேசமே சுடுகாடாகிடும். முழுக்க முழுக்க ராமரின் பெயரால் அயோக்கியத்தனம் பண்ணும் பக்கா கிரிமினல் அவன். எங்க ஊர் ஏழைப் பெண்களின் கற்புக்கும் குடும்ப வாழ்விற்க்கும் உத்தரவாதமே கிடையாது. தமிழர்கள் தெய்வங்கள்.
உண்மையில் ராமராஜ்யம் என்பதை
நான் இங்கேதான் காண்கிறேன்.
என் மனைவியும் எனது இரண்டு பிள்ளைகளும் சத்தியமாக பசியில்லாமல் நாளைக் கழிக்கும்
அந்த சொர்க்க தினங்கள் எனக்கு
இங்கேதான் கிடைத்தது. விரைவில் உங்கள் மொழியை எப்படியாவது கற்றுக் கொண்டு நான் ஒரு தமிழனாக மாறவே விரும்புகிறேன். தமிழ்நாட்லதான் நிறைய பில்டிங் கட்றாங்க.. வேலை நிறைய கிடைக்குது எங்க பசியெல்லாம் பஞ்சாப் பறக்குது.. !” மூச்சு விடாமல் பேசிக் கொண்டே போனான்.
"அடப் போங்கடா..!!. நீங்களும்.. உங்கள் ஹிந்தியும்..!! மனிதனை பசியில்லாமல் வாழ வைங்கடா முதலில்!!!! அப்புறம் பாத்துக்கலாம்.. ஆட்சி, அதிகாரம், மொழி, இனம், கடவுள் எல்லாம்!!!!

பசு மாடு பார்ப்பனர்களின் கடவுளா?

பசு மாடு பார்ப்பனர்களின் கடவுளா?
பசு மாடுகளை உணவிற்காகக் கொல்லப்பட்டால் பார்ப்பனர்களுக்குத் தேவையான பால்,தயிர்,வெண்ணெய்,நெய் (இவையெல்லாம் ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர்) போன்ற பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடுகள் வருமென்பதால், அதைத் தடுப்பதற்காகப் பார்ப்பனர்கள் பசு மாட்டிற்குக் கோமாதா என்று பெயரிட்டு அதற்கு ஒரு கதை கட்டி அனைவரும் கடவுகளாக வணங்கவேண்டுமென்றும் பசுவைக் கொள்வது பாவமென்றும் பொய்யுரைகளைப் பரப்பி வைத்துள்ளனர்.
பால் தொழிற்சாலைகளின் வளர்ச்சியால் தற்பொழுது அனைவரும் பால் பொருட்களை எந்தவித தட்டுப்பாடுகளும் இல்லாமல் பயன்படுத்தி வரும் வேளையிலும் மாட்டுக் கறி அரசியலைத் தூக்கிப் பிடிப்பதற்கு மாட்டுக் கறி ஏற்றுமதியே காரணம்.
உலகில் மாட்டுக் கறி ஏற்றுமதியில் இந்தியா முன்னோடியாக இருக்கிறது அதில் பார்ப்பனர்களே முக்கியப் புள்ளிகளாகவும் இருக்கிறார்கள்.
ஏதோவொரு வகையில் பசு மாடு பார்ப்பனர்களுக்குப் பயன்பட்டுக் கொண்டே இருக்கிறது,அதுவரை அவர்கள் பசுவைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்திக்கொண்டு தான் இருப்பார்கள். இனி பயனில்லை என்றவுடன் பசுவைத் தூக்கி ஓரம் வைத்துவிடுவார்கள். இந்திரன், பிரம்மன் போன்ற கடவுள்களையே தூக்கி ஓரம் வைத்தவர்களுக்குப் பசுவெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.
பார்ப்பனர்கள் பசுமாட்டைக் கடவுளாக வணங்குவதில்லை, மற்றவர்களைத் தான் வணக்க சொல்லி இருக்கிறார்கள். இரண்டிற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.
இதைப் புரிந்துகொண்டு,இனி மாட்டுக் கறி சாப்பிடுவதைப் புரட்சி என்று நம்பி உணர்ச்சிவசப்படாமல், நல்ல கறியாக வாங்கி குறிப்பாக beef steak வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். சுவையாக இருக்கும்.