Thursday, May 18, 2023

இன்று நாடார் குலமென்று நெஞ்சு நிமிர்த்தி திரிகின்ற சாணார்கள்

 இன்று நாடார் குலமென்று நெஞ்சு நிமிர்த்தி திரிகின்ற சாணார்கள்
19'ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் 18 வகை கீழ் சாதி பட்டியலில் தான் இருந்தார்கள்.

ஆனால் இப்போது...

கன்னியாகுமாரி மாவட்ட பாஜகவின் தூண்களாக இருப்பவர்கள் இவர்களே.!

1754-ல் திருதாங்கூர் சமஸ்தானத்தின் இராணுவச் செலவுகளுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ‘தலைஇறை’ எனும் வரி விதிக்கப்பட்டது. இத்தலைஇறையைக் கட்ட முடியாமல் பலரும் வாழ வழி தேடி திருநெல்வேலிக்குத் தப்பியோடினர்.

1807-ல் மட்டும் ஈழவர், நாடார், சாம்பவர் சாதி மக்களிடம் ‘தலைஇறை’யாக வசூலிக்கப்பட்ட தொகை 88,000 ரூபாய். இவ்வரி வசூலிப்பு, ஆடவரின் மீசைக்கு வரி, வளைந்த கைப்பிடியுள்ள குடைக்கு வரி, பெண்களின் மார்புக்கு வரி எனப் பல்வேறு வகைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

இப்பார்ப்பனியக் கொடுங்கோன்மையை எதிர்த்த ஐயா முத்துக்குட்டி என்பவர் தமது ‘அகிலத் திரட்டு’ எனும் நூலில் அன்று நடைமுறையிலிருந்த பல்வேறு வரிகளைப் பதிவு செய்கிறார். “தாலிக்கு ஆயம்; சருகு முதல் ஆயம்; கம்புத் தடிக்கு ஆயம்; தாளமேறும் சான்றோருக்கு ஆயம்; அரிவாள் தூர்வெட்டிக்கு ஆயம்; வட்டிக்கு ஆயம்; வலங்கை சென்றோர் கருப்புக் கட்டிக்கும் ஆயம் வைத்தானே கருநீசன்” என்று குறிப்பிடுகிறார்.

மேற்கண்ட அரையாடை சாதிக்கொடுமைகள் நடைபெற்ற பொழுது, இந்துமத மடாதிபதிகளோ சைவ மடாதிபதிகளோ, சங்கராச்சாரிகளோ அச்சாதிக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை.

ஆதிக்கத்திலிருந்து விடுதலை...

1800களில் நாடார், பரவர், ஈழவர், முக்குவர், புலையர்..உள் ளிட்ட 18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணி வது மாபெரும் குற்றம் எனப்பட்டது. முழங்காலிற்கு கீழும் இடுப்பிற்கு மேலும் ஆடை (முண்டு) அணியக் கூடாது.!

பொது வெளியில் முலைகளை திறந்து காட்டிக் கொண்டே தான் திரிய வேண்டும். திருவிதாங்கூர் மன்னன் நகர்வலம் வரும் போது பாதையெங்கும் வரிசையாக திறந்து காட்டிக் கொண்டே தான் நிற்க வேண்டும். குறிப்பாக நம்பூதிரி பெண்கள் முன்னால் அடுத்த சாதிப் பெண்கள் கொங்கைகளை ஆட்டிக் கொண்டு தான் நிற்க வேண்டும்.

முலைகளின் அளவிற்கு ஏற்ப "முலை வரி" விதிக்கப் பட்டது.! இந்தக் கொடுமைக்கு எதிராக பெண்கள் கொதித்து எழுந்தார்கள்.
போராட்டம் வெடித்தது.!

அவ்வப்போது போராட்டங்களும் அடக்கு முறைகளும் தொடர்ந்தன. இந்நிலையில் மீட் 'எனும் ஆங்கில பாதிரியாரின் முயற்சியால் 1823 இல் கிறிஸ்தவ பெண்கள் குப்பாயம் எனும் மேலாடை அணியலாம் என்று உத்தரவாயிற்று. தன்மானமுள்ள நாடார் பெண்கள் மானத்தை மறைக்க கிறிஸ்தவர்களாக மாற ஆரம்பித்தனர்!

கிறிஸ்தவம் திருவாங்கூரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக புனிததோமாவால் தொடர்ந்த நிலைமாறியது. ஹிந்து நாடார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த மானமுள்ள நாடார்களும் குப்பாய உரிமைக்காக வெகுண்டு எழுந்தார்கள்! ஐயா வைகுண்டர் தலைப்பாகை அணிந்து தனிமதமேகண்டார். கலவரங்கள் தொடர்ந்தன! வழக்குகளும் தொடர்ந்தன.

முலைவரி சட்டம் கடுமையாக பின்பற்றிருந்த காலத்தில், நாஞ்செலி என்ற பெண்ணிடம் திருவிதாங்கூர் சமஸ்தான அதிகாரிகள் உன்னோட முலை பெரிதாக உள்ளது ரெண்டு வரி கட்ட வேண்டும் என்று கேட்க, அப்போது கோபம் கொண்ட நாஞ்செலி வீட்டுக்குள்ள சென்று அரிவாள் எடுத்து தனது முலையை அறுத்து எரிந்தாள். அதன் பிறகு தான் முலைவரி சட்டம் நீக்கப்பட்டது.

அத்தகைய வீர மூதாதையருக்கு பிறந்த நபர்கள் தான் இன்றும் பார்ப்பனர்களுக்கு வால் பிடித்துக் கொண்டு திரிகின்றனர்.

மருத்துவம்*

1820 களில் ஆரம்பித்த காலரா தொற்று நோயால், இந்தியா முழுவதும் பிணங்கள் கொத்து கொத்தாக விழுந்து கொண்டிருந்தன! மருந்தே இல்லாத காலராவிற்கு பலியானவர்கள் 15 இலட்சம் பேரென்று புள்ளி விபரம் சொல்கிறது!

அந்த நேரத்தில் மெடிக்கல் மிஷனால் 1838 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது தான் நெய்யூர் மருத்துவ மனை! உலகின் பழமையான மிஷன் மருத்துவ மனை.! இந்தியாவின் முதல் புற்று நோய் ஆராய்ச்சி நிலையம் என்று அதற்கு அளவில்லாத பெருமைகள் உண்டு.

டாக்டர். தாம்சன், டாக்டர். வேத மாணிக்கம் ஆகியோரால் 1883 ஆம் ஆண்டு மார்த்தாண்டத்தில் கட்டப் பட்டது மார்த்தாண்டம் மிஷன் மருத்துவமனை. ( பொன்னாரின் சிலுவைப் பாலம் ஆரம்பிக்கிற இடம்)

1895 இல் சால்வேஷன் ஆர்மியால் வடசேரியில் கட்டப் பட்டது கேத்ரின் பூத் மருத்துவ மனை! 1936 இல் குளச்சலில் கட்டப் பட்டது சார்லஸ் பீஸ் தொழுநோய் மருத்துவ மனை.! இன்னுமுண்டு பட்டியல்.!

இன்று போல கிட்னியை விற்று கல்லீரலை ரிப்பேர் செய்ய வேண்டிய அவசியமில்லை. இவை அத்தனையும் இலவச மருத்துவ மனைகள்.!

நாஞ்சில் மண்ணில் காலராவிற்கு தப்பித்த யாரோ ஒருவனின் சந்ததி தான் நம்மிடம் "பார்.. பார் .! குஜராத்தை பார்" என்று அக்குளை சொறிகிறான்.!

கல்வி !!!.

நாஞ்சில் நாட்டு கிறிஸ்தவ மிஷினறி பள்ளிக் கூடங்களை குறித்து தனித்து எழுத வேண்டிய அவசியம் இல்லை!

இலவசகல்வி வழங்கிய பல பள்ளிக் கூடங்கள் நூறு வயதைக் கடக்கின்றன.

இது மதம் சார்ந்த பதிவல்ல ஆனால் ஒரு மதத்தின் ஒடுக்கமுறையிலிருந்து மீண்ட சமூகம் இன்று அதே பார்ப்பனிய சூழ்ச்சியால் மத வெறி பிடித்து அலைகிறார்கள். அந்த பார்ப்பனிய சூழ்ச்சியில் இருந்து விடுபட அந்த சமூக இளைஞர்கள் தங்களுடைய பழைய வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் எந்த பக்கம் நிற்க வேண்டும் என்ற தெளிவு வரும்.

ஒடுக்கப்பட்ட சமூக
தோழர்கள் உள்பட அனைவரும்
#நாடார்_வரலாறு
#கறுப்பா? #காவியா? என்ற புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டுகிறேன்.