Friday, February 09, 2018

இட ஒதுக்கீட்டு முறையை நீக்கி விடலாம்

இட ஒதுக்கீட்டு முறை என்பது அநீதியானது, சற்றும் தகுதியற்ற ஒரு சாராருக்கு அநியாய சலுகை அளிக்கும் திட்டம் என்று நினைப்பவருக்கு - சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடுதான். இட ஒதுக்கீட்டு முறை வேண்டாம். அதற்கு முன்னதாக:
ரொம்ப வேண்டாம் - ஒரு இருநூறு ஆண்டுகளுக்கு தலித் அல்லாதவர்கள் - தலித் வீடுகளில் பண்ணைக்கு இருக்கலாம். கொடுக்கும் கூழையும் கஞ்சியயும் குடித்துவிட்டு மாடாய் அவர்களுக்கு உழைத்துக் கொட்டிவிடலாம். அவர்கள் வீடுகளில் பண்ணைக்கு செல்லும்போது செருப்பு அணியாமல் சென்று விடுவோம் - நம் வீட்டுப் பெண்கள் மேலாடை இல்லாமலேயே சென்று வரட்டும். நம் தந்தயைரை அவனே இவனே என்று அவர்கள் வீட்டுப் பொடியர்கள் அழைப்பதை செவிக்கினியதாக கேட்டும் விடுவோம். நமது சில தலைமுறைகள் கல்வியற்ற மூடர்களாய்ப் போகட்டும். நம் அடையாளம் சாராயமும் மாட்டுக்கறியுமாக ஆகட்டும். ஆண்ட பரம்பரை தலித்கள் கால்மேல் கால்போட்டு அதிகாரம் செய்து நம் உழைப்பைத் திருடட்டும் - அதுவே நியாயம் என்று நம்மையும் சொல்ல வைக்கட்டும். மலக்குழியில் இறங்கி பீ அள்ளுதல், பிணங்களை புதைத்தல், சாக்கடை சுத்தம் செய்தல் என்று கேவலமானதாக கருதப்படும் வேலைகளையே செய்து ஊருக்கு ஒதுக்குப்புறங்களில் நமக்கான சேரிகளில் வாழ்ந்துவிடுவோம். நம்மைப்பார்த்து அவர்கள் மூக்கில் துண்டை வைத்து பொத்திக் கொண்டு போகட்டும்.
கொடிய பசியில் கடுமையாய் உழைப்பத்துதான் எத்தனை சுகமாக இருக்கிறது நமக்கு, அந்த உழைப்பின் பயனை ஆண்ட பரம்பரை தலித்துகள் அனுபவிக்கும் போது ஒரு இன்பம் கிடைக்குமே... ஆஹா!. சுயமரியாதை பொங்கி நாம் கொந்தளிக்கும் போது நம் வாயில் மலத்தையும் மூத்திரத்தியும் ஊற்றட்டும். நம் நிலை நொந்து கடவுளே துணை என்று - கோயிலுக்கு வெளியே நின்று மட்டும் - வேண்டிக்கொள்வோம்.
ஒரு நூறாண்டு வாக்கில், மிகவும் கொடிய பழக்கங்களில் சில பல வழக்கொழிந்து போகலாம் - என்றாலும் அவர்கள் நம்மை ஆண்ட பரம்பரை என்று பேசித்திரிவதைப் பற்றி, இன்றும் சாக்கடை அள்ள எப்போதும் நம்மில் ஒருவரையே அவர்கள் தேடி வருவது பற்றி, அவர்களுக்கு விவசாய அடிமை வேலை செய்யாமல் நாம் எதோ ஒரு வழியில் பொருளீட்ட முடிந்தால் (100 நாள் வேலை வாய்ப்புத்திட்டம் போன்று) அது தவறென வாதிடும் நிலை பற்றி, அவர்கள் உடலுழைப்பைத் தரத் தயாரில்லை என்ற நிலைபற்றி, வெளியே தெரியாதானாலும் உள்ளிருக்கும் சாதிவெறி பற்றி, ஒடுக்கப்பட்ட அடிமைகளாய் வாழ்ந்துவிட்ட நம்மில் பலர் இன்னும் அவர்களை அண்டி வாழ்வதே நமக்கு விதிக்கப்பட்டது என்றெண்ணி வாழ்வது பற்றி, எல்லாவற்றிற்கும் மேலாக - மறுக்கப்பட்ட கல்வியின் விளைவாக நாம் பிந்தங்கிப்போனதைப் பற்றி பேச என்ன வேண்டியிருக்கிறது? சரிதானே?
பிறகு சமத்துவத்துக்கென்ன தடை? இட ஒதுக்கீட்டு முறையை நீக்கி விடலாம் 

இன்றைய தமாசுகள் - தீதும் நன்றும் பிறர்தரவாரா..

இன்றைய தமாசுகள் 
சில விசயங்களை உணர்த்தியிருக்கிறது..
சிலரால் என்ன செய்தாலும் ஏதும் பிடிங்க முடியாது.. சிலரை சமயம் பார்த்து பழிதீர்த்தல் நடத்துவதும் .. இறைவனால்ஏதுமில்லை மக்கள் எழுச்சியே வெற்றியை தருமென்ற யதார்த்த உண்மையை போலிகளை வைத்து உலகறிய செய்த தினம்..
மற்றொன்று சில துரோகங்கள் வாழ்வில் மதிப்பிழந்து மரியாதைபோய் நடுதெருவில் காலம் நிறுத்தும்..
..
ஜீயர்.. சைவத்தை விட வைணவமே பெரிதென எண்ணி காலில் விழவைத்த செயலை .. இதோ வைணவ பீடத்தை காமெடியாக்கி திண்டு கொழுத்த தேகத்தை நீயெல்லாம் சரிபட்டு வரமாட்டே என காரணம் சொல்லி கேவலபடுத்தியிருக்கிறது.. சைவம்.. யார் நிர்பந்தத்தின் பெயரில் உண்ணா நிலையென்றோ அவர்களே கேட்டுக்கொள்வார்களாம்.. உடனே விட்டுவிடுவாராம்.. இதனால் ஆண்டாளுக்கு ஏற்பட்ட கலங்கம் தீர்ந்ததா.. தாசியென்று தானே தமிழன் சொன்னான் .. அவளை வேசியாக்கி நடுதெருவில் கேலி பேசவைத்தது யார் சைவமத ராசாசர்மா தானே.. இதிலுள்ள சூழ்ச்சி புரியாமல் அசிங்கபட்டு கிடக்கிறது வைணவம்..
இதிகம் அரசியலில் நேரடியாக கருத்திடாத வைணவசபை இந்தமுறை சிரிப்பிற்குள்ளாகி இருக்கிறது ..திருப்புகழ் அருணகிரிநாதர் தெரியுமா.. அவர் அருணகிரியாக வலம்வந்த போது மைனராக சொத்தையெல்லாம் தாசிகளுக்கே அழித்தார்..
ஒருகட்டத்தில் தாயில்லாமல் தமக்கையின் வளர்ப்பில் வாழ்ந்தவர் .. கடைசியில் நானும் பெண்தானே என்க திருந்தி நாதரானார்
அவர் பாடிய திருப்புகழில் .. கலவியில் ஆண்களிடம் சிக்கிய பெண்கள் படும் துன்பம் போல் தனக்கு தந்துவிடாதே என்று பாடினார் .. அந்தளவு பெண்களை துன்படித்தியவர் கலவி கொண்டு அனுபவித்ததைதான் எழுதினார்.. கன்னியாக வாழ்ந்த ஆண்டாள் எப்படி கலவியின் ரகசியங்களை .. அறிந்து மெய்மறந்த உயர்ந்தநிலையை அடைந்தைப்போல் எழுதியிருக்கமுடியும்.. அனுபவமே எதையும் சரியாக உணர்ந்துமென்ற அறிவு நம்மை கேட்கவைக்கிறதே... அவள் "ஸ்ரீரங்கத்து ராசியோ" என்று இன்றும் ஸ்ரீரங்கம் அதற்கு பெயர்போனதுதானே.. நிறைய கிளறவைக்கிறார்கள்..
கிளறும்போதெல்லாம் காமமே அவர்களின் வாழ்வின் உயரத்திற்கு கொண்டு போனதென்று உலகுக்கு உணர்த்துகிறார்கள் அவர்களின் ஆயுதம் அதுதானென உலகறியும்..
..
இரண்டாவது பரிதி இளம்வழுதி. திராவிடத்தை கையெலேந்தி வீதியெங்கும் முழங்கிய இளம்வழுதியின் மகனாய் கலைஞரின் பாசத்திற்குரியவராய் சட்டென்று உயரத்திற்கு வந்தவர்.. திராவிட கழக துணைப்பொதுசெயலராக உயர்ந்த பதவி வரை அனுபவித்தவர்.. களஅரசியலில் மாவட்டங்களில் காலம் தரும் மாற்றத்தை ஏற்க மறுத்து உட்கட்சியினரோடு இணைந்து செயல்பட முடியாமல் போனது. நிறைய உதாரணங்களை சொல்லமுடியும் ஒருகாலம் வந்த பிறகு மன்னை மணியின் கட்டளைக்கு கட்டுபடவில்லையா ஏன் அதே மணி.. பழநிமாணிக்கத்திற்கு துணையாக நிற்கவில்லையா. அதுபோல இயக்கம் முக்கியமென உணராமல் கொள்கை உயிரென எண்ணாமல் திடீரென்று ஒருநாளில் பூங்கொத்தோடு ஜெயலலிதாவிடம் சேர்ந்து இன்று எங்கிருக்கிறாரென சுவடு தெரியாமல் கடைசியில் தூக்கியெறிய பட்டிருக்கிறார்.. எதுவும் இருக்குமிடத்தில் இருந்தால்தான் நாருக்கும் மரியாதையென தெரியாமல் போனது.. இவரின் புதல்வர் தன் தாத்தனைப்போல கொள்கை உணர்வோடு .. தளபதியின்படையில் "இளம்சுருதி" யாக வலம் வருகிறார் .. அதுவரை மகிழிச்சி..
தீதும் நன்றும் பிறர்தரவாரா..

குப்பாயம் " மறந்த குள்ளநரி ஒன்றிற்கு .....

குப்பாயம் " மறந்த குள்ளநரி ஒன்றிற்கு ......

கடும் சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளான ஒரு சமூகத்தில் இருந்து வந்த ஒருவன் ஆட்சி அதிகாரம் என்பதற்காக சாதி தான் தமிழனின் அடையாளம் என்று கூவலாம் . அப்படிக்கூவ ..ஒன்று வரலாறு தெரியாமல் இருக்கலாம் . இல்லை கடந்து வந்த பாதையை மறக்கும் கயமையாய் இருக்கலாம் .
தஞ்சை மாவட்டத்தின் தரங்கம்பாடியில் தன்னைக் கிறித்துவராக மாற்றிக் கொண்டு சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்ட மயிலாடிக்கு வருகிறார் "மாராயன் " என்கிற வேதமாணிக்கம் .முட்டாள்தனமும் ..மூர்க்கத்தனமும் கொண்ட சாதிய ஒடுக்கு முறைகளுக்கு மதமாற்றத்தின் மூலம் சவால் விட்ட முதல்மனிதன் .
இவரைக்காண கிருத்துவப் போதகரான " வில்லியம் தோபியாஸ் ரிங்கல் தௌபே " 1806 ஏப்ரல் மாதம் வருகிறார் .அனுமதியின்றி தெருவில் நடமாடக் கூட மறுக்கப்பட்ட ...ஆச்சாரமானவர்கள் எட்டிப்பார்க்காத ....ஒரு பகுதிக்கு ...அந்த ஆச்சாரமானவர்களை விட வெள்ளைநிறம் கொண்ட ஒருவர் வந்திருப்பது அறிந்து அப்பகுதி மக்கள் கூடுகின்றனர் .
பாதிரியோ மிகுந்த முகச்சுழிப்போடு அவர்களை உற்று நோக்குகிறார் . முகச்சுழிப்பின் காரணம் சாதிய அருவருப்போ ...அழுக்குத் தன்மையோ ...நிற வேறுபாடோ அல்ல . வந்திருந்த மக்களில் ஆண் பெண் வேறுபாடு இன்றி மேலாடை இல்லாமல் இருந்தது தான் .
ஒரு முழம் துணிகூடவா கிடைக்கவில்லை உங்களுக்கு உடலை மூடிக்கொள்ள ? என்று கொந்தளிக்கிறார் . ஆனால் இது அம்மக்களுக்கு கிஞ்சிற்றும் உறைக்கவில்லை .அப்படி ஒரு அனுமதி எங்களுக்கு இல்லை என்கின்றனர் ..வேதமாணிக்கம் அவர்கள் இந்தச் சமுதாயத்தின் .....தீண்டாமை ...தோன்றாமை ....பார்க்காமை ...முதலிய விலக்குகளைப் பற்றி விளக்கம் அளிக்கிறார் .துன்பத்தில் உழன்று உழன்று அதையே நடைமுறையில் ரசிக்கப் பழகிவிட்ட மக்களுக்கு படிப்படியாகத்தான் எழுச்சி ஊட்ட முடியும் என்ற புரிதலோடு சில நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார் . ஆனால் பல்வேறு காரணங்களால் அவரால் தொடர முடியாமல் போகிறது .
தொடர்ந்து 1819 இல் அப்பகுதிக்கு ஆங்கிலேயர்களின் பிரதிநிதியாய் வந்து சேர்ந்த பாதிரியார் " மீட் "தௌபே விதைத்த கனலை ஊதிப் பெருக்குகிறார் .
மத போதகத்தை இரண்டாம் நிலைக்குத் தள்ளி விட்டு மக்களின் இழிநிலை போக்க இவரும் இவரின் மனைவியும் முனைகின்றனர் .அப்படி அவரும் அவர் மனைவியும் அந்த எளிய மக்களுக்கு வடிவமைத்துக் கொடுத்த ஆடைதான் "குப்பாயம் ".கழுத்து.. கைகளை முழுமையாக மூடியும் இடுப்பு வரை நீண்டும் இருந்தது இந்த ஆடை .
இந்த மண்ணில் பிறந்த பாதிரியார்கள் சாதிப்பாகுபாடுகளோடு கிருத்துவ ஆலயங்களில் இயங்கிய போது ....அவர்களின் மீட்சிக்கு உதவிய தௌபே ...மீட் போன்றோர் மண்ணின் மைந்தர்கள் ஆனார்கள் .
ஆனாலும் குப்பாயம் அணிவது கண்டு கொதித்துப் போன ஆதிக்க சாதிப் பழமைவாதச் சமூகம் பல்வேறு கொடுமைகளை அரங்கேற்றியது .பெண்கள் அம்மணம் ஆக்கப்பட்டார்கள் .தடுக்க வந்த ஆண்கள் அடித்துக் குற்றுயிர் ..குலையுயிர் ஆக்கப்பட்டார்கள் . மாடுகளோடு மாடுகளாக ஏர்களில் பூட்டப் பட்டார்கள் .குடிசைகள் தீக்கிரை ஆக்கப்பட்டன .பள்ளிகளில் இருந்த இவர்களின் பிள்ளைகள் வெளியே எறியப்பட்டனர் .
இப்பெண்களுக்கு பரிந்து வந்த ஆண்கள் சிறைக்கூடத்திற்கு அனுப்பப்பட்டனர் .சில முற்போக்கு நம்பூதிரிகளே சிறைக்குச் செல்லவும் நேர்ந்தது .சிறைக்குச் சென்ற நம்பூதிரிகள் தீட்டுப் பட்டதாக குடும்ப விலக்கம் செய்யப்பட்டதும் நிகழ்ந்தது .
1823..பார்வதிபாய் ...திருவிதாங்கூர் அரசி ........உயர்சாதி மக்களின் பிரத்தியேக பழக்க வழக்கங்களை தாழ்ந்த குல மக்கள் பின்பற்றக்கூடாது என்று ஆணை பிறப்பிக்கிறார் .
1858 ...விக்டோரியா மகாராணி இந்திய அரசின் பொறுப்பேற்ற பின்பும் நிலைமை சீரடையவில்லை .இந்த பொழுதில் தான் சாமித்தோப்பு வைகுண்ட சாமி அவர்கள் ........மேல் துண்டு போடவே அனுமதியற்ற எளிய மக்களுக்கு தலைப்பாகை கட்டிவிடத் துவங்குகிறார் .
இதுவரை எளியசாதி கிருத்துவப் பெண்களின் போராட்டமாக இருந்த இந்தப் புரட்சி ...இந்துப் பெண்களையும் தொற்றிக்கொண்டு பற்றிப் படர்கிறது .மத வேறுபாடுகள் கடந்து அனைத்துப் பெண்களும் ஒன்றுபட்டுப் போராட ........வேறு வழியின்றி .....1865 இல் எல்லாச் சாதியினரும் முழுமையாக அணிந்து கொள்ளலாம் என்று திருவிதாங்கூர் சமஸ்தானம் அறிவிக்கிறது .
ஒரு நெடிய போராட்டம் வெற்றி பெறுகிறது .
இந்தப் பாதை மறந்த சுயநலமிகள் சிலர் சாதி தான் அடையாளம் எனும் போது எரிகிறது .
# சு .சமுத்திரம் அவர்களின் நெடிய கட்டுரை ஒன்றை சுருக்கி வரைந்திருக்கிறேன்.

Thursday, February 08, 2018

பார்ப்பனீய எதிர்ப்பை கையில் எடுக்காமல், தமிழ் தேசியம் வலு பெறாது.

A:
பார்ப்பனீய எதிர்ப்பை கையில் எடுக்காமல், தமிழ் தேசியம் வலு பெறாது.

திராவிட அரசியலை எதிர்க்கிறோம் என்பதற்காக பார்ப்பனீய எதிர்ப்பை கைவிட்டது தமிழ் தேசியம் செய்த மாபெரும் பிழை. திராவிட அரசியலை வீழ்த்தவேண்டும் என்று தமிழ் தேசியம் ஆசைப்பட்டால், அவர்களைவிட பார்ப்பனீய எதிர்ப்பை கடுமையாக செய்யவேண்டும்

Q:
நீங்க தொடர்ந்து ப்ராமண எதிர்ப்பை கைவிட்டதாக கூறி வருகிறீர்கள். கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள். தமிழ் தேசியம் என்றுமே பிராமண தத்துவார்த்தங்களுக்கு நேர் எதிர் நிலையை கொண்டது தானே. இன்னும் வீரியமாக எதிர்க்கணும் என்பதில் மாற்று கருத்து இல்லை. தமிழகத்தில் பிராமண எதிர்ப்பு என்பது என்றுமே வீரியமாக இருந்ததில்லை. பிராமண எதிர்ப்பு என்று போலி தனமாக பிராமணாள் கஃபே முன்னாள் கருப்பு சட்டை மடையர்கள் செய்த போலி போராட்டங்கள் அனைத்தும் நம்மை ஏமாற்றிய வித்தை தானே. இலக்கியம், கலை, நாடகம் என அனைத்தும் திராவிட ஆக்கிரமிப்பு இருந்து பிராமணத்தை மறைமுகமாக வளர்த்து நிலை பெற செய்ததை கண்டு கோபம் கொண்டு தானே தமிழ் தேசியர்கள் திராவிட போலிகளை ஒழித்து கட்டும் முடிவிற்கு வருகின்றனர். தமிழ் தேசியர்கள்  இப்பொழுது தான் தொடங்கியிருக்கின்றனர். ப்ராமணர்களின் பலம் இந்துத்துவம், அதனை தாங்கி வரும் அரசியல் கட்சி பாஜக, நான் முன்பு கூறியது போல இன்று தமிழகத்தில் பாஜகவுடன் யார் கூட்டணி வைத்தாலும் தோல்வி நிச்சயம் என்பது உறுதியாகிவிட்டது. இதற்கு காரணாம் திராவிடம் இல்லை, தமிழ் மொழி மற்றும் தமிழ் கட்டமைப்பின் இயல்பு அப்படி. இன்னும் இறங்கி மட்டும் தான் அடிக்கல, அதனை தமிழர்கள் செய்வதில்லை. இவ்வளவு செய்தபின்னும் இன்னும் தெலுங்கனை எல்லாம் விட்டு தானே வைத்திருக்கிறோம்... பல எதிரிகளை ஒரே நேரத்தில் அடிக்க முடியாது என்கிற பொழுது நீங்கள் தமிழ் தேசியம் எதிர்க்கவில்லை என்பதற்கு காரணாம் ஏதுவாக கருதுகிறீர்கள்

A: தமிழ்  தேசியம் பேசுவோர் ஏன் பார்ப்பனீய எதிர்ப்பை கைவிட்டனர் என்று கேட்டால், ஏன் திராவிட காட்சிகள் பற்றி பேசவேண்டும்?

திராவிட அரசியல் பார்ப்பனீய எதிர்ப்பை கைவிட்டு விட்டது,  மறைமுகமாக ஆதரிக்கிறது என்று தெரிகிறது - அதை மறுக்கவில்லை.

என் கேள்வி - ஏன் தமிழ் தேசிய கட்சிகளும், இயக்கங்களும் பார்ப்பனீய எதிர்ப்பை கைவிட்டன?

இன்றைக்கு தமிழ் தேசியம் பேசும் யாராவது பார்ப்பன எதிர்ப்பை வெளிப்படையாக செய்கிறார்கள் என்று சொல்லுங்க..... யாருமே இல்லை.

எல்லா பிரச்னைக்கும் மூல காரணம் என்ன?

ஹிந்தி சமஸ்க்ரித திணிப்பு - பார்ப்பனீயம்
நீட் தேர்வு - பார்ப்பனீயம்
பொருளாதார கொள்கை - பார்ப்பனீயம்
ஈழ பிரச்னை - பார்ப்பனீயம்
ஆண்டாள் பிரச்னை - பார்ப்பனீயம்
தமிழ் தாய் வாழ்த்து - பார்ப்பனீயம்
வெளியுறவு கொள்கை - பார்ப்பனீயம்
கல்வி கொள்கை - பார்ப்பனீயம் 

பாஜகவிற்கு வாக்கு கிடைக்காததட்க்கு காரணம் தமிழ் தேசியம் என்று சொல்றீங்க. வாக்கு கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால் என்ன? அவா ஆட்சி தான் நடக்குது. அது ஹிந்திடுவா-பாஜக ஆட்சியா இருந்தாலும், செகுலர்-காங்கிரஸ் ஆட்சியா இருந்தாலும் - அவா ஆட்சி தான் நடக்குது. 

பேரும், கட்சியும், களமும்  மாறியதே தவிர, அவா தான் உள்ளிருந்து இயங்குபவர்கள் 

அதை வெளிப்படையான சொல்லி கேட்காவிடில், ஒன்றும் மாறாது 

இன்றைக்கு தமிழ் தேசியம் பேசுவோர் பார்ப்பனீய எதிர்ப்பை வெளிப்படையாக கையாளவில்லை என்றால், எதுவும் மாறாது.

Q, I grew up amongst several Brahmins and the school that I went to had at least 90% Brahmins.

I don’t want to say all are bad or all are good. Such generalizations would be wrong.

But the prevalent general idea that “Brahmins are smart and intelligent” is far from the truth. In fact, it’s a joke.

I have never seen any originality, creativity, brilliance or wisdom - I have never seen anybody doing anything great in their field. The only advantage they have over others is their “adaptability”. And because of that their main achievements are “rising up in posts”. They usually occupy high positions and hence are there in Key decision making areas, but no intrinsic achievement of value.

This can be better seen US, where they are not as successful as they are in India.

All goes to say that the so called “brilliance of Brahmins” is not just a myth but Infact could be the very opposite.
 I’ve seen many so called “brilliant Brahmins” (who Dr. Su Swamy says should make policy decisions) have blatantly wrong understanding of scientific and economic principles. They interpret data wrongly. They can’t make smart decisions. Their decisions are based on “how can I avoid trouble? What is the safest decision for me?” - not “what is the best long term solution for this problem?” Or “what is the solution for the country or public”?

Ever wonder why India’s major issues - Defense, External Affairs, Intelligence, Economic policy, Education policy, etc are so bad???? Because it’s all in the hands of these so called brilliant folks.

Q: தமிழ் தேசியம் பேசுபவர்கள் ப்ராமண எதிர்ப்பை தொடர்ந்து காட்டி கொண்டு தான் இருக்கின்றனர். கீழடி ஆய்வு நிறுத்தியதற்கு எதிர்ப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு எதிர்ப்பு என்று தமிழகம் தொடர்ந்து ப்ராமண சித்தாந்தங்களுக்கு எதிர்ப்பை இயல்பில் காட்டி கொண்டு தான் உள்ளது. நாம் திராவிட கட்சி பற்றி பேசியத்துக்கு காரணம், திராவிட ஆக்கிரமிப்புகள் மற்றும் போலி ப்ராமண எதிர்ப்பு போராட்டங்கள் என எனது முந்தய பதிவில் விரிவாக கூறியிருந்தேன்.    திராவிட அரசியல் ப்ராமண எதிர்ப்பை கைவிடவில்லை, அவர்கள என்றுமே எதிர்ப்பை வலுவாக காட்டினதே இல்லை, இன்னும் சொல்ல போனால் அது பிராமண எதிர்ப்பே இல்லை. தமிழ் தேசியம் வரலாறு முழுவது தனது தனித்த சித்தாந்தங்கள், மொழி கட்டமைப்பின் மூலம் பிராமணத்தை தமிழ் தடுத்து வந்திருக்கிறது. பாண்டியர்கள் நயவங்கமாக வீழ்த்தப்பட்டபின் விஞ்ஞான வளைச்சி அடைந்த காலத்தில் தமிழ் தேசிய கோரிக்கையை வைத்து உண்மை தமிழர்கள் இப்பொழுது தான் வந்திருக்கிறோம். நாம் தமிழ் என்று உயர்த்தி புடிப்பதே ப்ராமண எதிர்ப்பு தான்.................... நீட், பொருளாதாரம், ஈழம், GST போன்ற பிரச்சனைகளுக்கு நாம் ப்ராஹ்மணம் பார்ப்பனீயம் என்று கூறுவது சரியான தந்திரோபாயம் இல்லை, காரணம் இது இந்திய பேரினவாதம். இந்திய ஒன்றியத்தின் புவிசார் அரசியல். நீட் க்கு கையெழுத்து போட்டது மாஃபா பாண்டியராஜன், ஈழ படுகொலையில் சிதம்பரம் பங்கு, பொருளாதாரம் சீர்கேட்டிற்கு சிதம்பரம், மாநில உரிமைக்கு பொன் ராதாகிருஷ்ணன், பன்னீர், எடப்பாடி பங்கு என்று தமிழர்கள் பட்டியலும் நீள்கிறது. திராவிடம் தான் இதனை ஆரியம், பார்ப்பனீயம் என்று கூறுகிறது. தமிழ் தேசியர்கள் அப்படி அணுக கூடாது என்பது எனது பார்வை. உலக அரங்கில் திருமுருகன் போன்ற நரிகள் வைத்தது அது தான். ஈழ அழிவிற்கு காரணம் பார்ப்பனீயம் என்பது. அப்படி நீங்கள் பேசினால் உலக அரங்கில் ஏற்று கொள்ள படாது. மலையாளிகள், தெலுங்கர்கள் என்று பலர் பங்கு இருக்கிறது. இந்திய ஒன்றியத்தின் புவிசார் அரசியல் என்ன என்பதை தான் பேச வேண்டும்... ...........   அடுத்ததாக பாஜக வாக்கு என்பது அவர்களின் நேரடி அதிகாரம் செலுத்துவதற்கான வலிமையை காட்டுகிறது. தமிழகத்தில் அவர்க்ளை கோமாளிகளாக தான் வைத்திருக்கிறோம். 1 சதவீதம் கூட வாக்க வாங்க முடியாத நிலை என்பது மக்கள் முழுவதுமாக புறக்கணித்திருக்கிறார்கள் என்று தானே பொருள். ஆம் நீங்கள் கூறுவது சரி தான் அவர்கள் தான் ஆட்சி செய்கிறார்கள். அது தான் காலங்காலமாக இருந்து வந்திருக்கிறது. மென்பொருள் நிறுவனம், நீதி துறை, உயரிய பதவிகள் அனைத்திலும் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதற்கு காரணம் தமிழ் தேசியம் இல்லை, 70 வருட திராவிட ஆட்சியில் இவர்கள் அவர்களுக்கு நீவி விட்டது தான். தமிழ் சாதியை சார்ந்த ஒரு பெண்மணி அதிமுக தலைமைக்கு வருகிறார் என்றதுமே எத்தனை பிராமணன் துள்ளினான், விசு ல இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் வரைக்கும் பதறினார்கள். தமிழ் தலைமை வரும் பொழுது தான் உயர் பதிவில் இருக்கும் பிராமணர்களை கட்டுப்படுத்த முடியும். நாம் வரும் பொழுது அவர்களாகவே ஓடி விடுவார்கள் பாருங்கள். இப்பவே பாதி பேர் வெளிநாடுகளுக்கு வந்துவிட்டார்கள்.........................  இறுதியாக பார்ப்பனர் என்றால் தமிழர், பறையர்களின் பெயர் தான் பார்ப்பனர். பிராமணர்களை பிராமணனர்கள் என்றே அழைப்போம்

A: திராவிடத்திற்கு வக்காலத்து வாங்கவில்லை,  யதார்த்தத்தை வைத்து மட்டும்.....நாம் இப்படி இங்கு பேசும் அளவில் வளர்ந்தது, திராவிடம் ஆட்சியிலிருந்த ஆண்டுகளில் தானே.

இப்போதுள்ள குறைபாடு, குற்றங்கள் அனைத்திற்கும் மொத்தமாகத் திராவிடத்தைக் குற்றம் சொல்வது சரியான பாதையில் நம்மை சிந்திக்க விடாது என்பது என் கருத்து

Q: ஏற்கிறேன் பிரபு, திராவிடம் என்னும் கருத்தியல் தோற்று போய்விட்டது, தெலுங்கன் எல்லாம் பதுங்கிருவான், நாம் அறியாத நம்ம மக்களுடன் தான் சண்டை போட்டு கொண்டிருக்கிறோம். இவர்களை கடந்து நாம் இந்திய ஒன்றியத்தின் ஆதிக்கம் அனைத்தையும் எதிர்க்க வேண்டும். மாநில உரிமைகளை பாதுகாப்பதே இப்பொழுது பிரச்சனையாக இருக்கிறது. இந்திய ஒன்றியம் ஒரே தேசம், அகண்ட தேசமாக ஹிந்துத்வ இந்தி தேசமாக மாற்ற முயல்கிறது. அந்த அடிப்படையில் தான் தமிழ் தேசிய பேரியக்கம் நடத்திய மாநாடு "தமிழ்நாட்டு வேலை தமிழருக்கே" மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது

R:
அருமை, குறிப்பாக

‘நீட், பொருளாதாரம், ஈழம், GST போன்ற பிரச்சனைகளுக்கு நாம் ப்ராஹ்மணம் பார்ப்பனீயம் என்று கூறுவது சரியான தந்திரோபாயம் இல்லை, காரணம் இது இந்திய பேரினவாதம். இந்திய ஒன்றியத்தின் புவிசார் அரசியல். நீட் க்கு கையெழுத்து போட்டது மாஃபா பாண்டியராஜன், ஈழ படுகொலையில் சிதம்பரம் பங்கு, பொருளாதாரம் சீர்கேட்டிற்கு சிதம்பரம், மாநில உரிமைக்கு பொன் ராதாகிருஷ்ணன், பன்னீர், எடப்பாடி பங்கு என்று தமிழர்கள் பட்டியலும் நீள்கிறது. திராவிடம் தான் இதனை ஆரியம், பார்ப்பனீயம் என்று கூறுகிறது. தமிழ் தேசியர்கள் அப்படி அணுக கூடாது என்பது எனது பார்வை. ‘

I think since independence it is always the combo of brahminism and nationalism that wrecked havoc on Thamil people.

Also we should not forget the impact of globalization (since the signing of GATT agreement in 1991) from the equation and the invisible control imposed by the western countries and corporations.

(response to i grew up amongst several brahmin)
True, in my experience many Brahmins lacks creativity, originality and imagination. As they are more religiously conditioned they might have lost these traits. However, in my experience they (most) are very good at memorizing , remembering and at verbal & written communication. That again I attribute to their life style.

But as their exposure is higher than most of the other communities and as their father and others relatives are in key positions they continue to get good jobs.

However, we also should not forgot that they have been the learned community for generations so, obviously they might edge us genetically (in the above mentioned skills).

(another response to same)
Good one. 👌Especially not all Brahmins are bad or good. Each nation has a character, so do each state, city, community etc. It is just that rest of the population do not align with the collective character of Brahmins and vice versa.

I also experienced many Brahmins (my friends unfortunately) consider most of the other communities as savages and they think they are gifted to be born as Brahmins.

Q:
I always think the dravidian party is kind of power struggle between Aryans & Telugu people. Ramasamy was a clever architect during those days and made sure they get their share and of course the maintain connivance with them. They literally became proxy to protect brahmins. Out side world they were projecting as if fighting. Tamils always kind of resisted, (that is why the dravidians harvested that) would have been much better if we were are on our own (Tamil Nationalists or those who care for the Tamil land, language and people).

R:
On the whole I am tempted to agree with you. However, no one can disagree that Periyar was a social reformist (in doing that he gained lots of enmity and conflicts)and that too one who didn’t bend corners most of the times. He is clever no question about that. To some degree he might have bolstered Telugu people’s presence in key political positions. I think the later leaders of Dravidian parties to secure their ranks caused more damage than him.

A: சில விடயங்கள் -

1. பார்ப்பனீய எதிர்ப்பை வெளிப்படையாக செய்தால்தான் பலன் இருக்கும். GST , neet , ஈழம், ஜல்லிக்கட்டு, ஹிந்தி திணிப்பு என்றெல்லாம் பேசும்போது - இது பார்ப்பனீயம் என்று சொல்லி எதிர்க்க வேண்டும். அதை சொல்லி எதிர்த்தால் தான் பலன் கிடைக்கும் 

2. பார்ப்பனீயம் என்பது பார்ப்பனர்கள் மட்டும் அல்ல. “பார்பனீயர்கள்” (Brahminists) சேர்த்து தான். பார்ப்பனீய தலைமை, தத்துவம் இதையெல்லாம் ஏற்றுக்கொண்டவர்கள் “பார்பனீயர்கள்“. நீங்க சொன்ன பாண்டியராஜன், சிதம்பரம், நளினி சிதம்பரம்,  எடப்பாடி, ஜெயலலிதா, ரஜினி, கமல்  - எல்லோரும் பார்பனீயர்கள். அல்லது, பார்ப்பனீய எதிர்ப்பை ஏற்றுக்கொள்ளாதவர்கள். பார்ப்பனீய எதிர்ப்பை உணராதவன் தமிழனாகவே இருக்கமுடியாது என்று இருக்கிறபோது, இதில் அவன் தெலுங்கானாய் இருந்தால் என்ன, திராவிடனாய் இருந்தால் என்ன? இவர்கள் எல்லாருமே தமிழர் அல்லாதோர்! அவளவுதான்.

அதே போல், நம்மிடமே இருந்து பார்ப்பனீயத்தை ஆதரிப்பவர்களை தமிழர் அல்லாதோர் என்று குறிப்பிட்டு காட்ட , இறையாண்மையை - இறையாண்மையை மட்டும் கொண்ட வரையறை வேண்டும். அதையும் தமிழ் தேசிய தலைவர்கள் செய்வதில்லை.

3. இந்திய புவிசார்ந்த அரசியல், இந்திய ஏகாதிபத்தியம் என்பதெல்லாம் கிடையாது அன்பரே! புவிசார்ந்த அரசியல் என்று சொல்லி நம்மை ஏமாற்றிவிட்டனர். பார்பனீயர் அல்லாத இந்தியன், தமிழனை ஆதிக்கம் செய்ததே இல்லை!  ஈழம் வருவதினால் இந்தியா உண்மையில் புவிசார்ந்த அரசியலில் வளர்ந்திருக்கக்கூடும். மாறாக, இந்திய அரசை  கைக்குள் போட்டுக்கொண்டு “இந்தியாவின் பெயரால் செய்கிறோம்“, “இந்தியாவின் நன்மைக்காக“ என்று சாக்கு சொல்லிக்கிட்டு பார்ப்பனீயம் “இந்திய தேசியம் ” என்ற போர்வைக்குள் இருந்து ஆடுகிறது.

இதை புரிந்து கொள்ளாமல், “இந்திய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறேன்“, “இந்திய நமக்கு எதிரி ” என்பது போல் பேசிக்கொண்டு கெட்டபேர் வாங்கிவிடுகிறோம். இது அவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.

4. பார்ப்பனீய ஆதிக்கத்திற்கு காரணமே திராவிடம் என்று சொல்வது தமிழ் தேசியத்திற்கு ஆபத்தானது யுக்தி. உண்மையாகவே இருந்தாலும், அது ஆபத்தான யுக்தி.  இன்றைக்கு வாழும் முதிய தலைமுறை - பெரியாருக்கு முன்பு எப்படி கடுமையான பார்ப்பன ஆதிக்கம் இருந்தது, பெரியாருக்கு பிறகு எப்படி  குறைந்துள்ளது என்று பார்த்துள்ளனர்.  திராவிட கட்சிகளுக்கு இருக்கும் இன்றைய ஆதரவு அவர்கள் தான் - அடுத்த முப்பது ஆண்டுகளுக்கும் அவர்களின் எண்ணிக்கை பெரியது.  அப்படி இருக்க, திராவிட காட்சிகளை வீழ்த்துவதற்கு  ஒரே வழி - அவர்களை விட அவர்களின் கொள்கை - அதாவது பார்ப்பனீய எதிர்ப்பில் நேரடியாகவும் வெளிப்படையாகவும் இருப்பது.  அதற்காக பார்ப்பன மக்களுக்கு தொந்தரவு, வன்முறை செய்யக்கூடாது - ஆனால், தமிழரை அடக்கும் எல்லா தத்துவங்களுக்கும் பார்ப்பனீயம் காரணம் என்பதை உணர்த்தினால் மட்டுமே தமிழ் தேசியம் வளரும்.

Take JALLIKATTU for example - from beginning to end, it was a Brahministic thing to ban it. There are multiple videos of the Animal Welfare Board members very clearly saying that it is their “dharma” and “high nature” to not do this to animals. He also went public and gave an interview that they are high caste because they think this way.

Take NEET for example - I personally attended a Hindutva meeting in medical college in Chennai in 1999. Yes 20 years back! And they openly said that only an entrance exam based criteria is the first step to create a centralized system of entry which could then be controlled by Brahmins. I saw this personally.

Take Eelam for example - Brahminism has played a part from the Disenfranchisment law until the last struggle. Nehru, Indira and Rajiv Gandhi were all Brahmins. Su Swamy and Sankara mutt who made sure TN doesn’t wake up to Tamil genocide are Brahmins.

Beyond all this, we shouldn’t say that this is all because of brahminism?

அப்படி என்ன தயக்கம்? பார்ப்பனர் தைரியமா நான் தான் செய்யுறேன் என்று சொல்றான்..... ஆனால், தமிழ் தேசியவாதிகள் (அரசியல்வாதிகள்) மட்டும் அவளோ தயங்குறாங்க!

Let’s not argue amongst ourselves. But at least take it as a playful bet.

I guarantee you - without open declaration of anti-brahminism stance, Tamil desiyam will not be able to overtake Dravidian politics.

R:
We were/are/will be always great social reformists no question about that. That is with in us. I can't say he is clever as the work clever means different thing to different people. I am damn sure if he would have lived in this period, he would be no big of a deal than vai.Gopalsamy Naidu. To his credit he also created an illusion that he is clean and do his best our savior of Tamil language and people. Look how he fell apart now. He had become a political clown. The raise of Tamil desiyam made him panic, he uttered words beyond damage control. Ramasamy Naidu's ideas didn't go well with other race other than Tamils why?  Even today look who is holding him high.. all Tamils only, other people have done/are doing it for their personal profit. Even today if you look at it who is defending him.. his own people will go behind, where as our people will defend him from the front (half ignorant half loyalty). Can you tell me any where else any one scolding the people, language and still thrive in the very place? In the last 50 years we lost much bigger than what we would have lost in thousands of years. As Garga Chatterjee said "you (Tamil) people are slowing down, your reaction time is getting longer and longer".. 

Even today for every action we are only reacting (more of a defence) never seen anything proactive (offence). If we protested saying no to hindi at the airport, having it alone will be a struggle for them. Now they are testing the waters... If we remove Tamil what will happen? How they will react.. they outrightly said no Tamil in Tamil Nadu high court.. what is the reaction? Nothing..

In the recent past we got one victory.. that is for jallikattu.. we won all by ourselves. That too bjp agenda went wrong.. we would have stopped Ellam massacre, if we were allowed to protest.. the cunning karuna defuse that very cleverly. If he wasn't ruthless, with less greed, we wouldn't have noticed, realized this treachery. Above all we wouldn't be talking here for sure.. who sowed the seeds??

Trust me, before 2009, I believed the illusion and thought he might have done something good for Tamil people (that time no difference so should use US)

(response to let's not argue amongst)
agree. ஆனால் திராவிடமும் ஆரியமும் சண்டையிடுவது அட்டகத்தி சண்டை. சண்டை போடுவதுபோல தெரியும் ஆனால் சண்டை இல்லை என்பதே நிதர்சனம்!

A: (response to para above)
அய்யோ பாஸ்......அட்டகத்தி சண்டை என்பது உங்களுக்கு, நமக்கு தெரியுது. ஆனால், பொதுமக்களுக்கு எப்படி புரியவைக்க முடியும்?

உண்மையான தத்துவரீதியான சண்டை எப்படி இருக்கும் என்று போட்டு காட்டணும் தமிழ் தேசியவாதிகள். அப்போதான், அவர்கள் சண்டை போலி சண்டை என்று உணர்த்தமுடியும்.

அதை விட்டுட்டு, ”அது போலி சண்டை” என்று மட்டும் சொன்னால், “அவனாவது தைரியமா சண்டை போடறான், நீங்க சண்டைக்கே வராதவர்கள்” என்றுதான் புரிந்துகொள்வார்கள்  

இன்றைய தேதியில், தமிழ் தேசியவாதிகள் பார்ப்பனீய எதிர்ப்பில் கோட்டை விட்டதால், திராவிடம் மறுபடியும் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. 

போன இரண்டு வாரங்களாக, அதிகம் ட்விட்டர் மற்றும் பகிரி முகாமில் அதிகம் வருவது சீமானை விட சுபவீ தான்!

இதை மாற்றுங்கள் என்று தான் சொல்கிறேன்.

video:



This lady Radha Rajan is PETA person that said crowd will gather for free sex. Here she is talking about christianity being cancer. she is nothing but a RSS agent

A:
This is another thing I noticed about Brhaminists culture. Their speech is not gracious. They use very dirty language. They use personal and sexual connotations. There is no candor, grace, clarity, comprehension, cohesiveness in their language. Flawed logic expressed in caustic language is their trademark.

M:
100% true. Whether it is men or women, even kids use the most vulgar language possible and are proud of it. They go and call us all "cheri behaviour"

A:
It might as though that I am over emphasizing or perseverating on anti-Brahminism. Actually I have never given that much importance until recently. My main focus was to show that Tamil identity was lost on grounds of sovereignty and because it was mistaken for linguistic identity.

But today, there is overwhelming evidence that it’s Brahminism and the silence of Tamil desiyam is very deafening.


A:
One side note - Deepavali is actually a Tamil festival of winter solistice. The reason later was given as “narakasuran homicide”. Just like Christmas was also a winter Solistice festival and people started celebrating Jesus’s birth.
The real festival that fits your description is Vinayaka chathurthi. Vinayakar was a aseevagam symbol (elephant) for Aceevaga Siddhars. Then these Siddhars were killed and massacred by aryan based regimes (chanakya period).  Very brutal deaths - they were dragged in front of people, stoned, smeared with dirt and then thrown from heights or into the sea.

So, they wrote in Puranas that he was born from gods’ “dirt” (to contrast that Brahmins born from head, shudras from feet), and that he opposed even shiva  (Aryan shaivism), so his head was chopped off (to signify killing of the aceevaga Siddhars), was placed a dead elephants head. So, they made the oppressed people (Dalits) make a festival where they will build Vinayagar out of dirt or mud, then make own people  carry our Vinayagar through the streets and break it or throw it in sea.

Vinayaka chathurthi is the most insulting festival of the Aryans thrust on Tamils.

Tuesday, February 06, 2018

தனது திருமணத்தில் பறை அடித்து கலக்கிய மாப்பிள்ளை!!

இந்துதான்

இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் எந்த அரசியல் கட்சியும் முன் வருவதில்லையே.ஏன்?-எச்.ராசா.

முகநூல் விடை இதோ.
மருத்துவக் கல்விக்கு இடம் கிடைக்கவில்லையே என செத்துப் போன அனிதாவும் இந்து தான்.

வேலை கிடைக்காமல் தினம் தினம் அவமானங்களைச் சந்திக்கும் இளைஞர்கள் பெரும்பான்மையோர் இந்து தான்.

கொத்து கொத்தாக தற்கொலை செய்த லட்சக்கணக்கான விவசாயிகள் இந்து தான்.

இளவரசன் கோகுல்ராஜ் சங்கர் இந்து தான்.

மருத்துவம் இன்றி மருத்துவமனையில் மாண்டு போன பச்சிளம் குழந்தைகள் இந்து தான்.

ஒரு வேளை உணவின்றி படுக்கைக்குச் செல்லும் பல கோடி இந்தியர்கள் இந்து தான்.
......ச்சாரியால் கொலை செய்யப்பட்ட சங்கர்ராமன் இந்து தான்.

ஒரு நிமிடத்திற்கு 12 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.அவர்களில் பெரும்பாலும் இந்து தான். ஆளாக்குபவனும் இந்து தான்.

விலைவாசி உயர்வால் வாழ வழியின்றி வஞ்சிக்கப்படும் கோடிக்கணக்கானவர்கள் இந்துக்கள் தான்.

இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் எங்கே போனீர்.

இந்து என்பது சிந்து நதி சார்ந்த சொல்.
நதி அனைவரையும் வாழ வைக்கும்.

மதவெறியைத் தூண்டி மடமை வளர்க்கும் கெடு செயல் வேண்டாமே.
வடநாட்டுப் பிறவியாக இருப்பினும் உம்மை வாழ்விப்பது இந்துக்களை பெரும்பாண்மையாக கொண்ட தமிழர்கள் தானே.

உங்களை தினமும் ஓட ஓட விரட்டுவதும் பெரும்பான்மை இந்துக்கள் தான்.